Powered By Blogger

Thursday, August 12, 2021

ஒரு லயன் பயணம் !

 நண்பர்களே,

வணக்கம். திரும்பிய பக்கமெல்லாம் ஆபீசில் டப்பிக்கள் மயம் !! கொஞ்ச காலமாகவே கூரியர் அனுப்பும் 'பொட்டிகள்' சற்றே வலுவிழந்தவைகளாக இருக்க, இம்மாதத்து பயில்வான் பொஸ்தவங்களுக்கு அவை சுகப்படாதென்று தீர்மானித்தேன் ! So வழக்கத்தை விடவும் கனமும், வலுவும் கூடுதலான டப்பிக்கள் - இம்மாதத்து ரெகுலர் புக்ஸுக்கெனவும் ; மாடு மாதிரியான கனத்தினில் "இ.ப" புக்ஸுக்கெனவும் பிரேத்யேகமாய் செய்து வாங்கியிருப்பதால், ஆபீசில் திரும்பின திக்கிலெல்லாம் ப்ரவுன் மயமே !! And இன்றைக்கு அவற்றுள் முதல் பாதி இடத்தைக் காலி செய்துள்ளன - லயன் # 400  + தோர்கலைச் சுமந்தபடியே ! 

அவர்களோடு கொசுறாய் இணைந்து பயணிக்கும் TEX Color சிறுகதை இம்மாதத்தில் கொஞ்சமாகவேனும் பேசுபொருளாகிடாது போனால் நான் வியப்புக் கொள்வேன் - simply becos இது நம்ம 'வெள்ளிமுடியாரின்' solo சாகசம் + தாத்தா சாரை இங்கே கொஞ்சமே கொஞ்சமாய் வித்தியாசமானதொரு அவதாரில் ரசித்திடவுள்ளோம் ! இதோ அதன் அட்டைப்பட (முதல் பக்க) preview ! நாளைக்கு புக்ஸ் கைக்கு கிட்டிய பின்னே, ஒரு சர சர வாசிப்புக்கு இதனை உட்படுத்தினால் - mixed comments இங்கே பதிவாவது சர்வ நிச்சயம் என்பேன் ! 

அப்புறம் இந்த 32 பக்க புக்லெட்டை பெரிய சைசில் போடுவது சுகப்படாதென்பது இறுதி நொடியினில் தான் புலனானது ! லயன் 400 ரெகுலர் சைசில், ஹார்ட்கவரில் தாட்டியமாய் டப்பாவினுள் இடம்பிடிக்கும் சமயத்தினில், அட்டைப்படமில்லா இந்த புக்லெட் மட்டும் பெரிய சைசில் உள்ளே நுழைக்கப்பட்டால், உங்களை அது வந்து சேரும் போது புளியம்பழமாய்க் கசங்கியே சேர்ந்திடும் என்பது புரிந்தது ! இம்மாதத்தின் தோர்கலுமே பெரிய சைஸ் என்றாலும், அதற்கு வலுவான ராப்பர் உண்டெனும் போது அதனில் இந்த நோவுக்கு வாய்ப்புகளில்லை !  So டெக்சின் அதே சைசுக்கு கதாசிரியர் மௌரோ போசெல்லியின் இந்தப் புதுயுகக் குட்டிக் கதை இடம் பிடிக்கிறது !! 

லயன் 400 !! 

இ.ப ; Smashing 70's ; 2022 அட்டவணை ; முத்து ஆண்டுமலர் - என சில பல (மெகா) புராஜெக்ட்ஸ் ஏக காலத்தில் துவக்கம் கண்டிருக்க, அத்தனைக்குள்ளும் ஒரே நேரத்தில் புலி வேஷம் கட்டிக்கொண்டு ஆட நான் முற்பட்டு வருவதால், இந்த நொடிக்கான முக்கியத்துவத்தை அடிக்கோடிட மறந்து விட்டேனோ என்ற சிறு உறுத்தல் உள்ளுக்குள் !! 'ஆ-வூ-ன்னா' ஸ்டாண்டை எடுத்துப்புட்டு, வாடகைச் சைக்கிளில் பின்னோக்கிய பயணம் போவதே நமது வாடிக்கை எனும் பொழுது - மறுக்கா அதையே இப்போதும் செய்யத் தோன்றவில்லை எனக்கு ! மாறாக - லயன் # 500 இருக்கக்கூடிய திக்கினில் பார்வைகளை ஓடச் செய்யவே விழைகிறது ! ஆனால் மிதமிஞ்சிய நோஸ்டால்ஜியா காதலர்களான நமக்கு, கடந்து வந்த பாதையின் மீதே மையல் அதிகமல்லவா ? தவிர, என்னைப் போலான சில வெள்ளிமுடியார்கள் "முத்து காமிக்ஸ்" யுகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், யூத்தான உங்களின் பெரும்பான்மை "லயனின் யுகத்துப் பிள்ளைகள்" அல்லவா ? So உங்களின் காமிக்ஸ் துவக்கங்கள் பெரும்பாலும் லயனிலிருந்தே இருந்திருக்கும் எனும் போது - இந்த ஜாலியான மைல்கல் is one to be cherished !! ஆகையால் - 'தன்னான்னே...தானான்னே...' என்று ஒருவாட்டி பின்திரும்பி ஒரு ஆட்டம் போட்டுக் கொள்வதில் தப்பில்லை என்பேன் !! 

சாவகாசமாய் யோசித்தால் நமது (இதுவரையிலான) லயன் பயணத்தில் - நான்கு distinct அத்தியாயங்கள் இருப்பது புலனாகும் ! முதலாவதும், எனது தலையெழுத்தையே மாற்றியதுமான அத்தியாயம் - "இளம் கன்று பயமறியாது ; பசியறியாது ; சாலையறியாது ; மேடறியாது ; பள்ளமறியாது" அத்தியாயமே !! பதினேழு வயசுக்கு என்ன தெரிஞ்சிருக்குமோ அது மாத்திரமே தெரிந்திருந்தாலும் - சந்தர்ப்ப சூழல்களின் புண்ணியத்தில் நான் இங்கே அடிக்க நேர்ந்த கூத்துக்கள் ஏற்கனவே well documented ! ஆகையால் அதனில் நான் மேற்கொண்டும்  'டொய்ங் டொய்ங்' என்று தம்பூராவை வாசிக்கப் போவதில்லை ! மாறாக, அந்தப் பிள்ளையார் சுழிப் பருவத்தில் நமக்கென செட் ஆன சில templates பற்றி மட்டுமே highlight செய்திட எண்ணுகிறேன் ! பிரதானமானது - variety !! 1984 to 1987-க்குள்ளான முதல் 3 ஆண்டுகளில் நாம் களமிறக்கிய நாயகர்களை மட்டுமே எண்ணினால் கூட  - ஒரு விடுமுறை தினத்தின் காசிமேடு மார்க்கெட்டில், மீன் வாங்க நிற்கும் ஜனத்தை விடவும் ஜாஸ்தி தேறும் ! பெருசாய்த் திட்டமிடல்களின்றி, கண்ணில்பட்ட கதைகளையெல்லாம் நமது லயனின் இதழ்களாக்கிட வேண்டுமென்ற அந்நாட்களின் வேட்கையே - இன்றளவிற்கு நம் முன்னே தொங்கி வரும் variety என்ற கேரட் !! அந்தக் கேரட்டை  விழுங்கிட மாட்டோமா ? என்ற ஏக்கத்தோடே ஓட்டமெடுத்து வரும் கழுதைக்கு இன்று வயசாகியிருக்கலாமேயொழிய - அந்த பேரவா துளியும் குன்றிடவில்லை ! 

Template # 2 - சைஸ்கள் மீதான ஒரு ஆராய்ச்சி அவா !! அந்நாட்களிலெல்லாம் மதியம் சீக்கிரமாய் சாப்பிட்டு முடித்து விட்டு ஆபீசுக்குத் திரும்பும் பட்சத்தில் - புதுசாய் எந்த மரத்தில் ஏறலாமென்ற மந்தி சிந்தனை தான் ஓடி வரும் ! நியூஸ்பிரிண்ட் காகிதங்களில் தான் நமது அந்நாட்களது பயணம் எனும் போது - பெரிய சைசில் ரீல்களாய் பேப்பர் வாங்கி, அவற்றை என் கோக்கு மாக்குப் புத்திக்கேற்ற அளவுகளில் வெட்டினால் வினோதமான சைஸ்களுமே  சாத்தியமாகிடும் ! உள்ளுக்குள்ளேயே சிகாமணி + திறன் வாய்ந்த ஆர்டிஸ்ட்கள் பணியாற்றிய நாட்களென்பதால்  - நான் எவ்விதம் வெட்டி, ஒட்டி மாற்றியமைக்கச் சொன்னாலும் நொடியினில் வேலை ஆகி விடும் ! So சைஸ்களின் மீதான மையல் ; அதிலும் குறிப்பாய் அந்த பாக்கெட் சைஸ் மீதான காதல் தான் - அடுத்த பத்தாண்டுகளுக்கு நம்மைச் சுமந்து சென்ற வாகனம் என்றால் மிகையாகாது !!

லயன் பயணத்தின் அத்தியாயம் # 2 - "இது டூ மச்..த்ரீ மச்..." days ! உங்களில் பலருமே இன்றளவிற்கு golden age என்று சிலாகிக்கும் - அந்தத் "திகில்" ; ஜூனியர் லயன்" ; "மினி-லயன்" ; "முத்து" ரவுண்டு கட்டி அடித்த நாட்கள் அவை !! பட்டிக்காட்டான் முட்டாய்க் கடைக்குள் நுழைஞ்சாச்சு ; பள பளக்கும் பட்சணங்கள் அணிவகுத்து நிற்பதை வாய் பிளந்து ரசிக்கவும் செஞ்சாச்சு !! அத்தோடு நகராமல், பிளந்த வாய்க்குள் அங்கிருக்கும் அத்தனையையுமே திணிக்க முற்பட்டால் என்ன ஆகுமோ - அதுவே அன்றைய பொழுதில் அரங்கேறியது ! Fleetway எனும் அட்சயப் பாத்திரமே திகட்டத் திகட்ட அமுதூட்டி வந்த நிலையில், பிரான்க்கோ பெல்ஜிய பாற்கடலும், டெக்ஸ் வில்லரெனும் உச்சமும் அதே பந்தியில் கிட்டிய போது பகாசுரப் பசி எட்டிப் பார்த்தது ! அதன் பலனாய் ஒன்றுக்கு நான்காய் இதழ்களைப் போட்டுத் தாக்கிட, வெகு சீக்கிரமே அஜீரணம் பலனாகியது ! So 'திக்கெட்டும் காமிக்ஸ்' என்ற அந்த phase - "அபரிமித ஆசை ; ஆரோக்கியத்துக்கு ஆகாது !!" என்று கற்றுத் தந்தது !

லயன் பயண அத்தியாயம் # 3 - "இனியெல்லாம் சோகமே !" விறு விறு ஏற்றம் ; உச்சத்தில் சடுகுடு ஆட்டம் என்றான பின்னே, தொடரக்கூடியது கிடு கிடு கீழிறங்கும் படலமன்றி வேறென்னவாக இருக்கக்கூடும் ? கேபிள் டிவி ; வாசிப்பினில் மந்தகதி ; இன்டர்நெட்டின் வருகை என பற்பல காரணிகளோடு நமது சோம்பலும், நேரம் சார்ந்த ஒழுங்கீனமும் கரம் கோர்க்க, பாதாள பைரவியானது கதை ! இத்தனைக்கும் இந்த வேளையினில் நீங்களெல்லாம் மீசைகளை முறுக்கி விட்டுக் கொள்ளும் பருவத்தினைத் தொட்டிருந்திருப்பீர்கள் & நியாயப்படிப் பார்த்தால் - ஆரம்ப நாட்களை விட உங்களின் வாங்கும் திறன் இப்பொழுதுகளில் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் ! இன்ன பிற சிரமங்கள் காமிக்ஸ் நிர்வாகத்தினையும் சிரமமானதாய்க் காட்டிட, 'போதுமே சாமீ - இந்த பொம்ம பொஸ்தவ சவகாசம் !!' என்று உள்ளுக்குள் தோன்றிய தருணங்கள் இவை ! இந்த இருண்ட காலகட்டத்திலிருந்து நாம் கற்றிருந்த பாடமென்று ஏதேனும் இருப்பின், அது - "டில்லிக்கே ராசாவானாலும், பள்ளிக்குப் பிள்ளை தான்" என்ற பாடமாகத்தானிருக்க வேண்டும் ! எத்தனை ஆதர்ஷங்களை ஈட்டியிருப்பினும், அடிப்படைகளை மதிக்காது போயின் - மவனே சங்கு தான் என்பதை நமக்கு வாழ்க்கை உணர்த்திய நாட்களவை !

லயன் பயண அத்தியாயம் # 4 - நமது மீள்வருகைக்குப் பின்பான "வந்துட்டேன்னு சொல்லு" அத்தியாயம் ! இனி இழக்க ஏதுமில்லை  என்றபடிக்கே, முதல் மூன்று அத்தியாயங்களிலும் கற்ற பாடங்களை மண்டையில் குட்டி, ஏற்றியபடிக்கே தட்டுத் தடுமாறியபடியே மறுக்கா புறப்பட்ட வண்டியானது, இன்றைக்கு இந்த மைல்கல்லினைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது ! நமது COMEBACK ஸ்பெஷலின் வெளியீடு நம்பர் 210 ! So கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டுகளில், முதல் 27 ஆண்டுகளில் வெளியிட்ட அளவினைத் தொடச் சாத்தியப்பட்டுள்ளது என்பது தான் இந்த மீள்வருகை நாட்களின் highlight ! Of course - ஒரு சில ஆண்டுகளில் முத்து காமிக்ஸ் வெளியீடுகள் குறைச்சலாகவும், லயனின் நம்பர்ஸ் கணிசமாகவும் இருந்திருக்கக்கூடும் என்பதால் இந்த doubling of the numbers சுலபமாகியிருக்கலாம் தான் ; but still - கடந்த தசாப்தம் எதில் உச்சமாய் இருந்துள்ளதோ, இல்லையோ - sheer numbers-களில் ரவுண்டு கட்டி அடித்துள்ளது என்பேன் !! இந்த வேளையினில் முதல் பருவத்தின் variety இன்னமும் அதே உத்வேகத்துடன் தொடர்கிறது தான் ; சைஸ் சார்ந்த கிறுக்கும் அவ்வப்போது தலைகாட்டுகிறது தான் ; (ஸ்பைடரின் விசித்திரச் சவால் - பாக்கெட் ஸைஸ் hardcover ஞாபகங்களில் கீது தானே ?)  ; இரண்டாம் பருவத்தின் பகாசுரப் பசியும் தொடர்கிறது தான் ; கண்ணில் தென்படுவதையெல்லாம் விழுங்கிட மனசு துடிக்கிறது தான் ! ஆனால் மூன்றாம் பருவத்தினில் செய்த பிசகை மட்டும் இன்றைக்கு எக்காரணம் கொண்டும் செய்திடலாகாது என்ற அடிப்பு தான் எனது நள்ளிரவு எண்ணெய்களின் நதிமூலம் ! ஒற்றை தேதி பிசகிட அனுமதித்தல் கூட ஒரு மினி தோல்வி - என்ற ரீதியில் பார்க்கத் துவங்கியிருப்பதால் இந்த மைல்கல்களெல்லாம் சாத்தியமாகின்றன ! (என்ன - கொரோனா அசுரன் மூஞ்சியில் கணிசமாய்க் கரி பூசிக் சென்று விட்டது கிளைக் கதை !!) ஆண்டொன்றுக்குச்  சரளமாய் 6000+ பக்கங்களை போட்டுத் தாக்குமிடத்தினில் நானிருப்பேன் - என்று 10 வருஷங்களுக்கு முன்னே யாரேனும் ஆரூடம் சொல்லியிருந்தால், "போங்கப்பு...காமெடி பண்ணாமப் போய் புள்ளை குட்டியைப் படிக்க வையுங்க அப்பு !" என்று சொல்லியபடியே நகர்ந்திருப்பேன் ! ஆனால் உங்களின் மாறா நேசங்களும், குன்றா அன்புகளும், எனது அசமந்தங்களை ஆயுசுக்கும் ஒரு கெட்ட கனவாக்கிட உதவியதே இந்த தசாப்தத்தின் my biggest takeaway என்பேன் ! ஓராயிரம் நன்றிகள் guys - நம்பர்களால் உங்களின் பங்களிப்பினை ஒருபோதும் அளவிட்டிட முடியாது !!

இதோ இந்தத் திரும்பிப் பார்க்கும் நொடியினில் உங்களிடம் கேட்க எனக்கு கேள்விகள் இல்லாமலா போய்விடும் ? So here you go !!

1. (நம்முடனான) உங்களின் காமிக்ஸ் பயணமானது துவங்கியது - மேற்சொன்ன அத்தியாயங்களில் எதனுள்ளிருந்து folks ? நீங்கள் வாசித்த முதல் லயன் (குழும) இதழ் எதுவென்றே நினைவுள்ளதா இன்னமும் ?

2. அந்த பாக்கெட் சைஸ் மோகம் தலைவிரித்தாடிய நாட்கள் உங்களுக்கு இன்னமும் நினைவுள்ளதா ? திரும்பிப் பார்க்கையில் இன்று சிப்பு சிப்பாய் வருகிறதா ? அல்லது - அதெல்லாம் ஒரு கனாக்காலம் ! என்ற பெருமூச்சா ?

3. இதுவரையிலுமான 400 லயன் காமிக்ஸ் இதழ்களுள் TOP 3 என்று நீங்கள் தேர்வு செய்வதாயின் - அந்த 3 எவையாக இருக்கும் ? 

4. எல்லாமே ஒரு குடையின் கீழே நிழல் தேடும் வாத்துக்கள் தான் என்ற போதிலும், என்னளவினில் "லயன் காமிக்ஸ்" என்றென்றும் சன்னமான கூடுதல் வாஞ்சைக்குரியது ! Of course - முத்து காமிக்ஸ் "போட்டி கம்பெனி" என்ற எண்ணங்களை இடைப்பட்டுள்ள இத்தனை ஆண்டுகளில் களைந்தாச்சு தான் ; but still , பந்தி பரிமாறும் போது -  ஒரு கரண்டி கூடுதலாய் கேசரியை லயனின் இலையில் வைக்க மனசு பறக்கும் என்பதை மறுக்க மாட்டேன் ! உங்களுக்கு எனது இந்தக் குடாக்கு எண்ணமானது புரிகிறதா ? உங்களுக்கும் இது போல ஏதேனும் மினி ஓரவஞ்சனை எதன் மீதாச்சும் உண்டா guys ?

5. And of course - கடாசிக் கேள்வி : ஒரு இதழை....ஏதேனும் ஒரேயொரு இதழினை இந்த நானூறிலிருந்து மறுக்கா பதிப்பிடுவதெனில், உங்களின் தேர்வு எதுவாக இருக்குமோ ? இது சும்மா ஒரு curiosity -ன் பொருட்டு நான் முன்வைக்கும் வினவலே தவிர்த்து வேறெதுவும் இல்லை guys ! So ஜாலியான கேள்விக்கு, ஜாலியாய் பதில் ப்ளீஸ் ?

ரைட்டு...நாளைய பொழுது இரண்டே முக்கால் கிலோக்கலின் எடையுடன் XIII கூரியர்கள் கிளம்பிடத் தயாராக இருக்க, நாளை மறுநாளின் முஸ்தீபுகளுக்குள் இறங்கிடக் கிளம்புகிறேன் guys !! And btw, ஆகஸ்ட் இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி : 

https://lion-muthucomics.com/latest-releases/855-august-pack-2021.html

https://lioncomics.in/product/august-pack-2021/

So happy shopping & happy reading folks !! மீண்டும் சந்திப்போம் - bye for now !!

229 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. லயன் 400 வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. முதல்கதை ஸ்பைடர் இன் எத்தனுக்கு எத்தன் 400 மறுபதிப்பு கொலை படை

    ReplyDelete
  4. எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ

    ReplyDelete
  5. ////So கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டுகளில், முதல் 27 ஆண்டுகளில் வெளியிட்ட அளவினைத் தொடச் சாத்தியப்பட்டுள்ளது என்பது தான் இந்த மீள்வருகை நாட்களின் highlight !////

    அம்மாடியோவ்!! நம்மளவில் இதுவொரு அசுர சாதனை தான் சார்!!

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஆசிரியஅசுரருக்கு இதெல்லாம் சாதாரணம் ஈவி

      Delete
  6. பனியில் ஒரு புது நேசம் கலக்கலாய் அமையும் போல...

    ReplyDelete
  7. ///இன்றளவிற்கு நம் முன்னே தொங்கி வரும் variety என்ற கேரட் !! அந்தக் கேரட்டை விழுங்கிட மாட்டோமா ? என்ற ஏக்கத்தோடே ஓட்டமெடுத்து வரும் கழுதைக்கு இன்று வயசாகியிருக்கலாமேயொழிய - அந்த பேரவா துளியும் குன்றிடவில்லை ! ////

    தெரியும் சார்! ஆனா உங்க வாயாலே இதைக் கேட்கும்போது உற்சாகம் எக்கச்சக்கமாய் ஊற்றெடுக்கிறது!

    ReplyDelete
  8. மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் பதிவுகளில் ஒன்று. திரும்பி பார்க்கும் போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது. I am so Happy.

    ReplyDelete
  9. லயனின் 400 வது இதழ் வெற்றிபெற வாழ்த்துக்கள் சார்.

    கேள்விகளுக்கான பதில் அடுத்த பதிவில்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் எடி சார்...

    இரத்தப்படலம் டிரெய்லர் கண்ணுல காட்டுங்க சார்.. நொயிடா வர்ரதுக்கு 10 நாள் ஆகும் சார்..

    ReplyDelete
  11. 1. கத்தி முனையில் மாடஸ்டி. முதலி்ல் படித்த லயன் குழும இதழ். மூக்குப் பொடியும் பாலைவனத்தில் தண்ணீரையும்தேடிப் போனவனுக்கு காட்டூர்பிரபா ஸ்டோர்ஸ் ஓனர் புதுசா வந்துருக்கு வாங்கிட்டுப்போன்னு எடுத்துக் குடுத்தார். அன்னிலிருந்து விடாம்ப் படிச்சிகிட்டிருக்கேன்.

    ReplyDelete
  12. 2. அதெல்லாம் கனாக்காலந்தான். இப்போதைக்கு டெக்ஸ் இதழ்கள் சைஸ் தான் கம்பர்டபிளா இருக்கு.

    ReplyDelete
  13. 1. ஸ்பைடர்
    2. ஒன்லி பெரு மூச்சு.. அன்று வசதிபடவில்லை. ஹம்ம்ம்மம்
    3. ஒன்றா இரண்டா எல்லாம் சொல்லவே மூன்று போதுமா!!
    4. எனக்கு மினி லயன் மிக மிக நெருக்கமானது.. நினைத்தாலே இனிக்கும் .. மறுபடி ஆரம்பியுங்கள்
    5. Mr.Z இதில் ஒரு நத்தை ஒரு கார் வேகமா வந்து நத்தை அருகே சடன் ப்ரேக் போட்டு நிற்கும்.. நத்தை டயலாக்: என்ன ஒரு காராபிமானம்.. எனக்கு பிடித்த வசனம்

    ReplyDelete
    Replies
    1. Mr.Z இதில் ஒரு நத்தை ஒரு கார் வேகமா வந்து நத்தை அருகே சடன் ப்ரேக் போட்டு நிற்கும்.. நத்தை டயலாக்: "என்ன ஒரு காராபிமானம்.."
      அது கொள்ளைக்கார கார், சகோ

      Delete
  14. ///(ஸ்பைடரின் விசித்திரச் சவால் - பாக்கெட் ஸைஸ் hardcover ஞாபகங்களில் கீது தானே ?)///

    பாக்கெட் சைஸ் மிகவும் நன்றாக இருந்தது! படுக்கையில் படுத்துக்கொண்டே படிப்பதற்கு ரொம்ப சௌகர்யமாய் இருந்தது!

    லக்கி, சிக்பில் கதைகள் பாக்கெட் சைஸில், முழு வண்ணத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  15. நாளைய பொழுது August-13 நினைச்சாலே தூக்கம் வராது போலிருக்கே..

    ReplyDelete
  16. 1.ஒவ்வொன்றாக பதிலை போஸ்ட் செய்து விடுகிறேன் சார். எனக்கு நினைவு தெரிந்து 'பயங்கர நகரம்'. ஆர்ச்சியின் சிறுகதையில் அது வண்டியை இழுத்துக் கொண்டு ஓடியது மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அப்போதெல்லாம் தெருவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறுவர் இதழ் வைத்திருப்போம்....பாலமித்ரா, கோகுலம் , பூந்தளிர், ரத்னபாலா ,அம்புலிமாமா, ராணி காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ்,.....ரஷ்ய தமிழ் புத்தகங்கள்.....லயனில்கூட ஒருவரிடம் இல்லாத வேறொரு கதை...இப்படியாக. நாங்கள் exchange செய்து கொண்டு படித்த பொற்காலம். படிக்கும் பழக்கமில்லாததால் ஆங்கிலம் , தமிழ் இரண்டையும் இழந்து நிற்கும் இப்போதைய தலைமுறையினரை துரதிஷ்டசாலிகள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது?

    ReplyDelete
  17. நாங்கள் படிக்காத ஒரு புத்தகத்தைப் பார்த்தால் மனம் கிறுகிறுத்துப் போகும். கையில் கிடைக்கும் வரை வார்த்தையால் விவரிக்க இயலாத அளவிற்கு மனம் பேதலித்துப் போகும்.

    ReplyDelete
  18. 1.
    "வெறும் இரும்புக்கை மட்டும் தனியா போயி சண்டை போடுதாம்டா"பிரண்டு ஒருத்தன் சொல்லி
    எட்டு வயதில் 93 ன் வாக்கில் முதன்முதலாக வாடகை நூலகத்தில் ,அப்போதைய அரிஸ்டோகிராட் பொட்டியிலிருந்து நாலணா வாடகையில் "மந்திர வித்தை"யில் ஆரம்பித்தது.சென்ற வாரத்தில் சேலத்து நண்பர் ஒருவர் மூலமாக பரிசாக எனக்குக் கிடைத்து விட்டது.

    2.
    பழி வாங்கும் பொம்மை ரூ 3.50 க்கு பாக்கெட்சைஸூல
    டவுசர் பாக்கெட்டுல ஈஸியா வைச்சுப்புடலாம்ங்கிற சௌரியத்தை எட்டு வயசுப் பயலுக்கு கொடுத்த கனாக்கலாம்.

    3.
    கொலைப் படை
    கார்சனின் கடந்த காலம்
    நீரின்றி அமையாது உலகு

    நிறைய சிறந்த கதைகளில் கிராஃபிக் நாவல்களும் அடக்கம்.

    4.இலயன்,முத்து இரெண்டையும் பிரிச்சுப் பாக்க முடியலை அண்ணாச்சி.

    5.நிறைய கதைகள் இருந்தாலும்
    கார்சனின் கடந்த காலம் கதையை,பேனல்களை சுருக்காமல் வெளியிட்டால்
    நல்லா இருக்கும் அப்பு.







    ReplyDelete
  19. மீ 32. அக்குப்பஞ்சர் தெரபி காரணமாக கையில் வலி உள்ளதால் அப்போ அப்போ அணு அப்சென்ட் ஆனால் அணு இஸ் ஆல்சோ பிரசென்ட்.

    ReplyDelete
    Replies
    1. ஓவ்... டேக்கேர் சகோ! கெட்வெல் குயிக்லி

      Delete
    2. நிச்சயம். வீட்டுக்காரர் உப்மா பண்ணி கொல்லுறார். சீக்கிரம் கிட்சேனில் இருந்து கிளப்பிவிடணும்.

      Delete
    3. Getting well pa. Work in progress. Thanks.

      Delete
    4. 'கையை மடக்கி மடக்கி ஆத்துக்காரரை குத்துவதை கொஞ்சம் நிறுத்திக்கோங்க அணு'ன்னு சொன்னா கேட்டாத்தானே? கெட் வெல் சூன், சகோ!

      Delete
    5. உஷ். கம்பெனி ரகசியத்தை எல்லாம் இப்படி வெளில சொல்ல கூடாது அண்ணே. அனு விஷயமெல்லாம் அணுகுண்டு மாதிரி. பாருங்க GSLVயே நடுங்கி போச்சு.

      Delete
  20. 1. இரத்த வெறியர்கள்(டெக்ஸ்) அதுவரையிலும் வேறு குழும இதழ்களை மட்டுமே படித்திருந்த எனக்கு இதைப் படித்த பிறகு அடைந்த ஆனந்தத்தை வார்த்தைகளில் சொல்ல இயலாது... எல்லாம் டெக்ஸ் செய்த மாயம்...
    2. உண்மையிலும் எனக்கு அது ஒரு கனாக்காலம் தான் சார்... நான் வாங்க ஆரம்பித்த பிறகு பாக்கட் சைசில் அதிகம் வரவில்லை...
    3. இரத்த வெறியர்கள்(முதல் இதழ்), லயன் டாப்10 ஸ்பெஷல்(முதல் ஸ்பெஷல்), ஜெஸ்ஸி ஜேம்ஸ்(முதல் முழு வண்ண இதழ்) மூன்றுக்குள் எல்லாம் ரொம்பவே கடினம் சார், உண்மையை சொல்வதென்றால் பொம்மை படம் போட்ட எல்லா இதழ்களுக்குமே முதல் இடம் தான்...

    4. ஆரம்பகாலத்தில் ஓரவஞ்சனை உண்டுதான்.. கையில் காசு அளவாக புளங்கிய காலத்தில் முதலில் வாங்கியது லயன் இதழ் தான்.. பிறகு தான் மற்றவை..
    5. கண்டிப்பாக இரத்த வெறியர்கள் தான் சார்...:-))
    டெக்ஸின் சிறந்த கதைகளில் ஒன்று..
    ஆனால் நண்பர்கள் யாருமே இதை மறுபதிப்பிற்கு முன்மொழிவதில்லை...

    லயன் 500, 600...1000 என்று மைல்கல் இதழ்களை விரைவில் கொண்டாட வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
    Replies
    1. ////டெக்ஸின் சிறந்த கதைகளில் ஒன்று..
      ஆனால் நண்பர்கள் யாருமே இதை மறுபதிப்பிற்கு முன்மொழிவதில்லை...//

      ----மறுபதிப்பு வாண்டட் லிஸ்ட்ல பலமுறை கொடுத்து உள்ளோம் நண்பரே.... இரத்த வெறியர்கள் வெகு விரைவில் வரக்கூடும்.😍

      Delete
    2. சூப்பர் சார்...🧡

      Delete
  21. 1. (நம்முடனான) உங்களின் காமிக்ஸ் பயணமானது துவங்கியது - மேற்சொன்ன அத்தியாயங்களில் எதனுள்ளிருந்து folks ? நீங்கள் வாசித்த முதல் லயன் (குழும) இதழ் எதுவென்றே நினைவுள்ளதா இன்னமும் ?

    The first big size Archie book sir - forgot the title. Also SADHIVALAI was of same size.


    2. அந்த பாக்கெட் சைஸ் மோகம் தலைவிரித்தாடிய நாட்கள் உங்களுக்கு இன்னமும் நினைவுள்ளதா ? திரும்பிப் பார்க்கையில் இன்று சிப்பு சிப்பாய் வருகிறதா ? அல்லது - அதெல்லாம் ஒரு கனாக்காலம் ! என்ற பெருமூச்சா ?

    Definitely I would like the pocket size comics to return sans the saanithaaL.

    3. இதுவரையிலுமான 400 லயன் காமிக்ஸ் இதழ்களுள் TOP 3 என்று நீங்கள் தேர்வு செய்வதாயின் - அந்த 3 எவையாக இருக்கும் ?

    If only LION Brand then:

    1. Lion Magnum Special Hardcover
    2. Lion Super Special - 1987 Deepavali
    3. Dragon Nagaram

    If other brands are included the following titles will give a close run:

    1) Sirikkum Maranam - Killing Joke
    2) Sirithuk kolla vendum
    3) Puratchi Thee
    4) Super Circus

    4. எல்லாமே ஒரு குடையின் கீழே நிழல் தேடும் வாத்துக்கள் தான் என்ற போதிலும், என்னளவினில் "லயன் காமிக்ஸ்" என்றென்றும் சன்னமான கூடுதல் வாஞ்சைக்குரியது ! Of course - முத்து காமிக்ஸ் "போட்டி கம்பெனி" என்ற எண்ணங்களை இடைப்பட்டுள்ள இத்தனை ஆண்டுகளில் களைந்தாச்சு தான் ; but still , பந்தி பரிமாறும் போது - ஒரு கரண்டி கூடுதலாய் கேசரியை லயனின் இலையில் வைக்க மனசு பறக்கும் என்பதை மறுக்க மாட்டேன் ! உங்களுக்கு எனது இந்தக் குடாக்கு எண்ணமானது புரிகிறதா ? உங்களுக்கும் இது போல ஏதேனும் மினி ஓரவஞ்சனை எதன் மீதாச்சும் உண்டா guys ?

    Me too - even today Lion 400 excites me more than Muthu 50th Annual Edition :-) Lion 40 and Lion 450 and 500 would be close to heart too. Lion's 86-88 releases were a smashing success across various genres - அந்த சமயத்தில் முத்து காமிக்ஸில் நிறைய டப்ஸா கதைகள் - கொஞ்சம் சிறிய நெருக்கமான fonts and bubbles மற்றும் அட்டை கலர்கள் மங்கலாய் வந்ததால் - it did not impress me as did the kumudam sized issues of 70's my uncle had. The Muthu special of '90 changed all that. ஆனால் சிங்கம் என்றுமே பசுமையான சிங்கம் தான் !

    5. And of course - கடாசிக் கேள்வி : ஒரு இதழை....ஏதேனும் ஒரேயொரு இதழினை இந்த நானூறிலிருந்து மறுக்கா பதிப்பிடுவதெனில், உங்களின் தேர்வு எதுவாக இருக்குமோ ? இது சும்மா ஒரு curiosity -ன் பொருட்டு நான் முன்வைக்கும் வினவலே தவிர்த்து வேறெதுவும் இல்லை guys ! So ஜாலியான கேள்விக்கு, ஜாலியாய் பதில் ப்ளீஸ் ?

    Obvious choice is LION SUPER SPECIAL sir.

    ReplyDelete
    Replies
    1. May be SADHI VALAI is the title for the Archie book? And KOLAIPPADAI is spider's? Those were my first books - forgot which hero maps to what title.

      Delete
    2. ஆர்ச்சி முதல் கதை பெயரே "இரும்பு மனிதன்" தான் ராக்ஜி...

      Delete
    3. I meant my first Archie was that big book. Have not read IRUMBU MANIDHAN.

      Delete
    4. அப்போ அடுத்த மறுபதிப்பு இரும்பு மனிதன் தான்....!!

      Delete
    5. சதி வலையில் ஜான் மாஸ்டர்...அதில் வந்த ஆர்ச்சி கதை நதிக்கரையில் ஆர்ச்சி...மதுரை பஸ்டாண்ட்ல ஊர்லருந்து ரிட்டர்ன் வரைல் வாங்கிய கதை...இன்றும் என்னிடமுள்ள ஒரே பொக்கிஷம் நண்பரே

      Delete
  22. அருமை சார்...
    1. முதலில் படித்த கதை நம்ம இரும்பு மனிதன்....நீண்ட நாட்களாய் கடையில் தொங்க...எப்படி வாங்க தோன்றியது என்றோ...கேட்டதும் அந்த அநியாய விலைக்கு அன்னையார் எப்படி வாங்கித் தர சம்மதித்தார் என்பதும் இன்றைய ஆச்சரியம்...ரெகுலரா வாங்கித் துவங்கியது...மாதா மாதம் வரும் என அறிந்ததும் நம்ம சைத்தான் விஞ்ஞானி அல்லது டெக்சின் தலைவாங்கியிலிருந்தென நினைக்கிறேன்....அப்படியே 400ன் லிஸ்டும் தந்தால் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. 2.என்ன இப்படி கேட்டுட்டீங்க...எங்கப்பாட்ட ஆட்டய போட்டு பாக்கெட்ல ஒளிச்சு வைங்க வாய்ப்பான சைசல்லவா....ஆனாலும் அந்த சைசே வித்தியாசம் என்றதால்தான் நம்ம கதைகளின் மேல் ஈர்ப்பு...இன்னைக்கு கேட்டா தலையில்லா போராளி சைசுதான் எனக்கு பிடிச்சது...ஆனாலும் சதி வலை ...இரும்பு மனிதன்...கொலைப் படை சைசுல வராதான்னு ஏங்கிய நாட்களும் அன்று அதிகம்...இரத்தப்படலம் பின்னர் அதே சைசுல வந்தது...ஏன் சார் அந்த சைச தொடரல நான் நீண்டகாலமாக கேட்க நினைத்து வாய்ப்பிருந்தும் கேளாம விட்டுட்டேன்...பதில் ப்ளீஸ்...அதிலும் இன்றோ பனி அசுரர் படலத்தப் பாத்து பறக்காத குறைதான்

      Delete
    2. 4.ஸ்பைடரும் ஆர்ச்சி மும் மாசாமாசம் வராதா எனவும்...ராணியை வந்த தம்பி ஓடிய இளவரசி நம்ம இதழ் அலங்கரித்திருக்கக் கூடாதா என பொறாமை பட்டதும் ...ரத்னபாலால வந்த விண்வெளி விதியண்ணல்...திகிலில் வந்த ஸ்பைடர் நம்ம லயன்ஸ் ஒரே புக்கா வரக்கூடாதா என ஏங்கியதும்...திகிலில் வந்த டெக்ஸ் நம்ம லயன்லதான வரலன்னு கோவப்பட்டதும் உண்டு

      Delete
    3. 5.கொலைப்படை...அதே சைசு...அதே இருவண்ணம் அதே போல் அட்டை ..அதே விளம்பரங்கள்...முன் பக்கம் முதல் பின் பக்கம் வரை அதே ஈ அடிச்சான் காப்பி ஒரு பக்கம் கூட மிஸ்ஸாகாம

      Delete
  23. Can someone please upload the 400 titles of Lion Comics with the Hero/Heroine names - thanks a lot.

    ReplyDelete
    Replies
    1. இதழில் இருக்க கூடும்.... இல்லைனா நாளை போட்டுவிடலாம்...

      கியூபா படலத்தில் 300வரை இதழ்கள் பெயர் இருக்கும்....!!!

      Delete
  24. Dear Editor
    1.Pachai maranam Tex
    2.Dream time
    3.Top 3 not sure of lion comics list but spider and tex books are right up there
    4.Can understand the slight partiality Sir but its okay , in fact it needs 2 b that way
    5.Spider books- Neethi kavalan or Kolai padai
    Irumbukkai norman - Manitha erimalai ( dunno if it came under lion banner)
    Regards
    All the best
    Arvind

    ReplyDelete
  25. 2. பாக்கெட் சைஸ் என்றால் 1980களின் ஆரம்பத்தில் / 70களில் வந்த வைரஸ் X , மடாலய மர்மம் போன்ற இதழ்களின் சைஸ் சூப்பர். 'விசித்திர சவால்' ஏனோ சொதப்பல் சைசாகப் படுகிறது எனக்கு.

    ReplyDelete
  26. /// simply becos இது நம்ம 'வெள்ளிமுடியாரின்' solo சாகசம் + தாத்தா சாரை இங்கே கொஞ்சமே கொஞ்சமாய் வித்தியாசமானதொரு அவதாரில் ரசித்திடவுள்ளோம் !////

    வா தல வா தல..

    இவண் -
    காதல் இளவரசன் கார்சன் ரசிகர் மன்றம்

    ReplyDelete
    Replies
    1. பல்லு போன காலத்துல பகோடாவா?

      Delete
    2. இது பாதாம் அல்வா சுந்தர்..😋

      Delete
    3. நானும் அந்த ரசிகர் மன்றத்தில் ஒருவன்

      Delete
  27. 3. மிகக் கடினமான கேள்வி ..டைப் செய்வதற்குள் பலப்பல இதழ்கள் மனதில் வந்து போகின்றன....இப்போதைக்கு கோடை மலர் 1987, தீபாவளி மலர் 1986 ஐ சொல்லி வைக்கிறேன். இன்னொன்று reserve ல் இருக்கட்டும்.

    ReplyDelete
  28. டியர் விஜயன் sir...

    1. என்னுடைய முதல் இதழே நமது லயனில் வந்த அதிசய தீவில் ஆர்ச்சிதான். என் அம்மாதான் எனக்கு காமிக்ஸை அறிமுகம் செய்தவர். மேற்கூறிய இதழும், மினிலயனில் வந்த காமெடி கர்னல், மற்றும் ராணி காமிக்ஸின் இதயக்கனி மற்றும் படகோட்டி ஆகிய இதழ்களே என் முதல் காமிக்ஸ் வாசிப்புக்குரியவை. இந்த லிஸ்டில் ஆர்ச்சிதான் என்னை மெய்மறக்க செய்த ஹீரோ. பிற்காலத்தில் என்றேனும் ஒருநாள் அதிசய தீவில் ஆர்ச்சி கதையை மறுபதிப்பு செய்வீர்கள் எனில் உயிர் உள்ள வரை தங்களின் அன்பை பற்றி என் பிள்ளைகளிடம் கூறி பெருமை கொள்வேன்.

    2. பாக்கெட் சைஸ்களின் கால கட்டம் நிச்சயம் எங்கள் காமிக்ஸ் வாழ்வில் பொற்காலம் sir.

    3. நிறைய கதைகள் உள்ளதெனினும் மூன்று மட்டுமே கேட்டுள்ளதால். டெக்ஸின் இரத்த வெறியர்கள், காரிகனின் ஒரு பனிமலை பயங்கரம் மற்றும் இரத்த பூமி.

    4. உண்மைதான் லயனின் மீது மட்டும் அதிக கரிசனத்தோடு செயல்படுகிறீர்கள் பலமுறை எண்ணியுள்ளேன், ஆனால் முத்துவில் டைகரின் தங்க கல்லறை வந்த பிற்பாடு அந்த எண்ணம் அடியோடு மாறிப்போனது. சரிந்து கிடந்த முத்துவின் ஓட்டு மொத்த இமேஜை டைகர் என்ற ஒற்றை நபர் எங்கோ கொண்டு சென்று விட்டார். அந்த தருணங்களை மறவேன்.

    5. அதிசய தீவில் ஆர்ச்சி மட்டும் மீண்டும் வந்தால் எங்கள் தெருவில் புக்கை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு கத்தியவாறே ஓடினாலும் ஆச்சர்யமில்லை. :)

    மற்றும் கூடுதல் சில அன்பு கோரிக்கைகள்.. தாங்கள் வெளியிட்ட அனைத்துமே சிறந்தவைகள் எனினும் அனைத்தையுமே மறுபதிப்புக்கு கேட்க வேண்டும் என்று தோன்றினாலும்... ஒரு சில கதைகள் அவசியம் மறுபதிப்பு செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும். அவற்றின் லிஸ்ட் கீழே.

    The Man Who Searched For Fear. பயத்தை தேடி எனும் பெயரில் திகிலில் வந்தது. இதன் முழு தொகுப்பும் மறுபதிப்பு செய்ய வேண்டுகிறேன்.

    அடுத்து... துப்பறியும் கம்பியூட்டர் ஜானியின் கதை வரிசை தொகுப்பை மறுபதிப்பு செய்ய வேண்டுகிறேன்.

    மற்றும்... அசோக் காமிக்ஸில் வந்த Uncle Terry இரத்த பூதம் முழுமையும் ஒரே தொகுப்பாக மறுபதிப்பு செய்ய வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பரே...
      //The Man Who Searched For Fear. பயத்தை தேடி எனும் பெயரில் திகிலில் வந்தது. இதன் முழு தொகுப்பும் மறுபதிப்பு செய்ய வேண்டுகிறேன்.

      அடுத்து... துப்பறியும் கம்பியூட்டர் ஜானியின் கதை வரிசை தொகுப்பை மறுபதிப்பு செய்ய வேண்டுகிறேன்.

      மற்றும்... அசோக் காமிக்ஸில் வந்த Uncle Terry இரத்த பூதம் முழுமையும் ஒரே தொகுப்பாக மறுபதிப்பு செய்ய வேண்டுகிறேன்.//
      அப்படியே நானும்...படத்தைத் தேடி என்னா ஓர் கதை....காலூனமுற்ற கோடீசுவரர் போல நானும் ஏங்கிப் படித்த சாகசக் கதை

      Delete
    2. //பாக்கெட் சைஸ்களின் கால கட்டம் நிச்சயம் எங்கள் காமிக்ஸ் வாழ்வில் பொற்காலம் sir.//
      //The Man Who Searched For Fear. பயத்தை தேடி எனும் பெயரில் திகிலில் வந்தது. இதன் முழு தொகுப்பும் மறுபதிப்பு செய்ய வேண்டுகிறேன்.//

      100% Truuuueee.

      Delete
    3. அருமை நண்பரே! தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள்!

      Delete
    4. ஆதரவு குரலிற்கு நன்றி நண்பர்களே.

      அந்த 4 வது கேள்வி தொடர்ச்சி... லயனில் மட்டும் ஸ்பெஷல் இதழ்கள் அணிவகுக்கும், முத்துவில் ரெகுலர் இதழ்கள் தவிர்த்து எதுவுமே இராது. எடிட்டர் ஏன் இவ்வாறு ஒரு மாற்றாந்தாய் போல் முத்துவை நடத்துகிறார் என்று நினைத்ததுண்டு.

      1997 வாக்கில் நம்ம கேப்டன் டைகர் வந்து முத்துவை கோபுரத்தில் கொண்டு சென்ற போது எடிட்டர் நிச்சயம் முத்துவை விட்டுவிடவில்லை என்று ஆறுதலாக இருந்தது... தொடர்ந்து மின்னும் மரணம் போன்ற தமிழ் காமிக்ஸின் வரலாற்று சிறப்பு ஸ்பெஷல் முத்துவில் வந்தது. சரியா... இப்ப முத்துவும் லயனுக்கு நிகராக நடை போட்டுக் கொண்டிருந்த போது... 2000ங்கள் மத்தியில் லயன் மெகா dream ஸ்பெஷலில் லயன் பேனரில் முத்துவின் சூப்பர் ஸ்டார் வந்ததை என்னால் அப்போது தாங்கி கொள்ள முடியவில்லை. டைகரை லயனில் வளைத்து போட்டு விட்டாரே என்று லேசான அங்காலாய்ப்பு உண்டானது. பின்னர் அனைத்திற்கும் நம் விஜயன் sir தான் ஆசிரியர் எனும்போது எதில் வந்தால் தான் என்ன, மேலும் டைகரை நமக்கு அவர்தானே அறிமுகம் செய்தது, தளர்ந்த முத்துவை தூக்கி நிறுத்தியதும் நம் விஜயன் sir தானே என்று மனம் நியாயம் கூறி கொண்டது.

      மற்றப்படி.. அப்போது வந்த காமிக்ஸ் இதழ்களில் என் விருப்பத்திற்குரியவை லயன், முத்து, திகில் மற்றும் மினிலயன் மட்டுமே. இந்த நான்கு இதழ்கள் மீது ஏன் இவ்வுளவு பிரியம் என்று சொல்லத் தெரியவில்லை. இவைகளுக்கு அடுத்துதான் மற்ற காமிக்ஸ் இதழ்களை சொல்வேன் என்னுடைய கண்ணோட்டத்தில்.

      Delete
  29. Congratulations Sir!
    For achieving this milestone.

    ReplyDelete
  30. 4.லயன் காமிக்ஸ் மீது கூடுதல் கரிசனம் இருந்தது. பின்பு முத்து காமிக்ஸின் அருமையை நண்பர் ஒருவர் மூலமாகவும் எனது மாமாவின் மூலமாகவும் உணர்ந்து கொண்டேன். "நாங்கள் மதுரையில் இருந்தபோது (1970s) பேப்பர்காரர் வீட்டிற்கே முத்து காமிக்ஸை போட்டுவிட்டுச்செல்வார்" என்று மாமா சொல்ல வாயைப்பிளந்தேன்.
    எனது தெளிவின்மையோ என்னவோ இப்போதைய லயனுக்கும் முத்துவிற்கும் ஒரு வித்தியாசமும் தெரியமாட்டேன் என்கிறது.(டெக்ஸ் முத்துவில் இல்லை என்பது போன்ற சிறு தகவலைத் தவிர)

    ReplyDelete
  31. 1. "கடத்தல் குமிழிகள்".... எனது debut lion வாசிப்பு இதழாகும்...

    2. புத்தக சைஸ்களில் எப்பொழுதும் பெரிய நாட்டமிருந்ததில்லை... பக்கங்கள் அதிகமாக இருந்தால் போதும்...

    3. a. டாக்டர் டக்கர்
    b. 1987 தீபாவளி மலர்
    c. LMS

    4. ஏனோ எனக்கு "முத்து மோகம்" கொஞ்சம் அதிகமே...

    5. "கார்சனின் கடந்த காலம்"... ஒழுங்கான panelகளில் அழகான சித்திரங்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. ////ஏனோ எனக்கு "முத்து மோகம்" கொஞ்சம் அதிகமே...///

      ஆனாக்கா மாடஸ்தி ப்ளைசி கதைகள் அதிகம் வந்தது லயனில் தானே????

      Delete
    2. கார்சனிஷ் கடந்த காலம் பெரிய சைசுல வரனும்...வரும்ன்னு நம்பிக்கை அதிகம்...தலைவாங்கி வந்தது போல இதும் வரும்...ஆசிரியரே இத்தவற சரி செய்யனும்னு போட்ருக்கார் ஓர் பதிவில்

      Delete
  32. ///And of course - கடாசிக் கேள்வி : ஒரு இதழை....ஏதேனும் ஒரேயொரு இதழினை இந்த நானூறிலிருந்து மறுக்கா பதிப்பிடுவதெனில், உங்களின் தேர்வு எதுவாக இருக்குமோ ?///

    தலைவாங்கும் தேசம்

    கிட் ஆர்டின் & டாக்புல் & கோ இந்தியாவுக்கு வந்து அடிக்கும் லூட்டிகள் செம்ம கலாட்டாவாக இருக்கும்.! அதை முழுவண்ணத்தில் (இயலுமாயின் மேக்ஸியில்) காண நிரம்ப ஆசை சார்.!

    ReplyDelete
  33. கானக வீரர் (வன ரேஞ்சர்) ஜோ
    மீண்டும் வர வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. +1

      புதையல் பாதை + யானை கல்லறை

      சிறுத்தைகள் சாம்ராஜ்யம்..


      ரெண்டுமே அபாரமான கதைகள்.! பலமுறை மீள்வாசிப்பு செய்த கதைகள்.!
      ஆப்பிரிக்க கானகங்களில் சாகசம் புரியும்.. ஜோ மற்றும் ஜின் கூடவே அவரது பூர்வகுடி உதவியாளன் என்று அட்டகாசமான குழு.!

      இவர்கள் மீண்டு வந்தால் சூப்பராகத்தான் இருக்கும்..!

      Delete
    2. ஆசிரியர் இவரின் கதைகள் மேற்க்கொண்டு இல்லை என சொன்னதாக ஞாபகம்.

      Delete
    3. ///ஆசிரியர் இவரின் கதைகள் மேற்க்கொண்டு இல்லை என சொன்னதாக ஞாபகம்.///

      அடடா... ஏதேதோ சுமாரான தொடர்கள் எல்லாம் தொடரும்போது படைப்பாளிகள் இதை ஏன் கைவிட்டார்கள்.!?

      Delete
  34. வன ரேஞ்சர் (கானக வீரர்) ஜோ மீண்டும் வர வேண்டும்
    அவரது கதைகள் தொடர்ந்து வர வேண்டும் நான் மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்

    ReplyDelete
  35. மின்னும் மரணம் போன்று 1000 விலைக்கு டைகர் கதை ஒன்று போடுங்கள் சார்

    ReplyDelete
  36. 1.நான்லாம் ரொம்ப ஜூனியருங்கோ காமிக்ஸ் படிப்பில....!!! நமக்கு லயன் அறிமுகமே "பழிவாங்கும் புயல் "-டெக்ஸ் கதை... பழைய புத்தக கடையில் வாங்கியது... டெக்ஸ்க்காவே லயன் படிக்க வந்தது... 007ராணி காமிக்ஸில் இருந்து டெக்ஸ் இழுத்து உள்ளே போட்டுட்டாரு...!!!

    ReplyDelete
    Replies
    1. 2.பாக்கெட் சைசும் குண்டு புக்குகளும் என்றும் நம்ம ஃபேவரைட்!

      Delete
    2. 3.த டஃப்பஸ்ட் கொஸ்டியன் யுவர் ஹானர்.....

      இருப்பினும்...

      கம்பேக்கிற்கு முன்பு:-

      1.லயன் சூப்பர் ஸ்பெசல்1987,லயன் கோடைமலர்1986,1987& லயன் தீபாவளி மலர்1986&பாட்டில் பூதம்!

      2.லயன் சென்சுரி ஸ்பெசல், லயன் டாப்10 ஸ்பெசல், மில்லெனியம் சூப்பர் ஸ்பெசல்

      3.ஜாலி ஸ்பெசல், கெளபாய் ஸ்பெசல், மெகா ட்ரீம் ஸ்பெசல்....


      கம்பேக்கிற்கு பின்பு:-

      1.Lion magnum special
      2.கம்பேக் ஸ்பெசல்
      3.இரத்தப்படலம் கலக்டர் ஸ்பெசல் (18தனிதனி அட்டைகளோடு,பாக்ஸ் செட்டல்...ஹி...ஹி....)

      Delete
    3. 4.ஓரவஞ்சணைலாம் இல்லீங்கோ...என்ன, முத்து காமிக்ஸில் தங்க்கல்லறைக்கு பின்பு இருந்து தான் வாசிக்கிறோம்...

      Delete
    4. கடத்தல் குமிழிகள் & உலகப்போரில் ஆர்ச்சி& எமனுக்கு எமன்& திக்குதெரியாத தீவில்& ஆப்பிரிக்க சதி& மந்திர ராணி இணைந்த ஒரே ஒரு ஒல்லி புக்கு....!

      Delete
  37. ///உங்களுக்கும் இது போல ஏதேனும் மினி ஓரவஞ்சனை எதன் மீதாச்சும் உண்டா guys ?///

    அப்கோர்சுங்க...

    கார்ட்டூன்ஸ் மேல..!

    ReplyDelete
  38. 1.ரிப் கிர்பியின் நாலுகால் திருடன் முதன்முதல்படித்தமுத்து காமிக்ஸ் அதற்கு முன்பேதுப்பறியும் சாம்புவின் தீவிரரசிகன்நான். முதலாளிஎன்ற மரியாதை குறையாமல்கிர்பியிடம் டெஸ்மாண்ட் பேசும் வசனங்களின் மொழிபெயர்ப்புப்பகுதிகள் என்னைமிகவும் கவர்ந்தன. 2.சட்டைக்குள் முத்துவோ லயனோஇருக்கும்அந்தக்காலம் ஒருகனாக்காலம் மட்டுமல்ல. பொற்காலமும் கூட 3.லயனோ முத்துவோஇரண்டும் ஒன்றுதான். எனக்குஇரண்டும் வேறுவேறுதான் என்பதே2012 ன் மீள்வருகைக்குப்பின்தான் தெளிவாக உணர்ந்து கொண்டேன்(உபயம். J. S. K & கரூர் குணா)3. கதைகள்1. அதிரடி வீரர் ஹெர்குலஸ் 2மாடஸ்டியின்_ மரணத்தைமுறியடிப்போம். 3கராத்தேடாக்டர். கேள்வி நம்பர் 5.மறுபதிப்புஅதிரடிவீரர் ஹெர்குலிஸ் தான். ( எடிட்டர்-சான்ஸேஇல்லை. ம்கூம் மிடியாது. பார்க்கலாம். ட்ரைபண்ணுவோம்). கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. கராத்தே டாக்டர்...செம...ஆசிரியர் தவிர்த்தது ஏத்துக்க முடியல...இன்னும் நாலஞ்சு விட்டு பாத்ருக்கலாம்

      Delete
  39. ///இதுவரையிலுமான 400 லயன் காமிக்ஸ் இதழ்களுள் TOP 3 என்று நீங்கள் தேர்வு செய்வதாயின் - அந்த 3 எவையாக இருக்கும் ? ///

    ரொம்ப கஷ்டமான கேள்வி.!

    ReplyDelete
  40. ///அந்த பாக்கெட் சைஸ் மோகம் தலைவிரித்தாடிய நாட்கள் உங்களுக்கு இன்னமும் நினைவுள்ளதா ? திரும்பிப் பார்க்கையில் இன்று சிப்பு சிப்பாய் வருகிறதா ? அல்லது - அதெல்லாம் ஒரு கனாக்காலம் ! என்ற பெருமூச்சா ///

    அப்போது மட்டுமல்ல..இப்போதும் பாக்கெட் சைஸ் மோகம் கிஞ்சித்தும் குறையவில்லை.! கடைசியாக பாக்கெட் சைஸில் வந்த ஸ்பைடர்கதையை அப்படி ரசித்தேன்.!

    ReplyDelete
    Replies
    1. ///கடைசியாக பாக்கெட் சைஸில் வந்த ஸ்பைடர்கதையை அப்படி ரசித்தேன்.!///

      ஸைபைடர் கதை வந்த பாக்கெட் சைஸை அப்படி ரசித்தேன்.!

      ன்னு சொல்லவேண்டியதை மாத்திச் சொல்லிட்டேன்..! :-)

      Delete
  41. 1. லயன் சூப்பர் ஸ்பெஷல்
    2. பாக்கெட் சைஸ் சூப்பர்
    3.எல்லா குண்டு புக்ஸ்
    4. நமக்கு நல்ல content மட்டுமே. என்ன பேருனு முக்கியமில்லை

    Reprint all books based on sales like other companies do. Once they complete sale then do reprint.

    ReplyDelete
  42. ///(நம்முடனான) உங்களின் காமிக்ஸ் பயணமானது துவங்கியது - மேற்சொன்ன அத்தியாயங்களில் எதனுள்ளிருந்து folks ? நீங்கள் வாசித்த முதல் லயன் (குழும) இதழ் எதுவென்றே நினைவுள்ளதா இன்னமும் ?///

    பழி வாங்கும் புயல் (டெக்ஸ்) நன்றாக ஞாபகமிருக்கிறது.!
    அதற்கு முன்பு வேறும் படித்திருக்கலாம்.!

    அதுமட்டுமல்லாமல் பழிவாங்கும் புயல் வாங்கும்போதே.. டேய் டெக்ஸ்வில்லர்டா.. செம்மயா இருக்கும்டான்னு நானும் நண்பனும் சிலாகித்து வாங்கியது நன்றாக நினைவுள்ளது.!

    ReplyDelete

  43. 1. இன்று ஓவர்கில் என எண்ண வைத்து தலை தெறித்து ஓட வைக்கும் ரத்தப்படலத்தின் பெரிய சைஸ் 6 - முதலில் படித்த லயன் இதழ்..( என்ன ஒரு irony)

    ஜோனதன் ப்ளை கையைப்பிடித்து ஜேஸன் ப்ளை சிறுவனாய் நிற்கும் காட்சி மனதை விட்டகலாது..


    இதிலிருந்தே மறுபடியும் காமிக்ஸ் பந்தம் மீண்டும் துவங்கியது...

    மூன்றாம் பயண அத்தியாயத்தில்தான் கலந்து கொண்டிருக்கிறேன்..ரொம்ப ஜூனியர்...


    2. கல்லூரி காலம்...தஞ்சையில் ஓரிடத்திலும் காமிக்ஸ் சந்திப்பு 6 வருட காலத்தில் நடக்கவில்லை என்பது ஆச்சர்யமே...

    காமிக்ஸ் 3- ம் கட்டத்தில் இணைந்ததால்

    பாக்கெட் சைஸ் அனுபவமில்லை..

    3.


    a. ரத்தப்படலம்

    b. பிஸ்டலுக்கு பிரியாவிடை

    c. நில் கவனி சுடு

    4. புரிந்து கொள்ள கூடியதுதான்

    அண்ணன் மகன் அல்லது மகள் , தனது மகன் அல்லது மகள் இருவரையும் இணைத்து பார்க்கும் பங்காளி மனோபாவம்...

    அண்ணன் மகன் மேல் பிரியம் இருக்கும் ஆனால் அவனை விட தன் மகன் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையும் இருக்கும்

    5. லயனின் முதல் வெளியீடு..இதைப் படித்ததில்லை என்பதே காரணம்..

    கத்தி முனையில் மாடஸ்டி..

    ReplyDelete
    Replies
    1. ///5. லயனின் முதல் வெளியீடு..இதைப் படித்ததில்லை என்பதே காரணம்..///

      கல்லை கழுத்துல கட்டிக்கிட்டு தண்ணியில்லாத கெணத்துல தலைகீழாத்தான் குதிப்பேன்னு அடம்புடிச்சா....

      நாம என்ன பண்ண முடியும்..!?

      அப்புறம் செனா.. அந்த பாஞ்சுரூவா கருவாடு இன்னும் வந்து சேரலை..!

      Delete
    2. //கல்லை கழுத்துல கட்டிக்கிட்டு தண்ணியில்லாத கெணத்துல தலைகீழாத்தான் குதிப்பேன்னு அடம்புடிச்சா....//

      கண்ணாலம் கட்டியாச்சுல்ல! அந்த அனுபவம் போதாது மேலே நீங்க சொன்ன விஷயத்துக்கு?

      :-)

      Delete
    3. //அப்புறம் செனா.. அந்த பாஞ்சுரூவா கருவாடு இன்னும் வந்து சேரலை./

      அனுப்பிச்சுட்டனே!!! உள்ளூர் எஸ்டி கூரியர் ஆள் மீன் பிரியர்ங்கறது இப்பத்தான் ஞாபகம் வருது!!


      ஆள் மூலமா மீனாவே ( மீனாவை இல்ல)

      அனுப்பிச்சுடுறன்...

      Delete
    4. அடடா ரொம்ப ஜுனியர்...ஆனா சரியான கதை பிடிச்சி நடந்திருக்கீங்க செனா ....நீங்க வந்த காலத்ல ஒளியிழந்து தடுமாறிய காமிக்ஸின் மின்னல் வெட்டு இரத்தப் படலமும்..டைகரும்....டெக்ஸ் கூட சுமாராய் பட்டதாய் நினைவு...ஆர்ச்சி இல்ல...ஸ்பைடர் இல்ல(இவ்வளோ பெரிய குண்டு வச்சிட்டு ஆசிரியர் தயங்கிய காரணம் சத்தியமா ஏற்க முடியல....ஸ்பைடர் அட்டய பாத்தா துள்ளிக் குவிப்போம்)...இரட்டை வேட்டையர் இல்ல...ஆனா முத்து வில் டைக்ரின் வரவு சந்தோசத்த அள்ளித் தெளித்தது.

      Delete
  44. பாட்டில் பூதம், விண்வெளி பிசாசு கம்போவாக போடாலாம் தரமான ஹார்ட் பவுண்டில்

    ReplyDelete
    Replies
    1. கூட மினி ஸ்பைடரும்...நீதிக்காவலன் ஸ்பைடரும் போட்டா ஸ்மேசிங்80 தயார்....மனது வைப்பாரா இந்நன்னாளில்

      Delete
    2. ம்ஹிம்.. இனிமே இப்படியெல்லாம் கேட்க கூடாது,
      குற்றச்சக்கரவர்த்தி ஸ்பைடரின் பெரிய சைஸ் சாகஸங்கள் ஒரு தனி ஆல்பமாய், இரு பேனல் பாக்கெட் சைஸ் ஒரு குண்டு புக்காக.
      நீதிக்காவலன் ஸ்பைடரின் பெரிய சைஸ் சாகஸங்கள் ஒரு தனி ஆல்பமாய், இரு பேனல் பாக்கெட் சைஸ் ஒரு குண்டு புக்காக.
      மொத்தம் நான்கு ஹார்ட் பௌண்ட் குண்டு புக்ஸ். quota ஓவர்.

      Delete
  45. லயன்"400" வது இதழுக்கு எனது வாழ்த்துகள் சார்.. iii.
    400 இதழ்களை சேர்த்து வைத்திருக்கும் எனக்கும் வாழ்த்துகள் சார்.. (மற்ற லோகோவில் வந்தவைகளை கணக்கில் எடுக்கவில்லை சார்). லயன் எனது உரிமை..
    கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அது புரிந்துவிடும்..
    1..முத்துகாமிக்ஸ் லேண்டிங் லைப்ரரி மூலம் அறிமுகம். (வேதாளரின் கதைகள்.. ரிப் கிர்பி கதைகள்)
    ஆனால், லயன் முதல் இதழிலிருந்து எனது சொத்து...
    2.128 பக்கங்களில்- பாக்கெட் சைஸில் உள்ள புத்தகங்களை-பாக்கெட்டில் சேர்த்து வைத்து அப்ப அப்ப எடுத்து மறுவாசிப்பு செய்யும் போது அலாதியான இன்பம். அந்த சைஸ் கசங்காது, கிழியாது. அதன் அழகே தனி சார்..
    3. லயன் Top 3
    லயன் சூப்பர் ஸ்பெஷல்- ரூ 10.
    அந்த காலத்தில் பரபரப்பு, எதிர்பார்ப்பு, முதல் குண்டு புக்.
    X 111-B & W_முழு தொகுப்பு.
    ஒரு முழுமை.
    யாருக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்தது போல் ஒரு பெருமை..
    லயன் Comeback ஸ்பெஷல்.
    அந்த ஆர்ட் பேப்பரில், கேப்டன் பிரின்ஸ் கதையின் ஓவிய அதகளம். - ஒரு அதிர்ச்சி..
    இப்படியும் இதழ் printing செய்ய முடியுமா? என்று...
    4. ஓரவஞ்சனை.
    மேத்தா காமிக்ஸ்-க்கு சுமாரான பிளாஸ்டிக்கவர்.(ராணி காமிக்ஸுக்கு கவரே கிடையாது.)
    லயன்-முத்து-விற்கு மட்டும் ஸ்பெஷல் பிளாஸ்டிக்கவர்கள்.
    5. ஆர்ட் பேப்பரோ, கலரிங்கோ எதும் வேண்டாம் சார்.
    மாடஸ்டி யின்" கத்திமுனையில் மாடஸ்டி "
    "மாடஸ்டி In இஸ்தான்புல்" இரண்டும் சேர்த்து ஒரே இதழாய்..
    நன்றிகள்..பல...

    ReplyDelete
  46. அத்தியாயம் 4 ல் துவங்கியது. அதற்கு முன் நண்பரது வீட்டில் வாங்கும் புத்தகத்தை படித்து ரசித்துள்ளேன். சில இன்னல்களால் சந்தாவை தொடர இயலவில்லை. இரத்தபடலம் புத்தகத்தை வாங்க இயலமால் வருந்தினேன். ஆனால் ரீபிரிண்ட் வருகை மகிழ்வை தந்தது ஒன்றுக்கு இரண்டாக(one for me another for my friend) வாங்க ஆர்டர் கொடுத்தது மகிழ்ச்சி தருணம். வருத்தமான விசயம் என்னவென்றால் இரத்தபடலம் புத்தகத்திற்காக சந்தாவை இழந்தது. மீண்டும் சந்தாவை புதுப்பிக்க தேவையான சக்தி வருவதற்கு புனித மனிடோவை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  47. தலை வாங்கிக் குரங்கு நான் படித்த முதல் பத்தகம்

    ReplyDelete
  48. நீங்கள் வாசித்த முதல் லயன் (குழும) இதழ் எதுவென்றே நினைவுள்ளதா இன்னமும் ?

    1) தங்க வேட்டை - ஆர்ச்சி

    2) பாக்கெட் Size மோகம் இன்னும் உண்டு Sir

    3) My Top 3

    1.அதிரடி வீரர் ஹெர்குலஸ்
    2.லயன் Super special
    3.திக்கு தெரியாத தீவில்

    4) Mini lion மீது தனி கரிசனம் உண்டு

    5) திக்கு தெரியாத தீவில்

    ReplyDelete
  49. #காமிக்ஸ்_ஸ்நேகங்களுக்கு ...
    அன்பு ஆசிரியருக்கு வணக்கம்🌹.

    முதற்கண் 400வது இதழை தொட்ட,
    என் இனிய சிங்கத்திற்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    "அண்ணா இது என்ன புக்குனா?
    புதுசா இருக்கு?."
    "புதுகாமிக்ஸ் பா லயன்"
    "குடுங்கண்ணா பாத்துட்டு தரேன்"
    என்று மாடஸ்டியை ரசித்ததை இன்று உங்களுக்கு நினைவு கூறுகிறேன்.

    1984ல் முதல் இதழை வாங்கி படித்துவிட்டு,
    இந்த இதழ் நல்ல வரவேற்பு பெறவேண்டும் என்று நண்பர்கள் பலரும் நினைத்தது இன்றும் நினைவில் உள்ளது.

    என்னதான் முத்துவுக்கு பின் லயன் வந்தாலும் , எங்களுக்கு பிடித்தது என்னவோ லயன் மட்டுமே.
    வரும் கதைகள் ஒரே சீராக, எதிலும் சலிப்படையாத கதைக்களங்கள்,
    நேர்த்தியான படங்கள்,மாடஸ்டி, ஸ்பைடர், ஆர்ச்சி, இரட்டையர்கள், லாரன்ஸ் டேவிட்,அதிரடிப்படை, அசத்தலான வரிசையில் கதைகள் வந்து
    கொண்டிருந்ததே இதற்கு காரணம்.
    இந்த நேர்த்தி முத்து காமிக்ஸில் இல்லை.
    இரும்புக் கை மாயாவிக்காக மட்டுமே நாங்கள் முத்து காமிக்ஸ் வாங்கினோம்.
    இன்றும் அப்படியே.
    லயன் மீதுள்ள பிரியம் முத்து மேல் கண்டிப்பாக இல்லைங்க.

    ஆனால் லயனும், முத்துவும் ஒரே பதிப்பகம் தான் என இத்தனை வருடங்களுக்கு பின் இப்பதான் தெரிந்தது.

    உங்கள் பதிவு என்னை மீண்டும் 1984 க்கே கொண்டு செல்கின்றன.

    காமிக்ஸ் வாசகர்கள் குறைந்து வரும்
    இச் சவாலான காலத்தில்,
    "ஒரு நிறுவனம் 400 வது இதழை தொடுகிறது" என்பது சிறப்பு மிகச் சிறப்பு.
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    இதற்கு காரணம்,
    லயனின் மேல் உண்மையான அன்பு கொண்ட , வாசகர்களே தவிர வேறெதும் இல்லை.
    மேன்மேலும் வளர எங்களின் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்...
    இந்த இனிய 400 வந்து இதழில் உங்களுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சி.

    நாங்கள் சொல்ல வேண்டியதை நீங்களே பாதி சொல்லிட்டீங்க.
    தனிமையாய் வெறுமையில் இருந்தபோதெல்லாம் லயன் மட்டுமே துணை.
    இதற்கு நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

    2 ரூபாய்க்கு அடித்து பிடித்து வாங்கி படித்த அந்த ஆனந்தம்,இன்று 1000 ரூபாயில் இல்லை. ஏதோ ஒரு வெறுமை மனதில்.
    கோடை மலருக்காக கடை வாசலில் தவமிருந்து,வாங்கி படித்தது பசுமையான நினைவுகள்.

    எந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் இல்லாததால் லயனை நாங்கள் முழுதாக ரசித்தோம்.
    அந்த அன்பை நினைத்தால் இன்று கண்ணீர் வருகிறது.

    டாப் 10 எதைச் சொல்ல சார்?!.
    இருப்பினும் என்றுமே என் விருப்பம் 1986மே மாதம் வந்த
    1)கோடை மலரும்,
    அதே ஆண்டில் வந்த
    2)தீபாவளி மலரும்,
    3) 1987 தீபாவளிக்கு வந்த லயன் சூப்பர் ஸ்பெஷல்.
    என்றுமே இது போல் வந்ததில்லை.
    இனி வருவதும் சந்தேகமே.

    மறுபதிப்பு....
    கண்டிப்பாக என் விருப்பம்,
    12 சித்திரக்கதைகள் கொண்ட
    1987 தீபாவளி லயன் சூப்பர் ஸ்பெஷல் புத்தகமே மறுபதிப்பாக வர வேண்டும் என விரும்புகிறேன்.❤️

    நன்றி ஆசிரியரே....💐💐💐
    எங்களின் பல கவலைகள் உங்கள்&எங்களின் லயன் மூலமாக ரஷ் ம்வவ்தத் த்ஞ தீர்ந்தது.
    வாழ்த்துக்கள் சார்..

    வளரவேண்டும் இன்னமும்...
    அதற்கு நாங்கள் என்றும் உறுதுணையே.

    நன்றி....

    ReplyDelete
    Replies
    1. //தனிமையாய் வெறுமையில் இருந்தபோதெல்லாம் லயன் மட்டுமே துணை.
      இதற்கு நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.//++++++

      Delete
  50. 1. பழி வாங்கும் பொம்மை (ரீபிரிண்ட்)

    2. பாக்கெட் சைஸில் அடுத்த புக் எப்போ வரும் சார்?! எனக்கு மிகவும் பிடித்த சைஸ் அது... 🥰

    3. டாப் 3
    a) ஆர்ச்சி
    b) ஜேஸன்
    c) ஸ்பைடர்

    *(சத்தியமா டெக்ஸ் பிடிக்கும். ஆனால், டாப் 3 இவங்க தான்)*

    4. முத்து காமிக்ஸின் மேல் ஏகப்பட்ட ஓர வஞ்சனை இருக்குங்கோ...
    அதிலும் உயிரோட்டமுள்ள கதைகளை கொண்ட ஜான் சில்வர், சாயர், ரிப்கிர்பி, காரிகன் (X9), விங் கமாண்டர் ஜார்ஜ், வேதாளர் இவர்களுடைய கதைகளின் மேல்
    எப்போதும் தனி ஈர்ப்பு இருக்கும்.
    லயனில் வந்த மாடஸ்டியும், இரட்டை வேட்டையர், அதிரடிப்படை மற்றும் மின்னல் படையினர் என இவர்களின் மேலும் தனி கரிசனம் உண்டு... உளவாளி 13-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம்

    5. இரும்பு மனிதன் ஆர்ச்சி - மேக்ஸி மற்றும் முழு வண்ணத்தில்

    ReplyDelete
  51. 1.படித்த முதல் லயன் இதழ்
    யார் அந்த மினி ஸ்பைடர் ஆர்ச்சிக்கோர் ஆர்ச்சி இரண்டு இதழ்களும் ஒன்றாக மாமா வாங்கித் தந்தார் இரண்டில் எது முதலில் என் சரியாக சொல்ல தெரியவில்லை
    2.பாக்கேட் சைஸ் மோகம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது தணியாத தாகமாக உள்ளது
    3. டாப் 3 ஈசியாக கேள்வி கேட்டு விட்டீர்கள் மிகவும் சிரமமான கேள்வி குறைந்தது டாப் 30 வரும் அதில் சிரமப்பட்டு மூன்று சொல்கிறேன்
    1.திக்கு தெரியாத தீவில்
    2.இரத்தப்படலம் ஜம்போ
    3.1986 தீபாவளி மலர்
    4.திகில் மீது தனி கரிசனம் உண்டு ரிப்போர்ட்டர் ஜானி பேட்மேன் Xlll என்று கலந்து கட்டி அடித்த திகில் மனதுக்கு நெருக்கமாக உள்ளது
    5.இரட்டை வேட்டையர்கள் அசத்திய திக்கு தெரியாத தீவில் மறுபதிப்பு வரும் நாள் ஒன்று இருந்தால் அதனை கண்ணில் பார்த்து விட்டு நான் மரணமடைந்தாலும் சந்தோஷமே இரட்டை வேட்டையர்கள் சாத்தியமில்லையென்றால் சாத்தான் வேட்டை கலரில் பெரிய சைசில் ஹார்ட் பவுண்ட் அட்டையில்

    ReplyDelete
  52. Top 3

    1. ரத்தப் படலம் வண்ண இதழ்
    2. தலை வாங்கிக் குரங்கு
    3. ஆல் நியூ ஸ்பெசல்

    ReplyDelete
    Replies
    1. ஏன்னா இந்தக் கதைகள் ஏதோ ஒரு விதத்தில் ட்ரெண்ட் செட்டர்ஸ்.

      Delete
  53. 4. லயன் மேல எனக்கு எப்பவுமே கூடுதல் லவ் உண்டு. ஒரு வேளை லயனோடு வளர்ந்தாக இருக்கலாம். இப்ப இரண்டையும் பிரிச்சு பார்ப்பதில்லை.

    ReplyDelete
  54. 5. ரத்த ஒப்பந்தம், தணியாத தணல்காலன் தீர்த்த கணக்கு,

    ReplyDelete
  55. லயனில் முதலில் படித்தது
    இரத்தப்படலம் பாகம் 6..அங்க புடிச்சுதான் என்தலைவன...காடு போறவரைக்கும் விட முடியாது..
    அடுத்தது கார்சனின் கடந்தகாலம் டெக்ஸ பற்றியெல்லாம் அப்போ தெரியாது முதலில் படித்த டெக்ஸ்கதையும் இதே..எனது ஃபேவரைட்..
    அடுத்து திக்குத்தெரியாத தீவில் ஒரு செமத்தியான ஹாலிவுட் படம்போல் ஓயாத ஆக்ஷன்...
    அதைவிட சிறந்த கதைகள் நிறையவந்திருக்கலாம் ஆனால் முதல் அனுபவம் மறக்க முடியாதே சார்..

    எனது வரிசை லயனில்

    இரத்தப்படலம்
    கார்சனின் கடந்தகாலம்
    திக்குத்தெரியாத தீவில்...

    பதில்கள் தொடரும்..

    ReplyDelete
  56. பிடித்த இதழ்கள்

    லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்
    அனைத்து கதம்ப குண்டூஸ்
    திகல் நகரம் டோக்கியோ
    இரத்த ஒப்பந்தம்
    மரணத்தின் நிழலில்
    சாத்தான் வேட்டை
    நள்ளிரவு வேட்டை...


    ReplyDelete
  57. பாக்கெட் சைஸ் நிச்சயமா வேண்டும் சார்.. முடிந்தால் அதிலும் ஒரு குண்டு புக் ட்ரை பண்ணலாம் பாக்கெட் குண்டு பாத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது...

    ReplyDelete
  58. 1. அத்தியாயம் 1ல் ஆரம்பித்தது. முதல் இதழ் தீபாவளி மலர் லயன் 1987, ஆனாலும் கையில் கிடைத்தது 1988 நான்காம் வகுப்பு படிக்கும்போது ஒரு பள்ளி நண்பன் மூலமாக. திகில், மினி லயன், ஜூனியர் வருவதைபற்றி அறியாமலேயே அடுத்த 5-6 ஆண்டுகள் நகந்துவிட்டன. So எனவே அத்தியாயம் 2ல் நான் absent.

    2. பாக்கெட் சைஸ் மோகம் இப்போதும் உள்ளது. ஒரு பக்கத்துக்கு ஓரிரு பேனல்கள் மட்டும் கொண்ட அந்த வடிவம் - Close to my heart.

    3. Top 3
    பழி வாங்கும் புயல் - டெக்ஸ்வில்லர்
    பூம் பூம் படலம் - லக்கிலூக்
    கல் நெஞ்சன் - ஸ்பைடர்

    4. முத்து காமிக்ஸ் "போட்டி கம்பெனி"
    அதிலென்ன சந்தேகம்? ;)

    5. மறுக்கா பதிப்பிடுவதெனில்...
    தீபாவளி மலர் லயன் 1987 (பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் ஹி! ஹி!)


    ReplyDelete
  59. ///நீங்கள் வாசித்த முதல் லயன் (குழும) இதழ் எதுவென்றே நினைவுள்ளதா இன்னமும் ?///

    தலைவாங்கிக் குரங்கு!


    ///அந்த பாக்கெட் சைஸ் மோகம் தலைவிரித்தாடிய நாட்கள் உங்களுக்கு இன்னமும் நினைவுள்ளதா ? திரும்பிப் பார்க்கையில் இன்று சிப்பு சிப்பாய் வருகிறதா ? அல்லது - அதெல்லாம் ஒரு கனாக்காலம் ! என்ற பெருமூச்சா ?////

    நன்றாக ஞாபகமுள்ளது சார்! அந்தக் காலகட்டத்தில் எனக்கும் பாக்கெட் சைஸ் ரொம்பவே பிடிக்கும்! டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இஸ்கூலுக்கு சென்று நண்பர்களிடம் எடுத்துக் காட்டி பந்தா பண்ணியிருக்கிறேன்! ஆனால் இப்போது ஏனோ பாக்கெட் சைஸ் பிடிப்பதில்லை. பக்கெட் சைஸ் தான் பிடிக்கிறது!

    ///இதுவரையிலுமான 400 லயன் காமிக்ஸ் இதழ்களுள் TOP 3 என்று நீங்கள் தேர்வு செய்வதாயின் - அந்த 3 எவையாக இருக்கும் ? ////

    முதல் இடத்தைக் கண்ணை மூடிக்கிட்டு 'இரத்தப் படலத்துக்கு' கொடுப்பேன் சார்! இரண்டாவது மூன்றாவது இடங்களுக்கெல்லாம் போட்டி அதிகம்!

    4. நினைவு தெரிந்த நாள் முதலே 'லயன்' தான் பிரியமானது! ஏனெனில் லயன் வெளியீடுகளில் எப்போதும் ஒரு புதுமை, வேகம், ஃபேன்டஸி இருந்தது! என் கற்பனைகளுக்கு மிகச் சரியாய் தீணியிட்டது (தீணின்னா ரவுண்டு பன்னுதான் சார்). முத்துவில் இரும்புக்கை மாயாவி, லா&டே தவிர மற்ற கதைகள் ஸ்லோவாகத் தெரிந்தன! குறிப்பாய் ரிப்கெர்பியின் கதைகள் (பிடித்தாலும்) ஆமை வேகமாய் தோன்றின!

    ///5. And of course - கடாசிக் கேள்வி : ஒரு இதழை....ஏதேனும் ஒரேயொரு இதழினை இந்த நானூறிலிருந்து மறுக்கா பதிப்பிடுவதெனில், உங்களின் தேர்வு எதுவாக இருக்குமோ ? ///

    அப்படியாப்பட்ட இதழ் இன்று மறுமறுமறுக்கா மறுபதிப்பு செய்யப்பட்டு கொரியரில் கிளப்புகிறது சார்!

    மினி லயனில் வந்தவை எனில், வால்ட் டிஸ்னி கதைகளும், சிந்துபாத் கதைகளும் என் தேர்வுகள்!

    ReplyDelete
  60. எனது வாசிப்பு பயணம் தொடங்கியது முதலில் இருந்தே. முதல் புத்தகம் இரும்பு மனிதன். மறக்க முடியுமா ஆர்ச்சியயை யும் ஸ்பைடர் இருவரையும்.

    பாக்கெட் சைஸ் மீது பெரியதாக ஆர்வம் இல்லை சார் இப்போது. ஆனால் அப்போது அந்த size தான் நமது அடையாளம்.

    டாப்3 மிக மிக சிரமம் சார்.
    இருந்தாலும்
    1. இரத்தப் படலம்
    2. இரும்பு மனிதன்
    3. பாதாள போராட்டம்

    உங்களது எண்ணம் புரிகிறது சார். ஆனால் அன்றில் இருந்து இன்று வரை லயன் வேறு முத்து வேறு என்று பிரித்து பார்த்ததே இல்லை. நிறைய நண்பர்கள் மேலே சொல்லி இருப்பதை நான் வியப்பாக தான் பார்க்கிறேன். இல்லை சிறிய வயதில் எனது சித்தப்பா இரண்டும் ஒரே பதிப்பகம் தான் என்று விளக்கி சொன்னாரா என்றும் ஞாபகம் இல்லை அல்லது இதை எல்லாம் யோசிக்கும் அளவுக்கு எனக்கு அப்போது வயது இல்லையா என்று தெரியவில்லை. விதவிதமாக காமிக்ஸ் வந்தபோது ஏற்பட்ட குஷிக்கு எல்லையே இல்லை. லயன், முத்து, திகில், மினி லயன், ஜூனியர் லயன், இப்போதைய ஜம்போ.
    இப்போது சொல்வதானால் ஜம்போ மீது மட்டும் கொஞ்சம் அதிக ஈர்ப்பு உண்டு.

    மறு பதிப்பு என்றால் ஆர்ச்சியின் இரும்பு மனிதன் தான் எனது தேர்வு.



    ReplyDelete
    Replies
    1. எனக்கு இன்று வரை அட்டையில் லயன் லோகோ உள்ளதா அல்லது முத்து லோகோ உள்ளதா என்று பார்க்கும் பழக்கம் இல்லை. நிறைய நேரங்களில் அது லயன் ஆ அல்லது முத்துவா என்று நண்பர்கள் சொல்லும் போது தான் தெரியும்.

      Delete
    2. ///எனக்கு இன்று வரை அட்டையில் லயன் லோகோ உள்ளதா அல்லது முத்து லோகோ உள்ளதா என்று பார்க்கும் பழக்கம் இல்லை. நிறைய நேரங்களில் அது லயன் ஆ அல்லது முத்துவா என்று நண்பர்கள் சொல்லும் போது தான் தெரியும்.///

      அப்பாடா..!
      நானும் அப்படித்தான் குமார்.! எங்கே தனியொருவனாய் நிற்கவேண்டியிருக்குமோன்னு பயந்துகிடந்தேன்.. நல்லவேளை நீங்க துணைக்கு வந்திங்க..!

      Delete
    3. அப்பாடி துணைக்கு ஆள் இருக்கு. எப்படியோ சொல்லவந்ததை சொல்லிட்டேன் போல.

      Delete
    4. ///அப்பாடி துணைக்கு ஆள் இருக்கு. எப்படியோ சொல்லவந்ததை சொல்லிட்டேன் போல.///

      😂😂😂😂

      Delete
  61. 1./நீங்கள் வாசித்த முதல் லயன் (குழும) இதழ் எதுவென்றே நினைவுள்ளதா இன்னமும் ?//

    ஒரு கோச் வண்டியின் கதை ..

    2.SIZE DOES NOT MATTER SIR ..

    3.400 லயன் காமிக்ஸ் இதழ்களுள் TOP 3 ..

    1. இரத்தப் படலம்
    2.all TEX AND LUCKY .. WAYNE SHELTON ..
    3.GREEN MANOR , JASON BRICE ..

    4. BOTH LION AND MUTHU R SAME FOR ME SIR ..

    5.//ஒரு இதழை....ஏதேனும் ஒரேயொரு இதழினை இந்த நானூறிலிருந்து மறுக்கா பதிப்பிடுவதெனில், உங்களின் தேர்வு எதுவாக இருக்குமோ ? ///

    புதையல் பாதை + யானை கல்லறை ,சிறுத்தைகள் சாம்ராஜ்யம்.. மூன்றும் சேர்த்து கலரில் ..


    ReplyDelete
    Replies
    1. // புதையல் பாதை + யானை கல்லறை ,சிறுத்தைகள் சாம்ராஜ்யம்.. மூன்றும் சேர்த்து கலரில் // அருமை தம்பி அருமை இந்த புத்தகம் மட்டும் வந்தால் திருவிழா தான். அட்டகாசமான சாய்ஸ்

      Delete
  62. ST courier office இன்னும் திறக்கவில்லை, ஆனால் கொரியர் பார்சலுடன் வண்டி ஒன்று நின்று கொண்டுள்ளது. அதில் எனது காமிக்ஸ் புத்தகங்கள் இருக்குமா என்ற கேள்விகளுடன் - பரணி நமது சிறப்பு நிரூபர் தூத்துக்குடியில் இருந்து.

    ஓவர் டூ சேலம் மற்றும் மேச்சேரி :-)

    ReplyDelete
    Replies
    1. இங்கே பெரும்பாலான கடைகள் மூடப்பட்டே இருக்கின்றன! ரவுண்டு பன்னு கிடைப்பதுகூட சிரமமாக இருக்கிறது! மக்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பரபரப்பாகக் காணப்படுகிறார்கள்! பத்து மணிக்கு மேல் தான் பார்சல் வந்திறங்கும் என்பதால் இப்போதே கொரியர் ஆபீஸுக்குச் செல்வது வீண் வேலையென்று தோன்றுகிறது! பத்து மணிக்கு மேல் மீண்டும் தொடர்பு கொண்டு சம்பவங்களை விவரிக்க உத்தேசித்திருக்கிறேன் - சேலத்திலிருந்து லயன் நியூஸுக்காக ஈ.வி!

      Delete
    2. மேச்சேரியிலிருந்து ரிப்போர்ட் :
      "கொர்ர்ர்.. கொர்ர்ர்"

      Delete
    3. (வண்)டீ இன்னும் வரலை..!

      Delete
  63. 'பனியில் ஒரு புது நேசம்' ப்ரிவியூ பக்கத்தைப் பார்க்கும்போது குப்புறப்படுத்தபடியே துப்பாக்கியால் குறிவைத்துக் கொண்டிருப்பது ஒரு பெண் என்பது என் யூகம்! யாரெல்லாம் சவாலுக்கு வருகிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. துப்பாக்கியில் குறிவைக்கவில்லை - டெலஸ்கோப்பில் பார்க்கிறாள்!

      Delete
  64. 1. கத்தி முனையில் மாடஸ்டி
    2. அது ஒரு கனாக்காலம் பாக்கெட் சைஸ்க்கு ஜே
    3. 1.கொலைப்படை
    2.அதிரடி வீரர் ஹெர்குலஸ்
    3. கார்சனின் கடந்த காலம்
    4. ஆம்
    5. இரும்பு மனிதன்

    ReplyDelete
  65. அசோக் காமிக்ஸின் ரத்தபூதம். அங்கிள் டெர்ரி சமீபகாலம் வரைஎன்னுடன் இருந்தபுத்தகம். கங்கைஅமரனுக்கு கரகாட்டக்காரன் போல, p. வாசுவுக்கு சின்னதம்பி போலஅசோக்காமிக்ஸுக்கு இன்றளவும் பெயர்சொல்லும் கதை இரத்த பூதம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  66. தல தரிசனம் காட்டிட்டாரு நம்ம சரண் வாத்தியாரு...😍

    டெக்ஸ் அட்டை சும்மாஆஆஆஆ தெறி....!!

    அடுத்த வெளியீடுகள்...

    1.டெட்வுட்டிக்- நரகத்திற்கு நடுவழியே...

    2.மேக்& ஜாக்- பாவை மிரண்டால் பார் கொள்ளாது.

    3.ஜம்போ- சித்திரமும் காலம் பழக்கம்.


    ஐ யாம் ஆன் த வே டூ dtdc office...!!!

    ReplyDelete
    Replies
    1. சித்திரமும் கொலைப் பழக்கம்.

      Delete
    2. My Answer in lion blog ji

      நீங்கள் வாசித்த முதல் லயன் (குழும) இதழ் எதுவென்றே நினைவுள்ளதா இன்னமும் ?

      1) தங்க வேட்டை - ஆர்ச்சி

      2) பாக்கெட் Size மோகம் இன்னும் உண்டு Sir

      3) My Top 3

      1.கொலை படை
      2.டிராகன் நகரம்
      3.மந்திர மண்டலம்

      4) Mini lion மீது தனி கரிசனம் உண்டு

      5) மந்திர மண்டலம் வண்ணத்தில் வரவேண்டும்

      Delete
    3. வாழ்த்துக்கள் விஜயராகவன்.

      Delete
  67. லோடு வந்ட்ருக்காம்...வந்ததும் கூப்டுவாவளாம்...பாமை கடித்த படி வெய்ட்டிங்

    ReplyDelete


  68. நீங்கள் வாசித்த முதல் லயன் (குழும) இதழ் எதுவென்றே நினைவுள்ளதா இன்னமும் ?

    1) தங்க வேட்டை - ஆர்ச்சி

    2) பாக்கெட் Size மோகம் இன்னும் உண்டு Sir

    3) My Top 3

    1.கொலை படை
    2.டிராகன் நகரம்
    3.மந்திர மண்டலம்

    4) Mini lion மீது தனி கரிசனம் உண்டு

    5) மந்திர மண்டலம் வண்ணத்தில் வரவேண்டும்

    ReplyDelete
  69. Pocket size comics are compact size to hide from our parents and teachers while reading secretly.

    ReplyDelete
  70. கொரியர் பிராஞ்சுக்கு பார்சல் மூட்டை வந்துட்டது.....

    ஒவ்வொரு பார்சலாக எடுத்து வைத்தார்கள் மூட்டைல இருந்து....

    விதவிதமான பார்சல் கடந்து...ஆங் நம்ம லயன் பொட்டி...
    டாக்டர் சாய்கணேஷ்,சேலம் அவரோடது...அடுத்து நம்ம பார்சல் எடுத்து வைப்பாங்கனு பார்த்துட்டே
    இருந்தா....

    இருந்தா....

    இருந்தா....

    இருந்தா....

    மூட்டை காலி...

    ஙே..ஙே..ஙே...னு நான் அந்த ஸ்டாஃபை பார்க்க அவர் என்னை பார்க்க....!!

    போச்சா....சிவகாசி DTDC ஆபீஸ்ல இருந்து நேற்று நம்ம பொட்டிகளை ஏற்றல என்பது புரிந்தது....

    காற்று போன பலூன் மாதிரி உள்ளுக்குள் ஆனாலும்... அவரிடம் நாளைவரும் சார்... நாளை வர்றேன்னுட்டு வந்தாச்சி!!!

    நாளை தான் இனி!!!

    அதான் தல தரிசனம் பார்த்தாச்சே...இனி மெதுவாக புக் வாங்கிடலாம்....!!!

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் பொட்டி வரலை,நாளைதானாம்...

      Delete
    2. ரவி@ 3 மாசமா சேலத்திற்கு யாரோ சில்லி சூன்யம் வெச்சிட்டாங்க போல...

      Delete
    3. ஆமா டெ.வி கொரோனா 2 எபெக்ட்...

      Delete
    4. நம்பள்து முன்ன ST இப்ப DTDC PFB...
      ஒன்னுக்கொன்னு சளைத்ததில்லை போலும் ஹி,ஹி...

      Delete
  71. புத்தகம் வந்தாச்சாம்...சப்ளை நண்பர் கூற..லோக்கல் ஆஃபீஸ்லயே வைக்கச் சொல்லியாச்...அந்த வழில வாடகைக்கு போவதால் முக்கா மணி நேரத்ல பிடிச்சிடு வேன்....ஆனாலும் என்ன வந்தாலும் எத்தனை வந்தாலும் நம்ம எதிர்பார்ப்பு நாளைய இப மேல்தான்...ஆயிரம் கோடி நன்றிகள் ஆசிரியரே

    ReplyDelete
  72. எனக்கு கானக வீரர் ஜோ கதைகள் மீண்டும் வர வேண்டும்

    அது தான் என் ஆசை

    ReplyDelete
  73. 10:30க்கு கொரியர் ஆபீஸுல போய் நின்னேன்! ஏற்கனவே ஏரியாவாரியாக பார்சல்களைத் தரையில் பிரித்து வைத்திருந்தார்கள்! பேர், ஏரியா கேட்டார்கள் சொன்னேன்! சில நொடிகளிலேயை 'வர்ல சார்'னு பதில் வந்தது! 'மூன்றாம் பிறை' க்ளைமாக்ஸில் ஸ்ரீதேவியிடம் கமல் நடித்துக் காட்டுவதைப் போல நமது கொரியர் டப்பியின் நீள அகலங்களை காற்றில் வரைந்து காட்டி "சார்.. இ..இந்த சைஸுல அந்த புத்தகப் பார்சல் இருக்கும்.. இருக்கான்னு பாருங்க" என்றேன். முன்னைவிட வேகமாக, அழுத்தமாக பதில் வந்தது "இன்னும் வர்ல சார்"!


    பிடித்தவர்களுக்காக/பிடித்த பொருளுக்காகக் காத்திருப்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் கிடையாது - யூ நோ?!!

    ReplyDelete
    Replies
    1. ஆத்தா ஆத்தா ஞாபகம் வருதா EV

      Delete
    2. ஆத்தா எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்குமுங்க KS! :)

      Delete
    3. ஒரு வேளை ஆத்தாவும் வச்சி செய்யுறாளோ என்னவோ?..எதுக்கும் பாக்கி ஏதாச்சும் இருந்தா சட்டுனு கணக்கை நேர் பண்ணிடுங்க ஈ.வி.

      Delete
  74. Replies
    1. தந்தி பாஷையா ஒண்ணும் புரியலை

      Delete
  75. புத்தகங்கள் வந்து விட்டது தூத்துக்குடிக்கு - மகிழ்ச்சியுடன் தூத்துக்குடியில் இருந்து பரணி :-)

    ReplyDelete
    Replies
    1. உங்க புத்தகங்களின் உள்ளே எதுவுமே பிரின்ட் ஆகியிருக்கக் கூடாதுன்னு நான் வேண்டிக்கிடலை! ஆனா அப்படி செஞ்சுடுவனோன்னு பயமா இருக்கு!

      Delete
  76. பொக்கிஷப் பெட்டியை கைப்பற்றியாச்சுங்கோ....!!!!


    லயன் #400 சும்மா மேக்கிங்கில் தெறிக்கவிடுதுங்கோ.

    கார்ஸன் தோன்றும் மினி சாகஸம் புரட்டும் போதே செம கலக்கலாக இருக்குதுங்கோ.

    ஆரிசியாவின் ஆத்துக்காரர் வேறு இருக்கின்றார் டயட்டில் இருப்பவர் போல். சமீபமாக குண்டு தோர்கலைத் தரிசனம் செய்துவிட்டு இப்போது ஒல்லிப்பிச்சானாக தோர்கலை கையிலேந்துவது மட்டும் சிறுகுறை.

    அனைத்தும் நன்று.

    ReplyDelete
  77. புத்ததகங்கள் வந்து சேர்ந்தன..

    லயன் 400 அட்டைப்படமும் மேக்கிங்கும் பெர்பெக்ட்.கருப்பு,பச்சை பின்ணணியில் வில்லரின் போஸ் அற்புதம். புத்தகமாக பார்க்கும்போது மட்டும் தெரியும் சில ஜெகஜாலங்கள் மின்னுகின்றன..பின்னட்டையும் தன் பங்குக்கு புதிய வார்ப்பாக மிளிர்கிறது.

    அடுத்து தோர்கல்..வழமைபோல ஆர்வத்தைத் தூண்டினாலும்..சிங்கிள் ஆல்பம் பார்க்க கொஞ்சம் பரிதாபமாக உள்ளது..

    கலர் டெக்ஸ்..வித்தியாசமான டெம்ப்ளேட்டில் பரிமாறும் அந்த ஸ்டைல்..இம்முறை சைஸிலிருந்தே தொடங்குவது சிறப்பு.கார்சன் வூடுகட்டி அடிப்பதைப் பார்க்க கொள்ளை ஆசை..

    ReplyDelete
    Replies
    1. //லயன் 400 அட்டைப்படமும் மேக்கிங்கும் பெர்பெக்ட்.//

      +1

      Delete
  78. பனியில் ஒரு புது நேசம் !!

    கார்சன் நம்ம ஜெமினி மாதிரி நெசமாவே காதல் மன்னன்தான்!!!!


    லவ்லி!!! 8.5/10

    ReplyDelete
    Replies
    1. கார்ஸன் - காதலிக்கிறாரா.. அல்லது காதலிக்கப்படுகிறாருங்களா செனாஅனா?!!

      Delete
    2. செய்வினையா? செயப்பாட்டு வினையா?

      Delete
    3. EV க்கும் கார்சனுக்கும் நேர்ந்தது செய்வினைதான்.


      EV க்குபுத்தகங்கள் இன்னும் வர்ல.

      கார்சனுக்கு காதலி இல்ல.
      ☺☺☺

      Delete
    4. கார்சன் கவுன், ஸகர்ட் போட்ட எல்லாத்தையும் காதலிப்பாரே..

      இதில் "படுகிறார்.."

      :-)


      எடிட்டர் சார்!!! டெக்ஸ் இது போல கேமியோ ரோல் பண்ற மாறி கார்சனின் வேற ரொமான்ஸ் கதைகளோ அல்லது இதே கதையின் தொடர்ச்சியோ இருக்கான்னு பாக்க முடியுங்களா?


      அப்டின்னு ஈவி புக்க படிச்சவுடனே கேப்பாருன்னு நினைக்கறேன்


      Delete
    5. அலோ.. எச்சூஸ் மீ..! இங்கிட்டு சங்கத்துகாரக எதுக்கு இருக்கோமாம்.!?

      Delete
  79. 1. நள்ளிரவு வேட்டை (Tex)

    2. பாக்கெட் சைஸ் னா ..சமீத்தில் ஸ்பைடர் புக் ...அப்புறம் மாடஸ்டி ...அவ்ளோதான் தெரியும்


    3. கஷ்டமான கேள்வி ...3
    நள்ளிரவு வேட்டை, மந்திர மண்டலம் சூது கொல்லும்.

    4. Of course ...muthu logo va vida ..lion logo ஒரு படி மேல தான் தெரியும் ...சொல்லப்போனா Lion comics logo பல முறை ரொம்பவே தனித்துவமா தெரியும். சந்தேகம் இருந்தா நண்பர்கள் lion Logo vaஒரு தடவை கவனிச்சு பாருங்க. Lion க்கு தனியா கேசரி வச்சீங்களா ...எப்போன்னு சொன்னீங்கனன்னா நல்லா இருக்கும் :) .இப்போ எல்லாம் கலந்து வர்தனால பெருசா விச்சியாசம் தெரியலை.


    5. உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை ...400 ல் எது சிறந்த கதைகளோ அதை நீங்களே தேர்வு செய்து (அது 100 ரோ 200 ரோ) மறுபதிப்பு செய்யுங்கள் சார்.

    ReplyDelete
  80. புத்தகங்கள் வந்தாச்சு!

    ReplyDelete
    Replies
    1. The லயன் #400

      அட்டைப்படம் - அருமை!!

      9.9 / 10

      Delete
  81. வரலை....:-(


    இனி திங்கள் அன்றே இதழ்களை பார்க்க முடியும்...

    ReplyDelete
  82. பொறுமையா ஆற,அமர ரசிச்சு படிக்கலாம்னு இருந்தவனை..டெக்ஸும்.தோர்கலும் மாறி மாறி ஆசைகாட்ட..பொறுமை எல்லை மீறி தோர்கலை படித்தே விட்டேன்..

    ஸ்டீல் பாடி ஷெர்லக் ஹோம்ஸ் காமிக்ஸில்..நம்மாள் எதாவது துப்பறியும்போதோ, கண்டுபிடிக்கும் போதோ வாட்சன் டக்கென தன் டைரியைப் பிரித்து, அதில் டெம்ப்ளேட்டாக இருக்கும் 'ஆஹா.. பேஷ் பேஷ்...பிரமாதம்..போன்றவற்றில் எதாவதொன்றை பயன்படுத்துவார்..

    அதுபோல...

    தோர்கலுக்கும் அற்புதம் எனும் டெம்ப்ளேட் செட் 'டாகிவிட்டது..

    மேற்கொண்டு டீப்பான விமர்சனத்தை எங்க வாத்தியார் சரவணகுமார் பாத்துக்குவார்..!

    ReplyDelete
  83. என் மகன் செந்தூரான் கையில் கொடுத்து...திருச்செந்தூரானுக்கு படைத்து ....பிள்ளை கையால் உடைத்து....பார்த்து ரசித்து பகிர்கிறேன்

    ReplyDelete
  84. 😂 சும்மா சொல்லக்கூடாது, 500 ரூபாய்க்கு வந்துள்ள டெக்ஸ் அட்டைப்படம் நான் முதன் முதலில் 2.50 ரூபாய்க்கு வாங்கிய சிறுபிள்ளை விளையாட்டு அட்டைப்படத்துக்கு ஈடாக வந்துள்ளது....
    லயன் சூப்பர் ஸ்பெஷல் reprint உள்ளது உள்ளது படியே வேண்டும். பேப்பர் தரமும், விலை மட்டுமே மாற்றிக்கலாம்.

    ReplyDelete
  85. பெட்டி வந்தாச்சு. எடிட்டர் சொன்னமாதிரி தரமான, கனமான பெட்டி. பிரித்து வெளியில் எடுத்து பார்த்தால் டெக்ஸ் 400,. சிறப்பான ஹார்ட் பவுண்ட் மேக்கிங்கில் ச்சும்மா மினுமினுக்கிறது. கலர் டெக்ஸ், தோர்கல் இரண்டுமே அம்சம்.

    ReplyDelete