நண்பர்களே,
வணக்கம். நேற்றைக்கு இரவு சேனல்களுக்குள் கதக்களி ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், ஏதோவொன்றில் ஏதோ ஒருவிதப் போட்டிக்கோசரம், ஆளாளுக்கு ஜிலேபி ஜிலேபியாய் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது ! நடுவர்கள் வந்து பார்த்துவிட்டு 'இது ரிஜிட்' என்றால் மறுக்கா சுடணுமாம் ! 'சபாஷ்...சரியான போட்டி' என்று தோன்றியது !! கைநடுங்க நடுங்க, அந்த amateurs சுடும் ஜிலேபிகளைப் பார்த்துக் கொண்டேயிருந்த போது தான் - கடந்த வாரத்தினில் நாம்கூட இதே போலொரு முயற்சியினில் ஈடுபட்டிருந்தது நினைவுக்கு வந்தது ! ஆகஸ்டின் அத்தனை இதழ்களுமே மெகா இதழ்கள் and ஒவ்வொன்றின் முதுகிலுமே ஒரு வண்டி எதிர்பார்ப்புகள் எனும் போது, நடுவர்களாக நீங்கள் என்ன சொல்லக் காத்திருக்கிறீர்களோ ? என்ற பதைபதைப்பு உள்ளுக்குள் கணிசமாயிருந்தது !!
'தல' தான் ; மாஸ் தான் ; முழுநீளக் கதை தான் ; வண்ணம் தான் ; கெத்தான அட்டைப்படம் தான் - ஆனாலும் உங்களுக்குக் கதை பிடித்திருக்க வேண்டும், தெறிக்கும் வேகத்தில் செய்திருந்த மொழியாக்கம் பிடித்திருக்க வேண்டும் ; தயாரிப்பினில் எல்லாமே set ஆகியிருக்க வேண்டும் ; அட்டைப்படம் நேரில் கெத்து காட்ட வேண்டும் ; and எல்லாவற்றிற்கும் மேலாய் இத்தாலிய மஞ்சச்சட்டைக்காரர் மீது இப்போதெல்லாம் ஒரு மிடறு கூடுதலாகவே நாமெல்லாம் குவித்து வைத்திருக்கும் அபிமானத்துக்கு நியாயம் செய்திட வேண்டும் என்ற டென்ஷன் லயன் 400 இதழினில் !!
XIII தான் ; ஏற்கனவே வெளியான மறுபதிப்புத் தான் ; தடவிப் பார்த்து விட்டு ; முகர்ந்து பார்த்து விட்டு, புரட்டிப் பார்த்து விட்டு, பீரோவிற்குள் துயிலுக்கு அனுப்பிடவோ ; 'வாங்க சார்...வாங்க சார்...சுடச் சுட வாங்கிக்கோங்க சார் !' என்று "காமிக்ஸ் பிரைவேட் சேல்" க்ரூப்பில் கல்லா கட்டிடவோ போகும் 2.75 கிலோ சமாச்சாரம் தான் !! ஆனாலும் , இத்தனை மாதங்களது எதிர்பார்ப்பின் பலன்கள் உங்களைப் பூரணமாய்த் திருப்தி கொள்ளச் செய்திட வேண்டும் ; அச்சில் ; பைண்டிங்கில் ; தயாரிப்பில் உங்கள் முகங்களுக்குப் புன்னகையினைக் கொண்டு வர வேண்டும் எனும் போது இங்கேயும் பிரஷருக்குப் பஞ்சமே கிடையாது !
ஆன்லைன் புத்தக விழா ; ஸ்பெஷல் இதழ்கள் ; யூகிக்கக்கூடிய மறுபதிப்புகளே என்றாலும், அங்கேயும் தல hardcover கலர் இதழ் - எல்லா பெட்டிகளையும் டிக் அடித்தாக வேண்டும் தானே ? So இங்கேயும் எதையுமே taken for granted என எடுத்துக் கொள்ளும் குஷன் லேது நமக்கு !
ஜட்ஜ்கள் வரிசையாய், ஒவ்வொரு ஜாங்கிரியையும் ருசித்து ; ரசித்து ; மார்க் போடும் வரைக்கும் தில்லாக இருப்பது போல் வெளியே காட்டிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் எனக்கு டர் தான் ! And கடந்த நான்கு நாட்களில் ஜிலேபிகள் ஒவ்வொன்றாய்த் தேர்வாகிட, ஒரு கனவை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பை எனக்குத் தந்துள்ளீர்கள் guys !! லயன் # 400 கெத்து ; இ.ப. தயாரிப்பினில் கெத்தோ கெத்து ; "சிகப்பாய் ஒரு சிலுவை" புக் இன்னமும் உங்களை எட்டியிருக்கவில்லை என்றாலும், அதுவும் சோடை போயிடாது என்ற நம்பிக்கை - என இந்த triple சந்தோஷங்களோடு - வாரயிறுதியினில் நிகழ்ந்த அந்த 'நல்ல காரியத்துக்கு கைகொடுக்கும்' முயற்சி + ஆன்லைன் புத்தக விழாவின் thumping வெற்றி என, நான்கு நாட்களில், ஐந்து லட்டுக்களைத் தின்ன வாய்ப்புத் தந்துள்ளீர்கள் !!
First things first !!
நம்மிடமிருந்த அந்தப் 13 Slipcase (2018) இதழ்களின் விற்பனையினில் முதல் 11 இதழ்கள் - அடையார் மையத்துக்கு நன்கொடையாய் ஈட்டியிருந்தது ரூ.32,400 என்பதை நேற்றே அறிவித்திருந்தேன் ! பாக்கி இருந்த 2 இதழ்களின் சார்பிலும் - "நாங்கள் ஒரு தொகையினை நன்கொடையாக மட்டும் அடையாருக்கு அனுப்பி விடுகிறோம் ; புக் ஏற்கனவே எங்களிடம் உள்ளதால் வேறு யாருக்கேனும் அன்புடன் கொடுத்து விடுங்கள் !!" என்றபடிக்கே முன்வந்துள்ளனர் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் வசித்து வரும் இரு வாசக அன்புள்ளங்கள் !! And இருவரது நன்கொடைகளும் தலா ரூ.10,000 என்ற போது - அடையாருக்கான வாசகப் பங்களிப்பு மட்டுமே ரூ.52,400 என்றாகிறது !!! Take a bow மகிஜி & கணேஷ் ராஜேந்திரன் சார் from ஆஸ்திரேலியா !! And ஆஸ்திரேலிய நண்பருக்கு நமது இம்முயற்சியினைப் பற்றிச் சொல்லி, அவரை இதனில் பங்கேற்கச் செய்த காமிக் லவர் ராகவன் அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் !! ஏற்கனவே நமது நிதி திரட்டும் முயற்சிகளிலும் நண்பர் கணேஷ் ராஜேந்திரன் அவர்கள் கணிசமான பங்கெடுத்துள்ளார் என்பது கொசுறு தகவல் !
So நண்பர்களின் பங்களிப்பு ரூ.52,400 என்றாக, 13 இதழ்களுக்குத் தலா ரூ.2900 வீதமான விற்பனைத் தொகையினை round off செய்து - ரூ.38,000 இன்றைக்கு நம் சார்பினில் அடையாருக்குச் சென்றாகிவிட்டது !! So வருஷங்களாய் டப்பாக்குள் துயின்று கிடந்த 13 இதழ்களின் வாயிலாய் ஒரு நற்காரியத்துக்கென ரூ.90,400 புரட்ட முடிந்துள்ளது இந்த வாரயிறுதியினில் !! And நாளை இன்னொரு தொகையும் நம்மிடமிருந்து செல்லவுள்ளதெனும் போது - கனவாய் மட்டுமே தென்படுகிறது உங்களின் உத்வேகப் பங்களிப்புகள் !! Simply awesome folks !!!
Moving on to the லட்டு # 5 - என்ன சொல்வதென்றே தெரியவில்லை எனக்கு !! இது வரையிலுமான நமது ஆன்லைன் புத்தக விழாக்களின் போது - தூரத்தில் நின்று பராக்குப் பார்த்து விட்டு, விற்பனை நம்பர்களை மட்டுமே கேட்டுக் கொண்டு நகர்ந்திடுவேன் ! ஆனால் இம்முறை ஜிலேபி சார்ந்த டென்க்ஷன் உள்ளுக்குள் இருந்ததாலோ, என்னவோ, இயன்ற அளவுக்கு நேரம் செலவிட முனைந்தேன் நம்மவர்களோடு ! And மெய்யாலுமே எனக்கு வியர்த்துப் போய்விட்டது உங்களின் திக்கு முக்காடச் செய்த உற்சாக வரவேற்பினில் !! கணிசமான (ரெகுலர்) புத்தக விழாக்களுக்கு வந்திருக்கிறேன் தான் ; வாரயிறுதிகளில் அலை மோதும் கூட்டங்களில் நமது ஸ்டால் திணறுவதையும் பார்த்திருக்கிறேன் தான் ! ஆனால் அவையெல்லாமே ஜுஜுப்பி தான் - கடந்த 2 நாட்களின் உங்களின் ரகளைகளுக்கு முன்னாள் ! பல்லாயிரங்களில் ஜனம் வந்து போகும் பெருநகர புத்தக விழாக்களில் கணிசமான கூட்டம் சேர்வதில், கூரையிலேறிக் கூவிடும் வியப்புகள் இல்லை தான் ; ஆனால் ஒரு virtual விழாவினில், தொலைவிலிருந்தபடியே இத்தனை வேகத்தை ; உத்வேகத்தை உண்டாக்குவதென்பது ஒரு ராட்சச சாதனை என்பேன் !!
சனிக்கிழமை காலையில் அடிக்கத் துவங்கிய போன் மாலை ஏழு மணிக்கு நம்மாட்கள் கிறங்கிப் போய்க் கிளம்பும் வரைக்கும் அடித்துக் கொண்டேயிருந்தது !! ஞாயிறோ இன்னொரு உச்சம் !! மதியம் சாப்பிட அமரும் போது மட்டும் செல்லை அணைத்து விட்டு, 15 நிமிடங்கள் கழித்து ஆன் செய்து பார்த்தால் நூற்றிச் சொச்ச வாட்சப் மெசேஜஸ் !! உள்நாட்டிலிருந்து, வெளிநாட்டிலிருந்து என்று எங்கெங்கிருந்தோ நண்பர்கள் அழைக்க, அத்தனை பேரையும் ஏதோ வருஷமாய் நேரில் தெரிந்து வைத்திருப்பவர்களை போல நலம் விசாரித்து ; ஆர்டர் கேட்டு நம்மாட்கள் மூவரும் இயங்கியதை நான் வெறிக்க வெறிக்கத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன் !! அத்தனை பேரின் ஆர்டர்களிலும் டெக்ஸ் இருந்தார் ; இம்முறை கணிசமானோரின் ஆர்டர்களில் லார்கோவும் இடம்பிடித்திருந்தார் ; சில பல இறுக்கமான சீன்ஸ் இமான்தார்கள் (இ.சீ.இ) கார்ட்டூன்களுக்காய் ஆர்டர் செய்திருந்தனர் ! ஆங்கில காமிக்ஸ் ஆர்டர்களும் இருந்தன ; SMASHING 70 s பற்றிய விசாரிப்புகள் ரவுண்டு கட்டின ; "இ.ப" இல்லியா ? என்ற கேள்விகள் காதில் உதிரம் கொட்டுமளவுக்கு இருந்தன !! மாலை ஆறரைக்கு மேல் ஆளாளுக்கு அறிஞர் அண்ணாவின் வாய்ஸில் பேச ஆரம்பிக்கும் நிலை தென்பட, செல்களை அணைத்து விட்டு, E -ROAD 2021-க்கு மங்களம் பாடிவிட்டு நம்மவர்கள் கிளம்பிய பின்னேயும் land line கதறிக் கொண்டே இருந்தது !! And இன்று, திங்கட்கிழமையின் முழுமையிலும் கிட்டத்தட்ட அதே கதை தான் !! "நேற்றைக்கு லைன் கிடைக்கலை ; என் ஆர்டர் இதெல்லாம்" - என்று பிரித்து மேய்ந்து விட்டீர்கள் guys !! பாக்கெட் போட்டுக் கொண்டே இருந்தார்கள் மாலை ஏழு வரையிலும் & இன்னும் ஒரு வண்டி ஆர்டர்கள் தொக்கி நிற்பதும் தெரியும் எனக்கு !!
இந்த விற்பனைகளினில் - வாசிக்க எவ்வளவு சதவிகிதம் ? தெரிந்தோருக்கு வழங்கிட எத்தனை சதவிகிதம் ? சேகரிப்புக்கு எத்தனை சதவிகிதம் ? நம் மீதான பரிவின் காரணமாய் வாங்கியிருப்பது எத்தனை சதவிகிதம் ? என்பதை மட்டும் கண்டறிய ஒரு மாயக்கண்ணாடி இருப்பின், அமேசானில் முதல் வேலையாக அதற்கு ஆர்டர் போட்டிருப்பேன் ! எது எப்படியோ - இந்த இரு நாள் மேளாவின் பலனாய் கிட்டங்கியின் பளு சன்னமாய்க் குறைந்திருக்கலாம் தான் ; ஆனால் இத்தனை அன்பினைக் கடனாகப் பெற்றிருக்கும் வகையில் எனக்குள்ள பொறுப்புகளின் பளு பன்மடங்கு கூடியிருப்பதாய்த் தோன்றுகிறது !! ஜெய் பாகுபலி !! உங்களின் அன்புகளுக்கு நியாயம் செய்திடும் ஆற்றலை புனித மனிடோ எங்களுக்கு அருள்வாராக !!
அடுத்த சில நாட்களாவது ஆகும் - நம்மவர்கள் இந்த ஆர்டர்கள் முழுமையினையும் அனுப்பி முடித்திட !! அதற்குள் நான் புதுசாய் SWEET '60s என்றோ ; EXCELLENT '80s என்றோ ; "நின்னுக்கோரி '90s" என்றோ - எதையேனும் இழுத்து விட்டிருக்கக்கூடாதே என்று கருப்பசாமி கோயிலுக்குப் போய் கறுப்புக் கயிறு கட்டியபடியே அவர்கள் வேண்டியிருந்தாலும் நான் ஆச்சர்யம் கொள்ள மாட்டேன் !! அசாத்தியமான நீங்கள் ; அசாத்தியமான நாட்கள் & அசாத்தியமாய்க் கையாண்ட பெருமை நம்மவர்களையே சாரும் !! THANKS A TRILLION ALL !!!
Before I sign out - சுடச் சுட கூரியர் டப்பிக்களை உடைத்த கையோடு "இ.ப" இதழ்களை ஏலம் போட புதுசாக திரை மறைவைத் தேற்றியுள்ள "ஆர்வலர்களுக்கு" ஒரு update : "கழுகு வேட்டை" சுத்தமாய் துடைத்தாச்சு ; அதைக் கோரி ஒரு நூறு போன்களும் வந்தாச்சு ! So நாளை முதல் கத்திரிக்காய் ; வெண்டைக்காய்களோடு - "கழுகு வேட்டை" களையும் ஷாப்பிங் கூடைக்குக் கொணர இப்போதே ஏலேலோ - ஐலசா என நீங்கள் தயாராகிக் கொள்ளலாம் ! உங்கள் முகங்களை அச்சிட்டு, ஒரு பரோபகார நண்பர் விலையின்றித் தர ஒரு லட்சம் பணஉதவியும் செய்திட்ட இந்த இதழிலும் இனி நீங்கள் கல்லா கட்டிட ரூட் செம க்ளியர் !! ஒரு பக்கம் - "எனக்கு புக்கே வேணாம் ; ஆனால் ஒரு நல்ல காரியத்துக்கு என்னால் இயன்றதைத் தருகிறேன்' - என ஓசையின்றி செயல்படும் பிரசன்னாக்களும், மஹேந்திரன்களும், கணேஷ் ராஜேந்திரன்களும் இருக்கும் இதே வட்டத்தினுள் - நீங்களுமே இருப்பது, வானவில்லின் வர்ணஜாலத்துக்கு ஒப்பாகிடும் தானே ? So ஜமாயுங்கள் நட்பூஸ் !!
அதே சமயம் "இ.ப" இதழ்களுக்கென காசைக் கரியாக்கிட முனைப்பு காட்டிடும் நண்பர்களே !! ஒரு முகவரிடம் கணிசமான அளவுக்கு உபரி இதழ்கள் உள்ளன & அவர் ஏலமிடும் பார்ட்டியும் அல்ல ! ஒரிஜினல் விலைக்கே விற்றால் போதுமென்ற எண்ணத்தினில் உள்ளார் ! So காசைச் சூறை போடும் முன்பாய் கொஞ்சமாய் யோசித்துக் கொள்ளுங்கள் என்பது மட்டுமே எனது வேண்டுகோள் ! And அவர் யாரென்ற கேள்விகளோடு நாளை நம்மவர்களைத் துளைக்க வேண்டாமே - ப்ளீஸ் ; because அந்த சமாச்சாரங்களை நான் மட்டுமே கையாள்வதாய் உள்ளேன் ! நம்மாட்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது !!
அப்புறம் டெக்ஸ் இதழ்கள் காலமாய் நம்மிடம் கையில் உள்ள போதெல்லாம் வாங்காது இருந்து விட்டு, இப்போது மூன்று மடங்குகளுக்கு விலை தரும் நண்பர்களுக்கும் ஒரு தகவல் : பொறுமை ப்ளீஸ் ; உங்கள் தேடல்களுக்கு சீக்கிரமே நியாயமான பலன்கள் கிட்டாது போகாது ! So careful please !!
Time for me to sign out folks !! பொதுவாய் இங்கே நமது பொம்ம புக் & அவை சார்ந்த சமாச்சாரங்களைத் தாண்டி பெருசாய் வேறெதைப் பற்றியும் நான் எழுத முனைவதில்லை ! ஆனால் ஆப்கனிஸ்தானிலிருந்து இன்று வந்து கொண்டிருக்கும் வீடியோ க்ளிப்பிங்களையும், படங்களையும், தகவல்களையும், உள்வாங்கிடும் போது ஈரக்குலையெல்லாம் நடுங்குகிறது ! அதிலும் இன்றைக்கு காபூல் விமான நிலையத்திலிருந்து வந்திடும் படங்கள் சத்தியமாய் கண்ணில் உதிரத்தை வரச் செய்கின்றன ! இத்தனை ஜனமும் ஒட்டுமொத்தமாய் என்ன பாவம் செய்தனரோ - இப்படியொரு தலையெழுத்துக்கு ஆளாகிட ! தெய்வமே...அவசரமாய் இந்த அப்பாவிகளின் கண்ணீரைத் துடையுங்களேன் என்பதைத் தாண்டி இந்த நொடியினில் வேறெதுவும் தோன்றவில்லை !
Bye all...see you around !!
உள்ளேன் ஐயா
ReplyDeleteமிக்க நன்றி. உங்களின் காமிக்ஸ் காதலுக்கு.
Deleteநான் 3
ReplyDeleteநாநாலு
ReplyDeleteHi
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...
ReplyDelete🙏🙏
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteசூப்பர் பதிவு சார். ஆகஸ்ட் இதழ்களை முடித்து விட்டேன். புக் Fair இதழ்களுக்கு வெயிட்டிங். நன்றிகள் சார் தங்களுக்கும் நமது அலுவலக நண்பர்களுக்கும்.
ReplyDeleteஉங்கள் தேடல்களுக்கு சீக்கிரமே நற்பலன்கள் கிட்டாது போகாது ! Ahhha 👍🏻👍🏻👍🏻 Waiting 😀
ReplyDelete🙏🙏
ReplyDeleteஅனாதை குழந்தைகள், ஆந்திரா புத்தூர் , அடையாறு இன்ஸ்டியூட் எல்லாருக்கும் உதவ நினைப்பது நல்ல விஷயம்தான் ..
ReplyDeleteஉங்களையும் கொஞ்சம் பாத்துக்குங்க சார்!
( அடையாறுன்னு வந்தாலே நெகிழ்ந்து போறீங்க...அடையாறு ஆனந்த பவனுக்கு கூட நன்கொடை அனுப்பிடுவீங்க போல:-)]
நல்லவர்க்கு பொருள் எதற்கு ?
நாடிவரும் புகழ் எதற்கு ?
அப்டிங்கற வரிக்கு பொருத்தமா இருக்கீங்க..
ஆஸ்திரேலியா கணேஷ் , ஷெரீப் கொடை மனம் குறித்து மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்
///அடையாறுன்னு வந்தாலே நெகிழ்ந்து போறீங்க...அடையாறு ஆனந்த பவனுக்கு கூட நன்கொடை அனுப்பிடுவீங்க போல:-///
Deleteஹா ஹா ஹா! :))))))))
செனா அனா ஜீ...
Delete:-)))
ஆஸ்திரேலியா கணேஷ் சார் மற்றும் அமெரிக்கா மஹி சார் இருவர் இருக்கும் திசை நோக்கி தலை தாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன்.
ReplyDelete//அப்புறம் டெக்ஸ் இதழ்கள் காலமாய் நம்மிடம் கையில் உள்ள போதெல்லாம் வாங்காது இருந்து விட்டு, இப்போது மூன்று மடங்குகளுக்கு விலை தரும் நண்பர்களுக்கும் ஒரு தகவல் : பொறுமை ப்ளீஸ் ; உங்கள் தேடல்களுக்கு சீக்கிரமே நற்பலன்கள் கிட்டாது போகாது ! So careful please !!//
ReplyDeleteடெக்ஸ் இதழ்கள் மட்டுமல்ல, இலவச வெளியீடுகள், ஸ்டிக்கர்கள், அட்டவணைகள், இன்னும் என்னவெல்லாமோ பதுக்கல்களில் பங்கேற்கின்றன.
எனவே, ஸ்டிக்கர்கள், அட்டவணைகள், புக்மார்க் போன்றவற்றிற்காக தனியே ஒரு ஜன்னல் இருந்தால் தேவலாம்...
ஜன்னல்கள், கதவுகள், வாசல்கள் என்று என்ன இருந்தாலும் - 'நான் காசு கொடுத்து வாங்கியதை என்ன வேணாலும் செஞ்சுக்குவேன் !" என்று நண்பர்கள் சொல்லப் போகும் வரையிலும் எதுவும் மாறிடப் போவதில்லை சார் !
Delete😁
Deleteஅவர்களின் லாஜிக்கானது "ஒரு பிரீமியம் விலை கொடுக்க இந்த பணமுடை நாட்களில் வாங்குபவர்கள் தயாராக இருக்கிறார்களே" என்பது !! Anyways ஒட்டுவது தான் சார் ஒட்டும் - no worries !
Deleteஎதிர்பார்த்தபடியே மனநிறைவை தந்த பதிவு!
ReplyDelete///And இருவரது நன்கொடைகளும் தலா ரூ.10,000 என்ற போது - அடையாருக்கான வாசகப் பங்களிப்பு மட்டுமே ரூ.52,400 என்றாகிறது !!! Take a bow மகிஜி & கணேஷ் ராஜேந்திரன் சார் from ஆஸ்திரேலியா !!///
ReplyDelete///And இருவரது நன்கொடைகளும் தலா ரூ.10,000 என்ற போது - அடையாருக்கான வாசகப் பங்களிப்பு மட்டுமே ரூ.52,400 என்றாகிறது !!! Take a bow மகிஜி & கணேஷ் ராஜேந்திரன் சார் from ஆஸ்திரேலியா !!///
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நண்பர்கள் இருவருக்கும் எனது நன்றிகளும்....
Deleteஎனது நன்றிகளும்
Deleteகொடை கொடுத்த உள்ளங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
ReplyDelete///சனிக்கிழமை காலையில் அடிக்கத் துவங்கிய போன் மாலை ஏழு மணிக்கு நம்மாட்கள் கிறங்கிப் போய்க் கிளம்பும் வரைக்கும் அடித்துக் கொண்டேயிருந்தது !! ஞாயிறோ இன்னொரு உச்சம் !! மதியம் சாப்பிட அமரும் போது மட்டும் செல்லை அணைத்து விட்டு, 15 நிமிடங்கள் கழித்து ஆன் செய்து பார்த்தால் நூற்றிச் சொச்ச வாட்சப் மெசேஜஸ் !! உள்நாட்டிலிருந்து, வெளிநாட்டிலிருந்து என்று எங்கெங்கிருந்தோ நண்பர்கள் அழைக்க, அத்தனை பேரையும் ஏதோ வருஷமாய் நேரில் தெரிந்து வைத்திருப்பவர்களை போல நலம் விசாரித்து ; ஆர்டர் கேட்டு நம்மாட்கள் மூவரும் இயங்கியதை நான் வெறிக்க வெறிக்கத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன் !! ///
ReplyDeleteநிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்..👏👏👏
ஐந்து லட்டுகள் மிகவும் இனிப்பாக இருந்தது கண்டு மகிழ்ச்சி.
ReplyDeleteஆன்லைன் புத்தகத் திருவிழா மெகா வெற்றி பெறும் என்று நினைத்திருந்தது நடந்தது மகிழ்ச்சி.
ஒரே ஒரு குறை. இன்னும் சில பல நண்பர்களால் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க அழைத்தும் செல்போன் பிஸியால் அவர்களால் பங்கேற்க இயலவில்லை.அடுத்த முறை இன்னும் ஒரு செல்போன் எண்ணை கூடுதலாக்கலாமே சார் ? ஆவன செய்யுங்கள் சார்.
திறம்பட ஆன்லைன் திருவிழாவை சிறப்பாக நடத்திய அலுவலகப் பணியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.பாராட்டுக்கள் & வாழ்த்துகள்.
ReplyDeleteவழிமொழிகிறேன்...
Deleteஆன்லைன் புத்தக விழா ஒரு அட்டகாசமான ஹிட் கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!
ReplyDeleteஆதரவளித்த, ஆர்டர் செய்த நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteகொடை கொடுத்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும், பாராட்டுகளும், வாழ்த்துகளும், அன்புகளும்!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிறைவான பதிவு!!!!💕💕💕💕
ReplyDeleteகடவுள் எல்லா இடங்களில் நேரடியாக உதவிக்கு வரமுடியாத காரணமாக தன் உதவியாளர்களை இங்கே காமிக்ஸ் உலகுக்கும் அனுப்பியுள்ளார் போலும்...
அந்த நண்பர்கள் உள்ள திசைக்கு தலைவணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
///கடவுள் எல்லா இடங்களில் நேரடியாக உதவிக்கு வரமுடியாத காரணமாக தன் உதவியாளர்களை இங்கே காமிக்ஸ் உலகுக்கும் அனுப்பியுள்ளார் போலும்...
Delete///
அழகான, பொருத்தமான வார்த்தை!
/கடவுள் எல்லா இடங்களில் நேரடியாக உதவிக்கு வரமுடியாத காரணமாக தன் உதவியாளர்களை இங்கே காமிக்ஸ் உலகுக்கும் அனுப்பியுள்ளார் போலும்...
Delete#####
அழகு...
///நான் புதுசாய் SWEET '60s என்றோ ; EXCELLENT '80s என்றோ ; "நின்னுக்கோரி '90s" என்றோ - எதையேனும் இழுத்து விட்டிருக்கக்கூடாதே என்று///
ReplyDeleteசார்.. ஏனோ எனக்கு அந்த 'நின்னுக்கோரி-90s' தலைப்பு ரொம்பப் பிடிச்சுருக்குங் சார்! அடுத்த சிறப்பிதழுக்கு அதையே வச்சீங்கன்னா சூப்பர் ஹிட்டடிக்கும்றது உறுதி!
அப்போ 'நின்னுக்கோரி வரணும்...அ வர்ணம்...அ வரணும்'. :)
DeleteTouching final lines
ReplyDeleteசார் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...கருப்பு பதிவு....
ReplyDeleteஆஜர்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஎன் வாழ்க்கையில் சாகும்வரை நான் மறக்கக்கூடாத சில தருணங்கள் நினைவு வருமென்றால் அதில் சில தருணங்கள்
ReplyDelete1.என் அம்மாவிற்க்கு முதன் முதலாக புடவை எடுத்துக்கொடுத்து
2.தலைவரை நேரில் சந்தித்து அவருடன் கைகுலுக்கியது
3.என் மகள் பிறந்த சில நிமிடங்களில் அந்த தேவதை தன் திராட்சை கண்களை உருட்டி என்னை பார்த்தது (பிறந்து சில நிமிடங்களில் குழந்தைகளுக்கு எதிரில் நிற்க்கும் உருவம் தெரியாது எனத்தெரிந்தும் என்னையே பார்த்தது போல ஒரு உணர்வு
4.என்னுடைய நிரந்தர ஆசிரியர் விஜயன் அவர்களை நேரில் பார்த்த தருணம் சிவகாசிக்கே அவரை நேரில் இருமுறை போனேன் ஆனாலும் அவரை சந்திக்க முடியவில்லை ஒருமுறை அறையில் இருந்தார் அவரை பார்க்க வேண்டும் என்று சொன்னேன் ஆனால் அலுவலக ஊழியர்களோ சார் செம்ம டென்ஷனில் இருக்கிறார் அவரை சந்திப்பது கடினம் என திருப்பி அனுப்பி விட்டார்கள் அப்போதிருந்து விஜயன் சார் டென்ஷன் பார்ட்டி அவரை சந்திப்பதோ பேசுவதோ ஆகாத காரியமென நினைத்திருந்தேன் அதனால் N.B.S.ரிலீஸில் அவரை நேரில் சந்திக்கும் போது கூட சற்று நடுக்கத்துடன் கை கொடுத்தேன் ஆனால் நான் நினைத்ததை எல்லாம் தூள் தூளாக்குவது போல் புண்ணகையுடன் கை குலுங்கியது மட்டுமல்லாது என் தோள் மீது கை போட்டு போட்டோ எடுத்தது மட்டுமில்லாது நான் அறிவுகெட்டதனமாக கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக அருமையாக பதில் கொடுத்து அவர் ஆசிரியர் மட்டுமல்ல மூத்த அண்ணன் என்கிற உணர்வை மனதில் பதித்தார்
5.என் மனைவியை காப்பாற்றுவது கடினம் என்று என் சொந்தங்கள் ஆருடம் சொன்னபோது அதனை எதிர்த்துப்போராடி உங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் கொண்ட நண்பர்கள் என்னுடன் கரம்கோர்த்து என் மனைவியை உயிருடன் மீட்ட தருணம்
6. இதோ நமது காமிக்ஸ் உலகில் பொற்காலமான இந்த தருணம் குண்டு புக்காக மிகச்சிறந்த மேகிங்கோடு டெக்ஸ் குலாப்ஜாமுனாக இனித்திருக்க பின்னாடி திருப்பதி லட்டாக இரத்தப்படலம் மைசூர் பாகுகாக சிகப்பாய் ஒரு சிலுவை & சூ மந்திர காளி இது மட்டுமல்லாமல் ஏற்கனவே வெளியாகி இருந்த கலர் இரத்தப்படலத்தை அடையப்போகிறேன் இந்த தருணங்களை விட வேறெதுவும் சிறந்ததில்லை இதனை இறந்தாலும் நான் மறப்பதாகயில்லை
வாழ்கையின் சந்தோஷ தருணங்கள் பெரும்பாலும் காமிக்ஸுடனே என்பது எல்லோருக்கும் வாய்த்திடாது நம் காமிக்ஸ் எனும் தனி உலகில் வாழுபவர்க்கே இது சொந்தமென பெருமையாக கொண்டாடுவோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏற்கனவே வெளியான இரத்தப் படலத்தை வாங்கித்தருவதும் நம் தளத்து நண்பரே
Deleteஅருமை செந்தில் சத்யா..
Deleteநன்றி தலிவரே
Deleteஅகத்தின் அழகான வார்தை வெளிப்பாடுகள் செந்தில் சத்யா! கிரேட்!!
Deleteசூப்பர் சத்யா சூப்பர். வாழ்த்துக்கள்
Delete/* தலைவரை நேரில் சந்தித்து அவருடன் கைகுலுக்கியது */
DeleteAhaa ... என் வாழ்க்கையில் செய்ய நினைத்து முடியாமல் போன ஒரு விஷயம் ! நீங்கள் செய்தது 'மகிழ்ச்சி' !
செயலர். குமார். ராக் ஜி.
Deleteநன்றிகள்
சிறப்பு சத்யா.....!!
Deleteமனதை நெகிழ வைத்த தருணங்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்...!!!
ஜூனியர் எடிட்டர் அவர்களின் திருமணத்திற்கு நீங்கள் எல்லாம் சென்றிருந்த போது, வாசக நண்பர்களை எத்தனை வாஞ்சையோடு எடிட்டர் சார் வரவேற்றும், விருந்தில் அன்போடு உபசரித்தும் இருந்தார் என சொல்லி இருந்தீர்கள்.
இதுபோன்ற நெகிழச் செய்த நிறைவான தருணங்களே கடுமையான சூழலில் வாழ்க்கையை சற்றே இனிமையாக்கும் காரணிகள்....!!!
Good Sathya!
Deleteவிஜயராகவன் & பரணி
Deleteநன்றி நண்பர்களே
/ஜூனியர் எடிட்டர் அவர்களின் திருமணத்திற்கு நீங்கள் எல்லாம் சென்றிருந்த போது, வாசக நண்பர்களை எத்தனை வாஞ்சையோடு எடிட்டர் சார் வரவேற்றும், விருந்தில் அன்போடு உபசரித்தும் இருந்தார் என சொல்லி இருந்தீர்கள்.
Deleteஇதுபோன்ற நெகிழச் செய்த நிறைவான தருணங்களே கடுமையான சூழலில் வாழ்க்கையை சற்றே இனிமையாக்கும் காரணிகள்....!!!
உண்மை நண்பரே அந்த நேரத்தில் சென்னையில் கடுமையான மழை நான் வாடகைக்கு இருந்த வீடு தொடையளவு தண்ணீரில் மூழ்கிய இருந்தது அம்மா மனைவி மகள் மூன்று பேரையும் நண்பரொருவர் வீட்டில் தங்க வைத்து விட்டு மனம் குழம்பிய நிலையில் திருமணத்திற்கு சென்றேன் அங்கு ஆசிரியரின் கவனிப்பும் உபசரிப்பும் நம் நண்பர்களின் கனிவான விசாரிப்புகளும் எனது கவலைகள் மறக்க செய்தது மிக மிக சந்தோஷமாக இருந்தேன் தெளிவானேன் ஊருக்கு வந்தவுடன் முதல் வேலையாக நல்ல வீடு மாறினேன்
நெஞ்சை நெகிழச் செய்யும் பதிவு.
Deleteஉள்ளத்தின் வெளிப்பாடு.
//தலைவரை நேரில் சந்தித்து அவருடன் கைகுலுக்கியது//
Deleteநானும், வாசல்லையே கைய்ய போட்டு வண்டிய நிறுத்தி குலுக்கியாச்சு :) :) :)
அருமை நண்பரே செந்தில் சத்யா!
Deleteநன்றி தோர்கல் சரவணாரே
Deleteஆஸ்திரேலியா கணேஷ் சார் மற்றும் அமெரிக்கா மஹி சார் இருவர் இருக்கும் திசை நோக்கி தலை தாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன்
ReplyDeleteநேற்று மாலை தான் இம்மாத இதழ்களை கைப்பற்றி பார்சலை பிரித்து இதழ்களை ரசிக்க முடிந்தது. எடுத்தவுடன் கண்ட இதழ் "புத்தம் புது பூமி வேண்டும்" ..அடேங்கப்பா ..அட்டகாசம்..( வெறும் அட்டகாசம் அல்ல அஜித் ன் அட்டகாசம் படத்தின் தீம் மியூசிக் அட்டகாசம் அட்டகாசம் என அதிரடிக்குமே அந்த அட்டகாசம் இந்த லயன் 400)
ReplyDeleteஇதழின் முன் பின் அட்டைப்படம் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் ..டெக்ஸ்ன் மைய உருவம் ,தி லயன் 400 ன் லோகா ,தலைப்பின் மினுமினுப்பு என வெளிப்பக்கமே இதழ் அசரடித்தால் உள்ளே வண்ண டெக்ஸ் ஒரே முழு சாகஸ சித்திர தரத்தில் பளபளக்கிறார்..ஆசிரியர் சொன்னது போல் ஒரே மூச்சில் தான் படிக்க வேண்டும் .காத்திருக்கிறேன் ..சந்தா இல்லாத நண்பர்கள் உடனடியாக இதழை கைப்பற்றி விடவும் நண்பர்களே ..அசால்ட்டாக இருந்தால் இன்னும் இரண்டு மாதத்தில் இந்த இதழுக்காக கண்டிப்பாக அலைபாய வேண்டும்.நீண்ட நாட்கள் பிறகு வாசகர் கடிதம் கண்டதில் மகிழ்ச்சி..அடுத்த வெளியீடு விளம்பரங்களில் அறிமுக நாயகரின் ட்ரெயலர் ஆவலை கூட்டுகிறது..ஜம்போ காமிக்ஸ் அடுத்த வெளியீடு விளம்பரத்தில் ஷெல்டன் கண்ணுக்கு தெரிவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை..:-) தெரிந்தாலும் ,தெரியாவிட்டாலும் அந்த விளம்பர படமும் இதழை காண ஆவலை கூட்டுகிறது..மொத்தத்தில் இதழும் ,தரமும் ,பைண்டிங்கும் செம செம அட்டகாச தரத்தில் கலக்கி விட்டது...இச்சமயம் ஒரு மந்தகாச புன்னகை எனக்குள் பூக்கிறது .காரணம் முகநூலில் இதழின் வண்ணத்தரத்தை சிலர் குறை கூறி இருந்தார்கள் ..கண்ணை உறுத்தாத இந்த வண்ண கலவை இதழ் செம அழகாய் அமைந்துள்ள பொழுது இதையுமா குறை கூறுவார்கள்..குறை இருப்பின் கூறலாம் தான் ..ஆனால் குறை சொல்லியே ஆக வேண்டும் என மெனக்கெட்டு குறையை கண்டுபிடிப்பவர்கள் எப்படி கதையுடன் ஒன்றி பயணிப்பார்கள் என எனக்கு புரியவில்லை.
புத்தம் புது பூமி வேண்டும் படிக்கும் முன்னரே இதழின் தரத்திற்கே முழு மதிப்பெண்ணை வழங்குகிறேன்.
மேலும் இந்த இதழுடன் டெக்ஸ் இதழின் வண்ண இலவச இணைப்பு " கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா "என்பது போல் அமைந்து இந்த மாதத்தை இன்னும் குஷி ஆக்குகிறது..நன்றி நன்றி நன்றி சார்...
அசுர பூமியில் தோர்கல் நீண்ட நாட்களுக்கு ஓர் சிறிய இதழாக பார்ப்பது கொஞ்சம் வருத்தமாக இருப்பினும் இது ஓர் ஒன் ஷாட் கதையாக இருப்பதாக ஆசிரியர் சொன்ன காரணத்தால் அந்த வருத்தமும் பின்னுக்கு போய் விட்டது.தோர்கலும் இப்மொழுதெல்லாம் தோல்வி காணா நாயகர் பட்டியலில் இடம் பெற்று விடுவதால் மிக ஆவலுடன் இந்த இதழில் புகவும் காத்திருக்கிறேன்..
ReplyDeleteஇனி படித்து விட்டு....
*இங்கி பிங்கி பாங்கி*...
தலைவரே படித்து விட்டு விமர்சனம் பிளீஸ்
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// அதிலும் இன்றைக்கு காபூல் விமான நிலையத்திலிருந்து வந்திடும் படங்கள் சத்தியமாய் கண்ணில் உதிரத்தை வரச் செய்கின்றன ! //
ReplyDeleteஆமாம் சார்,இச்சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது மனம் வேதனையுறுகிறது,நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தோன்றுகிறது.
வரலாற்றின் நெடிய பக்கங்களில் போரின் அவலத்தால் எப்போதும் எளிய மனிதர்களின் பாடு சிரமம்தான்...
சீக்கிரம் அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும்
...
நேற்றுமாலை ஒருவழியாக ரெகுலர் பார்சல் கிடைத்தது,லயன் 400 தரம் சும்மா மிரட்டல்,மேக்கிங்+ டெக்ஸ் இதற்காகவே பறந்துடும்...
ReplyDelete// ஒரு நற்காரியத்துக்கென ரூ.90,400 புரட்ட முடிந்துள்ளது இந்த வாரயிறுதியினில் //
ReplyDeleteதரமான சம்பவம்,பங்களிப்பு செய்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
// வேட்டை" சுத்தமாய் துடைத்தாச்சு ; //
ReplyDeleteஇவ்வளவு நாள் இருந்ததே பெரிய விஷயம்...
பனியில் ஒரு புது நேசம் படிச்சாச்சி,கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது,குறைவான பக்கங்களில் நிறைவான சாகஸம்...
ReplyDeleteகா.க.கா படிக்கற மாதிரியே ஒரு பீலிங்...
எனக்கும் அதே ஃபீலிங்
Deleteநமக்கும் ஒரு டோக்கன் போட்ருங்க இந்த லிஸ்ட்ல...
Deleteவாங்கோ,வாங்கோ...
Delete// அசாத்தியமான நீங்கள் ; அசாத்தியமான நாட்கள் & அசாத்தியமாய்க் கையாண்ட பெருமை நம்மவர்களையே சாரும் !! THANKS A TRILLION ALL !!! //
ReplyDeleteVery true. Hats off to them.
பழைய சோறு ; பச்சை மிளகாய் !
ReplyDeleteகதை விமர்சனம்/ புத்தக விமர்சனம்!
2021 ஜூலை மாத வெளியீடு!
1. ஒரு பிரளயப் பயணம்! (டெக்சு)
2. ரின் டின் கேன்! (The Dog does matter)
3. மாடஸ்டி அக்கா! (பாண்ட் பங்காளி)
2021 ஆகஸ்ட் மாத வெளியீடு!
1. லயன் 400! (டெக்சு)
2. கார்சனின் பிட் கதை!
3. இரத்தப் படலம்! (மீண்டும் ஒரு 3000)
4. அசுர பூமியில் தோர்கல்! (ஒல்லிப் பிச்சா)
தொடரும்..
பழைய சோறு ; பச்சை மிளகாய் - 2
Deleteகாமிக்ஸ் வாசகர்களுக்கு காலை வணக்கம்! கடந்த ஒரு மாதமாக இங்கு வரவில்லை என்பதையும் கூட ஏதோ ஒரு சிலர் கவனித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்!
ஆனால் என் நெருங்கிய நண்பர்களான சென்னை புத்தகத் திருவிழா காமிக்ஸ் வாசகர்களில் ஒருவரான - ஜாபர்கான் பேட்டை சையது இப்ராஹிம் அவர்கள் கடந்த 16 நாட்களாக தினமும் மாலையில் போன் செய்து என்னிடம் உரையாடுவார். காமிக்ஸ் பற்றி பல விஷயங்கள் பேசுவோம்!
ஏன் நீங்கள் பதிவிடுவது இல்லை? சென்ற மாத காமிக்ஸ் பற்றிய உங்களுடைய விமர்சனத்தை எதற்காகப் பதிவிடவில்லை? எதற்கு பயம்? யாருக்காக பயம்? - என்று பலவிதமான கிடுக்கிப்பிடிக் கேள்விகளை எழுப்பினார்!
அதில், குறிப்பாக கடந்தப் பத்து நாட்களுக்கு முன்பாக ஒரு வாசகர் இங்கு பதிவிட்டதைப் பற்றி என்னிடம் விவாதம் செய்தார்!
உண்மையான காரணத்தைச் சொல்லியும் ஏனோ அவருக்கு ஏற்பு இல்லை!
நீ தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே என்ற தோனியில் - காரணத்தை லயன் பிளாக்கில் பதிவிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்!
தொடரும்..
பழைய சோறு ; பச்சை மிளகாய் 3
Deleteஜூலை மாத வெளியீடு - ஒரு பிரளயப் பயணம்!
முன்பெல்லாம் எந்தக் காமிக்ஸ் வந்தாலும் வாங்கி விடுவேன்! படிக்க முடியா விட்டாலும் தட்டுத்தடுமாறி, தவழ்ந்து தடை மீறி - எப்படியாவது பத்து பத்துப் பக்கமாகப் படித்து முடித்து விடுவேன்! உள்ளே உறுத்திக்கொண்டே இருக்கும் பல நெருடல்களை இங்கே பகிர்வது மூலமாக - சற்றே இலகுவாக சுவாசிக்க முடிந்தது!
அது போலத் தான் டெக்ஸ் வில்லர் கதைகளில் நான் காணும் நிறைகுறைகளை அவ்வப்போது இங்கு விமர்சனமாகப் பகிர்ந்து வந்தேன்! கடந்த முறை டெக்ஸ் வில்லர் கதை ஒன்றை படித்து விட்டு, டெக்ஸ் வில்லரின் வலது கை முஷ்டி என் முகரையைப் பெயர்த்தெடுத்தக் கற்பனையில் பேயறைந்ததுப் போல நெடுநேரம் சித்தம் கலங்கி அமர்ந்திருந்தேன்!
சரி, நான் பெற்றத் துன்பத்தை இந்த வையகம் அறிய, சபையில் பார்வைக்கு வைக்கலாம் என்று நினைத்திருந்தேன்! ஆனால் பாயாசம் காய்ச்சுவதற்கு என்றே கம்பெனி ஒரு எக்ஸிக்யூட்டிவ் நண்பரை வைத்திருக்கும் போது - நமக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று விட்டுவிட்டேன்! இதுதான் நான் கடைசியாகப் படித்த டெக்ஸ் வில்லர் ஜாகஜம்!
So, ஜூலை மாத டெக்ஸ் வில்லர் கதையை நான் வாங்கவில்லை! எனவே நண்பர்கள் நினைப்பது போல் என்னிடம் நான்கைந்து காப்பிகள் டெக்ஸ் வில்லர் புத்தகம் இல்லை என்பதால் யாருக்கும் பகிர்ந்தளிக்க இயலாத நிலையில் இருக்கிறேன் என்பதை என் நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! இதோ இம்மாத டெக்ஸ் வில்லர் (லயன் 400) புத்தகத்தையும் வாங்கவில்லை என்பதே ரூபாய் 500 விலையிலான உண்மை!
இலவச இணைப்பு என்றுமே எனக்குத் தரமாட்டார்கள் என்பதால் - கார்சன் அங்கிள் கதையிலிருந்தும் தப்பித்த பாக்கியம் இம்மாதம் கிடைத்தது!
தொடரும்..
பழைய சோறு ; பச்சை மிளகாய் 4
Deleteஜூலை மாத வெளியீடு - வால் முளைத்த வாரிசு!
பொதுவாக லக்கி லூக் கதைகளை விரும்பிப் படிக்கும் நான் - இந்த ரின் டின் கேன் - நாய் சாகசம் செய்யும் கதைகளை மட்டும் தவிர்த்து விடுவேன்! பல காரணங்கள் இருந்தாலும், முத்தாய்ப்பாகச் சொல்வதென்றால் நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையும் மரத்துப் போய்விடும் என்பதால் தான்! So, லக்கி லூக் வாங்கவில்லை!
ஜூலை மாத வெளியீடு - மாடஸ்டி அக்கா (பாண்ட் பங்காளி)
மேலுள்ள தலைப்பே பலப் பல விஷயங்களைப் பறைசாற்றும் என்பதால் - ஆம் காரணம் அதுவே தான். தற்போதெல்லாம் மாடஸ்டி கதைகளை நான் வாங்குவதில்லை!
தொடரும்..
பழைய சோறு ; பச்சை மிளகாய் 5
Deleteஆகஸ்ட் மாத வெளியீடு - இரத்தப் படலம் மறுபதிப்பு (மீண்டும் ரூபாய் 3 ஆயிரம்)
சென்றமுறை வாங்கிய இரத்தப்படலம் புத்தகம் அப்படியே புத்தம் புதுசாக என்னிடம் இருப்பதால் இந்த முறை நான் வாங்கவில்லை!
கொஞ்சம் சோகம் ; கொஞ்சும் நேசம்!
சரியாக 2020 மார்ச் 19 என்று நினைக்கிறேன்! கொரோனா என்ற கொடிய நோயின் போர்வையில் - வாழ்க்கை கதகளி ஆடத் தொடங்கியது! சிலருக்கு உயிர்ச் சேதம் ; பலருக்குப் பணச் சேதம் ; சிலருக்குப் பொருளாதாரச் சீர்கேடு ; பலருக்கு வாழ்க்கையே சாபக்கேடு!
இதோ இன்று வரை அதில் மாற்றமில்லை ; எதிலும் சுபிட்சம் இல்லை! பணம் பாதாளம் வரை பாயும் - ஆனால் பாதாளத்தில் உள்ளவர்களிடம் மட்டும் பாரபட்சம் காட்டும் அதற்கு என்றுமே ஓரவஞ்சனை தான்!
மேடும் பள்ளமும் தான் வாழ்க்கை ; இப்போதோ மலையும் பள்ளத்தாக்குமாக மாறி விட்டதோ - என்ற ஐயமே மிஞ்சுகிறது!
வறண்ட பூமியில் பெய்யும் மழை, பெருக்கெடுத்து பெருவெள்ளமாய் யாருக்கும் உபயோகம் இல்லாமல் கடலில் கலப்பது போல ; தரிசு நில வெள்ளாமை கணக்கு வழக்காய் - வாழ்க்கை அசுர கதியில் ஓடுகிறது! இதில் எங்கே நிற்க? எங்கே தேட? ஓட்டம் ஓயாமல் இருந்தால் போதாதா?
அசுர பூமியில் தோர்கல் :
ReplyDeleteதோர்கள் வழக்கம் போல் நன்றாக இருந்தது .. ஆனால் தோர்களுக்கு இனி single shot வேணாம் சார் .. double albumஆக போடவும் ..
பனியில் ஒரு புது நேசம்:
"தல" கூட இல்லேன்னா கார்சன் jollyஆக இருப்பார் போல .. கா.க.கா இதே தான் நடந்தது .. இந்த ஆளு வந்து காடு, மலை னு கார்சனை எங்கயாவது கூட்டிட்டு போய்டுறாரு ..
// Take a bow மகிஜி & கணேஷ் ராஜேந்திரன் சார் from ஆஸ்திரேலியா !! //
ReplyDeleteஇரண்டு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
இந்த நல்ல காரியத்திற்கு துணை இருந்து உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. நன்றி.
Dear Editor Sir, A big kudos to you and the entire team for working so hard for the past few days to keep us happy. Thank you all again sir.
ReplyDeleteஎனக்குப் பழகி விட்ட சமாச்சாரங்கள் சார் ; நம்மாட்களும் சிறுகச் சிறுகப் பழகி வருகின்றனர் !
Delete//'நான் காசு கொடுத்து வாங்கியதை என்ன வேணாலும் செஞ்சுக்குவேன் !" என்று நண்பர்கள் சொல்லப் போகும் வரையிலும் எதுவும் மாறிடப் போவதில்லை சார் !//
ReplyDeleteஇன்னும் லயன் காமிக்ஸ் வருவது தெரியாமல் இருப்பவர்கள் எவ்வளவு பேர்? போதுமான விளம்பரம் செய்யப்படுகிறதா? மேலும் லயன் காமிக்ஸ் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் செயல்படுகிறதா?
வேறொரு இடத்தில் அதிகப்பணம் கொடுத்து வாங்குகிறார்களே என்று அங்கலாய்த்து என்ன பயன்? அவர்களுக்கென்ன அதிகவிலை கொடுத்து வாங்க ஆசையா ?
எந்த பிரைவேட் குழுக்கள் இ.ப அதிகவிலைக்கு விற்கப்படுகிறது என்ற பழிக்கு ஆளாகிறதோ அதே குழுக்கள் தான் லயன் முத்து காமிக்ஸ் இன்னமும் வருகிறது என்று பலருக்கு தெரியப்படுத்துகிறது என்பதை அறிவீர்களா? ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் புத்தகங்கள் அங்கிருக்கும் முகவர்களிடம் அதிக அளவில் வாங்கப்படுகிறது என்று அறிவீர்களா?
லயன் 400 ஒரு வாட்ஸாப்ப் குழுவில் 100 புத்தகத்துக்குமேல் முன்பதிவு செய்யப்பட்டதை அறிவீர்களா?
தற்போது வெளியிடப்பட்ட இ.ப விற்பனையில் அந்த குழுக்களில் பழனிவேல், கே.வி.கணேஷ் போன்றவர்கள் செய்த முயற்சிகளுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை அறிவீர்களா? இதையெல்லாம் அனுமதிக்கும் ஒரு லெவல் ப்ளெயிங் பீல்டு அந்தக்குழுக்கள் என்பதை அறிவீர்களா?
கிட்டத்தட்ட ஒரு வருட சந்தா கொடுத்து கொரோனா காலத்தில் இந்த மாதம் கஷ்டப்பட்டு புத்தகம் வாங்கியவர்கள் கூட படித்துவிட்டு விற்கவும் இதே தளங்கள் தான் உதவுகிறது.
தேவை இருப்பவர்கள் வாங்குகிறார்கள்..வேறெங்கேனும் சரியான விலைக்குக் கிடைத்தால் அங்கே ஏன் அதிக விலைக்கு விற்கப்போகிறார்கள்? பிரிண்ட் ரன் என்பது நாம் எடுக்கும் முடிவு. சரியாக டேட்டா அனாலிடிக்ஸ் மூலம் அதை தெரிந்து கொண்டால் பாஸிடிவான திசையில் பயணிக்கலாம்.
இப்படிக்கு,
அந்தக் குழுக்களில் பயணிக்கும் நடப்பதை கவனிக்கும் ஒரு பயணி
Well said bro..
Deleteஒரு கேள்வி விட்டுப் போச்சே ... ஆங் ... (எடிட்டர் சார்) இனிமே கைய பிடிச்சு இழுப்பீங்களா ? :-p :-p ;-) ;-)
Deleteபயணிகளுக்கும் ஒரு பெயர் இருக்கும் வேளையில் பதில்களுக்கு நேரம் எடுத்துக் கொண்டால் போச்சு !
Deleteகேள்விகளே பதில்களாக இருக்கும்போது எல்லா கேள்விகளும் பதில்களுக்காக அல்லவே...
Delete//கேள்விகளே பதில்களாக இருக்கும்போது எல்லா கேள்விகளும் பதில்களுக்காக அல்லவே...//
DeleteThis wanderer of what's app groups may appear enigmatic but one should admit he has got taste in sentence phrasing..!!!
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர்களே என்னிடம் ஒர் மின்னும் மரணம் உள்ளது...அதனை இங்கே ஏலம் விடப் போகிறேன்...யார் அதிக விலை கேட்கிறார்களோ அவர்களுக்கு இப்புத்தகம்....அதற்கீடான தொகைக்கு ஆசிரியரின் கொடோனில் தேங்கிய புத்தகங்கள் வாங்கப்பட்டு ஏதேனும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ...பள்ளி லைப்ரரிகோ அந்நண்பரின் பெயராலே வழங்கப்படும்...ஆசிரியரே கேக்காமல் செய்வதற்க்கு மன்னிக்க...என்னை வழிப்படுத்திய நண்பர்கள் ஆசிரியர்..செனா...மகி..ராகவன்...ஈவி...மற்றும் அனைத்து நல்ல நண்பர்களுக்கு நன்றிகள்...
ReplyDeleteSuper da!
DeleteThis comment has been removed by the author.
Deleteசூப்பர் மக்கா....எப்போ ஏலம்...??
Deleteஎல்லா உங்கள பாத்துதான் மக்கா....இப்பருந்தே பழனி
Delete//Take a bow மகிஜி & கணேஷ் ராஜேந்திரன் சார் from ஆஸ்திரேலியா !! And ஆஸ்திரேலிய நண்பருக்கு நமது இம்முயற்சியினைப் பற்றிச் சொல்லி, அவரை இதனில் பங்கேற்கச் செய்த காமிக் லவர் ராகவன் அவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் !!// என்ன ஒரு சிந்தனை! பெருந்தன்மை! மிகவும் பெருமையாக உள்ளது நண்பர்களே... இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் (ஒரு பெரிய தொகையான) ஒரு லகரம் (கழுகு வேட்டை) தர எண்ணும் அந்த உள்ளத்தின் மாண்பை என்னவென்று சொல்வது? Huge Respect நண்பர்களே... காமிக் லவர் ராகவன் அவர்களின் பங்களிப்புக்கும் எனது வணக்கங்கள். //பாக்கி இருந்த 2 இதழ்களின் சார்பிலும் - "நாங்கள் ஒரு தொகையினை நன்கொடையாக மட்டும் அடையாருக்கு அனுப்பி விடுகிறோம் ; புக் ஏற்கனவே எங்களிடம் உள்ளதால் வேறு யாருக்கேனும் அன்புடன் கொடுத்து விடுங்கள் !!"// இப்படி ஒரு மனசா? சத்தியமா நெனச்சு கூட பார்க்க முடியல... வணக்கமும் வந்தனங்களும்... பெருமையாக உள்ளது இந்த பொம்மை புக் குழுமத்தில் நானும் அங்கம் வகிப்பதை எண்ணி!!!! _/\_ இத்தனைக்கும் காரணமான அந்த எடிட்டர் சாருக்கும் ஒரு மெகா சல்யூட்!!!
ReplyDeleteபிரிய நண்பரே வரிக்கு வரி +1000000.....
Deleteலயன்400 என்ற மெகா மகா மைல்கல்,
ReplyDeleteஇரத்தப்படலம் வண்ணமறுபதிப்பு 2.0 என்ற வரலாற்று நிகழ்வு,
ஆன்லைன் ஈரோட்டு புத்தகவிழா,
ஆன்லைன் விழா சிறப்பிதழ்கள்,
இரத்தப்படலம் வண்ணமறுபதிப்பு 1.0-வாயிலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டல்,
ஆன்லைன் விழா வாயிலாக கணிசமான ஸ்டாக் குறைவு...
ஒரு தொடர் திருவிழாவை அனுபவித்த திருப்தி மேலோங்குகிறது....
இந்த திருவிழாவை சிறப்பாக தலைமை ஏற்று நடத்திய எடிட்டர் சார், விழாவின் ஒவ்வொரு நிமிடத்திலும் தங்களது உழைப்பு வாரியிறைத்த அவரது சிறு அணி, விழாவை பெருவெற்றியாக்கிய நண்பர்கள்... என அனைவருக்கும் வாழ்த்துகள்💐, பாராட்டுகள்🌹 & நன்றிகள்🙏!!!!
இந்த தொடர் நிகழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் உற்சாகமாக அனபவித்தேன்....😍
இதுபோன்ற இன்னொரு தொடர் விழா எப்போது அமையுமோ என மனம் ஏங்குகிறது!!!!!
ஆஸம் ப்ரெண்ட்ஸ்...
இன்னொரு தொடர்விழா இருக்கு 2022 ஜனவரியில்.
Deleteவேதாள மாயாத்மா வருகை.
முத்து பொன்விழா சிறப்பிதழ் வெளியீடு.
ஒரு ஆன்லைன் புத்தகத் திருவிழாவையும் ஏற்பாடு செய்தால் போயிற்று.
ஆம் சரவணாரே... ஈரோடு விழா இல்லாத குறையை இந்த தொடர்விழா போக்கிட்டது....
Deleteஜனவரி 2022க்கு என்ன மாதிரி அசத்தல் காத்துள்ளதோ???
ஓவர் டூ எடிட்டர் சார்.
4மாதங்களே உள்ளன....சர்ர்னு ஓடிடாது???
இன்று நமது காமிக்ஸ் (facebook) முகநூல் தளத்தை பார்த்தேன், நமது சமீப நிகழ்வுகள் (ஆன்லைன் புத்தக திருவிழா), புதிய இதழ்கள், மற்றும் சிறப்பிதழ்கள், பற்றிய தகவல்கள் மற்றும் விளம்பரம்கள் தொடர்ந்து அப்டேட் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது! நமது முகநூல் (https://www.facebook.com/LionMuthuComicsSivakasi) தளத்தை தொடர்ந்து இதே போல் அப்டேட் செய்து வாருங்கள்!
ReplyDeleteஅதே போல் நமது காமிக்ஸ் ப்ளாக் பற்றி தொடர்ந்து நமது புத்தகங்களில் விளம்பரபடுத்தி வருவது மகிழ்ச்சி, இது மேலும் பல நண்பர்கள் உங்களுடன் நேரில் உரையாடவும், காமிக்ஸ் பற்றிய தகவல்கள் மற்றும் புதிய இதழ்கள், மாற்றங்கள், சமூக செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ள உதவும்!
நண்பர்கள் எளிதாக புத்தகங்களை வாங்க ஆன்லைன் விற்பனை தளம், பணம் செலுத்த வசதியாக PayTM, GPay, மற்றும் PhonePe போன்ற செயலிகளையும் இணைத்து நன்று!
twitter மற்றும் youtube சேனல்களிலும் இரு வாரங்களுக்கு ஒரு முறை highlights update செய்வது நலம் பயக்கும் - மேலும் அடிக்கடி எல்லா online சேல்களிலும் கையிருப்பு பிரதிகளின் catalogue போடுவது உதவும்!
Delete1000 ரூபாய்க்கு வாங்குபவர்களுக்கு கூரியர் இலவசம் என்பது வசதிப்படுமானால் அறிவிக்கலாம் !
சொல்லிட்டீங்கள்ள ஆசிரியர் செய்து விடுவார்.
Delete
ReplyDelete*** ஒரு புக் பேர் பயணம் ***
## திட்டம் ##
ஒரு மாதம் முன்பு, பெங்களூரிலிருக்கும் நெருங்கிய நண்பனிடம் இருந்து ஃபோன் "எனக்கு ஆகஸ்ட் 1 - 15 வரை ஷட்டௌன் , நண்பர்கள் வீட்டுக்கு ஒரு ரவுண்ட்ஸ் போலாமாடா? " னு கேட்டான. எனக்கோ வாழ்வில் எப்போதும் ஆகஸ்ட் முதல் 2 வாரம் ரொம்ப பிஸி. ஆகஸ்ட் 13(ஆடி 28) எங்கள் குலதெய்வ பூஜை வரும் மற்றும் அதற்கு முன்பான வாரத்தில் ஒருநாள் அம்மன் பூஜை என ஒரு மிடில் க்ளாஸ் கல்யாணம் மற்றும் நிச்சயதார்த்தம் செய்யும் அளவுக்கு வேலை இருக்கும். அதனால் தான் ஈரோடு புக் ஃபேரில் கலந்துகொள்ள முடிவதில்லை.
"ஆகஸ்ட் 13 வரைக்கும் நான் ரொம்ப பிஸி, 14 இல்லை 15 ஒரு நாள் உனக்கு, ப்ளான் பன்னிக்கோ" ன்னு சொன்னேன்.
"சரிடா, திருநெல்வேலில இருக்க (எங்க பழைய லெக்ட்சரரை) பாக்க போறேன் நீயும் வரியா? "ன்னு கேட்டான். அவங்க எங்க வாழ்க்கையில one of the stepping stone, so நானும் O. k. சொல்லிவிட்டேன், ஆனால் அவனுக்கு தெரியாது என்னோட மன்டையில "கண்னா 3 லட்டு தின்ன ஆசையா???" ரேஞ்சுக்கு ப்ளான் ஓட ஆரம்பிச்சுடுச்சு. என்னா அப்ப தான் e-Road online book fair பற்றிய பதிவு வந்தது. நேர்லையே போய் புக்ஸை வாங்கிட்டு வந்திடலாம்ன்னு முடிவுசெஞ்சு "நேர்லையே வந்து வாங்கிக்கும் வாய்ப்பு இருக்கும்" ன்னு தளத்தில் பதிவு செய்தேன். No no no no, Strictly online, ஆபிஸ் மிக பிஸியாக இருக்கும், இந்த வாரம்விட்டு எப்பவேனா வாங்கன்னு பதில் வந்தது. என்னடா லட்டு ஒடஞ்சு பூந்தியாகிடெச்சேன்னு தோணுச்சு. ஆனால் அதிலிருக்கும் நியாயமும் உறைத்தது. கரோனா காலம் social gathering ஐ தவிர்க்கலாம், நான் வருவதை பார்த்து மற்றவர்களும் வரக்கூடும், ஃபோன் செய்து ஆர்டர் செய்யும் நபர்களுக்கு இடைஞ்சல், அதுவுமில்லாமல் புக் ஃபேர் ஷபேசல் அதிகாரிவேற வந்த சேர தாமதம் ஆகும் என்பது பின்பு தான் தெரிந்தது. இருந்தாலும் முயற்ச்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் போல் ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன் “அந்த வழியாகதான் கடந்து போகிறேன், ஒரு quick visit அடித்து இம்மாத புக்ஸ் & மற்ற புக்ஸை வாங்கிகலாமா?” ன்னு அனுமதி வாங்க. O.K என பதில் வந்ததும் பரம சந்தோசம். இனி இது goa trips மாதிரி ப்ளானோடு நில்லாமல் செயல் படுத்த வேண்டுமே…
## சந்திப்பு ##
Deleteநாளும் நெருங்கியது, நானும் பிஸியாகிப்போனேன், புக் ஃபேருக்காக ஆரம்பித்த போஸ்ட்டர்களைக்கூட முடிக்க முடியவில்லை. சனி அன்று காலை கிளம்பி மதிய உணக்கு 2 மணி வாக்கில் திருநெல்வேலி செல்ல முடிவு செய்தோம். நிறைய நேரம் இருக்கும் காலையிலெயே சிவகாசி வந்து புக்ஸ் வாங்கி விட்டு நெல்லை போக கரெக்டா இருக்கும்ன்னு தோணுச்சு. திருச்சங்கோட்டிலிருந்து இன்னோரு நண்பனும் சேர்ந்துகொண்டான். வெள்ளி அன்று ஆடி28 விழா முடிந்து வீட்டிக்கு வந்து சேர இரவு 1 மண. வீட்டம்மா “அவசியம் போகனுமா, ரெஸ்ட் எடுக்கலாமே? அவங்க அவ்வளவு முக்கியமா?” என கேட்டை போட, “இல்லைமா, புக் ஃபேர் வேற ரொம்ப பக்கத்துல நடக்குது அதான்..? என நான் இழுக்க.. இனி இந்த ஜென்மத்தை தடுக்க முடியாது என அமைதியானார்!!!
காலை 8 மணிக்கு பெங்களூர் நண்பன் தன் காரில் வீட்டிற்க்கு வந்து என்னை பிக்கப் செய்து கிளம்பலாம் என நினைக்கும் போது, திருச்சங்கோடு நண்பன்(எங்கள் கார்சன் என்று வைச்சுக்களாம்) “திருச்சி பேமஸ் முரளி காபி பக்கத்துல தான் இருக்காம், என்க்கு அங்க காபி குடிச்சே ஆகனும்ன்னு அடம்பிடிக்க ”ரைட்டு இன்னைக்கு நிறையா stop இருக்கு”ன்னு தோனுச்சு.
வெஜ் ஒருத்தன், இட்லிக்கு ஆப்பாயில் தொட்டு சாப்பிடும் சர்பேட்டா டாடி மாதிரி ஒரு அங்லோ இண்டியன் & 40 நாள் விரதம் முடித்த கையோடு தயிர் சாதத்தில் லெக் பீஸ் தேடும் மனநிலையோடு நான் என தொடங்கியது. பல விவாதங்களுக்கு பின் காலை உணவுக்கு மட்டும் சைவ உணவகத்தில் என முடிவு செய்து மதுரை திருமங்களம் அருகே ஒரு ஹாஸ்பிடல் காண்டீனில் தேடிபிடித்து நிறுத்தி ஆளுக்கொரு தோசை ஆர்டர் செய்தோம். ஏன்னா வேறு எதுவும் இல்லை மணியும் 10 ஆச்சு. தோசை வந்ததோடு ஆம்ப்ளேட் இருக்கு வேணுமான்னு கேக்க, அந்த வெஜ் நண்பனை பார்த்து கொண்டே ஆளுக்கு 2 ஆர்டர் செய்தோம். நண்பனை வெறுப்பேத்துவது அலாதிதான், டெக்ஸிடம் சிக்கும் கார்சான் தான் ஞயாபகம் வந்தார். அங்கிருந்து கிளபம்பும் போது 10.30 ஆகியிருந்தது, நான் “நமக்கு நேரம் இருக்கிறது, சின்ன detour எடுத்து சிவகாசி போயிட்டு அங்க புக் பேர் நடக்குது பாத்துட்டு போகலாமா? நீயும் அங்கு 10% தள்ளுபடியில் Cinebooks வாங்களாம் என்று ஒரு incentive கொடுத்தேன். கார்சன் நண்பனுக்கும் அங்கு ஒருவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அவனும் கார்சன் போல் பொலம்பவில்லை.
## டோல் எற்படுத்திய டோல் ##
Deleteவிருதுநகர் சாலையில் திரும்பினோம், fasttag பற்றிய விவாதம் வந்தது. “அது மட்டும் இல்லை என்றால் நாம் தாண்டி வந்த டோல்களில் மட்டும் 1 மணி நேரம் நின்றிருப்போம்” என்று அதற்க்கு சப்போர்ட் செய்தேன். 5 நிமிடத்தில் அடுத்த டோல் நுழைய அது துறக்க மறுத்து விட்டது. அவர்கள் barcode reader gunஐ வைத்து கண்னாடி உடைக்கிறமாதிரி தட்டியும் பார்த்து விட்டார்கள். டோல் அப்பரேட்டர் “உங்கள் fasttag வண்டி நம்பரில் டேக் செய்யபட்வில்லை, செஸிஸ் நம்பரில் டேக் செய்ய பட்டுள்ளது அது மாத்தனும் இல்லாட்டி பணம் கட்டி செல்ல வேண்டும் “ என்றார். அதுவும் one way fee + அபராதம் என 170 ரூ கட்டனம். 12 மணி நேரத்தில் return பயணம் செய்யும் எங்களுக்கு அப்படி செய்தால் அது 4மடங்கு செலவு, எனக்கோ அதற்க்கு 4 புக்கு சேத்து வாங்களாம் என்ற எண்ணம். “பின்னாடி நீங்கள் fasttag வாங்கிய வங்கி representative இருப்பார் அவரிடம் சென்று உங்கள் வண்டி நம்பரை அப்டேட் செய்யுங்கள் என்றார், பின்னாடி நின்ன 10-12 வண்டிகளையும் reverse எடுக்க வைத்து நாங்க பின்னாடி சென்று அவரிடம் சென்று அப்டேட் செய்தாள்.., ஒரு மணி நேரத்துக்கு அப்புறம் தான் update ஆகும்னார்!!! இருந்தாலும் வேறு லைனில் ட்ரை பன்னுங்கள் என சொல்ல, அங்கும் அதே பிரெச்சனை, “உங்களால் பாருங்க எல்லாருக்கும் லேட் ஆகுது”ன்னு ஒரு ஊழியர் சொல்ல, என் நண்பன் கடுப்பாக “என் கிட்ட valid fasttag இருக்கு, அதில் பணம் இருக்கு, ஒரு வாரமாக சேலம், கோவை, திண்டுக்கல் திருச்சி என இதே டெக்கில் தான் வந்திருக்கேன், 10 km முன்னாடி கூட வேலை செய்தது பாருங்கள் என SMSஐ காட்டி பணம் கட்ட முடியது என்று சோல்ல… ரைட்டு இன்னைக்கு சிவகாசி இல்லைன்னு தோணுச்சு. இருந்த அசதிக்கும் இரவு நான் கார் ஓட்ட தேவைபடும் என்பதால் எப்ப வேணும்னாலும் வண்டியை எடுங்கடா என்று நான் துங்கி விட்டேன். 12.30 கிட்ட தான் அங்கிருந்து கிளம்பினோம். கூகுள் வேறு ஹோண்டா காரை ஒத்தையடி பாதை வழியாக எல்லாம் கூட்டிடு போய் 2.30 மணிக்கு மேல் எங்கள் பேராசிரியர் வீட்டில் விட்டது. அங்கு நாங்கள் பிரியானி சாப்பிட கார்சான் நண்பரோ கீரை சாதம் சாப்பிட்டார். ஒரு மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்ப இருட்டு கடை அல்வா வாங்கியே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்க, அதுக்கு வெயிட் பண்ணா சிவகாசியை மறந்து விட வேண்டியதுதான் என்பதால், சாந்தி கடை அல்வா தான் இன்னும் நல்லா இருக்கும்ன்னு சமாதானப்படுத்தி அங்கு சென்று அல்வா வாங்கிட்டு 4.30 மணிக்கு சிவகாசி நோக்கி புறப்பட்டோம்.
## ஆபிஸைக் காணோம்!!! ##
Delete"லயன் ஆபீஸ் வர 5.30 மணி ஆகும் வரட்டுமா? "ன்னு ஃபோன் பன்னினேன், " வாங்க சார்"ன்னு மகிழ்ச்சி மிகுந்த குரல் வரவேற்றது, "சார் நீங்க வருவீங்கன்னு சொன்னார், உங்கள் இ. ப. புக்ஸை எடுத்து வைக்க சொன்னார்". இல்லை மாடம் அது நான் வாங்கலை, சந்தா புக்ஸ்ஸும் அல்ரெடி வந்துவிட்டது, டெக்ஸ் புக்கும் வரவில்லை என்று தெரியும், இருப்பதை நேரில் பார்த்து வாங்கலாம்ன்னு தான் வருகிறேன் என சொல்லி கட் செய்தேன். அப்போது தான் நமது டெக்ஸ் விஜயராகவன் "புக் ஃபேரில் டெக்ஸ் வராதுன்னு சொல்லி பேட் கட்டுநீங்களே!! " மெசேஜ் செய்தார், இன்னும் வரலையாம் நண்பரே, சிவகாசி தான் சென்று கொண்டிருக்கிறேன் என்று என் சந்தோஷத்தை பகிர்ந்தேன். குரூப் மற்றும் தளத்தில் இதை பகிரும் ஆசையை அடக்கிகொண்டேன். எடி "பிற்பாடு வாருங்கள்" என்று சொல்லியும் போரான்னு திட்டுக்களை தவிர்க்க நினைத்தேன். புக் ஃபேர் லிஸ்டை பார்த்து நமக்கு வேண்டிய புக் லிஸ்டை முன்னமே அனுப்பி விடலாம் என மேஜிக் விண்ட் அத்தனையும்ன்னு W.A தட்டினேன். வேய்ன் ஷெல்டன் லிஸ்டை பார்க்கும்போது தான் நம்மிடம் எது இருக்கும் இல்லை என்ற சந்தேகம் வந்தது, நான் 2016 முதல் சந்தா பார்டி, அதனால் நேரில் சென்று பாத்துக்களாம்ன்னு அதற்கு மேள் லிஸ்ட் எதும் அனுப்பவில்லை, 127+கூரியர் 45 என பதில் வந்தது. இந்த 100ரூ புக்கு வாங்கதானா இவ்வளவு கூத்து என்று கூட அவர்களுக்கு தோன்றியிருக்கலாம். கார்சன் நண்பரின் சிவகாசி நண்பர் கோவில்பட்டியில் இருக்க, அங்கு ஒரு ஷார்ட் விசிட், " இங்கே கடலை மிட்டாய் நல்லா இருக்குமான்டா!! வங்கிட்டு போலாம் "ன்னு கேட்ட அவனுக்கு " இது தான் கடை, அடுத்த தடவை வரும் போது மறக்காமல் வாங்கிக்கோ " ன்னு சொல்லி சிவகாசியை நோக்கி வண்டியை செலுத்தினோம். பெங்களூரு நண்பன் Lucky luke மற்றும் Iznogoud(நம்ம மந்திரியார்) cinebook அனைத்திலும் ஒன்று வேண்டும் என்று கேட்டான். நமது லயன் வெப்சைட்டில் 75+ லக்கி புக்ஸ் இருக்க அனைத்திலும் ஒன்று என்றான். அப்போது தான் தெரியும் அவன் ஒரு René Goscinny கலெக்டர்!!! என்று :) :) :). அதுவுமில்லாமல் நாங்கள் இங்கு வந்திருக்க, அவனது அப்பா அம்மா திருச்சியில் இருக்கும் மாமா வீட்டிற்கு சென்று இருந்தனர், அவர் இவன் எங்கே என கேட்க, இந்த மாதிரி சிவகாசி யில் காமிக்ஸ் புக் ஃபேர் போயிருக்கான்னு சொல்ல, அவர் தன் மறைந்த மனைவியின் Asterisk & Obelisk collectionஐ ஒரு அட்டை பெட்டி நிறைய வைத்து பரிசாக கொடுத்துவிட்டார்.
## சிவகாசியில் ஈரோடு ##
Delete5.25க்கு சிவகாசி வந்தோம், கூகுளாண்டவர் வழக்கம் போல ஒரு சந்துக்குள்ள காட்டியது. அங்கே சென்று கேட்டால் "இங்கு லேடீஸ் டெய்லர் தான் இருக்கு, லயன் காமிக்ஸா? அப்படின்னா?? " என்றார்கள். திரும்பவும் ஆபீஸுக்கு போன் செய்து வழி கேட்க! நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று சொல்லத் தெரியவில்லை. பக்கத்தில் இருந்த அம்மா விவரம் கேட்டு வழி சொல்ல, நன்றி கூறி ஆபிஸ் இருக்கும் ஏரியா வந்து, திரும்பவும் ஆபீஸுக்கு கால் அடிக்க நம்பர் பிஸியோ பிஸி. லைன் கிடைத்து இந்த பரபரப்பிலும் அவர்கள் வெளியே வந்து கை அசைத்து தெரு முனையில் இருந்து எங்களை அழைத்துச் சென்றார்.
மாடிக்கு சென்று நான் முதலில் தேடியது, சூ மந்திரிகாளியில் எடி கூறிய ஷபெஷல் அறிவிப்பு எது என்று தான். பின்பு எனக்கு வேண்டிய புக்ஸ்சை எடுத்து அடுக்க ஆரம்பித்தேன், 2016ல் இருந்து சந்தா பார்டி என்பதால் , அதற்க்கு முன்பு வந்த புக்ஸ் தான் தேவை, எந்த வருடம் ப்ரிண்ட் செய்தது என்று கண்டுபிடிக்க முடியாது என்பதால், எனக்கு தெரிந்தது மட்டும் எடுக்க ஆரம்பித்தேன். மேஜிக் விண்ட், செல்டென், லார்கோ, Smurfs & அதிகாரி நண்பர்களின் மனசாந்திக்காக “குற்றம் பார்க்கின்” எடுத்துக்கோண்டேன். எனுக்கு excitement கொடுத்தது லயன் 32 ஆண்டு மலர். இவ்வளவு நாள் எப்படி கண்ணில் படமால் போனது என்பது ஆச்சிரியமே!!!, நேரில் செல்லவில்லை என்றால் மிஸ் பன்னியிருப்பேன். சிகப்பாய் ஒரு சிலுவை இருந்த ரேக் நோக்கி நகர்ந்த போது , இன்னும் பைண்ட் பன்னி வரவில்லை , அது வெறும் ராப்பெர் தான் உள்ள இருக்க புக்கு வேற என்றார்கள். சிகப்பு கலரில் செம்ம சூப்பராக இருந்தது. தேற்றியது 16 புக்ஸ். இதை அடுக்கும் போது கார்சன் நண்பன், இதேல்லாம் உன்னோட குழந்தைக்கா என்று 3-4 தடவை கேட்டிருப்பான், அந்த குழந்தையே நான் தான் என்று அடுக்கி வைத்துக்கொண்டேன். அவனும் புக்ஸை எடுத்து விலைகளை செக் செய்தான், இருப்பதிலேயே கம்மி விலை எந்த புக் என்று பார்த்தான், அவனை பொருத்தவரை இவை விலைகள் அதிகம். அல்வா, கடலைமிட்டாய் 100ரூ வாங்கி சுவைப்பது போல இதுவும் சுவையானதுதான் என்று அவன் உணர்வில்லை. நான் டிசைன் செய்த போஸ்ட்டர்களை காட்டியிருந்தேன், அதை காரணம் சொல்லி extra தள்ளுப்டி தருவீங்களா என்றுவேறு கேட்டான், அவனுக்கு தெரியாது இங்கு பலர் லட்சங்களிலும், ஆயிரங்களிலும் செய்கிறார்கள்,எதோ என்னால் முடிந்தது என் போஸ்டர்கள் மூலம் 4 புக்ஸ் extra வித்தால் என்க்கு முழு சந்தோஷம். “இதேல்லாம் உனக்கு புரியாது , freeya விடு” என்று அமைதி படுத்தினேன். பெங்களுர் நண்பருக்கு 4 Iznogoud and Luck Luke (71-Cowboy in Paris மட்டும் இல்லை) என ஒரு 80+ புக்ஸ்க்கு ஆர்டர் போட்டான். எனக்கு லயன் மற்றும் நண்பனுக்கு help பண்னியதில் செம்ம ஹாப்பி.
மூவரும் அங்கிருந்து கிளம்ப்பி வெளியே வந்த போது, தேரு முனையில் ஒரு ஸ்கூட்டர் திரும்பியது, அதில் வந்தவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிய, அது எடிட்டர்தான் என்று தெரிந்தது. நான் கை அசைக்க அவர் வண்டியை நிருத்தினார், நான் தான் கிரிதரசுதர்சன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, பல கேள்விகள் கேக்கணும்னு ஆசை இருந்தாலும், அவர் busy schedule கருதி, பிறகு பேசிக்கலாம் என்று bye மட்டும சொல்லிவிட்டு கிளம்பினேன். நைட் ட்ரைவ்
நான் தான் என்பதால், குழுவிலோ, தளத்திலோ எதுவும் பதிவிட முடியவில்லை. இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்துவுட்ன் எல்லா புக்ஸையும் ஒரு புரட்டு புரட்டிவிட்டுதான் படுத்தேன்.
18 வருடம் கழித்து (கார்சன்) நண்பன் மற்றும் பேரசிரியரை சந்தித்து, கல்லூரி ஞயாபகங்ள் பற்றி பேசியது 18 வயசு கம்மியான் பீலிங்.
DeleteClose friendஉடனான் நேடும் பயணம், பல புக்ஸ் பார்த்து , அதில் சிலவற்றை சுமந்து வரும்போது கிடைக்கும் சந்தோஷம், எடி மீட்டிங் என என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகியது இந்த புக் ஃபேர்.
அட்டகாசமான பதிவு நண்பரே.. நாங்களும் சிவகாசி நேரடியா போயிட்டு வந்த effect..
Deleteசிறப்பான பதிவு..
Deleteசூப்பர் கிரி.
Deleteசூப்பர்....சூப்பர்...கிரி... சிவகாசி ஆன்லைன் விழாவில் லைவாக சென்று வந்தது போல நாங்களும் உணர்ந்து கொள்ள வகை செய்து விட்டீர்கள்... எக்ஸலன்ட் நரேசன்... இதுபோல இயல்பாக எழுதுவதைத்தான் நம் நண்பர்கள் விரும்புகிறார்கள்... அந்த வகையில் நீங்களும் சிறப்பான பதிவராகிட்டீர்கள்.....செம...செம...🌹🌹🌹🌹
Deleteஅருமையான பதிவு நண்பர் கிரி அவர்களே
Deleteசெம பதிவு கிரி🙌🙌🙌🙌
DeleteGood write up - hilarious at many places - had a great laugh :-D :-D
Deleteஅருமையாக எழுதி இருக்கிறீர்கள் கிரி. உங்களுடன் சேர்ந்து நானும் பயணித்த உணர்வு. Keep going
Delete@ Giridharasudarsan
Deleteஹாஸ்ய நடையில் மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே! நிறையவே ரசித்தேன்! உங்களுடன் நானுமே பயணித்து சாந்தி கடை அல்வாவை வழித்து வாயில் விட்டதைப் போல ஒரு உணர்வு!
சளைக்காமல் எழுதிப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள்!
எம்மாம் பெரிய மாத்திரை,எப்படித்தான் சலிக்காமல் டைப் செய்தீர்களோ...
Deleteமுதல்முறை அலுவலகப் பயணம் அதனால் எதிர்பார்ப்புகள்,ஆர்வங்கள்,சந்தோஷங்கள் என கலந்து கட்டி நிறைய கலவையான உணர்வுகள் ஏற்பட்டிருந்தால் வியப்பில்லை தான்...
நன்றி நண்பர்களே, இரண்டு நாள்தான் ஆகியது டைப் செய்ய
Deleteகிரிதரசுதன் ப்ரோ மிக்க அருமையான பதிவு.
Deleteவாழ்த்துகள் & பாராட்டுக்கள்.
E Road online book fair ல் 33 Book வாங்கினேன், உண்மையில் அருமையான அனுபவம், நல்ல Discount,
ReplyDeleteWhatsapp ல் ஆர்டர் செய்ததை புரிந்து கொண்டு உடனடியாக புத்தக விலை அனுப்பி Order confirm செய்து Packing அனுப்பி Really great,
Thank you very much
Good to hear this Ganesh!
Deleteஅட டே அற்புதம்... வாழ்த்துகள் கணேஷ்💐💐💐💐💐
DeleteThanks friends
Deleteவாழ்த்துகள் & பாராட்டுக்கள் ப்ரோ.
Deleteசார் டிராகண்நகரம்லயன்250லயன்300 இது எல்லாம் ரி பிரிண்ட் வருமா
ReplyDeleteவந்ததே வந்ததே புத்தகத் திருவிழா ஸ்பெஷல் புத்தகங்கள் :-)
ReplyDeleteசிகப்பாய் ஒரு சிலுவை அட்டைப்படம் தெறி ரகம்.
Deleteஇரத்தப்படலம் முன்பதிவு எண்:455 இதுவரை புத்தகம் கிடைக்கவில்லை. அலுவழகத்தில் கேட்டால் முறையான பதிலில்லை. மாற்றி மாற்றி பேசுகிறார்கள். எனது புத்தகம் கிடைக்க ஆவண செய்யவும் சார். இதற்கிடையில் நேற்று மாலையில் ரூ.420/=ஐ சிகப்பாய் ஒரு சிலுவை, சூ மந்திரகாளி புரபசனல் கொரியரில் கேட்டு பணம் அனுப்பி உள்ளேன். பணம் அனுப்பிய விவரம் போனில் சொல்லியும் சரியான பதிலில்லை. பணம் கடாடிய இனணய (phone pe) விவரத்தை கிரின்சாட் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளேன். தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும் சார்.
ReplyDelete\\அசாத்தியமான நாட்கள் & அசாத்தியமாய்க் கையாண்ட பெருமை நம்மவர்களையே சாரும் !! THANKS A TRILLION ALL !!!\\
ReplyDeleteநேரிலெயே பார்த்தேன், மாலை 5.30 மணிக்கும் full energy & சந்தோசத்தோடும் உதவினார்கள், அவர்களுக்கு ஒரு ட்ரீட் ரெடி பண்ணனும் சார்.
செம்மையாக அருமையாக விவரித்து எழுதி உள்ளீர்கள் சார். அருமை. ஏதேனும் பயண அனுபவ கட்டுரை எழுதிய அனுபவமோ??? செம செம 👌👌👌
Deleteபயணங்கள் சில சென்றுள்ளேன் , ஆனால் இப்படி எழுதியது கிடையாது. இது தான் முதல் தடவை. எழுதுனும்னு ஆசைதான்.
Deleteஎடிட்டர் சாரின் பயணக் கட்டுரை நாமலாம் கொஞ்ச நஞ்சமா படித்து உள்ளோம்...
Deleteஇப்படினா ஒன்று, அப்டீனா ஒன்று, ஆனா ஓன்று, ஊனா ஓன்றுனு பயணக்கதைகள் கேட்டு கேட்டு நமக்கும் பயணக்கதை சொல்லும் அனுபவம் தானாகவே வந்துட்டது...
ஆசிரியர்.. ஆசிரியர் என நாம வெறும் வாய்ல மட்டுமே சொல்லவில்லை... உள்ளத்தில் இருந்தும் சொல்லி உள்ளோம். அதனால் தான் அவரிடம் இருந்து ஏதாவது கற்று உள்ளோம்.
🙏🙏🙏🙏
பின்னிட்டிங்க கிரி...;)))
DeleteApplaudable portrayal of events ..
DeleteHilarious expressions..
( தயிர் சாதத்தில் லெக்பீஸ் தேடின மாதிரி
Like)
Wonderful...
நன்றி நண்பர்களே 🙏
Delete121st
ReplyDeleteஅசுர பூமியில் தோர்கல்!
ReplyDeleteபக்கம் 13
"இந்த உலகில் மனிதர்கள் இரண்டே வகைதான்...! ஒன்று அதிகார வர்க்கம்! இரண்டு அவர்களுக்கு ஊழியம் புரியும் அடிமை வர்க்கம்! அடிமட்டத்தில் இருப்பவர்கள் மென்மேலும் வேதனையும், துயரமும் அனுபவித்து... மரணித்தால் தான் அதிகார வர்க்கம் மேன்மேலும் வலிமையடைய முடியும். மனித இனம் தோன்றிய காலம்தொட்டு நிகழ்ந்து வரும் இந்த விதிதான் தொடர்ந்து இறுதிவரை நீடிக்கும்!"
எத்தனை வலிமையான, மாற்ற முடியாத, சிந்திக்க வேண்டிய வலிதரும் வார்த்தைகள்! இதை மாற்ற முயன்றோர் பட்டபாடுகள் தான் வரலாற்றில் எத்தனை எத்தனை!
அட்டகாசமான மொழிபெயர்ப்பு!
ReplyDelete*திருவிழாக்கள்ல திளைத்துணர்ந்து கொண்டிருந்த வேளையில் லயன்400ம் இலவச இணைப்பு "பனியில் ஒரு புது நேசமும்"--வந்து காத்திருந்தன... அவற்றை புரட்டி பார்த்து இருந்ததோடு சரி. நேற்று, தலயிடம் சன்னமானதொரு சாரியை தெரிவித்துட்டு், பனியில் ஒரு புது நேசத்தை தேடினேன்...!!
*சென்ற தீபாவளிமலர் உடன் இலவச இணைப்பாக வந்திருந்த அபாச்சே வீரன் கதை கலக்கி இருந்தது. இம்முறையும் அதே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா இதுவும் என படித்தா அதைவிட ஒருபடிமேலே அசத்திட்டது!
*முத்தையது சுட்டெரிக்கும் பாலையில்; இதுவோ சிலீரென்ற சிலிர்க்கும் பனிப்பிரதேசத்தில்....!!!
*முந்தையதில் காதல்-மோதல் கைகோர்த்திருந்தது; இம்முறையும் காதலும்-மோதலும் களைகட்டியது...
இரு சாகஸங்களுக்கும் உள்ள இன்னொரு ஒற்றும இரண்டிலும் டெக்ஸ்ம்,கார்சனும் தேடிச்செல்வது இளம்பெண்களை!
*பின்னணியில் கதை சொல்லப்படும் பாணி வெற்றிக்கு முழு உத்திரவாதம்... இம்முறையும் அதே பாணியல் கதை சொல்லப்பட்ட "பனியில் ஓரு புது நேசம்" அதகளமான ஸ்நேக சாகசம்...!!!
*கதை என்னவோ நாம ஆதிகாலத்தில் இருந்து ஆயிரத்தெட்டு தடவை பார்த்துள்ள ஷெரீப்பை கொலை செய்த அடாவடி கும்பலை டெக்ஸ்& கார்சன் போட்டுதள்ளுவது தான். ஆனா அதை சொல்லியவிதம், பிரசன்ட் பண்ணிய விதம் மனதைக் கவர்கிறது.
*பனிமண்டிய வயோமிங் பிரதேசத்தின் ஜாக்சன்ஹால் ஷெரீப் ப்ராங்கை ப்ளாக் சர்க்கில் கும்பல் டெபுடி ஷரிப்பின் சகாயத்தில் போட்டுத்தள்ளிட, அந்தக் கொலையை நேருக்கு நேர் பார்த்த ஷெரீப்பின் இளம் மனைவி ஸாராவைவும் கொலை செய்ய அந்த கும்பல் துடிக்கிறுது...
*ப்ராங்கின் நண்பர் கார்சன் தன் சகா டெக்ஸ் உடன் தன் நண்பரது மரணத்துக்கு பழிவாங்க களம் இறங்க ஆட்டம் சூடுபிடிக்கிறது.
*ஸாரா தஞ்சமடைந்துள்ள டெடான் கனவாய்க்கு டெக்ஸ் சோடி வர, பனிச்சரிவு அவர்களை பிரிக்கிறது.
*தனித்திருக்கும் கார்சன் பனிமலையின் அடிவாரத்தில் குதிரையில் ஆரோகணிக்க, இந்த இடத்தில் கதை தொடங்குகிறது.
*கதையின் ஆரம்ப காட்சி கார்சன் புகழ் கார்சனின் கடந்த காலத்தை நினைவூட்டுகிறது.
*தன் பாதுகாப்பை தானே உறுதி செய்ய விளையும் ஸாரா பதட்டத்தில் கார்சனை காயப்படுத்தி விடுகிறாள். மயங்கி விழும் கார்சனை தன் குடிலுக்கு எடுத்து சென்று சிகிச்சை அளிக்க, கார்சன் யார் என்பதை அறிகிறாள் ஸாரா. கதை ரொமான்ஸ் மெலடியாக மாறுகிறது.
*"""இயற்கை வெல்கிறது இங்கே""""
*பனிவிலக ஆரம்பிக்கும் வேளையில் கொலைகாரர்கள் வந்து சேர்கிறார்கள்.
#காயத்திலிருத்து முற்றிலும் குணமடைந்தாரா கார்சன்?
#கார்சன்-ஸாரா காதல் என்னவானது?
#ஸாராவை காத்தாரா கார்சன்?
#டெபுடி ஷெரீப்பின் வேசம் கலைந்ததா?
#பிரிந்து போன டெக்ஸின் நிலை என்ன?
---விடைகளை வெள்ளித்திரையில் காண்க.
செம 🙌🙌🙌🙌
Deleteசூப்பர்! கண்டோம்! வண்ணத்திரையில் கண்டோம் நண்பரே!
Deleteஅடி தூள்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஸ்டீல். இதற்கென தனியா வாட்ஸ்அப் முகநூல் குழுக்கள் இருக்கின்றன. ஆளாளுக்கு இங்கே ஏலம் விட ஆரம்பித்தால் எடிட்டருக்கு மிகுந்த சிரமம். யோசிச்சுப் பாருங்களேன்.
Deleteசரிதான் நண்பரே...ஆனா அது வேற விஷயத்துக்காக...இது நமது நிறுவனத்துக்கு நம்மாளியன்ற கைமாறு...
Deleteஸ்டீல்! ஷெரீஃப் சொல்வது சரி!
Deleteமேச்சேரி கண்ணன், ஷெரீஃப், ப்ளைஸி பாபு போன்றோரிடம் இப்பொறுப்பை ஒப்படையுங்கள்...
அவர்கள் இதனை செவ்வனே செய்து முடிப்பார்கள்..
எடிட்டர் தனது தளத்தில் ஏல நடவடிக்கை மேற்கொண்டது சரியான செயல் ..ட்ராண்ஸ்பேரன்ஸி வேண்டி அவர் செய்தார்..
அதற்கான உரிமை அவருக்குண்டு..
உங்கள் நோக்கம் உன்னதமானது..
அதற்கான இடம் இதுவல்ல...
உங்கள் வெள்ளந்தி மனது இதை உணரவில்லை..
ஈவியிடமாவது தொடர்பு கொள்ளுங்கள்..
அன்புடன்
/* உங்கள் நோக்கம் உன்னதமானது..
Deleteஅதற்கான இடம் இதுவல்ல...
உங்கள் வெள்ளந்தி மனது இதை உணரவில்லை..
ஈவியிடமாவது தொடர்பு கொள்ளுங்கள்..
*/
+ 1000000
தூக்கிட்டு வாங்கண்ணே அந்த (ஸ்டீல்)செல்லத்தை....
Delete-பட்டாசு பாலு.... இல்லை....ப்ளைஸி பாபு.
பணியில் ஒரு நேசமும் தோர்கல் கதையும் படிச்சாச்சு. அதற்குள் இன்று E-ரோடு புத்தகத்திருவிழா புத்தகமும் வந்து சேர்ந்து விட்டது. முதல் வேலையாக லக்கிலுக் இதழில் என்ன சஸ்பென்ஸ் என்று பார்த்தபோது அப்படியே ஷாக்காயிட்டேன். ஆசிரியர் உண்மையிலேயே எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார். அந்தக் கதை அந்த ஸ்பெஷல் இதழுடன் தனியாக வந்தது. அந்த ஸ்பெஷல் இதழிலேயே எதிர்காலத்தில் நாம் மறுபதிப்பு செய்யும் போது இந்த சைஸில் வெளியிட்டால் தான் சுகப்படும் என்று ஆசிரியர் கூறியிருந்தார். அந்த இதழை ஒருவரிடம் இரவல் கொடுக்க அது என் கைக்கு வந்து சேரவில்லை. அந்த இதழ் மீண்டும் வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த அறிவிப்பு எனக்கு கொண்டாட்டத்தைக் தருகிறது. டிசம்பரில் நோக்கி ஆவலுடன்.
ReplyDeleteசூ மந்திரகாளி பழய இதலும் என்னிடம் உள்ளது
ReplyDeleteபுத்தம்புது பூமி வேண்டும் :
ReplyDeleteமான்களும் தான் மலைச்சிங்கங்களுக்கு எந்தத் தீங்கும் செய்வதில்லை.! அதற்காக சிங்கங்கள் சாத்வீகமாய் இருந்துவிடுகின்றனவா.?
எவ்வளவு பெரிய சித்தாந்தம்.. எத்தனை அழகான வார்த்தைக் கோர்வைகள்..
தொப்பித் தூக்கல் எடிட்டர் சார்..!
மான்= தங்க தங்க தலைவன் ரசிகர்கள்
Deleteபாவம் கொடூரன் மாதிரி.. பாவம் ரம்மி.!
Deleteஇந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு போறப்பிலே இருந்தாலே கீழடியிலிருந்து மம்முட்டியோட கெளம்பி வந்துருவாருங்க நம்ம வைத்தியர்.. இந்த மாச கதையிலியோ பல மைல் தூரம் ஜனங்க போறங்க.. ம்ம்முட்டியோட கடப்பாரையையும் தூக்கிட்டு கெளம்பிருப்பாப்பிடிங்க இந்நேரத்திக்கு.. ஆனா ஒன்னு என்னன்னா வைத்தியர் எப்புமே 200 கமென்ட்டுக்கு மேலே போச்சுனாதான் வெளியே வருவாப்பிலே.. எனக்கும் வெகுநாளா டவுட்டு.. ஒரு வேளை 200 கமென்ட்டு வர்ற வரைக்கும் ஒளிஞ்சட்டிருந்து எண்ணிட்டு இரிப்பாரோ..
ReplyDelete'-------------------------------'
Deleteகாட்டுப்புலி வழிமறிக்கும் கவலைப்படாதே
மம்பட்டியான் பேரை சொன்னா
புலி ஒதுங்கும் பாரு '
பாட்டு கேட்டுட்டு இருக்காப்ல
வந்துருவாப்ல!!!!
:-)
மண்வெட்டிய சொல்றீங்களா? வாசீச்சோடன பதறிட்டேன்... பாவம் மம்முட்டி.. மலையாளப்பக்கமா ஏதோ படம் நடிச்சு சம்பாரிச்சுக்கிட்டிருக்காரு...
Deleteசெனா...
Deleteஎங்க ஊர் பாட்டாச்சே அது.!?
//பாவம் மம்முட்டி.. மலையாளப்பக்கமா ஏதோ படம் நடிச்சு சம்பாரிச்சுக்கிட்டிருக்காரு...//
Delete:-))
//பாவம் மம்முட்டி.. மலையாளப்பக்கமா ஏதோ படம் நடிச்சு சம்பாரிச்சுக்கிட்டிருக்காரு...//
Delete😂😂
காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு...
ReplyDeleteஅன்பு ஆசிரியருக்கு 🙏.
அழகான பதிவு.
தங்கள் ஊழியர்களை "அன்பு" தொந்தரவு செய்த நபர்களில் நானும் ஒருவன்.
சனிக்கிழமை காலை முதல் ஞாயிறு மதியம் வரை இந்த "அன்பு" தொந்தரவு தொடர்ந்தது.
என் பழைய நண்பர்களுக்கும் சேர்த்து, புத்தங்களை ஆர்டர் செய்துள்ளேன்.
"காமிக்ஸ் தொடர்பு விட்டுப் போனவர்களை, திரும்ப படிக்க வைப்போம்" என்ற என்ன எண்ணத்தோடு.
என்னைப்போல, பழைய "டெக்ஸ்" கிடைக்காத வாசகர்கள், அதிக விலை கொடுத்து வாங்கித்தான் ஆக வேண்டிய சூழல். சில சமயம் விலை அதிகமானால் விட்டும் போகலாம்.
"கொஞ்சம் பொறுங்க" என்ற வாசகம் நம்பிக்கை அளிக்கிறது.
நன்றிகள் பல.
இன்னும் பல மறுபதிப்புக்களை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்
(பழைய தீபாவளி மலர்,கோடை மலர் போன்ற) ஆவலுடன்.
நன்கொடை அளித்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
மீண்டும் அடுத்த பதிவில் 🌹...
🙏🙏🙏🙏
Delete///என் பழைய நண்பர்களுக்கும் சேர்த்து, புத்தங்களை ஆர்டர் செய்துள்ளேன்.
Delete"காமிக்ஸ் தொடர்பு விட்டுப் போனவர்களை, திரும்ப படிக்க வைப்போம்" என்ற என்ன எண்ணத்தோடு.///
அருமை நண்பரே!
"காமிக்ஸ் தொடர்பு விட்டுப் போனவர்களை, திரும்ப படிக்க வைப்போம்" என்ற என்ன எண்ணத்தோடு" - Good to hear this! Super!
Delete**** அசுர பூமியில் தோர்கல் *****
ReplyDeleteகடந்த சில பாகங்களாக மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இப்பாகத்தில் விடை சொல்லப்பட்டிருக்கிறது! 'தன் சுயநினைவை இழந்து கிரிஸ்ஸினால் ஷைகான் என்ற கடற்கொள்ளையனாக மாற்றப்பட்டிருந்த தோர்கல் - மீண்டும் தன்னிலை தெளிந்து தோர்கலாவது எப்போது?' - என்பதே அந்தக் கேள்வி!
நமக்கெல்லாம் பக்கத்திலிருக்கும் ஏற்காட்டுக்குப் போவதற்கே கோவிட் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால்தான் அனுமதி கிடைக்கும் என்ற நிலையில், தோர்கல் மட்டும் ஏதாவதொரு மலையுச்சியிலிருந்து குதித்து குதித்தே தேவ உலகம், அசுர உலகம், மானுட உலகங்களுக்கெல்லாம் பயணிப்பது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது!
அதிக குழப்பங்கள் இல்லாத நேர்கோட்டுக்கதை! விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை! இந்தப் பாகம் சிங்கிள் ஆல்பமாக வந்திருப்பதும் பொருத்தமானதே! என் ஐந்து வயது மகளுக்கு முழுக்கதையையும் படித்துக் காண்பித்துவிட்டேன்.. அவளுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது! வேறென்ன வேண்டும் எனக்கு?!!
ரேட்டிங் : 10/10
தோர்கல்ல தூக்கிட்டு அந்த அன்னப்பறவை அமெரிக்கா வந்திறங்கி 'நீ ஷைகான் இல்ல ! நீதான் தோர்கல் மெக்லேன் " ன்னு சொல்லிப்புடுமோ ,தோர்கல் - ரத்தப்படலம் க்ராஸ் ஓவர் கதையாயிடுமோன்னு பயந்து வந்துச்சு:D
Deleteஇருந்தாலும் வான் ஹாமேக்கு "அம்னீஷியா" மேலே இம்புட்டு ப்ரியம் இருக்கப்படாது!!
:-)
///இருந்தாலும் வான் ஹாமேக்கு "அம்னீஷியா" மேலே இம்புட்டு ப்ரியம் இருக்கப்படாது!!////
Delete😂😂😂😂😂
// ன் ஐந்து வயது மகளுக்கு முழுக்கதையையும் படித்துக் காண்பித்துவிட்டேன்.. அவளுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது! வேறென்ன வேண்டும் எனக்கு !! //
DeleteSuper!!
Yours faithfully,
ReplyDeleteநேற்று மதியம் காமிக்ஸ் வாசகரும், புத்தகத் திருவிழா விசிட்டரும், என் அருமை நண்பருமான - மிஸ்டர் ராபர்ட் கென்னடி (குன்றத்தூர்) அவர்கள் அலைபேசியில் நெடுநேரம் அளவளாவினார்!
அவர் ஒரு டெக்ஸ் வில்லர் ரசிகர். டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றத்தில் கூட ஏதோ உறுப்பினராகவும் இருக்கிறார்! இது நிற்க,
நான் ஏன் டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் வாங்குவதை நிறுத்தி விட்டேன் என்று ரொம்பவும் வேதனைப்பட்டார். காரணத்தை மீண்டும் மீண்டும் அறிய விரும்பினார், உள்ளங்கை நெல்லிக் கனிக்குக் கண்ணாடித் தேவையா என்று கேட்டும் அவருக்குப் புரியவே இல்லை!
டெக்ஸ் வில்லர் அனைத்தும் டெக்ஸ் புக் போல உள்ளது என்று கூறினேன் ; படிக்கப் படிக்கப் பழையக் கதைப் போல் இருக்கிறது என்று கூறினேன் ; படித்தவுடன் மறந்து விடுகிறது என்று கூறினேன் ; படிக்க முடியவில்லை என்று கூறினேன் ; தூக்கம் வருகிறது என்று கூறினேன் ; துக்கம் நெஞ்சை கவ்வுகிறது என்று கூறினேன் - ஹ்ஹும், எந்த நியாயமானக் காரணமும் ஏற்கப்படவில்லை !
கடைசியாக, யார் ஸார் நீங்க என்று உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டு விட்டேன் - அவர் கூறினார் டெக்ஸ் வில்லர் ரசிகன் நான் என்று!
Thank You!
"புத்தம் புது பூமி வேண்டும்"--
ReplyDeleteஇன்று பெருந்தலையோடு பயணம்.
அதகள ஆக்சன்... படுஸ்பீடானா மாஸ் சாகசம்...
அப்படியே அச்சு அசலாக ஒக்லஹோமா பாணியில் துவங்கி கதை நாலுகால் பாய்ச்சல்ல ஓடுது...
சும்மா போல்டருக்கு விழும் குத்துல எனக்கே வலிக்குது....யம்மாடி... இரும்புக்கை முஷ்டி!!!
ட்ராகன் நகர வில்லன் பாணியில் சும்மா கோல்டு ஃபீல்டும் தெறிக்க விடுறான்..வில்லத்தனத்தில்....!!!
இதுபோன்ற சாகசங்களை கொடுத்துட்டு இருப்பீங்களாம் நாங்க வாசிச்சி ரசிச்சிட்டே இருப்பமாம்...
ஓரே மாதிரியான சம்பவங்கள் என்றாலும் படிக்க படிக்க புதுமையாக தோணுவதே தலையின் பலம்... அசாத்திய டீம் ஒர்க்...
படிக்க படிக்க பேரானந்தம்....
மதிய உணவு உண்டபின் தூக்கம் சுழற்றி அடிக்கும்... ஆனா கையில் தல சாகசம் இருக்கும் போது தூக்கம் போன இடம் தெரியல...
கதையை படிக்க படிக்க நெஞ்செலாம் உவகை பொங்குகிறது.....ஒவ்வொரு டெக்ஸ் படிக்கும் போதும் இது தொடர்ச்சியாக நேர்கிறது.. என்ன வரம் இந்த பொம்மை பொஸ்தவம்...
ஆஹா....ஹா...வசனங்கள் பின்னி பாடல் எடுக்கின்றன....
ஓரு டெக்ஸ் வில்லர் ரசிகன்டா என மனசு கூவுகிறது....சார்பட்டா பரம்பரை கடைசி சீன் ஸ்டைலில....,,,
"""பொம்மை பொஸ்வத விரும்பிடா..
டெக்ஸ் வில்லர் ரசிகன்டா....."""""
நான் இன்னும் நாலு மாதம் காத்திருக்கனும். ஒரே ஒரு ஆறுதல் என்னன்னா தீபாவளி வித் டெக்ஸை அந்த மாசமே படிச்சிடலாம். அதுவும் கலரா இல்லே க. வெள்ளையா?
Deleteஅப்படியே அச்சு அசலாக ஒக்லஹோமா பாணியில் துவங்கி கதை நாலுகால் பாய்ச்சல்ல ஓடுது...
Deleteசும்மா போல்டருக்கு விழும் குத்துல எனக்கே வலிக்குது....யம்மாடி... இரும்புக்கை முஷ்டி!!!
ட்ராகன் நகர வில்லன் பாணியில் சும்மா கோல்டு ஃபீல்டும் தெறிக்க விடுறான்..வில்லத்தனத்தில்....!!!
அப்புறம் என்ன அந்த ரெண்டு புத்தகமும் இருக்கில்லே.. அதையை எடுத்து படிங்க.. இந்த அட்டைப்படத்தை வரும்போது ரசிச்சிக்கலாம்..
மாப்பு மஹி@ தீபாவளி மலர் பெரிய குண்டுபுக்குதான்....
Deleteகலரில் பாதி...கருப்பு-வெள்ளையில் பாதி இணைந்து அசத்த காத்துள்ளது...
கலர்-டெக்ஸ் & டேசா-பொக்கிஷம் தேடிய பயணம்....!
கருப்பு&வெள்ளை-டைகர் கதைக்கு மாற்றாக ரூ200க்கு மதிப்பான நெடும் சாகசம்...
கடகடனு மாதங்கள் ஓடிடும்....
அடுத்த பரபரப்ப்பு தீபாவளி மாசந்தேன்.....😍
/* தீபாவளி வித் டெக்ஸை அந்த மாசமே படிச்சிடலாம். அதுவும் கலரா இல்லே க. வெள்ளையா? */
Deleteஅது உங்க கைல தான் இருக்கு ஷரீப் - ஹா ஹா ஹா !! (சொல்றது புரியுதா?)
எனக்கு அப்படியெல்லாம் தோணினது இல்லை. எல்லாக்கதையிலயும் ஏற்கனவே வந்த நாலு சீனை சொல்லி இந்த மாதிரி இருக்குங்களாம். I JUST LOVE TEX. 1000 பக்கம் ஒரு புக்கா மாதம் ஒன்னு வந்தாலும் I WELCOME TEX.
Deleteரம்மி செல்லம்@ தீவாளி மலரே உங்க ஆளு காசுலதாண்டியோய்!😎😜
Deleteடைகர் கதையை வரைய ஆரம்பிச்சி நகசுத்தி வந்துடுச்சாமே...பாவம் அந்த பிரெஞ்சு ஓவியர்...
தேறி வந்து கதையை கம்ப்ளீட் பண்ணுவாரா??? டைகர்னு ஒன்று முத்து காமிக்ஸில் வருமா???😉
இல்லை ஊஊஊஊஊஊஊஊஊ தானா???
ராக்ஜி…🤣🤣🤣. நீங்க வேற…வெறும் வாயை மென்னுட்டிருக்காங்க. நீங்க அடிக்கற ஜோக்கை அவலாக்கிடப் போறாங்க 🤣🤣🤣
Delete
ReplyDeleteYours humorously
டெக்ஸ் கதைகளை நான் அறவே விரும்புவதில்லை..
இது பற்றி எனது இனிய நண்பர் விழப்பள்ளம் முஜிபுர் ரஹ்மானிடம் ஒருமணி நாற்பத்தியேழு நிமிடங்கள் பதினாறுநொடிகள் பேசினேன்..
அவர் கொடுத்த தைரியத்தில் லயன் அலுவலகத்திற்கு போன் செய்து " எனக்கு ரெகுலர் டெக்ஸ் கதைகளும் பிடிக்காது..மினி டெக்ஸூம் பிடிக்காது எனச் சொல்லிவிட்டேன்..அப்படியும் நீங்கள் டெக்ஸ் நெடுங்கதைகளை வெளியிடுகிறீர்கள்..
டெக்ஸ் கதையினை ஒருபக்க ,அரை பக்க பில்லர் பேஜ்ஜாக வெளியிடுங்கள் .
மனமிருந்தால் அதை வேண்டுமானால் படித்து தொலைக்கிறேன் என கர்ஜித்தேன்
எனக்கு டெக்ஸ் காமிக்ஸ் பிடிக்காது என அறிந்தவுடன் லயன் காமிக்ஸ் அலுவலகமே சோகத்தில் மூழ்கிவிட்டது..
விம்மல் , விசும்பல்கள் கேட்க துவங்கிவிட்டன..
இனி லயனின் எதிர்காலம் அவர்கள் கையில் என நினைத்து
இத்தாலி போனெல்லி அலுவலகத்துக்கே போன் செய்தபோது அவர்கள் விக்கித்து போனார்கள்..
பிரேசிலுக்கு கிளம்பி கொண்டிருந்த பல ஆயிரம் டன் டெக்ஸ் ஷிப்லோடை கான்சல் செய்துவிட்டார்கள்..
தனி ஒருவனுக்கு டெக்ஸ் புக் பிடிக்கவில்லையெனில் டெக்ஸை நிறுத்த முடிவு செய்து தலிபான் புகுந்த காபூல் கணக்காய் ஆபிசில் டெக்ஸ் பிரிமீசஸ் எவாக்குவேட் செய்யப்பட்டது..
Thank you
Pincode 600010
அதிகாரி வம்சத்தையே அழ வெச்சுட்டீங்களே...
Deleteசெனா 🤣🤣🤣
Deleteஹி...ஹி...ஹி.
Deleteஹா...ஹா...ஹா.
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
செனா அனா.. சிரிச்சு முடியல!🤣🤣🤣🤣🤣🤣🤣
Deleteசோறு ஒரு வாயி உண்டு பார்த்து தானே அரிசி வெந்துருக்குதா இல்லியான்னு தெரியும்.. எலையை பார்த்தே விருந்து நல்லாயில்லீன்னா எப்பிடீங்க??
ReplyDeleteஅது விருந்தோ இல்ல உப்புமாவோ குத்தம் சொல்றதுக்கு ஒன்றில் சிக்காமிலியாங்க போகும்??
"நெஞ்சே எழு".
ReplyDeleteமெளரோ போசெலியின் அசத்தலான கதைக்கு கிளாடியோ வில்லாவின் ஓவியங்கள் கனகச்சிதம்.
கறுப்பு வெள்ளையில் தல சாகசங்கள் படிப்பது பேரானந்தம்.
தெறி சாகசம்.
10/10 மதிப்பெண்கள்.
ஒரு கத சொல்ட்டா சார்?
ReplyDeleteஏழு மலை தாண்டி ஒரு ஊரு, அந்த ஊருக்கோ பெத்த பேரு வனாந்தரம்! ஊருக்கு நடுவுல ஒரு சலூன், சரக், சரக்குன்னு தண்ணீ ஸ்ப்ரே பண்ணி முடி வெட்றதுக்கில்ல சாரே, சரக்கு ஊத்தி தலைய வெட்றதுக்கு நம்பகமான எடம்!
மாதவன்: ஹையோ, சிச்சுவேஷன் செமையா இருக்கு ப்ரோ!
விஜய் சேதுபதி: ஸ்டார்டிங் எல்லாம் எப்பவும் எல்லா கதையிலும் அப்படித்தான் இருக்கும் சார். முடியும் போது தான் தெரியும் எல்லா கதையும் ஒரே கதைனு!
மாதவன்: ஹ்ம்ம்... ச்சரி மேல ச்சொல்லு..
விஜய் சேதுபதி: குதிரை சவாரி ; சுக்கா வறுவல் ; பெருசு ; செவ்விந்தியன் ; அவநம்பிக்கை ; டமால் டுமில் சத் கும் ; ஷெரிப் ; நாவறட்சி ; புழுதி !
மாதவன்: வாவ்.. புத்தம் புதுக் கதையா?
விஜய் சேதுபதி: ஹா.. ஹா.. ஒரு கதையே மொத்தமா இந்தப் பத்து வார்த்தைகள்ல அடங்கிடும் சார்! என்னக் கேட்டீங்க? புதுக் கதையானா?
முப்பது வருஷம் முன்னாடி, எங்க அப்பாரு படிச்சக் கதை ; பத்து வருஷமா நான் படிச்சக் கதை ; அங்கிளோட பையன் இப்போ படிக்கிற கதை - எல்லாமே ஒரே கதை, ஒரே டெம்ப்ளேட் தான் சார்! ஜம்பில்டு வெர்ஷன் மாதிரி பக்கத்தை மட்டும் மாத்தி மாத்தி பைண்ட் பண்ணிட்டேடேடே இருப்பாங்க சார்!
மாதவன்: போதும்.. போதும்.. இத்தோட நிறுத்திப்போம்!
Dedicated to ஜெ.ராமைய்யா (விடியலைக் காணாதவர்)
நம்ம டைகர் ஜாக் தனியாக போய் வேவு பாக்குறத விட்டுடீங்களே!!!
Deleteஇங்கே இந்த நிமிசம் நான் ஒரு விசயத்த ஒடச்சி சொல்லியே ஆகோணும்,
ReplyDeleteஇந்த அளவுக்கு மரண கலாய் கலாய்ச்சாலும் அதையும் தாண்டி,
நெஞ்சே எழுன்னு கம்பீரமா, வசூல் சக்ரவரத்தியா, நம்ம எம்ஜிஆர் மாதிரி நிக்கிறாரு பாருங்க.. அதுதான் டெக்ஸ் வில்லர்.
எம் ஜி ஆர் படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான கதைகள், அது என்னங்க பேரு.. டெம்ப்ளேட்டுங்களா..ஆங்.. அதேதான்.. ஒரே மாதிரியான டெம்பிளேட்.. அதுக்குப் பேரு எம்ஜிஆர் ஃபார்முலா..ஆனா அதையும் தாண்டி படத்துல ஒரு ரன்னிங் இன்ட்ரஸ்ட் இருக்கும்.மூன்று மணி நேரம் படம் போவதே தெரியாது.படம் மாஸ் ஹிட் அடிக்கும்.ஏன் எதனால அப்படின்னு யாருக்குமே தெரியாது.ஆறு பாட்டு நாலு சண்டை ரண்டு தங்கச்சி எமோசனல் சீன்.நடுவுல கதைன்னு கொஞ்சம். அவ்ளோதான் படம் பிச்சிக்கிட்டு ஓடும்.அதுமாதிரிதான் டெக்ஸ் கதைகளும்.அட்டையை எடுத்தா ஒரே மாதிரியான கதைகள் தான்.எல்லா கதைகளிலும் நாலு பக்கத்துக்கு கும்..சத்..நாலு பக்கத்துககு டமால்..டுமீல்.பக்கம் பக்கமா டெக்ஸ் எதிரிகளை குதிரையில் துரத்துவார்.ஆனால் அதையும் தாண்டி அவர் கதைகளில் ஒரு வசீகரம் இருக்கிறது.அதுதான் டெக்ஸ் வில்லர் ஃபார்முலா. அதனால் தான் விற்பனையில் அவர் கதைகள் முன்னிலை வகிக்கின்றன.டைகர் கூட அப்புறம் தான்.
ReplyDeleteஎம்ஜிஆர் ஃபார்முலா!
Deleteசார், அதெல்லாம் முடிந்து போன சகாப்தங்கள்/சரித்திரங்கள்! 1987 வரை சினிமா ரசிகர்களின் மனோபாவம் எளிமையாக இருந்திருக்கலாம் ; இவர் வெற்றிக்கொடி நாட்டி இருக்கலாம்! அவர் படத்தை இன்றையக் காலகட்டத்தில் தமிழகமெங்கும் ரிலீஸ் செய்து தான் பார்ப்போமே?! அதாவது தியேட்டர்கள் அனைத்தும் திறந்தப் பிறகு!
ரஜினி ஃபார்முலா!
இவருக்கும் அதே இலக்கணம் தான் பொருந்தும், ஏற்கனவே இவர் படத்தைப் பார்க்க யாரும் விரும்புவதில்லை, தொடர் தோல்விகள் மட்டுமே அவருக்கு சொந்தமானது!
டெக்ஸ் வில்லர் கதைகளைப் பொருத்தவரை அவர் ரசிகர்கள் பாராட்டும் போது எந்தத் தவறும் இல்லை ; போலவே டெக்ஸ் வில்லர் கதைகளைப் பிடிக்காதவர்கள் விமர்சிப்பதிலும் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை!
மீண்டும் மீண்டும் நீங்கள் எம்ஜிஆர் எம்ஜிஆர் என்றும், வேறு சிலர் ரஜினி ரஜினி என்றும் கூறினால் - தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா என்று வேறு சிலர் கொடிப் பிடிக்க ஆரம்பித்து விடப் போகிறார்கள்!
வணக்கம் சார்
ReplyDelete🙏🙏
ReplyDeleteஇன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் தான எம்ஜிஆரின நாடோடி மன்னன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன, ரிக்ஷாக்காரன், சிவாஜியின் வசந்தமாளிகை போன்ற படங்கள் டிஜிட்டல் வடிவில திரையிடப்பட்டு, தியேட்டர்களுக்கு வசூலை அள்ளித தந்தன. ரசனைகளின் வடிவங்கள் மாறலாம். ரசனைகள் மாறுவதில்லை.
ReplyDeleteஉண்மைதான் சார், ஊருக்கு ஒரு தியேட்டர் ; சென்னையில் சாந்தி தியேட்டர்!
Deleteஇப்பொழுதும் நாம் டெக்ஸ் வில்லரின் மறுபதிப்பு பழிக்குப்பழி மற்றும் சில கேட்பது போல!
சுடச்சுட போண்டாவும், பஜ்ஜியும்
விற்பனையாவதால் மட்டுமே எல்லோருக்குமே பிடித்த ஸ்னாக்ஸ் என்று ஆகிவிடாது - அதைச் சாப்பிடாதவர்கள் நிறையப் பேர்!
போண்டாவும், பஜ்ஜியும் காலியாவதற்கு காரணம் விற்பனையின் அளவைப் பொருத்து தயார் செய்யப்படுவதால் தான். எண்ணிக்கையில் 50 போண்டா அதிகம் ஆகிவிட்டாலும் அன்று அதோகதிதான்!
புக்ஃபேர்ஸ்பெஷல் புத்தகங்கள் வந்தாச்சு. சிகப்பாய ஒரு சிலுவை ஹார்ட் பவுண்ட் மேக்கிங் Super.
ReplyDeleteலயன் 400 கடகட கடகட கடகடானு ஓடுது... சம்பவங்கள் கோர்வை அடுத்தென்ன அடுத்தென்ன என்ற ஆர்வத்தை கிளப்பிக்கொண்டேயுள்ளன....
ReplyDeleteஓவியரும், கதாசிரியரும் போட்டி போட்டு நகர்த்தியுள்ளனர்....
பக்கம் 130ல நடுபேனல் யம்மாடி...சும்மா தெறி போட்டி...
செடார் சிடி ஷெரீப் டெக்ஸ்&கார்சனை பார்த்து நக்கலாக, பேசும் வசனமும்....
ஓவியங்கள் சின்க்ரைன்ஸ்ம் செம... இது பெஸ்ட்டா அது பெஸ்ட்டா என்றால் 50:50!
அந்த வசனங்களை அப்படியே சிந்தாமல் சிதறாமல் தமிழ்ல நம்மிடம் சேர்த்துள்ளார் எடிட்டர் சார்....!!!
கதையின் ஓட்டத்தோடு மெய்மறந்து நான் பயணித்தாலும் இதுபோன்ற சீன்களை சொல்லாமல் போனா வரலாற்று பிழையாகிடக்கூடும்...😉
2012 க்கு முந்திய பட்டியல் இது. வேற எதாவது சேத்தனுமான்னு பாருங்க.
Delete*பழிக்குப் பழி*
*இரத்த முத்திரை*
*இரத்த வெறியர்கள்*
*இரும்புக் குதிரையின் பாதையில்*
*இரத்த நகரம்*
*நள்ளிரவு வேட்டை*
*பாலைவனப் பரலோகம்*-
" *மந்திர மண்டலம்* "
*மெக்ஸிகோ படலம்*-
*ஓநாய் வேட்டை& இரத்த தாகம்*
*இரத்த ஒப்பந்தம், தணியாத தணல்& காலன் தீர்த்த கணக்கு*
மரண தூதர்கள்.
சாத்தான் வேட்டை
அதிரடி கணவாய்.
எல்லையில் ஒரு யுத்தம்
எமனுடன் ஒரு யுத்தம்.
கானகக் கோட்டை
நள்ளிரவு வேட்டை
பனிக்கடல் படலம்
*கார்சனின் கடந்த காலம்*... 3ஆம் பதிப்பு. வசனம் பாடல்கள் மாற்றாமல்.
அம்சம்..அம்சமான முழு லிஸ்ட்....🙌 அப்படியே படிப்பேன் தூங்காமால் கொள்ளாமல்....
Delete"அத்தனையும் பொறுக்கி எடுத்த ரத்தினங்கள்" --- (நன்றி:இ.ப.-காரிங்டன் வசனம்)
இதுல எடிட்டர் சார் தோதுபடும்போது எப்படி வேணா போட்டுத் தாக்கலாம்... டெக்ஸின் முதல் சீசனை தவறவிட்ட நண்பர்களுக்கு அட்சய பாத்திரம்!
நடுநடுவே போட்டோக்கள், ஹார்டுகவர்கள் லாம் போட்டுக்கலாம்...!!!
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஆமா ஜி சரி பார்த்துட்டு அழுச்சுட்டேன்
Delete200
ReplyDeleteஅப்படியே நியூயார்க்கில் பார்னே கலர்ல மறுபதிப்பு கேளுங்க
ReplyDeleteசார் ஈரோட்டு இதழ்கள் அட்டைப் படம் அதகளம்...ஒன்றையொன்று விஞ்சுகின்றன...
ReplyDeleteடெக்ஸ் ஹார்டு பௌண்டில் கச்சிதமாய் ஜொலித்தால்....லக்கி பச்சையில் படம் போடுறார்...இது வர வந்த வங்கியின் அட்டைகள்லயே டாப் இதான
Delete