Powered By Blogger

Sunday, December 29, 2019

தசாப்தத்தின் சகாப்தங்கள் !

நண்பர்களே,

வணக்கம். மாமூலான மொக்கைகளை ஆரம்பிக்கும் முன்பாய் முக்கிய தகவலைப் பட்டென்று சொல்லிட்டால் தேவலை தானே ? So here you go : புத்தாண்டின் முதல் மாதத்து இதழ்கள் ஐந்தும் ரெடி ! திங்களன்று டப்பிகளுக்குள் ஐக்கியமாகி - செவ்வாயன்று உங்கள் இல்லங்களில் தஞ்சமடைந்திடத் தயாராகி வருகின்றன ! So பத்தொன்பதிலேயே இருபதுக்கு ஸ்வாகதம் சொல்லிடலாம் folks ! And சந்தா எக்ஸ்பிரஸின் புதுப் பயணத்துக்கு இன்னமும் உங்களின் இருக்கைகளை உறுதி செய்திருக்கா பட்சத்தில் - no better time than now !! இந்த ஞாயிறன்றும், அதன் மறு நாளைய பகலிலும் கிட்டிடும் சந்தாக்களுக்குமே கூட, உடனடி டெஸ்பாட்ச் செய்யப்படும் என்பதால் ஆவலாய்க் காத்திருப்போம் - உங்களையும் சந்தாப் பட்டியலில் இணைத்திட  !! டிங்..டிங் .டிடிங்.....! 

கடை விரிக்கும் பொறுப்பு பூர்த்தியானபடியால் இனி இந்த வாரப் பதிவின் மையத்தை  நோக்கி focus செய்திடலாமா ? கடந்த ஒரு வாரமாய்க் கண்ணில்படும்  பேப்பர்களில் ; பத்திரிகைகளில் எல்லாமே பத்தி பத்தியாய் ; பக்கம் பக்கமாய் ஒற்றை விஷயத்தை ஆளாளுக்கு எழுதிக் குவித்து வருகின்றனர் ! கடந்த பத்தாண்டுகளின் வெற்றிப் படங்கள் ; வெற்றுப் படங்கள் ; சூப்பர் அணிகள் ; டப்ஸா அணிகள் ; சாதித்த மாந்தர்கள் ; சொதப்பிய மனிதர்கள் ; மறக்கவியலாத் தருணங்கள் ; மருகச் செய்த தருணங்கள் இத்யாதி..இத்யாதி என்ற ரீதியிலான 'தசாப்த அலசல்கள்' தான் அத்தனை ஊடகங்களிலும் அலசப்பட்டு வரும் பொதுவான சமாச்சாரம் - of course வேறு சில பற்றி எரியும் பிரச்னைகள் நீங்கலாக ! அந்தப் பத்தாண்டு அலசல்களை வாசித்த போது தான் பொறி தட்டியது - ஆஹா...ஒரு decade-க்கு விடைதரும் தருணமல்லவோ இதுவென்று !! நமக்குத் தெரிந்ததெல்லாம் காமிக்ஸ் குண்டுச்சட்டிக்குள் குருதை ஓட்டுவது மாத்திரமே எனும் போது, புத்தாண்டின் வாயிலில் நின்றவாறே - பறந்து சென்றிருக்கும் இந்தப் பத்தாண்டின் காமிக்ஸ் சவாரியினை நாமுமே ஜாலியாய் அலசிப் பார்த்தாலென்னவென்று தோன்றியது ! இங்கே எனது அலசல்களை விடவும், உங்களின் பங்களிப்புகளுக்கே அவசியங்கள் ஜாஸ்தி என்பதால் - இயன்றமட்டுக்கு இந்த ஒற்றைப் பதிவிலாவது மௌன நண்பர்களும் (கோபித்துக் கொள்ளாது) பங்கேற்றால் அற்புதமாக இருக்கும் ! முயற்சித்துப் பாருங்களேன் all ? ப்ளீஸ் ?

இந்த தசாப்தத்தின் துவக்கத்தில் லயன் & முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு கல்லறைக் காவியங்கள் எழுத வேண்டிய வேலை மாத்திரமே பாக்கியிருந்தது என்பதில் ரகசியங்கள் லேது !  'இது ஆகிற வேலையாய்த் தெரியக்காணோம் !' என்று நானே மொத்தத்துக்குக் கைகழுவிடத் தயாராகி வந்தேன் என்பதுமே well documented ! 2011-ன் துவக்க நிலவரம் கூட இதுவே எனும் போது - தொடரக்கூடிய அடுத்த எட்டாண்டுகளில்  சுமார் 250 இதழ்களை நம் குழுமம் போட்டுச் சாத்தியிருக்கும் என்று யாரேனும் என்னிடம் ஆரூடம் சொல்லியிருந்தால், "அடடே...அப்டீங்களா ?" என்று நாசூக்காய்ச் சிரித்து விட்டு நடையைக் கட்டியிருப்பேன் தான் ! ஆனால் பெரும் தேவன் மனிடோ நமக்கொரு இரண்டாம் வாய்ப்பையும், அதனில் பணியாற்ற ஒரு இரண்டாம் 'தம்'மையும் தந்திடும் திட்டங்களைத் தீட்டி வைத்திருக்க - அவற்றைத் தாண்டிப் போயிடல் அசாத்தியமன்றோ ?

2012 ஜனவரியில் தான் effective ஆக நமக்கிந்த தசாப்தத்தின் அர்த்தம் தாங்கிய பயணம் துவங்கியது ! So அன்றைக்கு முதல் இன்றைக்கு வரைக்குமான இதழ்களுள் எனக்கு முக்கியமாய்த் தென்பட்ட இதழ்களைப்  பட்டியலிடுவதே இந்த வாரத்தின் நோக்கம் ! 'அதைத் தெரிஞ்சுக்கிட்டு நாங்க எந்தக் கோட்டையைப் புடிக்கப் போறோங்கண்ணா ?' என்று சிலபல மைண்ட்வாய்ஸ்கள் ஒலிக்கலாம் தான் ; அந்த நண்பர்கள் நேராக பதிவின் வால்பகுதியில் உள்ள புது இதழ்களின் preview நோக்கிப் பாய்ந்திடலாம்  ! மைண்ட்வாய்சை mute-ல் போட்டுக் கொள்ள சாத்தியப்படும் இதர நண்பர்களுக்காக இனி :

Of course - நமது மறுவருகையின்  முதல்படியானComeback ஸ்பெஷல் இந்தப் பட்டியலில் நிச்சயமாய் இடம்பிடிக்குமென்பதைக் குழந்தைப் பிள்ளை கூட யூகித்துவிடும் ! And இந்த இதழைப் பற்றிப் பல்வேறு தருணங்களில் அக்கக்காய் அலசியாகி விட்டதென்பதால் அதே மாவை மறுக்கா அரைக்க முனையப் போவதில்லை ! On the contrary - ஒரு முக்கிய மைல்கல்த் தருணத்தில் இன்னும் கொஞ்சம் தேஜஸான கதைகளைத் தேர்வு செய்திருக்கலாமோ ? என்ற ஆதங்கமே தலைதூக்குகிறது இன்றைக்கு ! லக்கி லூக்கின் "ஒற்றர்கள் ஓராயிரம்" ஓ.கே ரகமே தவிர்த்து ஆஹா-ஓஹோ ரகமல்ல ! And கேப்டன் பிரின்ஸ் தொடரின் எஞ்சியிருந்த 2 புதுக் கதைகளுள் நாம் தேர்வு செய்திருந்த "கானகத்தில் களேபரம்" கூட சுமார் தான் ! அட்டைப்படமுமே இன்றைய அளவுகோல்களின் பார்வைகளில் so so தான் ! ஆனால் வண்ணத்தில் ; (அன்றைக்குப்) புதுசாய்த் தென்பட்ட template-ல் ; நெடும் இடைவெளிக்குப் பின்பாய் வெளியான இதழ் என்ற விதத்தில் கொண்டாடித் தீர்த்து விட்டீர்கள் !! இன்றைக்கு நம்பக் கஷ்டமாக உள்ளது folks - ஆனால் இதனில் நாம் அச்சிட்டது 3000 பிரதிகள் ; and 2012-ன் இறுதிக்கு முன்பாகவே ஸ்டாக் லேது ! இத்தனைக்கும் ஆன்லைன்  விற்பனை என்பதெல்லாம் என்னவென்றே நமக்குத் தெரிந்திரா நாட்களவை ! அது மட்டுமல்லாது அந்தாண்டின் புத்தக விழாவில் ஒரு குட்டியூண்டு ஸ்டாலில்  எக்கச்சக்கமான முந்தைய இதழ்களோடு கடைவிரித்திருந்த நிலையில், அங்கே நமது பிரதான விற்பனைகளே அந்த back issues bundles தான் ! So இந்த Comeback ஸ்பெஷல் இதழானது விற்பனையில் அதகளம் செய்ததன் மாயாஜாலம் என்னவென்றே  நினைவில்லை ! எது எப்படியோ - இன்றும் அதே எண்ணிக்கை மட்டும் விற்றிடச் சாத்தியப்பட்டால், செவ்வாய் கிரகத்தில் புத்தக விழா நடந்தால் கூட முதல் ஆளாய் ஆஜராகி நின்றிருப்போம் !! ஒரு புதுப் பயணத்துக்கு முன்னோடி ; புதுசாய்த் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள எனக்கொரு வாய்ப்புத் தந்த இதழ் ; தயாரிப்புத் தரங்கள் சார்ந்த எதிர்பார்ப்புகளை புதுசாயோரு உயரத்துக்கு இட்டுச் சென்ற இதழ் என்ற விதத்தில் இந்த தசாப்தத்தின் TOP 20 பட்டியலுக்குள் Comeback  ஸ்பெஷலுக்குச்  சொல்லும்படியான ஒரு இடமுண்டு ! இங்கே எனது கேள்வி : இந்த இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும்  ?  

என் பெயர் கோடீஸ்வரர் !! என்று தெனாவட்டாய் அறிமுகம் செய்து கொண்ட லார்கோ வின்ச்சின் வருகை இந்த தசாப்தத்தின் ஒரு notable phase என்பேன் ! துப்பாக்கி கிடையாது ; டிடெக்டிவ் என்ற போர்வை கிடையாது ; நாடி நரம்புகள் புடைக்க பன்ச் பேசும் பாணிகளும் நாயகருக்குக் கிடையாது இங்கே ! And பற்றாக்குறைக்கு கதைகளின் அச்சாணியே - பெரும் குழுமங்களின் நிதி நிர்வாகம் ; பங்குச் சந்தை முதலீடுகள் ; அதில் அரங்கேறும் தில்லாலங்கடி ஆட்டங்கள் என்று எகனாமிக்ஸ் வகுப்பில் கொட்டாவிகளுக்கு மத்தியில் ஓடிடும் மேட்டர்கள் தான் ! அவற்றையெல்லாம் கதைகளுக்குள் லாவகமாய்ப் புகுத்தியதோடு,  வாசகர்கள் நெருடல்களேயின்றி உள்வாங்கிக்கொள்ளும் விதமாய்க் கதைகளை  கதாசிரியர் வான் ஹாம்  அற்புதமாய் உருவாக்கியிருப்பினும் , நம் மட்டிற்கு இவை எல்லாமே புத்தம் புதுசு தான் ! So அவற்றை நீங்கள் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற இதழ் என்றென்றும் என் நினைவை விட்டு நீங்காது ! "புது யுகக் கதைகளுக்கு நாங்கள் ரெடி !!" என்ற அறைகூவல்  உரக்க ஒலித்தது  "என் பெயர் லார்கோ" இதழில் இருந்தே எனும் போது இந்த தசாப்தத்தின் memorable புக்ஸ் பட்டியலில் இது இடம்பிடிப்பதில் no surprises I guess !! இங்கே எனது கேள்வி : மெய்யாலுமே முதல்வாட்டி படித்த போது  லார்கோவை ரசிக்க  முடிந்ததா ? என்ன மாதிரியான கதைடா சாமி ? என்ற திகட்டல் தோன்றவில்லையா ?

"வித்தியாசங்களுக்கு வாசல் கதவைத் திறந்தே வைத்துள்ளோம் !" என்று நீங்கள் தண்டோரா போட்டுத் தெரிவித்த இன்னொரு memorable இதழ் WILD WEST ஸ்பெஷல் ! இங்கும் கதாசிரியர் வான் ஹாம் ; ஆனால் முற்றிலும் வித்தியாசமானதொரு வன்மேற்குக் கதைக்களத்தோடு ! ஓவியர் ரோசின்ஸ்கியின் semi கார்ட்டூன் ; semi classic பாணி  ஓவியங்கள் இந்த offbeat கதைக்கு வலு சேர்க்க - அந்தக் காலத்து கேவா கலர் போலான வர்ணச் சேர்க்கையும் தன பங்கிற்கு வேறுபடுத்திக் காட்ட, இந்த ஆல்பத்தை ஆங்கிலத்தில் CINEBOOK-ல் படித்த நொடியே எனக்குள் குடைச்சல் - இதனைத் தமிழுக்கு கொணர்ந்திட ! இன்றைய சூழலில்,உங்களின் வாசிப்புகளுக்கு  இதெல்லாம் பிஸ்கோத்து மேட்டரே என்பதில் no doubts ; ஆனால் 2012-ல் "எமனின் திசை மேற்கு" அனுபவத்திற்கு  நாம் தயாராகியிருந்தோமா ? இல்லையா ? என்ற கேள்வி பெரிதாகவே நின்றது என்முன்னே ! ஏதோவொரு அசட்டுத் துணிச்சலில் நான் இதற்கு thumbs up தந்தேன் & and நீங்கள் இந்த பாணிக்கு ஒரு மெகா thumbs up  தந்து நம் பயணத்துக்குப் புதுசாயொரு பரிமாணத்தைத் தந்தீர்கள் ! இங்கு எனது கேள்வி : இந்தக் கதையை மட்டும் ஒரு one shot சிங்கிள் ஆல்பமாய்  மறுபதிப்பிட்டால் தேறுமா

As milestones go - NBS இதழானது இன்னும் நிறைய காலத்துக்கு ஒரு மறக்க முடியா "கூட்டணி ஆல்பமாய்" தொடர்ந்திடுமென்பதில் சந்தேகங்கள் கிடையாது ! In fact - கதம்ப (வண்ண) இதழ்களின் கடைசி முயற்சியாய் இதனைப் பார்த்திடலாம் ! இனியொரு தபா இப்படியொரு பன்முக நாயகக் கூட்டணியை ஒரே இதழில் ரசிப்பது அசாத்தியத்துக்கு அருகாமை என்பதால் NEVER AGAIN ஸ்பெஷல் என்று இதற்குப் பெயரிடலாம் ! And இது நிறையவாட்டி அலசப்பட்டதொரு ஆல்பம் என்பதால் - மறுக்கா பிளேடைப் போடுவதாயில்லை நான் !  இங்கு எனது கேள்வி : இந்த இதழில் இடம்பிடித்த கதைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் தனி இதழாய் மறுபதிப்பிடுவதாயின் எதைத் தேர்வு செய்வீர்களோ ?

The next one's an easy guess too....க்ரீன் மேனர் !! அதுநாள் வரைக்கும் எவையெல்லாம் நமக்கு எட்டிக்காயாய்க் கசந்திருக்குமோ - அவற்றை ஒன்று பாக்கியின்றி திரட்டி நின்றது 'க்ரீன் மேனர்' ஆல்பமானது ! முழுநீளக் கதைகளன்றி துண்டும், துக்கடாவுமான எதுவும் நம் ரசனைகளுக்கு உகந்து இருந்ததில்லை ! ஆனாலிங்கோ அத்தனையும் சிறுகதைகளே !! கதை நெடுக ஒரே ஹீரோவோ ; ஹீரோயினா ட்ராவல் செய்தாலன்றி நமக்குப் பிடிக்கவே செய்யாது ! ஆனால் இங்கேயோ அத்தினி பயல்களும் வில்லன்களே தவிர்த்து - எவனும் ஹீரோ கிடையாது !  லக்கி லூக்கும், சிக் பில்லும், மந்திரியாரும் கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் நமக்கன்று ஓ.கே. ; ஆனால் இங்கோ கொலைகாரர்களின் கூட்டத்தையே கார்ட்டூன் பாணியில் வடித்திருந்தார்கள் ! And விக்டோரிய மஹாராணியாரின் புராதன லண்டனே கதையின் backdrop ; அழுது வடியும் அந்தக் காலகட்டத்தையே கதையின் ஒரு கதாப்பாத்திரமாயும் அமைக்காத குறை தான் !  ஆனால் அதையும் ரசித்து ஏற்றுக் கொண்டீர்கள் ! எல்லாவற்றிற்கும் சிகரமாய் - பல்லெல்லாம் சுளுக்கிக் கொள்ளச் செய்யும் நாடக பாணி வசனங்கள் பக்கத்துக்குப் பக்கம் போட்டுத் தாக்கின ! But hey ...துளியும் மிரளாது அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள் ! அது வரையிலுமான காமிக்ஸ் வாசிப்புக்  கோட்பாடுகள் சகலத்தையும் தெறிக்க விட்ட இதழ் என்ற வகையில் "மனதில் மிருகம் வேண்டும்" ரொம்பவே ஸ்பெஷல் எனக்கு ! And ஆறே மாதங்களுக்குள் விற்றுத் தீர்ந்து எங்களையே அசரடித்த இதழ் இது ! இங்கே எனது கேள்வி : முதல் வாசிப்பினில் க்ரீ .மே லயித்ததா ? கிறுகிறுத்ததா ? நிஜம் ப்ளீஸ் folks ?

அவசரம் அவசரமாய் ; உருண்டு-புரண்டு ; காலில் வெந்நீரை ஊற்றியபடியே இரண்டே நாட்களில் உருவாக்கியதொரு இதழே இன்று வரையிலும் புது இதழ்களின் விற்பனைப் பட்டியலில் top of the heap !! அது எதென்று யூகிக்க முடிகிறதா ? Comic Con பெங்களூருக்கென கடைசி நொடியில் திட்டமிட்டுத் தயாரித்த டெக்சின் "நிலவொளியில் நரபலி" வண்ண இதழே அது !! ஒரு சனியிரவு எழுதத் துவங்கி,ஞாயிறு மாலைக்குள் 110 பக்கங்களையும் ஒப்பேற்றி ; ஞாயிறு காலை முதல் டைப்செட்டிங் பணிகளைத்  துவக்கி, திங்கள் காலைக்குள் சகலத்தையும் முடித்து வாங்கி அச்சுக்குத் தயாராகியது நிச்சயமாயொரு மறக்கவியலா ,அசுர அனுபவமே ! And விற்பனையில் இந்த இதழ் இப்போதுவரையிலும் செய்துவரும் சாதனைகள் in a league of its own !! ஒவ்வொரு புத்தகவிழாவிலும் "அதிகம் வாங்கப்படும் இதழ்" என்ற பெருமைக்குப் போட்டி போடும் ஆல்பம் இதுவாகத் தானிருக்கும் ! நார்மலான டெக்ஸ் இதழ்களை விடவும் மூன்று மடங்கு அதிகம் விற்றுள்ள இதழிது - நம்பினால் நம்புங்கள் !! And இங்கே எனது கேள்வி : "இந்த இதழின் அதகள வரவேற்புக்கு காரணம் அந்த சைஸ் தானா ? அல்லது வேறேதேனுமா ? இந்த இதழில் அப்படியென்ன ஸ்பெஷல் ? 

விற்பனை எண்ணிக்கையினையே அளவுகோலாக்கிட்டால் இன்னொரு இதழும் அசாத்தியமானதொரு உச்ச ஸ்தானத்தைச் சொந்தம் கொண்டாடிடுவதை பார்க்கலாம் ! அது வேறெந்த இதழும் அல்ல - இரும்புக்கை மாயாவியாரின் "நயாகராவில் மாயாவி" தான் !! 'மறுபதிப்புகள் மறுக்கா வருகின்றன' என்று 2013-ல் அறிவித்த சமயம் ஏனோ உங்களின் ரெஸ்பான்ஸ் அத்தனை விறு விறுப்பாய் இருந்திடவில்லை ! In fact வெறும் எழுபதோ - எண்பதோ முன்பதிவுகளே கிட்டியிருந்தன - என்னை மிரண்டு போகச் செய்யும் விதமாய் !  மூட்டை கட்டப்பட்ட அந்த மறுபதிப்புத் திட்டமானது 2015-ல் (or was it 2016 ??) மீண்டும் களம் கண்ட போதோ உங்களது ரியாக்ஷன்ஸ் திக்குமுக்காட செய்தன ! ஒரு ஞாயிறின் பதிவாய் இந்தச் சேதியை பகிர்ந்த போது 300 + பின்னூட்டங்களோடு நீங்கள் செய்த அதகளங்கள் இன்னமும் நினைவில் நிழலாடுகின்றன ! தொடர்ந்திட்ட சென்னைப் புத்தக விழாவில் 'நயாகராவில் மாயாவி' வெளியான வேலையின் விற்பனை விஸ்வரூபம் இதுவரையிலும் நாம் பார்த்திரா உச்சம் !! அந்நேரம் இது குறித்து நான் எழுதியது இதோ :

Highlight # 3 - மின்சார ஓட்டைகளைத் தேடி விரல் சொறுகும் நம் எவர்க்ரீன் இரும்புக்கை மாயாவியின் அதகள விற்பனை !!! இன்றைய இரவு வரையிலும் "நயாகராவில் மாயாவி" மாத்திரமே கிட்டத்தட்ட 1700 பிரதிகள் விற்பனையாகி எங்களை வாய் பிளக்கச் செய்துள்ளன ! "கிராபிக் நாவல் ; அடுத்த தலைமுறை ரசனை ; பௌன்சர் ; வாசிப்புக் களங்கள் விஸ்தீரணம் காண வேண்டும்" என்றெல்லாம் நான் ஒரு பக்கமாய் ஓலைப்பாயில் சுசு பெய்யும் நாய்க்குட்டியைப் போல 'தம்' கட்டி தொண்டை நரம்பு புடைக்க சப்தம் எழுப்பிக் கொண்டிருக்க - இன்னொரு பக்கமோ நம் பணியாளர்கள் மும்முரமாய் தினமும் சிவகாசியில் இருந்து வந்து சேரும் மாயாவி கட்டுக்களை இறக்கி அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள் ! இன்று மாலை புத்தக விழாவிற்குச் சென்ற போது வடிவேலுக்கு பஞ்சாயத்து செய்ய முயன்ற சங்கிலி முருகன் பாணியில் - "நான் சரியா தானே பேசறேன் ?" என்று அக்கம்பக்கமெல்லாம் கேட்டு வைத்துக் கொள்ளத் தோன்றியது ! Phew...!! இந்த விற்பனையை  எக்கச்சக்கமான வாசகர்களின் பால்யங்களின் சுகமான நினைவூட்டலாய் பார்த்துக் கொள்வதா  ? அல்லது "மாயாவி" எனும் அந்த மாயச் சொல்லின் அசாத்திய ஈர்ப்பாய்ப் பார்ப்பதா ? சத்தியமாய் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை !

பரீட்சைக்குப் படிப்பவனைப் போல  ராவெல்லாம் கண் முழித்திருந்து  ஒரு வண்டிப் புதுக் கதைகளை வாசித்து ; அவற்றிலிருந்து ஒன்றோ-இரண்டோ தேறும் என்ற தீர்மானத்தோடு 'லோ-லோ'வென்று நாயாய்ப் பேயாய் ஒவ்வொரு நாட்டின் தெருக்களிலும் அலைந்து அவற்றிற்கு உரிமைகளை வாங்கி ; மொங்கு-மொங்கென்று விடிய விடிய அவற்றை மொழிபெயர்த்து ; ஓராயிரம் நகாசு வேலைகளையும்  செய்து இதழை வெளியிட்டுவிட்டு  ; அதனை போணி பண்ணும் பொருட்டு திரும்பவும் 'தம்' கட்டி எழுத்துக்களை ஒன்றிணைக்க - சில சமயங்களில் வெற்றி-சில தருணங்களில் தோல்வி என்பதே யதார்த்தமாய் இருக்கும் வேளையில்  -

நிலாவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் காபி சாப்பிடச் சென்ற நாட்களைச் சார்ந்த  மனுஷன் ஒருத்தர் - விறுவிறு நடை போட்டு வந்து ஆஜராகி - 'அதே பெயர் ; அதே மொழிநடை ; அதே கதை ; அதே filler pages ; முடிந்தால் அதே அட்டைப்படமும்  போதும் !' என்ற பார்முலாவோடு - கண்ணில்படும் இதர போட்டியாளர்களை ஒருவர் பாக்கியின்றி துண்டைக் காணோம்..துணியைக் காணோம் என்று ஓடச் செய்து விட்டு - என்னைப் பார்த்து 'பிம்பிலிக்கா..பிலாக்கி..!!' என்று நக்கலாயும் சிரித்தால் - 'ஞே' என்று திகைப்பதைத் தாண்டி என் முட்டைக்கண்கள் தான் என்ன செய்திட முடியும் ?!  Take a bow - man with the steel claw !! Stunning show !!!

Post 2012 - இதுவரைக்குமான நமது இதழ்களுள் maximum விற்பனை கண்ட இதழ் என்ற  விதத்தில் 'ந.மா' ஒரு அசாத்திய நினைவுப் பேழை எனக்கு !! 

மறக்கவியலா நினைவுகள் சார்ந்த இன்னொரு இதழ் நமது LMS இதழ் ! முதன்முதலாய் அந்த சைசில் ஒரு hardcover இதழ் ; முதன்முதலாய் அத்தனை பக்கங்களுக்குள் பணி ; முதன்முதலாய் அத்தனை எடை கொண்டதொரு இதழ் - என நிறைய firsts உண்டு அந்த இதழுக்கு !! அத்தனைக்குப் பின்னேயும் ரூ.450 என்ற விலையை நியாயப்படுத்த - கூடுதலாய் ஒரு ரெகுலர் சைசிலான வண்ண இதழையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டதென அன்றைக்கு செய்த லூட்டிகள் ஆயுட்கால ஞாபகங்கள் !! ஒரு கட்டத்தில் பணிகளை காலத்தில் முடிக்க முடியுமோ-முடியாதோ என்ற  பயம் குரல்வளையை நெறிக்காத குறை தான் ! ஒவ்வொரு நாள் காலையும் காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போதும் வயிற்றுக்குள் பயப்பந்து உருள்வதை மெய்யாக உணர முடிந்த அந்த ஜூலை மாதம் ஒரு போதும் மறவாது எனக்கு ! And அந்த இதழ் ஈரோட்டில் வெளியானதும் சரி ; விற்பனையில் ஒரு புது உத்வேகத்தைக் கண்டதும் சரி - மறக்கவே மறக்காது ! அப்புறம் இந்த இதழுக்கு இன்னமும் கூட 2 பெருமைகள் உண்டு ! அதுநாள் வரையிலும் "இஷ்டப்பட்ட வேளைகளில் பதிவு" - என்று சுற்றித் திரிந்தவனை "ஒவ்வொரு ஞாயிறுக்கும் பதிவு" என்ற template க்குள் அடைத்ததும் இந்த இதழே & இன்று வரைக்கும் page views எண்ணிக்கையில் அசைக்க இயலா உச்சத்தில் நிற்பதும் இது வெளியான சமயத்திலான 'தல..தளபதி' பதிவே !! LMS - first amongst many equals !! இங்கு எனது கேள்வி : பிடாரியாய்க் கனத்த இந்த இதழைக் கையில் ஏந்திய அந்தத் தருணங்கள் நினைவில் உள்ளனவா guys ? கூரியர் டப்பிகளுக்குள் இவற்றை அடைத்த நாட்கள் இன்னமும் எனக்குப் பளிச் ஞாபகத்தில் நிற்கின்றன !! 

"தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இந்தப் பட்டியலுக்குள் இடம்பிடிக்கும் அடுத்த இதழ் ! இந்த இதழுக்கும் சரி, 'இரவே..இருளே..கொல்லாதே' இதழுக்கும் பெயர் வைக்க வழக்கத்தை விடவும் ஜாஸ்தி நேரம் எடுத்துக் கொண்டு மொக்கை போட்டதே இங்கு எனது முதல் memory !! ஏனோ தெரியலை - இந்த இரு கதைகளுக்கும் முதலில் எனக்குள் உருவான தலைப்புகள் எல்லாமே தெலுங்கு டப்பிங் படத் தலைப்புப் பாணிகளிலேயே அமைந்து போயின ! சரி..ஏதாச்சும் ஒரு "படலம்" என்று பெயர் வைக்க வேண்டியது தான் என்று அலுத்துப் போய் ஆபீசுக்கு கிளம்பியவனுக்கு, ரோட்டில் பைக் ஒட்டிக் கொண்டிருக்கும் போது இந்தப் பெயர்கள் திடுமென உதித்தன மண்டைக்குள் ! And இந்த 2 இதழ்களின்  சூப்பர்-டூப்பர் வெற்றிக்கு அந்தத் தலைப்புகளின் பங்கு என்னவென்று தெரியாது - ஆனால் இன்றளவிற்கு வாசிக்கும் போது நெருடாத தலைப்புகளாய் அவை தொடர்கின்றன, என்மட்டிற்காவது   ! "தேவ ரகசியம் தேடலுக்கல்ல" தேர்வானது primarily - அந்த பெயின்டிங் ரக சித்திர பாணிகளுக்கே ! கதையின் ஓட்டத்தைக் கண்டு எனக்குள்ளே கொஞ்சம் மிரட்சியும் குடி கொண்டது நிஜமே - simply becos இரு சமயங்கள் சார்ந்த நம்பிக்கைகளுக்கு இங்கு புது வடிவம் தர முனைந்திருந்தார் கதாசிரியர் ! அதன் பலனாய் நிறைய இன்டர்நெட் அலசல்கள் ; தேடல்கள் என்று மூழ்கிய பின்னே தான் இந்த இதழின் எடிட்டிங் பணிகளை நிறைவு செய்திட எனக்கு முடிந்தது ! அப்புறமுமே கொஞ்சம் பயம் தொடர்ந்தது தான் - உங்களின் வரவேற்பு எவ்விதமிருக்குமோ என்று !! ஆனால் தொடர்ந்த நாட்களில் என் பயங்களுக்கு அவசியம் லேது என்று நிலைநாட்டின உங்கள் உற்சாக வரவேற்புகள் ! "பொம்மை புக்" என்ற பிம்பங்களைத் தகர்க்க ஒத்தாசை செய்த இதழ்களுள் பிரதானமானது என்ற விதத்தில் இந்த தசாப்தத்தில் இதற்கொரு முக்கிய இடம் தர விழைகிறேன் ! இங்கே எனது கேள்வி : இதனை மறுவாசிப்புக்கு உட்படுத்திட முடிந்துள்ளதா guys ? 

பட்டியலில் # 10 : பவுன்சரின் :"ரௌத்திரம் பழகு" ! நிறைய ஆக்ஷன் கதைகள் ; கொஞ்சம் கிராபிக் நாவல்கள் என்று அதுநாள்வரையிலும் பழகியிருந்த நமக்கு, முகத்தில் அறையும் Jodorowski பாணியிலான வன்முறைகளும் ; முதுகுத் தண்டில் பூரான் நெளிகிறதோ ? என்று மிரளச் செய்யும் கதை நகர்த்தல்களும் ரொம்ப ரொம்பப் புதுசு தான் ! நிறையவே தயக்கமும், சம அளவுக்கு பயமும் இந்தத் தேர்வின் பின்னே இருந்தன என்றாலும், அந்த ஒற்றைக் கை நாயகரிடம் ஒரு இனம்புரியா வசீகரம் இருப்பதாகவும், அவரது அந்தத் துவக்க ஆல்பத்தின் sheer audacity நம்மைக் கட்டுண்டு போகச்செய்யும் என்ற நம்பிக்கையும் எப்படியோ ததும்பிய என்னுள் ! அதன் பலனாகவே பவுன்சர் தமிழ் பேசத் தீர்மானித்தார் ! And ஒரு பெரும் ராயல்டி தொகை தந்து கதைகளை வரவழைத்த பின்னே மொழிபெயர்ப்பில் மொக்கை போடும் படலம் தொடர்ந்தது ! அமெரிக்காவில் சியாட்டிலில் பணியாற்றி வந்த நம் வாசக நண்பர் ஒருவர் இந்த இதழின் ஆங்கிலப் பதிப்பை எனக்கு அன்போடு ஓராண்டுக்கு முன்னரே அனுப்பியிருந்ததால் அந்தப் புண்ணியத்தில் மொழிபெயர்ப்பில் கரை சேர முடிந்தது எனக்கு ! Maybe இதனை பிரெஞ்சிலிருந்தே மொழிபெயர்த்து வாங்கி, அப்புறமாய் நான் பேனா பிடித்திருந்தால் கதையோட்டத்தில் புரிதல் முழுமையாய் இருந்திருக்குமா ? என்று சொல்லத் தெரியலை எனக்கு ! சியாட்டில் நண்பருக்கு மீண்டுமொரு thanks ! நம் ரசனைகளின் முதிர்ச்சி அடுத்த லெவெலுக்குப் பயணமாகியிருப்பதை உணர்த்திய இதழ் என்ற வகையில் "ரௌத்திரம் பழகு" finds a place in this list ! And இங்கே எனது கேள்வி : முதல் வாசிப்பில் பவுன்சர் உங்களை மிரளச் செய்தாரா ? இல்லாங்காட்டி just like that வாசித்து முடித்தீர்களா ?

இந்தப் பதிவினில் 10 இதழ்களைப் பார்த்துள்ள நிலையில்  ; அடுத்த பதிவினில் பாக்கிப் 10 பற்றிய நினைவுகூரலை வைத்துக் கொள்ளலாமே என்று நினைத்தேன் - சரமாரியாக கிழியும் கொட்டாவிகளின் பொருட்டு ! அலாரம் வைத்து மார்கழியில் பதிவிடுவதில் சுண்டல் கிடைக்கிறதோ இல்லையோ - கொத்துக் கொத்தாய்க் கொட்டாவி நிச்சயம் கிட்டுகிறதே !! 

Before I sign off - ஜனவரியின் MAXI லயன் இதழ் பற்றிய preview இதோ  : 

இந்த அட்டைப்பட டிசைனிங்கின் பின்னணியில் உள்ள கதைகளை சொல்ல ஆரம்பித்தால் மதியமாகி விடும் என்பதால் - அதனை என்றேனும் ஒரு மழை நாளுக்கென வைத்துக் கொள்வோமே ? ஒரிஜினல் டிசைனுக்குள் கொஞ்சம் மாற்றங்கள் ; கொஞ்சம் மெருகூட்டல் என இயன்றதைச் செய்துள்ளோம் ! கதையின் தலைப்புக்கு நியாயம் செய்யும் விதமாய் அட்டைப்படமும்  அமைந்திருப்பதாய் உங்களுக்குத் தோன்றிடும் பட்சத்தில் நாங்க ஹேப்பி அண்ணாச்சி !  And இதோ - உட்பக்க வண்ண டிரெய்லர் - மிரட்டலான அந்த மெகா சைஸ் பக்க அமைப்பினில் ! 

As usual, டப்பா டப்பாவாய் மஞ்சள் மசிக் கொள்முதலோடு மங்களகரமாய் இந்த இதழின் அச்சு அரங்கேறியதால் சில பல எதிர் முகாம் ஆபீசர்களுக்கு "மஞ்ச phobia" தாக்கிடும் சாத்தியங்கள் பிரகாசமே ! அதே போல "மஞ்சச்சட்டை ஆபீசரின்" அடாவடியும் ; ஆரஞ்சு சட்டை அண்ணாச்சியின் பரிதாபமும்" என்று சில பல நெடும் பின்னூட்டங்களும் தொடர்ந்திடக்கூடிய சாத்தியங்களும் இங்கே இல்லாதில்லை தான் ! So ஜனவரியில் லூட்டிகளுக்கு பஞ்சமிராதென்று பட்சி சொல்கிறது ! அதைச் சொல்லிய கையோடு இப்போதைக்கு நான் விடை பெறுகிறேன் folks !! Have a cool Sunday !! See you around...bye for now !!

192 comments:

 1. Replies
  1. நெம்ப நாள் கழிச்சு மீ த பர்ஸ்ட்டுங்க குமார். 😏

   Delete
  2. ஆ , இந்த அமெரிக்கவாலாக்கள் தூங்கவே மாட்டாங்க போலயே !

   Delete
  3. எப்படி முடியும்? நமக்கு காலைல 7 மணின்னா அவங்களுக்கு ராத்திரி 7 மணி.

   Delete
 2. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 3. செவ்வாய் அன்றுதான் கிடைக்குமா?
  பரவாயில்லை ஆண்டு இறுதிநாளில் கிடைப்பது சந்தோசமசந்தோசம்!

  இருந்தாலும் வருடத்தின் முதல் நாளன்று ஏதாவது சர்ப்ரைஸ் கிடைத்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்..............

  ReplyDelete
 4. வாசகர்களை சரியாகவே புரிந்து கொண்டு உள்ளீர்.தயங்காமல் மேலே செல்லலாம் நம்பிக்கையோடு

  ReplyDelete
 5. என் பெயர் லார்கோ ,கிரீன் மேனர்...
  டெக்ஸ்...

  ReplyDelete
 6. இருளின் மைந்தர்கள் அட்டைப்படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 👌

  ReplyDelete
  Replies
  1. எனக்கும். இது ஒரு புத்தகத்தின் அட்டை தானே அப்போது இரண்டாவது புத்தகத்திற்கு?

   Delete
 7. கேள்வி 1.
  அப்ப எனக்கு மறு வருகை பற்றி தெரிந்திருக்கவில்லை 2014 மேயில் விடுமுறையில் இந்தியா வந்த பொழுது தான் இதழ்கள் மீண்டும் தொடர்ந்து வர ஆரம்பித்தது தெரிய வந்தது. உடனே வராமல் இருந்த மீதம் கதைகளையும் ஆபிசுக்கு போன் செய்து பணம் கட்டி வர செய்து படித்த பரபரப்பான விடுமுறை. அப்பொழுது கொத்து கொத்தாக நிறைய கதைகள் இருக்க இபிபா போட்டு படித்தேன். அதனால் அந்த ஒரு இதழ்தனித்து என்னால்உணரப்படவில்லை.

  ReplyDelete
 8. Advance new year greetings to our editor&team and to all our friends.

  ReplyDelete
 9. // திங்களன்று டப்பிகளுக்குள் ஐக்கியமாகி - செவ்வாயன்று உங்கள் இல்லங்களில் தஞ்சமடைந்திடத் தயாராகி வருகின்றன ! //

  இன்றைய தித்திப்பான செய்தி......

  ReplyDelete

 10. கேள்வி 2
  இல்லை. ஆங்கிலத்தில் வந்த லார்கோவுடன் பரிச்சயம் இருந்ததால் என்ன மாதிரியான கதை என்ற தோன்றவில்லை. ஆனால் புது மாதிரியான ஸ்டைலிஷ் மொழிபெயர்ப்பு ஒரு மகிழ்ச்சியைக் குடுத்தது என்பதும் உண்மை. இந்த மாதிரியான கதைகள் தமிழில் வருமா என்ற சந்தேகம் இருந்த காலகட்டம் என்று ஒன்று உண்டு. எனவே லார்கோவை தமிழில் பார்த்த பொழுது இன்ப அதிர்ச்சி தான்.

  ReplyDelete
 11. கம்பேக் ஸ்பெஷல் முதன்முதலாய் பார்த்தில்லாமல் வண்ணத்தில், அதுவும் ரூபாய் விலையில் மிரட்சிய்டைய செய்த இதழ்! கிராபிக் நாவல் வரிசையில் வெளிவந்த கதைகளில் இன்னமும் எனது நெ சாய்ஸ் எமனின் திசை மேற்குதான் பட்டாசாய் பறந்த கதை!சமயம் வாய்க்கும் போது மறுபதிப்பாகவும் போடலாம்!முதல் டெக்ஸ் வண்ண காம்பேக்ட் சைஸ் என்றால் நிலவொலியில் ஒரு நரபதி தான் ஞாபகத்திற்கு வரும் பெங்களூர் காமிக்கானில் எதிர்பாராத விருந்தாக ரசித்தது! கதையும், 50 ரூபாய் விலையும் இந்த கதையோட வெற்றிக்கு முக்கிய காரணங்கள்! கிரீன் மேனர் பலர் சிலாகித்து பேசினாலும் என்னால் ஒரு சிறுகதைக்கு மேல் தாண்ட முடியவில்லை என்பதே உண்மை!கால்மணி நேர அவகாசம் இருக்குதே அந்த நேரத்தில் லார்கோ கதையை படிக்க ஆரம்பித்தது, கதை போகும் வேகத்தில் ரெண்டு பாகத்தையும் படித்து முடித்து என்றும் மறக்க முடியாத அனுபவம்! Lms வெளியான போது கூரியர் டப்பாவை பிரித்து வைத்து நோட்டம் விட்ட போது அதன் மேல் நீங்கள் செய்திருந்த வித்தியாசத்தை ரசித்துக் கொண்டிருந்த போது, உங்களிடம் பேசியதும் இன்னமும் நினைவில் நிற்பவையே சார்

  ReplyDelete
 12. 'இருளின் மைந்தர்கள்' அட்டைப்படம் - மிரட்டல்! (பாகம்-2லும் இதே அட்டைப்படமா அல்லது வேறான்னு தெரியலியே?!!)

  ReplyDelete
 13. கேள்வி 3.

  எமனன் திசை மேற்கு. என்னுடைய ஆல் டைம் பேவரைட்களில் ஒன்று. வேகமா செல்லும் கதைஅமைப்பு; தீட்டியது போன்ற ஓவியங்கள்; இதயம் கனக்கும் முடிவு என மலைக்க வைத்த கதை.

  மறுபதிப்பில் வந்தால் மேக்ஸியில் வரத் தகுதியான கதை.

  ReplyDelete
  Replies
  1. அதுவும் இந்தக் கதையில் முழுப்பக்கங்களில் வரும் அடர்நீல ஓவியங்கள் இன்னும் மனதில் நிற்கிறது.

   Delete
 14. காலை வணக்கம் நண்பர்களே ☺️☺️

  ReplyDelete
 15. ஐ!இ.கை.மா!!!��
  தேவரகசியம் தேடலுக்கல்ல - பலமுறை படித்துள்ளேன்.
  இரவே இருளே கொள்ளாதே-ஏதோ படித்தேன்.
  பவுன்ஸர் - எனக்கு உவ்வே! ரகம்.
  லார்கோ - முதல் பந்தில் சிக்ஸர்��
  க்ரீன் மேனர் - மிடியலேரகம்

  இ.கை.மா. பற்றி எழுதியிருந்ததால் இதனைப் கூறுகிறேன். ஆரம்பகால இரும்புக்கையார் சூப்பர் இன்றும் சாதிக்கும் முடிந்தால் புதியது அல்லது மறுமதிப்பு யோசியுங்கள்.

  ReplyDelete
 16. கேள்வி 4:

  இன்ப் அதிர்ச்சியில்கிறு கிறுக்க வைத்த இதழ்களில் NBS உம் ஒன்று. மேக்கிங் அச்சுத்தரம்என அனைத்தும் வேற லெவல்.

  அரில் இருந்து மறுபதிப்பு என்றால் கான்க்ரீட் கானகம் (இது வரை தனி இதழாக வர வில்லை எனில்) மற்றும் கான்சாஸ் கொடூரன். ஏனெனில் நிறைய பேரிடம் இந்த இதழ் இல்லை. லார்கோ மற்றும் தளபதியின் இதழ்களை சேகரிப்போருக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கான்கிரீட் கானகம் நியூயார்க் தனி இதழாக 2018 ஈரோடு புக் ஃபேரில் வந்துவிட்டது. எனது லார்கோ கலெக்க்ஷனில் உள்ளது.

   Delete
  2. சரியாக சொன்னீர்கள் ஷெரீஃப் என்னிடமும் இந்த இதழ் இல்லை. கன்சாஸ் கொடூரன் +1

   Delete
  3. NBS படித்ததில்லையா குமார
   நீங்கள்?

   Delete
  4. #கான்சாஸ் கொடூரன்#
   +111111111

   Delete
 17. எனது மறுவாசிப்புகளில் LMS. கிரீன் மேனர்,பெளன்சரின் கறுப்பு விதவை, மற்றும் லார்கோ கதைகளுக்கு மிகப் பெரிய இடம் உண்டு.
  அப்புறம் என் பெயர் லார்கோவில் அவரின் இளம் வயது ரொமான்ஸும் பிடிக்கும். (ஹி.. ஹி.)

  ReplyDelete
  Replies
  1. NBS.LMS இரண்டும் வாங்கி பிரித்து அட்டைப்படங்களின் அச்சுத்திறனில் மெய் மறந்தது நிஜம். அது போலவே மின்னும் மரணம், மற்றும் இரத்தப்படலம் கலர் வெளியீடுகளும்.world class printing and binding with reasonable price.

   Delete
 18. //Comeback special - இந்த இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும்  ?//  

  புத்தகக் கண்காட்சியில் முதல் சில இதழ்களில் ஒன்று நண்பர்களின் புண்ணியத்தில் எனக்கு கிடைத்தது. எனக்கு மிகப் பிடித்த , பால்யத்தின் பிரிக்கவியலா நண்பனான லயன் காமிக்ஸ் உலகத்தரத்தில், புத்தம் புதிய வடிவமைப்பில் கையில் தவழ்ந்த போது கிடைத்த மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட இயலாது. புத்தகம் கிடைத்திடா நண்பர்களின் பொறாமைப்பார்வையிலிருந்து புத்தகத்தை காப்பாற்றியது தனி அட்வென்ச்சர்!!

  //மெய்யாலுமே முதல்வாட்டி படித்த போது  லார்கோவை ரசிக்க  முடிந்ததா ? என்ன மாதிரியான கதைடா சாமி ? என்ற திகட்டல் தோன்றவில்லையா ?//

  முதன்முறை வாசித்து ஆச்சர்யம் தீராமல் மறுமுறை பல முறை என வாசித்து தீராத இதழ்!!

  //NBS இதழானது இன்னும் நிறைய காலத்துக்கு ஒரு மறக்க முடியா "கூட்டணி ஆல்பமாய்" தொடர்ந்திடுமென்பதில் சந்தேகங்கள் கிடையாது//

  இந்த குண்டு புக்கை கையில் ஏந்தியபோது ஆச்சர்யத்தில் வாய் அடைத்துப்போனது அதே நேரத்தில் வாயைப் பிளக்கவும் தோணியது.. ஏதோ நானே புத்தகம் அச்சிட்டது போல 400/₹ க்கு இந்த தரத்தில், வண்ணத்தில் வேற யாராலும் போட முடியாது என புத்தகத்தை நண்பர்கள், உறவினர்களிடம் காண்பித்து தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தேன்


  அனைத்தையும் சாத்தியமாக்கிய எடிட்டர் அவர்களுக்கு கோடி நன்றிகள்!!!

  (இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்... டைப்ப முடியவில்லை.. பக்கம் பக்கமாக டைப்பும் எடிட்டரின் விரல்களுக்கு டபுள் தம்ஸ்அப்)

  ReplyDelete
 19. //இங்கே எனது கேள்வி : இந்த இதழ் //// உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும் //
  Surprise edition.

  ReplyDelete
 20. இந்த பத்து வருட வெளியீட்டில் படிக்காமல் இன்னமும் இருக்கும் புத்தகங்கள் நிறைய... புது வருஷத்திலாவது வெளியாகும் அத்தனையும் படிச்சுடணும்.

  ReplyDelete
 21. இந்த இதழின் அதகள வரவேற்புக்கு காரணம் அந்த சைஸ் தானா ? அல்லது வேறேதேனுமா ? இந்த இதழில் அப்படியென்ன ஸ்பெஷல் ?

  Willer, Tex willer.
  Colour, First colour tex.

  ReplyDelete
 22. கேள்வி 5:

  க்ரீன் மேனர் மற்றும் ம. மி. வே. இரண்டும் நன்றாகவே இருந்தது. கிறுகிறுக்க வைக்கவில்லை அதே சமயம் லயுக்கவும் வைக்கவில்லை. காரணம் நான் பெரும்பாலும் விரும்பும் கதைகள் பொழுதுபோக்குக் கதைகள் என்பதே.

  கேள்வி 6.

  உண்மையாலுமே தெரியவில்லை. இத்தனைக்கும் இதைவிட நல்ல டெக்ஸ் கதைகள் இருக்கிறது. ஒரு வேளை பாக்கெட்சைஸ் , வண்ணம் மற்றும் விலை காரணமாக இருக்கலாம்.

  கேள்வி 7:

  அப்போது இந்தியாவிலிருந்து வந்த ஒரு நண்பரை உலுக்கி LMS கொண்டு வர செய்தது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. இரண்டு வேறு சைஸிலான புத்தகங்கள், தளபதியின் அசத்தல் அட்டை, கார்சனின் நண்பருக்கு மட்டும் ஹார்ட்கவர் என்ற ஓரவஞ்சனைகள் (😏😜)எல்லாம் இன்னும் நினைவில் உள்ளது.

  கேள்வி 8

  தே. ர. தே & இ. இ. கொ. இரண்டும் எனக்கு பிடித்த கதைகள். முதல் கதை அதிக மறுவாசிப்புக்குள்ளானது. தே. ர. தே வின் டைட்டில் நிறைய காமிக்ஸ் ரசிகர்களிடம் பிரபலாமன வசனங்கள் போல உபயோகப்படுத்தப்படுவது உங்களுக்குத் தெரியுமோ?

  கேள்வி 9:

  Game of Thrones போன்ற கதைகளை படித்து அவற்றை காமிக்ஸ் மற்றும் திரை வடிவில் பார்த்து விட்டதால் எனக்கு பெரிய அதிர்ச்சி ஏற்படவில்லை. Nevertheless பவுன்சர் தமிழ் காமிக்ஸ் வடிவத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் புதுமையான முயற்சியே. மிச்ச மீதி இருக்கும் கதைகளையும் சரியான சந்தர்ப்பத்தில் கொண்டு வர முயற்சிக்கவும்

  ReplyDelete
 23. 2000 த்தை தொடர்ந்த வருடங்களில் உயர்படிப்பு, பணி மற்றும் குடும்ப நிகழ்வுகள் காரணமாக காமிக்ஸ் வட்டத்திலிருந்து விலகி வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருந்த எனக்கு 2016 புத்தக திருவிழாவின் போதுதான் லயனின் மறுவருகை பற்றித் தெரிந்தது, ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேல் இடைவெளி எனக்கும் நமது காமிக்சுக்கும் ஏற்பட்டிருந்த அந்த சமயத்தில் ஒரேயடியாக 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நமது ஸ்டாலில் இருந்ததை பார்த்து நிஜமாகவே திக்குமுக்காடி போனேன்.

  கிட்டத்தட்ட எனக்கும் காமிக்சுக்குமான பந்தத்தை மீட்டுக் கொண்டுவந்த தருணமது. உன்மையாகச் சொன்னால் எனது மகளுக்காக சில ஆங்கில கார்ட்டூன் இதழ்களை வாங்கிச் செல்லவே அந்த புத்தக விழாவிற்கு விஜயம் செய்திருந்தேன். ஆனால் எனக்குள் இருந்த குழந்தையை மீட்டுக் கொணர்ந்த அந்த நாளையும், அப்போது ஸ்டாலில் இருந்த நண்பர்கள் இருவரையும் என்னால் மறக்கவே முடியாது. ஆசிரியர் கேட்டுள்ள கேள்விகளைத் தாண்டி இந்நிகழ்வை இந்த தசாப்தத்தின் சிறந்த ஒன்றாக நான் நினைவு கூர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி நண்பர்களே... என் பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுக்க உதவியமைக்கு!

  ReplyDelete
  Replies
  1. 1. கம் பேக் ஸ்பெஷல் படிப்பதற்கு முன்னரே அதன் பின் வெளியான நிறைய இதழ்களை படித்துவிட்ட காரணத்தால் அதனுடன் பெரிய அளவில் லயிப்பு ஏற்படவில்லை. ஆனால் அதுசார்ந்த வலைப் பதிவுகளை பின்னாட்களில் படிக்க நேர்ந்த போது நண்பர்களின் சிலாகிப்பை உணர நேரிட்டது.

   Delete
  2. 2. லார்கோ கதைகளில் நான் முதலில் படித்தது 'துரத்தும் தலைவிதி' தான். அதன் பிறகு லார்கோவின் பிற வெளியீடுகள் அனைத்தையும் ஆன்லைனில் வாங்கி ஒருங்கே படிக்கும் அளவுக்கு அவரின் வசீகரம் என்னை ஈர்த்து விட்டது.

   Delete
  3. 3. Wild west special, நீண்ட நாள் தேடலுக்குப் பின்னர் கிடைத்த இதழ், உண்மையில் டைகர் கதையின் தொடர்ச்சிக்காக இந்த புத்தகத்தை தேடிப் பிடித்தேன். ஆனால் வாசிப்புக்குப் பின்னர் டைகர் இரண்டாம் பட்சமாகிப் போனது உண்மை. எமனின் திசை மேற்கு, நிச்சயம் ஒரு மைல் கல்.

   Delete
  4. // இந்தக் கதையை மட்டும் ஒரு one shot சிங்கிள் ஆல்பமாய்  மறுபதிப்பிட்டால் தேறுமா//
   Maxi யில் வெளியிடலாம்.

   Delete
  5. NBS இதழில் வெளிவந்த லார்கோவின் 'கான்கிரீட் கானகம்' ஏற்கனவே மறுபதிப்பு செய்யப்பட்ட நிலையில் அதில் வெளிவந்த டைகர் கதைகள் மற்றும் ஷெல்டன் இரண்டும் மறுபதிப்புக்கு உகந்தவையே...

   ஆனால் இளம் டைகர் தொகுப்பை (இதுவரை வெளிவந்தவை) மொத்தமாக பின்னாட்களில் முன்பதிவுகளுக்கு மட்டுமாவது மறுபதிப்பு செய்யலாம்.

   Delete
  6. 5. கிரீன் மேனர், சில கதைகள் தவிர்த்து ஏதும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒருவேளை புத்தகத் திருவிழாவில் ஒட்டுமொத்தமாக 50+ இதழ்களை சேகரித்து அவசர கோலத்தில் படித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ...

   Delete
  7. 6. என்னைப் பொறுத்தவரை size மற்றும் வண்ணம் இரண்டின் கலக்கல் கலவை. தற்போதைய மினி டெக்ஸ் தொகுப்புகளிலும் அதே factor தொடர்கிறதே...

   Delete
  8. 7. இரும்புக்கை மாயாவி நாஸ்டல்ஜியாதான் காரணம்...

   8. முதன்முதலாக நான் ஆன்லைனில் வாங்கிய இதழ், ஒரு தமிழ் காமிக்ஸ் இதழை இப்படி காணமுடியும் என கனவிலும் எண்ணவில்லை. இப்பொது 100 பக்கங்களுக்கு குறைந்த லயன் ஆண்டு மலர்களை கூட ஹார்ட் பவுன்டில் பார்த்தாலும் LMS ஒரு எக்ஸ்(ட்ரீம்) இதழ்.

   Delete
  9. 9. தேவ ரகசியம் தேடலுக்கல்ல...
   நிறைய முறை மறுவாசிப்பு செய்தது மட்டுமின்றி அது சார்ந்து நிறைய விஷயங்களின் தேடலுக்கு இட்டுச் சென்ற கதை!

   Delete
  10. 10. பவுன்சரின் 3 தொகுப்புகளையும் நண்பர்களின் வலைதள சிலாகிப்புகளின் அடிப்படையில் ஒன்றாக வாங்கி படித்து மிரண்டு போனேன். அடுத்தடுத்த பாகங்களை நிச்சயம் வெளியிடுங்கள் சார். Jodorowski யின் களங்கள் நிச்சயம் தமிழ் காண வேண்டியவையே...

   Delete
  11. தேவரகசியம் ேதடலுக்கல்ல நாவலில் Rozabal line பற்றி படித்துவிட்டு அது தொடர்பாக வெளியான அஸ்வின் சாங்கி அவர்களின் நாவலான ேராஸபால் ைலன் நாவலின் தமிழாக்கத்தை இன்னும் ேதடிக்கொண்டு இருக்கிறேன்.

   Delete
  12. தேவ ரகசியம் தேடலுக்கல்ல...!

   ☺☺☺

   Delete
  13. ”இளம் டைகர் தொகுப்பை (இதுவரை வெளிவந்தவை) மொத்தமாக பின்னாட்களில் முன்பதிவுகளுக்கு மட்டுமாவது மறுபதிப்பு செய்யலாம்.“
   👍🏼

   Delete
  14. ”தேவ ரகசியம் தேடலுக்கல்ல...
   நிறைய முறை மறுவாசிப்பு செய்தது மட்டுமின்றி அது சார்ந்து நிறைய விஷயங்களின் தேடலுக்கு இட்டுச் சென்ற கதை!“
   SARAVANAKUMAR 👍🏼

   Delete
 24. ஏனோ சமீப நாட்களாய் நீல நிற எழுத்துகளை சரிவர படிக்க முடிவதில்லை..

  ReplyDelete
 25. காலை வணக்கம் ஆசிரியரே மற்றும் நண்பர்களே கம் பேக் ஸ்பெஷல் வந்தபோது புத்தக விழாவில் வாங்கிய நினைவு இருக்கிறது அதன் பிறகு தொடர்ச்சியாக புத்தகம் வாங்க விரும்பி சிவகாசிக்கு மாதாமாதம் போன் செய்து விசாரிப்பேன் லார்கோ விஞ்ச் கதை வந்த போகுது அதைப் பற்றி தெரியாமல் சிவகாசிக்கு போன் செய்தேன் போனை எடுத்தது அன்புக்குரிய அண்ணாச்சி ராதாகிருஷ்ணன் எந்த புதிய புத்தகங்கள் வர இருக்கிறது என்று கேட்டபோது அவரது இனிமையான குரலில் என் பெயர் லார்கோ என்று சொன்னார் சத்தியமாக எனக்கு எதுவும் காதில் புரியவில்லை விளங்கவும் இல்லை குறைந்தது நாலு ஐந்து முறையாவது என்ன என்ன என்று கேட்டு அவரும் பதில் சொல்லி அது புரியாமல் மிகவும் எரிச்சலுடன் போனை கட் செய்தேன் அதன் பிறகு சென்னையில் எனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் என்ற இடத்தில் லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் கிடைக்கிறது என்று அறிந்து அங்கே போனேன் அப்போதுதான் சுடச்சுட வந்திருந்த என் பெயர் லார்கோ பார்த்து சிரித்தது கதையின் தலைப்பு அட்டைப்படம் இவை இரண்டில் மனம் சமாதானபடாமல் அதன் மேல் இருந்த முத்துகாமிக்ஸ் என்ற அடையாளத்திற்காக வே அந்தப் புத்தகத்தை நான் வாங்கினேன் வீட்டிற்கு வந்து முதல் நான்கு பக்கங்களை படிக்கும்போதே அந்தக் கதையின் அற்புதம் கதை சொல்லும் பாணி கதையின் நாயகன் இவற்றின் மேல் தீராக் காதல் உண்டானது இன்றுவரை 10 பாகங்களே வந்திருந்தாலும் என் மனதில் என்றும் நீங்காத இடம்பிடித்த இரண்டாவது கதாநாயகன் நம் லார்கோ முதல் கதா நாயகன் நமது ஜேசன் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் என் பி எஸ் உள்ள ஒரு கதையை மறுபதிப்பு செய்வதாக இருந்தால் வெய்ன் ஷெல்டன் இன் கதையை பதிப்பிக்கலாம். இதன் மூலம் செல்டன் கதையை மொத்தமாக தொகுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்படிக்கு
  என்றும் உங்கள் நண்பன்
  K.V.GANESH.
  அனைவருக்கும் இனிய2020 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. // மறுபதிப்பு செய்வதாக இருந்தால் வெய்ன் ஷெல்டன் இன் கதையை பதிப்பிக்கலாம். இதன் மூலம் செல்டன் கதையை மொத்தமாக தொகுக்கும் வாய்ப்பு கிடைக்கு// சரியாக சொன்னீர்கள் அண்ணா

   Delete
 26. அனைவருக்கும் வணக்கம்..!

  ReplyDelete
 27. ரூ. 10 விலையில்நமதுபகாமிக்ஸ்வந்து கொண்டிருந்த நேரமிது. ஒருஐஸ்பர்க்காமிக்ஸ் ரூ. 50விலையில் கண்டேன்.அதன்தரத்தைப்பார்த்தபோது ஆகா நம்மால் தாராளமாக ரூ100க்கு தகுதியானது என்ற என்னம் மனதில் ஓடியது.அப்போதுகண்ணில் பட்டது., comeback special. நாம நினைச்சதுநடக்குதுடோய் என்று சந்தோசத்தில் குதித்தேன். அன்றைய மன நிலையில்கதைகளைப்பற்றிய எந்தமதிப்பீடும் மனதில் இல்லை. லயன் மீண்டும்வந்ததே பெரிய சந்தோசம். அதிலும்நிலவொளியில்நரபலி கலரில் மிகக் குறைந்த விலையில். 2புத்தகங்களை வாங்கிக் கொண்டு சந்தோசமாய்திரிந்தேன். அடுத்தடுத்த மாதங்களில்பட்ஜட்பற்றாமல்ஒருமாதிரியான சந்தோசமான. மனநிலையில்சுற்றிக் கொண்டிருந்தேன்.அது ஒரு பொற்காலம் கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 28. முதல் வாசிப்பினில் க்ரீ .மே லயித்ததா ? கிறுகிறுத்ததா ? நிஜம் ப்ளீஸ் folks ?

  #####

  கிறு கிறு...:-)

  ReplyDelete
 29. கம்பேக் இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும் ?

  ####

  அப்பொழுது தான் அகன்ற கைபேசி வாங்கிய சமயம் ..வாங்கியவுடன் முதல்காரியமாக லயன்காமிக்ஸ் என்றுதான் தேட ஆரம்பித்தேன் .ஓர் இணைய தளத்தில் கம்பேக் இதழ் பற்றிய ஓர் செய்தி என்னை நம்ப முடியாமல் செய்தது ..நூறுரூபாய் என உள்ளது ..வண்ணத்தில் என்று உள்ளது உண்மையாகவே நமது லயன்காமிக்ஸ் தானா ..அல்லது ஆங்கில இதழுக்கு ஏதாவது தமிழில் விளம்பரமா என பலத்த சந்தேகம்..சந்தோசத்தில் தடுமாறி லயன்அலுவலகத்தில் விசாரித்து உடனடியாக பணம் கட்டி ஆர்வத்துடன் காத்திருக்க பார்சலை பிரித்த அன்று அப்பப்பா சொல்ல வார்த்தைகளே இல்லை.நம்ம லயன் காமிக்ஸா இது என பிரித்து பிரித்து அந்த இதழை முகர்ந்து முகர்ந்து ரசித்தது இன்னும் நினைவில்..:-)

  ReplyDelete
 30. மெய்யாலுமே முதல்வாட்டி படித்த போது லார்கோவை ரசிக்க முடிந்ததா ? என்ன மாதிரியான கதைடா சாமி ? என்ற திகட்டல் தோன்றவில்லையா ?

  ######

  படித்த முதல் கதையிலேயே டெக்ஸை விட லார்கோ மனதில் ஆழமாக பதிந்து அடுத்த இதழுக்காக வெகு ஆவலுடன் காக்க வைத்தார் என்பதே உண்மை..

  ReplyDelete

 31. தேவரகசியம் தேடலுக்கல்ல ,இரவே இருளே கொல்லாதே
  மறுவாசிப்புக்கு உட்படுத்திட முடிந்துள்ளதா guys ?


  ######

  இதுவரை இல்லை சார்..:-)

  ReplyDelete
 32. முதல் வாசிப்பில் பவுன்சர் உங்களை மிரளச் செய்தாரா ? இல்லாங்காட்டி just like that வாசித்து முடித்தீர்களா ?

  ####

  பலமாக மிரள செய்தார்..:-)

  ReplyDelete
  Replies
  1. உங்களை மிரள செய்யாமல் இருந்தால் தானே தலைவரே ஆச்சரியம்.

   Delete
 33. ஞாயிறு காலை வணக்கம் சார் 🙏🏼

  நண்பர்களே 🙏🏼
  .

  ReplyDelete
 34. // புத்தாண்டின் முதல் மாதத்து இதழ்கள் ஐந்தும் ரெடி ! திங்களன்று டப்பிகளுக்குள் ஐக்கியமாகி - செவ்வாயன்று உங்கள் இல்லங்களில் தஞ்சமடைந்திடத் தயாராகி வருகின்றன ! So பத்தொன்பதிலேயே இருபதுக்கு ஸ்வாகதம் சொல்லிடலாம் folks //

  ஹேப்பி அண்ணாச்சி 💃🏻🕺🏻💃🏻🕺🏻💃🏻🕺🏻

  ReplyDelete
 35. 1.கம்பேக் இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும் ?

  நண்பர் யுவா விடம் தான் வாங்கி படித்தேன் .. badly missed it ..முடிந்தால் மறு பதிப்பு செய்யவும் சார்..

  2.மெய்யாலுமே முதல்வாட்டி படித்த போது லார்கோவை ரசிக்க முடிந்ததா ?

  YES SIR .. after TEX, TIGER LARGO MADE A HUGE IMPACT IN FIRST ISSUE ITSELF

  3.இந்தக் கதையை மட்டும் ஒரு one shot சிங்கிள் ஆல்பமாய் மறுபதிப்பிட்டால் தேறுமா ?

  கண்டிப்பாக சார் .. IN MAXI NEXT YEAR ..

  4.NBS இதழில் இடம்பிடித்த கதைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் தனி இதழாய் மறுபதிப்பிடுவதாயின் எதைத் தேர்வு செய்வீர்களோ ?

  SHELDON ..

  5.முதல் வாசிப்பினில் க்ரீ .மே லயித்ததா ?

  லயித்தது சார்.. மனித மனங்களின் DARK SIDE ஐ வெளிப்படுத்திய இதழ் ...

  6."தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இதனை மறுவாசிப்புக்கு உட்படுத்திட முடிந்துள்ளதா guys ?

  YES ..

  7.முதல் வாசிப்பில் பவுன்சர் உங்களை மிரளச் செய்தாரா ? இல்லாங்காட்டி just like that வாசித்து முடித்தீர்களா ?

  மிரள செய்ய வில்லை சார் .. ஆனால் இதழின் RAWNESS ஈர்த்தது ..

  8."நிலவொளியில் நரபலி இதழின் அதகள வரவேற்புக்கு காரணம் அந்த சைஸ் தானா ? அல்லது வேறேதேனுமா ? இந்த இதழில் அப்படியென்ன ஸ்பெஷல் ?

  FIRST TIME TEX IN COLOR , SIZE AND PRICE ..

  9. பிடாரியாய்க் கனத்த இந்த இதழைக் கையில் ஏந்திய அந்தத் தருணங்கள் நினைவில் உள்ளனவா guys ?

  தலையின் அந்த ஜிகினா BULLET இன்னும் நினைவில் உள்ளது சார் ...

  ReplyDelete
 36. // இங்கே எனது கேள்வி : இந்த இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும் ? //

  ரொம்ப வருடமாகவே சந்தாதார் என்பதால் தொலைபேசி மூலமாக அண்ணாச்சி நன்கு பழக்கம்
  அதனால் உடனே கொரியரில் வாங்கியாச்சு

  கலரில் லக்கி மற்றும் பிரின்சும் கலக்க
  கறுப்பு வெள்ளையில் மாயாவியும் காரிகனும் அசத்த
  உங்களுடைய சிங்கத்தின் சிறுவயதில் மற்றும் வரவிருக்கும் கதைகளின் முன்னோட்டங்கள் என
  மிக அசத்தலாக இருந்தது சார் 😍😍😍
  .

  ReplyDelete
 37. நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் எனக்கு 2014 & 2015 தான் வாசிக்க கிடைத்தது அதனால் முதல் முறை பரவசம் எனக்கு வாய்க்கவில்லை..
  ஆனால் இரண்டு கதைகள் பயங்கர தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது..


  ###"தேவ ரகசியம் தேடலுக்கல்ல"
  இதனை மறுவாசிப்புக்கு உட்படுத்திட முடிந்துள்ளதா guys ? ###

  ஜந்து முறை படித்திருக்கிறேன் சார் ..

  ##முதல் வாசிப்பில் பவுன்சர் உங்களை மிரளச் செய்தாரா ? இல்லாங்காட்டி just like that வாசித்து முடித்தீர்களா ?##

  கண்டிப்பாக மிரண்டுதான் போனேன்..
  இலகுவான காமிக்ஸ்களேயே படித்து பழகியதால் நமது குழுமத்தில் இப்படியொரு வக்கிரமான,கொடூரமான,கதைகளை படித்ததில்லை ஆகையால் நெஞ்சம் கலங்கி போனேன்..

  ReplyDelete
 38. ////இந்த இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும் ? ////  எப்போதும் கடைகளில் வாங்குவதால் 2012 க்கு முன் புக் வருகிறதோ இல்லையோ மாதத்திற்கொருமுறை பஸ்ஸ்டாண்ட் கடையை எட்டிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.புக் வரவில்லை என்றாலும் எனது விடாப்பிடியான விக்ரமாதித்தன் அவதாரம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கம்பேக் ஸ்பெஷல் வந்தபோது, எப்படி நடந்ததோ தெரியவில்லை.வெற்றிரமாக அதை மிஸ் செய்தே விட்டேன். கடைகளில் வாங்காமல் விட்டுவிட்டால் மீண்டும் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். அதிர்ஷ்டவசமாக மார்க்கெட் பகுதியில் இருந்த ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைத்தபோது உண்மையிலே எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது.பின்னே ஒரு வருடத்திற்குப்பிறகு கிடைத்த பொக்கிஷமல்லவா.?முனைகள் கசங்கியிருந்தது.வலதுகீழ்முனை மடங்கி கிழிந்திருந்தது.உள்பக்கம் லக்கியின் கதையின் முதல்பக்கம் இல்லை.ஆனாலும் ஒடுங்கியிருந்தாலும் தங்கம் தங்கம் தானே. வீட்டுக்கு வந்ததும் மனம் முழுவதும் உவகையோடு மெலிதாக கைநடுங்க பிரித்துப் படித்தது மறக்கவே முடியாத தருணம்..!

  ReplyDelete
  Replies
  1. செம்ம GP. என்னால் உணர முடிகிறது.

   Delete
  2. ஒவ்வொரு கேள்வியும் சொல்லமறந்த கதைகள் ஏகப்பட்டதை உள்ளடக்கியுள்ளது ஜீ.

   இதோ ..பின்னாடியே லார்கோ வருகிறார்..!

   Delete
 39. I srill remember the 2012 book fair. Got the bundle of old books pack for around 800 rupees. It was arouund 40 to 50 books. Read them for a period of one month and from that dates subscribing continuously. Still lot of my friends dont know the books are released everymonth. When i tell them they get excited. We need to do more marketing and awarness.

  ReplyDelete
 40. இருளின் மைந்தர்கள்.1 பின் அட்டைப்படம், தலையில்லா போராளி கதையின் பின் அட்டை.copy/paste.

  ReplyDelete
 41. Sir, I have irulin mynthargal Rs.20 edition. It's not worth to republish on maxi.Try to get mefisto maxi stories. Yes, I missed NBS. I realized online facility at 2015. But I collected all my favorites. For 2020 I also decide to buy all santha.But like missing Spidey,steel claw, and irulin mynthargal selection, and specially Dillon and old James,stories oh please sir, I read the stories from my 5 age. I done them all in Rani comics. So I changed my mind to buy my favorites only through online.

  ReplyDelete
 42. ஆசிரியருக்கு. ..மாமுலான மொக்கை என்ற வாக்கியம் வேண்டாமே.நீங்கள் நினைப்பது போல் மொக்கையாக இருந்தாலும் உங்களின் பதிவுவை படிக்க காத்திருக்கும் எங்களின் சந்தோஷம். ..மகிழ்ச்சியின் உச்சம்💐💐💐

  ReplyDelete
 43. வணக்கம் சார்! நேற்று மாலை சுமார் 4 மணியளவில், சந்தாவுக்கு உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளேன். விவரங்களை மெயிலில் அனுப்ப 6 மணியாகிவிட்டது. அதற்கு மேல் உங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. நாளை வங்கி கணக்கை சரிபார்த்து விட்டு, நாளைக்கே எனது பார்சலையும் அனுப்பி வையுங்கள் சார்!

  ReplyDelete
 44. நானும் எனது ஃப்ளாஷ்பேக் ஐ பகிர்ந்து கொள்கிறேன். 2014 இல் என்று நினைக்கிறேன் அப்போது ஈரோடு வந்த போது பஸ் ஸ்டேண்ட் இல் கடையில் லயன் காமிக்ஸ் ஐ பார்த்து நம்பவே முடியாமல் புத்தகம் வாங்க வெறும் 200 ரூபாய் மட்டும் வைத்து இருந்தேன். அதில் இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கினேன் அதில் ஒன்று மனதில் மிருகம் வேண்டும் எனவே அது எனக்கு மறக்கவே முடியாத இதழ். மிகவும் ரசித்த புத்தகம்.

  ReplyDelete
  Replies
  1. யானும் அவ்வண்ணமே. என் பெயர் லார்கோ புத்தகத்தை கரூர் பஸ் ஸ்டேண்டில் புத்தகக்கடையில் பார்த்துவிட்டு அதன்பிறகு லயன் ஆபீஸ்க்கு போன் பண்ணி கேட்டு விட்டு சந்தா கட்டினேன். 600 ரூபாய் என்பதாக ஞாபகம்.

   Delete
  2. அட. பஸ் ஸ்டாட் பற்றி ஒரு கதையே இங்கு இருக்கும் போல தெரிகிறது.

   Delete
 45. அதற்கு பிறகு லயன் ஆபீஸ் தொடர்பு கொண்டு எல்லா புத்தகங்களையும் ஒன்று ஒன்றாக வாங்கினேன். என்னிடம் லயன் come back special இருக்கிறது. ஆனால் லயன் NBS இல்லை.

  ReplyDelete
 46. நான் படித்த முதல் லார்கோ ஆதலினால் அதகளம் செய்வீர் எனவே என் பெயர் லார்கோ மற்றும் கான்கிரீட் கானகம் நியூயார்க் இரண்டு புத்தகங்கள் கிடைக்கவே இல்லை. ஆனால் தனியாக அவை கிடைத்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன். லார்கோ வின் தாக்கம் டைகர் இன் தாக்கத்திற்கு சற்றும் குறைந்தது இல்லை.

  ReplyDelete
 47. லார்கோ.!

  இதில் வேறொருவிதமான பிரச்சனை முளைவிட்டது. வழக்கமாக கடையில் கொள்முதல் செய்துவிட்டு, அங்கேயே பிரித்துப் பார்த்தேன்.சத்தியமாகச் சொல்கிறேன் ஆடிப் போய்விட்டேன்.நிஜமாகவே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். அட்டகாசமான ஓவியங்கள், ஆளை மயக்கும் வண்ணக் கலவை, அடித்துத் தூக்கும் உலகத்தரம் என ரெம்பவே சர்ப்ரைஸ் கொடுத்த இதழ். முத்து காமிக்ஸில் டைகருக்கு பின்னே, என்னை ஆட்கொண்டது லார்கோ என பெருமையாகச் சொல்வேன்.
  ஆனால்,
  என்பெயர் லார்கோ 'விலும் ஒரேயொரு நெருடல் ரெம்பவே உறுத்தியது.அது ஆங்காங்கே தென்படும் கசாமுசா க்ளாமர் காட்சிகளே.முதன்முறையாக காமிக்ஸில் இது என்னை முகம்சுழிக்கச் செய்தது.விளைவு 'லார்கோ 'வா வேண்டாம் சாமி என தள்ளி வைத்தேன்.துரத்தும் தலைவிதி வந்த சமயம் எப்போதும் போல லார்கோவைத் தவிர்த்து விட்டேன். ஆனால் காமிக்ஸ் சுவை உயிரோடு ஒட்டிக் கொண்ட பின்னே அதை தவிர்ப்பது சுலபமா என்ன.? அந்த மாதத்தில் வெளியான மற்ற காமிக்ஸ்களை படித்த பின்னே, வேறு (படிக்காத) புத்தகங்களின்றி அந்த வாரத்தில் ஒரு வெறுமை சூழ்ந்தது.

  அவ்வப்போது எட்டிப் பார்க்கும் பழக்கத்தில் பஸ்ஸ்டாண்ட் கடைக்குச் செல்லும்போது லார்கோ சைமனோடு புன்னகையோடு வரவேற்றார். சரி..என்னதான் இருக்கு பார்க்கலாம் என அரைமனதோடு லார்கோவை வாங்கினேன்.எங்கெங்கே என்னென்ன சேட்டை நடக்குமோ என்று ஆர்வமில்லாமலே படிக்க ஆரம்பித்தேன்.படிக்கப் படிக்க 'அமானுஷ்ய அலைவரிசையில் 'வரும் டிவி போல கதை என்னை விழுங்கத் தொடங்கியது.ஒப்புக்கு படித்தவன் அதில் ஒரேடியாகத் தொலைந்து போனேன். வான் ஹாமே அவர்களின் பிரம்மாண்டமான கதை சொல்லும் திறனை உண்மையாகவே கண்டுகொண்ட தருணமது.அதிலிருந்துததான் லார்கோவின் நிஜ பரிமாணம் பரிச்சயமானது. இதிலும் கசாமுசா காட்சிகள் இருந்தாலும், எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் ஆச்சரியம்.ஊறுகாய் ரசிக்கவில்லை என்பதால், ஒட்டுமொத்த பதார்த்தத்தையும் ருசிக்காமல் புறக்கணிப்பது தவறு என்ற உண்மை புலப்பட்டது.இப்போதெல்லாம் ஊறுகாயை தடையாகப் பார்ப்பதில்லை.சொல்லப்போனால் ஊறுகாயை கண்டுகொள்வதேயில்லை.

  லார்கோவின் மீது ஸ்பெஷல் ஈடுபாடு ஏற்பட்டது துரத்தும் தலைவிதியில் என்பதால் சர்ப்ரைஸ் ஸ்பெஷலைத் தாண்டி, ஆக்சன் ஸ்பெஷலே முன்னுக்கு நிற்கிறது.

  ReplyDelete
 48. தேவ ரகசியம் இரவே இருளே பல முறை மறு வாசிப்பு செய்து விட்டேன். எமனின் திசை க்கும் ஒரு thumbs up.

  ReplyDelete
 49. ஏற்கனவே பல ஆங்கில திரைப்படங்கள் மற்றும் கௌபாய் சீரிஸ் பார்த்து விட்டதால் bouncer ஒன்றும் திக்கித்து போக செய்யவில்லை. Jorodowski எழுதிய மீதி காமிக்ஸ் புத்தகங்களையும் வெளியிட்டு முடித்து விடுங்கள் சார். இது நண்பர் கார்த்திகை பாண்டியனின் வேண்டுகோளும் கூட. இந்த வருட ஈரோடு புத்தக விழா அன்று மாலை நடந்த மரத்தடி மாநாட்டின் போது அவர் திரும்ப திரும்ப இதை தான் கேட்டு கொண்டே இருந்தார்.

  ReplyDelete
 50. அன்பின் ஆசிரியருக்கு,

  வணக்கம். வரவிருக்கும் புத்தாண்டில் நமது காமிக்ஸ் புதிய உயரங்களைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துகள்.
  1.கம்பேக் ஸ்பெசலை எப்போதும் மறக்க முடியாது. ஒரு புதிய தொடக்கம், வெகுதூரம் பயணிப்போம் என்கிற நம்பிக்கையை மீட்டெடுத்த இதழ். கதைகள் சற்று சுமார்தான் என்றாலும் மீண்டும் காமிக்ஸ் வாசிக்கிறோம் என்கிற உற்சாக உணர்வை அந்த இதழ் விதைத்தது. அதுவும் அந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் பழைய இதழ்களை பண்டல் பண்டல்களாக மக்கள் அள்ளிச் சென்ற காட்சியை என்றும் மறக்க முடியாது.
  2.லார்கோ – முதல்முறை வாசித்தபோது ஆவென்று வாயைப் பிளக்க வைத்த இதழ். அதுவரைக்கும் நாம் பழகியிருந்த காமிக்ஸ்களிலிருந்து வேறுபட்டு நவீன யுகத்தின் பிரதிநிதியாகக் களமிறங்கிய கோடீஸ்வரக் கோமான் முதல் பந்தில் அடித்தது ஹோம்ரன்தான் என அடித்துச் சொல்லலாம்.
  3.எமனின் திசை மேற்கின் மறுபதிப்பு – வேண்டாம் என்பதே என் அபிப்பிராயம். கடந்த பத்து / இருபது வருடங்களுக்குள் வெளியான எந்த இதழையும் மறுபதிப்பு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. மும்மூர்த்திகளிலும் மறுபதிப்பு செய்யாத சில புத்தகங்கள் இருக்கும்போது வெகு சமீபத்தில் வெளியான இந்த இதழை நாம் மீண்டும் வெளியிட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.
  4.NBS – மறுபதிப்புக்கான எனது சாய்ஸ்கள் பற்றி ஏற்கனவே சொல்லி விட்டேன். கண்டிப்பாக ஒரு கதை என்றால் கிட் ஆர்டினின் கம்பளத்தில் கலாட்டாவை மறுபதிப்பாக வெளியிடலாம்.
  5.க்ரீன் மேனார் ஒருவகை போதையைத் தந்தது என்று சொன்னால் மிகையாக இருக்காது. குற்றத்தின் நறுமணத்தை கதைகளெங்கும் பரவ விட்டிருந்த பிரமாதமான தொகுப்பு.
  6.என்னளவில் நிலவொளியில் நரபலி ரொம்பவே சுமாரான கதை. அனேகமாக அந்த பாக்கெட் சைஸும் வண்ணமும்தான் அதன் வெற்றிக்குக் காரணாமாக இருக்கக்கூடும்.
  7.LMS – கடந்த தசாப்தத்தில் நம் காமிக்ஸ் மகுடத்தில் பதிக்க வேண்டிய வைரக்கற்களில் நிச்சயம் இதற்கு இடமுண்டு.
  8.மனம் சற்று தளர்வாக உணரும்போதெல்லாம் நான் மறுவாசிப்பு செய்யும் காமிக்ஸ்களுள் தேவ ரகசியம் தேடலுக்கல்ல, ஒரு சிப்பாயின் சுவடுகளில் ஆகிய இரண்டு கதைகளுமே மிக முக்கியமானவை
  9.ஹொடொரோவெஸ்கியை எனக்கு மிகவும் நெருக்கமானவராக உணரும் காரணத்தால் மிகுந்த பிரமிப்போடும் ஆசையோடும்தான் பௌன்சரை வாசித்தேன். வரும் காலங்களில் மீதமிருக்கும் பௌன்சரின் ஆல்பங்களை நீங்கள் வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைக்கிறேன்.

  நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பிரியமுடன்,
  கார்த்திகைப் பாண்டியன்

  ReplyDelete
  Replies
  1. // எமனின் திசை மேற்கின் மறுபதிப்பு – வேண்டாம் என்பதே என் அபிப்பிராயம். கடந்த பத்து / இருபது வருடங்களுக்குள் வெளியான எந்த இதழையும் மறுபதிப்பு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. மும்மூர்த்திகளிலும் மறுபதிப்பு செய்யாத சில புத்தகங்கள் இருக்கும்போது வெகு சமீபத்தில் வெளியான இந்த இதழை நாம் மீண்டும் வெளியிட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். //

   +1

   Delete
 51. வணக்கம் சார் .. கம்பேக் ஸ்பெஷல் சபரிபலைக்கு மாலை அணிந்து கோவிலுக்கு சென்று திரும்பிவரும்போது நண்பன் sriram சென்னையில் இருந்து ஒரே கத்தல் மச்சான் பிரின்ஸ்கதடா கலர்ல கூடவே லக்கியும் கலர்ல கூடவே மாயாவி கத. என்றான் சரி மச்சி நமக்கு இங்கிலீசு வராதேடா என்றேன். டேய் மடயா நம்ம லயன்காமிக்ஸ்டா என்றான் சாமினு கொஞ்சம்கூட மரியாதையில்லாம....என்னடா சொல்லற மச்சி என்றேன் நானும் சாமிங்கரத மறந்து கூட இருந்த குருசாமி பாத்த பார்வை இன்னும் நினைவில் உள்ளது....மறக்க இயலாத உண்மையான comeback என்றால் இதுதான் சார்....தொடரும் அடுத்து LMS

  ReplyDelete
 52. எமனின் திசை மேற்கின் மறுபதிப்பு
  வேண்டாம்.

  இந்த கதையின் வசனங்கள் பல இடங்களில் என்னை உலுக்கியது. குறிப்பாக விரலை/கையை வெட்டியது பற்றிய வசனம், இன்றும் அதனை படிக்கும் போது வயிற்றில் புளியை கரைக்க வல்லது.

  ReplyDelete
  Replies
  1. இந்த கதையை படிக்க ஆரம்பித்த போது என்னடா இது தலைப்பு என நினைத்தேன், கடைசி இரண்டு பக்கங்களை நெருங்கிய போது அட இதனால் தான் தலைப்பின் காரணமா என ஆச்சரியப்பட்டேன், மிகவும் சரியான கதை தலைப்பு.

   Delete
 53. விஜயன் சார், நமது come back பின்னர் வந்த எந்த கதைகளும் மறுபதிப்பு வேண்டவே வேண்டாம்.

  Come back முன்னால் வந்து உள்ள கதைகளை மட்டும் மறுபதிப்பு செய்யுங்கள். இல்லை என்றால் புதிய கார்டூன் கதைகளை கொடுங்கள் சார்.

  ReplyDelete
 54. "பிடாரியாய் கனத்த இந்த இதழைக் கையில் ஏந்திய அந்தத் தருணங்கள் நினைவில் உள்ளனவா guys ? " ஒவ்வொரு மாதமும் இதழ்கள் வெளியாகும் தருணம் என்பது பெண்ணின் பிரசவம் போன்றது. எனும் போது இது மாதிரி வாக்கியங்கள் நெருடலாக தென்படுகின்றன.

  ReplyDelete
 55. Replies

  1. நமது Come back பிறகு வந்த கதைகளில் மறுவாசிப்பு செய்தது லக்கி-லூக், ஸ்மர்ப், ரின் டின் மற்றும் தோர்கல், மேலும் சில டெக்ஸ் கதைகள், கியூபா படலம், நிலவொளியில் ஒரு நரபலி.

   Delete
 56. //Come back special - இந்த இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும்?//
  2013 இறுதியில் தான் புத்தகங்களின் வருகை அறிந்து, பின்பு stockல் இல்லாத
  இந்த புத்தகத்தை பழைய புத்தக கடையில் கண்ட போது கிடைத்த ஆனந்தம் அளவிட முடியாதது.

  //மெய்யாலுமே முதல்வாட்டி படித்த போது லார்கோவை ரசிக்க முடிந்ததா ? என்ன மாதிரியான கதைடா சாமி ? என்ற திகட்டல் தோன்றவில்லையா ?//
  முதல் தடவையே முத்திரை பதித்தவர் லார்கோ

  //"எமனின் திசை மேற்கு" கதையை மட்டும் ஒரு one shot சிங்கிள் ஆல்பமாய் மறுபதிப்பிட்டால் தேறுமா ?//
  Collection னில் உள்ளது. இன்னும் படிக்க வில்லை. அதனால் no comments.

  // NBS இதழில் இடம்பிடித்த கதைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் தனி இதழாய் மறுபதிப்பிடுவதாயின் எதைத் தேர்வு செய்வீர்களோ ?
  Already லார்கோவை போட்டாச்சு, ஷெல்டனையும் போட்டு விட்டால், NBS ன் மதிப்பு குறைந்து விடும்.

  //முதல் வாசிப்பினில் க்ரீ .மே லயித்ததா ? கிறுகிறுத்ததா ? நிஜம் ப்ளீஸ் folks ?//
  Lion all new specialல் முதன் முதலாய் படித்தது. கிறுகிறுத்து விட்டது, அடுத்த பாகமான "மனதில் மிருகம் வேண்டும்"
  வாங்கியதோடு சரி இன்னும் படிக்கவில்லை.

  //நிலவொளியில் நரபலி" இந்த இதழின் அதகள வரவேற்புக்கு காரணம் அந்த சைஸ் தானா ? அல்லது வேறேதேனுமா ? இந்த இதழில் அப்படியென்ன ஸ்பெஷல் ?//
  முதன் முதலில் வெளியான கலர் டெக்ஸ் புத்தகம் இதுதான், தவிர all time favourite க்கு தகுதியான விறுவிறுப்பான கதை. தரமான கலரிங் மற்றும் அச்சு.

  //LMS பிடாரியாய்க் கனத்த இந்த இதழைக் கையில் ஏந்திய அந்தத் தருணங்கள் நினைவில் உள்ளனவா guys ? கூரியர் டப்பிகளுக்குள் இவற்றை அடைத்த நாட்கள் இன்னமும் எனக்குப் பளிச் ஞாபகத்தில் நிற்கின்றன !!//
  இப்புத்தகத்தை வாங்க அன்று bus ல் சென்று விட்டேன். நிரம்பி வழிந்த கூட்டம், 25 km பயணம், அதுவும் நின்று கொண்டு, யாரிடமும் கொடுக்க மனமில்லை, ஒரு கையில் புத்தகம், மற்றொன்றில் பேருந்து கம்பி. புத்தக எடை வேலையைக் காட்ட கைகளை மாற்றி மாற்றி நானும் சமாளித்து ஊர் வருவதற்குள் ஒரு வழியாகி விட்டது.
  ஆனால் புத்தகத் தரம் அனைத்தையும் மறக்கடித்து விட்டது. அதில் எனது இரண்டு பக்க விமர்சனமும் இடம் பெற்றது கூடுதல் சந்தோஷத்தை அளித்தது.

  //தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இதனை மறுவாசிப்புக்கு உட்படுத்திட முடிந்துள்ளதா guys ?//
  எனது All time favorite இதழ், நிச்சயம் மீண்டும் படிக்க வேண்டும், ஆனால் நமது மீழ் வருகைக்கு பின் எந்த கதையையும் மீண்டும் ஒருமுறை படிக்கும் வாய்ப்பு/நேரம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் உண்டு.

  //முதல் வாசிப்பில் பவுன்சர் உங்களை மிரளச் செய்தாரா ? இல்லாங்காட்டி just like that வாசித்து முடித்தீர்களா ?//
  முதல் வாசிப்பில் மிரண்டது உண்மை. எனது all time favorite "சர்பங்களின் சாபம்".

  ReplyDelete
 57. Comeback special reprint on demand base try pannunga sir...

  ReplyDelete
  Replies
  1. ரொம்பவே சுமாரான கதைகள் சார் அதனில் !

   Delete
 58. தற்போது மேகனம் ஸ்பெஷலில் வந்த பேய் நகரம் மற்றும் அதிர்ஷ்டம் தரும் அண்ணாத்தே கதைகள் மறுவாசிப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. கலாமிட்டி ஜேன் அடிக்கும் கூத்துக்கள் செம ரகளையான அனுபவம்.

  ReplyDelete
  Replies
  1. LMS மெயின் இதழை நேற்றுப் புரட்டிக் கொண்டிருந்தேன் ; ஆனால் அதனுடன் இணைந்து வந்த வண்ண இதழைப் பார்த்திட நேரமிருக்கவில்லை ! இதோ இப்போது உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பின்னே கலாமிட்டி ஜேனை சந்திக்க நானுமே புறப்படுகிறேன் !

   Delete
  2. அதனுடன் இணைந்து வந்த வண்ண இதழின் 3 கதைகளும் mutthukal.

   Delete
 59. //comeback special - இந்த இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும் ? //

  2012 மீள்வருகை பற்றி நீங்கள் இந்த பிளாக்கில் எழுத ஆரம்பித்தநாள் முதல் இன்றுவரை நானும் தொடரந்து வருவதை பெருமையாக நினைக்கிறேன்.

  இரத்தப்படலம் புத்தகம் விற்பனைக்கு உள்ளதா என்பதை ஒரு கேள்வியாக கேட்டு நண்பர் ஒருவரின் பதிலில் உறுதி செய்துவிட்டு அதை புத்தகவிழாவில் வாங்கியது இன்றும் நெஞ்சில் இருக்கும் இனிய நினைவு...

  குடும்பத்துடன் சென்று ஸ்டாலில் (இன்னொரு பதிகப்பத்துடன் பகிர்ந்த) இருந்த நமது பழைய புத்தகங்கள் புல் செட்டை வாங்கி வந்தது மறக்க இயலான நினைவுகள்....

  அரவிந்தசாமி போல ஸ்டாலில் நின்று கொண்டிருந்த நமது ஆசிரியரை ஓரப்பர்வை மட்டும் பார்த்துது விட்டு ஏதோ காரணத்தால் (பேசிட தயக்கம்) பேசாமல் வந்த்தை நினைத்தால் இப்பொழுது சிரிப்பு வருகிறது.

  திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன்

  ReplyDelete
  Replies
  1. சார்..கோச்சுக்க மாட்டேன்....நிஜத்தைச் சொல்லுங்க !! யாருடா இந்த முனீஸ்காந்த் மாதிரியான முழியாங்கண்ணன் பார்ட்டின்னு தானே அன்னிக்கு உங்களுக்கு சிரிப்பு வந்திருக்கும் ?

   Delete
  2. நானும் இப வாங்க போகயில ஆசிரியரின் நேரத்த விழுங்கிடுவேனோன்னும். பேசுவாரோன்னும் பயந்து பின் வாங்கிட்டேன்

   Delete
 60. /// இந்தக் கதையை மட்டும் ஒரு one shot சிங்கிள் ஆல்பமாய் மறுபதிப்பிட்டால் தேறுமா ? ///

  வேண்டாம் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete

 61. NBS..!

  NBS வெளியான சமயம், ஒவ்வொரு காமிக்ஸையும் அப்போதைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து தனித்தனியே வாங்கிப் படித்த காலமது.400 விலையில் மிகப் பிரம்மாண்டமாக NBS வெளியான போது, பட்ஜெட் கையைக் கடிக்க மிஸ் செய்துவிட்டேன்.மிகக் குறுகிய காலத்தில் கைவசம் உள்ள பிரதிகள் விரைவிலே காலியாகிட கையை பிசைந்து நின்றேன்.ஒரு வரலாற்று இதழை வாங்கிடாமல், வரலாற்றுப் பிழை செய்தது நிச்சயமாக நெஞ்சை உறுத்தியது.ஆனால் வரலாற்றை மீண்டும் மாற்ற இயலாதே.

  ஏற்கனவே லார்கோ மேல் லைட்டா கடுப்பிலிருந்ததால், 'போனால் போகட்டும் போடா 'னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.ஆனால் கூடவே டைகர் இருக்காக..!ஷெல்டன் இருக்காக..இரும்புக்கை மாயாவி இருக்காக...மற்றும் மனதுக்கினிய மாடஸ்டி இருக்காக..! என்ற எண்ணம் மனதை வதைக்கவே செய்தது. அதுமட்டுமல்ல ஆக்ஷன் ஸ்பெஷல், லார்கோ மீதான கடுப்பை ஈர்ப்பாக மாற்றிட, 'ஓ 'வென அழாதகுறைதான்.தருமி கணக்காக புலம்பாதது ஒன்றுதான் பாக்கி.

  2016 என்று நினைக்கிறேன்.ஆசிரியர் சர்ப்ரைஸா கான்க்ரீட் கானகத்தை ஈ.பு.வி ல் வெளியிட, வானத்து தேவர்கள் ஆசிரியர் மேல் பூமழை பொழிவதுபோலே கிராபிக்ஸ் கற்பனை செய்தேன். ரெம்பவே உற்சாமானேன்.ஆனாலும் NBS மீதான மனவருத்தம் தொடரவே செய்தது.

  ஒருமுறை தளத்தில் NBS ஐ நிதி நெருக்கடியில் மிஸ் செய்ததைக் குறிப்பிட்டேன்.அதைக் கருத்தில்,, கொண்டார் ஒரு இனிய நண்பர். வெறுமனே அதைக் கடந்து போகாமல்,தன் ஞாபக செல்களில் அழுத்தமாக பதிய வைத்து, சிரமேற்கொண்டு, காமிக்ஸ் விற்பனைக் குழுவில் கொள்முதல் செய்து 2019ஈ.பு.வில் ஆசிரியர் திருக்கரங்களால் அதை எனக்கு வழங்கி அழகு பார்த்தார்.மிகவும் சிலிர்த்துப் போனேன்.NBS எத்தனையோ பேர் தவறவிட்ட அற்புதக் கனவு.அந்தக் கனவை என் கண்முன்னே நிகழ்த்திக் காட்டி திக்குமுக்காட வைத்துவிட்டார்.

  அவர்,

  திரு மகேந்திரன் பரமசிவம் அவர்கள். அவர் கடல் கடந்து வசித்தாலும் தாய்மண்ணையும் தமிழ் காமிக்ஸையும் மறக்காத மனம் கொண்டவர்.நண்பர்கள் மீது ஏகப்பட்ட பிரியம் கொண்டவர். தன் அன்பு உள்ளத்தில் எனக்கும் இடமளித்ததை எண்ணி உவகை கொள்கிறேன்.
  நீண்ட நாட்களாக இதைப் பதிவிடவேண்டும் என நினைத்திருந்தேன்.ஆசிரியர் இன்றைக்கு வாகான தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.இதற்காக ஆசிரியருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

  M P சார்..!நன்றி...!ஏகப்பட்ட நன்றி.!
  (உரக்கக் கூறுகிறேன்.)

  NBS ஐ மனைவியிடம்,வாரிசுகளிடம், அம்மாவிடம், உடன்பிறந்தோரிடம் காட்டி பெருமைப்பட்டது நெகிழ்ச்சியான நிகழ்வு.

  NBS முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நண்பர்களைக் கடவுள் காட்டிய தருணம்..!

  இதெல்லாம் என் வரலாறில் கண்டிப்பாக வரும்..!

  ReplyDelete
  Replies
  1. Good to hear about your nbs story. Very nice.

   Delete
  2. அட்டகாசம் GP ஷெரீஃப் ஜி உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்.

   Delete
  3. மகி ஜி காமிக்ஸ் நண்பர்களுக்காக எதையும் செய்யும் நல்ல மனம் கொண்டவர் வாழ்க அவரின் காமிக்ஸ் காதல்

   Delete
  4. //NBS ஐ மனைவியிடம்,வாரிசுகளிடம், அம்மாவிடம், உடன்பிறந்தோரிடம் காட்டி பெருமைப்பட்டது நெகிழ்ச்சியான நிகழ்வு.//

   Awesome !!

   Delete
 62. GP sir.NBS உங்களை பொறுத்தமட்டில் Never Before Surprise. Hats off M.P.sir.

  ReplyDelete
 63. Sir

  நீங்க தமிழ் Quora.com லே எழுத வரலாமே. தமிழ் காமிக்ஸ் பற்றிய நிகழ்வுகளை பகிர சிறந்த ஒரு இணைய தளம் ஆகும்.

  ReplyDelete
 64. இதழில் இடம்பிடித்த கதைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் தனி இதழாய் மறுபதிப்பிடுவதாயின் எதைத் தேர்வு செய்வீர்களோ ?
  Already Concrete Kaanagam Newyork was reprinted sir. My choice is modesty blaise(kodesty story). And I like this book very very much much . I used to hold it more than I read it. It was really that satisfying one.
  . Really unforgettable book sir.

  ReplyDelete
 65. சார் 1990 இருந்து சந்தா கட்டி காமிக்ஸ் படித்து வருகிறேன் இடையில் காதல் அது இதுன்னு பெண்னுங்க பின்னால் சுத்தி காமிக்ஸ் மறந்து போச்சு பிறகு அதை விட்டு வெளியே வந்த போது காமிக்ஸ் மிது திரும்பவும் காதல் வந்தது உடன் சிவகாசிக்கு வந்தால் அங்க பழைய புக்ஸ் தான் இருந்தது புது புக்ஸ் வெளியிடவில்லை உடனே ஒயின் சாப் பெய்யி ஒரு ஆப் எடுத்து அடிச்சுட்டு ஊருக்கு வந்துட்டேன் பிறகு ஒரு நாள் டெக்ஸ் வில்லரின் தலை வாங்கிக்குரங்கு வந்து சந்தோஷம் கன்டேன் எனக்கு இப்போது வாழ்க்கை யில் ஒரு பிடித்தம் என்பதே நம்ம காமிக்ஸ் தான்

  ReplyDelete
 66. இரத்தப்படலம் கடைகளில் கிடைக்காது என அறிந்து சிவகாசிக்கு ஜாலியா பஸ் ஏறி நம்ம ஆஃபீஸ் போய் அண்ணாச்சிய முதல்ல பாத்தது ..ரெண்டு புத்தகத்த வாங்கி...அடத்து வர உள்ள 25 விலை வண்ண இதழ்கள வியப்பா கேட்டு ...ஒட்டுக்கா ஆறு இதழும் பத்து விலைல வரும் 600சந்தா முதன்முறயா கட்டி நிம்மதியா பஸ் ஏறி அமர்ந்தேன்....பின்னர் கம் பேக் இதழ் குறித்து அறிந்தது...முதல் வலை பதிவு எல்லாம் செந்தூர் முருகன் அருளால் தொடர அற்புதம்...அட பிரின்ஸ் தலை முடி கூட வண்ணத்ல வந்தது அட்டகாசம்...அருமையான உணர்வுகள் கலந்த பொற்காலம் மீண்ட தருணம்

  ReplyDelete
 67. அடுத்து லார்கோ ...இந்த கேள்வி தங்களுக்கே வியப்பால்ல...ஆனா அக்கடான்னு இருந்த லார்கோ விளம்பரம் பாத்து இவன்லா ்்்...ஸ்பைடர் ஆர்ச்சி ,,பதிமூன்று மாயாவி டெக்ஸ் டைகர் லாரன்ஸ் மாயாவிய நினச்சி பெருமூச்...ஆனா அடுத்த மாதம் என வண்ணந்ல காட்டிய முதல் பக்க ஓவியம் , வண்ணம் மிரளச் செய்ய அக்கடான்னு அமாவாசயா இருந்த லார்கோ நாகராஜ சோழனா நிமிர ்்்புத்தகம் கிடைத்து இரண்டு பக்க புரட்டல்லயே சந்தோசமும் பரபரப்பும் பற்றிக் கொள்ள ...கதய முடிக்கயில ஸ்பைடர் ஆர்ச்சிலாம் பத்தடி அப்டியே தள்ளி தானா நிக்க ...நம்ம லயன முன்னணிக்கு கொண்டு வர சரியான ஆள்னு சந்தோசம் தானாய் வந்து அமர ஒரு நிலையில் நானில்லை...நானாக நானில்லை...வாழ்வின் அற்புத தருணம் கூட...சத்தியம்

  ReplyDelete
 68. நம்ம எமனின் திசை மேற்கு ஓவியமும் கதயும் முடிவும் பட்டய கிளப்பிய இதழ்...அதுவும் வான் ஹாம்மே ஏனும் போது கூடுதல் பெருமை....இத மறுபதிப்பா விட்டா இன்னொரு கத வருவத தடுக்கும்னு நம்ம ரமேச மாதிரி கோவம் வந்தாலும் ...படிக்காத நண்பர்களுக்காக இத மறு இதழா கணக்கில் கொள்ளாம ஆசிரியர் இணைதடத்ல புது இதழ இது கூட விடனும்...பிற நட்பர்கள் இதால ஓரிதழின் இடம் தடுக்கப் படலன்னு தினைப்பத தடுக்காம புது இதழ்னு சந்தோசம் கூடுமே...அதூ ஸ்பைடர்னா எகிரும்ல

  ReplyDelete
 69. Nbsன்னாலே நம்ம ஷெல்டன்தா நினைவுக்கு வர்றார்...கருப்பு மாடஸ்டிக்கு பதிலா...அத விட மும்மடங்கு பக்க எண்ணிக்கைல வண்ணத்ல..விலய ஓரணா கூட உயர்த்தாம ... உங்கள தாக்கிய நபர்களும் வெருண்டோட வச்ச...வாயடைக்க வச்ச ...அந்த கதை டாப் ...மறுபதிப்பா விட்டா அதற்கிணையா பல நண்பர.கள் கேட்ட மெபிஸ்டோ...பெருசா தெரிஞ்சா இருவண்ண கொலைப்படையும் மர்மத்தீவும்

  ReplyDelete
 70. க்ரீன்மேனர் முதல் கத பரவால்ல...இரண்டாவது புத்தகம் தாண்ட முடில...இன்னோர் தூங்கிப் போன டைம் பாமோ...வாய்ப்பு கெடச்சா படிக்க முடிதான்னு பாக்கிறேன்

  ReplyDelete
 71. க்ரீன்மேனர் முதல் புத்தகத்தில் முதல் இரண்டு கதைகளை வேகமாக படித்த போது என்ன கதை இதுவென முதலில் தோன்றியது. அந்த வார இறுதியில் முழு புத்தகத்தையும் நிதானமாக படிக்க ஆரம்பித்த போது அட இந்த பணக்கார நபர்கள் தங்களுக்கு பொழுது போகவில்லை என அப்பாவி மக்களை எப்படி ஆட்டிபடைக்கிறார்கள் என்று அதிர்ந்தேன். ஓவ்வொரு கதையும் வித்தியாசமாக இருந்தது மட்டும் இன்றி மனதையும் அடிவயிற்றையும் கலங்கியது. மிகவும் ரசித்தேன். நேரம் கிடைக்கும் போது மறுவாசிப்பு செய்ய விரும்பும் இதழ் இது.

  ReplyDelete
 72. இருவே இருளே கொல்லாதே - அரைகுறையாக புரிந்து படித்த கதை என்றாலும் முடிக்கும் போது மனதில் ஏதோவொரு பயம் தொற்றிக் கொண்டது.

  இந்த கதை வந்தது தீபாவளி நேரம் என நினைக்கிறேன், பல நண்பர்கள் இது போன்ற சந்தோஷமான நாட்களில் இது போன்ற கதைகளை வெளியீட வேண்டாம் என கோரிக்கை வைத்தனர் என நினைக்கிறேன்.

  அடுத்த இரண்டு தினங்களில் இதனை மறுவாசிப்பு செய்ய போகிறேன்.

  ReplyDelete
 73. ///முதல் வாசிப்பினில் க்ரீ .மே லயித்ததா ? கிறுகிறுத்ததா ? நிஜம் ப்ளீஸ்///

  இன்னும் வாசிக்கவில்லை என்பதுதான் நிஜம்..!😔😔😔😔

  ReplyDelete
 74. என் பெயர் லார்கோ அட்டைப்படத்தை பார்த்த போது என்னடா ஒருத்தன் கேனை பயல் மாதிரி உட்கார்ந்து இருக்கிறான்.. இவனை வைத்து என்ன கதை சொல்ல போகிறார்கள் என பக்கத்தை புரட்டினால் பிஸினஸ் ப்ளஸ் ஆக்சன் என கலக்கி மனதில் இடம் பிடித்து விட்டார் லார்கோ.

  ஆனால் பின்னாட்களில் ஒரே டெம்ப்ளேடில் வந்த கதை இந்த கதை தொடர் சில கதைகளில் மிகவும் போரடித்து. அதுவும் இவரின் கடைசி கதை மிடியல ரகத்தின் உட்சம்.

  ReplyDelete
  Replies
  1. //இவரின் கடைசி கதை மிடியல ரகத்தின் உட்சம்.//

   அதுக்கு அடுத்ததை நீங்க இன்னும் பாக்கலியே...!!!

   Delete
 75. நிலவொளியில் நரபலி..!

  பாக்கெட்டுக்கு அடக்கமான சைஸ்.!
  பாக்கெட்டுக்கு அடங்கிய விலை..!

  அதுமட்டுமில்லாம முதன்முதலாக வண்ணத்தில் வந்த டெக்ஸ் கதை என்ற வசீகரம்.

  அதையும் தாண்டி முதல் பக்கத்தில் எடுக்கும் வேகம், மூச்சிரைக்க இறுதிவரை பாய்ந்த கதையோட்டம்..!

  ReplyDelete
  Replies
  1. // முதல் பக்கத்தில் எடுக்கும் வேகம், மூச்சிரைக்க இறுதிவரை பாய்ந்த கதையோட்டம்..! //

   +1

   Delete
  2. செம்ம GP இன்று சரியான ஃபார்ம் இல் இருக்கிறீர்.

   Delete
  3. //முதல் பக்கத்தில் எடுக்கும் வேகம், மூச்சிரைக்க இறுதிவரை பாய்ந்த கதையோட்டம்..!//

   Oh yes !!

   Delete
 76. LMS RS.500 என அறிவிச்சாச்சு...ஒரேபுக்...புக்கு வர்ர நேரத்துல ₹.550 ன்னு சொன்னார்..இரண்டு புக்குன்னுவேற சொல்றார் ஆசிரியர் என்னடா இது ஏதோ கில்மா வேல பண்றார் தலைவரு... ஈரோட்ல நேர்ல போயி நல்லா நறுக்குன்னு கேக்கனும்னு ஒரு பிரிபரேசனோட போனாக்க அங்க பிரிச்சாரு வெடிகுண்டு பார்சல அடகொக்கமக்கா கெட்டி ஹார்டுபவுண்டு..தலைப்பு மின்னுது...கண்ணபறிக்குது...சொக்கா..நல்லவேல ஏதும் எக்குதப்பா கேட்டுவெக்கல...கதைகளும் அட்டகாசத்தேர்வுகள்..புக் 2 டைகர பாத்தா நம்ம தல XIII சாயல் தலய அப்பவே கலர்ல பாத்தமாதிரி ஒரு சந்தோசம்....எடி எப்பவும் மாஸ்தான்...தொடரும்...அடுத்து...
  மின்னும் மரணம்

  ReplyDelete
 77. நிலவொளியில் நரபலி....

  உங்க கையால போட்ட கையெழுத்துடன்....

  பெங்களூரு காமிக் கான் இல்....வாங்கியதும்....பசுமை மாறா நினைவுகள்....

  ReplyDelete
 78. விண்வெளி பிசாசு பிலீஸ்.....

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் அந்த முதலை வாய் பிசாசு...விந்தை வாகனத்தில் பறந்துச்சு.....ஸ்பைடர்.... துப்பாக்கி குண்டை...பின்னோக்கி..இழுத்தாறு......அப்புறம் என்ன ஆச்சு காமிக் ஆசான்......


   Delete
  2. தெலுங்கு திரையினில் ரகளை செய்யும் ஒரு சூப்பர் ஸ்டாரை (!!) அவ்வப்போது Youtube -ல் போட்டு நம்மாட்கள் வாருவதைப் பார்த்தேன் சமீபமாய் ! கிட்டத்தட்ட நம்ம ஸ்பைடர் 'விண்வெளிப் பிசாசில்' செய்த லூட்டிகள் அத்தனையையும் அவர் செய்தது போலிருந்தது ! So நம்ம வலைமன்னாரைப் பார்க்க தோணும் பட்சம் அக்கட பூமிப் படம் பாத்துட்டா வேலை ஆகிடும் மந்திரியாரே !

   Delete
 79. மொபைலிலிருந்து...


  கல்யாணமாகி ரெண்டு குழந்தையும் ஆனபின்னே ஹனிமூன் போன கதைதான்..

  லார்கோ(என்பெயர் லார்கோ),க்ரீன் மேனர்,எமனின் திசை மேற்கு போன்றவற்றை வாசித்தது...

  NBS மொத்தமாக என்றால் கொஞ்சம் வித்தியாசம்..
  கல்யாணமாகி ரெண்டு குழந்தையும் ஆனபின்னே small house -உடன் ஹனிமூன் போனமாதிரி இருந்துச்சு...

  NBS கிடைத்தவிதம்,கிடைத்த நேரம்,வாசிப்பு அனுபவம் அப்படி...(உதாரணம் சொன்னதை எல்லாம் வச்சு குடும்பத்துல கும்மி அடிக்க வச்சிடப்படாது ஈவி..இப்பவே சொல்லிப்புட்டேன்..)

  ReplyDelete
  Replies
  1. எமனின் திசை மேற்கு..மறுபதிப்பு?

   வான ஹாமே சுட்ட வடையாய் இருப்பினும் காலையில் சுட்டது அன்று இரவில் ருசிக்காது...காஜா பையன் உபயோகிக்கும் அளவு நூல் வரும்..

   Delete
  2. //NBS இதழில் இடம்பிடித்த கதைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் தனி இதழாய் மறுபதிப்பிடுவதாயின் எதைத் தேர்வு செய்வீர்களோ ?//

   பல மரங்கள் அடங்கிய தோப்பு..

   நிழல் தரும் ஆலமரம் பழம் மனிதர் உண்ண பழம் தராது..

   பழம் தரும் வாழை நிழல் தராது..

   கையெட்டும் தூரத்தில் கனி தரும் பலாமரம்..

   கைக்கெட்டா உயரத்தில் இளநீர் தரும் தென்னை..

   NBS..பல மர தோப்பு...அதில் உயர்வாய் எதைக் கூற?

   ஷெல்டனின் தோழியின் பெயரை மனதில் வைத்து பதில் சொன்னால்..பிக் நோ!?

   Delete
  3. //நிலவொளியில் நரபலி" இந்த இதழின் அதகள வரவேற்புக்கு காரணம் அந்த சைஸ் தானா ? அல்லது வேறேதேனுமா ? இந்த இதழில் அப்படியென்ன ஸ்பெஷல் //

   அம்மாவின் சர்க்கரை பொங்கல் எதனால் உசத்தி?

   பாகின் பக்குவத்தாலா?

   அளவு தெரிந்து விட்ட நெய்யாலா?

   முந்திரி வறுத்திட்ட விதமா)?

   அரிசி குழைந்திட்ட விதமா?

   எல்லாம் சேர்ந்ததாலா?

   Delete
  4. //6."தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இதனை மறுவாசிப்புக்கு உட்படுத்திட முடிந்துள்ளதா guys ?//

   கண்ணை கூச வைக்கும் சௌந்தர்யத்துடன் கூடிய பெண்ணேயேயாயினும் நம்மை கடந்தவுடன் திரும்பி பார்க்க எல்லா சமயத்திலும் கூடுவதில்லை..

   Delete
  5. //LMS பிடாரியாய்க் கனத்த இந்த இதழைக் கையில் ஏந்திய அந்தத் தருணங்கள் நினைவில் உள்ளனவா guys//

   எல்லா ஓட்டையும் நீங்களே போட்டுக்குங்கன்னு வாக்கு பெட்டி கொடுக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் மனநிலைன்னு வச்சுக்குங்களேன்..

   Delete
  6. /முதல் வாசிப்பில் பவுன்சர் உங்களை மிரளச் செய்தாரா ? /

   Sean abbott 25.11.2014 லில் Philip Hughes - க்கு போட்ட அதே பவுன்சர் மாதிரி அதே ஃபீலிங்..

   டெட்லி..

   Delete
  7. //எல்லா ஓட்டையும் நீங்களே போட்டுக்குங்கன்னு வாக்கு பெட்டி கொடுக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் மனநிலை//

   சீக்கிரமே இப்படிக்கூட நடந்து வைக்குமோ ?

   Delete
 80. இங்கே எனது கேள்வி : இந்த இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும்
  கம்பேக் ஸ்பெஷல் வந்தது தெரியாமல் மடையனாக இருந்தேன் என் நண்பன் ஒருவனால் கேள்விப்பட்டு லயன் ஆபிஸுக்கு போன் போட்டு விசாரிக்கும்போது அப்போது தயாராகி கொண்டிருந்த இதழ் எமனின் திசை மேற்கு உடனே சந்தாவில் இனைந்தேன் கம்பேக் கையில் ஏந்தும் போது திகைப்பே எழுந்தது உலகத்தரமானதொரு மேக்கிங்காக இருந்தது கதைகளும் பிரமாதம்

  ReplyDelete
 81. இன்று கொஞ்சம் ரிலாக்ஸாக நேரம் கிடைத்ததால் பொறுமையாக பதில் எழுதுகிறேன்...

  கே 1: கம்பேக் ஸ்பெஷலை வாசிக்க சாத்தியப்பட்ட அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன். அப்போது முழுநேர சென்னைவாசியாக இருந்த நான், பூந்தமல்லி சாலையில் பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே இருந்த பள்ளி வளாகத்தில் நடந்த சென்னை புத்தகத்திருவிழாவில் இந்த புத்தகத்ததை வாங்கியதாக நினைவு. அன்றைய தினம் எதார்த்தமாக புத்தகத் திருவிழாவிற்கு வர, நேரத்தை கழிக்கும் பொருட்டாக சுற்றத் தொடங்கினேன். திடீரென்று பார்த்தால் நம்ம கடை.
  அப்போது வாங்கிய கம்பேக் ஸ்பெஷலில் வெகுகாலத்திற்குப் பின்னர் மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது இரும்புக்கை மாயாவியின் 2 சாகஸங்களே - டாக்டர் மாக்னோ மற்றும் கண்ணாமூச்சி ரே... ரே...அதே புத்தகத்தில் வந்த கேப்டன் பிரின்ஸ், பிலிப் காரிகன் மற்றும் லக்கி லூக்கின் கதைகளையும் கண்டு மிகப்பெரிய சந்தோஷம் எனக்கு...
  ஒட்டுமொத்தமாக கம்பேக் ஸ்பெஷல் சொன்ன செய்தி “வந்துட்டேன்னு சொல்லு. எப்டி போனேனோ அதே மாதிரி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்பதே... அதுவும் 2012-லேயே…

  கே2 : லார்கோ... தாத்தா பாட்டி காலத்திய ஹீரோக்களுடன், ப்ளூ ஜீன்ஸ் பில்லியனரையும் களமிறக்கியது சரவெடியன்றி வேறில்லை. ஒரு நவீன யுக ஹைடெக், நடைமுறை கதையை இப்போதைய தலைமுறையில் நடக்கும் விஷயங்களை ஜெட் வேகத்தில் சொல்லிய லார்கோவை ரசிக்க முடிந்ததா என்று கேள்வி கேட்பது தவறு சார்... லார்கோ இன்னமும் வேண்டும் என்பதே அப்போதும், இப்போதும்.

  கே 3: எமனின் திசை மேற்கு கதையை ஒன்றிரண்டு முறை படித்திருக்கிறேன். உணர்ச்சி பிரவாகம் மிக்க கதை. மறுபதிப்பு செய்வது உங்கள் விருப்பம்.

  கே 4: NBS-ல் வந்த கேப்டன் டைகரின் “இருளில் ஒரு இரும்புக் குதிரை” அல்லது வாய்ன் ஷெல்டனின் “ஒரு பயணத்தின் கதை & துரோகத்தின் கதை”யை மறுபதிப்பு செய்யலாம்.

  கே 5: கிரீன் மேனர் கதைகள் எங்களுடைய (என்னுடைய) இரசனைகளை வெறொரு லெவலுக்கு எடுத்துச் செல்ல உதவிய கதை என்றால் மிகையல்ல. இரும்புக்கை மாயவி, ஸ்பைடர் போன்ற காதுல பூ ஹீரோக்களை ஆராதித்து, லார்கோ, ஷெல்டன் போன்ற நவீன ஆக்ஷன் மேளாவையும் இரசித்து வந்த நேரத்தில் திடுமென்று பிரசன்னம் செய்து கார்ட்டூன் பாணியில் வந்தாலும் நானொரு டெர்ரர் என்று மனித மனங்களின் குரூர பக்கங்களின் ரியாலிட்டியை காட்டியது கிரீன் மேனர். லயித்தது.... லயித்தது... ஜெயித்தது.

  கே 6: நிலவொளியில் நரபலி கதையை நீங்கள் வெளியிடும் முன்பே ஆங்கிலத்தில் படித்து விட்டு, இதையெல்லாம் ஏன் போட மாட்டேன்கிறார்கள் என்று எண்ணிய “ஒரே வாரத்திற்குப் பின்னர்” நடந்த, பெங்களூரு Comic Con-ல் சர்ப்ரைஸ் ரீலீஸ் என்று தகவல் கிடைக்க... அங்கே ஒரு அடடே... அப்ளாஸ் சார். புத்தகம் எந்த வடிவில் இருந்தாலும் டெக்ஸ் வில்லர் பட்டாசு கிளப்பினால் விற்று விடும் என்பதே அந்த புத்தகத்தின் மவுசுக்கு முதல் காரணம். இரண்டாவதாக சொல்ல நினைப்பது கையடக்கமான ரூ.50 என்ற விலையை சொல்வேன்... கலர் புக்கு, சின்ன சைஸு, ஐம்பது ரூவா... இது ஒரு பொதுஜன டெம்ப்ளேட் சார்...

  கே 7: நயாகராவில் மாயாவி - நானும் முதல்முறையாக படித்து இரசித்த கதை இது.

  கே 8 : LMS புதியதொரு முயற்சியை அட்டகாசமான கதைகளுடன் செய்ததும், குண்டு புக் மோகம் தலைக்கேற வைத்ததும் இந்த புத்தகமே எனக்கு. கூடவே வந்த தளபதியின் LMS 2ம் அட்டகாசம்...சுகமான சுமைகள்!

  கே 9: இந்த கதை வந்த புதிதில் சில பல முறைகள் மறுவாசிப்புகள் செய்துள்ளேன். அதுவும் இரண்டு மதங்களை இணைககும் ரோஸாபெல் கல்லறை பற்றி இணையத்திலும் போய் தேடுதல்களை நிகழ்த்தியுள்ளேன். என்னுடைய நண்பர்கள் சிலரிடம் இப்படியொரு இடம் காஷ்மீரில் இருக்கிறது தெரியுமா என்றும கேட்டதாக நினைவு... நான் அடிக்கடி எடுத்து படிக்கக் கூடிய புத்தகங்களில், கேப்டன் டைகருக்கு அடுத்தபடியாக தேவ இரகசியமே...

  கே 10: பௌன்சரின் முதல் புக், முதல் பக்கத்திலிருந்தே மிரளச் செய்ததை மறுக்க மாட்டேன்.. ஆனலும், துரத்தும் தலைவிதி என்ற லார்கோவின் சாகஸத்தில் லார்ஸனின் தலையை தட்டில் விருந்துக்கு கொண்டு வருவதைக் கண்டு உண்மையிலேயே மிரண்டேன் என்பது நிஜம்.

  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அழகான, நிதானமான பார்வைகள் சார் !

   Delete
  2. ///கலர் புக்கு, சின்ன சைஸு, ஐம்பது ரூவா... இது ஒரு பொதுஜன டெம்ப்ளேட் சார்...///

   +111

   Delete
 82. (இங்கே எனது கேள்வி : மெய்யாலுமே முதல்வாட்டி படித்த போது லார்கோவை ரசிக்க முடிந்ததா ? என்ன மாதிரியான கதைடா சாமி ? என்ற திகட்டல் தோன்றவில்லையா ?) இரத்தப்படலம் புத்தகத்தில் விளம்பரமாக இருந்த
  லார்கோ உட்கார்ந்திருந்த ஸ்டைலும் முகமும் என்னை கவரவில்லை ஆனால் இதழ் கையில் கிடைத்தவுன் என் என்னம் எவ்வளவு தவறென்று தெரிந்தது என்னா ஸ்டைலிஷான ஹீரோ கண்ணை பறிக்கும் கலரிங் அழுத்தமான கதையென்று பிச்சு உதறியிருந்தார் லார்கோ
  அறிமுக படலத்திலேயே மனதை கவர்ந்த ஹீரோக்கள் டெக்ஸ் XIII இவர்களுக்கு பிறகு லார்கோவே இந்த இடத்தை பிடித்தார்

  ReplyDelete
 83. (இங்கு எனது கேள்வி : இந்தக் கதையை மட்டும் ஒரு one shot சிங்கிள் ஆல்பமாய் மறுபதிப்பிட்டால் தேறுமா ? )
  அருமையான கதை கிளைமேக்ஸ் மனதை பிசையும் ஆனால் இப்போது மறுபதிப்பு வேண்டாம் சார் காலம் கனியட்டும் இந்த கனியை புசிப்பதற்க்கு

  ReplyDelete
 84. ((இங்கு எனது கேள்வி : இந்தக் கதையை மட்டும் ஒரு one shot சிங்கிள் ஆல்பமாய் மறுபதிப்பிட்டால் தேறுமா ?))
  ஷெல்டனை முயற்ச்சிக்கலாம் ஆனால் இப்போது வேண்டாம் சார்

  ReplyDelete
 85. நிலவொளியில் நரபலி"இந்த இதழின் அதகள வரவேற்புக்கு காரணம் அந்த சைஸ் தானா ? அல்லது வேறேதேனுமா ? இந்த இதழில் அப்படியென்ன ஸ்பெஷல் ?
  முதன் முதலாக சூப்பர் 6 ல் வந்த கதை முதன் முதலாக டெக்ஸ் வில்லரின் கலரில் வந்த கதை சைசும் அருமை விலையும் குறைவு கதையும் சூப்பர் கிளைமேக்ஸில் டெக்ஸ் கார்சன் கிட் டைகர் என அனைவருமே ஆளுக்கொரு பக்கம் அட்டாக்கை ஆரம்பித்து பட்டையை கிளப்புவது திரைப்படம் போலிருந்தது இன்றுவரை புத்தக திருவிழாவில் சக்கை போடு போடும் இதழ்

  ReplyDelete
 86. LMS பிடாரியாய்க் கனத்த இந்த இதழைக் கையில் ஏந்திய அந்தத் தருணங்கள்
  நினைவில் உள்ளனவா guys ? கூரியர் டப்பிகளுக்குள் இவற்றை அடைத்த நாட்கள் இன்னமும் எனக்குப் பளிச் ஞாபகத்தில் நிற்கின்றன !
  பட்டையை கிளப்பியது ஹார்ட்பவுண்ட் அட்டை அதில் வாம்பம் பட்டையுடன் டெக்ஸ் பிரமாதம் கதைகளின் தேர்வும் பிரமாதம் சட்டம் அறிந்திரா சமவெளி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் டெக்ஸ் ரசிகர்களுக்கு நல்ல தீனீ போட்டது பெரிய ஆச்சர்யம் கிராபிக் நாவலான இறந்தகாலம் இறப்பதில்லை செம்மையாக இருந்தது மார்டினும் நியூட்டனின் புதுஉலகம் போலல்லாமல் நல்ல கதை உண்மையிலியே பிரமாதப்படுத்திய இதழ்

  ReplyDelete
 87. தேவ ரகசியம் தேடலக்கல்ல இதனை மறுவாசிப்புக்கு உட்படுத்திட முடிந்துள்ளதா guys ? முதல்முறை படிக்கும்போது திருப்தி தந்த இதழ் ஒவியங்களும் வித்தியாசமாக இருக்கும் ஆனால் மறுவாசிப்பு செய்திட முடிய்வில்லை மன்னிக்க ஆசிரியரே

  ReplyDelete
  Replies
  1. பிடித்ததைத் தானே ரசிக்க முடியும் சத்யா ? இதில் நான் வருத்தம் கொள்ள என்ன இருக்கிறது ?!

   Delete
 88. ((ரௌத்திரம் பழகு முதல் வாசிப்பில் பவுன்சர் உங்களை மிரளச் செய்தாரா ? இல்லாங்காட்டி just like that வாசித்து முடித்தீர்களா ?))
  பவுன்சர் மிரள வைத்தது உண்மை அழுத்தமான கதைக்களம் காமிக்ஸ்களில் கான முடியாத வேற முகங்கள் என பவுன்சர் மிரள வைத்தாலும் மனதில் ஒட்டிக்கொண்டார் அதுவும் கருப்பு விதவை செமையான கதை இவரின் மீதி சாகசங்களையும் காண ஆசை

  ReplyDelete
 89. (( முதல் வாசிப்பினில் க்ரீ .மே லயித்ததா ? கிறுகிறுத்ததா ? நிஜம் ப்ளீஸ் folks ?)) கிறுகிறுத்தது என்பதே உண்மை பின்னர் கவர்ந்து வேறு கதை

  ReplyDelete
 90. "மெய்யாலுமே முதல்வாட்டி படித்த போது லார்கோவை ரசிக்க முடிந்ததா ? என்ன மாதிரியான கதைடா சாமி ? என்ற திகட்டல் தோன்றவில்லையா ?"

  Largo is one of the books that I like from the first page.
  Among all the books in lion, LARGO occupies the first slot for me. Before Thorgal, Durango, Tex, Undertaker, etc. Largo comes first.

  It is a detective story, action story, and a lesson in economics all combined into one. Add simon to provide some masala and it is the perfect combination for a super thriller movie/story.

  ReplyDelete
 91. //It is a detective story, action story, and a lesson in economics all combined into one//

  Very true !!

  ReplyDelete
 92. Kindly reprint Muthu comics' *vedalan* kathaikal.. Quite interesting.. Expecting your reply sir...

  ReplyDelete
  Replies
  1. A topic thrashed umpteen times here on our blog sir...

   Delete
 93. மருத்துவமனை...

  மனைவி: ரொம்ப படபடப்பா இருக்குன்னு சொல்றாரு டாக்டர்!

  மருத்துவர்:( அசுவாரஸ்யமாய்) அப்புறம்..?

  மனைவி: நேத்திலர்ந்து சரியா சாப்பிட மாட்டேங்கறாரு..


  மருத்துவர்: ( நிதானமாக) வேற??

  மனைவி: நேத்திலேர்ந்து சரியா தூங்க மாட்டேங்கறாரு..

  மருத்துவர்: ( லேசாக கொட்டாவி விட்டு) இன்னும் ஏதாவது???

  மனைவி:(கோபத்துடன்) நான் இவ்வளவு சொல்றேன்..நீங்க ஏனோதானோன்னு பதில் கேள்வி கேக்கறீங்க..இவரு உங்க கிட்டதானே பதினைஞ்சு வருஷமா உடம்பை காமிச்சுகிட்டு இருக்காரு?..இப்படி அக்கறை இல்லாம பேசறீங்களே??

  மருத்துவர்: பதினைஞ்சு வருஷமா இவரை பாக்கறதாலதான் சொல்றேன்..நாளைக்கு பத்துமணிக்கு எல்லாம் சரியா போயிடும்.

  மனைவி: ( கோபத்தை தற்காலிகமாக மறந்து)
  என்ன டாக்டர்? மருந்து கொடுக்காமலே ஜோஸியக்காரன் மாதிரி சொல்றீங்க?

  மருத்துவர்: ஜோஸியமெல்லாம் ஒண்ணுமில்லே..லயன் முத்து காமிக்ஸ் ஆறு வருஷமா கடையில வாங்கிகிட்டு இருந்தாரு உங்க வீட்டுக்காரர்..முதல் முதலா சந்தா கட்டியிருக்காரு..நாளைக்கு பத்துமணிக்கு கூரியர் வந்தவுடன் எல்லாம் சரியா போயிடும்..ஆறு வருஷம் முன்னாடி எனக்கும் இப்படித்தான் எல்லா ஸிம்ப்டம்ஸ்- ம் வந்துச்சு..!!!

  ReplyDelete
 94. Priyatels!

  எடிட்டரின் புதிய குறும்பதிவு ரெடி.!!

  ReplyDelete
 95. This comment has been removed by the author.

  ReplyDelete
 96. இந்த இதழ் உங்களுள் எத்தனை பேருக்கு வாசிக்கச் சாத்தியப்பட்டதோ ? And இந்த இதழ் வெளியான தருணம் சார்ந்த நினைவுகள் ஏதேனும் ?
  >> மன்னிக்கவும், நான் படிக்கவில்லை
  மெய்யாலுமே முதல்வாட்டி படித்த போது லார்கோவை ரசிக்க முடிந்ததா ? என்ன மாதிரியான கதைடா சாமி ? என்ற திகட்டல் தோன்றவில்லையா ?
  >> என் நண்பன் சாதிக் அமீன் படிக்க சொல்லி குடுத்தான். உண்மையில் எந்த வித திக்கட்டலும் இன்றி மிகவும் ரசிக்க முடிந்தது.
  இந்தக் கதையை மட்டும் ஒரு one shot சிங்கிள் ஆல்பமாய் மறுபதிப்பிட்டால் தேறுமா ?
  >> மன்னிக்கவும், அதே சாதிக் அமீன் தயவில் நான் ஏகப்பட்ட தரம் படித்துவிட்டேன்
  இந்த இதழில் இடம்பிடித்த கதைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் தனி இதழாய் மறுபதிப்பிடுவதாயின் எதைத் தேர்வு செய்வீர்களோ ?
  >> மன்னிக்கவும், நான் படிக்கவில்லை
  முதல் வாசிப்பினில் க்ரீ .மே லயித்ததா ? கிறுகிறுத்ததா ? நிஜம் ப்ளீஸ் folks ?
  >> மன்னிக்கவும், நான் படிக்கவில்லை
  "இந்த இதழின் அதகள வரவேற்புக்கு காரணம் அந்த சைஸ் தானா ? அல்லது வேறேதேனுமா ? இந்த இதழில் அப்படியென்ன ஸ்பெஷல் ?
  >> Size, Tex willer book in color, நர மாமிசம் சாப்பிடுவர் , கனடா , பாலைவனம் இல்லாத பணி மற்றும் எதோ ஏதோ
  இதனை மறுவாசிப்புக்கு உட்படுத்திட முடிந்துள்ளதா guys ?
  >> மன்னிக்கவும், நான் படிக்கவில்லை
  முதல் வாசிப்பில் பவுன்சர் உங்களை மிரளச் செய்தாரா ? இல்லாங்காட்டி just like that வாசித்து முடித்தீர்களா ?
  >> உண்மையில் பௌன்சர் மிரள / மிரட்ட செய்தார்

  ReplyDelete
 97. Comeback special moments is best to me. During jan 2012 accidentally I found our blog. Before Comeback special my correspondence is by only phone to your office. During that period I was so excited, during that period several times I get log in to blog to see updates. Big change in our steps Largo winch launch. Till date he is unforgettable hero.Bouncer & Undertaker introduction is stunning. It our first steps towards 18+ genre albums.

  ReplyDelete
 98. தாமதமாக பதிவிட்டாலும் அட்லீஸ்ட் பதிவிடுகிறேனே என சந்தோஷமே
  உங்கள் கேள்விக்கு பதில்கள்
  1. படிக்க சாத்தியப்படவில்லை
  2. முதல் முறை படித்த போது, "காமிக்சால் நம்மை இப்படியும் திகைக்க வைக்க முடியுமா" என உணர்ந்தேன். என் பெயர் லாரக்கோ அல்ல. அதற்கு அடுத்த லாரக்கோ இதழ்.
  3. please NO
  4. No
  5. கிறுகிறுப்பு, பின் லயித்தது, பின்னர் அடிமையாக்க வைத்தது.
  6. டப்பா கதை. இருந்தாலும் அட்டைப்படத்தாலோ என நினைக்கிறேன். Plus terror title effect
  7. ந மா - nostagia mattum.
  8. waited eagerly for LMS sir. at that time u named it based on icecream. we loved that issue
  9. read more than 10 times, superb story and colours. also அட்டைப்படம்
  10 . first issue was great

  ReplyDelete
 99. my top moments
  1. seeing editor in blog for the first time
  2. capn tiger மின்னும் மரணம் full book with shining hard cover
  3. XIII book full issue with book cases
  4. largo
  5. to bring smurfs நீங்கள் அடித்த லூட்டி
  6. fan fight over some dappa issue
  7. creating separate track for cartoons
  8. graphic novels entry
  9. attending book fairs
  10. online listing

  ReplyDelete