நண்பர்களே,
வணக்கம். சரம் கோர்த்து வந்திட்ட விடுமுறைகள் சரவெடி போல் பட்டையைக் கிளப்பியிருக்குமென்று நினைக்கிறேன் ! வாரயிறுதிக்கு இன்னொரு தபா சென்னைப் புத்தக விழாவினில் தலை காட்ட எண்ணியிருந்தேன் ; ஆனால் ஒரு ஒட்டகத்தையோ ; கோவேறு கழுதையையோ பிடித்துச் சவாரி செய்தாலொழிய சிங்காரச் சென்னைக்குப் போக மார்க்கம் லேது என்பது தடையாகிப் போனது ! Anyways சென்னைப் புத்தக விழாவின் விற்பனைகள் doing good என்பதால் நான் விபரங்களை மட்டும் கேட்டுக் கொண்டு இக்கட பிப்ரவரியின் பணிகளுக்குள் பொழுதுகளை ஒட்டி வருகிறேன் ! As always, நிறையவே நேரம் இருக்கும் போதெல்லாம் 'பாத்துக்கலாம் !!' என்று வளைய மறுக்கும் உடம்பானது தேதி இருபதை நெருங்கப் போகிறதெனும் போது பதட்டம் + பரபரப்பு என்ற பெட்ரோலில் ஓட்டமெடுக்கத் துவங்குகிறது ! And as always - இந்த மாதமும் "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" என்று புது இதழ்கள் பற்றிய பில்டப் படலம் இல்லாது போகாதென்றாலும், பிப்ரவரியின் நான்குமே ஏதோவொரு காரணத்தின் பொருட்டுப் பேசப்படும் இதழ்களாய் அமையவிருப்பது நிச்சயம் ! Simply becos கதைகளின் தன்மை top class !!
ஜம்போ காமிக்ஸின் இரண்டாம் சீசனில் இன்னமும் 2 இதழ்கள் பாக்கியிருக்க - அந்த இரண்டுமே வெவ்வேறு விதங்களில் பொறி பறக்கச் செய்யப் போகும் ஆல்பங்கள் ! அவற்றுள் பிப்ரவரியில் வெளிவரக் காத்திருப்பது ஒரு கௌபாய் one shot ! மார்ஷல் சைக்ஸ் !! இவரின் "அந்தியின் ஒரு அத்தியாயம்" தான் நமக்கிம்மாத வண்ண இதழ் ! (பாக்கி 3 இதழ்களுமே black & white இம்முறை !!) வழக்கமான வன்மேற்கு ; வழக்கமான போக்கிரிகள் ; வழக்கமான வன்முறை ! ஆனால் இங்கே சட்டத்தை நிலைநாட்ட வலம் வருபவரோ கொஞ்சம் வித்தியாசமானவர் ! இவருக்கு இரக்கம் உண்டு ; கௌபாய் நாவல்கள் மீது நாட்டமுண்டு & உள்ளுக்குள் ஒரு ஆறா ரணமும் உண்டு !! அத்தனையையும் சுமந்து கொண்டே வெறிநாய்களை வேட்டையாட முனைந்திடும் இந்த மனுஷனுக்கு எதிராய் இருப்பது இன்னுமொன்று : மூப்பு !! தனக்குள் உறையும் சாத்தான்களோடு போரிட்டபடிக்கே - ஒவ்வொரு மனிதனையும் விட்டு வைக்கா காலத்தின் ஓட்டத்தோடும் போட்டி போட்டபடிக்கே - வன்மேற்கை சுத்தப்படுத்த நினைக்கும் சைக்ஸ் நிச்சயமாய் நம் மனதைத் தொடுவார் ! கதையின் வீரியத்துக்குத் துளியும் தொனிக்கா ஓவிய பாணி & ஓவிய பாணிக்குத் துளியும் சளைக்கா கலரிங் பாணி என்று இங்கொரு முக்கூட்டணி ரகளை செய்துள்ளது ! மிகையிலா ; மேக்கப் போடா வன்மேற்கை தரிசிக்க நினைப்போர்க்கு "அந்தியின் ஒரு அத்தியாயம் !" would make for an engrossing read !! ட்யுராங்கோ பாணியில் சைக்ஸூம் ஜாஸ்தி பேசுவதில்லை என்றாலும், கதை நெடுக உள்ள வசனங்கள் 'நச்' ரகம் & பேனா பிடிப்போர் score செய்திட ஆங்காங்கே வாய்ப்புகள் நிறையவே உண்டு ! So ஒரிஜினல் ஸ்கிரிப்ட் சொல்ல முனையும் சங்கதிகளை ; பொருத்தமான அதே தொனியில் சொல்லிட இயன்றமட்டிலும் முயற்சித்துள்ளேன் !! பார்க்க வேண்டும் இதழ் வெளியான பின்பு இது குறித்த உங்களது அபிப்பிராயங்கள் என்னவென்று ! இதோ அட்டைப்படத்தின் முதல் பார்வை ; ஒரிஜினல் டிசைனை மிக மெலிதாய் மெருகூட்டும் நம் முயற்சிகளோடு ! And தொடர்வது உட்பக்க டிரெய்லரும் கூட !
A word of advice too : விஷயங்களைச் சொல்லிட ஸ்கிரிப்டை பயன்படுத்திய அதே அளவுக்கு சித்திரங்களையும் இங்கே படைப்பாளிகள் பயன்படுத்தியுள்ளனர் ! So சித்திரங்கள் மீதும் நுணுக்கமாய் பார்வைகளை ஓடவிட நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் !!
Moving on, பார்வைகளை ஈர்ப்பதோ நடப்பாண்டின் முதல் கிராபிக் நாவல் ! And இம்முறை ஒரு திகில் கதையானதே அந்த ஸ்லாட்டை ஆக்கிரமிப்பது !! இதோ - 'தனியே...தன்னந்தனியே...' இதழின் அட்டைப்பட முதல் பார்வை - இம்மியும் மாற்றமிலா ஒரிஜினல் டிசைனோடு :
மிரட்டலான அட்டைப்படத்துடனான இந்த இதழுக்கு ஒரு first உண்டு ! பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் உச்ச ஸ்தானத்தில் உள்ளதொரு ஜாம்பவானான GLENAT பதிப்பகத்துடன் கரம்கோர்க்க நமக்கு வாய்ப்புக் கிட்டியுள்ள முதல் தருணம் இது என்பதே அந்த first ! சுமார் 4000 இதழ்களை வெளியிட்டுள்ள நிறுவனம் ; ஆண்டொன்றுக்கு சுமார் 400 ஆல்பங்கள் ; ஆண்டுக்குத் தோராயமாய் 12 மில்லியன் இதழ்கள் விற்பனை என்று மிரட்டும் GLENAT பதிப்பகத்தின் துவக்கம், நமது நீலப் பொடியர்கள் smurf களுக்கொரு ரசிகர்மன்ற இதழ் போலானதொரு வெளியீட்டோடு தான் ! 1969 வாக்கில், (Glenat நிறுவனர்) ஜாக் க்ளெநாட் அந்த இதழை உருவாக்கிய சமயம் அவரது வயது 17 மட்டுமே !! இருபது வயதாகிய போது Glenat பதிப்பகத்தைத் துவங்கியவர் இன்றைக்கு அது ஒரு அசாத்திய காமிக்ஸ் சுரங்கமாக விஸ்வரூபம் எடுக்கச் செய்துள்ளார் ! பிரெஞ்சுக் காமிக்ஸ் உலகுடன் நமக்கு 35 ஆண்டுகள் பரிச்சயம் என்ற போதிலும் இவர்களின் கதைகளுக்கு உரிமைகள் கிட்டிடும் தருணம் இன்றைக்கே புலர்ந்துள்ளது !! Fingers crossed இவர்களின் படைப்புகளை நாமும் ரசிப்போமென்று !! கதையைப் பொறுத்தவரைக்கும் இதுவொரு ஹாரர் த்ரில்லர் எனும் போது அதனைப் பற்றி முன்கூட்டியே பேசி வைத்து சஸ்பென்ஸை போட்டுத் தள்ளிடக் கூடாதென்பதால் - மிஞ்சியிருக்கும் பொங்கலால் வாயை ரொப்பிக் கொள்ளவுள்ளேன் - பெவிகால் இல்லாத குறையைத் தீர்த்துக் கொள்ளும் விதமாய் !
பிப்ரவரியின் இறுதி இதழ் - 'தல'யின் crackerjack சாகசம் !! அது பற்றிய preview அடுத்த ஞாயிறுக்கு என்பதால் தற்போது அடுத்த தலைப்பின் பக்கமாய்த் தாவட்டுமா ?
And இதுவோ ரொம்ப காலமாகவே வெறும் வாக்குறுதியாய் மாத்திரமே தொடர்ந்து வந்திடும் ஒரு சமாச்சாரத்தை நிஜமாக்கிடும் முயற்சிக்கான முதல் படி பற்றி ! தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாய் நமது சந்தா எக்ஸ்பிரஸில் இடம்பிடித்து வரும் ரெகுலரான சந்தா நண்பர்கட்கு loyalty points வழங்கப்படும் என்றும், அவற்றிற்கு ஈடாக பரிசுகளோ ; காமிக்ஸ் இதழ்களோ பிரேத்யேகமாய் இருந்திடும் என்று அறிவித்திருந்தது நினைவிருக்கலாம் ! ஆண்டுகள் ஓடிக் கொண்டேயிருக்க, நாம் அதனை நடைமுறைப்படுத்தாது போயின் அப்பாலிக்கா ஒட்டு மொத்தமாய்க் கணக்குப் பார்ப்பதற்குள் நம்மாட்களுக்கும் நாக்குத் தள்ளிப் போய் விடக்கூடும் என்பதால் இதோ அந்த 2020 நடப்பாண்டின் சந்தாக்களுக்கு ஈடான சமாச்சாரங்களை முதலில் அறிவிக்கின்றேனே ? அடுத்த 3 மாத இடைவெளிக்குள் இதனை நிஜமாக்கிய கையோடு 2019-க்கான பரிசு ; அதன் பின்னே 2018-க்கு என வாக்குறுதிகளை நிறைவேற்றிட உத்தேசித்துள்ளேன் !
நடப்பாண்டை நான் முதலில் தேர்வு செய்திடக் காரணங்கள் இரண்டுள்ளன ! காரணம் # 1 : Obviously நமக்கு இதற்கான பட்டியலைத் தயார் செய்வது ரொம்பவே சுலபம் ! And காரணம் # 2 : இம்முறை கிட்டத்தட்ட 95% சந்தாக்கள் "ஆல்-இன்-ஆல் அழகுராஜா" சந்தாக்களே !! So இந்தாண்டினில் நீங்கள் ஈட்டியுள்ள பாய்ண்டுகளில் பெரிதாக வித்தியாசம் இராதென்பதால் - ஒற்றை அறிவிப்பே அனைவருக்கும் பொருந்திடும் ! As a result எனது வேலையும் லேசாகிப் போகிறது !
இங்கே என் முன்னே இருப்பன 2 options :
1."படகோட்டி" படத்தில் தலீவர் (நம்ம பதுங்குகுழிப் புகழ் தலீவர் நஹி!) கழுத்திலே கட்டின கர்சீப் ; "கன்னடத்துப் பைங்கிளி பயன்படுத்திய சோப்பு டப்பி" என்ற ரகத்தில் அல்லாது - உருப்படியாய் நம் நாயகர்களின் படங்களுடனான printed tshirts ; coffee mugs ; wallclocks என்று வழங்கிடலாம் ! டெக்ஸ் வில்லர் ' லக்கி லூக் ; ஜேம்ஸ் பாண்ட் 007 போன்ற prime நாயகர்களின் படங்களை பதித்திட அனுமதி கிட்டுவது கடினம் - becos ஏற்கனவே அவர்களின் இது போலான merchandise உலகளவில் விற்பனைக்கு உள்ளன ! மாறாக - மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி ; போன்ற evergreen பார்ட்டிகளை இங்கே பயன்படுத்திடலாம் !
2.Option # 2 : ஏதேனும் பிரத்யேக விலையில்லா காமிக்ஸ் இதழ்களைத் தயாரித்து பாய்ண்ட்களுக்கு ஈடாக அவற்றை வழங்கிடலாம் தான் ! ஆனால் இங்கே சின்ன நடைமுறைச் சிக்கல்கள் நெருடுகின்றன :
முறைப்படிப் பார்த்தால் இந்தத் திட்டமிடலின் கீழ் உருவாக்கக்கூடிய இதழ்களை "சந்தாவின் அங்கத்தினர்கட்கு மாத்திரமே" என்று - பிரேத்யேகங்களாக்கிடுவதே சிறப்பாய் இருக்கும் ! ஆனால் சந்தாவினில் இணைந்திட இயலாது போன இதர நண்பர்களின் வருத்தங்களை மறுபக்கம் சம்பாதிப்பதும் அங்கு நிகழும் ! So தற்போதைய அந்த இலவச கலர் டெக்ஸ் பார்முலாவையே அங்கும் கையில் எடுக்க எண்ணியுள்ளேன் ! Which means சந்தா நண்பர்களுக்கு விலையின்றி சுடச் சுட விநியோகிக்கும் இதழ்களை ஒரு கால இடைவெளிக்குப் பின்பாய் (maybe towards the end of the year) ஒரிஜினல் விலைக்கே limited editions-களாய் விற்பனைக்குக் கொணர்வது நிகழ்ந்திடும் !
ரைட்டு - எந்த மாதிரிக் கதைகளை இங்கே உபயோகிப்பது ? என்பது அடுத்த கேள்வி ! ஏதேனும் புதுக் கதை நாயகர்களையோ ; அல்லது டெக்ஸ் வில்லரின் புது அதிரடிகளையோ இங்கே களமிறக்கிவிட்டு - சந்தாவின் அங்கத்தினர்கள் தவிர்த்து மீதப் பேருக்கு எட்டோ ஒன்பதோ மாதங்களுக்கு அப்பால் அவை கிடைக்குமென்று நான் அறிவிக்கும் பட்சத்தில் - முழியாங்கண்ணன் - முழியில்லாகண்ணன் ஆகிடும் சாத்தியங்கள் செம பிரகாசம் என்பது புரிகிறது ! So "சித்தே தாமதமாய்ப் படித்தாலும் ஓ.கே." என்ற ரீதியிலான கதைகளே இந்தத் திட்டமிடலும் சுகப்படும் ! அவ்விதம் யோசிக்கும் போது மறுபதிப்புகள் அல்லது சற்றே புராதனங்கள் இழையோடும் கதைநாயகர்களே தேர்வாகிறார்கள் ! மறுபதிப்புகளை மறுக்கா அப்படியே போட்டு சந்தா நண்பர்களின் சிரங்களில் கட்டுவதிலும் பெருசாய் fancy இராதெனும் போது - அந்த இதழ்களுக்கு ஏதேனும் ஸ்பெஷலாய் மெருகூட்டல் அவசியம் என்பது common sense ! உதாரணத்திற்கு - மாயாவியின் "கொரில்லா சாம்ராஜ்யம்" மறுபதிப்பினை வண்ணத்தில் போட்டு தாக்கிடலாம் ! ஆனால் நீண்ட நெடும் காலமாய் இதனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நண்பர்கள் / மூத்த வாசகர்கள் சந்தா அணியினில் இடம்பிடித்திருக்கும் அதே அளவுக்கு சந்தாவில் அல்லாதோர் அணியிலும் இருப்பது நிச்சயம் ! அவர்களிடம் போய் "கொரில்லா சாம்ராஜ்யம்" இப்போ வருதுங்கண்ணா ; ஆனா பாருங்கோ - நீங்க சந்தாவிலே இல்லாததனாலே உங்களுக்கு அடுத்த ரவுண்டிலே தான் அதைக் கண்ணிலே காட்டுவேனாக்கும் !!" என்று சொல்லிடும் பட்சத்தில், குரல்வளையோடு நான் முழுசாய் வீடு திரும்பும் வாய்ப்புகள் என்ன மாதிரியானவை என்பதை யூகிக்கச் சிரமங்களே இராது தான் !! So அது போன்ற evergreen மறுபதிப்புகளை இந்த முயற்சிக்குப் பயன்படுத்துவது out of question !!
சரி, evergreen மறுபதிப்புகள் வேணாம் ; MAXI லயனில் தற்சமயம் வருவது போலான TEX மறுபதிப்புகளை வண்ணத்தில் போட்டு அவற்றை விநியோகிக்கலாமா என்றும் யோசித்துப் பார்த்தேன் ! வண்ணத்தில் 'தலைவாங்கிக் குரங்கு" came to mind - அது கிட்டத்தட்ட எல்லோரிடமும் black & white-ல் இருப்பதால், கொஞ்சம் முன்னேவோ,பின்னேவோ வண்ண மறுப்பதிப்பை வாங்கிக் கொள்வதில் பெருசாய் நெருடல்கள் இராதே என்ற காரணத்தினால் ! ஆனால் அங்கே வேறொரு நெருடல் தலைதூக்கியது ! நடப்பாண்டின் சந்தாவில் MAXI லயனும் ஒரு அங்கம் & அதனில் டெக்ஸ் மறுபதிப்புகள் வெளிவருகின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ! அவ்விதமிருக்க - "இந்த ஒரு டெக்ஸ் மறுபதிப்பு மாத்திரம் சந்தாவிலே சேராதுங்க சார் ; இது loyalty points கோசரம் போடற இதழ் என்று சொல்வதாயின், நமது பதிவுகளை ; இங்கே அலசப்படும் தலைப்புகளை அத்தனை உன்னிப்பாய்க் கவனிக்கா வாசகர்கள் கண்சிவப்பது நிகழ்ந்திடும் துளியும் சந்தேகமின்றி ! வெகு சமீபத்தில் கூட இத்தகைய "வாசக காச் மூச் படலம்" அரங்கேறியது - "ஈரோடு ஸ்பெஷல்"இதழ்களை முன்பதிவுக்கென அறிவித்து வெளியிட்ட வேளைதனில் ! அது சந்தாவின் அங்கமல்ல என்பதை புரிய வைக்கத் தலைகீழாய் நின்று நம்மாட்கள் தண்ணீர் குடித்தும் நிறைய வாசகர்கள் கத்தித் தீர்த்ததே நிகழ்ந்தது ! "அதுலாம் எனக்குத் தெரியாது...ஒரு வருஷத்துக்கான சந்தா கட்டிப்புட்டேன் ; அதனாலே வருஷத்தின் அத்தினி புக்கும் எனக்கு வேணுமாக்கும் !" என்று அடம் பிடித்தோர் எக்கச்சக்கம் !! So மறுபடியும் அது போலொரு சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளும் படலம் வேண்டாமே என்ற எண்ணத்தில் டெக்ஸ் வண்ண மறுபதிப்பு யோசனையையும் கைவிட்டேன் !!
சரி...கார்ட்டூன்களுள் ஏதேனும் ஸ்பெஷல் இதழ் போடலாம் என்றாலும், அதே வாசக அர்ச்சனைப் படலம் தொடருமோ என்ற குழப்பமே !! "இது சந்தா C -ன் அங்கம் தானே ? எனக்கு ஏன் அனுப்பலை ? நான் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகப் போறேன் !!" என்று போனில் நமது பாவப்பட்ட பணிப்பெண்களிடம் எகிறும் வைபவங்கள் நிச்சயமாய் நடந்திடும் !
கதவுகள் பல அடைபட்டாலும் "நாங்க இருக்கோம் ஜி !!" என்று உத்வேகமாய்க் கைதூக்கி நிற்போர் யாரென்று பார்த்தால் - அட...நம்ம ஆர்ச்சி அண்ணாத்தேயும் ; ஸ்பைடர் அப்புச்சியும் தான் !! இவர்களை நடப்பாண்டின் சந்தா அட்டவணைகளில் கண்ணில் காட்டவே கிடையாதெனும் போது இவர்களது (புதுக்) கதைகளை தனித்தடத்தில் வெளியிடும் பட்சம் பெரிதாய்க் குழப்பங்கள் நேராது என்றுபட்டது ! சரி....இவர்களுள் ஒருவரைத் தேர்வு செய்து வழக்கமான பாணியில் கதைகளை வெளியிட்டு "loyalty points க்கு இது தானுங்கோ !" என்று ஒப்படைப்பதில் என்ன கிக் இருக்க முடியும் என்றும் யோசித்துப் பார்த்தேன் ! "அண்ணன் ஆர்ச்சியை முழுவண்ணத்தில் போட்டுத் தாக்கினால் எப்படியிருக்கும் ?" என்று லேசான யோசனை மண்டைக்குள் ஓட்டமெடுக்க - அதை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் முஸ்தீபுகளில் இறங்கினோம் சத்தமின்றி ! சும்மா சொல்லக்கூடாது - கலரில் சட்டித் தலையன் சும்மா தக தகவென்று மின்னுறான் !! பயலை வண்ணத்தில் ஆர்ட்பேப்பரில் பார்த்தால் மெர்சலாக இருக்குமென்றேபட்டது ! Here is a sample !!
So 2020-ன் சந்தா நண்பர்கட்கு loyalty points-களுக்கு ஈடாக இந்த ஆல்பம் இருந்திடும் - வரும் ஏப்ரல் மாதத்தினில் ! "இல்லீங்கோ ...black & white ஆர்ச்சியே பாக்கிறதுக்கே பயந்து பயந்து வருது ; கருப்பசாமி கோயில்லே துன்னீரு போட நினைச்சருக்கேன் ; இந்த அழகிலே கலரிலே காப்ரா காட்டுறீரே !!" என்று மிரளும் நண்பர்கள் இந்தப் பாய்ண்ட்களை டி-ஷர்ட்களிலோ ; coffee mug-களிலோ ஈடு செய்து கொள்ளலாம் ! அல்லது - இந்தப் புள்ளிகளை அடுத்தாண்டிற்கு Carry forward-ம் செய்து கொள்ளலாம் ! உங்கள் தீர்மானங்கள் எதுவாயினும் lioncomics@yahoo.com என்ற நம் மின்னஞ்சலுக்கு உங்கள் சந்தா நம்பரைக் குறிப்பிட்ட கையோடு - "ஆர்ச்சிக்கு ஜே" என்றோ ; "ஆத்தாடியோவ் நோ !!" என்றோ ; "Carry forward" என்றோ சுருக்கமாய் தகவல் சொன்னால் போதும் ! அதற்கேற்ப நாங்கள் குறிப்பெடுத்துக் கொள்வோம் !
எனக்குத் தோன்றிய கோணங்களில் எல்லாமே யோசித்துத் தான் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளேன் - யாருக்கும் பெரிதாய் நெருடல்கள் தோன்றிடக் கூடாதே என்ற ஆர்வத்தோடு ! ஆனால் வண்ணாந்துரையில் உள்பாவாடை காணாது போவதற்குக் கூட இந்த முட்டைக்கண்ணன் தான் காரணமாக இருக்க முடியும் ! என்ற அசைக்க முடியா அன்பும், நம்பிக்கையும் கொண்ட அணியினருக்கு நிச்சயமாய் இதனுள் குறைகளைக் கண்டுபிடித்துக் கும்மியடிக்க வாய்ப்புகள் அல்லாது போகாதென்பதும் நிச்சயம் ! Just a word to them too : கும்மியடிக்கும் மும்முரத்தில் மின்னஞ்சலை அனுப்ப மறந்து விடாதீர்கள் - ப்ளீஸ் ; ஜனவரி 31-க்கு முன்பான பதிவுகளுக்கேற்பவே அச்சிடவுள்ளோம் ; அல்லது merchandise தயார் செய்திடவுள்ளோம் ! So நடப்பாண்டின் சந்தா எக்ஸ்பிரஸில் தொற்றிக் கொள்ளவும் ; அஞ்சாநெஞ்சன் ; ஆருயிர் அண்ணன் ஆர்ச்சியின் முதன்முதல் வண்ண ஆல்பத்தை தரிசிக்க புக்கிங் செய்திடவும் ஜனவரி 31 வரையிலும் தான் அவகாசமிருக்கும் guys !
நெடுநாள் அவகாசம் கழித்து முன்மண்டையில் முட்டை பரோட்டா போடும் ஒரு சந்தோஷ சந்தர்ப்பத்தை வழங்கிய திருப்தியோடு இப்போது கிளம்புகிறேன் guys !! பிப்ரவரி இதழ்களின் பணிகள் இன்னமும் மலையாய்க் குவிந்து கிடக்கின்றன ! Bye now ...see you around !! Have a lovely weekend !!

மீ!!
ReplyDeleteமீ டூ
ReplyDeleteமீ 3 !
ReplyDeleteMe three
ReplyDeleteஉள்ளேன் ஐயா.
ReplyDeleteநானும் நண்பர்களே..
ReplyDeleteவாங்க சந்தோஷ்.
DeleteUnder top 10!!!!
ReplyDelete@ ALL : வானிலை எச்சரிக்கை :
ReplyDeleteகவிஞர் நாளைக்கு எப்படியும் ஒரு நூத்திச் சில்லறை கமெண்ட் வெள்ளத்தால் தாக்கிடப் போவது உறுதி ; அதிலே பாதிக்கும் மேலே கவிதை அருவியாவும் இருக்கப் போறது உறுதியோ உறுதி !! So அல்லாரும் சித்தே பத்திரமான இடங்களிலே நிலைகொள்ளல் நலம் !!
ஹா ஹா!! ஸ்டீல் காட்டில் மழை!! :)
DeleteTop 10
ReplyDeleteகலர் ஆர்ச்சி கலர் ஆர்ச்சி வரட்டும்.
ReplyDeleteஆர்ச்சிக்கு ஜே.
ReplyDeleteHi
ReplyDeleteWelcome aarchi
ReplyDeleteஆஹா...வந்துட்டான்யா..வந்துட்டான்யா..(நம்ம ஆர்ச்சி ;-)
ReplyDeleteமாடஸ்டிக்கு புக்கும் இல்லை காபி மக்கும் இல்லை டி சர்ட்டிலும் இடமில்லை. இந்த வருடமும் carry Forward. அடுத்த வருடமும் இதே தொடர்ந்தால் அடுத்த வருடமும் டிட்டோ
ReplyDeleteஇதெல்லாம் இல்லேன்னாலும், மாடஸ்டி சிக்குன்னு இருக்காங்களே. விடுங்க பாஸ்.
Delete//மாடஸ்டிக்கு புக்கும் இல்லை காபி மக்கும் இல்லை டி சர்ட்டிலும் இடமில்லை. இந்த வருடமும் carry Forward. அடுத்த வருடமும் இதே தொடர்ந்தால் அடுத்த வருடமும் டிட்டோ// Same!
Deleteமாடஸ்டி வரும்வரைக்கும் carry forward தான் என்றால் ஒரு பெரிய நோட் போட்டு உங்களது பாய்ண்ட்களைக் குறித்தாக வேண்டும் சார் !
Delete"Carry forward" mail has been sent,vijayan sir!
Deleteவணக்கம்
ReplyDeleteகலரில் ஆர்ச்சி
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி
22nd
ReplyDelete23வது
ReplyDeleteஅந்தியின் ஒரு அத்தியாயம் - அட்டைப்படம் , மிகநன்று- மார்ஷல்சைக்கஷ் தொடர் நன்றாக வரும் என்று தோன்றுகின்றது, சித்திரங்களும் பேசுகின்றன
ReplyDeleteதனியே தன்னந்தனிய தனியே- அம்மாடியோவ், மிரட்டலாக உள்ளது
அந்தியில் ஒரு அத்தியாயம் எதிர்பார்ப்பு கூடூகிறது
ReplyDeleteஆர்ச்சி கலரில் பேஷ் பேஷ்
ReplyDeleteபின்னிரவு வணக்கங்கள்..!
ReplyDeleteகதை சொல்லும் கானகம் அட்டைப்படத்தை அப்படியே நினைவூட்டினாலும் 'தனியே தன்னந்தனியே அட்டைப்படம் ரொம்பவே மெருகேறியுள்ளது.
ReplyDeleteஅந்த தனித்துவமான எழுத்துரு, கவித்துவமான தலைப்புக்கு சட்டெனப் பொருந்துகிறது.
// கதை சொல்லும் கானகம் அட்டைப்படத்தை அப்படியே நினைவூட்டினாலும் 'தனியே தன்னந்தனியே அட்டைப்படம் ரொம்பவே மெருகேறியுள்ளது. // சூப்பர் GP
Deleteமார்ஷல் சைக்ஸ் ..,
ReplyDeleteஅட்டைப் பக்கங்களும், உட்பக்கங்களும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.
வண்ண ஆர்ச்சி.!
ReplyDeleteநோ கமெண்ட்ஸ்..!
வணக்கம் நண்பர்களே!
ReplyDeleteபுக்கும் வேண்டும்..! காபி மக்கும் வேண்டும் என்றால் என்ன செய்வது சார்?
Deleteஇன்னொரு சந்தா கட்டணும்!!! :-)
DeleteGood question 😆😆🤔
Deleteவணக்கம் சார் வணக்கம் நண்பர்களே.
ReplyDeletehttp://lion-muthucomics.blogspot.com/2019/11/blog-post_23.html?m=1 சார் நீங்கள் ஏற்கனவே சொன்ன இந்த இதழ் சந்தா நண்பர்களுக்கு என்ன ஆயிற்று?
ReplyDeleteஒரு காலும் ஒரு கட்டை விரலும் பதிவு.
Deleteஅட ஆமால்ல...!
Deleteகுமார் சார்... நீங்க ரொம்ப ஷார்ப்பு...!
ஆர்ச்சிக்கு இது மாதிரி புக் பெட்டெர் சாய்ஸ்!
குமார் சார்..!
Deleteநல்ல ஞாபக சக்தி உங்களுக்கு.
நானுமே இதை வழிமொழிகிறேன்.
//சார் நீங்கள் ஏற்கனவே சொன்ன இந்த இதழ் சந்தா நண்பர்களுக்கு என்ன ஆயிற்று?//
Deleteஅதுதானே வாத்தியாரே .. நானுமே இதை வழிமொழிகிறேன்..
@KS
Deleteகிடுக்கிப்பிடி கேள்வி நண்பரே!!
எடிட்டரை உங்களின் கிடுக்கிப்பிடி கேள்வியால் விழிபிதுங்கச் செய்திருப்பதால் (ஆத்தாடியோவ்.. பயமாயிருக்கு!!) இன்று முதல் நீங்கள் நாட்டுமக்களால் 'கிடுக்கிப்பிடி குமார்' என்று அன்போடு அழைக்கப்படுவீர்களாக!!
எடிட்டர் சார்.. இப்ப இப்ப இப்ப நீங்க இங்கே வரணும்! வந்து.. உங்க விளக்கங்களைச் சொல்லணும்! எங்ககிட்டயேவா?
அதுவும் உண்டு. ஆர்ச்சி 2019 லாயல் பாயிண்ட்க்கு அந்த பதிவில் உள்ளது 2020 அல்லது 2018 சந்தாதாரர்களுக்கு :-)
Deleteஒரு கொத்து பரோட்டா படலம் என பதிவின் தலைப்பை மாற்றி விடுங்கள் சார் :-)
நிச்சயமாய் மறக்கவில்லை guys ! என்ன - அது போன்ற வித்தியாசமான புதுக் கதைகளை ஒரே நேரத்தில் அனைவரையும் எட்டிடும் இதழாக்கிடும் ஆசை நடுவே துளிர் விட்டது ! Moreso நமது மூத்த வாசகர்களையும் அது சென்றடைய வேண்டும் என்று பட்டது !! So 2021 -ன் ரெகுலர் இதழ்களின் ஸ்லாட்டினுள் எப்படியேனும் புகுத்திடுவேன் !
Deleteநன்றி சார். அப்போ என் சார்பாக Archikku ஜே ஜே
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஜம்போவில் இதுவரை 11 புத்தகங்கள் வந்து விட்டதா? (சைக்கஸ் 12 எனில்...) என்னிடம் 10 தானே உள்ளது? எதையாவது மிஸ் செய்து விட்டேனா?
ReplyDeleteஇதழ் எண் :7 உங்களிடம் இருக்காது. அது கால வேட்டை யர் அதற்கு பதில் தான் ஜம்போ வின் அடுத்த இதழ் வருகிறது. கால வேட்டை சுமார் என்று ஆசிரியர் வெளியிட வில்லை. அதனால் அந்த எண் skip ஆகி விட்டது. நீங்கள் எதையும் மிஸ் செய்ய வில்லை.
Deleteநன்றிகள் சார்!
Deleteஇல்லையே. எடிட்டர் இன்னும் இரண்டு இதழ்கள் பாக்கி. அதில் பிப்ரவரியில் மாஸ்டர் சைக்ஸ் என்று தானே சொல்லி இருக்கிறார்.
ReplyDeleteஅடுத்த மாதம் வரவுள்ள மார்ஷல் சைக்ஸ், தனியே தன்னந்தனியே, டெக்ஸ், ஆர்ச்சி ஒரு வித்தியாசமான கூட்டணியாக அதகளப்படுத்துமென நம்புகிறேன் சார்! பாயிண்ட்ஸ்களுக்கு வண்ண ஆர்ச்சியே நல்ல தேர்வாக இருக்குமென நம்புகிறேன்!அதனால இப்பவே ஆர்ச்சிக்கு ஜே போட்டு வைக்கிறேன்! ஆர்ச்சியை களம் இறக்கியது போல கூர்மண்டையர் ஸ்பைடரையும் தாங்கள் களம் இறக்கினால் நிறைய பேருக்கு தீபாவளியை கொண்டாடிய உற்சாகம் வரும்! என்னதால் காதுல பூ மூக்குல மூக்குத்தி னு மின்னினாலும் குழந்தைப் பருவத்தை மீட்டிய சந்தோஷத்தை வழங்கக்கூடியவர்களில் ஸ்பைடருக்கு எப்போதுமே ஓர் இடமுண்டு! எல்லோருக்குமே ஒரு நாயகர் கனவு நாயகராக இருப்பதுண்டு! அதுபோல ஸ்பைடருக்கும் இன்னும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள்! இவருடைய மறுவருகை செய்தியை அறிவித்து பாருங்கள்! எத்தனை பேர் தங்களுடைய சந்தோஷத்தை ஷேர் பண்ணுகிறார்கள் எனப் பாருங்கள் சார்!முடிந்தால் இந்த வருடமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அறிவிக்கப் பாருங்கள் இல்லையென்றால் அடுத்த வருடமாவது ஸ்பைடருக்கென ஒரு ஸ்லாட் ஒதுக்கப் பாருங்கள்! இது எனது கனிவான வேண்டுகோள்! நன்றி சார்
ReplyDelete+1
Deleteவழிமொழிகிறேன். மறுபதிப்பு காணாத ஸ்பைடர் மற்றும் மாயாவி கதைகளை அவ்வப்போது இது போன்று சர்ரைஸாக வெளியிடுங்கள் சார்.
Deleteஸ்பைடரார் தான் இப்போது வரைக்குமே ஓட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறாரே சார் ? ஆர்ச்சி பய தான் சில பல ஆண்டுகளாய் மிஸ்ஸிங் !!
Deleteமார்ஷல் சைக்ஸ் ன் அட்டைப்படம் சிவப்பு நிறத்தில் பளபளக்கிறது சார்..அருமை..இந்த அறிமுக நாயகர் டெக்ஸ் போலவா ,டைகர் போலவா ,ட்யூராங்கோ போலவா ,ட்ரெண்ட் (?) போலவா ..
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறேன்..:-)
தனியே தன்னந்தனியே இதழின் அட்டைப்படத்தை பார்க்கும் பொழுது கதை சொல்லும் கானகத்தின் அதே இதழோத்தானோ என்று எண்ண வைக்கிறது சார்..:-)
ReplyDeleteவண்ண ஆர்ச்சிக்கு ஜே சார்...:-)
ReplyDelete///அட்டைப்படத்துடனான இந்த இதழுக்கு ஒரு first உண்டு ! பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் உச்ச ஸ்தானத்தில் உள்ளதொரு ஜாம்பவானான GLENAT பதிப்பகத்துடன் கரம்கோர்க்க நமக்கு வாய்ப்புக் கிட்டியுள்ள முதல் தருணம் இது என்பதே அந்த first ! ///
ReplyDeleteWow super
Glenat உடன் ஆன பயணம் எப்படி துவங்குகிறது என்று பார்ப்போம். டாப் கியரில் செல்லும் என்று நினைக்கிறேன்.
Deleteஎனக்கு இத்தாலிய கதைகளை விடவும் பிரெஞ்சு கதைகளின் மேல் ஈர்ப்பும், விருப்பமும் உண்டு!
Deleteஎனக்கு மிகவும் பிடித்த டாப் 3 கி.நா.க்கள்!
1. நிஜங்களின் நிசப்தம்
2. தேவ ரகசியம் தேடலுக்கல்ல
3. இரவே இருளே கொல்லாதே
(இதுவும் பிரெஞ்சு கதை தான்னு நினைக்கிறேன்; ஞாபகமில்லை)
இரவே..இருளே..கொல்லாதே...! பிரெஞ்சுக் கதையே சார் !
Deleteஇத்தாலிய மொழியினில் நாம் தேர்வு செய்திடும் களங்கள் ஜனரஞ்சகங்களே என்பதால் கி.நா.ரசனைகளில் அவர்கள் ஒரு மிடறு குறைச்சலாய்த் தோன்றிடலாம் ! ஆனால் அங்கும் உள்ள நிஜ ஆழத்தை முழுமையாய்த் துளாவினால் நிறைய பொக்கிஷங்கள் கிட்டிடக்கூடும் !
ஆர்ச்சிக்கு ஜே!!!
ReplyDeleteவருக வருக வண்ண ஆர்ச்சி😁😁😁
ReplyDeleteசந்தா 1...ஆர்ச்சிக்கு ஜே!!!( கீச் மூச்ன்னு சத்தம் போட்டாலும் புக்குன்னு வந்துட்டா விட்டுட முடியுமா? )
ReplyDeleteசந்தா 2 ..டி ஷர்ட்டுக்கு ஜே ! ( பையனுக்கு .)
:-)
Delete//கீச் மூச்ன்னு சத்தம் போட்டாலும் புக்குன்னு வந்துட்டா விட்டுட முடியுமா?//
Deleteஹிஹி!! :)))
:-)
Delete"ஆர்ச்சிக்கு ஜே"
ReplyDeleteமார்ஷல் சைக்ஸ் !! அட்டைப்படத்தில் சைக்ஸ் செம ஸ்டைலா உட்கார்ந்து இருக்கார். உட்பக்க டீசர் படங்கள் வசனங்கள் இல்லாமல் சில விஷயங்களை சொல்கிறது. சைக்ஸ் வெயிட்டிங் பார் யூ.
ReplyDeleteஅப்புறம் சைக்கோவை shortஆ சைக்ஸ் என கூப்பிடுவோம். அவரின் பெயருக்கு பின்னால் ரகசியம் ஏதும் உண்டா. :-)
அது psychs இல்லை பரணி..Sykes..
Deleteவட இங்கிலாந்திய புழக்க சொல்..
தனிமையான, ஒதுக்குப்புறமாய் உள்ள,ஆற்றோரம் உள்ள சேறும் சகதியும் உள்ள சதுப்பு நிலப்பகுதியை குறிக்கும்..
இதற்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை..கதையை படித்தால் விளங்கலாம்..படித்து பார்ப்போம்..
நன்றி செல்வம் அபிராமி
Deleteசெனா அனா அருமையான விளக்கம்.
Delete/////வட இங்கிலாந்திய புழக்க சொல்..
Deleteதனிமையான, ஒதுக்குப்புறமாய் உள்ள,ஆற்றோரம் உள்ள சேறும் சகதியும் உள்ள சதுப்பு நிலப்பகுதியை குறிக்கும்..////
வட இங்கிலாந்திய புழக்க சொல்..
இந்த மார்ஷல் சைக்ஸும் கூட தனிமையான, ஒதுக்குப்புறமாய் உள்ள,ஆற்றோரம் உள்ள சேறும் சகதியும் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் தான் குடியிருக்காரோ என்னமோ?!!
சதுப்புநிலத்துல குடியிருக்க எதுக்கு இம்புட்டு டீசன்ட்டான கோட்டும் சூட்டும்ன்தான் புரியலை!!
பதுங்கு குழியிலேயே பலரும் டீசன்ட்டான கோட்டு சூட்டு போடறப்ப சதுப்பு நிலத்துல ...
Deleteதப்பில்ல செயலரே...:-)
தென் தமிழகத்தில் சைக்ஸ் என்றால் சைக்கோ என்று சொல்வார்கள் என்பதையும் சொல்லி கொள்கிறேன் யூவர் ஆர்னர் :-)
Deleteபிப்ரவரி 1 வரைப் பொறுமை புலவர்களே !
DeleteMs jayakumar good morning friends
ReplyDelete
ReplyDeleteசந்தா 1...ஆர்ச்சிக்கு ஜே!!!( என்னதான் மாடஸ்டி., மாடஸ்டின்னு சத்தம் போட்டாலும் புக்குன்னு வந்துட்டா விட்டுட முடியுமா? )
சந்தா 2 : மாடஸ்டி (டீ சர்ட் போட்ட) படம் போட்ட டீ சர்ட் போட்டா, இன்னொரு சந்தா கட்டுவோம்... கட்டுவோம்...
கட்டுவோம்...
(எக்கோ எபெஃக்ட்டுல படிக்கனும்..
லொக்.. லொக்.. )
டெம்ப்ளட் உதவி : செனா அனா..
:-)))
Deleteகரூர்கார்..:)))))
Deleteஆமா.. நீங்க யாரு.. கொஞ்சம் பக்கமா வந்து, இந்த பக்க காதாண்டி சத்தமா சொல்லுங்க சார்..??
Delete25% டேபிளில் இருந்து முதலில் விடுதலை சார் ; அப்பாலிக்கா டி-ஷர்ட் ; காபி-ஷர்ட் !
Deleteமாறாக - மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி ; போன்ற evergreen பார்ட்டிகளை இங்கே பயன்படுத்திடலாம் !////
ReplyDeleteஇளவரசி மற்றும் சிகுவாகுவா சில்க் பயன்படுத்த கூடாதா???
லேடி-s வேணாங்களான்ணா?
Deleteஇவங்க படம் போட்ட டீசர்ட் போட்டா எனக்கு எங்க வீட்டில், வீட்டை சுத்தம் செய்ய உபயோகிக்கும் கருவியால் எனக்கு சிறப்பு பூஜை
நடக்கும் என்பதால் ஆர்ச்சிக்கு ஜே போட்டேன் என்று மட்டும் நீங்கள் யாரும் நினைக்க வேண்டாம் யுவர் ஆர்னர் :-)
அதே ரத்தம் பெங்களூர்பரணி...:-)
Deleteஇளவரசியை புக்காக முதலில் ஏற்றுக் கொள்வோம் சாரே ; அப்புறமாய் டி-ஷர்ட் புரமோஷனுக்கு திட்டமிடுவோம் !
DeleteTex
ReplyDeleteஎனது புகைப்படத்தை நீண்ட வருடங்கள் கழித்து மீட்டு கொண்ட வர உதவி புரிந்த எங்கள் கரூராருக்கும் ஒரு ஆர்ச்சி புத்தகம் சார்...:-))
Deleteஅந்த புத்தகம் ஆசிரியர் சொல்லி உள்ள லாயல்ட்டி புத்தகம் தானே :-)
Deleteஅப்புறம் உங்களோட படம் என்று வேறுயாரோட படம் உள்ளது. கரூர்கார் உங்களுக்கு குண்டு பல்பு கொடுத்த மாதிரி தெரியுது தலைவரே :-) பார்த்து கவனமாக இருக்க தலைவா.
Deleteஉசுப்பேத்தாதீங்க பெங். பரணி.. அப்புறம் அவரு அவரோட தலைவர் படத்த வெச்சுடப் போறாரு..
Deleteஅட போங்க சரவணன் தலைவர் பார்க்காத முட்டுச்சந்தா... இல்ல குத்துக்கல்லா :-)
Deleteஅந்த புத்தகம் ஆசிரியர் சொல்லி உள்ள லாயல்ட்டி புத்தகம் தானே :-)
Delete#####
எஸ்...யுவர் ஆனர்...:-)
கரூர் கார்...அன்ட்...பெங்ளூர்கார்
Deleteஹீஹீஹீ்...:-)
// மிஞ்சியிருக்கும் பொங்கலால் வாயை ரொப்பிக் கொள்ளவுள்ளேன் - பெவிகால் இல்லாத குறையைத் தீர்த்துக் கொள்ளும் விதமாய் ! //
ReplyDeleteஅதாவது வீட்டு பொங்கல் பெவிகாலாகி விட்டது என சொல்ல வர்றீங்களா சார்?.
விக்ரம் நோட் திஸ் பாயிண்ட். வீட்டில் அம்மாகிட்டே இதுபற்றி கொஞ்சம் சொல்லிடு :-)
இல்ல பொங்கல் என்று சொல்லி பெவிகாலை போட்டாங்களா. 🤔🤔🤔🤔 ஓரே குழப்பமாக இருக்கே :-)
Deleteஆசிரியர் மனதுக்குள் "பொங்கல் பெவிகால் மாதிரி இருப்பதை வீட்டில் எப்படி சொல்லுறது என விக்கி கொண்டு இருந்தேன்.. இந்த பெங்களூர் தம்பி நம்ப வேலையை எளிதாக்கி விட்டாப்புல"
Deleteஆசிரியர் வீட்டில் இருந்து இந்த பெங்களூர் பரணிக்கு ஒரு பொங்கலை போட்டு அனுப்பி விட வேண்டியதுதான் (விவேக் பட பாயாசத்தை போட்டு விட வேண்டியதுதான் என்ற டயலாக்கை மட்டும் நினைக்க வேண்டாம்) :-)
DeletePfB
Delete:))))))
புத்தகக் கடைக்காரர்களுக்கு அனுப்புவதற்காக 'பட்டாம்பூச்சி படலம்' போஸ்டர்களும், போஸ்ட்டர் ஒட்ட பசையும் லயன் ஆபீஸுல வச்சிருந்தாங்களாம். பொங்கல் பண்டிகை முடிஞ்சு வந்து பார்த்தா பசை டப்பா காலியா கிடந்ததாம்!! ஹிஹி!
விஜய் இதுவேறயா.... என்னமோ போங்க.
Deleteஆனால் ஒரு விஷயம் தெளிவாக புரியுது பொங்கலுக்கும் பெவிக்காலுக்கும் ரொம்ப நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது என்று :-)
பொங்கலோ-பெவிக்காலோ வாயை அடைக்க இரண்டுமே வெவ்வேறு விதங்களில் உதவிடும் தானே சார் ?
Delete// அட்டைப்படத்துடனான இந்த இதழுக்கு ஒரு first உண்டு ! பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் உச்ச ஸ்தானத்தில் உள்ளதொரு ஜாம்பவானான GLENAT பதிப்பகத்துடன் கரம்கோர்க்க நமக்கு வாய்ப்புக் கிட்டியுள்ள முதல் தருணம் இது என்பதே அந்த first ! //
ReplyDeleteஇது அருமையான வெற்றி இதழாக மாறி அவர்களின் மற்ற இதழ்களையும் தொடர்ந்து நமது காமிகஸில் தரிசிக்க ஆவலுடன் உள்ளேன்.
புதுசா கல்யாணம் ஆகியிருந்தா பொங்கல் |பொங்கலா. ஏன், கலர்கலரா ரம்யமா தெரியும். அதுவே சில பல வருடங்கள் (என்னை மாதிரி 25 வருடம் )தாண்டி இருந்தா பெவிகாலா தான் தெரியும். எடிசார். சர்தானே.
Deleteபத்து சார்.. பெவிகால் நிறைய சாப்பிட்டால் இப்படி இடம்மாற்றிக்கூட ரிப்ளை கொடுக்கலாம்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்! :)
Deleteநீங்க என்னை ரொம்ப புகழறீங்க(?). கூச்சமா இருக்குது.
Deleteஞாயிறு காலை வணக்கம் சார்
ReplyDeleteமற்றும் நண்பர்களே 🙏🏼
.
Feb இதழ்கள் அட்டகாசமாக இருக்கிறது. Sykes காக waiting. இந்த மாதம் கிராஃபிக் நாவல் இருக்கிறது. டெக்ஸ் இருக்கிறார். ஆர்ச்சி யும் உண்டு. பட்டையை கிளப்பும் மாதம்.
ReplyDeleteடெக்ஸ் வில்லர் ' நாயகர்களின் படங்களை பதித்திட அனுமதி கிட்டுவது கடினம்./////
ReplyDeleteஎல்லாம் நன்மைக்கே.
தப்பிசாரு நம்ப கணேஷ் :-)
Deleteகணேஷ் 🤭🤭
Delete"இருட்டோட புள்ளிங்கோ" விமர்சனம்.
ReplyDeleteஅரிசோனா மெக்ஸிகோ எல்லையான்ட, புரபஸர் ஒருத்தர் அஸ்டக் இன கரங்க புதைச்சு வச்ச பழமையான சரக்கை தேடி side dish யோட வர்றாங்க. அவரோட ஜிம், மோட்சன் மற்றும் குளோரியா வும் கூட தொத்திகிறாங்க.
அஸ்டக் பேர கேட்டாலே பழங்குடியினர் "ச்சி சிச்சி அந்த சரக்கு புளிக்கும் ம்ன்னு ஒதுங்கிடுறானுங்க. நாம side dish நிறைய கொடுப்போம்ன்னு சொன்னா கூட கண்டுகிட மாட்டங்கிறய்ங்க. நாம தேடுறதை நிறுத்தி டலாம்னு" மேட்சன் சொல்ல.
அஸ்டக் சரக்கு எவ்வளவு பழசு, அத குடிச்சா எவ்வளவு கிக் இருக்கும்னு ஆசை காட்டி, சரக்கு இருக்கும் இடத்துக்கு புரபஸர் எல்லாரையும் தள்ளிகிட்டு போயிடுறாரு.
அங்க போயவது புரபஸர் கம்முன்னு இருந்தாரா?. கிடையாது. சும்மா தூங்கிட்டு இருந்த பூசாரியை மந்திரம் சொல்லி எழுப்பி விட்டு வேடிக்கை பாக்குறாரு.
துக்கம் கலைஞ்சு டென்ஷனான புசாரி எல்லாரையும் "ஆஆஆஆஆஆ" ன்னு கத்த விடுறான்.
தொடரும்...
புள்ளிங்கோ விமர்சனம் தொடரக்காணோமே சார் ?
Deleteகதவை தட்டும் கேடி:
ReplyDeleteமெக் அன் ஜாகின் சாகசத்தளம் இந்த முறை புதியது என்பதை விட ரசிக்கும்படி இருந்தது. குடிகாரனை திருத்தும் வேலையை கையில் எடுக்கும் இவர்கள் படும்பாடுகள் காமெடி ரகம் அதனை விட இவர்களின் டீரிட்மென்டில் மாட்டிக்கொண்டு முழிக்கும் அந்த அப்பாவி பேஷன்ட் பாவம் ரகம். இதற்கு இடையில் உள்ளே நுழையும் அல் மேக் அன்டு ஜாக்கிக்கு ஆகா நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா ரக காமெடி.
மிகவும் அருமையான கதைக்களம், ஆசிரியர் அதனை சரியாக கையாண்டு நம்மை சிரிக்க/சிந்திக்க வைத்துள்ளார்.
கதவை தட்டும் கேடி - பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்.
இந்த கதையை எனது வாரிசுகளுக்கு அவர்களுக்கு ஏற்றவாறு நேற்றுத்தான் இரவில் கதை சொன்னேன் .விழுந்து விழுந்து சிரித்தார்கள் ..;-)
Deleteஉண்மை ஜி. குழந்தைகள் இந்த கதையை கண்டிப்பாக ரசிப்பார்கள்.
Deleteதலீவரே....எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் !! பதுங்கு குழியிலிருந்து வெளியில் வந்து கதை சொன்னீங்களா ? இல்லாங்காட்டி புள்ளைகளையும் பதுங்கு குழிக்குள்ளாற இஸ்துகினு போயிட்டிங்களா ?
Deleteபதுங்குகுழியில் போரிடுவதே மிகப்பெரிய போராட்டமாக காணப்படும் இந்நாளில் அவர்களையும் இப்பொழுதே அதில் இறக்கிவிட மனம் ஒப்பாத காரணத்தால் நானே வெளியேறி வந்து விட்டேன் சார்..:-)
Delete
ReplyDeleteசுறா வேட்டை..!
என்னதான் ஒரு அட்டகாசமான ஆரம்பம் பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைத்தாலும், நடுநடுவே அட போடவைக்கும், சிலிர்க்க வைக்கும் சீட்நுனி சீக்வென்ஸ் இருந்தாலும்,உற்சாகமாக கைதட்டி பரவசப்படுத்தும் காட்சியமைப்பு இருந்தாலும், க்ளைமாக்ஸ் ருசித்தால்தான் மொத்தமும் திருப்தியாக முழுமை அடையும்.அதனால்தான் மனசு எப்போதும் க்ளைமாக்ஸ் பரபரப்பை இரத்தமும் சதையுமாக நகம்கடித்தபடியே ஆர்வமாக எதிர்பார்க்கும்.
அப்படியொரு க்ளைமாக்ஸாக ஆண்டின் இறுதியில் (அதாவது க்ளைமாக்ஸில்) பாண்டின் சாகசம் மிகச்சரியாக அமைந்துவிட்டது. மிகச் சிறந்த திருப்தியானது, திருப்பதி லட்டு போன்ற விஷேச சுவையுடன் மூளையில் நன்றாகவே பதிந்துவிடும்.அந்தவகையில் 2019 ஐ நல்ல முறையில் வழியனுப்புவதற்கு சரியான சாய்ஸாக 007 ன் சாகசம் முத்தாய்ப்பாக முத்தான வாய்ப்பாக அமைந்துவிட்டது எனலாம்.
வெறும் பத்து வார்த்தைகளில் அடங்கிவிடும் ஒருவரிக் கதைதான்.ஆனால் அப்படி வெறுமனே அடக்குவது அத்தனை சுலபமான காரியம் அல்ல எனப் படிக்க படிக்கப் புரிந்தது. சித்திரங்களின் புது ஸ்டைல், கலரிங்கில் புதுமை, ஏகப்பட்ட டெக்னிகல் விபரங்கள், நவீன ஆயுதங்கள் என இயல்பாகவே கதையோடு ஒன்றி பயணிக்க, மேற்கொண்டு வரும் அதிரடி ஆக்சன் பஞ்சமில்லாமல் பஞ்சபூதங்களிலும் புகுந்து விளையாடுகிறது.
120 பக்கங்களில் 200 விதமாகக் காணப்படும் 007
வெறுமனே இல்லாமல் புத்தகத்தின் பருமன் முழுதும் பயங்கரமாக ஆக்ரமித்து பயம் காட்டியுள்ளார்(எதிரிகளுக்கு) ..!,
நிலவின் பின்னணியில் பின்னியெடுக்கும் சண்டைக்காட்சி நல்ல ஒரு தொடக்கம். சுறாக்களுக்கிடையான ஆக்சன் திக் திக் ரகம். ஆட்டோமேடிக் காருடனான ஆடுபுலி ஆட்டம் ரெம்பவே புதுசு.'சுறா'வை கட்டுப்படுத்தி எதிரிகளை ஆட்டம்காண வைப்பது, ஆட்டம் பாம் ஸ்டைல். .M மற்றும் மணிப்பெண்ணை மீட்டு தப்பிக்கும் காட்சி அம்சமோ அம்சம்.
கடைசி பக்கம் வரை துளியும் ஓய்வின்றி கன்னாபின்னவென தூள்பறத்துகிறார் பாண்ட்.
அட்டகாசம் GP என்ன ஒரு விமர்சனம். அப்படியே நான் உணர்ந்ததை எழுதி இருக்கிறீர்கள்.
Deleteஅருமை நண்பரே...ரசித்து படித்துள்ளீர்கள்..
Deleteநீங்க இந்த பக்கமா எழுதி அந்த பக்கம் அவரை போட விட்டுட்டு இந்த பக்கம் வந்து இந்த மாதிரி கமெண்ட் போடுற விஜய் ஐடியாவை நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களா குமார் :-)
Deleteபரணி இதெல்லாம் ஓவர் ஆமா
Deleteநீங்கள் செய்யறத சொன்னா நான் சொல்லுறது ஓவரா:-) கலிகாலம்டா ஆண்டவா :-)
Delete@PfB
Deleteகிர்ர்ர்.. என்னாவொரு வில்லத்தனம்!!
நீங்கமட்டும் இந்தப்பக்கமா வந்தீங்கன்னா அந்தப்பக்கமா உங்களை குனியவச்சி பின்பக்கமா பிறாண்டி வைக்க வசதியா இருக்கும்!!
விஜய் @ ஆர்ச்சியோட டவுசரை போட்டுகிட்டு வந்து விட வேண்டியதுதான். உணர்ச்சி வசப்பட்டு பிராண்டி நகத்தை உடச்சுக்காதிங்க :-)
Deleteஆர்ச்சியோட டவுசர்.. ஹா ஹா ஹா!! :))))))
Deleteஆனா ஆர்ச்சி போட்டிருப்பது குட்டைப் பாவாடையாச்சே!! :)
ஆனா ஆர்ச்சி போட்டிருப்பது குட்டைப் பாவாடையாச்சே!! :)
DeleteEV என்னா டைமிங். தரையில் உருண்டு புரண்டு சிரிக்கும் படங்கள் 1000
//கடைசி பக்கம் வரை துளியும் ஓய்வின்றி கன்னாபின்னவென தூள்பறத்துகிறார் பாண்ட்.//
Deleteவிமர்சனமுமே தூள் பறத்துகிறது சார் !
ஆறாது சினம்:
ReplyDeleteமிருகத்தைப் போல் ஒருவர் சில மனித மிருகங்களால் வேட்டையாட படுகிறார், அந்த மிருக கூட்டத்தின் தலைவர் ஷெரீப். செம்மையான ஆரம்பம். ட்யுராங்கோவின் வேலை இந்த விஷப்பயிரை களைவதே. இதனை நேர்மையான ஒரு தந்தை, அவரின் ஊதாரி மகன், தந்தையின் போக்கு பிடிக்காத மகள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம் என அனைத்தையும் கலந்து விறுவிறுப்பாக ரசிக்கும் படி மீண்டும் கொடுத்துள்ளார் கதாசிரியர்.
முதல் பாகத்தில் பெரிய அளவு ப்ளாம்ம் ப்ளாம்ம் குறைவாக தோன்றினாலும் கதையின் சுவையான சம்பவங்கள், வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள் புத்தகத்தோடு என்னை கட்டிபோட்டுவிட்டது.
இரண்டாம் பாகம் மிசைல் வேகத்தில் சென்று முடிந்தது, இதற்கு துணையாக இருந்தது ஓவியம் மற்றும் அட்டகாசமான ஆக்சன் sequence: கதாசிரியர் நினைந்த ஆக்சன் sequenceஐ ஓவியமாக்கிய ஒவியருக்கு பலமான விசில்.
பல இடங்களில் நாயகனை செம ஸ்டைலிஸ்டாக வரைந்தது சூப்பர்; மிகவும் ரசித்தேன்.
ட்யுராங்கோ - அமைதிப் புயல்.
அருமையான விமர்சனம் நண்பரே..
Delete, இதே போன்ற ஒரு சுப தருணத்தில் மாடஸ்டி யும் வருவார் என்ற நம்பிக்கையில் ஆர்ச்சி க்கு இப்போதைக்கு carry forward கரூர்ராஜ சேகரன்
ReplyDeleteமார்ஷல் ஷைக்ஸ் - அட்டைப்படம் செம செம செம செம செம செம!!
ReplyDeleteஎல்லாருக்கும் புரியறமாதிரி சொல்லணும்னா 'இதுவரை வந்ததிலேயே இதான் டாப்'!
'அந்தியின் ஒரு அத்தியாயம்' எழுத்துரு பட்டையைக் கிளப்புகிறது!!
Deleteஆனால் டைட்டிலுக்கான அர்த்தம்தான் சற்றே குழப்புகிறது!!
'அந்தியில் ஒரு அத்தியாயம்'னா ஓகே... ஆனா 'அந்தியின்' வருதே..?!!
ஏதாச்சும் காரணமிருக்கும்!
// எல்லாருக்கும் புரியறமாதிரி சொல்லணும்னா 'இதுவரை வந்ததிலேயே இதான் டாப்'! // EV hehehe semma semma
Deleteவிஜய் @ அந்தி என்றால் பல அர்த்தங்கள் உள்ளன என்பதை விக்கியானந்தா மூலம் தெரிந்து கொண்டேன்.
Deleteமாலை
சந்தியா காலம்
இரவு
செவ்வானம்
சந்தியாவந்தனம்
முச்சந்தி
பாலை யாழ்த் திறவகை
இதில் எது பொருத்தமாக இருக்கும் என்பதை கதையை படித்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம்.
@PfB
Deleteதாராளத் தகவல்களுக்கு நன்றி!
ஆனால் என் சந்தேகம் 'அந்தி' என்பதற்கான அர்த்தத்தில் அல்ல! 'அந்தியின்' என்று வரவேண்டுமா அல்லது 'அந்தியில்' என்று வரவேண்டுமா - என்பதிலேயே!
'அந்தியில் ஒரு அத்தியாயம் '
Deleteஅந்தி நேரத்தில் நடக்கும் ஏதேனும் ஒரு சம்பவம்.நேரம் முன்னே பின்னே இருக்கலாம்..!
'அந்தியின் ஒரு அத்தியாயம் '
ஒட்டுமொத்த அந்தியே ஒரு சம்பவமாக மாறுகிறது .!நேரம்லாம் கிடையாது.
இது சரியாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
வாழ்வின் அந்தியே இந்த அத்தியாயம் !
Deleteபுக்கைப் படிக்கும் போது பெயர்க்காரணம் புரியும் !
ஏற்க்கனவே ஒருலியனார்டோ தாத்தா இப்போ ரு சைக்கஸ் தாத்தா இனிமேல் நம்பள யாரும் குழந்தைகள் புத்தகம்படிப்பவர்தானே என்று கூறமுடியாது.மார்ஷல் சைக்ஸ் கதைக்களம் கிராபிக் நாவலுக்கு நியாயம் சேர்க்கும் என்றேதோன்றுகிறது. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஎன்னது இவரும் தாத்தாவா🙄🙄🙄
Deleteஅது "சைக்கஸ்" அல்ல சார் ; "சைக்ஸ்" !!
DeleteAnd அவர் தாத்தாவும் அல்ல !
அப்பாடா ...ஒரு நிமிஷம் பழைய தாத்தா நினைப்பு வந்துருச்சு ..நன்றி சார்..:-)
Deleteஎன்னைப்பொருத்தவரை, லாயல்ட்டி பாயிண்டுகளுக்கு இந்த 'கலர் ஆர்ச்சி' என்பது சரியான, பொருத்தமான முடிவே!!
ReplyDeleteவண்ணத்தில் ஆர்ச்சி - ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே!!
நேத்திக்குவரைக்கும் சீண்ட ஆளில்லாமல் கிடந்த பழைய இரும்புப் பயல்களுக்கெல்லாம் திடீர் வாழ்வு! அதுவும் வண்ணத்துல!!
ஏற்கனவே பயலுக்கு மண்டைக்கனம் சாஸ்தி!! இப்போ வண்ணத்தில் வரப்போறது தெரியவந்தா உற்சாகத்துல இடுப்புப் பகுதியிலிருக்கும் ஜெட் அமைப்பை இயக்கி டைனோசர் மாதிரி கத்திக்கிட்டே தமிழ்நாட்டையையே ஒரு ரவுண்டு வருவான்!!
அப்பப்போ எரிபொருளை செக் பண்ணிக்கோப்பா ஆர்ச்சி.. அப்படிக்கிப்படி தீர்ந்துபோச்சுன்னா நேரா காயலான்கடைலயே விழுந்துதொலைக்கப்போற!!
விஜய்:- கடைசி லைன் செம டச்சிங். சூப்பர்
Deleteஆர்ச்சிக்கு ஜே
ReplyDeleteஇருந்தாலும்
அந்த
"விண்வெளிப் பிசாசு" வண்ணத்திலனா யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். எல்லோரும் ேஜ சொல்லிருப்பாங்க
எனக்கு கறுப்பு வெள்ளையா இருந்தாலும் ஜே...:-)
Deleteno பெட்ரோமாக்ஸ் லைட்டே தா வேணும்
Delete:-)))
Deleteகண்டிப்பாக அன்பு சார். விண்வெளி பிசாசு க்கு ஜே ஜே ஜே
Deleteஎடிட்டர் சார் மனசு வச்சா நல்லாருக்கும்
Deleteஅது இல்லைனா "கழுகு வேட்டை" கலரில்
ReplyDeleteஅதுவும் இல்லனா .....
தொடரும்
தொடர்கிறேன்...:-)
Delete**** சுறா வேட்டை *****
ReplyDeleteகாமிக்ஸ் படைப்புகளிலும் நவீனத்தைப் புகுத்த முடியுமென்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கும் அட்டகாசமான ஆக்கம்!!
சித்திரங்களிலாகட்டும், தெறிக்கும் ஆக்ஷனிலாகட்டும், பல இடங்களில் 'அட' போட வைத்திருக்கும் மிகப்பொருத்தமான வசனங்களிலாகட்டும் - இந்த 007 தொடர் ஒரு masterpiece!!
என்னுடைய ரேட்டிங் : 10/10
Yes yes yes 10/10
Delete**** ஆறாது சினம் ****
ReplyDeleteமுதலிரண்டு பாகங்களில் ட்யூராங்ககோ ரொம்பவே அடக்கி வாசித்திருப்பது துளியூண்டு ஏமாற்றமென்றாலும், அழுத்தமான கதைக்களமும், தொய்வில்லாத கதை நகர்வும், ஒப்பற்ற தரத்துடனான சித்திரங்களும் ஒரு அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தரத் தவறவில்லை!!
மூன்றாவது பாகம் - அனல் பறக்கிறது!
அட்டைப்படங்களும், ஆக்கமும் - வேற லெவல்!!
என்னுடைய ரேட்டிங் : 10/10
+1
Deleteமரணமுள் கலரில்
ReplyDeleteபுரட்சித்தலைவன் ஆர்ச்சி.;-
ReplyDeleteகாலப்பயணம் ஒன்றை முடித்துக்கொண்டுநிகழ் காலத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் கோட்டை .....எதிர்பாராவிதமாக எதிர்கால லண்டனில் தரையிறங்கிவிடுகிறது.அங்கே தாம்சனுக்கும்...விக்டருக்கும் பேரரதிர்சி காத்துக்கொண்டிருக்கிறது.வெளிக்கிரகத்திலிருந்து வந்து பூமியை ஆக்கிரமிக்கும் முயற்சியில் லண்டனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன சூப்பரான்கள் எனும் அயல் கிரகவாசிகளின் ரோபோ படை.லண்டன்வாசிகள் உயிருக்கு பயந்து நிலத்தடி குகைப்பாதைகளில் ஔிந்து வாழ்கின்றனர்.ஆர்ச்சியும்..தோழர்களும் பல்வேறுவிதமான சாகஸங்களை செய்து சூப்பரான்களை வீழ்த்தி.., லண்டனை மீட்டெடுப்பதான் சுவாரஸ்யமான கதை.
குதிரை வீரன் ஆர்ச்சி
ReplyDelete:
கால யந்திரமான கோட்டையில் ....காலத்தில் பின்னோக்கி பயணம் செய்து....
Wild West ல் அதிரடிகள் செய்யும் அற்புத சாகஸம்.
வன்மேற்கின்கார்வார்ஸ் நகரில் ரோஜர் என்பவன் வைத்ததே சட்டம்.சட்ட ஒழுங்கு என்பதே இல்லாமல் போய் அநீதியும்.., அட்டூழியங்களும் ராஜாங்கம் செய்யும் ஒரு பாவப்பட்டபூமி.
அந்த நகருக்குத்தான் ஆர்ச்சியும் தோழர்களும் வந்து சேர்கிறார்கள்.தனது பிரத்யேக ஸ்டைலில் ரவுடிகளை துவம்சம் செய்கிறது ஆர்ச்சி.குதிரை சவாரி.....துப்பாக்கி சண்டைகள்...செவ்விந்தியர்கள் தாக்குதல் என ஜாலியான கௌ-பாய்களத்திலும் ஆர்ச்சி தன் முத்திரையை பதித்திருக்கிறது.
நதி அரக்கன் :
ReplyDeleteதென்னமெரிக்க கானகப்பகுதிகளில் ஓரிடத்தில்.....நதியில்...ராட்சஸ சுறாவொன்று யாரையும் அந்த பகுதியில் நடமாட இயலாதவாறு அச்சுறுத்தி அட்டகாசம் புரிந்து வருகிறது.
அதைப்பற்றி ஆராய்ந்து ரிப்போர்ட் தருமாறு அரசாங்கம் தாம்சனையும் விக்டரையும் கேட்டுக்கொள்கிறது.
உடனடியாக ஆர்ச்சியையும் அழைத்துக்கொண்டு பிரச்சினையுள்ள நதியில் மிதவையில் பயணமாகிறார்கள்.
அப்போது அந்தப்பகுதியில் வாழும் ஆதிவாசிக்கும்பலொன்று தோழர்களை தாக்கத்தொடங்குகிறது.
அந்த தாக்குதலை ஆர்ச்சி சமாளித்துக்கொண்டிரக்கும் போதே ராட்சஸ சுறாவின் மரணத்தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள்....!
ஆதிவாசிகள் ஏன் மிரண்டு போய் ஆர்ச்சியை தாக்குகிறார்கள்.?
அந்தப்பிரதேசத்தில் யாரையும் அண்டவிடாமல் அட்டூழியம் செய்யும் ராட்சஸ சுறாவின் மர்மம் என்ன...?
ஆர்ச்சி எவ்வாறு இந்த விஷயத்தில் வெற்றி ஈட்டுகிறது..!
என்பதை எளிமையான......அழகான சித்திரங்களில் விறுவிறுப்பாக சொல்லும் அதிரடி சாகஸக்கதை இது.
சிறுகதையே என்றாலும்..ஒரு முழுநீளக்கதைக்குரிய அத்தனை அம்சங்களும் பக்காவாய் அமைந்துள்ளன.
சூப்பர். தொடர்ந்து விமர்சனம் எழுதுங்கள்.
Deleteஇரும்பு மனிதன்:
ReplyDeleteலயன் காமிக்ஸில் ஆர்ச்சி அறிமுகமான முதல்கதை.
முதல்தீபாவளி மலர்.
முதன்முதலாக வந்த பெரிய சைஸ் இதழ்
முதன்முதலாக வந்த இருவண்ண இதழ்
என்று பல சிறப்புகளைப்பெற்ற இதழ் இது.
எந்திர மனிதன் ஆர்ச்சியை உருவாக்கிய ....தாம்சனின் சித்தப்பா நெல்சன் கடத்தப்படுகிறார்கடத்தியவன்டெவில் எனும் சமூக விரோதி.நெல்சனை ஹிப்னாட்டிஸ மயக்கத்தில் ஆழ்த்தி அவரது அதிசயக்கும்அறிவியல் கண்டுபிடிப்புகளைக்கொண்டு ......
பல கொள்ளைகளில் ஈடுபடுகிறான்
டெவில்
குற்றச்செயல்களைத்தடுத்து...நெல்சனை எப்படி மீட்கிறார்கள் என்பதை பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள் நமக்கு விவரிக்கின்றன.
அந்தரத்தில் சுழன்று ப்ளை ஓவரையும் ..மாளிகைகளையும் துண்டு துண்டாக்கும் ராட்சஸ பற்சசக்கரம்...
வில்லன் டெவிலின்ராட்சஸ இரும்புக்கை
ராட்சஸ ரோபோஎனகதையில்பிரம்மாண்டத்திற்கும்பஞ்சமில்லை.
@ ஜேடர்பாளையம் சரவணகுமார்
Deleteபெரியதொரு இடர்பாட்டிலிருந்து மீண்டு வந்து, இத்தனை சீக்கிரத்தில் நீங்கள் முழுநீளக் கமெண்ட் போடுமளவுக்குத் தேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது நண்பரே!
நன்றி நண்பரே...!
Deleteஉடல்சோர்ந்து கிடந்தாலும்....நம்உயிரிலும் உணர்விலும் கலந்த காமிக்ஸ் உள்ளத்தை இன்னும் குதூகலமாகவே வைத்திருக்கிறது.
அதிலும் என்னைப்போன்ற பழங்காமிக்ஸ் ரசிகர்களுக்கு எடிட்டரின் அறிவுப்புகள் (ஆர்ச்சி வண்ணத்தில்.)உற்சாகத்துள்ளல் போட வைக்கின்றன.
என்னதான்
பராகுடா
பிஸ்டலுக்கு பிரியாவிடை
007 2.0
டெமக்லீஸ் டீம் மற்றும்போனெல்லியின் கிராபிக் நாவல்கள் போன்றவை மனதில் ஒரு புதுவித தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஸ்பைடர் ஆர்ச்சி போன்ற எளிமையான.....ஜாலியான ஃபேன்டஸி கதைகளை வாசிக்கும்போது ஏற்படும் பரவசமே தனிதான்.
ஊசிப் போன உப்மாக்களைக் கிண்டுறோமோ ? என்ற லைட்டான நெருடல் உள்ளுக்குள் தலைதூக்கிடுவது நிஜமே ; ஆனால் இது போலான ஆத்மார்த்த வரிகளைப் படிக்கும் போது அந்த நெருடல் காணாது போவதும் நிஜமே ! நலம் பெற்று வருவது மகிழ்ச்சியைத் தருகிறது சார் !
Deleteசரவணகுமார் ஜி அருமை அபாரம்
Deleteமீண்டு (ம்) பழையபடி வருகை தரும் ஜேடர்பாளையார்த்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Delete// பெரிய இடர்பாட்டிலிருந்து மீண்டு வந்து, இத்தனை சீக்கிரத்தில் நீங்கள் முழுநீளக் கமெண்ட் போடுமளவுக்குத் தேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது நண்பரே! //
Delete+1
உண்மை தான். தொடர்ந்து எழுதுங்கள் ஜி.
நேற்றைய CBF அப்டேட்ஸ் :
ReplyDelete* கடந்த சனிக்கிழமையோடு ஒப்பிடும்போது நேற்று கூட்டமும், விற்பனையும் சற்று குறைச்சலே என்று பொதுவான கருத்து நிலவியது! பொங்கலுக்கு ஊருக்குப்போன பலர் இன்னும் வந்துசேரவில்லை போலும்!
* நம் ஸ்டாலில் ஒரு பிரதிகூட இல்லாமல் நிறைய டைட்டில்கள் விற்றுத் தீர்ந்தது 'தல' டெக்ஸே!! 'ஒரு ரெளத்திர ரேஞ்சர்' அதிகம் விசாரிக்கப்பட்ட இதழ் - ஆனால் ஏற்கனவே காலியாகிவிட்டிருந்தது! 'ஏன் இந்த மாதிரி அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் இல்லாமலிருக்கிறது? சிவகாசியிலிருந்து வரவழைப்பதற்கென்ன?' என்று பணியாள நண்பர்களிடம் விசாரித்தபோது 'லோடு இறக்குபவர்கள் பொங்கலுக்குப் போய்விட்டதால் ஆளே கிடைக்கவில்லை' என்று சொன்னார்கள்! பொங்கல் பண்டிகையின் ஒரு சைடு-எஃபெக்ட்!
* நேற்றும் இரும்புக் கை மாயாவியின் விசாரிப்புகள் ஏராளம் ஏராளம்!! மொத்தமே மூன்று டைட்டில்கள் மட்டுமே நம்மிடம் விற்பனைக்கு இருந்தன! அவையும் மாலைக்குள் காலியாகிவிட, அதன்பிறகு மாயாவியை கேட்டு வந்தவர்களிடம் ஏமாற்றம் + கோபம்!! 50+ வயதைக் கடத்தவர்களின் பேச்சு மூச்செல்லாம் இ.கை.மாயாவி பற்றியே இருந்தது!! மாயாவிக்கான இந்த வரவேற்பு முன்பு எப்போதையும்விட இந்தவருடம் சற்று தூக்கலோ என ஆச்சரியப்படுத்துகிறது!
* நேற்று நான் ஸ்டாலுக்குச் செல்வதற்கு முன்பே அங்கு விற்பனைக்கு தீயாய் உதவிக்கொண்டிருந்தவர்கள் - 'முத்தி விசிறி' தயாளன் மற்றும் கிங் விஸ்வா ஆகியோர்!! சற்றுநேரத்திலேயே 'லக்கி லிமட்' தமிழும், சொக்கலிங்கம் பன்னீர்செல்வமும் சேர்ந்து கொண்டனர்! வேறு சில புதிய நண்பர்களும் கூட ஆர்வமாய் தங்கள் பங்களிப்பைச் செய்துகொண்டிருந்தனர்!
* 'டைனமைட் ஸ்பெஷல்' - ஸ்டாக்அவுட் ஆக மூன்று இதழ்கள் மட்டுமே பாக்கி!
* கிட்டத்தட்ட 50 டைட்டில்களுக்கு 25% டிஸ்கவுண்டு போடப்பட்டு, அதற்கென்று தனியாக ஒரு பெரிய டேபிளே ஒதுக்கப்பட்டிருந்தது! இந்த 25% டிஸ்கவுண்டில் லார்கோ, ஷெல்டன், தோர்கல் உள்ளிட்ட பல ஜாம்பவான்களும் இடம்பெற்றிருந்தது சற்றே வருத்தமளித்தது!
முத்தி விசிறி ---> முத்து விசிறி!
Deleteகிங் விஷ்வா ???? ஸர்ப்ரைஸ்!!!!!!!
DeleteUpdateக்கு நன்றி விஜய்.
DeleteUpdateக்கு நன்றி விஜய்.
Delete///கிங் விஷ்வா ???? ஸர்ப்ரைஸ்!!!!!!!///
Deleteஎனக்குமே!!
போன வருஷத்து selfie ஒன்றைக் கையில் ஏந்தியபடிக்கே கண்ணாடி போட்டதொரு பூனை CBF-ல் சுற்றித் திரிவதாய் flash news ஓடியதே சார் ; அது பற்றி updates போடக்காணோமே ?
DeleteAnd yes - போன சனியின் விற்பனை ஒரு உச்சம் ! நேற்றைய பொழுதினில் அந்த வேகம் மிஸ்ஸிங் !
Deleteஅருமை செயலரே்...:-)
Deleteகதவைத்ட்டும் கே(ர)டி.
ReplyDeleteமேக் &ஜாக் கதைகள் சுமாராக போய்கொண்டிந்தது போல் ஒரு பீலீங் இருந்து கொண்டிருந்தது.ஆனால் இம்மாதம் வெகு நேர்த்தி .ஆரம்பமே அமர்க்களம் கென்னடியின் குடிப்பழக்கத்தை நிறுத்த மேக்கும் ஜாக்கும் படும் பாடுகள்,பாட்டில்களின் குவியல்,எலி பெருச்சாளிகளின் ஓட்டம்,பாப்பாஸ்களின் உள்ளே வேளியே ஓட்டம்.கடைசி பிரேம் கூட வெடிச்சிப்பு .சிரிச்சு சிரிச்சு வயிரு வலிச்சிங்.மேக் ஜாக் தற்போது புத்தம்புது பரிணாமம் எடுக்கிறார்.எடிட்டர் ஸார் இது போன்ற கதைகளை தவறாமல் தொடர்ந்து தேர்ந்தெடுங்கள்.
நன்றி.
கார்ட்டூன்களை தேடிக் கொணரத் தான் முயற்சிக்கிறேன் நண்பரே ; ஆனால் சிரிப்புப் பார்ட்டிகளை second class citizens ஆகவே பார்க்கும் பாங்கு நம்மிடையே தொடரும் போது நான் செய்யக்கூடியது அதிகம் இருப்பதில்லை - 25% discount ஸ்டிக்கர்களை போடுவதைத் தவிர்த்து !
Deleteமேச்சேரி ஜெயக்குமார் சாருங்களா...
Deleteபாத்து ரொம்ப நாளாச்சு்.நல்லாருக்கீங்களா சார்...அடிக்கடி இங்கே வாங்க சார்...பாத்து பேசிட்டு போவோம்..அப்புறம் மேச்சேரில ஒரு பாடகர் இருப்பாரே அவரையும் வரச்சொல்லுங்க...பேசிட்டு போலாம்...
ஆனா பாட சொல்ல வேணாம்..நிறையபேரு வந்து போற இடம் பாருங்க...:-)
ட்யூராங்கோ,
ReplyDeleteசட்டத்தின் பாதுகாவலர்களே சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுதலும்,சட்டவிரோதிகளுக்கு துணைபோவதும் அதனை ட்யூராங்கோ முறியடிப்பதுமான கதை கொண்டு சென்ற விதமும் முடித்த விதமும் அருமை.சின்ன சின்ன திருப்பங்களுடன் அருமையான படங்களுடன் மற்றும் ஆங்காங்கே ரொமான்ஸ்கள் என்று அருமையாக செல்கிறது.சூப்பர் சூப்பர்.
பட்டாம்பூச்சிப்படலம்,
ReplyDeleteதனக்கே உண்டானபாணியில் ஜேம்ஸ் தூள்பரத்துகிறார்.ஏற்கனவே நீண்டநாட்களுக்கு முன் ராணியில் படித்திருந்தாலும் தனக்கே உரிய லயன் பாணியில் படித்தது மிகச்சிறப்பு.
இருளின் மைந்தர்கள்,
அநேகமாக முதன்முறையாக படிக்கிறேன் என்று நினைக்குறேன்.அமானுஷ்ய சக்கிகளை கொண்டவர்களின் கொட்டத்தை வேரறுக்கும் டெக்ஸ்.திகிலாகவும் விறுவிறுப்பாகவும் அட்டகாசமாக சென்றது.
ஒரே குறை டெக்ஸ் மேக்சி சைஸ் என்பதால் வழக்கம் போல் விட்டத்தை பார்த்தபடி படுத்துகொண்டு படிக்க முடியவில்லை.
அவ்வப்போது சயன நிலையிலிருந்து எழுந்து கொள்வதும் நல்லது தானே சார் ?
Delete///ஒரே குறை டெக்ஸ் மேக்சி சைஸ் என்பதால் வழக்கம் போல் விட்டத்தை பார்த்தபடி படுத்துகொண்டு படிக்க முடியவில்லை.///
Deleteநேக்கும் இதே ஃபீலிங் இருக்கு.. ஒரு வேளை, வயசானதால வந்த எஃபெக்டோன்னு சமாதானம் ஆகிக்கிட்டேன்... 🧘🏻♂️🧘🏻♂️🧘🏻♂️
168
ReplyDeleteசார் அருமை.... அட்டைப்பட உலக வரலாற்றில் அந்தியின் அத்தியாயம் முதலிடத்தில் இடம் பிடிப்பது திண்ணம் அனைவர் பார்வையில்...எழுத்துரு கலக்கல்....தனியே தன்னந்தனியே ஸ்பைடர் நினைவுறுத்துவது ஏன்னு கண்டுபிடிக்க முயலுங்கள் நண்பர்களே...ஆர்ச்சி வண்ணத்தில் பின்னுறார்...வாங்கிப்புடுவம்....
ReplyDeleteசார் சில நண்பர்கள் சோம்பவானவர்கள்....சந்தாவுக்கு மட்டும்தானா அவர்களும் வாங்கியே ஆகனும்ங்ற வாய்ப்பு வந்தா சந்தா கூடலாம்.....அது போல அரிய கதைக் இதுக்கும் தரலாம்...சந்தா பெருக வாழ்த்துகள்...நன்றிகள்
மாங்கு மாங்கு என்று டைப்புற ஸ்டீல் வந்துட்டார்... நான் வேலைய பார்க்க கிளம்புறேன். அடுத்த புதிய பதிவில் சந்திப்போம் நண்பர்களே :-)
ReplyDeleteவழிமொழிகிறேன்...:-)
Deleteசந்தாதரர்களுக்கு ஏதாவது சிறப்பா செய்யனும்னு நினச்சதே சிறப்பு
ReplyDeleteபுத்தக விழாவிற்கு வர மனமிருந்தும் வரவியலாமல் போய் விட்டது! அது சரி, ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே ஆர்ச்சியுடன் ஓர் ஆராய்ச்சி நடத்துகிறீர்கள் போல? ஆகட்டும், எனக்கு காப்பிக் கோப்பைக்குப் பதிலாக, ஆர்ச்சியின் புத்தகத்தையும்; டீ-ஷர்ட்டுக்கு பதிலாக, காப்பிக் கோப்பையையும்; விசுவாசப் புள்ளிகளுக்கு ஈடாக டீ-ஷர்ட்டையும் அனுப்பி வையுங்கள். புள்ளிகள் எஞ்சியிருப்பின், அவற்றை அடுத்த ஆண்டிற்கு முன்னெடுத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறேன், நன்றி.
ReplyDelete:-)))
Delete:-)
Deleteஆர்ச்சிக்கு ஜேனு மெயில் அனுப்பிட்டேன்
ReplyDeleteசீக்கிரம் எல்லோரும் அனுப்பிடுங்க
அற்புதம்! அற்புதம்!!
ReplyDeleteநெடுநாளைக்கு பிறகு ஒரு அற்புதமான வாசிப்பனுபவம்! ஆரம்பித்த முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை விறுவிறுப்பு! சுறுசுறுப்பு!! அருமையான கதை! அட்டகாசமான கருத்து! சமகாலத்துக்கு தேவையான, முக்கியமான விஷயத்தை விலா நோகச் சிரிப்புத் தோரணங்களாய் அமைத்து அட்டகாசம் செய்திருக்கிறார்கள் படைப்பாளிகள்!!!
விலா நோகும் சிரிப்பு.!
கோடிகளில் சொத்து..!
ஒரு குடிகார வாரிசு...!
அல் கபோன்....!
இம்மாத கார்ட்டூன் கலாட்டா
மேக் & ஜாக்
கதவைத் தட்டும் கேடி!!!
10/10
'ஆர்ச்சிக்கு ஜே' என்று மெயில் அனுப்பிவிட்டேன்! (வந்தவரைக்கும் லாபம்! ஹிஹி)
ReplyDeleteஇப்படியாக மெயில் அனுப்பியதன் மூலம் நான் என் காமிக்ஸ் கடமையாற்றியிருக்கிறேன்!
அப்ப நீங்க?
@ ALL : உங்கள் விருப்பங்களை இங்கே தெரிவிப்பது ஓ.கே. folks - ஆனால் முறைப்படி ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட மறவாதீர்கள் - ப்ளீஸ் ! என்ட்ரி போடப் போவது நம் பணியாட்கள் தான் எனும் போது அவர்களுக்கு உங்களின் blog பட்டப் பெயர்களோ ; ஒரே பெயரில் இருக்கக்கூடிய ஒன்றுக்கு மேற்பட்டோரின் அடையாளங்களோ தெரிந்திருக்க வாய்ப்பிராத்து ! So மின்னஞ்சல் இருந்தாலொழிய உங்களின் செலெக்ஷன் on record வந்திடாது !
ReplyDeleteMail sent Sir.
Deleteசார் .. அடுத்த மாதம் வரும் ஆர்ச்சியை படித்து விட்டு முடிவு எடுக்கலாமா ?? அது வரை time உண்டா ..
ReplyDelete