நண்பர்களே,
வணக்கம். 'பழசு வேணும் ; வேணாம் !' என்ற சர்ச்சை நான் மறுக்கா 16 வயசை எட்டிப் பிடிக்கும் வரையிலும் ஓடக்கூடியதே என்பதால், ஆவேசப்பட்டு சாலமன் பாப்பையாவாகி, தீர்ப்பென்று எதையாச்சும் சொல்லி வைத்து அப்பாலிக்கா ஆப்பில் அமர்ந்த ஐயாவாகிட இஷ்டமில்லை ! So "லட்சியம் முழுசும் புதுசு ; நிச்சயம் 90% - 10% " என்று தேர்தல் அறிக்கை பாணியில் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன் ! 2021 இன்னமும் ஏக தொலைவில் இருப்பதால், நடப்பாண்டின் போக்கில் யோசித்துக் கொள்ள அவகாசம் தான் கணிசமான உள்ளதே ! So இப்போதைக்கு Forward Ahoy !! என்று காத்திருக்கும் புது இதழ்கள் பக்கமாய்க் கவனங்களைத் திருப்புவோமா ?
மார்ச்சின் சந்தா A சார்பில் அதிரடி மேளா ஒன்று காத்துள்ளது - DAMOCLES டீமின் மறுவருகையோடு ! இந்தத் தொடரை மட்டும் இரண்டே டபுள் ஆல்பம் தொகுப்புகளோடு மங்களம் பாடிடும் விதமாய்ப் படைப்பாளிகள் திட்டமிடாது இருப்பின், LADY S சாதிக்கத் தவறிய அனைத்தையும் ஸ்டைலான இந்த DAMOCLES ஏஜெண்ட் சாதித்திருப்பர் - at least நம் மத்தியிலாவது ! சென்றாண்டின் ஈரோட்டு ஸ்பெஷல் இதழ்களுள் ஒன்றாய் அறிமுகமாகி, "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" செய்த அதகளத்தையும் தாண்டி, கவனத்தை ஈர்த்த ஆக்ஷன் த்ரில்லர் இது ! And இம்முறை துளியும் குறையா பரபரப்பு + நிறையவே மெல்லிய உணர்வுகள் + கொஞ்சம் கிச்சாங்கோ-முச்சாங்கோ பகுதிகள் - என ஒரு முழுநீள entertainer ஆகக் காத்துள்ளது "பிழையிலா மழலை !" நமது காமிக்ஸ் உலகுக்கேனும் ரொம்பவே வித்தியாசமான கதைக்கரு (!!) இம்முறை ! And அதனை சித்திரங்கள் பிரமாதப்படுத்தியுள்ளன என்றால் - கலரிங் ஆர்ட்டிஸ்ட் ஒரு புது உச்சத்தைத் தொட்டிருக்கிறார் ! புதுயுக டிஜிட்டல் கலரிங் பாணி என்பதால், அவரது கைவண்ணம் பக்கத்துப் பக்கம் வண்ணச் சிதறல்களில் தெறிக்க விடுகின்றது ! இன்று அச்சு நிறைவுற்று, இதன் உட்பக்கங்களைப் பார்த்த போது மூச்சு வாங்காத குறை தான் ; simply breathtaking stuff !! So மார்ச்சில் ஒரு visual விருந்து வெயிட்டிங் என்பேன் !! இதோ ஒரிஜினல் டிசைன்களை அப்படியே முன் & பின் அட்டைகளுக்குத் தத்து எடுத்துக் கொண்டதன் preview :
ஒரு ஜனரஞ்சக ஆக்ஷன் கதையே எனினும், கதையினூடே பயணிக்கும் மெல்லிய இணைத்தடமொன்று சற்றே நெளியச் செய்தது என்பது நிஜம் ! போன வருஷம் இதனை Cinebook ஆல்பத்தில் ; இங்கிலீஷில், அவசரம் அவசரமாய் , மேலோட்டமாய் வாசித்த போது அவ்வளவாய் கவனித்திருக்கவில்லை ! ஆனால் பேனாவோடு பயணிக்கத் துவங்கிய சமயம் லைட்டாக ஜெர்க் அடித்தது தான் ! So Recommended for 18+ என்ற ஸ்டிக்கரோடே இந்த ஆல்பம் உங்கள் கைகளை எட்டிடும் ! சற்றே கவனம் ப்ளீஸ் !
Moving on, மார்ச்சின் visual விருந்து அத்தனை சீக்கிரம் முடிவதாய் இல்லை என்பதே சேதி !! ஜம்போ காமிக்ஸ் சீசன் 2 -ன் இறுதி இதழான "நில்..கவனி..வேட்டையாடு" - இம்மாத இதழ்களுள் "கண்கவர் போட்டியில்" செம tough தந்திடக் காத்திருக்கும் முரட்டுப் போட்டியாளர் ! கதையைப் பற்றி ஒற்றை வரியில் சொல்வதானால் - இந்த இதழின் தலைப்பையே சொல்ல வேண்டி வரும் - simply becos இது முழுக்க முழுக்கவே ஒரு மனித வேட்டையின் ரணகளங்களை சொல்லிடும் ஆக்கமே ! சற்றேற 100 ஆண்டுகளுக்கு முன்பாய் கானகங்களில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவது மேட்டுக்குடிகளின் ஆதர்ஷப் பொழுதுபோக்காக இருந்திருக்கும் போலும் ! அந்தக் காலகட்டத்தில் நடைபெறும் ஒரு racy ஆக்ஷன் த்ரில்லரே இம்மாதத்து ஜம்போ !! லாஜிக் பார்த்தால் இங்கே அண்டர்வெர் கழன்று போகுமென்பது உறுதி - ஆனால் அந்த லா-ஜி-இக்கென்னா பார்க்கவெல்லாம் நேரமே இராது - முதல் பக்கத்திலிருந்து ஓட்டமெடுக்கத் துவங்கும் கதையினில் ! And இங்குமே ஒரு not so common விஷயத்தினைப் பார்த்திடவுள்ளோம் - பச்சைபசேலென்ற அமேசான் கானகப் பின்னணியில் !! Maybe கேப்டன் பிரின்ஸ் சாகசத்தில் கடைசியாய்ப் பார்த்திருப்போம் அமேசானின் அசாத்திய வனங்களை ! இங்கே கதையும், சித்திரங்களும், அந்த retro style வர்ணங்களும் போட்டி போட்டுக்கொண்டு அமேசானின் குறுக்கிலும், நெடுக்கிலும் வலம் வருவதால் - National Geographic சேனலில் ஒரு ஹாலிவுட் படைப்பைப் பார்த்த effect இருக்கப் போகிறது !! "முட்டைக்கண்ணன் ஓவரா பில்டப்பை ஏத்துறானோ ?" என்று கெக்கேபிக்கே காட்டிட விழையும் அன்பர்களுக்கு தொடரும் images சந்தேக நிவர்த்திகளாய் அமைந்திடக்கூடும் ! Here are the previews :
அட்டைப்படம் - அட்சரசுத்தமாய் ஒரிஜினலே !! என்ன ஒரே நெருடல் - முன்னட்டையில் ஐயாவும், பின்னட்டையில் அம்மாவும் வாயில் தம்மோடு காட்சி தருவது தான் !! தவிர்க்க இயலவில்லை !!
Thus end the previews of MARCH '20 !!
இங்கொரு சின்ன கவனக்கோரல் ப்ளீஸ் : இந்த ஜம்போ காமிக்ஸ் இதழானது - சீசன் 2-வின் இறுதி இதழே !! ஜம்போவின் மூன்றாவது சீசன் ஏப்ரல் முதலே துவக்கம் கண்டிடவுள்ளது ! ஆகையால் சீசன் 2-ன் சந்தாவினில் சேர்ந்திருக்கா நண்பர்கள் ; சீசன் 3-க்கு மட்டுமே சந்தா செலுத்தியுள்ள நண்பர்கள் - கண்சிவக்காதிருக்கக் கோருகிறேன் ! போன மாசமே - "அந்தியின் ஒரு அத்தியாயம்" எனக்கு வரலை !!! அது எப்படி அனுப்பாமே விட்டுப் போச்சு ?" என்று நம்மவர்களிடம் ருத்ரதாண்டவம் ஆடிய நண்பர்கள் நிறையவே ! அவர்கட்குப் பொறுமையாய் விளக்குவதற்குள் ஒரு வழியாகிப் போனார்கள் நம்மாட்கள் ! So இம்மாதமும் அதே routine வேண்டாமே - ப்ளீஸ் ?
ஜம்போ சீசன் 3 - ஏப்ரல் 2020 முதல் - "பிரிவோம்....சிந்திப்போம்" ஆல்பத்துடன் துவங்குகிறது !!
Before I sign off - சில குட்டியான updates :
- 2020-ன் சந்தாதாரர்களுக்கான loyalty points-க்கு ஈடாய் வண்ண ஆர்ச்சி புக்கா ? டி-ஷர்ட்டா ? அல்லது பாய்ண்ட்களை முன்னெடுத்துச் செல்வதா ? என்ற choice தந்திருந்தது நினைவிருக்கலாம் ! இதுவரைக்கும் 66 பேர் மட்டுமே தமது தேர்வ்களை சொல்லியுள்ளனர் ! And அவற்றுள் 63 - ஆர்ச்சி புக்குக்கு 'ஜெ' போடும் குரல்கள் ! பாக்கிப் பேர் சற்றே சிரமம் பாராது தங்களின் தேர்வுகளைச் செய்தால் - ஏப்ரலின் இறுதிக்குள் வண்ணத்தில் சட்டித் தலையனை சட்டுப்புட்டென்று ரெடி பண்ணி விடுவோம் !! Please guys ? 2020-ன் அன்பளிப்பை உங்களிடம் ஒப்படைக்கும் தினமே 2019-ன் பாய்ண்ட்ஸ்க்கான ஈடு என்னவென்பதையும் அறிவிக்க உதவிடும் !!
- புதுசாய்க் கதைகள் ; புதுசாய்ப் பரிசீலனைகள் என்று ஒருபக்கம் ஓடிக் கொண்டேயுள்ளன ! ஒரே கொடுமை என்னவெனில், சமீபமாய்க் கண்ணில் பட்டு வரும் அத்தனை கௌபாய் கதைகளுமே செம தெறியாய் இருந்து வருகின்றன ! ஓவராய் அதே ஜானரைப் பிடித்துத் தொங்கித் திரிய வேண்டாமே என்று பார்த்தாலும் - இந்தப் புதுப் படைப்புகள் ஒவ்வொன்றும் பட்டையைக் கிளப்புவதில் எதையுமே கழிக்க மனசு ஒப்ப மாட்டேன்கிறது ! "Too much of cowboys" என்று ஆகிடக் கூடாதே என்று பயந்திடுகிறது சிரம் ! என்ன நினைக்கிறீர்கள் guys ? திகட்டாத பண்டமா இந்த ஜானர் மட்டும் ?
- ஈரோட்டு ஸ்பெஷல் குறித்து உங்களின் மெஜாரிட்டி தேர்வுகள் ஒரே ரீதியில் இருந்ததைக் கவனித்தேன் ! So புதையல் வேட்டைக் கதையையும் ; அந்த அமெரிக்க க்ரைமையும் தெறிக்க விடலாமா ஒருங்கே ? 2 தனித்தனி ஆல்பங்களாய்த் தான்...!
- நடப்பாண்டின் முதல் 200 சந்தாதார்களுக்கொரு டி-ஷர்ட் நம் அன்புடன் என்று அறிவித்திருந்தது நினைவிருக்கலாம் ! அடுத்த பதிவில் அந்தப் பட்டியல் இடம் பிடித்திடும் !
இளவரசியின் black & white இதழ் மட்டுமே பாக்கி - எடிட்டிங்கை முன்னிட்டு ! So நான் அதனுள் மூழ்கிட நடையைக் கட்டுகிறேன் !! Bye all....Have a Super Sunday !! See you around !!
1st!
ReplyDeleteநானா?
ReplyDelete2nd
ReplyDelete3rd?
ReplyDeleteவந்துட்டேன் ஐயா
ReplyDeleteஉள்ளேன் அய்யா..்..
ReplyDelete7
ReplyDeleteMe too
ReplyDeletewaiting
ReplyDeleteநல்லிரவு வணக்கம்!!
ReplyDeleteEvergreen cowboys though the background is desert...
ReplyDeleteஅதே
Deleteஉள்ளேன் ஜயா....
ReplyDelete// 2 தனித்தனி ஆல்பங்களாய்த் தான்...! //
ReplyDeleteஅப்ப இரண்டுதானா? அடடே.......
எல்லாமுந்தே
DeleteXIII
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete// அடுத்த பதிவில் அந்தப் பட்டியல் இடம் பிடித்திடும் //
ReplyDeleteஹைய்யா......
// ஈரோட்டு ஸ்பெஷல் குறித்து உங்களின் மெஜாரிட்டி தேர்வுகள் ஒரே ரீதியில் இருந்ததைக் கவனித்தேன் ! So புதையல் வேட்டைக் கதையையும் ; அந்த அமெரிக்க க்ரைமையும் தெறிக்க விடலாமா ஒருங்கே ? 2 தனித்தனி ஆல்பங்களாய்த் தான்...! //
ReplyDeleteஒ எஸ். Please proceed your ஆனர் :-)
// திகட்டாத பண்டமா இந்த ஜானர் மட்டும் ? // எந்த ஜானராக இருந்தால் இரசிக்கும்படியாக இருந்தால் கெளபாயாக இருந்தாலும் தொடர்வதில் தவறில்லையே....
ReplyDeleteகளம் புதுசா இருந்தால் தாரளமாக இரசிக்கலாம்........
2020-ன் சந்தாதாரர்களுக்கான loyalty points-க்கு சாய்ஸ் வேற இருக்கா சார்??
ReplyDeleteநான் கலர் ஆர்ச்சியே அனைவருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தேன்.
மெயில் பண்ணுகிறேன் சார்.
20th
ReplyDeleteசூப்பர் பதிவு சார். அட்டகாசமான முன்னோட்டம். நான் மிக எதிர்பார்க்கும் இரண்டு புத்தகங்கள் மார்ச் மாதத்தில் இந்த முறை ஆக்சன் சரவெடி காத்து இருக்கிறது.
ReplyDeleteகௌபாய் ஜானர் எப்போதுமே திகட்டாத பண்டமே அடுத்த வருடம் இதற்கு மட்டும் ஒரு தனி சந்தா பிளீஸ்
ஈரோடு ஸ்பெஷல் இரண்டுமே ஓகே தான் சார் த்ரில்லர் and புதையல் வேட்டை
கௌபாய் சந்தா ப்ளீஸ்
Deleteஒரே ஒரு கேள்வி மட்டும் சார்
ReplyDeleteஜம்போ சீசன் -3 இன் 6 வது இதழ் பற்றிய அறிவிப்பு எப்போது?
// முதல் 200 சந்தாதார்களுக்கொரு டி-ஷர்ட் நம் அன்புடன் என்று அறிவித்திருந்தது நினைவிருக்கலாம் ! அடுத்த பதிவில் அந்தப் பட்டியல் இடம் பிடித்திடும் ! //
ReplyDeleteஅனுப்புங்க அனுப்புங்க ஈரோடு வரும் போது போட்டு அசத்தி விடுவோம் :-)
// ஒரே கொடுமை என்னவெனில், சமீபமாய்க் கண்ணில் பட்டு வரும் அத்தனை கௌபாய் கதைகளுமே செம தெறியாய் இருந்து வருகின்றன ! //
ReplyDeleteதனியாக ஒரு சந்தாவை ஏற்படுத்தி மாதம் ஒரு புத்தகம் கொடுத்தால் வேண்டாம் என சொல்ல மாட்டேன் சார். :-) ஆனால் நீங்கள் இதற்கு பதில் சொல்லும் போது பட்ஜெட் என காரணம் சொல்வீர்கள். உண்மை அது தான். முடிந்ததை செய்யுங்கள்.
முடியும்ல...முடியனும் சார்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete"நில்..கவனி..வேட்டையாடு" அட்டைப்படம் உண்மையில் செம ரகளையாக உள்ளது. பச்சை வண்ண பின்னணியில் ஸ்டைலான அந்த மனிதரின் உருவம் முற்றிலும் புதிது.
Deleteஉட்பக்க டீசரை பார்த்த உடன் மனம் புத்தகம் கையில் என்று வரும் என கேட்கிறது. அந்த கானகத்தில் இரண்டு மனித தலைகள் கம்பில் குத்தியபடி பின்னணி பச்சை நிறம் அதனை பார்த்து கொண்டு இருக்கும் நபர்கள் இருக்கும் இடத்தில் செந்நிறம் என இரு வண்ணத்தில் நைட் எஃபெக்ட் சூப்பர். அந்த செந்நிறம் எப்படி என பார்த்தால் ஏதோ நெருப்பின் ஓளி.
பரணிக்குள் ஸ்டீல் க்ளா புகுந்து விட்டாரோ?
Deleteஆஹா
Deleteபிழையில்லாத மழலை: இரண்டு பெண் புலிகள் மாதம், இந்த மாதம் வரவுள்ள இரண்டு கதைகளில் பெண் நாயகிகள், அதுவும் அட்டைப்படத்தில் முழுவதும் அவர்களே ஆட்சி செய்கிறார்கள்.
ReplyDeleteDAMOCLES - கடந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். நெருடல் இல்லை அட்டகாசமான ஆக்சனை மிகவும் ரசித்தேன்.
கதையின் தலைப்பு அருமை, அதன் காரணத்தை கதையை படித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
எப்ப புத்தகம் அனுப்புவீங்க சார் :-) இந்த வாரம் வெள்ளிக்கிழமையா அல்லது வியாழக்கிழமையா?
27வது
ReplyDelete###பாக்கிப் பேர் சற்றே சிரமம் பாராது தங்களின் தேர்வுகளைச் செய்தால் - ஏப்ரலின் இறுதிக்குள் வண்ணத்தில் சட்டித் தலையனை சட்டுப்புட்டென்று ரெடி பண்ணி விடுவோம்###
ReplyDeleteஇந்த கேள்விக்கு ஏற்கனவே பதில் அளித்து விட்டேனா என தெரியவில்லை..
நான் ஆர்ச்சி அண்ணாச்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் சார்.
மெயில் அனுப்புங்க சிவா.
DeletePfb
Deleteபண்ணிடறேன் அண்ணா.
எல எனக்கு அனுப்பினியா
Deleteஅது அனுப்பி ஒரு மாதம் ஆகுதுல மக்கா.
Deleteசூப்பர்ல
Deleteஇந்த மாதம் கார்சனின் நண்பர் கதை கிடையாது என்பதை கேட்டு ரம்மி வருத்தமாக உள்ளதாக ஊருக்குள்ள பேசிக்கிறாங்க சார்.
ReplyDeleteரம்மி சிரிப்பதற்கு வுட் சிட்டி கோமாளிகள் கதை இந்த மாதம் வருது அதனால் கவலைப்படேல் :-)
### "Too much of cowboys" என்று ஆகிடக் கூடாதே என்று பயந்திடுகிறது சிரம் ! என்ன நினைக்கிறீர்கள் guys ? திகட்டாத பண்டமா இந்த ஜானர் மட்டும் ? ###
ReplyDeleteவித்தியாசமான கதைகள் என்றால் தாராளமாக முயற்சி பண்ணலாம் சார்..
ப்ளஸ்
Delete###புதையல் வேட்டைக் கதையையும் ; அந்த அமெரிக்க க்ரைமையும் தெறிக்க விடலாமா ஒருங்கே ? 2 தனித்தனி ஆல்பங்களாய்த் தான்...! ###
ReplyDeleteஆர்ச்சிக்கு ஜே போட்ட கையோடு இதுக்கும் ஒரு ஜே..
//நடப்பாண்டின் முதல் 200 சந்தாதார்களுக்கொரு டி-ஷர்ட் நம் அன்புடன் என்று அறிவித்திருந்தது நினைவிருக்கலாம் ! அடுத்த பதிவில் அந்தப் பட்டியல் இடம் பிடித்திடும் !//
ReplyDeleteபெயர் வருமா.??? வராதா...???
பிம்பிலிக்கிபிலாக்கீ
Deleteஎனது இரு சந்தாக்களும் இருநூறு -க்குள் வருவன..
Deleteநண்பர் பழனிவேல் - க்கு 200 - க்குள் சந்தா எண்ணிக்கை வர சாத்தியக்கூறுகள் குறைவு..
எனவே எனது ஒரு சந்தாவுக்கான டி ஷர்ட்டை நண்பர் பழனிவேலுக்கு அனுப்ப எடிட்டருக்கு வேண்டுகோள் வைக்கிறேன்..
அருமை.பாராட்டுக்கள் செனாஅனா
Deleteஅவர்களே. நன்றி.
// எனது ஒரு சந்தாவுக்கான டி ஷர்ட்டை நண்பர் பழனிவேலுக்கு அனுப்ப எடிட்டருக்கு வேண்டுகோள் வைக்கிறேன்//
Deleteமிக்க நன்றி நண்பரே....தங்களது பரிசை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்...ஆசியரிடம் ஏற்க்கனவே ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். வாய்ப்பிருந்தால் எனக்கு பதிலாக எனது மகளின் size டீ சர்ட்டை வழங்குமாறு....!! ஈரோடுபுத்தக திருவிழாவை 2020 சிறப்பாக நடத்த என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்ய தயாராக உள்ளேன் நண்பரே....
செல்வம் அபிராமி # நல்ல விஷயம். பாராட்டுக்கள் உங்கள் செயலுக்கு.
Deleteபழனிவேல் # வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே...😊
Delete35
ReplyDeleteபுதையல் வேட்டைக்கதையையும் அமெரிக்க த்ரில்லரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
ReplyDelete+1000
Deleteஅப்ப கென்யா
Deleteகென்யா வயும் கேட்டு வாங்கிடலாம் ஸ்டீல்
Delete//புதுசாய்க் கதைகள் ; புதுசாய்ப் பரிசீலனைகள் என்று ஒருபக்கம் ஓடிக் கொண்டேயுள்ளன ! ஒரே கொடுமை என்னவெனில், சமீபமாய்க் கண்ணில் பட்டு வரும் அத்தனை கௌபாய் கதைகளுமே செம தெறியாய் இருந்து வருகின்றன ! ஓவராய் அதே ஜானரைப் பிடித்துத் தொங்கித் திரிய வேண்டாமே என்று பார்த்தாலும் - இந்தப் புதுப் படைப்புகள் ஒவ்வொன்றும் பட்டையைக் கிளப்புவதில் எதையுமே கழிக்க மனசு ஒப்ப மாட்டேன்கிறது ! "Too much of cowboys" என்று ஆகிடக் கூடாதே என்று பயந்திடுகிறது சிரம் ! என்ன நினைக்கிறீர்கள் guys ? திகட்டாத பண்டமா இந்த ஜானர் மட்டும் ?//
ReplyDeleteYes ,என்றக்குமே திகட்டாத தின்பண்டங்கள் இந்த கவ்பாய் கதைகள்.
தெறிக்க விடலாம் சார்.
+1000
Deleteவோ
Deleteஇரு இதழ்களின் அட்டைப்படமும் கண்ணை பறிக்கிறது..செம ..
ReplyDeleteஅந்த அடர் பச்சை வர்ண இதழ் ஒரு கலக்கு என்றால் அந்த அடர் நீல வர்ணம் இன்னும் செம..
கலரை போலவே கதையும் கலக்குமா என்று காத்திருக்கிறேன்..!
! "Too much of cowboys" என்று ஆகிடக் கூடாதே என்று பயந்திடுகிறது சிரம் ! என்ன நினைக்கிறீர்கள் guys ? திகட்டாத பண்டமா இந்த ஜானர் மட்டும்..
ReplyDelete#######
Yes...yes...yes...
மற்ற ஜானர் கதைகள் நன்கு எனும் போதே தொடரும் பொழுதே கெளபாய் ஜானர்கள் கேட்கவும் வேண்டுமா சார்..போட்டு தாக்குங்கள்..:-)
தலீவருக்கு மட்டும் ஜானதன் தாத்தவின் கதையை அனுப்பவும்.
Deleteநான் கெளபாய் கதைய தான கேட்டேனே ஒழிய தாத்தா கதையை கேட்கவில்லையே மிஸ்டர் ஷெரீப்..
Deleteபுதையல் வேட்டைக்கதையையும் அமெரிக்க த்ரில்லரையும் வருக வருக என வரவேற்கிறேன்
ReplyDeleteஏனய்யா இந்த கென்யா
Deleteஎதிர்காலம் எனதே..
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteகொடுத்துை வைத்த மகராசன். இளவரசியுடன் இரவு இனிமையாய் கழிந்திட இனிய வாழ்த்த்துக்கள்.(சற்றே பொறாமையுடன்)
ReplyDeleteபொறாமை படவேண்டிய அவசியமே இல்லை பத்து சார்.. நீங்க ஒரு தொழிலதிபரா இருந்தாப் போதும்! :D
Delete"இளவரசியின் black & white இதழ் மட்டுமே பாக்கி "
Deleteபுத்தகத்தை கலரில் வெளியிட்டால் Black & White இதழும் கலராகிடுமே சார்.(பூரிக்கட்டை ரெடி)
///பொறாமை படவேண்டிய அவசியமே இல்லை பத்து சார்.. நீங்க ஒரு தொழிலதிபரா இருந்தாப் போதும்!///
Deleteமுடியாது ஈ.வி. முடியாது. அவர்களோ கோட்டை மாடத்தில்.நானோ கொடி மரத்து நிழலில். ஏழைகட்கு அவர் எட்டாக்கனி. கிட்டாக்கனி. (Riming)
நேத்திக்கு நைட் ஷிப்டில் மொபைலில் மகாதேவி படம் பார்த்ததின் எஃபெக்ட். கொஞ்ச நேரம் போனா சரியாயிடும்.
Deleteநிஜமாகவே மகாதேவி தான் பார்த்தீங்களா..?!! நம்பமுடியலையே?!! ;)
Delete///ஏழைகட்கு அவர் எட்டாக்கனி. கிட்டாக்கனி.///
இல்லேன்னா பேசாம வரலாறு படிச்சு டாக்டராயிடுங்க. இளவரசிக்கு டாக்டர்களும் ரொம்பப் பிடிக்கும்னு கேள்விப்பட்டேன்! ஹிஹி!!
படிச்சு டாக்டராயிடுங்க. இளவரசிக்கு டாக்டர்களும் ரொம்பப் பிடிக்கும்னு கேள்விப்பட்டேன்.
Delete######
ச்சே..ஜஸ்ட் மிஸ்..பேசமா டாக்டருக்கே படிச்சு இருக்கலாம்..:-(
டெமெக்லெஸ் முதல் கதையிலேயே கவர்ந்து விட்டது! ஆகையால் இரண்டாவது கதையை ஆவலுடன் எதிர்பார்ப்பில், ஆர்ச்சி வண்ண இதழ் தேவையென முன்கூட்டியே சொல்லியாச்சு, கௌபாய் இதழ்கள் எவ்வளவு வந்தாலும் தெறிக்க விடலாம் சார் அதெல்லாம் சலிப்பே தட்டாது! ஒரு வழியாக புதையல் தேடும் கதையான அர்ஸ் மேக்னா & அமெரிக்க இதழ்கள் தேர்வானது மகிழ்ச்சியே! இரண்டும் தனித் தனி இதழாக வெளிவருவதே சிறப்பாக இருக்கும்!
ReplyDeleteமெயில் அனுப்புங்க கலீல்.
Delete/// புதையல் வேட்டைக் கதையையும் ; அந்த அமெரிக்க க்ரைமையும் தெறிக்க விடலாமா ஒருங்கே ? 2 தனித்தனி ஆல்பங்களாய்த் தான் ///
ReplyDeleteObviously your honour. அப்போ ஈரோடு புக் ஃபேர்க்கு ஒரு புத்தக புதையல் வேட்டையே காத்திருக்குன்னு சொல்றீங்க..eagerly waiting for August.
நீங்களும் ஈரோட்டுக்கு வாங்களேன் சார் இந்த முறை
Deleteகெளபாய் கதைகள் வெரைட்டியாக இருந்தால் எத்தனை வந்தாலும் ஓகே தான். (ஜடாமுடி ஜானதன் மாதிரி இல்லாதவரைக்கும் ok)
ReplyDeleteநல்ல வேளை சொன்னீங்க..அந்த தாத்தா என்னை பொறுத்தவரைக்கும் கெளபாயே கிடையாது..
Deleteஅவர் ஒரு போலி கெளபாய்..:-)
அவர் கௌ க்ராண்ட்பா(ய்).
Deleteகடந்த வருடத்தின் பிஸியான தருணங்களால் நான் படிக்க இயலாமல் போன மிகச் சில கதைகளுள் இந்த டெமக்லீஸின் முதல் சாகஸமும் ஒன்று! இக்கதைக்கான நண்பர்களின் ஏகோபித்த ஆதரவைக் காணும்போது படிக்காமல் விட்ட ஏக்கம் இன்னும் அதிகரிக்கிறது! கூடவே, படிக்கவேண்டுமே என்ற வெறியும்! உர்ர்.. உர்ர்.. க்ரா!!
ReplyDeleteஅட்டைப்படம் அருமை!
'நில் கவனி வேட்டையாடு' அட்டைப்படமே மிரட்டுகிறது! முன்னட்டையில் அந்த அண்ணாவின் விழிகளில் வேட்டையாடும் வெறி - தெறிக்கிறதென்றால், பின்னட்டையில் அந்த ஆண்டி வீசுவதோ - வசீகரப் பார்வை!! இரண்டுபேரின் வாயிலும் சிகரெட் வேறு - புகை உயிருக்குப் பகை கண்ணுகளா..ஹீஹீஹீ!
பின்னட்டையில் 'அமேஸான் காட்டில் ஒரு மனித வேட்டை' என்ற டேக்லைன் புத்தகத் திருவிழாக்களில் விற்பனைக்கு உதவக்கூடும்!
நானும் படிக்கல....அப்ப அற்புதங்க காத்திருக்கு நமக்கே நமக்காக
Deleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete// 2020-ன் சந்தாதாரர்களுக்கான loyalty points-க்கு ஈடாய் வண்ண ஆர்ச்சி புக்கா ? டி-ஷர்ட்டா ? அல்லது பாய்ண்ட்களை முன்னெடுத்துச் செல்வதா ? //
Deleteவண்ண ஆர்ச்சி புத்தகம் சந்தாதாரர்களுக்கு மட்டுமா? அல்லது விருப்பப் படுவோருக்கு கடைகளில் / ஆன்லைனில் கிடைக்குமா? அவ்வாறு அதே *வெளியீட்டு எண்ணுடன் கிடைக்குமெனில் என்னுடைய pointகளை முன்னெடுத்து செல்லலாம் சார், இல்லையெனில் வண்ண ஆர்ச்சிக்கே என் option.
// "Too much of cowboys" என்று ஆகிடக் கூடாதே என்று பயந்திடுகிறது சிரம் ! என்ன நினைக்கிறீர்கள் guys ? திகட்டாத பண்டமா இந்த ஜானர் மட்டும் ? //
Deleteவித்தியாசமான கதைகளாக இருந்தால் கட்டாயம் வெளியிடலாம்.
பி.கு: மற்ற ஜானர் கதைகளைக் குறைக்காமல் கூடுதல் புத்தகங்களாக மட்டுமே...
கடைசியிலே கார்ட்டூனுக்கு பதிலா கெளபாய் என்று சொல்லிவிடக் கூடாது...
Delete// புதையல் வேட்டைக் கதையையும் ; அந்த அமெரிக்க க்ரைமையும் தெறிக்க விடலாமா? //
SUPER! Welcome Ars Magna and American crime thriller...
// கடைசியிலே கார்ட்டூனுக்கு பதிலா கெளபாய் என்று சொல்லிவிடக் கூடாது... //
Deleteஆசிரியர் கார்ட்டூனை எப்போதும் கைவிட போவதில்லை. கவலை வேண்டாம் சரவணன்.
// SUPER! Welcome Ars Magna and American crime thriller... // Yes Sir
Deleteசார் அட்டைப்படங்களிரண்டுமசத்தல் .டெமாக்லியஸ் வண்ணத்திலசத்தினால் அமேசானில் பதுங்கிக் கிடக்குமனிதவேட்டையட்டை பரபரப்பாய் வித்தியாசமாயதகளப்படுத்துது...பள்ளியில் படிக்கயிலிருந்தே அடர் கானகம் அமேசான் அதன் ஆராய்ச்சியாளர்கள் லிவிங்ஸ்டன் என புவியலில் படிக்கையில் , அந்த அடர்ந்த வனப்பிராந்தியத்தில் ஊடுருவித் திரிய வாய்ப்பு கிட்டிடாதா எனவேங்கியததிகம் அவ்வயதினிலே...ஊரெங்கும் சுற்றித் திரிந்ததது போதாதென திருச்செந்தூரிலும் மே ஏப்ரல் மாதங்களில் திரிவத போல எண்ணம் மேலோங்கும் . இதோ அரிய வாய்ப்பு அமேசானின் குறுக்கும் நெடுக்கும் திரிய அழைத்துச் செல்லும் வழிகாட்டியாய் தாங்களிருக்கயில் அதுவும் லயனின் பாதுகாப்பில் பயணிக்கயில் கூடவே தரமான ஓவியர்கள் சரியான ஈர்ப்பான அடர் பாதையில் அழைத்துச் செல்லும போது கொண்டாட்ட குதூகலத்திற்க்கு சொல்லவும் வேண்டுமோ......முதன் முறையாக படிக்கயில் வியப்பால் விரிந்த விழிகள் போய் படிப்பதற்காக விழிகள் விரிய காத்த் கிடக்கிறேன்....நினைத்தாலே இனிக்குதே...மனித வேட்டை மாடஸ்டி ,இரட்டை வேட்டையர் , வளர் நாயகர் ஜேசன் , க்யூ பிரிவு ஜானை விட கலக்க வாழ்த்துக்கள் , நல்லோர் வெல்லட்டும் வேட்டையில்....
ReplyDeleteசார் கௌபாய் கதைகள் எவ்ளோ வந்தாலும் கயித்த வீசி கட்டி இழுத்து வாங்க...
ReplyDeleteT shirt
ReplyDeleteஈரோட்டு ஸ்பெசல் 1500என ஏக எதிர்பார்ப்பு ...ஆதலால சாய்ஸ்ல விட்ட அத்தன கதயயும் விட்டா அதிருமே...தெறிக்க விடலாமே கதைகள...பாத்து செய்ங்க சார்
ReplyDelete// Please guys ? 2020-ன் அன்பளிப்பை உங்களிடம் ஒப்படைக்கும் தினமே 2019-ன் பாய்ண்ட்ஸ்க்கான ஈடு என்னவென்பதையும் அறிவிக்க உதவிடும் !! //
ReplyDeleteநான் சொல்லிட்டேனான்னு தெரியலை,எனது பாயிண்ட்ஸ்கள் முன்னெடுத்து செல்கிறேன்....
வண்ண ஆர்ச்சி விலைக்கு கிடைக்குமல்லவா?
அதில் வாங்கிக் கொள்கிறேன்.....
புதையல் வேட்டை கதையும், அமெரிக்கன் த்ரில்லர் detective கதையும் அவசியம் வேண்டும் சார்.
ReplyDeleteஏற்கனவே ரெகுலர் தடத்தில் A முதல் D வரை 4 தடங்கள்,கி.நா தடம்,ஜம்போ தடம்,அப்புறம் Maxi தடம் என்று 7 தடங்கள் போய்க் கொண்டிருக்கிறது.....
ReplyDeleteஇதில் குண்டு புக் ஸ்பெஷல் இதழ்களை எதில் இணைப்பது என்று ஒரு சிந்தனை,அடுத்து கெளபாய் இதழ்களுக்கு என ஒரு தடம் சாத்தியமா???
ஆசிரியர் முன் பட்ஜெட் என்ற கத்தி தொங்கும்....
தடைகளை தாண்டி இவை சாத்தியமானால் மகிழ்ச்சியே.....
கெளபாய் இதழ்களை குண்டு புக் ஸ்பெஷலாக வெளியிடுவது சாத்தியமான்னு தெரியலை???
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎடிட்டர் ஸார், நீங்கள் ஒருமுறை the road to perdition படத்தில் வரும் கதையை போல ஒன்று நமது வெளியீட்டில் வரும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு சொல்லி யிருந்தீர்கள்.
ReplyDeleteஅதைப்பற்றி அறிவிப்பு எதேனும் உண்டா சார்.
ReplyDeleteசார் கவ்பாய் கதைகள் எத்தனை வந்தாலும் எனக்கு சம்மதம் ஈரோடு புத்தக வெளியீடு ஒரு கவ்பாய் குன்டு புக்கை வெளியீடுகள் சார்
ReplyDeleteகௌபாய் கதைகளுக்கு தனி தடம் .. சந்தா E.. ஒதுக்கினால் நன்றாக இருக்கும்
ReplyDeleteகௌபாய் கதைகள் திகட்டுமா? //
ReplyDeleteசந்தோசத்தில மிகப் பெரிய சந்தோசமே அடுத்தவங்க சந்தோசமா இருக்கிறதை பாக்கறது தான். உல்லாசமா ஜிலோன்னு குதிரையில ஏறி வூட்டுக்காரி இம்சை எல்லாம் இல்லாம அப்பப்ப ணங், சத், சலூன், வறுத்த கறின்னு சந்தோசமா இருக்கிற அவங்களைப் பாத்து நாங்களும் சந்தோசப்பட்டுக்கறோம். போட்டுத் தாக்குங்க.
அதூ.....:-)
Deleteஅப்புறம் அந்த டீசர்ட் மேட்டர் //
ReplyDeleteஆமாமா. அதை சீக்கிரம் அனுப்பிடுங்க. இப்ப லார்ஜ் சொல்லி இரண்டு மாசம் கழிச்சு வந்தா எக்ஸ்ட்ரா லார்ஜ் தேவைப்படும்.
🤣🤣🤣
Deleteகௌபாய்களிடம் கேட்டால் அல்லவா தெரியும் அவர்களது பிழைப்பு இன்னா மேரியான மெர்சல்னு :
Delete1 .கும்மிருட்டிலே சணல் கூட சாரைப்பாம்பாய்த் தெரியும் நமக்கு ! அந்தப் பசங்களோ சாரைப்பாம்புகள் திரியும் பாலைவனத்தின் கும்மிருட்டில் தான் குடித்தனமே நடத்தியாகணும் !!
2 .சரி...சட்னி ஊசிப்போய்ட்டாக்கா - பொடியைத் தொட்டாச்சும் இட்லிகளை உள்ளாற தள்ளிக்கலாம் இங்கே ! அங்கேயோ காய்ஞ்ச பெம்மிகன் ; பிஸ்கட் ; பீன்ஸ்னு தொண்டைக்குள்ளே குச்சியை விட்டுக் குத்திக்கும் ஐட்டங்கள் மட்டுமே நாஷ்டாவுக்கு !!
3 .சரி, இக்கட வவுரு லைட்டா மக்கர் பண்ணினா ஒரு மூடி ஜெலுசிலை ஊத்திக்கிட்டு, டேங்கில் தண்ணிய ஏத்தி வைச்சுக்கிட்டு உஷாரா இருந்துப்புடலாம் ! அங்கேலாம் அது முடியுமா ? ஒதுங்குறே இடத்திலே கற்றாழையோ ? கடி எறும்போ ? கோப்ராவோ ? கண்டது யார் ?
4 .மாசக்கடைசி, பட்ஜெட் உதைக்குதுன்னா மளிகைக்கடை அண்ணாச்சி இங்கனே இருக்கார் கடன் குடுக்க ! அங்கனே கடன் கேட்டா கடைவாயிலே வின்செஸ்டரை திணிச்சுப்புட்டு இல்லே மறுவேலை பார்ப்பானுங்கோ ?
5 .அட...முடிவெட்டிட்டு வருவோம்னு போனாக்கா - மிஞ்சிப் போனா மொட்டையடிச்சு விடுவாங்க இங்கே ! அங்கேயோ...? ஆத்தாடியோவ், மண்டைத்தொலி உரிச்சாலும் ஆச்சர்யமில்லே !
Not easy at all being a cowboy !!
///Not easy at all being a cowboy !!///
Delete👏👏👏👌👌👌
ஒருவேளை கற்பனை நகரில் தான் கெளபாய் சிறப்போ..ஆனாலும் காமிக்ஸ் தொண்டர்களுக்கு கெளபாய் நகரமே கோலார் வயல்..:-)
Deleteஎந்த லார்ஜெ சொல்றீங்க.
ReplyDeleteலார்ஜ் மீன்ஸ் லார்ஜ்தான்
Delete(எந்த லார்ஜாக இருந்தாலும் சரி.)
:-)
😜😜😜😜
Deleteகடைசியாய் இரட்டை வேட்டையரின் “திக்கு தெரியாத தீவில்” & ரிப்போர்ட்டர் ஜானியின் “ஒரு திகில் கனவு” ஆகியவற்றில் தான் மனித வேட்டையை பரபரப்பாய் ரசித்த அனுபவம். இப்போது வரப்போகும் கதையில் திகில் வேட்டை அனுபவம் காத்திருப்பது போல தெரிகிறது. 2010ல் வெளிவந்த Predators படத்தை நினைவு படுத்துகிறது.
ReplyDeleteஅடர்ந்த காட்டில் கொசுக்கடி ஆளை அச்சுறுத்தும் . அதை சமாளிக்க சிகரெட் புகை பயன்படும். அதை நாம் தவறாக கருத வேண்டியதில்லை.
இத்தாலி Special, அமெரிக்கன் Thriller பற்றி தெரிந்து விட்டது. அடுத்த கென்யா மட்டுமே waiting. அதற்கும், இந்த வருடமே ஒரு நாள் குறித்து விடுங்கள் சார்.
மாடஸ்டி கதை ...இரத்தப்படலம்...ஜானின் மனித வேட்டை கூட
Deleteyes, of course nanbarae
Deleteகென்யா விற்க்கு +1000
Deleteடெமக்லீஸ் அட்டைப்படம் தகதகவென மின்னுகிறது.முன், பின் அட்டைகள் வெவ்வேறு வண்ணங்களில் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் போட்டி போடுகின்றன.
ReplyDeleteநில், கவனி, வேட்டையாடு அட்டைப்படம் கொஞ்சம் மர்மங்களை உள்ளடக்கியது போல் வரவேற்கிறது.உட்பக்க படங்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கின்றன.
புதையல் வேட்டையையும்,
ReplyDeleteஅமெரிக்க க்ரைம் த்ரில்லரையும்
ஈரோட்டுக்கு வரவேற்கிறேன்..!
டெமக்லீசின் உட்பக்க ஓவியங்களை நோக்கும் போது விழிகளுக்கு அற்புத விருந்து காத்துள்ளது என அப்பட்டமாகிறது.
ReplyDeleteஆனால்,
நில், கவனி, வேட்டையாடு உட்பக்க சித்திரங்களை காணும்போது நாமே விருந்தாகி விடுவோமோ என மனது பட்டமாக அடித்துக் கொள்கிறது..
எப்படி GP இப்படி எல்லாம் எழுத முடிகிறது.
Deleteரெண்டுமே நிஜமே !!
Deleteஐயம் வெயிட்டிங்...:-)
Deleteஇன்றுணர்ந்தேன் காமிக்ஸ் பந்தத்தை..
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்... இன்று எனக்கு ஒரு நல்ல மனிதர் மற்றும் எதிர்பார்ப்பு இல்லா நண்பரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. முகநூலில் அறிமுகமாகி அலைபேசியில் அளவளாவி இன்று கண்டேன் நாகர்கோவில் நண்பரை.
கனவுகள் மெய்படும் போது தொலைவுகள் தூரமில்லை என உணர்த்திய நாள். கிட்டத்தட்ட 2500 km தூரம் 24 மணி நேரப்பயணம், நண்பரை கண்டவுடன் மனதில் புத்துணர்ச்சி கொண்டேன். அருமையான தேனீர் விருந்தளித்து எனது நெடுங்கனவான "மின்னும் மரணத்தை" கைகளில் தாங்கிவந்தார். இவ்வாழ்வில் கனவாகவே இருந்திடும் என நினைத்த பொருள் கண்முன்னே வரும்போது மனதில் உண்டான மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. கைநடுங்க காமிக்ஸை பெற்றுக்கொண்டு நண்பரின் முகம்பார்தேன் விலையறியும் எண்ணத்தோடு. நண்பரோ புன்முறுவலுடன் உங்களுக்காக இது விலையில்லை என்றார். ஆனாலும் விலைமதிப்பற்ற பொருளை விலையில்லாமல் பெறுவதில் ஏற்பட்ட தயக்கத்துடன் நண்பரிடன் கேட்டேன் நான் எப்படி இதை சமன் செய்வது. சற்றும் தாமதியாது சொன்னார் நீங்கள் இந்தாண்டு காமிக்ஸ் சந்தா செலுத்துவதே இதன் விலை என்றார். எனது ஆச்சரியம் விலகும் முன் "Magnum Special" புத்தகத்தையும் பரிசளித்தார். என் வாழ்வின் மறக்க முடியாத நண்பராகிவிட்டார்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லா நண்பர்கள் இன்று மிகவும் அரிதான நிலையில், லயன் முத்து காமிக்ஸ் மூலம் எனக்கொருவர் கிடைத்துள்ளார்.
நண்பரின் வேண்டுகோளை மீறி இதனை பகிர்ந்துள்ளேன் மன்னித்து விடுவார் எனும் நம்பிக்கையில்.
நன்றி நண்பரே :)
அருமை அருமை,மகிழ்ச்சி,சிறப்பு......
Deleteசூப்பர் சரவணன். அந்த நண்பருக்கும் எனது வாழ்த்துக்கள். வளரட்டும் உங்கள் காமிக்ஸ் நட்பு.
Deleteசரவணன் சார் அட்டகாசமான அனுபவம். என்னால் உணர முடிகிறது
Deleteசரவணன் @ அப்படி என்றால் நீங்கள் சந்தா எக்ஸ்பிரஸில் ஏறி விட்டீர்களா? வாங்க வாங்க.
Deleteநன்றி நண்பர்களே.... வீட்டுக்கு போனவுடன் முதல் வேலை சந்தா எக்ஸ்பிரஸ் டிக்கெட்.
Deleteஅது....
Deleteஉங்களை சந்தா செலுத்த வைத்த அந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
ஈத்துவக்கும் இன்பத்தை எய்திய அந்த நாகர்கோயில் நல்உள்ளத்துக்கும், கனவு மெய்பட்டதால் களிப்படைந்த இந்த காமிக்ஸ் நண்பருக்கும் என் பூரிப்பான வாழ்த்துகள்!!
Deleteஇந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க! _/\_
அருமை
Delete//கிட்டத்தட்ட 2500 km தூரம் 24 மணி நேரப்பயணம்,//
Deleteஅட...சும்மாக்காச்சும் அடிச்சுப் பார்ப்போமே - நாகர்கோவிலில் இருந்து 2500 கி.மீ. தொலைவில் இருக்கக்கூடிய சில பல நகரங்கள் எவையாக இருக்கக்கூடுமென்று என்று தோணியது !! பலன்கள் :
டெல்லி : 2277 கி.மீ.
சண்டிகர் : 2510 கி.மீ.
கவுஹாத்தி : 2509 கி.மீ.
சிம்லா : 2550 கி.மீ
பேங்காக் : 2592 கி.மீ.
லாகூர் : 2625 கி.மீ.
ஊர் எதுவாயினும், இந்தப் பயணத்தின் குறிக்கோள்களுள் (காமிக்ஸ்) நண்பரையும் சந்திப்பது முக்கியமான ஒன்றாய் இருப்பின், simply awesome !! And equally awesome - நாகர்கோவில் நண்பரின் அன்பு !!
Comics rockz !!
சூப்பர் சூப்பர்!! 👏👏👏👌👌👌
Deleteஎடிட்டர் சார் உங்களின் யூகம் மிகவும் சரி.
Deleteடெல்லி - சென்னை - மதுரை - நாகர்கோவில்.
Lighthouse ~ சரவணன்..
Deleteவாழ்த்துகள் சார்..!
ஷல்லூம் ஃபெர்னான்டஸ்க்கு பாராட்டுகள் சொல்லலாம்தான்.. ஆனா வெக்கப்படுவாரே..! :-)
நண்பர்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
Deleteஆஸம்..
கௌபாய் ஜானர் மீது மையல் குறையும் வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஇந்த ஜென்மம் முடியும் வரை
Deleteஈரேழு லோகத்லயும்...ஓரேழு ஜென்மத்லயும்
Deleteஎஸ்...:-)
Deleteகௌபாய் மட்டுமேதானா?
ReplyDeleteஇந்த கௌகேர்ள்,கௌவுமன் ஏதாச்சும் இல்லியா?? :-)
கௌபாய் எவ்வளவு வேணா போடுங்க
ஆனாக்க
யார் அந்த மினிகௌபாய்?
கௌபாய்க்கோர் கௌபாய்
பாலைவனத்தீவில் கௌபாய்
கச்சத்தீவில் கௌபாய்
அப்படிங்கற மாதிரி டைட்டில் மட்டும் வச்சுப்புடாதீங்க!!!:-)
சரி... அப்ப உங்களுக்கு பாயசத்தை ரெடி பண்ணி விட வேண்டியதுதான் :-)
Deleteசெனா அனா சார் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. ;-)
Deleteகுமார் @ அதுக்கு தான் பாயாசம் :-) முந்திரி பிஸ்தா எல்லாம் கொஞ்சம் தூக்கலாக போட்டு :)
Delete////இந்த கௌகேர்ள்,கௌவுமன் ஏதாச்சும் இல்லியா?? ///
Deleteமருந்துக்குக்கூட பெண்களே கண்ணில் படாத எத்தனையோ கெளபாய் கதைகளைப் படித்தாயிற்று! அதேபோல, கடுவன்களே கண்ணில் படாமல் முழுக்க முழுக்க கெளகேர்ஸை வச்சு ஒரு கதை வந்தா எப்படியிருக்கும்னு ரொம்பநாளாவே ஒரு ஆசை உண்டு!!
என்ன.. 'ணங், கும், சத்'க்கு பதிலா 'மெத், பொத், சத்'னு அடிக்கடி வரும்! ;)
செனா நீதிக் காவலன் கௌபாய விட்டதுமில்லாம ...கௌபாய் டக்கர...டாக்டர் கௌபாய....விட்டுட்டிங்கள
Delete//மருந்துக்குக்கூட பெண்களே கண்ணில் படாத எத்தனையோ கெளபாய் கதைகளைப் படித்தாயிற்று! அதேபோல, கடுவன்களே கண்ணில் படாமல் முழுக்க முழுக்க கெளகேர்ஸை வச்சு ஒரு கதை வந்தா எப்படியிருக்கும்னு ரொம்பநாளாவே ஒரு ஆசை உண்டு!!//
Deleteரொம்ப நாள் ஆசைகள் நிறைவேறும் போது தலீவருக்கு மொட்டை போடுவதாய் வேண்டி இருப்பதாகக் கேள்விப்பட்டேன் ! நாவிதருக்குச் சொல்லி வையுங்களேன் ?
நாவிதராவோ
Deleteஎது எப்படியோ விஜய்யின் ஆசை நிறைவேறினால் சரிதான்:-)
Delete///என்ன.. 'ணங், கும், சத்'க்கு பதிலா 'மெத், பொத், சத்'னு அடிக்கடி வரும்///
Deleteஐ இது நல்லாயிருக்கே!
///யார் அந்த மினிகௌபாய்?
Deleteகௌபாய்க்கோர் கௌபாய்
பாலைவனத்தீவில் கௌபாய்
கச்சத்தீவில் கௌபாய்
அப்படிங்கற மாதிரி டைட்டில் மட்டும் வச்சுப்புடாதீங்க!!!:-)///
ஹாஹாஹா...!
இப்போ லேட்டஸ்டா..
கௌபாய் இருக்க பயமேன்
என்ன.. 'ணங், கும், சத்'க்கு பதிலா 'மெத், பொத், சத்'னு அடிக்கடி வரும்! ;)
Deleteஹாஹாஹா....:-)))
*********
ரொம்ப நாள் ஆசைகள் நிறைவேறும் போது தலீவருக்கு மொட்டை போடுவதாய் வேண்டி இருப்பதாகக் கேள்விப்பட்டேன்
ஆஹா...நாமெல்லாம் குலகோவீலுக்கு கூட இதுவரை மொட்டை அடிச்சது இல்ல...செயலரே பாத்து ..
ஆச நல்லாருக்கு...ஆனா வேண்டுதல்...:-(
இளவரசியின் black & white இதழ் மட்டுமே பாக்கி - என எடிட்டிங் செய்ய போன எங்க எடிட்டரை காணோம்க :-)
ReplyDeleteஅது ஒரு பெரிய கதை சார் ! மார்ச் ஒண்ணாம் தேதி வரைப் பொறுங்கோ !
Deleteஆகா ஒரு குட்டிகரண படலம் இன்று நடந்து இருக்கும் போல தெரிகிறது. காத்திருக்கிறேன் சார்.
Deleteஎனக்கென்னவோ கும்பகர்ண படலமோன்னு தோணுது. இரண்டு பக்கம் படிச்ச உடனே தூக்கம் வந்துருக்கும். தூக்கி எழுந்து மறுபடி ரெண்டு பக்கம் மறுக்கா தூக்கம். மறுபடி ரெண்டு பக்கம் மறுக்கா தூக்கம்.
Deleteஹீம்....இளவரசியின் எதிரிகள் அயல்நாட்டிலுமா..?!
Deleteஇரண்டு வண்ண விருந்துகள் காண மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
ReplyDeleteஅர்ஸ் மேக்னாவிற்குப் பதில் கென்யாவை தந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஎத்தனை கெளபாய் கதைகளையும் வரவேற்கின்றேன்.
ReplyDeleteவித்தியாசமான டெக்ஸ் கதை "ஒரு துளி துரோகம்".10/10
ReplyDeleteபிப்ரவரியில் மார்ச் உண்டா சார்?
ReplyDeleteஇராஜபாளையம் சொக்கநாதன்புத்தூரில் குலசாமி கும்பிட குடும்பத்துடன் வந்தேன்.சிவகாசி பக்கந்தானே உங்களைச் சந்திக்கலாம் என்று நினைத்தேன்,ஆனால் நேரமின்மையால் முடியவில்லை சார்.
ReplyDeleteஞாயிற்றுக்கிழமை பூட்டப்பட்ட பெரியதொரு ஷட்டர் தான் உங்களை வரவேற்றிருக்கும் - நமது அலுவலகத்தில் ! எல்லா ஞாயிறுகளும் நமக்கு விடுமுறைகள் சார் !
Deleteதங்கள் பதிவுகள் காமிக்ஸ் போலவே அருமையாக இருக்கின்றன. அருமையான எழுத்து நடை. ஆனால் தொடர்ந்து காமிக்ஸ் வாசிக்கத்தான் நமக்கு வாய்க்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து வாசிக்கும் அத்தனை அதிர்ஷ்டசாலிகளுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது இரு விருந்துகள் – இரு விழிகளுக்கு..! பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இணைக்கப்பட்டுள்ள வலைப்பதிவுகளின் பட்டியல்: வலைப் பட்டியல்
// அத்துடன் தங்களது இரு விருந்துகள் – இரு விழிகளுக்கு..! பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். //
Deleteநன்றி. சந்தோஷம்.
வாழ்த்துக்கள்...:-)
Deleteஇளவரசி கதையை எடிட்டிங் செய்யப் போன ஆசிரியரைக் காணோம்.!
ReplyDeleteஒருவேளை இளவரசி அழகில் மயங்கிட்டாரோ.?
:-)
நம்ம எடிட்டரும் ஒரு தொழிலதிபர் தானே?!! ;)
Deleteசேச்...சே
Deleteஹி...ஹி..இன்னும் ஒரு வாரம் கூடக் கிடையாது - யாம் பெற்ற பாயசம்...சீ..சீ...யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெற்றிட !!
Deleteபாவமாருக்கே சார்
Deleteஆசிரியரின் முதல் ஆசை நாயகி இளவரசி தானே ஓ சாரி சாரி முதல் கதாநாயகி இளவரசி அதனால் அவருக்கு தேவதை மேல் கொஞ்சம் பாசம் அதிகம்
Deleteஇளவரசிக்காக வெயிட்டிங்..:-)
Deleteபாயசம் செயல்முறை கற்றிடல் நலம் பயக்கலாம் !
Deleteவலைப்பக்கத்தில் மனித வேட்டை முன்னோட்டம் பார்த்தேன்.....!!!!!
ReplyDeleteகண்டிப்பாக ஒரு சித்திர விருந்து காத்துள்ளது.
வரவேற்க தயாருங்கள்.
பயமாயுமிருக்கு
Deleteவருகிறது
ReplyDelete✋ நில்.
கவனி!?
வேட்டையாடு!!!!!
மார்ச்சில் மனித வேட்டை!
நீங்கள் எதிர் பாரா! வேட்டை.
அடர் வனத்தில் அடாவடி வேட்டை.
காணத்தவறாதீர்கள் !
ஆசிரியரே 200 டீ சர்ட்டுகளுக்கு பதில் 400 ஆக மாற்ற வழி உண்டா ( எனக்கு கிடைக்கனுமில்ல அதுக்குதான் பக்கத்து இலைக்கு பாயாசம்) எப்படியும் ஆசிரியர் அடிக்க போறாரு அதுக்குள்ள நான் ஓடிடுறேன் 🏃🏃🏃🏃🏃🏃
ReplyDeleteகாமிக்ஸ் தளத்தில் காமிக்ஸை பற்றி ஏதாவது எழுதனும்னு தோணுச்சு.
ReplyDeleteதோர்கள், மற்றும் லார்கோ கதைத்தொடர்களில் வான்ஹம் பிரமிப்பை ஏற்படுத்தும் படைப்பாளி.
சாகவரத்தின் சாவியில் தோர்கள் மற்றும் எவிங் ஒற்றைக்கு ஒற்றை மோதலில் ஈடுபடும் காட்சி.
எவிங் பயன்படுத்தும் நவீன வில் ஆயுதம்,சிகரங்களின் சாம்ராட்டில் வல்னா கையில் வைத்திருக்கும் ஆயுதத்தோடு ஒத்துபோகிறது
எவிங்,வல்னா,ஹெரெல்ப் மூவரும் ஒரே வம்சாவளியை சார்ந்தவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
மூன்றாம் உலகத்தில் தோர்களுடைய குழந்தைய கைப்பற்ற நினைக்கும் ஷெர்தாருடைய முகத் தோற்றமும் ,ஹெரெல்புடைய முகத்தோற்றமும் ஒரே சாயலில் உள்ளதை அறியலாம்.அவர்கள் இருவரும் ஒரே இரத்த பந்தம் உள்ள சகோதரர்கள்.
ஷெர்தார் தீய குணங்களோடு இருப்பதால் ""கிறிஸ் ஆஃப் வல்நா" (கடவுளர் தேசம்) அதே தீய குணங்களோடு வருகிறாள்.
ஹெரெல்ப் மேன்மையான குணங்களோடு இருப்பதால் எவிங் மற்றும் வல்னா நற்குணங்களோடு இருப்பதை உணரலாம்.
ஹெரெல்ப் மற்றும் ஷெர்தாருடைய சந்ததி தொடர்ச்சிதான் இவர்களாக இருக்குமோ?!!! என்று சந்தேகமாக உள்ளது.
ஷெர்தார் மூன்றாம்உலகத்தில் (80 ம் பக்கம்) தோர்களை ""சகோதரனே!""என்று அழைப்பதாக அமைந்திருக்கும்.
ஆக வைகிங் தீவில் வேற்று கிரகத்தில் இருந்து கரை ஒதுங்கியது ஒரு விண்கலமாக இருக்க வாய்ப்பு இல்லை.
படைப்பிலக்கியத்துக்கான நோபல் பரிசை வான்ஹம் அவர்களுக்கு அளித்தால் அந்த விருதுக்கு பெருமை சேர்க்கலாம்.காமிக்ஸ் படைப்புகள் இலக்கியம் இல்லை என்பதுதான் மேற்கத்திய சிந்தைனையாக இருக்குமோ???.
தொடரும்...
தோர்கள் தொடரின் அடுத்த பாகங்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.
Deleteஅதன் அடுத்த பாகம் எவ்விதம் இருக்கும் என்பதாக ஓர் அனுமான் பிரமானம்.
சிகரங்களின் சாம்ராட்டில் எதிர்காலத்துக்கு பயணித்த டோரிக்;அந்த மலை சிகரங்களில் பேரரசராக வாழ்ந்துவரும் கொடூர டோரிக்கை சந்தித்து ஜோலனுடைய பிறப்பின் இரகசியத்தையும்;ஜோலன் மூலமாக
உலகம் முழுவதும் ஓர் பேரரசாக ஆள இயலும் என்ற இலக்கையும் சொல்லி இருக்க வேண்டும்.
தோர்கள் அந்த பனிமலையை கடக்கும் போது,எதிர்காலத்திலிருந்து வரும் டோரிக் ஜோலனை கடத்தி போகிறான்.நிகழ்காலத்தில் தோர்களும்,ஆரிசியாவும் நடந்தது உணராமல் ,ஜோலனுக்காக பரிதவிக்கின்றனர்.
நிகழ்காலத்தில் சிகரங்களின் சாம்ராட்டாக வாழும் வல்னா தோர்களுக்கு உதவ முன் வருகிறாள். சிகரங்களின் சாம்ராட்டில் தனக்கு முதுமையான தோற்றம் ஏற்பட்டது குறித்தும்,தங்களுடைய கடந்த காலத்தை பற்றியும் வல்னா தோர்களுக்கு விளக்குகிறார்.
தோர்கள் , வல்னா,ஆரிசியா கால வாகனத்தில் எதிர்காலத்துக்கு சென்று டோரிக்கோடு மோதுகிறார்கள்.எதிர்காலத்தில் உள்ள டோரிக்கும் கொல்லப்பட்டு ஜோலனோடு மீண்டும் திரும்புகிறார்கள்.
காலத்துக்குள் காலம் பயணிப்பதாக கதை அமைக்கபட்டு இருக்கும்.கடந்த காலத்தை நினைவு கூறும் ஒரு ஃப்ளாஷ்பேக் காடசியோடு,கதை பனிமலையில் தொடக்கம் பெற்று மீண்டும் பனி மலையில் (நிகழ்காலத்தில்) முடிவதாக அமைக்கப்படலாம்.
வேலை எதுவும் இல்லை.நிரல்கள் நகரவில்லை.
அதா இது மேரி ஏதாவது எழுத தோணுது.
தோர்களுக்காக காத்திருக்கலாம்.
This comment has been removed by the author.
Deleteதோர்கலோடு மறுபடியும் ஒரு பயணம் செய்து, கிறிஸ் வல்நார், வல்நா மற்றும் ஆரிசியாவை சந்தித்துவிட்டு மீண்டும் வருகிறேன்..!
Delete(...முடிந்தால் இரவில்...!)
ஆங்... ஒரு முக்கியமான சங்கதிய சேர்க்காமல் விட்டுட்டேன்.
Deleteவான்ஹம் எழுதும் கதைப்படி இறுதி காட்சியில் வாசகர்கள் மண்டையில இருக்கக்கூடிய மிச்ச கேசத்தையும் பிய்த்துக் கொள்ளுவது போல் அமைக்க வேண்டும்.
நிகழ்காலத்துக்கு திரும்பும் தோர்கள்,வல்னா,அரிசியா,ஜோலன் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
எதிர்பாராதவிதமாக வல்னா திடீரென்று குற்றுயிராக விழுந்து உயிருக்கு போராடுகிறாள்.
திகைத்து போகும் தோர்கள் வல்னாவை தன் மடியில் ஏந்துகிறான்.
தன் தாத்தா ஹெரெல்ப் மற்றும் ,தனக்கும் ஏற்பட்ட பேராசையின் காரணமாக எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தாலும் தான் நோய்களை நேசித்த அந்த "" அன்பு ""பரிசுத்தமானது என்பதை தோர்களுக்கு உணர்த்துகிறாள்.
தோர்கள் அந்த அன்பை உணர்ந்து வயது முதிர்ந்த வல்னாவை முத்தமிடும்போது அவளது உயிர் பிரிகிறது.
சிகரங்களின் சாம்ராட்டில் வல்னா காதலோடு தோர்களை முத்தமிடுவது.அடுத்த பாகத்தில் இதுவரை தன் மனைவி ஆரிசியாவை தவிர வேறு பெண்ணை நினைக்காத தோர்கள் முதல்முதலாக அரிசியா முன்பே வேறொரு பெண்ணை அணைத்து முத்தமிடுவதாக அமையும்.வல்னா எவ்வாறு இறந்து போனால் எனும் ஓராயிரம் குழப்பங்களோடு கதை முடியும்.
இதற்கு அழகாய் ஒரு விடையையும் தரலாம்.
கால் வாகனத்தில் தன் வாழ்வின் அந்திம காலம் வரை பயணிக்கும் ஒருவர் நிகழ்காலத்துக்கு திரும்பும் போது உறுதியாக மரணம் நிகழ்வதாய் இருக்கலாம்.ஹெரெல்ப் தன் அந்திம காலத்தில் தோர்களுகடைய நிகழ்காலத்துக்கு பயணித்து,திரும்பவும் ஹெரல்புடைய நிகழ்காலத்துக்குள் நுழைந்ததால் இறந்திருக்கலாம்.
இந்த பதிவுகளை சற்று அதிக பிரசங்கித்தனமாக எழுதியதாக உணர்ந்தால் பொறுத்துக் கொள்ளவும்.
இதை வேறு எந்த அந்நிய மொழி வெளியீட்டிலும் முன்கூட்டியே படித்துவிட்டு எழுதவும் இல்லை.வேறு மொழிகளில் எந்தவித பயிற்சியும் இல்லை.
**** தி அண்டர்டேக்கர்****
ReplyDeleteசேவியர் டேரிசனுடைய மற்றுமொரு கவனிக்க தகுந்த ஆக்கம்.இதை பற்றி அலசும் முன்பு ஓர் ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படத்தை உணரலாம்.
Gladiator திரைப்படம் ஆஸ்கர் அரங்கில் சிறந்த திரைப்படத்துக்கான,இயக்குனருக்கான விருதை Ridley Scott அவர்களுக்கு பெற்று தந்தது.
கிரேக்க பேரரசில் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களால் ஏற்படும் கலகத்தை;தன் இராணுவத்தை பயன்படுத்தி,தன் நம்பிக்கைக்குரிய தளபதி மூலமாக ஒடுக்குவார் மேன்மை மிகு சீசர்.தன் நாட்டு பிரஜைகள் மீதே அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டிய சூழலில் மிகப்பெரிய தவிப்பு சீசர் மனதில் எழும்.எதிர்காலத்தில் இது போன்று மீண்டும் நிகழாமல்இருக்க; மக்கள் அதிகாரம் பெற்ற மக்கள் அமைப்பை ஏற்படுத்தி,அரசியல் குழுக்கள் மூலம் மக்கள் அதிகாரத்தை நிறுவ முயற்சிக்க விரும்புவார்.மக்கள் தங்களுடைய குறைகளை அரசுக்கு தெரியப்படுத்தி,தீர்வு பெறும் அரசியல் அமைப்பை உருவாக்குவது மேதகு சீசர் அவர்களின் அந்திம கால கனவாக இருக்கும்.அசாதாரனமான திரைக்கதை அமைப்பில் திரைப்படம் நகரும்.
திரைக்கதை பயணிக்கும் வேகத்துக்கு இணையாக திரைப்படத்தில், காட்சி அமைப்புகளை பயன்படுத்தி அதன் அடிநாதமாக சூழ்நிலை அளவில் ஓர் கதை புனையப்பட்டிருக்கும்.
காட்சி அமைப்புகளை கவனிக்கும் போது;
கிரேக்க பேரரசு மேதகு சீசர் அவர்களுடைய முடியாட்சியில் இருந்து,ஓர் எதேச்சதிகாரத்தின் கீழ் சென்று பின்பு மக்கள் ஆட்சியின் வசம் வருவதாக அமைக்கப்பட்டிருக்கும்.நீண்ட போராட்டத்துக்கு பின்பு ரோம் நகரம் மக்களாட்சிக்காக மீட்டெடுக்கப்படும்.மேதகு சீசர் அவர்களுடைய அந்திம கால கனவை அவருடைய நம்பிக்கைக்குரிய தளபதி நிறைவேற்றுவார்.காட்சி அமைப்புகளில் இதை உணர்ந்து கொள்ளலாம்.
திரைக்கதையிலோ,வசனங்களிலோ இவை எங்கும் பிரதிபலிக்காமல் ,காட்சி அமைப்புகளில் அடிநாதமாக இணைக்கப்பட்டிருக்கும்.
அண்டர் டேக்கர் மற்றும் பிஸ்டலுக்கு பிரியாவிடை போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த சித்திரக்கதைகளிலும் இத்தகைய கதை வடிவம் அமைக்கப்பட்டிருக்கும்.
அண்டர் டேக்கர் க்ராபிக் நாவலில் காட்சி அமைப்புகளில் இழையோடும் கதையை இங்கு கவனிப்போம்.பிஸ்டலுக்கு பிரியாவிடை பிறிதொரு நாளில்.
*** தொடரும்....***
ஸ்ரீராம்!!! நீங்கள் கிளாடியேட்டர் படம் பற்றி புரிந்திருப்பதில் நிறைய பிழைகள் உள்ளன...
Deleteஉதாரணம் கிரேக்க பேரரசு அல்ல ..ரோம பேரரசு
படத்தில் ஆரம்பத்தில் காண்பிக்கப்படுவது உள்நாட்டு யுத்தம் அல்ல ..
ரோம எல்லைக்குள் நுழைந்த ஜெர்மானிய பழங்குடி இனத்தவரை ரோம படைகள் வெல்லும் காட்சி
சீசர் அல்ல ...மார்க்கஸ் அரேலியஸ் ..நிஜ பாத்திரம்
போர் நிகழ்வது கி .பி 180-ல்
சீசர் காலம் கிமு 100 -கிமு 45 வரை
ரிட்லி ஸ்காட் இப்படத்துக்கு ஆஸ்கார் விருது- இயக்குனருக்கான- விருதை பெறவில்லை
ஆஸ்கார் விருது சிறந்த படமெனில் தயாரிப்பாளரை போய் சேரும்
கிளாடியேட்டர் படமே வரலாற்று உண்மைகளை மாற்றி சுவாரஸ்யமான விதமாக இருக்கும்பொருட்டு திரித்து எடுக்கப்பட்டது தான்
முக்கியமாக மன்னர் மார்க்கஸ் அரேலியஸுக்கு மன்னராட்சி விடுத்து பழைய ரிபப்ளிகன் ஆட்சி கொண்டு வரும் எண்ணம் அறவே இருந்ததில்லை
அரேலியஸ் இறப்பதற்கு மூன்று ஆண்டுகள் முன்பிருந்தே மகன் கமோடஸ் ஆட்சியில் துணை செய்தான் என்பதே உண்மை
*** அண்டர்டேக்கர் ***
ReplyDeleteகாட்சி அமைப்புகளை நெருக்கமாக உணர்வதற்கு.
1. கர்னலுடைய முக சாயலும்,முக பாவனைகளும் கதை முழுவதும் ஒரே விதமாகவும் அருகருகே மும் அமைக்கப்பட்டிருக்கும்.(பக்கம் 21ல் இதை நன்கு உணரலாம்.)
இது கர்னலும் கேப்டன் ஜோனஸ் க்ரோவும் ஒரே வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பதை உணர்த்த.
கர்னல் இறக்கும் போது ஒரு வித மன நிறைவோடு இறப்பதை கதையில் உணரலாம்.
2.காட்சி இரண்டு.
க்வின்ட் மிஸ் ரோஸ் அவர்களுடைய கையை முறிப்பது.அவளை தன் வசப்படுத்த தன்னோடு இருக்க வைக்க செய்யும் முயற்சி.
52 இரண்டாம் பக்கம் ரோஸ்ப்ரைரி தன் சுய விருப்பத்தோடு க்வாண்டம் ஜெரோனிமஸுடன் பயணிப்பதாக இருக்கும்.
அவ்வாறு இருந்தும் ஜோனஸ்க்ரோ தன் உயிரையும் பொருட்படுத்தாது (66 ம் பக்கம்)அவளை மீட்டு வர போராடுவான்.
கதைப்படி இரண்டு பெண்களின் தாய்மை உணர்வு சுட்டிக்காட்டப் பட்டிருக்கும்.(லின் மற்றும் ரான் டான்னர்).
கதையில் க்வான்டன் ஜெரோனிமஸ்,ஜோன்ஸ் க்ரோவுடைய குண இயல்புகள் ஒப்பீட்டு அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இவற்றிலிருந்து காட்சி அமைப்புகள் மூலம் படைப்பாளிகள் மறைமுகமாக படைத்திருக்கும் மைய கதையை விளங்கிக் கொள்ளலாம்.
*** தொடரும் ... ***
*** அண்டர் டேக்கர் ***
ReplyDeleteஅடிநாதமாக இணைக்கப்பட்டிருக்கும் பிரதான மைய கதை.
கர்னல் வார்விக் தன் மகன் டான்னியை மீட்டு போக கேப்டன் ஸ்ட்ரைக்லேன்ட்டுடன் பயணிக்கிறார்(கேப்டன் ஜோன்ஸ் க்ரோவும் கர்னலுடைய மகனே).
அரக்கன் ரோஸுடைய கையை முறித்து தன்னோடு பயணிக்க வேண்டிய நெருக்கடியை நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்.ரான் டான்சர் என்ற கதாபாத்திரம் வலியின் வேதனை தாங்காமல் ஜெரோனிமஸ் உடன்படுவது போல் காட்டப்பட்டிருக்கும்.அது போன்ற நிலைமை தனக்கும் (ரோஸ்ப்ரைரிக்கும்)ஏற்படுவதை தவிர்க்க விரும்புவாள்.தன்னை கட்டாயப்படுத்தி பலவந்த படுத்த கூடாது என்பதற்கு ரோஸ் ஒரு வழிமுறையை பின்பற்றுவாள்.
ஜோன்ஸ் க்ரோவுக்கும்,ரோஸ் ப்ரைரிக்கும் நெருக்கமான காதல் காட்சிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை.
அரக்கனை கொல்ல கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு இருக்கும்போது கர்னல் தன் மகன் டான்னியை மீட்பதற்காக தடுக்கிறார்.
அதே வாய்ப்பு கர்னலுக்கு அமையும் போது ; அரக்கன் உயிரோடு இருந்தால்தான் ஜோன்ஸ் உயிர் பிழைக்கும் வாய்ப்பு.அவரவர் தத்தமது பிள்ளைகளை காப்பாற்றிக்கொள்ள முனைப்பு காட்டுவர்.கர்னல் தான் இறக்கும் போது மனநிறைவோடு இறப்பதற்கு காரணம்.தன் மகன் டான்னியை மீட்க இயலாவிடினும் தன் மகன் வழி(ஜோன்ஸ் க்ரோவுடைய)வாரிசு தொடர்ச்சி ஏற்பட்டதை உணர்ந்த மன நிறைவு.
இப்பொழுது ஜோன்ஸ் க்ரோ தன் உயிரையும் துச்சமாக மதித்து ரோஸ்ப்ரைரியை மீட்க வேண்டிய சூழல்.
ரோஸ் ப்ரைரி அரக்கனோடு செல்லும் முன்பாகவே ஜோன்ஸ் க்ரோவுடைய கருவை சுமந்து செல்வாள்.
ஓர் அரக்கனுடைய வம்சாவளி,ஓர் போராளியுடைய வம்சாவளி இரண்டில் ஒன்று யாரென தேர்வு செய்யும் முடிவு மட்டுமே அவளுடையது.இதை உணர்த்தவே இரு கதாபாத்திரங்களுடைய ஒப்பீடு.
ரோஸ் தாய்மை அடைந்ததை மறைமுகமாக உணர்த்தவே இரு பெண்களுடைய(லின் மற்றும் ரான் டான்னர்) தாய்மை உணர்வின் வெளிப்பாடு.
லின் தன் மகனோடு சேர்ந்து கொள்ளவும்,ரோஸ் தன் மகனை பாதுகாப்பாக பெற்றெடுக்கும் அவனை விட்டு பிரிகின்றனர்.
42.பக்கம் படைப்பாளிகளுடைய உச்சகட்ட ஆற்றலை உணர்த்தும் காட்சி.
லின் மற்றும் ஜோன்ஸ் ரோஸை நெருங்கும் போது வலியில் கண்மூடி படுத்திருப்பாள்.அதன் மூலமாக மறைமுகமாகவும் தன் படைப்புக்கு வலு சேர்த்திருப்பர்.இதை நீண்ட தயகத்துக்குப் பிறகே குறிப்பிட வேண்டியுள்ளது.ஆனால் படைப்பாளிகளுடைய ஆற்றலை தரிசிக்க சிலவற்றை தவிர்க்க இயலாது.
இது போன்ற கருத்தாக்கம் இத்தளத்தில் விரும்பப்படாது என்பதை உணர்ந்த போதிலும்;ஓர் படைப்பு அதன் ஆத்மாவோடு உணரப்படும் போது படைப்பாளிகளுக்கு கிடைக்கும் மதிப்புதான் சரியான வெகுமதி.
ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள் தேவையற்ற விவாதங்களை தவிர்த்துவிடலாம்.
மற்றுமொரு இலக்கியத் தரம் உள்ள வேறொரு நாவலில் சந்திப்போம்.
நன்றி.
//இது போன்ற கருத்தாக்கம் இத்தளத்தில் விரும்பப்படாது//
Deleteஅப்படியா ? News to me sir...
///ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள் தேவையற்ற விவாதங்களை தவிர்த்துவிடலாம்.///
Deleteவிவாதங்கள் எழ வாய்ப்பே இல்லை!
சார் "காற்றுக்கு ஏது வேலி"கதையின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் சார்?
ReplyDeleteநம் தல டெக்ஸின் "சிங்கத்தின் சிறு வயதில் "தொடரின் அடுத்த இதழ் எப்போது சார்?
ReplyDelete***** இருளின் மைந்தர்கள் ******
ReplyDeleteஏற்கனவே கருப்பு வெள்ளையில் சிலபல முறை படித்த கதைதான்.. எனினும் வண்ணத்தில், மேக்ஸி சைஸில் படிப்பது ஒரு ஃப்ரெஷ்ஷான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கிறது!
இருளின் மைந்தர்களின் பலவீனங்களை மிகச் சரியாகக் கணித்து, அதைக்கொண்டே கொண்டே அவர்களை வீழ்த்தும் அதிகாரியின் யுக்திகளெல்லாம் செம + கெக்கபிக்கே!!
எல்லாவகையிலும் நிறைவானதொரு படைப்பு - என்றாலும், ஒரே புத்தகமாய் வந்திருக்கலாமோ என துளியூண்டு ஏங்க வைத்திடுகிறது!
என்னுடைய ரேட்டிங் : 9.8/10
மார்ச் வரைப் பொறுங்களேன் ; கூத்துக்கள் ஒன்றிரண்டு காத்துள்ளன !!
Deleteஎடிட்டர் சார்..
ReplyDeleteடீ-ஷர்ட்டில் முன்புறம் முத்து லோகோவும், பின்புறம் லயன் லோகோவும் (or vice versa) பிரின்ட் செய்து கொடுத்தால் பெருமையுடன் அணிந்து கொள்வோமே?! இதற்காக நீங்கள் எந்தப் படைப்பாளியின் முன் அனுமதியும் பெற வேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பு!
செய்வீர்களா..நீங்கள் செய்வீர்களா?
நிச்சயம் நண்பர்களின் வரவேற்புப் பெறுமென்பது என் கணிப்பு!
+1000
Delete+111
Deleteஆனாக்க ஆர்ச்சி புக் இல்லைனா டீசர்ட் ரெண்டுல ஏதோ ஒன்னு தானே கெடைக்கும்!??
ஏற்கெனவே ஆர்ச்சிக்கு ஜே போட்டாச்சே!??
///ஆனாக்க ஆர்ச்சி புக் இல்லைனா டீசர்ட் ரெண்டுல ஏதோ ஒன்னு தானே கெடைக்கும்!??//
Deleteஆப்ஷன் கொடுத்த அது லாயல்டி புள்ளிகளுக்கு ..
இது முதல் இருநூறு சந்தாதாரர்களுக்கு மட்டும்
தெளிவான இம்மாத டெக்ஸை படிச்சு முடிச்சிருந்தா குழப்பமான இந்த எண்ணமே வந்திருக்காது...:-)
Deleteபலசரக்குக் கடைகளில் "கண்ணன் தேவன் டீ " என்ற லோகோவோடு டி-ஷர்ட் போட்டபடிக்கே அண்ணாச்சி பொட்டலம் மடிப்பதைப் பார்த்திருப்போம் ! அதே பாணியில் இராதா - நண்பர்களின் நெஞ்சங்களையும், முதுகுகளையும் நமக்கான விளம்பரப் பலகைகளாக்கிட்டால் ?
Delete