நண்பர்களே,
வணக்கம். ஆண்டின் "அந்தப்" பொழுதில் குஷியாய் நிற்கிறேன்...! "எந்தப்" பொழுது ? என்கிறீர்களா ? டி-வியில் நிறையவே பார்த்திருப்பீர்களே....கோட் சூட்டையெல்லாம் அந்து உருண்டைகளிலிருந்து தூசு தட்டி எடுத்து வந்து, சேரில் நடுநாயகமாக பந்தாவாய் அமர்ந்தபடிக்கே - "இந்தாண்டின் திரைப்படங்கள்" என்று அலசுவார்கள் அல்லவா ? அதே மாதிரியானதொரு வாய்ப்பு இந்த நொடியில் நேக்கு - "இந்தாண்டின் நமது இதழ்கள்" என்ற அலசல்களுக்குள் புகுந்திட ! என்ன ஒரே வித்தியாசம் - கல்யாணத்துக்கு வாங்கிய கோட்டுக்குள் இப்போது நுழைய முயற்சித்தால் தொந்தியின் விஸ்தீரணம் தடங்கலாய் இருப்பதால் - குளிருக்காகப் போட்டு நிற்கும் குரங்கு குல்லாயோடு அலசல் படலத்தை ஆரம்பிப்பதாகவுள்ளேன் !! So here goes :
ஜம்போவின் சீசன் ஒன்றின் ஓரிரு இதழ்களும் இந்தாண்டில் இடம்பிடித்திட, இரண்டாம் சீஸனின் சில பல இதழ்களும் இக்கட பாய் போட்டிருக்க - திடுமென நுழைந்த MAXI லயன் இன்னொருபுறமிருக்க, ஈரோட்டில் ஸ்பெஷல் இதழ்கள் காரமும், தித்திப்பும் சேர்த்திருக்க - 2019-ன் மொத்த இதழ்களின் எண்ணிக்கை விபரம் இதோ :
**வண்ணத்தில் : 35
**கருப்பு-வெள்ளையில் : 13
**மொத்தப் பக்க எண்ணிக்கை : 3158 + 2554 = 5712 pages !!
'வச்சா குடுமி...அடிச்சா மொட்டை' என்பது யாருக்குப் பொருந்துமோ இல்லியோ - நமக்கு சிறப்பாகவே பொருந்தும் தானே ? வருஷத்துக்கே நாலு புக் போட்ட நாளும் உண்டு ; மாசத்துக்கு நாலைப் போட்டுத் தாக்கும் நாளும் உண்டு எனும் போது - இந்த இரண்டாம் வருகையின் வேகத்துக்குப் பின்னணிகள் பக்கமாய்ப் பார்வைகளை ஓடச் செய்திட ஓரிரு நிமிடங்களை செலவிடுவதில் தப்பில்லை என்று நினைத்தேன் ! "மாதம் ஒன்று - கலக்கல் கலரில்" என்று 2012 -ல் துவங்கிய template எத்தனை காலத்துக்கு நீடிக்குமோ ? என்ற கேள்வி என்னுள் மாத்திரமன்றி, உங்களுள்ளேயும் இருந்திருக்கும் என்பதில் no ரகசியம்ஸ் ! சரி, முடிந்தமட்டுக்கு வண்டியை ஓட்டுவோம் என்று பயணித்தவனுக்கு சிறுகச் சிறுக சிறகுகளைத் தந்தது உங்களின் நிபந்தனைகளற்ற அன்பும், காமிக்ஸ் காதலுமே ! இங்கே வாசிக்கும் வட்டம் சின்னதாயிருப்பினும், விட்டம் கிடுகிடுக்கும் விசில்கள் கிட்டுவது சாத்தியமே என்பது புரியத் துவங்கிய போது - அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொண்டது ! And here we are - ஏழு ஆண்டுகளில் சுமார் 275 புக்குகள் என்ற புள்ளிவிபரத்தோடு !! இந்த 84 மாதங்களில் ஏகமாய் அனுபவங்கள், நினைவுகள், பணிகள், பல்டிக்கள் என்றெல்லாம் அரங்கேறியுள்ள போதிலும், நடப்பாண்டின் 12 மாதங்கள் தந்துள்ள பயண அனுபவம் கொஞ்சம் ஸ்பெஷல் என்றே சொல்லுவேன் ! "எலே...பீத்திக்காதே ! சொதப்புனதை எல்லாம் காந்தி கணக்குலேயா எழுதிக்கிறது ?" என்ற அன்பொழுகும் மைண்ட்வாய்ஸ்களும் ஒலிப்பது கேட்காதில்லை ! ஆனால் "ஹிட்ஸ் vs சொதப்ஸ்" என்ற போட்டியில் முன்னது முந்தி நிற்பது போலத் தெரிவதால் 2019 மீது கொஞ்சம் கூடுதல் வாஞ்சை !!
ஆண்டின் ஒவ்வொரு இதழையும் நினைவு கூர்ந்து அலசும் வேலையை அந்தந்த மாதங்களிலேயே நீங்களும் செய்துள்ளீர்கள் ; நானும் செய்துள்ளேன் என்ற மட்டில் அதே ரூட்டில் இன்னொருக்கா பயணிக்கப் போவதில்லை ! மாறாக - பணிகளினூடே பயணித்த வேளையினில் நினைவுச் சுவடுகளாய் எதையேனும் விட்டுச் சென்ற இதழ்களைப் பற்றியும் ; இந்தாண்டின் சில memorable moments பற்றியும் அளவளாவ நினைத்தேன் ! As memories go - இந்தாண்டின் ஆரம்பமே தோர்கலின்புண்ணியத்தில் நெட்டுக்கா take off ஆனது மறக்கவியலா ஒரு அனுபவம் ! அது பற்றி நிறையவே அலசி, ஆராய்ந்து தொங்கப் போட்டு விட்டோம் என்ற போதிலும் இன்னமும் என்னுள் ரீங்காரமிடும் சிந்தனை ஒன்றே !! அது தான் - ஒரு குட்டியூண்டு வாசக வட்டமான நாம் அந்த ஸ்பைடர் ; ஆர்ச்சி நாட்களிலிருந்து எத்தனை தொலைவு பயணித்துள்ளோம் என்ற புரிதல் !! Oh yes - இன்னமுமே சட்டித் தலையனுக்கும் , வலைமன்னனுக்கும் கொடிப் பிடிக்க நாம் தயாரே - yet ஒரு ஆழமான / மாறுபட்ட களம் எதிர்நோக்கும் போது நமது ரியாக்ஷன்ஸ் simply stupendous !!
சந்தேகமின்றி நடப்பாண்டின் big story - பராகுடா தொடரின் தாக்கம் சார்ந்ததே ! சொல்லப்போனால் நிறைய வாசகர்களின் ஏடுகளில் இந்தாண்டின் டாப் ஆல்பமாய்த் தேர்வாகக் கூடிய ஆற்றல் இந்தக் கடற்கொள்ளையர் கதைக்கே என்று தோன்றுகிறது ! இந்தத் தொடரின் பின்னணியில் பணியாற்றிய போது எனக்கு கொஞ்சம் தடுமாற்றம் இருந்ததை நான் சொல்லியே ஆக வேண்டும் ! கார்ட்டூன்களில் கூட லாஜிக் ; ஒரு நம்பக்கூடிய கதை இருந்தால் தேவலாமென்று கருதிடும் வட்டம் நாம் ! So கணிசமான புய்ப்பச் சுற்றல் க்ளைமாக்சில் அரங்கேறுவதையும் சரி ; கதையின் நடுவே தமிழ் சினிமா பாணியிலான சென்ட்டிமென்ட் ; காதல் ; காமெடி இழையோடுவதையும் சரி - நீங்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வீர்களோ என்ற டர் என்னுள் நிறையவே இருந்தது ! ஆனால் கதை சொன்ன அந்த அசாத்திய பாணிக்கும், சித்திரங்களின் அதகளத்திற்கும் நாம் மயங்காது போக மாட்டோம் என்ற நம்பிக்கையே என்னை உந்தித் தள்ளியது ! கிராபிக் நாவல்கள் என்றதொரு தனித் தடம் மாத்திரம் இல்லையெனில் இத்தகைய கதைகளைக் களமிறக்கும் வாய்ப்பு நமக்கு வாய்த்திருக்குமா ? என்பது சந்தேகமே !! An experience to savour !!
கிராபிக் நாவல் வரிசையிலேயே இன்னொரு இதழும் சுவாரஸ்யமான அலசல்களை ஆண்டின் முற்பகுதியினில் உருவாக்கியதும் இங்கே நினைவு கூர்ந்திட லாயக்கான விஷயம் என்பேன் ! 'முடிவிலா மூடுபனி' தான் நான் குறிப்பிடும் அந்த இதழ் ! இதனை மொழிபெயர்க்கும் சமயம் என்னை தீண்டிய சிந்தனை இன்னமுமே நினைவில் நிற்கிறது ! பொதுவாய் நாம் focus செய்து வந்துள்ள அந்த ஆக்ஷன் ; டிடெக்டிவ் & கௌபாய் ஜானர்களில் கதைக்களங்கள் எல்லாமே உலகின் பெருநகரங்களையோ ; வன்மேற்கின் பாலைகளையோ சுற்றிச் சுற்றி இருப்பதே வாடிக்கை ! நியூயார்க்கும் ; பாரிஸும் ; இலண்டனும் ; அரிஸோனாவும் ; டெக்சாசும் நமக்கு கொட்டாம்பட்டி ; சிலுக்குவார்பட்டி ரேஞ்சுக்குப் பரிச்சயம் தானே guys ? அதே போல கௌபாய் உலகின் மீதான அந்த romance காரணமாய் வரலாற்றின் அந்தப் பக்கங்களைப் புரட்ட சம்மதிக்கும் நாம், பாக்கி நேரங்களில் சமகாலப் படைப்புகளைத் தாண்டி வேறெதெற்கும் வாயிலைத் திறந்து வைத்திருந்ததில்லை ! உலகப் போர் பக்கமாய் வண்டியைத் திருப்ப முனைந்தால் கூட - "உன் அக்கப்போர் தாங்கலைப்பா சாமி !!' என்று மண்டையில் குட்டு விழுவது தானே வாடிக்கை ?! ஆனால் இன்றைக்கோ - ஒரு பிரெஞ்சுக் குக்கிராமப் பின்னணியோடு ; ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பான புராதனத்தைக் கண்முன்னே கொணரும் கதைகளைக் கூட வரவேற்கும் பாங்கு நம்மிடையே துளிர்விட்டிருப்பதை அகன்ற விழிகளோடு ரசித்தேன் ! Winds of change...!!
அதே நேரம் இன்னொரு வித்தியாசக் காலத்தைக் / களத்தைக் கண்முன்னே காட்டும் முயற்சியைத் தெளியத் தெளிய வைத்துச் சாத்தியதுமே இந்தாண்டெனும் வானவில்லின் இன்னொரு பரிமாணம் ! அது தான் 'ஜெரெமியா' தொடருக்கு எதிராய் நீங்கள் வழங்கியுள்ள, சந்தேகங்களுக்கு இடமிலா thumbs down ! எதிர்காலம் ; ஒரு மகாயுத்தத்துக்குப் பின்பான சேதம் கண்ட பூமி ; அதனில் உலவும் இரு நாடோடி இளைஞர்களின் யதார்த்த சாகசங்கள் எனும் போது நிச்சயமாய் நமக்கு ரசித்திருக்க வேண்டும் தான் ! ஆனால் இனம்சொல்ல இயலா ஏதோவொன்று அந்தக் கதைகளில் குறைவதாக எண்ணம் என்னையுமே ஆட்டிப்படைக்க - உங்களின்அழுத்தமான "NO !!" க்களை நோண்டிப் பார்க்கும் ஆற்றல் எனக்கு சாத்தியப்படவில்லை !! Maybe தொடரும் ஆல்பங்களில் முத்திரை பதிக்கும் கதைகளோடு ஜெரெமியா கோலோச்சக்கூடுமோ என்னவோ - இப்போதைக்கு நாம் விலகி நிற்க தீர்மானித்ததும் இந்தாண்டின் ஒரு முக்கிய தருணம் - என்னளவில் !
நடப்பாண்டின் சொதப்ப்ஸ் பற்றிய தலைப்பில் லயித்திருக்கும் சமயம் முடி நீண்ட ஜானதன் கார்ட்லெண்டை பற்றிப் பேசாது போக இயலாதே !! சில பல ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடையே தலைகாட்டியிருக்க வேண்டியவர் இவர் ! ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திட 'கமான்சே' முந்திக் கொள்ள - கார்ட்லெண்ட் பின்தங்கியிருந்தார் ! சரி, லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்டாய் சாகசம் செய்யட்டுமே என்ற எண்ணத்தில் இவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டேன் ! என் பாணியிலேயே ரொம்பச் சங்கடமானதொரு பகுதி ஒன்று உண்டென்றால் - அது ஓமக்குச்சி நரசிம்மன் என்பது புலனான பின்னேயும் மென்று, விழுங்கி, அவரை WWF பயில்வானாய்ச் சித்தரிக்க முயன்றிட வேண்டிய அவசியத்தையே சொல்வேன் ! சில சுமார் கதைகளின் எடிட்டிங்கினுள் புகுந்திடும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் - புது ஆத்துக்காரி செய்த உப்பும், புளிப்பும் ததும்பும் பாயாசத்தைக் குடித்தது போல பேஸ்தடித்துக் கிடப்பேன் தான் !! ஆனால் "ஆங்...ஜுப்பரப்ப்பு !! இன்னா டேஸ்டு ; இன்னா மணம் !! பேஷா இன்னொரு கிளாஸ் குடிக்கலாமே !!" என்று பில்டப் தரும் கட்டாயம் தவிர்க்க இயலாது போகும் !! அந்தக் கதைகளைப் படித்த பிற்பாடு ஆளாளுக்கு ரூம் போட்டுத் திட்டுவீர்கள் என்பதும் தெரிந்திருந்தாலும் - வேறு வழி இராது எனக்கு ! குளிர்காலக் குற்றங்கள் ; நீரில்லை.நிலமில்லை....நியூட்டனின் புது உலகம் ...விசித்திர உலகமிது (மார்ட்டின்) - டக்கென்று இந்த category-ல் நினைவுக்கு வருகின்றன ! ஏதேதோ காரணங்களின் பொருட்டு, தேர்வுகளின் சமயம் 24 காரட் தங்கமாய்த் தோற்றம் தரும் கதைகளானவை - கிட்டக்கே போய்ப் பார்க்கும் சமயம் 'கல்யாணி கவரிங்' ஆகப் பல்லிளிக்கும் மாயையை தவிர்க்க நானும் ஆனமட்டிலும் முயற்சித்தே வருகிறேன் guys !! Anyways தெரிந்தே கூசாமல் புளுகியுள்ளமைக்கு சாரி guys !!
நடப்பாண்டினில் 'தல' கூட சில பல so so சாகசங்களில் தலைக்காட்டியதையும் மறுப்பதற்கில்லை !! "சாத்தானின் சீடர்கள்" இதழை ஜனவரிக்கென அவசரம் அவசரமாய்த் தயாரிக்க முனைந்த போது அந்நாட்களது ஹீரோ ஜெய்ஷ்ங்கரும், வில்லன் அசோகனும் மனக்கண்ணில் மாறி மாறி ஆஜராகி, நிஜக்கண்களை வேர்க்கச் செய்ததும் தான் நடந்தது ! அந்நாட்களின் 'துணிவே துணை' படத்தில் டெக்ஸுக்கு ஒரு கவுரவ ரோல் தந்தது போலான கதைக்களம், நிச்சயமாய் உங்களை இம்ப்ரெஸ் செய்திடாது என்பதை யூகிக்க நான் கில்லாடியாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லையே ?! அதே போல வண்ண மறுபதிப்பாய் வெளியான "வைகிங் தீவு மர்மம்" கூட என் கேசமிலா கபாலத்தைக் காயச் செய்தது ! பற்றாக்குறைக்கு அந்நாட்களில் black & white-ல் வெளியான இந்த இதழை செம சுமாரானதொரு மொழிபெயர்ப்பில் நாம் சிலாகித்து ரசித்திருப்பதை நினைவு கூர்ந்திட்ட போது அழுகாச்சி அழுகாச்சியாய் வந்தது !
Same அழுகாச்சி - same காரணம் - கேப்டன் பிரின்சின் "மரண வைரங்கள்" ப்ளஸ் MAXI லயனின் "பழி வாங்கும் பாவை" இதழ்களில் தொடர்ந்ததைக் குறிப்பிட்டால் தேவலாம் என்றும் நினைக்கிறேன் ! ஒரிஜினலாய் பாக்கெட் சைசில் வெளியாகிய இந்த 2 இதழ்களுமே அந்நாட்களில் runaway hits ! ஆனால் இன்றைக்கோ ஏகப்பட்ட மாஸான கதைகளைப் படித்தான பிற்பாடு இவை ஒரு மாற்றுக் குறைவாய்த் தென்பட்டது எனக்கு மட்டும் தானா - no idea !! ஆனால் எது எப்படியோ - இந்தாண்டின் விற்பனையில் தெறிக்கும் வேகம் காட்டிய வகையில் MAXI லயனின் இரு இதழ்களும் அற்புதமான ஆரம்பங்கள் ! இந்த இதழ்களின் திட்டமிடல்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் என்பதால் அரைத்த அதே மாவையே மறுக்கா அரைக்கப் ப்ரியமில்லை ! மாறாக - இங்கே ஒரேயொரு கேள்வி மட்டும் !! 2020-ன் MAXI லயன் சந்தாவினில் "கார்ட்டூன் மறுபதிப்பு" என்று அறிவித்துள்ள ஸ்லாட்டுக்குள் உட்ஸிடியின் சிறப்பான சிரிப்புப் போலீசை நுழைக்கலாமா guys ? What say ? அவ்விதம் நுழைப்பதாயின் - நீங்கள் பார்த்திட விரும்பும் சாகசம் எதுவாக இருக்குமோ ?
MAXI லயனோடு கைக்கோர்த்துக் களம் கண்ட "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" நடப்பாண்டின் TOP இதழ் என்ற போட்டியில் வேகமாய் ஓடிடும் வேட்பாளர் என்பதிலும் no secrets ! இந்த இதழும் கூட நமது எக்கச்சக்க அலசல்களுக்கு ஏற்கனவே உட்பட்டுள்ளது என்பதால் - அது விட்டுச் சென்றுள்ள நினைவுகளை மாத்திரமே கிளறிப் பார்க்க விழைகிறேன் ! நமக்குத் துளியும் தொடர்பிலா ஒரு தேசத்தின் துப்பாக்கிக் கலாச்சாரம் ; அதற்கு அனுமதி தந்திடும் அரசியல் சாசனம் ; அதனில் அவசியமாகிடும் திருத்தங்கள் - என்பனவே ஒரு 4 பாக ஆல்பத்தின் கதைக்கருவாக சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய நமது வாசிப்புக்களத்தில் அமைந்திருப்பின், நமது ரியாக்ஷன்கள் எவ்விதம் இருந்திருக்குமோ ? என்று மட்டும் யோசித்துப் பாருங்களேன் ? பற்றாக்குறைக்கு இங்கே அதிரடி ஹீரோ என்று யாரும் கிடையாது ; கோமாளிகள் போன்ற வடிவமைப்பில் வலம் வந்திடும் கதை மாந்தர்கள் மாத்திரமே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் !! அத்தகையதொரு ஆக்கத்தை நாம் கொண்டாடியிருக்கும் வாய்ப்புகள் பூஜ்யத்துக்கு மிக மிக அருகில் என்று தான் இருந்திருக்கும் ! ஆனால் இன்றைக்கோ அதனை ஹார்டகவரோடு, ஒரு மிக முக்கிய தருணத்தின் ஸ்பெஷல் இதழாய் வெளியிடும் தகிரியம் எனக்கு சாத்தியப்படுகிறதெனில் - நாற்கால்ப் பாய்ச்சலில் பயணித்திருக்கும் நமது ரசனைகளை தவிர்த்து வேறெதனை சிலாகிப்பது ? பிஸ்டலுக்குப் பிரியாவிடை - நம் பயணத்தின் ஒரு HUGE மைல்கல் !
பி.பி.வி. இதழோடு வெளியான "நித்தமொரு யுத்தம்" கூட மாமூலான stereotypes-களை சன்னமாய் முறியடித்த சாகசம் என்பேன் ! ஆக்ஷன் பின்னணியில் மெலிதான உணர்வுகளோடு பயணித்த இந்த DAMOCLES டீமானது கண்டுள்ள வெற்றி - நம் காமிக்ஸ் வாசிப்புகளின் பன்முகத்தன்மைக்கு இன்னொரு சான்று ! 'நாலு சாத்து சாத்தாமல் இந்தப் பாப்பா என்னமோ வசனமா பேசிட்டே திரியுதே ?" என்ற கடுப்ஸ் காட்டாது அழகாய்க் கதையோடு ஒன்றிட நம் அனைவருக்கும் இயன்றுள்ளது - "காமிக்ஸ் வாசகாள்ஸ் 2.0" எத்தனை மாறுபட்டவர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்திடும் சமாச்சாரமாய் நான் பார்த்திடுகிறேன் !
2019-ன் சற்றே கவலையான legacy ஒன்றுள்ளதெனில் அது இன்றைய கார்ட்டூன் வறட்சியினை அத்தனை பெரியதொரு சமாச்சாரமாய்ப் பெரும்பான்மை பார்த்திருக்கா அந்தப் பாங்கையே குறிப்பிடுவேன் ! ஆண்டுக்கு ஆறே கார்ட்டூன்கள் என்ற தீர்மானத்தை "எடுத்தேன்" என்பதை விட - "எடுக்கும் நிர்ப்பந்தத்தில் இருந்தேன்" என்பதே நிஜமாக இருந்திருக்கும் ! இந்தத் தீர்மானம் அமலாகும் பொழுதினில் போராட்டங்கள் வெடிக்கும் ; சாலைகளில் உண்ணும் விரதங்கள் அரங்கேறும் ; வேப்பிலையினை மட்டுமே உடுப்பாக்கி தலீவரை உருட்டி விட்டு கண்டனங்களைப் பதிவு செய்வீர்களென்றெல்லாம் எதிர்பார்த்தேன் ! ஆனால் ஒரு இக்ளியூண்டு "கார்ட்டூன் காதலர் கும்பலின்" சன்னமான வருத்தக்குரல்களைத் தாண்டி - மூச் காட்டக் கூட நாதியின்றிப் போனது சோகத்திலும் சோகம் ! கபாப் ; பீட்சா ; டக்கிலோ என்று ஆண்டின் வித விதமான பதார்த்தங்களின் லயிப்பில், சிம்பிளான கேசரியின் சுவையை அவ்வளவாய் யாருமே மிஸ் செய்திடவில்லை எனும் போது - தொடரவுள்ள ஆண்டுக்குமே அதனையே template ஆக்கிடும் சூழலே பலனானது ! இதோ - இந்த நவம்பரின் ஆன்லைன் ஆர்டர்களை பார்த்தால் கூட - கேரட் மீசைக்காரர் நீங்கலாய் பாக்கி இதழ்கள் பெரும்பான்மையான ஆர்டர்களில் இடம் பிடித்திருப்பது புலனாகிறது ! பெருமூச்சு விட்டபடிக்கே கல்யாண வீட்டுப் பந்திகளில் தான் கேசரிகளை ஒரு பிடி பிடிக்க முடிகிறது இப்போதெல்லாம் !! Truly sad..!!
நடப்பாண்டின் இன்னொரு அதிரடி ஹிட் - வெகு சமீபத்தைய "தீபாவளி மலர்" ! 'தல' வழிநடத்த - போனெல்லியின் இன்ன பிற நாயக / நாயகியர் செய்த அதிரடிகள் ஒற்றை குண்டு புக்காகிடும் போது ரகளைகளுக்குப் பஞ்சமிலாது போய் விடுகிறது ! அதிலும் ஜூலியா + டைலன் டாக் version 2.0 சாதித்துக் காட்டியது சூப்பர் சந்தோஷ நொடிகள் ! இங்கு இடம்பிடித்திருந்த டெக்ஸ் & மார்ட்டின் இன்னமும் ஒரேயொரு மாற்றுக் கூடுதலாய் ஜொலித்திருப்பின் - கச்சேரி இன்னமுமே களை கட்டியிருக்கும் !
நடப்பாண்டின் இன்னொரு highlight தருணமாய் நான் நினைத்தது அகஸ்மாத்தாய் மூன்று மெகா இதழ்கள் ஒரே மாதத்தில் துண்டை விரிக்க நேர்ந்த மே மாதத்தை ! ட்யுராங்கோவின் tight த்ரில்லர் ; தி Lone ரேஞ்சர் + பராகுடா க்ளைமாக்ஸ் பாகம் என 3 பயில்வான்கள் ஒருசேர ஆஜராகிடும் பொழுதில் உடல் சுகவீனமும் என்னைத் தேடி வந்திருந்தது ! ஆஸ்பத்திரிவாசம் உறுதி என்று ஊர்ஜிதம் ஆன நொடியில் இந்த 3 இதழ்களுக்குள்ளும் பணியாற்றும் பிசாசு போன்ற உத்வேகத்தைத் தந்த பெரும் தேவன் மனிடோவை இங்கே நினைவு கூர்ந்திடத் தோன்றுகிறது ! மேஜை முழுக்க கலவையாய் மூன்று இதழ்களையும் பரப்பிப் போட்டுக் கொண்டு ஏப்ரலின் துவக்கத்தில் அடித்த கூத்து - one for the memories !! அதுவும் பராகுடாவின் க்ளைமாக்ஸ் பாகம் + தனியொருவன் இதழ்களின் மொத்த மொழிபெயர்ப்பையும் மூன்றோ / நான்கோ நாட்களில் நிறைவு செய்ததை மண்டையைச் சொரிந்தபடிக்கே நினைத்துப் பார்க்கிறேன் !
As dark as they come - என்பதற்கு அடையாளமாய் இந்தாண்டினில் நின்ற 2 கிராபிக் நாவல்களுமே பேனா பிடித்த தருணங்களில் ரொம்பவே வித்தியாசமான அனுபவங்களைத் தந்தன எனக்கு ! "நித்திரை மறந்த நியூயார்க்" & "கதை சொல்லும் கானகம்" - இந்த 2 கதைகளையும் தேர்வு செய்த போதே ஓரளவுக்குத் தெரிந்திருந்தது - இங்கே இறுக்கமும், இருளுமே கோலோச்சப் போகின்றன என்று ! And இரு கதைகளிலுமே காலத்தில் முன்னே & பின்னே பயணிக்கும் கதை சொல்லும் யுக்தி கையாளப்பட்டிருக்க - இத்தாலிய மொழியிலிருந்து மாற்றம் கண்டான அந்த ஆங்கில ஸ்கிரிப்ட்களையும், கூகுள் தேடல்களையும் ஒருங்கிணைத்துப் பணியாற்றியது செம வித்தியாச அனுபவம் ! இரு கதைகளுக்குமே எந்த மாதிரியான தொனியில் வசன நடையினை உருவாக்கினால் ஒரிஜினலுக்கு நியாயம் செய்தது போலிருக்கும் என்பதை யூகிக்கவே மொக்கை போட்டேன் ! And தற்போதைய தமிழாக்கங்களில் எனக்கு நூறு சதவிகிதம் திருப்தி என்றெல்லாம் இல்லையெனினும் - அந்த இருண்ட களங்களுக்குள் தட்டுத் தடுமாறி பணியாற்றிய ராப்பொழுதுகளை அத்தனை சீக்கிரத்தில் மறக்க மாட்டேன் தான் !
இந்தாண்டின் pleasant surprises பட்டியலில் ஜூலியா ; டைலன் தவிர்த்து ட்ரெண்டுக்கும் ஒரு இடமுண்டு என்பேன் ! "சாலையெலாம் ஜ்வாலைகளே' ஹிட்டடிக்கும் வரையிலும் இந்தச் சிகப்புச் சட்டைக்காரரின் நம்மிடையிலான எதிர்காலம் சின்னதொரு கேள்விக்குறியோடே தொங்கிக்கொண்டிருந்தது ! ஆனால் நடப்பாண்டின் 2 ட்ரெண்ட் சாகசங்களும் செம decent என்ற விதத்தில் இவரை நம்மிடையே ஒரு நிரந்தரமாக்கியுள்ளன !!
"நிரந்தரம்" எனும் போது - நம்மிடையே தற்சமயம் குடிகொண்டுள்ள கிராபிக் நாவல் காதலையும் அந்த "நிரந்தர' பட்டியலினுள் நுழைக்கலாம் என்றே தோன்றுகிறது - "இருளின் ராஜ்யத்தில்" (அண்டர்டேக்கர்) + "வஞ்சம் மறப்பதில்லை" இதழ்களின் வெற்றியினைப் பார்க்கும் போது !! இரண்டுமே நேர்கோட்டுக் கதைகள் தான் என்றாலும், கதை சொன்ன பாணியினில் இரு ஆல்பங்களும் மிரட்டியிருந்தது - made for awesome reading !! "வஞ்சம் மறப்பதில்லை" இதழின் அந்த painted சித்திர பாணிகள் கூடுதலாய் ஒரு ப்ளஸ் தானன்றோ ? அந்த இரத்தப் பொரியல் சற்றே தூக்கலான கோங்குராக் காரமாய்த் தென்பட்டிருக்கலாம் தான் - ஆனால் சில தருணங்களில் காரமும் நலம் தான் என்பதை தெலுங்கானா போலீசார் தான் காட்டு காட்டென்று காட்டியுள்ளனரே ?!! "வஞ்சம் மறப்பதில்லை" என்பதைத் தான் மனசுக்குள் சொல்லிக்கொள்ளத் தோன்றியது செய்தியைப் படித்த போது !!
`லுக்கி லூக்கின் ரெகுலர் சாகசங்கள் ; அவரது not so regular சாகசம் (லக்கி லூக்கைச் சுட்டது யார் ?") ; ப்ளூகோட் பட்டாளம் ; சிக் பில் & கோ. ; க்ளிப்டன் என்று இந்தாண்டை light ஆக்கிட உதவிய சில பல கார்ட்டூன் படலங்களும் நினைவில் ஓடுகின்றன !! அந்த சந்தோஷ நினைவுகளோடே ஓராண்டுக்கு விடை தந்திட எண்ணுகிறேன் - உங்களிடம் எப்போதும் போல் சில கேள்விகளை முன்வைத்தபடிக்கு !! அதற்கு முன்பாய் ஒரு thanksgiving படலம் பாக்கியுள்ளதல்லவா ? என்ன தான் 'அமெரிக்கால சொன்னாகோ...ஆப்ரிக்காலே சொன்னாகோ...சப்பான்லே சொன்னாகோ ' என்று நான் கூரையில் ஏறி நின்று கூவினாலும், அவற்றையெல்லாம் நிதானமாய்ப் பரிசீலித்து ; படித்து ; ரசித்து ; சிலாகித்து ; குட்ட வேண்டிய நேரங்களில் குட்டி ; கைபிடித்துத் தூக்கி விட வேண்டிய வேளைகளில் தூக்கி விட்டு அசாத்தியங்களை சாத்தியமாக்கிக் காட்டும் உங்கள் ஒவ்வொருவருக்கும் yet another பயண ஆண்டின் இறுதியில் கரம் கூப்பிய நன்றிகள் folks !! நீரின்றி இங்கு எதுமில்லை....நீவிரின்றியும் தான் !! Thanks a ton & more...!!
கேள்விகள் இதோ :
1. ஒன்றிலிருந்து பத்துக்குள்ளானதோர் மதிப்பெண் பட்டியலில் 2019-ன் நமது செயல்பாட்டிற்கு உங்களது மார்க்குகள் என்னவாக இருக்குமோ ?
2. 2019-ன் டாப் 3 இதழ்கள் உங்கள் பார்வைகளில் ? மூன்றே மூன்று மட்டும் ப்ளீஸ் ?
3. சொதப்பல்கள் பட்டியலைப் பற்றி இம்முறை கேட்கப் போவதில்லை - simply becos அதற்கான பதில்கள் எனக்கே தெரியும் ! இருந்தாலும் - 'மிடிலே' பட்டியலின் TOP இதழாக எதைச் சொல்வீர்களோ ?
4. உங்களைப் பொறுத்த வரையிலும் இந்தாண்டின் best moment எது ?
5. நடப்பாண்டின் அனுபவங்களிலிருந்து 2020-க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பாடமென்று ஏதேனும் இருப்பின் - விளக்குங்களேன் புளீஸ் ?
6. இந்தாண்டின் 5172 பக்கங்களில் நீங்கள் படித்திருப்பது உத்தேசமாய் எத்தனையோ ?
Bye all...இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் - ஜனவரியின் "மேக் & ஜாக்" கார்ட்டூனுக்குள்ளும், ஜேம்ஸ் பாண்டின் "பட்டாம்பூச்சிப் படல"த்தினுள்ளும் கால்பதித்திட ! அடுத்த ஞாயிறின் பதிவில் 2019-ன் எனது ஜாலியான தருணங்கள் பற்றிப் பார்த்த கையோடு இன்னொரு ஜாலியான செய்தியையும் சொல்ல முயற்சிக்கிறேனே !! See you around !! Have a breezy weekend all !!
And சந்தாவினில் இணைந்திடவோ ; புதிப்பிக்கவோ கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ?

Me 1st
ReplyDeleteபின்னே ஞானும்..
Deleteபின்னேயே நானும்!
Delete(இங்க Reply பண்ணா நாமலும் First 3 இடங்களுக்குள்ள வந்துடலாம்.)
1) 8 mark
Delete2) சிகரங்களின் சாம்ராட்,
பாரகுடா & பி.பி.வி
3)ஜானதன் கார்ட்லேண்ட்
(பில்டிங் ஸ்டிராங் பேஸ்மெண்டே இல்ல)
4) மொத்தத்தில் இந்த ஆண்டே பெஸ்ட்தான்
5)கார்டூன் கதைகளின் எண்ணிக்கை குறைந்தற்க்கான காரணத்தை அடுத்த ஆண்டிலாவது களைய முயற்சி எடுக்க வேண்டும்.
6)எல்லாமே படிச்சாச்சு
(அப்புறம்..
ஜனவரி புக் எப்போ அனுப்புறீங்க சார்??)
2020 மஞ்சள் சந்தா & ஜம்போ சந்தா கட்டியாச்சி...
Deleteசிவா ஹேப்பி அண்ணாச்சி.
திரும்பி பாத்துட்டு வாரேன்....
ReplyDeleteவுட்சிட்டி கோமாளிகள் மேக்ஸியில் வேண்டாம் சார்.....
ReplyDeleteஏன் கூடாது???
Deleteஏன் வேண்டாம்???
வரலாம்.
இல்லண்ணா வேண்டாம் ...!!
Deleteநெஜமாலுமே வேண்டாம்...
நெஜமாலுமே வேண்டும்.
Deleteஹைய்யா புதிய பதிவு......
ReplyDeleteGood evng friends😊😊
ReplyDeleteவணக்கம் சார் 🙏🏼
ReplyDeleteநண்பர்களே 🙏🏼
.
வணக்கம் நண்பர்களே...!
ReplyDelete5172 பக்கங்களை இரு முறை படித்து இருக்கிறேன் எனவே 10,344 பக்கங்கள் குறைந்தது.
ReplyDelete1. எனது மதிப்பெண்கள் 10/10
ReplyDeleteTop 3
ReplyDelete1. உத்தம புத்திரன்
2. Sigarangalin சாம்ராட்
3. பி பி வி
This comment has been removed by the author.
ReplyDelete3. சத்தியமாக சாத்தானின் சீடர்கள் தான்
ReplyDeleteஎனக்கு மெய்யாலுமே ஜானதன் கார்ட்லேண்ட் கதை மிகவும் பிடித்திருந்தது... ஆனால் கதை முடிவடையாதது போல் தோன்றியது... அதனாலேயே அந்த கதை எனக்கு பிடித்ததோ என்னவோ, அடுத்து என்ன என்று ஆவலுடன் காத்திருக்கிறேனோ என்னவோ
ReplyDeleteபெரிய்ய்ய பதிவு
ReplyDelete4. எனது best moment எது என்றால் ஏப்ரல் மாத இதழ்கள் தான். அதற்கு நீங்கள் அடித்த பல்டிகள் தான். கால வேட்டையr அறிவித்து விட்டு பிறகு கதை சுமார் என்று கேன்சல் செய்து அதற்கு பதிலாக முதலில் விலையில்லா color Tex அச்சடித்து அதுவும் போதாது என்று அவசர அவசரமாக இரண்டாவதாக பச்சோந்தி பகைவன் அச்சிட்டு அனுப்பியது மறக்க முடியாத அனுபவம். உங்களது commitment வாய்ப்பில்லை. இதுவே இந்த வருடத்தின் மறக்க முடியாத மிகச் சிறந்த நிகழ்வு. மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நன்றி சார்.
ReplyDeleteஇந்த வருடம் சொன்ன பாடம் எதனை அடுத்த வருடத்திற்கு எடுத்து செல்வது என்றால் தயங்காமல் பி பி வி , barracuda போன்ற கிராஃபிக் நாவல் களை வெளியிடுங்கள். Trust your instincts சார்.
ReplyDeleteAnd a double yes for woodcity team in Maxi. Only one slot for them next year so this makes it double.
ReplyDelete🙏🙏🙏🙏🙏
ReplyDeleteமொத்த மதிப்பெண்கள்
ReplyDelete8/10
Top 3
ReplyDeleteபிஸ்டலுக்குப் பிரியாவிடை
சிகரங்களின் சாம்ராட்.
அண்டர்டேக்கர்.
டப்ஸா 3
ReplyDeleteசாத்தானின் சீடர்கள்.
முடிவிலா மூடுனி
பாரிஸில் ஒரு கௌபாய்
குளிர்கால குற்றங்களை மறந்துவிட்டேனே. டப்ஸா நெ.1
Delete// 2020-ன் MAXI லயன் சந்தாவினில் "கார்ட்டூன் மறுபதிப்பு" என்று அறிவித்துள்ள ஸ்லாட்டுக்குள் உட்ஸிடியின் சிறப்பான சிரிப்புப் போலீசை நுழைக்கலாமா guys ? What say ? அவ்விதம் நுழைப்பதாயின் - நீங்கள் பார்த்திட விரும்பும் சாகசம் எதுவாக இருக்குமோ ? //
ReplyDeleteதாராளமாய் போட்டுத் தாக்கலாம் சார்,எந்த கதை நல்ல கதையோ அதையே போடலாம்,தலைப்பெல்லாம் நம்மள்கி சொல்லத் தெரியல சார்.....
வந்தா மட்டும் போதும் சார்........
தங்கத்தடம்
ReplyDeleteபுதிய நாயகர் எப்படி என்ற ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். தங்கம் எடுத்துச்செல்லும் வண்டிக்கு பாதுகாப்பாக செல்லும் ரிங்கோ நடுவில் வரும் செவ்விந்தியர்கள் மற்றும் தங்கத்தை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தை எப்படி சமாளிக்கிறார் என்பதை 54 பக்கங்களில் அழகாக சொல்லி உள்ளார்கள்.
எளிதான வாசிப்புக்கு உகந்த நேர்கோட்டில் பயணிக்கும் கதைதான் ஆனால் மிகவும் பழைய கதை பெரிய திருப்பம் இல்லை, சொல்லிக்கொள்ளும் படி அல்லது ரசிக்கும்படி ஏதும் இல்லை.
சரி ஓவியங்களையாவது ரசிக்கலாம் என்றால், கதையில் வரும் நபர்களின் முகங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை, இயற்கை காட்சிகள் மற்றும் மற்ற கதை சம்பவங்கள் அதனை விட மோசம்.
நல்லவேளை இந்த கதை கருப்பு வெள்ளையில் வரவில்லை வந்தால் படங்கள் இந்த அளவுக்கு கூட தெரியாது என நினைக்கிறேன்.
நேர்கோட்டில் பயணிக்கும் கதை என்பதை தவிர்த்து ரிங்கோவில் ரசித்த மற்றும் ஒரு விஷயம் என்றால் அது அட்டைப்படம் மட்டுமே.
ரிங்கோ பை பை.
ரிங்கோ போங்கோ
Deleteஎனது கருத்தும் இதுவே...
DeleteBest moment.
ReplyDeleteசந்தேகமின்றி பி.பி.வி தான்.
எந்த ஆர்வமின்றிதான் புக் 'கை புரட்டினேன்.ஆனால் அது என்னை புரட்டி எடுத்தது மறக்கவே முடியாத நிகழ்வு. டாப் 3 மட்டுமல்ல, 2019 சிறப்பான கதையென்றால் கொஞ்சமும் யோசிக்காமல் பி.பி.வி க்கே என் ஓட்டு.
ரிங்கோவிற்கு பதில் அடுத்த வருடம் மறுபதிப்பில் வெளிவராமல் இருக்கும் மும்மூர்த்திகள் அல்லது ஆர்ச்சி அல்லது ரிப் கெர்பி கதை எதையாவது முடிந்தால் சந்தா-Dயில் 40 விலையில் கொடுக்க சார்.
ReplyDeleteஅல்லது கமான்சேயின் மீதிக்கதைகளை வெளியிடலாமே?
Deleteகமான்சே வில் வராத கதை ஒன்று க/வெ வந்த ஓநாய் கணவாய் ஒன்று இணைத்து old new collection னா கொடுத்தா கமான்சேவே கம்ப்லீட்
Deleteபழனி @
Delete+1
👍👍
Deleteகமான்சேவுக்கும், ரிங்கோவுக்கு பெரிய வித்தியாசம் இல்லை...சுமாரான கதைகள் தான்
Delete1. ஒன்றிலிருந்து பத்துக்குள்ளானதோர் மதிப்பெண் பட்டியலில் 2019-ன் நமது செயல்பாட்டிற்கு உங்களது மார்க்குகள் என்னவாக இருக்குமோ ?
ReplyDeleteஎந்த சந்தேகமும் இல்லாமல் 09/10.......
// 2. 2019-ன் டாப் 3 இதழ்கள் உங்கள் பார்வைகளில் ? மூன்றே மூன்று மட்டும் ப்ளீஸ் ? //
ReplyDelete1.பராகுடா 1 & 2,
2.பிஸ்டலுக்குப் பிரியாவிடை,
3.சிகரங்களின் சாம்ராட்.....
நடப்பாண்டின் அனுபவங்களிலிருந்து ///2020-க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பாடமென்று ஏதேனும் இருப்பின் - விளக்குங்களேன் புளீஸ் ?///
ReplyDeleteடெக்ஸ் மற்றும் மார்டின் மேல் கவனம் தேவை.
///இந்தாண்டின் 5172 பக்கங்களில் நீங்கள் படித்திருப்பது உத்தேசமாய் எத்தனையோ ?///
ReplyDeleteஉத்தேமாய் ஒரு 6000 பக்கங்கள்.
(ஆனால் கேள்வி 5172 பக்கங்கள்தானே)
ரெண்டு மூணு கதைளை ரெண்டு மூணுவாட்டி படிச்சிட்டேன் அதான்..:-)
///ஒரு இக்ளியூண்டு "கார்ட்டூன் காதலர் கும்பலின்" சன்னமான வருத்தக்குரல்களைத் தாண்டி///
ReplyDeleteSo sad
// 3. சொதப்பல்கள் பட்டியலைப் பற்றி இம்முறை கேட்கப் போவதில்லை - simply becos அதற்கான பதில்கள் எனக்கே தெரியும் ! இருந்தாலும் - 'மிடிலே' பட்டியலின் TOP இதழாக எதைச் சொல்வீர்களோ ? //
ReplyDelete1.ஜெரெமயா,
2.குளிர்காலக் குற்றங்கள்,
3.மரண வைரங்கள்........
31 steel
ReplyDelete// 4. உங்களைப் பொறுத்த வரையிலும் இந்தாண்டின் best moment எது ? //
ReplyDeleteஎந்தவித ஐயமும் இன்றி ஈ.பு.வி யில் வெளியிட்ட இதழ்கள்தான் சார்.........
எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யும் விதமாக அனைத்து இதழ்களும் அமைந்திருந்தது அருமையான ஒரு நிகழ்வு......
சந்தேகமின்றி
ReplyDelete1. பிஸ்டலுக்கு பிரியாவிடை
2. பராகுடா
3 மட்டும் கொஞ்சம் ரோசனை பண்ணித்தான் சொல்லனும்; கடும் போட்டியா இருக்குல்ல!!??
+1
Deleteஹைய்யா எடிட்டர் சார் கேட்ட அத்தனை கேள்விக்கும் பதில் சொல்லிட்டேன்.எடிட்டர் எனக்கு எத்தனை மார்க் போடுவாருனு ஆவலுடன்....!☺☺☺
ReplyDelete0 😠😠😠
Deleteஓ...!
Delete'ஓ ' போட்டிருக்கீங்க. அப்படித்தானே.:-)
ReplyDelete1. ஒன்றிலிருந்து பத்துக்குள்ளானதோர் மதிப்பெண் பட்டியலில் 2019-ன் நமது செயல்பாட்டிற்கு உங்களது மார்க்குகள் என்னவாக இருக்குமோ ?
/* 9.75 */
2. 2019-ன் டாப் 3 இதழ்கள் உங்கள் பார்வைகளில் ? மூன்றே மூன்று மட்டும் ப்ளீஸ் ?
/* PISTOLUKKU PIRYAAVIDAI, THE UNDERTAKER, 3rd place is a tie between Thorgal and Durango */
3. சொதப்பல்கள் பட்டியலைப் பற்றி இம்முறை கேட்கப் போவதில்லை - simply becos அதற்கான பதில்கள் எனக்கே தெரியும் ! இருந்தாலும் - 'மிடிலே' பட்டியலின் TOP இதழாக எதைச் சொல்வீர்களோ ?
/* MidilE - Modesty Blaise */
4. உங்களைப் பொறுத்த வரையிலும் இந்தாண்டின் best moment எது ?
/* Erode releases - save Neerillai Nilamillai */
5. நடப்பாண்டின் அனுபவங்களிலிருந்து 2020-க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பாடமென்று ஏதேனும் இருப்பின் - விளக்குங்களேன் புளீஸ் ?
/* Over build up Udambukku (Virpanaikkum !) aavaathu */
6. இந்தாண்டின் 5172 பக்கங்களில் நீங்கள் படித்திருப்பது உத்தேசமாய் எத்தனையோ ?
/* 4500+. Rest saved for year end vacations */
All in all one of the best years since our return - I would say THE BEST since 2012 ...
மிடிலே மாடஸ்டி சூப்பரா இருக்கே!!!
Delete//மிடிலே மாடஸ்டி சூப்பரா இருக்கே!!!//
Deleteஅடடே.ஆச்சர்யக் குறி.
##/* 4500+. Rest saved for year end vacations */####
Deleteபடிக்காத கதைகளில் மாடஸ்டியும் இருக்கும் போல அண்ணா..
Sivakumar Siva - Modesty I could not move more than 5 pages. Will not read.
Deleteமார்கழி குளிர் காய தனலிட உதவும் எரிபொருளே மாடஸ்டி :-D
//2020-ன் MAXI லயன் சந்தாவினில் "கார்ட்டூன் மறுபதிப்பு" என்று அறிவித்துள்ள ஸ்லாட்டுக்குள் உட்ஸிடியின் சிறப்பான சிரிப்புப் போலீசை நுழைக்கலாமா guys ?//
ReplyDeleteடபுள் ஓகே
// 6. இந்தாண்டின் 5172 பக்கங்களில் நீங்கள் படித்திருப்பது உத்தேசமாய் எத்தனையோ ? //
ReplyDeleteஅனைத்து பக்கங்களையும் தரிசித்து முடித்தாயிற்று,என்னிடம் ஒரு பழக்கம் உண்டு சார்,கதை சுமாரோ & சூப்பர் ஹிட்டோ அதை முழுமையாக படித்து முடித்து விடுவேன்......
இதுவரை எந்த இதழ்களையும் ஒதுக்கி வைத்தது இல்லை.......
அதே நேரத்தில் மீள்வாசிப்பில் சில இதழ்களை அமிழ்த்த வாய்ப்பும்,நேரமும் அமையாதது வருத்தமே.....
கதை சொல்லும் கானகம் தவிர இம்மாத புக்ஸ் எதையும் படிக்கல!! மத்தபடி எல்லாம் படிச்சாச்சு!!!
ReplyDeleteவெற்றிகரமாக கடந்தது கடந்தாண்டு..
ReplyDeleteபுத்தாண்டின் ஆச்சரியங்களோடு புத்தாண்டு புலரும் இத்தருணமது நெருங்கி வரும் வேளையில் திரும்பிப் பார்த்தலில் ஆச்சரியங்களே மிஞ்சிடும்..வரவிருக்கும் ஆண்டுக்கு கட்டியம் கூறுவது போன்று.. வாழ்த்துக்கள் லயனுக்கும் வாசகர்களுக்கும்..
என்னைப் பொருத்தவரை ஜெரெமையா நன்றாகவே இருந்தார், மிகவும் ரசித்தேன். மனதில் நெருடிய விஷயம் கதாசிரியர் குறைந்த பக்கங்களில் அதிக விஷயங்களை நுழைக்க முயற்சி செய்தது இதனால் கதை அங்கங்கே ஜம்ப் செய்தது.
ReplyDeleteஜானதன் கார்ட்லெண்ட், நீரில்லை நிலமில்லை ரிங்கோ மற்றும் மரண வைரங்கள் என்னை மிகவும் சோதித்த கதைகள்.
அதேபோல் ஜானி 2.0 மற்றும் சாத்தானின் சீடர்கள் பரவாயில்லை என்ற ரகம்.
வஞ்சம் மறப்பதில்லை பரவாயில்லை என்பதற்கு அடுத்த இடம்.
Deleteநியூட்டனின் விசித்திர உலகம் மிகவும் சோதித்த இதழ்களில் இதுவும் உண்டு.
Delete// 5. நடப்பாண்டின் அனுபவங்களிலிருந்து 2020-க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பாடமென்று ஏதேனும் இருப்பின் - விளக்குங்களேன் புளீஸ் ? //
ReplyDeleteமறுபதிப்பு இதழ்கள் வெளியிடுவதில் நல்ல கதைகளாகவும்,தேர்ந்தெடுத்த கதைகளாகவும் இருந்தால் சிறப்பு...
மார்ட்டின் கதைகளில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்....
புத்தக தரத்தில் நாம் முன்னேறி விட்டாலும்,இதழ்களை அச்சிடுவதில் & பைண்டிங் செய்வதில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை என்றே தோன்றுகிறது.....
மற்றபடி எல்லாம் நலமே........
"நித்தமொரு யுத்தம்"
ReplyDeleteஇந்த வருட புதிய அறிமுகத்தில் மிகவும் ரசித்த கதை. அட போட வைக்கும் ஆக்சன் அட்டகாசமான கதாபாத்திர படைப்புகள்.
இவர்கள் அடுத்த வருடமும் தொடர்வதில் இரட்டை மகிழ்ச்சி.
// 2020-ன் MAXI லயன் சந்தாவினில் "கார்ட்டூன் மறுபதிப்பு" என்று அறிவித்துள்ள ஸ்லாட்டுக்குள் உட்ஸிடியின் சிறப்பான சிரிப்புப் போலீசை நுழைக்கலாமா guys ? What say ? அவ்விதம் நுழைப்பதாயின் - நீங்கள் பார்த்திட விரும்பும் சாகசம் எதுவாக இருக்குமோ ? //
ReplyDeleteநீலப்பேய் மர்மம்+அதிரடி மன்னன்
//
ReplyDeleteஇங்கே ஒரேயொரு கேள்வி மட்டும் !! 2020-ன் MAXI லயன் சந்தாவினில் "கார்ட்டூன் மறுபதிப்பு" என்று அறிவித்துள்ள ஸ்லாட்டுக்குள் உட்ஸிடியின் சிறப்பான சிரிப்புப் போலீசை நுழைக்கலாமா guys ? //
BIG NO.
லக்கி அல்லது புதிய கார்டூன் கதையை முயற்சிக்கலாமே.
ஏன் இந்த கொலைவெறி?
Deleteபுதிய கார்டூன் கதை நாயகர்களை தரிசனம் செய்ய உள்ள ஒரு சிறந்த வாய்ப்பை தவற விட வேண்டாமே என்ற ஆதங்கம்.
DeleteHi..
ReplyDeleteசிறப்பான இதழ்கள் இவ்வருடத்தில் நிறைய இருந்தாலும் "கார்ட்டூன் வறட்சி" காரணமாக என்னளவில், இதழ்களை படிப்பதில் கொஞ்சம் ஆர்வம் குறைந்து தான் போய்விட்டது! காரணம் கனமான கதைகளை படிக்க தனித்த நேரம் ஒதுக்க வேண்டி இருக்கிறது; இல்லையேல் கதையின் பரிமாணங்களில் ஒரு லயப்பு இல்லாமல் போய்விடும்!
ReplyDeleteஇதில் வேடிக்கை என்னவென்றால் பல வேலை நெருக்கடிக்கு மத்தியிலும் LONE RIDERS - lucky luke ஆங்கிலப் பதிப்பை 15 முறைக்கும் மேலாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் படித்திருப்பேன்!
1. ஒன்றிலிருந்து பத்துக்குள்ளானதோர் மதிப்பெண் பட்டியலில் 2019-ன் நமது செயல்பாட்டிற்கு உங்களது மார்க்குகள் என்னவாக இருக்குமோ ?
ReplyDelete8.5
2. 2019-ன் டாப் 3 இதழ்கள் உங்கள் பார்வைகளில் ? மூன்றே மூன்று மட்டும் ப்ளீஸ் ?
1. சிகரங்களின் சாம்ராட்
2. நித்தம் ஒரு யுத்தம்
3. பிஸ்டலுக்கு பிரியாவிடை
4. பரலோகத்திற்கு ஒரு படகு (டாப் காமெடி கதை)
5. உத்தமபுத்திரன் & பாரிஸில் ஒரு கௌபாய்
6. சிங்கத்தின் சிறுவயதில்
7. அண்டர்டேக்கர்
8. ஷெர்லாக் (காமெடி கதையில் இரண்டாம் இடம்)
9. பராகுடா (முதல் பாகம் ஏற்படுத்திய பாதிப்பு இதில் மிஸ்ஸிங், அதிகப்படியான சண்டை; ஒருவேளை முதல் பாகத்தில் கதையின் முக்கிய விஷயங்களை கதாசிரியர் சொல்லி விட்டதால் இந்த பாகத்தில் சொல்ல அதிக விஷயங்கள் இல்லாமல் போய் இருக்கலாம்.)
5வது இடத்தில் தீபாவளி மலர் மற்றும் உத்தமபுத்திரன்.
Delete10. லக்கியை சுட்டது யார். காமெடி நாயகனை சீரியஸாக சித்தரித்த இந்த கதையை மிகவும் ரசித்தேன். அதுவும் லக்கி புகைபிடிக்கும் பழக்கத்தை விட காரணமாக உள்ள நட்பு மனதை தொட்டு விட்டது.
Deleteபணி நிமித்தமாக வெளியூர் சென்றுவந்தேன்... அதனால் வலைப்பக்கம் வரயிலவில்லை. சோதனை என்னவென்றால் என்னுடனே தீபாவளி மலர் மற்றும் நவம்பர் மாத இதழ்களும் பயணித்தும் அவைகளை ஆனுபவிக்க இயலாததுதான்.
ReplyDeleteSo just started embracing November pack...
இன்னும் நமது சிறிய வட்டத்தின் சந்திதாரராக வராவிட்டாலும், இந்த வருடம் அருமையான வருடமாகவே இருந்தது. கிட்டத்தட்ட 47 புத்தகங்கள் கதம்பமாக பெற்றுமகிழ்ந்தேன்.
1. இந்த வருடத்தின் செயல்பாடு என்னை பொருத்தவரை 10 / 10.
2. 2019 ன் முதல் முன்னணி இதழ்கள்,
1. பிஸ்டலுக்கு பிரியாவிடை
2. பாரகுடா..
3. நீரில்லை நிலமில்லை
இவைதவிர முடிவில்லா மூடுபணி, வஞ்சம் மறப்பதில்லை மற்றும் இருளின் ராஜ்ஜியத்தில் இதழ்களும் அடங்கும்.
3. சொதப்பல் என்று எதுவுமே இல்லை. ஆனால் ஏமாற்றமளித்த ஒரே சார்வாள் நம்ம குளிர்கால குற்றங்களின் நாயகனைத்தவிர வேறு எவருமில்லை.
4. இந்தாண்டின் ஆகச்சிறந்த தருணம்.... 2020 ன் முன்னோட்டமே.
5. எங்களுக்கு நல்விருந்துபடைத்த ஆசிரியருக்கு நன்றி. அடுத்தாண்டு இதைவிட சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. முடியும்பட்சத்தில் சில பல Limited edition இதழ்களை சந்தாவில் இல்லாமல் வெளியிட முயற்சிக்கவும். அது புதுபாதைகளை சோதனை செய்ய வாய்ப்பளிக்கும்.
6. பாதிக்கும் மேல் என நினைக்கின்றேன். கார்டூன் இதழில் மனதில் உறுதிவேண்டும் மற்றும் விடுமுறையில் கொல் மட்டுமே வாங்கினேன்.
நன்றி... ஜூலியா அழைக்கின்றாள்.
கார்ட்டூன் கதையில் கடைசி இடம் மேக் & ஜாக்கின் நடனமாடும் கொரிலாக்கள் (ஒரே டெம்ப்ளேட்டை மூன்று? குழுக்கள் தொடர்ந்தது)
ReplyDeleteஅடுத்த இடத்தில் Maxi மனதில் உறுதி வேண்டும்... முக்கிய காரணம் இந்த கதைக்கு திருத்தி செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு, பல விதமான மொழிநடை படிக்கும் வேகத்தை ரொம்ப சோதனை செய்தது. பழைய மொழிப்பெயர்பிலேயே இந்த கதையை கொடுத்து இருக்கலாம்.
கார்ட்டூன் கதைகளை மறுபதிப்பு செய்யும் போது இதனை கொஞ்சம் மனதில் வைத்து கொள்ளுங்கள் சார்.
//
ReplyDelete4. உங்களைப் பொறுத்த வரையிலும் இந்தாண்டின் best moment எது ?
//
ஈரோடு புத்தகத் திருவிழா
//
5. நடப்பாண்டின் அனுபவங்களிலிருந்து 2020-க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பாடமென்று ஏதேனும் இருப்பின் - விளக்குங்களேன் புளீஸ் ? //
மறுபதிப்பு செய்யும் கதைகளின் மொழிபெயர்ப்பு அதிலும் குறிப்பாக கார்டூன் கதைகளின் மொழிபெயர்ப்பு.
அடுத்த வருடம் வாய்ப்பு கொடுக்லாமா வேண்டாமா என நினைக்கும் புதிய நாயகர்களின் கதைகளை காமிக்ஸ் அட்டவணை வெளியீடுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வெளியீடுகள். உதாரணம்: ரிங்கோ.
//
6. இந்தாண்டின் 5172 பக்கங்களில் நீங்கள் படித்திருப்பது உத்தேசமாய் எத்தனையோ ? //
எல்லாம் படித்து விட்டேன்.
66th
ReplyDelete1.பராகுடா
ReplyDelete2.அண்டர்டேக்கர்
3.பழி வாங்கும் புயல்
2020 -ன் டிசம்பரில் நான் கேட்கப்போகும் இதே கேள்விக்கு உங்கள் பதில் இப்படி இருக்குமோ பழனி ?
Delete1. 2132 மீட்டர் - XIII
2. சதியின் மதி - XIII
3. ஏதோவொன்று !
நிச்சயமா சார்.....😊😊😊
Deleteமேக்ஸி ஆல்பத்தில் சிக்பில் கதைகளையே போடலாம் சார்! எனது டாப் 3 பரகுடா,பிஸ்டலுக்கு பிரியாவிடை, சிங்கத்தின் சிறுவயதில் போனஸ் நித்தமொரு யுத்தம்
ReplyDeleteடாப் சொதப்பல் லக்கிலுக்கை சுட்டது யார்.பாரீஸில் ஒரு கௌபாய்,நீரில்லை நிலமில்லை
'லக்கி லூக்கைச் சுட்டது யார் ?" உங்களுக்கு சோதனையாய் அமைந்து போனது தான் ஆச்சர்யமே சார் !! வித்தியாசமான லக்கி அந்நியமாய்த் தோன்றியிருப்பார் போலும் !
Deleteஉண்மையில் "லக்கி லூக்கை சுட்டது யார்" எனக்குமே பிடிக்கவில்லை. "நான் புதுமை விரும்பி'" என்று தெருவுக்கு தெரு ப்ளக்ஸ் வச்சி பெருமை பட்டுகிட்டாலும். ஒரு சில விஷயங்களை மாற்றி கொள்ள முடியவில்லை.
Delete1. ஒன்றிலிருந்து பத்துக்குள்ளானதோர் மதிப்பெண் பட்டியலில் 2019-ன் நமது செயல்பாட்டிற்கு உங்களது மார்க்குகள் என்னவாக இருக்குமோ ?
ReplyDeleteகுழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டபின்னும் குறையேதும் எனக்கேதடி என ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடலின் இனிமையான வரிகளில் உலவும் மாய கண்ணனின் மனதிற்கு உகந்த தமிழ் மாதத்தின் எண்ணிக்கையே எமது மதிப்பெண்
2. 2019-ன் டாப் 3 இதழ்கள் உங்கள் பார்வைகளில் ? மூன்றே மூன்று மட்டும் ப்ளீஸ் ?
சிகரங்களின் சாம்ராட்
பிஸ்டலுக்கு பிரியாவிடை
அண்டர்டேக்கர்
3. சொதப்பல்கள் பட்டியலைப் பற்றி இம்முறை கேட்கப் போவதில்லை - simply becos அதற்கான பதில்கள் எனக்கே தெரியும் ! இருந்தாலும் - 'மிடிலே' பட்டியலின் TOP இதழாக எதைச் சொல்வீர்களோ ?
நியூட்டனின் விசித்திர உலகம்
4. உங்களைப் பொறுத்த வரையிலும் இந்தாண்டின் best moment எது ?
ஈரோடு புத்தக திருவிழா
5. நடப்பாண்டின் அனுபவங்களிலிருந்து 2020-க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பாடமென்று ஏதேனும் இருப்பின் - விளக்குங்களேன் புளீஸ் ?
Deleteஇவ்வருடம் தாங்கள் கடைப்பிடித்த AVANT –GARDE அணுகுமுறை .. எல்லைகளை விரிவாக்கும் பரீசாட்ர்த்த கதை தேர்வுகள் தொடரவேண்டும் ..உதாரணம் பராகுடா ,பிபிவி
உண்மையில் பழமையும் புதுமையும் கலந்த நமது இந்த வருடத்திய ஒருமாதிரியான ஹைபிரிட் நிலை மிகவும் பிடித்து இருக்கிறது
6. இந்தாண்டின் 5172 பக்கங்களில் நீங்கள் படித்திருப்பது உத்தேசமாய் எத்தனையோ ?
• இம்மாத கதை சொல்லும் கானகம் படித்தாகிவிட்டது .மீதம் உள்ளவை மிக விரைவில் படிக்க உத்தேசம் ..{கடுமையான நேர நெருக்கடி ...}
/////2020-ன் MAXI லயன் சந்தாவினில் "கார்ட்டூன் மறுபதிப்பு" என்று அறிவித்துள்ள ஸ்லாட்டுக்குள் உட்ஸிடியின் சிறப்பான சிரிப்புப் போலீசை நுழைக்கலாமா guys ? What say ? ////
கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாலுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒன்னிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
படிக்காதவர் ஆயினும் படித்த பெரியோர்களுடன் சேர்ந்து பழகினால், நல்லறிவு வாய்க்கப்பெறும். அழகும், மணமும் நிறைந்த பாதிரிப்பூ வைத்திருந்த பாண்டத்தில் உள்ள தண்ணீருக்கும் பூவின் மணம் கிடைப்பதைப்போல.
வுட்சிட்டி நாயகர்கள் பாதிரிப்பூ மாதிரி .. அவர்கள் வருவதால் லயன் மேக்ஸிக்குத்தான் பெருமை ..
//இவ்வருடம் தாங்கள் கடைப்பிடித்த AVANT –GARDE அணுகுமுறை .. எல்லைகளை விரிவாக்கும் பரீசாட்ர்த்த கதை தேர்வுகள் தொடரவேண்டும் ..உதாரணம் பராகுடா ,பிபிவி//
Deleteநன்றிகள் சார் ! இந்தப் பரீட்சார்த்தங்கள் T 20 -ல் ஆடப்படும் அந்த ramp shots ; scoop shots போன்றவை ! When they come off - looks spectacular !! சொதப்பிடும் பட்சம் கபாலத்துக்குக் கவசம் அவசியமாகிடும் !
///Anyways தெரிந்தே கூசாமல் புளுகியுள்ளமைக்கு சாரி guys !///
ReplyDeleteமனம்திறந்து வெளிப்படையாக 'புளுகியிருக்கிறேன்' என்று ஒப்புக்கொட்டு வருத்தம் தெரிவிப்பதெல்லாம் இந்த கலிகாலத்தில் சாதாரண சமாச்சாரம் இல்லை எடிட்டர் சார்!! உங்கள் நேர்மையான மனம் வாழ்க!
ஓரிரு இதழ்கள் இதுபோல சுமாராய் அமைந்துவிடுவது - ஒரு நீண்ட வருடத்தின் நெடிய பயணத்தில் - மிகச் சாதாரணமானது தான்! இயல்பானதுதான்!!
தவிர, ஒப்பிட்டுப் பார்க்கவாவது சில மொக்கை இதழ்கள் இருந்தால்தானே மெகாஹிட் இதழ்களின் அருமையை முழுமையாய் நாங்கள் உணர்ந்துகொள்ள முடியும்?!!
காமிக்லவர் ராகவன் ஏற்கனவே (இருமுறை) சொல்லியிருப்பதைப் போல, 2012க்குப் பிறகான நமது இரண்டாவது இன்னிங்சில் பலவகைகளிலும் (குறிப்பாய் நிறைய்ய்ய்ய சூப்பர்ஹிட் கதைகளைக் கொடுத்தவகையில்) சிறப்பானதொரு வருடமாக இவ்வருடத்தையே சொல்லலாம்!!
இவ்வருடத்தின் சாதனையை அடுத்தவருடமும் நாமே தகர்ப்போம் என்ற நம்பிக்கையும் நிறையவே உள்ளது!! வாழ்க்கையை ஒரு பிடிப்போடு, உற்சாகமாய் நகர்த்திச் செல்லும் மிகச்சில காரணிகளுள் பிரதான இடம் நம் காமிக்ஸுக்கு உண்டு!! ஒவ்வொரு வருடமும் இந்த உற்சாகம் கூடிக்கொண்டே செல்வதற்கு மிக முக்கிய காரணமே நீங்கள் தான்!! நீங்களின்றி அமையாது எங்கள் காமிக்ஸ் வாசிப்பு! உடல்நலம் குன்றியிருந்த வேளைகளிலும், பிரசவ வலியையொத்த வலிகளினூடேவும் கூட பல இரவுகளில் தூக்கம் தொலைத்து, எங்கள் முகத்தில் முகத்தில் புன்னகை அரும்பச்செய்திட உங்கள் கண்களில் கருவளையம் வாங்கிக்கொண்ட உங்கள் அயராத உழைப்புக்கு இருகரம் கூப்பி நன்றி சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கிறது, எடிட்டர் சார்!!
எல்லா வகையிலும் மனநிறைவான, உற்சாகமான வருடத்தை எங்களுக்கு அமைத்துக் கொடுத்த உங்களுக்கும், உங்களின் சின்னசிறு டீமிற்கும் நெஞ்சு நிறைந்த நன்றிகள்!! _/\_
இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!
வரிக்கு வரி வழிமொழிகிறேன்..
Deleteஅன்புக்கு நன்றிகள் சார்...! காமிக்ஸ் வாசிப்பின் மீதான பிடித்தம் தொடர்வதற்கு நமது பன்முகத்தன்மையே முக்கிய காரணம் என்பேன் ! ஒரே ஜானரிலான பயணமாய் இருப்பின், ஆண்டுக்கு 50 புக்குகளென்று போட்டுத் தாக்கும் போது அயர்வே மேலோங்கிடும் - ஓரிரு ஆண்டுகளுக்கு அப்பால் ! ஆனால் கிளைக்குக் கிளை...மரத்துக்கு மரம் தாவும் மந்தியைப் போல் வித விதமான முயற்சிகளில் தலையை விட்டுப் பார்க்க நாம் முனையும் போது ஒருவித freshness தொடர்வதாக எனக்கொரு யூகம் !
Delete77வது
ReplyDeleteஉள்ளேன் ஐயா.
ReplyDeleteசெப்- டிசம்பர் இதழ்கள் ஏதும் இன்னும் கைக்கு வரவில்லை. எனவே தீர்க்கமா பதிலா சொல்ல முடியலை.
1. செயல்பாட்டிற்கு மார்க்குகள் 10/10. சிறு சிறு குறைகள் இருந்தாலும், கடவுளின் படைப்பான மனிதனே ஏகப்பட்ட குறைகளோட இருக்கும் போது, எங்களின் திருப்தியே முதன்மை குறிக்கோளாக கொண்டு இயங்குவதால் 10/10.
2. 1. சிகரங்களின் சாம்ராட் 2. பராகுடா மற்றும் சி. சி. வ. 3. பிபிவி.
3. சொதப்பல். உங்களுக்கு தெரிஞ்சவர்தான்.
4 பெஸ்ட் மொமெண்ட்: ஈபுவி. பர்சனலா பாத்தா உங்களோடு பணியாற்ற கிடைத்த வாய்ப்பு.
5. புதுசு புதசா செய்யத் துடிக்கும் உங்களுடைய முயற்சிகள். உத்வேகம். 2020 க்கான அட்டவணையின் பேலன்சிங்.
6. செப் டூ டிசம்பர் படிக்கலை. பிப்ரவரியில் படிச்சிடுவேன்.
//புதுசு புதசா செய்யத் துடிக்கும் உங்களுடைய முயற்சிகள்//
Deleteஅதுக்குப் பஞ்சமே கிடையாது சார் ; இப்போது கூட ஒரு லவ்ஸ் ஸ்டோரியை எங்கனக்குள்ளே நுழைக்கலாம்னு திங்கிங் !!
ஙே..!
Deleteலவ் ஸ்டோரியா? நம்ம செயலர் மனசில பட்டாம்பூச்சி இப்பவே பறக்க ஆரம்பிச்சிருக்குமே.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசூது கொல்லும்:
Deleteடெக்ஸ் மற்றும் கார்சன் அட்டகாசம் செய்யும் அடிதடியான அக்மார்க் டெக்ஸ் கறி விருந்து. எதிரியின் கோட்டையான கப்பலில் புகுந்து வெடிக்கும் சரவெடி செமயா இருந்தது. எதிரியின் அடியாட்கள் இருவரை பார்க்கும் போதெல்லாம் துவைக்கும் இடம் கறி விருந்துக்கு வலுசேர்க்கும் விதம் இருந்தது.
கதைக்கு மற்றும் ஒரு ப்ளஸ் அதன் தெளிவான ஓவியம்.
எதிரியின் கையாளில் இருந்து தலைவன் வரை மிகவும் பயங்கரமானவர்கள் என அந்த ஊர் மக்கள் புலியை கண்டது போல் பயப்படுகிறார்கள். ஆனால் டெக்ஸ் முன்னாள் அவர்கள் எலியாகி விட்டனர்; ஆமாம் டெக்ஸ் என்ற சூப்பர் மேன் முன்னால் டைனோசர் கூட நடுங்கும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்மார்க் டமால் டூமீல் டெக்ஸ் கதை
சூது கொல்லும் போன்ற அக்மார்க் டெக்ஸ் கதைகளை வருடத்திற்கு ஒன்றாவது வெளியீடுகள் சார்.
ReplyDelete:-) :-)
Delete////ஒன்றிலிருந்து பத்துக்குள்ளானதோர் மதிப்பெண் பட்டியலில் 2019-ன் நமது செயல்பாட்டிற்கு உங்களது மார்க்குகள் என்னவாக இருக்குமோ ?////
ReplyDeleteஇந்த வருடத்தின் முழுமைக்கும் உங்கள் செயல்பாடுகள் மிக மிக நன்றாக இருந்ததாலேயே இத்தனை பெரிய வெற்றி ஆண்டாக அமைந்திருக்கிறது!! எல்லா மாதங்களிலுமே குறித்த நேரத்துக்கு முன்பாகவே புத்தகங்கள் வீடுதேடி வந்திருக்கிறது!! தயாரிப்புத் தரத்திலும் ஒவ்வொரு புத்தகமும் வியப்பை ஏற்படுத்தத் தவறவில்லை! குறிப்பாக அட்டைப்படங்கள் அனைத்துமே இவ்வருடம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது!! ஒவ்வொரு இதழின் தயாரிப்புக்குமே உங்களின் தனிப்பட்ட ஈடுபாடும் இல்லையெனில் இதெல்லாம் சாத்தியமேயில்லை!!
சுமாராய் அமைந்துபோன சாத்தானின் சீடர்கள், கு.கா.குற்றங்கள் உள்ளிட்ட ஒன்றிரண்டு கதைத் தேர்வுக்கு 0.25 மார்க்குகள் குறைத்துக் கொண்டதுபோக,
இவ்வாண்டிற்கான என்னுடைய மதிப்பெண்கள் : 9.75/10
//அட்டைப்படங்கள் அனைத்துமே இவ்வருடம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது!! //
Deleteதொண்ணூறு சதவிகிதம் ஒரிஜினல் டிசைன்களே என்றாலும், அவற்றிற்கு மெருகூட்டிய வகையில் நமது DTP கோகிலாவுக்கே இதன் க்ரெடிட் சாரும் !
1. செயல்பாட்டிற்கு மார்க்குகள் 8/10.
ReplyDeleteவெற்றிக்கு அருகில் இருக்கும் போது தான் வெற்றி பெற தூண்டுதலும் அதிகமாகும்.
2. 1. பிபிவி
2. பராகுடா
3. சிகரங்களின் சாம்ராட் மற்றும் ஜெராமையா
3. அனைத்து கதைகளையும் படித்து விடுவேன்.. ஆனாலும் தீபாவளி சிறப்பு மலரில் டெக்ஸின் கதை, தீபாவளி சிறப்பு மலருக்கான கதையல்ல என்பதுவே என் எண்ணம்..
4 பெஸ்ட் மொமெண்ட்: இந்த வருடம் மட்டுமல்ல, இனி வரும் வருடங்களிலும், ஈரோட்டு புத்தக விழாவில் நண்பர்களோடு இணைந்து மகிழும் இரண்டு நாட்களே..
5. தேடல்கள் தொடரட்டும்..
6. இரண்டு மூன்று புத்தகங்கள் இன்னும் படிக்கவில்லை.. நேரமின்மையெல்லாம் காரணமல்ல.. சூழ்நிலைகள் காரணம்..
அடடே...நீங்களும் ஜெரெமியா கட்சியா சார் ?
Delete:-):-):-)
Deleteநல்லவேளை நா ஜெரேமியா வாங்கல. நாங்களு தெறிச்சு ஓடி பதுங்குவோமுல.
Delete2019 ற்கான தங்களின் செயல்பாட்டிற்கு எனது மதிப்பெண் ..
ReplyDelete10/10
2019:ன் டாப் 3 இதழ்கள்
ReplyDelete1) பராகுடா மற்றும் பிஸ்டலுக்கு பிரியாவிடை
2 ) பாலைவனத்தில் ஒரு கப்பல் மற்றும் சிங்கத்தின் சிறு வயதில்
3) ட்யூராங்கோ மற்றும் கதை சொல்லும் கானகம்
தலீவரின் TOP 3 இதழ்களில் - "கதை சொல்லும் கானகம்" !! அடடே...!
Deleteநான் வளர்கிறேனே மாமி....ஐய்யயோ..இல்லே..இல்லே..நான் வளர்கிறேனே மம்மி moment#
:+)))))
Deleteதலைவரே நல்லா பாருங்க டாப் 3 தான் கேட்டுருக்காங்க, டாப் 6 இல்லை.......
Delete1. ஒன்றிலிருந்து பத்துக்குள்ளானதோர் மதிப்பெண் பட்டியலில் 2019-ன் நமது செயல்பாட்டிற்கு உங்களது மார்க்குகள் என்னவாக இருக்குமோ ?
ReplyDelete9/10 ..
2. 2019-ன் டாப் 3 இதழ்கள் உங்கள் பார்வைகளில் ? மூன்றே மூன்று மட்டும் ப்ளீஸ் ?
1. பராகுடா
2.அண்டர்டேக்கர் ,BOND 007
3.லக்கி ஐ சுட்டது யார் , சிங்கத்தின் சிறு வயதில் ,SHELDON துரோகமே துணை .
3. சொதப்பல்கள் பட்டியலைப் பற்றி இம்முறை கேட்கப் போவதில்லை - simply becos அதற்கான பதில்கள் எனக்கே தெரியும் ! இருந்தாலும் - 'மிடிலே' பட்டியலின் TOP இதழாக எதைச் சொல்வீர்களோ ?
JONATHAN CARTLAND ..
4. உங்களைப் பொறுத்த வரையிலும் இந்தாண்டின் best moment எது ?
ERODE BOOK FAIR ..
5. நடப்பாண்டின் அனுபவங்களிலிருந்து 2020-க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பாடமென்று ஏதேனும் இருப்பின் - விளக்குங்களேன் புளீஸ் ?
இந்த ஆண்டு GRAPHIC NOVEL போல் புது களங்கள் கொண்டு வாருங்கள் சார் ..
6. இந்தாண்டின் 5172 பக்கங்களில் நீங்கள் படித்திருப்பது உத்தேசமாய் எத்தனையோ ?
ALL SIR ...
//இந்த ஆண்டு GRAPHIC NOVEL போல் புது களங்கள் கொண்டு வாருங்கள் சார் ..//
Deleteதேடிக் கொண்டே இருக்கிறேன் சார் ; 2 பாக செம வித்தியாச ஆல்பம் ஒன்று கிட்டியுள்ளது இப்போதைக்கு !
ஏமாற்றமளித்த இதழ்கள்
ReplyDeleteகுளிர்கால குற்றங்கள்
நீரில்லை நிலமில்லை
வஞ்சம் மறப்பதில்லை..
நீரில்லை...நிலமில்லை, இது கிட்டதட்ட க்ரைம் ஸ்டோரி போல்.அது ஒரு கேம்.ஆங்கில படங்கள் இத்தகைய பாணி படங்கள் திரில் அனுபவம் கொண்டவை.இதற்கென ஓர் ரசிகர் கூட்டமே உண்டு. இக்கதையை பற்றி சில வரி விமர்சனம் கண்டிப்பாய் செய்வேன்.
Deleteபரணிதரன் கருத்தே எனதும்
Delete2019 ன் பெஸ்ட்
ReplyDeleteநண்பர்களும் ,ஆசிரியரும் கூடும் ஈரோடு புத்தக திருவிழா
5. நடப்பாண்டின் அனுபவங்களிலிருந்து 2020-க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பாடமென்று ஏதேனும் இருப்பின் - விளக்குங்களேன் புளீஸ் ?
ReplyDelete######
இதற்கு பதில் சொல்லும் அளவிற்கு எனக்கு வயதோ அனுபவமோ கிடையாது என்பதால் நோ கமெண்ட்ஸ் சார்..:-)
6. இந்தாண்டின் 5172 பக்கங்களில் நீங்கள் படித்திருப்பது உத்தேசமாய் எத்தனையோ ?
ReplyDeleteஅனைத்து பக்கங்களையும் படித்துவிட்டு அடுத்த பக்கத்தை தேடி கொண்டு இருக்கிறேன் சார்..:-)
மேக்ஸியில் கார்ட்டூன்
ReplyDeleteவேண்டாமே சார்..:-(
வொய்? அய்யனார் டூரிங் டாக்கீஸில் பார்த்த படம் நல்லா இருந்திச்சின்னா IMAX -ல் இன்னும் நல்லாத்தானே இருக்கும்.
Deleteதொன்னையில் வாங்கிய நெய்யை பெட்ஜாரில் வாங்கினா நல்லா இருக்கும்தானே? :-)
MAXI-ல் வந்துள்ள / வரவுள்ள லக்கி லூக் கதைகளை "கார்ட்டூன்" என்றில்லாது என்னவென்று வர்ணிப்பீர்களோ தலீவரே ?
Deleteஇனி வரும் மேக்ஸியில் # ஆக்ஷன்,அதிரடி என இருப்பின் சிறப்பு என்ற கருத்தில் பதிவிட்ட பதிவு சார்..:-)
Deleteதலீவரே..சில்லுமூக்குச் சிதறல்களும்...சிரிப்பின் சிதறல்களும் ஒரு தராசின் இரு பக்கங்களில் இடம் பிடித்தால் எந்தப் பக்கம் சிறப்பானதாய் இருக்குமென்பீர்கள் ?
Deleteஏற்கனவே ஆக்சன் அதிரடிக்கு தான் ஜம்போ இருக்கே
Deleteதலீவர் சொல்றதை தலீவரே கேக்கறதில்லை. அதனாலே கட்டாயம் சிரிப்பு போலீஸ் வரட்டும்.
Deleteகார்ட்டூன் கண்டிப்பாக வேண்டும்👍
Delete////2019-ன் டாப் 3 இதழ்கள் உங்கள் பார்வைகளில் ? மூன்றே மூன்று மட்டும் ப்ளீஸ் ?///
ReplyDeleteபார்ப்பதற்கு எளிமையான கேள்வியாகத் தோன்றினாலும், பதிலளிக்க ரொம்பவே சிரமமான கேள்வி இது!! மனதைத் தொட்ட வெற்றிப் படைப்புகள் இம்முறை ஏராளம் என்பதால் 'மூன்றுக்குள்' அடைப்பது அவ்வளவு சுலபமானதல்ல!!
படைப்பாளிகளின் மிதமிஞ்சிய கற்பனா சக்திக்காகவும், அற்புதப் படைப்பாற்றலுக்காகவும் வகைப்படுத்தினால் :
* சிகரங்களின் சாம்ராட்
* பராகுடா
* பிஸ்டலுக்குப் பிரியாவிடை
* துரோகமே துணை
'பெஸ்ட் எண்டெர்டெய்னர்' என்ற பிரிவின் கீழ் :
* சிங்கத்தின் சிறுவயதில்
* இருளின் ராஜ்ஜியத்தில்
* வதம் செய்ய விரும்பு
* நிழலும் நிஜமும் (007)
* வஞ்சம் மறப்பதில்லை
* ஒரு ரெளத்திர ரேஞ்சர்
* புதைந்துபோன புதையல்
'மூச்சை இழுத்துப் பிடிக்கும் வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த கதைகள்' என்ற பிரிவின் கீழ் :
* ஒரு இல்லத்தின் கதை
* நித்திரை மறந்த நியூயார்க்
* சிகப்பு ரோஜாக்கள்
* முடிவிலா மூடுபனி
'பெஸ்ட் கெக்கபிக்கேக்கள்' வகையின் கீழ் :
* உத்தம புத்திரன்
* நடனமாடும் கொரில்லாக்கள்
* மனதில் உறுதி வேண்டும்
* கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு
* விடுமுறையில் கொல்
'அடடே.. எதிர்பார்த்ததை விடவும் அருமையா இருக்கே!!' என்று ஆச்சரியப்பட வைத்த கதைகளின் கீழ் :
* லக்கிலூக்கை சுட்டது யார்?
* ஒரு பள்ளத்தாக்குப் படலம் (ட்ரெண்ட்)
* பழிவாங்கும் புயல் (மாடஸ்டி)
* ஜானி 2.0
(பி.கு : நியூட்டனின் புது உலகம், நீரில்லை நிலமில்லை, நித்தம் ஒரு யுத்தம் உள்ளிட்ட சில கதைகளை இன்னும் படிக்கவில்லை என்பதால், மேற்கண்ட எனது பட்டியல் இவை நீங்கலாக என்று எடுத்துக்கொள்ளலாம்!)
மூன்றே மூன்றைக் கேட்டு வைத்தால் மூச்சு விடாமல் முப்பதை பட்டியல் போடுகிறீர்களே ? சாமீ ? சங்கத்தின் மீட்டிங்குகளுக்கு உங்களை டிபன் ஆர்டர் செய்யச் சொல்லாத வரைக்கும் தப்பிச்சூ !!
Delete///இருந்தாலும் - 'மிடிலே' பட்டியலின் TOP இதழாக எதைச் சொல்வீர்களோ ?///
ReplyDeleteஆங்.. ரொம்ப சுளுவான கேள்வி இது!! கண்ணை மூடிட்டு பதில் சொல்லிடலாம்!
* கு.கா.குற்றங்கள்
* தனியொருவன்
* சாத்தானின்ஜீ யின் சீடர்கள்
'மிடிலே' பட்டியலில் எனது TOP இதழ் - "மரண வைரங்கள்" !! ஷப்பா !! கண்ணெல்லாம் வேர்த்துப் போச்சு !!
Delete//மிடிலே' பட்டியலில் எனது TOP இதழ் - "மரண வைரங்கள்" !! ஷப்பா !! கண்ணெல்லாம் வேர்த்துப் போச்சு !//
Deleteமுட்டை வாங்கி ஃபெயிலாவறது ஒரு ரகம்
முப்பது மார்க் வாங்கி பெயிலாவறது இன்னொரு ரகம்..:-)
பூஜ்யமோ - முப்பதோ - கொடுமை என்னான்னா இதெல்லாம் நாம் அந்நாட்களில் சிலாகித்த இதழ் என்பதே சார் ! மறுபதிப்புகளின் தேர்வுகளில் பெருசாய் மெனெக்கெடாது - பட்டியல்படி எவை இன்னமும் வண்ணத்தில் வெளியாகாது உள்ளனவோ - அவற்றை 'டிக்' செய்வது வாடிக்கை ! சில வேளைகளில் அத்தகைய 'டிக்'குகள் லொடுக்கு பாண்டிகளாகிப் போகின்றன !!
Delete:-)
Deleteரொம்ப நாளைக்கு பிறகு இங்கு பதிவிடுகிறேன்.
ReplyDelete1 ஒன்றிலிருந்து பத்துக்குள்ளானதோர் மதிப்பெண் பட்டியலில் 2019-ன் நமது செயல்பாட்டிற்கு உங்களது மார்க்குகள் என்னவாக இருக்குமோ ?
8
2. 2019-ன் டாப் 3 இதழ்கள் உங்கள் பார்வைகளில் ? மூன்றே மூன்று மட்டும் ப்ளீஸ் ?
1 பிஸ்டலுக்கு பிரியாவிடை
2 சிகரங்களின் சாம்ராட்
3 புதைந்து போன புதையல்
3. சொதப்பல்கள் பட்டியலைப் பற்றி இம்முறை கேட்கப் போவதில்லை - simply becos அதற்கான பதில்கள் எனக்கே தெரியும் ! இருந்தாலும் - 'மிடிலே' பட்டியலின் TOP இதழாக எதைச் சொல்வீர்களோ ?
of course ஜொனாதன் கார்ட்லண்ட் குளிர்கால குற்றங்கள்
4. உங்களைப் பொறுத்த வரையிலும் இந்தாண்டின் best moment எது ?
ஈரோடு திருவிழா
5. நடப்பாண்டின் அனுபவங்களிலிருந்து 2020-க்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பாடமென்று ஏதேனும் இருப்பின் - விளக்குங்களேன் புளீஸ் ?
ஹாரர் ஜானரும், சயின்ஸ் பிக்ஷன் ஜானரும் நம்ம வாசகர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்ற அந்த எண்ணத்தை நீங்கள் மாற்ற வேண்டும். எந்த ஜானரையும் ஏற்று கொள்ளும் பக்குவம் வந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன்.
என்னுடைய வேண்டுகோள் ஒரே ஒரு முறை 2021 இல் 48 இதழ்களில் ரெண்டு புக் .. ரெண்டே ரெண்டு புக் பரிட்சித்து பாருங்களேன்.
1 Valerian - சயின்ஸ் பிக்ஷன்
2 உங்கள் முதல் திகில் புத்தகத்தில் வந்த கதைகள் போல திரில்லர் variety - ஹாரர் (அதை இப்பொழுது படித்தாலும் i get goosebumps )
கண்டிப்பாக இது வரவேற்க படும் என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை.
அப்படியே பிளாப் ஆனாலும் ஜெராமையா, கு கு ஆகியவை விட கீழே போகவே போகாது.
(ஆதரவு வேணும் மக்களே.. இல்லையென்றால் இந்த ஜானர் வருமோ வராதோ )
6. இந்தாண்டின் 5172 பக்கங்களில் நீங்கள் படித்திருப்பது உத்தேசமாய் எத்தனையோ ?
டிசம்பர் பேக் இன்னும் வாங்க வில்லை, லயன் தீபாவளி மலர் மட்டும் பெண்டிங்.
Sci fi மற்றும் horror kku +100000
Deleteகண்டிப்பாக வரும். ஆனால் ஒரு சில வருடங்கள் ஆகலாம்.
Delete/// 1 Valerian - சயின்ஸ் பிக்ஷன்
Delete2 உங்கள் முதல் திகில் புத்தகத்தில் வந்த கதைகள் போல திரில்லர் variety - ஹாரர் (அதை இப்பொழுது படித்தாலும் i get goosebumps ) ///
சரியாக கூறியுள்ளீர்கள்👍
டியர் சார்,
ReplyDeleteஒவ்வொரு ஆண்டையும், கடந்த ஆண்டை விட சிறப்பான கோணத்திலேயே நகர்த்திச் செல்கிறீர்கள்..
எனவே 2019- என்பது நன்றாகவே கடந்து வந்திருக்கிறோம்.'
4திய கதைகள் - புதிய களங்கள் வெளிவந்ததும் சரிதான். அதிலிருந்து பழசு எத்தனை சதவீதம் தேவை - புதுக் களங்கள் எத்தனை சதவீதம் தேவை என்ற வடிவம் கிடைத்து இருக்கிறது அல்லவா. (உ-ம்) சந்தா D - வடிவமைத்தது.
மறுபதிப்பிற்கு லயன் - Maxi இதழ். என்று.
அப்றம் , லயன் Maxiயில் சிக் பில் தான் என்றில்லை. பக்கத்திற்கு 8 கட்டங்கள் கொண்ட ஒவ்வொரு ஹீரோக்களின் ஒரு இதழை வெளியிட்டு சிறப்பு செய்ய வேண்டும் மே.
ரிப்.ஜானியின் - விசித்திர நண்பன் (அ) சிவப்புப் பாதை .
ப்ரூனோ பிரேசிலின்-அப்பலோ படலம்.'.. என்று.
அப்றம், ெசான்னா கோச்சுக்காதீங்க.- " இரத்தப் படலம் "பாகம் 1 -யை மட்டும் Maxi _SIze-யில். இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்தாவது வெளியிட்டு விடுங்கள். (18 பாகங்களில் அந்த முதல் பாகத்தை மட்டும் எத்தனை முறை படிந்தாலும் ,ரசித்தாலும் அலுக்க வே மாட்டேன்கிறதே.) ப்ளீஸ் சார்..ii
// இரத்தப் படலம் "பாகம் 1 -யை மட்டும் Maxi _SIze-யில். இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்தாவது வெளியிட்டு விடுங்கள். (18 பாகங்களில் அந்த முதல் பாகத்தை மட்டும் எத்தனை முறை படிந்தாலும் ,ரசித்தாலும் அலுக்க வே மாட்டேன்கிறதே.) ப்ளீஸ் சார்..//
Deleteஅட நம்மாளு வாங்க வாங்க....👌👌 +1313131313
விஜயன் சார், வலது இடது கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு எல்லா பக்கமும் திரும்பி பார்த்தாலும் வெற்றி முகம் முழுத்திருப்தி மற்றும் ஆனந்த அனுபவமே.
ReplyDeleteஇருகரம் கூப்பிய நன்றிகள் பல பல, கப்பல்களின் கேப்டனாகிய உங்களுக்கும் நீங்கள் திரும்ப சொன்ன திசையில் வேகத்தில் செலுத்திய அலுவலக நண்பர்களுக்கு (நன்றிகள் கோடி).
ஜாலியான செய்தி என்ன இன்னா அந்த நான்கு ஐந்து மூன்று பாக கவ்பாய் கதைகள் தான் இருக்கும்
ReplyDeleteஉங்க பாஸிட்டிவ் சிந்தனை நன்றாக இருக்கிறது பாலன் சார்.
DeleteTOP 3. வரிசையில்.
ReplyDelete1. சிகரங்களின் சாம்ராட்
2.பரா குடா
3. பிஸ்டலுக்கு பிரியாவிடை.
மறுபதிப்புகளில் இதுவரை வெளியிடாத கதைகளை வெளியிடலாம்.
Trial / limited print run basisல் சயின்ஸ் பிக்ஷன் கதை ஒன்று வெளியிடலாம். கண்டிப்பாக வரவேற்பு இருக்கும்.
2019ல் ஜடாமுடி ஜானதன் தவிர மற்றவை எல்லாமே நன்றாக இருந்தன.
ஜெரமியா எனக்குப் பிடித்திருந்தது.
தனி ஒருவன்.ஜேம்ஸ்பாண்ட், வஞ்சம் மறப்பதில்லை மூன்றுமே மிரட்டலான சித்திரங்கள்.
மொத்தத்தில் 2019 ஏமாற்றம் இல்லாதது.
2020 அடுத்த லெவலுக்கு போகும் என்று நம்புகிறேன்
பராகுடா பற்றி எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு.இத்தகைய கதையை காட்டிலும் அடல்ட் ஒன்லி படிக்கலாம்.ஏன் Love story படிக்கலாம்.லயன் காமிக்ஸ்ல் இத்தகைய கதைகளை ஜீரனிக்க கடினமாய் இருக்கிறது.
Deleteமற்றபடி எனக்கு பிடித்தது பலருக்கு பிடிக்கிறது.இந்த நடைமுறையை புறம் தள்ளி விட முடியாது. அவர்களது ரசனைகளையும் ஏற்று கொள்ளமுடிகிறது.தனி ஒருவன், வ.ம.தில்லை படித்து விட்டு பதுங்கியவன் தான்.... ஜேம்ஸ்பாண்ட், ஜெரேமியாவை கண்டாலே தெறித்து ஓடுகிறேன்.
Deleteஎனக்கு பிடிக்காதது...பலருக்கு பிடிக்கிறது.
Delete// மொத்தத்தில் 2019 ஏமாற்றம் இல்லாதது.
Delete2020 அடுத்த லெவலுக்கு போகும் என்று நம்புகிறேன் // நானும்
// எனக்கு பிடிக்காதது...பலருக்கு பிடிக்கிறது //
Deleteஇயற்கை. நமக்கு பிடிப்பது பிறருக்கு பிடித்து விட்டாலோ அல்லது பிறருக்கு பிடிப்பது நமக்கு பிடித்து விட்டாலோ வாழ்கையின் சுவாரசியம் குறைந்து விடும் :-)
Real one.
Deleteஅடல்ஸ் ஒன்லி - யை தவிர்க்கலாம்
Deleteஜாலி ட்ரிப் செல்லலாம் என்று ஏமாற்றி அழைத்து செல்லப்படும் ஒரு நண்பர், பொய் பேசாமல், கடமையை மீறாமல் நேர்மையாக பணிபுரியும் ஒரு காவல் அதிகாரி மற்றும் மற்றவர்களை சந்தோசப் படுத்தி அதன் மூலம் வருமானம் ஈட்ட நினைக்கும் ஒரு தொழிலதிபர். இவர்கள் மூவரும் எப்படி ஒரு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரியால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் கதை. இவர்கள் மூவர் நேரடியாகவும் இன்னும் பலரும், அவர்களது குடும்பங்களுமே மறைமுகமாக பாதிக்கபடுகின்றனர். அந்த அதிகாரியின் அராஜகத்தினால் அந்த மூவருக்கும், மற்றவர்களுக்கும் ஏற்பட்ட உடல்நல குறைபாடு மற்றும் பொருளாதார சேதாரங்களும் அப்பப்பா.. நினைத்து பார்க்கவே கொடுமை.
ReplyDeleteஜாலி ட்ரிப் எனக் கூறி நண்பரை அழைத்து வரும் அந்த அதிகாரி அந்த நகரில் உள்ள விடுதியில் தங்க செல்கின்றனர். விஷயம் ஏதும் அறிய நம் அப்பாவி நண்பரோ வறுத்த கரி சாப்பிட செல்ல விரும்புகிறார். ஆனால் அந்த அதிகாரியோ கிஞ்சித்தும் அந்த எண்ணத்தில் இல்லை. அந்த நேரத்தில் மேலே குறிப்பிட்ட அந்த தொழில் அதிபரின் வேலையாட்கள் பக்கத்து அறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் விஷயமாக பேசிக் கொண்டு இருக்கின்றனர். உடனே இந்த அதிகார வெறி பிடித்த அதிகாரிக்கு கை நமைச்சல் எடுக்கவே கொஞ்சமும் நாகரீகமின்றி பக்கத்து அறைக்குள் அடாவடியாக நுழைகின்றார். முக்கியமான வியாபார ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் தன்னுடைய அடாவடி தனத்தை ஆரம்பிக்கிறார். இரண்டு அப்பாவிகள் அதிரடி தாக்குதலுக்கு உள்ளாகி ஜன்னல் வழியாக வெளியே வீசப்படுகின்றனர் .
தனது அதிகார மிடுக்கை மேலும் காட்ட விரும்பும் அந்த அதிகாரியோ அறையில் மீதி இருக்கும் இன்னொரு நபரிடம் பேச்சு கொடுக்கிறார். மேலும் அந்த அடிபட்ட அப்பாவிகளை பற்றியும், அவர்களுக்கு வேலை கொடுத்து அவர்களது குடும்பங்களையும் காப்பாற்றி வரும் அந்த தொழிலதிபர் பற்றியும் விசாரித்து கொண்டு அறையை விட்டு வெளியேறுகின்றனர்.
ஒரு நேர்மையான விசுவாசமான , யார் வம்பு தும்புக்கும் போகாத அப்பாவியான ஹோட்டல் பணியாளரிடம் சென்று தனது அதிகார மிடுக்கை காட்டுகிறார் அந்த அதிகாரி. இது வரை தான் உடைத்ததுக்கும், இனி மேல் தன உடைப்பதற்கும் பணத்தை கொடுத்து அராத்து பண்ணுகிறார்.
மேலும் அறையிலிருந்த அந்த நபரின் முதலாளியை காண செல்லும் அந்த அதிகாரி நம் நண்பருக்கு சுக்கா கறி வாங்கி கொடுக்காமல் பட்டினியாகவே அழைத்து செல்கிறார்.அங்கே சென்று பாதிக்கப் பட போகும் தொழிலதிபரின் விவரங்களையும் , அவரது ஆபீஸ் பற்றிய தகவல்களையும் கேட்டு கொண்டு அவர்களது ஆஃபீசுக்கே சென்று தனது அதிகார மமதையை காட்ட எண்ணுகிறார்.
ஏற்கனவே இந்த அதிகாரியால் பாதிக்கப்பட்ட அந்த இரு தொழிலாளிகளும் தங்களுடைய மேல் அதிகாரியிடம் தங்களுக்கு நேர்ந்த தாக்குதல் பற்றி முறையிட்டு கொண்டு உள்ளனர்.அங்கே வரும் அதிகாரியிடம் யார் நீங்கள் என்று கேட்கிறார் அந்த மேலதிகரி . உடனே தான் அந்த தொழிலதிபரை பார்த்தாக வேண்டும் என்று அதிகாரம் செய்கிறார்.
அதற்க்கு தொழிலதிபரின் நண்பர்கள் எல்லோரையும் எனக்கு தெரியும் , அது போக அந்த அதிகாரி காலையில் எழுந்ததிலிருந்து இன்னும் குளிக்கவில்லை என்பதையும் அந்த மேனேஜர் சுட்டி காட்டுகிறார். உடனே அந்த அதிகாரிக்கு ரௌத்திரம் ஏறி அதிகார மிதப்பில் அங்கிருக்கும் அனைவரையும் தாக்கி அங்கே ஒரு அசாதாரண சூழ்நிலையை உண்டாக்குகிறார் .
மேலும் அந்த அதிகாரியின் அக்கிரமங்கள் கட்டுக்கடங்காமல் செல்கிறது ..
பசி வயிற்றை கிள்ளுவதால் மீதி அக்கிரமங்கள் உணவு இடைவேளைக்கு பிறகு ...
ரம்மி என்னா அடி என்னா அடி
Deleteரம்மி @ லஞ்ச் சாப்பிட இவ்வளவு நேரமா? இல்லை ஒரு கிடாவை அடித்து பிரித்து ரசிச்சு சாப்பிட்டு கொண்டு இருக்கிறீங்களா? அல்லது கார்சனின் நண்பர் கதையை படித்தது வயிற்றுக்கு பிரச்சினையை கொடுத்து விட்டதா :-)
Deleteஉண்ட மயக்கம்.. நாளைக்கும் லீவு போட்டிருக்கேன்..... அக்கிரமத்தை தட்டி கேட்காமே விடமாட்டேன்..
Deleteவிடாதீங்க ரம்மி விடவே கூடாது
Deleteநன்றாக இருக்கிறது.
Deleteரம்மி மிக சிறப்பான நகைச்சுவை எழுத்தாற்றல் உமக்கு...
Deleteபாதி பாதியில் விடாமல் முழு விமர்சனத்தை எழுதி பிறகு பதிவிட்டால் இன்னும் கலகலப்பாக இருக்கும் :-)
பரிந்துரைப்பது அனைத்து டெக்ஸ் தீவிர ரசிகர்களும்..:-)
///உங்களைப் பொறுத்த வரையிலும் இந்தாண்டின் best moment எது ? ///
ReplyDeleteEBF தான் சார்!!
ஆனால் இம்முறை EBFஐ விட கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது - EBFக்கு ஒரு வாரம் முன்பு நம் காமிக்ஸ் நண்பர்களை அவர்தம் குடும்பத்தினரோடு ஒரு விழா அரங்கத்தில் சந்தித்து, ஒரு நாள் முழுக்கக் கொண்டாடி மகிழ்ந்தது!!
This comment has been removed by the author.
Deleteஒரு தங்கத் தடத்தில் - ரிங்கோ
ReplyDeleteடைகர், டெக்ஸ், டியூரங்கோவை எல்லாம் பார்த்துவிட்ட காரணத்தினால், அவற்றோடு ஒப்பிடும்போது ஒரு சராசரியான கௌபாய் கதை என்ற அளவில் தான் உள்ளது! தொடரும் கதைகளும் இதேபோல் தான் என்றால் ?? ம்ஹூம்!!?
மார்க் 5/10
அடுத்த வருடம் Ringo vukku no no no no
Deleteஎடிட்டர் சார்
ReplyDeleteஅடுத்த வருட மாடஸ்டி புக்கு போகிக்கு முன்னாடி கிடைக்குமாங்க சார் ? :-) ஹி ஹி :D :D
:-)))
DeleteTo set abla(i)z(s)e..:)
Blaise !! To set ablaze??:)
//
Deleteமாடஸ்டி புக்கு போகிக்கு முன்னாடி கிடைக்குமாங்க சார் ? :-) ஹி ஹி :D :D //
:-(
Yeah :) Blaize-ablaze - tongue twister if you repeat it :)
Delete1.9.9/10
ReplyDelete2.1.பராகுடா+சிங்கத்தின் சிறுவயதில்
2.சுறா வேட்டை+சிகரங்களின் சாம்ராட்
3.ட்யூராங்கோ+பி பி வி
3.1.குளிர்காலக் குற்றங்கள்
2.சாத்தானின் சீடர்கள்
3.ஜெராமயா
4.தீபாவளி மலர்
5.2019ல் பெற்ற வெற்றியை அடுத்தடுத்த ஆண்டுகளில் தக்க வைத்துக் கொள்க.
6.4000 பக்கங்கள்.மீதிப்படிக்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை.
MAXIயில் சிக்பில் வரத்தடையேதும் இல்லை.
ReplyDeleteடியர் எடி,
ReplyDeleteமாக்ஸியில் உட்சிடி பட்டாள அமர்க்களத்திற்கு எனது பச்சை கொடி இப்போதே ஏந்திவிடுகிறேன் !
நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் பதிலிட ஆசை, ஆனால் 1000 பக்கங்கள் கூட எட்டாத நான் மொத்த இதழ்களுக்கும் மார்க் போடுவது தகாது.
படித்தவற்றில் என்ற அடிப்படையில், 2019ன்
1. டாப் : பராகுடா, சிகரங்களின் சாம்ராட்
2. ஃப்ளாப் : நீரில்லை நிலமில்லை, ஜெரமியா
3. பெஸ்ட் : மூன்று கனமான இதழ்களை தாங்கி வந்த மே மாதம்
TOP 3
ReplyDeletePPV
PARAGUDA
S.S.VAYATHIL
2019 - மொத்தத்தில் நன்றாக இருந்தது.
ReplyDeleteதலீவரே..சில்லுமூக்குச் சிதறல்களும்...சிரிப்பின் சிதறல்களும் ஒரு தராசின் இரு பக்கங்களில் இடம் பிடித்தால் எந்தப் பக்கம் சிறப்பானதாய் இருக்குமென்பீர்கள்
ReplyDelete#######
யோசிக்க வேண்டிய விசயமே ..அப்ப கார்ட்டூன் வரட்டும் சார்..:-)
*********
தலீவர் சொல்றதை தலீவரே கேக்கறதில்லை. அதனாலே கட்டாயம் சிரிப்பு போலீஸ் வரட்டும்.
######
ஷெரீப் வேற மிரட்டுறாரு ..மேக்ஸியில் லக்கி வருமாயின் தாராளமாக " சிக்பில்லும் " வரலாம்..
( இது எனது சுய சிந்தனையாக பலமணி நேரங்கள் யோசித்து எடுத்த ஆழ்ந்த முடிவே தவிர யாருடைய மிரட்டலுக்கும் பயந்து அல்ல என்பதை அமெரிக்க ஏகாதிபத்திய அரசுக்கு எச்சரிக்கையாகவே சொல்லி கொள்கிறேன் )
நீங்கள் யாருக்குமே பயப்பட மட்டீர் என்று இந்த உலகமே அறியுமே தலைவரே
Delete1. 8/10
ReplyDelete2. பாரகுடா, சுறா வேட்டை, pp
3. குளிர்காலக் குற்றங்கள், பழி வாங்கும் புயல், லக்கி லூக்கை சுட்டது (too much ado about nothing)
4. பாரகுடா தான்
5. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது. கார்டூன் தனி சந்தா optional basisல் போடவும். I miss it.
6. 5172 + 2500 (சில இதழ்கள், பழைய இதழ்கள் மறு வாசிப்பையும் சேர்த்து)
சுறா வேட்டை பல நண்பர்களின் டாப் 3 இல் இருப்பது மிக்க மகிழ்ச்சி. ஒரு டாப் கிளாஸ் ஹாலிவுட் ஆக்சன் திரைப்படம் போல.
Deleteவணக்கம் ஆசிரியரே.
ReplyDeleteநடப்பாண்டின் உங்கள் பணிக்கான மதிப்பெண் 10.எதற்காக இந்த மதிப்பெண் என்றால் கால அட்டவணையை சொன்னபடி வெளியிட்டீர்கள்.மூன்று மாத புத்தகங்களை முன்னரே வெளியிட்டீர்கள்.பைவ் ஸ்டார் மிட்டாய் மற்றும் பன் ஆகியவற்றை வழங்கியமைக்கும் தீபாவளி வாழ்த்து அட்டை ஆகியவற்றிற்காகவும்.எனது பார்வையில் முதல் மூன்று இடம் எனும் போது இது கடினமான கேள்வி ஏனெனில் மொக்கை மூன்று இதழ்களை தேர்வு செய்வது எளிது.என்னைப் பொறுத்தமட்டில் பெரும்பாலான இதழ்கள் இட் புத்தகங்களே.எனது பார்வையில் முதல் இடம் சிங்கத்தின் சிறுவயதில்.ஒரு சகாப்தத்தின் வரலாற்றினை அன்பான தந்தை,நேர்மையான பணியாள் என்று தந்தை காண்பித்து,வீரமிகு சிறுவனாக டெக்ஸ் வில்லரைக் காட்டி,கிளைமாக்சில் விஸ்வாசத்தைக் காட்டி கதையை நிறைவு செய்கிறார்.காதலும் கடந்து போகும் கதைக்குப் பிறகு கண் கலங்கிப் படித்த காவியம் இது.இரண்டாம் இடம் பராகுடா அடிமை வாழ்க்கையை அழகாக சித்தரித்துக்காட்டிய காவியம்.மெய்யாலுமே படித்து முடித்ததும் கண்கள் கலங்கின.மூன்றாம் இடம் சூது கொல்லும்.உயிரோட்டமான சித்திரங்கள். வலுவான கதை.அதகளம் செய்யும் ஆக்சன்.முதல் பக்கத்திலிருந்தே விறு விறுப்பு.இந்த ஆண்டின் சிறந்த நிகழ்வு மேக்ஸி லயன்.கதைகள் இரண்டுமே அற்புதம்.இந்த ஆண்டுதான் முதன் முதலாக புத்தகவிழாவில் கலந்து கொண்டேன்.விவரிக்க முடியாத நிகழ்வு.நமது காமிக்ஸ் ஒரு சிறுவட்டம்.அதில் எத்தனை நிகழ்வு.காமிக்ஸ் உணர்வோடு கலந்து கொண்ட காமிக்ஸ் காதலர்கள்.ஆசிரியரின் குடும்பத்தின் எளிமை,அற்பணிப்பு,கடமை உணர்வு என்னை மெய்சிலிர்க்க வைத்தது.எழுத நிறைய உண்டு.மீண்டும் ஒரு பதிவில் எழுதுகிறேன். நன்றி ஐயா.
சூப்பர் விக்னேஷ்
Deleteநன்றி நண்பா
Delete1. Palaivanathil oru kappal - 1 place
ReplyDelete2. Sigarangilin Samrat - 2 Place
3. Irulin Rajyathil - 3 Place
இந்த வருடத்தின் மிகச்சிறந்த இன்னொரு தருணம் ஈரோடு புத்தக விழாவில் கலந்து கொண்டது. எனது முதல் வருட மீட்டிங் என்பதால் அதற்கு முன்பு இரு நாட்கள் தூங்கவே இல்லை. மேலும் நண்பர்கள் நம்மிடம் எப்படி பழகுவார்கள் என்று பயம். ஆனால் அட்டகாசமான அனுபவம் நண்பர்கள் அனைவரும் சகஜமாக பேசிட எடிட்டர் சார் ஜூனியர் உடன் வருகை தர அனைத்து நண்பர்களுடனும் கை கொடுத்து யார் என்று அறிமுக படுத்தி கொண்டு பிறகே மேடையில் அமர்ந்தனர். அதிலும் முன்பதிவு புத்தகங்களை பெற்று கொண்ட போது அனைத்து நண்பர்கள் முன்னிலையில் என்னை பற்றி எடிட்டர் சார் பேசியது எப்போதுமே என் நினைவில் இருக்கும்.
ReplyDeleteநண்பர்கள் ஓவோவெருவரும் ஈரோடு புத்தக விழாவினை மிகச் சிறந்த நினைவாக கூறுவது சரிதான். அழகான நிகழ்வு.
சார் 5250+900 கட்டியாச்
ReplyDelete10/10
ReplyDelete2.பரகுடா ,சூது கொல்லும் ,நடனமாடும் கொரில்லாக்கள்
3். மிடிலங்றது நீங்க சொன்ன அந்த நீரில்லை நிலமில்லை , சாத்தானின் சீடர்கள மிடிலேன்னது,,,,ரெண்டுமே சூப்பரோ சூப்பர் ,,,ஜெரமயா படிக்கல சார்
Super moment நம்ம மேக்சி அறிவிப்பும் குண்டு புத்தகங்கள் மூணு ஒட்டி வந்த நாளும்,,,பரகுடா ஒவியங்கல மிஞ்சிய வண்ணம் சேர்க்கையும்
Deleteநேத்துதான் சூது கொல்லும் படிச்சேன்,,,கேக்காம சாத்தும் டெக்ச மீண்டும் பார்த்த சந்தோசம் ,,,திகட்டா விறுவிறுப்பும் கூட,,,,
ReplyDeleteடெக்ஸ் ஆச தலவிரிச்சாட ,,,ரொம்ப எதிர் பார்த்து படிக்காத இருந்த டைகர காதலும் கடந்து போகும புரட்டுனா முக்காவாசிய முடிக்க பதினொன்று ,,,புதிய படிக்க விரைகிறேன்,,,டெக்ஸ் டெக்ஸ்தான் best moment ல இதையும் சேத்துக்கங்க கேக்காமலேயே
//புதிய படிக்க விரைகிறேன்// சாரி மீதிய படிக்க
Deleteஇன்னும் இருவதே கதைகள் சும்மா சந்தோசத்தை தெளிக்க காத்துள்ளன படிக்காமல்...
Delete1. 8/10
ReplyDelete2. (i) பராகுடா
(ii)பிஸ்டலுக்கு பிரியாவிடை
(iii)சிகரங்களின் சாம்ராட்
3. குளிர்கால குற்றங்கள்
4. ஈரோடு புத்தக விழா
5. இந்த ஆண்டின் கிராபிக் நாவல்களின் வெற்றியை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் கூடுதல் slot ஒதுக்கலாம்.
6. Sorry Sir, ஆகஸ்ட் வரை மட்டுமே படிக்க முடிந்தது. But, விரைவில் முடித்து விடுவேன்.
கூடுதல் இடம் ஒதுக்க முடியாவிட்டாலும் தனியாக முன்பதிவு அறிவிக்கலாம்.
Deleteடாக்புல் & கிட் ஆர்டின் கோ விற்க்கு தாரளமாக MAXI யில் இடம் கொடுக்கலாம் எனது தேர்வு நீலப்பேய் மர்மம்
ReplyDelete+100
DeleteSorry nanbargale....Nalla puthu kathaigala kepome
Deleteசுறா வேட்டை:
ReplyDeleteமுதல் சில பக்கங்களில் உள்ள ஆக்சன் sequenceஐ மிகவும் ரசித்தேன். அதற்கு வலு சேர்த்தது ஓவியம். வானத்தில் நிலா பெரியதாக, அதில் ஏதோ தெரிகிறது அருகில் பெரிய கட்டிடம்: கொஞ்சம் உயரம் குறைந்த உடன் நிலா சிறியதாக அந்த ஏதோ ஒன்று பாராசூட் என தெரிகிறது, கட்டிடம் மேல் ஒரு உருவம்: அடுத்து நிலவொளியில் பாராசூட்டில் வந்த உருவத்தின் கையில் துப்பாக்கி, அதேபோல் கட்டிடத்தில் உள்ள உருவம் கொஞ்சம் தெளிவாக அதனின் கையிலும் துப்பாக்கி: அடுத்து கட்டிடம் மேல் உள்ள உருவத்தின் நெற்றிப்பொட்டில் தோட்டா பாய்கிறது.
கதாசிரியர் இப்படி தான் எழுதி இருப்பார் என நினைக்கிறேன் அதனை அழகாக ஓவியம் மூலம் வசனமே இல்லாமல் காட்சிப்படுத்திய ஓவியருக்கு ஸ்பெஷல் சபாஷ்.
கதையை முழுவதும் படிப்பதற்கு முன் எழுதத் தோன்றியது.
விஜயன் சார், மார்ஷல் சைக்ஸ் ஜம்போ சீசன் - 2ஆ அல்லது 3ஆ? இந்த மாத ஜம்போ இதழில் சீசன் 2 என உள்ளது. எனவே இவர் எப்போது எங்கள் கைகளில் தவழ்வார்?
ReplyDeleteபரணி ஜம்போ 2 வில் இன்னும் இரண்டு புத்தகங்கள் உள்ளன.
Delete1. மார்ஷல் சைக்கஸ்
2. Zaroff அமேசன் கானகத்தில் நடக்கும் கதை.
அடுத்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தான் ஜம்போ 3 ஆரம்பம்.
நன்றி குமார்.
Deleteஇம்மாத கதைகளை அனைத்தும் படித்துவிட்டேன்
ReplyDeleteமிகவும் பிடித்தது : சூது கொல்லும் . ஆரம்பம் முதல் அதிரடியாய் இருந்தது. நிறைய இடங்களில் ரசிக்க கூடிய வசனங்கள். உதாரணத்திற்கு, ஒரு இடத்தில் கார்சன் கேட்பார் : "டெக்ஸ் நீ தானே இவர்களை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தது" அதற்க்கு டெக்ஸ் சொல்லும் பதில் சூப்பர் " அடிச்சது நான்தான் ஆனால் ஜன்னல் வழியாக விழுந்தது அவரவர் தனி சாகசம்" :-)
ஜேம்ஸ் பாண்ட் : சிம்ப்லி சூப்பர்
கதை சொல்லும் கானகம் : எனக்கு இந்த பிளாஷ் பேக் சுத்தமாய் புரியவில்லை, சாரி !
ரிங்கோ : நோ கமெண்ட்ஸ்
ரௌத்திரம் மற : கதை ஓகே ஆனால் முடிவுதான் எனக்கு ஏற்றுக்கொள்வதாய் இல்லை. மெக்ஸிகோவில் ஒரு சிறையில் நான்கு வருடம் இருந்து வெளிவரும் ஒருவரை டெக்ஸ் திடிரென்று வந்து அவரை காப்பாற்றுவது நம்பும் படியாக இல்லை.
டெக்ஸ் நானும் மிக ரசித்த இடம்
DeleteWell reviews.
ReplyDeleteஎல்லாம் சரி சார்....நம்ம ஆர்ட்டின்...பின்னால் பற்போமே...புதிய கதைகள் அல்லது ஸ்பைடர் விண்வெளிப் பிசாசு அல்லது புது கதைகள் சும்மா தூள் கிளப்ப வரட்டுமே
ReplyDeleteஸ்டீல்