Powered By Blogger

Sunday, February 12, 2017

இது இளவரசியின் வேளை !!

நண்பர்களே,
            
வணக்கம். ஜேசன் ப்ரைஸ் த்ரில்லரை விடவும் ; லார்கோ வின்ச்சின் rollercoaster கதைக்களங்களை விடவும் படு சுவாரஸ்யமான நிகழ்வுகளை நிஜத்தில் நாம் தரிசித்து வரும் நாட்களிவை ! ரிலீஸாகும் புதுப்படமோ ; கிரிக்கெட் மேட்ச்களின் ஓட்டங்களோ விறுவிறுப்பில் மங்கிப் போகும் வேளைதனில், நாமெல்லாம் எம்மாத்திரம் ? But நொடிக்கு நூறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சமயத்திலும், ஸ்திரமாய், நிலையாக சந்தோஷத்தை வழங்கி வரும் நமது ‘பொம்மை புக்‘ சஞ்சாரத்தை நாம்பாட்டுக்கு  தொடர்வோமே என்று தோன்றியதன் பலனே இந்தப் பதிவு !

இரண்டு வாரங்கள் கூட ஆகியிருக்கா நிலையில் பிப்ரவரி மாதத்து 4 இதழ்களும் அலசி, ஆராயப்பட்டு, ஞாபகப் பேழைகளுக்குள் புதையுண்டு போனதாய் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை ! ஆனால் இப்போதெல்லாம் புஷ்டியான ; தாட்டியமான  இதழ்கள் மாதந்தோறும் இல்லாப் பட்சத்தில் - ரெகுலர் இதழ்களை ஒரே மூச்சில் ஊதித் தள்ளி விடுகிறீர்கள் என்பது கண்கூடு ! காத்திருக்கும் மார்ச் மாதத்தினில் அப்படியொரு “குண்டு புக்” கடமையைச் செவ்வனே ஆற்றக் காத்திருப்பது நமது இளவரசியே ! ‘Super 6’-ன் இதழ் # 2 ஆக மாடஸ்டி பிளைஸியின் “கழுகுமலைக் கோட்டை” அடுத்த சில நாட்களில் அச்சுக்குப் புறப்பட வேண்டிய சூழல் என்பதால் கடந்த சில நாட்களாய் அதன் இறுதிக் கட்டப் பணிகளுக்குள் தலைநுழைத்துக் கிடந்தேன் ! ஏற்கனவே எப்போதோ- எங்கோ நான் பதிவிட்ட கருத்தின் மறுஒலிபரப்பே இது - but இருந்தாலும் அதனை இன்னுமொருமுறை உரக்கச் சொல்லுவதில் தவறில்லை என்று பட்டது !

“கழுகுமலைக் கோட்டை”! Boy... oh boy... oh boy”-  எனது Alltime Top 10 இதழ்களுக்குள் இதற்கொரு பிரதான இடம் உண்டென்று சிலபல ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய ஞாபகமுள்ளது ! இன்றைக்கு இதனை முழுமையாய் ஒரு மறுவாசிப்பு செய்திடும் போது - எனது கருத்தில் துளியும் மாறுதலில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது ! இப்போதுள்ள நண்பர்களுள் ஒரிஜினலாய் முத்து காமிக்ஸில் இந்த இதழ் வெளியான போதும் வாசகர்களாக இருந்தோர் எத்தனை சதவிகித்தினர் என்று தெரியவில்லை ; ஆனால் இன்றைக்கு அட்சரசுத்தமாய் அதே (பாக்கெட்) சைஸில் ; அதே அமைப்பில் இந்த இதழ் வெளியாக உள்ளதன் மூலம் ஒரு பின்னோக்கிய காலப்பயணம் உத்தரவாதம் என்று தோன்றுகிறது ! "எடிட்டர்" என்ற குல்லாவைப் போட்டுக் கொள்ளத் தொடங்கிய நாள் முதலாகவே நமது எந்தவொரு முந்தைய இதழினையுமே மறுமுறை படிக்கும் பழக்கத்தைத் தொலைத்து விட்டேன் ! அந்த மாதத்துப் பணி நிறைவுற்ற பின்னர் அந்தக் கதை, மேலோட்டமான நினைவுகளாக மட்டுமே எனக்குள் தொடர்ந்திடும் ! ‘க.ம.கோ‘ சமாச்சாரம் கூட இதே போலத் தான் என்றாலும் - கதையின் அழுத்தமானது மனதில் செம்மையாகவே பதிந்திருந்தது. So எடிட்டிங்கின் பொருட்டு அமர்ந்த போது - மும்மூர்த்திகளின் மறுபதிப்பு வேளைகளோ ; ஸ்பைடரின் reprint தருணங்களோ ரெடிமேடாகக் கொணரும் ராட்சஸ சைஸ் கொட்டாவிகள் எழுந்திடவில்லை ! மாறாக- ஏதோவொரு யுகத்தில் வாய்பிளக்கப் படித்த இந்தக் கதையினுடன் மீண்டுமொரு கைகுலுக்கல் செய்திடும் ஆர்வமே தலைதூக்கியது !

ஒரிஜினலாய் ‘க.ம.கோ.‘ வெளியான நாட்கள் முத்து காமிக்ஸிற்கு செம விறுவிறுப்பானவை ! Fleetway-ன் அலை சன்னமாய் ஓய்ந்து, அமெரிக்க dailystrip நாயகர்கள் ரிப் கிர்பி ரூபத்திலும், சார்லி, காரிகன், ஜார்ஜ் ஆகியோரின் அவதார்களிலும் சுற்றி வந்து கொண்டிருந்த தருணமது. அப்போது இந்த King Features நாயகர்களின் கதையுரிமைகளை மும்பையிலிருந்த நிறுவனம் மூலம் வாங்கி வந்து கொண்டிருந்தார்கள். ‘மாலைமதி‘ காமிக்ஸ் அதிரடியாய் உள்ளே புகுந்து ஆட்டத்தைத் தற்காலிகமாய்க் குலைத்ததும் ஒரு கட்டத்தில் நடந்தது. இதற்கு மத்தியில் மும்பையில் இன்னமுமொரு அயல்நாட்டுக் காமிக்ஸ் கதை விநியோகப் பிரதிநிதி இருப்பதை சீனியர் கண்டுபிடித்திருந்தார். அவர்களிடம் அந்நாட்களில் தருவித்த கதையே “கழுகுமலைக் கோட்டை”!.

இங்கிலாந்தில் செய்தித்தாளில் தொடராக வெளிவந்து கொண்டிருந்த மாடஸ்டி பிளைஸி கதைகள் அந்நாட்களில்  செம popular ! ஆங்கிலத்தில் ஏதோவொரு பெண்கள் பத்திரிகையிலும் இந்தியாவில் வெளிவந்து கொண்டிருந்தது ! இது போன்ற dailystrip தொடர்களைத் தருவிக்கும் வேளைகளில் கதைகளைப் படித்துப் பார்த்துத், தேர்வு செய்யும் சுதந்திரங்கள் பெரும்பாலும் இருப்பதில்லை ! இன்டர்நெட் கிடையாதெனும் போது, அதே தொடரின் இதர  கதைகள் / விமர்சனங்கள் என எதையும் படித்தறிவது ரொம்பவே கஷ்டம் ! So ஏஜெண்ட்கள் தூக்கி அனுப்பி வைக்கும் கதைகளே நமது வெளியீடுகளாகிடும் கட்டாயம் அன்றைக்குண்டு ! 1980-களின் பின்பகுதியிலும், ’90 களிலும் நான் அவர்களைக் கையைக், காலைப் பிடித்து தாஜா செய்து, ஒரு எட்டுப், பத்துக் கதைகளை மொத்தமாய் எடுத்துத் தரச் செய்து, ரூமில் அமர்ந்து பரீட்சைக்குப் படிப்பவனைப் போல மாங்கு மாங்கென்று படித்து விட்டு- அதனில் ‘தேவலை‘ என்று தோன்றும் கதைகளை மட்டும் வாங்கும் சுதந்திரத்தைக் கொண்டிருந்தேன் !

Back to the '70s - அன்றைக்கு மாடஸ்டியின் இந்தக் கதையினை அந்த ஏஜெண்ட் தற்செயலாய்த் தூக்கியனுப்பி வைத்தது ஒரு கடவுள் செயல் எனலாம் - simply becos மாடஸ்டி தொடரின் alltime best என்ற ரேஞ்சுக்கு உச்சமான கதையிது ! யாரது ஏற்பாடோ நினைவில்லை - இதனை பாக்கெட் சைஸுக்கு உருமாற்றம் செய்திடத் தீர்மானித்திருந்ததால் - கிட்டத்தட்ட 190 பக்க நீளத்தைக் ‘க.ம.கோ.‘ எட்டிப் பிடித்திருந்தது ! சித்திரங்களை கட்டத்தின் நடுவாக்கில் ஒட்டி விட்டு - சுற்றியிருக்கக் கூடிய காலியிடத்தினில் அந்த மையப் படத்துக்குப் பொருந்தும் விதத்தில் background-கள் வரைவது ஒரு கலை ! அதனில் பழம்தின்று கொட்டை போட்ட கில்லாடிகள் நிறையப் பேர் நம்மிடமுண்டு ! அந்நாட்களில் மாடஸ்டியின் இந்த சாகஸத்தில் அந்தப் பணிகளைச் செய்தவர் சிவகாசிக்கருகே உள்ளதொரு சிறு நகர அரசுப் பள்ளியில் பணியாற்றிய ஓவிய டீச்சர். பகுதிநேரமாய் நம்மிடம் வேலை செய்து வந்தார். So அவரது கைவண்ணத்தில் உருவானதே க.ம.கோ.!! அட்டைப்படமோ நமது சிகாமணியின் ஏற்பாடு !

அந்த ஒரிஜினல் இதழை மொட மொடவென ஒடியும் நியூஸ்பிரிண்டில் புரட்டிய போது ‘குப்‘பென்று நாசியைத் தாக்கியது தூசியின் நெடி மட்டுமன்றி ; அந்த எழுபதுகளின் நினைவுகளும். அந்த உற்சாகத்தோடே எடிட்டிங் வேலைகளை ஆரம்பித்த போது, நான் போட்டுக் கொண்டிருந்த முதல் கண்டிஷனானது - "No எக்ஸ்ட்ரா நம்பர்ஸ்" என்பதே ! ஒரிஜினலில் ஈ அடித்திருப்பின், அதே ஈயைத் தேடிப் பிடித்தாவது இம்முறையும் அடித்து விடுவது ; வசனங்களில் கைவைப்பதேயில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இருந்தாலும் - நெருடல் ஏற்படும் இடங்களில் மட்டுமாவது திருத்தங்கள் / மாற்றங்கள் செய்து கொள்ளலாமென்ற சன்னமான சிந்தனையும் எனக்குள் இருந்தன ! ஆனால் முத்து காமிக்ஸின் அந்நாட்களது வெளியீடுகளுள், மொழிபெயர்ப்புத் தரத்தின் ஒரு உச்சம் இந்த இதழ் என்பதை பக்கங்களைப் புரட்டப் புரட்டப் புரிந்து கொள்ள முடிந்தது ! நிச்சயமாய் இது நமது கருணையானந்தம் அவர்களின் வரிகள் என்பதையும் நொடியில் யூகிக்க முடிந்தது ! So சொற்பமான சில இடங்களில் அத்தியாவசியமான சில திருத்தங்கள் நீங்கலாக எங்கும் என் பேனாவைக் கத்திரியாக அவதாரம் எடுக்கச் செய்யவில்லை நான்!

கதையைப் பொறுத்தவரை ஒற்றை வார்த்தையில் விமர்சிப்பதெனில் - ‘stunning!‘ என்று தான் சொல்லத் தோன்றுகிறது ! பொதுவாய் மாடஸ்டி கதைகளில் விறுவிறுப்பிற்குப் பஞ்சமே இருப்பதில்லை என்றாலும், அழுத்தம் என்று வரும் போது ஒரு சில கதைகள் பெரிதாய் மதிப்பெண்கள் பெறுவதில்லை ! 100 கதைகள் கொண்ட இந்தத் தொடரில் நீங்கள் (தமிழில்- நமது இதழ்களிலாவது) படித்துள்ளவை ரொம்பவே சல்லடை போட்டுத் தேர்ந்தெடுக்கப் பெற்ற கதைகளே ! நானே reject செய்து விட்ட கதைகள் பின்னணியில் நிறையவே உள்ளன ! ஆனால் ‘க.ம.கோ.‘ - விறுவிறுப்பு + அழுத்தம் என இரண்டு தரப்புகளிலுமே பின்னிப் பெடலெடுத்திருப்பது ஒரு highlight ! So அந்த அதிரடி ஆக்ஷன் + சென்டிமெண்ட் கரம் கோர்க்கும் கதையை சந்தோஷமாய் ஒரு மறுவாசிப்புப் போட்ட உற்சாகத்தோடே இந்தப் பகுதியை எழுதுகிறேன் ! கலரிங்கைப் பொறுத்தவரையிலும், துவக்கத்தில் அறைகளுக்குள்ளும், ஆஸ்பத்திரிச் சுவர்களுக்குள்ளும் கதை நகர்ந்திடும் தருணத்தில் - லேசான தடுமாற்றம் எழவே செய்கிறது - சுவற்றையும், தரையையும், நாற்காலி, மேஜைகளையும் எவ்விதம் அழகாய் கலர் பண்ணிடுவதென்று?! ஆனால் பிற்பகுதியில் outdoors ; மலை ; நீலவானம் ; கழுகுகள் ராஜ்யம் என்றெல்லாம் கதை பயணிக்கத் தொடங்கும் வேளைகளில், கலரிங் ஒரு புதுப் பரிமாணத்தைத் தொடுகின்றது ! So ஒரு அட்டகாசமான கதைக்களம் - வித்தியாசமான வர்ணங்களோடு ஒரிஜினல் பாக்கெட் சைஸில் காத்துள்ளது ! And of course - நண்பர் அஜயின் அட்டகாசமான அட்டைப்படத்துடன் ! நண்பரின் இல்லத்திலும் ஒரு அழகான சிறு, புதுவரவு ஆஜராகியிருப்பதால் - அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்ல முகாந்திரங்கள் இரண்டாகின்றன! Congrats அஜய் ! ஜுனியரும் பல உயரங்களைத் தொட வாழ்த்துக்கள் ! So ஒரு அழகான கதை, பிசிறின்றி மறுபதிப்பாகக் காத்துள்ளது ! புதிதாய்ப் படிப்பவர்களாக இருப்பின், நிச்சயமொரு மிரட்டலான அனுபவம் காத்துள்ளது  என்பது உறுதி ! 

இம்மாதம் இளவரசியோடு வலம் வரக் காத்திருப்பது நமது fantasy தளபதி ‘தோர்கல்‘ ! நீண்ட, நெடும் இடைவெளிக்குப் பின்னே தலைகாட்டும் விண்வெளியின் மைந்தன் - வழக்கம் போல வண்ணத்தில், அதகள artwork-ல் மிரட்டுகிறார் ! இது அவரது முன்கதை flashback சார்ந்த கதைகளின் தொகுப்பு என்பதால் - இந்தக் கதாபாத்திரத்தை இன்னமும் நெருக்கமாய் நாம் புரிந்து கொள்ளவொரு வாய்ப்பு ! தோர்கல் கதைக்குப் பேனா பிடிக்கும் வாய்ப்பை சீனியருக்கே இம்முறையும் தந்திருந்தேன் - நேர்கோட்டுக் கதையெனும் போது பெரிதாய் சிரமங்கள் எழக்கூடாதென்ற நம்பிக்கையில் ! And சீனியரும் நிறைய அவகாசம் எடுத்துக் கொண்டு decent ஆனதொரு முயற்சியைச் செய்தும் வைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது ! ஆனால் எடிட்டிங்கின் போது - CINEBOOK ஆங்கில இதழைக் கையில் வைத்துக் கொண்டே  பக்கங்களுக்குள் புகுந்திட முனைந்த போது தான் புரிந்தது இந்தக் கதையின் மொழியாக்கத்தில் எத்தனை நுணுக்கங்கள் உள்ளனவென்று !! புதிதாய் எழுதுவதைக் கூடச் சமாளித்து விடலாம் - ஆனால் ஏற்கனவே உள்ளதொரு ஸ்கிரிப்டில் டிங்கரிங் செய்வது பிராணன் போகும் வேலை என்பதை இன்னமுமொரு முறை உணர்ந்தேன் - இந்த வாரத்தின் போக்கினில் ! அதிலும், இதுவொரு சுலபப் பணியாக இருக்குமென்று ஏதோவொரு அசட்டு அனுமானத்தில் இருந்துவிட்டு, அது நெட்டியைக் கழற்றும் போது நாக்கார் தான் பாவம் - தொங்கோ தொங்கென்று தொங்கிடுகிறார் ! Phew !!

அமர்க்களச் சித்திரங்களுடன் காத்திருக்கும் இந்த fantasy த்ரில்லருக்கு துளியும் மாற்றமிலா ஒரிஜினல் ராப்பரே ! பாருங்களேன் ! 


So மார்ச் மாதத்திலும் ஒரு fantasy களம் காத்துள்ளது !! 

ஏற்கனவே வெளியாகியுள்ள ஜேசன் ப்ரைஸ் "அனுபவத்தைப்" பற்றி இன்று விவாதிக்க எனக்கு ஆசை தான் ; ஆனால் நானிப்போது இருக்கும் ஊரில்  JIO-வின் internet internet சக்கரம் சுற்றும் வேகத்தினில்  ஆணிகளை அதிகளவில் நெம்பியெடுக்க சாத்தியமாகாது என்பது புரிகிறது ! So அதனை அடுத்த ஞாயிறுக்கென கொண்டு செல்வோமா ?

இந்த வாரம் "இளவரசி வாரம்" என்பதால் - அவரது டாப் கதைகள் பற்றியும் , அவற்றுள் உங்களது favorites பற்றியும் எழுதலாமே ? 

அதே  போல - ஒரு சுவாரஸ்யமான கேள்வியும் எழுந்தது எனக்குள் !! இதுவரையிலான நமது  சுமார் 775 + வெளியீடுகளுக்குள்  (லயன் ; திகில் ; மினி லயன்  ; ஜுனியர் ; etc ) ஒரு தற்போதைய TOP 10 தேர்வினைச் செய்திட  இயலுமா என்று ?! கார்ட்டூன் ; கௌபாய் ' டிடெக்டிவ் என்ற genre பாகுபாடுகளெல்லாம் இல்லாது - "இது லயன் ; இது முத்து ; இது மினி லயன் " என்ற வேற்றுமைகள் ஏதும் பாராது ரசனைகள் அளவுகோல்களின்படி ஒரு பட்டியலைப் போட தான் முனைவோமா ? நிச்சயம் இந்தத் தேர்வானது ரொம்பவே unique ஆன பட்டியல்களைத் தருமென்பது நிச்சயம் ! முதல் ஐந்தை இந்த வாரம் பதிவிட முயற்சிக்கலாமே ? நிறைய சிந்தியுங்கள்  ; நிறைய ஞாபகங்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள் ; அப்புறமாயொரு   பட்டியல் போட்டுத் தான் பாருங்களேன் ?

Bye for now !! See you around ! Have a great weekend !!


236 comments:

 1. இளவரசியின் கதைகளில் பாடசாலைக் காலத்தில் என்னை மிக ஈர்த்த கதை - கற்கால வேட்டை, பச்சைவனப்பாவையும் மிகப் பிடித்த கதைகயில் ஒன்றாகவிருந்தது. கழுகுமலைக் கோட்டை வாசிக்க ஓர் அண்ணனின்மூலம் கிடைத்த பின்னர் அது முதலிடத்துக்கு தாவிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. அதன் பின்னர் பல கதைகளை வாசித்து இரசித்திருக்கிறேன். நினைவுபடுத்திக்கொண்டு பட்டியலொன்றை வரிசைப்படுத்திட முயற்சிக்கிறேன்.

   Delete
  2. கழுகுமலைக் கோட்டை - மாடஸ்டியின் ஆரம்ப நிலை ஓவியரான Jim Holdaway யின் கைவண்ணமா?

   Delete
 2. சட்டென ஞாபகத்திற்கு வந்த 5 புத்தகங்கள்.

  சூப்பர் சர்க்கஸ்
  87 தீபாவளி மலர்
  இரத்தப்படலம் ( குண்டு புக்)
  NBS
  தங்க்க் கல்லறை

  ReplyDelete
 3. Replies
  1. வணக்கம் நண்பரே! நமது காமிக்ஸ் உங்கள் எண்ணம்களை எழுதலாமே! ஆர்வமுடன் உள்ளேன்!

   Delete
 4. I AM 10TH.GOOD MORNING EDITOR AND FRIENDS

  ReplyDelete
 5. இது இளவரசியின் வேளை !!தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்ற தலைப்பு?? :)

  ReplyDelete
 6. Replies
  1. வணக்கம் நண்பரே! நமது காமிக்ஸ் உங்கள் எண்ணம்களை எழுதலாமே! ஆர்வமுடன் உள்ளேன்!

   Delete
 7. இளவரிசியின் க.ம.காே.சிறு வயதில் படிக்கும் பாேது ஈா்த்த விஷயம்..
  வில்லியின் மயக்கத்தை தெளிய வைக்க மாடஸ்டியின் யாேனை அருமையானது
  அவர் துவண்டு விழும் சந்தர்ப்பங்களில் எல்லாம் எதிா்த்து பாேராட கற்றுகாெடுக்கும் மனாே வலிமை இப்பாேது நினைத்தாலும் மறக்க முடியாத ஒன்று (அது பாேல் இளவரசிக்கு பேனாவினால் நானே சட்டையும் பாேட்டு விட்டதும் மறக்க முடியாதது)

  ReplyDelete
  Replies
  1. /// (அது பாேல் இளவரசிக்கு பேனாவினால் நானே சட்டையும் பாேட்டு விட்டதும் மறக்க முடியாதது)///

   இவ்வளவு நல்லவராவும் இருக்கக்கூடாது சிவா..! :-)

   (நீங்களாவது சட்டையில டிசைன் போட்டிங்களா? இல்ல அதுவும் கோடுபோட்ட சட்டைதானா???)

   Delete
  2. க.ம.காே வண்ணத்தில் வரும்பாேது காா்வினை காப்பாற்ற மாடஸ்டி செய்யும் செயலை பாருங்கள் சட்டை என்ன ஸ்வெட்டரே பாேட்டு விடுவீா்கள்...

   Delete
 8. இளவரசியின் இந்த கதை படித்ததில்லை என்பதால் படிக்க ஆவலாக உள்ளேன்!

  ReplyDelete
 9. எனது நினைவில் உள்ளவை கோடை மலர்கள்

  ReplyDelete
 10. சூப்பர் சர்க்கஸ், புரட்சி தீ ,சதுரங்கத்தில் ஸ்பைடர்,நீதி காவலன் ஸ்பைடர் ,தங்க வேட்டை ,குற்ற வருடம் 2000,கொலை படை ,பழிவாங்கும் பொம்மை ,பாதாள போராட்டம் மனித எரிமலை, ரிப் கேர்பி யின் பட்லர் கோடீஸ்வரன் ஆகும் கதை தலைப்பு நினைவில் இல்லை இவையே என் நினைவில் நிற்கும் கதைகள் !

  ReplyDelete
  Replies
  1. காசில்லா கோடீஸ்வரன் - குளிர் நிரம்பிய நகரத்தின் சாலையில் தன்னந்தனியே யாரும் அற்றவனாக டெஸ்மாண்ட் நடக்கையில், கண்ணில் நீர் தளும்பும் வேளையது.

   Delete
 11. Replies
  1. டைகரின் - தங்கக் கல்லறை (எக்ஸ்ட்ரா நம்பர் இல்லாதது)
   டெக்ஸின் - பழிவாங்கும் புயல்
   காரிகனின் - ஒரு பனிமலை பயங்கரம்.
   லக்கியின் - புரட்சித்தீ
   ஸ்பைடரின் - சிறு பிள்ளை விளையாட்டு
   மாயாவியின் - மாயாவிக்கோர் மாயாவி
   ஜானியின் - நள்ளிரவுப் பிசாசு
   ப்ரின்ஸின் - நரகத்தின் எல்லையில், பற்றி எரியும் பாலைவனம்
   XIII-ன் - இரத்தப் படலம்.
   இரட்டை வேட்டையரின் - ஆப்பிரிக்க சதி.

   Delete
 12. காமிக்ஸ் நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.பதிவை படித்து விட்டு வருகிறோம்.

  ReplyDelete
 13. XIII
  டைகர் தங்கக்கல்லறை
  டெகஸ் கார்சனின் கடந்த காலம்
  பிரின்ஸ் நதியில் ஒரு நாடகம்
  சூப்பர் ஹுரோ சூப்பர்ஸ்பெசல்
  XIII மூன்று கடிகாரங்கள்
  தொடரும்...!

  ReplyDelete
 14. டெக்ஸின்-மந்திர மண்டலம்"நள்ளிரவு வேட்டை"இருளின் மைந்தர்கள்.பழிவாங்கும் புயல். கௌபாய் கதை களம் இல்லாம சகட்டு மேனிக்கு டெக்ஸை போட்டு தாக்கரதால பேர் செல்லரமாதிரி காலங்கடந்தும் குறியீடுகளா(காது..........).கழுகு இல்லாம இளவரசனை ரசிக்க முடியாதுல.
  லக்கி_பயங்கர பாலம்" சூப்பர் சர்கஸ்". சமகால நிகழ்வுகளை வெளிப்படுத்தும் விதமா மொழிப்பெயர்த்ததுல"பட்டா போட்டி".அத்து மீறாம' யாரும் முகம்கோணம நகைச்சுவையுணர்வு குன்றாம எடிட்டருடைய மேதாவிலாசத்தை உணர முடியும்.
  சிக்பில்_
  டைகர்_
  ப்ரின்ஸ்_
  ரிப்போர்ட்டர் ஜானி_
  மாடஸ்டி_
  இரசனை குறைபாடு ஏற்படத வரை உண்மை யான நல்ல கதைகள அனைவராலும் இரசிக்க முடியும்.

  ReplyDelete
  Replies
  1. அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம் நண்பர்களே.

   Delete
  2. மிகப்பெரிய காமிக்ஸ் இரசனையை சிறிய எண்ணிக்கையில் என்னால வகைப்படுத்த முடியாது. மாத வெளீயீடுகளில் இதழ்களின் எண்ணிக்கையை சற்றே உயர்த்தலாம்.

   Delete
 15. குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: நிலையாமை.
  குறள் 333:

  “”அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
  அற்குப ஆங்கே செயல்.””

  மு.வரதராசனார் உரை:
  செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

  பரிமேலழகர் உரை:
  அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடைத்துச் செல்வம், அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்ற பொழுதே செய்க. ('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழுள்ளவழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், அது பெற்றால் என்றும் அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின் அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.).

  மணக்குடவர் உரை:
  நில்லாத வியல்பை யுடைத்துச் செல்வம்; அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க. நிலையாமை மூன்று வகைப்படும்: செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என.

  திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
  நிலைத்து நில்லாத தன்மையினையுடையது செல்வமாகும். அதனைப் பெற்றால் செய்யப்பட வேண்டிய அறங்களை அப்பொழுதே செய்தல் வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உயர்திரு ஜகங் அவர்களுக்கு,

   உங்களுடைய தமிழ் மற்றும் திருக்குறள் ஆர்வம் குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. அதனை மற்றவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் புரிகிறது. ஆனால் அதற்கான தளம் இதுஅல்ல. தயவு செய்து உங்கள் திருக்குறள் பதிவுகளை இங்கே போட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்களைப்போல ராமாயணம் மற்றும் மஹாபாரதம் படிக்கும் ஆர்வலர்கள் அதனை இங்கே போட்டால் இந்த தளம் என்னாகும் என்று கொஞ்சம் யோசியுங்கள்.

   நான் பதிவுகளை சிறிய தொலைபேசியில் படிக்கிறேன், அதுவும் என்னால் முடியும்போது டேட்டா போட முடிந்தால். அப்போது உங்கள் பதிவு மட்டுமே பத்து பக்கம் என்னுடைய மொபைலில் வருகிறது. இது எனக்கு மிக சிரமம் கொடுக்கிறது. நேரத்தோடு, எனக்கு பணமும் செலவாகிறது. நான் இந்த தளத்திற்கு காமிக்ஸ் பற்றிபடிக்க மட்டுமே. வேறெதற்கும் இல்லை. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன்.

   மிக்க நன்றி

   அன்புடன்,
   தமிழ்

   Delete
  2. அன்பு நண்பர் தமிழ் அவர்களுக்கு"
   மிகவும் அரிதான மானிட பிறவியில் எத்துனை ஆத்மாக்கள் காலம் கடந்தும் உயிர்த்திருக்கும்.மனித சிந்தனை யின் உச்சமே படைப்புகளின் எச்சம். மிகப்பெரிய பேரரசுகள் கூட வீழ்ந்து விடும்.கடல் கடந்தும் யுகம் கடந்தும் பிரம்மாக்களின் படைப்புகள் வாழந்து விடும். தமிழினத்தின் முப்பாட்டனார் ஐயன் வள்ளுவரின் பேறு நாம் பெற்ற தவம்.நீர் சூழ்ந்த உலகுக்கு அறம்"பொருள்'"இன்பம்* எனும் நெறியாக்கத்தை வகுத்த வானவர் வள்ளுவர்.சில சிரமங்களை பொறுத்துக் கொள்ளுங்கள் அன்பு நண்பர்களே!வெல்வது தமிழ்.பதிவு பிழை என்று உணர்ந்தால் மன்னிக்கவும்.

   Delete
  3. திருக்குறள் எத்துணை உயர்வானது என்று மற்றவர் சொல்லி நமக்கு தெரியவேண்டியதில்லை........ ஆனால் அதற்கான தளம் இதுவல்ல என்ற தமிழ்'ன் கருத்தோடு நான் ஒத்து போகிறேன்

   Delete
 16. காலை வணக்கம் விஜயன் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼

  மாடஸ்டி கலரிங் மிக அருமையாக உள்ளது
  அந்த நீல வான பின்னனி மிக அருமை

  இப்படி போட்டீங்கன்னா நம்ம மாடஸ்டி வெங்கடேசன் சார் கண்டிப்பாக மற்ற எல்லா கதைகளையும் கலரில் கேட்டு சேர்மேன் PKSS ரோட்டில் தர்ணா நடத்திடுவாரு

  தயாராக இருந்துக்கோங்க சார் 🙏🏼
  நன்றி
  .

  ReplyDelete
 17. வணக்கம் சார்...
  வணக்கம் நண்பர்களே...

  ///நொடிக்கு நூறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சமயத்திலும், ஸ்திரமாய், நிலையாக சந்தோஷத்தை வழங்கி வரும் நமது ‘பொம்மை புக்‘ சஞ்சாரத்தை நாம்பாட்டுக்கு தொடர்வோமே ///... ஹா..ஹா... செம்ம சார். எவ்வளவு அசாதரணமான சூழலிலும் மனதை இலகுவாக்கும் உங்கள் எழுத்துக்கள் எங்களுக்கு வரப்பிரசாதங்கள்.

  ReplyDelete
 18. ///- நண்பர் அஜயின் அட்டகாசமான அட்டைப்படத்துடன் ! நண்பரின் இல்லத்திலும் ஒரு அழகான சிறு, புதுவரவு ஆஜராகியிருப்பதால் - அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்ல முகாந்திரங்கள் இரண்டாகின்றன! Congrats அஜய் ///...

  இரட்டை வாழ்த்துகள் நண்பர் அஜய் அவர்களே...

  ReplyDelete
 19. //கழுகுமலைக் கோட்டை”! Boy... oh boy... oh boy”- எனது Alltime Top 10 இதழ்களுக்குள் இதற்கொரு பிரதான இடம் உண்டென்று சிலபல ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய ஞாபகமுள்ளது ! இன்றைக்கு இதனை முழுமையாய் ஒரு மறுவாசிப்பு செய்திடும் போது - எனது கருத்தில் துளியும் மாறுதலில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது !//
  நீங்க என்ன சொன்னாலும் தவுல் வித்வான் ஒத்துப்பாரா என தெரியவில்லை.

  ReplyDelete
 20. ///நண்பரின் இல்லத்திலும் ஒரு அழகான சிறு, புதுவரவு ஆஜராகியிருப்பதால் - அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்ல முகாந்திரங்கள் இரண்டாகின்றன! Congrats அஜய் ! ஜுனியரும் பல உயரங்களைத் தொட வாழ்த்துக்கள் !///


  வாழ்த்துகள் அஜய் சார். .!!

  ReplyDelete
  Replies
  1. எனது வாழ்த்துக்களும் அஜய் சார்.

   Delete
 21. ஆகா.!" இளவரசிக்காகவே ஒரு பதிவு.! "வசிஸ்டர் வாயால் பிரம்ம ஸ்ரீ பட்டம்.! "

  ReplyDelete
 22. ///ஆண்டவனே எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும்!. ///

  /// நிதானமாக மூச்சுவிடுகிறாள்...காப்பாற்றிவிடலாம்! மீத தூரத்தையும் மூச்சைப் பிடித்து விபத்து இல்லாமல் இறங்கிவிட வேண்டும்.!///

  ஹாஹாஹா..!!

  குறிப்பாக இந்த வசனங்களை டீசராக உபயோகித்திருப்பது ஏதேனும் குறியீடா சார்.!?
  இள்வர்சீயின் தற்போதைய நிலமையை பிரதிபலிப்பதாகவே நேக்குத் தோன்றுகிறதே. .!! :-)

  ReplyDelete
 23. Good morning all, என்னை பொறுத்தவரை டாப் கதைகள் என்று பல கதைகளை சொல்லலாம். இதற்கு பதில் மொக்கை கதைகள் எவை என்று பட்டியலிட சொன்னால் பட்டியல் இட எளிதாக இருக்கும். சுமார் ரகங்களும் கூட இந்த அளவு கோல்களுக்கு பொருந்தும்

  ReplyDelete
 24. பத்திரிகைகளின் கருத்து சுதந்திரம். அரசியல் பக்க சார்பான பத்திரிகை தர்மம் போன்றவற்றை எண்ணி பார்க்கும் போது பொம்மை கதை வெளியிடும் நமது இதழ் எத்தனை மகத்துவமானதுனு உணர முடியும்.

  ReplyDelete
 25. ///நொடிக்கு நூறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சமயத்திலும், ஸ்திரமாய், நிலையாக சந்தோஷத்தை வழங்கி வரும் நமது ‘பொம்மை புக்‘ ///

  கோடியில் ஒரு வார்த்தை. !

  ReplyDelete
 26. கழுகு மலை கோட்டை: இன்றும் எனது மனதில் பசுமையாக உள்ள கதைகளில் இதுவும் ஒன்று. அதுவும் இளவரசியை காப்பாற்ற கார்வின் எடுக்கும் முயற்சியும், கார்வினை காப்பாற்ற இளவரசி எடுக்கும் முயற்சியாகட்டும் ஒன்றை ஒன்று சளைத்தது இல்லை. நட்பிற்காக இவர்கள் இருவரும் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த கதை மிக சிறந்த உதாரணம்.

  இதன் ஒரிஜினலை சிலமாதம்களுக்கு முன் மறுவாசிப்பு செய்தேன். இவர்களுக்கு உதவி செய்த பௌசர் மற்றும் அவரின் கழுகுகளுக்கும் என்னை கவர்ந்தன!

  உங்களின் இந்த பாக்கெட் சைஸ் மேலும் பல நமது பழைய & புதிய வாசகர்களை நமது காமிக்ஸ் பக்கம் இழுக்கும் சக்தி உள்ளது! இதனை நீங்கள் சென்னையில் வெளி இட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

  மறுபதிப்பில் பாக்கெட் சைஸ் இதழுக்கு க.ம.கோ. தேர்வு செய்தது மிகவும் சரியான முடிவு.

  ReplyDelete
 27. பத்திரிகைகளின் கருத்து சுதந்திரம். அரசியல் பக்க சார்பான பத்திரிகை தர்மம் போன்றவற்றை எண்ணி பார்க்கும் போது பொம்மை கதை வெளியிடும் நமது இதழ் எத்தனை மகத்துவமானதுனு உணர முடியும்.

  ReplyDelete
 28. அனைவருக்கும் காலை வணக்கம்!

  'கழுகு மலைக் கோட்டை'யை சில வருடங்களுக்கு முன் நான் குழந்தையாய் இருந்தபோது படித்திருக்கிறேன். முழுசா கதை ஞாபகத்தில் இல்லேன்னாலும் அந்த பெரிய பெரிய கழுகுகள், அதை வளத்தறவர், மாடஸ்டி-கார்வினின் ம**க்கூச்செறிய வைத்திடும் மலையேற்றம்'னு கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்துக்கு வருது!

  மறுபடியும் இதை; அதுவும் வண்ணத்தில்; அதுவும் என் டீன்ஏஜ் முடியறதுக்குள்ளாற படிக்கப்போறேன்றது ரெம்போ உற்சாகமா இருக்கு!

  நண்பர் சிபி சொன்னாப்ல அந்த நீல வானக் கலரிங் அருமையா இருக்கு!

  'தூரிகைத் தென்றல்' அஜய் சாமிக்கு என்னோட இரட்டை வாழ்த்துகளும்! (பெண் குழந்தையா இருந்தா 'மாடஸ்டி'னு பேர்வையுங்க. ஆண் குழந்தையா இருந்தா 'மாடஸ்டன்'னு பேர் வையுங்க)

  ReplyDelete
  Replies
  1. ///(பெண் குழந்தையா இருந்தா 'மாடஸ்டி'னு பேர்வையுங்க. ஆண் குழந்தையா இருந்தா 'மாடஸ்டன்'னு பேர் வையுங்க)////
   @ஈரோடு விஜய்.
   சின்ன gap கெடைச்ச அடிச்சி வுடுறதுல நீர் நிகரில்லாதவர்.
   சூப்பர்.

   Delete
  2. ///(பெண் குழந்தையா இருந்தா 'மாடஸ்டி'னு பேர்வையுங்க. ஆண் குழந்தையா இருந்தா 'மாடஸ்டன்'னு பேர் வையுங்க)////
   @ஈரோடு விஜய்.
   சின்ன gap கெடைச்ச அடிச்சி வுடுறதுல நீர் நிகரில்லாதவர்.
   சூப்பர்.

   Delete
  3. நன்றி பாஷா ஜி! நான், கிட்ஆர்டின் கண்ணன் எல்லாம் நம்ம காமெடி தல 'கவுண்டர்'ன் சிஷ்யப் பிள்ளைகள்! :)

   Delete
  4. அண்ணன் இப்போ முருகேசிக்கு இருநூறுவா மொய் செய்வாரு. .!!

   Delete
  5. //'கழுகு மலைக் கோட்டை'யை சில வருடங்களுக்கு முன் நான் குழந்தையாய் இருந்தபோது படித்திருக்கிறேன். //
   ஆகா,அந்த குழந்தையே நீங்கதானா?

   Delete
 29. 1.ரத்தப்படலம்
  2.பளிங்குசிலை மர்மம்
  3.சூப்பர் சர்க்கஸ்
  4.யார் அந்த மினி ஸ்பைடர்
  5.விற்பனைக்கு ஒரு ஷெரீப்
  6.ரத்தக்கட்டேரி மர்மம்
  7.ஓநாய் வேட்டை
  8.உலகம் சுற்றும் அலிபாபா
  9.சொர்க்கத்தின் சாவி
  10.புரட்சி தீ

  ReplyDelete
 30. பழய கதைகளைப்பற்றி நினைவுபடுத்தி

  இப்படி உசுப்பு ஏத்தியே


  ஆசிரியர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் காலை வணக்கம்
  ஈ வி Steel. மாயாவி நலமுடன்மற்றும்
  காமிக்ஸ்சுடன் நூறு ஆண்டு வாழ்க

  ReplyDelete
  Replies
  1. நன்றி கணேஷ்!
   எல்லாருமே நூறு+ ஆண்டுகளுக்கு நல்லாருப்போம்! புனித மானிடோவின் புத்தகங்களை ஏந்தியிருக்கும் நம்மை எகிப்தின் விதிக் கடவுளான 'ஷாய்' என்றென்றும் இளமையோடு வைத்திருப்பார்! ஜக்கம்மா சொல்லிட்டா!

   Delete
  2. ஆனா பிரம்மிப்பாய் கதைகள பாக்கும் போது நூறாண்டு போதாத நிச்சயமாய்...ஏன்னா மீத அறுவதாண்டுகளுக்குள்ள இன்னும் பல கதைகள் வந்திடும்..பதிமூனு மட்டும் இன பிறக்க உள்ள குழந்தைகளின் மனதை வாங்கி இளமை குறயாம வளம் வரணும் .

   Delete
 31. நண்பர்கள் அனைவருக்கும் காலைவணக்கங்கள்..!

  மாத்தியோசி-24

  ReplyDelete
 32. ஒவ்வொன்றும் பொன் குஞ்சு தான் என்றாலும் ஆசிரியரின் வேண்டுக்கோளுக்கான என் Favorite கதைகளின் வரிசை.
  1.லார்கோ கதைகள்.
  2.மின்னும் மரணம்.
  3. தங்க கல்லறை.
  4.ஹாலிவுட்டில் ஜாலி.
  5.பனி மண்டல கோட்டை.
  6.நள்ளிரவு வேட்டை.
  7.இரத்த படலம்.
  8.கார்சனின் கடந்த காலம்.
  9.பாலைவன பரலோகம்.
  10.மாடஸ்டி in இஸ்தான்புல்.

  ReplyDelete
 33. Yakari கதைகளை சந்தா C-யில் வெளியிடும் விருப்பம் உள்ளதாக முன்பு ஏதோ ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தீர்கள். பின்னர் அதை பற்றி தகவல் எதுவும் இல்லை. இந்த ஆண்டு சந்தாவிலும் இடம்பெறவில்லை. Yakari எப்போது வரும் சார்?

  ReplyDelete
 34. பத்திரிகைகளின் கருத்து சுதந்திரம். அரசியல் பக்க சார்பான பத்திரிகை தர்மம் போன்றவற்றை எண்ணி பார்க்கும் போது பொம்மை கதை வெளியிடும் நமது இதழ் எத்தனை மகத்துவமானதுனு உணர முடியும்.

  ReplyDelete
 35. நண்பர் அஜய் அவர்களுக்கு ..என்னுடைய இரட்டை வாழ்த்துக்கள் ...

  இது சமயம் நண்பரின் அந்த அட்டைப்படத்தையும் வெளியிட்டு இருந்தால் ரசித்து இருப்போமே சார் ..

  ReplyDelete
 36. இரண்டு வாரங்கள் கூட ஆகியிருக்கா நிலையில் பிப்ரவரி மாதத்து 4 இதழ்களும் அலசி, ஆராயப்பட்டு, ஞாபகப் பேழைகளுக்குள் புதையுண்டு போனதாய் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை


  ########

  உண்மையோ உண்மை சார் ...இதை ...தாங்கள் அடுத்த வருட இதழ் வெளியீடுகளை அட்டவனை படுத்தும் பொழுதும் மறவாமல் நினைவில் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

  ReplyDelete
 37. /// தோர்கல் கதைக்குப் பேனா பிடிக்கும் வாய்ப்பை சீனியருக்கே இம்முறையும் தந்திருந்தேன் - நேர்கோட்டுக் கதையெனும் போது பெரிதாய் சிரமங்கள் எழக்கூடாதென்ற நம்பிக்கையில் ! And சீனியரும் நிறைய அவகாசம் எடுத்துக் கொண்டு decent ஆனதொரு முயற்சியைச் செய்தும் வைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது ! ஆனால் எடிட்டிங்கின் போது - CINEBOOK ஆங்கில இதழைக் கையில் வைத்துக் கொண்டே பக்கங்களுக்குள் புகுந்திட முனைந்த போது தான் புரிந்தது இந்தக் கதையின் மொழியாக்கத்தில் எத்தனை நுணுக்கங்கள் உள்ளனவென்று ///

  சீனியர் எடிட்டரின் மொழிபெயர்ப்பு பட்டையைக் கிளப்பும் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை! ஆனால், அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி நீங்கள்தான் அவரது ஆர்வத்தை மட்டுப்படுத்துவதாகத் தோன்றுகிறது! குறிப்பாக, முத்து-45வது ஆண்டுமலரில் சீனியரின் ஒரு முழுநீளக் கட்டுரையை எதிர்பார்த்திருந்தோம்... கிடைத்ததோ கமர்கட் சைசில் ஒற்றை வரி மட்டுமே! ( வீ ஆர் ஆங்ரி வித் யூ எடிட்டர் சார்!)

  ReplyDelete
 38. இது இளவரசியின் வேளை....

  வேண்டாம் சார் ...அப்புறம் இளவரசியையும் ஏதாவது விடுதியில் அடைத்து வைத்து விட போகிறார்கள் ...இந்த கார்வின் வேற விடுமுறைல இருக்காரு சார் ..பிறகு இளவரசி அனைவரையும் காப்பாற்றியது போக இப்போது இளவரசியை வக்கில் மடிப்பாக்கம் மாடஸ்தி சார் தான் காப்பாற்றும் துர்பாக்கிய சூழல் அமைந்து விட போகிறது..:-)


  ReplyDelete
 39. முத்து முதல் இதழில் இருந்து 200 வது இதழ் வரையிலும் ...லயன் முதல் இதழில் இருந்து நூறாவது இதழ் வரையிலும் உள்ள இதழ்களில் பல இதழ்கள் இன்னும் படிக்கா சூழலில் எனது டாப் இதழ்கள் படித்ததில் இருந்து...  1..) இரத்த படலம் ...
  2) தங்க கல்லறை...  3..)சூப்பர் சர்க்கஸ்


  4..)டிராகன் நகரம்  5..)என் பெயர் லார்கோ..  அடுத்த ஐந்து சிறிது யோசனைகளுக்கு பிறகு சார் ...:-)

  ReplyDelete
  Replies
  1. என் பெயர் லார்கோ என்பது லார்கோவின் அனைத்து வரிசைகளுமே என்பது பின் குறிப்பு ..

   Delete
 40. ஒரு வேண்டுகோள்.தாங்கள் வெளியிட்ட வேதாளன்(மாயாவி) கதைகளை தொகுத்து ஒரே புத்தகமாகப் போடலாமே.அவர் எவர்கிரீன் ஹீரோ அல்லவா! ஒரு மாறுதலாகவும் அனைவரும் விரும்பும் புத்தகமாகவும் இருக்கும்.

  ReplyDelete
 41. ////இதுவரையிலான நமது சுமார் 775 + வெளியீடுகளுக்குள் (லயன் ; திகில் ; மினி லயன் ; ஜுனியர் ; etc ) ஒரு தற்போதைய TOP 10 தேர்வினைச் செய்திட இயலுமா என்று///

  ரொம்பக் கஷ்டம் சார்! பிரவாகமெடுக்கும் கதை வரிசைகளை பத்துக்குள் அடைப்பது ரொம்பவே சிரமம்! தவிர, இதுவரை படித்திடாத இதழ்களும் கணிசமாய் உண்டு!
  நான் இந்த வெளாட்டுக்கு வரலே!

  ReplyDelete
 42. ஒரு வேண்டுகோள்.தாங்கள் வெளியிட்ட வேதாளன்(மாயாவி) கதைகளை தொகுத்து ஒரே புத்தகமாகப் போடலாமே.அவர் எவர்கிரீன் ஹீரோ அல்லவா! ஒரு மாறுதலாகவும் அனைவரும் விரும்பும் புத்தகமாகவும் இருக்கும்.

  ReplyDelete
 43. அப்படியே உங்கள் favorite ten"னையும் குறிப்பிடுங்களேன் ஆசிரியரே...!!!
  நம்ம ரசனைகள் எந்தளவில் தங்களோடு ஒத்துபோகிறது என்றறிய ஆவல்.

  ReplyDelete
 44. விஜயன் சாருக்கு வணக்கம்.

  ReplyDelete
 45. Vanakaam.kalkiyil 1970el vanda SINGA KALUGUm kalugu malai kottaiyum ondra ?

  ReplyDelete
 46. This comment has been removed by the author.

  ReplyDelete
 47. ///இதுவரையிலான நமது சுமார் 775 + வெளியீடுகளுக்குள் (லயன் ; திகில் ; மினி லயன் ; ஜுனியர் ; etc ) ஒரு தற்போதைய TOP 10 தேர்வினைச் செய்திட இயலுமா என்று ?! ///

  ரொம்பவே கஷ்டமான கொஸ்டீன் சார்.!

  ஒரு கதையை நாம் படித்த சூழலையும், நேரத்தையும் பொருத்துகூட டாப் லிஸ்ட் அமையக்கூடும். உதாரணமாக முதன்முதலில் படித்தது, நீண்ட இடைவெக்குப்பின் மீண்டும் முதலில் படித்தது , மனம் முழுதும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்த தருணத்தில் படித்தது அல்லது வாழ்வில் சிக்கல் ஏற்பட்டிருந்த தருணத்தில் படித்தபோது சிக்கலை சின்னாபின்னமாக்கும் சக்தியை வழங்கியது என பலவகைகளில் டாப் கதைகள் இடம்பெறலாம். அந்த வகையில் என்னுடைய டாப் டென் லிஸ்ட்டை முயற்சிக்கிறேன். ஆனாலும் டாப் சொதப்பல் டென் கேட்டிருந்தீர்களெனில் வேலை சுளுவா இருந்திருக்குமோன்னு தோன்றது..! :-)

  ReplyDelete
 48. அராஜகம் அன்லிமிடேட்
  ஓர் காலத்தில் டெக்ஸ் தடித்த புத்தகங்களாக,ஆண்டு மாலராகவோ,கோடை மற்றும் சிறப்பு மலராக நீண்ட இடைவெளியில் வந்தன.
  அந்த கால கட்டத்தில் நான் ஊர் ஊராக பயணம் செய்து வந்ததால், அந்த அந்த பஸ் நிலையங்களில் புத்தக கடையை நோக்கித்தான் ஓடுவேன்.
  லயன்,முத்து கதைகளை ஆர்வத்துடன் வாங்கினேன்.அப்படிப்பட்ட சூழலில் தடித்த புத்தகமாய் டெக்ஸ்-ஐ கண்டதும் என் கண்கள் ஆர்வமாய் விரியும்.
  தங்க கல்லறை,XIII மற்றும் புது புது Heroக்கள் புதிது புதிதாய் வந்ததும் என் பார்வை விசாலமாய் போய் விட்டது.
  ஓர் கட்டத்தில் டெக்ஸ்க்கு ஓர் ஆண்டில் அதிகப்படியான Slot என்றான பிறகு, ஆசிரியர் வேறு முகத்தை டெரராய் வைத்துக்கொண்டு படித்தே தீர வேண்டும் என்று என்னை பார்த்து முறைத்து கொண்டே இருந்ததால், இன்றுவரை படித்து வருகிறேன்.அப்படித்தான் இதிலும் துவக்கப்பக்கங்களில் நுழைந்தபோது, ஆரம்பத்தில் கொஞ்ச பக்கங்கள் காண வில்லையோ என்ற எண்ணம் வந்து விட்டது.
  அவர்கள் தப்பி விடுவதும்,நம் ஆட்கள் திட்டம் போடுவதும்,நம் ஆளுக்கு ஓவர் பில்டப் கொடுக்க ஆரம்பிக்கிறார்களோ என்ற எண்ணம் வழக்கம் போல் வந்து விட்டது.
  ஆனால் நம் ஆள் டெரராய் மாறியதும்,கிடைத்தவனை சகட்டு மேனிக்கு தவைக்க எடுக்க ஆரம்பித்ததும் தான் தெரிந்தது. இப்பதாய்யா படத்தை போட்டுருக்காங்க.நம்ம ஆளுதா சோலோவுலேயே பிரிச்சு மேய ஆரம்பிக்கிற கதை கடைசி வரைக்கும் டெரரா தாய்யா போது.
  ஒழுக்கமா எல்லா கதையையு படிச்சுக்குட்டு தானே இருந்தேன்.
  இப்ப நானே டெரரு போல, என்னை வம்பிழுக்கிறவனை பாத்ததும் டெரருபோல உதைக்க தோணுதே.
  இன்னைக்கு வரைக்கும் ரொம்ப நல்லவனா தானே இருந்தேன்.
  என்ட குருவாயூப்பா
  எப்படி இருந்த நா இப்படி ஆயிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. இதில் விடுபட்டு போனது,
   ... தவைக்க அல்ல துவைக்க என்று படிக்கவும்.
   முக்கியமான ஒன்றை பதிவு செய்ய மறந்து விட்டேன்.
   அது
   அது வார வாரம் டெக்ஸ் கதைகளை ஆசிரியர் வெளியிட்டே ஆகவேண்டும், அதற்காய் சிவகாசி நமது அலுவலகம் முன் முகத்தை டெரராய் வைத்துக்கொண்டு, அவரை முறைக்கலாம் என்று உள்ளேன்.விருப்பப்பட்டவர் உடன் இணையவும்.

   Delete
  2. இதோ இணைந்து விட்டேன்.

   Delete
 49. 1. கார்சனின் கடந்த காலம்
  எத்தனைகாலம் கடந்தாலும் என் மனதில் முதலிடம் இந்த காவியத்திற்கே.!

  2. தங்கக் கல்லறை
  பொன்னாசையையும், ஆசை மனிதனை எப்படியெல்லாம் அலைகழிக்கும் என்பதை யதார்த்தத்தோடு அழகாக மிரட்டிய (சொல்லிய) கதை.

  3. மின்னும் மரணம் (முதல்பாகம்)
  முதன்முறையாக படித்தபோது மிரண்டுபோனதொரு காவியம். (படித்துகொண்டிருந்தபோது வாய் திறந்து கொண்டிருக்கிறதா என்று அடிக்கடி தொட்டுப்பார்த்துக் கொண்டது நினைவில் இருக்கிறது)

  4. ரத்தப் படலம் (ஜம்போ ஷ்பெசல்)
  இதற்கு காரணம் சொல்லவேண்டியதில்லையே..!!

  5. என் பெயர் லார்கோ (சர்ப்ரைஸ் ஷ்பெசல்) & ஒப்பந்தத்தின் கதை (NBS)

  யாரோ ஒரு தம்பி, பேண்ட் பாக்கெட்டுக்குள்ள கைய விட்டுகிட்டு நிமிர்ந்து உக்காரக்கூட திராணியில்லாமே தொங்கல் பயலைப்போல் சேரில் உக்காந்திருக்கானே!?, இவனெல்லாம் என்ன செஞ்சி என்ன ஆகப்போகுதோ ன்னு அசுவாரஸ்யமாக ஆரம்பித்து ஆச்சர்யத்தில் சுவாசித்த கதை.

  ஷெல்டன். -

  கைதியை மீட்க, ஸ்கெட்ச் போட்டு, கச்சிதமாக காய்நகர்த்தியும் ,கூட்டாளிகள் மூவரை காவு கொடுத்து வெற்றியை தொட்டும், அது பிரயோஜனமில்லாதது என்று தெரியவரும். வேலை கொடுத்தவனையே சோலி முடிக்கும் ஷெல்டனின் இக்கதையும் என்னுடைய டாப் லிஸ்டில் எப்போதும்.!!

  தொடரும். . .!!

  (மீண்டும் சொல்கிறேன். டாப் டென் என்பது கடினமானது சார். பத்துக்குள் அடைக்க முடியாதே. .:-))

  ReplyDelete
 50. சார்..அருமை..அட்டகாசம்...அதகளம்....மாடஸ்டி கதை என்றவுடன் காத தூரம் ஓடும் என்னை....இப்ப மனமுதிர்ச்சி இரசிக்க வைக்கிறதென்றாலும்...வழக்கம் போலவே எதிர் பார்ப்பேன்......ஆனா வெகு எதிர்பார்ப்பை ( லார்கோ அளவுக்கென வைத்துக் கொள்ளுங்களேன்)...ஏற்படுத்திய இதழ் என்றால் இதான்....அதற்கு காரணம் இப்ப பாக்கெட் சைஸ் பிடிக்குமா.....பிடிக்காதா என மனதுக்குள் பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தாலும்....அன்று சைசில் வித்யாசம் என்பதால் மனதை கவர்நத இந்த சைஸ் இப்ப எதிர்பார்ப்பை ஏற்றியதுடன் ...முழுவண்ணத்தில் இளவரசிய தரிசிக்கும் ஆவலும்...ஹார்டு பௌண்டு அட்டையில் பாக்கட் சைசில் வந்தால்....அதாவது ஒரு வேளை வந்தால் இது ஒரு மைல் கல் இதழாய அமையுமே என சந்தோசம் கூட.. என்னடா இது மனம் , த. இ.போ சைசுகு ஏங்கும் மனம் இந்த பாக்கட் சைசையும் மகிழ்வாய் ஏங்குதே என கேவலமாய் பார்த்தால்..மனம் சொல்லுத...இதுக்குஇந்த சைஸ் ஜோரு....ஆனா இபக்கு த. இ.போ சைச தவிர பிற சைஸ் பேஜாருன்னு போராட....இதத் தாண்டி வெகு சிறப்பென கருதுவது நண்பர்கள் பலரும் சிலாகிக்கும் கதையோட்டமும் முக்கியக் காரணம் . சார் என்ன நடந்தாலும் வீட்டுக்கு திரும்பனுமே எனும் உணர்வு இயல்பூக்கமாய் அமைவதப் போல இந்த பொம்மை புக் தரும் இதம் அலதிதான் . அதிலும் ஜேசன் தவிர இம்மாத இதழ் பிற புரட்டலன்னாலும் ...லார்கோ சில பக்கங்க ள புரட்டலாம்னு நுழைந்தால் புதுமயாய் மேலும் சில விஷயங்கள் ஈர்க்க முழுக் கதயும் படித்த பின்தான் நிமிர்கிறேன் என்றால்..அடுத்த தோர்கள் என்னயும் பார் என மாய வித்தை காட்டி மயக்குகிறார்...இந்தக்காதலும் சுவையும் என்றும் நீங்காதுதான் போல . பின்னோக்கி சென்றால் இந்த மாடஸ்டி கதய நான் அன்று வாங்கினேனா....வாங்கலயா என்பது நினைவில் இல்லை ...ஆவாரம்பாளையத்தில் பஸ்டாண்டு அருகே புத்துக்கண் கடை என ஒரு கடை இருக்கும் .நமது பழைய புத்தகங்கள் திடுமென அங்கே முளைக்கும் .ஏஜெண்டுகளிடம் தேங்கிய இதழ்கள வாங்கி விற்பார்கள் போலும் . ஜூனியர் லயன் வந்த புதிதில் என நினைக்கிறேன் .பத்து புத்தகங்களுக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்தன ...... அதில் ஒன்றுதான் அனைவரயும் ஈர்த்த தேம்ஸ் நதி மொத்தத்தயும் ஆக்கிரமித்த மஞ்சள் பூ மர்மம , மூளைத் திருடர்கள் , இதனுடன் சேர்ந்த க.ம..கோ . ...அவற்றை வாங்கினேன் ....க.ம.கோ வாங்கியது போலவும் உள்ளது ;வாங்காதத போலவும் உள்ளது .ஆனா அன்றய மன நிலையில் மாடஸ்டிய பிடிக்காட்டியும்..மாடஸ்டிய மீறி கவரச்சியான குண்டு ....பாக்கட் சைசால வாங்கி இருக்கலாம் ....கதய படிச்ச பின் திரை விலகலாம் .காத்திருக்கிறேன் கூடுதல் ஆவலாய் ...மேலும் தங்கள் உற்ச்சாக முன்னோட்டம் கண்டு .தோர்கள் அட்டைப் படம் சும்மா அசத்துது ...நீல வண்ணத்தில்....ஏன் ....முதல் வணண அட்டை என்று கூட சொல்லலாம் ..இதவரை காய்ந்த..வரண்ட நிறத்தில் வந்த தோர்கள் அட்டை சும்மா நீல வானில் ஜொலிக்குது .சார் அடுத்த பாகங்களயும் ஏப்ரல்லயே போட்டுடுங்க.....அப்பவும் அடங்காது தாகமெனினும் கொஞ்சமாட்டும் தணியட்டுமே.....அடுத்த வருடம் தீபாவளி மலர் போன்ற சிறப்பிதழ்கள்லயும் இதப் போட்டு அதிக இடங்கள ஒதுக்கி சீக்கிரம் தோர்கள் கடல்ல சந்தோச மு்த்தெடுக்க அனுமதிங்க .தோர்கள் அட்டையபடமும்..காட்டிய ொரு பக்கமும் சான்சே இல்ல...சூப்பர் ...கொலைப்படை கூட இப்டிதான்

  ReplyDelete
 51. நண்பர் அஜய்க்கு எனது வாழ்த்துகளும்....அட்டைமிரட்டும் என்பதில் ஐயமிலை

  ReplyDelete
 52. ///ஒரு சுவாரஸ்யமான கேள்வியும் எழுந்தது எனக்குள் !! இதுவரையிலான நமது சுமார் 775 + வெளியீடுகளுக்குள் (லயன் ; திகில் ; மினி லயன் ; ஜுனியர் ; etc )///

  இதனை படித்திட்டபோது என்னுள் எழுந்த சுவாரஸ்யமான கேள்வி யாதெனில்,

  இந்த 775+ இதழ்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் புண்ணியாத்மாக்கள் எத்தனை பேர் இங்கே இருக்கின்றீர்கள்?

  என் வசம் சுமார் 75+ இதழ்கள் மாத்திரமே உண்டுன்னு நான் சொன்னா நீங்க நம்பித்தான் ஆகோணும். .!!

  ReplyDelete
  Replies
  1. நல்ல எண்ணிப் பாருங்க.. அதிகமாக இருக்கும்..

   Delete
  2. ஆமா 76 ஆ கூட இருக்கும்.

   Delete
  3. என்னிடம் ஏறக்குறைய 1000 டைட்டில் இருக்கும் .(ராணி & மேகலா & இந்தரஜால் மொத்தமும் சேர்த்து .!)

   Delete
  4. என் வசம் சுமார் 75+ இதழ்கள் மாத்திரமே உண்டுன்னு நான் சொன்னா நீங்க நம்பித்தான் ஆகோணும். .!!

   ##₹₹3


   இதை நாங்க நம்பிட்டோம்ன்னு சொல்றதை நீங்களும் நம்பி தான் ஆகனும் சொல்லிபுட்டேன் ரவிகண்ணரே...

   Delete
  5. நான்தான் 75 க்கு பின்னால் ஒரு கூட்டல் குறியை போட்டு இருக்கிறேனே நண்பர்களே!
   75 க்கு மேல் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாமல்லவா?!!

   (நாங்க எல்லாம் ரொம்பவே உசாரான ஆளுக.! தீப்பெட்டி வாங்கினாக்கூட எல்லாக் குச்சியும் நல்லா எரியுதான்னு கொளுத்திப் பாத்துதான் வாங்குவோமாக்கும். .!!)

   Delete
 53. இங்கே ஒரு அன்பர் தொடர்ச்சியாக ஒவ்வொரு பதிவிலும் திருக்குறள், அதன் பொழிப்பு என பதிவிட்டு வருகிறார். திருக்குறள் அருமையானதுதான், ஆனால் அதுவும் பொருத்தமாக - ஏன் பதிவிடப்படுகிறது இங்கே என்ற விளக்கத்தோடு - ஆசிரியரின் பதிவுக்கோ அல்லது நண்பர்களின் பின்னூட்டத்துக்கோ பதிலாக பதிவிடப்பட்டால் பரவாயில்லை. இல்லாவிட்டால் - சம்பந்தமில்லாத சினிமா பதிவோ, வேறேதேனும் செய்திகளோ, அவ்வப்போது பதிவிடப்படும் அநாமதேய விளம்பரங்கள் போலவோ அது அர்த்தமற்றதாகிவிடுமே? அது அது அந்தந்த இடத்தில் இருந்தால்தான் மதிப்பு!

  ReplyDelete
  Replies
  1. ////அவ்வப்போது பதிவிடப்படும் அநாமதேய விளம்பரங்கள் போலவோ அது அர்த்தமற்றதாகிவிடுமே? அது அது அந்தந்த இடத்தில் இருந்தால்தான் மதிப்பு!////

   உண்மை உண்மை!

   Delete
  2. அட இருந்து விட்டு போகட்டும். அதில் அவருக்கு ஒரு திருப்தி. விடுங்கள் சார்.

   Delete
  3. திருக்குறளையும் அதன் விளக்கவுரையையும் சொல்ல அவருக்கு நிறைய இடங்கள் கிடைக்கும். வாட்ஸ் அப் , ஃபேஸ்புக் ப்ளாக் இன்னபிற இடங்கள் இருந்தாலும் நமது தளத்தில் வாரந்தோறும் தவறாமல் பதிவிடுகிறார் என்றால், அதில் ஏதோ அவருக்கொரு மனச்சாந்தி கிடைக்கக்கூடும். நானும் தளத்தை பின்பற்றுகிறேன் என்று சொல்வதைகூட மறைமுகமாக இப்படி வெளிப்படுத்தலாம். வெறுமனே உள்ளேன் அய்யா என்று போட்டுவிட்டு போகாமல் குறளும் விளக்கமும் என்ற நல்ல விசயத்தைத்தானே பதிவிடுகிறார். எனவே அவர் இதனை தொடர்ந்து செய்யலாம் என்பதே என் நிலைப்பாடு நண்பர்களே..!!

   Delete
  4. ///அதில் ஏதோ அவருக்கொரு மனச்சாந்தி கிடைக்கக்கூடும். நானும் தளத்தை பின்பற்றுகிறேன் என்று சொல்வதைகூட மறைமுகமாக இப்படி வெளிப்படுத்தலாம். ///

   தப்பில்லே! வெறும் நம்பரைப் போட்டுட்டு போறதுக்கு பதிலா ஒரு குறலைப் போடுறதும்; அதிலே அவருக்கொரு திருப்தியும் கிடைக்குதுன்னா தப்பில்லே!

   ////வெறுமனே உள்ளேன் அய்யா என்று போட்டுவிட்டு போகாமல் குறளும் விளக்கமும் என்ற நல்ல விசயத்தைத்தானே பதிவிடுகிறார். ///

   போயிண்ட்! ஆனா பெரிசா விளக்க உரைகள் கொடுக்கறதுக்குப் பதிலா, ஒவ்வொரு குறலுக்கும் ஒவ்வொரு குட்டிக்கதை சொன்னாக்கூட நல்லாத்தான் இருக்கும்! ஆஃப்டர்ஆல், நாமெல்லாம் கதைகேட்க வசப்பட்டவர்கள்தானே!

   Delete
  5. இந்த இடத்தில் பதிவிடும்போது அது பதிவுக்கு பொருத்தமாக இருந்தால் இரசிக்கப்படும். நான் எடிட்டரின் பதிவை மட்டும் படித்துவிட்டு செல்பவனல்ல. அனைத்து நண்பர்களதும் பின்னூட்டங்களையும் வாசிப்பவன். அப்படி வாசித்து வரும்போது ஒவ்வொரு தடவையும் அவரது திருக்குறள் பின்னூட்டத்தில் நமது காமிக்ஸ்களுக்கு ரிலேட்டட்டாக ஏதாவது வருமா என்று பல தடவை வாசித்து ஏமாந்த பின்னரே இந்த கருத்தினை பதிவிட்டேன். பின்னூட்டங்களை வாசிக்காதிருப்போருக்கு அந்த ஏமாற்றம் புரிய வாய்ப்பில்லை!

   Delete
  6. அவரவருக்கு மனச் சாந்தி கிடைக்கத்தான் இப்போது தனிப்பட்ட சோஷியல் மீடியாக்கள் உண்டே!

   Delete
  7. ஆசிரியரின் அடுத்த பதிவிலிருந்து கலைஞரின உரையை ஒருவரும் சாலமன் பாப்பையாவின் உரையை இன்னொருவருமாக பின்னூட்டமிட ஆரம்பித்தால்?
   நாளை சமையல் குறிப்புகளும் வரலாம்....

   Delete
 54. பிப்ரவரி இதழ்களின் விமர்சனம்:

  முதலாவது ஜேசன்....

  அட்டை படம் : அருமை
  சித்திரங்கள் : அருமை
  கதை : அருமை
  ஒரு வரி விமர்சனம் : கதையை முடித்த விதம் அருமை. இன்னும் கேள்விகள் பாக்கி இருக்கிறதோ????

  இரண்டாவது டெக்ஸ்:

  அட்டை படம் : சொதப்பல்(கதைக்கும் அட்டை படத்துக்கும் சம்பந்தமே இல்லை)
  சித்திரங்கள் : அருமை
  கதை : சுமார்
  ஒரு வரி விமர்சனம் : தல கதையை எப்படி இருந்தாலும் படிக்க முடியும்....

  மூன்றாவது மந்திரியார்:

  அட்டை படம் : அருமை
  சித்திரங்கள் : அருமை
  கதைகள் : சுமார்
  ஒரு வரி விமர்சனம் : இந்த முறை என்னவோ ஏமாற்றம் தான் எனக்கு??!!!!

  நான்காவது லாரன்ஸ் & டேவிட்:

  அட்டை படம் : சுமார்
  சித்திரங்கள் : சுமார்
  கதை : சுமார்
  ஒரு வரி விமர்சனம் : அறிவு வளர்ந்தது எவ்வளவு தவறு என்பதை மறுபதிப்புகள் நிருபித்து கொண்டு இருக்கின்றன....!!

  ReplyDelete
 55. பிப்ரவரி இதழ்களின் விமர்சனம்:

  முதலாவது ஜேசன்....

  அட்டை படம் : அருமை
  சித்திரங்கள் : அருமை
  கதை : அருமை
  ஒரு வரி விமர்சனம் : கதையை முடித்த விதம் அருமை. இன்னும் கேள்விகள் பாக்கி இருக்கிறதோ????

  இரண்டாவது டெக்ஸ்:

  அட்டை படம் : சொதப்பல்(கதைக்கும் அட்டை படத்துக்கும் சம்பந்தமே இல்லை)
  சித்திரங்கள் : அருமை
  கதை : சுமார்
  ஒரு வரி விமர்சனம் : தல கதையை எப்படி இருந்தாலும் படிக்க முடியும்....

  மூன்றாவது மந்திரியார்:

  அட்டை படம் : அருமை
  சித்திரங்கள் : அருமை
  கதைகள் : சுமார்
  ஒரு வரி விமர்சனம் : இந்த முறை என்னவோ ஏமாற்றம் தான் எனக்கு??!!!!

  நான்காவது லாரன்ஸ் & டேவிட்:

  அட்டை படம் : சுமார்
  சித்திரங்கள் : சுமார்
  கதை : சுமார்
  ஒரு வரி விமர்சனம் : அறிவு வளர்ந்தது எவ்வளவு தவறு என்பதை மறுபதிப்புகள் நிருபித்து கொண்டு இருக்கின்றன....!!

  ReplyDelete
 56. 1. மின்னும் மரணம் ( தங்க தலைவன் )
  2. ரத்தப் படலம் (13)
  3. தங்க கல்லறை ( தங்க தலைவன் )
  4. ரத்த கோட்டை ( தங்க தலைவன் )
  5. எல்லையில் ஒரு யுத்தம் (டெக்ஸ் )
  6. பிணம் காத்த புதையல் (காரிகன் )
  7. சிங்கத்திற்கு ஒரு சவால் (ஜார்ஜ் )
  8. சைத்தான் வேட்டை (டெக்ஸ் )
  9. கான்கிரீட் கானகம் நியூயார்க் (லார்கோ )
  10. பொடியன் பில்லி (லக்கி )

  ReplyDelete
  Replies

  1. இதுவே டாப் 11 ன்னா பதிவே போட்டு இருக்க மாட்டேன்,,, ஏன்னா பேசிக்கலி ஐ யாம் எ சோம்பேறி

   Delete
  2. ரம்மி ஜி,ஹா,ஹா,ஹா.

   Delete
 57. வணக்கம் நண்பர்களே...!

  ReplyDelete
 58. நண்பர் அஜய் இற்கு இரட்டிப்பு வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
 59. எனது சாய்ஸ்.!

  1) பழி வாங்கும் புயல் (மாடஸ்டி)

  2) கானகத்தில் ஒரு கண்ணாமூச்சி.

  3) பச்சை வனப்பாவை.

  3) மரணப்பிடி

  ReplyDelete
  Replies
  1. வக்கீல்னாலே எப்பவுமே பொய் ய தான் சொல்லனுமா???\

   Delete
  2. மாடஸ்டி ரசிகர்கள் பொய் சொல்ல மாட்டாங்க

   Delete
 60. ///இதுவரையிலான நமது சுமார் 775 + வெளியீடுகளுக்குள் (லயன் ; திகில் ; மினி லயன் ; ஜுனியர் ; etc ) ஒரு தற்போதைய TOP 10 தேர்வினைச் செய்திட இயலுமா என்று ?! ///
  ரொம்ப கஷ்டமான கேள்வி,ஏன்னா பழைய இதழ்களை நிறைய படித்ததில்லை,படித்ததிலும் பிடித்ததே நிறைய,மேலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசனையின் அளவுகோல் மாறிக் கொண்டே உள்ளது.எனவே இந்த கேள்வியை தாண்டி போக வேண்டியதுதான்.

  ReplyDelete
 61. மிகவும் கடினமான ஒரு கேள்வி சார் . ஒவ்வொன்றும் முத்துக்கள் . காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
  Top 10 இனை வகைப்படுத்துவது கடினம் .
  1)XIII
  2) தங்க கல்லறை
  3) கார்சனின் கடந்த காலம்
  4) தலை இல்லா போராளி
  5) பனியில் புதைத்த ரகசியம்
  6) NBS
  7) சூப்பர் சர்க்கஸ்
  8) பனி மண்டல கோட்டை
  9) லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷல்
  10) மக்னம் ஸ்பெஷல்
  இன்னும் நிறைய ........ ஒவ்வொன்றும் ஒரு விதம் . நவ ரசங்கள் .
  எதை எடுப்பது , எதை விடுவது

  ReplyDelete
 62. My all time top 5
  1 Xiii
  2 thanga kallarai
  3 karsonin kadantha kalam
  4 Spider rakshasa kullan
  5 green manor/ en peyar largo

  ReplyDelete
 63. கழுகு மலைக்கோட்டை மெலிதாக நினைவில் உள்ளது.மாடஸ்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
  "இளவரசியே முதல் அரசி.
  மற்ற அரசியெல்லாம்
  வெறும் ரேசன் அரிசி"

  ReplyDelete
 64. இனிய மாலை வணக்கம் எடிட்டர் சார்!!!
  இனிய மாலை வணக்கம் நண்பர்களே!!!

  ReplyDelete
 65. This comment has been removed by the author.

  ReplyDelete
 66. டியர் எடிட்டர்க்கு,

  திருப்பூர் புத்தக கண்காட்சியில் கடந்த ஆறு மாத புத்தகங்கள் : லக்கி ஸ்பெசல் /
  லக்கி / ஸ்மர்ப்ஸ்
  + ப்ளூகோட் கேப்டன் டைகர் / டெக்ஸ் / 13 வகையரா என புத்தகங்களே இல்லாமல் காற்றாடிக்கொண்டு பழைய புத்தகங்களையும் ரீபிரிண்ட்களையுமே ரேக்குகளில் மாற்றி மாற்றி வைத்து ஒப்பேற்றினால் நமது காமிக்ஸ் வாசகர் வட்டங்களையும் குழந்தைகள் வட்டங்களையும் இது போன்ற புத்தககண்காட்சிகளில் எப்படி ஈர்க்கமுடியும் ?

  திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கு வரும் நண்பர்கள் சொல்லி நேரில் சென்றபோதுதான் எங்களுக்கே உறைத்தது.

  நாங்களும் வாசக நண்பர்களும் புத்தகங்கள் வாங்க சென்று வெறும் கையோடு திரும்பியதுதான் மிச்சம்

  வரும் காமிக்ஸ் நண்பர்கள் வாசக/வாசகியர்/குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் என்னங்க பழைய புக்ஸ் + ரீபிரிண்ட்கள் தான் இருக்கிறதே என புலம்பிச் சென்றது வேதனை.

  இது உங்களுக்கு நஷ்டங்களையும்/சரிவுகளையும் உருவாக்குமே தவிர வாசகர் வட்டங்களையும் , விற்பனையையும், அதிகப்படுத்தாது .

  வருத்தத்தில் உள்ள திருப்பூர் வாசகர்கள் சார்பாக
  - டெக்ஸ் சம்பத்

  ReplyDelete
  Replies
  1. இதை தான் நாம் சரி செய்ய வேண்டும்,வழி ஏதும் உண்டா

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. என்னோட கேள்வியை நான் கேட்டிட்டேன்
   இது யாரையும் புண்படுத்த அல்ல
   நம் அடுத்த தலைமுறைக்கான கேள்வியிது

   தவறாக இருந்தால் நண்பர்கள் என்னை மன்னிகவும்

   Delete
  4. ////நமது காமிக்ஸ் நண்பர்கள் நான் கேட்ட எடிட்டரை பாதிக்கும் கேள்விகளை கடந்து செல்லும் நம்காமிக்ஸ் நண்பர்களை கண்டால் எரிச்சல் தான் மிஞ்சுகிறது ////

   என்ன செய்யவேண்டுமென்கிறீர்கள் சம்பத்? சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டுமா?
   உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்கலாம்தான்! அவ்வப்போது ஸ்டாலுக்கு ஒரு விசிட் அடித்து இக்குறைகளைக் களைய முன்னரே முயற்சி எடுத்திருக்கலாமே? அடுத்தவர் வந்து சொல்லிதானே உங்களுக்கே தெரிகிறது? அதுபோலவே, உங்களைப் போன்றவர்கள் சொன்னால்தானே எடிட்டருக்கும் தெரியும்?

   தவிர, எந்தவொரு புத்தகக் கண்காட்சியிலும் அதன் இறுதி தினங்களின்போது நம் வெளியீடுகளில் சில/பலவற்றைக் காணமுடியாமல் போவது சகஜமே (குறிப்பாக, டெக்ஸ் மற்றும் லக்கிலூக் கதைகள்)! ஆரம்பநாட்களின்போது எல்லா புத்தகங்களும் காணக் கிடைப்பதும், இறுதிநாட்களின்போது 'மீதமிருப்பவை விற்றால் போதும்' என்ற மனநிலையிலிருப்பதும் கிட்டத்தட்ட எல்லா புத்தகத் திருவிழாக்களிலும் தொடர்வதாக என் கணிப்பு! ஆனால் இதில் தவறொன்றுமில்லை! சிவகாசியிலிருந்து புத்தகங்களை பார்சல் (செலவு) செய்து அனுப்பிவைப்பதும், அடுத்த ஓரிரு தினங்களிலேயே (விற்பனையாகாமல் மீந்துபோனவற்றை) மறுபடியும் பார்சல் (செலவு மற்றும் சில நடைமுறைச் சிக்கல்கள்) செய்து சிவகாசிக்கு அனுப்பி வைப்பதும் தேவையில்லாத விசயமாக எடிட்டரோ/விற்பனையாளரோ கருதியிருக்கக்கூடும்!

   இவைபோக, குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே குடோனில் ஸ்டாக் உள்ள புத்தகங்கள் 'அடுத்து வரயிருக்கும் புத்தகத் திருவிழாவுக்கு number of titles கணிசமான எண்ணிக்கையில் வேண்டும்' என்பதற்காகவே காரணத்தோடு நிறுத்தி வைக்கப்படவும் வாய்ப்பிருக்கிறதில்லையா?

   ஒரு விற்பனையாளரின் நோக்கில் பார்த்தோமேயானால் இங்கே நான் விவரிக்க முடியாத/தவறிய வேறுசில நியாயமான கருத்துக்களும் இருக்கக்கூடும்தான்!

   Delete
  5. இந்தக் கமெட்ண்டை நான் டைப்பிக்கொண்டிருக்கும்போது அந்த 'எரிச்சல்' கமெண்டை நீங்களாகவே நீக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

   மற்றவர்களைப் புண்படுத்தும்படியான ஒரு பின்னூட்டத்தைப் போடுவதற்கு முன்பே ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நலம்!

   Delete
 67. Ganesh

  1. சூப்பர் சர்க்கஸ்
  2. பனி மண்டல கோட்டை.
  3. விற்பனைக்கு ஒரு ஷெரீப்
  4. ரத்தக்கட்டேரி மர்மம்
  5. ஓநாய் வேட்டை
  6. உலகம் சுற்றும் அலிபாபா
  7. சொர்க்கத்தின் சாவி
  8. புரட்சி தீ

  ReplyDelete
  Replies
  1. உங்க ரெண்டு பேருக்கும் same to you.
   மற்றும் நம் அனைவருக்கும் same to you.

   Delete
 68. 1. தங்க கல்லறை

  2. மின்னும் மரணம்.

  3. தலைகிழாய் ஓரு தினம்(மதியில்லா மந்திரி)

  4.துரத்தும் தலைவிதி(லார்கோ)

  5. பொடியன் பில்லி

  6. கொலை செய்விர் கனவான்களே

  7. தேவ ரகசியம் தேடலுக்கல்ல

  ReplyDelete
 69. It is a tough call to select d top 5 of all time best in our Lion / Muthu comics editions. But its easy 2 select the top 2 and those were 1. THANGA KALLARAI & 2.MINNUM MARANAM- Impeccable stories LOVE U BLUE BERRY!!!

  ReplyDelete
 70. 3. Largo winch_ Concrete kanagam new york - Simply astinished after read d book, ill consider this book is the best book of LARGO

  ReplyDelete
 71. அராஜகம் அன்லிமிட்டேட் :-

  முதலில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்னு தோணுது . ஏனெனில் லிங்கோ மற்றும் திருடர் நகரைத் தேடி வில்லர் குழு பயணிப்பதற்கான முகாந்திரம் எங்குமே சொல்லப்படவில்லை.
  ஜிலாஸாக மாறிய வில்லரின் அடாவடி ஒரு பத்துப்பக்கங்களுக்கு குடுத்த காசுக்கு மேல கூவுன ஃபீலிங்கை கொடுத்தது.
  ஆனால் அந்த பேங்க் கொள்ளைக்கு வில்லர் திட்டமிடத் தொடங்கும் இடத்திலிருந்து வேகமெடுக்கத் தொடங்கிய கதை திருடர்நகரம் துவம்சமாகும் வரை பக்கா விறுவிறுப்பு.

  ஜிலாஸை (வில்லர்) திருடர் நகருக்கு அழைத்துச்சென்று அவருக்கு நண்பனாகி, மோதலில் வில்லரின் பக்கம் நின்ற ஓர்டேகாவின் முடிவு பரிதாபகரமானது. கொஞ்சம் பணம் சேர்த்துக்கொண்டு நல்ல விவசாய நிலத்தை வாங்கிக்கொண்டு மிச்ச வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க எண்ணியிருந்த ஓர்டேகாவுக்கு எல்லாம் கைகூடிவந்த வேளையில் காலன் அழைத்துக்கொண்டது மனதை வருத்தியது.

  கார்சன் டைகரின் ஆலோசனைகளை கேட்டு கேட்டு நடப்பதை பார்த்தபோது, யாராவது ஒருவரின் கட்டளைப்படிதான் காரியம் செய்வீர்களா கார்சன் என்று மனதுக்குள் நினைத்தேன். ஐந்தாறு பக்கங்களுக்கு பிறகு அதே வசனத்தை கார்சன் அலுத்துக்கொண்டு சொல்லும்போது சிரிப்பே வந்துவிட்டது.
  டெக்ஸ் வில்லர் கதைகளில் பலவிதமான களங்கள் உண்டு. எனக்கு வல்லவர்கள் வீழ்வதில்லை போன்ற கனமான கதைக்களங்கள் நிரம்ப பிடிக்கும். அதேசமயம் இதுபோன்ற ஆக்சன் சரவெடிகளும் பிடிக்கத்தான் செய்கின்றன. ஏனெனில் ரொம்பவும் ஊன்றிப்படிக்காமல் இலகுவாக ரசித்துவிட்டு போகலாம் என்பதால். .!!

  அராஜகம் அன்லிமிட்டேட். - ஆக்சன் பிரியர்களுக்கான தீனி..!!

  ரேட்டிங் 7.5 /10

  ReplyDelete
 72. இளவரசி டாப் 5

  கழுகு மலைக்கோட்டை

  திகில் நகரம் டோக்யோ

  கானகத்தில் கண்ணாமூச்சி

  கற்கால வேட்டை

  பூமிக்கொரு ப்ளாக்மெயில்

  ReplyDelete
 73. முத்து டாப் 5
  மிண்ணும் மரணம்

  தங்கக்கல்லறை

  ஒரு வீரனின் கதை


  இனியெல்லாம் மரணமே

  பேழையில் ஒரு வாள்

  ReplyDelete
 74. My Top 10
  - சாத்தான் வேட்டை
  - மின்னும் மரணம்
  - டாலர் வேட்டை
  - இரத்தக் கோட்டை
  - கிசுகிசுக்கும் மரணம்
  - தலை வாங்கும் தேசம்
  - கெளபாய் எக்ஸ்பிரஸ்
  - சதிகாரர் சங்கம்
  - வேங்கையோடு மோதாதே
  - இரத்தப்பாதை

  ReplyDelete
  Replies
  1. *இரத்த பூமி (not இரத்தப்பாதை)

   Delete
 75. My top 10 books :
  1. Dragon Nagaram
  2. Ulgha poril Archie
  3. Dr. Agrovin VISITHIRA SAVAL
  4. Pani mandala kotai
  5. Parakkum pavai PADALAM
  6. Ratha veriyarghal
  7. Irumbu manithan
  8. Kolai PADAI
  9. Minnum maraname
  10. Karsanin kadandha Kalam

  This month books are not a good one except CID LAWRANCE. OTHER stories climax not very well I expect.jason price story was a different one. But climax part was a huge SODAPPAL.
  I AM EXPECTING PRINCESS MODESTY.

  ReplyDelete
 76. My top 10 list
  1 தங்க கல்லறை
  2 இரத்தக் கோட்டை
  3 இருளின் மைந்தர்கள்
  4 யானைக்கல்லறை
  5 குள்ளநரிகளின் இரவு
  6 வல்லர்வகள் வீழ்வது இல்லை
  7 மரணத்தின் முன்னோடி
  8 நள்ளிரவு வேட்டை
  9 என் பெயர் லார்கோ
  10 கான்கிரிட் கானகம்

  ReplyDelete
 77. Inmig "மின்னும் மரணம் 2 பவளச் சிலை மர்மம் 3 ெகாலைகாரக் குள்ள நரி 4 யார் அந்த அதிர்ஷ்டசாலி 5 மரணமுள்

  ReplyDelete
 78. சமீபத்தில் திருப்பூர் புத்தகக்காட்சி சென்றிருந்தேன்.என்னைப் போன்ற புதிய காமிக்ஸ் வாசகர்கள் நிறைய பேர் வரும்பொழுது அவர்களை ஈர்க்க நிறைய புத்தகங்கள் வைத்திருக்க வேண்டாமா? அல்லது ஒரே காமிக்கதையில் நிறைய பிரதிகளையாவது வைத்திருக்க வேண்டாமா? நான் காமிக்ஸை புத்தகக்காட்சிகளில் மட்டுமே வாங்கி வாசிப்பவன். முதல் இரண்டு நாட்கள் சென்றபோது சில புத்தகங்களை மனதில் குறித்துக் கொண்டேன்.அதைப்பற்றிய விமர்சனங்களையும் பார்வைகளையும் இணையத்தில் அலசிஆராய்ந்து படித்தபின் அப்புத்தகங்களை வாங்கலாம் என ஆர்வத்தோடு சென்றேன். நான் புத்தகங்களை வாங்கும் முறை இப்படித்தான். ஆனால் அங்கோ எனக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்! நான் முந்தைய நாள் பார்த்துச் சென்ற பல புத்தகங்கள் அங்கு இல்லை! அங்கிருந்த சொற்பமான கூட்டத்தை வைத்துப் பார்க்கும் போது மடமடவென விற்றுத்தீர்ந்து விட்டது என்று கூறவும் வழியில்லை. ஆகவே பிரதிகளை மிகக் குறைவாகவே வைத்துள்ளார்கள் எனத் தெரிகிறது.புத்தகம் விற்கிறதோ இல்லையோ நிறைய புத்தகங்களை வைத்திருப்பதுதானே முறை? அதுதானே புத்தகக்காட்சி?இதை வேறு யாராவது சொன்னால் அலட்சியப்படுத்தலாம் அல்லது காரணங்களை அடுக்கலாம். ஆனால் என்னைப் போன்ற புதிய வாசகர்கள் சொல்லும்போது அதில் ஏமாற்றம் கலந்த தொனி இருப்பதை உணர்வீர்கள் என நம்புகிறேன்!

  ReplyDelete
 79. நமக்கு எல்லா விதமான காமிக்ஸ் கதைகளுமே பிடிக்கும் ,பிஞ்சு கத்தரிக்காய்ப் பொரியலும் பிடிக்கும் லேசாக வெந்த இளம் ஆ ட்டுக்கறியை வெளியே எடுத்து வெங்காயம் பச்சை மிளகாய் எண்ணெய் கலந்து தனியே வறுவல் செய்து உண்பதும் பிடிக்கும்.வெறும் கஞ்சியில் மோர் கலந்து மாங்காய் ஊறுகாய் துணையோடு வெளுத்துக் கட்டுவதும் பிடிக்கும்..ஒன்றுமே இல்லாமல் வாரம் ஒருவேளை விரதம் இருப்பதும் பிடிக்கும்.செய்யும் வேலை ஏதுவாக இருந்தாலும் அதை ரசித்து செய்யும்போது ஆர்வம் அதிகமாகிவிடுகிறது.என்றாலும்.கார்சனின் கடந்த காலம் வெகுநாட்களுக்கு முன்னரே முதலிடம் பிடித்துவிட்டது.X 111 கதைகளை மறக்க முடியுமா?பனி மண்டலக் கோட்டையும் ,சிறைமீட்டிய சித்திரக்கதையும் ,பனி யில் புதைத்த ரகசியமும் இப்போதும் இனிக்கும் கதைகள்.மந்திர மண்டலத்தில் கார்சனையும்,கிட்டையும் தேடி டெக்ஸ் அலையும் காட்சி கண்முன் நிற்கிறது.விசித்திர ஹீரோவும் ,இரும்பு கவ் பாயும் ,ஹாலிவுட்டில் ஜாலியும் அருமை ..தங்க கல்லறை ,மின்னும்மரணம் சூப்பர் .புதிய கதைகளில் ?லார்கோ டாப் ..

  ReplyDelete
  Replies
  1. ////,பிஞ்சு கத்தரிக்காய்ப் பொரியலும் பிடிக்கும் லேசாக வெந்த இளம் ஆ ட்டுக்கறியை வெளியே எடுத்து வெங்காயம் பச்சை மிளகாய் எண்ணெய் கலந்து தனியே வறுவல் செய்து உண்பதும் பிடிக்கும்.வெறும் கஞ்சியில் மோர் கலந்து மாங்காய் ஊறுகாய் துணையோடு வெளுத்துக் கட்டுவதும் பிடிக்கும்..////

   என்னாவொரு ரசணை வெட்டுக்கிளி சார்!!!
   படிக்கும்போதே வாய்க்குள் ஒரு கார்ப்பரேசன் குழாய் உடைஞ்சு ஊற்றெடுத்துச்சு போங்க! :)'

   Delete
 80. 1.தங்க கல்லறை
  2.மின்னும் மரணம்
  3.இரத்தப் படலம்
  4.ஒரு ஒப்பந்தத்தின் கதை (NBS)
  5.பூம் பூம் படலம்
  6.யானை கல்லறை
  7.சிரிக்கும் மரணம் (பேட் மேன்)
  8.கார்சனின் கடந்த காலம்
  9.நரகத்தின் நடுவுல (ராபின்)
  10.சைத்தான் வேட்டை

  ReplyDelete
  Replies
  1. its 10.சாத்தான் வேட்டை (TEX)

   Delete
 81. எனது டாப் 10 இதழ்கள். நான் படித்துள்ள கதைகளை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளேன். எத்தனையோ கதைகளைப்படித்திருந்தாலும் கீழே உள்ளவை இப்போது நினைத்தாலும் ஒரு திரைப்படம் போல மனதில் ஓடும்.

  1. தங்கக் கல்லறை (டைகர்) - முத்து
  2. கார்சனின் கடந்த காலம் (டெக்ஸ் ) - லயன்
  3. இரத்தப்படலம் 1 (XIII) - திகில்
  4. மின்னும் மரணம் (டைகர்) - முத்து
  5. அதிரடிப்பொடியன் (லக்கி லூக்) - மினி லயன்
  6. பனியில் ஒரு பிணம் (ராபின்) - முத்து
  7. ஒரு மாந்திரீகனின் கதை - முத்து
  8. காணாமல் போன ஜோக்கர் - முத்து
  9. இனி எல்லாம் மரணமே (மார்ட்டின்) - முத்து
  10. பழிவாங்கும் பொம்மை (ஸ்பைடர்) - லயன்

  ReplyDelete
  Replies
  1. ////எத்தனையோ கதைகளைப்படித்திருந்தாலும் கீழே உள்ளவை இப்போது நினைத்தாலும் ஒரு திரைப்படம் போல மனதில் ஓடும்.///

   நடுவாலே இன்ட்ரோல் விட்டு பாப்கான் எல்லாம்கூட சாப்பிடுவீங்களா செந்தில்? ;)

   10 படப்பொட்டிகளும் சூப்பர்!

   Delete
 82. //இதுவரையிலான நமது சுமார் 775 + வெளியீடுகளுக்குள் (லயன் ; திகில் ; மினி லயன் ; ஜுனியர் ; etc ) ஒரு தற்போதைய TOP 10 தேர்வினைச் செய்திட இயலுமா என்று ?! //

  அடுத்த குண்டு புக் ரெடி, எப்போன்னு சொல்லுங்க ? ;-)

  ReplyDelete
 83. 1.பழி வாங்கும் பொம்மை...
  2.சூப்பர் சர்க்கஸ்...
  3.சிந்துபாத்...
  4.இரட்டை வேட்டையர்....
  5.சைத்தான் சாம்ராஜ்யம்....
  6.ஆர்ச்சி தங்க வேட்டை ....
  7.அதிரடி ஹெர்குலஸ்
  8.தங்க கல்லறை....
  9.ரத்த படலம் ....
  10.கழுகு மலைக்கோட்டை

  ReplyDelete
 84. ""காமிக் இயக்குநர் ஜரோ தனிகுசி"" மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

  ReplyDelete
 85. "THE INCAL" நமது காமிக்ஸ்-ல் வெளிவர வாய்ப்புள்ளதா?

  ReplyDelete
 86. புடிங்க இன்னொரு பத்து...!!
  11.பழி வாங்கும் பாவை.
  12. ரத்த வெறியர்கள்.
  13.சிந்து பாத்.
  14. உலகம் சுற்றும் அலிபாபா.
  15.புரட்சீ தீ.
  16. எல்லையில் ஒரு யுத்தம்.
  17. டிராகன் நகரம்.
  18. பற்றி எரியும் பாலைவனம்.
  19. மாஸ்கோவில் மாஸ்டர்.
  20.யானை கல்லறை.

  ReplyDelete
 87. This comment has been removed by the author.

  ReplyDelete
 88. இப்படி பத்து பத்தா அடுக்கிட்டே போகலாம் ஆசிரியரே...!!!
  இவை எல்லாமே நம் வாழ்க்கை துணையாய் பயணிப்பவை.
  இதில் பத்தை மட்டுமே கேட்டா எப்புடி?

  ReplyDelete
  Replies
  1. +1

   ///இவை எல்லாமே நம் வாழ்க்கை துணையாய் பயணிப்பவை////

   ஆமா! கருப்புக்கிழவியக்கூட என் சொந்த ஆயாவாத்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன்!

   Delete
 89. இன்றய உற்சாக சூழலில் உற்சாக பதிவு....
  சார் பத்து கதைகள் என பிரிப்பது மிகக் கடினம் என்றாலும் முயற்ச்சிக்கிறேன் இதை விட்டு விட்டாயே , அதை விட்டு விட்டாயே என எழுதி முடித்த பின் எதிர்க்கும் மனக் குரலினை நினைத்தே பொதுவான என் நினைவுகளை பட்டியலிடுகிறேன் . எனது பயணம் துவங்கியதும் கோட்டையில் ஏறி ஆர்ச்சியுடன் பயணித்த அற்புதமான நாளில்தான் .ஆச்சரியமான விஷயம் அதனுடன் தொங்கிக் கொண்டிருந்த ...மீன் படம் கண்ணில் பட்டும் சுறா வேட்டை எனும் ராணி காமிக்ஸ் என்னை கவர்ந்தத விட ஆர்ச்சி எப்படி கவர்ந்திருக்கும் எனத் தெரியவில்லை(மீன்கள் என்றால் வியந்து பார்க்கும் நிலை அன்று ) . அந்த பிரம்மாண்ட பாடபுத்தக சைசா...இரும்புக்கை மாயாவி யாரென்றே தெரியாத நிலை , ஆனாலும் அதில் சீறிச் செல்லும் இரும்புக் கையா.....தோழர்களுடன் தடுமாறிய படி அந்த பறக்கும் இயந்திரத்தில் காணப்பட்ட சட்டித் தலையனா என எவ்வளவு உருண்டு புரண்டு யோசித்தாலும் விடை கிடைக்கப் போவதில்லை .இப்ப அந்தக் கதை சாதாரணமாகத்தான் தெரிகிறது .பின்னர் ஸ்பைடர் மேனியா மூளையில் மட்டுமின்றி மேனி முழுதும் வியாபிக்க.....அற்புதமான கதைகள படிச்சா அன்னைக்கு நான் தொலஞ்சேன் .அன்று முழுதும் இருப்பு கொள்ளாமல் அது போல கதை கிட்டுமா என கடை கடையா திரிஞ்சு கண்ணில் பட்ட கதைகள எல்லாம் கவ்வினேன் . அப்புறம் மாயாவிய படிச்சா இன்னும் ஒருபடி மேல் , மாயாவின்னு பெயர் கொண்ட பொன்னி காமிக்ச விட்டுட்டமேன்னு கண்ட அதாவது கண்ணில் கண்ட மாயாவிகள் எல்லாம் என்னுடன் வலம் வரத் துவங்கினார்கள் .மாயாவியுடன் சிறுவன் மோரீஸ் வந்தாலோ சொல்லவே வே்டாம்..நானும் ஹீரோதான் ...மனதளவில் நம்மாலும் முடியுமென நம்பிக்கை பூக்கள் பூக்கும் தருணங்கள கொஞ்ச நஞ்சமல்ல . அப்புறம் தலைவாங்கிக் குரங்கு என்ற பெயர கேட்துமே மனதை இழந்து எப்படா வரும்னு டெக்ஸ் குறித்த ஆசிரியரின் விளம்பரங்களால் காத்திருந்தது ஒரு யுகம் போன்றது .அந்த தலைப்பே திகிலுடன் கூடிய பிரம்மாண்டத்த கண் முன்னே ; படிப்பதற்கு முன்னே கொண்டு வந்த கொலைகாரக் குரங்கு என நீங்க தந்த முதல் தலைப்ப விட அட்டகாசமா ஜொலிச்ச தலைவாங்கி எனும் வார்த்தையில்தான் எவ்வளவு வசீகரம் ....அந்த தலைப்புக்கே அதற்கு ஒரு இடம் கொடுக்கலாம் .அப்புறம் ஒரு மழை நாளில் கடலாடியபடி கண்ணில் பட்ட பிரின்ஸ் ...புரட்டிப் போட்ட .....முதல் பாகத்த தேடி என்ன துரத்தி , தூண்டி விட்ட எப்பவும் என்னுடன் உலவும் நண்பர் பதிமூன்று ....அதகளம் புரிந்த இரட்டை வேட்டையர் ..இதில் இன்னொரு ஜோடி மினி லயனில் உண்டு .தலைப்புகளால் அதாவது திகில் தலைப்புகளால் அதாவது காட்டேரி போன்ற வார்த்தைகளால் கவரப்பட்டு அதெல்லாம் காணலியேடா தம்பி என அதன் அருமை தெரியாமல் அன்று திருதிருவென முழிக்க வைத்த ஜானி ...இரும்புக்கை என்பதால் மட்டுமின்றி சாகசங்களால் , உணர்வுகளால் மனம் பதைக்க வைத்த இரும்புக்கை நார்மன் ....இரும்புக்கை வில்சன்.....டென்னிஸ் விளையாடிய படி நண்பனை இழக்கும் போது என்னயும் துடிக்க விட்ட தொடராத இனிய நண்பர் ஜான் மாஸ்டர்....அந்த திறமையா டென்னிஸ் வீரன் , தந்தை நிர்பந்தத்தால் கால் பந்தாட்டத்தில் ஈடுபட்டு மீள்வாரே ....இது போல விளையாட்டு கதைகள ஏன் விட மாட்டேங்குறார் என ஏக்கத்தை தூக்கத்துடன் பங்கு போட்ட நாட்கள் அதிகமிருக்குமே !வண்ணத்தாலும் ..அற்புதமான அட்டையாலும் முதல் கதையில் அசத்திய லக்கி லூக்...உட்சிடி கோமாளிகள் ...மஞ்சள் பூ மர்மம் தந்து தோழமைக்கிலக்கணம் கற்பித்த லாரன்ஸ்-டேவிட்....திடுமென தங்க புதையல் ஆர்வத்துடன் வந்து அதையும் மிஞ்சி ரவுண்டு கட்டி அடித்த தங்கக் கல்லறை ....தந்த டைகர்...பேரிக்காய் மனிதர்களுடன் ..பாலை நிலத்தில்...கால பயணத்தில் பங்கு பெறச் செய்த பாசமிகு சுஸ்கி-விஸ்கி...புதிர்குகை மூலம் வண்ணத்தில் அசத்திய ஜெர்ரி ....அன்று கவராத இன்று தேடச்சொல்லும் மர்மக் கத்தி தந்த ரோஜர்....விமானங்கள் மேல் கொணட காதலால் ஆர்வத்தை தூண்டிய பைலட் வில்சன்...கதை நினைவில் இல்லை ...தேர்வு செய்தல் கடினம்தான் ...டேய் பாவண்டா குடுங்கடா லைசன்ச ...என ஒரு பரிதாப உணர்வ ..பதிமூன்ற போல தன் மீதும் ஏற்றிய படி பயணித்த ஜான் சில்வர்...வேடிக்கை என்னன்னா லைசென்சு கிடைத்தா இவர் கத தொடராம போலாம்ங்கிறது அப்ப தெரியுமான்னு தெரியாது .என்னதான் அப்பத்தய நாயகர்கள் சிறப்பு பெற்றாலும் இப்ப புதிய வரவுக்கு பின்னர் நீங்க வெளி விட்ட கதைகளே ஏக இடங்கள ஆக்கிரமிக்கப் போகுது . உதாரணமா லார்கோ கதைகள பிரிக்க முடியாது . அதிலே பதினெட்டு தேர்வாகுமே ...இன்று மாலைக்குள் தொகுக்கிறேன் பத்த...

  ReplyDelete
  Replies
  1. மருத்துவர்களயும்...நல்லவர்களையும்..உதவியவர்கயும் காத்த வேதானின் பதுகாப்பு முத்திரை..சுரன்...டயனோசர் கால விலங்குகள்...டயானா...ரெக்ஸ்....ஈடன் தீவ..பார்ப்போமா..மண்டை ஓட்டுக்குகை ,சாலமன் கோப்பை ,அரியணை..நீர்வீழ்ச்சி..புரட்டும் புத்தகத்தில் வேவாளன் முன்னோர் கதைகள்..தங்கக்கடற்கரை...அடேங்கப்பா....நினைத்து எழுத எழுத மறுபதிப்பில் வேதாளர் எண்ணம் வலுவாகிறத....

   Delete
  2. அடேயப்பா!! காமிக்ஸ் நினைவுகளால் கிளர்ந்தெழப்பட்டால் உற்சாகம் கொப்பளிக்கும் வார்த்தைகளால் பட்டைய கிளப்புறீங்க ஸ்டீல்!!

   காட்டாற்று வெள்ளம் தோற்றது போங்க!

   Delete
  3. சாரி சார்...இடைச்செருகல் வேதாளருக்கு மேல் விடு பட்டு விட்டது

   Delete
  4. அடடா ஒன்றை விட்டு விட்டேனே...அவரேதான்...இதயே மறந்துட்டேன் ..பத்த தேர்வது ஒப்புக்காகத்தானிருக்குமோ....வேதாளர் .. பார்த்ததும் ..எங்க பழய இரும்புக் கடையில் கிடைத்த அரிய கூண்டில் தொங்கிய சதிகாரி..இன்னும் அட்டையில்லா ..கும்மாங்குத்து குத்திய முத்திரை மோதிரம் கபால முத்திரை கொண்டு நண்பர்களுடன் விளையாட உதவிய வேதாளன்....பத்து வருடங்களுக்கில் கிடைத்தமனதை கவர்ந்த செந்தாடி துணை கொண்டு கடல்படை அமைத்த முதல் வேதாளன்

   Delete
  5. தூங்கும் போது என்ன மறந்துட்டியேன்னு எட்டிப்பார்த்தவர்கள்...சாரி ...சாரி ..என்னயே மறந்துட்டியேன்னு.....அந்த கோடை மலரில் அந்த மேன் ..இந்த மேன்னு ...பார்த்து ...ஈகிள் மேன் கண்டு பரபரப்பாய் பிரிக்க..வண்ணத்தில் சில பக்கங்கள் கண்டு ஆடிய ஆனந்தம் இப்பவும் கூட....அந்த நாயுடன் வந்த ரேம்போ....வராதா மீண்டும் என ஏங்கியது...அந்தக்கதைகள் ஏதேனும் இருந்தால் விடலாமே சார்......கெக் தீவு மன்னன் ...அந்த அநாதை இல்லச் சிறுவர்கள் போராட்டம் ,அந்தத் தீவில் எப்போது படித்தாலும் வாழ வைக்குமே......அப்புறம் பௌர்ணமி இரவில் நிலவை மிஞ்சி அழகாய் அவதரித்தாரே பேட் மேன்.....யானைத் தந்தம் தேடி கால்களை இழந்து ....திகிலான அனுபவங்களுக்கு பரிசளித்து , அந்தக் கதய நம்முடனும் பகிர்வாரே அந்தக் கதைகளை மீண்டும் தரலாமே சார்......ஜேம்ஸ்பாண்டாய் வாழும் ரோஜர் மூர்......அந்தஸ்தை தேடிய அங்கிள் ஸ்குரூஜ்...டொனால்ட்......அதிரடிப்படை....மீனை சமைத்து தின்று விழுந்து விழுந்து சிரிக்க வைத்த அலிபாபா......யாரையெல்லாம் மறந்தனோ....ஓ....ஓஓஓ

   Delete
 90. I am 1. மின்னும் மரணம் 2. கொலைகாரக் குள்ள நரி 3 தங்க கல்லறை (ஓல்டு) 4மரணமுள் 5. குரங்கு தேடிய கொள்ளையர் புதையல்

  ReplyDelete
 91. டாப் 10 ரொம்ப கஷ்டம்.
  ஸ்பெஷல் வெளியீடுகள் தவிர்த்து எனது டாப் 10
  1. விசித்திர கடற் கொள்ளையர் (முதன் முதலில் படித்தது)
  2. கொலைகார குள்ளநரி (மாயாவி கதைகளில் அதிக முறை திரும்ப திரும்ப படித்தது)
  3. தங்க கல்லறை
  4. சதிவலை (ஜான் மாஸ்டர்)
  5. காணாமல் போன கடல்
  6. பழி வாங்கும் புயல் (டெக்ஸ் கதைகளில் 100 தடவை படித்து இருப்பேன்)
  7. கொலைகார கானகம்
  8. பிசாசு குரங்கு
  9. சூப்பர் சர்க்கஸ்
  10.விண்வெளியில் ஒரு எலி
  முத்து டாப் 10, லயன் டாப் 10, திகில் டாப் 10 என்று கேட்டு இருந்தால் நல்லா இருக்கும்.

  ReplyDelete
 92. இன்று FACE BOOK-ல் படித்த ஒரு பதிவு.
  எப்போதாவது Breaking நியூஸ்னா பரவால்ல....!!
  எப்போ பார்த்தாலும் Breaking நியூஸ்னா எப்படி???

  ReplyDelete
  Replies
  1. சை! எனக்கு தமிழ்நாடே புடிக்கலை! பேசாம பொனெல்லியின் அழைப்பை ஏத்துக்கிட்டு இத்தாலிக்கே போயிடலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்...!

   யார் கண்டா... அடுத்தவருசக் காதலர் தினத்தை அந்த ஸ்மர்ஃப்ஸ் ஆபீஸ் ரிசப்சனிஷ்ட்டோட கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லே! ஹிஹி!

   Delete
  2. இந்த ரணகளத்திலேயும் கிளுகிளுப்பு கேக்குது???

   Delete
  3. //பேசாம பொனெல்லியின் அழைப்பை ஏத்துக்கிட்டு இத்தாலிக்கே போயிடலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்...!

   யார் கண்டா... அடுத்தவருசக் காதலர் தினத்தை அந்த ஸ்மர்ஃப்ஸ் ஆபீஸ் ரிசப்சனிஷ்ட்டோட கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லே//

   விஜய், ஹுஹும், நீங்க இத்தாலி போயிட்டா இந்த ஜென்மத்தில் அந்த ரிசப்ஷனிஸ்ட பாக்க முடியாதுன்னு தோணுது. ஏன்னா, நீங்க போறது இத்தாலி அவுங்க இருக்கிறது பெல்ஜியம், ஹி ஹி ஹி

   Delete
  4. @ ரட்ஜா

   ////நீங்க போறது இத்தாலி அவுங்க இருக்கிறது பெல்ஜியம்,///

   அதனால் என்னங்கோ? 'ஈரோட்டில் இத்தாலி'ய நாம ஏத்துக்கிட்டமாதிரியே 'இத்தாலியில் ஒரு பெல்ஜியம்'ன்றதை என்ர செல்லக்குட்டி ஏத்துக்கிட மாட்டாளா என்ன? ;)
   இத்தாலி போய் இறங்கினதுமே மொதோ வேலையா பொனெல்லி ஆபிஸுல இப்ப ரிசப்ஷனிஸ்ட்டா இருக்கிற அந்த பாட்டிம்மாவை வேலைய விட்டு தூக்கிட்டு, என்ர பெல்ஜியம் புஜ்ஜிக்குட்டியை ரிசப்சனிஷ்ட்டாக்கிடுவேன்!
   அப்புறம் என்ர பேரை அழகா 'விட்ஜை'னு மாத்திக்கிட்டு நரைச்ச தலையோட நாலு குழந்தைகளைப் பெத்துக்கிட்டு அங்கேயே செட்டிலாயிடுவேன்!

   இரண்டு வருசத்துக்கு ஒரு தபா ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு அரை ட்ரவுசர், ஆட்டுத்தாடி சகிதம் வந்து ரெண்டு நாள் இருந்துட்டு "அட! இப்போ லயன் காமிக்ஸ் என்னமா முன்னேறிடுச்சு!!"னு ஆச்சரியப்பட்டுகிட்டு சொய்ங்ங்ங்னு கிளம்பிடவேண்டியதுதான்!

   ( அசடுவழிவதை தெரியாமல் மறைக்க எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியதிருக்கு!!) ;)

   Delete
  5. //இரண்டு வருசத்துக்கு ஒரு தபா ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு அரை ட்ரவுசர், ஆட்டுத்தாடி சகிதம் வந்து ரெண்டு நாள் இருந்துட்டு "அட! இப்போ லயன் காமிக்ஸ் என்னமா முன்னேறிடுச்சு!!"னு ஆச்சரியப்பட்டுகிட்டு சொய்ங்ங்ங்னு கிளம்பிடவேண்டியதுதான்! //

   விஜய், இதுல உள்குத்து எதுவுமில்லை தானே :-)))

   Delete
  6. அனைத்துவகை குத்துகளும் மானாவாரியாய் அடக்கம் ரட்ஜா அவர்களே! ;)

   Delete
  7. ///விஜய், இதுல உள்குத்து எதுவுமில்லை தானே :-)))//

   Radja @

   ஹாஹாஹா!!

   இதைவிட நேரடியாகச் சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்..!! :-)

   Delete
 93. இன்னிக்கு இங்கே வந்து கமெண்ட் போடாதவங்களையெல்லாம் கையில் ரோசாப்பூவும், வாய் நிறைய ஜொள்ளும் வச்சுக்கிட்டு யார் பின்னாலோ சுத்திக்கிட்டிருக்கறவங்க லிஸ்ட்டுல வச்சுக்கிடலாமா? :P

  கினாஆனா, செனாஅனா, தலீவர் - இவங்கல்லாம் லிஸ்ட்டுல முன்னணியில இருக்காப்ல தோனுது! ;)

  ReplyDelete
  Replies
  1. //இன்னிக்கு இங்கே வந்து கமெண்ட் போடாதவங்களையெல்லாம் கையில் ரோசாப்பூவும், வாய் நிறைய ஜொள்ளும் வச்சுக்கிட்டு யார் பின்னாலோ சுத்திக்கிட்டிருக்கறவங்க லிஸ்ட்டுல வச்சுக்கிடலாமா? //

   யப்பா, எப்படித்தான் இந்த உண்மையெல்லாம் கண்டுபிடிக்கிறாய்ங்களோ :-))))

   Delete
  2. @ ராட்ஜா

   முன்னணி லிஸ்ட்டுல இருக்குற ஒருத்தர் மட்டும் இன்னிக்கு வந்து இங்க கமெண்ட்ஸ் போடமாட்டார்ன்னு பட்சிசொல்லுது.! அவர் யாருன்னா...அடிக்கடி உங்க ஊர்பக்கம் வந்துட்டு போறவருங்கோ..!! ;-)))))

   Delete
  3. ///ஒருத்தர் மட்டும் இன்னிக்கு வந்து இங்க கமெண்ட்ஸ் போடமாட்டார்ன்னு பட்சிசொல்லுது.! அவர் யாருன்னா...அடிக்கடி உங்க ஊர்பக்கம் வந்துட்டு போறவருங்கோ..!! ;-)))))///

   யாரா இருக்கும்???!!

   Delete
  4. நேத்திக்கு இங்கே நம்ம எடிட்டர்கூட கமெண்ட் எதுவும் போடலைன்றதை நீங்க கவனிக்கனும்! :P

   Delete
 94. MY TOP 10 COMICS:

  10-மனதில் உறுதி வேண்டும்:
  கைதிகளின் மனதை மாற்றி அவர்களை நல்லவர்களாக்க முடியும் என்று ஒரு டாக்டர் டால்டன்களின் மனதை மாற்ற முயல, முடியாமல் அவரும் வில்லனாக மாறி டால்டன்களுடன் சேர்ந்து கொள்ளையடிப்பதும் லக்கியை திணற அடிப்பதும் என்று அட்டகாசமாக அமைந்த கதை.

  9-சாத்தான் வேட்டை:
  பார்த்து நீண்ட நாட்களான ஒரு நண்பனை பார்க்க ஆவலோடு போகும் டெக்ஸ், அவனையும் அவன் குடும்பத்தையும் பிணமாக பார்ப்பதும், அவர்களை கொன்ற 4 பேரை விரட்டி சென்று தனித்தனியாக பழிவாங்கி கடைசியாக தன் நண்பனின் கல்லறை முன் அஞ்சலி செலுத்துவதும் நெஞ்சை நெகிழச் செய்துவிட்டது. அந்த 4 பேரின் தனித்தனி கதைகளும், பின்னணியும் சரியான மிரட்டல்.

  8-இரவே இருளே கொல்லாதே:
  சூழ்நிலை காரணமாக தனக்கு சம்மந்தமே இல்லாத ஒரு ஊரில் மாட்டிக்கொள்ளும் ஒரு அபலைப்பெண்ணை பற்றியும் அந்த ஊரில் நடக்கும் தொடர் கொலைகளை பற்றியும் 'திக்' 'திக்'கென நகர்ந்த கதை.

  7-துரத்தும் தலைவிதி:
  ஒரு உலக பணக்காரனுக்கு எவ்வளவு நெருக்கடி வர முடியுமோ, அத்தனையையும் சாமர்த்தியமாக அவன் ஜமாளிக்கும் விதம் சூப்பர். ஒரு கம்பீரமான க்ளைமாக்ஸ் கொண்ட கதை.

  6-எஞ்சி நின்றவனின் கதை:
  அநாதையாக கிடந்த ஒரு குழந்தையை ஒரு பாதிரியரிடம் ஒப்படைத்துவிட்டு அதை மறந்து போகும் ஷெல்டனும், அந்த குழந்தை ஷெல்டனையே அப்பாவாக நினைத்து வளர்ந்து அப்பாவின் பரம வைரியான டாக்கூ என்பவனை காட்டி கொடுத்து அப்பனுக்கு பழிதீர்க்க வாய்ப்பு கொடுத்து இறந்துவிடுகிறான். நெஞ்சை தொட்டு சென்ற ஆக்ஸன் கதை.

  5-சர்ப்பங்களின் சாபம்:
  கேவலமும், கொடூரமும் கலந்த ஒரு ஊரில் ஹேங்மேனாக பௌன்சரும், அவனுக்கு ஒரு காதலியும், அவளை தன் கைகளாலேயே தூக்கில் போட நேரும் கொடுமையும், அன்டொய்ன்க்ராண்ட் என்ற அதிரடி அழகியும் - மர்மமான தந்தையின் வாழ்க்கையும் கலந்து பல திருப்புமுனைகளை கொண்டு அதிரடித்த கதை.

  4-கார்சனின் கடந்த காலம்:
  ஒரு துரோகத்தை 25 வருடங்களாக நெஞ்சில் சுமந்துக்கொண்டு பழிவாங்கும் சிலரின் கதை. அக்கால அமெரிக்க கௌபாய் மக்களின் கலாச்சாரம், பண்பாடுகளை அருமையாக பிரதிபலித்த படங்கள். இந்த கதையில் என்னை கவர்ந்த ஒரு படம்: தாய் லினாவின் முகத்தை போலவே அதே சாயலில் அவள் மகள் டோணாவின் முகத்தையும் ஓவியர் வரைந்திருப்பார். ஆனால், 'இவள் தந்தையை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.' என்று பூன் டோணாவின் முகத்தை காட்டும் படத்தில் மட்டும் ஓவியர் டோணாவின் கண்களை ரே க்ளம்மன்ஸ் சாயலில் வரைந்திருப்பார். ஒவ்வொரு படத்தையும் வசனங்களையும் நான் நன்றாக ரசித்து, படித்து அனுபவித்த கதை. வருத்தக்கறி பிரியர் இளமையாக வந்து கண்ணுக்கு விருந்து படைத்த கதை.

  3-தங்கக் கல்லறை:
  இந்த கதையை படிக்கும் போது எனக்கு 22 வயது. அதுவரை நான் ரூபாய் நோட்டிற்கு கொடுத்த மதிப்பைக்கூட தங்கத்திற்கு கொடுத்ததில்லை. பெண்களின் கழுத்தில் தங்க நகையை பார்க்கும்போது செவ்விந்தியர்களைப் போல அதை மஞ்சள் உலோகமாகத்தான் பார்த்தேன். தங்கத்தின் மதிப்பை எனக்கு உணர்த்த ஆரம்பித்தது இந்த கதைதான். இதில் வரும் முக்கியமான நபர்களெல்லாம் தங்கத்தின் பொருட்டு படும் அவஸ்தைகள் கொடுமையானவை. இந்த கதை க்ளைமாக்ஸில் சொதப்பிவிட்டது. உண்மையான லக்னரை பிழைக்க வைத்து கஸ்டாபை அரெஸ்ட் செய்யும்போது காட்டி இருக்கலாம்.

  2-மின்னும் மரணம்:
  மெக்ஸிகோ கவர்னர் ஜுவாரேச், PRESIDENT கிராண்ட், செவ்விந்திய தலைவர் கோசேஸ் இவர்களோடு டைகரையும் ஒரு சரித்திர நாயகரைப்போல நம் மனதில் பதிய வைத்த கதை. அந்த பிரம்மாண்டமான புத்தகத்தை கையில் எடுத்து பார்க்கும்போது இதை வெறும் கதையாக நான் பார்ப்பதில்லை. அமெரிக்காவின் வரலாறாக பார்க்கிறேன். இதன் இறுதி பாகம் மட்டுமே அதிருப்தியளித்தது.

  1-என் பெயர் டைகர்:
  வன்மேற்கின் ஒரு ஊரில் நடந்த பிரச்சனைகளைக் கொண்டு 'நேரடி ஒளிபரப்பு'க்கு ஈடான frame-களோடு நகர்ந்த கதை. அந்த ஊரில் வாழ்ந்து மறைந்த பிரபலங்களை வாழவைத்துக்கொண்டிருக்கும் கதை. அனைத்து கதைகளிலும் வெற்றி வீரனாக வாழ்ந்தவர், இந்த கதையில் சாதாரணமான சூதாடியாக வாழ்ந்து வென்றிருக்கிறார். டைகரின் மேல் தூய்மையான அன்பை பொழியும் ஒரு பெண். சேற்றில் பூத்துக் ஜொலிக்கும் செந்தாமரை போல கதாபாத்திரம். சென்ற ஆண்டின் சிறந்த வில்லன் கேரக்டராக இந்த கதையில் வரும் ஜானி ரிங்கோ. தலைகாட்டுவது சில பக்கங்களே, ஆனாலும் என்ன ஒரு கொடூரமான மிரட்டல்! மறுபடியும் மறுபடியும் இந்த கதையை படிக்கும்போது நானும் கோச் வண்டியில் பயணம் செய்து காடு, கணவாய்களை கண்ணார கண்டுகளித்த சந்தோஷம் கிடைக்கிறது. டைகரின் தோளில் கை போடாத குறையாக அருகில் நின்று சூதாட்டத்தை ரசித்த உணர்வை கொடுக்கிறது. சலூனில் நடக்கும் ரகளையில் நானும் கலந்துக்கொண்டு நாலு பேர் மூக்கில் 'நச்'சென்று குத்துவிட்ட திருப்தி கிடைக்கிறது. Tombstone என்ற அந்த ஊர் காமிக்ஸ் மதவாதிகளின் புண்ணிய ஸ்தலம் போல உணர வைத்த கதை.

  ReplyDelete
  Replies
  1. @ Jagath kumar

   அருமை!

   ஒவ்வொரு கதையுடனும் எவ்வளவு 'வாழ்கிறீர்கள்' என்பது உங்களது எழுத்துக்களைப் படிக்கும்போது புரிகிறது!

   ஆச்சர்யப்படுத்தும், தெளிவான, ஆழமான எழுத்துநடை!

   Delete
 95. எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் அவர் டெக்ஸ் வில்லர் கதையை வாசித்தது பற்றி லேசாக டச் பண்ணும் ஒரு வரியை காண முடிகிறது! Always gives smile whenever we stumble upon our comics in unexpected places. Not so important, but couldn't resist sharing here! :)

  http://www.jeyamohan.in/95371#.WKRyW_l96Hs
  // டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் கொஞ்சம் வாசித்து ஒரு மெல்லிய ஆன்மவிடுதலையை அடைந்தேன்.. //

  ReplyDelete
  Replies
  1. சூப்பர்..!!

   டெக்ஸ் வில்லர் கதைகள் உண்மையிலேயே நமக்கு நல்லதொரு வடிகால் என்பது மீண்டும் ஒரு தேர்ந்த எழுத்தாளரால் சொல்லப்பட்டு இருக்கிறது. !

   நன்றி ஜெமோ சார். .!!

   Delete
 96. +1

  யாருக்கு?

  யாருக்கோ!

  ReplyDelete