நண்பர்களே,
வணக்கம். புது இதழ்கள் வெளியாகிய முதல் வாரத்தில் எப்போதுமே நிலவும் அமைதியைப் பார்க்கும் போது தான் "ஒரு தோழனின் கதை" மாதிரியான இதழ்களை அவ்வப்போது களமிறக்கணுமோ ? என்று தோன்றுடிவதுண்டு ! போன மாசம் இதே நேரத்தில் சும்மா தளமே கொதிநிலையில் இருக்க - For & Against என அலசல்கள் தூள் பறத்திக் கொண்டிருந்தன ! But இம்மாதமோ சர்ச்சைக்குரிய சமாச்சாரங்களெனில், அது பாத்திமாவின் ஆடை / ஆடையின்மை மட்டுமே தான் என்பதே நிலவரம் !
ஜேம்ஸ் பாண்ட் கதைகளினில் எப்போதுமே பெண் பாத்திரங்களிடையே துணிப்பஞ்சம் தலைவிரித்தாடுவதுண்டு தான் ; இம்முறையோ அம்மணி முற்றும் துறந்ததொரு மோன நிலையினில் உலவிட்டதால், அவரை அவர் போக்குக்கு விட்டு விட்டேன் ! இக்கட எனக்கொரு கேள்வி ! In fact இந்தக் கேள்வியினை அடுத்தாண்டின் அட்டவணை சார்ந்த கேள்விகளாய்க் கேட்டு வந்த (லாக்டௌன்) மே மாதமே கேட்டிட நினைத்திருந்தேன் தான் ; ஆனால் இந்த B & B ஸ்பெஷல் வெளியான பின்னே அதைக் கேட்டால் சற்றே பொருத்தமாயிருக்கும் என்று நினைத்தேன் ! So இதோ - அந்த இதழ் உங்களை எட்டிவிட்ட நிலையில் எனது கேள்வி(கள்) :
நிஜத்தைச் சொல்வதானால் - க்ளாஸிக் 007 கதைகளில் தென்படும் புராதனம், ஹைதர் அலி காலங்களை நினைவூட்டுவது போல்பட்டது எனக்கு ! இயன் பிளெமிங்கின் 007 நாவல்களின் சகலத்தையும் வாசித்திருப்போர்க்குத் தெரியும் - இந்தத் தொடரின் முதுகெலும்பே நேச நாடுகள் vs கம்யூனிச ரஷ்யா என்ற உரசல் நிகழ்ந்து வந்த பனிப்போர் நாட்களே என்பது ! அமெரிக்கா ; இங்கிலாந்து இத்யாதி என்றான மேற்கத்திய நாடுகள் நல்லவர்களாய், வல்லவர்களாய் வலம் வர, மர்மமான இரும்புத் திரைக்குப் பின்னுள்ள ரஷ்யர்கள் தெறிக்க விடும் வில்லன்களாய் அந்நாட்களில் பார்க்கப்பட்டதை பாண்ட் கதைகளில் அப்பட்டமாய்ப் பார்த்திட முடியும் ! ஆனால் இன்றைக்கோ பாயசத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடும் அப்பளம் ரேஞ்சுக்கு ரஷ்யாவே துக்கடா துக்கடாவாகி இருக்க, அந்தப் பனிப்போர் தினங்களெல்லாம் போயிண்டே ! So மாறியுள்ள உலக அரங்கினுள் ; மாறியுள்ள விஞ்ஞான உலகினில், இன்னமும் நமது க்ளாஸிக் நாயகர் செய்யும் அந்தக்காலத்து லூட்டிகள் ஜெர்க் அடிக்கச் செய்வது என்னை மட்டும் தானா - தெரியலை !! ஒரு திரைசீலையைக் கொண்டு முக்காடைப் போட்டுவிட்டு ஒரு உறுமும் முரட்டுப் புலியைச் சார்வாள் சமாளிப்பதையெல்லாம் எடிட் செய்யும் போது நாற்காலியை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டியிருந்தது எனக்கு - சிரிப்பில் எதையாச்சும் செய்து தொலைக்கப்படாதே என்று ! In contrast - இன்றைய அந்த ஜேம்ஸ் பாண்ட் 2.0 version செம ஸ்டைலாய் ; செம சமகாலத்து பாணிகளில் ; சமகாலத்து வில்லன்களோடு பொருதுவதெல்லாம் நெருடல்களேயின்றி வாசிக்க / ரசிக்க முடிகிறது - at least என்னளவிற்கு ! அந்த சமகாலத்து பாண்டையும், பாட்டையா காலத்து பாண்டையும் ஒப்பீடு செய்ய நினைப்பது அபத்தம் என்பது புரிகிறது ; so எனது கேள்வி அத்திக்கில் இல்லை !
நான் கேட்க நினைப்பதெல்லாம் very simple : இத்தோடு 4 க்ளாஸிக் பாண்ட் கதைகள் போட்டாச்சு - கடந்த ஒரு வருஷம்+ அவகாசத்தினில் (பட்டாம்பூச்சிப் படலம் ; விண்ணில் ஒரு வேதாளம் ; டாக்டர் நோ & இம்மாதத்து ஹாட் ஷாட்) So ஓரளவிற்கு நமது கையாளலில் இந்த பாண்டாரைப் பார்த்து விட்டாச்சு எனும் போது tell me please :
1.இவரது கதைகள் வரும் ஆண்டுகளிலும் தொடர்வது ஓ.கே தானுங்களா folks ? 2022-ன் அட்டவணை 95 சதவிகிதம் நிறைவு கண்டுவிட்டுள்ள நிலையில் - this could be the last piece of the puzzle !
2.ஓ.கே. எனில் - இந்த பாண்ட் + பிளைசி பார்முலாவே தொடரட்டுமா ? லேடி 007 & ஒரிஜினல் 007 அமைத்துள்ள இந்தக் கூட்டணி ரசிக்கின்றதா ?
மாடஸ்டிக்கு slot உறுதி என்ற நிலையில் அவரது கதையெல்லாம் வந்தாச்சு ! க்ளாஸிக் பாண்ட் பற்றிய உங்களின் எண்ணங்கள் மட்டும் தெரிஞ்சிடும் பட்சத்தில், அடுத்து என்ன செய்வதென்று தீர்மானிக்கலாம் ! Of course பழமைக்கு பெரிய 'ஜே' போடும் நம் மத்தியில், சிலருக்கு இந்தக் கேள்வியே குடாக்குத்தனமாய்த் தோன்றிடலாம் தான் ; ஆனால் கேட்டு வைப்பதில் தப்பில்லை ; மிஞ்சிப் போனால் ஒரு முட்டுச் சந்து தானே ? ஆகையால் - சொல்லுங்கண்ணே ; சொல்லுங்க !
இம்மாதத்து மீதக் கதைகளினில், கேள்விகளும் சரி, பெரிதாய் அலசல்களும் சரி, இருந்திட இயலாதென்பது எனது யூகம் ! Of course பாயசம் போட எண்ணிடும் வல்லுநர்கள் எதையேனும் குறை கண்டுபிடிக்காது விட மாட்டார்கள் தான் ; ஆனால் "பிரளயப் பயணம்" as near a perfect entertainer as possible - எனது பார்வையில் ! டெக்ஸ் & full டீம் ஒரு சாகஸத்தின் முழுமையிலும் வலம் வந்தாலே அது தெறி ஹிட் என்பது ஒரு எழுதப்படா விதி ; அதிலும் இங்கே ஒரு வித்தியாசப் பின்புலத்தில், வித்தியாச எதிரியோடு டீம் மோதுவது எனும் போது 220 பக்கங்கள் 20 நிமிடங்களில் கரைந்திடுவது சாத்தியமே ! And வழக்கமான கார்சனின் லூட்டிகள் இம்முறை ஒரு மிடறு தூக்கல் எனும் போது பாயசம் போடுவோர்க்குமே ஆயாசம் எழுந்திராதென்பேன் ! இதற்கு முந்தைய "நெஞ்சே எழு" ஆல்பமும் சரி, பிரளயப்பயணமும் சரி, வெகு சமீபப் படைப்புகள் என்பதால் இனி வரும் நாட்களில் ரொம்பவே பின்னோக்கிய கதைக்குவியல்களுக்குள் துழாவுவதன் சதவிகிதத்தை சற்றே குறைச்சலாக்கிக் கொள்வதில் தப்பில்லை என்று தோன்றுகிறது ! And 2022 அட்டவணையினில் கணிசமாகவே 'தல' & டீமின் புது சாகசங்கள் இடம் பிடிக்கின்றன என்பது ஒரு தற்செயலான highlight-ம் கூட ! அப்புறம் இம்முறை அந்த லாக்டௌன் நாட்களில் 'தல' சார்ந்த கேள்விகளுக்கு நீங்கள் தந்த பதில்களுள் பெரும்பான்மை அட்டவணையினில் நடைமுறை கண்டுள்ளன ! So அட்டவணை வெளியாகிடவுள்ள அக்டோபர் 15-ல் நீங்கள் மகிழ்ந்திடக் கூடுதலாயொரு காரணமும் இருந்திடும் !
Moving on to லக்கி லூக் - கலரில், அந்தப் பிரியத்துக்குரிய பார்ட்டிகளோடு ஓட்டமெடுக்கும் கதைகள் என்றென்றும் சோடை போயிடாது என்பதில் எனக்கு அசைக்க முடியா நம்பிக்கை உள்ளது ! ஆனால் இங்கும் எனக்கொரு கேள்வி உண்டு - இத்தொடரின் மீதானதொரு பொதுவான பார்வையினில் ! நெட்டிலோ, இங்கிலீஷ் புக்சிலோ, லக்கியின் முழுமையினையும் வாசித்திருக்கக்கூடிய நண்பர்களுக்கு நான் சொல்ல வரும் சமாச்சாரம் புதிதாய் இராது தான் :
லக்கி தொடரினில் முதல் ஒரு டஜன் கதைகளில் சித்திர பாணி ரொம்பவே பழைய ஸ்டைல் ! லக்கியும் சரி, இன்ன பிற ஆசாமிகளும் சரி, நாம் தற்சமயம் பார்த்திருக்கும் மிடுக்கினில் இருப்பதில்லை ! இது வரையிலும் நாம் வெளியிட்டுள்ளவை 42 லக்கி ஆல்பங்கள் (என்று நினைக்கிறேன்) So தொடரினில் ஒரு கணிசமான பகுதியைப் போட்டுத் தாக்கியுள்ள நிலையினில் கொஞ்சம் கொஞ்சமாய் அந்தத் துவக்க டஜனுக்குள்ளேயும் பயணிப்பதா ? வேண்டாமா ? என்ற கேள்வி உள்ளுக்குள் ஓடுகிறது ! எனது குடைச்சலுக்கு இன்னொரு காரணமும் உள்ளது ! ஒரிஜினல் படைப்பாளிகளான மோரிஸ் & காஸினி இயற்கை எய்திய பின்னே, கதைப் பொறுப்பேற்றிருக்கும் புது டீமுக்கு நகைச்சுவைகள் அத்தனை சுகப்பட மாட்டேன்கின்றன ! So தொடரின் பின்பகுதியினில் வெளியாகிய "பாரிசில் ஒரு கௌபாய்" மாதிரியான ஆல்பங்களுள் ஹ்யூமரை கொணர நாக்குத் தள்ளுகிறது ! So துவக்கத்து ஒரு டஜன் புராதனைச் சித்திரங்களுடன் ; பின்பகுதியில் சுமார் பத்தோ , பன்னிரண்டோ மித ஹ்யூமர் கதைகளுடன் என்ற நிலையில் இருக்க, நாம் என்ன செய்யலாம் என்பீர்கள் guys ?
*சிறுகச் சிறுகப் பழசுக்குள் பூந்துக்கலாமா - அந்த ஆர்ட்ஒர்க் பழகிக்கொள்ளும் என்ற நம்பிக்கையினில் ?
அல்லது
*நவீன பாணியிலான கதைகளோடு travel பண்ணுதல் தேவலாம் என்பீர்களா ?
இதோ - அந்த ஆரம்ப டஜனின் கதைகளை பார்த்திரா நண்பர்களின் பொருட்டு ஒரு சாம்பிள் :
அப்புறம் சில updates :
1.இரத்தப் படலம் புக் # 1 அட்டகாசமாய் பிரிண்ட் ஆகியாச்சு ! புக் # 2-ல் மூன்றில் ஒரு பங்குமே அச்சு done ! புதன் கிழமைக்கு அதன் மீதமும் நிறைவுற்றிடும் ! ஏற்கனவே அட்டைப்படங்கள் பிரிண்ட் ஆகி விட்டன எனும் போது இனி பைண்டிங்கில் நிதானமாய் பணிகள் நடக்க அனுமதிப்பது மட்டுமே நமது வேலையாக இருந்திடும் ! So ஆகஸ்ட் புது புக்ஸ்களை அனுப்பிய சற்றைக்கெல்லாம் இவற்றையும் கிளப்பிடவுள்ளோம் !
2. SMASHING '70s முன்பதிவுகள் going on at a fair clip !! மூன்று மாத அவகாசத்துக்குள் எல்லையைத் தொட்டு விடலாமென்றே தோன்றுகிறது ! Fingers crossed !!
3. லயன் 400 இதழுக்கு 'தல' அட்டைப்படம் செம மாஸாக அமைந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது ! அந்த நகாசு வேலைகள் வரும் வாரத்தில் நடைபெறவுள்ளன ; நிச்சயமாய் புக்காக்கிப் பார்க்கும் போது செமத்தியாக இருக்குமென்று தோன்றுகிறது !
And before I sign out - இதோ நமது மீம்ஸ் டீமின் ரகளைகள் !! முதல் 5 மீம்ஸ் கரூர் டாக்டர் பார்த்தீபனின் கைவண்ணம் & இறுதியானது நண்பர் MKS ராம் !
MKS Ramm :
Bye all...have a cool Sunday ! See you around !
ITS me!!
ReplyDelete2nd
ReplyDelete3
ReplyDeleteIt's me 4th
ReplyDeleteHello friends, good morning.
ReplyDelete! And 2022 அட்டவணையினில் கணிசமாகவே 'தல' & டீமின் புது சாகசங்கள் இடம் பிடிக்கின்றன என்பது ஒரு தற்செயலான highlight-ம் கூட !///
ReplyDeleteபோடுங்க வெடியை…
நா கொளுத்தட்டா
Deleteபோட்டுத்தாக்கு...போட்டுத்தாக்கு...போட்டுத்...தாக்கு....
Deleteடாமால் டூமில் டம் பட் படீர்
DeleteClassic bond is OK once a year. If there are more Blaise stores you may combine them as B&B special.
ReplyDelete--x--
Even apart from Goscinny and Morris there are some great Lucky Luke stories sir - example Nitroglycerine. We should try to complete all 81 albums.
"Nitroglycerin" was done in 1986 - when Morris was fine and active sir ! He breathed his last in 2001...
Delete//இவரது கதைகள் வரும் ஆண்டுகளிலும் தொடர்வது ஓ.கே தானுங்களா folks ? //
ReplyDeleteமுடியல சார்!!!
பழைய பாண்ட்டை தாக்குப்பிடிக்க முடில...
காயாத கானகத்தே ,வதனமே சந்திர பிம்பமோ
பாடல்கள் எல்லாம் படிக்கறப்போ பிஜிம் -மா கேட்குது...
எனக்குமே சார் !
Delete///காயாத கானகத்தே ,வதனமே சந்திர பிம்பமோ///
Deleteஎனக்கும்தான் கேட்டுச்சி செனா..! அதே புக்குல இருக்குற இன்னொரு கதையை படிக்கறச்சே..
நின்மதி வதனமும் நீள்விழியும் கண்டு...
ரம்பா..
ஸ்வாமீ..
நின்மதி வதனமும் நீள்விழியும் கண்டு..
என்மதி மயங்கினேன் நான்.மூன்று உலகிலும்......
அப்படின்னு சத்தமாவே கேட்டுச்சி.!:-)
கண்ணா :-) lol
Deleteஹஹஹஹ
Deleteஇது காரிகனுக்கும் பொருந்துமே சார்....கதை பட்டய கிளப்பு தா....விறுவிறுப்பா தெரியுதா....போட்டுத் தாக்குங்க சார்...
Deleteமுடிந்த வரை நியாயமா நடந்துக்குவேன்னு நீங்களும் முடிந்த வரை நெகட்டிவ் விமர்சனங்கள தவிர்த்திடுங்க சார்..விற்பனையே விமர்சகராகட்டும்
Deleteவந்தாச்சு.7வதாக.
ReplyDelete//சிறுகச் சிறுகப் பழசுக்குள் பூந்துக்கலாமா - அந்த ஆர்ட்ஒர்க் பழகிக்கொள்ளும் என்ற நம்பிக்கையினில்//
ReplyDeleteஆர்ட் நல்லாத்தான் இருக்கு சார் பழைய லக்கி லூக்குக்கு...
லக்கி லூக்லாம் ஒயின் மாதிரி...
பழசுக்கு மவுசு ஜாஸ்தி...
உண்மையை சொல்வதென்றால் பழைய ஜேம்ஸ் பாண்ட் கதைகள் அவ்வளவு சுகப்படவில்லை. புது கதைகள் ஏதும் படித்ததில்லை. ஆதலால் அதைப்பற்றிய கூற ஒன்றுமில்லை. இப்போது வெளியிட்ட b&b ஸ்பெஷல் போன்றே வெளியிடலாம் ஆனால் ஜேம்ஸ் க்கு பதில் மாடஸ்டி யின் இன்னொரு கதையை சேர்த்து வெளியிடலாம்.
ReplyDeleteமீண்டும் அதே. உண்மையை சொல்வதென்றால் தற்போதைய லக்கிலூக் கதைகள் அவ்வளவு நகைச்சுவையை தரவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். லக்கி இல் இருந்து ப்ளூ கோட்க்கு மாறி ரொம்ப காலங்கள் ஆகிவிட்டது ஆகாயத்தில் அட்டகாசம் மூலம்.
ReplyDeleteலக்கியின் பழைய கதைகளை மீட்டெடுப்பது மூலம் அவரது இடத்தை தக்க வைக்க வாய்ப்புள்ளது போல் தெரிகிறது.
1.இவரது கதைகள் வரும் ஆண்டுகளிலும் தொடர்வது ஓ.கே தானுங்களா folks ? 2022-ன் அட்டவணை 95 சதவிகிதம் நிறைவு கண்டுவிட்டுள்ள நிலையில் - this could be the last piece of the puzzle !
ReplyDelete2.ஓ.கே. எனில் - இந்த பாண்ட் + பிளைசி பார்முலாவே தொடரட்டுமா ? லேடி 007 & ஒரிஜினல் 007 அமைத்துள்ள இந்தக் கூட்டணி ரசிக்கின்றதா ?//
ரசிக்கிறது சார்.. வேணும்..
007 விற்பனையில் எப்படி உள்ளது பழனி? உங்களிடம் வாங்கும் வாசகர்கள் பழைய 007 பற்றி என்ன சொல்கிறார்கள் என முடிந்தால் சொல்லுங்கள்.
Deleteவந்தாச்சு
ReplyDeleteதல சிங்கிளாக வருவதைவிட தனது படையுடன் வரும் கதைகள் எப்போதுமே மிக பிரமாதமாக அமைந்து விடுகிறது.. தல டீம் முழுவதும் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து இறக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்... தொடரட்டும் தலையின் தாண்டவம்.
ReplyDelete2022 இன் தல தீபாவளியை காண வெகு ஆவலுடன் ( எத்தனை கதைகள் எத்தனை பக்கங்கள் & கருப்பா சிவப்பா என அறிந்துகொள்ள ஆவல் )
இள வயது டெக்ஸ் கலர்ல வரலாம்
Deleteசேனா அண்ணா லயன் 400 வது இதழ் கலரில் வந்தால்தானே அட்டகாசமாக இருக்கும். இதுபோன்ற மைல்கல் தருணங்களை கலரில் கொண்டாடுவது தான் சரியாக இருக்கும். எனவே தலையின் கதையை கலரில் வெளியிடுவது தான் பொருத்தாமாக இருக்கும்.
Delete1.இரத்தப் படலம் புக் # 1 அட்டகாசமாய் பிரிண்ட் ஆகியாச்சு//
ReplyDeleteமுதல் லட்டு ஆஹா...
புக் # 2-ல் மூன்றில் ஒரு பங்குமே அச்சு done ! புதன் கிழமைக்கு அதன் மீதமும் நிறைவுற்றிடும்//
ஆஹா இரண்டாவது லட்டு..
ஆமா ஒரு மாதம் வைத்து படிக்க ஒரு புத்தகம். ஒரு நாளைக்கு ஒரு Chapter ஆக படிக்க வேண்டும். நிறுத்தி நிதானமாக
Deleteஅனுபவிச்சு படிக்கனும் சகோ...
Deleteஒரு நாளைக்கு ஒரு பக்கம் படிங்க இன்னும் செமையா இருக்கும்😂😂😂😂😂
Delete007 வேண்டும் ஆசிரியரே
ReplyDeleteவேண்டும் வேண்டும்
Deleteஎப்படியும் அட்டைப்படத்த கண்ணுல காட்ட மாட்டிங்க...சார்..
ReplyDelete//ஓ.கே. எனில் - இந்த பாண்ட் + பிளைசி பார்முலாவே தொடரட்டுமா ? லேடி 007 & ஒரிஜினல் 007 அமைத்துள்ள இந்தக் கூட்டணி ரசிக்கின்றதா ?/
ReplyDeleteதொடரட்டும் ஆசிரியரே ரசிக்கும்படியே உள்ளது
தொடரட்டும் சார்.
Deleteஅடுத்த மாதம் இரத்தப்படலம் கைகளில் சூப்பரோ சூப்பர்
ReplyDeleteஅடுத்த வாரம்னா சூப்பரோ சூப்பர்
Deleteலக்கி தொடரினில் முதல் ஒரு டஜன் கதைகளில் சித்திர பாணி ரொம்பவே பழைய ஸ்டைல்//
ReplyDeleteவேண்டாம் சார்.. லக்கிமாதிரியே தெரியாது...
லக்கி யின் முதல் ஒரு டஜனை முயற்சி பன்னலாம் ஆசிரியரே
ReplyDeleteசத்யா வின்டர் ஸ்பெசல் கையில் உள்ளதா...?? அதில் நம்ம லக்கிய பாருங்க..
Deleteஅட ஆமால்ல...ஆனா அப்பல்லாம் ஓவியத்தை பெருசா கண்டுக்கிட்டதில்லை..
Delete//SMASHING '70s முன்பதிவுகள் going on at a fair clip !! மூன்று மாத அவகாசத்துக்குள் எல்லையைத் தொட்டு விடலாமென்றே தோன்றுகிறது !
ReplyDeleteநல்ல செய்தி மிக நல்ல செய்தி
வணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஅனைத்து லக்கி லூக் கதைகளும் உங்கள் அருமையான மொழி பெயர்ப்பில் வந்தால் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteகார்ட்டூன் கதைகளுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு..
80களில் ஜேம்ஸ்பாண்ட். ஒருமாஸ்ஹீரோதான். இப்பொழுதோலாஜிக் தேடினால் ஊருக்கே பாயாசம் வவைக்கும்படிசங்கதிகள் தெறிக்கின்றன. விருந்தாளிரேஞ்சுக்கு ஜம்ஸை வில்லன்கள் ட்ரீட் பண்ணுவது. .,மொத்தபிளானையும்ஜேம்ஸ்கேட்காமலேஒப்பிப்பது. கையில்கிடைத்தஜேம்ஸை யோ, பாப்பாக்களையோசுட்டுக்கொல்லாமல்கட்டிப்போட்டுவிட்டுஅந்த இடத்தைவிட்டசென்றுவிடுவது. என லாஜிக்பாயாசம் பறிமாறினாலும்மினிமம் கேரண்டிநாயகர் என்பதோடும்ஒருகாலத்தில் நாம் கொண்டாடிய ஹீரோஎன்னும் வாஞ்சையோடும், மாடஸ்டியுடனான கெமிஸ்ட்ரி செம என்பதாலும் பாண்ட் தொடரவேண்டும்எனவே மனதுவிரும்புகிறது. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteகதாநாயகன் கட்டிப் போடலன்னா அவரு அடுத்த சாகசத்துக்கு தப்பிச்சு போக முடியாத நண்பரே
Delete///ஒருகாலத்தில் நாம் கொண்டாடிய ஹீரோஎன்னும் வாஞ்சையோடும், மாடஸ்டியுடனான கெமிஸ்ட்ரி செம என்பதாலும் பாண்ட் தொடரவேண்டும்எனவே மனதுவிரும்புகிறது. ////
Deleteஅருமையா சொன்னீங்க கரூர் ராஜ சேகரன் ஜி!
ஹா....ஹா... இத்தனை லாஜிக் ஓட்டைகள் உள்ள பாயாசத்தையா அள்ளி அள்ளி பருகினோம்....????! அப்ப இதெல்லாம் மாஸான சாகஸம்...!!!
Deleteசும்மா ஓப்பனிங்ல அந்த டக..டக...டக...ட்ரோன் சீன்ல ஆரம்பிக்கும் ஜெட் வேகம் கடைசி வரை பரபரனு நகர்த்தி செல்லும்.
இப்ப கொஞ்சம்....ஹி...ஹி.. தான்!
ஸ்டில் உங்கள் பாயிண்ட்க்கு 101% ப்ளஸ்ஸோ ப்ளஸ்கள் ராஜசேகரன் ஜி!
///ஒருகாலத்தில் நாம் கொண்டாடிய ஹீரோஎன்னும் வாஞ்சையோடும், மாடஸ்டியுடனான கெமிஸ்ட்ரி செம என்பதாலும் பாண்ட் தொடரவேண்டும்எனவே மனதுவிரும்புகிறது. ////
Old lucky Luke artwork looks ok. Please select them.
ReplyDelete🙏🙏
ReplyDeleteக்ளாசிக்காலக்கி. லக்கியில் எதிர்பார்ப்புசிரிப்புமட்டுமே. ஓவியங்கள் எப்படிஇருந்தாலும்சிரிப்பை வரவழைக்கும்பழையலக்கியேநமக்குவேண்டும்அந்தபழையசித்திரபாணிகளேரசிக்கும்படிஇருந்தன.அழகானலக்கியைரசிக்கவேண்டுமென்றால்2. O. வில் பார்த்துக்கொள்ளலாம். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஉள்ளேன் ஐயா.!!
ReplyDelete36
ReplyDeleteஆசிரியர் அவர்களே நீங்கள் வருகிறது என விளம்பரம் செய்துள்ள டெக்ஸ்ஸின் கண்னே கொலைமானே கதையின் சித்திர தரம் தற்போது தாங்கள் விளம்பர படுத்திய படிதான் புத்தகத்தில் இருக்குமா
ReplyDeleteஇனிய வணக்கங்கள்
ReplyDeleteஒருபிரலயப்பயணம் வழக்கமாககதைகளில் வில்லன் யாரென்று தெரியாமல் ஹீரோகண்டுபிடிக்கமுனைவததான் மொத்தக்கதையாக இருக்கும். டெக்ஸ் டீம்
ReplyDeleteடெக்ஸ் ஒரே டெம்ப்ளேட்என்னும் கருத்தைமாற்றுவதற்காக மாற்றியோசித்திருக்கிறார்கள்இம்முறை. தங்கள் எதிரிக்கு வலுவான டெக்ஸ் டீம் துணைநிற்பதைஅறியாமல் மோதுகிறான்வில்லன். அதிலும் அடியாட்கள் மட்டுமே. வலுவான எதிரிகள்என்றால் போராட்டம் கடுமையாக இருக்கும். இங்கோ எதிரிகளைகதை முழுதும் பந்தாடுகிறார் டெக்ஸ். கதைபடிக்கும்நாமே எதிரிகளை அடித்துநொறுக்குவது போன்ற கொண்டாட்டஉணர்வு கதைமுழுதும். என்போன்ற டெக்ஸ் ரசிகர்களுக்கு புல்மீல்ஸ். கரூர் ராஜ சேகரன்
இப்போல்லாம் விமர்சனத்துல பட்டையைக் கிளப்புறீங்க ராஜசேகர் ஜி!
Deleteமகிழ்ச்சி மகிழ்ச்சி!!
///எதிரிகளை அடித்துநொறுக்குவது போன்ற கொண்டாட்டஉணர்வு ///
Delete----இதானே வேணும்... கதையை படிச்சமா நாலுபேரை கொத்து புரோட்டா போட்டமானு இருக்கனும்.... குஷாலா போனமானு இருக்கனும்.....!!!
அதைவிட்டுட்டு கதையையே லென்ஸ்
வெச்சி தேடணுமாம், தேடி ஆளுக்கொரு முடிவு வெச்சிக்கணுமாம்...கேட்டா புதுயுக கி.நா.வாம் ஆருகிட்ட!!!!
1. கிளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.My choice "No".
ReplyDelete2. லக்கியின் பழைய ஸ்டைலும் சுகப்படவில்லை. ஆனால் சிரிப்பை அள்ளித்தரும் கதைகளாக இருப்பின் வெளியிடலாம்.
ஜேம்ஸ்பான்டா, முடியலங்க. தயவு செய்து
ReplyDeleteவேறு யாருக்காவது கொடுத்துருங்க.
லக்கி லூக் கதைகளைப் பொறுத்தவரை மோரிஸ் கோசினி கூட்டணியில் ஒரு கதை கூட சோடை போகாது..!
ReplyDeleteசித்திரங்களைப் பற்றி கவலையில்லை.. போட்டுத் தாக்குங்க சார்..!
ஓ.. கார்ட்டூன்னா, சித்திரங்களைப் பற்றி கவலையில்லை.. ஆனா, எங்க தலைவி கதைன்னா மட்டும் கண்ணு வேக்குதோ..???
Delete///லக்கி லூக் கதைகளைப் பொறுத்தவரை மோரிஸ் கோசினி கூட்டணியில் ஒரு கதை கூட சோடை போகாது..!
Deleteசித்திரங்களைப் பற்றி கவலையில்லை.. போட்டுத் தாக்குங்க சார்..!///
அதே அதே!!
எனது கருத்தும் இதுவே
Delete///ஓ.. கார்ட்டூன்னா, சித்திரங்களைப் பற்றி கவலையில்லை.. ஆனா, எங்க தலைவி கதைன்னா மட்டும் கண்ணு வேக்குதோ..???///
Deleteசித்திரங்களோடு சேர்த்து கதையையும் ரசிச்சி படிக்கிறதுக்கும்...
வெறுமனே..
(கண்ணாடிய தொடச்சிப் போட்டு) பொம்மை பாக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு கரூவூராரே..!:-)
இதுல.. நம்மாள் ஒருத்தர் மாடஸ்டியை(புத்தகத்தைத்தான்) ஒரு கையில வெச்சிக்கிட்டு , குழம்பு கூட ஊத்திக்காமே வெறும் சாதத்தையே ரெண்டு குண்டா சாப்பிட்டிருக்கார்னா பாத்துக்குங்க..!
எங்கிட்ட போட்டோ (கெணறு வெட்டின ரசீது) ஆதாரம் இருக்கு.. அவரால தப்பிக்கவே முடியாது..!;-)
///வெறுமனே..
Delete(கண்ணாடிய தொடச்சிப் போட்டு) பொம்மை பாக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு///
ஹாஹாஹா!
//இதுல.. நம்மாள் ஒருத்தர் மாடஸ்டியை(புத்தகத்தைத்தான்) ஒரு கையில வெச்சிக்கிட்டு , குழம்பு கூட ஊத்திக்காமே வெறும் சாதத்தையே ரெண்டு குண்டா சாப்பிட்டிருக்கார்னா பாத்துக்குங்க..!
Deleteஎங்கிட்ட போட்டோ (கெணறு வெட்டின ரசீது) ஆதாரம் இருக்கு.. அவரால தப்பிக்கவே முடியாது..!;-)//
மினி மன்ஹாட்டன் பிராஜக்ட் ரேஞ்சுக்கு 10 நியூக்ளியர் பிஸிஸிஸ்ட்,15 கெமிஸ்ட், 12 எலக்ட்ரோபிஸியாலஜிஸ்ட் மூலமா ஆராய்ஞ்சுதல அது " மோர் சாதம்" னு ஊர்ஜிதமாயிடுச்சு..
வெறும் சாதமா இருந்தா கூட மாடஸ்டி அதுக்கு வொர்த்துதான் என மேற்படி நபர் அடிச்சு சொல்றாப்ல!!!!
நெருங்கிடுச்சு
வேளை நெருங்கிடுச்சு..
பீட்டர் ஓ டோனல் பல்கலைக்கழகம் ஆரம்பிச்சு பல பேருக்கு " டாக்டர் " பட்டம் வழங்க வேண்டிய
வேளை நெருங்கிடுச்சு..
லிஸ்ட்டில் முதல் ரெண்டு பேரு
1. மேச்சேரி கண்ணன்
2. மிதுன்
///பீட்டர் ஓ டோனல் பல்கலைக்கழகம் ஆரம்பிச்சு பல பேருக்கு " டாக்டர் " பட்டம் வழங்க வேண்டிய
Deleteவேளை நெருங்கிடுச்சு..
லிஸ்ட்டில் முதல் ரெண்டு பேரு
1. மேச்சேரி கண்ணன்
2. மிதுன்///
அப்படின்னா.. நானும் அடுத்த மாடஸ்டி புக்கை கையில வெச்சிக்கிட்டு மோர்சாதம் சாப்பிட வேண்டியிருக்குமா.!?
சார் பாண்ட பொருத்த வரை...கதை வேகமா இருந்தா போதுமென்பதே என் நிலை...பழைய காலம்னா அதுவும் ஓர் அழகுதானே...வரலாற்றை பார்க்க உதவுமே...பனிப் போர்...இரும்புத் திரை வார்த்தை ஜாலங்கள் இப்பவும் வருடிச் செல்வதோடு மனதை திருடிக் செல்வதும் துள்ளவும் கதையை அள்ளவும் செய்யுதே...நீங்க நிறைய படிப்பதால் அயற்ச்சியா இருக்கலாமோ...
ReplyDeleteஜேம்ஸ் வந்தாலும் சரி..வராட்டியுஞ் சரி...அந்த இடத்ல கதைக்கடலில் உள்ள சிறந்த கதைகள் வந்தாலும் சூப்பர்....விற்பனைபய பொறுத்து முடிவெடுங்க...ஆண் பாட்டும் பெண்பாண்டும் காம்பினேசன் அருமை...ஐந்து பக்கங்கள் புகுந்தேன்...பாண்ட் அசத்த...வேலை பிசியானதால படிக்க முடியல...புத்தகத்தை வண்டில விட்டுவிட்டதால் இரவு படிக்க முடியல...இன்று படித்ததும் பகிர்கிறேன் .
This comment has been removed by the author.
ReplyDeleteடெக்சை பல விதங்களில் ரசிக்க உள்ளோம் என்பது ஆனந்தம் . இளம் டெக்ஸின் தடம் கூடுதலாக இருந்தால் மகிழ்ச்சி...அவர்கள் வேகத்தோடு இணைவோம்..அட்டவனைய சீக்கிரமா அருள ஓட்டை வாய் ஒலகநாதன வேண்டுகிறேன்...கடவுளே கருணைக்கண்ணால் பாருங்க
Deleteலக்கி ரொம்பக் சுமார்...இக்கால கண்ணா பின்னா ஓவிய சேனல்ல மூழ்கிக் கிடக்கும் குழந்தைகள் ஈர்க்கலாம் சித்திரங்கள்...கதை ரசிக்க வைத்தால் விட்டுப் பாக்கலாம்...நல்லா இல்லன்னா அவ்விடத்தில் கூடுதலாக ஓர் சிறந்த கதைய இறக்குவோம்
ReplyDelete//ஒரு திரைசீலையைக் கொண்டு முக்காடைப் போட்டுவிட்டு ஒரு உறுமும் முரட்டுப் புலியைச் சார்வாள் சமாளிப்பதையெல்லாம் எடிட் செய்யும் போது நாற்காலியை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டியிருந்தது எனக்கு //
ReplyDelete😁😀😁
// சிறுகச் சிறுகப் பழசுக்குள் பூந்துக்கலாமா - அந்த ஆர்ட்ஒர்க் பழகிக்கொள்ளும் என்ற நம்பிக்கையினில் ? //
ReplyDeleteI am ready.
வந்துட்டேன்
ReplyDeleteBond - vote to continue, but new over old
ReplyDeleteLucky - the old artwork looks weird. It will definitely be in the back of the mind when reading.
இரத்தப்படலம் பிரம்மாவும் எனும் தங்கள்/தங்க வார்த்தைகளுக்குள் பிரம்மாண்டத்தின் பார்க்கிறேன் .அருமை சார்...அதென்ன ரெகுலர் இதழ் கிளம்பிய சற்று நேரத்தில்...ஐந்து நிமிடம் கழித்துக் கிளம்ப ஓர் பாக்ச வேஸ்ட் செய்யனுமா...பார்சல் பணத்தை லாஸ் செய்யனுமா...ஒட்டா அனுப்புனா இது வர வந்ததுலே பெரிய பார்சலா இருந்திடப் போவுது...குண்டு பார்சல் கனமா தவழுமே கரங்களில்....அடுத்த மாதத்துக்கான ஆவல் வழ்க்கத்த விட கூடுது...எத்தனை முறை வந்தாலும் ஆவல் குன்றப் போவதில்லை போலும் .ஒன்னாந் தேதியே வந்திடுமோ . ஒரு வேளை பத்துக்கு மேல்தான் ரெகுலர்னா ....இரண்டையும் தனியாத்தான் அனுப்ப முடிவெடுத்தா...இப் வ ஒன்னாந் தேதி அனுப்புனா எப்புடி இருக்கும்
ReplyDelete.//இவரது கதைகள் வரும் ஆண்டுகளிலும் தொடர்வது ஓ.கே தானுங்களா folks ? 2022-ன் அட்டவணை 95 சதவிகிதம் நிறைவு கண்டுவிட்டுள்ள நிலையில் - this could be the last piece of the puzzle ! //
ReplyDeleteஏற்கனவே ஜேம்ஸ் பாண்ட் படித்து இருந்தாலும் ,,உங்களது மொழிபெயர்ப்பில் அசத்தல்,,
தொடரட்டும்,
70 கள் உற்ச்சாகம் தெறிக்கப் போவதுறுதி...ஆசைப்படுவோர்க்கு அல்லது பேராசைப் படுவோர்க்கு அழகியல் பயணம்
ReplyDeleteலயன் நானூறு நம்ம லக்கி ஆண்டு மலர் நீல ஜிகுனா போல ஏழு வர்ணங்கள் சிதறல் செய்யனும்...நீங்களே அசந்து நிக்கும் போது இத விட பெஸ்டான அட்டைப் படத்தை காணவோ...நான் வழக்கம் போல் எழுதவோ ஏலாதோ என விரல்கள் நடுங்குவதேனோ...400ஆல் தானோ
ReplyDeleteஎன்னா சார் முறத்தை வச்சு புலிய விரட்டுனா தமிழச்சின்னு சொன்னா பெருமையா இருக்கு ஆனா ஒரு போர்வைய தீ பிடிக்க வைத்து விரட்டுனா காமடியா இருக்கு னா? இது ஓரவஞ்சனை.
ReplyDeleteவந்த classic 007ல் ஹாட் ஷாட் சுப்பர் சார். வேனிஸில் ஒரு வேங்கையை விட அது 1 மார்க் கூட.
நண்பர்கள் உதவியுடன் எது சிறந்த கதை என்று கண்டு பிடித்து ஒரு 10 கதையானது வந்தால் நல்லாருக்கும். B & B spl ஆகவே.
கிரி அது முறத்தை வைத்தல்ல...முறைத்து வைத்து...நாளடைவில் திருகித் திருகி இப்படி புளுகிப் போய் விட்டது
Delete///கிரி அது முறத்தை வைத்தல்ல...முறைத்து வைத்து..///
Deleteஇது அதைவிட காமெடியால்ல இருங்குங்க ஸ்டீல்?!! லேடீஸ் முறைத்துப் பார்த்தால் சில பூனைகள் வேண்டுமானால் ஓட்டமெடுக்கலாம்.. புலிகளுமா?!!
ஆக இந்த பூனை ஓட்டமெடுக்குது!!!!😉
Deleteஅது ஆம்பளை புலி! , இல்லாட்டி ஜேம்ஸ்ஸும் முறைத்து பார்த்தே அதை வசியம் பன்னியிருப்பார். பென் புலி தான் வினிஸ் போயிருந்ததே!!!
Delete///அது ஆம்பளை புலி! , இல்லாட்டி ஜேம்ஸ்ஸும் முறைத்து பார்த்தே அதை வசியம் பன்னியிருப்பார். பென் புலி தான் வினிஸ் போயிருந்ததே!!!/
Delete:-))))
This comment has been removed by the author.
Deleteசாரி ...ஆம்பள புலி
Deleteஅதான் புளிஞ்சுட்டாரோ
Deleteஅனைத்தும் அருமை...டாப்பா கவருவது 4வது மீம்சு
ReplyDeleteஅன்பு எடிட்டர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteலக்கி எப்படியிருந்தாலும் o.k தான்.
ஜேம்ஸ் பாண்ட் நம் ஆதர்ஷ்ச ஹீரோ.அவர் புதுசோ,பழசோ ரசிக்க முடிகிறதே
சிம்ப்பிளா, ஆனா நச்'னு சொல்லிட்டீங்க செ.மா சார்!
DeleteHa..ha beautiful sir..நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு... பாண்ட் கதைகளில் அம்மணிகளுக்கு ஆடைப்பஞ்சம்.. எனவே அவர்களை மோன நிலையில விட்டுட்டீங்க.. எங்கள் குமாரபாளையத்தில் textile தொழில் down... துணி விலை ரொம்ப கம்மி.. அட்ரஸ் சொல்லுங்க ஒரு 50 மீட்டர் வாங்கி அனுப்பறேன்...விஜயன் நீங்க எழுதறது புரியல.. கமல் பேசற மாதிரி இருக்கு அப்படின்னு நண்பர்கள் சிலர் எழுதியுள்ளது வியப்பு தான்... எளிமையான, நகைச்சுவை உணர்வு கொண்ட எழுத்து உங்களுடையது... அதுவே.. கிராபிக் கதைகளுக்கு படு சீரியஸாக மாறி விடுவது.. எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.. வெரி நைஸ் sir.. அப்படியே தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteI am nandheswaran..
ReplyDeleteவெல்கம் அண்ணா💐💐💐 தொடர்ந்து எழுதுங்க....
Deleteவாங்க நந்தீஸ்வரன் சார்.
Deleteவணக்கம் நண்பரே.
Deleteஅடடே.. வாங்க அண்ணா.!!
Deleteசார், கிளாசிக் பாண்ட் மற்றும் அதன் கதை பின்புலங்கள் இன்றும் ரசிக்க கூடியவை தான்!!! தொடரட்டும் pls!!
ReplyDelete"மாறியுள்ள விஞ்ஞான உலகினில், இன்னமும் நமது க்ளாஸிக் நாயகர் செய்யும் அந்தக்காலத்து லூட்டிகள் ஜெர்க் அடிக்கச் செய்வது என்னை மட்டும் தானா - தெரியலை"
ReplyDeleteDear Editor Sir, காலம் மாறிவிட்டது, James bond காலத்தைய சாகசங்கள் சிரிப்பு வர வைக்கின்றன என்ற Logic ok ஆனால் இதே Logic மற்ற Cow boys கதைக்கு பொறுந்தாதா, இன்னும் புகை சமிக்ஞை, குதிரையில் செல்வது, செவ்விந்திய வெள்ளையர் போராட்டங்கள், இல்லை இந்த சலிப்பு எல்லாம் குறிப்பிட்ட சில கதாநாயகர்கள் மீது மட்டும் சுமத்தப்படுவதேன், புரியவிவல்லை
சார் கதை நடக்கிற காலகட்டத்தையும் பொருத்தி பார்க்க வேண்டும் ...James bond ஐ Smartphone use பன்ன வைக்க மீடியும் ...ஆனால் சீரீயசான செவ்வந்தியர்கள் கதையில் Hello 'பகல் ஆந்தையாரே' லைன்ல இருக்கிங்களா என்றால் அது காமெடியாககத்தான் பார்க்கப்படும். பழைய நாயகரோ ..புதுசோ ..சுவாரஸ்ய கதைகள் மட்டுமே இங்கே விரும்பப்படுகிறது. சில விதிவிலக்குகள் உண்டு.
Delete//பழைய நாயகரோ ..புதுசோ ..சுவாரஸ்ய கதைகள் மட்டுமே இங்கே விரும்பப்படுகிறது. //
Delete+1
லக்கி லுக் - கதைகளின் பெரும் பலமே, humor தான், அது கண்டிப்பாக இருக்கும் பட்சத்தில், நாம் வரவேற்போம், முடிவு உங்கள் கையில்!!!😎😎😎
ReplyDelete// சிறுகச் சிறுகப் பழசுக்குள் பூந்துக்கலாமா - அந்த ஆர்ட்ஒர்க் பழகிக்கொள்ளும் என்ற நம்பிக்கையினில் ? // பூந்துக்கலாம் சார்.
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteகிட் கண்ணன் சொன்னதுபோல கதை நன்றாக இருந்தால் போதும் சார்.. சிரிப்பு வசனங்களோ, சித்திர பாணியோ கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா தப்பில்லே!
எனக்கு பழைய 007ஐ இப்போதும் ரசிக்க முடிகிறது! தேர்ந்த மொழிபெயர்ப்பும், அன்றைய டவுசர் போட்ட ஞாபகங்களை மீட்டெடுக்கும் சித்திரங்களும் முக்கிய காரணம்!
இ.ப பிரின்டிங் பணிகள் நிறைவுறும் தருவாயில் இருப்பது மகிழ்ச்சி!!
லயன்-400ல் தல'யின் அட்டைப்படத் தாண்டவத்தைப் பார்த்துவிட ஆவலோ ஆவல்!!
எனக்குமே டெக்ஸின் பழைய பாணி கேலப்பினியின் சித்திரங்களை விட, தற்போது புதிய பாணியே பிடித்திருக்கிறது! கூடவே, புதிய பாணி கதை நகர்வில் விரவிக்கிடக்கும் ஒருவித ஸ்டைலும் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது!
// எனக்கு பழைய 007ஐ இப்போதும் ரசிக்க முடிகிறது! தேர்ந்த மொழிபெயர்ப்பும், அன்றைய டவுசர் போட்ட ஞாபகங்களை மீட்டெடுக்கும் சித்திரங்களும் முக்கிய காரணம்! // Fact fact இப்போதும் கொஞ்சமும் சலிக்கவில்லை
Deleteஇரத்தப்படலம் இதற்காக இந்த வருடத்தின் அனைத்து புத்தகங்களையும் தியாகம் செய்தாகிவிட்டது. எதிர்வரும் வருடமாவது புத்தகங்களை வாங்கும் வல்லமையை புனித மானிடோ வழங்குவாராக..
ReplyDeletesuper☺
DeleteThanjavur sekar
This comment has been removed by the author.
Deleteஅருமை.. பரணி பாராட்டுகள்👌👌👌
Deleteபாலாஜி வாழ்த்துகள்🌹🌹🌹🌹
பழைய ஜேம்ஸ் பாண்ட் கதைகள் வேண்டும்
ReplyDeleteUpdates அபாரம். முதலில் பைண்ட் ஆன புத்தகங்களை முதலில் அனுப்புவது தானே முறை??? அப்போ முதலில் இரத்த படலத்தை அனுப்பி விட்டு பிறகு ஆகஸ்ட் இதழ்களை அனுப்புவது தானே முறை??? First in First Out. ஆகஸ்ட் மாதம் முழுவதும் கொண்டாட்டம் தான். இரத்த படலம், லயன் 400, தோர்கல், E-road புத்தக விழா ஸ்பெஷல் புக்ஸ் (உயிரைத் தேடி, ஸ்பெஷல் 2???) ஒரு பிளாக் அண்ட் ஒயிட் கிராஃபிக் நாவல்??? அல்லது பழிக்கு பழி??? அல்லது லக்கி???
ReplyDeleteபழிக்கு பழியென்றால் கொண்டாட்டமே
Deleteஅட்டகாசமாருக்கே
Deleteஅப்பறம் இன்னும் ஒரு கேள்வி சார் பாண்ட் 2.0 அடுத்த வருடம் உண்டா???
ReplyDeleteMr.Bond கதையை தவிர எல்லாக் கதையும் படித்தாகி விட்டது ...இந்த மாசம் வந்த பழைய பாண்ட் ரம்பம் என்றால் புது பாண்ட் ரொம்ப Hitechகா இருக்காரு...அவரு கதை ரெண்டாவது தடவ பாக்கும் போது தான் ஓரளவுக்கு புரியுது.
ReplyDeleteOld Bond… shhhh mudiyala. Lucky we can give a try sir. Tex… your decision sir😀😀😀
ReplyDeleteசார் ஜேம்ஸ்பாண்ட் கதை கண்டிப்பாக போடுங்கள் அது பழைய பானி கதைகள் என்றால் இன்னும் சிறப்பு காமிக்ஸ் படிக்கும் போது லாஜிக் பார்த்தால் எந்த கதையும் படிக்க முடியாது என்னை பொறுத்தவரை அந்த காலத்து ஜேம்ஸபாண்ட் கதைகள் படிக்கும் பொழுது அது வெறும் கதை மட்டுமல்லாது அன்றைய அமெரிக்க ரஷ்ய இடையேயான பனிப்போரை நினைவு படுத்துகிறது லயன் முத்து காமிக்ஸ் மட்டுமே பழகியவர்களுக்கு பழைய ஜேம்ஸ்பாண்ட் கதைகள் பிடிக்குமா என் தெரியவில்லை ஆனால் நானோ அன்று ராணி காமிக்ஸ் மட்டுமே படித்தவன் அதனால் ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி போன்றவர்களின் கதை என்றால் மிகவும் விரும்புகிறேன் இம்மாதம் வெளியாகியுள்ள 3 புத்தகங்களுமே நட்சத்திர பட்டாளங்கள் உள்ளடக்கியதாக இருந்ததால் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும் ஆனால் எனக்கோ பாண்ட் & பாண்ட் கதைகளை பற்றியே இருந்தது என்னை போன்ற சிந்தனை உடையவர் மேலும் பலர் இருப்பார்கள் எனவே கிளாசிக் ஜேம்ஸ்பாண்ட் கதைகள் தனியாக தர முடியாவிட்டாலும் மற்ற கதைகளுடன் இணைத்தாவது தர வேண்டும் நன்றி சார்
ReplyDeletePlease give a slot for classic James Bond in 2022
ReplyDeleteவேணுமின்னா 2022 ல் smashing 70's பழைய ஜேம்ஸ்பாண்ட் கதைகளை 5-6 ஆக போட்டுக்கொடுங்க சார்..
ReplyDeleteஇம்மாத புத்தகங்களில் நான் முதலில் படித்தது - மாடஸ்டியக்காவ தான்!
ReplyDeleteஅட்டைப்படத்தை நம்பி ஏமாந்து போய் படிச்சுட்டேன்!
///வெறுமனே..
(கண்ணாடிய தொடச்சிப் போட்டு) பொம்மை பாக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு///
எப்புடி கண்டுபுடிச்சீங்க?? ஹிஹி!
இந்த கூட்டத்தில் நான் மட்டும் தனியாக இல்லைங்கிற வரைக்கும் சந்தோஷம்!
பழைய பாண்டு பலவாட்டி முயற்சி பண்ணியும் நாலு பக்கத்துக்கு ஏனோ நகர மாட்டேங்குது இப்போ வரைக்கும்!
ஆஹா 2022
ReplyDeleteவேதாளர்
காரிகன்
ரிப்கெர்பி
மாண்ட்ரேக்
ஜேம்ஸ்பாண்ட்
மாடஸ்டி
ஒரு அருமையான க்ளாசிக் விருந்துக்கு இப்பவே கை பரபரக்குது.. இன்றைய லேட்டஸ்ட் ஹூரோக்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என நிறுபிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை...
1.இவரது கதைகள் வரும் ஆண்டுகளிலும் தொடர்வது ஓ.கே தானுங்களா folks ? 2022-ன் அட்டவணை 95 சதவிகிதம் நிறைவு கண்டுவிட்டுள்ள நிலையில் - this could be the last piece of the puzzle !
ReplyDeleteயெஸ்....நிச்சயமாக கோல்டன் 007 தொடரவேணும் சார்.
காமிக்ஸ் தேசத்திற்குள் எண்ட்ரி ஆக நுழைவுச்சீட்டு வழங்கிய முதல் நாயக்கன் 007.
அவர் எப்படி இருப்பினும், எப்போதும் வாசிக்க...ரசிக்க இயலும்...
அக்காலத்தில் வாய்பிளந்து ரசித்த சாகஸங்கள் இப்போது பார்க்கையில் தலையை சொறிந்தாலும், அது அந்த 1980களின் கடைசியில் அநாயசமாக உலவச் செய்கிறது... சோ, 100% ஒரு சீட்டு கன்ஃபார்ம் பண்ணிடலாம்.
2.ஓ.கே. எனில் - இந்த பாண்ட் + பிளைசி பார்முலாவே தொடரட்டுமா ? லேடி 007 & ஒரிஜினல் 007 அமைத்துள்ள இந்தக் கூட்டணி ரசிக்கின்றதா ?
ஓரே இதழ் தான் வாய்ப்பு இருவருக்கும் சேர்த்து எனும்போது இணைப்பு தொடரட்டும்... விற்பனை தேங்கும் முதல் நொடி வரை....!!!
அப்படியே
ReplyDeleteசிஸ்கோ
ஷெர்லாக்
ஜார்ஜ்
கதைகளையும் கொண்டுவந்தால் மீண்டும் ஒரு க்ளாசிக் பொற்காலம் போல் இருக்கும்...
சார்.. அடுத்த வருடம் வேறு நிறுவனத்தில் வெளிவந்த மெஹா ஹிட்டடித்த சிறந்த பாண்ட் கதைகளை நமது மொழிபெயர்ப்பில் தரமான தரத்தில் காண செம ஆவல் சார்.
ReplyDeleteஇரகசிய மாநாடு - colonal sun
தங்கராஜா - gold finger
அழகியைத்தேடி
மந்திரியை கடத்திய மாணவி...என தேர்ந்தெடுத்து போடலாம் சார்..
செம...செம...பேஸா இருக்குமே..
Delete"அழகியைத் தேடி" மட்டும் கலரில் வந்தா நல்லா இருக்கும்...
இல்ல தலைவரே க்ளாசிக் பாண்ட் கருப்பு வெள்ளையே சிறப்பாக இருக்கும்...அந்தக்கோட்டோவியம் அருமை...
Deleteஅடுத்து நடிச்சது -
ReplyDeleteபேய் நகரில் ஒரு பொன்வேட்டை!
ஏனோ மொத கதையை விட இரண்டாவது பார்த்தவுடன் படிக்கத் தூண்டியது!
வழக்கமான எனது கார்ட்டூன் வாசிப்பு பாணியில் 3 மணிநேரம் எடுத்துக் கொண்டது! எனது ஃபேவரிட் லக்கி கதைகளில் இதுவும் இடம் பிடித்து விட்டது! நேரமிருப்பின் இக்கதை பற்றிய தனி விமர்சனம் எழுதணும்!
பேய் நகரில் ஒரு பொன்வேட்டை - ரொம்ப ரொம்ப சூப்பர்!!
9.5/10
வால் முளைத்த வாரிசு!
வழக்கமான லக்கி பாணியில் ஏதோ மிஸ்ஸிங்! மறுவாசிப்பு செய்யும் தான் கண்டுபிடிக்கனும்!
இப்போதைக்கு 8/10
///நடிச்சது///
Deleteநாம ஒன்ன டைப் பண்ணினா அது ஒன்னு விழுகுது! ஆனாலும் Google G-board இப்பிடியெல்லாம் update பண்ணினா மண்டை வலி எடுத்துக்கும்!
இப்பெல்லாம் இந்த Artificial Intelligence தொல்லை தாங்க முடியலைடா சாமி!!
//// லாக்டௌன் நாட்களில் 'தல' சார்ந்த கேள்விகளுக்கு நீங்கள் தந்த பதில்களுள் பெரும்பான்மை அட்டவணையினில் நடைமுறை கண்டுள்ளன////
ReplyDeleteஆஹா...ஆஹா...ஆஹா... அருமையான சேதி...
சின்ன டெக்ஸ்
பெரிய டெக்ஸ்
மினி டெக்ஸ்
வண்ண டெக்ஸ்
இளம் டெக்ஸ்
இன்னும் என்னென்ன டெக்ஸோ...????
காத்திருக்கும் அட்டவணைக்கு இப்போதிலிருந்தே காத்திருக்கிறோம்...!!!
உங்க காட்ல எப்பவுமே அடைமழைதான் தலைவரே...
Deleteஆமா...ஆமா... டெக்ஸ் மழை நல்லது!
Deleteமேலே "மூணாவது லட்டு--- அடுத்த மாசம் இந்நேரம் இ.ப. கையிலே"""
----என்பதை விட்டுட்டீங்களே?????
அதுக்கு தனி விழாவே இருக்கு தல...
Deleteதனி விழாவா? செம..செம...💞💞💞
Deleteவிழா எங்கிட்டோ
Deleteகொடுக்கிற ஒன்று இரண்டு ஸ்லாட்டும் சும்மா நச்சுனு நம்ம க்ளாசிக் பாண்ட்க்கு கொடுங்க சார்..
ReplyDelete//*சிறுகச் சிறுகப் பழசுக்குள் பூந்துக்கலாமா - அந்த ஆர்ட்ஒர்க் பழகிக்கொள்ளும் என்ற நம்பிக்கையினில் ?? ///
ReplyDelete----கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்குமே!
கார்டூன் கதைகளை சந்தாவில் வாங்கினாலும் அதை அப்படியே படிக்காமல் வைத்து விடுவேன். எனது மகன் பெரியவன் ஆனதும்படிப்பான் என நினைத்து வாங்கி வருகிறேன் அவன் அந்த பக்கம் திரும்பி கூட பார்ப்பதில்லை. என்னத்த சொல்ல.....
ReplyDeleteஇளவரசி,தல, தளபதி, டியூராங்கோ, கமான்சே, தோர்கல், 007, விரும்பி படிப்பதுண்டு. மற்றவை பரணுக்குள் குடி புகுந்திடும். தற்போது வேதாளர் வருவது ஆறுதல்.
007 கிளாசிக், மாடர்ன் ரெண்டுமே பிடிக்கும். தயவுசெய்து தொடரவும்.
////. லயன் 400 இதழுக்கு 'தல' அட்டைப்படம் செம மாஸாக அமைந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது ! அந்த நகாசு வேலைகள் வரும் வாரத்தில் நடைபெறவுள்ளன ; நிச்சயமாய் புக்காக்கிப் பார்க்கும் போது செமத்தியாக இருக்குமென்று தோன்றுகிறது///
ReplyDelete----யாஹீஹீஹீ.....ஹீ...ஹீ...ய்யாயாயாஆஆஆஆ😍😍😍
// யாஹீஹீஹீ.....ஹீ...ஹீ...ய்யாயாயாஆஆஆஆ😍😍😍 //
Deleteகாலையிலேயே இந்த தம்பி நள்ளி சாப்ஸ் சாப்பிட்டு இருக்குமோ :-)
சார் லக்கிலுக்ன் பழைய கதைகளை வெளியிடுங்கள். சித்திரம் நன்றாகத்தான் இருக்கிறது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொள்ளும். சைபர் சைபர் ஏழை பொருத்தவரை பெரும்பான்மை நண்பர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் ஓ அதையே நான் வழிமொழிகிறேன்.
ReplyDeleteமீம்ஸ்கள் வழமை போல பட்டாசு....
ReplyDeleteவாழ்த்துகள் சகோஸ்....🌹
+1
Deleteஉரிமைகள் வாங்கிய பாண்ட் அனைத்தும் முடிந்துவிட்டால் மீண்டும் வேண்டாம் சார் மட்டும் அந்த ஷீலாவும் வேண்டாம். இளவரசியோடு வேறு யாரவது முயற்சி செய்யுங்கள் சார்.
ReplyDeleteலக்கி இந்த ஆர்ட் ஓடு ஒரு கதை நீங்கள் வெளியிட்ட ஞாபகம் ஒரு குத்து சண்டை வீரனை லக்கி கைப்பற்றிய கதை எனக்கு பிடித்தமானதும் கூட. ஆனால் அக்கதை சிறுகதையாக இருந்தது. இருந்தாலும் எனக்கு பழைய கதைகள் முயற்சி செய்ய ஓகே தான்.
டெக்ஸ் புதுக்கதைகள் ஓகே தான் ஆனால் நமது வாழ்நாளில் ஆரம்ப கூட்டணி இதழ்கள் முழுவதும் வாசித்திட வேண்டும் சார் ஆகையால் மீதம் இருந்தால் அவைகளையும் வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.
ஷீலா வ இது யாரு புதுசா?
Deleteஅமாயா
Deleteநமது வாழ்நாளில் ஆரம்ப கூட்டணி ///////இதழ்கள் முழுவதும் வாசித்திட வேண்டும் சார் ஆகையால் மீதம் இருந்தால் அவைகளையும் வெளியிட கேட்டுக்கொள்கிறேன்///.
Deleteஆமா... ஆமா.... ஆரம்ப கூட்டணி கதைகளை அனைத்தும் வாசித்திட வேணும் எப்படியும்.... தேடலில் அவைகளும் இருக்குட்டும் சார்....!!!
இன்றும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக மனதில் நிலை கொண்டு உள்ளவை பிரம்மா கியான்லூஜி அவர்களின் அமர படைப்புகளே!!!!!
தலைவாங்கி....
பவளசிலை...
பழிவாங்கும் பாவை..
பழிக்கும்பழி...(ஷெரீப்பு&சுந்தர் ஸ்பெசல்)
ட்ராகன் நகர்...
இரத்தமுத்திரை..
இரத்தவெறியர்கள்..
கழுகுவேட்டை....
இரும்புகுதிரையின் பாதையில்...
பாலைவன பரலோகம்...
நள்ளிரவு வேட்டை....
என அக்கால ஹிட்டுகள் ஒவ்வொரு பேனலாக நிழலாடுகின்றன....
ஒரு பிரளயப் பயணம்!
ReplyDelete//220 பக்கங்கள் 20 நிமிடங்களில் கரைந்திடுவது சாத்தியமே//
ஆமாங்க உண்மையிலேயே 20 நிமிஷத்துல படிச்சு முடிச்சிட்டேன்! அதுக்கு மேல இதுல நேரம் ஒதுக்க ஒண்ணுமில்லை!
முதல் 110 பக்கம் சாண்டில்யன் கதைகளைப் போல வெறும் வர்ணனையிலேயே ஓட்டிட்டாங்க!
தல கதைகளில் ஒரே சௌகர்யம் என்னவென்றால் பெரும்பாலும் கதைகள் எனது நினைவுபேழைகளுக்கு சுமை வைக்காமல் வந்தோமா போனோமா என இருந்து விடுகிறது!
கதை - காப்பி
வசனங்கள் - வழக்கம் போல
சித்திரங்கள் - சிறப்பு
மார்க் : Just entertainer
// Just entertainer //
DeleteThat important. Good to know that you enjoyed this entertaining story :-)
///Just entertainer///
DeleteThat's why TeX is so successful in these days.......
Classic Bond & Lucky (old) - No
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவால் முளைத்த வாரிசு:
ReplyDeleteஅட்டைப்படத்தில் உள்ள ஞானசூன்யம் + தலைப்பை ஒரு முறை படித்தால் கதை என்ன என்பதை மிகவும் எளிதாக யூகித்து விடலாம்.
ஆனால் நம்ப ஞானசூன்யத்திற்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது?, இதற்கு ஏதாவது ஆனால் யாருக்கு லாபம் அதைவிட டால்டன் சகோதரர்களுக்கு இங்கு என்ன வேலை? நடுவில் வரும் சைனாகாரர்கள் யார், அப்புறம் லக்கி லூக் மற்றும் ஜாலிக்கு என்ன ரோல் என பல கேள்விகளுடன் ஆரம்பிக்கும் இந்த கதை 51 பக்கங்களில் எல்லா முடிச்சுகளையும் சிரிப்பை கொண்டு அவிழ்த்து மன நிறைவுடன் கதை முடிகிறது.
நான் சந்தோஷமாக உணர்கிறேன் அண்ணாச்சி :-)
கதையில் படத்துடன் சிரிக்க பல இடங்கள் உள்ளது. நண்பர்கள் பலர் இன்னும் கதையை படித்திறாத நிலையில் அடுத்த வாரம் எழுதுகிறேன்
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteடென்வர் மைல்ஸ் மற்றும் கொலராடோ பில் அடிக்கும் லூட்டிகள் செம காமெடி. சிரியஸான பார்டிகளைக்கூட சிரிக்க வைத்து விடுவார்கள் இந்த இரட்டையர்கள் :-)
ReplyDelete152nd
ReplyDelete###அட்டவணை வெளியாகிடவுள்ள அக்டோபர் 15-ல் நீங்கள் மகிழ்ந்திடக் கூடுதலாயொரு காரணமும் இருந்திடும் #####
ReplyDeleteமெபிஸ்டோ ??
ஆயிரம் பக்க கதை ??
ஸ்பைடர்500 பக்கம்???
Deleteஅரை டவுசரு ஒரு 600 பக்கம்???
Deleteஒரு தோழனின் கதை 3 நாட்களுக்கு முன் தான் படித்தேன். மாறுபட்ட ரசனைகளை தொடர முடிந்தால் ஓகே. But, 🙄🙄🙄, மிடில. Sorry!!!
ReplyDelete😉😀😀
Deleteஓ.கே. எனில் - இந்த பாண்ட் + பிளைசி பார்முலாவே தொடரட்டுமா ? லேடி 007 & ஒரிஜினல் 007 அமைத்துள்ள இந்தக் கூட்டணி ரசிக்கின்றதா ?
ReplyDelete#######
"இந்த முறை ரசித்தது சார்"
வித்தியாசப் பின்புலத்தில், வித்தியாச எதிரியோடு டீம் மோதுவது எனும் போது 220 பக்கங்கள் 20 நிமிடங்களில் கரைந்திடுவது சாத்தியமே ..
ReplyDelete₹₹₹#
சிலர் (மட்டும் ) டெக்ஸ் ஒரே பாணி கதை என ஒரே மாதிரி சொல்லி கொண்டு இருந்தாலும் இந்த முறை நானும் எப்பொழுதும் போல் ஒரே போல் சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன்..எனவே நோ விமர்சனம்..எப்பொழுதும் போல கடைசி வரியை மட்டும் பிரதிபலித்து கொள்கிறேன்..
"அடுத்த டெக்ஸ் எப்பொழுது சார்..?"
அடுத்த மாதம் நீஈஈஈஈஈஈண்ட கலர் டெக்ஸ் தலைவரே....!💕
Deleteவாழ்க்கையிலேயே முதல் தபா...
ReplyDeleteலக்கி லூக் புது இதழ் என் கைக்கு வந்தும் நாலஞ்சி நாளா பிரிக்காம வெச்சிருக்கிறது...!
எந்தா இது மனிடோ சாரே..!?
விரைவில் கார்டூனை நீங்கள் படிக்க சரியான நேரத்தை தர அந்த மனிடோவை வேண்டுகிறேன் :-)
DeleteLucky Luke (Old style) -- Yes, Yes ... : James bond (Old style) -- No
ReplyDeleteபழைய கதைகளை முக்கியமாக 007 ஜேம்ஸபாண்ட் கதைகளை கலரில் போடலாம். இல்லை காம்போ ஆஃபர் மாதிரி ஏதேனும் ஸ்பெஷல் வெளியீடு உடன் சேர்த்து போடலாம். பாக்கெட் சைஸ்ல் கூட போடலாம். நிஜங்களின் நிசப்தம், ஒரு தோழனின் கதைகளையே பார்த்து படித்து விட்டோம். இவற்றிற்கு 007 கதைகள் லக்கிலுக் பழைய கதைகள் எவ்வளவோ பெட்டர். என்னை கேட்டால் வெத்து வேட்டு கிநா களுக்கு பதிலாக பழைய கதைகள், மறுபதிப்புகளுக்கு சந்தா ஓல்டு ஈஸ் கோல்டு என தனித்தடம் ஆரம்பித்து விடலாம். கூடிய சீக்கிரம் மெபிஸ்டோவை களம் இறக்குங்க
ReplyDeleteசெஸ்டர் அன்ட் செஸ்டர் அன்ட் செஸ்டர் அன்ட் செஸ்டர் ஒரு செஸ்டரை விட்டு விட்டார் :-)
ReplyDeleteரின் டின் கேனை விட தாங்கள் தான் பெரிய ஞானசூன்யம் என ஜோ புலம்புகிறார் :-) படியுங்கள் ரசியுங்கள் சிரியுங்கள் :-)
ReplyDeleteஇந்த மாத புத்தகங்கள் கிடைத்து ஏறத்தாழ ஒரு வாரமான பின்னும் கூட படிக்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை. லக்கி வந்தவுடன் அட்டைப் படத்தைக்கூட சரியாக பார்க்கவில்லை, அதற்குள் என் மகள் வாங்கிக்கொண்டு போய்விட்டார்; இன்னும் கிடைத்த பாடு இல்லை! ஆனால் இரண்டு கதைகளும் செம்மையாக இருப்பதாக அவரிடமிருந்து விமர்சனம் வந்துவிட்டது.
ReplyDeleteபாண்ட் பற்றி ஆசிரியர் கேட்டதனால் படித்துவிட்டு பதில் சொல்லிவிடலாம் என்று இன்று மதியம் ஆரம்பித்து முடித்தாயிற்று. வழக்கமான கிளாசிக் ஜேம்ஸ்பாண்ட் கதை! இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் இதுபோன்ற கதையைப் படித்திருந்தால் நானும் அந்த ரோட்டரில் பறப்பது போல எதையாவது முதுகில் கட்டிக்கொண்டு ஓடியிருப்பேன். ஆனால் இப்போது அதெல்லாம் அதரப்பழசாகத் தெரிகிறது. அந்த இருட்டு அறையில் புலியின் உறுமலைத் தொடர்ந்து ஜேம்ஸின் தோளில் அடிபட்டது எப்படி என்று தெரியவில்லை...இப்போது அது எடிட் செய்யப்பட்டதாக ஆசிரியர் சொன்ன பிறகுதான் போர்வை போர்த்திக் கொண்டு வந்த புலியின் கைங்கரியம் எனத்தெரிகிறது.
கடத்தப்பட்ட/கட்டிவைக்கப்பட்ட பாத்திமாவை பாண்ட் பாதுகாக்கும் படலமாகவே பாதிக்கதை முடிந்து விடுகிறது. டாக்டர் நோவின் இரண்டாவது அத்தியாயம் வெற்று மிரட்டலாகவே ஓடிவிட்டது...
புத்தக வடிவமைப்பும், அளவும் கனகச்சிதமாக இருக்கிறது. கிளாசிக் ஜேம்ஸ்பாண்டை ரசிக்கும் நண்பர்களுக்காக இது போல வருடம் ஒன்று மட்டும் வரலாம். அப்படி வரும் பட்சத்தில் இது போல 'B & B ஸ்பெஷல்' போலவே வரட்டும்.
ஹாட் ஷாட்... சூடு ரொம்ப கம்மி!!!
////ஒரு திரைசீலையைக் கொண்டு முக்காடைப் போட்டுவிட்டு ஒரு உறுமும் முரட்டுப் புலியைச் சார்வாள் சமாளிப்பதையெல்லாம் எடிட் செய்யும் போது நாற்காலியை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டியிருந்தது எனக்கு - சிரிப்பில் எதையாச்சும் செய்து தொலைக்கப்படாதே என்று////
ReplyDelete😂🤣😂🤣😂
இந்தப் பழைய பாணி லக்கி லூக் சித்திரங்கள் மினி லயன் விண்டர் ஸ்பெஷலில் வந்திருக்கிறதே
ReplyDeleteபேய் நகரில் ஒரு பொன்வேட்டை!!!
ReplyDeleteவாய்விட்டு சிரிக்க பல இடங்கள்!!!!
டென்வர் & கொலராடோ செம கூட்டணி...
9/10
Absolutely - buy the English version also - Ghost Town (or City) - absolute ROTFL !
Deleteஇதுல மல்லுக்கட்டும் நேரத்துக்கு ஜாலியாக ஒரு கை போக்கர் ஆட்டம் ஆடி ஏது நல்லா இருக்கு என தீர்மானம் செய்யலாம் - கொலராடோ :-)
DeleteB&B ஸ்பெஷல் compact புக் சைஸ் காரணமாக வசன பலூன்கள் மெஜாரிட்டி பேனல்களை ஆக்கிரமிப்பு செய்வதாக தோன்றுவதும் (சென்ஸார் தவிர), font சைஸ் வழக்கத்தை விட சிறியதாக படிக்க ஏற்றவாறு வசதியாக இல்லை என்று நினைப்பதும் நான் மட்டுமே தானா??? 🤔🤔🤔
ReplyDelete182th
ReplyDelete182th
ReplyDeleteஆபாசம் என்ற வரையறை கீச்சல் பாணி சித்திரங்கள் கொண்ட கதைகளில் (ஒரு தோ. கதை) நாம் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடைந்து விட்டோம் என்றும (18+ tag'ஐ விட்டுத் தள்ளிவிட்டு), அதுவே பாண்ட் கதைகளில் அவை விரசம் என்ற வேறுபட்ட பார்வைகளில் மசி பூசி மறைத்தலும் நாங்கள் பக்குவம் அற்றவர்கள் என்ற நினைப்பினால் தானோ என்கிற ஆயாசம் எழுகிறது சார். இங்கு உள்ள அனைவரும் கிட்டத்தட்ட (வெகு சிலர் தவிர) முதிர்ந்த ரசிகர்கள் தானே... அதைப் பார்த்து கெட்டு போகலாமே, கலாச்சாரத்தை காக்க என்பது இன்றைய மொபைல் போன் காலத்தில் முரணாக தோன்றுகிறது சார்
ReplyDeleteஆயாசம் எழுவது இதுபோன்ற கேள்வி மறுபடி மறுபடி எழும்போதுதான் நண்பரே.
DeleteTitillating என்ற பதத்தை எடிட்டர் சார் பலமுறை பயன்படுத்திவிட்டார்..
ஒரு தோழனின் கதையில் வரும் சித்திரங்கள் கதைப்போக்குக்கு அவசியமானவை...
Titillating - பாலுணர்வை தூண்டும் - வகையை சார்ந்தவை அல்ல
பாண்ட் பெண்களின் ஆடைகள் titillating வகையை சார்ந்தவை..
இதுகுறித்து எடிட்டரும் , நண்பர்கள் பலரும் விளக்கமளித்து உள்ளனர்...
பாண்ட்,மாடஸ்டி, பௌன்ஸர்,கடற்கொள்ளையர் கதைகளில்
வரும் சித்திரங்கள் சில விரசமானவையே..
அவை அவசியமேற்படும்போது பலூன்கள்,மசி மூலம் குறைக்க அல்லது மறைக்கப்படுகின்றன...
கதைக்கு அவசியமானதா இல்லையா என்பதே உற்றுநோக்கப்படவேண்டியது..
கோன மூஞ்சி டெக்ஸ், அழகு வதன டெக்ஸ் என எல்லா வகை டெக்ஸையும் ரசிக்கிறோம், அதே போல அரை மண்டை லக்கியும் முயற்ச்சிகலாம். கதையில் காமடி இருந்தால் OK
ReplyDelete1. B & B கதை மிகச் சிறப்பு. நவீன 007 & மாடஸ்டி ஐ களமிறக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்.
ReplyDelete2. லக்கி கதையை மிகவும் ரசித்தது எங்கள் வீட்டுச் சுட்டி. சிரிப்புடன் இருக்கும் பழைய மாடல் லக்கிக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.
3. தல 10/10. (இதுக்கு மேல் தர வாய்ப்பு இல்லையே?)
ReplyDeleteஹாட் ஷாட் ( தனது துறையில் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் செயல்படும் மனிதனை சுட்டுகிறது)
007- ன் இக்கதை பழமையானதோ என்னவோ சொல்லி போகும் விஷயங்கள் பல...
ஜிம் லாரன்ஸால் 1976 - ல் எழுதப்பட்டது
( நாளிதழ் ஸ்டிரிப்)
1956-ல் இயான் பிளமிங்கால் எழுதப்பட்டு 1976-ல் திரைப்படமாக வெளிவந்த டயமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர் -ல் சூரிய ஒளியை- வைரங்களை ஸாட்டலைட்டில் வைத்து - வைரங்கள் மூலம் லேஸர் ஒளிக்கற்றைகளாக மாற்றி அழிவாயுதமாக பயன்படுத்த உத்தேசிப்பதாக சொல்லப்படும்...
2002 -ல் வெளிவந்த டை அனதர் டேயின்
அடிப்படையும் இதுவே..
சூரிய ஒளி மெட்டாலிக் சோடியம் பூசப்பட்ட ரிப்ளக்டர்கள் மூலம் அழிவாயுதமாக ஸாட்டலைட் பயன்படுத்தி மாற்றப்படுவதாக காண்பிக்கப்படும்....
இவையெல்லாம் விண்வெளியிலிருந்து பூமியை தாக்குவதாக காண்பித்து இருப்பார்கள்...
இவையெல்லாம் ஏட்டளவில் சாத்தியமே!!
1929-லேயே ஹெர்மன் ஓபெர்த் எனும் ஜெர்மானிய விண்வெளி அறிவியலாளர் விண்வெளி நிலையம் , அங்கிருந்து பூமியை தாக்க உதவும் சன்கன் அல்லது ஹீலியோபீம் பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார்
( இவரது விண்ணியல் கணிதவியல் கோட்பாடுகள்,ராக்கெட் தொழில்நுட்ப கோட்பாடுகள் இன்றளவும் மதிக்கப்படுபவை,)
இரண்டாம் உலகப் போரின் போது இவ்விஷயத்தை ஜெர்மானியர்கள் பயன்படுத்த முயன்றனர்..வெற்றி பெறவில்லை..
நமது ஹாட் ஷாட் கதையில் பாரபொலிக் ரிஃப்ளக்டர் [ தமிழில் பரவளைய தெறிப்பி]- இதுவே சன் கன்( sungun)- மூலம் விமானங்கள் தாக்கப்படுவதாக காண்பிக்கப்படுகிறது..
விமானங்கள் போல வேகமாக நகரும் டார்கெட்டுகளை இதன் மூலம் தாக்குவது அவ்வளவு சுலபமில்லைதான்.. ( இதற்காகவே கதையில் மாசு நீக்கும் பொருள் என்ற ரசாயனம் கொணரப்படுகிறது)
நிலத்திலிருந்து ஆகாயம் என்பதையும் தாண்டி சூரிய ஒளியை ஒரு ஆயுதமாக
நிலத்திலிருந்து நிலத்துக்கு ஒருவர் பயன்படுத்தினார் அதுவும் கி.மு 210 -ல் என சொல்லப்படுகிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?
ரோமானியர்கள் அப்போதைய சிசிலியின் ஸிரக்யூஸ் நகரை தாக்கியபோது கிரேக்க அறிஞரான ஆர்கிமிடிஸ் குழிபிறை கண்ணாடிகளை கொண்டு ரோமானிய கப்பல்களை சூரிய ஒளியின் மூலம் எரியூட்டி அழித்தார் என சொல்லுவார்கள்...
( ஆனால் இது ஒரு மித் (myth) ..இதற்கான அறிவியல் சாத்தியங்கள் கொஞ்சமுமில்லை)
இருப்பினும் படிக்க சுவாரஸ்யமானது..
விண்வெளியிலிருந்து பூமியை தாக்கும் ஆயுதங்களை விண்வெளியில் நிறுத்த பனிப்போர் காலத்தின் போது அமெரிக்காவும் ரஷ்யாவும் முற்பட்டனதான்..
ஆனால் விண்வெளி பாதுகாப்பு ஒப்பந்தம் (( space preservation treaty)
ஆயுத குறைப்பு ஒப்பந்தம் - SALT 1 & 2 ( STRATEGIC ARMS LIMITATION TREATY)
ஆகியவை மூலம் விண்வெளியில் இதுபோல் சர்வதேச நாடுகள் எவ்வித ஆயுதங்களும் நிறுத்துவது இல்லை என உடன்பாடு ஏற்பட்டு விட்டது..
( நம்மவர்கள் சூரிய ஆயுதம் என்ற வம்புதும்புக்கெல்லாம் போவதில்லை...சந்திரனை மட்டும் கூப்பிட்டு காதலியின் நிலா முகம் என வர்ணிக்க பயன்படுத்துவதோடு சரி!!!)
டைமண்ட் பார் எவரில் இந்த கதையின் புலி குட்டி அண்ணன் பூனை குட்டி இருப்பார்.
DeleteOld lucky , pls try sir...
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்! விஜய ராகவன் சார், பரணி சார், எடிட்டர் சார் மற்றும் அனைவருக்கும் வணக்கம்! எனக்கு "Smashing 70s" சந்தாவை அன்பளிப்பாக வழங்கிய பேரன்பு நிறைந்த சார் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்!! உங்கள் மொபைல் நம்பர் கிடைத்தால் நேராக உங்களிடம் பேசி மிகவும் சந்தோஷப்படுவேன்.
ReplyDeleteSmashing 70's வெளிவருவதில் மிக்க சந்தோஷம் அடைகிறேன். வேதாள மாயாத்மா, மாண்ட்ரேக் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்!
வேதாள மாயாத்மா கதைகளோடு நான் எதிர்பார்த்த அனைத்து கதைகளும் மறுபதிப்பாக வந்து விட்டது. இன்னும் 'கருப்பு கிழவியின் கதைகள்' மட்டுமே வராமல் உள்ளது. அதையும் வெளியிடுங்கள் சார்!
Warm welcome back.
Deleteலயன் 37'ம் ஆண்டு மலர்:
ReplyDeleteஆண்டு மலரின் முதல் கதை 'வால் முளைத்த வாரிசு' அட்டகாசமான காமெடி தோரணம். சிறு வயதில் நான் எல்லா லக்கி லூக் கதைகளையும் படிக்கும் போது விழுந்து விழுந்து சிரிக்கும் அந்த பரவசத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு உணர்ந்தேன். சிறு வயதிலேயே இந்த கதையை நான் படித்திருந்தால் ஆனந்த கண்ணீரோடு சிரித்து சிரித்து பரவசம் அடைந்திருப்பேன். ஆனால், இப்போது நான் சிரிப்பை மறந்து போய் வெகு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இந்த கதையோ, நான் சிரிப்பை மறந்துப் போன காலக்கட்டத்தில், நான் வாய் விட்டு சிரிக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்து வெளியாகியுள்ளது. ரின் டின் கேன் & ஆவ்ரெல் இருவரும் சிரிக்க வைப்பதில் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். ரின் டின் கேனின் கூத்துக்கள் ஒரு படி என்றால் ஆவ்ரெல் அடிக்கும் கூத்துக்கள் இன்னும் ஒரு படி மேலே போய் நம்மை சிரிப்பில் குலுங்க வைத்து விடுகின்றன. நாய் காலை தூக்கி மூச்சா போக விளக்கு கம்பங்கள் விற்கும் நபர் நல்ல வேடிக்கையென்றால், நாய் தொலைந்து போனதற்காக அமெரிக்காவின் பொருளாதாரமே ஆட்டம் காண்பது இன்னும் நல்ல வேடிக்கை. 18-ஆம் பக்கத்தின் மேலே உள்ள இரண்டாவது சித்திரத்தில்- "உலகில் உள்ள பல பணக்கார முதலாளிகளும் இந்த வேலையைத்தான் செய்கிறார்கள்" என்பதை நகைச்சுவை உணர்வாய் காட்டுகிறது ரின் டின் கேன். அதே நேரத்தில் இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு கிடைக்கும் போது, முதலாளியின் கணக்கு பிள்ளைகள் "தான் பிழைக்க வழி பார்க்காமல், தொழிலாளிகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்" என்பதை உணர்த்தி நெஞ்சில் இடம் பிடிக்கிறார் லக்கி லூக். சோப்புக்கட்டி துப்பாக்கியும், சீனர்களின் "சங்கி மங்கி" டயலாகும் நம் வயிற்றை புண்ணாக்கி விடுகிறது. "டிராகன் சாப்ஸ்" வாவ்!! சீன தலைக்கு அருமையான நாமகரணம் நடந்துள்ளது.
"வால் முளைத்த வாரிசு". இதை விட காமெடியான கதை ஏதாவது இருக்கிறதா?
அருமையான விமர்சனம்.
Delete007'ன் "ஹாட் ஷாட்" சூப்பர் ஷாட்! கதை மும்பையில் ஆரம்பிப்பதை படித்ததும், அந்த காலத்தில் ராணி காமிக்ஸ்-சில் வெளிவந்த 'காஷ்மீரில் 007' கதையோ என்று நினைத்தேன். ஆனால் கடைசி வரை கதையில் காஷ்மீரே காட்டப்படவில்லை. பிறகுதான் 'காஷ்மீரில் 007' வேறு, 'ஹாட் ஷாட்' வேறு என்று புரிந்துக் கொண்டேன். எனினும், 007 காமிக்ஸ்களில் இந்தியா இடம் பிடிப்பதில் பெருமையாக உள்ளது. முதல் ஒன்றிரண்டு பக்கங்கள் படிக்கும்போது 'இதுவும் வழக்கம் போல இன்னொரு 007 அதிரடி கதையாக இருக்கும்' என நினைத்து அரைகுறை சுவாரசியத்தோடு படித்துக் கொண்டிருந்தேன். போக போக புரிந்தது, ஒரு ஆயிரம் வாலா அணுகுண்டு தொடர்ச்சியாக வெடித்துக் கொண்டிருக்கிறது என்று. இந்த கதையில் 007'ன் வழக்கமான சேட்டைகளை குறைத்து விட்டு, எதிரியின் பாசறையை பிரம்மாண்டமாக காட்டி, ஒரு அட்டகாசமான களத்தில் Bond'ஐ செயல்பட வைத்திருக்கிறார் கதாசிரியர். டாக்டர் நோ'வும் முந்தைய கதையை விட இதில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அட்டகாசமான ஆக்ஷன் கதை.
ReplyDelete///..இவரது கதைகள் வரும் ஆண்டுகளிலும் தொடர்வது ஓ.கே தானுங்களா folks ?///
இந்த ஆண்டை போலவே 4 புத்தகங்கள் ஓ.கே. சார்,!!
லாக் டவுன் நாட்களில் என் வீட்டில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்கள்:
ReplyDeleteஎன் தம்பியின் மகன் தருண் (வயது 6.) அவனை ஒருநாள் மடியில் உட்கார வைத்து ஸ்மர்ஃப்'பின் "வேட்டையாடு விளையாடு" கதையை சொல்லி கொடுத்தேன். ஒவ்வொரு பக்கமாக புரட்டிப் புரட்டி கதையை நான் சொல்ல... அத்தனையும் சுவாரசியமாக கேட்டுக் கொண்டு பக்கத்து வீட்டில் இருந்த அவனது நண்பனை அழைத்து வந்து அவனுக்கு அந்த கதையை சொல்ல ஆரம்பித்தான். அந்த கதை சொல்லும் படலத்தில் இருவரும் சேர்ந்து புத்தகத்தின் ஒரு பக்கத்தை கிழித்து விட, அந்த புத்தகத்தை பிடுங்கி பெட்டியில் வைத்து பூட்டிவிட்டேன். அன்று அவன் "ஸ்மர்ஃப் புக் வேணும்... ஸ்மர்ஃப் புக் வேணும்" என்று அடம் பிடித்து அழுது அவன் செய்த ஆர்ப்பாட்டம், அப்பப்பப்பா!! (எப்படியோ எங்கள் வீட்டில் ஒரு காமிக்ஸ் வெறியன் உருவாகிறான் என்று பின்னர் ஆனந்தப்பட்டேன்.)
என் தங்கையின் மகன் அஸ்வின். (வயது 14, The Avengers, Harry Porter ரசிகன்.) காமிக்ஸ் புத்தகங்களில் இவன் தோர்கல் கதைகளை மட்டுமே விரும்பி படிக்கிறான். இவனை கௌபாய் கதைகளை படிக்க வைக்க நான் என்னென்னவோ செய்து பார்த்தேன். ட்யூராங்கோவின் அட்டகாசமான கதைகளை எடுத்து கொடுத்து படிக்க வைத்தேன். ஆனால், முதல் பக்கத்தோடு புக்'கை மூடி விட்டான். இந்த வேளையில் தான் உங்கள் புத்தகத்தில் வந்த 'மரண முள்,' 'தலைவாங்கி குரங்கு' விளம்பரங்களை பார்த்தேன். அதை ஆன்லைனில் பணம் செலுத்தி வாங்கினேன். பையன் வித்யாசமான சம்பவங்கள் வருகிற ரகமான கதைகளை படிக்கிறானே என்று 'மரண முள்' புத்தகத்தை கொடுத்தேன். ஆச்சரியமாக, அதை முழுவதும் படித்து விட்டு பரவசமடைந்தான். அதன் பிறகு, ஒருநாள் 'சைத்தான் சாம்ராஜ்யமும், மற்றொரு நாள் 'பவளச்சிலை மர்மமும் படித்தான். ஆனால், முழுக்க முழுக்க கௌபாய் கதைகளை படிக்க அவனுக்கு விருப்பம் வருவதில்லை. இப்படிப்பட்ட இளையவர்களுக்கு கௌபாய் கதைகளின் பக்கம் ஈர்ப்பை உண்டாக்க அந்த கௌபாய் கதையில் ஒரு அமானுஷ்யமான சம்பவங்கள் நிறைந்திருக்க வேண்டும். அதனால், அமானுஷ்யங்கள் நிறைந்த Tex vs Mefisto கதைகளை மீண்டும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!!
ஸ்மர்ப் குழந்தை பட்டாளம் உருவாவது மகிழ்ச்சி.
Delete* கீழ்கண்ட கதைகளை மறுபதிப்பில் கொண்டு வர முயற்சிக்க வேண்டுகிறேன்:
ReplyDelete1. மரண தூதர்கள். (முன்பு கருப்பு வெள்ளையில் பாக்கெட் சைஸில் வெளிவந்தது. அதே பாக்கெட் சைஸில் முழு வண்ணத்தில்.)
மற்றும்
2. டெக்ஸ் vs மெஃபிஸ்டோ கதைகள்
டெக்ஸ் vs மெஃபிஸ்டோவூம் ஒரு நாள் தமிழில் கண்டிப்பாக சண்டை போடுவது உறுதி.
Deleteகண்டிப்பா. நானும் ஆவலுடன் வெயிட்டிங்.
Deleteவேதாள மாயாத்மா , மாண்ட்ரேக்கை போல இன்னொரு க்ளாசிக் ஹீரோ இருக்கிறார். Flash Gordon. மாய உலகம் + மர்ம மனிதர்கள் என்று விஞ்ஞானமும் + மாயாஜாலமும் கலந்த விண்வெளி கதைகள். இவரது கதையும் வெளிவந்தால் நன்றாய் இருக்கும்.
ReplyDelete200
ReplyDelete