Powered By Blogger

Saturday, December 05, 2020

ஒரு டிசம்பர் தோரணம் !

 நண்பர்களே,

வணக்கம். எங்களைப் பொறுத்தவரையிலுமாவது 2020 ஒரு முற்றுக்கு வந்து விட்டது ! Yes- டிசம்பரின் இதழ்கள் நான்கும் தயாராகி, பைண்டிங்கில் குடியேறியுள்ளன ! வரும் வியாழனன்று டப்பிகளுக்குள் ஐக்கியமாகி வெள்ளி / சனிக்கு உங்கள் இல்லத்துக் கதவுகளை அவை தட்டிட வேண்டும் ! So அட்டவணை பூர்த்தி கண்டுள்ளதோ - இல்லையோ ; ஒரு வரலாற்று நிகழ்வான ஆண்டிலும், நம் தலை தண்ணீருக்கு மேலே தட்டுத்தடுமாறித் தொடர்ந்திட்ட அதிசயத்துடன் இந்த வருடத்துக்கு விடை தந்திட முனைந்துள்ளோம் ! சன்னமானதொரு பெருமூச்சும், விசாலமானதொரு நன்றி கூறும் பிரார்த்தனையும் இந்த நொடியினில் ரொம்பவே தேவையெனத் தோன்றுகிறது ! Boy..oh boy !!

எது எப்படியோ – இந்தாண்டின் ரெகுலர் அட்டவணை மார்ச் வரை நீண்டு போவதால் 3 மெகா இதழ்கள் இன்னமும் பெண்டிங் உள்ளன !

- ஜனவரியில் முத்து 49-வது ஆண்டுமலராய் தோர்கல் 5 பாக ஆல்பம் !

- பிப்ரவரியில் MAXI லயனின் 3 பாக ARS MAGNA !!

- மார்ச்சில் 3 பாக அசாத்தியமான “பிரளயம்” கிராபிக் நாவல்!

So தொடரவுள்ள ஒவ்வொரு மாதத்திலுமே ஒரு மெகா ரகளையான வாசிப்பனுபவம் காத்துள்ளது என்பேன் ! And கேக்கின் மீதான ஐஸிங்காகச் சொல்லக்கூடியது - மூன்று இதழ்களுமே தெறிக்க விடச் செய்யும் ஹிட்களாக அமைவதில் ஐயங்களில்லை என்ற ஜாலி சேதியே ! தோர்கல் பில்டப்களுக்கு அப்பாற்பட்டவராகி விட்டார் ! ARS MAGNA ஒரு க்ளாஸிக் என்பது நம்மில் பலருக்கும் தெரியும் & “பிரளயம்” பிடரியில் அறையவுள்ளதிலும் சந்தேகங்களில்லை ! So டிசம்பருக்கு டாட்டா சொன்ன கையோடு, தொடரவுள்ள மாதங்களுக்கான எனது planner-ஐப் பார்த்திடும் போது ஒரு மெல்லிய இளிப்பு குடிகொள்வதைத் தவிர்க்க .இயலவில்லை ! ஆண்டின் பெரும்பகுதிக்கு இஞ்சி தின்ற எதுவோ போலவே பொழுதுகளைக் கடத்தி வந்தவனுக்கு இப்போது home stretch-ஐப் பார்த்தது போலான உணர்வு !

மெகா இதழ்கள் தவிர்த்து நான் எதிர்பார்த்திருப்பது MAXI லயனின் இறுதி ஸ்லாட்டை நிரப்பிடப் போகும் ஆல்பத்தை எண்ணியே ! அறிவிக்கப்பட்டவை 6 MAXI இதழ்கள் ! அவற்றுள் MAXI-க்களாகவே இதுவரை வெளியாகியுள்ளவை மூன்று :

- இருளின் மைந்தர்கள் TEX – பாகம் 1

- இருளின் மைந்தர்கள் TEX – பாகம் 2

- பிசாசுப் பண்ணை லக்கி லூக்

பிப்ரவரியில் காத்துள்ள ARS MAGNA' வாண்டு ஸ்பெஷல்களின் 2 ஸ்லாட்களையும் ஒன்றிணைத்து ரூ.300 விலையிலான ஆல்பமாய் வரவுள்ளதால் MAXIs # 4 & 5 ஓவராகிடும் ! So எஞ்சி நிற்பது அந்த இறுதி ஸ்லாட் ! அதனை MAXI சைஸிலேயே லக்கி லூக்கின் “கௌபாய் எக்ஸ்பிரஸ்” or “சூ…மந்திரகாளி” மறுபதிப்புகளோடு நிறைவு செய்திடலாம் ! Or – அந்தக் களத்தினில் நமது ‘தல‘யின் வண்ண மறுபதிப்பில் ஏதோவொன்றை (டெக்ஸ்) ரெகுலர் சைஸிலேயே போட்டுத் தாக்கிடலாம் ! எந்த மஞ்சள்சட்டையார் அந்த ஆறாவது ஸ்லாட்டை ஆக்ரமித்தாலுமே உத்தரவாதமான ‘ஹிட்‘ என்பதில் ஏது ஐயம் ? So எந்த மஞ்சளுக்குக் கைதூக்கிடப் போகிறீர்கள் guys?

- MAXI சைஸில் லக்கி லூக்

or

- ரெகுலர் (டெக்ஸ்) சைஸில் ; கலரில் இரவுக்கழுகார் !

ஒல்லிப்பிச்சானுக்கே உங்கள் ஓட்டெனில் – அதை குதிரை மீதே சவரம் செய்து பயணம் செய்யும் சாகஸத்துக்கா ? அல்லது விரல் நீண்ட மாயாஜாலக்காரர் கதைக்கா ? என்பதையும் சொல்லி விடுங்களேன் ப்ளீஸ் ? திட்டமிடலில் தொக்கி நிற்பது இந்த ஒற்றை இதழ் மட்டுமே என்பதால் – இது குறித்து ஜல்தியாய் ஒரு தீர்மானத்துக்கு வந்தோமெனில் மேற்கொண்டு ஆக வேண்டிய வேலைகளைப் பார்த்து விட்டு புது அட்டவணைப் பணிகளில் சிறுகச் சிறுக விரல் நனைக்கத் துவங்கி விடுவேன் !

நடப்பாண்டின் ஒரு நகைமுரணைப் பற்றியும் இங்கே சுட்டிக்காட்ட நினைக்கிறேன்! ஆரவாரமாய் ஜனவரியில் துவங்கிய ரெகுலர் அட்டவணையானது ஜானவாசக் கார் போல ஆடியசைந்து பயணித்து வரும் நிலையில், ஏப்ரலில் துவக்கம் கண்ட ஜம்போ சீஸன் 3 இதோ- இந்த டிசம்பரோடு சுபம் காண்கிறது ! லேட்டாய் ஆரம்பித்தாலும் லேட்டஸ்டாய்த் தாக்குவது தானே தமிழகத்துத் தற்போதைய trend ? So அந்த பாணியில் நடப்பாண்டினில் சடுதியாய் சீஸன் 3-ன் ஆறு இதழ்களுமே களம் கண்டுவிட்டுள்ளன !!

- பிரிவோம் சந்திப்போம்

- ஜேம்ஸ் பாண்ட் 007 – நில்… கவனி… கொல்!

- தனித்திரு… தணிந்திரு… (Old Pa Anderson)

- மா துஜே சலாம் (ரஷ்ய செச்சன்ய யுத்தகளம்)

- கால வேட்டையர்

 &

- தி Lone ரேஞ்சர் – தகிக்கும் பூமி

பிப்ரவரியிலும், மார்ச்சிலும் களம் கண்ட ஜம்போவின் சீஸன் 2 இதழ்களான “அந்தியில் ஒரு அத்தியாயம்” (மார்ஷல் சைக்ஸ்) & “நில்…கவனி…வேட்டையாடு” (Zaroff) இதழ்களையுமே கணக்கில் சேர்த்துக் கொண்டால் 2020-ன் ஜம்போ count மொத்தம் 8 ஆகிடும் ! “சூப்பர் 6” என்று ரெகுலர் தடம் சார்ந்த நாயகர்களோடே முயன்றிட்ட எக்ஸ்ட்ரா இதழ்களின் தடத்தினை சற்றே tweak செய்து, one-shots களுக்கான பிரத்யேகத் தடமாக்கினாலென்ன ? என்ற மகாசிந்தனை ஒரு ரயில்ப் பயணத்தின் அப்பர்பெர்த்தில் துளிர்விட்ட போது, ஒற்றை ஆண்டின் ஆர்வக்கோளாறாக மாத்திரமே இது அமைந்திடக் கூடுமென்றே நினைத்திருந்தேன் ! ஆனால் இஷ்டப்பட்ட ஜானர்களையெல்லாம் வரம்புகளின்றி முயற்சிக்கும் சுதந்திரம் ரொம்பவே பிடித்துப் போனதால் சீஸன் 2-க்கு பிள்ளையார் சுழி போடும் ‘தகிரியம்‘ துளிர் விட்டது ! And உங்களுக்கும் இந்த freewheeling பாணி பிடித்திருந்ததால் – ஜம்போ இனி ‘அம்போ‘வாகிடாதென்ற நிச்சயம் பிறந்துள்ளது ! And இந்த 2020-ல் நாம் பார்த்துள்ள ஜம்போ இதழ்கள் ஒவ்வொன்றுமே ஒரு விதமல்லவா ?

- மார்ஷல் சைக்ஸ் – ஒன் ஷாட் கௌபாய்… சற்றே pathos சகிதம் !

- Zaroff – Pure thrills; ஒரு exotic பின்புலத்தில் ; மலைக்கச் செய்யும் சித்திரங்களுடன் !

- பிரிவோம்… சந்திப்போம் – மறுபடியுமொரு ஒன் ஷாட் கௌபாய் இதழ்! ஆனால் இதனிலுள்ள கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் a different shade of grey ! மனித மனதைத் தோலுரித்துக் காட்ட முயன்ற முயற்சி!

- ஜேம்ஸ் பாண்ட் 2.0 – நவீன யுக espionage பற்றிச் சொன்ன ஒரு old school spy ! Again – ஜப்பானின் வித்தியாசப் பின்புலத்தில் !

- தனித்திரு … தணிந்திரு – ஒன் ஷாட்! ஹெர்மனின் அதகளத் தூரிகையோடு ! சொல்லப்பட்டது கதையல்ல… நாகரீகத்தின் ஒரு அவலப் பக்கமே !

- மா…துஜே…சலாம் – பார்த்திரா புதுக்களம்… படித்திரா புதுப் பாணி ! ஒரு கிழவியும், ஒரு புள்ளைத்தாச்சி நாயும் 96 பக்கங்களுக்கு நம்மைக் கட்டுண்டு செய்ய  மடியுமென்று நிரூபித்த கதை!

- கால வேட்டையர் – மெதுமெதுவாய் Sci-fi பக்கமாய் அடிவைத்திட ஒரு முதற்படி ! காதுல கணிசமான புய்ப்பமே என்றாலும், காமிக்ஸ் உலகின் ஒரு மெகா அங்கத்தின் பக்கமாய்ப் பாராமுகமாய் நாம் இருந்திட முடியாதென்பதற்கு ஒரு சிறு நினைவூட்டல் !

- தி Lone ரேஞ்சர்             -  டிசம்பர் 2020

Looking ahead – காத்திருக்கும் சீஸன் 4-ம் ‘திக்குக்கொரு தினுசு‘ என்றே அமைந்திடவுள்ளது ! சில நேரங்களில் கதாநாயகர்கள் / நாயகிகள் / தொடர்கள் / சீரான கதைவரிசைகள் என்பதையெல்லாம் தூக்கிக் கடாசி விட்டு, சிக்கிய சிக்கிய சுவாரஸ்யங்களையெல்லாம் படிப்பதும் ஒரு ரம்யமே என்பதை நாம் சிறுகச் சிறுக உணர்ந்து வருகிறோம் ! எனது கதைத் தேர்வுகள் மட்டும் சோடை போகாது தொடர்ந்திடும் பட்சத்தில், ஆனையார் ஆண்டுக்குப் பன்னிரெண்டு தபா பிளிறும் சாத்தியங்களும் இல்லாது போகாது – maybe in the distant future !

இதோ – நடப்பு மாதத்து ஜம்போவின் அட்டைப்பட preview & உட்பக்க previews ! 



ஒரிஜினல் அட்டைப்படமே ; லேசான வர்ண மெருகூட்டலுடன் ! கதையைப் பொறுத்தவரையிலும் “தனியொருவன்” ஆல்பத்தின் மெலிதான தொடர்ச்சியாகவும் இதைப் பார்த்திடலாம் ! அதற்காக அந்தக் கதையை மறுக்கா மனப்பாடம் செய்தாக வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ; but துவக்கப் புள்ளியைப் பற்றிய ஞாபகம் இருப்பின், இந்த இறுதி புள்ளியினைப் புரிந்திட சுலபமாகிடும் ! And மாமூலான டமால்-டுமீல் சமாச்சாரங்கள் இம்முறையுமே ஜாஸ்தி இராது ! வன்மேற்கின் ஒரு யதார்த்த முகத்தோடே தொடர் பயணிக்கிறது ! சொல்லப் போனால் அமெரிக்க வரலாறு ; அரசியல் என்றெல்லாமே கூட கதாசிரியர் தொட்டுச் செல்கிறார் ! So வழக்கமான வெஸ்டர்ன் கதை பாணிகளில் அல்லாது, இங்கே மொழிபெயர்ப்பில் நிறையவே சிரத்தை தர அவசியப்பட்டுள்ளது ! என்ன – கலரிங் செம டார்க் வண்ணங்களில் இருப்பதால், பக்கத்துக்குப் பக்கம் அமாவாசை இருட்டுக்குள் ஆளாளுக்குச் சுற்றித் திரிவது போலவே உள்ளது மட்டுமே நெருடியது ! 

தனியொருவன்” தொடர வேண்டிய ஒருவனா ? ‘அப்பாலிக்கா பார்த்துக்கலாம்‘ என சொல்லப்பட வேண்டியவனா ? என்பதை இனி நீங்களே தீர்மானித்தாக வேண்டும் folks!

And இதோ- போன வாரம் தலை மட்டும் காட்டிய க்ளிப்டனின் உட்பக்க preview :

IMAGE COMING SHORTLY 

As cartoons go – இது பக்கத்துக்குப் பக்கம் உங்களை விலா நோகச் செய்யப் போகும் கதையெல்லாம் நஹி ! மாறாக ஒரு ஜாலியான ஆக்ஷன் கதையை பிரிட்டிஷ் வாழ்க்கைமுறை சார்ந்த பகடிகளோடு, கார்ட்டூன் சித்திரங்களுடன் சொல்லிட முனையும் முயற்சியாய் இதைப் பார்த்திட்டால் no disappointments for sure ! பரபரவென படித்துக் கொண்டே போகாது, சித்திரங்களையும் கர்னலின் முகபாவனைகளையும் நிதானமாய் ரசித்துக் கொண்டே போனால் அந்நாட்களது மூத்த நகைச்சுவையாளர் திரு.பாலையா அவர்களின் ஜாடைகள் தென்படலாம் !

And இம்மாதத்தின் இதழ் # 3 – நமது ‘தல‘ சிங்கிள் ஆல்பமான “ஒரு கசையின் கதை!” போன மாதம் திகட்டத் திகட்ட 672 பக்கங்களுக்கு ரவுசு செய்திருக்கும் நம்மவருக்கு இந்தாண்டின் இறுதி slot அத்தனை பெரிதில்லை தான்! In fact 86 பக்கங்கள் மட்டுமேயான இந்தக் குட்டிப் பட்டாசு போன மாதத்து ஆயிரம்வாலாவின் முன்னே வெங்காய வெடியாகத் தோன்றக்கூடும் தான்! ஆனால் 12 மாதத் திட்டமிடலை 15 மாதங்களுக்கு நீட்டிக்க நேரிடும் போது இது போன்ற எதிர்பாரா வறட்சிகளும் தலைகாட்டக்கூடும் தான்! In fact காத்திருக்கும் 64 பக்க கலர் டெக்ஸ் தொகுப்பானது மட்டுமே, புது அட்டவணை வரையிலான டெக்ஸ் சாகஸம்! Maybe நீங்கள் MAXI லயனின் அந்தக் கடைசி ஸ்லாட்டுக்கு இரவுக்கழுகாரையே தேர்வு செய்திடும் பட்சத்தில் இடையே ஒரு quick ஜாக்பாட் அடித்திட வாய்ப்புள்ளது! Depends on எந்த மஞ்சளுக்கு ‘ஓ‘ போடவுள்ளீர்கள்!! இதோ இந்த சிங்கிள் ஆல்பத்துக்கான அட்டைப்பட முதல்பார்வை! And இது சில காலம் முன்பாகவே நமது ஓவியர் மாலையப்பன் வரைந்தது! Probably நடப்பாண்டின் ஒரே அட்டைப்படம் நம் ஆஸ்தான ஓவியரின் கைவண்ணத்தினில்!


Looking ahead, ஜனவரியின் சென்னைப் புத்தக விழா சார்ந்த தீர்மானத்தினை அரசும், BAPASI-ம் எடுத்திட்ட பின்னரே நமக்கு ஏதேனும் தெளிவு பிறக்கும்! விழா இம்முறை நடந்திட்டால்; நமக்கு ஸ்டால் கிடைத்திடும் பட்சத்தில் சென்னைக்கு நமது கேரவன் உருண்டோடி வரும்! அவ்விதம் நிகழ வாய்ப்பின்றிப் போகும் பட்சத்தில் ஜனவரியில் நமது ஆன்லைன் புத்தக விழா இருந்திடும்! And போன தபா போலவே இம்முறையும் out of the blue இதழாய், இதழ்களாய் எதையேனும் களமிறக்க முடிகிறதா ? என்று பார்த்திட வேண்டும்!

Before I sign out – இரத்தப் படலம் வண்ண முன்பதிவுகள் சார்ந்ததொரு quick note ! "157" என்ற நம்பரில் புக்கிங்குகள் நிலை கொண்டிருக்க, ஏப்ரல் 2021 & மே 2021 என்ற 60 நாட்களது slot மட்டுமே மேற்கொண்டான புக்கிங்களுக்கு அவகாசமாய்த் தந்திடவுள்ளோம் ! And எண்ணிக்கை 250-ஐ தொட்ட கணமே பணிகளைத் துவக்குவதாகவுள்ளோம் – மீதம் 50+ புக்கிங்குகள் எப்படியும் தேறிவிடும் என்ற நம்பிக்கையினில் ! So ஈரோடு 2021 நடைமுறையாகிடும் பட்சத்திலும் சரி, நிகழாது போனாலும் சரி - ஆகஸ்ட் 2021-ல்  இந்த மறுக்கா-மறுக்கா-மறுக்கா மெகா இதழ் வெளிவந்திடும் ! இதுவே திட்டமிடல் ! And மே 31 2021க்குள் வண்டி பிக்கப்பே ஆகவில்லையெனில் ஜுன் முதல் தேதிக்கு அவரவரது முன்பணங்கள் வாபஸ் செய்திடப்படும் - முழுமையாய் ! There will be no further time extensions at all !! 

இதற்கிடையே அவ்வப்போது ‘எனக்கு 6 மாசம்லாம் காத்திருக்கப் பொறுமை லேது ; பணத்தைத் திருப்பியனுப்புங்க !‘ என்ற ஓரிரு கோரிக்கைகள் வராமல் இல்லை ! So ஏதேனும் காரணங்களின் பொருட்டு இந்த முன்பதிவுகளிலிருந்து நீங்கள் பின்வாங்கிட விரும்பிடும் பட்சத்தில் – your last date to do that will be December 15, 2020 ! இந்தத் தேதிக்குப் பின்பாய் வாபஸ் கோரிக்கைகள் வரவேற்கப்பட மாட்டாது என்பதைத் தெளிவாக்கிடுகிறேன் folks ! இது பணம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருந்திடும் பட்சத்தில் 157 பேருமே நாளையே காசைத் திரும்பக் கேட்டாலும், அந்தக் கோரிக்கையின் மசி உலரும் முன்னமே பைசா சுத்தமாய் திரும்ப ஒப்படைக்கும் ஏற்பாடுகள் ரெடியே ! ஆனால் இந்தத் திட்டமிடலின் எதிர்காலமே உங்கள் ஒவ்வொரு புக்கிங்குகள் என்ற செங்கல்களின் மீது அமர்ந்திருப்பதால் இடையிடையே செங்கல்களை உருவிட அனுமதித்தால் கட்டிய மொத்தமும் சரிந்தது தான் பலனாகிடும்! So back out செய்ய நினைத்திடும் பட்சத்தினில் டிசம்பர் 15க்கு முன்பே செய்திட்டால் – தயாராகியிருக்கும் கட்டுமானத்தின் பலத்தை நானும், நீங்களும் சரியாய்க் கணித்த புண்ணியம் கிட்டும்! So டிசம்பர் 15-க்குப் பின்பாய் இது குறித்து நம்மவர்களிடம் குரலை உசத்திட வேண்டாமே ப்ளீஸ் !

And while on the topic of இரத்தப் படலம் - இந்தப் புது ஆல்பங்களுடனான இரண்டாம் சுற்று இன்னும் எத்தனை தொலைவுக்கு நீண்டிடும் ? எப்போது நிறைவு கண்டிடும் ? என்ற தகவல்களும் படைப்பாளிகளிடமிருந்து கிட்டியுள்ளன ! சுவாரஸ்யமான அதனை வாகான நேரத்தில் பகிர்ந்திடுவேன் folks !

ஒரு கத்தை தோர்கல் பக்கங்கள் எடிட்டிங்கோசரம் காத்திருப்பதால் அடியேன் அங்கு நகர்கிறேன் folks ! இந்த வாரத்தினில் டெஸ்பாட்ச் இருக்குமென்பதால், அடுத்த ஞாயிறின் பதிவுப் படலத்தை உங்கள் முதற்பார்வைகள் ; நடுப்பார்வைகள் ; சைடுப் பார்வைகள் என ஏதோவொன்றால் நகர்த்திடுவோம் ! So கொஞ்சமாய் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்களேன் - please ! Bye for now ! See you around !

391 comments:

  1. First time first...m.babu Mohamed ali.. gangavalli..

    ReplyDelete
  2. first time nu type panradhukkulla 3rd place ah.. so sad..

    ReplyDelete
  3. ஆசிரியரே டெக்ஸ் அட்டையில் ஒரு கசையின் கதை என்று அச்சாகி உள்ளது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இல்லை... ஆர்வத்துல அத பாக்கலயே..

      Delete
    2. அதான் சரியான தலைப்புன்னு நினைக்கிறேன்..

      Delete
    3. அப்படித்தான்னு எடி சொல்லிருக்கார்

      ஒரு கசையின் கதை ன்னு

      ஆமா கசை ன்னா என்ன அர்த்தம் ?? 😉😉

      Delete
    4. கசை = சவுக்கு !

      Delete
    5. //ஆமா கசை ன்னா என்ன அர்த்தம் ?? //

      சவுக்கு ,சாட்டை

      தமிழ்ல விப்..(whip)

      Delete
  4. தோர்கல் வெயிட்டிங்

    ReplyDelete
  5. Maxi kku என்னோட choice tex...

    ReplyDelete
  6. //So எந்த மஞ்சளுக்குக் கைதூக்கிடப் போகிறீர்கள் guys?

    - MAXI சைஸில் லக்கி லூக்

    or

    - ரெகுலர் (டெக்ஸ்) சைஸில் ; கலரில் இரவுக்கழுகார் !///

    லக்கி லூக் ரெண்டுமே நல்லா அனுபவிச்ச கதைங்க..

    டெக்ஸ் - க்கு என் வோட்டு...

    ReplyDelete
  7. லக்கி லூக்கின் கௌபாய் எக்ஸ்பிரஸுக்கே என் வோட்டு.!!

    செம்ம கதை.!
    போனி எக்ஸ்பிரஸின் வரலாறு. வில்லியம் ஹெச் போனியோடு சேர்ந்து லக்கி தூள்பரத்தும் காமெடி கலாட்டா..!

    ப்ளீஸ் கௌபாய் எக்ஸ்பிரஸை ஆதரியுங்கள்..!

    ReplyDelete
    Replies
    1. என்னால் முடியாதுங்க ப்ரோ .. 😃

      Delete
    2. எனக்கு ஓகே தான் கண்ணா லக்கி யின் இரண்டு கதையில் எது வந்தாலும்

      Delete
    3. அடடா ?! சித்த முன்னால சொல்லியிருக்கப்படாது..
      ஓட்டு போட்டுட்டனே..:-)

      Delete
    4. என்னோட விருப்பமும் அதான் மாமா..

      Delete
    5. ///அடடா ?! சித்த முன்னால சொல்லியிருக்கப்படாது..
      ஓட்டு போட்டுட்டனே..:-)///

      கள்ள ஓட்டாவது போட்டு காப்பாத்துங்க செனா..!

      Tex Sampath : பெயரிலேயே டெக்ஸ் இருக்கும் நீங்க மாத்தி சொல்லமாட்டிங்கன்னு ஐ நோ ப்ரோ.!

      Kumar Salem & Palanivel :
      உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் நண்பர்களே..!:-)

      Delete
    6. // லக்கி லூக்கின் கௌபாய் எக்ஸ்பிரஸுக்கே என் வோட்டு //

      +1

      Delete
  8. இரத்த படலத்திற்கான முன்பதிவு தொகையை வாபஸ் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.. எவ்ளோ நாள் ஆனாலும் பரவாயில்லை ஆசிரியரே...நாங்க காத்திருப்போம்.. உங்களை கை விட மாட்டோம்...
    மு.பாபு
    கெங்கவல்லி..

    ReplyDelete
  9. மேக்சி ஸ்லாட் டெக்ஸ்வில்லர் போடலாம்
    என்னோட சாய்ஸ் பழிக்குப்பழி எமனுடன் ஒரு யுத்தம் இரத்த முத்திரை

    ReplyDelete
  10. ரெகுலர் (டெக்ஸ்) சைஸில் அல்லது கலரில் இரவுக்கழுகார்

    இதுவே எனது ஓட்டு

    நீங்கள் சொன்ன லக்கி லூக் கதைகள் ஏற்கனவே கலரில் வந்திட்டதேங்க எடி !!! ட்வின் கலரில் ...

    அதையே இன்னும் மெறுகேற்றிய கலரில் படிப்பதை விட கருப்பு வெள்ளையில் வந்த டெக்ஸ் ககதையினை கலரில் பா.ப்க்க ஆர்வமாய் உள்ளோம் ... 😍😍

    ReplyDelete
    Replies
    1. மேக்ஸியில் ஆர்வமாய் உள்ள கதை கோடைமலர் 87 வந்த பழிக்கு பழி

      Delete
  11. டெக்ஸின் பழிக்குப் பழி.

    ReplyDelete
  12. Tex colour வரட்டும் எடி

    ReplyDelete
  13. நமக்கு எப்போதுமே லக்கி தான். Maxi size சூ மந்திரகாளி எனது ஓட்டு

    ReplyDelete
  14. ரெகுலர் ஸைஸில் டெக்ஸ் கலரில். எனதுஓட்டு டெக்ஸ்.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  15. ஏற்கனவே வாண்டு ஷ்பெசல்ஸ் இரண்டும் அர்ஸ்மேக்னா புண்ணியத்தால் ஸ்வாஹா ஆயாச்சு..

    டெக்ஸ்.. சந்து பொந்து இண்டு இடுக்குன்னு சகல இடங்களையும் ஆக்கிரமித்து இருக்கிறார்..

    லக்கி லூக்கின் ஆறு, பத்து ரூபாய் இதழ்கள் கலரிங் குவாலிட்டி , இப்போதைய இதழ்கள்களை ஒப்பிடும்போது பத்து பர்சன்ட் கூட தேறாது..

    கார்ட்டூன்ஸ்களுக்கான ஸ்லாட்டுகளும் மீந்துபோன பிரியாணியில் பீஸ் தேடும் கதையாய் குறைந்துகொண்டே போகின்றன..

    இந்நிலையில் காரேட்டூன் மறுபதிப்புகள் மற்றும் வாண்டுகளுக்கென ஒதுக்கப்பட்ட ஸ்லாட்களிலும் டெக்ஸே எனும்போது..

    டெக்ஸை எல்லா வகையிலும் கொண்டாடும் எனக்கே ஆயாசமாக இருக்கிறது(என்னுடைய கருத்து மட்டுமே)..

    Maxi சைஸில் போனியின் கௌபாய் எக்ஸ்பிரஸோ, ஸ்டீல் ஃபிங்கர்ஸின் சூமந்திரகாளியோ வந்தால் சூப்பராக இருக்குமென்பது என்னுடைய ஆசை..

    இல்லை..

    டெக்ஸ் தான் முடிவென்றாலும்.. கொண்டாடத்தான் போகிறேன்..!

    ReplyDelete
    Replies
    1. // இந்நிலையில் காரேட்டூன் மறுபதிப்புகள் மற்றும் வாண்டுகளுக்கென ஒதுக்கப்பட்ட ஸ்லாட்களிலும் டெக்ஸே எனும்போது..//

      வருத்தமாக உள்ளது!

      Delete
    2. டெக்ஸ் தான் சொல்லலாம்னு இருந்தேன். ஆனா நம்ம KOK சொன்ன விளக்கத்துப் பிறகு அட ஆமா இல்லன்னு தோனுது.
      ஆகையால் என் வோட்டு லுக்கிக்கே !!

      Delete
    3. எனக்கு எந்த கதை வந்தாலும் ஓகே தான்.. ஆனா லக்கிலூக் வந்தால் சந்தோசப்படுவேன்..

      எனவே லக்கிலூக்குக்கே எனது நல்ல ஓட்டும் இப்போதைக்கு ஒரு அம்பது கள்ள ஓட்டும்.

      Delete
    4. சரி.. பதிவை படிச்சுட்டு வர்றேன்...

      Delete
    5. /// ஒல்லிப்பிச்சானுக்கே உங்கள் ஓட்டெனில் – அதை குதிரை மீதே சவரம் செய்து பயணம் செய்யும் சாகஸத்துக்கா ? அல்லது விரல் நீண்ட மாயாஜாலக்காரர் கதைக்கா ? ///

      ரெண்டுமே ஒண்ணா வேணும்... 😍😍😍

      Delete
  16. எனது வோட்டு லக்கிமேக்ஸி கௌபாய் எக்ஸ்பிரஸ்...

    ReplyDelete
  17. ஈரோடு 2021 நடைமுறையாகிடும் பட்சத்திலும் சரி, நிகழாது போனாலும் சரி - ஆகஸ்ட் 2021-ல் இந்த மறுக்கா-மறுக்கா-மறுக்கா மெகா இதழ் வெளிவந்திடும் !//

    மெகா இதழ் வெளிவந்திடும் இதுவல்லவோ இனிமையான செய்தி... நன்றி சார்.. நிச்சயம் 2021 ஆகஸ்ட் அதிரப்போகுது...

    ReplyDelete
  18. பணத்த திரும்ப வாங்குற பேச்சுக்கே இடமில்லை. சம்பளம் வந்தவுடன் இன்னொரு புக்கிங் உண்டு சார்..

    ReplyDelete
  19. சாரி kok ஜிகப்பலில் பார்சலாகவரும்முட்டைகள் டெலிவரியின்போது கோழிக்குஞ்சுகளாக வரும் கௌபாய் எக்ஸ்பிரஸ் எளக்கும்பிடித்தகதைதான்என்றாலும் மாற்று டெக்ஸ் எனும்போது ஓட்டுடெக்ஸிற்க்கே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ்க்கு இங்கே இல்லையென்றாலும் வேறு இடங்கள் நிறைய கிடைக்கும் ராஜசேகரன் சார்.!
      லக்கிலூக்கோடு சேர்ந்த கார்ட்டூன்ஸ் பாவமில்லியோ..!?

      Delete
  20. தனி ஒருவன் preview அருமை சார். ஓவியங்கள் அபாரம். எனக்கு மிகவும் பிடித்த தொடர். இந்த கதை வந்ததும் மற்ற நண்பர்களும் ஓகே சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    அப்புறம் ஜனவரி ஆன்லைன் புத்தக விழா வாக இருந்தாலும் இல்லை சென்னை புத்தக விழா வாக இருந்தாலும் இரண்டு ஸ்பெஷல் வெளியீடுகள் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  21. உறவினர்கள்இல்லாதவர்களுக்கானபோனிஎக்ஸ்பிரஸ் வேலைவாய்ப்பிற்க்காள இண்டர்வியூகாட்சியும் இன்றும்மனதில்நிற்கும்காட்சியே கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அதில் ஒரு காதுகேக்காத தாத்தா வீல் சேரில் இன்டர்வியுவிற்கு வருவாரே... ஏ க்ளாஸ் காமெடி கதை..!

      Delete
    2. "இவங்கெல்லாம் நொந்து போயிட மாட்டாங்களா.?"

      டக....டக..டக..டக..

      செமத்தியான காமெடி.:-)

      Delete
  22. என் ஓட்டு டெக்ஸ்க்கே...

    ReplyDelete
  23. ///MAXI சைஸில் லக்கி லூக்

    or

    - ரெகுலர் (டெக்ஸ்) சைஸில் ; கலரில் இரவுக்கழுகார் !////

    முதல் முறையாக வாக்களிக்க இயலா நிலை!!!!!

    லக்கிக்கு வாக்களித்தா தல பொசுக்குனு போயிடுவாரு!!!

    தலைக்கு வாக்களித்தா டெக்ஸ் ரசிகன் இதை தான் செய்வீங்கனு லக்கி கோபிப்பாரு!!!

    எந்து செய்யும் நானு....😷😷😷😷😷

    ReplyDelete
    Replies
    1. லக்கி லூக்கிற்கு ஓட்டு போடு.! டெக்ஸ்க்கு தெரியாம நான் பாத்துக்கிறேன்.!

      Delete
    2. உன் பேச்சுக்கு மறு பேச்சு ஏது மாம்ஸ்...!

      என் ஓட்டும் லக்கிக்கே!

      Delete
    3. //என் ஓட்டும் லக்கிக்கே!//

      நன்றி STV நண்பரே!

      Delete
  24. யுத்தபூமியில் டெக்ஸ் :

    அமெரிக்காவின் உள்நாட்டுப்போரை மையமாக வைத்து நிறைய கதைகள் வந்திருந்தாலும் கூட., அதில் டெக்ஸ்வில்லர் சாகசம் புரிவதென்பது ஷ்பெசல்தானே.?

    இதே பாணியில் வரும் கேப்டன் டைகர் கதைகள் யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருப்பதையும் பார்த்திருக்கிறோம்.!
    ஆனால் இதில் ஹீரோ உயர்வாக தெரிவதற்காக இராணுவம் டம்மியாக காட்டப்பட்டிருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது (இறுதியில் வரும் வரலாற்றுச் சம்பவம் தவிர்த்து).!

    கிட் கார்சன் இல்லாத குறையை பூம் பூம் டிக் அழகாக நிவர்த்தி செய்திருக்கிறார்.! டிக்கும் டெக்ஸும் சந்தர்ப்பவசத்தால் வடக்கு ராணுவத்துக்கு ஸ்கவுட்ஸாக பணிபுரிய வேண்டிவருகிறது.!

    ஆனால் டெக்ஸ் ஸ்கவுட்டாக மட்டுமே இருந்தால் நம்மாட்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்களே..
    அதனால்..
    எதிரிகளின் துருப்புகள் இருக்கும் இடத்தைப் பற்றி வடக்கு படைப்பிரிவுக்கு தகவல் கொடுத்து வரச்சொல்கிறார்.. படைப்பிரிவு வருவதற்கு முன்பாக ஒற்றை ஆளாகப்போய் (பெயருக்கு டிக் துணை) கப்பலில் இருக்கும் ராணுவத்துக்கு டிமிக்கி கொடுத்து கப்பலையே கொளுத்திவிடுகிறார்.. படைப்பிரிவு லேட்டாக வந்து நன்றி சொல்கிறார்கள்..
    இதேபோன்ற நிகழ்வுகளே கடைசி 20 பக்கங்கள் வரையிலும் திரும்ப திரும்ப நடக்கின்றன.!

    இதைப் படித்துக்கொண்டிருக்கு.போது எனக்கு நினைவுக்கு வந்தது என்னவென்றால்..

    போகோ சேனலில் வரும் சோட்டா பீமில்..

    டோலக்பூருக்கு ஆபத்து வரும்போதெல்லாம் பீம் (லட்டு சாப்பிட்டு) அந்த ஆபத்தை முறியடித்து ஊரையே காப்பாற்றுவார். டோலக்பூர் மஹாராஜா சாவகாசமாக வந்து.. கரகரத்த குரலில்..
    " பீம்.. நீ திரும்பவும் டோலக்பூரை காப்பாத்திட்டே.. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை" அப்படின்னு சொல்வாரு.!

    (இங்கே டெக்ஸ் சோட்டா பீமாகவும், வடக்கு ராணுவத்தை சேர்ந்த குதிரைப்படை கேப்டன் டோலக்பூர் மஹாராஜாகவும் தெரிந்தால் நான் பொறுப்பல்ல.! )

    காலப்பினியின் கைவண்ணத்தில் டெக்ஸ் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.! தீபாவளி மலர் மேக்கிங் படு பிரமாதம்..!

    யுத்தபூமியில் டெக்ஸ் = டெக்ஸ் + வரலாறு + டெக்ஸ்

    ரேட்டிங் 8/10

    ReplyDelete
  25. டெக்ஸா லக்கியாஇந்த ஒருதடவைஒருஓட்டுக்கேஇப்படிமண்டைகாயுதே மொத்தஅட்டவணையும் திட்டமிடும் ஆசிரியருக்குஎப்படிமண்டைகாயும்ஒவ்வொருவருடமும்.

    ReplyDelete
    Replies
    1. அட்டவணைகள் போடற புண்ணியத்தில் இப்போல்லாம் தலையைத் துவட்ட வேண்டிய அவசியமே இருக்கிறதில்லீங்க சார் !

      Delete
  26. டெக்ஸ்,கதை என்றால்,பழிக்குப் பழி, போடலாம்,நல்ல கதை,வில்லரை சுட்ட ஒரு வில்லன் ரூபி ஸ்காட், என்னும் செவ்விந்திய வில்லன் சாதுரியமாக வில்லரை சுட்டுவிடுவான் ஆஸ்பத்திரியில் கையில் கட்டு போட்டுக்கொன்டே, மீண்டும் வில்லனை பழிவாங்கும் கதை, அருமையான கதை,போட்டால் ரொம்ப நாளைக்கு பிறகு படிப்பது சுகமே ஆசிரியர் மனசு வைக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சார் ; மறுபதிப்புப் படலங்களில் நான் மண்டையை ஆட்டும் கடமையை மாத்திரமே செய்பவன் ! என்ன - பக்க எண்ணிக்கைகள் ; விலைகள் ; கோப்புகளின் availability போன்ற சமாச்சாரங்களை மட்டும் தீர்மானத்தின் பின்புலனாக்கிடும் பொறுப்பு எனக்குண்டு !

      Delete
  27. கௌபாய் எக்ஸ்ப்ரஸுக்கே என் ஓட்டு.

    என்ன..மேக்ஸி சைஸ்தான் கொஞ்சம் தடங்கலா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. போச்சா ? போச்சா ? ஒல்லியார் அணிக்குள்ளேயே குயப்பமா ?

      Delete
    2. // மேக்ஸி சைஸ்தான் கொஞ்சம் தடங்கலா இருக்கு.//

      லக்கி-க்கு மேக்ஸி பர்பெக்டா இருக்கும் சார்.

      Delete
  28. எமனுடன் ஓரு யுத்தம்,இரத்த முத்திரை,பழிக்குப் பழி,அதிரடி கணவாய் இதில் எந்த கதை போட்டாலும் ஒகே தா, அதுவும் கலரில்

    ReplyDelete
  29. // ரெகுலர் (டெக்ஸ்) சைஸில் ; கலரில் இரவுக்கழுகார் ! //
    எனது டெக்ஸ்வில்லருக்கே,அது பழிக்குப் பழியோ அல்லது கழுகு வேட்டைக்கு சீனியாரிட்டியில் இருக்கும் ஏதாவது ஒரு நல்ல கதையோ அதை தேர்ந்தெடுக்கலாம் சார்....
    டெக்ஸ் இல்லாத மூன்று மாத வறட்சியைப் போக்க இதுவே வழி...

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய ஓட்டும் டெக்ஸ்க்கு தான்..

      Delete
  30. Tex colour reprintl இரத்த நகரம் காண ஆவல்

    ReplyDelete
  31. கார்ட்டூன் வறட்சியைப் போக்க ஜனவரியில் நடக்கும் ஆன்லைன் திருவிழாவிற்கு வெளியிடும் இரண்டு கதைகளில் ஏதேனும் ஒன்று லக்கியின் நல்ல கதையை மறுபதிப்பாக வெளியிடலாமே சார்...!!!

    ReplyDelete
    Replies
    1. Too short a time sir ; தோர்கலின் பணிகளே நிரம்ப நேரத்தை எடுத்துக் கொள்ளும் ; அதிலும் ஒரு பாகமானது லைட்டா 'சிகரங்களின் சாம்ராட்' பாணியில் இடியப்பம் பிழியும் ஆல்பம் !

      So கலரில் ஏதேனும் ஸ்பெஷல் இதழைக் கொணர அவகாசம் கிட்டுவது கஷ்டமே !

      Delete
    2. இந்த கஷ்டம் வேறா...!!!
      ஆசை இருக்கு இரண்டும் புக்கும் படிக்க,அம்சம் வேணுமே...!!!

      Delete
  32. வணக்கம் இரவுக் கழுகுகளே...

    ReplyDelete
  33. // வியாழனன்று டப்பிகளுக்குள் ஐக்கியமாகி வெள்ளி / சனிக்கு உங்கள் இல்லத்துக் கதவுகளை அவை தட்டிட வேண்டும் //
    ஆக அடுத்த வாரம் வாசிப்பு வாரம்...!!!

    ReplyDelete
  34. @ ALL : ரெண்டு மஞ்சச்சட்டைக்கார்சின் தரப்பிலும் நியாயங்களை லட்டு போல முன்வைக்கிறார்களே ; சாலமன் பாப்பையா சார் வந்தாலும் முழி பிதுங்கும் போலுள்ளதே ! 🤔🤔🤔

    ReplyDelete
    Replies
    1. ஒரே இதழில் 2யும் போட்டு புடலாமா சார்???

      Delete
    2. வாய்ப்பில்லியே ராஜா !!

      Delete
  35. டிசம்பர் வெளியீட்டில் தளம் எண் 13ற்கான விளம்பரம் பார்த்ததாக நினைவு அது தள்ளிப் போகுதா சார் ???!!!

    ReplyDelete
    Replies
    1. // இதழ்கள் நான்கும் தயாராகி, பைண்டிங்கில் குடியேறியுள்ளன ! //

      ☝️

      Delete
    2. ஹை,ஹை,ஹைய்யா...
      டாங்க்ஸ் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்...

      Delete
  36. // அடுத்த ஞாயிறின் பதிவுப் படலத்தை உங்கள் முதற்பார்வைகள் ; நடுப்பார்வைகள் ; சைடுப் பார்வைகள் என ஏதோவொன்றால் நகர்த்திடுவோம் ! //
    அதெல்லாம் பேஷா...!!!

    ReplyDelete
  37. // முழுமையாய் ! There will be no further time extensions at all !! //
    இந்த வண்டி அடிக்கடி பேக் அடிக்குது,ரிவர்ஸ் கியர் போடுது...
    ஸ்டார்ட்டிங் பிரச்சினை...
    என்னத்த சொல்ல.....!!!

    ReplyDelete
    Replies
    1. பள பளான்னு தொட்ச்சி தொட்ச்சி வெச்சாலும் வண்டி பயசு தானுங்கண்ணா ; மக்கர் பண்றது ஜகஜம் தானே !

      Delete
  38. தனியொருவன் சாகஸத்தை பொறுத்தவரை மோசமும் இல்லை,சூப்பரு இல்லை...
    எனினும் படிக்கற இரகத்தில்தான் இருக்கு...

    ReplyDelete
  39. ஒரு கசையின் கதை அட்டைப்படத்திற்கு இன்னும் கொஞ்சம் மெருகூட்டி இருக்கலாமோ...!!!
    தல முகம் கொஞ்சம் மாறுபட்டிருக்கு...!!!

    ReplyDelete
  40. தல டெக்ஸ் வில்லருக்கே என் ஓட்டு.எப்படி வந்தாலும் ,எந்த அளவில் வந்தாலும் மஞ்சள் சட்டை மாவீரரை வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  41. லக்கி லூக்கிற்க்கு எனது ஓட்டு. கௌபாய் எக்ஸ்பிரஸ் அட்டைபடம் பார்த்ததோடு சரி.

    ReplyDelete
  42. Lone ranger மிகவும் பிடித்திருக்கிறது.தொடர வேண்டுகின்றேன் ஆசானே!

    ReplyDelete
    Replies
    1. நம்பள் போட்றான் சார் ; நிம்பள் படிச்சால் தொடர்றான் சார் ! தீர்மானம் நம்ம கை மேலே நஹி !

      Delete
  43. கௌபாய் எக்ஸ்பிரஸ் வரட்டுமே சார்... நல்ல தேர்வு 👌👌👌

    ReplyDelete
  44. எடி சார், இரத்தப்படலம் புக்கிங் ஆல்ரெடி படுத்தும் பாட்டோடு மேலும் ஒரு படலமாக,
    200 புக் என லிமிடட் லிமிடட் எடிஷனா ஆரம்ப விலை யில் வெளியிட வாய்ப்புள்ளதா?


    புத்தகம் எப்படியாவது வெளிவர வேண்டும் என்னை போல புத்தகத்தின் புகழையே படித்தவருக்கு கதை படிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே..

    Don't mistake me sir.

    ReplyDelete
  45. லக்கியின் 'கெளபாய் எக்ஸ்பிரஸ்'க்கு டிக்கெட் ஒண்ணு ப்ளீஸ்...online புக்கிங், தட்கல், unreserved என எதுவானால் என்ன...போய் சேரும் ஊர் 'சிரிப்பூர்'தானே.

    ReplyDelete
  46. டெக்ஸ் கதையென்றால் அதிரடி கணவாய் மரணமுள் சாத்தான் வேட்டை பழிக்குபழி எனது சாய்ஸ்

    ReplyDelete
  47. இப்படித்தான் அந்தகாலத்துல ஒருதடவை..

    ஒரு ஸ்லாட் காலியா இருக்கு., அதுல லக்கிலூக்கா, டெக்ஸ்வில்லரா யாரைப் போடலாம்னு ஓட்டெடுப்பு நடத்தினாங்களாம்.!

    அதுல பாருங்க..
    லக்கி லூக்குக்கு ஓட்டு போட்டவங்க வீட்டுல, பரண்மேலயும் அட்டைப்பெட்டியிலயும் அட்டாளியிலயும் ஏனோதானோன்னு அசால்டா போட்டுவெச்சிருந்த காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் அடுத்தநாள் பார்க்கும்போது அழகா பைண்டிங் பண்ணி அடுக்கிவெச்சிருந்துச்சாம்.. அதுமட்டுமில்லாம எக்ஸ்ட்ராவா ஏகப்பட்ட கலர் காமிக்ஸும் இருந்தூச்சாம்.. அதிசயம் ஆனால் உண்மைன்னு எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்களாம்.! அதுமட்டுமில்லாம அவங்க அவங்களுக்கு புடிச்ச வேற்றுமொழி காமிக்ஸ் எல்லாம் தானாவே தமிழ்ல மொழிபெயர்க்கப்பட்டு ஹார்டு பவுன்டோட ஆர்ட்பேப்பர்ல கலர்ல இருந்துச்சாம்..! எடுக்க எடுக்க குறையவே இல்லையாம்.!


    இந்த உண்மையை சுத்துரமோரூர் கல்வெட்டுலயும் சமீபத்துல நடந்த மேலபுடி அகழ்வாராய்ச்சியிலயும் பார்த்து உறுதிப்படுத்திக்கலாம்.!

    ஆனா கார்ட்டூனுக்கு ஓட்டு போடாதவங்க வீட்டுல கண்ணாடி பீரோவுல பாச்சா உருண்டையெல்லாம் போட்டு பத்திரமா வெச்சிருந்த காமிக்ஸ் புத்தகத்ததை கூட கரையான் அரிச்சிடுச்சாம்.! அட்டையை பிரிச்சா உள்ளே பின்னட்டைதான் தெரிஞ்சுதாம்.. நடுவுல எந்த பக்கத்தையும் காணோமாம்..! ஐநூறு புக்ஸ் வெச்சிருந்தவங்க அடுத்த நாள் எண்ணிப் பாத்தா அம்பது புக்ஸ்தான் இருந்துச்சாம்.! எல்லோரும் அச்சச்சோ ன்னு உச்சுகொட்டி பாத்துட்டு போனாங்களாம்.! போகும்போது அந்த அம்பது புத்தகங்களையும் ஆளுக்கொன்னா அக்குள்ல மறைச்சி ஆட்டையப் போட்டுக்கிட்டு போயிட்டாங்களாம்..!
    லக்கி லூக்குக்கு ஓட்டு போடாதவங்க கையில காமிக்ஸே இல்லாம பூடுச்சாம்.!
    இந்த வரலாற்று சம்பவங்களுக்கான ஆதாராம் (இஞ்சி)மொரோப்பா, பொகஞ்சபீரோ வை தோண்டினப்போ கிடைச்சுதாம்..!

    எதுக்கு சொல்றேன்னா..
    நீங்க எல்லாம் புத்திமான்கள்.. கடந்தகால வரலாற்றுல இருந்து பாடம் கத்துகிட்டு இப்போ சரியா ஓட்டுப் போடுவீங்கன்ற நம்பிக்கையிலதான்..!

    ReplyDelete
    Replies
    1. ####
      லக்கி லூக்குக்கு ஓட்டு போட்டவங்க வீட்டுல, பரண்மேலயும் அட்டைப்பெட்டியிலயும் அட்டாளியிலயும் ஏனோதானோன்னு அசால்டா போட்டுவெச்சிருந்த காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் அடுத்தநாள் பார்க்கும்போது அழகா பைண்டிங் பண்ணி அடுக்கிவெச்சிருந்துச்சாம்.. அதுமட்டுமில்லாம எக்ஸ்ட்ராவா ஏகப்பட்ட கலர் காமிக்ஸும் இருந்தூச்சாம்.. அதிசயம் ஆனால் உண்மைன்னு எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்களாம்.! அதுமட்டுமில்லாம அவங்க அவங்களுக்கு புடிச்ச வேற்றுமொழி காமிக்ஸ் எல்லாம் தானாவே தமிழ்ல மொழிபெயர்க்கப்பட்டு ஹார்டு பவுன்டோட ஆர்ட்பேப்பர்ல கலர்ல இருந்துச்சாம்..! எடுக்க எடுக்க குறையவே இல்லையாம்.!####

      என் ஓட்டு லக்கிலூக் தான்..

      என்னை யாரும் ஆசை வார்த்தை கூறி மயக்கவே இல்லை என கூறி கொள்கிறேன்..

      Delete
    2. ஹா ஹா ஹா செம்ம👌👌👌

      Delete
  48. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. லக்கி மேக்சி, கௌபாய் எக்ஸ்பிரஸ்

      Delete
    2. சார், டெக்சின் வண்ண மறுபதிப்புகள் வர நிறைய தருணங்கள் அமையும், ஆனால் வாண்டுக்களுக்கான ஸ்லாட்களிலும் டெக்ஸ் என்பது கார்ட்டூன்களின் எதிர்காலத்தை நசித்துப் போகச் செய்து விடாதா? அதிலும் லக்கி மேக்சி எனும்போது விற்பனை சுணக்கம் ஏற்பட வாய்ப்பில்லையே! தயவுசெய்து கார்ட்டூன்களுக்கும் கருணை காட்டுங்கள்!!

      Delete
    3. மதிப்புமிக்க புள்ளி (வேலீட் பாயிண்ட்னு சொல்லவந்தேன்):-)

      Delete
    4. நண்பர்களின் மறுப்புக்கு காரணம் கூட அந்த குறிப்பிட்ட கதைகள் என்பதால் தான் எனப் படுகிறது, பழைய இருவண்ணத்தில் வந்த லக்கி கதைகளை முயற்சி செய்ய இயலுமா சார்?

      Delete
  49. லக்கி லூக் ரெண்டுமே நல்லா அனுபவிச்ச கதைங்க..

    டெக்ஸ் - க்கு என் ஓட்டு....

    பழிக்குப்பழி Or அதிரடிக் கணவாய்

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் அந்தகாலத்துல...

      Delete
    2. புரிஞ்சுக்குங்க பெரியவரே! லக்கிலூக் கதைகள்ல உங்க காலத்துல வந்த கதைகளைப் போட்டா நாங்க வேண்டாம்னு சொல்லுவோமா??
      ஆசிரியர் சொன்ன ரெண்டுமே புதுசு பெரியவரே. எல்லார் கிட்டயும் இருக்க வாய்ப்பிருக்கு.

      (பழிக்குப்பழி 124 Pages.)

      Delete
    3. ம்ஹூஹூம்...

      இப்படித்தான் அந்தகாலத்துல....

      Delete
    4. ங்ஙே.. அவசரத்துல சரியா கவனிக்காம விட்டுட்டேன்..!

      எதேய்.. பெரியவரா..!?

      ஏஞ்சாமி.. உங்க கூற்றுப்படி..

      புதுசு கேட்குற நான் பெரியவரா அல்லது பழசைக் கேக்குற நீங்க பெரியவரா..

      நல்லா ரோசனை பண்ணிப்பாருங்க பெருசே..! :-)

      Delete
    5. வயசான காலத்துல சரியா கவனிக்காம விட்டுட்டேன்னு சொல்லுங்க பெரியவரே..

      Delete
  50. தல போல் வருமா ?
    தல டெக்ஸ்க்கே என் வாக்கு.
    வண்ணத்தில் தீபாவளி வித் டெக்ஸ் இதழ் அளவில் வந்தாலே நன்றாக இருக்கும்.
    லோன் ரேஞ்சர் தொடர வேண்டுகின்றேன் ஆசானே!

    ReplyDelete
  51. My vote is for Color Tex (except marana mul ant Tex album is ok)

    ReplyDelete
  52. லக்கி லூக் வரட்டும்

    ReplyDelete
  53. இது வரையில் மறுபதிப்பு செய்யாத கதையாக இருந்தால் டெக்ஸ் வில்லருக்கே என் ஓட்டு.

    1. பழிக்குப் பழி
    2. அதிரடிக் கணவாய்

    இவை இரண்டும் 1990களுக்கு முன்பே வந்து மறுபதிப்பு காணாதவை

    ReplyDelete
  54. டெக்ஸும் ஓடுற குதிரை,லக்கியும் ஓடுற குதிரை...
    பேசாமல் இரண்டையும் போட்டுத் தாக்குங்கள் சார்...
    இரண்டு அணியினரையும் சந்தோஷப்படுத்தியது போல் இருக்கும்...
    யாருக்கும் ஏமாற்றமும் இல்லை...
    கொஞ்சம் பரிசீலிக்கலாமே சார்...
    கண்ணா இரண்டு லட்டு திங்க ஆசையா....!!!
    கண்டிப்பா ஆசைதான்...

    ReplyDelete
  55. // ஆனையார் ஆண்டுக்குப் பன்னிரெண்டு தபா பிளிறும் சாத்தியங்களும் இல்லாது போகாது //
    இது ஒரு அட்டகாசமான தகவல், ஜம்போவை பொறுத்தவரை விதவிதமா கிடைப்பதுதான் சிறப்பே.....
    எல்லாவித கலவை சாதமும் கிடைப்பதை போல,சமயத்தில் அது அட்டகாசமான சுவையிலும் அமைந்துவிடும்...
    ஜம்போ-2 தடத்தில் வந்த நில்,கவனி,வேட்டையாடு சாகஸத்தைப் போல...
    ஜம்போ வளரட்டும்,சிறக்கட்டும்...

    ReplyDelete
  56. இந்த வருடம் வந்த தீபாவளி மலர் டெக்ஸ் கதை என்றதுமே வாங்காதவர்கள் கூட ஆர்வமாக வாங்கி புத்தகத்தை காலி செய்து விட்டனர்! அதனாலே திரும்பவும் கூடுதலாக டெக்ஸ் தீபாவளி மலரை ஆர்டர் போட்டு வாங்க வேண்டியதாகி விட்டது! கார்ட்டூனைப் பொறுத்தவரை விற்பனை பேஹ்னு பல்ல இளிக்குது! விற்பனையாளர்கள் + கடைகாரர்களுக்கு மட்டுமில்லாமல் ஏனைய வாசகர்களுக்கும் மஞ்சள் சட்டை வந்தாலே புன்னகையும் சேர்ந்து கொள்கிறது! இதை ஒரு டெக்ஸ் ரசிகனாக சொல்லவில்லை! ஒரு விற்பனையாளராக சொல்கிறேன்! அதனால் எனது ஓட்டு டெக்ஸ் கதைக்கே! டெக்ஸ் கதை வரிசையில் 1. பழிக்குப்பழி 2.எமனுடன் ஒரு யுத்தம் 3. மரண தூதர்கள் 4. எல்லையில் ஒரு யுத்தம் 5. எமனுடன் ஒரு யுத்தம் இதில் எது வந்தாலும் சந்தோஷமே

    ReplyDelete
    Replies
    1. டைப் பபண்ணுகிற ஆர்வத்தில எ.ஒ.யுத்தம் ரெண்டு தடவை சொல்லீட்டீங்க ..

      அப்போ ரெண்டு தடவை ரீபிரிண்ட் கேட்கறீங்க போல .. 😃😃

      Delete
  57. என் ஓட்டு லக்கியின் கெளபாய் எக்ஸ்பிரஸ்க்கு. இது நான் பத்தாவது படித்த போது வந்ததாக ஞாபகம். மேல் பார்டரில் மஞ்சள், கீழே சிவப்பு ரேப்பர் என்று நினைவு. சூ மந்திரக்காளி படித்ததில்லை. தல இருக்கவே இருக்கார், லக்கி வரட்டும்.

    ReplyDelete
  58. சார் அருமை...நம்ம டெக்ஸ் அட்டை இப்படி அதகளம் வண்ணத்தில் அமைவது கௌபாய் ஸ்பெசலுக்குப் பின் இதுவே என் நினைக்கிறேன்.தனியொருவன் அட்டையுமருமை.டெக்சே வரட்டுமே மறுபதிப்பில்...பலிக்குப்பலியாய்...

    ReplyDelete
  59. டெக்ஸ் கதை வண்ணத்தில் மறுபதிப்பு காண வேண்டியது நிறய இருக்கு. வர வேண்டிய புது கதைகளும் இருக்கு. லக்கி லூக்குது மொத்த எண்ணிக்கையே 60-70 கதைகள் தான். வண்ணத்திலே நிறய வந்துடுச்சு; வரவும் செய்யுது. டெக்ஸ் 700 கதைகள். அப்படிப் பாத்தா டெக்ஸ் கதைகள் லக்கியை விட பத்து மடங்கு வரணும். இந்த காமிக்ஸ் நீதி அடிப்படையிலே டெக்ஸ்க்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டிக் கொள்கிறேன்.

    அதுவும் மேலே கலீ்ல் பட்டியல் செய்த கதைகளுக்கான வேண்டுகோள் நீண்ட நாட்களாக சென்று கொண்டிருக்கிறது. வரும் டெக்ஸ் கதைகளெல்லாம் க. வெ. வருவதாக மிகப்பெரிய வருத்தத்தில் ரம்மி வேறு புலம்பிக் கொண்டிருக்கிறரார்.

    # டெக்ஸ் கலர் வரணும். குண்டு சத்தம் கேக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. பல பேருடைய பட்டியலில் இந்த கதைகள் தான் பொதுவாக இருக்கும் தல! சேலத்து நண்பரொவர் (அவர் ஆன்லைன் பக்கம் தலை காட்டாதவர்) அவருக்கு போனஸாக டெக்ஸ் மறுபதிப்பு வரப்போவுதுன்னு தெரிஞ்சாலே சந்தோஷத்துல உச்சிக் குளிர்ந்திடுவார்! இவரைப்போல இன்னும் நிறைய பேர் டெக்ஸ் கதைகளை வண்ணத்தில் தரிசிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்! எல்லாம் மஞ்சள் சட்டை மகிமைக்கா 😍

      Delete
    2. ///லக்கி லூக்குது மொத்த எண்ணிக்கையே 60-70 கதைகள் தான். வண்ணத்திலே நிறய வந்துடுச்சு; வரவும் செய்யுது. டெக்ஸ் 700 கதைகள். அப்படிப் பாத்தா டெக்ஸ் கதைகள் லக்கியை விட பத்து மடங்கு வரணும்.///

      பாரேன்...!!

      போனவருசம் மட்டும் வெளியான டெக்ஸ் கதைகளின் எண்ணிக்கை 25+.! மறுதிப்புகளை நீக்கிவிட்டு பார்த்தால்கூட 22+ .!
      ஆனால் லக்கி லூக்கின் கதைகளோ ரெண்டே ரெண்டுதான்.. மறுபதிப்புகள் நீங்கலாக..!

      டெக்ஸ் வில்லர் கதைகளை ஆல்பங்களாக பிரித்தால் 240. 330 பக்கங்கள் என ரெண்டு , மூணு கதைகளுக்கு சமானம்.! லக்கி லூக்கோ வெறும் 48 பக்கங்கள் மட்டுமே.!

      டெக்ஸ் 700:22+(கூடுதல் உள் ஆல்பங்கள்)
      லக்கி 70: 2 (ஒரே ஆல்பம்)

      இப்போ சொல்லுங்க.. கம்பாரிசன் சரியா..சோடிபோட்டு பாத்தது நியாயமான்னு.?

      Delete
    3. கீழே ஒருத்தரு ட்வெயின் ஜான்சன் பென் ஜான்சன் ஒப்பீடு போட்டிருக்காரு. கொஞ்சம் அதைப் படிங்க மேச்சேரி பெருசு

      Delete
    4. அதுவும் நான்தாம்பா..!!

      ட்வைன் ஜான்சன் பென் ஜான்சன் ரெண்டுலயும் ஜான்சன் இருக்கு. பென் ட்வைன் சின்ன வித்தியாசம்தானே.. அப்படின்னு ரெண்டுபேரும் ஒரே எடை இருக்கணும்னு ஆசைப்படலாமோ..

      பென் குண்டாயிட்டா ஓடடியிருக்க முடியுமோ..?
      ட்வைன் இளைச்சிட்டா ட்ரிப்பிள் H, அன்டர்டேக்கரை சமாளிச்சிருக்க முடியுமோ..?

      Delete
  60. டாக்டர் சுந்தர் டெக்ஸ் பழிக்கு பழிக்கு அவருடைய ஓட்டை அளிப்பதாக தெரிவிக்க சொன்னார். மேச்சேரியில் கார்ட்டூன் கேட்டு சத்தம் அதிகம் வந்தால் மேச்சேரிக்கே வந்து மேச்சேரி தாத்தாவின் கடவாய்ப் பல் (இன்னும்இருந்தால்) பிடுங்கப்படும் என்று தெரிவிக்க சொன்னார்.

    ReplyDelete
    Replies
    1. Thanks mahi!!!!
      டெக்ஸின் பழிக்கு பழி பல வருடங்களாகவே விஜயன் சாரிடம் மறுபதிப்பு கேட்டு வருகிறேன்...
      மற்ற டெக்ஸ் கதைகளில் இல்லாத சிறப்பு இந்த கதையில் உள்ளது...

      ஏன்னா

      முதன் முதலில் எனக்கு தெரிந்து டெக்ஸ் தோற்ற கதை...
      ரூபிஸ்காட் என்ற கலப்பீன வில்லனிடம்...
      டெக்ஸீக்கு சற்றும் சலைக்காத வில்லன்...
      வண்ணத்தில் டெக்ஸ் கதைகள் குறைவாகவே நாம் வெளியிட்டுள்ளோம், லக்கிலூக்கை கம்பேர் செய்தால்...

      எனவே டெக்ஸ் பழிக்கு பழியை மறுபதிப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து...

      Delete
    2. ///வண்ணத்தில் டெக்ஸ் கதைகள் குறைவாகவே நாம் வெளியிட்டுள்ளோம், லக்கிலூக்கை கம்பேர் செய்தால்...///

      இதெல்லாம் ஒரு காரணமா சுந்தர்..?

      பக்க எண்ணிக்கையை பார்த்தா தலைகீழாப் பூடுமே பாஸ்..!!:-)

      Delete
    3. ஹையோ டாக்டர் சார் டெக்ஸுக்கு ஓட்டு போட்டுட்டாரே..


      நாட்டுக்கோழி வருவலா இல்ல மேச்சேரி தக்காளி பிரியாணியா..??


      டெலிகேட் பொசிஸன்..

      Delete
  61. கெளபாய் எக்ஸ்பிரஸ்- ஒ.கே சார்

    ReplyDelete
  62. ஞாயிறு காலை வணக்கம் சார் 🙏🏼🙏🏼🙏🏼

    எனது ஓட்டு டெக்ஸுக்கே 💃🏻💃🏻💃🏻
    .

    ReplyDelete
  63. என் ஓட்டு லக்கி லூக் கிற்கே

    ReplyDelete
  64. லக்கிலூக் - கௌபாய் எக்ஸ்ப்ரெஸ்

    ReplyDelete
  65. எனது ஓட்டு “தல” ரெக்ஸ் இற்கே- அதுவும் பழிக்குப் பழி, கழுகு வேட்டை வந்தால் ......

    ReplyDelete

  66. என் ஓட்டு லக்கி லூக்


    லக்கிலூக் - கௌபாய் எக்ஸ்ப்ரெஸ்

    ReplyDelete
  67. கெளபாய் எக்ஸ்பிரஸ் மற்றும் தனியொருவன் வருவதற்கு எனது ஓட்டு. உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா டெக்ஸ் + சூ..மந்திரக்காளி இரண்டும் சேர்ந்து ஒரு combo புக்காக வந்தாலும் ok தான்...பார்த்து செய்யுங்க, எடிட்டர் சார்.

    ReplyDelete
  68. // MAXI சைஸிலேயே லக்கி லூக்கின் “கௌபாய் எக்ஸ்பிரஸ்” or “சூ…மந்திரகாளி” மறுபதிப்புகளோடு நிறைவு செய்திடலாம் ! //

    லக்கி லூக்கின் “கௌபாய் எக்ஸ்பிரஸ்"

    ReplyDelete
  69. //MAXI சைஸில் லக்கி லூக்

    or

    - ரெகுலர் (டெக்ஸ்) சைஸில் ; கலரில் இரவுக்கழுகார் !//

    ரெண்டுமே favorite தான்.. so எதுனாலும் ஓகே சார் .. TEX என்றால் "பழிக்கு பழி "அல்லது "கழுகு வேட்டை"..

    லக்கி னா "சூ மந்திரகாளி" .. மூன்றும் என்னிடம் இல்லாதது ..TEX AND LUCKY COMBO போட்டாலும் மகிழ்ச்சி SIR .. ரெகுலர் SIZEல் ..

    ReplyDelete
  70. Super announcements and jumbo hit news.

    ReplyDelete
  71. Super announcements and jumbo hit news.

    ReplyDelete
  72. லக்கி லூக் vs டெக்ஸ்
    நான் கார்ட்டூன் மற்றும் டெக்ஸ் ரசிகன்! ஆனால் கார்ட்டூன் கதைகள் நமது இதழில் அதிகம் வருவது இல்லை, பலருக்கு கார்ட்டூன் பிடிப்பது இல்லை. லக்கி-லூக் பலரை கவர்ந்தவர் மற்றும் கார்ட்டூன் நாயர்களில் இவர்தான் விற்பனையில் முதலிடம் என நினைக்கிறன்! டெக்ஸ் மாதம் மாதம் வருகிறார், ஒரு வருடத்தில் வரும் காமிக்ஸில் அதிக பக்கங்களை ஆக்கிரமித்து கொண்டுள்ளவர் அவர் (நமது காமிக்ஸின் அச்சாணி என்பதை மறுக்க வில்லை) ஆனால் கார்ட்டூன் அப்படி இல்லை, ஏற்கனவே இந்த வருடம் வர இருந்த வாண்டு ஸ்பெஷல் கொரோனா காரணமாக வரவில்லை. அப்படி இருக்கும் போது இருக்கும் இந்த ஒரு ஸ்லாட்டை கார்ட்டூன் கதைகளுக்கு கொடுப்பதே சிறப்பாக இருக்கும். I go with லக்கி லூக்கின் “கௌபாய் எக்ஸ்பிரஸ்"

    MAXI - இந்த சைஸில் வந்த எந்த கதையின் சித்திரங்களும் பெரியதாக என்னை கவரவில்லை; இவைகளை நான் ரசித்ததன் முக்கிய காரணம் கதை மற்றும் அந்த நாயகர்கள் தான்; இங்கே MAXI என்ற சைஸ் (சித்திரங்கள்) என்னுள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. MAXI சைஸுக்கு பொருத்தமான சித்திரங்கள் இருக்கும் கதைகளை தேர்வு செய்து வெளியிட்டால் கதையோடு சேர்ந்து ரசிக்க இன்னும் சிறப்பாக/வித்தியாசமான அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும்.

    இந்த (லக்கி லூக் & டெக்ஸ்) இருவருக்கும் பல புதிய கதைகள் உள்ள நிலையில் இந்த இருவரின் கதைகளை வண்ணத்தில் மறுபதிப்பு செய்யும் காரணம் என்ன சார்! இருவருமே அட்டகாசமான கௌ-பாய் மற்றும் விற்பனையில் டாப் இடத்தில் இருப்பவர்கள். இவர்கள் கதைகளைத்தான் போட வேண்டும் என்றால் இவர்களின் புதிய கதைகள் ஏதாவது ஒன்றை போடலாமே? அதே போல் மாக்ஸியில் அதிகம் வியாபித்து இருப்பவர்கள் இவர்கள் இருவர்களே, அதற்கு பதில் வேறு நபர்களின் புதிய கதைகளை அவ்வப்போது தலைகாட்ட செய்யலாமே? ARS போல்.அதே போல் நீண்ட நாள் கோரிக்கையில் உள்ள கென்யா (மிகவும் நீளமான கதையாக இருந்தால் இந்த மாக்ஸியில் முடியாது என நினைக்கிறன்) போன்றவைகளையும் பரிசீலனை செய்யலாமே?

    ReplyDelete
    Replies
    1. ஙே.. இவரென்ன புதுரூட்டுல போறாரு..!?

      Delete
    2. எந்த ரூட்டில் போனாலும் எனது ஆதரவு கார்டூனுக்கே கண்ணா :-)

      Delete
  73. “ஒரு கசையின் கதை!” அட்டைப்படம் அருமையாக உள்ளது! அதுவும் டெக்ஸ் முகம் பெரியதாக நன்றாக வரையப்பட்டுள்ளது. அவருக்கு முன்னால் குதிரையில் வேகமாக செல்லும் வீரர்கள் மற்றும் வண்ணகலவை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  74. வாக்கு எண்ணிக்கை நிலவரம்....

    காலை 8:25வரை....

    டெக்ஸ்=28

    லக்கி=21

    செல்லாதவை=1

    கடுமையான போட்டிக்கு நடுவே டெக்ஸ் கொஞ்சம் முன்னிலை வகிக்கிறார்....!!!

    பார்ப்போம், வாக்கு நிலவரம் மதியம் எப்படி போகுதுனு....!!!

    ReplyDelete
    Replies
    1. சுந்தரோட மெசேஜை ப்ரூபா நான் தேர்தல் கமிசனுக்கு அனுப்பிடறேன்.

      Delete
    2. அனுப்புங்க. சுந்தர் எங்களுக்கு அனுப்பிய மெசேஜை ப்ரூப்பா நாங்களும் தேர்தல் கமிசனுக்கு அனுப்பி வைக்கிறோம். :-)

      Delete
    3. சுந்தர் இங்கியே வந்து ஓட்டு போட்டுட்டாரு பரணி. மேலே பாருங்க. டெக்ஸ் அணி சத்தியத்தையும் தர்மத்தையும் பின்பற்றுகிற அணி. பொய் சொல்லாது.

      லக்கி அணி பாருங்க வீட்ல பழங்காமிக்ஸ் பலது ஓட்டு போட்டா தன்னாலே வரும்னு சொல்லி ஆசை காட்டி ஏமாத்தி ஓட்டு வாங்கிட்டிருக்காங்க.

      Delete
  75. “தனியொருவன்” உட்பக்க சித்திரங்கள் செம! அதுவும் அடர் வண்ணத்தில் வித்தியாசமாக நிலவின் ஒளியில் நடப்பது போல் உள்ளது. தனியொருவன் இந்த இயல்பான நாயகர் கடந்த கதையில் என்னை கவர்ந்து விட்டார்; இந்த கதை எப்படி என பார்க்க ஆவலுடன் உள்ளேன் குறிப்பாக அவரின் செவ்விந்திய நண்பரை காப்பாற்றி விட்டாரா என அறிய துடிப்பாக உள்ளேன்!

    ReplyDelete
  76. லக்கி லூக்கின் கௌபாய் எக்ஸ்பிரஸ், எளியவனை வலியவன் நசுக்ககூடாது, so டெக்ஸ் விலகி நிக்கலாம்,
    We have enough Tex stories, Cartoon is feeble.

    ReplyDelete
  77. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எனது ஓட்டு டெக்ஸ்க்கே.பழிக்குப்பழி அல்லது பலி கேட்ட புலிகள் இரண்டுமே ஸ்பெஷல் இதழ்களில் வந்தவை.இரண்டுமே இதுவரை மறுபதிப்பு காணாதவை.எனவே இவை கலரில் வந்தால் ஆஸம்.(இந்த இரண்டு புத்தகங்களின் பைண்டிங்கும் பிய்ந்து போய் ரப்பர் பேண்ட் போட்டு வைத்திருப்பதால் கேட்கிறேன் என்று யாரும் தப்பு தப்பாக நினைக்கவேண்டாம்)

    ReplyDelete
    Replies
    1. ச்சே...ச்சே..அடுத்த இலைக்கு மெய்யாலுமே பாயசம் கேக்கறீங்கன்னு பந்தியே நம்பிடுச்சுங்கோ சார் !

      Delete
  78. My vote:
    LUCKY LUKE Cowboy Express in Maxiee.

    Need more cartoons, Lucky, Bluecoats, etc...

    Thank you...

    ReplyDelete
  79. பெரும்பாலான,லக்கி,கதைகள்,கலரில், தானே வருகிறது,Tex,கலரில்,லக்கியவிட கம்மி தான்,SO,கலரில்,அதிகம்,காணாத டெக்ஸ்க்கே என் ஓட்டு,அதுவும்90"ரில்,வந்த கதைகளில், ஒன்றை,போடலாம்,வியாபார ரீதியாக பார்த்தால்,தலைக்கே முதல் இடம்,எதாவது பாத்து செய்ங்க சாமி 😅

    ReplyDelete
    Replies
    1. குறிச்சிக்கோங்க ; points தொடர்கின்றன !

      Delete
  80. டெக்ஸ் - க்கு என் வோட்டு

    ReplyDelete
  81. லக்கி லூக் தயாராவதே கலரில்தான்.! 48 பக்கங்களே எனும்போது பட்ஜெட்டும் பெருசா கையை கடிக்காது. அதனால லக்கி ஆரம்பத்தில் இருந்தே கலரில் வரூகிறார்.! ஆனால் டெக்ஸ் அப்படி கிடையாது.கலரில் என்றால் பட்ஜெட் எகிறிவிடும். . அதனால் கலந்துகட்டி வருகிறார்.!

    பென் ஜான்சன் ஓட்டப்பந்தயத்தில் சிறந்தவர்.. ஒல்லியாகத்தான் இருப்பார்..
    ராக் பாட்டம் ரெஸ்லிங்கில் சிறந்தவர்.. ஆஜானுபாகுவாகத்தான் இருப்பார்..

    இருவரின் எடையை ஒப்பிடுவது எவ்வளவு காமெடியோ.. அதே அளவு காமெடி லக்கி, டெக்ஸ் எண்ணிக்கை மற்றும் கலரை ஒப்பிடுவது.!

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் டெக்ஸ் கருப்பு வெள்ளையில் தான் நன்றாக உள்ளது.

      வண்ணத்தில் ரசிக்க கார்டூன் கதைகளே சிறந்தவை யுவர் ஆர்னர்.:-)

      Delete
    2. ஒண்ணும் பிரச்னையே இல்லை கறுப்பு வெள்ளைலயே ரெண்டு டெக்ஸா மறு பதிப்பு பண்ணிடலாம். விக்காத கார்ட்டூனுக்கு இப்ப இருக்கற பொருளாதார நிலை விக்கற டெக்ஸே வரட்டும்

      Delete
    3. இப்படி சொல்லி சொல்லியே விக்காம பண்ணிட்டாங்க மஹி..!
      யூ.. ட்டூ..!??

      Delete
    4. டெக்ஸூக்கு விற்பனையில் போட்டி லக்கி மட்டுமே என்ற பொறாமையில் அப்படி சொல்கிறார் கண்ணா :-)

      Delete
    5. // விக்காத கார்ட்டூனுக்கு //

      வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆர்னர். கார்டூன் கதைகளில் விற்பனையில் முதல் இடம் மற்றும் டெக்ஸூக்கு விற்பனையில் சரியான போட்டி இவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன் யுவர் ஆர்னர் :-)

      Delete
    6. // இப்படி சொல்லி சொல்லியே விக்காம பண்ணிட்டாங்க //

      உண்மை :-(

      Delete
    7. இப்படி சொல்லி சொல்லியே விக்காம பண்ணிட்டாங்க மஹி..! //
      ச்சொல்றதால விக்காதுன்னா டெக்ஸுக்கு அந்த நிலைமை வந்துருக்கும். ஏன்னா அதிகம் திட்டு வாங்கறது டெக்ஸ் தான்.

      இன்றைய கொவிட் நிலையில்போட்ட உடனே காலி ஆகற டெக்ஸ் மறு பதிப்பு வருவது தான் அடுத்த வருட காமிக்ஸ் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

      Delete
    8. திட்டு வாங்குறது வேற..
      விக்கிறதில்லைன்னு சொல்றது வேற..
      டெக்ஸ் சரியாப் போகலைன்னு இதுவரை யாருமே சொன்னதில்லை மஹி.!

      Delete
    9. நூறு மீட்டர் ; WWF என்று அனல் பறக்குதே விவாதம் ! தீர்ப்பு சொல்ல யாரைக் கோர்த்து விடலாம் ? ம்ம்ம்ம்ம் ?

      Delete
  82. எனது choice டெக்ஸ் - பழிக்கு பழி, எமனுடன் ஒரு யுத்தம், இரத்த முத்திரை இவற்றில் ஒன்று.

    ReplyDelete
  83. எனக்கு லக்கி லூக், டெக்ஸ், இருவருமே மிகவும் பிடித்தமான கதை நாயகர்கள்...
    ஆனால் இரண்டில் ஒன்றுதான் எனும் போது, எப்பொழுதும் எனது வாக்கு நம்ம தலை டெக்ஸ்க்கு மட்டுமே.
    கார்ட்டூன் பிரியர்கள் மன்னிக்கவும், லக்கி கதைகள் படிக்கும் போது அவரின் பயணத்தை பார்த்து ரசிப்பது போன்று இருக்கும் ஆனால், ஒவ்வொரு முறையும் தலை கூடவே பயணம் போவது போன்ற உணர்வு வருவது இது வரையும் நிகழ்கிற ஒரு அனுபவம்...

    ReplyDelete
    Replies
    1. Point noted !! வாக்குகள் எண்ணிக்கையோடு ஆராச்சும் ஒவ்வொரு தரப்பின் நியாயங்களையும் குறிப்பு எடுங்கோ - ப்ளீஸ் !

      STV சார் - கவனிச்சூ !

      Delete
  84. Tex Pazhikku pazhi my vote
    Regards Sir
    Arvind

    ReplyDelete
  85. 'ஒரு கசையின் கதை' அட்டைப்படம் சூப்பர்! அதிகாரி கோபக்கனல் காட்டி ச்சும்மா - மிரட்டுகிறார்!

    லோன் ரேஞ்சரின் 'தகிக்கும் பூமி' அட்டைப்படம் - அபாரம்!! உள்ளங்கையை குறிவைத்துச் சுடுவதில் பல மெடல்களைப் பெற்ற நம்ம லோனு இந்தக் கதையிலாவது நெஞ்சைக் குறி வைப்பாரான்னு பார்ப்போம்!

    என் ஓட்டு மேக்ஸி சைஸ் லக்கிலூக்குக்கே! காரணம் - மேக்ஸி சைஸில் - கண்றகவர் வண்ணத்தில்- லக்கிலூக்கைப் படிப்பது ஒரு தனீஈஈஈ சுகம்!

    ReplyDelete
    Replies
    1. லோனு கையிலே சித்தே பாருங்கோ ; இஸ்கேல் மாரி ஒரு கட்டை கீது ! அதை பாத்த பிறகுமா உங்களுக்கு கேள்வி - நெஞ்சிலே சுடுவாரா ? அக்குள்ளே சுடுவாரான்னு ?

      Delete
  86. அப்புறம் இந்த வழக்குக்கு தீர்ப்பு சொல்ல உள்ள நீதிபதி (ஆசிரியர்) அவர்களும் கார்ட்டூன் ரசிகரே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்! :-) அவரின் உதவியாளரும் (விக்ரம்) ஒரு கார்ட்டூன் ரசிகர் என ஊருக்குள் பேசி கொள்கிறார்கள். :-)

    ReplyDelete
  87. தலைவர் ஒரே பிஸியாம் சார்,அதனால் அவருடைய ஓட்டை டெக்ஸ் கலர் மறுபதிப்புக்கு பதிவு செய்யச் சொன்னார்...
    இது பக்கத்து இலைக்கு பாயாசம் இல்லிங்கோ...
    ஹி,ஹி,ஹி...

    ReplyDelete
  88. டியர் எடிசார்
    "லக்கியோ, டெக்ஸ் _ "ஸோ - நீங்கள் எது தேர்ந்தெடுத்திருந்தாலும் நிச்சயம் கொண்டாடத்தான் போகிறோம்..
    இதற்கு போய் ஓட்டு கேட்டு இந்த பதிவின் கொண்டாட்டத்தை தடம் மாறச் செய்து விட்டீர்களே..
    ஏப்ரல் - மே யில் இருந்த நிலைமைக்கு டிசம்பர் வரை கடந்து வந்து - இதோ புத்தாண்டையும் எட்டிப் பிடிக்கப் போகிறோமே... நம்பிக்கைகளோடு இன்னும் நிறைய ஆசைகளோடும் கடந்து செல்வோம்.. வரவேற்ப்போம் 2021-யை ... சார் ...

    ReplyDelete