நண்பர்களே,
வணக்கம். ஒரு பேரிடரின் துவக்க நாட்களில் துவங்கியதொரு 'மறுக்காகாகா' முயற்சியானது, இதோ இன்று நிறைவு காண்கிறது ! பதின்மூன்றை அடையாளமாய்க் கொண்ட நமது ஜேசனின் last hurray கூட ஒரு பதின்மூன்றில் அமைவது தான் விதியின் வேடிக்கை வரிகள் போலும் !
Finally, இன்றைய கூரியர்களில் இரண்டே முக்கால் கிலோ எடையிலான புக்ஸ், reinforced டப்பிக்களில் இங்கிருந்து ரொம்பச் சீக்கிரமே கிளம்பி விட்டன - நாளைய பொழுதில் XIII உங்கள் இல்லக்கதவுகளை தட்டிட ஏதுவாக ! (அதாவது, கூரியர்காரவுக சொதப்பிடாத பட்சங்களில் !) இம்முறை பயன்படுத்தியிருக்கும் டப்பிக்கள், காசுக்கேற்ற வலுவோடு இருப்பதால், கூரியர்காரர்கள் கும்மாங்குத்து குத்தினாலொழிய தாக்குப் பிடித்திடும் ! And ஒவ்வொரு புக்கையுமே பொறுமையாய் கைபார்த்து அனுப்பிட, நமது பைண்டிங் நண்பர் இம்முறை முனைந்துள்ளார் ! So hopefully - சிக்கல்கள் இருந்திடக்கூடாது ! புனித மனிடோ...காப்பீராக !!
And here you go - இந்த 2 ஆல்ப மறுபதிப்பின் அட்டைப்பட முதற்பார்வை !! இரண்டுமே அமரர் வில்லியம் வான்சின் ஒரிஜினல் சித்திரங்களே ; ஆனால் ஆல்பம் இரண்டினில் மட்டும் டிசைனுக்கு நாம் சற்றே மெருகூட்ட முனைந்துள்ளோம் ! And இரு அட்டைப்படங்களுக்குமே வழக்கம் போல நகாசு வேலைகளில் இம்மியும் குறை வைத்திருக்கவில்லை ! So நாளைய பொழுதினில் புக்ஸ் உங்களை எட்டிடும் போது வர்ண ஜாலங்களுக்குப் பஞ்சமிருந்திடாதென்று நினைக்கிறேன் ! Fingers crossed !!
So ஓராண்டுக்கும் மேலாய் கைகளில் வைத்திருந்த உங்கள் பணத்திற்கான பொருளை ஒரு வழியாய் அனுப்பி விட்ட சன்னமான திருப்தியுடன் அடுத்த பணிக்குள் முனைப்பாகிட முயற்சிக்கிறேன் ! And அட்டையினில் "XIII" என்று போடுவதா ? "13" என்று போடுவதா ? என்ற பஞ்சாயத்துக்கு படைப்பாளிகளே தீர்வு சொல்லி விட்டதால், என் சிரம் தப்பிச்சூ ! "இது முதல் சுற்றின் மறுபதிப்புக்கு மறுபதிப்பே எனும் போது பழைய பாணியிலேயே XIII என்று போட்டுக் கொள்ளுங்கள் !" என்று சொல்லிவிட்டார்கள் ! So அதன் பொருட்டு துடைப்பங்களை உணரும் அவசியமின்றிப் போனது எனது அதிர்ஷ்டம் !
அதே அதிர்ஷ்டம் தொடரும் நாட்களிலும் தொடர்ந்தால் மகிழ்வேன் - simply becos இறுதி ஒரு வாரத்தினில் "இ.ப." தேடி அலைபாய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை ரொம்பவே கணிசம் ! So புக்ஸ் சுற்றுக்கு வந்தான பின்னே, ஒரு கணிசமான எண்ணிக்கை 'ஏலேலோ ஐலசா ' என க்ரூப்களில் ஏலங்களுக்கு வந்திட முகாந்திரங்கள் இருப்பதாய் எனக்கு சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன ! முன்பதிவுகளுக்கு எத்தனை அவகாசம் தந்து, எத்தனை குரல் கொடுத்தாலுமே நண்பர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதையும், அப்புறம் தண்ட விலைகளுக்கு வாங்க நேர்வதையும் சங்கடத்தோடே பார்க்கிறேன் ! சேகரிப்பாளர்கள் அரிய இதழ்களை லாபத்திற்கு விற்பது உலகெங்கும் நடைமுறையே ; அவர்கள் அதனில் பார்த்திடக்கூடிய இலாபங்களிலும் எனக்கு கிஞ்சித்தும் நெருடல்களுமில்லை ! ஆனால் இங்கேயோ போன மாசத்து புக்ஸும், முந்தைய மாதத்து புக்ஸும் இந்தக் கூத்துக்களுக்கு ஆளாகிடத் துவங்குவதைப் பார்க்கும் போது, ரசிக்க மாட்டேன்கிறது ! 'எப்படியோ - எனக்கு இடம் காலியானால் சரி தான்' என்று நான் இன்றைக்கு ஒதுங்கிடும் பட்சத்தில் - இந்தப் போக்கானது, நாளை நம்மையே பதம் பார்த்திடக்கூடும் என்பதால், தொடரும் நாட்களில் சில நடைமுறை மாற்றங்கள் வந்திடவுள்ளன ! அவற்றைப் பற்றி நானிங்கு டமாரம் போடப்போவதில்லை ; ஆனால் சீக்கிரமே அவற்றின் பலன்களை நீங்கள் பார்த்திடுவீர்கள் !
ஏலமென்ற தலைப்பினில் இருக்கும் வேளையில், ஒரு சுவாரஸ்யமான விஷயமுமே !!
2018-ல் slipcase சகிதம் வந்த மூன்று தொகுப்பு இரத்தப் படலம் வெளியீட்டுக்கு பிரெஞ்சு அமைச்சகமானது நமக்கு ஒத்தாசை செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் ! அதன்படி, புக்சினை நாம் வெளியிட்ட பிற்பாடு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாதிரிகளை அவர்களுக்கு அனுப்பிட வேண்டி வரும் - அவர்களது நூலகத்தில் ஆதாரங்களாய்ப் பத்திரப்படுத்திக் கொள்ளும் பொருட்டு ! So மூன்று பெரிய பார்சல்களில் slipcase சகிதம் புக்சினை அனுப்பியிருந்தோம் - டில்லியிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்துக்கு ! ஆனால் இத்தனை பருமனான இதழ்களில், இத்தனை புக்ஸ்களைப் பத்திரப்படுவது எங்களுக்கு அவசியப்படாதென்று சொல்லி ஒரு பார்சலை உடைக்காமலே தூதரகத்திலிருந்து திருப்பி அனுப்பி விட்டனர் - ஒரு மாதம் கழித்து ! அவ்விதம் ரிட்டர்ன் வந்த பார்சலை உடைக்காமலே ஆபீசில் அந்நாட்களில் பத்திரப்படுத்தி விட்டோம் - பின்னாட்களில் ஏதேனுமொரு விசேஷத் தருணத்தினில் நண்பர்கள் யாருக்கேனும் பணம் புரட்டிடும் அவசியம் எழுந்திடும் பட்சத்தில், இவற்றை ஏலப்பொருள்களாக்கிடலாமே அல்லது பரிசுகளாக்கிடலாமே என்ற எண்ணத்தினில் ! நண்பர் ஜேடர்பாளையம் சரவணகுமார் அவர்களின் வைத்தியத்துக்கு நெருக்கடி நேர்ந்த சமயம் இதனை முன்னெடுக்க எண்ணினேன் ; ஆனால் நண்பர் J.S. ஒரு ஸ்பைடர் பிரியர் என்று கேள்விப்பட்ட போது "சர்ப்பத்தின் சவால்" இதழினை அவருக்கொரு tribute + fundraiser ஆக உருவாக்கிட தீர்மானித்தேன் ! இப்போது சமீபமாய் நமது ஓவியர் மாலையப்பன் குடும்பத்திற்கென பணம் திரட்ட முனைந்த போது கூட, இந்த நினைப்பு எழுந்தது தான் ; ஆனால் நண்பர்களில் சிலர், பெரும்தொகைகளை எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி தாமாகவே அனுப்பித் தந்திட, இந்த slipcase சகித "இரத்தப் படல" பார்சலை உடைக்கவே அவசியமாகிடவில்லை !
இப்போது, ஒரு வழியாய் அதற்கடுத்த இ.ப. version கூடத் தயாராகியிருப்பதால் - 2018-ன் அந்தப் பார்சலை உடைத்து அதனிலிருக்கும் 13 இதழ்களையும் (!!!) இப்போது வெளியெடுக்கும் எண்ணம் தலைதூக்குகிறது ! இவற்றிலிருந்து கிட்டிடக்கூடிய முழுத் தொகைகளையுமே அடையார் புற்று நோய் மையத்துக்கு,நாம் ஏற்கனவே அனுப்பிடவுள்ள தொகையுடன் சேர்த்து அனுப்பிட எண்ணியுள்ளேன் ! ஆனால்...ஆனால்...அந்த முயற்சியினில் என்னைத் தயங்கச் செய்வது சமீப நாட்களின் 'திருநெல்வேலிக்கே அல்வா' நிகழ்வுகள் தான் !
இக்கட நம்மிடமே, உண்டான விலைகளில் புக்ஸை வாங்கிய கையோடு, கடை, கண்ணிகள் எதற்குமே விநியோகிக்காது, கொஞ்ச காலத்துக்கு அவற்றைப் பத்திரமாய் ஆறப் போட்டுவிட்டு, அப்புறமாய் சாவகாசமாய் ஆங்காங்கே உள்ள க்ரூப்களில் மும்மடங்கு விலைகளுக்கு, சிறுகச் சிறுக ஏலம் விடுவதே ஒரு செம வியாபாரமாய் நடைபெற்று வருகிறதென்பதை நண்பர்கள் நம் கவனங்களுக்குக் கொணர்ந்துள்ளனர் - கடந்த சில தினங்களாய் ! மெய்யாலுமே கிடைத்தற்கரிய இந்த slipcase இ.ப. விஷயத்திலும் நம்மைப் பிராந்தன்களாக்கிடும் வேலைகள் நடந்திடக்கூடாதே என்ற ஆதங்கம் மண்டையை நோவச் செய்கிறது ! So மறு வணிகங்களுக்குப் பயன்படுத்திடாது, மெய்யாகவே வாசிப்பின் பொருட்டு தேடி வரும் தீவிர ரசிகர்களின் கைகளுக்கு இவற்றைக் கொண்டு சேர்க்க எண்ணுகிறோம் !
ஊருக்குள் யார் என்ன செய்தாலும் சரி, என்ன மாதிரியான கொள்ளை விலைகளில் விற்றாலும் சரி, நாம் அதே மாக்கான்களாய், உண்டான அதே விலையினில் தான் விற்றிடவுள்ளோம் ! கூரியர் கட்டணம் சேர்த்து தலா ரூ.2900 கிட்டினால் இந்த 13 இதழ்களையும் சந்தோஷமாய் விற்றிடுவோம் ! But please note : இதழின் விலைகளோடு அடையார் புற்று நோய் ஆராய்ச்சி மையத்துக்கு நன்கொடையாய் ஏதேனுமொரு தொகையினைத் தந்திட முன்வரும் நண்பர்களுக்கே இந்த புக்சினில் முன்னுரிமை வழங்கப்படும் !
So all you need to do is this :
***இங்கேயோ, அல்லது நமது மின்னஞ்சலிலோ - இதழின் கிரயத்துக்கு மேலாக நன்கொடையாய் நீங்கள் தந்திட எண்ணும் தொகையினை மட்டும் "DONATE 500" ; "DONATE 1000" என்ற ரீதியில் குறிப்பிட்டுப் பதிவு செய்தால் போதும். நன்கொடையானது பல்லாயிரத்தில் , பெரும் தொகையாய் இருந்திட வேண்டுமென்ற எதிர்பார்ப்பெல்லாம் நிச்சயமாய் நமக்குக் கிடையாது ; இதே புக் ஒரு க்ரூப்பில் ஏலத்துக்கு வந்தால் நீங்கள் என்ன தந்திட நினைப்பீர்களோ, அதனையே இங்கே நீங்கள் தெரியப்படுத்தலாம். நீங்கள் தந்திட முன்வரும் பணமானது, யாரது பாக்கெட்களையும் ரொப்பிடாது ; மாறாக ஒரு நற்காரியத்துக்கே பயன்படுமென்ற திருப்தி இங்கே போனஸ் !
** வரும் ஞாயிறு காலை (Aug 15th) வரையிலும் மட்டுமே இதற்கான அவகாசம் !
***கூடுதலாய் நன்கொடை தந்திட முன்வருவோர் யாரென்பது தீர்மானமான உடனே அந்தப் பத்துப் பேருக்குமே அடையார் புற்று நோய் ஆய்வு மையத்தின் வங்கிக் கணக்கு விபரங்களை அனுப்பித் தருவோம்.
***அவர்களே நேரடியாய் அந்த வங்கிக்கணக்குக்கு நன்கொடைத் தொகையினை UPI மூலம் அனுப்பிய கையோடு, நம்மைத் தொடர்பு கொண்டால் போதும்.
***அதன் பின்னே, நமது கணக்குக்கு புக்கின் கிரயமான ரூ.2,900 அனுப்பிட்டால், கூரியரில் புக்ஸை அனுப்பி விடுவோம்.
***மொத்தம் 13 இதழ்களின் விற்பனைத் தொகையான ரூ.37,700 ப்ளஸ் நடப்பு இ.ப.வெளியீட்டிலிருந்து ஒரு தொகை என மொத்தத்தையும், நாங்கள் தனியாக அடையாருக்கு அனுப்பிடுவோம்.
***ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் நன்கொடையாளர்களின் பட்டியலினை அடையார் மையத்தினர் வெளியிடும் போது, நான் வெறும் வாயால் வடை சுட்டுள்ளேனா ? அல்லது மெய்யாலுமே பணம் அனுப்பியுள்ளேனா ? என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம் !
So - ஒரு தவறான முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டவும், ஒரு நல்ல காரியம் செய்திடவும், உங்கள் சேகரிப்பில் இல்லாததொரு இதழை இணைத்துக் கொள்ளவும், இதனை ஒரு வாய்ப்பாக்கிட முயற்சிக்கலாமே folks ?!
Oh yes, வணிக அடிமடிகளில் கைவைக்கும் விதமாய் நான் ஏதேனும் செய்யும் முதல் நொடியில், எனது குரல்வளையைக் கடிக்க முகாந்திரங்கள் தேடும் வேலைகள் ஜரூராய்த் துவங்கி விடுமென்பது தெரியாதில்லை ! But மு.ச. + மூ.ச.நமக்குப் புதிதே அல்ல தானே ? So நல்லதே நடக்குமென்ற நம்பிக்கையுடன் முயற்சிப்போம் !
ரைட்டு.....நாளை துவங்கிடவுள்ள ஆன்லைன் புத்தக விழாவின் பொருட்டு நம்மவர்கள் போன்களை off செய்துவிட்டு இன்னும் பணியாற்றி வருகின்றனர் !! ஒலிக்கும் செல்களின் ரிங்டோனில் காதில் தக்காளிச் சட்னி வராத குறை தான் !! So ஒரு எட்டு அவர்களைப் பார்த்து வர நான் கிளம்புகிறேன் !! Bye all .....see you around ! Wishing a fun weekend ahead !!
கிளம்பும் முன்பாய் - அந்த 2 bookfair special இதழ்களைப் பற்றியுமே !!
உங்களின் நாயகர் சார்ந்த யூகங்கள் bang on ....நமது இரு மஞ்சள்சட்டை நாயகர்களே இந்த 2 ஸ்லாட்களையும் ஆக்கிரமிக்கின்றனர் ! "இவிகளுக்கு ஓவராய் இடங்கள் தர்றே ; அதிகாரி தான் ஏற்கனவே இந்த மாதம் ஐநூறு ரூபாய் விஸ்வரூபம் எடுத்துள்ளாரே ; மறுக்காவும் அவரேவா ? " என்ற குரல்கள் ஒலிப்பது சர்வ நிச்சயமே ! ஆனால் எனது பதில் ரொம்பவே சிம்பிள் guys !! ஒரு வண்டிப் பணிகள் தொக்கி நிற்கும் தருணத்தினில், இதற்கென புது வெளியீடுகளைத் திட்டமிட சாத்தியங்கள் பூஜ்யம். So மறுபதிப்பே தீர்வெனும் போது விற்பனைகளின் அளவுகோல்கள் மாத்திரமே இங்கே முன்னிற்கின்றன ! And இந்த 2 மஞ்சள் சட்டை நாயகர்களைத் தாண்டி இன்றைக்கு போணி கண்டிடுவோர் எவருமிலர் ! "இளம் டைகரின் கதைலாம் பாக்கி இருக்கே - கண்ணுக்குத் தெரிலியா ?" என்ற கேள்வி தொடருமென்பதும் புரிகிறது ! இளம் டைகர் நன்றாகவே கண்ணுக்கு (இன்னமும்) தெரிகிறார் என்பதே இங்கே பிரச்சனை ; ரூ.80 விலையிலான "இளமையில் கொல்" இரண்டு ஆண்டுகளைத் தாண்டி விட்டுள்ளது கிட்டங்கி குப்பைக் கொட்டலில் ! So கேட்டுப் புளித்துப் போயிருப்பினும், யதார்த்தத்தை மாற்றிட வழியில்லையே guys ?!! இன்றைய வாசக வட்டத்தின் டார்லிங் மட்டுமன்றி, விற்பனையாளர்களின் டார்லிங்கும் கார்சனின் சகாவே !! So ரெகுலர் தடத்தில் இல்லாததொரு இதழ் சோடை போகிடாது கரைசேர வேண்டுமெனில் - அதன் அட்டைப்படத்தில் TEX என்று பதிக்கப்பட்டிருக்க வேண்டிப் போகிறது ! இதோ - இதற்கு முன்பான ஆன்லைன் விழா ஸ்பெஷலாய் நாம் வெளியிட்ட ஆர்ச்சி புதுசு + மாயாவி மறுபதிப்பு கம்பீரமாய் நம்மிடமிருந்து நகர மறுக்கின்றன ! இடையினில் சென்னைப் புத்தக விழாவினில் விற்றதோடு சரி ; அப்புறமாய் ஆன்லைன் ஆர்டர்களோ, முகவர்களின் ஆர்டர்களோ பூஜ்யமே !
அவ்விதம் TEX என்று பதிக்கப்பட்டுள்ள இதழினில் "சிகப்பாய் ஒரு சிலுவை" என்ற பெயருமே இம்முறை இணைந்து கொள்கிறது ! Yes guys - கால்நூற்றாண்டுக்கு முன்னே நமது மெகா ட்ரீம் ஸ்பெஷல் இதழினில் பெரிய சைசில், கருப்பு-வெள்ளையில் வெளியான அந்த 200 பக்க சாகசமே, நாளை உங்களுக்குக் காத்துள்ளது ! ஓராண்டுக்கு முன்னமே ; in fact போன லாக்டௌனின் சமயத்திலேயே என் கண்ணில்பட்டு , சுவாரஸ்யத்தைக் கிளப்பிய கதை இது ! தனியாய் ; சோலோ சாகசங்களாய் வெளியான டெக்ஸ் கதைகளைக் கூட எப்படியேனும் உருட்டிப் பிடித்து யாரிடமாச்சும் வாங்கிடலாம் தான் ; ஆனால் இது போன்ற - கிடைக்கவே கிடைக்காதெனும் ஸ்பெஷல் இதழ்களுக்குள் புதைந்து கிடைக்கும் டெக்ஸ் சாகசங்களை இவ்விதம் மறுபதிப்பு செய்தாலொழிய பார்ப்பது அரிது என்று தோன்றியதால் போன ஆண்டே இதனை வாங்கி விட்டிருந்தேன் ! And சும்மா இருக்காமல் அந்த வேளையினில் நம்மிடம் விண்ணப்பித்திருந்ததொரு யுக்ரேனிய ஓவியையிடம் இதன் அட்டைப்படத்தினை டிஜிட்டலாய் உருவாக்கச் சொல்லி ஒப்படைத்துப் பார்த்தேன் ! அவர் போட்டுத் தந்த சித்திரம் இதோ :
டிசைன் ஒரு தினுசாய் ஓ.கே.வாகத் தென்பட்டாலும், அந்த முகங்கள் எல்லாமே ரொம்பவே செயற்கையாய் இருப்பது போல் பட்டது ! அதன் பின்னே, சிவனே என்று நம்மவர்களைக் கொண்டு அட்டையினை இன்னொருமுறை ரெடி செய்து வாங்கினேன் ! And here it is !
"கழுகு வேட்டை" புக்கின் அட்டைப்படம் அச்சான அதே சமயம் இதுவும் இணைந்து அச்சாகி இருந்தது - அதே நகாசு வேலைகளுடன் ! So நமது இஸ்திரி ; ஜியாகிரபி என சகலத்திலும் முதன்முறையாக - "ஒற்றை வாரத்தினில் 4 hardcover புக்ஸ்" என்ற சாதனையினை நிலை நாட்டவுள்ளது இந்த ஆல்பம் !! என்ன ஒரே பிரச்சனை - பைண்டிங்கில் மனுஷன் விழி பிதுங்கிக் கிடக்கிறார் - ஏக காலத்தில் அவரது பிராணனை நாம் வாங்கி வரும் வேகத்தினில் ! So "சிகப்பாய் ஒரு சிலுவை" பைண்டிங் முடிந்து நாளை மாலையே கைக்கு வந்து சேரும் ; காலையில் மாதிரிகள் மட்டுமே இருந்திடும் ! So பொறுத்தருள்க ப்ளீஸ் !!
அப்புறம், "பழிக்குப் பழி" & "இரத்த வெறியர்கள்" - என்ற இரு மறுபதிப்புகளுமே நமது TEX மறுபதிப்புப் பட்டியலில் next in line என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன் - புருவங்களை உயர்த்தியிருக்கும் டெக்ஸ் ரசிகர்களுக்கு !
லூக்கின் மறுபதிப்பினை உங்களில் almost அனைவருமே கச்சிதமாய் யூகித்திருந்தீர்கள் என்ற மட்டில் kudos !! இதோ - அதன் அட்டைப்படம் !!
லக்கியின் 75-வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் முதல் படி இது ! அடுத்த பெரிய படி, இந்த புக்கினுள்ளே விளம்பரமாய் இருக்கிறது !! So அதனை மட்டும் இப்போதைக்கு சஸ்பென்சாக விட்ட கையோடு கிளம்புகிறேன் !! Bye again all !
Wish us luck for the E-Road Online Bookfair please !!
Hello
ReplyDelete1st
ReplyDeleteஅட்டகாசம்
ReplyDelete4th
ReplyDelete5வது
ReplyDelete7
ReplyDeleteசூப்பர்
ReplyDelete6ம் இடம்...
ReplyDeleteஜெயிக்கும் குதிரைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம்.
ReplyDeleteஇரத்தப்படலம் கிளம்பிடுச்சுங்கோ.....!
ReplyDeleteமகிழ்ச்சி..!!!!
மிக்க மகிழ்ச்சி.....!!!!
மிக சமீபத்தில் கலரில் பார்த்த உனர்வு.
ReplyDeleteWoowww... XIII Wrapper is awesome Sir.
ReplyDeleteநேரில் இன்னும் கெத்தாய் இருக்கும் நண்பரே !
DeleteThank you Sir.
Deleteஏன் சார்..அந்த முதல்பாகத்தின் அட்டைப்படத்தை தவிர்க்கிறீர்கள்.. iii
Deleteஅது தான் XIII-ன் கெத்து...
சார் சிகப்பாய் ஒரு சிலுவை தேர்ந்தெடுதற்கான காரணம் மிக சரி தனியாக கிடைக்காத இதழ்.
ReplyDeleteஇம்முறையும் கருப்பு வெள்ளை தானா அல்லது கலரில் ஆ சார்?
Color !
Deleteசிறப்பு
Deleteமீண்டும் மீண்டும் மீண்டும் ""தல"".
ReplyDelete"தல" னா சும்மாவா ?!.
சிகப்பாய் ஒரு சிலுவை -சத்தியமாக யூகிக்கவே இல்லை யாருமே.
திகைக்க வைத்துவிட்டார் ஆசிரியர்.
மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைத்துவிட்டார்.
நன்றிகள் ஆசிரியர் சார்.
யாரும் யூகித்திருக்கவில்லை தான் ; ஆனால் நண்பர் ஷலோம் இங்கொரு சமீபப் பின்னூட்டத்தினில், இந்தக் கதையினை நண்பர்கள் யாருமே இன்னும் பரிந்துரைக்கக் காணோமே ? என்று வினவியிருந்தார் !
Deleteலயன் 400 சி சி மற்றும் முள் உருண்டை ஆர்டர் புக்கிங் சார்.
ReplyDeleteவணக்கம் sir. I donate Rs.1000
ReplyDeleteஆசிரியரிடம் ஒரு வேண்டுகோள் ;
ReplyDelete"பனிக்கடல் படலம் " என்ற தல கதையையும் வண்ணத்தில் வெளியிட்டால் மிக்க நன்றாக இருக்கும்.சிவிடெலியின் ஓவியங்கள் சும்மா வண்ணத்தில் தெறிக்கவிடுமே !!!.
ஆவன செய்யுங்கள் ஆசானே ?!
சமீபத்தில் - Cowboy ஸ்பெஷல் இதழினை review செய்திட முனைந்த போது கண்ணில் பட்டது சார் ; நம்மவர்கள் ரயிலேறி பாஸ்டன் நகர் செல்லும் சாகசம் ! நினைவில் கொண்டிடுவேன் !
Deleteஜாலி ஸ்பெஷலில் என்ன கதை வந்தது ?!
Deleteநான் மனதில் நினைத்ததை நீங்கள் கேட்டு விட்டீர்கள்..... டெக்ஸ் கதைகளிலேயே மிக மிக சிறப்பான சித்திரங்கள் இந்த கதையில் தான்
DeleteSir and a reprint in color of that 3 parter story sir -I think they take a steamer and go elsewhere - should have come in 90s. I loved the story.
Deleteதெற்கே ஒரு தங்கத் தேட்டை ?
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete//நமது இரு மஞ்சள்சட்டை நாயகர்களே இந்த 2 ஸ்லாட்களையும் ஆக்கிரமிக்கின்றனர் !//
ReplyDeleteகாரணங்கள் நீங்கள் எத்தனை சொன்னாலும் இது எனக்கு ஏமாற்றமே... ஒரு மாதம் 3 டெக்ஸ் கதைகள் எல்லாம் ரொம்பவே ஓவர்.
End of the day he has to sell and these sell like hot cakes Bro !
Deleteஸ்பைடரின் "சர்ப்பத்தின் சவால்" !! 650 பிரதிகளுக்கு மேல் இன்றைக்கு வரையிலும் போணியாகவில்லை ! புதுக் கதை ; செம ஆக்ஷன் ; செம அட்டைப்படம் !
Deleteநியூயார்க்கில் மாயாவி ! இது வரைக்கும் மொத்த சேல்ஸ் 540 புக்ஸ் !
ஆர்ச்சி புதுக் கதை : இன்னும் நானூறைத் தாண்டவில்லை !
சொல்லுங்களேன் ஆதி - உங்களின் ஏமாற்றமும், எனது ஏமாற்றமும் ஒரே அளவிலானவைகளாவென்று ?
Okay Sir!
Deleteகடந்த ஓராண்டுக்கும் மேலாய் நம் கையில் :
Delete1 புது ஆர்ச்சி
2 மாயாவி மறுபதிப்புகள்
1 ஸ்பைடர் மறுபதிப்பு
கதைகள் வெயிட்டிங் நண்பரே !
அவற்றை வெளியிட்டால் விற்றிடும் வாய்ப்புகள் தென்பட்டால் நான் ஏன் அவற்றை பீரோவுக்குள் உறங்க விடப் போகிறேன் ?
அடடா!
Deleteசிகப்பாய் ஒரு சிலுவை
ReplyDeleteசூ மந்திரகாளி..
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
எடிட்டர் சார்!
ReplyDeleteலயன் 400 110 பக்கங்களுக்கு மேல் படித்துவிட்டேன்..
கதை அட்டகாசமாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க இதற்குள்ளாகவே ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்..
சமீப காலமாக இது அதிகம் இல்லாமலிருந்தது
நல்ல புரூஃப் ரீடராக வையுங்கள் சார் !
Oops....தற்சமயம் உள்ள பெண் M.A. Tamil !!!
Deleteஇன்னும் கவனமெடுக்க முயற்சிக்கிறேன் சார் !
விஜயன் சார், எனது துணைவியார் பிழை திருத்தம் செய்ய தனது விருப்பத்தை தெரிவித்து உள்ளார்.
Deleteநடைமுறை சாத்தியம் கிடையாது சார் ; ஒவ்வொரு கதையின் மீதும் மூன்று முறை பணிசெய்திடுகிறோம் ! ஒவ்வொரு முறையும் கோப்புகளை அனுப்பி, அவர்கள் பார்த்துத் திருப்பி அனுப்பி,அப்புறமாய் திருத்தங்களைப் போட்டு அச்சிடுவதென்பது இயலாக் காரியம் சார் !
Deleteஅருமை சகோதரரே
DeleteSir you need to deploy an MBBS minimum to weed out typo looks like ;-)
Deleteஒரு தமிழ் ஆசிரியரையும் முயற்சித்துப் பார்த்தோம் சார் - கொஞ்ச காலம் முன்னே ; வேலைக்கு ஆகவில்லை !!
DeleteDONATED 500/-
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDelete28
ReplyDeleteசிகப்பாய் ஒரு சிலுவை நல்ல தேர்வு ஆசிரியரே
ReplyDelete"சிகப்பாய் ஒரு சிலுவை" - விலை எவ்வளவு சார் ?
ReplyDeleteRs.250 சார்.
DeleteDONATE 1000
ReplyDeleteM BABU MOHAMED ALI
ATTUR PO
SALEM DT
me 34
ReplyDeleteகையில் என்ன பிரச்சனை என்பதை, சரியான பின்னே சொல்லுங்களேன் !
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete##அப்புறம், "பழிக்குப் பழி" & "இரத்த வெறியர்கள்" - என்ற இரு மறுபதிப்புகளுமே நமது TEX மறுபதிப்புப் பட்டியலில் next in line என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன் ## இரண்டையும் இணைத்து குண்டு புக்காக வெளியிடுங்கள் சார்
ReplyDeleteபார்ப்போமே சார் !
Delete///இரண்டையும் இணைத்து குண்டு புக்காக வெளியிடுங்கள் சார்///
Delete+1
+1
Deleteஅட்டகாசமான சிறப்பிதழ்கள் சார்..நன்றி..
ReplyDeleteஆனாலும் லெஃப்ட்டுல இண்டிகேட்டர் போட்டுட்டு, ரைட்டுல கைய காட்டிட்டு, நேரா வுடற உங்க ஸ்டைல் எங்களுக்குப் பிடிச்சிருக்குங்க எடிட்டர் சார்!
ReplyDelete'சிகப்பாய் ஒரு சிலுவை' - எதிர்பாராத சர்ப்ரைஸ்!!
என்னிக்காச்சும் ஒரு புளியமரத்தில் ஸ்கூட்டரைக் கொண்டு செருகாத வரைக்கும் ஒடட்டுமே சார் !
Deleteகரெக்ட் ஈவி...அவர் எப்பவுமே இப்படித்தான் சர்ப்ரைஸ் ப்ளஸ் சஸ்பென்ஸ் கொடுப்பார் தெரியாதா....
Deleteமனதில் மனதில் நினைத்து வைத்திருந்த தலையே தலையின் தாண்டவம் தொடருகிறது அபாரம் மகிழ்ச்சி ஆசிரியரே மகிழ்ச்சி... யார் எவ்வளவுதான் பாயாசம் கிண்டி னாலும் தலைவாழை போன்றவர் எங்கள் தல.... இப்பவே வெற்றியின் சத்தம் கேட்கிறது 👌👌👌👌👌👌
ReplyDeleteபுத்தகத்தின் விலை என்ன என்று அறிந்து கொள்ளலாமா....
ReplyDeleteமேலே அட்டைப்படத்தையே upload செய்தாச்சு பாருங்கள் நண்பரே !
Deleteமெகா ட்ரீம் ஸ்பெஷல் எனது ஆல் டைம் ஃபேவரிட்.
ReplyDeleteசிகப்பாய் ஒரு சிலுவை வண்ணத்தில் வெளியிடுவதற்கு நன்றிகள்.
அதே இதழில் காமெடியில் பட்டையக் கிளப்பிய "லக்கிலூக்கிற்கு கல்யாணம்" மறுபதிப்பாக வந்தால் சிறப்பாக இருக்கும் தலீவரே!
குறிப்பெடுத்துக் கொண்டாச்சூ சார் !
Deleteடாங்க்யூ சார்!
DeleteDonate 500kthirukumaranwestmambalam
ReplyDeleteசிகப்பாய் ஒரு சிலுவை நல்ல தேர்வு.
ReplyDeleteபழிக்குப்பழியும் ரத்த வெறியர்களும் நெக்ஸ்ட் இன் லைன் என்பது மிக சிறப்பு.
சிகப்பாய் ஒரு சிலுவை எதிர்பாராத சர்ப்ரைஸ்...
ReplyDeleteஹார்ட் பைண்டிங்கா சார் ?!
ஆமாம்.
Deleteஆமாம் சார் ; பதிவின் வால்பகுதியை வாசியுங்களேன் !
Delete// இவற்றிலிருந்து கிட்டிடக்கூடிய முழுத் தொகைகளையுமே அடையார் புற்று நோய் மையத்துக்கு,நாம் ஏற்கனவே அனுப்பிடவுள்ள தொகையுடன் சேர்த்து அனுப்பிட எண்ணியுள்ளேன் //
ReplyDeleteநல்ல விஷயம்.
இந்த இதழ்கள் சரியான நண்பர்கள் கைகளில் கிடைக்கட்டும். அவர்கள் ஒரு நல்ல தொகையை இந்த புத்தகத்திற்கு கொடுத்து இந்த நல்ல காரியத்திற்கு உதவட்டும்.
// இ.ப. version கூடத் தயாராகியிருப்பதால் - 2018-ன் அந்தப் பார்சலை உடைத்து அதனிலிருக்கும் 13 இதழ்களையும் (!!!) இப்போது வெளியெடுக்கும் எண்ணம் தலைதூக்குகிறது ! //
கோரொனா அலை கொஞ்சம் ஓய்ந்த பின்னர் அல்லது 2022 ஜனவரி மாதத்தில் இதனை செய்தால் பல வகையில் சிறப்பாக அமையும் என்பது எனது தாழ்மையான எண்ணம்.
ஒன்னும் பிரச்சனையில்லை சார் ; இப்போது ஒன்றரை நாள் மட்டுமே அவகாசம் தந்துள்ளேன் ! அதற்குள் பிரயோஜனமாய் எதுவும் தேறவில்லை எனும் பட்சத்தில் ஜனவரிக்கோ - வாகானதொரு தருணத்துக்கோ தள்ளி வைத்துக் கொள்ளலாம் ! மூன்றாண்டுகள் துயில் பயின்றவற்றை இன்னும் கொஞ்ச காலம் தூங்கப் செய்வதில் no problems at all !!
Deleteநிச்சயம் சூட்டோடு சூடாய் நல்லது நடக்கும் சார்..
Delete@ Parani from Thoothukudi : அதற்குள்ளாக 2 செம அழகான தொகைகள் அடையாருக்கு கிளம்பி விட்டன சார் !!!
Delete2 BOOKS DONE FROM THE LIST !! இனி எஞ்சியிருப்பது 11 புக்ஸ் மாத்திரமே !!
First donate 1000 comment coming from சரவணன் சீனிவாசன் 13 August 21.38 sir
DeletePlease check and confirm Sir
கூடுதல் தொகைகள் நன்கொடையாக்கிட நண்பர்கள் முன்வராத பட்சத்தில் நிச்சயம் கவனித்திடுவோம் பாபு ! இந்த நொடியில் முதல் 5 பிரதிகள் ஈட்டியுள்ளது ரூ.14000 !!
Deleteஅப்புறம் உங்க பேட்ஜ் அமர்க்களம் !!
This comment has been removed by the author.
ReplyDeleteஅட, உங்கள் பின்னூட்டம் என்னை ஆச்சர்யமேபடுத்தக் காணோமே சம்பத் ?
DeleteThis comment has been removed by the author.
Deleteசூப்பர் ஆசிரியர் சார்
Deleteசிகப்பாய் ஒரு சிலுவை படித்ததாக ஞாபகம் இல்லை. வரவேற்கிறேன். மகிழ்ச்சி.
ReplyDeleteநல்லா இருக்கும் PFB...
Deleteமண்டைக்கு மேல கொண்டை (தொப்பி) மாதிரி போட்டுகிட்டு ஒரு கூ கிளாஸ் கும்பல் வரும்னு நினைக்கிறேன்...
அது கு க்ளக்ஸ் க்ளான் சார் !!
DeleteXIII தொடரினில் கூட வருவார்களே !
அவிங்களேதான் சார்...எங்க தலைவனோட வளர்ப்புதந்தையை கொன்னவங்க..
Deleteகுட். நன்றி அறிவரசு மற்றும் விஜயன் சார்.
DeleteDonate Rs. 500 - Karthik, Trichy
ReplyDeleteDonate1000
ReplyDeleteமுதலில் உங்க அடையார் புற்றுநோய் மைய முயற்ச்சிக்கு பாராட்டுகள் சார்...
குட்.
Deleteகண்ணைக்கவரும் அன்புத்தோழன் என் மறதிக்கார மன்னன் மெய்யாலுமே அட்டைப்படத்தில் ஜொலிக்கிறார் சார்..XIII லோகோ watermark உள்ளதா சார்...?? அதன் அட்டைப்பட டிசைனை இங்கே பகிருங்க சார்...
ReplyDeleteடெக்ஸ் வில்லரின் சாத்தான் வேட்டை கலரில் அமர்க்களமாக இருக்குமே அடுத்த மறுபதிப்புகளின் லிஸ்ட்டில் சேர்த்திடலாமே ஆசிரியரே
ReplyDeleteஇரத்தப்படலம் கையிலேந்தும் நாள் வந்துவிட்டது 💪💪💪💪💪
ReplyDeleteDonate 500.
ReplyDeleteR.CHANDRASEKARAN, Coimbatore
@ ALL :
ReplyDeleteஅதற்குள்ளாக 2 செம அழகான தொகைகள் அடையாருக்கு கிளம்பி விட்டன !!!
2 BOOKS DONE FROM THE LIST !! இனி எஞ்சியிருப்பது 11 புக்ஸ் மாத்திரமே !!
//இதழின் விலைகளோடு அடையார் புற்று நோய் ஆராய்ச்சி மையத்துக்கு நன்கொடையாய் ஏதேனுமொரு தொகையினைத் தந்திட முன்வரும் நண்பர்களுக்கே இந்த புக்சினில் முன்னுரிமை வழங்கப்படும் ! //
ReplyDeleteSir, excellent idea.
Please implement the same for first two Durango and recent Tex Willer books (If you have few of those books in stock).
Thanks.
Regards,
Mahesh kumar S
சிகப்பாய் ஒரு சிலுவை எதிர்பாராத இன்ப அதிர்ச்சி . இந்த நாளை சிறந்த நாளாக மாற்றியதற்கு மிக்க நன்றி சார் !
ReplyDeleteDonat 600/- டியர் எடி
ReplyDeleteலக்கிலுக்கின் விலை என்னங்க சார்
ReplyDelete₹100
Deleteஒரு தீபாவளி பண்டிகையை போலுள்ளது இந்த தருணம் ஒரு பக்கம் சுவீட் மறு பக்கம் பட்டாசு இன்னொரு பக்கம் புது துணி அது போல லயன் 400 இரத்தப்படலம் கலெக்சன் ஆன்லைன் வெளியீடு புத்தகங்கள் என பண்டிகையின் சந்தோஷத்தை உணர வைத்து விட்டீர்கள் நன்றி ஆசிரியரே
ReplyDeleteஒரே நேரத்தில் சகலத்தையும் இழுத்துப் போட பயமாகத் தானிருந்தது சத்யா ; ஆனால் மறுக்கா எப்போ லாக்டவுன் ; என்ன - ஏதென்றே தெரிந்திரா ஒரு சூழலில், இந்த நொடியினை வீண் செய்திட வேண்டாமென தீர்மானித்தேன் !!
Deleteஅதனை நடைமுறைப்படுத்தி வரும் நமது டீமுக்குத் தான் பாராட்டுக்கள் போய்ச் சேர வேண்டும் !!
//க்ரூப்களில் மும்மடங்கு விலைகளுக்கு, சிறுகச் சிறுக ஏலம் விடுவதே ஒரு செம வியாபாரமாய் - போன மாசத்து புக்ஸும், முந்தைய மாதத்து புக்ஸும் இந்தக் கூத்துக்களுக்கு ஆளாகிடத் துவங்குவதைப் பார்க்கும் போது //
ReplyDeleteஎந்த மாதிரியான புத்தகங்கள் அவ்வகையான பிசினஸ் மாடலில் சுழல்கின்றன என்பதைச் சற்று ஆராய்ந்து பார்த்து அவற்றை மற்றும் சற்று கூடுதலாக கையிருப்பில் வைத்துக் கொள்ளுங்களேன் சார். கையிருப்பை, ஒரேடியாக விற்று விடாமல் சில மாதங்களுக்கு ஒருமுறை சிறுகச் சிறுக விற்பனைக்கு கொண்டு வாருங்கள் (டெக்ஸ் மற்றும் ஸ்பெஷல் இதழ்கள்?).
ஒரு பக்கம் முப்பது, நாற்பது சதவிகிதம் கழிவு கொடுத்தாலும், வாங்க ஆளின்றி மலை போலக் குவிந்து கிடக்கும் புத்தகங்கள்! இன்னொரு பக்கம் இப்படி "ஆயிரம், ரெண்டாயிரம், நாலாயிரம்" என்று போட்டா போட்டி போட்டுக் கொண்டு பலரும் வாங்குவது போன்ற தோற்றமேற்படுத்தப் பட்டு விலையேறிக் கிடைக்கும் சில புத்தகங்கள்...! முத்து காமிக்ஸில், டெக்ஸ் வில்லரைப் பார்த்தது போல ஒரே குழப்பமடா சாமி! :)
முத்து காமிக்ஸில், டெக்ஸ் வில்லரைப் பார்த்தது போல ஒரே குழப்பமடா சாமி! :)
Delete😃😃😃
// எந்த மாதிரியான புத்தகங்கள் அவ்வகையான பிசினஸ் மாடலில் சுழல்கின்றன என்பதைச் சற்று ஆராய்ந்து பார்த்து அவற்றை மற்றும் சற்று கூடுதலாக கையிருப்பில் வைத்துக் கொள்ளுங்களேன் சார். கையிருப்பை, ஒரேடியாக விற்று விடாமல் சில மாதங்களுக்கு ஒருமுறை சிறுகச் சிறுக விற்பனைக்கு கொண்டு வாருங்கள் (டெக்ஸ் மற்றும் ஸ்பெஷல் இதழ்கள்?). //
Delete+1
I echo the same point.
35 % டிஸ்கவுன்ட்டில் நான் கூவிக் கூவி விற்க முனையும் கமான்சே தொடரின் இதழினை கூட premium கொடுத்து வாங்கும் கொடுமைகளும் அரங்கேறி வருகின்றன அந்த ஏல க்ரூப்களில் !
Deleteஅந்தக் கொடுமைகளை முறையிட கோயிலுக்குப் போகலாமென்று பார்த்தாக்கா இங்கே வாரயிறுதிக்கு கோயில்களும் பூட்டியாச்சு கார்த்திக் !! தெய்வமே !!
வணிகங்கள் ஜெகஜோதியாய் அரங்கேறி வருவது டெக்ஸ் இதழ்களில் மட்டுமே !!
Deleteதொடரும் நாட்களில் இதனில் தட்டுப்பாடே இராத வண்ணம் ஏற்பாடுகள் ஏற்கனவே செய்தாச்சு !
//கமான்சே தொடரின் இதழினை கூட premium கொடுத்து வாங்கும் கொடுமைகளும் //
Deleteஇது அந்த கமான்சேக்கு தெரியுமா? :) எனக்கென்னவோ இது சும்மா "ஒரு லுலுலாய் படலம்" என்று தோன்றுகிறது சார்! நண்பர்கள் பொழுது போவதற்காக அவர்களுக்குள்ளேயே கமான்சே புத்தகங்களை ஏலம் விட்டுக் கொள்வார்களாக இருக்கும், விடுங்கள் சார்! :)
// தொடரும் நாட்களில் இதனில் தட்டுப்பாடே இராத வண்ணம் ஏற்பாடுகள் ஏற்கனவே செய்தாச்சு //
Deleteஅருமை சார்! நல்ல முடிவு,
சார் லயன் டாப் 10 ஸ்பெஷலில் வந்த பாலைவன பரலோகம்.
ReplyDeleteலயன் ஜாலி ஸ்பெஷலில் வந்த கானகக் கோட்டை. லயன் 1995 தீபாவளி மலராக வந்த நள்ளிரவு வேட்டை ஆகிய டெக்ஸ் வில்லர் இன் மூன்று இதழ்களை மறு பதிப்பாக வெளியிட வேண்டுகிறேன்.
அதிகாரியின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது சார் !! அடுத்தாண்டினில் மீண்டும் ரெகுலர் புத்தக விழாக்கள் துவங்கிடும் பட்சங்களில் - ஒவ்வொன்றாய் பெரிய விழாக்களினில் முயற்சிக்கலாம் !
DeleteDonate ₹1000 from my side Vijayan sir.
ReplyDeletePFT செம சூப்பர்..🎊🎉👍👍👍👍
Delete@ ALL : 3 புக்ஸ் ஆச்சு !!
ReplyDeleteமீதம் 10 !!
#இளம் டைகர் நன்றாகவே கண்ணுக்கு (இன்னமும்) தெரிகிறார் என்பதே இங்கே பிரச்சனை ; ரூ.80 விலையிலான "இளமையில் கொல்" இரண்டு ஆண்டுகளைத் தாண்டி விட்டுள்ளது கிட்டங்கி குப்பைக் கொட்டலில் ! So கேட்டுப் புளித்துப் போயிருப்பினும், யதார்த்தத்தை மாற்றிட வழியில்லையே guys ?!!#
ReplyDeleteமிகவும் தப்பான கணிப்பு ஆசிரியர் சார்!3 பாக கதையில் ஒரு பாகத்தை மட்டும் வெளியிட்டு விட்டு அடுத்த பாகத்திற்கு வருடக்கணக்கில் இடைவெளி விட்டால் இப்படித்தான் ஆகும்!ட்யுராங்கோ மாதிரி, தோர்கல் மாதிரி 3 அல்லது 4 பாகங்களை ஒரே தொகுப்பாக விட்டிருந்தால் கமான்சேவும் கரை சேர்ந்திருக்குமே? இதே சிகப்பாய் ஒரு சிலுவையை இரண்டாகப்பிரித்து முதல் பாகம் இப்போது,அடுத்த பாகம் 2022ல் என வெளியிட்டால் டெக்ஸ்-ம் கிட்டங்கியில் தேங்கக்கூடியவரே...
ஒரே ஆண்டினில் 3 கமான்சே இதழ்கள் வெளிவந்துள்ள நாட்களும் உண்டென்பதை நினைவூட்டுகிறேன் நண்பரே ! And ஆண்டுக்கு ஒன்றே ஒன்றென்று வெளிவரும் போதிலும், சாதித்து வரும் ப்ளூகோட்ஸ் ; சிக் பில் ; சோடா இத்யாதிகளும் உண்டென்பதைச் சுட்டிக் காட்டுகிறேன் !
Deleteஅட, மின்னும் மரணம் தொகுப்பானது நம்மிடம் மூன்றேகால் ஆண்டுகள் கைவசமிருந்ததையும் நீங்கள் மறந்திருப்பினும், நான் மறக்கவில்லை !
"ஈரோட்டில் இத்தாலி" நீங்கலாய் கடந்த பத்தாண்டுகளில்,
டெக்சின் கலர் இதழ்களில், ஆறு மாதங்களைத் தாண்டிய கையிருப்பில் எதுவும் இருந்ததில்லை என்பது fact !
சிக்கலின்றி விற்றுத் தீருவது கரும்புச் சாறே எனும் பட்சத்தில், கரும்புக் கட்டுக்களை வாங்கிப் போடவே சாலையோர சிறு வியாபாரி முனைவான் ! இங்கு நடப்பதும் அதுவே !
This comment has been removed by the author.
ReplyDelete//மெய்யாகவே வாசிப்பின் பொருட்டு தேடி வரும் தீவிர ரசிகர்களின் கைகளுக்கு இவற்றைக் கொண்டு சேர்க்க எண்ணுகிறோம் ! //
ReplyDeleteஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டு Donate மெசேஜ்களை போட்டால் நலம்! ஏற்கனவே அந்தப் புத்தகத்தை வைத்திருக்கும் தீவிர வாசகர்கள் தவிர்க்கலாமே? :)
நண்பரே, என்னை பொறுத்தவரை, இது ஏற்கனவே வண்ண பதிப்பு இல்லாத ஒரு காமிக்ஸ் நண்பருக்கு கொடுத்திடத் தான்.
Deleteதவறாக என்ன வேண்டாம் உதய், உங்கள் கமெண்ட்டின் கீழே எனது வந்தது தற்செயலான நிகழ்வே, மற்றபடி இது பொதுவாக போடப்பட்ட ஒரு கருத்து!
Deleteதேங்க்ஸ் கார்த்திக் !!
Deleteஉதய் - தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ப்ளீஸ் - ஒரு க்ரூப்பினில் 2019-ல் வெளியான ரூ.700 விலையிலான டைனமைட் ஸ்பெஷல் - ரூ.2500 க்கு விற்றுள்ளது ! இந்த Slipcase XIII அந்த க்ரூப்பில் ஏலம் போகும் பட்சத்தில் உங்களின் offer ஏற்கப்படுமா ?
நிச்சயமாக தவறாக எடுக்க ஒன்றுமேயில்லை சார்... நன்றி
Deleteவியாழன் முதல் திங்கள் வரை ஐந்து நாட்களும் லயன் அலுவலகத்தை நினைத்தாலே ....
ReplyDeleteபணியாளர்கள் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
போர்க்களம் போல் அலுவலகம் பரபரப்பாகக் காட்சியளிக்கும்.
எங்கும் புத்தகங்கள் நிரம்பிக் கிடக்கும்.டப்பிக்குள் புத்தகங்கள் வேகமாக அடைபட்டுக் கொண்டிருக்கும்.
காணக் கண் கோடிவேண்டுமே..!!!
நிஜம் தான் சார் ; இந்த வாரத்தின் துவக்கம் முதலாய் அத்தனை பேரும் காலில் சக்கரங்கள் கட்டிக் கொண்டு தெறிக்க விட்டு வருகின்றனர் ! தினப்படி ஆளுக்கு ஒரு நூறு / நூறு போன் வேறு பேசி வருகிறார்கள் !
Deleteரொம்ப ரொம்ப ரொம்ப நாளாச்சு - இந்தப் பரபரப்பைப் பார்த்து !!
இன்று இப்போது ஸ்பெஷல் இதழ்களுக்குப் புக்கிங் பண்ணலாமா ?
ReplyDeleteGPay - Rs.400
Deleteசார் அடுத்த மாதம் டிக் உட் 200 பக்கம்...ஷெல்டனோ என நினைத்த சித்திரமும் கொலைப் பழக்கம் 100 பக்கம்...மேக்ஜாக்...லேடியா நடித்து ...படத்தப் பாத்தே வயிறு குலுங்கச் செய்த கதை போல இருக்கும் போல...அடுத்த மாதமும் இம்மாதத்துக்கு சளைத்ததல்ல போல.
ReplyDeleteஆசிரியர் அவர்களே ஈரோடு ஸ்பெஷல்க்கு மொத்தம் எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும் என்பதை குறிப்பிடுங்கள்
ReplyDeleteRs.400 சார் !
Deleteவேறு புக்ஸ் சேர்த்து வாங்கிடும் பட்சத்தில் ரூ.1000-க்கு மேலான தொகையெனில், கூரியர் கட்டணங்கள் கிடையாது !
அட்டைப் படங்க ரெண்டும் பிரம்மாதம்...பிரம்மாண்டம்....பிரம்மாண்டத்தை புகுந்தாமலே தோர்கள் ஈடு கொடுக்குது டெக்சுக்கு .
ReplyDeleteஆனா அட்டைப் பட உலகிலே இது வரை வந்ததிலையே ...ஏன்...இனி வரப் போவதிலும் டாப் இதான்...வேலைப்பாடுகள் கச்சிதம்...பின்னணியில் கருப்பில் தோழர்களுடன் விரையும் டெக்ஸ்....லயன் 400... அதில் தொங்கும் சிங்கம்...கெத்தான டெக்சும்...பின்னணி பசுமையும்...தங்க நிற தலைப்பும்...முன்னட்டைக்கு சளைக்காத பின்னட்டையும்...முதுகும் அதகளம்...அந்த கருப்பு நிற டிசைன் எப்படி தோணிச்சு சார்....இது வர வந்த டிசைன்ல அதகளம் இதான்...காணக் கண் கோடி வேண்டும்...போதாதோ அதுவும்
தோழர்கள் அட்டைப்பட பிரம்மாண்ட பெருச்சாளி ஓவியம் பிச்சு ஒதறுது ...
இரு பிரம்மாண்டங்கள்...அருமை ஆசிரியரே
இப்போல்லாம் உங்க தந்தி பாஷை கூட எனக்குப் புரிய ஆரம்பிச்சூ ஸ்டீல் !! ஆத்தா....நான் பாஸாயிட்டேன் !!
Delete// So மறு வணிகங்களுக்குப் பயன்படுத்திடாது, மெய்யாகவே வாசிப்பின் பொருட்டு தேடி வரும் தீவிர ரசிகர்களின் கைகளுக்கு இவற்றைக் கொண்டு சேர்க்க எண்ணுகிறோம் ! //
ReplyDeleteI respect this line sir. This action need to be seriously taken care now to let the books to reach the people who really long for the book.
I just wish people who end up shelling out good money were a bit more aware of the pre-bookings & subscriptions sir !
DeleteAgreed sir.
Deleteஇப்பொழுது தான் மறுபடியும் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தேன் என்று சொல்பவர்கள் இன்னும் நிறையே பேர் ஒவ்வொரு மாதமும் வருகிறார்கள். புதிதாக வருபவர்களிடம் அவ்வளவு விழிப்புணர்வு இருப்பதில்லை.
நெஞ்சே எழு கொஞ்சம் reprint பண்ணுங்க. திடீர்னு டிமாண்ட் அதிகமாகி தேடுபவர்கள் அதிகமாகி விட்டனர்.
Tex+மஞ்சள் சட்டை.. இது இரண்டும் போதும் எடிட்டர் Sir.. க்யூ விலே நிக்க நாங்க ரெடி Sir..
ReplyDeleteவாங்கோ சார் !! வாங்கோ !
Deleteடெக்ஸ் மறுபதிப்புக்கான கதைகளின் விருப்பப் பட்டியல்:
ReplyDelete*பழிக்குப் பழி*
*இரத்த முத்திரை*
*இரத்த வெறியர்கள்*
*இரும்புக் குதிரையின் பாதையில்*
*இரத்த நகரம்*
*நள்ளிரவு வேட்டை*
*பாலைவனப் பரலோகம்*-
" *மந்திர மண்டலம்* "
*மெக்ஸிகோ படலம்*-
*ஓநாய் வேட்டை& இரத்த தாகம்*
*இரத்த ஒப்பந்தம், தணியாத தணல்& காலன் தீர்த்த கணக்கு*
மரண தூதர்கள்.
சாத்தான் வேட்டை
அதிரடி கணவாய்.
எல்லையில் ஒரு யுத்தம்
எமனுடன் ஒரு யுத்தம்.
கானகக் கோட்டை
நள்ளிரவு வேட்டை
*கார்சனின் கடந்த காலம்*... 3ஆம் பதிப்பு. வசனம் பாடல்கள் மாற்றாமல்.
இதெல்லாம் சேத்தி மொத்தமா ஒரே டைஜஸ்டா அல்லது ஆம்னி பஸ்ஸாவோ வேனாவோ போட்டாலும் வேணாம்னு சொல்லப் போவதில்லை.
Deleteஅடுத்த ரண்டு வருஷங்களுக்கு மிச்ச மீதியை ஒட்டு மொத்தமா ஏறக்கட்டிட்டு - இதை மட்டும் நான் போட்டாப்டியானாக்கா - "ஹேப்பி ; இன்று முதல் ஹேப்பி !!!" ன்னு பாடிட்டு இருப்பேனுங்க சார் !
Deleteபலமுறை கேட்டது தான் சார் காரசனின் கடந்த காலம் மற்றும் தங்க கல்லறை இரண்டையும் மறுவெளியிடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக ஒரு முறை
Deleteகொஞ்சமே கொஞ்சமாய் இந்த கொரோனா நிலவரங்கள் சீராகட்டும் கிருஷ்ணா ; போட்டுத் தாக்கி விடுவோம் !
Deleteநன்றி நன்றி நன்றி
Deleteஅருமை சார்...சூப்பர் கிருஷ்
Deleteமகேந்திரனின் எண்ணமே மக்களின் எண்ணமும்.
Deleteஅப்புறம் மக்களின் எண்ணமே மகேசனின் எண்ணமும் :)
இது வெற்றி அடைவது திண்ணம்
பழிக்கு பழி என்னை அசர வைத்த ஒன்று.
நம்மூருக்கும் எல்லா புக்கும் ஒரு செட் பார்சல் ப்ளீஸ்....
ஹேப்பி ; இன்று முதல் ஹேப்பி !!!" ன்னு பாடிட்டு இருப்பேனுங்க சார்//
Deleteவேறு வேறு குழுக்களில் நண்பர்கள் கேட்டதால் உருவான பட்டியல் இது. வாய்ப்பு கிடைக்கும் போது போட்டுத் தாக்குங்க சார்.
சார் கார்சனின் கடந்த காலம் மீண்டும் மறுபதிப்பாக வரும்போது ஒரே ஒரு கோரிக்கை,
Deleteமுந்தைய வெளியீட்டை விட முழுச் சிறப்பாக கூடுதல் கவனத்துடன் வெளியிடவும்...
முந்தைய வெளியீட்டை பார்த்து நண்பர் ஒருவர் மிகவும் வருத்தப்பட்டது இன்றும் நினைவில் உள்ளது...
தோர்கல் மற்றும் கார்சனின் மினி சாகசம் இரண்டு புத்தகங்களையும் படித்து விட்டேன்.
ReplyDeleteதோர்கல் வாவ் சூப்பர். கையில் எடுத்ததும் தெரியவில்லை படித்து முடித்ததும் தெரியவில்லை. செம.
Deleteநீ எங்கல படிச்ச...எந்திரில..இது கனவுதாம்ல
Deleteபோய் புள்ளய தூங்க வைக்கிற வேலையை பாருலே :-)
Deleteகார்சனின் மினி சாகசம் அடுத்த வாரம் விரிவாக எழுதலாம் :-)
ReplyDeleteமுதலில் நன்றி எடிட்டர் சார். ஸ்பெஷல் புத்தகங்கள் வெளியிடும் போதெல்லாம் அதில் கிடைக்கும் வருமானத்தில் பாதியே நல்ல விஷயங்களுக்கு செலவு செய்யும் உங்கள் மனதை என்னவென்பது என்னம் போல் வாழ்க்கை என்பார்கள் எடிட்டர் சார் உங்கள் என்னம் இன்னும் உங்களை உயர்த்தும்👏 சஸ்பென்ஸ் இதழ் சூப்பர் சார். அதுவும் சிவப்பாய் ஒரு சொப்பனம் அருமை. மிக்க நன்றி சார்
ReplyDeleteஅந்தக் கதை ; இந்த மறுபதிப்பு ; அந்த ஹீரோ - என்பனவெல்லாம் சோப்புக் குமிழிகள் போலான சின்னச் சின்ன சந்தோஷங்கள் தானே சார் ?! ஒரேயொரு ஜீவிதத்துக்கு ஏதேனுமொரு சிறு விதத்தில் உதவிட இயன்றால் கூட - அதனில் கிடைக்கக்கூடிய மெய்யான நிறைவு - வேறொரு உச்சமல்லவா ?
Deleteசிகப்பாய் ஒரு சிலுவை அட்டைப்படம் நன்றாக உள்ளது.
ReplyDeleteஅருமை சார்...நல்லுள்ளம் வழக்கம் போல பட்டய கிளப்புது...
ReplyDeleteமறு பதிப்பில் சிறிது ஏமாற்றமே....பழிக்கும் பழி நிச்சயமென எதிர்பார்த்தேன்....பரவால்லை சார்....
சூ மந்திர காளி அட்டைப் படம் அருமை...
E ரோட்டுக்கு எவ்வளவுக்கு சொன்னா இப்பவே அனுப்பிடுவோம்
ReplyDeleteசிகப்பாய் ஒரு சிலுவை 250
Deleteசூ மத்திரகாளி 100
கூரியர் 50
400 நீங்கள் அனுப்பவேண்டியிருக்கும் ஸ்டீல்
Tex ₹250 + lucky ₹100 + courier (அது மட்டும் எனக்கு தெரியாது) :-)
Deleteகொரியர் கட்டணம் எவ்ளோ சார்
Deleteநன்றி கிருஷ்.சார் 400 அனுப்பியாச்
DeleteSir donating INR 3000. I need a copy for my cousin who loves our comics.
ReplyDeleteDone sir !!!
Delete4 down.....
Delete9 புக்ஸ் மீதம் !!
சூப்பர்
Deleteசிரம்தாழ்ந்த நன்றிகள் நண்பரே...
Deleteடியர் சார் ,நாளை எனது பால்ய நண்பன் ஒருவன் வீட்டிற்கு வருகிறான்.
ReplyDeleteஅவனோடு அலவலாவவே நேரம் சரியாக இருக்கும்.
இந்த online-Ebook Fair -யை அடுத்த வாரம் ஒத்திவைக்க முடியாதா. சார்?".
"நண்பனே.. எனது உயிர் நண்பனே..
நீண்டநாள் பிரிவிது..
சார் ஏற்கனவே புத்தக லிஸ்ட் இருக்கிறது உங்களுக்கு தேவையானதை வாட்ஸப்பில் லயன் ஆபிசுக்கு அனுப்பிவிடுங்கள் அவ்வளவுதான் உங்களது அலவலாவள் தொடரலாம்.
Deleteநான் அவ்வாறே ஆர்டர் செய்துள்ளேன்
அட அவரையும் சேர்த்து அழைத்து வந்துவிடுங்கள் நண்பரே - இருவரும் சேர்ந்தே 30 நிமிடங்கள் நமது காமிக்ஸ்க்காக செலவிடலாமே ? It would be a surprise for him to see childhood books !
Deleteஅட இதுவும் நல்ல ஐடியா
Deleteஅவர் குறிப்பிடும் நண்பர் ரொம்பவே மறதிக்காரர் சார் !
Deleteகூரியர்காரர் வழி சொல்லி, நாளைக்கு சரியாகக் கூட்டிக் கொண்டு வந்தாரென்றால் மட்டுமே அளவளாவல்களுக்கு வாய்ப்பிருக்கும் !
Deleteஇல்லீங்களா சார் ?
Aaah புரிந்தது சார் ... மறதிகாரர் பலரை பிஸியாக்க போகிறார்
Deleteஆஹா..?i கூரியர்காரர் மறதிக்காரர் அல்ல. அவர் மாதமாதம் வீட்டிற்கு வருவர்தான்..வழி. மறக்காது..சார்..
Delete164வது
ReplyDeleteகாமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு...
ReplyDeleteஅன்பு ஆசிரியருக்கு 🙏
இந்த வாரம் மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி சார்.
புக் ஷோ,இரத்தப்படலம் வெளியீடு,லயன் 400,புக் ஃபேர் இதழ்கள் என.
சிகப்பாய் ஒரு சிலுவை யாரும் எதிர்பாராத விதமாக மறுபதிப்பு.💐
இது போன்ற மறுபதிப்புகள் தொடரவேண்டும்.
என்ன கூப்பாடு போட்டாலும், அதிக விலை கொடுத்து வாங்கும் வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஈரோடு விஜயன் சொன்னமாதிரி,
நேற்றுவரை லயன் ஸ்டாக்கில் உள்ளவை
இங்கு அதிக விலைக்கு விற்பனையானது வருத்தமே. ஸ்டாக் இல்லையென்றாலும் இது நடப்பது உறுதி.
மீண்டும் அடுத்த பதிவில் 🌹
சார்...விஜயனுக்கு ஜாகை சிவகாசி !
Deleteவிஜய்க்கு ஜாகை ஈரோடு !
@ ALL :
ReplyDelete5 down.....
8 புக்ஸ் மீதம் !!
I donate rs 1000 sir
DeleteAnd இது வரையிலும் கிட்டியுள்ள நன்கொடை ரூ.14000 !!!!
ReplyDeleteமுழுப் பட்டியல் ஞாயிறன்று !!
ஒருவருக்கு ஒரு புத்தகம் தானுங்களா?
Deleteஅந்திப் பொழுதில் துவங்கிய மழை கிரே மார்க்கெட் நண்பர்களின் பையில் விழுந்த பணத்தைப் போல கொட்டித் தீர்க்க வழக்கமான பணிச்சுமைகளில் இருந்து விடுதலை கிட்ட
ReplyDeleteஇம்மாத 3 இதழ்களையும் வந்து சேர்ந்த ஒரே நாளில் படித்து முடித்தாகி விட்டது ..
அறுபதாம் கல்யாணம் முடிந்தவனுக்கு சாந்தி ப்ராப்தி விவாஹ சடங்குகளை மேற்கொள்ள வேண்டிய சங்கடங்கள் இல்லாததைப் போல்
ரத்தப் படலத்தை கையில் ஏந்த வேண்டிய அவஸ்தை இல்லாததால் தோர்கலின் இறுதிப் பக்கங்களில் உள்ள ஆறு வித்தியாசங்கள் , நரியார் துப்பறிவது போன்றவற்றை கூட பார்க்க நேரம் இருந்தது..
விமர்சனங்கள் அடுத்த வாரத்தில்...
I donate 1000 Venkatraj.K
ReplyDeleteஈ-ரோடு ஸ்பெஷல் இதழுக்கு பதிவு பணம் 400 ரூபாய் கட்டியாச்சு
ReplyDeleteகூறியரை நேற்றே கைப்பற்றி விட்டேன். லயன் 400 அட்டைப்படத்தையும் பார்ப்பதிலேயே நேரம் சென்று விட்டதால் இன்று காலையில் தான் புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
ReplyDeleteஇரத்தப்படலம் wrapper அட்டையையும் அப்லோடு பண்ணுங்க சார்
ReplyDelete187???? என்ன கொடுமை சார் இது
ReplyDeleteலயன் 400 இதழ் அதகளம். அட்டையிலுள்ள வேலைப்பாடுகள் சும்மா டாலடிக்கின்றன! உள்ளே சித்திரங்கள் மிதமான வண்ணத்தில் கண்களை வருடுகின்றன. வழக்கத்தை விட இந்த முறை டபுள் திக்னஸில் கெட்டியான அட்டை. அப்புறம் perfect பைண்டிங் (மெஷின் பைண்டிங்?) வேற லெவல் சார். இதுப் போதுமே! அடுத்த மாதம் ஸ்டாக் காலியென்று போடு மாட்டிவிடலாம்?
ReplyDelete///உள்ளே சித்திரங்கள் மிதமான வண்ணத்தில் கண்களை வருடுகின்றன.///
Delete+111
டியர் எடி,
ReplyDeleteவார இறுதி வேளைகளை முடித்து வருவதற்குள் இத்தனை பின்னூட்டங்கள் போட்டு தாக்கிவிட்டார்கள் நண்பர்கள்.
அருமையான திட்டம், நன்கொடை. தெரிந்த நண்பர்களுக்கு அந்த 13 இதழ்களும் சென்றைடைந்தால், உண்மை தேவை இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் அது சென்று சேரும் என்று நம்பலாம்.
ஒரு வருட காலம் அறிவிப்பு, இடை இடை பதிவுகளில் நினைவூட்டல், தள்ளுபடியில் இதழ்கள், நண்பர்கள் பதிவு, இப்படி அனைத்தையும் மீள் காமிக்ஸ் ரசிகர்கள் தவறவிட்டு, பின்பு ஏலத்தில் ஏமாறுகிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. நான் குகையிலேயே வசிப்பேன், வெளியே வரும்போது எனக்கு ஒரு பிரதி கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்பது அதீத ஆசை.
ஏல கோஷ்டிகளை வீழ்த்த, 20 சதவிகிதம் கீழே செல்லும், விரைவாக விற்பனையாகும், புத்தகங்களை மட்டும் சத்தமே இல்லாமல் ரீப்ரின்ட் செய்வதே ஒரே தீர்வு. கூடவே, வெளியீட்டிற்கு பிறகு, இப்படி அதிகம் விற்பனையாகும் இதழ்களுக்கு, மொத்தமாக ரீ-ஆர்டர் வந்தால் அதை நிராகரியுங்கள்.
XIII, ஆன்லைன் புத்தக ஸ்பெஷல் அட்டை கனகச்சிதம். உடனே அனுப்புகிறேன் பணத்தை. Best of Luck, for Online Book Fair.
பெங்களூர் மழையில் சந்தா புத்தகங்களுக்கு இன்னும் காத்திருக்கிறேன்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSorry sir, but all the donations so far have been substantially higher.
Delete// லக்கியின் 75-வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் முதல் படி இது ! அடுத்த பெரிய படி, இந்த புக்கினுள்ளே விளம்பரமாய் இருக்கிறது !! So அதனை மட்டும் இப்போதைக்கு சஸ்பென்சாக விட்ட கையோடு கிளம்புகிறேன் !! // அந்த சஸ்பென்ஸ்க்காக ஆவலுடன் வெயிட்டிங் சார். பட்டையை கிளப்பப் போகிறது.
ReplyDeleteசார் வணக்கம். நான் முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் எல்லா கதைகளையும் படிக்கிறேன் படித்து கொண்டும் இருக்கிறேன் சார்.அதேபோல ராணி காமிக்ஸ் கதைகளையும் படித்து உள்ளேன்.ஆனால் இப்பொது ராணி காமிக்ஸ் புத்தகங்கள் கிடைப்பது இல்லை.நீங்கள் அந்த ராணி காமிக்ஸ் புத்தகங்களை மறுப்பதிப்பு செய்விர்களா? ஏங்களுடன் காமிக்ஸ் பிரியன் சார்...
ReplyDeleteஅம்மா உணவகத்தில் - அம்மா உணவகத்து மெனு மட்டுமே கிடைக்கும் நண்பரே ; அடையார் ஆனந்த பவனின் சரக்குகளை இங்கு எதிர்பார்ப்பானேன் ?
Delete//சிகப்பாய் ஒரு சிலுவை//
ReplyDeleteஅருமையான கதைத்தேர்வு சார்.. இதே சிறப்பிதழ்களில் வந்த நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பிரித்து மறுபதிப்புக்கு தேர்ந்தெடுங்கள் சார்.
மா டால்டன்
பனிக்கடல் படலம்
லக்கிலூக்கிற்க்கு கல்யாணம்
என....
புத்தம் புது பூமி வேண்டும் ஆரம்பத்தில் வழக்கம் போல நடுவழியில் துப்பாக்கி சத்தம். ஒருவர் கொல்லப்பட வழக்கம் போல'எதிர் பாராமல்' டெக்ஸ் & கோ தலையிட வழக்கம் போல சம்பவங்கள் வழக்கம் போல துப்பாக்கி சூடு சற்றே சோர்வுநேற கழமிறங்குகிறார் கார்சன். டெக்ஸ்:' இந்த குற்றச்சாட்டை அடுத்த ஒருநிமிசத்திற்குள் வாபஸ் வாங்கவில்லைஎன்றால்இவன் மகரையில் ஒற்றைப் பல்கூடமிஞ்சாது' -// கும் கார்சன்:ஏய் இது போங்குஆட்டம்ஒருநிமிசத்திற்குமுன்னரே முகரையில் குத்திவிட்டாய் முதலாலிசாரிடம் சாரி சொல்லிவிடு //அடுத்து ஸ்டோர் பணியாளிடம் சூனா. பாணா அவதாரம் எடுக்கிறார்//அட தயங்காமல்மனதில் உள்ளதைசொல்லுப்பா ஷெரீப்கூட இங்கே இருக்கிறாரில்லையா?நீதான் தைரியசாலியாச்சே? 130 பக்கங்களேவந்துள்ளேன் இத்தனை அதகளங்களுக்கும் தெளிவான காரணங்கள் இதுவரை சொல்லப்படவில்லைபூடகமாகவே சொல்லப்படுகிறது.இருந்தாலும் சுவாரஸ்யமாக உள்ளது. அக்மார்க் டெக்ஸ்ப்ராண்ட் சூப்பர் தல தல தான் டெக்ஸ் ரசிகர்களுக்கு செமவிருந்து கொண்டாடுவோம். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteSir I donate 1000 rupees
ReplyDeleteDonate Rs.1200
ReplyDeleteS.Gopalakrishnan, Chennai
அப்புறம்..விற்பனையில் முதலிடத்தைப் பிடிக்கும் டெக்ஸ் பதிப்பகத்தார் நமக்கு ரொம்ப குளோஸ் என்பதும் அள்ள அள்ளக்குறையாதபடி புதுக் கதைகள்
ReplyDeleteஇருப்பதும் எவ்வளவு சாதகமான விஷயம் சார்