நண்பர்களே,
வணக்கம். ஒரே நாளில் பதிவு - உபபதிவு என்பதெல்லாம் நாம் நிறைய பார்த்துவிட்டோம் ; so இன்றைய ரவுசு மேளா பெரியதொரு ஆச்சர்யத்தினை எனக்கு ஏற்படுத்திடவில்லை தான் ! ஆனால் மெய்யான வியப்பு எழுந்தது - இன்றைய லூட்டிகளின் வீரியத்தையும் ; முன்வைக்கப்பட்ட for & against வாதங்களில் மிளிர்ந்த லாஜிக்கையும் பார்த்திட்டே போதே ! பொதுவாய்த் 'தென்னைமரத்திலே ஒரு குத்து ; பனமரத்திலே ஒரு குத்து' என்று ஜாலி தேர்தல் நிகழ்வதே வாடிக்கை என்று எண்ணியிருந்தேன் - பிரின்சா ? ரிப்போர்ட்டர் ஜானியா ? என்ற தேர்தலைப் போல ! ஆனால் இம்முறையோ வேட்பாளர்கள் - டிரம்பும், பைடனும் ரேஞ்சுக்கு heavyweights என்பதை நான் கணிக்கத் தவறி விட்டேன் தான் ! So தொடர்ந்த அதகளங்களை செம சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்த்தேன் - வெள்ளை மாளிகைக் கூத்துக்கள் அளவுக்கு இல்லாவிடினுமே !!
எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு பதில் இருந்தாக வேண்டும் ; எல்லாப் போட்டிகளுக்கும் ஒரு வெற்றியாளர் இருந்தாக வேண்டுமெனும் போது, ஆப்பைத் தேடிப் போய் அமரும் சாலமன் ஆப்பய்யா அவதார் எடுக்கும் அவசியமும் இருந்தாக வேண்டும் தானே ?! உபபதிவினில் சொன்னது போல - பழைய பண்ணீர்செல்வமாய் (கொஞ்சம் அழுத்தி சொல்லிப்பாப்போமேன்னு தான் !!) நானிருந்திருக்கும் பட்சத்தில் - 'தென்னைமரத்தையும் நட்டிடலாம் ; பனையையும் நட்டிப்புடலாமென்று' சுருக்க தீர்ப்பைச் சொல்லி வைத்திருப்பேன் தான் ! ஆனால் இதுவோ 'நிதான நித்தியானந்தம்' அவதாருக்கான வேளை எனும் போது - எதையுமே எடுத்தோம்-கவுத்தோமென்று தீர்மானிக்க வழியில்லை !
அரங்கேறிய ஆரவார அலசல்களுக்கு மத்தியினில், லக்கியின் கார்ட்டூன் தரப்பின் சார்பினில் 'ஆமாம்லே !' என்று தலையை பிரதானமாய் ஆட்டியது 2 பாய்ண்ட்களின் பொருட்டு :
1.2020-ன் அட்டவணையின் அறிவிப்பினில் கார்ட்டூன் இதழ்கள் வெறும் ஆறாக இருந்தது நினைவிருக்கலாம் தான் ! அப்போது நான் எழுதிய வரிகள் இவை :
//"கார்ட்டூன் சந்தா : C : நடப்பாண்டைப் போலவே இம்முறையும் இங்கே 6 இதழ்களே – ஆனால் அந்த கார்ட்டூன் வறட்சியை நிவர்த்திக்க MAXI லயனும் ; இன்னுமொரு புதுத் திட்டமிடலும் காத்திருப்பதால், கார்ட்டூன் ரசிகர்கள் ஜாலியாய் வாசிப்பைத் தொடரலாம் ! "//
"புதுத் திட்டமிடல்" என நான் குறிப்பிட்ட MAXI லயனில் 1 லக்கி மறுபதிப்பு + 2 வாண்டு ஸ்பெஷல்ஸ் + 1 கார்ட்டூன் மறுபதிப்பு + 2 டெக்ஸ் மறுபதிப்புகள் - ஆக மொத்தம் 6 இதழ்கள் என்பதே திட்டமிடலாய் இருந்தது ! So 4 கார்ட்டூன்ஸ் + 2 டெக்ஸ் என்பதே நான் தந்திருந்த வாக்குறுதி !
ஆனால் நடப்பாண்டின் கொரோன தாண்டவம் திட்டங்களைப் பப்படமாக்கியிருக்க, கார்ட்டூன் அணிக்கு (என்னையும் சேர்த்தே தான்) ஒரு சட்டி நயம் அல்வாவே கிட்டியுள்ளது ! என்ன தான் சூழலின் தன்மைகளை அவர்கள் புரிந்து கொண்டு கார்ட்டூன் கல்தாக்களை ஏற்றுக் கொண்டிருப்பினும், அந்தப் பெருந்தன்மை பாராட்டுக்களின்றிப் போகலாகாதே என்ற நெருடல் உள்ளுக்குள் !!
2.சந்திலும், பொந்திலும், இண்டிலும், இடுக்கிலும், சாலையிலும், புறவழியிலும், ஆறுவழி சாலையிலும், ஒற்றையடிப் பாதையிலும் பயணம் செய்யவல்ல All Terrain Vehicle என்று சொல்லலாம் நமது இரவுக்கழுகினையும், அவரது டீமையும் ! புத்தக விழா ஸ்பெஷலா ? தீபாவளி மலரா ? காதுகுத்து ஸ்பெஷலா ? அல்லாத்துக்கும் எவ்வித முணுமுணுப்புகளுக்கும் இடம்தராது கச்சிதமாய்க் காரியமாற்றும் ஆற்றல் டெக்ஸுக்கு உண்டு என்பதை நாமறிவோம் ! ஆனால் காலாவதியாகிவரும் ஒரு டைனோசர் இனத்தைப் போல இன்றைக்கு சிறுகச் சிறுக fade out ஆகி வரும் கார்ட்டூன்களின் எந்தவொரு பிரதிநிதிக்கும் - 'எங்கேயும் ; எப்போதும் ' என்ற லைசென்ஸ் சத்தியமாய் நஹி - அது லக்கி லூக்காகவே இருந்தாலுமே !! So அவர்களுக்கென உருவாக்கப்படும் சொற்ப வாய்ப்புகளும் தட்டிச் செல்லும் சங்கடங்கள் ஒரு நெருடும் சமாச்சாரமாகிடாதா ?
These were my concerns !
ரைட்டு - மறு தரப்பின் ஜாம்பவான் அணியின் வாதங்களைப் பரிசீலித்த போதும் 3 விஷயங்கள் striking ஆக எனது கவனத்தை ஈர்த்தன !!
1.ஒரு இதழின் வெற்றி ; ஒரு நாயக / நாயகியின் வெற்றியின் ultimate அளவுகோல் அவற்றின் விற்பனை வெற்றிகள் தான் என்பதில் மாற்றுக கருத்துக்களே இருக்க இயலாது ! அதிலும் தொடர்ச்சியாய் ; consistent ஆக ஈட்டப்படும் வெற்றிகள் அந்த நாயகரின் ஆளுமைக்கு ; நம் மனங்களில் அவர் வீற்றிருக்கும் சிம்மாசனங்களின் கம்பீரத்துக்கு ஒரு அசைக்க இயலா சான்றாகிடும் தானே ? அந்தப் பார்வைக் கோணத்தினில் பார்த்திடும் போது - பஞ்சாயத்தைக் கூட்டும் அவசியமே இன்றி, hands down அத்தினி பேரையும் தூக்கிச் சாப்பிட்டு விடும் திறன் படைத்தவர் 'தல' தான் ! 2012-ல் துவங்கி இன்று வரைக்கும் ஒவ்வொரு ஆண்டின் 'டாப் ஹிட்ஸ் ; டாப் சேல்ஸ் ; டாப் புத்தக விழா வரவேற்பு' என டாப் சகலத்தையும் அக்குளுக்குள் செருகி நிற்பவர் இந்த திடகாத்திர மஞ்சள் சட்டைக்காரரே ! ஒரு பேரிடர் காலத்திலும், நூற்றாண்டுக்கு ஒருவாட்டி நிகழவல்ல ஒரு அசாத்திய பிரளய காலத்திலும் - ரூ.450 என்ற விலை இமயத்தையும் ; 672 பக்கங்கள் என்ற தாட்டியத்தையும் ஆனாயாசமாய் சுமந்து ; ஒற்றை மாதத்திற்குள் கிட்டத்தட்ட 90% விற்பனையினை கண்ணில் காட்டுவது ஒரு அசாத்தியனின் அடையாளமாகிடாவிடின் - வேறென்ன தான் ஆகிட முடியும் ?
தவிர, இதுவரையிலுமான கலர் டெக்ஸ் இதழ்களுள் நம்மிடம் ஸ்டாக் இருப்பதே இரண்டே titles என்பதாக ஞாபகம் ! 700 ரூபாய் டைனமைட் ஸ்பெஷல் எப்போதோ காலி ; டிராகன் நகரம் காலியோ - காலி ; சர்வமும் நானே அனல்பறந்த ஹிட் - என்று சொல்லிக்கொண்டே செல்லலாம் ! So நார்மலாய் அல்லாத ஒரு மார்க்கெட் சூழலை எதிர்கொள்ள பந்தயக் குதிரையன்றி வேறேது சுகப்படக்கூடும் ?
2."நிஜ வெற்றி" என்பதை விட - "முழுமையான வெற்றி" என்றொரு சமாச்சாரமும் உள்ளதை இங்கே சுட்டிக்காட்ட அனுமதியுங்கள் நண்பர்களே ! Oh yes - நமது பதிவுப் பக்கத்துக்கு 550+ followers உள்ளனர் தான் ; ஏகமாய் மௌன வாசகர்களும் உண்டு தான் ! ஆனால் இங்கே active ஆகக் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் நண்பர்களின் எண்ணிக்கை ஒரு நூறு இருக்குமா ? Maybe 125 ? இந்த நண்பர்களுள் அரங்கேறிடும் அலசல்கள் ; விவாதங்கள் பிரதானமாய் இங்கு centerstage எடுத்துக் கொள்கின்றன என்பதால் அவர்களின் மெஜாரிட்டி குரலே லாஜிக்கின்படி வெற்றியின் குரலாய்ப் பார்க்கப்படுகிறது ! And thats perfectly understandable too !
ஆனால் ஒரு முழுமையான வெற்றியானது வலைக்கு அப்பாலுள்ள நண்பர்களும் தங்கள் குரல்களை ஒலிக்கச் செய்திடும் போது தானே கிட்டுகிறது folks ? அவ்விதம் பார்த்தால் - நெட்டுக்குள் தலை நுழைக்கிறார்களோ, இல்லையோ - 'பிடிச்சதை வாங்கிப் படிச்சிக்குவேன் ; அம்புட்டுத்தேன் !!' என்ற ரீதியில், ஆன்லைனிலோ, முகவர்களிடமோ, சந்தாக்களிலோ புக்ஸை வாங்கித்தள்ளி - விற்பனை ஹிட்ஸ் வாயிலாய் - நமது ஒட்டுமொத்த சிறுவட்டமும் ஒன்றிணைந்து அனுப்பிடும் மௌனப் புகை சிக்னல்களை நாம் கொண்டாடுவது தானே முழுமையான வெற்றியாகிடும் ? அவ்விதம் பார்த்தால் நடப்பாண்டின் தீபாவளி மலர் again a striking example !! ஜூலையில் வந்த லக்கி ஆண்டுமலரும் ஒரு செம ஹிட் இதழே ; ஆனால் தீபாவளி மலரோ மெகா மாஸ் ஹிட் !! So முழுமையான வெற்றிக்கு உரித்தானவரை acknowledge செய்திட இதுவொரு வாய்ப்பன்றோ ?
3.Simple & Sheer numbers !! வோட்டுப் போடச்சொல்லிப்புட்டு ; அப்பாலிக்கா புரிந்தும், புரியாமலும் மய்யமாய் பேசி, வேறேதேனும் தீர்மானத்தினை நான் எடுப்பின், அது உங்கள் ஓட்டுக்களை பிம்பிலிக்கா பிளாக்கி செய்தது போலாகிடும் அன்றோ ?
ஆக மேற்படி 3 காரணங்களின் காரணமாய் இன்றைய போட்டியின் ஏகோபித்த வெற்றியாளராக தல டெக்சினை அறிவிக்கிறேன் !! தொடரும் நாட்களில் உங்கள் அவாவினைப் பூர்த்தி செய்திடும் விதமாய் TEX வண்ண மறுபதிப்பினைக் கொணரும் முயற்சிகளைத் துவக்கிடுவேன் - எந்தக் கதை என்ற அறிவிப்போடு !
அதே சமயம் கார்ட்டூன் காதலர்களுக்குமே கொஞ்சமாச்சும் உற்சாக பானம் தருவது எனது தலையாய கடமையாகிடும் ! கொஞ்சமே கொஞ்சமாய் திட்டமிட அவகாசம் எடுத்துக் கொள்கிறேன் guys - உங்களை ஜிலீரெனக் குளிப்பாட்டும் அறிவிப்போடு ; இயன்றமட்டிலும் விரைவாய் ஆஜராகிடுவேன் - and thats a promise !! மஞ்சள்சட்டை ஒல்லியாரே தான் ; அட்டகாசமாய் வண்ணத்தினில் தான் ; ரொம்பச் சீக்கிரமேவும் தான் !
Bye all & Thanks for a wonderful Sunday ! இன்று கெலித்தது காமிக்ஸ் நேசம் மாத்திரமே என்ற சந்தோஷத்தோடு நடையைக் கட்டுகிறேன் !! See you around !
நன்றி.
ReplyDeleteவாழ்க டெக்ஸ்.. அப்பாலிக்கா வாழ்க லூக்..
Deleteகதையோட ஆரம்பத்திலேயே தெரிந்து போயிற்று கலரில் டெக்ஸ்தானென்று ...
Deleteவயசான காலத்தில நாம இன்னும் கார்டூனா பார்த்திட்டிருப்போம் 😱😱😱 .. நாம் இன்னும் இளவயதுதான் என நிறுபிக்கிறார்போல் டெக்ஸ்ஸை ல்ல பிடிச்சு தொங்குவோம் ... 😉😉😉
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteTop3
ReplyDelete5
ReplyDeleteசக்ஸஸ்..!! :-)
ReplyDeleteஒல்லியாரின் கதை சாய்ஸ் - மாங்கு மாங்கென்று குரல் கொடுத்த மேச்சேரியாரிடமே விட்டுத் தருகிறேன் !
DeleteMaybe லக்கி லூக்குக்கு கல்யாணம் ? Pony Express ? Fingers ?
STV கூட்டணியில் தீர்மானித்துச் சொல்லுங்கள் சார் !
Delete////STV கூட்டணியில் தீர்மானித்துச் சொல்லுங்கள் சார் !////
Delete----ஆஹா...ஆனந்தம் சார்..!!!
KOK அங்கிள் தலைமையில் அதற்கு ஒரு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டத்தை கூட்டிப்புடலாம்...😍😍😍😍😍
ஹை! கண்ணன்! ரீபிரிண்ட் ஆகாத கதைங்களா கேளுங்க...
Deleteசந்தேகத்துக்கு இடமின்றி கௌபாய் (போனி)எக்ஸ்பிரஸ்தான் சார்.!
Deleteஎன்னுடைய சாய்ஸை STVயும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார் 😃😃😃..!
ஒல்லியாரின் கதை சாய்ஸ் - மாங்கு மாங்கென்று குரல் கொடுத்த மேச்சேரியாரிடமே விட்டுத் தருகிறேன் !
Deleteஅருமை சார் அருமை
/// KOK அங்கிள் ///
Deleteஇன்னாது... அங்கிளா.. அடியேய்..!
///ரீபிரிண்ட் ஆகாத கதைங்களா கேளுங்க..///
கதைகளா..!? :)
எனக்கும் ஆசைதான்..ஆனால் வாய்ப்பு ஒரே ஒரு கதைக்குத்தான் செனா.! மூன்றுமே ரீபிரின்ட் ஆகாதவைதான்.. அதில் மூத்தது மற்றும் நகை மிகுந்தது என்ற அடிப்படையில் போனி எக்ஸ்பிரஸை டிக் அடித்துவிட்டேன் செனா.!
நல்லா இருக்கும்..!!
ஆஹா நன்று நன்று. கௌபாய் எக்ஸ்பிரஸ். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். First நாங்க தான் வந்தோம்.
Delete///.என்னுடைய சாய்ஸை STVயும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்///---
Deleteநிச்சயமாக மாம்ஸ்...!!! சரியான தேர்வு!!
அருமையான கார்டூன் கதை!!!
எடிட்டர் சார்@@@ ஏகமனதாக "கெளபாய் எக்ஸ்பிரஸ்"---லயே பயணம் செய்ய ஆவண செய்யுங்கள் சார்.🙏🙏🙏🙏
Deleteஜேன் இருக்க பயமேன்? இரு வண்ணத்தில் தானே வந்தது, நண்பர்களின் கருத்து எப்படியோ?
Deleteசூ மந்திரகாளி மற்றும் லக்கி லூக் கல்யாணம் நகைசுவையில் சுமார் கதைகளே; அதிலும் சூ மந்திரகாளி நகைச்சுவையில் மூன்றாம் இடம்.
Deleteகௌபாய் எக்ஸ்பிரஸ் சரியான தேர்வு. சிரிக்க நாங்க ரெடி.
நான் எதிர் பார்த்த அருமையான தீர்பை அளித்ததற்கு நன்றி சார். எனக்கு தெரியும் எப்படியும் இரண்டும் வரும் என்று. இரண்டு அறிவிப்புகளை எதிர்நோக்கி ஆவலுடன் வெயிட்டிங்
ReplyDeleteயெஸ்ஸூ... நானும் நண்பர் சரவணனும் இதையே கணித்து இருந்தோம்... பெரும்பாலான நண்பர்களும்....!!!
Deleteஏறத்தாழ அனைவரின் விருப்பமும் அதுவே என நினைக்கிறேன்.
Delete8
ReplyDelete10
ReplyDelete// "புதுத் திட்டமிடல்" என நான் குறிப்பிட்ட MAXI லயனில் 1 லக்கி மறுபதிப்பு + 2 வாண்டு ஸ்பெஷல்ஸ் + 1 கார்ட்டூன் மறுபதிப்பு + 2 டெக்ஸ் மறுபதிப்புகள் - ஆக மொத்தம் 6 இதழ்கள் என்பதே திட்டமிடலாய் இருந்தது ! So 4 கார்ட்டூன்ஸ் + 2 டெக்ஸ் என்பதே நான் தந்திருந்த வாக்குறுதி ! //
ReplyDelete// அதே சமயம் கார்ட்டூன் காதலர்களுக்குமே கொஞ்சமாச்சும் உற்சாக பானம் தருவது எனது தலையாய கடமையாகிடும் ! கொஞ்சமே கொஞ்சமாய் திட்டமிட அவகாசம் எடுத்துக் கொள்கிறேன் guys - உங்களை ஜிலீரெனக் குளிப்பாட்டும் அறிவிப்போடு ; இயன்றமட்டிலும் விரைவாய் ஆஜராகிடுவேன் - and thats a promise !! //
:-). :-)
Hi..
ReplyDeleteஹலோ
ReplyDeleteநடு நிலைத் தீர்ப்பு.தலை வணங்குகின்றேன்.
ReplyDeleteலயனின் பில்லர் டெக்ஸ்வாழ்க. இன்று முழு நாளும் சந்தோசமாக காமிக்ஸோடு வாழ்ந்தோம். மீண்டும்1980களுக்கு சென்றசந்தோசம். காமிக்ஸேநமது அனைவரது வாழ்விழும்சந்தோசமானநிகழ்வு என்பதுமீண்டும் இன்று உறுதிப்பட்டுள்ளது. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteசார் FILLER ah PILLAR ah ன்னு ஒரு நிமிடம் திகைக்க வைத்தது உங்கள் கமெண்ட்😁😁😁
Deleteசெமயான தீர்ப்புங்க எடிட்டர் சார்!!
ReplyDeleteபதிவின் இறுதியில் கார்ட்டூன் காதலர்களுக்கும் ஒரு நல்லசேதி சொல்லியிருப்பது - ஐசிங் ஆன் த ரவுண்டு பன்!
நடுநிலையான தீர்ப்புங் சார்!!!
ReplyDeleteடெக்ஸ் வெற்றி என்பது மகிழ்ச்சியை தருகிறது.
கார்டூன் ரசிகர்களுக்கு நல்ல செய்தி!!!
வாழ்த்துகள் KOKமாம்ஸ்,
பள்ளி ஆசிரியர் நண்பர் சரவணக்குமார்,
பெங்களூரு பரணி,
GP and எல்லா கார்டூன் காதலர்களே!!🌹🌹🌹🌹🌹
வாழ்த்துகள் அன்பின் KS.
Deleteநன்றி டெக்ஸ் நன்றி. முக்கியமாக நீங்கள் மேலே குறிப்பிட்ட அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்
Deleteநன்றி STV நண்பரே!
Deleteஇன்றைய போட்டியின் ஏகோபித்த வெற்றியாளராக தல டெக்சினை அறிவிக்கிறேன் !! தொடரும் நாட்களில் உங்கள் அவாவினைப் பூர்த்தி செய்திடும் விதமாய் TEX வண்ண மறுபதிப்பினைக் கொணரும் முயற்சிகளைத் துவக்கிடுவேன் - எந்தக் கதை என்ற அறிவிப்போடு ! //
ReplyDeleteமற்றுமொரு கருப்பு ஞாயிறு தினம்.. Yet another Black Sunday..
Black Friday மேரி விக்கிறச்சே உங்களை அல்லாரும் ஒருவாட்டி நினைச்சுக்கச் சொல்லிடுவோம் சார் !
Deleteஇப்படி ஆகிடுச்சே ரம்மி
Deleteடெக்ஸ் & லக்கி- இருவரும் சம வாக்கு வாங்கி இருந்தா டைகர்து "இளமையில் கொல்"--- பாக்கி 2 பாகங்கள் போட கேட்கத்தான் எண்ணி இருந்தேன் ரம்மி!
Deleteநிஜமாத்தான் சொல்லுறேன்...!!!
அனு @
Deleteஹி.ஹி.ஹி..
அதானுங் பிளானே..!! :-)
KOK you bad fellow... . I'm innocent... இப்படிக்கு terror tenet 😴
Deleteஉண்மையா சொல்லனும்னா, என்னைப் பொருத்தவரையிலும், டெகஸ்ஸை மாக்ஸி சைசில் வாசிக்க பிடிக்கவில்லை.. ட்ராகன் நகரம், ஹார்ட் கவர் ஃபார்மெட் தான் சிறப்பாக இருக்கிறது.. க்ளாசிக் கலர் ரீ பிரிண்ட்களை அதே ஃபார்மெட்டில், பட்ஜெட் உதைக்காமல் போட வாய்ப்பிருந்தால் போடவும்..
ReplyDeleteசிவாஜி சார்லாம் இயற்கை எய்து எவ்ளோ காலமாச்சு சார் ? டெக்ஸ் இனி மாக்சி சைஸ்களில் கிடையாது ; ரெகுலர் சைஸ்களில் மட்டுமே என்று அறிவித்துமே எவ்ளோ காலமாச்சு சார் ?
Deleteஎன்னாது.. சிவாஜி செத்துட்டாரா..??😳😳😳
Deleteஅப்புடி தான் பேசிக்கிறாங்க சார் !
Delete20
ReplyDelete21st
ReplyDeleteநடுநிலை என்பது எப்போதுமே சரியான பக்கம் இருப்பது என்றாகாது.. நடுவர் ஒரு அதிகாரியின் அதிகாரத்தில் பயந்து விட்டார் என்றே இது எடுத்து கொள்ள படுகிறது.. வாழ்க ஜனநாயகம். ்
ReplyDeleteஇதை கண்டித்து ஒரு வாரத்துக்கு அடையாள உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பை வலுவ்வா பதிவு செஞ்சிடு ரம்மி.!
Deleteமஹி,
ReplyDeleteரவி,
தலீவர்,
வெங்கடேஷ்.C,
தம்பி பாபு,
தம்பி சம்பத்,
கலீல் ஜி,
யோவ் சுந்தரா,
செந்தில் சத்யா,
செந்தில் மாதேஷ்,
நவநீதன்,
புத்தகப்பிரியன்,
ராஜசேகரன்,
கிருஷ்ணா வ வெ,
பாஸ்கரன்,
&
டெக்ஸ்க்கு வாதாடிய&
தலைக்கு வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் இதயம் பொங்கும் வாழ்த்துகள்....💐💐💐💐💐💐💐
மகத்தான வெற்றி...வாருங்கள் கொண்டாடுவோம் எதிர் பாரா இதழை...!!😍😍😍😍😍😍😍
"பழிக்குப் பழி"--- அற்புதமான விருந்தாக அமையும்...!!!!
சரவணன் சரவணன் வாழ்த்துகள் நண்பரே💐💐💐💐
Deleteஎனது சாய்ஸ் பழிக்கு பழி
Deleteவெற்றிவேல் வீரவேல் :)
Deleteஇளைஞர்களின் ஓட்டுக்களுக்கு மதிப்பளித்து டெக்ஸை தேர்ந்தெடுத்து தீர்ப்பு சொன்ன அதேநேரம், பதிவின் கடைசி வரிகளில் அந்த மேச்சேரி பெரியவரின் ஆசையையும் நிறைவேற்றி வைத்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் கோடி!
Deleteநாளை இதே மாதிரி ஒரு சூழ்நிலையில் மாடஸ்டிக்கும் வாக்களிக்க இன்றுபோல் இதே இளைஞர்படை திரளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்!
// பழிக்குப் பழி"--- அற்புதமான விருந்தாக அமையும்...!!!! //
Deleteஆவலுடன்...
ரெண்டு தரப்பும் ஜெயிச்சுப்புட்டோமுல்ல 😁😁😁... என்னா ஒரு கில்லாடித்தனம் 👌👌👌
Deleteநல்லா பரபரன்னு ஞாயிறு கழிந்தது நம் நண்பர்களின் உபயத்தில்.. 🙏🙏🙏
Delete///நாளை இதே மாதிரி ஒரு சூழ்நிலையில் மாடஸ்டிக்கும் வாக்களிக்க இன்றுபோல் இதே இளைஞர்படை திரளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்!///
Delete😂😂😂😂😂
//இதே இளைஞர் படை// ஙே ஙே ஙே... நாம சிறார் படையாச்சே😇😇😇
Delete@ Blizybabu :
Deleteஒரேயொரு நாளுக்கு முன்னமே சொல்லிப்புட்டீங்கன்னா இயைஞர்கள் தலைகளை கரிச்சட்டிக்குள் முக்கிப்புட்டு, தொப்பைகளை பெல்ட்டுக்குள் திணிச்சிப்புட்டு, திடு திடுன்னு ஓட்டமா வந்திடுவாங்க - கைத்தாங்கலா ! அப்புறம் அரை அவருக்கு ஒருவாட்டி சக்கரை போடாத காபிக்கும் ; மேரி பிஸ்கெட்டுக்கும் மட்டும் ஏற்பாடு பண்ணிடுங்க !
// கைத்தாங்கலா வா??? // சில பல யூத் மனசுகளை புண்படுத்தி விட்டீர்களே சார்!!!! என்னா கொடுமை சார் இது??? :)
Delete///அரை அவருக்கு ஒருவாட்டி சக்கரை போடாத காபிக்கும் ; மேரி பிஸ்கெட்டுக்கும் மட்டும் ஏற்பாடு பண்ணிடுங்க !////--- ஒரே கமென்ட் லே கம்பனி சீக்ரெட் எல்லாம் வெளியே வந்து விட்டதே....ஹி..ஹி..ஹி...😉😉😉
Delete---STV
டெக்ஸுக்கு வாக்களித்த அனைவருக்கும் ,மனதுக்குள் வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி
Deleteஅப்பிடி அதிகாரி கதை தா போட்டு ஆகனும்னா எஃலையில் ஒரு யுத்தமோ இல்லே நத்த நகரமோ போட்டுட்டு போங்க..
ReplyDeleteசூப்பர் முடிவு ஆசிரியரே
ReplyDelete//// இன்று கெலித்தது காமிக்ஸ் நேசம் மாத்திரமே///
ReplyDeleteபொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வாசகம் சார்..👌👌👌👌👌👌👌👌👌👌👌
உண்மை
DeleteSTV கொண்டாடுவோம்
Deleteடியர் விஜயன் சார்,டெக்ஸின் பழிக்கு பழி மறுபதிப்பில் MAXIயில் வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து...
ReplyDeleteகார்டூன் கதைகளில் லக்கிலூக் எனக்கு பிடித்ததுதான்... ஆனால் கடைசியாக லக்கிலூக்கின் எந்த கதையை படித்து மனம் விட்டு சிரித்தேன் என்று சொல்ல முடியவில்லை...
மேலும்
சுஜாதா சொன்ன ஒரு விசயம் நியாபகம் வருகிறது!!!
கல்கியின் எழூத்துகள் இப்போது போரடிக்கிறது.. படிக்க முடியவில்லை..
ஏனைன்றால் கல்கி மாறவில்லை..நான் மாறிவிட்டேன் என்று...
அப்படிதான் கார்டூன் கதைகளும் தற்போது எனக்கு தோன்றுகிறது...
எப்போது போர் அடித்தாலும் மறுவாசிப்புக்கு நான் எடுப்பது டெக்ஸின் கதைகளே...
கார்ட்டூன் கதைகள் அல்ல!!!
மாத்துவோம் சார் ; சிஸ்டத்தையே மாத்துவோம் சார் ! இப்போ மாத்தாட்டி எப்போவுமே முடியாது !
Delete///எப்போது போர் அடித்தாலும் மறுவாசிப்புக்கு நான் எடுப்பது டெக்ஸின் கதைகளே...///
Deleteஅருமை சுந்தரா!!!👌👌👌👌
"பழிக்குப் பழி"---அற்புதமான சாய்ஸ்!!!
"மேக்ஸி" சைஸ் இனி டெக்ஸ்க்கு ஆகாது என தெரிந்து விட்டது. ரெகுலர் டெக்ஸ் சைசில் ரசிப்போம்....
//மாத்துவோம் சார் ; சிஸ்டத்தையே மாத்துவோம் சார் ! இப்போ மாத்தாட்டி எப்போவுமே முடியாது !///
DeleteROFL....:-)))))))))))))))
மேக்ஸி டெக்ஸை ரெகுலர் டெக்ஸை மாத்தினத்துக்கு ஒரு ஸ்பெஷல் கலர் டெக்ஸ் பார்சல்...!!!
Delete///இன்றைய போட்டியின் ஏகோபித்த வெற்றியாளராக தல டெக்சினை அறிவிக்கிறேன் !! தொடரும் நாட்களில் உங்கள் அவாவினைப் பூர்த்தி செய்திடும் விதமாய் TEX வண்ண மறுபதிப்பினைக் கொணரும் முயற்சிகளைத் துவக்கிடுவேன் - எந்தக் கதை என்ற அறிவிப்போடு ! ///
ReplyDeleteLove you TEX
We all love TEX
Deleteமாமா ஒரு வகையில் இது நமக்கும் வெற்றிதான்... கௌபாய் எக்ஸ்பிரஸ் எனது விருப்பம்...
Deleteஆனா history கிடையாது போல...
யெஸ்ஸு...!
Deleteஇஸ்டரி உண்டு பழனி ; போனி எக்ஸ்பிரஸின் வன்மேற்கு இஸ்டரி உண்டு - இந்த இதழோடு !
Deleteஜெஸ்ஸி ஜேம்ஸ் ; கோச் வண்டியின் கதை - மறுபதிப்புகளில் வந்தது போலவே !
Deleteநன்றி சார்....
Deleteடெக்ஸ் வில்லரின் அதிரடி கணவாய் வெளிவந்தால் சந்தோஷம்
ReplyDeleteஒரே நாளில் மூன்று பதிவு செம்ம
ReplyDeleteஅன்பு காமிக்ஸ் நண்பர்களுக்கு வணக்கம்,நமக்கு என்ன தேவை என்பதை நாம் தான் முட்டி மோதிக்கொண்டு ஆசிரியரிடம் கேட்க வேண்டும்,அவர் நமக்கு எது கொடுத்தாலும் சந்தோஷமே,இந்த தடவை,நாம் கேட்ட இரண்டுமே வரும்,அதில் ஒன்று,பழிக்குப் பழி,வாழ்க நண்பர்கள்,வளர்க டெக்ஸ் புகழ்
ReplyDeleteநன்றி ஆசிரியரே!
ReplyDeleteவாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும்!
பழிக்குப்பழி, டெக்ஸ் கலர் ரெகுலர் சைஸ்.
Deleteகௌபாய் எக்ஸ்பிரஸ், லக்கி மேக்சி.
வெற்றி பெற்றது காமிக்ஸ் நேசம்.
ரியலி ஐயாம் வெரி ஹேப்பி!
We are all happy sir !
Deleteமறு வாசிப்புக்கு ஏற்ற கதை,டெக்ஸ்,டெக்ஸ் மட்டுமே,
ReplyDelete🙏🙏
ReplyDeleteமிகப் பெரிய சந்தோசமே கார்ட்டூனும் வரும் என்பதே. வராம்ப்போயி மச்சானோட முகம் வாடிப் போயிருந்தா ரொம்பக் கஷ்டமாப் போயிருக்கும்.
ReplyDeleteஇது நீண்ட கால வேண்டுகோள். நேரம் வரும் போது வாய்ப்பளிக்க வேண்டும். சந்தாவில் வரும் ஆறு கார்ட்டூன்கள் பத்தவில்லை என்பது சரியான வாதந்தான். அதுக்கு மேல அதிக எண்ணிக்கையில் கார்ட்டூன் வந்தா நல்லாருக்கும் என்பதே என் எண்ணமும்.
ஆனா அவற்றை மூன்று அல்லது நான்கு எண்ணிக்கை கொண்ட தொகுப்புகளாக, முன்பதிவு அடிப்படையில் ஹார்ட்கவரில் வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ கொண்டு வர முடியுமானால் அட்டகாசமாக இருக்கும்.இந்த மாதிரி வரும்போது அவற்றை பரிசாக வழங்கவும் கொஞ்சம் கெத்தா இருக்கும். ஒரே ஒரு தடவை வாய்ப்பு குடுத்துப் பாருங்கள். வெற்றி பெற்றால் தொடரலாம்.
///மிகப் பெரிய சந்தோசமே கார்ட்டூனும் வரும் என்பதே. வராம்ப்போயி மச்சானோட முகம் வாடிப் போயிருந்தா ரொம்பக் கஷ்டமாப் போயிருக்கும்.///
Deleteலக்கி லூக் ஜெயிச்சிருந்து, டெக்ஸூம் வரும்னு சார் சொல்லியிருந்தா.. மேலே இருப்பதை அப்படியே நான் எழுதியிருப்பேன்..! :-)
///இது நீண்ட கால வேண்டுகோள். நேரம் வரும் போது வாய்ப்பளிக்க வேண்டும். சந்தாவில் வரும் ஆறு கார்ட்டூன்கள் பத்தவில்லை என்பது சரியான வாதந்தான். அதுக்கு மேல அதிக எண்ணிக்கையில் கார்ட்டூன் வந்தா நல்லாருக்கும் என்பதே என் எண்ணமும்.
Deleteஆனா அவற்றை மூன்று அல்லது நான்கு எண்ணிக்கை கொண்ட தொகுப்புகளாக, முன்பதிவு அடிப்படையில் ஹார்ட்கவரில் வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ கொண்டு வர முடியுமானால் அட்டகாசமாக இருக்கும்.இந்த மாதிரி வரும்போது அவற்றை பரிசாக வழங்கவும் கொஞ்சம் கெத்தா இருக்கும். ஒரே ஒரு தடவை வாய்ப்பு குடுத்துப் பாருங்கள். வெற்றி பெற்றால் தொடரலாம்.///
ஆமாம் சார்.!
ஒரு முறை முன்பதிவுக்கு மட்டும் என்றோ,அல்லது லிமிட்டேட் எடிசனிலோ முயற்சித்து பார்க்கலாம் சார்.!
லக்கி, சிக்பில் போன்றோரை தவிர்த்து ரின்டின்கேன் மதியில்லா மந்திரி, சுட்டி லக்கி.. ஏன்.. ஸ்மர்ஃம்ப்ஸ், பென்னி கூட முயற்சி செய்யலாம் சார்.!
ரத்த படலத்துக்கு வாய்ப்பு கொடுத்தது போல நலிவடைந்த கார்ட்டூனுக்கும் ஒரு வாழ்வு கொடுக்கலாமே சார்.!
முன்பதிவு வெற்றிபெறவில்லையெனில் விட்டுவிடலாம்.. அல்லது வேறு வகையை யோசிக்கலாம்.!
அட்டகாசமான ஐடியா..👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼
Deleteஅருமையான idea. ஒரு வருடம் செயல் படுத்தலாம் சார்.
Deleteஆர்வமுடன் இதனை வரவேற்று ஆதரிக்கிறேன்.
DeleteThis comment has been removed by the author.
Deleteஇதெல்லாமே என்னைப் பொறுத்தவரையிலும் வசந்த மாளிகை காலத்து அகுடியா தான் சார் ! 2018-ல் ப்ளூ கோட் ஸ்பெஷல் என்று 3 ஆல்பங்களை ஒருசேர வெளியிடத் திட்டமிட்டு அப்புறமாய் ரிவர்ஸ் அடித்திட்டேன் - இது தேறுமா - தேறாதா ? என்ற நெருடலுடன் ! டாக்டர் சுந்தரின் எண்ணங்களே புத்தக விழாக்களில் நான் சந்தித்துப் பேசிடும் நிறைய 'கார்ட்டூன் வேண்டாமே ' அணியினரின் அபிப்பிபிராயங்களும் ! 'அன்னிக்கு ரசிச்சதை இப்போ ரசிக்க முடியலீங்கோ ' என்றே அவர்கள் வருத்தப்பட்டனர் ! பெருசாய் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்து உள்ளதையும் சொதப்பிக்க வேண்டாமே என்று தான் அந்தத் திட்டமிடலை ஓரங்கட்டினேன் !
DeleteMoreover ஒற்றை நொடி ஒன்பது தோட்டா ; கென்யா ; ரூட் 66 ; இரத்தப் படலம் என 'முன்பதிவு' ஸ்லாட்டுக்காகக் காத்திருக்கும் heavyweights இம்முறை ஏராளம் ! இந்தப் பட்டியலை க்ளியர் செய்யவே எத்தனை காலமாகிடவுள்ளதோ - கொரோனாவுக்கே வெளிச்சம் !
Deleteமுடிஞ்சவரைக்கும் 2021 ல் எல்லாத்தையும் கிளியர் பண்ணிடுவோம் சார்,அப்புறம் மறுக்கா புதுசா யோசிப்போம்...!!!
Delete///Moreover ஒற்றை நொடி ஒன்பது தோட்டா ; கென்யா ; ரூட் 66 ; இரத்தப் படலம் என 'முன்பதிவு' ஸ்லாட்டுக்காகக் காத்திருக்கும் heavyweights இம்முறை ஏராளம் ! இந்தப் பட்டியலை க்ளியர் செய்யவே எத்தனை காலமாகிடவுள்ளதோ - கொரோனாவுக்கே வெளிச்சம் !///
Deleteநிறைய நண்பர்களின் நீண்டநாள் ஆசை சார்.!
ஐரோப்பிய தரத்தில் நம்முடைய காமிக்ஸூம் கலக்கும் இந்நேரத்தில்.. அவர்களைப்போவே நாமும் ஆம்னிபஸ் சிஸ்டத்தை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும் சார்.!
அவர்களுடைய விற்பனை இமயமலை என்றால் நம்முடையது பறங்கிமலையில் பாதி என்பதும் புரிகிறது சார்..
அடுத்த வருடம் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் சார்.. லிமிட்டேட் எடிசன்..முன்பதிவுக்கென மட்டும்..! குறிப்பிட்ட எண்ணிக்கையை முன்பதிவு எட்டவில்லையெனில் கேன்சல் செய்துவிடலாம் சார்.!
ஒரு சாராரை கவராமல் போய்விட்ட கார்ட்டூன்ஸ் இன்னொரு சாராரை வெகுவாக கவர்ந்துள்ளது.. அவர்கள் நிச்சயம் கைகொடுப்பார்கள்.!
வாசக சொந்தங்களுக்கு..
எல்லா ஜானர்களும் வாழவேண்டும்.. எனக்குப் பிடித்தவை மட்டும் போதுமென்று ஒவ்வொருவரும் நினைக்க ஆரம்பித்தால்..
இங்கு நல்ல மீன்கள் கிடைக்கும்னு போர்டு வெச்ச வைகைப்புயல் கதையாகிவிடும்.!
//ஒரு சாராரை கவராமல் போய்விட்ட கார்ட்டூன்ஸ் இன்னொரு சாராரை வெகுவாக கவர்ந்துள்ளது.//
Deleteஅந்த மஞ்சப்பையத் தூக்கிட்டு கொடி புடிச்சிட்டு ஆ- வூ ன்னு
ஆரவாரமா வர்ற அணி தான் நம்ம இன்னொரு சாராரா சார் ?
// இங்கு நல்ல மீன்கள் கிடைக்கும்னு போர்டு வெச்ச வைகைப்புயல் கதையாகிவிடும்.! //
Deleteஎதிரணி தலைவரே,தீர்ப்பு சொல்லியாச்சி,தம் கட்டினது போதும்...!!!
ஹி.ஹி.ஹி...
ஏஞ்சாமீ..நான் அதை எதுக்கு சொல்லியிருக்கிறேன்.. நீ எப்படி புரிஞ்சிக்கிட்டே..!? ;-)
Delete///அந்த மஞ்சப்பையத் தூக்கிட்டு கொடி புடிச்சிட்டு ஆ- வூ ன்னு
Deleteஆரவாரமா வர்ற அணி தான் நம்ம இன்னொரு சாராரா சார் ?///
இன்றில்லாவிட்டாலும் சமயம் வாய்க்கும்போது ஒரு முயற்சி செய்துதான் பார்ப்போமே சார்..! தேறவில்லையென்றால் விட்டுவிடுவோம்.!
காமிக்ஸ்னா டுமீல் டுமீல் கும் நங் சத் சர்ர்ர்ர் விர்ர்ர்ர் மட்டுமே நினைக்குறவங்க அப்படியேவா இருந்திடப்போறாங்க..!
2018-ல் ப்ளூ கோட் ஸ்பெஷல்//
Deleteவடை போச்சே...
புரியுதுப்பா லிமிட்டேட் எடிசனுக்குதானே...
Delete!!!
இருந்தாலும் உம்ம வாதத்தின் தொனி அதே டிரண்டில் இருந்த மாதிரி இருந்திச்சி அதான்...ஹி,ஹி,ஹி...
I also support the cartoon omnibus idea. I am sure if people are not able to read and enjoy it they will at least gift it to kids. The titles selected should be done in such a way as to aid the gifting.
DeleteYAKARI is for kids - but it is simplistic yet profound - can be tried.
If not we can look at other cartoon ideas - Luckly Luke has many titles to go, Bluecoats, Classic Chik-Bill omnibus - etc etc...
etc etc...
Deletei.e
Rin tin can
Kid lucky
Iznogoud
And why not..
Smurf & Benny
ஹைய்யா மறுக்கா,மறுக்கா புதிய பதிவு...!!!
ReplyDeleteகாமிக்ஸ் பிரவாகத்தில் நானும் நனைந்தேன்.ஒற்றை நாளில் மூன்று பதிவுகள்.சந்தோஷம்.மிக்க சந்தோஷம்.தீர்ப்பும் மகிழ்ச்சி தந்தது.நன்றி ஆசானே.
ReplyDelete:-)
DeleteWe all love tex.
ReplyDelete// லக்கி லூக்காகவே இருந்தாலுமே !! So அவர்களுக்கென உருவாக்கப்படும் சொற்ப வாய்ப்புகளும் தட்டிச் செல்லும் சங்கடங்கள் ஒரு நெருடும் சமாச்சாரமாகிடாதா ? //
ReplyDeleteஎனக்கென்னமோ சாலமன் பாப்பையா பேச்சை கேட்கற மாதிரியே ஒரு பீலிங்கு...!!!
அட..என்னய்யா இப்புடி பொசுக்குன்னு சொல்லிப்புட்டீங்க ! அவுக நிழலிலே நிக்க கூட முடியாதுங்களே நமக்கு !
Deleteஒரு நாளைக்குள் முன்று பதிவுகள் ..!!!!!
ReplyDeleteசொல்லிட ஒன்றுமில்லை எடி .. 😱
இந்த வருஷத்து பதிவு எண்ணிக்கையையும் சித்தே பார்த்திடுங்கோ !
Deleteஎனது கணக்கீட்டின்படி,இந்த பதிவுடன் 90 பதிவு இந்த ஆண்டில் பதிவாகியுள்ளது...
Deleteஇந்த வருடத்தில் அதிக பதிவு வந்தது ஜூன் மாதமாகும்,ஜூனில் 11 பதிவுகள் வந்துள்ளன...
இன்னும் 10 பதிவுகள் வந்தால் சதமடிக்கலாம்...!!!
பதிவு சதம் போட்டதுக்கு ஒரு குண்டு ஸ்பெஷல் வெளியிடலாம்...!!!
Deleteஹி,ஹி,ஹி...!!!
2018 ல் அதிகபட்சமாக 81 பதிவுகள் போட்டுள்ளோம்,அந்த வகையில் இந்த ஆண்டுதான் அதிகபட்ச பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது...!!!
Deleteசார்...பதிவு எண்ணிக்கை 99-ல் நிற்கின்றது இப்போதைக்கு ! And லாக்டௌன் மாதங்களில் தலா 12 posts போட்டு ரவுசு விட்டிருக்கிறோம் !
Deleteநல்லது அப்ப சதம் போட இன்னும் ஒரே பதிவுதான்...!!!
Deleteஎதிர்பார்த்த தீர்ப்புக்கு நன்றி சார்...
ReplyDeleteஉண்மையைச் சொன்னால் கார்ட்டூன் வருவதும் மகிழ்ச்சியே...!!!
இன்னைக்கு உங்களுக்கு சாப்பிடக்கூட நேரம் இருந்திருக்காதுதானே சார்...??😊😊
ReplyDelete// இன்று கெலித்தது காமிக்ஸ் நேசம் மாத்திரமே என்ற சந்தோஷத்தோடு நடையைக் கட்டுகிறேன் !! //
ReplyDeleteஅதே,அதே சார்...!!!
டெக்ஸ்வில்லர்.
ReplyDeleteநள்ளிரவு வேட்டை
மந்திர மண்டலம் ( மெபிஸ்டோவும் வந்தமாதிரி இருக்குமே சார் )
பழிக்குப்பழி
இதுவரை வந்த டெக்ஸ் மறுபதிப்பில் ஹாரட்கவர் செமஹிட் எனவே ஹார்ட்கவர் நலம்சார்.. 2 கதைகளை ஒரே புக்காக கொடுத்தால் இன்னும் சிறப்பு...இல்லைனா எனக்கு history தான் வேணும் சார்...
விடாது மழை பெய்யும் இந்த புயல் வேளையில், காமிக் ரீலிஃபு அவசியமாகிறது. துணிகள் காயாத ஈர காற்று, எந்த நேரத்திலும் நிறுத்தி வைக்கப்படும் மின்சாரம், சென்னை மிதக்கிறது என்று இரண்டு அடிக்கு தேங்கியுள்ள நீரை ஓவர் ஹைபு செய்யும் நியூஸ் சேனல்கள், அதை நம்பி பயந்து போய், நமக்கு போன் செய்து விசாரித்து, இருக்கிற சார்ஜை காலி பண்ணும் நண்பர்கள்.. இதனால்தான் இம்முறை லக்கியை தேர்வு செய்தது. எப்படி இருந்தாலும் சந்தோஷம் தான். வாழ்க காமிக்ஸ் கட்சி.
ReplyDelete// இரண்டு அடிக்கு தேங்கியுள்ள நீரை ஓவர் ஹைபு செய்யும் நியூஸ் சேனல்கள், அதை நம்பி பயந்து போய், நமக்கு போன் செய்து விசாரித்து //
Deleteஉண்மை.
அதுக்கெல்லாம் நீங்க எங்க ஊர்கிட்டே டியூஷன் எடுத்துக்கணுமுங்கோ ! நிவராவது ; புரெவியாவது - நாங்கல்லாம் அரைபாடி லாரிலேயே ஆணியடிச்சாப்புலே டிராவல் பண்ணுவோம்லே !
Deleteமாத்துவோம் சார் ; சிஸ்டத்தையே மாத்துவோம் சார் ! இப்போ மாத்தாட்டி எப்போவுமே முடியாது !//
ReplyDeleteஆமா சார் அப்படியே XIII ஸ்பின்ஆப்பையும் கொஞ்சம் கவனிங்க...
போதுந்சாமி இப்போதைக்கு ! முதல்லே மெயின் பிக்சர் தேறும் வழி பிறக்கட்டும் ; அப்புறமா இன்னும் சில வருஷங்களில் ரெண்டாம் சுற்றும் முடியட்டும் ! அதுக்குப் பிறகு தம் இருந்தால் யோசிப்போம் !
DeleteThe 2 heroes I prefer while re-reading are always Tex and Tiger only. Expecting more Tex published whenever you get a open slot.
ReplyDeleteஇதோடு படிக்காமல் பாதியில் நிறுத்திய டெக்ஸ் கதைகள் 17! மறுபடியும் ஒன்னா???
ReplyDeleteஓட்டு போடுறப்ப எங்கைய்யா போனீங்க.?
Delete17 வேண்டாம் சார் ; ராசியான நம்பரில்லே !
Deleteநான் மொத்தமா பதினேழு டெக்ஸ் காமிக்ஸ் தான் படிச்சு இருப்பேன். (நிறைய பக்கத்தில டூமில் டூமில், மீதமிருக்கும் பக்கம் கும் கும். அவ்வளவு தான் டெக்ஸ் காமிக்ஸ் முடிச்சு போச்சு.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகாமிக்ஸ் வரலாற்றில் நான் 10 பக்கங்களுக்கு மேல் படிக்காத படிக்க முடியாத பயந்து ஓடிய புத்தகம் நிஜங்களின் நிசப்தம் அதை ஆஹா ஓஹோ என்றவர்கள் டெக்ஸ் கதைகளை படிக்க முடியவில்லை என்று சொல்வது அபத்தம் யப்பா சாமிகளா
ReplyDeleteவச்சிகிட்டா வஞ்சனை பன்றோம். டெக்ஸ் காமிக்ஸை ஆரம்பிச்சால சிரிப்பு வந்துடுது. நான் என்ன செய்யட்டும்.
Deleteநி.நி பத்து தடவை படிச்சாலும் இன்னும் ஒரு தடவை படிக்க தோனுது.
நி.நி.உங்களுக்கு 10 தடவை படிக்க தோனுது எங்களுக்கு டெக்ஸை 100 முறை படிக்க தோனுதே தேறாத டைகரை புடிச்சு நீங்க தொங்கும் போது விற்பனையின் ராஜா பாக்ஸ் ஆபிஸ் கிங் டெக்ஸை இன்னும் பல படிகள் ஏற்றி வைத்து பார்ப்போம் உங்களுக்காவது டெக்ஸை படிக்கும்போது சிரிப்புதான் வருது நி.நி.5 பக்கம் தாண்டும்போதே அழுகை பீறீட்டுக்கொண்டு வருகிறது
Delete\\நி.நி.5 பக்கம் தாண்டும்போதே அழுகை பீறீட்டுக்கொண்டு வருகிறது\\
Deleteஅப்ப நீங்கள் சரியாக தான் படிச்சு இருக்கிங்க. சிரிப்பு வந்தா உங்களுக்கு ஏதோ கோளாறுன்னு அர்த்தம். ஏனெனில் அது கி.நா. டெக்ஸ் கிடையாது.
உலக அளவில் வசூல் சாதனை படைத்த படங்கள் அனைத்தும் சோக க்ளைமாக்ஸ் கொண்ட சினிமாக்களே.
//ராஜா பாக்ஸ் ஆபிஸ் கிங் டெக்ஸை இன்னும் பல படிகள் ஏற்றி வைத்து //
Deleteஅப்புறம் நான் காக்க அதிகம். அதுக்காக .......மயில் தான்... எதாவது சொல்லுவேன். டென்ஷன் உங்களுக்கு தான்.
கமர்ஷியல் பார்முலா உள்ள சினிமாக்களே 95 சதவிகிதம் எடுக்கப்பபடுகிறது ரசிக்கப்படுகிறது 5 சதவிகிதமே சோக சினிமாக்கள்
Delete//அப்ப நீங்கள் சரியாக தான் படிச்சு இருக்கிங்க. சிரிப்பு வந்தா உங்களுக்கு ஏதோ கோளாறுன்னு அர்த்தம். ஏனெனில் அது கி.நா. டெக்ஸ் கிடையாது.//
Deleteகரெக்ட்டு எனக்கு கோளாறு எதுவுமில்லைதான் ஏன்னா ஆக்சன் கதையை படிச்சிட்டு சிரிக்கிற அளவிற்க்கு என் மூளை கலங்கி போகவில்லை
//அப்புறம் நான் காக்க அதிகம். அதுக்காக .......மயில் தான்... எதாவது சொல்லுவேன். டென்ஷன் உங்களுக்கு தான்//
Deleteநீங்க டென்ஷன் ஆக்காம பேசினாதான் அதிசயம் உங்க வழக்கமான வேலையத்தானே பாக்குறிங்க
94வது
ReplyDeleteஆஹா மூன்று பதிவா...யப்பா
ReplyDeleteடெக்ஸ் வெற்றிவாகை சூடியது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி சார்! எந்த கதை வந்தாலும் ரெம்ப சந்தோஷமே! லக்கிலுக் போடுவதாக இருந்தால், தாயில்லாமல் டால்டனில்லை போடப் பார்க்கலாம் என்பது எனது எண்ணம்! ஏனெனில், இதனை ஸ்பெஷல் இதழிற்கு ப்ரீயாக தந்ததினால் நிறைய பேரிடம் இந்த இதழ் இருக்காது!
ReplyDeleteகௌபாய் எக்ஸ்பிரஸ் தேர்வாகியுள்ளது சார் ; அடுத்த வாய்ப்பு 'தாயில்லாமல் டால்டனில்லை'க்கு வழங்கப் பார்ப்போம் !
DeleteNice. Cowboy Express first printu print not clearu so welcommu
DeleteThis comment has been removed by the author.
Delete100
ReplyDeleteதீர்ப்பு OK !
ReplyDeleteபின்குறிப்பு OK OK !
KOK சாய்ஸ் OK OK OK!
வாவ்....சரியான தீர்ப்பை வழங்கிய நாட்டாமை அவர்களுக்கு மனம் கனிந்த நன்றிகள்...
ReplyDeleteஇளைஞர்களின் போராட்டம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி...
அதை விட பெரியவர்களின் இளவயது மகிழ்ச்சியை மீண்டும் கொணர அவர்களுக்கும் வாய்ப்பளித்ததில் இன்னும் மகிழ்ச்சியே சார்...:-)
கெளபாய் எக்ஸ்பிரஸ் லக்கியை மனம் கனிந்து வாழ்த்தி வரவேற்கிறேன்..
ReplyDeleteதேர்ந்தெடுத்த அண்ணன் ரவிக்கண்ணர்ர்ர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..:)
Deleteஉங்களுக்கு நல்ல மனசு தலீவரே..!
Deleteஅதுக்காக அண்ணன்னு சொல்லலாமா..!? இதெல்லாம் அடுக்குமா..!? ஜனங்க ஏத்துக்குவாங்களா..!?
அட.. ஜனங்களை வுடுங்க.. உங்க மனசாட்சி ஏத்துக்குமா..!? நைட்டு தூக்கம் வருமா..!? பகல்ல பசிக்குமா..!? பல்லு வெளக்க முடியுமா..!? பத்துபாத்திரம் தேய்க்க முடியுமா..!?
விடு விடு மாம்ஸ்! சில உண்மைகள் காதில் விழும் போது கண்டுகாமல் போய் விடனும்....😉😉😉😉
Deleteசின்ன அண்ணனை சொன்னவுடனே பெரிய அண்ணண் வந்துட்டாரே...!!!
Deleteஒரே நாளில் மும்மூர்த்தி சாரி மூன்று பதிவுகள்...
ReplyDeleteஅட்டகாச தேர்தல் பதிவுகள்...:-)
பலம் வாய்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டாலே சுவையான கலவரம் தான்...
ReplyDeleteடெக்ஸ் அணிக்காக வாதாடிய அனைவருக்கும் பாராட்டுகளும் ,வாழ்த்துகளும்..
லக்கி அணிக்காக வாதாடிய நண்பர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..
// டெக்ஸ் அணிக்காக வாதாடிய அனைவருக்கும் பாராட்டுகளும் ,வாழ்த்துகளும்.. //
Deleteசந்தோஷம் தலைவரே...
அப்புறம் தலைவர் அணி ஜெயிப்பதில் வியப்பில்லைதான்...!!!
போங்கப்பா.. இன்னொருக்கா 5:30 வெகிக்கிளை பாருங்க.!
Deleteஇன்னாது........!!!!
Deleteஎனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நண்பர்களே
DeleteWe want Pazikkupazi or ellaiyil oru yutham or Athiradi Kanavai
ReplyDeleteமூன்று நாளில் 750"கமெண்ட்,சூப்பர்,
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி டெக்ஸ் வில்லர் தேர்வு செய்தது
ReplyDeleteஇதிலிருந்து நண்பர்கள் அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என்ன அப்படின்னா, அடுத்த தபா எடிட்டர் ஏதாவது ஓட்டு, இதுவா அதுவா அப்படின்னு நம்மள பார்த்து பண்ண சொன்னா நமக்குள்ளேயே பேசி விட்டு, பிரிந்து இதே மாதிரி விடிய விடிய பஞ்சாயத்து பண்ண எடிட்டர் போனா போகட்டும் அப்டினு இரண்டு புத்தகமும் தந்து விடுவார். நமக்கு என்ட் ஆப் த டே நிறைய காமிக்ஸ் கிடைக்கும்...
எப்படி என் ஐடியா
நேற்று நடந்தது இதே டெக்னிக் தானே.... இனி இதான் கரெக்ட் ஃபார்முலா....
Delete---STV
அடப்பாவி மாம்ஸே...
Deleteநேத்து கைவலிக்க டைப் பண்ணி லக்கி லூக் ஜெயிக்கணும்னு உசுரை குடுத்து போராடினோம்யா..
என்ன..
தேர்தல் நேரத்துல கொஞ்சம் பொறுப்பா வேலை பாக்காம விட்டுட்டோம்..டெக்ஸ் ஜெயிச்சிட்டாப்ல..!
அப்படியே இருந்தாக்கூட இந்த ஃபார்முலா எல்லா டைம்லயும் வொர்க்கவுட் ஆகாதுப்பா.!
///நேத்து கைவலிக்க டைப் பண்ணி லக்கி லூக் ஜெயிக்கணும்னு உசுரை குடுத்து போராடினோம்யா.. !///---
Deleteஇதெல்லாம் உன் ஆற்றல் முன்பு சும்மா மாம்ஸ்...😍😍😍😍
Elephant பசி solle பொரி...!!!😉😉😉😉
தம்மாத்தூண்டு தொப்பை லேசா முன்னுக்க தள்ளிட்டு தெரியுது.. அதுக்காக எலிபன்டுனு சொல்லிட்டியே..?
Delete// தேர்தல் நேரத்துல கொஞ்சம் பொறுப்பா வேலை பாக்காம விட்டுட்டோம்..டெக்ஸ் ஜெயிச்சிட்டாப்ல..! //
Deleteஅப்புறம்,வேற ஏதாவது இருக்காபா...!!!
ஹாஹா...:-)))
Deleteஎடிட்டரின் அடுத்த பதிவு இந்த வருடத்தின் 100 வது பதிவு! அட்டகாசம்!!
ReplyDeleteஇதுக்கு ஒரு ஸ்பெஷல் இதழ் கேட்கலாமா நண்பர்களே?
மைல்கற்கள் வருவதே கொண்டாட்டத்திற்குத் தானே?
Deleteஒரு சிக்பில் ஷ்பெசல் கேட்ருவோமா..?? எத்தனை மில்லியன் செலவானாலும் பரவாயில்லை.. நான் ஒரு புக்கு வாங்கிக்கிறேன்.!:-)
Deleteஇதை தான் விரைவில் கார்ட்டூன் என எடிட்டர் sir சொல்லி இருப்பார் போலே... சூப்பர்....
Delete---STV
ஒரு சிக்பில் ஷ்பெசல் கேட்ருவோமா..?? எத்தனை மில்லியன் செலவானாலும் பரவாயில்லை.. நான் ஒரு புக்கு வாங்கிக்கிறேன்.!:-
Delete#####
ஓகே நானும் வழிமொழிகிறேன்...:-)
நவநீதன் சார்புதுசா யோசிக்கிறாரே. சரவணகுமார் சார் அதுக்குள்ள எண்ணிட்டீங்களா சூப்பர். கார்ட்டூன் தொகுப்பு முன்பதிவுக்கு மட்டும். ஆசிரியர் மனதில் வைத்திருந்து நேரம்வரும்போதுசெயல்படுத்த வேண்டும்என்று கேட்டுக்கொள்கிறேன். சற்று விரைவில் நடந்தால் சந்தோசம். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteதெய்வமே..🙏🙏🙏🙏😍😍😍😍😍
Deleteஓ காட்...( வடிவேல் பாணியில்..)
Delete100 ஆவது பதிவை நல்ல ஸ்பெஷல் பதிவாக போட சொல்வோம் அதுவே இப்போதைக்கு போதும். இரண்டு புத்தகங்களும் எவை என்ற அறிவிப்பு உடன் வெளி வந்தால் போதும் சும்மா பட்டையை கிளப்பும்.
Deleteஅடுத்த பதிவு இதழ்கள் அனுப்பியாச்சு என்ற அறிவுப்பு+ ஆன்லைன் லிங் கொண்ட பதிவு என்பது கன்ஃபார்ம்...!!
Deleteலக்கிதான் கெளபாய் எக்ஸ்பிரஸ் னு தெரிஞ்சிடிச்சே...!!
வியாழன் இரவு பதிவு போடுவதற்குள் டெக்ஸ் போனஸ் புத்தகம் எதுனு ஃபைனலைஸ் பண்ண நேரம் போதுமானதாக இருக்குமானு தெரியலயே!
ஆர்ச்சிஸ்பைடர்மாயாவிமாடஸ்டி கலந்த 100வது மலர்
Deleteநூறாவது பதிவுக்காண்டி ஒரு கார்ட்டூன் ஸ்பெஷலே போட்றுங்க சார்...பாவம் ...ஆசையா கேக்குறாங்க...:-)
ReplyDeleteஇனிமே ஏதாவது போட்டி வந்தா இப்படி ஆளுங்க அடிச்சுக்காம கருத்து மோதல்களுடன் வாதாடினால் பயன் இரு தரப்புக்கும் என்பதை அந்த புலி குழு அறிந்து கொள்ள வேண்டுகிறேன்...
ReplyDeleteகரும்புலியா தலைவரே...!!!
Deleteஹீஹீ
Deleteஎன்ன பன்னுவது புலி பசிச்சாலும் புல்லை திங்காது.
Deleteகுணம் அப்படி. புலிய குறை சொல்லி ப்ரோஜனம் கிடையாது.
Bang Bang Lucky Luke..
ReplyDeleteBang Bang Lucky Luke..
தோர்கல் ஆண்டுமலர் அறிவிப்பின்படியே ஸ்லிப்கேஸுடன் ஐந்து தனி புத்தகங்களா? அல்லது ஒரே ஹார்டுபைன்ட் புத்தகமா சார்?
ReplyDeleteவாங்க சார் வாங்க nice question
Deleteஎனக்கு 5 இதழ்கள் & சூட்கேஸை விட ஒரே அட்டை குண்டுபுக்தான் பிடித்தமானது.....!!!
Deleteகையில் வைத்து இருக்கும் போதே ஒரு கிக் குண்டுபுக்கில உண்டு.
சூட்கேசுல அட்டையோட
Delete///எனக்கு 5 இதழ்கள் & சூட்கேஸை விட ஒரே அட்டை குண்டுபுக்தான் பிடித்தமானது.....!!!
Deleteகையில் வைத்து இருக்கும் போதே ஒரு கிக் குண்டுபுக்கில உண்டு.///
எனக்கும்..!
En sandhegatha yaaraachum theethu vaiyunga.....y no Spider no Archie in 2021 list?
ReplyDelete2021ன் 9 மாத சந்தாவுல பட்ஜெட் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக மொத்தம் 33 இதழ்களே ப்ளானிங்ல இருக்கு....!!!
Deleteஇதனால் 40ரூவாக்கு வரும் சந்தா D கட்டிங் ஆகிட்டது. ஆர்ச்சி இந்த d ல வந்தது. எனவே அடுத்த ஆண்டு நோ ஆர்ச்சி நோ ஸ்பைடர் in list.
ஸ்பெசலா வரும் வாய்ப்பு அதிகங்குது பக்ஷ்சி ராஜா...பட்சி...பட்சி...பட்சி...
DeleteThank u Tex sir. May your dream come true Steel Claw sir.
DeleteI'm a poor lonesome cowboy..
ReplyDeleteAnd a long way from home..