Thursday, January 30, 2020

புக் 4 ..'பக்..பக்' 2 ....!

நண்பர்களே,

வணக்கம். ஜனவரி நேற்றைய பொழுதாகி, பிப்ரவரி இன்றாகிடுகிறது - at least நம்மளவிற்காவது !  ரகத்துக்கொரு கலராய் டாலடிக்கும் பிப்ரவரி இதழ்கள் இதோ என் கையில் தயாராய் இருக்க, டப்பிகளுள்  அவசர அவசரமாய் அவற்றை அடைத்து உங்கள் இல்லங்களை நோக்கி அனுப்பும் பணிகளில் நம்மாட்கள் பிசி ! So மாமூலான அந்தத் தேய்ந்த வரியினை மறுக்கா தூசி தட்டி போட்டுக் கொள்கிறேனே : "ஜனவரியில் பிப்ரவரி" !! Yet another 4 இதழ் கூட்டணி இம்முறையும் - and yet another before time take-off தான் ! ஆனால் Indigo விமானங்களது சமீபத்தைய எஞ்சின்கள் போல, டெஸ்பாட்ச் தேதியில் லைட்டாக சொதப்பிடுவோமோ என்ற பயம் மெய்யாலுமே இம்முறை  எனக்கிருந்தது ! சென்னைப் புத்தக விழாப்  பயணம் ; பொங்கலின் தொடர் விடுமுறை சொகுசு என்று சோம்பல் முறித்துக் கொண்டே சுற்றி வர, தேதி 20-ஐத் தொட்டு நின்றது ! 'ஆத்தாடியோவ்' என்று ராக்கூத்துக்களை ஆரம்பித்து எடிட்டிங் வேலைகளை முடித்து அச்சுக்கு இதழ்களை அனுப்பும் போதே தேதி 25 !! அப்புறமாய் அத்தனையும் fast forward-ல் நடந்ததன் பலனாய் தலை தப்பியுள்ளது ! 

ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு கத்தை இதழ்களையும் உங்களுக்கு அனுப்பிடும் வேளைதனில் உங்களின் reactions எவ்விதமிருக்குமோ என்றறியும்  ஆவல் அலையடிக்கத் தவறுவதில்லை ! No different this time as well - ஆனால் இம்முறையோ நான்கில் இரண்டு குறித்து பெரிதாய் அலட்டிக் கொள்ள அவசியமிராதென்ற மௌன நம்பிக்கை உள்ளுக்குள்  ! 'தல' டெக்சின் பர பர ஆல்பமான "ஒரு துளி துரோகம்" நம்பிக்கை தந்த முதல் இதழ் எனில் - நமது ஆதர்ஷ ஜானரான கௌபாய்க் களத்தில் ; வண்ணத்தில் உலவிட முயற்சிக்கும் "அந்தியின் ஒரு அத்தியாயம்" இதழ் # 2 ! Of course எனது நம்பிக்கை பணாலாகி மேற்படி இரு இதழ்களும் மொத்து வாங்கிடலும் நிகழ்ந்திடலாம் தான் ; ஆனால் அவ்விதம் நிகழாதென்ற அசட்டு நம்பிக்கையினைப் பட்சி ஊட்டுகிறது  ! இம்முறை எனது ஆவலோ பாக்கி 2 இதழ்களின் மீதுமே மையல் கொண்டு நிற்கின்றது !  

ஆவல் # 1 : அஞ்சாநெஞ்சர் ஆருயிர் அண்ணன் ஆர்ச்சியின் பொருட்டு !! Of course -  'அந்த நாள் ஞாபகம்..நெஞ்சிலே வந்ததே...நண்பனே..நண்பனே..!' என்று சிகப்புச் சட்டித்தலையனை வாஞ்சையோடு வாரியணைக்க இன்னமும் ஒரு அணியினர் தயாராய் இருப்பார்கள் தான் ; ஆனால் அவர்களின் பலம் மிகுதியா ? அல்லது இப்போதே குதிங்கால் பிடரியில் அடிக்க ஜார்கண்டுக்கு போகும் ரயிலில் டிக்கெட் போட ஓட்டமெடுக்கும் அணியின் பலம் ஜாஸ்தியா ? என்பதே எனது curiosity ! டெக்ஸுக்கும் ; லார்கோவுக்கும் ; ட்யுராங்கோவுக்கும் பன்ச் வரிகளை எழுதி வரும் சமீப நாட்களில் - திடு திடுப்பென நமது அண்ணாத்தேக்கு பன்ச் எழுத முனைந்த என் பேனாவுக்கு லைட்டாக ஜெர்க் அடித்தது வாஸ்தவமே ; ஆனால் துவக்கங்களெல்லாமே இங்கிருந்தே என்பதை அதற்கொருவாட்டி நினைவூட்டிய பின்னே வண்டி பிக்கப் ஆனது ! "ஆர்ச்சி இருக்க பயமேன் ?" என்று பந்தாவாய்ப் பெயரெல்லாம் வைத்தாச்சு - சாத்து விழுந்தாலும் சட்டித் தலைவனுக்கு வலிக்கப் போவதில்லையே என்ற நம்பிக்கையில் ! ஆனால் நம்ம ஷைனிங் கபாலத்துக்கும் ஒரு இரும்புப் பாதுகாப்பு அவசியப்படுமோ ? என்ற கேள்வியே இம்மாதத்தின் பிரதான point of interest - என்னளவிளாவது !         

ஆவல் # 2 : கிராபிக் நாவல் கதைத் தேர்வுகளென்பது பொதுவாகவே கத்தி மேல் நடப்பதல்ல - நடனமாடுவது போலானது ! லைட்டாய் சொதப்பினாலும் கத்தி கழுத்தைப் பதம் பார்த்து விடும் ! இம்முறை சந்தா E சார்பில் வெளிவந்திடும் "தனியே..தன்னந்தனியே.." அதற்கொரு classic example என்பேன் !  இந்தக் கதையின் இறுதியில்  தென்படும் விடைகளை விட, எழுந்து நிற்கும் கேள்விகளே ஜாஸ்தியாக இருக்கும் என்ற விதத்தில் இம்முறையின் வாசிப்பனுபவம் வித்தியாசமானதாகவே இருந்திடவுள்ளது ! And சமகால பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் ஹாரர் + த்ரில்லர் கதைகளின் ஜாம்பவானாய் உலவிடும் Christophe Bec உடன் நமக்கான முதல்ப் பரிச்சயமிது ! So புதுக் கதாசிரியர் ; புது கதை சொல்லும் யுக்தி +புது சித்திர பாணி (உட்பக்கங்கள் வெறும் கறுப்புக் கோட்டோவியங்களாய் மட்டுமே இராது, grey வையும் வலு சேர்க்க அற்புதமாய்ப் பயன்படுத்தியுள்ளனர் !) என்ற முக்கூட்டணியின் பலனை நாம் எவ்விதம் ரசிக்கவுள்ளோம் ? என்ற curiosity தலை முழுக்க ! Fingers crossed !!      

நாளைய தினம் பார்சல் கிட்டிடும் ; அட - மிஸ் ஆனால் நிச்சயம் சனியன்றாவது கிட்டிடும் என்பதால் இந்த ஞாயிறை சுவாரஸ்யமாக்கிட உங்களின் முதல்பார்வை அலசலகளையே பெரிதும் எதிர்பார்த்திருப்பேன் ! வித்வான்கள் - please oblige !! 

அப்புறம் ஆன்லைன் லிஸ்டிங்குகள் கூட ரெடி : Bye all ; See you around & Happy Reading !!                 
 P.S:  இன்று திருப்பூரில் துவங்கிடும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 23 ! Please do visit us folks !!           

 
 பல்லடத்துக்கு அருகிலானதொரு துவக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நமது வாசக நண்பர் சரவணகுமார் & அவரது வகுப்பு மாணவர் !!  

                                   

217 comments:

 1. Waiting for New cowboy! Archie will once again win hearts of readers after several decade!

  ReplyDelete
 2. Sir, Waiting for all the books and all the best for Archie.

  ReplyDelete
  Replies
  1. கிரி சார் உங்களுக்கு இங்கே என்ன வேலை?

   Delete
  2. இதனை வருடங்களில் இன்று தான் இந்த வாய்ப்பு கிடைத்தது , அதுவும் சரியாய் ஆர்ச்சியின் மீள்வருகையின் போது. அதனை தவற விட விரும்பவில்லை குமார் சார்.

   Delete
 3. காத்திருக்கிறேன். நன்றி ஆசிரியரே

  ReplyDelete
 4. திருப்பூர் புத்தக திருவிழாவிற்கு அன்போடு வரவேற்கிறோம் 🙏🏼
  .

  ReplyDelete
 5. திருப்பூர்(Book fair)ல தான் இருக்கேன்.
  ஓவர்.... ஓவர்....

  ReplyDelete
 6. ///புக் 4 ..'பக்..பக்' 2 ....!////

  செம்ம!!

  ReplyDelete
 7. பிப்.1-ல் துவங்கும் திருநெல்வேலி புத்தகத்திருவிழாவில் நமது ஸ்டால் உண்டா ஸார்?

  ReplyDelete
 8. காத்திருக்கிறேன் கண்மணியே..:-)

  ReplyDelete
  Replies
  1. ஊட்டுக்காரம்மாக்கு தெரியுமா தலீவரே ?

   Delete
  2. கண்மணியா?!!!

   தலீவரே, பதுங்குகுழிக்கு ஒரு பார்ட்னரை ரெடி பண்ணிட்டிங்க போலிருக்கே?!
   சரி, பாவம் நீங்களும் எத்தனைநாளுக்குத்தான் பெருச்சாளிகளையே கொஞ்சிக்கிட்டிருப்பீங்க!!

   ஆனா இனியாவது 8 மணியை 'நள்ளிரவு'ன்னு நினைக்கறதை நிப்பாட்டுங்க! :D

   Delete
  3. ///சரி, பாவம் நீங்களும் எத்தனைநாளுக்குத்தான் பெருச்சாளிகளையே கொஞ்சிக்கிட்டிருப்பீங்க!!///

   கண்மணின்னு சொன்னதே அதுகளைத்தானாம்...! :-)

   Delete
 9. ஆஹா ஆஹா 4 புக் வேறு என்ன வேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. அடுத்த வருஷத்துலேர்ந்து 'ரவுண்டு பன்' சந்தான்னு ஒன்னை ஆரம்பிச்சார்னா நல்லாருக்கும்! சந்தா - R! கீழ்பல்லால ரவுண்டு பன்னின் பொன்னிற மேற்தோலை கரண்டுக்கிட்டே புக்கு படிச்சோம்னா இன்னும் செமயா இருக்குமில்லே?

   Delete
  2. செமயா தான் இருக்கும் விஜய் ஆனால் ரவுண்டு பன் வந்தால் எனது மகன் அதை கைபற்றி விடுகிறான்.

   Delete
 10. நீங்களே இரண்டு புக் ஹிட் என்று சொன்னதால் அடுத்த இரண்டு புத்தகங்களை முதலில் படிப்போம்.

  ReplyDelete
 11. ஹைய்யா புதிய பதிவு....

  ReplyDelete
 12. Replies
  1. வாங்கோ...கரீட்டான நேரத்துக்கு ஏடிசி பஸ்ஸை புடிச்சு வந்துட்டீங்க ஷெரீப்..

   வாழ்த்துக்கள்..:-)

   Delete
 13. // நாளைய தினம் பார்சல் கிட்டிடும். //
  இன்றைய மிகச் சிறப்பான செய்தி......

  ReplyDelete
 14. திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நமது இதழ்களின் விற்பனை சிறக்க வாழ்த்துகள் சார்.........

  ReplyDelete
 15. சொல்றதுக்கு எதுவுமில்ல
  பார்சல் வந்தப்புறம் பாத்துக்கலாம்

  ReplyDelete
 16. ///ஆர்ச்சி இருக்க பயமேன் ?" என்று பந்தாவாய்ப் பெயரெல்லாம் வைத்தாச்சு - சாத்து விழுந்தாலும் சட்டித் தலைவனுக்கு வலிக்கப் போவதில்லையே என்ற நம்பிக்கையில் ! ஆனால் நம்ம ஷைனிங் கபாலத்துக்கும் ஒரு இரும்புப் பாதுகாப்பு அவசியப்படுமோ ? என்ற கேள்வியே இம்மாதத்தின் பிரதான point of interest - என்னளவிளாவது ! //


  கோக் டின்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் குவலயத்தில் கோலி சோடா பாட்டில்கள் பற்றிய கவலை ஏனோ???:-)

  ReplyDelete
  Replies
  1. நேற்றைக்குத் தான் ஷமியின் பந்தை ஹெல்மெட்டால் ஆட முனைந்த ஒரு நியூசிலாந்து ஆசாமியையும் பார்த்து வைத்தேனா ..லைட்டா ஒரு மிரட்சி !

   Delete
 17. சார்.. நாளைக்கு வரப்போறது ஆர்ச்சியோட எந்த version? ரிமோட்கண்ட்ரோலில் இயங்கும் ஆர்ச்சியா அல்லது artificial intelligence ஆர்ச்சியா?

  ReplyDelete
  Replies
  1. இல்லை செயலரே..

   விக்டரும் ,தாம்சனும் சொல்றபடி கேக்கும் ஆர்ச்சி..

   ( சத்தியமா சீரியஸா சொல்றேன்..)

   Delete
  2. நம்மள் கி இன்டெலிஜென்சை கழட்டி வைக்கக் கோருமொரு ஆர்ச்சி ! சும்மா ஜாலியா லூட்டி அடிக்கும் ஒரு ஆர்ச்சி !

   Delete
  3. அன்புள்ள ஆசிரியருக்கு
   இரண்டு ஆர்ச்சியா?

   Delete
  4. No..no...ஒன்றே ஒன்று தான் சார் !

   Delete
 18. அந்தியின் ஒரு அத்தியாயம்

  தனியே...தன்னந்தனியே


  ஆவலுடன் எதிர்நோக்கி...

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Sir, சென்ற வருடம் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத இதழ்களை திருப்பூர் புத்தக கண்காட்சியில் தான் வாங்கினேன். பின்னர் கோவைக்கு திரும்ப பேருந்தில் ஏறி அமர்ந்த பின்னர் , கோவை காந்திபுரம் வருவதற்குள் படித்த கதைகள் வைகிங் தீவு மர்மம், சாத்தானின் சீடர்கள், நடமாடும் நரகம் ஆகியவை. அந்த ஒன்றரை மணி நேர பயணம் என் வாழ்வில் மறக்க முடியாத பரவசத்தை அளித்த ஒன்று. பஸ் முழுதும் கூட்டமாக இருந்தாலும் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் படித்து கொண்டே வந்தேன்.

   சாத்தானின் சீடர்கள் படிக்கையில் டெக்சும் கார்சனும் செவ்விந்திய பெண்கள் பலி கொடுக்கப்பட்ட பாழடைந்த இடத்தை ஆராயும்போது , பஸ்ஸில் என்னை சுற்றி பலர் இருந்தாலும் என் முதுகுத்தண்டில் கூச்செறிந்தது. வெறும் கருப்பு வெள்ளையில் இருந்த அந்த படம் என்னையும் ஒரு சாட்சியாக உள்ளிழுத்துக்கொண்டது. சூப்பர் கதை. நிறைய பேருக்கு பிடிக்க வில்லை என்பது ஒரு வருத்தமே .

   Delete
  2. சாத்தானின் சீடர்கள் க்ளைமாக்ஸ் மட்டும் இன்னும் கொஞ்சம் கணமாக வைத்திருந்தால் நல்ல ஹிட்டாகி இருக்கும்.!

   Delete
  3. உண்மை தான் சார்.அந்த மெயின் வில்லனான மத குருவை பார்க்கும் போது லக்கி லூக்கின் கதைகளில் வரும் காமெடி வெட்டியானைப் போலவே தோன்றியதும் , வாளைக் கொண்டு டெக்ஸை வென்றுவிடலாம் என்று அவர்கள் நினைத்ததும் கொஞ்சம் Seriousnessஸை குறைத்து விட்டது.

   Delete
  4. 'துணிவே துணை ' படத்தை 'தர்பார் ' யுகத்தில் பார்ப்பது தான் சிக்கலே என்பேன் சார் ! டெக்சின் வீரியமான கதைகளுக்கு அப்புறமாய் இதனைப் படிக்கும் போது நெருடல் நேர்வது ஆச்சர்யம் அல்ல தானே ?

   Delete
  5. கிரி சார் மலரும் நினைவுகள் அருமை அருமை.

   Delete
 20. ///கிராபிக் நாவல் கதைத் தேர்வுகளென்பது பொதுவாகவே கத்தி மேல் நடப்பதல்ல - நடனமாடுவது போலானது ! லைட்டாய் சொதப்பினாலும் கத்தி கழுத்தைப் பதம் பார்த்து விடும் ! இம்முறை சந்தா E சார்பில் வெளிவந்திடும் "தனியே..தன்னந்தனியே.." அதற்கொரு classic example என்பேன் ! ///

  ஆர்வங்கா வெய்ட் சேஸி உண்ணானு..!

  ReplyDelete
 21. நான்கு கண்மணிகளில் எந்த கண்மணி முதல் கண்மணி என்பது நாளை கண்மணிகளை கண்டவுடனே முடிவு செய்யப்படும்...:-)

  ReplyDelete
  Replies
  1. நான் போய் பாக்கி இருக்கும் பனிக்கடலில் ஒரு பயங்கர எரிமலை யை படிக்கிறேன்.!

   Delete
  2. எரிமலை ஏகாம்பரத்துக்கே எரிமலையா..?!

   Delete
  3. //பனிக்கடலில் ஒரு பயங்கர எரிமலை யை படிக்கிறேன்.!//

   அம்மாம் பெரிய கப்பலிலே பச்சக் பச்சக்குனு பெயரை மாத்தி மாத்தி லூட்டி பண்ணுவாங்க பாருங்கோ வில்லன்ஸ்.... சும்மா ஜிலோன்னு இர்க்கும் ! தியேட்டர்லே போஸ்டர் ஒட்ன பாய்ஸ் போல !

   Delete
  4. காற்றில் கரைந்த கப்பல்கள்
   இந்த கதையில்தானே கப்பலில் பெயர் மாற்றி எழுதுவார்கள்?

   Delete
  5. // எரிமலை ஏகாம்பரத்துக்கே எரிமலையா..?! // தலைவரே ROFL

   Delete
  6. // அம்மாம் பெரிய கப்பலிலே பச்சக் பச்சக்குனு பெயரை மாத்தி மாத்தி லூட்டி பண்ணுவாங்க பாருங்கோ வில்லன்ஸ்.... சும்மா ஜிலோன்னு இர்க்கும் ! தியேட்டர்லே போஸ்டர் ஒட்ன பாய்ஸ் போல ! // ஆசிரியர் ஐயா இங்கே உள்ள அத்தனை பேரையும் தூக்கி சாப்பிட்டு விடுவீர்கள் போல 🤣😂 செம்ம செம்ம

   Delete
  7. Oops...சமீபமாய் வந்த இதழ் என்பதால் அதைத் தான் வாசிப்புக்கு நண்பர் எடுத்திருப்பார் என்று நினைத்து விட்டேன் !

   Delete
  8. ///Oops...சமீபமாய் வந்த இதழ் என்பதால் அதைத் தான் வாசிப்புக்கு நண்பர் எடுத்திருப்பார் என்று நினைத்து விட்டேன் !///

   பரணில் இருந்து இறக்கியது சார்.!

   இக்கதையில் நினைத்த இடத்தில் எரிமலையை உண்டாக்கும் வல்லமை கொண்ட வில்லன் கும்பல்.!

   வில்லன் குழு டேவிட்டுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள்.! சொந்த நாடிழந்து வேறு நாட்டில் அகதிகள் போல் வசிப்போர்.! நட்பா கடமையா என்று வரும்போது டேவிட் தன் கையாலேயே நண்பர்களை அழிப்பார்.!

   ஆனால்...

   அந்த வில்லன் கும்பல் ஐநா வுக்கு வைக்கும் கோரிக்கை வித்தியாசமாக இருக்கும்..

   உலக நாடுகள் அனைத்தும் குறிப்பாக வல்லரசு நாடுகள் தங்கள் ராணுவத்தை கலைத்துவிட வேண்டும்.

   அணு ஆயுதங்கள் வைத்திருப்போர் அதை அழித்துவிட வேண்டும்.

   இனி எங்கும் போரே இருக்கக்கூடாது..

   இவையே அவர்களின் கோரிக்கை. இதை நிறைவேற்றாவிட்டால் உலகின் முக்கிய இடங்களில் எரிமலையை உண்டாக்கி அழித்துவிடுவோம் என்று மிரட்டுவார்கள்.!

   பார்க்கப்போனால் வில்லன்களின் கோரிக்கை நியாயமானதாகவே படுகிறது.!

   Delete
  9. ///காற்றில் கரைந்த கப்பல்கள்
   இந்த கதையில்தானே கப்பலில் பெயர் மாற்றி எழுதுவார்கள்?///

   ஆமாம் சார்.!

   கப்பலைத் தேடி கடற்படை வரும்போது அங்கு வேறு பெயரில் கப்பல் நிற்கும்.! கடற்படையோ கப்பலை காணவில்லை என்று திரும்பிப் போய்விடுவர்.!
   லாரன்ஸ் டேவிட் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை அது.!
   முதலில் கப்பல் மாலுமி ஒருவருடன் லாரன்ஸ் டேவிட்டுக்கு மோதல் ஏற்படும்.! பின்னர் மூவரும் இணைந்து வில்லன்களை முறியடிப்பார்கள்..!

   Delete
  10. கண்ணா @ மும்மூர்த்திகள் கதைகளின் விமர்சனங்கள் அனைத்தும் அருமை.

   Delete
 22. அதீத ஆவலுடனும்,காதலுடனும் என் அபிமான இரும்பு மனிதனை எதிர் நோக்கி..!!!

  ReplyDelete
 23. இம்மாத முதல் வாசிப்பு ஆர்ச்சிக்காகவே..!!!
  ☺️☺️☺️☺️

  ReplyDelete
  Replies
  1. அப்படி போடுங்க. அப்படியே அதன் விமர்சனம் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

   Delete
 24. நாளை intha veIai katrIl aadI vaa nIla Indru enthan archIe ILLaI sendru vaa nIla

  ReplyDelete
 25. அன்புள்ள ஆசிரியருக்கு
  இரண்டு ஆர்ச்சியா?

  ReplyDelete
  Replies
  1. இல்லையே சார்...ஒன்று தானே ?

   Delete
 26. Sir, Just completed a purchase order in your online store for 4 Tex books and Archie. Not able to purchase some books as minimum purchase requirement is showing as 1000 copies(example Thalaimurai Ethiri). Not able to purchase these books. Kindly update.

  ReplyDelete
  Replies
  1. Sir try lioncomics.in site. I have purchased many books

   Delete
  2. Same problem faced by me last month. You better write email to lion office and they'll help...

   Delete
 27. ஒரு சில்லி கொஸ்டின் ஆசிரயரிடம்.....உங்கள் நினைவுக்கு முதலில் வருவது தலைப்பா.or பதிவா....
  பதிவை படித்த முடித்தவுடன் தலைப்பின் அர்த்தம் விளங்குகிறது..அதனால் கேட்டேன்..

  ReplyDelete
 28. திருப்பூர் புத்தக ஸ்டாலில் ஈரோட்டில் இத்தாலியை பார்த்தவுடன்.....
  1.சென்ற ஆண்டு வெளிவந்த டைனமைட் விற்று தீர்ந்தது...அதற்கு முன்பு வெளியிட்ட இத்தாலி இரபக்கிறது.விலை குறைவாக இருந்ந போதிலும் விற்பனை மந்தம்...ஏன்?????
  2.கூட்டத்தோடு கோவிந்த போட நேரிட்டால் தலயும் கூட ராமம் போட வேண்டி உள்ளதோ....
  3.முத்து 50 வது ஆண்டு மலர் வருவதற்கு இன்னும் சுமார் 100+ இதழ்களை கடக்க வேண்டிய இந்த தருணத்தில் ஒரு பெரிய வேண்டுகோள். .ஹைடெக் அவதார் எடுத்த பிறகு முத்து என்ற பிம்பத்திலிருத்து வெளிவந்து கார்ட்டூன் ஹீரோக்களை எல்லாம் போட்டு தாக்கும் நீங்கள்...இந்த கனவு இதழில் தலயின் பவர்புல் ஒரு பெரிய கதையை கலரில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். ..நன்றி

  ReplyDelete
 29. இன்று புத்தகங்கள் கிடைக்குமா ? பக் பக் பக்

  ReplyDelete
 30. இன்று பிறந்த நாள் காணும் நண்பர் அறிவரசு ரவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். விமர்சன புயல் என்று அவருக்கு இந்த இனிய நாளில் பட்டம் தந்து வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. விமர்சனப் புய்ல் அண்ணன் அறிவரசு ரவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ..😄💐💐💐

   Delete
  2. விமர்சனப் புயல் பெரியண்ணா அறிவரசு ரவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ..😄💐💐💐

   Delete
  3. விமர்சனப் புயல் பெரியண்ணா அறிவரசு ரவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ..😄💐💐💐

   Delete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரவி !!!

   Delete
  5. விமர்சனப் புயல் பெரியண்ணா அறிவரசு ரவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ..😄💐💐💐

   Delete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அறிவரசு ரவி சார்..!

   Delete
  7. அன்பான வாழ்த்துகளுக்கு நன்றிகள் நண்பர்களே.......

   Delete
  8. // விமர்சன புயல் என்று அவருக்கு இந்த இனிய நாளில் பட்டம் தந்து வாழ்த்துகிறேன்.//
   அன்பிற்கு நன்றிகள் குமார்.🙏🙏🙏

   Delete
  9. நண்பர் "விமர்சனப் புயல்" ரவிக்கு உளமார்ந்த பிறந்த தின வாழ்த்துக்கள் !! நட்பும், நலமும் சூழ இன்னும் எக்கச்சக்கப் பிறந்த நாட்கள் பின்தொடரட்டும் சார் !!

   Delete
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரவிடி அவர்களே!!... 💐💐🍫🍫🍫😊😊🎂🎂🎂🧁🧁🍭🍭🍭

   Delete
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அறிவரசு ரவி சார் !

   Delete
  12. அன்பாய் வாழ்த்திய ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு நன்றிகள்.......

   Delete
 31. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அறிவரசு ரவி 🎂🎂🎂🎂🎂🎂🎂

  ReplyDelete
 32. ரௌத்திரம் மற நேற்று தான் பார்த்தேன் (படித்தேன்)
  என்னதான் தனித்தனி கதையா படித்தாலும் ஒரே book ஆ படிக்கிற சுகமே தனிதான் book size ம் Compact ஆ Super ஆ இருக்கு

  ReplyDelete
 33. செயலர் மற்றும் மேச்சேரி வித்வானின் பொறாமையின் பலனாக இன்று " கண்மனி "களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டவில்லை என்பதை வருத்ததுடன் பகிர்ந்து கொள்கிறேன்..


  நாளை சந்திப்போம் கண்மனிகளே..:-(

  ReplyDelete
  Replies
  1. தென்னைமரத்துல தேள் கொட்டிங்..
   பனைமரத்துல நெறி கட்டிங்..

   Delete
  2. கிடைச்சாச்சு புக்ஸ் கிடைச்சாச்சு. வெற்றி வெற்றி.

   Delete
  3. மகிழ்ச்சி குமார்.

   Delete
  4. நேக்கு கூரியர் நாளைக்குதானாம்..!

   நடுநிசிக் கள்வன்
   பழிவாங்கும் பொம்மை
   தங்கவிரல் மர்மம்
   தலைகேட்ட தங்கப்புதையல்

   இறக்கிய பண்டலில் மீதமிருக்கும் இதழ்கள்..!

   இங்கீ பிங்கீ பாங்கீ யை இவங்களோட விளையாட வேண்டியதுதான்..!:-)

   Delete
  5. கண்ணா @ உங்களின் மும்மூர்த்திகள் கதைகளின் விமர்சனங்கள் நமது குடோனில் தங்கியுள்ள அவர்களின் புத்தகங்களை ஜாகை மாற்றப் போவது உறுதி. தொடர்ந்து மும்மூர்த்திகள் விமர்சனம் எழுதுங்கள்.

   Delete
 34. புத்தகங்கள் கிடைத்தது விட்டன.. மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 35. We always like and welcome Archie sir, i hope it will sell like hot cakes and you are going to reprint all Archie stories

  ReplyDelete
 36. புக்கு வந்திடுச்சாம்! கொரியர்பாய் கிட்டேர்ந்து ஃபோன்!
  எல்லாம் ஆத்தாவின் மகிமை!!

  ReplyDelete
 37. இந்த மாதம் கார்ட்டூன் இல்லாத வரட்சி மாதம்!! பிடிக்கலை.. இது பிடிக்கலை!

  ஆனால், கார்ட்டூன் இல்லாத குறையை ஆர்ச்சி நிவர்த்தி செய்யுமா? - என்பதே இப்போதைய நாற்பது ரூபாய் கேள்வி!
  பிடிக்குது.. இப்போ கொஞ்சம் பிடிக்கறாப்ல இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. // ஆனால், கார்ட்டூன் இல்லாத குறையை ஆர்ச்சி நிவர்த்தி செய்யுமா? - என்பதே இப்போதைய நாற்பது ரூபாய் கேள்வி! // Definitely definitely

   Delete
 38. மும்மூர்த்திகளின் ரசிகர்களே @ மும்மூர்த்திகள் கதைகளை மற்றும் பழைய கிளாசிக் கதைகளை விரும்பும் நீங்கள் இவர்களின் கதைகளை படித்தும் உங்களின் விரிவான விமர்சனங்களை எழுதுங்கள். இவை நமது குடோனில் தங்கியுள்ள அவர்களின் புத்தகங்களை ஜாகை மாற்ற உதவும் அதேநேரம் பிற்காலத்தில் நீங்கள் புதிய கோரிக்கை வைத்தால் அதனை பரிசீலனை செய்ய உதவும்.

  ReplyDelete
 39. தனியே தன்னந்தனியே - முதல்ல வாசிச்ச கதை இதுதான். ஒரு பேய் படம் பார்த்த ஃபீலிங். பல இடங்களில் எது கனவு எது நிஜம்னு குழப்பம் ஏற்பட்டது. அந்த அன்ட்டி திடீர் திடீர்னு எந்திரிச்சு,"இது கனவுடா அம்பி" அப்படின்னு சீரியல்ல வர மாதிரி சொதப்பும் போது செம காண்டாகுது. கதை முழுசா படிச்சதுக்கு அப்புறம் ஒரே ஒரு டவுட். அது நல்ல பேயா? கெட்ட பேயா? - 9/10

  ReplyDelete
  Replies
  1. முதல் விமர்சனம்.. முத்தான விமர்சனம்!

   Delete
  2. அந்த artwork பற்றியும் சார் ?

   Delete
  3. சித்திரங்கள் பிரமாதம் சார், கலரில் இன்னும் மெய் சிலிர்க்க வைத்தது இருக்கும். ஒவ்வொரு ஃப்ரேமும் ரசிக்க வைத்தது.

   Delete
  4. அது நல்ல பேயோ கெட்ட பேயோ: வெரி சிம்பிள், உங்களுக்கு கதை பிடித்து இருக்கு அப்படி என்றால் நல்ல பேய்தான் :-)

   Delete
 40. சார் புத்தக பார்சல சைக்கிளில் போய் 7.30௧்கு எடுத்து வைத்த நண்பரிடம் நன்றியை ௨திர்தவாறே வாங்கியதும் முதன்முதலாக அங்னயே பிரிச்சா ஸ்டீல்லயே ஸ்பேனனர்ல ஆர்ச்சி ௧ம் பேக்க பாக்க ஆர்ச்சி வாளும் இப்டி மின்னுனா நல்லாரு௧்குமே என நினைக்க ஆசிரியரோ இருப்பத ரசிலன்னு மண்டல தட்ட வீடு வந்தேன். பைக் ரிப்பேராததலால் வீட்டிலிருந்தே நடைராஜா வண்டில ஞாபகம் வருதே பாடல் பின்னிசை௧்௧ நடந்தபடியே ஸ்டேண்டு௧்கு கிளம்ப . .. .பக்கத்த புரட்டுனா கோட்டையிலேறி என்பது௧ளுக்கோர் பயணம்... இப்படி நடக்கும் போதே ஆவலாய் படித்தது என்பது களில்தான் . ஆரு சொன்னா வயசாயிருச்சின்னி... பக்கங்களில் குறைய குறைய வயசும் குறையுதே என்ன மாயம்.. . நன்றி ஆசிரியரே. ..

  ஸ்டீல்

  ReplyDelete
 41. கூரியர் கிடைச்சாச்சு!

  முதல் புரட்டலில் "அந்தியில் ஒரு அத்தியாயம்" முதல் பக்கமே மனதை மயக்கும் ஓவியங்கள்! அந்த அமைதியை குலைக்கும் வண்ணம் "டுமீல்" சத்தம், என ஆவலை ஏகமாய் தூண்டுகிறது!!

  ஏனோ தெரியவில்லை டெக்ஸ் அட்டைப்படம் அல்லுது! என்னளவில் இந்த டெக்ஸ் லுக் தான் டாப்பு! தி பெஸ்ட்!!

  "தனியே தன்னந்தனியே" முதல் புரட்டலிலேயே ஒரு இனம் புரியாத ஈர்ப்பை உண்டாக்குகிறது! அனேகமாக இம்மாதத்தின் சூப்பர் ஹிட் எதுதான்னு மனசு சொல்லுது!

  அப்புறம் கடேசியா நம்ம "ஆர்ச்சி" க்கு வருவோம்! அட என்னமோ கிநா வாநா எல்லாம் இருக்கட்டுங்க! பால்ய நினைவுகள் துள்ளலை உண்டாக்குவது, என்ன சொல்வது வார்த்தைகளே இல்லை!!

  பார்ப்போம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில்!! யாரு எவ்ளோ ஸ்கோர் பண்றாங்கனு!!??

  ReplyDelete
  Replies
  1. ////"தனியே தன்னந்தனியே" முதல் புரட்டலிலேயே ஒரு இனம் புரியாத ஈர்ப்பை உண்டாக்குகிறது! அனேகமாக இம்மாதத்தின் சூப்பர் ஹிட் எதுதான்னு மனசு சொல்லுது!////

   சூப்பர்!! வாழ்க கி.நா!!

   Delete
  2. அட முதல் புத்தக புரட்டல் விமர்சனம். சூப்பர் மிதுன்.

   Delete
 42. ஆர்ச்சி வழக்கம் போல தாம்சன் மற்றும் விக்டருடன் கோட்டை மூலம் காலப் பயணம் மேற்கொண்டு, பின்னோக்கி பயணித்து தரையிறங்கி அங்கு எதிர்பாராமல் ஏற்படும் இன்னல்களையும் , அபாயங்களையும் சமாளித்து , வெற்றி கொடி நாட்டுவது தான் "ஆர்ச்சிஇருக்க பயமேன்”.

  "தோழர்கள் பயப்படவேண்டாம்! ஆர்ச்சி இருக்க பயமேன்” என்று ஆர்ச்சியே சொல்லும்போது ஆனந்தம் அலையடிக்கிறது. பழங்கால வீரர்களோடு ஆர்ச்சி போடும் கத்தி சண்டை ஸ்டார்வார்ஸ் படத்தில் ஓபி வானும் டார்த் வேடரும் போடும் சண்டை போல சூப்பர் ஆக உள்ளது.

  அட்டைப்படத்தை பார்த்து விட்டு நான் செய்யும் முதற்கட்ட விமர்சனம் இது. விரைவில் புத்தகத்தை கைப்பற்றியவுடன் மீதி விமர்சனம் எழுத முயற்சி செய்கிறேன் சார்.

  வீட்டுக்கு கிளம்பும் நேரம் ஆகிவிட்டது. காத்திருக்க முடியவில்லை. விமர்சனம் எதுவும் இப்போதைக்கு வர வாய்ப்பில்லை என்பதால் நான் எழுதி விட்டேன் சார்.Good Night sir.

  ReplyDelete
  Replies
  1. ///தோழர்கள் பயப்படவேண்டாம்! ஆர்ச்சி இருக்க பயமேன்” என்று ஆர்ச்சியே சொல்லும்போது ஆனந்தம் அலையடிக்கிறது. ///

   இதைப் படிக்கும்போதே எனக்கும் அலையடிக்கிறது!

   கதையைப் படிக்கும்போது எப்படி இருக்கப்போகிறதென்று அறிய எனக்கே ஆவலாக இருக்கு!!

   எடிட்டர் வேற "intelligenceஐ ஓரமா வச்சுட்டுப் படிங்க"ன்றார்..
   PfB வேற "ஆறாவது அறிவை அந்தண்டை வச்சுட்டுத்தான் காமிக்ஸ் படிக்கணும்"றார்..

   ஒரே குழப்பமா இருக்கே!!

   Delete
  2. இந்த கோழி பெருசா இருக்கும்போது உரிச்சது.

   அதே கோழி சிறுசா இருக்கும்போது உரிச்சது இது.

   ஆக மொத்தம் ரெண்டும் ஒரே கோழிதான்.

   Delete
  3. பூனைகளுக்கு ஆறாது அறிவு கிடையாதுன்னு ஊருக்குள்ள பேசிகிட்டாங்க :-)

   Delete
  4. //வீரர்களோடு ஆர்ச்சி போடும் கத்தி சண்டை ஸ்டார்வார்ஸ் படத்தில் ஓபி வானும் டார்த் வேடரும் போடும் சண்டை போல சூப்பர் ஆக உள்ளது.//

   ஆத்தாடியோவ்....எங்கேயோ போய்ட்டிங்களே சார் !!

   Delete
  5. ///ஆர்ச்சி வழக்கம் போல தாம்சன் மற்றும் விக்டருடன் கோட்டை மூலம் காலப் பயணம் மேற்கொண்டு, பின்னோக்கி பயணித்து தரையிறங்கி அங்கு எதிர்பாராமல் ஏற்படும் இன்னல்களையும் , அபாயங்களையும் சமாளித்து , வெற்றி கொடி நாட்டுவது தான் "ஆர்ச்சிஇருக்க பயமேன்”.///

   சயின்ஸ் ஃபிக்சன்.!

   Delete
  6. அதெல்லாம் வேண்டாம் ஈவி. ரொம்ப சிம்பிளா பொட்டிய மட்டும் அந்தண்ட வெச்சுட்டு புக்க படிங்க.குழப்பம் எல்லாம் தீர்ந்துடும்.

   Delete
  7. //பழங்கால வீரர்களோடு ஆர்ச்சி போடும் கத்தி சண்டை ஸ்டார்வார்ஸ் படத்தில் ஓபி வானும் டார்த் வேடரும் போடும் சண்டை போல சூப்பர் ஆக உள்ளது.//

   உருண்டு புரண்டு சிரித்து கொண்டிருக்கிறேன்..:-)))))

   Delete
  8. செல்வம் அபிராமி @ தலைக்கு ஹெல்மட் போட்டு உருளுங்க அடிபடாமல் இருக்க. :-)

   குமார் உங்களுக்கும் தான்.

   Delete
  9. ஆர்ச்சி இருக்கையில் மகிழ்ச்சி தான். மகிழ்ச்சி மட்டுமே. கரகாட்டக்காரன் 'சிவாஜி பத்மினி காமெடி'யை நினைவு கூர்ந்து சிரித்தால் நான் பொறுப்பல்லங்கோவ்.

   Delete
 43. ஆர்ச்சி...சத்தியமா முடியலை சார்....

  ReplyDelete
  Replies
  1. யுவா @ புத்தகங்கள் இன்னும் பலர் படிக்கவில்லை என்ற நிலையில் இதுபோன்ற விமர்சனம் செய்ய வேண்டாமே? இது ஆன்லைனில் அல்லது கடைகளில் அல்லது புத்தகத் திருவிழாவில் வாங்க விரும்பும் நண்பர்களை பின் தள்ளுமே.

   இந்த தளத்தில் வரும் சில நண்பர்கள் நமது காமிக்ஸ் பலரிடம் செல்ல வேண்டும் நமது காமிக்ஸ் வட்டம் பெரியதாக வேண்டும் என்று காமிக்ஸ் விற்பனை முகவர்களாகவும் உள்ளது நீங்கள் தெரிந்த விஷயமே.

   பிடித்த சில விஷயங்களை மற்றும் பிடிக்காத விஷயங்களையும் சேர்த்து விமர்சனம் செய்யுங்களேன். ப்ளீஸ்.

   Delete
  2. மன்னிக்கவும் பரணி ஜி...அதுல பிடித்த விசியம்னு ஒன்றுமில்லை ஜி.....இன்னொரு விசியம் நா இதுவரை எந்த ஒரு கதையையும் பிடிக்கலை ..மோசம்னு சொன்னதே இல்லையே......என்னால ஆர்ச்சியை படிக்க முடிவில்லை னு தானே சொல்லியிருக்கேன்...நான் என்னுடைய கருத்தை மட்டுமே சொன்னேன் ஜி...

   Delete
  3. யூவா @ எதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் நண்பர்களுக்குள்.

   Delete
 44. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அறிவரசு ரவி சார்!

  ReplyDelete
 45. இந்த மாத புத்தகங்களில் எந்த அட்டைப்படம் பெஸ்ட் என்று ஒப்பிட முயற்சித்து, இறுதியில் தோற்றுப் போனேன்!

  எல்லாமே அட்டகாசம்!!

  ReplyDelete
 46. இந்த மாதமும் ஏமாற்று வேலை கச்சிதமாக நடக்கிறது..
  ஒன்றும் அறியாத ஒரு முரட்டு சிங்கிளை பிரஞ்சு அழகிகளின் தாரளமான நடனத்தை காண்பிப்பதாக அந்த அதிகாரியின் ஏமாற்று வேலை முதல் பக்கமே ஆரம்பிக்கிறது.. இன்னும் என்ன என்ன அட்டகாசகங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் காத்திருக்கின்றனவோ தெரிய வில்லை..

  ReplyDelete
  Replies
  1. உங்க கோபமெல்லாம் அந்த நடனங்களை கடைசி வரைக்கும் காமிக்காதது தானே. அதுக்கு காரணம் அதிகாரியா? அல்லது அவ்வப்போது தையல்காரர் அவதாரம் எடுக்கும் ஆசிரியரா?

   Delete
  2. அதிகாரியை "ஏமாற்றுப் பார்ட்டி" என்று முத்திரை குத்தின பின்னேயும், அவர் கதையையே மாதா மாதம் முதலில் தேர்வு செய்வதன் பின்னணி பற்றி யோசிக்கிறேன்.....! உங்களுக்கு ஏதாச்சும் புரிஞ்சூ மஹா ஜனங்களே ?

   Delete
  3. அவர் கார்ட்டூன் வராத மாதங்களில் முதலில் படித்து சிரிக்க விரும்புவது கார்சனின் நண்பன் கதையைத்தான் என ஊருக்குள்ள பேசிக்கிறாங்க :-)

   Delete
  4. அவர் எல்லா மாதங்களிலும் மொத படிக்கிறது அதிகாரி கதை தான் பரணி.

   Delete
 47. ஊய்!! 'தனியே தன்னந்தனியே' முதல் 20 பக்கங்களை தூங்குவதற்கு முன் படித்தேன். மீண்டும் அதிகாலை 3 மணிக்கு படிக்க ஆரம்பித்து 4:30க்கு முடித்தேன்!!

  ய்ய்யீஈஈஈஈஈஈக்க்க்!!!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. அடேங்கப்பா.சூப்பர்.

   // ய்ய்யீஈஈஈஈஈஈக்க்க் //
   ம்க்கும். நீங்கள் இன்னிக்கு அதிகாலை 3 மணிக்கு எழுந்து விட்டீங்க என்பதை சொல்ல இவ்வளவு ஆர்பாட்டமா :-)

   அப்புறம் உங்க வீட்டில் இன்றைக்கு
   விருந்தாளிகள் அதிகமோ :-)

   Delete
 48. ஆர்ச்சி நீண்ட நாட்களுக்குப்பிறகுவந்ததோசத்தில்கதைமுழுவதும்ஜாலியாக உலாவருகிறது. ஒருபார்வையில் வைத்து விடலாம் என்றுஎடுத்தபுத்தகத்தை முழுதும் படித்துவிட்டுத்தான் வைக்க முடிந்தது ஆர்ச்சி ஜாலி ஜாலிசூப்பர் . கரூர்ராஜ சேகரன்

  ReplyDelete
 49. // ///ஆர்ச்சி இருக்க பயமேன் ?" என்று பந்தாவாய்ப் பெயரெல்லாம் வைத்தாச்சு - சாத்து விழுந்தாலும் சட்டித் தலைவனுக்கு வலிக்கப் போவதில்லையே என்ற நம்பிக்கையில் ! ஆனால் நம்ம ஷைனிங் கபாலத்துக்கும் ஒரு இரும்புப் பாதுகாப்பு அவசியப்படுமோ ? என்ற கேள்வியே இம்மாதத்தின் பிரதான point of interest - என்னளவிளாவது ! //


  கோக் டின்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் குவலயத்தில் கோலி சோடா பாட்டில்கள் பற்றிய கவலை ஏனோ???:-) //

  நான் படித்த முதல் புத்தகம் இந்த மாதத்தில் நன்றி ஆசிரியரே மற்றும் செல்வம் அபிராமி சார். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல முடியாது.

  ReplyDelete
 50. இப்போது அந்தியின் ஓர் அத்தியாயம்! பாதி படித்து இருக்கிறேன் கதை. என்றால் இது கதை. ஒரிஜினல் வெஸ்டர்ன் சென்டன்ஸ் Sykes அட்டகாசம். படித்த வரை.

  ReplyDelete
 51. ***** தனியே தன்னந்தனியே! *****

  கலிபோர்னியாவின் ப்ளேஸர்வில் என்ற கிராமப்புறப்பகுதியின் அருகேயுள்ள ஒரு மலைப்பாதையின் குறிப்பிட்ட வளைவு ஒன்றில் மட்டும் அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேறுவது தொடர்கதையாகிறது! ஒரு சிறுமியின் ஆவியையோ அல்லது ஒரு இளம்பெண்ணின் உயிரற்ற சடலத்தையோ இரவில் அம்மலைப்பாதையில் பயணிப்பவர்கள் காண்பதும்; உள்ளூர் ஷெரீப்புக்கு தகவல் கொடுப்பதும் அந்நிகழ்வுகளின் ஒரு அங்கம்! இதனிடையே (அ) இதற்கு சற்றுமுன்பு, புது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் பொருட்டு தன் பெற்றோரிடம் விடைபெற்றுகொண்டு, தனது 3 வயது மகனுடன் தொலைதூரத்திற்குப் பயணிக்கும் பெண் ஒருத்தி அந்த மலைப்பாதையில் இரவில் பயணிக்க நேர்வதும்; அதன் பிறகு மர்மமான முறையில் காணாமல் போவதும் நிகழ, ஷெரீப்பின் துணையோடு அந்த பெற்றோர்கள் தங்கள் மகளையும், பேரனையும் வலைவீசித் தேடுகிறார்கள்!
  அந்தத் தேடலின் தொடர்ச்சியாக ஷெரீப் அந்தக் குறிப்பிட்ட மலைப்பாதையில் ஒரு சிறுவனின் ஷூவை கண்டெடுக்க; மலைப்பாதையிலிருந்து காட்டுக்குள் இறங்கி ஆராயும் அவருக்கு அதிர்ச்சியான மற்றும் புதிரான பல காட்சிகளைப் பார்க்க நேரிடுகிறது!

  * ஷெரீப் கண்ட புதிரான காட்சிகள் என்னென்ன?
  * காணாமல்போன பெண் மற்றும் அவளது 3 வயது மகனின் கதி என்ன?
  * மலைப்பாதையில் அடிக்கடி தென்பட்ட சிறுமியின் ஆவி யாருடையது?
  * உயிரற்ற சடலமாய் காட்சியளித்த அந்த அமானுஷ்ய பெண் உண்மையில் யார்?
  * ஷெரீப்புக்கு முக்கியத் தடயமாகக் கிடைத்த அந்த ஷூ அங்கே எப்படி வந்தது?

  என்பதையெல்லாம் திக்-திக்-தடக்-தடக் இதயத்தோடு படித்து, ஒரு அருமையான அமானுஷ்ய வாசிப்பு அனுபத்தைப் பெறுங்கள்!

  ஆரம்பப் பக்கங்களிலேயே இந்த திக்திக் சமாச்சாரம் நம்மை ஒரு பயமுறுத்தலோடு ஆக்கிரமித்துக் கொள்ள, தொடரும் வெவ்வேறு விதமான அமானுஷ்ய சம்பங்கள் நம்மை ஒரு சிறு குழப்பத்தோடும் திகிலோடும் நகர்த்திச் செல்ல, இறுதியில் அந்தச் சம்பவங்கள் ஒரு நேர்கோட்டில் வந்து இணையும்போது - படைப்பாளிகளின் கதை சொல்லும் திறனை வியக்காமலிருக்க முடியாது!!

  சித்திரங்கள் - அம்மாடியோவ்!! குறிப்பாக, ஆவியைக் கண்ணுற்றவர்களின் விழிகளில் காட்டப்பட்டிருக்கும் பய உணர்வு - நம்மையும் ஆக்கிரமித்துக் கொள்ளும்படியாக - வாவ்!! கதைநெடுக சித்திரங்கள் ஜாலம் செய்திருக்கிறது!!

  இறுதியில் '16' என்ற நம்பரின் மர்ம முடிச்சு அவிழும் விதம் மட்டும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது!

  'தனியே தன்னந்தனியே' - என்ற இந்தக் கதையின் தலைப்பை நமக்கு ஒரு அறிவுறுத்தலாகவே தன் ஹாட்-லைன் ஏரியாவில் சொல்லியிருக்கிறார் நம் எடிட்டர்! அதாவது, இரவில் - தனிமையில் இக்கதையைப் படிக்க முயற்சித்தால் ஒரு திக்திக் வாசிப்பு அனுபவம் உறுதி!!

  என்னுடைய ரேட்டிங் : 9.9/10

  ReplyDelete
  Replies
  1. கதைய விமர்சனம் செய்ய சொன்னால் திரைக்கதையுடன் அழகாக விமர்சனம் செய்து விட்டீர்கள். அருமை.

   Delete
  2. EV இப்போது தான் இந்த கதையை படித்து முடித்தேன். ஹரார் கதை வரிசையில் அட்டகாசம். சித்திரங்களும் மிக அழகு என்ன ஒரு அருமையான கதை. இந்த வருடத்தின் முதல் கிராஃபிக் நாவல் சூப்பர் டூப்பர் ஹிட். Glenat பதிப்பகதுடன் நமது உறவு பலப்பட போகிறது என்பது உறுதி.

   வேற லெவல் சார் இந்த மாதிரி கதைகளை தானே நான் எதிர் பார்க்கிறேன்.

   எனது மதிப்பெண் 10/10

   Delete
  3. ///கதைய விமர்சனம் செய்ய சொன்னால் திரைக்கதையுடன் ///

   இல்லீங் PfB! திரைக்கதை இன்னும் அதிகம்!! காட்டுக்குள் தனிமையில் வாழும் ஒரு பெரியவர் தன் வீட்டினகிருகிலேயே ஒரு 'சிலந்தி ஆராய்ச்சி கூடம்' வைத்திருப்பதும், அவர் மர்மமான முறையில் இறந்துபோவது - என்று கதைக்குத் தொடர்புடைய இன்னும் சில சமாச்சாரங்கள் கூட உண்டு!! நான் எழுதியிருப்பது மிகக் குறைவே!

   Delete
  4. ///Glenat பதிப்பகதுடன் நமது உறவு பலப்பட போகிறது என்பது உறுதி.///

   உண்மை உண்மை!! ஆரம்பமே அசத்தல் ரகம்!! இவர்களிடமிருந்து இன்னும் பல புதையல்கள் கிடைத்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே!!

   Delete
  5. "கதிரவன் கண்டிரா கணவாய்" என்றொரு Glenat ஆல்பம் காத்துள்ளது ; வேறொரு விதத்தில் நம்மை மூச்சிரைக்கச் செய்திட !! Yet another ripper !!

   Delete
  6. //இரவில் - தனிமையில் இக்கதையைப் படிக்க முயற்சித்தால் ஒரு திக்திக் வாசிப்பு அனுபவம் உறுதி//

   ஏதேனும் ஒரு ராவில் இதைப் படித்து அலச all ready எனில் - நானும் ரெடி - அதன் பின்னான அரட்டையில் கலந்து கொள்ள !

   Delete
  7. அதுவும் ஒரு சில இடங்களில் இந்த கதை கொடுக்கும் தாக்கம் ய ப்பா பயங்கரம். இரவு நேரத்தில் படித்து இருந்தால் இனி இரவு பயணம் மேற்கொள்ள வே மாட்டேன். கார் பயணம் அதுவும் குழந்தைகளுடன் என்றால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்த கதை. இரண்டு விபத்துகளும் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை.

   Delete
  8. ///இரண்டு விபத்துகளும் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை.///

   யெஸ்! எனக்குமே!!
   விபத்தின் கோர முகத்தையும், அமானுஷ்யம் ஏற்படுத்தும் திகில் உணர்வையும் ஒருசேர ஏற்படுத்திடும் இதழ்!

   நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு நிஜமான பேய் கதை!!

   எனக்கு பேய் பிசாசுகளில் எல்லாம் நம்பிக்கை கிடையாது.. ஆனால் இம்மாதிரி கதைகளையோ, சினிமாக்களையோ பார்க்கநேரிடும்போது 'இருந்தாலும் இருக்கும்.. யாரு கண்டா?' என்று நினைத்துக் கொள்வேன்!! அப்போதுதான் சுவாரஸ்யம் பன்மடங்கு கூடும்! :)

   Delete
  9. என்னை மாதிரி குழந்தைகள், இது போன்ற பேய்க்கதைகளை படிக்க முடியுமா??

   பயந்து பயந்து வருது.. 😩😩😩

   Delete
 52. அந்தி யின் ஓர் அத்தியாயம் அட்டகாசம். ஜம்போ வில் நீங்கள் இதுவரை வெளியிட்ட கதைகள் எல்லாமே அருமை. மிகச்சிறந்த ஒரு வெஸ்டர்ன் கதை. கனமான முடிவு. அருமையான வசனங்கள். எனது மதிப்பெண் 10/10.
  அடுத்து தனியே தன்னந்தனியே வை நோக்கி.

  ReplyDelete
  Replies
  1. ஜம்போ சீசன் 3-ல் காத்திருக்கும் முதல் இதழும் ஒரு மிரட்டும் வெஸ்டர்ன் one shot சார் !

   Delete
  2. நான் மிகவும் எதிர் பார்க்கும் இதழ் அடுத்த ஜம்போ நில் கவனி வேட்டையாடு. Jumbo season 3 5 கதைகளும் முழு வண்ண கதைகளே. 6 வது கதையும் வண்ணமா சார்?

   Delete
 53. நமது காமிக்ஸ் வாசக நண்பரும் பல்லடம் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளி ஆசிரியருமான சரவணகுமார் தற்போது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ஜந்தாம் வகுப்பு குழந்தைகளை (முதல் பாட்ச் 42 பேர்) அழைத்து வந்து ஆளுக்கொரு ஸ்மர்ப்,பென்னி,லக்கிலூக் என வாங்கி கொடுத்து அசத்தி விட்டார்..
  அடுத்த பாட்ச் குழந்தைகளை வரும் செவ்வாயன்று அழைத்து வருவதாக கூறியிருக்கிறார்..
  ஆசிரியர் பணி என்பது மகத்தானது.. அதிலும் இம்மாதியான காமிக்ஸ் வாசிக்க ஊக்குவிக்கும் ஆசிரியர் கிடைத்திருப்பது அந்த குழந்தைகளுக்கு கிடைத்த வரம்..
  💐💐💐💐💐

  விஜயன் சாருக்கு ஒரு வேண்டுகோள்..
  ஸ்மர்ப்ஸ் ஒரு சில புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி இருக்கிறது ஒரு சிலவற்றுக்கு இல்லை அதனால் அதையும் தள்ளுபடி செய்து தந்தால் வரும் செவ்வாயன்று வாங்க வரும் குழந்தைகளுக்கு உதவிகரமாக இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. முன்னரே சொல்லியிருந்தால் இன்றைக்கே கூட சகல இதழ்களுக்கும் 25 % டிஸ்கவுண்ட் தரச் செய்திருக்கலாமே சிவா !! செவ்வாயன்று தவறாது தந்திடுவார்கள் !!

   Delete
  2. சூப்பர்!! ஆசிரிய நண்பர் சரவணகுமாரின் இந்த காமிக்ஸ் ஆர்வமும், சேவையும் மகத்தானது! அவருக்கு நம் வாழ்த்துகள்!!

   Delete
  3. ////சகல இதழ்களுக்கும் 25 % டிஸ்கவுண்ட் ////

   வாவ்!! சூப்பர் சார்!!

   Delete
  4. ஆசிரிய நண்பர் சரவணகுமாரின் இந்த காமிக்ஸ் ஆர்வமும், சேவையும் மகத்தானது! அவருக்கு பாராட்டுக்கள்.

   சிவா @ உடனே இதனை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.

   Delete
  5. காமிக்ஸை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நண்பர் சரவணகுமாருக்கு வாழ்த்துக்கள் & நன்றிகள்

   Delete
  6. வாவ்...அருமையான செய்தி ..

   ஆசிரிய நண்பர் சரவணக்குமார் அவர்களுக்கு மனம்கனிந்த பாரட்டுகளும் ,வாழ்த்துகளும்...

   Delete
 54. நன்றி சார் தங்கள் அறிவிப்புக்கு..

  நான் அவரிடம் இத்தகவலை தெரியபடுத்துகிறேன்..

  ReplyDelete
 55. ஏழு கழுதை வயசாச்சு ; காட்டெருமைக்குப் போட்டி தரும் தோல் தடிமனை வளர்த்தாச்சு ; பெருசாய் எதைக் கண்டும் லயிக்கும் வயதையெல்லாம் தாண்டியாச்சு என்று நினைப்பு உள்ளுக்குள் உண்டு ! இதழ்களை நீங்கள் பாராட்டும் போது ; மொழியாக்கத்தில் ஸ்பெஷலாய் எதையேனும் சிலாகிக்கும் போது - ஒற்றை நொடிக்கு 'ஹை' என்று துள்ளும் மனசு அடுத்த நொடிக்கு தரைக்குத் திரும்பிடுவதே நடைமுறை !

  ஆனால் ...ஆனால்...

  பிஞ்சுகளின் கைகளில் காமிக்ஸ் இதழ்களைப் பார்க்கும் தருணங்களில் மட்டும் ............. கண்களில் குஷியோடு அவர்கள் பக்கங்களை புரட்டிப் படம் பார்க்கும் காட்சியை ரசிக்க இயன்றிடும் போது மட்டும் ......துள்ளிடும் மனசானது தரை வந்து சேர ரூ யுகமாகிறது ! இதோ திருப்பூர் புத்தக விழாவினில் நமது ஸ்டாலில் ஆசிரியர் சரவண குமார் (ஆசிரியர் என்ற பட்டத்துக்கு ஒரிஜினலாய்த் தகுதியானவர் !!) தம் பள்ளி மழலைகளை அழைத்து வந்து Smurfs ; பென்னி ; ரின்டின் கேன் ; ப்ளூ கோட்ஸ் ; லக்கி லூக் என்று வாங்கித் தந்து அசத்தியுள்ள காட்சி !!

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகளின் "கனவு ஆசிரியர்" என்பவர் இவரை போலத்தான் இருப்பார் சார்.

   Delete
  2. ####பிஞ்சுகளின் கைகளில் காமிக்ஸ் இதழ்களைப் பார்க்கும் தருணங்களில் மட்டும் ............. கண்களில் குஷியோடு அவர்கள் பக்கங்களை புரட்டிப் படம் பார்க்கும் காட்சியை ரசிக்க இயன்றிடும் போது மட்டும் ......துள்ளிடும் மனசானது தரை வந்து சேர ரூ யுகமாகிறது ###

   அந்த நேரத்தில் எவ்வளவு பெரிய மகிழ்ச்சி..
   ஒரு சேர அத்தனை குழந்தைகள் கையிலும் புத்தகங்கள் கானும் பொழுது..
   அதுவுமில்லாமல் 42 குழந்தைகளுக்கும் அவரவர் பெயரிலேயே பில் போட சொன்னதும் இன்னுமொரு மகிழ்ச்சியான விஷயம்..

   Delete
 56. சார் ஆர்ச்சி நீண்ட நாட்௧ளு௧்௧ு பின் 94ல் பாரீசில் ஆர்ச்சி என நினைக்கிறேன் .அதன் பின்னர் நீண்ட நெடுங்௧ாலம் கழித்து பரவால்லை ர௧மாக வந்த ஆர்ச்சியும் வந்த சூப்பர் ஹீரோ ஸ்பெசல் .. இப்ப வந்த ஆர்ச்சி இருக்கப் பயமேன்.. .என பார்க்கையில். . . அட்டகாசமான இதழ். .
  விறுவிறுப்பான கதை. வழக்கமான பூச் சுற்றலிலா ஐன்ஸ்டீனின் காலப்பயணம் குறித்த கதை. .... ஹீரோவோ ஜப்பானியர் முதல் அமெரிக்கர் வரை ௨ருவாக்கத் திணரும் சுப்பர் ரோபோ. ... .அது ௨பயோகிக்கும் ட்ரில் மெசின் ட்ரில் பிட்டோ ஜெர்மானியர் முயற்ச்சித்து வரும் சூப்பர் மெட்டல்... .இதனை கதையாக 50ல் முயற்சித்து கற்பனை சிறகடித்துப் பறந்தோர பாராட்ட... . .. ..
  தொடரும்

  ReplyDelete
  Replies
  1. ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்குப் போயாச்சாக்கும் ஸ்டீல் ? இந்த நடுக்கொண்ட மார்க்கோனி ; ஆல்வா எடிசன் கூட கிடையாதோ ?

   Delete
  2. ஆர்ச்சி ,எதிர்காலத்துக்கு சென்று அங்கு வசிக்கும் சாதாரண ரோபோமனிதர்களோடு சேர்ந்து , குரூயெல்ஸ் என்னும் எதிரிகளை பழைய போர் தளவாடங்களை பயன்படுத்தி தோற்கடிக்கும் கதை தான் Super Hero Super Specialக்கு முன்பு வந்த கதை. அந்த கதையும் , கதை பெயரும் அதிரடியாகத்தான் இருக்கும். ஆனால் ,பெயர் மறந்து விட்டது ,ஸ்டீல்.

   Delete
  3. புரட்சித் தலைவன் ஆர்ச்சி. கிரி சார்

   Delete
  4. குமார் சார்! புரட்சித் தலைவன் ஆர்ச்சி வந்தது 1985 அல்லது 1986 இல். இந்த கதை வந்தது மார்ச் அல்லது ஏப்ரல் 94 இல் சார்.

   Delete
  5. சார்! நினைவுக்கு வந்து விட்டது.ஆர்ச்சியோடு மோதாதே.

   Delete
  6. ஸ்டீல், மன்னிக்க வேண்டும். மே ,1995 இல் லயன் டாப் 10 ஸ்பெஷலில் ஆர்ச்சி IN பாரிஸ் சிறுகதை வந்த நினைவு. ஆர்ச்சியோடு மோதாதே வந்தது மார்ச் 95ல் என்று நினைவு.

   Delete
 57. # ஜம்போ சீசன் 3-ல் காத்திருக்கும் முதல் இதழும் ஒரு மிரட்டும் வெஸ்டர்ன் one shot சார் ! #
  டெக்சாஸ் ஜாக்-ஆ சார்?

  ReplyDelete
  Replies
  1. விஜயன் சார், இந்த "Lion Comics" உங்களுடையதா?

   Delete
  2. 1980களிலிருந்தே வயன் காமிக்ஸ் அவரோடதுதானே!!

   Delete
 58. "தல " புக்க முதல்ல படிக்கிறதா ஆர்ச்சி புக்க முதல்ல படிக்கறதா ஒரே குழப்பமா
  இருக்கே

  ReplyDelete
  Replies
  1. லைட் ரீடிங் ஆக ஆர்ச்சியுடன் தொடங்கி பின் "தல" டெக்ஸ் ,ஹாரர் , சைக்ஸ், என படித்து மீண்டும் ஒருமுறை லைட் ரீடிங் ஆக ஆர்ச்சியுடன் நிறைவு செய்தால் அருமையாய் இருக்கும் நண்பரே.

   Delete
 59. This comment has been removed by the author.

  ReplyDelete
 60. விமர்சனங்கள் எல்லாம் இப்பவே தூள் பறக்குது போல.......
  மின்னல் வேகம்தான்.....

  ReplyDelete
 61. 'தனியே தன்னந்தனியே'வின் அட்டைப்படத்தை கொஞ்சநேரம் உற்றுப்பார்த்தாலே ஒருவித அமானுஷ்யம் ஏற்படுவதான பிரம்மை எனக்கு! குறிப்பாக, அந்த உருவம் முன்புறத் தோற்றமாகவும், பின்புறத் தோற்றமாகவும் மாறி மாறித் தோன்றி கிலியை ஏற்படுத்துகிறது! (அந்த உருவத்தின் கையிலிருக்கும் ஷூவை மட்டும் ஓவியர் வரையாமல் விட்டிருந்தால் அது 'முன்புறத்தோற்றமா பின்புறத்தோற்றமா' என்று அனாடமி படித்தவர்களைக் கொண்டு ஒரு பட்டிமன்றமே நடத்த வேண்டியிருந்திருக்கும்!)

  அச்சச்சோ.. எனக்கு வேப்பிலை அடிக்கணும் போலிருக்கே!!

  ReplyDelete
 62. ஒரு எச்சரிக்கை!!

  'தனியே தன்னந்தனியே'வை கீழ்க்காணும் வகையில் இடம்பிடிப்பவர்கள் - குறிப்பாக இரவில் - படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

  * பெண்கள் (போச்சு.. 2% போச்சு)
  * குழந்தை மனம் படைத்தவர்கள் (போச்சு.. இதுல ஒரு 70% போச்சு!)
  * இதய நோயாளிகள் (போச்சு.. இதுலயும் ஒரு 20% போச்சு)

  மீதமுள்ள 8% நபர்களும் விபூதி இட்டுக்கொண்டோ, ஜெபமாலையை கையில் வைத்துக் கொண்டோ, திருக்குர்ஆனை அருகில் வைத்துக் கொண்டோ படிக்கவும்!

  எல்லாவற்றையும் விட முக்கியமான விசயம் : படிக்க உட்காரும் முன்பு ஒருமுறை 'மூச்சா' போய்விட்டு வந்துவிடுவது நல்லது! :D

  ReplyDelete
  Replies
  1. இதுவரை நமது காமிக்ஸ் இதழில் " பேய்க்கதை " படித்து ( படித்தேனா?!)வெகுகாலமாகி விட்டது..

   இப்பொழுது பேய் கதையா ..ஆவலுடன் காத்திருக்கிறேன்..

   Delete
  2. செயலரே எச்சரிக்கை ஓகே..ஆனால் உங்கள் சதவீதமும் சரிதான் என்றாலும் ஒரு 60 சதவீதமாவது தவறும் அபாயம் உண்டு...

   காரணம் அவர்கள் அனைவரும் திருமணம் ஆனவர்கள்..:-)

   Delete
 63. கண்மணிகள் இன்று இல்லம் வந்து சேர்ந்து விட்டன..பட் நான் நாளை காலை பத்து மணி அளவில் தான் இல்லம் போய் சேருவேன்..

  என்ன விளையாட்டு ஆண்டவா இது...?!

  ReplyDelete
 64. அதிகாரியை "ஏமாற்றுப் பார்ட்டி" என்று முத்திரை குத்தின பின்னேயும், அவர் கதையையே மாதா மாதம் முதலில் தேர்வு செய்வதன் பின்னணி பற்றி யோசிக்கிறேன்.....! உங்களுக்கு ஏதாச்சும் புரிஞ்சூ மஹா ஜனங்களே

  ########

  சார்...நான்தான் பதுங்குகுழியிலே இருந்தே பலவருசத்துக்கு முன்னாடி கண்டுபிடிச்சுட்டு சோல்லிட்டேனே..

  அவர் டெக்ஸின் ஸ்லீப்பர்செல் சார்..ஆனா அதை வெளியே தெரியாம பயங்கரமா காப்பாத்தி வர்றாரு நம்ம சீனாபானரம்மி..:-)

  ReplyDelete