நண்பர்களே,
வணக்கம். பிப்ரவரியின் நான்கை உங்களிடம் பிப்ரவரின் ஒன்றுக்கே ஒப்படைத்த கையோடு இந்த ஒற்றை வாரயிறுதியனை சற்றே லாத்தலாய்ச் செலவிட நினைத்தேன் ! So இம்முறை பதிவானது - 'பராசக்தி' வசனம் போலில்லாது - மணிரத்னம் பட டயலாக் போலவே இருந்திடும் ! ஆகையால் இந்த ஞாயிறை சுவாரஸ்யமாக்கும் பொறுப்பானது உங்களின் அலசல்களிடமே இம்முறை !!
ஆர்ச்சியின் மறுவருகையும், "தனியே,,,தனித்தனியே"-வின் novelty-ம் துவக்க கவனங்களைத் தமதாக்கியிருக்க, கார்சனின் நண்பரான அதிகாரியின் திசையில் ஸ்லீப்பர் செல்களைத் தவிர்த்து வேறு யாரும் பயணித்துள்ளதாய்த் தெரியக்காணோம் ! ஒரு பட்டாசு அங்கே காத்திருப்பதால் அதனுள் நீங்கள் புகுந்திடும் வேளை புலர்வதற்குக் காத்திருப்பேன் ! Maybe இந்த ஞாயிறு அந்தப் பொழுதாகின் - சூப்பர் தான் !
Very very early days yet - ஆனால் எதிர்பார்த்தபடியே அண்ணாத்தே ஆர்ச்சி கொணர்ந்திருப்பது இரு வேறு துருவங்களிலான விமர்சனங்களையே ! பழமையை இன்னமும் ஒரு உத்வேகத்தோடு போற்றிட ; பாராட்டிட எண்ணும் நண்பர்கள் விட்டத்தைத் தொடக் குதிப்பது நிச்சயம் ; and பழமையை மியூசியங்களோடு மட்டுமே முடிச்சுப் போட்டு வைத்திருக்கும் இன்றைய ஜனத்துக்கு, குளிர் காய்ச்சல் வராத குறையாய்த் தூக்கித் தூக்கிப் போடும் என்பதும் எனக்குத் தெளிவாகவே யூகிக்க முடிந்திருந்தது ! So இரு வேறு திக்குகளிலான extreme reactions தென்படுவதை பார்த்திடும் போது எனக்கு பெருசாய்த் தூக்கிவாரிப் போட்டில்லா ! And இதோ -இன்றைக்கு எனக்கு வந்திட்டதொரு மின்னஞ்சலின் சற்றே எடிட் செய்யப்பட பிரதி :
------------------------------------------------------------------------------------------------------------
"ஆர்ச்சி இருக்க பயமேன்!"
லயன் காமிக்ஸ் நிறுவனத்தின் ரூபாய் நாற்பது விலையிலான இதழ். !!
முதலில்--
'அறிவு ஜீவி' என்ற பட்டத்தோடு வாழும் மனிதரா நீங்கள் ? கொஞ்சம் தள்ளிப் போங்கள் !!
புராணங்களின் மூட்டை மூட்டையான புளுகுகளையும், கட்டுக்கதைகளையும் அப்படியே நம்பும் மனிதரா நீங்கள் ? ஆனால் ஜஸ்ட் ஒரு 'டைம் பாஸூக்காக' படிக்கும் காமிக்ஸ்களில் "அது நொட்டை !! இது சொட்டை !!" என்று சொல்லிடும் மனிதரா நீங்கள் ? நீங்களும் தள்ளிப் போங்கள் - ப்ளீஸ் !!
மூத்தோர், முதியோரெல்லாம் திரையில் இன்றுவரை டூயட் பாடி நூறு பேரை அடிப்பதையும், டூயட் காட்சியில் எவ்வளவுதான் ஓடினாலும் நாயகனும், நாயகியும் மூச்சிறைக்காமல் ஒரு வரிகூட மறக்காமல் பாட்டென்ற பெயரில் நம்மை வதம் செய்வதையும் ரசிப்பார்களாம் ! பாடலின்போது கற்பனையென்ற பெயரில் வெளிநாட்டின் தெருக்களில் ஓடி ஆடி நம் நாட்டின் மானத்தை கப்பலேற்றுவதை குறை சொல்ல மாட்டார்களாம் ! இப்படி பலப்பல அபத்தங்களை பலநூறு செலவழித்து ரசிப்பார்களாம் ! ஆனால் ...........
ஒரு காமிக்ஸென்று வந்து விட்டால் ஐம்புலன்களும் விழித்துக் கொள்வது நிகழ்ந்து பூதக் கண்ணாடியை வைத்துக்கொண்டு லாஜிக் பார்ப்பதே அரங்கேறிடுகிறது ! சாரி, நீங்கள் இந்த ரகமாயிருப்பின், இந்த இதழ் உங்கட்கு அல்ல !
இனி--
*ஓடும் ரயிலில் ஜன்னலோர இருக்கை,
*பல்லில்லா பாட்டியின் மழலைப்பேச்சு
*வீதியில் உலா வரும் யானை
*பாதங்களை தொட்டு விளையாடும் கடலலைகள்
*தள்ளுவண்டி ஐஸ் க்ரீம்
இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களை இன்னமும் மறக்காமல் அனுபவித்து வாழும் மனிதரா நீங்கள் ?
அப்படியானால் நீங்கள் மட்டும் வாருங்கள் !!
உங்களுக்காகத்தான் 'யாமிருக்க பயமேன்' ஆர்ச்சியின் கதை !!
ஆர்ச்சியைப் போல நாமும் கால யந்திரத்தில் ஏறி நம் இளமைக்காலத்தை நோக்கி பயணிக்கலாம் !! ஒரு ஆர்ச்சியின் கதையில் என்னென்ன இருக்க வேண்டுமோ அது அத்தனையையும் உள்ளடக்கி 'பளிச்' சென்ற அட்டைப் படத்தோடு நம் பர்ஸை அதிகம் பதம் பார்க்காமல் ஒரு ஜாலி ரவுண்டுக்கு கேரண்டி நிச்சயம் !!! நம் வீட்டு சுட்டீஸ்களுக்கு விடுமுறை தினங்களை ஜாலியாக்கவும் உதவும். குழப்பங்களும், ட்விஸ்டுகளும் இல்லாத எளிமையான கதை.
அறிவு பூர்வமாக எழுதும் எழுத்தாளர் என்று அறியப்பட்ட சுஜாதாதான் "பூக்குட்டி"யையும் எழுதினார். So வெகுஜன ரசனைகளுள் ஒரு அங்கத்தை ஜாலியாக படிக்கலாம் வாங்க !!!
------------------------------------------------------------------------------------------------------------
இந்த மின்னஞ்சலை அனுப்பிய நண்பரும் இங்கே உலவிடும் ஒரு ரெகுலரான அங்கத்தினரே ! நெஞ்சுக்கு நெருக்கமானதொரு தலைப்பின் மீதான நேசத்தில் இங்கே அழுத்தமாய்ப் பதிவிட்டு விட்டு, அதன் நீட்சியாய் சர்ச்சைகள் / அர்ச்சனைகள் தேடிக் கொள்ள வேண்டாமே - என்ற முன்ஜாக்கிரதை நண்பருக்கு ! நியாயமாய்ப் பார்த்தால் எனக்கென நண்பர் அனுப்பியதை என்னோடே வைத்திருப்பதே நியாயமாக இருக்கக்கூடும் ; ஆனால் அவரது வரிகளின் வலிமை இங்கு பொதுவெளியிலும் தெறிப்பதில் தப்பில்லை என்று பட்டது ! So நண்பரே - உங்களின் மின்னஞ்சலை இங்கே பிரசுரிக்கும் உரிமையை எடுத்துக் கொண்டிருக்கிறேன் !!
Of course - 'மிடிலே ஆர்ச்சி !!" அணியினருக்கு இந்த மின்னஞ்சல் மீது நிறையவே மாற்றுக் கருத்துக்கள் ; வலுவான எதிர்சிந்தைகள் இருக்குமென்பது சர்வ நிச்சயம் ! Maybe எரிச்சலும் தோன்றிடலாம் தான் ! புளுகாமல் நிஜத்தைப் பேசுவதானால் - நானுமே அந்த 'மிடிலே ஆர்ச்சி" அணியினில் தான் இப்போது வரைக்கும் சவாரி செய்து வருபவன் !! முப்பது ஆண்டுகளுக்கு முன்னே ரசிக்க முடிந்ததை ஆயுளின் முக்கால்வாசியைத் தொட முனையும் தருவாயில் ரசிக்க முடியுமா என்ன ? என்ற எண்ணம் கொண்ட sceptic நானுமே !! ஆனால் மேலுள்ள மின்னஞ்சலில் நண்பர் கொட்டியிருக்கும் உள்ளக்கிடக்கை போலவே நிறைய தருணங்களில் ; நிறைய புத்தக விழாக்களில் ; நிறைய சந்திப்புகளில் மடை திறந்த வெள்ளமாய் - ஏகப்பட்ட நண்பர்கள் கொட்டித் தீர்த்துள்ளதைக் கேட்டிருக்கும் காதுகள் என்னது ! Of course - "முன்னே நாலு அடி எடுத்து வைத்த கையோடு பின்னே ரெண்டு அடி எடுத்து வைப்பது போலாகிடாதா இந்தப் பழமைத் தேடல் ?" ; "கடலாய் காமிக்ஸ் குவிந்து கிடக்கும் போது, பழசுக்குள் விடாப்பிடியாய்க் கிண்டிக் கொண்டே காலத்தைப் பாழ் பண்ணுவானேன் ?" என்று நண்பர்களிடம் கேட்டும் உள்ளேன் ! ஆனால் அவர்களது கண்களில் துவக்கத்தில் தென்படும் உற்சாகமும், நான் மறுதளித்த பிற்பாடு தென்படும் ஏமாற்றமும் ரொம்பவே குறுகுறுக்கச் செய்திடும் என்னை ! ஏதோவொரு விதத்தில் ஒரு தம்மாத்துண்டு சந்தோஷத்தை, அந்தப் பழமைக் காதலர்க்குக் கொணரும் ஆற்றலை பெரும் தேவன்மனிட்டோ எனக்கு அருளியிருக்க, நிர்தாட்சண்யமாய் நான் மறுப்பது சங்கடங்களைத் தரத் தவறியதே இல்லை ! And ஐம்பது+ இதழ்களை ஆண்டொன்றுக்குப் போட்டுத் தாக்கும் சூழலில், ஒன்றோ / இரண்டோ இதழ்களை மட்டுமேவாவது இந்த young at heart வாசகர்களின் புராதனைத் துழாவல்களின் பொருட்டுச் செலவிடுவதால் குடி முழுகிடாதென்று தீர்மானித்தேன் ! And இருப்பதில் குறைச்சலான விலையிலான இதழில் அதை நுழைத்தால் 'மிடிலே' அணிக்கும் பெருசாய் வருத்தம் நேர்ந்திடாதென்று நினைத்தேன் !
And இதோ - ஆர்ச்சியும் வெளிவந்து - காதில் புய்ப்ப கிட்டங்கியையே ஏற்றிவிட்டாலும், அதைக் குதூகலத்தோடு ரசிக்கும் நண்பர்களை ஓரமாய் நின்று மனநிறைவோடு ரசிக்கும் உணர்வு உள்ளுக்குள் ! பார் பாராட்டியதொரு கதையைக் கொணர்வதில் மட்டுமல்ல ; வாசகர்களின் சிறு கனவுகளை நனவாக்கிடும் கதைகளைக் கொணர்வதிலும் கூட ஒரு சுகமுண்டு என்பதை இந்த பிப்ரவரி எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது !! அதற்காக "எட்றா வண்டிய ;போட்றா ரிவர்ஸ் கியரை !" என்றெல்லாம் நாம் ரூட் மாறப் போவதில்லை தான் ! ஆனால் லாஜிக் அறியா இந்த சந்தோஷங்களின் பொருட்டு இக்ளியூண்டு சிந்தனையையாவது செலவிடுவதால் தப்பில்லை என்ற புரிதலும் நம்மிடம் இருக்கும் தான் ! Bye all !! See you around !! Have a beautiful Sunday !!
And do keep the Feb reviews going guys !!
P.S : கனடாவின் டொரோண்டோ நகரின் Stoufeville பொது நூலகம் ஒன்றில் நமது காமிக்ஸ் இதழ்கள் இருப்பதை நண்பர் (சென்னை) மகேஷ் குமார் பார்த்திருக்கிறார் ! இவை அவர் க்ளிக் செய்த போட்டோக்கள் !! நூலகத்துக்கு இவற்றை வழங்கிய முகமறியா நண்பருக்கும், தகவல் தெரிவித்த நண்பருக்கும் நம் நன்றிகள் உரித்தாகுக !!
இன்றுதான் புக்ஸ் கைப்பற்ற முடிந்தது. இன்னும் படிக்கவில்லை. ஆனால் ஆர்ச்சி மிகவும் வசீகரித்தார் என்பதை மறுக்க முடியாது. அட்டை படம் மேக்கிங் அருமை. சூப்பர் ஓவரில் பட்டைய கிளப்ப போகிறார் ஆர்ச்சி அண்ணாத்தே.
ReplyDeleteகனடாவின் டொரோண்டோ நகரின் Stoufeville பொது நூலகம் ஒன்றில் நமது காமிக்ஸ் இதழ்கள் இருப்பதை நண்பர் (சென்னை) மகேஷ் குமார் பார்த்திருக்கிறார்///
ReplyDeleteஅருமை மகேஷ் ஜி
Thanks Mr. Ramesh.
DeleteLooking forward to know about the fellow comic reader, who has gifted those books to library.
Hai friends😊😊😊
ReplyDelete5th
ReplyDeleteHello friends
ReplyDeleteஹலோ வணக்கம்...no 7..
ReplyDeleteஆர்ச்சிக்கு ஜே
ReplyDelete+111 ஜே 👍👍👍
Deleteபத்துக்குள்ள
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteகனடா நூலகத்தில் எமது புத்தகங்கள்—- சூப்பர் மகேஷ் ஜி!
ReplyDeleteThank you sir!
Deleteநண்பர் எண்ணவோட்டம் மிகவும் சரியே..என்ன தான் 2.0 போன்று படம் வந்தாலும் அப்பப்போ கொஞ்சம் விட்டாலாச்சாரிய படமும் பார்த்தால் தான் மனசு சற்றுசற்றும ப்ரீயாக ஆகிறது என்பதை மறுக்க முடியாது.
ReplyDeleteஆதலால். முடிந்தால் வரபடத்திற்கு 2 முறையாவது காதில் பூ சுற்றும் கதைகளை கொடுக்கவும்...நன்றி 💐💐💐💐
அருமை
Delete2.0 வே ஆர்ச்சிதானே சார்
Deleteபோனில் டிஸ்ப்ளே கொஞ்சம் கறுப்பாக இருப்பதால் எழுத்து பிழை வருகிறது. ..மன்னிக்கவும்
ReplyDeleteஆர்ச்சியை அட்டைப்படத்தில் பார்க்கும்போதே பரவசம் தொற்றிக்கொள்கிறது இந்த காமிக்ஸ் வருடம் என்னுடைய கனவு நனவாகிய வருடம் 007. ஆர்ச்சி.என தொடர்ச்சியாக ஆனந்த மழையில் நனைகிறேன்(ஜன்னி வந்தாலும் சந்தோஷமே) நன்றி ஆசிரியரே
ReplyDeleteஉங்களை நனைக்கும் அந்த மழையானது புழல் ஏரியையும் செம்பரம்பாக்கத்தையும் சேர்த்தே ரொப்பினால் செமையா தான் இருக்கும் சத்யா !!
Deleteசென்னை ஏரிகள் ஆந்திராவின் புண்ணியத்தால் நிரம்பி இருக்கிறது ஆசிரியரே எங்கள் காமிக்ஸ் தாகத்தை தீர்க்க உங்களால் மட்டுமே முடியும் ஆசிரியரே
Deleteகனடா மட்டும் தானா...கொஞ்சம் அமெரிக்கா,ஜப்பான்,ஆப்பிரிக்கா என்று ரவுண்ட் கட்டிருக்கும் என்று அல்லவா நினைத்து இருந்தேன்..
ReplyDeleteகனடாவில் நமது புத்தகங்கள் மனதைச் சந்தோஷப்படுத்தியது.நமது காமிக்ஸ் இதழ்கள் இன்னும் நிறையச் சாதனைகள் புரியப் போவது உறுதி.
ReplyDeleteஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று இதழ்கள் எமது பால்யங்களை மீட்டெடுக்க வருவதில் தவறில்லை என்றே தோன்றுகின்றது.கிளாசிக் 007 மற்றும் ஆர்ச்சி இதழ்கள் மாபெரும் வரவேற்பைப் பெரும் சந்தேகமில்லை.
ReplyDeleteஇதோ எனது கரமும்
Delete++++++111111
Deleteஆர்ச்சியை மீண்டும் உயிர்ப்பித்தமைக்கு நன்றி ஆசரியரே!
ReplyDelete//And ஐம்பது+ இதழ்களை ஆண்டொன்றுக்குப் போட்டுத் தாக்கும் சூழலில், ஒன்றோ / இரண்டோ இதழ்களை மட்டுமேவாவது இந்த young at heart வாசகர்களின் புராதனைத் துழாவல்களின் பொருட்டுச் செலவிடுவதால் குடி முழுகிடாதென்று தீர்மானித்தேன்//
ReplyDeleteஇந்த தீர்மானத்தின்படி முகமூடி வேதாளர்,மாண்ட்ரெக் கதைகளுக்கும் முன்னுரிமை அளித்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
படைப்பாளிகள் எனும் சாமிகளின் வரம் வேண்டுமே சார் - இந்த எடிட்டர் எனும் பூசாரி செயல்படுத்திட !
Deleteமாண்ட்ரேக் சாத்தியமே ; but இங்கே வாசக பக்தாளின் வரங்கள் வேணுமே - நடைமுறை கண்டிட !
வரம் தரும் பக்த கோடிகள் வரிசையில் வரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்ளும் பக்தகோடி பத்மநாபன்.
Deleteமுதலில் மாண்ட்ரேக்கை களமிறக்குங்கள் சார். அப்புறம் அவரோட மந்திரஜாலம் மூலமாக வேதாளனை வர வைப்போம்.
Deleteஉங்களுக்குப் பின்னே உங்கள் நிழல் மாத்திரமே நிற்கிறதே சார் !!
DeleteI am in que behind padmanaban
DeleteMe too!
Deleteகூட்டம் கூடுதுடோய் !!
Deleteநானும் மாண்ட் ரெக்கை ஆதரிக்கிறேன்.
Deleteவூஹூ !
Delete
Delete//உங்களுக்கு பின்னே உங்கள் நிழல் மாத்திரமே நிற்கிறதே சார் !!//
அறிவிப்பு வெளியிடுங்கள் சார்.நிழல் எது நிஜம் எது என்பது தெரிய வரும்.( இந்த மாண்ட்ரெக் கதை, எனது ஆல் டைம் பேவரிட் கண்ணாடிக்கு பின் இருக்கும் மாண்ட் ரெக் மற்றவர்கள் பேசுவது ரிவர்ஸில் வரும். அருமையான கற்பனை)
மாண்ட்ரெக் கதைகளில் பிடித்தது. (நினைவில் இருப்பது)
Delete1. சூ.. சேவல் நாகம்.
2. எமக்குறி எட்டு.
3. அஷ்ட துஷ்டன
4. இருளின் விலை இரண்டு கோடி.
5. மாண்ட்ரெக் இன் தம்பி ட்ரெக்வில்லனாக வந்து ஹிப்நாடிஸ் மேnதல் நடக்கும் கதை.
6. லூஸிபர் வில்லனாக வரும் கதை.
இவை எல்லாமே நிழலாக நினைவில் நிற்பவை.
சார்... இனிமே கி.நா. கூட போடலை !!
Deleteபோதும் சார்....முதுகு இதுக்கு மேலேயும் தாங்காது !
மாண்ரேக்...
Deleteகூடும் கூட்டத்தில் நானும் ஒருவன்..
வேதாளர், மாண்ட்ரெக்..பெயரை சொன்னாலே ச்சும்மா அதிருதில்ல. ஆசிரியரேயே தெறிச்சு ஒட வைக்குது.
Deleteஎனக்கும் மாண்ரெக்
Deleteநானும்
Deleteநானும் . என்னுடைய ஆல் டைம் favourite விபரீத வித்தை .
Deleteமான்ட்ரேக், லொதார்.....!!!!
Deleteஆர்ச்சி: Nostalgic Factor
ReplyDeleteமுதல் இடத்தில் கிராபிக் நாவல், சிறிதே சிறிது பின்னர் மார்ஷல் சைக்ஸ்.
டெக்ஸ் பின்னரே வர முடிந்தது. கிராபிக் நாவல் அதகளம் 👍
Though a few condemned the idea of Archie reprint, definitely it added a nostalgic factor the pep that went missing for a while... Kudos to editor for taking a bold decision that too with an issue of low price tag. 🙏👍
ReplyDeleteசார்... "நோஸ்டால்ஜியா" எனும் ஒரு அஸ்திரத்தைத் தாண்டி இங்கே உள்ள சமாச்சாரங்கள் சொற்பமே என்பதை நீங்களும் அறிவீர்கள் ; நானும் அறிவேன் !
DeleteJust for old times sake !!
சார் கதையிருக்கே
DeleteLoyalty points க்கு ஆர்ச்சியா?
ReplyDelete2020 சந்தாவிற்கு ப்ரியாக ஆர்ச்சியா?
லாயல்ட்டி பாயிண்டுக்கு கலர் ஆர்ச்சி சார்.
Delete2020 சந்தாக்கான லாயல்டி பாய்ண்ட்ஸ்களுக்கு ஈடாக கலர் ஆர்ச்சி !
DeleteHi..
ReplyDeleteஎத்தனை எத்தனை கி.நா.க்களை பொறுத்துக் கொண்டோம்..
ReplyDeleteஆர்ச்சி மாதிரி ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ பொறுத்துக் கொள்வதில் தவறில்லை...
ஆர்ச்சிக்கு ஜே...
ரூ.40 விலையில் 40 வருடங்கள் பின் நோக்கி அழைத்துச் சென்ற ஆசிரியருக்கு அன்பு வணக்கங்கள்
ReplyDeleteமறுபடியும் 2020-க்குத் திரும்பிடும் வரையிலும் ஓ.கே தான் சார் !
Deleteஇரண்டுமே இனிமைதானே
Deleteபால்யங்களை மீட்டெடுத்த அற்புதமான தருணம் இது. முதலில் 007, இப்போது ஆர்ச்சி... இன்னும்..... இன்னும்.... வேண்டும்... நன்றிகள் சார்!
ReplyDeleteஇந்த வருஷத்துக்குப் போதும் சார் !
Delete///கனடாவின் டொரோண்டோ நகரின் Stoufeville பொது நூலகம் ஒன்றில் நமது காமிக்ஸ் இதழ்கள் இருப்பதை நண்பர் (சென்னை) மகேஷ் குமார் பார்த்திருக்கிறார் ! இவை அவர் க்ளிக் செய்த போட்டோக்கள் !! நூலகத்துக்கு இவற்றை வழங்கிய முகமறியா நண்பருக்கும், தகவல் தெரிவித்த நண்பருக்கும் நம் நன்றிகள் உரித்தாகுக !! ///
ReplyDeleteஅடடே!! சூப்பர்!!
கனடாவில் இரத்தப்படலம் அருமை...நன்றி முகமறியா நண்பரே....👌👌👌
ReplyDeleteMs jayakumar hai friends
ReplyDeleteவணக்கம் நண்பரே
Deleteஞாயிறு வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼
ReplyDelete.
// ஐம்பது+ இதழ்களை ஆண்டொன்றுக்குப் போட்டுத் தாக்கும் சூழலில், ஒன்றோ / இரண்டோ இதழ்களை மட்டுமேவாவது இந்த young at heart வாசகர்களின் புராதனைத் துழாவல்களின் பொருட்டுச் செலவிடுவதால் குடி முழுகிடாதென்று தீர்மானித்தேன் ! //
ReplyDeleteஉங்களுடைய கணிப்பு சரியே சார் 🙏🏼
நேற்றைய திருப்பூர் புத்தக திருவிழாவிற்கு வந்திருந்த இரு இளைஞர்கள் புரட்டிய மற்றும் தனது மகனிடம் விவரித்துக்கொண்டிருந்தது மாயாவி பற்றியே 🤷🏻♂️
அதனால் நீங்கள் சொன்னதுபோல வருடத்திற்கு ஒரு புத்தகம் வருவது நன்றே சார் 🙏🏼
.
ஒரு துளி துரோகம்
ReplyDeleteஎனது மதிப்பெண் 7/10. Climax twist யூகிக்க முடிந்ததே என் அளவில். எனவே பெரியதாக ஈர்க்க வில்லை. டெக்ஸ் ரசிகர்களுக்கு வேறு மாதிரி தோன்றலாம். மற்ற நண்பர்களின் கருத்துகளுக்காக காத்து இருக்கிறேன்.
இந்த மாத ரேட்டிங்
தனியே தன்னந்தனியே -10/10
அந்தி யின் ஓர் அத்தியாயம் -10/10
ஒரு துளி துரோகம் - 7/10
ஆர்ச்சி - __/10
இன்ஃபினிட்டிவோ
Deleteஆர்ச்சி அட்டைப்படம் மேக்கிங் அருமை! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இதழ்! இதே போல அவ்வப்போது ஒவ்வொரு ஓய்வு பெற்ற நாயகளுக்கும் வாய்ப்பு கொடுத்தால் மகிழ்ச்சி தான்!
ReplyDelete///ஓய்வு பெற்ற நாயகளுக்கும் வாய்ப்பு கொடுத்தால் ///
Deleteஒரு புளோவுல 'நாய்களுக்கும்'னு படிச்சுட்டேன் கலீல்! :D
நானும் தான் விஜய்
Deleteஒரு துளி துரோகம் டெக்ஸ் கதைகளே அட்டகாசம் எனில் இது ஒரு மைல்கல் அட்டகாசம்.கதையின் இறுதியில் வரும் "நீ..." எனும் ஒரு சொல் வசனம் வரை யூகிக்க இயலாமல்,யார் களவானி என்பதை இறுதி வரை மர்மமாக கொண்டு சென்றது நன்று.டெக்ஸின் திட்டமிடல் அருமை.இதுவே இக்கதையின் ஹீரோ டைகர் எனில் என்னா ஒரு சஸ்பென்ஸ்!என்னா ஒரு திறமை!என்று கொண்டாடி இருப்பார்கள்.அற்புதமான கதை .டெக்ஸ் ரசிகனாக இல்லாமல் இருந்திருந்தால் கூட எனது மதிப்பெண் 10/10
ReplyDelete//இதுவே இக்கதையின் ஹீரோ டைகர் எனில் என்னா ஒரு சஸ்பென்ஸ்!என்னா ஒரு திறமை!என்று கொண்டாடி இருப்பார்கள்.//
Delete:-)
இந்த மாத ரேட்டிங்
ReplyDelete1.தனியே தன்னந்தனியே - நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த சிறந்த HORROR கதை .. சித்திரங்கள் பெரிய ப்ளஸ் /.. 9/10 ..
2. அந்தியின் ஓர் அத்தியாயம் .. "எமனின் திசை மேற்கு "பிறகு வந்த பெஸ்ட் ஒன் ஷாட் கவ்பாய் கதை .. 9/10
3. ஆர்ச்சி இருக்க பயமேன் ?? - ஆர்ச்சி இருக்கறது தான் பயமே ..
அட்டைப்படம் MAKING அருமை .. மற்ற படி மிடில .. THIS S ONLY FOR ARCHIE FANS ..
4.தல இன்னும் படிக்கல ..
//ஆர்ச்சி இருக்க பயமேன் ?? - ஆர்ச்சி இருக்கறது தான் பயமே .. //
Deleteஹி ..ஹி !!
சிரிங்க நல்லா சிரிங்க...வெற்றி வரய்ல பாருங்க
Deleteஅது ஆருங்க கவிஞரே - வெற்றி ? நம்ம கூட்டாளியா ?
Deleteஸ்டீல் ஜி..
Deleteவெற்றி நமதே..
விற்பனை உச்சம் எட்டட்டும்..!
சார் கூடவே வரும் அவர் சீக்கிரமே தோள்ல கை போடுவார்...
Deleteகுணா நிச்சயம்
// ஐம்பது+ இதழ்களை ஆண்டொன்றுக்குப் போட்டுத் தாக்கும் சூழலில், ஒன்றோ / இரண்டோ இதழ்களை மட்டுமேவாவது இந்த young at heart வாசகர்களின் புராதனைத் துழாவல்களின் பொருட்டுச் செலவிடுவதால் குடி முழுகிடாதென்று தீர்மானித்தேன் !
ReplyDelete######
உண்மையே...:)
///கனடாவின் டொரோண்டோ நகரின் Stoufeville பொது நூலகம் ஒன்றில் நமது காமிக்ஸ் இதழ்கள் இருப்பதை நண்பர் (சென்னை) மகேஷ் குமார் பார்த்திருக்கிறார் ! இவை அவர் க்ளிக் செய்த போட்டோக்கள் !! நூலகத்துக்கு இவற்றை வழங்கிய முகமறியா நண்பருக்கும், தகவல் தெரிவித்த நண்பருக்கும் நம் நன்றிகள் உரித்தாகுக !! ///
ReplyDeleteஅருமை அருமை ...
இதழ்களை பிடிக்க அவசர அவசரமாய் படையெடுத்து கொண்டிருக்கறேன் இல்லத்தை நோக்கி...
ReplyDeleteவணக்கம் ஆசிரியரே! நண்பர்களே!
ReplyDeleteமுதலில் தாமதமாக பதிலளிப்பதற்காக வருந்துகிறேன்.
சகல புத்தகங்களுக்கும் 25% கழிவு தர முன்வந்த ஆசிரியருக்கு எம் மாணவர்கள் சார்பாக மிகுந்த நன்றிகள் சார்!
வாழ்த்துகள் தெரிவித்து ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இச்செய்தியை இங்கும் வலைப்பூவிலும் பகிர்ந்து உதவிய நண்பர் சிவாவுக்கும் நன்றிகள்.
உள்ளபடியே இது சற்று மிகைப்படுத்தப்பட்ட செய்திதான். எந்த மாணவருக்கும் நான் இலவசமாக எந்த புத்தகங்களையும் வாங்கித் தரவில்லை. இந்த புத்தகங்கள் அனைத்தும் மாணவர்கள் தங்கள் சொந்த சேமிப்பை கொண்டு வாங்கியவையே... அதிலும் 100 முதல் 150 வரை மட்டுமே இந்த விழாவிற்கு பயன்படுத்த அனுமதி அளித்திருந்தேன். ஏற்கனவே வகுப்பறையின் வாசிப்பு முனையில் (reading corner) அவர்களுக்கு சித்திரக்கதைகளை அறிமுகம் செய்ய வாங்கிய புத்தகங்களும், இந்த புத்தக விழாவிற்கு மாணவர்களை அழைத்துவர வாகனம் ஏற்பாடு செய்து எரிபொருள் நிரப்பியது மட்டுமே என்னாலான பங்களிப்பு.
எற்கனவே ஒருமுறை வலைப்பதிவில் குறிப்பிட்டு இருந்தபடி சென்ற ஆண்டு புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஊட்டி நமது காமிக்ஸ் அரங்க எண்ணையும் தெரிவித்து பெற்றோர் உடன் சென்றுவர விழைத்திருந்தேன். ஏறத்தாழ 120 மாணவர்களில் சென்று வந்தோர் 15க்கும் குறைவே, காரணம் பெற்றோரின் ஆர்வமின்மையும், நேரமின்மையுமே... மாணவர்கள் இதை வருத்தத்துடன் என்னிடம் தெரிவித்த போது நான் எடுத்த முடிவுதான் வரும் ஆண்டுகளில் நாமே அழைத்துச் செல்ல முயற்சிக்க வேண்டும் என்பது. அது இந்தமுறை நனவாகி இருக்கிறது. எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒத்துழைப்பும் என்னுடன் பணிபுரியும் சக ஆசிரிய நண்பரின் உதவியுடனுமே இது சாத்தியமாயிற்று.
ஏறத்தாழ எட்டு மாதங்களாக காமிக்ஸ் வாசிப்புக்கு பழகிய மாணவர்களின் சுயவிருப்பத்துடனேயே புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தனர், அவற்றில் பல அவர்கள் ஏற்கனவே வாசித்தவையே, தங்கள் உடைமையாக்கிக் கொள்ள வேண்டிய அவர்கள் விரும்பியதன் பேரிலேயே தனித்தனியாக அவரவர் பெயரிலேயே பில் செய்யக் கோரியிருந்தேன், அரங்கில் இருந்த லயன் அலுவலக நண்பர்களுக்கும் நன்றிகள்.
மேலும் சித்திரக் கதைகள் மாணவர்களின் கற்பனை திறனையும், விரிவு சிந்தனையையும் வளர்க்கின்றன, இது சார்ந்த எனது செயல் ஆராய்ச்சி குறித்து ஈ.பு.வி. சந்திப்பின் போது நண்பர்களிடம் கலந்துரை யாடியிருந்தேன். ஆசிரியர் பணிமனைகளிலும், கலந்தாய்வுக் கூட்டங்களிலும் இது குறித்து திரும்பத் திரும்ப பதிவு செய்ததன் விளைவாக இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடப் புத்தகங்களில் சித்திரக் கதைகள் ஓர் கற்பிக்கும் யுக்தியாக அரசால் ஏற்றுக் கொள்ளப் பட்டு அவை இடம் பிடித்துள்ளதைக் காணலாம். நண்பர்கள் வாய்ப்பு இருந்தால் அவற்றை வாசித்து பாருங்களேன்...
இவ்வளவு நேரம் தங்கள் நேரத்தை ஒதுக்கியமைக்கு அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்!
// சகல புத்தகங்களுக்கும் 25% கழிவு தர முன்வந்த ஆசிரியருக்கு எம் மாணவர்கள் சார்பாக மிகுந்த நன்றிகள் சார்!//
Deleteஅருமை,அருமை வாழ்த்துகள்.......
Saravanan @ I just like you!
Deleteசரவணன் @ உங்கள் கருத்து மற்றும் முயற்சிகள் அனைத்திற்கும்
Deleteபல கைதட்டல்கள்.
சரவணன் @ உங்கள் கருத்து மற்றும் முயற்சிகள் அனைத்திற்கும்
Deleteபல கைதட்டல்கள்.
+111
///ஆசிரியர் பணிமனைகளிலும், கலந்தாய்வுக் கூட்டங்களிலும் இது குறித்து திரும்பத் திரும்ப பதிவு செய்ததன் விளைவாக இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடப் புத்தகங்களில் சித்திரக் கதைகள் ஓர் கற்பிக்கும் யுக்தியாக அரசால் ஏற்றுக் கொள்ளப் பட்டு அவை இடம் பிடித்துள்ளதைக் காணலாம்.///--
Deleteஅருமை சரவணன் சார். உன்னதமான முயற்சி நடைமுறையில் வந்தது அசாத்தியமான நிகழ்வு. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். தொடருங்கள் தங்களது நற்பணிகளை! காமிக்ஸ்களின் எதிர்காலம் வளரும் தலைமுறையினர் கைகளை சென்றடையம் முயற்சி முழுமை பெற்றுவிட்டால் வானம் வசப்படும்!!!
சரவணன் @ உங்கள் கருத்து மற்றும் முயற்சிகள் அனைத்திற்கும்
Deleteபல கைதட்டல்கள்.
//காமிக்ஸ்களின் எதிர்காலம் வளரும் தலைமுறையினர் கைகளை சென்றடையம் முயற்சி முழுமை பெற்றுவிட்டால் வானம் வசப்படும்//
DeleteVery true !!
@ saravanakumar வாழ்த்துக்கள் ஆசிரியரே! நீங்கள் ஓர் முன்மாதிரி!
Deleteவாழ்த்துகள் சார்.. அதுவும் நம்ம பகுதியில் இருந்து எனும் போது பெருமையாக இருக்கிறது சரவணன் சார்..
Deleteசூப்பர் ஆசிரியரே...ஆர்ச்சியயும் கொடுங்க
DeleteWeldon'sir.
Deleteசெயற்கரிய செயல். நன்றி.
தங்களது பணி தொடர்ந்து சிறப்பாக நடக்க வாழ்த்துகள் சகோதரரே..
Deleteகனடாவில் பொது நூலகத்தில நமது இதழ்களை பார்ப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது......
ReplyDelete// And இதோ - ஆர்ச்சியும் வெளிவந்து - காதில் புய்ப்ப கிட்டங்கியையே ஏற்றிவிட்டாலும், அதைக் குதூகலத்தோடு ரசிக்கும் நண்பர்களை ஓரமாய் நின்று மனநிறைவோடு ரசிக்கும் உணர்வு உள்ளுக்குள் ! //
ReplyDeleteநான் இன்னும் படிக்கலை,அதே நேரத்தில் புய்ப்ப கூடை ஆர்ச்சியையே இரசிக்கும் நமக்கு மெபிஸ்டோ சாகஸத்தை இரசிப்பதில் பெரும் சிரமமிராது என்ற கருத்தையும் இங்கே பதிவு செய்ய தோன்றுகிறது......
மொத்தமுமே புய்ப்பம் எனும் போது வேறு சாய்ஸ் லேது சார் ! ஆனால் சாய்ஸ் இருக்கும் சமயம் புய்ப்பத்தை நாடிப் போவானேன் ?
Deleteமணக்குதே...அதால மயக்குதே சார்...
Deleteஹி,ஹி, சார்......!!!!
Deleteஎனினும் முயற்சிகள் தொடரும் சார்......
//2020 சந்தாக்கான லாயல்டி பாய்ண்ட்ஸ்களுக்கு ஈடாக கலர் ஆர்ச்சி !//
ReplyDeleteஅதற்கு பதிலாக காப்பி டம்பளரோ இல்ல கடைசிக்கு காப்பி பொடியாவது மாத்தி வாங்கிக்கிற ஆப்சன் இருக்கா சார்..??
"அதிகாரியோட" புக் ஏதாச்சும் வாங்கிக்கற ஏற்பாடு ?
Delete///அதிகாரியோட" புக் ஏதாச்சும் வாங்கிக்கற ஏற்பாடு ?///
Delete:-)))))
போற உசிரு ஆர்ச்சியிலியே போகட்டும் சார்...
Deleteரம்மி @ :-)
Deleteஅதுதுது
அதிகாரிக்கு முரட்டு சிங்கிள்ஸ் மட்டுமன்றி முறைக்கும் டபுள்ஸ் கூட அடங்கிடுவதன் மாயம் என்னவோ ? Thinking..
DeleteWho is அதிகாரி?
DeleteI am unable to understand and missing the fun here.
//Who is அதிகாரி//
Deleteகார்சனின் நண்பர்..
Oh OK sir. TeX Willer is the king of Tamil comics. Only Maxi TeX can beat TeX.
Deleteஆர்ச்சி இருக்க பயம் ஏன்:
ReplyDeleteகோட்டையில் ஆர்ச்சியுடன் பயணம் செய்யும் நண்பர்கள் தவறான காலத்தில் இறங்க அங்கே ஒரு நபரை காப்பாற்ற முயற்சிக்க அங்கே குளறுபடி. அந்த குளருபடியை ஆர்ச்சி தனக்கே உரிய பாணியில் கையாண்டு வெற்றி பெறுவதே. சுபம்.
நமது காமிக்ஸில் இல்லாத சையின்ஸ் ஃபிக்ஷன் குறையை போக்குவதாக உள்ளது.
ஆர்ச்சியின் பழைய யூக்திகள் ரசிக்கும்படி உள்ளது. ஆர்ச்சியின் பஞ்ச் டயலாக்குகள் அருமை; இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்து இருக்கலாம். விக்டர் மற்றும் தாம்சன் வழக்கமான புலம்பல் ரகம், இவர்களுடைய டயாலக்குகளை வரும் கதைகளில் கொஞ்சம் மாற்றி எழுதினால் படிக்க சுவாரசிமாகலாம்.
ஆளில்லா கோச் வண்டியை ரசித்தேன் அது எப்படி அப்படி என்ற விளக்கம் அருமை.
கதை வேகமாக அடுத்த அடுத்த கட்டங்களுக்கு செல்வது சிறப்பு, ஆனால் அப்படி செல்லும் இடங்களில் வசனங்கள் இன்னும் கொஞ்சம் தொடர்பு உள்ளது போல் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
அட்டைப்படம் அருமை, கதையின் தலைப்பில் பற்சக்கரம் நட்டு போல்ட் மற்றும் ஸ்பானருடன் வடிவமைத்து சிறப்பு.
ஆர்ச்சி is back இன்னும் சிறப்பாக வந்து இருக்கலாம்.
சட்டியில் சிறப்பாய் இருந்திருப்பின் ... !
Deleteஅதைத்தான் நான் சுற்றி வளைத்து சொல்லியிருக்கிறேன் :-)
Deleteஆனால் வசனங்களில் நீளத்தை கொஞ்சம் கூட்டலாம்.
யாருக்கு கூட்டலாம் ? புதுசாய் என்ன சேதி சொல்லலாம் சார் ?
Delete71
ReplyDelete72..
ReplyDeleteசார் முன்னால நாலு அடி போகயில புதையல் பின்னால இருக்குதேன்னு தோணுனா இரண்டடி பின் வைத்துப் பார்த்தல் தவறில்லைதானே...எவ்ளோ சம்பாதித்தாலும் போதாதோ...தொடர்ந்து வருமானம் இதே போல வருமா ...அல்லது பொழுது போக்காய் சம்பாதிக்கவோ...ஓடிக்கொண்டிருக்கிறோம் பின் வரும் தலைமுறை சம்பாதிக்கும் என்ற நேர்மறை எண்ணமில்லாமலே அவர்கட்கும் சேர்த்தே...
ReplyDeleteஆனா சிறு வயதுல பிடிச்சத செஞ்/படிச்சோம்...பாகுபலிய இரசிக்கும் நமக்கு அன்றய லண்டன அற்புத ஓவியங்களால அதாவது அடர்த்தியாக அதாவது திரும்பும் சாலை ,குளம் ,மலை ,சக்கரத்தால் நீர் விசையால் இயங்கும் மில், மாந்தர் உடையலங்காரம் ,குதிரை வண்டி காட்சிகள என நம்மை ஈர்த்து லயிக்க வைக்கும் விடயங்களில் கவனத்த சிதற விட்டா...ஆட்சியாளர்களின் அன்றய சுயநலத்த இன்றும் காப்பாளர்கள வச்சி வயித்த வளர்க்கும் அரசுகளின் அவல நிலய உங்களால உணர முடிஞ்சா இதுவுமொரு கிநாவே...புரட்சி கருத்து தாங்கியஙகதைதானே...நல்லவன் என நம்பி , ஆர்ச்சி போல கொள்ளயன ஆட்சி பீடம் ஏற்றி வைக்கத் துடிக்கும் மக்களும் பின்னர் உணர்ந்து வெதும்பும் நம்மைப் போலல்லாது அவனைத் தூக்கும் ஆர்ச்சியின் ஹீரோயிசம் கொண்ட கதை...
நாம சிறுவயதுல சாலைகள வேடிக்கைப் பாத்து எளிமையான விசயங்களால உற்சாகப்படுவோமே நினைவிருக்கா....இப்ப கடிவாளமிட்ட குதுர போல பணம் மட்டுமே குறியா பாயுறமே இரசிப்பை தவறவிட்டபடி...அந்தத் தவற இங்க செய்ய வேண்டாமே அறிவாயுதம் ஏந்தி என்ன குறை என்ன குறைன்னு விளக்கெண்ணய் ஒரு லோட கண்ல பாய்ச்சிய படி...ஓவியம் தரும் கதைகள பாருங்க மீண்டும் குழந்தையாவதா கடினம்்்்
ஆர்ச்சி கரம் நீளும் ...பறக்கும்.. சூறாவளிக் காற்ற செலுத்தும் ...சுரங்கம் தோண்டும்...நல்லாதான இருக்கு் விஞ்ஞானத்தால இது வராம போய்டும்னு இன்று சொல்ல முடியுமா...யார் கண்டா உங்க குழந்தை கூட தூண்டப்பட்டு ஓர் ஆர்ச்சிய உருவாக்கலாம்...ஏன் நீங்களும் கூட தலையில் விழப்போகும் ஆப்பிளால ஆர்ச்சிய படைக்கலாம்...ஆர்ச்சியின் தலைக்கனமும்...நண்பர்களின் பரிதவிப்பான கோபமும்...வழக்கம் போல உலா வர அதிரடியாய் ஆர்ச்சி.. அது உருவாக்கும் குதிரயயும்....பாதாள வழியும் ...கொள்ளயற தாக்கி ராபின் ஹூட்ட காக்கும் அட்டகாசக் கதை...கூர்மயா பாத்தாலும் பூக்கவில்லை ,
பழுத்துள்ளது கதை...ஆர்ச்சி இருக்க பயமேன்...வாங்கிப் படிங்க ...எளிமையான விசயங்க தரும் சந்தோசத்த இழந்துராதிய...குழந்தைகளுக்கும் காட்டுங்க
என்னடா.. இன்னும் ஆளைக் காணோமின்னு நினைச்சேன்..
Deleteசார் ஒரு காட்டமான கேள்வி...அன்று ஆரச்சி ஸ்பைடர் இருந்தாலே ஓடுமே...அப்படியிருக்க தொன்னாறுகளின் தொய்வ சரி கட்ட இந்த அற்புதக்கதய வெளியிடும் எண்ணம் கொஞ்சமும் தோணலயா...மனத திறங்க
Deleteமிடிலே ஸ்டீல் !
Delete//இதுவுமொரு கிநாவே...புரட்சி கருத்து தாங்கியஙகதைதானே//
Deleteகுத்துங்க எசமான் ..குத்துங்க ! இந்த மாசம் உங்களது தானே !
//தொன்னாறுகளின் தொய்வ சரி கட்ட இந்த அற்புதக்கதய வெளியிடும் எண்ணம் கொஞ்சமும் தோணலயா...//
Deleteதொண்ணூறுகளின் தொய்வே ஏனென்று யோசித்துப் பாருங்கோ கவிஞரே !
கிராபிக் கமெண்ட்.
Deleteசார் ரிப் கெர்பி...மான்ட்ரேக் ...சில வக்கீல்கள்...காரிகன் என ஈர்ப்பிலா நாயகர்களுமே...டெக்ஸ் டைகர் பதிமூனு தூள் கிளப்பினரே்்்ஆர்ச்சியும் ஸ்பைடரும் வந்திருந்தால் கொஞ்சம் உயிர்ப்ப கூட்டியிருக்கலாம் என்பதே என் அசைக்க முடியா நம்பிக்கை
Deleteமுடியும் சார் நம்பித் துணிக கருமம்...
Deleteசங்கர் சிமெண்ட் போட்டதோ ஸ்டீல் ?
Deleteநண்பர்களே..கதைன்னாலே பூ மாதிரிதான...வாசத்த முகரனுமே தவிர கசக்கிப் பாக்கக் கூடாது...
Deleteவிஜய சிமண்ட்தான சார்
Delete//தொன்னாறுகளின் தொய்வ சரி கட்ட இந்த அற்புதக்கதய வெளியிடும் எண்ணம் கொஞ்சமும் தோணலயா...//
Delete//தொண்ணூறுகளின் தொய்வே ஏனென்று யோசித்துப் பாருங்கோ கவிஞரே !//
Ha ha. :)
"முப்பது ஆண்டுகளுக்கு முன்னே ரசிக்க முடிந்ததை ஆயுளின் முக்கால்வாசியைத் தொட முனையும் தருவாயில் ரசிக்க முடியுமா என்ன ? என்ற எண்ணம் கொண்ட sceptic நானுமே" ஆசிரியரின் கருத்து ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஒருங்கே தருகிறது. முப்பது வருடங்களுக்கு முன்னே Comics ரசித்தது, ஆனால் ஆயுளின் முக்கால்வாசியை கடந்து விட்டதால் Comics ரசிக்கவில்லை,எனவே நாவலுக்கு மாறிவிட்டேன் என்று கூற முடியுமா ? இன்னொரு முக்கிய விஷயம், ஆர்ச்சி, ஸ்பைடர், மாயாவி, மாண்ட்ரேக் கோருபவர்கள் எல்லாம் குழந்தைத்தனமான ரசனை கொண்டவர்கள் , Graphic Novel படிப்பவர்கள் முதிர்ந்த ரசனை கொண்டவர்கள் என ஆசிரியர் உள்ளிட்ட பலரின் எண்ணவோட்டம் உள்ளது. இது Comics படிப்பவர்கள் எல்லாம் குழந்தைத்தனமானவர்கள் என Comics படிக்காத நபர்கள் நினைப்பதை போன்றது. " தன்னுள் இருக்கும் குழந்தைத்தனத்தை உயிர்ப்போடு வைத்திருப்பவனே சந்தோசமான ,புத்திசாலித்தனமான மனிதன் " I am proudly say that i am one of them, ஒரு டீ வடை சாப்பிட மட்டுமே போதுமான ரூ.40/- என்ற சாதாரண விலையில் பலரின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு பிறகு ஒரு ஆர்ச்சி புத்தகத்தை வெளியிட்டு விட்டு, பெரிய தவறு செய்தது போல் Explanation message எல்லாம் ஆசிரியர் போடுவதை என்ன சொல்வது, ஆர்ச்சி சிறுபிள்ளைத்தனம், Reverse gear என்றால்,Hollywood ன் Mega hit ஆன Avengers , Iron man போன்ற Comics based successful cinemas க்கு உங்கள் விளக்கம் என்ன? I like to say our respected editor that Archie and and spider like fleetway stories are gross routes, don't forget your gross routes, it will never fail, Thank you
ReplyDeleteசார்.பதிவை மறுக்க படியுங்களேன் ! படித்ததில் ; அல்லது புரிந்ததில் பிழை !
Deleteஅப்புறம் இங்கே நான் பதிவிட்டுள்ளது எனது ரசனைசார் அபிப்பிராயங்களையே தவிர திணிப்புகளை அல்ல ! இதில் நீங்கள் வருந்தவோ நான் வருந்தவோ ஏதுமிருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை !
And "gross routes"என்பதன் பொருள் புரிபடவில்லையே ; தற்சமயம் அது உணர்த்திடும் பொருளானது - நீங்கள் சொல்ல முனைவதற்கு நேர் எதிராய்ப் பொருள் தருகிறது !
வேர்கள் என்ற பொருளில் சொன்னேன் Sir, குறைந்த விலையில் வரும் இந்த மாதிரி Books, Comics விற்பனைக்கு ஆக்சிஜன் மாதிரி என்பது எனது கருத்து sir, Archhie is my first comics hero but still i likes him, i like time travel stories because it gives us lot of opportunities to imagine, if i understand anything mistakenly ,sorry sir,
Deleteகணேசருமை
Deleteநண்பரே... நாற்பது ரூபாயென்ற விலை - நூறிலும் இருநூறிலும் வலம் வரும் ரெகுலர் காமிக்ஸ் வாசகர்களுக்கு குறைவானதாய்த் தோன்றிடலாம் தான் ! ஆனால் கடைகளில் விற்பனைக்குப் போகும் போது இருபது ரூபாயிலான வெகுஜன ஊடகங்களின் முன்னே தென்படுவது வேறொரு வெளிச்சத்தில் !
Deleteஅதே போல இந்த 'பால்யக் காதல்கள்' ; 'ஆர்ச்சி நேசங்கள் ' என்ற எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் இல்லாததொரு casual வாசகருக்கும் இவை ஈர்ப்பை ஏற்படுத்தினால் மாத்திரமே தலை தப்பிடும் ! இதுவே யதார்த்தம் !
So ஆர்ச்சி தரவுள்ளது ஆக்சிஜனா ? நைட்ரஜனா ? என்பதை விற்பனைகள் சொல்லட்டுமே !
இன்றைய பொழுதில் அந்த அதிகாரியினால் ஒரு அப்பாவி நண்பர் எவ்வாறெல்லாம் ( உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்) தமிழ் தெரிய சில ஆங்கில வைத்தியர்களுக்காக இந்த அடைப்புக்குறி.. பாதிக்கப்படுகின்றார் என்பதை எழுத நினைக்கின்றேன்..
ReplyDeleteதலீவரே....ஸ்லீப்பர் செல்ல ஆன் பண்ணிடீங்க போல ?
Deleteதலைவருக்கு தான் பேட்டரியே நிக்கிறது இல்லியே... அவருடைய பதிலுக்கு இன்னும் குறைந்த பட்சம் ஆறு பணி நேரம் ஆகும்..
DeleteGreat insult தலீவரே...!!
Delete//தலைவருக்கு தான் பேட்டரியே நிக்கிறது இல்லியே... //
Deleteஏனுங்க அப்டீங்களா?
ரம்மி நீங்க மாறனும்...இருளின் மைந்தராய் தெரிவத...அக்கதய படிச்சா மந்திரிச்சி விட்டத போல தெளிவாக வாய்ப்பு பிரகாசமே
Delete//மந்திரிச்சி விட்டத போல தெளிவாக //
Deleteதெளிவாக,குழப்புதே.
மந்ரிச்சா சரியாகிடுமாமே
Deleteஒரு துளி துரோகம்!
ReplyDeleteஇந்த வருட டெக்ஸ் சந்தாவில் முதல் கதையே அசத்தலாக தொடங்கி இருக்கிறது..
படிக்க எடுத்ததும் தெரியவில்லை, முடித்ததும் தெரியவில்லை..
தெரிந்தபோது மனம் கனத்து கிடக்கிறது, யுத்தத்தின் கோர முகங்களையும் துரோக சிந்தனைகளையும் நினைத்து..
இந்தக் கதை, டெக்ஸின் அடுத்து வரும் கதைகளுக்கு ஒரு பென்ச் மார்க்காக இருந்துவிட்டால், உங்கள் பாடு திண்டாட்டமே, எங்கள் பாடு கொண்டாட்டமே..
On Lighter side :
ரம்மி சொன்னது போல,
பிரஞ்சு அழகிகளின் நடனத்தை காண்பிப்பதாக சொன்ன அந்த அதிகாரியின் ஏமாற்று வேலை, ஒன்றும் அறியாத ஒரு முரட்டு சிங்கிளை மட்டும் பாதிக்கவில்லை, எங்களையும் பாதித்துத்தான் விட்டது...
நடப்பாண்டில் டெக்ஸ் நிச்சயமாய்
Deleteமேலும் மேலும் தெறிக்க விடுவார் பாருங்களேன் சார் !
ஞானு வெயிட்டிங் சார்..
Deleteஅதிகாரி மேலே அம்புட்டு பாசமா ? அடியாத்தி !
Deleteசார் ரம்மி ஒரு வகயா ரசிக்கத்தான செய்றாப்ள
Delete///ஒரு காமிக்ஸென்று வந்து விட்டால் ஐம்புலன்களும் விழித்துக் கொள்வது நிகழ்ந்து பூதக் கண்ணாடியை வைத்துக்கொண்டு லாஜிக் பார்ப்பதே அரங்கேறிடுகிறது ! சாரி, நீங்கள் இந்த ரகமாயிருப்பின், இந்த இதழ் உங்கட்கு அல்ல !///
ReplyDeleteஒன்னு செய்யுங்க. காமிக்ஸ் இப்படி படிக்கனும். லாஜிக் பார்ப்பது தெய்வ குத்தம். எப்படி யெல்லாம் காமிக்ஸ் படிக்க கூடாது துன்னு பைபிள் அளவுக்கு ரூள்ஸ் எழுதி புத்தமா வெளியிடுங்க, படிச்சு எப்படி ரசிக்கனும்னு தெரிஞ்சுகிறோம்.
வச்சுகிட்டா வஞ்சனை பன்றோம். ஆர்ச்சி படிக்க முடியலை. என்ன பன்றது???.
வேண்டுமானல் பல்லு போன தாத்தாக்கள் குதுகலத்தோடு ஆர்ச்சி ரசித்து படிப்பதை பார்த்து ரசிக்க முடியும்.
அது மட்டுமே என்னால் செய்ய முடியும்.
//வச்சுகிட்டா வஞ்சனை பன்றோம். ஆர்ச்சி படிக்க முடியலை. என்ன பன்றது???. //
Delete:-)
ஸ்டீல் பல்லு லேதுவா உங்களுக்கு ?
Deleteசார் பல் போலாம் சொல் போகாது. ..வான வில்லின் இரு முனைகளும் அழகே...
Deleteஎல்லாருக்கும் எ்ல்லாமும் பிடிச்சிடாதே...நிறங்கள கூட ஏழா தந்தாலும் ஒரு நிறத்தக் கூட ஒதுக்க முடியாத...அனுபவிச்சிதான ஆகனும் அதனதன் சிறப்ப அதற்கதுக்கேற்ப...ஆர்ச்சியோ ...கிநாவோவானாலுமே
Deleteஅப்போ ஆர்ச்சி படிக்க முயற்சி பண்ணிருக்கீங்க...??!!
Deleteகணேஷ் லாஜிக் மீறல்லஇல்லாத ஒரு கதய சொல்லுங்க பாப்போம்்்்்்கதன்னா சுவாரஷ்யம் தரனும் அவ்வளவே...படைப்பாளிக்கும் ரூல்ஸ் போட முடியாது..படிப்பாளிக்கும் ரூல்ஸ் போட முடியாதூ....அதத அதனதன் போக்ல இரசிச்சா அருமை...அம்மா சொன்ன கதன்னாலும் பொண்டாட்டி சொன்ன கதன்னாலும.் இரசிக்கும் மன நிலைல இருந்தா தப்பில்லை
Delete///கணேஷ் லாஜிக் மீறல்லஇல்லாத ஒரு கதய சொல்லுங்க பாப்போம்்்்்்கதன்னா///
Deleteமிண்ணும் மரணம்.
ஹஹஹ....டைகரின் சாகசங்கள ஹீரோவா ரசிக்கலாம்...அற்புதக்கதயா இரசிக்கலாம்தான் ...தன்னம்பிக்கைய ஏற்றலாம்....சாத்தியமான்னு பாத்தா மணக்குமே்்்்அது போலவே ஆராய்ச்சிக்கு ஆர்ச்சி
Delete50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பொன்னியினசெல்வன், யவனராணி, கடல்புறா, இன்றளவும் ஒவ்வொரு புக் ஃபேர் இலும் பெஸ்ட்செல்லர் Novels. கதைகளின் சுவாரஸ்யத்திற்கு காலம் ஒரு தடையே அல்ல. இன்றைய பாகுபலியை ரசிக்கும் நாம் அன்றைய மெக்கன்னாஸ் கோல்ட் ஐயும் இன்றளவும் ரசிக்கிறோமே. ரசனைகள் காலங்களின் எல்லைக்கு உட்பட்டது அல்ல. புதிய படங்கள் ஒரு வாரம் கூட ஒட முடியாத நிலையில், எம் ஜி ஆரின் அடிமைப்பெண், சிவாஜியின் கர்ணன் சமீபத்தில் மறுவருகை தந்த போது நூறு நாட்களை தாண்டி அரங்கு நிறைந்த காட்சிகளாக சென்னையில் ஓடியது சமீபத்திய உதாரணங்கள்.
ReplyDeleteஅதேஅதே...சபாபதே ...சின்னவரே
Delete// படிக்க எடுத்ததும் தெரியவில்லை, முடித்ததும் தெரியவில்லை..//
ReplyDeleteஆமாமா..
ஆனாலும்.. அறிவு தெரிஞ்சு படிச்ச மொதக் கதை ஆர்ச்சிது இது தான் முழுசா.. மோசமில்லை.. என்ன .. ஆர்ச்சி கொஞ்சம் அடக்க ஒடுக்கமா இருந்திருந்தா சிறப்பா இருந்திருக்கும்..
ReplyDeleteமீன் கருவாடாகலாம்.. ஆனால் கருவாடு மீனாக முடியாது மூமென்ட்..
Deleteஅடக்கம் ஆர்ச்சியின் அகராதில கிடையாதுங்றதே ...டைகரின் பரிதாப நிலை எல்லா கதலயும் வாரத போல ரம்மி
Deleteரம்மி ஆனா ரண்டயும் தின்னலாம்
Deleteவிக்கிக்கப் போகுது ஸ்டீல் !
Delete// ஆர்ச்சி கொஞ்சம் அடக்க ஒடுக்கமா இருந்திருந்தா சிறப்பா இருந்திருக்கும்.. //
Deleteஅது என்ன பெண்ணா? :-)
விஜயன் சார், ஆர்ச்சியின் அடுத்த கதையில் அடக்க ஒடுக்கமான தெரிகிற மாதிரி dress மாட்டி விடுங்க சார் :-)
என்ன கேட்டுச்சா நம்ப ரம்மி ஆர்ச்சியை அடக்க ஒடுக்கமா இருக்கச் சொல்றார் :-)
Deleteஆனாலும் எனக்கு சைக்ஸ் கிடைக்கவில்லை என்பதை சொல்லி கொள்கிறேன்..
ReplyDeleteமுதல் பக்கத்துக்கே கொடுத்த காசெல்லாம் சரியாப் போயிடும்...இன்னோர் எமனின் திசை மேற்கு
Deleteஇதோ குவியலில் கிளி புரட்டுவத போல புரட்டி தங்கை மகள் பார்த்து இரசிப்பது ஆர்ச்சி அட்டயயே...படிக்கலாம் இரு வருடங்களில்
ReplyDeleteஸ்டீல்.என்ன சொல்றீங்க.. ஆர்ச்சிய படிக்க ரெண்டு வருஷம் ஆகுமா?..
ReplyDeleteஐந்து வயதுதான் நண்பரே
Deleteஓ...உங்க தங்கை மகளை சொல்றீங்களா? ஒரு நிமிஷம் ஆஆடிப்போயிட்டேன்.
ReplyDeleteஹஹஹ
Deleteமுதலில் ஆர்ச்சிக்கு ஜே!
ReplyDeleteஅப்புறம் ஆசிரியர் சொன்னது போல வருடத்திற்கு ஒன்றிரண்டு இதழ்கள் என்பது நன்றாகவே இருக்கும்!
அதோடு லக்கிலூக், ஸ்மர்ப்ஸ் போல நடப்பு மனித வாழ்க்கையைப் பகடி செய்யும் கார்ட்டூன்களும் வேண்டும்! அதேநேரம் பென்னி, கெரட் மீசைக்காரர்லாம் மண்டைகாய வைக்கிறது! கார்ட்டூன்க்கு உண்டான சிறப்பே இது மாதிரி கார்ட்டூன்களில் கிடையாது என்பது எனது தனிப்பட்ட கருத்து! இதுக்கு டெக்ஸ் கதைகளே தேவலை!? ஹிஹி! (சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது தான் காமெடி கார்ட்டூன் என்பது எண்ணம்)
வாழ்க்கையின் அசாத்திய பக்கங்களை வெளிப்படுத்தும் கி.நா.க்களும் வேண்டும்!
கார்ட்டூன்களும், கி.நா.க்களும் நமது உணர்வுக்கும், அறிவிற்க்கும் தீனி போடுபவை!
டெக்ஸ் மற்றும் ரீபிரிண்ட் நாயகர்கள் எல்லாம் பொழுதுபொக்கிக்கள்! டெக்ஸ் 12+ வரும்போது ஆர்ச்சி, 007 லாம் ரண்டுரண்டு வந்தா என்ன தப்பு!
சிரமப்பட்டு கி.நா.க்களைப் பொறுத்துக் கொள்ளும் நண்பர்களும், கார்ட்டூன்களை பொறுத்துக் கொள்ளும் நண்பர்களும் டெக்ஸ் போல 12+ அரைத்தமாவு கதைகளை என்னைப் பொன்றவர்களும் பொறுத்துக் கொண்டுதானே சந்தா கட்டுகிறோம்!
நான் ஒன்றும் டெக்ஸ் விரோதி கிடையாது! நல்ல கார்ட்டூன் மற்றும் கி.நா.க்களும் வேண்டும்! பால்யத்தை நினைவுபடுத்தும் கதைகளும் வேண்டும்! இவற்றோடு சேர்த்து டெக்ஸ் உள்பட சில பொழுதுபோக்கு கதைகளும் வேண்டும்!
கடைசியாக கார்ட்டூன்கள் குழந்தைகளுக்கானது என்ற எண்ணமே தவறானது! எந்தக் கருத்துச் செறிவும் இல்லாத பென்னி, கேரட் மீசைக்காரர் போன்ற கதைகளும் உண்டு! ஆழமான கருத்துகளை பகடி செய்து கருத்து சொல்லும் லக்கிலூக், ஸ்மர்ப்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த கதைகளும் உண்டு!
கடைசியாய்ச் சிரமப்பட்டு நண்பர்கள் வாசிக்க நேர்ந்த கிராபிக் நாவல்கள் இரண்டே ! அவை : நிஜங்களின் நிசப்தம் & நித்திரை மறந்த நியூயார்க் !
Deleteஇதர கி. நா. க்கள் சகலமுமே சூப்பர் ஹிட்ஸ் !
இதுவே யதார்த்தம் எனும் போது நண்பர்கள் 'சிரமப்பட்டுப் பொறுத்துக் கொண்ட' கி.நா. க்களாய் நீங்கள் குறிப்பிடுவது எதையோ - தெரியலையே !
அதற்கென ஒரு தனி தடமுண்டு & அங்கே என்ன எதிர்பார்த்திடலாமென்றும் தெளிவுண்டு எனும் போது நிச்சயமாய் உங்களின் பொதுப்படையான ஸ்டேட்மென்ட் மிகையே சார் !
Not to say that நிஜங்களின் நிசப்தம் & நித்திரை மறந்த நியூயார்க் were not hits !!
Delete// கார்ட்டூன்கள் குழந்தைகளுக்கானது என்ற எண்ணமே தவறானது! எந்தக் கருத்துச் செறிவும் இல்லாத பென்னி, கேரட் மீசைக்காரர் போன்ற கதைகளும் உண்டு! ஆழமான கருத்துகளை பகடி செய்து கருத்து சொல்லும் லக்கிலூக், ஸ்மர்ப்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த கதைகளும் உண்டு! //
Delete+1
சார், பல இடங்களில் கி.நா.க்களையும் கார்ட்டூன்களும் பொறுத்துக் கொள்கிறோம்னு சில நண்பர்கள் பதிவிடுவதை பார்த்து பிறகு தான், எனது எண்ணத்தையும் பதிவிட நமது காமிக்ஸ் குடும்பத்தில் எனக்கும் உரிமை உண்டு என்ற வகையில் தான் பதிவிட்டேனே அன்றி வேறொன்றும் இல்லை! மற்றபடி அனைத்து பதிவுகளையும் படிப்பதை தவிர விடுவதில்லை! வேலைப்பளு காரணமாக வணக்கம் மட்டும் போட்டு விட்டு போக வேண்டியதாகிவிடுகிறது!
Deleteஅதோடு எனக்குமே "நித்திரை மறந்த நியூயார்க்" அவ்வளவாக சுகப்பட வில்லை!
Deleteஆனால் "நிஜங்களின் நிசப்தம்" வேற லெவல்! அது புரியலைனா அது அவரவர் தனிப்பட்ட பிரச்சனை!
ஒரு துளி துரோகம்! (4.5/5)
ReplyDeleteடெக்ஸ், கார்சனுக்கு சொல்லும் ஃப்ளாஷ்பேக்கே கதை. கதையின் கிளைமாக்ஸ் மட்டும் நிகழ்காலத்தில். வழக்கமான டெக்ஸ் கதைகளிலிருந்து மாறுபட்டது. ஆனால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. அமெரிக்க உள்நாட்டுப் போர் அவலங்களையும், அப்போது நிலவிய நிற வேற்றுமையையும் கதையின் போக்கில் உணர்த்தியிருக்கிறார் கதாசிரியர். கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களில் கடைசியில் மிஞ்சிருப்பது டெக்ஸ் மட்டுமே. வழக்கம்போல் திரு விஜயனின் மொழியாக்கம் அருமை.டெக்ஸ்க்கு "மெட்ராஸ் ஐ"யோ என்று நினைக்க தோன்றிய சித்திரம் மட்டுமே ஒரே குறை. "சூது கொல்லும்" சித்திரத்தரம் இதில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். டெக்ஸ் கதையைப் பிடிக்காதவர்களையும் இந்த கதை கவரும் என்று நினைக்கிறேன். இது கண்டிப்பாக டெக்ஸின் all time classic சாகசங்களில் ஒன்று எனலாம்.
ஓவியர் Ticci- ன் பாணியே இது தானே சார் ? இதுவுமே ஒரு அழகு தான் என்பேன் !
Deleteஆர்ச்சி, 007,அடுத்துமாண்ட்ரேக்,மாடஸ்டி,.மற்றும் கிர்பி. சூப்பர். 2020ல்1985.அட்டகாசம்.இதுவல்லவா,காமிக்ஸ் பொற்காலம்.கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஅடுத்து மாண்ட்ரேக்கா ?
Deleteஇது எப்போ சார் - எனக்கே தெரியாம ?
// மாண்ட்ரேக் சாத்தியமே ; but இங்கே வாசக பக்தாளின் வரங்கள் வேணுமே - நடைமுறை கண்டிட//
Deleteநீங்க கோடு போட்டீங்க. நாங்களே ரோடு போட்டுட்டேnம்.
அந்தியின் ஒரு அத்தியாயம்:
ReplyDeleteஇயல்பான ஒரு மார்ஷல் ஒரு குற்றவாளி கூட்டத்தை கண்டுபிடித்து வேட்டையாடுவது; இயல்பாக ரசிக்கும் படி சுவாரசியமான விஷயங்கள், குட்டிப்பையன் ஜிம் சென்டிமேட், சில தந்திரங்கள் மற்றும் சஸ்பென்ஸ் என விறுவிறுப்பான கதை. இதில் முக்கிய பங்கு ஒவியருக்கு, வண்ணத்தில் ரசிக்கும் படி இருந்தது.
முதல் சில பக்கத்தில் சைக்ஸை துப்பாக்கி முனையில் ஜிம்மின் அம்மா நிறுத்தி தனது கணவரும் ஆயூதத்துடன் ஒரு ஓரத்தில் இருந்து கவனித்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லும் இடத்தில் சைக்ஸ் ஓரக்கண்ணால் பார்த்து போல் இருக்கும் காட்சியில் ஒரு முலையில் ஜிம்மின் தந்தை சமாதி தெரிவதாக காட்டிய ஓவியமும் சரி வசனமும் சரி ஒன்றுக்கொன்று சமமாக பயணித்தன.
simply superb.
///முதல் சில பக்கத்தில் சைக்ஸை துப்பாக்கி முனையில் ஜிம்மின் அம்மா நிறுத்தி தனது கணவரும் ஆயூதத்துடன் ஒரு ஓரத்தில் இருந்து கவனித்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லும் இடத்தில் சைக்ஸ் ஓரக்கண்ணால் பார்த்து போல் இருக்கும் காட்சியில் ஒரு முலையில் ஜிம்மின் தந்தை சமாதி தெரிவதாக காட்டிய ஓவியமும் சரி வசனமும் சரி ஒன்றுக்கொன்று சமமாக பயணித்தன.///
Deleteநான் நெனைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க நண்பரே!?
ஓவியங்களுக்காகவே 100க்கு 200 மார்க் போடலாம்!
சூப்பர்!!
This comment has been removed by the author.
ReplyDeleteஎடிட்டர் கோவில்பட்டியை சேர்ந்தவர்; தமிழில் காமிக்ஸ் வெளியிடுபவர்; வருடம் ஒருமுறை புத்தகத் திருவிழாவிற்கு வருபவர்; என்பதை தாண்டி அவரிடம் நாலு வார்த்தைகள் கூட பேசியதில்லை நண்பரே! ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த பிளாக்கை பாலோ செய்கிறேன்! ஆக தங்களது கருத்து தவறு என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்!!
Deleteஅட..விடுங்க சார் ! அடுத்த எலெக்ஷனில் நான் நிற்கவுள்ளதால் பக்கவாத்யத்துக்கு இப்போதிருந்தே ஆள் சேர்த்து வருகிறேன் என்று கூட நினைத்து விட்டுப் போகட்டுமே சார் !
Deleteஹைதர் அலி காலத்து இந்தப் பஞ்சாயத்துக்கு மெனெக்கெடும் வயசெல்லாம் தாண்டியாச்சு !
அவர் நம்பிக்கை ! More power to that !
எனது ஒரே ஓட்டு உங்களுக்கே விஜயன் சார். சின்னம்: Butter :-)
Deleteஅவரது ஆதர்ஷத் தொடருக்கு மாத்திரமன்றி இதரமுயற்சிகளுக்கும் சம முக்கியத்துவம் அளித்திடலாமே - என்ற ரீதியில் இங்கே போன பதிவிலோ , அதற்கு முந்தையதிலோ பதிவானதொரு பின்னூட்டத்துக்கும் அதனை அனுமதித்ததன் பொருட்டு எனக்கும், பகடியில் பதிவிட நேற்று பின்னிரவிலிருந்து முயற்சித்து வருகிறார் !
Deleteஅவற்றை நீக்கிவருவதால் நான் ஜால்ரா நேசனாகி விட்டேன் !
அமுலா ? ஆவினா ?
Deleteஏதேனும் கள்ள ஓட்டு போடனுமா சார்ஜி..
Deleteஅப்புறம் கோவில்பட்டிக்கு மிக மிக அருகிலான சிவகாசியே பூர்வீகம் சார் !
Delete//ஏதேனும் கள்ள ஓட்டு போடனுமா சார்ஜி..//
Deleteஹை .கேப்டன் பிரின்ஸை கெலிக்க வைச்ச மேரியா சார் ?
🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️
Deleteஅட..இதுதான் விஷயமா? என்னடா சில கமெண்ட் எல்லாம் காணாமல் போகுதேன்னு பார்த்தேன். leave it sir.
Deleteஅமுல் பட்டர் அசல் பட்டர் :-)
Deleteஅந்தியின் ஒரு அத்தியாயம்:
ReplyDeleteராக்கி என்ற பாத்திரம் ஏன் எதற்காக? தேவையில்லாத கதாபாத்திரமோ?
சீன் 1:
சைக்ஸ் ஊருக்குள் இருக்கும் போது ராக்கி சைக்ஸை தேவையில்லாமல் வம்புக்கு இருப்பான் ஆனால் இரண்டு முறையும் சைக்ஸ் பொறுமையா இருப்பார், அவரின் டெபுடி மாலி சுட்டுக்கொள்வார்.
சீன் 2:
சுடும் போது வேகம் மட்டுமே முக்கியமில்லை ஜிம். எதற்காக சுடுகிறோம். யாரைச் சுடுகிறோம். எந்த சூழலில் சுடுகிறோம் என்பவையே முக்கியம்.
இரண்டையும் தொடர்பு படுத்திய போது அட... :-)
அதேபோல் ஓமால்லி சில சித்திர நாவல்களை கொடுப்பார்.. அவைகளை பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கும் ஜிம் தனக்கு பிடித்த கதாநாயகர்கள் மற்றும் தனது தந்தை மூலம் படிக்க கற்று கொண்டதாக சொல்வான்.... அடுத்து ஒரு இடத்தில் கிளேட்டன் கும்பலை வேட்டையாடும் போது "டெக்ஸாஸ் ஜாக்தான்" உதவ போகிறார் என்று அந்த சித்திரகதையின் ஒரு நாயகனை குறிப்பிடுவார்.
இப்படி சுவாரசியமான கவனிக்க கூடிய விஷயங்கள் இந்த கதையில் பல.
நண்பரே!
Deleteகுழந்தைகளைக் காத்தருளும் ஆண்டவரே!
வீசும் காற்றும்...
சீறும் புயல்களும்...
உலுக்கிடுவது ...
இந்தச் சிறு மொட்டுக்களையே!
பக்கம் 46 கடைசி பிரேம்!!
அடேங்கப்பா!!
என்ன வலுவான, அர்த்தமுள்ள வார்த்தைகள்!!!
இந்தவொரு வரியை வைத்தே ஓராயிரம் கி.நா.க்களை உருவாக்கிடலாம்!
உண்மையிலேயே கவனிக்க வேண்டிய, தொடர்ந்து வெளிவர வேண்டிய தொடர் தான் இந்த "அந்தியில் ஒரு அத்தியாயம்"
சூப்பர்! சூப்பர்!!
கதையை முடிக்கும் முன்பே மார்க் போடுகிறேன்!!?
9 / 10
ஒருவேளை படித்து முடித்த பிறகு 10ஆகவும் மாற்ற வேண்டி வரலாம்!
ஓவியங்களும் மிக அருமையாக வரையப்பட்டுள்ளன..
Delete
ReplyDelete//கதையை முடிக்கும் முன்பே மார்க் போடுகிறேன்!!?ஒருவேளை படித்து முடித்த பிறகு 10ஆகவும் மாற்ற வேண்டி வரலாம்!//
சமீபத்துல TNPSC எக்ஸாம் எழுதினீங்களோ? ராமேஸ்வரத்துல.