Powered By Blogger

Monday, February 22, 2021

வணக்கம் சென்னை !

 நண்பர்களே,

வணக்கம். வரும் புதனன்று (24 பிப்ரவரி) துவங்கவுள்ள சென்னைப் புத்தகத் திருவிழாவில் நமது ஸ்டால் எண்கள் : 105 & 106 ! சென்றாண்டைப் போலவே இம்முறையும் நமக்கு டபுள் ஸ்டால் ! சொல்லப் போனால் இன்றைய காலகட்டத்தில் நெருக்கியடித்து நில்லாது கொஞ்சமேனும் இடைவெளிகளோடு ஷாப்பிங் செய்திட இது அத்தியாவசியம் என்பேன் ! இரண்டாவது வாயிலை ஒட்டிய துவக்கத்திலேயே இம்முறை ஸ்டால் கிடைத்திருப்பது விற்பனைக்கு உதவிடுமா என்பதை அடுத்த 15 நாட்கள் சொல்லிடக்கூடும் ! Fingers crossed !




சென்றாண்டைப் போலவே இம்முறையும் முந்தைய வருஷத்து மொத்த புக்ஸ் pack ; ஜேசன் ப்ரைஸ் pack ; இத்யாதி packs என்று நம்மிடம் பண்டல்கள் இருக்கும். அதே சமயம் இந்தாண்டில் கூடுதல் டிஸ்கவுண்ட் தந்து புக்ஸை காலி செய்யும் முயற்சிகளுக்கு BAPASI அனுமதிகள் தந்திருக்கவில்லை என்பதால் - 10% டிஸ்கவுண்ட் மாத்திரமே ஏகத்துக்கு அமலில் இருக்கும் ! 

விற்பனைகளின் விறுவிறுப்பைப் பொறுத்து - "யார் அந்த மாயாவி ?" புக்கை ஸ்பெஷல் வெளியீடாய் நடுவாக்கில் இறக்கிடலாமென்ற எண்ணம் மேலோட்டமாய் தலைக்குள் ஓடிவருகிறது ! முதல் வாரத்து நம்பர்கள் தீர்மானித்திடும் - இது அவசியப்படுமா ? இல்லையா ? என்பதை ! 

So ஓராண்டின் தொய்வுக்குப் பின்பாய் நமது கேரவனின் சக்கரங்கள்  திரும்ப சுழலத் துவங்கிடவுள்ளன - BAPASI அமைப்பின் அன்புடன் ! இனி நிகழ வேண்டியவற்றை பெரும் தேவன் மனிடோவும், நீங்களும் பார்த்துக் கொள்வீர்களென்ற நம்பிக்கையில் நடையைக் கட்டுகிறேன் !

And எப்போதும் போலவே சென்னையில் நம் ஸ்டாலில் ஆண்டுச் சந்தாக்களைச் செலுத்தவும் செய்திடலாம் ! அப்புறம் முக்கியமாய் மாஸ்க் அணிந்திட மறந்திட வேண்டாமே - ப்ளீஸ் ?

Bye all !! Have a safe & succesful week ahead ! 

185 comments:

  1. உள்ளேன் ஐயா..!!

    விற்பனை சிறக்க வாழ்த்துகள் சார்..!!

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. // புத்தகத் திருவிழாவில் நமது ஸ்டால் எண்கள் : 105 & 106 ! //
    இன்றைய மிகச் சிறப்பான செய்தி,விற்பனை சிறக்க வாழ்த்துகள் சார்...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சார்....


    விற்பனை சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  5. வாழ்த்துகள் சார்🌹🌹🌹🌹

    வழக்கம் போல விற்பனை களைகட்டட்டும்...💐

    ReplyDelete
  6. நல்ல செய்தி தந்ததொரு நல்ல பதிவு 😁

    ReplyDelete
  7. அருமை சார்.. பின்சீட்டிலிருந்து முன்சீட்டுக்கு வந்தாச்சு சார்.. நிச்சயம் அது நமக்கு ப்ளஸ் பாயிண்ட்தான் சார்..இரத்தப்படல முன்பதிவையும் அங்கே சேத்து ஆரம்பிக்கலாமே சார்...?

    ReplyDelete
  8. அப்படியே தங்களது வருகையும்... சீனியர் எடிட்டர்..அய்யா ஸ்டால் வருகையை எப்போது என உறுதிப்படுத்துங்களேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. 80...53...!

      நகர்வலம் வர ஏதுவான அகவைகளுமல்ல ; காலங்களுமல்ல !

      Delete
    2. //நகர்வலம் வர ஏதுவான அகவைகளுமல்ல ; காலங்களுமல்ல !//
      சரியான முடிவு சார்!

      Delete
    3. நிசம்தான் எடிட்டர் சார்...!!!

      45க்கே இங்கன ஒரு வருடமாக நோ அவுட்டிங்... நேராக வீட்டில் இருந்து கடை....கடை டூ வீடு!!!

      நிறைய கண்ணாலம், காது குத்துலாம் வந்து வந்து போகுது...!
      ஆனா சொந்தகாரங்க ஏதும் நினைத்தால் கூட பரவாயில்லை என கப்சிப்.

      காது குத்துலயும் பந்த கெடாவுலயும் கறிசோறுனு ஒரு நொடி எச்சில் ஊறினாலும் கூட , மூக்குல அந்த நீடிலை விடுற காட்சி ஞாபகம் வந்தவுடன் பதை பதைப்போடு பின்சீட்டு சோபாவுல தானாகவே உட்கார்ந்துடுது....

      வூட்டுக்கு பக்கத்திலே இருக்கும் கறிகடைக்கே கூட மதியான வேளைல ஒரு சரக் ஒரு பரக் அவ்வளவே....!!!

      நிலவரம் சரியாகும் பட்சத்தில் ஈரோட்டில் பட்டறையை போடுவோம்.

      இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கனுமோ...!!!!

      Delete
    4. இங்கிட்டும் இதே நிலைமை தான் நண்பரே.இன்னும் எத்தனை நாளைக்கோ இப்படி பம்முறது?!

      Delete
  9. சார்! மகிழ்ச்சி! சென்னை புத்தகத் திருவிழாவில் நமது ஸ்டால்! ஒருவருடம் கழித்து மீண்டும் புத்தக திருவிழா கண்களில் ஆனந்த கண்ணீர்! வெற்றி நமதே!

    மாஸ்க் பற்றிய போஸ்டர் உண்மையில் செம! பலரை இது கவரும்! எல்லோருக்கும் தெரியும் வண்ணம் இந்த போஸ்ட்டரை தொங்க விடுங்கள்!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. கூடுதல் டிஸ்கவுண்ட் தந்து புக்ஸை காலி செய்யும் முயற்சிகளுக்கு BAPASI அனுமதிகள் தந்திருக்கவில்லை//

    சற்று ஏமாற்றமே..ஆனால் நீங்கள் நினைத்தால் மாற்றுவழியில் செய்யலாம் சார்..

    ReplyDelete
    Replies
    1. நம் மொட்டைமாடி புக் பேரில் நான் நினைப்பது சாத்தியம் பழனி...800 அரங்குகள் கொண்ட ஒரு மெகா நிகழ்வில் பராக்கு பார்க்க மட்டுமே எனக்கு சாத்தியம் !

      Delete
  12. All the best and good luck for safe and wonderful sale in Chennai Book Fair!

    ReplyDelete
  13. Stay Safe and Wish a Happy Gathering and Sales !

    ReplyDelete
  14. சென்னை புத்தக விழா மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  15. இரத்தப்படலத்தை விளம்பரம் செய்யும் போது, ஆங்கிலத்தில் நாவலாகவும், திரைப்படமாகவும் இந்த கதை வந்திருக்கிறது என்றும், ஜேஸன் பார்னே ஆங்கில திரைப்படத்தின் தாக்கம் இதில் இருக்கும் என்று தகவல் கொடுத்தால் யாராக இருந்தாலும் மறதிக்காரரை ஒருமுறை வாங்க நினைக்கலாம்...

    ReplyDelete
  16. // வரும் புதனன்று (24 பிப்ரவரி) துவங்கவுள்ள சென்னைப் புத்தகத் திருவிழாவில் நமது ஸ்டால் எண்கள் : 105 & 106 ! சென்றாண்டைப் போலவே இம்முறையும் நமக்கு டபுள் ஸ்டால் ! //

    விற்பனை சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  17. I wish for book fair Success! Yaarintha maayavi good choice for bookfair!

    ReplyDelete
  18. சென்னை புத்தகத் திருவிழாவில் இரட்டை அரங்கு கிடைத்தமைக்கு வாழ்த்துகள் சார்! விற்பனையிலும் இரண்டு மடங்கு சாதிக்கும் எனக் கட்டாயம் நம்பலாம்!

    புத்தகத் திருவிழா சிறப்பிதழாக யார் அந்த மாயாவி களம் காணவிருக்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

    வாழ்த்துகள் அனைவருக்கும்!! நன்றி!!!

    ReplyDelete
  19. நல்ல செய்தி ஆசானே.
    புததகத் திருவிழா மாபெரும் வெற்றி பெற எல்லாம் வல்ல முருகப் பெருமானை வேண்டி வணங்குகின்றேன்.

    ReplyDelete
  20. யார் அந்த மாயாவி மிகச் சிறந்த வரவு.வரட்டும் ,வெல்லட்டும்.

    ReplyDelete
  21. புத்தக திருவிழாவில், நமது ஸ்டாலில், சிறப்பான விற்பனை பெற வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  22. விஜயன் சார் தங்களது தயாரிப்பில்தான்
    11 பாக மின்னும் மரணம் வந்தது.
    இப கூட 6 *** 6 பாகங்களாக வந்தது.
    அர்ஸ் மேக்னா வெறும் மூன்று பாகங்களே.
    தரமான திறமையான பைண்டிங்கும்
    அவை எடை ஏற்றி காய வேண்டிய
    அவகாசமும் கொடுத்தால் நல்லது.
    புதிய இபவை தயவு செய்து
    புதுப்பொலிவுடன் இரண்டு பாகங்ளாக
    வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  23. சார்,

    உங்களின் இந்த பதிவு செம "நச்" !

    ReplyDelete
  24. விற்பனைகளின் விறுவிறுப்பைப் பொறுத்து - "யார் அந்த மாயாவி ?" புக்கை ஸ்பெஷல் வெளியீடாய் நடுவாக்கில் இறக்கிடலாமென்ற எண்ணம் மேலோட்டமாய் தலைக்குள் ஓடிவருகிறது
    ஏற்கனவே சொன்னது போல் வண்ணத்தில் தானே

    ReplyDelete
  25. /// 80...53...!

    நகர்வலம் வர ஏதுவான அகவைகளுமல்ல ; காலங்களுமல்ல ///
    காலம் அல்ல என்பது ok. ஆனால் அகவை 53 என்பது வாலிபத்தின் வால் பகுதி என்று கொள்வோமே. நோட் தட் பாய்ண்ட் யுவர் ஆனர்.
    53 வயதில்தான் தலைவர் ரிக்க்ஷாக்காரன் படத்தில் ரிக்க்ஷா ஓட்டிக்கொண்டே கம்பு சுத்தினார். உலகம் சுற்றும் வாலிபனாக ஜப்பான், தாய்லாந்து,மலேஷியா என வெளிநாடுகளில் வலம் வந்தார். (மைண்ட்வாய்ஸ்: 53ன்னு சொன்னதுமே சீனியர்க்கு எல்லாம் எவ்ளோ வேகம் வருது பாருய்யா..!..!)
    Anyhow. புத்தகவிழாவும், நமது ஸ்டால் விற்பனையும் சிறப்பாக அமைந்திட நல்வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. // அகவை 53 என்பது வாலிபத்தின் வால் பகுதி என்று கொள்வோமே. நோட் தட் பாய்ண்ட் யுவர் ஆனர். //

      Point taken யுவர் ஆனர் :-)

      Delete
    2. 10 சார் திரும்ப வந்ததும் அடிச்சதோ முதல் பாலிலே 6. 80+ ஈஸ்ட்வுட் கலக்கல் படங்களை இயக்கிட்டிருக்கிறார். அந்த மாதிரி எடிட்டர் இன்னும் பல்லாண்டு கலக்க பிரார்த்தனைகள்.

      சென்னை புத்தகவிழா நமக்க வேண்டிய விற்பனை பூஸ்டை அளிக்க பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துகள்.

      பத்து சார் மீண்டும் புல் பார்மில் இறங்கியது மகிழ்ச்சி. அனைத்தும் விரைவில் சரியாக பிரார்த்தனைகள்.

      Delete
    3. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் தலைவர் புகழ் மறைவதில்லை....😍😍😍😍😍

      Delete
    4. பத்து சார் ...காதைக் கொண்டு வாங்க - ஒரு ரகசியம் சொல்றேன் : நம்ம ஊட்டாண்ட கூட ஒரு வாலிபர் உள்ளார் !

      கம்பு சுத்தணுமா ? மலேஷியா ; சப்பான் போணுமா ? உலகம் சுத்தணுமா ? அவர் ரெடியோ ரெடி ! And வய்சு ஒன்லி 80 !! நாங்க தான் வீட்டுக்குள்ளாற பிடிச்சு வைச்சிருக்கோம் ; இல்லாங்காட்டி கதையே வேற !

      Delete
    5. ம.ச.மா.@ நண்பரே நீங்கள் தல ரசிகர்னு தெரியுது.... எனில் பெயரை கொஞ்சம் மாற்ற வேண்டுகிறேன்.
      நம்ம சனத்தை நீங்க வைத்துள்ள பெயரில் அழைக்க சங்கடமாக இருக்கு....!!!

      "மஞ்சள் சட்டை"---க்கு அடுத்து கம்பீரமாக ஏதாவது பின்னொட்டை சேருங்களேன்...ப்ளீஸ்..🙏

      Delete
    6. அப்புறம் Why Worry. சீனியர் சிங்கத்தின் சிறு வயதில் அப்படின்னு ஆரம்பிச்சு போட்டுத் தாக்க வேண்டியதுதானே சார்?

      Delete
    7. தலைப்பு கூட ரெடி சார்.
      " இரும்புக்கை மாயாவி முதல் இன்றுவரை ".

      கொடி பிடிக்க விருப்பமுள்ளவர்கள் வரிசையில் வந்து நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

      Delete
    8. அருமையான ஐடியா பத்து சார்...

      அடுத்த ஆண்டு முத்துவின் 50வது (பொன்விழா தானே...?) ஆண்டு...!!!
      இப்ப ஆரம்பித்து 50வது சிறப்பிதழ் முடிய "சீனியர் சிங்கத்தின் சிறுவயதில்.....""" கொண்டு போகலாம்.... சூப்பரா இருக்கும்....!!!

      Delete
    9. எடிட்டர்: ஏம்ப்பா..எல்லாம் நல்லாத்தானேப்பா போய்க்கிட்டு இருந்தது? why this கொல வெறி?

      Delete
    10. அட்டகாசமான idea சார். சீனியர் சிங்கத்தின் சிறுவயதில்.

      Delete
    11. அது ஒண்ணுமில்லீங்க..பழைய பன்னீர் செல்வமான்னு Just ஒரு சின்ன Self analysis. thats all. .

      Delete
    12. "மஞ்சள் சட்டை"---க்கு அடுத்து கம்பீரமாக ஏதாவது பின்னொட்டை சேருங்களேன்...ப்ளீஸ்..🙏//

      காமெடிக்காக வைத்தது. மாற்றி விடுகிறேன் ப்ரோ.

      Delete
    13. ""மஞ்ச சட்டை மன்மதன்""---

      இது டாப்பா இருக்கு.....

      இளம் டெக்ஸக்கு ஏற்றவாறு....!!!!

      👌👌👌👌👌👌

      Delete
  26. சென்னைப் புத்தகவிழாவால் நமது காமிக்ஸ்கள் நிறைய விற்று குடோன் குசேலராக நல்வாழ்த்துகள் ஆசானே.

    ReplyDelete
    Replies
    1. அருமை சரவணாரே... நிறைவான வாழ்த்து...

      இத்தனை இதயங்கள் எடிட்டர் சாருக்கு துடிக்கையில் அவர் கைகள் தான் ஞாயிறுகளில் ஓய்வெடுக்குமா என்ன????

      Delete
  27. சென்னை புத்தகவிழாவில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி சார்! இந்தாண்டும் விற்பனையில் களை கட்ட முன்கூட்டிய வாழ்த்துகள்! ஏதாவது சர்ப்ரைஸ் இதழ் போடுவதாக இருந்தால் ரீபிரிண்ட் அல்லாமல் ஏதாவது புதிய கதைகளாக முயற்சிக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. எந்தவொரு மாதத்திலாவது கொஞ்சமேனும் அவகாசம் கிடைத்தால் தானே எதையெனும் புதுசாய்த் திட்டமிட முடியும் சார் ? நெடுக ஒன்றன் பின் ஒன்றாய் முழுப்பரீட்சைகள் ரவுண்டு கட்டும் போது ஆபத்பாந்தவராய்க் கண்ணில் தெரிவன மறுபதிப்புகளே !

      Delete
  28. சென்னை புக் பெயார் இல் ஸ்டார் கிடைத்து மகிழ்ச்சியாக உள்ளது. விற்பனை சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. புத்தக விழாவில் விற்பனையில் சிறக்க வாழ்த்துகள்.

    வெல்கம் பேக் பத்மநாபன் சார்.

    ReplyDelete
  30. சென்னை புத்தக விழாவில் - நமது காமிக்ஸ் - களின் சிறப்பான விற்பனைக்கு வாழ்த்துக்கள் சார்..
    அனைவரிடமும் தேங்கிக் கிடக்கும் சோகங்கள் ( சிறிதேனும் )மறைய நமது காமிக்ஸ் உதவும் என்பதால் கண்டிப்பாக அனைவரும் வருகை தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

    ReplyDelete
  31. டயபாலிக் போஸ்டர் மிக்க அருமை சாரே.

    ReplyDelete
    Replies
    1. காலத்தின் கட்டாயம் அல்லவா சார் ?

      Delete
  32. ஒரு கசையின் கதை நேரமின்மையால் இப்போது தான் படிக்க முடிந்தது.மிக்க நன்றாக உள்ளது.கராம்பா என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரிக்கின்றனர் மெக்சின்கள்.கராம்பா என்றால் என்ன அர்த்தம் நண்பர்களே?

    ReplyDelete
    Replies
    1. 'தூத்தேறி..' ; 'இழவு " - போல கடுப்பையோ, திகைப்பையோ வெளிப்படுத்தும் சொல் சார் !

      Delete
    2. ரொம்ப நன்றி ஆசிரியர் சார்.

      Delete
    3. படிக்கும் போது இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் முழித்தேன், இப்போது விடை தெரிந்துவிட்டது. நன்றி.

      Delete
  33. கோழைகளின் பூமி கிராபிக் நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.ஆசிரியர் மொழிபெயர்ப்பில் மிகவும் மெனக்கெட்டிருக்கின்றார் என்பது கதை முழுக்க அவர் பேனா தூவியிருக்கும் வார்த்தைப் பிரயோகங்களிலிருந்தே தெரிகின்றது. " சாகத் தான் போகிறோமோ எனில் வாழ அவசியம் தான் என்ன " போன்ற வைரவரிகள் ஆசிரியரின் சிறந்த மொழிபெயர்ப்புக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு.நன்றி ஆசிரியர் அவர்களே!!!

    ReplyDelete
  34. அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு,

    இரத்தப்படலம் முன்பதிவு குறித்து ஆகஸ்ட் 19, 2020 தேதிய பதிவில் இரத்தப்படலம் 2 புத்தகங்களாக வெளிவர இருப்பது குறித்து பகிந்திருந்தீர்கள்.

    தற்போதைய பொருளாதார சூழலில் அனைவரும் பகுதிநேர வேலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டு வருகின்றனர். சிலருக்கு வேலையிழப்பும் நேரலாம். இதையெல்லாம் மீறி இந்த ஞாபக மறதிக்காரர் வசியம் செய்கிறார். 2018-ல் பலருக்கு இதழ் கிடைக்கவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்கள் வைத்திருக்கும் நபர்கள் சொல்லும் இதழின் விலை எல்லோராலும் வாங்கக்கூடியதாக இல்லை. இந்தச்சூழ்நிலையில் வாசகர்களின் அன்புக் கட்டளையை ஆசிரியர் ஏற்றிருக்கிறார். அவரது நிலைப்பாட்டில் அதுவும் காலக்கெடுவோடு. கட்டாயப்படுத்தவில்லை. இலக்கை எட்டவில்லை என்றால் அடுத்த ஆண்டு சந்தாவுக்கு முன்னெடுத்துச் செல்லலாம் என்ற அறிவிப்பாமல் மகிழ்ந்தோம்.

    தற்போது முன்பதிவுக்காக செலுத்திய தொகை திரும்பப் பெறலாம் என்ற காலக் கெடுவும் முடிந்துவிட்ட நிலையில் கடந்த 20ம் தேதிய இது திங்கிங் நேரம் பதிவில் இரத்தப்படலம் புத்தகத்தை ஏற்கனவே வெளிவந்த 3 புத்தக தொகுப்பாக வெளியிடுவதாக சொல்லி அதிர்ச்சியளித்துள்ளீர்கள்.

    பல வாசகர்கள் இரத்தப்படலம் B/W மற்றும் வண்ணத் தொகுப்பு வைத்திருப்பவர்கள்கள். வாசகர்களின் ஓரே புக் கோரிக்கை என்பது சாத்தியமில்லை என்பதை தாங்கள் தெரிவித்துவிட்டு பின்னரே தங்களின் 2 புத்தக அறிவிப்பைச் செய்தீர்கள். 2 புத்தகங்கள் என்பதாலேயே ஓருசில வாசகர்களைத் தவிர பல வாசகர்கள் மீண்டும் முன்பதிவு செய்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

    பலமுறை வாசிப்புக்குள்ளான பின்பும் வெளிவந்து தற்போது வரை பைண்டிங்கில் எந்தவித பிசகும் நேராத மின்னும் மரணம் என்னும் 11 பாக அசாத்தியத்தை எங்கள் கைகளில் தவழவிட்ட தங்களின் இந்த பதில் பல வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த மாயையில் உண்மையிலேயே காமிக்ஸ் வாசகர்கள் அனைவருமே இப்படி ஒரு அசுர இதழ் (XIII) - ஒரிஜினல் படைப்பாளிகளே சிந்திக்காத மெகா இதழ் நம்மிடம் இருந்தால் என்ன என்று ஏங்குவது நிச்சயம். அப்படிப்பட்டவர்கள் தங்கள் லோகோவில் எந்த இதழ் வந்தாலும் வாங்கக்கூடியவர்களே. அவர்கள் நிலை?

    காமிக்ஸ் தங்களுக்கு தொழில் என்பதைத் தாண்டி அதன்மேல் நீங்கள் கொண்ட தீராக்காதலே இன்னும் தமிழ் காமிக்ஸ் உலகத்தை உயிர்ப்போடு வைத்துக் கொண்டுள்ளது என்பதை அனைத்து வாசகர்களும் அறிவார்கள்.

    ஆகவே தாங்கள் தயவுகூர்ந்து பல வாசகர்களின் நம்பிக்கைக்கு செவி மடுப்பீர்கள் என்றும் இரண்டு புத்தகங்களாக வெளியிடுவீர்கள் என்றும் ஒரு சாமான்ய காமிக்ஸ் வாசகனாக இதை இங்கு பதிவு செய்கிறேன்.

    காமிக்ஸ் வாசகர்கள் அருகி வரும் இந்நாளில்: காமிக்ஸ் கலெக்டர்ஸ், ஆர்வலர்கள் இவற்றைத் தாண்டி ஒரு சராசரி-சாமானிய காமிக்ஸ் வாசகனுக்கு தங்களுடைய இதழ்கள் எட்டாக்கனியாகி விடக்கூடாதே என்பதே என் அவா. XIII வரட்டும் என்பது ஒரு காமிக்ஸ் ரசிகனாக என் ஆசை. ஆனால் இனி வரப்போகும் எந்த இதழுக்கும் இது முன்னுதாரணமாகி விடக்கூடாது என்பது என் பேராசை.

    பின்னூட்டம் குறித்தும் சில கேள்விகளை எழுப்பியிருந்தீர்கள். அதற்கு முத்து காமிக்ஸின் முதல் இதழ் முதல் தற்போது வரை வாசகராக உள்ள ஒரு மூத்த வாசகரின் பின்னூட்டமும் அதற்கு நண்பர்களின் பதிலும் சற்றே யோசிக்க வைக்கிறது. தளம் என்பது தங்களோடு நெருங்கிய தொடர்பில் இல்லாத வாசகர்களுக்கும் தங்களுக்கும் ஒரு இணைப்புப்பாலமாகவே நான் கருதுகிறேன். இங்கு தங்களின் வினாக்களும் கருத்துக் கேட்புகளும் வாசகர்களின் ரசனையை தாங்கள் அறிந்து கொள்ள பெரிதும் உதவும். அதற்கு எப்போதும் போல் LION-ன் பதிலையே வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பது நிதர்சனமாகிறது.

    பின்குறிப்பு:
    தங்களின் பதிவுக்கு கருத்துக்களை பதிவு செய்தபோது இதுபோன்ற ஒரு பதில் ஒரு சீனியர் வாசகரிடம் இருந்து எனக்குக் கிடைத்து.

    அதை அவரது வார்த்தைகளிலேயே கீழே குறிப்பிட்டுள்ளேன்.

    'விஜயன் சார் தாங்கள் மறுபடியும் 'இவரும் காமிக்ஸ் வாசகர்தான்" என்பதைத் தெரிந்துகொள்ள 'மாதம் ஒரு வாசகர் பகுதியை" மீண்டும் கொண்டு வரலாம் - என பதிவு செய்திருந்தார். சுமார் 35 ஆண்டுகால வாசகனாகிய எனக்கு கிடைத்த பதில் இது.

    இதுபோன்று பல வாசகர்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அந்த மூத்த வாசகரின் பின்னூட்டம் எனக்கு உணர்த்தியதன் விளைவாக - இங்கு கருத்துக்களை பதிவு செய்யாமல் இருக்கும் மற்ற வாசகர்களின் சார்பாகவும் இதை இங்கு பதிவு செய்கிறேன்.

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. As editor replied already making the book as single book will not work out ... I've tried binding all the Largo's comics in single book (ofcourse with the help of our comics friend). Initially it was good to have such a huge book, but over a period, the binding will get tampered naturally. We can't maintain it as collectors edition. I agree with Editor.

      Delete
    2. வீரபாண்டியன் சார் ; வரிக்கு வரி பதில் சொல்லும் படலத்தினுள் நான் இறங்கினால் இந்த நொடியில் என் சிண்டைப் பிய்க்க செய்து வரும் மார்டினின் பஞ்சாயத்து ஓய்ந்திடாது ! And in any case இந்தப் பதிவின் ஆதாம் ஏவாள் காலத்துப் பஞ்சாயத்து என்றைக்கும் தீரப் போவதில்லை எனும் போது - அதன் பொருட்டு மிச்சமிருக்கும் 'தம்'மையும் செலவிடுவானேன் ?

      ஒரு இதழின் தேர்விலோ ; கையாளிலோ மாற்றுக் கருத்துக்கள் கொள்ளல் அவரவர் பிரியங்களே ; மறுப்பதற்கில்லை ! ஆனால் தயாரிப்பினிலும் அந்த சுதந்திரம் எடுக்க முனைவது - sorry is just not on ! சமீப மாதங்களின் ஹார்ட்கவர் பணிகள் ; பொதுவான ஹார்ட் கவர் பணிகளின் சிக்கல்கள் என நிறைய சொல்லப்படா சமாச்சாரங்கள் உள்ளன ! அவற்றை ஒவ்வொரு முறையும் ஒப்பிப்பதோ ; ஒப்பித்த பின்னுமே வழங்கப்படும் சிறந்த அறிவுரைகளை சமாளிப்பதோ சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டவை !

      நேற்றைய பின்னூட்டத்தில் தெள்ளத் தெளிவாக்கி விட்டேன் - மெஷினில் பைண்ட் செய்யும் சூழலில் மட்டுமே 2 தொகுப்புகள் இயலும் ; கையால் செய்வதாயின் மூன்றே முடியும் என்று ! அதன் பின்னரும் "மின்னும் மரண முசலுக்கு 7 கால் இருந்துச்சே ; என் பேர் டைகர் முசலுக்கு இன்னும் கூடுதலே ?" என்ற கேள்விகளை விடாப்பிடியாய் எழுப்பிடுவோருக்கு பதில் சொல்ல இந்த நொடியில் என்னிடம் சத்தியமாய் தெம்பில்லை சார் !

      ஒரு கொரோனா பணமுடை நாளில் தடுமாறிய சித்தமே இந்த 300 புக் விஷப்பரீட்சைக்கு என்னைச் சம்மதிக்கச் செய்தது ! அந்த பேதலிப்புக்கான செருப்படிகளை அப்போதே வாங்கவும் செய்தாச்சு ! இன்றைக்கு தயாரிப்புகளிலும் புத்தியை நான் பறிகொடுப்பின் - என்னை விடவும் மிஞ்சிய கோமாளி யாரும் இருக்க இயலாது ! கணிசமான செலவு குறையும் என்ற போதிலும் safer option எதுவென தேட நான் முனைவது முன்பதிவு செய்துள்ளோரை ஏமாற்றி விடுமெனில் - ஒன்றும் பிரச்சனையில்லை சார் ; சிரட்டையைக் கவ்விய நாலுகாலாரைப் போல 5 மாதங்களாய் fixed deposit-ல் துயின்று வரும் முன்பதிவுத் தொகைகளை சுமந்து திரிகிறேன் ! அவசியமென்றாகிடும் பட்சத்தில் அதனை வெளியெடுத்து - வேண்டாமென்று நினைப்போர்க்கு வாபஸ் செய்து விடலாம் ! கசக்கும் மோரை வம்படியாக யாரையும் குடிக்க வைக்க எண்ணிட மாட்டோம் சார் !

      அதற்காக இந்த புராஜெக்ட் நிச்சயம் கைவிடப்படவும் மாட்டாது ; முன்னூறு பிரதிகள் ஜூன் முதல் தேதிக்கு அச்சுக்குச் செல்வதை maybe 250 / 230 என்று மாற்றிக் கொள்வோம் ! அல்லது அதே 300 -ஐ அச்சிட்டு தொடரும் காலங்களில் விற்றிடவும் முனைவோம் ! 10 வருஷங்களுக்கு முன்பாய் இதே இ.ப. black & white இதழ்களை மலையளவுக்கு குவித்து வைத்திருந்து ஓராண்டுக்கு விற்ற நாட்களும் நமக்குப் புதிதல்லவே ?!

      //இப்படி ஒரு அசுர இதழ் (XIII) - ஒரிஜினல் படைப்பாளிகளே சிந்திக்காத மெகா இதழ் நம்மிடம் இருந்தால் என்ன என்று ஏங்குவது நிச்சயம். அப்படிப்பட்டவர்கள் தங்கள் லோகோவில் எந்த இதழ் வந்தாலும் வாங்கக்கூடியவர்களே. அவர்கள் நிலை?//

      படைப்பாளிகளே இதனை ஏன் செய்திட முனையவில்லை என்ற வினாவை ஒற்றை நிமிடம் கேட்டுப் பாருங்களேன் சார் - யதார்த்தம் புரியக்கூடும் !

      Delete
  35. இரத்தப்படலம் படலம்.... தொடரும்

    ReplyDelete
  36. சென்னை புத்தகவிழாவில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி சார்!
    We will meet there.

    ReplyDelete
  37. அன்புள்ள ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு
    காமிக்ஸ் மீதும் இரத்தப் படலம் என்ற ஒரு அற்புதமான காவியத்தின் மேலும் கொண்ட அளப்பரிய காதலினால் இதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 2010ல் இரத்தப் படலம் கருப்பு வெள்ளை இதழாக 18 தொகுதியாக வெளி வந்த போதும் அதனைப் படித்து ரசித்தோம்.2018 இல் முழு வண்ண இதழாக புலன்விசாரணையுடன் இணைந்து வந்தபோதும் அதனை படித்து ரசித்தோம். 2020இல் ஏப்ரல் அல்லது மே
    மாதங்களில் கொரோனா வின் பிடியில் உலகமே அவதிப் பட்ட போது மீண்டும் ஒரு முறை அதனை பதிப்பிக்க வாசகர்களின் கோரிக்கையை ஏற்று
    300 முன்பதிவு என்ற இலக்கை தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டீர்கள். அடுத்து வந்த நான்கு மாதங்களில் சுமார் 150 முன்பதிவுகள் எட்டியது. அப்போது இந்தப் புத்தகம் ஒற்றைப் புத்தகமாக வருமா அல்லது பழைய படி 3 புத்தகமாக வருமா என்ற கேள்வி எழும்பி தடுமாறிய போது
    அது இரண்டு தொகுதியாக வரும் என்ற அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் 2020 தாங்கள் தெளிவு படுத்தி உள்ளீர்கள்.
    அதனை ஏற்று அமைதி காத்து மேலும் முன்பதிவுகள் சேகரிக்க எங்களால் இயன்ற முயற்சிகளை செய்தோம்.
    அதன் பிறகு டிசம்பர் மாதத்தில் இந்தப் புத்தகம் தேவையில்லை என்னும் பட்சத்தில் முன்பதிவு தொகையை திருப்பி வாங்கிக் கொள்ளலாம் அதற்கு டிசம்பர் மாதம் இறுதிவரை வாய்ப்பு கொடுத்தீர்கள். அப்போதே இந்தப் புத்தகம் பழைய வடிவில் மூன்று புத்தகமாக வரும் என்பதை தெளிவு படுத்தி இருந்தால் நிச்சயமாக நூற்றுக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் திருப்பி வாங்க பட்டிருக்கும். அதை அப்போதே தெளிவு படுத்தாமல்
    இரண்டு மாதங்கள் கழித்து திடீர் என்று தாங்கள் நேற்றைய பதிவின் போது பழையபடி மூன்று புத்தகமாக வரும் என்று அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஏற்கனவே படித்த இந்த கதையை எத்தனை முறை வந்தாலும் அந்த ஒரே கதைதான் மறுபதிப்பு காண்கிறது. ஆனால் அதன் உருவாக்கமும் அமைப்பும் வித்தியாசப்படும் போது சேகரிப்புக்கு என்று வாங்கும் வாசகர்கள் அதனை ஆர்வத்துடன் வாங்குவார்கள்.
    இப்படிப்பட்டதொரு இக்கட்டான சூழ்நிலையில் இதன் அமைப்பை மீண்டும் பழைய படி மாற்றும்போது பலரும் அதை வரவேற்க மாட்டார்கள். ஏற்கனவே உங்கள் தயாரிப்பில் வெளிவந்த மின்னும் மரணம் மற்றும் மேக்னம் ஸ்பெஷல் தயாரிப்பு உலகத்தரத்திற்கு ஈடானது. மூன்று பாகங்களாக வெளிவந்த அர்ஸ்மேக்னா
    புத்தகத்தை அவசர கதியாக பைண்டிங் செய்து காய்வதற்குள் அதனை வாசகர்களுக்கு அனுப்பியதால் ஒரு சில புத்தகங்கள் மட்டும் சில குறைகளுடன் இருந்திருக்கலாம். ஏற்கனவே வெளிவந்த இரத்தப்படலம் ஆறு ஆறு பாகங்களாக மூன்று புத்தகங்கள் வெளிவந்தது அதன் பைண்டிங்கும் தரமாக இருந்தது.
    அதேபோல் மின்னும் மரணம் புத்தகம் இன்றுவரை அதன் தயாரிப்பு மிகவும் பிரமாதம் என சொல்ல வைக்கிறது.
    11 பாகமாக வெளிவந்த புத்தகம் தரமாக இருக்கும் போது பத்து பத்து பாகங்களாக இரத்தப்படலம் புத்தகத்தை இரண்டு புத்தகமாகவாவது வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். மொத்த புத்தகத்தையும் ஒரே தொகுதியாக வெளியிடுமாறு கேட்டதற்கு அதில் பல சிரமங்கள் உள்ளது என்று நீங்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டோம். குறைந்தபட்சம்
    புதிய வடிவில் இரண்டு தொகுதியாக வருகிறது என்ற எண்ணமே எங்களை உற்சாகப்படுத்தியது. தற்போது உங்களது அறிவிப்பு எங்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
    ஏற்கனவே வந்த வடிவில் உள்ள வண்ண புத்தகம் வைத்திருப்பவர்கள் மீண்டும் அதனை வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டா என்று சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
    தயவு செய்து தாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இதனை இரண்டு தொகுதிகளாக முற்றிலும் மாறுபட்ட புதிய அட்டை படங்களுடன் தரமான
    பைண்டிங்கில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    இப்படிக்கு
    கே .வி .கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. மேலேயுள்ளது சார் பதில் !

      Delete
    2. இப. உங்களுக்கு ஆரம்பமும் முடிவுமாய் இருக்கலாம் சார் ; தப்பே இல்லை & அது உங்கள் ரசனை ! எனக்கோ இது நம் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் மட்டுமே ! அந்த மைல்கல்லை வேண்டியமட்டுக்கு கொண்டாடியாச்சு ; பாராட்டியாச்சு ; நகர்ந்தும் விட்டாச்சு !


      ஆனால் இன்னமும் அந்த மைல்கல்லையே சிலாகித்து கசிந்துருகி நானுமே நின்றாக வேண்டுமென்ற உங்கள் எதிர்பார்ப்பு நடைமுறைக்கு ஒவ்வாது ! இதுவரையிலும் இந்த வண்ண இதழை வாங்கிட வாய்ப்பின்றிப் போன நண்பர்களுக்கு இதுவொரு மறுவாய்ப்பாய் மட்டுமே அமைந்திடுமே தவிர - ஏற்கனவே வாங்கி பீரோவில் பூட்டிவைத்து அழகு பார்ப்போரின் பாக்கெட்டுகளை மறுபடியும் பதம் பார்க்கும் 'புது மொந்தை'யாக இராது !

      Delete
    3. Aah .. a tad disappointed with the reprint decision. I did order multiple copies to support you but since a 2 volume option is no longer possible, can we at least consider different covers and shades sir?

      Delete
    4. Yes sir, its the manual binding that's a concern. Having different covers isn't a problem as we have 18 designs to choose from.

      Delete
    5. But the 2 album thing isn't ruled out either ; if numbers touch 500 with agents chipping in, we have the possibility to go ahead with machine binding ! We already have 95 books covered for agents!

      Delete
    6. The agent's count has jumped to 115 !

      Delete
    7. //But the 2 album thing isn't ruled out either ; if numbers touch 500 with agents chipping in, we have the possibility to go ahead with machine binding ! We already have 95 books covered for agents!//

      Good news, Sir.

      Dear friends pls note this...
      If the order reaches 500 nos double album is possible... So the best option for us to wait for some more time to fulfil the decent order numbers for our desired book binding.

      Kindly don't pressurize our editor, for any kind of making.
      (By the way I love to have one full volume mega binding)

      Delete
    8. // The agent's count has jumped to 115 ! //

      Great! super news!!!

      Delete
  38. அலைகள் ஓய்வதில்லை...:-)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிடிக்காத படம் தாரை பரணி :-)

      Delete
  39. பதின்மூன்று..
    மந்திர எண், மாயச் சொல் (சுழல்)
    புயலாக வருகிறாய் களத்தில்..
    அமர்க்களப்படுகிறாய் தளத்தில்..
    முதல்முறை கடைவிரித்தோம்,
    கொள்வாரிலை.
    விழிபிதுங்கி, நாத்தள்ளி நின்றோம்
    மறுமுறையும் கடைவிரித்தோம்.
    வந்தாய்..வென்றாய்..சென்றாய்..
    தடம் தெரியவில்லை, ஆனால்
    தளம் அதிர்ந்தது மட்டும் நிஜம்.
    இம்முறையும் கடைவிரித்தோம்ம்ம்..
    அதிர வைக்கிறாய் மீண்டும்..
    டைகர், தோர்கல் அதிசயிக்கிறார்கள்.
    டெக்ஸும், கார்ஸனும் விழிக்கிறார்கள்.
    யார் இவன், என்ன இவன் சரித்திரம் என்று..
    தமிழ் காமிக்ஸ் உலகின் ஆகச்சிறந்த
    ஆச்சர்ய அற்புதம் நீ..
    வந்தால் வரலாறு. நின்றால் சரித்திரம்..
    எப்படியிருப்பினும்,
    உன்னில் நாங்கள் கட்டுண்டிருப்பது
    மட்டுமே நிதர்சன நிஜம்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா ஆகா... கவிதை பிண்ணிட்டீங்க. அருமை.

      ஆனால் நான் நம்ப ஸ்டீல் வரதுக்குள்ள ஒடி ஒளிந்து கொள்கிறேன் :-) எதுக்கும் எல்லோரும் உயரமான இடத்தில் ஒதுங்கி கொள்ளுங்கள் நண்பர்களே :-)

      Delete
    2. 10 சார்@ நிசம்தான்....
      இவன் மந்திரன்!

      உண்மையில் நிறைய நிறைய விவாதிக்க வேண்டியகதை இது.

      ஒவ்வொரு அத்தியாத்திற்கும் வண்டி வண்டியாக தகவல்கள் மலைபோல குவிந்து உள்ளன....!!!!

      பாகம் 1ஐயே ஒரு மாசம் பிரிச்சி மேயலாம்.

      டைகர், தோர்கல்-- தொடரை விட அதிசயிக்க வைக்கும் மலைப்பை தரவல்லவன்....!!!!

      என்றாவது நல்லபடியாக விவாதிக்க முடியுதானு பார்ப்போம்.

      Delete
    3. @ 10 சார்

      ஹா ஹா!! அட்டகாசம் அட்டகாசம்!!!

      Delete
  40. பொன்னை வைக்கும் இடத்தில்
    பூவை வைப்பது போல்
    ஸ்டீலை வைக்கும் இடத்தில்
    என்னை வைத்தேன்.அவ்வளவே.
    (உயரமான இடம் இல்லையெனில், இருக்கவே இருக்கிறது, தலைவரின் பதுங்குகுழி. அதில் அனைவருக்கும் இடம் உண்டு. கவலை வேண்டாம் நண்பர்களே)

    ReplyDelete
    Replies
    1. பதுங்கு குழி தலைவருக்கே இப்போது எல்லாம் போதவில்லையாம் :-) இதில் நீங்கள் வேறயா :-)

      Delete
    2. ///பதுங்கு குழி தலைவருக்கே இப்போது எல்லாம் போதவில்லையாம் ////----
      ஹா....ஹா... வாய் விட்டு சிரிச்சே விட்டேன் PfB.... செம டைமிங்!

      Delete
    3. ///பதுங்கு குழி தலைவருக்கே இப்போது எல்லாம் போதவில்லையாம் ////-
      எங்க தல லாக்டவுண்ல நல்லா சாப்பிட்டு ஒரு 20 கிலோ எடை கூடியிருக்கலாம். அதுக்காக அவரை இப்படி கலாய்ககறது சரியில்லை. ஆமா சொல்லிபுட்டேன்.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. எங்க தலைவராவது கொஞ்சம் தான் எடை கூடி இருக்கிறார் ஆனால் நீங்கள் சதத்தை நெருங்குவதாக சொல்லிக் கொள்றாங்க ஊருக்குள் மகேந்திரன் :-)

      Delete
    6. வசந்திகளை நம்பாதீர்

      Delete
    7. // வசந்திகளை நம்பாதீர் //

      ஆகா யாருப்பா இது! :-)

      பாவம் நம்பி ஏமாந்து போய்விட்டார் போல நம்ப ஷெரிப் :-)

      Delete
  41. எச்சூஸ்மீ... பதுங்குகுழி எனக்கல்ல. only recoommand for others.

    ReplyDelete
    Replies
    1. நம்பிட்டோம் பத்து :-)

      Delete
    2. ஒரு வேளை பதுங்கு குழி ரிசர்வேசன் எடிட்டருக்கா? அய்யோ தலீவரு அங்கே ஒரு கத்தை கடிதாசியோட அதை எடிட்டருக்கு அனுப்பலாமா வேண்டாமான்னு யோசிச்சுகினு குந்திகிட்டிருக்காரே?

      Delete
    3. இப்படி எல்லாம் சொல்லி ஆசிரியரை பயமுறுத்த கூடாது :-) தலைவர் இப்போது எல்லாம் கடிதம் எழுத பேப்பர் உபயோகிப்பது இல்லை; அவர் படிப்பது எழுதுவது எல்லாம் போனில் தான்! தலைவர் 2021 காஜ்ட்ஸ் கிட்ஸ் ஆகா மாறி விட்டார் :-) அதனால் ஆசிரியருக்கு பிரச்சனை இல்லை :-)

      Delete
  42. அன்பின் ஆசிரியருக்கு,
    யார் அந்த இரும்புக்கை மாயாவி
    100 இதழை போலவே வண்ணத்தில் வெளியிடுங்கள்.
    விற்பனையில் நிச்சயம் ஏமாற்றாது.
    தயவு செய்து முயற்சி செய்யவும், ஏனென்றால் இனியொரு முறை நிச்சயம் மறு பிரிண்ட் செய்ய மாட்டீர்கள் please do the needful.

    ReplyDelete
    Replies
    1. படைப்பாளிகளின் அனுமதியும் ; டிஜிட்டலில் கலரிங் செய்திட குறைத்த பட்சமாய் 45 நாட்களும் ; கணிசமான பட்ஜெட்டும் அதற்கு அவசியமாகிடும் சார் !

      ஆர்ச்சியை கலரில் வெளியிட கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தோம் ! நாளைத் துவங்கவுள்ள புத்தக விழாவிற்கு வெளியிட உத்தேசிக்கும் இதழிற்கு அந்த குஷன் இல்லையே - துரதிர்ஷ்டவசமாய் ! தவிர டிசம்பரின் மத்தியிலிருந்து லாக்டவுணில் உள்ளனர் சார் இங்கிலாந்திலிருக்கும் படைப்பாளிகள் !

      Delete
    2. "கொரில்லா சாம்ராஜ்யம் " முயற்சிப்போம் சார் - அவர்கள் மறுபடியும் நார்மலாய் பணிகளுக்குத் திரும்பிய பிற்பாடாய் !

      Delete
    3. யார் அந்த மாயாவி??

      கொரில்லா சாம்ராஜ்ஜியம்!

      ---2மே என் கலக்சன்ல இல்லை...ஹி...ஹி... என்னுடைய சேகரிப்பை கலக்சன்னு சொன்னாவே நிசமான காமிக்ஸ் கலெக்டர்ஸ் அடிக்க வந்துடுவாங்க..."அப்ப நாங்கலாம் யார்பா???" என்ற கேள்வியோடு.

      தங்களது மறுபதிப்பு வெளியீடுகளில் இருந்து தான் முத்து காமிக்ஸ் ஓல்டு ஹீரோஸ்லாம் படித்து வர்றேன் சார்.

      (அதுக்கு முன்னாடி டைகர் கதைகள் மட்டுமே வாசித்து உள்ளேன்!)

      எனவே இந்த விழாவுக்கு ,

      "யார் அந்த மாயாவி??" அவசியம் வெளியிடுங்க சார்.....(தாங்கள் சொல்லி உள்ளபடி தேவை இருந்தா மட்டுமே)

      Delete
    4. சார் வண்ணமில்லா இதழ் வரட்டுமிப்ப....இத கெத்தா நூறாவது இதழ்னு வண்ணத்லயே பொறுமையா பின்னர் விடலாமே ...ப்ளீஸ்....அந்த கால வண்ணம் அதகளமா இருக்கும்....ப்ளீஷ்

      Delete
    5. // "கொரில்லா சாம்ராஜ்யம் " முயற்சிப்போம் சார் //

      I am waiting :-)

      Delete
  43. சார் செந்தூரான் அருளால் விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்...யார் அந்த மாயாவி வண்ணத்ல வந்த இதழா....அப்படின்னா அப்படியே வரும்னு பட்சி பறக்குதே....பட்சி ராசா எப்டியோ

    ReplyDelete
  44. தோர்கலின் மாய உலகம்
    ———————————

    புதிதாக வந்த இதழ் , பழய இதழ்களின் மீள் வாசிப்பு மற்றும் வராத இதழ்களை ஆங்கிலத்தில் வாசித்தது என கடந்த 3 வாரமாக தோர்கலின் மாய உலகில் செலவிட்டேன். இப்போதைக்கு என்னோட ஆல்டைம் பேவரைட் இடத்தில் தோர்கல் சீரிஸ் மின்னும் மரணம், ரத்தக் கோட்டை, தங்கக் கல்லறைக்கு அடுத்து நான்காவது இடத்தை பிடிச்சிடுச்சு.

    ஒரு வேளை மீதக் கதைகளும் தமிழில் வந்த பிறகு படிச்சா இரண்டாம் இடத்துக்கு உயர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

    தோர்கலில் தமிழில்வர இன்னும் பல ஆல்பங்கள் காத்திருப்பதால் 2022 ல் வாய்ப்பிருப்பின் இந்த வருடத்தைப் போல ஒரு நான்கு அல்லது 5 கதைகள் கொண்ட தொகுப்பை வெளியிடுமாறு தோர்கல் ரசிகர்கள் (எத்தினி பேருப்பா இருக்கீங்க) சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதுசரி....டாப்புல ஒரு டெக்ஸ் கதை கூடவா இல்லை....!!!

      ஏன் அந்த கார்சனின் கடந்த காலம்!& வல்லவர்கள் வீழ்வதில்லை& சர்வமும் நானே & புயலுக்கொரு பிரளயம் & கழுகு வேட்டை.... என ஓன்று கூடவா தேறலை....???

      Delete
    2. டாப் டென் லிஸ்ட் போட்டா கண்டிப்பா டெக்ஸ் வரும். ஆனா டெக்ஸை இந்த வட்டத்தில அடைக்கறது சரி வராதுன்னு நினைக்கிறேன்.

      வேணுமனா் இப்படி பண்ணலாம்.

      1. டைகர் தொடர்கள்
      2 லக்கி லூக் தொடர்கள்
      3. தோர்கல் தொடர்கள்
      4. டெக்ஸ் பல கதைகள்.
      5. 13 தொடர்.

      டாப் 5 லயே டெக்ஸ் வந்துட்டாரு பாருங்க.

      Delete
    3. // தோர்கலில் தமிழில்வர இன்னும் பல ஆல்பங்கள் காத்திருப்பதால் 2022 ல் வாய்ப்பிருப்பின் இந்த வருடத்தைப் போல ஒரு நான்கு அல்லது 5 கதைகள் கொண்ட தொகுப்பை வெளியிடுமாறு தோர்கல் ரசிகர்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறேன். //

      +1
      வழி மொழிகிறேன்!

      அப்புறம் முத்து 50 இதழுக்கு தோர்கலின் மீதம் உள்ள அனைத்து கதைகளையும் இணைந்து ஒரு குண்டு புத்தகமாக போட்டால் வேண்டாம் என சொல்ல மாட்டோம் :-) தோர்கல் ரசிக மன்றத்தின் சார்பாகவே இந்த கோரிக்கை :-)

      இல்லை என்றால் 5 தோர்கல் + சின்ன தோர்கலின் சாகசம் இரண்டை இணைத்து ஒரு குண்டு புத்தகமாக கொடுத்தால் கூட ஒகே தான் :-)

      Delete
    4. சின்ன தோர்கல் 7, க்ரிஸ் ஸ்பின் ஆப் 7 இருக்கு பரணி. மெயின் சீரிஸ் முடிஞ்சு வந்தா க்ரிஸ் ஸ்பின் ஆப் வந்தா சூப்பரா இருக்கும். ஸ்பின் ஆப்னு கூட அதை சொல்லமுடியாது. ஐ ஜோலன் ஆல்பத்திலிருந்து நடக்கும் மெயின் தோர்கல் கதைக்கு இணையா நடக்கும் கதை. ஒன்னுக்கு ஒன்று தொடர்புடையது. தோர்கல் விற்பனையில் சாதித்தால் இதெல்லாம் நமக்கு சீக்கிரம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐ ஜோலனை எட்டிப் பிடிக்கவே நமக்கு 3 வருடம் ஆயிடும் போல.

      Delete
    5. // ஜோலனை எட்டிப் பிடிக்கவே நமக்கு 3 வருடம் ஆயிடும் போல //

      hmmmmmmmmmmmmmm! long way to go!

      Delete
    6. // சின்ன தோர்கல் 7 //

      அப்படி என்றால் ஒரே குண்டு புத்தகமாக வேண்டும் என ஆசிரியரிடம் கேட்டு விட வேண்டியது தான்! விஜயன் சார் பார்த்து ஏதாவது செய்யுங்கள் :-) முடிந்தால் 2023இல்!

      Delete
    7. தோர்கல் சீரிஸ் க்கு double ஓகே. கொஞ்சம் consider பண்ணுங்க சார். தோர்கல் உடைய மாய உலகில் உலவுவது மிக்க மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு நிகழ்வு.

      Delete
    8. // ஆனா டெக்ஸை இந்த வட்டத்தில அடைக்கறது சரி வராதுன்னு நினைக்கிறேன். //

      ஆமாம் கொஞ்சம் பெரிய சைஸ் டப்பாவா பார்த்து அடைக்க வேண்டியதுதான் அவரை :-)

      Delete
    9. //எத்தினி பேருப்பா இருக்கீங்க//

      நானும்...

      Delete
    10. //ஒரு வேளை மீதக் கதைகளும் தமிழில் வந்த பிறகு படிச்சா இரண்டாம் இடத்துக்கு உயர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை//

      கிரிஸ் சீரிஸ் வந்தால் நிச்சயம் நடக்கும்.

      Delete
    11. //அப்புறம் முத்து 50 இதழுக்கு தோர்கலின் மீதம் உள்ள அனைத்து கதைகளையும் இணைந்து ஒரு குண்டு புத்தகமாக போட்டால் வேண்டாம் என சொல்ல மாட்டோம் :-) தோர்கல் ரசிக மன்றத்தின் சார்பாகவே இந்த கோரிக்கை//

      அட... இது செமையா இருக்கே...
      சூப்பர் PfB.

      Delete
  45. சென்னை புத்தகவிழா இந்தாண்டு நடைபெறுவதே மகிழ்ச்சி என்றால், நமக்கும் ஸ்டால் கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி - அதுவும் இரட்டை ஸ்டால் கிடைத்திருப்பதில் ஏக மகிழ்ச்சி! விற்பனையும் சிறப்பாக அமைந்துவிட்டதென்றால்மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்! கொரோனாவுடன் வாழப் பழகிவிட்ட இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மக்களிடம் புத்தகங்களின் மீதான ஆர்வம் எப்படியிருக்கிறது; மக்களின் வாங்கும் திறன் எப்படியிருக்கிறது - என்பதையெல்லாம் அறிந்திட ஆவல்!

    இந்த விற்பனையே நம் எடிட்டருக்கு எதிர்வரும் நாட்களுக்கான - காமிக்ஸ் சார்ந்த செலவினங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கப்போகிறது என்பதை நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம்! எடிட்டர் தன் கால் கட்டை விரலை வாஞ்சையோடு நோக்கிடுவதை இந்த விற்பனையின் அளவுகோல்களே முடிவு செய்திடும் என்பதையும் நாம் அறியாதவர்களல்ல!

    மூன்று வழிகளில் இந்த புத்தகத் திருவிழா பயனுள்ளதாக அமையவேண்டும் என்று கருதுகிறேன்...

    1. அன்றாட விற்பனை சிறப்பாக அமைய வேண்டும்
    2. சந்தா செலுத்துவோர் கணிசமாக இருக்க வேண்டும்
    3. இதுவரை காமிக்ஸ் படித்திராத புதியவர்களும் இம்முறை காமிக்ஸை தனக்காகவோ, தங்கள் குழந்தைகளுக்காகவோ வாங்க முன்வரவேண்டும்.


    சரி, விற்பனை சிறக்க நம்மால் ஆன எதைச் செய்யலாம்?!!

    நண்பர்கள் அனைவரும் (குறிப்பாகச் சென்னையிலுள்ள நண்பர்கள்)...

    * அவ்வப்போது நம் ஸ்டாலுக்கு ஒரு விசிட் அடித்து, விற்பனைக்கு உதவலாம். புதிதாக காமிக்ஸ் வாங்க வருவோரின் விருப்பமறிந்து கதைகளைத் தேர்வு செய்து கொடுக்கலாம்.

    * நண்பர்களிடமும், உறவினர்களிடமும், பக்கத்துவீட்டுக்காரர்களிடமும் புத்தகத் திருவிழா நடைபெறுவது குறித்தும், அதில் நம் காமிக்ஸ் பங்கெடுத்திருப்பது குறித்தும் தெரியப்படுத்தலாம்.

    * உங்களின் காமிக்ஸ் நண்பர்கள் அல்லாத மற்ற நண்பர்களிடமும் கூட வாட்ஸ்அப் மூலமாக புத்தகத் திருவிழா & நமது காமிக்ஸ் பங்கெடுப்புக் குறித்து ஒரு தகவல் அனுப்பலாம். நூறு நண்பர்களில் ஓரிருவர் இதற்கு பலன்கொடுத்தால் கூட, மொத்தவிளைவு நிச்சயமாய் கணிசமான பலனளிக்கும்.

    * இந்த வருடத்திற்கான சந்தா ஏப்ரலில் தான் துவக்கம் பெறுகிறது என்பதால் இதுவரை சந்தா செலுத்தாத சென்னை நண்பர்கள் நம் ஸ்டாலிலேயே செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பு.


    இதெல்லாம் சரியாக அமைந்துவிட்டால் தரைதட்டிக்கிடக்கும் நம் காமிக்ஸ் வங்கிக் கணக்கு மீண்டும் புத்துயிர் பெறும்.. கட்டைவிரல் வாஞ்சையோடு நோக்கப்படும்.. நமக்கு இன்னும் புதுப்புது பிரம்மிப்பான வாசிப்பு அனுபவங்கள் கிட்டிடும்!

    நண்பர்கள் தங்களால் இயன்றதைச் செய்து - பயனளித்துப் பயன்பெறுமாறு அனைத்திந்திய காமிக்ஸ் கழகக் கண்மணிகள் சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    எல்லாம் நல்லபடியாக நடந்தேற பெருந்தேவன் மனிடோ துணையிருக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நல்லபடியாக நடந்தேற பெருந்தேவன் மனிடோ துணையிருக்கட்டும்!//
      +1

      Delete
    2. /// எடிட்டர் தன் கால் கட்டை விரலை வாஞ்சையோடு நோக்கிடுவதை இந்த விற்பனையின் அளவுகோல்களே முடிவு செய்திடும் என்பதையும் நாம் அறியாதவர்களல்ல!///

      அருமை செயலரே.

      நீட் ஆஃப் த ஹவரை சிறப்பாக சொல்லிட்டீங்க...!!!

      Delete
    3. முத்து முத்தான கருத்துக்கள்.
      நன்றி விஜய்.

      Delete
  46. /// எடிட்டர் தன் கால் கட்டை விரலை வாஞ்சையோடு நோக்கிடுவதை இந்த விற்பனையின் அளவுகோல்களே முடிவு செய்திடும்///

    மறுக்க முடியாத உண்மை ஈ.வி. கால் கட்டைவிரல் வாஞ்சையுடன் நோக்கப்படும் போதெல்லாம், வித்தியாசமான கதைகளும், முயற்சிகளும் களமிறக்கப்படுவது நிதர்சனம். இல்லையென்றால் மின்னும் மரணம் ஒரே தொகுப்பாய், ரத்தப்படலம் 3 தொகுதிகளாய், மேக்ஸி லயன், கி. நா. தனித்தடம் போன்றவை கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை

    ReplyDelete
    Replies
    1. யெஸ் யெஸ் பத்து சார். இம்முறை அந்த வித்தியாசமான முயற்சி எனும் காத்து- யங் டைகர் தொடருக்கு அடிக்கட்டும்.... ரொம்ப நாளாக காத்திருக்கும் இதழ் இது.

      இல்லீனா இருக்கவே இருக்கு....சரி சரி வேணாம்.😉

      Delete
    2. 2022 ல் யங் டைகர் வந்துவிடும்னு நம்பறேன். அப்பத்தான் 2023 ல் தல 75 ஐ வேறு பெரிய பட்ஜெட்டும் ஏதும்இல்லாம கொண்டாடலாம்.

      Delete
  47. தோர்கலில் 38 ஆல்பங்கள் இதுவரையிலும், கிரிஸ் 8, யங் தோர்கல் 8, ஓநாய்க்குட்டி 7.
    இதெல்லாம் எப்ப தமிழில் வருமோ?

    காத்திருக்கிறோம்...

    இளம் தோர்கலுக்கு ஒரு ஸ்லாட் 2022 இல் ஒதுக்கலாம்.
    கிரிஸ் தோர்கல்-36 க்கு பின்னாடிதான் தொடங்க முடியும்.

    இந்த வருடமே ஏதாச்சும் சரிகட்டி தோர்கல் 2 ஆல்பம் போட்டால் ஆர்க் கம்பிளீட் ஆகும். 3 னா போட்டால் இன்னும் நல்லது.

    அடுத்தடுத்த ஆல்பங்கள் ஒன்றுக்கொன்று தொடர்ந்தே இருப்பதால் தொகுதிகளாக போட்டால் நன்றாக இருக்கும்.

    2021- GIANTS,THE CAGE & ARACHIANA - 3 Albums
    2022- BLUE PLAGUE, KINGDOM BENEATH THE SAND, BARBARIAN, KRIS OF VALNOR, SACRIFICE - 5 Albums
    2023- I JOLAN, THORS SHIELD, BATTLE OF ASGARD- 3 Albums
    2024- BLADE SHIP, KAH ANIEL, SCARLET FIRE, ANIEL - 4 Albums
    2025- KRISS OF VALNAR தொடர் ஆரம்பிக்கலாம்...

    இதுவே 5 வருடம் ஆயிடும்...

    ReplyDelete
  48. E-mail this morning :

    //இந்த வாரத்தில் இரத்தப்படலம் (மறு)மறுபதிப்பு சம்மந்தமாக வலைப்பக்கத்திலும், வாட்ஸ் அப், முகநூல் குழுக்களிலும் நடந்து வரும் விவாதங்களையும் விதண்டாவாதங்களையும் கவனித்தே வருகிறேன்.

    ஒரு புத்தகத்தை தரமாக தரவேண்டும் என்ற எண்ணத்தில் விலையை பொருட்படுத்தாது தாங்கள் செய்யும் பணியை கண்டு உண்மையாகவே நான் மனமுவக்கிறேன்.

    பொதுவாகவே இந்த ஒன் ஹீரோ வொர்ஷிப்பை பெரும்பாலும் நான் ரசிப்பதில்லை. அது XIII றோ, டெக்ஸோ இல்லை வேறு யாராக இருந்தாலும் சரி. அதேசமயம் அவ்வாறு நினைத்து கொண்டாடும் நண்பர்களை வெறுப்பதும் இல்லை. ஆனால் நடைமுறைச் சிக்கல்களையும், அது சார்ந்த யதார்த்தங்களையும், மாற்றுத் தீர்வுகளையும் தெளிவாகவே நீங்கள் கூறியபின்னரும் இந்த இரத்தப்படலம் நண்பர்களை வெறுக்கத்தான் தோன்றுகிறது.

    ஒரே புத்தகத்தை தனித்தனியாக, ஒரே புத்தகமாக, மூன்று தொகுதிகளாக வெளியிட்ட பின்னரும் இன்னும் ஒருமுறை அதுவும் பழைய விலைக்கு நஷ்டத்தில் செய்யவேண்டிய காரணம் என்ன சார்?

    இதன் ஒவ்வொரு பதிப்பையும் வாங்கி சேகரிக்கும் கலெக்டர்கள் அது எப்படி வந்தாலும் வாங்கத்தான் போகிறார்கள். கிட்டத்தட்ட முக்கால் வருட சந்தாவை செலுத்தி...

    உண்மையாகவே இதை தவறவிட்ட நண்பர்கள் இதற்காகவே சந்தாவை தியாகம் செய்தேனும் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வழியிலும் சந்தா எண்ணிக்கை குறையவே வாய்ப்பு.

    20, 30 புத்தகங்களை ஆர்டர் செய்துள்ள முகவர்களும் அத்தனையும் விற்க முடியும் என்று தோன்றவில்லை... அவர் அதில் முடக்கும் பணமும் வருங்காலங்களில் பிற இதழ்களின் ஆர்டரை பாதிக்கும் என்பதும் உண்மை.

    இதை எல்லாம் நிச்சயம் நீங்கள் யோசித்திருப்பீர்கள்... இருந்தாலும் ஒப்புக்கொண்ட சொல்லுக்காக செய்கிறீர்கள் என்று தெரிகிறது. அப்படியானால் இரண்டு தொகுதி, புதிய கவர்கள் என்றே செய்துவிடுவதே உசிதம் என்று படுகிறது.

    ஏற்கனவே பைண்டிங் சார்ந்த நடைமுறைச் சிக்கல்களை வண்டி வண்டியாய் ஒப்பித்த பிற்பாடும் அப்படியே வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்போருக்கு என்ன செய்வது?

    இதில் ஏற்கனவே 2018ல் பிரிண்ட் செய்து பதுக்கி வைக்கப்பட்ட சரக்கு வெளியே வருகிறது என்ற நகையாடல் வேறு... பதுக்கி வைத்து என்ன இலாபம் கண்டீர்கள் என்பது இந்த புண்ணியவான்களுக்கே வெளிச்சம்.

    *என்னுடைய வருத்தம் என்னவென்றால் இந்த ஒற்றைப் புத்தகத்தின் சுமை வருங்காலத்தில் உங்கள் தரப்பையோ வாசகர்கள் தரப்பையோ பாதிக்கக் கூடாது என்பதே*

    அவ்வாறு இருக்குமோ என நீங்கள் 10% சிந்தித்தால் கூட இதை Drop செய்து விடுங்கள். கசப்பாக இருந்தாலும் இத்தோடு போய்விடும்! இல்லையென்றால் இரண்டு தொகுதிகளாகவே கொடுத்து விடுங்கள், தரம் பற்றிய கவலையின்றி...

    இதனால் ஏதோ வாக்குறுதி தவறிய... இல்லை பதுக்கல் வியாபாரி போல தாங்கள் சித்தரிக்கப் படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை சார்,

    ஏதோ சொல்லத் தோன்றியது.
    மன்னித்து விடுங்கள்! //


    மக்களுக்கும் பொழுது போகணுமில்லியா சார் - யாரையாச்சும் லந்து பண்ணுவதென்பது தினசரி உந்துதல் என்றான இன்றைய நாட்களில் ?

    பதுக்கல் - புண்ணாக்கென்று மகா சிந்தனைகளை உதிர்த்தும் மகானுபாவர்கள் - மூன்று புது ராப்பர்கள் ; புக் நெடுகிலும் செய்யவுள்ள பிழைத்திருத்தங்களைப் பார்க்கும் போது - கலாய்க்க அடுத்த தலைப்பைத் தேடப் போகிறார்கள் ; அவ்வளவே ! And
    பேசாமல் இந்த புராஜெக்டையே உதறிடலாமே ? என்ற உங்கள் எண்ணத்திலுள்ள அக்கறை புரிகிறது சார் ; 'ரிவர்ஸ் அடிக்க எண்ணுவோர் - தாராளமாய்ப் பணத்தைத் திரும்ப வாங்கி கொள்ளலாமென்ற ' வாக்குறுதியோடு கதவைத் திறந்து தந்திருக்கிறோமே - அதுவே போதும் !


    நிறைய பார்த்தாச்சு சார் ; இப்போதெல்லாம் இவற்றுக்கு ரியாக்ட் செய்யும் நேரத்துக்கு அடுத்த வேலையைப் பார்த்து நகர்வது சாலச் சிறந்தது என்றாகிவிட்டுள்ளது ! இந்த நொடியில் மார்ட்டின் கதையோடு நடத்தி வரும் போரில் இந்த அக்கப்போரெல்லாம் ஒரு சமாச்சாரமாகவே தெரியவில்லை ! சீரியஸாக மார்டினின் இந்த சாகசம் கொலையாய்க் கொல்கிறது எடிட்டிங்கில் ! இம்மாத இதழ்களில் ஓரிரு நாள் தாமதம் தவிர்க்க இயலாதென்றே படுகிறது ! Way too complex a story !!

    ReplyDelete
    Replies
    1. இத்தாலியில் கதை சார்ந்த சில தெளிவுகளைக் கோரிப் பெறாது Detective Special புக்கை உங்கள் தலையில் கட்டினால் , கிறுகிறுத்துப் போய் விடுவீர்கள் என்பது உறுதி ! ஆகையால் மார்ச் புக்சில் ரெண்டோ - மூன்றோ நாள் தாமதம் இருக்கும் guys ! Sorry !!

      And டைலன் டாக் மினி சாகசமும் ரங்க ராட்டினம் சுற்றச் செய்யும் ரகமே ! அதை ஒரு மாதிரியாய் சமாளித்து விட்டேன் - ஆனால் மார்ட்டின் !!

      Delete
    2. இனி வரும் நாட்களில் மார்டினின் கதைகளை வாங்கி , மொழிபெயர்த்து, முழுசாய்ப் படித்துப் பார்த்து - எல்லாம் ஒ.கே .என்றிருந்தால் மட்டுமே அறிவிப்பாய் வெளியிடணும் போலும் ! திணறச் செய்கின்றன கதாசிரியர்களின் knots !

      Delete
    3. இதில் 2021-க்கென காத்திருப்பது டைலன் + மார்ட்டின் கூட்டணி ! இப்போவே வியர்க்கிறது பயத்தில் !

      Delete
    4. // 2021-க்கென காத்திருப்பது டைலன் + மார்ட்டின் கூட்டணி ! இப்போவே வியர்க்கிறது பயத்தில் ! //

      அப்ப சூப்பர் முடிச்சுக்கள் உள்ள கதை என சொல்லுங்கள் :-)
      :-)

      Delete
    5. // ஒன் ஹீரோ வொர்ஷிப்பை பெரும்பாலும் நான் ரசிப்பதில்லை. அது XIII றோ, டெக்ஸோ இல்லை வேறு யாராக இருந்தாலும் சரி. அதேசமயம் அவ்வாறு நினைத்து கொண்டாடும் நண்பர்களை வெறுப்பதும் இல்லை. ஆனால் நடைமுறைச் சிக்கல்களையும், அது சார்ந்த யதார்த்தங்களையும், மாற்றுத் தீர்வுகளையும் தெளிவாகவே நீங்கள் கூறியபின்னரும் இந்த இரத்தப்படலம் நண்பர்களை வெறுக்கத்தான் தோன்றுகிறது. //

      +1
      எனக்கும் சில நேரங்களில் இது தோன்றுவது உண்டு.

      Delete
    6. // இதில் 2021-க்கென காத்திருப்பது டைலன் + மார்ட்டின் கூட்டணி ! இப்போவே வியர்க்கிறது பயத்தில் !//

      உங்கள் கேசக் கற்றைகளின் கனபரிமாணத்தில் கொஞ்சம் நஞ்சம் நஷ்டமானாலும் எங்கள் உற்சாகத்தை வரவில் வையுங்கள் சார்!

      படிக்கிற எங்க மண்டைகளின் பளபளப்பே இந்தளவு இருக்க கொடுக்கற உங்க மண்டைய நினைச்சா....

      Delete
    7. // இதில் ஏற்கனவே 2018ல் பிரிண்ட் செய்து பதுக்கி வைக்கப்பட்ட சரக்கு வெளியே வருகிறது என்ற நகையாடல் வேறு... பதுக்கி வைத்து என்ன இலாபம் கண்டீர்கள் என்பது இந்த புண்ணியவான்களுக்கே வெளிச்சம். //

      பதுக்கலா?

      அட கொடுமையே... ஒரு காமிக்ஸ்சுக்கு என்னல்லாம் வார்த்தை வாங்க வேண்டிருக்கு....
      என்னதான் காமிக்ஸ் காதல் இருந்தாலும் இப்படி சீரியஸ் ஆகி வார்த்தையை விடலாமா?

      Delete
    8. அட...இந்த "கைய புடிச்சு இழுத்தியா ?" பஞ்சாயத்துக்கள் நமக்குப் புதுசா - என்ன நண்பரே ? ப்ரீயா விடுங்க !

      Delete
    9. ஓகே சார்.

      ஆனா... ரத்த படலத்தை 10000+ ரூபாய்க்கும் லக்கி போஸ்ட்டரை 300+ ரூபாவிற்கும் விற்றவர்களுக்கு தான் இந்த "பதுக்கல்" கற்பனையெல்லாம் வரும்.

      Delete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. And டைலன் டாக் மினி சாகசமும் ரங்க ராட்டினம் சுற்றச் செய்யும் ரகமே ! அதை ஒரு மாதிரியாய் சமாளித்து விட்டேன் - ஆனால் மார்ட்டின் !!

      Delete
    2. // And டைலன் டாக் மினி சாகசமும் ரங்க ராட்டினம் சுற்றச் செய்யும் ரகமே ! அதை ஒரு மாதிரியாய் சமாளித்து விட்டேன் - ஆனால் மார்ட்டின் !! //

      ஆக மொத்தத்தில் வரும் மாதம் எல்லார்க்கும் ஜுரம் காணப்போவது உறுதி! மார்ட்டின் மை பேவரைட்!!

      Delete
  50. ///// The agent's count has jumped to 115 ! //

    அருமை.... அருமையான தகவல் எடிட்டர் சார்.

    500என்பது இப்ப எட்டி பிடித்து விட கிட்டக்க தெரியும் இலக்காகியிருக்கிறது.

    புத்தகம் வருவது உறுதியாகும் பட்சத்தில் தான் முன்பதிவு செய்வேன் என காத்திருக்கும் நண்பர்கள் & வெளியாகிய பின்னர் பார்த்து வாங்குவேன் என காத்திருக்கும் நண்பர்கள் & இப்படி பலப்பல காரணங்களால் காத்திருக்கும் ரசிகர்கள்...,

    ---இனியும் தாமதிக்க காரணங்கள் ஏதும் இல்லைதான்!

    ReplyDelete
    Replies
    1. நிறைய அவகாசம் உள்ளதே என்று நாம் தான் ஏஜெண்ட்களிடம் முன்கூட்டிக் கேட்டு வைக்கவில்லை சார் ! இப்போது தான் ஆரம்பித்துள்ளோம் !

      Delete
    2. நல்லதுங் சார்....!!!

      விரைவில் 500வந்து இந்த இடைக்கால பஞ்சாயத்துக்கள் ஓய்ந்தா சரி!

      இத்தோடு அர்ஸ்மேக்னா கடைசி சீன்ல ஒரு பொட்டியில் போட்டு அந்த "பீனிக்ஸை",

      "TOP Secret

      Do Not Open "---- என ஆணியடித்து சீக்ரெட் ரூம்ல தள்ளுவாங்களே...

      அதேபோல இரத்தபடலத்தையும் பரண்மேல ஏத்துங்க சார்.

      போதும் முடியுல!


      நானும் இரத்தப்படல காதலனே....
      எப்படி அலைந்து திரிந்து 1990களில் இரத்தபடல உதிரிகளை சேகரித்தேன் என ஒருநாள் விவரிக்கிறேன்.
      ஆனா வெறியன் இல்லை!
      எந்தவிசயத்திலும் காதல், வெறியாக மாறினால் அது அடுத்தவர்களை நிச்சயமாக தொந்தரவு செய்யும்.

      2018ல இரத்தப்படல வண்ண மறுபதிப்பு ரிலீ்ஸ் பண்ணிட்டு,
      இரத்தப்படலம் 18 பாகங்களில் இருந்து 18கேள்விகள் கேட்டு பரீட்சை வெச்சீங்களே...

      18/18 மார்க் வாங்கி சிறந்த இரத்தப்படல காதலர்களாக (கவனிக்க:காதலர்களாக மட்டுமே) வந்த 5, 6பேரில் நானும் ஒருவன்.

      காரைக்கால் பிரசன்னா,
      இலங்கை மதுபிரசன்னா,
      நண்பர் யோகநாதன் உள்ளிட்டோரும் இந்த 18/18 பட்டியலில் உண்டு.

      தாங்கள் சொல்லியவாறு நம் பயணத்தில் இரு ஒரு மைல்கல் மட்டுமே!



      Delete
    3. //அதேபோல இரத்தபடலத்தையும் பரண்மேல ஏத்துங்க சார்.//

      அஸ்க்கு ..புஸ்க்கு ..!!

      உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக - ஒரே பாகமா போடாங்காட்டி எப்புடி ? இன்னொரு ரெண்டு வருஷத்துக்குப் பின்னே அந்தப் பஞ்சாயத்த ஆரம்பிக்கணுமில்லே - பரணிலே கிடத்திட்டா முடியுமா ?

      Delete
    4. ////உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக - ஒரே பாகமா போடாங்காட்டி எப்புடி ? இன்னொரு ரெண்டு வருஷத்துக்குப் பின்னே அந்தப் பஞ்சாயத்த ஆரம்பிக்கணுமில்லே - பரணிலே கிடத்திட்டா முடியுமா ?///

      ஆனாலும் உங்க நையாண்டிக்கு ஒரு அளவே இல்லைங்க எடிட்டர் சார்! :))))

      எத்தனைமுறை வாங்கிக்கட்டிக்கிட்டாலும் மறுபடியும் "தம்பீ.. நேத்திக்கு அடிக்க வர்றேன்னு சொன்னீங்க.. வரவேல இல்ல?"னு கேட்கும் வடிவேலு மாதிரி ஆகிட்டீங்களே?!!

      Delete
    5. // எத்தனைமுறை வாங்கிக்கட்டிக்கிட்டாலும் மறுபடியும் "தம்பீ.. நேத்திக்கு அடிக்க வர்றேன்னு சொன்னீங்க.. வரவேல இல்ல?"னு கேட்கும் வடிவேலு மாதிரி ஆகிட்டீங்களே?!! //

      அதே அதே!

      Delete
    6. அப்புறமேட்டு 18 பாகங்களையும் தனித் தனி இதழ்களாவும் ஒருக்க போடணும்லே ; இப்போவே பரண் கிரண்னா பேசுனா எப்புடி ?

      Delete
    7. சார். 3D ல ரத்தப்படலம் போட முடியுமா?

      Delete
    8. ஏற்கனவே த்ரி டி போட்டுட்டுட்டாங்களே.!

      Delete
  51. இரத்த படலம் :

    தலைவர் அன்றே சொன்னார்..

    இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன..!

    யானும் அவ்வண்ணமே..!:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவர் ஒரு தீர்க்கதரிசி !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. தலீவர் தலீவர்தான்யா....!!!

      Delete
  52. // இத்தாலியில் கதை சார்ந்த சில தெளிவுகளைக் கோரிப் பெறாது Detective Special புக்கை உங்கள் தலையில் கட்டினால் , கிறுகிறுத்துப் போய் விடுவீர்கள் என்பது உறுதி ! ஆகையால் மார்ச் புக்சில் ரெண்டோ - மூன்றோ நாள் தாமதம் இருக்கும் guys ! Sorry !! //

    நோ பிராப்ளம். தாமதமானாலும் உங்களுக்கு முழு திருப்தி ஆன பிறகு அனுப்பி வையுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா...ஆமா...எடிட்டர் சார்.

      ஏற்கனவே வெய்ய காலம் ஆரம்பித்துட்டது...!😉😉😉

      Delete
    2. // ஏற்கனவே வெய்ய காலம் ஆரம்பித்துட்டது...!😉😉😉 //

      LOL

      Delete
  53. (உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக - ஒரே பாகமா போடாங்காட்டி எப்புடி ? இன்னொரு ரெண்டு வருஷத்துக்குப் பின்னே அந்தப் பஞ்சாயத்த ஆரம்பிக்கணுமில்லே - பரணிலே கிடத்திட்டா முடியுமா முடியல மீண்டும் இரத்தப்படலம் ஆ ஆ

    ReplyDelete
  54. இன்று சென்னை புத்தகவிழாவிற்க்கு சென்று எனது காமிக்ஸ் சனநாயக கடமையினை சிறப்பாக செய்துவிட்டேன். CBF ல் முதல் சந்தா என்னுடையதாக்கும்..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..

      உங்களுக்கு முதல் வாழ்த்து என்னுடையதாக்கும்..!!

      Delete
    2. வாவ் சூப்பர் @Lighthouse~சரவணன்

      ஒரு நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறீர்கள்! வாழ்த்துகள்!

      எப்போது சென்னைக்கு வந்தீர்கள்? இனி சென்னைதானா?

      Delete
    3. Lighthouse~சரவணன் @
      // CBF ல் முதல் சந்தா என்னுடையதாக்கும்.. //

      vow super news! welcome to "சந்தா குடும்பம்!"

      Delete
    4. Welcome to our சந்தா family sir !

      Delete
    5. @ ஈ.வி சார்,

      பணி நிமித்தம் சென்னை வந்தேன்.. இருந்த மூன்று மணிநேரத்தில் சந்தாவில் இணைந்தேன்...

      இப்போது ரிடர்ன் டூ நொயிடா...


      ஒரே வருத்தம் காமிக்ஸ் நண்பர்களை சந்திக்க முடியவில்லை... உங்கள் ஊர் புத்தக விழா. வில் சந்திக்க புனித மானிடோ அருள வேண்டும்.

      Delete
    6. @ BFB and எடிசார்,

      நன்றிகள்..

      Delete
    7. @ Lighthouse~சரவணன்

      ///பணி நிமித்தம் சென்னை வந்தேன்.. இருந்த மூன்று மணிநேரத்தில் சந்தாவில் இணைந்தேன்...///

      அபாரம் நண்பரே!! கிடைத்த சிறு மணித்துளிகளையும் காமிக்ஸுக்காகச் செலவிட்ட உங்கள் ஈடுபாட்டைப் எத்தனை பாராட்டினாலும் தகும்!

      கடந்தகாலங்களில் - சென்னையில், பக்கத்து ஏரியாவிலேயே இருந்தும்கூட புத்தகத் திருவிழாவின் பக்கமாய் தலைவைத்துப் படுக்காத சில நண்பர்களை இங்கே வேறுவழியின்றி நினைவுகூறவேண்டியதிருக்கிறது!

      அதேசமயம், கடந்த வருடம் நிறையமுறை நம் ஸ்டாலுக்கு வருகை தந்து, கிட்டத்தட்ட நாள் முழுக்க அழுக்காமல் காமிக்ஸ் களப்பணியாற்றிய நண்பர்கள் முத்து விசிறி, கிங் விஸ்வா, KVG உள்ளிட்ட நண்பர்களும் இங்கே வாஞ்சையோடு நினைவுகூறப்பட வேண்டியவர்களே!

      Delete
  55. இரத்தப்படலம் என்றாலே ஒரே இரத்தக்களரி தானோ?!

    ReplyDelete
    Replies
    1. மெய்யான இரத்தக் களரியைப் பார்க்க வேண்டுமெனில் - நானிப்போது கட்டி உருண்டிட்டு இருக்கும் மார்டினின் பக்கங்களைத் தான் பார்க்கணும் நண்பரே ; மிடியலே !

      Delete
  56. எடிட்டரின் புதிய பதிவு எப்பயோ ரெடி நண்பர்களே!

    ReplyDelete