Powered By Blogger

Saturday, August 21, 2021

Classy க்ளாசிக்ஸ் !!

 நண்பர்களே,

வணக்கம். சரக்கடிச்ச அனுபவம் லேது ; ஆனால் சரக்கடித்த நண்பர்களின் hangover-களைப் பார்த்திருக்கிறேன் தான் ! And இதோ லேட்டஸ்டாக - இந்த வாரத்தின் முழுமைக்கும் நம்மாட்கள், E-ROAD '21 தந்துள்ள  ஹேங்கோவரில் கிறங்கிக் கிடப்பதைப் பார்த்து வருகிறேன் ! போன சனிக்கிழமை ஒலிக்கத் துவங்கிய செல்போன்கள் - இந்த சனி வரையிலும் ஓய்ந்த பாடில்லை ! எதிர்பாரா இந்த அதகளத்தினை நம்மவர்களில் 4 பேர் சமாளிக்க முயன்று வந்தாலும், பணியின் தன்மையானது ஜவ்விழுக்கச் செய்கிறது ! கொஞ்சம் சொதப்பியுள்ளனர் நம்மாட்கள் ; நிறைய சரியாய்ச் செய்துள்ளனர் - ஆனால் இம்முறை கிட்டியுள்ள அனுபவங்களானவை ரொம்பவே different !!

**எட்டு ஆண்டுகளுக்கு முன்பான இதழிலும் ஆர்டர் ; நேற்றைய புக்கிலும் ஆர்டர் எனும் போது, இரு தனித்தனிக் கிட்டங்கிகளிலிருந்து கிட்டத்தட்ட முன்னூறு புக் குவியலுக்குள், ஒவ்வொன்றையும் தேடியெடுத்து சரி பார்த்து அனுப்பிடுவது சுலபமாகவே இல்லை  தான் ! 

**சின்னச் சின்ன ஆர்டர்கள் ;  Google Pay வாயிலாய் அவற்றிற்கான பணப் பட்டுவாடாக்கள் ; and இந்த Google Pay அனுப்பப்படுவதோ  இல்லாள் பெயிரிலிருந்தோ ; புள்ளையின் பெயரிலிருந்தோ எனும் போது - "யார் கணக்கில யாரு பணம் போட்டா ?" என்ற ஆராய்ச்சியில் உச்சந்தலை கேசங்கள் (!!) நட்டுக்குத்தாகி நிற்காத குறையே ! கொடுமைக்கென போன சனிக்கிழமையின் பகல் பொழுதினில் நமது வங்கியின் சர்வர் புட்டுக்கிட, நிறைய பேருக்கு GPay செய்திட முடியலை ; சிலருக்கோ அனுப்பியது அவர்களையே மறுக்கா சென்றடைந்துவிட்டது ! அதையெல்லாம் குறித்துக் கொண்டு, சிரமம் பார்க்காது இன்னொருவாட்டி முயற்சிக்க அவர்களிடம் கோரியதும் அரங்கேறியது !!

**சிலரோ ஆன்லைனில் வங்கிக்கே டிரான்ஸ்பர் செய்திட, சிற்சிறு தொகைகளால் இந்தியக் கிரிக்கெட் அணியின் தற்போதைய வாலைப் போல நீண்டு தென்படும் ஸ்டேட்மெண்ட்டினில் , கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியபடியே சரிபார்த்திடவும் அவசியப்பட்டது  ! ஒரு சில நண்பர்களோ, ஆங்காங்கே தத்தம் ஊர்களில் உள்ள TMB கிளைகளில் ரொக்கமாய்க் கட்டியிருக்க, எங்களது ஸ்டேட்மெண்ட்டில் - "இன்ன ஊர் ; ரொக்கம்" என்ற விபரம் மட்டுமே இருக்கிறது ! செலுத்தியது யாரென்றே புலனாய்வு -  நம்மாட்களை ஹெர்லக் ஷோம்ஸ் ரேஞ்சுக்கு உருமாற்றிவிடுகிறது !

**அயல்நாட்டிலிருந்து ஆர்டர்ஸ் ; அவற்றிற்கான ஏர்மெயில் ரேட்களைக் கேட்டறிந்து சொல்வதற்குள் பொழுதுகள் ஓட்டமெடுத்து விடுகின்றன !!

**பொதுவாய் "மஞ்சப் பத்திரிகை " என்றால் நாமெல்லாம் "ஐயே" என்று முகம் சுளிப்பதே வாடிக்கை ; ஆனால் இங்கேயோ நிலவரம் தலைகீழ் !  இப்போது மஞ்சள் தான் flavour of the season ; ஆளாளுக்கு ஐஞ்சு புக் ; பத்து புக் என்று ஒவ்வொரு "மஞ்சச் சொக்காய்க்காரவுக" கதைகளிலும்  வாங்கித் தள்ளியுள்ளனர் எனும் போது அவற்றை மாமூலாய்  கூரியர் டப்பிக்களில் பேக் செய்திட வழியில்லை ; முகவர்களுக்கு அனுப்புவதைப் போல பண்டல்களாக்கி டிராவல்ஸ்களிலும், லாரிகளிலும் அனுப்ப வேண்டிப் போயுள்ளது !

**இதற்கிடையே எங்கிருந்தோ திரட்டியுள்ள உத்வேகங்களோடு, முகவர்கள் இரட்டிப்பாய் ஆர்டர்களை அனுப்பி வைத்துள்ளனர் - லயன் # 400 இதழுக்கும் ; "சிகப்பாயொரு சிலுவை" இதழுக்கும் ! போன மாசம் வரைக்கும் 20 புக் ; 30 புக் என்று வாங்கியோர் இப்போது திடு திடுப்பென 100 ; 200 வேணுமெனும் போது அவர்களுக்கு பதில் சொல்ல நேரிடும் திணறல்கள் வித்தியாச ரகம்  ! ஐநூறு பேருக்கென சமைத்த விருந்தின் பந்தியில், எவ்வித முன்னறிவிப்புமின்றி 800 பேர் அமர்ந்தால் - இட்லியிலும் ரேஷன் ; கேசரியிலும் ரேஷன் தவிர்க்க இயலாதாகிடும் தானே ? So இங்கும் அதுவே செய்திட வேண்டியிருந்துள்ளது ! ஆனால் அதனைப் புரிந்து கொள்ள பொறுமையின்றிப் பொங்கலோ பொங்கலென்று பொங்குவோர்க்கு பதில் சொல்லிட எடுக்கும் நேரம் இன்னொரு பக்கம் !! 

So தட்டுத் தடுமாறி உங்கள் ஆர்டர்களைக் கரை சேர்த்து விட்டு, தங்களையும் கரை சேர்க்கக் கரணம் அடித்து வரும் நம்மவர்களின் முனைப்புகளே  எனது இவ்வாரத்து highlight !! இயன்றதைச் செய்து வரும் அந்தச் சிறு அணிக்கு ஒரு பெரிய பார்சலில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புகளும், காரமும் அனுப்பியுள்ள நண்பர் ராகவன் ஒருபக்கமும் ; சன்மானமொன்றை அனுப்பியுள்ள நண்பர் N.சரவணகுமார் இன்னொரு பக்கமும் திக்குமுக்காடச் செய்துள்ளனர் ! பார்சலிலிருந்த ஸ்வீட் டப்பியில் ஒன்றை ஆட்டையைப் போட்டவனென்ற முறையில், நண்பர்களின் எதிர்பார்ப்பில்லா இந்த அன்பு எத்தனை இனிமையானதென்று சப்புக்கொட்டியபடிக்கே சொல்ல முடிகின்றது !!  Thanks from me & the team sirs !!

நம்மவர்கள் இன்னமும் போன வாரத்து மேளாவின் பிசியிலேயே மூழ்கிக் கிடக்க, நானோ வேறொரு  ஜாலியான பிசியில் இந்த வாரத்தை நகற்றி வருகின்றேன் ! அது வேறொன்றுமில்லை guys - காத்திருக்கும் SMASHING '70s நான்கு ஆல்பங்களுக்குமான கதைத் தேர்வுப் படலமே தற்சமயம் பிசியாக்கி வருகின்றது !! ஒட்டுமொத்தமாய் வேதாளன் ; மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி & காரிகன் கதைகளில் ஒரு பெரும் கத்தை சாம்பிள்கள் அமெரிக்காவிலிருந்து வந்து குவிந்திருக்க, வேளைக்கு ஒரு நாயகரின் கதையோடு பயணித்து வருகிறேன் ! அதிலும் நாம் திட்டமிட்டுள்ள முதல் ஆல்பமானது வேதாளனினது என்பதால் டென்காலி  ; டயானா ; ரெக்ஸ் ; டெவில் ; ஜும்போ  ; குறன் ; வம்பேசி ; ஈடென் தீவுகள் -  என்று அவர் கதை சார்ந்த ஏதேதோ தலைக்குள் ஓட்டமெடுத்து வருகின்றன ! கனவில் அந்தக் கபாலக் குகை வராதது ஒண்ணு தான் பாக்கி ! படைப்பாளிகளிடமிருந்து வந்துள்ளது ஒரு வண்டி எனில், அமேசானிலும், இன்ன பிற மார்க்கங்களிலிருந்தும் வரவழைத்துள்ள தடித் தடி புக்ஸ் இன்னொரு வண்டி ! So கதை படிக்க ; குறிப்பெடுக்க, என்று ஓடும் நாட்களினூடே, எனது பால்யத்து PHANTOM நினைவுகளையும் கொஞ்சமாய் வருடிக் கொள்ள முடிகிறது !! அந்நாட்களில் இந்திரஜால் காமிக்சில் வெளியாகும் வேதாளன் கதைகளை வீட்டுக்கு வெகு கிட்டேயிருந்த கடையினில் வாங்கியது  ; குஷ்வந்த் சிங் அவர்கள் எடிட்டராய்ப் பணியாற்றிய THE ILLUSTRATED WEEKLY OF INDIA வாரயிதழினிலிருந்து வேதாளன் தொடரினைக் கத்தரித்துச் சேகரித்தது ; அதன் பின்னே முத்து காமிக்ஸில் வேதாளன் தலைகாட்டத் துவங்கிய பிற்பாடு ஆபீசுக்கு வந்திடும் ஆங்கில ஒரிஜினல்களை மேய்ந்தது - என்று நிறைய Phantom வாடகை சைக்கிள் moments இருந்துள்ளன தான் - இவ்வாரத்தினில் !  

அதே சமயம் ஒரு சிக்கலுமே இந்தத் தேர்வுப் படலத்தில் இருப்பதை உணர முடிகிறது ! உதாரணத்திற்கு ரிப் கிர்பி தொடரையே எடுத்துக் கொள்வோமே !! இங்கும்  இந்திரஜாலில் இவர் கதைகளைப் படித்துள்ளேன் ; முத்து காமிக்சிலும் படித்துள்ளேன் ; அப்புறமாய் நாமே லயனில் ; மினி லயனில் இந்த ஜென்டில்மேன் டிடெக்டிவை வெளியிட்ட நாட்களில் - லோடு லோடாய்ப் படித்துள்ளேன் தான் ! சொல்லப் போனால், மும்பையிலிருந்த அவர்களின் ஏஜெண்ட்களின் ஆபிஸுக்குப் போக நேரும் போதெல்லாம், அவர்களிடம் கையிலிருக்கும் அத்தனை கதைகளையும் வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாய் இருக்கும் அவர்களது கணக்கரின் மேஜையருகே அமர்ந்து அத்தனையையும் மேலோட்டமாகவாவது வாசித்து, அதனுள்ளிருந்து நாம் வாங்கிடும் கதைகளைத் தேர்வு செய்திடுவேன் ! So இன்றைக்கு மறுக்கா ரிப்போடு சவாரி செய்யும் போது - 'இந்தக் கதையை இதுக்கு முன்னே போட்டுப்புட்டோமா - இல்லியா ?" ; "இதை இதுக்கு முன்னே நான் எங்கே படிச்சேன் ?" என்று மண்டையைச் சொரிய வேண்டிப் போகிறது ! 

ஏழோ / எட்டோ கதைகள் கொண்ட நமது SMASHING '70s  ஆல்பம் ஒவ்வொன்றிலும் - 2 மறுபதிப்புக் கதைகள் & பாக்கி அனைத்தும் புதியனவை என்றே அமைத்திடத் திட்டமிட்டுள்ளேன் ! And அந்த மறுபதிப்புகளுக்கு ஒரிஜினல் மொழிபெயர்ப்பே இருந்தாக வேண்டும், இல்லையெனில் பள்ளிப்பாளையத்திலிருந்து கண்ணைக் குத்த ஒருத்தர் ஸ்கூட்டரிலேயே கிளம்பிப்புடுவார் என்ற பீதி நிரம்பவே இருப்பதால் - பீரோவில் உள்ள பழைய முத்து இதழ்களையும், லயன் இதழ்களையும் உருட்டோ உருட்டென்று உருட்டி வருகிறோம் ! இதோ இப்போது கூட, பட்லர் டெஸ்மாண்டை ஹிப்னாட்டிஸ வசியம் செய்து, ராவினில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்து போய்த் திருடச் செய்திடும் அந்த ரிப் கிர்பி சாகசம் வந்தது லயனிலா ?  மினி லயனிலா ? முத்துவிலா? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் !! இதே நோவு காரிகன் கதைகளிலும், மாண்ட்ரேக் கதைகளிலும் தொடர்கின்றது ! முதலில் வேதாளர் கதைகளையும், ரிப் கிர்பி கதைகளையும் தேர்வு செய்து முடித்து விட்டால் - அப்புறமாய் மந்திரவாதி சாரோடும், ஸ்டைலான சீக்ரெட் ஏஜெண்ட் சாரோடும் மல்லுக்கட்ட எண்ணியுள்ளேன் !  நமது ஆரம்ப இதழ்கள் முதலாய்ப் படித்திருக்கக்கூடிய ; நிறைய வெண்டைக்காய்கள் சாப்பிட்டிருக்கக்கூடிய நண்பர்களை அந்நேரத்துக்குக் குடலை உருவ வேண்டியது தான் ! 

And இங்கொரு சமாச்சாரத்தை நான் சொல்லியே தீரவும் வேணும் தான் ! பொதுவாய் ரிவர்ஸ் கியர் போட்டு, க்ளாஸிக் நாயகர்களின் பக்கமாய்ப் பயணிக்கும் வேளைகளில் - பூட்டிக் கிடக்கும் மச்சு அறைக்குள் புகுந்தாற்போல புராதன நெடி சுழற்றியடிப்பது வாடிக்கை ! க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளே அதற்கொரு prime உதாரணம் என்பேன் ! ஆனால் ஆச்சரியத்திலும், ஆச்சர்யம் - இந்த அமெரிக்கப் படைப்புகளில் இது வரைக்குமாவது அந்தப் புராதனம் சார்ந்த சிக்கல்கள் தலைதூக்கக் காணோம் ! திகுடு முகுடாய்க் குவிந்து கிடக்கும் இந்த நாயகர்களின் கதைக் குவியலுள், எந்தக் காலகட்டத்தினில் அதன் best கதாசிரியர்களும், ஓவியர்களும் பணியாற்றியுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சித்து, அந்த phase-ல் தேட முனைந்தது maybe இதற்கொரு காரணமாக இருக்கலாம் தான் ; ஆனால் in general - இவர்களது golden years தந்துள்ள கதைகளின் தரம் மெய்யாலுமே மிரட்டுகிறது ! Of course - ஒரு லார்கோவின் நவீனத்தை ரிப்பிடம் எதிர்பார்க்க இயலாது தான் ; ஒரு ஜேம்ஸ் பாண்ட் 2.0-ன் sophistication-ஐ காரிகனிடம் எதிர்பார்க்க இயலாது தான் ; ஆனால் இந்த இருவரின் கதைகளிலும் நிறைய gems இறைந்து கிடப்பதைப் பார்க்கிறேன் ! 

And வேதாளர் & மாண்ட்ரேக்கின் விஷயங்களிலோ, மேட்டர் வேறு விதம் !! TEX சாகசங்கள் ஒரு கண்ணில் பார்த்திரா (வரலாற்று) வன்மேற்கில் அரங்கேறுவதால் எப்படி அங்கே நமக்கு புராதன நெடி உதைக்காதுள்ளதோ - அதைப் போலவே, வேதாளரின் கதைகளுமே இருண்ட கண்டத்தின் ; இருண்ட டெங்காலியில், நடைபெறுபவை எனும் போது - இங்கே பெருசாயொரு timeline தென்படும் அவசியம் இருக்கவில்லை ! Oh yes -  கோட்-சூட்-கண்ணாடி மாட்டிக் கொண்டு "உலகும் சுற்றும் வாலிபன்" போல செம ஸ்டைலாய் வேதாளர் நகருக்குள் புகுந்திடும் தருணங்களில் படைப்பின் timeline தட்டுப்படாது போகாது தான் ; ஆனால் அங்கே  நாம் 'கெக்கெக்கே' என சிரிக்க நேரிடும் நிலையெல்லாம் இல்லை ! 

மாண்ட்ரேக்கோ - முழுக்க முழுக்க ஒரு வித fantasy நாயகர் & கதைக்களங்கள் எல்லாமே எதிர்காலத்தினில் இருப்பது ஜகஜமோ, சகஜம் எனும் போது அங்கே புராதனத்துக்கு spelling கூடப் பார்க்க இயலவில்லை !  என்ன, காதிலே சுற்றும் புய்ப்பங்களைச் சமாளிக்கத் தான் கொஞ்சம் தெம்பு அவசியப்படும் ! 

So காத்துள்ள மீள்வருகை - க்ளாஸிக் நாயகர்களதாய் இருப்பினும், அவர்களோடு பயணிக்கவுள்ளது செம தெறி சாகசங்களே என்பது மட்டும் உறுதி !! கதைத்தேர்வினில் இன்னும் நிறையவே வேலை காத்துள்ளது தான் ; ஆனால் நிச்சயமாய் இந்த SMASHING '70s - SMASH HITS ஆகிடுமென்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே உள்ளது !! Fingers crossed !! 

And வேதாளரின் அட்டைப்படத்திற்கென ஒரு  ஐரோப்பிய ஓவியரின் கைவண்ணங்களை ரெடி செய்திடும் படலமும் துவங்கியாச்சு ! So மாஸ் கதைகளோடு ; தெறிக்கும் அட்டைப்படமும் இருக்குமென்று எதிர்பார்க்கலாம் !! இந்த '70s முயற்சிகள் மட்டும் வெற்றி கண்டிடும் பட்சத்தினில் - காத்திருக்கும் காலங்களில் வேதாளரை முழு வண்ணத்தினில் உலவச் செய்திடலாம் தான் ! Fingers crossed once more !!

Anyways - இந்த 4 ஆல்ப SMASHING '70s முன்பதிவினில் இன்னமும் தயக்கம் கொண்டிருப்போராய் நீங்கள் இருப்பின், உங்கள் மனதுகளைத் தாராளமாய் மாற்றிடலாம் என்பதே எனது பரிந்துரையாக இருக்கும் ! நிச்சயமாய் ஹைதர் அலி ஜாடைகள் எங்குமே தட்டுப்படாதென்ற மட்டுக்கு தைரியம் கொள்ளலாம் ! 

ரைட்டு, ஆண்டின் முக்கிய இலக்குகளுள் ஒன்றான ஆகஸ்டின் பாடு ஒரு வழியாய் நிறைவுற்றிருக்க, நமது கவனங்கள் அடுத்ததாய் 2022-ன் அட்டவணை மீதே ! இதோ இன்றிரவு அதன் இறுதிப் படிவத்தை ஒருக்கா பார்த்தாகி விட்டால், அடுத்த சில நாட்களுக்குள் அச்சுக்குத் தயாராகி விடும் ! அட்டவணையின் ஹைலைட்டே முத்து ஆண்டுமலர் # 50 தான் எனும் போது - அதன் மீதான பணிகளும் இனி தட தடக்க வேண்டி வரும் ! அக்கட, இன்னமும் இரண்டே ஆல்பங்களே பாக்கி - மொழிபெயர்ப்பினில் ! So எப்படியேனும் அடித்துப் பிடித்து இந்த மாதயிறுதிக்குள் அந்தப்  பணிகளுக்கு "சுபம்" போட்டு விட்டால், அப்புறமாய் டென்காலியின் கரையோரமாய் ஒதுங்கிட வேண்டியது தான் பாக்கி இருக்கும் ! 

எனது பால்யத்து முதல் சூப்பர் ஹீரோவுக்கு நான் முதன்முறையாய்ப் பேனா பிடித்தது 1981-ல் ......"டிங் டாங்" என்றதொரு சிறார் இதழினில் வந்திடவிருந்த 4 பக்கத் தொடர்கதையின் பொருட்டு ! In fact - தொடரவிருந்த இதழ்களின் பொருட்டு (!!!) மேற்கொண்டும் எழுதிய ஞாபகமெல்லாம் உண்டு தான் ; ஆனால் "டி.டா." - பணால் ஆகிப் போனதால், அந்தப் பக்கங்கள் வெளிச்சத்தைப் பார்க்காமலே மூலை சேர்ந்து விட்டன ! So 14 வயதில் விட்டதை, நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பாய் மறுக்கா முயற்சித்துப் பார்க்கவுள்ளது தான் விதியின் நிர்ணயிப்பெனில், அதனை மாற்றிடத் தான் இயலுமா ?  பார்ப்போமே - இரண்டாம் முறையாச்சும் அதிர்ஷ்டம் அரவணைக்கிறதாவென்று !!

Before I sign out - ஒரு வருத்தமான தகவல்  : 

நமது ப்ளூகோட்ஸ் தொடரின் பிதாமகர் ரௌல் கோவான் அவர்கள் நேற்று தனது 82-ம் வயதினில் தீரா புற்று நோய்க்குப் பலியாகி விட்டுள்ளார் ! பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புலகினில் ரொம்பவே மரியாதைக்குரியவர் ; பல மில்லியன் பிரதிகளின் விற்பனைக்கு சொந்தம் கொண்டாடக்கூடியவர் ; அழகான பகடிகளையே தனது படைப்புகளின் முத்திரையாகக் கொண்டிருந்தவர் - இப்போது இறைவனடி சேர்ந்து விட்டுள்ளார் ! எண்ணற்ற புன்னகைகளை நமக்கெல்லாம் தந்தவர் மேலுலகினில் நிம்மதி காண பிரார்த்திப்போம் ! RIP சார் !

Some updates :

  1. E-ROAD எபெக்டா ? வேறெதுவுமா - சொல்லத்தெரியலை ; ஆனால் லயன் # 400 & சிகப்பாயொரு சிலுவை இதழ்களின் கையிருப்பு தரைதட்டி விட்டுள்ளது  ! So அவற்றில் இனி யாருக்கும் மொத்தமாய் புக்ஸ் அனுப்பிடப்படாது ; இன்னமும் வாங்காதிருக்கும் நண்பர்களின் பொருட்டு அவை நமது ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் தடையின்றிக் கிடைக்கும் ! இது பொருட்டு க்ரூப்களில் பொங்கும் நண்பர்கள் - அந்தப் பொங்கலை - ஆயிரம் ரூபாய்க்கு எனது கோழி கீச்சல் கையெழுத்தைக் கொண்ட டெக்ஸ் இதழின் விற்பனை போலான சமாச்சாரங்கள் பக்கமாய்த் திருப்பிடக் கோருகிறேன் ! நம்மிடம் கையிருப்பில் உள்ள TEX இதழே அது எனும் போது, ஒரு நூறோ, இருநூறோ போட்டுக் கொடுத்தீர்களெனில், பஸ்ஸையோ, ரயிலையோ , மாட்டு வண்டியையோ பிடிச்சு உங்க வீட்டாண்டையே வந்து கூட இன்னொரு கோழி கீச்சல் கீச்சித் தந்து விடுவேன் !
  2. தொடரவுள்ள TEX இதழ்களில் நமது பிரிண்ட் ரன்னை சன்னமாய் கூட்டிட உத்தேசித்துள்ளோம் ! சமீபத்தைய இந்தத் திடீர் சேகரிப்பு மோகங்கள் தொடர்கதையாகிடும் பட்சங்களில், casual வாசகர்கள் பாதிக்கப்படலாகாதே என்பதால் இந்த முன்ஜாக்கிரதை ! அதே சமயம் ஒரேடியாய்ப் போட்டுத் தாக்கி விட்டு தேவுடு காக்கவும் கூடாதென்பதிலும் கவனமாக உள்ளோம் ! 
  3. கொஞ்சமாய் மூச்சு விட அவகாசம் கிட்டும் முதல் தருணத்தினில் டெக்சின் "நெஞ்சே எழு" & "பிரளயப் பயணம்" இதழ்களை இன்னும் கொஞ்சம் தயார் செய்திடவுள்ளோம் ! அவற்றை இன்னமும் வாங்கிடாது இருப்போர், கொஞ்சம் பொறுமை ப்ளீஸ் ! 
Bye all...see you around ! Have a relaxed Sunday !


                                                                  Meme : MKS Ramm !

365 comments:

  1. Enna innum kanomenu parthutu irunthen intha vara blog 😇😊☺😆

    ReplyDelete
  2. வணக்கம் சார்🙏

    ஹாய் நட்பூஸ்💕

    ReplyDelete
  3. வணக்கம் உங்க எல்லாருக்கும்

    ReplyDelete
  4. அனைவருக்கும் இரவு வணக்கங்கள்

    ReplyDelete
  5. படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  6. இரத்த படலம் மறுவாசிப்பு முடிந்து விட்டது. மறுபடியும் அதே அட்டகாசமான கதை. தயாரிப்பு மிரட்டல் ரகம். நன்றி. மீண்டும் ஒரு குண்டு புத்தகம் மறுவாசிப்பு முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. அருமை பரணி..!
      (சில முக்கிய கடமைகள் இருப்பபதால்)
      நான் ரெகுலர் இதழ்களை வாசிக்கவே இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகிவிடும்..!
      நீங்களானால் ரத்தபடலத்தை மறுவாசிப்பே செய்து முடித்திருக்கிறீர்கள்.. பொறாமையா கீதுபா..! :-)

      Delete
    2. பொறுக்கமாட்டமல் அவ்வபோது லயன் 400ஐ மட்டும் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்..! :-)

      Delete
    3. இந்த மாதம் வந்த புத்தகங்கள் அனைத்தும் படித்து விட்டேன் கண்ணா :-)

      நேரம் கிடைக்கும் போது விமர்சனம் :-)

      Delete
    4. //மறுபடியும் அதே அட்டகாசமான கதை//

      ???

      This statement shocked the hell out of me!!!!

      ;-)

      Delete
    5. செல்வம் அபிராமி @ :-)

      Delete
  7. வேதாளருக்கு வெயிட்டிங்..!

    ReplyDelete
    Replies
    1. அப்படியே கழுகுமலை கோட்டை & உடனே முடிந்து போன மர்மமனிதன் மார்டின் கதை

      Delete
  8. சிகப்பாய் ஒரு சிலுவை : கதை ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிந்தது தெரியவில்லை, செம விறுவிறுப்பாக சென்றது. வித்தியாசமான கதை, எந்த இடத்தில் போரடிக்கவில்லை. வண்ணத்தில் கண்களுக்கு இதமாக இருந்தது.

    ReplyDelete
  9. ///நமது ப்ளூகோட்ஸ் தொடரின் பிதாமகர் ரௌல் கோவான் அவர்கள் நேற்று தனது 82-ம் வயதினில் தீரா புற்று நோய்க்குப் பலியாகி விட்டுள்ளார் ///

    R I P 😔

    ReplyDelete
  10. Super sir for point 3.

    Naanga ellam innum bangali, athai january book fair time la kidaikka seithal magilchiyaga irukkum. 😇🙂

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு முன்னமே ரெடியாகிடும் நண்பரே ; black & white இதழ் தானே ; தயாரிப்பினில் பெருசாய் கம்பு சுழற்றவெல்லாம் வேண்டியிராது !

      Delete
    2. Thank you sir.

      We always ready for that. 🙏🙏

      Delete
    3. Naanga innum vangalai (spelling mistake in previous comment) ☺😊

      Delete
  11. //இந்த 4 ஆல்ப SMASHING '70s முன்பதிவினில் இன்னமும் தயக்கம் கொண்டிருப்போராய் நீங்கள் இருப்பின், உங்கள் மனதுகளைத் தாராளமாய் மாற்றிடலாம் என்பதே எனது பரிந்துரையாக இருக்கும் ! நிச்சயமாய் ஹைதர் அலி ஜாடைகள் எங்குமே தட்டுப்படாதென்ற மட்டுக்கு தைரியம் கொள்ளலாம் ! //

    கொட்டிக் கிடைக்கும் குவியலில் இருந்து நமக்கு தேவை எட்டு!!! நல்லா இருக்கும்ன்னு எனக்கு முழு நம்பிக்கை. உள்ளது.

    ReplyDelete
  12. டெக்ஸ் மினி சாகசம்: இதுபோல் ஒரு கதையை கார்சனுக்கு நான் எதிர்பார்க்கவில்லை. ஜேம்ஸ் கதையை எழுதியவர் இந்த கதையை எழுதி இருப்பார் என நினைக்கிறேன். கார்சன் மேல் எனக்கு இருந்த நல்லெண்ணத்தை மாற்றுவது போல் இருந்த இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை. இதுவரை வந்த மினி சாகசங்களை ரசித்த எனக்கு இந்த கதையில் கார்சன் கையாலப்பட்ட விதம் பிடிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ரிடையர் ஆகப்போகும் வயசில் கார்சனின் வாழ்க்கையில் ஒரே ஒரு தபா வசந்தம் வீசியிருக்கிறது! அது பொறுக்கவில்லையா உங்களுக்கு?!!

      Delete
    2. அதானே சிகப்பாய் ஒரு சிலுவையில் கூட டெக்ஸ் கேப்பார் ஏப்பா நீ வாழ்க்கை கொடுக்கறையானு.. மனுசன் டெக்ஸ்காக மறுத்துவிடுவார். ஏதோ அவருக்கு என்று தானாக அமைந்துள்ளது.

      Delete
    3. காதல் இளவரசன் கார்சன்.

      வாழ்க வாழ்க..

      Delete
    4. //ரிடையர் ஆகப்போகும் வயசில் கார்சனின் வாழ்க்கையில் ஒரே ஒரு தபா வசந்தம் வீசியிருக்கிறது! அது பொறுக்கவில்லையா உங்களுக்கு?!!//
      😂😂😆😆🤣😀😃😄

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. அவருக்கு வசந்தம் வீசட்டும் ஆனால் வசந்தம் வீசிய உறவு முறை எனக்கு மன நெருடலை தந்தது. இதுவே ஜேம்ஸ் பாண்ட் கதை என்றால் சகஜமாக எடுத்து கொண்டு இருப்பேன்.

      Delete
    7. //ஜேம்ஸ் கதையை எழுதியவர் இந்த கதையை எழுதி இருப்பார் என நினைக்கிறேன். //

      டெக்சின் டாப் கதாசிரியரும், டெக்ஸ் எடிட்டருமான மௌரோ போசெல்லியின் உருவாக்கம் சார் இது !

      Delete
    8. ///அவருக்கு வசந்தம் வீசட்டும் ஆனால் வசந்தம் வீசிய உறவு முறை எனக்கு மன நெருடலை தந்தது. ///

      நெருடல் அவசியமற்றது! அந்தப் பெண் தன் கணவனை இழந்து தனி மரமாய் நிற்பவள்! நம்ம ஆள் பிறந்ததிலிருந்தே தனி மரம் தான்! அந்த இரண்டு மரங்களும் ஊதைக் காற்றில் ஒன்றோடொன்று உரசிக்கொண்டன! அதில் என்ன தவறிருக்க முடியும்ன்னேன்?!!

      Delete
    9. விடுங்க விஜய் உங்களுக்கு பிடித்து இருக்கிறது எனக்கு பிடிக்க வில்லை :-)

      அப்புறம் கதை செம ஸ்லோ :-)

      Delete
    10. தவிர, தன்னைப் பாதுகாக்க வந்தவரே கார்சன் என்பதை அறியாமல் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய அந்தப் பெண், உண்மை தெரிந்த பின் தன்னால் காயமுற்ற கார்சனுக்கு பிரதியுபகாரமாக 'தன்னால் இயன்றதைக்' கொடுக்க முன்வந்திருக்கிறாள்! வாட்டும் அந்தக் குளிரில் ஒரு வயோதிகருக்கு இதைவிட அவள் வேறென்ன சிறந்த உபகாரம் செய்துவிடமுடியும்?!!

      கார்சனுக்கெல்லாம் இப்படிக்கிப்படி யாராவது மனமிளகி ஒரு வாய்ப்புக் கொடுத்தால் தான் உண்டு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் PfB!

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. இந்தக் கதைக்கு நான் முதலில் வைக்க நினைத்த பெயரைக் கேட்டால் சிரிப்ப்பாய் சிரிப்பீர்கள் !!

      Delete
    13. சார்.. இந்த நள்ளிரவிலும் சிரிப்பாய் சிரிக்க நாங்க ரெடி!

      Delete
    14. "கார்சனின் 'கபி ..கபி..' !"

      "முறைமாமன்" கவுண்டர் - மணிவண்ணன் மாடுலேஷனின் !

      Delete
    15. //இந்தக் கதைக்கு நான் முதலில் வைக்க நினைத்த பெயரைக் கேட்டால் சிரிப்ப்பாய் சிரிப்பீர்கள் !!//

      ஐம்பதிலும் ஆசை வரும். (அ)
      கார்சனுக்கும் ஆசை வரும்
      இது போலத்தானே சார் .........?

      Delete
    16. //ரிடையர் ஆகப்போகும் வயசில் கார்சனின் வாழ்க்கையில் ஒரே ஒரு தபா வசந்தம் வீசியிருக்கிறது! அது பொறுக்கவில்லையா உங்களுக்கு?!!//

      என்ன ஒரு கரிசனம் கார்ஸன் மேல 😀😃😂🤣😃

      Delete
    17. ///கார்சனின் 'கபி ..கபி..'///

      ஹா ஹா ஹா!! அட்டகாசம் சார்!!😂🤣😂🤣😂🤣

      Delete
    18. ///என்ன ஒரு கரிசனம் கார்ஸன் மேல///

      இன்னிக்கு நாம காட்டும் கரிசனத்தை நாளைக்கு நமக்கும் யாராவது காட்டுவாங்கன்ற நப்பாசைதான் நண்பரே! ;)

      Delete

    19. நெருடல் அவசியமற்றது! அந்தப் பெண் தன் கணவனை இழந்து தனி மரமாய் நிற்பவள்! நம்ம ஆள் பிறந்ததிலிருந்தே தனி மரம் தான்! அந்த இரண்டு மரங்களும் ஊதைக் காற்றில் ஒன்றோடொன்று உரசிக்கொண்டன! அதில் என்ன தவறிருக்க முடியும்ன்னேன்?!!


      ######

      :-)))))

      Delete
    20. கார்சனின Situational Song.
      " ஊதக்காத்து வீசயில,
      குயிலு கூவயில,
      கொஞ்சிடும் வேளையில
      குருவிங்க பேசயில
      வாட தான் என்னை வாட்டுது..
      வாட்டுது."
      (இளையராஜா Song எம்புட்டு உபயோகமாகுது பாருங்க.

      Delete
    21. கார்சன், விதவை மறுமணம் லாஜிக் சரிதான்... அது கா.க.கா (இரண்டாம் பாகம்) போல அழுத்தமாக சொல்லப்பட்டால் நன்று.

      Delete
    22. // கார்சனின் 'கபி ..கபி..' //

      ஆகா. செம. கதைக்கு ஏற்ற தலைப்பு:-)

      Delete
  13. Sir...70's classics mathiri 80s classic book ..spider, mayavi, james bond and Modesty vanthaal superah irukkum...

    ReplyDelete
    Replies
    1. '60s என்ன பாவம் பண்ணுச்சு நண்பரே ?

      Delete
  14. ஆஹா!! ஈ-ரோடு ஆன்லைன் திருவிழாவின் சூப்பர் டூப்பர் வெற்றியாகட்டும்; முகவர்களிடமிருந்து வரும் உற்சாக ஆர்டர்களாகட்டும்; காலியாகிக்கொண்டிருக்கும் லயன்-400 இதழ்களாகட்டும் - உற்சாக மீட்டர்களை எகிறச் செய்திருக்கின்றன!

    மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!

    ReplyDelete
  15. ஒரு நூறோ, இருநூறோ போட்டுக் கொடுத்தீர்களெனில், பஸ்ஸையோ, ரயிலையோ , மாட்டு வண்டியையோ பிடிச்சு உங்க வீட்டாண்டையே வந்து கூட இன்னொரு கோழி கீச்சல் கீச்சித் தந்து விடுவேன் !//

    😃😃😃😃

    ReplyDelete
  16. ////அந்தச் சிறு அணிக்கு ஒரு பெரிய பார்சலில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புகளும், காரமும் அனுப்பியுள்ள நண்பர் ராகவன் ஒருபக்கமும் ; சன்மானமொன்றை அனுப்பியுள்ள நண்பர் N.சரவணகுமார் இன்னொரு பக்கமும் திக்குமுக்காடச் செய்துள்ளனர் ! ////


    அருமை அருமை!!
    அட்டகாசமான வேலை செய்திருக்கிறீர்கள் நண்பர்களே! வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. அதிலும் அந்த ஸ்வீட்ஸ் சகலமும் premium ரகங்கள் !! ஏவ்வ்வ்வ்வ்வ் !!

      Delete
    2. ///ஏவ்வ்வ்வ்வ்வ்///

      கொடுக்காமல் சாப்பிட்டு ஏப்பம் விட்டவர்களுக்கு துளியூண்டாவது வயிறு வலிக்கும்னு பெரியவங்க சொல்வாங்க! அது நிஜமா இருந்தா நல்லாருக்கும்!

      Delete
  17. //டென்காலி ; டயானா ; ரெக்ஸ் ; டெவில் ; ஜும்போ ; குறன் ; வம்பேசி ; ஈடென் தீவுகள் -//

    படிக்கும் போதே வாயில் ஊருகிறது சார். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.


    //சமீபத்தைய இந்தத் திடீர் சேகரிப்பு மோகங்கள் தொடர்கதையாகிடும் பட்சங்களில், casual வாசகர்கள் பாதிக்கப்படலாகாதே என்பதால் இந்த முன்ஜாக்கிரதை !//

    சார் சமீப மோகம், டெக்ஸ் கதைகள் ஹிட் ஆன காரணமே ஒழிய சேகரிப்பாக தெரியவில்லை. நெஞ்சே எழு முதல் கதைகள் மற்றும் உங்களது மொழிபெயர்ப்பு என இங்கே, முகநூல், வாட்டசப் மற்றும் கிளப் ஹவுஸ் என பல இடங்களில் அதனை பற்றிய சிலாகிப்பே காரணம் என நினைக்கிறேன்.

    பொதுவாகவே அதிக டெக்ஸ் என்று இருந்த அயர்ச்சி கூட சமீப அதிரடி கதைகளில் மாறியுள்ளது.

    தொடர்ந்து ஹிட் ஆகும் பட்சத்தில் கண்டிப்பாக டெக்ஸ் உடனே காலியாகத்தான் செய்யும்.

    சார் ஒரு சந்தேகம் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா முத்து 50இல் வருகிறதா?

    ReplyDelete
    Replies
    1. 2022-ல் உறுதியாய் உள்ளது நண்பரே ! எங்கே என்பதை அட்டவணையில் சொல்கிறேனே !

      Delete
  18. இன்னமும் வாங்காதிருக்கும் நண்பர்களின் பொருட்டு அவை நமது ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் தடையின்றிக் கிடைக்கும் !//

    அருமையான யோசனை சார்..ஆனால் எங்களையும் ஏன் ரேஷனில் அடைக்கிறிங்க...

    ReplyDelete
    Replies
    1. பதிவைப் படியுங்க இன்னொருக்கா ; பதில் அங்குள்ளது !

      Delete
  19. // நெஞ்சே எழு" & "பிரளயப் பயணம்" இதழ்களை இன்னும் கொஞ்சம் தயார் செய்திடவுள்ளோம் ! //

    Good move. I like this decision.

    ReplyDelete
  20. ராகவன் மற்றும் N.சரவணன் தரமான செயல் நண்பர்களே. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. செப்டம்பர் மாதம் மதுரை புக் ஃபேர் இல்லையா சார் 🤣😎

    ReplyDelete
    Replies
    1. எந்த செப்டெம்பரென்று நீங்க குறிப்பிடலியே சார் ?

      Delete
  22. Online book fair ஹிட்டடிததில் மகிழ்ச்சி

    ReplyDelete
  23. // லயன் # 400 & சிகப்பாயொரு சிலுவை இதழ்களின் கையிருப்பு தரைதட்டி விட்டுள்ளது ! So அவற்றில் இனி யாருக்கும் மொத்தமாய் புக்ஸ் அனுப்பிடப்படாது ; இன்னமும் வாங்காதிருக்கும் நண்பர்களின் பொருட்டு அவை நமது ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் தடையின்றிக் கிடைக்கும் //

    குட் சார்.

    ReplyDelete
  24. சூ மந்திரகாளி - சிரிப்புக்கு பட்டர் பிங்கர் guarantee :-)

    அடுத்த வாரம் முதல் இந்த கதையை குழந்தைகளுக்கு சொல்லப் போகிறேன்.

    வால் முளைத்த வாரிசு - என் குழந்தைகளுக்கு இந்த கதை சொல்லி முடிக்க இன்னும் ஏழு பக்கங்கள் உள்ளன.நாளை கதையை சொல்லி முடிக்க வேண்டும் :-)

    ReplyDelete
  25. காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு,அன்பு ஆசிரியருக்கு, 🙏.
    இந்த மாதம் ஒரு பெரிய காமிக்ஸ் புதையலில் மூழ்கடித்து விட்டீர்கள்.எதை வாங்குவது,எதை படிப்பது என புரியாமல் திணறினோம்.இந்த ஆவல் அடங்க இன்னும் 1 வாரமாவது ஆகும்.
    உங்களால், காமிக்ஸ் முகநூல் தளம், காமிக்ஸ் வாட்ஸ்அப் குரூப்ஸ் 1 வாரமாக முடங்கியுள்ளது.எங்கு பாத்தாலும்,400,இ ப,ஆ பு ஃபேர்,புக் ஃபேர் ஸ்பெஷல் பதிவுகள் தான்.

    "எல்லா பட்டாசையும் இந்த மாதமே கொளுத்தி விட்டால், தீபாவளிக்கு என்ன செய்வார்கள்" என்று மனதில் பரபரப்பு.அதை அறிவியுங்கள்.

    பின் "நெஞ்சே எழு,பிரளயம்" பிரிண்ட் செய்வது ஒரு ஆசுவாசம்.இது இன்னமும் எனக்கு கிட்டவில்லை.இனி நிம்மதி.காத்திருக்கிறேன்.

    இரத்தப் படலம் கைக்கு வந்தது.
    விலை அதிகமாக இருந்ததால்,
    இதன் மீது பெரிதாக எதிர்பார்ப்பு இல்லைனாலும், பெட்டியை பிரித்தவுடன் வந்த பரபரப்பு சொல்லி மாளாது.அருமை சார்.
    இந்த விலையில் இது பெரிய விசியம். லயன் எதை கொடுத்தாலும் "தரம்" நிரந்தரம்.
    3 நாளாக சிறுபிள்ளை போல் அடிக்கடி தொட்டு ரசித்தேன்.இன்று தான்
    படிக்க ஆரம்பித்து விட்டேன்.
    30 வருடங்களுக்கு முன் திகில் காமிக்ஸில் முதல் இரத்தப்படலம் படித்த ஞாபகம் வருகிறது.

    மீண்டும்...
    தீபாவளி மலர் எதுவாக இருக்கும் என மனம் அலைபாய்கிறது.சாந்தப்படுத்தினால் தேவலை.

    மீண்டும் அடுத்த பதிவில்🌹...

    ReplyDelete
    Replies
    1. சார்...வழக்கமாய் இந்த ஆகஸ்டில், ஈரோடு புத்தக விழா ; நண்பர்கள் சந்திப்பு ; மரத்தடி மீட்டிங் என்று களை கட்டிடும் ! ஆனால் இந்தப் பேரிடரின் உபயத்தில், நிறைய விஷயங்கள் கடந்த ஒன்றரை ஆண்டிற்குள் பெரும் மாற்றங்கள் கண்டுவிட்டுள்ளனவே ?! So மயிலேறி உலகைச் சுற்றிய சுப்ரமணியரின் பாணி இந்நாட்களில் சாத்தியமில்லை என்றான பின்னே, அம்மையப்பரைச் சுற்றி வந்தே ஞானப் பழத்தை வாங்கிடும் பாணியினையே கையிலெடுக்க வேண்டிப் போனது !

      ஆனால் அந்த சிறு முயற்சியினை தெறிக்கச் செய்யும் பெரு வெற்றியாக்கிய புண்ணியம் 'தல'யையும் ; நம்மவர்களையுமே சாரும் !

      Delete
    2. ///எல்லா பட்டாசையும் இந்த மாதமே கொளுத்தி விட்டால், தீபாவளிக்கு என்ன செய்வார்கள்" என்று மனதில் பரபரப்பு.///

      சூப்பரா சொன்னீங்க நண்பரே! தடித்தடியான புத்தகங்களைத் தாங்கியபோது இந்தமாதமே தீபாவளி வந்துவிட்டதைப்போல ஒரு உற்சாகம் ஏற்பட்டதை மறுக்கமுடியாது!

      Delete
    3. ஈரோடு புக் ஷோ. மிக ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன்.ஆன்லைனில் வாங்கியது அந்த ஏமாற்றத்தை சற்றே குறைத்தது.உங்களைப் போல நல்ல நட்புக்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் ஈரோடு விஜயன் சார்.💐

      Delete
    4. @ஸ்ரீ

      உங்களைப் போன்ற அருமையான நண்பர்களைச் சந்திக்க நானுமே ஆவலுடன் இருக்கிறேன் நண்பரே!

      அப்புறம்... என்னை 'விஜய்' என்றழைத்தீர்களானால் மகிழ்வேன்! இல்லாவிட்டால் ஈவி, ஈனாவினா, பூனையார், இ.சி.ஈ.இ - இப்படி ஏதாவது ஒரு பெயரில் அழைத்தாலும் ஓகே தான்! 'விஜயன்' வேண்டாமே?

      ஏன்னா நீங்க அப்படிக் கூப்பிடும்போதெல்லாம் யாரோ ஏழெட்டு பேர் என் சட்டைக்காலரைப் பிடித்து உலுக்குவது போலவும், முட்டுச் சந்துகளில் குட்டிக்கரணம் அடிப்பது போலவும் மாயத் தோற்றங்கள் ஏற்பட்டு 'விழி பிதுங்கவும்' செய்கின்றன! 😝😝😝😝

      Delete
  26. E-rode book fair ல order பண்ணின புக்ஸ் எல்லாம் வந்திடுச்சு Sir.. Excellent packing.. Thanks kudos..E-rode book fair ல ஆர்டர் பண்றதுக்கு video call பண்றப்ப response பெரிசா இருக்காதுன்னு நினைச்சேன்.. But, very nice experience & thanks to the sales persons.

    ReplyDelete
    Replies
    1. உங்களது முதல் முறையா சார் - நம்மிடம் ஆன்லைனில் வாங்குவது ? Glad it went well !!

      Delete
    2. உங்கள் அனுபவத்தை இங்கு பின்னூட்டம் இட்டது மிகவும் நன்று நண்பரே. தொடர்ந்து நமது காமிக்ஸ் பற்றி இங்கு பின்னூட்டம் இடுங்கள் நண்பரே.

      Delete
  27. '//Anyways - இந்த 4 ஆல்ப SMASHING '70s முன்பதிவினில் இன்னமும் தயக்கம் கொண்டிருப்போராய் நீங்கள் இருப்பின், உங்கள் மனதுகளைத் தாராளமாய் மாற்றிடலாம் என்பதே எனது பரிந்துரையாக இருக்கும் ! நிச்சயமாய் ஹைதர் அலி ஜாடைகள் எங்குமே தட்டுப்படாதென்ற மட்டுக்கு தைரியம் கொள்ளலாம்// எனக்கு தைரியம் வந்துவிட்டது

    ReplyDelete
    Replies
    1. ///எனக்கு தைரியம் வந்துவிட்டது///

      சூப்பர்!!

      Delete
  28. அருமை சார்....நண்பர்களே கலக்குறீங்க....70கதைகள் ஏக்கத்த கூட்டுது...அட்டவணை ஏக்கமும் கூடுது...முத்து மலரால் கூடுதலாய்...

    சார் ஒளிமயமான எதிர்காலம் நம் அனைவருக்கும் தெரியுது

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குத் தெரிஞ்சா இந்தப் சேர, சோழ, பாண்டிய, நாட்டுக்கே தெரிஞ்சா மெரி தான் ஸ்டீல் ! ஜமாய்த்திடுவோம் !

      Delete
  29. Editor sir, still haven't received my books. Eagerly waiting..Ordered last Saturday.

    ReplyDelete
    Replies
    1. அச்சோ சாரி சார் ; ஒரேயொரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விடுங்களேன் ; நாளை காலையில் உங்களுக்கான பதில் & இன்னும் அனுப்பியிரா பட்சத்தில் புக்ஸ் கிடைக்க ஏற்பாடு செய்து விடுகிறேன் !

      Delete
  30. ###இன்னமும் வாங்காதிருக்கும் நண்பர்களின் பொருட்டு அவை நமது ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் தடையின்றிக் கிடைக்கும்###

    நான் இன்னும் வாங்கவில்லை சார்..
    அடுத்த மாத சம்பளத்திற்க்காக வெயிட்டிங்..

    எனக்காக இரண்டு புத்தகங்களிலும் தலா ஒரு பிரதி எடுத்து வைக்க தங்கள் பணியாளர்களிடம் கோரியிருக்கிறேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. தாராளமாய் இருக்கும் சிவா ; பதறாது வாங்கிக் கொள்ளுங்கள் !

      Delete
  31. சார், flashgordon போன்ற விண்வெளி சார்ந்த scifi கதைகள் போட ட்ரை பண்ணுங்க சார், இன்னும் காதுல புய்ப்பம்னு ஒதுக்கி வைக்க வேண்டாமே, scifi genre க்கும் நிறைய ரசிகர்கள் இருக்கோம்

    ReplyDelete
    Replies
    1. சாரே....ரிவர்ஸ் கியர் ; சைடு கியர் ; குப்பறடிக்கா கியர் என்று அவரவர் ஆசைகளுக்கேற்ப கியர் போடும் ஏற்பாடுகள் கணிசமாகவே செஞ்சாச்சு ; இனிமேல் என் ஆசைக்கென கொஞ்ச காலத்துக்கு முன்செல்லும் forward கியரைப் போட்டுக் கொள்கிறேனே - ப்ளீஸ் ?

      Delete
  32. டெக்ஸ் வண்ண மறுபதிப்புக்கான கோரிக்கை பட்டியலில் இருக்கும் கதைகளில் ஒவ்வொன்றாக சிறு அறிமுகம் அல்லது விமர்சனம் எழுத முயற்சிக்கப் போகிறேன். அந்த வரிசையில் முதல் கதை பழிக்குப் பழி.

    அந்த லயன் கோடைமலரின் அட்டைப்படத்தில் ஸ்பைடரும் ஆர்ச்சியும் மட்டுமே. பின்னட்டையில் திகில் கோடைமலருக்கான விளம்பரம். டெக்ஸ் கிடையாது.

    இருந்தாலும் 83 பக்கம் பற்ற வைக்கப்படும் சரம் 205 பக்கம் வரை படபடவென வெடித்துக் கொண்டே செல்கிறது.

    கதையை பஸ் டிக்கெட்டை நாலாக் கிழித்து அதில் ஒரு துண்டில் ஒரே வரியில் எழுதி விடலாம். வசனங்களுக்கு ரொம்ப சிரமப்படத் தேவையும் இல்லை. கும், சத், ணங் மட்டுந்தான். இருந்தும் 100+ பக்கங்களை பரபரப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

    பேக்கர் என்னும் பணக்கார அடாவடி இளைஞன். அவனுடைய அப்பா. வழக்கம் போல கையாலாகதா செரீப். ரூபி் என்னும் கலப்பின வில்லன் என மிகக் குறைந்த கேரக்டர்களே. இவர்களின் வழியில் குறுக்கிடும் டெக்ஸ் & கார்சன். டெக்ஸை விட விரைவாக சுடும் வில்லனாக ரூபி (நியாயமான முறையில் அல்ல). க்ளைமாக்ஸிற்கு முன் டெக்ஸ் சுடப்பட்டு காயமுற்று கிடப்பது பாயசக்காரர்களுக்கும் உற்சாகமூட்டும் சங்கதி.

    நிறைய பேரிடம் இல்லாத கதை. வந்தால் டெக்ஸ் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்ததாக இருக்கும்.

    அடுத்த அறிமுகம் சாத்தான் வேட்டை…

    ReplyDelete
    Replies
    1. "வந்தால்" நஹி ; வருது சார்....!

      Delete
    2. ஷெரீப்..

      அருமையான முயற்சி! தொடருங்கள்...

      Delete
    3. வந்தால்" நஹி ; வருது சார்....!//

      😍😍😍😍

      Delete
    4. அருமையான முயற்சி! தொடருங்கள்...//

      என்ன செய்யறது இ. சி. ஈ கி. அவர்களே. புது டெக்ஸ் கதைக்கு விமர்சனம் எழுதலாம்னா புக்கு ஸ்டாக்கில இல்லை. அதான் பழய கதைகளுக்கு எழுத முடிவு பண்ணிட்டேன். முகநூலில் போட்டோக்களோடு போட்டிருக்கேன். பாத்துக்குங்க.

      Delete
    5. வந்தால்" நஹி ; வருது சார்....!

      சூப்பர் தகவல்...

      Delete
    6. என்னுடைய ஆல் டைம் பேவரைட் பழிக்கு பழி.

      ரூபிஸ்காட் என்ற கலப்பின வெள்ளையனிடம் டெக்ஸ் ஒற்றைக்கு ஒற்றை சண்டையில் தோற்று ,வலது கரம் செயலற்று,மருத்துவர்கள் ரெஸ்ட் எடுக்க சொல்லியும் கேட்காமல் மறுபடியும் ஒற்றைக்கு ஒற்றையில் இடது கரத்தில் துப்பாக்கி யூஸ் செய்து வில்லனை வீழ்த்துவார்.
      டெக்ஸ் கதையை எப்போது படித்தாலும் தன்னம்பிக்கை வரும்.
      இந்த கதையில் தன்னம்பிக்கை மீட்டர் அதிகம்!!!!

      Delete
  33. Sir, இது சரிப்பட்டு வராது...

    அடுத்த வருடம் கண்டிப்பாக டெக்ஸுக்கு தனி தடம் வேண்டும் சார். மாசம் ஒரு டெக்ஸ் புக் இருந்தால்தான் திருப்தியா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பேரிடர் நாட்களின் தாக்கமா - இல்லையா ? என்று சொல்லத்தெரியலை சார் ; ஆனால் மாமூலான நாட்களை விடவும் இந்த வேளைகளில் "தல' அதிரடிகளுக்கு reach சற்றே ஜாஸ்தியாய் இருப்பதாய்த் தென்படுகிறது தான் !

      Delete
    2. இது..! இது பேச்சு!

      Delete
  34. டியர் எடி,

    உங்கள் அலுவலர்கள் உண்மையில் ஒரு பிரம்மாண்ட சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். இவ்வளவு வேலை மத்தியிலும் ஒவ்வொரு முறை தொ(ல்)லைபேசும்போதும் 'சொல்லுங்க சார்' என்று பதிலளிக்கும் பாங்கு அலாதி.

    இவ்வாரத்தில் உங்கள் சார்பில், ஒரு கூடுதல் விடுமுறையை அளிக்கும்படி விண்ணப்பம் போட்டுவைக்கிறேன்.

    2022 கேட்டலாக்கை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். 70s Specials included.

    ReplyDelete
    Replies
    1. கொடுமையை ஏன் கேட்கிறீர்கள் சார் - நாளையும் வேலை !!

      Delete
    2. //இவ்வாரத்தில் உங்கள் சார்பில், ஒரு கூடுதல் விடுமுறையை அளிக்கும்படி விண்ணப்பம் போட்டுவைக்கிறேன்.//

      Delete
  35. //ரிடையர் ஆகப்போகும் வயசில் கார்சனின் வாழ்க்கையில் ஒரே ஒரு தபா வசந்தம் வீசியிருக்கிறது! அது பொறுக்கவில்லையா உங்களுக்கு?!!//

    என்ன ஒரு கரிசனம் கார்ஸன் மேல 😀😃😂🤣😃

    ReplyDelete
  36. இரத்தப்படலம் ஏன் நம்மெல்லோர் இதயத்திலும் இடம் பிடித்துள்ளது என்றால் ஒவ்வொருவர் ஒரு காரணம் சொல்லக்கூடும்... அதன் சிறப்பம்சம் எல்லாம் எனக்கும் பிடிக்கும். எனினும், இன்றைய உலகினை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு பெரிய இராஜ்யத்தின் ஏகாதிபதிகாரத்தை வான் ஹாம்மே வெளிச்சம் போட்டு காட்டியதே எனக்கு இந்த படலம் மிகவும் பிடிக்க காரணமாகும்.
    சிறந்த பணியாற்றியிருந்தார்... அதனை போன்றே கருவினை கெட்டியாக பிடித்துக்கொண்டு அப்படிப்பட்ட நிஜமான ராஜாங்கத்தை இப்படி டெக்ஸ் துவம்ஸம் செய்து அதகளம் செய்தால் எப்படியிருக்கும் என்று அநியாயத்திற்கு எதிர்த்து நிற்கும் சாகசம் தான் "சிகப்பாய் ஒரு சிலுவை"...

    இந்தக்கதையில் இன்றுவரை உலகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு உலகளாவிய சக்தியின் துவக்கப் புள்ளியாக இருந்திட்ட "க்ளூ க்ளக்ஸ் கான்" என்னுமொரு இனவெறி கூட்டம் இருந்தது. இந்த கூட்டத்தை தான் இரத்தப்படலம் ஆறாம் பாகத்தில் வான் ஹாம்மே துகிலுரித்து காட்டியிருப்பார். எனினும் டெக்ஸ் வில்லர் கதைகள் பெரும்பான்மை ஒரு ஜாலியான பொழுதுபோக்கு கதை என்பதால் இதனில் அத்தனை விரிவாக எதுவும் சொல்லப்பட்டிருக்காது. எனினும் "பழிவாங்கும் புயல்" ஒரு exceptional டெக்ஸ் சாகஸம்.

    கதையின் மிகப்பெரிய பிளஸ் டெக்ஸ் வில்லரும் கிட் கார்சனும் பேசுகிற உரையாடல்தான். டெக்ஸ் வில்லர் கார்சன் பேசும் உரையாடல்களில் நகைச்சுவை எள்ளி நகையாடும். அதனை தொடர்ந்து உருவாக்குவது என்பது அத்தனை சுலபமல்ல. அதிலே கார்சன் அத்தனை துல்லியமாக டெக்ஸின் எண்ணவோட்டத்தை கணித்து வைத்திருப்பார். எப்போதும் டெக்ஸ் வில்லர் கதைகளில் எனக்கு ரொம்பவும் பிடித்த விஷயம், அவர் அநீதியை எதிர்ப்பார், தேவைப்பட்டால் அந்த அநீதி ஆதரிக்கிற சட்டத்தையும் எந்த பயமின்றி எதிர்ப்பார். அந்த ஊரின் ஷெரிப்பை கதவை மூடி விசாரிக்கும் காட்சி அதகளம் ஆக இருக்கும். அந்த ஷெரிப்பும் கொஞ்சம் நேர்மையானவர் தான் என்று தெரிந்தவுடன் அங்கே "டும் டூஷ் டமால்" எதற்கும் இடம் விடாமல் அமைதியாக போய்விடுகிறது.

    நடந்ததை காரண காரியங்கள் மூலமாக யோசித்து யூகிப்பது டெக்ஸ் குழுவின் பலம். "சிகப்பாய் ஒரு சிலுவை" நிச்சயமாக டெக்ஸ்வில்லர் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்றுதான்.

    ReplyDelete
  37. இது வரைக்கும் நான் கேட்டிருந்த ஆன்லைன் புத்தகத்திருவிழா புத்தகங்களுக்கு பணம் அனுப்பும் விவரங்கள் வரவில்லை சார்...

    ReplyDelete
  38. சார்! நீண்ட நாட்களாக மனதில் உள்ள கேள்வி!

    மற்ற இதழ்களை விட்டுவிடுகிறேன்..

    டெக்ஸ்க்கு ஏன் சார் மறுபதிப்புகள்?

    சிகப்பாய் ஒரு சிலுவை கையில் ஏந்தும்போது இதழின் தரம் , வண்ணக் கலவை பரவசப்படுத்தினாலும் இவ்விலையில் ஒரு புது இதழை ஏந்தியிருப்பின் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை...

    ஒரு பழைய இதழின் மேம்படுத்தப்பட்ட தரம் ஒரு புதிய இதழ் கொணரும் ஆர்வம், பரபரப்பை அளிப்பதில்லை..

    ஏன் சார்?

    ReplyDelete
    Replies
    1. Dear Sir
      I missed MDS
      So, a gopden chance to read such story
      unlike many other tex re re prints
      Regards
      Arvind

      Delete
  39. ///Anyways - இந்த 4 ஆல்ப SMASHING '70s முன்பதிவினில் இன்னமும் தயக்கம் கொண்டிருப்போராய் நீங்கள் இருப்பின், உங்கள் மனதுகளைத் தாராளமாய் மாற்றிடலாம் என்பதே எனது பரிந்துரையாக இருக்கும் ////

    எடிட்டர் சார்.. கம்பேனிக்கு கட்டுப்படியாகுமா தெரியலை.. ஆனால்,
    'முன்பதிவு செய்யும் அனைவருக்கும் வேதாளரின் முத்திரை மோதிரம் ஒன்று இலவசம்'ன்னு அறிவிச்சீங்கன்னா முன்பதிவு இன்னும் களைகட்டும் சார்!

    ReplyDelete
    Replies
    1. இதுக்குதான் வம்ம ஈவி வேணும்

      Delete
    2. டெக்ஸ்ஸின் விரலில் வேதாளரின் முத்திரை மோதிரத்தை போட்டு விட்டால், கும், சத்,ணங்..கிற்கு DTS எஃபெக்ட் கிடைத்தது போலிருக்குமே.

      Delete
  40. எனக்கு E ரோடு புத்தகத் திருவிழா சிறப்பிதழ்கள் வேண்டும்.கிடைக்குமா சார் ?

    ReplyDelete
    Replies
    1. உடனடியாக நமது லயன் அலுவலகத்திற்கு வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்
      எல்லாமே கிடைக்கும் கேட்டது கிடைக்கும்

      Delete
  41. காத்திருக்கும் காலங்களில் வேதாளரை முழு வண்ணத்தினில் உலவச் செய்திடலாம் தான் ! Fingers crossed once more !!//

    கண்ணுக்கு குளிர்ச்சியாக காதில் தேனாக பாயும் வாக்கியம் சார்...

    ReplyDelete
  42. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  43. தரத்தில் லயன் அளவுக்கு இல்லாவிட்டாலும், தொண்ணூறுகளின் முற்பாதி வரையிலாவது, லயன் குழுமத்தை அடுத்து தமிழில் சொல்லிக் கொள்ளும்படி இருந்தது ராணி காமிக்ஸ் மட்டுமே (அதிலும் அதன் ஆரம்ப ஆண்டுகளில்)!

    70ஸ் & 80ஸ் சீனியர் கிட்டுகள் முத்துவை சிலாகித்துக் கொண்டிருந்த வேளையில், எண்பதுகளின் பிற்பாதியில் காமிக்ஸ் வாசிக்கத் துவங்கிய எங்களுக்கோ லயன், மினி லயன், திகில் இவற்றைத் தாண்டினால் நேரே ராணி காமிக்ஸ் தான்!

    அச்சமயம், உங்கள் "போட்டி" நிறுவனமான முத்து காமிக்ஸில் சொல்லிக் கொள்ளும் படியான புதிய கதைகள் வந்ததில்லை - பெரும்பாலும் இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட் இவர்களின் மறுபதிப்புகள் மட்டும் பழமை நெடி மாறாமல் வந்து கொண்டிருந்தன. மாறுதலாக ஒரு சில ஜான் சில்வர், மாண்ட்ரேக் மற்றும் உலகப்போர் கதைகள் வந்ததுண்டு.
    ஆக, லயன், மினி லயன் மற்றும் திகிலில் இருந்த இளமை ஊர்ப் பெரியவர் முத்துவிடம் இல்லாவிடினும், உள்ளூர் அழகி ராணியிடம் நிறையவே இருந்தது. மேத்தா, பூந்தளிர் மற்றும் பார்வதி மீதும் தனி அபிமானம் இருந்ததுண்டு.

    ஆனால்.... சிலாகிக்கும் அடிக்கடி நீங்கள், காமிக்ஸ் இந்திரஜாலை மதித்தில்லை நாங்கள்! பல்லைப் பெயர்க்கும் முன்னுக்குப் பின்னான தமிழ் நடையில், "காவாலிக் கோட்டையில் குண்டாந்தடியர் குரங்குச் சேட்டை - III" போன்ற கலவரமான தலைப்புகளுடன், அடுக்கடுக்காய் குவிந்து கிடக்கும் இந்திரஜால்களை சத்தியமாக ஏறிட்டுக் கூடப் பார்த்ததில்லை. அமர் சித்திரக் கதைகளிடத்தும் ஏறத்தாழ அதே அணுகுமுறை தான்!

    ஹாட்லைனைத் தொடர்ந்து, பத்து ஆண்டுகளாக உங்கள் வலைப்பூவையும் வாசித்து வருகிறேன். ராணி காமிக்ஸ் நின்று பதினைந்து ஆண்டுகள் (மானசீகமாக 25+ ஆண்டுகள்) ஆகியும் கூட, அதை ஒரு (முன்னாள்) போட்டி நிறுவனமாக மட்டுமே அணுகி, அதைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் கவனமாகத் தவிர்த்து வருவது வியப்பையும், ஒரு தமிழ் காமிக்ஸ் ரசிகனாக, சற்றே வருத்தத்தையும் தருகிறது - நீங்கள் ஒரு மிகப் பெரிய காமிக்ஸ் ரசிகர் என்ற வகையிலும்!

    பிற்காலத்தில் இந்திரஜால் காமிக்ஸ்கள் ஒன்றிரண்டை சிரமப்பட்டு வாசித்ததில், அந்நிறுவனம் மீது பச்சாதாபமே மேலிட்டது. மொழியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், முழுவண்ணத்தில் வந்து கொண்டிருந்த அந்த காமிக்ஸ்கள் லயனுக்கும், ராணிக்கு சரியான போட்டியாக இருந்து, எங்களுக்கும் சிறப்பான வாசிப்பு அனுபவத்தினைத் தந்திருக்கும்! நீங்கள், கவனமாய் ராணி காமிக்ஸை தவிர்த்து எழுதும் அந்தப் பெருமை இன்று இந்திரஜாலுக்கும் கிடைத்திருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. மொழியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால்
      அந்த மொழிநடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஏனென்றால் எங்கள் நண்பர்களே நாங்கள் அவ்வாறு பேசிக்கொள்வோம் உதாரணமாக மாண்ட்ரேக் பூவாய் சுடு அப்படி என்பதற்கு பதிலாக சுடு பூவாய் இங்கிலீஷ் அப்படியே தமிழ்ல உள்ளபடி அப்படியே டிரான்ஸ்லேட் பண்ணி இருப்பாங்க பண்ணி இருப்பாங்க போல

      Delete
    2. காவாலிக் கோட்டையில் குண்டாந்தடியர் குரங்குச் சேட்டை - yes. ஆனால் அந்த காமெடி மொழிப் பெயர்ப்பிலும் ஒரு வசீகரம் உண்டு நண்பரே. 'டெஸ்மண்டு' என்று போட்டிருக்கிறார்களே என்று நகைத்தவன் குறில் ஒலி தான் அப்பெயருக்கு சரியான உச்சரிப்பு என்றரிந்து வியந்தேன். என்ன...கதையை இஷ்டத்திற்கு சுருக்கி வெளியிட்டிருப்பார்கள்.

      Delete
    3. நமது லயன் மற்றும் முத்து காமிக்ஸ் உடன் நான் சிறுவயதில் விரும்பி படித்து.2015 இந்திரஜாலில் நான் படிக்காத பகதூர் மற்றும் வேதாளர் கதைகள் கிடைக்க அதனை படிக்க ஆரம்பித்த போது மிகவும் தடுமாறினேன் காரணம் அந்த மொழி பெயர்ப்பு; சிறுவயதில் இது தெரியவில்லை :-) அவர்கள் மொழிபெயர்ப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இன்றும் அது நம் அனைவரையும் கவர்ந்து இழுத்து இருக்கும் ஒரு காமிக்ஸாக உலா வந்து இருக்கும்.

      Delete
    4. சிறுவயதில் இந்திரஜால் கதைகள் படித்ததின் விளைவா என தெரியவில்லை சிலநேரங்களில் எனது பின்னூட்டங்களை நான் படிக்கும் போது ஜூனூன் தமிழ் சீரியல் ஞாபகம் வருகிறது :-)

      Delete
  44. // நமது ப்ளூகோட்ஸ் தொடரின் பிதாமகர் ரௌல் கோவான் அவர்கள் நேற்று தனது 82-ம் வயதினில் தீரா புற்று நோய்க்குப் பலியாகி விட்டுள்ளார் !//

    RIP sir.

    ReplyDelete
  45. // கொஞ்சமாய் மூச்சு விட அவகாசம் கிட்டும் முதல் தருணத்தினில் டெக்சின் "நெஞ்சே எழு" & "பிரளயப் பயணம்" இதழ்களை இன்னும் கொஞ்சம் தயார் செய்திடவுள்ளோம் ! //

    அருமை சார்...
    இதுவரை வாங்காமல் விட்ட நண்பர்களுக்கு நிம்மதியான செய்தி!

    ReplyDelete
  46. ஒரு பிரளய பயணம்!

    8.5/10


    வழக்கமாக வறண்ட பாலைவனங்களிலும், குளிரான வனாந்திரங்களிலும் சாகசம் செய்து வரும் டெக்ஸ் வில்லர் & கோ விற்கு இந்த ஆற்றுவழி படகு பயணக் களம் ஒரு நல்ல மாறுதல். தனக்குப் போட்டியாக ஆரம்பிக்கப் படவிருக்கும் படகுக் கம்பெனியை முளையிலேயே கிள்ளி எறிந்து தன் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட எத்தனிக்கும் ஒரு முதலாளியின் முகமூடியைக் கிழித்து சட்டத்தின் முன் நிறுத்தும் இந்த சாகசம் வாசிப்போர்க்கு ஒரு adventurous expedition சென்ற உணர்வை வழங்குகிறது. கதையோட்டத்தின் tempo எங்கேயும் எள்ளளவும் குறையவில்லை... ஒரு மிடறு கூடுதலாகத் தோன்றினாலும் டெக்ஸ்‐ கார்சன் எள்ளல்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் ரகம். எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் பரவாயில்லை... உதாரணமாக "என்ன னொன்னே?".

    ரசிக்க... சிரிக்க... ஏற்ற கதை!

    இருப்பு இல்லாததால் புத்தகம் கிடைக்காத நண்பர்களுக்கும் விரைவில் கிடைக்க ஆசிரியர் ஏற்பாடு செய்வார் என நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்படிப் பண்ணலாம் சார் ; ஒரு புக்கில் பிழைத்திருத்தங்களைப் போட்டு அனுப்பிடுங்கள் ; நாம் மறுக்கா தயார் செய்திடவுள்ள புக்சில் அவற்றை சரி செய்து விட்டு - "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக - பிழைகளே இல்லாததொரு இதழ்" என்று விளம்பரம் செய்தால், அவற்றையும் ஆயிரம்,ரெண்டாயிரத்துக்கு தள்ள எங்கேனும் வழி பிறக்கக்கூடும் !!

      :-)

      Delete
  47. ஒரு நூறோ, இருநூறோ போட்டுக் கொடுத்தீர்களெனில், பஸ்ஸையோ, ரயிலையோ , மாட்டு வண்டியையோ பிடிச்சு உங்க வீட்டாண்டையே வந்து கூட இன்னொரு கோழி கீச்சல் கீச்சித் தந்து விடுவேன்

    #####

    :-))))

    ReplyDelete
  48. அந்தச் சிறு அணிக்கு ஒரு பெரிய பார்சலில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புகளும், காரமும் அனுப்பியுள்ள நண்பர் ராகவன் ஒருபக்கமும் ; சன்மானமொன்றை அனுப்பியுள்ள நண்பர் N.சரவணகுமார் இன்னொரு பக்கமும் திக்குமுக்காடச் செய்துள்ளனர் ! //

    சூப்பர் நண்பர்களே..

    மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  49. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  50. //ROAD எபெக்டா ? வேறெதுவுமா - சொல்லத்தெரியலை ; ஆனால் லயன் # 400 & சிகப்பாயொரு சிலுவை இதழ்களின் கையிருப்பு தரைதட்டி விட்டுள்ளது ! //

    சூப்பரு....

    ReplyDelete
  51. புத்தம் புது பூமி வேண்டும்:


    1."கால்தடங்கள் இன்னமும் புதிதாகவே தெரிந்திட அவை சொல்லும் சேதிகளை ஒரு திறந்த புத்தகத்திலிருந்து வாசிப்பதைப் போல டெக்ஸ் சுலபமாய் கிரகித்துக் கொண்டார் ! வன்மேற்கின் சகல நுணுக்கங்களையும் அறிந்திருந்த அந்த ரேஞ்சரின் தீட்சண்யப் பார்வையிலிருந்து எதுவுமே தப்பவில்லை"

    2."நாம் இம்மக்களுக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை எனும்போது,அவர்களுக்கு நம் மீது வன்மம் இருக்க முகாந்திரம் கிடையாதே !"
    "மான்களும் தான் மலைச் சிங்கங்களுக்கு எந்த தீங்கும் செய்வதில்லை ! அதற்காக சிங்கங்கள் சாத்வீதகமாய் இருந்து விடுகின்றனவா ?!"

    3."பாலாடைக் கட்டியை முகர்ந்து விட்ட எலிகளின் உற்சாகம் !"

    "பாவம்...பாலாடைக் கட்டிக்குக் காவலாக நான்கு கடுவன் பூனைகள் இருப்பது அவர்களுக்குத் தெரியாது தான் !"

    -வசனங்கள் அட்டகாசம்.

    நிலத்திற்கான ஒரு சமூகத்தின் பயணம்,இந்த ஒன்லைனை வைத்துக் கொண்டு சிலந்தி தனது வலையை அபாரமாக பின்னுவது போல திரைக்கதையை அட்டகாசமாக வடிவமைத்துள்ளார்கள்,அதில் நம் வில்லர் & கோ அருமையாக பொருந்திப் போவது கூடுதல் சிறப்பு...

    "ஸாமுவேல் கோல்ட்டின் கண்டுபிடிப்பு-ரிவால்வரில் சிலிண்டர் பிஸ்டல்" போன்ற குட்டித் தகவல்களும் உண்டு...

    செயன்னீக்களின் தலைவன் கெண்டோ மண்டைத்தொலிகளை என் பெல்ட்டில் தொங்க விடப் போகிறேன் என்ற வசனத்தை கடைசி வரை பேசிக் கொண்டேதான் போகிறான்,வழக்கம்போல் அது நிறைவுறாமலே போகிறது...

    வியப்பு என்னவெனில் இந்த மாதம் வெளிவந்த இரண்டு (புத்தம் புது பூமி வேண்டும்,சிகப்பாய் ஒரு சிலுவை) டெக்ஸ் கதைகளிலும் ஒரே ஊரின் பெயர் (மாண்ட்கோமரி) அடிபடுவதுதான்.

    வன்முறையை மறுதளிக்கும் க்வெக்கர்ஸ் கும்பல்,நீதியை நிலைநாட்ட எதையும் செய்யும் டெக்ஸ் & கோ இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் நம்மிடம் பல கேள்விகளை முன்வைக்கிறது...
    உளவறிய வந்து மாட்டிக் கொள்ளும் செய்ன்னீ வீரனை டெக்ஸ் & கோ விற்கு தெரியாமல் க்வேக்கர்ஸ் கும்பல் விடுவிப்பதும்,அதையறிந்த டெக்ஸ் & கோ மற்றும் க்வேக்கர்ஸ் தலைவர் க்ளெண்டனுக்கும் இடையே நடக்கும் விவாதம் சுவராஸ்யமானது...
    கார்ஸன் சொல்வது போல் இந்த பூமியில் எல்லோருக்கும் இடம் உண்டுதானே...

    டெக்ஸ் வில்லரின் கதைகளின் ஸ்பெஷலே கதையுடன் நம்மைக் கட்டி இழுத்து செல்வதுதான்,ஆக எவ்வளவு பக்கங்கள் இருப்பினும் நம்மால் அயற்சியடையாமல் பயணிக்க முடிகிறது...

    300 பக்கம் வந்தாலும் இரசிக்க வெக்கறாங்க,30 பக்கம் வந்தாலும் இரசிக்க வெக்கறாங்க இந்த வில்லர் & கோ...
    மொத்தத்தில் சிறந்த பொழுது போக்கான வாசிப்பிற்கு உத்தரவாதம் உண்டு...

    கதை வாசிப்பினிடையே மனதில் ஓடிய ஒரு எண்ணம்-
    "எவ்வளவு நாளைக்கு இப்படி டெக்ஸ் அராஜகங்களை எதிர்ப்பதான டெம்லேட் கதைகளையே படித்துக் கொண்டிருப்போம்" ???!!!
    அதற்கு அதே மனமே சொன்ன பதில்,
    "எப்போது இந்த பூமியில் வன்முறைகள் ஒழிகிறதோ,அராஜகங்கள் ஓய்கிறதோ அப்போது நாம் வில்லர் கதைகளை வாசிப்பது ஒருவேளை போரடிக்கலாம்"...!!!

    தலைவாழை விருந்தை சாப்பிட்டு விட்டு ஒரு பீடா சாப்பிட்டால் எப்படி நிறைவாக இருக்குமோ அப்படி இருந்தது "பனியில் ஒரு புது நேசம்."

    பயணத்தை முடித்தவுடன் டெக்ஸ் & கோ வை பார்த்து சொல்லத் தோன்றியது இதுதான் "உங்களுக்கு எல்லாம் சாவே கிடையாது,போங்கயா,போங்கயாபோய் வேலைய பாருங்கய்யா"...

    இதுபோன்ற சாகஸங்களை படித்து முடித்தாலே நமக்கு கிடைக்கும் மனநிறைவிற்கும்,
    சந்தோஷத்திற்கும் ஈடு இணை இல்லைதான்...

    கெட்டி அட்டை வழக்கத்தை விட செம கெட்டி,மிக்க மகிழ்ச்சியான அதே நேரத்தில் சிகப்பாய் ஒரு சிலுவையின் கெட்டி அட்டை ஒரு மாற்றுக் குறைவாய் தோன்றுவது எனக்கு மட்டும்தானா ?!
    டிராகன் நகரம் அட்டை இதைவிட சற்றே கெட்டியாக இருந்ததாய் தோன்றுகிறது...

    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
    Replies
    1. புக்கின் பருமனுக்கும், அவற்றின் hardbound அட்டைகளுக்குமிடையே ஒரு கணக்கு உண்டு சார் ; சன்னமான புக்சில் கனம் கூடுதலாய் அட்டைகளைப் போட்டு வைத்தால் - நாளாசாரியாய் இடது கீழ்க்கோடியில் இழுக்க ஆரம்பிக்கும் ; வெடிப்பு விட ஆரம்பிக்கும் ! 384 பக்கங்களுக்கான மேலட்டையை 200 பக்க இதழின் தலையில் சாத்திட சாத்தியப்படாது !

      Delete
    2. ஓ இதில் இப்படி ஒரு விஷயம் இருக்கா,விளக்கத்திற்கு நன்றிகள் சார்...

      Delete
    3. தடிமனான அட்டை - சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் விரலுக்கு ஏற்ற வீக்கம் :-)

      Delete
  52. அசுர பூமியில் தோர்கல்:
    மாயாஜால உலகம் எப்போதும் நமக்கு ஆச்சர்யமானதுதான்...
    வியப்பான,சிலிர்ப்பான அனுபவங்களை அள்ளித் தரும்,அசுர பூமியில் தோர்கலும் அப்படியே...
    ஷைகானின் குணங்களில் இருந்து மீண்டு வர தோர்கல் தன் இயல்பு நினைவுகளை மீட்டெடுக்க துணிந்து எடுக்கும் முயற்சிகள் இறுதியில் சுபம்...
    உதவி செய்பவர்கள் கடவுளர் ஆயினும் ஒரு நிபந்தனைகளோடே உதவி புரிகின்றனர், ஒன்றை இழந்தால் ஒன்று கிடைக்கும் என்ற தத்துவமும் இதனுடன் பயணிக்கிறது...

    பிளாஷ்பேக் கேட்டது குத்தமாய்யா மொமெண்ட்...

    மொழிபெயர்ப்பு சிறப்பு,
    "கிறிஸ் பேசும் அடிமை வர்க்கம்,அதிகார வர்க்கம்" சார்ந்த வசனம் நச்...
    அதே நேரத்தில்,அசுர பூமியின் அரசன் ஜியோர்ட் சில இடங்களில் ஓ.கே,ஓ.கே என பேசும் வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமோ என்றும் தோன்றியது...
    மற்றபடி எல்லாம் நிறைவே...

    சிங்கிள் ஷாட் சாகஸம்,யானைப் பசிக்கு காரப்பொறி...

    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
    Replies
    1. // சில இடங்களில் ஓ.கே,ஓ.கே என பேசும் வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமோ என்றும் தோன்றியது. //

      சரி. Good suggestion.

      Delete
  53. சிகப்பாய் ஒரு சிலுவை::
    நீண்ட நாளுக்கு முன்பு க & வெ -யில் படித்தது,தற்போது வண்ணத்தில் நிறைவான வாசிப்பு...
    ஒரு மழை நாளில் டெக்ஸ் & கார்ஸனின் ஸ்டார்க்வில் எண்ட்ரி அபாரமான காட்சியமைப்பு,ஒரு ஆக்‌ஷன் சினிமாவின் ஓப்பனிங் சீன் போல...
    அப்புறம் என்ன வழக்கம்போல் அதிரி புதிரி நடவடிக்கை தான்...

    ஹார்ட் பைண்டிங் தரம்,என்ன அட்டை இன்னும் கொஞ்சம் கெட்டியாக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது...

    வருடத்திற்கு நான்கைந்து டெக்ஸ் சிறப்பிதழ்களை ஹார்ட் பைண்டிங்கில் வெளியிட்டு விடுங்கள் சார்,இத்தாலிய வாசகர்களைப் போல் அழகாய் அலமாரியில் அடுக்கி அழகுப் பார்க்கனும் சார்...

    சூ மந்திரக்காளி:

    இதற்கு முன் படித்ததாய் நினைவில்லை,மொழிபெயர்ப்பின் ஜாலத்தில் சிரிப்பு மத்தாப்புக்களாய் தெறித்துள்ளன...
    ஆக்‌ஷன் + காமெடி கெளபாய் இதில் கூடுதலாய் மேஜிக் கெளபாயாக உருவெடுத்திருப்பது கூடுதல் சிறப்பு...
    அமைதியானதொரு தருணத்தில் இலகுவான மனம் நிறைவான ஒரு வாசிப்பு...

    வருகிறது வெளியீட்டில்,நீதிக்குத் தலைவணங்கு,தாயில்லாமல் டால்டனில்லை விளம்பரம் வந்துள்ளதே ?!
    டிசம்பரில் வரும் இந்த இதழ் ரெகுலர் தடத்தில் வருகிறதா,சிறப்பு வெளியீட்டுத் தடத்தில் வருகிறதா சார் ???!!!

    ReplyDelete
    Replies
    1. //இத்தாலிய வாசகர்களைப் போல் அழகாய் அலமாரியில் அடுக்கி அழகுப் பார்க்கனும்//

      பெரிய பெரிய அலமாரிகளாய் வேண்டியிருக்கும் சார் !

      //நீதிக்குத் தலைவணங்கு,தாயில்லாமல் டால்டனில்லை விளம்பரம் வந்துள்ளதே ?!
      டிசம்பரில் வரும் இந்த இதழ் ரெகுலர் தடத்தில் வருகிறதா,சிறப்பு வெளியீட்டுத் தடத்தில் வருகிறதா ?//

      அடுத்த பதிவில் சொல்லுறேன் சார் !

      Delete
    2. And அது "நிதிக்குத் தலைவணங்கு" ; not "நீதிக்கு" !

      Delete
    3. அட ஆமாம் போன பதிவிலேயே டெ.வி க்கு சொல்லி இருந்திங்க...
      "நி" கொஞ்சம் சுளுக்கிகிச்சு சார்...

      Delete
  54. மொத்தத்தில் இந்த மாத இதழ்கள் 100 % நிறைவு,புத்தம் புது பூமி வேண்டும் தீபாவளி இதழை முன்கூட்டியே ஏந்திய உணர்வை கொடுத்தது என்றால் அது மிகையில்லை...

    ReplyDelete
    Replies
    1. லயனின் இதழ் # 400 ஆச்சே சார் !! நமக்கு ஒரு மினி தீபாவளித் தருணம் தானே !!

      Delete
  55. //நெருடல் அவசியமற்றது! அந்தப் பெண் தன் கணவனை இழந்து தனி மரமாய் நிற்பவள்! நம்ம ஆள் பிறந்ததிலிருந்தே தனி மரம் தான்! அந்த இரண்டு மரங்களும் ஊதைக் காற்றில் ஒன்றோடொன்று உரசிக்கொண்டன! அதில் என்ன தவறிருக்க முடியும்ன்னேன்?!!//

    E.V நிங்கள் இ தளத்து காமெடி ஜாம்பவான்.ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. @Sridharanrckz

      ஒரு இரக்க சிந்தையுள்ள இளவரசருக்கு இதெல்லாம் சாதாரணம்! ஹிஹி!

      Delete
  56. Dear Editor,

    //வேதாளரை முழு வண்ணத்தினில் உலவச் செய்திடலாம் தான் ! Fingers crossed once more !!//

    Please release in its originally created way. Avoid changing art size. Worst thing is to do repainting some thing, which was best in its original B/W. All our recent painted Steel Claw, The Spider or Robot Archie were the best-worst example of spoiling the original art.

    And the to be planned release of painted version of Survival comics (Uyirai Thedi) collection. Please don't spoil the art of José Ortiz. Please release it in original B/W, if possible it its original art size.

    Thanks!

    ReplyDelete
    Replies
    1. Phantom & company are going to be in Original Black & White sir - at least for the initial 2 years.

      Delete
  57. //எப்போது இந்த பூமியில் வன்முறைகள் ஒழிகிறதோ,அராஜகங்கள் ஓய்கிறதோ அப்போது நாம் வில்லர் கதைகளை வாசிப்பது ஒருவேளை போரடிக்கலாம்"...!!!//
    சூப்பர் sir.
    அதுபோல இந்த வசனமா பிடித்திருந்தது பார்ப்பதற்கு பாரறைகள் திடமாக தெரியும் ஆனால் அதன் கீழே பல விஷப்பூச்சிகள் குடியிருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள் .

    ReplyDelete
  58. டெக்ஸ் & கோ, பக்கம் பக்கமாக பேசுகிறார்கள், என்று சலித்துக்கொண்டீர்கள் சார். இனிமேல் இது போல பேசும்கதைகளாக தேடி க்கொண்டு வாருங்கள். செம. டெக்ஸ் கதைகளில் இந்த டெம்ப்ளேட் மிக நன்றாக உள்ளது. டெக்ஸ் :முதலில் கார்சன், இரண்டாவது நான், மூன்றாவது நீ டைகர் ஜாக் :நான்காவது நான் அமைதி காப்பேன் (அதற்குள் ஆட்டம் முடிந்திருக்கும் ) பின்வாங்குபவர்களைப்பார்த்து டெக்ஸ் :நாம் அவர்களுக்காக செய்த கச்சேரி பிடிக்கவில்லை போலும் முகாமிற்கே பொய்த்தனியாக உட்கார்ந்து அவன்களாக வாசிக்கக்கூடும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. // டெக்ஸ் கதைகளில் இந்த டெம்ப்ளேட் மிக நன்றாக உள்ளது //

      அதே,அதே ராஜசேகரன்...

      Delete
    2. பத்தே நாட்களுக்குள் 380 பக்கங்களை மாற்றி எழுதுவதென்பது குறுக்கைக் கழற்றிக் கையில் கொடுத்து விடும் பணியல்லவா சார் - அந்த அயர்வில் சொன்ன வார்த்தைகள் அவை ! ஆனால் இன்று நீங்கள் ரசிப்பதைப் பார்க்கும் போது ஜண்டு பாம் தடவிக்கிட்டது போலுள்ளது !

      Delete
    3. தெறிக்கும் வேகத்தில் நீங்கள் செய்த மொழிபெயர்ப்பு அட்டகாசம் சார். மிகவும் நன்றாக இருந்தது. வரும் காலங்களில் இதே அணுகுமுறையை கடைபிடித்தால் எப்படி இருக்கும் என்று கேட்க ஆசை ஆனால் நடைமுறைக்கு எல்லா நேரமும் இது போல் அமையாது என்பதால் கேள்வியை வாபஸ் வாங்கி கொள்கிறேன் :-)

      Delete
  59. தல தலதான். லயன் 400ஆண்டாண்டுகளுக்கு பேசப்படும்என்பது நிச்சயம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. லயன் 400 - ஆண்டாண்டு காலங்களுக்குப் பேசப்படும் என்றீர்களா சார் ? முதலில் படிச்சப்போ : லயன் - 400 ஆண்டுகளுக்குப் பேசப்படும் என்று வாசித்து வைத்தேன் !!

      40 வருஷங்களையே தொட்டுப் பிடிச்ச பாடைக் காணோமே ; அதற்குள் 400 வருஷங்களுக்கு வண்டியை forward அடிச்சுப்புட்டாரே ? என்று திகைத்தது !!

      Delete
    2. // லயன் - 400 ஆண்டுகளுக்குப் பேசப்படும் என்று வாசித்து வைத்தேன் !! //
      எனக்கும் அப்படித்தான் தோணிச்சி சார்...
      ஹி,ஹி,ஹி...

      Delete
  60. // இயன்றதைச் செய்து வரும் அந்தச் சிறு அணிக்கு ஒரு பெரிய பார்சலில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புகளும், காரமும் அனுப்பியுள்ள நண்பர் ராகவன் ஒருபக்கமும் ; சன்மானமொன்றை அனுப்பியுள்ள நண்பர் N.சரவணகுமார் இன்னொரு பக்கமும் திக்குமுக்காடச் செய்துள்ளனர் ! //
    சிறப்பு,சிறப்பு...
    உழைப்பவர்களை ஊக்குவிப்பது என்றும் மதிப்பிற்குரிய செயல்தான்...

    ReplyDelete
  61. // நிறைய Phantom வாடகை சைக்கிள் moments இருந்துள்ளன தான் - இவ்வாரத்தினில் ! //
    படிக்கும்போதே தலையைச் சுற்றுகிறது,இத்தனை விஷயங்களையும் தலைக்குள் வாங்கிக் கொண்டு இருப்பது பெரிய விஷயம் தான் சார்...

    ReplyDelete
    Replies
    1. உள்ளே நிறைய போட்டு அடைக்க வேண்டியிருப்பதாலோ - என்னவோ, வெளியே காற்றாட விட்டு விட்டாச்சே சார் !

      Delete
    2. தூத்துக்குடி பீச் பக்கம் வந்து கொஞ்சம் காற்றாட விடுங்கள் சார் ;-)

      Delete
  62. // நமது கவனங்கள் அடுத்ததாய் 2022-ன் அட்டவணை மீதே ! //
    அந்த தங்கத் தருணம் வந்து விட்டதோ...!!!

    // அட்டவணையின் ஹைலைட்டே முத்து ஆண்டுமலர் # 50 தான் எனும் போது - அதன் மீதான பணிகளும் இனி தட தடக்க வேண்டி வரும் ! //
    தளத்தில் ஐம்பது இலட்சம் பார்வைகளுக்கான ஸ்பெஷல் பற்றி ஏதாவது தகவல் உண்டா சார்...

    ReplyDelete
    Replies
    1. நியாயப்படிப் பார்த்தால் அதனுள் ஒரு மில்லியனாவது போட்டுத் தாக்கிய ஸ்டீலுக்கோசரம் ஒரு "ஸ்டீல் ஸ்பெஷல்" போடணும் தான் ; ஆனால் பூமி தாங்காதென்பதால் வேறு ஏதாச்சும் தான் யோசிக்கணும் சார் ! ரெகுலர் புத்தக விழாக்கள் சார்ந்த நிலவரங்கள் தொடரவுள்ள மாதங்களில் எவ்விதம் உள்ளன ? என்று பார்த்த பின்னே 5 மில்லியன் பற்றி யோசிப்போம் !

      Delete
    2. இதை ஸ்டீலுக்கு தெரியாம பார்த்துக்கனுமே...!!!

      Delete
    3. சிம்பிள் அறிவரசு. இந்த பின்னூட்டம் ஸ்டீலுக்கானது என்று சொல்லி விட்டீங்க என்றால் நம்ப பொன்ராசு இதனை படிக்காமல் தாண்டி சென்று விடுவான் :-)

      Delete
  63. // நமது ப்ளூகோட்ஸ் தொடரின் பிதாமகர் ரௌல் கோவான் அவர்கள் நேற்று தனது 82-ம் வயதினில் தீரா புற்று நோய்க்குப் பலியாகி விட்டுள்ளார் ! //

    வருத்தமான செய்தி,ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  64. // ஆயிரம் ரூபாய்க்கு எனது கோழி கீச்சல் கையெழுத்தைக் கொண்ட டெக்ஸ் இதழின் விற்பனை போலான சமாச்சாரங்கள் பக்கமாய்த் திருப்பிடக் கோருகிறேன் ! //
    என்னாது இது ?! ஒன்னும் புரியலையே...

    ReplyDelete
    Replies
    1. புரியாதே போகட்டும் சார் ; தலைநோவுகள் குறைச்சலாகவாவது இருந்திடும் !

      Delete
    2. எனக்கும் இந்த வரிகளை படிக்கும் போது புரியவில்லை. எதற்கும் காலை டிபனை உள்ளே தள்ளி விட்டு படித்து பார்க்கலாம் என உள்ளேன் :-)

      Delete
    3. இப்ப கொஞ்சம் சன்னமா புரியுது சார்...

      Delete
    4. எனக்கும் புரிந்து விட்டது :-) ஆனால் இன்னும் ராகி தோசை வரவில்லை யுவர் ஆனர். :-)

      Delete
  65. // தொடரவுள்ள TEX இதழ்களில் நமது பிரிண்ட் ரன்னை சன்னமாய் கூட்டிட உத்தேசித்துள்ளோம் ! //
    நல்ல முடிவு சார்...

    ReplyDelete
  66. கிடங்கு கொஞ்சம் காலியானது மகிழ்ச்சி சார். நமது காமிக்ஸ் பதுக்கப்பட்டு கொள்ளை விலைக்கு விற்கப்படுவது (அது நமது புத்தகத்தின் அருமைக்குச் சான்றாக இருப்பது வேறு விஷயம்) வருந்தத்தக்க செய்தி. இப்படி அதிக விலை கொடுத்து வாங்குவோர் இருக்கும்போது விற்பனை கூடாடது ஏனோ? (பதுக்கல் டெக்ஸ்க்கு மட்டும்தானா?)

    ReplyDelete
  67. இன்னுமும் பிசியாக தான் நேரம் கழிகிறது, *கார்சனின் காதல் கட்டு* கூட நாலு பக்கம் தான் படித்துள்ளேன்.

    ReplyDelete
  68. சார் ஆகஸ்ட் மாத இதழ்களில் இரத்த படலம் தவிர்த்து அனைத்து புத்தகங்களையும் படித்து விட்டேன். ஒரு suggestion சார். நண்பர் ஒருவர் சொன்னது போல சூ மந்திர காளி கதையில் அந்த font ரொம்பவே லைட் ஆக இருந்தது அடுத்த முறை கொஞ்சம் கவனிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  69. //70s முயற்சிகள் மட்டும் வெற்றி கண்டிடும் பட்சத்தினில் - காத்திருக்கும் காலங்களில் வேதாளரை முழு வண்ணத்தினில் உலவச் செய்திடலாம் தான் ! Fingers crossed once more !!//

    கண்டிப்பா Smash hit அடிக்கும். வேதாளரை வண்ணத்தில் காண வெறித்தனமாக ஐ ம் வெய்ட்டிங்..

    ReplyDelete
    Replies
    1. அடடே..நம் மத்தியில் இப்படியொரு அதிதீவிர Phantom fan ஆ !!

      Delete
  70. இதற்கிடையே எங்கிருந்தோ திரட்டியுள்ள உத்வேகங்களோடு, முகவர்கள் இரட்டிப்பாய் ஆர்டர்களை அனுப்பி வைத்துள்ளனர் - லயன் # 400 இதழுக்கும் ; "சிகப்பாயொரு சிலுவை" இதழுக்கும் ! போன மாசம் வரைக்கும் 20 புக் ; 30 புக் என்று வாங்கியோர் இப்போது திடு திடுப்பென 100 ; 200 வேணுமெனும் போது அவர்களுக்கு பதில் சொல்ல நேரிடும் திணறல்கள் வித்தியாச ரகம்

    ########

    இது மிகவும் மகிழ்வான செய்தி சார்..:-)

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் உருட்டுக் கட்டைகளைக் கொண்டு சாத்துவது மகிழ்வான சமாச்சாரமாக இல்லை தலீவரே !

      Delete
  71. // தொடரவுள்ள TEX இதழ்களில் நமது பிரிண்ட் ரன்னை சன்னமாய் கூட்டிட உத்தேசித்துள்ளோம் ! சமீபத்தைய இந்தத் திடீர் சேகரிப்பு மோகங்கள் தொடர்கதையாகிடும் பட்சங்களில், casual வாசகர்கள் பாதிக்கப்படலாகாதே என்பதால் இந்த முன்ஜாக்கிரதை ! அதே சமயம் ஒரேடியாய்ப் போட்டுத் தாக்கி விட்டு தேவுடு காக்கவும் கூடாதென்பதிலும் கவனமாக உள்ளோம் !

    கொஞ்சமாய் மூச்சு விட அவகாசம் கிட்டும் முதல் தருணத்தினில் டெக்சின் "நெஞ்சே எழு" & "பிரளயப் பயணம்" இதழ்களை இன்னும் கொஞ்சம் தயார் செய்திடவுள்ளோம் ! //

    இத இதைத்தான் உங்கிட்ட எதிர்பார்த்தேன். இப்படி சூட்டோடு சூடாக போட்டுத் தள்ளும் செயலை இனிவரும் காலங்களில் தொடர்ந்து செய்யுங்கள்.

    ReplyDelete
  72. இரத்தப் படலம் 3.0 அருமை சார்...

    இன்னும் படிக்கவில்லை... ஆனாலும் புரட்டிப் பார்க்க பார்க்க... அழகு கொள்ளை கொள்கிறது..

    ஒரே குறை... என்னிடமுள்ள எல்லா special வெளியீடுகளிலும்... உங்கள் கையொப்பமிருக்கும்... இந்த முறை அது missing...

    ReplyDelete
    Replies
    1. அட....4.0 வில் நிவர்த்தி பண்ணிப்போம் சார் !!

      Delete
  73. // உங்கள் அலுவலர்கள் உண்மையில் ஒரு பிரம்மாண்ட சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். இவ்வளவு வேலை மத்தியிலும் ஒவ்வொரு முறை தொ(ல்)லைபேசும்போதும் 'சொல்லுங்க சார்' என்று பதிலளிக்கும் பாங்கு அலாதி. //

    உண்மையோ உண்மை.

    அதேநேரத்தில் அவர்கள் குரலில் ஒரு பயம் இருந்தது. திங்கள்கிழமை அலுவலகத்திற்கு போன் செய்து "எனது புத்தகங்கள் அனுப்பி விட்டீர்களா" என கேட்டபோது எப்போதும் நார்மலாக பேசும் நமது சகோதரி ஸ்டெல்லா, "சார் புத்தகங்கள் அனுப்ப மறந்து விட்டேன் சார். இன்று அனுப்பி விடுகிறேன் சார்" என்று பயம் + நடுக்கம் கலந்த குரலில் பேசுவதை கவனித்தேன். பாவம் எதாவது சில நண்பர்கள் புத்தகங்கள் தங்களுக்கு வரவில்லை என்று கோபத்தில் பேசியது அவர்களின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என புரிந்தது.

    நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - காமிக்ஸ் பற்றி தெரியவில்லை என்றாலும் இவர்கள் வேலையில் மிகவும் ஈடுபாடு மற்றும் ஒரு commitment உடன் பணியாற்றுகிறார்கள். வேலைப்பளூ காரணமாக சில நேரங்களில் புத்தகங்கள் அனுப்ப மறந்து இருக்கலாம். இது போன்ற தவறுகள் எல்லோருக்கும் நடப்பதுதான், நமது வீட்டில் / நாம் வேலை செய்யும் இடங்களில் வாடிக்கையாக நடக்கும் விஷயம். அதற்காக நாம் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது இல்லை. எனவே நமது அலுவலக சகோதரிகளிடம் இனி வரும் காலங்களில் கடுமையாக பேசி அவர்களை காயப்படுத்த வேண்டாமே. அவர்களை நமது உடன் பிறந்த சகோதரிகளாக நினைத்து நடத்துவோமே.🙏🙏🙏🙏

    ReplyDelete