Powered By Blogger

Friday, December 11, 2020

கனவுகள்...இன்னும் கொஞ்சம் கனவுகள்..!

நண்பர்களே,

வணக்கம். 'சடுதியில் டாட்டா சொன்னால் தப்பே இல்லை' - என்றதொரு ஆண்டுக்கு விடைதரும் டிசம்பர் மாதத்து இதழ்களுடனான டப்பிக்கள் நேற்று மதியமே கிளம்பிவிட்டன !  So இன்றோ / நாளையோ  உங்கள் வீட்டு வாசல்களில் கூரியர் நண்பர்கள் தவறாது ஆஜராகிட DTDC &  ST மனது வைப்பார்களாக !! And ஆன்லைன் லிஸ்டிங்குகளுமே போட்டாச்சு என்பதால், சந்தாக்களில் இல்லாத நண்பர்கள் தேவையான இதழ்களை வாங்கி கொள்ளும் வாய்ப்பும் ரெடி ! கார்ட்டூன்களை ஒரு collector's special ஆக வெளியிடலாமே ? என்ற கேள்வி எழுந்து நிற்கும் இந்தத்தருணத்தினில் மாதாந்திரக் கார்ட்டூன்களை  கரிவேப்பிலையாய் ஓரம்கட்டாது, உங்கள் வாசிப்புகளில்  அதனையும் சேர்த்துக் கொண்டீர்களென்றாலே அதுவே ஒரு கார்ட்டூன் புனர்ஜென்மத்துக்குப் பெரும் பூஸ்ட்டாக இருந்திடும் ! Fingers crossed !!


100 !! இது நடப்பாண்டின் பதிவு நம்பர் 100 !! And வருஷம் முடிய இன்னமும் 3 வாரங்கள் பாக்கி உள்ளன எனும் போது - வாரத்துக்கு தோராயமாக 2 பதிவுகள் என்றாகிறது - இந்த வருஷத்தினில் ! இதுவரைக்கும் ஒற்றை ஆண்டினில் இத்தனை மொக்கைகள் போட்டதில்லை  எனும் போது உங்களின் பொறுமைகளை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை தான் ! For sure கொரோனாவின் பெயரைச் சொல்லி முழு அடைப்பினில் அடைந்து கிடந்த அந்த ஏப்ரல் / மே மாதங்களில் அடித்த லூட்டிகளே இந்த மூன்றிலக்கத்துக்குக் காரணம் என்பது புரிகிறது !! But still - ஒரே பாணியிலான எழுத்துக்களுடன் ; ஒரே மாதிரியான topic -களிலான இத்தினி பதிவுகளை, இந்த மட்டிற்கு சகித்து வருவதென்பது நிச்சயமாய்ப் பெரியதொரு விஷயமே ! Thanks a ton folks ; அரையணா செலவின்றி எனது கச்சேரிகளை உங்களின் நிறையப் பேர்களது செவிகளிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கும்  ; உங்களது இசைமழைகளை என் காதுக்குள் புகுத்திடவும்  இது செம effective கருவியாய் அமைந்திருப்பது நிஜமான வரமே ! தொடரும் காலங்களிலும் இந்தப் பரிமாற்றப் பாலம் பழுதின்றித் தொடர்ந்திட பெரும் தேவன் மனிடோ ஆசீர்வதிப்பாராக ! 

And அந்த மூன்றிலக்க ரவுண்ட் நம்பரைப் பார்த்த நொடியே - "இதுக்கொரு ஸ்பெஷல் சாயா ஆத்திடலாமே ?" என்ற ஆர்வம் உங்களில் பலரிடமும் ததும்பிடலாம் தான் ! "கார்ட்டூன் ஸ்பெஷல் ; முன்பதிவுக்கு மட்டும்" என்ற ரீதியிலான பேச்சு லைட்டாகத் துளிர்விட்டிருக்கும் இந்த நொடியில் - நூறாவது பதிவினை நான் அது மாதிரியானதொரு அறிவிப்புக்குப் பயன்படுத்திடுவேன் என்ற எதிர்பார்ப்புமே சன்னமாய் இருந்திடலாம் தான் ! ஆனால் வயசின் ஓட்டத்தின் நீட்சியோ - என்னமோ ; இப்போல்லாம் வாய்க்குள் கட்டைவிரலைத் திணிக்கும் முன்பாக 'நிதான நித்தியானந்தா' ஓட்டமும் நடையுமாய்ப் பிரசன்னமாகி விடுகிறார் ! இந்த மனுஷன் காவி, கீவியோ, கழுத்தில் அரை டன்னுக்குச் சங்கிலிகளோ அணியாதவர் எனும் போது தைரியமாய்க் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கத் தோன்றுகிறது !  

இந்த நொடியினில் நம் முன்னே பிரதான முக்கியத்துவம் பெற்று நிற்பது 2021-க்கான சந்தா சேகரிப்புகளே ! And புது இதழ்கள் துவக்கம் காணவுள்ளது ஏப்ரல் முதற்கொண்டே எனும் போது நிதானமாகவே "ச.சே." இருந்திடும் என்பதை யூகித்திடலாம் ! Of course - எனது யூகத்தைத் தவறென்று ஆக்கிடுவீர்களெனில் சூப்பர் தான் ! 

காரணம் # 2 - ஏற்கனவே பாதிக் கிணற்றைத் தாண்டிய நிலையில் நின்றுவரும் நமது ஞாபகமறதிக்காரப் பார்ட்டி XIII ! ஏப்ரல் & மே மாதங்களை மேற்படியாரின் பொருட்டு ஒதுக்கிப் பார்த்தால் மட்டுமே இந்த முயற்சி கெலிக்குமா ? கவுந்தடித்துப் படுத்து விடுமா ? என்பது புரியும் ! So அந்தத் தெளிவு பிறக்கும் மே இறுதிவரைக்கும் புதுசாய் எதையும் நுழைக்கும் சாத்தியங்கள் நஹி !

காரணம் # 3 -  இத்தகைய கார்ட்டூன் தொகுப்பு + பாக்ஸ் செட் என்ற திட்டமிடல் 2015-ல் ஆண்டுமலராய் களம் கண்டு தடுமாறிய பழைய track record  ! Smurfs + க்ளிப்டன் + சிக் பில் + சோன்பப்டி தாடித் தாத்தா லியனார்டோ - என்ற செம variety கார்டூன்களோடு வெளியான இந்த இதழ் takeoff ஆகவே இல்லை !

காரணம் # 4 - லக்கி லூக்கைத் தாண்டிய பாக்கி கார்ட்டூன் நாயகர்கள் அனைவருமே 'வருஷத்துக்கு ஒற்றை ஸ்லாட்டுக்கு வந்துப்புட்டுப் போகட்டுமே' என்ற ரீதியிலேயே வண்டியோட்டி வருவோர் என்பதில் எது இரகசியம் ? So ரெகுலர் தடத்தினிலேயே தொட்டுக்கொ-துடைச்சுக்கோ என்று நடைபோடுவோரை ஒரு மெகா இதழில் ; கூடுதல் விலையினில் இறக்கி விட்டு வேடிக்கை பார்த்திடுவது அத்தனை ரசிக்க மாட்டேனென்கிறது ! Diehard கார்ட்டூன் ரசிகர்களின் தீவிரம் எத்தகையதோ - அதே வீரியமே  "வேண்டாமே கார்ட்டூன்ஸ்' என்போரின் வேகங்களும் ! So ஏற்கனவே அந்தரத்தில் XIII தொங்கிக்கொண்டிருக்க, இன்னொரு பரீட்சார்த்தமும் இந்த நொடியின் அவசியமா ? என்ற கேள்வி என்னுள் ! 

Of course - நாலு லக்கி லூக் கதைகளை ஒருங்கிணைத்து ஒரு செம classy தொகுப்பினை திட்டமிடலாம் தான் ; அதன் வெற்றி சார்ந்த சந்தேகங்கள் பெரிதாய் இராதும் தான் ! ஆனால் இக்கட பிரச்சனையோ வேறு விதமானது !! லக்கியின் தொடரினில் அந்த ஆரம்பத்துக் கதைகளின் artwork ரொம்பவே மொக்கை & லக்கியின் கதாப்பாத்திரமுமே முழுசுமாய் develop ஆகியிராதது போலவே தோன்றும் ! பின்னாட்களது, கலவையான கதாசிரியர்களின் ஆக்கங்களும் மித ரகங்களே ! So இடைப்பட்ட அந்த classic கதைகள் தான் காலமாய் நம் ரசனைகளை உயிர்ப்போடு வைத்திருப்பவை ! Classic படைப்புகளுக்கும், பின்னாட்களின் படைப்புகளுக்கும் மத்தியிலான வேற்றுமை  செம அசாத்தியமானது ! இதோ, நடப்பாண்டினில் வெளியான "கௌபாய் கலைஞன்" ஆல்பமே அதற்கொரு சான்று என்பேன் ! Taking it even further - ரொம்பச் சீக்கிரமே வெளியாகவுள்ள லக்கியின் புது ஆல்பத்தின் ஆங்கிலப் படிவங்கள் போன வாரமே நமக்கு வந்தாச்சு - 'சூட்டோடு சூடாய் தமிழில் இந்த ஆல்பத்தை வெளியிட ஆர்வமிருக்குமா ?' என்ற கேள்வியோடு ! கோசினியும் ; மோரிஸும் நம்மைப் பழக்கப்படுத்தி விட்டிருக்கும் அந்த உச்சங்களின் முன்னே - சமகாலத்து ஜாம்பவான்களின் ஆக்கங்கள் கூட தண்ணீர் குடிக்கவே செய்கின்றன  என்பதை yet again புரிந்து கொள்ள முடிந்தது ! So ஒல்லியாரின் தொடரினில் உள்ள classy & classic கதைகளை, மண்டையில் எஞ்சியிருக்கும் ஓரிரண்டு கற்றைகளை போல, பொக்கிஷமாய்ப் பொத்திப் பொத்தி வைத்தபடிக்கு அடுத்த சில ஆண்டுகளையாச்சும் ஓட்ட நினைப்பவனுக்கு - 'ஏக் தம்மில்' 4 க்ளாசிக்சை ஒரே ஆல்பத்தினில் போட்டுத் தாக்குவது என்பது தயக்கங்களையே கொணர்கிறது ! 

So கார்ட்டூன்களென்பது கனவாக மாத்திரமே இனி தொடரணுமா ? என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது ! Maybe, நிலவரங்கள் சற்றே சீராகி ; புத்தக விழாக்களும் முன்போல நடைமுறை காணும் பட்சங்களில் - ஏற்கனவே முன்பதிவுப் பட்டியலில் முன்னே நிற்கும் "ஒற்றை நொடி...ஒன்பது தோட்டா" ; "கென்யா" ; ரூட் 66  ஆகியவற்றைச் சடுதியில் க்ளியர் செய்தான பின்னே இந்த கார்ட்டூன் தொகுப்பினை சீரியஸாய்ப் பரிசீலிக்கலாம் ! 

அப்புறம் பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்புகளுள் கார்டூன்களைத் தாண்டியும் light reading-க்கான படைப்புகள் கணிசமாகவே உள்ளன ! அவை எல்லாமே தொடர் நாயகர்களென்று இல்லாது - ஜாலியாய் டிராவல் செய்யும் ஒன்-ஷாட்ஸ் ! பூனைகள் நாயகர்களாய் ; நாய்கள் ; நரிகள் ஹீரோக்களாய் கலக்கும்  கதைவரிசைகள் ; பொடுசுகள் டிடெக்டிவ் அவதார் எடுக்கும் கதைகள் ; fantasy-ல் கார்ட்டூன்ஸ் ; விழி பிதுங்கும் குடும்பத்தலீவர்களின் கதைகள்  என்று நிறையவே இருக்கவும் செய்கின்றன தான் ! Maybe அவற்றின் பக்கமாய் ஒருவாட்டி கவனங்களைத் தந்தும் பார்க்கலாம் - ஆக்ஷனே போதுமென்று எண்ணிடும் நண்பர்களையும் ஈர்த்திட முடிகிறதா ? என்ற நப்பாசைகளோடு ! 

வாக்குத் தந்தபடியே லக்கியின் "கௌபாய் எக்ஸ்பிரஸ்" அடுத்த சில மாதங்களுக்குள் ஏதேனுமொரு திடும் ஸ்பெஷலாகக் களம்காணும் ! And டெக்சின் வண்ண மறுபதிப்பு MAXI-யின் கடைசி ஸ்லாட்டை எடுத்துக் கொள்ளும் ! இத்தாலியிலும், பிரான்சிலும் இன்னமும் கொரோனா நிலவரங்கள் சீராகவில்லை என்பதால்,  நமது புது வேண்டுகோள்களை படைப்பாளிகள் பரிசீலித்து, டிஜிட்டல் கோப்புகளை அனுப்பி வைக்க நிச்சயமாய் அவகாசமெடுக்கும் ! So அதன் வரையிலும்  பொறுமையே பெருமை சேர்க்கும் நமக்கு !

ரைட்டு.......கார்ட்டூன் தொகுப்பு தான் கானல் நீராய்த் தொடர்கிறதெனில், வேறெதாச்சும் செய்திடலாமா ? என்ற கேள்வி என்முன்னே ஆஜராகிறது ! இதற்கு பதிலாய் - எனது ரொம்ப கால ஆசை ஒன்றினை சொல்லிவைக்கட்டுமா folks ? அதனை அசை போட்டுத் தான் பாருங்களேன் - கொஞ்ச காலம் கழிந்த பின்னே நிஜமாக்கிடலாமா ? என்று :

நமது இதழ்களில் எப்போதுமே ஒரு striking feature ஆகத் தென்படுவது அந்த variety  என்பதில் உடன்பாடிருக்கும் என்று நினைக்கிறேன் ! Variety ஆக நாயகர்கள் என்பதை விடவும், variety ஆன ஜானர்களுடன் ஒரு Box set தொகுப்பினை யோசித்துத் தான் பாருங்களேன் :

1 ஹ்யூமர் ஆல்பம்

1 லவ் ஸ்டோரி 

1 அமானுஷ்யம்

1 Sci -fi ஆல்பம் 

1 த்ரில்லர் 

5 வெவ்வேறு சுவைகளோடு - 5 oneshots - ஒரே பாக்ஸ் செட்டில் ! முன்பதிவுகளுக்கு மட்டும் - 500 என்ற இலக்கு நிர்ணயதோடு ! எல்லோருக்கும் ரசிக்க இதனுள் ஏதோ ஒன்றோ, இரண்டோ, மூன்றோ - இல்லாதா போய் விடும் ? என்ற நப்பாசையில் இந்தக் கனவு நெடுநாளாய் என்னுள் தொடர்ந்து வருகிறது ! Maybe இது ஒர்க் அவுட் ஆகுமென்று பட்டால் 2021-ன் பின்பகுதியினில் முயற்சிக்கலாம் தான் ! Your thoughts folks ?

அப்புறம் நமது சந்தா D-ல் தலைகாட்ட வரும் அந்த மர்ம மண்டல மேக்சின் ஆல்பத்தின் அட்டைப்பட பிரிவியூ இதோ !! இன்றைக்கு புக்கே உங்களை எட்டிவிடும் என்பதால் பெரிதாய் பில்டப்பின்றி நடையைக் கட்டுகிறேன் !! Bye all...see you around ! Happy Reading !

287 comments:

  1. வெரைட்டி பாக்ஸ் செட்..

    தம்ஸ் அப்!!

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. // 5 வெவ்வேறு சுவைகளோடு - 5 oneshots - ஒரே பாக்ஸ் செட்டில் ! //

    கார்டூன் தான் குண்டு புத்தகமாக வர தாமதமாக உள்ள நிலையில், இதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். அந்த லவ் ஸ்டோரி கதை என்பது மட்டும் கொஞ்சம் யோசனை செய்ய வைக்கிறது. மற்ற அனைத்தும் ஓகே.

    ReplyDelete
    Replies
    1. // 1 லவ் ஸ்டோரி //

      Ithu மட்டும் கொஞ்சம் யோசனை செய்ய வைக்கிறது.

      Delete
  4. 5 in One செம ஐடியா.!வித்யாசமான அனுபவமாக இருக்கும் சார்.

    ReplyDelete
  5. 10"க்குள்ளே நான், வணக்கம் ஆசானே

    ReplyDelete
  6. //Variety ஆக நாயகர்கள் என்பதை விடவும், variety ஆனா ஜானர்களுடன் ஒரு Box set தொகுப்பினை யோசித்துத் தான் பாருங்களேன் :

    1 ஹ்யூமர் ஆல்பம்

    1 லவ் ஸ்டோரி

    1 அமானுஷ்யம்

    1 Sci -fi ஆல்பம்

    1 த்ரில்லர் //


    ஒரே குண்டு புக்காக போடுங்கய்யா. இப்பவே முன்பதிவு செஞ்சிபுடறேன். லயன் காமிக்ஸ் என்றாலே வெரைட்டி என்பது ஆரம்ப நாள் தொட்டு வரும் பழக்கமன்றோ. லயன் கோடைமலர் 86,87, சூப்பர் ஸ்பெஷல், டாப் 10 ஸ்பெஷல், மில்லெனியம் ஸ்பெஷல், மெகா ட்ரீம் ஸ்பெஷல், மேக்னம் ஸ்பெஷல் வரிசையில் இந்த கலவை சேர்ந்தால் ஜாலியோ ஜாலீ... 😁😀😄

    ReplyDelete
    Replies
    1. இங்குள்ள அத்தினி பேருமே ஆளுக்கு 5 புக் வாங்குவதாக இருப்பினும் ஒரே புக்கெல்லாம் சாத்தியமாகாது என்பது தான் தெரிந்த சமாச்சாரமாச்சே நண்பரே ?

      Delete
    2. Kuntu book special I want . 5 variety story super sir .
      Box set not interested sir

      Delete
  7. // 5 வெவ்வேறு சுவைகளோடு - 5 oneshots - ஒரே பாக்ஸ் செட்டில் ! //
    முயற்சிகள் பல செய்தாயிற்று,இதையும் முயற்சிக்கலாம் சார்,சக்சஸ் ஆனா மகிழ்ச்சிதான்...

    ReplyDelete
  8. சார் பாக்ஸ் செட் என்றவுடன் நினைவுக்கு வருது,அந்த டப்பிகள் 2021 ல் வாய்ப்பிருக்கா சார் ?!

    ReplyDelete
    Replies
    1. புத்தக விழாக்கள் துவக்கம் காணட்டும் சார் !

      Delete
  9. காலை வணக்கம் நண்பர்களே.. புக்ஸ் இன்றைக்கேவா.. வா...வா..

    ReplyDelete
  10. 1 ஹ்யூமர் ஆல்பம்

    1 லவ் ஸ்டோரி

    1 அமானுஷ்யம்

    1 Sci -fi ஆல்பம்

    1 த்ரில்லர்

    +1

    1 லவ் ஸ்டோரி / ACTION?

    ReplyDelete
  11. முதலில் ஆசானின் வாசனைகளை முகர்வோம்,பின் வலைக்குள் வருவோம்

    ReplyDelete
  12. /// வெரைட்டி பாக்ஸ் செட்..///

    /// தம்ஸ் அப்///

    Me too...

    ReplyDelete
  13. இந்த வருடத்தின் 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆசிரியரே கோலி இந்த வருஷம் 100 அடிக்கலை அதுக்கு பதிலா நீங்க விளாசிட்டிங்க ரொம்ப நன்றி ஆசிரியரே இந்த கொடுமையான கோரோனா காலம் உங்கள் பதிவுகளாலும் காமிக்ஸ்களாலும் இலகுவாக போனது இல்லையென்றால் கோரோனா தாக்கம் தீராத தலைவலியை உண்டு பன்னியிருக்கும் மிக்க நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. வைரட்டி பாக்ஸ் செட்
    கண்டிப்பாக முயற்சிக்கலாம் ஆசிரியரே
    234 தொகுதியிலும் உங்களுக்கு ஆதரவு தருகிறோம்

    ReplyDelete
  16. இந்த வருடத்தின் 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆசிரியரே கோலி இந்த வருஷம் 100 அடிக்கலை அதுக்கு பதிலா நீங்க விளாசிட்டிங்க ரொம்ப நன்றி ஆசிரியரே இந்த கொடுமையான கோரோனா காலம் உங்கள் பதிவுகளாலும் காமிக்ஸ்களாலும் இலகுவாக போனது இல்லையென்றால் கோரோனா தாக்கம் தீராத தலைவலியை உண்டு பன்னியிருக்கும் மிக்க நன்றி ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. உண்மை, மிக கடுமையான கொரோனா காலத்தை கடக்க உங்களது பதிவுகள் மிகவும் உதவின. மிக்க நன்றி சார்.

      Delete
  17. இந்த வருடத்தின் 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆசிரியரே கோலி இந்த வருஷம் 100 அடிக்கலை அதுக்கு பதிலா நீங்க விளாசிட்டிங்க ரொம்ப நன்றி ஆசிரியரே இந்த கொடுமையான கோரோனா காலம் உங்கள் பதிவுகளாலும் காமிக்ஸ்களாலும் இலகுவாக போனது இல்லையென்றால் கோரோனா தாக்கம் தீராத தலைவலியை உண்டு பன்னியிருக்கும் மிக்க நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  18. இந்த வருடத்தின் 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆசிரியரே கோலி இந்த வருஷம் 100 அடிக்கலை அதுக்கு பதிலா நீங்க விளாசிட்டிங்க ரொம்ப நன்றி ஆசிரியரே இந்த கொடுமையான கோரோனா காலம் உங்கள் பதிவுகளாலும் காமிக்ஸ்களாலும் இலகுவாக போனது இல்லையென்றால் கோரோனா தாக்கம் தீராத தலைவலியை உண்டு பன்னியிருக்கும் மிக்க நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  19. 100 வது பதிவு மிகப்பெரிய விஷயம் சார். பல தடங்கல் மற்றும் பல பிரச்சனைகளுக்கு நடுவில் அவைகளை எல்லாம் பின் தள்ளிவிட்டு எங்களுக்காக தொடர்ந்து வாரம் தவறாமல் பதிவுகளை போட்ட உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    காமிக்ஸ் வாசகர்களுக்கான எடிட்டர் இந்த 100 பதிவுகளே சாட்சி.நன்றி.

    பதிவுகளின் எதிர்பார்ப்பு இன்றுவரை சற்றும் குறையவில்லை, இது போன்று வாசகர்களை உங்கள் பதிவுகளால் கட்டிப்போட்டுவது சுலபமில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பார்வைகள் உங்கள் பதிவுகளின் எண்ணிக்கை இன்னும் புதிய புதிய உட்சங்களை தொடுவது உறுதி.

    வாழ்த்துகள் சார்.

    இங்கு தொடர்ந்து பார்வையிடும் & பின்னூட்டம் இடும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நேரம் ஒதுக்கி, மற்றவர்களை ஊக்கப்படுத்தி வரும் உங்களைப் போன்ற நண்பர்களுக்கும் நன்றிகள்... 🙏🙏🙏🙏🙏

      Delete
    2. இன்றைய உலகில் (காமிக்ஸ்) வாசகர்களுக்கான எடிட்டர் நீங்கள் மட்டும் தான் என்பதற்கு இந்த 100 பதிவுகளே சாட்சி.நன்றி 🙏🙏🙏🙏

      Delete
    3. நீங்கள் சொல்வது சரி தான் பரணி. எவ்வளவு கடுமையான வேலை இருந்தாலும் நீங்கள் எங்களுக்காக தொடர்ந்து பதிவுகள் இட்டு கொண்டே தான் இருக்கிறீர்கள். எப்போது பதிவு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. உங்கள் எழுத்துகளுக்கு எப்போதுமே நான் ரசிகன் அப்போதும் இப்போதும் எப்போதும். வாழ்த்துக்கள் மற்றும் எனது நன்றிகள் சார்.

      Delete
  20. வாழ்த்துகள் ஆசிரியரே!
    வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. //5 வெவ்வேறு சுவைகளோடு - 5 oneshots - ஒரே பாக்ஸ் செட்டில் !//

      Yes, I'm ready!!

      Delete
  21. வணக்கம் நண்பர்களே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  22. 5 in One - நிச்சயமாய் ஒரு திருமண சாப்பாடு போல கலந்துகட்டிய கலவையாக இருக்குமென்று எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு கதையையும் நீங்கள் பிரமாதமாகத் தெரிவுசெய்வீர்கள் (எதிர்காலத்திலும் இவை தொடர்வதற்கான அடித்தளமாய்) என்ற நம்பிக்கையுண்டு!

    ReplyDelete
  23. இன்று புத்தகங்கள் கிடைக்கிறதா?
    சூப்பர்! 👍👌

    ReplyDelete
  24. வெரைட்டி பாக்ஸ்..


    வரவேற்கிறேன் சார்... என்ன...லவ்வுக்கு பதிலா ஆக்‌ஷனை இறக்கி விட்டால் சூப்பராக இருக்கும் சார்...இல்லை எனில் லவ்வோடு ஆக்‌ஷனையும் இணைத்து ஆறு கதைகளாக வெளியிட்டாலும் ஓகே..:-)

    ReplyDelete
    Replies
    1. எல்லா வெரைட்டியும் இருக்கனும் என்பதுதான் ஆசிரியரின் முக்கிய நோக்கம் தலைவரே.....

      Delete
    2. வழிமொழிகிறேன் அதில் கூடுதலாக ஆக்‌ஷனும் இருப்பின் அனைவருமே விரும்புவாரகளே என்பது எனது எண்ணம் ரவி அவர்களே..:-)

      Delete
    3. அப்படின்னா எல்லாத்திலும் ஆக்‌ஷன் கதையவே போட்டுடுவோம் தலைவரே...!!! ஹி,ஹி,ஹி...

      Delete
    4. தலீவரே.... தேர்தல் நெருங்குது.. உங்க பதிவுகளும் ஒரு "மய்யமா "கீதே ?

      Delete
    5. Love story lifela illanalum booklayavathu irukkattume. Bro ... comics it’s mean variety of collection.

      Delete
  25. வருடத்தின் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  26. இதழ்கள் பறந்து வந்தாலும் புறா தூது தகவல் ஏதும் வராத காரணத்தால் காத்து கொண்டே இருக்கிறேன் சார்...

    ReplyDelete
  27. ஆஹா....ஆத்தா அருமை..அருமை...இங்கே தகவல் வரவில்லை என்று நான் பதிந்த நேரம்..

    இதோ தகவல் வந்து விட்டது...


    வுடு ஜூட்...

    ReplyDelete
  28. எடிட்டர் சார், கார்டூன் புத்தகங்கள் சார்ந்த நடைமுறை சிக்கல்கள் இவ்வளவு இருக்கும்போது உங்கள் தயக்கம் நியாயமானதே!
    ஆனால் சரியான சந்தர்ப்பம் அமையும் போது லக்கி பாக்ஸ் செட் முயன்று பார்க்கலாம் என்பது என் அவா!
    வெரைட்டி பாக்ஸ் கண்டிப்பாக வெளியிடலாம்!!
    டபுள் தம்ஸ்அப்!!

    ReplyDelete
  29. தீபாவளி மலர் டபுள் தெறி !!
    பனிவனப்படலம் - அவ்வளவு பனி, குளிரிலும் செம ஹாட்டான ஆக்‌ஷன் அதகளம்.
    விரைவில் இதன் மறுபதிப்பை வண்ணத்தில் காண மனம் விரும்புதே!!

    ஒரு சிறிய பரிந்துரை!
    செவ்வியந்தியர்கள் என்பதற்கு பதிலாக இனி பூர்வகுடி இந்தியர்கள் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தலாம்.
    அதேபோல எஸ்கிமோ என்பதற்கு பதிலாக இன்யூட் பழங்குடியினர் என பயன்படுத்தலாமே சார்.

    ReplyDelete
  30. ஒரு கசையின் கதை....

    நீண்ட நாட்களுக்கு பிறகு நமது ஓவியரின் கைவண்ணத்தில் டெக்ஸை அட்டைப்படத்தில் பார்ப்பது ஓர் நமது பழைய லயன் காமிக்ஸ் இதழை பார்ப்பது போல ஓர் ஆனந்தம்...சிறப்பு...

    தற்பொழுது தான் தீபாவளி வித் டெக்ஸ் ல் நீண்ண்டு கொண்டே போன டெக்ஸை படித்து முடித்த காரணத்தால் கசையின் கதை இதழை படித்து முடித்தவுடன் மினி டெக்ஸ் இதழை படித்தது போலவே ஓர் உணர்வு..கதையும் மினி டெக்ஸ் போலவே சிறப்பு.

    வழக்கம் போல வழிப்பயணத்தில் ஒருவரை டெக்ஸ் கார்ஸன் குழு காப்பாற்ற முயல... அவரின் இறுதி வேண்டுகோளை டெக்ஸ் குழுவிடம் தெரிவித்த கையோடு மாண்டு போக நேரிட அவருடைய விருப்பம் தான் என்ன..? ,அவரின் வேண்டுகோளை டெக்ஸ் கார்ஸன் குழு நிறைவேற்ற முடிந்ததா என்பதை பல விறுவுறு துரத்தல்களுடன் கசையின் கதை பட்டாசாய் நகர்ந்து சென்று முடிகிறது..மேலதிக ஆக்‌ஷன் தகவல்களுக்கு இதழ்களை பெற்று நண்பர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்..இந்த இதழினுள் அடுத்த வருட சந்தா வரிசை கதை விளம்பரங்கள் இதழினை மேலும் மெருகூட்டுகிறது...

    கடுகு தான் .. ஆனால் காரமே .

    ReplyDelete
    Replies
    1. தலைவரே...!!!
      வொய் திஸ் கொல(படிப்பி)வெறி.....!!!

      Delete
    2. தலைவரின் அடுத்த கேள்வி, டிசம்பரில் ஜனவரி எப்ப சார் ???!!!

      Delete
    3. சார், சுட சுட முதல் விமர்சனம் போட்ட தலைவருக்கு ஏதாவது பார்சல் அனுப்ப முடியுமா?

      Delete
    4. ஊத்தப்பம் வேணும்னா பார்சல் அனுப்பலாம்....

      Delete
    5. இப்போத்தான் மைசூர்பாகு ஆர்டர் போட்டு முடிச்சேன் ராஜசேகரன் சாருக்கு ! இன்னொரு அரை கிலோ யாருக்கென்று யாராச்சும் நினைவுபடுத்துங்களேன் ப்ளீஸ் !

      தலீவருக்கு சுட சுட கொஞ்சம் சோன்பப்டி போட்டுப்புடலாம் !

      Delete
    6. ///! இன்னொரு அரை கிலோ யாருக்கென்று யாராச்சும் நினைவுபடுத்துங்களேன் ப்ளீஸ் !//---
      அது குமார் சேலம் sir.

      Delete
    7. தீபாவளி மலர் மொதல் விமர்சனம் அவிங்க தான் கொடுத்தாங்க...

      (மீ கூட விண்டர் special Ku மொதல் விமர்சனம் கொடுத்தேன்.. ஆனா அதுக்கு போட்டி இல்லை போல)

      Delete
    8. // ஊத்தப்பம் வேணும்னா பார்சல் அனுப்பலாம். //

      தலைவருக்கு ஊத்தப்பம் ரொம்ப பிடித்குமாம்.

      Delete
    9. அந்த கொட்டாபாக்கு பயாச விமர்சனதுக்கு justification கொடுத்த இரண்டாவது கமெண்ட் விமர்சனமாக எடுத்துக்கொள்ள படுமா ??? :P :P :P

      Delete
  31. எனது புத்தகமும் வீடு வந்து சேர்ந்து விட்டது. DTDC வாழ்க வாழ்க.

    ReplyDelete
  32. பார்சல்கள் கிளம்பிவிட்டது.மிக்க மகிழ்ச்சி.
    சந்தோஷம்.

    ReplyDelete
  33. ஆசானே தங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த சின்னமனூர் சரவணன் என்றும் துணையாய் இருப்பேன்.

    ReplyDelete
  34. கனவுகள் நனவுகளாகட்டும்.

    ReplyDelete
  35. மொக்கைகள் இல்லை சார் மாறாக எங்கள் பொழுதுகள்உற்சாகமாகக் கழிந்தன என்பதே உண்மை. தினம் ஒரு பதிவு என்பதே எங்கள்எதிர் பார்ப்பாக இருந்தது கொரானாகாலத்தில். உங்கள் சிரமம் கருதியேநாங்கள் வற்புறுத்தாமல் அடக்கியே வாசித்தோம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  36. புக்ஸ் வந்து கிடைத்து விட்டது... Sanitizer அடிச்சு இருக்கேன்... இனி தான் ஓபனிங்.. ஆன அதற்குள் தலை சோன் பப்டி தட்டியும் விட்டார். வாழ்த்துகள் தல..💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வெளியீடுகள் பிளீஸ்

      Delete
  37. காமிக்ஸ் படித்தோம் என்பதே மகிழ்ச்சியான விசயம் அதிலும் அனைவருக்கு முன் படித்துவிமர்சனமும்எழுதிவிட்டோம் என்று ஆசிரியர் மற்றும் நண்பர்களின் அங்கீகரிப்பேபெரிய சந்தோசம் சார்.இதற்க்காக உங்கள் மதிப்புமிக்க நேரத்தை செலவழிக்க வேண்டியதில்லை என்பதே எனது கருத்து. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  38. //நமது இதழ்களில் எப்போதுமே ஒரு striking feature ஆகத் தென்படுவது அந்த variety என்பதில் உடன்பாடிருக்கும் என்று நினைக்கிறேன் ! Variety ஆக நாயகர்கள் என்பதை விடவும், variety ஆன ஜானர்களுடன் ஒரு Box set தொகுப்பினை யோசித்துத் தான் பாருங்களேன் :

    1 ஹ்யூமர் ஆல்பம்

    1 லவ் ஸ்டோரி

    1 அமானுஷ்யம்

    1 Sci -fi ஆல்பம்

    1 த்ரில்லர்

    //

    ஓகே சார்.. நிச்சயம் முயற்சிக்கலாம்...

    ReplyDelete
  39. எனக்கும் புத்தகங்கள் இன்று வந்து விட்டது. நன்றி.

    ReplyDelete
  40. 100 வது பதிவு மிகப்பெரிய விஷயம் சார். பல தடங்கல் மற்றும் பல பிரச்சனைகளுக்கு நடுவில் அவைகளை எல்லாம் பின் தள்ளிவிட்டு எங்களுக்காக தொடர்ந்து வாரம் தவறாமல் பதிவுகளை போட்ட உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    காமிக்ஸ் வாசகர்களுக்கான எடிட்டர் இந்த 100 பதிவுகளே சாட்சி.நன்றி.

    பதிவுகளின் எதிர்பார்ப்பு இன்றுவரை சற்றும் குறையவில்லை, இது போன்று வாசகர்களை உங்கள் பதிவுகளால் கட்டிப்போட்டுவது சுலபமில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பார்வைகள் உங்கள் பதிவுகளின் எண்ணிக்கை இன்னும் புதிய புதிய உட்சங்களை தொடுவது உறுதி.

    வாழ்த்துகள் சார்.

    இங்கு தொடர்ந்து பார்வையிடும் & பின்னூட்டம் இடும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.


    நன்றி : PfB (ஹிஹி.. பேஸிகலி ஐயாம் எ சோம்பேறி!)

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதியதை மிக அழகாக மீண்டும் எழுதிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள் விஜய். :-)

      Delete
  41. எடிட்டர் சார்

    வெரைட்டி பாக்ஸ் செட், சூப்பர் ஐடியா
    வரவேற்கிறேன் !

    ReplyDelete
  42. 'லவ் ஸ்டோரி'க்கு பதிலாக 'ஆக்ஸன்' கேட்கும் நண்பர்களை நான் இங்கே பார்க்கிறேன். அவர்களுக்கு 'லவ்' என்றால் ஏன் பிடிப்பதில்லை என்பது தெரியவில்லை! ஒருவேளை அதுல நிறைய அடி வாங்கிட்டாய்ங்களோ என்னமோ?!! ஹிஹி!!

    ReplyDelete
    Replies
    1. தலீவரே லவ்லாம் வாணாம்னு அடம் புடிக்கிறாரே - என்ன "வாலிப" சங்கம் நடத்தறீங்க சாமீ ?

      Delete
    2. செயலரே லவ் எல்லாம் ஒண்ணு இல்ல எனக்கு மூணு அப்ளிகேஷன்...

      ஆனா மறுத்தது நானு அடிவாங்கியது மகளிர் குழு..)

      Delete
    3. எனக்கும் லவ் ஸ்டோரி வேணாமே என்று தோணுது

      Delete
    4. ஆனாக்கா .. லவ் ஸ்டோரிக்கு மொழி பெயர்க்கும் வயசெல்லாம் நமக்குத் தாண்டியாச்சே சார் ... :-) ஒரு வேளை வயசான காலத்து platonicity-யோ !

      Delete
    5. ///செயலரே லவ் எல்லாம் ஒண்ணு இல்ல எனக்கு மூணு அப்ளிகேஷன்...///

      பொண்ணுகளுக்கு எப்பவுமே அப்பாவியா ('ஙே'னு) இருக்கற ஆம்பிளைங்களதான் ரொம்பப் பிடிக்கும்னு நான் படிச்சு தெரிஞ்சுக்கிட்டது உண்மைதான்னு புரியுது தலீவரே!

      அப்பத்தானே போட்டு புரட்டி எடுக்க முடியும்!

      Delete
    6. ///ஆனாக்கா .. லவ் ஸ்டோரிக்கு மொழி பெயர்க்கும் வயசெல்லாம் நமக்குத் தாண்டியாச்சே சார் ...///

      ஒருவேளை மொழிபெயர்ப்புன்ற பேர்ல அவர் இதுவரைக்கும் எழுதிவச்சிருக்கும் கவிதைகளையெல்லாம் களமிறக்கிடலாம்னு பார்க்கிறாரோ என்னவோ?!! :D

      Delete
    7. பொண்ணுகளுக்கு எப்பவுமே அப்பாவியா ('ஙே'னு) இருக்கற ஆம்பிளைங்களதான் ரொம்பப் பிடிக்கும்னு நான் படிச்சு தெரிஞ்சுக்கிட்டது உண்மைதான்னு புரியுது தலீவரே!

      அப்பத்தானே போட்டு புரட்டி எடுக்க முடியும்

      *****

      ஙே..

      Delete
  43. வருடத்தின் நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் ஆசிரியர் சாரே.

    ReplyDelete
  44. பொட்டி வந்துடுச்சூ...
    தனி ஒருவன் தவிர மற்ற அனைத்து அட்டைகளும் ஸ்பெஷல் டெக்ஸ்டருடன் சூப்பராக உள்ளது.

    ReplyDelete
  45. ஆமா அந்த லவ்வேண்டாம்சார்பதிலாஆக்ஷன். இல்லாங்காட்டி வழக்கம்போல டெக்ஸ். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  46. பார்சல் பிரித்து புத்தகங்களை பார்த்து விட்டாச்சு....

    முதல் பார்வையில் வாவ் சொல்ல வைத்தது "தகிக்கும் பூமி"--- அட்டை தான்...!!

    இருளின் நிழலில் இத்தனை அருமையா வரைந்து உள்ளர்கள்...!!!

    சும்மா குதிரை குளம்புகளில் அனல் பறக்கிறது...!!!

    நிழல் இருளில் ஜொலிக்கும் விழிகள்... ஆத்தாடி மிரட்டல்...!!!

    சந்தேகம் இல்லால் டாப் அட்டை!!!!


    பின் அட்டை கருமை நிறம் மேலும் அழகு...!!

    மற்ற 3 அட்டைகள் சம அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

    2 கருப்பு வெள்ளை...
    2 வண்ண இதழ்கள்...

    சம வாய்ப்பு...!!
    ---STV

    ReplyDelete
    Replies
    1. தகிக்கும் பூமி - அட்டைப்பட விமர்சனம் அருமை.

      Delete
  47. டெக்ஸ் ஓவியங்கள் பழைய நாட்களை நினைவு படுத்தி விட்டது....

    டெக்ஸ் & கார்சன் அசல் ஓவியங்கள் ஓரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் எப்போதும்....!!!
    --------

    13 செம்ம பயம் காட்டுது... மீண்டும் ஓவியங்கள் நிண்ணு பேசுது...!!!

    ----

    கிளிப்டன்--- எப்போதும் எனக்கு ஃபேவரைட்...

    அடர் நீலம்,
    அடர் மஞ்சள்,
    அடர் 🍊 என பளீரென்று வண்ண கலவை... பளிச் பளிச் என மின்னுின்றன!!!

    என்ன சிறப்பு sir???

    ReplyDelete
  48. 1)pycholical thriller
    1)cow boy thriller
    1)neo noir thriller
    1)horror thriller
    1)fantasy thriller
    1)ocean thriller

    ReplyDelete
  49. 4 இதழ்களையும் ஒரு புரட்டு புரட்டி விட்டு மீண்டும் தனி ஒருவனை எடுத்தேன்...!!!

    அசாத்திய கணம்...!!!
    இது போன்ற குண்டு புக்கு கையால் எடுக்கும் போதே ஒரு கிளர்ச்சி தோன்றும்... இம்முறையும்...!!!!

    மொத்தம் 3 கதைகள் உள்ளன. 3கும் தனி அட்டை போல உள் பக்கங்களை கொண்டுள்ளது அருமை....!!!

    எதிர் பாராத சர்ப்ரைஸ் இது.

    முதலில் படிக்க போகும் book இதே...!!


    ஒரு வேண்டுகோள் sir..

    புத்தாண்டின் முதல் தோர்கல் இதழை இதே போல குண்டு புக் ஆக தாருங்கள், வாய்ப்பு இருந்தால்...!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ---STV

    ReplyDelete
  50. படிக்காதவர்களும் படிக்கலாம் எப்பொழுதுமே
    .. ( எனது விமர்சனத்தை :-)

    தி லோன் ரேஞ்சரின் "தகிக்கும் பூமி "

    இந்த இதழை தரம் ,அச்சு ,வண்ணம் ,கதை ஆகியவற்றை பற்றி பார்ப்பதற்கு முன்னால் கண்டிப்பாக ஒன்றை சொல்லிக்கொள்ள தோன்றுகிறது..இதற்கு முன் வந்த ரேஞ்சரின் தனியொருவன் என்னை பொறுத்தவரை மொக்கை எனவும் இல்லாமல் ஆஹா ஓஹோ என்ற ரகமாகவும் இல்லாமல் ஏதோ ஒரு வித நடுப்புள்ளியிலேயே இருந்தது. சுருக்கமாக சொன்னால் சுமாரான வன்மேற்கு நாயகராகவே தோன்றினார் என்னை பொறுத்தவரை..வில்லன்களை கொல்ல மாட்டாராம் ,தூக்கில் இடும் சமயங்களில் கண்டு கொள்ளமாட்டாராம் என அவரிடம் ப்ளஸை பார்த்ததை விட மைனஸையை அதிகம் என்னால் பார்க்க முடிந்தது. பட் இந்த தகிக்கும் பூமியில் அதே லோன் ரேஞ்சர் தான் ,அதே யாரையும் சுட்டுக்கொள்ளாத அதே மனநிலை தான்..ஏன் ஒரு பெண்ணிடம் அறை வாங்கிவிட்டு கன்னம் பழுத்து விட்டது என்ற தொனியில் பேசி நகர்வது என எதிலும் நாயக அவதாரம் இல்லாத அதே பாணிதான் இம்முறையிலும் அனைத்து பாகங்களிலும் ..ஆனால் ஆனால் இந்த முறை முன்னர் வந்த தனியொருவன் என்ற தனி இதழை படிக்காமலேயே என்னை முழுவதுமாக ஆட்மித்து க்கொண்டார் எனில் கதையின் சாரி கதைகளின் தாக்கத்தை சொல்லவும் வேண்டுமா என்ன..?!

    முதலில் அட்டைப்படங்களுக்கு ஒரு பூங்கொத்து சார்...பின் பாகங்களுக்கான முன் ஓவியத்திற்கும் ஒரு பூங்கொத்து சார்..பின் அழகான சித்திரங்களும்,அட்டகாசமான மொழிப்பெயர்ப்பிற்கும் ஒரு பூங்கொத்து சார்..உண்மையில் ஒரு பாகத்தை படிக்கலாம் என்றே இதழை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்..ஆனால் கடைசி பக்கத்தில் வந்தவுடன் தான் இதழின் அனைத்து பாகங்களையுமே படித்து முடித்தாயிற்று என்பதை உணர முடிந்தது. முன் கதை நினைவு இல்லாமலே லோன் ரேஞ்சர் மனதில் புகுந்து கொண்டார் எனில் முன் வந்த இதழையும் வழக்கம் போல் படித்து விட்டு இதனை தொடர்ந்து இருந்தால் அந்த இதழுக்கும் சேர்த்தி பொன்னாடை போர்த்தலாம்.. ரேஞ்சரை விட அவரின் செவ்விந்திய தோழன் இன்னமும் நெஞ்சில் குடி கொண்டார் கடைசி கதையான நேருக்கு நேர் படித்தவுடன்..அவர் மட்டுமல்ல அந்த சாகஸத்தின் கோர முக வில்லனுமே இன்னமும் ஒரு வித வலியை ஏற்படுத்துகிறார்.

    "எல்லோருமே சிறுவயதில் விசாலமான லட்சியங்களோடுதான் வாழ்க்கையை தொடருகிறோம்.வளர்ந்து பெரியவனாகி பல நல்ல காரியங்களை செய்வோம் என கனவு காண்போம்.அம்மாக்கள் நம்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவோம்.."

    என்ற வரிகள் எல்லாம் எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்..ஆனால் இந்த வசனத்தை வில்லன் கூறுவது தான் இந்த கதைக்கு ப்ளஸ்ஸே..

    " நாகரீகம் என்ற பெயரில் இந்த பூமி செய்திடும் தகிடுத்தத்தங்கள் தான் எத்தனை..?"

    இதுவுமே இன்றுமே எவ்வளவு பெரிய உண்மை...அனைத்து நாட்டிலுமே..மொழிப்பெயர்ப்பாளருக்கு ஒரு பெரிய பூந்தோட்டத்தையை அளிக்கலாம்.

    மொத்தத்தில் லோன் ரேஞ்சரா என அசுவராஸ்யமாக இதழை படிக்க எடுத்த என்னை லோன் ரேஞ்சர்டா என்று சொல்ல வைத்துள்ளது இதழை படித்து முடித்தவுடன்..

    தகிக்கும் பூமி...இனிக்கும் ஸ்டோரி..

    ( மறந்து போன முக்கிய குறிப்பு..:

    தகிக்கும் பூமியை படிக்க தனியொருவன் முன் இதழ் கண்டிப்பாக தேவையில்லை..ஆனால் அந்த இதழை வாங்கி வாசிக்காதவர்கள் அதனையும் வாங்கி ஒரே தொடர்ச்சியாக படிக்க முயன்றால் சுவை இன்னும் பல மிடறு அதிகமாகும் என்பது உண்மை..இதை சொல்ல காரணம் மீண்டும் அந்த இதழை எடுத்து கொண்டு தொடர்ச்சியாக மீண்டும் இதனை மறு வாசிப்பு வாசிக்க எனக்கு இப்பொழுதே ஆவல் பெருகிவிட்டதே காரணம்..)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே அடுத்த வெளியீடுகள் பிளீஸ்

      Delete
    2. தோர்கல் ..ஒரு அழகிய அகதி ( முத்து ஆண்டு மலர்.)

      ஷெர்லக் கானகமே காலடியில் ( கார்ட்டூன் )

      கோழைகளின் பூமி ..கிராபிக் நாவல் ..


      மூன்று இதழ்கள் நண்பரே..

      Delete
    3. ///முதலில் அட்டைப்படங்களுக்கு ஒரு பூங்கொத்து சார்...பின் பாகங்களுக்கான முன் ஓவியத்திற்கும் ஒரு பூங்கொத்து சார்..பின் அழகான சித்திரங்களும்//// அந்த extra ஓவியங்கள் செம்ம....!!!

      Delete
    4. என்னாது வருடத்தின் முதல் மாதம் டாமல் டுமீல் டெக்ஸ் கிடையாதா? சத்திய சோதனை பாலா :-)

      Delete
    5. தலீவரே..நேர்கோட்டுக் கதையே என்றாலும் இதன் ஸ்கிரிப்ட் ரொம்பவே ஸ்டராங் ! அதனை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டே பயணம் செய்தால் போதும் என்பதே முதற் ஆல்பம் முதலான லோன் ரேஞ்சர் பாடம் ! இவை மாமூலான வன்மேற்கின் கதைக்களங்கள் அல்ல என்பதால் சித்தே கி.நா .பாணியிலான வசனங்கள் ஓ.கே.வாகிடும் என்ற நம்பிக்கை இருந்தது ! நீங்கள் குறிப்பிட்ட வரிகள் அந்த நம்பிக்கையின் பலன்களே !

      Delete
    6. ஆகா ஆகா எனக்கு பிடித்த லோன் ரேஞ்சர் தாரை பரணிக்கும் பிடித்து விட்டது. சூப்பர். அப்ப லோன் ரேஞ்சர் 3ம் பாகம் வருவது உறுதி.

      Delete
    7. ஆ-வூன்னா கொடிய புடிச்சிட்டு ஆர்ப்பாட்டமா வர்றாங்களே ! இன்னா கூட்டம் ; எஷ்டு ஜனா !!

      Delete
    8. நன்றி தலைவரே மிக்க நன்றி

      Delete
    9. ஆ-வூன்னா கொடிய புடிச்சிட்டு ஆர்ப்பாட்டமா வர்றாங்களே ! இன்னா கூட்டம் ; எஷ்டு ஜனா

      :-)))

      Delete
    10. நேர்கோட்டுக் கதையே என்றாலும் இதன் ஸ்கிரிப்ட் ரொம்பவே ஸ்டராங் ! அதனை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டே பயணம் செய்தால் போதும் என்பதே முதற் ஆல்பம் முதலான லோன் ரேஞ்சர் பாடம் ! இவை மாமூலான வன்மேற்கின் கதைக்களங்கள் அல்ல என்பதால் சித்தே கி.நா .பாணியிலான வசனங்கள் ஓ.கே.வாகிடும் என்ற நம்பிக்கை இருந்தது ! நீங்கள் குறிப்பிட்ட வரிகள் அந்த நம்பிக்கையின் பலன்களே !

      ******

      உண்மை சார்...பல இடங்களில் வசனங்கள் அட்டகாசப்படுத்தின..

      Delete
  51. KS @ January 2021

    தோர்கள்-அழகிய அகதி

    ஹேர்லாக் ஷோமஸ்-கானகமே காலடியில்

    கி. நா.-கோழைகளின் பூமி

    ReplyDelete
    Replies
    1. ஓ...கூறி விட்டீர்களா..?!..:-)

      Delete
    2. லீவா தல விமர்சனம் ஃபாஸ்ட் ஆக குமியுது....!!!
      😉😉😉

      ரவி, KS , வரிசையில் தல... Enjoy தல 💐💐💐💐

      Delete
    3. இம்மாதமும் கூரியர் சொதப்பலால் தலைவரோட போட்டி போட முடியாம போச்சி...!!!
      இருக்கட்டும் தலைவரே அடுத்த மாசம் பார்த்துக்குவோம்...!!!

      Delete
    4. சோன்பப்டி வென்ற கையோடு பிரித்து மேயும் தலீவருக்கு கொஞ்சம் ஆந்திரா மிக்சரையும் பார்சல் பண்ணிப்புடலாம் !

      Delete
    5. எஸ். தலைவர் டீசர்வ்ட் திஸ் சார்.

      Delete
    6. நன்றி டெக்ஸ். ☺️

      Delete
    7. ஆம் டெக்ஸ் ...நேற்று விடுமுறை நாளே...:-)

      Delete
    8. ஆசிரியர் * பெ.பரணி * ரவி *


      :-)))

      Delete
  52. Replies
    1. நூறாவது பதிவில் 100வது பின்னூட்டம். வாழ்த்துக்கள்.

      Delete
  53. எனக்கும் குரியர் சொதப்பல் நாளைதான் புத்தகங்களைப்பார்க்கமுடியும். அதுவரை blog ஆண்டவரே வாசிப்புக்குகரூர் ராஜ சேகரன்.

    ReplyDelete
  54. Hi Sir
    5 set box is a great idea.
    Love to see Sexton blake,Karuppu kizhavi in it.
    Regards
    Arvind
    Regards

    ReplyDelete
  55. விதவிதமான ஜானர்களுடன் Boxset தொகுப்பு ஒரு நல்ல முயற்சி.கண்டிப்பாக முயற்சிக்கலாம்.வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  56. ///100 !! இது நடப்பாண்டின் பதிவு நம்பர் 100///

    ---வாழ்த்துகள் சார்.💐💐💐💐💐

    100வது பதிவு ஒரே வருடத்தில் என்பது அசாத்திய சாதனை!!!!

    முன்பைவிட இன்னும் தளம் நம்மோடு ஒன்றிப்போய் விட்டதை இந்த சென்சுரி பதிவு சொல்லுகிறது என்பதில் ரகசியம் எதுவுமில்லை...!!!

    இந்த 100பதிவுகள் முன்னெப்போதையும் விட நம்முடைய நேரங்களை சுவாரஸ்யமான....

    தொடருங்கள்... தொடர்கிறோம்.

    இந்த பதிவுகளில் பங்கு கொண்டது மகிழ்ச்சி! நாமும் கூட சற்றே காலரை தூக்கி விடலாம்!

    ReplyDelete
  57. ///ஒற்றை நொடி...ஒன்பது தோட்டா" ; "கென்யா" ; ரூட் 66 ஆகியவற்றைச் சடுதியில் க்ளியர் செய்தான பின்னே...////

    உய்...உய்...உய்... இதனையே 100வது பதிவு சிறப்பு அறிவிப்பு என்று எடுத்து கொள்ளலாம்....!!

    ஒற்றை நொடி ஒன்பது தோட்டா....ஆர்வத்தை கிளப்பிக் கொண்டே உள்ளது!

    வரும் 2021ல 3 மாதம் 1என்ற விதத்தில் போட்டு தாக்கிடலாம் சார்....!!!

    ReplyDelete
    Replies
    1. மூன்று புத்தகங்களும் வரும் நாளை நோக்கி ஆவலுடன் வெயிட்டிங்.

      Delete
  58. ///எனது ரொம்ப கால ஆசை ஒன்றினை சொல்லிவைக்கட்டுமா folks.

    1 ஹ்யூமர் ஆல்பம்

    1 லவ் ஸ்டோரி

    1 அமானுஷ்யம்

    1 Sci -fi ஆல்பம்

    1 த்ரில்லர்

    5 வெவ்வேறு சுவைகளோடு - 5 oneshots - ஒரே பாக்ஸ் செட்டில் !///---

    100 பதிவுகள் போட்டுத் தாக்கிய தங்களது ஆசை படியே சூட்கேஸை போட்டுத்தள்ளிடலாம் சார்...😍

    ReplyDelete
  59. பணி காரணத்தால் இப்பதா கிடைத்தது.மதியமே வந்து சேர்ந்து விட்டது.நன்றிகள் சார்

    ReplyDelete
  60. அருமை சார் 500 விலையில் அறுசுவைக்கொருசுவை குறைவாய்...ஐம்புலன்களுக்கு நிறைவாய்....தயார்

    ReplyDelete
  61. இம்மாத அட்டைகளும் முதலிடம் பிடிக்க டெக்சும் லோன் ரேஞ்சரும் போட்டி போட்டாலும்...டெக்ஸ் என்பது களுக்குள் அழைத்துச் சென்று...அட்டகாச வண்ணச் சேர்க்கையுடன் இது வர வந்ததிலே தலையென தலையெடுக்கிறார்...அருமை...லோனோ வண்ணப்பக்கங்கள் காட்டி மிரட்டுறார்

    ReplyDelete
  62. டியர் எடி,

    Variety Box Set... Double Triple OK.

    இப்படியாவது அந்த ஜானர் கதைகளை பார்க்க (படிக்கவும் முயலனும்) முடிந்தால் சுகமே.

    ReplyDelete
  63. சார் நீங்கள் அறிவித்த பாக்ஸ் செட்டை அப்படியே மாற்றம் இன்றி வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒரு முயற்சி செய்து பார்க்கலாம். நீங்கள் அறிவித்த 5 ஜானர் எனக்கு ஓகே தான் சார். இந்த புத்தகம் வெறும் அறிவிப்பாக இல்லாமல் 2021இல் வெளிவர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எனது கருத்தும் அதேதாங்க.. 🔥

      Delete
    2. வரும்..வரும்.. உறுதியாக வரும்...!!!

      Delete
  64. ஹைய்யா! புத்தகங்கள் கிட்டி!

    இந்த தபா லோன் ரேஞ்சர் அட்டைப்படம்தான் டாப்பு! உள்பக்க சித்திரங்கள் - குறிப்பாக வண்ணக்கலவைகள் - மிரட்டுகின்றன! தலீவரின் விமர்சனத்தைப் படித்தபிறகு லோனு மீதான மரியாதை கொஞ்சம் எகிறியிருக்கிறது!

    அதிகாரி கதையின் இறுதியில் அடுத்தவருடத்திற்கான முழு அட்டவணையையும் இணைத்திருப்பது சிறப்பு!

    சந்தாதாரர்களுக்கு நமது அன்பு நண்பரின் அன்புப் பரிசாக 'கழுகு வேட்டை' கிடைக்கவிருப்பதை அதிரடிச் செய்தியாகச் சொல்லியிருப்பது அட்டகாசம்! ('வண்ணத்தில்' என்பதையும் குறிப்பிட்டிருக்கலாமே எடிட்டர் சார்?). சந்தாச் செலுத்த நிறைய நண்பர்களை இம்முயற்சி ஊக்குவிக்கும் என்பது உறுதி!!

    கூடவே, எடிட்டரின் அன்புப் பரிசாக 64 பக்க கலர் டெக்ஸும் சந்தாதாரர்களுக்கு உண்டு என்ற அறிவிப்பும் அட்டகாசம்!

    அருமையான வாய்ப்புகள்!! பயன்பெற்று பயனளிக்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. செயலர்@ ///சந்தாச் செலுத்த நிறைய நண்பர்களை இம்முயற்சி ஊக்குவிக்கும் என்பது உறுதி!!//.--- நச்சுனு சொன்னீங்க...!!

      கழுகு வேட்டை,
      டெக்ஸ் ரெகுலர் சைஸ்,
      ஹார்டு பவுண்டு,
      வண்ணத்தில்...

      அட டா அம்சமா இருக்கும்!!!


      ///எடிட்டரின் அன்புப் பரிசாக 64 பக்க கலர் டெக்ஸும் சந்தாதாரர்களுக்கு உண்டு என்ற அறிவிப்பும் அட்டகாசம்///--- இது நடப்பு சந்தாவின் அன்பளிப்பு இதழ். 2020 சந்தாதாரர்களுக்கு எடிட்டர் சாரின் அன்பு பரிசாக அறிவிக்கப்பட்ட 4மினிகளில் 2 வந்திட்டன...!
      மீதி 2ம் ஒரே புத்தகமாக கொடுத்து டெக்ஸ் வறட்சியை தணிக்க செய்யும் முயற்சி!
      இது ஒரு மாசம், அநேகமாக 2021பிப்ரவரியில்... (2021சனவரி இதழ்கள் என்ன என நேற்றே நமக்கு தெரியும்)

      போன ஞாயிறு நாம எல்லாம் அடித்த குத்தடி குத்தடி சைனக்கா தேர்தலில் கிடைத்த டெக்ஸ் வண்ண மறுபதிப்பு 2021மார்ச் மாசம் வெளியாகி சந்தா 2020ஐ நிறைவு செய்யும் என்பது என் கணப்பு!

      Delete
  65. அமானுஷ்யம்.. Sci fi.... Thriller .. கேக்கும்போதே ஆர்வமா இருக்கு.. ரொம்ப சந்தோஷம் சார்.. 💜💜💜

    ReplyDelete
  66. எடி சார், எந்த இதழ் வேணுமோ போடுங்க, ஆனால் நம்ம ஆப்பை கொஞ்சம் சரி பண்ணுங்க. ஒவ்வொரு தடவையும் லாகின் கேட்கிறது. அப்பறம் payments க்கு போனால் எப்பவுமே ஹாங் தான். சும்மா நாங்களும் ஆப்பு வைத்திருக்கிறோம் என்று சொல்லி கொள்வதில் அர்த்தமில்லை அய்யா. simple but functional should be our motto. இந்த மாத ஆர்டரும் ஹாங் ஆகி விட்டது. மெயில் போட்டிருக்கேன். கொஞ்சம் பார்த்து, ஆப்பு டெவலப்பரிடம் பேசுங்கள் சார்.

    ReplyDelete


  67. ///1 ஹ்யூமர் ஆல்பம்

    1 லவ் ஸ்டோரி

    1 அமானுஷ்யம்

    1 Sci -fi ஆல்பம்

    1 த்ரில்லர் ///


    வாவ்.. தூள் ஐடியா சார்.!
    பாக்ஸ் செட் அல்லது ஒரே குண்டு.. எப்படி வந்தாலும் வரவேற்கிறேன்.!
    (குண்டு புக்குன்னா கூடுதலாக க் சேர்த்து வரவேற்க்க்கிறேன்.)

    ReplyDelete
  68. ஒரு மர்மமான சடலம்..!

    ஒரு மர்மமான கடிதம்..!

    ஒரு மர்மமான வரைபடம்...!

    ஒரு மர்மமான ஆபீஸர்...!

    மற்றும்,

    கொஞ்சம் திகில்..!

    கொஞ்சம் சஸ்பென்ஸ்..!

    கொஞ்சம் சுவாரஸ்யம்...!

    கொஞ்சம் குளிரோடு...,

    துவக்க வேகம் அற்புதமாக அமைந்துவிட்டது.

    பனிவனப் படலம் ஆரம்பம்.



    ReplyDelete
    Replies
    1. 'பிரிட்டிஷ் கொலம்பியா'

      'கொலம்பியா'

      ரெண்டும் வேறுவேறா.?

      Delete
    2. ஆம் GP...

      'பிரிட்டிஷ் கொலம்பியா'--- இது கனடா மாகாணம்

      'கொலம்பியா'--- இது தென் அமெரிக்க நாடு....!!

      Delete
    3. கொசுறு:- கொலம்பியா-- புட்பால் கேப்டன் கார்லோஸ் வல்டோரோமா-- வின் கூடை hair style world famous.

      நம்ம யோகி பாபு வின் hair விட இன்னும் செம்ம பெரிய கூடு...!! அதுகு அவர் நிறைய மேக் அப் போட்டு களம் வருவார்... ரசிகைகள் சொக்கி போவாங்க.....!!!

      Delete
    4. அந்தப் பெயருக்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா.?

      Delete
    5. ஆம்.. கிறிஸ்டோபர் கொலம்பஸ் நினைவாக....!!!

      Delete
    6. //ஆம்.. கிறிஸ்டோபர் கொலம்பஸ் நினைவாக....!!!//

      கொஞ்சம் வித்தியாசம் உண்டு..


      சவுத் அமெரிக்க கொலம்பியா..


      கிறிஸ்டோபர் கொலம்பஸ் நினைவாகத்தான்..

      ஆனால் spelling- COLOMBIA


      US-ல உள்ள இப்பத்திய வாஷிங்டன் டிசி.

      உண்மையில் COLUMBIA (Spelling கவனிங்க) மாவட்டதின் ஒரு பகுதி..+ மேரிலேண்ட் பகுதி கொஞ்சம்+ வர்ஜீனியா பகுதி கொஞ்சம் சேர்ந்தது.

      இந்த Columbia கிறிஸ்டோபர் கொலம்பஸோட பெண் வடிவம்..அமெரிக்க பெண் கடவுள்..


      பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு (British Columbia) அந்த பேரு வந்ததுக்கு காரணம்

      ராபர்ட் கிரே -அமெரிக்க கப்பல் கேப்டன் -முதன்முதல்லா அந்த பகுதிக்கு தன்னோட கப்பல்ல வந்தாரு ..

      அந்த கப்பல் பேரு கொலம்பியா ரெட்விவிவா..

      அந்த கப்பல் பேரையே அந்த ஆற்றுக்கு பேரா வச்சாரு..columbia-ன்னு..


      அந்த ஆறு போன இடமெல்லாம் கொல்ம்பியா பகுதின்னு பேரு வந்தது

      பிரிட்டிஷ்காரங்க அங்க காலனி வச்சதால

      பிரிட்டிஷ் கொலம்பியா..

      கொலம்பியா ஆறு ஒடற இப்பத்திய ஒரேகான்,வாஷிங்டன் மாகாணம் எல்லாம் பின்னாடி அங்கிருந்து பிரிஞ்சி அமெரிக்கா கூட வந்து சேர்ந்துகிட்டவங்கதான்...



      ஒரு ஆறு வழியா தன் கப்பல்ல வந்தாரு

      Delete
    7. சுவையான தகவல்கள் அருமை பொருளர் ஜி 👌👌👌👌👌

      இதுபோல யாராவது பாடம் நடத்தி இருந்தா வரலாறு புவியலில் 100/100 வாங்கி இருப்பேன்...!!!

      தங்களது மதிப்புமிக்க நேரத்தை எங்களின் பொருட்டு செலவிட்டதற்கு நன்றிகள் ஜி!

      Delete
  69. சார் இன்று பதிவுக் கிழமை.

    ReplyDelete
  70. ஒரு கசையின் கதை+பயமே ஜெயம்
    A perfect hot and cool special.

    டெக்ஸ் மற்றும் க்ளிப்டன் இரண்டுமே மிக அருமை.

    ReplyDelete
  71. திகில் காமிக்ஸில் முன்னர் வந்த * மர்ம மண்டலம் + சாவதற்கு நேரமில்லை* புக் ரீப்ரிண்ட் இப்போது *நரகத்தின் நம்பர் 13* என வந்துள்ளது... புது கதைகள் என்றாலும் ஓகே. ஆனால் தற்போது எதற்கு சார் இந்த அநாவசிய ரீப்ரிண்ட் வெளியீடு??? 😣😣😣😔😔😔

    ReplyDelete
  72. ஏற்கனவே ரிப்கெர்பியின் *வாரிசு யார்* கதை விளம்பரம் சமீபத்தில் பார்த்த ஞாபகம்... ரீப்ரிண்ட் தான் எனில் நாங்கள் நெடு நாட்களாக விரும்பும் கதைகள் வரட்டுமே சார்..

    ReplyDelete
  73. 100வது பதிவுக்கு எனது வாழ்த்துகள் சார்...ii
    புத்தகம் வந்தும் வெளியூரில் இருப்பதால் படிக்க ( பார்க்க ) முடிய வில்லை. _ ஆனால் சனி , ஞாயிறு என்றாலே உங்கள் பதிவு கிடைத்தாலே போதும்.சார்...

    ReplyDelete
    Replies
    1. துரதிர்ஷ்டவசமாய் இந்த வாரம் பதிவு கடைக்கு லீவு சார் ! புக்சின் முதல் பார்வை ; இரண்டாம் பார்வை ; அலசல் ; கும்மல் என்று டிசம்பர் இதழ்களோடு இந்த வாரயிறுதியினை நகர்த்திடுவோமே !

      Delete
    2. எடிட்டரின் புதிய பதிவு இந்த வாரம் நஹி நண்பர்களே! :(

      Delete
    3. என்னது இன்று விடுமுறையா ...?..


      அப்ப நேற்று படித்த இதழின் விமர்சனத்தை இன்று இங்கேயே பதிந்து விடவேண்டும் போல...

      Delete
  74. கால வேட்டையர்கள் - என் மனதை வென்ற வேட்டையர்கள்.

    இந்த வருடத்தின் சர்ப்ரைஸ் சயின்ஸ் ஆக்சன் ஹிட்.

    ReplyDelete
    Replies
    1. கதையின் மிக பெரிய ப்ளஸ் ஓவியங்கள். நிகழ்கால வாழ்க்கையில் அன்றாடம் தினமும் காணும் வாகனங்கள், உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் வீடு இவைகளை கருப்பு வெள்ளை ஓவியத்தில் மிகவும் ரசிக்க செய்தது. இது போன்ற ஓவியங்களை XIII, லார்கோ, ஷெல்டன் மற்றும் லேடி-s கதைகளில் வண்ணத்தில் பார்த்ததை கருப்பு வெள்ளையில் பார்க்கும் போது எளிதாக ஒட்டிக்கொண்டது.

      மற்றும் ஒரு ப்ளஸ் கதையின் வசனங்கள் அதிகம் இல்லாமல் அதே நேரம் அடுத்து என்ன என்ற கேள்விகளுடன் ஓவ்வொரு பக்கம்களும் நகர்வது, இதனை நகர்த்தி செல்வதற்கு சித்திரங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது!

      முதல் பாகமும் சரி இரண்டாவது பாகமும் சரி, ஒன்றுக்கொன்று போட்டி போட்டுகொண்டு அருமையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது.

      Delete
  75. Dear Editor,

    Box set concept absolutely welcome sir - அந்த லவ் ஸ்டோரி மட்டும் வேணாமே சார் ! We should play field to genres that are our strengths. இந்த விஷயத்தில் நான் தலீவர் கட்சி சார் - action replacing love story சார் !

    "அன்பே  ! நீ இல்லாமல் நானிருக்கும் நாட்கள் வசந்தத்தின் உச்சமல்லவே?" - இப்டீலாம் படிச்சுடுவோமோன்னு பயம்மா கீது சாரே ! 

    ReplyDelete
    Replies
    1. ///அன்பே ! நீ இல்லாமல் நானிருக்கும் நாட்கள் வசந்தத்தின் உச்சமல்லவே?" - இப்டீலாம் படிச்சுடுவோமோன்னு பயம்மா கீது சாரே ! ///

      😂😂😂😂😂😂😂



      வெறுமனே பார்க் ,பீச் ,புதர் .. லவ் மட்டும் இருக்காதுன்னு நினைக்கிறேன் ஜி.! இன்ட்ரஸ்ட்டிங்கான நாட் ஏதாவது இருக்கும்.!

      Delete
    2. //
      "அன்பே ! நீ இல்லாமல் நானிருக்கும் நாட்கள் வசந்தத்தின் உச்சமல்லவே?" - இப்டீலாம் படிச்சுடுவோமோன்னு பயம்மா கீது சாரே ! //

      ROFL..


      காளிதாசனின் " சாகுந்தலத்துக்கு" போட்டியா ஒரு அமர காதல் காவியம்
      வரப் போறது உங்களுக்கு பொறுக்கலையா?

      :-)

      Delete
    3. ///அன்பே ! நீ இல்லாமல் நானிருக்கும் நாட்கள் வசந்தத்தின் உச்சமல்லவே?" - இப்டீலாம் படிச்சுடுவோமோன்னு பயம்மா கீது சாரே ! ///

      😂😂😂😂😂😂😂

      Delete
    4. //இன்ட்ரஸ்ட்டிங்கான நாட் ஏதாவது இருக்கும்.!//

      யூ மீன் த்ரீ நாட்ஸ் ???

      Delete
    5. டாக்டர் - அதெப்படீ - "அபிநவ (தற்கால) சாகுந்தலம்"னு பேரு வெச்சது நீங்க - வாங்கி கட்டுறது நானா ? :-p சரி சரி ... வரட்டும் வரட்டும் - பரிமேலழகர் உரை மாதிரி ஒன்னு எளுதிடுவோம் இங்க :-)

      Delete
    6. காதலர்கள்... 20 ல் தத்தம் பாதைகளில் பிரியும் போதுவொரு உறுதி எடுக்கிறார்கள் - வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும் தங்களது 40 வது வயதுக்கு ரோம் நகரில் சந்திப்பது ; காதல் ததும்பும் நகரில் ஒற்றைப் பொழுதைக் கழிப்பதென்று !

      காலச் சக்கரங்கள் சுழல்கின்றன ; தொப்பையும் குடும்பமும் பெருத்த அண்ணாத்தேக்கு ஒரு வீடியோ கேசட் அகவை 40 க்கு முன்னே வந்து சேர்கிறது - 'ரோமில் கழித்திடத் திட்டமிட்ட இரவினை நினைவூட்டி !

      தொடர்ந்தது என்ன ? விடை சொல்கிறது சித்திரங்களில் !

      Delete
    7. ஆனால் இவற்றையெல்லாம் நாம் முயற்சிக்கப் போவதில்லை தான் ; சும்மா ஒரு சேம்பிளுக்க்காண்டி மட்டுமே !

      Delete
    8. ///யூ மீன் த்ரீ நாட்ஸ் ???///

      நான் சொல்லவந்தது கட்டப்படும் நாட்ஸைப் பற்றி அல்ல செனா..! :-)

      (மை மைண்ட் டூ மீ : ஓடீர்ர்ரா கைப்புள்ள..)

      Delete
    9. நல்லா இருக்கு சார்.!

      சேம்பிளுக்காண்டி வழங்கப்படும் பொருட்கள் தரமானதாகத்தான் இருக்கும்.!

      உதாரணத்திற்கு கமலா ஆரஞ்சு பழ வியாபாரிகள் ஒரு பழத்தை உரிச்சி வெச்சிருப்பாங்க. சாப்பிட்டு பாத்து வாங்கிட்டு போங்க சார்னு சொல்லுவாங்க. சேம்பிளுக்கு கொடுக்கப்படும் சுளைகள் ருசியாகவே இருக்கும். (நம்பி ரெண்டு கிலோ வாங்கிட்டுப்போயி, ஏழுகழுதை வயசாச்சி இன்னும் உருப்படியா பழம் வாங்கக்கூட தெரியலை.. பூராம் புளிக்குதுன்னு திட்டு வாங்கின கதைகள் இங்கே சம்மந்தமில்லாதது:-))

      அப்படி சுவைத்துப் பார்க்க சேம்பிளுக்கு வைத்திருக்கும் ஆரஞ்சு சுளைகளை போலவே தங்களது
      "ஐந்தும் ஐந்து ரகம் ஷ்பெசல்"
      சுவையாக இருக்குமென்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது சார்.!

      Delete
    10. ஒரே ஒரு பொய்..

      அந்த ஏழு கழுதை வயசாயிடுச்சு என்பதில் இன்னொரு ஏழயும் இணைத்தே திட்னுவார்கள் என்பது நான் அறிந்த்தே..

      Delete
    11. விஜயன் சார், நீங்கள் சொல்லும் கதை சுருக்கத்தை பார்த்தால் ஏதோ திகில் கதை போல் தெரிகிறது :-) கடந்த வருடம் நீரில்லை நிலமில்லை கதை மாதிரியா? நான் இப்போதே ஓட ஆரம்பிக்கிறேன்! :-)

      Delete
  76. இரவு வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  77. """' ஆட்டோகிராப் """ லவ் ஸ்டோரி தலைப்பு.

    ஆன மெபிஸ்டோ கதைகளை மட்டும் போடாதிங்க.

    ReplyDelete
  78. Last night I read 'Naragathin Number 13'and 'Oru Kasaiyin Kadhai' simple and superb stories. Y too many pages of trailer in a relatively small book sir? But I equally enjoyed these two books.

    ReplyDelete
  79. எங்க பதிவு காணோம்...:-(

    ReplyDelete
  80. பயமே ஜெயம்...

    கர்னல் தாத்தா கதைகள் நான் மிகவும் விரும்பி ரசிக்கும் இதழ் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.வந்தால் படிப்பேன்..ஓகே அவ்ளோத்தான்..

    இந்த முறை மதிய வேளையில் ஒரு தன்னந்தனி நிலப்பரப்பில் ஓர் பெரிய ஆரமரத்தடியில் காலை நீட்டியப்படி கொறிக்க கொஞ்சம் சிப்ஸ் பாக்கட்டையும் கொறித்து கொண்டே ஆளரவு இல்லாத தனிமையான சூழலில் படித்த காரணத்தினாலோ என்னவோ கதை வெகுவாகவே கவர்ந்து விட்டார் இந்த முறை இந்த கர்னல் தாத்தா...

    உளவுப்படையில் இணைக்க ஓர் புதிய நபரை இறுதி பயிற்சி அளிக்க அதகாரி ஓய்வு பெற்ற நமது கர்னலிடம் ஒப்படைக்க அந்த நபரின் பிரச்சனை என்ன ..பயிற்சியை வெற்றிகரமாக முடித்தாரா என்பதை சிலப்பல நகைச்சுவை சம்பவங்களுடன் வேகமாக இனிதே நகர்ந்து சென்றது இந்த பயமே ஜெயம்..

    பயமே ஜெயம் ...ஜெயமே...

    ReplyDelete
  81. நரகத்தின் நம்பர் 13..

    முதலில் அட்டைப்படத்திற்கு பலத்த பாராட்டுகள் சார்..அழகு..

    அழகான தரமான வெள்ளைத்தாளில் அட்டகாசமான சித்திர தரங்களோடு புரட்டி பார்க்கவே அவ்வளவு சிறப்பு..அதற்கும் ஓர் பலத்த பாரட்டுகள் ..

    கதை (கள்) வழக்கம் போல் நாம் அறிந்ததே ..ஒரு பழைய திகில் காமிக்ஸை பார்த்த ,படித்த திருப்தி ..ஓகே ..ஓகே...



    ReplyDelete
  82. மொத்ததில் இந்த டிசம்பர் மாத இதழ்கள் அனைத்தும் எவ்வித ஏமாற்றத்தையும் அளிக்காமல் வெகு சிறப்பாக அமைந்து மனதை கவர்ந்து உள்ளது என்பதை தெரிவித்து கொண்டு...

    ஆங்...அடுத்த மாத இதழ்கள் எப்பொழுது சார்...?டிசம்பரில் ஐனவரி இந்த முறை நிகழும் அல்லவா சார்..புத்தாண்டு மாதம் அல்லவா...

    ReplyDelete
  83. //காதலர்கள்... 20 ல் தத்தம் பாதைகளில் பிரியும் போதுவொரு உறுதி எடுக்கிறார்கள் - வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும் தங்களது 40 வது வயதுக்கு ரோம் நகரில் சந்திப்பது ; காதல் ததும்பும் நகரில் ஒற்றைப் பொழுதைக் கழிப்பதென்று !

    காலச் சக்கரங்கள் சுழல்கின்றன ; தொப்பையும் குடும்பமும் பெருத்த அண்ணாத்தேக்கு ஒரு வீடியோ கேசட் அகவை 40 க்கு முன்னே வந்து சேர்கிறது - 'ரோமில் கழித்திடத் திட்டமிட்ட இரவினை நினைவூட்டி !

    தொடர்ந்தது என்ன ? விடை சொல்கிறது சித்திரங்களில் !//

    சார் அந்த கதாநாயகன் குதிரையிலே போய் பத்துப்பேர டுமீல் டுமீல்னு சுட்டுத் தள்ளுறவரா, ஒத்தைக்கு ஒத்தை வர்ரியான்னு வம்புக்கிழுக்கிறவன போட்டுத் தள்ளுறவரா, சல்லூன்ல பதினைஞ்சு தடிமாடுகளை சாத்தீட்டு மேசை கதிரையையும் போட்டுப் பொளக்கிறவரா இருந்தாருன்னா... இந்தக் கதைகூட நம்ம கூட்டத்துல சூப்பர் ஹிட்டடிக்குமே....

    ReplyDelete
  84. டியர் சார்..i
    வார வாரம் ஏதாவது புதுசு புதுசா கிளப்பி விட்டு விடுகிறீர்கள்.. உள்ளே நுழையவே முடியவில்லை.
    "கால வேட்டையரை " பற்றி எனக்கு சொல்லியே ஆகனும். அட்டகாசமான கதைக்களம்- அதை ஓவியர் தன் ஓவியத்திறமையால் வில்லியம் வான்ஸ் அளவுக்கு அமர்களப் படுத்தி விட்டார்.
    என்ன கதையின் வலுவற்கு தக்க "ஹூரோ " யிசம் தான் இல்லாதது போல் ஃப்லிங்..
    இரும்புக்கை மாயாவி அளவுக்கு வலுவான ஹீரோயிசம் இருந்திருந்தால் - .முடிவு சந்தோசமாக இருந்திருக்கும்.
    ஆனால், ஒரு விதத்தில் நாமே நேரடியாக பாதிக்கப் Uட்டு ஒரு தேடலை நோக்கி பயணித்தது போல் கதையோட்டம் அமைந்து விட்டது. சூப்பர் சார்...

    ReplyDelete
    Replies
    1. // நாமே நேரடியாக பாதிக்கப் Uட்டு ஒரு தேடலை நோக்கி பயணித்தது போல் கதையோட்டம் அமைந்து விட்டது. //

      Yes.

      Delete
    2. // வலுவான ஹீரோயிசம் இருந்திருந்தால் //
      வலுவான ஒரு ஹீரோ இருந்திருந்தால் இந்த அளவுக்கு கதையை எல்லோரும் ரசித்து இருப்பார்களா என்றால் இருக்காது என்பதே எனது பதில் என்னளவில். இங்கே சயின்ஸ் பிக்க்ஸன் என்ற பூச்சுற்றலை ரசித்து படிக்க முடிந்ததற்கு முழுமையான காரணம் பெரிய ஹீரோக்கள் இல்லாமல் இயல்பான மனிதர்களுடன் பயணித்ததே.

      Delete
  85. கடந்த மாதம் வந்த புத்தகங்களின் தர வரிசை:
    1. கால வேட்டையர்கள்
    2. தீபாவளி மலர்
    3. சர்ப்பத்தின் சவால்
    4. மினி டெக்ஸ்
    5. வானம் வசப்படும்

    ReplyDelete
  86. இந்த மாத புத்தக விமர்சனங்களை நண்பர்கள் போட்டு தாக்கினால் நன்றாக இருக்கும். இன்னும் ஒரு நூறு பின்னூடங்கள்தான் 300 தொட :-) இன்றே ஆசிரியரிடம் உப பதிவு கேட்கலாம் :-)

    ReplyDelete
  87. இந்த மாத புத்தகங்களை புரட்டியதில் அட்டை படங்கள் அனைத்தும் அருமை, மெட் பினிஷிங்கில் அனைத்தும் அருமை, டெக்ஸின் அட்டைப்படம் என்னை மிகவும் கவர காரணம் இந்த பினிஷிங். முதலில் படிக்க உள்ளது கர்னல், அடுத்து டெக்ஸ், அதற்கு அடுத்தது லோன் ரேஞ்சர், கடைசியாக 13 ம் மாடி கதை. அடுத்தவாரம் முதல் இரண்டு வாரங்கள் அலுவலகம் விடுமுறை, அப்போது எனக்கு பிடித்த லோன் ரேஞ்சரை படிக்க உள்ளேன்

    ReplyDelete