நண்பர்களே,
வணக்கம். நேற்று காலையே கூரியர்கள் சகலமும் புறப்பட்டுவிட்டன என்பதால், இந்நேரத்துக்கு அவற்றின் பெரும்பான்மை உங்கள் ஊர்களை எட்டிப் பிடித்திருக்க வேண்டும் ! So இன்றைய பொழுதில் முதல் புரட்டலுக்கென கொஞ்சமாய் நேரம் ஒதுக்கிட முடிகிறதாவென்று பாருங்களேன் ?
அப்புறம் சந்தாப் புதுப்பித்தல் தொடர்பாய் ஒரு கடுதாசியும் டப்பிக்களில் இணைக்கப்பட்டிருக்கும் ! ஏற்கனவே புதுப்பித்துவிட்ட நண்பர்கள் அதனை பொருட்படுத்த வேண்டாமே ! And புதுப்பித்திடவுள்ள நண்பர்கள் அதன் பொருட்டு கவனம் செலுத்திடக் கோருகிறேன் ! Please guys !!
மீண்டும் சந்திப்போம் ! Bye for now !
பி.கு. : ஆன்லைன் லிஸ்டிங்குகள் போட்டாச்சு :
1வது
ReplyDeleteநல்லது!
ReplyDeleteவணக்கம்!!
ReplyDeleteடைலன் மார்ட்டின் மற்றும் ராபின் இவைகள் கருப்பு வெள்ளையில் வருவதே சிறப்பு. கலரில் சோபிக்காது.
ReplyDeleteஇம்மாதம் வந்த டைலன் நன்றாக இருந்தது.
ஜூலியா கதையின் படங்கள் தெளிவாக திருத்தமாக இருந்தது இதை போன்ற படங்களை கலரில் வெளியிடாமல் கருப்பில் வெளிவருவதே நலம்
+1
Deleteகருப்பில். - கருப்பு வெள்ளையில்.
Deleteநாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஜூலியா கதைகளும் சரி, டைலன் டாக் 2.0 கதைகளும் சரி - கருப்பு-வெள்ளையில் மட்டுமே சாத்தியம் சார் ! அவற்றினை போனெல்லியே b & w-ல் தான் உருவாக்கியுள்ளனர் !
Deleteஅடடே,புதுப் பதிவு.....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவாவ் சூப்பரு சாரே 🙏🏼🙏🏼🙏🏼
ReplyDelete.
மாடஸ்டி பிளைசி
ReplyDeleteவாழ்க! வாழ்க!
Deleteவணக்கம் காமிக்ஸ் காதலர்களே....
ReplyDelete// So இன்றைய பொழுதில் முதல் புரட்டலுக்கென கொஞ்சமாய் நேரம் ஒதுக்கிட முடிகிறதாவென்று பாருங்களேன். //
ReplyDeleteஇங்கே கூரியர் கொடுப்பவர்கள் மனம் வைக்க வேண்டுமே சார்....
சார் மினி டெக்ஸ் முன்னோட்டம் இல்லையா.....
ReplyDeleteவணக்கமுங்கோ
ReplyDeleteபுத்தகங்கள் பழைய வீட்டு முகவரிக்கு செல்லும், இன்று அங்கு புத்தகங்கள் வந்து விட்டதா என கேட்டு மாலையில் போய் வாங்கி வர வேண்டும்.
ReplyDeleteநானும் வந்து விட்டேன்
ReplyDeleteரிங்கோ - வாங்கோ வாங்கோ! (நல்வரவு)
ReplyDeleteடெக்ஸ் - என்னுக்குமே அலுக்காத மசாலா மிக்ஸ்!
கி.நா - உள் மனசுக்குள் ஒரு கானா!
ஜேம்ஸ் - அடிச்சு தூள்கிளப்பு மாம்ஸ்!!
விஜய் வீராச்சாமி ஆன தருணம்..!
Deleteகண்ணா ஹிஹிஹி உண்மை
Deleteதாடி எதாச்சும் வச்சிருக்காருனு செக் பண்ணணும்.:-)
Deleteஏ டண்டணக்கா..
Deleteஏ டணக்குணக்கா...
Meesa
Deleteஉள்ளேன் ஐயா..!
ReplyDeleteகும்புடுறேனுங்க..!
ReplyDelete23rd
ReplyDeleteX24
ReplyDelete24*7?
DeleteOnnum pannala
DeleteOnnum pannala
Deleteதகவல் வந்தாச்சு ..
ReplyDeleteஆனா பார்சலை நாளை தான் கைப்பற்ற வேண்டும்...
தகவலும் வந்தாச்சு ... பார்சலும் வாங்கியாச்சு தலைவரே.்்்்்்்்்
ReplyDelete******* இளவரசி தூள்பறத்தும் - பழிவாங்கும் புயல் ******
ReplyDeleteநல்ல கதை!!
எனக்குப் பிடித்திருக்கிறது!
இளவரசி - கார்வினுக்கு இடையேயான நட்புக்கு பெருமைப் சேர்க்கும் கதை!
சித்திரங்கள் செம!
வசனங்கள் ஓகே!
அட்டைப்படம் அருமை!
என்னுடைய ரேட்டிங் : 9.25/10
அப்படி சொல்லுங்க EV . Same pinch. இதை நீங்க டாக்டர் க்கு பயந்து சொல்லவில்லை தானே 🤭
Deleteயாருக்கும் பயப்படாம மேச்சேரி ராஜேந்தர் வந்து விமர்சிப்பாரு. ஆனா சிக்கலே அந்த அம்மிணி கதையை படிக்க அவரு பயப்படறது தான்.
Deleteபயமெல்லாம் ஒண்ணுமில்லீங்.. ஒரு மருவாதிதானுங்..!
Deleteஅந்த அம்மிணிக்கு நம்மளைய மாதிரி யூத்துகளை புடிக்கிறதில்லீங்களாமா.. ரிட்டேரான பெரிய மனுசங்களத்தான் புடிக்குமுங்களாம்..
அதனாலதானுங் அம்மிணி பக்கமா நானு தலைவெச்சி படுக்குறதில்லீங்..!
//அந்த அம்மிணிக்கு நம்மளைய மாதிரி யூத்துகளை புடிக்கிறதில்லீங்களாமா..//
Deleteஊருக்குள்ள அப்படித்தான் பேசிக்கிட்டாங்க...
இந்த ஆண்டின் நிறைவு இதழ்களை எதிர்நோக்கி!
ReplyDelete"மாடஸ் டியின் கதை "யையும் இணைத்து வெளியிட்டிருந்தால் - கார்வினின் பழிவாங்கும் வீர்யம் புரிபட்டிருக்கும்.
ReplyDeleteநானும் அதன் பின் (2020)யில், - மாட ஸ்டி வெளியிட வில்லை என்றால் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்.
நல்ல வேளை - 2020-யில் மாடஸ்டி இருக்கிறார். ஜுலியா தான் விடுபட்டு விட்டார். சோகமே ..i
+1
Deleteமாடஸ்டியின் கதை சேர்ந்தே வரும் என நினைத்திருந்தேன். ஆசிரியர் ஏனோ அதனை தவிர்த்து விட்டது ஏனென்று புரியவில்லை ஹூம்........
Deleteபணியாற்றும் கோணத்தினில் ஜூலியா amongst the toughest சார் ! ஆயாசமாகிப் போய் விடுகிறது அந்த ஒற்றைக் கதையினைக் கரை சேர்ப்பதற்குள் !
DeleteBooks arrived
ReplyDeleteOpening only Tuesday.hmmm.
ReplyDeleteApadiye adutha jumbo slot la 007 add pannirungo sir...
ReplyDeleteஜேம்ஸ் இருக்கார் நண்பரே. ஜம்போ 3 இல்
Deleteசார் காலை எட்டு மணிக்கு கூரியர் அழைப்பால் புத்தகத்தை கைப்பற்ற ...சந்தோசமாய் பிரிக்க புத்தக அட்டைகள் அருமை ...எப்பவும் போல அனைத்து கதைகளையும் ஐந்து பக்கங்கள் நுனிப்புல் மேய்ந்ததில் அட்டகாசம் ...துவக்கம் முதலே ஈர்ப்பு...அதிலும் அந்த ரிங்கோ முன்னால் வரும் காட்சி அட்டகாசம்... வண்ணக்கலவைகளும் சும்மா செம பாண்ட் அதிர வைக்குது...சீக்கிரம் படித்ததும் பகிர்கிறேன்...கானகம் வேர லெவல் போலும்....உற்சாகம் ஆரம்பம்...நன்றிகள்....
ReplyDeleteஸ்டீல் kளா
டெலிக்ராம் ஆபீஸ் மூடிய கவலை மறந்தூ ! ஸ்டீல்க்ராம் தான் இருக்கே !!
Deleteஆமா..ல்ல
Deleteஸ்டீல்க்ளா
பஸ் பயணத்தில் 007 படித்தாகிவிட்டது.. கதை எக்ஸ்பிரஸ் வேகம்... சித்திரங்கள் அதற்கு ஒரு படி மேலே. 007 பாறையை பிடித்து தொங்க, தலைக்குமேல் கார் பறக்கும் காட்சி அமேசிங்..
ReplyDelete///சித்திரங்கள் அதற்கு ஒரு படி மேலே. ///
Deleteசித்திரங்கள் மேல் படியிலன்னா.. கதை கீழ் படியில..! அப்படீன்னா.. பஸ்ஸுல படிக்கட்டுல உக்காந்து பயணம் பண்ணியிருக்கீங்க போல.!
இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது....
DeleteBond 2.0 கதை சொல்லும் பாணிகளில் அடுத்த லெவல் !
Deleteமத்தியானம் ஆபீஸுல தூங்கும்போது ஆத்தா கனவுல வந்து ஒரே அழுகாச்சு! ஆத்தாவை ஒரு வார்த்தை கூட பேச விடலை நான். "புரிஞ்சுடுச்சு ஆத்தா.. இன்னிக்கு கொரியர் டப்பியை கொண்டு சேர்க்க முடியாத அளவுக்கு இக்கட்டான வேலையில மாட்டிக்கிட்டே - அதானே? பர்ர்ர்ரால்ல ஆத்தா.. நாளைக்கோ நாளன்னிக்கோ உனக்கு வசதியப்போல கொண்டு வந்து கொடு. இப்ப கண்ணத்தொடச்சுட்டு கடமைய நோக்கி கிளம்பாத்தா"ன்னு சொல்லி அனுப்பி வச்சேன்!
ReplyDeleteகடவுளுக்கும் கஷ்டமான வேளைகள் வரத்தான் செய்யும்.. நாமதான் புரிஞ்சு நடந்துக்கணும்!
பழைய பாக்கிக்காக பழி வாங்கப்பட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் குருநாயரே..!
Deleteஆத்தா பாவம்...
DeleteCoozhatha...coolatha
Deleteஅப்படின்னு ஆத்தாகிட்ட சொல்லிட்டு உங்க தூங்கர கடமையை,விட்ட இடத்திலிருந்து கண்ட்னின்யு பண்ணீங்க தானே.
Deleteஎன்ன ஒரு கடமை உணர்ச்சி.
Deleteமுதல் புரட்டலில்..
ReplyDeleteகதை சொல்லும் கானகம் : சித்திர மாயாஜாலம்
ப்ப்ப்பா.. கருப்பு வெள்ளையில் என்னமா செதுக்கியிருக்காரு ஓவியர் மாக்ஸ் அவகாட்ரோ..!
சூது கொல்லும் : கண்ணை உறுத்தாத வெளிர் வண்ணங்களில் ஆன அட்டைப்படம் செம்ம.! இம்மாத்தின் சிறந்த அட்டைப்படம் இதுதான்.. (என்னளவில்)
ரிங்கோ : தங்கத் தடத்தில் .. என்ன ஒரு பொருத்தமான தலைப்பு. (முதல்ல இதைத்தான் படிச்சின்ட்ருக்கேன்.) வான்ஸின் ஜாலம்.. வண்ணத்தில் பட்டாஷ்..!
சுறா வேட்டை : பாண்ட் ப்ரியனான நான் வேறென்ன சொல்லப்போறேன்.. சூப்பர் என்பதைத் தவிர.!
ரௌத்திரம் மற : 48 பக்க மினி டெக்ஸ் பாம்.! வண்ணக்கலவை மெக்சிகோவுக்கே சுண்டி இழுக்கிறது.!
கதை சொல்லும் கானகம் & ரௌத்திரம் மற & சுறா வேட்டை - மூன்றும் படித்தாகிவிட்டது. மூன்றுமே முத்துக்கள்..... மற்ற இரண்டும் இது போலவே இருக்கும் என நம்பிக்கை உள்ளது..
Delete"கதை சொல்லும் கானகம்" பெறவுள்ள reactions எவ்விதமிருக்கும் என்ற curiosity இம்மாதம் எனக்கு !
Deleteடெக்ஸ்: வழக்கம் போல் சிவிடெல்லி ன் அசர வைக்கும் ஓவியம். இவர் டெக்ஸ் க்கு பணியாற்றியது எல்லாம் டபுள் ட்ரிபிள் ஆல்பங்கள்தான் என்றாலும் எப்போவாவது இது போன்ற ஓன் ஷாட் ஆல்பங்கள் அபூர்வமாக. அந்த வகையில் டெக்ஸ் ன் ஒரிஜினல் வரிசையில் 323 வெளியீடாக வந்தது.
ReplyDeleteசிவிடெல்லியின் ஆரம்ப கால ஓவியம் என்றாலும் இப்போதுள்ள நேர்த்தி காணலாம் சிவிடெல்லி அப்போதே அப்படிதான் போலியிருக்கிறது. இதன் ஒரிஜினல் வெளி வந்தது 1987 September மாதம். சித்திரம் சிவிடெல்லி கைவண்ணமென்றாலும் அட்டை டிசைன் காலப்பினி.
Graphics Novel: கதையின் தலைப்பே ரொம்ப எதிர் பார்க்க வைக்கிறது. மாக்ஸ் அவகாட்ரோ வின் சித்திரங்கள் வேற லெவல். நித்திரை மறந்த நியூ யார்க் இவரது கைவண்ணமே. இதில் லைன் ட்ராயிங் அண்ட் கேன்வாஸ் ட்ராயிங் என கலக்கி உள்ளார்.
JamesBond 007: அட்டையில் சுறா வேட்டை எழுத்துருவே அட்டகாசம். சுறா எழுத்தில் சுறா பற்கள் ஆகட்டும் வேட்டையில் புல்லட் ஆகட்டும் ரசனை + ரகளை. மிக குறைந்த வசனமும் நிறைந்த சித்திரமும் மிரட்டுகின்றன.
ரிங்கோ : வான்ஸ் இஸ் வான்ஸ் சித்திரங்கள் புராண நெடி அடித்தாலும் ஓல்டு இஸ் கோல்ட். அடுத்த வருசம் ரிங்கோ ப்ளீஸ். கூடவே கதை தங்க தேட்டை எனும் போது டபுள் ஓகே.
And pls. Confirm which one is coming in January issue for subscription D. In Hot line mentioned young Tex whether in trailor 007 James Bond (old).
M H Mohideen
Pinnal parungo ...Tex Mela bond sticker....athanala athaane
Deleteஸ்டீல் இருக்க பயமேன் ?
Deleteரௌத்திரம் மற - அடேயப்பா...
ReplyDeleteமெக்சிகோ பாலை நிலத்தின் வெயில் ஓவியமாகி, தபாலில் வந்து, இந்த மழை நேரத்திலும் இங்கே என் கண்ணை சுட்டெரிக்கிறது. அவ்வளவு அட்டகாசமான ஓவியங்கள். பாலைவன காட்சிகள், பண்ணை சம்பவங்கள், விருந்து உபசார காட்சிகள், பள்ளத்தாக்கு துப்பாக்கி சண்டை காட்சிகள், குழந்தையின் அழுகுரல் கேட்டு தாக்குதலை கைவிடும் கொடியவர், இறுதியாக ஜெயிலுக்கு வெளியே நடக்கும் அந்த அதிரடியான காட்சிகள்... குட்டியூண்டு கதையில் எத்தனை பிரம்மாண்ட சங்கதிகள்.
அட்டைப்படத்தோடு சிறப்பாக வெளி வந்திருக்க வேண்டிய கதை.
அட்டைப்படம் இருந்தாலும், இல்லாது போனாலும், கதை அதுவே தானே ஜகத் ?
Deleteரௌத்திரம் மற - கலர் டெக்ஸ்
ReplyDeleteடிசம்பர் மாத பார்சல் பிரித்தவுடன் முதலில் கவர்ந்தது இந்த 48 பக்க இன்ப அதிர்ச்சி ”ரௌத்திரம் மற”. அடடா என்னவொரு அதிரடியான கதைக்களம். ஒரே வார்த்தையில் ‘செம்ம’. இது ஒரு காதல் கதைங்க. இல்லை இல்லை இது ஒரு குடும்பக் கதைங்க. இல்லை இல்லை இது ஒரு பழிவாங்கும் கதைங்க. அப்படிலாம் அவசரப்பட்டு முடிவு பண்ணிடாதிங்க இது எல்லாமும் கலந்த கலவைதாங்க இந்த ரௌத்திரம் மற. இந்த மாத புத்தகங்களில் கலர் டெக்ஸில் இருந்து ஆரம்பியுங்கள். இந்த மழை நாளில் அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.
போன தடவையின் கலர் TEX குட்டியூண்டு கதையின் அதிருப்தியினை இந்த 48 பக்க சாகசம் மறக்கடித்தால் ஹேப்பி அண்ணாச்சி !
Deleteவிலையிலா கலர் டெக்ஸ் இந்தமுறை 48 பக்கங்களா?!!! அட்ராசக்கை அட்ராசக்கை!!
Deleteவணக்கம் சார்,
ReplyDeleteகோபி ST கூரியர் நிர்வாகம் மாறிவிட்டதால் போன மாதமே ஒரு வாரம் கழித்து தான் புத்தகம் கிடைத்தது!
இந்த மாதம் இதுவரை பார்சல் வந்ததா இல்லையானே தெரியலை!
எதிர்வரும் 2020 க்கு ST கூரியரில் அனுப்பவே சந்தா கட்டியிருக்கிறேன்! அதை போஸ்டலுக்கு மாற்றிக் கொள்ளலாமாங்க சார்! கூடுதல் கட்டணம் எவ்வளவு?
DTDC வேண்டாமா சார் ?
Deleteஎனக்கு சேலத்தில் DTDC தான் சும்மா அனுப்பிய மறுநாள் கிடைத்து விடும். First class service
Deleteஎனக்குந்தான்
Deleteசும்மால்லாம் அனுப்ப மாட்டாங்க சார். கூரியர் க்கும் சேர்த்து தானே நீங்க சந்தா கட்டுநீங்க.
Deleteஎடி சார்.என் இந்த ஓரவஞ்சனை.அவருக்கு மட்டும் சும்மா அனுப்பரீங்க.
Deleteசுறா வேட்டை .. சூப்பர். அதகளமான ஒரு ஹாலிவுட் படம் பார்த்த பீலிங்.. இன்னிக்கே இன்னொரு தடவை படிச்சுப்புடனும்..
ReplyDeleteஅடடே !
Deleteடியர் எடி, நேற்றே பெங்களூரூம் வந்து சேர்ந்து விட்டது .... முதல் வாசிப்பில் தற்போது 'கானக கதை'. முடித்துவிட்டு கருத்து பகிற்கிறேன்.
ReplyDeleteவெயிட்டிங் சார் !
Deleteஒரு வாரமாய், உங்கள் பதிவுக்காக waiting sir... ஆனால் பதிவோ அமீபா சைஸில்... disappointment... கொஞ்சம் பாத்து பண்ணுங்க edi sir☺
ReplyDeleteசற்றுமுன்பு கொரியர் பையனிடமிருந்து ஃபோன் வந்தது! "சொல்லுங்க ஆத்தா" என்றேன்!
ReplyDeleteஅவன் ராங் நம்பர் என்று சொன்னானா?
Delete@Kumar Salem
Deleteவயித்தெரிச்சல் வயித்தெரிச்சல்!
எரிச்சலுக்கு கூழ்
Deleteதூக்கத்திலிருந்து எழுப்பினா வூட்டமா கிட்டர்ந்து ஃபோன் வந்தாலும் ,சொல்லுங்க ஆத்தா தான்.
Deleteஇந்தமாதப் புத்தகங்கள் எல்லாமே அட்டைப்படம் & தயாரிப்புத்தரத்தில் மனதை அள்ளுவதாக ஆத்தாவின் அருளால் நேற்றே புத்தகங்கள் கைவரப்பெற்ற நண்பர்களிடமிருந்து செய்திகள் வந்தபடியே உள்ளன!!
ReplyDeleteமகிழ்ச்சி மகிழ்ச்சி!!
கதைகளும் பட்டையைக் கிளப்பும் என்பதிலும், மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் மாதமாக இது அமையும் என்பதிலும் ஐயமில்லை!
2019 முடிஞ்ச்!
ஆத்தாவின் அருளால் இந்தமாத புத்தகங்களை கொரியரில் வாங்கியவர்களெல்லாம் அடுத்தமாசமும் இதே மாதிரி வரும்னு நம்பிட்டிருக்கப்படாது! இந்தமாச சந்தா இதோட முடிஞ்ச்! அடுத்தமாசம் புக்கு வீடு வரணும்னா ஆத்தாவை மட்டும் நம்பிப் பிரயோசமில்லே - சந்தாவை புதுப்பிச்சிருக்கணும்!
ReplyDeleteஇதுவரை கட்டாதவங்க சட்டுபுட்டுனு கட்டி சந்தா நம்பரை வாங்கிக்கிடுங்க. அப்பத்தான் புக்கு வர லேட்டாச்சுன்னா சிவகாசிக்கு போன் போட்டு 'அலோ.. லயன் ஆபீஸா? அல்லாருக்கும் புக்கு வந்து மூனு நாளாச்சு.. எனக்கு மட்டும் இன்னும் வரலியேம்மா? என்னம்மா இப்புடிப் பண்றீங்களேம்மா.." என்று ராவு ராவுன்னு ராவ முடியும்!
சந்தா கட்டுங்க.. பந்தாவா மிரட்டுங்க!
சூது கொல்லும். பட்டாசாக பரபரக்கும் கதை. ஒரு லாஜிக் ஓட்டையில்லாத தமிழ் மசாலாப் படத்தைப் பார்த்த திருப்தி. தீபாவளிக்கேஇந்த இதழ் வரவில்லையே என்று எங்க வைத்தது. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteடெக்ஸ் டெக்ஸ் தான். ஆகா அட்டகாசம். இரண்டுடெக்ஸூமே2020 சந்தாப்பதிவு சீக்கிரம் சீக்கிரம் என்று என்னைப் பரபரக்கவைத்துவிட்டன. கரூர்ராஜ சேகரன்
ReplyDeleteசார் தங்கத் தடம் சூப்பர் சார்
ReplyDeleteஅந்த ஆயிரத்தைனூறு பக்க கௌபாய .....மறந்துட்டியல
Deleteமறக்க மாட்டேன் மாதம் ஒரு முறை ஞாபக படுத்து வோம்
Deleteஜனவரி வெளியீடு குறித்த அறிவிப்பில் காமிக்ஸ் டைமில் சந்தா D யில் இளம் டெக்ஸ்-எதிரிகள் ஓராயிரம் என்று உள்ளது.
ReplyDeleteஅதே நேரத்தில் இதழின் கடைசியில் வரும் அடுத்த வெளியீடுகள் விளம்பரத்தில் சந்தா D யில் ஜேம்ஸின்-பட்டாம்பூச்சி படலம் என்று உள்ளதே....
ஒருவேளை இரண்டு இதழ்களுமே வெளியாகுமா சார்???
ஸ்டிக்கர்...ஸ்டிக்கர்
Deleteவருச ஆரம்பத்திலேயே டெக்ஸ் எதுக்குன்னு மாற்றி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. 🤷🏻♂️🤷🏻♂️
Delete///வருச ஆரம்பத்திலேயே டெக்ஸ் எதுக்குன்னு மாற்றி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. 🤷🏻♂️🤷🏻♂️///
Deleteஇருளின் மைந்தர்கள் வண்ணமறுபதிப்பு வருதுண்ணே..!
சூது கொல்லும் பட்டையை கிளப்பிவிட்டது டெக்ஸ் & கார்சன் ரொம்ப நாட்களுக்கு பிறகு ஆக்சனில் பின்னியெடுத்துவிட்டனர் நேர்கோட்டு கதையென்றாலும் பர பரவென்று போனது நிஜம் சூப்பர் 10/10
ReplyDeleteஅனைத்துக் கதைகளையும் படித்து முடித்துவிட்டேன்.
ReplyDeleteஎனது இந்த மாத ரேட்டிங்.
1 கதை சொல்லும் கானகம்
2 சுறா வேட்டை
3 தங்கத் தடம்
4 ரௌத்திரம் மற
5 சூது கொல்லும்
கதை சொல்லும் கானகம்
ஒரு பண்ணையில் பிணத்தை பார்க்கும் கதாசிரியர் ஒருவர் பணத்துக்காக அதன் பின்னே உள்ள கதையை தேடி அலைகிறார்.
கேட்பவர் அனைவரிடமும் தான் எழுதப்போகும் கதைக்கான கருவை தேடுவதாக சொல்கிறார்.
நொடிக்கு நொடி திருப்பம்.
ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்றே "அதேசமயம் வேறு இடத்தில்" இம்மாதிரி தருணங்களில் கதையின் வசனங்கள் படங்களுக்கு பின்னே வருவது.
ஃப்ளாஷ்பேக் கதைக்கு வித்தியாசமான பாணி ஓவியங்கள்
மனதை பிசையும் கதை.
இதை இந்த ஆண்டின் சிறந்த கதை என்ற பட்டியலில் சேர்க்கலாம்.
2 சுறா வேட்டை
ஜேம்ஸ் பாண்ட் பல இடங்களில் சறுக்கும் கதை.
ஆயுதங்களை விற்கும் கும்பல் கதை.
அதன் பின்னே இருக்கும் தேசபக்தி மற்றும் அதிகார போதை.
இதுவும் முந்தின கதைபோல நொடிக்கு நொடி திருப்பம்.
யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.
3 தங்கத் தடம்
தங்கத்தை தேடியலையும் வன் மேற்கின் மற்றும் ஒரு கதை.
இந்தக் கதையின் பலம் வசனம்.
4. ரௌத்திரத்தை மற
இது ஒரு மெக்சிகன் ஆணவக்கொலை கதை.
வண்ணம் கதைக்களம் அதற்காகவே 4வது இடம்
5 சூது கொல்லும்
சூதாடி ஒருவர் அனைவரும் தன்னிடமே சூதாட வேண்டுமென்று அட்டூழியம் செய்கிறார். அவரை டெக்ஸ் அண்ட் கோ அதகளம் செய்யும் கதை இது.
94வது
ReplyDeleteசார் ஞாயிறு பதிவெங்கே போகிறது....
ReplyDeleteநோ பதிவு ?!
ReplyDeleteஒன்றல்ல இரண்டல்ல மூன்றல்ல நான்கல்ல - 5 இதழ்கள் உங்கள் கைகளில் ! And மாதத்தின் முதல் தேதியே இன்று ! புதுசாய் நான் எதையேனும் யோசித்து மொக்கை போடும் நேரத்துக்கு இதழ்களின் அலசல்களோடு இன்றைய பொழுதைச் செலவிட முயற்சிப்போமே folks ?
Deleteசார் புத்தகங்கள் என்பது உணவென்றால், பதிவென்பது தண்ணீரைப் போல!
Deleteஒன்றல்ல இரண்டல்ல மூன்றல்ல நான்கல்ல - 17 இதழ்கள் எங்கள் கைகளில் இருந்தாலும் உங்கள் பதிவு தரும் உற்சாகம் தனீ தான்!!
நேற்றிரவுகூட பதிவுக்காக 1:30 மணிவரை காத்திருந்த பின்பே கட்டையைக் கிடத்தினேன்!
Deleteஇப்போதைக்கு பதிவு இல்லேன்னு நாசூக்காக சொல்லிட்டார்.
DeleteThis comment has been removed by the author.
Delete//
Deleteஒன்றல்ல இரண்டல்ல மூன்றல்ல நான்கல்ல - 5 இதழ்கள் உங்கள் கைகளில் ! And மாதத்தின் முதல் தேதியே இன்று ! புதுசாய் நான் எதையேனும் யோசித்து மொக்கை போடும் நேரத்துக்கு இதழ்களின் அலசல்களோடு இன்றைய பொழுதைச் செலவிட முயற்சிப்போமே folks ?
//
+1
இதனை நான் வரவேற்கிறேன்.
இன்று பழைய வீட்டுக்கு சென்று புத்தகங்களை வாங்கி வந்து பார்த்து படிக்க ஆரம்பித்து விட வேண்டியதுதான்.
பதிவு...
Deleteஒன்றல்ல இரண்டல்ல மூன்றல்ல நான்கல்ல - 5 இதழ்கள் உங்கள் கைகளில் ! And மாதத்தின் முதல் தேதியே இன்று ! ////
ReplyDeleteஅதற்கு காமிக்ஸ் கைக்கு வரணும் சார். என்னமோ போங்க..
கரெக்ட் சார். ஆளே இல்லாத கடையில யாருக்கு டீ போடுவதாம்.
ReplyDeleteஅதே.. அதே.. !
Deleteசார் இது நியாயம் இல்லை. நான் இரவெல்லாம் உங்கள் பதிவு வருமா என்று காத்து இருந்தேன். காலையில் இப்படி சொல்வது சரியா
Deleteஇங்கே டீ ஆத்தும் மாஸ்டர் - மிகத் திறமையானவர்! அவர் ஆத்தும் அழகுக்காகவே டீ குடிக்க வரும் கூட்டமிது!
Delete"மாஸ்டர்.. எனக்கு கொதிக்கக் கொதிக்க ஒரு டீ - துளியூண்டு பால் சேர்த்து!"
அவர்தான் டீ போடவே யோசிக்கணும் என்று சொல்லிட்டாரு.
Deleteவெங்காய விலை ஏறிட்டதால டீ போட யோசிக்கிறாரோ என்னமோ?!!
Deleteஎனக்கு மசாலா டீ - துளியூண்டு ஆடை (பாலாடை) சேர்த்து..!
Deleteஎனக்கு ஆடை இல்லாமல். ஹீஹி.
Deleteவிஜய் @ :-)
Deleteஎனக்கு ஒரு 'அனுபவத்தில் முதிர்ந்தோருக்கான டீ'! அதாவது, துளி கூட ஆடையே இல்லாம! ஹிஹி!
Delete///எனக்கு ஒரு 'அனுபவத்தில் முதிர்ந்தோருக்கான டீ'! ///
Deleteஅதாவது மாடஸ் டீ..!!
சரிதானே குருநாயரே.!?
"மாஸ்டர்.. எனக்கு கொதிக்கக் கொதிக்க ஒரு டீ - துளியூண்டு பால் சேர்த்து! அப்படியே ஒரு ஏலக்காய் சேர்த்து.
Delete//அனுபவத்தில் முதிர்ந்தோருக்கான டீ'! //
Deleteஇவ்விடே ஆ சாயாக்கான தூள் கிட்டில்லா !
/// அதாவது மாடஸ் டீ..!! ///
DeleteKID தாத்தா..
அவிங்க நெனெப்பாவே இருக்கீங்க போல..🤣🤣
வம்பிழுக்காம சும்மா இருக்க முடியாதா??? 😡😡
சாயாக்கான தூள் இல்லெங்கில் ஆயாக்கான ஆளில்லியோ?
Delete///வம்பிழுக்காம சும்மா இருக்க முடியாதா??? 😡😡.///
Deleteபெரியவங்களுக்கு கோவம் வரும்னு தெரியும்..
ஆனா இவ்ளோ பெரியவங்களுக்கு கோவம் வரும்னு நினைக்கலை..!
என் ராத்தூக்கம் போச்சே.பதிவு இல்லேன்னு ஆயாச்சே.
ReplyDeleteஅனைத்து புத்தகங்களும் படிச்சாச்சு..
ReplyDeleteஇன்னும் நிறைய பேருக்கு கொரியர் வந்து சேர்ந்திருக்காது அதனால் நோ ரேட்டிங்..
வருட கடைசி மிக மிக அருமையாக முடிவுற்றது.
இந்த வருடத்தில் வெற்றி சதவீதம் அதிகம் அடுத்தாண்டும் இதேபோல தொடரட்டும்.
சுருக்கமாய் உங்களின் ratings please ?
Delete@editor
DeleteJames bond 9.5
Graphic novel 9
Tex 9
Ringo 9
Mini tex 7
ஒரு தங்கத் தடம் :
ReplyDeleteமண்வெட்டியும் கடப்பாறையும் படும் இடமெல்லாம் தங்கமாக விரவிக்கிடக்கும் ஒரு அற்புதச் சுரங்கம்..
அங்கிருந்து முதுகொடியத் தோண்டியெடுத்தத் தங்கத்தை பாதுகாப்பாக இடம் மாற்றுவது என்பது தண்டவாளத்தில் தலை வைத்து தூங்குவதற்கு சமமான செயல்..
இந்நிலையில்..
பெருமதிப்பிலான தங்கத்தை கொண்டு செல்லும் வண்டிக்கு பாதுகாப்புத் துணையாக நம் நாயகன் ரிங்கோ..
கூடவே துணைக்குச் சிறியதொரு படைப்பிரிவு..
அந்தப் படைப்பிரிவில் இரண்டு புல்லுருவிகள்..
அந்தப் புல்லுருவிகளின் துணையோடு தங்கத்தை ஆட்டையைப் போட ஆயத்தமாகும் ஒரு போக்கிரி கும்பல்...
அத்தோடு.. படைப்பிரிவை சமாளிக்க வேண்டி அந்தப் போக்கிரி கும்பலால் தூண்டிவிடப்பட்ட செவ்விந்திய கும்பல் ..
இத்தனையையும் சமாளித்து நாயகன் ரிங்கோ தங்கத்தை பாதுகாப்பாக கொண்டு சென்றாரா இல்லை பறி கொடுத்தாரா..?! அல்லது தங்கம் யார் கைக்கு கிடைத்தது.. அல்லது என்னவானது என்பதை ஒரு தங்கத் தடம் முழுவண்ண இதழை வாங்கிப் படித்துத் தெரிந்து இன்புறுங்கள்..!
வில்லியம் வான்ஸ் அவர்களின் கைவண்ணத்தில் இயற்கை காட்சிகளும் அந்த வண்டித் தடங்களும் ஜொலிக்கின்றன..!
போக்கிரிகளை சமாளிக்க ரிங்கோ போடும் திட்டங்களும், ரிங்கோ இப்படித்தான் திட்டமிடுவார் என்பதை முன்பே கணித்து அதற்கேற்றாற்போல் திட்டமிடும் போக்கிரி கும்பலும் .. தங்த்தின் மீதான வெறியில் உதவிய நண்பர்களுக்கே துரோகமிழைக்கும் வில்லனும்....
இலகுரக வாசிப்புக்கு ஏற்றதொரு சாகசம் இந்தத் தங்கத் தடம்.!
ஒரு தங்கத் தடம் : தங்கமான தடம்
ரேட்டிங் 8.5/10
ஆங்... இது வல்லிய சாயாவாக்கும் !
Deleteஒரு 'கிராபிக் நாவல் சாயா' கிட்டுமோ ?
ReplyDeleteஒரு செறிய திருவிழாவானு.. அங்கோட்டு போயி ஞான் இப்பத்தன்னே திரிச்சி வந்நு சாரே.. இனியேட்டு படிக்கான் போயி..!
Deleteயாராவது மலையாளம் தெரிஞ்சவங்க இருந்தா கேசு ஏதும் போட்றாதிங்க அண்ணாச்சி..!
Delete///யாராவது மலையாளம் தெரிஞ்சவங்க இருந்தா கேசு ஏதும் போட்றாதிங்க அண்ணாச்சி..!///
Deleteஅப்படிப் பாத்தா 'தமிழுக்காக' நம்ம ஸ்டீல்க்ளா மேல இதுவரைக்கும் ஏழாயிரம் கேஸ் புக் ஆகியிருக்கணுமே?!!
எல்லோரும் நம்மள மாதிரிதான்.don't worry.
Delete,😁
Deleteஇந்த கிராபிக் நாவலைப் பொறுத்தவரை உங்களின் முன்னுரை (photos) மற்றும் பின்னுரையைப் படித்த பின்னர் இக்கதையினைப் படிப்பதாய் இல்லை சார். Would like to end the year in good moods.
Deleteஆக இவ்வருடம் அடியேனால் பாதிக்கப்படாத இருந்தாவது இதழ் இஃதே. Modesty Blaise 10 பக்கங்கள் கூட தாண்ட முடியவில்லை. மற்றபடிக்கு overall நமது பின்வருகைக்குப் பின்னான சிறந்த காமிக்ஸ் வருடம் 2019 என்பேன். ஜூன் துவங்கி ஒரு 12-16 இதழ்கள் ஹிட் அடித்தது ஒரு purple patch என்பேன் !
//Would like to end the year in good moods. //
DeleteDon't blame you at all sir !
வரிசையில் வருமாக்கும்
ReplyDeleteகடையில் ஆள் சேர்ந்தாச்சு.டீயும் வந்நூ
ReplyDeleteKathai sollum kanagam-10/10.Nice suspense thriller 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
ReplyDeleteஇந்த மாத புத்தகங்கள் பற்றிய ஒருவரி விமர்சனம் அல்லது புத்தகங்களின் முதல் புரட்டல் என ஒரு 300 பின்னூட்டம் நாம் இன்று மாலைக்குள் போட்டுத்தாக்கினால் ஆசிரியர் உ.பதிவு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
ReplyDeleteமுயற்சிக்கலாம்.
ஜனவரியில் வர உள்ள புத்தகங்கள் எவை என சொல்ல முடியுமா நண்பர்களே?
ReplyDeleteபாண்ட்....
Deleteடுரங்கோ
கொரில்லக்கள்
டெக்ஸ்
நன்றில மக்கா...
Delete,😊
Deleteபுத்தகங்களை வாங்க பழைய வீட்டுக்கு மழையில் கிளம்பி விட்டேன்.
ReplyDeleteஎல பைkல போல ... மழைல வேணாம்
Deleteமழைல ஸ்கூட்டர்ல போய் வாங்கிட்டேன்ல...
Deleteவீட்டுக்கு திரும்பி போய்கிட்டு இருக்கேன்ல
என்ஜாய்ல
Delete///எல பைkல போல ... மழைல வேணாம்///
Deleteஅடேங்கப்பா 👀
கண்ணா @ ஸ்டீல் உங்களைவிட பெரிய கடி பார்ட்டி போல் தெரிகிறது :-)
DeleteOru thanga thadam story narrated in a linear way with out any twist.My rating is 8.9/10😃😃😃😃😃😃
ReplyDeleteஇந்த மாதத்துடன் 2019ற்கான இதழ்கள் எண்ணிக்கை அரைசதம் (50) அடித்துள்ளது மகிழ்ச்சி சார்,வரும் வரும் ஆண்டுகளில் முழுசதம் அடிப்போம் என்று நம்புவோமாக....
ReplyDeleteநேத்துவரை புத்தகங்கள் வரலை.சரி...பதிவை படிச்சி சண்டே ஐ ஓட்டலாம்னா அதுவும் வெற்றிகரணமாக சொதப்பிடுச்சி...
ReplyDeleteநான் என்ன செய்வேன்? 😭😭😭
வெற்றிகர(ண)மாக..
Deleteஅட்டைப்படம் அனைத்தும் அருமை. ஒன்றுக்கொன்று செம போட்டி. டெக்ஸ் அட்டைப்படம் கிளாசிக் என்றால் மற்றவை absolute கிளாசிக் ரகம்.
ReplyDeleteஅனைத்து அட்டைப் படங்களும் mate பினிசிங்கில் மனதை அள்ளுகிறது.
அன்பான நண்பர்களுக்கு,
ReplyDeleteஆசிரியர் பெரிய பதிவு போடும் போதெல்லாம் முதலாவது, இரண்டாவது என்று போட்டேLoad more -யில் கொண்டு வந்து விட்டு விடுகிறீர்கள். உள்ளே நுழைய வே முடிவதில்லை. ஆசிரியரும் வருவதில்லை.
இது குட்டிப் பதிவு எல்லோருக்கும் பதிவு போடவும் இடம் இருக்கும். ஆசிரியரும் உள்ளே வந்து செல்கிறார். சிறப்பு தானே.. ii
Tex_ இரண்டும் படித்ததில் சூது கொல்லும் - வழக்கமான மசாலா தான். (என்று நினைக்கிறேன். இன்னும் முடிவு படிக்கவில்லை )
"ரெளத்திரம் மற" - மிக அருமையான கதை. சார் ..i
அட்டைப்படம் மட்டுமல்ல.. 48 Uக்கங்கள் எனும் போது தங்க தடம் - இதழ் சைஸில் வெளியிட மிகவும் தகுதியான இதழ்.
"கிராபிக் நாவல் " - என்று படிப்பவைகள்Cநித்திரை மறந்த நியூயார்க்) -படித்து முடிந்ததும் மனதில் ஒரு வெறுமை. அத்தோடு மறந்தும் விடத் தோன்றுகிறது.
ஆனால், இந்தக் கதையில் தான் எத்தனை
உணர்ச்சிக்குவியல்கள் .
ஜாதி ஆணவம் மிக்க பெரியவர் - துப்பாக்கிச் சண்டையில் பேரனின் அழுகுரல் கேட்டு திரும்பிச் செல்வதும், வீரம் பேசிய தகப்பன் - ஜெயித்தது என் மகன் தான் என்று சட்டத் திடம் சரணடைய சம்மதிப்பதும் - ஒரு சூப்பர் ஹீரோ இருக்கும் கதையில் சண்டையைத் தாண்டி நடக்கும் சம்பவங்களும். இறுதியில் ஹீரோ பேசும் வாழ்வியல் சார்ந்த கருத்துக்களும். கதை முடிந்த பின்னும் கதையோட வே பயணித்துக் கொண்டிருப்பது.
என்னைப் பொறுத்தவரை இதுவே சிறந்த கிராபிக் நாவல்.
தாங்கள் கண்டிப்பாக வேறு வடிவத்தில் தந்திருக்கலாம்.. .
//என்னைப் பொறுத்தவரை இதுவே சிறந்த கிராபிக் நாவல்//
Delete!!!!!
ஒரு தங்கத் தடம்:
ReplyDeleteகிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு முன் நடக்கும் கதைக்களம்,திரும்பிய பக்கமெல்லாம் பரவிக் கிடக்கும் தங்க துகள்கள், அள்ள அள்ளக் குறையா வல்ச்சர் சுரங்கம்....
மஞ்சள் உலோகத்தை பொறுப்பாய் கொண்டு செல்லும் வெல்ஸ் பார்கோ போக்குவரத்து கம்பெனியின் பாதுக்காப்பு பொறுப்பில் இருக்கும் நாயகர் ரிங்கோ....
இரண்டு இலட்சம் டாலர் பெறுமானமுள்ள மஞ்சள் உலோகத்தை ஆபத்து நிறைந்த வழிதடத்தில் கொண்டு செல்லும் பெரும் பொறுப்பை ரிங்கோ ஏற்க நேரிடுகிறது....
புரட்சியில் ஈடுபட்டுள்ள கயோட்டரேக்கள்,
வழித்தடத்தில் பொறுப்பேற்கும் இராணுவத்தில் சில கருங்காலிகள்,மஞ்சள் உலோகத்தை கைப்பற்றி சொகுசாய் வாழ முற்படும் ஒரு கயவர் கும்பல்..
செல்லும் வழித்தடமெங்கும் கண்ணி வெடிகள் போல நிறைந்திருக்கும் ஆபத்துகள்....
இவற்றை எல்லாம் தாண்டி ரிங்கோ தனது பணியை செவ்வனே நிறைவு செய்தாரா???
மஞ்சள் உலோகம் பாதுகாப்பான இலக்கை அடைந்ததா???
-விடை காண "தங்கத் தடத்தில் கால் பதியுங்கள்"....
ரிங்கோவின் :"ஒரு தங்கத் தடம்" வான்ஸிற்கான சிறந்ததொரு "Tribute".
வில்லியம் வான்ஸின் ஓவியங்கள் அசத்தல்.
காட்சி அமைப்புகளும்,வர்ணச் சேர்க்கைகளும் பழமையான பாணியை நினைவூட்டுகின்றன....
வண்ணத்தில்,வழக்கமான அளவில் வெளியிட்டது நல்ல முடிவு சார்,அதற்காக எமது நன்றிகளும்....
வசனங்களில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாமோ என்ற எண்ணம் வாசிப்பினிடையே எழுந்தது ஏனோ தெரியவில்லை....
மொத்தத்தில் முதல் சாகஸத்தில் ரிங்கோ பாஸ் இரகம் தான்,மற்றபடி அருமை என்றும் சொல்ல இயலவில்லை, சுமார் என்றும் சொல்ல இயலவில்லை.....
எமது மதிப்பெண்கள்-09/10.
நான் ஒரு தங்கத் தடம் கதையில் பலம் வசனம் என்று சொல்லியிருந்தேன். அது தவறுதலாக தட்டச்சு செய்யப் பட்டது.
ReplyDeleteஒரு தங்க தடத்தின் பலம்.
1 சித்திரம்.
முதல் பக்கத்தில் ரிங்கோ வரும் காட்சி.
பக்கம் 36 ல் ஸாம் பாட்ஸ் கதையில் நுழையும் காட்சி.
இந்த மாத புத்தகங்களின் சிறப்பு என்னவென்றால் அட்டை படங்கள்.
ஒன்றையொன்று விஞ்சுகின்றன.
1. டெக்ஸ்ஸின் சூது கொல்லும் அட்டை படம்
2 ஒரு தங்க தடம் அட்டை படம்
3. கதை சொல்லும் கானகம் அட்டை படம்
4. சுறா வேட்டை அட்டை படம்
சுறா வேட்டை:
ReplyDeleteசும்மா சொல்லக் கூடாது "சுறா வேட்டை" தெறி பட்டாசு இரகம்,
மரண காட்டு காட்டுது,செம ஆக்ஷன் சீக்வென்ஸ்.
காட்சி அமைப்புகளும்,கதையோட்டமும் வேற லெவல்,
அந்த ஹாம்மர்ஹெட் வெடிக்க தயாராகும் நொடியில் பாண்டின் எண்ட்ரி செம.....
ஜேம்ஸின் தலைக்கு மேல் கார் பறக்கும் காட்சியும் செம.....
க்ராகென் யார் என்பதை கதையின் போக்கில் கணித்தது சரியாக அமைந்தது வியப்பு......
ஜேம்ஸின் காரில் கைப்பற்றும் சிப்பை கொண்டு அவர் கம்ப்யூட்டரை ஹேக் செய்வது,ஹாம்மர்ஹெட்டை ஊடுருவி இயக்குவது போன்றவை சாத்தியமா?
எல்லாவற்றிற்கும் ஒரே பாஸ்வேர்ட் தரப்பட்டிருக்குமா என்ன???
மொத்தத்தில் ஒரு மாஸ் ஆக்ஷன் த்ரில்லர் ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி.....
என்ன 007 ன் முகவெட்டை இன்னும் கொஞ்சம் நன்றாக காட்டியிருக்கலாம்....
தெறிக்க விடும் வசனங்கள்:
"எதிரியிடம் ஒருமுறை எச்சரிக்கையாயிரு...உன் நண்பனிடமோ ஓராயிரம் தடவைகள் ! ஏனெனில் உன்னை வதைக்கக் கூடியது என்னவென்று ஒரு நண்பனுக்குத் தெரியும்"!.
எமது மதிப்பெண்கள்-10/10.
(பத்துக்கு மேல மார்க் போட முடியல எனும் போது வருத்தமாவே இருக்கு)
ஏப்பா சாமீ...
Deleteஒரே நாள்ல டிசம்பரை முடிச்சாச்சா..ஹீம்..:-(
சூது கொல்லும்:
ReplyDeleteநியூ ஆர்லியன்ஸில் காலைப்பொழுதில் நம் ரேஞ்சர் குழுவின் வருகையுடன் தொடங்கும் கதையானது டெக்ஸ் & கார்சன் ஓய்வெடுக்க அறை எடுத்த சற்று நேரத்திலேயே சூடுபிடிக்கிறது,
பிரச்சினைகள் தான் நம்மவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போலாயிற்றே அருகில் உள்ள அறையில் நடக்கும் களேபரத்தில் நம்மவர்கள் தலையிட்டு இரண்டு போக்கிரிகளை சாத்தியெடுத்து அங்கிருக்கும் கப்பல் கேப்டன் பில் ஹோகனை காக்க,தாக்க வந்தவர்கள் ரிவர் கேங் என்று அழைக்கப்படும் போக்கிரி கும்பலை சேர்ந்தவர்கள் என்று அறிய நேரிடுகிறது....
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த கதையா இருக்கே என தான் தேடிவந்த குழுவை பற்றி அறிய டெக்ஸ் & கார்சன் களத்தில் குதிக்க..
பில் ஹோகன் உதவியுடன் கப்பல் உரிமையாளர் ஜெரால்டை சந்திக்கும் ரேஞ்சர்கள் அவர் மூலம் "ரிவர் கேங்" குழுவின் சூத்ரதாரி ராட் ரேவர் எனும் பெரும் பணக்கார போக்கிரி என்றறியும் டெக்ஸ் & கார்சன் குழு நேரடியாக களமாடி ரேவரின் வலது கையான லியோ மில்டன் மற்றும் போக்கிரிக் குழுவை போட்டு புரட்டியெடுக்க,அடடே,அடடே ஒரே சாத்து மேளாதான் போங்க....
அடுத்தடுத்த திருப்பங்களில் சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்க முடிவெடுக்கும் டெக்ஸ் & கார்சன் கூட்டணி நண்பரும் நகரின் ஷெரீப்புமான மெக் கென்னட்டின் உதவியை நாட.....
மெக் கென்னட்டின் உதவி நம் ரேஞ்சர் குழுவிற்கு கிட்டியதா?
அதிரடி திட்டங்களை தீட்டும் ரேஞ்சர் குழுவின் திட்டம் பலித்ததா?
நகரை ஆட்டிப் படைக்கும் ராட் ரேவரின் கதி என்ன?
-விடை காண வாசிப்பீர் "சூது கொல்லும்".....
"அருகில் எங்கேயோ கச்சேரி நடக்கிறது"
அடுத்து டெக்ஸ் "வாசிப்பு பலமாக இருக்கிறதே"!
-ஹா,ஹா,ஹா வழக்கமான கார்சன் & டெக்ஸின் கிண்டல் பாணிகள் செம...
" ரோமில் இருக்கும்போது ரோமனாக இரு".
டெக்ஸ்:-"நானும் எனது பார்ட்னரும்,போரடிக்கிறதென்று நியூ ஆர்லியன்சுக்கு ஒரு ஜாலி ட்ரிப் வந்தோம்! வந்த இடத்தில்,மலைக் குரங்குகளை ஒடுக்குவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறதென்றால்,அது எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறோம்"!.
கார்சன்:-"போரடிக்கிறதா? ஜாலி ட்ரிப்பா? ஆனாலும் இது உலக மகா நடிப்புடா சாமி"!.
"இதுவொரு விநோதமான தொற்று நோய் போலும் கிட்? எதற்கெடுத்தாலும் நாற்காலிகளை உடைக்கிறார்கள்"....
-சிறப்பான, கலக்கலான வசனங்கள்....
மேலே சிறு துரும்பு கூட படாமல் ஒரு போக்கிரிக் கும்பலை பந்தாடவும்,கொட்டத்தை அடக்கவும் முடிகிறதென்றாம் அது நம் டெக்ஸ் & கார்சன் கூட்டணியால் மட்டுமே சாத்தியம்,அதற்கான நம்பகத்தன்மையை நம் மனதில் பதிய வைப்பாதால் மட்டுமே டெக்ஸும் வெற்றி பெறுகிறார்,கதாசிரியரும் வெற்றி பெறுகிறார்.....
ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தில் தல மிளிர்கிறார்....
நிறைய காட்சியமைப்புகள் வியப்பில் ஆழ்த்தின,குறிப்பாக பிளாக் ரிவர் சலூனில் நடக்கும் சணடையில் பறக்கும் கத்தியானது பார்மேனின் விரல்களுக்கு இடையே குத்தி நிற்பது....
அட்டகாசமான மசாலா பேக்கேஜ்...
எமது ரேட்டிங்-10/10.
ரெளத்திரம் மற!
ReplyDeleteமனுவெல் டாரஸ் தலைமையிலான கொள்ளைக் கும்பலை தேடிவரும் நம் ரேஞ்சர் குழு எதிர்ப்படும் டான் அகஸ்டோ ரெச்சாஸ் எனும் நிலக் கிழாரை சந்திக்க நேரிட,அப்பண்ணையும் டாரஸின் தாக்குதலுக்கு உள்ளானதை அறிகின்றனர்.
அகஸ்டோவுக்கு உதவி டாரஸை பிடிக்க திட்டமிடும் டெக்ஸ் மீண்டும் மறுதாக்குதலுக்கு வரும் டாரஸுக்கு பாடம் புகட்ட ரேஞ்சர் குழு களத்தில் அதிரடி நிகழ்த்த,டாரஸ் வலையில் சிக்க....
அங்கேதான் திருப்புமுனை டாரஸை கொல்லத் துடிக்கும் அகஸ்டோவின் அவசரம் மற்றும் அகஸ்டோவின் மகள் மூலம் அறிந்து கொள்ளும் பல்வேறு உண்மைகள் ரேஞ்சர் குழுவிற்கு தெரியவர,இடையே டாரஸை கொல்லத் தடையாக இருக்கும் ரேஞ்சர் குழுவை வளைத்து பாதாளச் சிறையில் அடைக்க அகஸ்டோ முயற்சிக்க கொதித்தெழும் ரேஞ்சர் குழு அதிரடி,தடாலடிகளை நிகழ்த்தி டாரஸை கைப்பற்றி வெளியேற.....
பின்னர் டெக்சின் கோரிக்கையை ஏற்று செய்த குற்றத்திற்கு டாரஸ் சிறைபுக,சிறைவாசம் முடிந்து வெளியே வரும் டாரஸின் கதி என்ன?
டாரஸிற்கும் அகஸ்டோவிற்குமான முந்தைய பகை என்ன?
அகஸ்டோவின் மகள் டெக்ஸிடம் கூறிய உண்மைகள் என்ன?
உண்மையில் குற்றவாளி யார்?
விடை காண வாசிப்பீர் "ரெளத்திரம் மற".
சிறிய இடைவேளைக்கு மீண்டும் பட்டாசான மினி டெக்ஸ் சார்,
திருப்புமுனைகளும்,அதிரடிகளும்,அதிக பக்க எண்ணிக்கைகளும் ஒரு முழு டெக்ஸ் சாகஸத்தை வாசித்த நிறைவை அளித்தது.....
ஓவிய பாணிகளும்,கலரிங்கும் நிறைவு....
" அந்தப் பதிலை தன் இதயத்திற்குள் தேடட்டும் கிட்".
"ஒரு தூரத்து நாளில் மன்னிக்க முடிவெடுத்திருக்கலாம்".
" நல்லது நடக்க காலநேரம் கைகூடி வர வேண்டுமே நண்பா".
-நிறைவான வசனங்கள்....
-பக்கா எண்டர்டெயின்மெண்ட் பேக்கேஜ்....
எமது ரேட்டிங்-10/10.
கதை சொல்லும் கானகம்:
ReplyDeleteமேற்கு விர்ஜீனியாவின் இல்வுட் கிராமத்தில் தொடங்கும் களமானது முன்னும்,பின்னும் இரு வழி கால பாதைகளில் பயணிக்கிறது....
வழ்வெனும் ஏணியின் அடுத்தப்படியில் ஏறத் துடிக்கும் எழுத்தாளர் ஹரால்ட்,இல்வுட் அருகேயுள்ள அடர்கானகத்தில் ஓர் வேட்டைப்பொழுதில் புதைந்ததோர் காரைக் காண அதில் மனித எலும்புக்கூடு தட்டுப்படுகிறது,தன் இருப்பை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கும் ஹரால்ட் தனது அடுத்த கதைக்கான மையப்புள்ளியாக மர்மத்தை துப்புதுலக்க முடிவெடுக்கிறார்....
கிடைக்கும் முதல் துப்பில் அது இல்வுட்டில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வங்கியின் பொறுப்பாளராக பணியாற்றிய ரிச்சர்ட் அடென்பார் என்பதும்,கடந்த காலத்தில் இல்வுட் மக்களின் பெரும் வைப்புத் தொகையை ஆட்டையை போட்டுவிட்டு தன் சொந்த குடும்பத்தினரையே கொடூரமாக கொன்றுவிட்டு தலைமறைவு ஆனதாகவும் விசாரணையில் தெரியவருகிறது.....
இதன் விசாரணை அதிகாரியும் ஷெரீப்புமான டட்லி ஹட்ஜென்ஸும் கேஸின் முடிச்சை அவிழ்க்காமலே இல்வுட்டை விட்டு வெளியேற தகவலும் கிட்டுகிறது.
அதேகால கட்டத்தில் ரேண்டால் வார்டன் என்று அழைக்கப்படும் தொடர் கொலைகாரன்,கொடூர கொலையாளி தன் மனைவியுடன் இல்வுட் அருகே ஊடுருவியதாகவும்,தொடர் துர்நிகழ்வுகளால் பலர் காணமல் போனதும் தெரியவருகிறது....
இடையில் சில கிளைக் கதைகள் விரிய,அனைத்திற்கும் மையப் புள்ளியாக இருக்கும் கொள்ளை போன பணம் மர்மமாய் திகழ,
தொடர் சம்பவங்களில்,
1.ரிச்சர்ட் ஏன்,யாரால் கொல்லப்பட்டார்???
2.ஷெரீப் டட்லி என்னவானார்???
3.ரிச்சர்ட் ஆட்டையைப் போட்ட பெரும் தொகை எங்கெ,என்னவானது???
4.குரூர கொலை (ரேண்டால் வார்டன்)ஜோடி என்னவானது???
-விடை காணவும் அதிரி,புதிரி கிளைமேக்ஸை காணவும் கானகத்தின் ஊடே ஒரு பயணம் மேற்கொள்வோமா....
"மழைக்கால ராப்பொழுதுகளில் பசேல்னு வளர்ந்து விடும் பூஞ்சையைப் போல".
" சகலத்தையும் இறுக்கமாய்ப் பற்றி நிற்கிற கயிறுகள் ஒரு கட்டத்தில் ஓவராய் இறுகிடும் போது மொத்தமாய்த் தெறித்து விடும் ! அதுகூட பழம் நழுவிப் பாலில் விழும் வேளையாகிடலாம் !"
"ஒன்று சேர மறுக்கிற புதிர் மாதிரி இது என்னக் குழப்புது....
-நச் வசனங்கள்....
இறுதி முடிவு எதிர்பாரதது,
ஒரு செயலுக்குண்டான விளைவு எப்பொழுதும் எதிர்பார்க்கும் வகையில் இருக்கும் சொல்ல முடியாதுதான்,வாழ்வின் போக்கே புதிர் நிறைந்தது தானே....
நீதியின் கரங்கள் எப்போதும் வலுவாக இருப்பதில்லைதான்....
இதற்கு என்ன மாதிரியான தர்க்க ரீதியிலான விளக்கம் இருக்கக்கூடும்???
பெரும்பாலான கதைகளில் வசைபாடும் வார்த்தையாக இந்த " இழவு" எனும் வார்த்தை இடம்பிடிக்கிறதே சார்,இதை தவிர்த்து வேறு வார்த்தைகள் எதையேனும் தேட இயலுமா?
எமது மதிப்பெண்கள்-10/10.
ஆஹா அதற்குள்ளவாகவா..
Deleteஆனால் படிக்காமல் விமர்சனத்தை படிக்க வேண்டாம் என்பதால் இந்த விமர்சனமும் படித்து விட்டு ரவி அவர்களே..:-)
பொறுமையாய் ; விசாலமாய் அலசியுள்ளமைக்கு நன்றிகள் சார் ! மதிப்பெண்களிலும் காட்டியுள்ள தாராளத்துக்கும் டாங்க் யூ ! வசனங்களைப் பொறுத்தமட்டில் ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகிறது !
Deleteஇப்போதெல்லாம் கோங்குரா காரங்களோ ; 'நச்' தித்திப்புகளோ இல்லாது போனால் பந்தியில் உங்கள் ரசனைகளுக்கு ஈடு தந்திட திண்டாட வேண்டியிருக்கும் போலும் ! ரிங்கோ கதையின் க்ளாஸிக் கதை பாணிக்கு நமது கருணையானந்தம் அவர்களின் க்ளாஸிக் பாணி எழுத்துக்கள் பொருந்திடக்கூடுமென்று அதனில் துளியும் நோண்டிட மெனெக்கெடவில்லை நான் ! ஆனால் அதனை சுலபமாய் இனம் கண்டுவிட்டீர்கள் எனும் போது மண்டையை சொரிந்திடத் தான் தோன்றுகிறது !
பின்றீங்க ரவி! நாளுக்கு நாள் உங்க விமர்சன பாணி மெருகேறிட்டே போகுது!! தொடர்ந்து கலக்குங்க!
Deleteடிசம்பர் இதழ்கள் முதல் பார்வையில்...
ReplyDeleteஇன்று தான் பெட்டியையை திறக்க முடிந்த காரணத்தால்,அலுவலகமும் சென்ற காரணத்தால் இன்று பார்வை மட்டுமே நாளை முதலே இதழ்களை படிக்க முடியும் என்பது தவிர்க்க இயலா நிகழ்வாகி விட்டது.
பொக்கிஷ் பெட்டியை திறந்தது ம் என்னை மிக கவர்ந்தது சந்தா நண்பர்களுக்கான "விலையில்லா இதழான" ரெளத்தரம் மற இதழே .எவ்வளவு மொத்தமாக உள்ளது .போன முறை குறைவான பக்கங்களில் "மெளன டெக்ஸை " பார்த்து ஏமாற்றம் அடைந்த நண்பர்களுக்கு இந்த மாதம் வட்டியும் முதலுமாக ஒரு டெக்ஸ் இதழை வழங்கி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள் சார் ..மிக்க மிக்க நன்றி.
அடுத்து என்னை கவர்ந்த அட்டைப்படம் "ஒரு தங்கத் தடம் " பனி பொழிவில் குதிரையின் மீது வீற்றிருக்கும் நாயகன் ஏற்கனவே சொன்னது போல ஓவியமா ,புகைப்படமா என திகைக்க வைக்கறது.அடுத்து வரும் விளம்பர வெளியீடுகள் இப்பொழுதே ஆவலை கிளப்புகிறது .அதே சமயம் மேக்ஸி லயன் இதழில் "இருளின் மைந்தர்கள் " இதழை ஒரே இதழாக இருப்பின் மிக சிறப்பாக இருக்குமே என்ற எண்ணமும் மேலோங்குகிறது சார்..( முடிந்தால் ) அதனை ஒரே இதழாக குண்டாக வெளியிட்டால் மிக சிறப்பாக இருக்குமே சார்..மனது வையுங்கள்.
சுறா வேட்டை அட்டைப்படமும் ,உட்பக்க சித்திரங்களும் வெகு சிறப்பு .அதே சமயம் பாண்ட் 2.0 வாக இருப்பினும் பழைய பாண்ட்ன் முக சாயலை கொண்டு வராமல் இருப்பது போல் இருப்பது ஒரு குறையே..ரிப்போர்ட்டர் ஜானியும் அவ்வாறே தான் ..என்னத்தான் புது யுக நாயகர்களாக பழைய ஹீரோக்கள் வெளிவரும் போது மற்ற மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனது அவர்களின் முகச்சாயலை கொண்டு வராமல் இருப்பதை ஏற்று கொள்ள மறுக்கிறது .இதன் காரணமாக கூட அவர்கள் நமது பழைய பேவரிட் நாயகர்கள் என்ற நெருக்கம் விலகி போக காரணமாகிறது.நம்மால் இதனை மாற்ற முடியாது எனினும் ஆசிரியர் படைப்பாளிகளிடம் இதனை பற்றி தெரிவிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை.
சூது கொல்லும் ..சொல்லவும் வேண்டுமா ..நாளை முதல் இதழாக படிக்க போவது இதனைத்தான் ..
கதை சொல்லும் கானகம் அட்டைப்படமும் ,உட்பக்க சித்திர பாணிகளும் மிக அமைதியான சூழலில் இதனை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது..அந்த சூழல் நாளை கிடைக்குமாயின் நாளேயே டெக்ஸ் க்கு முன்னராக கானகத்தில் பயணமாகவும் நேரலாம்..
மொத்தத்தில் இந்த வருட இறுதி மாதத்தில் அட்டகாசமான படைப்புகளை அழகாக வழங்கி மனதை நிறைவாக நிறைவுற செய்துள்ள ஆசிரியருக்கு மனம் கனிந்த நன்றிகள்..
இனி படித்து விட்டு
//ஆசிரியர் படைப்பாளிகளிடம் இதனை பற்றி தெரிவிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட
Deleteஆசை.//
தலீவரே - 'தல' கதைகளுக்கு மட்டுமே ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஓவியர்கள் பணியாற்றுகிறார்கள் ! ஆனால் துவக்க நாட்களது ஸ்டைலில் எதுவும் நஹி ! அதற்காக படிக்காமலோ / ரசிக்காமலோ இருக்கிறோமா - என்ன ? எல்லாமே பழகிக் கொள்வதில் தானே ?
படைப்பாளிகளிடம் போய்ச் சொன்னால் ஒரு மந்தகாசப் புன்னகையோடு கைகுலுக்கி அனுப்பிடுவார்கள் !
:-)
Deleteஇருளின் மைந்தர்கள் இரண்டு பாகங்களாக போடுவதில் அர்த்தமே இல்லை. அவை ரெகுலர் சந்தா இல்லை. புத்தக திருவிழா புத்தகம் என்பதால் தனி தனியாக யார் வாங்கினாலும் அவர்களுக்கு கதை புரியப்போவதில்லை. எப்படியும் இரண்டு புத்தகங்களையும் வாங்கினால்தான் அதில் பயன். ஒரே புத்தகமாக போடுவதால் குண்டு மேக்ஸி அட்டகாசமாக இருக்கும்.
ReplyDelete// ஒரே புத்தகமாக போடுவதால் குண்டு மேக்ஸி அட்டகாசமாக இருக்கும். //
Deleteஉண்மை.
விஜயன் சார், இதனை பரிசீலனை செய்யலாமே?
//இருளின் மைந்தர்கள் இரண்டு பாகங்களாக போடுவதில் அர்த்தமே இல்லை//
DeletePagewise,sizewize & pricewise there should be consistency in maxi format editions...
Otherwise saleswise drop may occur.
ie..agents point of view..
Logicwise two parts decision is wise..
//இருளின் மைந்தர்கள் இரண்டு பாகங்களாக போடுவதில் அர்த்தமே இல்லை. அவை ரெகுலர் சந்தா இல்லை. //
Deleteதவறான புரிதல் ! புத்தாண்டின் அட்டவணையைப் புரட்டுங்களேன் - MAXI லயனும் சந்தாக்களின் ஒரு அங்கமாயிருப்பது புலனாகும் ! தவிர மாக்ஸியில் சைஸ் ; விலை ; அமைப்பு என சகலமும் ஒரே சீராய் இருந்திடுவதே template எனும் போது மாற்றங்களுக்கு இடம் லேது சார் !
கதை சொல்லும் கானகம் சொல்லும் கதைகள் ஏராளம். அதில் உள்ள சமூக விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை.
ReplyDeleteஅட்டகாசமான கதை, கதை சொல்லும் பாணி வித்தியாசமாக இருந்தது. ஓவியங்கள் கதையின் பக்கபலம்.
//கதை சொல்லும் கானகம் சொல்லும் கதைகள் ஏராளம். அதில் உள்ள சமூக விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை//
Deleteஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ள வன்கொடுமையின் நிழலில் இதனை வாசிக்கும் போது நடுக்கம் இன்னும் ஜாஸ்தி ஆகின்றது !
இருளின் மைந்தர்கள் ஓரே குண்டு மேக்ஸியாக தந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஆதரவு தாருங்கள் காமிக்ஸ் காதலர்களே...ஒருமித்த குரலாய் ஆசிரியரிடம் வேண்டுவோம்.
தவறான முகவரிக்கு கோரிக்கை எழுப்பியுள்ளீர்கள் சாரே ! அக்கட எடிட்டர் ஞான் அல்லா !
Deleteஅப்புறம் புக்குகள் ஏற்கனவே அச்சும் ஆகி விட்டன - 2 தனித்தனி இதழ்களாய் ! 2019-ல் 2020 !
இதுக்கு :-) போடலாமா :-( இப்படி போடலாமான்னு தெரில சார்..?!
Delete///அக்கட எடிட்டர் ஞான் அல்லா !
Deleteஅப்புறம் புக்குகள் ஏற்கனவே அச்சும் ஆகி விட்டன - 2 தனித்தனி இதழ்களாய் ! 2019-ல் 2020 !///
குண்டுபுக்குத்தான் வேணும்னு குரல் உயர்த்தலாம்னு இங்கே வந்தா 'இதுக்குமேல எத்தனை கூவுனாலும் பிரயோஜனமில்லே'ன்னு ஒத்தை வரியில புரிய வச்சுட்டீங்க எடிட்டர் சார்!
அப்புறம் வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்க மேக்ஸி எடிட்டரை இங்ஙனக்குள்ள எட்டிப் பார்க்கச் சொல்லுங்களேன்? :)
ஞானாட்டும் பஞ்சத்துக்கு பெவிகால் பெரியசாமி ; அவரோ பெவிகால் பாக்டரியின் மொத்தக் குத்தகைதாரர் !
Deleteவேங்கையன் மவன் (டெக்ஸ்- இருளின் மைந்தர்கள்) ஒத்தையிலே (ஒரே புக்கா) வந்தா வேணாம்னா சொல்லப் போறோம்.
ReplyDeleteவணக்கம் ஆசிரியரே.இந்த மாதமும் சதம் அடித்து விட்டீர்கள். மிக்க நன்றி ஐயா.இந்த ஆண்டு நான்கு மாதங்களில் சதமடித்துவிட்டீர்கள்.வாழ்த்துகள் ஐயா.இந்த ஆண்டு வாசகர்களுக்கு சிறப்பான ஆண்டாய் அமைந்துள்ளது. அட்டவணையில் கூறியபடி அனைத்து புத்தகங்களையும் வெளியிட்டு சொன்னதை செய்துகாட்டிவிட்டீர்கள்.மூன்று மாதங்களில் புத்தகங்களை முன்னரே வெளியிட்டு எங்களை பரவசப்படுத்திவிட்டீர்கள்.வாசகர்கள் அனைவர் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.எதிர்வரும் ஆண்டின் அட்டவணையும் அருமையாக உள்ளது.d பிரிவு அட்டகாசமாக உள்ளது.என் போன்ற தல ரசிகர்களுக்கு தீபாவளிதான்.ஆண்டு சந்தா தொகையை புத்தாண்டு கட்டிவிடுகிறேன்.நன்றி ஐயா.
ReplyDeleteஅருமையா எழுதியிருக்கீங்க Vigneswaran Willer!
Delete//இந்த மாதமும் சதம் அடித்து விட்டீர்கள்//
Delete:-)
இருளின் மைந்தர்கள் புத்தகத்தை ஒரே புத்தகமாக வெளியிடுங்கள் ஐயா.
ReplyDeleteஅன்பு எடிட்டர் ,நான் படித்ததில் மிக டார்க்கான கதை இம்மாத கிராபிக்தான்.மனதை மிகவும் பாதித்தது.கதையை படித்தது ஞாயிறு இரவு 7 மணிக்கு. படித்த பின்பு மனதை வெறுமை சூழ்ந்தது. கதை என்பதை நினைவு படுத்திக்கொண்டுதான் இழந்த நம்பிக்கையை முழுமையாக பெற முடிந்தது.இவ்வளவு டார்க் வேண்டாம் சார்.நமது காமிக்ஸ் நம்பிக்கையை பெற ,தன்னம்பிக்கை அதிகரிக்க உதவுவதாகத்தான் இதுவரை நம் நண்பர்களும்,நானும் உணர்ந்துள்ளோம்.12 வயதில் தொடங்கிய எனது காமிக்ஸ் பயணத்தில் இம்மாதிரி உணர்வு மிகவும் புதிது.நமது வெளியீடுகள் அனைத்தையும் படித்து பழகிவிட்டதால் இம்மாதிரி கதைகளை தவிர்க்கவும் தெரியவில்லை. எனது பலவீனம்தான் என்றாலும் இது போல் டார்க் கதைகளை தவிர்க்க வேண்டுமென இறைஞ்சுகிரேன் சார்.
ReplyDeleteபுரிகிறது சார் ; ஆனால் ஒநாய்க் கூட்டங்களும் நம் மத்தியில் வசிப்பதை சென்ற வாரத்து தெலுங்கானா தலைநகர்ச் சம்பவம் நிரூபிக்கத் தானே செய்கிறது ? சில நேரங்களில் இத்தகைய நினைவூட்டல்கள் அவசியமன்றோ ?
Deleteசெந்தில் மாதேஷை இந்தக் கதை இவ்வளவு பாதித்து, கமெண்டும் போட வைத்திருப்பதே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது!
Delete@விஜய் ஒரு இரண்டு மணி நேரம் செய்வதரியாது திகைத்து விட்டேன் விஜய் ....terrible
Deleteரெளத்ரம் மற..
ReplyDeleteஎனக்கு என்னவோ இந்த முறை இது ஒரு சாதாரண விலையிலா இதழாக தெரியவில்லை..ஒரு முழுநீள டெக்ஸ் இதழை படித்த திருப்தியை கொடுத்தது..சித்திரங்களும்,பக்க அளவுகளும் அதை நிரூபிக்கின்றன எனில் கதையும் அவ்வாறே ..பல நண்பர்கள் படித்து விட்டார்களோ என்னவோ ,எனவே கதையை பற்றி சொல்ல போவதில்லை.
ஆனால் ஒரே வரியில் சொல்லி விடலாம் சிம்ப்ளி சூப்பர்.
கதை சொல்லும் கானகம்....
ReplyDeleteமற்ற சமயங்களில் இந்த கதையை படித்திருந் தால் பாதிப்பு கொஞ்சம் குறைவாக இருந்து இருக்குமோ என்னவோ சமீபத்தில் ஓர் இளம் பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட கொடூரமும் இந்த கதையை படித்து முடித்தவுடன் கண்முன் வந்து நின்று ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது ..இது கதை அல்ல கண்முன் நடக்கும் நிஜ பயங்கரம் என்று. அப்பப்பா இதை எழுதும் பொழுது கூட இன்னுமும் ,இங்கேயும் நடக்கும் இது போன்ற சமூகத்தில் தானே நாமும் வாழ்கிறோம் என்ற பயத்தையும் ஏற்படுத்துகிறது..என்னை பொறுத்த "கதை சொல்லும் கானகம் " ஒரு கதை அல்ல.. சகோதரிகளை கொண்ட ஒவ்வொரு ஆண்களும் ,பெண்களை பெற்ற அனைத்து தந்தைகளும் இந்த கானகத்தின் கதையின் மூலம் நம்மிடையே இருக்கும்.., போர்வைக்குள் ஒளிந்திருக்கும் வக்கிர மனிதர்களிடம் இருந்து எவ்வாறு ஜாக்ரதையாக இருக்க வேண்டும் என்பதை பாலபாடமாக கற்று தரும் இதழ் இது..இதுவரை எத்துனையோ கிராபிக் நாவலை படித்து ஒதுங்கி இருக்கலாம்..சில கிராபிக் நாவல்களை படித்து கலங்கி இருக்கலாம்..சில கிராபிக் நாவல்களை படித்து மகிழ்ந்தும் இருக்கலாம்.ஆனால் இந்த "கதை சொல்லும் கானகம் " கிராபிக் இதழோ இதனை விட வேறு மாதிரி .இதன் பாதிப்பு மனதினுள் அதிகம் அழுத்துவதன் காரணம் சித்திரங்களும்,அதன் மொழி ஆக்கமும் பெரும் துணை என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த இதழுக்கு எப்படி மதிப்பெண்களை வழங்குவது என எனக்கு தெரியவில்லை.ஆனால் ஒவ்வொரு இல்லத்திலும் ,நூலகத்திலும் இருக்க வேண்டிய மிக முக்கிய இதழ் இந்த "கதை சொல்லும் கானகம் "
ஆத்மார்த்தமான விமர்சனம் தலீவரே!
Deleteஇதனில் மொழியாக்கம் சொல்லும்விதமாய் அமைந்திருப்பின், அதற்கான கிரெடிட் பெரும்பாலும் ஒரிஜினல் ஸ்கிரிப்டுக்கே தலீவரே ! கைகளை பற்றியபடிக்கே நடை போடும் சிறு பிள்ளைகளை போல - இதன் ஒரிஜினல் வரிகளை பின்பற்றியது மட்டுமே நான் செய்தது !
DeleteAnd yes - அந்தத் தெலுங்கானா சம்பவத்தின் தாக்கம் இதனை இன்னமும் வீரியமாக்குகிறது ! "ஓநாய்கள் உலவும் பூமியிது" என்று எழுதிய மை காய்வதற்குள் இப்படியொரு கோரம் என்பது தான் கொடுமை !
புக்கு கெடைச்ச ஒன்னு ரெண்டு நாள்லயே படிச்சு முடிக்க வரம் கிடைச்சவங்களை நினைச்சா கொஞ்சூண்டு பொறாமையாத்தான் இருக்கு!!
ReplyDeleteபுத்தகங்களை வாங்கி தடவி, புரட்டிப் பார்த்ததுக்கப்புறம் இப்பத்தான் கி.நா'வை நாலு பக்கம் புரட்ட டயம் கிடைச்சிருக்கு எனக்கு!