நண்பர்களே,
வணக்கம் ! ஆங்கிலப் புத்தான்டு நல்வாழ்த்துக்கள் ! நலமும், வளமும், இந்த 2020-ன் ஒவ்வொரு நாளிலும் இல்லமெங்கிலும் பிரவாகமெடுக்க பெரும் தேவன் மனிடோவை வேண்டிக் கொள்வோம் !!
புது இதழ்கள் இன்னமும் பலருக்குக் கிடைத்தும், கிடைக்காமலும் இருக்கும் நிலையில், 'தேமே' என டெக்சின் புன்னகை பூக்கும் முகத்துடனான வாழ்த்தை இங்கே upload செய்துவிட்டு நடையைக் கட்டுவோம் என்று தான் நினைத்திருந்தேன் - ஐந்து நிமிடங்களுக்கு முன்வரையிலும் ! கடந்த பதிவினில் நண்பர்கள் என்ன பதிவிட்டுள்ளனரோ என்று மேலோட்டமாய்ப் பார்க்க முனைந்த போது தான் உள்ளுக்குள் ஒரு க்ளிக் !! இதோ - இந்தப் பின்னூட்டம் தான் என்னை நின்று, சிந்திக்கச் செய்தது :
//பார்சலோ பெருசு....சுத்தி டேப் அடிச்சத தடுமாறி நெடிய நேரமெடுத்து பிரிக்க ...சரித்தா கத்தயா விண்ணிலிருந்து கைக்கு இறங்குது பண்டல் பெரீய்ய்ய்...ய சைசுல விசிலடித்த படி துள்ளிக் துடித்த மனதுக்கு போட்டியா சந்தோசத்த அள்ளித் திணித்தபடி கரத்துல தவழுது...மனமோ காலண்டர் டைரின்னு பஞ்சாயத்து கூட்டுனா...கண்களோ குப்புற கிடந்த ஸ்டிக்கர காட்ட....அப்டியே சூப்பர்ஸ்டாரா(
தோர்களா ) மாறி சவ்வுத் தாளுக்க கைய விட்டு இழுத்தா ...மடயா அவசரப்பட்டுட்டியே இத எழுதினா மறுக்க கிண்டல் பண்ணுவாறேல்லல என மூள கூவ மனசோ உள்ளவற்றை சொல்லுலன்னு பஞ்சாயத்து முடிக்க...அதேதான் இந்த அட்டைப்பட வரலாற்றுலேயே நான்தான் டாப்புன்னு .. சத்தியமா நாஞ்சொல்லல சாமி மின்னுஞ்ஜிகுனா தாங்கிய டெக்சு சொல்ல உள்ளருந்தே நழுவி விழுந்த பக்கங்காட்டிகள் டெக்சும் ட்யூராங்கோவும் கத்தியால் வவுத்துல குத்த... மனமோ அதோட வேலைப்பாடுல மயங்கி இதுவரவந்த செருகிபக்கங் காட்டிகள்லயே என மானங்கெட்டு கத்தத் துடித்தத
மற/றைந்/த்த படி விரல் டைப்ப மனமோ அத மறந்தபடி மயிலிறகா நெனச்சி ட்யூராங்கோ பக்கக்காட்டியால வருடயிலயே ...அடுத்த அட்டைலய டைகரும் டெக்சும் ஊதா வண்ண மின்னும் லயன் லோகோ ஊதாப்பொடியர்கள நினைவு படுத்தி சோகப்படுத்துனாலும் கொடி பிடிக்கும் பொடியனோட அது பெஸ்டுன்னா நாங்க யாராம்லன்னு மொறைக்க ...ஒரு கும்பிடு போட்டபடி நீங்கதாம்லே பெஸ்டுன்னபடி விரல் டைப்ப ஆசிரியர் என்ன சொல்லப்போறாறோன்னு கேட்ட மனச தட்டிய படி குப்புறப் கிடந்த டெக்ஸ் ஸ்டிக்கர் நிமிர லயித்தவாறே அந்தப்பக்கமா பாஞ்சா நம்ம கொரில்லாக்காரங்க நல்ல வேலயா இது வர வந்த கார்ட்டூன் அட்டைலயே
நாங்கதாம்லே பெஸ்டுன்னு ஜாக்கிரதையாக கூவ...என்னடா இவ்வளவு தடிமனாகீதேன்னு பாத்தா பொத்துன்னு பின்னாலேர்ந்து விழுது பேப்பர் மாதிரி ரோஜர்மூர் தாங்கி வந்த பட்டாம்பூச்சிப்படலம் பட்டாம்பூச்சிகளாலே புள்ளி வைத்த கோலமாய் 007 ஜிகுஜிகூன்னூ மின்னியபடி நாங்க தனியா வந்தாங்க நாங்கதான் பெஸ்ட்டா இருந்திருப்போம்னு பரிதாபமா கேட்ட பாப்பாவ கண்களால் இரசித்தபடி தாண்டுனாக்க....என்ன மறந்துட்டியடா பாவின்னு மடில தவழ்ந்து கிடந்த ட்யூராங்கோவும்( நெசமாவே மறந்துதான் போறேன்) நீலச்சாயத்தால விளாச முதுக தடவியபடி....புத்தக முதுகயுந்தான்...ஜிகுனா உனக்கு தூவலயேன்னு பழிப்பு காட்டிய படி பின்னடடய பொரட்டுனாக்கா...மிரண்டேதான் போறேன் ஆசிரியர் என்ன சொன்னாலுஞ்சரீரீரீ....இது வர வந்ததுலயே பெஸ்டுன்னா நாந்தா சொல்றேன் ....அந்த ஜீவனுள்ள குதிரையின் கண்கள் பாருங்க அட்டைய பிச்சிட்டு வந்துறப்போவுது ....அந்த ட்யூராங்கோவும் பாருங்க....அதுக்கு மேல வேலைப்பாடமைத்த நண்பர்கள பாருங்க ...அத செய்யப்பணித்த ஆசிரியர பாருங்க எல்லாம் மறந்து நீங்களும் கதறுவிய உறுதியா நண்பர்களே...இததான பெஸ்டுன்னேஏஏஏஏஏ....ஆனா இதெல்லாத்தயும் வரீரீரீசயா வெச்சி பாக்கயில ...ஐயோ அம்மா . ...ஓடிரு ஸ்டீல் க்ளா பொன்ராசு கோவைக்கே..//
இதை பதிவிட்டிருக்கக்கூடியது யாரென்பதை யூகிக்க நிச்சயம் ராக்கெட் விஞ்ஞானம் பயின்றிருக்க அவசியமில்லை தான் !! அதே போல இந்தப் பதிவின் பின்னுள்ள மனிதரின் ஆத்மார்த்தமான வெள்ளை மனதை உணர்ந்து கொள்ளவும் NASA வரைப் போய் திறன் வளர்த்துக் கொள்ளவும் வேண்டியதில்லை தான் !! ஆனால் இவர் என்ன சொல்ல வருகிறாரென்று புரிந்து கொள்ள கணிசமான பொறுமையும் ; "ஸ்டீல் தமிழில்" நிறையவே பாண்டித்துவமும் தேவைப்படலாம் !
ஸ்டீல் க்ளா பொன்ராஜ் !!!
இந்தப் பெயரைக் கேட்டாலே ஒரு காலத்தில் இந்தியா முழுக்கச் செயல்பட்டு வந்து தந்தி ஆபீஸ்களும் ; குண்டும் குழியுமான கிராமீய மண்ரோடுகளும் பலரது மனக்கண்களில் நிழலாடினால் நிச்சயம் வியப்பில்லை ! ஓய்வேயின்றி நீண்டு போகும் அந்த தந்தி ஸ்டைலிலான பின்னூட்ட வரிகள் ; கட்டா-முட்டா என குதித்துக் குதித்துப் போகும் தமிழ்ப் பிரயோகம் என்ற அடையாளங்களோடு இந்தத் தளத்துக்கு இந்த மனுஷனை 8+ ஆண்டுகளாய்ப் பரிச்சயம் ! In fact இந்தத் தளத்தின் முதல் மில்லியன் பார்வைகளுக்குப் பெரும் காரணகர்த்தா நம்ம திருச்செந்தூரக்காரரே என்பது துவக்க காலம் முதல் இந்தப் பதிவுப் பக்கத்தை follow செய்து வரும் நண்பர்களுக்குத் தெரியும் !
ஈரோட்டில் LMS வெளியீட்டின் போது இவரை முதல்முறை நேரில் சந்தித்ததாய் ஞாபகம் ! (அல்லது காமிக் கான் பெங்களூரிலா ??) சும்மா தடததடவென பின்னூட்டங்களின் அதே வேகத்தில் கேள்விகளாய்க் கேட்டுத் தெறிக்க விட்ட மனுஷனின் முகத்தில் சதா நேரமும் வளைய வந்த அந்தப் புன்சிரிப்பு தான் அவரது டிரேட்மார்க் என்பது புரிந்தது ! நடுவே கொஞ்ச காலம் இங்கே பதிவினில் absent ஆகியிருந்தாலும் ; இன்றைக்கு மறுக்கா 'அதே பன்னீர்செல்வமாய்'த் திரும்பி வந்து கலக்கி எடுத்து வருகிறார் நேரடியாகவும் ; பெங்களூரு செலபோன் வாயிலாகவும் !
ஏதேதோ காரணங்களால் சிற்சிறு அணிகள் ; சிறுவட்டங்கள் என நண்பர்களுள் பிரிவினைகள் நேர்ந்திடுவதும் ; இங்கே ஆஜராகப் பிரியமின்றிப் போவதும் நிகழ்ந்திட்டாலும் , 'என் வழி..தனிவழி !' என 8 ஆண்டுகளுக்கு முந்தைய அதே உற்சாகத்தோடு உலா வரும் ஒரு அற்புத வட்டத்தில் நம்ம ஸ்டீலுக்குத் தனியிடம் உண்டு ! நானே பலமுறைகள் இவரைக் கலாயத்துள்ளேன் தான் ; ஆனால் எதனையும் மனதில் வைத்துக் கொள்ளாது அன்பையும், காமிக்ஸ் நேசத்தையும் தனது புல்லெட்டைப் போல விடாப்பிடியாய்க் கொண்டு வரும் இந்தக் கோவைக்காரருக்கு ஏதேனும் செய்திடலாமே - என நண்பர் காமிக்லவர் ராகவன் கூட ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் இங்கே எழுதியிருந்தது நினைவில் உள்ளது !
And இந்தப் புத்தாண்டின் புதுப் பொழுதில் எனக்குமே அந்த எண்ணமே மேலோங்குகிறது !
So ஸ்டீல் : இந்த நாளில் நீங்கள் முன்வைக்கும் கோரிக்கை என்னவாகயிருந்தாலும் அதை இந்தாண்டின் ஏதேனுமொரு தருணத்தில் நிறைவேற்றிடுவேன் !! (தயை கூர்ந்து விண்வெளிப் பிசாசை மட்டும் கேட்டு விடாதீர்கள் - ஓ.கே.வா ?) Maximum ரூ.100 விலைக்குள் அடைப்படுகின்றது போல ஏதேனும் ஒரு இதழுக்கான பரிந்துரையைச் செய்யுங்கள் - நம் சாத்தியங்களுக்குள் இருந்தால் நனவாக்கிடுவோம் ! (அடிக்கோடிட்ட வரி மீது கவனம் ப்ளீஸ் !!)
இவரது நீண்ட நெடும் பின்னூட்டங்களைக் கண்டு மிரண்டு தாண்டிச் சென்றே பழகிப் போயிருக்கக்கூடிய நண்பர்களும் இங்குண்டு என்பதை நானறிவேன் ! அவர்கட்கு எனது இந்த offer கடுப்பேற்றவும் கூடுமென்றும் புரிகிறது ! But "அணிகள்" ; "குறுகிய நட்புவட்டங்கள்" என்ற சமாச்சாரங்களையெல்லாம் ஓரம்கட்டி விட்டு சற்றே பொறுமையாய் யோசித்தால் - இந்த அன்பான மனிதரை மகிழ்வித்து நாமும் மகிழ்வதில் நிச்சயமாய் ஒரு சுவாரஸ்யம் இருப்பது புரியும் folks ! "ஆஹா...முதுகு சொரிந்துவிட்டால் ஒரு ஸ்பெஷல் இதழுக்கு வாய்ப்புண்டாக்கும் ?" என "அன்போடு" சிலபல வாட்சப் வட்டங்களில் வினாக்கள் இன்று சுற்றிலிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது ! ஆனால் இந்த ஒற்றைத் தருணத்தில் மட்டுமாவது நிஜத்திற்கும் ; சிலபல கற்பனையிலான அனுமானங்களுக்கும் மத்தியிலான கோட்டினை உணர்ந்திட சிலருக்குச் சிரமங்கள் தொடரின் - so be it !
ஸ்டீல் - இனி பந்து உங்கள் பக்கம் !! ஜமாயுங்கள் !!
Wishing you all happy 2020
ReplyDeleteவேற வழியே இல்லை இரவே இருளே கொல்லாதேயே கையில் எடுப்பதை தவிர வேறு வழியில்லை :-)
ReplyDeleteThe best ever Lion Comics
Delete😃😃😃😃
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஇத தவிர வர வர நீங்க சரியாக இங்கு பின்னூட்டம் இடுவதில்லை கண்ணா :-)
DeleteThis comment has been removed by the author.
Deleteஉடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள் கண்ணன்
Deleteஉடல்நலத்தில் அக்கறை கொள்ளுங்கள் கண்ணன்
Deleteஆஹா ஆஹா அருமை இதற்கு தானே காத்து இருந்தாய் குமாரா
ReplyDeleteஆசிரியர் மற்றும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteHappy new year 2020 friends 🙏🏼
ReplyDelete.
வாவ்..! வாழ்த்துகள் ஸ்டீல்..!
ReplyDeleteகேளுங்க ஸ்டீல்.. (அது ஸ்பைடர் கதையாகத்தான் இருக்கும்..!)
நாங்களும் மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம்..!
🙃
Deleteஅனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஏலே பொன்ராசு போன எடுத்து பேசுலே... உனக்கான பதிவுல :-)
ReplyDeleteவருங்கால ஜூனியரை ஞாபகத்தில் வைத்து ஒரு கதையை சொல்லுலே :-)
ஏல தம்பி அதுக்குதான் கேட்காமலேயே வாண்டு மலர தந்துட்டாரே பரிசா....இது நமக்காகல
Deleteஆஹா!! ஸ்டீலுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்!!
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்டீல்!! நல்லதா ஏதாச்சும் கேட்டு வையுங்க!! :)
எல்லாம் நல்லதே ஈ வி...நன்றிகள்
Deleteதோள் கொடுப்பதற்கு
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டீல்
ReplyDelete🙃
Deleteபுத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!
ReplyDeleteசார் சூப்பர் சார் இதை விட பெரிய பரிசு வேறு என்ன வேண்டும் . Claw enna கேட்க போகிறீர்கள்.
ReplyDelete🙃மிகச்சரியாக நண்பரே
Deleteவாழ்த்துக்கள் ஸ்டீல் ... உண்மையாகவே அருமையான புத்தாண்டு பரிசு....
ReplyDelete//ஈரோட்டில் LMS வெளியீட்டின் போது இவரை முதல்முறை நேரில் சந்தித்ததாய் ஞாபகம் ! (அல்லது காமிக் கான் பெங்களூரிலா ??)//
ஈரோட்டில் சார்...
இது பற்றிய
நண்பர் ஸ்டாலினின் பதிவு....
சரிதான் நண்பரே...சென்னைல பிடிக்க பாஞ்சா இப்பதா போறாரு...ஃபோன் பண்ணுங்க பிடிச்சிடலாம்ன ராதாகிருஷ்ணன் அண்ணாசசியிடம் தொல்லை பண்ண வேண்டாம்னு மறுத்து ...அடுத்த ஈரோட்லயே சந்திச்சம்ல
Deleteமார்கெட் பக்கம் ஒரு நடைக்கு போய் இருக்காராம்... உனக்கு பதிவு ஆசிரியர் போட்டி இருக்கார் என்றால் நம்மால் சிரிக்கிறான்... வீட்டுக்கு போய் பார்க்கிறேன் என்று சொன்னாப்புல...
ReplyDeleteஇன்னொரு விஷயம் அப்ப அப்ப unknown என்று கமெண்ட் போடும் இவரு போகிற வழியில் கிடைக்கிறவங்க செட்ட (மோபைல்) வாங்கி கமெண்ட் போடுவதால்.
இந்தப் பதிவைப் படிச்சிட்டு சந்தோசத்துல ஸ்டீலு தைய தக்கானு கரகம் எடுத்துட்டு ஆடப்போறத நினைச்சா வர தூக்கமும் போயிடுச்சு. 🤣
Deleteநம்மால் -> நம்பாமல்
Delete:-))))
Delete🙃🙃🙃
Deleteஸ்டீலுக்கு முன்பாகவே நான் கேட்டதை தந்துவிட்டீர்கள் ஆசிரியரே 007 & ஆர்ச்சி மறுவரவின் மூலம் ஆகவே நீங்கள் எனக்கு எந்த சலுகையும் தரவேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 😄😄😄😄😄
ReplyDelete😀😀😀😀😀
Deleteஅட !! என்னே பெருந்தன்மை சத்யா !!
Deleteசார், கடந்த ஆண்டு சந்தாக்களுக்கு இலவசமாகக் கொடுத்த டெக்ஸ் சிறுகதைகள் - தொகுப்பு புத்தகம் எப்போது வெளியாகும்?
ReplyDeleteசார், கடந்த ஆண்டு சந்தாக்களுக்கு இலவசமாகக் கொடுத்த டெக்ஸ் சிறுகதைகள் - தொகுப்பு புத்தகம் எப்போது வெளியாகும்??
Deleteஇந்தாண்டின் சென்னைப் புத்தக விழா சமயத்தில் கிடைக்கும் நண்பர்களே ! Limited edition...
Deleteஸ்டீல் நம்மாளு கண்டிப்பாக ஸ்பைடரைதான் கேட்பாரு
ReplyDelete🙃
DeleteSuper sir .. இதே போல் ஸ்டீல் தேர்ந்தெடுக்கும் இதழை சென்னை அல்லது ஈரோடு புக் fair ல் அவரை வரவழைத்து வெளியிட்டு விடுங்கள் ..
ReplyDeleteஇதே அதிகம் நண்பரே....நன்றிகள்
Deleteசீக்கிரமே ரிலீசாகக் காத்திருக்கும் ஸ்டீல் ஜூனியரைக் கொண்டே ரிலீஸ் செய்து விடுவோமா சார் ?
Deleteபுத்தாண்டின் புதிய பதிவா.....
ReplyDeleteஉள்ளேன் ஐயா.
ReplyDeleteஏலே மக்கா...ஸ்டீலு. அருமையான புத்தாண்டு பரிசுலே உனக்கு...உன்னோட வெள்ளை மனசுக்கு இதுக்கு மேலே என்னலே வேணும். நல்லா டெக்ஸ் கதையா ஒன்னு கேளுலே...
ReplyDeleteநீங்களும்....நன்றிகள் நண்பா
Delete// ஸ்டீல் - இனி பந்து உங்கள் பக்கம் !! ஜமாயுங்கள் ! //
ReplyDeleteஅடடே,உண்மையாகவே லக்கி பிரைஸ்தான் நண்பர் ஸ்டீலுக்கு....
🙃
Deleteஏலே மக்கா...ஸ்டீலு. அருமையான புத்தாண்டு பரிசுலே உனக்கு...உன்னோட வெள்ளை மனசுக்கு இதுக்கு மேலே என்னலே வேணும். நல்லா டைகர் கதையா ஒன்னு கேளுலே...
ReplyDeleteஆரம்பிச்சு விட்டீர்களா :-) ஆட்டை தூக்கி மாட்டைத் தூக்கி போடும் விளையாட்டை :-)
Deleteஅட பாவமே..:-)
Deleteவணங்குறன்ல
Deleteஆசிரியருக்கும் ,மற்றும் இங்கு கூடும் அனைவருக்கும்..
ReplyDeleteஆங்கிலப் புத்தான்டு நல்வாழ்த்துக்கள் ! நலமும், வளமும், இந்த 2020-ன் ஒவ்வொரு நாளிலும் இல்லமெங்கிலும் பிரவாகமெடுக்க பெரும் தேவன் மனிடோவை வேண்டிக் கொள்கிறேன்...:-)
This comment has been removed by the author.
ReplyDelete"வெள்ளந்தி மனதுக்கு சொந்தக்காரர் " என நீங்கள் சொன்னது மிகவும் பொருத்தம் எடிட்டர் சார்!
ReplyDeleteமுதன்முறை ஈரோடு வந்து இவரை சந்தித்தபோது இதனை இயல்பாக உணர முடிந்தது..
ஸ்டீல் எது வேண்டுமானாலும் கேளுங்கள்..ஸ்பைடராயினும் கூட பரவாயில்லை..
எடிட்டரின் இந்த அன்பு பரிசுக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் நீங்கள் என்பதில் தளத்தில் உள்ளவர் அனைவரும் அறிவர்..
+1
Deleteநன்றிகள் செனா...மற்றும் நண்பர்களே
Delete/
ReplyDeleteஸ்டீல் - இனி பந்து உங்கள் பக்கம் !! ஜமாயுங்கள் !! //
நம்பாளுக்கு கிரிக்கெட் புடிக்காது... புட்பால் ஒகேயாலே மக்கா:-)
நம்ப செந்தூர் வேலவன் கூடவே இருக்கார்லே மக்கா.. சந்தோஷமா இருக்குலே. என் ஜாய். :-)
ஆனால் உன் வீட்டுக்கார அம்மணியை டெய்லி காமிக்ஸ் படின்னு டார்ச்சர் கொடுக்கிறத கொஞ்சம் நிறுத்துல :-)
அப்பறம் இந்த பதிவுக்கு பதில் போடுவதாவது எல்லாருக்கும் எளிதில் புரிகிற மாதிரி போடுல.
நன்றில...
Delete40 ஸ்டீல்
ReplyDeleteவாவ்...வாழ்த்துக்கள் ஸ்டீல்..
ReplyDeleteஸ்டீல் காருக்கு அழகான புத்தாண்டு பரிசு பதிவு ..
விடாதீங்க ஸ்டீல்..கருப்பு வெள்ளையா இருந்தாலும் பரவாயில்ல விண்வெளி பிசாசை மறந்துறாதீங்க:-)
அந்த பாட்டில் பூதத்தையும் மறந்துடாதிங்க ஸ்டீல்.......
Delete:-)
Deleteநிச்சயமா இதுக வரும் நண்பர்களே தானாக
Deleteஇன்றும் பார்சல் தகவல் ஏதும் வரவில்லை என்பதை கடுப்புடன் தெரிவித்து கொள்வது உங்கள் நானே..:-(
ReplyDeleteசார்,
ReplyDeleteபோராட்டங்கள் பல நடத்தி, கத்தை கத்தையாய் கடுதாசிகள் பல வரைந்து, பலமுறை உங்கள் கண்களை குளமாக்கிய எங்கள் தலீவருக்கு புத்தாண்டு பரிசாக அட்லீஸ்ட் 5 ரூபாய் மதிப்பிலான புத்தகத்தையாவது வெளியிட்டு கழகக் கண்மணிகளின் சினம் கொண்ட பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ளுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
இப்படிக்கி,
தலீவரின் மெயின் விழுது
// எங்கள் தலீவருக்கு புத்தாண்டு பரிசாக அட்லீஸ்ட் 5 ரூபாய் மதிப்பிலான புத்தகத்தையாவது வெளியிட்டு //
Deleteதலைவருக்கு அடுத்த ரவுண்டில் வாய்ப்பு கிடைக்குமாம்......
///தலைவருக்கு அடுத்த ரவுண்டில் வாய்ப்பு கிடைக்குமாம்......///
Deleteஎன்னாது.. அடுத்த ரவுண்டா? தலீவர் என்ன ராட்டிணத்தில் சுத்தவா காத்துக்கிட்டிருக்காரு? அடுத்த ரவுண்டாம் அடுத்த ரவுண்டு.. கிர்ர்ர் இது ப்ரஷ்டீஜ் விசயமுங்க!
5 ரூபாய்க்கு கீழேல்லாம் குறைக்க முடியாது.. சொல்லிட்டேன்!
Delete///5 ரூபாய்க்கு கீழேல்லாம் குறைக்க முடியாது.. சொல்லிட்டேன்.///
Deleteஆம்மா..!
500 பக்கமோ 1000 பக்கமோ உங்க விருப்பம்..
கலரோ ப்ளாக் அண்ட் வொய்ட்டோ.. அதுவும் உங்க விருப்பம்.!
ஹார்டு பவுண்டு போட்டாலும் வாணாம்னு சொல்லமாட்டோம்.!
ஆனா.. விலை மாத்திரம் 5 ரூவாய்க்கு ஒரு பைசா குறைஞ்சாலும் , ஆபீசுக்கு முன்னாடியே காலவரையற்ற உண்ணிவிரதத்துல "தலீவரை மட்டும்" உக்கார வெச்சிருவோம்னு தெரிவிச்சிக்கிறோம்..!
இப்படிக்கு
தலீவரின் ரைட் சைடு விழுது
அவரு பேசாம போனாறு இப்படி முட்டுச்சந்தில் கூட்டி வந்து இப்படி பண்ணுறீங்களேப்பா :-) (வடிவேலு தனது தலைவனை கூப்பிட்டு வந்து செய்யும் காமெடி தான் ஞாபகம் வருகிறது)
Deleteதலைவரே இந்த இரண்டு விழுதையும் உடனே கட் பண்ணுங்க...
Deleteஇந்த இரண்டு விழுதுகளும் நேரம் கிடைக்கும் போது எதிர் கட்சி தலைவரோட சேர்ந்துகிட்டு உங்களை குப்பறத் தள்ளி விட்டு வாழைப்பூ வடை சாப்பிட ரெடியாகுறாங்க. :)
இந்த விழுதுகளால் நான் பதுங்கு குழியில் விழுவது தான் அதிகம் ப்ரணி சார்..என்ன பன்றது போங்க...:-(
Deleteபரணிதரன் @ எல்லாம் சரிதான். இந்த சார் மட்டும் வேண்டாமே.பரணி என்றே எழுதலாம் நீங்கள்.
Delete///தலைவரே இந்த இரண்டு விழுதையும் உடனே கட் பண்ணுங்க...///
Deleteவிஷப்பரிட்சை வேணாம் தலீவரே!
அப்படிக்கிப்படி கட் பண்றதா இருந்தா நெஜமாவே அது விழுதுதானான்னு ஒருதபா செக் பண்ணிட்டு அப்புறம் கட் பண்ணுங்க! சாதாரணமாவே உங்களுக்கு தூக்க கலக்கமாகிடுச்சுன்னா தலை எது வால் எதுன்னு தெரியாது...ஹிஹி :D
தலைவரே இதுதான் சரியான நேரம் தூங்க கலக்கம் என்றாலும் அவருக்கு தலையோ வாலோ எதையாவது கட் பண்ணுங்க :-)
Deleteதலீவரே...விழுதுகளைக் கட் பண்ணிப்புட்டா அப்புறம் அந்தப் பட்டாப்பெட்டி டிராயர்களை எங்கே காயப் போடுவீங்களாம் ? தலையிலே மாட்டிக்கிட்டு வயக்காட்டுப் பக்கம் ஒதுங்குற செந்தில் மாதிரி ஆகிப் போயிடாம !!
Delete///தலீவரே...விழுதுகளைக் கட் பண்ணிப்புட்டா அப்புறம் அந்தப் பட்டாப்பெட்டி டிராயர்களை எங்கே காயப் போடுவீங்களாம் ? தலையிலே மாட்டிக்கிட்டு வயக்காட்டுப் பக்கம் ஒதுங்குற செந்தில் மாதிரி ஆகிப் போயிடாம !!///
Deleteஹா ஹா ஹா!! :))))))))))
பரணிதரன் @ எல்லாம் சரிதான். இந்த சார் மட்டும் வேண்டாமே.பரணி என்றே எழுதலாம் நீங்கள்.
Delete₹####
அது கரீட்டு தான் சார்...அ..ஆனா அகிலை விட ஏழு வயது சிறியவனான நான் இங்கே உள்ள அனைவருமே என்னை விட மிக மிக மூத்தவர்களாக இருப்பதால் தன்னால் சார் ஒட்டிக்கொள்கிறது..ஞான் எந்து செய்யும்..!?
முதல்ல இந்த பட்டாபெட்டியை ஓஎல்எஸ்ல வித்துருனும் ..:-(
Deleteதலைவரே @ உங்கள் பட்டாபட்டியை காயவைக்க Tech Dry வாங்கி கொள்ளலாம். தயங்காமல் கட் பண்ணுங்க :+)
Deleteவழக்கம்போல எனக்கும் இன்னும் பெட்டி வரவில்லை......
ReplyDeleteஅச்சச்சோ !! எந்த கூரியர் சார் ?
Deleteஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பார்சல் வந்துடுச்சேய்...
ReplyDeleteகொரியர் வந்து சேர்ந்ததாக வீட்டிலிருந்து தகவல்!! புக்கைத் தேடி நான் DTDC அலுவலகங்களுக்கு அலைந்துகொண்டிருக்க, இப்போது வந்துசேர்ந்திருப்பதோ ST கொரியரில்!!
ReplyDeleteஇது என்ன புதுவகையான விளையாட்டு ஆத்தா? யூ ஆர் ஆஃபன் பிளேயிங் வித் மீ, ஹஹ்? கிர்ர்ர்...
ஆத்தா நெனச்சா DTDC, ST யா மாறும். ST professionalஆ மாறும். சாக்கிரத.
Deleteஇந்த ஈவி நெனச்சா கூழ் - நீர்மோரா மாறும், நீர்மோர் - நீச்சத்தண்ணியா மாறும். ஆத்தாவும் சாக்கிரத.
Deleteஇது என்ன புதுவகையான விளையாட்டு ஆத்தா? யூ ஆர் ஆஃபன் பிளேயிங் வித் மீ, ஹஹ்? கிர்ர்ர்...
Delete######
:-))))))))))))
ஸ்டீல் வாழ்த்துக்கள் என்ன வேணும் எடுத்து விடுல இதற்காக ஸ்பெஷல் இதழ் வெளியிடும் எடிட்டரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அது சரி ஸ்டீல் டைப்புவதை கஷ்டப்பட்டு படிக்கிறோமே எங்கள் சார்பாக ஸ்பெஷல் இதழ் கிடையாதா.
ReplyDeleteM H MOHIDEEN
////அது சரி ஸ்டீல் டைப்புவதை கஷ்டப்பட்டு படிக்கிறோமே எங்கள் சார்பாக ஸ்பெஷல் இதழ் கிடையாதா.///
Deleteஅப்படிக் கேளுங்க மொய்தீன் ஜி! நியாயப்படி இதுக்கு 1000 ரூவா மதிப்பிலான புக்குதான் போடணும்!
கண்டிப்பாக.... அத படித்து காட்ட ஆர்ச்சி இலவசமாக தருவதாக கேள்விப்பட்டேன் பாஸூ.
Deleteஇது கூட நல்லாருக்கே நண்பரே . ..கேட்டு வெப்போம்
Deleteகாதிலே கசிஞ்சிருக்கக்கூடிய தக்காளிச் சட்னி தான் எத்தினி லிட்டர் ? ஆட்டம் கொண்டிருக்கக்கூடிய பற்கள் தான் எத்தினி - எத்தினி ? நிச்சயம் அந்தத் தியாகங்களும் அங்கீகரிக்கப்பட வேண்டியவைகளே மொஹிதீன் சார் ! ரோசிப்போம் !
Deleteஸ்டீல்.. எதுவேணா கேளுங்க.. ஆனா எல்லார்க்கும் புரியற மாதிரி கேளுங்க!
ReplyDelete😀
Deleteநண்பன் பரணி சொன்னான் சிரித்தபடியே கேட்டு வைத்தேன் நண்பர்களே....இவ்ளோ உறுதியா சொல்றானே ...நெசமாத்தானிருக்கும்ன படி ஆட்டோவ ஓட்டுகிறேன்....ஆசிரியர் சிக்குனார்டா சேகர்ன படியே ....விண்வெளிப்பிசாசு வேண்டாம்னு மட்டுஞ்சொன்னான் ....விலயபத்தி குறித்து செல்லாததால் மனசோ துள்ளுது....மொத கேக்க சொன்னது நம்ம பாலா கேக்குற 1500 பக்க அந்த கௌபாய் கதய கேப்பம் என கூக்குரலிட ...அது தானாகவே 50 ஆம் ஆண்டு மலரா மலருமேங்க.....
ReplyDeleteஅப்ப அந்த பெரிய ஸ்பைடர் கேப்பமான்னு குரலெழுப்ப அதும் லயனின் நினைவைப்
போற்றும் வகைல ஏதாச்சும் மலர்ல வந்ருமே...
அப்பறம் நம்ம கொலைப்படை...மர்மத் தீவில் ஆர்ச்சி இணைந்த கதய கேப்பமான்னு ஜிலீரிட....
ஊதாப் பொடியர்கள கேப்பமா என குரலெடுக்க ....அதும் தானா வித்த பிறகு வாண்டு மலரா மலர வாய்ப்பு அதிகம்னே பட்சி கூட கூவ ....
ஆஸ்ட்ரிக்ஸ்னு தறிகெட்டோடிய மனச அடக்க ஏலாம ....
லார்கோ எக்கனாமிக்க கேப்பமான்னா பரணி பரிதாபமா பாக்குறான்....
இப்ப பதிவ சந்தோசமா படிச்சா ஆசிரியர் நெளியச் செய்தார்....அதற்கெல்லாம் தகுதியான ஆள்தானா என தடுமாறியபடி கேட்டு வைக்கிறேன் ....நா கேக்க போவத யூகித்திருப்பார் ஆசிரியரும் நண்பர்களுமே...
ஏன் கேட்கிறேன் ... இதன் விலை மார்கட்ல 5000 ஐந்து வருடம் முன்னர்....
என்ன தவிர கேக்க ஆளில்ல ...வந்தா நிச்சயம் கல்லா கட்டும் செந்தூரான் அருளால....
சார் அப்படியே முன்னட்டைல அதே ஸ்பைடர் ஏதும் மாத்தாம ....பின்னட்டைல ஆர்ச்சி அட்டகாசமா...அதே இரு வண்ணத்ல....டெக்சுக்கு போடும் தாள்ல....பெரிய சைசுல பழமை விரும்பும் நண்பர்களும் ஆராதிக்க வரட்டும் முடிஞ்சா அதே பழங்கால மலராக...
அதாவது அவர் கேட்பது இந்த இரண்டு கதைகளை இணைத்து ஒரே புத்தகமாக :-)
Delete//
கொலைப்படை...மர்மத் தீவில் ஆர்ச்சி இணைந்த கதய கேப்பமான்னு //
சரிதானாலே மக்கா?
வாழ்த்துகள் ஸ்டீல் ஜி.வழக்கம்போல புரியல.ஆனாலும் ரெண்டு தடவை படிச்சா என்ன சொல்ல வர்றீங்கனு புரியும்.
Deleteவருடத்தின் துவக்கத்தில் ஒரு அழகான பரிசு.மீண்டுமொருமுறை வாழ்த்துகிறேன்..!
///அதாவது அவர் கேட்பது இந்த இரண்டு கதைகளை இணைத்து ஒரே புத்தகமாக :-)///
Deleteநல்லவேளை மொழிபெயர்ப்பு செஞ்சிங்க பரணி!
என்ன சொல்ல வர்ரார்னு மண்டைய பிக்க வேண்டியதாயிருச்சு!!?
கொலைப்படை + மர்மத்தீவல் ஆர்ச்சி
Deleteநம்ம ஸ்டீல் க்ளாவுக்காக..
ஆரவாரத்துடன் வரவேற்கிறோம்..!!
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அதான பாத்தேன்.
Deleteஅவுரு ஸ்பைடர்மேன்-அயர்ன் மேன் தா கேப்பாப்டி
கொலைப்படை + மர்மத்தீவில் ஆர்ச்சி
Deleteகொங்குதேச கோமகனுக்காக
கோஷமெழுப்பி வரவேற்கிறேன்...
சிறப்பிதழ் வெளியிடுவது சாதாரண விஷயமே!!
Deleteபடைப்பாளிகளை நினைவு கூர்ந்து..
முக்கிய தருணங்களில்...
விஷேஷ காரணம் குறித்து..
ஆனால்..
தமது வாசகர் ஒருவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிடும் பெருந்தன்மையும்,அன்பும் நமது எடிட்டர்
ஒருவருக்குத்தான் இருக்கமுடியும்..
இத்தகைய படைப்பு குழாமில் உள்ள ஒரு வாசக வட்டத்தின் அங்கத்தினனாக நெஞ்சை நிமிர்த்தி பெருமிதம் கொள்கிறேன்..
மிதுன் @ எங்க ஊர் பக்கம் ஒருநாள் வாங்க அப்படி இல்லைனா ஸ்டீல் கூட ஒரு நாள் ஊர் சுற்றுங்க எல்லாம் புரிஞ்சுடும் :)
Deleteவரட்டும் கொ. ப. + ம. தீ. ஆ. வாசகர் சிறப்பிதழாக. 👏👏👏👏👏
Deleteமொழிபெயர்த்துச் சொன்னதற்கு நன்றி PfB!
Deleteஇதுக்கே கொடுக்கலாம் உங்களுக்கொரு PhD!
கொலைப்படை + ஆர்ச்சிக்கு நான் பச்சைக் கொடி!
அதிர்வேட்டாய் வெடிக்கும் இந்த இரண்டை வெடி!
ஆனாலும் இந்தக் கவிதை செமக்கடி!(அதானே?) ;)
// தமது வாசகர் ஒருவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிடும் பெருந்தன்மையும்,அன்பும் நமது எடிட்டர்
Deleteஒருவருக்குத்தான் இருக்கமுடியும்.. // உண்மை உண்மை நூறு சதவீதம் உண்மை
////தமது வாசகர் ஒருவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிடும் பெருந்தன்மையும்,அன்பும் நமது எடிட்டர்
Deleteஒருவருக்குத்தான் இருக்கமுடியும்..
இத்தகைய படைப்பு குழாமில் உள்ள ஒரு வாசக வட்டத்தின் அங்கத்தினனாக நெஞ்சை நிமிர்த்தி பெருமிதம் கொள்கிறேன்..////
அபாரமான வார்த்தைகள்!! ஞானும் அவ்விதமே பெருமை கொள்கிறான்!!
///தமது வாசகர் ஒருவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிடும் பெருந்தன்மையும்,அன்பும் நமது எடிட்டர்
Deleteஒருவருக்குத்தான் இருக்கமுடியும்..
இத்தகைய படைப்பு குழாமில் உள்ள ஒரு வாசக வட்டத்தின் அங்கத்தினனாக நெஞ்சை நிமிர்த்தி பெருமிதம் கொள்கிறேன்..///
யானும் அவ்வண்ணமே..!!
// தமது வாசகர் ஒருவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிடும் பெருந்தன்மையும்,அன்பும் நமது எடிட்டர் ஒருவருக்குத்தான் இருக்கமுடியும்.. //
Deleteஉண்மை உண்மை நூறு சதவீதம் உண்மை.
///தமது வாசகர் ஒருவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிடும் பெருந்தன்மையும்,அன்பும் நமது எடிட்டர்
Deleteஒருவருக்குத்தான் இருக்கமுடியும்..
இத்தகைய படைப்பு குழாமில் உள்ள ஒரு வாசக வட்டத்தின் அங்கத்தினனாக நெஞ்சை நிமிர்த்தி பெருமிதம் கொள்கிறேன்..///
நானும் அவ்வண்ணமே..!!
///தமது வாசகர் ஒருவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிடும் பெருந்தன்மையும்,அன்பும் நமது எடிட்டர்
Deleteஒருவருக்குத்தான் இருக்கமுடியும்..
இத்தகைய படைப்பு குழாமில் உள்ள ஒரு வாசக வட்டத்தின் அங்கத்தினனாக நெஞ்சை நிமிர்த்தி பெருமிதம் கொள்கிறேன்..///
நானும் அவ்வண்ணமே..!!
// தமது வாசகர் ஒருவருக்காக ஒரு சிறப்பிதழ் வெளியிடும் பெருந்தன்மையும்,அன்பும் நமது எடிட்டர் ஒருவருக்குத்தான் இருக்கமுடியும்.. // நானுமே
Delete. நன்றிகள் நண்பர்களே
ஒற்றை வாசகருக்கு மட்டுமே இப்படியொரு வாய்ப்புத் தந்திருக்கும் நிலையில் கூட - 'நாங்கள்லாம் கண்ணுக்குத் தெரியலையாக்கும் ?' என்று சினம் கொள்ளாது - இதனை உள்ளன்போடு ; தத்தமது பரிசுகளாய்க் கருதி, பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளும் வாசக வட்டத்தினூடே செயல்படுவதில் நெஞ்சம் நிமிர்த்திப் பெருமிதம் கொள்கிறேன் !
Deleteபுத்தாண்டின் முதல் பதிவு
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்டீல்..
ReplyDeleteஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🎊..
🙃
DeleteMs jayakumar happy new year 2020 friend
ReplyDeleteஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!புத்தகங்கள் கிடைத்து விட்டது!
ReplyDeleteடெக்ஸ் ஸ்டிக்கர்!டெக்ஸ் இன் maxi புத்தகங்கள் இரண்டு!Durango அதிரடி! சிரிப்புக்கு மாக் & ஜாக்! ஆனால் ஜேம்ஸ் பாண்ட் புத்தகத்தில் இறுதி அட்டையில் வூதுபத்தி விளம்பரம் என்?
ReplyDeleteஅட... நம்ப புத்தகத்தில் விளம்பரமா. சூப்பர். தொடரட்டும்.
Delete///ஜேம்ஸ் பாண்ட் புத்தகத்தில் இறுதி அட்டையில் வூதுபத்தி விளம்பரம் என்?///
Deleteஅதுவும் நம்ம கம்பேனி தான்! ஜூனியர் எடியின் fragrance in the air! விளம்பரம் - நச்!! கலக்குங்க ஜூனியர்!
வாழ்த்துக்கள் மணக்கட்டும்
Deleteஒரே கல்லிலே இரண்டு மாங்கா :-)
Delete@ Siva Subramanian : ஜேம்ஸ் பாண்ட் உள் அட்டைகள் வண்ணத்திலிருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கலாமே சார் ? வேறுபாடு அதனிலும் தானன்றோ ?
Deleteஇதுவரை வருடம் முழுவதும் dtdc courier மூலம் வந்த புத்தகங்கள் இன்று மட்டும் stc ல வந்த மர்மம் என்ன?
ReplyDeleteஇங்கே புத்தகமே வரலை மைலார்ட். :-)
Deleteமன்னிக்கவும் நண்பரே! முதல் முறையாக விளம்பரத்தை பார்த்தவுடன் தோன்றியதை எழுதிவிட்டேன்! நெறைய நண்பர்கள் புத்தகம் கிடைக்காமல் தவிப்பார்கள் என்பதையும் யோசிதிருக்க வேண்டும் தான்!
Deleteஜாலியாக சொன்னேன் ஜி. இதற்கு எதற்கு மன்னிப்பு.
Deleteஎனது கமெண்ட்ஐ ஜாலியாக எடுத்துக் கொள்ளுங்கள்
///Maximum ரூ.100 விலைக்குள் அடைப்படுகின்றது போல ஏதேனும் ஒரு இதழுக்கான பரிந்துரையைச் செய்யுங்கள் - நம் சாத்தியங்களுக்குள் இருந்தால் நனவாக்கிடுவோம் ! ...////----- வாழ்த்துகள் ஸ்டீல்!
ReplyDelete"ரசிகர் ஒருவருக்கு சிறப்பிதழ் "---எடிட்டர் சாரின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது.
ReplyDeleteசூழல் எதுவாக இருப்பினும் இவர் சங்கடப்படும்படி சில சமயத்தில் கமெண்ட் போட்ட நினைவுகள் நெளி்ய வைக்கிறது!
இன்று முதல் இவர் லயன் எடிட்டர் மட்டுமல்ல! ரசிகர்களின் எடிட்டரும் கூட...!!!
நிச்சயம்
Deleteஅந்த எடிட்டர்..இந்த எடிட்டர் என்பதெல்லாம் தற்காலிகங்களே சார் ; இங்கே உங்களுள் ஒருவன் என்பதே நிரந்தரம் !
Delete///கொலைப்படை + மர்மத்தீவில் ஆர்ச்சி////+1,+2,+3,+4.......+2020
ReplyDeleteஅருமையான செலக்சன் ஸ்டீல்!
ஆர்ச்சி ,
007,
ரிப் ரசிகர்கள் தாண்டி இப்ப ஸ்பைடர் ரசிகர்களும் ஹேப்பி ஆகப் போறாங்க!
ஆங்,
அடுத்து இன்னும் ஆரு ????
பின்னிரும்ல டெக்ஸ்டைல்....வழக்கம் போலீஸ் வாங்க நேரம் கிட்டும் போதெல்லாம்
Deleteபோலீஸ் வாங்கணுமா ? டெக்ஸ்டைல் பின்னிருமா ?
DeleteFull form-ல்லே இருப்பது புரியுது ஸ்டீல் !
அது
Delete"டெக்ஸ் விஜயராகவன் வழக்கம் போல நேரம் கிடைக்கும் போது எல்லாம் வாங்க"
ஜூனூன் தமிழ் போல் இது ஸ்டீல் தமிழ் :-)
Happy new year sir.. ♥️♥️
ReplyDeleteபார்சலு முன்னுக்க குந்திகினு வெறிச்சி பாத்துக்கினேகீறேன்..
ReplyDeleteவுன்னும் பிரிச்சபாடில்ல..
வர்சத்தோட மொதோ பார்சலு.. பிரிச்சிட்டா இன்டரஸ்டு குயிக்கா புஸ்ஸாயிடுமேன்னு டைம் எட்த்துகிறேன்.!
செரி. செரி.. நைட்டு டின்னரு முட்ச்சதுக்கு அப்பால ஒரு எட்டு எட்டரைக்கா பிரிச்சிக்கலாம்..!
என்ஜாய்
DeleteLet our friend Steel Claw choose the story himself. No suggestions please. Otherwise it won't be fair. Am I right friends?
ReplyDeleteஎனது தேர்வே நண்பரே....பல நாட்களா பலரும் தேடிய பொக்கிசம் நிச்சயமா
Deleteவாழ்த்துகள் ஸ்டீல். உங்கள் செலக்சனுக்கு +1
ReplyDelete🙃
DeleteBooks not received.ST cour
ReplyDeleteஅனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteஇப்புத்தாண்டில் ஸ்டீலை பெருமைபடுத்திய ஆசிரியருக்கு நன்றி. ஸ்டீலுக்கு வாழ்த்துகள்.
உங்கள நீண்ட நாளா
Deleteகாணமே ATR...நலமா...நன்றிகள்
புத்தாண்டினில் உங்கள் ஆரோக்கியம் மேம்பட வேண்டிக் கொள்வோம் சார் !
Deleteசார் செல்ல தம்பி எடுத்துட்டு போனதால படபடன்னு டைப்பிட்டேன். இந்தப் பெருமய தந்ததுக்கு நன்றிகள் . முதல் மில்லியன் தொடர்ந்த பல நண்பர்களின் கூட்டு முயற்சி மற்றும் உங்களை தனியா ஆர்வமும் கூட . 2020 க்கு இத விட அரிய பரிசு எனக்கு கிடைக்காது . நா கேட்ட புத்தகத்த விட அரிய பரிசல்லவா . கண்கள் பணிக்கும் நன்றிகள் . இத கொண்டாடும் நண்பர்களுக்கும் கோடி நன்றிகள் . இனி பொறுமயா டைப்ப நேரம் எடுத்துக்கிறேன். உங்க நேசத்த என் மேல படிய வச்ச செந்தூர் வேலவனுக்கும் நன்றிகள் . படிக்கும் அனைவருக்கும் குறையா உற்ச்சாகத்த வாரி இறைக்கட்டும் .
ReplyDelete......ஸ்டீல்
//இனி பொறுமயா டைப்ப நேரம் எடுத்துக்குறேன்.//
Deleteவேண்டாம் ஸ்டீல். உங்களை ஆசிரியரும் நண்பர்களும் கொண்டாடுவதற்கு உங்கள் வேகமான டைப்பும் காரணம்! ஸ்டீல் என்று நீங்கள்
உங்கள் பதிவுகளில் டைப்படிக்காமல் விட்டால்கூட உங்கள் தடதடக்கும் பதிவுகளே உங்களை அடையாளம் காட்டும்.அதை மாற்ற முயற்சிக்காதீர்!
😀
DeleteSir. Adhiradi Archie was an already used title
ReplyDeleteOops....I felt so too sir ; but our people checked and somehow ended up telling me this title hasn't been used yet...!!
Deleteசார்
ReplyDelete1.கொலைப்படை மர்மத் தீவில் ஆர்ச்சி இரண்டும் இணைந்து
2.இரு வண்ணத்ல
3.முன்னடயா அச்சு மாறாம அதே ஸ்பைடர் அட்டய
4. பின்னட்டையா அட்டகாசமா ஆர்ச்சி தாங்கி வர
5. முதல் பக்கம் முதல் ...முடிஞ்சா வருகிறது விளம்பரங்கள் கூட அப்படியே தாங்க
....விண்ணுக்கும்(செந்தூர் வேலவன்) மண்ணுக்கும்( விஜயன் ) பாயும் மனச கட்டுப்படுத்த மனசால் ஏலல....மீண்டும் மீண்டும் கோடி நன்றிகள் சார் மற்றும் நண்பர்களே
சூப்பர் பொன்
Delete+ 10000 Steel Claw :-)
DeleteI can see "Doctor" Selvam taking "sick" leave :-p :-D
The French express kooriyur கவனிக்கவும். Dekshinamoorthy. திருவாரூர்
ReplyDeleteஉள் பக்கங்கள் வழமை போல புரட்டுனா ....சும்மா தகதகக்குது வண்ணத்தில் கொரில்லாக்கதை...
ReplyDeleteடெக்சின் பெரிய சைசும் வண்ணமும் படிக்க அட்டகாச உணர்வைத் தர தவறல .
ஜேம்சோ ஓர் படி மேலே ....பளிச்சிடும் ப்ளீஸ்....உள்ளட்டை வண்ணத்ல அதிரடி ஆர்ச்சி பளிச் அட்டகாசம்....விளம்பர வெளியீடு வெற்றி பெற செந்தூர் முருகன வேண்டுகிறேன் .லோகோ இப்படியே மின்னட்டும் தொடர்ந்து. ட்யூராங்கோவும் வழக்கம் போல வாய்பிளக்கச் செய்ய....அடுத்த வருடம் முடியப் போகுதே எனும் வரிகள் இடறினாலும் ...தொடர வாய்ப்புள்ளது எனும் காமிக்ஸ் டைம் வரிகள் சந்தோசத்த மீட்டெடுக்குது .
இருளின் மைந்தர்கள் 1 ன் கடைசிப் பக்க உள்ளட்டை ஆர்ச்சி கை கோர்க்கும் அந்த 2020 சந்தா சந்தோச காலப் பயணத்துக்கு பின்னோக்கி இழுப்பது அடடா...
:-)
Deleteஅல்லாரும் நம்ப எடிட்டரை எங்கே காணோம் என தேடலாம். அவரு இப்ப ஸ்டீலோட ஆசையை நிறைவேற்ற என்ன/எப்படி செய்யலாம் என்று நம்ப லயன் டீம் உடன் ஆலோசனை செய்து கொண்டு இருப்பார் என நினைக்கிறேன் (முதல்வன் படத்தில் ரகுவரன் அர்ஜுனனை ஒருநாள் முதல்வராக்க நடத்தும் ஆலோசனை சீனை கற்பனை செய்துகோங்க மக்களே)
ReplyDeleteவிரைவில் நல்ல செய்தியோட வருவார் என காத்திருப்போம் :-)
நம்ம "லயனின் எடிட்டோரியல் டீம்" !!
Deleteஅட....கேட்கவே கொஞ்சம் கெத்தாகத் தானிருக்கிறது !!
ஆனாலும் ஒரு ஆந்தைவிழியனிடம் ஆரம்பித்து ; வடாம் , வத்தல் காயப் போட முன்னந்தலையை வாடகைக்கு விட நினைக்குமொரு வளர்ந்த மாடனோடு முடிவுறும் ஒரு தம்துண்ட் அமைப்புக்கு இந்த கெத்தெல்லாம் கொஞ்சம் டூ..டூ..மச் தான் என்பேன் !
ஸ்டீலின் கோரிக்கையினை நிறைவேற்ற நான் மனசு வைப்பது இரண்டாம் பட்சம் ; படைப்பாளிகளின் சம்மதமே தலையாயம் என்பதால் - விடுமுறைகள் முடிந்து அவர்கள் திரும்பும் வரையிலும் காத்திருக்க வேண்டியது தான் !
இடைப்பட்ட இந்தப் பொழுதில் பிப்ரவரி மாதத்துக்கான குருதைகளைச் சவாரிக்குத் தயார் செய்யும் முஸ்தீபுகளில் "எடிட்டோரியல் டீம்" பிசி !
விஜயன் சார், நம்ப "லயனின் எடிட்டோரியல் டீம்" சிறியது என்றாலும் அவர்களின் செயல் வேகம் மின்னல் போன்றது.
Deleteநமது come back பின்னர்
1.காமிக்ஸ் அட்டவணை
2. மாதம் தவறாமல் புத்தகங்களை தருவது
3. அச்சுத்தரம் நாளுக்கு நாள் மெருகேற்றும்
4. பாக்கிங் மெனக்கெடல்
5. மொழிபெயர்ப்பு
மேனக்கெடல்
6. வாசகர்கள் எதிப்பார்புக்கு மேல் அவர்களை சந்தோஷ படுத்த நினைப்பது.
என இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
உங்கள் டீமின் செயல்கள் பாராட்டுக்குரியது.
தாராளமாக காலரை தூக்கி விட்டுக்கோள்ளலாம்.
Utopia என்றொரு கற்பனை லோகம் ; கற்பனை சமூகம் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா சார் ? அங்கே எல்லாமே துளியும் பிசகின்றி கனகச்சிதமாய், ஆகச் சரியாய் மாத்திரமே நடந்திடும் !! அங்கு சந்தோஷமும், நிம்மதியும் மட்டுமே நிலவிடும் ! The Perfect World !!
Deleteஇந்த "எடிட்டோரியல் டீமின்" கனாவெல்லாம் ஒரு காமிக்ஸ் utopia வினை என்றைக்கேனும் ; ஒரேயொருமுறையேனும் நனவாக்கிப் பார்த்திட வேண்டுமென்பதே ! அதன் பொருட்டு பயணிக்க இன்னும் வண்டி வண்டியாய் தூரமிருக்கும் போது இன்றைக்கு காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதெல்லாம் சரிப்படாது சார் !
Miles to go ...!
// வாண்டு மலர தந்துட்டாரே பரிசா.... //
ReplyDeleteஎப்போ சொல்லவே இல்ல.... புத்தகங்கள் வாங்கிய யாராவது இதனை பற்றி விரிவாக சொல்லுங்களேன்.
Dtdc. St korier mattum. Olla the French express koorierrum irrukku. Acriyar. Yochikkayum
ReplyDeleteவீதிக்கொரு கூரியர் இருப்பது தெரிந்த சமாச்சாரம் தானே சார்...?!தெரியாத சமாச்சாரம் அவர்களது சர்வீஸ் சார்ந்த நிலவரங்கள் மட்டுமே !
Deleteவாழ்த்துக்கள் ஸ்டீல் பொன்ஸ் .. 💐💐💐
ReplyDeleteGot the books .. All books are eye-catchers at the first look. Classic 007 looks inviting but Durango would be the one I would plunge into over the weekend. 2020 looks to have begun with a bang !
ReplyDeleteFingers crossed sir !!
Deleteகதவைத் தட்டும் கோடி :
ReplyDeleteவாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ஒரு மெகா கோட்டீஸ்வரர்..
அவருடைய அளவுகடந்த சொத்துகளுக்கு ஒரே வாரிசு ஊதாரியான அவரது மருமகன் மட்டுமே..
குட்டி, புட்டி என தறுதலையாய்த் திரியும் மருமகன் அத்தனை பழக்கங்களையும் விட்டுவிட்டு ஒழுக்கசீலனாக மாறினால் மட்டுமே சொத்து அவனுக்கு கிடைக்கும் என்பது கோட்டீஸ்வரரின் நிபந்தனை.
தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள இயலாத மருமகன் டேவ்.., மாக் அண்ட் ஜாக் ஜோடியின் உதவியை நாட..
கதைத் தொடங்குகிறது..!
மூன்று குட்டிகளோடும் , வீடு முழுக்க புட்டிகளோடும் , எலிகள் வசிக்கும் சில பெட்டிகளோடும் அவுட் அவுஸில் தங்கியிருக்கும் மொடாக்குடியனான டேவை திருத்தி வழிக்கு கொண்டுவர மாக் அண்ட் ஜாக் படும் பாடுகள் புன்னகைக்க வைக்கின்றன.!
ஒருவழியாய்த் திருந்திய டேவ் காதலில் விழ.. அக்காதலின் மூலம் கதைக்குள் அல் கபோன் நுழைய.. அல் கபோன் மூலம் டேவ் பழைய ஃபார்முக்கே திரும்ப..
அதன்பின் அல்கபோனுக்கு நிலவரம் பிடிபட்டு மீண்டும் டேவைத் திருத்த மாக் அண்ட் ஜாக் உதவியை நாட..
பிறகு ஏற்படும் திருப்பங்களும்.. குறிப்பாக க்ளைமாக்ஸும் கலகலப்பு..!
டேவ் மற்றும் அல் கபோனின் வசனங்களும் சேட்டைகளும் ரொம்பவே ரசிக்க வைத்தன.! ஜாக் அட்டாவே அல் கபோனிடம் டீல் பேசும் விதமும் , அந்த டீலை அல் கபோன் அடியாட்களை வைத்தே முடிப்பதும் செம்ம நகைச்சுவை..!
அத்தனை பாடுபட்டும் கடைசியில் அல் கபோனின் நிலமை.. ஹிஹிஹி..!
கதவைத் தட்டும் கோடி : அல் கபோனும் டேவும்
ரேட்டிங் 9/10
காமிக்ஸ் உலகினில் வன்மேற்கின் மீது படைப்பாளிகளுக்கு எத்தனை மையல் உண்டோ - அத்தனை ஆர்வம் அந்த 1920 களின் அமெரிக்கா மீதும் உண்டு ! Mafia ஆதிக்கம்...பங்குச் சந்தைச் சரிவும், அது சார்ந்த பெரும் பொருளாதார வீழ்ச்சி ...என்று பல வரலாற்று நிகழ்வுகளைத் தன்னுள்ளே அடக்கி நிற்கும் அந்தக் காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு ஏகப்பட்ட ஆல்பங்கள் / தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளன ! அந்த நாட்களை பகடியாய்ப் பார்த்திட முனையும் இந்த மேக் & ஜாக் தொடர் என் பார்வையில் செம சுவாரஸ்யம் + முக்கியத்துவம் வாய்ந்தது ! இது வெற்றி காணின் - நிஜமாய் ஹேப்பி !
Deleteஅருமையான ஸ்டோரி லைன்! அடித்து விளையாட ஏற்ற களம்!
Deleteநாமதான் கார்ட்டூனுக்கு வாரிவழங்கும் வள்ளல்களாச்சே.. அப்புறம் எப்படி ஒரு மார்க்கு குறைஞ்சதாம்?!!
என்ன மாதிரியான சுவாரஸ்யக் கதைக்களமாக இருந்தாலும் - 'நமக்கும் கார்ட்டூனுக்கும் ஆகாதுங்கோ !' என்று ஓரம்கட்டும் ஆன்லைன் கொள்முதல் நண்பர்கள் சற்றே மனசு மாறிட பெரும் தேவன் மனிடோ தான் உதவிட வேண்டும் !! Phew !!
Delete///நாமதான் கார்ட்டூனுக்கு வாரிவழங்கும் வள்ளல்களாச்சே.. அப்புறம் எப்படி ஒரு மார்க்கு குறைஞ்சதாம்?!!///
Deleteநீதி வழங்குறொப்போ அண்ணன் தம்பி சொந்தம் பந்தம் எதுவும் பாக்கப்படாதுன்னு சொக்காப் போடாத நாட்டாமை சொல்லியிருக்காருங்கோ..
அதேமேரி..
மார்க்கு போடுறப்போ கார்ட்டூனு ஆக்ஷனு ரீப்ரின்டு கிநான்னு எதையும் பாக்கப்படாதுன்னு நிஜார் போடாத தலீவரு சொல்லியிருக்காருங்கோ..
அதுவுமில்லாம நாமளும் கொஞ்சமாச்சும் ஸ்ட்ரிட்டா காட்டிக்க வாணாமூங்களா குருநாயரே ..!?
இந்த ஒண்ணாவது நான் சொல்றத கேக்குறீங்களே அதுக்கே உங்களுக்கு விழுது போடலாம் ச்சே மாலை போடலாம்..:-)
DeleteFolks,
ReplyDeleteWe are marching towards 4 million hits - come on - time for counter increase !
Dear Editor,
4M special should be different from Steel Claw Special - solliputten.
"ஸ்டீல் கிளாவின் தமிழமுதம் பருகிய தியாகிகள் ஸ்பெஷல்" என்று ஒன்றைப் போட்டு தாக்கிடுவோமா guys ?
Delete///
DeleteWe are marching towards 4 million hits - come on - time for counter increase !///
Congratulations to us :-)
4M special.. love to see another இரவே இருளே கொல்லாதே or தேவ ரகசியம் தேடலுக்கல்ல.!
மொழிப்போரில் முழிப்போர் தியாகஸ்பெஷல்
Deleteடைட்டில் செம ஹே !! 4 மில்லியன் தொட வேண்டியது தான் பாக்கி ஹே !!
Deleteமொழிப்போரில் முழிப்போர் தியாகஸ்பெஷல் +1
Deleteரெடி சார்...தியாக ஸ்பெஷலுக்கு ..:-)
Deleteஇருளின் மைந்தர்கள் மாக்ஸி சைசில் மிரட்டலாய் வந்திருக்கிறது சார்.!
ReplyDelete(மரண முள், கார்சனின் கடந்தகாலம்(ஹிஹி.. ஆசை) போன்ற க்ளாசிச் கதைகளையும் இப்படிக் காண ஆவல்.!
அதே போல்..
லக்கி லூக்கின் சூ மந்திரக்காளி விரைவில் மாக்ஸி சைசில் என்ற விளம்பரம் பார்த்ததும் குசியாக இருந்தது உண்மைதான் சார்.! ஆனால்.. சூ மந்திரகாளிக்கு பல வருடங்கள் முன்னதாகவே வெளியான கௌபாய் எக்ஸ்ப்ரஸ், ஜேன் இருக்கப் பயமேன் மாதிரியான கதைகளை முதலில் வெளியிட்டால் இன்னும் சந்தோசமாக இருக்கும் சார்.!
ஆறாது சினம்.. செம்ம மேக்கிங்.! ஹார்ட் பவுண்டில் பட்டாசாக வந்திருக்கிறது. கலரிங்கும் அருமை.!
பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் ..! சைசும் புத்தக அமைப்பும் நன்றாகவே இருக்கின்றன.!
என்னுடைய அடுத்த வேலை.. பாண்டின் பட்டாம்பூச்சியுடன்தான்..!
MAXI யில் அடுத்த லக்கி "பிசாசுப் பண்ணை" என்று தான் ஞாபகம் சார் ; பாக்கி எல்லாமே "விரைவில்" விளம்பரங்களே ! So சீனியாரிட்டிபடி கதைகளை உள்நுழைத்துக்கொள்ளலாம் !
Delete//ஆறாது சினம்.. செம்ம மேக்கிங்.! ஹார்ட் பவுண்டில் பட்டாசாக வந்திருக்கிறது. கலரிங்கும் அருமை.!//
Deleteஅது ட்யுராங்கோ ராசி ! என்ன செய்தாலும் அமர்க்களமாய் அமைந்து போகிறது இதழ் !
///MAXI யில் அடுத்த லக்கி "பிசாசுப் பண்ணை" என்று தான் ஞாபகம் சார் ; பாக்கி எல்லாமே "விரைவில்" விளம்பரங்களே ! So சீனியாரிட்டிபடி கதைகளை உள்நுழைத்துக்கொள்ளலாம் !///
Deleteசூ மந்திரக்காளி.. விரைவில் வருகிறது என்ற விளம்பரம்தான் சார்.!
பிசாசுப் பண்ணைக்கு அடுத்து கௌபாய் எக்ஸ்ப்ரஸூக்கு இப்போதே எனது வோட்டு.!
Happy new year sir,
ReplyDeleteMaxi Tex wrapper 100%
James bond(rathakateri marmam in Rani comics)reprint excellent quality sir ...I have all the omnibus series...
Durango wrapper is no 1 in this month..I have measured these much only...I have to read the all...
Happy Reading sir !
Delete2020 நன்றாகவே ஆரம்பித்துள்ளது....
ReplyDeleteஅக்கறையுடன்
அள்ளித்தரும்
அக்கரங்களுக்கு
என்ன கைம்மாறு செய்வேன்...
நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி...
கனிவான வார்த்தைகள் சார் !! உளமார்ந்த நன்றிகள் !
Delete187வது
ReplyDeleteபுத்தாண்டு புத்தகங்கள் அனைத்தையும் படித்தாயிற்று சார்.( நேற்றே புத்தகங்கள் கிடைத்துவிட்டன ) புத்தாண்டை நம் காமிக்ஸூடன் வரவேற்க உதவிய உங்களுக்கும், உங்களுக்கு உதவிடும் அலுவலக தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteஒவ்வொரு அட்டைப் படங்களும் தெறிக்க விடுகின்றன சார்.அதுவும் ட்யூராங்கோ அட்டைப்படம்....!!!
ட்யூராங்கோ ஓவியங்களும், வண்ணமும் அட்டகாசம்.
ஜேம்ஸ்பாண்ட் முத்துமினி காமிக்ஸ் சைசில் வருமென நினைத்திருந்தேன். ஆனால் எதிர்பாராத சைஸ். சூப்பர்.உள்ளே தெளிவான படங்களுடன் கலக்கலாக உள்ளது.இந்த சைசில் முத்துவில் வந்த மறுபதிப்பு காணாத காரிகன்,ரிப்கெர்பி,சார்லி,வேதாளர்,விங்கமாண்டர் ஜார்ஜ் இவர்களின் கதைகளை அவ்வப்போது கண்ணில் காட்டினால் நன்றாக இருக்கும்.
கார்டூன்..மாற்றம் முன்னேற்றம் மாம்பழம்!!! எடிட்டர் சார்.பார்த்து பத்திரமாக இருந்து கொள்ளுங்கள். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்?
இதை பதிவிடும்போதுகூட சிரிப்பு வருகிறது.
நீண்ட வருகைக்கு பிறகு நீண்ட விமர்சனம் வாழ்த்துக்கள் ஏடிஆர் சார்..:-)
Deleteவாழ்த்துக்கள் ஸ்டீல் ப்ரோ..!
ReplyDeleteஉங்கள் தேர்வுகள் அட்டகாசம்.!!
ஆசிரியரின் செயல் என்னைப் புல்லரிக்க வைத்துவிட்டது.நன்றிகள் சார்.நானும் ஒரு லயன் வாசகன் என்பதில் பெருமை கொள்ளுகின்றேன்.
ஆறாது சினம் Durango வின் மற்றுமோர் அதிரடி. 2020 ஐ இந்த கதையுடன் தான் துவங்கினேன். வழக்கம் போல ஒரு இரு பக கதை அதை தொடர்ந்து ஒரு பாக கதை. இரண்டுமே அட்டகாசம். ஒரு சில பாத்திரங்கள் நன்றாக மனதில் பதிந்து விட்டன. அதுவும் எடிட்டரின் மொழி பெயர்ப்பு அருமை பல இடங்களில் ரசிக்க வைத்தது. லூயி க்கும் நம் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் உரையாடலை மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteஎனது மதிப்பெண் 9/10
தாரை ஆத்தா இன்று மனது வைக்குமா ..
ReplyDeleteகடுப்புடன் காத்திருக்கிறேன்..
தாரை ஆத்தா இன்று மனது வைக்குமா ..
ReplyDeleteகடுப்புடன் காத்திருக்கிறேன்..
நேற்று இரவு பழைய அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி போன் செய்து கன்னடத்தில் கொரியர் வந்து இருக்கிறது என சொன்னார். இன்று ஆபீஸ் சென்று மாலையில் திரும்பி வரும் போது வாங்கி கொள்ளலாம் என உள்ளேன். எல்லாம் 31ம் தேதி அவர் கொடுத்த பல்பின் முன்னெச்சரிக்கை தான் :-)
ReplyDelete