Powered By Blogger

Wednesday, February 22, 2017

தக தகக்கும் தாரகை !

நண்பர்களே,

வணக்கம். ரொம்ப  நாள் கழித்து - ஒரே ஞாயிறில் 270 + பின்னூட்டங்கள் ; செம உற்சாகம் ; உருப்படியான அலசல்கள் என்று இங்கே களைகட்டியதை  பார்த்திட நிறைவாக இருந்தது !! "ஒரு அலசல் அனுபவம்" இத்தனை சுவாரஸ்யமாய் இருக்குமெனில் - ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு ஞாயிறை அந்தந்த இதழ்களின் ஆராய்ச்சிக்கு ஒதுக்கினாலென்ன folks ? கதைகள் ; அதன் பின்னணிகள் ; ஒவ்வொருவரின் ரசனைப் பாங்குகள் ; கொஞ்சம் கலாய்ப்புகள் என மாதம்தோறும் ஒரு வாரத்தை இவ்விதம் ஜாலியாக்க சாத்தியமாகின் - I am all for it !! இதனில் உள்ள ஓசையிலா ஆதாயம் - நமது ஆன்லைன் ஸ்டோரில் கடந்த 2 நாட்களாய் தட்டுப்படும் "ஜேசன் ப்ரைஸ்" (விற்பனை) மோகத்தில் தென்படுகிறது ! 'அட..இந்தக் கதையில் இத்தனை சுவாரஸ்யம் உள்ளதா ?' என்ற ஆர்வத்தில் அது வரையிலும் அமைதியாய் இருந்த வாசகர்களும் திடீரென வேகம் பெறுவது புரிகிறது !! So நாம் பெற்ற இன்பம் - கூடுதலாய் சில பல நண்பர்களையும் எட்டும் வாய்ப்புகள் இருப்பின், அதனைத் தொடர்ந்திடலாமே ?! Let 's give it a thought  guys ?

மார்ச்சின் அச்சுப் பணிகள் வேகமாய் நடந்தேறிட, இளவரசியின் (வண்ண) இதழ் சும்மா மின்னுகிறது ! எனக்குத் தெரிந்தளவிற்கு வர்ணங்கள் சேர்க்கையில் சிற்சிறு திருத்தங்கள் மட்டும் செய்திருக்கிறோம். இது நாம் பார்த்துப் பழகியுள்ள படைப்பாளிகளின் கலரிங் யுக்திகள் முன்பாய்க் கத்துக்குட்டித்தனமாய்த் தெரிந்திடக் கூடும்தான் ; ஆனால் முழுக்க முழுக்க black & white-க்கென மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடரை வர்ணத்துக்கு மாற்றுவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும் ! But still, புத்தகத்தை வாசிக்கும் போது நிச்சயமாய் ரசிக்கும்விதம் இருந்திடும்    !! பாக்கெட் சைஸ் தன பங்குக்கு கலக்குகிறது  ! And கலக்கோ கலக்கென்று ராப்பரில் தூள் கிளப்புகிறார் - சற்றே கூடுதல் கண்ணியத்துடனான மாடஸ்டி !!!


இது முன்னே........திருத்தங்களுக்கு முன்னே....!! 
எல்லாப் புகழும் சாமிக்கே.....அஜய் சாமிக்கே !  Hats off நண்பரே  !! Bye for now !!

P.S : ஜாக்கி நீரோவின் ....சாரி...சாரி....ஜானி நீரோவின் "கொலைக் கரம்" இதழில் சில பக்கங்கள் + "தங்க விரல் மர்மம்" இதழில் சில பக்கங்கள் அவசியப்படுகின்றன folks !! யாரிடமாவது இந்த இதழ்களிருப்பின் தகவல் தாருங்களேன் - ப்ளீஸ் ? 

190 comments:

 1. Replies
  1. Can't wait to have modesty in my hands.. Still remember the very first time I read this..always dreamed of having a girlfriend like Modesty.. Veetla sollidadhingo 😇

   Delete
 2. வணக்கம் சார்...
  வணக்கம் நண்பர்களே...

  சூப்பர் சிக்ஸ் மாதிரி ஜொலிக்குது அட்டைகள்..

  ReplyDelete
 3. ////எல்லாப் புகழும் சாமிக்கே.....அஜய் சாமிக்கே ! Hats off நண்பரே !! ///

  அட்டகாசம் அட்டகாசம்!!

  சற்றே மெலிந்த தேகத்தோடு; ஆனால் சிக்கென்று சிறுத்தைக்குட்டி போல் இருக்கிறார் மாடஸ்டி!

  ReplyDelete
 4. எடிட்டர் சார்,

  மேலேயிருக்கும் அந்த மூன்று அட்டைப்படங்களையும் எடுத்துட்டோம்னா மீதியிருப்பதற்குப் பெயர்தான் 'பின்னூட்டம்'! :P

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க செயலரே ....உப பதிவை கொஞ்சம் நீளமா கேட்டதாலே மாடஸ்தி புகைப்படத்தை நீளமா போட்டு ஏமாத்திட்டாரு ...:-((

   Delete
  2. தலீவரே.

   போன பதிவு - மினி பதிவு
   இந்தப் பதிவு - மைக்ரோ பதிவு
   அடுத்த பதிவு...

   "நண்பர்களே, வணக்கம். Bye for now!" - அப்படீன்னு ஒரு நேனோ பதிவாத்தான் இருக்கும் போலிருக்கு!

   ஊஹூம்! போர்க்கால அடிப்படையில நாம எதாவது செஞ்சாகணும் தலீவரே!

   ம்'மினு ஒரு வார்த்தை சொல்லுங்க தலீ! கைவசம் ஏகப்பட்ட திட்டங்கள் வச்சிருக்கேனாக்கும்!

   Delete
 5. Hi friends
  படித்து விட்டு வருகிறேன்

  ReplyDelete
 6. அருமை அஐய் சார்.தூங்கி எழுந்து முகம் கழுவாததை தவிர மற்றவை நம்மை தூங்க விடாதவை

  ReplyDelete
 7. முகமும் கையும் மட்டும் தெரியும் கூடுதல் கண்ணியத்தை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் அஜய் சார் ....அருமை ...

  ReplyDelete
 9. ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு ஞாயிறை அந்தந்த இதழ்களின் ஆராய்ச்சிக்கு ஒதுக்கினாலென்ன folks ?

  #######


  ஓகே ..சார் ....:-)

  ReplyDelete
 10. இளவரசி ஓவியம் நன்றாக உள்ளது.

  ReplyDelete
 11. modesty அட்டைப்படங்கள் Super. Ajay sir congrats!

  ReplyDelete
 12. எப்படி பார்த்தாலும் எடுப்பாக
  தெரிகின்றது. நான் இளவரசியின்
  படங்களை சொன்னேனன்.
  அனைவருக்கும் காலை வணக்கம்
  ஈரோடு விஜய் 25மணி நேரமும்
  தூங்காமல் Blogல் இருப்பது எப்படி?
  என்னிடம்மட்டும் ரகசியமாக
  சொல்லவும்.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ் சார்,

   ஆபத்தான வளைவுகளைக் கவனிச்சீங்களா...? நானும் பின்னணியில் தெரியும் அந்த பாறைகளைத்தான் சொன்னேன்! அதை வரையும்போது அஜய்சாமியின் தூரிகை எப்படி நடுங்கிப்போயிருக்கும்?!!

   Delete
  2. அய்யாக்களா "கலை"க் கண் கொண்டு....

   Delete
  3. ஈரோடு விஜய்.!!!

   நீங்கள் ஒரு " கலா " ரசிகர்.!   உங்கள் துணைவியார் மௌன பார்வையாளராக இந்த பக்கம் வருவதுண்டா.???

   ஆறு மாதங்கள் முன்புவரை என் மனைவியும் எடிட்டரின் இந்த ப்ளாக்கில் மௌன பார்வையாளராக தொடர்ந்து இருந்தார்.!


   அது எவ்வளவு டேஞ்சர் என்பதை அனுபவம் எனக்கு நன்கு உணர்த்தியது!

   நீங்களும் ட்ரை பண்ணலாமே.???

   Delete
  4. M.V சார்,

   முன்னே ஒருநாள் என்ர வீட்டுக்காரம்மா கேட்டாங்க "எப்போப் பார்த்தாலும் காமிக்ஸே கதியாக் கிடக்கறீங்களே... அப்படி என்னதான் இருக்கு அதில?"

   உடனே என்னோட பிரஸன்ஸ் ஆஃப் மைன்டு வேலை செஞ்சது. "தோ பாருடா செல்லம்... நான் எவ்வளவு முரட்டுத்தனமான ஆளுன்றது உனக்குத் தெரியுமில்ல? தெரியுமில்ல? எனக்குள்ள ஒரு மிருகம் இருக்குது. ரொம்பப் பயங்கரமானது அது! அப்படியாப்பட்ட மிருகம் வெளியே வராமக் கட்டுக்குள் வச்சிருக்கும் ஒரே விஷயம்னா... அது இந்தக் காமிக்ஸுதான்! இந்தக் காமிக்ஸ், வலைப்பூல நான் புழங்கிட்டிருக்கும் வரைதான் அந்த மிருகம் வெளியேறாம இருக்கும்! இது மட்டும் இல்லேன்னா அந்த மிருகத்தால அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களுக்கு எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டும்னு உனக்குத் தெரியுமா? தெரியுமா? ஆனா, உனக்குப் பிடிக்கலேன்னா சொல்லு. இந்த நிமிஷமே எல்லாத்தையும் கடாசிப்புடறேன் கடாசி"

   "அச்சச்சோ... வேணாம்க! நீங்க எதைவேணா படிச்சுக்கோங்க. நீங்க இதேமாதிரி நல்லவரா இருந்தா எனக்கு அதுவே போதும்"

   "நீ சொன்னாச் சரி! போ... போயி காப்பி போட்டு எடுத்துட்டு வா... நிலவொளியில் ஒரு நரபலி'ன்ற கதையை கலர்ல போட்டதைப் பாராட்டி எங்க எடிட்டருக்கு ஒரு கமெண்ட்டு டைப் பண்ணிக்கிட்டிருக்கேன். காப்பி நல்லா சூடா இருக்கோணும்"

   "சரிங்க"

   "நில்லு! எனக்குள்ள இருக்கறது என்ன மாதிரியான மிருகம்னு தெரிஞ்சுக்க உனக்கு ஆசையில்லையா?"

   "சொ..சொல்லுங்க"

   "வேணாம். அதை நீ தெரிஞ்சுக்காமயே இருக்கறதுதான் உனக்கும் நல்லது - எனக்கும் நல்லது! சில புதிர்கள் அவிழ்க்கப்படாம இருக்கறவரைக்கும்தான் வாழ்க்கை சுவாராஸ்யமா இருக்கும். போ... பயப்படாமப் போயி காப்பிய எடுத்துட்டு வா"

   "ச..சரிங்க"

   (முற்றும்) ;)   Delete
  5. மிஸஸ் விஜய் சற்று அப்பாலிகா போனதும், நம் விஜய், மேய்வதற்காக அந்த மிருகத்தை லைட்டா வெளியே விடுகிறார். அது உறுமியது.. “ம்மியாவ்வ்”

   :-))))

   Delete
  6. @ ஆதி

   ஹிஹி! எனக்குள்ளிருக்கும் அந்த மிருகத்தை வாசகர்கள் யாராவது கண்டுபிடிப்பாங்களான்னு பார்க்கத்தான் கடேசிவரை சஸ்பென்ஸை மெயின்டெய்ன் பண்ணேன்! ஆனா, எப்படியோ கஷ்டப்பட்டு நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க! க்ரேட்!! இதற்கான சிறப்புப் பரிசான பன்னு-டீ'யை, ஏற்கனவே தரவேண்டியுள்ளதோடு சேர்த்து அக்கவுண்ட்டில் வைத்துக்கொள்ளவும்! :)

   Delete
 13. நண்பர் அஜய் அவர்களின் கைவண்ணத்தில் இள்வர்ஷீ சிக்கென்று தெரிகிறார். .!
  இப்படி போட்டோ மட்டுமே போடுறதா இருந்தா ஜூப்பருதான். ஆனா அந்த கதை. . கதைன்னு வரும்போதுதான். .!! :-)

  ReplyDelete
  Replies
  1. மூளைக்கு வேலை இல்லாத போது சிறிது கண்ணுக்கும் ஈயப்படும்!

   Delete
  2. க்கும்.....ஆமா ....உங்களுக்கு கதை படிக்காத முந்தியே கதை இருக்கா ...பிடிக்கா ன்னு முடிவு பண்ணிட்டு படிச்சா எப்பூடி நல்லாருக்கும் ....


   மாடஸ்தி சார் ....ஆட்டோவை ரெடி பண்ணுங்க ...கொஞ்சம் மேச்சேரி நாடு வரைக்கும் போய்ட்டு வரலாம் ...நான் வழில தொத்திக்கிறேன் ...:-)

   Delete
  3. தலிவரே.. நானும் வர்ரேன்..

   Delete
  4. தலைவரே.!

   ஓ.கே தலைவரே.! ஜல்லிக்கட்டு மாதிரி பொங்கிடுவோம்.! மேச்சேரியா.? மெரினாவா என்று கூகுளே குழம்பட்டும்.!!!

   Delete
 14. ///So நாம் பெற்ற இன்பம் - கூடுதலாய் சில பல நண்பர்களையும் எட்டும் வாய்ப்புகள் இருப்பின், அதனைத் தொடர்ந்திடலாமே ?! Let 's give it a thought guys ?///

  ஐ யாம் ரெடியிங்!

  ReplyDelete
 15. பின்னணி அருமை . மாடஸ்டிக்காக...காததிருக்கிறேன் தோர்களுக்கிணையாய் ...நானே நானா....யாரோதானா

  ReplyDelete
 16. இரண்டாமட்டை அழகு...நீலவண்ண பின்னணி ..ஊரும் ஜீப் ...அந்த மலையில்லாதது குறை

  ReplyDelete
 17. "இனிமேல் இளவரசி சாகசம்னா நம்ம அஜய் தான் அட்டைப்படம் வரையனும்"- என்ற தீர்மானத்தை வழிந்து வழிந்து முன்மொழிகிறேன்....!!!

  ReplyDelete
  Replies
  1. ////இனிமேல் இளவரசி சாகசம்னா நம்ம அஜய் தான் அட்டைப்படம் வரையனும்"- என்ற தீர்மானத்தை வழிந்து வழிந்து முன்மொழிகிறேன்....!!!////

   வருஷத்துக்கு ஒருதபா தான் அஜய்சாமி அட்டைப்படம் வரையணும்னு சொல்றீங்களா? ;)

   Delete
  2. ///வருஷத்துக்கு ஒருதபா தான் அஜய்சாமி அட்டைப்படம் வரையணும்னு ? ;)///

   வருசம் ஒருதபா வாய்ப்பு இருக்குமா?? :-)

   Delete
  3. ஏம்பா குரு சிஷ்ய ஜோடிக்கு இன்று நான்தான் ஊறுகாயா...!!!

   இளவரிசி இல்லீனா,
   ஜூலியா...
   லேடி எஸ்...

   அட அதுவும் இல்லீனா,

   இருக்கவே இருக்கா
   நம்ம பழைய மந்திர ராணி.
   இன்னும் "ஏ"கப்பட்ட கதைகள் இந்த சீரியஸ்ல இருக்கும் போல...
   ஜியோ புண்ணியத்தில Axaஎனும் இதன் ஆங்கில பாகங்களை வழிந்து கொண்டே ரசித்தேனாக்கும்...

   Delete
  4. ////இளவரிசி இல்லீனா,
   ஜூலியா...
   லேடி எஸ்...

   அட அதுவும் இல்லீனா,

   இருக்கவே இருக்கா
   நம்ம பழைய மந்திர ராணி.///

   அப்படீன்னா அவர் லேடீஸை வரையறதுக்குத்தான் லாயக்கு'னு சொல்றீங்களா?

   Delete
  5. ஆஹா...எல்லா பக்கமும் அனை கட்டுறாங்களே...!!!

   Delete
  6. ///அப்படீன்னா அவர் லேடீஸை வரையறதுக்குத்தான் லாயக்கு'னு சொல்றீங்களா?///

   இல்லேன்னா அவருக்கு ஆண்களே புடிக்காதுன்னு சொல்றிங்களா??

   Delete
 18. எத்தனை நாள் ஆச்சு ...பாக்கட் சைஸ் பார்த்து.....அதுவும்

  இந்திய காமிக்ஸ் உலக வரலாற்றில் முதன்முறையாக வண்ண பாக்கெட் ...


  காண கண் குளிர காத்திருக்கிறேன் -----

  ReplyDelete
  Replies
  1. அய்யா இது 2ம் வண்ணப் பாக்கெட் இதழ் என நினைவூட்டுகிறேன்.

   எங்கள் தங்கம் டெக்ஸே ஆட்டத்தை துவக்கி வைத்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆக்கும்.

   Delete
  2. கொள்ளைக்கார பிசாசு இதில் வராதா???

   Delete
  3. ஹி..ஹி...ஹி....
   மன்னிக்கவும் செனா அனா ஜி.

   அந்த பெருமையும் எவர் க்ரீன் இரும்புக்கரத்தாருக்கே சொந்தம்னு ஒப்புக் கொள்கிறோம்.
   2வது டெக்ஸ்,
   3வது இளவரசி... யா?
   இல்லை இன்னும் பழைய நாயகர்கள் வண்ணத்தில் பாக்கெட் சைசில் வந்துள்ளார்களா???

   Delete
  4. யோவ் மாமா ஏன்யா கையை முதுகு பக்கம் வளைத்து பிடித்து முதுகில் குத்துர...பொறுமை..பொறுமை...   மற்றொரு தகவல்.
   உட்சிட்டி கோமாளிகளும் வண்ண பாக்கெட்டில் மிலிர்ந்து உள்ளார்களாம்.
   அதிரடி மன்னன்- ஜூனியர் லயன் காமிக்ஸ் வாயிலாக....

   இன்னும் ஏகப்பட்ட ஃப்ளாஸ் தகவல் வரக்கூடும்.
   பட்டியல் போடும் வேளை வந்துவிட்டது போல...!!!!

   Delete
  5. டெக்ஸ் ...


   வண்ணத்தில் பாக்கட் சைஸ் டெக்ஸ் இதழ் வந்துள்ளதா என்ன ...எனவே வண்ண பாக்கட் சைஸ் என்பது டெக்ஸ் முதலிடம் என்பது தவறு...(என்றே நம்புகிறேன் விளக்குக..)


   செல்வம் அபிராமி ஜீ

   கொள்ளை கார பிசாசு இதழ் பாக்கட் சைஸ் கிடையாது ( என்றே நம்புகிறேன் ...மாயாஜீ உண்மை பகிரலாம் ..எனவே இதுவும் தவறே என்றே நினைக்கிறேன் ..மாயாவி ..டெக்ஸ் வண்ண பாக்கட் இதழ் இல்லை என்றே நினைக்கிறேன் ..மாயாஜீ இங்கே க்ளிக் மூலம் எது சரியென விளக்கலாம் ..:-)

   ஜூனியர் லயன் காமிக்ஸ் ....ஆம் இது உண்மை ...அதிரடி மன்னன் ...அலிபாபா போன்றவை வண்ண பாக்கட் இதழ்கள் தான் ..


   எனவே எனது பதிவை கீழ்கண்டவாறு மாற்றி படிக்குமாறு பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன் ..   இந்திய காமிக்ஸ் உலக வரலாற்றில் முதன்முறையாக லயன்காமிக்ஸ் ...மாடஸ்தி வண்ண பாக்கட் இதழாக காண கண்குளிர காத்திருக்கிறேன் ...:-)
   சாமீ எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கும் ...:-)))

   Delete
  6. ///வண்ணத்தில் பாக்கட் சைஸ் டெக்ஸ் இதழ் வந்துள்ளதா என்ன ...எனவே வண்ண பாக்கட் சைஸ் என்பது டெக்ஸ் முதலிடம் என்பது தவறு...(என்றே நம்புகிறேன் விளக்குக..)////....

   2013 சூன் மாதம் வெளிவந்த +6ல் ன் முதல் இதழான டெக்ஸின் "நிலவொளியில் ஒரு நரபலி"- பாக்கெட் சைசில் வந்த வண்ண இதழ் அய்யா.
   இதுவே டெக்ஸின் முதல் வண்ண சாகசமும் கூட(லயனில்).

   "கொள்ளைக்கார பிசாசு" வண்ண பாக்கெட் சைஸ்தான். அந்த இதழை பல ஆண்டுகள் முன் ஒரு நண்பர் கண்ணில் காட்டினார்.

   இன்னும் சில ஹீரோக்கள் கூட வண்ண பாக்கெட்டில் வந்து இருக்கலாம்.

   மாயாசார் ஏகப்பட்ட க்ளிக் போடுங்க, எங்க சந்தேகங்களை தீர்த்து வைங்க சார்.

   Delete
  7. அதிரடி மன்னன் பாக்கேட் சைஸ் தான்

   Delete
  8. @ சேலம் இரவுகழுகார்

   ஜ்ச்ன்சஜ்த்கத்க்து..நஜ்ப்வ்வுஜ்பப்ய்து.க்ஹ்ம்ஹப்ப்ப்ஹைப்ஸ்....
   ட்ன்கட்ஜ்டுட்ஜம்க்க்க்...ட்ஜ்ட்ஜப்ஜ்ஜ்ஹஹ்கேஜ்டு...இடுய்ர்ய்டேஹ்டிவ்க்...
   இது என்னமொழின்னு யாரும் குகிள் ஆண்டவரிடம் விரிக்கவேண்டாம்..! மொத்த வண்ண பக்கெட்சைஸும் எடுத்து வரிசையாக பார்த்தும் ஒருமாதிரி 'மெர்சல்' ஆகி வார்த்தையே வரலைங்கோ...ஹீ..ஹீ..ஹீ...

   வரவிருக்கும் 'கழுகுமலை கோட்டை' வண்ணபக்கெட் சைஸில் ஒன்பதாவது புக்குங்கோ..!

   மீதி எட்டு என்னன்னு வரிசை போடுங்க, அப்பால நான் 'கிளிக்' போடுறேன்.! :)))))))))))))))))

   Delete
  9. இந்த போட்டியில் எடிட்டரும் கலந்துகொள்ளலாம்...பதில் சரியா சொன்னா 'கொலைகரம்' 'தங்கவிரல் மர்மம்' இரண்டும் ஸ்கேனுக்கு அனுப்பிவைக்கப்படும்...அவுக்..அவுக்...ஈஈஈகீகிஈஈஈஈகீய்...! :))))))))

   Delete
  10. என்னாது...
   க.ம.கோட்டை வண்ண பாக்கெட் சைஸ்லயே 9வதாஆஆஆஆஆஆ.....
   நிஜமாவே கிழிஞ்சது கிருஷ்ணகிரி...

   Delete
  11. அவுக்..அவுக்...எட்டு என்பது தவறான விடை...விடை இரட்டை இலக்கம்.! ஜிங்குசக்கான்...ஜிங்கு...

   Delete
  12. ///விடை இரட்டை இலக்கம்///...சுத்தம்.!!!

   ஐயாம் தெரிச்சி ஓடிங்....

   Delete
 19. மாடஸ்டி எப்போதும் என்னை கவர்ந்த நாயகி...

  எக்சோட்டிக் இடங்கள்

  எக்சென்ட்ரிக் வில்லன்கள் ...அடிக்கடி வரும் கதைகள்

  முழுதும் ஆக்ஷன் எதிர்பார்க்கலாம்...

  btw in modesty covers, ridiculous it may seem,in contrary to expectation ,modesty with unbuttoned shirt(the last one)looks less glamorous than the rest.:)

  ReplyDelete
  Replies
  1. ///modesty with unbuttoned shirt(the last one)looks less glamorous than the rest.///

   நாலாவதா, அஞ்சாவதா அட்டைகள் இருந்திருந்தா நாம எதிர்பார்க்கிறது கிடைச்சுருக்குமோ என்னவோ? ;)

   Delete
  2. Erode VIJAY : //நாலாவதா, அஞ்சாவதா அட்டைகள் இருந்திருந்தா நாம எதிர்பார்க்கிறது கிடைச்சுருக்குமோ என்னவோ? ;)//

   நீங்கள் எதிர்பார்ப்பதும்....அதுக்கு மேலேயும் நிறையவே உள்ளதொரு கதைத் தொடர் சமீபமாய்க் கண்ணில் பட்டது ! "அதன் உரிமைகள் வேண்டுமா ?" என்றும் அவர்களே நம்மைக் கேட்டார்கள் !! குதிங்கால் பிடரியில் அடிக்க பிடித்தேன் ஓட்டம் !! உப்ப் !!

   Delete
  3. @ஈவி,

   நாம ஏன் வயது வந்தோருக்கான (வயசானவங்களுக்கானன்னு படிச்சிடாதீங்க) ’சந்தா X னு ஒண்ணை ஸ்டார்ட் பண்ணுங்க’னு ஒரு போராட்டம் அனவுன்ஸ் பண்ணக்கூடாது?

   (உதை வாங்குறதுக்கு முன்னால எஸ்கேப்ப்ப்!!) :-)))))

   Delete
  4. ////நீங்கள் எதிர்பார்ப்பதும்....அதுக்கு மேலேயும் நிறையவே உள்ளதொரு கதைத் தொடர் சமீபமாய்க் கண்ணில் பட்டது ! "அதன் உரிமைகள் வேண்டுமா ?" என்றும் அவர்களே நம்மைக் கேட்டார்கள் !! குதிங்கால் பிடரியில் அடிக்க பிடித்தேன் ஓட்டம் !! உப்ப் !!////

   ஓட்டம் பிடித்தீர்கள் - சரிதான்! ஆனால், அவர்களை நோக்கியா அல்லது விலகியா'ன்னு சொல்லலையே...? :D

   Delete
  5. @ ஆதி

   ///சந்தா X னு ஒண்ணை ஸ்டார்ட் பண்ணுங்க’னு ஒரு போராட்டம் அனவுன்ஸ் பண்ணக்கூடாது?///

   :P

   சூப்பர்! முதல்கட்டமா அரை-நிவாரணப் போராட்டம்னு ஒன்னை ஆரம்பிப்போம்!

   பி.கு : மேலே 'நிவாரண' என்ற வார்த்தையை ஒரு ஃபுளோவில் 'மாற்றி' படித்தவர்கள் மட்டுமே இந்தப் போராட்ட குழுவில் சேரத் தகுதியானாவர்கள்! ;)

   Delete
 20. //ஜாக்கி நீரோவின் ....சாரி...சாரி....ஜானி நீரோவின் "கொலைக் கரம்" இதழில் சில பக்கங்கள் + "தங்க விரல் மர்மம்" இதழில் சில பக்கங்கள் அவசியப்படுகின்றன folks !! யாரிடமாவது இந்த இதழ்களிருப்பின் தகவல் தாருங்களேன் - ப்ளீஸ் ? //
  இருந்தாலும் யாரும் கொடுத்திடாதீங்க .... மறு மறு பதிப்புகளில் வேறு இதழ்களை சேர்க்க நல்ல வாய்ப்பு. ha ha:)

  ReplyDelete
  Replies
  1. சரியான கட்டளை ...ஹீஹீ...:-)))

   Delete
  2. ஆனா....ரவி கண்ணரே ...உங்கள் கட்டளை வரும் முன்னரே இதழ்கள் ஆசிரியரிடம் பறந்து போயிருக்கும் என கோவை ஸ்டில் பட்சி சொல்லுது....:-((

   Delete
  3. அதும் தங்க விரல் மர்மம் ....இந்த மாத cid லாரன்ச படிச்சீங்களா தலீவரே...நம்ம நண்பர்களிருவரும் பட்டய கிளப்பீட்டாங்க .. அட்டகாசமான த்ரில்லான கதை . எடுத்து படித்து முடித்த பின்தா கைய விட்டு நழுவியது ...சார் அந்தக்கால கதைகள் என்றாலும் அதே வேகம்...இவ்வளவு வயசாகியும் அதே பாய்ச்சல் .....ஓவியம் மட்டும் பரவால்ல ரகம் . கதய அடிச்சுக்கவே முடியாது ..அதை மிஞ்சி அஸ்டக் ராஜ்யத்துக்கு விரல் பிடித்து அழைத்துச் செல்ல காத்திருக்கிறது தங்க விரல் மர்மம் ...siv வரட்டும் பாவம் !

   Delete
  4. /// அஸ்டக் ராஜ்யத்துக்கு விரல் பிடித்து அழைத்துச் செல்ல காத்திருக்கிறது தங்க விரல் மர்மம் ...siv வரட்டும் பாவம் !///


   அது லாரன்ஸ் டேவிட்டின் தலைகேட்ட தங்கப்புதையல்னு நினைக்கிறேன் ஸ்டீல். தங்கவிரல் மர்மம் ஏதோ ஒரு அரபுநாட்டில் நடக்கும் கதைன்னு ஞாபகம்.

   Delete
  5. சந்தேகத்தோடுதான் பதிவிட்டேன்..நன்றி நண்பரே.....சரி ஷேக் உலகில் ஷேக் ஹேண்ட் பண்ணுவோம் .

   Delete
  6. ///ஆனா....ரவி கண்ணரே ...உங்கள் கட்டளை வரும் முன்னரே இதழ்கள் ஆசிரியரிடம் பறந்து போயிருக்கும் என கோவை ஸ்டில் பட்சி சொல்லுது....:-((///

   Profileஅ கிட் ஆர்டினைப் பாத்ததும் நான்தான்னு முடிவு பண்ணிட்டீங்களே, இந்த ஒரே ஒரு தகுதி போதும் தலீவரே! உலகம் அழியுற வரைக்கும் நீங்க மட்டுந்தான் எங்களோட ஒப்பற்ற தலீவர். .!! :-)

   Delete
  7. ஙே.....   உஸ்......எங்கே போனாலும் கேட்டு போடறாங்களே....:-((

   Delete
  8. இன்று கொஞ்சம் வெய்யில் அதிகம் தான். தளத்தில் தெறிக்கும் பல கமெண்ட்டுகள் அதை உறுதி படுத்துகின்றன.

   Delete
 21. Replies
  1. ஆசிரியர் சார் மைண்ட் வாய்ஸ்: க்கும். பிப்ரவரியில் ஏற்கனவே இரண்டு நாளு கம்மியாம். இதுல மார்ச் இன் பிப்ரவரி. கிழிஞ்சது தர்மபுரி (ஏன் கிருஷ்ணகிரி தான் சொல்லுனுமா)

   Delete
  2. tex kit : அச்சுப் பணிகள் சகலமும் ஆச்சு நண்பரே ! அந்த "சர்ப்ரைஸ் சமாச்சாரம்" தான் கூடுதலாய் ஒரு நாள் எடுக்கும் !

   Delete
 22. அடேங்கப்பா மாடஸ்டி அட்டை அசத்துதப்பா சூப்பர் நண்பர் அஜய் சாமி அவர்களே
  இதுவரை வந்த மாடஸ்டி அட்டைகளிலே இதுதான் டாப்

  ReplyDelete
 23. தேவதைக்காக தட தடக்கும் (ஏங்கும்) மனதுடன் நான்

  ReplyDelete
  Replies
  1. செந்தில் சத்யா : வீட்டில் பூரிக்கட்டைக் காங்கோவோடு காத்திருக்கும் சகோதரி !!

   Delete
  2. ஆசிரியரே
   பூரிகட்டையை விட பயங்கரமான ஆயுதத்தை எல்லாம் பார்த்து விட்டேன் மாடஸ்டி க்காக எதையும் தாங்கலாம் உதையும் வாங்கலாம்

   Delete
 24. டெக்ஸின் "நிலவொளியில் ஒரு நரபலி"- பாக்கெட் சைசில் வந்த வண்ண இதழ்


  ####₹

  நோ...நோ....இது செல்லாது ....அது பாக்கட் சைஸ் கிடையாது....பாக்கெட் சைஸ்ன்னா அது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் சைஸ் அய்யா ...உதாரணமா நீங்க சொன்ன ஜீனியர் லயன் ஓகே.....  இப்ப மாடஸ்தி எந்த பாக்கட் சைஸ் ன்னு குழப்பம் வந்துருச்சே...

  திருட்டு முழு முழிக்கும் படங்கள் பத்து...

  ReplyDelete
  Replies
  1. அது பாக்கெட் சைஸ் இல்லீனா, இது மட்டும் எப்படி பாக்கெட் சைஸ் ஆகும்.

   இதுவும் பாக்கெட் சைஸை விட கொஞ்சம் அதிகம். அதுவும் கூட பாக்கெட் சைஸை விட கொஞ்சம் அதிகம் தான்.

   சரியான பாக்கெட் சைஸ் இது இல்லீனா அதுவும் சரியான பாக்கெட் சைஸ் இல்லை.

   இது சரியான பாக்கெட் சைஸை விட சற்றே அதிகப்படியான சைஸ்பரவாயில்லை என பாக்கெட் சைஸ்ல வகைப்படுத்தினா,
   அதுவும் பாக்கெட் சைஸை விட சற்றே அதிகம்னு அதையும் பாக்கெட் சைஸ்ல வகைப்படுத்தனும்.

   இது பாக்கெட் சைஸை விட சற்றே அதிகம் எனவே பாக்கெட் சைஸ் கிடையாதுனா, அதுவும் பாக்கெட் சைஸை விட சற்றே அதிகம் எனவே அதுவும் பாக்கெட் சைஸ் கிடையாது.

   Delete
  2. நண்பர்...டெக்ஸ் அவர்களுக்கான கருத்து...:-)

   Delete
  3. அதிரடி மன்னன் பக்கா பாக்கேட் சைஸ்

   Delete
  4. டெக்ஸ் சொல்வதை பார்த்தால்
   விசு வின் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே வேலை பாக்குற டாக்டருக்கு பைத்தியம் பிடிச்சா
   என்கிற வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது

   Delete
  5. ///அது பாக்கெட் சைஸ் இல்லீனா, இது மட்டும் எப்படி பாக்கெட் சைஸ் ஆகும்.///

   மாம்ஸூ! உம்ம பேன்ட்டுல முழங்கால் வரைக்கும் பாக்கெட் வெச்சிருக்கலாம். சட்டைப் பாக்கெட்டும் இடுப்பு வரை வெச்சிருக்கலாம். அதெல்லாம் நீர் பொறிகடலை வாங்கிப்போட்டு எந்நேரமும் கொறிச்சிட்டே இருக்கணும்குற வசதிக்காக வேண்டி தெச்சி வெச்சிருக்கலாம். அதுக்காக உம்ம பாக்கெட்ல புடிக்கிற அளவு இருக்குற புக்ஸெல்லாம் பாக்கெட் சைசுன்னு ஒத்துக்கமுடியாது ஓய். .!!

   Delete
  6. இளவரசிது சைடில வளர்ந்து இருக்கும்.

   டெக்ஸுது நீளத்தில் வளர்ந்து இருக்கும்.

   இரண்டும் பாக்கெட் சைஸ்ல கொஞ்சம் அதிகப்படியான சைஸ்.

   வெச்சா இரண்டையும் பாக்கெட் சைஸில் வைங்க.
   இல்லீனா....

   Delete
  7. ஙே...ஙே...ஙே.....

   இன்னக்கி ஒரு முடிவோடதான் களம் கண்டு இருப்பீக போல....

   வாயின் மேல் விரலை வைத்து கொண்டு ஓடும் படங்கள் பலப்பல...

   Delete


  8. டெக்ஸ் விஜயராகவன்.!

   "அதானே.?"

   Delete
  9. ஊஹூம்...இந்த ஆட்டைக்கு நான் வரலை சாமி !!

   Delete
  10. ஜூனியர் லயனின் இதழ்கள் 2 ; 3 ; 4 எல்லாமே பாக்கெட் சைசில் வண்ணத்தில் வந்தவைகளே ! அப்புறமாய்த் தான் மினி லயனோடு Junior Lion சங்கமித்துப் போனது !

   Delete
 25. ஆசிரியரே 2016 ன் டாப் 3 இன்னும் அறிவிக்கவே இல்லையே அடுத்த பதிவில் எதிர் பார்க்கலாமா

  ReplyDelete
  Replies
  1. உங்களை போன்ற
   நண்பர்கள் இருப்பதனால்
   மிக்க நலம்
   மாடஸ்டி சார்

   Delete
 26. டெக்ஸ் மற்றும் தற்போது வரும் புத்தகங்களின் 95% அட்டைப்படங்கள் அசத்துகின்றன.புதிதாக நம் காமிக்ஸை பார்ப்பவர்களின் ஆ வென் ஆச்சர்யத்தில் வாய் திறக்க தவறுவதே இல்லை.!அப்படியொரு தரம்.!


  அதுவும் கலர் புத்தகங்கள் சான்சே இல்லை.! அப்படி ஒரு அசத்தல்.! அந்த வரிசையில் நம் இளவரசி கதை இல்லையே என்று ஏங்கியது உண்டு.! அந்த ஏக்கம் நிறைவேறிவிட்டது.!  ஆனாலும் ஒரு சின்ன உறுத்தல்.!


  நிழலோடு நிஜ யுத்தம் கதையில், மாடஸ்டி போன்ற ஒரு பெண்ணை அச்சு அசலாக பல மாதங்கள் பயிற்சி கொடுத்து கார்வின் முன்பாக நிறுத்த ஏற்பாடாகும்.அப்போது அந்த டூப்பளிகேட் பெண் சொல்வால். ! மற்றவர்களை நான் சுலபமாக நான் மாடஸ்டியாக நடித்து நம்பவைக்க முடியும் ஆனால் ,கார்வினை அரை மணிநேரத்திற்கு மேல் ஏமாற்ற முடியாது " என்பார்.!

  மாடஸ்டி கதை மீது ஆர்வத்தை முதன்முதலில் உருவாக்கியது என் மனைவிதான். அதில் என் மனைவி அதிகமாக சிலக்கித்து பேசுவது.....


  மாடஸ்டியின் கண்கள்......


  அவரின் பார்வை....


  தன்னம்பிக்கையா.? தெனாவெட்டா.? கர்வமா.?

  உணர்ச்சியை வெளிக்காட்டாத அந்த பார்வையில் .........

  ஒரு அழகிய இளம் பெண்ணின் காதல் கண்கள்! ஒருவித கண்டிப்பு.! ஒரு வித பரிவு.!  என்று கண்டுபிடிக்க முடியாத லியனோ டாவின்சி யின்மோனலிசா ஓவியத்திற்கு நிகரான ஓவியம்.!

  இது மிஸ்ஸிங்......

  அதேபோல் ஒரு பெரிய மைதானத்தின் மறுமுனையில் ,அந்த டூப் மாடஸ்டி காரில் இருந்து இறங்கும்போதே தொலைவில் இருந்தே கார்வின் கண்டுபிடித்துவிடுவார்.!!!

  ReplyDelete
  Replies
  1. /////மாடஸ்டியின் கண்கள்......


   அவரின் பார்வை....


   தன்னம்பிக்கையா.? தெனாவெட்டா.? கர்வமா.?

   உணர்ச்சியை வெளிக்காட்டாத அந்த பார்வையில் .........

   ஒரு அழகிய இளம் பெண்ணின் காதல் கண்கள்! ஒருவித கண்டிப்பு.! ஒரு வித பரிவு.!   என்று கண்டுபிடிக்க முடியாத லியனோ டாவின்சி யின்மோனலிசா ஓவியத்திற்கு நிகரான ஓவியம்.!
   //////


   அருமையான விவரிப்பு! மாடஸ்டியின் கண்களைப்பற்றியும்,அது நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் பற்றியும் இதைவிட அழகாக விவரிப்பது கடினம்!

   திரும்பவும் ஃபார்முக்கு வந்துட்டீங்க M.V சார்!

   எல்லாம் இளவரசியின் மகிமை!

   Delete
  2. மாடஸ்டி வெங்கடேஸ்வரன் : //இது மிஸ்ஸிங்......//

   சார்...நீங்கள் சொல்லும் வசீகரம் இத்யாதி, இத்யாதியெல்லாமே black & white -ல் ; அல்லது b & w சித்திரம் மீது overlap ஆகும் இரண்டாவது வர்ணத்தில் உள்ள மாடஸ்டியின் சித்திரங்களில் தென்படும் சமாச்சாரங்கள் ! இதை போல !!

   ஆனால் process கலர்களில் நீங்கள் சொல்லும் சகலத்தையும் வரவழைப்பது சொல்லி மாளா சிரமம் ! பாருங்களேன் !!

   நண்பர் அஜய் அங்கு ஸ்கோர் செய்திருப்பது அசாத்தியமாய் !!

   Delete
  3. சார்..ஆனா மாடஸ்டி முகத்துல மஹாலட்சுமி கலை எட்டிப் பார்ப்பது உண்மை !

   Delete
  4. மாடஸ்டி அட்டைப் படத்தில் நல்ல அழகு கழுகு மலைக் கோட்டையில் ஓவியங்களும் அருமையாக இருக்கும் அதிலும் தேவதை அழகாக இருப்பாள் இன்னும் 5 நாட்களில் நமக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது

   Delete
 27. ஊர் கண்ணு நாய் கண்ணு பேய்கண்ணு பூனைக்கண்ணு எல்லாக் கண்ணும் கண்ணு விழுந்திடாம இருக்க துப்புடா என் மாடஸ்டி செல்லம்..
  மறுபதிப்பில் முதல் வண்ண பாக்கெட் சைஸ் வென்றவளே வாழிய

  ReplyDelete
  Replies
  1. நல்ல கண்ணு , நொள்ள கண்ணு,முண்டகண்ணு ....இதையெல்லாம் விட்டுட்டீங்களே தல.!

   Delete
  2. வருஷத்துக்கு ஒரு தரம் ஊர்ப்பக்கம் தலைகாட்டிப் போறவங்களுக்கு இதுமாதிரி துப்பச் சொல்லி திருஷ்டி கழிக்கறது, ஆரத்தி எடுக்கறது இதெல்லாம் ஜகஜம் தானே? ;)

   அப்புறம்... அது வெளிநாட்டுல வளர்ந்த பொண்ணு... 'துப்புடா செல்லம்'னு வெறுமனே சொல்லி மூஞ்சிலயே துப்பிடப்போகுது! :P

   Delete
  3. ///அது வெளிநாட்டுல வளர்ந்த பொண்ணு... 'துப்புடா செல்லம்'னு வெறுமனே சொல்லி மூஞ்சிலயே துப்பிடப்போகுது! :P///

   ஹிஹிஹி.!!

   ஆமாமா..!! அப்புறம் எல்லோரும் அதை துப்புகெட்ட மாடஸ்டின்னு சொல்லிடுவாங்க..!!
   அப்புறம் ஆரத்தியோட கலரப்பாத்துட்டு ஏதோ ஆரஞ்சு ஒயினுன்னு நினைச்சு அந்தபுள்ள கடகடன்னு குடிச்சிடவும் வாய்ப்பிருக்கு..!! :-)

   Delete
  4. ////எல்லோரும் அதை துப்புகெட்ட மாடஸ்டின்னு சொல்லிடுவாங்க..!!///

   'துப்பிக் கெட்ட மானஸ்தன்ஸ்'னு நமக்குப் பேர் வந்திடவும் வாய்ப்பிருக்கு! ;)

   Delete
  5. மாடஸ்டி நீ யார் மேல எல்லாம் துப்புனேனு இப்போ தெரிஞ்சு போச்சு

   Delete
  6. வெளிநாட்ல வளர்ந்த பொண்ணா? துப்பட்டா போட்டா எதிர் வீட்டு பொண்ணுணு

   Delete
  7. உன்னை எதிர்ப்பவரை மோதி மிதித்து விடு மாடஸ்டி
   அவர் முகத்தில் காரி உமிழ்ந்து விடு
   மாடஸ்டி

   Delete
  8. கிட் ட வந்து பிறாண்டுறாங்கோ முடியல

   Delete
  9. ///கிட் ட வந்து பிறாண்டுறாங்கோ முடியல.///

   இவிங்க இம்சையிலருந்து தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு இல்வார்ஷீ!

   உங்க செட்டுல கலக்குன காரிகனை கண்ணாலம் கட்டிகிட்டு ரிட்டயர்மெண்ட் வாங்கிடு இல்வார்ஷீ! ஆங்.! மறக்காம கார்வினுக்கு கேட் கீப்பர் வேலை குடுத்திடணும் இல்வார்ஷீ!!

   Delete
 28. மாடஸ்டி இன் அட்டைபடங்கள் செம. வாழ்த்துக்கள் நண்பர் அஜய் .

  ReplyDelete
 29. ஆர்ட் பேப்பரில் - கலரில் - பாக்கெட் சைஸ் - இதுதான் முதல் தடவை!
  Note: (2016 - புக்லெட் பாக்கெட் சைஸில் ஆர்ட் பேப்பரில் வந்தது!)

  ReplyDelete
  Replies
  1. Podiyan : 2015 -ல் வந்தது தான் பாக்கெட்டோ பாக்கெட் சைஸ் புக்லெட் !!

   Delete
 30. ****** ஒரு பெரிய்ய பெரிய்ய ஆசை! ******

  நமது எடிட்டர் தானே உருவாக்கிய ஒரு அட்டகாசமான சாகஸக் கதைக்கு நமது நண்பர்கள் அஜய் சாமி, சாரதி, சண்முக சுந்தரம், டாக்டர் சதீஷ் உள்ளிட்டவர்களில் யாரேனும் ஓரிருவர் தங்களின் ஓவியத் திறமையைக் காட்ட, ஏன் ஒரு முழுநீள, முழுக்க முழுக்க நாமே படைத்த காமிக்ஸ் ஒன்று உருவாகிடக்கூடாது?

  நிறைய்ய நிறைய்யவே மெனக்கெடல்களும், கால அவகாசமும் எடுத்துக் கொள்ளும் விசயம் இதுவென்பது புரிந்தாலும் கூட, என்றாவது ஒருநாள் சாத்தியமாகிடும் என்றே நம்புகிறேன்!

  ஊதுற சங்கை ஊதி வப்போமேன்னு...

  ReplyDelete
  Replies
  1. ///நமது எடிட்டர் தானே உருவாக்கிய ஒரு அட்டகாசமான சாகஸக் கதைக்கு நமது நண்பர்கள் அஜய் சாமி, சாரதி, சண்முக சுந்தரம், டாக்டர் சதீஷ் உள்ளிட்டவர்களில் யாரேனும் ஓரிருவர் தங்களின் ஓவியத் திறமையைக் காட்ட, ஏன் ஒரு முழுநீள, முழுக்க முழுக்க நாமே படைத்த காமிக்ஸ் ஒன்று உருவாகிடக்கூடாது? ///

   +1

   Delete
  2. அப்டியே லாஜிக் பாக்க நம்ம நண்பர்களயும் வச்சா அட்டகாசமான கத தயார் .

   Delete
  3. Erode VIJAY : //ஊதுற சங்கை ஊதி வப்போமேன்னு...//

   ஊதுறது காமிக்ஸ் வாசகர்களின் ஆர்வங்களுக்கான சங்காக இருந்து விடக் கூடாதே என்பது தான் சிக்கலே !!

   Delete
  4. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் //அப்டியே லாஜிக் பாக்க நம்ம நண்பர்களயும் வச்சா அட்டகாசமான கத தயார் .//

   அட...கடைசி காலம் வரைக்கும் ஒரு அரை மண்டையிலாச்சும் கேசத்தோடு ஒப்பேற்றி விடுகிறேனே ? அதற்குமே ஆப்பு வைக்கப் பார்த்தால் எப்படிங்கண்ணா ?

   Delete
  5. சாரிங்கண்ணா...இதெல்லாம் அச்சிடும் முன்னே...நீங்களும் பாக்கணுங்கண்ணா ...இவ்வளவ தாண்டியும் தவறு தட்டுப்படுமாண்ணு பாக்கணுங்கண்ணா...வந்தா...

   Delete
 31. ஆடு வேட்டை படலம்:
  காணாமல் போன ஆட்டைத் தேடி Tex & C0 செல்கிறது.ஒரே துப்பு ஆடு கார்சன் ஜாடையில் இருக்கும். நீண்ட தூர பயணத்திற்கு பின் அடிவானில் செவ்விந்தியர்களின் புகை சமிக்சையில் ஆட்டின் படம் தெரிகிறது. அங்கு விரைந்த Tex & Co விவரத்தை ஊர் தலைவனிடம் கேட்க புனித மானிடோவிற்கு ஆட்டு பிரியாணி போடுவதற்காக மற்ற குழுக்களை வரச் செய்ய புகை சமிக்ஞை அனுப்பியதாக தெரிவித்தாதார். டெக்ஸ் டைகரை எல்லா ஆடுகளையும் டெஸ்ட் செய்ய சொன்னார்.காணாமல் போன ஆடுகளை கண்டு பிடிக்க எண்ணி. சற்று நேரத்தில் கிராம தலைவர் ஆஜராகி டைகர் எல்லா ஆட்டையும் கடித்து எச்சில் பண்ணி விட்டார் என்றார். டெக்ஸ் உடனே டை கரை அழைத்து கேட்டதற்கு நீங்க தானே டேஸ்ட் பண்ண சொன்னீர் என்றார். அப்போது ஒரு ஆடு புல் புரையேறி நட்சத்திர லட்சினைையை வாந்தி யெடுத்தது. அந்த டெக்ஸாஸ் ஷெரிப் லட்சினையை வைத்து அந்த ஆடு தான் தான் தேடி வந்த ஆடு என்பபதை உணர்ந்த டெக்ஸ் நேருக்கு நேர் மோதலில் தன் நண்பன் டெக்ஸாஸ் வில்லி சுடப்பட்டு வைக்கோகோ போரில் விழுந்ததையும் அவரது வளர்ப்பு ஆடு ஷெரிப் லட்சினையும் விழுங்கியதையும் கூறி அந்த ஆட்டினை கோட் சிட்டிக்கு ஷெரிப்பாக நியமித்து விட்டு தங்கள் பயணத்தை Tex & C0 தொடர்ந்தந்தனர்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா!!!

   செம்ம! செம்ம!!

   மாடஸ்டி கதைகளவிட நல்லாவே இருக்குங்க!!

   Delete
  2. அருமையான கதை! ரொம்பவே சிக்கலான, நுணுக்கமான கதையம்சம் உள்ள இதுபோன்ற கதைகளை ஒரு அதி தீவிர டெக்ஸ் ரசிகரால் மட்டுமே படைக்க முடியும்! என்னோடு சேர்ந்து நீங்களும் இத்தாலிக்கு வருவதாக இருந்தால், கதை விவாத குழுவில் உங்களைச் சேர்த்துவிட பொனெல்லியிடம் சிபாரிசு செய்ய எனக்கொன்றும் தயக்கமில்லை!

   நிறைய்ய இடைவெளி விட்டுத்தான் இப்போல்லாம் மாடஸ்டி கதைங்க வந்துக்கிட்டிருக்குன்றதுனாலயோ என்னமோ... நிறையப்பேர் நல்லா சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்கன்றது புரியுது! :D

   Delete
 32. என்ன.... மாடஸ்டி பாக்கெட் சைஸில் வரப்போகுதா? இதென்ன புது சர்ப்ரைஸ்!! செமை! மகிழ்ச்சி! ஆச்சரியம்! மிகவும் நன்றி எடிட்டர் சார்!!

  (போன பதிவிலேயே பாக்கெட் சைஸ் என்பதை படித்துவிட்டேன். பின்னூட்டம்தான் போட முடியவில்லை. அதான், இப்போ படிப்பதைப்போல ஆச்சரியமா பின்னூட்டம் போட டிரை பண்ணினேன். ஹிஹி!!)

  ReplyDelete
 33. அஜய்சாமியின் கைவண்ணம் அருமை. அப்படியே கோழிபுடிக்கிற கூண்டு ஒண்ணு செஞ்சு அவரை அலேக்கா அதுல கவுத்துப்புடிச்சி, டெக்ஸ் படங்களையும் வரையச் சொல்லலாம் என நினைக்கிறேன். :-))))))

  ReplyDelete
  Replies
  1. ஆதி தாமிரா : சிவாஜி செத்துட்டாரா ?? ரேஞ்சிலே தான் தொடர்கிறீர்கள் சார் !! அஜய் already டெக்ஸ் கதைக்கு ராப்பர் போட ஆரம்பித்து விட்டார் !!

   இதோ அந்த "IN PROGRESS "தருணம் !

   Delete
  2. @எடிட்டர்,

   அட ஆமால்ல.. நான் கூட போன பதிவில் இதைப் பார்த்துவிட்டு, அவரது கையெழுத்தைக் கவனிக்காமல், இத்தாலிலதான் ஏதோ புதுசா கிராண்டியரா டிரை பண்ணியிருக்காங்க போலிருக்கு, அந்தக் கதையைப் போடுறதுக்குதான் நீங்க பில்டப் குடுக்குறீங்களோனு நினைச்சுட்டேன். இதுமாதிரி விஷயங்களை எதுக்கும் வெளக்கமாவே சொல்லிடுங்க.. விளக்கு சமாச்சாரங்கள்ல நமக்கு டியூப்லைட்னா ரொம்ப பிடிக்கும். :-)))))

   Delete
 34. நமது எடிட்டர் தானே உருவாக்கிய ஒரு அட்டகாசமான சாகஸக் கதைக்கு நமது நண்பர்கள் அஜய் சாமி, சாரதி, சண்முக சுந்தரம், டாக்டர் சதீஷ் உள்ளிட்டவர்களில் யாரேனும் ஓரிருவர் தங்களின் ஓவியத் திறமையைக் காட்ட, ஏன் ஒரு முழுநீள, முழுக்க முழுக்க நாமே படைத்த காமிக்ஸ் ஒன்று உருவாகிடக்கூடாது?


  ####₹₹₹₹######


  கதைக்கு ஏங்க மண்டைய குழம்பிட்டு இருக்கனும் ...நம்ம சிங்கத்தின் சிறு வயதில் தொடரையே இனி சித்திரகதையா வர வச்சுட்டா.....:-)

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : தலீவரே...நமக்குள்ளே எதுனாச்சும்னா பேசியே தீர்த்துக்குவோமே....? ஒய் திஸ் கொ.வெ ?

   Delete
 35. சமீபத்தில் மதன் அவர்களின் "மனிதனும் மர்மங்களும்" எனும் நூலை வாசிக்க நேர்ந்தது,அதில் வியப்பு என்னவெனில் அதில் நமது காமிக்ஸ் பற்றியும் ஒரு குறிப்பு வருகிறது.
  "மாண்ட்ரேக்" என்கிற மேஜிக் நிபுணரை ஹீரோவாகக் கொண்ட காமிக்ஸ் கதை ஓன்று உண்டு,அதில் வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகளில் பூமியை நோக்கி வருவார்கள்,உங்கள் கிரகத்தை அழிக்கப் போகிறோம் என்று தகவல் அனுப்புவார்கள்,யு.எஸ்.,ரஷ்ய ராக்கெட்டுகள் தயார் நிலையில் வைக்கப்படும். எந்த நிமிஷமும் தாக்குதல் நிகழலாம் என்று ரேடியோ,டிவிக்களில் செய்திகள் வந்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தும்,"மாண்ட்ரேக்" ஒரு விண்வெளி கூடத்தில் உச்சி மாடியில் விஞ்ஞானிகளுடன் நின்று கொண்டு ஏலியன்ஸ்களுடன் டெலிபதி மூலம் தொடர்பு கொள்ள முயற்சிப்பார்.
  இந்த கதையை நான் படித்தது இல்லை,நம் காமிக்ஸில் இந்த கதை வந்துள்ளதா? யாராவது படித்திருந்தால் சொல்லவும்.

  ReplyDelete
  Replies
  1. @ ஜென் குரு [எ] ரவுடிஜி

   நீங்க சொல்லுற விஷயங்கள் இந்திராஜல் காமிக்ஸில் வந்துள்ளன.நீங்கள் குறிப்பிடுவது போல டெலிபதி மூலமாக வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வது போல கதை என்நினைவுக்கு இல்லை. இருப்பினும்கூட தேடிபார்க்கிறேன்...இப்போது எனக்கு தெரிந்த விவரங்கள்...

   எனக்கு தெரிந்த சில விவரங்களை பகிர்ந்துகொள்கிறேன்...மாண்டிரெக் மாயாஜலங்க்களை கற்றுக்கொண்ட பள்ளியில் அவருடன் ஜாலங்கள் பயின்றவர்கள் பலர் கெட்டவழிகளில் மாறிபோனார்கள், அனாதையான இரண்டையர்களில் ஒருவர் மாண்டிரேக்...அவருடைய சகோதர்தான் பின்னாளில் 'கோப்ரா' பயங்கர எதிரியாக உருவெடுத்தார்.

   அதேபோல் 'அலீனா' என ஒரு பெண்ணும் கூட மாயஜாலங்களை கொள்ளையடிக்க,மாண்ரேக்கை மயக்க தவறான வழியில் பயன்படுத்தினாள். இவர்களின் குரு பெயர் 'தொரன்'; அவருக்கு வயது 300 ; தவறாக ஜாலங்கள் பயன்படுத்தும்போது எழும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண 'டெலிபதி மூலம் தன் குருவை தொடர்புகொண்டு மான்டிரேக் உரையாடுவார். உங்களின் நினைவுகளை மீட்க ஒரு...இங்கே'கிளிக்'

   அடுத்து பலகிரகங்களுக்கு மன்னான 'மக்னோன்' பல கதைகளில் பூமிக்கு வேற்றுகிரக தாங்குதல்கள் நடக்கும் போதெல்லாம் மாண்டிரெக்கிற்கு முப்பரிமானத்தில் வந்து உரையாடுவார்.மாண்டிரேக்கும் முப்பரிமாணத்தில் கண்டம்தாண்டி சென்று பேசுவார். மாண்டிரெக் கையில் ஒரு வாட்சு இருக்கும்,மன்னரால் வழங்கப்பட்ட அந்த வாட்சில்இருந்து வரும் சமிஞ்ஞை மூலமாக அவருடன் தொடர்புகொள்வார் மாண்டிரெக்.! அதுபற்றிய ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
  2. தகவலுக்கு நன்றி மா ஜி.

   Delete
 36. https://www.youtube.com/embed/l9zoSLvvufw?rel=0&wmode=transparent&border=0&autoplay=1&iv_load_policy=3

  ReplyDelete
  Replies
  1. Wow!! Fantastic!!! Largo series has element to be made into movie.. Hopefully we can expect sequels...

   Mr Bala....while giving a link about our comics please mention what it's about...so many will open the link without hesitation

   Thanks for the link....

   ( sorry for typing in English..

   Tamil input device in mobile is not working)

   Delete
  2. Typo..."largo series has every element "

   Delete
  3. @செ.அ,

   2008 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் இரண்டு லார்கோ விஞ்ச் சினிமாக்கள் வெளியாகியுள்ளன. இரண்டையுமே பார்த்துவிட்டேன். இவை ஹாலிவுட் தரத்துக்குக் குறைவில்லாத பிரஞ்சுப்படங்கள். ஆங்கிலப்பிரதிகள் டோரண்டுகளில் (வேறு வழியில்லாததால்) கிடைக்கின்றன. நமக்கு பழக்கமான கதை என்பதால் மிகவும் ஈடுபாட்டோடு பார்க்க முடிந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தன. செம ஆக்‌ஷன்!

   போலவே, லக்கி லூக் படங்களும் கூட இதுவரை இரண்டு (1991, 2009) வெளியாகியுள்ளன. 2009 படம் பார்த்துவிட்டேன், கொஞ்சம் சுமார் ரகம். 1991 இன்னும் பார்க்கவில்லை.

   மேற்கண்ட இரண்டு ஹீரோக்களும் திரையில் தொடர்ந்து வலம் வருவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், 2011, 2013 என திரையில் ஆதிக்கம் செலுத்திய நம் நீலக்குட்டி ஸ்மர்ஃப்ஸ் 2017ல் மூன்றாம் படத்தில் தோன்றவிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து பின்னுவார்கள் என நம்பலாம். நானறிந்தவை அவ்வளவுதான். நமது காமிக்ஸ் நாயகர்கள் வேறு யாரும் சினிமாவில் ஜொலித்தார்களா எனும் தகவல் தெரிந்த நண்பர்கள் பகிர்ந்துகொள்ளலாமே!!

   Delete

  4. @ ஆதி தாமிரா

   /////////2008 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் இரண்டு லார்கோ விஞ்ச் சினிமாக்கள் வெளியாகியுள்ளன. இரண்டையுமே பார்த்துவிட்டேன். இவை ஹாலிவுட் தரத்துக்குக் குறைவில்லாத பிரஞ்சுப்படங்கள். /////
   கூட படம் பார்த்த அந்த பிரெஞ்சு( தெரிஞ்ச ) பொண்ணு யாரு???? :-))
   பிரெஞ்ச்-ல் வெளியானது என்பதே எனக்கு செய்திதான்....
   இப்போது கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்க்-ம் டாரண்ட்-லிருந்து கொடுக்கப்பட்டதுதானா???
   (ஆங்கிலத்தில் இருப்பதால் எழும் வினா)

   //////நமக்கு பழக்கமான கதை என்பதால் மிகவும் ஈடுபாட்டோடு பார்க்க முடிந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தன. செம ஆக்‌ஷன்! /////
   ஆகா !!!!!! எனக்கும் பார்க்க ஆர்வம் பீறிடுகிறது


   /////நமது காமிக்ஸ் நாயகர்கள் வேறு யாரும் சினிமாவில் ஜொலித்தார்களா எனும் தகவல் தெரிந்த நண்பர்கள் பகிர்ந்துகொள்ளலாமே!!/////

   விவரம் அறிந்தோர் பகிரலாமே....

   பேட்மேன், ஷெர்லக் ஹோம்ஸ் தவிர.....


   Delete
  5. நமது பெல்ஜியத்து சஞ்சய் இராமசாமியை சேர்த்துக் கொள்ளுங்கள் பட்டியலில்...!

   அப்புறம் டேஞ்சர் டயபாலிக் !

   அப்புறம் நமது இரவுக் கழுகார் கூட 1985 -ல் வெள்ளித் திரையில் வலம் வந்திருக்கிறார் என்றால் நம்புவீர்களா ?!! பாருங்களேன் இங்கே - https://www.youtube.com/watch?v=piW7-HpSd9M

   ஷெர்லாக் ஹோம்ஸ் திரையினில் பிரபலம் !

   நமது திகில் டிடெக்டிவ் டைலன் டாக் கூட திரைவடிவில் தலை காட்டியவரே ! https://www.youtube.com/watch?v=cCeLIa02iy0

   Delete
  6. எல்லாவற்றையும் விடப் பெரிய கூத்து - மாடஸ்டியைத் திரைக்கு இட்டுச் சென்றதில் நிகழ்ந்தது ! கதாசிரியர் பீட்டர் ஓ டொன்னெலின் ஸ்கிரிப்ட்டை ஏகமாய் நோண்டித் தள்ளி மாடஸ்டியும், கார்வினும் ரொமான்ஸ் செய்வது போல ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது 1966 -ல் !

   அப்புறம் 2003 -ல் My Name is Modesty என்ற பெயரிலொரு திரைப்படம் நேரடி வீடியோ மார்கெட்டுக்கென எடுக்கப்பட்டது !

   Delete
  7. செம தகவல்கள் சார். டைலன் பார்த்துவிட வேண்டியதுதான். மாடஸ்டி தேடல் துவங்கியது. அப்படியே XIII பற்றி மேலதிக தகவல்கள் தைரிஞ்சா சொல்லுங்க சார். நெட்ல இருப்பவை அவர் கதை போலவே கொழப்பமா இருக்கு. இந்த லைனை வைச்சி ஏராளமான படம் வந்திருக்கு. ஆனா அபிசியலா எந்த படம்னு தெரியல..

   இதுக்குன்னே ஒரு தனி பதிவு போட்டா செமையா இருக்கும்.

   Delete
  8. அட போட வைக்கிறது சார் தகவல்கள்....லிங்க்-களை சேவ் செய்து பார்க்க வேண்டியதுதான்..

   ////எல்லாவற்றையும் விடப் பெரிய கூத்து - மாடஸ்டியைத் திரைக்கு இட்டுச் சென்றதில் நிகழ்ந்தது ! கதாசிரியர் பீட்டர் ஓ டொன்னெலின் ஸ்கிரிப்ட்டை ஏகமாய் நோண்டித் தள்ளி மாடஸ்டியும், கார்வினும் ரொமான்ஸ் செய்வது போல ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது 1966 -ல் ! /////

   ம வெ சார், ராவணன்ஜி ஆகியோர் இதை படிக்க நேர்ந்தால்...பிரளயம்தான்....   Delete
  9. காத்திருக்கும் SMURF புதிய திரைப்படத்தின் வெளியீட்டு வேளையிலேயே அதன் காமிக்ஸ் வடிவத்தையும் வெளியிட உள்ளனர் படைப்பாளிகள் !

   "நீங்களும் அதனில் ஆர்வமாய் இருப்பீர்களா ?" என்ற கேள்வியுடன், அந்த காமிக்ஸ் வடிவத்தை முழுமையாக அனுப்பியுள்ளனர் !! அட்டகாசமாய் உள்ளது !!

   Delete
  10. அப்புறம் "மர்ம மனிதன் மார்ட்டின்"கூட டி.வி. தொடர்களில் ரொம்பவே பிரபலம் ! அறுபது / எழுபது எபிஸோட்ஸ் உண்டு !

   நண்பர் XIII -ம் ஒரு பிரான்க்கோ / கனடா கூட்டு முயற்சியிலான டி.வி. தொடரில் வலம் வந்திருக்கிறார் ! ! XIII - THE CONSPIRACY "என்பது அதன் பெயர் ! 16 தேசங்களில் ஒளிபரப்பாகியுள்ளது - இந்தியா உட்பட !!! இங்கே HBO சானலில் வந்துள்ளது ! சுமாரான வரவேற்பே பெற்றுள்ளது பரவலாக !

   நெட்டில் தேடிப் பாருங்களேன் !

   Delete
  11. https://youtu.be/Mg_LN43RjX

   இது கலாமிட்டி ஜேன் படம். ஜேனை ஹஹீரோயினாக வைத்து நிறைய படங்கள் யூ ட்யுபில் கிடைக்கின்றன.

   சின்ன எச்சரிக்கை :
   நாம் வழக்கமாக லக்கி லூக் கதைகளில் பார்க்கும் கலாமிட்டி இல்லை இது. டெர்ரர் பொண்ணா இருக்கு :-)

   Delete
  12. XIII - THE CONSPIRACY
   HBO சானலில் வந்துள்ளது !
   இதை நானும் பாா்த்திருக்கிறேன் நிறைய வசனங்கள் கதை படித்ததினால் ஒரளவிற்க்கு யூகித்து காெள்ள முடிந்தது புத்தக அளவிற்க்கு விறு விறுப்பாக இல்லை...

   Delete
  13. XIII - THE CONSPIRACY
   HBO சானலில் வந்துள்ளது !
   இதை நானும் பாா்த்திருக்கிறேன் நிறைய வசனங்கள் கதை படித்ததினால் ஒரளவிற்க்கு யூகித்து காெள்ள முடிந்தது புத்தக அளவிற்க்கு விறு விறுப்பாக இல்லை...

   Delete
 37. Hi selvam, iam trying to find how to type in Tamil, sorry to post without elements. iam big fan of largo series of our comics in Tamil. Seems the movie released few years back. Looks very impressive...
  Will try to find soon how to type in Tamil...

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி திரு பாலா!!!! லார்கோ நமது காமிக்ஸ்-ல் வெளியானபின் பெரும்பாலானோர் அதன் ஆர்வமிகு ரசிகர்கள்தான்.....

   Delete
 38. https://youtu.be/piW7-HpSd9M


  இது டெக்ஸ் வில்லர் படம்.கார்சன் பக்காவாக பொருந்துகிறார். டெக்ஸ் கூட ஓகே. டைகர் ஜாக் மட்டுமே கொஞ்சம் உறுத்தலாக இருப்பார். (நாம் கதைகளில் பார்த்த டைகர் மாதிரி இல்லாமல்)

  https://youtu.be/dfdolxtzdO4

  இது 2009 ல் வெளியான லக்கிலூக் படத்தின் ட்ரெய்லர். செம்ம மாஸாக இருக்கும். லக்கியின் துப்பாக்கி சாகசங்கள் படத்திலும் பட்டையை கிளப்பும்.!!

  டெர்ரன்ஸ் ஹில் லக்கீயாக நடித்த டெய்சி டவுன் படமும் யூ ட்யூபில் கிடைக்கும். டால்டன்ஸ் சூப்பராக பொருந்தியிருப்பார்கள். ஆவ்ரேலும் ஜோவும் அட்டகாசமாக இருப்பார்கள். என்ன ஒரு சிரமம்னா கடைசிவரை டெர்ரன்ஸ் ஹில் லக்கி லூக் மாதிரி தெரியவே மாட்டார். :-)

  ReplyDelete
 39. மோனிகா விட்டி டெரன்ஸ் ஸ்டாம்ப் நடித்த சினிமாவுக்காக மாடஸ்டடியும் கார் வினும் ரொமான்ஸ் பண்ணுவதாக வந்த படம் தெரியும். பார்க்க பிடிக்க வில்லை. தமிழில் வந்திருந்தால் இருவருக்கும் டூயட் இருந்திருக்கும். மாடஸ்டிக்கு தனியே ஒரு குத்தாட்டமும் இருந்திருக்கும்

  ReplyDelete
 40. https://youtu.be/GUpqtkKMyhM

  இது சிஸ்கோ கிட் டீவி தொடரின் லிங். திரைப்படங்களும் கிடைக்கின்றன.

  https://youtu.be/G3lZ_dQsnUk

  இது நம்ம வேதாள மாயாத்மா படத்தின் ட்ரெய்லர். 1996 ல் படம் வெளியானது.

  ReplyDelete
 41. https://youtu.be/E4s7OI7IbvY

  மாண்ட்ரேக் த மெஜீசியன் மூவியின் லிங். டீவி தொடர்களும் உண்டு.

  அப்புறம் தூங்கப்போறதுக்கு முந்தி, இதுவரை உங்க யாருக்கும் தெரிந்திராத அரிய ரகசியம் ஒன்றையும் சொல்லிவிடுகிறேன்.
  அதாகப்பட்டது முத்து காமிக்ஸிலும் லயனிலும் தலைகாட்டிய ஜேம்ஸ்பாண்ட் கூட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். .!!


  ReplyDelete
 42. கண்ணன்!! செம தகவல்கள்.. சிஸ்கோ கூட உண்டா ...நைஸ்...

  ReplyDelete
  Replies
  1. @ செ.அபிராமி

   நம்ம வேதாளரை மறந்துட்டிங்களே... :(((((((((((

   பிளாஷ்கார்டன்,டார்ஜான் கூட உண்டே..!

   Delete
  2. மாயாவிஜி!!!! வேதாளரை யாரால் மறக்க இயலும்?? சிஸ்கோ இருப்பது அதிகம் பிரமிப்பை ஏற்படுத்தியது....பிளாஷ் கார்டனுமா? ..அருமை..அருமை....ஆதி சொன்னது போல் ஒரு தனிப்பதிவே போடலாம் போல.....

   Delete
  3. நம்ம பயங்கரவாதி டாக்டர் செவன் அச்சுஅசலாக நினைவுட்டும்,பிளாஷ்கார்டன் கதையின் வில்லன் திரையில் வரும் ஒரு காட்சி பார்க்க..இங்கே'கிளிக்'

   Delete
 43. என்ன இன்னைக்கி இப்படி கண்ண கட்டுதே.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு லிங்க் க கொடுக்கிறாங்க.கடவுளே இதையெல்லாம் குறிச்சுவெச்சு எப்பதான் பார்ப்பேனோ? நீதான் வழிகாட்டணும் தெய்வமே!!

  ReplyDelete
 44. This comment has been removed by the author.

  ReplyDelete
 45. அட டே.....இந்த முறை உப பதிவின் உப கமெண்ட்களே பட்டையை கிளப்புகிறதே...:-)

  ReplyDelete
 46. மாயாசார் @ அ அ அந்த வண்ண பாக்கெட் கதைகளின் வரிசையும்,
  வண்ண பாக்கெட்
  சைஸ் பற்றிய பட்டியலும் பாக்கி இருக்கே சார்.

  ReplyDelete
  Replies
  1. @ சேலம் இரவுகழுகார்

   தகவல்கள் தயாராக உள்ளன,அடுத்தவர்கள் சொல்லும் வாய்ப்பு தரனுமில்லையா..!!! மாடஸ்டி மாமியார் பஞ்சாயத்து-மகாசிவராத்திரின்னு டாபிக் வேறபக்கம் வேறமாறிடிச்சி. மொத்தம் வண்ணத்தில் வந்த வண்ணபாக்கெட் சைஸ் புத்தகங்கள் பதினொன்று என்ற தகவல் இப்பொது.!

   மறுப்பவர் இல்லை என்க.!
   வழிமொழிபவர் ஆம் என்க.! :))))))))))))

   Delete
  2. ஆம்...

   எனக்கு தெரிந்த சில...

   ஜூனியர் லயன் காமிக்ஸ்
   1. உலகம் சுற்றும் அலிபாபா.
   2. அதிரடி மன்னன்.
   3. புதிர் குகை.

   லயன் காமிக்ஸ்
   4.ஈகிள் மேன்.
   5.பயங்கரப் பொடியன்
   6.நிலவொளியில் நரபலி

   முத்து காமிக்ஸ்

   7.கொள்ளைக்கார பிசாசு

   8.
   9.
   10.
   11.

   12.கழுகு மலைக் கோட்டை (வரப்போவது)


   Delete
  3. பயங்கரபொடியன்
   நிவ்வொளியில் ஒரு நரபலி

   இவை இரண்டுமே பாக்கெட் சைஸ் அல்ல.!

   ஈகிள்மேன் பாக்கெட் சைசில் வந்தாலும் அதன் ஆரம்ப பக்கங்களின் சில மட்டுமே வண்ணம்,250 பக்ககோடைமலரில் 10 பக்கங்கள் மட்டுமே கலர் என்பதால் இதுவும் பட்டியலில் சேர்க்க முடியாது! :(

   Delete
  4. கலர் பாக்கெட்சைஸ் பட்டியல்

   1.கொரில்லா சாம்ராஜ்யம்--------முத்து காமிக்ஸ்

   2.கொள்ளைகார பிசாசு---------முத்து காமிக்ஸ்

   3.உலகம் சுற்றும் அலிபாபா-----------ஜீனியர் லயன்

   4.அதிரடி மன்னன்-----------ஜூனியர் லயன்

   5.புதிர் குகை------------ஜூனியர் லயன்

   6.சொர்கத்தின் சாவி-----------ஜூனியர் லயன்

   7.விற்பனைக்கு ஒரு செரிப்-------ஜூனியர் லயன்

   8.பேரிக்காய் தோட்டம்--------ஜூனியர் லயன்

   9.கம்ப்யூட்டர் மனிதன்---------ஜூனியர் லயன்

   10.மரண சர்க்கஸ்----------மினி லயன்

   11.ஆர்டிக் நகரம்--------மினி லயன்

   Delete
  5. கலர் பாக்கெட்சைஸ் பட்டியல்

   1.கொரில்லா சாம்ராஜ்யம்--------முத்து காமிக்ஸ்

   2.கொள்ளைகார பிசாசு---------முத்து காமிக்ஸ்

   3.உலகம் சுற்றும் அலிபாபா-----------ஜீனியர் லயன்

   4.அதிரடி மன்னன்-----------ஜூனியர் லயன்

   5.புதிர் குகை------------ஜூனியர் லயன்

   6.சொர்கத்தின் சாவி-----------ஜூனியர் லயன்

   7.விற்பனைக்கு ஒரு செரிப்-------ஜூனியர் லயன்

   8.பேரிக்காய் தோட்டம்--------ஜூனியர் லயன்

   9.கம்ப்யூட்டர் மனிதன்---------ஜூனியர் லயன்

   10.மரண சர்க்கஸ்----------மினி லயன்

   11.ஆர்டிக் நகரம்--------மினி லயன்

   Delete
  6. 1.கொரில்லா சாம்ராஜ்யம்--------முத்து காமிக்ஸ் -- சரி

   2.கொள்ளைகார பிசாசு---------முத்து காமிக்ஸ் -- சரி

   3.உலகம் சுற்றும் அலிபாபா-----------ஜீனியர் லயன் -- சரி

   4.அதிரடி மன்னன்-----------ஜூனியர் லயன் -- சரி

   5.புதிர் குகை------------ஜூனியர் லயன் -- சரி

   6.சொர்கத்தின் சாவி-----------ஜூனியர் லயன் -- சரி

   7.விற்பனைக்கு ஒரு செரிப்-------ஜூனியர் லயன் -- சரி

   8.பேரிக்காய் தோட்டம்--------ஜூனியர் லயன் -- சரி

   9.கம்ப்யூட்டர் மனிதன்---------ஜூனியர் லயன் -- சரி

   10.மரண சர்க்கஸ்----------மினி லயன் ( இது கருப்பு வெள்ளையில் தானே வந்திருக்கிறது இன்றிரவு அல்லது நாளை உறுதிப்படுத்துகிறேன் நண்பரே நன்றி )

   11.ஆர்டிக் நகரம்--------மினி லயன் ( இதுவும் கருப்பு வெள்ளை, இதனுடன் வந்த சாகச வீரன் சிந்துபாத்தானே கலரில் வந்தார் )

   12. கோடை மலர்-86 ஈகிள் மேன் ( Colour Half ) 4-18colour - 83 கொலை வெறியன் ( Colour Half ) 294-306 b/w 307-317 colour ( இதனை எப்படி கணக்கில் எடுக்க ) ( குப்புற படுத்து யோசிக்கும் படம் ஒன்று )

   13. லயன் சூப்பர் ஸ்பெஷல் பயங்கரப் பொடியன்

   இந்த தகவல்கள் சரிதானா மாயாவி ஜி
   சோதித்து சொல்லுங்களேன் நன்றி _/\_

   Delete
  7. சிந்துபாத் கதைதான்...அதாவது பின்பாதியான ஜீ.லயன் தான் கலர் கதை என்பது சரியே.!

   மரண சர்க்கஸ் க.வெ தான்,பரிசோதிக்கவே அப்படி மாத்திபோட்டேன்.:))))))

   பயங்கரபொடியன் தான் அதற்க்கான மாற்று பதில்..ஹீ..ஹீ..

   முத்து காமிக்ஸ் சம்மர் ஸ்பெஷல் கூட சில பக்கம் கலரில் வந்தது,அப்பு கதை மட்டுமே என்பதால் அதையும் சேர்க்கலாமா? வேண்டாமான்னு பாத்து சொல்லுங்க...நான் குகையில இருக்கிறதால செக்பண்ண சான்ஸ் இல்லை..ஹீ..ஹீ..!

   Delete
 47. எல்லோரும் ஆளாளுக்கு ஒரு லிங்க் போட்டு படம் காட்டுறதைப் பார்த்துட்டு நமக்குக் கொஞ்சம் பொறாமையாப் பூடுச்சு! ஹெஹ்ஹே... விட்டுடுவோமா என்ன?! இதோ இப்ப நீங்க இந்த லிங்க்குல பார்க்கப்போறது மோனாலிசாவின் புன்னகையை மிஞ்சிடும் ஒரு மர்மப் புன்னகை!
  " மிஸ்டர் மோனோலிசன் "

  சரி விடுங்க பாஸ்... Blog லைஃப்புல இதெல்லாம் ஜகஜம்!

  ReplyDelete
 48. ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...:-)

  ReplyDelete