Powered By Blogger

Saturday, November 23, 2019

ஒரு காலும்..ஒரு கட்டைவிரலும் ...!

நண்பர்களே,

வணக்கம். அடுத்தாண்டின் அட்டவணை எல்லாமே ரெடி என்ற போதிலும்,  சிக்கும் வாய்ப்புகளில் சிக்கும் புதுக் கதைகளை வாசிக்கும் பழக்கம் இன்னமும் தொடர்கிறது ! And அப்படியொரு வாசிப்பின் மறு கணம் எனக்குத் தோன்றிய எண்ணங்களை லேசாய்க் கூட dilute ஆகிட அனுமதிக்கலாதென்று ஒரே ஓட்டமாய் வந்து எழுத்தாக்கியுள்ளேன் ! Maybe கொஞ்ச நாட்களுக்குப் பின்னே இந்தக் கதை மீதான தாக்கம் இதே போலத் தொடர்ந்திடுமா ? அல்லது குன்றியிருக்குமா ? என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை ; ஆனால் இந்த நொடியின் ரம்யத்தைப் பகிரத் தோன்றியதால் இந்த ஓட்டம் !  

ஹீரோவே கிடையாது....அடிதடி அதகளம் எதுவும் கிடையாது ...இன்னும் சொல்லப் போனால் இந்தக் கதையில் யாரும் - யாருக்கும் எதிரியெல்லாம் கிடையாது .....அட...இன்னும் ஒரு படி மேலே போவதாயின் இங்கே கதையென்றே பெருசாய் எதுவும்  கிடையாது !! வாழ்க்கையின் அந்திப் பொழுதில் நிற்கும் மனிதர்களின் அனுபவங்கள் ; உணர்வுகள் ; சந்தோஷங்கள் ; சங்கடங்கள் என்றே சுழன்றடிக்கும் ஆல்பம் இது ! இடையிடையே வாழ்க்கையின் இன்னல்கள் பற்றி கதை மாந்தர்கள் பொரிந்து தள்ளுவதும் உண்டு ; அதே சமயம் நெகட்டிவான வட்டத்துக்குள் சிக்கிடாது ஜாலியாய் ஓட்டமெடுக்கவும் தெரிந்த ஆல்பம் இது ! வாழ்க்கைப் பாடங்களை ; அதன் யதார்த்த முகங்களை ; இளமையின் வேகத்தை ; முதுமையின் மந்தத்தை சொல்ல விழையும் முயற்சி இது ! இங்கே ஆணழகர்களோ ; கவர்ச்சிக் கன்னிகளோ கிடையாது ; அத்தனை பேருமே ஒருவித கார்ட்டூன் பாணியிலான சித்திரங்களில் சராசரிக்கும் கீழேயே தென்படுவர் ! 

தொழிலாளர் ஒற்றுமை ; அரசியல் ; கடந்து போன / மறந்து போன ஒரு காலகட்டத்தின் வாழ்க்கைமுறைகள் என்று செல்லும் இந்த ஆல்பத்தில் மாமூலான காமிக்ஸ் சமாச்சாரங்கள் எதையும் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் ! கிளைமாக்சிலாவது  நல்லவனும், கெட்டவனும் மோதி - கெட்டவன் மண்ணைக் கவ்வுவான் என்றெல்லாம் காத்திருந்தால் அங்கும் 'புஸ்ஸ்ஸ்' தான் ! யதார்த்த வாழ்வில் போல் ஜெயமோ-தோல்வியோ 'சக்கரங்கள் சுழன்றே தீரணும் !' என்று கதைமாந்தர்கள் நடையைக் கட்டுவார்கள் ! So வெகுஜன காமிக்ஸ் இலக்கணத்துக்கு கொஞ்சமும் கிட்டே நிற்காததொரு படைப்பு இது ! நமக்கு ரொம்பவே பரிச்சயமானதொரு கதாசிரியரின் கைவண்ணமிது என்பது மாத்திரமே இதற்கென நான் பரிந்துரைக்கக்கூடிய ஒரே ப்ளஸ் பாய்ண்ட் !

ஆனால்...ஆனால்....

இத்தனைக்கும் மீறி இந்த 50+ பக்கங்களில் ஒரு இனம்புரியா ஈர்ப்பு...ஒரு மென்சோகம் கலந்த சந்தோஷம் இழையோடுவது போல் தென்பட்டது எனக்கு ! 

Maybe ..just maybe இத்தகையதொரு படைப்பை ரசிக்கும் பாங்குக்கும், எனது ஏழரைக் கழுத்தை வயதுக்கும்  ஏதேனும் தொடர்பிருக்குமோ - என்னவோ தெரியவில்லை ! And maybe  வயதில் குறைந்தோர்க்கு இது ரசிக்குமோ - ரசிக்காதோ - கணிக்கவுமே  தெரியவில்லை ! 

But இந்தச் சந்தேகங்களையும் மீறி ; தயக்கங்களையும் தாண்டி - இந்த ஆல்பத்தைத் தமிழுக்குக் கொணரும் வேட்கையை மட்டும் மட்டுப்படுத்திட இயலவில்லை ! மாமூலான பொழுதுபோக்கை எதிர்பார்க்கும் நண்பர்கட்கு  இதனில் பத்தே பக்கங்களைக் கூடத் தாண்ட முடியாது போகலாம் ; ஆனால் 'சற்றே வித்தியாசமான படைப்புகளை முயற்சித்துத் தான் பார்ப்போமே' என்று எண்ணக்கூடிய நண்பர்களுக்கு இது கிருஷ்ணா சுவீட்ஸ் மைசூர்பாகாய் கரையவும் செய்யலாம் ! 

கெலித்தால் எனது ரசனை சிலாகிக்கப்படலாம் ; சொதப்பினால் கேலியும், கிண்டலுமாய், சீப்பட்டும் போகலாம் ! 'நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு ; இந்த விஷப் பரீட்சையெல்லாம் வேணும் தானா ?' என்று உங்களுக்குத் தோன்றின் நிச்சயம் அது உங்கள் தவறாகாது ! ஆனால் ஒரேயொரு நூறு ரூபாயில் ஒரு வாழ்க்கைப் பயணத்தை தரிசிக்கும்  வாய்ப்பை இழக்க இந்தக் கட்டை விரல் காதல் தாசனுக்கு மனம் ஒப்ப மறுக்கின்றது ! "அது சரி, உன் மப்புக்கு எங்க காசு தான் ஊறுகாயா மாப்பு ?" என்ற அன்பான குரல்கள் எழும் வாய்ப்புகளும் உண்டென்பது புரிகிறது ! 
So இல்லாத கேசத்தை ரொம்பப் பிய்த்துக் கொண்டிராது சின்னதாயொரு தீர்மானத்துக்கு வந்தேன் ! Loyalty points ; சந்தா செலுத்துவோருக்கு பிரத்யேகமாய் ஏதேனும் புக்குகளோ ; பொருட்களோ பரிசாய்த் தருவதாய் 3 ஆண்டுகளாய் பிராமிஸ் செய்து வருகிறோமல்லவா ? முந்தைய ஆண்டுகளுக்கு என்ன வழங்குவதென கொஞ்சமாய் யோசித்து முடிவெடுக்க அவகாசம் எடுத்துக் கொள்ளும் கையோடு - 2020-ன் சந்தாதாரர்கட்கு இந்த இதழை பாய்ண்டுகளுக்கு ஈடாய்த் தந்தால் என்னவென்று ? நினைத்தேன் ! So ஜனவரியின் இறுதியில் சந்தாச் சேகரிப்புகள் நிறைவுறும் தருணத்தில் - இந்த இதழினை official ஆக அறிவித்திட எண்ணியுள்ளேன் ! Of course - கதைக்கான உரிமைகளை பெற்றிடும் வேலைகளை இனிமேல் தான் துவக்கிடவே வேண்டும் ; ஆனால் கையைக் காலைப் பிடித்தேனும் வாங்கிடலாமென்ற நம்பிக்கையில் இருக்கிறேன் ! அப்புறம்  'இது எனக்கு வேண்டாம் !' என்று எண்ணிடும் சந்தா நண்பர்களுக்கு  இதனை நிராகரித்து விட்டு பாயிண்டுகளை முன் எடுத்துச் செல்லும் சுதந்திரமும் இருக்கும் !  

So என் ஆர்வக் கோளாறுக்கும் வடிகால் கண்டது போலவும் ஆச்சு  ; உங்கள் பாக்கெட்களுக்குச் சேதமும் இன்றிப் போனது போலவும் ஆச்சு ! 

அப்புறம் இந்த இன்டர்நெட் யுகத்தில் நான் குறிப்பிடும் கதை எதுவென்று கண்டுபிடிக்க அதிக நேரம் பிடிக்காது தான் ! In fact இப்போதே கூட உங்களில் சிலருக்கு நான் பேசுவது எந்தக் கதையைப் பற்றி என்று தெரிந்திருக்கக்கூடும் தான் !  ஆனால் இத்தனை பில்ட் டவுணுக்கு ; இத்தனை நெகட்டிவ் எண்ணங்களுக்குப் பிற்பாடும்  இந்த இதழுக்கு எத்தனை பேர் opt செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள என்னுள் சின்னதாயொரு curiosity ! So அது வரையிலாவது  உங்களின் ஷெர்லாக் ஹோம்ஸ் வேகங்களை இங்கும் சரி, இன்ன பிற களங்களிலும் சரி, கட்டுக்குள் வைத்திருக்கக் கோருகிறேன் folks !! Thanks for your understanding !

ரைட்டு...மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்த சமாச்சாரத்தை இறக்கி வைத்தாயிற்று என்ற திருப்தியோடு ரெகுலர் விஷயங்களுக்குள் புகுந்திடலாமா ? இதோ டிசம்பரின் சந்தா B சார்பிலான ரிங்கோவின் முதற்பார்வை & டிரெய்லர் !
அமரர் வில்லியம் வான்ஸை நினைவு கூர்ந்திடும் விதமாய் அவரது ஆர்ட்ஒர்க்கில் வெளியான இந்தத் தொடரை நாம் தேர்ந்தெடுத்தது போனாண்டின் சேதி ! 2019 அட்டவணையில் இந்த இதழ் சந்தா B-ல் compact சைசில் black & white-ல் வெளிவருவதாய் அறிவித்திருந்ததுமே நீங்கள் அறிவீர்கள் ! உரிய வேளைகளில் கதைகளை வரவழைக்கும் முன்பாய் மொழிபெயர்ப்புக்கோசரம் அவற்றின் low resolution பக்கங்களை வாங்கிடுவது வாடிக்கை ! அதே போல் இம்முறையும் செய்த போது அமரர் வான்ஸின் துவக்க நாட்களது சித்திர பாணியுடன் ரிங்கோவின் பக்கங்கள் மின்னஞ்சலில் வந்து சேர்ந்தன !  அவற்றைப் புரட்டியபடிக்கு வான்ஸ் அவர்களின் ஜாலங்களை  ரசித்த வேளையிலேயே சின்னதாயொரு  நெருடலும் துளிர்விட்டது ! ஒரு tribute இதழை ரெகுலர் சைசில் வெளியிடாது compact சைசுக்கு கொண்டு செல்வதென்பது கஞ்சப் பிசினாரி வேலையாய்த் தென்படுமே என்று உறுத்தியது ! ஏற்கனவே ஜடாமுனிகாரு கதையினையும் இதே போல திட்டமிட்டிருந்தும், பின்னே ரெகுலர் சைசுக்கே கொண்டு சென்றதும் நினைவில் நிழலாட ரிங்கோவும் ரெகுலர் சைஸ் என்றே தீர்மானித்தேன் ! அப்பாலிக்கா நெருடல் # 2  தலை தூக்கியது - ஒரிஜினலின் வண்ணப் பக்கங்களைப் பார்த்த போது ! வெறுமனே கருப்பு-வெள்ளையில் மாத்திரமே ஒரிஜினலாய் உள்ள கதைகளை வெளியிடும் போதே - "இதைக் கலரில் போட்டிருக்கலாமே ?" என்று ஆதங்கக் குரல் எழுப்பும் வட்டத்திடம் - ஒரு வண்ணத்திலான கதையை black & white-ல் ஒப்படைத்தால் என்ன மாதிரியான எதிர்வினையிருக்கக்கூடுமென்று யூகிக்க முயற்சித்தேன் ! ஏனோ தெரியலை...திடீரென மதுரை வெளிக்கடைகளில் 'டங்கடங்கடங்க..'வென்று கொத்து பரோட்டா போடும் ஓசை கேட்பது போலவே ஒரு பீலிங்கு !! 'ஆங்...வான்ஸின் சித்திரங்களை ரசிக்க black & white தான் சுகப்படும் என்று சமாதானம் சொல்லிக்கலாமென்று மனசுக்குள்  சொல்லிக் கொண்ட நொடியில் பஜ்ஜி போட தெருமுனையிலான டீக்கடையில் 'சரக்..சரக்' என்று வாழைக்காயை சீவும் காட்சி  நிழலாடத் துவங்கியது !  அப்புறமென்ன ? "ஆத்தாடியோவ் !! ரிங்கோ in color ; in regular size" என்ற தீர்மானம் தான் !! ஒரு அமரரை நம்மளவிற்கு வணங்கிடும் முயற்சியில் துட்டுக் கணக்கை ரொம்பப் பார்த்துத் திரிந்தால் வேலைக்கு ஆகாது என்ற ஞானோதயம் ஒருமாதிரிப் புலர்ந்திட - here you go !
சற்றே புராதன கலரிங் பாணி தான் என்றாலும் கலர்- கலர் தானே ? And அதனை நான் கண்ணில் காட்டாது கருப்பு -வெள்ளையிலேயே நின்றிருப்பின் அது சார்ந்த curiosity இன்னும் ஜாஸ்தியாக இருந்திருக்கக்கூடும் ! So லேட்டான தீர்மானமெனினும் லேட்டஸ்ட்டான தீர்மானமென்று வைத்துக் கொள்வோமே ?

அப்புறம் ஒரே மாதத்தில் ஒரே சந்தாப் பிரிவிலிருந்து 2 இதழ்கள் இதற்கு முன்பாய் வெளியாகியுள்ளனவா - தெரியவில்லை ! ஆனால் இம்மாதம் சந்தா B சார்பில் இரு இதழ்களுண்டு ! இதோ TEX-ன் சிங்கிள் ஆல்பத்தோடு இந்தாண்டைப் பூர்த்தி செய்திடும் "சூது கொல்லும்" preview !!
As always - வில்லன் யார் ? சிக்கல் என்ன  என்பதையெல்லாம் நம்மூர் மந்திரிகளின் பேட்டிகள் போல் உரக்கவே கதாசிரியர் சொல்லி விட்டுத் தான், அப்புறமாய் நம்மவர்களை களத்துக்குள் இறக்கி விடுகிறார் ! கதைக்கான backdrop சற்றே வித்தியாசமானது என்பது ப்ளஸ் பாய்ண்ட் ! மற்றபடிக்கு சிக்குவோரையெல்லாம் சாத்தியெடுக்கும் அவதாரோடு ஓவியர் சிவிடெல்லியின் துவக்க நாட்களின் சித்திரங்களோடு கதை தட தடக்கிறது ! 'தல'க்கு  பில்டப் என்பதெல்லாம் மதுரைக்கு ஜிகர்தண்டாவை அறிமுகம் செய்வதை ஒத்த முயற்சி என்பதால் இத்தோடு ஒலிபரப்பை முடித்துக் கொள்கிறேன் guys !!
புக்குகள் சகலமும் ரெடியென்றாலும் முகவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு வியாழனன்று (28th.nov) despatch செய்திடவுள்ளோம் ! So வெள்ளி & சனிக்குள் அனைவரிடமும் புக்குகள் இருந்திடுவதை உறுதி செய்திட இயலும் என்ற நம்பிக்கையோடு விடை பெறுகிறேன் ! Bye all ! See you around ! Have a great Sunday !

P.S : சென்னைப் புத்தக விழாவிற்குப் பின்னான விழா என்றாலும் ஏற்பாடுகளில் இப்போதே முனைப்பு காட்டி வருகின்றனர் திருப்பூர் புத்தக விழவினர் ! ஜனவரி 30-ல் துவங்கவுள்ள இந்த விழாவில் நாமும் இடம் போட்டுள்ளோம் !! 

அப்புறம் 2019-ன் பணிகள் எங்களளவில் ஓவர் guys !! இனி 2020  க்கான பயணத்தைத் துவங்கிட சந்தாக்களெனும் பச்சைக்கொடி நீங்கள் காட்டினால் தான் ஆச்சு !! Please do subscribe all !!

163 comments:

  1. முதலிரண்டு பத்திகளை படிக்கும் போதே நாலாவது பத்தியின் முதல் வரி மண்டைக்குள் ஓடியது என்னவோ வாஸ்தவம் தான்...

    ReplyDelete
  2. இந்த மாசம் நல்ல கன்டென்ட் கிடைக்கும்ன்னு பட்சி கூவுது..்

    ReplyDelete
  3. ஆஹா...நல்லதொரு பதிவு..

    ReplyDelete
  4. பத்துக்குள்ள வந்தாச்சு...ஆனா படிச்சிட்டு வரல்லியே...!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. இங்கோ பிங்க்கோ பாங்க்கோ போடாமல் ரிங்கோ கலரில் வருவதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. நள்ளிரவு வணக்கங்கள் காமிக்ஸ் காதலர்களுக்கு....

    ReplyDelete
  8. சந்தா கட்டியாச்சு...

    ReplyDelete
  9. திருப்பூர் புத்தக விழாவில் ஸ்பெசல் அறிவிப்பு ஏதாவது இருக்கிறதா விஜயன் சார் ??

    ReplyDelete
    Replies
    1. ஜம்போ சீசன் 3 பட்டியலை வேண்டுமானால் வெளியிடலாம் சார் ; மற்றபடிக்கு ஆண்டின் முதல் மாதத்திலேயே வேறென்ன ஸ்பெஷல் இருக்க முடியும் ?

      Delete
    2. அதுவே போதுமே!!!

      Delete
  10. சூது கொல்லும்


    டெக்ஸை குறி பார்த்துக்கூட சுட தெரியாத என்ன வில்லன் இவர் ( டெக்ஸ் இவ்வளவு அருகிலிருந்தும் ? !!! )

    ReplyDelete
  11. ரிங்கோ வண்ணத்தில் வழக்கமான அளவில் வரும் செய்தித் தேனாய்த் தித்திக்கின்றது.
    ஓவியமாமேதை வில்லியம் வான்ஸின் சித்திர அதகளத்தைத் தரசிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றேன்.

    ReplyDelete
  12. சிவிடெலி ஓவியங்கள் தத்ருபமாக இருக்கும்.தல கதை செம மாஸாக இருக்கப்போவது உறுதி.

    ReplyDelete
  13. நல்லிரவு வணக்கம்!!!

    ReplyDelete
  14. ///'சற்றே வித்தியாசமான படைப்புகளை முயற்சித்துத் தான் பார்ப்போமே' என்று எண்ணக்கூடிய நண்பர்களுக்கு இது கிருஷ்ணா சுவீட்ஸ் மைசூர்பாகாய் கரையவும் செய்யலாம் ! ///

    I'm ready for Krishna sweets sir! 👍👍👍

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கிருஷ்ணா ஸ்வீட் பார்சல்

      Delete


  15. அந்த ரிடையர்ட் மோடு புக் என்னான்னு புரிஞ்சு போச்,...

    தெரிஞ்சும் போயி‌...

    எந்தா விஜயன் சாரே...
    நிங்கள் ஒன்றும் விஷமிக்க வேண்டாம்...
    ஆ புக் ஒரு வல்லிய செலக்ஷன் சாரே....

    ReplyDelete
    Replies
    1. நம்மள் கி வயசுக்கு அப்டி தோணுதோ என்னவோ சார் !

      Delete
  16. வணக்கம் ஆசிரியர் சார் மற்றும் நண்பர்களே. அழகான பதிவு. நீங்கள் கட்டை விரலை பற்றி பேசினாலே எனக்கு குதூகலம் தான். புதிய முயற்சிகளுக்கு எனது ஆதரவு எப்போதுமே உண்டு. எனக்கு அந்த புத்தகம் வேண்டும். டிசம்பர் மாத இதழ்கள் வெள்ளி சனி கிடைக்கும் என்பது ஐசிங் ஆன் தி கேக்.
    இதழ்களின் preview பட்டையை கிளப்பு கிறது.
    நமது சரித்திரத்தில் இப்போது தான் முதல் முறை ஒரே சந்தாவில் இருந்து இரு இதழ்கள் சந்தா B.

    ReplyDelete
  17. ரிங்கோ வருவதில் மகிழ்ச்சி சார்! என்ன மூன்று பாகத்தையும் ஒன்றாக போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இதே போல அமரர் வில்லிமம் வான்ஸ் படைப்புகளில் உருவான ப்ரூனோ பிரேசில் 2.0 எப்போது களம் காணுவார் சார்? 2020 ல் வாய்ப்புள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. ப்ருனோ பிரேசில் பாகம் 2 தயாராக வேண்டுமே சார் !

      Delete
  18. ஞாயிறு காலை வணக்கம் சார்🙏🏼
    மற்றும் நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  19. விஜயன் சார்,

    // 2020-ன் சந்தாதாரர்கட்கு இந்த இதழை பாய்ண்டுகளுக்கு ஈடாய்த் தந்தால் என்னவென்று //

    எனக்கு சம்மதம். நல்ல முடிவு, இது போன்ற பரிசோதனை முயற்சி கதைகளை
    இது போன்று முயற்சி செய்வது நல்லது ஐடியா.

    இதற்கு e-mail எதுவும் அனுப்ப வேண்டுமா?

    ReplyDelete
  20. விஜயன் சார், அடுத்த மாதம் சந்தாதாரர்களுக்கு ஆன விலையில்லா டெக்ஸ் உண்டா? முடிந்தால் அதன் டீசரை கண்ணில் காண்பித்து விடுங்களேன்? ப்ளீஸ்.

    ReplyDelete
  21. // வியாழனன்று (28th.nov) despatch செய்திடவுள்ளோம் //
    இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே......

    ReplyDelete
  22. Replies
    1. டெக்ஸ் கதையின் அட்டைப்படம் நன்றாக உள்ளது. இந்த முறை அட்டைப்படமே வில்லன் யார் என்று சொல்லிவிட்டது.அதுவும் வில்லன் டெக்ஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டான், டெக்ஸ் சுதாரித்து நகர்ந்து விட்டார், அவர் கை இன்னும் தூப்பாக்கியில் இல்லை அப்படி என்றால் வில்லன் துப்பாக்கியை கையால்வதில் வல்லவன் போல் தெரிகிறது.

      வழக்கமான டெக்ஸ் கதை (நான்கு பஞ்ச் டயலாக், சட்டையை பிடித்து பல்லை உடைத்து enquiry பண்ணுவது, டமால் டூமீல்) படித்து மாதங்கள் பல ஆகிவிட்டன. இது போன்ற கதைகளை வருடத்திற்கு ஒன்றையாவது கண்ணில் காட்டுங்கள் சார்.

      Delete
  23. ரிங்கோவின் "ஒரு தங்கத் தடம்" அட்டைப்படம் அசத்தல் ஆசிரியரே......

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் புகழும் அமரர் வான்சுக்கே !

      Delete
  24. Replies
    1. விஜயன் சார்,

      ரிங்கோ கவரில் வருவது இரட்டிப்பு மகிழ்ச்சி. அதேபோல் compact size இல்லாமல் ரெகுலர் சைசில் வருவது சந்தோஷம்.

      இதற்கு காரணம் உங்கள் காமிக்ஸ் காதல் மற்றும் எங்களுக்கு சிறந்ததை தரவேண்டும் என்ற உங்கள் மனம். நன்றி.

      ரிக்கோ அட்டைப்படம் அருமையாக உள்ளது, அதுவும் அந்த பின்னணி வண்ணம் மனதை ஏதோ செய்கிறது.

      Delete
    2. ஒரிஜினல் வான்ஸ் சித்திரம் சார் - துளி கூட நோண்டல்களின்றி !!

      Delete
  25. தலயின் "சூது கொல்லும்" பட்டையக் கிளப்பும் போல.....
    இந்த மாசம் பலத்த போட்டி இருக்கும் போல....

    ReplyDelete
  26. // ஜனவரி 30-ல் துவங்கவுள்ள இந்த விழாவில் நாமும் இடம் போட்டுள்ளோம் !! //
    மகிழ்ச்சியான செய்தி......

    ReplyDelete
  27. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 🎶🎶🎶

    ReplyDelete
  28. புதுசுக்கு டபுள் ஓ கே

    ReplyDelete
  29. வித்தியாசமான (கதைகள்)காமிக்ஸ் எப்போதும் எனக்கு பிடிக்கும்!அதுவும் பரிசாக!இரட்டிப்பு மகிழ்ச்சி,நன்றி!

    ReplyDelete
  30. சார் 24th oct சந்தா 2020 ஜம்போ 2020 பணம் அனுப்பி screenshot மெயில் அனுப்பியிருந்தேன் இன்று வரை பதில் வரவில்லை கொஞ்சம் செக் பன்னி சொல்லுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. நாளை பார்க்கச் சொல்லிடுகிறேன் நண்பரே !

      Delete
  31. //ஹீரோவே கிடையாது....அடிதடி அதகளம் எதுவும் கிடையாது ...இன்னும் சொல்லப் போனால் இந்தக் கதையில் யாரும் - யாருக்கும் எதிரியெல்லாம் கிடையாது .....அட...இன்னும் ஒரு படி மேலே போவதாயின் இங்கே கதையென்றே பெருசாய் எதுவும் கிடையாது !! வாழ்க்கையின் அந்திப் பொழுதில் நிற்கும் மனிதர்களின் அனுபவங்கள் ; உணர்வுகள் ; சந்தோஷங்கள் ; சங்கடங்கள் என்றே சுழன்றடிக்கும் ஆல்பம் இது //

    ஜி.நாகராஜனின் நாளை மற்றொரு நாளே பாணியிலான க்ளாசிக் கதை போலிருக்கிறது ஆசிரியரின் வர்ணனை!! ரசனைகளின் பல பரிமாணங்களை காட்டிடும் எடிட்டர்் அவர்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. நமது மையக் குறிக்கோள் பொழுதுபோக்கு & கமர்ஷியல் கதைகள் தான் என்றாலும், இடையிடையே இது போல் ஏதேனும் வித்தியாசங்களை செய்து பார்க்கும் ஆசை இப்போதெல்லாம் ஜாஸ்தி சார் ! கண்ணுக்கெட்டும் தொலைவில் ஓய்வின் வயது தென்படும் போது இயன்ற பல்டிக்களையெல்லாம் அடித்துப் பார்த்து விட்ட திருப்தியை ஈட்டிடும் சுயநலம் என்று கூட இதைச் சொல்லலாம் ! சாவகாசமாய் வீட்டில் அமர்ந்து பல்செட்டைக் கழற்றி மாற்றிடும் வேளைகளில் - காலம் முழுக்க மரத்தைச் சுற்றி பாட்டுப் பாடுவதிலேயே தொலைத்து விட்டோமே ! என்ற ஆதங்கம் தலைதூக்கிடக் கூடாதல்லவா ?

      Delete
    2. // காலம் முழுக்க மரத்தைச் சுற்றி பாட்டுப் பாடுவதிலேயே தொலைத்து விட்டோமே ! என்ற ஆதங்கம் தலைதூக்கிடக் கூடாதல்லவா ? //
      சரியான கருத்து சார்.......

      Delete
    3. // காலம் முழுக்க மரத்தைச் சுற்றி பாட்டுப் பாடுவதிலேயே தொலைத்து விட்டோமே ! // என்ற ஆதங்கம் இப்போது தான் கொஞ்சம் குறைந்து உள்ளது

      Delete
  32. ஹீரோவே கிடையாது....அடிதடி அதகளம் எதுவும் கிடையாது ...இன்னும் சொல்லப் போனால் இந்தக் கதையில் யாரும் - யாருக்கும் எதிரியெல்லாம் கிடையாது .....அட...இன்னும் ஒரு படி மேலே போவதாயின் இங்கே கதையென்றே பெருசாய் எதுவும் கிடையாது !! வாழ்க்கையின் அந்திப் பொழுதில் நிற்கும் மனிதர்களின் அனுபவங்கள் ; உணர்வுகள் ; சந்தோஷங்கள் ; சங்கடங்கள் என்றே சுழன்றடிக்கும் ஆல்பம் இது

    *******

    ! 'நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு ; இந்த விஷப் பரீட்சையெல்லாம் வேணும் தானா ?' என்று உங்களுக்குத் தோன்றின் நிச்சயம் அது உங்கள் தவறாகாது !


    *********


    புரிதலுக்கு நன்றி சார்..:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே...பதுங்கு குழிக்குள்ளாற குந்தியபடிக்கே குதிரைப்பசங்களோடே மரத்தைச் சுற்றிச் சுற்றி பாட்டுப் படிச்சா போதும்னு பாத்துட்டீங்க !!

      Delete
  33. 2020-ன் சந்தாதாரர்கட்கு இந்த இதழை பாய்ண்டுகளுக்கு ஈடாய்த் தந்தால் என்னவென்று ? நினைத்தேன் ! So ஜனவரியின் இறுதியில் சந்தாச் சேகரிப்புகள் நிறைவுறும் தருணத்தில் - இந்த இதழினை official ஆக அறிவித்திட எண்ணியுள்ளேன்

    *****

    'இது எனக்கு வேண்டாம் !' என்று எண்ணிடும் சந்தா நண்பர்களுக்கு இதனை நிராகரித்து விட்டு பாயிண்டுகளை முன் எடுத்துச் செல்லும் சுதந்திரமும் இருக்கும் !

    So என் ஆர்வக் கோளாறுக்கும் வடிகால் கண்டது போலவும் ஆச்சு ; உங்கள் பாக்கெட்களுக்குச் சேதமும் இன்றிப் போனது போலவும் ஆச்சு

    #######

    இதில் தெரிகிறது சார் ..இந்த கதை உங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை..

    அந்த தாக்கத்தை என்னை போன்ற சிறுவர்களுக்கும் ஏற்படுத்த முடியுமா என்பதை அறியவாது நானும் பாயிண்ட்களுக்கு பதிலாக இதழை பெற்றுக் கொள்கிறேன் சார்..:-)

    ReplyDelete
  34. சார் கலர் இவர்தான்...அங்க நிககுறீய....புராதன வண்ணமே தனியழகுதானே....ரிங்கோ ஒரு பக்கமும் சரி . .அட்டைப்படமுஞ் சரி சும்மா பிச்சி ஒதறுதே....அடுத்த மாதமே குதித்தோடி வாராயோ....டெக்சட்டையும் கலக்கல்....லாயல்டி பாயிண்ட் செலவழிக்கும் வச்சிருக்கலாம்னு நெனெச்சனே....இதுக்குதானே ஆசைப்பட்டால் பொன்ராசுன்னு அலறவிடுது நீங்க தர உள்ள கதை....சார் உங்களால மட்டும எப்டி முடிவு....தலை வணங்குகிறேன்...நன்றிகள்...


    ஸ்டீல்

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஸ்டீல் ன்னு போடலைனாலும் நாங்க ஸ்டீல்ன்னு கண்டுபிடிச்சுடுவோம் ஸ்டீல்..:-)

      Delete
    2. நான் அங்கேயும் நிக்கலே...இங்கேயும் நிக்கலே ஸ்டீல் ; மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்தபடிக்கே தான் டைப்பிடிக்கிறேன் லேப்டாப்பிலே !

      Delete
    3. எடிட்டர் சார் ஹிஹிஹி

      Delete
    4. //நீங்க ஸ்டீல் ன்னு போடலைனாலும் நாங்க ஸ்டீல்ன்னு கண்டுபிடிச்சுடுவோம் ஸ்டீல்..:-)//

      😂😂😂

      Delete
    5. Henna Panna ...Nama Inna typuna athu Inna typuthu nanbargale...,,😙😁

      Delete
    6. Henna Panna..naama onna typuna athu onna typuthe nanbargale😁😁😁😁😁😁

      Delete
    7. ,///


      ஸ்டீல் க்ளா24 November 2019 at 15:00:00 GMT+5:30
      Henna Panna ...Nama Inna typuna athu Inna typuthu nanbargale...,,😙😁


      ஸ்டீல் க்ளா24 November 2019 at 15:01:00 GMT+5:30
      Henna Panna..naama onna typuna athu onna typuthe nanbargale😁😁😁😁😁😁
      ////


      ROFL

      Delete
  35. ரிங்கோ...

    அட்டைப்படம் கலக்கல் சார்..அந்த பனி படர்ந்த படலத்தில் நாயகனும் குதிரையும் புகைப்படம் போலவே அசத்துகிறது..காத்திருக்கிறேன்..

    டெக்ஸ் அட்டைப்படம் ஆரம்ப கால டெக்ஸை நினைவுபடுத்துகிறார் .காரம் குறையாது என்பதை அட்டைப்படத்திலியே தெரிகிறது..:-)

    ReplyDelete
  36. வணக்கம் நண்பர்களே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  37. வியாழனன்று (28th.nov) despatch செய்திடவுள்ளோம்\\\\

    புதன்கிழமை அனுப்புங்களேன் ப்ளீஸ். பெரும்பாலும் எனக்கு அனுப்பிய மறுநாள் காமிக்ஸ் வராது. நான் அலுவலக முகவரி கொடுத்துள்ளேன்.

    எப்போதம் திங்கட்கிழமை தான் கிடைக்கும். என்னை போல எத்தனை பேர் இதே போன்ற சிரமத்தை அடைகிறார்கள் என்று தெரியவில்லை.
    அதனால் வார இறுதியை உறுதி செய்யும் வகையில் புதன்கிழமையே அனுப்புங்களஅனுப்புங்களேன் ப்ளீஸ்.

    ReplyDelete
  38. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.கடந்த 2000 ஆண்டில் சந்தா வாசகனாக ஆரம்பித்து 2020 ஆண்டுக்கும் சந்தா வாசகனாக எனது கடமையை பூர்த்தி செய்து உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே 20 வருடம் என்பது சாதாரணம் அல்ல.

      Delete
    2. நண்பரே...

      நீங்கள் குறிப்பிடும் 2000-ன் துவக்கங்களின் பல பொழுதுகளில் நாம் சந்தாக்களையே அறிவிக்கவில்லையே ? ஆண்டொன்றுக்கு வெறும் 4 புக்குகளை மட்டுமே பிரசுரித்த ஆண்டும் அந்தச் சமயத்தில் உண்டல்லவா ?

      Anyways தொய்வு நம் பக்கமிருந்தாலும் உங்கள் மட்டுக்கு உத்வேகத்தோடு இருந்துள்ளமைக்கு நன்றிகள் சார் !

      Delete
    3. சார் 2000 ஆம் ஆண்டில் நான் மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த ஆண்டு.என் நண்பரை அழைத்து கொண்டு முதன்முறையாக சிவகாசி வந்து ராதாகிருஷ்ணன் சாரை பார்த்து என்னிடம் இல்லாத காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி கொண்டு வந்தேன். சந்தாவிற்கு பணம் கட்டி வைத்து ஒரு சில புத்தகங்கள் மட்டுமே வந்த நிலையில் கூட எனது சந்தா தொகையில் மீதி இவ்வளவு உள்ளது என்று தங்கள் அலுவலகத்தில் ஃபோன் செய்யும் போது அக்கவுண்ட் புத்தகத்தைப்பார்த்து தெளிவாக கூறுவார்கள். இடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது என்றாலும் கூட என்னைப் பொறுத்தவரை சந்தா கட்டி நான் நிம்மதியாக புத்தகங்களை வாங்கி வருகிறேன்.இது எப்போதும் தொடரும் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி

      Delete
    4. எனக்கு கூட பழைய ஞாபகங்கள் வருகிறது. பள்ளி காலத்தில் 10 பைசாவுக்கு வாடகைக்கு எடுத்து படித்திருக்கிறேன்.பணிக்கென பெங்களூர் சென்றபின் ஊருக்கு வரும்போதெல்லாம் சேலம் பஸ்ஸாண்ட்லில் காமிக்ஸ் வாங்குவதற்காய் தெறிக்க ஓடியதுண்டு. அப்புறம் ஊர் ஊராய் சுற்றும் வேலை வந்ததும் அந்தந்த ஊரில் உள்ள புத்தககடையை பரிச்சயம் செய்து கொண்ட பழக்கமெல்லாம் உண்டு. பின்புதான் ஊருக்கு செல்லும் பொதெல்லாம் சிவகாசி ஆபிசுக்கு நடையாய் நடந்த காலமெல்லாம் உண்டு. துவக்க காலத்தில் பிரகாஷ் பப்ளிகேசன் சந்து செல்வதற்கு முன்பாய் இன்னொரு சந்து உண்டு .அதனுள் புகுந்து அங்கே ஓர் ஆபீஸில் புத்தகங்கள் இருக்கா என மல்லுகட்டிய அனுபவமும் உண்டு.பிரஸ்-ல் வேலை நடந்தபோது, ஆபீஸ் எதிர்புறம் மாடியில் குடோன் இருந்தபோது, நான் வாங்காத புக் ஏதாவது இருக்குமா என்று எல்லா புக்கையும் புரட்டி போட்டதும் உண்டு. இரத்தபடலம் தொகுப்பு காலத்தில் தினம்தோறும் காவடி எடுக்காத குறைதான். ஒர் கட்டத்தில் புத்தகம் வெளியிடபடாத காலத்தில், அடுத்த புக் எப்ப வரும் என்று ஆபீஸில் அழாத குறையாய் கேட்ட காலங்களும் உண்டு. கடந்த 2 ஆண்டு முன்பு (என எண்ணுகிறேன்) சந்தாதாரராய் இருந்தேன். அப்பொழுதும் ஆபீஸ் சென்றே புத்தகங்களை பெற்று கொண்டேன். இன்றும் கிடைக்கும் விடுமுறையில் ஆபீஸ் சென்று புத்தகங்கள் வாங்குகிறேன்.

      Delete
  39. நான்
    "ஜுலை முதல் நவம்பர் வரை"
    வந்த புத்தகங்களுள்
    Must read 8 books என பரிந்து உரைப்பவை.
    1.அண்டர்டேக்கர்
    2.புதைந்து போன புதையல் (கலரில் Maxi சைஸ்சில் காண வேண்டிய புத்தகம்.)
    3.லயன் தீபாவளி மலர்-2019
    ( cid ராபின்,ஜுலியா, டைலன்டாக்)
    4.ஒரு பள்ளதாக்கு படலம்.
    5.பிஸ்டலுக்கு பிரியா விடை
    6.நித்தம் ஒரு யுத்தம்
    7.நீரில்லை...நிலமில்லை
    8.நித்திரை மறந்த நியுயார்க்

    என்னை சோதித்த கடுப்பேத்திய புக்
    1.வஞ்சம் மறப்பதில்லை.



    ReplyDelete
    Replies
    1. நீர் இல்லை நிலமில்ல must buy
      வஞ்சம் மறப்பதில்லை கடுப்பு ஆ? 😨 வானவில்லின் இரண்டு பக்கங்கள்

      Delete
    2. நீர் இல்லை நிலமில்ல must buy
      வஞ்சம் மறப்பதில்லை கடுப்பு ஆ? 😨 வானவில்லின் இரண்டு பக்கங்கள் +100

      Delete
    3. ரசனைகளின் மீட்டர்கள் சென்னை நகர ஆட்டோ மீட்டர்களை விடவும் சூடானவை தான் !

      Delete
  40. நான் சர்க்கஸ் சாகஸம் படித்து முடித்தபின்பு, தீபாவளி மலருக்கான புக் என்ற வகையில் வீரியத்தை குறைவாய் கண்டேன். ஒரு ரௌத்திர ரேஞ்சர் கூட அந்த இடத்தை ஆக்கிரமித்து இருக்கலாம். எனது மதீப்பீடு என்று 6.5 / 10 என எண்ணி இருந்தேன். அதன் பின் வஞ்சம் மறப்பதில்லை படித்தபின் டெக்ஸ்-In அருமை புரிந்தது. ச.சா மதிப்பு சடாரென 8.5 / 10 உயந்தது.
    வ.ம படிப்பதை காட்டிலும் டெக்ஸ்In மாயாஜால மந்திரதந்திர கதைக்கு ஜே சொல்லுவேன். குப்புற, மல்லாக்க, குட்டிகரணம் அடித்தாவது படிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  41. எனது ரசனையில்:
    ஜீலை முதல் நவம்பர் இதழ்கள் #
    1. அண்டர்டேக்கர்- 15/10
    2.புதைந்து போன புதையல்-15.5/10
    3. "லயன் தீபாவளி மலர் 19"- 11/10
    4. ஒரு பள்ளதாக்கு படலம்-9.5/10
    5. பிஸ்டலுக்கு பிரியாவிடை 11/10
    6. நித்தம் ஒரு யுத்தம் 10/10
    7. நீரில்லை...நிலமில்லை 9/10
    8. நித்திரை மறந்த நியூயார்க் - 8.5/10
    9. விடுமுறையில் கொல் 11/10
    10.கறுப்பு தா எனக்கு..கலரு 11/10
    11.ஒரு ரௌத்திர ரேஞ்சர் 9.5/10
    12.துரோகமே துணை 9/10
    13.தலைமுறை எதிரி -8.5/10
    14.சாலையோரம் ஜுவாலைகளே - 8/10
    15.லயன் ஆண்டு மலர் "லக்கி"19- 9/10
    16.லக்கிலூக்கை சுட்டது யார் - 9.5/10
    17.Maxi lion"லக்கி" -
    (மனதில் உறுதி வேண்டும்)- Must buy
    18.maxi lion "tex"
    பழி வாங்கும் பாவை- Must buy
    19.வஞ்சம் மறப்பதில்லை- 4.5/10

    ReplyDelete
  42. ஆசிரியரிடம் ஒரு சந்தேகம்...சந்தா பாயிண்டில் இலவசமாக புத்தகம் தரலாம் என்று சொன்னீர்கள்..சந்தோஷம்.
    இங்கு தான் சின்ன நெருடல்.1.தங்கனின் ஒரு படைப்பை கூட தவற விட கூடாது என்று நினைக்கும் என் போன்ற வாசகர்கள் இந்த புக்கை வாங்குவார்கள் என்று வைத்து கொள்வோம். ...இதனால் எங்களுக்கு சில பாயிண்ட்ஸ் குறையும்.
    இதனால் உதாரணமாக அடுத்த ஆண்டு சிங்கத்தின் சிறு வயதில்(தங்கனின் காமிக்ஸ் ப்ளாஷ்பேக்) வெளியிடும் போது பாயிண்ட் இல்லாமல் இதனையோ அல்லது சின்ன போஸ்டரையோ இழக்க வாய்ப்பு வருமே.....
    இதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா..
    என் கருத்து என்னவென்றால் (என் கருத்து மட்டுமே)..சந்தாவிற்கு ஒரு காமிக்ஸை கொடுப்பது சரியாக பட வில்லை..டெக்ஸையும் சேர்த்து தான் சொல்கிறேன்.அதே புத்தகம் சிறிது நாட்கள் கழித்து விற்பனைக்கு வந்து விடுகிறது.
    இதை விட சில வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாதமும் ஸ்டிக்கர்,போஸ்டர் என்று சந்தா நண்பர்களுக்கு மட்டும் கொடுத்தீர்களே..அது தான் கெத்து..👏👏👏👏.
    சந்தா உயர்வதற்கான சிறந்த வழி..இப்போது நடைமுறை படுத்திய பாயிண்ட்ஸ் நல்ல முயற்சி. .வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. போகாத ஊருக்கு வழி தேடும் முனைப்பில் பக்கத்துக்கு ஊர்ப் பயணத்தை குழப்பிக் கொள்வானேன் நண்பரே ? சிம்பிளான விஷயங்களை சிம்பிளாக மட்டுமே பார்த்திடுவோமே ?

      Delete
  43. 'சற்றே வித்தியாசமான படைப்புகளை முயற்சித்துத் தான் பார்ப்போமே' என்று எண்ணக்கூடிய நண்பர்களுக்கு இது கிருஷ்ணா சுவீட்ஸ் மைசூர்பாகாய் கரையவும் செய்யலாம் !



    ரொம்ப நாள் கழச்சு வந்துள்ளேன்...
    வந்ததும் இப்படி ஒரு இனிமையான செய்திய சொல்லியிருக்கிக
    அந்த கதைய கண்டிப்பாக வெளியிட வேண்டும் சார்...
    சும்மா டமால் டுமில்னு பாத்து சலுச்சு போச்சு...
    நீங்க நம்புலனாலு அது தா நெசம்...
    🥴

    ReplyDelete
  44. சற்றே புராதன கலரிங் பாணி தான் என்றாலும் கலர்- கலர் தானே ?
    V.vanceக்கே உரிய பானி சார்
    அது மாத்த முடியுமா...
    அந்த கலர் தான் அதன் வசிகரம்...☺️😉

    ReplyDelete
    Replies
    1. Nopes ! சித்திரங்கள் மட்டுமே வான்ஸ் ! கலரிங் டிஜிட்டல் ஸ்டூடியோவில் செய்துள்ளனர் அகில் !

      Delete
    2. 🙄😑😬
      முடிந்தது சோலி

      Delete
    3. கலரிங் பொறுப்புகளையும் artists கையில் எடுத்துக் கொள்வது வெகு சொற்பமான வாய்ப்புகளில் மட்டுமே !

      இரத்தப் படலம் தொடரில் அமரர் வான்ஸ் சித்திரப் பொறுப்பை ஏற்றிருக்க கலரிங் செய்தது யார் தெரியுமோ ? திருமதி வான்ஸ் தான்

      Delete
  45. கடந்த இரண்டு வருடமாக சந்தா கட்டியுள்ளேன்.
    எனக்கு எவ்வளவு சந்தா பாயின்ஸ் உள்ளது என்று கூட தெரியாது.

    கடந்த இரண்டு வருட சந்தா பாயின்ஸ் ஐ எப்படி,எப்போது உபயோக்கிக்க முடியும்?.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தேர்வு செய்திடும் ஒவ்வொரு சந்தாப் பிரிவிற்கும் ஒரு பாய்ண்ட் வீதம் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் சார் ! சீக்கிரமே எத்தனை பாய்ண்ட்களுக்கு என்ன பரிசென்பதை அறிவிக்க முனைகிறேன் ; நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் !

      Delete
  46. // மற்றபடிக்கு சிக்குவோரையெல்லாம் சாத்தியெடுக்கும் அவதாரோடு ஓவியர் சிவிடெல்லியின் துவக்க நாட்களின் சித்திரங்களோடு கதை தட தடக்கிறது ! //
    இன்றே காரபொரிக்கு ஆர்டர் போட்டுட வேண்டியதுதான்.....

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் அனைத்து இதழ்களுமே புதியதுதான் போல,மறுபதிப்புகள் மற்றும் கார்ட்டூன் கதைகள் கலந்து வந்தால் அது ஒரு வித கலவையாக இருக்கும்...
      எனினும்,புதிய இதழ்களும் எதிர்பார்ப்புக்கு உரியதே என்பதால் அவற்றையும் ஆவலுடன் எதிர்நோக்குவோம்.....

      Delete
  47. //'சற்றே வித்தியாசமான படைப்புகளை முயற்சித்துத் தான் பார்ப்போமே' என்று எண்ணக்கூடிய நண்பர்களுக்கு இது கிருஷ்ணா சுவீட்ஸ் மைசூர்பாகாய் கரையவும் செய்யலாம் ! //
    குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவதில் என்ன சுவராஸ்யம் இருக்க முடியும்,வழக்கமான பயணத்துடன் கொஞ்சம் மாற்று முயற்சியும் எடுப்பதில் தவறில்லை...
    முயற்சிக்கு பிறகே எதையும் முடிவு செய்ய இயலும்,வரட்டும் போட்டுத் தாக்குங்க சார்.....

    ReplyDelete
  48. Edi sir keep it up.😁😁😁😁😁😁😁👍👍👍👍👌👌👌

    ReplyDelete
  49. Replies
    1. இங்கேயா ?

      வேண்டாமே ! சந்தா கட்டியிரா ; கட்டப் போவதிலா நண்பர்களை சங்கடப்படுத்தியது போலிருக்குமன்றோ ?

      Delete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. ஆசிரியர் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்,40ரூபாயில் வரயிருக்கும் இதழ்களுடன் சிஸ்கோ கிட் கதைகள் தரலாமா?2021க்கு சிஸ்கோ கிட் தரலாமா?
    இவர் கதைகளின் சித்திரத்தரம் சிறப்பாகவும் நேர்கோட்டுக் கதைகளாகவும் இருப்பதால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஊஹூம் ..இப்போதைக்கு சாத்தியமில்லை சார் !

      Delete
  52. ஜனவரிக்கு வரயிருக்கும் இதழ்கள் என்னென்ன சார்?

    ReplyDelete
    Replies
    1. டிசம்பரைத் தாண்டிக் கொள்வோமே சார் முதலில் !

      Delete
  53. இன்னும் நீங்கள் நிறைய காலையும் கட்டைவிரலையும் வாயில் வைக்க புனித தேவன் மனிடோவின் அருளாசியை வேண்டுகின்றேன் ஆசிரியர் சார்!

    ReplyDelete
  54. இன்னும் 4 நாட்களா

    ReplyDelete
  55. ஏதேனும் பாக்கெட் சைஸ் புக் போட்டு தாக்குங்களேன். வீ ஆர் வெயிட்டிங்.

    ReplyDelete
  56. ஒரு இல்லத்தின் கதை:

    இதுவரையில் வந்த ஜூலியா கதைகளில் டாப். அமைதியாக ஆர்ப்பாட்டமாக கலக்கிவிட்டார்.

    ஜூலியாவின் அடுத்த கதையை விரைவில் கொடுக்க ஏதாவது செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நேற்று மாலையில் தான் இந்த கதையை படித்து முடித்தேன். இரவில் தூக்கம் வர வெகுநேரம் ஆனது. தூங்க ஆரம்பித்த பின் இந்த கதையின் சம்பவங்களே கனவில் வந்து சென்றது.

      ஒரு க்ளாசிக் கதையின் தாக்கம்.

      Delete
  57. முன்னர் நம்மையெல்லாம் தாமத பிசாசு பிடித்துக் கொண்டிருந்தது..
    இப்போதெல்லாம் ஆகஸ்டில் செப்டம்பர் செப்டம்பரில் அக்டோபர் அக்டோபரில் நவம்பர் நவம்பரில் டிசம்பர் என்று முன் வேகம் முத்தண்ணா இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

    மறு ஒளிபரப்பு முடிந்து புது ஒளிபரப்பு புதுமை படைத்து கொண்டு வருகிறது.

    ReplyDelete
  58. டியர் எடி,

    சந்தா பாயின்ட்ஸ் ஸ்பெஷல் இதழுக்கு டபுள்-ட்ரிபிள் ஓகே. சீக்கிரம் ஆவண செய்யுங்கள்.

    ரிங்கோ கலரிங் கிளாசிக்...ஆவலுடன் எதிர்நோக்குவோம், ஒல்லி டப்பியை.

    ReplyDelete
  59. எடிட்டர் சார்,

    லாயல்ட்டி பாய்ண்டுகளை சேர்த்துவச்சுக் கொடுத்தா.. அதுக்கு பதிலா ஒரு 'சிங்கத்தின் சிறுவயதில்' புக்கு கிடைக்கும்னு முன்னே அறிவிச்சிருந்தீங்க.. நாங்களும் 'அந்த' சி.சி.வா'ன்னு நினைச்சுக்கிட்டு குஷியா லாயல்ட்டி பாயிண்டுகளை எண்ணிக்கிட்டிருந்தோம்.. உங்களை நேரில் பார்த்தபோது கூட 'அந்த சி.சி.வ'ங்களா சார்னு நாங்க கேட்டதுக்கு 'சிறந்த துப்பறிவாளர் அவார்டு' வாங்கின கர்னல் கிளிப்டன் மாதிரி முகத்தை வச்சுக்கிட்டீங்க.. ஆனா பதில் மட்டும் வரவேயில்லை!

    இப்போ திடீர்னு வந்து 'புதுசா ஒரு புக்கு படிச்சேன்.. அதுல ஹீரோ கிடையாது, ஈரோயிணி கிடையாது, சாகஸம் கிடையாது, அவ்வளவு ஏன் - கதையே கிடையாது.. உங்க லாயல்ட்டி பாயிண்டுகளை சரண்டர் பண்ணிக்கிட்டு இதை வாங்கிக்கறீங்களா'ன்னு கேட்டா எப்படிங்க சார்?

    அதெல்லாம் தெரியாது - எங்களுக்கு 'அந்த' சி.சி.வ வேணும்! இல்லேன்னா போராட்டம் வெடிக்கும் - சொல்லிப்புட்டோம்!

    ReplyDelete
    Replies
    1. அட ,இது வேற இருக்கா செயலரே...அதானே..

      சார் பாயிண்ட்க்கு சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பு புத்தகமா கதை இல்லாத கதை புத்தகமான்னு கேட்டா

      எனக்கு சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பு புத்தகம் தான் வேண்டும் சார்..

      கண்டிப்பா சொல்லிப்புட்டேன்..

      ( நினைவு படுத்திய செயலருக்கு நன்றி)

      Delete
    2. ம்க்கும் வாழைப்பூ வடை வேண்டும் என்பதை தலைவரும் செயலாளரும் எப்படி சுற்றி வளைத்து கேட்கிறாங்க :-)

      விஜயன் சார், ரெண்டு பிளேட் வாழைப்பூ வடை ரெடி பண்ணிடுங்க.

      Delete
    3. இதே கேள்வி தான் நானும் கேட்டேன்.அதற்கு ஆசிரியரின் பதிலையும் மேலே சென்று பாருங்களேன்..

      Delete
  60. Sir, “தங்க தடம்” என்னும் பெயரை வைத்து பார்க்கும் போது, தங்க புதையலை தேடி செல்லும் கதை போல் தெரிகிறது. “மெக்கனாஸ் கோல்ட்” படத்தை நினைவு படுத்தி குதூகலப்படுத்துகிறது. (“புருனோ பிரேசி”லை கவ்பாய் கெட்டப்பில் பார்க்கையில் மகிழ்ச்சியாய் உள்ளது.)

    மேலும்,ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்ணின் துணை இருக்கும் என்பது வில்லியம் வான்ஸின் மனைவியாரை பற்றி அறிகையில் உறுதி ஆகிறது.

    TEX கதை எப்போது வந்தாலும் மனம் மலருகிறது.

    யோகாசனம் பயில்வோர் யாரேனும் நீங்கள் வெளியிட்டுள்ள படத்தையும்,Instruction’ஐயும் பார்த்து இது என்ன வகையான யோகா , இதன் விளைவு (நன்மை) யாது என்று கேட்டு விட போகிறார்கள். எனக்கு சைத்தான் விஞ்ஞானி’யில் ஸ்பைடர் செய்த சிரசாசனம் நினைவுக்கு வருகிறது sir.

    வாசக நண்பர் சொன்ன படி ஜி. நாகராஜனின் கதை போன்ற யதார்த்த கதையையும், மற்றொரு நண்பர் சொன்னவாறு மாயாஜால யதார்த்த கதையான மெபிஸ்ட்டோ கதையையும், ஒரே மாதத்தில் (உடன் ஒரு கிட் ஆர்டின் கதையையும் சேர்த்து) வெளியிட்டால் அந்த மாதம் ஒரு மறக்கயியலா சாதனை மாதம் ஆக அமையும். Thank you sir.

    ReplyDelete
    Replies
    1. // மாயாஜால யதார்த்த கதையான // மாயாஜால யதார்த்த கதையா? என்ன கொடுமை சார் இது

      Delete
    2. நண்பரே! இது இலக்கிய சொற்கள் அகராதியில் இடம் பெரும் வார்த்தை. மாந்திரீக எதார்த்தம் என்றும் சொல்வர். ஆங்கிலத்தில் Magical realism என்பர். நான் டெக்ஸின் கதைக்கு பொருத்திப் பார்த்தேன். Just a try only.

      Delete
  61. Sir, இவ்வருடம் வெளியான ஜெரேமியாவின் “யுகமெல்லாம் பரிசோதனைகளே“வில் வரும் கருத்து “எரியும் பனிக்காடு" எனும் அருமையான நாவலின் கருத்தோடு ஒத்துப்போகும். 450 பக்கங்களுக்கு மேல் உள்ள , சீரியஸ் ஆன உண்மை சம்பவங்களை கொண்ட அந்த கதை சொல்லும் சேதியை விளையாட்டாய் 40-50 பக்கங்களில் காமிக்ஸ் ஆக வெளியிட்டு படிக்கும் வாய்ப்பை அளித்தது ஒரு சாதனை .

    அந்த கதையில் காதலியாய் வரும் பெண் ஜெரோமியாவை காப்பாற்றுவது காதல் உணர்வால் அல்ல. தாய்மை உணர்வால் என நாம் உணரும்போது ஏற்படும் மனஎழுச்சியை அளவிட முடியாது. ஜெரோமியா வராதது ஒரு வித இழப்பு தான் சார். முடிந்தால் வருடத்திற்கு ஒரு பாகம் என்று வெளியிடலாம் .

    ReplyDelete
    Replies
    1. +1

      //
      ஜெரோமியா வராதது ஒரு வித இழப்பு தான் சார். முடிந்தால் வருடத்திற்கு ஒரு பாகம் என்று வெளியிடலாம் .
      //

      உண்மை.

      Delete
    2. Jermiah வராதது மிகப்பெரிய இழப்பு தான்.

      Delete
    3. உண்மை... ஜெரெமயா தொடர வேண்டிய ஒரு தொடர்... ஏனோ நண்பர்கள் ஆதரவு மிகக்குறைவாகவே உள்ளது... ஆனால் இந்த நிலை மாறி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் வரும் என நம்புகிறேன்.

      Delete
    4. இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜெரெமியா தொடரினில் 37 ஆல்பங்கள் உள்ளன இப்போது வரையிலும் ! நாம் வெளியிட்டுள்ள 6 கதைகளை கழித்துப் பார்த்தால் எஞ்சியிருப்பன 31 ஆல்பங்கள் ! ஆண்டுக்கு ஒன்று வீதமென்றால் 2051-ல் தொடருக்கு மங்களம் பாடியிருப்போம் - மேற்கொண்டு கதைகளே இனிமேல்
      உருவாக்கப்படாது போனால !

      நடைமுறைக்கு சுகப்படும் விஷயமாய் தெரிகிறதா guys ?

      Delete
    5. நடைமுறைக்கு சுகப்படும் போது வருடம் 6 கதைகளாக வெளியிடலாமே சார் ?

      Delete
    6. // இந்த நிலை மாறி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் வரும் என நம்புகிறேன். //

      +1

      Delete
    7. “Something is better than nothing“ என்ற எண்ணத்தில் தான் ஒன்று வந்தால் கூட வந்தால் போதும் என்று சொன்னேன் Sir. பரணி குறிப்பிட்டது போல காலம் கனியும் போது ஆறு ஆறாக போட்டு தாக்கிவிடவேண்டியது தான் சார்.

      Delete
    8. ஜெரொமியாவுக்கு தம்ஸ் அப் 👍👍

      Delete
    9. //////நடைமுறைக்கு சுகப்படும் விஷயமாய் தெரிகிறதா guys ?////

      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      தீவிர சிகிச்சை பகுதி மருத்துவர் : என்ன ஆச்சும்மா ? ஏன் உங்க வீட்டுக்காரர் மயக்கம் போட்டு விழுந்துட்டார்?
      மனைவி : அணில் சேமியா நல்லாருக்கும் ..கடையில போய் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்...அவரு காதில ஜெரெமியா –ன்னு கேட்டுட்டது போல ..மயக்கம் வந்துடுச்சு ...
      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      தோல் மருத்துவர் : உங்க வீட்டுக்காரருக்கு ஒரு வருஷமா அரிப்பு அப்பப்போ வருதுன்னு சொல்றீங்களே ..அவருக்கு ஒத்துக்காத –அலர்ஜி –ஏற்படுத்தும் பொருள் உணவு ,மாத்திரை பத்தி சொல்ல முடியுமா ??

      மனைவி : பெனிசிலின் ,டைக்லோபினாக் ,கத்தரிக்காய், பச்சை பட்டாணி, இறால் அப்புறம் ஜெரெமியா.
      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      காதலன் பூனை : ...வ்வ்வவ்வ்வ்

      காதலி பூனை : என்னங்க இது ? மியாவ் –ன்னு கத்தாம இப்படி சத்தம் போடறீங்க ?
      காதலன் பூனை : என்னை வளர்க்கிற வீட்டுக்காரர் ஒரு தமிழ் காமிக்ஸ் ரசிகர் ..அவர்தான் மியாவ்ல இருக்குற மியா வேண்டாம் ..அப்படி செஞ்சா தினைக்கும் மீன் வாங்கி தரேன்னு சொன்னாரு ..மீனுக்கு ஆசைப்பட்டு உன்கிட்டேயும் அதே சவுண்டு வருது
      //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    10. ஒருவேளை காதலி பூனை மியா ஜார்ஜோட ரசிகையா இருந்திக்கா...?

      Delete
    11. Sir, ஜெரோமியாவை படித்ததனால் நான் அடைந்த பரவசத்தை விட, சில நண்பர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு வருத்தத்தை அளிக்கிறது.

      Dear Doctor Sir! உங்களுக்கும் ஜெரோமியாவிற்கும் இடையே கோபதாபம் இருக்கலாம். அதற்காக இரண்டு இளம் காதலர்கள் அந்தரங்கமாக கூடி பேசி களித்திருக்கையில், காதை நுழைத்து அவர்கள் பேச்சினை ஒட்டு கேட்டதும் அல்லாமல் , அதனை இங்கு நம் அனைவரின் முன்னாலும் போட்டு உடைத்தது வருந்தத்தக்கது ஆகும். நீங்கள் உடைத்தவுடன் நண்பர் G. P காதலிக்கு அரேபியா வரை தொடர்பு இருக்குமோ என்று உளவறியும் அளவுக்கு சென்று விட்டார். (Hellow! பாஸ்! கவனம். சாலையெல்லாம் படுகுழிகளே!
      )
      Boss! இங்கிலாந்து , அயர்லாந்து என்று அசத்திய நீங்கள் கொஞ்சம் அமெரிக்க பயணி ஜெரோமியாவிற்கும் ஆதரவு காட்டினால் நன்று.

      செந்தில் சத்யா அவர்களே! நாமெல்லாம் ஸ்பைடர் ரசிகர்கள். ஜெரோமியாவை எதிர்கொள்ளும் அளவுக்கு Guts உள்ளவர்கள். So, be Cheerful.

      தலைவரே! ஆசிரியர் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

      வருடம் ஒன்று வந்தால் போதும் என்ற போது அமைதியாயிருந்த நண்பர்கள் , 6 என்றதும் ஆவேசமடைந்து விட்டனர்.இதனால் ஜெரோமியாவை வருடத்திற்கு ஒன்றிலிருந்து ஐந்து பாகத்திற்குள் வெளியிட்டால் எவ்வித பிரச்னையும் இருக்காது என்று தோன்றுகிறது.

      ஆகையால், Editor Sir, ஜெரோமியாவை …………, now I (am) escape.

      Delete
    12. @ GIRI NARAYANAN Sir,

      தனிப்பட்ட முறையில் வரையப்படும் ஹெர்மனின் ஓவியங்களை ரசிப்பது இப்போது எனக்கு தண்ணிபட்ட பாடாகிவிட்டது.ஹெர்மன் என் மனதுக்கு நெருக்கமான ஓவியராகிவிட்டார்.
      அதனால்,
      ஜெரெமியாவுக்கு என்னுடைய ஆதரவு உண்டு.

      Delete
    13. மிக்க நன்றி பாஸ், உங்களுக்குள் உறையும் கலைஞனின் வெளிப்பாடாகவே இதை உணருகிறேன். And "Giri" is enough.no Sir, please.

      கடந்த இருவாரங்களாக அபிராமி Sir’ன் கமெண்டுககளுக்கு பதில் அளித்தது மிகவும் அரிய வாய்ப்பு. அவரது கேள்விகளுக்கும், நகைசுவை டயலாக்குகளுக்கும் பதில் அளிக்க யோசித்தது அரிய அனுபவம். அதற்கு உறுதுணையாக இருந்த மற்ற அன்பு நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

      நல்லவேளையாக நான் மௌன வாசகனாக இருந்திருந்தால் இந்த வாய்ப்பை இழந்திருப்பேன். Thank you very much Sir and friends.

      Delete
  62. Wanted Jeremiah please Edi sir🤔🤔🤔🤔

    ReplyDelete
  63. சார் பீட்டர் பாலன்டையின் யானை கல்லறை ஒன் ஷாட் கவ்பாய் ரத்த பூமி ஆகியவை எப்போது

    ReplyDelete
  64. சார் காமிக்ஸ் கடல் ஜெரமியா செவ்விந்திய புக்கை எப்போது வெளியீடுவிர்கள்

    ReplyDelete
  65. சார் பீட்டர் பாலன்டையின் காடு சார்ந்த கதைகள் கருப்பு வெள்ளை யிலும் அருமையா இருக்கும் கலரில் பார்க ஆசை சார் எப்போது வெளியீடுவிர்கள்

    ReplyDelete
    Replies
    1. அவரின் கதைகள் இரண்டு தான் என்று ஆசிரியர் சொன்னதாக ஞாபகம். இரண்டும் நமது காமிக்ஸில் வந்து விட்டது. நீங்கள் அவைகளை வண்ணத்தில் மறுபதிப்பாக கேட்கிறீர்களா?

      Delete
  66. சார் எமனின் திசை மேற்கு மாதிரி ஒன் ஷாட் கவ்பாய் கதைகளை வெளியீடுகள் சார்

    ReplyDelete
  67. ஜெராமியா

    #####

    ஈரோடு வாக்கெடுப்பில் ,நேரில் ,விற்பனையில் குறைந்த ஓட்டுகளே பெற்ற இதழ் நண்பர்களே..

    கிடைக்காத இதழ்கள் கிடைக்கும் பொழுது ஆர்வம் மட்டுப்படுவதும் கிடைத்த இதழ்கள் கிடைக்காது எனும்போது ஆர்வம் ஓங்குவதும் இயற்கைதான் போலும்..:-)

    ReplyDelete
    Replies
    1. ஜெராமியா வேண்டும் என்று இங்கு குரல் கொடுக்கும் நண்பர்கள் பலர் ஈரோடு வராததால் குறைந்த ஓட்டுகள் :-)

      அடுத்த முறை ஈரோட்டில் இவருக்கு ஆதரவு அதிகரிக்கும் போல் தெரிகிறது:-)

      அதேபோல் தற்சமயம் கையிருப்பில் உள்ள ஜெராமியா இதழ்களின் விற்பனை சூடுபிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

      மேலும் நண்பர்கள் ஆதரவு அதிகரித்தாலும் தற்சமயம் கையில் உள்ள ஜெராமியா முழுவதும் காலியான பிறகு இவரின் அடுத்த பாகங்களை ஆசிரியர் கொண்டுவருவது நலம்.

      Delete
  68. தற்சமயம் கூட ஜெரோமயாவின் பயணங்கள் முடிவதில்லை தான் படித்து கொண்டு இருக்கிறேன்.ஏதோ ஒரு வசியம் இருக்க தான் செய்கிறது இதில்.ஆனால் பலருக்கு !!!!!!!!

    ReplyDelete
  69. Sir, Why spider & Steel claw old books not republish on 2020. Lots of old spider and steel claw are still pending. I'm waiting to buy them in 2020. But 2020 list disappointing.

    ReplyDelete
  70. புத்தகங்கள் அனுப்பியாயிற்றா சார் ??

    ReplyDelete
  71. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  72. Now that we've looked at a few of the numerous advantages of hiring professional resume writers rather than scrounging a CV off of Linkedin, let's have a look at three of the best current resume writing services available to you. So find best resume help here

    ReplyDelete