நண்பர்களே,
வணக்கம். முந்நூற்றிச் சொச்சம் பின்னூட்டங்கள் ; so கம்பெனி ரூல்ஸ்படி இதோவொரு உபபதிவு !! And இந்த உ.ப. நிச்சயமாய் சுவாரஸ்ய அலசல்களுக்குப் பஞ்சம் வைக்காதென்றொரு பட்சி சொல்கிறது !
எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு கேள்வியுண்டு !! காமிக்ஸ் வாசிப்பினில், மொத்தமாய், துளியும் மீதங்களின்றி, துடைத்து எடுத்தார்போல - பழசுகளுக்கு ஓர் பெரும் டாட்டா சொல்லி விட்டு, புதுசுகளின் பக்கம் மட்டுமே கவனங்களை செலுத்துவது நமக்கு என்றைக்கேனும் சாத்தியப்படுமா ? - என்பதே அந்தக் கேள்வி !!
எண்பதுகளில் பக்கிரிசாமி கடா மீசைகள் ; தலைவாழை இலை சைஸுக்கான காலர்கள், ஒரு செங்கல் அகலத்துக்கான பெல்ட்கள் இடையில் நெளிய, ஜமுக்காள நீளத்துக்கு அகன்று நிற்கும் பெல்பாட்டம் பேண்ட்களோடு சுற்றித் திரிவதற்கு பேஷன் என்று பெயர் ! இதில் குருவிமண்டை போல ஸ்டெப்கட்டிங் வேறு !! அக்காக்களின் திருமண போட்டோக்களை எடுத்துப் பார்க்கும் போது - அந்நாட்களுக்கேற்ற மேற்படி இஷ்டைலில், பின்புலங்களில் நிற்கும் அடியேனைப் பார்த்தால் தரையில் உருண்டு, புரண்டு சிரிக்கத் தோன்றுகிறது !
ஒரு எட்டுப் பத்து ஆண்டுகள் ஓட்டமெடுத்த வேளையில் பேண்ட்களின் விசாலம் சபக்கோவென்று வற்றிப் போய் tights ஆயின ! கிராமத்து மைனர் ரேஞ்சிலான பெல்ட்கள் தம்துண்டாகிப் போயின அகலத்தில் ! குருவிக்கூட்டுத் தலையலங்காரங்களும் போயே போச்சு ! எட்றா - நம்ம கல்யாண போட்டோக்களை என்று ஆல்பத்தைப் புரட்டினால் - நாசருக்கும், நாகேஷுக்கும் இடைப்பட்டது போலொரு ஆசாமியே கண்ணில் பட்டான் ! மறுக்கா சிரிப்புப் படலமே !
ஆக இப்படி ஒவ்வொரு தசாப்தத்துக்கும் நடை ; உடை ; சிகை ; என்று ஏதேதோ மாறிடுவதையும், புதியன வரும் நொடியில் பழையன கழிவதையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம் ! ஒரு ஆர்வக் கோளாறில் எண்பதுகளின் பெல்பாட்டம் பேன்ட்டைப் போட்டபடிக்கே வீதியுலா போயின் - 'நேத்திக்கு வரைக்கும் நல்லா தானே இருந்தான் ??..அச்சோ ' என்ற உச்சுக் கொட்டும் படலங்களே மிஞ்சிடும் அல்லவா ?!
ஆனால்...ஆனால்...காமிக்ஸ் வாசிப்பெனும் ஒரு குட்டியூண்டு வட்டத்துக்கு மாத்திரமே இந்தப் பொது விதி apply ஆகிட மறுக்கிறதே ?!!
இதோ 1984-ல் முதன்முறையாக வெளியிடும் போதே 'ஓவராய்..ரெம்போ ஓவராய்ப் பூச்சுற்றல் உள்ளதே'- என்று தலைசுற்றிட - அன்றைக்கே கொஞ்ச sequences-களில் கத்திரி போட அவசியமாகிட்ட இரும்புமனிதன் ஆர்ச்சி - 36 ஆண்டுகளுக்குப் பிற்பாடு பிரெஷாக களம் காண்கிறான் - ஆரவாரமான வரவேற்போடு !
இதோ 1970-களில் உருவான இரும்புக்கையாரின் ஆல்பங்களை இன்றைக்கும் ஆசை ஆசையாய் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள ஒரு மூத்தோர் அணியே ரெடி !!
இப்போதும் நமது வலைமன்னன் ஸ்பைடராரை மறுக்கா கண்ணில் காட்டினால் - கண்ணெல்லாம் ஆனந்தக் கண்ணீரோடு உச்சி முகர ஒரு அணியே ரெடியாய் இருக்குமென்பது obvious !!
சரி, சூப்பர் ஹீரோக்களுக்குத் தான் இந்த மவுஸோ ? என்று நினைத்தால் நடு எண்பதுகளில் காமிக்ஸ் படிக்கத் துவங்கிய நண்பர்களணியோ - "ஜான் மாஸ்டர் மறுக்கா வருவாரா ? இரும்புக்கை நார்மன் வரில்லாவா ? இரட்டை வேட்டையர் ?? XIII மறுக்கா-மறுக்கா-மறுபதிப்பு கிடையாதா ? என்ற ரேஞ்சில் தாக்கிடுவதை பார்க்கிறோம் !
Oh yes - நோஸ்ட்டால்ஜியா ; பால்யத்தின் அடையாளங்கள் ; காலத்தில் திரும்பிப் போயிடும் யுக்தி என்றெல்லாம் இதற்கு விளக்கங்கள் சொல்லிடுகிறோம் ! ஆனால் "எனக்கு பழைய நெனப்பா கீதுச்சு ; so ஸ்டெப்கட்டிங் வெட்டிக்கினேன் !" என்று நாம் ஒருபோதும் வீட்டில் போய் நிற்பதில்லை தானே ? (ஹி..ஹி...அதுக்கோசரம் மண்டையில் இன்னிக்கு கேசம் வேணுமே முதலில் !!' என்கிறீர்களா ?) தனிமையினில் இருக்கும் போது கூட பழைய பெல்பாட்டங்களை முயற்சித்து அழகு பார்க்க நினைப்பதில்லையே ? (தொந்தி அதற்கொரு பெரும் தடா என்பது வேறு விஷயம் !!) யோசித்துப் பார்த்தால் காமிக்ஸ் தவிர்த்து வேறு reading material களில் கூட பால்யங்களது சமாச்சாரங்களை நாமின்று இதே வேகத்தோடு சேகரிப்பதாய் (!!!) எனக்குத் தோன்றவில்லை ! "அம்புலிமாமா" ; " கோகுலம்" backissues இன்னமும் நமது வீட்டுச் சேகரிப்புகளில் உள்ளனவா - தெரியலை எனக்கு ! Of course சுஜாதாவின் நாவல்கள் ; அமரர் கல்கியின் படைப்புகள் போன்ற சில evergreens என்றைக்கும் நம்மை விட்டு அதிக தொலைவில் இருப்பதில்லை தான் ! ஆனால் அவையெல்லாமே முழுசுமாய் பால்யங்களது properties என்று சொல்லிட முடியாதல்லவா ?
Whatever the reasons maybe - "பழமை" என்பது நம்மோடே பயணிக்கும் ஒரு நிரந்தரமாய் - காமிக்ஸ் வாசிப்பினில் மாத்திரமே தொடர்வதன் சூட்சுமம் பற்றியெல்லாம் அலசிட 'தம்' இல்லை இக்கட ! நானும் 'கி.நா. ; அந்த.நா. ; இந்த நா.' என்று கூத்தடித்தாலும், அவ்வப்போது தாயைத் தேடிடும் கன்றைப் போல பழமைகளை நாடி U-டர்ன் அடிப்பதைத் தவிர்க்க வழி தெரியக்காணோம் !! So my question is : இதுவே தான் காலத்துக்கும் நமது comics template ஆக இருந்திடுமா ?
Given a choice, பழசுகளை ஒட்டு மொத்தமாய் ஓரம் கட்டி விட்டு முழுக்க முழுக்கப் புதுசுகளுக்குள் மட்டுமே நீச்சலடிக்க விழைவேன் என்பதை நூற்றி பதிமூன்று தடவைகள் ஒப்பித்திருப்பேன் ! ஆனால் "விற்பனை" எனும் கெடுபிடியாளர் ஒரு பக்கம் ; உங்களின் "பழமை மோகம்" இன்னொரு பக்கமென முறைத்து நிற்கும் போது 'சரிங்கண்ணா !!' என்று மண்டையை ஆட்டிடுவதே சாத்தியமாகிறது ! So சும்மா ஜாலியாய் உங்கள் கற்பனைகளை ஓடவிட்டுச் சொல்லுங்களேன் - 2030-ல் நம் தேடல்கள் எவ்விதம் இருக்கக்கூடுமென்று ? 2030-ன் இதே நேரத்திலுமே 'ஆர்ச்சியார் for PM !!" ; "வருங்கால சனாதிபதி லூயி கிராண்டேல் வாழ்க !" ; அடுத்த ஐ.நா.சபைச் செயலாளர் அண்ணன் பதிமூன்றுக்கு ஜெ !!" என்று தான் கொடிபிடித்துக் கொண்டு நிற்போமா ? Your thoughts on the future please guys ?
நான் தான் முதலாவதா?
ReplyDeleteOld is Gold👍
ReplyDelete3rd
ReplyDeleteகாரிகன் / ஜான் சில்வர் வேண்டும்
ReplyDelete2030 எப்படி இருந்தாலும் தற்பொழுது பழைய நினைப்புக்கள் வேண்டும்.
ReplyDelete2030-ல் நினைவிருக்குமா என்று தெரியவில்லை
எனக்கு இப்போவே மறக்குது சார் !
Delete2030 அப்பவும் ஆர்ச்சி மாடஸ்டி ஸ்பைடர் மாயாவி ஸ்பெஷல் கேட்கிற குரூப்புல நான் இருப்பேன்..
ReplyDeleteஅப்படிப் போடுங்க சிவா !
Deleteசார்!! தயவு தாட்சண்யம் பார்க்காமல் பழசை எல்லாம் தூக்கி ஓரங்கட்டுங்கள்..
ReplyDelete.
மறுபதிப்பு என்ற சமாச்சாரமே தேவையில்லை..
தமிழ் காமிக்ஸ் முன்னேற்றத்துக்கு இவை கிஞ்சித்தும் உதவப் போவதில்லை..
மாக்ஸி சைஸில் புதிய கதைகள் எவ்வளவு பேரானந்தத்தை உருவாக்க முடியும்?
அதை விடுத்து படித்ததையே படிப்பதும் -வேறு வடிவங்களில் இருப்பினும்...ரத்தப்படலம் நானெல்லாம் பிரித்து பார்த்துவிட்டு உள்ளே வைத்ததோடு சரி...
காலத்துக்கு ஒவ்வாத கதைகளை சகிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது...
அந்த இடத்தில் வேறு ஒரு புதிய கதை வந்திருந்தால் என்ற எண்ணமே மேலோங்குகிறது...
புதிய கதை அல்லது கதைத் தொடர் ஏதேனும் பிடிக்காமல் போய்விட்டால் மனம் அவ்வளவாக கஷ்டப்படுவதில்லை..
அடுத்த முயற்சியில் பார்ப்போம் என்ற எண்ணம் வருகிறது ..
தோல்வியுற்றாலும் அம்முயற்சியை பாராட்டவே தோன்றுகிறது..
பழசையெல்லாம் கெடாசவும்
புதிய கதைகளில் பாதை பொங்கி செல்லட்டும்..
விற்பனையில் சாதித்தாலும் ஆர்ச்சி முன்னேற்றத்துக்கு வழிகாட்டியல்ல...
நெஜமா முடியல சார்!!!
புதுசு பக்கம் வாங்க!!!
அதெல்லாம் சொல்லி அலுத்துப் போச்சு.
Deleteஎடிட்டரு எல்லாரையும் பேலன்ஸ் பண்ணி போக நெனக்கிறாரு.
அதான் பழையன புகுதலும்...
மீண்டும் மீண்டும் அரைச்ச மாவை அரைத்தலும்...
வரிக்கு வரி உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் செனா அனா அவர்களே
Deleteவரிக்கு வரி உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் செனா அனா ஜி..
Deleteமுதன்முறையாக செனாஅனாவின் கருத்துக்களோடு ஒன்ற முடியாமல் மனசு கிடந்து அல்லாடுகிறது!
DeleteJ சாருக்குப் புத்தக விழா ஸ்டால்களின் அனுபவம் உண்டு ; செனா அனாஜிக்கு அந்த அனுபவம் இருக்க வாய்ப்புகள் குறைவே ! அங்கு வரும் "பழமை விரும்பிகளின்" அதிரடித் தேடல்களை அவர் ஒருநாள் ரசித்தால் மாத்திரமே இன்னமும் ஆர்ச்சிக்கள் & மறுபதிப்புகள் நம்மிடையே தொடர்ந்திடுவதன் காரணம் புரியும் !!
DeleteTruth to tell - ஒரேயொரு ஆண்டேனும் "NO பழசு !!" என்ற போர்டை சந்தாக்களில் மட்டுமேனுமாவது தொங்க விட எனக்கும் ஏகமாய் ஆசை தான் !! VRS வாங்கும் முன்பாய் ஒருவாட்டியாச்சும் அதற்கான வாய்ப்பும், தெகிரியமும் புலர்ந்தால் மகிழ்வேன் !
-10000😎
Deleteசெல்வம் அபிராமி @
Delete-1
வரிக்கு வரி செனா ஆனா வுடன் ஒத்து போகிறேன்.
Delete//ரத்தப்படலம் நானெல்லாம் பிரித்து பார்த்துவிட்டு உள்ளே வைத்ததோடு சரி...//
Deleteபழனிவேல்
No.7 புகளூர்.கரூர் மாவட்டம். 9344861389
Truth to tell - ஒரேயொரு ஆண்டேனும் "NO பழசு !!" என்ற போர்டை சந்தாக்களில் மட்டுமேனுமாவது தொங்க விட எனக்கும் ஏகமாய் ஆசை தான் !!
Deleteவிபரீத ஆசை சார்..
இந்தாண்டு வாழ்வில் முதல்முறையா சந்தா கட்ட தூண்டியதே கிளாசிக் மறுபதிப்பு மற்றும் வண்ண ஆர்ச்சி இதழே சார்...
பழையன கழிதல் என்ற முதுமொழி கண்டிப்பாக காமிக்ஸ்க்கு கிடையாது.
ReplyDeleteஏனென்றால் இதெல்லாம் நமது வாழ்க்கையோடவே பின்னி பிணைந்துள்ளது. அதிலும் காமிக்ஸ் வாசகர்களுக்கு பழைய சாதம் போன்றது.
எப்பொழுதுமே பிஸ்ஸா, பர்கர்னே சாப்பிட்டுகிட்டு இருக்க முடியாது சார்.
பழையதே உடலுக்கும், உள்ளத்திற்க்கும் ஆரோக்கியம்.
இதை டெம்ப்ளேட் என்று சொல்வதைவிட நமது காமிக்ஸ் கலாச்சாரம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
///எப்பொழுதுமே பிஸ்ஸா, பர்கர்னே சாப்பிட்டுகிட்டு இருக்க முடியாது சார்.///
Deleteஉண்ம! பழையதும் அளவோடு இருத்தல் நல்லது!
//பழையதே உடலுக்கும், உள்ளத்திற்க்கும் ஆரோக்கியம்.//
Deleteகாமிக்ஸ் உலகிற்கு மட்டுமே இவை பொருந்தக்கூடும் சார் ;நீங்கபாட்டுக்கு வீட்டிலே சாப்பாட்டு விஷயத்திலும் இந்தக் கோட்பாட்டை அமல்படுத்திப்புடாதீங்க !!
வீட்ல எப்பவும் பழைய கஞ்சிதான் கிடைக்குதுன்றதைத்தான் அவரு அவ்வளவு டீசன்ட்டா சொல்லியிருக்காரு சார்! :)
Delete//நீங்கபாட்டுக்கு வீட்டிலே சாப்பாட்டு விஷயத்திலும் இந்தக் கோட்பாட்டை அமல்படுத்திப்புடாதீங்க.//
Deleteஅமல்படுத்தியிருந்தாதான் ஆரோக்கியத்திற்க்கு குறைவில்லாமல் இருந்திருக்குமே சார்....
ஈ.வி.,
Delete//வீட்ல எப்பவும் பழைய கஞ்சிதான் கிடைக்குதுன்றதைத்தான் அவரு அவ்வளவு டீசன்ட்டா சொல்லியிருக்காரு சார்! :)//
அங்கே பழைய கஞ்சி கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா பழைய சோறு தாராளமா கிடைக்கும்.;-)
சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வந்தது. மதுரையில என ஞாபகம். ஒரு ஸ்டார் ஹோட்டலில் பழைய சாதம்,மோர் மிளகாய் காம்பினேஷனில், மண்பானையில் வழங்கப்படுகிறது.
Delete12 th
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஸ்பைடர் & இரட்டை வேட்டையர்கள்
ReplyDeleteஜான் மாஸ்டர்
பதின்மூன்றாம் பின்னூட்டம் ; XIII-ஐ விட்டு வைப்பானேன் சத்யா ?
Delete13ஐ போல் மறக்காமல் இருந்தால் சரிதான் ஆசிரியரே.
Deleteஒரே குண்டு 18+புவி போட்டு
தாக்குங்க. நாங்க தயார்.
என்றும் ஜெயிக்கும் சிங்கம்
எங்கள் தங்கம்
ஜேஸன் மக்லேன்.
அண்ணா அந்த புலன்விசாரணை பாகம் 2 விட்டாச்சு அதையும் சேத்துங்க.... வருங்கால அமெரிக்க அதிபர். ஜேஸன் மக்லேன்...!! வாழ்க..! வாழ்க..!
Deleteஅண்ணன் கணேஷ் அவர்களுக்கு,
Delete"என்றும் ஜெயிக்கும் சிங்கம், எங்கள் தங்கம்" என்று அழைப்பதற்கு தகுதியுள்ள ஒரே ஒருத்தர் "காமிக்ஸ் உலக சூப்பர் ஸ்டார் வேதாள மாயாத்மா" மட்டுமே என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் என்பது எனக்கும் தெரியும்.
நீங்க தாராளமா குண்டு புக்கு கேளுங்க (எனக்கு ரெண்டு காப்பி).
அதுக்காக இந்த நம்பர் பார்ட்டிய எல்லாம் என்றும் ஜெயிக்கும் சிங்கம்
எங்கள் தங்கம் ன்னு சொல்லி கூப்பிடுறது நல்லாவா இருக்கு?
2030
ReplyDeleteபழைய கிளாசிக் கதைகள் கேட்பது தொடரும்.
மறுபதிப்புக்கு மறுபடியும் மறுபதிப்பு கேட்பது தொடரும்.
கார்சன் நண்பரின் யூமா கதைகளை கேட்பது தொடரும்.
நீங்களும் அவ்வப்போது கிளாசிக் கதைகளை வெளியிட்டு எங்களை பரவசப்படுத்துவது தொடரும்.
உங்கள் கட்டைவிரல் காதல் தொடரும்.
தல தளபதி ரசிகர்களின் காரசாரமான பின்னூட்டங்கள் தொடரும்.
காமிக்ஸ் நண்பர்கள் கஷ்டப்படும் நமது காமிக்ஸ் நண்பர்களுக்கு உதவி செய்வது தொடரும்.
கென்யா வரும் வரும் என நீங்கள் சொல்வது தொடரும்.
இப்படி பல தொடரும்...
நாங்கள் தொடர்ந்து காமிக்ஸ் படிப்பது தொடரும்.
உங்கள் சனிக்கிழமை இரவு பதிவுக்காக நாங்கள் விழித்திருப்பது தொடரும்.
I am first தொடரும்.
200, 300, 400 நம்பர் போடுவது தொடரும்.
இப்படி நாங்கள் பின்னூட்டம் இடுவதும் தொடரும்.
பரணி.. ஹிஹிஹி..!
Deleteஉள்ளேன் ஐயா தொடரும் :-)
Deleteவாழைப்பூ வடைக்கான போராட்டம் தொடரும்.
Delete@ PfB
Deleteஹா ஹா ஹா! செம செம!! :))))
10 வருஷம் கழிச்சும் நான் கட்டைவிரலை கடித்துக் கிடந்தால் வீட்டாட்கள் ஏர்வாடிக்குக் கொண்டு போய் சேர்த்துப்புடுவாங்க சார் !!
DeleteMaybe அன்னிக்கு நானும் உங்களோடு சேர்ந்து, "இதை போடு ; அதை போடுன்னு" இப்போதைய ஜூனியர் / அப்போதைய எடிட்டர் கிட்டே கோஷம் போட்டுக்கிட்டு இருப்பேன் !
10 வருஷம் கழிச்சும் நான் கட்டைவிரலை கடித்துக் கிடந்தால்//
Deleteவயசெல்லாம் எல்லை இல்லீங்க சார். ஆரோக்கியத்தையும் ஸ்ட்ரெஸ்ஸையும் மட்டும் கவனமா பாத்துக்ககுங்க சார். 80+ வயதிலும் முன்னாள் முதல்வர், க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டெல்லாம் கலக்கினாங்க. அது போலவே உங்க மனதில் இருக்கும் ஹ்யுமர் சென்ஸும் காமிக்ஸ் காதலும் உங்களையும் தொடர வைக்கும்.
இதுதான் உண்மை
Delete/// வயசெல்லாம் எல்லை இல்லீங்க சார். ஆரோக்கியத்தையும் ஸ்ட்ரெஸ்ஸையும் மட்டும் கவனமா பாத்துக்ககுங்க சார்... ///
Deleteசூப்பர் ஷெரிப் அண்ணா...
ஈரோட்டு திருவிழாவில் உங்களுக்கு மட்டும் தயிர் சாதம் என்ற தடை விலக்கப்படுகிறது ..
மாமியார் உடைச்சா மண்சட்டி..!
Deleteவிஜயன் சார், இன்னும் 10 வருடம் கழித்து கால் கட்டை விரலை வாயில் வைக்க முடிந்தால் நீங்கள் 100% fit என அர்த்தம். எனவே கவலைபடாமல் உங்கள் கட்டைவிரல் காதலை தொடருங்கள்.
Deleteபரணி அற்புதம் அமர்க்களம் அட்டகாசம். தொடரும் என்று நீங்கள் சொன்னது எல்லாமே கண்டிப்பாக தொடர போவது திண்ணமே
Deleteகாமிக்ஸ் மட்டுமல்ல.. பழையதை தேடித்தேடி ரசிக்கும் மற்ற சமாச்சாரம் சினிமாவும் திரையிசையும்..!
ReplyDeleteஇன்னமும் சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி, பஸ்டர் கீட்டன், ஹெரால்டு லாய்டு போன்ற நூறு வருட பழமைகளை தேடித்ததேடி ரசிக்கிறோம்.!
மேற்கூரியவை எல்லாம் தற்போது கலரைஸ்டு செய்யப்பட்டும் டிஜிட்டல் ஆக்கப்பட்டும் கிடைக்கின்றன.!
போலவே
தமிழ் சினிமாக்களை எடுத்துக்கொண்டால் கூட
கர்ணன், உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட பல படங்களும், கேவிஎம், எம்எஸ்வி போன்றோரின் காலத்தால் அழிக்க இயலா இசைக்கோர்வைகளும் டிஜிட்டல் முறையில்
நவீனப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன.!
எனவே
காமிக்ஸிலும் இந்த முறை செயல்படுத்தப்படுவது என்னைப் பொறுத்தவரை வரவேற்க்கத்தக்கதே.!
ஆரம்பத்தில் கருப்பு வெள்ளையிலும் சாதாரண கலரிலும் வெளியான டெக்ஸ், லக்கி, சிக்பில் போன்றவை மறுபதிப்பாக வருவது மெத்த மகிழ்ச்சியான சமாச்சாரம்.!
ரிப்போர்ட்டர் ஜானி, பெர்னார்ட் பிரின்ஸ் போன்றோரும் அப்படியே.!
ஜேம்ஸ் பாண்ட் தனிக்கதை.. நோ ப்ராப்ளம்.!
மும்மூர்த்தி + ஸ்பைடர் + ஆர்ச்சி போன்றோரை அவ்வபோது அளவாக பயண்படுத்திக்கொள்ளல் நலமென்று எனக்குத் தோன்றுகிறது சார்.!
இவர்களைத் தாண்டி வேறு நாயகர்களின் மறுபதிப்புகள் பெரிதாக வெற்றிபெறுமா என்று சொல்லத் தெரியவில்லை..!
இது பேச்சு!
Delete//பழையதை தேடித்தேடி ரசிக்கும் மற்ற சமாச்சாரம் சினிமாவும் திரையிசையும்..!//
Deleteசினிமா பற்றித் தெரியலை ; ஆனால் இசை - oh yes !!
அருமையான பார்வை கண்ணா நீங்கள் அசத்துகிரீர்கள்.
Deleteநன்னி குமார்..!!:-)
Deleteஇசை என்றால் இளையராஜா. மனதில் உள்ள கவலைகளை போக்க சிறந்த மருந்து எப்போதும் எங்கள் இளையராஜாவே.
Deleteகண்ணா @ ரொம்ப யோசித்து சரியாக எழுதி இருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.
Delete///இசை என்றால் இளையராஜா. மனதில் உள்ள கவலைகளை போக்க சிறந்த மருந்து எப்போதும் எங்கள் இளையராஜாவே.///
Deleteஉண்மைதான்.!
ஆனால் நமக்கு காமிக்ஸ் என்ற கூடுதல் வைட்டமினும் கிடைச்சிருக்கு.!
20 வருடத்திற்கு முன்பே எனது ஆஸ்தான டெய்லர் சொன்னார். பேஷன் எப்படியோ வரும் போகும் நீங்க உங்களுக்கு Fit ஆகிற மாதிரியான pant போடுங்கனு அத தா இன்றும் கடை பிடிக்கிறேன்
ReplyDeleteஅந்த மாதிரி எத்தன கிநா வந்தாலும்
பழங் காமிக்ஸ் மாரி வருமா
உங்க டெய்லரின் ரோசனை ஓ.கே. தான் சார் ; ஆனால் 20 வருஷங்களுக்கு முன்னே குடுத்த அதே அளவை வைச்சுட்டு இப்போவும் துணி தைத்துப் போட்டுக்க நினைப்பதில் தான் சிக்கலே ! ஒருக்கால் - என்றும் மார்கண்டேயனா இருக்கீங்களா - என்னவோ !!
Delete,🤩
Deleteஇன்னும் பத்து வருடங்களில் பழைய டெக்ஸ், லக்கி, சிக்பில் போன்றலை மறுபதிப்பு செய்யப்பட்டு விட்டால் ..
ReplyDelete2030 ல் விரும்பிக் கேட்கும் மறுபதிப்பாக ரிப்போர்ட்டர் ஜானி இருப்பார் சார்.!
அந்த இரத்தக் காட்டேரி மர்மம் உள்ளிட்ட திகிலில் வெளியான கதைகளை வரிசையாக.. வருடத்திற்கு இரண்டாக.. ம்..ம்ம்..ம்ம்ம்...!!
ஹை !! ஜானிக்கு வந்த வாழ்வு !!
DeleteHi..
ReplyDeleteமாக்ஸி சைசில் லக்கி லூக்கை பார்த்தது மிகப்பெரிய சந்தோசத்தை அளித்தது.!
ReplyDeleteஅடுத்து கிட் ஆர்டினையும் இந்த வருடம் மாக்ஸியில் பார்க்கப்போகிறோம் என்பது பேரானந்தத்தை தருகிறது.!
அது பழசோ புதுசோ..
லக்கியும் ஆர்டினும் டெக்ஸும் வரணும்.. வந்துக்கிட்டே இருக்கணும்.. அம்புட்டுதேன்.!
இது இது இது பேச்சு!
Deleteமாக்ஸி சைஸில் மாடஸ்டி... விட்டுட்டீங்களே!
Deleteமாக்ஸியில் மாடஸ்டி.. 😍😍😍😍
Deleteமாக்ஸி சைசுல வந்தா மட்டும் உங்க மாடச்சிட்டி ஆளை மாத்திடவா போவுது..
Deleteஅதே ரிட்டயரான.. பின்னந்தலையில மட்டும் கொஞ்சோண்டு நரைமுடியிருக்குற.. முதியோர் கல்லூரி ஆசாமிகளோடதான் சிப்ட் போட்டு விடுமுறையை கழிக்கப் போவுது..!
அதுக்கு இருக்குற சைஸே போதும்.. போங்க சார்ஸ்..!!
மேற்கூறிய கருத்து என்னோடது இல்லீங்கோ...
Deleteகார்வின்னு ஒருத்தரு பூட்டி இருக்குற டாஸ்மாக் வாசல்ல குந்திக்கிட்டு புலம்பிட்டு இருந்தாரு..!
அனுபவம் புதுமை ..அவரிடம் கண்டேன்...
DeleteKok.Sir, கண்டனக்குரல் வந்ததால மாடச் சட்டி மாடச்சிட்டி ஆகிட்டுது போலிருக்கு!
Delete///கண்டனக்குரல் வந்ததால மாடச் சட்டி மாடச்சிட்டி ஆகிட்டுது போலிருக்கு!///
Deleteஅதெல்லாம் ஒண்ணுமில்லீங் சார்.! ஏதோ கைக்கு வாரதை எழுதுறதுதான்..!!
அதுமட்டுமில்லாம அந்த கண்டனத்தை தெரிவிச்சவரு என்ற ஒண்ணுவிட்ட பெரியப்பாருதான்.. அதனால நோ ப்ராப்ளம்.!
அப்புறம் இன்னொரு முக்லீமான சமாச்சாரம்.!
பழைய படங்கள், பழைய நடிகர்கள், பழைய பாட்டுகள்னு பேசுறதால என்னை வயசானவன்னு நினைச்சி KoK Sirனு சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.!
எனக்கு இருபத்தியேழு வயசுதான் சார் ஆகுது.! மாடசுட்டி புடிக்காம லக்கி, கிட் ஆர்டின்னு புடிக்கும்போதே நான் சின்னப்பையன்தான்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்.. பரவாயில்லை.!
இனிமே வெறுமனே KOK இல்லேன்னா கண்ணா ன்னு மட்டும் சொல்லுங்க சார். சந்தோசப்படுவேன்.! :-)
கண்ணா @ நீங்கள் பள்ளிக்கூட வாத்தியார் என நினைத்து "சார்" என எழுதிவிட்டார். இதுக்கு இப்படி கவலைப்பட்டு தலைவர் பரணி மாதிரி இப்படி பக்கம் பக்கமாக எழுதனுமா :-)
Deleteமாக்ஸியில் மாடஸ்டி// இந்த தாத்தாக்கள் தொல்லை தாங்க மிடில. ஆயாவை மினி, மிடி லயே பாக்க முடியலே. இதுல மாக்ஸில வேறயே? பத்தாதுக்கு எடிட்டர் வேற மிச்சம் இருக்கிற பெல பாட்டத்தையெல்லாம் ட்ரெஸ் தைச்சு போட்டுடுவாரு. நான் வரலை இந்த விளையாட்டுக்கு. 🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️
Deleteஆர்ச்சி சத்தியமா முடியில சாமி.கம்மி விலை வடிவமைப்புக்காக வாங்கினேன்.
ReplyDeleteஅவ்வளவு தான்.
புது கதைகள் ஆர்ட் பேப்பரில் மட்டுமே என்ற கொள்கை தளர்த்தி சாதாரண பேப்பரில் வந்த்தால் நலம் சார்.
//புது கதைகள் ஆர்ட் பேப்பரில் மட்டுமே என்ற கொள்கை தளர்த்தி சாதாரண பேப்பரில் வந்த்தால் நலம் சார்.//
Deleteஏன் சார் - முதுகில் மத்தளம் கொட்ட காரணம் கிட்டலைன்னு ஆதங்கமா ? ஒரேயொரு புக்கை மட்டும் நான் ஆர்ட்பேப்பர் அல்லாத ரெகுலர் தாளில் அச்சிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் - அதை பார்த்த பிற்பாடு ஆங்காங்கே பழைய சப்பல்களுக்குக் கடும் பஞ்சம் நேரும் !
தயாரிப்புசார் சமாச்சாரங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஏகமாய் லாஜிக் & அனுபவப்பாடங்கள் உள்ளன சார் ! அந்தப்பாட்டை என்னிடம் விட்டு விடுங்களேன் - ப்ளீஸ் ?
\\ஆர்ச்சி சத்தியமா முடியில சாமி.\\
DeleteSame blood.
முதன் முதலா பாக்கட் சைசுல எத்தனுக்கு எத்தன் r டாக்டர் டக்கர் புத்தகத்தை வாங்கின மகிழ்ச்சி
ReplyDeleteகவுண்டர் சொன்ன மாரி கோடி ருவா கொடுத்தாலும் - ....
கோடி ரூவா கொடுத்தாலும் ஆறு மணிக்கு மேலே அவற்றை படிக்க முடியாதா சார் ? :-)
Deleteஅந்த சந்தோசம் கிடைக்காதுனு சொல்ல வந்தேங்க சார்
Delete2030லலும் நம் அதிகாரி கோலோச்சுவார் புது புது களம் மற்றும் கதைகளுடன்.
ReplyDelete"பாயசம் போடுறேன்...கஞ்சி போடுறேன்னு" ஒருத்தர் மிரட்டிக்கினேவும் இருப்பார் !!
Deleteவிற்பனையில் சுணக்கம் காட்டும் கதைகளை கடாசுங்கள்...
ReplyDeleteகட்டையில் கிடத்தும் வரையிலும் காமிக்ஸ் காதல் கரையாது.
ReplyDeleteசெம & உண்ம!
DeleteWow !!
Deleteஸ்பைடர்
ReplyDeleteஆர்ச்சி
நார்மன்
ஜான் மாஸ்டர்
க்ராண்டேல்
இரட்டை வேட்டையர்
மாடஸ்டி
ப்ரூனோ பிரேசில்
ரிப் கெர்பி
மாண்ட்ரேக்
வேதாளர்
பஸ் சாயர்
........
........
பேரக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்ல....
"ப்ருனோ பிரேசில்" ; "மாடஸ்டி" - பெயரைக் கேட்டால் 25% ஸ்டிக்கரும் அதிருதே சார் !!
Delete/// "ப்ருனோ பிரேசில்" ; "மாடஸ்டி" - பெயரைக் கேட்டால் 25% ஸ்டிக்கரும் அதிருதே சார் !! ///
Deleteஉண்மைகள் பல நேரம் சுடவே செய்கின்றன..
ஹைய்யா புதுப் பதிவு.......
ReplyDeleteClassic 50% and New 50% Editor sir
ReplyDeleteசீக்கிரமே எனக்கு ஒய்வு கொடுக்கத் தீர்மானமா சார் ?
Deleteவலேரியன் அண்ட் லோரைன்..விண்வெளி மற்றும் எதிர்கால...ஆபாச வீச்சம் அதிகமில்லா கதைகள்..தேவை சார்..
ReplyDeleteபவுன்சர் படலம் சார் ?
Deleteபடலம் னு எது வந்தாலும் நம்பள்க்கி ஓகே சார்....😊😊😊
Deleteநமது ஆன்லைன் ஆர்டர் சேல்ஸ் செம்மையாய் சூடுபிடித்திருக்கும் 2030ல்..
ReplyDeleteதேர்ந்தெடுத்து வாங்க ஏகப்பட்ட சாய்ஸ் காணக்கிடைக்கும் தமிழில்.. இளவட்டம் விர்ச்சுவல் மாயையிலிருந்து விடுபடத்தான் வழியைக் காணோம்.. அவ்வாறு விடுபட்டு புத்தகங்களைப் புரட்டுபவர்களையே இப்போது நம்மை இளவட்டம் பார்ப்பது போன்று விசித்திரமாக பார்க்கத் துவங்கியிருப்பார்கள்...
// நமது ஆன்லைன் ஆர்டர் சேல்ஸ் செம்மையாய் சூடுபிடித்திருக்கும் 2030ல்..
Deleteதேர்ந்தெடுத்து வாங்க ஏகப்பட்ட சாய்ஸ் காணக்கிடைக்கும் தமிழில் //
+1
பேண்ட்களின் விசாலம் சபக்கோவென்று வற்றிப் போய் tights ஆயின//
ReplyDeleteநாங்கெல்லாம் இப்ப அதே பேண்டை தலை கீழா போட்டுக்கறோம் சார். ஏன்னா தொப்பை பெருத்துடுச்சு.
ஹி..ஹி...கடாவெட்டுக்களைக் குறைப்பது நலம் அமைச்சரே !
Delete@ MP
Delete:)))))
க்கும்.. 2030லயும் ஈரோட்டு மாநாட்டுல எப்பவும் போல இந்த வாலிப பசங்க மூனு நாள் கொண்டாட்டத்த தொடருவாங்க சார்..
Deleteஎன்ன அப்பமட்டும் போன்லஸ்க்கு மட்டும் டிமாண்ட் அதிகமா இருக்கும்..
மகேந்திரன் @ :-)
Delete10% எவெர்க்ரீன் கதைகள் மறுபதிப்பு,90% புதிய கதைகள், புதிய ஜானர்கள், ஆண்டுக்கு ஒரு 100/150 புத்தகங்கள் வெளியிடுவோமா?
ReplyDeleteஆண்டுக்கு 100 /150 வெளியிடுவதில் no சிக்கல்ஸ் சார் ; அவற்றை விற்பதில் தான் விக்கல்ஸ் !
ReplyDelete90 %புதுசு மீதம் 10% பழசு. அரதப்பழசு அவ்வளவாக பிடிக்கலன்னாலும் அவற்றைப்பிடிச்ச நண்பர்கள் சந்தாக்குள்ள வர வாய்ப்பிருக்கு என்பதால் மட்டுமே.
ReplyDeleteஉண்மை தான் ஷெரீஃப். 90-10 நியாயமே
Delete65th
ReplyDeleteசார், பழைய நாயகர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு புதியவர்களை மட்டும் கொண்டாட மனது வராது சார். இன்றைக்கும் அனா, ஆவன்னா சொல்லிக் கொடுத்த வாத்தியார்களைக் கண்டால், பேசினால் ஒரு ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்குமே அதை புதிய வாத்திகளால் கண்டிப்பாக தர முடியாது.
ReplyDeleteஅந்த வகையில் காமிக்ஸ் படிக்கும் ஆர்வத்தை விதைத்தவர்களை மறப்பது நன்றன்று
10%-20% பழையவர்களையும், மறுபதிப்புகளையும் பயன்படுத்துதல் ஏற்புடையதாக இருக்கும் சார்
மாடஸ்டி புதுப் புத்தகங்கள் விற்பதில்லை. ஸ்டாக் நிறைய இருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் மறுபதிப்பாக வந்த கழுகு மலைக்கோட்டை முழுவதுமாக விற்றுவிட்டது. என்ன காரணமாக இருக்கும்.இத்தனைக்கும் புது புத்தகத்தை விட கழுகு மலைக்கோட்டை விலை அதிகம். 2030 இல்ல சாகும் வரை மறுபதிப்பு கேட்டுக்கொண்டே தான் இருப்போம்
ReplyDeleteவண்ணத்தில் ; பாக்கெட் சைசில் என்ற ஒரே காரணம் தான் சார் ! அதுவும் வழக்கம்போல black & white -ல் வெளிவந்திருப்பின் - கிட்டங்கியை குஷிப்படுத்திக் கொண்டிருந்திருக்கும் !
Deleteமற்றும் ஒரு முக்கிய காரணம்... அருமையான கதை மற்றும் இருவரின் ஆழமான நட்பை காட்டும் கதை.
Delete///வெளியிடுவதில் no சிக்கல்ஸ் சார் ; அவற்றை விற்பதில் தான் விக்கல்ஸ்///
ReplyDelete:)))))
71வது
ReplyDeleteஎதிர்பார்ப்பு எந்த அளவு உள்ளதோ ஏமாற்றத்தின் அளவும் அதை பொருத்தே. ஒரு குழந்தையை குஷி படுத்த குருவி ரொட்டி போதும், ஆனால் மனைவியரை குஷிப்படுத்த 10 பௌவுன் தங்கம் தேவைப்படும். குழந்தை(மனசு)யாக இருந்தால் நாம் குஷியாக வாய்ப்பு ரொம்ப ரொம்ப அதிகம்
ReplyDeleteClassic கதைகள் வந்த காலகட்டங்களை மனதில் வைத்து, இக்கால கதைகளுடன் compare செய்யாமல் படித்தால் ரசிக்க வைக்கின்றன. பழைய சோற்றில் லெக் பீஸ் தேடினால் பிம்பிளிக்கி பிளாப்பிதான்.
அந்த காலத்தில் ஹிட் அடித்த கதைகளை மட்டுமே தேடாமல், கமல் படம் மாதிரி Ahead of its time வெளிவந்த புஸ்ஸான கதைகளை தேடி மறூபதிப்பு செய்ய முயற்சிக்களாமெ எடிட்டர் சார்.
// பழைய சோற்றில் லெக் பீஸ் தேடினால் பிம்பிளிக்கி பிளாப்பிதான்.
Deleteஅந்த காலத்தில் ஹிட் அடித்த கதைகளை மட்டுமே தேடாமல், கமல் படம் மாதிரி Ahead of its time வெளிவந்த புஸ்ஸான கதைகளை தேடி மறூபதிப்பு செய்ய முயற்சிக்களாமெ எடிட்டர் சார். //
+1 Hope this happens in the future
2030- கிழம் டெக்ஸ் & இளம் டெக்ஸ் போல, Timetravel செய்து "டெர்மினேட்டர் டெக்ஸ்" கதைகளை டிஜிட்டல் புக்காக படிப்போம். அதில் அவர் கார்சன், கிட் & Android டைகருடன் Drone குதிரைகளில் LASER gunஉடன் வில்லன்களை வேட்டையாடுவார்.
ReplyDeleteஅப்போதும் நாம் டெக்ஸ் vs மபிஸ்டோ வெளியிடுமாறு கேட்டுகொண்டிருப்போம் :)
//மாக்ஸி சைஸில் புதிய கதைகள் எவ்வளவு பேரானந்தத்தை உருவாக்க முடியும்?//
ReplyDelete//அந்த இடத்தில் வேறு ஒரு புதிய கதை வந்திருந்தால் என்ற எண்ணமே மேலோங்குகிறது...//
+11111111
பழசோ ,புதுசோ மாசாமாசம் நிறைய காமிக்ஸ் போடுங்க சார்..அம்புட்டுதான்..
ReplyDelete( இப்ப எல்லாம் யார் வம்பு,தும்புக்கும் நாம போறதில்ல..)
///பழசோ ,புதுசோ மாசாமாசம் நிறைய காமிக்ஸ் போடுங்க சார்..அம்புட்டுதான்///
Deleteஆமாங்கோவ்.
பழசோ ,புதுசோ மாசாமாசம் நிறைய காமிக்ஸ் போடுங்க சார்..அம்புட்டுதான்.
Deleteஅனேகமாக 2030ல் புத்தகங்கள் டிஜிட்டல் வடிவில் வெளியாகும் என நினைக்கிறேன்..
ReplyDeleteடவுன்லோட் பண்ண முடியாமல்..
ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாமல்..
ஃபோட்டோ கூட எடுக்க முடியாமல்..
இருந்தால் மட்டுமே சாத்தியப்படலாம்..
டியர் எடி,
ReplyDelete2030 வரை ஆர்ச்சி, இரும்புகை இதழ்கள் மறுபதிப்புக்கு மிச்சம் இருக்காது என்பது நிச்சயம். அப்படி ஒரு கட்டம் வந்தால், இன்னொரு கிளாசிக் தொடரின் மறுபதிப்பை கோருவேன், ஆனால் இந்த கோட்பாடுகளுடன்:
1. கடந்த 20 வருடங்களில் வெளிவராத மறுபதிப்பு
2. மறுபதிப்பு மொத்த வருட இதழ்களில், 10 சதவிகத்துக்கும் அதிகம் இல்லாமல் இருப்பது.
3. சந்தாவில் இல்லாமல், புத்தக விழா சிறப்பிதழ்களில் மட்டும் வெளிவர ஆதரவு
சுருக்கமா சொன்னால், நமது பழைய கதைகளின் ரசிகர்கள், எள்ளவிற்கும் புதிய கதைகளை வாங்க போவதுமில்லை, படிக்க போவதும் இல்லை. எனவே ரீப்ரிண்ட் வழியே அவர்களை மீண்டும் வாசிப்பிற்கு அழைத்து வருவது நடவாத காரியம்.
எனவே கலெக்ஷனுக்கு மட்டும் வாங்கபடும் இந்த கிளாசிக் கதைகள், எண்ணிக்கையிலும், வெளியீடு முறையிலும் கட்டுக்குள் இருப்பதே, நமது புதிய கதைகளுக்கான தேடுதல்களை தொடர செய்யும்.
என்னை பொறுத்த வரை, 1000 நபர்கள் தான் என்றாலும், புதிய கதைகளை விரும்பி படிக்கும் நமது நிகழ்கால வாசகர்களே, நமது பயணம் மேலும் தொடர ஊன்றுகோல் !
// புதிய கதைகளை விரும்பி படிக்கும் நமது நிகழ்கால வாசகர்களே, நமது பயணம் மேலும் தொடர ஊன்றுகோல் ! //
Deleteஉண்மை.
//நமது பழைய கதைகளின் ரசிகர்கள், எள்ளவிற்கும் புதிய கதைகளை வாங்க போவதுமில்லை, படிக்க போவதும் இல்லை.//
Deleteஅது ஒவ்வொரு புத்தக விழாவிலும் நிரூபணமாகிடும் நிஜமே சார் ! ஓசியாய்க் கொடுத்தாலும் அவர்களது ஆதர்ஷ நாயகர்களைத் தவிர்த்து வேறு புக்குகளைத் தொடக்கூட அவர்கள் தயாராய் இருப்பதில்லை !
திருச்சியில் ஒரு பிரபல பஸ் நிறுவன அதிபர் குமுதத்தில் வந்த அரசு பதில்களில் ஜெராமையாவை பற்றி எழுதிஇருந்தார் அதைபடித்த அவர் நமது அலுவலகத்துக்கு போன் செய்து கேட்டபோது திருச்சி ஏஜென்ட் ஆன எனது என்னைக்கொடுத்தார்கள்...அவர் என்னைத்தொடர்புகொண்டு ஜெராமையா புக் வேணும் கொண்டு வர்ரிங்களா எனக்கேட்டார்...எடுத்துக்கொண்டு கிளம்பினேன் எனக்கும் திருச்சிக்கும் 80 கிமீ..கையில் எதுக்கும் இருக்கட்டும் என மாயாவி லாரன்ஸ் ஜானி ஸ்பைடர் மறுபதிப்புகள் சாம்பிளுக்கு ஒண்ணு...மின்னும் மரணம் வண்ண இதழ்..சில கார்ட்டூன் இதழ்கள்....ஜெராமையாவை பார்த்துவிட்டு ஓகே அருமையா இருக்கு..என கூறினார். பின்பு வேறு ஏதாவது இருக்கா என கேட்க நானும் கெத்தா மின்னும் மரணம் எடுத்து வைத்தேன் வேண்டாம் வேற என என்றார் ..ஐயையோ என்னாடா இது என மறுபதிப்புகளைக்காண்பித்தேன் அந்த 80 வயதில் அவரது கண்களில் தெரிந்த பிரகாசம் வாவ்.. எல்லாத்துலையும் ஒரு காப்பி ஆர்டர்..மாடஸ்டி எல்லாம் ஒரு காப்பி...அவரது ஆர்வத்தை நமது ஆசிரியருடன் பகிர்ந்து கொள்ள நமது ஆசிரியருக்ன்கு போன் செய்து கொடுத்தேன்... சிறிது நேர உரையாடல்....அவருக்கு தனது ஹூரோக்களை திரும்ப பார்த்த மகிழ்ச்சி...எனக்கோ கல்லா கட்டியாச்சு என சந்தோஷம்...இன்றும் அவர் என்னிடம் புத்தகம் வாங்கிக்கொண்டிருக்கிரார்...முடிவா என்ன சொல்ல வர என்கிறீர்கள்....குமுதம் அரசு நமது க்ளாசிக் ஹூரோக்களை இன்றும் படிக்கிறார்....ரொம்ப நாளாச்சு இவ்ளோ டைப்பி....
Deleteமதியம் சத்திரம் பேருந்து நிலைய வசந்தபவன் சாப்பாடு பஸ்சுக்கு எவ்வளவு என கேட்டு அதையும் கொடுத்த நல்ல மனிதர்.
Delete//குமுதம் அரசு நமது க்ளாசிக் ஹூரோக்களை இன்றும் படிக்கிறார்....//
Deleteஆத்தாடி!!! பொன்வண்ணன் சார்,கஸ்தூரி மேடம்தான் அந்த பக்கம்னா இவரும் அந்த பக்கம் இருக்காரே!!
இப்போதைய அரசு "எப்பவுமே லயன்முத்து காமிக்ஸ் ரசிகர்தானாம்..2012 -லேயே அரசு பதில்கள்- லில்" காற்றில் கரைந்த கப்பல்கள் " பற்றி எழுதியிருக்காராம்..
ஆக இவரும் இந்த பக்கம்தானா?
போவட்டும்!! தமிழ் தெரியாட்டியும் பரவால்ல..நமீதா மேடத்தை புதுசு பக்கம் கொண்டு வர்றோம்!! :-)
நமீதாவுக்கு ஆங்கில XIII cinebook
Deleteவச்சுருக்கோம் சார்....
Palanivel arumugam @ அரசு பற்றி இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி! அருமை!
Deleteமறுபதிப்பு தேவை இல்லை பழைய நாயகர்களின் இது வரை நாம் வெளியிடாத கதை எவ்வளவு சொதப்பலாக இருந்தாலும் வெளியிட முயற்சி செய்யலாம். மற்றபடி புதிய நாயகர்களின் நல்ல கதைகளை வெளியிட்டு நாம் அடுத்த கட்டத்திற்கு போகலாம் மாற்றம் ஒன்றே மாறாதது
ReplyDelete// புதிய நாயகர்களின் நல்ல கதைகளை வெளியிட்டு நாம் அடுத்த கட்டத்திற்கு போகலாம் மாற்றம் ஒன்றே மாறாதது // சூப்ப ரப்பு
DeleteI could collect a lot of old books, missed ones from reprint.
ReplyDelete108
ReplyDeleteபழைய கதைகளை ரீபிரிண்ட் கேட்பது தொரும் என்றுதான் தோன்றுகிறது சார். மூத்த வாசகர்களில் பலர் 75 - 55 வயதிடைவெளியில் இருக்கிறார்கள். இவர்கலில் பெரும்பான்யரது நாட்டம் நமது அந்தநாள் ஞாபகங்களிலேதான். (மீள் வருகைக்குப் பின்னரான வெளியீடுகளில் பல ஸ்டாக் இல்லாமல் போய்க்கொண்டிருப்பதாலும், லிமிட்டெட் எடிசன்கள் பல வருவதாலும், இவற்றையும் ரீபிரிண்ட் கேட்கும் இன்னொரு தரப்பினரது கோரிக்கை 2030 இல் இன்னும் ஓங்கி ஒலிக்குமென்று நினைக்கிறேன்!)
ReplyDelete//தொரும்// >>> தொடரும்
Deleteசிறு வயதில் வாங்க முடியாமல் ஏக்கத்துடன் கடைகளில் தொங்கும் காமிக்ஸ் டைட்டிலை மட்டும் படித்த திருப்தியுடன் கடந்து சென்ற நாட்கள் பல.. இப்போது பொருளாதார வசதி இருந்தாலும் அதை வாங்க வேண்டும் என்றால் ஆர்ச்சியின் கால இயந்திரத்தில் பின்னோக்கி சென்றால் தான் முடியும் தட் இஸ் மிஷன் இம்பாசிபள்.ஒரு சில நல்ல கதைகளை வோட்டிங் முறையில் தேர்ந்து எடுத்து மீண்டும் அச்சிடலாமே என்பது எனது கருத்து..
ReplyDelete////சிறு வயதில் வாங்க முடியாமல் ஏக்கத்துடன் கடைகளில் தொங்கும் காமிக்ஸ் டைட்டிலை மட்டும் படித்த திருப்தியுடன் கடந்து சென்ற நாட்கள் பல.. ////
Deleteயெஸ் யெஸ் யெஸ்!! நான் மறுபதிப்புகளை வாஞ்சையோடு அணைத்து உச்சிமுகர இதுவும் ஒரு மிக முக்கிய காரணம்!!
This comment has been removed by the author.
Delete///வயதில் வாங்க முடியாமல் ஏக்கத்துடன் கடைகளில் தொங்கும் காமிக்ஸ் டைட்டிலை மட்டும் படித்த திருப்தியுடன் கடந்து சென்ற நாட்கள் பல..//
Deleteஎப்போதும் சென்றதையே சிந்தை செய்து
...குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா
என்ற பாரதி
மறைவாக பழங்கதைகள் நமக்குள்ளே
சொல்வதிலோர் மகிமை இல்லை
என்றும் சொன்னான் ..
குமுதம் அரசு போன்றோர் ஸ்பைடர் கதைகளை படிப்பார்களா ?
இந்த காலகட்டத்தில் நமக்கு எது தேவை என்பதை உணர்வுபூர்வமாக அல்லாமல் சிந்தனை வாயிலாக அறிதல் நலன் ..
This comment has been removed by the author.
Deleteகிரி!! நீங்கள் சொல்ல வருவது புரிகிறது!!
Deleteநீங்கள் அறியாத விஷயம் "அந்த " அரசுவும் காமிக்ஸ் ஆர்வலரான "இந்த " அரசுவும் வெவ்வேறு நபர்கள்...
// உணர்வுபூர்வமாக அல்லாமல் சிந்தனை வாயிலாக அறிதல் நலன் .. // நூற்றுக்கு நூறு உண்மை
Delete
Deleteசார், அந்த அரசுக்கு பின் சிலவருடங்கள் கழித்து அந்த பதவியை ஸ்பைடர் போலவே அதிரடியாக கைப்பற்றிய இந்த அரசுவும் என்னை போல் ஜெரேமியா ரசிகர் மட்டுமல்ல , ஸ்பைடர் ரசிகராகவும் தான் இருக்க கூடும் என்பது என் எண்ணம். ஒரு ஜெரேமியா புத்தகம் Bet. Deal Sir?
மேலும் பழையவர் காலத்தில் தான் மலைமதி காமிக்ஸ் வந்தாக நினைவு உள்ளது சார்.
Delete//இந்த அரசுவும் என்னை போல் ஜெரேமியா ரசிகர் மட்டுமல்ல , ஸ்பைடர் ரசிகராகவும் இருக்க கூடும்//
Deleteகூடும்லாம் இல்ல!! அதேதான்..மேலே நண்பர் பழனிவேல் எழுதியிருப்பதை படிக்கவில்லையா??
பழனிவேல் சொல்லிருப்பது போல் அரசு சாரின் காமிக்ஸ் காதலை பற்றி பிரபல பதிவர் ஒருவரும் தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்..
2012 - ல் கம்பேக் ஸ்பெஷல் உட்பட புல்செட்டையும் அள்ளி சென்றிருக்கிறார்..
பழசு அணியில் இருக்கிறார் என்பது 100 % ஊர்ஜிதம்..
பழசு அணியோ, புதுசு அணியோ கூட்டி கழிச்சு பாத்தா எல்லாரும் ஒரே அணிதானே.!!! :-)
பிகிலு காமிக்ஸ் முக்கியம்....!
Delete//பழசு அணியோ, புதுசு அணியோ கூட்டி கழிச்சு பாத்தா எல்லாரும் ஒரே அணிதானே.!!! :-)//
இரண்டு அணி இரண்டு அணி இருந்தாதான் சார் நல்லா விளையாட முடியும்....
சூப்பர்! சூப்பர்! டக்கர்! டக்கர்! அவர் இவ்வளவு தீவிர ரசிகராக இருப்பர் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை sir.
Deleteசாரி சார். ஆபீஸ் வேலைக்கு நடுநடுவே அவ்வப்போது நமது ப்ளாகிற்கும் வந்து கொஞ்சம் படித்து, பின் வாய்ப்பு கிடைத்தால் கமெண்டும் போட்டு விட்டு போவேன். சில சமயம் வெளிவேலையாக போனால் இங்கு வர முடியாமல் போய்விடும். அதனால் நண்பரின் கமெண்டை படிக்க வில்லை. நாமெல்லாம் ஒரே அணி என்பதில் சந்தேகமே இல்லை .Thank you சார்.
உண்மை சார். சிலசமயம் இரு அணிகளாக பிரிந்தால் தான் நமது ஆதர்ஷ ஹீரோக்களை பற்றி சொல்ல பல புது கருத்துக்கள் தோன்றும் .
DeleteSir, என்னை பொறுத்தவரை பழமை புதுமை என்றெல்லாம் பேதம் பார்ப்பது கிடையாது. ஒவ்வொன்றையும் பாகுபாடற்ற ஆர்வத்துடன் தான் படிப்பேன்.
ReplyDeleteபரபரப்பாக பேசப்பட்ட ஒரு திரில்லர் கதையை ஆங்கிலத்தில் இரண்டு பாகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவரை விறுவிறுப்பாக சென்றாலும் , ஜானி நீரோவின் “கொலைகார கலைஞனை" நினைவு படுத்தியது. மீதி பாகங்கள் எப்படியோ தெரியவில்லை.
சில கதைகளும் , ஹீரோக்களும் சாகாவரம் பெற்று, தங்களை படித்தவர்களை கவர்ந்து , அவர்களால் மீண்டும் மீண்டும் பேசப்பட்டு அடுத்த தலைமுறை வாசகர்களை தேடி சென்றடைந்து கொண்டே இருக்கும்; இருப்பர். புதியவர்களுக்கும் பிடித்து போனால் வாழ்க்கை சக்கரம் மீண்டும் சுழலும். இது ஒரு இயல்பான விஷயம் தான் என்று கருதுகிறேன் sir.
// சில கதைகளும் , ஹீரோக்களும் சாகாவரம் பெற்று, தங்களை படித்தவர்களை கவர்ந்து , அவர்களால் மீண்டும் மீண்டும் பேசப்பட்டு அடுத்த தலைமுறை வாசகர்களை தேடி சென்றடைந்து கொண்டே இருக்கும் //
Deleteஉண்மை.
+1
உண்மை தான் பரணி. சில கதைகளும் ஹீரோக்களும் சாகா வரம் பெறுவது உண்மை தான். கிரி சார் சும்மா அடி தூள்.
Deleteதங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை யுவர் ஆனர்...எந்த சட்டம் சிறந்த சட்டமோ அதை தேர்ந்தெடுத்து செயல் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்..
ReplyDeleteவிஜயன் சார், ஸ்பைடரோட இந்த கதை தமிழில் வந்து உள்ளதா? இல்லை என்றால் அடுத்த வருடம் ₹40 விலையில் கொடுங்கள். இல்லை ஏற்கனவே வந்து விட்டது ஆனால் இதுவரை மறுபதிப்பு செய்யவில்லை என்றால் அடுத்த வருடம் கொடுங்கள் :-)
ReplyDeleteTHE DRUGS & COSMETICS RULES 1945 (AMENDMENTS) மருந்துகள் & அழகுப்பொருட்கள் விற்பனை சட்டம் ( திருத்தங்களுடன்) 1945 ஷெட்யூல் H மற்றும் H1 பிரிவுகளின் படி கூறுவது என்னவென்றால் குறிப்பிட்ட மருந்துகள் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இன்றி வழங்கப்படலாகாது..
Deleteதூக்க மருந்துகளும் இதில் அடக்கம்..
ஸ்பைடர் மிகவும் வீரியமிக்க ஹிப்னாட்டிக் ( தூக்க மாத்திரை) என்பதால் உங்கள் கோரிக்கை சட்டத்திற்கு புறம்பானதொன்றாக மாறிவிடும் அபாயம் உள்ளது....:D
This comment has been removed by the author.
Deleteஇந்தியாவில் இந்த ரூல்ஸ் செல்லுபடியாகாதென சுட்டிக் காட்ட விரும்புகிறேன்..:-)
Deleteநல்ல வேளை செல்வம் அபிராமி நமது காமிக்ஸின் அசிஸ்டன்ட் எடிட்டராக இல்லை :-)
Deleteசெனா அனா அவர்களே
Deleteஇரத்தபடலம் புத்தகத்தை
படிக்காமல் வைத்து இருப்பதாக
சொல்லியிருந்தீர்கள்.
உங்களுக்கு ஏன் அந்த கஷ்டம்
என்னிடம் கொடுத்தால் மீண்டும்
படித்து பத்திரப்படுத்திக்கொள்வேன்.
மேலும் சில சமயம்
சிலபல தகல்களை கூறும்போது
என்போன்ற எளியவர்க்கும்
புரிவது போல் சொல்ல வேண்டுகிறேன்.
உங்களைப்போல அறிவாளிகள்
இங்கே இல்லை என்பதால்.
மேலும் நாங்கள் உங்களைப்போல்
மெத்த படித்தவர்கள் இல்லை.
உங்கள் விளக்கங்களை புரிந்து கொள்ளும் அளவிற்க்கு எங்களுக்கு
அறிவு பத்தாது.நாங்கள் காமிக்ஸ்
படிக்கும் சிறுவர்கள் மட்டுமே.
அலோ நான் ஏற்க்னவே அட்ரஸ் அனுப்பியாச்சு...சாரி பாஸ்...
Delete//அறிவு பத்தாது.நாங்கள் காமிக்ஸ்
படிக்கும் சிறுவர்கள் மட்டுமே.//
இங்கயும் அதேகதைதான் சார்...
//நல்ல வேளை செல்வம் அபிராமி நமது காமிக்ஸின் அசிஸ்டன்ட் எடிட்டராக இல்லை :-)//
Deleteகோடிகோடில ஒரு வார்த்தை நண்பரே....😢😢
///செனா அனா அவர்களே
Deleteஇரத்தபடலம் புத்தகத்தை
படிக்காமல் வைத்து இருப்பதாக
சொல்லியிருந்தீர்கள்.
உங்களுக்கு ஏன் அந்த கஷ்டம்
என்னிடம் கொடுத்தால் மீண்டும்
படித்து பத்திரப்படுத்திக்கொள்வேன்///
வண்ண ரத்த படலம் பற்றி சொன்னேன் கணேஷ் சார் !!
கருப்பு வெள்ளை இரத்தப்படலம் படித்தாகிவிட்டதால் மறுபடி ஏன் படிப்பானேன் என்று ?
ஆனால் அதனுடன் வந்த புலன்விசாரணை –யை –வாங்கிய வழி எப்படியோ வந்தவழி சிவகாசி என்பதால் வரிவிடாமல் படித்து மூச்சு முட்டுமளவு ஆறேழு பக்கம் விமர்சனமும் எழுதினேன் ..
///மேலும் சில சமயம்
சிலபல தகல்களை கூறும்போது
என்போன்ற எளியவர்க்கும்
புரிவது போல் சொல்ல வேண்டுகிறேன்.///
உதாரணமாக ..???????
///உங்களைப்போல அறிவாளிகள்
இங்கே இல்லை என்பதால்.///
அட போங்க சார் !! நான் அரை வாளியுமில்ல ,முழு வாளியுமில்ல , ஏன் குவார்ட்டர் வாளியுமில்ல ...ஏன் ‘’மக் ‘’குமில்ல வாலியுமில்ல ..
///மேலும் நாங்கள் உங்களைப்போல்
மெத்த படித்தவர்கள் இல்லை.///
தவறான அனுமானம் ....நானும் மெத்த ,தலையணை ,பெட்ஷீட் பத்தி படிச்சதில்ல
///உங்கள் விளக்கங்களை புரிந்து கொள்ளும் அளவிற்க்கு எங்களுக்கு
அறிவு பத்தாது.நாங்கள் காமிக்ஸ்
படிக்கும் சிறுவர்கள் மட்டுமே.///
விட்டு தள்ளுங்க கழுதையை ....அது என்ன ஒலகத்தை மாத்த போற அறிவியல் கோட்பாடா என்ன ??
///நல்ல வேளை செல்வம் அபிராமி நமது காமிக்ஸின் அசிஸ்டன்ட் எடிட்டராக இல்லை :-///
Deleteநல்ல வேளை நான் நமது காமிக்ஸின் அசிஸ்டன்ட் எடிட்டராக இல்லை :-)
ஆர்ச்சி ,ஸ்பைடர் , இன்னும் பல கதைகளை எடிட்டர் ப்ரூப் பாக்க சொன்னா நான் எங்க போவேன் ...????
ஒவ்வொண்ணியும் பலவாட்டியும் படிக்கனுமே ???
///
/// ஒவ்வொண்ணியும் பலவாட்டியும் படிக்கனுமே ??? ///
Deleteஆத்தாடி.. இது வேற இருக்கா.. நா கூட லயன் ஆபிஸுல ஏதாச்சும் வேலைக்கு போயிடலாமான்னு ரோசனை பண்ணிட்டு இருந்தேன்... 🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️
/// உங்கள் விளக்கங்களை புரிந்து கொள்ளும் அளவிற்க்கு எங்களுக்கு
Deleteஅறிவு பத்தாது.நாங்கள் காமிக்ஸ்
படிக்கும் சிறுவர்கள் மட்டுமே. ///
கேவி கணேஷ் அண்ணா..
XIII பற்றி அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து, டாக்டரேட் பட்டம் வாங்கின நீங்களே காமிக்ஸ் படிக்கும் சிறுவன்னா, இன்னும் மடசட்டியவே ச்சே மாடஸ்டிய கொண்டாடிக் கொண்டு இருக்கும் என்போன்ற சிறுவர்களை என்னன்னு சொல்லறது??? :)))
(உடனே ரெண்டு பேரு வந்து வயோதிக வாலிபர்கள் அல்லது வாலிப வயோதிகர்கள்ன்னு கிண்டல் அடிப்பாங்க.. )
///மாடஸ்டிய///
Deleteச்சே அர்த்தம் வேறயா வரும் போல இருக்கு..
மாடஸ்டியையும் ன்னு மாற்றி படிச்சுக்குங்கோ..
( இதுக்கும் ஏதாச்சும் கிண்டல் பண்ணுவாய்ங்களோ.. காமிக்ஸ் அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே.. )
செல்வம் அபிராமி @
Delete//
ஆர்ச்சி ,ஸ்பைடர் , இன்னும் பல கதைகளை எடிட்டர் ப்ரூப் பாக்க சொன்னா நான் எங்க போவேன் ...???? //
:-) ஹா ஹா
விஜயன் சார், கலர் ஆர்ச்சி மற்றும் வர இருக்கும் க்ளாசிக் மறுபதிப்பு கதைகளுக்கு ப்ரூஃப் ரீடிங் செய்ய செல்வம் அபிராமி தான் சரியான ஆள.
மாடஸ்டி கதைக்கு ப்ரூப் பாக்க நான் ரெடி.ஆனா எடி அதுக்கு பெயின்ட் அடிக்கிறதுக்கு முன்னாடி கொடுக்கணும்.ஹிஹிஹி
Deleteநன்றி செனா அனா அவர்களே.
Deleteகாமிக்ஸ் மட்டுமே உலகம் என்று
இருக்கும் என்போன்றவர்களுக்கு
எளிய விளக்கம் சாதாரண எழுத்து நடையே புரிகின்றது.
எது எப்படி இருந்தாலும் நடமாடும்
தகவல் களஞ்சியம் தங்களுக்கு நன்றி.
கணேஷ் @
Deleteகணேஷ் @
// மாடஸ்டி கதைக்கு ப்ரூப் பாக்க நான் ரெடி //
மாடஸ்டி கதைக்கு ப்ரூப் பார்க்க ஆள் தேவையில்லை, ப்ரூப் ரீடிங் செய்யதான் ஆள் தேவை :-)
சார்..அவங்கல்லாம் மாடஸ்டி கதைக்கு ப்ரூப் பாக்கட்டும். மாடஸ்டி படத்த மட்டும் எனக்கு அனுப்புங்க. நான் ப்ரூப் பாக்கிறேன்.
Deletehihihi
DeleteLife is short நண்பா..
ReplyDeleteபுதுக்கதை நிறைய படிக்கணும் நண்பா..
Reprint stop பண்ணனும் நண்பா....
அடடே நம்ம கட்சிக்கு ஆதரவு நிறைய இருக்கிறதே
Deleteஎது எப்படியோ நான் படிச்சு முடிக்காத டெக்ஸ் கதைகளில் 'ஒரு துளி துரோகம்'மும் சேர்ந்திடும் போல!
ReplyDelete20 நாட்களாக கடும் முயற்சி எடுத்தும் இன்னும் முடிக்க முடியல!
டெக்ஸ் கொடுமையே தாங்க முடியல! இதுல மா..டஸ்டி, மும்மூர்த்திகள் வேற?
கைரேகையை வைத்தே நமது மொத்த சரித்திரத்தையும் "ஆதார்" மூலமாக தெரிந்து கொள்ளக் கூடிய இந்தக் காலத்தில் நாம் கொண்டாடி தீர்க்கும் XIII யே தமாஷாக தான் தெரியும் புதிதாகப் படிப்பவர்களுக்கு!
கல்கி, கௌபாய் போன்றவை சரித்திரக் கதைகள் என்பதால் அவை என்றும் ரசிக்கக் கூடும்! (தனிப்பட்ட முறையில் எனக்கு டெக்ஸ்னாவே அலர்ஜி)
ஆனால் கம்ப்யூட்டர் கால கதைகள் எல்லாம் ஐந்து வருடம் கடந்து விட்டாலே அவுட் ஆஃப் ட்ரென்டு ஆகிவிடும்!
// 20 நாட்களாக கடும் முயற்சி எடுத்தும் இன்னும் முடிக்க முடியல! // மிதுன் ஹிஹிஹி
Delete//அடுத்த ஐ.நா.சபைச் செயலாளர் அண்ணன் பதிமூன்றுக்கு ஜெ !!"//
ReplyDeleteஅமெரிக்க அதிபருக்கே எங்க தல டஃப் கொடுப்பார் சார்...என்ன இப்படி சொல்லிட்டிங்க....
பாஸ்,
Deleteஐ.நா.சபைச் செயலாளர் ஆகுறதுக்கு முதல் தகுதி "கிழவனாக" இருக்க வேண்டும் என்பதே.
உங்க 13 ஆம் நம்பர் பார்ட்டிக்கு வசதி எப்பூடி ?
என்றும் மார்கண்டேயன் எங்க தலைவர்....
Deleteபாஸ் அப்பூடீன்னா உங்க என்றும் 'பதிமூனு' வயசு மார்க்கண்டேயன்
Deleteஐநா சபைல ஆபிஸ் பாயா கூட ஆக முடியாது!!!!!!!!'
//பழையன கழிதல் என்ற முதுமொழி கண்டிப்பாக காமிக்ஸ்க்கு கிடையாது.//
ReplyDeleteபழையன கழிதல் என கூறுவது தேவையில்லாத குப்பைகளுக்குதான் பொருந்தும் நமது காமிக்ஸ்கள் ஒன்றும் குப்பைகள் அல்ல.. அந்த பழையவை இல்லாமல் இந்த புதியவைகள் கிநா ரசணையில் முதிர்ந்தோர் என பட்டம் நான் ஒலக காமிக்ஸ் ரசிகன் என காலரைத்தூக்கிவிட்டுக்கொள்ள முடியாது நண்பர்களே...எனது ஓட்டு (பழையதுஎனகூற வேண்டாம் ) கிளாசிக் ஹூரோக்களுக்கு எப்போதும் உண்டு....
உங்கள் கேள்விகளுக்கு பதில் Quite simple sir. அனைத்து பழைய புத்தகங்களையும் சேமித்து வைத்துள்ள/படித்து விட்டவர்கள் are AGAINST REPRINTS. மற்றவர்கள் அனைவரும் ஒரே அணியில். இது லாஜிக் பார்க்கும் விஷயமே அல்ல. 😔😌😣😔🙄
ReplyDeleteஅன்புள்ள விஜயன் அவர்களுக்கு,
ReplyDeleteநீங்கள் கூறும் புதியது மட்டும் என்பது சுலபத்தில் நடக்காது என்றே தோன்றுகின்றது!
ஆனால் ஒரு வருடம் ஒரே வருடம் முழுவதும் புதிய நாயகர்கள்,புதிய களங்கள் என்னும் என் கனவும் சாத்தியமாவது பெரும்பான்மை ஓட்டுகளை பொறுத்தே!
அந்த ஒரு வருடம் முழுவதும் வரும் அனைத்து புது முகங்களும் / புத்தகங்களும் வெற்றியும் பெற்று விட்டால் அது உங்களுடைய வாழ்நாள் சாதனையாகும் விஜயன் சார்!
நான் / நாம் படிக்க வேண்டிய கதைகளும் களங்களும் மிக அதிகம்!
விஜயன் சார், நீங்கள் விரும்பும் படி ஒரேயொரு வருடம்; மட்டும் எந்த (டெக்ஸ், லக்கி, க்ளாசிக், மாக்ஸி புத்தக கதைகளும் அடங்கும்) ஒரு மறுபதிப்பும இல்லாமல் புதிய கதைகளை கொடுங்கள். அதுவும் முடிந்தால் வரும் 2021ல்லேயே.
ReplyDeleteகடந்த வருடம் மும்மூர்த்திகள் இல்லாமல் வந்த போது மற்ற கதைகளை ரசிக்கத்தான் செய்தோம்.
ஒரு வருடத்தில் மறுபதிப்பாகி வரும் கதைகளின் எண்ணிக்கை சில வருடங்களாக குறைவுதான். எனவே அவைகளை ஒரு வருடம் மட்டும் விட்டுக்கொடுத்து புதிய கதைகளை ரசிக்க ரெடி.
நண்பர்களே ஒரே ஒரு வருடம் இதனை முயற்சிக்க ஆசிரியருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போமே.
நமது பல காமிக்ஸ் கனவை நிறைவேற்றிய ஆசிரியரின் கனவை நனவாக்க நாம் தோள் கொடுக்கும் நேரமிது நண்பர்களே.
+1000
Deleteமறுபதிப்புகளை மட்டும் தனி சந்தாவாக போடலாமே பரணி சார்.. பழைய கதைகளை விரும்புவர்களை ஏமாற்ற வேண்டாமே..
Deleteகாமிக்ஸ் வராமல் இருந்த காலமும் உண்டு, மறுவருகைக்கு பின் க்ளாஸிக் கதைகள் மறுபதிப்பாக கிடைக்குமா என காத்து கிடந்த நாட்களும் உண்டு, அவைகளை வசந்த காலமாகியவர் நமது ஆசிரியர்!
Deleteஒரே ஒரு வருடம் ஆசிரியருக்காக இதனை விட்டு கொடுக்கலாமே சந்தோஷ் ?
This comment has been removed by the author.
ReplyDelete😊😊😊😊
Deleteபாஸுக்கு என்ன ஒரு சந்தோசம்!!!
Deleteநான் delete செய்தது repeated comment.
அவ்வளவுதான்.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
குமைச்சல் இல்லை செல்வம் அபிராமி பழையது என்பதை விட availability என்ற கோணத்தில் பாருங்கள்..பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை வாசகர் ஆதரவு காரணமாகத் (6 decades)பல்வேறு காலகட்டங்களில் இதே நாவலை கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டு இன்றைய generations கேட்டாலும் கிடைக்கும் வன்னம் இருக்கிறது..சரி வேறு எந்த வகையில் ஒரு சில பழைய நல்ல காமிக்ஸ் இன்றைய பிற வாசகர்களுக்கு கிடைக்க செய்ய முடியும் என்று கூறுங்கள்?
ReplyDeleteஅருமையான, நியாயமான கேள்வி!
Deleteபுலவர்களே....அவரவர் பார்வைகளில், அவரவரது நியாயங்கள் கணிசமாய்த் தென்படுவது இயல்பே ! சற்றே பொறுமையாய், தொடரவுள்ள சமாச்சாரத்தைப் படித்த பின்னே இந்த விஷயத்தை அணுகிப் பாருங்களேன் - எதிர்தரப்பின் வாதப்பின்னணி ஸ்பஷ்டமாய்ப் புரிந்திடும் !
Deleteஇந்த ஒற்றைக் கேள்விக்கு மாத்திரம் பதில் ப்ளீஸ் :
நாமுமொரு பதிப்பகமே ! ரெகுலராய் இதழ்களை / புக்குகளை வெளியிட்டு வருகிறோம் தான் - ஓ.கே. ! அப்படியிருக்கும் போது நம்மை Magazine Publisher என்று சொல்வீர்களா - அல்லது Book Publisher என்பீர்களா ? Magazine (பத்திரிக்கை) வெளியிடுவோருக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தினில், குறிப்பிட்ட இதழ்களைக், குறிப்பிட்ட விலைகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடும் அவசியம் இருக்கும் !
ரைட்டு...அந்த வர்ணனையை அளவுகோலாக்கிட்டால் - நாமும் குமுதம், குங்குமம், விகடன் போலொரு magazine தான் ; மாதாமாதம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இதழ்களை ஒரே குறிப்பிட்ட template களில் ; சீராக வெளியிடுவதால் ! இப்போது சொல்லுங்களேன் - நகன்று கொண்டேயிருக்கும் இந்த magazines எவையேனும், தம் பக்கங்களில் ஹிட்டடித்த தொடர்களை ; கதைகளை - திரும்பத் திரும்பத் தலைகாட்ட அனுமதிக்கின்றனவா என்று ! சாண்டில்யனின் ஹிட்ஸோ ; சுஜாதாவின் ஹிட்ஸோ ; அப்புசாமி-சீதாப்பாட்டியின் ஹிட்ஸோ - ஒருவாட்டி சாதித்துக் காட்டுவதோடு அவற்றின் பணி முடிந்து விடுகின்றன - magazines களைப் பொறுத்தவரை !
So பதிப்புலகினில் தொடர்வது என்னவெனில், magazine களில் சாதித்த கதைகள், பின்னாட்களில் Book Publishers கைக்குப் போகின்றன ; அல்லது விகடன், நக்கீரன் போல அவர்களே சொந்தமாய் நடத்திவரும் books பிரிவுக்குச் செல்கின்றன ! அங்கே, விலை சார்ந்த கட்டுப்பாடுகளோ ; வெளியீட்டுத் தேதிகள் சார்ந்த கெடுபிடிகளோ இன்றி, வசதிப்பட்ட தருணத்தில், சொகுசான விலைகளோடு வெளிவந்து, புத்தகக் கடைகளிலும், புத்தக விழாக்களிலும் மக்களை எட்டிட முனைகின்றன !
ஆக நம்மையும் ஒரு Magazine போலப் பார்த்திடுவோருக்கு - 'பழசோடு ஓயாது சல்சா நடனம் ஆட என்ன அவசியம் வேண்டிக்கிடக்கு ? அது தான் போட்டாச்சே ; படிச்சாச்சே ; நடையைக் கட்டலாமே ?! என்ற எண்ணம் தோன்றிடலாம் !
ஆனால் "என்னிக்குனாலும் படிச்சுக்கலாம் ; எப்போனாலும் படிச்சுக்கலாம் - so நீயொரு புக் தான் ; பத்திரிகை இல்லை !" என்று கருதக்கூடிய நண்பர்களுக்கு - ஹிட்டான இதழ்கள் (அவை பழசாக இருந்தாலும் சரி, புதுசாக இருந்தாலும் சரி) எந்நேரமும் கிடைக்கணும் ; ரீபிரிண்ட்கள் தொடர்ந்திடவே செய்யணும் !என்ற எண்ணம் தோன்றுவது இயல்பே !
So நீங்கள் எவ்விதம் நம்மைப் பார்த்திடுகிறீர்கள் என்பதனைப் பொறுத்தே இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்திடுகின்றன என்பது எனது அபிப்பிராயம் !
நடைமுறைச் சிக்கல் என்னவெனில், இந்த காமிக்ஸ் வாசிக்கும் வட்டமானது ஏகச் சிறுசு எனும் போது - ஊடகமாய் நடத்திடவொரு குழுமம் ; அப்பாலிக்கா புக்குகளாக்கி வெளியிடவொரு குழுமம் என்பதெல்லாம் not possible !
So ராஜாவும் நாமே ; கூஜாவும் நாமே ; we seem like magazines ; yet we are books too !! And vice versa as well !! இயன்றமட்டுக்கு பழசுக்கும், புதுசுக்கும் மத்தியில் ஒரு நெருடலிலா கோட்டைப் போட்டுக் கொண்டு ; இயன்ற மட்டுக்கு இரு தரப்பையும் குஷிப்படுத்தும் அவாவில், இயன்ற மட்டுக்கு இரு தரப்பிலிருந்தும் தாராளமாய்ச் சாத்து வாங்குவோரே நாம் ! So இங்கே தப்பு-ரைட்டு என்பதெல்லாம் அவரவர் மண்டைக்குள் உள்ள சமாச்சாரங்களேயன்றி, பொது விதிகள் என்று கொள்ளல் சுகப்படாது !!
பழசுக்கும், புதுசுக்கும் மத்தியில் எங்கே கோடு கிழிப்பது என்பதை 50 % நிர்ணயிப்பது வியாபார நிர்ப்பந்தங்கள், என்றால் உங்களின் விருப்பு-வெறுப்புகள் இன்னொரு 25 % & எனது choice இறுதி 25 % -ஐ ரொப்பிடுகின்றன ! அந்த 25 சதவிகிதத்தினில் தான் லடாய்களே !!
Peace புலவர்களே !!
குறும்பதிவாக இட வேண்டிய பதில்..
Deleteஅனைவரும் ஏற்றுக்கொள்ளும் பதில்..
வரவேற்கிறேன் சார்..:-)
////நம்மை Magazine Publisher என்று சொல்வீர்களா - அல்லது Book Publisher என்பீர்களா ?///
Deleteசார்.. அதுவுந்தே.. இதுவுந்தே!
எனக்கு ஒரே பப்ளிஷர்ஸ் தான் தெரியும் சார்..
Deleteஅது பீரகாஷ் பப்ளிஷர்ஸ்..:-)
இங்கே ஒரு ரத்த ஆறு ஓடவிருந்தது! நல்லவேளையாக எடிட்டரின் தலையீட்டால் பூரண அமைதி நிலைநாட்டப்பட்டு, தற்போது அது முத்த ஆறாக மாற்றம் கண்டிருக்கிறது!
Deleteபழசுக்கு ஒரு இச்சு!
புதுசுக்கு ஒரு இச்சு!
பஞ்சாயத்து முடிஞ்சிஇச்சு!
//அந்த 25 சதவிகிதத்தினில் தான் லடாய்களே !!//
Deleteஇங்க ,ஸ்டிக்கர்னு இந்த 25% சும்மா பூந்து விளையாடுதே..:-)
This comment has been removed by the author.
Deleteஅதனாலே தான் இரு தரப்புக்கும் மத்தியில் ஜமரஜம் ஏற்பட மாட்டேங்குது !! அதனாலே தான் கபாலம் வீங்குகிறது !
Delete"எத்தினி சொன்னாலும் அரைத்த மாவையே அரைக்கிறாண்டோய் !" என ஒரு திக்கிலிருந்து மத்தளம் கொட்டல் கேட்கிறது ; இன்னொரு திக்கிலிருந்து 'பழசு' இல்லாங்காட்டி 'பவுசு' இல்லேண்ணே !! என்று முரசு ஒலிக்கிறது !
இந்த ஆண்டுக்கான அட்டவணையை தயார் செய்யும்போது எடிட்டர் சார் போட்ட பதிவில் நமது ரசனை/பட்ஜடுக்குட்ட புதிய நாயகர்கள்/ தொடர்கள் "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்கிற ரீதியில் குறிப்பிட்டுருந்தார். So "Only புதூசு" நமது பட்ஜெட்டில் சுமார் கதைகள்தான் கிட்டும்.
ReplyDeleteவெஸ்டர்ன் ஜானரில் கதைகளுக்குப் பஞ்சமே நஹி சார் & கிராபிக் நாவல்களிலும் ஏகமாய்க் குவிந்துள்ளன ! நமக்குத் தான் தெகிரியமும், பொறுமையும் தேவை - அவற்றை பரிசீலிக்க !
Deleteசிக்கல் எழுவது (நமக்கு ரசிக்கும்) கார்ட்டூன் பாணிகளிலும், டிடெக்டிவ் ஜானரிலும் தான் சார் ! அங்கு தான் கதைத் தேர்வினில் மல்லுக்கட்ட நேரிடுகிறது !
எடிட்டர் சார், நீங்க லயன்/முத்துன்னு போட்டு என்ன காமிக்ஸ் வேணும்னாலும் போடுங்க. வருடம் தவறாமல் என்பங்கு சந்தா தொடர்ந்து கொண்டே இருக்கும்.
Deleteசிக்கலே அங்கே தானே சார் ; கண்மூடி நீங்கள் நம்பிக்கை வைக்கும் போது கண்களை இன்னமும் அகலத் திறந்தல்லவா நான் செயல்பட வேண்டிப் போகிறது ?!
Deleteநம்பிக்கை தானே எல்லாம்..
Deleteதாங்கள் தொடர்ந்து கொண்டே செல்லுங்கள் சார்..
நாங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம்..:-)