Powered By Blogger

Saturday, December 14, 2019

மாற்றம் இங்கே நிரந்தரம் !

நண்பர்களே,

வணக்கம். பத்தொன்பது வரலாறாகி, இருபது யதார்த்தமாகிட இருபதே நாட்களுக்கும் குறைவாயிருக்க - லைட்டாய் சோம்பல் முறித்துக் கொண்டிருந்த மாடுகளை வண்டியில் பூட்டி, இதோ பயணம் போகும் முஸ்தீபுகளைத் துவக்கியாச்சு ! அதுவும் ஆண்டின் முதல் மாதத்தினில் புதுசும், பழசுமாய்ச் சேர்ந்து 5 இதழ்கள் இடம்பிடித்து நிற்க - பணிகளுக்குப் பஞ்சமே லேது ! "மைதீன் ...அந்த ராப்பர் அச்சுக்குப் போயாச்சா ? மைதீன் ...இந்தப் பக்கங்களைக் கரெக்ஷன் போட்டுட்டாங்களா ?....மைதீன் ....அந்தக் கதையை ஸ்பைரல் பைண்டிங் போட்டுத் தரக் கேட்டிருந்தேனே.....மைதீன்...வால்போஸ்டருக்கு டிசைன் என்னாச்சு ? மைதீன்....அந்த லேமினேஷன் என்னாச்சு ?  !" என்று நமது ஆல்-இன்-ஆல் அழகுராஜாவின் குடலின் நீள-அகலங்களை நித்தமும் அலசி வருகிறேன் ! நமது DTP அணியுமே அநியாயத்துக்கு பிசி ! அட்டைப்பட வடிவமைப்பில் இப்போதெல்லாம் முழுநேரத்துக்கு மண்டையை நுழைத்தபடிக்கே - "ஆங்...இதை  சிகப்பாக்கு ; அதை பச்சையாக்கு ; ஆட்டைத் தூக்கிக் குட்டியோட போடு...குட்டியைத் தூக்கி ஆட்டோட போடு !" என்று சதா நேரமும் ஏதாவது யோசனை சொல்லியபடியே திரிய, என்னை நடுமூக்கில் ஓங்கிக் குத்தும் ஆவலை அடக்கியபடியே பெண்களும் பணியாற்றி வருகின்றனர் ! என்ன தான் ஜனவரியின் பணிகளெல்லாம் , டிசம்பரின் நார்மலான தொடர்ச்சியே என்றாலும், ஏதோ புதுசாய் ஒரு ஊரில் குடித்தனம் துவக்கிடுபவனைப் போல ஒரு பரபரப்பு உள்ளுக்குள் ! And இம்முறை கொஞ்சமாய் பதட்டமுமே ததும்புகிறது - simply becos 2019 ஒரு "தலைதப்பிய ஆண்டு" என்ற பெருமையை ஈட்டியிருக்கும் போது தொடரவிருக்கும் நாட்களானவை ஒரு மிடறேனும் உசத்தியாய் இருத்தல் அவசியமென்ற புரிதல் ! பற்றாக்குறைக்கு  ஆண்டினில் 12 இதழ்கள் தாங்கி வரவுள்ள சந்தா D (for Delightful Light Reading) சார்ந்த ஆவல் நம்மிடையே நிரம்பவே நிலவிடும் போது, அதற்கு இயன்ற நியாயம் செய்தாக வேண்டுமே என்ற ஆதங்கமுமே ! So இவ்வாரத்துப் பதிவின் பின்னணியே சந்தா D தான் ; and here she goes :

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு ஆசையுண்டு ! ஆண்டின் ஐம்பது+ இதழ்களைத் தேர்வு செய்து அறிவித்த கையோடு அவை சகலத்தையும் 'ஏக் தம்'மில் கொள்முதல் செய்து ; சரசரவென மொழிபெயர்க்க ஏற்பாடுகளைச் செய்து - கதைகளின் முழுமையையும் முன்கூட்டியே படித்துப் / பரிசீலித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் ? என்பதே அந்த அவா ! ஆனால் அதற்கு ரொம்பவே ஒரு முரட்டுத் தொகையினைப் புரட்டிட அவசியமாகும் எனும் போது - கைக்குப் பணம் கிடைக்கக் கிடைக்க, மும்மூன்று மாதங்களின் இதழ்களின் கதைகளை வரவழைப்பதே நடைமுறை ! என்ன தான் நான் அக்டோபர் இறுதியிலேயே புதுச் சந்தா இதழ்களை அறிவித்தாலும் - கிட்டத்தட்ட பிப்ரவரி வரையிலுமே சந்தாப் படலம் தொடர்ந்திடுமெனும் போது, அது சார்ந்த பண வரத்தானது கோடையின் காவேரி நீர் வரத்துப் போலவே இருப்பது வாடிக்கை ! So கதைக் கொள்முதல் சதா காலங்களிலும் தவணை முறைகளிலேயே !! ஆனால் இம்முறை ஒரு சன்னமான சந்தோஷ மாற்றம் / முன்னேற்றம்  ! சந்தா சேர்க்கைகளின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கிடுகின்றன டிசம்பரின் முதல் வாரயிறுதியினில் ! So வாடிக்கையான அந்த மும்மூன்று மாதங்களின் கதைக் கொள்முதல் என்பதை இம்முறை சற்றே கூடுதலாக்கிட முடிந்துள்ளது ! And அதற்கான பலன் கைமேல் தெரிகிறது !

சந்தா D-ல் நாம் அறிவித்திருந்த 4 x  Young TEX கதைகளையும் ஒரே நேரத்தில் வாங்கிடும் பட்சத்தில், அவற்றை இத்தாலிய மொழியிலிருந்தும் ஒரே தவணையில் மொழிபெயர்த்து வாங்கிடலாம் என்ற ஞானோதயம் பிறந்தது எந்தச் சாமி புண்ணியத்திலோ தெரியலை ; ஆனால் எட்டுத் திக்கிலும் அதன் பொருட்டு நன்றி தெரிவித்துப் பெருசு பெருசாய், சரமாரியான  கும்பிடுகள் போட்டு வருகிறேன் இங்கே ! கதைத் தேர்வின் போது TEX WILLER என்ற பிரேத்யேகத் தடத்தில் வெளிவரத் துவங்கியுள்ள இந்த இளம் டெக்ஸ் கதைகளின் ஆல்பங்கள் தலா 62 / 64 பக்கங்களிலானவை என்றும்  ; ஒரு சங்கிலித் தொடராய்ப் பயணித்தாலும், ஆங்காங்கே நோவின்றி தனித்தனிக் கதைகளாய்ப் பிரிந்து நின்றிடுகின்றன என்றும் காதில் வாங்கியிருந்தேன் ! So முதல் 4 இதழ்களை 2020-ன் சந்தாக்குள் நுழைத்திட துளியும் தயங்கிடவில்லை !  In fact - குறைந்த பக்கங்கள்  ; light reading களம் ; குறைந்த விலை - என்றதொரு சமாச்சாரத்தை ஜூனியர் எடிட்டர் முன்மொழிந்த போது - சிவனே என இந்த Young TEX கதைகளை மட்டுமே மாதந்தோறும் ஒன்று என்ற ரீதியில் களமிறக்கினாலென்ன ? என்ற நினைப்பு கூட என்னுள் நிழலாடியிருந்தது ! போனெல்லி வெளியிடும் வேகத்திலிருந்து வெறும் ஒரு டஜன் வித்தியாசத்தில் நாமும் வால் பிடித்துப் பயணித்தது போலிருக்குமே என்ற நினைத்தேன் ! அப்புறம் நாலைந்து நாட்களின் அசைபோடலுக்கு அப்பாலிக்கா அந்த எண்ணத்தைக் கைவிட்டேன் - "இளம் அதிகாரி" அரங்கத்தையே தனதாக்கிக் கொண்டு அராஜகம் செய்கிறார் என்ற புகார்ப்பட்டியலை சீட்டாட்டத்தைப் பெயரிலேயே வைத்திருக்கும் நண்பரும் ; இன்ன பிற சேலம் ; கோபி ; பெங்களூரு நண்பர்களும் பாடிடக் கூடுமென்று தோன்றியதால் !  ஆனால் இத்தொடரின் முதல் 4 இதழ்களை மட்டுமேனும் சந்தா D-ல் நுழைப்பின் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு "சின்னவர்  கதை" சாத்தியமாகிடுமே என்று திட்டமிடலை மாற்றிக் கொண்டேன் ! தவிர, ஆரம்பம் முதலே நமது அடையாளமே variety தான் எனும் போது - ஒரே தொடரோடு பயணிப்பதும் உங்களுக்கு போர் அடித்திடக்கூடுமென்று நினைத்தேன் ! So ஜேம்ஸ் பாண்ட் ; AXA ; தோட்டா தேசம் ; ரிப் கிர்பி என களம் விரிவானது அதன் நீட்சியாகவே !

To cut a long story short - இளம் டெக்சின் முதல் 4 கதைகளின் ஒரிஜினல்களும் வந்து சேர்ந்தன  !! வேக வேகமாய் அவற்றை மின்னஞ்சல் மூலமாய் நமது இத்தாலிய மொழிபெயர்ப்பு அம்மணிக்கு அனுப்பச் செய்த கையோடு, சாவகாசமாய் கதைகளின் பக்கங்களைப் புரட்டிய போது தான் லைட்டாகப் புளியைக் கரைத்தது ! 62 / 64 பக்கங்களில் கதைகளில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அறிகுறியே தென்படவில்லை !  மாறாக ஒரு நெடும் சாகஸத்தின் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் 'சுபம்' போடப்பட்டு, அடுத்த புக்கில் அதன் தொடர்ச்சி ஓட்டமெடுக்கிறது என்பது சிறுகச் சிறுகப் புரிந்தது ! இத்தாலியில் ஒவ்வொரு மாத இடைவெளியில் இவற்றை இந்த பாணிகளில் படித்து ரசிப்பதில் வாசகர்கட்கு சிரமம் இருப்பதில்லை தான் ; ஆனால் நமக்கோ அது ஒத்து வராதே ? இவற்றை தனித்தனி இதழ்களாய் இத்தாலிய பாணியில் வெளியிட முயற்சிப்பது - இளம் டைகரின் ஒற்றை knot -ல் பயணிக்கும் ஆல்பங்களைப் பிரித்து வெளியிட்டது போலாகிடும் என்பது தெளிவாய்ப் புரிந்தது !! அதுவும் புதிதாய் ஒரு தடத்தில் இவற்றை வெளியிட நினைத்திருக்கையில் இந்த bits & pieces பாணியானது நிச்சயமாய் சுகப்படாது என்ற பீதி கலக்கியெடுத்தது ! இதற்கிடையே ஏற்கனவே டிசம்பரின் இதழ்களுள் "அடுத்த வெளியீடு" என்று Young டெக்சின் முதல் சாகசத்தை விளம்பரப்படுத்தி, அச்சிட்டு முடித்திருந்தோம் ! And "சூது கொல்லும்" இதழின் உள் அட்டையிலும் இந்த விளம்பரம் இடம்பிடித்திருந்தது மண்டைக்குள் ஓடியது !! "ஆஹா....மாற்றுத் திட்டமிடல் என்னவென்பதெல்லாமே அடுத்தது ; முதலில் இந்த விளம்பரங்கள் மீது ஸ்டிக்கரைப் போட்டு ஓட்டுங்க டீம்" என்றபடிக்கே யோசனைகளுக்குள் மூழ்கினேன் ! அதே கையோடு, இளம் டெக்சின் துவக்க சாகசமானது எத்தனை பக்கங்களில் முழுமையடைகின்றதோ - அதற்கேற்ப ஒரு முழு இதழாகத் திட்டமிட்டு எங்கேனும் வாகான ஸ்லாட்டில் நுழைப்பதென்று தீர்மானித்தேன்  ! ஆனால் சந்தா D-ல் காலியாகிடும் 4 ஸ்லாட்களை எவ்விதம் பூர்த்தி செய்வதென்ற முக்கிய வினா மட்டும் விடை கோரிக் காத்து நின்றது !

பொதுவாய் ஆண்டின் மித வேலைப்பளு நாட்களில் out of the syllabus தேடல்களுக்குள் தலைவிட்டுக் கிடப்பதும் ; 'எப்போதேனும் வெளியிட்டுக் கொள்ளலாம்' என்ற ரகத்திலான கதைகளை வாங்கி ஓசையின்றிச் சேமித்து வைப்பதும் உண்டு ! இது போன்ற மழைநாட்களில் குடையாக அக்கதைகள் பயன்படக்கூடுமே என்ற நம்பிக்கையில் தான் அந்தச் சேகரிப்பை வளர்த்து வருகிறேன் ! சரி....இந்த நொடியின் அவசரத் தேவையினைப் பூர்த்தி செய்திட ஏதேனும் கிட்டுகிறதா ? என்ற அவாவில் அந்தப் பேழையினுள் துளாவத் துவங்கிய முதல் நொடியில் என் கைகளில் சிக்கியது - ஒரு பழைய நண்பனின் கதைத் தொடரே ! இன்னமுமே உள்ளத்தினில் பாலகர்களாய் உலவிடும் நம் நண்பர்களில் ஒரு பகுதியினர் அதனைக் கடந்த நாலைந்து ஆண்டுகளாய் வேண்டி, விரும்பிக் , கோரி வருகின்றனர் ! அரை நிஜார் அணிவித்து அந்த உசரமான பாலகர்களை மறுக்கா பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிடும் பட்சத்தில், அங்கே  A for APPLE என்று டீச்சர் கற்பித்தால், இவர்களோ "A for ARCHIE" என்று தான் வாசிப்பார்கள் !! அத்தகைய அழும்பு செய்வோர் - அண்ணன் அதிமேதாவி ஆர்ச்சியின் பாசறையைச் சார்ந்தோராய் இருப்பது தானே இயல்பு ? Oh yes - நமது அந்நாட்களது ஜிகிடி தோஸ்தான இரும்பு மனிதன் ஆர்ச்சியின் புதுக் கதைகளுக்கான உரிமைகள் நம்மிடம் உள்ளன ! கி.நா. ; கடற்கொள்ளையர் கதைகள் ; ஹாரர் ; என்று வேறொரு லெவெலில் வண்டி தற்சமயமாய் ஓடிக்கொண்டிருக்கையில் - மறுக்காவும் ஒரு ரிவர்ஸ் கியரைப் போட்டு புய்ப்ப அலங்காரங்களைக் காதில், கழுத்தில் என்று சுற்றிக் கொள்வானேன் ? என்ற நினைப்பில் தான் இதை பற்றி வாய் திறக்காதே திரிந்தேன் ! புத்தக விழாக்கால சந்திப்புகளின் போது அண்ணாத்தே ஆர்ச்சியின் பாசறையினர் ஆதங்கமாய் வினவிடும் போதும் சிரித்து மழுப்பிடுவது வாடிக்கை ! ஆனால் தற்சமயமாய் light reading என்பதே களம் & எதிர்பாரா விதத்தில் கொஞ்சம் காலியிடம் உருவாகியுள்ளதெனும் போது சட்டித் தலையனைக் களமிறக்கினாலென்ன ? என்று தோன்றியது ! Maybe just 2 albums in சந்தா D ?

"இல்லீங்கோ ....மறுக்கா புய்ப்பச் சரங்களைக் காதிலே கோர்ப்பதாய் இருந்தால் நாங்க ஜார்கண்ட் பக்கமாய்க் குடி மாற உள்ளோம் !" என்று நீங்கள் தெறிப்பதாக இருப்பின் - no worries !! ஆர்ச்சிக்கு வேறேதேனும் pre-booking களமமைத்துக் கொள்ளலாம் - பின்னொரு நாளில் ! And தற்போதைய இந்த 4 காலி ஸ்லாட்களை வேறேதேனும் நார்மலான கதைகளைக் கொண்டு ரொப்பிடுவதும் கடினக்காரியமே அல்ல ! காரிகன் உள்ளார் கைவசம் ; AXA காத்திருக்கிறார் ஓரமாய் ; ஒய்யாரமாய்  !

On the contrary - ஆர்ச்சியின் வருகைக்கு "அட்ரா  சக்கை...அட்ரா சக்கை...!!" என்பதே உங்களின் ரியாக்ஷன்களாக இருப்பின் சந்தா D-ல் இந்தச் சிகப்பு  மண்டையனை சட்டென்று இறக்கி விடலாம் - 2 ஸ்லாட்களினை ஆக்ரமிக்க ! பாக்கி 2 ஸ்லாட்களில் ஒன்றை AXA-விற்கும் ; இன்னொன்றை maybe காரிகனுக்கும் தந்திடலாம் !

எதுவாகயிருப்பினும் - உங்களின் பெரும்பான்மையின் தீர்ப்பே இங்கு செயல்வடிவம் கண்டிடும் guys ! ஆகையால் சிரமம் பாராது உங்கள் வாக்குகளை பதிவிடுங்களேன் பின்னூட்ட வடிவில் ! And no டுபாக்கூர் வாக்குகள் ப்ளீஸ் !!

*** "வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் ஆர்ச்சி வாழ்க !" என்றெண்ணுவோர் - "A" என்று மட்டும் பின்னூட்டமிட்டால் கூடப் போதும் !

*** "அய்யா...மிடிலே......வேண்டாமே !!" என்று ஈனஸ்வரத்தில் பதிவிடுவோர் "Z" என்று ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப் பதிந்தாலும் போதும் !

And நேர்ந்துள்ள இந்தக் குளறுபடிக்கு கரம் கூப்பிய மன்னிப்புக் கோருகிறேன் ! Sorry all....!!

டெக்ஸ் முதல் ஆல்பத்தினில் இடம்பிடிக்கவில்லை என்ற நொடியே - ஜேம்ஸ் பாண்ட் 007-ஐ அங்கு களமிறக்கத் தயாரானேன் ! இதோ "பட்டாம்பூச்சிப் படலம்" இதழின் அட்டைப்பட முதற்பார்வை :
பொதுவாய் நாம் வண்ணத்தில் வெளியிடும் பிரான்க்கோ-பெல்ஜியக் கதைகளுக்கும், இத்தாலிய டெக்ஸ் கதைகளுக்கும் ஒரிஜினல் ராப்பர்கள் அம்சமாய் உண்டென்பதால் அவற்றை கொஞ்சமாய் மெருகேற்றி நம் டேஸ்டுக்கு ஏற்ப மாற்றிடுவது சுலபம் ! ஆனால் இந்த ஜேம்ஸ் பாண்ட் ; மாடஸ்தி பிளைசி போன்ற newspaper strips-களுக்கு அட்டைப்படங்களே லேது ; நாமாகத் தான் ரெடி செய்திட வேண்டும் ! And மூப்பு காரணமாய் நமது ஓவியர் மலையப்பன் out of order என்பதால் இந்த அட்டைப்பட உருவாக்கங்களுக்கொரு மாற்று ஏற்பாடு செய்திட ரொம்பவே நாக்குத் தள்ளிப் போனது ! ஆங்காங்கே கிட்டியோர் எல்லோருமே டிஜிட்டலில் படம் போடும் வல்லுனர்களாயிருக்க - அது நமக்கு சுகப்படாதே என்று தயங்கி நின்றேன் ! ஒரு மாதிரியாய் கடல் கடந்த அமெரிக்க மண்ணில் ஒரு ஓவியரைத் தேடிப்பிடிக்க சாத்தியமாகிட - நம் வேண்டுகோள்களுக்கேற்பப்  பணியாற்றி அழகாயொரு டிசைனை அனுப்பினார் ! அதனை நமது DTP கோகிலாவைக் கண்டு அப்பாலிக்கா கொஞ்சம் பட்டி-டிங்கேரிங் பார்த்த போது decent ஆனதொரு அட்டைப்படம் ரெடியாகி நிற்பது போல் பட்டது ! உங்களுக்கும் ரசிப்பின் - ஹேப்பி !! And here is a preview of the inner page :
இன்னமும் பிழைதிருத்தம் செய்தியா பக்கமிது ! 
இயன்றமட்டுக்கு நீட்டி முழக்கா வசன நடையைக் கையாள முயற்சித்தது மட்டுமன்றி, எழுத்துருவவிலுமே  (font) உங்களது அந்நாட்களது வாசிப்பினை நினைவூட்டும் ஸ்டைலை பின்பற்றவும் முயற்சித்துள்ளேன் ! Fingers crossed - உங்களின் வாசிப்பு களைகட்டிட !!

மலையாய்க் குவிந்து கிடைக்கும் பணிகளுக்கும் மூழ்கிட நான் நடையைக் கட்டுகிறேன் folks !! Have an awesome weekend !! See you around !! Bye for now !

320 comments:

  1. ஹைய்யா புதுப் பதிவு......

    ReplyDelete
  2. ஜேம்ஸ்பாண்ட் புத்தகங்களுக்கு மறு உயிர் கொடுத்த உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை சார்😊😊

    ReplyDelete
  3. 1.வணக்கம். நண்பர்களேகரூர் ராஜசேகரன்

    ReplyDelete
  4. வணக்கம் சார் மற்றும் நண்பர்களே

    ReplyDelete
  5. A. அப்படியே கலர்ல போடுங்க சார்.. thank you very much for Archie..

    ReplyDelete
  6. ஐய்யா ஆர்ச்சி வர்றான் ஜாலி

    ReplyDelete
  7. வணக்கம் சார் 🙏🏼
    நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  8. 2 Slot Archie kku தாராளமாக தரலாம். மோசம் என்றால் அடுத்த 2021இல் மாற்றி விடலாம்.

    ReplyDelete
  9. இனிய இரவு வணக்கங்கள்.

    ReplyDelete
  10. ரொம்ப நன்றி ஆசிரியரே 2020 மறக்கமுடியாத ஆண்டாக இருக்க போகிறது 007 XIII ஆர்ச்சி ஸ்பின் ஆப் என்று செம விருந்து காத்துக்கொண்டிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆர்ச்சி ஸ்பின் ஆப்பா ? ஆஆ !!!

      Delete
    2. 13 ன் ஸ்பின் ஆப் ஆசிரியரே

      Delete
  11. Replies
    1. Don't worry sir you'll get that as a single book. No probs.

      Delete
    2. ஆங்காங்கே திடுமென 'தொடரும்' போட்டுவிட்டுக் கிளம்பினால் ஓ.கே தானா சார் ? ஜனவரியில் துவங்கும் முதல் பாகம் ஆறேழு மாதங்களுக்குப் பிற்பாடு நிறைவுறும் விதமாய் அமைப்பது சுகப்படும் என்றா நம்புகிறீர்கள் ?

      YOUNG டெக்ஸ் நிச்சயம் உண்டு சார் ; பிய்ச்சுப் பிய்ச்சு இல்லை என்பதில் மட்டுமே மாற்றம் !

      Delete
    3. YOUNG டெக்ஸ் நிச்சயம் உண்டு சார் ; பிய்ச்சுப் பிய்ச்சு இல்லை என்பதில் மட்டுமே மாற்றம்

      ######


      நன்றி சார்...அது இந்த வருடமே என்பதில் மாற்றம் இல்லாதிருப்பின் இன்னும் மகிழ்ச்சி..:-)

      Delete
  12. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் AXA மறைவது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. AXA களமிறங்கிடவே ஆயிரம் கைகள் தேவையே சார் - AXA -வின் "அழகை" சென்சாரிக்க !!

      Delete
  13. // சந்தா D-ல் இந்தச் சிகப்பு மண்டையனை சட்டென்று இறக்கி விடலாம் - 2 ஸ்லாட்களினை ஆக்ரமிக்க ! பாக்கி 2 ஸ்லாட்களில் ஒன்றை AXA-விற்கும் ; இன்னொன்றை maybe காரிகனுக்கும் தந்திடலாம் ! // இதற்கு எனது முழு ஆதரவு உண்டு.

    ReplyDelete
  14. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. JAMESBONDஐ ரசிப்பது போல் ஆர்ச்சியை தற்போது என்னால் ரசிக்க (வாசிக்காவாவது) முடியுமா என்று தெரியவில்லை. சமீபத்தில் ஒரு காமிக்ஸ் கிளாசிக்ஸ் எடுத்து அப்படியே திருப்பி வைத்து விட்டேன்.

      சாரி ஆர்ச்சி ரசிகர்களே...
      Z...Z...Z....Z...

      Delete
    2. பழைய அளவிற்கு சட்டித்தலையனை ரசிக்க இயலாதுதான். இருந்தாலும் பழைய நினைவுகளை மீட்டெடுக்க ஒன்று வரலாம்

      Delete
  15. நான் சிறு வயதில் படித்த காமிக்ஸ் முதன் முதலாக இரும்பு மனிதன் தான். ஒரு ராட்சச சக்கரம் நகரத்தை அழிக்க அதனை Archie தடுத்து நிறுத்த அட்டகாசமான கதை. இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

    ReplyDelete
  16. சந்தா D க்கு சிறப்பு சேர்த்ததே டெக்ஸ் & ஜேம்ஸ் அதில் ஒருவர் 👎 இல்லை என்றால் சந்தா டி ஒரு சக்கரம் இல்லாத வண்டி போன்று இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. யதார்த்தம் புரிந்தாலும் உங்களின் டெக்ஸ் காதல் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது தெளிவு ! சக்கரமில்லா வண்டிகள் கூட மிதவை டெக்னிக்கில் பயணித்திடும் சார் ; ஆனால் குதிரைகளை பின்னுக்குப் பூட்டிவிட்டு முன்னே உள்ள ஊருக்குச் சவாரி செய்ய முனைவது சாத்தியமென்று நீங்கள் எண்ணினால் நான் என்ன செய்திட முடியும் ?

      Delete
    2. ஆசிரியரின் பதில் நன்று!

      Delete
  17. A A A A AA
    AAAAAA


    AAAAAA

    அஹ்ஹா ... ஆர்ச்சி is back

    ReplyDelete
    Replies
    1. ஆர்ச்சி பாசறையின் கொ.ப.செ !! வெல்கம் சார் !

      Delete
  18. Archie is back. Going to renew subscription tomorrow itself for Archie.

    ReplyDelete
  19. ஆர்ச்சி கூட ஓகே. ஆனா காரிகன்? 🥺 அதுக்கு பதிலா AXA please.

    ReplyDelete
    Replies
    1. பதிவைப் படியுங்களேன் சார்..."maybe" காரிகன் ? என்று தான் எழுதியிருப்பேன் ! Maybe..just maybe தான் !

      Delete
    2. காரிகன் கண்டிப்பாக வேண்டும்

      Delete
    3. ஆசிரியருக்கு - maybe என்பதை மறந்து விடுங்கள். Must.

      Delete
  20. //
    வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் ஆர்ச்சி வாழ்க !" என்றெண்ணுவோர் - "A" என்று மட்டும் பின்னூட்டமிட்டால் கூடப் போதும் !
    //

    A

    மண்டையன் வாழ்க.. வாழ்க வாழ்க.

    ReplyDelete
  21. A.

    One slot for Archie
    Remaing 2 for AXA and Corrigan

    ReplyDelete
  22. விஜயன் சார்,

    இளம் டெக்ஸின் 8 கதைகளை இணைந்து ஒரே புத்தகமாக ஏதாவது ஒரு புத்தகத் திருவிழாவில் வருடம் தோறும் கொடுக்க முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம் சார் !

      Delete
    2. முடிந்தால் வரும் சென்னை புத்தக திருவிழாவில்...

      Delete
  23. விஜயன் சார், டிசம்பர் முதல் வாரம் வரை சந்தா எண்ணிக்கை 200 தான் தொட்டுள்ளது என்பது வருத்தமளிக்கிறது. இது இந்த மாத இறுதிக்குள் 500 தொட்டு விட ஆசைப்படுகிறேன். நடக்கும் நல்லதே.

    ReplyDelete
  24. ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி

    ReplyDelete
  25. ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி

    ReplyDelete
    Replies
    1. ஆர்ச்சி யை அண்ணன் ஜெராக்ஸ் எடுத்திட்டார் போல...

      Delete
    2. சிவா..மனசுல பதியம் போட்டு வச்சது...
      அப்படியே ஊறிப் போய் மனசு பூராம் விரவி கிடக்கு..
      எத்தனை நாள் ஏக்கஸதவமிது..

      Delete
  26. A
    1 for Archie
    1 for Axa
    1 for Corrigan
    1 for wing commander George

    ReplyDelete
  27. AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAÀAAAAAAAAAAA

    1) எதுக்குப்பா இத்தனை A போட்ட??

    2) ஆர்ச்சி வேனும்ன்னா A போட சொல்லி ஆசிரியர் சொன்னாருல்ல அதனால் தான் அத்தனை A போட்டேன்

    1)இந்த ஆர்ச்சி ரசிகங்க சும்மாவே ஆடுவாங்க ஆசிரியர் வேற சலங்கை கட்டி விட்டுட்டாரே..
    ஆனது ஆச்சு..
    இனி நம்ம பங்குக்கு அடுத்ததா ஸ்பைடர் கதைக்கு ரெண்டு ஸ்லாட் போராட வேண்டியதுதான்...

    ஸ்பைடர்...
    ஸ்பைடர்...
    ஸ்பைடர்....

    ReplyDelete
  28. மினி டெக்ஸ்: ரௌத்திரம் மற

    குடும்ப கௌரவத்தை மையமாக கொண்ட கதௌ. நமது தமிழ் சினிமாவில் பலமுறை! பார்த்து சலித்து போன கதை. இதில் டெக்ஸூம் கார்சனும் உள்ளே புகுந்தது டமால் டூமீல் என சுடுகிறார்கள், பெரியதாக வேலை இல்லை.

    ரௌத்திரம் மற படித்த உடன் மறக்க விரும்பும் கதை.

    ReplyDelete
  29. ஆர்ச்சி வரட்டும்
    அக்ஸா வரட்டும்
    காரிகன் வரட்டும்

    ReplyDelete
  30. விஜயன் சார், கடந்த வருடம் வந்த மினி டெக்ஸ் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த வருடம் கடந்த இரண்டு கதைகளும் சாரி....

    ReplyDelete
  31. A - ரவுண்டு போட்டு!

    ReplyDelete
  32. ரைட்டு...
    இன்னைக்கு கமெண்ட் 300 க்கு மேலே போக போகுது..

    சீக்கிரமா போய் தூங்கிட்டு காலையில் வரும் உப பதிவுக்கு வந்து நம்பர் போட்டுக்கலாம்.
    குட் நைட் ஆல்...

    ReplyDelete
  33. Archie vendam sir. May be cover all slots with Corrigan

    ReplyDelete
  34. �� A ��

    Wow!! Nice to hear about Archie again, Vijayan Sir...

    Archie - 2
    Corrigan - 1
    AXA - 1
    would be nice combo...
    &If possible few in pocket size too sir... Thx... ��

    ReplyDelete
  35. ஆர்ச்சிக்கு ஜே...A

    ReplyDelete
  36. நீண்ட நெடுநாள் கனவு..நனவாகிப் போகும் தருணமிது..
    ஆர்ச்சி..ஜ
    ஆர்ச்சி
    ஆர்ச்சி

    ReplyDelete
  37. ஆர்ச்சி கொணரும் அய்யனாரே..

    எங்கள் விஜயனாரே..

    நீர் வாழிய வாழிய பல்லாண்டு!!💐💐

    ReplyDelete
  38. சார்! யங் டெக்ஸ் மொத்தமா நல்ல தருணத்தில் வெளியிடலாம்..

    வேணாங்கல..!!!

    ஆனா ஆர்ச்சியா????


    சந்தா D - யில் இத எதிர்பார்க்கலயே!!!!

    ஆப்பிள் போன் பாக்ஸை திறந்தா உள்ற சைனா மேக்கா ?

    அடுத்த வருஷ " மிடிலே " லிஸ்ட்க்கு இப்பவே ஆள் கிடைச்ச மாதிரி ஆயிடும்.:D

    ReplyDelete
    Replies
    1. 😂😂
      செல்வம் ஜி..
      எங்களுக்காக கொஞ்சம் அனுசரிச்சுக்கங்க...
      ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!!!

      Delete
    2. ஒரு கதை வருவதற்கு முன்பே இப்படி சொல்ல வேண்டாமே.

      Delete
    3. //
      அடுத்த வருஷ " மிடிலே " லிஸ்ட்க்கு இப்பவே ஆள் கிடைச்ச மாதிரி ஆயிடும்.:D
      //

      -1

      Delete
    4. குணா கரூர்! எடிட்டர் கேட்டதுக்கு மனசுல பட்டதை சொன்னேன்!!

      தவிர பெரும்பான்மையான ஓட்டுக்குத்தான் எடிட்டர் தலையசைப்பார்..

      A- தான் நிறைய விழும்போல இருக்கு.:-)

      அதனால கவலைப்படாதீங்க...!!

      /////////////


      //

      ஒரு கதை வருவதற்கு முன்பே இப்படி சொல்ல வேண்டாமே.//

      Pfb@

      ஆர்ச்சி ஒரு டெம்ப்ளேட் கதை வரிசை என்பதால் அப்படி சொன்னேன்..

      மற்றபடி ஒரு கதை வருவதற்கு முன் அதைப்பற்றி எழுத முனைவதில்லை..

      No offence! Still feel sorry if it hurts!!

      Delete
    5. @ Selvam Abirami : ஆர்ச்சியை சந்தா D-ல் தான் என்றில்லாது ஏதேனும் Prebooking தடத்திலும் இறக்கிடலாம் தான் சார் ! வாசகப் பெரும்பான்மை என்ன அபிப்பிராயப்படுகிறார்கள் என்று தெரிந்திடுவோமே ?

      Delete
    6. ஆசிரியரின் கருத்தே எனதும்

      Delete
  39. காரிகன் இவரின் பழைய கதைகளை அந்த அளவு விரும்பவில்லை. எனவே இவர் வேண்டாம் சார்.

    AxA Big No

    மீதமுள்ள இரண்டு கதைகளுக்கு வேறு ஏதாவது புதிய கதைகளை முயன்று பார்க்கலாம்.

    அல்லது ஸ்பைடரின் அந்த வெளிவராத கதையை போடலாமே சார்.

    ReplyDelete
    Replies
    1. @ parani Anna
      ஸ்பைடர்::விண்வெளி பிசாசு.

      Delete
    2. இருக்கும் 4 காலியிடங்களை ஒட்டுமொத்தமாய்த் தந்தாலும் ஸ்பைடரின் ஒற்றைப் புதுக் கதைக்கு கூட அந்த இடம் பற்றாது !

      Delete
    3. கூர்மண்டையனை ஒரேபுத்தமாக வெளியிடலாம்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  40. அல்லது ஸ்பைடரின் அந்த வெளிவராத கதையை போடலாமே சார்.

    சூப்பர் பரணி அவர்களே...
    அருமையான யோசனை

    ReplyDelete
  41. On another note i sent an email regarding subscription. No replies till date ( more than a week). What is the official mail to communicate. The same mail i used to get replies for earlier subscriptions

    ReplyDelete
  42. அல்லது இளமையில் கொல் போன்ற டைகரின் இளவயது சாகசங்களை வெளியிட முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. எங்க... கடந்த வருடம் வந்த அந்த கதை தொகுப்பு நன்றாகவே இருந்தது.

      Delete
  43. ஜேம்ஸ் பாண்ட் அட்டைப்படம் நமது இதழில் ஏற்கனவே வந்த ஜேம்ஸ் பாண்ட் அட்டைப்படத்தை நினைவு படுத்துகிறது.

    வேறு முயற்சித்து இருக்கலாம். ஆனால் நீங்கள் இதனை உருவாக செய்த முயற்சிகள் புரிகிறது. ஆனால் உண்மையில் முன்பக்க அட்டைப்படம் சுமார். சாரி விஜயன் சார்.

    ReplyDelete
    Replies
    1. கதையில் வரும் உட்பக்க படம் ஏதாவது ஒன்றை அப்படியே எடுத்து DTP மூலமாக வண்ணத்திற்கு மாற்றி அட்டைப்படமாக கொடுக்க முடியுமா சார்.?

      Delete
    2. கொடுக்கலாம் சார் ; ரொம்பவே சுமாராய் இருக்கும் !

      Delete
  44. ஓவியர் மலையப்பன்ஆ அல்லது ஓவியர் மாலையப்பனா விஜயன் சார்?

    ReplyDelete
  45. AXA வரலாம் வரலாம் வரலாம்.....

    ReplyDelete
  46. என்னது சந்தா எண்ணிக்கை இரநூறா !!?????

    கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையால்ல இருக்கு !!! வருத்தத்துடன் ங்க சார்

    ஏதோ ஒரு வகைல நம்ம ரசிகமார்ங்க பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு இதிலிருந்தே தெரிகிறது

    நீங்க உசாரா இருக்க வேண்டிய காலகட்டமிது


    தென் ஆர்ச்சி ஆர்ச்சி யை இப்போ உள்ளே நுழைக்க காரணம் என்ன விஜயன் சார் ??

    எல்லாரும் 7 & 8 வருடமா கத்தி கத்தி கேட்டோம் அப்போல்லாம் வராது வராதின்னிட்டு இப்போ A போடச்சொல்றீங்க ரொம்ப ஆச்சர்யமா இருக்குங்க சார்!!!

    நானும் போட்டிடறேன் A

    ReplyDelete
    Replies
    1. பதிவின் வரிகளை இன்னொருவாட்டி படித்துப் பாருங்களேன் நண்பரே ! இந்தாண்டு சந்தா வரத்தில் முன்னேற்றம் என்பதையே சுட்டிக் காட்டியிருந்தேன்.! வழக்கமாய் டிசம்பரின் முதல் வாரத்தில் 130 சந்தாக்கள் வந்திருந்தாலே பெரும் பாடென்றாகி இருக்கும் ! டிசம்பரின் இறுதியில் ; சென்னைப் புத்தக விழாவினில் ; ஜனவரி இறுதியில் என்றே சந்தாச் சேர்க்கை தொடரும் ! So இது தான் மாமூல் !

      அப்புறம் நாம் மறுக்கா இதழ்களை வெளியிட ஆரம்பித்தே 7 வருடங்கள் தான் ஆகின்றன எனும் போது - எட்டு வருஷங்களாய்க் கத்திக் கேட்க ஏது களம் சார் ?

      Delete
    2. இந்தாண்டு சந்தா வரத்தில் முன்னேற்றம் என்பதையே சுட்டிக் காட்டியிருந்தேன்.! வழக்கமாய் டிசம்பரின் முதல் வாரத்தில் 130 சந்தாக்கள் வந்திருந்தாலே பெரும் பாடென்றாகி இருக்கும் ! டிசம்பரின் இறுதியில் ; சென்னைப் புத்தக விழாவினில் ; ஜனவரி இறுதியில் என்றே சந்தாச் சேர்க்கை தொடரும் ! So இது தான் மாமூல் !

      #######


      மகிழ்ச்சி சார்..:-)

      Delete
    3. அதற்குள் 200 சந்தா என்பது உங்களது 2020 அட்டவணை க்கு கிடைத்த பரிசு.

      Delete
  47. காரிகன் வரட்டும் சாரே...
    நீங்கள் பேடிக்காண்டே..

    ReplyDelete
  48. AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

    ReplyDelete
  49. காரிகனின் இரண்டாவது வைரக்கல் எங்கே போன்ற கதைகளென்றால் டபுள் ஓகே

    ReplyDelete
    Replies
    1. துரதிர்ஷ்டவசமாக "அது மாதிரிக் கதைகள்" ; "இது மாதிரிக் கதைகள்" என்றெல்லாம் வாங்கிட முடியாதே சத்யா ! சட்டியில் உள்ளதே அகப்பையில் !

      Delete
    2. காரிகன் வரட்டும்

      Delete
  50. சகோதரர் பரணி சொன்னது போல் ஸ்பைடருக்கும் ஒரு ஸ்லாட் ஒதுக்கலாமே ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. ஆர்ச்சிக்கே இன்னும் பெர்த் confirm ஆகவில்லை சாமி ; இதில் ஆர்ச்சியின் பக்கத்து வூட்டுக்காரருக்கும் பெர்த்துக்கு நான் எங்கே போவது ?

      Delete
    2. என்ன ஆர்ச்சிக்கே பெர்த் confirm இல்லையா ஐய்யோ அடக்கமுடியாமல் கண்ணில் கண்ணீர் வருதே 😭😭😭😭😭😭😭

      Delete
  51. காரிகனுக்கே 2 ஸ்லாட் கொடுத்தா நல்லா இருக்கும்...
    யங் டெக்ஸ் பெரிய ஆல்பமா வந்தா சரி...2020லேயே...

    ReplyDelete
    Replies
    1. அட !! பின்னூட்டமிட்டுள்ளீர்கள் சார் !

      Delete
    2. Texkit சார் ஆச்சரியமே. ஆசிரியர் சார் :-)

      Delete
  52. Replies
    1. அது பதில்களில் இல்லாத option சார் !

      Delete
  53. ஆர்ச்சி A வேண்டும். அப்படியே.s..அது தான் நம்ம கூர்மண்டையர்.

    ReplyDelete
  54. டெக்ஸின் சிறுகதை தொகுப்பு..விற்பனைக்கு மிகவும் உதவும் என்று நினைத்தேன்..இப்படி ஆகி விட்டதே😭😭😭😭😭😭.
    டெக்ஸின் சிறுகதை தொகுப்பு எப்போது என்று கூற முடியுமா? ???

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். பல புதிய ரசிகர்களை தன் மூலம் நமது காமிக்ஸ் உலகில் சேர வைப்பார் என எதிர்பார்த்து இருந்தேன். விற்பனை முகவர்களுக்கும் இவர் ஒரு சரியான தீனியாக இருப்பார் என இருந்தேன்.

      Delete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. 1. ஆர்ச்சிக்கு ஒரு பெரிய ஜே ஸாரி பெரிய்ய்ய்ய AAAAAAAAAAAAAAAAAAAA....

    2. AXA யாரென தெரியவில்லை. எனவே புத்தகமாக போட்டால், வாங்கி படித்து தெரிந்து கொள்வேன்... நன்றி

    3. காரிகனை ஏன் வேண்டாமென்று சொல்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் எனக்கு வேண்டும். டாக்டர் 7 ரக கதைகள் வீரியமானவை...

    4. மற்றபடி இளம் டெக்ஸ் லேட்டாக முழு வடிவில் வர வேண்டுமென்பது நியாயமான முடிவு. மேலும், டெக்ஸ் பி சந்தா, மேக்ஸி என பல வடிவங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறார். டெக்ஸ் கதைகளில் 150 பக்கங்களுக்கு மேல் இருப்பவற்றை மிகவும் வரவேற்பவன் நான்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. AXA ராணி காமிக்ஸில் புரட்சிப்பெண் ஷீலா என அறிமுகமானவள்

      Delete
  57. A 4 Archie!

    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி
    ஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சிஆர்ச்சி

    ReplyDelete
    Replies
    1. ஹஸன் சார் நன்றி. நீங்களும் Archie fan தானா மகிழ்ச்சி m

      Delete
  58. Replies
    1. டெக்ஸ் கதையை தவிர வேற எதையும் நீங்க படிக்கறதில்லைங்கற உண்மைய ஒத்துக்கிட்டீங்கன்னா இளம் டெக்ஸையே கொண்டார போராட்டத்தை ஆரம்பிக்கறோம்.

      Delete
    2. " இளம் அதிகாரி " போல் எல்லாம் இருக்காது என நம்புங்கள் ரம்மி ..

      நம்பிக்கை தானே எல்லாமே..:-)

      Delete
  59. Zzzzz.காரிகன் OK.axa க்கு மீண்டும் ஒரு Zzzzz

    ReplyDelete
  60. ஏதோ ஆசிரியர் பெரிய மனது பண்ணி எங்களை போன்றோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளார்.

    இரும்புக்கையரையும் கொண்டுவரலாம் (2.0 இருக்கு என்று சொன்னதாக ஞாபகம்)

    ReplyDelete
  61. AXA சுமாரகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்(கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போலுள்ளதே!)

    சூப்பர்மேன் / ஸ்பைடர் மேன் போன்றவற்றையும் யோசித்திடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நீங்க ஏதாவது ஒன்னு சொல்லுங்கண்ணா!

      Delete
  62. ஆர்ச்சியை அப்பொழுது கொண்டாடி மகிழ்ந்த்து உண்மை ..ஆனால் இப்பொழுது அதே அளவிற்கு ரசிக்க முடியுமா என்பது சரியாக தெரியவில்லை..எனவே ஒரு முறை முயற்சி செய்யலாம் .வரவேற்பை பொறுத்து முடிவெடுக்கலாம் என்பது என் கருத்து .

    ReplyDelete
  63. அதே சமயம் காரிகன் ,புரட்சி பெண் ஷீலா வை வரவேற்கிறேன் சார்.

    ஆனால் எப்படி வரவேற்றாலும் இளம் டெக்ஸ் காணாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றம் என்பதும் உண்மை.

    ReplyDelete
  64. இளம் டெக்ஸ் கதைகளை பிரித்து போடாமல் ஒரே இதழாக போட முடிவெடுத்திருப்பது நல்ல முடிவு சார். ஒரே இதழாக வெளிவந்தால் சிறப்பாக இருக்கும். சீக்கிரமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்! ஆர்ச்சிக்கு ஒரு கதையை முதலில் போட்டுப் பாருங்கள் விற்பனையில் சாதித்தால் இன்னொரு கதையும் போடுங்கள்! Axa கதையும் போடலாம் சார் கூடவே காரிகன், விங்கமாண்டர் ஜார்ஜ், சார்லி, ஜான் சில்வர் கதைகளையும் களம் இறக்கினால் பழைய வாசகர்களை திருப்திபடுத்திய மாதிரியும் இருக்கும். வாங்க வைத்த மாதிரியும் இருக்கும் அதனால் இவர்களை களம் இறக்கினால் விற்பனைக்கு கொஞ்சம் புத்துயிர் தந்தது போலிருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. // ஆர்ச்சிக்கு ஒரு கதையை முதலில் போட்டுப் பாருங்கள் விற்பனையில் சாதித்தால் இன்னொரு கதையும் போடுங்கள்! Axa கதையும் போடலாம் சார் கூடவே காரிகன், விங்கமாண்டர் ஜார்ஜ், சார்லி, ஜான் சில்வர் கதைகளையும் களம் இறக்கினால் // +1000

      Delete
  65. நாம் முன்பு வெளியிட்ட ஆர்ச்சி கதைகள் தவிர மொக்கை கதைகள் நிறையா சார். மேலும் நாம் சூப்பர் ஸ்பெஷல் வெளியிட்ட கதை கூட சுகப்படவில்லை.

    ஆகையால் கதை தேர்வில் நீங்கள் நம்பிக்கை கொடுத்தால் A.

    ரிங்கோ விமர்சனம்:
    இப்பொழுது தான் இம்மாத புத்தகங்கள் படிக்க நேரம் கிடைத்தது, முதலில் ரிங்கோ படிக்க எடுத்தேன்.

    ஒரு வரி விமர்சனம் மோசமில்லை.

    ப்ளஸ்:
    கண்டிப்பாக ஓவியங்கள் மற்றும அந்த புதுவித வண்ணங்கள். நாம் பார்த்து பழகிய அடர்த்தி இல்லாமல் ஆரஞ்சு சற்றே மைல்டாக படிக்க குளிர்ச்சியாக இருந்தது.

    ஓவியங்கள் வழக்கம் போல அனைவரும் ஒரே மாதிரி இருந்துவிடுவார்களோ என்று பயந்தேன் ஆனால் அவ்வாறு இல்லாதது ஆறுதல். அதிகபட்சம் லாங் சாட் ஓவியங்கள் தான்.. ரிங்கோ மற்றும் வில்லன் இருவருக்கு மட்டும் தான் closeup.

    நேர்கோட்டிலான கதை, லைட் ரீடிங் உகந்தது.

    மைனஸ்:
    மீண்டும் நேர்கோட்டிலான நாம் பலமுறை படித்த கதை தான். ஒரு safe bet ஆக தேர்ந்து எடுத்துருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    அடுத்த வருட ஸ்லாட்டிற்கு ok. இறுதி முடிவு அடுத்த கதைகள் படித்த பின்.

    ReplyDelete
  66. 007 அட்டைப்படம் சுமார்தான்

    ReplyDelete
  67. Axa விற்கு 2 கதை வேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. அப்படி கேளுங்க சார். கணேஷ் எங்க இருக்கீங்க?

      Delete
  68. A for Archie - Yes

    ஜேம்ஸ் பாண்டின் preview பக்கங்களை பார்க்கும் போது light ஆக 'டர்' ஆகிறது. பற்றாக்குறைக்கு காரிகன் may be வருவார் என பீதியை கிளப்புகிறீர்கள்.

    Big No for காரிகன்

    ஆர்ச்சியை வரவேற்றாலும், சந்தா D யை நினைத்தால் சற்றே ஏமாற்றம் தான் வருகிறது. டெக்ஸும் இல்லை, புராதான ஜேம்ஸ் பாண்ட், மாடஸ்டி, ரிப்கிர்பி மற்றும் இதர கதைகள் light reading ஆக இருந்தாலும் இக்கால கட்டத்திற்கு நிலைத்து நிற்குமா என்பது சந்தேகமே.

    துவக்கத்தில் may be சற்று ஆதரவு இருக்கலாம். ஆனால் எவ்வளவு தூரம் இம்முயற்சி எடுபடும் என்று தெரியவில்லை.

    May be Action Special, போல் சொதப்பினாலும் ஆச்சர்யம் இல்லை.

    நிறை/குறைகளை சுட்டிக்காட்டும் ஆர்வத்தில் தான் இக்க்ருதுக்களே தவிர ஒவ்வொரு கதைகளும் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது/நமது அவா.





    ReplyDelete
    Replies
    1. சார் ஆசிரியரும் அதை தான் எதிர்பார்க்கிறார். உங்கள் மனதில் பட்டதை தாராளமாக பதிவிடுங்கள்.

      Delete
    2. // சந்தா D யை நினைத்தால் சற்றே ஏமாற்றம் தான் வருகிறது. டெக்ஸும் இல்லை, //

      உண்மை தான்.

      Delete
  69. பாண்ட் 2.0 ,பி பி வி, அண்டர்டேக்கர் , LARGO , SHELDON, கிராபிக் நாவல் போன்ற வற்றை பார்த்து விட்டு ஆர்ச்சி படிக்க முடியுமா என்று தெரியவில்லை சார் .. பெருன்பான்மை நண்பர்கள் வேண்டும் என்று முடிவு எடுத்தால் ஒன்றை மட்டும் முயற்சி பண்ணுங்கள் சார் .. IF POSSIBLE NA INCREASE SLOT FOR DIABOLIK IN SANTHA D .. PERSONALLY I WOULD VOTE ZZZ FOR ARCHIE ..

    ReplyDelete
    Replies
    1. So பெரும்பான்மை முடிவு ஒன்று முயற்சி செய்ய லாம். ஓகே என்றால் இரண்டாவது ஓகே தானே.

      Delete
  70. Replies
    1. அண்ணா உடல் நலம் நன்கு தேறி விட்டதா?

      Delete
  71. இது வரை வந்த வாக்குகள் பெரும்பான்மை Archie kku ஆதரவாக இருக்கிறது. பதிவே இடாத நண்பர்கள் கூட ஆதரவாக பதிவு செய்தது ஆச்சரியமே.

    ReplyDelete
  72. aaaaaaaa

    சார் SMALL A வா......capital a வா சார் ....

    மாதிரி confused

    ReplyDelete
  73. அப்படியே ஸ்பைடர் க்கும் ஒரு premium slot.... பிலீஸ்......

    ReplyDelete
  74. இளம் டெக்ஸ் சந்தா Dயில் வர சந்தர்ப்பமில்லை எனும் செய்தி சற்றே வருத்தமே

    இருந்தாலும் குண்டு புக்கா ஹார்டு பைண்டில் வருவார் என்பதால் மகிழ்ச்சியே 💃🏻💃🏻💃🏻

    பெரியண்ணன் ஆர்ச்சிக்கு A ஒரு ஸ்லாட் முயற்சிபண்ணலாம் சார் 👍🏼🙏🏼

    உங்களுக்கு தெரியாதவைகளா என்ன
    தங்களின் இறுதி முடிவுக்கு எனது ஆதரவு சார்🙏🏼

    .

    ReplyDelete
  75. ஆர்ச்சி வருகிறாரோ இல்லையோ -
    காரிகன் கண்டிப்பாக வேண்டும்.. .
    Axa - விற்கு பதில் மாடஸ்டிக்கு - ஒரு Slot கூடுதலாக்கலாமே.
    மாட் ஸ்டி - ஜேம்ஸ் பாண்ட் -காரிகன் - ரிப் கிர் பி_மாண்ட் ரெக்-- இவர்களை ரசிப்பது ஒரு dசனை
    ஆர்ச்சி -ஸ்பைடர் - இ.கை.மாயாவி -சார்லி என்று ரசிப்ப ஒரு ரசனை..
    எனவே இதில் கேட்டுக் கொண்டே இருப்பதை விட - சந்தா - Dஇதழகளை மட்டும் - தாங்கள் முன்பு ( 2012க்கு முன்பு) வெளியிட்டது போல அந்தந்த மாதங்களில் அடுத்த வெளியீடு என்று அறிவித்து தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கலாமே.i??
    2010 க்கு முன்பு அப்படித்தானே படித்து சிலாகித்துக் கொண்டோம்.
    யோசிப்போமே நண்பர்களே..ii

    ReplyDelete
    Replies
    1. //சந்தா - Dஇதழகளை மட்டும் - தாங்கள் முன்பு ( 2012க்கு முன்பு) வெளியிட்டது போல அந்தந்த மாதங்களில் அடுத்த வெளியீடு என்று அறிவித்து தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கலாமே.i?? // இந்த ஐடியா நன்றாக இருக்கிறது

      Delete
  76. Dear Editor, for Subscription path - D 'Delightful Light Reading', I don't mind reading
    1 more Modesty,
    1 more Diabolic,
    1 AXA,
    1 Archie...
    all the four are suitable for light reading...
    Modesty and AXA will be Delightful without saying...

    ReplyDelete
  77. ஆர்ச்சிக்கு A

    காரிகனுக்கு உஷ்ஷ்Zzzzz

    ReplyDelete
  78. இளம் டெக்ஸோட நாலு ஸ்லாட்ல ஏதாச்சும் கார்ட்டூன்ஸ் முயற்சி செஞ்சிப்பாக்க வாய்ப்பு இருக்குமா சார்னு கேக்கலாமேன்னு தோணுச்சின்னா பாருங்களேன்..!!

    ReplyDelete
    Replies
    1. அது கூட சரி தான்....சாகச வீரன் சிந்துபாத் போல....

      இளம் டெக்ஸ்....

      குதிரை லாயம் 4 பக்கம்

      தூக்கி பிடி கார்சன்.....8 பக்கம்....

      வறுத்த கறி.... 4 பக்கம்....

      வில்லன் பிடிக்க சொல்லி 6 பக்கம்....

      வில்லனை தேடி.....6 பக்கம்...

      அல்லக்கைகள் நய்ய புடிப்பது 8 பக்கம்....

      வில்லன் முகத்தில் குத்து விட்டு...time கொடுப்பது...6 பக்கம்....

      பத்தடியில் உள்ள எருமை மாடு....ஜோக்கை 2 பக்கம்

      Climax மிச்ச பக்கம்ம்.....

      64 பக்க ஜாகஜம்....

      Discliamer

      அப்புறம் நான் ஒரு டெக்டின் டீவிர ரஜிகன்

      Delete
  79. கதை சொல்லும் கானகம்...... ஸ்ஸ்ஸ் அப்பா நாக்கு தெல்லிடுச்சு.....இப்பதான் படிச்சேன்......மீடிலே......

    ReplyDelete
  80. டெக்ஸ் இடத்திற்கு சட்டித்தலையனா... என்ன கொடும சார்... :((

    பிராயசித்தமா வரும் சம்மர்ல 500 பக்க இளம் டெக்ஸ் ஸ்பெஷலா வரனும். இல்லைனா பெரியளவில் போராட்டம் வெடிக்கும். :))

    ஓகே, ஆர்ச்சிக்கு டபுள் A காரிகன் எப்பவுமே என்னோட ஃபேவரிட்.

    ReplyDelete
  81. A

    Archie for sure
    No corrigan please.
    Haven’t read AXA before so we can try.

    ReplyDelete
  82. A
    ஆர்ச்சி நம் வீட்டு பிள்ளைகளை காமிக்ஸ் ரசிகர்களாக்கிடும், அவர்கள் ரசிப்பார்கள்.

    ReplyDelete
  83. ஆர்ச்சிக்கு ஆதரவு அதிகமாகவே உள்ளது ஆசிரியரே

    ReplyDelete
  84. சென்னை புத்தக திருவிழாவில் சந்தா சற்று உயரக்கூடும்

    ReplyDelete
  85. A for ஆர்ச்சி
    Axa புக்கை எடிட் பண்ணறேன்னு சொல்லி தார் டின்னை கையில் வைத்து கொண்டு அலைய வேண்டாம் என்பது என் வேண்டுகோள்

    பழைய பாணி அட்டைப்படம், பிடிச்சு இருக்கு. ரொம்ப நாள் ஆச்சு. அட்டை படம் நன்றாக வந்து இருக்கிறது.

    ReplyDelete