Powered By Blogger

Wednesday, July 14, 2021

ஜித்தர்களின் ஜூலை !

 நண்பர்களே,

வணக்கம். க்ளாஸிக் 4 நாயகர்கள் கடந்த சில நாட்களாய் ஒளிவட்டத்தை ஆக்கிரமித்துக் கொள்ள - its now time for us to go back to normal ! "அப்டிக்கா ஓரமாப் போயி விளையாடுங்க கண்ணுகளா !" என்று 'பெருசுகளிடம்' சொல்ல புதுயுகத்தார்கள் நேற்றைக்கே கூரியரில் புறப்பட்டு விட்டார்கள் ! Yes, ஜூலையின் அதிரடிப் பார்ட்டிகள் இன்றைக்கு உங்கள் இல்லக்கதவுகளைத் தட்டிட உள்ளார்கள் ! 

இம்மாதம், யார் - எந்த இதழிலிருந்து வாசிப்புகளைத் துவக்கிடவுள்ளனர் ? என்பதே ஒரு ஜாலியான சமாச்சாரமாகிடக்கூடும் என்பேன் ; becos கார்ட்டூன் மேளா ; கௌபாய் அதிரடி ப்ளஸ் க்ளாஸிக் நாயகர் + நாயகி என்ற இந்த காம்போவினில் ஜனரஞ்சகத்தின் சகல முகங்களும் உள்ளன ! ஏற்கனவே நமது ஏஜெண்ட்கள், இம்மாத இதழ்களுக்குக் குஷியாய் ஆர்டர் தெரிவித்திருப்பதே அந்த ஜனரஞ்சகத்தின் தொடர்ச்சியாக எனக்குத் தென்பட்டது ! And நேற்றிரவு ஆன்லைன் லிஸ்டிங் போட்ட சற்றைக்கெல்லாமே அங்குமே ஒரு வேகம் தென்பட்டது ! So அத்தி பூத்தாற் போல ஒரே மாதத்தில் களமிறங்கிடும் இந்த ஜாம்பவான்களுடன் நீங்கள் அன்னம் தண்ணீர் புழங்க உள்ளதை தரிசிக்க ஆவலாய் வெயிட்டிங் !

அதிலும் சில பல மருத்துவர்களும், தொழிலதிபர்களும் ஆங்காங்கே, வேக வேகமாய் ஐப்ரோ பென்சில்களை வாங்கியாந்து மீசைகளுக்கும், புருவங்களுக்கும் உரம் ஏத்திய கையோடு -  "இன்னிக்கு ஆசுபத்திரி லீவுங்கோ ; ஆபீசுக்கு ஜூட்டுங்கோ !" என்ற போர்டுகளை மாட்டிடும் அழகைப் பார்க்க  தொலைநோக்கிகள் கிடைக்குமாவென்று அமேசானில் தேடிக் கொண்டிருக்கிறேன் ! இம்மாதத்து இளவரசி நிச்சயம் சோடை போக மாட்டாரென்பதால் ஜமாயுங்கோ gentlemen ! 

And இதோ - இம்மாத இதழ்களுக்கென நமது IT டீமின் நண்பர் கிரி அனுப்பியுள்ள போஸ்டருடன் ஆன்லைன் லிஸ்டிங்கின் links : 

https://lion-muthucomics.com/home/847-2021-july-pack.html

https://lioncomics.in/product/2021-july-pack/

Happy Shopping.....Happier Reading folks !!



251 comments:

  1. Classic .4 க்கு சனியிரவே பணம் செலுத்தப்பட்டது.

    பாதி படிக்கும் பொழுதே பணத்தினை மாற்றம் செய்துவிட்டு மீதத்தை பிறகு படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மின்னல் வேகம் இதுதானோ ?!!

      Delete
    2. உங்களுக்கு ஸ்பெஷல் மீம்ஸ் போட்டாச்சே தலைவரே...

      Delete
  2. // நமது ஏஜெண்ட்கள், இம்மாத இதழ்களுக்குக் குஷியாய் ஆர்டர் தெரிவித்திருப்பதே அந்த ஜனரஞ்சகத்தின் தொடர்ச்சியாக எனக்குத் தென்பட்டது //

    Super!

    ReplyDelete
  3. // நேற்றிரவு ஆன்லைன் லிஸ்டிங் போட்ட சற்றைக்கெல்லாமே அங்குமே ஒரு வேகம் தென்பட்டது //

    Double super!

    ReplyDelete
  4. // "இன்னிக்கு ஆசுபத்திரி லீவுங்கோ ; ஆபீசுக்கு ஜூட்டுங்கோ !" //

    :-) LOL

    ReplyDelete
  5. Okay! I will start my office work :-) Have a good day friends!

    My kids are waiting for Luke & Rin Tin book!

    ReplyDelete
  6. முதலில் லக்கி மற்றும் ரின் டின் கேன் கதையை படிக்க வேண்டும்! அப்படி என்றால்தான் அடுத்த இரண்டு நாட்களுக்கு குழந்தைகளுக்கு கதையை சொல்ல முடியும்! இந்த வாரம் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நேரம்!

    ReplyDelete
  7. தாய்க்குலத்துக்கே எனது முதல் ஓட்டு.... பாண்டு கடைசியாதான் படிக்கலாம்ன்னு இருக்கேன். நடுவுல மாட்டுக்கார பசங்கள படிக்கலாம்.

    ReplyDelete
  8. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  9. முதலில் லக்கி தான் எப்போதுமே

    ReplyDelete
  10. // ஏற்கனவே நமது ஏஜெண்ட்கள், இம்மாத இதழ்களுக்குக் குஷியாய் ஆர்டர் தெரிவித்திருப்பதே அந்த ஜனரஞ்சகத்தின் தொடர்ச்சியாக எனக்குத் தென்பட்டது ! //
    மகிழ்ச்சி...

    ReplyDelete
  11. // And நேற்றிரவு ஆன்லைன் லிஸ்டிங் போட்ட சற்றைக்கெல்லாமே அங்குமே ஒரு வேகம் தென்பட்டது ! //
    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி...

    ReplyDelete
  12. \\இதோ - இம்மாத இதழ்களுக்கென நமது IT டீமின் நண்பர் கிரி அனுப்பியுள்ள போஸ்டருடன் ஆன்லைன் லிஸ்டிங்கின் links\\

    spelling mistakesக்காக முன்னும் பின்னும் பறந்த மேயில்களை நினைக்கும் போது, உங்கள் கேசங்களை பிய்த்து கொள்வதை உணரமுடிந்தது. அடுத்த முறை இன்னும் கவனம் எடுத்து கொள்கிறேன்.

    ReplyDelete
  13. என் பிரியமான 007 & இளவரசி இருவரும் ஒன்றாக கையில் ஏந்த போகிறேன் இனிமையான தருணமிது

    ReplyDelete
  14. முத்துவின் பொன்விழா ஆண்டுமலரை தரிசிக்க மிக ஆவலுடன் நாம தயாராகிக் கொண்டு உள்ள வேளயையில், சத்தம் காட்டாமல் நாங்களும் இருக்கம்ல ஆட்டத்தில் என, 37வது லயன் ஆண்டுமலர் இன்றைக்கு களம் இறங்குது.

    இதழைக் கைப்பற்றும் வரையில் இதுவரை வந்த ஆண்டுமலர் நினைவுகளில் திளையுங்கள் நட்புகளே.....

    லயன் ஆண்டு மலர்கள்....!!!!

    1.சைத்தான் விஞ்ஞானி-1985
    2.பவளச்சிலை மர்மம்-1986
    3.அதிரடிப் படை-1987
    4.கானகத்தில் கண்ணாமூச்சி-1988
    5.நடுக்கடலில் அடிமைகள்-1989
    6.எமனுடன் ஒரு யுத்தம்-1990
    7.மர்ம முகமூடி-1991
    8.மின்னலோடு ஒரு மோதல்-1992
    9.கானகக் கோட்டை-1993
    10.மந்திர மண்ணில் மாடஸ்தி-1994
    11.பூம் பூம் படலம்-1995
    12.இரத்தப் படலம்-VI-1996
    13.பேங்க் கொள்ளை-1997
    14.கானகத்தில் கலவரம்-1998
    15.தலைவாங்கும் தேசம்-1999
    16.இரத்த பூமி-2000
    17.மெக்சிகோ படலம்-2001
    18.பயங்கரப் பயணிகள்-2002
    19.பரலோகத்திற்கொரு பாலம்-2003
    20.----------------------------2004
    21.----------------------------2005
    22.சூ மந்திரகாளி-2006
    23.----------------------------2007
    24.----------------------------2008
    25.----------------------------2009
    26.----------------------------2010
    27.----------------------------2011
    28.நியூ லுக் லக்கி ஸ்பெசல்-2012-(கம்பேக்கிற்கு பின்பு)
    29.ஆல் நியூ ஸ்பெசல்-2013
    30.லயன் மேக்னம் ஸ்பெசல்-LMS-2014
    31."தி லயன் 250"-Texஸ்பெசல்-2015
    32.பெல்ஜியம் எவர்கிரீன் ஜானி,XIII&பிரின்ஸ் மலர்-2016
    33.லயன் 300 ஸ்பெசல்-2017
    34.லூட்டி வித் லக்கி-2018
    35.தி லக்கி ஆண்டுமலர்-2019
    36.Lucky's லயன் ஆண்டுமலர்-2020

    "கொளுத்தும்" கோடைமலருக்கும்,
    "அதிர்வேட்டு" தீபாவளி மலருக்கும் இடையே சத்தமின்றி கம்பு சுத்திப்போகும் ஆண்டுமலர்களும் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளன....

    ரூ550க்கு வந்த லயன் ஆண்டுமலர் LMS ன் சாதனையை எல்லாவகையிலும் முத்து 50வது பொன்விழா ஆண்டுமலர் முறியடிக்குமோ?????

    ReplyDelete
    Replies
    1. கொரியர் ஆபீஸ்ல எனக்காக காத்திருக்கும் லயன் "ஜாலி" ஆண்டுமலரைக் கைப்பற்ற விரைந்து போனா கிடைத்த பதில்.....

      "இன்றைய லோடு இன்னும் வர்ல சார்......""

      ---என்பதே!

      ஏமாந்துபோன மனசோட கடைக்கு வந்து காத்திருப்பைத் தொடர்கிறேன்....

      Delete
    2. "இன்றைய லோடு இன்னும் வர்ல..."

      சிலபல கேள்விகளை கிளப்புதே?

      லோடு எப்பவரும்???

      லோடுல என் பார்சல் வந்துருமா??

      ஒருவேளை லோடுல என்பார்சல் மிஸ்ஆகிடுமோ???

      லோடு லேட்ஆச்சுனு லோக்கல் ஹப்புல என் பார்சலை, ப்ராஞ்ச் ஆபீஸ்க்கு அனுப்பிவைப்பாங்களா??

      லோக்கல் ஹப்பில தங்கிட்ட பார்சலை நாளை தான் ப்ராஞ்சிக்கு தருவாங்களோ??

      லோக்கல் ஹப்பில் என்பார்சல் வேறு பார்சல்களின் அடியில் சிக்கிடுமோ??

      இன்னும்...இன்னும்.....கேள்விகள் தொடருது!!!😉

      Delete
    3. எங்க ஏரியா லோடு வராமல் எனக்கு கிடைக்க லேட் ஆனா கூட, சேலத்தில் வேற ப்ராஞ்சின் சேவையில் யாராவது கைப்பற்றி வாட்ஸ்ஆப்பில தகவல் வந்திருக்கும்...
      இதுவரை யாரது தகவலும் வர்லயே????

      ஓருவேளை சேலம் லோடு ஏற்றி வந்த லாரி எங்காச்சும் ஏலேலே ஐலசா போட்டுட்டு இருக்கா???

      Delete
    4. டெஸ்பேட்ச் ஆகி புக்கு நம்ம கைக்கு வர்ரதுகுள்ள ஷப்பா.... 2 வருஷம் முன்னாடி என்னோட கூரியர் பாக்ஸ் மட்டும் எங்க எங்யே போய்ட்டு வரும்... இப்பலாம் நான் எதிர்பார்க்கும் முன்னரே வந்துடுது.இன்று 3.30 வாக்கில் கையில் வந்து விடும்.

      Delete
    5. பதிலின் நாயகருக்கே இவ்வளவு கேள்விகளா...??

      Delete
    6. ஹா ஹா ஹீ ஹீ ஹோ ஹோ ... புக்ஸ் வந்துடுச்சு , அதுக்குள்ள.

      Delete
    7. என்னா சந்தோசம்....ஹா...ஹா...
      வாழ்த்துகள் கிரி... என்சாய்.

      Delete
    8. ரொம்ப நாள் ஆச்சு பழனி இதுமாதிரி மிஸ்ஸிங் ஆகி....2017 ஆகஸ்ட்டின் இதழ்கள் தான் தாமதமாக வந்தது, கடைசியாக.... விழாவுக்கு டெக்ஸ் பேட்ஜ் இல்லாமல் வந்து, சரவணன் சார் அவரோட பேட்ஜை எனக்கு குத்தி விட்டார்.....

      4இயர்ஸ்க்கு பின்னர் ஆண்டுமலர் மாதம் மாட்டிகிச்சி போல....!!!

      Delete
    9. இன்னும் வர்லயா...?? நம்பள்க்கி போன் வந்தாச்சு....

      Delete
  15. முதல்ல லக்கி பிறது மாடஸ்டி ஜேம்ஸ் டெக்ஸ்

    ReplyDelete
  16. ஈரோடு புத்தகதிருவிழா படுகவர்ச்சியாக உள்ளதே சார்...அருமை...மெஹாஹிட்டடிக்கும்...

    ReplyDelete
  17. குறிப்பிட்ட இதழ்களுக்கு 35%வரை டிஸ்கவுண்ட் அருமை சார்..
    மற்றபடி 20% மா சார்..??

    ReplyDelete
  18. புக்பேர் ஸ்பெஷல் என்னவென்று அறிய பரபரக்குதே.... கையெல்லாம் நடுங்குதே...

    ReplyDelete
  19. //"Book fair ஸ்பெசல் ரிலீஸ்கலுடன்!//
    சுஸ்கி விஸ்கி யா? ஸ்பைடரா? அல்லது லக்கி யா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஸ்பின்ஆப்தான்..

      போட்டுவைப்போம்

      Delete
    2. உயிரைத்தேடி தான் ஆகஸ்ட் புக்ஃபேர் ஸ்பெசல் க்கு ரெடியா இருக்கே!!!!

      கூட சுஜிக்கி விஜிக்கியா???

      Delete
    3. உயிரைத்தேடி செம....

      Delete
    4. ஹாட்லைனில் இன்னும் ஒரு லக்கி இருக்கு சொல்லிருக்கார்

      Delete
    5. // ஹாட்லைனில் இன்னும் ஒரு லக்கி இருக்கு சொல்லிருக்கார் //

      Super! Book fair special cartoon and Lucky 75 year celebration.

      Delete
    6. உயிரைத் தேடியுடன் வரப் போகும் புத்தகம் எது??? அடுத்த மாதம் சும்மா கிழி கிழி கிழி

      Delete
  20. E-road புக் fair - online - துண்டு போட்டாச்சு 
    - Lion 500 ஆகஸ்ட் 2023 ரிலீஸ் இல்லே? அட்டகாசமாய் இருக்கணும்.  இதுல Tex குண்டு, லக்கி லுக் குண்டு, சிக்பில் குண்டு, ஸ்பைடர் collectors edition with that long color story - maxi size - hard bound including some classic stories of இஸ்பய்டர் அண்ணாத்தே ! பழைய லயன் நாயகர்கள் யார் activeஆ  இருந்தாலும் இணைக்கணும் !!
    - Jan 2022 லிருந்தே லயன் 500 பிளானிங் ஆரம்பிச்சுடுங்கோ 

    ReplyDelete
    Replies
    1. முத்து 50 50 அடி பாஞ்சா லயன் 50 500 அடி பாயணும் சொல்லீட்டேன் - இப்படிக்கு ஒரு காலத்தில் முத்து காமிக்ஸ்க்கு எதிரியாக லயன் வாங்கியவன் :-D :-D :-D 

      Delete
    2. "லயன் 500" வரும் முன்னமே "முத்து 500" வந்துப்புடுமே சார் ?

      Delete
    3. Varattum.. adhaiyum vaanguvom .. andha kaala yethiriyaachchE :) :)

      Delete
    4. // andha kaala yethiriyaachchE :) :) //

      :-)

      எதற்காக முத்து காமிக்ஸ் உங்களுக்கு எதிரி :-) Any interesting story behind this?

      Delete
    5. அப்போதெல்லாம் 1985-87, லயன் சும்மா பளபள என்று வரும் - இளைய ஆசிரியர் கதை selection எல்லாம் ஜெகஜோதியாய் இருக்கும் ! முத்து காமிக்ஸ் கவர் மற்றும் பிரின்டிங் கொஞ்சம் சஸ்தாவாய் தோன்றிய காலம். பழைய ஹீரோக்கள் வேற பிளேடு போட்டுக்கொண்டிருப்பார்கள். அப்போ இது பங்காளி கம்பெனி என்று தெரியாததால் லயன் was close to my heart. 

      90களில் முத்து சூப்பர் ஸ்பெஷல் புத்தகத்தில் s விஜயன் என்று கையொப்பம் கண்டபோதுதான் அடேடே ஒரே வீடு ரெண்டு கம்பெனி என்று தோன்றியது !

      அப்பாவும் பிள்ளையும் நாங்க பொழுது போகாம பேசீட்டிருக்கோம்னு ஒரு S Ve சேகர் ஜோக் வருமே அது நினைவுக்கு வந்தது ;-)

      Delete
    6. Not Muthu Super Special - it was Muthu Special - priced at 5 Rupees - with a Timothy Dalton cover ! Had a color strip from Chellam too in it.

      Delete
    7. லயன் dialog bubbles மற்றும் குண்டு fonts படிக்க ஈர்க்கும். முத்து காமிக்ஸ் bubbles சின்னதாய், எழுத்துக்கள் அதை விட சின்னதாய் சப்பை fontல் வெறுப்பேற்றும். 

      Delete
    8. எனக்கும் லயனின் கதைகளே முதல் அறிமுகம் மற்றும் டெக்ஸ் ஸ்பைடரே ஆதர்ஷ நாயகர்கள். முத்துவில் வரும் கதைகள் அதுரடிகள் குறைந்து இருக்கும் ஜெஸ் லாங், ஜார்ஜ். ஸ்பெஷல் இதழ்களுமே லயனில் தான் செஞ்சுரி ஸ்பெஷல், டாப் 10 ஸ்பெஷல் கோடைமலர் அனைத்துமே அந்த காலத்தில் லயனில் தான்.

      Delete
    9. //90களில் முத்து சூப்பர் ஸ்பெஷல் புத்தகத்தில் s விஜயன் என்று கையொப்பம் கண்டபோதுதான் அடேடே ஒரே வீடு ரெண்டு கம்பெனி என்று தோன்றியது !//

      Same here

      Delete
    10. //லக்கி லுக் குண்டு, சிக்பில் குண்டு, ஸ்பைடர் collectors edition with that long color story - maxi size - hard bound including some classic stories of இஸ்பய்டர் அண்ணாத்தே ! பழைய லயன் நாயகர்கள் யார் activeஆ இருந்தாலும் இணைக்கணும் !!//
      நடந்தா மிக்க மகிழ்ச்சி... ஆனால் லக்கி லூக் தவிர வேறு யாருக்கும் வாய்ப்பு லேது சார்.

      Delete
    11. // Lion 500 ஆகஸ்ட் 2023 ரிலீஸ் இல்லே? அட்டகாசமாய் இருக்கணும். இதுல Tex குண்டு, லக்கி லுக் குண்டு, சிக்பில் குண்டு, ஸ்பைடர் collectors edition with that long color story - maxi size - hard bound including some classic stories of இஸ்பய்டர் அண்ணாத்தே ! பழைய லயன் நாயகர்கள் யார் activeஆ இருந்தாலும் இணைக்கணும் !! // டக் என்று இதை படித்தவுடன் என்னடா இது ராகவன் சார் உடம்புக்குள் நம்ம ஸ்டீல் கூடு விட்டு கூடு பாய்ந்து விட்டாரோ என்று நினைத்து விட்டேன்.

      Delete
    12. // அப்போ இது பங்காளி கம்பெனி என்று தெரியாததால் லயன் was close to my heart. //

      Interesting :-)

      Delete
    13. i too preferred Lion over muthu, may be due to logo or stories

      Delete
  21. இதழ் இல்லம் வந்து விட்டது...


    பார்வையோ நாளையே ..


    ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. ஏன் தலைவரே இன்னைக்கு நாள் நல்லா இல்லையா ? நீங்க இன்னைக்கு நம்ப காமிக்ஸ் புத்தகங்களை பார்க்க படிக்க கூடாதா :-)

      Delete
    2. ஹப்பா...சந்தோசம்...நமக்கு புக் வர்ல... தலைக்கு வந்தும் பார்க்க முடியல....!!!

      Delete
    3. ஏன் தலைவரே இன்னைக்கு நாள் நல்லா இல்லையா ? நீங்க இன்னைக்கு நம்ப காமிக்ஸ் புத்தகங்களை பார்க்க படிக்க கூடாதா :-)

      ####

      அதான் சொன்னனே பரணி சார்..புத்தகம் இல்லத்தில் நானோ அலுவலகத்தில் :-)

      *******

      ஹப்பா...சந்தோசம்...நமக்கு புக் வர்ல... தலைக்கு வந்தும் பார்க்க முடியல...

      ###

      அடப்பாவி...:-)

      Delete
    4. // அதான் சொன்னனே பரணி சார்..புத்தகம் இல்லத்தில் நானோ அலுவலகத்தில் :-) //

      அதான் தலைவரே நீங்க ஏன் இல்லத்தில் இல்லை :-) புத்தகம் இன்னைக்கு வரும் என தெரிந்து நீங்கள் ஏன் இல்லத்தில் இருக்காமல் வெளியே இருங்கீங்க :-)

      // ஹப்பா...சந்தோசம்...நமக்கு புக் வர்ல... தலைக்கு வந்தும் பார்க்க முடியல... //
      நீ நல்லா வருவ ராஜா! நல்லா வருவ!! :-) (அக்னிநட்சத்திரம் வில்லன் மாடுலேஷனில் படிக்கவும்:)

      Delete
    5. ///ஏன் இல்லத்தில் இருக்காமல் வெளியே இருங்கீங்க :-)//----

      வேலைக்கு போனாதானே சம்பளம்னு ஒண்ணு தருவாங்க பாஸ்.....


      ///அடபாவி//---ஹா..ஹா...


      ///நீ நல்லா வருவ ராஜா! நல்லா வருவ!! :-)///---தேங்யூ...தேங்யூ!

      Delete
  22. அனைவருக்கும் வணக்கம் சொல்வது சின்னமனூர் சரவணர்ங்க.....

    ReplyDelete
  23. நமக்கு இந்த முறையும் காய்ச்சல்...பழைய ஆட்கள் வருவதில்லை..‌சப்ளையர் லீவு...ஆஃபீசுக்கு ஃபோன் பன்னிட்டு போங்க என நம்பத் தர...இல்லன்னி சொல்லிருவாங்களோன்னு பயந்து நேர்ல போக கிளம்பி....திடுமென ஃபோன்...சார் கொரியர்....உங்க ஏரியா ஆளு லீவு...எங்க வரட்டும்....எங்கன்னாலும் நானே வரேன் எனச் சொல்லி பாய்ந்து கைப்பத்தியாச்சு மூவிதழ்கள...நன்றிகள் சார்

    ReplyDelete
  24. கிரி இது வரை நீங்க போட்ட போஸ்டர்லயே அட்டகாசம் இதான்....சான்சே இல்ல கலக்குங்க

    ReplyDelete
  25. E-Book Fair: Wow Great news! ஆகா ஆகா ஆகஸ்ட் எப்ப வரும் என நினைக்க தோன்றுகிறது! இந்த மாத புத்தகங்களை நான் படித்து முடிப்பதற்குள் ஆகஸ்ட் வந்தித்துவிடும் :-) இந்த மாத புத்தகங்கள் இன்னும் தூத்துக்குடி வரவில்லை கோபால் :-)

    ReplyDelete
    Replies
    1. தூத்துகுடி கோபாலரே@ இங்கும் டுடே கேம் ஓவர்!!!

      மழை வேறு கொட்டுது. கொரியர் பையெல்லாம் உள்ளே வைத்துகிடுவாங்க.....!!!!

      Delete
    2. சேலம் கோபால் @ இங்கு நல்லா காத்து அடிக்குது! லேசா மழை சாரல்!! குற்றாலத்தில் சீசன் நல்லா இருக்குனாங்க ஆனா இந்த கொரோனா பிரச்சினையால் குற்றாலம் போக முடியல பார்டர் கடை பரோட்டா சாப்பிட முடியலை கோபால்!

      Delete
    3. விடுங்க கோபால்.... புரோட்டா இன்னும் 10ஆண்டு கழித்து கூட சாப்பிட்டுகிடலாம்... சேஃப்டி பர்ஸ்ட்!

      Delete
    4. அதற்குதான் தூத்துக்குடியில் அவ்வப்போது பரோட்டா பார்சல் வாங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிடுகிறேன் கோபால் :-) ஆமாம் சேப்டி முக்கியம் கோபால்.

      Delete
  26. புத்தகம் வந்து விட்டது முன்னுரிமை இளவரசிக்கே

    ReplyDelete
  27. சார் மூன்று அட்டைகளும் ஒன்றையொன்று விஞ்சுது...மழை பொழியும் டெக்ஸ் அட்டை அழகா...சும்மாநீல நிற ஜிகுனா ஜொலிக்கும் ஜாலி ஆண்டு மலர் எழுத்துக்களால் ஜொலிக்கும் அட்டை அழகா....அல்லது ஜிகுனா இல்லாமலே ஜொலிக்கும் பாண்ட் மாடஸ்டி அட்டை அழகா என நினைக்கிறேன்...திரும்பத் திரும்ப பாக்க வைக்கும் நீல ஜிகுனாவை மிஞ்சி வழவழப்பான அட்டைப் திரும்பிப் பார்க்கும் மாடஸ்டியும்...துடிக்கும் ak47னுடன் சீறிப்பாயும் மாடஸ்டிய மிஞ்சிய ஜேம்சுமே வந்ததிலேயே டாப்...அதகள அட்டை....பாக்க பாக்க இன்பம்...புரட்டப் புரட்ட பேரின்பம்..டெக்ஸ்...பிற&பி...இரு பக்கமும் முழு அட்டைக கலக்க....

    ReplyDelete
    Replies
    1. லக்கி ஜிகுனா எழுத்தால் கலக்க...பி&பி எல்லாத்தையும் விஞ்சி வந்ததிலயே டாப்

      Delete
    2. // பி&பி எல்லாத்தையும் விஞ்சி வந்ததிலயே //

      பி&பி ஜாஸ்தியா இருந்தா உடனே டாக்டரை பாருலே மக்கா :-)

      Delete
    3. மாடஸ்டி அட்டை ரொம்பவே சூப்பரா இருக்கு

      Delete
  28. உற்ச்சாகத்த ஹாட்லைன் காட்டுனா...உற்சாகம் வடிஞ்ச ஒல்லித் தோர்கள்....குண்டா வரட்டும்னு கேட்டோமே...ஆனா உயிரத் தேடி விளம்பரத்தை காணமேன்னு பாத்தா...சுமார் 400பக்கத்ல முழுநீள வண்ண டெக்ஸ் ஹார்டு பவுண்டு இதழ் தீபாவளியை முன்கூட்டியே அறிவிக்குது...பி&பி அட்டகாச தாளுடன் சித்திரத் தரத்தில் துள்ள...நானும் சளைக்கலன்னு குதிக்குது டெக்ஸ்....ஏற்கனவே பாத்த ஸ்மேஷ்70திகைக்கச் செய்யல...ஆனா உற்ச்சாக ஊற்று....இனி மாதந் தோறும் அடுத்த ஜனவரி வரை உற்சாகத்துக்கு குறைகள் லேது

    ReplyDelete
  29. வெனிஸில் ஒரு வேங்கை!!!

    இயல்பான போக்கில் ஓட்டமெடுக்கும் கதை!!

    விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை!!

    8.9 /10

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சார், நீங்க சொன்னது உண்மைதான்! நம்ப செல்வம் அபிராமி மாடஸ்தி கதையை படிக்க மருத்துவமனைக்கு இன்று விடுமுறை விட்டு விட்டார் போல! அதுவும் உடனே விமர்சனம் :-) என்னமோ நடக்குது உலகத்திலே :-)

      Delete
    2. ///விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை!!///

      குளுகுளுப்புக்கும் பஞ்சமில்லை ஜி!
      அட்டைப்படம் அள்ளுது!!

      Delete
  30. சார். வேதாளர் இரு வண்ணத்தில்னு விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கன்பர்ம் பண்ணுங்களேன்? (கருப்பு வெள்ளை என்பது கூட இரு வண்ணந்தான். இருந்தாலும் கன்பர்ம் பண்ணிடலாம்னு தான்).

    ReplyDelete
    Replies
    1. +1 பதில் தெரிந்துகொள்ள

      Delete
    2. எல்லா கலரும் சேந்தது கருப்பு, ஒரு கலரும் இல்லாத்து வெள்ளை.

      Delete
    3. //கருப்பு வெள்ளை//

      கருப்பு ஒரு வண்ணம் தான்!
      வெள்ளை பேப்பர் தானேங்க!

      Delete
    4. அனைத்து வண்ணங்களின் கலவை வெள்ளை என்று தானே விஞ்ஞானம் சொல்லுது நண்பரே!

      நிறமற்ற இயல்பு நிலை கருப்பு!

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. நம்மளை மாதிரி lay-manக்கு அதெல்லாம் தெரியாதுங்க மிதுனரே. போன பதிவுக்கு முந்தின பதிவுல கருப்பு வெள்ளைன்னு போட்டிருந்துச்சு. இப்போ இரண்டு வண்ணத்தில் போட்டிருந்தது என்னைப் மொருத்தவரை இன்ப அதிர்ச்சி. ஆரம்ப காலத்தில லக்கி, சட்டித் தலையன், ஏன் வேதாளர் கூட இரு வண்ணத்தில் வந்திருக்கு. அது தானான்னு கன்பர்ம் பண்ணிக்கலாம்னு தான்.

      Delete
    7. வேதாளர் இரு வண்ணங்களில் என்றால் இன்னமும் சூப்பர் ..
      :-)

      Delete
  31. முதல் பார்வை:

    பெரிய ஒல்லி புத்தகத்தை எதிர்பார்த்து இருந்த எனக்கு அந்த சைஸ் மிகவும் பிடித்திருந்தது பாண்ட் மற்றும் மாடஸ்தி

    டெக்ஸ் : அட்டைப்படம் அருமை. உள்ளே சித்திரங்கள் mixed ரியாக்ஷன் படித்துவிட்டு இறுதி கருத்து

    லக்கி:
    ஹார்டுகவர் இல்லாதது வருத்தமே. அட்டை படத்திலும் கொஞ்சம் அதிக இங்க் ஊற்றியது போலெ இருந்தது. உள்ளே சித்திரங்கள் கலரில் சிறப்பு.

    படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
  32. ஓரு பிரளயப்பயணம்: மற்றும் ஓரு Super Tex கதை.பாலைவனம் ...குதிரையை தவிர்த்து மொத்த Teamம் Steamship பயணம் செய்கிறார்கள். புக்க எடுத்தா நிச்சமயா ஓரே Shot முடிக்கத்தூண்டும். இதே மாதிரி கத போட்டா 500 வருஷத்துக்குTex ஐ யாரும் ஒன்னும் பண்ண முடியாது.

    ReplyDelete
    Replies
    1. //இதே மாதிரி கத போட்டா 500 வருஷத்துக்குTex ஐ யாரும் ஒன்னும் பண்ண முடியாது.///

      ---லாலே லாலி லாலா...😍😍😍😍

      Delete
    2. ///இதே மாதிரி கத போட்டா 500 வருஷத்துக்குTex ஐ யாரும் ஒன்னும் பண்ண முடியாது///

      அப்படிப் போடுங்க!

      Delete
    3. சூப்பர்...1000 ஆண்டுகள் ஆனாலும் தல தல தான்.

      Delete
    4. தல போல வருமா.
      தல வரலாறு பேசும்.

      Delete
    5. படித்து விட்டு வருகிறேன்

      Delete
  33. புக்கு வந்திடுச்சாம் - வீட்ல சொன்னாங்க! ஆனால் நாளை மாலை தான் நான் புத்தகங்களைக் கண்ணில் காண முடியும்!! ஹூம்... மாடஸ்டி..

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம் தலைவர் எவ்வழியோ செயலரும் அதே வழி. :-) பாராட்டுக்கள்.

      Delete
  34. மடஸ்டிக்கு பில்ட்அப் பயங்கரமா இருக்கே?!

    ReplyDelete
    Replies
    1. ஓவர் பில்ட்டப் உடம்புப்புக்காகாது....!

      Delete
    2. என்னாது ஓவர் பில்டப் உப்புமாவக்கு ஆகாதா :-) அனு வரதுக்குள்ள ஒடுடா பரணி சிக்கின கொழ கொழ பாயாச உப்புமாதான் :+)

      Delete
    3. இத்தனை நாள் மாடஸ்டிக்கு விமர்சனம் எழுதாத நண்பர்கள் எல்லாம் புத்தகம் வந்த உடனே விமர்சனம் எழுதுவதை என்ன செய்ய :-) அதுவும் மாடஸ்டிக்கு இனி வருடம் ஒரு கதை உறுதி என சொன்ன பிறகு துள்ளல் ஜாஸ்தியாக இருக்கிறது கோபால் :-)

      Delete
  35. /// இம்மாத இதழ்களுக்கென நமது IT டீமின் நண்பர் கிரி அனுப்பியுள்ள போஸ்டருடன் ////

    அருமையா டிசைன் பண்ணியிருக்கீங்க நண்பரே! கண்ணுக்கு இதமான வண்ணங்களோடு மிக நேர்த்தியாய் அமைந்திருக்கிறது!

    ReplyDelete
  36. வெனிஸில் ஒரு வேங்கை

    இளவரசியின் Network காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த Rosinnaவின் மகள் Francesca கடத்தப்படுகிறாள்... இளவரசியும், கார்வினும் விரைகிறார்கள் அவளுக்கு உதவ... கடத்தியவனோ ஒரு பழைய எதிரி... அவனுக்கு ransomஐ விட இளவரசியை சிறையெடுப்பதே தலையாய குறிக்கோளாய் உள்ளது...

    மிக thrillஆன கதை... அழகிய சித்திரங்கள்... கதைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன...

    Double crossings, ransom, rampage, deceit, sacrifice என எல்லா வித கலவையுடன் ஒரு roller coaster ride...

    படிக்க ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை... செம்ம வேகம்...

    ஒரு நீண்டநாள் குறை/வருத்தம்:

    இதை ஏற்கெனவே நான் பலமுறை கூறியுள்ளேன்... இளவரசி... கார்வினை விட வயது, திறமை, அனுபவம் என அனைத்திலும் உயர்ந்தவர்... Peter O’Donnell கதைகளில்... அவரே leadஆக இருப்பார்.. ஆனால் நமது தமிழ் கதைகளில்.. இளவரசி கார்வினை மரியாதையுடன் அவர் இவர் என அழைக்க... கார்வின் அவரை ஒருமையில் அழைப்பதாக உள்ளது... இது Peter O’Donnellன் கதையோட்டத்திற்கு மாறாக உள்ளது.... அவரது கதைகளிலும், daily stripகளிலும்... இளவரசி கார்வின் lingo... இளவரசி கார்வினை எப்பொழுதும் அன்புடன் கிண்டல்... கேலி.. செய்வது... ஒரு senior... juniorஐ treat பண்ணும் தொனியில் தான் இருக்கும்...

    நீங்கள்... இளவரசி கார்வினை மரியாதையுடன் அழைப்பதை மாற்றினால்... அவர்கள் இருவரின் நட்பின் அன்னியோன்யம்... மேலும் வெளிப்படும் என எண்ணுகின்றேன்... முடிந்தால் மாற்றிப் பாருங்கள்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பீரிட்டுக் கிளம்பிய டாக்டர்களின் ஜொள் ச்சே விமர்சன மழைகள்.....

      Delete
    2. ////இதை ஏற்கெனவே நான் பலமுறை கூறியுள்ளேன்... இளவரசி... கார்வினை விட வயது, திறமை, அனுபவம் என அனைத்திலும் உயர்ந்தவர்... Peter O’Donnell கதைகளில்... அவரே leadஆக இருப்பார்.. ஆனால் நமது தமிழ் கதைகளில்.. இளவரசி கார்வினை மரியாதையுடன் அவர் இவர் என அழைக்க... கார்வின் அவரை ஒருமையில் அழைப்பதாக உள்ளது... இது Peter O’Donnellன் கதையோட்டத்திற்கு மாறாக உள்ளது.... ///

      அடடே! இப்படியெல்லாம் வேற சமாச்சாரங்கள் இருக்கா?!!

      Delete
    3. சில ஒரிஜினல் templates எல்லா நேரங்களிலும், அட்சர சுத்தமாய் நமக்கும் பொருந்திட வேண்டுமென்பதில்லை டாக்டர் சார் ! TEX கதைகளே அதற்கொரு சிம்பிளான உதாரணம் !

      சமீப காலமாய் நாம் வாசித்து வரும் 'தல' கதைகளில் ஒரு subtle வேறுபாடிருப்பதை யாரும் கவனித்ததாய்த் தெரியலை எனக்கு ! அட, இம்மாதத்து "பிரளயப் பயணம்" கதையையே கூட நான் highlight செய்திட எண்ணும் விஷயத்துக்கு சுகப்படும் :

      ஒரிஜினல் இத்தாலிய வார்ப்பினில் டெக்ஸ் வில்லரை - டைகர் ஜாக் - ஒரு தோஸ்த்தைப் போலவே "நீ..வா.." என்று தான் விழிப்பார் ! கிட் வில்லருக்குமே அதுவே treatment ! ஆனால் நமது மொழியாக்கத்தில் டெக்ஸை "இரவுக்கழுகாரே !" என்றும் கிட்டை "சின்னக்கழுகாரே" என்றும் தான் அழைப்பார் ! ஒரிஜினலையே நாம் பின்பற்றி - "ஏண்டாப்பா டெக்ஸ் வில்லா...அந்த காப்பி கோப்பையை சித்தே எடுத்துத் தாயேன் ?" என்று டைகர் ஜாக் தமிழில் பேசிட்டால் நாம் ஜெர்க் ஆகிட மாட்டோமா சார் ?

      பொதுவாய் ஆங்கிலத்தில் மரியாதையினை இணைக்கவோ, துண்டிக்கவோ வழிகளில்லையே ? தாத்தாவையும் சரி, அப்பாவையும் சரி, அண்ணனையும் சரி, தம்பியையும் சரி - ஒரே வார்த்தைப் பிரயோகங்களில் தானே அழைக்க சாத்தியப்படுகிறது ? ​

      Gramps ..pass me the coffee ....Dad ..pass me the coffee !! Bro ..pass me the coffee ..? என்பது தானே universal பிரயோகங்கள் ?

      ஆனால் தமிழிலோ - மரியாதைகளை உணர்த்திடத் தேவையான மார்க்கங்களை நம் மொழி கைவசம் வைத்துள்ளதே ? "நைனா.. அந்த காப்பி டபராவை இப்டிக்கா தள்ளுங்களேன் ?" ; "தாத்தா...காப்பியைக் குடிச்சிடீங்களா ? டேய் தம்பி...அந்த சக்கரை டப்பியை இப்டி தள்ளி விடு !" என்பதில் அவரவர் வயதுகளுக்கோ / நிலைகளுக்கோ உரிய மரியாதை தெரிவிக்க முடிகிறதே ?

      So ஆங்கிலத்தில் - மாடஸ்டியும், கார்வினும் குரு, சிஷ்யன் ரேஞ்சுக்குப் பேசினாலும் சரி, நண்பர்கள் ரேஞ்சுக்குப் பேசினாலும் சரி, அவர்களது பயன்பாட்டில் இருந்திடக்கூடியது ஒரே set of words தானே சார் ? தமிழாக்கத்தில் அவற்றை துவக்க நாட்களிலிருந்தே கார்வினுக்கு மரியாதை தந்திடும் விதத்தில் நம்மவர்கள் கையாண்டு வந்துள்ளனர் & நானும் அதனையே தொடர்ந்து வருகிறேன் !

      இன்றைக்கு கிட்டத்தட்ட 30+ கதைகளுக்குப் பின்னே "சரிங்க மாடஸ்டி...நீங்க சொன்னா சரியாத் தானிருக்கும் !" என்று கார்வினும், "அந்த கிடாமாட்டை மண்டையிலேயே ரெண்டு சாத்து சாத்துப்பா கார்வின் !" என்று இளவரசியும் பேசத் துவங்கினால் நம்மவர்கள் ஏற்றுக் கொள்வார்களா சார் ?

      So இந்தப் பின்னூட்டத்தின் முதல் வரியையே இங்கேயும் ஒருக்கா போட்டுக்குறேன் !!

      Delete
    4. ஆனால் ஒரு ஜாலியான மாற்றமாய் இருக்கட்டுமென்று நண்பர்கள் நினைத்தால் - அடுத்த கதை முதலே மரியாதைகளை உல்டா பண்ணிடலாம் ! What say folks ?

      Delete
    5. ஏன் சார் வம்பு? நம்ம தோழர்கள் நவஹோ நல்லால்லே நவஜோ தான் புல்லரிக்குதுங்குறாய்ங்கே - நீங்க வேற :-) modesty புக்கு விக்கணுமா வேணாமா ? :-|

      Delete
    6. // modesty புக்கு விக்கணுமா வேணாமா ? :-) //

      LOL

      Delete
    7. // அடுத்த கதை முதலே மரியாதைகளை உல்டா பண்ணிடலாம் ! What say folks ? //

      ஏன் சார் இன்னுமொரு முட்டு சந்து பார்க்கலாம் என நினைக்கிறீங்களா :-) ஆனால் உங்களுக்கு இப்ப எல்லாம் முட்டு சந்து எல்லாம் ஜிகர்தாண்டா குடிப்பது மாதிரி ஆகிவிட்டது :-)

      Delete
    8. ஆனால் ஒரு ஜாலியான மாற்றமாய் இருக்கட்டுமென்று நண்பர்கள் நினைத்தால் - அடுத்த கதை முதலே மரியாதைகளை உல்டா பண்ணிடலாம் ! What say folks ?

      ######

      இந்த விசயத்தில் எல்லாம் பழகியதை மாற்றினால் ரசிக்க இயலாது சார்..:-)

      Delete
    9. ஏன் சார் வம்பு? நம்ம தோழர்கள் நவஹோ நல்லால்லே நவஜோ தான் புல்லரிக்குதுங்குறாய்ங்கே - நீங்க வேற :

      எஸ்..ட்ரூ சார்..:-)

      Delete
  37. இந்த வருசமும் EBF கொண்டாட்டத்துல துண்டு விழுந்ததுல செம கடுப்புல இருக்கேன்.. அந்த கொரோனா பயபுள்ள மட்டும் என் கையில சிக்கிச்சோ.. தெரியும் சேதி!

    எடிட்டர் & நண்பர்களை எல்லாம் பார்க்காம டச் விட்டுப்போன மாதிரி இருக்கு! முகங்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறந்து போற மாதிரி ஒரு பீலிங்கு! இப்படியே போனா இன்னும் கொஞ்சநாள்ல யாராவது எங்கிட்டே வந்து "ஏம்ப்பா விஜி.. அதோ அங்கே தலை ரொப்ப முடி, கொழுக் மொழுக் உடல்வாகு, சின்னச் சின்ன கண்களோட ஒருத்தர் நிக்கறாரே.. அவருதான் உங்க எடிட்டரா?"ன்னு கேட்டா "ஆ..ஆமாம்! அப்படித்தான் நினைக்கிறேன்"ன்னு சொன்னாலும் சொல்லிடுவேன் போலிருக்கு!

    நேத்திக்கு ராவுல ஈரோட்ல V.O.C park பக்கமா போயிருந்தேன்.. புத்தக ஸ்டால்கள் போட்டு ஜெகஜோதியா இருந்த இடம் முழுக்க இப்போ காய்கறி மார்கெட்டா நா/மாறிக்கெடக்கு! கொஞ்ச நேரம் அங்ஙனக்குள்ளயே நின்னு வெறிச்சுப் பார்த்துட்டு, ஒரு பெருமூச்சோட வண்டியைக் கிளப்பினேன்!

    மீண்டும் அந்தத் திருநாள் என்று திரும்புமோ?!!

    ReplyDelete
    Replies
    1. // அந்த கொரோனா பயபுள்ள மட்டும் என் கையில சிக்கிச்சோ.. தெரியும் சேதி //

      ஆமாம் கையில் கிடைத்தால் அதற்கும் ஒரு கோவேக்ஸின் போட்டு விட வேண்டியதுதான் :-)

      Delete
    2. கடந்த ஏழெட்டு ஆண்டுகளாய், ஜூலை மாதத்தில் ஆபீசே ஈரோட்டின் முஸ்தீபுகளில் பர பரவென இயங்கிக் கொண்டிருக்கும் ! புக்ஸ் பேக்கிங் ஒரு பக்கம் ; ரவுண்டு பன் இன்னொரு பக்கம் ; மீட்டிங்குக்கான பேனர்கள் இன்னொரு பக்கமென்று செம பிஸியாய் வண்டி ஓடி வரும் ! இதோ - முத்து காமிக்சின் 50 வது ஆண்டுமலர் கூப்பிடு தொலைவில் இருக்கையில், ஈரோட்டுச் சந்திப்பு மட்டும் சாத்தியமாகி இருந்தால் செம ரகளையாக ஏதேனும் திட்டமிட்டிருக்கலாம் ! ஹ்ம்ம்ம் !

      Delete
    3. ஹ்ம்ம். சார் அடுத்த மாதம் ஒரு சனிக்கிழமை மாலை நேரத்தில் ஆன்லைன் மீட்டீங் போடலாமா சார்.?

      Delete
    4. இல்லை சார்....அதில் பெரிய சுவாரஸ்யங்கள் லேது !

      Delete
    5. நீங்கள் சொன்னால் சரிதான். நேரில் மணிக்கணக்கில் உரையாடும் சுவாரசியம் இதில் கிடையாது என்பது உண்மை.

      Delete
  38. கோபால் St courier அலுவலகம் சென்று விசாரித்த போது எனது பார்சல் வரவில்லை என சொல்லி விட்டார்கள். "வாழ்க ST courier".

    எனது அண்ணனிடம் இதை பற்றி சொன்ன போது தூத்துக்குடியில் ST Courier சொதப்பல் என சொன்னார்கள். அடுத்த முறை எனது பார்சலை DTDC courierல் அனுப்ப சொல்ல வேண்டியதுதான் கோபால்.

    பாதியில் மறுவாசிப்பு செய்து வந்த ஜானியின் சைத்தான் வீடை சந்தோஷமாக படித்து முடிக்க வேண்டியதுதான் கோபால்.

    ஹம் இப்படி ST courier சொதப்பும் என தெரிந்து இருந்தால் நேற்று சிவகாசிக்கு நேரில் சென்று புத்தகங்களை வாங்கி வந்து இருப்பேன் கோபால் :-)

    ReplyDelete
  39. புத்தகம் வந்து சேர்ந்து விட்டது. அட்டைபடங்களில் B&B special தெறிக்கவிடுகிறது. அடுத்த இடம் டெக்ஸ்க்கு. பெரிதும் எதிர்பாத்த ஆண்டு மலர் அட்டைபடத்திற்கு மூன்றாவது இடமே. இன்னும் கொஞ்சம் முயற்சித்து இருக்கலாமோ. அதே போல் முதல் கதையில் panel கள் சற்று சிறிதாகவும், பக்க எண்களின் கீழ் அதிக இடம் blank ஆக இருப்பது வழக்கத்துக்கு மாறாக உள்ளது. இரண்டாவது கதையில் இவ்வாறு இல்லை.

    நான்கு கதைகளிலும் அச்சு மற்றும் சித்திரங்கள் நன்கு. அதில் டெக்ஸ் கதை முந்துகிறது. B&B specialல் சித்திரங்கள் தெளிவாக இருப்பது பெருத்த ஆறுதல் அதிலும் மாடஸ்டி அக்காவை சமீபத்தில் இவ்வளவு தரத்தில் கண்டதில்லை. B&B specialல் வெளியீடு எண் விடுபட்டு உள்ளது. மேலும் நார்மல் size ல் இல்லாமல் இந்த சைஸ் இக்கதைகளுக்கு நன்றாகவே செட் ஆகி உள்ளது. ஆனால் பக்க எண்ணிக்கையை பார்த்தால் விலை கூடுதலாக தெரிகிறது. அதே எண்ணம் ஹார்ட் பவுண்டில் இல்லாமல் நார்மலாக வெளிவந்திருக்கும் ஆண்டு மலருக்கும் பொருந்தும். இப்பொழுது எதிலிருந்து துவங்குவது என்று தான் தெரியவில்லை. ஆன்லைன் புத்தக விழாவின் surprise
    வெளியீடுக்ளை காண ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. துரதிர்ஷ்டவசமாய் பக்க எண்ணிக்கையினைப் பார்த்து விலை நிர்ணயம் செய்திடும் சாத்தியங்கள் நமக்கு ஒவ்வாது சார் ! அந்தக் கணக்குகள், ஒரே மாதிரியான தயாரிப்புச் செலவினங்களை உள்ளடக்கிடும் சமாச்சாரங்களுக்கே சுகப்படும் ! ஆனால் நம் கதையோ வேறு !

      In fact கதை ரகங்கள் வேறு வேறு என்பது தான் இங்கு சிக்கலே ! இம்மாதத்து கிளாசிக் நாயகர் & நாயகியின் கதைகளுக்கான ராயல்டி தொகைகள் என்னவென்பது தெரிந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் இவ்விதம் சொல்லத் தோன்றியிராது சார் !

      Delete
    2. நிச்சயம் இதை நினைவில் ஏற்றிக் கொள்வேன் சார். இனி வரும் காலங்களில் இவ்வித கேள்விகள் எழாமல் இருக்க உதவும்.

      Delete
  40. ஈரோடு திருவிழா. இல்லாதது. ஆசிரியர்
    நண்பர்களை பார்க்காதது. எல்லாருக்குமே. பயங்கர. பீலிங். காக. உள்ளது. ஆசிரியர். சிவகாசியில். நம்அலுவலக. மாடியில். அல்லது. Sivakasiylayee. பக்கத்தில். வேற. எங்காவது. ஆசிரியர். வாசகர். சந்திப்பு. ஏற்பாடு. செய்யலாமே. நம். அலுவலகத். தையும். கந்தக. பூமியை. பார்க்காத. வாசகர்களும். பார்த்து. சந்தோசம். அடை. வார்களே. ஆசிரியர். ஏற்பாடு. செய்யலாமே. புத்தக திருவிழா. வையும். அங்கேயே. வைத்து. கொள்ளலாமே

    ReplyDelete
    Replies
    1. என்ன காரணத்தின் பொருட்டு ஈரோட்டில் புத்தக விழா இல்லையோ - அதே காரணங்கள் தானே சார் - சிவகாசியிலோ ; திருவாரூரிலோ சந்திப்பை நடத்துவதற்குமே தடை ?

      Delete
    2. வருத்தமான உண்மையே சார்..:-(

      Delete
  41. எனக்கும். St. கூரியர். புத்தகம். வரவில்லை. நேரில். சென்று. (பலமுறை. நடந்திருக்கிறது )கேட்டால். பிரட்சனை. தான். வருகிறது. ஆகையால். இப்போதெல்லாம்மூன்று நாட்கள். கழித்து. நம். அலுவலகத்திலேயே விபரம். கேட்டு. தெரிந்து. கொண்டு. செல்வதே. வாடிக்கை. ஆகிவிட்டது DtDc. கூரியர். ரு ம். சலைத் ததது. இல்லை

    ReplyDelete
  42. புத்தகம் இந்த முறை கோவை வந்து விட்டது. லயன் ஜாலி ஆண்டு மலர் படித்து விட்டேன்.

    கிளாசிக் ரியல் கிளாசிக் இரண்டு கதைகளும் வாய் விட்டு சிரிக்க வைத்த இடங்கள் ஏராளம். அதும் வால் முளைத்த வாரிசு எல்லாம் வேற லெவல்.இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடியும்.

    எனது மதிப்பெண் 1000/10.

    ReplyDelete
    Replies
    1. பல் இருக்கு பக்கோடா சாப்பிடுறாரு...!!

      Delete
    2. விஜயராகவன் @ அவருக்கு என்னப்பா பல் இருக்கு பட்டாணி சாப்பிடுறாரு :-) எப்பூடி :-)

      Delete
    3. எந்த மஞ்சள் சட்டை முந்துகிறது ஜி. கடும் போட்டியோ. மார்ஜினில் முந்துவது யார்

      Delete
  43. சார் ஆன்லைன் chatting சுவாரஸ்சயமாய் இருக்காது எனில் வீடியோ பதிவு ஒன்றை upload செய்யலாமே. சென்ற வருட லாக்டவுனில் ஒரிரு முறை இது போல் முயற்சித்தீர்கள். உங்களையும் உங்கள் குரலையும் பார்த்தும் கேட்டும் நாளாகி விட்டது. தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை பொருத்து (குறைந்த பட்சம் 30 நிமிஷமாவது) ஒரு வீடியோவை upload செய்து அந்த லிங்கை ஒரு வார இறுதியின் பதிவிவில் பகிரலாமே. அதுவும் வரும் ஆன்லைன் புத்தக விழா சமயத்தில் பதிவேற்றம் செய்தால் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும்.

    ReplyDelete
    Replies
    1. இன்றைக்கெல்லாம் ஒரிஜினல் 'தலைவர்' அரை அவருக்குப் பேட்டி தந்தாலே கேட்க நமக்குப் பொறுமை லேது சார் ; இந்த அழகில் நானெல்லாம் அரை மணி நேரம் பேசி வேலைக்கு ஆகவா ?

      உலகம் ரொம்பவே மாறிப் போச்சு சார் - post the pandemic !! இனி எல்லாமே crisp ஆக இல்லாவிடின் கதை கந்தலே !

      Delete
  44. ஒரு பிரளயப் பயணம் முடிந்தது. ஷாப்பா அட்டகாசமான பயணம். டெக்ஸ் டீமுடன் நாமும் சேர்ந்து பயணம் போனது போல இருந்தது. செம்ம fast செம்ம செம்ம. இந்த வருடத்தின் இரண்டாவது டெக்ஸும் ஹிட். பட்டையை கிளப்பிய பயணம்.
    சதுப்பு நிலத்தில் நடக்கும் சண்டை, சீட்டின் நுனிக்கு என்னை கொண்டு வந்து விட்டது. அதற்காகவே 10/10.

    ReplyDelete
    Replies
    1. //இந்த வருடத்தின் இரண்டாவது டெக்ஸும் ஹிட். //

      சேதி தெரியுமோ ? இந்த வருஷத்தின் முதல் டெக்ஸ் ஹிட் - ஸ்டாக் காலி சார் !!

      Delete
    2. கழுகு பறந்திடிச்சோ.....?

      Delete
    3. நெஞ்சே எழு என்று நினைக்கிறேன். Worth..
      (பெயர் சொல்லும்போது ஏ. ஆர். ரஹ்மான் குரல் தான் முதலில் நிற்கிறது)

      Delete
    4. // இந்த வருஷத்தின் முதல் டெக்ஸ் ஹிட் - ஸ்டாக் காலி சார் !! //

      சூப்பர் தகவல்.

      Delete
    5. இரவுக்கழுகிலிருந்தே ஆரம்பித்து விடலாம்.

      Delete
    6. அப்ப இன்னொரு டெக்ஸ் வண்ண மறுபதிப்பை போட்டுத் தாக்கவும். பழிக்குப் பழி நீண்ட நாட்களாக வெயிட்டிங்.

      Delete
    7. சேதி தெரியுமோ ? இந்த வருஷத்தின் முதல் டெக்ஸ் ஹிட் - ஸ்டாக் காலி சார் !!


      ######

      டெக்ஸ் இஸ் ராக்ஸ்..

      எத்துனை பாயாச அண்டாக்கள் வைத்தாலும்..:-)

      Delete
  45. இன்னும் பாக்கி இருப்பது பாண்ட் மற்றும் பிளைசி மட்டுமே. இதற்கு மேல் முடியாது எனவே நாளை காலை அதையும் படித்து முடித்து விட்டு வருகிறேன். அட்டகாசமான நாள். நன்றி சார் அலுவலக பணியாளர்களுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  46. Sir can we try clubhouse like audio only meet so every one have good conversation and can query you as well.

    ReplyDelete
    Replies
    1. Not too sure Krishna....! Maybe நண்பர்கள் என்னிடம் கேட்க எண்ணிடும் கேள்விகளை முன்கூட்டியே தீர்மானித்து, அவற்றை ஒருங்கிணைத்த பின்னே என்றேனும் ஒரு Live ZOOM மீட்டிங்கில் கேட்கலாம் ! நான் மரத்தடி சந்திப்பினைப் போல ஜாலியாய் பதில் சொல்ல முயற்சிக்கலாம் ! எவ்வளவு நேரம் ? என்ன தலைப்புகள் ? என்பதை முன்கூட்டியே நண்பர்களுக்குச் சொல்லி வைத்தால் ஆர்வம் எழக்கூடும் !

      இலக்கின்றிப் பயணிக்கும் ஆன்லைன் மீட்டிங்குகளில் யாருக்குமே சுவாரஸ்யம் இருந்திடுவதில்லை என்பது தான் சிக்கலே !

      Delete
    2. அதுவும் நல்ல ஐடியா தான் சார். ஆனால் மரத்தடி நிழலில் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி நண்பர்கள் தொடுக்கும் கேள்விகள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்திற்கும் சலிக்காமல் பதில் சொல்லும் பீலிங் உருவாக்க முடியுமோ என்ற கருத்து தான்.

      ஆனால் நீங்கள் சொன்னது போல ஜூம் என்றாலும் டபுள் ஒகே தான் சார்

      Delete
    3. கேள்விகளை என்னிடம் சொல்ல வேண்டியிராது கிருஷ்ணா ; நண்பர்களுக்குள் தீர்மானித்துக் கொண்டாலே போதும் ! என்ன கேட்பது ? யார் எதைக் கேட்பது ? என்ற தெளிவு நண்பர்களுக்கு இருந்திட்டால் - மீட்டிங் இலக்கின்றி ஜவ்விழுக்காது இல்லியா ?

      நான் வழக்கம் போல தலைக்குள் அந்த நொடியில் தோன்றும் பதில்களை ஜாலியாய்ச் சொல்லிடுவேன் !

      Delete
    4. அந்த நாளில் இணைய தொடர்பில் என்னால் இணைய முடியுமா என அறியாத சந்தேக காரணத்தால் முதல் வினாவாக இங்கேயே கேட்டுவிடுகிறேன் சார்..இங்கே ஆசிரியர் பதில் அளிக்கா விட்டாலும் இணைய சந்திப்பு நிகழுமாயின் எனது சார்பாக இந்த வினாவினை நண்பர்கள் கேட்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.



      *சீங்கத்தின் சிறு வயதில்* தொடர் மீண்டும் தொடருமா சார்...?


      *இதுவரை வந்த சிங்கத்தின் சிறு வயதில்* கட்டுரைகளையாவது ஒரு தொகுப்பாக கொண்டு வாருங்கள் சார்..ப்ளீஸ்..?!

      Delete
  47. நன்றிகள் சார்.

    ஆண்டு மலர் TEMPLATE ஆன லயன் ஆண்டு மலர் கொண்டாட்டத்தின் படத்தை மாற்றாமலிருந்ததற்கு.


    மூன்றுப் புத்தகங்களின் ஒன்றுக்கொன்று சலிக்காத,சளைக்காத அட்டைப்படங்களுக்கும்,கனமான அட்டைக்கும்,ஆண்டு மலரின் அற்புதமான தாள்களுக்கும்.


    டெக்ஸ் வில்லரின் பிரளயப் பயணம் ஏக் தம்மில் படித்து முடித்தும் விட்டேன்.
    "இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்" போன்று ஆரம்பத்திலிருந்து கடைசி வரை செம‌.

    "வால் முளைத்த வாரிசு",
    ஆரம்பம் முதல் இறுதி வரை நாலு கால் ஞான சூன்யத்துடன்,டால்டன் சகோதரர்கள் செய்திடும் ரகளை,கூடவே ஜாலி ஜம்பரின் புலம்பல்,சைனா பாஷை, சீனர்கள் டால்டன் சகோதரர்களை புகார் செய்யுமிடம் ,மொழிப்பெயர்ப்பில்
    நீங்கள் பின்னூட்டத்தில் கூறியது போன்று ஒரிஜினல் templates எல்லா நேரங்களிலும், அட்சர சுத்தமாய் நமக்கும் பொருந்திட வேண்டுமென்பதில்லை சார்.

    ஆத்மார்த்தமான நன்றிகள் சார் அற்புதமான,சீரியஸான,
    ஜாலியான மொழிபெயர்ப்புகளுக்கும், புத்தகங்களின் வடிவமைப்புகளுக்கும்.


    ReplyDelete
    Replies
    1. //ஆண்டு மலர் TEMPLATE ஆன லயன் ஆண்டு மலர் கொண்டாட்டத்தின் படத்தை மாற்றாமலிருந்ததற்கு//

      அது என்றென்றும் மாற்றம் கண்டிடாது சார் ; நம்மோடே ஒவ்வொரு ஜூலையிலும் தவறாது பயணிக்கும் !

      அப்புறம் (லக்கி) மொழிபெயர்ப்பிற்கான அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் சார் ! 'கார்ட்டூன் தானே ? நம்ம லக்கி கதை தானே ?' என்று பணிக்குள்ளே புகுந்திடும் நேரத்தில் தோன்றிடுவதுண்டு ; ஆனால் இங்கே காத்திருக்கும் சவால்களோ எவற்றிற்கும் சளைத்தவையல்ல என்பது சீக்கிரமே மண்டையில் உரைக்கும் ! And "வால் முளைத்த வாரிசு" எக்கச்சக்கமான கதை மாந்தர்களை, கதைப் பிராணிகளை (!!) கொண்ட சாகசம் எனும் போது, வழக்கத்தை விடவும் கூடுதலாய் கரணங்கள் அடிக்க வேண்டியிருந்தது !

      Delete
    2. அட்டகாசம் தனபாலன். தொடர்ந்து எழுதுங்கள்.

      Delete

  48. டெக்ஸின் 'ஒரு பிரளயப் பயணம்' இருப் பக்க அட்டைப்பட ஒவியம் தத்ருபமாக அமைந்துள்ளது. நான் கூட அட்டையில் ஏதோ கோடுக்கோடாக இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் அதை உன்னிப்பாகக் கவனித்தால் மழைத்துளிகள். செம்ம செம்ம.
    உள் பக்க சித்திரங்கள் Corrado Mastantuono கைவண்ணத்தில் மிரட்டுகின்றன. அடுத்தாண்டும் டெக்ஸ் + Corrado Mastantuono கூட்டணிக்கு ஒரு ஸ்லாட் டிக் அடித்து விடுங்கள்.

    வழக்கம் போல் லக்கி லூக் தோன்றும் ஆண்டு மலர் ஒரு trendsetter-ராகவே தொடர்கிறது! ஒரிஜினல் அட்டைப்படங்களை அப்படியே கொண்டுவந்தால் இன்னும் Better - ராகயிருக்கும். லயன் ஆண்டு மலர் லோகோ போல், லக்கியின் 75-வது ஆண்டு லோகோவையும் அட்டையில் போட்டிருக்கலாம். அடுத்த வெளியீட்டில் 2 இதழ்கள் மட்டுமே கண்ணில்பட்டன. Eroad online புக் Fair - ல் 'உயிரைத் தேடி' & லக்கியின் 'சூ - மந்திரகாளி' May be களமிறங்கலாம்.

    'B & B ஸ்பெடில்' இருப்பக்க அட்டைப்படங்கள் சூப்பரோ சூப்பர். ஒவியர் பின்னி பெடல் எடுத்துவிட்டார். அபாரமான வர்ணக்கலவை.
    மாடஸ்டியின் உட்பக்க சித்திரங்கள் இந்த முறை வசீகரிக்கின்றன.
    சமீபத்திய மாடஸ்டியின் கதைகள் 5-6 பக்கங்கள் மட்டுமே எட்டிப் பிடிப்பேன். இந்த முறையாவது முழுமையாகப் படிக்க புனித மனிடோ அருள்பளிப்பாராக.? B & B ஒரேயிதழில் இணைத்தது நல்ல ஐடியா. எனக்கு க்ளாஸிக். பாண்ட் அவ்வளவு ஈர்ப்பில்லை. இந்த முறையும் தொடர்வது ஒரு மழைநாளில் மாறுமோ என்னவோ...?

    ReplyDelete
    Replies
    1. சித்திர தரமே உங்களை மாற்றுவார்கள் நண்பரே...:-)

      Delete
  49. இனி மேல் ஆண்டுமலர் லக்கிவெளியிட்டால்கூடவே வயிறுவலி மாத்திரையும் அனுப்புங்கசார் வயிறு வலிக்குதுசிரித்து, சிரித்து. லக்கி இரண்டுமே செம.
    கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  50. முத்து காமிக்சின் 50 வது ஆண்டுமலர் கூப்பிடு தொலைவில் இருக்கையில்,//

    பேசாம இதை சிவகாசியில் ஒரு வெளியீட்டுவிழாவா.. ப்ளான் பண்ணுங்க சார்..இன்னும் 5 மாசம் இருக்கே ஏதும் நல்லது நடக்கும் வாய்ப்பு உண்டே சார்.. நாங்களும் குடோன ஒருவழிபண்ண வழிஉண்டே...நமது அச்சகங்கள் தயாரிப்புபணிகளையும் ஒருக்கா பாத்தமாதிரி இருக்குமே...

    ReplyDelete
    Replies
    1. உலகம் முழுவதும் பலவிடங்களில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டது பழனிவேல். டாக்டர்கள் தங்கள் சுயநலன் கருதாது ஏற்கனவே overtimeல் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் 500 பேர் அவர்களுக்கு செய்யக்கூடிய மிகுந்த மரியாதை என்பது இன்னும் 5-6 வருடங்களுக்கு நேரடியாக கூடாமல் இருப்பதே.

      80-90% தடுப்பூசி (இருமுறை) போடாமல் நிலைமை கட்டுக்குள் வராது - இந்திய ஜனத்தொகை அளவுகளின் படி இந்த எண்ணை கடக்க 5-6 வருடங்கள் ஆகலாம் !

      Let us tune to realities and make up our minds - எமோஷனல் ஏகாம்பரங்களுக்கு இங்கே வேலையே இல்லை - என்னையும் சேர்த்து !

      Delete
    2. நல்லது நண்பரே... காத்திருப்போம்

      Delete
  51. எடிட்டர் & நண்பர்களை எல்லாம் பார்க்காம டச் விட்டுப்போன மாதிரி இருக்கு! முகங்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறந்து போற மாதிரி ஒரு பீலிங்கு!//

    உண்மையாகவே எனக்கும் அதே பீலிங் ஈவி அந்த இரண்டு நாளுக்காக வருஷமெல்லாம் காத்திருப்பேன் என்ன செய்ய ...அடேய் சப்ப மூக்கு கொரோனா மவனே கைல கெடைச்ச கபர்தார்தான்...

    ReplyDelete
  52. received yday evening. finished lucky and tex. Tex was great. Lucky-rin tin can was good. but the second one was sleepy. yet to read the double dhamaka. haavvvvv.....

    ReplyDelete
    Replies
    1. // yet to read the double dhamaka. haavvvvv. //

      நம்பிட்டோம் :-)

      Delete
  53. சிறையில்அசல் துப்பாக்கியைமாடலாக வைத்துசோப்பு துப்பாக்கிசெய்யும்ஆவ்ரெல்துப்பாக்கி கேட்கும் ஜோவிடம்சோப்பு துப்பாக்கியைகொடுப்பது, மற்றம் மாற்றுடைஆட்டையைப்போடரகசியக்கூட்டமைப்பின் தலைவனையேதேர்ந்தெப்பது என அலப்பறை செய்வது ரசிக்கவைக்கிறது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  54. புத்தகங்கள் கிடைத்து விட்டது! மகிழ்ச்சி!

    ReplyDelete
  55. இன்னிக்கும் பொட்டி வரலை,பார்சல்கள் குறைவாம்...
    எப்ப வருமோ ???!!!
    எதிர்பார்ப்பின் நாட்கள் கடந்துவிட்டால் சுவராஸ்யம் குறைந்து விடும்,சரி வரட்டும் மெதுவா படிச்சிக்குவோம்...

    ReplyDelete
  56. இப்பொழுது அரைமணி நேரத்திற்கு முன்னர் தான் இதழை பிரித்து பார்த்து புரட்டி ரசிக்க முடிந்தது..

    *அட்டைப்படம்*

    டெக்ஸ் ,லக்கி ,007 ,இளவரசி அனைவரும் இந்த முறை ஒருவருக்கொருவர் போட்டிக்கொண்டு அசத்துகின்றனர்...இந்த பக்கம் ஒரு கதை,அந்த பக்கம் ஒரு கதை என பார்த்து எத்தனை நாட்கள் ஆயிற்று...இந்த முறை இளவரசியும் ,007 ம் அதை நெடுநாட்கள் கழித்து தொடங்கி வைத்ததில் மிக மகிழ்ச்சி .லயன் ஜாலி ஆண்டு மலர் தலைப்பின் மினுமினுப்பு கண்ணை கவர்கிறது.என்னை பொறுத்தவரை எப்பொழுதுமே ஹார்ட் பவுண்ட் அட்டையை விட இது போன்ற கெட்டியான அட்டைப்பட தாள்களில் வரும் அட்டைப்படங்களே மனதை கவரும் .எனவே ஹாரட்பைன்ட் சிலருக்கு மைனஸ் பாயண்ட் ஆக தோன்றினாலும் எனக்கு அதுவே ப்ளஸ் பாயண்ட் ஆக மகிழ்வுற வைக்கிறது.மூன்று அட்டைப்படங்களும் சூப்பர் சூப்பர் சூப்பர்..


    *சித்திரம்& தரம்*

    லக்கி எப்பொழுதும் போல் கலக்குகிறார் எனில் டெக்ஸ் இந்த முறை அசத்தலான சித்திரத் தரத்தில் மேலும் அசத்துகிறார் எனில் பழைய நாயகர்கள் சித்திர தரத்தில் மின்னுகிறார்கள்..அதுவும் இளவரசியின் சித்திர தரமே இதழின் வெற்றியை 50 சதவீதம் அடைய வைத்து விட்டது எனில் மிகை கிடையாது..இதழின் அட்டைப்படம் ,சித்திர தரம் ,அச்சு தரம் என அனைத்திலுமே ஒவ்வொருவரும் மேலே சொன்னவாறு அசத்தல் படுத்தியுள்ளார்கள்..தளத்தில் பார்த்ததை விட இதழல் வேதாளர் ,மாண்ட்ரேக் போன் றோரின் விளம்பரங்களும் ,சந்தா அறிவப்பும் காணும் பொழுது மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரிக்கிறது..மொத்தந்தில் இந்த மாத இதழ்கள் மூன்றுமே செம ரகளையாய் அமைந்து எதை முதலில் படிப்பது என திக்கு முக்காட வைக்கிறது..இருப்பினும் இளவரசியின் கயல்விழி கண்ணை சுண்டுவதால் இங்கி பாங்கி இல்லாமல் இளவரசியை தேர்ந்தெடுக்கிறேன்...இனி படித்து விட்டு....

    ReplyDelete

  57. ஒரு பிரளய பயணம் !!!!
    சமீபத்தில் வந்த ஒரு லக்கி லூக் கதையும் இதே கருவில்தான் வந்தது [ எடிட்டரே ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தார்]
    அது இனிப்பு கொழுக்கட்டை
    இது கார கொழுக்கட்டை
    இர்ண்டுமே வெவ்வேறு வகையில் சப்பு கொட்ட வைப்பவைதான்…

    நால்வரும் இருக்கும்போது வரும் வழக்கமான உலர் நகைச்சுவை தாண்டி பக்கம் 14, 15 ,16 களில் கார்சன் அடிக்கும் கூத்தில் உருண்டு புரண்டு சிரித்தேன் ..
    பின்னரும் தொடரும் பக்கங்களில் கார்சன் ஒரு ரெஸ்டாரென்ட் பலகையில் மீன் படம் பார்த்து ஸ்தம்பித்து நிற்கும்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை
    என்ன னொன்ணே/?/

    இது எடிட்டரின் கைவண்ணமாக இருக்க வேண்டும்
    ESCARGOTS A LA BOURGUIGNONNE

    PRETTY WOMAN –படத்தில் இதே நத்தை கறியை வைத்து ஜூலியா ராபர்ட்ஸ் அடிக்கும் கூத்தில் சிரிக்காதவர் யாருகம் இருக்க முடியாது

    கார்சனுக்கும் சுக்காவுக்கும் உள்ள மிக நெருங்கிய பந்தத்தை
    இதை விட சுவையாக சொல்லி இருக்க முடியாது

    9/10

    ReplyDelete
  58. அதே போல் க்ளாசிக் இதழ்கள் பெரிய அளவை விட இந்த அளவிளான இதழ்களே சிறப்பாக தெரிகிறது சார்...இனி இப்படியே தொடரட்டும் சார்...

    ReplyDelete
  59. வெனிஸில் ஒரு வேங்கை!

    அட்டைப்பட இளவரசி, கதையினுள் வரும் ஃபிளாஷ் பேக் இளம் இளவரசி டாப் - A1!!

    கதை சுமார் ரகம்! சித்திரங்கள் சூப்பர்!!

    8/10

    இரண்டு நாள் முன்னதாக 'வேட்டை நகரம் வெனிஸ்' லார்கோ கதை படிச்சேன்! நீரில் மிதக்கும் வெனிஸ் நகரின் மேல் ஒரு ஈர்ப்பு உண்டாகிவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. The B&B special!

      புக் சைஸ் படிக்க லாவகமாய் உள்ளது!

      இதே சைசில் லக்கி லூக் புத்தகங்கள் வண்ணத்தில் வந்தால் நல்லா இருக்கும்!!!

      Delete
  60. Smashing 70s புக் பண்ணியாச்சு!!

    ReplyDelete
  61. வெனிஸில் ஒரு வேங்கை...

    படித்து முடித்தவுடன் உண்மையிலேயே எனக்கே ஆச்சர்யமாய் உள்ளது..சமகால கதைகளில் நாயகர்களுக்கு ,நல்லவர்களுக்கு ஆபத்து ஏற்படும் பொழுது ஒரு பதைபதைப்பு ,மனம் கனத்தல் என மனம் அலைபாயும்...சமீப டெக்ஸ் கதையில் கூட டெக்ஸ் நீரோட்டத்தில் அல்லல்படும் பொழுது கதையில் நாயகர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நன்றாகவே தெரிந்தாலுமே கூட மனம் படபடத்தது உண்மை..ஆனால் அதே படபடப்பு அன்று படைத்த அ(இ)ன்றைய நாயகிக்கும் அதே படபடப்பு நிகழுமா ..!? நிகழ்ந்து விட்டதே..மாடஸ்தி துப்பாக்கியில் சுடப்பட்டு கீழே விழுந்து மயங்கி கிடக்கும் பொழுது மனம் படபடத்தது உண்மை எப்படியோ என்னை பற்றி நினைக்காமல் குழந்தையை மீட்டு செல்லுங்கள் என மாடஸ்தி உத்தரவிடும் பொழுது மனம் கனத்து போனது எவ்வளவு உண்மையோ போல் கார்வின் குழந்தையிடம் உன்னை பெற் றோர் இடம் விட்டு விட்டு மீண்டும் வருவேன் என சூழுரைக்கும் பொழுது அந்த பழிவெறி எனக்கும் பலமாக மனதில் ஊறியதும் உண்மை.அது கதையின் வலிமையாலா ,சித்திர தரத்தின் உணர்வினலா ,அல்லது மொழி ஆக்கத்தின் படைப்பினாலா .. எனக்கு சொல்ல தெரியவில்லை..ஆனால் பழைய மும்மூர்த்திகளுக்கு எவ்வளவு ஆபத்து வந்தாலும் உணராத ஒன்று இளவரசி அன்ட் கார்வின் கதையில் ஏற்பட்ட இந்த உணர்வு தான் இன்றும் இளவரசி வெற்றி நடை போடும் ரகசியத்திற்கு காரணம்..

    அதே போல் " டாக்டர்களை " பற் றி கார்வினும் ,இளவரசியும் உரையாடும் பொழுது வாய்விட்டு சிரித்த பொழுது நமது அனைத்து காமிக்ஸ் மருத்துவ நண்பர்களும் ,பெயர்களும் நினைவில் வந்து சென்றது ஓர் தனி சுவராஸ்யம்..

    இதே சித்திர தரத்தில் இளவரசி தொடர்ந்து வந்தால் இக்கால பல நாயகர்களுக்கு அவரும் இன்னமும் போட்டியாளர் தான் என்பதை இந்த "வெனிஸில் ஒரு வேங்கை " நிரூபித்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. // அதே படபடப்பு அன்று படைத்த அ(இ)ன்றைய நாயகிக்கும் அதே படபடப்பு நிகழுமா ..!? நிகழ்ந்து விட்டதே..மாடஸ்தி துப்பாக்கியில் சுடப்பட்டு கீழே விழுந்து மயங்கி கிடக்கும் பொழுது மனம் படபடத்தது உண்மை எப்படியோ என்னை பற்றி நினைக்காமல் குழந்தையை மீட்டு செல்லுங்கள் என மாடஸ்தி உத்தரவிடும் பொழுது மனம் கனத்து போனது எவ்வளவு உண்மையோ போல் கார்வின் குழந்தையிடம் உன்னை பெற் றோர் இடம் விட்டு விட்டு மீண்டும் வருவேன் என சூழுரைக்கும் பொழுது அந்த பழிவெறி எனக்கும் பலமாக மனதில் ஊறியதும் உண்மை.அது கதையின் வலிமையாலா ,சித்திர தரத்தின் உணர்வினலா ,அல்லது மொழி ஆக்கத்தின் படைப்பினாலா .. எனக்கு சொல்ல தெரியவில்லை.. // சத்தியமாக கதையை படித்து விட்டு எனது மனதில் ஓடியதை அப்படியே எழுத்தில் வடித்து விட்டீர்களே தலீவரே ஆஹா ஆஹா

      Delete
  62. 🎵🎶 டெக்ஸாஸ் என் ஊருங்க 🎶🎵
    🎵🎶 லக்கி என் பேருங்க 🎶🎵

    🤠 🐎 🤠

    🎵🎶 என் பேரு ஜாலிங்க 🎶🎵
    🎵🎶 இவரோட சுத்தரது ஜோலிங்க 🎶🎵

    சூப்பர் சூப்பர் சூப்பர்!!!

    ஹாஹாஹா!

    ReplyDelete
  63. டியர் விஜயன் சார், இம்மாத புத்தகங்கள் அனைத்தும் படித்து விட்டேன்.ஜேம்ஸ்பாண்டை தவிர...
    மாடஸ்டி கதை என்றாலே ஆரம்ப கால லயனில் வந்த மாடஸ்டி கதைகள்தான் எப்போதும் எனக்கு பிடிக்கும்..
    தெளிவான சித்திரதரம் மற்றும் சரளமான மொழிபெயர்ப்பு.
    மாடஸ்டி கதைகளில் என் ஆல் டைம் பேவரைட்
    கழுகு மலை கோட்டை
    மற்றும்
    மரணகோட்டை
    அத்துடன்
    இம்மாத மாடஸ்டியையும் சேர்த்து கொள்ளுங்கள்..ர
    அருமை சார்...
    அதனை போலவே டெக்ஸ் அண்ட் கார்சன் லூட்டி ...
    சிரித்து மாளல...

    வெகு நாட்களுக்கு பிறகு கண்களில் நீர் தழும்ப சிரித்தேன் கார்சனின் சுக்கா காமடிக்கு...
    லக்கி லூக் இந்த முறை கதையை படிக்கும்போது மெய்யாலுமே சிரிப்பு வந்தது...
    இந்த இதழ்களின் பின்னனியிலுள்ள தங்களின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் சார்..
    அடுத்தது,
    ஜேம்ஸ்பாண்ட்
    பின்னொரு நாளில் படிக்க எடுத்து வைத்துள்ள கிராபிக் நாவல்களுடன் சேர்த்து இதனையும் படிக்க வேண்டும்...
    அப்புறம் ஒரு கேள்வி ஆபிஸர்..
    70'S கதாநாயகர்களை ஹார்ட் பவுண்டில் மெகா சைஸில் ஏழெட்டு கதைகளோடு கவுரவிக்கிறீர்கள்...
    அந்த மாதிரி லயனின் இளவரசி மாடஸ்டியையும் கவுரவிச்சா குறைஞ்சா போயிடுவீங்:-)

    ReplyDelete
    Replies
    1. வாரே வாவ்...அடுத்த டாக்டரும் ரெடி...:-)

      Delete
    2. சகலவிதமான நோய்களுக்கும், காமிக்ஸ் உலக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரே மருந்து, சர்வ ரோக நிவாரணி, 'மாடஸ்டி, மாடஸ்டி, மாடஸ்டி' இன்றே வாங்கி பிறவிப் பயனடைவீர்.

      Delete
  64. 007 ன் "ஹாட் ஷாட்"


    வித்தியாசமான தலைப்பு ..ராணிகாமிக்ஸ் ல் இதில் பாதி கதை படித்தது போல் உள்ளது பாதி படிக்காத கதை போல் உள்ளது.. இந்திய பாம்பே களத்துக்கு ஏற்ற மொழிபெயர்ப்பும் ,சித்திரமும் இந்த அளவிளான இதழ் சைஸுமே கவர வைத்த காரணத்தால் பழைய பாணி கதை என்றாலுமே போரடிக்கமலே சுவையாகவே படிக்க முடிந்தது.. முதல் பக்கத்திலியே ( மட்டுமே ) ஆசிரியர் சென்சார் செய்ய மறந்து போய்விட்டார் போல...:-)

    தலைப்பும் ஒரு வித்தியாசமாகவே தோன்றியது...இளவரசிக்கு அடுத்த இடம் தான் 007 க்கு என்றாலும் கதை இந்த முறை விறுவிறுப்பாகவே சென்றது..

    ஹாட் ஷாட் குட் ஷாட்

    ReplyDelete
  65. ஏனோ இந்த ஜூலை-நாயகர்கள் நமது பால்யத்திற்கே கொண்டு சென்று வீட்டார்கள்..லயன் காமிக்ஸின் முதல் நாயகி-மாடஸ்டி | ராணி காமிக்ஸின் முதல் நாயகன்-007|ஜுனியர் லயன் காமிக்ஸின் முதல் நாயகர்-லக்கிலூக்-/ திகில் காமிக்ஸின் மறுவடிவம் போல்-ெடக்ஸ்வில்லர்-என்று 35 ( - 2) ஆண்டுகளுக்கு முன் அழைத்துச் சென்றுவிட்டீர்கள்.'-நன்றி..
    மற்றவர்கைளை படிக்க தனி ேநரம் பார்த்துக்ெகாண்டிருக்ையில் - மாடஸ்டியை முதலாவதாக படித்து முடிச்சாச்சு..
    நீங்களே குறிப்பிட்டது ேபால் மற்ற ஹீ ேராக்களின் கதையில் ெபரிய அளவில் குற்றம், அனைத்து மக்களையும் காப்பது ேபால் இருக்கும்.
    ஆனால், மாடஸ்டி கதைகளில் தனிமனித பாதிப்பு, - அதை மாடஸ்டி தலையிட்டு முடிப்பது என்று வரும்போதுதான் கதையில் ஒரு ஈர்ப்பு வருகிறது.
    அதிலும், இந்த கதையில் குழந்தை கடத்தல் - அதை காப்பாற்றுவதற்கு அதிரடி நடவடிக்கை என்பதை தாண்டி - தனது பாலிசி-மற்றும் குழந்தையை நினைத்து பெற்ேறார்களின் நடவடிக்கை-பரிதவிப்பு-இரண்டிற்கும் இடையிலான உரையாடல்கள் என்று நம்மையும் -. ஒரு தர்க்கவாதம் செய்து ெகாள்ளச் செய்து-முடிவில் மாடஸ்டி - ஆலனை சந்திக்காமலே செல்வது. - நான் முன்பே குறிப்பிட்டது ேபால் எனக்குப் புரியக்கூடிய கிராபிக் நாவல் மாடஸ்டி தான்,
    only மாடஸ்டி தான்...

    ReplyDelete
  66. வணக்கம் நண்பர்களே இன்றுதான் புத்தகப் பார்சலை கைப்பற்றினேன்.இளவரசியுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  67. எனது அக்கவுண்ட் இந்த தளத்தில் இணைய மறுத்ததால் இதுவரை பார்வையாளனாக மட்டுமே இருந்து வந்தேன். ஆகவே தற்பொழுது ஆசிரியரிடம் நான் வைக்கும் விண்ணப்பம் ஒன்றே ஒன்றுதான். ஒரு தோழனின் கதை போல் இனிமேல் எந்த புத்தகத்தையும் உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு தோழனின் கதையின் கதையைப் பற்றி நான் இப்பொழுது எதுவும் கூறவில்லை. புத்தகத் தயாரிப்பு பற்றி மட்டுமே நான் கூறுகிறேன். அந்தக் கதையின் எழுத்துருக்கள் கண்ணை உறுத்துவது படிக்கவே முடியவில்லை. லயன் முத்து உடனான எனது காமிக்ஸ் அனுபவத்தில் ஒரு கதையை எழுத்துரு காரணமாக படிக்காமல் போனது இதுவே முதல் முறை. கதைகளைப் பொருத்தவரை இப்படிப்பட்ட காலை வந்தாலும் எனக்கு அதுபற்றி கவலையில்லை அனைத்தையும் படித்து விடுவேன். ஆகவே என்னைப் பொறுத்தவரை எழுத்துருவில் கவனம் செலுத்துமாறு ஆசிரியரை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உறுத்துவது படிக்கவே முடியவில்லை. /////லயன் முத்து உடனான எனது காமிக்ஸ் அனுபவத்தில் ஒரு கதையை எழுத்துரு காரணமாக படிக்காமல் போனது இதுவே முதல் முறை. //


      வருத்தத்துக்குரியது...ஒரு குறிப்பிட்ட விகிதாச்சார நண்பர்கள் இதுபற்றி பதிவிட்டுள்ளார்கள்...

      எடிட்டர் மூலத்தில் இருந்த ஒரிஜினல் ஃபாண்ட் - தான் தமிழிலும் கையாளப்பட்டு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்..

      தனிப்பட்ட முறையில் வாசிப்பதில் எனக்கு எவ்வித சிரமமும் இல்லை..

      எனினும் வாசகர்களில் மிக சிலருக்கேனும் இச்சிக்கல் ஏற்படுமேயாயின் அச்சங்கடம் எதிர்காலத்தில் தோன்றாவண்ணம் எடிட்டர் சார் மனது வைக்க வேண்டும் !!!

      Delete
  68. புத்தகங்கள் உள்ள பார்சல்கள் மதியத்திற்கு மேல் கிடைத்து விட்டன..

    சாணிடைசர் அடித்து வைத்துள்ளேன்... காலையில் தான் பிரிப்பு!

    இதழ்களை தயாரித்து விரைவாக அளித்த லயன் நிறுவனத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...!!!

    ReplyDelete
  69. அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன். காலை அலுவலகம் செல்லும் அவசரத்தில் இருந்ததால் விமர்சனம் பதிய வில்லை. கடைசியாக படித்தது பாண்ட் மற்றும் பிளைசி முதலில் படித்தது பாண்ட் சிறிய வயதில் இருந்தே படித்து வருவதாலும் எப்போதுமே எனக்கு பிடித்த ஹீரோ என்பதாலும் இந்த ஹாட் ஷாட் பிடித்தே இருந்தது. நல்ல ஆக்சன், பலமான வில்லன் நிறைவான வாசிப்பு. எனது மதிப்பெண் 8/10.

    கடைசியாக படித்தது பிளைசி எப்போதும் போல
    பிளைசிக்கு வேண்டிய ஒரு குழந்தையை கடது சென்று விட அவளை மீட்க கார்வினும் மாடஸ்டி யும் செய்யும் முயற்சிகள் தான் கதை, ஆனால் இந்த முறை வில்லன்களிடம் மாடஸ்டி மாட்டி கொள்ள, அவளது பேச்சை மீற முடியாமல் குழந்தையை கூட்டி சென்று அவளின் பெற்றோர்களிடம் விட கார்வின் செல்வது உணர்ச்சி பூர்வமான இடம். தலைவர் அவரது விமர்சனத்தில் சொன்னது நான் அதை படிக்கும் போது உணர்ந்தது. அதற்காகவே எனது மதிப்பெண் 9/10.

    ReplyDelete
  70. வந்தது தான் வந்துட்டேன் அப்படியே அந்த 200ஆவது கமெண்டையும் போட்டுவிட்டு போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நாம வழக்கம் போல மொய் வைப்போம் 201...

      Delete
  71. Smashing 70s subscribed. Got subscription number. Among July books,, read Modesty first. Blaise is a bliss and a blaze,, as always. 10/10

    ReplyDelete
  72. தோழனின் கதையில் உபயோகித்து உள்ள font and it size;

    // கதையின் எழுத்துருக்கள் கண்ணை உறுத்துவது படிக்கவே முடியவில்லை. //

    நானும் மிகவும் சிரமமாக உணர்ந்தேன். இரவு மின்விளக்கு வெளிச்சத்தில் வீட்டில் உட்கார்ந்து படிக்கும் போது முடியவில்லை இரண்டு பக்கங்களுக்கு மேல். பகல் வேளையில் படித்து கொள்ளலாம் என இன்னும் படிக்கவில்லை.

    வரும் காலங்களில் இதனை கொஞ்சம் கவனத்தில் கொண்டால் சிறப்பாக இருக்கும் விஜயன் சார்.

    ReplyDelete