நண்பர்களே,
வணக்கம். மாதங்களில் 12 நிறைவு கண்டிருந்தாலும் நமது சந்தா இதழ்களின் கோட்டா நிறைவுற்றிருக்கவில்லை தான் ! ஆனாலும் ஒரு புதிரான, பளுவான ஆண்டின் மத்தியினில் ஆண்டவன் அருளால் தலைதப்பியிருக்கும் நாமெல்லாம் சற்றே திரும்பிப் பார்க்க இந்தத் தருணம் பொருத்தமானது என்பேன் ! So 2020-ன் இதுவரையிலான நமது இதழ்கள், நமது பதிவுகள் என ஒரு overall கணக்கெடுப்பே இந்த வாரயிறுதியின் பதிவு !
சென்றாண்டின் இதே வேளையினில் உலகமே ஒரு பிரளயப் பயணத்தினை அனுபவிக்கவுள்ளது தெரியாமல் அத்தனை பேருமே ஒரு புது தசாப்தத்தின் வருகையை வரவேற்க வழிகள் தேடிக் கொண்டிருந்தோம் தானே folks? நம் ஆபீஸிலோ ஜனவரியின் சென்னைப் புத்தக விழா ஏற்பாடுகள்; ட்யுராங்கோ ஹார்ட்கவர் இதழ் சார்ந்த பணிகள் ; என ஏதேதோ லயிப்புகளில் பிஸியாக ஓடிக் கொண்டிருந்தன பொழுதுகள் ! டபுள் ஸ்டால் என்பதால் சற்றே கையைக் காலை நீட்டிப் புழங்கலாம் என்ற குஷியும் – விற்பனையும் சற்றே கூடுதலாய் இருக்க வாய்ப்புண்டு என்ற எதிர்பார்ப்பும் கைகோர்த்திட – ஜனவரி எப்போது பிறக்குமென்ற எதிர்பார்ப்பில் காத்துக் கிடந்தோம் !
புலர்ந்தது புது வருஷம்... பிறந்தது ஜனவரியும்... And நமது “முதல் தேதிக்கு புக்ஸ்” என்ற பழக்கத்தின்படி ஆஜரான 5 இதழ்களை நினைவில் வைத்திருப்போருக்கு ஒரு ஆளுயர வெண்டைக்காய் மாலை நம் சார்பில் ! அவற்றை நினைவுக்குக் கொண்டு வர என்னைப் போலவே குட்டிக்கரணங்கள் அடிக்கும் அணியினருக்கு ஒரு லோட்டா வெண்டைக்காய் சூப் ப்ளஸ் இந்த நினைவூட்டல் !
ஜனவரிகளுக்கும், முத்து காமிக்ஸ் ஆண்டுமலர்களுக்கும் ட்யுராங்கோ ஸ்பெஷல் இதழ்களுக்குமிடையே ஒரு செமத்தியான கெமிஸ்ட்ரி உண்டென்று தான் சொல்ல வேண்டும்! And இந்த ஜனவரியின் ”ஆறாது சினம்” ஹார்ட்கவர் இதழுமே அந்த கெமிஸ்ட்ரியில் இன்னொரு அடையாளம் என்பேன்! பிரமாதமான அட்டைப்படம் ; ட்ரேட்மார்க் template கதைகள் & புத்தக விழாவினில் brisk sales என ஜனவரியை சுறுசுறுப்பாய் ஆரம்பித்துத் தந்தது இந்த இதழ்! சிக்கல்களில்லா நேர்கோட்டுக் கதைகளே எனும் போது இவற்றில் பணியாற்றுவது என்றைக்குமே சவால்களாய் இருந்ததில்லை தான் – and was no different this time too! இன்னும் கொஞ்சமே கொஞ்சமாய் கதைகளில் காரமும், களங்களில் ஆழமும் அமையப் பெற்றிருந்தால் ட்யுராங்கோவை இன்னமுமே அற்புதமாய் சிலாகித்திருக்கலாம் என்ற நினைப்பு மட்டும் ஆண்டுக்கொரு தபா எட்டிப் பார்ப்பதுண்டு; and இம்முறையுமே அதனில் மாற்றமில்லை தான்! என் ஆந்தைவிழிகளின் பார்வையில் 7/10.
ஜனவரியில் நான் பெர்சனலாக ரொம்பவே எதிர்பார்த்திருந்த 2 இதழ்கள் MAXI சைஸிலான டெக்ஸின் “இருளின் மைந்தர்கள்” தான்! பெரிய சைஸ்; அழகான layout என்று எனக்கு இந்த MAXI தடத்தில் டெக்ஸை சவாரி செய்ய விடுவது ரொம்பவே பிடித்திருந்தது! And சென்னைப் புத்தக விழா; ஆன்லைன் விற்பனைகள் என எதிர்பார்த்த வெற்றியும் சாத்தியப்பட்டிருந்தது! ஆனால் – ஆனால் கதைக்களத்தைச் சுத்தமாய் மறந்திருந்த எனக்கு – அந்த ‘பிம்பிலிக்கா பிலாபி‘ பாணியிலான ஓட்டத்தை ஜீரணிக்க ரொம்பவே சிரமமாகயிருந்தது என்பதே நிஜம்! சற்றேர 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே கதையை வாய் பிளந்தபடிக்கு ரசித்த ஞாபகம் அவ்வப்போது தலைதூக்கினாலும் – அரை வேக்காட்டில் இறக்கிய சாதத்தைச் சாப்பிட்டது போலவே இப்போது தோன்றியது எனக்கு மட்டும் தானா ? – தெரியலை! ‘திடமாக, தாட்டியமாக, கால்களைத் தரையில் ஊன்றித் திரியும் எதிராளிகளே டெக்ஸுக்கு சுகப்படுவர்! என்ற எண்ணத்தைப் பலப்படுத்திய இதழ்கள் ! 6.5/10.
ஜனவரியின் முழுத்திருப்தி தந்த இதழ்கள் lightweight பார்ட்டிகளே! வண்ணத்தில், கார்ட்டூன் சந்தாக்களின் முதல் இதழாய் களமிறங்கிய மேக் & ஜாக்கின் “கதவைத் தட்டிய கே(ா)டி” சிரிப்பு மேளாவைச் சிறப்பாய்ச் செய்தது என்று பட்டது எனக்கு! ஒரு வரலாற்று வில்லனான அல் கபோனை வாரு வாரென்று வாரி முழுநீள entertainment தந்த இந்த இதழ் என் ரேட்டிங்கில் 8/10.
ஜனவரியின் ஐந்தாவது இதழும் lightweight தான் – பருமனில்! ஆனால் 007 என்றொரு அதிரடி ஆட்டக்காரர் – க்ளாஸிக் கதைகளோடு தந்த மீள்வருகை; அழகான அட்டைப்படத்துடன்; சன்னமான விலையுடன் என்று அமைந்திட – விற்பனையில் பட்டையைக் கிளப்பியது! இது போன்ற ஆல்பங்களில்; மீள்வருகைக் கதைகளில் – பெருசாய் ரிஸ்க் ஏதும் கிடையாதெனும் போது உருப்படியாய்ப் பணி செய்தால் உத்தரவாதமான ஹிட் பலனாகிடும் என்பதை இன்னொரு தபா புரிந்து கொள்ள வாய்ப்பானது! “பட்டாம்பூச்சி படலம்” – பழைய கள்ளாகவேயிருந்தாலும் ‘கிக்‘ ஏற்றத் தவறவில்லை! 7.5/10.
பிப்ரவரி 4 இதழ்களோடு துவங்கியதை இதோ இந்தச் சித்திரம் நினைவூட்ட உதவிடும்!
And ஆண்டின் முதல் black & white டெக்ஸ் சாகஸம் வெளியானதும் இம்மாதமே! And தெறிக்க விட்ட இதழாய் அது அமைந்து போனதில் செம குஷி எனக்கு! “ஒரு துளி துரோகம்” ஒரு திருப்தியான ஞாயிறு மதியத்து விருந்தாய் அமைந்திட்டதில் பாயாசப் பார்ட்டிகளுக்குமே வருத்தங்கள் இருந்திராது என்பேன் ! 9/10 என் பார்வையில்!
பிப்ரவரியின் b&w படலம் தொடர்ந்தது “தனியே... தன்னந்தனியே” கிராபிக் நாவலுடன் ரொம்ப காலம் கழித்தான ஒரு முழுநீள ஹாரர் ஆல்பம்; நிறைய open ends சகிதம் என்பதால் இதற்குப் பேனா பிடித்தது ஒரு விறுவிறுப்பான அனுபவமாக இருந்ததெனில் – தொடர்ந்த உங்களின் அலசல்களும் சோடையே போகவில்லை! கறுப்புக்கிழவி கதைகளின் தரத்தில் இல்லாவிடினும் அந்த கறுப்பு-வெள்ளைச் சித்திரங்களில் தொனித்ததொரு ஓசையில்லா திகில் இந்தக் கதையினை well above average என்று சொல்லச் செய்தது ! 7.5/10 என் மட்டில்!
பிப்ரவரியின் b&w இதழ் # 3 – ஒரு டாலடிக்கும் அட்டைப்படத்துடன் அதிரடியாய் ஆஜரான ஆர்ச்சி அண்ணாத்தேயை showcase செய்திட்டது – ஒரு fleetway சாகஸத்துடன்! புய்ப்பத் தோட்டாக்கள் ஆர்ச்சியின் ஒரு இன்றியமையாத அங்கமே என்பது தெரிந்திருந்தாலுமே – இந்தவாட்டி ஒரு புய்ப்ப எஸ்டேட்டே கண்முன்னே விரிந்திட மடக் மடக் என எச்சிலை விழுங்கினேன்! ஜாம்பவான்களோ மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால் ஜிலோவென்று அடுத்த இதழ் பக்கமாய்ப் பார்வைகளைத் திருப்பிடலாமா ?
பிப்ரவரியில் வண்ணத்தில் வெளியான ஒரே இதழ் ஜம்போ சீஸன்-2ன் “அந்தியின் ஒரு அத்தியாயம்”! ஒரு கிழ மார்ஷலின் கௌபாய் ஒன்ஷாட் – ஒரு மெலிதான சோகத்துடன் என்ற template நிச்சயமாய் நம்மை லயிக்கச் செய்யுமென்ற எதிர்பார்ப்பு இந்தக் கதையை ‘டிக்‘ அடித்த போதே இருந்திருந்தது என்னுள்! And துளியும் பிசகி்ன்றி இந்த ஆல்பம் எனது / உங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது பிப்ரவரியின் சந்தோஷ ஹைலைட்! கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கூடியிருந்தால் நெடுநாள் நினைவில் நிற்கவல்ல இதழயாகியிருக்குமென்பேன்! எனது ரேட்டிங்: 7.5/10.
மார்ச் மாதமோ கலரில் 3 ; b&w-ல் 1 என்று உல்டாவான மாதம் !
And ஆகஷன் சந்தா A-வின் சார்பிலான “பிழையில்லா மழலை” (டெமக்லீஸ் டீம்) பிரமாதமானதொரு த்ரில்லரை – நவீன உலகின் பின்னணியில் சொல்லவிருந்த பாணி நமக்கெல்லாம் ‘நச்‘சென்று பிடித்திருந்தது! செம crisp கதைசொல்லல் எனும் போது இதனில் பணி செய்ததும் உற்சாகமான அனுபவமாக அமைந்தது எனக்கு! நான் போடும் மார்க் : 8/10.
மார்ச்சின் கார்ட்டூனே கோட்டாவினில் களமிறங்கிய “ஆர்டின் ஒரு ஆச்சர்யக்குறி” அத்தனை பிரமாதமான ஆக்கமாய் திருப்தியளிக்கவில்லை என்பதே எனது அபிப்பிராயம்! சிக் பில் தொடரின் அந்த க்ளாஸிக் கதாசிரியர்களின் கைவண்ணத்திலான கதைகளின் முன்னே பின்நாட்களின் கதைகள் அத்தனை சோபிப்பதில்லை என்பதை மறுக்கா புரிய நேரிட்டது எனக்கு! அதன் பலனாய் 2021க்குத் தேர்வு செய்துள்ள உட்சிட்டிக் கோமாளிகளின் ஆல்பமானது செம க்ளாஸிக் கதையே! ஆர்டின் ஒரு ஆச்சர்யக்குறி... வாங்கும் மார்க்குகள் 6.5/10.
சந்தா D சார்பில் ‘நச்‘சென்ற அட்டைப்படத்தோடு நளினமாய் ஆஜரான நமது இளவரசியை சற்றே ‘ஹிஹிஹி‘ ரேட்டிங்குகளோடு அணுக வேண்டிப் போனது நிஜமாய் நெருடிடும் ஒரு விஷயமே! வேற்றுமொழிக் கதைகளில் எனது தேர்வுகள் சற்றே இப்படியும் – அப்படியுமாய் இருக்கும் போதாவது அதற்கொரு சால்ஜாப்பு சாத்தியமே! ஆனால் இங்கிலீஷில் உள்ள கதைகளின் தேர்வினில் இத்தகைய சாக்குப் போக்குகள் சொல்வது சுகப்படாது என்பது புரிகிறது! “எதிர்காலம் எனதே” – வாய் நிறைய பூந்தியை எதிர்பார்த்து, கணிசமான அல்வாவை வாங்கி வந்த அனுபவம் !
மார்ச்சின் ஒரு மறக்கவியலா ஹைலைட் – ஜம்போ சீஸன் 2-ன் இறுதி இதழான “நில்... கவனி... வேட்டையாடு!” Zaroff என்ற பெயரில் இந்த ஆல்பம் ப்ரெஞ்சில் வெளியான வெகு சீக்கிரமே என் கண்ணில் பட்டிருக்க – அந்தச் சித்திர அதகளத்தினில் மெய்மறந்து, நொடியில் ‘டிக்‘ அடித்திருந்தேன்! And பிசகின்றி இதழின் தயாரிப்புத் தரமும் அமைந்து விட, அமேசான் கானகத்துப் பதற வைக்கும் பின்னணியில் தெறித்த ஆக்ஷன் த்ரில்லர் – கதையின் சுலபத்தன்மையையும் தாண்டி ஒரு அசாத்திய அனுபவத்தை நமக்குத் தந்தது! கதை அந்நாட்களது டூரிங் டாக்கீஸ் படங்களது பாணியில் இருந்தாலுமே அந்த exotic பின்னணி + சித்திர & கலரிங் அற்புதங்கள் இந்த இதழை 8.5/10 வாங்கிடச் செய்கிறது எனது பார்வையில்!
ஏப்ரலுக்குள் அடியெடுத்து வைக்க சகலமும் தயாராகி வந்த நிலையில் திடுதிப்பென ஆட்டத்தின் அத்தனை விதிகளையும் நமக்கு மட்டுமன்றி, தேசத்துக்கே புரட்டிப் போட்டது கொரோனா எனும் கொடும் வரவு! இது ஏதோ பன்றிக் காய்ச்சல் மாதிரி; SARS மாதிரி ஆங்காங்கே பீடித்த கையோடு ஓடிப் போய் விடுமென்ற அரைவேக்காட்டு நம்பிக்கையில் குந்திக் கிடக்க – கொரோனா விஸ்வரூபம் சிறுகச் சிறுக திக்பிரமையடையச் செய்த நாட்களை நம்மில் யாருமே ஆயுசுக்கும் மறக்கவியலாது தான்! முழுக்கடையடைப்பு; திரும்பிய திக்கெல்லாம் நோயின் தடங்கள்; தினப்படி ப்ளாஷ் நியூஸ் ரணகளம் என மார்ச்சின் இறுதியும், ஏப்ரலின் முழுமையும் நகர்ந்தது இன்றைக்கொரு தொலைதூரக் கனவாய்த் தோன்றினாலும் அவை கொணர்ந்துள்ள உயிர்ச்சேதங்கள்; வாழ்வாதாரச் சேதங்கள் வரலாற்று வடுக்களாகிடும் தானே? ஈயோட்டிய அந்நாட்களைச் சற்றே சுவாரஸ்யப்படுத்தியவை நமது பதிவுப் நாட்களும், ஜாலியான அரட்டை மேளாக்களுமே – என்னளவிற்காவது! அது நாள் வரைக்கும் பிசாசு போலப் பணியாற்றி வந்தவனு்ககு அந்த 45+ நாட்களில் லேப்டாப் மட்டுமே ஆத்ம நண்பனாகியிருந்தான்! மறுக்கா எப்போ வாழ்க்கை நார்மலாகிடுமோ? எப்போது விற்பனைகள் நார்மலாகுமோ? என்ற கேள்விக்குறிகளின் பின்னால் மாமூலான நமது பணிகள் எவையுமே முக்கியமாய்த் தென்படவில்லை! இன்றளவிற்கும் தேடிடுகிறேன் – pre lockdown நாட்களின் அந்த அசாத்திய வேகத்தினை! தவிர, இந்த வைரஸின் உபயத்தால் எனக்கும், நமது இதழ்களுக்கும் தட்டிப் போனதொரு வாய்ப்பை எண்ணி சித்தே feelings of India வாகவும் இருந்தது ! அது பற்றி பின்னொரு நாள் சொல்கிறேன் !
மெது மெதுாய் இயல்பு நிலைகள் மறுதுவக்கம் கண்ட மே மாதம் நாம் வண்டியை ஓட்டியது இதோ – இந்த இதழ்களுடன்!
மறுபடியும் ஆபீஸ் திறக்கச் சாத்தியமாகி, புக்ஸ் அனுப்பும் வேளையும் புலர்ந்த போது ஆளாளுக்கு டேஞ்சர் டயபாலிக் பாணிகளில் மாஸ்க் அணிந்து கொண்டு நடமாடும் கூத்துக்களின் மத்தியிலும் – ஐயாவுக்கு வசதியாகவே இருந்தது! முகரையில் இரண்டு கண்கள் மட்டுமே தெரியக் கூடுமெனும் போது நம்மை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாது போக வாய்ப்பே இல்லை தானே? So ஆபீஸ் முழுக்க பூச்சாண்டிகளாய்ச் சேர்ந்து மே மாதத்தின் நடுவாக்கில் அனுப்பிய புக்ஸ் கீழ்க்கண்ட 5 :
ட்ரெண்ட் – தனது அலட்டலில்லா பாணியில், தெளிந்த நீரோடை போலான கதையுடன், சுவையான பட்சணம் தொந்தியைத் தொடு்ம் வேளையில் பரவும் ரம்யத்தைத் தந்திடும் சித்திரங்களுடன் வலம் வந்த “கனவே... கலையாதே!” ஒரு ரிஸ்க் இல்லாத ஜாக்கி ஜான் டப்பிங் படம் மாதிரி என்பேன்! யாருக்கும் கையைக் கடிக்காது; யாருக்கும் போர் அடிக்கவும் செய்யாது – எனும் போது ட்ரெண்ட் எப்போதுமே எனக்கு ஆத்ம தோஸ்தே! So கொஞ்சம் பாரபட்சமாகத் தெரிந்தாலும் 8/10 போட்டு வைக்கிறேன் .
‘தல‘ ஒரு அலட்டலில்லா அவதாரிலுமே அசத்திடும் ஆற்றலுடையவர் என்பதை pleasant ஆனதொரு அட்டைப்படத்துடனான “வானவில்லுக்கு நிறமேது?” நிரூபித்தது என்பேன்! As stories go – ஆரம்பம் சூப்பர்; ஆனால் finishing மிதமே! ஆனாலும் ஆனை சும்மாக்காச்சும் குனிந்து நிமிர்ந்தால் கூட குதிரைகளை விட உசரம் தானே? அந்த ஸ்பஷ்டமான சித்திரங்களும் ஒரு added plus என்பதால் எனது ரேட்டிங் 7.5/10.
இத்தாலிய முகமூடிக்காரர் பெரிய சைஸில், கலர்புல்லான அட்டைப்படத்தோடு “அலைகடலில் அதகளம்” செய்ய முனைந்தது அந்த மாதத்தின் ஒரு குட்டியான ஹைலைட்! அநேகமாய் உலகத்தில் டயபாலிக் சார் இந்தப் பெரிய சைஸில் வெளியானது இதுவே முதல் முறை என்பதே எனது யூகம்! ஆனால் சைஸிலும், அட்டையிலும் ஸ்கோர் செய்த மனுஷன் கதையினில் தடுமாறியது தான் நெருடலே! ரொம்பவே நேர்கோட்டுக் கதை எனும் போது நிஜங்களின் நிசப்தங்களையெல்லாம் ஏப்பம் விட உங்களிடம் மனுஷன் சுணங்கி நிற்க நேரிட்டதால் 6/10 எனது பார்வையில்!
அம்மாதத்தின் surprise package அந்த க்ளாரா குட்டிப்பாப்பாவுடனான “கண்ணான கண்ணே” கிராபிக் நாவல்! Again ரொம்பவே எளிய; ரொம்பவே லீனியரான கதை சொல்லல்! In fact இதைக் கதை சொல்லல் என்பதை விடவும், வாழ்க்கை மீதான ஒரு பார்வை; சிறுமியின் விழிகள் வாயிலாக என்று எடுத்துக் கொள்ளலாம்! நிச்சயமாய் இதற்கு mixed reactions இருக்குமென்பது இதைத் திட்டமிட்ட கொரோனா தாண்டவ நாட்களுக்கு முன்பே யூகித்திருந்தேன் தான்; but still இதையும் முயற்சித்திடும் ஆர்வம் குறைந்திருக்கவில்லை! So ஆக்ஷன் கதைகளே காமிக்ஸ் வாசிப்புகளின் ஜீவநாடியெனக் கருதும் நம் சிறுவட்டத்தின் பெரும்பான்மையினை இந்த பொம்மை ஸ்டைலிலான பொம்மை புக் ‘ஙே‘ என்று விழிக்கச் செய்ததில் எனக்கு வியப்பே இருந்திருக்கவில்லை! சிராபிக் நாவல் தனித்தடத்தில் இது வெளியானதால் தர்ம அடிகள் மிகுந்திருக்கவில்லை என்பது எனது யூகம்! And வெகு காலமாய் நண்பர் மகேந்திரன் பரமசிவம் பதிவிட்டிருந்தது போல – நம்மைச் சார்ந்தோருக்கு நமது ஆயுள்களும், ஆரோக்கியங்களும் எத்தனை முக்கியம் என்பதை இந்த பொம்ம புக் அடிக்கோடிட்டு, அதன் நீட்சியாய் அவரவரது ஆரோக்கியங்கள் மீது துளியூண்டு அக்கறைகளாவது கூடியிருப்பின் அதுவே இந்த இதழின் வெற்றி! என் பார்வையில் 8.5/10.
அந்த மாதத்தின் இன்னொரு surprise ஜம்போ சீஸன் 3-ன் துவக்கப் புள்ளியின் உபயத்தில்! “பிரிவோம்... சந்திப்போம்” கூட Zaroff போலவே ஒரிஜினலாய் வெளிவந்த சற்றைக்கெல்லாம் கண்ணில் பட்டதொரு இதழ் என்பதால் – பிரெஞ்சுத் தொகுப்பு களம் கண்ட ஓரிரு மாதங்களிலேயே தமிழிலும் வெளிவந்து விட்டது! என் கவனத்தை ஈர்த்ததே மழைநீர் சிந்தும் அந்த கௌபாயின் profile shot கொண்ட அந்த அட்டைப்படம் தான்! சித்திரங்கள் + கலரிங் வேறொரு லெவலில் இருப்பதைப் பார்க்க முடிந்த போது – கதை பற்றிய அலசல்களுக்கெல்லாம் புகுந்திட ரொம்ப மெனக்கெடவே தோன்றவில்லை! And நடப்பாண்டின் தெறிக்க விட்ட ஹிட் இதழ்களுக்குள் இந்த ஆல்பமும் நிச்சயம் உருப்படியானதொரு இடம்பிடிக்குமென்ற நம்பிக்கையை உங்களின் சிலாகிப்புகள் ஊர்ஜிதம் செய்தன! ஒவ்வொரு மனிதனுள்ளும் உள்ள grey shadows களை வெளிச்சம் போட்டுக் காட்டிய “பிரிவோம் சந்திப்போம்“ gets 9/10 in my books!
அப்பாலிக்கா வந்த மாதத்தின் கூட்டணி இருந்தது இவ்விதமாய்!
எப்போதுமே ஒருவித இருண்ட பின்புலங்கள் கதை சொல்லலுக்கு உதவிடும் என்பதும்; வாசிப்புகளில் ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்தும் என்பதும் எனது அபிப்பிராயங்கள்! இரண்டையுமே “சரி தான் என்ற ரீதியில் ஆதரித்தவர் நடப்பாண்டின் அறிமுக நாயகரான SODA ! ஒண்டிக்கட்டை; கையில் 2 விரல்கள் கிடையாது; குற்றங்களுக்குப் பஞ்சமிரா நியூயார்க்கில் போலீஸ் பணி; ஆனால் வீட்டிலோ பாஸ்டராக வேஷம் என்று பலவித layer களுடன் ஆஜரான இந்தப் புதியவரின் “திசை மாறிய தேவதை” செம ஹிட்! விற்பனையிலுமே ஒரு ‘பேஷ்‘ போட வைத்த இந்த மனுஷன் தொடரவுள்ள புது அட்டவணையினில் ஆளுக்கு முந்தி இடம் பிடித்ததே இவரது வெற்றிக்கு ஒரு நிரூபணம்! பணியாற்றவும் இது போன்ற ஆல்பங்கள் சுவாரஸ்யமாய் அமைவதால் my rating would be 8/10.
சிங்கிள் ஆல்பமாய் வெளியான ”கைதியாய் டெக்ஸ்” என்னைச் சற்றே நெளியச் செய்த இதழே! “ப்ராடியெஸ்” என்ற டெரர் வில்லன் பில்டப்களோடு சரி; செயலில் கந்துவட்டி கோவிந்தனை விடவும் சுமாரான பார்ட்டி தான் என்பதைப் “பச்சோந்திப் பகைவன்” கோடிட்டுக் காட்டியதெனில் “கைதியாய் அதிகாரி” மண்டையில் தட்டிப் புரியச் செய்தது! Average stuff – 6/10.
கார்ட்டூன் பட்டியலில் தெறிக்க விட்ட இரண்டாவது இதழ் – ப்ளுகோட் பட்டாளத்தின் “போர்முனையில் ஒரு பாலகன்”! உருப்படியான கதை; அதனை நகைச்சுவை + பகடி கலந்து கச்சிதமாய்ச் சொன்ன விதம் என்று கணிசமான plus points இந்த வண்ண ஆல்பத்தினில்! துளித் தயக்கமுமின்றி 9/10 தருவேன் நான்!
And நான்காவது இதழாய் வெளியான ஜேம்ஸ் பாண்ட் 007ன் “விண்ணில் ஒரு வேதாளம்” மறுபடியும் அந்தப் பெரிய சைஸ்; vintage பாணி அட்டைப்படம்; க்ளாசிக் கதை என்று ஆஜராகியிருந்தது! நிஜத்தைச் சொல்வதானால் ரொம்ப காலம் பூட்டிக் கிடந்த மச்சி அறையைத் திறந்தது போல் பகீரென பழமையின் நெடி தூக்கலோ தூக்கல்! சமகாலத்து ஜேம்ஸ் பாண்ட் 2.0 அவதாரில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, இந்த நெற்றியில் சுருள்முடி 007 பரணின் பண்ட பாத்திரங்களையெல்லாம் இறக்கிப் போட்டு புளி சாதம் செய்ய முனையும் பீலிங்கு மேலோங்கியது! 6/10!
மறு மாதம் :
நமது லயனின் ஆண்டுமலர் மாதமாகவும் அமைய நேரிட்டதால் லக்கி லூக்கின் ஆட்டகளம் பிரமாதமாய்த் தயாராகக் காத்திருந்தது! And ஒரு சூப்பர் ஆல்பம் + ஒரு not bad ரக ஆல்பத்தோடு வந்த “லக்கி’s லயன் ஆண்டுமலர்” நடப்பாண்டின் செம decent விற்பனை கண்ட இதழ்களுள் ஒன்று! ஹார்ட்கவர் என்றாலே வாங்கும் போது value for money என்ற எண்ணம் தலைதூக்குமோ – என்னவோ தெியலை; ஆனால் சொதப்பிக் கிடந்த மார்கெட்டில் கொஞ்சமாய் விறுவிறுப்பை விதைக்க உதவினார் நமது ஒல்லியார்! 8/10 overall I’d say!
அதே மாதம் பரபரவென டைனமைட்டின் திரியைப் போல பாய்ந்தோடி உற்சாகமூட்டிய இதழ் இளம் டெக்ஸின் “எதிரிகள் ஓராயிரம்”! 4 பாகங்களின் தொகுப்பு; மௌரோ போசெலியின் அழகான கதை நகர்த்தல் + crisp ஆன சித்திரங்கள் என்று இங்கே ஏகமாய் நிறைகள் நிரம்பி ஓடியதால் – வெற்று அண்டாவைச் சுரண்டவே சிலருக்குச் சாத்தியமானது! A thumping 8.5/10!
அப்புறமாய் வந்த b&w இதழில் நமது பால்ய நாயகர்களான CID லாரன்ஸ் & டேவிட் ”மீண்டும் கிங் கோப்ரா”வை வேட்டையாட முனைந்தனர் சந்தா D இதழில்! இந்த vintage சாகஸங்கள் இன்றைய நமது அகவைகளோடு அதிகம் பொருந்திப் போவதில்லை என்பதால் – “அன்றைக்கு ரசிக்க முடிந்தது; இன்னிக்குத் தடுமாறுது” என்றே தீர்மானம் கண்டது! அவை உருவாக்கப்பட்டது வேறொரு காலகட்டத்தில்; வேறொரு வயதினரை மனதில் கொண்டே எனும் போது இங்கே படைப்பின் மீதோ; படைப்பாளிகளின் மீதோ பிழையில்லை என்பேன்! And on the same coin – வாசகர்கள் மீதுமே பிழை நஹி; அந்த target audience-ன் வயதுகளில் நாமில்லை என்பதே நிலவரம்! Again ஜாம்பவான்களுக்கும்; நம்மை மேலேற்றி விட்ட ஏணிகளுக்கும் மார்க் போடல் அபச்சாரம் என்பதால் I’ll pass this by!
ஆக ஆண்டின் 6 set இதழ்கள் மீதான அடியேனின் unbiased பார்வை இது! தொடரும் பதிவில் மீத sets பற்றிப் பார்க்கலாம் ! இடைப்பட்ட இந்த நாட்களில், உங்களின் ஆதர்ஷ இதழ்கள் பற்றி; கொரோனா லாக்டௌன் நாட்களின் நினைவலைகளைப் பற்றிப் பகிர்ந்திடலாமே folks? பொழுது ஜாலியாய் நகன்றது போலிருக்குமல்லவா ? தவிர, சில கேள்விகள் உங்களுக்கு :
1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? ஓ.கே. தானா ?
2. லக்கி லூக் நமது கார்ட்டூன்கள் undisputed king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ?
3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?
ஒரு பெரும் கத்தையாய் ARS MAGNA-வின் 3 பாகங்களும், “பிரளயம்” கிராபிக் நாவலின் 3 பாகங்களும் மொழிபெயர்ப்பிற்கெனக் காத்துள்ளதால் இப்போதைக்கு I am நடையைக் கட்டறேன்! இந்த 2 மெகா இதழ்களின் பணிகளைப் பூர்த்தி செய்து விட்டால் அப்பாலிக்கா 2021ன் சற்றே சுலபக் களங்களே காத்திருக்கும்! So ஜெய் பாகுபலி...! Bye all... See you around... முன்கூட்டிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!
முதலில்.
ReplyDeleteGood👍
ReplyDelete3
ReplyDeleteமுதன் முதலாக மூன்றாவது இடம்
ReplyDelete4
ReplyDeleteஇனிய காலை வணக்கம் நண்பர்களே..10 க்குள்..
ReplyDeleteவந்தாச்சுங்கோ
ReplyDeleteஉள்ளேன் ஐயா.
ReplyDelete1. இப்போதைக்கு இந்தக் கேள்விக்கு விடை இல்லை.
ReplyDelete2. வுட்சிடி கோமாளிகள். எனக்கு பிடித்த கார்ட்டூன் வரிசைகள்: பென்னி, க்ளிப்டன், மதில்லா மந்திரி, ப்ளூ கோட்ஸ், ரின்டின்கேன்.
3. கண்ணான கண்ணே
ஞாயிறு காலை வணக்கம் சார் & நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼
ReplyDelete.
Hi..
ReplyDeleteWhat's my number?
ReplyDeleteAllo
ReplyDelete###1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? ஓ.கே. தானா ?
ReplyDelete2. லக்கி லூக் நமது கார்ட்டூன்கள் undisputed king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ?
3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?####
1)வேறு புது கதைகள் முயற்ச்சிக்கலாம்
2)சிக் பில் & கோ
3)நில் கவனி வேட்டையாடு
1. சற்றே புராதன நெடியடித்தாலும் ஈர்க்கத்தான் செய்கிறார் ஜேம்ஸ்பாண்ட்.
ReplyDelete2. புளூகோட் பட்டாளம்தான் இரண்டாம் இடத்தில். அடுத்து வுட்சிடி கோமாளிகள், ஹெர்லாக் ஷோம்ஸ்,மதியில்லா மந்திரி, லியானர்டோ, ஊதாப் பொடியர்கள், ...
1.கிளாசிக் ஜேம்ஸ்பாண்ட் - 50/50 வந்தாலும் OK. வராவிட்டாலும் வருத்தம் இல்லை.
ReplyDelete2. After Lucky - சிக்பில் & கோ
3. Top 1 - நில் கவனி வேட்டையாடு
க்ளாஸிக் கதைகளில் திருப்தியாக இருப்பதுஜேம்ஸும் இளவரசியும் மட்டுமே. ஸோ தெரியாத பேய்க்கு தெரிந்த பிசாசே மேல்என்ற வகையில் ஜேம்ஸ் டபுள் ஓ. கேகார்ட்டூன்களில் லக்கிக்கு அடுத்த இடம்உட்சிடிகேங்க் இல்ல இல்ல மேக்அண்ட் ஜாக் இல்ல இல்லப்ளூ கோட் பட்டாளமே இல்லஇல்ல. தப்பு கர்னல் கிளிப்டன் ஐய்யய்யோ முடியலியே பேசாம வாக்கெடுப்பு நடத்திடலாம் சார் 3.டெமக்லீஸ். கரூர்ராஜ சேகரன்.
ReplyDelete3. பிரிவோம் சந்திப்போம்!
ReplyDeleteஅப்புறம் கார்ட்டூன்களில் போர்முனையில் ஒரு பாலகன்! கொரோனா லாக்-டவுனுக்குப் பின்னர் முகத்தில் புன்னகையுடன் படிக்கச்செய்த இதழ்!
மீண்டும் கிங் கோப்ராவிற்கு மார்க் போடாத உங்களது முடிவை வரவேற்கிறேன் எடி சார். ஹீ ஹீ... அந்த இதழை சுலபத்தில் மறக்கமுடியாது ... ஜிலோவ்,அய்யோ,அம்மா என்று பல பிராண அவஸ்தைகளை ஏற்படுத்தியது 🤣😁
ReplyDelete1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? ஓ.கே. தானா ?
ReplyDeleteOK SIR .. CONSIDERING ARCHIE , LAWRENCE-DAVID , SPIDER ..
2. லக்கி லூக் நமது கார்ட்டூன்கள் undisputed king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ?
கிட் ஆர்டின் - டாக் புல் ..
3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?
1.பிரிவோம் சிந்திப்போம் .. மிகவும் எதார்த்தமான கதை .. ஹீரோ வில்லன் என்று யாரும் இல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ப REACT செய்யும் CHARACTERS பலம் ..
2. YOUNG TEX .. சரவெடி .. BEST TEX THIS YEAR ..
3.LUCKY'S பொன் தேடிய பயணம் .. CANT CHOOSE ONLY ONE SIR .. மூன்றுமே BEST FOR ME THIS YEAR ..
அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ReplyDelete1)இப்போதும் சீன்கானரியின் you only live twice ம் ,ரோஜர்மூரின் for your ice only ம் பார்த்தால் ரசிக்க வைக்கின்றன .எனவே க்ளாஸிக் ஜேம்ஸ்பாண்ட் ரசிக்கவே செய்கிறார்.
2)ப்ளூகோட் ,மேக் & ஜாக்,உட்சிட்டி பட்டாளம்
எடி சார்.லோன் ரேஞ்சர் நேற்று தான் படித்தேன். புத்தகத்தில் பத்து பக்கங்களுக்கு மேல் கசங்கி உள்ளன.இது பிரின்டிங் தவறா அல்லது பைண்டிங் தவறா. கதையோடு ஒன்றிய முடியாமல் போகிறது.
ReplyDelete+1111
Delete1. க்ளாஸிக் பான்ட் தொடரலாம்
ReplyDelete2. சமிபத்தைய சாகசத்தை வைத்து பார்க்கும் போது க்ளிப்டன்
3. நில் கவனி வேட்டையாடும் ...ஓரு கொடுரனை நாயகனாக இருத்தி...ஓரு கட்டத்தில் அவன் ஜெயிக்க வேண்டுமே என்று எதிர்பார்ப்பை எகிற வைத்த இதழ். வறண்ட பாலை..ஹைடெக் நகரங்களை திகட்ட திகட்ட பார்த்தோர்க்கு முதல் முறையாக காடுகளின் குளிர்ச்சியை ரசிக்க வைத்த இதழ்.
1. ஜேம்ஸ் பாண்ட் வேண்டும் ஆசிரியரே கோட் சூட் ஸ்டைலிஷ் ஹீரோவை ரசித்திட கண்டிப்பாக அவகாசம் தேவை இன்னும் வாய்ப்புகள் தந்துவிட்டு அப்புறம் கருத்து கணிப்பை பார்ப்போம்
ReplyDelete2. டாக்புல் & ஆர்ட்டின் இவர்களின் சமிபத்து கதைகள் சற்று சுமார் என்றாலும் சிரிப்புக்கு உத்திரவாதமான ஜோடி சார்
3.ஆறாது சினம் (பட்டாம்பூச்சி படலம்)
1. க்ளாசிக் பாண்ட் வேண்டும்
ReplyDelete2. லக்கி லூக், ப்ளூகோட், கெர்லாக் ஷோம்ஸ்
3. எதிரிகள் ஓராயிரம்
1. 007 - ஓகே ஓகே
ReplyDelete2. வுட் சிடி யில் அட்ராசிடி பண்ணும் Dog புல் & Kit(d) ஆர்டின் தான்
3. கண்ணான கண்னே - இன்னும் சில பல புத்தகங்கள் எகிறி அடித்தாலும், நாம் தொடாத களம், மனதை கனக்கச்செய்யும் கதை என இதுவே என் லிஸ்ட்டில் முதலிடம்
Happy Sunday
ReplyDelete1. எப்போதுமே பாண்ட் ரசிகன் என்பதால் எப்போதுமே பாண்ட் பிடிக்கும் அது கிளாசிக் பாண்ட் ஆக இருந்தாலும் சரி பாண்ட் 2.0 ஆக இருந்தாலும் சரி. Bond kku ஜேஜே
ReplyDelete2. எப்போதுமே lucky kku அடுத்த இடம் சிக் பில் அண்ட் கோ விற்க்கு தான். ஆனால் இப்போதைய நிலையில் மேக் அண்ட் ஜாக் தான் எனது சாய்ஸ்.
Delete3. கண்ணான கண்ணே தான் பெஸ்ட் ஆஃப் தி இயர்.
///1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? ஓ.கே. தானா ? ///
ReplyDeleteஓகே தான் சார்!
///2. லக்கி லூக் நமது கார்ட்டூன்கள் undisputed king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ?///
டாக்புல் & கிட்ஆர்டின் & கிட்ஆர்டின் கண்ணன்
///3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?///
கண்ணான கண்ணே!
குருநாயரே.....
Delete//king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ?///
Deleteடாக்புல் & கிட்ஆர்டின் & கிட்ஆர்டின் கண்ணன்//
:-)))
1.OK to classic Jamesbond,
ReplyDelete2.Herlock Shomes; Blue coats
3.Lucky Luke 'Pon thediya payanam'
Thank you sir.
//நில் கவனி வேட்டையாடு ...ஓரு கொடுரனை நாயகனாக இருத்தி...ஓரு கட்டத்தில் அவன் ஜெயிக்க வேண்டுமே என்று எதிர்பார்ப்பை எகிற வைத்த இதழ். வறண்ட பாலை..ஹைடெக் நகரங்களை திகட்ட திகட்ட பார்த்தோர்க்கு முதல் முறையாக காடுகளின் குளிர்ச்சியை ரசிக்க வைத்த இதழ்.//
ReplyDelete+1
வணக்கம் நண்பர்களே...
ReplyDelete1. முடியல
ReplyDelete2. இந்த வருஷம்னா- க்ளிப்டன்
எப்பவுமேன்னா- சிக்பில் & கோ
3. போர்முனையில் ஒரு பாலகன்..
பாண்ட் ராணி காமிக்ஸ்ல கூட வாசித்து இல்ல...
ReplyDeleteஇப்ப நம்ம இதழ்களை வாசிச்சாலும் கூட மனசில ஒட்டல..
பாண்ட் 2.0 வருகை,எத்தனையோ புதுயுக சம்பவங்கள் காரணமா இருக்கலாம்..
////தவிர, இந்த வைரஸின் உபயத்தால் எனக்கும், நமது இதழ்களுக்கும் தட்டிப் போனதொரு வாய்ப்பை எண்ணி சித்தே feelings of India வாகவும் இருந்தது ! அது பற்றி பின்னொரு நாள் சொல்கிறேன் ! ////
ReplyDeleteஅடுத்த பதிவிலேயே சொன்னாலும் ஆவலுடன் கேட்க நாங்க ரெடி சார்!
ப்ளஸ்ஸோ ப்ளஸ்...
Deleteஇப்போவே சொன்னாலும் கேட்க நான் ரெடி தான்.
DeleteYes. Please!!
Deleteகொரானா காலக் கும்மாளங்கள் என்று சிறப்பிதலே வெளியிடலாம் போலகொட்டமடித்தனர் நம் நண்பர்கள்பதிவுகளில்.திரு.செ.அ.அவர்கள் சங்க இலக்கியங்களிலிருந்து கபஞ்சலப் பறவையைக் கொண்டுவந்து பறக்கவிட சகோதரர் கிட் ஆர்டின் கண்ணர் கபஞ்சலஆம்லேட் கபஞ்சல கலக்கி கபஞ்சல 65 எனபுதுப்புது சைடு டிஷ்களை அறிமுகப்படுத்தினார். சகோதரி அனு வீட்டு உப்புமாவும் ரசாயண ஆயுதங்கள்அளவு புகழ் பெற்றது. ஆனால் கடமையே கண்ணாக சாரி காமிக்ஸே கண்ணாக டெக்ஸ் விஜயராகவன் சார்நமது லயன் பற்றியபுள்ளிவிபரங்களை அடிக்கடி தொகுத்தளிக்ககொரானாவின் தாண்டவத்தைமறந்துகாமிக்ஸ் கடலில்மூழ்கினோம். செயலர்விஜய் மற்றும் அறிவரசு ரவி.,செந்தில் சத்யா , g. P. ,இரும்புக் கவிஞர் ஸ்டீல்ஆகியோரும் தமது பதிவுகள் மூலம்நமது தளத்தைசுவாரஸ்யமாக்கிக் கொண்டேஇருந்தனர். ஆசிரியர் 3 நாட்களுக்கு ஒருமுறையே பதிவிட தினம் ஒருபதிவுவராதாஎன்றுஎனஅனைவரும்எதிர்பார்க்கநண்பர்கள்எப்படிஇருக்கிறார்கள் என்று பிறநண்பர்களிடம்விசாரித்து விசாரித்து நண்பர்உதவிசெய்யகொரானா காலம் நம்மைப் பொருத்தவரை இனிதாகவே கழிந்தது. தலைவர்பரபரணிதரண் மற்றும்குமார் சேலம்தங்கள் விமர்சனங்கள்மூலம்rஒவ்வொருபுத்தகங்களின் சுவாரஸ்யத்தையும் அதிகப்படுத்தினர். கரூர் ராஜ சேகரன்
ReplyDelete+1
Deleteநீங்களும் உங்கள் பங்குக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்தீர்கள்
அட பார்றா,நான் கூட லிஸ்டில் இருக்கேனா...ஹி,ஹி,ஹி.....
Deleteஉங்களுடைய உற்சாகமான விமர்சனங்களும் கருத்துகளும் முக்கிய பங்காற்றின ராஜைசேகர் சார்!
Deleteதளத்தையும் நண்பர்களையும் நல்லா பாலோ பண்ணி உள்ளீர்கள் ராஜசேகரன் ஜி்... அருமை.
Deleteநீங்களும் நல்லதொரு விமர்சகராக பரிணமித்து உள்ளீர்கள் இந்த நாட்களில்...சிறப்பு! தொடருங்கள்.
அருமை நண்பரே...
Deleteஎன்னையும் நினைவில் கொண்டமைக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...:-)
நண்பர் இராஜசேகர் போன்ற வெள்ளந்தியான மனம் கொண்டவர்கள் அரிது...
Deleteநண்பர்கள் சொன்னது போல் நல்ல பாலோ அப்...
அழகான பதிவு ராஜசேகர் சார். நன்றி
Deleteஅருமை ராஜசேகரன் அவர்களே.
Delete((அந்நாட்களைச் சற்றே சுவாரஸ்யப்படுத்தியவை நமது பதிவுப் நாட்களும், ஜாலியான அரட்டை மேளாக்களுமே – என்னளவிற்காவது!))
ReplyDeleteஉங்களுக்கு மட்டுமில்லை ஆசிரியரே முக்கியமாக எங்களுக்கும் என சேர்த்துக்கொள்ளுங்கள் அவ்வளவு கொடிய நாட்களிலும் உங்களின் பங்களிப்பால் மட்டுமே சற்று மனதை லேசாக வைத்திருக்க முடிந்தது அதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும் அவ்வளவு சிரமங்களுக்கிடையிலும் புத்தகங்கள் அனுப்பியதற்க்கு இன்னொரு கணக்கில்லா நன்றிகளையும் உங்கள் அக்கவுண்ட் ல் சேர்த்துக்கொளள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தகிக்கும் பூமி:
ReplyDeleteஅதிரிபுதிரி ஆக்ஷன் இல்லை என்றாலும் வாசிக்க ஏற்ற வகையிலான கதையமைப்பு...
டோண்டா ஓட்டலில் இருந்து நள்ளிரவில் வெளியேறி உலாவும் நள்ளிரவு பொழுதில் நடக்கும் சண்டைக் காட்சியும்,பின்னூடான நாட்டுப்புறக் கதையின் கவிதை பாணியிலான வசனங்களின் கோர்வையும், மாறுபட்ட கோணத்தில் நம் வாசிப்பின் கவனத்தை ஈர்க்கிறது...
சில பேனல்கள் அசத்தல் இரகத்தில் அமைந்திருந்தன,
32 ஆம் பக்கத்தில் அந்தக் கட்டிட அமைப்பு...
65 ஆம் பக்கத்தில் குதிரையில் தடதடக்கும் காட்சி...
91 ஆம் பக்கத்தில் கதிரவனின் அந்திமக் காட்சி...
102 ஆம் பக்கத்தில் லோன் டேஞ்சர் கெத்தாய் நிற்பது...
நேர்த்தியான வசனங்கள் கூடுதல் பலம்,
"கழுத்தைச் சுற்றிய சுருக்குக் கயிற்றின் முத்தத்தை உணர்ந்திருக்கிறேன் நான் !"
"என் நண்பனோ பாலைவனத்தின் நடுவே குற்றுயிராய்க் கிடந்த வேளையில் பரலோகத்தில் ஒரு கால் பதித்திருந்தான்".
"நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அவரவரது நிலைப்பாடுகளில் உறுதியாய் நிற்பதில் தவறில்லை என்பது மட்டுமே எனது அபிப்ராயம் சார் !"
"முதல் மிடறு விஸ்கியை ருசிக்கும் வரை ! அன்று முதல் அந்த நாசமாய்ப் போன திரவத்தை ருசிப்பதற்காகவே பிறப்பெடுத்தவன் போல் உணர்ந்தேன் !"
"வேடிக்கைகளுக்கு இந்தப் பூமியில் பஞ்சமே இருந்தில்லை ! மற்ற காட்டுமிராண்டிகளை விடவும் ரெளத்திரங்களில் தாங்கள் ஒருபடி குறைந்தவர்களே என்ற வெள்ளையர்களின் பிரமைகளும் இந்த வேடிக்கைச் சமாசாரப் பட்டியலில் இடம்பிடித்திடும் !"
"ஊர் ஆயிரம் பேசும் ! அதில் நிஜமும் இருக்கலாம் தான் ! அதன்படி உன்னைப் போன்ற அரக்கன்களைக் கொல்ல எனக்கு மனது வராமலே போகவும் செய்யலாம் தான் ! அல்லது இந்த நல்லபிள்ளை அவதார் எனக்கு சலித்தும் போயிருக்கலாம்தான் ! அப்பாவிகளைச் சுரண்டித் தின்னும் கொழுத்த பெருச்சாளிகள் மீது கொலைவெறி எழவும் செய்யலாம்தான் ! இல்லையா ?"
"இரவு முழுக்கப் பாலைவனத்திலேயே பதுங்கிக் கிடந்தேன் !" "ஒரு குழந்தையைப் போலச் சுருண்டு நடுங்கியபடி."
"நடக்க ஜீவன் இருக்கும்போதே நடையைக் கட்டு பையா !"
"பூசாரி நீ வரம் தர மனசு வைத்தாலும் சட்டம் எனும் சாமி மனசு வைக்க வழியில்லையே ப்ரதர் ?!"
"நான் விழிப்பது பிசாசைக் கண்டல்ல... மனித மனங்களின் பரிமாணங்களை எண்ணியே !!!"
அட்டகாசமான ஓவியங்கள்,அருமையான வர்ணச் சேர்க்கைகள்...
எதார்த்தமான கெளபாய் கேரக்டர் என்றாலே கம்பி மேல் நடக்கும் கதைதான்....
கூட்டு முயற்சியின் பலனாக தி லோன் ரேஞ்சர் மனதை கவர்கிறார்.....
எமது மதிப்பெண்கள்-09/10.
சூப்பர் நல்ல விமர்சனம் ரவி்.
Deleteஇதழின் தயாரிப்பு தரம் அசத்தல்.
இருப்பினும் ஏதோ ஒன்று குறைவாகவே தோணுது.
யோசித்து விட்டு சொல்கிறேன்.
அருமையான விமர்சனம்..
Delete///டோண்டா ஓட்டலில் இருந்து நள்ளிரவில் வெளியேறி உலாவும் நள்ளிரவு பொழுதில் நடக்கும் சண்டைக் காட்சியும்,பின்னூடான நாட்டுப்புறக் கதையின் கவிதை பாணியிலான வசனங்களின் கோர்வையும், மாறுபட்ட கோணத்தில் நம் வாசிப்பின் கவனத்தை ஈர்க்கிறது...///
Delete+1
தங்களுடைய விமர்சனமும் நன்றாகவே இருந்தது தலைவரே,காலையில்தான் படித்தேன்...
Delete// யோசித்து விட்டு சொல்கிறேன். //
Deleteஓகே டெ.வி.....
தம்பி குமார் பாணியில் சொல்றதுன்னா ஓகே டெ.வி அண்ணா...!!!
ஹா,ஹா,ஹா.....
///டெ.வி அண்ணா...!!!///---எதே???
Deleteஎல்லாம் ஒரு ஆறேழு மாச வயசு கேப்புதான் இருக்குமாக்கும்....!!!
"ஷரீப்பு அண்ணா" னு சொன்னாலும் ஒரு ஞாயம் உண்டு!
ரவி அண்ணா உங்கள் ஸ்டைல் விமர்சனம் அருமை. நீங்கள் நினைவு கூர்ந்து எழுதும் போது அந்த வசனங்கள் அருமையாக இருக்கிறது. மறுபடி ஒரு முறை புத்தகத்தை படிக்க தூண்டுகிறது. அழகு
Delete// "ஷரீப்பு அண்ணா" னு சொன்னாலும் ஒரு ஞாயம் உண்டு! //
Deleteஅவரை உயரத்தையும்,உருவ அமைப்பையும் வைத்து பார்க்கும்போது அண்ணான்னு சொல்றது தப்பில்லைதான்...
அதுக்காக உங்களை தம்பின்னு கூப்பிட முடியாதுங்கோ...!!!
நன்றி குமார்,உண்மையைச் சொன்னால் அந்த வசனங்களும்,சம்பவங்களின் அடிப்படையில் வரும் வார்த்தை கோர்வைகளும் வீரியமானவைகளாக எனக்குத் தோன்றின...
Deleteஅதே போல்,லோன் ரேஞ்சருக்கு இதுபொன்ற மொழி பெயர்ப்பும்,அட்டகாசமான ஓவியங்கள் மற்றும் வர்ணச் சேர்க்கைகளும் இரு பில்லர்கள் என்றால் அதில் மிகையில்லை என்பேன்...!!!
அந்த டோண்டா தங்கும் அறையில் இருந்து வெளியே வரும் காட்சியை திரும்ப எடுத்துப் புரட்டி பாருங்க...!!!
Deleteகிளாஸிக் பாண்ட் வரவேற்கின்றேன்.தொடரவேண்டுகின்றேன்.
ReplyDelete+1
Deleteநரகத்தின் நம்பர் 13:
ReplyDeleteதவறுக்கு தண்டனை,நாம் காணும் கனவை கணினி மூலமாக நடைமுறைப்படுத்துவதே வித்தியாசமான சிந்தனைதான்,
மாக்ஸ் கேரக்டர் வடிவமைப்பு நம் ஆழ்மன எண்ணங்களின் பிரதிபிம்பம் என்றே தோன்றுகிறது...
லாஜிக் மீறல்கள் இருப்பினும்,அட இப்படிக் கூட யோசிக்கக் கூடுமா என்று வியக்க வைத்த களம்.....
நான் இரசிக்கும் களமும் கூட,ஏற்கனவே படித்த கதையாயினும் மீள் வாசிப்பில் சுவராஸ்யமாகவே சென்றது...
எமது மதிப்பெண்கள்-08/10.
///லாஜிக் மீறல்கள் இருப்பினும்,அட இப்படிக் கூட யோசிக்கக் கூடுமா என்று வியக்க வைத்த களம்.....///
Deleteயெஸ்ஸ்ஸ்..!
// லாஜிக் மீறல்கள் இருப்பினும்,அட இப்படிக் கூட யோசிக்கக் கூடுமா என்று வியக்க வைத்த களம்..... //
Delete+1
ஒரு கசையின் கதை:
ReplyDelete"யானைப் பசிக்கு சோளப்பொறியாய் டெக்ஸின் ஒரு குட்டி சாகஸம்".
கசைக்குள் இருக்கும் புதிர் கதையை ஆர்வமாய் நகர்த்த உதவுகிறது...
அரே ஓ சம்போ,யாஹூ,ஓவ்...
வரிசையில் கராம்பா...
வழக்கமாக வில்லர் சாகஸங்களில் கார்ஸன் புலம்பிக் கொண்டிருப்பார்,தல அட வா பெருசு பாத்துக்கலாம்னு கார்ஸனை ஓட்டிக் கொண்டிருப்பார்,ஒரு கசையின் கதையில் அது தலைகீழாக உள்ளது,கார்ஸனுக்கு இணையாக டெக்ஸும் புலம்பிக் கொண்டிருப்பது சற்றே நகைமுரண்...டெக்ஸின் தொடக்க வரிசை கதைக்களம் என்பதால் இதுபோன்று அமைந்து விட்டதோ என்னவோ...
இசித்ரோ கும்பல் டெக்ஸ் & கோ வை தேடி வரும்போது சில குளறுபடிகள் நிகழ்வதாய் எனது வாசிப்பினிடையே தோன்றியது,நண்பர்களின் சில விளக்கங்கள் கொஞ்சம் தெளிவைக் கொடுத்தது... (சம்பவங்களின் பக்க நிகழ்வுகள் -63)
வழக்கமாய் டெக்ஸ் கதைகளில் வசனங்கள் சற்று கூடுதல் பலத்தை அளிக்கும்,அதன் தாக்கம் இதில் மிஸ்ஸிங்...
" சார்வாள்","அம்பி" போன்ற வார்த்தைகள் கொஞ்சம் நெருடலாய் இருப்பது போல் பீலிங்...
கிளைமேக்ஸ் சற்றே ஏமாற்றமான முடிவு,இசித்ரோவின் முடிவு டெக்ஸ் & கோ வின் கையை விட்டு நழுவி விடுகிறது....
ஆஹா,ஓஹோ இரகமில்லை எனினும் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாசித்தால் பொழுதுபோக்கான வாசிப்பிற்கு ஓகேதான்...
எமது மதிப்பெண்கள்-8.5/10.
//கொஞ்சம் தெளிவைக் கொடுத்தது... (சம்பவங்களின் பக்க நிகழ்வுகள் -63)//
Deleteபேனல்கள் இடவரிசை மாறிவிட்டது போலும்..
இல்லை செனா..!
Deleteநல்ல விமர்சனம்..
Deleteவிஜயன் சார், ஒரு முகநூற்பக்கத்தில் "கண்ணான கண்ணே"யின் சில பக்கங்களைப் பார்த்தேன். அதில் அந்தச் சிறுமி "மம்மி" என்று தாயை அழைக்கிறார். ஆனால் தாய்த்தமிழில் "அம்மா" என்று அழைத்திருந்தால், கதையின் உணர்வுகள் வாசகரை மென்மேலும் கட்டிப்போட்டு விடும் என்று நம்புகிறேன். இனி வேறு ஏதாவது கதைகள் இவ்வாறு வந்தால், "அம்மா" என்ற சொல்லைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன் சார்.
ReplyDeleteநல்ல கருத்து வழிமொழிகிறேன் நண்பரே..
Deleteதண்ணிலவன் @ இந்த காலத்து குழந்தைகள் எப்போதும் அம்மா அப்பா என்று அழைக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் சந்தோஷமாக இருந்தால் மம்மி டாடி என அழைப்பதை கேட்கும் போது அவர்களின் சந்தோஷத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் மனது சரியில்லை என்றால் வரும் வார்த்தைகள் அம்மா அப்பாதான்.
Deleteஅப்புறம் தாரை பரணி சொன்ன பிறகு வேறு என்ன வேண்டும். :-)
தலைவர் பரணி + பெங்களூர் பரணி என்ற இரட்டைப் பரணியரின் ஆதரவாக இருக்கட்டுமே என்று தான் கேட்டேன்ல. நன்றில.
Deleteஅனைத்து இதழ்களின் விமர்சனங்களையும் தாங்களே அழகாக விமர்சித்து விட்ட பின் அந்த விமர்சனங்களே எனது எண்ணவோட்டமாகவும் அமைந்து விட்டது சார்...:-)
ReplyDelete///1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? ஓ.கே. தானா ? ///
ReplyDeleteஅந்நாளைய 007 எப்போதும் வாசிக்க ஏற்றவர். இன்னும் கொஞ்சம் தரத்தை உயர்த்தி வழங்கலாம் சார்.
///2. லக்கி லூக் நமது கார்ட்டூன்கள் undisputed king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ?///
உட்சிடி கோமாளிகள்!
///3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?///
யங் டெக்ஸின் "எதிரிகள் ஓராயிரம் "---அசத்தலான ஓவிய பாணி.
007.....ஆஹா ஓஹோ ,சுமார் என இரண்டுக்கும் நடுவில் க்ளாசிக் 007 அமைகிறார் சார்..இளவரசியை போலவே..
ReplyDeleteஆனால் மற்ற சூப்பர் க்ளாசிக் நாயகர்கள் இப்பொழுது மண்டையை சொறிய வைக்கும் பொழுது இவர்கள் இருவரும் இந்த அளவிற்கு கவர்வதே சிறப்பு தான் என் அளவில்...
1. 007 - not ok for me.
ReplyDelete2. ப்ளுகோட் பட்டாளம்.
3. பிரிவோம்...!சந்திப்போம்...!
லக்கி லூக் அடுத்து அல்ல சில சமயங்களில் அவரையே முந்துவது போல தோன்றுவது சிக்பில் அவர்களே...
ReplyDeleteஅடுத்து வருவது ப்ளுகோட் ...
கர்னல் தாத்தா தான் கொஞ்சம் கடுப்பேற்றுவது போல தோன்றினாலும் இந்த முறை கவர்ந்து விட்டார் என்பதே வியப்பாக உள்ளது...:-)
//லக்கி லூக் அடுத்து அல்ல சில சமயங்களில் அவரையே முந்துவது போல தோன்றுவது சிக்பில் அவர்களே//
Deleteகரெக்ட்தான்.!! சில கதைங்க லக்கி லூக்கையே தூக்கி சாப்பிட்டிருக்கு...
கொஞ்சம் கடினமான வினா சார்..
ReplyDeleteஇருந்தாலும் நில் கவனி வேட்டையாடு ...இளம் டெக்ஸ் இருவரும் என் அளவில் சம வாய்ப்பில் முதல் மதிப்பெண்ணை வழங்குகிறேன்...
ஆனால் ஒன்று சார்...
ReplyDeleteஉங்கள் பார்வையில் இதழ்களின் மறு விமர்சனத்தை படித்தவுடன் சில பல இதழ்களை மீண்டும் மறுவாசிப்பு படிக்க ஆவல் மேலிடுகிறது...
ஒரு கசையின் கதை :
ReplyDeleteசின்ன வயதில தாத்தாவிடம் கதைகேட்கும் பழக்கம் எனக்குண்டு.! ராமாயணம், மஹாபாரதம் தொடர்பான கிளைக்கதைகள் நிறைய சொல்வார் எங்கள் தாத்தா.! அவை எதையுமே நான் இதுவரை எழுத்துவடிவில் படித்ததேயில்லை.!
அவற்றில் ஒரு கதையில்..
அனுமன் இலங்கையை தீயிட்டு அழித்தபோது, இராவணன் தன் சபையில் இருந்த (சிவில் இன்ஜினியரை ) கொத்தனாரை அழைத்து இலங்கையை திரும்பவும் கட்டமைக்கச்சொன்னாராம்..அதுவும் மிகவிரைவாக.!
இப்போ எதற்கு இந்த கதை என்று கேட்பீர்கள்.. சொல்கிறேன்.!
(அந்த கொத்தானார் கட்டிடங்களையும் தெருக்களையும் அமைத்த விதத்தை என் தாத்தா சொன்ன விதம் இன்னும் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.)
ஒரு கொட்டுக்கு ஒரு வீடு
ஒரு சொட்டுக்கு ஒரு வீடு ன்னு அதிவேகமாக இலங்கையை அரைநாளில் திரும்ப கட்டமைத்தாராம் அந்த கொத்தனார்.!
அதைப்போல..
டெக்ஸ் வில்லரும்
ஒரு கொட்டுக்கு ஒரு சாகசம்
ஒரு சொட்டுக்கு ஒரு சாகசம் னு கணக்கில்லாம கலக்கிட்டு இருக்காரு.!
கசையின் கதையும் அப்படித்தான் ஊருக்கு போற வழியில் வண்டியை நிறுத்தி டீ சாப்பிடுவது போலொரு சாகசம்.!
கசையும் சின்னது கதையும் சின்னது.! ஆனால் இரண்டுமே வலுவானது.! பழங்கால புதையல் ஒன்றின் வரைபடம், கசையின் கைப்பிடிக்குள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.! அதன் ரகசியம் தெரிந்த கும்பல் கசையின் உரிமையாயாளரை கொன்று அதை கைப்பற்ற எத்தனிக்கும் வேளையில் கார்சனுடன் இணைந்து குறுக்கிடுகிறார் வில்லர்.. பிறகென்ன.. பொறுப்பேற்றுக்கொண்டு, கசையை (புதையல் வரைபடத்தை) அதன் வாரிசிடம் ஒப்படைக்க கிளம்புகிறார்.! இடையில் வரும் இடையூறுகளை எப்படி சமாளித்து நீதியை நிலைநாட்டுகிறார் என்பதே மீதிக்கதை.!
டேக் ஆஃப் ஆவதற்குள் லேண்ட் ஆவதைப்போல் தொன்றினாலும், டெக்ஸ் கதைகளுக்கே உண்டான அனைத்து அம்சங்களையும் அட்சரம்பிசகாமல் தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்த கசையின் கதை.!
கசையின் கதை - சிறுசு ஆனாலும் கடுசு
ரேட்டிங் 8/10
ரிபீட்டாக்கும்....
Deleteஆமப்பா..!
Deleteவழக்கமா நான் ரிப்பீட் போடுறதில்லைதான்..
ஆனா
முகநூல்ல நம்ம குழுவுல இந்த விமர்சனத்தை பார்த்துட்டு, ரொம்ப நாளா காமிக்ஸ் டச் இல்லாம போச்சி.. இதை எப்படி வாங்குறது எப்படி வாங்குறதுன்னு ஒரு நண்பர் கேட்டார்.! அதனால முடிஞ்சவரைக்கும் நிறைய பார்வைகள் படட்டுமே என்ற எண்ணத்தில்...!
இதே காரணத்திற்காகத்தான் உங்க விமர்சனத்தையும், தலீவர், ஈ.வி போன்றோர் விமர்சனத்தையும் முகநூல், வாட்ஸ்அப் எல்லா இடங்களிலும் போடச்சொல்லி வேண்டுகோள் வைத்தேன்.! (ஷெரீப்போட விமர்னங்களை காப்பிரைட் கவலையில்லாம நானே காப்பி பண்ணிடுவேன்..ஹிஹி.)
சரிதான்பா...!!!
Delete///1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? ஓ.கே. தானா ?
ReplyDelete2. லக்கி லூக் நமது கார்ட்டூன்கள் undisputed king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ?
3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?///
1. சைஸ் ஒரு குறையோ எனத் தோன்றுகிறது. மற்றபடி வரட்டும்.. வரட்டும்.!
2.வுட்சிடி ஷெரீப் & டெபுடி ஷெரீப்
3. நில் கவனி வேட்டையாடு.
// சைஸ் ஒரு குறையோ எனத் தோன்றுகிறது மற்றபடி வரட்டும்.. வரட்டும்.! //
Deleteஅதே,அதே...
1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? ஓ.கே. தானா ?
ReplyDeleteதாரளமாக ஓகே தான் சார்...
2. லக்கி லூக் நமது கார்ட்டூன்கள் undisputed king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ?
சிக்பில் & கோ,ப்ளுகோட்...
3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?
ஒன்று மட்டும் எனில் ரொம்ப கஷ்டம் சார்,எனது பார்வையில் மிக ஈர்ப்பாய் அமைந்தவை,
1.நில்,கவனி,வேட்டையாடு.
2.பிரிவோம் சந்திப்போம்,
பொழுதுபோக்கு மற்றும் ஆக்ஷன் கரம் மசாலாவில்,
1.இளம் டெக்ஸ்,
2.ஒரு துளி துரோகம்.
நகைச்சுவையில்,
1.போர் முனையில் ஒரு பாலகன்,
2.லக்கி லூக் ஆண்டு மலர்.
அதிலும் நில் கவனி வேட்டையாடு எல்லாம் சான்ஸே இல்ல சார்,பட்டையக் கிளப்பும் கதைக்களம்...
Delete///நில் கவனி வேட்டையாடு எல்லாம் சான்ஸே இல்ல சார்,பட்டையக் கிளப்பும் கதைக்களம்...//
Delete----யெஸ்ஸூ.. அபாரமான ஓவியங்கள். யெங் டெக்ஸ் இல்லீனா இதான் என் சாய்ஸ்ம்!
கூடுதலாக என் யோசனைக்கு ஒரு பாயிண்ட்டும் எடுத்து கொடுத்து விட்டீர்கள்.!😉
அப்படியா சொல்றிங்க...!!!
Delete84th
ReplyDelete##1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? ஓ.கே. தானா ?
ReplyDelete2. லக்கி லூக் நமது கார்ட்டூன்கள் undisputed king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ?
3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?####
1. ஓ.கே சார்
2. சந்தேகமின்றி நம்ம கவுண்டர் செந்தில் ஜோடி தான்..
3. இதுல 3 இருக்கே..ஆறாது சினம்.. நில் கவனி வேட்டையாடு..எதிரிகள் ஓராயிரம்..
பாபு
கெங்கவல்லி
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteTop book Nil gavani Vattaiyadu - not comparing tex. He is out of comoarision
ReplyDeleteNo interest in James bond classic. Ok for one book per year
After lucky , sirippu sheriff team. I purchase only these cartoon seperate. Rjntin can i like.
டியர் எடி,
ReplyDelete2020 காலத்திற்கும் ஞாபகம் இருக்கும் ஒரு நிகழ்வுதான். நமது காமிக்ஸ்கள் கடினங்களை இலகுவாக்க உதவியது என்று சொன்னால் மிகையாகாது.
2021 கான திட்டமிடலில் ஒரு சந்தேகம் மட்டுமே. வழக்கமாக வருட சந்தா இரு தவணைகளில் வாங்கும் அதே முறை தான்... டிசம்பருக்குள் முதல், மார்ச்சுக்குள் இரண்டாம்.
ஆனால், 2021 ல் சந்தா ஆரம்பிப்பதே ஏப்ரல் எண்ணும்போது, அதே சந்தா தவணைகள் சரிதானா ?! மார்ச் முதல் தவணை, ஜூலை இரண்டாம் தவணை என்று மாற்றி அமைக்க முடிந்தால், முன்பணம் சேர்க்க ஏதுவாக இருக்கும் அல்லவா ?!
பதிவின் கேள்விகளுக்கான என் பதில்கள் :
Delete1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? Double OK
2. லக்கி லூக் அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ? Undoubtedly, டாக்புல் ஆர்டினி
3. 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? சொற்பமாக முழுவதும் படித்து முடித்த கதைகளில் எனது டாப் தேர்வு, பிரிவோம் சந்திப்போம்.
கூடவே கிளாசிக் வெளியீடுகளில் ஒரு வேண்டுகோள், ப்ளீட்வேயில் இருந்து விலகி அதன் போட்டி நிறுவனமாக பல காலம் தொடர்ந்த டிசி தாம்ஸன் இதழ்களின் பிரபல படைப்புகளையும் நீங்கள் களம் இறக்க வேண்டும் என்பதே.
Delete1. என்னை பொறுத்த வரையில், மறு பதிப்பை சுத்தமாக நிறுத்தி, (அது வேறு எந்த காமிக்ஸ் இல் வந்து இருந்தாலும் சரி) இது வரையில் தமிழில் எங்கும் வராத ஜேம்ஸ் பாண்ட், ஆர்ச்சி, ஸ்பைடர், மற்றும் நமக்கு பரிட்சியமில்லாத fleetwayin வேறு கதாநாயகர்கள் அறிமுகப்படுத்தி நாள் நன்றாக இருக்கும்.
ReplyDelete2. Undisputedly Woodcity ஷெரீஃப் and deputy
3. I have not read most of the comics yet, so can't comment as of now.
////திடமாக, தாட்டியமாக, கால்களைத் தரையில் ஊன்றித் திரியும் எதிராளிகளே டெக்ஸுக்கு சுகப்படுவர்! என்ற எண்ணத்தைப் பலப்படுத்திய இதழ்கள் !////----
ReplyDeleteஉண்மைதான் சார். இந்த ஜீபூம்பா பாணி, நெருப்பு உடறது, ஆவி பாணி, மாயமந்திர பூரி பீலா இதெல்லாம் தலைக்கு காததூரம். இப்போதைக்கு மெபிஸ்டோ சேப்டர்க்கு ஒரு புள்ளி வெச்சி இருக்கீங்க நிம்மதி! தலை தன் வழியே நடை போடட்டும்.
////“ஒரு துளி துரோகம்” ஒரு திருப்தியான ஞாயிறு மதியத்து விருந்தாய் அமைந்திட்டதில் பாயாசப் பார்ட்டிகளுக்குமே வருத்தங்கள் இருந்திராது என்பேன் ///----டெபனட்லி.. டெபனட்லி...!!! அண்டாவை ஏற்ற முடியாமல் பார்டிக தவிக்கும் தவிப்பு இருக்கே அது தனி கிக்!
ReplyDelete//1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? ஓ.கே. தானா ?//
ReplyDeleteOK தான். லைட் ரீடிங் என பார்த்தால் கிளாசிக் 007 தான் கெத்து.
//2. லக்கி லூக் நமது கார்ட்டூன்கள் undisputed king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ?//
லக்கிக்கு அடுதத்ததாக என யோசித்தால் டக்கென நகனைவுக்கு வருபவர் நம்ம நாலு கால் ஞானசூன்யம் ரின்டின்கேன்.. வேறு நாயகர் எனில் புளூகோட் பட்டாளம்.. மூன்றாவது மற்றும் இன்னபிற இடங்களுக்கு மேக் அண்ட் ஜேக், கிளிப்டன், வுட்சிட்டி பாய்ஸ்.
//3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?//
Top தேர்வு நிறைய உண்டு, Just 1 please condition தான் இடிக்கிது.
Just 1 -- நில்.. கவனி.. வேட்டையாடு
Just 2 -- எதிரிகள் ஓராயிரம் - இதர டெக்ஸையும் படிக்க தூண்டியது (பேசிக்கலி டைகர் ஃபேணாக்கும்)
Just 3 -- கண்ணான கண்ணே..
நன்றிகள் பல கோடி இந்த கொரோனா அரக்கனை காமிக்ஸ் மூலம் மறக்க வைத்ததற்கு.. நாங்கெல்லாம் தடுப்பூசி போட்டு ரோம்பநாளச்சுப்பூ...
.டியர் சார்..
ReplyDelete1. க்ளாஸிக் ேஜம்ஸ்பாண்ட் பற்றி.
இதழின் சைஸ் பற்றி பலமுறை சொன்னது தான்.அது என்னமோ ஆரம்பத்தில் பழகிய சைஸை மாற்றும் போது சில கதைகள் ரசிக்க முடியாமல் போய்விடுகிறது.
(உ-ம்) 'காணாமல் போன கடல்' CI D லாரன்ஸ் .கடந்த வருடத்தில் ஒரு தடவை ரசித்து படித்திருக்கிறேன். ஆனால். மீண்டும் கிங் கோப்ரா -வை ரசிக்க முடியாததற்கு - சைஸைத் தான் காரணம் சொல்வேன் .எனவே என்னளவிற்கு க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டும் இதே சைஸில் எனில் ரசிப்பது சிரமமே.
இதே சைஸில் (அதாவது பக்கத்திற்கு 12 படங்கள்) வெளியிடுவதை தவிர்க்க முயற்சிக்கலாமே..
2. "லக்கி லூக்" -க்கு அடுத்து ரசிப்பது "மேக் & ஜாக்" தான். (கிட் ஆர்டின் & டாக் புல்லும்) ரசிக்கும் தான்.
3. பிடித்த இதழ் - வித்தியாச கதைக்களம்- கார்டூன் கதையா? - ஆக்ஷன் கதையா என வகைப் Uடுத்த முடியாத -சோடா.
நன்றி சார்..i
///ஈயோட்டிய அந்நாட்களைச் சற்றே சுவாரஸ்யப்படுத்தியவை நமது பதிவுப் நாட்களும், ஜாலியான அரட்டை மேளாக்களுமே – என்னளவிற்காவது///
ReplyDelete--- காமிக்ஸ் தளமும், காமிக்ஸ் நண்பர்கள் குழுமிக் கிடக்கும் வாட்ஸ்ஆப் குழுக்களும் இல்லீனா நிச்சயமாக பைத்தியம் பிடித்து இருப்பது உறுதி சார்.
வாரம் இரு பதிவுகள் என தாங்கள் மனம் திறந்து அந்நாட்களை சுவாரஸ்யமான ஒன்றாக செய்திருந்தீர்கள்.
தங்களது பதிவுகள்,
அதையொட்டிய உரையாடல்கள்,
பலவிதமான போட்டிகள்& நண்பர்களே நடுவர்களாக பதவு உயர்வு பெற்ற தருணங்கள் என பொழுதுகளை நகர்த்திப்போக முடிந்தது ஒரு பக்கம்.
மறுபக்கம் மகாபாரதம் காலை வேளைகளை கச்சிதமாக எடுத்து கொள்ள தலை தப்பியது.
காமிக்ஸ் வாட்ஸ்ஆப் குழுவில் பலவித போட்டிகள் நண்பர்களுக்கு இடையே இருந்த படைப்பாளிகளை வெளிக்கொணர்ந்து இருந்தது.
மொத்தத்தில் காமிக்ஸ் & காமிக்ஸ் சார்ந்த விசயங்கள் பீதியை பாதியாக குறைத்து இருந்தன...!!!
வாட்ஸ்ஆப் குழுவில் இனைய விருப்பம் சார்
Deleteஉங்க வாட்ஸ்ஆப் நம்பரை எனக்கு அனுப்புங்கள். viji.comics@gmail.com
Delete////வெற்று அண்டாவைச் சுரண்டவே சிலருக்குச் சாத்தியமானது///
ReplyDelete---ஹா..ஹா....ஹா...!!
பாயச பார்டிகளை பார்த்து பரிதாபமே தோணியது அப்போது!!!!
1. கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன்
ReplyDelete2. சிக் பில் & co
3. நில் கவனி.. வேட்டையாடை சற்றே முந்தி வென்றது *** பிரிவோம் சந்திப்போம் ***
1.I like classic James bond
ReplyDelete2.chik bill
3.Nil Kavani Vettayaadu
//// கொரோனா லாக்டௌன் நாட்களின் நினைவலைகளைப் பற்றிப் பகிர்ந்திடலாமே folks?////
ReplyDelete----கொரோனா பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டுள்ள வேளையில் நம்ம நண்பர்கள் செய்த பாஸிடிவ் பங்களிப்பை பதிவு செய்கிறேன்.
காமிக்ஸ் வாட்ஸ்ஆப் குழுக்கள் பல உண்டு. கொரோனா காலங்களில் அங்கே கும்மி, குலாவல் என பஞ்சமில்லா டைம்பாஸிங்ஸ் இருந்தன.
சென்னையில் வசிக்கும் ஓவிய நண்பர் உதய், நண்பர்கள் உடன் இணைந்து நடத்தும் "ஸ்பைடர் படை"---என்ற குழுவில் பல்சுவை போட்டிகள் பலதும் நடத்தி நண்பர்கள் திறமையை கணிசமாக வெளிக்கொணர்ந்து இருந்தார்.
கேப்சன் போட்டி,
காமிக்ஸ் நாயாகரை பற்றி கட்டுரை வரைதல்,
காமிக்ஸ் நாயகர்கள் மற்ற நாயகருக்கு கடிதம் எழுதுவது,
ஒருவர் மாற்றி ஒருவர் எழுதும் ரிலே தொடர் கதைகள்,
சிறார்களுக்கு ஓவியங்கள் வரைதல்,
ஒரு பக்க கதைகள் உருவாக்கம்(பெரியவர்கள் உதவியுடன்),
என நிறைய விசயங்கள் செய்து இருந்தார்.
சிறந்த பங்களிப்புகளுக்கு பழைய காமிக்ஸ் இதழ்களை பரிசாக வழங்கி இருந்தார்.
அறிய பல பழைய இதழ்களை நண்பர்கள் பரிசாக தட்டிச் சென்றனர்.
எனக்கும் சில இதழ்கள் பரிசாக கிடைத்து இருந்தன.
டாக்டர் AKK ராஜா,
மருத்துவர் சகோ பார்த்தீபன் கரூர்,
பிளைசி பாபு
ஓவியர் அப்பு சிவா
மற்றும் பலர் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் பங்களிப்பு செய்திருந்தினர்.
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நண்பர் உதய்க்கு வாழ்த்துகள் & பாராட்டுகள்💐💐💐💐💐
அங்கே புத்தகங்கள் பரிசாக வாங்கித் தந்திருந்த என்னுடைய மற்றும் பாபுவின் சிறப்பான கட்டுரையை நம்ம நண்பர்கள் நடத்தும் மற்றொரு வாட்ஸ்ஆப் குழுவான "காமிக்ஸ் எனும் கனவுலகில்"--- பதிவு செய்து எங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தோம். அந்த குழுவின் அட்மீன்கள் ஈரோடு விழா சிறப்பிதழ்களை ஊக்கப்பரிசாக அளித்து என்னையும் தம்பி பாபுவையும் திகைக்க வைத்து விட்டனர்.
எங்களை உற்சாகப்படுத்திய அந்த குழு அட்மீன் நண்பர்களது பெருந்தன்மை ஐசிங் ஆன் த கேக்!
காமிக்ஸ் நேசங்களின் வெளிப்பாடாக அமைந்த இந்த நிகழ்வுகள் என்னென்றும் என்னுள் பாஸிடிவ் நினைவுகளாக வீற்றிருக்கும்!😍😍😍😍😍
🙏🙏
ReplyDelete1.கிளாசிக் பாண்ட் கண்டிப்பாக தொடரவேண்டும்.
ReplyDelete2.டாக் புல் -கிட் ஆர்டின்.
3.பிரிவோம் சந்திப்போம்.
கொரோனா கால நினைவுகள்
ReplyDeleteகிட்டத்தட்ட 75 நாட்கள் சேலம் செல்ல முடியாமல் இங்கே கோவையிலேயே முடங்கி கிடந்த நாட்கள் அவை. மனைவி மற்றும் மகனிடம் ஃபோன் மூலம் மட்டுமே பார்த்து பேச முடியும். ஆரம்ப கொரோனா நாட்களின் பீதி வெகுவாக இருந்த நேரம் அது. செய்திகளை பார்க்க ஆரம்பித்தால் கிரிக்கெட் ஸ்கோர் போல ஊருக்கு எத்தனை பேருக்கு கொரோனா என்று statistics.
தினமும் swiggy Zomato என்று ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்த எனக்கு அவை இனி எப்போது சேவையை தொடங்கும் என்ற கவலை. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த நாட்களின் இடர்களை,
அவற்றின் தாக்கத்தை கணிசமாக குறைத்தது அந்த நாட்களில் நீங்கள் எழுதிய பதிவுகள் தான். அந்த நாட்களில் நமது தளத்தில் அடித்த அரட்டைகள், கிடைத்த சகோதரி, மிகவும் நெருக்கமான நண்பர்கள் இவை தான் என்னை உயிர்ப்புடன் வைத்து இருந்தது. நமது ATR சார் போன்ற மூத்த வாசகர், பத்து சார் அவர்களுடன் அடித்த கும்மாளம் எல்லாம் காலத்திற்கும் நினைவில் இருக்கும். நீங்கள் மட்டும் அப்போது தொடர்ந்து பதிவுகள் இடாமல் இருந்து இருந்தால் பைத்தியமே பிடித்து இருக்கும். சத்யா சொன்னது போல உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சார்.
அந்த நாட்களில் நான் முன்பே படிக்காமல் விட்ட பதிவுகள் நண்பர்களின் பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டேன். வாரம் ஒரு முறை நீங்கள் இடும் பதிவு எனது வாழ்வோடு கலந்த ஒன்று சார். மீண்டும் ஒரு முறை உங்களுக்கு எனது நன்றிகள்.
நல்ல பதிவு குமார்...!!!
Deleteஉணவுக்கு வழி இல்லை எனும்போது கொஞ்சம் சிக்கல் தான். நாங்களாம் ஊட்ல சாப்பிட்டே ஒரு ரவுண்டு ஏறி போயிட்டோம்.
Deleteகொரோனா முன்பு செலக்ட் ஆக சாப்பிட்டது போய் கிடைச்சதெலாம் சாப்பிட்ட நாட்கள்.
இருக்கும் உணவு பொருட்களை ரேசனிங் செய்து சமாளிக்க வேண்டிய நிலை.
காசு இருந்தாலும் எதுவும் வாங்க முடியாத நிலை.
சின்ன சின்ன நோய்களுக்கு டாக்டர் இடம் போகும் "நோய்" குணமானது கொரோனா காலத்தில்!
டிவில போடும் எல்லா படங்கள் பார்த்தாச்சு... ஒரு கட்டத்தில் தினம் ஒரு மணி நேரம் அமைதியாக உட்காரும் நிலைக்கு போயாச்சு.
இன்னும் ஒரு மாதம் நீடித்து இருந்தால் ண...ண..ண..ண..தான்!!!!
நன்றி ரவி அண்ணா. உண்மை தான் டெக்ஸ் நீங்கள் சொல்வது. இன்னும் ஒரு மாதம் தொடர்ந்து இருந்தால் ரொம்ப சிரமம் தான்.
Deleteஉண்மை டெக்ஸ் விஜயராகவன் கொரோனாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது
Deleteவிஜயராகவன் @ ALL ++
DeleteWell said Kumar!
Delete110
ReplyDeleteநில்..கவனி..வேட்டையாடு & எதிரிகள் ஓராயிரம்..
ReplyDeleteடாக்புல் & கிட் ஆர்டின்
JAMES BOND... NO NO NO NO NO....
1. பாண்ட் ஓகே ரகம் மட்டுமே தான் சார்
ReplyDelete2.சிக்பில்.
3.நில் கவனி வேட்டையாடு. இது வேற லெவல் சார்.
1. க்ளாசிக் பாண்ட் ஓ.கே
ReplyDelete2. லக்கிக்கு அடுத்தது சிக்பில்தான்.வேணும்னா ப்ளூகோட்ஸையும் சேத்துக்கலாம்.
3. பிரிவோம்..சந்திப்போம்.!(படித்தவரையில்..,படிக்காதவை இன்னும் இருக்கின்றன.)
161வது
ReplyDelete///ஒவ்வொரு மனிதனுள்ளும் உள்ள grey shadows களை வெளிச்சம் போட்டுக் காட்டிய “பிரிவோம் சந்திப்போம்“ gets 9/10 in my books///
ReplyDeleteஒன்றே ஒன்றை மட்டும் குறிப்பிடச் சொன்னதால் நில் கவனி வேட்டையாடு மட்டும் குறிப்பிட வேண்டியதாகிவிட்டது சார்.!
அதைப்போலவே, அதாவது.. அதற்கு நிகரான கதைகளாக நான் கருதுவது பிரிவோம் சந்திப்போம் மற்றும் மார்சல் சைக்ஸின் அந்தியின் அத்தியாயம்.!
இரண்டுமே யதார்த்த கௌபாய் உலகை ஹீரோயிச ஜீம்னாஸ்டிக்ஸ் இல்லாமல் அருமையாக வெளிப்படுத்திய கதைகள்.!
அந்தியின் ஒரு அத்தியாயம்;
குடும்பத்தை இழந்து மனம் ரணமான ஒரு நபர், வாழ்க்கையில் எவ்வித பிடிப்பும் இல்லாமல், எப்போதும் மரணிக்க தயாரான மனநிலையுடன், தனது சுடும் திறமையை தீயவர்களை வேரறுக்க அர்பணிக்கிறார்.!
சைக்ஸின் அறிமுகமே மெர்சலாக இருக்கும்.! க்ளைமாக்ஸ் ஒரு கவிதை.! மார்சல் சைக்ஸின் மரணத்தில் ஜிம் சைக்ஸ் ஜனிப்பது.. அடுத்து.. ஜிம்மை சிறுவனாக.. சைக்ஸ் சந்தித்த அதே காட்சியமைப்பில் ஜிம் இன்னொரு சிறுவனை சந்திப்பதோடு கதை முடியும்.. கவிதை.. கவிதை..!
பிரிவோம் சந்திப்போம்:
யதார்த்தத்துக்கு மிகமிக நெருக்கமான கதை.!
பாண்டவர்களின் நியாயம் பாண்டவர்களுக்கு.. கௌரவர்களின் நியாயம் கௌரவர்களுக்கு (இடையில் கண்ண பரமாத்மக்களின் நியாயமும் உண்டு) என்பது போல, கதை மாந்தர்கள் யாரையுமே தவறு செய்பவர்களாக பார்க்கமுடியவில்லை.! அத்தனை பேரின் செயல்களிலும் நியாயம் இருக்கும்.! ஆனால் அவரவர் நியாயம் அடுத்தவர்க்கு அநியாயம் என்பது போல கதைமாந்தர்களுக்கிடையே நடக்கும் போராட்டங்களை நாம், கண்ணபரமாத்மாவைப் போல சீர்தூக்கிப்பார்த்து நல்லவர் கெட்டவரை முடிவுசெய்துகொள்ளலாம். !
நில் கவனி வேட்டையாடு:
இக்கதையின் வீரியத்தை ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.! கதையை படிக்க ஆரம்பித்த சில பக்கங்களில், ஜாரோஃப் கெட்டவன் அவன் சாகவேண்டும் என்று சாபமிடும் நம் ஆழ்மனம்.. கதை போகப்போக ஜாரோஃப் எப்படியாவது தப்பிவிடவேண்டும் என மாறிவிடும்.. நம்மையறியாமலேயே.!
ஜாரோஃப் தப்பவேண்டும் என நாம் விரும்பக் காரணம் அந்த குழந்தைகள் உயிர்பிழைக்க வேண்டும் என்பதுதான் என்றாலும்.,
ஒரு கொடூரனை, கொலைகாரனை, செத்து தொலையட்டும் என்று சபித்த ஒருவனை, எப்படியாவது தப்பிச்சிடுடா என நம்மையே பதறவைத்த அந்த வீரீயம்.. விசித்திரம்.. வேறெந்த கதைகளிலும் நாம் இதுவரை காணாதது. ! சித்திரங்களும் மிகப்பெரிய பலம்.!
இந்த மூன்று கதைகளுமே நம்பர் ஒன் இடத்திற்கு தகுதியானவை.!
// கதையை படிக்க ஆரம்பித்த சில பக்கங்களில், ஜாரோஃப் கெட்டவன் அவன் சாகவேண்டும் என்று சாபமிடும் நம் ஆழ்மனம்.. கதை போகப்போக ஜாரோஃப் எப்படியாவது தப்பிவிடவேண்டும் என மாறிவிடும்.. நம்மையறியாமலேயே.! //
Deleteஅதே,அதே...
சரியான பாயிண்ட்...
// ஒரு கொடூரனை, கொலைகாரனை, செத்து தொலையட்டும் என்று சபித்த ஒருவனை, எப்படியாவது தப்பிச்சிடுடா என நம்மையே பதறவைத்த அந்த வீரீயம்.. விசித்திரம்.. வேறெந்த கதைகளிலும் நாம் இதுவரை காணாதது. ! சித்திரங்களும் மிகப்பெரிய பலம்.! //
DeleteWell said!!
+1
3.கண்ணான கண்ணே
ReplyDeleteசேலம் டெக்ஸ் சார்,
ReplyDeleteகடந்த ஒரு மாதமாய் உங்களுக்கு போன் செய்கிறேன். யாரோ பேசுகிறார்கள். தாங்கள் என்னை அழைக்க முடியுமா. காமிக்ஸ் சம்மந்தமாய் சில தகவல் வேண்டும், வேறு Lion Comics நண்பர்கள் நம்பர்கள் என்னிடம் இல்லை. நமது காமிக்ஸ் விசயமாய் தகவல் பெற யாராவது உதவுகிறீர்களா. நம்பர் பகிர்ந்திட யாராவது முனைந்தால், சில விவரங்களை நான் தங்களிடம் தெரிந்து கொள்வேன்
சார் இது குமார் சேலம் எனது எண் 9443144007.
Deleteநண்பரே எனது நம்பர் 9043690930 செந்தில் சத்யா
Deleteஓவ்...சிரமத்திற்கு மன்னிக்கவும் சார். மேலே நண்பர்கள் உள்ள எண்களில் சத்யா அல்லது KS ஐ தொடர்பு கொள்ளலாம் சார்.
Deleteஉங்க நெம்பரை மெயில் பண்ணுங்க நான் அழைக்கிறேன்.
viji.comics@gmail.com
குமார் சார், செந்தில் சத்யா சார்,
Deleteஉங்கள் அன்புக்கு நன்றி. எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. தங்களின் போன் நம்பரை பெற்று கொண்டேன்.
எனக்கான தகவல் இனி உங்களின் தெரிந்து கொள்கிறேன்.
சேலம் டெக்ஸ் அவர்களுக்கும் நன்றி.
...உங்களிடம்...
Deleteசார் ஆனாலும் நீங்க ரெம்போ....ஸ்ட்ரிக்டு...மூனே கதைக்கு மட்டும் ஒன்பது மார்க்...
ReplyDelete1.பரவால்ல
ReplyDelete2.ஸ்மர்ஃப்
3.ஆர்ச்சி....அந்த அமேசான் கதை
Covid-19 தந்த வேதனையான சோதனையான நினைவுகளை மீண்டும் திரும்பிப் பார்க்கவே பயமாக உள்ளதே. ஆனாலும் லாக் டவுன் தந்த சந்தோசம் உண்டு. நமது பிளாக்கில் ஆசிரியரால் நடத்தப்பட்ட கேப்ஷன் போட்டியில் வெற்றி பெற்று ஜம்போ சந்தா பரிசாக பெற்றது மகிழ்ச்சி தந்தது. தினக்கூலி யான நான் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்த தவித்தபோது சில நண்பர்கள் உருவில் வந்த தெய்வங்களால் உதவி வரப்பட்டு வாழ்க்கைச் சக்கரம் உருண்டது. தங்கள் பெயரை வெளியிட கூடாது என்று அந்த நண்பர்கள் பெயரை வெளியிடவில்லை. சோதனை காலத்தை கடக்க காமிக்ஸ் புத்தகங்களும் சில வாட்ஸ்அப் குழுக்களில் நடந்த போட்டிகளும் உதவின. நிறைய வாட்ஸ்அப் காமிக்ஸ் குழுக்களில் காமிக்ஸ் நேசத்தைப் பற்றி சிறுவயது காமிக்ஸ் தேடல் பற்றி நிறைய எழுத முடிந்தது. சில சில காமிக்ஸ் புத்தகங்கள் பரிசாக கிடைக்கப் பெற்றேன். இந்த சோதனையான காலகட்டத்தை கடக்க காமிக்ஸ் காமிக்ஸ் புத்தகங்கள் மற்றும் ஆசிரியரின் பதிவுகள் நண்பர்களின் ஆறுதல்கள் மற்றும் உதவிகள் உதவின. சோதனைகளை சாதனைகளாக மாற்ற உதவியது காமிக்ஸ் காதல்.
ReplyDelete1) கிளாஸிக் ஜேம்ஸ்பாண்ட் புராதன நெடி அடித்தாலும், பழைய மொந்தையில் புதிய கள் - ஓகே சார்
ReplyDelete2) லக்கி லூக்கின் பின்பு வூட் சிட்டி கோமாளிகள், புளூகோட் பட்டாளம்
3) நில் ... கவனி... வேட்டையாடு இனை தெரிவு செய்ய முனையும்போது, கண்ணான கண்ணே முன்னுக்கு வந்து நிற்பதால் வேறு வழி இல்லை. சமீபத்தில் எனது உற்ற நண்பனும் மைத்துனருமான சுதா மாரடைப்பால் மரணமடைந்தது, அவரது நீண்ட காலத்தின் பின் பிறந்த மகள் மனநிலையில் கதை சொல்லப்படுவது கண் கலங்கி பல முறை வாசிக்க , வைத்தது. அதன் தாக்கம் நீண்ட நாள் நீடித்தது .
ஊதாப் பொடியர்கள். மந்திரி
ReplyDeleteஎதிரிகள். ஓராயிரம். கண்ணே கலைமானே
1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் 5/10
ReplyDelete2. லக்கி லூக்கு அடுத்த ஸ்தானம். Clifton, Blue Coat, Smurfs
3. TOP தேர்வு. பிரிவோம் சந்திப்போம்
1. Useless sir.It was interesteting in 1995. Not now. Latest James Bond is my choice
ReplyDelete2. I am a cartoon fan. Next place to lucky luke-Bluecoats, leonardo(he gives great laughs), smurfs(since its trending in many forms now), rin tin can(absolutely loving), mack and jack, and others
3. Zaroff
// . I am a cartoon fan. Next place to lucky luke-Bluecoats, leonardo(he gives great laughs), smurfs(since its trending in many forms now), rin tin can(absolutely loving), mack and jack, and others //
Delete+1
Vijayan sir, please make a note. One more cartoon lover.
ஜனவரி:
ReplyDeleteஆறாது சினம் - அதகளம் 9/10
கதவைத் தட்டிய கே(ா)டி - சிரிப்புக்களம் 8.5/10
பட்டாம்பூச்சி படலம் - நன்று - டயபாலிக் கதையை விட மிகவும் ரசித்தேன் 7/10
இருளின் மைந்தர்கள் - பழைய ஞாபகங்களை தட்டி எழுப்பிய கதை என்பதை தவிர சொல்ல ஒன்றும் இல்லை! டெக்ஸ் (மறுபதிப்பு) கதைகளுக்கு நோ மாக்ஸி! 7/10
பிப்ரவரி
ஒரு துளி துரோகம் - துரோகத்தின் பாதிப்பை உணர்த்திய கதை 8/10
தனியே... தன்னந்தனியே - தனிமையில் படித்தால் பீதியை கிளப்பும் கதை 8/10
அந்தியின் ஒரு அத்தியாயம் - கிராபிக் நாவல் சாயலில் ஒரு கதை - கொஞ்சம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய கதை. 7/10
ஆர்ச்சி இருக்க பயம் ஏன் - இதுவரை ஆர்ச்சியை விரும்பிய எனக்கு பயத்தை உருவாக்கிய கதை
6/10
மார்ச்
நில்... கவனி... வேட்டையாடு - அக் மார்க் வேட்டையாடு விளையாடு கதை 9/10
ஆர்டின் ஒரு ஆச்சர்யக்குறி - சிரிப்பு குறைவு என்றாலும் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க செய்த இதழ் 7/10
பிழையில்லா மழலை - முதல் பாகம் ஒரு ஆக்ஷன் + கொஞ்சம் சென்டிமென்ட் என கவர்ந்தது. இந்த கதை நிறைய செண்டிமெண்ட் + துளி ஆக்ஷன் என்று மனதை கவராத கதை. 7/10
எதிர்காலம் எனதே - இளவரசி எனது ஆல் டைம் விருப்பமானவர், ஆனால் இந்த கதை பெரியதாக கவரவில்லை 6/10
ஏப்ரல்
கனவே... கலையாதே - வழக்கம் போல் இந்த முறையும் மனதை கவர்ந்து விட்டார் 8.5/10
கண்ணான கண்ணே - கண்களை குளமாகிய கதை 8/10
பிரிவோம்... சந்திப்போம் - நன்று, இன்னும் கொஞ்சம் ஆக்ஷன் இருந்து இருக்கலாம் 7.5/10
வானவில்லுக்கு நிறமேது - வித்தியாசமான டெக்ஸ் கதையை கொடுக்க நினைத்து பூமாலை கசங்கிய கதையாக இரண்டும் கேட்டான் கதை போல அமைந்து விட்டது. 6/10
அலைகடலில் அதகளம் - நேர்கோட்டு கதை என்றாலும் அதர பழைய கதை! முடியவில்லை! 5/10
மே
திசை மாறிய தேவதை - இந்த ஆண்டு அறிமுகத்தில் முதல் இடம், என்னை மிகவும் கவந்தது, ஒரு பக்கம் அம்மா சென்டிமென்ட் மறுபுறம் போலீஸ் தொழில் என பயணித்து ரசிக்க செய்த கதை. அடுத்த பாகம் படிக்க ஆவலுடன் உள்ளேன்! 9/10
போர்முனையில் ஒரு பாலகன் - I liked திஸ் very much! கதை முழுவதும் வாய்விட்டு சிரிக்க செய்தது! 9/10
கைதியாய் டெக்ஸ் - ப்ராடியெஸ் மிகவும் எதிர் பார்த்தேன், கொஞ்சம் ஏமாற்றமே! 8/10
விண்ணில் ஒரு வேதாளம் - not bad 7/10
ஜூன்
லக்கி’s லயன் ஆண்டுமலர் - சிறப்பு! சிரிப்பு!! 8.5/10
எதிரிகள் ஓராயிரம் - கதையின் நீளம் கொஞ்சம் ஜாஸ்தி!! 8/10
மீண்டும் கிங் கோப்ரா - லாரன்ஸ் டேவிட் கொஞ்சம் முடியவில்லை, அதுவும் அடிக்கடி மயக்கம் போட்டது தாங்க முடியவில்லை! 6/10
நல்ல அலசல்.நன்று.
Delete1. க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை தற்போது எவ்விதம் பார்த்திடுகிறீர்கள் ? ஓ.கே.
ReplyDelete2. லக்கி லூக் நமது கார்ட்டூன்கள் undisputed king - சர்தான் ! அவருக்கு அடுத்த ஸ்தானத்தை சிரிப்புப் பார்ட்டிகளில் யாருக்குத் தருவீர்களோ ? - ப்ளுகோட் பட்டாளம். சிக்-பில் கதை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் ஆரம்ப காலத்தில் வந்த கதைகளில் இருந்த சிரிப்பு குறைவு! எனவே கார்ட்டூன் வரிசையில் இவர்கள் மூன்றாம் இடம்!
3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?
நில்... கவனி... வேட்டையாடு
3. மேலே நாம் review செய்துள்ள இந்த 25 இதழ்களில் உங்களின் TOP தேர்வு எதுவோ ? Just 1 please ?
Delete2 nd place SODA
கடந்த சிலவருடங்களாக வராமல் உள்ள கார்ட்டூனில் பிடித்தவர்கள்:
ReplyDelete1.ரின்டின் கேன் 2. ஸ்மூர்ப் 3. லியனார்டோ 4. மதியில்லா மந்திரி
மீ ட்டூ..!
Deleteஇங்கிலாந்தில் மீண்டும் மறுவருகை புரிந்துள்ள வைரஸ் பற்றிய தகவல்கள் கவலை கொள்ளச் செய்கின்றன...
ReplyDeleteசூழல் மீண்டும் அசாதாரணமான நிலைக்கு செல்லுமோ என்னவோ...!!!
இந்நிலையில் பிப்ரவரியில் புத்தகத் திருவிழா நடக்குமா ???!!!
நமது ஜனவரி ஆன்லைன் திருவிழாவாவது நல்லபடியாக நடக்க வேண்டும்...
U K கவலை தரும் பயம் தரும் தகவல்.
Deleteகவலை வேணாம் நண்பர்களே. நம்ம நாட்டில் herd immunity அதிக அளவில் இருப்பதால் எப்போதும் ரெகுலர் ஆக செல்லும் அலுவல், கடைகள் என இருந்து கொண்டால் தப்பி விடலாமம். புதிய இடங்களுக்கு செல்வதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டுமாம்! மருத்துவ நண்பர் குழுவில் டாக்டர் சொல்லி உள்ளார்.
Deleteநம்ம தள மருத்துவ நண்பர்கள் இது பற்றி உறுதியான தகவல் தர வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
----STV
./நம்ம தள மருத்துவ நண்பர்கள் இது பற்றி உறுதியான தகவல் தர வேண்டுகிறேன்//
DeleteToo early to say anything.
In general mutations are usual for such viruses..
This particular virus has undergone 40 + mutations already..
If the mutations occur at spike proteins locations clinical consequences are yet to be judged..
Will the vaccines work for mutated virus?
Will the already acquired immunity help fighting the mutated virus?
These questions are yet to be answered
But the consoling point is all these viruses are genetically similar and this may help to fight against the mutated supposedly more virulent virus..
The lockdown until march 2021 in UK may indicate the magnanimity of the situation..
Just keep maintaining personal hygiene and wearing masks and avoid social gatherings..
நன்றிகள் பொருளர் ஜி.🙏🙏🙏🙏🙏
Deleteதங்களது அறிவுரைப்படி இன்னும் கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்கிறேன்
மா துஜே சலாம் :
ReplyDeleteஎன்ட அம்ம்ம்மேமேமேமே...
***** ஒரு கசையின் கதை *****
ReplyDeleteநல்ல படைப்பாளிகளின் கையில் ஒரு தூணோ, துரும்போ சிக்கினால் கூட அதை அழகாக ஜோடித்து ஒரு சுவாரஸ்யமான கதையாக்கிவிடுவார்களில்லையா?...
அப்படியாப்பட்ட படைப்பாளிகளின் கண்ணில் ஒரு கசை தென்பட்டிருக்கிறது!
ஒரு கசை.. அப்புறம் ஒரு வரைபடம் + ஒரு தங்கச் சுரங்கம் + சில ரவுடிகள் + சில செவ்விந்தியர்கள் + ஒரு நேர்மையான ஷெரீப் + ஒரு சலூன் + நிறைய தோட்டாக்கள் + சில பல சாவுகள் + நீதியை நிலைநாட்டுபவர்கள் + அவர்களுக்கு ஓரிரு சிராய்ப்புகள்! இதற்குமேல் வேறென்ன வேண்டும்?!!
பெரிய கெடா விருந்தில் ஒரு ரவுண்டு கட்டிவிட்டு ஊருக்குத் திரும்பும் வழியில் ஒரு கடையோரம் வண்டியை நிறுத்தி சுர்ர்ர்ரென்று ஒரு 7upஐ உள்ளிறக்குவோமே... ஆங்!அதைப்போன்றதுதான் 'ஒரு கசையின் கதை'!
என்னுடைய ரேட்டிங் : 9/10
///கடையோரம் வண்டியை நிறுத்தி சுர்ர்ர்ரென்று ஒரு 7upஐ உள்ளிறக்குவோமே...///
Deleteஅதையெல்லாம் குடிக்காதிங்க குருநாயரே.!
கரும்புச்சாறு, பழச்ச்சாறு ன்னு இயற்கை பானங்களை குடிங்க.!
டாஸ்மார்க்லதான் இயற்கைபானம் கிடைக்கிறதேயில்லை.!:-)
// அதையெல்லாம் குடிக்காதிங்க குருநாயரே.!
Deleteகரும்புச்சாறு, பழச்ச்சாறு ன்னு இயற்கை பானங்களை குடிங்க.! //
அதே அதே கண்ணா.
///அதையெல்லாம் குடிக்காதிங்க குருநாயரே.!
Deleteகரும்புச்சாறு, பழச்ச்சாறு ன்னு இயற்கை பானங்களை குடிங்க.!///
அதாவது.. டைகர், மாடஸ்டி கதைகளைப் படிக்கச் சொல்றீங்க. அதானே?!! ;)
///அதாவது.. டைகர், மாடஸ்டி கதைகளைப் படிக்கச் சொல்றீங்க. அதானே?!! ;)///
Deleteஅதில்லை குருநாயரே..!
இயற்கைபானங்கள் எப்படி உடல்நலனுக்கு நல்லதோ அதுபோல மனநலனுக்கு நல்லதான கார்ட்டூன்களை படிக்கச்சொல்கிறேன்.!
வன்முறைகளை(கூல்ட்ரிங்ஸ்) ரசித்து ரசித்து மனதை குரூரமாக்கி , அதன்பலனாக உடலை கெடுத்துக்கொள்ளாமல்..
புன்னகைக்க வைத்து.. சிரிக்கவைத்து மனதை லேசாக்கி, அதன்மூலம் உடல்நலத்தையும் பேணிக்காக்கும் கார்ட்டூன்களை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.!
(ஷ்ஷப்பா.. குருநாயரை சாக்கா வெச்சி எல்லாருக்கும் மெஸேஜ் சொல்லிட்டேன்..ஹிஹி)
// ஷ்ஷப்பா.. குருநாயரை சாக்கா வெச்சி எல்லாருக்கும் மெஸேஜ் சொல்லிட்டேன்..ஹிஹி //
Deleteஇவ்வளவு நாள் குருநாயரை வைத்து காமெடி பண்ணிவிட்டு இப்போது மெஸேஜா :-) நடக்கட்டும் நடக்கட்டும் :-)
ஒரு கசையின் கதை: தலைப்பை பார்த்தவுடன் ஓகே கசையை வைத்து விளாசும் வில்லனை டெக்ஸ் திரும்ப விளாசும் கதை என நினைத்த எனக்கு சில பக்கங்கள் படித்த பிறகு ஆகா இது வேற லெவல் என புரிந்தது.
ReplyDeleteஒரு வித்தியாசமான கசை அதனை கைப்பற்ற நினைக்கும் கூட்டம். அதனை வைத்து இருப்பவர்களுக்கு தொடரும் ஆபத்து. இந்த கசையின் உரிமையாளர் யார், அவரின் மகனிடம் கசை சென்று சேர்ந்ததா? என ஒரு குட்டி சாகசத்தில் பல கேள்விகளுக்கு விடை, நடுவில் நடக்கும் டெக்ஸ் கார்சன் டமால் டூமில் என விறுவிறுப்பாக செல்லும் கதை.
கதையின் முடிவு சரியான முடிவு என்று மூளைக்கு புரிந்தாலும் மனது ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறது, க்ளைமாக்ஸில் ஒரு சண்டை வைத்து முடித்து இருந்தால் ஒரு வேளை மனது சமாதானம் ஆகி இருக்கும் என நினைக்கிறேன் :-)
100-350 பக்க டெக்ஸ் கதைகளை படித்து பழகியதால் இந்த சிறிய கதை டெக்ஸ் கதை படித்த திருப்தியை தரவில்லை. ஆமாம் படிக்க ஆரம்பித்த உடன் முடிந்து விட்டது :-)
விஜயன் சார், இது போன்ற சிறிய டெக்ஸ் கதைகளை வரும் காலங்களில் சந்தா D-யில கொடுக்க முடியுமா?
நரகத்தின் நம்பர் 13
ReplyDeleteமேக்ஸ் என்ற கம்யூட்டர் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு செய்யும் சேவையே கதையின் மையம். மனிதர்கள் செய்யும் ஹீரோ வேலையை மேக்ஸ் செய்வது ரசிக்கும் படி அதேநேரம் நம்பும் படி + மனிதாபிமானத்துடன் இந்த இயந்திரத்தை அமைத்தது சிறப்பு.
பெர்ட்டை சம்பந்தம் இல்லாத கொலை பழியில் இருந்து காப்பாற்ற எடுக்கும் முயற்சி ஒரு தேர்ந்த வக்கீலின் செயல்பாடு.
ஹாரியிடம் இருந்து ஸ்டோன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சிகள் அருமை.
ஸ்கெக் மற்றும் அவனின் கூட்டாளிகளுக்கு மேக்ஸ் கொடுக்கும் ட்ரீட்மெண்ட் லக லக ரகம். சூப்பர்.
எனது குழந்தைகளுக்கு கதை சொல்ல ஒரு கதை கிடைத்து விட்டது.
இதன் தொடர்ச்சி இருந்தால் வருடத்திற்கு ஒருமுறை வெளியிடுங்கள்.
This comment has been removed by the author.
Deleteஎல பரணித்தம்பி, மேலே நான் போட்டுள்ள கமெண்டுக்கு ஆதரவு தால
Deleteநான் இந்த வருடம் வந்த அனைத்தையும் படிக்கவில்லை. படித்ததில் மிகவும் பிடித்தது "எதிரிகள் ஓராயிரம்" மற்றும் நில் கவனி வேட்டையாடு!
ReplyDeleteஎதிரிகள் ஓராயிரம், ஒரு விறுவிறு ஆக்க்ஷன் கதை. முதல் பக்கம் ஆரம்பித்த ஸ்பீட் கடைசி பக்கம் வரை குறையவில்லை. ஆனால் கிளைமாக்ஸ் தான் வேறுமாதிரி இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அந்த குகை கோயிலிலேயே கதை முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைவிட்டுவிட்டு ஜான் காஃபின் புதையலை எடுத்துக்கொண்டுபோய், பணக்காரனாகி பிறகு டெக்ஸ் போய் பழி தீர்ப்பதெல்லாம் தலையை சுற்றி மூக்கை தொடும் விதம்.
நில் கவனி வேட்டையாடு - ஹாலிவுட் சர்வைவல் த்ரில்லர் படம் போல சூப்பராக இருந்தது.
நண்பர்களே!
ReplyDeleteகடந்த வாரத்தில் நமது அதிதீவிர காமிக்ஸ் நண்பரொருவர் ('பெயரைச் சொல்ல வேண்டாமே விஜய்' ) தொடர்பு கொண்டு தற்போதைய/நீண்டகால காமிக்ஸ் விற்பனை நிலவரம் குறித்து கலந்தாலோசித்தார்! அவர் என்னுடன் பேசிய விசயங்களில் சிலவற்றை இங்கே சுருக்கமாகப் பகிர்ந்திருக்கிறேன். அதீத வேலைப்பளு காரணமாக கடந்தவாரமே இதைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை ( மன்னிச்சூ நண்பரே!)
//////////////////////////
*இந்தியாவில் ஹிந்தி உள்பட எந்த மொழி வாசகர்களுக்கும்
கிட்டாத வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது நமது காமிக்ஸ்
இதழ்களால்! இந்த வாய்ப்பை மேலும் வளர்க்கும் பொறுப்பு வாசகர்களாகிய
நமக்கும் இருக்கிறது. நமது சந்தா எண்ணிக்கை நான்கு
இலக்கத்தை எட்டிட நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்!
* அண்மையில் ஒரு Dentist நண்பர் ஒருவரை பார்க்க அவரது கிளினிக் சென்றிருந்தேன். காத்திருப்பு அறையில் பல ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிக்கைகளுடன்
நமது காமிக்ஸ் இதழ்களும் இருக்க கண்டேன். நமது இதழ்களை
பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் விரும்பி
படிப்பதை பார்க்க முடிந்தது. மனம் மகிழ்ச்சியில் திளைத்தது!
நமது வாசக டாக்டர்களும் இந்த உத்தியை கடைப்பிடித்து பல புதிய வாசகர்களுக்கு நமது காமிக்ஸ் வெளியீடுகளை அறிமுகப்படுத்லாமே?
மேலும், இதே பாணியில் வாடிக்கையாளர்கள் கத்திருக்கவேண்டிய பல்வேறு இடங்களிலும் நமது காமிக்ஸ் இதழ்கள் பரவிட
நமது காமிக்ஸ் காதலர்கள் முயற்சியெடுக்கலாமே?
* இதுவரை சந்தாவில் இணையாமல் கடையில் கிடைத்திடும் இதழ்களை மட்டும் வாங்கி மகிழும் நண்பர்களும் 2021லாவது உங்கள் இல்லம் தேடி இதழ்கள் வந்திட சந்தாவில் இணைந்துகொள்ளலாமே? ஒவ்வொரு வாசகரும் தங்களை சந்தாவில் இணைத்துக் கொள்வதே காமிக்ஸ் வளர்ச்சிக்குச் செய்யும் பேருதவியாக இருக்குமில்லையா?
ஒருவேளை, நமது இதழ்களின் விலைகள் உங்கள் Budget க்குள்
இல்லை என்று கருதினால் உங்கள் நண்பர் ஒருவருடன் இணைந்து சந்தா செலுத்தி இருவரும் பயன் பெறலாமே?
* மேற்சொன்னவைகளைப் போலவே, நமது Blog நண்பர்கள் அனைவரும் அவர்களுக்கு தோன்றும் உத்திகளை பகிர்ந்திடும்படி கேட்டுக்கொள்ளுங்கள்!
///////////////////
இதுகுறித்து உங்களின் கருத்துக்களை/ஐடியாக்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே?
// மேலும், இதே பாணியில் வாடிக்கையாளர்கள் கத்திருக்கவேண்டிய பல்வேறு இடங்களிலும் நமது காமிக்ஸ் இதழ்கள் பரவிட
Deleteநமது காமிக்ஸ் காதலர்கள் முயற்சியெடுக்கலாமே? //
+1 Good idea!
//நமது வாசக டாக்டர்களும் இந்த உத்தியை கடைப்பிடித்து பல புதிய வாசகர்களுக்கு நமது காமிக்ஸ் வெளியீடுகளை அறிமுகப்படுத்லாமே?/.
DeleteHesitancy to implement is because there is no precedents that I am aware of.
Unlike dentists' waiting room hospitals do not allow kids..
Theirs' presence is warrented only if they are sick..
Adult men do not even watch TV..
WOMEN on the other hand always like to watch TV series ( this is always running on the TV at theirs' request)
To the extent some of them skip their turn to complete watching that episode)
Still worth considering... May implement in the new year...selected books only..
One thing is for sure...
Separate books ought to be bought and showcased..
Kids always want to take the books along with them..if they are impressed
This cannot be prevented...
Should be initiated anyway in the new year..!!!
This comment has been removed by the author.
ReplyDeleteரிப்போர்ட்டர் ஜானியின் ஆதலினால் கொலை செய்வீர்..
ReplyDelete...ப்ப்ப்பா செம்ம்ம..!
ஜானி 2.0 என்பது சித்திரங்களில் மட்டுமே தெரிந்தது.! கதையோ கிளாசிக் ஜானியையே கண்முன் நிறுத்தியது.!
ஜானிக்கே உரித்தான தனித்துவமான கதையம்சம், வெகு திருத்தமான சித்திரங்கள், அட்டகாசமான கலரிங்.. மொத்தத்தில் சிறப்பான கதையை படித்ததொரு மனநிறைவு உண்டாயிற்று.!
ரேட்டிங் 10/10
காந்தியை சுட்டுட்டாங்களா.!?
Deleteசிவாஜி செத்துட்டாரா..!?
போன்ற வரலாற்று சிறப்புமிக்க கேள்விகளுக்கான பதில்.. ஹிஹி..!
காரணம் தெரியும் கண்ணா 🤗
Deleteகுணம்நிறைந்த குமார்... 🙏
Deleteமாடஸ்டியின் எதிர் காலம் எனதே லாஜிக்ஓட்டைகள் இல்லாமல் நன்றாகவே இருந்தது. நாம்தான்கிராபிக்வழித்தடத்தின் மூலம், தேசியவிருதுகள் பெற்ற மலையாள ஆர்ட்பிலிம்களை ரசிக்கும் மனநிலைக்கு மாறிவிட்டோம். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஇன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும்
ReplyDeleteசீனியர் எடிட்டர் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன்🙏🏼🙏🏼🙏🏼
இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்🙏🏼🙏🏼🙏🏼🎂🎂🎂💐💐💐
.
சீனியர் எடிட்டர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .......
Deleteசீனியர் எடிட்டர் அவர்களுக்கு பிறந்தநாள் வணக்கங்கள்..!
Delete🙏🙏🙏🙏🙏
சீனியர் எடிட்டர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎊 சார்..
Deleteமதிப்பிற்குரிய சீனியர் எடிட்டர் அவர்களுக்கு
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
சொல்ல வயது போதாததால் வணங்குகிறேன்🙏🏼🙏🏼🙏🏼
💐💐💐💐💐💐💐
Delete🎂🎂🎂🎂🎂🎂🎂
மதிப்பிற்குரிய சீனியர் எடிட்டர் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
& வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
----STV, தாமரை & நிரு!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சீனியர் எடிட்டர் சார்.
Delete******* பயமே ஜெயம் ******
ReplyDeleteசித்திரங்களை சற்றே கூர்ந்து கவனிக்கத் தவறினால் நிறைய சமாச்சாரங்களை விட்டுவிடுவோம் என்பதற்கு இந்தப் படைப்பும் ஒரு உதாரணம்!
எனக்கு எப்போதுமே கர்னலின் கதைகள் கூடுதல் சிரிப்பை வரவழைக்கும்! காரணம் - தோற்றத்தில் இருக்கும் ஒற்றுமை, செயல்பாடுகள் ஆகிய சமாச்சாரங்கள் எனக்கு ஏனோ கர்னலை நம் எடிட்டராக உருவகப்படுத்திக் கொள்ளத் தோனும்! (மன்னிச்சூ எடிட்டர் சார்!)
கர்னலின் மீசையை கருப்பாக்கிக் கீழ்நோக்கி வளைத்துவிட்டு, மண்டையில் கொஞ்சம் முடியைக் குறைத்துவிட்டால் - இதோ - எடிட்டர் ரெடி!
ஹோ ஹோ ஹோ!!! :)))))
என்னுடைய ரேட்டிங் : 9.5/10
தலைமை ஆசிரியருக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமதிப்பிற்குரிய சீனியர் எடிட்டருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வயதில்லை வணங்குகிறேன்.
ReplyDelete🎂🎁💐🌹🎊🎆🎉💥🌈🎇🍰
நண்பர்கள் அனைவருக்கும் கிரிஸ்துமஸ் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete
ReplyDeleteசீனியர் எடிட்டர் அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நண்பர்களனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteசெளந்தர பாண்டியன் ஐயாக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete199..
ReplyDeleteLoad more..
ReplyDelete201
ReplyDeleteக்ளாசிக் 007 கண்டிப்பாய் தொடரலாம் எடி.சார்.
ReplyDeleteஆனால்..
இன்னும் கொஞ்சம் மேம்பட்ட தரத்தில்..
ஆகக் கூடிய விலையில்..?
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteசார் அடுத்த மாதம் லாக்டவுன் வாய்ப்புள்ளதாமே....பேரிடர் காலத்து போரடிக்கும் பொழுதுகளுடன் போரிட பேராண்மை கொண்ட தோரானை முன்னரே அனுப்பி காக்க முடியுமா
ReplyDeleteபின்னூட்டத்தை விட பேரு பெருசா இருக்கே ஸ்டீல்.?? 🏃🏃🏃🏃🏃
Deleteசார் இன்று பதிவுக்கிழமை என்று நினைவூட்ட கடமை பட்டுள்ளேன்.
ReplyDelete