Powered By Blogger

Thursday, January 23, 2020

நான் வளர்கிறேனே டம்மி !!

நண்பர்களே,

வணக்கம். 'நான் வளர்கிறேனே மம்மி !!' என்று பாட்டுப் பாடும் காம்பிளான் பாப்பாவைப் பார்த்திருப்போம் !  

ஆனால் -

"நான் வளரோ வளரோ வளரோ என்று வளர்கிறேனே டம்மி !" என்று பாடி வரும் ஒரு வலைப்பதிவைப் பார்த்திருப்பீர்களா ? என்பது சந்தேகமே !! Welcome to the latest episode of the non-stop soap opera that is otherwise called "Tamil comics" folks !!

இதோ கீழிருப்பது கடந்த ஒரு மாதத்தின் நமது வலைப்பதிவுப் பக்கத்தின் பார்வைக் கணக்கு விபரங்கள் : 
இனி வரும் நாட்களில் நாமெல்லாம் செம கெத்தாய்ச் சொல்லிக் கொள்ளலாம் - "எங்கள சப்பானிலே பாத்தாகோ ; அமெரிக்காவுல பாத்தாகோ ; சுச்சர்லாந்திலே பாத்தாகோ !!" என்று !! கோபால் பல்பொடி மாத்திரமல்ல - நமது வலைப்பக்கமும் எக்கச்சக்க தேசங்களுக்கு ஏற்றுமதி ஆவது எத்தினி மெகா பெருமை !!

And தொடர்ந்திடும் screenshot சொல்லிடும் stats மீதுமே கொஞ்சம் கவனம் ப்ளீஸ் :

Windows Firefox & Chrome பிரௌசர்களின் புண்ணியத்தில் 68% பார்வைகள் - அதாவது 109,929 பார்வைகள் பதிவாகியுள்ளன !!

Android மார்க்கமாயும் IPhone வாயிலாகவும் 29% - அதாவது சுமார் 47,500 பார்வைகள் !! இது நமது வாடிக்கையான பார்வைகளை அனுசரித்துச் செல்லும் ஒரு நம்பராக்கும் ! 

So இதிலிருந்து என்ன கிரஹித்துக் கொள்வதென்பதை உங்களின் யூகங்களுக்கே விட்டு விடுகிறேனே guys ! சிஸ்டத்தில் அமர்ந்து browse செய்யும் திருவாளர் பொதுஜனம் இந்தக் கடைசி ஒன்றேகால் மாதத்தில் - "இணையத்தில் வேறு சரக்கே கிட்டில்லா சாமி ; நீங்களே நிம்ம தேவுடு" என்ற ஆதங்கத்தோடு  திடு திடுப்பென ஓட்டமாய் ஓடியாந்து நம் தளத்தில் ஐக்கியமாகியுள்ளது இன்னா மாதிரிப் பெருமை  ? 

சரி, 4 மில்லியனைத் தொட்ட கையோடு ஒரு ஸ்பெஷல் இதழைக் கோரிக் பெறுவதே இதன் பின்னணி நோக்கமென்று வைத்துக் கொள்ளுங்களேன் - நேற்றோடு இந்த வேகமும், மோகமும் மட்டுப்பட்டிருக்க வேண்டாமோ ? மாறாக வேகம் கூடவல்லவா செய்கிறது ? 

"இன்றைய பொழுது இன்னமும் வேகம் பிடிப்பதன் மருமம் என்ன ? " என்று தில்லானா மோகனாம்பாள் மாடுலேஷனில் பாட்டுப் பாடத் தான் தோன்றுகிறது எனக்கு !! And எதை நோக்கியோ இந்த வேகம் ? என்றும் கேட்கத் தோன்றுகிறது ! 

ஆனாலும் நமக்கு போர் அடிக்காது இருந்திட வேண்டுமென்பதற்காக அநியாயத்துக்கு அக்கறையும் , முனைப்பும் காட்டிச் செயல்பட்டு வரும் அனாமதேய அன்பர்கள், ஊன், உறக்கத்தைத் தொலைத்து வருவதே இங்கே கஷ்டமான சமாச்சாரமாய் எனக்குத் தோன்றுகிறது !!  Rest a wee bit guys !! 

85 comments:

  1. ஒன்னும் புரியவில்லை sir

    ReplyDelete
  2. என்ன சொல்ல நினைக்கிறீங்க என்று, நல்லதா கெட்டதா?

    ReplyDelete
    Replies
    1. இயல்புக்கு முரணானவை என்றைக்குமே கவனத்தைக் கோருபவை தானே நண்பரே ?

      Delete
    2. // இயல்புக்கு முரணானவை என்றைக்குமே கவனத்தைக் கோருபவை தானே நண்பரே //

      Yes.

      Delete
  3. வணக்கம் ஆசிரியரே.

    ReplyDelete
  4. அனைவருக்கும் பேய்களும் உறங்கும் நள்ளிரவு வணக்கமுங்கோ!!!!!!!.

    ReplyDelete
  5. Replies
    1. ஒரு சேஞ்சுக்காண்டி,

      ஹேப்பி சனி பெயர்ச்சி டே!!!

      🤣😂🤣😂😆😆

      Delete
  6. //4 மில்லியனைத் தொட்ட கையோடு ஒரு ஸ்பெஷல் இதழைக் கோரிக் பெறுவதே இதன் பின்னணி நோக்கமென்று //

    எடிட்டர் சார்,
    அந்த ஆப்ரிக்கா தேசத்து கதைகளை 4 மில்லியன் ஸ்பெஷல் (குண்டு புக்காக) கொண்டு வரலாமே!!

    ReplyDelete
  7. இது என்னமோ spam பதிவுகளை (activate, buy மாதிரியான ) போடும் நபர்களின் வேலையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  8. Replies
    1. Some hacker :-( some guys who comes here and place some advertisement (not relevant to comics) might be doing this, since your blogger is very active.

      Delete
  9. அடடே,புதுப் பதிவு......

    ReplyDelete
  10. எனக்கு புரியலையே...

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  12. எடிட்டர் சார்..
    இந்தியாவுக்கு இணையா அமெரிக்காவிலிருந்தும் பார்வைகள் கிட்டியிருப்பதைப் பார்த்தா, கடந்த சில வாரங்களா நீங்க 'ஆர்ச்சி ஆர்ச்சி'ன்னு எழுதினதை 'அமெரிக்க ஆர்ச்சி'யோட தீவிர ரசிகர்கள் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு!!

    windows firefox browserன் எண்ணிக்கையை வச்சுப் பார்த்தா.. ஆபீஸில் மொபைல் ஃபோனை யூஸ் பண்ண முடியாதவங்கதான் ஆபீஸ் கம்ப்யூட்டரிலிருந்தே நம்ம தளத்தை பார்வையிட்டுக்கிட்டிருக்காங்கன்னும் தோனுது!!
    'அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டுமா - உடனே லயன்-முத்து காமிக்ஸ் ப்ளாக்கைப் பார்வையிடுங்கள்'னு யாராவது அவங்களுக்கு அறிவுறுத்தியிருக்கலாமில்லையா?

    சீக்கிரமே அமெரிக்கா, நெதர்லாந்து, ஸ்வீடன்-லேர்ந்தெல்லாம் நூத்துக்கணக்கானோர் சந்தா கட்டினாலும் ஆச்சரியப்படறதுக்கில்லே!! :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம் வர வர உலக அளவில் பிரபலமாக ஆகி கொண்டு இருக்கிறோம் போல உள்ளதே.

      Delete
    2. ஆமாங்க KS! அப்படியே கொஞ்சம் முயற்சி பண்ணி ஏலியன்ஸ் கிட்டேயும் பிரபலமாகிட்டோம்னா தேவலை!

      Delete
  13. அதெல்லாம் இருக்கட்டும். 4 மில்லியன் புக் உண்டா இல்லையான்னு சொல்லாமல் கமல் மாதிரியே குழப்புறாரே

    ReplyDelete
    Replies
    1. குழப்பம் எனக்கில்லை !

      4 மில்லியனை என்றைக்கு நாமாக, இயல்பாகத் தொட்டிருப்போமோ அன்றைக்கு அறிவிப்பும் வரும் !

      Delete
    2. அப்போ சூரி மாதிரி, கோட்ட அழிச்சி மொதல்லேர்ந்து போடுங்க தலீவரே.

      Delete
  14. //நேற்றோடு இந்த வேகமும், மோகமும் மட்டுப்பட்டிருக்க வேண்டாமோ ? மாறாக வேகம் கூடவல்லவா செய்கிறது ?//

    ஒருவேளை 4 மில்லியனுக்கான ஸ்பெஷல் அறிவிப்பு வருகிறதோ என தேடி, என்னேப் போல் ஏமாந்திருக்கலாம் சார்...😁😁🤣

    ReplyDelete
  15. ஒருவேளை 4 மில்லியனுக்கான ஸ்பெஷல் அறிவிப்பு வருகிறதோ என தேடி, என்னேப் போல் ஏமாந்திருக்கலாம் சார்..

    Fact Fact Fact

    ReplyDelete
  16. ஒவ்வொரு மில்லியன் ஹிட்ஸ்க்கு ஸ்பெஷல் புக் என்பது எனக்கு விருப்பம் இல்லை (கேட்பதும் பிடிக்கவில்லை). வேண்டும் என்றால் 5,10,15,20, மில்லியன் ஹிட்ஸ் போது ஸ்பெஷல் புத்தகம் வெளியிடலாம்.

    ReplyDelete
  17. செயலரே...

    உங்க ரமணா புள்ளி விவரமெல்லாம் இப்படி வீணாப் போச்சே..:-(

    ReplyDelete
    Replies
    1. புள்ளிகள் வேணும்னா கொஞ்சம் அப்படி இப்படி வீணாகியிருக்கலாம் - ஆனால் விவரங்கள் வீணாகவில்லை தலீவரே!! ;)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. புள்ளிகள் கூட வீணாகவில்லை தலைவரே! அந்த புள்ளிகளை வைத்து நேற்று அவர் வீட்டில் 10 புள்ளி கோலம் போட்டு விட்டார் தலைவரே :+) மிச்சம் உள்ள புள்ளிகளை வைத்து மேச்சேரி கண்ணன் தன் வீட்டில் 8 புள்ளி கோலம் போட்டு விட்டார். இதில் ஷெரீப் மகி தனக்கு எதுவும் புள்ளிகள் கொடுக்கவில்லை என்று வருத்தப்படுகிறார் ;-)

      Delete
  18. இத பத்தி எல்லாம் நமக்கு ஒண்ணும் தெரியாது புரியாது சார்..


    நீங்க அப்பப்ப ஸ்பெஷலை மட்டும் போடுங்க போதும்..:-)

    ReplyDelete
  19. எனக்கும் ஒண்ணுமே புரியலை சார்..!

    ReplyDelete
    Replies
    1. யாருமே தெளிவா இல்லைன்றதுதாங்க நிஜம், GP!

      Delete
  20. //நீங்க அப்பப்ப ஸ்பெஷலை மட்டும் போடுங்க போதும்.//
    suppppper

    ReplyDelete
  21. தீபாவளியோ, பொங்கலோ, பண்டிகையின் பெயர் எதுவானால் என்ன? இலையை போடுங்க சார். சாப்பிடலாம். (இன்னிக்கு தை அமாவாசை வேற.சீக்கிரமே பசிக்குது.)

    ReplyDelete
  22. ஹூம்.. மணிக்கு 300 பார்வைகளுக்குமேல் எகிறிக்கொண்டிருந்த நிலைமை இன்று காலையிலிருந்து மாறிவிட்டமாதிரி தெரிகிறதே?!! மணிக்கு 100க்கும் கீழான பார்வைககள் தான் இப்போது! ஒருவேளை இது அமெரிக்காவில் தூங்கும் வேளை என்பதாலோ?!!

    என்னவோ போங்க!!

    ReplyDelete
  23. சார், கடந்த ஒருமாதமாக இங்கிலாந்து அரச குடும்பத்தில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவிக்கொண்டிருந்தது. முடிவில் இளரவரசர் ஹாரியும் அவரின் மனைவியும் தங்கள் மகனுடன் அரசகுடும்பத்தில் இருந்து வெளியேறி விட்டனர். அவர்களின் மகனின் பெயரும் ஆர்ச்சி தான். ஒருவேளை அந்த சிறுவனை பற்றி கூகிளில் தேடும் போது நமது ப்ளாகிற்கு தற்செயலாக வந்திருக்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. அடடே!! இப்படியும் இருக்குமோ?!!

      Delete
    2. புதுஸ்சா யோசிக்கிறீங்க ஜீ.!

      Delete
    3. ஆசிரியர் சொன்னதில் “ஒரு மாதமாக” எனும் சொற்றொடர் தான் என்னை இவ்வாறு யோசிக்க வைத்தது ஜி.

      Delete
  24. யார் பார்த்தால் என்ன? எதுக்கு பார்த்தால் என்ன? பார்த்துட்டாங்கல்ல ஒரு ஸ்பெஷல் தலைகாணியை (குண்டு புக்) ரெடி பண்ணுங்க..

    ReplyDelete
  25. ஆசிரியரே, வலைப்பூ புள்ளி விவரங்கள் குறித்து மிகையாகக் கவலை கொள்ள வேண்டாம்! ஆண்டுக் கணக்காய் இழுத்து மூடிய வலைப்பூக்களுக்கே, மாதம் பத்தாயிரத்திச் சொச்சப் பார்வைகள் வரும் போது, உங்கள் தளத்திற்கு நூறாயிரம் வருவதில் வியப்பேது?

    வெறுமனே தமிழ் என்று தட்டினாலோ, காமிக்ஸ் என்று தேடினாலோ, அவ்வளவு ஏன் கோ ஆஃப் "டெக்ஸ்" என்று தேடினாலும் கூட, தேடல் முடிவுகளில் உங்கள் வலைப்பூ வரக்கூடும். கூகிள் தேடுபொறி மற்றும் பற்பல web crawler-களின் வலைவீச்சிற்கு, நமது ஸ்பைடர் தாத்தாவால் கூட ஈடு கொடுக்க இயலாது.

    தவிர, யாராவது குறி வைத்து தாக்க எண்ணினாலுங் கூட, கூகிள் பிளாகர் பாதுகாப்பில் இருக்கும், இவ்வலைப்பூவைத் தாக்கி ஒன்றும் கிட்டப் போவதில்லை - இன்னுமொரு மில்லியன் ஸ்பெஷல் இதழைத் தவிர! அச்சந்தேக வட்டத்தில் வருவது Firefox ஹேக்கர் அல்ல, அதை உபயோகிக்கும் நமது ஈரோட்டு ஜோக்கர் மட்டுமே...

    வருபவரெல்லாம் வாசகரில்லை, என்ற புரிதல் உங்களிடம் ஏற்கனவே இருப்பதால், "ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நான் அறிவேன்" என்ற இனிமையான பாடலை இசைக்க விட்டு மன அமைதி கொள்க! :)

    ReplyDelete
  26. 6 மணி நேரத்தில் வெறும் 300ர்ர்ரே பார்வைகள்!! தளத்தை ஆக்கிரமித்திருந்த அமெரிக்கர்கள் அனைவரும் ஏமாற்றத்தோடு வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது!

    அடேய் செம்பட்டை மண்டையனுகளா.. யாருகிட்ட.. எங்ககிட்டயேவா?!! மில்லியன் ஸ்பெஷலும் கிடையாது.. ஒன்னும் கிடையாது - ஓடிவிடு!

    ReplyDelete
  27. வாங்க ஜான்! நீங்க அமெரிக்காவா? வூர்ல எல்லோரும் சுகம் தானே?

    ReplyDelete
  28. PfB,

    U forgot to ask about his father - Black smith!

    ReplyDelete
  29. Yeah. Thanks for reminding about his father. :-)

    ReplyDelete
  30. "தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெறி கட்டுமாங்கிற மாதிரி" lion King பார்த்த அமெரிக்க சிறுவர்கள் lion comics என தேடியதில் வந்திருக்கலாம்...
    இதில் ஒரு சதவீதம் சந்தாவாக மாறினால் கூட 10 ஆயிரம் சந்தா வந்திருக்க வேண்டும்

    ReplyDelete
  31. 4 மில்லியனை என்றைக்கு நாமாக, இயல்பாகத் தொட்டிருப்போமோ அன்றைக்கு அறிவிப்பும் வரும்

    True Words !

    Looks like chrome and Firefox plugin-play by someone...

    ReplyDelete
  32. எடிட்டர் சார்,

    கடமையே கண்கண்ட தெய்வம்...

    பிப்ரவரியின் இதழ்களை பற்றிய சனிக்கிழமையின் பதிவு பிலிஷ்....

    ReplyDelete
  33. தள்ளுபடி இதழ்கள் லயன் காமிக்ஸ் வலைதளத்தில் எப்போது அறிவிக்கப்படும் சார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார்.. முகநூலில் கூட இதுகுறித்து நண்பர்கள் விசாரிப்பதுண்டு!

      Delete
  34. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தப் பதிவைப் பார்வையிட்டு வருகிறேன்..! குறிப்பாக, பதிவிலிருக்கும் அந்த இரண்டு screen-shotsஐ!!
    குறிப்பாக, அந்த screen-shotன் வலதுபுறத்திலிருக்கும் ரவுண்டு-பன்னு மாதிரியான தோற்றத்தை!!

    ப்பா!! என்னா அழகு!! ஸ்க்ரீன்-ஷாட்னா இப்படில்ல இருக்கணும்!!

    ReplyDelete
    Replies
    1. ரவுண்டு-பன்னு வேணும் என்று நேரடியாக கேளுங்கள் விஜய் :-)

      Delete
    2. @ EV

      பன் 'னைத் தாண்டி வரு(வீரா) வாயா? :-)

      Delete
  35. இன்று பதிவு உண்டா ஆசானே?

    ReplyDelete
    Replies
    1. சுடச் சுட ஒன்பது மணிக்கு ! இன்னிக்கு நோ ராக்கூத்து !

      Delete
    2. அப்படீன்னா அது எங்களுக்கு ராக்கூத்து!

      Delete
    3. இது பேச்சு. I'm waiting

      Delete
    4. நன்றி சார்...ஆனா அஞ்சு நிமிஷம் தாமதித்தா கூட எனக்கு ராக்கூத்தம் ஆயிரும்..:-)

      Delete
  36. சூடான வரவேற்பு..!

    அதாவது Warm welcome..!

    :-))

    ReplyDelete
  37. ஆசிரியரின் புதிய பதிவு தயார் நண்பர்களே.....

    ReplyDelete