நண்பர்களே,
வணக்கம். அது என்ன மாயமோ தெரிலிங்கண்ணா - ஒண்ணரை வருஷமாய் முன்பதிவை அறிவிச்சுப் போட்டு, ஈயோட்டும் போதெல்லாம் ஆருக்கும் நம்ம நினைப்பே தோணலே ! ஆனா இப்போ பாருங்க - அச்சும் முடிஞ்சு ; பைண்டிங்கும் முடிஞ்சு ; பொஸ்தவங்கள டப்பிக்குள்ளாற அடைக்கிற வேலை மட்டுமே பாக்கிங்கிறச்சே - நெதமும் கொறஞ்சது 15 போன் வருதுங்க - 'நெத்தப் படலம்' வேணுமேன்னு !! ஏற்கனவே புக் பண்ணின எசென்ட்களுமே இதிலே சேர்த்தி !
தெள்ளத் தெளிவாக - "இது முன்பதிவுகளுக்கோசரம் மாத்திரமே" என்று ஒண்ணரை ஆண்டுகளாய்க் கத்திக், கதறிக்,கூப்பாடு போட்ட பொழுதுகளிலெல்லாம் சயனங்களில் இருந்த நண்பர்கள், இன்றைக்கு நம்மவர்களைப் போட்டுத் தாக்கும் போது - 'ஒண்ணுமே பிரியலே..ஒலகத்திலே....!! ' என்று தான் பாடத் தோணுது !! இதோ இவ்வாரயிறுதியில் புக்குகள் கைக்குக் கிடைத்தான பின்னே, என்ன நிகழவுள்ளதென்பதை யூகிக்க இங்கே லியனார்டோ தாத்தா கூட தேவைப்படமாட்டார் தான் ! வெகு சமீபமாய் கூட, டெக்சின் "பிரளயப் பயணம்" + "நெஞ்சே எழு" இரண்டு மடங்கு ; மும்மடங்கு விலைகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன என்று நண்பர்கள் வருத்தத்தோடு தகவல் சொல்லியிருந்தனர் ! தொடரும் நாட்களில் டெக்சின் பிரிண்ட் ரன்னை கொஞ்சமாய் கூட்டிவிட்டால் இந்த நோவு தொடர்கதையாகிடாது தான் ! ஆனால் மேக்கிங்கில் பிராணனை வாங்கவல்ல "இரத்தப் படலம்" போலான இதழ்களை, உண்டான விலையினில் முன்பதிவு செய்து வாங்கிட இருந்திடும் ஒரு வண்டி அவகாசங்களை உதாசீனம் செய்து விட்டு, அப்புறமாய் கூடுதலாய் விலை தந்து வாங்கிட நேரும் பட்சத்தில் யாரை நொந்து என்ன பலனிருக்கப் போகிறது ? And அதன் நீட்சியாய் "இன்னொருக்கா போடலாமே ?" என்ற கொடி பிடிக்க இப்போவே கச்சை கட்டிக் கொண்டு நண்பர்கள் இருப்பர் என்பதும் உறுதி !
Make no mistake folks - சுற்றியதையே மேற்கொண்டும் மேற்கொண்டும் செக்கு மாடாய் சுற்றி வரும் வயசோ, ஆர்வமோ , ஆற்றலோ என்னிடம் லேது ! So தயை கூர்ந்து சேகரிப்பின் மீதான உங்கள் ஆர்வங்களை "இ.ப" மீதிருந்து - புதியன மீதோ ; Smashing '70s மீதோ திசைதிருப்பிட கரம் கூப்பிக் கோருகிறேன் ! இதோ - எனது அறையின் ஒரு மூலையில் குந்தியிருக்கும் இந்த புக்ஸ் தான் - XIII-க்கு நாம் தந்திடும் இறுதி hurray !!
And ஓராண்டுக்கும் முன்னே ஒரு சிறுமியின் வைத்தியத்துக்கென அவளது பெற்றோர் இணையத்தில் கதறிக் கொண்டிருந்தது கண்ணில்பட்ட தருணத்தில் துளிர் விட்டது தான் இந்த (நடப்பு) "இ.ப" புராஜெக்ட் ! தொடர்ந்த நாட்களில், தயாரிப்பின் செலவினங்கள் கூடியிருந்தனவோ ; குறைந்துள்ளனவோ - அதை பற்றிய கவலைகளின்றி, இந்தப் பணியிலிருந்து ஒரு தொகையினை அடையார் புற்று நோய் மையத்துக்கு உங்கள் சார்பினில் செலுத்திடவுள்ளோம் ! அது பற்றி மேற்கொண்டு - சனிக்கிழமையில் - சின்னதொரு சர்ப்ரைஸ் சகிதம் !
And இதோ - ஆன்லைன் புத்தக விழாவின் புக் லிஸ்ட் - டிஸ்கவுண்ட் விபரங்களுடன் :
ரூ.1000-க்கு மேலான ஆர்டர்களுக்கு தமிழகத்தினுள் அனுப்பிடுவதாயின் கூரியர் கட்டணங்கள் இராது !
And
ஆங்கில CINEBOOK இதழ்களில் 5-க்கு அதிகமான புக்ஸ் வாங்குவோருக்கு 10% டிஸ்கவுண்ட் இருந்திடும் !
இவை சகலமும் இந்த 2 தினங்களுக்கு மாத்திரமே - ப்ளீஸ் !
Happy Shopping all !! Bye for now ! See you around !!
1st
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம் சொல்வது சின்னமனூர் சரவணர்ங்க...!!!
ReplyDeletePlease டயலாக்க மாத்துங்க அண்ணா
Deleteசொல்லிட்டிங்கல. மாத்திருவோம் ப்ரோ. லக்கிக்கு தனிமையே துணைவன் மாதிரி ஒரு டெம்ப்ளேட் இருக்கட்டும் என்று வைத்தேன்.நண்பருக்காக மாற்றிருவோம்.🙏🙏🙏🙏🙏
Deleteநன்றி அண்ணா
DeleteGood evening.
ReplyDelete4
ReplyDelete5
ReplyDelete🙏🙏
ReplyDeleteHi..
ReplyDeleteE ரோடு ஸ்பெஷல் வெளியீடுகள் பற்றிய விவரங்கள் கொடுங்கள் ஆசானே ?!
ReplyDeleteசஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை ஆசிரியர் சார்.
ஆமா ஆமா தயவு செய்து
Deleteடெக்ஸ்ம் லக்கியும் தானே😜
Deleteவிஜயராகவன் ப்ரோ இரண்டும் மஞ்சச் சட்டை சாகசங்கள் தான். என்ன டைட்டில் என்பதில் தான் குழப்பமும் மர்மமும் நீடிக்கின்றன.
Deleteசரவணாரே@ அதானே போட்டிக்கான விடை... வெள்ளி அல்லது சனிக்கிழமை பதிவுல தானே தெரியும்..!!
Deleteயாருக்கு லக் அடிச்சிருக்கோ???
E-ரோடு.... ஈ-ரோடு ஆகும் நாளை எண்ணி ஏக்கத்துடன்....
ReplyDeleteஅட 10 க்குள்ளே
ReplyDeleteவாவ் 10
ReplyDeleteநாளொன்றுக்கு புதிய நண்பர்கள் என்ன காமிக்ஸ் இன்னும் வருகிறதா என ஆச்சரியப்படும் நிகழ்வு முகநூல் மற்றும் வாட்டசப் நடக்கிறது அதன் காரணமாகவே இந்த வினவல் என நினைக்கிறேன் சார்.
ReplyDelete1000 மேல் ஆர்டர் செய்தால் கொரியர் தள்ளுபடி வரவேற்கிறேன் சார்.
புத்தகவிழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.
டெக்ஸ் கதைகள் வழக்கமான நம்பர்களில் இருந்து குறைக்கப்பட்டுள்ளதா சார்?
பிரளய பயணம் ஒரே மாதத்தில் காலி என்பது ஆச்சரியமே.
சார் படத்தில் இருக்கும் விலை தள்ளுபடி போகவா அல்லது அதில் உள்ள விலையில் மேலும் தள்ளுபடி இருக்குமா.
Deleteலிஸ்ட்டில் இருப்பவை இதழ்களின் விலைகள் நண்பரே ; டிஸ்கவுண்ட் கணக்குகளை அவற்றின் மீது போட்டுக் கொள்ளுங்கள் !
Deleteநன்றி சார்.
Delete13
ReplyDelete13 spcl day la nammalum 13 kulla..
ReplyDeleteஅடேங்கப்பா பார்க்க கண்கோடி வேண்டும் எங்கத்தலைவனை...
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteசார் , கண்ணாடி பீரோவின் கீழ் இடது மூலையில் உள்ள TEX Comics ?☺️😊👌
ReplyDeleteஆயிரம் பக்க மெபிஸ்டோவாம்....
Delete(பதனி..பதனி...)😜
2030 க்குள்...!!!
Deleteஇரத்த படல வாழ்த்துக்கள்....:-)
ReplyDeleteவணக்கம் 💓
ReplyDeleteஇரத்த படலத்தை காண மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். ������
ReplyDeleteகனவுலயாவது அந்த பீரோவ திறந்து கண்குளிர பார்த்திடனும்...முன்னாடியே ஜேம்ஸ்பாண்ட் இரகசியமாநாடு டெக்ஸ் டயபாலிக் என அனைத்து ஹூரோக்களையும் சிறைபிடித்துள்ள அந்த பீரோ திறந்து பார்க்க ஆசை சார்..
ReplyDeleteஇதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை ஆசிரியரே.. இருக்கும்போது அதன் அருமை தெரியாமல் இழந்தபின் அதன் அருமை தெரிவதே மனிதமனம். உதாரணம் தந்தையின் அன்பு. முன்பதிவு முன்பதிவு என்று கூறும்போது ஆவலுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து இருந்தால் விலையும் குறையும் என்பது எனது கருத்து. ஆனால் அதை விட்டுவிட்டு என்னால் அதிக விலைக்கு வாங்குவதை அவர்கள் இயல்பு அதற்காகத்தானே ஒன்றுக்கு இரண்டாக புத்தகம் வாங்கிக் கொண்டிருக்கிறோம் சில நண்பர்கள். அனுபவிக்கட்டும் அதற்காக வருத்தப்படாதீர்கள் இது என்ன ஒரு முறையா இரு முறையா பல முறை....
ReplyDeleteடெக்ஸ் புக் இன் பிரின்ட் எண்ணிக்கையை கூடினால் மிக நன்று,
ReplyDeleteஆன்லைன் புத்தகவிழா வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகள் சார்🌹🌹🌹🌹
ReplyDeleteவாவ் !
ReplyDeleteகாத்திருக்கிறேன் புதிய தரிசனத்துக்கு ....
மேலும் புத்தக திருவிழாவுக்கு சேர்த்து ....
டெக்ஸ் புக் காலியாவது மகிழ்ச்சியை தந்தாலும், குடும்ப செலவுகளை சரிகட்டிட்டு காமிக்ஸின் மீதுள்ள பற்று காரணமாக ஒற்றை இதழுக்கே பட்ஜெட் ஒதுக்கும் நண்பர்கள் தேர்வு இயல்பாக டெக்ஸ் தான்... அப்படி வாங்க முயல்கையில் அதுவும் காலி என்பது அவர்களுக்கு வருத்தத்தை கூட்டும்....!!!
ReplyDeleteநண்பர்களே@ டெக்ஸ் இதழ் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொஞ்சம் விட்டுத்தாருங்க...ப்ளீஸ்!!
தொலைஞ்சிடும்னு பயப்படும் சில நண்பர்கள் டபுள்ஸ் வாங்குங்க...!!
ஆனா 3வது 4வது காபிலாம் இந்த சோதனை காலத்தில் வாங்க வேணாமே...ப்ளீஸ்🙏🙏🙏
நீங்க இப்படி வருத்தபடுவீர்கள் என்று தெரிந்து தான் ஒரு copy க்கு மேல் எந்த புத்தகமும் வாங்குவது இல்லை.
Delete7 டெக்ஸ் புத்தகங்களுக்கு மேல் வாங்குவதில்லை என்று முடிவு செய்து விட்டேன் அண்ணா ஆனால் வண்ணத்தில் வந்த பவளச் சிலை மர்மம் மற்றும் அதிகமாக சேர்த்த தேடிக்கொண்டு உள்ளேன் அண்ணா
Deleteவாத்தியாரே@ கொஞ்சம் கருணை வையுங்க... நம்ம நண்பர்களுக்கும் கொஞ்சம் கிடைக்கட்டும்....!! இந்த கொரோனா டைம் முடிச்சி, பழைய படி பிரிண்ட் ரன் அதிகமாகும் வரை 3காபிகள் மட்டும் வாங்கிக்கங்களேன்...ப்ளீஸ்!
Delete"பவளசிலைமர்மம்"-கலர் புக் தந்தா ஓரு "வெள்ளை இளவரசி" கிடைக்குமா???😉
வணக்கம் நண்பர்களே!
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஇரத்தப்படலம் மேக்கிங் பிரமாண்டம் சார்...
ReplyDeleteஅடர்சிவப்பு வண்ணங்கள் மிகப்பொருத்தமாக உள்ளன....
நேரில் பார்க்கும்போது ஜொலிக்கும்போல...!!!
பெயருக்கு ஏற்ப இரத்தசிகப்பில் அசத்துது...😍😍😍
சார் இப்பொழுதே நமது தேவைகளே வாட்ஸ்அப் செய்து அட்வான்ஸ் புக்கிங் செய்துகொள்ளலாமா மேலே கொடுத்துள்ள லிஸ்ட் வைத்து.
ReplyDeleteஅல்லது சனி ஞாயிறு மட்டும் கால் அல்லது மெசேஜ் செய்யவேண்டுமா
சனியன்று அறிவிக்கப்படவுள்ள ஸ்பெஷல் புக்ஸ் தேவையெனில், அதற்கென எப்படியும் இன்னொருக்கா ஆர்டர் செய்திட வேண்டி வரும் தானே நண்பரே ?
Deleteஅட்வான்ஸ் புக்கிங் மட்டும் தான் சார். கொரியர் ஸ்பெஷல் புத்தகம் தெரிந்த பின் தான். லார்கோ செட் ஒன்று எடுத்து வைக்கசொல்லி whatsapp செய்துள்ளேன்
Delete///சனியன்று அறிவிக்கப்படவுள்ள ஸ்பெஷல் புக்ஸ்////
Delete----அந்த பழிக்குப்பழியும், சூமந்திரகாளியும் தானேங் சார்!
வருஷ சந்தாவில் இருப்பவர்கள் ஓரிரு புத்தகங்கள் வாங்கும்ே து கூட கூரியர் தள்ளுபடி தரலாம்.. வழக்கமான இதழ்களோடு அனுப்புவது தானே
ReplyDeleteவழக்கமான இதழ்கள் கிளம்புவது வியாழனுக்கு ! ஆன்லைனில் வாங்கிடக்கூடிய இதழ்கள் மறு திங்களுக்கு !
Delete"பரவாயில்லை - என் சந்தா இதழ்கள் லேட்டாய் வரட்டும்" என்பீர்களெனில், பேஷாய் செய்திடலாம் சார் !
வேண்டாம் வேண்டாம் எனக்கு முதலில் புக் வந்தே ஆக வேண்டும்.
Deleteதிரு.டெக்ஸ் விஜயராகவன் கூறியது போல் டெக்ஸ் புத்தகங்கள் பிரிண்ட் ரன் அதிகப்படுத்தலாம்.
ReplyDelete// தொடரும் நாட்களில் டெக்சின் பிரிண்ட் ரன்னை கொஞ்சமாய் கூட்டிவிட்டால் இந்த நோவு தொடர்கதையாகிடாது தான் ! // ஆசிரியர் ஏற்கனவே சொல்லி விட்டார் சார்.
Deleteமற்றவை ஒருபுறம் இருப்பினும் நவீன யுக கதைகளான லார்கோ ,ஷெல்டன் 30%,தள்ளுபடி தருமளவிற்கு தங்கி நிற்பது வருத்தமும் ,ஆச்சர்யமும் அளிக்கும் விஷயமாகப்படுகிறது...
ReplyDeleteநண்பர்களை புரிந்துகொள்ளவே முடியவில்லையே...!!!?
இதை விடவும் ஆச்சர்யங்கள் உண்டு சார் ; நம்மிடம் ஸ்டாக் உள்ள லார்கோ இதழையே - வாட்சப் குரூப்பில் நூற்றி சொச்சம் பிரீமியம் விலை தந்து வாங்கும் ரணகளத்தை என்னவென்பீர்கள் ?
Deleteஎன்னோட கலெக்ஷன் ஸ்லாம் விலை மதிப்பில்லாதது...
Deleteகுழுமங்களில் போட்டி நடத்தி பரிசுகள் அளிக்கும் கொடையாளர்கள் ,நண்பர்கள் புது இதழ்களுடன், ஸ்மர்ப்ஸ்,லியொனார்டோ, பென்னி போன்றவற்றை பரிசு பெறும் அன்பர்களின் வீட்டு குழந்தைகளுக்காக சேர்த்து அளிக்கலாம்..
ReplyDeleteகமான்சே இதழ்களின் தொகுப்பினையும் ( இருப்பில் உள்ள செட் இதழ்கள்) பரிசாக அளிக்கலாம்...(க்ளியரன்ஸ்க்கு உதவியது போலாகும்)..
பரிசு பெற்ற அவ்விதழ்கள் சேகரத்தில் வேண்டாம் எனக் கருதும் அன்பர்கள் தங்கள் பகுதி நூலகங்களுக்கு அவற்றை அளித்து நூலக கொடையாளர்களாக மாறலாம்..
அருமையான ஐடியா
Deleteவந்தாச்சு
ReplyDeletee-rode போகும் வழி எது?..
ReplyDelete9842319755 க்கு கால் பண்ணி டிக்கெட் ரிசர்வ் பண்ணிடுங்க....!!!
Deleteவிஜயன் சார்,
ReplyDelete"பிரளயப் பயணம்" + "நெஞ்சே எழு" டெக்ஸ் இதழ்களை மட்டும் இது போன்ற புத்தக திருவிழா நேரங்களில் குறைந்த அளவில் மறுபதிப்பு செய்யலாமே ? இதில் உள்ள நடைமுறை பிரச்சனை என்ன என்பது தெரியவில்லை, முடிந்தால் இனிவரும் காலங்களில் சூட்டோடு சூடாக போட்டு தாக்குங்கள் சார்.
எல்லா நேரங்களிலும் , எல்லாத் தீர்வுகளும் நம்மிடமே இருக்குமென்றில்லை சார் !
Deleteமிஞ்சிப் போனால் இருபது புக்குகளுக்கான தேவை இன்றைக்கு இருக்கக்கூடும் ; அதன் பொருட்டு இன்னொரு 500 இதழ்களை அச்சிட்டு, கிட்டங்கியினை இன்னும் பிஸியாக்க சத்தியமாய் தம் இல்லை ! ரெகுலர் புத்தக விழாக்கள் இனி எப்போது சாத்தியம் என்றே தெரியாத நிலையில் , இதற்கு மேலாயும் பணங்களை முடக்கிட பையில் தெம்பில்லை சார் !
Agreed. But you can plan ரெகுலர் புத்தக விழாக்கள் in future if situation improves.
DeleteIn 2030 yes - definitely ! That looks to be the sad reality.
Deleteஎச்சூஸ்மீ…கொஞ்சூண்டு லேட்டாயிடிச்சி..
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம் !
ReplyDelete// சுற்றியதையே மேற்கொண்டும் மேற்கொண்டும் செக்கு மாடாய் சுற்றி வரும் வயசோ, ஆர்வமோ , ஆற்றலோ என்னிடம் லேது ! //
ReplyDeleteஹைய் அதே டயலாக்கு...
அலுத்துப் போகுது சார் - காமிக்ஸ் நேசங்கள் பின்னுக்குப் போய் ; வணிகங்கள் முன்னணிக்கு வரும் இது போன்ற அப்பட்டமான தருணங்களில் !
Deleteஒன்றே கால் ஆண்டுகளாய் பிச்சையெடுக்காத குறையாய் நான் கூவிக் கொண்டிருந்த போதெல்லாம் 'காசை இப்போவே முடக்குவானேன் ?' என்று கண்டுகொள்ளாதிருந்துவிட்டு, புக் ரெடியாகும் கடைசி 30 நாட்களுக்குள் சொடக்குப் போடும் நொடியினில் பணத்தைப் புரட்டி அனுப்பிட - நான் ; நீ என்று முந்துவதை என்னவென்பது ?! கிட்டத்தட்ட அன்னக்காவடியாய் அலைந்த சென்றாண்டின் நாட்கள் இன்னமும் நிழலாடுகின்றன கண்முன்னே !
விஜயன் சார், மிகவும் வருத்தமாக உள்ளது உங்கள் நிலையை நினைத்து.
Delete// அலுத்துப் போகுது சார் - காமிக்ஸ் நேசங்கள் பின்னுக்குப் போய் ; வணிகங்கள் முன்னணிக்கு வரும் இது போன்ற அப்பட்டமான தருணங்களில் ! //
Deleteபுரிகிறது சார்...
// புக் ரெடியாகும் கடைசி 30 நாட்களுக்குள் சொடக்குப் போடும் நொடியினில் பணத்தைப் புரட்டி அனுப்பிட - நான் ; நீ என்று முந்துவதை என்னவென்பது ?! //
இது தற்செயல் நிகழ்வாய் தோன்றவில்லை சார்...
// கிட்டத்தட்ட அன்னக்காவடியாய் அலைந்த சென்றாண்டின் நாட்கள் இன்னமும் நிழலாடுகின்றன கண்முன்னே ! //
கேட்கவே சங்கடமாக உள்ளது சார்,இதுவும் கடந்து போகும் என்று நம்புவோமாக...
// தொடரும் நாட்களில் டெக்சின் பிரிண்ட் ரன்னை கொஞ்சமாய் கூட்டிவிட்டால் இந்த நோவு தொடர்கதையாகிடாது தான் //
ReplyDeleteமுதல் வேலையாக இதை செய்யுங்கள் சார்...
// So தயை கூர்ந்து சேகரிப்பின் மீதான உங்கள் ஆர்வங்களை "இ.ப" மீதிருந்து - புதியன மீதோ ; Smashing '70s மீதோ திசைதிருப்பிட கரம் கூப்பிக் கோருகிறேன் //
ReplyDeleteநல்ல முடிவு சார்...
ஆம் ரவி!
Deleteலார்கோ,ஷெல்டன் கதைகளுக்கு 30 % கழிவு ஒருபுறம் மகிழ்ச்சியாகவும்,மறுபுறம் வருத்தமாகவும் உள்ளது...
ReplyDeleteடியர் எடி,
ReplyDeleteXIII தொகுப்புகள் அடுக்கு வைக்கபட்டிருக்கும் அழகை காண கண்கோடிவேண்டும். கூடவே அலமாரியில் உங்கள் கலெக்ஷனை பார்க்கும் ஒரு வாய்ப்பும் கிட்டிற்று.
அதிக விலைக்கு விற்கபடும் இதழ்களை பொறுத்தவரை, காமிக்ஸ் வியாபாரிகள் இருக்கும் வரை இந்த நிலை மாறபோவதில்லை.
டெக்ஸ், லக்கி இதழ்களின் பிரிண்ட்ரன் அதிகம் செய்தாலும் இதை மாற்றுவது கடினமே. 2000-4000 ரூபாய் கொடுத்து தனிநபர் பைகளை நிறைப்பவர்கள், அதே பணத்தில் சந்தா கட்டி பதிப்பாளரின் கைகளை வலுபடுத்த முனைவாததலிருந்தே, அவர்கள் எவ்விதம் காமிக்ஸ் ரசிகர்கள் ஆவார்கள் என்று கேட்க தோன்றுகிறது.
இனி அவர்களை பற்றி கவலை கொள்வது மட்டுமல்ல, அவர்களின் பழங்கால காமிக்ஸ் கோரிக்கைகளுக்கும் உடனே தலைசாய்க்காமல், அரிதான இதழ்களை முன்பதிவுக்கு மட்டும் என்று தராசில் எடை போடுவதே நலம்.
// அரிதான இதழ்களை முன்பதிவுக்கு மட்டும் என்று தராசில் எடை போடுவதே நலம். //
Delete+1
இதோ இன்று மாலை கூட "எனக்கு இன்னும் 6 புக்ஸ் தந்தாலே ஆச்சு" என்று போனில் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார் ஒரு நண்பர் ! And அவர் எற்கனவே முன்பதிவும் செய்துள்ளவர் ! இந்த ரீதியிலான திடீர், மொத்த புக்கிங்களின் பின்னணிகளில், வணிகமன்றி வேறு காரணங்கள் இருக்க இயலாதெனும் போது, அயர்வே மிஞ்சுகிறது சார் !
Delete//அரிதான இதழ்களை முன்பதிவுக்கு மட்டும் என்று தராசில் எடை போடுவதே நலம்.//
Deleteநல்ல யோசனை ப்ரோ. நமது காமிக்ஸிற்கு 'print on demand' முறைமை கச்சிதமாக பொருந்தும்.
புத்தக அலமாரி அழகு! மேலே சாமி பாய், நடுவில் டயபாலிக் மற்றும் ஜேம்ஸ் பாண்ட், கீழே குண்டு குண்டாய் டெக்ஸ் ஆல்பங்களைக் காண முடிகிறது. அலமாரியில் இடப்பற்றாக் குறை காரணமாக தாங்கள் படும் சிரமத்தைக் கண்டு சோகம் மனத்தைக் கவ்வுகிறது. இந்த தலைப்பு வைக்கும் போட்டி, கேப்ஷன் எழுதும் போட்டி என்று எளிதாக எதையாவது வைத்து இவற்றை எல்லாம் பரிசாக அளித்து மகிழலாமே? உங்களுக்கு பதிலா நாங்க அடுக்கி வச்சுப்போம், அவ்ளோதான்! :D
ReplyDelete//இவை சகலமும் இந்த 2 தினங்களுக்கு மாத்திரமே - ப்ளீஸ் !//
எந்த இரு தினங்களுக்கு சார்?
Meantime, Kabilan with Vijayan Vaathiyaar...
Deleteவாத்தியாரே... ஒன் வீடு, ஆபிஸ், கொடவுன் இதை எல்லாம் ஒரு ரைடு வுடணும்னு ரொம்ப நாளா ஆச... சைக்கிள்ல ஏறு வாத்தியாரே, ஒவ்வொரு இடமா சுத்திட்டு வருவோம்...
வாத்தியின் ஆபீஸைப் பாத்து மவுந்த கையோட, கிட்டங்கியையும் பாத்தாக்கா, ரோஸாண்ட நாக்அவுட்டான பச்சா பாக்ஸர் மெரி ஜோடா தெள்ச்சு தான் எழுப்ப வேண்டிப் போவும் கபிலா !
Deleteஉங்கள் புத்தக அலமாரியை பார்த்தப்பின் எனக்கும் இதுப்போன்ற bookshelf வேண்டுமென்ற (அத்தனை புத்தகம் இல்லாவிட்டாலும் கூட) ஆவல் பெருகிவிட்டது சார். என் கணிப்பு இது உங்களின் ஒரு டஜன் bookshelf களில் இது sampleலான ஒன்று தான் என தோன்றுகிறது.
Deleteஅருமை சார்....இப மேற்கொண்டும் அதிக விலை கொடுக்க அதிக ஆட்கள் இராதென்றே கருதுகிறேன்...இந்த முயற்ச்சி இனி வரவுள்ள விலை உயர்ந்த மிகச்சிறந்த கதைகளுக்கு தொடரட்டும்
ReplyDeleteரஷ்ய நிறத்தில் இப தெரிவது என் கண்களுக்கு மட்டுந்தானா
ReplyDeleteநண்பர் மகி போன்ற காணக் கிடைக்காத நண்பர்கள் ....செந்தூரானின் அவதாரங்கள் என்னளவில்...வாழ்த்த வார்த்தைகள் ஏது
ReplyDeleteசார் உயிரைக் தேடி வண்ணத்தில் சீக்கிரம் அறிவியுங்கள்
ReplyDelete80th
ReplyDeleteஆஹா iii,
ReplyDeleteஅந்த ஆகஸ்டும் புலர்ந்து புதுவகையான?i
"இரத்தப்படலம்" கைகளில் தவழலப்போகிறது. -
இதில் உள்ள, உங்கள் தனித்தன்மைகளை அறிய ஆவல்..
.எல்லா இதழ்களுக்கும் அட்டைப்படம் வெளியிடுவீர்கள். ஏனோ?i" இ.ப" க்கு மட்டும் வெளியிட மாட்டேன்கிறீர்கள்..
"இதழ் வெளியானதும் தங்கள் கோப்பிலிருந்து 18 பாகங்களின் முகப்பு ஓவியத்தையும் (தமிழ் தலைப்பு உள்ளது ) ஒவ்வொரு தனி Print ஆக பதிவிடும் கேட்டுக்கொள்கிறேன்.. Download செய்து cell-யில் ரசிக்க ஏதுவாக இருக்கும்.
இரத்தபடலத்தின் - முதல்பாகத்தின் ஓவியத்தை கடந்த முறை வெளியிடாததில் வருத்தமே..
இரத்தபடலத்தின் வசீகரமே - அந்த முதல் பாகத்தில்-X111-நிற்கும் தோரணையும் - திகைப்பிலும்தான்- முழு கதையும் சொல்லும்.
இந்த முறை ஏமாற்றி இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
ஆவலுடன் 14ம் தேதியை நோக்கி...
சார் ...அட்டைப்படங்களைத் தாண்டி, பெருசாய் மாற்றங்கள் இல்லா அட்சர சுத்த நகல்கள் இவை ! முந்தைய இதழ்களிலிருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்ட எதேனும் புதுசாய் செய்திடலாமென்ற பேச்சைத் துவக்க நாட்களில் துவக்கிய போதே - இருக்கும் கடுப்பையெல்லாம் களமிறக்கிய ஆர்வலர்களின் புண்ணியத்தில் அந்த எண்ணம் அன்றைக்கே சமாதியாகி போயிருந்தது ! ஆகையால் பெருசாய் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ?!
Deleteதவிர, அரைத்த மாவையே நூற்றியெட்டாம் தபாவும் உற்சாகமாய், உத்வேகமாய் அரைக்கும் ஆற்றல் என்னுள் இல்லை - moreso ஒரு வண்டிப் புதுப்பணிகளுக்குள் புதைந்து கிடக்கும் இத்தருணத்தினில் !
Deleteயோக்கியமான நகலாய் இதனை அமைத்திட இயன்ற சகலத்தையும் செய்துள்ளேன் சார் ! Nothing more ; nothing less !!
/* And அதன் நீட்சியாய் "இன்னொருக்கா போடலாமே ?" என்ற கொடி பிடிக்க இப்போவே கச்சை கட்டிக் கொண்டு நண்பர்கள் இருப்பர் என்பதும் உறுதி ! */
ReplyDeleteIngana irukkOmlulla .... BW Hardbound - thick paper - single volume of 18 - 2022 release !
Beneficiaries:
https://www.myhelpinghands.org/ (Udhavum Karangal)
नीचचे देखिए !
Deleteஇனிமையாக பிறந்த நாள் கொண்டாடிய இளைஞனின் உற்சாகத்தை காணப் பொறுக்காத அக்கிரமக்கார அதிகாரியின் அட்டகாசங்களை விமர்சிக்க ரம்மிக்கு வாய்ப்புக் கிடைக்குமா? விடை ஆகஸ்ட் 14 ல்.
ReplyDeleteவந்துட்டேன் வந்துட்டேன் அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள்
ReplyDelete///So தயை கூர்ந்து சேகரிப்பின் மீதான உங்கள் ஆர்வங்களை "இ.ப" மீதிருந்து - புதியன மீதோ ; Smashing '70s மீதோ திசைதிருப்பிட கரம் கூப்பிக் கோருகிறேன்///
ReplyDeleteஇன்னும் ஒரே ஒருவாட்டி சார்! தலையில்லா போராளி சைஸுல; எவ்வளவு மடக்கினாலும் பிரியாதமாதிரி பைண்டிங்குல ஒரு சிங்கிள் குண்டு மட்டும்! அப்புறம் கேட்கவே மாட்டோம் - ப்ராமிஸ்!
உங்களை இப்பவே போடுங்கன்னு கேட்டு அவசரப்படுத்தலை! ஏழாவது எட்டாவது அலை முடிஞ்சதுக்கப்புறம் புக்கிங் ஸ்டார்ட் பண்ணீங்கன்னா போதும்!
நாங்களும் கரம் கூப்பிக் கேட்டுக்கறோம்!
எங்களுக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா? ( ஜூனியர்ட்டல்லாம் கேட்டா சுளுக்கெடுத்துருவாரு!)
இதற்குமுன் நடந்த அத்தனை புக்கிங்கிலும் இரத்தப்படலத்தைத் தவறவிட்ட சில பரிதாபப்பட்ட நண்பர்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்!
இந்த மொத்த 968 பக்கங்களின் (தமிழ்) டிஜிடல் கோப்புகளையும் ஏதேனுமொரு நல்ல நாளாய்ப் பாத்து பொதுவுடமை ஆக்கிப்புடலாம் சார் ; அப்பறமா ஆளாளுக்கு 'தலையில்லா போராளி' சைசுக்கு போட்டுக்கிட்டாலும் சரி ; 'வாலில்லா சீக்காளி' சைசுக்குப் போட்டுக்கிட்டாலும் சரி - எனக்கு நோவே கிடையாது !
Deleteசார்... நாங்க புத்தகம் தயாரிப்பதெல்லாம் ஆகுறதில்லை சார். இன்னும் சில வருடம் கழித்து தயவுசெய்து கருப்பு வெள்ளையிலாவது A4 சைஸில் இரத்தப்படலம் போடுங்கள் சார். வில்லியம் வான்ஸ் சித்திர விருந்தை அதே ஒரிஜினல் A4 அளவில் கொடுங்கள். நல்ல தரமான சித்திர கதைகள் மட்டும் A4 சைஸில் தாங்க சார். நான் இதனை 2007ல் உங்களை சந்தித்த நாள் முதல் கேட்டு கொண்டு இருக்கிறேன்.
Delete// மொத்த 968 பக்கங்களின் (தமிழ்) டிஜிடல் கோப்புகளையும் ஏதேனுமொரு நல்ல நாளாய்ப் பாத்து பொதுவுடமை ஆக்கிப்புடலாம் சார் ; அப்பறமா ஆளாளுக்கு 'தலையில்லா போராளி' சைசுக்கு போட்டுக்கிட்டாலும் சரி ; 'வாலில்லா சீக்காளி' சைசுக்குப் போட்டுக்கிட்டாலும் சரி //
Deleteமேலோட்டமாக படித்தால் காமெடியாக தெரிந்தாலும் உங்கள் மனதில் உள்ள வலி நன்றாக புரிகிறது சார்.
போதும் என்ற மனமே என இ.ப நண்பர்கள் இதனை இனியாவது புரிந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.
உண்மை விஜயன் சார்.
Deleteஅருமையான கருத்து 👍
A4 க்கும் பெரிய சைசில் MAXI லயன் இதழ்களை போட்டோம் தானே நண்பரே ; "சேகரிப்புக்கு பெரிய சைஸ் சுகப்படவில்லை" என்ற கண்டனங்கள் தொடராய் ஒலித்திட, அந்தத் திட்டத்தையே ஒழித்திட்டோமே !! இது வரைக்கும் நாம் முயற்சிக்காத பல்டிகளே கிடையாது ; ஆனால் 'உடையாத எதையும் ஓட்ட முனைவானேன் ?' என்று மண்டையில் தட்டியே நம்மை தரைக்கு இறக்கி விடுகிறார்களே நண்பர்கள் !
Deleteஇதோ - காத்திருக்கும் SMASHING 70 s இதழ்கள் அனைத்துமே MAXI சைசில் தானென்று பிடிவாதமாய் நின்று வருகிறேன் ; இதழ் வந்த பின்னே - "இதையே அப்டியே பாதி சைசில் - குண்டு புக்கா போடுறாப்பா !!" என்ற குரல்கள் கேட்கவிருப்பது நிச்சயம் !
// ஆனால் 'உடையாத எதையும் ஓட்ட முனைவானேன் ?' என்று மண்டையில் தட்டியே நம்மை தரைக்கு இறக்கி விடுகிறார்களே நண்பர்கள் ! //
Delete:-( :-( very sad to hear this sir.
மேக்ஸி சைஸ் பலருக்கு அவ்வளவு ஏற்பாய் தோன்றவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து சார்,டெக்ஸ் இதழ்களில் கூட இருப்பில் இருக்கும் இதழ்களில் நான்கு தலைப்புகள் மேக்ஸி சைஸ் இதழ்கள் என்பதாய் தோன்றுகிறது சார்...
Deleteஆன் லைன் புத்தகவிழாஸ்பெசல் 1.மினிகலர்டெக்ஸ் 3அல்லது 4புத்தகங்களின் தொகுப்பு (மறுபதிப்பு) 2லக்கி லூக் சிறுகதைகள் தொகுப்பு(மறுபதிப்பு)
ReplyDeleteசார். ஆன் லைன் திருவிழால்லாம் முடிஞ்சுஆள் லைன் திருவிழாவந்தப்புறம்டெக்ஸ் இல்லாத நம்மஸ்டால் எப்படிஇருக்கும்னு நெனச்சுப்பாருங்க(அதுக்குஒரு டெக்ஸ்ஸ்பெசல் வெளியிட்டுத்தானே ஆகவேண்டும்) டெக்ஸ் இல்லாத ஸ்டாலைலயன் காமிக்ஸ் ஸ்டால்னு யாருமே நம்பமாட்டாங்களே. அதற்காகவேனும் டெக்ஸின் சீக்கிரமே ஸ்டாக்தீர்ந்து போன சிலபுத்தகங்களையாவது ரீபிரிண்ட்செய்வதுகுறித்து யோசியுங்கள் ப்ளீஸ் கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteபையில் தெம்பில்லை சார் ; அடுக்கி வைத்து அழகு பார்த்துக் கொண்டே செல்ல !
Deleteலயன் ஆபீஸை ஜூனியர் இடம் ஒப்படைத்து இருப்பதாகச் சொன்னீர்கள். ஜூனியர்க்கும் குட்டிக்கரணம் அடிக்க கற்றுக் கொடுத்து விடுங்கள் சார். இத்தனை காலமாய் விசுக் விசுக் என்ற பின்னணி சத்தத்துடன் வேலை செய்த ஊழியர்களுக்கு அந்த சத்தம் கேட்கவில்லை என்றால் லயன் ஆபீஸுக்கு வந்தோமா இல்லை வேறு இடத்துக்கு வந்து இருக்குமா என்ற சந்தேகம் வந்துவிடும் அதனால் தான் கூறுகிறேன்.
ReplyDeleteஇன்றைய தலைமுறை எதையுமே தம் வழிகளில் செய்திடவே பிரியப்படுவார்கள் சார் ! அவன் பாணியில்,பாதையில் பயணிக்கட்டும் !
Delete#### 101
ReplyDeleteபிஸ்டலுக்குப் பிரியாவிடை!
ReplyDeleteமறுவாசிப்பு ஸ்டார்ட்டர்டு!!
/ So தயை கூர்ந்து சேகரிப்பின் மீதான உங்கள் ஆர்வங்களை "இ.ப" மீதிருந்து - புதியன மீதோ ; Smashing '70s மீதோ திசைதிருப்பிட கரம் கூப்பிக் கோருகிறேன் //
ReplyDeleteநல்ல முடிவு.
//முந்தைய இதழ்களிலிருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்ட எதேனும் புதுசாய் செய்திடலாமென்ற பேச்சைத் துவக்க நாட்களில் துவக்கிய போதே - இருக்கும் கடுப்பையெல்லாம் களமிறக்கிய ஆர்வலர்களின் புண்ணியத்தில் அந்த எண்ணம் அன்றைக்கே சமாதியாகி போயிருந்தது !//
ReplyDeleteஉங்கள் வலி கொஞ்சமாக புரிகிறது, சார். முதல் வண்ண பதிப்பின் போதும், கூடுதலாக ஒரு 100 பக்க இதழ் சேர்க்க வேண்டியதொரு கட்டாயம், இரண்டாம் வண்ணப் பதிப்பின் போதும் ஏற்பட்ட மனக்காயங்கள்...
இந்த blog ஆரம்பித்த பின்னே நிறையவே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்றாலும்... blog இல்லாமல் வெறுமனே ஹாட் லைனில் நீங்கள் ஸ்பெஷல் காமிக்ஸ் வெளியீடுகள் அறிவித்த போது இத்தனை வலிகள் இருந்திருக்காது எனவே எனக்கு தோன்றுகிறது.
// blog இல்லாமல் வெறுமனே ஹாட் லைனில் நீங்கள் ஸ்பெஷல் காமிக்ஸ் வெளியீடுகள் அறிவித்த போது இத்தனை வலிகள் இருந்திருக்காது எனவே எனக்கு தோன்றுகிறது. //
DeleteTrue
பேப்பரில் மட்டுமே என் குரல் ஒலித்து வந்த வரையிலும், சில பல வணிகங்களுக்கும், சில சில ஈகோக்களுக்கும் சிக்கல் இருந்திருக்கவில்லை நண்பரே ! இவ்விரண்டுக்கும் என்னால் நோவுகள் நேரத்துவங்கிய நாளே கச்சேரிகள் களைகட்டத் துவங்கிவிட்டன ! யதார்த்தம் இது தான் !
DeleteSo sorry to hear that, Sir
Deleteஇ. ப. மறுபதிப்பு. கணக்குப்படி பார்த்தால்புதுவாசகர்கள் எண்ணிக்கைவெகுவாகக் கூடிஇருக்கவேண்டுமே. அல்லது புதுவாசகர்கள்எல்லாரும் இ. ப. மட்டுமே படிக்கிறார்களோ வாழ்க 13 பகழ்
ReplyDeleteகாமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு...
ReplyDeleteஅன்பு ஆசிரியர்க்கும் காலை வணக்கம்..
முதலில் சிறுமியின் மருத்துவ செலவுக்காக, எங்கள் மூலம் உதவுகிறீர்கள் என்ற மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்.
பாராட்டுகள்.எதிர்பாராத சஸ்பென்ஸ்.
காமிக்ஸ் நண்பர்கள் பலமுறை சொல்லியும்,
பழைய காமிக்ஸ்கள் வாங்கும் ஆர்வத்தில்,
"இரத்தப் படலம்"முன் பதிவு செய்வதை விட்டுவிட்டேன். இரண்டு நாட்களுக்கு முன் தான் மிஸ் பண்ணியதை உணர்ந்தேன்.
இது வாட்ஸ்அப் குழுவில் சில நண்பர்களுக்கும் லேசான கோபம்."சொல்ற போதெல்லாம் விட்டுட்டு இப்ப கேக்கறீங்க". ஆபீஸிலும்"சாரி சார் முடிந்தது" என்ற பதில்.
பிறகு தான் தெரிந்தது புக் இந்த வாரம் ரிலீசாகும் விசியம்.
சரி நமக்கு கிடைக்கும் என்றிருந்தால் கிடைக்கும் என நினைத்தபோது,
எதிர்பாராத விதமாக,"இருங்க சார் யார்கிட்டயாவது கேக்கலாம்"என என் ஆர்வத்தை புரிந்து சில குறிப்பிட்ட நண்பர்கள் தொடர்பு கொள்ள சொன்னார்.தொடர்பு கொண்டு
அவர் மூலம் புக் கிடைத்தது மிக மகிழ்ச்சி.
ஆனா அவர் உதவியதை விட,புக் கிடைத்ததை விட நான் அதிகம் நெகிழ்ச்சியானது அவர் சொன்ன காரணம்,
"ஆர்வமாக தேடுபவர்களுக்கு, காமிக்ஸ் கிடைக்க உதவனும்".என்றுதான்.
"இன்னும் யாருக்காவது தேவையா என தேடனும்" என ஓடினார்.
இதுதாங்க ஒரு உண்மையான காமிக்ஸ் வாசகருக்கு அழகு.
"எதுக்கு இத்தன சிரமம்.அப்பயே புக் பண்ண வேண்டீதான" என பலரும் முணுமுணுத்தாலும், என்னைப்போல பலரும் இதை மிஸ் பண்ணிருக்கலாம்.
"விட்டுட்டியல்ல எங்காவது போய் வாங்கு"
என நினைக்கறத விட, அவர்களுக்கு இருக்கும் இடங்களை காட்டி அவர்கள் வாசிப்பு ஆர்வத்திற்கு உதவலாம்.
"" காமிக்ஸ் படிப்பதே பெரிது,இதில் இப்படி கிடைக்காமல் போனால்,ரெம்ப வருத்தப்படுவாங்க.
நாம் உதவினால் அவங்களுக்கும் மகிழ்ச்சி.
எனக்கும் மகிழ்ச்சியே." என நினைத்த, அந்த நண்பர்...
"சேலம் டெக்ஸ் விஜயராகவன்".
மிக்க மகிழ்ச்சி விஜய்.❤️💞❤️
இந்த மாதிரி பல பேர் இருப்பார்கள்
மிஸ் பண்ணிட்டாங்க.சரி.
வேறு எங்காவது ,யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவலாம்.
கிடைக்கும் இடத்தை சொல்லலாம்.
இது அவர்களுக்கு,
"அடுத்த முறை தவற விட கூடாது"என்ற
எண்ணத்தை விதைக்கும். நன்றி.
சலுகை விலையில்புக்ஸ்.
காத்திருக்கிறேன் சார் அற்புதம்.
இந்த சலுகை பற்றியும்,வரும் 400 வது இதழ் பற்றியும்,நேற்று நான் முகநூலில் பதிவிட்டபோது , நண்பர்கள் ஆர்வமாக பதிலளித்திருந்தனர்.
பலபேருக்கு இன்னும் லயன் கிடைக்கும் இடமே தெரியாதது வருத்தமே.
அவர்களுக்கு ஆபீஸ் நம்பரை கொடுத்து,
பேச சொன்னேன்.
இந்த வாரம் லயன்தீபாவளி வாரம் தான்.
புக் திருவிழா,டிஸ்கவுன்ட்,புது புக் வெளியீடு,இரத்தப்படலம் வெளியீடு,
லயன் 400 மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி.
அருமை...
உங்களுக்கு மறுபடியும் வேண்டுகோள்.
லயனின் முகநூல் பக்கத்தை இயக்க வேண்டும் என்பதே.
புதிய செய்திகள் வாசகர்களுக்கு கிடைக்கும்.
400 வந்து இதழையும், இ ப இதழையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அதோடு புக்ஃபேரில் வெளிவரும் சஸ்பென்ஸ் இதழையும்.
மீண்டும் அடுத்த பதிவில் 🌹...
ReplyDeleteஹா! ஹா!ஹா!
புது (!) பதிமூணு வருமுன்னே அடுத்த புதுசுக்கு அச்சாரமா?
நடந்தது அந்த நாள் முடிந்ததா பாரதம்
இன்றைய பாரதம் யாரதன் காரணம்?
அம்புகளால் துளைக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு கொண்டு இருந்த கர்ணனிடம் தானம் கேட்ட கண்ணனை விஞ்சி நிற்கும் நிலையை கண்ணால் காணுகிறேன்...
தண்ணீருக்கடியில் தத்தளித்து கொண்டிருக்கும் மனிதரை வெளியில் கொண்டுவர முயல்வோம் என சொன்னால் அவர் கையில் கட்டியிருந்த வாட்சை பாதிவிலைக்கு கேட்ட கதையாகி விட்டது போன வருடத்து நிலை..
போனது போகட்டும் ..
ஜீனியர் எடிட்டரிடம் 3 வருடத்துக்கு ஒருமுறை ரத்தப்படலம் விதவிதமான அட்டைப்படம் , சைஸுடன் மறுபதிப்பு கேட்க உரிமையை ஏற்படுத்தி கொள்ள ஒரு எளிமையான வழி உண்டு..
SCP - ஸ்டாக் க்ளியரன்ஸ் புராஜக்ட்.
கொடவுனை கல்யாண மண்டபமாக மாற்றலாமா என எடிட்டர் எண்ணுமளவுக்கு அதை காலி செய்வதே.
சிறிது உபரி பணம் கிடைத்தாலும் அதை லயன் சன்ஷைன் கணக்குக்கு அனுப்பி ( ஒரேயொரு புத்தகமானாலும் சரி) ஏதேனும் நூலகத்துக்கு அனுப்ப சொல்லுங்கள்..( கொரியர் தொகை சேர்க்க முடிந்தவர்கள் முயலுங்கள்)
சில நல்லுள்ளங்களுக்கு எனது கோரிக்கை..
எடிட்டரை நம்பி இனி உபயோகமில்லை..
அவர் எது கொடுத்தாலும் இலவச இதழாக வாசகர் பக்கமாகவே திருப்பி விடுகிறார்..
சிறிது சிறிதாக கமான்சே போன்ற புஸ்தக விழாக்களிலும் சோபிக்காத இதழ்களை நூலகங்கள் சென்று சேர வழியை முனைந்து செய்யலாம்..
வெளியிடுபவர் ரத்தம் வழிய நின்றாலும் ரத்தப் படலம் வேண்டுமென்பவர்கள் தயவு செய்து தங்களை சுயப் பரிசோதனை செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.
கமான்சே இதழ்கள் முதல் இலக்காக இருக்கட்டும்..
Deleteகலைஞர் வசனம்போல் தடாகத்து மீன்கள் ஆக ஒரு வாய்ப்பாக கருதுங்கள்
பொதுநலத்திலே சுயநலம்..
பயனற்று கிடக்கும் இதழ்கள் பணமாக மாறினால் எடிட்டர் சாருக்கு கிடைக்கும் பலம் நமக்கு பலனாக வந்து சேரும்
// அம்புகளால் துளைக்கப்பட்டு அவஸ்தைப்பட்டு கொண்டு இருந்த கர்ணனிடம் தானம் கேட்ட கண்ணனை விஞ்சி நிற்கும் நிலையை கண்ணால் காணுகிறேன்... //
Deleteநமது எடிட்டர் நிலையை இதனை விட தெளிவாக சொல்ல முடியாது.
செல்வம் அபிராமி சார் : கமான்சேவும் ; இன்ன பிற "கிட்டங்கி காதல" இதழ்களும் நூலகங்களை நாளடைவினில் சென்றடைவது உறுதி ! Becos யாரும் வாங்காதவற்றை நாமே ஒரு கட்டத்தில் சந்தோஷமாய் தானங்களாக்கிடுவோம் !
Delete///வெளியிடுபவர் ரத்தம் வழிய நின்றாலும் ரத்தப் படலம் வேண்டுமென்பவர்கள் தயவு செய்து தங்களை சுயப் பரிசோதனை செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.///
Deleteசுயபரிசோதனை செஞ்சு பார்த்துட்டோம்.. பரிசோதனை முடிவுகள் எல்லாமே 'இ.ப தொற்று - பாஸிடிவ்'னு தான் வந்திருக்குங்க செனா அனா! :)
கிட்டங்கியில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு ஆட்படுத்தினால் எல்லாமே சரியாகிடும் !
Deleteதனிமைப்படுத்தலின்போது, இ.ப.வண்ண மறுபதிப்பும், உடன் மின்னும் மரணம், மேலும் NBS Book கையில் இருந்தால் 14 நாளும் இனி எல்லாம் சுகமே தான்.
Deleteசார்! சிறிது சிறிதாக பல பேர் பங்களித்தால் சாத்தியமான விஷயம்தான் சார்!
Deleteபெரும் தொகை ஒரே நேரத்தில் எடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம் .
மனம் மட்டும் இருந்தால் போதும்..
அவசரப்பட்டு நீங்களே நூலகங்களுக்கு கொடுத்துவிட வேண்டாம் சார்!
அவகாசம் நண்பர்களுக்கு கொடுங்கள் சார்!!!!
@ பத்து சார்..
Deleteகூடவே ஏழெட்டுப் பெட்டிகள் ரவுண்டு பன்னையும் சேர்ந்துக்கோங்க!
எந்த நூலகங்களுக்கு? முகவரி கிடைத்தால் போதும். செய்து விடலாம்.
Delete//சிறிது சிறிதாக கமான்சே போன்ற புஸ்தக விழாக்களிலும் சோபிக்காத இதழ்களை நூலகங்கள் சென்று சேர வழியை முனைந்து செய்யலாம்..//
Deleteசூப்பர் சார்!
//எந்த நூலகங்களுக்கு? முகவரி கிடைத்தால் போதும். செய்து விடலாம்.//
Deleteஎடிட்டர் சார் நினைத்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் நூலகங்களின் முகவரியினை ஒரே நாளில் பெற இயலும்..
தாங்கள் கோவை மாவட்டத்தை முன்னிறுத்த விரும்புவீர்களாயின் ஸ்டீல் க்ளாவிடம் சொன்னால் அருகில் உள்ள கிளை நூலகம் சென்று நூலகரிடம் வினவினால் மொத்த மாவட்ட நூலகங்களின் முகவரி லிஸ்டை வாங்கி விடலாம்..
புத்தகங்களை கொடையளிக்க வழிகாட்டுதல் நடைமுறைகளையும் கேட்டுவிடலாம்..
மகேந்திரன் பரமசிவம் @ check google,
Deletehttps://www.google.co.in/search?q=government+library+chennai+contact+number&source=hp&ei=wbwTYdS4Eo21qtsPvOmz8A4&iflsig=AINFCbYAAAAAYRPK0RpDI0FYDXw-iNX7YpYapB9yZK2s&oq=government+library+in+co&gs_lcp=Cgdnd3Mtd2l6EAMYATIFCAAQgAQyBggAEBYQHjoICAAQ6gIQjwE6CAguEOoCEI8BOgsIABCABBCxAxCDAToICAAQgAQQsQM6CAguEIAEELEDOg4IABCABBCxAxCDARDJAzoHCAAQgAQQCjoKCAAQsQMQgwEQCjoHCAAQsQMQCjoECC4QCjoNCAAQsQMQgwEQyQMQCjoECAAQCjoNCC4QxwEQrwEQChCTAjoKCC4QsQMQgwEQCjoHCAAQyQMQDToECAAQDToICAAQgAQQyQNQqwpYoFFgk29oAnAAeACAAasDiAGTQZIBCDItMS4yNC4xmAEAoAEBsAEK&sclient=gws-wiz
Chennai there are many govt libraries. You can do google and get the details.
Deleteசார்! சிறிது சிறிதாக பல பேர் பங்களித்தால் சாத்தியமான விஷயம்தான் சார்!//
Deleteஎன்னையும் சேத்துக்கங்க சார்...
/என்னையும் சேத்துக்கங்க சார்./
Deleteமிகப் பலர் செய்வதில்தால்தான் பெருமையுள்ளது பழனிவேல்ஜி!!
நூலகங்கள் இன்னும் இருக்குங்களா??
Deleteநூலகங்கள் இருக்கு ரம்மி...ஆனால் அனைத்தும் அண்டர் லாக்டவுன் போல.... பெரிய திண்டுக்கல்லா தொங்கிட்டு இருக்கு DLS வாயிலில்....!!
Delete//நூலகங்கள் இன்னும் இருக்குங்களா??//
Deleteமாவட்ட தலைமை நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் ,நடமாடும் நூலகங்கள் ,மைய நூலகங்கள் என தமிழ்நாட்டில் 4068 நூலகங்கள் உள்ளன..
தேவையில்லாத தகவல்: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் 5338..
(என்ன இது கேப்டன் மாதிரி ஆயிட்டேன்)
அது போகட்டும் ரம்மி!
பாயாச அண்டாக்களை பரண் மேல் வைத்துவிட்டு தங்கத் தலைவனை தமிழ் தாரணியின் தார் , மண் சாலைகளில் தவழவிடவேண்டிய வேளை புலர்ந்து விட்டது..
மாதம் ஒரு டைகர் ஒரு நூலகத்துக்கு ?
டீல்?
//எங்களுக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா? ( ஜூனியர்ட்டல்லாம் கேட்டா சுளுக்கெடுத்துருவாரு!)//
ReplyDeleteஅதென்னவோ உண்மைதான் ஈவி..
இந்த மொத்த 968 பக்கங்களின் (தமிழ்) டிஜிடல் கோப்புகளையும் ஏதேனுமொரு நல்ல நாளாய்ப் பாத்து பொதுவுடமை ஆக்கிப்புடலாம் சார்//
ReplyDeleteநமது முதல் டிஜிட்டல் இதழாகும் வாய்ப்பு உண்டாசார்...
உள்ளுர் புளிய மரங்கள் போதாதென பெல்ஜியத்துப் புளிய மரங்களில் என்னை கட்டி வைத்துப் பார்க்கும் ஆசையா சாமி ?
Deleteஹி..ஹி.. கட்டறதுன்னு ஆகிப்போனதுக்கு அப்புறம் புளியமரம் உள் நாடாக இருந்தா என்ன, வெளிநாடாக இருந்தா என்ன?
Deleteஅந்த ஊர்லே புளிய மரமே கிடையாதாம் சார் ; இங்கேர்ந்து விதை வரவழைச்சு மரமாக்கித் தான் கட்டணுமாம் ! அது வரைக்கும் அந்த ஊர் மு .ச. இல்லாங்காட்டி மூ.ச. தானாம் !
Deleteபயனற்று கிடக்கும் இதழ்கள் பணமாக மாறினால் எடிட்டர் சாருக்கு கிடைக்கும் பலம் நமக்கு பலனாக வந்து சேரும்//
ReplyDeleteநிச்சயமா நண்பரே...
65th
ReplyDeleteXIII இன் தற்போதைய புதிய தொடர் குண்டு புக்கா வராதா சார்
ReplyDeleteகிட்டங்கியில் உள்ளவற்றை ஒன்றாய் பைண்ட் செய்தாலே போதுமில்லையா ? இடம் காலியான மாதிரியும் இருக்கும் அல்லவா நண்பரே !
Deleteபேஷாய் போட்டர்ல்லாம் சார்..
Deleteவெகு சமீபமாய் கூட, டெக்சின் "பிரளயப் பயணம்" + "நெஞ்சே எழு" இரண்டு மடங்கு ; மும்மடங்கு விலைகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன என்று நண்பர்கள் வருத்தத்தோடு தகவல் சொல்லியிருந்தனர்//
ReplyDeleteவருத்தமான தடுக்கப்படவேண்டிய விடயம்.
"சேகரிப்புக்கு பெரிய சைஸ் சுகப்படவில்லை"//
ReplyDeleteடெக்ஸ்சுக்கு சரிப்படவில்லை என்பதே எனது எண்ணம் சார்..லக்கிலூக் அருமையாகத்தானே வந்துள்ளது....
True...
Deleteகாமிக்ஸ் வாசகர்களுக்கு!!!
ReplyDeleteசிறுவயதில் காமிக்ஸ் வாங்க இயலாமல் சிரமப்பட்ட சுய அனுபவங்களை பற்பலர் எழுத இங்கும் முக நூலிலும் , பிற இணைய குழுமங்களிலும் வாசித்து இருக்கிறோம் ..
தமிழகத்தின் மூலை முடுக்குகளில் காமிக்ஸ் வாசித்தறியா இளையோர் இருக்கலாம் ..
அவர்களுக்கு நூலகங்களில் இலவசமாக வாசிப்பனுபவம் கிட்டுமாயின் அவர்களில் ஓரிருவராவது பின்னாட்களில் அதை தொடர நினைக்கலாம்..
காமிக்ஸ் வாசிப்பு சந்தைப்படுத்தும் பொருள் அல்ல..சிந்தையை சென்றடைய வேண்டியது என எல்லாருக்கும் தெரியும்..
இதை யார்மேலும் திணிக்க இயலாது..
ஆனால் அதற்கான வாயப்புகளை ஏற்படுத்தலாம்..
வாய்ப்பு கிடைத்தால்தானே நீரஜ் ஸோப்ரா கூட!!!
பழைய காமிக்ஸ்கள் கிட்டங்கியை விட்டு செல்ல பலரும் உதவுவது பணரீதியானது என்பதை விட ஒரு அடையாளமாக -gesture- மனதை வருடும் செயலாக எண்ணுவது நலம்.
எனக்கு இதில் சற்றே மாற்றுக்கருத்து உண்டு.
Deleteகிட்டங்கி சுமை குறைய வேண்டும் என்பது எனக்கும் ஆசையே. ஆனால் விற்காமல் தேங்கி நிற்கும் கதைகள் மற்றும் தொகுதிகளை இலவசமாக அளிக்க முன்வருவோமாயின் அதை படிப்பவர்கள் - அக்கதைகள் அவர்களுக்கும் பிடிக்காமல் போனால் மொத்த காமிக்ஸ்களையும் மோசம் என்று நிராகரித்துவிட வழியுண்டு.
எனவே இலவசமாகவோ (மற்றவர்களால் வாங்கி அளிக்கப்பட்டு) தள்ளுபடியிலோ (எடிட்டரால் - இது சில ஹிட் கதைகள் வாங்கினால் ஒரு 'Godown ஸ்பெஷல்' இலவசமாக என்று அவர் யோசிக்கலாம்) அளிக்கப்படும் புஸ்தகங்கள் நமது ஆகச்சிறந்தவைகளாக இருத்தல் அவசியம். Only that will draw more crowd.
நம் வாசக வட்டத்தினரால் நிராகரிக்கப்பட்டு தேங்கியுள்ள புத்தகங்களைப் படித்து வெளிவட்டாரத்தினர் அதிகம் பேர் வந்துவிடப்போவதில்லை என்பது என் கருத்து.
///நம் வாசக வட்டத்தினரால் நிராகரிக்கப்பட்டு தேங்கியுள்ள புத்தகங்களைப் படித்து வெளிவட்டாரத்தினர் அதிகம் பேர் வந்துவிடப்போவதில்லை என்பது என் கருத்து..////
Deleteஎக்ஸாக்ட்லி ராக் ஜி!
டெக்ஸ் கதைகள் & லக்கி கதைகள் & யுகம் தாண்டிய யுத்தம் போன்ற பரபரப்பான கதைகளே இந்த வழங்களுக்கு சுகப்படும்...
கிட்டங்கியை காலி பண்றோம்னு எதிர்கால வாசகர்களை முடிச்சிடப்படாது!
.....கிட்டங்கி காதலர்களை காலி...
Delete////அளிக்கப்படும் புஸ்தகங்கள் நமது ஆகச்சிறந்தவைகளாக இருத்தல் அவசியம். Only that will draw more crowd.///
Deleteசெம போயிண்ட் ராக் ஜி!
///நம் வாசக வட்டத்தினரால் நிராகரிக்கப்பட்டு தேங்கியுள்ள புத்தகங்களைப் படித்து வெளிவட்டாரத்தினர் அதிகம் பேர் வந்துவிடப்போவதில்லை என்பது என் கருத்து.///
நூறில் ஒரு வார்த்தை!
தேங்கி நிற்கும் இதழ்கள் நிராகரிக்கப்பட்டவை என்ற கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ராக்ஜி!
Deleteகமான்சே- க்கும் காதலர்கள் உண்டு...
காமிக்ஸ் பாரம்பர்யத்தின் வெகுஜன ரசனைகள் ஒட்டுமொத்த வாசிப்புலகின் துலாக்கோலாகிட முடியாது..
ப்ரிண்ட் ரன் குறைவாக இருந்ததால் ஒரு பிரளயத்தின் பயணம் விற்று தீர்ந்திருக்கலாம்..அதை தவிர ஈரோட்டில் இத்தாலி இன்னும் லிஸ்ட்டில் இருப்பதற்கு வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?
இன்னும் பல டெக்ஸ் இதழ்களும் உண்டு..
( புத்தக திருவிழா இல்லை என்பதை தவிர)
டெக்ஸ் -ஐ அதிருப்தியுடன் பார்க்கவே இங்கு ஆட்கள் உண்டு எனும்போது மேஜிக்
விண்டை ரசிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்..
டெக்ஸ் விஜய் ! எதிர்கால ரசிகர்களுக்காக நீங்கள் அச்சமுறுவது உண்மையாயின் பென்னி, லியொனார்டோ, ஸ்மர்ப்ஸ் ,ரின் டின் கேன் ஆகியவற்றை கிளியர் செய்வதில் நீங்கள் சிறுபங்கேனும் வகிக்கலாமே? இந்த இதழ்கள் சிறு வயதுக்கேற்றவைதானே?
அல்லது இவையும் நிராகரிக்கப்பட்டவை என்று தள்ளிவிட முடிவெடுப்பீர்களா?
நமது அபிலாஷைகள் நாம் சந்தித்தேயிராத கிராம நூலகங்களை நாடும் பல பிராயத்தினரின் விருப்பங்களை எப்படி அளவீடு செய்ய முடியும்?
எடிட்டரே சொல்கிறார் யாரும் வாங்கவில்லை எனில் நூலகங்களுக்கு அளிப்பேன் என்று..
மிகப் பெரும் அனுபவஸ்தரின் இச்செயல் எதிர்கால வாசகர்களை தடுத்து நிறுத்தும் செயல் என கனவிலேனும் நம்மால் நினைக்க முடியுமா?
தவிர
One man's trash is another's treasure.
நிலையில் மாற்றமில்லையெனில் டெக்ஸ் கதைகளை நூலகங்களுக்கு பரிசளியுங்களேன்..உங்கள் பட்ஜெட்டுக்குட்பட்டு.
மாதம் ஒரு டெக்ஸ் இதழ் ஏதேனும் ஒரு நூலகத்துக்கு ?
டீல்?
ஈவி ! நீங்கள் மாதம் ஒரு சிக்பில்
Deleteடீல்?
உங்களுக்குத்தான் கார்ட்டூன் பிடிக்குமே
இதில் பெரும்பாலான கதைகளுக்கு நீங்கள் விமர்சிக்கும்போது 10/10
போட்டிருப்பதால் இதை வாசிக்க நேரும் எதிர்கால வாசகர்கள் வருங்காலத்தில் சிவகாசிக்கு அலைகடலென ஆர்ப்பரித்து விரைவார்கள் என நம்புகிறேன்
:-)
எதிர்கால வாசகர்கள் என்பது ஒரு ஆப்டிமிஸம்..
ஒரு நம்பிக்கை அவ்வளவுதான்..
மாய பிம்பத்தை நம்பி பல காரணங்களால் தேங்கி நிற்கும் இதழ்களை நூலகங்கள் செல்ல வேண்டாம் என சொல்வது தவறு
(என் பெயர் லார்கோ கூடவா?)
செனா அனா ஜி.. நான் தான் உண்மையான ஈ.வி! யாரோ ஒரு போலி ஐடி என் பெயரில் மேலே போட்ட கமெண்டை நான்தான்னு நீங்க நம்பிட்டீங்க! ஹைய்யோ.. ஐய்யோ!!
Deleteசெனா அனா ஜி.. நான் தான் உண்மையான ஈ.வி! யாரோ ஒரு போலி ஐடி என் பெயரில் மேலே போட்ட கமெண்டை நான்தான்னு நீங்க நம்பிட்டீங்க! ஹைய்யோ.. ஐய்யோ!!
Delete(தேங்யூ ஈவி)
அது...அது....உண்மையான STV...னு படிங்க பொருளர் ஜி!
Deleteஅவசரப்பட்டு வார்த்தையை உட்டுபுட்டோம்....!!! மன்னிக்க!
அவரு சொன்னபோது அதான் சரினு பட்டுச்சி..
ஆனா நீங்க விளக்கிய பிறகு இதான் சரி!!!!
நாம பழகிய ரசனை மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை...!!!
கமான்சே"- நிச்சயமாக வருங்காலத்திற்கு பிடிக்க கூடும்....!!!
கிட்டங்கி காதலர்களையே நூலகத்திற்கு வழங்கலாம்....
இந்த கமான்சே கிளியர் புராஜக்ட்ல இந்த அணிலின் பங்கும் உண்டு!!!!
அடியேனையும் சேர்த்துகிடுங்க...
பை த வே.. செனா அனா ஜி..
Delete///ஈவி ! நீங்கள் மாதம் ஒரு சிக்பில்
டீல்?
///
இப்படியெல்லாம் ஈவியை நீங்க கட்டுக்குள் அடைக்க முடியாது! வேற ஒரு ப்ளான் ஏற்கனவே ரெடி!
அது என்னான்னா..
கிட்டத்தட்ட நம்ம கார்த்திக் சோமலிங்கா பண்ணியது மாதிரிதான்! ஆனாலும் என்னோடதுல ஒரு வித்தியாசமிருக்கு! சேலத்துல நான் இருக்கும் ஏரியா பக்கமுள்ள சிறுவர் சிறுமிகளின் புத்தக ஆர்வம் மீதான தகவல்களை விசாரிச்சு சேகரிச்சு வச்சிருக்கேன்! அதிலே ஒரு மூனு பேர் தேறியிருக்காங்க! அவங்களுக்கு இந்த ஆன்லைன் திருவிழாவில் - ஆளுக்கு ரெண்டு புக் (நம் வெளியீடுகளில் சிறந்ததாக நான் நினைப்பவைகளில்) வாங்கிக் கொடுக்கலாம்னு இருக்கேன்! இரண்டில் ஒன்னு கண்டிப்பா கார்ட்டூனா இருக்கும்!! அவங்களுக்குப் பிடிச்சிருந்தா இன்னும் வாங்கிக் கொடுக்கவும் ஐடியா இருக்கு!
ஆனுலைன் திருவிழாவில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் கொரியர் செலவு ஃப்ரீன்னு வேற அறிவிச்சிருக்காங்களே - விட்டுடுவோமா?!!
சுயபரிசோதனை செஞ்சு பார்த்துட்டோம்.. பரிசோதனை முடிவுகள் எல்லாமே 'இ.ப தொற்று - பாஸிடிவ்'னு தான் வந்திருக்குங்க செனா அனா! :)//
ReplyDeleteஹிஹி எனக்கும்...
ஐய்யா பழனிவேல் சாமி மீண்டும் இ.ப. வேண்டும் என கொடி பிடிக்க ஆரம்பித்து விடாதீர்கள். 🙏🙏🙏🙏
Deleteஆசிரியரின் இந்த பதிவு மற்றும் அவரின் பின்னூட்டங்களில் அவரின் அயர்வு மற்றும் மனதின் வலி நன்றாக தெரிகிறது. ப்ளீஸ். அதனை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.🙏🙏🙏🙏
காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்: இ.ப.மீண்டும் வேண்டும் என கேட்பதை தயவுசெய்து இத்தோடு நிறுத்திக் கொள்ளுவோமே. நமக்கு புதிய கதைகள் களங்கள் வர வழிவிடுமோம்🙏🙏🙏🙏
ஒரு வேளை இ.ப முழு தொகுப்பு ஆர்டர் செய்ய முடியாமல் விட்ட நண்பர்கள், இ.ப. வேண்டும் என்று விரும்பும் காமிக்ஸ் காதலர்களுக்கு என்னிடம் உள்ள கருப்பு வெள்ளை, வண்ணத் தொகுப்பு, வரவுள்ள வண்ணத் தொகுப்பு என மூன்று புத்தகங்களையும் கொடுத்து உதவ தயாராக உள்ளேன்.
பரணீன்னா,
Deleteஎடிட்டரே இதுக்கும் மேல கூவோ கூவுன்னு கூவியிருக்காருங்கோ. ஆனாலும் மறு-மறு-மறு பதிப்பு வரை வந்தே விட்டோம் ! :-) :-D
எனக்கென்ன ஆதங்கம்னா என் பெயர் டைகர் எல்லாம் கலர் கருப்பு வெள்ளை அப்டீன்னு இன்ஸ்டண்டா போட்டுட்டு இந்த masterpiece சாகசத்தை ஒரே ஒரு முறை thick பேப்பரில் BW ஹார்டபௌண்ட்ல் பாக்கலேன்னா ஜேசன் நம்மளை மன்னிக்க மாட்டாருங்கோ !
ஸ்பின் ஆப் கதைகளையும் ஹார்டபௌண்ட்ல போடாட்டி கூட ஜேசன் கண்ணைக் குத்திப்புடுவாருன்னு பிட்டையும் சேர்த்தே போட்டீங்கன்னா பொழுது இன்னும் சூப்பரா போகுமே சார் !
Deleteஅப்பாலிக்கா இஸ்டரி ஆப் XIII என்றுமே ஒண்ணு கீது ! புடிக்கிற கொடியை மொத்தமா புடிச்சிட்டாக்கா வேலை சுளுவில்லீங்களா ?
ஐய்யா பழனிவேல் சாமி மீண்டும் இ.ப. வேண்டும் என கொடி பிடிக்க ஆரம்பித்து விடாதீர்கள். 🙏🙏🙏🙏//
Deleteஉள்ளபடியே ஆகட்டும் PFT
///உள்ளபடியே ஆகட்டும் PFT///
Deleteபூடகமான/புத்திச்சாலித்தனமான பதில்! நீங்க நம்பாதீங்க PfT! :)
'இனிமே இ.ப கேட்கமாட்டேன்'னு பதில் போடலைன்றதை கவனிங்க!
// 'இனிமே இ.ப கேட்கமாட்டேன்'னு பதில் போடலைன்றதை கவனிங்க! //
DeleteI noted this Vijay! :-)
பழனி ஆசிரியர் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர். இனி ஆசிரியரை இ.ப. வேண்டும் என கேட்கமாட்டார் என நம்புவோம் விஜய.
Deleteமகிழ்ச்சியான தருணம் இது சார். லயன் காமிக்ஸ் 400 வரை வந்துவிட்டது... 200வது வெளியீட்டுக்குப் பின்னே லயன்காமிக்ஸ் இனிமேல் வருமா, என்கிற அளவுக்கு நீண்ட தாமதம் இருந்தது... ஆனால் சாதனை படித்து விட்டீர்கள் சார். லயன் முத்து காமிக்ஸ் வாசகர் பேராதரவோடு எப்போதும் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.
ReplyDeleteE-ரோடு-ஸ்பெஷலில்-ஒரு ஜேம்ஸ்பாண்ட் 2.0
ReplyDeleteஇருக்கிறது என்பது எனது யூகம். மற்றபடி லக்கிலூக் (சூ மந்திரகாளி) தான்.
2 புத்தகங்கள் அதற்கு மேல் ஆர்டர் செய்தவர்கள் எல்லோருமே வணிக நோக்கத்தில் செய்யவில்லை. அப்போதைய சூழ்நிலை + ஒரு நல்ல நோக்கத்திற்காக நம் பங்கும் இருக்கட்டுமே என்று. முதல் கலர் புக்ஸ் நான் பதிவு செய்தும் கிடைப்பதில் வந்த இடர்ப்பாடுகள் இம்முறையும் வந்து விடக் கூடாதென்று முதலிலேயே 2 புக்ஸ் ஆர்டர் செய்தேன்' அது இப்போது நல்லதாக தெரிகிறது.
ReplyDelete// அப்போதைய சூழ்நிலை + ஒரு நல்ல நோக்கத்திற்காக நம் பங்கும் இருக்கட்டுமே //
Deleteநன்று நண்பரே.
*உண்மையான காமிக்ஸ் நேசர்கள்* யாருக்காவது இ.ப தேவை என்றால் ஒன்றுக்கு அதிகமாக ஆர்டர் செய்த நண்பர்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க முன்வரலாம்.
இனி மேல் புதியன மட்டுமே் என்பதே என் நிலைப்பாடு
ReplyDelete+1111
Deleteநாளை புத்தகங்கள் கிளம்பப் போகிறது. தீபாவளி ஆரம்பம்.
ReplyDeleteடைகர இல்லாமே முத்து 50 என்பது குறை பிரசவமே.. கடின வார்த்தைகளுக்கு மன்னிக்கவம்..
ReplyDeleteInfant Incubator ; Oxygen therapy-ன்னு எதேதோ இருக்குது சாரே...குறை பிரசவத்துப் பிள்ளைகளையும் அழகாய்த் தேற்றி,நார்மலான பிள்ளையாக்கிடும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திடுத்து !
DeleteSo பாரத்தை கடவுள் மீதும், நம்பிக்கையினை டாக்டர்கள் மீதும் போட்டால் போச்சு !
குறை பிரசவமாக இருந்தாலும் அது சுகப்பிரசவம் என்பது எல்லாருக்கும் தெரியும்
Deleteஸ்பின் ஆப் கதைகளையும் ஹார்டபௌண்ட்ல போடாட்டி கூட ஜேசன் கண்ணைக் குத்திப்புடுவாருன்னு பிட்டையும் சேர்த்தே போட்டீங்கன்னா பொழுது இன்னும் சூப்பரா போகுமே சார் !
ReplyDeleteஅப்பாலிக்கா இஸ்டரி ஆப் XIII என்றுமே ஒண்ணு கீது ! புடிக்கிற கொடியை மொத்தமா புடிச்சிட்டாக்கா வேலை சுளுவில்லீங்களா ?//
அடுத்து எங்க வருவாங்கன்னு நம்ம சாருக்கு தெரியாததில்லை ஆனாலும் வேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டோம்...அதற்க்கென காலம் கனியும் வரை காத்திருப்பேன் சார்....
நெஞ்சே எழு எனக்கு வந்த சந்தா காப்பியில் கிட்டத்தட்ட 10 20 பக்கம் இல்லை... பைண்டிங் மிஸ்டேக்... சரி ஆன்லைன் புத்தக விழாவில் இன்னுமொரு காப்பி வாங்கி கொள்ளலாம் என்று இருந்தேன்... இப்போ ஸ்டாக் இல்லை... What to do... ஏதாவது வழி உண்டா சார்?
ReplyDeleteபார்த்த உடனே லயன் ஆபிசில் சொல்லிருந்தால் அவர்கள் மற்றொன்று அனுப்பிருப்பார்கள்
Deleteசார் வணக்கம். நான் முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் எல்லா கதைகளையும் படிக்கிறேன் படித்து கொண்டும் இருக்கிறேன் சார்.அதேபோல ராணி காமிக்ஸ் கதைகளையும் படித்து உள்ளேன்.ஆனால் இப்பொது ராணி காமிக்ஸ் புத்தகங்கள் கிடைப்பது இல்லை.நீங்கள் அந்த ராணி காமிக்ஸ் புத்தகங்களை மறுப்பதிப்பு செய்விர்களா? ஏங்களுடன் காமிக்ஸ் பிரியன் சார்...
ReplyDeleteபுத்தகங்கள் கிளம்பிடுச்சான்னு தெரியலையே சொக்கா
ReplyDeleteகிளம்பிக் கொண்டே இருக்கு சத்யா. நாளை இந்த வேளை
Deleteஆபீஸ்க்கு போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை! எனவே பேக்கிங் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது என எடுத்து கொள்ளலாம் !
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteபுத்தகதிருவிழா புத்தகங்களுக்கு இன்று பணம் அனுப்பினால் அவைகளை இன்று புறப்பட உள்ள ரெகுலர் இதழ்களுடன் அனுப்பி வைக்க முடியுமா :-) இப்படிக்கு குண்டக்க மண்டக்க என யோசிக்க ஆரம்பித்துள்ள பரணி :-) ஓடுடா பரணி ஆசிரியர் குண்டு புத்தகத்தால் அடிப்பதற்குள் :-)
கெடாவெட்டுனாத்தான் கறிசோறுங்கோ!!!!!!!
Deleteசார் மேலே அதற்கு பதில் சொல்லியுள்ளார். புக் பேர் புத்தகங்கள் நீங்கள் தனியாக வாங்க வேண்டும்.
Deleteஆகையால் நான் ப்ரீ புக்கிங் மட்டும் செய்துள்ளேன். ஒரு செட் லார்கோ.
// கெடாவெட்டுனாத்தான் கறிசோறுங்கோ!!!!!!! //
Delete:-)
இன்றைக்கு புதிய பதிவு இருக்குமா அல்லது புக் பேர் புத்தகங்கள் பற்றி சொல்லும் போதுதான் பதிவா
ReplyDeleteகிருஷ்ணா என்னை விட ஆர்வமாக இருக்கீங்க போல. கட்டுப் படுத்த முடியவில்லை ஆர்வத்தை
Deleteலயன் 400 ஆர்வம் மற்றும் புக் பேர் இதழ்கள் பற்றி அறிய
Deleteஇன்று இரவு புத்தகங்கள் கிளம்பி விட்டது என்று பதிவு வரும். நாளை இரவு அல்லது சனி காலை புக் Fair பற்றி தெரிய வரும்
Delete"லயன் 400"---க்கு ஸ்பெசல் பதிவு இல்லாமலா??????
Deleteஇரத்தபடலம் லயன் காமிக்ஸின் டாப் படைப்புகளுள் ஒன்று.. இது சகலரையும் ஏதாவது ஒரு ரூபத்தில் சென்றடையணும்.
ReplyDeleteஇன்னும் சில ஆண்டு கழித்து காமிக்ஸ் படிக்க வர்றவங்க இதை அவுங்க தாமதமாக காமிக்ஸ் படிக்க வந்த காரணமாக மறுப்பது சரியாகாது.
இன்னும் ஓரு ஆறேழு ஆண்டுகள் கழித்து மீண்டும் கோரிக்கைகள் எழலாம்.. அதற்கு தேவை இருந்தால் ஒரே புக்காக கூட வரலாம்....
அப்போது நாம வேடிக்கை மட்டுமே பார்க்கும் பக்குவத்தை அடைந்து இருப்போம்.. நம்மிடம் இருக்கும் புக்கை நாம எடுத்து தடவி பார்க்கலாம்.
காலம் விரும்பினால் மற்றொரு பதிப்பு வரத்தான் செய்யும்......!!!!
Fact தான். நமது விசிட்டிங் கார்டுகளில் ஒன்று இரத்த படலம் எனபது மறுக்க முடியாத ஒன்று
Deleteஆமா ஆமா ... புதுசா கேள்விப்பட்டு வரவங்களுக்கு முதல்ல BW சிங்கள் hardboundலிருந்து ஆரம்பிக்கிறோம். தூள் கெளப்பறோம் !
Deleteகாலம் விரும்பினால் மற்றொரு பதிப்பு வரத்தான் செய்யும்......!!!!//
Deleteமறுக்க முடியாத உண்மை.STV
அப்போது நாம வேடிக்கை மட்டுமே பார்க்கும் பக்குவத்தை அடைந்து இருப்போம்.. நம்மிடம் இருக்கும் புக்கை நாம எடுத்து தடவி பார்க்கலாம்//
ReplyDelete👍👍👍
நண்பர்கள் யாராவுது சென்னை முகவர்கள் நம்பர் ஷர் செய்யவும்
ReplyDelete