Powered By Blogger

Saturday, July 03, 2021

ஒரு சலனம் போயிண்டே....its gone !!

 நண்பர்களே,

வணக்கம் ! First things first.....'வலது கை தருவதை இடது கை கூட அறியலாகாது' என்பதில் எனக்கும் உடன்பாடே ; ஆனால் இந்த ஒருமுறை தண்டோரா அடிப்பதில் தப்பில்லை என்று தோன்றுகிறது ! Simply becos இங்கே கொடுத்துச் சிவந்திருக்கும் கரங்களின் பெரும்பான்மை உங்களது ! இன்று காலை நமது காலஞ்சென்ற ஓவியர் மாலையப்பன் அவர்களின் மனைவியின் வங்கிக்கணக்குக்கு ரூ.75,000/- அனுப்பிட முடிந்துள்ளது என்பதைத் தெரிவிப்பது எனது சந்தோஷக் கடமை ! எதனில் இவ்வட்டம் சிறியதோ, இல்லியோ -  நேசங்களில் வானளாவியது என்பதை இன்னொருமுறை நிரூபித்து விட்டீர்கள் ;  A big round of THANKS guys !!

இதோ - ஜூலை பிறந்து விட்டது ; இன்னுமொரு பத்து நாட்களில் புது இதழ்களை டெஸ்பாட்ச் செய்திட வேண்டி வருமென்பதால் - பரபரப்பாய் அச்சுக்குத் தயாராகி வருகிறோம் ! ஒரு ஜாம்பவான்களின் சங்கமிப்பு மாதமாய் இந்த ஜூலை அமையவிருப்பதால், பணிகளில் ஒரு இனம்புரியா உற்சாகம் தொற்றிக் கொள்கிறதை இம்முறை நன்றாகவே உணர்ந்திட முடிந்தது தான் ! நமது காமிக்ஸ் முதல்வரும் ; கார்ட்டூன்களின் முதல்வரும் - லேடி ஜேம்ஸ் பாண்ட் + ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்டுடன் கரம் கோர்க்கும் வாய்ப்பு தினமும் அமைந்திடாது எனும் போது, ஜூலை 2021 ரொம்பவே ஸ்பெஷலான பொழுதாகிட வேண்டும் தான் ! And இதோ - காத்திருக்கும் முக்கூட்டணியினில் நீங்கள் இன்னமும் பார்த்திரா இதழின் அட்டைப்பட முதல்பார்வை : 

ஒன்றுக்கு இரண்டாய் தெறிக்கும் அட்டைப்படங்கள் அமையப் பெற்ற இந்த ஆல்பமானது, போன வருஷத்து லாக்டௌன் வேளையினில் தான் இத்தாலியிலேயே வெளியானது ! And நமக்கு மாமூலாய் வந்திடும் புது இதழ்கள் சார்ந்த newsletter-ல் பளீர் சித்திரங்களுடன் இது கண்ணில்பட்ட நொடியிலேயே டிக் அடித்து விட்டேன் - நடப்பாண்டினில் நமது அட்டவணையினில் இது இடம்பிடித்தே தீர வேண்டுமென்று ! ஒரு சினிமாவுக்குப் பாட்டுக்கள் சிறப்பாய் அமைந்துவிட்டாலே அது ஹிட்டடிக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்பது போல - நம்மைப் பொறுத்தவரையிலும் அட்டைப்பட சென்டிமென்டுக்கு மவுசு ஜாஸ்தி ! அந்த ஆங்கிளில் பார்த்தால் -பாயச அண்டாக்கள் பல குறுக்கிடினும், குழம்புக் குண்டாக்கள் பல தடை போடிடினும் -  "ஒரு பிரளயப் பயணம்" ஊர்ஜிதமான ஹிட்டே !  Because  இரட்டை ஆல்பங்களாய் வெளியான இந்த இதழ்களில் இருந்த 2 அட்டைப்படங்களுமே தீயாய் மிளிர்ந்தன ! எனக்கிருந்த கேள்வியோ - இவற்றுள் எதனை நமது முன்னட்டையாக்கிடுவது ? என்பது மாத்திரமே ! So நிறைய கோணங்களிலிருந்து முறைத்து முறைத்துப் பார்த்த பிற்பாடு - இனிஷியல் தலைவர்களைப் போல ஆளுக்கொரு திக்கில் க்ளோசப்பில் முறைத்துக் கொண்டிருந்த நம்மவர்களைத் தேர்வு செய்தேன் ! Hope my choice was right ! 

கதையைப் பொறுத்தவரையிலும் இதன் inspiration - நமது இம்மாதத்து இன்னொரு மஞ்சள் சொக்காய்க்காரரின் ஆல்பமாக இருந்திருக்கலாமோ ? என்ற கேள்வி எழாது போகாது ! ஆனால் காட்டாற்று வெள்ளத்துக்கு கரைகள் அனைத்துமே சொந்தம் தானே ; so காட்டாற்று வெள்ளமாய், காட்டாற்றின் நடுவே அரங்கேறும் இந்த சாகசத்தை செமையாய் நான் ரசித்தேன் ! And மாமூலாய் டெக்சின் பன்ச் வரிகளையும், கார்சனின் டயலாக்களையும் மாற்றி எழுதுவதோடு எடிட்டிங்கினுள் புகுந்திடும் எனக்கு, இம்முறை முழுசாகவே பேனா பிடிக்கும் வாய்ப்பும் தொற்றிக் கொள்ள, குஷியாய் ரவுண்டடித்தேன் ! சொல்லப் போனால், இம்மாதத்தின் கதைகள் ஐந்திலுமே சாலடித்துள்ளது எனது பேனாவே ! More on that later ! டெக்சின் இந்த ஆல்பத்தினில் நாயகராய் நான் பாவிப்பது அதன் ஓவியரையே ! CID ராபின் ஆல்பங்களுக்கு ; மேஜிக் விண்ட் ஆல்பங்களுக்கென நிறையவே வரைந்திருக்கும் Corrado Mastantuono இங்கே செய்திருக்கும் ஜாலங்கள் அதகளம் !! அந்தப் படகில் ஏறி இந்த மனுஷனும் டெக்ஸ் & கோ.உடன் பயணம் செய்திருப்பாரோ - என்னமோ ; போட்டோ எடுத்தது போல ஒவ்வொரு பிரேமையும் அமைத்து, சித்திரங்கள் போட்டுள்ளார் ! இம்மாத இதழ்கள் உங்கள் கைகளை எட்டிடும் போது - வாசிப்புக்கு எதனை முதலில் தேர்வு செய்திட உள்ளீர்களோ ; நம்ம கவுண்டர் பாஷையில் சொல்வதானால் - 'செம டெலிகேட் பொஷிஷன்' ! இந்த 220 பக்கங்களும் கண்ணுக்கு வழங்கும் அந்த விருந்து, நமது பாயசக்கார பாசக்காரர்களையுமே எழுந்து நின்று கரவொலி எழுப்பச் செய்யாது போனால் ஆச்சர்யம் கொள்வேன் ! இதோ பாருங்களேன் guys :  

So இம்மாதம் முதலில் தயாராகி, முதலாவதாய் அச்சும் பூர்த்தி கண்டுள்ளது 'தல' தாண்டவமே ! திங்களன்று ஒல்லியாரின் 2 ஆல்ப ஆண்டுமலர் அச்சுக்குப் புறப்பட்டிங்ஸ் ! இதன் கடைசி 2 பக்கங்களை மட்டும் ஒரு நப்பாசையினில் நிறுத்தி வைத்துள்ளேன் ; எதிர்பார்த்திடும் ஒரு அறிவுப்புக்கான வாய்ப்பு அமைந்திடுமா ? என்ற எண்ணத்தில் ! புதன் வரையிலும் காத்திருந்து பார்த்துவிட்டு அச்சினைப் பூர்த்தி செய்திடவுள்ளோம் ! 

ஆக எஞ்சியிருப்பது நமது பிரிட்டிஷ் க்ளாஸிக் நாயக / நாயகியரின் கூட்டணி இதழே ! நிஜத்தைச் சொல்வதானால் இது போன மாதமே வெளிவந்திருக்க வேண்டியதொரு இதழ் என்பதால் மே மாதமே என் மேஜையினில் அடைக்கலமாகியிருந்தது எடிட்டிங்கின் பொருட்டு ! மாடஸ்டிக்கு நமது கருணையானந்தம் அவர்களும் ; க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டுக்கு நமது புது வரவானதொரு சகோதரியும் பேனா பிடித்திருந்தனர் ! லாக்டௌன் புண்ணியத்தினில் ஜூன் மாதத்தில் ஒரு புக் கல்தா கண்டிட, THE B & B ஸ்பெஷல் ஜூலைக்கு நகன்றதால் - "அப்பாலிக்கா பார்த்துக்கலாமே ?!" என்று ஓரம்கட்டியிருந்தேன் ! ஒரு மாதிரியாய் அச்சுக்கு ரெடி செய்திடும் பொருட்டு பக்கக்கதைகளைத் தூக்கிக் கொண்டு போன ஞாயிறே பணிகளை ஆரம்பித்தேன் ! 

ஆனால்...ஆனால்...லாக்டௌன் சோம்பல்களின் உபயமா ? அல்லது ஏறிக்கொண்டே போகும் வயதின் பலனான மந்தமா ? - அல்லது முத்து ஆண்டுமலர் 50-க்கென ஒரு வண்டிப் பணிகள் குவிந்து கிடக்கையில், இங்கே இவற்றுள் பொழுதுகள் ஓட்டமெடுக்கின்றனவே ? என்ற ஆதங்கத்தின் பலனான தடுமாற்றமா ?  - சொல்லத்தெரியவில்லை ; ஆனால் எடிட்டிங்கில் எக்கச்சக்க மொக்கை போடும்படியாகிப் போனது ! மாடஸ்டியின் கதைகளிலும் சரி, 007-ன் கதைகளிலுமே சரி, ஒருவித வறண்ட நகைச்சுவையுணர்வு வரிகளில் இழையோடுவது வாடிக்கை ! அவற்றை இயன்றமட்டுக்கு தமிழுக்கும் கொணர்ந்தாலொழிய இரு தொடர்களின் நிஜ முகம் நம்மை எட்டாது என்பது எனது நம்பிக்கை ! இம்முறை புதியவரும் சரி, மூத்தவரும் சரி - அதனில் நிறையவே மாற்றங்களுக்கு இடம் தந்திருப்பது பக்கங்களைப் புரட்டப் புரட்டப் புரிந்தது ! மாடஸ்டி கதைகளில் எப்போதுமே வசனங்களும் எக்கச்சக்கமுண்டு ; so திருத்தங்களை போட ஆரம்பித்தால் அவை மெகா சீரியல்களாய் நீள்வது தவிர்க்க இயலாது ! So பேஸ்தடித்தபடிக்கே மொக்கை போட்டேன் ; போட்டேன் ; இந்த வாரத்தின் பாதி வரையிலும் மொக்கை போட்டேன் ! "அப்டியே இருந்திட்டுப் போட்டுமே !' என்று கூட நினைப்பு ஓடியது உள்ளுக்குள். ஆனால் இப்போதுதான் சமீபமாய் - "இளவரசிக்கு ஒரு நிரந்தர ஸ்லாட் உண்டு " என்று பகுமானமாய் அறிவிக்கவும் செய்திருந்தேன் ; இந்த நிலையில் சோம்பலின் காரணமாய் நகாசு வேலைகளில் நான் குறை வைத்தால் - பக்கத்திலேயே இன்னொரு பொங்கப்பானையை ஏற்றி இளவரசிக்கு கச்சேரிகளை ஆரம்பிக்க மேச்சேரிகளிலும், இன்னபிற ஸ்தலங்களிலும் தன்னார்வலர்கள் அணிதிரள்வது உறுதி என்றுபட்டது ! So புதன் ராவின் முக்கால் பங்குக்கு முழித்திருக்க வேண்டிப் போனது - தேவையான சகலன்களையும் மாற்றி எழுதிட ! Phew... என்றபடிக்கே வியாழன்று ஜேம்ஸ் பாண்டுக்குள் புகுந்தால் - புதிய பேனா ஏகமாய் கோட்டைகளும், ஓட்டைகளும் விட்டிருப்பதைக் கண்டு நாக்குத் தொங்கிப் போனேன் ! இதோ - இந்த சனிக்கிழமை அதிகாலை வரையிலும் ஜவ்வு இழுத்து விட்டது அதன் முழு மாற்றங்களுடனான ஸ்கிரிப்ட்தனை ரெடி பண்ணிட ! And இன்று பகல் முதல் மறு டைப்செட்டிங் வேலைகள் துவங்கியுள்ளன - அம்மணி ஜேம்ஸ் பாண்ட் + அய்யா ஜேம்ஸ் பாண்ட் ஆல்பங்களில் ! செவ்வாயாகிடுமென்று நினைக்கிறேன் - இரண்டும் பூர்த்தி கண்டிட ; so வாரத்தின் நடுவாக்கினில் அவை அச்சுக்குச் சென்றால் ஜூலை பணிகளுக்கு "சுபம்" போட்டிட முடிந்திருக்கும் ! Fingers crossed ! 

                                                            
                                                     JAMES BOND CLASSIC :

இங்கே இன்னொரு ஜாலியான சமாச்சாரமுமே சொல்லத்தோன்றுகிறது ! எனது இளம் பிராயத்துக் கனவு - இந்த கிளாசிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை எப்படியேனும் வெளியிட்டாகணும் என்பது ! நிறையவாட்டி இது பற்றிச் சொல்லியிருப்பேன் தான் ! அன்றைக்கு ராணி காமிக்சில் 007 கதைகளைக் கொத்திக் கொண்டு போயிருக்க, எனக்கோ மாடஸ்டியோடு மனசைத் தேற்றிக் கொள்ள வேண்டிப் போயிருந்தது ! "ச்சீ..ச்சீ..என்ன ஜெமுசு..நம்ம லேடி பாண்ட் எவ்ளோவோ தேவலை !" என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டாலும், உள்ளுக்குள் "பருப்பு வடை போச்சே !! மீந்திருந்த சுசியத்தோடே குப்பை கொட்டுறா மாதிரி ஆகிப் போச்சே !" என்ற கவலை இருக்கவே செய்தது ! ஆனால்...ஆனால்....கிட்டத்தட்ட 37 வருஷங்களுக்கு அப்பால் - அய்யாவையும், அம்மணியையும் ஒரே வாரத்தினில் எடிட் செய்யும் வாய்ப்பு கிட்டியுள்ள பொழுதினில் என்னுள் உறங்கிக்கொண்டிருந்த அந்தக் கவலையை நிரந்தரமாய் துயில் கொள்ளச் செய்திட முடிந்துள்ளது ! எப்படி என்கிறீர்களா ? இம்மாதத்து 2 கதைகளையும் நேருக்கு நேர் ஒப்பீடு செய்திட சாத்தியமாகிட்ட பொழுதில் தான் புரிந்தது - மெய்யாலுமே நம்ம இளவரசி தரப்பில் தான் சரக்கு ஜாஸ்தி என்பது ! இம்முறை காத்துள்ள மாடஸ்டி சாகசம் - மெய்யாகவே சமீபத்தைய சுமார் ரகங்களிலிருந்து மாறுபட்டுள்ளது & சித்திரங்களுமே பளிச் ரகம் ! அதன் முன்னே - ஜேம்ஸாரின் கதையினில் ஆழம் குறைவாய்த் தென்பட்டது போலிருக்க, 'சும்மா தோணுது டோய் !' என்று நினைத்திருந்தேன். ஆனால் 007 கதையோடு கடந்த 2 நாட்களும் பயணித்ததில் தான் எனது அனுமானம் மெய்யே என்று புரிந்தது ! Man to Woman - இம்மாதத்து மோதலில் ஜெயம் நமது முதல் நாயகிக்கே - at least என்மட்டிலாவது  ! So 37 ஆண்டுகளாய் உள்ளுக்குள் இருந்ததொரு சலனம் இன்றைக்கு போயிண்டே ; போயே போச்சு !! 

And as I said - இது முழுக்கவே எனது எண்ணம் மாத்திரமே ! உங்கள்மட்டில் இந்த க்ளாஸிக் 007 vs மாடஸ்டி என்ற போட்டியினில் கெலிப்பது யாரென்றும் அறிந்திட ஆவல் guys !!

So உற்சாகமாய் கிளம்புகிறேன் guys - திண்டுக்கல் டிக் அவதாரத்தை தவிர்க்கச் செய்யும் நோக்கிலான அந்தப் பணியினுள் மூழ்கிட ! Bye all ...see you around ! Have a Safe weekend !!

Memes by MKS Ramm :







154 comments:

  1. படிச்சுட்டு வர்றேன்

    ReplyDelete
  2. Eagar for the July and August issues - most of them would be superhits !

    ReplyDelete
  3. // நமது காலஞ்சென்ற ஓவியர் மாலையப்பன் அவர்களின் மனைவியின் வங்கிக்கணக்குக்கு ரூ.75,000/- அனுப்பிட முடிந்துள்ளது என்பதைத் தெரிவிப்பது எனது சந்தோஷக் கடமை ! //

    மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. இளவரசியின் கதைகளில் இழையோடும் உயிரோட்டத்தை அந்த க்ளாஸிக் பாண்ட் கதைகளில் காணமுடியாது சார்.

    ReplyDelete
    Replies
    1. Adhu namma kannu poruththa vishayam podiyan ;-) :-D

      Delete
    2. ஆமா சகோதரரே... இரண்டுமே கண்களுக்கு 'கலைக்' காட்சிகளைத் தரும் படைப்புகள்தான்... :-)

      Delete
  5. டெக்சின் அட்டைப்படமே பிரளயம் போல இருக்கிறது...

    பொதுவாகவே எனக்கு லக்கி லூக் & மாடஸ்டி பிடிக்கும்..

    அதகள காம்போ இம்மாதம்..

    அனைத்து கதைகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. /// நேருக்கு நேர் ஒப்பீடு செய்திட சாத்தியமாகிட்ட பொழுதில் தான் புரிந்தது - மெய்யாலுமே நம்ம இளவரசி தரப்பில் தான் சரக்கு ஜாஸ்தி என்பது ! ///

    சங்கத்துகாரவுகளும் அதைத்தானே சொல்றாக...

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  8. அனைவருக்கும் வணக்கம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க...

    ReplyDelete
  9. //உங்கள்மட்டில் இந்த க்ளாஸிக் 007 vs மாடஸ்டி என்ற போட்டியினில் கெலிப்பது யாரென்றும் அறிந்திட ஆவல் guys !!//

    வணக்கம் சார்,
    அன்றைய பிசி நாட்களில் நீங்கள் ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் கதை படிக்கவில்லை போலும்,
    இம்மாத 007 கதை படித்த நினைவு எனக்கு உள்ளது... சந்தேகமில்லாமல் "மெய்யாலுமே நம்ம லேடி சூப்பர் ஸ்டார் இளவரசி தரப்பில் தான் சரக்கு ஜாஸ்தி.".. அன்றும் இன்றும்...

    ReplyDelete

  10. // நமது காலஞ்சென்ற ஓவியர் மாலையப்பன் அவர்களின் மனைவியின் வங்கிக்கணக்குக்கு ரூ.75,000/- அனுப்பிட முடிந்துள்ளது என்பதைத் தெரிவிப்பது எனது சந்தோஷக் கடமை ! //

    மிகவும் மகிழ்ச்சி சார். நண்பர்கள் வட்டம் 'மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது' என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணமாக்கியுள்ளது. நன்றி நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. This is amazing sir - hope it gives some solace to the family in these tough times

      Delete
  11. ! Simply becos இங்கே கொடுத்துச் சிவந்திருக்கும் கரங்களின் பெரும்பான்மை உங்களது ! இன்று காலை நமது காலஞ்சென்ற ஓவியர் மாலையப்பன் அவர்களின் மனைவியின் வங்கிக்கணக்குக்கு ரூ.75,000/- அனுப்பிட முடிந்துள்ளது என்பதைத் தெரிவிப்பது எனது சந்தோஷக் கடமை ! /////

    மிக்க சந்தோஷம். கொடுத்து உதவிய கொடைவள்ளல்கள் கர்ணன்களுக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

      Delete
  12. இம்மாத ஜேம்ஸ் பாண்ட் 007 ராணி காமிக்ஸில் வெளிவந்த "" இரத்தக்காட்டேறி மர்மம் "" என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  13. நமது இலயனின் பத்தாவது ஆண்டு மலர் "மந்திர மண்ணில் மாடஸ்டி"க்குப் பின்பு மீண்டும் மாடஸ்டி,ஆண்டு மலர் மாதத்தில் இணைவது இந்த வருடத்தில் தான் என்று நினைக்கின்றேன் சார்.ஒப்பீட்டளவில் ஜேம்ஸைக் காட்டிலும் மெய்யாலுமே நம்ம இளவரசிக்குத்தான் சார் சரக்கு ஜாஸ்தி.
    அந்நாட்களில் ராணி காமிக்ஸில் வந்த மாடஸ்டியின் "முகமூடிப் பெண்" மீண்டும் நமது இலயனில் வந்தால் நன்றாக இருக்கும் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒரு முறை மட்டுமே அதற்கு பிறகு ஆண்டுமலர் மாதத்தில் மாடஸ்தி சாகசம் செய்தது நண்பரே!
      33வது லயன் ஆண்டுமலராக வந்த
      லயன் 300- கியூபா படலத்தில் "சிறையில் ஒரு சிட்டுக்குருவி"-என்ற மாடஸ்தி கதை இடம் பெற்று இருந்தது.

      Delete
  14. Simply becos இங்கே கொடுத்துச் சிவந்திருக்கும் கரங்களின் பெரும்பான்மை உங்களது ! இன்று காலை நமது காலஞ்சென்ற ஓவியர் மாலையப்பன் அவர்களின் மனைவியின் வங்கிக்கணக்குக்கு ரூ.75,000/- அனுப்பிட முடிந்துள்ளது என்பதைத் தெரிவிப்பது எனது சந்தோஷக் கடமை

    ####

    உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. க்ளோசப்பில் முறைத்துக் கொண்டிருந்த நம்மவர்களைத் தேர்வு செய்தேன் ! Hope my choice was right !

    #####

    ரைட் சார்....:-)

    ReplyDelete
    Replies
    1. அவங்க இரண்டு பேரும் முறைக்கிற மாதிரி தெரியவில்லை:-) ஆவேசமாக கத்துவது போல் இருக்கிறது.

      Delete
  16. Man to Woman - இம்மாதத்து மோதலில் ஜெயம் நமது முதல் நாயகிக்கே - at least என்மட்டிலாவது ! So 37 ஆண்டுகளாய் உள்ளுக்குள் இருந்ததொரு சலனம் இன்றைக்கு போயிண்டே ; போயே போச்சு !!

    #####


    :-)

    ReplyDelete
  17. டெக்ஸின் சித்திரம் மட்டுமல்ல இளவரசியின் சித்திரமும் அள்ளு..:-)

    ReplyDelete
  18. // கடைசி 2 பக்கங்களை மட்டும் ஒரு நப்பாசையினில் நிறுத்தி வைத்துள்ளேன் ; எதிர்பார்த்திடும் ஒரு அறிவுப்புக்கான வாய்ப்பு அமைந்திடுமா ? //

    என்ன சார். சஸ்பென்ஸ் தாங்கவில்லை. சீக்கிரம் சொல்லுங்கள்.

    ReplyDelete
  19. ஜேம்ஸ் மற்றும் மாடஸ்டி கதை இரண்டிலும் உட்பக்க டீசர் பக்கங்கள் அருமை. ஓவியங்கள் செம மாஸ் இந்த முறை.

    ReplyDelete
  20. டெக்ஸ் அட்டை படத்தில் இரண்டு பேரும் ஏம்பா அலறுராங்கப்பா ? ஏதாவது கடித்து விட்டதா :-) ரெடி ஸ்டார்ட் மீயூசிக் :-)

    அட்டைப்படம் இந்த முறை வித்தியாசமாக கதையின் தலைப்புக்கு ஏற்றமாதிரி கதையை சொல்வது போல் உள்ளது. கருப்பு வெள்ளை ஓவியங்கள் வேறு லெவல். நன்றாக உள்ளது.

    ReplyDelete
  21. // 37 ஆண்டுகளாய் உள்ளுக்குள் இருந்ததொரு சலனம் இன்றைக்கு போயிண்டே ; போயே போச்சு !! //

    மிகவும் மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
  22. சார் அட்டைப்படம் ச்சும்மா பட்டாசா தெறிக்குது...இரண்டு பக்கமும் முழு அட்டைப் படங்கள் அதகளம்...வருங்காலங்களிலும் இது போல் அமைந்தால் அழகு....இது வர வந்ததிலேயே டாப் டக்கர் இதான் . காட்டாறு எனும் வார்த்தையை உச்சரிக்கும் போதே உற்ச்சாகம் பரபரப்பாய் எட்டிப்பார்க்கும்...கதையினூடே பாயும் காட்டாற்றைக் காணக் கட்டுக்கடங்காத ஆயிரமாயிரம் கண்களின் ஆவலோடு நானுமே !
    மாடஸ்டி ஓர் பக்கம் தெறிக்குது...

    வாராயோ பத்து நாளே
    தாராயோ கதைகளே...

    ReplyDelete
  23. ஒன்றுக்கு நான்கு அதகள ஹூரோக்களின் அணிவகுப்பில் சந்தோஷ திணறல் நம் நண்பர்களுக்கு இந்த மாதம்...

    என் நினைப்பெல்லாம் B&B மேலேயே இருக்கு புதிய அமைப்பு அட்டகாசமாக வந்துள்ளது....

    ReplyDelete
  24. Corrado Mastantuono பணியாற்றிய 'நில்... கவனி. சுடு...., ஒவியங்கள் கதைக்கு வலு சேர்ப்பதாகவேயிருந்தது. அந்த கீச்சலான பாணி சித்திரங்கள் இங்கே விவாதங்களாக்கியதால் அதற்கு அப்புறம் அவரது படைபுக்கள் இங்கே தலைக் காட்டவில்லை.

    ஆனால், இந்த முறை நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஓவியர் Corrado Mastantuono கைவண்ணத்தில வரவிருக்கும் டெக்ஸ்ஸின் கதைக்காக ஆவலுடன் waiting.

    ReplyDelete
    Replies
    1. சித்திரத் தரங்கள் விமர்சனங்களுக்கு உள்ளானதால் இவரது கதைகள் தேர்வாகவில்லை என்பது தவறான அனுமானம் சார் ; இவரது டெக்ஸ் ஆல்பங்கள் எண்ணிக்கையில் குறைச்சலே என்பதே அதன் காரணம். இதோ காத்திருக்கவும் டெட்வுட் டிக் கூட இவரது கைவண்ணம் தான் ! இவர் பிரதானமாய் ராபின் தொடரிலும், டிஸ்னி கார்ட்டூன்களிலுமே பணியாற்றியுள்ளார் !

      நான் தவிர்க்க முனையும் ஒரே டெக்ஸ் ஒவியர் Giovanni Ticci மாத்திரமே !

      Delete
  25. //இதன் கடைசி 2 பக்கங்களை மட்டும் ஒரு நப்பாசையினில் நிறுத்தி வைத்துள்ளேன் ; எதிர்பார்த்திடும் ஒரு அறிவுப்புக்கான வாய்ப்பு அமைந்திடுமா ? என்ற எண்ணத்தில் ! புதன் வரையிலும் காத்திருந்து//

    என்னவா இருக்கும்?? புது நாயகர்/நாயகி??
    அல்லது ஆல்டபரான் கதை அறிவிப்பு?? :-))

    ReplyDelete
  26. \\அது என்ன மாயமோ உன் பெயரை உச்சரித்தாலே டாக்டர்களுக்கு நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க ஆரம்பித்து விடுகிறது//

    \\மறக்கவியலா டாக்டர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது//

    சும்மாவே இந்த டாக்டர்களை கையில் பிடிக்க முடியாது.நீங்களும் உசுப்பேத்தி விடுகிறீர்கள். வாழ்த்துக்கள் சார்.😂😂😂 வசனம் ரசிக்கக் கூடிய வகையில் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சார், வர வர வசனங்களில் உங்கள் குசும்பு அதிகமாகி வருகிறது.

      Delete
  27. >>இதன் கடைசி 2 பக்கங்களை மட்டும் ஒரு நப்பாசையினில் நிறுத்தி வைத்துள்ளேன் ; எதிர்பார்த்திடும் ஒரு அறிவுப்புக்கான வாய்ப்பு அமைந்திடுமா ? என்ற எண்ணத்தில் ! புதன் வரையிலும் காத்திருந்து பார்த்துவிட்டு அச்சினைப் பூர்த்தி செய்திடவுள்ளோம் !

    முன்னோரு முறை யாரும் எதிர்பார்த்திடாத இன்னோரு மொழியில் நமது comics வெளியிட try பண்ணுவதாக சொன்ன ஞாபகம்.
    ஒரு வேளை அதுவாக இருக்குமோ???
    English? Hindi?🤔🧐

    ReplyDelete
    Replies
    1. லக்கி 75 பற்றிய அறிவிப்பாக இருக்கலாம்:-)

      Delete
    2. லக்கி 75 பற்றிய அறிவிப்பாக இருக்கலாம்:-) இதுதான் சரி என்று நினைக்கிறேன். சூப்பர் பரணி

      Delete
    3. லக்கி 75 பற்றியதுனா எடிட்டர் சாரே முடிவு செய்வதுதானே நண்பர்களே!

      வேறு ஏதேனும் ஒரு கன்ஃபர்மேசன் கிடைக்கனும் என்பதால் தானே இந்த கடைசி நிமிட அவகாசத்தை எடுத்துக் கொண்டிருக்க வேணும்... அதற்கும் வாய்ப்பு கணிசமாக இருக்கிறது தானே!

      ஆன்லைன் ஆகஸ்ட்டு புத்தக விழா சிறப்பிதழ் பற்றியதாக இருக்கலாமோ???

      Delete
    4. அதுவும் தான் இதுவும் தான் :-)

      Delete
    5. இரண்டு முழு வண்ண பக்கங்கள் அறிவிப்புக்கென்று ஒதுக்கி இருப்பது யோசிக்க வைக்கிறது.

      எடி சார் clue குடுப்பாரா ?

      Delete
    6. ஆன்லைன் புத்தகத் திருவிழா சிறப்பிதழ் பற்றிய செய்தி அதில் ஒரு லக்கி லூக் 75 ஸ்பெஷல் மற்றும் ஒரு புதிய கதை அதற்கு தான் ஆசிரியர் வெயிட் செய்கிறார் என நினைக்கிறேன் :-)

      Delete
  28. ///காட்டாற்று வெள்ளமாய், காட்டாற்றின் நடுவே அரங்கேறும் இந்த சாகசத்தை செமையாய் நான் ரசித்தேன் ! And மாமூலாய் டெக்சின் பன்ச் வரிகளையும், கார்சனின் டயலாக்களையும் மாற்றி எழுதுவதோடு எடிட்டிங்கினுள் புகுந்திடும் எனக்கு, இம்முறை முழுசாகவே பேனா பிடிக்கும் வாய்ப்பும் தொற்றிக் கொள்ள, குஷியாய் ரவுண்டடித்தேன்///

    சூப்பர் சார்!! 'தல'ன்னாலே எங்களுக்கும் ஏக குஷி தான்! ஆவலுடன் வெயிட்டிங்!

    கூடவே, இரட்டை ஆல்பங்களோடு லக்கியின் ஆண்டு மலரைக் கையில் ஏந்தப் போவதை நினைத்தால் குஷி இன்னும் எகிறுகிறது!

    B&B யும் அசத்தப் போவதாகத் உள்ளுணர்வு சொல்கிறது!!

    ReplyDelete
  29. சூப்பர் ஸ்டார்கள் நால்வரின் வரவு நல்வரவாகுக!��

    ReplyDelete
  30. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  31. இந்த வாரம் - டைகர் வாரம்!

    மின்னும் மரணம் - 11
    தங்கக் கல்லறை - 2
    இரத்தக் கோட்டை - 5
    தோட்ட தலைநகரம் - 1

    மறு வாசிப்பு முடிச்சாச்சு!

    அடுத்து இரும்பு கை எந்தன், இரத்தத்தடம் படிக்கப் போறேன்!!!

    ReplyDelete
    Replies
    1. படிங்க நல்லா படிங்க. அப்படியே அந்த கதைகளின் விமர்சனம் போடுங்க.

      Delete
    2. என்சாமி... எஞ்சாயி....🌹

      டெக்ஸ் வாரமும் ஒரு தடவை இருக்கலாமே மிதுனரே!😉

      Delete
  32. // இன்று காலை நமது காலஞ்சென்ற ஓவியர் மாலையப்பன் அவர்களின் மனைவியின் வங்கிக்கணக்குக்கு ரூ.75,000/- அனுப்பிட முடிந்துள்ளது என்பதைத் தெரிவிப்பது எனது சந்தோஷக் கடமை ! //

    அருமை,அருமை...

    ReplyDelete
  33. // இன்னுமொரு பத்து நாட்களில் புது இதழ்களை டெஸ்பாட்ச் செய்திட வேண்டி வருமென்பதால் //
    ஜூலை நடுவாக்கில் ஜூலையில் ஜூலை...

    ReplyDelete
  34. // ஒரு பிரளயப் பயணம்" ஊர்ஜிதமான ஹிட்டே ! Because இரட்டை ஆல்பங்களாய் வெளியான இந்த இதழ்களில் இருந்த 2 அட்டைப்படங்களுமே தீயாய் மிளிர்ந்தன ! எனக்கிருந்த கேள்வியோ - இவற்றுள் எதனை நமது முன்னட்டையாக்கிடுவது ? //
    முன்,பின் என இரு அட்டைகளுமே கலக்கலாய் அமைந்துள்ளன சார்,டெக்ஸ் இதழை பார்த்தாலே ஒரு மகிழ்ச்சி தொற்றிக் கொள்கிறது...
    வாசிப்பையும்,பொழுதையும் இனிமையாக்குவதற்கு இன்னுமொரு தருணம் வாய்த்து விட்டதென...

    ReplyDelete
  35. // அந்தப் படகில் ஏறி இந்த மனுஷனும் டெக்ஸ் & கோ.உடன் பயணம் செய்திருப்பாரோ - என்னமோ ; போட்டோ எடுத்தது போல ஒவ்வொரு பிரேமையும் அமைத்து, சித்திரங்கள் போட்டுள்ளார் ! //
    ஆவலுடன் ஒரு காத்திருப்பு...

    ReplyDelete
  36. ஒரு சலனம் போயிண்டே....its gone !! - அமிர்தாஞ்ஜன் :-)

    ReplyDelete
  37. மாடஸ்டிக்கு நிரந்தர ஒரு இடம் -ங்கறது ஏதோ

    ஐநா சபையில பாதுகாப்பு கவுன்சில்ல இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைச்ச மாதிரி சந்தோஷம்..

    ஒரு ஸ்லாட் உறுதின்னா மகிழ்ச்சி ..அது வாசகர் ஓட்டெடுப்பினால் அப்டிங்கறது ரெட்டை மகிழ்ச்சி..


    B & B-ல பாண்டுக்கு கூட TANGIER -லேர்ந்து ஃபோன் வருது (டாஞ்சியர் மாடஸ்டியின் முன்னாள் நெட்வொர்க்கின் பிறப்பிடமல்லவா)

    ReplyDelete
    Replies
    1. ///
      ஐநா சபையில பாதுகாப்பு கவுன்சில்ல இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைச்ச மாதிரி சந்தோஷம்..//

      --- நீங்க , டாக்டர்AKK, பார்த்தி சகோ& ஏனைய மருத்துவர்கள் மகிழ்வாங்கனா ஒரு ஸ்லாட்டு என்ன இரு ஸ்லாட்டே தரலாம். இரு ஸ்லாட் என்ன ஒரு குண்டு புக்கே தரலாம். குண்டு புக் என்ன ஒரு தனி தடமே சந்தாவில் தரலாம்......

      ஆனா பாருங்க சந்தாவின் மற்ற நண்பர்கள் பொருட்டு ஒரு புக்கோடு நிறுத்திகிடலாம்.😉

      Delete
    2. //ஆனா பாருங்க சந்தாவின் மற்ற நண்பர்கள் பொருட்டு ஒரு புக்கோடு நிறுத்திகிடலாம்.😉//


      :-)))

      Delete
  38. ஞாயிறு நண்பகல் வணக்கங்கள்

    ReplyDelete
  39. டெக்ஸ் அட்டை அசத்துகிறது.

    ReplyDelete
  40. மாடஸ்டி Vs ஜேம்ஸ்பாண்ட்... Super....

    ReplyDelete
  41. எடி சார்...நான் இந்த மாதம் விடுமுறைக்கு ஊருக்கு செல்லவதால் இந்த மாத புத்தகங்களை மட்டும் வேறு முகவரிக்கு அனுப்ப இயலுமா.

    ReplyDelete
    Replies
    1. முடியும். நாளை நமது காமிக்ஸ் அலுவலகத்திற்கு போன் செய்து விபரம் சொல்லி புதிய முகவரியை கொடுங்கள். நீங்கள் சொல்லும் முகவரிக்கு இந்த மாத புத்தகங்களை அனுப்பி வைப்பார்கள். நான் இதுபோல் சில முறை செய்து இருக்கிறேன்.

      Delete
    2. நான் பல முறை செய்து இருக்கிறேன்.

      Delete
    3. உங்கள் சந்தா எண் இப்போதைய முகவரி அனுப்பி confirm செய்து கொள்ளுங்கள்.

      Delete
    4. நன்றி நண்பர்களே..

      Delete
  42. " இதன் கடைசி 2 பக்கங்களை மட்டும் ஒரு நப்பாசையினில் நிறுத்தி வைத்துள்ளேன் ; எதிர்பார்த்திடும் ஒரு அறிவுப்புக்கான வாய்ப்பு அமைந்திடுமா ? என்ற எண்ணத்தில் "

    சுஸ்கி விஸ்கி Digest ஆ இருக்குமோ 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  43. Enakku tex rommmbba pidikkum...��
    Lucky luke rommmmmbba pidikkum...��
    Modesty-um rommmbba pidikkum.. aanaal naan doctor illai.. thozhilathiparum illai����

    ReplyDelete
  44. இம்மாதம் முதல் இடத்திற்கான போட்டி இரு மஞ்சள் சட்டைக்கு இடையே கடுமையாக இருக்கும் போல் தோன்றுகிறது. Waiting.

    இவ்வாண்டில் இதுவரை வந்த கதைகள் பத்து. படித்து முடித்த பின் அடையும் திருப்தியின் அடிப்படையில் வரிசை படுத்தப்பட்டுள்ளது.

    1. இனியெல்லாம் சுகமே/ரணமே - 9/10

    மிக நீண்ட இடைவெளிக்கு பின் ப்ளுகோட்ஸ் அடித்திருக்கும் சிக்ஸர். சிவிலியன்களுக்காக இரு தரப்பும் சேர்ந்து நகரை புணரமைப்பது செம. பாழாய் போன யுத்தம் - இம்முறை நிறையவே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

    2. கழுகு வேட்டை - 9/10

    மறுபதிப்பு என்றாலும் மிரட்டும் அட்டைப்படம், வாசகர் புகைப்படம், ராக்கெட் வேக கதை, ஷார்ப்பான சித்திரங்கள், அசத்தும் கலரிங், குரூரம் கொப்பளிக்கும் வில்லன், தயாரிப்பு தரம் என அட்டை டூ அட்டை மிளிர ஒரு சில வெளியீடுகளுக்கே சாத்தியம். அவ்வகையில் இரவுக்கழுகார் செமயாக ஸ்கோர் செய்திருக்கிறார். க்ளைமாக்ஸை அனைத்திற்கும் காரணமான அந்த கடிகாரத்தை கொண்டும், அது தாமதமாக எழுப்பும் ஒலியைக் கொண்டும் முடித்திருப்பது நிறைவு.

    3. காற்றில் கரைந்த கலைஞன் - 9/10

    ஜானி கதைகளில் வரும் மாறுபட்ட சித்திரங்கள், பளீச் கலரிங் & பரபரப்பான கதையோட்டம்.இவையே போதும் கரை சேர்க்க. இம்முறை கூடுதல் வேகத்தில் கதை ஓட்டமெடுக்க வெற்றி எளிதாகிறது.
    யூகிக்க முடிந்தாலும் சேஸிங்கில் ஆம்புலன்சிலிருந்து தள்ளிவிடப்பட்ட டெட்பாடி செட்டப் நல்ல கற்பனை.

    4. நெஞ்சே எழு - 8.5/10

    இந்த கதையில் டெக்ஸ் இருக்கும் இடத்தை காட்டிலும் டெக்ஸ் இல்லாத அந்த ஜெயில் கடத்தல் சம்பவங்கள் படு சுவாரஸ்யம். மறுபடியும் நார்மலான தடத்தில் பயணித்து, அதே ஒற்றைக்கு ஒற்றை சண்டையில் முடிந்தாலும், ஒற்றைக்கு ஒற்றை சண்டையில் ஒருவருக்கு பின்னால் ஒளிந்து கொண்டு சுடுவது புது கபட யுக்தி. தலைப்பை மாற்றி இருக்கலாம்.

    5. ரௌத்திரம் கைவிடேல் - 8.5/10

    மூன்றில் இரண்டாவது பாகம் மற்ற இரண்டைக் காட்டிலும் தூக்கல் ரகம். Action sequence இத்தொடரில் நன்றாக கையாளப்பட்டிருக்கும். இக்க்தையிலும் தொடர்கிறது. தொடரை பாதியில் ஏன் நிறுத்தினார்களோ படைப்பாளிகள். நமது தரப்பில் ஒரு சில பக்கங்கள் ஒதுக்கி சின்ன farewell கொடுத்திருக்கலாம். ஆனால் ஹாட்லைனில் கூட இதை பற்றி ஆசிரியர் ஒரு வரி கூட எழுதவில்லை என்பது சிறு வருத்தமே. Well-done, டியுராங்கோ.

    6. ஒரு தோழனின் கதை - 8.5/10

    இக்கதையை தேவையான அளவு அலசி விட்டதால் ஒற்றை வரியோடு கடந்து செல்கிறேன். நமது பலமே variety தான். எதுமாதிரியும் இல்லா புது மாதிரியிலும் ஒரு மாதிரி ரசிக்க முடிவது உண்மை.

    7. நித்தமும் உந்தன் நிழலில் - 8/10

    வரும் காலங்களில் ஜானி போல் இவரும் மினிமம் கியாரண்டி நாயகர் ஆவது உறுதி. சாலமனுடன் பஸ்ஸில் நாமும் அந்த கிராமத்திற்கு சென்றது போல் ஒரு பீல். ஆனால் க்ளைமாக்ஸில் திடும் என அந்த போலீஸ்காரர் அங்கே எப்படி முளைத்தார் என தெரியவில்லை.

    8. ஒரு தலைவனின் கதை - 8/10

    சுமாரான கதையை சித்திரங்களில் நேர்த்தியால் ரசிக்க வைத்து விட்டனர். வெள்ளையர்களின் வாக்குறுதிகள் மேல் ஜெரோனிமோவின் கணிப்பு மெய்பட்டு முடிவது காலத்தின் சோகம்.

    9. நீரின்றி அமையாது உலகு - 8/10

    கூடுதல் பக்கங்களோடு வந்திருந்தாலும் மற்ற கதைகள் இதைவிட ஸ்கோர் செய்திருப்பதால் இந்த இடம். "ஆனால் டாக்புல் அவர்கள் இதுவரை வாங்கிய அத்தனை மெடல்களையும் ஒரு கத்திரிக்காக அடகு வைக்க தயார்" வசனம் குபீர் சிரிப்பு ரகம்.

    10 கதைகள் ஆனால் இருப்பதோ 9. விடுபட்ட "மாயாவி" அவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர். ஒரு ஜாம்பவானை மரியாதையுடன் கடந்து செல்கிறேன். கொரில்லா மிஷினை தூக்கி கொண்டு ஓடுவது செம டிவிஸ்ட்.

    நன்றி. இது இந்த மாதத்து நிலையே மீண்டும் அடுத்த மாதம் எந்த எந்த கதைகள் எந்த எந்த இடத்தில் இருக்க போகிறது என(என்னளவில்) பார்ப்போம்.














    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா ஏப்ரலில் இருந்து இப்பொழுது வரைக்கும் ஆன டாப் டென். அருமையாக உள்ளது திரு job well done.

      Delete
    2. சன் டிவில (பூச்சிதான???) டாப் 10 பார்த்த மாதிரியே இருக்கே.... சூப்பரு திரு.

      தல கதைகள் 2 இடங்களை ஆக்ரமித்துள்ளன........

      லயன்400, தீபாவளி டெக்ஸ், லக்கி ஆண்டு மலர்லாம் வந்தா பெருத்த மாற்றங்கள் இருக்கும்....!!!

      Delete
    3. சூப்பர் திருநாவுக்கரசு. தொடருங்கள்.

      Delete
  45. “தல” இன் அட்டைப்படம் அட்டகாஸ் . பின் அட்டையில் உள்ளது பிக் பென் தானே. உட்பக்க டீசர்- சித்திரங்கள் மிரட்டல் ரகம். அதுவும் தங்களின் பேனா வர்ணஞாலம் செய்துள்ளதாக தோன்றுகிறது- கார்சனின் “ எம்மைப் படைத்த ஆண்டவரே”, அட நாதாரிப் பயலே. உனக்கென்ன பங்காளித் தகறாரா? “ இவற்றுக்கு சின்ன உதாரணங்கள். மீம்ஸ்கள் செம . அதிலும் சத்தியராஜின் “ முத்து 50க்கு உங்க பங்களிப்பும் இருக்கனும்னு கேட்டதுக்கு” - அருமை

    ReplyDelete
  46. காற்றில் கரைந்த கலைஞன் 

    வழக்கமாக எனக்கு பழைய ஜானி கதைகள் அவ்வளவு பிடிக்காது. There were some exceptions - அந்த அட்டையில் ராசிக் சக்கரம் தாங்கி வந்த கதை போல. ஆனால் இந்தக் கதை நன்றாக இருந்தது - though the end was predictable. இதே போல ஏதோ ஒரு தமிழ் சினிமா பார்த்த ஞாபகம். நினைவுக்கு வரவில்லை. 

    மதிப்பெண் கொடுத்தே ஆக வேண்டும் என்றால் 7.5/10

    Bluecoats - இந்த வாட்டி மிடீலே - பக்கங்கள் 35 - 45 வரை நன்றாக இருந்தது - முதல் 35 பக்கங்கள் ஜவ்வு மிட்டாய் - கடைசிலேயும் கொஞ்சம் ஜவ்வு. Nothing to beat Skyriders yet.

    மதிப்பெண் கொடுத்தே ஆக வேண்டும் என்றால் 6/10

    ReplyDelete
    Replies
    1. ஜானி கதைக்கே இம்புட்டுதான் மார்க்கா?!!:ரொம்ப ஸ்ரிக்டு ஆபீஸரா இருக்கீங்களே ராக் ஜி?!!

      நல்லவேளையா நீங்கள்லாம் இஸ்கூல் வாத்தியார் ஆகலை!! :)

      Delete
    2. Erode Vijay-

      I missed marks for the below.

      ORU TOZHAANIN KADHAI - 9.5/10

      Delete
  47. ஜானியின் காற்றில் கரைந்த கலைஞன் இதே தீம் ஜெஸ் லாங்கின் கல்லறைக் கவிஞன் கதையிலும்வந்த ஞாபகம் ,

    ReplyDelete
  48. தோர்கலின் மாயாஜால உலகம் – பகுதி -6

    *#07: CHILD OF THE STARS*
    *விண்வெளியின் பிள்ளை*

    தோர்கலின் மூன்று இளவயது கதைகள் அடங்கிய இந்த ஆல்பம் இத்தொடரின் ஏழாவதாக வெளிவந்தது.

    தோர்கல் தொடரின் ஆரம்ப ஆல்பங்களை வாசிக்கத் தொடங்கும் போது பெரும்பான்மையினருக்கு ஏதோ இடையில் இருந்து படிப்பதைப் போன்ற ஓர் உணர்வு எழுவது தவிர்க்க இயலாதது. ஏனெனில் இத்தொடரின் ஆரம்பப்புள்ளி இந்த ஆல்பத்தில் தான் தொடங்குகிறது. ஆங்கிலத்தில் CINEBOOK இதையும், ஆரிசியாவின் இளவயது கதைகளையும் (ஒரிஜினல் ஆல்பம் #14) இணைத்து முதல் தொகுதியாக வெளியிட்டு இருந்தது. தமிழில், முத்து காமிக்சில் பிரெஞ்சு வரிசையே பின்பற்றப் படுவதால் இது ஒரிஜினலின் படி ஏழாவது ஆல்பமாக வெளிவந்தது.

    கதை 1: நடுக்கடலில் நரபலி - இக்கதை வைகிங்குகளின் கடல் பயணங்களில் ஆரம்பித்து குழந்தை தோர்கல் எவ்வாறு வைகிங் கிராமத்திற்கு வந்து சேர்கிறான் என்று கூறுவதாக அமைந்துள்ளது.

    கதை 2: பூலோகம் காணாத உலோகம் - இக்கதை குள்ளர் உலகத் தலைவன் இவால்டிக்கும், நிதோக் டிராகனுக்கும் (இதில் நாகலோக அரசன்) இடையில் நடக்கும் சொக்கட்டான் ஆட்டத்தில் தோற்றுப் போகும் இவால்டிக்கும் குள்ளர்களுக்கும் இளம் தோர்கல் எவ்வாறு உதவுகிறான் என்று கூறுகிறது.

    குள்ளன் ஜாகி (TJAHZI): தோர்கல் தொடரில் ஒரு பிரதான கதாபாத்திரம் ஜாகி! தன் மக்களை நிதோக் அடிமைப் படுத்துவதில் இருந்து மீட்க பூலோகம் காணாத உலோகத்தைத் தேடிவரும் ஜாகி தோர்கலை சந்திப்பது இத்தொடரின் முக்கியத் தருணம். தொடரில் அடுத்து வரும் ஆல்பங்களில் தோர்கலுடனும், இணைத் தொடரான ஓநாய்க்குட்டியில் அவளோடும் இணைந்து ஜாகி செய்யும் சாகசங்கள் அவனுடைய பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும். எல்லாவற்றிற்கும் மேலாக ஜாகியின் அன்பை தோர்கலை பிற்காலத்தில் காப்பாற்றும் கேடயமாக (ஜாகியின் கண்ணீர் துளிகள்) மாற்றி அதை அவனுடைய அன்புக்குரிய ஆரிசியாவின் பிறப்பின்போதே பிரிக் தேவதை அருள்வது அற்புதமான கற்பனை!

    கதை 3: தாயத்து - நட்சத்திரங்களின் புதல்வன் என தோர்கல் அழைக்கப்படுவதன் காரணத்தை இக்கதை நமக்கு தெரியப்படுத்துகிறது. தனது தாய்வழி தாத்தாவான ஜார்கோஸை சந்திப்பது, அவர் மூலமாக தன் தாய் தந்தையர் குறித்து அறிந்து கொள்வது என முக்கியமான சம்பவங்கள் நிறைந்த கதை இது.

    ஆக மொத்தத்தில் தோர்கலின் ஆரம்பக் கதைகள் அடங்கிய இந்த ஆல்பம் தவறவிடக் கூடாத ஒன்று!

    தமிழில் முத்து காமிக்சில் வெளிவரும் முன்னதாகவே (ஜூலை 1997) ராணி காமிக்ஸ் இதழ் எண் #313, வீரச்சிறுவன் என்ற பெயரில் தோர்கலின் இந்த ஆல்பம் வெளிவந்திருக்கிறது. முதல் இரண்டு கதைகளையும் முன் பின்னாக மாற்றி ஒரே கதையாக உருவாக்கப்பட்டு வெளியிடப் பட்டிருக்கும். மூன்றாவது கதை இருக்காது. கதையில் அடிப்படை பிழைகள் நிறையவே இருப்பினும் ஒற்றைக் கதையாக மட்டும் கொண்டால் அது வெளியான காலகட்டத்தில் நாம் இரசித்திருப்போம் என்றே நினைக்கிறேன்.

    நன்றி நண்பர்களே!

    தொடரும்...
    அரங்க. சரவணகுமார்

    #தோர்கல்
    #Thorgal

    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பரே....தோர்களின் பிறப்பின் ரகசியம்....ஒரிஜினலில் வான்ஹாம்மே பிறப்பின் ரகசியத்தின பின்னர் சொல்வது...ஏங்க வைத்து அற்புதமாக விவரிக்க கருதியிருக்கலாம்...

      Delete
    2. கதையின் விமர்சனமாவும், கட்டுரையின் தொடர்ச்சியாகவும் அமைத்து உள்ளீர்கள் SK.

      ரசித்து ரசித்து படித்ததை அருமையாக தொகுத்து அளித்துள்ளீர்கள்.... சிறப்பு!

      தோர்கலின் பிறப்பின் ரகசியம் இந்த இதழில் தெளிவாக சொல்லப்பட்டு இருப்பது சிறப்பம்சம்.

      இதை லயனிலும் முதல் கதையாக வெளியிட்டு இருந்து இருந்தால், துவக்கத்திலயே தோர்கல் பிக்கப் ஆகி இருக்குமோ என்னவோ!!!

      தொடருங்கள்... தொடர்ந்து கொள்கிறோம்.

      Delete
    3. சரியான விளக்கங்களுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்

      Delete
    4. அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே! தோர்கல் தொடர் மீதான உங்கள் ஆர்வம் எங்களை அவ்வப்போது ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது!

      இதையெல்லாம் ஒரு தொகுப்பாக உங்களுடைய ப்ளாக்கிலும் போட்டு வைத்தீர்களானால் வசதிப்படும்போது எங்களால் படித்துப் பிரம்மிக்க இயலும்!

      Delete
  49. என் பெயர் லார்கோ!

    ஸ்டார்ட் பண்ணியாச்சு!

    லார்கோ ஒன்றிரண்டு தான் படித்திருக்கிறேன்!

    என்னிடம் இரவல் வாங்கிச் சென்ற நண்பர் கடல் கடந்து போய் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது!

    இனியும் அவர் திருப்பி தந்தபிறகு படிக்கலாம் என்று இருப்பதில் ஒரு நியாயமும் இல்லை என்பதால் ஒரு செட் பார்சல் வாங்கியாச்சு!

    இந்த வாரம் - லார்கோ வாரம்!!!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வாரம் தோர்கல் வாரம் போட்ருங்க....

      Delete
    2. கான்கிரீட் கானகம் நியூயார்க்!

      இக்கதை 90களின் தொடக்கத்தில் எழுதப்பட்டவை போல!

      கம்பெனிகளை கையகப்படுத்தவும், பங்குகளை வாங்கி குவிக்கும் வழிமுறைகளிலும், அது சார்ந்த Insiders தகவல்களும், இன்றைக்கு வேறொரு பரிமாணத்தில் மாற்றமடைந்திருக்கின்றன!

      Scam 1992 காலகட்ட நடைமுறைகள் எல்லாம் காலாவதி ஆகிவிட்ட நிலையில்,

      Big bullsக்கு எதிராக retailers சாதிக்கும் "Game Stop issue" காலத்தில் நாம் இருப்பதால் பங்குச் சந்தை சார்ந்த நபர்களுக்கு இது ஜெய்சங்கர் பாணிக் கதைகளை போலத்தான் தோன்றும்!!

      பார்ப்போம்! அடுத்தடுத்த கதைகளில் சுவாரஸ்யம் கூடுகிறதாவென்று?!!

      Delete
    3. ///அடுத்த வாரம் தோர்கல் வாரம் போட்ருங்க....///

      அடுத்து டியுராங்கோ, அப்புறம் வெய்ன் ஷெல்டன், கமான்சே, சிக்பில், கடேசியா லக்கி! என படிக்கலாம்னு இருக்கேன்!!

      Delete
    4. பெரிய கம்பெனிகள் சிறிய கம்பெனிகளை பகாசூரப் பசிக்கு விழுங்கி வளரனுங்றது விதி லார்கோ....

      Delete
    5. பங்குச்சந்தை சிறிதே...ஆனா கதையின் விறுவிறுப்பு ...லார்கோவின் கெத்து...காலத்துக்கும் நிற்கும் மிதுனரே...ட்யூர்...வெய்ன்...கமான்சே ...இக்கதைகளே போதும்...காலம் முழுக்க மாற்றி மாற்றி சலிப்புறாமல் படிக்க...
      இதோட பதிமூன்று....கடல் வீரன் ராபின் எனச் சேர் சொல்லவும் வேண்டுமோ....யார் என்ன சொன்னாலும் இக்கதைகள் நம்மையும் இழுத்துச் செல்லும் போது வரும் இனிய நினைவுகள்...அற்புதம்...கற்பனைன்னாலும் கற்பனையாக் கூட தவிர்க்க முடியாது

      Delete
    6. இந்தக் கதை தமிழில் வெளிவந்தே 9 வருடங்களாகின்றன (Never Before Special). நீங்கள் படிப்பது தமிழிலேயே ரீ-பிரிண்டான புத்தகம். இது 2016 இல் வந்தது.

      Delete
    7. ///கதையின் விறுவிறுப்பு ...லார்கோவின் கெத்து...///

      என் பெயர் லார்கோ - நல்ல விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது!

      Delete
    8. எல்லா கதைகளும் ஜெட்தான் எனக்கு நண்பரே....பார்ப்போம் பொருளாதார நிபுணரின் லார்கோ 2.0 வந்ததும்...சைமன்...ஆண் பைலட் ....கான்கிரிட் கானக லார்கோ காதலி....வின்ச்....திபெத்திய வளர்ப்பாளி...குழுமத் தலைவர் பாத்திரங்கள் அனைத்தும் ஈடிணையற்றவை

      Delete
  50. லார்கோ வின்ச்!

    துரத்தும் தலைவிதி!!

    அமர்க்களம்!!!

    9/10

    ReplyDelete
  51. ஆசிரியர் வெள்ளிக்கெழம புத்தகத்தை அனுப்பிட்டுதா தலகாட்டுவார்னு பட்சி சொல்வது உண்மயா

    ReplyDelete
  52. வழியனுப்ப வந்தவன்!!!

    கதையின் மூலமே முர்ரேயின் தாய் லாரன்ஸ் நகர படுகொலை என்ற வரலாற்று சம்பவத்தில்

    படுகொலை செய்யப்படுவதின் மூலம் முர்ரேக்கு எழும் குரோதம்தனை அடிப்படையாக கொண்டது..


    பல கட்டுரைகள் வாசித்தபோதும் பெண் ஒருத்தி கூட உயிர் இழந்ததாக எதிலும் குறிப்பிடவில்லை..

    குவாண்ட்ரில் தலைமையிலான புஷ்வேக்கர்ஸ் குழு லாரன்ஸ் நோக்கி கிளம்பியபோது அதன் நோக்கம் தெளிவான ஒன்று..


    ""ஆண்களோ , துப்பாக்கி தூக்குமளவு வலு உள்ள ஆண் சிறுவர்களோ யாரும் லாரன்ஸில் உயிருடன் இருக்க கூடாது""

    பெண்கள் யாரையும் ,சிறுமிகளோ ,இளம் பெண்கள்,வயதான பெண்கள் யாரையுமோ அவர்கள் கொல்ல முற்படவில்லை..

    கைக்குழந்தை வைத்திருந்த தந்தையை கொன்றார்கள்..குழந்தையை அல்ல..

    படுத்திருந்த நோய்வாய்ப்பட்டு இருந்த ஆண்களையும் படுக்கையிலே கொன்றார்கள்

    வீடுகளை எரிக்கும்போது பெண்களை வெளிவர அனுமதித்தனர்..

    ஆண்களை வெளிவர முயன்றால் சுட்டு கொன்றனர்..

    கதையில் பாய்ண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் ஒரு பெண்ணை புஷ்வேக்கர்ஸ் -ல் ஒருவன் சுட்டு கொல்வது விசித்திரமான சம்பவமே..

    கதாசிரியர் பல்வேறு முறையான ஆவண தொகுப்புகளை படித்திருப்பார் என நம்பவேண்டியிருக்கிறது..


    இருதரப்பு தகவல்கள், நடுநிலையான நம்பகத்தன்மையுள்ள வரலாற்று பதிவாளர்கள் கூற்றை படித்த பின்பும் இம்முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது...

    வெறும் இணையத் தகவல்கள் ஆதாரமாகிவிட முடியாது...

    குவாண்ட்ரில் - ன் லாரன்ஸ் மீதான தாக்குதல்

    தெற்கத்திய ஆதரவாளர்களால் தேசப்பற்று நிகழ்வெனவும்

    வடக்கத்தியர்களால் மனம் சிதைந்த மனிதன் ஒருவனின் வரம்பு மீறிய வன்முறை செயலெனவும் பார்க்கப்பட்டது..


    வழியனுப்ப வந்தவனின் ஆதார சம்பவமான இது BLEEDING KANSAS என்ற அப்போதைய நிகழ்வின் உச்சமாகவும் அமெரிக்க உள்நாட்டு போரின் திறவுகோலாகவும் பார்க்கப்படுகிறது

    லாரன்ஸ் நகர படுகொலையின் முன் பின் வரலாற்று நிகழ்வுகள் சோகம் ததும்பும் சுவாரஸ்யம் மிக்கவை...

    ஒன்று மட்டும் உறுதியாக படுகிறது..

    லாரன்ஸ் படுகொலைக்கு 6 மாதம் முன்பாக தங்கள் வீட்டு இளம் பெண்களை வடக்கத்திய jayhawekers மூலம் வேண்டுமென்றே ,விபத்தினாலோ புஷ்வேக்கர்ஸ் இழந்திருந்தார்கள்..

    If you are fighting against monsters don't turn yourselves into a monster

    என்பதை வேறு எங்கு கடைப்பிடித்தார்களோ இல்லையோ லாரன்ஸ் நகரத்தில் பெண்களை தாக்காமல் விட்டதின் மூலம் புஷ்வேக்கர்ஸ் கடைப்பிடித்தனர் என நம்பவேண்டியிருக்கிறது..

    தவிர கதாசிரியரின் உண்மையின் மீதான கற்பனை என்று இருக்கத்தான் செய்கிறது..


    ReplyDelete
    Replies
    1. அருமை செனா....பல விசயங்கள் வரலாற்றில் மறைக்கப் படுவதுண்டே....வீரர்கள் ஒரு பெண்ணைக் கூட கொல்லாமல் விட்டார்கள் என்பதை நம்ப முடியுமா...அல்லது தன் கணவன் குழந்தைகளை கொல்ல முற்படும் போது தன் உயிர் போனாலும் பரவாயில்லையென ஒரு பெண்ணாவது போராடாது இருக்க இயலுமா...தன் மீது வெறியோட பாயும் அவர்களை அப்படியே அனைத்து வீரர்களும் விட்டிருப்பார்களா....குவாண்ட்ரில் டைகர் கதையில் கூட வந்தார்ல்லவா..தற்போது தமிழக மக்களை நம்பச் செய்த முந்தய ஆட்சியாளரின் வரலாறு கேலியாக்கப் பட்டதல்லவா....தாங்கள் திரட்டிய தகவல்கள் சுவாரஸ்யமாக உள்ளன...அருமை

      Delete
    2. // லாரன்ஸ் படுகொலைக்கு 6 மாதம் முன்பாக தங்கள் வீட்டு இளம் பெண்களை வடக்கத்திய jayhawekers மூலம் வேண்டுமென்றே ,விபத்தினாலோ புஷ்வேக்கர்ஸ் இழந்திருந்தார்கள் //

      புரியவில்லை இது! ஏதற்காக இப்படி செய்தார்கள்!

      முற்றிலும் வித்தியாசமான அலசல் மற்றும் தகவல்கள்! நன்றி!

      Delete
    3. //வரலாற்றில் மறைக்கப் படுவதுண்டே....வீரர்கள் ஒரு பெண்ணைக் கூட கொல்லாமல் விட்டார்கள் என்பதை நம்ப முடியுமா...அல்லது தன் கணவன் குழந்தைகளை கொல்ல முற்படும் போது தன் உயிர் போனாலும் பரவாயில்லையென ஒரு பெண்ணாவது போராடாது இருக்க இயலுமா...தன் மீது வெறியோட பாயும் அவர்களை அப்படியே அனைத்து வீரர்களும் விட்டிருப்பார்களா.//

      இருக்கலாம்...வரலாற்றில் அப்படி எங்கும் பதிவு செய்யப்படவில்லை என்ற மட்டில் வைத்து கொள்ளலாம் ஸ்டீல்!!

      குவாண்ட்ரில் வரும் டைகர் கதை எது ஸ்டீல்? கான்ஸாஸ் கொடூரன்?

      வீட்டில் நடந்த விசேசத்தின் காரணமாய் புத்தகங்கள் மேலேறி விட்டன..

      Delete
    4. //https://m.facebook.com/groups/2563733947186727/permalink/3320813434812104///

      /******/ லாரன்ஸ் படுகொலைக்கு 6 மாதம் முன்பாக தங்கள் வீட்டு இளம் பெண்களை வடக்கத்திய jayhawekers மூலம் வேண்டுமென்றே ,விபத்தினாலோ புஷ்வேக்கர்ஸ் இழந்திருந்தார்கள் //

      புரியவில்லை இது! ஏதற்காக இப்படி செய்தார்கள்!****"


      இதற்கான பதில் இந்த லிங்கில் உள்ளது .

      பரணி!!!

      Fb - ல் மொபைல் மூலம் நேரடியாக டைப் செய்ததால் டெஸ்க்டாப்பில் பதியவில்லை

      Delete
    5. ...//குவாண்ட்ரில் டைகர் கதையில் கூட வந்தார்ல்லவா//

      Quantrill ( குவாண்ட்ரில் ) என்ற பெயரிலேயே ப்ளூகோட்ஸ் கதை ஒன்றும் உண்டு ஸ்டீல்...

      தமிழில் இன்னும் வரவில்லை..ஆங்கிலத்தில் 36 டைட்டில் எனத் தெரிகிறது..

      Delete
    6. கான்சாஸ் கொடூரன் தான் நண்பரே...ப்ளூகோட்சிலுமா....ஆசிரியர் விரைவில் விடுவாரென நினைக்கிறேன் .... விசேசத்துக்கு கூப்பிடலயே...!
      குவாண்ட்ரில் ஹீரோதான் போல....

      Delete
    7. ///விசேசத்துக்கு கூப்பிடலயே..///

      கூப்பிடாமலேயே வூட்டுக்கு கொரோனா வந்துட்டுதால யாரையும் கூப்பிடமுடியல...

      விஷேஷத்தப்ப என்னை தவிர வூட்ல அல்லாருக்கும் கோவில் -19..

      (குக்,மெய்ட் உட்பட) .


      சகதர்மிணி கூட வர முடியல..

      இப்போ அல்லாரும் சௌக்கியம்!!!

      Delete
    8. ///இப்போ அல்லாரும் சௌக்கியம்!!!///

      குட்! :)

      Delete
    9. அருமை நண்பரே....செந்தூரான் அருளும்...உங்கள் அன்பும் என்றென்றும் துணையிருக்கட்டும்....வாழ்க மகிழ்வுடன்...மன நிறைவுடன்

      Delete
  53. இன்று பெட்டி கிளம்பினா எவ்வளோ நல்லா இருக்கும் :)

    ReplyDelete
  54. கம்பி நீட்டிய குருவி!!


    கோழி சின்னதா இருக்க சொல்லோ உரிச்சது

    இது!!

    ரிப் கிர்பி கதையெல்லாம் ரொம்ப நல்லாருக்கு

    புரிஞ்சுக்க ஈஸி!!! ரிப் கெர்பி பாக்க ஒரு பக்கா கனவான்!!

    அதே கோழி பெரிசா இருக்க சொல்லோ உரிச்சது இது


    படம்ல்லாம் தெளிவா கண்ணுல ஒத்திக்கற மாதிரி இருக்குதான்...சைஸ்லாம் செமதான்.

    இந்த கதை எங்க இருக்குங்குறத ஷெர்லக் ஹோம்ஸ்ட்டதான் கேக்கணும்..

    R2 போலிஸ் ஸ்டேஷன்ல கூட இத விட ரொம்ப சிக்கலான கேஸ்லாம் பதிவாகும்னு தோணுது

    ReplyDelete
    Replies
    1. /////R2 போலிஸ் ஸ்டேஷன்ல கூட இத விட ரொம்ப சிக்கலான கேஸ்லாம் பதிவாகும்னு தோணுது/////

      😂😂😂😂😂😂😂

      Delete
  55. மினி டெக்ஸ்

    தங்கத்தின் பாதையில்...பரவால்ல

    மின்னும் சொர்க்கம்...எடிட்டர் ஏன் மெபிஸ்டோ ரக டெக்ஸ் கதைகளை வெளியிட தயங்குகிறார்

    என புரிகிறது ..கதை ஓகே ரகம் ...

    வண்ணங்களில் சித்திரங்கள் ஜால வித்தை புரிவது நிஜம்...

    ReplyDelete
  56. மார்ச் மாதம் முதல் படிக்க விட்டு போன இதழ்களில் எஞ்சியிருக்கும் யுகம் தாண்டியொரு யுத்தம் கையில் எடுத்துவிட்டேன்...ஸ்ஸப்பா என்ன மாதிரியொரு துவக்கம்!!!

    ReplyDelete
  57. சார் இன்று பதிவுக் கிழமை

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா ஆமா! புத்தகங்கள் கிளம்பப்போகும் தேதியோட வர்ற பதிவாச்சே!!!

      நான்கு சூப்பர் ஸ்டார்ஸ் - ஒரே மாதத்தில்!!

      Delete
  58. பர்மா படலம் - ஆதலினால் அதகளம் செய்வீர்!!

    பட்டாசு! சூப்பர்!! திரைப்படமாக எடுக்க அட்டகாசமான கதை தான்!

    9/10

    ReplyDelete
    Replies
    1. வேட்டை நகரம் வெனிஸ்!

      ஸ்டார்ட் பண்ணியாச்சு!!

      Delete
    2. அந்த முதியவர் உரையாடல்கள் உயிரோட்டமானவை...தலைமைப் பண்புக்காக வின்ச்சின் அட்டகாசத் தேர்வு

      Delete
    3. மொழிபெயர்ப்பு, வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் 'வேற லெவல்'ல இருக்குமே! எடிட்டரை எக்ஸ்ட்ராவா விழிபிதுங்கச் செய்த தொடராச்சே!!

      நானும் இன்னொரு தபா மறுவாசிப்பு விடணும் - அனேகமா ரிடையர்மென்ட்டுக்கு அப்புறம்!

      Delete
    4. ///அனேகமா ரிடையர்மென்ட்டுக்கு அப்புறம்!///

      இந்த குரூப்லயே ரொம்ப யூத் ஆன நீங்க ரிடையராக இன்னும் 50 வருடம் ஆகுமே!!!

      😂🐱🐱😂

      Delete
  59. வேட்டை நகரம் வெனிஸ்!

    பல விஷயங்கள் முன்கூட்டியே யூகிக்க முடிந்தது!

    இடையில் கொஞ்சம் மாறுவேஷம், கத்திச் சண்டை என போரடித்தாலும் கதை விறுவிறுப்பு தான்!

    வெனிஸ் நகரைப் பற்றிய ஆவலை இக்கதை தூண்டிவிட்டிருக்கிறது!

    8/10

    ReplyDelete
  60. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete