நண்பர்களே,
வணக்கம். வாழ்க்கை ஒரு வட்டம் போலும் ! ஏனென்கிறீர்களா ? 10 வருஷங்களுக்கு முன்னே இதே "உப்மா" சார்ந்த அடையாளங்கள் தான் தரப்பட்டன - நமது மறுவருகையின் வேளைதனில் ! And 10 years down the line - அதே உப்மாவை சுகமானதாய் ; சுவையானதாய் தந்திட முடியுமென்ற நம்பிக்கையுடன் இன்றைக்கு அடுக்களையினில் நிற்க சாத்தியப்படுகிறது எனக்கு !
இந்தப் "பழசு vs புதுசு" சர்ச்சையானது - லெமூரியா கண்டத்தை விடவுமே பழசானதுதானென்றாலும், ரசனைசார் விஷயங்களில் எந்தவொரு நிலைப்பாடும் நிரந்தரம் கண்டிடுவதில்லை எனும் போது, இந்த topic ஒவ்வொரு முறையுமே புதுப் புதுக் கோணங்களில் அலசல்களை தருவிக்கின்றது ! And இந்த ஒற்றை விஷயத்தினில் மட்டும் ஒரு தரப்பினை, மறுதரப்பின் நியாயங்களைப் பார்க்கச் செய்வது, காவிரி நீர் விவகாரத்தில் நம் மாநிலமும், அண்டை மாநிலமும் மல்லுக்கட்டுவதற்குச் சளைக்காத சிரமமே ! But still - வாரத்தின் நடுவாக்கில், LION # 400 சார்ந்த பணிகளை முடித்த நிம்மதியில் ஒரு உபபதிவு !!
If ever there was a team of "anti-oldies" (aunty oldies இல்லீங்கோ) அதன் நிரந்தரக் கொ.ப.செ.பதவியினை பிட்டம் நிறைய பெவிகாலைத் தடவியபடிக்கே ஆக்கிரமிக்கக் கூடியவனாக நானே தான் இருப்பேன் !
மறுவருகைக்கு முந்தைய காலகட்டங்களில், நமது தேடல்கள் ; ரசனைகள் ; விலைகள் - என சகலமுமே ஜனரஞ்சகங்களை நோக்கியே இருந்திட்டதால் அன்றைக்கு எதுவுமே out of place ஆகத் தென்படவில்லை ! அத்திபூத்தார் போலொரு XIII ஆல்பமோ ; ஒரு டைகர் சாகசமோ மட்டும் நமது சீரான நேர்கோட்டுப் பயனத்திற்கொரு சின்ன மாறுதலைத் தந்து வர, பாக்கி நாட்களில் எவ்வித நெருடல்களுமின்றி straight as an arrow போய்க்கொண்டே இருந்தோம் ! ஆனால் ஒரு நெடும் இடைவெளிக்குப் பின்னே, மாறிப் போயிருந்த விற்பனைக்களங்களில் ; மாறிப்போயிருந்த (தயாரிப்பு) எதிர்பார்ப்புகளுடன் ; அவற்றிற்கேற்ற புதுத் திட்டமிடல்களோடு ; புது விற்பனை வழிமுறைகளையோடு பயணிக்கத் தயாரான சூழலில் தான் புரிந்தது - இடைப்பட்ட நாட்களில் நீங்களும் வளர்ந்து விட்டீர்கள் ; நானுமே வளர்ந்து விட்டேன் & நமது ரசனைகள் ரெம்போவே முன்னேறி விட்டிருந்தன என்பது !
எல்லாமே புதுசாய் இருக்க, பரிமாறப்படும் பதார்த்தங்கள் மட்டுமே பாட்டியின் recipe-க்களோடு இருந்தால் வேலைக்கு ஆகாதென்று நான் உணர்ந்தது நமது Comeback Special இதழிலேயே ! அது நாள் வரைக்கும் நமது திகில் காமிக்சின் ஜாம்பவான் பட்டியலில் இருந்த கேப்டன் பிரின்சின் கதையினில், 2011-ன் இறுதிவாக்கில் வேலை செய்த சமயம் லைட்டாக ஜெர்க் அடித்தது ! "சரி...சரி..இது மாமூலான கதாசிரியர் கிரெக் எழுதிய கதையில்லை ; யாரோ Yves H-ன்னு புதியவர் எழுதியிருக்கார் ; அதான் ரசிக்கலை போலும்" என்று என்னைத் தேற்றிக் கொண்டேன் ! மெது மெதுவாய் லார்கோவுக்குள் புகுந்தோம் ; அந்த fresh ரசனை ; அந்தப் பணியிலிருந்த சவால்கள் என எல்லாமே ரசிக்கச் செய்தன ! மெது மெதுவாய் ஷெல்டன் இணைந்து கொண்டார் ; ஒரு வான் ஹாம் கௌபாய் கிராபிக் நாவலும் தலை காட்டியது ; க்ரீன் மேனர் பரிச்சயமானது ; கார்ட்டூன்களில் ப்ளூகோட் பட்டாளம் ; fantasy-ல் தோர்கல் - என புது வரவுகள் பட்டியல் நீண்டிட, உற்சாகமும் எகிறியடித்தது ! இடை இடையே லக்கி லூக் ; டெக்ஸ் வில்லர் ; சிக் பில் ; கேப்டன் டைகர் ; XIII போன்ற பழகிய ; yet யுகங்களாகினும் சலிக்கா நாயகர்களும் தொடர்ந்திட - அந்நாட்கள் ஒரு மழை நாளின் மெரினா கடற்கரையின் அழகுடன் பயணித்தன ! சும்மாவே 'ஆட்றா ராமா - தாண்ட்றா ராமா' என்று கரணமடிக்கும் எனக்கு - உங்களின் உற்சாகங்களும், புதுப் பணிகள் தந்த உத்வேகங்களும் ஒரு கூட்டத்துக் குரங்குகளின் ஆர்வத்தை உருவாக்கிட, ஏதேதோ திக்குகளில் கல்லை வீச ஆரம்பித்தேன் ! புதுசு புதுசாயக் கதை ரகங்கள் ; ஜானர்கள் என்று சிக்கிட, மொத்தமாய் பழசுக்கு டாட்டா சொல்லியிருந்த நாட்கள் அந்த 2012 to 2015 வரையிலான பொழுதுகள் !
உப்மா உருவான கதை !!
ஆனால் மெது மெதுவாய் பெருமூச்சுகள் காதில் விழுந்த வண்ணமே இருந்தன - "மாயாவி இருந்தாக்கா நல்லாயிருக்கும் ; என்ன இருந்தாலும் பழசு போல் வருமா ?" என்ற ரீதியில் ! அதே தருணமே - நமது கையிருப்பில் titles அதிகமாகிடுவது - தொடரும் புத்தக விழாக்களில் பங்கேற்றிட ஒரு அவசியம் ஆகிடும் என்ற நிர்ப்பந்தம் தலைதூக்கியது ! அன்றைக்குத் துவங்கின - மொள்ளமாய் ரிவர்ஸ் கியர் போட்ட நாட்கள் ! "மும்மூர்த்திகள் + ஸ்பைடர் மறுபதிப்புகள் தனித்தடத்தினில் வெளி வரவுள்ளனர்" என்ற அறிவிப்பின் காலையில் சுமார் 300+ பின்னூட்டங்கள் இங்கே ரவுசு கிளப்பியது இன்னமும் எனக்கு நினைவுள்ளது ! And தொடர்ந்த சென்னைப் புத்தக விழாவினில் "நயாகராவில் மாயாவி" விற்ற துரிதத்தைப் பார்த்த போது மிரண்டே போனேன் !
உப்மா அலுத்த கதை !!
அடுத்த 3 ஆண்டுகளுக்கு, மாதமொரு மறுபதிப்பு உங்களது கூரியர் டப்பிக்களில் இடம்பிடிக்கத் துவங்கின and திரும்பிப் பார்க்கும் இன்றைக்கு - maybe உப்மா மீதான அலர்ஜியை புதுமைக் காதலர்களின் மத்தியினில் பன்மடங்காக்கிய நாட்களுமே அவை தான் போலும் ! That was probably the overkill !! And மாதா மாதம் அந்த oldie நாயகர்களின் கதைகளில் தொனித்த புராதனம், கார்ட்டூன்கள் விதைத்த ஹியூமரை விடவும் ஜாஸ்தியாய்ப் பகடிகளை விதைக்க, ""உப்மா வேலைக்கு ஆவாது !" என்ற எண்ணம் நிறையவே வலுப்பெற்றது ! And அந்த அணியினில் நானுமே ஒரு முன்னணி இடம் பிடித்திருந்தேன் ! புராதனைக் கதையோட்டங்கள் ; புராதன மொழிபெயர்ப்பு ; புராதன க்ளைமாக்ஸ்கள் என்று எல்லாமே என்னை ஜெர்க்கடிக்கச் செய்தன அந்நாட்களில் ! புருனோ பிரேசிலின் "முகமற்ற கண்கள்" எடிட்டிங்கின் போது, "இத்தனை காலமாய் நாம் ஆராதித்த கதைகளா இவை ??" என்று எனக்குள் ஓடிய நெருடல் இன்னுமே நினைவுள்ளது !
புதுக் கதைகள் & புது ஜானர்களுக்குள் இந்நேரத்துக்கு உள்நீச்சல், வெளிநீச்சல், சைட்நீச்சல் என எல்லா ரகங்களையும் முயற்சித்து இருந்தவனுக்கு - அவற்றின் சவாலான பரிமாணங்களைப் பார்த்தான பின்னே, புராதனங்கள் கூடுதலாய் ஜெர்க்கடிக்கச் செய்தது போலிருந்தது ! ஒரு ரசிகனாய் மட்டுமே இருந்த நாட்களில் - எனது அசாத்திய favorites-களுள் இடம்பிடித்திருந்த கதைகள் ஒவ்வொன்றாய் இன்றைக்கு எழுகழுதை வயதிலான என்னை disappoint செய்திட்ட போது, ஜீரணிக்க ரொம்பவே சிரமமாய் இருந்தது ! And அந்த அஜீரணம் ரொம்பச் சீக்கிரமே அயர்ச்சியாகவும் மாறி விட்டது ! "வேண்டவே - வேண்டாம் இனி இந்தப் பழம் பஞ்சாங்கம்" என்று எனக்குள் உறுதிப்படச் சொல்லிக் கொண்ட அந்த நாட்களில் - "உப்பு" என்று காதில் விழுந்தால் கூட - "உப்புமாவா ???" என்று கூரையில் தலை தட்டும் உசரத்துக்குக் குதிக்க ஆரம்பித்திருந்தேன் ! In fact நடப்பாண்டின் இந்த கொரோனா இரண்டாம் அலை துவைக்க ஆரம்பித்த மே மாதம் வரையிலுமே எனது நிலைப்பாடு இதுவாகவே இருந்தது !
உப்மா மறுவருகை செய்த கதை !!
இரண்டாம் அலையின் தாக்கம் நிறையவே விதங்களில் யோசிக்கச் செய்தன !! And நிறைய விஷயங்கள் ஏக காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாய் மே முதலாய் நிகழ்ந்திட்டதும் ஒரு தற்செயலான ஒற்றுமையே !!
**இனி கொஞ்ச காலத்துக்கேனும் அழுகாச்சிக் கதைகளோ ; இருண்ட noir களங்களோ வேண்டாமென்று கூட்டாய் நாம் தீர்மானித்தோம் ! So கிராபிக் நாவல்களில் பெரும் பகுதி தேர்வு லிஸ்டுக்குள் நுழையவே இடமின்றிப் போனது !
**மும்மூர்த்திகள் & இதர பிரிட்டிஷ் நாயகர்கள், உங்களின் ரசிப்பு விளிம்புகளிலிருந்து மெது மெதுவாய் நகன்றிருந்ததை சென்றாண்டின் "சர்ப்பங்களின் சவால்" & ஆர்ச்சி புதுக் கதைகளுக்கும் கிட்டிய thumbsdown சங்கடத்தோடு சொல்லியிருந்தன ! In fact "சர்ப்பங்களின் சவால்" ஒரு மெகா ஹிட்டடிக்கும் என்று கனவு கண்டிருந்த எனக்கு செம ஷாக் ! பற்றாக்குறைக்கு சமீபத்தைய "நியூயார்க்கில் மாயாவி "க்குமே கிட்டிய lukewarm response !! இந்தத் தொய்வுகளின் காரணமாய் கைவசமுள்ள இன்னும் 2 மாயாவி மறுபதிப்புகள் + ஒரு ஆர்ச்சி புதுக் கதை + 1 ஸ்பைடர் மறுபதிப்பு அந்தரத்தில் தொங்கலில் உள்ளன !
** கார்ட்டூன்களிலுமே பெரிதாய் லயிக்க உங்களின் பெரும்பான்மைக்கு எதுவும் தென்படவில்லை ! லக்கி லூக் & சிக் பில் நீங்கலாய் தலை தப்பியது ப்ளூ கோட் பட்டாளத்துக்கு மட்டுமே ! So கார்ட்டூன் கேட்டுமே பணாலென்று அடைந்து போனது - இந்த லாக்டௌன் தினங்களின் தினசரி அலசல் மேளாவினில் !
** And கிட்டத்தட்ட அதே நேரம் தான் "இரத்தப் படலம்" நூத்தியொன்றாவது மறுக்கா மறுக்கா பதிப்பின் முன்பதிவுக்கான இறுதித் தேதிகளும் நிறைவுக்கு வந்தன ! கதவைச் சாத்தும் நேரமாகி விட்டது என்பது புரிந்த கணத்தில் எங்கிருந்து இத்தனை உத்வேகம் துளிர் விட்டதோ தெரியலை - முகவர்களும் சரி, வாசக நண்பர்களும் சரி, தடுப்பூசி கேட்டு லைனில் காத்திருக்கும் ஜனத்தைப் போல தெறிக்க விடத் துவங்கினர் !
** And அதே வேளையில் தான் முத்து காமிக்ஸ் 50-வது ஆண்டுமலரின் திட்டமிடல் சார்ந்த அலசல்கள் துவங்கியிருந்தன !! "ஒரு மைல்கல் தருணத்தில் கூட பழசுக்கு இடமில்லையா ?" என்று ஒரு சிறு குழாம் கோரிக்கையினை முன்வைக்க - வழக்கமான மண்டையாட்டலில் அதனை நிராகரித்து விட்டேன் ! நிறையவே குரல்கள் உசந்தன இங்கே ; ஆனால் "அகில இந்திய உப்மா வேண்டாமென்பொரின் சங்கத்தின்" வலுவே கெலித்ததால் நானும் "ஷப்பாடி !!" என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன் ! But அந்தத் தோல்வியினில் உப்மா ஆர்வலர்கள் அடைந்த வருத்தங்கள் உள்ளுக்குள் என்னவோ செய்தது ! "ஆங்...அம்பதாவது வருஷ புக்கா ? ரைட்டு...பாத்துக்கலாம் !!" என்ற ரீதியில் கேஷுவலாய் எருமைக்கடாவாட்டம் இருந்தவனை இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை உணரச் செய்ததே இங்குள்ளோரின் முழுமை தான் எனும் போது, அதனின் ஒரு (சிறு) அணியின் வருத்தமுமே எனக்குப் பெரியதொரு சமாச்சாரமாய்த் தோன்றத் துவங்கியது !
கிடைத்த ஒரு ஓய்வான பகலில் யோசிக்க முயற்சித்தேன் - இன்னமும் பழசின் அடையாளங்களாய் எஞ்சி நிற்போர் யாரென்று ! வேதாளன் கதைகள் தமிழில் வெளியிடக்கோரி ரொம்ப காலமாய் ஒரு அணியினர் கோரிக்கை வைத்து வருவது நினைவுக்கு வந்தது ! நானுமே கடந்த 2.5 ஆண்டுகளாய் அதன் பொருட்டு முயற்சித்துக் கொண்டே இருந்து மண்ணையே கவ்வியிருந்தேன் ! இடைப்பட்ட நாட்களில் மலையாளத்திலும், இங்கிலீஷிலும் வேதாளர் களம் கண்டிட, அவர்களே தமிழிலும் வெளியிட இருப்பதாகவும் ஒரு தகவல் காதில் விழுந்திருந்தது ! சரி, அவர்கள் specialize செய்திடும் நாயகரை நாம் நோண்டுவானேன் ? என்று வேதாளன் தொடர்பான எனது விக்ரமாதித்ய முயற்சிகளை ஓரம் கட்டியிருந்தேன் ! ஆனால் MUTHU 50-க்கென பழையவர்களில் மும்மூர்த்திகள் நீங்கலாய் யாரைத் தேர்வு செய்வதென்று யோசித்த போது, வரிசையாய் மனதில் தோன்றியவர்கள் - முத்து காமிக்சின் இதர க்ளாஸிக் King Features நாயகர்களான ரிப் கிர்பி ; காரிகன் ; மாண்ட்ரேக் ; சார்லி etc தான் ! ரைட்டு....பழசின் இருப்பும் MUTHU 50-ன் போது இருந்திட வேண்டுமெனில், இவர்களுள் யாரையேனும் தான் தேற்றிட வேண்டி வருமென்று தீர்மானித்தேன் ! அந்நேரத்துக்குள் நமக்கு சம்பந்தமே இல்லாததொரு சர்ச்சை காரணமாய் King Features ஏஜெண்ட்களுடன் தொடர்பில் இருக்குமாறு ஆகிப் போக, பேச்சு "வேதாளர் in தமிழ்" பற்றியும் எழுந்தது ! "வேண்டுமானால் திரும்பவும் முயற்சித்துப் பாருங்கள் - தமிழில் வேறு யாரும் Phantom கதைகளை போடுவதாக இல்லையென்று" சொன்னார்கள் !
இவை சகலமும் அகஸ்மாத்தாய் ஒன்றன் பின், ஒன்றாய் நிகழ்ந்திட, மறுபடியும் வேதாளர் கதைகளுக்கு வேறொரு திட்டமிடலோடு முயற்சித்துப் பார்க்கலாம் என்ற முனைப்பு தோன்றியது ! அன்றைக்கு இரவு இந்த முனைப்பில் இருந்த போது தான் இன்னொரு விஷயமும் மனதில் ஓடியது ! இல்லாததைத் தேடுவது இயல்பு ; அதிலும் நம்மவர்களிடம் அது இயல்போ இயல்பு என்பது நினைவுக்கு வந்தது ! வேதாளனைக் கொண்டு வந்தால் - "மாண்ட்ரேக் லேதுவா ?" என்றும் ; மாண்ட்ரேக்கையும் இட்டாந்தால் - "எங்க ரிப் கிர்பி கண்ணுக்குத் தெரிலியா ? காரிகன்லாம் மனுஷனா தோணலியா ?" என்றும் கேள்விகள் எழுமென்பது உறைத்தது ! ஏக் தம்மில் நால்வரையும் தூக்கியாந்துட்டால் எப்புடி இருக்கும் ? என்று நான் யோசித்த போதே புலர்ந்தது - இத்தனை நாட்களாய் தோல்வியில் முடிவுற்ற Phantom உரிமைகளின் முயற்சி, நாலு நாயகர்களுக்கான ஒன்றிணைந்த கோரிக்கையாய் இருக்கும் பட்சத்தில் ஜெயம் கண்டிடக் கூடுமென்ற நம்பிக்கை ! Thus was born the SMASHING '70s !
நிறைய யோசித்தேன் ; நிறைய, நிறைய கதைகளை பரிசீலித்தேன் ; நிறைய புக்ஸை அமேசானில் வரவழைத்தேன் ; ஒவ்வொரு தொடரினிலும் உள்ள டாப் படைப்புகள் எந்தெந்த ஆண்டுகளில் உள்ளன என்பதை அறிய மெனெக்கெட்டேன் ; பரீட்சார்த்தமாய் சில பக்கங்களை ஒவ்வொரு தொடரிலிருந்து மொழிபெயர்த்துப் பார்த்துக் கொண்டேன் ! கவனமாய் தேர்வுகளைச் செய்தால், இக்கதைகளில் புராதன நெடி தூக்கலாய் இல்லாது பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை மெது மெதுவாய்ப் பிறந்தது ! அதன் பின்னே, வழக்கமான இதழ்களிலிருந்து இவற்றைத் தனித்து தென்படச் செய்ய என்னவெல்லாம் செய்யலாமென்று பட்டியல் போட்டேன் ; அவற்றை கற்பனையில் உருவகப்படுத்திடவும் முயற்சித்தேன் ! நிச்சயமாய் ஒரு ரசிக்கக்கூடிய ஆக்கமாய் இவற்றைச் செதுக்கிட சாத்தியமாகிடும் என்ற நம்பிக்கை பிறந்த பின்னேயே, மறுபடியும் உரிமைகளுக்கென கோரிக்கையினைத் திட்டமிட்டு முன்வைத்தேன் & yes - ஒற்றை வடத்தால் இழுக்க இயலாத தேரினை நான்கு வடங்கள் ஒன்றிணைந்த போது இழுப்பதில் ஜெயம் கிட்டியது !! இந்த இதழ்களின் தயாரிப்பிற்கென நான் திட்டமிட்டுள்ளதில் முழுசையும் உங்களிடம் பகிர்ந்திருக்கவில்லை ; புக்ஸ் வெளியாகும் போது ஒரு சன்னமான சர்ப்ரைஸாக அதெல்லாம் இருக்கட்டுமே என்று கொஞ்சம் பெவிக்காலோடு கூட்டணி போட்டுக் கொண்டேன் !
ஒரு அக்மார்க் anti-oldie ; பழசு இனி ஜென்மத்துக்கும் வேண்டாமென்று நினைத்திருந்த ஆந்தைவிழியன் ; முன்செல்லும் பயணத்துக்கு இவை சர்வ நிச்சய இடர்களே என்று வைராக்கியமாய்க் கருதியிருந்தவன் - ஒன்றுக்கு நான்காய் "உப்மா டூயட்கள்" இன்று பாடத் தயாராகி வருவதன் அட்சர சுத்தப் பின்னணி இதுவே guys !! ஒவ்வொரு சிறு நிகழ்வுக்கும் இங்கே பங்குண்டு & நாட்களின் ஓட்டம் என்னைக் கையைப் பிடித்து இழுத்து இதனுள் புகுத்தியிருப்பது போலவே உணர்கிறேன் ! And இந்த அறிவிப்பினைச் செய்த தினத்தில் இங்கே பிரவாகமெடுக்கக் கண்ட சந்தோஷங்கள் மெய்யாலுமே திகைக்க வைத்தன ! Was a stunningly humbling experience !!
Life with உப்மா :
பலங்களே பலவீனங்களாகவும், பலவீனங்களே பலங்களாவதும் விதியின் ஜாலியான வரிகள் என்பேன் ! "தனியான தடம் ; முன்பதிவுக்கு மட்டுமே ; வேண்டுமெனில் மட்டுமே வாங்கி கொள்ளலாம் " என்ற அறிவிப்புகளோடு களம் காணவுள்ள limited printrun கதைகளில் - "அகில உலக உப்மாவைக் கண்டு தெறித்தோடுவோர் சங்கத்துக்கு " விசனங்கள் எழ முகாந்திரங்கள் இருக்கலாகாது என்பதே ஒரு லட்சிய உலகின் எதிர்பார்ப்பு ! ஆனால் - "பிடித்தாலும், பிடிக்காது போனாலும், வாங்குவோமே " என்ற உங்களின் அற்புத ஆதர்ஷங்களே இந்த நொடியினில் நமது பாகுபலி பலமாகவும், " புடிக்காததை வாங்கிட்டோம் சரி,ஆனாக்கா விமர்சிக்காது இருக்க மாட்டோம் !" என்ற பிடிவாதங்கள் நமது ஓமக்குச்சி பலவீனங்களாகவும் இந்த சூழலில் மிளிர்வதே ஜாலியான யதார்த்தம் !
இந்த நொடியினில் என்னளவில் உறுதி - இவற்றை சிலாகிக்கப்படும் இதழ்களாய் உருவாக்கிட இயலுமென்று ! And இதோ - தெறிக்க விடும் உங்களின் முன்பதிவுகள் அந்த நம்பிக்கைக்கு உரம் சேர்க்கின்றன ! So இனியொருமுறை நானோ, சீனியர் எடிட்டரோ எங்களது ஆயுட்காலங்களில் காண இயலாவொரு மைல்கல் பொழுதினில் உங்களின் ஆதர்ஷமான நாயகர்களைக் கண்ணில் காட்டிடவுள்ள மகிழ்வே - இந்த அந்தர்பல்டியினிலிருந்து எனது takeaway !! Oh yes - ஐம்பதாவது அகவை காணவுள்ளது - சீனியர் எடிட்டரின் உருவாக்கம் என்ற போதிலும், அதனின் நிர்வகிப்பு முழுக்கவே என் கையில் இருக்கிறதெனும் போது - நான் செய்வதோ, செய்யாது போவதோ, காலத்துக்குமொரு (புது) வடுவாய் தொக்கிட வேண்டாமே என்ற உறுத்தலும் என்னை இயன்ற அத்தனை திக்குகளிலும் கர்ணம் அடிக்கச் செய்கிறது ! So ரயிலடியில் வயசான குருதைகளைக் கட்டி நிற்பதன் பின்னேயுள்ள காரணங்கள் இவையே guys !
Life after உப்மா !!
And என்னளவில் ரொம்பவே தெளிவாக உள்ளேன் folks - அன்னநடைகள் ஒரு குழந்தைத்தனமான ஆசைக்கு சுகப்படலாம் ; ஆயுசுக்கும் நம்மைக் கரைசேர்த்திடாதென்று ! இதோ ஒரு பக்கம் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பான கதைகளை தயார் செய்யும் அதே தருணத்தில், அடுத்த அரை தசாப்தத்துக்காவது நமது பயண இலக்காய் இருக்கவுள்ள புதுயுகக் கதைகளோடும் தடதடத்துக் கொண்டுள்ளேன் ! So "முழியான்கண்ணன் மேல் நோவாமல் பழசைப் போட்டு ஒப்பேத்த வழி தேடிப்புட்டான் ! இனி விளங்குன மெரி தான் !" என்று உதட்டைப் பிதுக்குவோர் 2022-ல் பிதுங்கிய உதடுகளை நேராக்க வழிகள் தேட வேண்டிப் போகலாம் ! Becos - புத்தாண்டினில் ; ரெகுலர் அட்டவணையினில் ; மருந்துக்கும் புராதனமோ, தொய்வோ இராது ; and thats a promise !! எனக்கென பணியாற்ற எஞ்சியிருக்கும் நாட்களில் - ஏதோவொரு ரூபத்தில் சவாலிடக்கூடிய கதைகளோடு மட்டுமே எனது பயணங்களின் பெரும்பகுதி இருந்திடுமே தவிர்த்து, "சொகுசா சாய்ஞ்சுட்டே போலாமே ?" என்ற எண்ணம் ஒரு போதும் தலைதூக்கிடாது !
And 'அகில உலக உப்மா நேசிப்போர் கழகத்துக்கும்' எனது சேதி இதுவே : இனி பரணிலிருந்து தூசி தட்டிட யாரும் லேதுங்கோ ; so "சார்லியை கூட்டியாரலியா ? ஜார்ஜைக் கூட்டியாரலியா ?" என்ற கேள்விகள் வேண்டாமே ப்ளீஸ் - thats simply not going to happen ! அடுத்த 2 ஆண்டுகளுக்கு மட்டும் இந்த Smashing '70s திட்டமிடல் தொடர்ந்திடும் ! அதன் பின்பாய் - வேதாளருக்கு துணையாய் - மாண்ட்ரேக்க்கோ ; கிர்பியோ ; காரிகனோ - இவர்களுள் யார் சாதித்துக் காட்டுகின்றனரோ - அவர் மட்டுமே வந்திடுவார் ! ஒருக்கால் நீங்கள் மேற்படி அனைவரையுமே ஹிட்டடிக்கச் செய்யும் பட்சத்தில் & உங்களுக்கே இவர்கள் போர் அடிக்காது போகும் பட்சத்தில் - அதற்கேற்ப யோசிக்கலாம் !
So ஒரு மைல்கல் பொழுதினை பாகுபாடின்றி மகிழ்வானதாக்கிடும் எனது முனைப்பின் முதுகில் ஒன்றன் பின் ஒன்றாய் தாத்தா நாயகர்களையாய் ஏற்றிவிட்டு, என்னையும், நண்பர்களின் கணிசமானோரையும் பெண்டு நிமிர்த்திட வேண்டாமே - ப்ளீஸ் ! And இன்னும் கொஞ்சம் நான் உழைத்துக் கொள்ள அனுமதியுங்கள் folks - அப்புறம் தான் லயனின் 50-வது ஆண்டுக்கென ஜூனியரிடம் இதே ரீதியிலான பழசு சார்ந்த கோரிக்கையினை வைத்திட சரக்கிருக்கும் !! இன்றைய பொழுதுகளில் நான் விடாப்பிடியாய் பழசோடே பயணிக்கும்படி ஆகிப் போனால் - 2034-ல் இரத்தப் படலத்தை குப்புறடிக்கப் பிரிண்ட் செய்து - "உலக வரலாற்றில் முதல் தடவையாக" என்று என் புள்ளையாண்டான் போடும் choice மட்டுமே மிஞ்சி இருக்கக்கூடும் !
A word again to "உப்மா கண்டு ஊரைவிட்டு ஓடுவோர் சங்கம்" !! கல்யாணவீட்டு சம்பந்தி விருந்துகளில் ஒரு பக்கம் அசைவம் தெறிப்பதும், இன்னொரு பக்கம் சைவப் பந்தி ஓடுவதையும் பார்த்திருப்போம் தானே ? சைவப் பந்தி ஓடுவதால் அசைவம் விரும்பும் நமக்கு நிச்சயமாய் பாதிப்புகள் இல்லை guys ! So 'அங்கே பாயசம் மணக்குது ; இது தேவையா ? இந்த மெனெக்கெடலாம் தேவையா ?" என்று முகம் சுழித்திட அவசியங்களில்லை ; simply becos உங்கள் விருந்தில் எதையும் குறைத்து அங்கே சுவையாய்ப் பரிமாறிட நான் முனைந்திடப்போவதில்லை ! இங்கும் சரி, அங்கும் சரி, பந்தியிலிருந்து எழும் போது அவரவருக்கு சுகமானதொரு ஏப்பமும், முகத்திலொரு திருப்தியின் புன்னகையும் நிலைத்திட வேண்டுமென்ற அவாவின் செயல்பாடே இந்த இரட்டைப் பந்தி !
Before I wind off - போன வாரம் வந்ததொரு மின்னஞ்சல் பற்றி ! நண்பர் இங்கே மௌன வாசகர் ; நமது புத்தக விழாவின் சந்திப்புகள் சகலத்திலும் தவறாது பங்கேற்பவர் ; அதிர்ந்து பேசத்தெரியா புன்னகையாளர் ! பிடித்ததை படித்து விட்டு, பிடிக்காததைத் தாண்டிப் போகும் ரகம் ; எந்த சர்ச்சைகளுக்குள்ளும் தலை நுழைக்காதவர் !
"சின்ன வயசில் ஏதாச்சும் வேண்டுமெனில் அழுது புரண்டு, கதறி கூப்பாடு போட்டு அதை வாங்கிக்குவேனாம் ! அழுகை அடங்கும் போது - "இப்போ உனக்கு ஜென்ம சாபல்யம் கிடைச்சிடுச்சாக்கும் ?" என்று அம்மா கேட்டுவிட்டுப் போவார் ! இதோ - இன்றைக்கு இத்தனை காலங்கள் கழித்து, எனக்கு அம்மாவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன !! உங்களின் Smashing 70s அறிவிப்பைப் பார்த்த கணத்தில் என் ஜென்மம் சாபல்யமடைந்ததாய் உணர்கிறேன் ; நன்றிகள் சார் !!" என்று எழுதியிருந்தார் !
இது அன்பின் மிகையா ? ஒரு பால்ய நேசம் திரும்பக்கிட்டப் போகும் குதூகலத்தின் ஆர்ப்பரிப்பா ? - சொல்லத்தெரியவில்லை folks !! ஆனால் இந்தப் பேரிடர் காலங்களில் ஒரேயொரு நெஞ்சுக்கு இந்த நிறைவைத் தந்திட எனது மனமாற்றம் உதவியிருந்தாலுமே கூட - அதற்கென ஒரு நூறு "உப்மா வேண்டாமே" நண்பர்களிடம் புரிதல் கோரி கையில்,காலில் விழுந்து விண்ணப்பித்தால் தப்பில்லை என்று படுகிறது ! சந்தோஷங்கள் விலைமதிப்பற்றவைகளாகிப் போய்விட்டுள்ள இந்நாட்களில் - சந்தோஷங்களை விதைக்க எனக்கு / நமக்குக் கிட்டியுள்ள வாய்ப்பாக இதனைப் பார்த்திடுவோமே all ?
Bye all...see you around ! Have a cool week !
its me!!
ReplyDeleteவாழ்த்துகிறேன் விஜய்..
Deleteநன்றிகள் ஜி! 'for the first time in my life'னு சொல்லாம விட்டுட்டேன்.. ஹிஹி!
DeleteErode Vijay, Editor wifi hack panni new post varuthaannu paarpparu pola :-)
DeleteGood!
ReplyDeleteS70 உப்புமா என்று சொல்ல தகுந்த காரணம் கூறுக? :D
ReplyDeleteவாங்குவோர் எண்ணிக்கை உப்புமா என கேட்டுள்ளார்...உப்பும்
Deleteஉப்பும் புத்தகத்தை வாங்கும் நம்ம மப்பும் துணை
Deleteவந்துட்டேன்…
ReplyDelete🙏🙏
ReplyDeleteபதிவுக்கு நன்றி ஆசிரியரே
ReplyDeleteஅட்டகாசமான அற்புதமான உங்களின் தன்னிலை விளக்கப் பதிவு. எனக்கு ரொம்பவே ஆத்மார்த்தமாக பிடித்து இருந்தது சார். உங்களின் டாப் பதிவுகளில் ஒன்று இது. நான் உப்மா வேண்டாம் என்ற அணியில் இருந்தாலும் இனிமேல் இதை பற்றி எங்கேயும் எழுத விமர்சிக்கப் போவது இல்லை.
ReplyDeleteஇது மகத்தான வெற்றி அடையவேண்டும். இது போல நிறைய புதிய முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டு அட்டவணை பற்றி நீங்கள் சொல்லி இருப்பதே போதுமானது. மீதி அட்டவணை வரும் போது தெரிந்து கொள்ளலாம்.
நன்றி சார் மிக்க நன்றி.
வாவ்!! சூப்பரா சொன்னீங்க KS!!
Deleteநன்றி EV
Deleteநன்றி குமார்
Deleteஅனைவருக்கும் வணக்கம் சொல்வது சின்னமனூர் சரவணர்ங்க....!!
ReplyDeleteReading NEERINDRAMAYAADHU ULAGU - comedy riot ! Will come back with full vimarsanam ! Best comedy of the year - close on heels with Lucky Luke Annual ...
ReplyDeleteWe're working on the next Chick Bill sir !!
Deleteநீரின்றி அமையாது உலகு
Deleteஇந்த வருடத்தின் ஆகச் சிறந்த காமெடி மேளா! ஜூபிட்டரை பல பெயர்கள் சொல்லி அழைப்பதிலிருந்து, டாக் புல் அடிக்கடி வாங்கும் மண்டை முட்டைகள் அகத்தும் - கிளைமாக்ஸ் ஆகட்டும் - அதிரடி சிரிப்பு விரவியிருந்தது. மேற்சொன்னது போல tight competition with லக்கி annual !
கண்டிப்பாக shelfல் இருக்க வேண்டிய காமிக் !
மதிப்பெண் : 9/10
சிங்கின் அட்டகாசமான கதை...
DeleteHi..
ReplyDeleteஅந்த மறுபதிப்பு ஸ்பைடர் அதும்போட்ட நல்லா இருக்கும்
ReplyDeleteபுது ஆர்ச்சி, மாயாவி???
Deleteஇதுவுந்தேன்
Deleteஅம்மாடியோவ்!!! என்னவொரு அட்டகாசமான, ஆத்மார்த்தமான பதிவு!! Smashing-70யின் முழுப்பின்னணியும் இப்போதுதான் முழுதாகப் புரிகிறது!
ReplyDeleteவாசகர்களின் மீதான உங்கள் அன்புக்கும், எக்கச்சக்கமான மெனக்கெடல்களுக்கும் நன்றிகள் பல எடிட்டர் சார்!!
உண்மையில், உங்களுக்கெல்லாம் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது!!
+1
Delete+1
DeleteAgreed Vijay!
// உண்மையில், உங்களுக்கெல்லாம் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது!! // போதவே போதாது
Deleteஅட நன்றியாவது, ஒண்ணாவது ! குஷிப்படுத்திப் பார்ப்பதும் ஒரு குஷியே ! So உங்களுக்கு கிட்டிடும் மகிழ்வில் எனக்குமே ஒரு மகிழ்ச்சியுண்டு !
Deleteஅப்ப ஸ்பைடருண்டு...ஸ்பின்னுண்டு
Deleteஅருமை சார் ஹிட்டடித்த கதைகளை தெறிக்க விடுங்க...2023 வருடமும் தெறிக்க விடுவோம்
ReplyDelete17 வது. நீண்ட பதிவு.
ReplyDeleteReading books is a boon to human beings. There is nothing like Upma.
ReplyDeleteTrue sir..
Delete////நிறைய யோசித்தேன் ; நிறைய, நிறைய கதைகளை பரிசீலித்தேன் ; நிறைய புக்ஸை அமேசானில் வரவழைத்தேன் ; ஒவ்வொரு தொடரினிலும் உள்ள டாப் படைப்புகள் எந்தெந்த ஆண்டுகளில் உள்ளன என்பதை அறிய மெனெக்கெட்டேன் ; பரீட்சார்த்தமாய் சில பக்கங்களை ஒவ்வொரு தொடரிலிருந்து மொழிபெயர்த்துப் பார்த்துக் கொண்டேன் ! கவனமாய் தேர்வுகளைச் செய்தால், இக்கதைகளில் புராதன நெடி தூக்கலாய் இல்லாது பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை மெது மெதுவாய்ப் பிறந்தது ! அதன் பின்னே, வழக்கமான இதழ்களிலிருந்து இவற்றைத் தனித்து தென்படச் செய்ய என்னவெல்லாம் செய்யலாமென்று பட்டியல் போட்டேன் ; அவற்றை கற்பனையில் உருவகப்படுத்திடவும் முயற்சித்தேன் ! நிச்சயமாய் ஒரு ரசிக்கக்கூடிய ஆக்கமாய் இவற்றைச் செத்துக்கிட சாத்தியமாகிடும் என்ற நம்பிக்கை பிறந்த பின்னேயே, மறுபடியும் உரிமைகளுக்கென கோரிக்கையினைத் திட்டமிட்டு முன்வைத்தேன்////
ReplyDeleteHats off, editor sir!!🎩🎩👏👏👏👏👏👏👏
எப்போதும் எந்நேரமும் காமிக்ஸ் பற்றியே யோசிக்கும் ஒருவரால் மட்டுமே இது சாத்தியம். உங்களுடைய மிகப் பெரிய பலமே, நீங்கள் ஒரு காமிக்ஸ் ரசிகர் என்பதே, எனவே உங்களால் எளிதாக மற்ற ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை கணிக்க முடியும்.
Delete///எப்போதும் எந்நேரமும் காமிக்ஸ் பற்றியே யோசிக்கும் ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்///
Deleteஉண்மை உண்மை!! என்னை பல்வேறு சமயங்களில், பலமுறை ஆச்சரியப்படுத்திய சமாச்சாரம் இது! எப்படி ஒருவரால் இப்படி சதாகாலமும் காமிக்ஸ் பற்றியே சிந்தனையும், செயலையும் செய்யமுடிகிறதென்று!!
நாம் இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இப்படியொரு எடிட்டரைக் காண்பதரிதே!
Deleteஇதர பணிகளின் பொருட்டு எங்கேயும் பயணம் போகும் வாய்ப்புகள் இல்லா இந்தச் சூழலில், என்னைச் சுற்றிலும் காமிக்ஸ் இருப்பதே இந்தப் பேரிடர் நாட்களிலும் மறை கழன்று போகாதிருப்பதன் காரணமென்பேன் சார் ! (Of course - அது சர்ச்சைக்குரிய விஷயமே !!)
// எப்போதும் எந்நேரமும் காமிக்ஸ் பற்றியே யோசிக்கும் ஒருவரால் மட்டுமே இது சாத்தியம். உங்களுடைய மிகப் பெரிய பலமே, நீங்கள் ஒரு காமிக்ஸ் ரசிகர் என்பதே, //
Deleteஎனது எண்ணமும் இதுவே குமார்.
வழக்கமா இங்கே ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் தான் ஓடிவந்து இதுமாதிரி தன்னிலை விளக்கமெல்லாம் கொடுத்து அசத்துவீங்க.. ஆனா இன்னிக்கு அதுமாதிரி ஏதும் பெரிய பிரச்சினைகள் எதுவுமில்லாமயே வாண்ட்டடா வந்து விளக்கியிருப்பதே ஒரு ஆச்சரியம் தான்! ஒருவேளை செனா அனாவின் அந்த குருடன் கதை தான் இந்தப் பதிவுக்குத் தூண்டுகோளாக இருந்ததோ என்னமோ?!!
ReplyDeleteஎது எப்படியாகினும் செனா அனாவுக்கு நன்றிகள் பல!!
அப்பப்போ (அந்தத் தூண்டிலை ஓரமா வச்சுட்டு) இங்ஙனக்குள்ள வந்து ஒரு கதை சொல்லிட்டுப் போங்க செனா அனா!
Fact fact
DeleteNopes ...செனா அனா அவர்களின் கதையை ரசித்தேன் தான் ; ஆனால் இந்தப் பதிவுக்கு எனது gut feel தான் பிரதான காரணி என்பேன் ! பழமைக்குக் கொடி பிடிப்பதில் பெரிதாய் முனைப்பிலா நிறைய நண்பர்கள் - தொண்டையில் நெருஞ்சி சிக்கியிருப்பது போலான உணர்வுடன் சுற்றி வருவதாய் எனக்குப் பட்டது ! I might be wrong on that too - ஆனால் மனசில் அந்த எண்ணம் திரும்ப திரும்ப அலையடிக்க, ஞாயிறுக்கு பதிவாக்கிட நினைத்தேன் ! ஆனால் இன்றைக்கு மதியம் ஒரு பணி முடிந்த வேளையினில், அடுத்ததற்குள் குதிக்கும் முன்பாய் பதிவைப் போடலாமே என்று தோன்றியது ! மினி..உப பதிவு என்று ஆரம்பித்தது கடைசியில் LIC ஆகிப் போனது !
Deleteஇதுவே "உப்மாவின் கதை" பற்றிய கதையின் கதை !!
// பழமைக்குக் கொடி பிடிப்பதில் பெரிதாய் முனைப்பிலா நிறைய நண்பர்கள் - தொண்டையில் நெருஞ்சி சிக்கியிருப்பது போலான உணர்வுடன் சுற்றி வருவதாய் எனக்குப் பட்டது ! //
Deleteநானும் இதனை உணர்ந்தேன் சார். பல நண்பர்கள் கடந்த சில மாதங்களாக சரியாக பின்னூட்டம் இடவில்லை என்பதை கவனித்தேன்.
உங்களின் இந்த பதிவு அவர்கள் மனதை சமன் செய்யும் என நம்புகிறேன்.
சார் ரிப் காரிகன் மேல் பெரிதும் நம்பிக்கையில்லை...ஆனா நண்பர்கள் கூறும் கதைக மேல் எதிர்பார்ப்பிருந்தது ....அதுவும் இம்முறை கலக்கலா தருவீங்கன்னு உங்க மேல நம்பிக்கை இருந்தது...உறுதி படுத்திட்டீங்க
Deleteமேலும் ஸ்பைடரோ மாயாவியோ லாரன்ஸோ வேற லெவல் சூப்பர் ஹீரோக்கள்...அவங்களுக்கோ கதைதான அந்தஸ்த்தை தரும்
Delete//பழமைக்குக் கொடி பிடிப்பதில் பெரிதாய் முனைப்பிலா நிறைய நண்பர்கள் - தொண்டையில் நெருஞ்சி சிக்கியிருப்பது போலான உணர்வுடன் சுற்றி வருவதாய் எனக்குப் பட்டது ! //
Deleteஉண்மையே ஐயா! கடந்த சில நாட்களாக சில வாட்ஸப் தளங்களில் இதை உணர்ந்தது உண்மை!
இந்த தருணத்தில், இந்த தன்னிலை விளக்கம் மிகவும் அவசியமான ஒன்றே!
நட்பு மலரட்டும்!
//நிச்சயமாய் ஒரு ரசிக்கக்கூடிய ஆக்கமாய் இவற்றைச் செத்துக்கிட சாத்தியமாகிடும் //
ReplyDeleteசெதுக்கிட..
சார் நோட் பண்ணுங்க சார்.. நோட் பண்ணுங்க சார்.. புருஃப் ரீடிங் பணிக்கு ஒருத்தர் கிடைச்சிருக்கார் :)
Deleteதிருத்தியாச்சூ சார் !!
Deleteஆசிரியருக்கு நன்றி..
Deleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஉங்களது இந்த மனம் திறந்த பதிவுக்கு தலைவணங்குகிறேன் சார்..நிச்சயமாக உங்களை தொந்தரவு செய்யமாட்டோம் சார்.. smashing 70 நிச்சயம் வெற்றி பெறும்..தொடரும் வருடங்களிலும் அது தொடர ஆண்டவனிடம் வேண்டுகிறேன் சார்..
ReplyDeleteஎங்களை திருப்தி படுத்த வேண்டும் என்று உங்களது அர்பணிப்புகளை உணராதவர்கள் இல்லை நாங்கள்...நிச்சயம் என்றும் உங்களுடன் நாங்கள்..என் மகள்களுடன் பயணிப்போம் சார்..
அருமை பழனிவேல்!
Deleteபின்ன இல்லையா நண்பரே...எவ்வளவு பெரிய ரிஸ்கை தன் தலைமேல் போட்டு ஆசிரியர் சிரமப்பட்டிருப்பார்..நமக்கு நல்லதா கொடுக்கனும்..அதையும் சிறப்பா கொடுக்கனும் என அவர் மெனக்கெடுவதற்க்கு நாம் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டாமா நண்பரே...
Deleteயெஸ் யெஸ்!! நம் முழு ஆதரவு எப்போதும் உண்டு!!
Delete// எங்களை திருப்தி படுத்த வேண்டும் என்று உங்களது அர்பணிப்புகளை உணராதவர்கள் இல்லை நாங்கள்...நிச்சயம் என்றும் உங்களுடன் //
Delete+1
நானும்
Delete2034-ல் இரத்தப் படலத்தை குப்புறடிக்கப் பிரிண்ட் செய்து - "உலக வரலாற்றில் முதல் தடவையாக" என்று என் புள்ளையாண்டான் போடும் choice மட்டுமே மிஞ்சி இருக்கக்கூடும் ! //
ReplyDeleteஅவ்வளவு நாள் தேவைப்படாது சார்...உலகவரலாற்றில் முதல்முறையாக நீங்களே மறுமறுமறுமறுபதிப்பு செய்யாமல் விடமாட்டோம் சார்...
அவ்வளவு நாள் தேவைப்படாது ; இப்போவே குப்பறடிக்க அச்சிட்றலாம்ன்னு சொல்றீங்களா ?
Delete2025-2027 ...சார்..
Deleteஓ இன்னும் குப்பறடிச்ச பிரிண்ட் வரலியா? என் கிட்ட இருப்பது அதுதான்னு நினச்சு நான் தான் தலைகீழா நின்னு படிச்சுட்டு இருக்கேனா?
Deleteகிரி டயானான்னா அப்படி படிச்சா தான் அழகு...ஆண்ட்ரே அப்படிதான...3டி ல கதை வந்திருக்கா
Deleteஉங்களின் இந்த ஆத்மார்த்தமான பதிவுக்கு நன்றிகள் சார். உண்மையை கூற வேண்டும் என்றால் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பித்து இன்றுவரை கொரோனா முடிவடையாத நிலையில் பலருடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்ட நிலையிலும் எங்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது தங்களுடைய பதிவுகளே என்றால் அது மிகையாகாது.இப்போதும் கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன் எப்படி பதினாறு மாதங்கள் இவ்வளவு வேகமாக ஓடிப் போனது என்று. ஏனென்றால் இதற்கு காரணம் நீங்களும் உங்களுடைய யதார்த்தமான பதிவுகளும்,நம்முடைய காமிக்ஸ்கள் மட்டும் தான்.என்னைப் போன்றே பல வாச நண்பர்களின் கருத்தும் இதுவாகவே இருக்கும் என்று நம்புகின்றேன்.நன்றி.
ReplyDeleteசூப்பரா சொன்னீங்க தனபாலன் சார்! உண்மை உண்மை!!
Deleteஉண்மைதான் தனபாலன் சார். மறுக்க முடியாத உண்மை
Deleteபதிவின் கடைசிப் பத்தியில் சொன்னதையே repeat செய்கிறேன் சார் :
Deleteஉங்கள் அன்பின் மிகையோ - யதார்த்தமோ ; எதுவாயிருப்பினும், ஒரு துளி சந்தோஷத்தினையாவது விதைக்க எனக்கு முடிந்திருப்பின், அது ஓராண்டின் ஹிட் இதழ்களைத் தந்த திருப்தியை விடவும் கூடுதலானது ! நன்றிகள் சார் !
உண்மை இந்த நெருக்கடியான காலத்தை சுமூகமாக நகர்த்த நமது புத்தகங்கள் உடன் நின்றது மறுக்க முடியாத உண்மையே...
Deleteமிகவும் சரியாக சொன்னீர்கள் தனபாலன். உண்மை.
Deleteஅருமையான மகிழ்ச்சியான பதிவு..
ReplyDelete2025-2027 லிலோ தொடங்க இருக்கும் இரத்தப்படல 35 பாக முழு வண்ணத்தொகுப்பிற்க்கு முன்பதிவில் எனது பெயரை முதலாவதாக சேர்த்துக்கங்க சார்....போட்டு வைப்போம்..
ReplyDelete3டில கேளு மக்கா....இரண்டாவது புலன்விசாரணை வரனும்ல
Deleteமனம் திறந்த பதிவு--- ஒவ்வொரு சம்பவமும் மீண்டும் 11 வருடங்களை கண்முன்னே ஓடச்செய்கிறது.
ReplyDeleteசிறப்பு எடிட்டர் சார்.
S'70 க்கு வேதாளர் தவிர்த்து என்னளவில் பெருத்த ஈடுபாடு இல்லாவிட்டாலும் இந்த மைல்கல் தருணத்தில் நண்பர்கள் அனைவரும் மகிழ்ந்திருக்கும் வாய்ப்பை அளித்ததற்கு நன்றிகள் சார்!
ReplyDeleteமேலும் இதன் தரம் மற்றும் வடிவமைப்பு குறித்த திட்டமிடல் மிகுந்த ஆவலை விதைத்துள்ளது. இப்படி முன்பதிவுக்கு மட்டும் என்ற தனித்தடம் உருவானதில் மகிழ்ச்சி! நிச்சயம் பெருவெற்றி பெறும். முத்துவின் மைல்கல் ஆண்டை அனைத்து நண்பர்களும் மனமுவந்து கொண்டாடுவோம்! ஆண்டு முழுவதும்!!!
+1
Delete//அடுத்த அரை தசாப்தத்துக்காவது நமது பயண இலக்காய் இருக்கவுள்ள புதுயுகக் கதைகளோடும் தடதடத்துக் கொண்டுள்ளேன்//
ReplyDeleteசூப்பர்! அருமையான செய்தி...
அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteநல்ல விவரிப்பு.எடிட்டரின் நல்மனது வியப்பளிக்கவில்லை.அவரது இயல்பே அதுதான்.நன்றி எடிட்டர் சார்.ஆனால் உப்மா எனும் பெயரும் ,விமர்சனங்களும் கவலை அளிக்கின்றன.உப்மா எனும் பெயரையே நானும் பயன்படுத்துகிறேன் புரிதலுக்காக.போனால் போகிறது பிழைத்துப்போங்கள் ,நாங்கள் புதுமை விரும்பிகள் எனினும் பங்கேற்க்கிறோம் உப்மா பந்தியில் எனும் தொனியில் சில நண்பர்கள் பதிவிடுவதை பார்க்கமுடிகிறது.இப்போ அனுமதிக்கிறோம் தொடர்ந்து கேட்காதீர்கள் எனும் குரல் வேறு கேட்கிறது.யாரும் யார் ரசனைகளிலும் குறுக்கிடமுடியாது.முன்னோக்கி செல்லவேண்டும்தான்.மறுக்கவில்லை.உலகம் முழுக்க சுற்றி வந்து விதவிதமான உணவுகளை சுவைத்தாலும் ,அம்மா கையால் சாப்பிடும் ஒரு உப்மா நமக்கு தேவாமிர்தமாகத்தான் தெரியும்.எடிட்டர் வழங்கும் சூடான சுவையான காண்டினெண்டல் சமையலும் தேவை.பத்திய சாப்பாடும் தேவை.க்ரே மார்க்கெட் கொஞ்சமாவது குறையட்டும்
// க்ரே மார்க்கெட் கொஞ்சமாவது குறையட்டும் //
Delete+1
எனக்கு உம்மால் சட்னி மேத்தா பிடிக்கும்....கதைல ஸ்பைடரயோ சுஸ்கி...விஸ்கியோ சேத்தா பிடிக்கும்
Deleteமிக இனிமையானதொரு பதிவு சார்!
ReplyDeleteஆக
ஸ்மாஷிங் 70 பாதையில் இடறிய சர்ச்சை எனும் சேற்றில் முளைத்த செந்தாமரை!!!
//Becos - புத்தாண்டினில் ; ரெகுலர் அட்டவணையினில் ; மருந்துக்கும் புராதனமோ, தொய்வோ இராது ; and thats a promise !!//
ReplyDeleteஇந்த ஒற்றை அறிவிப்பே போதும் சார். எங்கே சிறுக சிறுக பின்னோக்கி போய் பழமை ரெகுலர் ஆகி, புதுமுயற்சிகள் மட்டுபட்டு விடுமோ என்கிற பயம் தான் சார்.
****** வெனிஸில் ஒரு வேங்கை ****
ReplyDeleteகடத்தப்பட்ட தன் பழைய சகாவின் குழந்தையை மாடஸ்டியும் கார்வினும் போராடி மீட்கும் நெகிழ்வான கதை! கொடியவன் மாலிக்கின் பிடியில் கடத்தப்பட்ட குழந்தை படும் பாடு - பரிதாபம் தான்! ஆனால், கதையின் பின்பகுதியில் அடிக்கடி நெஞ்சுவலியால் துடிக்கும் கடத்தல்காரன் மாலிக்கே ஒருகட்டத்தில் அதிகம் பரிதாபத்துக்குரியவனாகிவிடுவது பரிதாபத்திலும் பரிதாபம்! இது ஒருவகையில் கதையின் போக்குக்கு நேரிட்ட பரிதாபமும் என்றாகிவிடுகிறது!
எது எப்படியோ, எந்தத் தொழிலதிபர்களோடும் பொழுதைக் கழிக்காமல் நேரடியாக சாகஸத்துக்குள் இறங்கிய இளவரசியைக் காண நிம்மதியாக இருக்கிறது!
அட அதையெல்லாம் கூட விடுங்க சார்.. அந்த அட்டைப்பட அழகிருக்கே.. அதுக்கே ஆயிரம் ரூவாய் தரலாம்!
என்னுடைய ரேட்டிங் 9/10
//தொழிலதிபர்களோடும் பொழுதைக் கழிக்காமல் நேரடியாக சாகஸத்துக்குள் இறங்கிய இளவரசியைக் காண நிம்மதியாக இருக்கிறது!//
DeleteSame here bro...
அப்புறம் இந்தக் கதைக்கு 'வெனிஸில் ஒரு வேங்கை' என்பதை விட 'இளவரசியைத் தேடிய இளவரசி' என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாய் இருந்திருக்குமோ?!!
Deleteஈரோட்டுக்கு ஒரு பன் பார்சேல்!!
// தொழிலதிபர்களோடும் பொழுதைக் கழிக்காமல் நேரடியாக சாகஸத்துக்குள் இறங்கிய இளவரசியைக் காண நிம்மதியாக இருக்கிறது! //
Deleteஅதுவும் டாக்டர்களுடன் இளவரசி மீன் பிடிக்க செல்லவில்லை என்பது உங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்து இருக்குமே விஜய் :-)
////அதுவும் டாக்டர்களுடன் இளவரசி மீன் பிடிக்க செல்லவில்லை என்பது உங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்து இருக்குமே விஜய்////
Deleteஅப்படியெல்லாம் இல்லீங்க PfT! உண்மையில் டாக்டர்களுடன் மீன் பிடிக்கச் செல்வது இளவரசிக்கு ரொம்பவே சேஃப்!! ஆற்றில் இருக்கும் அத்தனை மீன்களையும் பிடித்துத் தள்ளும்வரை மாடஸ்டி பக்கம் திரும்பவே மாட்டாய்ங்க!
இந்த விசயத்தில் தொழிலதிபர்களைத்தான் நம்ப முடியாது! அவங்களுக்கு மீன், தலைப்பிரட்டை இவைகளையெல்லாம் பிடிப்பதில் ஆர்வமிருப்பதில்லை! வெரி டேஞ்சரஸ் பில்லோஸ்!! :D
:-)
Deleteயாரு அந்த தொழில் அதிபர்கள் என்று சொன்னால் "கவனிக்க" வசதியாக இருக்கும் விஜய் :-)
64th
ReplyDeleteவணக்கம் சார்...
ReplyDeleteலயன், முத்து காமிக்ஸ் வெளியீடுகளில் மொக்கை கதைகள் என்பது என் அறிவுக்கெட்டின வரை வெகு வெகு சொற்பமே. அந்த கதையும் இங்கே சொல்ல தயங்க காரணம் அதையும் இங்கே ஏகமாய் பிடித்து போன மக்கள் இருப்பதை காணும் போது, தவிர்க்கவே தோன்றுகிறது... என்னைப்பொறுத்தவரை புராதன கதை என்பதே தவறான சொல்லாடல், ஆனால் அந்த புராதன காலத்திலேயே மொக்கையான் வெளியிடப்பட்ட (சொற்ப) கதைகளை தவிர்க்கலாம்...
லயன் முத்துவின் எல்லா நாயகர்களும் வரவேற்கப்பட வேண்டியவர்களே...
இப்போதெல்லாம் நம் இதழ்கள் கடைகளில் விற்பனை இல்லை என்னும் போது அதை இன்னமும் அழுத்தமாக சொல்லி கொள்கிறேன்.
///லயன், முத்து காமிக்ஸ் வெளியீடுகளில் மொக்கை கதைகள் என்பது என் அறிவுக்கெட்டின வரை வெகு வெகு சொற்பமே. அந்த கதையும் இங்கே சொல்ல தயங்க காரணம் அதையும் இங்கே ஏகமாய் பிடித்து போன மக்கள் இருப்பதை காணும் போது, தவிர்க்கவே தோன்றுகிறது.///
Deleteஉண்மை!!
அதுவும் கூட தோதான நேரத்தில் அசத்தும் நண்பர்களே
Deleteமினி லயனில் வெளியிடப்பட்ட சார்லியின், ஒரு கள்ளப்பருந்தின் கதை, இன்றும் மறக்க இயலா அற்புதமான படைப்பு.... அதில் ஒரு வார்த்தையை உபயோகித்திருப்பார்கள்... "வளைகுடா வாய்" வேறு எந்த இலக்கியத்திலும் இதை போன்ற வார்த்தைகளை யோசித்து பயன்படுத்தி இருப்பார்களா என்றால் சந்தேகம் தான்... அங்கே நிற்கிறது நம் காமிக்ஸ் தரம்.
ReplyDelete///"வளைகுடா வாய்" வேறு எந்த இலக்கியத்திலும் இதை போன்ற வார்த்தைகளை யோசித்து பயன்படுத்தி இருப்பார்களா என்றால் சந்தேகம் தான்... அங்கே நிற்கிறது நம் காமிக்ஸ் தரம்.///
Deleteஹா ஹா! ரொம்பவே ரசித்துப் படித்திருக்கிறீர்கள் நண்பரே! என்னவொரு ஞாபக சக்தி!!!
உங்கள் ஞாபகசக்தி வியக்க வைக்கிறது உதய்
Deleteநம் காமிக்ஸ் உபயம் தவிர வேறில்லை நண்பர்களே, நன்றிகள்.
Deleteசாரி நண்பர்களே. தலைப்பை மாற்றி சொல்லிவிட்டேன், அது மினிலயனின்... ஒரு காவலனின் கதை!
Deleteஅருமை உதய்.
Deleteஅருமை
Deleteமினிலயனின் இன்னொரு காவியம், ரிப்கிர்பியின், "காசில்லா கோடீஸ்வரன்' வாவ்வ்வ்.... சமையல்காரர் டெஸ்மாண்ட் தான் இதில் ஹீரோ...நெஞ்சைப் பிழியும் கதை... இதெல்லாம் சினிமாவை மிஞ்சிய கதை... இதைப்போய் புராதனம் ஒதுக்கிடலாமா?...
ReplyDelete///"காசில்லா கோடீஸ்வரன்' வாவ்வ்வ்.... சமையல்காரர் டெஸ்மாண்ட் தான் இதில் ஹீரோ...நெஞ்சைப் பிழியும் கதை... ///
Deleteசின்ன வயதில் படித்திருக்கிறேன்.. ஆனால் கதை இப்பொது ஞாபகத்தில் இல்லாதது வருத்தமளிக்கிறது!
நண்பர்களிடம் பிரதி இருந்தால் படித்து பாருங்களேன் சகோ... நான் இந்த கதையை ஆபிசில் நாடகமாக்கவும் முயன்றேன், ஆனால் approval கிடைக்கவில்லை...
Deleteஇந்த கதை எனது ஃபேவரைட் கதைகளில் ஒன்று. நண்பர் ஒருவர் இரவல் கொடுக்க படித்தது. அதற்கு பிறகு ஒரு sales குரூப் பில் புத்தகத்தை வாங்கியும் விட்டேன்.
Deleteஇதற்கென பிரின்ஸின் அட்டை படத்தில் டெஸ்மாண்ட் வைத்து தயாரிக்கப்பட்ட அட்டைப்படம் டாப்... அதுவும் கம்ப்யூட்டர் உதவியில்லா நாட்களிலேயே... விஜயன் சார் சிறந்த creative director
Deleteஅவ்வளவு ஏன், கடையாக வந்த ஜார்ஜ் கதையான "கோபுரத்தில் கொள்ளை" கதை கூட செம சூப்பராக இருக்கும். இவரது எல்லா கதைகளும் சூப்பர் டூப்பர் ஹிட் கதைகளே (பணியில் புதைந்த ரகசியம், நெப்போலியன் பொக்கிஷம், ஒற்றன் வெள்ளை நரி, etc.) One of my favorite heros !!!
Deleteபுராதன நெடி என்பது இவரது கதையில் வரையப்பெற்றிருக்கும் படங்களில் இருக்குமே தவிர, கதைகளில் துளிகூட இருக்காது. விறுவிறு என செல்லும் திரைக்கதைதான் இவரது கதைகளின் சிறப்பே.
ஆமாம் சகோ, உண்மை தான்... அப்படியே "தெரியாமல் செய்த கொலை" விட்டுவிட்டோமே... இருக்கும் ஜார்ஜ் கதைகளை மறுவாசிப்பு செய்து கொள்ள வேண்டியது தான் போல.
Deleteஎமனின் எண் எட்டு, மாயாஜால கதைத்தான், ஆனால் கதை பட்டையை கிளப்பும்... இதில் தான் மாண்ட்ரெக்கின் பிரம்மாண்ட வீடு பற்றி சொல்லப்பட்டிருக்கும். இதெல்லாம் படித்து ரசித்தவர்களுக்கு புராதனக்கதை என்ற வார்த்தை சொல்ல தோன்றாது.
ReplyDeleteஅதே போல் விங் கமாண்டர் ஜார்ஜ், அத்தனை கதைகளும் முத்துக்கள், அதிலும் "மரண மச்சம்" என்ன விலை கொடுத்தாவது படித்து பாருங்கள்... ஹாலிவுட் திரில்லர் படமே தோற்று போகும்...
ReplyDeleteமோசடி மன்னன், பிழைத்து வந்த பிணம். இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
DeleteYes, true
Deleteஜார்ஜ் கதைகளில் எப்போதுமே ஒரு பரபரப்பு இருக்குமே சார். இவரின் கதைகளில் கதாபாத்தீரங்களின் முகங்கள் சதுர வடிவிலேயே இருக்கும். அதேபோல சார்லி கதைகளின் ஓவியங்களும் வித்தியாசமாகவே இருக்கும்.
Deleteஆமாம் நண்பரே, ஓவியங்கள் சாதாரணம் போல புறக்கணிக்க தோணும்... நானும் அப்படியே செய்துள்ளேன்... ஒரு கட்டத்தில் ஒ, இவரும் ஒரு செம்மையான ஹீரோ தான் என்று இவர் கதைகள் விரும்பி படிக்க தோன்றியது.
Deleteநம்மில் அநேகர் டெக்ஸ் கதைகள் எத்தனை வந்தாலும் வாங்கவே குவிக்கவே ஆசை படுகிறோம்... இந்தப் போக்கில் பிரின்ஸ் குழுவின், "மரண வைரங்கள்" புறக்கணிக்கிறோம்... இரத்தப்படலத்தையே மிஞ்சும் வாழ்க்கை தத்துவம் நிறைந்த அதகள சாகசம், அதுவும் முழுவண்ணத்தில் வெறும் என்பது ரூபாய் விலையிலான இதழை கண்டும் காணாமல் அரதபழசு என்று முத்திரை குத்தி விடுகிறோம். நல்ல படைப்புகளை ஆதரித்தால் தானே ஆசிரியர் அவற்றை புறக்கணிக்காமல் நம் மத்தியில் தவழவிடுவார்?
ReplyDelete//பழமைக்குக் கொடி பிடிப்பதில் பெரிதாய் முனைப்பிலா நிறைய நண்பர்கள் - தொண்டையில் நெருஞ்சி சிக்கியிருப்பது போலான உணர்வுடன் சுற்றி வருவதாய் எனக்குப் பட்டது !//
ReplyDeleteமிக சரியான துல்லியமான கணிப்பு சார். நான் ராணி காமிக்ஸிலிருந்து தான் எனது வாசிப்பை துவங்கினேன். முகமூடி வீரர் மாயாவியின் தீவிர ரசிகன் நான். ஆனால் அந்த கால கட்டத்திலேயே மாயாவியை (வேதாளரை) தவிர்த்து வேறு நாயகர்கள் மீது பெரிதாக ஆர்வம் எழவில்லை. மாதம் ஒரு மாயாவி புத்தகம் வந்தாலும் சலிப்பு ஏறபடுத்தவில்லை. மாயாவி தவிர ஒரு சில ஒன் ஷாட்கள் ரசிக்கும் படி இருக்கும். ஆனால் ஜேம்ஸ்பாண்ட், மாடஸ்டி, மாண்ட்ரேக், பிளாஸ் கார்டன், கார்த் போன்றோரின் கதைகள் என்னை அவ்வளவாக ஈர்க்க வில்லை.
பிறகு தான் நமது குழுமத்தின் புத்தகங்கள் அறிமுகமானது. அவ்வளவு நாள் மாயாவியையும் (வேதாளர்) ராணிகாமிக்ஸையும் ரசித்து வந்த எனக்கு "திக்குத் தெரியாத தீவில்" திக்கு முக்காட வைத்து விட்டது. இப்பவும் சொல்ல தெரியவில்லை ஆரம்பத்தில் படிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் அந்த எழத்து நடையும், கதையமைப்பும் ஒரு வித்தியாசமான பரவசத்தை கொடுத்தது.
நமது வெளியீடுகள் அந்நாட்களில் எந்த தேதியில் வரும் என்பது உறுதியாக தெரியாததாலும், கோயம்புத்தூர் main சிட்டியை தாண்டி ரெகுலராக வேறெங்கும் கிடைக்காததாலும் நானும் சிறுவனாக இருந்ததால் அப்படியே தொடராமல் விட்டு விட்டேன். ஆனால் ராணி காமிக்ஸின் நிலையோ தலைகீழ் டான் என்று 1 மற்றும் 16 ஆம் தேதியில் கிடைத்து விடும. மேலும் அந்நாட்களில் ராணி காமிக்ஸோடு பூந்தளிர் (மாதம் இருமுறை) பின்பு சேர்ந்து கொண்ட பார்வதி சித்திர கதைகள் என்று நான்கு புத்தகங்கள் ரெகுலராக வாங்கி வந்தேன்.
கிராமத்தில் விவசாய பின்புலத்தில் பிறந்த எனக்கு சக நண்பர்களில் ஒரு சிலர் தவிர்த்து பெரும்பான்மை பள்ளி நேரம் தவிர விவசாயத்தில் பெற்றோர்க்கு உறுதுனையாய் இருக்க, காமிக்ஸ் படிக்கவும், கிரிக்கெட் விளையாடவும் என்னை அனுமதித்த பெற்றோரை மேலும் மேலும் காமிக்ஸ் புத்தகங்களை கேட்டு நச்சரிக்க மனம் ஒப்பவில்லை. ஆனால் அவ்வப்போது இடையிடையே நமது குழம புத்தகங்களை வாங்குவதும் உண்டு.
ஒரே மாதிரி டெம்பிளேட்டில் எளிமையாக படித்து கொண்டிருந்த எனக்கு நமது வெளியீடுகள் சற்று கடினமானதாகவும், ஆனால் சுவாரஸ்யமாகவும் தென்பட்டது.
இடையிடையே வாங்கி படித்ததில் லாரன்ஸ் டேவிட்,டெக்ஸ்வில்லர், ஜானி நீரோ, அதிரடி வீரர் ஹெர்குலஸ், லக்கிலூக், இரட்டை வேட்டையர், சிக்பில், நார்மன், மின்னல் படை போன்றோர் கவர்ந்தனர். இவர்கள் அனைவரையும் விட மிகவும் கவர்ந்தது ஸ்பைடரும், ஆர்ச்சியும். அதுவும் மாயாவியை (வேதாளர்) மட்டுமே ஆதர்ஸ நாயகனாக எண்ணி இருந்த எனக்கு ஸ்பைடரின் அந்த anti heroism ரொம்பவே பிடித்து போனது. ஸ்பைடர் பெயரை பார்த்தாலே ஒரு வித பரவசம் எழ ஆரம்பித்தது.
ஆனால் கறுப்புக்கிழவி, பேட்மேன், இரும்புக்கை மாயாவி, மாடஸ்டி, காரிகன், ரிப்கிர்பி, விங்கமாண்டர் ஜார்ஜ், சார்லி, ஆகியோரின் கதைகள் கவரவில்லை. இவை தவிர அந்நாட்களில் மற்ற நாயகர்களின் கதைகளை படிக்க அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை.
அருமையாக எழுதியுள்ளீர்கள்.
Deleteஅருமை நண்பரே...அந்த ஸ்பைடரின் ஜெட்டும் வலைத்ப துபாக்கியும் லேசர் கதிர் பீய்ச்சியும் ஹெலிகாரும்....கரிய ரப்பர் உடைகளும் ...நீள் காதும்...நெற்றியில் நிற்கும் கூர் முடியும் வர்ணனைக்குள் அடங்குமா...படித்தால் மட்டுமே...
Deleteஒரு சில வருடங்கள் அப்படியே நகர்ந்தது. சிறுவனாக இருந்த நான் டீன் ஏஜில் நுழைந்த சமயம் ராணி காமிக்ஸின் மீது இருந்த ஈடுபாடு குறைந்தது. பூந்தளிர் மற்றும் பார்வதி சித்திர கதையின் மீதும் அதே நிலை தான். அப்போது லயனின் 10 வது ஆண்டு மலர் வருடம். வேங்கை வேட்டை கதையில் சென்சுவரி ஸ்பெசல் 20 விலையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைக் கைப்பற்ற ஆவல் எழுந்தது. தொடர்ச்சியாக லயனின் வெளியீடுகளை வாங்க முடிவெடுத்தேன். அடுத்து பிணம் காத்த புதையல் பிறகு எனது கனவு இதழான சென்சுவரி ஸ்பெசலை என் தாயாரோடும், தங்கையோடும் டவுனுக்கு செல்கையில் கைபற்றினேன்.
ReplyDeleteஇதன் பின்னனியே சற்று சுவாரஸ்யமானது. டவுன்ஹாலில் உள்ள A.M.M.book ஸ்டாலுக்கு சென்று சென்சுவரி ஸ்பெசலுக்கு பதிலாக ஆண்டு மலர் வந்துவிட்டதா என தவறுதலாக நான் கேட்க, முஸ்தபா பாயோ இல்லை அது வர நாளாகும் என்று சொல்ல. எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பின்பு என்ன நினைத்தாரோ லயன் சென்சுவரி ஸ்பெசல் இருக்கிறது வேண்டுமா? ஆனால் விலை இருபது என்று தூக்கி என்னருகே எடுத்து காட்டினார். எனக்கு சந்தோசத்தில் தலை கால் புரியாமல் இது தான் நான் சொன்னது என்று துள்ளி குதித்து புத்தகத்தை ஆவலோடு புரட்டினேன். நமது பைண்டிங் சொதப்ப எடுத்த புத்தகம் எல்லாம் கொத்தாக கழன்று வர ஒருவாறு பசையை தடவி எனக்கு கொடுத்தார். வீட்டுக்கு வந்ததும் அம்மா ஊசி நூலால் தைத்து கொடுத்தார்.
ஹாட்லைனில் ஆசிரியர் "தைரியமாக ரூ20 செலவலித்து வாங்கியதுக்கு நன்றி" என்று ஆரம்பித்திருப்பார். ஆம் அன்று எனது தாயார் ரூ20 விலையை எனக்காக செலவிலிக்காமல் இருந்திருந்தால் இன்று வரை இந்த பயணம் தொடர்ந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் இன்று எனது தாய் தந்தையர் இல்லை, ஆனால் அவர்களின் நினைவுகளில் ஒன்றாக சென்சுவரி ஸ்பெசல் இன்னும் அந்த தையலோடு என்னிடம் இருக்கிறது. பின்பு அடுத்த இதழாக வந்த பிரின்ஸின் ஒரு திகில் பயணம் என்னை வெகுவாக கவர லயனோடு முத்துவையும் சேர்த்து வாங்க ஆரம்பித்தேன். ஆனால் நான் பெரிதும் எதிர்பார்த்த ஆர்ச்சியும், ஸ்பைடரும் ரெகுலராக வராதது ஏமாற்றம் அளித்தது. பின்பு பழைய மார்கெட்டின் தயவில் முந்தைய புத்தகங்களை ஓரளவுக்கு கிடைத்தது.
திகில் பயணத்திற்கு பின்பு 10 வது ஆண்டு மலராக வந்த மந்திர மண்ணில் மாடஸ்டி இதழில் வெளிவந்த அறிவிப்புகள் என்னை உற்சாகமடைய செய்தன. லக்கி லூக் மற்றும் XIII இனி லயனில் வருவார்கள் என்ற சேதிதான் அது. முன்னொரு நாளில் லக்கியின் அதிரடி பொடியனை நண்பன் ஒருவன் மூலம் இரவலுக்கு வாங்கி படித்தேன். நான் படித்த முதல் கலர் காமிக்ஸ் புத்தகம் அதுதான். நான் எவ்வளவு வற்புறுத்தி கேட்டும் அவன் எனக்கு கொடுக்கவில்லை. அந்த ஏக்கம் ஒரு புறம் இருக்க, நமது ஏதோ ஒரு இதழில் இரத்தப்படலம் 3 பற்றிய விளம்பரம் தெரிக்கவிட்டிருக்க. அதை கிணத்துக்கடவில் உள்ள ஒரு கடையில் ஏதேச்சையாக பார்க்க அந்த XIII லோகோவோடு அட்டை படம் முதல் பார்வையிலேயே கட்டி போட. திரும்பி வாங்க செல்லும் போது அந்த ஒற்றை பிரதி விற்றுப்போயிருக்க இருக்க அந்த ஏக்கம் என இரண்டிற்கான வடிகாலாக அந்த அறிவிப்பு இருந்தது.
இடையில் சர்பிரைசாக வந்த ஆர்ச்சியோடு மோதாதே மற்றும் மறுபதிப்பாக வந்த பழி வாங்கும் பொம்மையும் கொடுத்த சந்தோஷம் அலாதியானது. பின்பு பிரின்ஸ், லக்கி, XIII, ஜானி, டெக்ஸ், சிக்பில், ராபின், டைகர், என கலங்களும் விசாலமாக ஸ்பைடர், ஆர்ச்சி மோகம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. ஏறகனவே சுகப்படாத ரிப்கிர்பி, மாண்ட்ரேக், மாடஸ்டி மேலும் உறுத்தலாக தோன்ற ஆரம்பித்தது. நமது வெளியீடுகளும் ஒரு கட்டத்தில் நிறுத்தபட்டு, பின்பு 10 ரூபாய் டெம்பிலேட்டில் சில காலம் பயணித்து அவ்வப்போது 100 ரூபாயில் special இதழ்களாகவும் தலைகாட்டி கடைசியில் ஒரேடியாக நின்றும் போனது. இக்கால கட்டத்தில் திருமணம், குழந்தை, பெற்றோரின் இழப்பு என்று காமிக்ஸை ஏறத்தாள மறந்து விட்டேன். அவ்வப்போது பழைய புத்தகங்களை படிப்பதோடு சரி. அந்த சமயத்தில் வெளியான இரத்தப்படலம் black & white கலெக்ஸன் எனக்கு தெரியாமலே போய்விட்டது.
அருமை...எனக்கும் ஆர்ச்சி ஸ்பைடர் இல்லாம முடியல....லட்டர் போடவும் உணரல...இப்ப போல அப்ப இருந்தா ஆசிரியர் புஷ்பம்னு எக்கதையையும் விலக்க வாய்த்திருக்காது
Deleteபின்பு ஒரு நாளில் வலைபக்கங்களில் பிரின்ஸை வண்ணத்தில் பார்த்த ஞாபகம். ஆனாலும் கடந்து சென்று விட்டேன். 2013 ஆண்டு மத்தியில் எனது துணைவியுடன் ஷாப்பிங்கை முடித்து விட்டு டவுன்ஹால் வர வழக்கம் போல் எனது கால்கள் முஸ்தாபாவின் புத்தககடைக்கு இட்டு சென்றது. அவ்வழியே சென்றால் நலம் விசாரிப்பது வழக்கம். ஆனால் இம்முறை காத்திருந்ததோ ஒரு புதையல் வேட்டை. காமிக்ஸ் காதலர்களான நமக்கு வரும் கனவில் நிறைய புத்தகங்கள் இருக்கும் நாம் எதை அள்ளுவது, விடுவது என தெரியாது. அது அன்று நேரில் அரங்கேறியது. காமிக்ஸ் வந்திருக்கிறது பார்க்கிறீர்களா என்று எடுத்து போட்டார் நமது come back கிற்கு பிறகு வந்த அனைத்து இதழ்களையும்.
ReplyDeleteநான் நினைத்து கூட பார்க்காத தரத்தில், வண்ணத்தில், கறுப்பு வெள்ளையில், பெரிய சைஸில், ஆர்ட் பேப்பரில் அத்தனை புத்தகங்களையும் ஒன்றாக பார்த்த எனக்கு கால் தரையில் நிற்கவில்லை. துணைவியும் பொருமை காக்க நான் அனைத்தையும் புரட்டி எடுத்தேன். விலைகளும் நான் இதுவரை பார்க்காத ரேஞ்சில் இருக்க. இப்போதைக்கு அத்தனையும் அள்ள முடியாது. ஒன்றிரண்டை எடுத்து கொள்வோம். பிறகு மெதுவாக பார்த்து கொள்ளலாம் என மனதை ஒருவாறு தேற்றி கொண்டு நான் எடுத்த முதல் புத்தகம் லக்கி special (சூப்பர் சர்க்கஸ் & பயங்கர பொடியன்) & அடுத்து தரத்தில் மிரட்டும் லார்கோவின் துரத்தும் தலைவிதி. பின்பு அடுத்த நாள் "நிலவொளியில் ஒரு நரபலி" அடுத்து பூதவேட்டை என ஆரம்பத்தில் செலக்டிவாக மட்டுமே புத்தகத்தை சேகரித்தேன். பின்பு ஆவல் தொற்றிகொள்ள விடுபட்ட அனைத்து இதழ்களையும் முஸ்தபா மூலம் பெற்றுக்கொண்டேன். இதற்கிடையே ஸ்டாக் காலியான NBS, Wild West special, come back special, என் பேஃப் லார்கோ, super hero special ஆகியவற்றை பழைய நிலையத்தில் ஒருசேர கிடைத்தது இன்னுமொரு ஆச்சர்யம்.
2014 ஆண்டு முதல் ரெகுலராக வாங்கி வருகிறேன். நான் மீண்டும் காமிக்ஸ் பக்கம் வர அந்த தரமும், புதுமையும் தான் முக்கிய காரணம். ஒரு காலத்தில் சிலாகித்த ஸ்பைடரையும், ஆர்ச்சியையும் என்னால் super hero special லில் படிக்க முடியவில்லை. தட்டு தடுமாறி முடித்தேன். மாயாவியை படிக்கவே இல்லை. அப்போதே புரிந்து விட்டது. இனி இவ்வகை கதைகள் நமக்கு set ஆகாது என்று. மேலும் நீங்கள் குறிப்பிட்ட 2012 முதல் 2015 வரையான கதைகள் என் ரசனையை பண்மடங்கு உயர்த்தி விட்டது. கிராபிக் நாவல்கள், மாதம் ஒரு கார்டூன், டெக்ஸ், மார்டின், டைகர், XIII, ஜானி, தோர்கல், பவுன்சர் இன்னும் பல நாயகர்களை இறக்கி விட்டு எங்கள் எதிர் பார்ப்பையும் ரசனையையும் எகிற செய்து விட்டீர்கள். Come back கிற்கு பிறகு லியானார்டோ மற்றும் கார்ட்லேண்ட் மட்டும் தான் என்னை கவரவில்லை. மற்ற அனைவருக்கும் என்னைப்பொருத்தவரை ஜெயமே. நாங்கள் இவ்வளவு தூரம் ரசிக்கிறோம் என்றால் அதற்கு மூலமே நீங்கள் தான். ஆதலால் தான் உங்களிடம் நிறைய புதிய ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
ஆனால் 2019 வரை சரியாக தான் திட்டமிட்டிருந்தோம். அதுவரை வந்த கிளாசிக் நாயகர்களின் மறுபதிப்பு என்னை பெரிதாக உறுத்தவில்லை. அது தனித்தடம் அளவான விலையில் இருந்தது. ஆனால் 2020ல் சிறு புத்தக கடைகளை குறிவைத்து வந்த சந்தா d தான் பேஜாரை கிளப்பி விட்டது. அவ்வரிசையில் வந்த கதைக்ள் below averageல் இருந்ததால் சுத்தமாக ஏற்றுகொள்ள முடியவில்லை.அதிலும் அமாயா போன்ற கதைகளை உங்களிடம் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை சார். மேலும் ஆன்லைன் புத்தக விழாவில் மாயாவி, ஆர்ச்சி, maxi ஸியில் ஆர்ச்சி, வண்ண்த்தில் மாயாவி என இந்த இரண்டு வருடம் classic நாயகர்களின் படையெடுப்பு அதிகம் சார்.
இதில் மேற்கொண்டும் 2022 ல் அந்நாளிலேயே சொதப்பிய மான்ட்ரெக் மற்றும் உறவினர்கள் எல்லாம் வருகிறார்கள் என்றதும் காதில் புகை போகாத குறை தான். அதனால் நானும் சில கருத்துகளை classic நாயகர்களுக்கு எதிராக பதிவிட்டு விட்டேன். ஆனால் தங்கள் பதிவின் நீளத்தையும் அதன் சாரத்தையும், ஒவ்வொரு வாசகர் மீதும் தாங்கள் கொண்டுள்ள அபிமானமத்தையும்
நீங்கள் அடிக்கடி சொல்வது 101 வது முறையாக உணர்த்தி விட்டது. செய்வதை நீங்கள் மன நிறைவோடு செய்யுங்கள் உறுதுனையாக நாங்கள் இருக்கிறோம். நன்றி.
@Thirunavukkarasu Vazzukkupparai
Deleteமனம் திறந்த பதிவு.. இயல்பான எழுத்துக்கள்.. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! ரொம்பவே ரசித்துப் படித்தேன்! சில இடங்களில் நெகிழ்வாகவும் உணரமுடிந்தது!
எடிட்டரின் இந்தப் பதிவு உங்களைப்போலவே இன்னும் பலரையும் சமாதானப்படுத்தியிருக்கும் என்பது உறுதி!
இந்தக் காமிக்ஸ் நேசம் - நாளும் வாழ்க!
தங்கள் காமிக்ஸ் பருவத்தை முழுமையாக அழகாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே...அருமை...வாழ்த்துக்கள்..
Delete// செய்வதை நீங்கள் மன நிறைவோடு செய்யுங்கள் உறுதுனையாக நாங்கள் இருக்கிறோம். நன்றி. //
Delete+1
திரு அருமையான பதிவு. அப்படியே பால்யத்துக்கு அழைத்து சென்று விட்டது. அம்மா வாங்கி கொடுத்த செஞ்சுரி ஸ்பெஷல் அட்டகாசமான நினைவு.
Deleteநமது எடிட்டர் இப்படி ஒரு பதிவு எழுதும் போது எல்லாம் பார்க்கிறேன் நமது நண்பர்கள் அப்படியே தமது மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி தீர்த்து விடுகிறார்கள்.
அவர் தனது தாய் வழி தாத்தா வை பற்றி எழுதிய பதிவு நமது சகோதரி அனுவை முதன் முதலில் நமது தளத்தில் எழுத வைத்தது.
இப்போது இந்த பதிவு உங்களை பற்றியும் உங்கள் காமிக்ஸ் அறிமுகம் பற்றியும், உங்கள் சிறு வயது பற்றியும் எழுத வைத்தது.
EV சொன்னது போல ரொம்பவே நெகிழ்வாக உணர்ந்தேன்.
அருமையாக எழுதி இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி
இயல்பான எழுத்தோட்டம்..மனதை கவர்ந்தது..
Deleteமிக்க நன்றி நண்பர்களே. கூடுமானவரை நமது இந்த காமிக்ஸ் உறவை ஆரோக்கியமானாதாகவும், ஒற்றுமையாகவும் வளர்த்து மேன்மேலும் அது கொணரும் கல்ப்படமில்லாத உற்சாகத்தை/சந்தோஷத்தை எடிட்டருக்கும் அளித்து நாமும் இன்புருவோமே.
Deleteஒரு வீரனின் கதை. மறு பதிப்பில் வர வண்டிய கதைகளில் ஒன்று. அருமையான கதை.
ReplyDeleteஅப்புறம் ஆகஸ்ட் புத்தக விழாவுக்கு டெக்ஸோட பழிக்குப் பழி மறுபதிப்பில் வருதுன்னு சொன்னாங்களே. உண்மைங்களா?
///அப்புறம் ஆகஸ்ட் புத்தக விழாவுக்கு டெக்ஸோட பழிக்குப் பழி மறுபதிப்பில் வருதுன்னு சொன்னாங்களே. உண்மைங்களா?///
Deleteஇஸிட்?!!!
வீரனின் கதை +1000
Deleteபழிக்கு பழி +100000
அதுக்கும் முன்னாடி மகி
Deleteவால் முளைத்த வாரிசு
ReplyDeleteசெம. மொதப் பக்கம் மொத பேனலிலிருந்து கடைசி பேனல் வரைக்கும் சிரிப்பு வெடி. ஒவ்வொரு டயலாக்குக்கும் தனிக் குறிப்பே வரையலாம். அட்டகாசம். ஐ லவ் இட்.
பேய் நகரமும் ஒரே மூச்சில படிச்சாச்சி. ஏற்கனவே ஆங்கிலத்துல படிச்சது இருந்தாலும் தமிழில படிக்கற சொகமே தனி. ஆண்டு மலர் is awesome. Love you lucky luke.
Delete#### கதைகளில் தொனித்த புராதனம், கார்ட்டூன்கள் விதைத்த ஹியூமரை விடவும் ஜாஸ்தியாய்ப் பகடிகளை விதைக்க, ""உப்மா வேலைக்கு ஆவாது !" என்ற எண்ணம் நிறையவே வலுப்பெற்றது ! And அந்த அணியினில் நானுமே ஒரு முன்னணி இடம் பிடித்திருந்தேன் ! புராதனைக் கதையோட்டங்கள் ; புராதன மொழிபெயர்ப்பு ; புராதன க்ளைமாக்ஸ்கள் ####
ReplyDeleteஇங்கேதான் தவறான புரிதல் சார்...
பழசு என்றவுடன் ரீரீரீரீரீ பிரிண்ட் ஆக மும்மூர்த்திகள் கதைகள் வந்ததே அலுத்து போக காரணம்..
அதுவே மும்மூர்த்திகள் கதைகளில் இதுவரை வெளிவராத கதைகள் வெளியிட்டிருந்தால் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் சார்..
இப்போது பாருங்கள் இதுவரை வெளிவராத கதைகள் என்றவுடன் முன்பதிவில் எப்படி இருக்கிறது என்று...
ரீபிரிண்ட் என்றால் வேண்டாம் என்ற கருத்துள்ள
நானுமே கூட இந்த 70s மலருக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் சார்..
சார்..தங்களின் இதழ் தேர்வு ,கதை தேர்வு ,பழைமை புதுமை என வித்தியாச தேர்வு என எது வந்தாலும் அதற்கான காரணம் ஒன்று உண்டு என்பதை இந்த பதிவின் மூலம் உணர முடிகிறது..மிக அழகான பதிவு சார்..
ReplyDeleteமிக்க நன்றி சார்..
இல்லாததைத் தேடுவது இயல்பு ; அதிலும் நம்மவர்களிடம் அது இயல்போ இயல்பு என்பது நினைவுக்கு வந்தது ! வேதாளனைக் கொண்டு வந்தால் - "மாண்ட்ரேக் லேதுவா ?" என்றும் ; மாண்ட்ரேக்கையும் இட்டாந்தால் - "எங்க ரிப் கிர்பி கண்ணுக்குத் தெரிலியா ? காரிகன்லாம் மனுஷனா தோணலியா ?" என்றும் கேள்விகள் எழுமென்பது உறைத்தது !
ReplyDeleteவாவ்...
வாசகர்களின் நாடி பிடித்துப் பார்க்கும் வல்லமையுடையவரென்று தீர்க்கமாகக் காண்பிக்கின்றன இவ்வரிகள்.. காமிக்ஸ் உளவியல் டாக்டர் பட்டமே தங்களுக்கு தரலாம் சார்.. மிகவும் மகிழ்ச்சியுடன்..
ஆமாம் சகோ, நமக்கு பிடித்தது அவரிடம் சொல்லிட வேண்டியதுதான் நம் வேலை... கொஞ்சம் நீண்ட அவகாசம் எடுத்துக்கொண்டாலும் எப்படியும் ஆசிரியர் அதனை நடப்பில் கொண்டு வந்து விடுவார்...
Delete// வாவ்...
Deleteவாசகர்களின் நாடி பிடித்துப் பார்க்கும் வல்லமையுடையவரென்று தீர்க்கமாகக் காண்பிக்கின்றன இவ்வரிகள்.. காமிக்ஸ் உளவியல் டாக்டர் பட்டமே தங்களுக்கு தரலாம் சார்.. //
+1
Yes
+1 yes
Deleteநம்புங்கள் தரப்படும்...கேளுங்கள் கொடுக்கப்படும்
Delete101
ReplyDeleteNostalgia is a nonsense. Life goes only forward. Anyway we modern ppl support is always with you. We are at sync in your taste in modern stories like leonardo, smurfs, largo, graphic novels.
ReplyDeleteI think people who are not happy in current days, likes to chew on nostalgia.or very old retired ppl.
கடுமையான வார்த்தை பிரயோகங்களை தவிர்க்கலாம் சார்!
DeleteI think people who are not happy in current days, likes to chew on nostalgia.or very old retired ppl.//
Deleteதமிழ்ல சொன்னா கொஞ்சம் நல்லாருக்கும் நண்பரே..
Memories are the treasure of a life whizzed past by. Even if it is for the case of 50+ folks it is good to support their cause. As current 20s and 30s cross the threshold of 50s and look back they would understand if nostalgia is nonsense or effervescence! That that person that that sense.
DeleteThere are treasures hidden in those oldies, here is the chance to dig them up. Even now black & white movies like 12 Angry men, Psycho, Charlie Chaplin are delight to watch. We are moving forward with "தோழனின் கதை" , Graphic novel, Soda... Now then we can look back and relax too.
Deleteதிரும்பிப் பார்ப்போம் பிடித்தால்...எதானாலும்...எப்பவானாலும் என்பதே வாழ்க்கை கூறும் பாதை நண்பரே
Deleteவணக்கம் சார்!
ReplyDeleteஅடுத்த வெளியீடாக அசுர பூமியில் தோர்கல் னு ஒற்றை ஆல்பம் மட்டும் வெளிவருவதாக அறிவித்து உள்ளீர்கள்... அதை இரட்டை ஆல்பம் போட முடிந்தால் ஆர்க்கும் முடிந்து விடும். தோர்கல் தொகுப்பாக வேண்டும் என்ற வாசகர்களின் வேண்டுகோளும் பூர்த்தியாகும். வாய்ப்பு இருக்கிறதா சார்?
பட்ஜெட்டை மனதில் கொண்டே ஆசிரியர் அந்த முடிவெடுத்திருப்பார் நண்பரே...
Deleteஅந்த மேகி கேரிசன் க்கு பதில் தோர்கல் இன்னொரு ஆல்பம் போடலாமா என்று கேட்டதற்கு நண்பர்கள் இசைவு தெரிவித்து இருந்தார்களே சார்
DeleteKumar & Sarvanakumar @
Deleteபொறுமை பொறுமை! இப்போதுதான் ஸ்மாஷ் 70 பற்றி எழுதி பல விஷயங்களை அனைவருக்கும் புரிய செய்து உள்ளார்! அவரை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய விடுங்கள் :-) ஆசிரியர் அதனை (மெரி கெரிசன்/தோர்கல்) நினைவில் வைத்து இருப்பார், ஏதாவது யோசித்து கொண்டு இருப்பார் எனவே கவலை வேண்டாம்! நல்லதையே தருவார்!
Only the good memories make us to do good deeds too, we are not machines to do everything in a systematic way... The huge percentage of good comic stories got created in the golden seventies... Old is gold... பழைய மீன் குழம்பின் சுவை ருசி பார்த்தவருக்கு தான் தெரியும்...
ReplyDeleteஇன்றைய அவசர உலகில் தரமான கதைகள் அரிதாகவே கிடைக்கின்றன... எனவே பழையதும் புதியதும் இங்கே சேர்ந்தே தான் சங்கமிக்க வேண்டும்... மற்றவர் ரசனைக்கு மதிப்பு கொடுத்தலே இங்கே காமிக்ஸ் வளர்ச்சிக்கு தேவை.
எடிட்டர் சார்@
ReplyDelete"உப்மா உருவான கதை"----யில் ஆரம்பத்தில் ஒரு அத்தியாயத்தை தாங்கள் குறிப்பிடவில்லை...!!!
2012லயே இந்த உப்மா பார்டிகளின் கதைகளை வெளியிட பெரிதாக ப்ளானிங் பண்ணி அது சக்ஸஸ் ஆகாம வானலி தீஞ்சு போனது.
3அல்லது 4 கதைகள்...
368பக்கங்கள்..
ரூ50..பாக்கெட்சைஸ்...
7வெளியீடுகள்.../ஆண்டுக்கு
6கருப்பு வெள்ளை&1கலர்....
என பிரமாதமாக ப்ளானிங் பண்ணி பிரமாண்டமாக அறிவித்து வெறும் 160ஓ 150ஓ புக்கிங்கோடு அம்முயற்சி தோல்வியடைந்தது...
அந்த திட்டத்தை லக்கி க்ளாசிக்ஸ், டைகர் க்ளாசிக்ஸ் என மடை மாற்றி அதிரடி ஹிட்
ஆக செய்து இருந்தீர்கள்...
///
மறுபதிப்புகள் என்ற உடனேயே நம் முத்து காமிக்ஸ் மும்மூர்த்திகள் முன்னணியில் ஆஜர் ஆகிடுவதை தவிர்க்க இயலாதே ! So பிள்ளையார் சுழி போட்டு வைக்கப் போகும் இதழ் நமது "மாயாவி டைஜெஸ்ட் -1 " பிரத்யேகமாக மாயாவியின் சாகசங்களை மாத்திரமே தாங்கி வரவிருக்கும் இந்த இதழில் - கீழ்க்கண்ட 3 கதைகள் இடம் பிடித்திடும் :
உறைபனி மர்மம்
நயாகராவில் மாயாவி
கொள்ளைக்கார மாயாவி///
/// லாரன்ஸ் டேவிட் டைஜெஸ்ட் -1 ! அதே சைஸ் ; பக்கங்கள் ; இத்யாதி ; இத்யாதி...! கதைகளின் பட்டியல் இதோ :
FLIGHT 731
வான்வெளிக் கொள்ளையர்
பனிக்கடலில் பயங்கர எரிமலை !////
///இதழ் எண் 3 - "ஜானி நீரோ ஸ்பெஷல் -1 " ! கதைகளின் வரிசை இதோ :
பெய்ரூட்டில் ஜானி நீரோ
காணாமல் போன கைதி
மலைக்கோட்டை மர்மம்///
///இதோ இதழ் # 4 -ன் அறிவிப்பு !! "ஸ்பைடர் ஸ்பெஷல்-1 "-ல் இந்த 3 கதைகள் வந்திடும் :
சைத்தான் விஞ்ஞானி
விசித்திர சவால்
மரண ராகம்///
///இதழ் எண் 5 மினிலயன் டைஜெஸ்ட்
துப்பாக்கி முனையில்
மரண சர்க்கஸ்
கறுப்புப் பாதிரி மர்மம்
கானக மோசடி////
////இதழ்6 vintage detective special
நெப்போலியன் பொக்கிஷம் (ஜார்ஜ்)
குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் (சார்லி)
வைரஸ் x (காரிகன்)
ரோஜா மாளிகை ரகசியம் (ரிப் கிர்பி)///
மீண்டும் உப்மா கிளறும் திட்டம் ஓரு வழியாக 2015ல நிறைவேறியது...
இந்த வரலாறு எதையும் அறியாத நண்பர்கள் இதை உப்மானு அறியவும் இயலாதுதான்...!!
எங்க ரசனையில் நீங்க எப்படி தலையிடலாம்னு கேள்வியும் கேட்பாங்கதான்.
ஆல்ரெடி வெளிவர இருந்தும் சக்ஸஸ் பண்ண இயலாதது; 2015ஆரவாரமாக ஆரம்பித்து படுமொக்கையாக சொதப்பியது; இப்ப வந்தா கூட சக்ஸஸ் ஆகுமா என்ற ஐயங்கள்; இதுபோன்ற காரணங்களால் தான் இவைகளை உப்மா பார்டி என்கிறோம்.😉😉😉
இந்த பின்வரும் பதிவுகளில் டீட்டெய்ல் உள்ளது......
http://lion-muthucomics.blogspot.com/2012/07/blog-post_22.html?m=0
http://lion-muthucomics.blogspot.com/2012/09/blog-post_29.html?m=0
----தாங்கள் குறிப்பிட்ட உள்ளது போல சில மாதங்களாக நெருஞ்சியோடுதான் இருந்தோம்..
தங்களது இந்த பதிவு எங்களது ஐயங்களை நீக்கி தெளிவுபெறச் செய்துள்ளது.
பழையனவற்றை ரசிக்கும் நண்பர்கள் இதை முழுமையாக பயன்படுத்தி கொள்ளனும். பார்ப்போம் வெறும் பீரோ நிரப்பிகளா? அல்லது வெற்றி ஊர்வலமா என????
நாங்கள் நிறைவாக உண்ணும் அதேவேளையில் பக்கத்து பந்தியிலும் ஆரவாரங்கள் இருந்தா மகிழ்ச்சி அனைவருக்கும் தான்!!!
எப்போதும் போல தங்களின் பின்னே...........!!!!
இன்னும் அந்த 150 ஐ தாண்டியாச்சோ என்னவோ
Deleteஅன்னிக்கு 172 டு நின்றுபோய் ட்ராப் ஆனது.. ஆனா இம்முறை 500சாதாரணமாக தாண்டிடும்னு நம்புவோம்....!!!!
Deleteதேவையான 600-700லாம் தாண்டி 1000அடிச்சி சாதனை புரிஞ்சா தான் வேதாளர் கூட்டணிக்கு கெத்து...!!!!
வெயிட்டுவோம்....😍
1000அடிச்சிட்டா டெக்ஸக்கு இணைனு ஒத்துக்கிறோம்பா....😉
//எங்க ரசனையில் நீங்க எப்படி தலையிடலாம்னு கேள்வியும் கேட்பாங்கதான்//
Deleteஅப்படி இல்லை STV சார், சிலரது விமர்சனங்கள் ஸ்ட்ராங்காக இருந்ததால், “இதுக்கு போய் இவ்வளொ காசு, நேரம் செலவு செய்யூரீங்களே??” என்று கேட்பது போலவே தோன்றியது. மாமியார் வீட்டில் 150ரூ டெக்ஸுக்கே இந்த கேள்வி வந்தது. மின்னும் மரனம் & இ.பா பார்த்தா அவ்வளோதான். உங்களை புன்படுத்தியிருந்தாள் மன்னித்து விடுங்கள் சார்.
நண்பரே, நீங்கள் சொல்லும் காலம் சமூக வலைதளங்கள் பரவலாக பயன்படுத்தப்படாத காலம்,
Deleteஉங்கள் வாதப்படி இரத்தப்படலம் Black and white நீண்ட காலம் விற்காமல் குடோனிலேயே இருந்ததை எடிட்டரே குறிப்பிட்டிருப்பார்,அதற்காக அதை உப்மா என்று கூற முடியுமா,
பிடிக்காத கதையை ஜவ்வு, உப்மா, மொக்கைனு விமர்சிக்கத்தான் செய்வாங்க கணேஷ்.
Deleteஏன் அட்டைகளை ரிமூவ் பண்ணிட்டா டெக்ஸ் எல்லாம் ஒன்றுதான்னு இன்றும் சொல்லபடுதே...அது உண்மையா என்ன???? நிச்சயமாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனா அதுபோன்ற பேச்சுகள் ஓயாது என்றும்..
அவுங்களை விமர்சிக்காதீங்கன்னோ, பாயாசம் போடாதீங்கன்னு சொல்ல இயலுமா!!!! அது விமர்சகனின் உரிமை!
எப்படி ஒரு கதையை கொண்டாடுறமோ, அதேபோல ஆப்போசிட் சைடும் இருக்கத்தான் செய்யும்....
பிடிக்காத விமர்சனம் எழும்போது தாண்டிபோக வேண்டியது தான்...
பேய் நகரில் ஒரு பொன் வேட்டை
ReplyDeleteதார் சட்டியில் முக்கிஎடுத்து கோழி இறகு அபிஷேகத்துடன் உள்ள இருவரை "தோ பாருடா புது ரகப் பறவைகளாத் தெரிகிறது" என ஆரம்பிக்கும் கதை இறுதிவரை முகத்தில் சிரிப்புடன் படித்து முடித்தேன்! டென்வர் மற்றும் கொலராடோ அடிக்கும் லூட்டிகள் வெடிச்சிரிப்பு, அதுவும் ஒரு கழுதையை வைத்து இருவர் எப்படி பயணம் செய்ய போகிறார்கள் என யோசித்தால் அங்கும் ஒரு சிரிப்பு மேளா, கொலராடோ பின்னால் ஓடி வர "கமான் நண்பா உன்னாலே நாங்களும் மொள்ளமா பயணமாகிற மாதிரி ஆகுதில்ல"; ஐயா எப்படியா இப்படி சிரிப்பை தூவி விடுறீங்க :-) ஒரு கட்டத்தில் கொலரோடா அவர்கள் பின்னால் ஓடிவர முடியாது என சொல்ல சரி அவனை இப்பாவது கழுதையில் வர டென்வர் விடுவார் என பார்த்தால் அடுத்து காட்சி வசனங்கள் ஏதும் இல்லாமல் வயிற்றை பதம் பார்த்த காமெடி. இந்த இருவரும் அதுவும் கொலரோடா எல்லாவற்றுக்கும் பந்தயம் கட்டும் இடங்கள் சிரிப்பு அது அடிக்கடி அவன் யார் என காண்பிக்கும் அதனை டென்வர் சமாளிப்பது இன்னும் சிரிப்பு.
பக்கத்துக்கு பக்கம் ரசிக்க சிரிக்க நிறைய உள்ளது!
மீதி பக்கங்களை அடுத்து நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன்!
உங்க நகைச்சுவை உணர்வு எகிறிட்டே போகுதுங்க PfB!
Deleteவீட்டுக்காரம்மா ஊருக்குப் போய்ட்டாங்களா?!!
This comment has been removed by the author.
ReplyDelete//ரூ50..பாக்கெட்சைஸ்...// wrong information Sir, it is not pocket size.
ReplyDelete"நமது பத்து ரூபாய் லயன் ; முத்து இதழ்கள் வெளிவந்த அதே சைசில் (19cm x 13 cm ) ;
black & white -ல் 368 பக்கங்களுடன் ; அருமையான வெள்ளைக் காகிதத்தில், கெட்டியான அட்டைப்படத்தோடு காமிக்ஸ் க்ளாசிக்ஸ் banner -ல் இந்த வரிசை தொடர்ந்திடும்".
எடிட்டரின் இந்த குண்டு புக் திட்டம் வெளிவராததிற்கு வாசகர்களோ, முன் பதிவுகளோ காரணம் அல்லவே அல்ல.
Delete50 ரூபாய்க்கு 3 கதைகள் வெளியிட ஒருவேளை விஜயன் சாருக்கு சாத்தியப்படாததிற்கு விலைவாசி காரணமாக இருக்கலாம்.
மேலும் இந்த fleetway காமிக்ஸ் சகலமும் கைக்கெட்டாத அளவு பெரிய இடம் (DC Comicsக்கு) உரிமை போய்விட்டதாகவும் விஜயன் சார் பின்னர் பதிவிட்டு உள்ளார்.
ஆனா ஆசிரியர் விலைய காரணமாக சொன்னதா நினைவில்லை நண்பரே...முன்பதிவு சேரலை என்றே கைவிட்டார்....வேதாளர் கைதருவாரா பார்ப்போம்
Deletehttps://lion-muthucomics.blogspot.com/2017/10/blog-post_22.html
Delete"...5 ஆண்டுகளுக்கு முன்பாய் நமது மும்மூர்த்திகள் + ஸ்பைடர் மறுசுற்று reprints தொடர்பாய் அமெரிக்க நிறுவனமான DC காமிக்ஸில் பேசிட முனைந்த போது நடந்தது அட்சர சுத்தமாய் இதுவே ! New York-ன் ஒரு வெட வெடக்கும் பனி நாளில் 'ஜிலோ' நடை போட்டு DC Comics ஆபீசில் ஆஜரானேன் - முன்னாட்களைப் போல நம் தேவைகளுக்கேற்ப அவ்வப்போது கதைகளை வாங்கி கொள்ளலாமென்ற பகல் கனவோடு ! .............................பொறுமையாய் தங்களது பணிமுறைகளைப் பற்றி விளக்கிச் சொல்லி ; நாட்களும், சர்வதேச வருவாய் எதிர்பார்ப்புகளும் எத்தனை மாறிவிட்டன என்பதையும் சுட்டிக் காட்டினர் ! பதினோராவது மாடியில் உள்ள அவரது அறையில் அமர்ந்து, அந்த ஜன்னல்கள் வழியாகப் பார்க்கும் போது கீழே தேனீக்களின் கூட்டம் போல் மனிதத் தலைகளால் நிறைந்து கிடக்கும் டைம்ஸ் சதுக்கமே என்னைப் பார்த்து "இத்தனை பெரிய நிறுவனத்தில்- இப்படியொரு கோரிக்கையோடு ஆஜராகியிருக்கிறாயே -லூசாப்பா நீ ?" என்று கேட்பது போலிருந்தது ! ........................................................................
ஆழம் தெரியாது கால் விட்டு நிற்கிறோம் ; ......................................................................அது தான் நமது Comeback-க்குப் பின்பாய் - மாயாவி ; ஸ்பைடர் ; லாரன்ஸ்-டேவிட் இத்யாதிகளை அறிவித்திருந்த முதல் தருணம் !
காரியத்தில் கோட்டை விட்டு விட்டோமென்பதை உங்களிடம் சொல்வது எப்படி ? ......................................................................
ஆனால் அன்றைக்கு ஒரு தற்காலிக பாராசூட்டைத் தந்தார் நமது பெரும் தேவன் மனிடோ !! என் நல்ல காலமோ, என்னவோ தெரியவில்லை - அந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் சுத்தமாய் முன்பதிவுகளில் உற்சாகம் காட்டவே இல்லை ! ரெண்டோ, மூன்றோ மாதங்களில் மொத்தமே எழுபது, எழுபத்திரண்டு புக்கிங்குகள் மட்டுமே அதற்குக் கிட்டிய போது - "என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா !!" என்று அதகளம் செய்யும் ஜனகராஜைப் போலவே நான் உள்ளுக்குள் குதூகலித்தேன் என்பது தான் நிஜம் ! முதல்முறையாக ஒரு முயற்சியின் தோல்வியிலும் நானொரு வெற்றி கண்டது போல் உணர்ந்தேன் ! Maybe அன்றைக்கு நீங்கள் 'மொது -மொது' வென்று புக்கிங்களை செய்திருப்பின், நான் என்ன கதி ஆகியிருப்பேனோ - சத்யமாய்ச் சொல்லத் தெரியவில்லை ! எது எப்படியோ, மூச்சு விடத் தற்காலிகமாயொரு வாய்ப்பு கிட்டியதில் உள்ளுக்குள் நிம்மதி !"
///எடிட்டரின் இந்த குண்டு புக் திட்டம் வெளிவராததிற்கு வாசகர்களோ, முன் பதிவுகளோ காரணம் அல்லவே அல்ல.
Delete50 ரூபாய்க்கு 3 கதைகள் வெளியிட ஒருவேளை விஜயன் சாருக்கு சாத்தியப்படாததிற்கு விலைவாசி காரணமாக இருக்கலாம்.///
உரிய முன்பதிவுகள் வர்ல என்பதாலயே திட்டம் தோற்றது உதய்.
இம்முறையாவது சக்ஸஸ் ஆகணும்...
எடிட்டர் சாரின் அந்த பதிவும் லிங் போட்டுடலாம்...பொறுமை... பொறுமை...
விஜய்ராகவா,
Deleteமுன் பதிவுகள் வரவில்லை என்பது ஒரு தற்காலிக மேலோட்ட காரணம் தான்..
நிஜக் காரணம் அவரே பதிவிட்டுள்ளார். பார்க்கவும் மேலே பகிரப்பட்ட லிங்க்கை.
யெஸ் உதய்... எடிட்டர் உரிமையை வாங்குவது, வாங்காம போவது எல்லாம் திரைமறைவில் நடக்கும் நிகழ்வுகள்...
Deleteஆனா போதிய முன்பதிவுகள் வர்ல என்பதே நிலவரம்....
மும்மூர்த்திகள், டிடெக்டிவ், மினிலயன் இத்தனை இருந்தும் புக்கிங்குகள் கிடைக்கலயே!! அதுதான் அப்போதைய கன்சர்ன்...
இம்முறை அப்படி நீங்களாம் விட்டுட கூடாது என்பதற்கே இந்த நினைவூட்டல்...
ஒருமுறை சொதப்பியது இம்முறையும் சொதப்பிட கூடாது என்ற முன்னெச்சரிக்கை!!!!
அன்றைக்கே 1000 ரூபாய்க்கு மேல் சந்தா கட்டுபவர்கள், வெறும் 60 ரூபாய்க்கா அப்படி கணக்கு போட்டு யோசித்திருப்போம்? நம்புங்க விஜய், குண்டு புக்ஸ்க்கு அதுவும் கருப்பு வெள்ளை குண்டு புக்ஸுக்கு ஸ்டாக்கில் ஆயுசு கம்மி... எனவே சொதப்பாது நண்பா.
Delete///சொதப்பாது நண்பா.///---உண்மை...அனைவரும் மகிழ்ச்சியடைவது உறுதி எனும்போது நிச்சயமாக சக்ஸஸ் ஆகிடும்....
Deleteஉப்மாவோ...சோறோ...பிரியாணியோ சாப்ட கெடச்சா சரி...நேரத்துக்கேற்ப உடல்நலத்துக்கேற்ப பிடிக்கும்
ReplyDeleteபழசப் பத்தி பேசவே நாங்கள்லாம் பம்பிகிட்டு இருக்கும் போது முத்து காமிக்ஸ் டிஸ்கஷன்ல கூட 'ஸ்பைடர் ஆர்ச்சி' என்று குறுக்கு சால் ஓட்டும் நண்பர் ஸ்டீல் நெசமாவே 'ஸ்டீல்'தான். யாராலும் அசைச்சுக்க முடியாது. வாழ்த்துகள் நண்பரே! அருமை!
ReplyDeleteஎடிட்டர் சார் வணக்கம்....!
ReplyDeleteஎல்லாம் சரி...எங்கள ஏன் தேர் இழுக்க கூப்பிடலை..ஏஜண்ட்கள் பங்கு வேண்டாம்னா?...எங்களுக்கு எந்த ததகவலும் சொல்ல ப்படலை.ஆபிஸ்ல கேட்டாலும் "எங்களுக்கு எதுவும் தெரியாது...தகவல் வந்தா சொல்றோம்ங்கிறாங்க...எங்களையும் பங்குபெறச் செய்ங்க...அப்பறம் பாருங்க....நாங்களும் தெறிக்கவிடுவோம்ல....
This comment has been removed by the author.
Deleteநீங்கள் இல்லாமலா! உங்களை போன்ற விற்பனையில் உதவும் நண்பர்கள் நமது காமிக்ஸ்ன் மற்றும் ஒரு தூண் நண்பரே! நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து SMASHING '70ஐ மாபெரும் வெற்றி பெற செய்வோம்!
Deleteநீங்கள், பழனி மற்றும் சில நண்பர்கள் விற்பனை முகவர்களாக மட்டும் இல்லாமல் காமிக்ஸ் காதலர்களாகவும் இருப்பது மற்றும் ஒரு சிறப்பு!
Deleteநாம் அனைவரும் சேர்ந்து சரித்திரம்
Deleteபடைப்போம்...
முன்பதிவுக்கு என இருக்கும் போது அதை பற்றிய விமர்சனம் அதன் விற்பனையை பாதிக்காதா?. நடந்த சில விவாதங்கள் வங்குவதா? வேண்டாமா? என சந்தேகத்தில் இருந்தவர்கள் வேண்டாமே!! என முடிவெடுத்துருக்க வாய்ப்பு அதிகம்,உப்புமா வருசையில் நின்றவர்கள் சிலர் விலகி இருப்பார்கள் என்ற பயம் உள்ளது எனக்கு.
ReplyDeleteநானுமே பழமை விரும்பி இல்லை, சென்னை புத்தக விழாவில் மும்மூர்த்திகளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு மற்றதுக்கு நகர்ந்துவிடுவேன்.
அனால் சிவகாசி chef செய்ய போகும் இந்த முந்திரி பாதாம் பிஸ்தா போட்ட உப்புமாவில் எனக்கு நம்பிக்கை உள்ளது, 8ல் 4காவது நல்லா இருந்தால் எனக்கு போதும். அத்திவரதரையாவது 2059 பாக்க முடியும் அனால் இந்த உப்புமா 2022ல் மட்டுமே!!!
கிரி @ சீக்கிரம் SMASHING '70 முன்பதிவு செய்யுங்கள்!
Delete4117 - செஞ்சாச்சு சார்
Deleteகிரி @ தரமான செயல்.
Delete///முன்பதிவுக்கு என இருக்கும் போது அதை பற்றிய விமர்சனம் அதன் விற்பனையை பாதிக்காதா?.////
Delete---- கிரி@ எகெய்ன் ஹிஸ்டரி ஆன் த பாஸிடிவ் சைடு.
2012ல NBS ரூ400க்கு அறிவிக்கப்பட்ட போது அம்புட்டு விலையானு கொந்தளச்சதில 10ல் ஒருபங்கு கூட இது இல்லை....
அதேபோல 2014 ல LMS வரும்போது அதற்கு முன்பு கிளம்பிய புகைச்சல்கள், லயன் 250ன் போது....
மின்னும் மரணம் வந்தபோது பெரிய ஆர்பாட்டமே நடந்த்து....
2018ன் இரத்தப்படல இரத்தகளறிகள்... என ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கு....
எதற்கெலாம் எதிர்ப்பு பலமாக கிளம்புதோ அதெல்லாம் மாஸ் ஹிட்டு....
அவ்வளவு ஏன் சமீபத்திய இரத்தபடலம் 2.0 வும் இரத்தகளறியை கிளப்ப தவறல...அபாரவெற்றி....!!!
சோ, "Smashing 70 வேறு லெவல் வெற்றி அடையும்"🤜🤛🤜🤛🤜🤛
2ம் , 3ம் வருடங்களில் வரவைப்பது உங்களை போன்ற ஆர்வலர்கள் கைகளில் தான்.... வெறும் பீரோ நிரப்பிகளாக இல்லாமல் பார்த்துக்கிட்டாவே பட்டையை கிளப்பும்...
பாஸிடிவோ, நெகடிவோ விமர்சனங்கள் அத்தியாவசியமானவை...வெறுமனே வாங்கி தடவிபார்த்துட்டு சேகரிப்பில் வைப்பதை தவிர்த்தாலே போதுமானது......
*** *ஒரு பிரளயப் பயணம்* ***
ReplyDeleteTop Class ஓவியங்கள் , அதிலும் 203ம் பக்கத்தில் அந்த கோணம், ப்ரேம் போட்டு மாட்டலாம். கதை ஆரம்பிக்கவே கிட்டதட்ட 70 பக்கங்கள் ஆகிவிடுகிறது. கிளை மாரி செல்லும் இடம் மட்டுமே எனக்கு சுவாரசியமாக பட்டது மற்றவை எதிர்பார்த்த மாதிரியே செல்கிறது.
மார்க் 7/10
Smashing 70 கண்டிப்பாக ஹிட் ஆகும். இது ஒரு அருமையான முயற்சி,
ReplyDeleteஇது பழமை, Feel good factor மற்றும் தரத்தை விரும்புவர்களுக்கான தனித்தடம், இதை விரும்புபவர்கள் மட்டுமே வாங்கப் போகிறார்கள், இவை வருவதால் வேறெந்த வெளியீடு வருவதும் பாதிக்கப்படப் போவதும் இல்லை, இவை வெற்றியடைந்தால் இம்முயற்சியை தொடர்வதில் யாருக்கென்ன வருத்தம்,
மாறாக இவற்றை புராதனம், உப்மா என்று விமர்சனம் செய்வது ரசனை சார்ந்து ஒரு தரப்பிலான வாசகர்களை இழிவுபடுத்தும் செயலாகவே கருதுகிறேன்.
எடிட்டர் கூட இவற்றை வெளியிட்டுவிட்டு ஏதோ பெரும் தவறு செய்தது போல் இனி சார்லி வேண்டும், ஜார்ஜ் வேண்டும் என்று கேட்டு விடாதீர்கள் என்று சொல்வது தர்மசங்கடமாக உள்ளது.
பிடித்ததை கேட்பது வாசகரின் உரிமை, அது வெற்றியானால் தொடர்வது பதிப்பாளரின் விருப்பம், இதிலென்ன உப்மா, புராதனம் என்ற கேலி கிண்டல் என்று புரியவில்லை,
இத்தகைய ரசனை சார்ந்த வெறுப்புணர்வு பிரச்சாரங்கள் ஏற்கனவே அரிய வகை உயிரினமாக பார்க்கப்படும் காமிக்ஸ் வாசகர்களை இன்னும் குறைக்கவே செய்யும்.
// எடிட்டர் கூட இவற்றை வெளியிட்டுவிட்டு ஏதோ பெரும் தவறு செய்தது போல் //
Deleteஎடிட்டர் நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் ஆசிரியர் எழுதவில்லை நண்பரே. அவர் சார்லி வேண்டும் ஜார்ஜ் வேண்டும் என கேட்காதீர்கள் என்றால் அதன் பின்னால் பல காரணங்கள் இருக்கும் அதனை கண்டிப்பாக நம்மால் யூகிக்க முடியாது.
வரும் முத்து 50வது ஆண்டில் வரவுள்ள அனைத்து இதழ்களையும் வெற்றி பெற செய்வோம்.
நிச்சயமாக வெற்றி பெரும்... அதேபோல ஒரு கதை பிடிக்கவில்லை என்றால் அமைதி காப்பது நல்லது... பிறக்கப்போகும் குழந்தை நன்றாகவே பிறக்கட்டும்... அது பிழைத்து கொள்ளும், பிழைக்காது என்ற ஆருடம் எல்லாம் இப்போது எதுக்கு என்பதே தோன்றுகிறது.
ReplyDeleteநானும் வந்துட்டேன்
ReplyDeleteMy 2 cents:
ReplyDeleteS70 fans: negative விமர்சனங்களை கண்டுக்காதீங்க. ரத்தப்படலம் 2.0 பாக்காத நெகடிவா. பழனிவேல் கேவி மாதிரி அனைத்து இடங்களுக்கும் தகவலை எடுத்தது செல்லுங்கள். வாங்க விருப்பம் உள்ள நண்பர்களுக்கு டீட்டெயில்ஸ் குடுங்க. ஆட்டோமேட்டிக்கா 700 வந்துடும்.
S70 critics: இது ஒரு ஆப்பர்சசுனிட்டியா பாருங்க. இது செயிச்சா ஒரு கார்ட்டூன் ஸ்பெசலோ அல்லது க்ரிஸ் கலெக்சனோ, புளி மூட்டையோ (இளம்டைகர் தொகுப்பு) இதே மாதிரி கேட்டு வாங்கலாம். முடிஞ்சா சந்தாவை கட்டி ஜெயிக்க உதவுங்க.
அந்தக் கதையில் ஓட்டுப் போட்டவங்க எல்லாரும் ஒரே கூட்டணியில் நின்னு ஒரு நாள் உப்புமா, ஒரு நாள் பாவு பாஜி, ஒரு்நாள் பிரியாணின்னு ஓட்டு போட்டிருந்தா 100 பேரும் சந்தோசமாயிருந்தருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும். (Chef பாடு திண்டாட்டம். ஆனா அதைப்பத்தி நாம ஏன் கவலைப்படனும் 😉)
நான் கட்டிட்டேன் சந்தா. 4129. & 4130.
// நான் கட்டிட்டேன் சந்தா. //
Deleteமகிழ்ச்சி மகேந்திரன்
// S70 critics: இது ஒரு ஆப்பர்சசுனிட்டியா பாருங்க. இது செயிச்சா ஒரு கார்ட்டூன் ஸ்பெசலோ அல்லது க்ரிஸ் கலெக்சனோ, புளி மூட்டையோ (இளம்டைகர் தொகுப்பு) இதே மாதிரி கேட்டு வாங்கலாம். முடிஞ்சா சந்தாவை கட்டி ஜெயிக்க உதவுங்க. //
Deleteஅருமையாக சொன்னீங்க.
வேதாளர் முகமூடி வீரர் மாயாவி யாக என் காமிக்ஸ் உலகின் முதல் ஹீரோ. மாண்ட்ரேக் இன் நள்ளிரவு நாடகம் இன்னும் என் மனதுக்குள் நிழலாடிக் கொண்டு இருக்கிறது. ரிப்கிர்பியை பொருத்தவரை ரத்தக் கரம் எனக்கு மிகவும் பிடிக்கும். காரிகன் இன் டாப் 10 ஸ்பெஷல் இல் வந்தது என்று நினைக்கிறேன் அந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். இவர்கள் அனைவரும் திரும்ப வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆசிரியரே உப்புமா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவசரம் என்றால் வீட்டில் நான் உப்புமா தான் கிளறிக் கொள்வேன். உப்புமா வாழ்க உப்புமா வாழ்க உப்புமா வாழ்க உப்புமா வருடாவருடம் தொடர்க.
ReplyDeleteS'70 எனது சந்தா எண் 4025
ReplyDeleteசூப்பர் சூப்பர்.
Deleteஅன்புள்ள ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.
ReplyDeleteஆசிரியரின் இந்தப் பதிவு என் நெஞ்சை நெகிழச் செய்தது. இந்தச் சிறுகாமிக்ஸ் வட்டத்தை சந்தோஷமாக வைத்திருக்க நினைக்கும் அவரின் பெரும் மனசு இறைவன் நமக்கு கொடுத்த கொடை என்பதில் வியப்பில்லையே.ஆசிரியரை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.சிவகாசியில் என் உறவினர்கள் இருக்கின்றார்கள் , சிவகாசி அருகிலிருக்கும் ராஜபாளையத்தில் என் குல தெய்வ சாமி இருக்கிறது , ஆனால் சிவகாசி என்றவுடன் என் நினைவுக்கு வருவது நம் அன்பு ஆசிரியரும் காமிக்சும் தான்.
இங்கே சில மாதங்களாக சிறிய சர்ச்சைகள் நடந்து வருகின்றன. நான் பழங்காமிக்ஸ் ரசிகன் தான்.ஆனால் புதுமைக்கு எதிரியல்லவே.ஆசிரியரின் அனைத்து முயற்சிக்கும் ஆதரவு தந்தவர்கள் நாங்களும் தான். எனவே பழங்காமிக்ஸ் விரும்புவர்களின் ரசனைகள் கேலி செய்யப்படுவது கண்டு மனம் கசந்தது உண்டு.
வருடம் முழுவதும் பழைய சோறு கேட்கவில்லை.ஆனால் முத்து ஆண்டு விழாச் சிறப்பிதழில் மட்டும் இரண்டு குண்டு புத்தகங்களில் ஒன்றில் மட்டும் எவர்கிரீன் நாயகர்களின் மறுபதிப்பாகத கதைகளைத் தாருங்கள் என்று கேட்டோம்.அதுவும் கறுப்பு வெள்ளையில் தான் கேட்டோம். ஆசிரியர் மறுத்தார்.நண்பர்களால் மனம் புண்பட்டோம். பிறகு நடந்ததை அனைவரும் வருவோம்.
காமிக்ஸில் பழைய ஹீரோ புதிய ஹீரோ என்றெல்லாம் கிடையாதுங்க. பழைய நெடி அடிக்கிறது என்று சொல்வது அந்தப் படைப்பாளிகளுக்குச் செய்யும் அவமரியாதை. ஒரு படைப்பு எப்போதும் ஆராதிக்கப்படும்.ரசனைகள் பலவிதம்.ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை.ஒருவரின் ரசனையை கிண்டல் செய்வது சரியல்ல.
S70 வெற்றியடைவது உறுதி.ஒற்றுமையாக நண்பர்கள் செயல்பட்டால் முன்பதிவு இலக்கை கடந்துவிடலாம்.நண்பர்கள் ஆதரவு தரவேண்டுகின்றேன்.வேதாளன் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.ஆனால் மாண்ட்ரேக் , கிர்பி மற்றும் காரிகன் கதைகளில் மிகச்சிறந்த கதைகள் ஏராளம் உண்டு.
மாண்ட்ரேக் கதைகளில் கொலைக்கு விலை பேசும் கொடியவன் , இருளின் விலை இரண்டு கோடி போன்ற அற்புதமான கதைகள் உண்டு.
ரிப்கிர்பியின் கதைகளில் ரோஜா மாளிகை ரகசியம் , காசில்லா கோடீஸ்வரன் போன்ற சிறந்த கதைகள் உண்டு.
காரிகன் கதைகளில் வைரஸ் X , மடாலய மர்மம் போன்ற பட்டயக் கிளப்பும் கதைகள் உண்டு.
2022 ஆம் ஆண்டு நம் காமிக்ஸ் உலகின் மிகச் சிறந்த ஆண்டு. பல காமிக்ஸ் சிறப்பிதழ்கள் வருகை தர உள்ளன. நண்பர்கள் நம்மிடையே சிறு மாற்சரியங்களை மறந்து ஒன்றுபட்டு காமிக்ஸ் தேரை இழுக்க வேண்டுகின்றேன்.மகிழ்வோம் !!!!!
மகிழச் செய்வோம். !!!!.
நன்றி.வணக்கம்.
விரிகுடா வாய் . ஒரு காவலனின் கதையில் மிகவும்ரசித்த இடம் உதய் இன்னுமா ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் சார்லியின் ஒருகாவலனின் கதை ஒரு கள்ளப் பருந்தின் கதை சிறை மீட்டிய சித்திரக்கதை ஒரு நாள்மாப்பிள்ளை போன்றகதைகள் அன்றையஆக்ஷன் கதைகளுக்கு நடுவே கிராபிக் நாவல்களாய்ஜொலித்தவை. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஉங்கள் ஞாபகசக்தி அபாரம்.
Deleteநண்பர்களே ரீகல்காமிக்ஸ் ஆசிரியரிடம் வேதாளருக்கு ராயல்டி எவ்வளவு என கேட்டபோது அவர் சொன்ன விலை தலைசுற்ற வைத்தது..அதேபோல் மாண்ட்ரேக்கும். ரிப்கெர்பியும் காரிகனும் எங்கேயோ போய் சந்தையில் கூறுகட்டி விக்கிற இடத்தில் நம்ம ஆசிரியர் போய் வாங்கிவரவில்லை...ஒரு விஷயத்தை தெளிவா சொல்லுகிறேன்.. உங்களுடைய நெகட்டிவ் விமர்சனம் ஆசிரியர் காசுகொடுத்து வாங்கிவைத்த கதைகளுக்கான தொகைக்கும் வேட்டுவைத்து..எங்களுக்கு பிடித்தமான கதைகளையும் வரவிடாமல் செய்துவிட வேண்டாமே...நிச்சயமா இரத்தப்படலம் வெளிவர எந்த அளவுக்கு அவமானங்களை சந்தித்தேனோ அதைவிட கூடுதலாக வந்தால்கூட smashing 70 ன்கு சந்திக்க நான் தயார்... ஆசிரியர் தெளிவாக விளக்கி சொல்லிவிட்டார்.இது எந்த புதிய கதைகளையும் புதிய வரவுகளையும் பாதிக்காது என்று..இருந்தும் இப்படி கம்புசுத்துவது ஏன் என புரியவில்லை..உப்புமா பார்ட்டிகள். ரிடையர்டு பார்ட்டிகள் வயசான பழங்கள் என்ற கேளிவார்த்தைகளை பயன்படுத்தி பழைமை விரும்பிகளை கொச்சைபடுத்த வேண்டாம்...முடிஞ்சா தேர்வடத்தை பிடிங்க இல்லையா உங்க இஷ்டம்...
ReplyDeleteஎனது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொன்றிலும் 30 புத்தகங்கள் என்னிடம் புக்கிங் வந்துள்ளது...ஆயிரம் கை மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது... நிச்சயம் smashing 70 வெற்றியடைந்து தொடரும் ஆண்டுகளில் க்ளாசிக் ஹூரோக்களை ரசிப்போம்...
ReplyDeleteசூப்பர் நியூஸ் பழனி. அட்டகாசமான ஆரம்பம்.
Deleteநன்றி நண்பரே...
Delete//பீரோ ரொப்பிகள்//
ReplyDeleteஎன்னிடம் லயன் முத்து என எனது கலெக்ஷன் அனைத்தும் பீரோவில்தான் பத்திரமாக உள்ளது ..இரத்தப்படலம் என் உயிர்...அதுவும் பீரோவில்தான் உள்ளது...வேலைக்கு போகும் போதும் ஊருக்குபோகும்போதும் பாத்ரூம் போகும் போதும் அத்தனை புத்தகங்களையும் தூக்கிக்கிட்டா போக முடியும்..??
*வளைகுடாவாய்* கணவனை இழந்த ஒரு பெண்மணிக்குபாடிகார்டாகசார்லிக்குபதிலாகசெல்கிறார்சார்லியின் அஸிஸ்டெண்ட்ஸ்வீனிஅந்தப் பெண்ணோயாரையும் மதிக்காத.,யாரிடமும் ஒட்டாத, சிடுசிடுப்பான, சிடுமூஞ்சியானபெண்.ஒரு கட்டத்தில் கால் ஒடிந்து நடக்க இயலா சூழல்நேர்கிறது. அந்த நேரத்தில்நடுத்தரவயதான இருவருக்குள்ளும் ஒருமெல்லிய உணர்வு தோன்றுகிறது. பின்புமீண்டும் இயல்பான பழைய சிடுசிடுப்பு குணம்அப்பெண்ணிடம் தோன்ற நமக்குள் ஒத்துவராது என்று நடையைக்கட்டுகுறார் ஸ்வீனி அப்போது அந்தப் பெண் வருந்திக் கூறுவதுதான்உலகப்புகழ்பெற்றஅந்தவாக்கியம்தான் *என்வளைகுடாவாய் கெடுத்துவிட்டதே* ஆக்ஜன் கதைகள் மட்டம் வெளியுடாமலெ இது போலவெரைட்டியான பல கதைகளையும் வெளியிட்டு வாசகர்ளின்ரசனையைஅடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றார் நமதுசீனியர்.80களில் ஜோல்னாபைதாடி ஜிப்பாவைத்துக் கொண்டு, மற்றவர்களைஒரு அலட்சியப்பார்வை பார்த்துக் கொண்டு
ReplyDeleteஜயகாந்தன் தெரியுமாகிருஷ்ணமூர்த்திதெரியுமா என்றுஎன்று சிலர் வலம் வருவார்கள் முத்துகாமிக்ஸ்கையில் வைத்துக்கௌண்டுஅவர்களை அலட்சியமாகப்பார்த்துக் கொண்டு வலம்வர்வேன் ஹும் முத்துகாமிக்ஸ்தெரியுமா (மனதுக்குள்) என்ற கேள்வியோடு. சார்லியின் பலகதைகள் எனக்கு இதுபோன்ற பெருமித உணர்வைக்கொடுத்தன. கரூர் ராஜ சேகரன்
///80களில் ஜோல்னாபைதாடி ஜிப்பாவைத்துக் கொண்டு, மற்றவர்களைஒரு அலட்சியப்பார்வை பார்த்துக் கொண்டு
Deleteஜயகாந்தன் தெரியுமாகிருஷ்ணமூர்த்திதெரியுமா என்றுஎன்று சிலர் வலம் வருவார்கள் முத்துகாமிக்ஸ்கையில் வைத்துக்கௌண்டுஅவர்களை அலட்சியமாகப்பார்த்துக் கொண்டு வலம்வர்வேன் ஹும் முத்துகாமிக்ஸ்தெரியுமா (மனதுக்குள்) என்ற கேள்வியோடு. ///
அட்டகாசம் ராஜசேகர் ஜி!
//எல்லாம் சரி...எங்கள ஏன் தேர் இழுக்க கூப்பிடலை..ஏஜண்ட்கள் பங்கு வேண்டாம்னா?...எங்களுக்கு எந்த ததகவலும் சொல்ல ப்படலை.ஆபிஸ்ல கேட்டாலும் "எங்களுக்கு எதுவும் தெரியாது...தகவல் வந்தா சொல்றோம்ங்கிறாங்க...எங்களையும் பங்குபெறச் செய்ங்க...அப்பறம் பாருங்க....நாங்களும் தெறிக்கவிடுவோம்ல.//
ReplyDeleteமெய்யாலுமே சார்.. ஆபிஸில் கேட்டால் சரியான தகவல் இல்லை..நாங்கள் வாசகராக இருப்பதால் தெரிந்துகொள்கிறோம்..ஆனால் வாசகரல்லாதவர்களுக்கு ஒரு முறையான அறிவிப்பு தேவை சார்...தகவல் தெரிந்தால் இன்னும் உத்வேகத்துடன் உழைக்க ஏதுவாக இருக்கும்...