Powered By Blogger

Wednesday, February 01, 2017

ஜேசனும்...நண்பர்களும்..!

நண்பர்களே,

வணக்கம். பிப்ரவரியின் இதழ்கள் உங்கள் இல்லக் கதவுகளைத் தட்டிடும் பயணத்தைத் துவங்கிவிட்டன ! கூரியர்களில் அனைவரது பிரதிகளும் நேற்றைக்கே சிவகாசியிலிருந்து புறப்பட்டு விட்டன என்பதையும் உறுதி செய்து விட்டோம். So உங்கள் நகரத்துப் பட்டுவாடா நண்பர்களின் ஒத்துழைப்பிருப்பின், மாதத்தின் முதல் தேதிக்கு 4 இதழ்களும் இன்றே உங்கள் கைகளில் இருந்திட வேண்டும் !

And இம்மாத சர்ப்ரைஸ் கிப்ட்டின் பின்னணியினில் நிதி உபயதாரர் யாருமிலர் என்பதால் - நம்மாலான சிறு முயற்சி உங்கள் வசம் ! அது பற்றிய உங்கள் அபிப்பிராயங்களையும், இதழ்களின் முதல் புரட்டல் உருவாக்கும் எண்ணங்களையும் எழுத்துக்களாக்கினால் இந்தப் பதிவினையும், நமது பொழுதுகளையும் சுவாரஸ்யமானவைகளாக மாற்றிடலாமே ?

And பிப்ரவரியின் இதழ்களை இப்போது ஆன்லைனிலும் வாங்கிடலாம் ! இங்கே க்ளிக் செய்யுங்கள் ப்ளீஸ் : 

http://lioncomics.in/monthly-packs/294-february-2017-pack.html

Please do write all !! மீண்டும் சந்திப்போம் ! Happy Reading !!

P.S : திருப்பூரில் இன்று முதல் (03 -பிப்ரவரி) துவங்கிடும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் : 99 ! அனைவரும் வருகை தாருங்களேன் - ப்ளீஸ் ?



195 comments:

  1. அனைவருக்கும் காலை வணக்கம்.

    ReplyDelete
  2. மாடஸ்டியும் விரைவில் கிடைத்தால் மகிழ்ச்சி சார்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த மாசம் வர்ரா இளவரசி,அய்யாக்களா...உங்கள் விரதம் முடிக்க...வாழ்த்துகள்...

      Delete
  3. வணக்கம் சார்...
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

    ReplyDelete
  4. இந்த பதிவுக்கு நான் 10 ஆம் எண் comment கொடுத்து நான் முன்னேறி....!!??வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

    ReplyDelete
  5. ஆசிரியரின் அன்பான பரிசு எதுவாக
    இருந்தாலும் எனக்கு(நமக்கு) அது
    எவரெஸ்டுதான்.
    ஈவி மாயாவி TBB கருர் சரவணன்
    STEELCLAW. ST SATHAN மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் காலை
    வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. என் பணிவான வந்தனங்கள் கணேஷ் சார்! _/\_

      Delete
  6. அய்யா யாரும் புத்தகங்களை கைப்பற்றினீர்களா???
    அந்த...அந்த..சஸ்பென்ஸ் கிஃப்ட் என்னவோ!!!
    நேரில் டெக்ஸ் அட்டைப்படம் எப்படி இருக்கு?

    ReplyDelete
  7. விஜயன் சார், surprise அருமை .... ஜாலி டைம் வித் அப்பு!

    ReplyDelete
    Replies
    1. 'ஜாலி டைம் வித் அப்பு'?!!!
      புச்சா கீது!!!

      Delete
    2. check the post by Kumar Karur https://www.facebook.com/groups/426326524172251/809525209185712/?comment_id=809530192518547&notif_t=like&notif_id=1485919314538484

      Delete
    3. நன்றி PfB!

      அடடே! ஓவியர் செல்லத்தின் கைவண்ணத்தில்!! அடடடடே!!!

      Delete
    4. வாரமலர் சமீபமாய்க் கண்ணில் பட்டதன் பலன் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

      Delete
    5. லயன் சூப்பர் ஸ்பெசலை உங்கள் பார்வைக்காக எடுத்து பாருங்களேன் சார்...
      அந்த மினி சைசில் மெகா புதையல் ஏதாச்சும் அடிச்சா சும்மா எப்டி இருக்கும்...

      Delete
  8. 'மிக விரைவில் முன்பதிவு ஆரம்பம்'... 'முழுவண்ணத்தில், தலையில்லாப்போராளி சைஸில் ஒரு மெகா காமிக்ஸ் காவியம்'...

    காமிக்ஸ் வாசிப்பின் உச்சபட்ச அதிர்வலைகளை உள்வாங்கிக்கொள்ள...

    Stay tuned folks...

    - அப்படீன்னு போட்டு இரத்தப்படலத்துக்கு இந்தமாச புக்குகள்ல ஒரு trailer இருந்தா செம செம செம செமயா இருக்கும்ல?

    ReplyDelete
    Replies
    1. விஜய்@ இரத்தப்படலம் வண்ண மறு பதிப்பு வருவதே போதுமான ஒன்றல்லவா...!!!
      அதுவும் படிக்க மற்றும் பந்தாகாட்ட இருவழிகளில்...

      த.இ.போ. சைஸ்லாம் இதற்கு ரொம்பவே ஓவரா இருக்காது?

      மேக்ஸிம்ம் கலக்சனுக்கு வாங்கப்போகும் இது நார்மல் சைஸ்லயே வரட்டும், எ.எ.க.

      மேலும் த.இ.போ. சைஸில் உள்ள பெரிய குறை அதை பாதுகாப்பு செய்வது. அது ஒன்றை வைக்கவே தனி கவனம் செலுத்த வேண்டியுள்ளது....ஹி...ஹி...

      Delete
    2. டெக்ஸ் விஜய் அட்

      நீங்க சொல்றதையெல்லாம் ஏத்துக்கணும்னு ஆச ஆசையா இருக்கு!

      ஆனா, மாட்டேன்! :D

      Delete
    3. "தன் முயற்சியில் சிறிதும் மனம் தளரா விக்கிரமாதித்தன் - சிறிதும் பிடிவாதம் குறையா வேதாளத்தை மீண்டுமொருமுறை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு மரத்திலிருந்து கீழிறங்க முயன்றாராம்......!"

      எப்போதோ அம்புலிமாமாவில் படித்த வரிகள் தற்செயலாக இன்றைக்கு ஞாபகம் வந்தது !

      Delete
    4. போனப திவில் ஈவி அவர்களை
      நான் குறிப்பிட்ட வார்த்தைகள்.
      தஇபோ சைஸ் கேட்டு போராடியதற்க்காக

      Delete
    5. ஙே!!

      எடிட்டர் சார், என்னை விக்கிரமாத்தன்'னு சொல்றீங்களா? வேதாளம்'னா??

      @ கணேஷ் சார்

      பின்னே? நம்மை மீறி ஒருத்தர் யோசிச்சுட முடியுமா..? யோசிக்கத்தான் விடுவோமா?!! ப்பூ! :)

      Delete
  9. ஒரு திரை விலகும் நேரம் படித்து ஆகிவிட்டது super

    ReplyDelete
    Replies
    1. அதற்குள்ளாகவா?!!!!!!!
      எப்படி சாத்தியம்?!!!!!

      ஒருவேளை, தலைப்பை மட்டும் படிச்சிருக்கீங்களோ என்னவோ!!! ;)

      Delete
    2. நல்லா வருவீங்க! :-)

      Delete
  10. 7மணிக்கு கோரியர் அலுவலகத்தில் அமர்ந்து படித்து விட்டுதான் வீட்டுக்கு வந்தேன். சஸ்பேன்ஸ் தங்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. போவட்டும்! இரத்தப்படலத்தையும் இதே மாதிரி செஞ்சுடாதீங்க. அப்புறம் ஒரு ரெண்டுமூனு நாளைக்கு வீட்டுக்கே வரமுடியாது! :)

      Delete
    2. BALAMURUGAN D : ஏற்கனவே காமிக்ஸ் ஆர்வலர்களான நமக்கெல்லாம் "ஒரு மாதிரியான" பார்வைகளை மக்கள் வழங்கிடுவது வழக்கம் !! நீங்கள் காலங்கார்த்தாலே கூரியர் ஆபீஸிலேயே "பொம்மை புக்" படிக்க ஆரம்பித்துவிட்டதைப் பார்த்த போது நிச்சயமாய் சில பல புருவங்கள் உயர்ந்திருக்கும் !

      Anyways அந்த ஆர்வம் அட்டகாசம் சார் !

      Delete
  11. இனிய காலை வணக்கம் நண்பர்களே.. மு.பாபு., கெங்கவல்லி.. சேலம் மாவட்டம்..

    ReplyDelete
  12. B&wஇரத்தபடலம் வந்த பொது இப்படித்தான் காலை போனவன் மதியம் ஆகியும் வரவில்லை.வீட்டில் இருந்தாலும் 50போன் மேலே வந்தால் வீட்டுக்கு சென்றேன்

    ReplyDelete
    Replies
    1. பாத்தீங்களா!!!!

      அடுத்த வருசம் அந்த 1250 பக்க புக்கு வெளிவரும்போது நீங்க எதுக்கும் 'என்னை யாரும் தேட வேண்டாம்'னு ஒரு கடுதாசி எழுதி வீட்ல வச்சுட்டு, கட்டுசோறு, துணிமணி எல்லாம் கட்டிக்கிட்டு கொரியர் ஆபீஸ் போறதுதான் சரியா இருக்கும்னு தோனறது!

      Delete
  13. ஆசிரியர், மற்றும் எனது காமிக்ஸ் நணபர்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கம்!
    மற்றபடி ,என்னனுடன் பிறந்த, எனது மூத்த சகோதரர் உயிருக்கு எந்த உத்தரவாதம் இல்லாமல் ,மருத்துவர்களால் கைவிட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் இந்த வேதனையான தருணத்திலும், எனது இளைய சகோதர்ரை நமது காமிக்‌ஸ் குடும்பத்தில் இன்று கோல்ட் சந்தா செலுத்தி இணையவைத்ததில் நான் சிறிது மனம் ஆறுதல் அடைகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. I hope your elder brother will become normal with God grace. I pray for him to get well soon.

      Delete
    2. Please pray to lord seven hills Venkateswara. This God will help your brother and your brother will recover.

      Delete
    3. suresh suriya : சார்...நம்பிக்கையோடு இருங்கள் ! நிச்சயம் நல்லதே நடக்கும் !

      Delete
    4. சுரேஷ் சூரியா சார்...!!
      உங்கள் பதிவு ஸ்தம்பிக்க வைக்கிறது.மிகவும் கடினமான ஒரு தருணத்தை தாங்கள் கடக்கும் இந்த நேரத்தில்,
      எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்கள் மீது உண்டாக வேண்டுகிறேன்.
      இப்படிப் பட்ட சூழ்நிலையிலும் தாங்கள் வெளிப்படுத்தியிருக்கும் இந்த உணர்வுகள் நிச்சயம் நாமும்,நமது காமிக்ஸ் குடும்பமும் பெருமைப்படக்கூடியவை.
      உங்களுடன் நாமும் உள்ளோம் சகோதரரே...!!

      Delete
    5. நன்றி நண்பர்களே

      Delete
    6. அண்ணன் நலம் பெற பிரார்த்தனைகள்.

      Delete
    7. உங்கள் மூத்த சகோதரர் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நம்பிக்கையை மட்டும் கைவிட்டு விடாதீர்கள் நண்பரே. என் சொந்த அனுபவத்தில் சொல்லுகிறேன்.

      Delete
    8. நம் சகோதரர் நலம் பெட்ரு திரும்புவார் நம்பிக்கை கொள்ளுங்கள்.

      Delete
    9. Thank you all my friends, l brother' life is end to day 8.45 PM

      Delete
    10. @ சுரேஷ் சூர்யா

      ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே! மிகுந்த வருத்தமளிக்கிறது! :(

      May his soul rest in peace! :(

      Delete
    11. I pray to Our heavenly father for you're brother soul to enter in to the HEAVEN.

      Delete
  14. அனைவருக்கும் காலை வணக்கம்! பிப்ரவரி இதழ்களுக்காக courier deliverymanக்கு waiting!

    ReplyDelete
  15. வணக்கம் எடிட்டர் சார்...!
    வணக்கம் நண்பர்களே...!

    ReplyDelete
  16. எடிட்டர் சார்...!
    "ஜாலி டைம்ஸ்"-
    கடையில் வாங்குகிறவர்களுக்கு கிடைக்குமா...?
    (உரிய விலை கொடுத்து...)

    ReplyDelete
    Replies
    1. Better to be a subscribed for our comics to get all these surprise's.

      Delete
    2. ஜேடர்பாளையம் சரவணகுமார் : சார்... பணப் புழக்கச் சிரமங்கள் எழுந்த நாள் முதலாய் நமது ஏஜெண்ட்கள் வாயிலான விற்பனை முறைகளில் நிறையவே சுணக்கங்கள் ! நம் இதழ்களென்றில்லை - ஒட்டு மொத்தமாகவே புத்தகக் கடை விற்பனைகள் அரை ஜீவனிலேயே ஓடி வருகின்றன ! இந்த நிலையில் இது போன்ற துக்கடா இதழ்களுக்கொரு ஆர்டர் வாங்கி ; அவற்றையும் கடனுக்கு அனுப்பி விட்டு, அப்புறம் அந்தத் தொகைகளை நிலுவைகளில் ஏற்றிக் கொண்டு வசூலுக்கென நடப்பது நடைமுறைச் சிக்கல்கள் மிகுந்தது !

      தவிர, இது மாதா மாதத்துச் சமாச்சாரம் அல்லவே - இதற்கென ஏதேனும் திட்டமிட ! அந்த நொடியில் எனக்குள் தோன்றும் சிற்சிறு ஆசைகளின் வெளிப்பாடுகளாகவே இந்தாண்டின் முழுமைக்கும் இந்த surprises படலம் அமைந்திடும் !

      Delete
  17. சர்ப்ரைஸ் அருமை சார்.

    ReplyDelete
  18. புத்தகங்களை கைப்பற்றியாச்சு சார்...

    நேரில் பார்க்கும்போது ஜேசன் ப்ரைஸ் அட்டைக்கு டாப் பிரைஸ் இம்மாதம்...

    டெக்ஸ் சட்டையில் இல்லாத மஞ்சள் Texல் சூப்பர் சார்...

    டெக்ஸ் கதை பிரம்மாண்டமான மிரட்டலாக தெறிக்கிறது, முதல் புரட்டலில்...

    முதலில் க்ளைமாக்ஸ்ஐ படித்து விடலாம் என்ற ஆர்வம் ,திரையை விலக்குகிறது சார்.

    அடுத்து மாதம் பைனலி பைனலி தோர்கல் வர்ரார்...ஆரிஸியாவை பார்க்கலாம்..ஹி..ஹி...

    அடுத்த மாத டெக்ஸ் 224பக்க விளம்பரம் அள்ளுது...

    அந்த சர்ப்ரைஸ் அட்டகாசம் சார்...

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : //அடுத்து மாதம் பைனலி பைனலி தோர்கல் வர்ரார்...ஆரிஸியாவை பார்க்கலாம்..ஹி..ஹி...//

      நல்ல சேதி என்னான்னா - இது நமது பெங்களூரு நண்பர் நீண்ட காலமாய் எதிர்பார்த்து வந்த சமாச்சாரம் ! கெட்ட சேதி என்னான்னா தோர்கல் தலைகாட்ட ஓராண்டுக்கு மேலாகிப் போய் விட்டது !!

      Delete
    2. Vijayan @ ஒரு வருடம் கழித்து தோர்கல் வருவதால் ரெண்டு கதை கொண்ட சின்ன குண்டு புத்தகமா வரும் என்று எதிர்பார்த்த எனக்கு ஒரே ஒரு கதை மட்டும் வருவதால் ரொம்ப வருத்தமாக உள்ளது என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன்!

      Delete
    3. தோர்கல் கி.நா.வில் ஆரம்பித்து இன்று ரெகுலர் சந்தாவில் வருவது சிறப்பான வெற்றி அல்லவா நண்பரே பரணி...

      தோர்கலில் ஒற்றை பாக கதை மற்றும் இரட்டை பாக கதை கலந்து வரும்போது இப்படி ஒற்றை பாக இதழ் வருவது தவிர்க்க முடியாத ஒன்றல்லவா!!!

      ஒரு இரட்டை இதழும் உண்டு என எண்ணி பாருங்களேன். மகிழ்ச்சி வந்து ஒட்டி கொள்ளும்...
      ஆரிஸியாவை ஆரவாரமாக வரவேற்போம், வாருங்கள்...

      Delete
    4. சேலம் Tex விஜயராகவன் @ உங்களுக்கு என்னஜி, கொடுத்து வைத்தவர் டெக்ஸ் மாதாமாதம் வருகிறார்; தோர்கல் ஒருவருடம் கழித்து அதுவும் ஒரே ஒரு கதையாக வருகிறது, அப்படி எனும் போது நீங்கள் சொல்வது போல் நினைத்து சந்தோஷபட முடியவில்லை!

      ஆசிரியர் மனது வைத்தால் ஒன்றை இரண்டு கதைகளாக மாற்றமுடியும் என்பதால் ... :௦)

      Delete
  19. குரியர் வந்துடுச்சி.. அந்த சர்ப்ரைஸ் உண்மைலயே செம!! சந்தால இல்லாதவங்கள்லாம் நிசமாவே வருத்தப்படுவாங்க.. கடுப்பாகக்கூட வாய்ப்பிருக்கு. என்னான்னு சொல்லவா? இன்னும் கொஞ்ச நேரம் நீடிக்கட்டுமா?

    என்ன ஈவி அவர்களே.. மைக் டெஸ்டிங் ஒன்டூதிரி.. அது என்னான்னா..

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : நீங்கள் மைக்கை டெஸ்ட் பண்ணும் முன்பாக நண்பர்கள் FB-ல் ஆடல்-பாடல் நிகழ்ச்சியே நடத்தி முடித்து விடுவார்கள் சார் !

      Delete
    2. எப்பவே நடத்தி முச்சாச்சி.
      செம இணைப்பு.thx

      Delete
    3. ///என்ன ஈவி அவர்களே.. மைக் டெஸ்டிங் ஒன்டூதிரி.. அது என்னான்னா..///

      மிஸ்டர்... ரகசியங்களை reveal பண்றதுன்னா காலம்பர நேரத்தோட வந்து பண்ணணும்! இப்படி மத்தியானம் 12:32க்கு வந்து கமெண்ட் போட்டுட்டு, இதுல மைக் டெஸ்டிங் வேற!! :D

      Delete
    4. @எடிட்டர், ஈ.வி,

      வயசான காலத்துல குச்சிய ஊணிகிட்டு டக்கு டக்குனு இங்க வர்றதுக்கே நேரமாயிடுது.. இதில் நம்பளை போய் ஆடலும்பாடலும் நடத்தி, டக்குனு ஓபன் பண்ணச்சொன்னா எப்பிடிங்க? :-)))))

      Delete
  20. ஆசிரியர் சார் @ இரத்த கோட்டை & இரத்த படல வலைதள டிஸ்கஸ் ல கலந்து கொண்டிரா நண்பர்கள் பொருட்டு பதிவுகளை இணைப்பு செய்துள்ளதாக காமிக்ஸ் டைமில் தெரிவித்து உள்ளீர்கள். அதைக்காணோமே சார்?.
    வலையில் இல்லாத நண்பர்களுக்கு மட்டுமே இணைத்து உள்ளீர்களோ சார்???

    ReplyDelete
  21. இதழ் இன்னும் னகயில் சிக்கவில்னல பதிவு அஞ்சல் என்பதால் தாமதம்.....

    ReplyDelete
  22. சார் காலை எட்டு மணிக்கே கைப்பற்றி விட்டேன்...ஏக அலைச்சல்...கிஃப்ட் கதைகள் பரவாயில்லை...ஆனா வடிவமைப்பும் ..வண்ணமும் அமர்க்களம்...டெக்ஸ் நேரில் அட்டை சுமார்...மந்திரியும்....லார்கோவும் அமர்க்களம்...

    ReplyDelete
  23. புக்கு கிடைச்சுடுச்சேஏஏஏய்...!

    பொட்டலத்தப் பிரிச்சு கொஞ்ச நேரம் தடவிட்டு, அப்பால வாரேன்!

    ReplyDelete
  24. கிடைச்சாச்சு...!!!
    முதல் பார்வையில் எல்லாம் ஓகே.அனைத்து இதழ்களிலும்
    மிகவும் ஷார்ப்பான பிரின்ட்.
    நன்றி சார்.
    அட்டைப்படங்களில் டெக்ஸ் ஒரு ஹி...ஹி...
    சமீபத்தில் இது தான் டம்மி பீஸ்.

    ReplyDelete
  25. Vijayan sir, I am regularly buying your books from a local shop. Now because of the free book, I am going to subscribe instead of buying from him. I informed this to him since I am his regular buyer for so many years. He is very unhappy and told me that if this trend continues, he may be forced to stop selling your books.

    ReplyDelete
    Replies
    1. gowthamnithish : சார்....சிலபல விஷயங்களை தெளிவு பண்ணிட அனுமதியுங்களேன் ?

      இந்த கிப்ட் திட்டமானது சந்தாக்களை சுண்டியிழுக்கும் ஒரு அஸ்திரமாய் (?!!) திட்டமிடப்பட்டது அல்ல ! அவ்விதம் இருப்பின், ஜனவரியில் இப்படியொரு காலெண்டர் ; பிப்ரவரியில் இப்படியொரு இதழ் ; மார்ச்சுக்கு இது ; ஏப்ரலுக்கு அது என்று தம்பட்டம் போட்டிருப்போம் அல்லவா ? ஜனவரியில் பார்சலைப் பிரிக்கும் வரைக்கும் யாருக்கும் எதுவும் தெரியாது என்பது தானே நிலவரம் ? So இந்த "கிப்ட் படலத்தை" ஒரு வியாபார யுக்தியாய் நான் பார்த்திடவில்லை ! அதுமட்டுமன்றி, தொடர்ச்சியாய் 5 ஆண்டுகளாய், நம்மை விடாப்பிடியாய் அரவணைத்து, ஆக்சிஜன் ஊட்டி இந்தப் பயணத்தைக் சாத்தியமாக்கி வரும் சந்தா நண்பர்களும் இந்த கிப்ட்டின் பொருட்டு இந்தாண்டுச் சந்தாக்களைக் கட்டிடவில்லை தானே ?

      Maybe ஜனவரியின் பாதிக்குப் பின்பாய் சந்தாவில் சேரத் தீர்மானித்திருக்கும் சில புதியவர்களின் மனதுகளை மாற்றிய புண்ணியம் இந்த கிப்ட்டுகளுக்கு இருந்திடலாம் - உங்களது நிலையைப் போல ! அத்தகைய influenced decisions -ன் மொத்த எண்ணிக்கை 20 -ஐத் தாண்டிடாது என்பது தான் நிலவரம் !

      So இந்த 20 பிரதிகளின் விற்பனையானது கடைகளிலிருந்து சந்தாவுக்கு migrate ஆனதால் ஏற்பட்டிடக்கூடிய ஆதாயங்களோ / நஷ்டங்களோ எவ்விதமானவையாக இருந்திடக்கூடும் என்பதை யூகிக்கச் சிரமம் இராதுதானே ?

      Frankly speaking : தமிழகப் பெருநகரங்களில் நமக்கு நடக்கும் விற்பனைகளை விடவும், நாம் கையில் தூக்கித் திரியும் நிலுவைச் சிட்டைகளும், பிரயாணச் செலவுக்கான வவுச்சர்களுமே ஜாஸ்தி ! திருச்சி நகரினில் மொத்தம் 7 வெவ்வேறு முகவர்களை முயற்சித்து மொத்தமாய் பூஜ்யத்தில் நிற்கிறோம் இன்றைக்கு அங்கே ! திருப்பூரில் முகவர் லேது ! சென்னையில் மொத்தம் கடைகளில் நமக்கு விற்பது 40 பிரதிகள் !! அதிலும் பிரதானமாய் விற்றுக் கொண்டிருந்தவர் கடைமூடிப் போய் மாதங்கள் பல ஓடி விட்டன ! சிதம்பரத்தில் !0 பிரதிகள் ; நெய்வேலியில் ; பண்ருட்டியில் ; தேனியில் ; தூத்துக்குடியில் ; கன்னியாகுமரியில் ஏஜெண்ட்கள் கிடையாது !

      ஆனால் இங்கெல்லாம் நமக்குச் சந்தாதாரர்களும் உண்டு ; ஆன்லைன் ஸ்டோரின் வாடிக்கையாளர்களும் உண்டு !

      முகவர்களை களைந்து விட்டு, நேரடியாய் விற்று லாபம் பார்ப்பது நம் நோக்கமல்ல ; ஆனால் - காமிக்ஸ் எனும் ரசனைக்கு என்றேனும் ஒரு தூரத்து நாளிலாவது ஒரு mass உருவானால் தவிர, கடைகளில் முகவர்கள் சுலபமாய்க் காமிக்ஸ் இதழ்களை விற்றிடப் போவதில்லை ; சுணக்கங்களின்றி நமக்குத் பணம் தரப்பு போவதுமில்லை என்பதே bottomline ! வேகமாய் விற்றால் தானே அவர்களும் வேகமாய் இருப்பார்கள் ?

      So இந்த சூழலிலும் இந்த 5 ஆண்டுகளை ; 150 + இதழ்களை நம்மால் வெளியிட முடிந்துள்ளதெனில் அது சந்தாவின் ஆற்றலின் முதுகிலான சவாரியின் மகத்துவமே ! அந்தச் சவாரிக்கு ஒரு சின்ன thank you சொல்லும் முயற்சியே தற்போது நடைமுறையினில்!

      Delete
    2. "நாங்க நம்பிட்டோம்" என்று நாளைக்கே இதற்குமொரு memes போட்டு, என்னைக் கலாய்த்து விட்டதாய் சந்தோஷப்பட்டுக் கொள்ள நண்பர்கள் இருப்பது நிச்சயம் ! நம்பினாலும், நம்பாவிட்டாலும் யதார்த்தமும், நிஜமும் இதுவே !

      Delete
    3. //நம்பினாலும், நம்பாவிட்டாலும் யதார்த்தமும், நிஜமும் இதுவே !//
      ம்ஹ்ம்....ம்...

      Delete
  26. Cour indru varavillai.puthahangali endru partha paditha nanbarhalin magilchi enaku magilchi.

    ReplyDelete
  27. சூப்பர் தல ஆச்சர்ய பக்கங்கள் ............அடுத்த பிரச்சினை அதை பாதுகாப்பது எப்படி ...........?

    ReplyDelete
    Replies
    1. மதியில்லா மந்திரி //அதை பாதுகாப்பது எப்படி ...........?//

      அதற்குமொரு மார்க்கமுள்ளது ; போகப் போகப் புரியும் பாருங்களேன் !

      Delete
  28. அப்பு அசத்தல். தோட்டா டைம் இல்லாமல் tex வெருமை.அப்பு அருமை.

    ReplyDelete
  29. மதி இல்ல மந்திரி மற்றும் ஜேஸன் பிரைஸ் படித்து முடித்து விட்டேன்.

    3259 தினாருக்கு ஒத்துகிட்டேன? பணத்தை மிட்க மந்திரி போடும் plan செம டைமிங் காமெடி....
    வேலைக்கு ஆகாது... அப்படின்னு அந்த பொம்பிளை பன்னும் ரவுசு இருக்கே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...

    ஜேஸன் கிளைமாக்ஸ் ......படிங்க தெரிஞ்சிடும்.

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar Kumar : //3259 தினாருக்கு ஒத்துகிட்டேன? பணத்தை மிட்க மந்திரி போடும் plan செம டைமிங் காமெடி.//

      இதை நான் எழுதியது டிசம்பர் 2016 -ன் துவக்கப் பொழுதினில் சார் ! அன்றைக்கு இன்னமும் கூடுதல் வீரியமாய்த் தெரிந்தது இந்த காமெடி !

      Delete
  30. Dear sir thanks for the super gift

    ReplyDelete
  31. அட்டகாசமான அன்பளிப்பு.! சூப்பர்.! சந்தா செலுத்தாத வாசகர்கள் வருத்தப்பட வாய்ப்புண்டு.! அவர்களுக்கும் ஏதோ ஒரு வழியில் நீங்கள் நஷ்டபடாமல் கொடுக்க பாருங்களேன்.???

    ReplyDelete
    Replies
    1. //அவர்களுக்கும் ஏதோ ஒரு வழியில் நீங்கள் நஷ்டபடாமல் கொடுக்க பாருங்களேன்.???//

      ஆசிரியரின் முன்னைய பதிவொன்றில் நான் இட்ட பின்னூட்டமும் உங்களது கருத்தினைச் சார்ந்தே இருந்தது. சந்தாதாரராக இல்லாவிட்டாலும் பல வருடங்களாக கடைகயில் விற்பனைக்கு வரும் நமது வெளியீடுகளின் ஒரு புத்தகத்தையேனும் தவறவிட்டுவிடாமல் வாங்கிவரும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். லயன், முத்து நிறுவன வெளியீடாக எதுவந்தாலும் வாங்குவோம் என காத்திருக்கும் அவர்களுக்கு ஒரு விலையை நிர்ணயித்தாவது இப்படியான இணைப்புகளை கொடுப்பது பற்றி ஆசிரியர் அவசியம் ஆலோசித்திடவேண்டும். சந்தாதாரருக்கு கைமாறு செய்திட ஆசிரியர் நினைப்பதில் எள்ளளவும் குறை சொல்லிட இயலாது. அதே நேரம் இப்படியான ஒரு சிறப்பு பதிப்பினை தவறவிட்டிடும் சந்தாதாரராக இல்லாத நீண்ட நாள் வாசகர்களின் ஏமாற்றமும் பரிதாபத்துக்குரியதல்லவா?

      Delete
  32. முதல் பார்வை :-

    ஜேசன் - சித்திரங்கள் சுண்டியிழுக்கின்றன. போதாக்குறைக்கு முந்தைய பாகங்களின் சஸ்பென்ஸ் வேறு சேர்ந்துகொள்ள, உடனே படிக்க வேண்டுமென்ற ஆவலில் ..
    டெக்ஸ் வில்லர் - முன்னட்டை மாத்திரம் தற்போதைய மறுபதிப்புகளை நினைவூட்டுகிறது. ஆனால் உட்பக்கங்களோ, இன்னொருமொரு வில்லர் விருந்து நிச்சயம் என்கின்றன.

    மோடி மஸ்தான் - அட்டைப்படம் செம்ம அழகு (கலரிங்) . மதியில்லா மந்திரி எப்போதும் போல.

    CID லாரன்ஸ் - எப்பவும் பச்சை நாயகர் (Evergreen hero) . தெளிவான சித்திரங்கள். இம்முறை மறுபதிப்பு அட்டைப்படம் அழகாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  33. சந்தாவுக்கான சர்ஃப்ரைஸ். :-

    சூப்பரானதொரு பரிசு என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.
    சொல்லப்போனால் இதுபோன்ற பரிசுகள் சந்தா கட்டுவதை ஊக்குவிக்கும் என்பதும் உறுதியே.
    ஒரேயொரு சின்ன உறுத்தல் மாத்திரம் உண்டு. அதுதான் சைஸ்.
    நியூஸ் பேப்பர் சைசில் வந்திருப்பது ஒரு பெரிய குறை சார். முக்கியமாக கையில் வைத்து படிப்பதில் சிரமம் இருக்கும்.
    இந்த எட்டு பக்கங்களையே இரண்டாக மடித்து 16 பக்கங்ளாக கொடுத்திருந்தால் (தற்போதைய டைகர் சைஸ்) கையாள்வதற்கு எளிதாக இருந்திருக்குமே சார். (ஒரு பின்னும் மிச்சமாகியிருக்கும் ஹிஹி. .) :-)

    ஜேசன் ப்ரைஸுடன் உலவச்செல்கிறேன். .!!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தேள் தீவில் வந்த ஜேசனைத்தான் பிடிக்கும்.!

      Delete
  34. எடிட்டர் சார்,

    இந்தமாத சர்ப்ரைஸான 'ஜாலிடைம்ஸ்' நிஜமான அசத்தல் சர்ப்ரைஸ்!!!
    * அதிமேதை அப்பு
    * இயற்கையின் பாதையில்
    * டொனால்டு டக் ( அடடே! :))
    * நல்லசேதி/கெட்டசேதி
    * மிஸ்டர் லொள்ளு
    * மேதைகள் பலவிதம்
    * நாயும் நானும்!
    * விச்சு-கிச்சு
    * சுட்டீஸ் கார்னர்
    * பூசணித்தலை டைகர்
    * சிரிப்பின் நிறம் சிவப்பு
    * துப்பறியும் ஜூனியர் - டிடெக்டிவ் சிறுகதை
    * ஆறு வித்தியாசங்கள், கலரிங் பேஜ்

    என சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமாய் கலந்துகட்டி அள்ளித்தெளித்து அட்டகாசம் செய்திருக்கிறீர்கள்; 8 பெரிய்ய்ய பக்கங்களில், வண்ணமயமாய், வழவழா ஆர்ட் பேப்பரில்!

    ஒவ்வொருவருக்கும் அவரவர் ரசணைகளுக்கு ஏற்றாற்போல் சில பக்கங்கள் பிடிக்கலாம்; ஒன்றிரண்டு சுமாராகவும் தோன்றலாம்! ஆனால், எல்லாத்தரப்பினரையும் திருப்திபடுத்திடும் வகையில் செம வெரைய்டி காட்டியிருப்பது பலே சொல்ல வைக்கிறது!

    எல்லாவற்றிற்கும் மேலாக, இதன் தயாரிப்புப் பணியிலுள்ள மெனக்கெடல்களை கொஞ்சமாகவேனும் சிந்தித்திடும்போது, ஒரு 'இலவசத்துக்காண்டி'யான உழைப்பாய் இது சத்தியமாய் தெரிந்திடவில்லை!

    மற்றபடிக்கு சிறூஊஊ குறையாகத் தெரிவது - இதன் சைஸ்! மடித்துவைத்தால் சில வருடங்களுக்குப் பிறகு கிழிந்துவிடலாம்! மடிக்காமல் வைத்துப் பாதுகாப்பதிலும் சிரமமே! இந்த சைஸை பாதியாக்கி 16 பக்கங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் 100% நிறைவாய் இருந்திருக்கும் எ.எ.க!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN & Erode VIJAY : //இந்த சைஸை பாதியாக்கி 16 பக்கங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் 100% நிறைவாய் இருந்திருக்கும் எ.எ.க!//

      ஒரு "சர்ப்ரைஸ்" என்பதன் முழுமையான நோக்கம் நிறைவேறிட வேண்டுமெனில் அதனில் எங்கேனும் ஒரு சன்னமான வித்தியாசம் அவசியமாகிடாதா ? போன வருடம் நாம் தந்த அந்த "லயன் மினி" போலவே இதுவும் தோன்றிடக் கூடாதே என்று மனதில் பட்டது ! அப்புறம் "ஜாலி டைம்ஸ்" எனும் பெயரினில் ஒரு நியூஸ்பேப்பருக்கான effect இருக்கும் போது, ஒரு நியூஸ்பேப்பர் பாணியிலேயே இத்தனை அமைப்போம் என்றும் தோன்றியது !

      எல்லாவற்றிற்கும் மேலாய் - முதல் பார்வைக்கு "அட" என்றொரு ஆச்சர்யக் குறியினை உங்கள் முகங்களில் கொணர இந்த சைஸ் உதவிடும் என்று நினைத்தேன் !! அப்புறமாய் என் பேச்சை நானே கேட்பேனா - என்ன ?

      Delete
    2. எல்லாவற்றிற்கும் மேலாய் - முதல் பார்வைக்கு "அட" என்றொரு ஆச்சர்யக் குறியினை உங்கள் முகங்களில் கொணர இந்த சைஸ் உதவிடும் என்று நினைத்தேன் !!

      ######


      உண்மை சார் ....:-)

      Delete
    3. Erode VIJAY : //இதன் தயாரிப்புப் பணியிலுள்ள மெனக்கெடல்களை கொஞ்சமாகவேனும் சிந்தித்திடும்போது, ஒரு 'இலவசத்துக்காண்டி'யான உழைப்பாய் இது சத்தியமாய் தெரிந்திடவில்லை!//

      இந்த மாதத்துக்கென நான் முதலில் உருவகப்படுத்தியிருந்த கிப்ட் வேறொன்றே ! ஆனால் அதனில் பட்டி டிங்கரிங் செய்ய நிறையவே நேரம் செலவிட வேண்டியிருந்தது ! "அராஜகம் அன்லிமிடெட் " பணிகளில் முழி பிதுங்கிப் போய்க் கிடந்த நிலையில் - குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் மாலையே இந்த "ஜாலி டைம்ஸ்" என் மண்டைக்குள் உதயமாகியது ! இதற்கான மெட்டீரியல் எனது மேஜையில் 25 + ஆண்டுகளாய்த் துயில் பயின்று கொண்டிருந்தவை ! "டொனால்டு டக் " - டிங் டாங் இதழில் போடும் பொருட்டு 1982 -ல் வாங்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் !!

      மொத்தத்தையும் ஒரு மணி நேரத்திற்குள்தீர்மானித்து ; எழுதி ; குடியரசு தினப் பொழுதினில் DTP & கலரிங் செய்யத் துவங்கினோம் ! மொத்தமுமே ஒன்றரை நாள்க்கூத்து என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! நானொரு சுபநிகழ்வுக்கு வெளியூர் செல்ல வேண்டியிருக்க, அதற்கு முன்பாய் இத்னை அச்சில் பார்த்தே தீர வேண்டுமென்ற முனைப்பில் செய்து முடித்தோம் !

      புரட்சித் தீ - ஹொரேஸ் க்ரீலியின் பாணி தான் இப்போதெல்லாம் நமக்கும் !

      Delete
    4. எல்லாவற்றிற்கும் மேலாய் - முதல் பார்வைக்கு "அட" என்றொரு ஆச்சர்யக் குறியினை உங்கள் முகங்களில் கொணர இந்த சைஸ் உதவிடும் என்று நினைத்தேன் !!

      ######


      உண்மை சார் ....:-)

      Delete
  35. தம்பி டீ இன்னும் வரலை?????????

    ReplyDelete
    Replies
    1. ganesh kv : இன்னிக்காச்சும் வந்துச்சா சார் ?

      Delete
    2. நா டீ குடிக்க சிவகாசிக்கு வரணும்,(லீவு கிடைச்சா தானே).அப்புறம் மாஸ்டர் டீ
      ஆறாம பாத்துக்கங்க.என்னாமா வுசுப்பேத்துராங்க.

      Delete
    3. கிடைத்தது சார். அன்புக்கு நன்றி

      Delete
  36. இந்த லட்சணத்தில் மாநில தலைநகரம்?

    ReplyDelete
  37. S T COURIER ன் SUPERFAST SERVICE ஜுப்ரப்பு @@@@@

    ReplyDelete
  38. ****** ஒரு திரை விலகும் நேரம் ******

    எடிட்டர் தனது காமிக்ஸ்-டைமில் கூறியிருப்பது போலவே ஒரு டிடெக்டிவ் கதைபோல ஆரம்பித்து, மர்மமாய் பயணித்து, ஏகப்பட்ட அமானுஷ்ய சங்கதிகளோடு மிரட்டலாய் முடிக்கப்பட்டிருக்கிறது! பரபரக்கச்செய்து, பயமுறுத்தி, திகைக்கச் செய்து, திணறடித்து, ஆச்சரியப்படுத்தி, அலற வைத்திருக்கிறது இந்த இறுதிப் பாகம் - என்றால் அது மிகையல்ல!

    குறிப்பாக, மார்கன் ஃபடாய் யாரென்று தெரியவரும் அந்த ஃப்ரேமில், முகம் முழுக்க திகைப்பைக் காட்டுவது ஜேசன் மட்டுமல்ல - நாமும்தான்! அது ஒன்றுபோதுமே, படைப்பாளிகள் திறமையைப் பறைசாற்றிட!!

    கொஞ்சம் 'காதுல பூ' சமாச்சாரங்கள் அதிகமென்றாலும்கூட, காலப்பயணத்தில் முன்னோக்கியும், பின்னோக்கியும் பரபரப்பாய் பயணிக்கும் கதை அதை மறக்கச் செய்து இறுதிவரை 'திக் திக் தடக் தடக்'கையே முன்னிறுத்துகிறது! குறிப்பாய், அந்தச் சிறுவனுக்குள்ளிருந்து வெளிப்படும் ஒரு வித்தியாசமான ஜந்து - 'காதில் பூ' என்றாலும், வரையப்பட்ட விதத்தில் + கலரிங்கில் மிரட்டுகிறதென்பது நிஜம்!!

    கதைக் களத்தில் மிதமிஞ்சிய fantasy எதிர்பார்த்திடுவோர்க்கு இத்தொடர் ஓராயிரம் உணர்வுகளைக் கொடுத்திடுமென்பது உறுதி!

    எனது ரேட்டிங் : 9.5/10

    பி.கு : இன்னும் சில கேள்விகள் எஞ்சியிருப்பது போலவே ஒரு ஃபீலிங்கு! கதை ஏற்படுத்திய பிரம்மிப்பிலிருந்து கொஞ்சம் விடுபட்டான பின்னே எடிட்டர், செனாஅனா உள்ளிட்ட சில வல்லுனர்களிடம் அந்த சந்தேகங்களைப் போட்டு ஒரு விவாதமேடையை ( எடிட்டர் கூறியதுபோலவே) ஏற்படுத்திட வேண்டியதுதான்! :)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : //கொஞ்சம் 'காதுல பூ' சமாச்சாரங்கள் அதிகமென்றாலும்கூட, காலப்பயணத்தில் முன்னோக்கியும், பின்னோக்கியும் பரபரப்பாய் பயணிக்கும் கதை அதை மறக்கச் செய்து இறுதிவரை 'திக் திக் தடக் தடக்'கையே முன்னிறுத்துகிறது!//

      இரண்டாம் பாகத்தினில் பணியாற்றும் போதே - கிளைமாக்ஸ் பாகத்துக்குள் எட்டிப் பார்க்கும் ஆசைக்கு அடை போட்டுக் கொண்டே லேசாக கதாசிரியரின் மனவோட்டத்தை யூகிக்க முயற்சித்துப் பார்த்தேன் ! சத்தியமாய் அவரது இந்த அதிரடிக்கு நான் தயாராகி இருக்கவில்லை என்றாலும் - fantasy சார்ந்ததொரு கருவாக இல்லாது போயின் சுமார் 100 + பக்கங்களில் சிறுகச் சிறுக பில்டப் செய்து விஸ்வருபமெடுக்கச் செய்திருக்கும் இத்தனை முடிச்சுகளுக்குமொரு தீர்வை இறுதிப் பாகத்தின் வெறும் 50 + பக்கங்களுக்குள் சொல்லிட முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை ! தவிர, அந்த அமானுஷ்ய ஜாடைகள் ; எதிர்காலக் கணிப்புகள் ; என்ற சமாச்சாரங்களை மாமூலான லாஜிக் சார்ந்த விளக்கங்கள் எடுபடாதே ? என்ற எண்ணமும் நிழலாடியது ! So கதாசிரியர் முன்னிருந்த options வேறுவிதமாக இருக்கும் சாத்தியங்கள் குறைவு என்பது புரிந்தது !

      Delete
    2. @ ALL : But இந்த "ஜேசன் அனுபவம்" பற்றியொரு கலந்துரையாடல் சுவாரஸ்யமாக இருக்குமென்பேன் !! Maybe இந்த ஞாயிறு அல்லது அடுத்த ஞாயிறு ?

      Delete
    3. ஆசிரியர் சார்@ அடுத்த ஞாயிறு வைத்து கொள்வோம் சார்.
      இந்த வாரம் நண்பர்கள் திருப்பூர் புத்தக விழா செல்ல திட்டம் வைத்து இருக்கிறார்கள்.

      ஞாயிறு திருப்பூர் விழாவில் சந்திப்போம் நண்பர்களே...

      அனைவரும் வருக...ஆனந்தம் பெறுக...!!!

      Delete
    4. வெல்கம் டெக்ஸ் அண்ணே
      மற்றும் சேந்தம்பட்டி குரூப்
      நண்பர்களே

      Delete
    5. ஓவ்...

      சா சா சாரி சம்பத்...

      ஏகப்பட்ட முகூர்த்தம் மற்றும் சொந்த அலுவல் காரணமாக நண்பர்கள் வருவது பெரிய கேள்விக்குறி ஆகிட்டு.

      உங்கள் நல்வரவை அடுத்த வருடம் தான் வாங்கி கொள்ள இயலும் போல தெரிகிறது. மன்னிக்கவும். உங்களையும் சுத்துப்பட்டி நண்பர்களையும் ஈரோட்டில் சந்தித்து விடலாம் சகோதரா...

      Delete
  39. நேற்றுமுன் தினம் நம்முடைய 'அன்புடைய அனாமதேயா'வின் உதவி குறித்து நான் இங்கே பதிவிட்டதைத் தொடர்ந்து, பெயர் குறிப்பிடவிரும்பான இன்னொரு நண்பரும் செந்தில் சத்யாவுக்கு உதவிடும்பொருட்டு என்னைத் தொடர்புகொள்ள, இன்று காலையில் நான்கு இலக்க மதிப்பிலான தொகை ஒன்று நண்பர் செந்தில் சத்யாவின் பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது!

    நல்ல உள்ளம் படைத்த அந்த நண்பருக்கு எல்லோர் சார்பிலும் நன்றிகளும், வாழ்த்துகளும்!_/\_

    இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. இந்த காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க ...

      Delete
  40. நேற்று இரவு "ஒரு திரைவிலகும் நேரம் " படித்து முடித்தேன். Clubல் நடந்த பலிகள் திகைக்கவைத்தது. flashbackல் ஒரு சித்திரம் full pageல் பிரமிப்பு. இத்தொடரின் Colouring Artistக்கு big salute. Dark shadeல் மிக துல்லியமாக வரையபட்டிருந்தது. மூன்று பாகங்களையும் ஒரு சேர ஒரு ஓய்வுநாளில் படிக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil //இத்தொடரின் Colouring Artistக்கு big salute. Dark shadeல் மிக துல்லியமாக வரையபட்டிருந்தது.//

      ஒரு பெண்மணியின் கைவண்ணம் என்பதாக ஞாபகம் சார் !

      Delete
  41. இந்த மாத இதழ்கள் அனைத்தும் கிடைக்க பெற்றேன் சார் ...மிகுந்த மகிழ்ச்சி..

    படிக்கும் முன்னர் ஒரு பார்வையாக சுவைத்ததில் ...


    டெக்ஸ் ...

    அட்டைப்பட பிண்ணனி மிக அழகாக இருப்பினும் ...டெக்ஸின் இந்த வித்தியாச அட்டைப்படமும் அசத்தல் . எனினும் டெக்ஸின் முகம் தான் அது டெக்‌ஸின் சித்தப்பா என்றால் கூட டெக்ஸின் பெரிப்பா கூட நம்ப மாட்டார் என்பது போல அமைந்து விட்டது :-)..ஆனால் அதற்கு மாற்றாக உள்ளே டெக்ஸின் ஆரம்ப நாட்கள் போல சித்திரம் செம அட்டகாச ரகம் ...இந்த பழைய டெக்ஸ் ..அதிரடியை கிளப்புவார் என்பது போல் உறுதியாகிறது..

    மதியில்லா மந்திரி...

    இனையத்தில் பார்த்ததை விட நேரில் புத்தகத்தில் அட்டைப்படம் முன் பின் இரண்டும் இன்னும் அழகு ..லக்கி ..சிக்பில் பிறகு எனது மனம் கவர்ந்தவர் மந்திரி ..எனவே ஆவல் கூடுகிறது...


    ஜேசன் ....

    இதன் மூன்று பாக அட்டைப்படங்களுமே வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமாக அமைந்தாலும் மிக மிக சிறப்பாக அமைந்துள்ளது ..முதல் இரண்டு பாகங்களும் ஏற்கனவே படித்து அசந்து இருந்தாலும் இந்த மூன்றாம் பாகத்தை மீண்டும் முதல் இரண்டு பாகங்களோடு ஒன்று சேர்ந்து படிக்க நீண்ட அமைதியான சூழலை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன் ..

    சிஐடி லாரன்ஸ் ..

    இம்முறையும் அட்டைப்படம் செம கலக்கல் ..மறுபதிப்பு அட்டைப்படங்கள் நமது ஓவியர்களால் இன்னமும் மெருகேறி கொண்டே போகிறது என்பது உண்மை சார் ..


    அடுத்து அந்த சர்ப்ரைஸ் ...

    அருமை ..அருமை ..அருமை ..சார் ..


    ஆனால் ஒரு சந்தேகம் மட்டுமே ..நண்பர்கள் நிவர்த்தி செய்ய வேண்டுகிறேன் ..இது நமது பழைய முத்து வாரமலரின் மறுபதிப்பா...?

    பழைய முத்து வாரமலர் பற்றி கேள்வி பட்டு உள்ளேன் ..ஆனால் பார்த்தது கிடையாது ..எனவே தான் இந்த சந்தேகம் ..இது அந்த மறுபதிப்பு எனில் இது போல் வந்த மற்ற முத்து வாரமலரையும் இதே போல் கொண்டு வாருங்கள் சார் ..ப்ளீஸ் ..


    இனி படித்து விட்டு....

    அதற்கு முன் ...

    செயலரே ...ஒரு மாசம் விட்டு ஒருமாசம் போராடி போராடி எனக்கே போரடிச்சு போயிறுச்சு...ஆசிரியருக்கும் போரட்ட குழுவை பாத்து பயம் விட்டு போச்சு ..இனி 144 தடை உத்தரவு முடிந்தவுடன் மெரினாவில் சென்று போராடினால் தான் பலன் கிட்டும் போல...

    ஆனால் மெரினா போராட்டம் ஆர்வம் கூடினாலும் க்ளைமேக்ஸை நினைத்தால் டெக்ஸின் வில்லன் குரூப் போல் நிலைமை கை மீறி போய்விடும் என்ற அச்சமும் கொஞ்சம் ...கொஞ்சம் ..ஏற்படுவதால் கொஞ்சம் அமைதி காக்க வேண்டியுள்ளது..:-(

    ReplyDelete
    Replies
    1. ////இந்த மூன்றாம் பாகத்தை மீண்டும் முதல் இரண்டு பாகங்களோடு ஒன்று சேர்ந்து படிக்க நீண்ட அமைதியான சூழலை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன் ..///

      தலீவரே,
      பதுங்கு குழிக்குள் இறங்கி மேல்திறப்பை சரக்குனு மூடிட்டீங்கன்னா அதைவிட அமைதியான சூழல் வேறு எங்கே கிடைக்கும் தலீவரே?!!

      இந்தமாசம் 'சி.சி.வ' இல்லாமல் போனதைக் கண்டு நானும் அதிர்ச்சியடைந்தேன் தலீவரே! எனக்கென்னவோ இது நம்மை சீண்டுவதற்காகவே அந்த குறும்புக்கார எதிரணித் தலைவர் செய்யும் வெளாட்டாகவே தோன்றுகிறது!

      கழகக் கண்மணிகளோடு சிவகாசியில் நாம் கால்பதித்திடும் ஒரு களேபரத் தருணம் வெகு தொலைவில் இல்லை தலீவரே!

      Delete
    2. நிஜாரில்லாத்....அச்சச்சோ...... நிகரில்லாத் தலீவரின் போராட்டக் கூக்குரலும், செயலாளரின் முக்கால்கூவலும் இரண்டு நாட்களுக்கு முன்பாய் கேபிள் டி-வியில் நான் பார்த்த 23 -ம் புலிக்கேசியின் யுத்த சீனை லைட்டாக நினைவுபடுத்துவது ஏனோ - தெரியவில்லை !!

      ஆனால் தலீவர் பாட்டுக்கு மெரினா பக்கம் தர்ணா பண்ணப் புறப்பட்டு விட்டால் - பட்டணம் மறுபடியும் ரணகளமாகிடக் கூடும் என்பதால் அதனைத் தடுத்து நிறுத்தும் பொருட்டேனும் இந்தச் சின்ன விளக்கத்தை முன்வைக்க விழைகிறேன் :

      இருப்பதோ 52 + 52 = 104 பக்கங்கள், இரு வண்ண இதழ்களையும் சேர்த்து ! அதனில் ஒரு இதழில் மிகவும் அத்தியாவசியமான ஜேசன் ப்ரைஸ் முன்கதைச் சுருக்கம் 2 பக்கங்கள் + கதை என முழுமையாக ஸ்வாஹா ! மந்திரியார் கதையிலும், இதே கதை தான் ! காமிக்ஸ்டைம் ; அடுத்த வெளியீடுகள் அறிமுகப் பக்கம் என்ற பிற்பாடு free space லேது ! இதில் எதைக் காவு கொடுத்து நான் "சி>சி>வ>" பகுதியை இணைப்பதாம் தலீவரே ? ?

      Delete
    3. மற்றும் சென்னை புத்தக காட்சி படலத்தின் புகைப்படம் என பக்கங்கள் சென்றதாலேயே ...உணர்ந்த்தாலேயே

      எங்களின் *இங்கிபாங்கி* போராட்டம் ரத்து செய்யப்பட்டது சார் ...:-(

      Delete
    4. தலீவரே,
      பதுங்கு குழிக்குள் இறங்கி மேல்திறப்பை சரக்குனு மூடிட்டீங்கன்னா அதைவிட அமைதியான சூழல் வேறு எங்கே கிடைக்கும் தலீவரே?!!

      ###


      க்கும் ....இங்கு இல்லமே இல்லாள் மூலம் பதுங்கு குழி போல தான் இருக்கு செயலரே...:-(

      Delete
    5. ////எங்களின் *இங்கிபாங்கி* போராட்டம் ரத்து செய்யப்பட்டது சார் ...///

      நடுவாலே ஒரு 'பிங்கி'யை விட்டுட்டீங்எளே தலீவரே...? லுங்கியைக்கூட விட்டுடலாம்; இப்படி பிங்கியை விடலாமோ...?!! :D

      Delete
  42. இந்தத்தரம் மதியில்லாமந்திரி பட்டியல் நம்பர் ஒன்றில் வெற்றி வாகை சூடியிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் மகா ஜனங்களே..அதிலும் அந்த சொப்பன தின சுந்தரியோடு அவர் அடிக்கும் கூத்துக்கு ஈடு இணையே கிடையாது.முகத்திரையை விலக்கி சொப்பன சுந்தரி தன் அழகு முகத்தைக் காட்டும் நாள் நமக்கெல்லாம் வருமா? அப்புறம் அட்டைப் படத்தில் ஆணழகனாகக் காட்சி தரும் தலை கடைசி வரை கதையில் சட்டையைக் கழ.ட்டவே இல்லை..போக்கிரி வேஷம் கச்சிதமாய்ப் பொருந்திப் போகிறது மனிதருக்கு..எடுத்ததெற்கெல்லாம் ஒரே தடாலடிதான் ..முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை விறுவிறு..தூள் .. ஜேசன் பிரைஸ் ? திரை விலகியது .திடுக்கிடும் திருப்பங்களோடு..வழக்கம்போல் இரண்டாவது தரம் கதையைப் படித்த பின்னரே.. ஹி ஹி லேசாய் புரிந்த மாதிரி ..விடுங்கள்நமக்கெல்லாம் ஒரு ஜாலி ஒரு சந்தோசம் .ஒரு பிரமிப்பு ..மனதளவில் சுட்டி...பாதைதொடரட்டும் பயணம் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. //பாதைதொடரட்டும் பயணம் தொடரட்டும்//... +1

      Delete
    2. VETTUKILI VEERAIYAN //அந்த சொப்பன தின சுந்தரியோடு அவர் அடிக்கும் கூத்துக்கு ஈடு இணையே கிடையாது.முகத்திரையை விலக்கி சொப்பன சுந்தரி தன் அழகு முகத்தைக் காட்டும் நாள் நமக்கெல்லாம் வருமா?//

      நான் ரொம்பவே ரசித்துப் பணியாற்றிய கதைகளுள் சொப்பன சுந்தரியின் கதையும் ஒன்று சார் !! Glad you liked it too !

      Delete
  43. சார் ,

    என்னோட பார்சல் இன்னைக்கு கிடைத்தது. மதியில்லா மந்திரிக்கு பதிலா, ஜேசன் பிரைஸ் இரண்டு அனுப்பி இருக்கிறார்கள்..
    என்ன செய்வது? சந்தா எண் G-1130. அலுவலகத்துக்கு mail அனுப்பி இருக்கிறேன்.

    -சங்கர்

    ReplyDelete
    Replies
    1. Sankar : நாளை மாற்றுப் பிரதியினை அனுப்பச் செய்கிறேன் சார் ! Apologies !!

      Delete
    2. Error may happen.. You shouldn't ask apologies sir.. Please keep up the good work...

      மதியில்லா மந்திரி இன்று கிடைத்தது சார் .
      மிக்க நன்றி ..

      -சங்கர்

      Delete
  44. 3வதாக இன்னொரு நண்பரின் உதவி - செந்தில் சத்யாவுக்கு :

    இன்று காலை என்னை ஈமெயிலில் தொடர்பு கொண்ட சென்னையைச் சேர்ந்த நண்பரொருவர், தானும் செந்தில் சத்யாவுக்கு உதவ விரும்புவதாகவும், அவருடைய அக்கவுண்ட் விவரங்களைக் கொடுக்குமாறும் கேட்டிருந்தார்! கொடுத்தேன். அடுத்த சிலமணிநேரங்களிலேயே ரூ.5000 செந்தில் சத்யாவின் வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்பட்டுவிட்டது! ஆனால், இவரும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்பதால் ஐ யாம் கப்சிப்!

    செந்தில் சத்யா சார்பாகவும், அனைத்து காமிக்ஸ் நண்பர்கள் சார்பாகவும் அந்த நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகளும், நன்றிகளும்! _/\_

    இந்தக் காமிக்ஸ் லவ்வு நாளும் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.
      அந்த அன்பு இதயங்களை வணங்கி மகிழ்கிறேன்....

      Delete
    2. இரத்தக் கோட்டை ; படலம் ; ஆர்ச்சி ; ஸ்பைடர் ; மாயாவி ; இத்யாதி ; இத்யாதியெல்லாம் இன்றைக்கு வரும், நாளைக்குப் போகும் ; ஆனால் இந்த நட்பும், நேசமும் ஆயுட்காலத்துப் புதையல்களன்றோ ?

      நிஜமாய்ப் பெருமிதம் தரும் நிகழ்வுகள் !

      Delete
    3. நண்பர்களின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.
      அந்த அன்பு இதயங்களை வணங்கி மகிழ்கிறேன்....

      Delete
  45. சின்னதா ஒரு புலம்பல்:

    ஹேய்...இது...இந்த...அட்டைபெட்டி...இந்த பார்சலுக்கு உள்ளே... அட கடவுளே...இதை நான் எப்படி மறந்தேன்..???

    நம்ம XIII மூளையை தோட்ட பதம் பாத்தாப்பல...தமிழன்டாகிற உணர்வு...
    ஜல்லிகட்டு போராட்டத்தில் காட்டிய தீவிரம்...

    மூளையை பதம் பார்த்து காமிக்ஸ் மேல் இருந்த மொத்த காதலையும் மறக்க செய்துவிட்டதே.!

    நல்லவேளை சிவகாசி பார்சல் மறைத்திருந்த திரையை விலக்கி விட்டது.! நன்றிகள் திரு விஜயன் அவர்களே.!

    புத்தகங்களை படித்துவிட்டு வருகிறேன்.!

    ReplyDelete
    Replies
    1. mayavi. siva : சார்...."the bigger picture " என்று சொல்லப்படும் வாழ்வியல் சார்ந்ததொரு விசாலமான பார்வை, எத்தனை முக்கியம் என்பதை இது போன்ற தருணங்கள் உணர்த்துகின்றன ! வாழ்க்கை எனும் அடர்ந்த வனத்தினில் காமிக்ஸ் ; இத்யாதிகள் எல்லாமே சன்னமான ஈர்க்குச்சிகள் தானே ?!

      Delete
    2. @எடிட்டர்,

      தத்துவமெல்லாம் ஓகேதான். இருந்தாலும் காமிக்ஸ் ஈர்க்குச்சியெல்லாம் இல்லை, வனத்தில் ஒரு தேக்குமரம்னு வேணா வைச்சுக்குவோம்! :-))

      Delete
    3. /////ஜல்லிகட்டு போராட்டத்தில் காட்டிய தீவிரம்...

      மூளையை பதம் பார்த்து காமிக்ஸ் மேல் இருந்த மொத்த காதலையும் மறக்க செய்துவிட்டதே.!////

      ஆத்தா.. மகமாயி.. என்ட பகவதி அம்மே... தமிழ்நாட்டுல அடுத்ததா கோழிச்சண்டை, கெடாச் சண்டைக்கெல்லாம் கூட போராட்டம் நடந்தாலும் நடக்கும்! அப்பவும் எங்க மாயாவிகாருவுக்கு காமிக்ஸ் மறதியைக் கொடுத்துடாத தாயி... (கிழவிகள் குலவை போடும் படங்கள் பத்து)

      Delete
    4. ////வாழ்க்கை எனும் அடர்ந்த வனத்தினில் காமிக்ஸ் ; இத்யாதிகள் எல்லாமே சன்னமான ஈர்க்குச்சிகள் தானே ?!/////

      -1

      இப்படிச் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது எடிட்டர் சார்?!!! உங்களாண்ட டூ!

      ஈர்க்குச்சியல்ல அது! ஈர்ப்புச்சக்தி!

      Delete
    5. நான் செக்கு மாடுபோல் ஒரு வட்டத்தில் சுழன்றாலும் ,மாடஸ்டின் குணமான அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத சூழலை ஆவலோடு எதிர்கொள்ளுவதைப்போல் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதியில் இருந்து நானும் அனுபவத்து வருகிறேன்.பணம் மதிப்பு இழப்பு ,மாண்புமிகு முதல்வரின் மரணம்.,வர்தா புயலின் கோரத்தாண்டவம் ,ஜல்லிகட்டு என்று தொடர்கிறது.! இவையெல்லாம் மாடஸ்டி கதைகளைவிட திகிலுடன் கலந்த நிஜகதையாக இருந்ததால் காமிக்ஸ் மீது ஆர்வம் குறைந்தது உண்மைதான்.!!

      Delete
    6. ஈர்க்குச்சியல்ல அது! ஈர்ப்புச்சக்தி

      #####


      வழி மொழிகிறேன் ..

      Delete
    7. மாடஸ்தி சார் ....எங்கே ஆளையே பாக்க முடியவில்லை...

      Delete
    8. @ திரு விஜயன்

      உணர்வுகளாலும் உறவுகளாலும் சூழப்பட்ட அடர்ந்தகாட்டின் முன்னே காமிக்ஸ் ஒரு ஈரக்குச்சி என்பதை ஏற்க்க முடியலை ஸார்; ஆதி சொன்னதற்கும் மேலே அதுஒரு வாசம்வீசும் சந்தனமரம்.!

      சோர்வு,தனிமை,சுகவீனம் எனும் முட்களும் விசச்செடிகளுமாய் அடர்ந்து சூழும்போது வேண்டுமானால்...காமிக்ஸ் ஒரு தீக்குச்சி. அது வெந்து தணித்திடும் காட்டை.

      Delete
    9. என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க எல்லாரும்? இல்ல கேக்குறேன்!

      எடிட்டர் - காமிக்ஸ் ஒரு 'ஈர்க்குச்சி'ன்னாரு!
      ஆதி - 'தேக்குக்குச்சி'ன்னாரு!
      மாயாவி - முதல்ல 'ஈரக்குச்சி'ன்னாரு! அப்பறம் 'சந்தனக்குச்சி'ன்னாரு. கடைசியா 'தீக்குச்சி'ல வந்து நிக்கிது!

      இங்கே என்ன மரக்கடையா வச்சு நடத்திக்கிட்டிருக்கோம்? பக்கத்து ப்ளாக் காரங்க பார்த்தா சிரிக்கமாட்டாங்க? நான்ஜென்ஸ்!

      Delete
    10. //EV:என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க எல்லாரும்? இல்ல கேக்குறேன்!//

      அது தானே ஒரு பிளாட்டினம் ரேஞ்சுக்கு சொல்லவேண்டியதை ஈல்குச்சி வாத்திக்குச்சினுட்டு நல்லா கேளுங்க EV :P

      Delete
    11. சார் ஓரளவேணும் அந்த போராட்ட உணர்வ குலயாம பாத்துக்க நம்ம டெக்ஸ்...மற்றும் ....பதிமூன்று போன்ற சளைக்காம போராடும் போராட்டக்காரர்களும் ...காரணம் என்பத நீங்க எப்படி மறக்கலாம்...

      Delete
    12. சில இழப்புகள் அத்தியாவசிய உணவக் கூட வெறுக்க வைக்க தவறுவதில்லயே...அதிலிருந்து மீண்டதும் இயல்பாய் நமது மனம் தேடும் அத்தியாவசிய வசியமும் காமிக்ஸ்தானே...இழப்பை கடக்க கூட..

      Delete
    13. ////என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க எல்லாரும்? இல்ல கேக்குறேன்!

      எடிட்டர் - காமிக்ஸ் ஒரு 'ஈர்க்குச்சி'ன்னாரு!
      ஆதி - 'தேக்குக்குச்சி'ன்னாரு!
      மாயாவி - முதல்ல 'ஈரக்குச்சி'ன்னாரு! அப்பறம் 'சந்தனக்குச்சி'ன்னாரு. கடைசியா 'தீக்குச்சி'ல வந்து நிக்கிது!

      இங்கே என்ன மரக்கடையா வச்சு நடத்திக்கிட்டிருக்கோம்? பக்கத்து ப்ளாக் காரங்க பார்த்தா சிரிக்கமாட்டாங்க? நான்ஜென்ஸ்.//./

      எனக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வராது...

      சாப்பிடறப்ப ஈனாவினா கமெண்ட்ட படிக்கப்படாதுன்னு தெரிஞ்சும் படிச்சு வச்சு..

      சிரிச்சு சிரிச்சு ..புரையேறி..தொண்டை வலிக்க..

      ....முடியல.....

      Delete
  46. திரைவிலகும் நேரம் : -

    முதலிரண்டு பாகங்களை முடித்திருந்த போது மார்கன் ஃபடாய் கேரக்டர் ஜேசனின் ஸ்பிலிட் பர்சனாலிட்டியாக இருக்கும் என்றே யூகித்து வைத்திருந்தேன். அது பொய்த்துப்போனது.
    ஆனால் மூன்றாவது பாகத்தின் ஆரம்பத்தில் வரும் ஃப்ளாஷ்பேக் மூலம் மார்கன் ஃபடாய் இவராகத்தான் இருக்கக்கூடும் என்று யூகித்தேன். அது மெய்யாய் அமைந்துவிட்டதில் சற்றே திருப்தி.
    அதேபோல வில்லன் டேவிட்டின் நோக்கமும் சற்றே வித்தியாசமானதாய் இருந்தது. ஏனெனில் அறிவியல் பூர்வமான காரணங்களை எதிர்பார்த்து இருந்ததால் இம்மாதிரியொரு அமானுஷ்யம் கலந்த செயலை எதிர்பார்க்கவேயில்லை.
    அதேபோல டேவிட்டின் முடிவும் கொஞ்சமும் யூகிக்க முடியாத செம்ம ட்விஸ்ட்.
    வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுபோல, மார்கனுக்கும், ஜெஃப்ரிக்கும் டேவிட் செய்துவைத்த ஏற்பாடுகளே அவனுடைய உயிரைப் பறிப்பது சூப்பர் க்ளைமாக்ஸ். அதாவது கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே சாவு. .!!

    இறுதியில் ஜேசன் எடுக்கும் முடிவு மிகச்சரியானதே.! அடுத்து என்ன வரும் என்று தெரியாமல் இருப்பதே சுவாரஸ்யம். !!

    எழுதப்பட்ட விதி
    மறைக்கப்பட்ட நிஜங்கள்
    திரைவிலகும் நேரம் மூன்றின் தொகுப்பு
    ஒரு மாறுபட்ட வாசிப்புணர்வை கொணர்ந்தன என்பதில் மெத்த மகிழ்ச்சி.
    இன்னும் இதேபோல் நிறைய வித்தியாச முய்ற்சிகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் எடிட்டர் சார். ..!!

    ஜேசன் ப்ரைஸ் 9.5 /10

    ReplyDelete
    Replies
    1. அருமை....உண்மை ..டேவிட்டே தனது விதியயும் நிர்ணயித்துக் கொண்டார்.

      ..

      Delete
    2. //ஒரு மாறுபட்ட வாசிப்புணர்வை கொணர்ந்தன என்பதில் மெத்த மகிழ்ச்சி.
      இன்னும் இதேபோல் நிறைய வித்தியாச முய்ற்சிகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் எடிட்டர் சார். ..!!//
      +1

      Delete
  47. என் ராஜ்யமே ஒரு கேரட்டுக்கு :-

    தானுன்டு தன் வேலையுண்டு என்று சதாசர்வகாலமும் சுறுசுறுப்பாக தூங்கியபடி கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருந்த கலீபா குண்டு பாய் அவர்களை நாடுநாடாக அலையவைத்து நெட்டி வாங்கிவிட்டார்கள். மனிதர் அந்த கேரட்டைத்தேடி ஊர்ஊராக செல்லும் பயணங்கள் சிரிப்போ சிரிப்பு. வாழைத்தாரை 2000 தினாருக்கு வாங்கி அதை சோதிக்கும் அழகிருக்கே, அது நம்ம ஹரூன் அல் குண்டு பாய்க்கே உரிய தனித்துவம். !! இந்தக் கதையில்தான் மந்திரி மஸ்தானுக்கு பெரிய வேலை (வேறென்ன கலீபாவுக்கு பதில் கலீபா ஆவதுதான்) இல்லாமல் செய்துவிட்டனர். ஆனால் ஒட்டுமொத்த அப்ளாஸையும் கலீபா ஹரூன் அல் குண்டு பாயே பெற்றுவிடுகிறார்.
    நான்கு கதைகளில் முதலிடத்தைப் பிடிப்பது நம்ம சொப்பனசுந்தரிதான். என்னமா சிந்திச்சு இருக்காங்க கதையாசிரியர்கள் ..!! ஐஸ் தயாரிக்க அம்மணி கையாளும் டெக்னிக் படா தமாஷ். வழக்கம்போல கலீபா ஆகும் கனவை நிறைவேற்றிக்கொள்ள சொப்பனசுந்தரியின் வித்தையை பயண்படுத்திக்கொள்ள நினைத்து, வழக்கம்போல தானே பலியாகும் மோடி மஸ்தான் வழக்கம்போலவே கலகலப்பூட்டியிருக்கிறார். ஆனால் பின்னி பெடலெடுத்தது என்னவோ நம்ம சொப்பனசுந்தரிதான். .!! செம்ம. .!! செம்ம. .! :-)
    டகுல்பாஜி யின் வானவியல் ஆராய்ச்சியாளர்களும், ட்சே ட்செ ஈயும் வழக்கம்போலவே மந்திரியாரை வெச்சி செஞ்சிட்டு கிளம்பிடுறாங்க. .!!

    நா மோடி மஸ்தான் - கலீபா கனவுகளுடன். 9/ 10

    ReplyDelete
  48. ஜேஸன் ப்ரைஸ் (ஸ்பாய்லர் அலெர்ட்: இறுதிப்பாகத்தின் முடிவுகளை படித்து இன்புறத் திட்டமிட்டுள்ள நண்பர்கள் இதைப் படிக்க வேண்டாம்) :

    வழக்கமாக முக்கியமான இதழ்களை காத்திருப்பில் வைத்துவிட்டு சற்றே சுவாரசியக்குறைவுக்கு ஆளாகிய முன்னனுபவம் இருப்பதால், இதை அப்படி விட்டுவிடக்கூடாது என மூன்றாவது இதழுக்காகக் காத்திருந்தேன். வந்தவுடனேயே நேரம் ஒதுக்கி நிதானமாக மூன்று இதழ்களையும் படிக்க முடிந்தது.

    ஒற்றை வரியில் சொல்வதானால், எடிட்டரும், நண்பர்கள் பலரும் ஏற்றி வைத்திருந்த ஹைப்புக்கு முழுக்கவும் தகுதியுடைய, அட்டகாசமான கிராஃபிக் நாவல் இது. ஒரு அருமையான திரில்லர் வகை ஹாலிவுட் சினிமா பார்த்த நிறைவைத் தந்தது எனலாம்.

    தெரசா ப்ரெண்டர்காஸ்ட் எனும் ஒரு பெண்மணி, அவளைப் பற்றி முன்பே மோர்கன் ஃபடாய் எனும் எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு நாவல், அதிலிருக்கும் அமானுஷ்யங்கள், அதைத் துப்பறிய வரும் ஜேஸன் ப்ரைஸ், இந்த எளிய பின்னணிக்கதையை அடுக்கடுக்கான திருப்பங்களோடு சொல்கிறது முதல் பாகம். தெரசாவின் இறப்பில் இந்தக் கதைப்பாகம் முடிவுக்கு வந்தாலும் ஜேஸனின் கதை அங்கு தொடங்குகிறது.

    சிறுவயதிலேயே தந்தையின் இறப்பு, இரண்டு தேசங்களின் அடையாளம், போரினால் ஏற்பட்ட மனக்காயங்கள் என மனதளவில் துன்புறும் மனிதராகவும், அதேவேளையில் ஆக்டிவான துப்பறிவாளராகவும் தன்னை வைத்திருக்கும் உறுதியான ஜேஸன், தெரசாவின் கதையில் தானும் ஒரு அங்கமாகிப் போய்விட்டதை அறிந்து அதிர்ச்சியாகி நிற்கும் முதல் கதையின் இறுதிப்பக்கங்கள் இந்தக் கதைத் தொடரின் மிக சுவாரசியமான காட்சிகளாக எனக்குத் தோன்றியது.

    ஜேஸனின் பின்னணி, இப்போது கதையின் மையமாகிவிட்ட மோர்கன் ஃபடாயைப் பற்றிய தேடல், ஹோவர்ட் மேடனின் கொலைப்பழி, க்ளோ மற்று ஜெப்ரியின் உறவு, ஸ்காட்லான்ட் பயணம் என இரண்டாம் பாகம் தொடர்கிறது. இதன் இறுதிப் பக்கங்களிலேயே வில்லன் யார் என்பது அடையாளப்படுத்தப்பட்டு, கதை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட, அமானுஷ்யப் பின்னணிகொண்டது என்பதும் தெளிவாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம், இறுதிப்பாகத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் ஊகித்திடலாம், எனினும் அது எப்படி நடக்கப்போகிறது என்பதுதான் அடுத்த கேள்வி.

    இந்த இடத்தில் துவங்கும் மூன்றாம் பாகம், மோர்கன் ஃபடாயின் பின்னணி, ஆன்ட்ரூ ஏஞ்சலின் பின்னணி, தொடரும் கிளைமாக்ஸ் சன்டைக்காட்சி என நிறைவு பெறுகிறது. மோர்கன் இறக்கும் தறுவாயில் சுயத்தை மீட்டெடுத்து, கதையின் முடிவை மாற்றி எழுதி சுப முடிவுக்குக் காரணமாகிறார். அமானுஷ்யக் கதை என்று முடிவாகிவிட்டபடியால் பெரிதாக லாஜிக் மிஸ்டேக்குகள் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. எனினும் தீயசக்தியை வென்றெடுக்கும், ஜெஃப்ரிக்குள் ஒளிந்திருக்கும் நல்ல சக்தியைப் பற்றிய குறிப்புகள் கதையில் இல்லாததை ஒரு குறை எனக்குறிப்பிடலாம் என நினைக்கிறேன். போலவே ஜேஸனின் முடிவு வரை ஃபடாய் ஏற்கனவே எழுதிவிட்டார் எனும்போது, இறுதிப்பாகத்தின் இறுதிப்பக்கத்தில் ஜேஸன் தம் எதிர்காலத்தை தெரிந்துகொள்ள விருப்பமில்லாது மீதி கதைப்பாகங்களை நெருப்பில் போடுவது எவ்வாறு என்பதும் மற்றொரு லாஜிக் பிரச்சினை.

    மொத்தத்தில் ஒரு கிளாஸிக் அனுபவம்!

    பிசிறில்லாத ஓவியங்களும், வண்ணச்சேர்க்கையும் பிரமிப்பூட்டுகின்றன. எதையும் தனியே குறிப்பிட முடியாது. பாகம் 2: பக்கம் 21, 48 போன்றன நுணுக்கமான ஓவியங்களுக்கான சாட்சியாக நிற்கின்றன. சினிமா தோற்கும்படியான காட்சியமைப்புகள், காட்சிக் கோணங்கள்! ஆண்ட்ரூ ஏஞ்சலின் அறிமுகம், தெரசாவின் பார்ட்டி போன்ற காட்சிகளைப் படமெடுக்க ஒரு இயக்குநரும், கேமிராமேனும் ரொம்ப யோசிக்கத் தேவையில்லை. இந்த காமிக்ஸை கையில் வைத்துக்கொண்டு டக்கு டக்கென எடுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு காட்சிகளுமே அப்படித்தான்.

    படித்துக்கொண்டிருக்கும் போது தோன்றிய சில நினைவுகள். இரண்டாம் பாகத்தில் ஜேஸன் போர்க்களத்தில் இறந்துகிடக்கும் குதிரையின் வயிற்றில் ஒளிந்துகொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்கிறார். இப்படி ஒரு காட்சி 2015ல் வந்த ரெவனன்ட் படத்தில் இடம்பெற்றிருந்தது. குளிரிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள டிகாப்ரியோ இப்படிச் செய்வார். ஜேஸனின் இந்தக்கதைகள் 2010 வாக்கில் வெளியானவை என்று நினைக்கிறேன்.

    போலவே ஆன்ட்ரூ ஏஞ்சலின் நோக்கம் இளமையும், நீடித்த வாழ்வும்! அதற்காக ஆன்மாக்களை பலியிடுகிறான். 1978ல் வெளியான மலையாளப்படமான 'வயநாடன் தம்பான்' எனும் படத்தில், கமல்ஹாசன் இதே நோக்கங்களுக்காக இளம்பெண்களை பலியிடுவார். இறுதிக்காட்சியில் நோக்கம் தோற்றுப்போகையில் இப்படித்தான் சட்டென இளமையும், வயதும் தொலைந்து முதுமையடைந்து இறந்துபோவார். :)))))

    நிறைவான மொழியாக்கம். நேர்த்தியான அச்சாக்கம். அருமையான அட்டைப்படங்கள்! நன்றி எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ஆரம்பத்திலியே எச்சரிக்கை விடுத்தீர்கள் சார் ..

      நான் போய் விட்டு அடுத்த பதிவிற்கு வந்து விடுகிறேன் ..:-)

      Delete
    2. அருமையான விமர்சனம் ஆதி சார்!!!

      Delete
    3. செம்ம விமர்சனம் ஆதி ஜி..!!

      ///இறுதிப்பக்கத்தில் ஜேஸன் தம் எதிர்காலத்தை தெரிந்துகொள்ள விருப்பமில்லாது மீதி கதைப்பாகங்களை நெருப்பில் போடுவது எவ்வாறு என்பதும் மற்றொரு லாஜிக் பிரச்சினை.///

      அதுதான், எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது என்பதை அனுபவித்தே தெரிந்துகொள்கிறேன். முன்கூட்டியே தெரிந்துகொள்வதில் ஆர்வமில்லைன்னு ஜேசன் சொல்கிறாரே நண்பரே..!!??

      Delete
    4. அலெர்ட்ட்டா ஒரு விமர்சனம் !:P

      ஜேஸன் ப்ரைஸ்ன் வெற்றிக்கு கல்வெட்டு வெட்டியிருக்கிறீர்கள் ஆதி !

      இத்தகைய புது genre தொடரவேண்டும் எடிட், கதை தேர்வில் நீங்கள் காட்டும் சிரத்தை மகிழ்ச்சி மாற்றங்கள்...! உத்வேகமாய் இன்னும் சில மாற்றங்களை 2018இல் கொண்டுவாருங்கள் Edit sir!

      Delete
    5. இறுதி தெரியும்..இடைப்பட்ட நாட்களை அறியாமல் வாழ ஜேசனின் முடிவு...அந்த நல்ல சக்தி கூட வில்லனால்தான் வழங்கப்படுகிறது....அந்த நல்ல சக்தி அச்சிறுவனுக்கும்..அந்த தாய்க்கும் மட்டுமே துணை...இவர்களை எதிர்ப்போரை பொறுத்து அது கெட்ட சக்தியாயும் மாறும்...விமர்சனம் அருமை ஆதி..

      Delete
    6. @கிட்,

      ஸ்காட்லாண்ட் தீவில் ஜேசன் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்படுகிறார் என்பது படாய் எழுதிய ஜேசன் கதையின் முடிவு. அப்படியானால் அதற்குப்பிறகு ஜேசன் பற்றி அவர் ஏதும் எழுதயிருக்க வாய்ப்பில்லை. ஆகவே, ஜேசனின் எதிர்காலம் பற்றிய எந்த குறிப்பும், கதையும் அங்கிருக்க வாய்ப்பில்லை அல்லவா? வேண்டுமானால், இந்த அமானுஷ்ய குறிப்புகள் எதுவும் யாருக்கும் இனி தேவையேயில்லை என அவர் எரித்து விடுவதாக வசனம் எழுதப்பட்டிருக்கலாம்.

      Delete
    7. ஆனால் அந்தத் தீவில் வயதான பின்னரும் கத்தியால் குத்தப்படலாம் இல்லயா நண்பரே..அல்லது வேறு தீவிலும் காலம் கழிந்த பின்னர் இருக்கலாம் இறப்பு..கதை தரும் எல்லை விரிக்கும் சிந்தனைகளுக்கு அதிகம் இடம் அளித்திருக்கிறார் ஆசிரியர் என்றே நினைக்கிறேன்

      Delete
    8. ///ஸ்காட்லாண்ட் தீவில் ஜேசன் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்படுகிறார் என்பது படாய் எழுதிய ஜேசன் கதையின் முடிவு. ///

      ஆனால் எந்த வயதில், எப்போது, யாரால் குத்தப்பட்டு இறப்பார் என்பதுபற்றி தகவலேதும் இல்லையே ஆதி..?
      ஒருவேளை ஏஞ்சலினால் குத்தப்படலாம் என்று ஃபடாய் எழுதிவைத்திருந்தாலும், தன்னுடைய இறுதிநேரத்தில் ரத்தத்தாலேயே கதையை மாற்றி எழுதி முடித்துவிடுகிறாரே?
      அப்படிப் பார்த்தால் ஜேசன் குத்தடுவது நடக்காத விசயமாக போய்விடுகிறதல்லவா?

      எனவே ஜேசன் இந்தக் குறிப்புகள் இனி தேவையில்லை என்றும் எரித்திருக்கலாமே?

      Delete
    9. My rating to Jason is 9.9/10

      //எனினும் தீயசக்தியை வென்றெடுக்கும், ஜெஃப்ரிக்குள் ஒளிந்திருக்கும் நல்ல சக்தியைப் பற்றிய குறிப்புகள் கதையில் இல்லாததை ஒரு குறை //
      +1

      Delete
  49. ஆதி!!

    உங்க விமர்சனத்தைப் பார்த்தா... உலக சினிமாக்களை எல்லாம் ஒன்னுவிடாமப் பார்த்து ஊதித் தள்ளினவர் மாதிரி தெரியுதே...

    சினிமாவுக்கு கதை எழுதற கூட்டத்தைச் சேர்ந்தவரோன்னுகூட ஒரு டவுட் இருக்கு எனக்கு!

    ReplyDelete
    Replies
    1. @ஈவி,

      அப்படி பொதுவாக சொல்லிர முடியாது.. வேணும்னா 'உலக சினிமாவை ஒண்ணுவிடாம பாத்தவங்களால ஊதித்தள்ளப்பட்டவரோ'னும், 'சினிமாவுக்கு கத எழுதற கூட்டத்தைப் பார்த்த கூட்டத்தைச் சேர்ந்தவரோ'ன்னும் ஏகதேசமா சொல்லலாம். :-))))))

      Delete
    2. என்னா ஒரு வார்த்தை வெளாட்டு!!

      நிச்சயமா நீங்க டீவில ரியாலிட்டி ஷோ நடத்தறவராத்தான் இருக்கணும்!!!

      Delete
    3. அப்படி பொதுவாக சொல்லிர முடியாது.. வேணும்னா 'டிவில ரியாலிடி ஷோ நடத்துறவர் பக்கத்துல உக்காந்து டீ குடிச்சிகிட்டே வேடிக்கை பாத்தவராத்தான் இருக்கணும்'ன்னு ஏகதேசமா சொல்லலாம். :-))))))

      Delete
    4. உங்களை "ஆதி"ன்னாவது சொல்லலாமா இல்லை ஆதிக்கு டீ "ஆத்தி" குடுக்குறவர்னு ஏகதேசமா சொல்லணுமா??

      Delete
    5. //RaviKannan: "ஆதி"ன்னாவது சொல்லலாமா இல்லை ஆதிக்கு டீ "ஆத்தி" //
      இனி நீங்கள் ஆத்தி என்று நாமகரணம் கொண்டு அழைக்க வாய்ப்பு ஏகமாய் வாய்ப்பு ஆட்டோ கார் ! ;P

      Delete
    6. டீ ஆத்தி குடிக்றவர்னு சொல்லாம்னு அவர் சொல்வாரோ

      Delete
  50. சார் புத்தகங்கள் அருமையாக .....அட்டகாசமாக வந்தாலும்...எப்போதும் போல என்பதாய் மனதிற்குப் பட்டது...சென்ற மாதம் போல குண்டு இல்லயே...சரி ஜேசனை புரட்டவா...லாரன்ச புரட்டவா என யோசனை வேறு....ஜேசனை புரட்டி இரு மாதங்கள் கடந்து விட்டதால் லயிப்பு குறைவாய் இருந்தது...இ இணைப்ப புரட்ட முதல் பக்கம் அப்பு அட்டகாசமாய் மலர்ந்த முகத்துடன் தட்டுப்பட குப்பென அதே உணர்வு தட்டிப் பறிக்க அந்த பால் போலவே கதயும் தட்டுப்பட.. ஆனா அப்புவ பாத்த சந்தோசமே மனதை நிறைவாக்க....அடுத்த இயற்கையின் பாதையில்...டொனால்டு டக்..நல்லதும் கெட்டதும்.என உற்சாகமாய் கடக்க...நாய் கதை ஏற்கனவே படித்தாலும் இனிக்க..பூசனித் தலை டைகரை படித்து புரியாம விழிக்க.. இரத்த வெறியன் கடிக்க...விச்சு கிச்சு வழக்கம் போல இனிக்க ...தரம் கண்டு வியந்த படி....நகர்ந்தேன் இரண்டாம் பாக ஜேசுடன்....முன்னிரவு அது வரை படித்த நான்காம் புத்தகத்தின் முதல் பாகத்தை பிரிய மனமின்றி மூடி விட்டு ஜேசனின் முதல் பாகத்தை கையிலெடுத்தேன்.....அந்த மூடிய புத்தகம் தோர்கள்தான்...நிற்க...சார் நெருப்பில் கை வைத்த பரணியை விட அதிக படியான உணர்வு அ.மாத கோட்டாவில் ஒரே பாகம்தானா தோர்களுக்கு என நொந்த படி ....போராட்ட குழுவினரை அடுத்த மாதமே இரு பாகமும் கேட்டு போராட கோரிக்கை வைத்து ...பரணியயும் உற்சாகபடுத்தலாம்..இபவுக்கு அவர் சதி செய்தாலும்...இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என மனக்குரல் கதற ...ஜேசனின் இரண்டாம் பாகத்திற்குள் நுழைகிறேன் வேலையினூடே....கதை செல்ல செல்ல பல திகைப்புகளை வைத்ததுடன் ஓவியங்கள் அத கள நடணம் புரிய வாய் விட்டு பாட வைத்தன என்றால் மிகை அல்ல...

    ReplyDelete
    Replies
    1. ஓவியங்களை என்ன சொல்லி வியக்க என்றே சொல்லத் தெரியவில்லை சார்....நாசி முகர்ந்த மனமும்...நா உணர்ந்த சுவையும் யார் சரியாய் சொல்லிடக் கூடும் .எந்த வார்த்தைகளும் வெறும் வாய் வார்த்தைகளாய் மட்டுமே போய் விடுமே என முதன் முதலாய் மனதில் ஓட....மேலும் சுவை , உணர்வு அரும்புகள் ஒவ்வொருவருக்கும் உணர்வில் வேறாய் அமைந்ததில் யான் பெற்ற இன்பம் பெறுமா இவ்வையம் என ஐயமுடனே கோர்க்கிறேன் அந்த உணர்வுகளை...லண்டன் ..நதிகளாகட்டும்...அந்த காய்ந்து நிற்கும் இலையுதிர் மரங்களாகட்டும் ..அதன் முன்னணியில் உள்ள வீடுகளாகட்டும்...அந்த பூங்காவாகட்டும்..அங்கு நீந்தி விளையாடும் வாத்து சூழ் நீர்த் தேக்கமாகட்டும்....முதல் பாகத்தில் செத்து மிதக்கும் மீன்கள் சிறுவயதில் நீர் வற்றிய நீர்நிலைகளில் மிதந்த தத்ரூபமான மீன்களை கண்ணில் காட்டியதாகட்டும்...மாநகர வீதிகளாகட்டும் அங்கே வாழ்ந்தால் என்று ஏங்கிய மனதினை தள்ளி விட்டு அங்கே வாழ்ந்த உணர்வை நல்கி விட்டு ஒதுங்கி நிற்க காரணம் நீங்கள் பாடுபட்டு வரவழைத்த அந்த பிரத்யேக மைதான்(உண்மையெனினும் மையும்தான் என சொல்ல முடியல) காரணம் என்னும் போது மனதில் தோன்றும் இனம் புரியாத பாச உணர்வு ..மெனககெட்டு வரைந்த ஒவியர்களையும் பின்னிறுத்தி விட்டது ஆசிரியரே....அவர்கள் தராமல் இது சாத்தியமில்லைதான் எனினும் அதே அர்ப்பணிப்பு உணர்வு குன்றாமல் தரும் அசாத்திய மனமும் முன்னிறுத்தப் பட வேண்டிய ஒன்றல்லவா...வாழவைக்கும் தெய்வங்களிருந்தாலும்...கண் முன் நடமாடும்...பரிவோடு காமிக்ஸ் பசியாற்றும்...தாகம் தணிக்கும் தாய் தாங்கள்தானே...நெளிவீர்களோ.....ஓடி ஒளிவீர்களோ....மனம் நெகிழ்ந்தளிக்கும் பாராட்டை ஏற்றுக் கொள்ள மனம் வேண்டும் அவையடக்கம் அகற்றி...இரண்டாம் கதை அந்த பெண்ணின் கண்களினூடே ஊடுறுவி பார்க்கும் அந்த அசத்தலான வில்லன் நிமிர்ந்து அமர்ந்து மூன்றாம் பாகத்துக்கு அழைப்பு விடுக்குமிடம் ..இரு மாதங்களுக்கு முன்னர் எப்படா கதை வரும் என ஏங்கியது எண்ணமாய் வெளிப்பட ....அதே உற்சாகத்தை மீட்டிய படி மூன்றாம் பாகத்தினுள் பாய்ந்தால்.....ஓவியங்களும் ..துணை சேர்க்கும் நிறங்களும் ......நேர்த்தியான ஆடையினூடே பாயும் நூலாய் பிசகா மொழி பெயர்ப்பும் புரட்டிப் போட்டன என்னையும்...அப்பப்பா விவரிக்க முடியுமா....சார் எமனின் திசை மேற்கு போல ....எதற்குமீடாகா இரத்தப் படலம் போல ஒரு இதழ் அமையுமா என்றதேடல்களுக்கு...சுவை வேறெனினும்...மனம் நிறைவாகிறதே.....என அச்சிறுவன் வாயிலிருந்து வெளிப்படும் மிருகத்திற்கிணையாய் ...ஜேசனின் தந்தை வாயிலாய் வெளிப்படும் எழுத்துகளும் உயிர் பெற்று கொல்லும் கற்பனையை வியக்காமலிருக்க முடியவில்லை.....அந்த கலங்கரை விளக்கம்..காட்சிகள் கூடுதல் இன்பத்தை வாரி வழங்கினால்..நான் நீண்ட காலமாய் பிரமிட் கதைகளுக்கு ஏங்கிய ஏக்கத்தை போக்கின . சிறிதே வந்தாலும்..கதைக்கு மையக் கருவாய் விளங்கிய அந்த ஒவியங்கள் பிரம்மாண்டத்தை இரசிக்க உதவி ன... அட்டகாசம்..அதகள அமர்க்களம் என வார்த்தைகளை இணைத்து பாராட்டு போதாதே என தோற்கிறேன் கட்டத்திற்கொரு முறை...பல நண்பர்களுக்கும் ஒரு கேள்வி முன்னிருக்கலாம்...ஜேசன் அந்தத் தீவில் கத்தியால் குத்தப் படுவான் என இருக்கிறதே...சாகலையே என தோணலாம்...ஆனா இன்னும் தீவிலேதானே இருக்கிறான்..மெதுவாய் யாருக்கும் தெரியாமல் அமானுஷ்யமாய் குத்திடலாம் என கதையாசிரியர் முடிவு செய்ததற்கு ..நமது ஆசிரியரும் உடந்தை போலும்..ஜேசன் என்ற பெயர் கொண்டாலே முடிவைச் சொல்லாமல் தொடரும் அவலத்துக்கு இந்த ஜேசன் மட்டும் விதி விலக்கா என்ன.... இந்த பிரம்மாண்டத்த இரசித்த பின்னர் ..மனதின் முன் தோன்றிய ஒரே எண்ணம் தலையில்லா போராளி சைசுக்கு இப கேட்டு பரணிய கவுத்து போராடச் செய்யணும் வான்சின் வண்ண ஓவியங்கள அதுவாகவே இரசிக்க ......ஆசிரியரால் அச்சிடும் வாய்ப்பு கூடி வந்தால் ஜனவரிக்கே கேட்டு நச்ச வேண்டும் என நச்சென ஒரு ஐடியா வந்து ஆட்டுது நினைவில்...ஆசிரியருக்கும் அது இல்லயே தொலைவில்...படித்தவுடன் ஒரு ஆச்சரியம் ..இருட்டயே இரசித்ததாலோ என்னவோ ....இரவுக்கழுகாரின் பின்னட்டை மயக்க...முன்னட்டையும் அட்டகாசமாத்தானே இருக்கு என்ற எண்ணம் வேறூன்றத் தவறவில்லை..காலை நான் சொன்னத மறந்துடுங்க....இபவ ஜனவரிக்கு மறந்திடாதீங்க....ஈரோட்டுக்கு ஏதாவது தந்தே ஆகணும்னு தோணிச்சுன்னா அந்த ஆயிரம் பக்க கதைகளின் பக்கம் கவனத்தை திருப்பலாமே...

      Delete
  51. "என் ராஜ்யமே ஒரு கேரட்டுக்கு"

    சுமார் 12 வருடங்களுக்கு முன்பு "ஒரு கேரட்டின் கதை" என்று விளம்பரப்படுத்தப்பட்ட கதை இது. (கரெக்ட்டா சார்?). எனக்கு ஞாபகம் இருக்கிறது. அடுத்த சில மாதங்களுக்கு எதிர்ப்பார்த்து.., ஏமாந்து.., மறந்தே போய்விட்டேன். எதிர்பாராத விருந்தாக இப்போது வந்து என்னை குதூகலப்படுத்திவிட்டது. வழக்கமான மதியில்லா மந்திரியின் FORMULA'விலிருந்து முழுக்க மாறுபட்டு வந்திருப்பது நன்றாக இருக்கிறது. மந்திரிக்கு பதிலாக கலீபாவே களத்தில் இறங்கி நம்மை குபீர் சிரிப்பில் கிரங்கடித்துவிட்டார். இரண்டாவது கதை ஒரு மறுபதிப்பே. இதை நான் B&W-ல் படித்த ஞாபகம் இருக்கிறது. வசனங்கள் ஒருசில மட்டும் மாற்றி இருக்கிறீர். அயல் கிரகத்தினர் சொல்லும் "ATM க்யூக்களில் நின்னு உரமேறி வந்திருக்கோம்" என்ற வசனம் அப்போது வந்திருக்க சான்ஸே இல்லை. நடைமுறை காலத்திற்கேற்ப வசனங்களை மாற்றியது நன்றாக அமைந்திருந்தது. மூன்றாம் கதை "ஒரு சுந்தரியும் சொப்பன தினமும்" கலக்கல்லோ கலக்கல்!! பக்கத்துக்கு பக்கம் வாய்விட்டு சிரிக்க வைத்ததோடல்லாமல் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. ஒரு பெண்ணின் அழகான முகத்தை பார்த்தால் நம் எல்லோருக்கும் 'ஜில்'லென்று இருக்கும். இந்த அழகான உண்மையை தீம்மாக கொண்டு தத்ரூபமாக ஒரு நகைச்சுவை விருந்து படைத்துவிட்டார் கதாசிரியர். ஓவியரும் தன் பங்கிற்கு நம்மை வாட்டி வதைத்துவிட்டார். அதென்ன? அந்த சுந்தரி முகத்திரையை விலக்கும் போது அடுத்த படம் வெறுமையாக இருக்கிறது?? வரைவதற்க்கு முன்னால் அந்த சுந்தரியின் முகத்தை கற்பனையில் கண்ட ஓவியரே உறைந்துவிட்டாரோ! சூப்பர்!! எப்படி சார் இதெல்லாம்? 2'ம் கதையில், 26'ம் பக்கம் எழில் கொஞ்சும் பாலைவனத்தின் அழகை ரசிக்க முயன்றால் குபீர் என்று சிரிப்புத்தான் வருகிறது. இந்த கதையின் 50% மார்க், நம் ரசனையை சரியாக தெரிந்து, தக்க வகையில் மொழிமாற்றம் செய்து நம்மை நகைச்சுவை பெருங்கடலில் முக்கி எடுத்த மொழிப் பெயர்ப்பாளரையே சேரும். (அந்தாண்டை இந்தாண்டை ஜோக், அவுக்காபாத், தலையறுத்தான்பாத், மொக்டொனால்ட்ஸ், இஷ்டத்துக்கு மொக்கலாம், இன்னும் etc, etc,.) மீதி 50% மதிப்பெண் கதாசிரியருக்கும், ஓவியருக்கும் பிரித்து கொடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ///ஒரு பெண்ணின் அழகான முகத்தை பார்த்தால் நம் எல்லோருக்கும் 'ஜில்'லென்று இருக்கும். இந்த அழகான உண்மையை தீம்மாக கொண்டு தத்ரூபமாக ஒரு நகைச்சுவை விருந்து படைத்துவிட்டார் கதாசிரியர்//

      முகத்தை பாத்து பீதியில உறைஞ்சு போறாங்க பாஸ்!!!

      இந்த ஆங்கிளில் படிங்க ...இன்னும் சிரிக்கலாம்
      உண்மையா கதை இப்படித்தான் போகுது....:)

      Delete
  52. இந்த மாத இதழ்கள் ரேட்டிங்:
    1.ஜேசன். -10/10,
    2.மதியில்லா மந்திரி-9.5/10,
    3.டெக்ஸ் -8/10,
    4.லாரன்ஸ் & டேவிட்-7/10.

    ReplyDelete
  53. மதியில்லா மந்திரி.....
    பறக்கும் பூச்சி படலம்.......
    கதையில் ட்செட்செ என்ற ஈ கடித்தால் மீளாத தூக்கம் வந்துவிடும் என்பதாக வருகிறது.
    உண்மையில் TSETSE ( சரியான உச்சரிப்பு செட்சி என்பதாகும்) என்று உண்மையிலேயே ஒரு வகை ஈக்கள் காங்கோ ,சூடான் இன்னபிற ஆப்ரிக்க நாடுகளில் உண்டு...இவ்வகை ஈக்கள் காரணமாக AFRICAN SLEEPING SICKNESS என்ற வகை நோய் (ட்ரிப்பனோசோம்ஸ் என்ற ஒட்டுண்ணிகளை ஈக்கள் பரப்புவதால் ) வருகிறது..
    A DISEASE OF LIVING DEATH என்று நோயின் சில காலகட்டம் வரை அழைக்கப்படுகிறது..
    கதையில் நகைச்சுவைக்காக சொல்லப்பட்டாலும் -1990 – ல் ஏற்பட்ட பெருகொள்ளை நோயில் (எபிடமிக்) பல நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்குமளவிற்கு கொடூரமானதுதான்..
    எய்ட்ஸ் வருவதற்கு முன் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் இத்தூக்க நோய்தான் டாப் கில்லர்.
    பின் குறிப்பு: என்னா பெரிய செட்சி ஈக்கள்/????? நம்ப ஆறாம்ப்பு .ஏழாம்ப்பு படிக்கறச்சே நம்ம ஹிஸ்டரி வாத்தியார் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சவுடனே நமக்கு தூக்கம் வரவைப்பாரே அதுல பத்தில ஒரு பங்கு வருமா இந்த ஈக்கள்???? 

    ReplyDelete
  54. டெக்ஸ் வில்லர் :திருப்தி ஜேஸன் :திருப்திக்கு கீழே மோடி மஸ்தான் :திருப்தி ன்னு சொல்ல முடியல.

    ReplyDelete
  55. மாலை வணக்கம் அனைவருக்கும்

    ReplyDelete
  56. ஜேசன் ப்ரைஸ்...

    திரை விலகும் நேரம்:-

    எழுதப்பட்ட விதியின் மறைக்கப்பட்ட நிஜங்களை
    (ஆம்லெட் ச்சே டெம்ளேட் உதவி@ நன்றி:ஆசிரியர் சார்)
    திரையை முழுதும் விலக்கி காட்டுகிறது.

    2ம் பாக முடிவிலேயே அமானுஷ்யங்கள் தலை காட்டினாலும் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை சார். 120வருசமாவா அந்த டேவிட், குன்றா இளமையோடா வாழ்ந்து வருகிறான்....!!!??? (தானைத்தலைவர் ஸ்பைடர் கதையின் பூச்சுற்றல்கள் தோற்றது ...ஙே...ஙே...ஙே...)

    3பாகங்கள் கொண்ட ஒரேகதையாக படித்து இருந்தால் இந்த அளவு ஈர்ப்பு இருந்து இருக்காது என்பது உறுதி சார்.

    அ அ அந்த இதயத்தை கையில் எடுத்து டேவிட் விதிக்கடவுளுக்கு பூசை பண்ணும் இடம் கொஞ்சம் நிஜமாகவே மெர்சல் தருகிறது சார்.

    எந்த நேரமும் விதியை மாற்றி எழுதிவிளையாடும் விதிகடவுளின் விளையாட்டை கொண்டே, ஃபடாய் பழி தீர்ப்பது டச்சிங் ஆன சீன் சார்.

    க்ளோவின் கூற்றுப்படி தீங்கில் இருந்து அவளையும் ஜெப்ஃரியையும் காப்பாற்றுவதற்காக டேவிட் அளித்த சக்தி இந்த அளவுக்கு இருக்கும் என்பதும் சற்றும் எதிர்பாரா ஒன்று சார்.

    மொத்தத்தில் ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தை வழங்கிய உங்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் சார்.

    "தில் இருந்தா திகில் உண்டு"- என தாங்கள் வெளியிட்ட டீசருக்கு துவக்கத்தை தந்து விட்டீர்கள் சார்.
    இந்த ஆண்டின் சந்தா E யை இப்போதே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன் சார்.



    ReplyDelete
  57. தடியடியில் கிடைத்த தலைக்காயத்திற்கு ஒரு சாதாரணக் கிளினிக்கில் சிகிச்சை பெற்றுவந்த நண்பர் செந்தில் சத்யா, நம் அன்புள்ள அனாமதேயாக்கள் செய்த உதவியின் பலனாக தற்போது வேறொரு உயர்தர சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இந்த இரண்டு நாட்களில் நல்ல முன்னேற்றமும் கண்டிருக்கிறார்! "போராட்டம் -தடியடின்னு இப்படி மண்டைய உடைச்சுக்கிட்டு வந்து நிக்கறியே... இதெல்லாம் உனக்குத் தேவையா?" என்று சொந்தபந்தங்கள் ஏசிச் சென்றாலும், நம் காமிக்ஸ் சொந்தங்கள் வலிய வந்து உதவிசெய்திருப்பதில் வலிகள் நீங்கி உற்சாகமாய் இருக்கிறார்! "நமது நண்பர்களின் இந்த உதவிகளும், தினமும் ஃபோனில் வந்துசேரும் அக்கறையான விசாரிப்புகளும் என்னை ரொம்பவே தெம்பாக்கிவிட்டிருக்கிறது,செயலாளர் அவர்களே! அடுத்த வாரத்தில் வேலைக்குச் சென்றுவிடுவேன்னு நினைக்கிறேன்" என்ற அவரது குரலில் தெறித்த நன்றிகளும், உற்சாகமும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் பெருமிதமாய் இருக்குன்ன ஒற்றை வார்த்தைதனை பெருமிதமாய் பிடித்துக் கொண்டு பெருமையாய் தேறி வருகிறார்..அனாமதேய தெய்வங்கள எண்ணி நெகிழ்வதுடன்...தலையில்லா போராளி சைசில் மீண்டும் இப கேட்டு தலைய பிச்சாவது போராடுவார் என்பது போல டெலிபதி உங்களயும் அடைந்ததா ஈவி....இந்தப் போராட்டக்காரர் இறங்குவத நெனச்சா ..ஆசிரியரும் பாவந்தே...

      Delete
  58. **** என் ராஜ்ஜியமே ஒரு கேரட்டுக்கு *****
    தீயகுணம் படைத்தவர்களையும் நல்லவர்களாக மாற்றும் சக்தி 'கேரட்' என்ற செடிக்கு உண்டென்று கலீபா கேள்விப்பட, நம் ம.இ.மந்திரியாரை நல்லவராக்கிடும் பொருட்டு கேரட்டைத் தேடி கலீபா மேற்கொள்ளும் பயணங்களே கதை! சிரிக்கவும், ரசிக்கவும் நிறையவே வாய்ப்பிருந்தாலும், கூடவே நம் கலீபா ஒவ்வொருமுறையும் கேரட்டுக்காண்டி படும் அல்லல்களால் கொஞ்சம் பரிதாபத்தையும் ஏற்படுத்திவிடுகிறார். ஒருவாறாக அவர் கேரட்டைக் கண்டுபிடித்து தன் நாட்டுக்கு கொண்டுவந்துசேர்ந்தான பின்னே, அவரது சமையற்காரனால் அந்த கேரட்டுக்கு நேரும் கொடுமையோ - எதிர்பாராத சோக + கெக்கபிக்கே க்ளாமாக்ஸ்!
    இருபது பக்கங்களைக் கொண்ட முழுநீள(!) கதையில் நம் மதியில்லா மந்திரிக்கு மொத்தமே இரண்டு பேனல்களில் மட்டுமே தலைகாட்டிடும் வாய்ப்பு என்றால் நம்ப முடிகிறதா? ஆனாலும் நம் கலீபாவே (இத்தனை நாளும் தன் படுக்கையில் நிறைந்து கிடந்தவர்) ஒற்றை ஆளாக சாகஸம் செய்து நம் மனங்களிலும் நிறைகின்றார்!

    ***** மாயமில்லே... மந்திரமில்லே... ****

    ஏற்கனவே படித்த கதைதான் என்றாலும், வண்ணத்தினாலும், மேம்படுத்தப்பட்ட வசனங்களாலும் புதிதாய் படிப்பதுபோன்றே உணரவைக்கிறது! அந்த இரு ஏலியன்களின் முகபாவங்களும் - வசனங்களும், மந்திரியாரின் முகபாவங்களும் - பரிதவிப்புகளும் காமெடியில் பின்னிப்பெடலெடுத்திருக்கின்றன!

    ***** ஒரு சுந்தரியும்... ஒரு சொப்பன தினமும் ******

    ஹா ஹா ஹா... செம! செம! மந்திரியாரின் மிகச் சிறந்த படைப்புகளுள் ஒன்று! 'சிரிக்காமல் படிச்சு முடிக்கிறவாளுக்கு சில கோடிகள் பரிசு' - அப்படீன்னு போட்டியே வைக்கலாம்! அதிலும் அந்த க்ளாமாக்ஸ் - ஹா ஹா ஹா!!


    ****** பறக்கும் பூச்சிப் படலம் *****

    மீளாத் துயிலில் ஆழ்த்திவிடும் பூச்சிக்கடி சக்தியைக்கொண்ட ஒரு ஈ'யை மையமாகக் கொண்டு (தகவலுக்கு நன்றி செனாஅனா அவர்களே!) ஒரு ஜாலி தோரணம்! எஸ்கேப் ஆகிவிட்ட ஈயை தேடி மந்திரியாரும், ஜால்ராபாயும் அடிக்கும் லூட்டிகள் வயிறைப் பதம் பார்க்கின்றன!

    இப்படியாக,

    திரும்பத் திரும்பப் படித்து ரசித்து, சிரித்துமகிழும் புத்தகப் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் இதழ் இது!

    மொத்தத்தில், சென்றமுறை லேசாய் சறுக்கிய மந்திரியாருக்கு இதில் செங்குத்தான ஏறுமுகம்!

    எனது ரேட்டிங் : 9.75/10

    ReplyDelete
  59. படைத்தானே படைத்தானே
    இரத்தப்படலத்த வான்'s படைத்தானே
    வளர்த்தானே வளர்த்தானே
    ஜேசனின் கவலையை வளர்த்தானே
    படைத்தானே படைத்தானே
    இரத்தப்படலத்த வான்'s படைத்தானே

    கொடுத்தானே கொடுத்தானே
    கருப்பாய் சிறுசாய் விஜயன் கொடுத்தானே
    பிரித்தானே பிரித்தானே
    ஒன்றாய் மூன்றாய் புத்தகத்த பிரித்தானே

    படைத்தானே படைத்தானே
    இரத்தப்படலத்த வான்'sபடைத்தானே

    தலையில்லா போராளி சைசு கேட்ட மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
    ஒன்று இரண்டு மூன்றாய் கூட்டம் சிறிதுமில்லை
    தூக்க முடியாதென எண்ணி விழுந்தான்
    மூன்றில் ஒன்றைக் காணவில்லை
    அலைந்தான் தவித்தான்
    துடித்தான் மடிந்தான் ஆசிரியருக்கும் லாபமில்லை

    படைத்தானே படைத்தானே
    இரத்தப்படலத்த வான்'s படைத்தானே
    வளர்த்தானே வளர்த்தானே
    ஜேசனின் கவலையை வளர்த்தானே
    படைத்தானே படைத்தானே
    இரத்தப்படலத்த வான்'s படைத்தானே

    ஒன்றே ஒன்றாய் கேட்டவன் நெஞ்சில்
    குழப்பம் இல்லையடா
    இன்னும் இரண்டை தன்னுடன் சேர்த்தான்
    அதுவும் வேணும் தொல்லையடா
    இத்தனை சிறிய விஜயன் தலையில் எத்தனை சுமைகளடா
    ஏழில் தொடங்கி எழுபது வரைக்கும்
    என்றும் மயக்கமடா

    படைத்தானே படைத்தானே
    இரத்தப்படலத்த வான்'s படைத்தானே
    வளர்த்தானே வளர்த்தானே
    ஜேசனின் கவலையை வளர்த்தானே
    படைத்தானே படைத்தானே
    இரத்தப்படலத்த வான்'s படைத்தானே
    வளர்த்தானே வளர்த்தானே
    வளர்த்தானே வளர்த்தானே
    ஜேசனின் கவலையை வளர்த்தானே
    வளர்த்தானே வளர்த்தானே
    ஜேசனின் கவலையை வளர்த்தானே

    ReplyDelete
    Replies
    1. ////இத்தனை சிறிய விஜயன் தலையில் எத்தனை சுமைகளடா
      ஏழில் தொடங்கி எழுபது வரைக்கும்
      என்றும் மயக்கமடா ////

      செம! :)

      ஸ்டீல்,

      இது ரொம்ம்ம்பப் பழைய பாட்டுன்றதால ( நாங்கல்லாம் யூத் - இல்லையா?), சரணத்தோட ட்யூன் சரியா ஞாபகம் வரலை. சாயந்திரம்போல ஒரு ஃபோன் போடுறேன்... சுதி சுத்தமா பாடிக் காட்டிடுங்க! அதை அப்படியே ரெக்கார்டு பண்ணி எடிட்டருக்கு மெயில்ல அனுப்பிடலாம். அப்புறம் பாருங்க, "நீங்க சொன்னா தலையில்லா பேமானி சைஸுல கூட இரத்தப்படலத்த ரிலீஸ் பண்ணிப்புடலாம்க ஸ்டீலு. ஆனா மறுபடிகிறுபடி ரெக்கார்டு பண்ணி மட்டும் அனுப்பிடாதீங்கோவ்"னு அலறியடிச்சுக்கிட்டு பதில் போடுவார் பாருங்க!

      போராட்டுக்குழு உறுப்பினர்கள்ட்ட சகட்டுமேனிக்கு வாங்கிக் கட்டிக்கிறதே இப்பல்லாம் இந்த எடிட்டர் சமூகத்துக்கு வேலையாப் போச்சு!

      Delete
    2. ஆனா ஸ்டீல்... அந்த இரண்டாவது பேராவை மட்டும் ( என்னதான் பாட்டா இருந்தாலும்கூட) ரசிக்க முடியலை!

      Delete
    3. ஈவி ஆசிரியர் முந்தி இபவ தலையில்லா போராளி சைசுல இல்லாம சின்னதா வுட்டாரே ...அத சொல்லுது ..அந்தப் பேரா...மணந்தால்.

      Delete
    4. பாத்தா தெரிது நீங்க அப்பத்தய யூத்தா....அதான் படிச்சேன் பாட்டா...ஏ ..டண்டணக்கா..டனக்கு னக்கா...தலையில்லா போராளி சைசு நமக்கு மக்கா..

      Delete
  60. எடி சார், ஜாலி டைம் முதல் பக்கத்தில் பாதை 1; பயணம் 1 என உள்ளது. இது இந்த இதழ் இனி தொடர்ச்சியாக வரும் என்பது போல் தெரிகிறது. மகிழ்ச்சிதான் என்றாலும், இது சந்தாதாரர்களுக்கு மட்டுமே எனும் போது வரலாற்று பிழையாகிவிடாதா சார்

    ReplyDelete
  61. சார் மார்ச் மாதத்தில் இருந்து எல்லா புத்தகங்கள் வாங்க சந்தா எவ்வளவு சார்

    ReplyDelete
  62. @ ALL : ஒரு மாறுதலுக்கு புதுப் பதிவை ஞாயிறு காலையில் சாவகாசமாய் வைத்துக் கொள்வோமே ? 8 மணிக்கு ஆஜராகிடுகிறேன் guys ! Good night !

    ReplyDelete
    Replies
    1. பாத்தீங்களா ஸ்டீல்!! ஏழு கட்டையில நீங்க பாடினதைக் கேட்டு நேத்து எடிட்டருக்கு தலை சுத்திடுச்சு போல! ;) நீங்க ஒருதபா பாடினதுக்கே பதிவ ஒரு நாள் தள்ளிப்போட்டிருக்கார்னா... இன்னொரு தபா பாடினா அடுத்தபதிவு அடுத்த மாசம்தான்!

      Delete
  63. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete