Powered By Blogger

Sunday, February 05, 2017

கச்சிதப் பத்து !!

நண்பர்களே,
            
வணக்கம். ஜனவரி நமக்கு அதிரடியாகத் துவங்கியதெனில் பிப்ரவரி அழகானதொன்றாக அமைந்துள்ளது என்று சொல்லலாம் ! வழக்கமாய் நமது இரவுக் கழுகார் முன்நிற்க- அவரது பரந்த தோள்களுக்குப் பின்னே மற்ற நாயகர்கள் பதுங்கி நிற்பது நடைமுறை. ஆனால் ஜனவரியையும் சரி, இம்மாதத்தையும் சரி- புதியவர்களும், சற்றே விளிம்புநிலை நாயகர்களும், தமதாக்கிக் கொண்டுள்ளது ஒரு ‘பளிச்‘ மாற்றம் என்பேன் ! சத்தமின்றி மிரட்டிச் சென்ற ட்யுராங்கோவும் ; சத்தமாய் தங்கள் இருப்பைப் பதிவு செய்து வைத்த ப்ளுகோட் பட்டாளமும் ஜனவரியின் highlights எனில், ஜேசன் ப்ரைஸ் & மதி மந்திரியாரே பிப்ரவரியின் ஒளிவட்டத்தைப் பகிர்ந்திடுவோர் ! கதைகளென பார்த்தால் ஜேசனும், மோடி மஸ்தானும் - வானவில்லின் இரு எதிரெதிர் முனைகள் ! முன்னது இருண்ட, முரட்டு, மிரட்டல் களமெனில், பின்னது ஜாலியான, ‘பளிச்‘சென்ற சிரிப்பு உருட்டல் களம் ! “ஆனால் இதையும் ரசித்திடுகிறோம்- அதனையும் அமர்க்களப்படுத்திடுகிறோம் !” என்ற ரீதியில் உங்களது ரசனைகள் flexible ஆக அமைந்திருப்பது- இந்தக் காமிக்ஸ் பயணத்தில் நாம் கடந்து வந்துள்ள தூரத்தை ஸ்பஷ்டமாகச் சுட்டிக் காட்டுகிறது ! So ‘ரசனைகளின் பரிணாம வளர்ச்சி‘ என்பதே இந்த ஞாயிறின் மகா சிந்தனையின் பலனான பதிவு ! 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாய் இதே வேளையில் தான் நமது லயன் காமிக்ஸின் ஒரு மைல்கல் நிகழ்வு நிஜமாகியது ! Yes- இதுவரையிலான எனது 33 ஆண்டுகால அனுபவத்தில் நமது லயன் / முத்து காமிக்ஸ் இதழ்களுள் ஆகக் கூடுதலான printrun பார்த்திட்ட இதழான “புரட்சித் தலைவன் ஆர்ச்சி” வெளியானது 1987-ன் பிப்ரவரியில் தான் ! 31,000 பிரதிகள் அச்சிட்டோமென்பது நினைவுள்ளது & மொத்தமுமே 6 மாதங்களுக்குள் விற்றும் தீர்ந்து விட்டது ! So முப்பதாண்டுகளுக்கு முன்னே நாம் வாஞ்சையாய்ச் சவாரி செய்து கொண்டிருந்தது சட்டி மண்டையன் ஆர்ச்சியோடும் ; கூர்மண்டையன் ஸ்பைடரோடுமே ! ரசனைகளில் ‘இது உசத்தி; அது கம்மி !‘ என்ற பாகுபாடுகள் இருந்திடத் துளியும் அவசியம் கிடையாது தானே ? So நமது அந்நாளைய tastes இந்த ‘காதுல புய்ப்பம்‘ கதைகள் பக்கமாகயிருப்பின் அதன் பொருட்டு இன்றொரு ஏளனச் சிரிப்பை உதிர்த்திடப் போவதில்லை நான் ! மாறாக- ஏணியில் ஏறும் படலத்தின் முதல் படியாக அதனை வகைப்படுத்திப் பார்க்க நினைக்கிறேன் ! “பாதாளப் போராட்டம்” கதையை மொழிபெயர்க்க இன்றைக்கு அமர்ந்தேனெனில் கைப்புள்ளையின் பச்சைச் சட்டையை விடவும் எனது சொக்காய் கந்தலாகிப் போகுமென்பது உறுதி ! ஆனால் 1984-ல் அதை எழுத உட்கார்ந்த சமயம் எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்காத குறை தான் ! ஆர்ச்சியின் முதல் இதழான “இரும்பு மனிதன்” இன்றைக்கு என் கையில் சிக்கியிருப்பின், ஒரு இருட்டான மூலையில் அதைப் பதுக்கி விட்டுப் பீரோவைப் பூட்டி, சாவியைக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டு விட்டிருப்பேன் ! ஆனால் அன்றைக்கோ அது எனக்கு (& உங்களுக்கு) நல்கிய புளகாங்கிதம் (!!!) டண்டணக்கா ரகம் ! So அன்றைய நமது வயதுகளுக்கு ; நமது முன்னிருந்த பொழுதுபோக்கு சாதனங்களுக்கு இந்தக் கதைரகங்கள் அழகாய் ஈடு கொடுத்துள்ளன என்பது புரிகிறது ! (இன்னமும் ‘அண்ணன் ஆர்ச்சிக்கு‘ ஆளுயரக் கட்-அவுட் வைக்க ஏங்கும் நண்பர்களும் உண்டென்பதை நானறிவேன்!) 
இந்த fantastic சூப்பர் ஹீரோக்கள் பாணிகளிலிருந்து விலகி நின்று யதார்த்தக் கதைக் களங்களை நாம் ரசிக்க ரோடு போட்டு வைத்தவர் நமது இளவரசியும், வில்லி கார்வினுமே என்பேன் - லயனைப் பொறுத்த மட்டிலாவது ! கலர் கலரான காஸ்ட்யூம்கள் கிடையாது ; ஹெலிகார் ; காலப் பயணக் கோட்டை‘ என்றெல்லாம் புய்ப்பச் சூட்டல்கள் ஏதும் கிடையாது ; இரத்தமும், சதையுமான தடித் தடி வில்லன்கள் மட்டுமே இங்கே......அவர்களைப் பந்தாடும் இந்த சாகஸ ஜோடியும் போலீஸோ, டிடெக்டிவ்களோ, நீதிக் காவலர்களோ  கிடையாது ! அமெரிக்காவும், ரஷ்யாவும் உலக வல்லரசுகளாகவும்; நிரந்தரப் பகையாளிகளாகவும் லயித்திருந்த Cold War நாட்களில் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் செம ஹிட் ! அந்த பாணியைக் கொஞ்சமாய் இரவல் வாங்கிக் கொண்டு ரஷ்ய வில்லன்கள்... உளவுத் துறை... டபுள்ஏஜெண்ட் etc... etc... என்று மாடஸ்டியின் கதைகளின் ஒரு பகுதியை அமைக்கத் தொடங்கியதால் அந்நாட்களில் இந்தப் பெண் புலியும் ஒரு வெற்றிகரமான (காமிக்ஸ்) நாயகியாக வலம் வந்ததில் வியப்பில்லை ! Of course- “கண்ணுக்குக் குளிர்ச்சியான” அந்த சித்திர பாணிக்கும் இந்தத் தொடரின் வெற்றியிலொரு பங்குண்டு தான்! So நமது ரசனை ஏணியின் இரண்டாவது படியில் பிளைஸி & கார்வினின் அந்த maverick ஆக்ஷன் பாணியினைச் சொல்லலாம் !

1985-ன் தீபாவளி - நமது காமிக்ஸ் வாசிப்புகளை நிறைய விதங்களில் மாற்றியமைத்த புண்ணியம் சேர்த்துக் கொண்டதொரு திருநாள் என்று சொல்லலாம் ! என் பேரன் காலத்திலும் அந்த மஞ்சள்சட்டை மாவீரரை நாம் சிலாகித்துக் கொண்டிருப்பது ஓயப் போவதில்லை என்பதால் - டெக்ஸ் வில்லரின் 32 ஆண்டுகளுக்கு முன்பான அறிமுகத்தை ஒரு gamechanging moment என்று பார்த்திடலாம் தானே ? அதற்கு முன்பாகவும் உதிரியான one-shot கௌ-பாய் நாயகர்களென நாம் பார்த்திருப்போம் தான் ! ஆனால் - கௌபாய் ரசனைகளை நம் மனங்களில் ஆணியடித்து நிரந்தரமாக்கியது இரவுக்கழுகார் தானே ? தொடர்ந்த காலங்களில் கேப்டன் டைகர் அந்த genre-ஐ இன்னுமொரு புது உயரத்துக்கு இட்டுச் செல்ல சாத்தியமானதுமே 1985-ல் போடப்பட்ட சாலையின் மீது தானே ? இன்றைக்கு கமான்சே ; பவுன்சர் ; ட்யுராங்கோ என்ற பெயர்களெல்லாம் நமக்கு ராமசாமி...முனியாண்டி.....நடராஜன் என்ற ரேஞ்சுக்கு ரொம்பவே பரிச்சயமான பெயர்களாய் மாறியிருப்பின், எல்லாப் புகழும்  கௌபாய் ரசனைகளையும் நேசிக்கக் கற்றுத் தந்த அந்த இத்தாலிய மின்னல் மைந்தனுக்கே தானே ?  So அந்த ஏணியின் படி # 3 – நமது கௌபாய் ரசனைகளின் வேரூன்றல் என்பேன் !

1986-ன் ஜனவரியும் - நம்மளவில் ஒரு புதுப் பூங்கா மலர்ந்திட வித்துக்களை விதைத்த மாதமென்பேன் ! Yes - ‘திகில்‘ அறிமுகமான பொழுதல்லவா அது ? கதைகளில் ஹாரர் என்ற genre-ஐ நமக்குக் காட்டியது மட்டுமன்றி, “முழுநீளக் கதைகள் தவிர்த்த சகலமுமே filler pages-க்கு மட்டுமே லாயக்கு !” என்பதான நமது mindset-க்கு மாற்றத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டிய வேளையது ! அன்றைய தினம் அந்தப் பரிசோதனை சொதப்பலில் தான் முடிந்தது என்பதை நான் மறுக்கப் போவதில்லை ! ஆனால் ஒரு புது ஆரம்பத்துக்கு வழிகாட்டியாக நின்ற அந்தத் ‘திகில்‘ இதழ் நமது பயணத்தினில் ஒரு முக்கிய இதழே ! அமானுஷ்யங்கள் சார்ந்த கதைகள் ; “பதிமூன்றாம் மாடி” போன்ற முற்றிலும் மாறுபட்ட களங்கள் ; (பின்நாட்களில்) “கறுப்புக் கிழவியின் கதைகள்” என ஏகப்பட்ட ‘ஹிட்‘கள் இந்த ஹாரர் genre-ல் கூட சாத்தியமே என்ற புரிதலோடு ஏணிப்படியின் step # 4 ஆக அந்த ரசனையைச் சொல்லி வைப்போமா?

1986-ன் ஜனவரியில் இன்னமுமொரு புதுப் பாதைக்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டிருந்தது ! யுத்தக் கதைக்களத்தை நமக்கு (லயனில்) முதன்முதலாகக் கண்ணில் காட்டியவர் இரும்புக்கை நார்மன் தானே ? “மனித எரிமலை” அந்த இறுக்க முக ஆக்ஷன் நாயகரின் memorable hit என்ற போதிலும், அந்நாளில் எனது மையல் அவரது உலோகக்கை மீதே பதிந்து கிடந்தது ! கையில் உலோகமிருந்தால் லோகத்தையே வாங்கி விடலாமென்ற சிந்தனை  எனக்கு மாத்திரமன்றி, ஒரு நூறு காமிக்ஸ் பதிப்பகங்களுக்கும் இருந்த நாட்களன்றோ அவை ?  “அட்ரா சக்கை... எங்ககிட்டேயும் ஒரு இரும்புக்கைப் பார்ட்டி இருக்காரே!” என்று முத்து காமிக்ஸை நோக்கிப் பழிப்புக் காட்டிடத் தான் அப்போதைக்குத் தோன்றியது எனக்கு. யுத்த கதைகளை நமக்கு மேற்கொண்டும் பரிச்சயம் செய்து வைக்க அதிரடிப்படை ; பெருச்சாளிப் பட்டாளம் ; மின்னல் படை சார்ஜெண்ட் தாமஸ் என்று நிறையப் பேர் மெனக்கெட்டுள்ளனர் ! இவை சகலமும் இங்கிலாந்தின் தயாரிப்புகள் எனும் போது - உலக யுத்தத்தில் வெற்றி கண்ட அவர்களது பார்வைக் கோணங்களே எல்லாக் கதைகளின் அடித்தளமும் என்பதாலோ, என்னவோ ஒருவித stereotyped பாணியிலேயே பெரும்பாலான கதைகள் அமைந்து போயின ! Maybe இன்னும் சிறிது காலம், விடாமுயற்சியாய் அந்தக் கதைகளை வெளியிட்டிருந்தால், இன்றைக்கு “விண்ணில் ஒரு வேங்கை” பாகம் 2; 3 ஆர்வமாய் போணியாகியிருக்கக் கூடும் ! Just miss !!! எது எப்படியோ- ரசனைகளில் யுத்தக் கதைகளையும் நாம் விட்டு வைக்கவில்லை என்ற திருப்தி மிஞ்சுகிறதே - ஏணியின் படிக்கட்டு நம்பர் 5 -ல் !
அதே  1986-ல் நமது ரசனைகள் மேற்கொண்டுமொரு புது திசையில் take-off ஆனதை மறக்கத் தான் முடியுமா ? ‘ஙே‘ என்ற முழியோடும், மொட்டையடித்த தலையோடும், பெயரின்றி நின்ற அந்தப் புதுமுகத்தை நாம் எவ்விதம் ஏற்றுக் கொள்ளப் போகிறோமோ ? என்று 1986-ன் மே மாதம் என் வயிற்றில் கரைந்த புளியைக் கொண்டு ஒரு சின்ன கல்யாணப் பந்திக்கே ரசம் செய்திருக்க முடியும் ! தலை எது? தூர் எது ? எங்கே துவங்கி - எத்தனை தூரம் பயணித்து - எங்கே நிறைவு காணும் ? என்பதை யூகிக்கக் கூட வாய்ப்பில்லாத அன்றைய தினத்திலும் - “இரத்தப் படலம்” கொண்டிருந்ததொரு இனம்புரியா ஈர்ப்பு - கிராபிக் நாவல்கள் திசையிலான நமது முதல் எட்டு ! டிடெக்டிவ்கள் மட்டுமே எடுபடுவர் ; சூப்பர் நாயகர்களுக்கு மட்டுமே வெகுஜன வரவேற்பிருக்கும் என்றதொரு எழுதப்படா விதியினை முதலில் டெக்ஸ் வில்லரும், அப்புறமாய் நமது நண்பர் XIII-ம் முறியடித்தது நமது ரசனைகளின் பரிணாம வளர்ச்சியல்லவா ? So - ஏணியின் படி # 6 கிராபிக் நாவல்களின் ரசனை ! இதில் கொடுமை என்னவெனில் இன்றைக்கு "கி.நா.க்களா ?" என்று அலறிடும் நண்பர்கள் கூட, அது என்னவென்றே தெரியாத நாட்களிலேயே இரத்தப் படலத்தை மாங்கு மாங்கென்று ஆதரித்து வந்துள்ளனர் ! பூ கூட டூ... புய்ப்பம் கூடப் பழம் !!! இரத்தப் படலத்தின் மறு மாதமே வெளியான ரோஜரின் “மர்மக் கத்தி” கூட ஒரு கிராபிக் நாவலுக்கான தகுதிகள் கொண்ட கதையே என்பேன் ! அந்நாளில் அதனையுமே - வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்டவர்கள் தானே நாமெல்லாம் ?
பரந்து விரிந்த கடல்... அதில் அலையாடும் சிறு படகு ; படகினுள் ஒரு பரட்டைத் தலையன் ; டாஸ்மாக்கைக் குத்தகைக்கு கேட்கும் ஒரு குடிகாரக் கிழம் ; ஒரு அரை டிக்கெட் பொடியன் - என்ற கூட்டாளிகள் ! இவர்களுக்கு வரையப்பட்டிருந்த சித்திரங்களோ – ஒரு பண்ணைக் கோழிகள் ஒட்டுமொத்தமாய் கீச்சி வைத்திடக் கூடிய தடங்களுக்கு நிகரானது ! இந்த combo-வில் ஒரு கதைத்தொடர் ; அதனைத் தமிழில் நாம் ரசிப்போம் என்பதை கேப்டன் பிரின்ஸின் "பனிமண்டலக் கோட்டையின்" வெற்றிக்கு முன்பாக சத்தியமாய் நம்மில் யாரும் நம்பியிருக்க முடியாது தான் ! ஆனால் உளவுத்துறைகள் இல்லாமலே ; ஜேம்ஸ் பாண்ட் பாணி நாயகர்கள் இல்லாமலே ; டமால்-டுமீல் தோட்டாப் பாய்ச்சல்கள் இல்லாமலே கூட ஒரு தொடர் mass ஹிட்டாகிட முடியுமென்று நிரூபித்த இந்தத் தொடர் - நமது ரசனைகளின் நாற்கால் பாய்ச்சலில் ஒரு முக்கிய தருணம் ! ஓவியர் ஹெர்மனின் அசுர ஆற்றலுக்கொரு பறைசாற்றலும் கூட என்பேன் ! பின்நாட்களில் களமிறங்கிய பீட்டர் பாலண்டைன்; வன்ரேஞ்சர் ஜோ போன்றோரும் - இயற்கையோடு இணைந்து சாகஸங்கள் செய்திடும் பாணியை விசாலப்படுத்தியவர்களே ! So - ‘எது மாதிரியுமிலாப் புது மாதிரி‘ என்ற விதத்தில் இதுவும் கூட ஒரு ரசனைப் படிக்கட்டு தானே ? Number 7!

1987-ன் ஜனவரியும் ஒரு ground breaker நமக்கு ! ஜுனியர் லயன் காமிக்ஸ் தீர்க்கமான  ஆயுள் கொண்டிருக்கவில்லையெனினும், அது விட்டுச் சென்ற legacy இன்றளவும் நமது கார்டூன்களில் தொடர்ந்திடுகிறதல்லவா ? ஒரு தலைவாங்கிக் குரங்கைத் தேடிப் புறப்பட்டதொரு ஆக்ஷன் கௌபாய் 1985 முதல் நம்மைக் கட்டுண்டு வைத்திருப்பது ஒரு பக்கமெனில், ரௌத்திரத்தில் தெருவில் விரட்டி ஓடும் யானையையும், காய்கறி சூப் குடிக்கும்  சிங்கத்தையும், சமாளிக்கவொரு ஒல்லிப்பிச்சான் கௌபாய் களமிறங்கியது 1987-ல் தானே ? விச்சு & கிச்சு; கபிஷ் ; அதிமேதை அப்பு போன்ற துண்டுத் துக்கடாக்களைத் தாண்டியும் ஒரு பரந்த காமிக்ஸ் உலகம் காத்துள்ளது ; அதனைப் படித்திடவும், ரசித்திடவும் மனதளவில் சுட்டிகளாக இருந்தால் கூடப் போதுமென்பதையும் நமக்குப் புரியச் செய்த புண்ணிய ஆத்மா லக்கி லூக் தான் ! அவர் திறந்து வைத்த கதவு தான் - பின்னர் சிக் பில் ; Smurfs ; க்ளிப்டன் ; பென்னி ; மதியில்லா மந்திரி ; ஹெர்லக் ஷோம்ஸ் என்று ஏகப்பட்ட சிரிப்புப் பார்ட்டிகளுக்கு சுலபமாய் என்ட்ரி தந்திட உதவியதல்லவா ? So ஏணியின் முக்கியப் படிகளுள் இந்த கார்ட்டூன் genre ஒன்றல்லவா ? Step # 8 !
1980-களின் இறுதியில் சத்தமின்றி வெளியானதொரு லயன் இதழானது Fantasy கதைகளுக்கு நம்மை இட்டுச் சென்ற முன்னோடி ! சாம்ஸன் என்ற ஜடாமுடிப் போர்வீரனின் சாகஸங்களைத் தாங்கிய “மந்திர ராணி” இன்றைய தோர்கல்களுக்கெல்லாம் ரொம்பவே சீனியர் ! சில மாதங்கள் கழித்து “தங்க நகரம்” என்ற இதழில் தலைகாட்டிய பின்னே hibernate mode-க்குள் புகுந்து விட்டாலும், நமது ரசனைப் படிகளில் ஒரு சின்னப் பங்கு இவருக்குண்டு ! "மோசமில்லை" என்ற வரவேற்பைப் பெற்றிருப்பினும், அந்நாட்களில் இந்தத் தொடரினை நான் தொடராது போனதன் காரணம் நினைவுக்கு வர மறுக்கிறது ! Anyways படிக்கட்டு எண் 9 !

டிடெக்டிவ் Z என்றொரு ரோபோ நாயகர் நமது கதைவரிசையில் ஒரு குட்டித் தலைகாட்டலைச் செய்திட்டதை நமது துவக்க நாட்களது வாசகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை ! இவருமே 1980 களின் பின் பகுதியில் திடுமென என்ட்ரி தந்தவர் ! அந்நாட்களில் FLEETWAY வார இதழ்கள் சகலத்துக்கும் நான் சந்தா செலுத்தியிருந்தேன் என்பதால், அங்கே அவர்கள் தும்மல் போட நினைக்கும் தருணமே எனக்கும் மூக்கு குறுகுறுத்து விடும் ! அவ்விதம் தான் மிஸ்டர் Z எனக்குப் பரிச்சயம் ! EAGLE என்ற அவர்களது வார இதழில் இந்த எதிர்காலத்து போலீஸ்காரர் தலைகாட்டி மறு மாதமே துண்டைப் போட்டு வைத்து விட்டேன் - இந்த சீட் நமக்குத் தானென்று ! So sci -fi ரகக் கதைகளை மேம்போக்காகவேணும் நமக்கு காட்டிய இந்த நாயகரும் ரசனை ஏணியில் படி # 10 -குத் தகுதி வாய்ந்தவரே !! 

So என்றைக்கோ இத்தனை படிகளையும் தாண்டிய "பழங்கள்" என்ற பெருமை நமக்கிருப்பதாலோ என்னவோ - ஜேசனையும், மந்திரியாரையும் ஒரே மூச்சில் ஊதித் தள்ளிட சாத்தியமாகிறது போலும் !! நிஜமாய் பெருமிதப் பெருமூச்ச்சொன்று வெளிப்படுகிறது நமக்கு கிட்டியுள்ள வாசகர்களின் பன்முகத்தன்மையினை நினைத்திடும் போது!! Salute to this ultimate bunch of comics lovers !!

அப்புறம், திருப்பூரில் நடந்து வரும் புத்தக விழா அதிரடி ரகத்தில் இல்லா விட்டாலுமே, decent ஆனா விற்பனையைக் கண்ணில் காட்டியுள்ளது முதலிரு நாட்களிலுமே !! அடுத்த 10 நாட்களுமே இந்த அதிர்ஷ்டம் தொடரின், 2017 -ன் பயணம் பிசிறின்றி வேகம் பிடித்திட வைட்டமின் "ப' கிட்டிடும் !! அப்புறம் இந்த ஊர் சுற்றும் படலம் தொடரவிருப்பது "பெரம்பலூர் BAPASI புத்தக விழாவின் " மார்க்கத்தில் ! தேதிகள் தெரியவில்லை இன்னமும் ; ஆனால் நாமங்கு இருப்பது உறுதி !! 

பிப்ரவரி இதழ்களின் விமர்சனங்களைத் தொடர்ந்திடுங்கள் guys !! ரொம்பவே சுவாரஸ்யமாய் உள்ளது - உங்கள் ஒவ்வொருவரின் பார்வைக் கோணங்களையும், அவரவரது பிரத்யேக எழுத்துப் பாணிகளில் ரசித்திடும் போது !! Keep writing please !! மீண்டும் சந்திப்போம் !! அது வரை - happy reading !! Bye for now !!

திருப்பூரிலிருந்து சுடச்  சுட !!251 comments:

 1. //இன்னமும் ‘அண்ணன் ஆர்ச்சிக்கு‘ ஆளுயரக் கட்-அவுட் வைக்க ஏங்கும் நண்பர்களும் உண்டென்பதை நானறிவேன்!//
  Me tooo

  ReplyDelete
 2. காலை வணக்கம் விஐயன் சார் & நண்பர்களே 🙏🏼

  ReplyDelete
 3. ஆர்ச்சி ஒன்றையாவது கண்னில் காட்டுங்கள்

  ReplyDelete
 4. பதிவில் குறிப்பிடப்பட்ட பத்து பேரையும் வச்சு 'லயன் படிக்கட்டு ஸ்பெஷல்' ஒன்னு போட்டீங்கன்னா, வாயில் பொங்கும் கங்கையோட வாங்கிப் படிப்போமுல்ல எடிட்டர் சார்?

  ReplyDelete
  Replies
  1. மேலே ஏறிப்போற படிக்கட்டா, இல்லை கீழே இறங்கிப்போற படிக்கட்டான்னு கன்பூசனா கீது குருநாயரே..!!

   Delete
  2. படிக்கட்டு ஸ்பெஷலா? யோவ்! .. அவரை வாயைத் திறக்க விட மாட்றீங்களே.. சி.சி.வ வின் அடுத்த அத்தியாயம் போல இருத்தது இந்த பதிவு. ஸ்பெஷல் குஷல்னு ஏதாச்சும் சொல்லி விரட்டி விட்டுடாதிங்க.. :-))))

   பைதிவே, ஐடியா நல்லாருக்கு.. அப்படியே லிப்ட் ஸ்பெஷல், எஸ்கலேட்டர் ஸ்பெஷல்னு பிக்கப் ஆகி போக வழியிருக்கானு பார்த்து வையுங்க! ஈரோட்டுல வளைச்சிப்பிடிப்போம். :-)))

   Delete
  3. லயன் படிக்கட்டு ஸ்பெஷல்
   SUPER
   @ஈரோடு விஜய்.
   இந்த லொள்ளுதானய்யா உம்மை செயளாலரா வெச்சிருக்கு.

   Delete
  4. ///மேலே ஏறிப்போற படிக்கட்டா, இல்லை கீழே இறங்கிப்போற படிக்கட்டான்னு கன்பூசனா கீது /////

   :-)

   இங்கிட்டும் அதே ரோசனைதான்.!!!

   Delete
  5. 4மாசத்துக்கு 1...
   1மாசத்துக்கு 1...
   1மாசத்துக்கு 2...
   னு மேலே ஏறி இன்று
   மாசத்துக்கு 4...என மாறியிருக்கும் போது மேலே ஏறிப்போற படிக்கட்டு தானே சரியாவரும்...

   Delete
 5. சிபி ஜீயின் அன்புக்கும்,ரம்மியின் அடாவடிக்கும் பணிந்து சேந்தம்பட்டியின் முக்கிய தலைகள் ,இளைஞர்கள் பட்டாளம் திருப்பூர் கிளம்பியாச்சி.ஆட்டம் ஆரம்பமாயிச்சி,இதன் மூலமாக அனைத்து விதமான குழப்பங்களுக்கு,வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது .

  ReplyDelete
  Replies
  1. திருப்பூர் மாநகரைக் கலக்கிடச் செல்லும் சேந்தம்பட்டி கலைக் குழுவினருக்கு flex வைக்க நேரமில்லை என்பதால், இங்கொரு பெரிய "ஓஹோ !!!" மட்டுமாவது போட்டு வைக்கிறேன் ! ஆடலும்-பாடலும்- அப்புறம் அந்தக் கிடா வெட்டும் சிறக்க வாழ்த்துக்கள் !!

   Delete
  2. கரூரில் இருந்து அடியேனும் தற்போது கிளம்பி போய்க் கொண்டு உள்ளேன்.. துணைக்கு மந்திரியார் உள்ளார்..

   ஆசிரியர் அவர்களுக்கு..
   பழைய கதாநாயகர்களைக் கொண்டதொரு கதம்ப குண்டு புக் அடுத்த வருடத்திற்கு ஏற்பாடு செய்ய முடியுமா.. கருப்பு வெள்ளையில் மட்டும்..

   Delete
  3. வாழ்த்துக்கள் நண்பர்களே! have fun!

   Delete
  4. dear வாத்தியார் சார்,

   As I am suffering from severe family works, ஐ யாம் not able to attend the book fair today. kindly allow me to சிக்கிச் சின்னாபின்னம் with my family works.

   இப்படிக்கி,
   தங்கள் கீழ்படித்த மாணாக்கன் - ஈனாவினா

   Delete
  5. Erode VIJAY : செயலாளர் லீவு ; தலீவர் பதுங்கு குழியின் மூடியைத் திறக்கும் பாட்டைக் காணோம் ; பொருளாளரோ பிஸி !! என்ன கொடுமை இது - காமிக்ஸ் வளர்த்த நற்சங்கத்துக்கு ?

   Delete
  6. ///As I am suffering from severe family works, ஐ யாம் not able to attend the book fair today. kindly allow me to சிக்கிச் சின்னாபின்னம் with my family works./// ஹா...ஹா... ரணகளத்திலும் ஒரு கிலுகிலுப்பு...

   Delete
 6. Kalai vanakangal nanbargalae en NAL nan nal agattum.

  ReplyDelete
 7. February Tex கதையின் அட்டைப்படக் காட்சி
  உள்ளே காணோம்
  Tex மாறு வேடத்தில் வந்தது நன்றாகவே இருந்தது
  கேரட் கதை சுவையாகவே இருந்தது
  ஜேசன் .அமானுஷ்யம்.த்ரில் .மர்மம். கலந்து கடைசியில் நெருப்பில் இடுவதோடு முடிந்ததும் சுவாரஸ்யமே.
  லாரண்ஸ் டேவிட் மோசமில்லை ரகம்
  சூப்பர் என்று சொல்வது ஜாலி டைம்ஸ்
  பழைய முத்து காமிக்ஸ் வாரமலரை ஞாபகப்படுத்திவிட்டது தொடருங்கள் உங்கள் காமிக்ஸ் சேவையை நன்றி......

  ReplyDelete
 8. குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: இன்னாசெய்யாமை.
  குறள் 315:
  “”அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
  தந்நோய்போல் போற்றாக் கடை.””

  மு.வ உரை:
  மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

  பரிமேலழகர் உரை:
  அறிவினான் ஆகுவது உண்டோ - துறந்தார்க்கு உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ, பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக்கடை - பிறிதோர் உயிர்க்கு வரும் இன்னாதவற்றைத் தம் உயிர்க்கு வந்தனபோலக் குறிக்கொண்டு காவா இடத்து? (குறிக்கொண்டு காத்தலாவது: நடத்தல், இருத்தல், நிற்றல், உண்டல் முதலிய தம் தொழில்களானும், பிறவாற்றானும் உயிர்கள் உறுவனவற்றை முன்னே அறிந்து உறாமல் காத்தல். இது பெரும்பான்மையும் அஃறிணைக்கண் நுண்ணிய உடம்பு உடையவற்றைப் பற்றி வருதலின் பொதுப்படப் 'பிறிதின் நோய்' என்றும், 'மறப்பான் அது துன்புறினும் நமக்கு இன்னா செய்தலாம்' என்று அறிந்து காத்தல் வேண்டும் ஆகலின், அது 'செய்யாவழி அறிவினான் ஆகுவது உண்டோ' என்றும் கூறினார். இதனால் சோர்வால்செய்தல்விலக்கப்பட்டது.).

  மணக்குடவர் உரை:
  பிறிதோருயிர்க்குஉறும் நோயைத் தனக்கு உறும் நோய்போலக் காவாதவிடத்து, அறிவுடையனாகிய வதனால் ஆகுவதொரு பயன் உண்டாகாது. இஃது அறிவுடையார் செய்யார் என்றது.

  ReplyDelete
 9. //(இன்னமும் ‘அண்ணன் ஆர்ச்சிக்கு‘ ஆளுயரக் கட்-அவுட் வைக்க ஏங்கும் நண்பர்களும் உண்டென்பதை நானறிவேன்!) //

  அந்த காட்டுத்தனமான ரசிகர்களில் அடியேனும் ஒருவன் தானப்பு. 'உலகப் போரில்' எங்கள் அண்ணன் எல்லையோர இரும்பு வேலியை தூண்டிலாகப் போட்டு விமானத்தை பிடிப்பதாகட்டும். க்ருள்சால் தூண்டப்பட்ட சிங்கங்களை அடக்குவதாகட்டும்... டவுட்டே இல்லாமல் கட்டவுட்டிற்கு தகுதியானவரே.

  ReplyDelete
  Replies
  1. ஆர்ச்சியை ரசித்து கொண்டாடுபவர்களுள் நானும் ஒருவன்..

   Delete
  2. அந்த நாட்களில் இந்த கதையை பலமுறை படித்து ரசித்தேன். இது போன்று ரெண்டு ரோபோட் நமது நாட்டுக்கு இருந்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது, யாரும் நம்மீது போர்தொடுத்தால் நமது ஆர்ச்சி ரோபோ பார்த்து கொள்ளும் என்று ஏங்கிய நாட்களை மறக்க முடியாது!

   Delete
  3. @ Friends : இப்போதைக்கு "சித்தப்பா ஸ்பைடரைக்" கொண்டு கவலையை மறக்க முயற்சிப்போம் ; சமயம் வாய்ப்பின், "அண்ணன் ஆர்ச்சி" பக்கமாகவும் பார்வைகளை செலுத்துவோம் !

   Delete
  4. விஜயன் சார், ஆமா ஆமா, ரெண்டு காதுல பூ மாலை தாங்காது என்று மக்கள் கூச்சல் போட போறாங்க!

   Delete
 10. ennamo ponga indha comics piththu vidamaattaengudhu ,,,,,,

  ReplyDelete
  Replies
  1. j : அதுபாட்டுக்கு ஒரு ஓரத்தில் தொடர்ந்துவிட்டுத் தான் போகட்டுமே சார் ?

   Delete
 11. இதுவரையிலான பதிவுகளிலே டாப் 10 பதிவுகள் என்றொரு பட்டியலிட்டால் இடம் பெறக்கூடிய பதிவு இது. லயனின் பயணத்தையும் அதனினூடாக ரசனைகளின் பரிமாண மாற்றத்தையும் மிக அபாரமாக தந்துள்ளார் ஆசிரியர்.
  மலரும் நினைவுகள் /ஃப்ளாஷ்பேக் ஸபெஷல் என ஒன்று கொண்டு வரலாமே சார்!!!! ஹிஹி ச்சும்மா போட்டு வெப்போம்......

  ReplyDelete
  Replies
  1. Mohamed Harris : //டாப் 10 பதிவுகள் என்றொரு பட்டியலிட்டால்//

   ஏதேதோ எழுதித் தள்ளியுள்ளது மட்டுமே நினைவில் உள்ளது நண்பரே ! எனக்குள் டாப் பதிவுகளாய்த் தொடர்வன ஒரு நாலைந்து மட்டுமே !!

   Delete
 12. புத்தக அரங்க அமைப்பு மிகவும் அற்புதம்
  விற்பனை உயர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ganesh kv : நன்றிகள் சார் !

   Delete
 13. ///இதில் கொடுமை என்னவெனில் இன்றைக்கு "கி.நா.க்களா ?" என்று அலறிடும் நண்பர்கள் கூட, அது என்னவென்றே தெரியாத நாட்களிலேயே இரத்தப் படலத்தை மாங்கு மாங்கென்று ஆதரித்து வந்துள்ளனர் ! பூ கூட டூ... புய்ப்பம் கூடப் பழம்///

  புரிகிறது சார்...!!

  ReplyDelete
  Replies
  1. பாட்சா சார்.!

   இரத்தப்படலம் செமி கி.நா.! தற்போது வரும் அக்மார்க் 9001 கி.நா.க்கள் தான் வாயில் ரத்தம் கக்கவைத்துவிடுகிறது.!

   கொலுசு போட்டு ஜீன்ஸ் போடும் பெண்களை நாம் அல்ட்ரா மாடர்ன் கேர்ள் என்று சொல்லுவதில்லையே.!

   Delete
 14. விஜயன் சார், திருப்பூர் நமது புத்தக ஸ்டால் நன்றாக உள்ளது, புதிய rack நமக்கு புதிய பொலிவை தருகிறது! இது நமது ஸ்டாலுக்கு பலரை கொண்டு வந்துவிடும். விற்பனை ஜோல்லிக்க வாழ்த்துக்கள்.

  சென்னை புத்தகதிருவிழாவில் நமது மும்மூர்த்திகள் ரசிகர்கள் மறுவருகை பற்றி சொல்லி இருந்தீர்கள, மிகவும் சந்தோஷமான விஷயம்; இவர்கள் முலம் நமது மறுபதிப்பு விற்பனை மற்றும் அதன் தடம் சீராக செல்ல உதவும்.

  அதே நேரம் இவர்கள் நமது புதிய கதை நாயகர்களை ரசிக்கும் நாள் வெகுதூரம் இல்லை என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : //திருப்பூர் நமது புத்தக ஸ்டால் நன்றாக உள்ளது, புதிய rack நமக்கு புதிய பொலிவை தருகிறது! //

   டாலடிக்கும் வர்ணத்தில், இத்தனை அட்டைப்படங்கள் ஒட்டு மொத்தமாய் பார்வையாளர்களைப் பார்த்துப் பிரகாசிப்பது கண்ணுக்கு குளிர்ச்சியாகவே உள்ளதுதான் !!

   Delete
 15. மிகவும் சுவாரஸ்யமான பதிவு சார்...! அண்ணன் ஆர்ச்சியின் "கோட்டை"யில் ஏற்றி காலப்பயணம் செய்ய வைத்துவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : இந்தப் பயணத்துக்குத் தான் டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை ; மூட்டை முடிச்சுகளைக் கட்டும் அவசியமில்லை ; செலவுக்கு டப்பும் தேவைப்படாது !! So விட்டு வைப்பானேன் என்று நினைத்தேன் !!

   Delete
 16. @ சேந்தம்பட்டி கலைக் குழு + இணைந்து கொள்ளும் நண்பர்களுக்கு : ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளின் போட்டோக்களை அனுப்புங்கள் ; இன்றைய பதிவின் வாலில் இணைத்துவிடுவோம் !

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி சார்,திருப்பூர் வந்து சேர்ந்தாச்சி.

   Delete
 17. TYPICALLY YOURS.. அருமையான பதிவு.
  நமது பயணத்தின் அழகான ஒரு Documentary கண்ட உணர்வு.

  ReplyDelete
  Replies
  1. T.K. AHMEDBASHA : TYPICALLY MINE எனில் - பெரிதாயொரு யோசனையெல்லாமின்றி மனதிலிருந்து எழுதுவது தான் ! இந்தப் பதிவும் கூட அப்படிப்பட்டதொரு அனுபவமே !

   நேற்றிரவு பேனா பிடிக்கும்வரையிலும் என்ன எழுதப் போகிறோமென்று எனக்குள் எந்த திட்டமிடலும் இருக்கவில்லை ! In fact "ஜேசன் ப்ரைஸ் அனுபவம்" பற்றிய discussion -ல் இந்த ஞாயிறைச் செலவிடத்தான் எண்ணியிருந்தேன் ! ஆனால் சேந்தம்பட்டி & co இன்று பகலில் திருப்பூர் விஜயம் என்பதால் அவர்களும் கலந்து கொள்ளும்விதமாய் நமது "ஜே.பி" கலந்துரையாடலை இன்னொரு நாளுக்கு மாற்றிக் கொள்வோமென்று தீர்மானித்த போது - இன்றைய பதிவுக்கு எதைப்பற்றி எழுதுவது என்ற கேள்வி முன்நின்றது ! அப்போது பிப்ரவரி இதழ்கள் பற்றி நண்பர்களின் விரிவான வரிகளை படிக்க நேர்ந்திட, அதனிலேயே இன்றைய பதிவுக்கொரு spark கிட்டியது !

   Delete
 18. எழுத்தாளர் க.சீ.சிவகுமார் மரணமுற்றார் என்று செய்திப்பத்திரிகை வாயிலாக அறிந்தேன். மிகவும் வருத்தமடைகிறேன்.

  எழுதிய ஒவ்வொரு வரியிலும் தவிர்க்க இயலாத புன்னகையும், மறக்க முடியாத எழுத்தாழுமையும் கொண்ட கதைகளை படைத்தவர்.

  என்றும் நன்மைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு வாயிலாக அறிமுகம் கொண்டேன் அவரது எழுத்துக்களை... ஆனால் ஏன் இவ்விதம் மரணத்தை நேர் கொண்டார் என்பதுதான் புரியவில்லை...

  ReplyDelete
 19. சந்தா E-ன் முதல் கதை எது? எந்த மாதம் வருகிறது சார்????

  ReplyDelete
  Replies
  1. Jagath Kumar : மே முதல் தேதிக்கு நண்பரே !

   Delete
 20. இரும்புக்கை நார்மன்,மின்னல் படையினர்,பெருச்சாளி பட்டாளம்,சார்ஜண்ட் தாமஸ் போன்ற கதைகளை(அ)அதே கதைகளை இப்போதும் ரசிப்போம் சார்.அற்புதமான ஆக்ஷன் கதைகள்.
  விண்ணில் ஒரு வேங்கை இவற்றின் கிட்டேகூட வரமுடியாது.வண்ணமும்,சித்திரங்களும் சூப்பர்.ஆனால் கதை மிகப்பெரிய மைனஸ்தான் எ.எ.க.

  ReplyDelete
  Replies
  1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : விண்ணில் ஒரு வேங்கை - முதல் பாகம் ஒரு அறிமுகமே ! கதைக் களம் துவங்குவதே தொடரும் பாகங்களில் தான் !

   Delete
  2. அடடே...அப்படியா சமாச்சாரம்...!அப்படியானால் இன்னும் ஒன்றிரண்டு பாகங்களை வெளியிட்டுப்பார்க்கலாமே சார்...!தோர்கல் கூட முதல் இரண்டு ஆல்பங்களில் சாத்து வாங்கி,அதற்கப்புறம்தானே விஸ்வரூபமெடுத்தார்...!!!

   Delete
 21. விஜயன் சார், ஜெராமைய எப்போது வரவுள்ளார்?

  ReplyDelete
 22. அதிசியதீவில் ஆர்ச்சி நான் வாசித்த முதல் ஆர்ச்சி புத்தகம் .

  ReplyDelete
  Replies
  1. yazhisai selva : காதெல்லாம் புய்ப்பச் சரம் தொங்க விட்டதொரு கதை என்பது நினைவுள்ளது நண்பரே !

   Delete
 23. சார்! அடுத்த வருட சந்தாவில் (அல்லது) சூப்பர் 6'ல் "கருப்பு கிழவியின் கதைகளை" மறுப்பதிப்பாக முழுவன்ணத்தில் வெளியிடுங்கள்!!!!!👺 💀 👻

  ReplyDelete
  Replies
  1. Jagath Kumar : "க.கி.க." களில் இன்னமும் ஏராளமான புதுக் கதைகள் உள்ளன ஜகத் ! So இந்தத் தொடருக்கு உயிரூட்டுவதாயிருப்பின், புதுசில் தலை நுழைக்கலாம் !

   Delete
  2. ///// "க.கி.க." களில் இன்னமும் ஏராளமான புதுக் கதைகள் உள்ளன ஜகத் ! So இந்தத் தொடருக்கு உயிரூட்டுவதாயிருப்பின், புதுசில் தலை நுழைக்கலாம் !////

   சூப்பர்! சூப்பர்! சூப்பர்!
   உடனே நம்ம கருப்புஆயாவுக்கு ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடுங்க. மண்டையோட்டு-மாலை சகிதம் ஏர்ப்போர்ட்டுக்குப் போய் வரவேற்று அசத்திப்புடலாம்!

   Delete
  3. Erode VIJAY : ஆனாலும் ஆயாகுலமோ ; ஆண்டிகுலமோ- தாய்க்குலத்தின் மீது தணியா அக்கறை காட்டும் உங்க பரந்த மனசுக்கு சங்க செலவில் ஒரு சின்ன சிலை வைக்கச் சொல்லலாம் !!

   Delete
  4. இன்னும் ஓரு சிலர் பழைய கருப்பு கிழவி படிக்க வில்லை. சந்தா D இவற்றை சேர்ந்தால் நானும் தங்கம் வாங்க ஆரம்பித்து விடுவேன்.

   Delete
  5. johny ஜி @ கருப்பு கிழவி வர போறாளாம்!

   Delete
  6. கருப்பு கிழவியின் கதைகளை சிறு வயதில் படித்ததுதான். ஆனால், இன்னமும் நினைவை விட்டு நீங்காத ஒரு கதை "செத்தும் கெடுத்தான் சித்தப்பா."

   Delete
  7. ////தாய்க்குலத்தின் மீது தணியா அக்கறை காட்டும் உங்க பரந்த மனசுக்கு சங்க செலவில் ஒரு சின்ன சிலை வைக்கச் சொல்லலாம் ////

   அன்பு வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறேன்! என் சிலையை வடிப்பது ஒரு பெண் சிற்பியாக இருக்கட்டும்! :D

   Delete
  8. ஆனாலும் இந்த ஜொள்ளு சாரி
   இந்த ளொள்ளு உங்களுக்கே
   உரியது ஈ வி.

   Delete
  9. ஆஹா . கறுப்பு கிழவியின்கதைகளுக்கு நான் அடிமை . எப்படியாவது வெளியிடுங்கள் சார் .

   Delete
 24. புரட்சிதலைவன் ஆர்ச்சி இதழை இன்று கையில் எடுத்து முன்னும் பின்னும் பார்த்து உனக்கு முப்பது வயதா என்று நீண்ட நாட்களுக்கு அப்புறம் முழுதாய் மீண்டும் ஒருமுறை படிக்க தயாராகிகொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Jaya Kumar : ஜாக்கிரதை சார் !! அப்புறம் அந்த இதழுக்கு இப்போ வயது 32.5 !!

   Delete
  2. ஆமாம் ஸார் பேப்பர் மொடமொடவென்று உள்ளது.படிப்பதற்க்கு சற்று சிரமமான நிலமையில்தான் இருப்பினும் படித்துவிட்டு சிறிய பராமரிப்பு பணியை செய்துவிட்டால் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் படிக்கலாம்.

   Delete
 25. மதியில்லா மந்திரி சொப்பன சுந்திரி பற்றி ஏற்கெனவே நிறைய பதிவு வந்து விட்டாலும் எனது review..

  முதல்வ விஷயமா மொழிபெயர்ப்பு. ஆசிரியரை பாராட்டியே ஆகா வேண்டும்

  சொப்பன சுந்தரி கடையோட பேரு "ஜில் ஜில் ஜிகர்குண்டா"

  "எல்லாரையும் உறைய வைக்கிற நீ. தம்மாதுன்டு இருக்கும் கலிபாவை உறைய வைக்க மாட்டேங்குற" என்று மந்திரி சுடாவதும்.
  "இதுக்குகோசரம் ஜில் ஜில் இருக்கிற நம்ம உறவில் சுடுதண்ணி ஊத்திட வேண்டாமே." என்ற பதிலும் செம...

  ஆங்கிலத்தில் கூட இவ்வளவு நன்றாக இருக்குமா என்பது சந்தேகம்.

  அப்புறம் கதை
  கலிபாவை ஓன்றும் செய்ய முடியலயே என்று மந்திர ஆழ அத பார்த்து "நா கஷ்டம் படறத பார்த்து மந்திரி ஆழறாரே" என்று கலிபா ஆழ கமெடி சும்மா சுத்தி அடிக்குது ..
  ஆரம்பமே மந்திர உறைய போகிறார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் எப்படி உறைந்தார் என்பதைக் காட்டிய விதம் ரொம்ப சுப்பர்.ஓரு கதையின் முடிவு எல்லருக்கும் தெரிந்தும் அதை சுவாறஸ்ஸியமாக முடிப்பது மிகப் பெரிய கலை.

  ReplyDelete
  Replies
  1. Ganeshkumar Kumar //ஓரு கதையின் முடிவு எல்லருக்கும் தெரிந்தும் அதை சுவாறஸ்ஸியமாக முடிப்பது மிகப் பெரிய கலை.//

   Exactly !! Very well said !

   Delete
  2. நல்லா சொன்னீங்க!

   Delete
  3. /////ஓரு கதையின் முடிவு எல்லருக்கும் தெரிந்தும் அதை சுவாறஸ்ஸியமாக முடிப்பது மிகப் பெரிய கலை.////

   +1

   ///ஆரம்பமே மந்திர உறைய போகிறார் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் எப்படி உறைந்தார் என்பதைக் காட்டிய விதம் ரொம்ப சுப்பர்.///

   சுப்பராச் சொன்னீங்க!

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
 26. எடிட்டர் ஸார்.
  தோர்கல் எந்த மாதம் வருகிறார்?
  சீக்கிரம் ஆகட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. Jaya Kumar : "அடுத்த வெளியீடு " விளம்பரங்களைப் பாருங்கள் நண்பரே !

   Delete
 27. விஜயன் சார், மனித எரிமலை - இரும்புக்கை நார்மன் இவர் புதிய அறிமுகமானாலும் அந்த காலத்தில் அனைவரும் வாங்கிய காரணம் அந்த அட்டை படம், செமை! அதிக விளம்பரம் இல்லாமல், இந்த அட்டைபடம் முலம் ஒரு புதிய நாயகனை எங்களுக்கு அறிமுகம் செய்தது இவர் பக்கம் எங்களை இழுத்தது சிறப்பு. இந்த அட்டை படத்திற்காகவே நான் அவரின் ரசிகன்!

  ReplyDelete
  Replies
  1. நம்மிடம் நல்லவரவேற்பு பெற்ற நார்மன் இங்கிலாந்தில் வரவேற்பு பெற முடியாமல் போனது ஏன் என்று விளங்க வில்லை?

   Delete
  2. Ganeshkumar Kumar : நாம் கொண்டாடும் மாயாவி கூட இங்கிலாந்தில் ஒரு சூப்பர்-டூப்பர் ஹிட் நாயகரில்லை !! அறுபது ; எழுபது & எண்பதுகளில் அங்கே ஒரு காமிக்ஸ் சுனாமியே வீசிக் கொண்டிருந்தது எனலாம் ; so அப்போதிருந்த அசாத்திய ரேஞ்சில் எந்தவொரு நாயகரும் அதிரடி கவன ஈர்ப்பைப் பெற்றிடுவது சுலபமாக இருந்திராது !!

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. வெற்றி பெறாமல் இருப்பது வேறு. படு தோல்வி என்பது வேறு. நார்மன் இங்கிலாந்து அடைந்தது படுதோல்வி..

   Delete
  5. Ganeshkumar Kumar : படு தோல்வியா ? எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே ?

   அந்நாளைய இங்கிலாந்து காமிக்ஸ் மார்க்கெட்டில் topsellers என்று பார்த்தால் - அவை புட்பால் சார்ந்த கதைகளும் ; 2 பக்க கார்ட்டூன்களுமே ! அவை தவிர பாக்கி எல்லாமே - சீசனுக்கு சீசன் மாறுபடும் ரகங்கள் !

   And பெரும்பான்மைக் கதைகள் வாரம் 2 பக்கங்கள் என தொடராகப் பயணித்தவை என்பதால் - அவற்றின் பின்னணிகளில் ஒரு ஸ்திரமான திட்டமிடல் இருக்க வாய்ப்புகள் குறைவு ! பயணம் போகும் போது இடப்பக்கமோ, வலப்பக்கமோ - தாராளமாய் மாற்றங்கள் செய்து கொள்வோம் என்ற பாங்கு தெரிந்திடும். மாயாவி கூட திடீரென சூப்பர்மேன் ஜாடையில் காஸ்டியூம் மாற்றிக் கொண்டு சில காலம் உலா வந்தது - அந்நாளைய அமெரிக்க சூப்பர் ஹீரோக்களின் தாக்கத்தின் பலனால் தானே ? இதனாலேயே அந்நாட்களது பிரிட்டிஷ் காமிக்ஸ் கதைகளுள் பெரியதொரு ஒப்பீடுகள் இருந்ததில்லை !

   DAN DARE (எதிர்காலக் கதை) ; ROY OF THE ROVERS (புட்பால் ) ;செக்ஸ்டன் பிளேக் ; ANDY CAPP (2 பக்க கார்ட்டூன்) ; BEEZER (கார்டூன்) ; CAPT HURRICANE (யுத்த காமெடி) ; JOHNNY COUGAR ( மல்யுத்த வீரன்) ; JUDGE DREDD (எதிர்காலம்) போன்ற சில standout தொடர்களைத் தாண்டி, பாக்கி எல்லாமே ஒவ்வொரு சாராரின், ஒவ்வொரு வேளையின் பிரியங்களைக் கொண்டிருந்தன என்று சொல்வேன் ! நார்மன் கண்டது படுதோல்வி என்றுசொல்லிட முகாந்திரம் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை !

   Delete
  6. நீங்கள் ஏதோ ஓரு ககாமிக்ஸில்( எப்போது மற்றும் எந்த காமிக்ஸ் என்று நினைவில்லை) ஓரு வாசகர் நார்மன் தொடர்ந்து வெளியிடுங்கள் என்று கேட்டு இருந்தற்கு நீங்கள் நம்மவர்களிடன் பெரிய வெற்றி பெற்ற காமிக்ஸ் இங்கிலாந்தில் வரவேற்பு இல்லாத காரணத்தால் இரண்டு தொடர்களோடு நின்று விட்டது என்று பதில் எழுதி இருந்திர்கள்.
   நான் இரண்டு நார்மன் கதைகளை யும் படித்து இருக்கிறேன். எனக்கு ரொம்ப பிடித்தது இருந்தது.

   நான் சொல்ல வந்தது (வருத்தத்துடன் ) ஆர்ச்சி மாதிரி பொருளாதார ரிதியில் வெற்றி பெற வில்லையே என்று தான்.
   எல்லா நல்ல படைப்புகளும் வெற்றி பெற்று விடுவது இல்லை தான்

   உதாரணம்:
   வான்கா என்ற ஓவியர். இன்று அவர் வரைந்த படம் ஓவ்வொன்றும் குறைந்த பட்ச விலை 150 கோடி சில ஓவியங்கள் விலை மதிக்க முடியாதது. ஆனால் அவர் வாழ்ந்த போது ஓரு வேலை உணவு சாப்பிட முடியாமல் ரொம்பவே வறுமையில் வாடினார். அந்த காலங்களில் realistic எனப்படும் ஓருவரை பார்த்து அப்படியே வரைவது.
   என்றைக்கு கேமரா கண்டுபிடிக்க பட்டதோ அதன் பிறகு இவருடைய mmodern art உலகப் புகழ் பெற்றது.

   கலை துறையில் மட்டுமல்ல கிரிகோரி மென்டல் பெயர்த தான் மென்டல் ஆனால் மிகப்பெரிய scintist.மகரந்த சேர்க்கை எனப்படும் genetic ஆராய் ச்சி செய்து 19600 களில் வெளியிட்டார் ஆனால் அந்த கால கட்டத்தில் அவருடைய ஆராய்ச்சி யாருக்கும் புரிய வில்லை. அழர் இறந்து 100 ஆண்டு கள் கழித்து அவர் ஓரு மேதை என்பதை அறிவியல் உலகம் ஏற்று கொண்டது.
   மேலே சொன்னது போல் இந்த அந்த கால கட்டத்தில் இங்கிலாந்து மக்களால் ஏற்கபடாத ஓரு பொக்கிஷம் நார்மன் காமிக்ஸ்.

   Delete
 28. கோயம்புத்தூரில் BOOK FAIR எப்பொழுது சார் ?

  ReplyDelete
  Replies
  1. Venkatesan R : ஜூலை என்று கேள்வி !

   Delete
 29. @ VIJAYAN SIR!

  // க.கி.க." களில் இன்னமும் ஏராளமான புதுக் கதைகள் உள்ளன ஜகத் ! So இந்தத் தொடருக்கு உயிரூட்டுவதாயிருப்பின், புதுசில் தலை நுழைக்கலாம்.//

  உயிரூட்டுங்கள் சார்!! 😊 😊 😊 மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படியே இதுவரை வெளியிட்ட க.கி. கதைகளை அடுத்த ஆண்டு சந்தா D-யிலோ, SUPER 6-லோ வெளியிடுங்களேன்! (முழுவண்ணத்தில் இல்லையென்றாலும் கருப்பு வெள்ளையிலாவது)

  ReplyDelete
  Replies
  1. Jagath Kumar : முயற்சிப்போம் ஜகத் ; இப்போதைக்கு way too early !! அது மட்டுமன்றி, அடுத்தாண்டில் இரத்தப் படலமெனும் அசாத்தியச் சவால் காத்திருக்கும் போது - அதற்கே முன்னுரிமை தந்திட வேண்டி வரும்.

   Maybe 2018 க.கி.க. க்கு வாகாக அமையலாம் !

   Delete
  2. மிக்க மகிழ்ச்சி சார் .

   Delete
 30. மாடஸ்டி பிளைசி

  ReplyDelete
  Replies
  1. அடுத்த மாதம் classic வெளியீடு நம்ம இளவரசி யோடது தான்.

   Delete
  2. எல்லாம் சரிஆனால் மாடஸ்டி முகத்தில்
   கர்சீஃப் கட்ட வேண்டும்


   Delete
  3. ////எல்லாம் சரிஆனால் மாடஸ்டி முகத்தில்
   கர்சீஃப் கட்ட வேண்டும்////

   அதான் ஏற்கனவே ரெண்டு கர்சீஃப் கட்டியிருப்பாங்களே...?! அப்புறம் முகத்திலும் இன்னொன்னு எதுக்குன்றேன்?!! :D

   Delete
 31. இன்றைய காமிக்ஸ் ரசனை நமக்கு உயர்ந்துள்ளது என்றால் அதற்கு வித்திட்டது நமது இளவரசிதான் என்று காமிக்ஸ் உலகமே அறிந்திருந்தாலும் அது எடிட்டர் வாயால் சொல்லியதால் அது அரசு கெஸட்டில் வந்ததற்கு ஒப்பானது.!

  இந்த பதிவு , முப்பது வருட காமிக்ஸ் வரலாற் நினைவுறு சுருக்கத்தை பத்து நிமிடங்கள் கண்முன்னே நிறுத்திய எடிட்டருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.!!!

  ReplyDelete
  Replies
  1. மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : சார்..நன்றி நவிலல் நிச்சயம் தேவையில்லை ! பின்னோக்கிய பயணங்கள் உங்கள் நினைவுகளை மட்டுமன்றி, எனது நினைவலைகளையும் கிளறிடும் ஆற்றல் கொண்டவை தானே ?

   Delete
 32. Hi friends, Check my new post tamilcomicseries.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. @ SSS

   இரத்தப்படலம் பற்றிய நினைவுகூறல்களும், வண்ண முன்னோட்டமும் ஆவலை ஏகத்துக்கும் எகிறச் செய்கின்றன!

   Delete
 33. இரும்புத் தாத்தா - ஆர்ச்சி
  சிலந்தி வலை சின்ன தாத்தா -ஸ்பைடர்
  கௌபாய் மாமா - டெக்ஸ்
  தங்க மச்சான் - டைகர்
  அதிரடி அக்கா - மாடஸ்டி
  மறதி அண்ணன் - X111
  தண்கைது மிதக்கும் தம்பி- பிரின்ஸ்டைர்
  அழகு மருமகள் .ஆரிஸியா
  மாடர்ன் மச்சினிச்சி-பெட்டி
  அடக்கமான மகள்-ஜுலியா
  மாப்பிள்ளை-லார்கோ
  நரைமுடி சித்தப்பா-ஷெல்டன்
  பேரபுள்ள-ஸ்மர்ப்
  கைபுள்ள-பென்னி
  பெரியப்பா -டாக்புல்
  சின்ன தம்பி-சிக்பில்
  பெரிய தம்பி -ரோஜர்
  தங்கச்சீ(லை)-லேடி S
  எல்லோரும் லயன் முத்து குடும்ப உறுப்பிர்

  விடுபட்டர்கள் நம் சொந்தங்கள்.இவர்கள்
  நமக்கு படிகளாகவும் நமக்கிடையே பாலமாகவும் இருப்பார்கள்ண்

  ReplyDelete
  Replies
  1. இனியன் சார்.!


   ஹாஹாஹா.......சூப்பர்.!!!

   Delete
  2. @ ராவணன் இனியன்

   :)))) செம!

   Delete
  3. ravanan iniyan : ரொம்ப காலமாகவே சொல்ல நினைத்ததொரு விஷயமிது :

   இளவரசி நாமத்தை ஜெபிப்பதைத் தாண்டிய இத்தகைய பின்னூட்டங்களையும் அவ்வப்போது இட்டுத் தான் பாருங்களேன் சார் ! சில நேரங்களில் அந்த "முரட்டு பக்தி"யின் வெளிப்பாடுகள் கூட நண்பர்களுள் ஒருவித அலர்ஜியை மௌனமாய் விதைக்கக் காரணமாகிடக் கூடும் தானே ?

   உங்களது ஆதர்ஷ நாயகியை சிலாகிக்க வேண்டாமென்று சொல்லவில்லை ; ஆனால்அ தனை மட்டுமே one point agenda வாக்கிட வேண்டாமே என்று தான் கோருகிறேன் !

   இத்தனை வளமான கற்பனையும், அழகான நடையும், ஆண்டுக்கு ஒரே முறை தலைக்காட்டிடும் நாயகியோடு ஆரம்பமும், முடிவும் கண்டிட வேண்டாமே - ப்ளீஸ் ?

   Delete
  4. ////இத்தனை வளமான கற்பனையும், அழகான நடையும், ஆண்டுக்கு ஒரே முறை தலைக்காட்டிடும் நாயகியோடு ஆரம்பமும், முடிவும் கண்டிட வேண்டாமே - ப்ளீஸ் ? ////

   அழகாச் சொன்னீங்க எடிட்டர் சார்!

   Delete
 34. விஜயன் சார்,
  ரத்த படலம்: நண்பர்கள் யாரேனும் மெகா ஆல்பம் & 3 X 6 என இரண்டையும் ஒரு சேர வாங்குவதாக இருந்தால் அவர்களில் பர்சை கடிக்காமல் இருக்க ஏதாவது discount (தள்ளுபடி) கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும். புத்தகம் வர இன்னும் பல நாட்கள் பல விஷயம்கள் சரிசெய்ய உள்ளது என்பது தெரியும், இதனையும் கொஞ்சம் மனதில் வைத்து திட்டமிட்டால் நன்றாக இருக்கும்.

  குறிப்பு: இது போன்ற கருத்தை நண்பர் Shanmuga Sundaram.S @ தனது ப்ளோகில் தெரிவித்து உள்ளார், அதனை நானும் வழிமொழிகிறேன்!

  ReplyDelete
 35. அராஜகம் அன்லிமிடட் கதையில் tex ஜிலாஸாகவே மாறி விட்டார்.

  ReplyDelete
 36. இரும்பு கை நார்மன்,Mr jet , இரத்த படலம் வெளி வந்த நாட்களை மறக்க முடியுமா?

  ReplyDelete
 37. செத்தவன் பள்ளாத்தாக்கு டெட் மேன் ப் பாஸ் அ அல்லவா

  ReplyDelete
 38. இம்மாத இதழ்கள் ~ எனது தர வரிசை :
  1.அராஜகம் அன்லிமிடெட்- வழக்கம் போல் உயரப் பறக்கிறது இரவு கழுகு.😎😎
  2.CID லாரன்ஸ் - கிளாசிக் லாரன்ஸ் & டேவிட் 👌👍
  3.ஒரு திரை விலகும் நேரம்- முதல் இரண்டு பாகங்கள் அளவுக்கு இல்லை 🙁 disappointing climax. தயவு செய்து இது போன்ற கதைகளை Content Rating உடன் வெளியிடுங்கள். ~SPOILER ALERT~ I guess human sacrifice & taking the heart of the dead in hands are not for all age groups.
  4.என் ராஜ்யமே ஒரு கேரட்டுக்கு - என்ன சொல்வதென்றே தெரியவில்லை..one of the weakest translations in our comics journey. I know it is very difficult to bring in the wordplay of the original in tamil..but this was way below average in my opinion 😞😞😞

  ReplyDelete
  Replies
  1. Vallavaraiyan Vandhiyathevan : சார்...ரசனை சார்ந்த விஷயங்களில் எனக்கு ஓ.கே.வாகிடுவது உங்களுக்கும் அவ்விதமே இருத்தல் அவசியமாகாது & vice versa என்பதில் இரகசியமேது ?

   மந்திரியார் மொழிபெயர்ப்பினில் குறைகள் தென்படின் - அவற்றை செப்பனிட நிச்சயம் ஆர்வமாக இருப்பேன் ! இதன் ஆங்கிலப் பதிப்பு நம்மிடமே உள்ளதே ; ஆன்லைன் ஸ்டோரில் வாங்கிடலாம் ! அதனைக் கையில் வைத்துக் கொண்டு, கொண்டு, மேம்படுத்தப்பட்டதொரு மொழியாக்க முயற்சியினை அனுப்பிடுங்களேன் ? அது அழகாயிருப்பின், சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் சிற்சிறு black & white இணைப்புகளாக்கிடலாமே ?

   Delete
  2. //...ரசனை சார்ந்த விஷயங்களில் எனக்கு ஓ.கே.வாகிடுவது உங்களுக்கும் அவ்விதமே இருத்தல் அவசியமாகாது & vice versa என்பதில் இரகசியமேது ?//

   +1
   //
   மந்திரியார் மொழிபெயர்ப்பினில் குறைகள் தென்படின் - அவற்றை செப்பனிட நிச்சயம் ஆர்வமாக இருப்பேன் ! இதன் ஆங்கிலப் பதிப்பு நம்மிடமே உள்ளதே ; ஆன்லைன் ஸ்டோரில் வாங்கிடலாம் ! அதனைக் கையில் வைத்துக் கொண்டு, கொண்டு, மேம்படுத்தப்பட்டதொரு மொழியாக்க முயற்சியினை அனுப்பிடுங்களேன் ? அது அழகாயிருப்பின், சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் சிற்சிறு black & white இணைப்புகளாக்கிடலாமே ? //

   சார்...நான் உங்களை விட மேம்பட்ட மொழிபெயர்ப்பு செய்வதா? என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலேயே? 🤔🤔 😛 CBSE மாணவனான நான் தமிழ் படிக்க கற்று கொண்டதே நமது இதழ்களில் உங்கள் எழுத்துக்களை படித்துத் தான்..☺ Though I have read the original long back, I wasn't comparing the original with our version.I just felt that your usual 'Magic' was missing while reading என் ராஜ்யமே. But, as you said tastes and opinions are bound to differ ☺

   பி.கு: Please don't address me as Sir..Sir...😝நானெல்லாம் ஜூனியர் எடிட்டர் செட்டாக்கும்..😎😛

   Delete
 39. மதிய வணக்கம். நண்பர்களே!

  ReplyDelete
 40. ஒரு பொங்கல் சமயத்தில் வெளியூரில் இருந்து வந்த எனது அண்ணன் மனித எரிமலை வாங்கி வந்திருந்து பரிசாக கொடுத்தார் Time travel செய்தது போல இருந்தது இவ்வார நினைவுகள்!

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : சந்தோஷமாக உள்ளது - ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள இந்தச் சிற்சிறு flashback-களைக் கேட்கும் போது !!

   Delete
 41. அந்த சிறுமி புத்தகத்தை புரட்ட அம்மா
  ஆர்வமுடன் பார்க்க
  காமிக்ஸ் வாழ்கிறது
  மிக்க மகிழ்ச்சி
  நண்பர்கள் அனைவருக்கும்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ganesh kv : ரொம்பவே அழகானதொரு தருணத்தை வெளிப்படுத்திய போட்டோ !

   Delete
 42. விஜயன் சார் மலரும் நினைவுகளை
  தட்டி எழுப்பும் உங்களுக்கு நன்றி

  ReplyDelete
 43. விஜயன் சார்
  ஆர்ச்சியடம் மட்டும் இல்லை உங்களிடமும் உள்ளது அந்த கோட்டை

  ReplyDelete
  Replies
  1. ganesh kv : சார்...நினைவுப் பேழைகள் உங்களிடம் ! அவற்றின் திறவுகோல் மட்டுமே என்னிடம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

   Delete
 44. சார் அருமையான பதிவு ...அட்டகாச நினைவு கோரல்கள்....இரும்பு மனிதன் வாயிலாக தொடங்கிய பயணம்... பிற நண்பரிடம் பெற்ற விரைவில் வருது...பாதாள போராட்டம் விளம்பரத்தில் தென்பட்ட பல தலை நாய்..டயனோசர் கால விலங்கு....கண்டு திகைப்பாய் தேட நண்பனிடம் பெற்று அங்கேயே அமர்ந்து துள்ளாட்டம் போட்டு படித்தது இன்னும் நினைவில்....பின்னர் வெகு காலம் கழித்து கிடைத்த ....சில பக்கங்களின்றி கிடைத்த மைல் கல் இதழான பழி வாங்கும் பொம்மை இதழ் இன்றய வருகிறது விளம்பரம் கண்டும் அதே சந்தோசம். இந்த இதழ் குறித்த சிறப்புகளை தயவு செய்து முதல் பக்கத்தில் ஹாட் லைனில் எழுதினால் நண்பர்களுடன் சந்தோசம் மிகுமே...முதல் ஸ்பைடர் குறித்து எழுதியத போல....செய்வீர்களா....சார் பனி மண்டல கோட்டை ..மழைக்காலத்தில் பக்கத்து வீட்டில் ஒளித்து வைத்து படிக்கும் போது விழுந்த மழைத்துளி வட்டங்கள் கூட பசுமை மாறாமல் நினைவில்...இ..படலம் முதல் இதழ் விருப்பமில்லாது தொடர்ந்தேன் என்றே நினைக்கிறேன்......பின் பாகங்கள படித்த பின் ஸ்டீவின் கதை அதிலிருக்குமோ என பர பவென கோழி போ ல இறைத்து தேடினனே.....பின்னர் இப்பதான் ஸ்டீவை கண்டன்......
  நினைவலைகள் நாளை கொந்தளிக்கும்..

  ReplyDelete
 45. சிங்கத்தின் சிறு வயதில் படித்தது போல சிறப்பாக உணர்வு ஏற்றப்படுத்தியது இந்த பதிவு .

  ReplyDelete
 46. Dear Vijayan,

  சென்ற வாரம்தான் டுராங்கோ கிடைத்தது, இப்பொழுது தான் முடித்தேன். ஒரே தமிழ் வார்த்தையில் சொல்வதானால் 'அட்டகாசம்'...ஒரே ஆங்கில வார்த்தையில் சொல்வதானால் 'awesome'. இதழின் மொழிபெயர்ப்பிற்கும், வடிவமைப்பிற்கும் நீங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தைக்கு நூறுக்கு முன்னூறு. இதழின் அட்டை மற்றும் தரம் உங்களூரிலிருந்து வரும் Nightingale டைரிகளின் தரத்தை ஒத்திருக்கிறது. இவரின் மற்ற பாகங்களை படிக்க அடுத்த ஜனவரி வரை காத்திருக்க வேண்டுமா....Greatest தளபதியை சென்னைக்கு வரசொல்லிவிட்டு latest டுராங்கோவை, இந்த வருடமே ஈரோட்டிற்கு இவரை வரவழைக்க முடியுமா.

  பின் குறிப்பு: நானும் தளபதி ரசிகரே.

  ReplyDelete
  Replies
  1. ///தளபதியை சென்னைக்கு வரசொல்லிவிட்டு latest டுராங்கோவை, இந்த வருடமே ஈரோட்டிற்கு இவரை வரவழைக்க முடியுமா. ///

   இதுகூட நல்ல ஐடியாவாத்தான் இருக்கு! எடிட்டர் சார் மன்சு வச்சார்னா எல்லாம் நல்லபடியா முடியும்!

   Delete
  2. மேற்கிலிருந்து ம. ராஜவேல். & Erode VIJAY : ட்யுராங்கோவை ஈரோட்டுக்குக் கூட்டி வருவதில் எனக்கு நிச்சயம் சிரமங்கள் இல்லை ; ஆனால் சந்தாவுக்கு வெளியிலான extra இதழாகிடும் போது - "முன்பதிவுகளுக்கு மட்டுமே" என்றாகி விடுமல்லவா ?

   தற்சமயம் ரெகுலர் சந்தாவில் இடம்பிடித்திருப்பதன் மூலம் அனைவரையும் எட்டிப் பிடித்து விட்டவரின் அடுத்த பாகத்தை limited edition ஆக உருமாற்றுவது சரியாக இருக்காதே ?

   Delete
  3. Dear Vijayan Sir! இந்தமுறை ஈரோட்டுக்கு தளபதியே வரட்டும். அடுத்த வருட சந்தாவில் ட்யுராங்கோவுக்கு இரண்டு தடவை வாய்ப்பு கொடுங்கள். 4+4 கதைகளாக 2 முறை ட்யுராங்கோ வரட்டும்.

   Delete
 47. ஐ யாம் ரீடிங் 'அராஜகம் அன்லிமிடெட்'... மொன மொன மொன...

  தல... நீ கலக்கு தல! இன்னா ஸ்டையிலு!!!

  மொன... மொன.. மொன..

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : 'தல' - தறுதலையாகப் பார்த்தாலுமே ஸ்டைல் தான் !!

   Delete
 48. Tirupur Book Fair :

  வந்தார்கள்…
  சென்றார்கள்… :(

  ReplyDelete
 49. நண்பர் கலீல் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 50. விஜயன் சார் பனி மன்டல கோட்டை
  வண்ண மறுபதிப்பு எப்போது? ??????

  ReplyDelete
 51. திருப்பூர் திருவிழா :-

  அங்கிருந்த அரைநாளில் அதிகம் விற்பனையானவர் மாமா மாயாவிதான் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளமுடிந்தது.

  சார் ..! லார்கோ சார். .! சமகாலத்து பிஸினஸ்மேனின் சாகசங்கள் சார். .!
  சார். .! ஷெல்டன் சார். .! செம்ம விறுவிறுப்பான கதைகள் சார். .!
  டைகர் சார். ., ட்யூராங்கோ சார்.. னு சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு, மாயாவி கதைகள் இவ்வளவுதான் இருக்கா? லாரன்ஸ் டேவிட் எங்கே, ? அடடே ஜானி நீரோவும் இருக்கா என்று பழசையே வாஞ்சையோடு அள்ளிக்கொண்டு, தம்பி! ரொம்ப வருசம் கழிச்சு இப்பதான் காமிக்ஸை திரும்ப பார்க்கிறோம். நீங்க சொல்ற புது ஆளுகளையெல்லாம் பொறவு பாத்துக்குவோம்னு சொல்லிவிட்டு, மறுதிப்புகளோடு கிளம்பினர் ஒரு சீனியர் தம்பதியினர்.

  இன்னொருவரோ, ப்ரின்ஸ் ப்ரின்ஸ் மேலும் ப்ரின்ஸ் என்றார். பனிமண்டலக்கோட்டை இல்லையா? பார்னே குதிக்கிறப்போ பாறை உடைஞ்சிபோகுமே அது என்ன கதை ,அது இல்லையாவென்று ப்ரின்ஸை மட்டுமே விசாரித்து வாங்கிச் சென்றார்.

  இல்லத்தரசிகளும், சிறுவர்சிறுமியரும், நடுத்தரவயதினரும் அடுத்தடுத்து படையெடுத்ததில் டெக்ஸ், லக்கி இருவரும் மாயாவியுடன் போட்டியிடத் தொடங்கிவிட்டார்கள்.

  சுட்டிகளுடன் வந்தவர்களுக்கு ஸ்மர்ஃப், பென்னி யை சிபாரிசு செய்துவைத்தோம்.
  ஓரளவு வளர்ந்த குழந்தைகள் (என் வயதுடையோர்) தாமாகவே லக்கியை தழுவிக்கொண்டனர். அந்தவகையில் கார்ட்டூன்களும் விற்பனைப் போட்டியில் தாங்களும் இருப்பதை உறுதி செய்தன.
  ஆனாலும் மாயாவி மாமா விற்பனை வேகத்தில், மூணு ஊருக்கு அந்தண்டை ஓடிக்கொண்டிருந்தார்..!!

  மணி இரண்டைத் தொடவும் "விளக்கு வைக்கிறதுக்குள்ள வீட்டுக்கு வந்திடுவேன்மா " என்ற கன்டிசன் பெயிலில் வந்தது மண்டையில் உரைக்கவே நண்பர்களுடன் பெட்டியைக் கட்டிக்கொண்டு புறப்பவேண்டியதாகிவிட்டது. எனவே மதியத்துக்கு பின் வந்த பல நண்பர்களை சந்தித்து அலவலாகும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மன்னிக்கவும் நண்பர்களே.! சேர்த்து வைத்து ஈரோட்டில் கலக்கிவிடுவோம். .!! __/|\_/|\_/|\__

  ReplyDelete
  Replies
  1. ஹெ...ஹெ.ஹெ.ஹெ...ஹா.. ஹா...ஓ ஹ ..ஹா..ஹா...


   யாருக்கோ சிக்பில் சிபாரிசு செய்து வாங்கி கட்டி கொண்டு, மண்டை வீங்கிய டாக்புல் கணக்கா ஆயிட்ட போல.
   அத்த நேரடியாக சொல்லும் ஓய்.
   சும்மா சுத்தி வளச்சி லார்கோ, செல்டன்னு ஏன் வண்டி ஓட்டற...

   மாயாவி, டெக்ஸ், ச்பைடரு, இளவரிசினு பழைய ஞாபகத்தை கிளறிவிட்டு பிறகு சிக்பில் டிஜிட்டல் காபி அவியல் டீன்னு சொல்லியிருந்தீனா இந்த மாதிரி ஆகி இருக்காது இல்ல...

   பார்த்து சூதானமா இரும் மாமா

   Delete
  2. ///ஆனாலும் மாயாவி மாமா விற்பனை வேகத்தில், மூணு ஊருக்கு அந்தண்டை ஓடிக்கொண்டிருந்தார்..!///

   :D

   Delete
  3. @ all : /////ஆனாலும் மாயாவி மாமா விற்பனை வேகத்தில், மூணு ஊருக்கு அந்தண்டை ஓடிக்கொண்டிருந்தார்..!/////

   கொட்டாவிதான் விடத் தோன்றுகிறது - ஒவ்வொரு புத்தக விழாவினிலும் மாயாவி மாமா புராணங்கள் கேட்கும் பொழுது !! அடுத்தாண்டில் ஒரு சிங்கிள் ஸ்டால் கூடுதலாய் எடுத்து அதனில் மாயாவிகாருவை மட்டும் அடுக்கி வைத்தால் என்ன என்றொரு மகாசிந்தனை கூடத் தோன்றுகிறது !!

   Delete
 52. புரட்சி தலைவன் ஆர்ச்சி பற்றிய பதிவு அருமை சார், என்னிடம் உள்ள இரண்டு புத்தகங்களையுமே உடனே புரட்ட தோன்றியது. வெளியூரில் இருப்பதால் முடியவில்லை. சார், அராஜகம் அன்லிமிடெட் தலைப்பு இப்ப ரொம்ப பொருத்தமா இருக்கு சார்

  ReplyDelete
 53. This month books fair only. But all different stories. But Muthu reprint CID Lawrence was a excellent one. last reprint of this book was very bad, but this book was very excellent print and covers are superb. In tex willer book tex viller six pack very excellent.i am expecting next month stories.

  ReplyDelete
 54. *என் ராஜ்யமே ஒரு கேரட்டுக்கு*


  மதியில்லா மந்திரி குறுகிய பக்க கதைகளே பட்டைய கிளப்பும் எனில் சிறிது நீளமான முதல் சாகஸமான எ.ரா.கேரட்டுக்கு மதிப்பெண் இன்னும் கூடுமென நினைத்தேன் ..ஆனால் சுத்தரியின் சொப்பன தினமும் ..பறக்கும் பூச்சி படலமும் அதனை முந்தி சென்று விட்டது ஆச்சர்யமே...முதல் சாகஸத்தில் மந்திரியின் மதியூகத்திற்கு வேலை இல்லாததால் இந்த முடிவு ( எனக்கு) என்றே நினைக்க தோன்றுகிறது...

  மதியில்லா மந்திரியின் எனது மதிப்பெண்

  *நன்று*

  ReplyDelete
 55. *அராஜகம் அன்லிமிடெட்*


  ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் பட்டாசு..ஒரு நீதி காவலனாக டெக்ஸின் ஆக்‌ஷனும்..அதிரடி வசனங்களும் ஏற்கனவே அறிமுகமானது தான் ..ஆனால் இம்முறை வில்லன் கோஷ்டியில் வில்லனாக இணைந்த பிறகும் அதே தெனாவட்டும் ..அதிரடி வசனங்களும் அக்மார்க் ரஜினி ஸ்டைல் போல...எந்த இடத்தில் இருந்தாலும் சிங்கம் சிங்கம தான் என்பதை டெக்ஸ் நிருபித்து கொண்டே இருக்கிறார் .அதே சமயம் வில்லனின் ஆட்கள் டெக்ஸை' பொட்டை கண்ணன் ' என அழைக்கும் பொழுது புரிந்து கொள்ள முடிந்தது.. ஆனால் என்னதான் மாறுவேடத்தில் இருந்தாலும் டெக்ஸின் தோழரான கார்ஸனே ஆரம்பத்தில் பொட்டை கண்ணன் என டைகரிடம் உரையாடும் பொழுது கோபமும் எழுந்தது.. கார்ஸன் ஒத்தை கண்ணன் என்று அழைத்தால் கூட பரவாயில்லை ..இப்படி அழைக்கிறாரே ..படித்து முடித்தவுடன் ஒரு கண்டன கடிதம் கண்டிப்பாக எழுத வேண்டும் என படிக்கும் பொழுதே நினைத்தேன் ..நல்லவேளை பிறகு நான் மனதினுள் நினைத்தவாறே குறிப்பிடும் பொழுது தான் நிம்மதி ஆயிற்று.டெக்ஸின் எதிரியாக தோன்றி பின் தோழனாக மாறும் ஜீவானின் கதாபாத்திரம் அருமை..க்ளைமேக்ஸில் ஜூவானுக்கு சுபமான முடிவு வராது என்றே முன்கூட்டியே அறிய முடிந்தாலும் அது உண்மையாகும் பொழுது கொஞ்சம் மனது வலிக்க தான் செய்தது..

  ஒரு பரபரவென பறக்கும் எகஸ்பிரஸ் போல இந்த அராஜகம் அன்லிமிட்டடும் பறக்கிறது.வழக்கம் போல டெக்ஸ் இதழை படித்து முடித்தவுடன் ஏற்படும் ஒரு வித மகிழ்ச்சியும் ...இனி அடுத்த ஒத்தை கண்ணன் சாரி அடுத்த டெக்ஸ் எப்பொழுது என்ற எண்ணமும் ஒரு சேர எழுந்தன....


  அராஜகம் அன்லிமிடெட் எனது மதிப்பெண்


  *சூப்பர்*

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் ஒரு வில்லாதி வில்லன்.

   Delete
  2. //கார்ஸன் ஒத்தை கண்ணன் என்று அழைத்தால் கூட பரவாயில்லை ..இப்படி அழைக்கிறாரே ..படித்து முடித்தவுடன் ஒரு கண்டன கடிதம் கண்டிப்பாக எழுத வேண்டும் என படிக்கும் பொழுதே நினைத்தேன்//

   மலையாள பகவதி !! காப்பாற்றினாய் தாயே !!!

   Delete
 56. ஆளுநர் அவர்களுக்கு...ச்சே...

  அன்புநண்பர்களுக்கு...சொந்தகாரணங்களுக்காக (?) காமிக்ஸ் பதிவுகளுக்கு அறிவித்த இடைக்காலவிடுமுறையை நிறைவு செய்துகொண்டு பணிக்கு திரும்புகிறேன்..!

  மாத்தியோசி-18

  ReplyDelete
  Replies
  1. அந்த அடர் நீலநிற எழுத்துக்களை மொபைல் திரையில் படிக்க ரொம்பவே சிரமப்பட்டேன் மாயாவி அவர்களே! ( உடனே 'கஷ்டப்பட்டு படிச்சதுதான் மனசுல நிக்கும்'னு எதையாவது சொல்லி என்னை செவுத்துல முட்டிக்க வைக்காதீங்க!) ;)

   Delete
 57. Spoiler Alert

  (இது ஒரு சிறு சுய சேந்தம்பட்டி புராணம்)


  நண்பர்களுடனான ஒரு சந்திப்பு ஒரு புத்துணர்ச்சித் திறவுகோல் ( சேந்தம்பட்டி குழுவுடன் என்பது மேலும் ஒரு படி ) என்பது மீண்டும் நேற்று நிரூபிக்கப்பட்டது

  சென்னை புத்தக திருவிழாவிற்கு போக யாரெல்லாம் வருகிறீர்கள் என சேந்தம்பட்டி குழுவில் ஆரம்பித்து வைத்தது நான் தான் தவிர்க்க இயலா காரணங்களால் வர இயலவில்லை

  ஆகையால் அதன் பின் பொங்கல் தினமன்று நாகு ஜி யுடனான சந்திப்பின் போது விஜயன் சாரிடம் திருப்பூர் புத்தக திருவிழாவில் பங்கேற்பு உண்டா என கேட்டு உறுதி செய்யப்பட்டு 4 அல்லது 5 தேதிகளில் நண்பர்களை வரச்சொல்லலாம் என முடிவு எடுத்தோம்

  வழக்கமாக எனது மும்பைய் பயணம் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரம் தான் செல்லுவது வழக்கம் இம்முறை வியாழன் அன்று அழைத்து திங்கள்கிழமை வரச்சொன்னார்கள்

  அடுத்த வாரமும் சனி மற்றும் ஞாயிறு பயண புரோகிராம் இருப்பதால் இந்தவாரமே நண்பர்களுடன் புத்தக திருவிழாவிற்கு சென்றால் நன்றாக இருக்குமென தோன்றியது

  பயண டிக்கெட் புக்கிங்கில் ஏற்பட்ட குளறுபடியால் நேற்றைய சந்திப்பு மறுபடியும் கேள்விக்குறியானது

  இரண்டு புத்தக திருவிழாவிற்கும் போகலாம் என ஆரம்பித்தது நான்தான் இறுதியில் நானே அங்கு கலந்துகொள்ள இயலா சூழ்நிலை

  நண்பர்களிடம் ஆலோசித்த பொழுது அவர்கள் அனைவரது ஒட்டு மொத்த குரலும் உங்களது கடமைக்கு முதலிடம் கொடுங்கள் நம்மளுடைய சந்திப்பை மற்றொரு முறை வைத்துக்கொள்ளலாம் என

  இப்படி ஒரு நண்பர்கள் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  இதற்கான ஆணிவேராக இருப்பது காமிக்ஸ் எனும் ஒரு மந்திரச்சொல்லே என்றால் மிகையாகாது

  ஞாயிறன்று காலை 11 மணிக்கு திருப்பூர் வருவதாக சேந்தம்பட்டி பெருந்தலைகள் சம்மதிக்க ( ஒரு சில தவிர்க்க இயலா காரணங்களால் மாயாவி ஜி, டெக்ஸ் விஜய் ஜி, சோமு ஜி & மியாவி ஜி ஆகியோர் வர இயலவில்லை என தெரியப்படுத்தினார்கள் இதற்கு எனது ஒரு குளறுபடியும் காரணம் )

  வழக்கம்போல கரூரிலிருந்து சரவணணார் 10:45 க்கே வந்து சேர்ந்தார்
  சேலத்திலிருந்து நண்பர்கள் திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு 10:45 மணிக்கு வந்து சேர்ந்தனர்
  நான் மற்றும் ரம்மி ஜி சென்று அவர்களை அழைத்து புத்தக திருவிழாவிற்கு வந்து சேர 11:30 மணியாகிவிட்டது

  பின்னர் வழக்கம்போல அனைவரும் களத்தில் இறங்கி பலத்தை காண்பித்தனர்

  புத்தக திருவிழாவில் நண்பர் ரவி கண்ணன் அவர்களுடைய அனுபவம் மிக்க வித்தியாசமனது அதனை அவரே அவருடைய பாணியில் சொன்னால் சிறப்பாக இருக்கும்

  இப்படியாக மதியம் 2 மணிவரை நேரம்போனதே தெரியவில்லை


  இந்த சந்திப்பின் மூலம் கிடைக்கும் அந்த புத்துணர்வானது எனது பயணத்திற்கு உறுதுணையாக இருக்குமென நம்புகிறேன்

  மிக்க நன்றி நண்பர்களே மற்றும் இதற்கான பாலமாக திகழ்ந்து வரும் விஜயன் சார் அவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்
  நன்றி _/\_
  .

  ReplyDelete
  Replies
  1. ///இதற்கான ஆணிவேராக இருப்பது காமிக்ஸ் எனும் ஒரு மந்திரச்சொல்லே என்றால் மிகையாகாது///...+1000000.

   Delete
  2. வாழ்த்துக்கள் சிபிஜீ ...:-)

   Delete
  3. ///புத்தக திருவிழாவில் நண்பர் ரவி கண்ணன் அவர்களுடைய அனுபவம் மிக்க வித்தியாசமனது அதனை அவரே அவருடைய பாணியில் சொன்னால் சிறப்பாக இருக்கும்.///

   ஒரு மனுசன் பல்பு வாங்குனதை எத்தனை முறைதான் கேட்டு சிரிப்பிங்க!!?? :-)

   Delete
  4. @ சிபி

   இவ்வளவு நீநீநீளப் பின்னூட்டமே சொல்கிறதே உங்கள் உற்சாகத்தின் அளவுகோல்களை!!

   இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!

   Delete
  5. @ FRIENDS : ஈரோட்டில் போட்டுத் தாக்கி விடுவோம் guys !

   Delete
 58. ம.ம வின் உறையும் கிளைமாக்ஸ் .........
  நடுநீசி கள்வனை ஒத்தது போல உள்ளது .........இல்ல ...?
  அஸ்டெக் சூரிய தகடு கொண்டு குருடாக்கும் ஹெலிகாப்டர் ......
  ஞாபகம் வருதே ........
  ஞாபகம் வருதே ..........

  ReplyDelete
 59. நேற்றைய திருப்பூர் புத்தகவிழா எனக்கு சிறப்பாக அமைந்தது. ஏதேதோ காரணங்களால் நண்பர்களில் சிலர் வரமுடியாமல் போகவே, சிபிஜி, ரம்மிஜி யின் முரட்டுத்தனமான அன்புக்கு மறுப்பு சொல்ல மனமில்லாததால் நாங்கள் சிலர் மட்டும் கிளம்பினோம்.
  வழியிலேயே வந்திருந்து வரவேற்று அழைத்துச்சென்றனர் சிபிஜியும் ரம்மிஜியும். .
  அரங்கினுள் நுழைந்து நமது ஸ்டாலுக்கு சென்றபோது, சிறிது சிறிதாக பார்வையாளர்கள் வரத்தொடங்கினார்கள்.
  அவரவர்களுக்கு பிடித்தவையோடு சேர்த்து புதிய கதைகளையும் சிபாரிசு செய்தோம்.
  எல்லா வயதிலும் காமிக்ஸ் ரசிகர்களை ஸ்டாலில் சந்திக்க முடிந்தது.
  கண்ணன் ஜி யிடம் ஒருவர் லார்கோ வின்ச்சைப் பற்றி விசாரிக்க, அந்த தொடரைப்பற்றி சொற்பொழிவாற்றினார். அந்த நண்பர் அங்கேயே நின்று ஒருமணி நேரம் லார்கோ கதைகளை புரட்டத்தொடங்கவும், கண்ணன் ஜி என் காதோரமாய் "என்ன யுவா!, நாலு வருசமா வந்துட்டு இருக்குற மொத்தத் தொடரையும் இவர் இங்கேயே படித்து முடித்துவிடுவார் போலிருக்கே " என்றார். நான் சும்மா இருங்க ஜி என்று அதட்டவும், அந்த நண்பர் மீண்டும் சந்தேகம் கேட்க அவரிடம் சென்றுவிட்டார். ஆனாலும் தவறாமல் அனைவரிடமும் கார்ட்டூன் கதைகளைப்பற்றி எடுத்துச்சொல்ல தவறவேயில்லை கண்ணன் ஜி.

  சிபிஜி யும் தன் பங்கிற்கு வந்தவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைத்து புத்தகங்களை சிபாரிசு செய்தபடியே இருந்தார். கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த வண்ணம் இருந்தது.
  ரவி ஜி, ரம்மிஜி, சரவணன் ஜி மற்றும் சுசீ ஜியும் பார்வையாளர்களுக்கு உதவிக்கொண்டு இருந்தார்கள்.

  லஞ்சுக்கு சிபிஜி வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் அவரது இல்லத்துக்கு சென்றோம். சிபிஜி வீட்டாரும் ரம்மிஜி வீட்டாரும், உறவினர் போல் மிகவும் அன்புடன் கவனித்தார்கள். காமிக்ஸ் என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல என்று புரிந்தது.
  நன்றி ஜீஸ்.

  அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் யுவா..! அடிக்கடி கமெண்ட் போட்டிங்கன்னா நல்லா இருக்கும். எங்க கேக்குறிங்க!?!

   Delete
  2. ///காமிக்ஸ் என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல என்று புரிந்தது.
   நன்றி ஜீஸ்.///

   +1

   Delete
  3. @ யுவா

   நல்ல்ல்லா எழுதறீங்க...
   எழுத்து நடையும் நல்லாருக்கு...
   எழுத்துப் பிழை கூட இல்லை...

   அப்புறம் இதே மாதிரி ஒவ்வொரு பதிவிலும் ஒன்னுரெண்டு கமெண்ட்டு போட்டாத்தான் என்னவாம்? கேக்குறேன்!

   Delete
 60. நேற்றைய திருப்பூர் விழா ஒரு சிறு தொகுப்பு :
  காலையில் கொண்டடாத்துடன் கிளம்பிய சேந்தம்பட்டி குழு,உற்சாகமாக திருப்பூரை சென்று அடைந்தது,நண்பர்கள் ரம்மி ஜி,சிபியின் உதவியுடன் புத்தக விழா அரங்கை அடைந்தோம்,மற்ற ஸ்டால்களை விட நமது ஸ்டால் கொஞ்சம் களைகட்டியே இருந்தது,அது நம் நண்பர்களின் வருகையால் கூட இருக்கலாம்,இதில் ஆச்சிரியமான விஷயம் எதுவெனில் வருபர்களில் பெரும்பாலனோர் இரும்புக் கை மாயாவி இதழ்களில் ஏதாவது ஒன்றையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்தனர்,
  குணா படத்தில் கமல்ஹாசன் சொல்லும் "அது என்ன மாயமோ,மந்திரமோ தெரியல" எனும் வசனம்தான் நினைவில் ஓடியது,இன்னொரு நண்பர் எனது மகன் தமிழே படிக்க மாட்டேன் என்கிறான் அதனால் காமிக்ஸ் படிக்க வெச்சாவது அவனோட தமிழ் பற்றை வளர்க்க வேண்டும் எனவே எந்த இதழ்களை படிக்கலாம் என்று ஆலோசனை கேட்டு கொண்டிருந்தார் நமது நண்பர்களும் அவர்களால் இயன்ற உதவிகளையும்,ஆலோசனைகளையும் கூறிக் கொண்டிருந்தனர்,(இடையே நண்பர்களும் பிடித்த இதழ்களையும் வாங்கிக் கொண்டோம் என்பது தனி விஷயம்)பின்னர் நமது புகைப்படம் எடுக்கும் படலத்தையும் முடித்து விட்டு புத்தக அரங்குகளை சுற்றிப் பார்த்து கொண்டே மற்ற இதழ்களை வாங்கும் படலத்தை முடிக்கும்போது நேரம் போய் கொண்டிருப்பது உரைத்தது,உடன் நண்பர்கள் சிபி,ரம்மி ஜியின் அன்பு அழைப்புகளை ஏற்று சிபி அவர்களின் இல்லம் சென்று அவர்களின் அற்புதமான விருந்தோம்பலையும்,அன்பையும் ஏற்றோம்.
  இப்படியாக நேற்றைய நாள் ஒரு சிறந்த நாளாக அமைந்தது,காமிக்ஸ் மூலம் கிடைத்த நட்புகள் மிகச்சிறந்த ஒரு புள்ளியில் இணைத்திருக்கிறோம்,இது நமது நட்பு எனும் மகுடத்தில் பதிக்கப்பட்ட மற்றுமொரு வைரக்கல் எனில் அது மிகையல்ல.மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 61. ****** அராஜகம் அன்லிமிடெட் ******

  தலைப்பு அப்படியிருக்கலாம்தான்; ஆனால் அதற்காக இப்படியா?!! முதல்பக்க முதல் பேனலிலேயே 'டுமீல் டுமீல்'லுடன் ஆரம்பிக்கிறது கதை! கதை'ன்னும் சொல்லலாம்...இல்லேன்னா, 'காட்டாற்று வெள்ளம்'னும் சொல்லலாம் - ரெண்டும் ஒன்னுதான்!

  'ரவுடிகளின் ராஜ்ஜியத்தில் மாறுவேடத்தில் ஊடுருவும் ஹீரோ, அவர்களை துவாம்சம் செய்கிறான்' என்ற அதரபழசான ஒற்றைவரிதான் கதை! ஆனால் அதை கடைசிவரை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கும் விதத்தில் பட்டாசு கிளப்பியிருக்கிறார்கள் படைப்பாளிகள்!

  தாடி வைத்த பொட்டைக்கண்ணனாக ஜிலாஸ் என்ற வேடத்தில் வந்து அட்ராசிட்டி செய்திருக்கும் தல - ச்சும்மா மிரட்டியிருக்கிறார்! தன்னை ஒரு 'கட்டுக்குள் அடங்கா காவாலி'யாகக் காட்டிக்கொள்ள தெனாவட்டாய் ரவுடிகளின் நடுவே அவர் நிகழ்த்தும் சலம்பல்கள் எல்லாம் அக்மார்க் டெக்ஸ் ஹீரோயிஸம்! ரவுடிகளிடம் அவர்பேசும் அனல் தெறிக்கும் வசனங்களைப் படிக்கும்போதெல்லாம் மனசுக்குள் நம்மையறியாமல் ஒரு உற்சாக விசில் சத்தம் உய் உய் என்று பிளிறுவதை உணரமுடிகிறது!

  மெயின் வில்லனாக வரும் லிங்கோ'வைக்கூட பயமுறுத்தும் ஒரு வழக்கமான வில்லனைப் போல காட்டாமல் ரொம்பவே எதார்த்தமாகச் சிந்திக்கும் ஒரு சாதாரண ரவுடியாக(!) காட்டியிருப்பதிலும் வித்தியாசமே! ( சிலருக்கு இதுவொரு குறையாகத் தோன்றிடும் வாய்ப்புகளும் உண்டுதான்!)

  டெக்ஸின் ரவுடி-நண்பனாக வரும் ஓர்டெகாவின் முடிவு பரிதாபம்! அப்படியொரு முடிவு எனக்குப் பிடிக்கவில்லை! படைப்பாளிகள் அவனை 'பிழைத்துப்போ' என விட்டிருக்கலாம் ( உங்க சம்மதத்தோட படைப்பாளிகளை ஒருதபா 'கிராதகர்கள்' என்று திட்டிக்கலாமா எடிட்டர் சார்?)

  குறைகள் :

  * முதல் பக்கத்திலிருந்து கடேஏஏசி பக்கம்வரை கடுவன்கள் மட்டுமே சகட்டுமேனிக்குக் காட்டப்பட்டிருக்கின்றனர்! தமிழ்படங்களின் அவுட்டோர் செட் காட்சிகளின் பின்னணியில் சில துணைநடிகைகளை பேசிக்கொண்டே நடக்கவிட்டிருப்பார்களே... அதுமாதிரியாவது ஒன்றிரண்டு யுவதிகளைக் காட்டியிருக்கலாம்! ஹூம்...!
  * வழக்கமான டுமீல் டுமீல்களுடன் எந்தவொரு திருப்பமும் இல்லாமல் பொசுக்கொன்று முடியும் க்ளைமாக்ஸ்!
  * உள்ளே தலயின் ரகளைகளைப் படித்தபடியே அப்படியே அட்டைப்படத்தில் வரையப்பட்டிருக்கும் தலயின் முகத்தைப் பார்த்தால் 'குபுக்'கென்று சிரிப்பு வந்துவிடுகிறது! உள்ளே - தெனாவெட்டாய், ரகளையாய்! வெளியே அட்டையில் - சோகமாய், பாவமாய், கர்ச்சீஃபை விழுங்கியபடி! ஹா ஹா ஹா! முடியல! :))) 'வித்தியாசமாய் காட்டுகிறோமாக்கும்' என்ற முனைப்பில் இப்படி கதைக்குச் சம்பந்தமேயில்லாமல் தல'யை அரை நிர்வாணமாக்கியிருப்பதைவிட, தாடி-பொட்டைக்கண் சகிதம் ஒரு போஸ் கொடுக்கவிட்டிருந்தால் பொருத்தமாக cum வித்தியாசமாய் இருந்திருக்கும் எ.எ.க! ( நேர்மையான விமர்சனம்னா கொஞ்சம் அப்படிஇப்படி தான் இருக்கும் - கொஞ்சம் பொறுத்துக்கோங்க எடிட்டர் சார்!)

  verdict : தல ரசிகர்களுக்கான முழுச்சாப்பாடு!

  என்னுடைய ரேட்டிங் : 9.2/10

  ReplyDelete
  Replies
  1. நல்ல விமர்சனம் செயலரே..:-)

   Delete
  2. குருநாயர் அட்டு :-)

   Spoiler alert ன்னு ஒரு வார்த்தை போட்டிருக்கலாமோன்னோ!?, உங்க விமர்சனத்தை படிக்கறச்சயே ட்ராகன் நகரம் கண்ணுக்குள்ள வந்துவந்து போயிண்டிருக்கே..!!

   Delete
  3. ////Spoiler alert ன்னு ஒரு வார்த்தை போட்டிருக்கலாமோன்னோ///

   அவசியமில்லை என்று தோன்றியதாலேயே 'spoiler alert' போர்டு வைக்கவில்லை கினாஆனா அவர்களே!

   Delete
  4. Erode VIJAY : டாராய்க் கிழிந்த சட்டையோடு சல்மான்கான் பாணியில் 'தல' அட்டைப்படத்தில் நிற்பதை பார்த்தேன் - 6 மாதங்களுக்கு முன்னர் அந்த மிலான் காமிக்ஸ் மியூசியத்தில் ! அன்றைக்கே தீர்மானித்துவிட்டேன் சிலபல அசடு வழிதல்கள் அவசியமாகினும் ராப்பரில் இதே டிசைனைக் கொணர்வது என்று ! அந்த மஞ்சள் சொக்காயை லாண்டரிக்குப் போட்டு விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !!

   //ரவுடிகளிடம் அவர்பேசும் அனல் தெறிக்கும் வசனங்களைப் படிக்கும்போதெல்லாம் மனசுக்குள் நம்மையறியாமல் ஒரு உற்சாக விசில் சத்தம் உய் உய் என்று பிளிறுவதை உணரமுடிகிறது!//

   இரவுக் கழுகாருக்கு தெனாவட்டான வரிகளை எழுதுவது வாடிக்கையே என்றாலும் - அந்த "சின்னத் திரி கொண்ட பட்டாசு "பாணியிலான கதாப்பாத்திரப் படைப்புக்கு கூடுதலாய் கடுவன் பூனை பாணியில் டயலாக் அமைத்தால் தேவலை என்று பட்டது ! அதனால் தான் கொஞ்சம் தூக்கலாகவே அடாவடி வரிகள் ஜிலாசுக்கு !

   //தமிழ்படங்களின் அவுட்டோர் செட் காட்சிகளின் பின்னணியில் சில துணைநடிகைகளை பேசிக்கொண்டே நடக்கவிட்டிருப்பார்களே... அதுமாதிரியாவது ஒன்றிரண்டு யுவதிகளைக் காட்டியிருக்கலாம்! //

   ஏன் - அந்தக் காலத்து CID சகுந்தலாவை L .R ஈஸ்வரி குரலுக்கொரு குத்தாட்டம் போடவும் கேட்டுத் தான் பார்க்கலாமே? Maybe இந்தக் கதை ஒரிஜினலை வெளியான அந்தக் காலகட்டத்துக்கு அது பொருந்திடவும் கூடும் தான் !!

   Delete
 62. ரவி மற்றும் யுவா உங்கள் பயண அனுபவங்கள் அருமை...வாழ்த்துக்கள் .சமீபமாக சில கால சூழல்கள் என்னால் வர முடியாத நிலையை ஏற்படு்த்தி கொண்டே இருக்கிறது ...இனி தவற மாட்டேன் (ன்னு நம்புகிறேன் ).

  ReplyDelete
 63. *திரை விலகும் நேரம்.....*


  படித்தாகி விட்டது ....படித்து முடித்தாகி விட்டது சார் ..ஒரு சேர மூன்று பாகங்களையும் படித்து விட்டு இங்கே உடனே வருகை தந்து விட்டேன் சார்...என்ன சொல்வது ...எப்படி சோல்வது ..இப்படி ஒரு அசாத்திய கற்பனை வளமா ..ம்ஹீம் ...நம்ப முடிய வில்லை தான் ..சாத்தியமா என்பதும் புரிகிறது தான் ...ஆனால் மூன்று பாகங்களையும் ஒரு சேர லயிக்கும் பொழுது அந்த சாத்தியமற்ற உலகில் நம்மையும் உலவ விட்ட அந்த கதை ஆசிரியரை பாராட்டுவதா....இல்லை அந்த களத்திற்கே அசாத்திய தமிழ் மொழி பெயர்ப்பு மூலம் இது சாத்தியமே என்ற படியே உலவ வைத்த உங்கள் மொழி பெயர்ப்பை பாராட்டுவதா...இல்லை....இந்த கற்பனை களத்தை இது கற்பனை அல்ல நிஜம் என நம்பும் படி ஒவ்வொரு ப்ரேமும் இது ஓவியம் அல்ல ...நம் எதிரில் ம்ஹீம் எதிரில் கூட அல்ல அந்த உலகையே நம் கண் முன் நிஜத்தில் தரிசிக்க வைத்த அசாத்திய ஓவியரின் திறமையை பாராட்டுவதா ....அனைவருக்குமே சாத்தயமான முறையில் அசாத்திய பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் ..


  முதல் பாகமான எழுதபட்ட விதி கொஞ்சம் கற்பனை சிறகோடு பறந்தாலும் முடிவில் ஒரு கமர்ஷியல் கதை லாகவோத்தோடு முடிய..இரண்டாம் பாகமான மறைக்க பட்ட நிஜங்கள் ஒரு திடுக்கிடலோடு பயணமாக ..மூன்றாம் பாகத்தில் இதற்கான விடை ஓரு கமர்ஷியல் முடிவாகவோ ...அல்லது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் மூலமாகவோ தான் முடிவுறும் என்பது போல நினைத்தே பயணித்தேன் ..ஆனால் கொஞ்சம் கூட யூகிக்க முடியாத களம் என்பதோடு முடிவு அட்டகாச ரகம் ...

  நமது இதழ்களில் பாக பிரிவினை இதழ்கள் வந்து அதன் இறுதி பாக இதழ் கைகளுக்கு சிக்கியவுடன் மீண்டும் ஒரு முறை முதல் பாகங்களில் இருந்தே படிப்பேன் ..அது இரத்த கோட்டையாக இருந்தாலும் ...சரி...இரத்த படலமாக இருந்தாலும் சரி...ஆனால் அது போன்ற இதழ்கள் கதை நினைவில் இருந்தால் இறுதி பாகம் மட்டுமே படித்தாலே சுவை தான் ..ஆனால் இன்னமும் திரை விலகும் நேரத்தை படிக்காத நண்பர்கள் ..கதை நினைவில் இருந்தாலும் இந்த மூன்று பாகங்களையும் ஒரு சேர படித்து பாருங்கள் ..ஒரு அசாத்திய உலகில் மிதப்பீர்கள் ...


  எழுதப்பட்ட விதி...மறைக்கப்பட்ட நிஜங்கள் ..ஒரு திரை விலகும் நேரம் ஒட்டு மொத்தமாக எனது மதிப்பெண் ...  சூப்பர் ...சூப்பர்...சூப்பர்.....

  ReplyDelete
  Replies
  1. ஆங்! நம்ம தலீவருக்கு கி.நா'க்களை தானா படிக்கிற பக்குவம் வந்துடுச்சு! எடிட்டர் சார், இனிமே நீங்க சட்டுபுட்டுன்னு சந்தா-Eயை இறக்கிப்புடலாம்!

   Delete
  2. பாக்கி இருப்பது மடிப்பாக்க விக்கெட் மட்டுமே !!

   Delete
 64. நேற்று அவசர அவசரமாக பதிவை படித்து விட்டு நண்பர்களின் கமெண்ட்ஸ் களை படிக்க நேரமில்லாமல் இரவு தான் படிக்க முடித்தது சார் ..எனவே உங்கள் இந்த வார பதிவை பற்றி எனது கருத்து கொஞ்சம் தாமதமாக


  இந்த மாத இதழ்களில் சிங்கத்தின் சிறு வயதில் இல்லாத குறையை இந்த பதிவு தீர்த்தது.... எனில் அது மிகை அன்று...அருமை சார் ....:-)

  ReplyDelete
 65. மதியில்லா மந்திரி:-

  வாய்விட்டு சிரிக்க வைக்கும் தந்திரி.

  கேரட் கொஞ்சம் தலைப்புக்கு ஏற்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் மற்ற துணை கதைகள் 3ம் சிரிப்பு மந்தாப்புக்கள் சார்.

  மாயாமில்லே மந்திரிமில்ல க்ளைமாக்ஸ் செம்ம, வழக்கமாக மந்திரிக்கு நடப்பது இம்முறை அந்த வேற்று கிரக ராசாவுக்கும். கிரகங்கள் மாறினாலும் மந்திரிகளின் எண்ணங்கள் மாறாததே-என புரிய செய்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது சார்.

  சொப்பண சுந்தரி அட்டகாசமான கற்பனை. ஒவ்வொரு பிரேமும் சிரிக்க வைக்கிறது. பூனை கூடவா...

  டாப் ஆஃப் த போர்:- இடம்பெற்றதில் கடைசி, ஆனால் காமெடி வரிசையில் முதலாவது அந்த பூச்சி படலம். ஜால்ராபாயின் முக பாவனை செம்ம. அந்த 46ம் பக்கம் ஓவியத்தின் மற்றும் டயலாக்கின் உச்சமான இடம். வேலை இழந்த ஜால்ரா பாயின் புலம்பலும் அந்த கண்ணீர் சிந்தும் முகமும் செம மேட்சிங்.
  3தினார் சம்பளம் ஒஸத்தி என்றவுடன் அடுத்த பிரேமில் அந்த வாயும் கண்ணும் அட்டகாசமா வரையப்பட்டு உள்ளது. டயலாக்கே தேவைப்படாத மாஸான இடம். அப்டியே அந்த கிட் ஆர்டினை கண் முன் கொண்டு வந்த பிரேம். எந்தவித தயக்கமும் இல்லாமல் மந்திரியின் சேவையில் ஈடுபடும் ஜால்ரா ஹைலைட்டான இடம். ரொம்ப நாள் மறக்காமல் இருக்கும் இந்த கதை சார்.
  மந்திரிக்கு இரண்டு இடங்களாக அதிகரிக்க கேட்க தோணுது சார்.

  ReplyDelete
  Replies
  1. அட்டகாசம் டெக்ஸ்!!!!!!
   பிப்ரவரி வெளியீடுகளில் என்னை மிகவும் கவர்ந்தது மதியில்லா மந்திரிதான்...
   சொப்பன சுந்தரிதான் என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கதைகளில் தலையாயது..
   மற்ற கதைகளும் செம.....
   ஏற்கனவே படித்த மாயமில்லே ...மந்திரமில்லே கதையும் கூட...வண்ணத்தில் படிக்க செமையா இருக்கு...( டகுல்பாஜி கிரகவாசிகள் பூலோகவாசிகளின் தலைவன் என தோன்றுவதாக ஒட்டகத்திடம் போய் பேசும் காட்சி ....ஹா...ஹா...ஹா)
   என்வரையில் இம்மாதத்தின் மிக சிறப்பான இதழ் இதுவே...
   பின் இரண்டாமிடத்தில் ஜேசன் பிரைஸ்....தெளிவான குழப்பங்களுடன் ஆரம்பித்த கதையின் குழப்பமில்லாத தெளிவான முடிவு....(முடித்தவிதம் 1௦௦% எனக்கு ஏற்புடையதல்ல என்றபோதும்)
   மூன்றமிடத்தில் டெக்ஸ் .....அனல் பறக்கும் கதை....ஆனாலும் .சகிக்க முடியாத லாஜிக் ஓட்டைகள் டெக்சை மூன்றாமிடத்துக்கு தள்ளி விட்டன....

   Delete
  2. @ Friends : நிஜத்தைச் சொல்வதானால் - மந்திரியாரின் (நம்மிடையிலான) எதிர்காலம் இந்த இதழுக்கு முன்வரை ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்தது ! சொப்பன சுந்தரியும்...டகுல்பாஜிகளும், சாதித்துக் காட்டியிராவிடின், நிச்சயமாய் அடுத்தாண்டில் "காத்திருப்போர் பட்டியலுக்கு" பாக்தாத்வாலாவை பார்சல் பண்ணியிருப்பேன் !

   தனிப்பட்ட முறையில் எனக்கு மந்திரியார் செம favorite ; ஆனால் நம் அணிவகுப்பினில் தொடர்ந்திட அதுமட்டுமே ஒரு தகுதியாகிட முடியாதல்லவா ? மீசைக்காரர் சரக்கும் முறுக்கே என்று நிரூபித்துக் காட்டியதில் விஜயன் ஹேப்பி அண்ணாச்சி !!

   And ஆண்டின் முதலிரு மாதங்களுமே - கார்ட்டூன்களில் பிசிறின்றிச் சாதித்துள்ளது augurs well !! அடுத்த மாதம் லக்கி கலக்குகிறார் !!

   Delete