Powered By Blogger

Monday, December 30, 2019

கடுப்பேத்தறாங்க மை லார்ட் !

நண்பர்களே,

வணக்கம். 'நல்ல சேதி-கெட்ட சேதி' என்ற ஒற்றைப் பக்கக் கார்ட்டூன்களை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் நாம் வெளியிட்டது நினைவிருக்கலாம் ! அவற்றைத் தான் நினைவுகூர்ந்திடத் தோன்றியது இன்றைக்கு ! நல்ல சேதி என்னவென்றால் - சொன்னபடியே ஜனவரியின் இதழ்கள் ஐந்தையும் இன்றைக்குக் காலையே கூரியர்களிடம் ஒப்படைத்தாச்சு ! ஞாயிறன்றும் ; இன்றைக்கு மாலை வரையிலும் பணம் அனுப்பிய 18 நண்பர்களையுமே 2020-ன் சந்தாப் பட்டியலில் சூட்டோடு சூடாய் இணைத்து அவர்களுக்கும் டெஸ்பாட்ச்சும் செய்தாச்சு !!  கெட்ட சேதி என்னவென்றால் ST கூரியரின் சொதப்பல் படலங்களின் உச்சம் இன்றைக்கு அரங்கேறியுள்ளது ! அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சுமார் 250+ டப்பிகளில் வெறும் ஐம்பதை மட்டுமே இன்றைக்கு புக்கிங் செய்திட அவர்களுக்கு சாத்தியப்பட்டுள்ளது ! பாக்கி 200+ பார்சல்களை புக் செய்யாமலே கடையை மூடிவிட்டுக் கிளம்பி விட்டனர் - எனக்கென்ன குடி முழுகிப்போச்சென்று !! இங்கு இயங்கி வந்த  2 கிளைகளில் ஒன்றை மூடிய கையோடு, மீதமிருக்கும் ஒற்றைக் கிளையிலும் ஒன்றோ இரண்டோ பணிப்பெண்களை மட்டுமே வைத்துக் கொண்டு நொண்டியடித்து வருகின்றனர் ! இது போல் மொத்தமாய் பார்சல்கள் புக்கிங் செய்திட வேண்டிய நாட்களில் மட்டும் வெளியிலிருந்து காண்டிராக்ட் பணியாளர்கள் ஓரிருவரை வரவழைத்துச் சமாளித்து வருகின்றனர். இது கிட்டத்தட்ட ஓராண்டாய் நடைபெற்று வரும் கூத்துத்தான் என்றாலும் ; இன்றைக்கு அந்த காண்டிராக்ட் பணியாளர்களும் தலைகாட்டக் காணோம் என்பதில் தான் தலைநோவே !! So இரவு ஒன்பதரைக்கு முன்பாய் கைக்குச் சிக்கிய முதல் 50 பார்சல்களை  மாத்திரமே புக்கிங் செய்து சிவகாசியிலிருந்து கிளப்பிவிட்டு, மீதத்தை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு நடையைக் கட்டி விட்டுள்ளனர் !  So அந்த 50 வாசகர்களுக்கு மட்டுமே ST நாளை பட்டுவாடா செய்திடுவர் ; பாக்கிப் பேர் புத்தாண்டு வரை காத்திருக்க வேண்டிவரும் !! 😔😔

பரிதாபமான இந்த சர்வீஸுக்கு முழுக்குப் போட்டுவிட்டு DTDC-க்கு மொத்தமாய் மாறிடலாமா ? என்று ஏற்கனவே ஒருவாட்டி கேட்டிருந்தேன் & அதே கேள்வியை இன்னொருவாட்டி முன்வைக்கிறேன் guys - இப்போதும் ! இந்த முனையில்  ST கூரியரின் சர்வீஸில் முன்னேற்றம் தென்படுவதற்கான சாத்தியங்கள், என் முன்மண்டையில் படித்துறைப் பாண்டிக்கு ஈடாய், சுருள் சுருளாய் கர்லிங் ஹேர் முளைக்கும் சாத்தியங்களை விடவும் குறைவே என்பது அப்பட்டமாய்த் தெரிகிறது  !! On the other hand - துளி திகட்டலுமின்றி இன்றைக்கும் கச்சிதமாய் டெஸ்பாட்ச் செய்துள்ளனர் DTDC ! ST உடன் மாதாமாதம் மல்லுக்கட்டுவதற்குப் பதிலாய் மொத்தமாய் DTDC-க்கு மாறிட்டால் என்ன folks ? 29 நாட்கள் ஏதேதோ சிக்கல்களைத் தாண்டிக் குதித்து, இதழ்களைத் தயார் செய்துவிட்டு கடைசி நாளில் இதுபோன்ற லீலைகளை சகிப்பது ரொம்பவே கடுப்பேற்றுகிறது !! 

So நாளைய தினம் DTDC-யினை தேர்வு செய்திருந்த நண்பர்கள் கையில் இதழ்களிருக்கும் & ST-ன் பார்வையிலான அந்த 50 VIP நண்பர்களுக்குமே ! பாக்கிப் பேர் சற்றே பொறுமை ப்ளீஸ் ; நாளை நம் ஆபீசுக்கு போன் செய்து ட்ராக்கிங் நம்பர் கேட்டால் 'பெப்பெப்பே' என்று தான் பதில் தர சாத்தியப்படும் ! Hope for your understanding all !!
ஆன்லைன் லிஸ்டிங் இதோ: http://lioncomics.in/home/673-december-pack-2019.html

And இன்னொரு தளத்தில் காலையில் லிஸ்டிங் இருக்கும்..!

Lest I forget - இதோ இன்னமும் நான் திரைவிலக்கியிரா இருளின் மைந்தர்கள் பாகம் 2-ன் அட்டைப்படமும் ; கார்ட்டூன் இதழின் preview-ம் :


Once again apologies for the கூரியர் சொதப்பல் folks ! புத்தாண்டுக்காவது புது இதழ்கள் அனைவரின் கைகளிலும் இருப்பதை உறுதி செய்திட நாளை ST கூரியரில் நம்மாட்களை டேரா போடச் செய்திட எண்ணியுள்ளேன் ! Bye for now !!

177 comments:

  1. மிக்க நன்றி ஆசிரியர். தாராளமாக DTTC சர்விசுக்கு மாறிவிடலாம்.

    ReplyDelete
  2. Supero super மறுபடியும் பத்துக்குள்ள

    ReplyDelete
  3. ஆஹா அந்த 50 பேருல நாம் வருவோமா...தெரியலையே

    ReplyDelete
  4. Lets test our luck. Why cannot u become an booking agent sir. This way booking is done and save some money

    ReplyDelete
  5. சார்! அந்த பக்கம் ST எப்படி இருப்பினும் இந்த பக்கம் செம சர்வீஸ்..

    எங்க பக்கம் புரபஷனல்,ST மட்டுமே..

    பதிவு தபால் தாமதமாகிறது என்பதாலேயே ST க்கு மாறினேன்..

    இதுவரை எந்த ப்ரச்சினையும் இல்லை..

    DTDC எங்கள் பக்கம் இல்லவே இல்லை..

    ST கூரியரை என்னளவில் மட்டுமாவது விலக்க இயலாது..

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் st கொரியர் தான் பெஸ்ட் சர்விஸ்..
      மொத்தமான மாத்துனா எனக்கு ஆட்சேபனை இல்லை சார்.

      Delete
  6. ST கொரியரை விட DTDC-யில் விலை அதிகமாக இருக்குமே சார். அதையும் பார்க்கனுமே...

    இதில் எதுவாக இருந்தாலும் எனக்கான சர்வீஸ் இந்திய தபால் துறையே...ஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. இந்திய தபால் துறையோடு இன்னிக்கு அடித்த கூத்தைச் சொல்வதாயின் இன்னொரு புதுப் பதிவு போட வேண்டி வரும் சார் !!

      Delete
  7. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே...

    ReplyDelete
  8. St service வடக்கு பக்கம் அமோகமாக உள்ளது. தெற்கில் தான் தேய்கிறது போலும்... ஆனாலும், புத்தகங்களை எதிர்பார்ப்போர் ஏமாறும் சூழ்நிலை கொடுமை தானே...

    ReplyDelete
  9. தாராளமாக DTDC சர்விசுக்கு மாறிவிடலாம்.

    ReplyDelete
  10. Vijayan sir,
    பாக்கி 200+ பார்சல்களை you can send through DTDC today, except few of our fan's.

    ReplyDelete
  11. இருளின் மைந்தர்கள் -2 அட்டை சும்மா பிச்சு உதறி விட்டது. சூப்பர் சார். இந்த முறை மட்டும் ஸ்டீல் உடைய line கடன் வாங்கி கொள்கிறேன் இது வரை வந்த டெக்ஸ் அட்டையில் இது தான் சார் டாப்.

    ReplyDelete
  12. கூரியர் சொதப்பலுக்கு நீங்கள் என்ன செய்ய முடியும் சார். புது வருடம் புதிய புத்தகம் கிடைப்பதை விட சிறந்த பரிசு என்னவாக இருக்க முடியும். புத்தகங்கள் இன்று வந்தாலும் சரி நாளை வந்தாலும் சரி நோ பிராப்ளம் சார்.

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரியே எல்லாரும் இருந்துட்டா பரவாயில்லீங்களே குமார்! ஒருநாள் லேட் ஆச்சுன்னாலும் புலம்பித்தள்ளிடுவாங்களே! அதுவும் 'பக்கத்துத் தெரு பரந்தாமனுக்கு வந்துடுச்சு.. அவன் என்னைவிட கொஞ்சம் கலர் கம்மிதான் - அவனுக்கே வந்துடுச்சு எனக்கு ஏன் வரலை?' அப்படீன்னு கேட்பாங்க!

      Delete
    2. இதில் என்ன ரகசியம் என்றால் நாளை தான் நான் ஊருக்கு செல்கிறேன் எனவே இன்று புத்தகம் வந்தாலும் நாளை தான் படிக்க முடியும்.

      Delete
  13. காலை வணக்கம் சார்

    உங்களுடைய ஆதங்கம் புரிகிறது
    நன்றி சார. 🙏🏼🙏🏼🙏🏼

    இருப்பினும் திருப்பூரில் DTDC சரியாக தகவல் /டெலிவரி சரியாக கொடுப்பதில்லை எனவே ST ஓகே 🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. ஆலையிலா ஊரில்...இலுப்பையைக் கொண்டாட வேண்டிப் போகிறது சார் !

      Delete
  14. ஆத்தாவின் அருள் ரொம்பவே முக்கியம்! அது இல்லேன்னா எந்த கொரியர் கம்பெனியாலும் டயத்துக்கு டெலிவரி பண்ணிட முடியாது!

    எல்லாரும் குலவை போட கத்துக்கங்க மொதல்ல!

    ReplyDelete
    Replies
    1. கலவை போடணும்னா நாம மேஸ்திரியா இருக்கணும்.

      Delete
    2. இந்த பத்மநாபன் அண்ணாத்தே நம்ள மாதிரி பேசுரார் - ரின் டின்

      Delete
    3. லுலுலுலுலுலு......

      Delete
  15. சார்...
    எனக்கு புக்கு வந்தா மட்டும் போதும்...
    அதுவே என்னை குஷி படுத்தும்...😊😌

    ReplyDelete


  16. Selvam abirami30 December 2019 at 22:30:00 GMT+5:30
    மருத்துவமனை...

    மனைவி: ரொம்ப படபடப்பா இருக்குன்னு சொல்றாரு டாக்டர்!

    மருத்துவர்:( அசுவாரஸ்யமாய்) அப்புறம்..?

    மனைவி: நேத்திலர்ந்து சரியா சாப்பிட மாட்டேங்கறாரு..


    மருத்துவர்: ( நிதானமாக) வேற??

    மனைவி: நேத்திலேர்ந்து சரியா தூங்க மாட்டேங்கறாரு..

    மருத்துவர்: ( லேசாக கொட்டாவி விட்டு) இன்னும் ஏதாவது???

    மனைவி:(கோபத்துடன்) நான் இவ்வளவு சொல்றேன்..நீங்க ஏனோதானோன்னு பதில் கேள்வி கேக்கறீங்க..இவரு உங்க கிட்டதானே பதினைஞ்சு வருஷமா உடம்பை காமிச்சுகிட்டு இருக்காரு?..இப்படி அக்கறை இல்லாம பேசறீங்களே??

    மருத்துவர்: பதினைஞ்சு வருஷமா இவரை பாக்கறதாலதான் சொல்றேன்..நாளைக்கு பத்துமணிக்கு எல்லாம் சரியா போயிடும்.

    மனைவி: ( கோபத்தை தற்காலிகமாக மறந்து)
    என்ன டாக்டர்? மருந்து கொடுக்காமலே ஜோஸியக்காரன் மாதிரி சொல்றீங்க?

    மருத்துவர்: ஜோஸியமெல்லாம் ஒண்ணுமில்லே..லயன் முத்து காமிக்ஸ் ஆறு வருஷமா கடையில வாங்கிகிட்டு இருந்தாரு உங்க வீட்டுக்காரர்..முதல் முதலா சந்தா கட்டியிருக்காரு..நாளைக்கு பத்துமணிக்கு கூரியர் வந்தவுடன் எல்லாம் சரியா போயிடும்..ஆறு வருஷம் முன்னாடி எனக்கும் இப்படித்தான் எல்லா ஸிம்ப்டம்ஸ்- ம் வந்துச்சு..!!!

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் புக்ஸ்லெக்ஸியா ஸிம்ப்டம்ஸ்

      Delete
    2. செல்வம் அபிராமி சார். அழகு அழகு

      Delete
  17. சார்...
    முன்னதாக பதிவில்
    டெக்ஸ்சின் நிழவோழில் ஒரு நரபலி
    வெற்றியின் காரணம்
    என்ன வென்ரு கேட்டீகள்
    அதற்கு பதில்...
    அந்த இதழின் compact size மட்டுமே...
    ...
    கதை ஒன்றும் அவ்வளவு விரியம் கொண்டது அல்ல...💯😬

    ReplyDelete
    Replies
    1. அகில்...அகில்... டைப்பிடிக்கும் போது கொஞ்சமாய் ஸ்பெல்லிங் மீதும் கவனம் இருக்கட்டுமே - ப்ளீஸ் ? வளரும் பிள்ளை - பிழைகளைத் தவிர்க்க கொஞ்சம் மெனெக்கெட்டால் தப்பில்லை தானே ?

      Delete
  18. விஜயன் சார், நம்ப ஸ்டீல் க்ளா புத்தகங்களை வாங்கி விட்டாராம். இருளின் மைந்தர்கள் அட்டைப்படம் நேரில் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக உள்ளதாம்.

    டியூரங்கோ அட்டைப்படம் நன்றாக உள்ளதாம், இன்னும் கொஞ்சம் நகாசு வேலைகளை அவர் எதிர்பார்க்கிறார்; ஆசிரியர் தனியா உனக்கு இரண்டு ஜிகினா டப்பி அனுப்பி இருக்கிறார் வேண்டிய மட்டும் போட்டுக்கோ முடிந்தால் உன் மேலேயும் போட்டு எம் ஜி ஆர் மாதிரி தகதக என மின்னிக்கோ என சொல்லிட்டேன். :-)

    அப்பறம் இந்த ஜேம்ஸ் பாண்ட் புத்தக வடிவமைப்பு நல்லா இருக்காம்.

    ஸ்டீலோட விமர்சனம் புத்தகத்தில் வந்தது அவருக்கு மகிழ்ச்சியாம். பாவம் அத வாசித்து புரிந்து கொள்ள மக்கள் பட போகும் பாட்டை நினைத்தால் எனக்கு கொஞ்சம் நடுங்குது :-) ஒரு டிஸ்னரி நீங்கள் இலவசமாக கொடுத்து இருக்கலாம் அல்லது அவரின் போன் நம்பரையாவது கொடுத்து இருக்கலாம் ( அவரிடம் நேரில் விளக்கம் மற்றும் அர்ச்சனை செய்ய).

    ஏலே பொன்ராசு போதுமாலே ;-)

    ReplyDelete
    Replies
    1. அப்பறம் அவரு செட்டு வேற இடத்தில் மாட்டிக்கிட்டதாம் அதான் என்னை கமெண்ட் போட சொன்னாரு; செட்டு என்றால் சேவிங் செட்டா என நினைக்க கூடாது... நாங்க மொபைல அப்படித்தான் சொல்லுவோம் :-)

      Delete
    2. ///ஆசிரியர் தனியா உனக்கு இரண்டு ஜிகினா டப்பி அனுப்பி இருக்கிறார் வேண்டிய மட்டும் போட்டுக்கோ முடிந்தால் உன் மேலேயும் போட்டு எம் ஜி ஆர் மாதிரி தகதக என மின்னிக்கோ என சொல்லிட்டேன். ///

      ஹா ஹா ஹா!! :))))))))

      Delete
    3. // ஆசிரியர் தனியா உனக்கு இரண்டு ஜிகினா டப்பி அனுப்பி இருக்கிறார் வேண்டிய மட்டும் போட்டுக்கோ முடிந்தால் உன் மேலேயும் போட்டு எம் ஜி ஆர் மாதிரி தகதக என மின்னிக்கோ என சொல்லிட்டேன். :-) // செம்ம பரணி செம்ம

      Delete
    4. நண்பர்வலே ஒன்ன மறந்துட்டியள.....நான் mfrதான கல்ல...மேல மேல இதுக்கும் மேல

      Delete
  19. இங்கே ஒரே ஒரு முறை டிடிடிசி ல வந்து வாங்குறதுக்கு ஒரு வாரம் ஆயிறுச்சு சார்..ஆனா எஸ்டின்னா சரியாக அடுத்த நாள் கிடைத்து விடுகிறது..

    எனவே இன்று எனக்கு கிடைக்காவிட்டாலும் வழக்கம் போல எஸ்டி கொரியரே எனக்கு சிறப்பு சார்..ப்ளீஸ்..

    ReplyDelete
  20. இருளின் மைந்தர்கள் அட்டைப்படம் செம சார்..காத்திருக்கிறேன் கைகளில் ஏந்த..:-)

    ReplyDelete
  21. // பாக்கிப் பேர் சற்றே பொறுமை ப்ளீஸ் //
    என்ன கொடுமை சார் இது.....

    ReplyDelete
  22. // கெட்ட சேதி என்னவென்றால் ST கூரியரின் சொதப்பல் படலங்களின் உச்சம் இன்றைக்கு அரங்கேறியுள்ளது ! //
    அங்கே புக்கிங் ஸ்லோ,இங்கே டெலிவரி ஸ்லோ.....
    எனக்கு DTDC யில் அனுப்பினாலும் அதே ST கூரியர் ஆட்கள் மூலமாகவே வரும் என்பதுதான் காமெடி சார்......

    ReplyDelete
    Replies
    1. இங்கும் அதே. ஆனால் பங்க்சுவல்

      Delete
  23. // ST-ன் பார்வையிலான அந்த 50 VIP நண்பர்களுக்குமே ! //
    குலுக்கல் போடாமலே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 50 அதிர்ஷ்டசாலிகள் யார் என்பது தெரியலையே......

    ReplyDelete
  24. //இதோ இன்னமும் நான் திரைவிலக்கியிரா இருளின் மைந்தர்கள் பாகம் 2-ன் அட்டைப்படமும் ; கார்ட்டூன் இதழின் preview //
    இரண்டாம் பாக அட்டைப் படமும் கலக்கல்,முதல் அட்டையில் தல போஸ் கலக்கலாக இருந்தாலும் அந்த நிற்கும் கால் அமைப்பில் சற்றே மாற்றம் செய்திருக்கலாம்,எதையோ தேடுவது போல,பார்த்தது போல இருப்பதாலோ என்னவோ கால்கள் கொஞ்சம் வளைந்தாற்போல் வரையப்பட்டுள்ளது....
    இரண்டு புத்தகங்களாக வெளிவந்தாலும் ஒரே தொகுப்பாகத்தான் விற்க முடிவு செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....அப்படியிருக்க ஒவ்வொரு புத்தகத்திலும் தனித்தனியாக விலையை பிரித்து போடுவது அவசியமா என்ன???
    முதல் இதழிலேயே மொத்த விலையை நிர்ணயம் செய்ய இயலாதா சார்???
    இதில் ஏதேனும் சிக்கல்கள் உண்டா???

    ReplyDelete
    Replies
    1. இதை மினி/மீடியம்-லயன் எடிட்டரிடம் கேட்டுப் பிரயோஜனமில்லை.. சிம்ப்பிளா 'எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லே சாமீகளா'ன்னுடுவார்!
      அதனால,

      கூப்பிடுங்க அந்த மேக்ஸி-லயன் எடிட்டரை!

      Delete
    2. அவர் வரமாட்டார் வரவே மாட்டார் :-)

      ஆசிரியர் இதற்கு ஏற்கனவே பதில் சொல்லி இருக்கிறார் ஆனால் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை .

      Delete
    3. உங்களுக்குப் பிடிக்கிறதா ; எனக்குப் பிடிக்கிறதா - என்பதை விடவும் படைப்பாளிகளின் காண்டிராக்ட் சார்ந்த கட்டுப்பாடுகளுக்குப் பிடிக்கிறதா என்பதே இங்கே முக்கியம் folks ! இரு தனித்தனி இதழ்களாய் வெளியிடும் போது அவர்களது கணக்குகளுக்கு இரு தனித்தனி விலைகளும் அத்தியாவசியம் ! So there ends the debate !

      அவற்றை ஒன்றாய் மட்டுமே விற்க நினைப்பது இங்கே நம்மூரில், நாம் எடுக்கும் முன்ஜாக்கிரதை நடவடிக்கை மாத்திரமே ! And அதன் பின்னணிக்கு காரணம் என்னவென்பதிலும் ரகசியங்கள் கிடையாதே !

      Delete
  25. அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே: நமது காமிக்ஸில் ரின் டினின் அறிமுக கதை என்று நினைக்கிறேன். மறுவாசிப்பு செய்ய உகந்த கதை. அட்டகாசமான சிரிப்பு கதை. சரியான காமெடி தளம் உள்ள கதை. ஆசிரியர் நேரம் கிடைக்கும் போது இந்த கதையில் காமெடி டயலாக்குகளை மெருகேற்றி சில காலம் சென்ற பிறகு மறுபதிப்பு செய்ய சிறந்த கதை.

    ReplyDelete
  26. DTDC best. Phone செய்து உடனடியாக தகவல் தெரிவிக்கின்றனர். ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கும். St இப்ப service worst ஆ இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. இங்கும் அச்சாய் அதே நிலவரம் சார் !

      Delete
  27. நான் தஞ்சாவூர் நிலவரம் மட்டுமே சொல்லியுள்ளேன்

    ReplyDelete
  28. காலை 8 மணிக்கு விழுந்தடித்து st க்கு போனா.... லோட் இறக்கி கொண்டிருந்த நண்பர் மறைந்து விட்டார் ...உள்ளே போனா புத்தக பார்சலை சந்தோசமாய் நீட்ட st க்கு ஜே போட்ட கையோடு செந்தூர் திசையில் கும்பிடு போட்டு பதிவு செய்து வாங்கி ஸ்டாண்டுக்கு வந்து அரக்க பறக்க பிரிச்சா....

    ReplyDelete
  29. Replies
    1. ஓடுறே ரயிலே ஒரு கைட்டேயே - அதுவும் லெப்டுடே நிறுத்துற ஆளாச்சே நீங்க ஸ்டீல் ; உங்களுக்கு கிடைக்காமல் போகுமா ?

      Delete
  30. DTDC க்கு ஒரு ஓ. புக்ஸ் வந்தாச்சு

    ReplyDelete
  31. சார்! இருளின் மைந்தர்கள்-2 அட்டையில் ’தல’ கூட வெள்ளி முடியாருக்கு பதில் டைகர் இடம் பிடித்ததின் பிண்ணனி என்னவோ?

    ReplyDelete
    Replies
    1. உள்ளபடிக்கு இருளின் மைந்தர்களின் இரண்டாம் பாகத்துக்குப் போட்ட டிசைன் அத்தனை சோபிக்கவில்லை ! So கைவசமிருந்த டைகர் + தல டிசைனைக் கடைசி நிமிடத்தில் களமிறக்கத் தீர்மானித்தேன் !

      Delete
  32. ST யோட VIP லிஸ்ட்ல நான் இல்லை..!!

    "சரக்கு " வரல..

    முப்பதாம் தேதி உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டம் என்பதால் ஒப்பந்த பணியாளர்கள் வரமுடியாமல் போயிருந்திருக்கலாம்..

    Let's be practical..

    ST has never failed so far..
    I can wait..

    ReplyDelete
    Replies
    1. "சரக்கு" இன்றைக்கு காலையில் இங்கிருந்து கிளம்பிவிட்டது சார் ; so புத்தாண்டு - புது இதழ்களோடு !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. செல்வம் அபிராமி @ அப்படி என்றால் சைடிஸ் வந்து விட்டாதா?

      Delete
  33. நண்பர்கள் ஹே...

    அச்சா ஹே...

    புத்தாண்டு வாழ்த்துக்கள்...ஹே..


    நம்பள்கி DTDC ஹே....

    புக் வந்தில்லை...ஹே...

    ஆசிரியர் , ஆபெரியவர் , ஆசிறியவர் ,மற்றும் முத்துலயன் குழுமத்திற்கும் இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ட்வெண்டி...டுவெண்டி....

    J

    ReplyDelete
    Replies
    1. DTDC யுமே சொதப்புதா ?

      கிழிஞ்சது ஹே !

      இனிமே புறாக்காலிலே தூது விடலாமா ஹே ?

      புக்கு பிடிக்காட்டி கூட புறாவாச்சும் தேறும் ஹே !

      Delete
    2. எனக்கு என்னைக்குமே மறுநாள் DCTC வந்தது கிடையாது. எப்பையுமே இரண்டு நாள் ஆகும்.

      Delete
    3. //புக்கு பிடிக்காட்டி கூட புறாவாச்சும் தேறும் ஹே !//

      :-)))

      Delete
  34. Books not yet delivered by DTDC courier. Our office holiday tomorrow so 2nd Jan may be I receive.

    ReplyDelete
    Replies
    1. For my brother place DTDC never delivered and never called also that's y changed to ST...

      Delete
  35. Replies
    1. DTDC சர்வீஸே இல்ல!?

      Delete
    2. லேட் ஆனாலும் பரவால்லன்னு போஸ்டல்கே மாத்திக்கலானு யோசிச்சிட்டிருக்கேன்!!! வீட்டுக்கே வந்திரும்ல!

      ST or DTDC எதுனாலும்
      கோபி (13 கி.மீ.) போயி தான் வாங்கியதாகவும்!!

      🤔🤔🤔

      Delete
    3. //வாங்கியதாகவும்//

      வாங்கியாகனும்

      Delete
  36. கடல்லேயே மீன் இல்லயாம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா குளத்து மீன் இல்லைனா ஆற்று மீன் கிடைக்குமா பார்க்கலாமே :)

      Delete
  37. Comeback special moments is best to me. During jan 2012 accidentally I found our blog. Before Comeback special my correspondence is by only phone to your office. During that period I was so excited, during that period several times I get log in to blog to see updates. Big change in our steps Largo winch launch. Till date he is unforgettable hero.Bouncer & Undertaker introduction is stunning. It our first steps towards 18+ genre albums.

    ReplyDelete
  38. எனக்கும் இன்று புத்தகங்கள் வந்து சேரவில்லை (DTDC தான்!)

    ஆனா, ஆத்தா எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்கும்! காத்திருக்கிறேன் ஆத்தா...

    ReplyDelete
    Replies
    1. // எனக்கும் இன்று புத்தகங்கள் வந்து சேரவில்லை (DTDC தான்!) //

      +1

      Delete
    2. பழைய அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டிக்கு போன் செய்த போது சார் கொரியர் புத்தகம் வந்து இருக்கிறது என கன்னடத்தில் சொன்னாரு, ஆகா என்று புத்தகத்தை வாங்க கிளம்பி சென்றால் ஈஷா காட்டுப்பூ புத்தகத்தை கைகளில் கொடுத்து இதுதான் சார் வந்தது என்று சொல்லி கடுப்பேத்தி விட்டார் மைலார்ட்.

      :-)

      இனி வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தான் புத்தகங்கள் கிடைக்கும்.

      Delete
    3. ///ஆகா என்று புத்தகத்தை வாங்க கிளம்பி சென்றால் ஈஷா காட்டுப்பூ புத்தகத்தை கைகளில் கொடுத்து இதுதான் சார் வந்தது என்று சொல்லி கடுப்பேத்தி விட்டார் மைலார்ட்.////

      :))))

      ரெண்டுநாளா உங்க சென்ஸ் ஆப் ஹியூமர் எகிறியடிக்குதுங்களே PfB?!! (வீட்டம்மா ஊருக்குப் போயிருக்காங்களா? ;) )

      Delete
    4. புத்தகங்கள் வந்து விட்டது என்று ஏமாந்து விட்டேன் என்று சொன்னால் இவரு எனக்கு ஹியுமர் சென்ஸ் அதிகமாகி விட்டது என சொல்லி இவரும் கடுப்பேத்றார் மை லார்ட் :-)

      விஜய் @ எனது வீட்டம்மா ஊருக்கு போவது என்பது எனக்கு கனவில் மட்டுமே. :-) கடவுள் இருக்காரு விஜய் ;-)

      Delete
    5. நேக்கும் வரலையாக்கும் ! இவா அனுப்சும் அவா (DTDC) கொண்டு சேக்கலையாக்கும் ... எல்லாருக்கும் வாசல் தான் வழி !!

      Delete
    6. பொன்னைைத்த இடத்தினிலே (காட்டுப்)
      பூவைைத்து பார்ப்பதற்க்கு
      அண்ணன் அன்றி யாரும் உண்டோ...

      Delete
    7. ஊஹூம்.....வேற வழியே நஹி ; நேரா சந்தைக்குப் போறோம்...நயம் புறாக்களாய் பார்த்து வாங்கறோம் ; புக்குகளை இனிமேக்கா அதுக காலிலே கட்டி அனுப்பறோம் !

      சைவ வாச்கர்கள் வூட்டிலே கூண்டிலே அடைச்சு புறாவைக் காட்டி புள்ளீங்களுக்கு சோறு ஊட்டலாம் ; அசைவ வாசகர்கள் வூட்டிலே புறாவையே சோறோடு ஊட்டலாம் !

      இனி நோ DTDC ; நோ ST !!

      Delete
    8. அதே அதே புறா ரோஸ்ட் சாப்பிட்டு நாளாச்சு:-)

      Delete
    9. சந்தா கட்டுங்க.... மாதாமாதம் புறா ரோஸ்ட் சாப்பிட்டு சந்தோஷமாக இருங்கன்னு நம்ப எடிட்டர் சார் சொல்றார் :-)

      Delete
  39. What a waiting,what a waiting.
    Lovely birds tell me darling.
    Your watching,your watching.
    Lion comics tomorrow morning.
    'நினைத்தாலே இனிக்கும்' கமல் Song.( மன்னிச்சூ)

    ReplyDelete
  40. ஆடி மாசத்து புதுமாப்ள மாதிரி புக்ஸ் கிடைச்சும் பிரிச்சு பாக்க முடியாம பணியிடத்தில் இருக்கிறேன். All is fate.

    ReplyDelete
  41. DTDC - delivered in Coimbatore

    Wishing all of us a wonderful year ahead

    Happy new year comic lovers

    MKP

    ReplyDelete
  42. Ddtc இங்கே சொதப்பல் சார் அதுக்கு St கூரியரே ஒகே சார்! புதிய வருடத்தில் அனைவரிடமும் புத்தகத்தை ஒப்படைக்க நினைத்த உங்கள் ஆர்வத்திற்கு நன்றி சார்! ஆனால், இதை ஒருநாள் அதாவது 28.29 தேதிகளிலே புத்தகத்தை அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லது 2 ந்தேதி அனுப்பியீருக்கலாம! இன்றைக்கே பலபேருக்கு புத்தகங்கள் கிடைக்கவில்லை (எனக்கும்) நாளையும் கூரியர் ஆபீஸ் இருக்குமான்னு தெரியவில்லை! இதுபோலத்தான் கடந்த தீபாவளிக்கும் நடந்தது!புத்தகத்தை அனுப்புவதற்கு முன்பு விடுமுறை தினங்களை கவனித்து இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாவது அல்லது விடுமுறை கழிந்த பிறகாவது புத்தகங்களை அனுப்ப பாருங்கள் சார்! அப்போதுதான் சரியாக எல்லோருக்குமே புத்தகங்கள் ஒழுங்காக கிடைக்கக்கூடும்!இம்மாதம் வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் இதழ் நல்ல சிறப்பான முயற்சி அதைவிட 40 ரூபாய் விலை அசத்தலான அட்டைப்படம் என்று பாராட்ட நிறைய விஷயங்கள் உள்ளன! அதே சமயம், இதிலும் சிறு குறைகளும் இருப்பதை நண்பர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெரிய சைஸை விட வழக்கமாக வெளிவரும் டெக்ஸ் ரெகுலர் சைஸில் வெளிவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் படிக்கவும் இலகுவாக இருக்குமென அபிப்ராயப்படுகின்றனர். கூடவே Font சைஸ்களையும் கொஞ்சம் பெரிது படுத்தினால் நல்லாயிருக்குமென நினைக்கின்றனர் மற்ற கதைகள் (புத்தகங்கள்) சிறப்பாக வந்துள்ளது குறையில்லாமல்!மற்றபடி புத்தகத்தை இன்னும் பார்க்காததால் இப்போதைக்கு அவ்வளவுதான் சார்!
    உங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. குறைகளை நிறைகளாக்குங்கள் என்று அழகாக சுட்டி காட்டி உள்ளீர்கள் கலீல்.

      Delete
    2. ரசனைசார் விஷயங்களில் அபிப்பிராயங்களுக்குப் பஞ்சமிருந்த நாட்கள் தான் ஏது சார் ? அதிலும் நம் வட்டத்தில் கேட்கவும் வேண்டுமா - என்ன ?

      ரூ.40 இதழ்களை மாமூலான டெக்ஸ் சைஸிலேயே போட்டுவிட்டால் அட்டைப்படம் & தயாரிப்புச் செலவுகள் குறைவு என்ற விதத்தில் நமக்கு ஒவ்வொரு இதழிலும் ஆதாயமே ! இருந்தாலும் பெரிய சைசுக்கு நான் opt செய்துள்ளேன் எனில் அதன் பின்னணியில் காரணங்கள் இல்லாது போகுமா - என்ன ? அதிலும், அட்டவணையில் கவனித்தீர்களெனில் "64 பக்கங்கள்" (ரெகுலர் சைஸ்) என்றே விளம்பரப்படுத்தியிருப்போம் ! அவ்விதமிருக்க, இப்போதைய மாற்றம் ஏனென்று இன்றைக்குப் புரிபடாது போனாலும் தொடரும் மாதங்களில் நீங்களே அவற்றை உணர்ந்திடும் வாய்ப்புகள் நிச்சயம் இருக்கும் ! குறையென இன்றைக்குச் சுட்டிக் காட்டிடும் நண்பர்களிடம் இதே அபிப்பிராயங்கள் பின்னாட்களிலும் தொடர்ந்திடுகின்றனவா ? என்பதை அப்போது கேட்டுத் தெரிந்து கொள்வோமே !

      எழுத்துருக்களை (font) பெரிதாக்குவதன் மறுபக்கத்துச் சிரமம் என்னவென்பதை நான் சொல்லவும் வேண்டுமா சார் ? இருக்கும் சொற்ப இடத்துக்குள் வசனங்களை நுழைத்திடும் பொருட்டு மொழிபெயர்ப்பினில் நான் அடித்த பல்டிகள் எனக்குத் தான் தெரியும் ! இன்னமும் ஒரேயொரு font அதிகம் செய்தாலே வசன பலூன்கள் படங்களை இன்னமும் ஜாஸ்தி மறைக்கத் துவங்கி விடும் ; and அதன் பொருட்டு அடுத்த ஆலமரத்தடியினைத் தேடும் அவசியம் ஆரம்பித்து விடாதா ?

      And yes, நீங்கள் சொல்வதை போல கூரியர் சொதப்பல்கள் ; விடுமுறை வாய்ப்புகள் என சகலத்தையும் மனதில் கொண்டு புக்குகளை ஜனவரி 2-ம் தேதி கூட நாங்கள் அனுப்பிடலாம் தான் சார் ; ஆனால் ஜனவரி முதல் தேதிக்கே முகவர்கள் கைகளில் புக்குகள் இருக்கும் நிலையில் - முன்கூட்டியே ஓராண்டுக்குப் பணம் அனுப்பிய சந்தா நண்பர்கள் முச்சந்தியில் நிற்க வைத்து எனக்கு முதல் மரியாதை செய்திடாது விடுவார்களா - என்ன ?

      வண்டி ஓட்டும் போது சாலையில் இதர வாகன ஓட்டிகளும் முறைப்படி செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே சார் ஸ்டியரிங்கைப் பிடிக்கிறோம் ? எதிரே வருபவன் பிரேக் இல்லாமலே பயணிப்பான் என்ற யூகத்தோடோ ; அதற்கும் சேர்த்தே நாம் முன்ஜாக்கிரதையில் இறங்கிடுவதோ எல்லா நேரங்களிலும் சாத்தியம் தானா ?

      Delete
    3. // வண்டி ஓட்டும் போது சாலையில் இதர வாகன ஓட்டிகளும் முறைப்படி செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே சார் ஸ்டியரிங்கைப் பிடிக்கிறோம் ? // அட்டகாசமான பதில் சார்.

      Delete
    4. Parani from Bangalore
      நன்றி ஜி

      Delete
    5. வண்டி ஓட்டும் போது சாலையில் இதர வாகன ஓட்டிகளும் முறைப்படி செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே சார் ஸ்டியரிங்கைப் பிடிக்கிறோம் கண்டிப்பாக சார் நம்பிக்கை நம்மை விட முந்திச் செல்லும்

      Delete
  43. எடிட்டர் சாப்,

    புக் பேருக்கு எப்போ வரீங்க??? உங்க ஷெட்யூலை கன்பார்ம் பண்ணுங்க. புக் பேர் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் புக் ஏதேனும் உள்ளதா???

    ReplyDelete
    Replies
    1. ஓராண்டின் அட்டவணையே நிரம்பி வழியும் போது ; இன்னும் நிறைய நண்பர்கள் அதற்கான சந்தாக்களையே இன்னமும் ரெடி செய்து வரும்போது திடுமென ஸ்பெஷல் சர்ப்ரைஸுக்கு வழி ஏது சார் ?

      And நமக்கு ஸ்டால் confirm ஆவதல்லவா முதல் சமாச்சாரம் ? அப்புறம் தானே நானோ, நீங்களோ வருகை தருவதெல்லாம் ?

      Delete
    2. நமக்கு ஸ்டால் குடுக்காமா வேற யாருக்கு கொடுக்க போறாங்க. நாம ஆ வி ரேஞ்சுக்கு பட்டைய கிளப்புறோம்.

      Delete
  44. அந்த மெபிஸ்டோ யுமா கதைகளை கொஞ்சம் ஞாபகம் வெச்சுகிங்க. ஏதாவது புக் பேர்ல சர்ப்ரைஸ்ஸா போட்டா சூப்பரா இருக்கும். ஆவலுடன்‌ காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. சென்னைக்கு வரலாம்னு பட்சி கூவயில கோவயில கூவயில

      Delete
    2. அது மாறி இருளின் மைந்தர்கள் வந்து விட்டது. எடி மனது வைத்தால் விரைவில் சாத்தியமே.

      Delete
  45. எனக்கு புத்தகம் வீடு வந்து சேர்ந்து விட்டது. நாளை புது வருடம் புதிய புத்தங்கங்களுடன் தான். ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2019 போல 2020ம் மிகச்சிறப்பாக அமையும்.

    ReplyDelete
    Replies
    1. பின் குறிப்பு: எனக்கு சேலத்தில் DTDC தான் புத்தகம் அனுப்பிய மறுநாள் எப்போதுமே கிடைத்து விடுகிறது. லவ் it.

      Delete
    2. அப்படியே ரைட் குறிப்பு லெஃப்ட் குறிப்பு இருந்தால் சொல்லுங்க எஜமான்.

      Delete
  46. ஹாப்பி 2020 அனைவருக்கும் ! கலாம் கனவுகண்ட உன்னத நாடாக ஒரு நாள் மாறுவோம் என்று இந்நாளில் சபதம் செய்வோம் !

    ReplyDelete
  47. நாளைக்கு யாராவது விமர்சனம் போடுறேன்னு கடுப்பேத்தக் கூடாது மைலார்ட்..:)

    அப்படி நடந்தால் சிங்கம் படத்தில் சந்தானம் ஸ்டைலில் மன்னிப்பு கேட்க ஆரம்பித்து விடுவேன் மை லார்ட் :-)

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கும் புக் கிடைக்கலைன்னு யாரும் பஞ்சாயத்தைக் கூட்டக் கூடாதென்ற கவலை எனக்கு !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. டோன்ட் வொர்ரி மை லார்ட் :-)

      எல்லாம் நம்ப ஆட்கள் தான்.
      நாளைக்கு ஒரு புதிய பதிவை போட்டால் குஷி ஆகிடுவாங்க ;-)

      Delete
  48. ஆகா 50ல் ஒருவன். புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதர் களே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  49. Replies
    1. அல்லாருக்கும் கேப்பீ நூ இயரூ..!!

      Delete
  50. ஆசிரியருக்கும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. 💐💐💐

    ReplyDelete
  52. நேற்றைய,
    இன்றைய,
    நாளைய
    ஆசிரியர்களுக்கு
    &
    நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  53. மதிப்பிற்குரிய சீனியர் எடிட்டர் சார்,
    அன்பின் ஆசிரியர் சார்,
    ஜூனியர் எடிட்டர்,
    லயன் நிறுவன பணியாளர்கள்,
    காமிக்ஸ் அன்பர்கள்,
    நண்பர்கள்,
    அனைவருக்கும் இனிய 2020 புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐

    இன்று துவங்கும் தசாப்தம் புதியதொரு பொற்காலமாக அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் அமைய எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  54. அன்பு எடிட்டர்களுக்கும்,
    அருமை பணியாள சகோக்களுக்கும்,
    இனிய நண்பர்களுக்கும்,
    ஒரே ஒரு தலீவருக்கும்,
    சங்கத்துச் சகாக்களுக்கும்

    எளியவன் ஈவியின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. எளியவன் வலியவன் ஈவியின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

      இப்படி இருக்கனும். வலியவன் மிஸ்ஸிங் விஜய் :-)

      Delete
  55. 1 ஜனவரி 2😆2😆 வாழ்த்துக்கள் 👍👍👍

    ReplyDelete
  56. உங்கள் வாழ்கையை கொண்டாடுங்கள்…........
    புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…........
    இந்த வருட புத்தாண்டு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும், *இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!*
    அன்புடன்
    மு.பாபு,
    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,
    கெங்கவல்லி கிளை.

    ReplyDelete
  57. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  58. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
    ������������������

    ReplyDelete
  59. வந்துடுச்சு சார்

    ReplyDelete
  60. ஆசிரியர், ஜூ எடிட்டர், சீனியர் எடிட்டர், ஒட்டு மொத்த லயன் டீம், நன்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  61. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  62. Happy new year dear friends happy 2020

    ReplyDelete
  63. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  64. எல்லாருக்கும் இனிமையான புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!:)

    ReplyDelete
  65. எடிட்டர் சார் புத்தாண்டை ஒட்டி ஒரு புதிய பதிவு பிளீஸ்

    ReplyDelete
  66. This comment has been removed by the author.

    ReplyDelete
  67. ஆசிரியருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும்,
    அலுவலகப் பணியாளர்களுக்கும்,
    அன்பு நண்பர்களுக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  68. பார்சலோ பெருசு....சுத்தி டேப் அடிச்சத தடுமாறி நெடிய நேரமெடுத்து பிரிக்க ...சரித்தா கத்தயா விண்ணிலிருந்து கைக்கு இறங்குது பண்டல் பெரீய்ய்ய்...ய சைசுல விசிலடித்த படி துள்ளிக் துடித்த மனதுக்கு போட்டியா சந்தோசத்த அள்ளித் திணித்தபடி கரத்துல தவழுது...மனமோ காலண்டர் டைரின்னு பஞ்சாயத்து கூட்டுனா...கண்களோ குப்புற கிடந்த ஸ்டிக்கர காட்ட....அப்டியே சூப்பர்ஸ்டாரா(
    தோர்களா ) மாறி சவ்வுத் தாளுக்க கைய விட்டு இழுத்தா ...மடயா அவசரப்பட்டுட்டியே இத எழுதினா மறுக்க கிண்டல் பண்ணுவாறேல்லல என மூள கூவ மனசோ உள்ளவற்றை சொல்லுலன்னு பஞ்சாயத்து முடிக்க...அதேதான் இந்த அட்டைப்பட வரலாற்றுலேயே நான்தான் டாப்புன்னு .. சத்தியமா நாஞ்சொல்லல சாமி மின்னுஞ்ஜிகுனா தாங்கிய டெக்சு சொல்ல உள்ளருந்தே நழுவி விழுந்த பக்கங்காட்டிகள் டெக்சும் ட்யூராங்கோவும் கத்தியால் வவுத்துல குத்த... மனமோ அதோட வேலைப்பாடுல மயங்கி இதுவரவந்த செருகிபக்கங் காட்டிகள்லயே என மானங்கெட்டு கத்தத் துடித்தத
    மற/றைந்/த்த படி விரல் டைப்ப மனமோ அத மறந்தபடி மயிலிறகா நெனச்சி ட்யூராங்கோ பக்கக்காட்டியால வருடயிலயே ...அடுத்த அட்டைலய டைகரும் டெக்சும் ஊதா வண்ண மின்னும் லயன் லோகோ ஊதாப்பொடியர்கள நினைவு படுத்தி சோகப்படுத்துனாலும் கொடி பிடிக்கும் பொடியனோட அது பெஸ்டுன்னா நாங்க யாராம்லன்னு மொறைக்க ...ஒரு கும்பிடு போட்டபடி நீங்கதாம்லே பெஸ்டுன்னபடி விரல் டைப்ப ஆசிரியர் என்ன சொல்லப்போறாறோன்னு கேட்ட மனச தட்டிய படி குப்புறப் கிடந்த டெக்ஸ் ஸ்டிக்கர் நிமிர லயித்தவாறே அந்தப்பக்கமா பாஞ்சா நம்ம கொரில்லாக்காரங்க நல்ல வேலயா இது வர வந்த கார்ட்டூன் அட்டைலயே
    நாங்கதாம்லே பெஸ்டுன்னு ஜாக்கிரதையாக கூவ...என்னடா இவ்வளவு தடிமனாகீதேன்னு பாத்தா பொத்துன்னு பின்னாலேர்ந்து விழுது பேப்பர் மாதிரி ரோஜர்மூர் தாங்கி வந்த பட்டாம்பூச்சிப்படலம் பட்டாம்பூச்சிகளாலே புள்ளி வைத்த கோலமாய் 007 ஜிகுஜிகூன்னூ மின்னியபடி நாங்க தனியா வந்தாங்க நாங்கதான் பெஸ்ட்டா இருந்திருப்போம்னு பரிதாபமா கேட்ட பாப்பாவ கண்களால் இரசித்தபடி தாண்டுனாக்க....என்ன மறந்துட்டியடா பாவின்னு மடில தவழ்ந்து கிடந்த ட்யூராங்கோவும்( நெசமாவே மறந்துதான் போறேன்) நீலச்சாயத்தால விளாச முதுக தடவியபடி....புத்தக முதுகயுந்தான்...ஜிகுனா உனக்கு தூவலயேன்னு பழிப்பு காட்டிய படி பின்னடடய பொரட்டுனாக்கா...மிரண்டேதான் போறேன் ஆசிரியர் என்ன சொன்னாலுஞ்சரீரீரீ....இது வர வந்ததுலயே பெஸ்டுன்னா நாந்தா சொல்றேன் ....அந்த ஜீவனுள்ள குதிரையின் கண்கள் பாருங்க அட்டைய பிச்சிட்டு வந்துறப்போவுது ....அந்த ட்யூராங்கோவும் பாருங்க....அதுக்கு மேல வேலைப்பாடமைத்த நண்பர்கள பாருங்க ...அத செய்யப்பணித்த ஆசிரியர பாருங்க எல்லாம் மறந்து நீங்களும் கதறுவிய உறுதியா நண்பர்களே...இததான பெஸ்டுன்னேஏஏஏஏஏ....ஆனா இதெல்லாத்தயும் வரீரீரீசயா வெச்சி பாக்கயில ...ஐயோ அம்மா . ...ஓடிரு ஸ்டீல் க்ளா பொன்ராசு கோவைக்கே

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல்க்ளாவின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :D

      Delete
    2. படிக்க கஷ்டமா இருந்தாலும் அனுபவிச்சு எழுதறாரு...கமெண்ட்டின் எஸ்ஸென்ஸ் படிக்க செமயா இருக்கு...சில வார்த்தை ப்ரயோகங்கள் நிஜமாவே gooseflesh ஏற்படுத்துகிறது.. க்ளாப்ஸ் ஸ்டீல்!!

      ரசிகர்ங்க நீங்க!!!

      Delete
    3. புல்ஸ்டாப் இல்லாமல் எவ்வ்ளோ பெரிய வாக்கியம்..!👍👍👍

      Delete
  69. அனைத்து காமிக்ஸ் சொந்தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  70. ஜேம்ஸ்பாண்டு காமிக்ஸ் புக்கின் பின் அட்டையின் உள்பகுதியில் புதிய முயற்சி சிறப்பு.
    புக்கின் விலையை கட்டுக்குள் கொண்டுவர ஆசிரியரின் முயற்சி என நினைக்கிறேன்.

    இது நமது காமிக்ஸ் வரலாற்றில் முதல் முறையா என்பதை நண்பர்கள்தான் கூறவேண்டும்.

    ReplyDelete
  71. அன்புள்ள விஜயன் சார்.
    மற்றும் அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் iii
    (புக் பார்சல் வந்தும் பிரித்துப் பார்க்க முடியாமல் விசேஷ வீடு.. - நாளையே. - புத்தாண்டு மலரு...ம்.)

    ReplyDelete
  72. சித்தே முன்னாடிதான் கொரியர் ஆபீஸ் போயிருந்தேன். இன்னும் வரலை!

    ஆர் யூ கிட்டிங் மீ ஆத்தா? இந்த வெளாட்டெல்லாம் எங்கிட்டே வேணாம்.. வர்ற கோவத்துக்கு மொத்த கூழ் பாக்கியையும் கேன்சல் பண்ணிப்பிடுவேன்.. ஆம்ம்மா!

    ReplyDelete
    Replies
    1. இப்டி எல்லாம் ஆத்தாவ மெரட்டுனா, ஆத்தா கொரியர்காரர் கனவுலே போயி சொல்லி நாளைக்கும் லீவு போடச் சொல்லிடுவா, சாக்கிரத.

      Delete
  73. புத்தாண்டு வாழ்த்துக்களுடன் புத்தகங்கள் வந்து சேர்ந்தது..

    ReplyDelete
  74. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் 🎊

    ReplyDelete
  75. எடிட்டரின் புத்தாண்டு பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  76. Books received.

    Maxi tex - excellent. 10/10

    ReplyDelete