Powered By Blogger

Sunday, January 29, 2017

பிப்ரவரிக்கு ஹல்லோ !

நண்பர்களே,
            
வணக்கம். புது இதழ்களின் அட்டைப்படங்கள் & டீசர்களைக் கொண்டு எப்படியும் மாதத்தின் இரு பதிவுகளைத் தேற்றி விடுவேன் - வழக்கமாக ! ஆனால் இம்முறையோ சென்னைப் புத்தகவிழாவும், நமது பெல்ஜியத்து சஞ்சய் ராமசாமியும் இணைந்து ஜனவரியின் ஒளிவட்டத்தை ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டதால்- ‘ஏக் தம்மில்‘ 4 ராப்பர்களும், டிரெய்லர்களும் இப்போது வரை திரைக்குப் பின்னேயே இருந்து விட்டன ! So - திரை விலகும் நேரத்தில்- let me get to work right away !

பிப்ரவரியின் “எதிர்பார்க்கப்படும் இதழ்களுள்” பிரதானமானது நமது ஜேசன் ப்ரைஸ் த்ரில்லரின் க்ளைமேக்ஸ் பாகம் தான் என்பதில் 99% கருத்து ஒற்றுமை இருக்குமென்று தோன்றுகிறது. அக்டோபர் & டிசம்பரில் இதன் துவக்க பாகங்கள் சரமாரியான கேள்விகளையும் முடிச்சுகளையும் முன்வைத்துச் சென்றிருந்தன ! துவக்கத்தில் மர்மக்கதை / டிடெக்டிவ் த்ரில்லர் போலக் காட்சி தந்து, போகப் போக திகில் + ஹாரர் + கஸ்பென்ஸ் என்று பயணித்து நம்மிடையே ஒரு இனம்புரியா எதிர்பார்ப்பைத் தூண்டி விடுவதில் கதாசிரியர் + ஓவியர் + கலரிங் ஆர்ட்டிஸ்ட்கள் வெற்றி கண்டிருந்தனர் ! இரண்டாவது பாகத்தை எழுதி முடிக்கும் போதே எனக்குள் லேசானதொரு கலக்கம் இருந்தது - இத்தனை முடிச்சுகளையும் போட்ட கதாசிரியர், தொங்கலில் விடாது அத்தனையையும் அவிழ்த்து விடுவாரா ? என்று ! So பாகம் # 3-க்குள் பேனாவை நுழைத்த சமயம் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியா ஒரு நிலையே எனக்கு ! பக்கங்கள் நகர, நகர கதாசிரியரின் கற்பனைக்களங்கள் விஸ்வரூபமெடுப்பதைப் பார்க்க முடிந்த போது ‘ஆ‘வென வாயைப் பிளக்கத் தான் முடிந்தது ! ஒற்றைப் போடு போடுவதில் - கதையின் முடிச்சுகள் ஒன்று பாக்கியில்லாமல் தீர்வு காண்பதை masterstroke என்று வர்ணிப்பதா ? வேறு விதமாகப் பார்ப்பதா ? என்று புரியவில்லை ! அந்தப் பணியை நீங்கள் கையில் எடுத்துக் கொள்வதே நியாயமாகயிருக்குமென்று நினைக்கிறேன்! ‘ஒரு திரைவிலகும் நேரம்‘- நாம் வாய் பிளக்கும் நேரமும் கூட! இதோ இதன் அட்டைப்பட first look!


இதுவுமே ஒரிஜினல் ராப்பரின் அட்சர சுத்தமான தமிழ் பிரதி மாத்திரமே ! தொடரின் அந்த இருண்ட கதைக்களத்துக்கு அட்டைப்படத்திலிருந்தே ஒரு sober பில்டப் தந்திட படைப்பாளிகள் எண்ணியிருப்பது தெளிவாகப் புரிந்ததால் – ‘ஜிங்கு சாங்‘ என்று ஏதாலது கலர்புல்லான ராப்பரைத் தயாரிக்கும் எண்ணமே எழுந்திடவில்லை ! பின்னட்டை மட்டும் நமது டிசைனர் கோகிலாவின் உருவாக்கம். And இதோ உட்பக்கங்களிலிருந்து ஒரு சின்ன டிரெய்லர் ! 

அதே மாறுபட்ட ஓவியப் பாணி ; மிரட்டலான பார்வைக் கோணங்கள் ; வர்ணச் சேர்க்கைகளில் அட்டகாசம் என்று இந்தத் தொடரில் முத்திரைகள் இம்முறையும் பிரதானமாகக் கண்ணில் படுகின்றன ! இந்த ஒற்றைப் பக்கத்தில் மட்டுமே எத்தனை பார்வைக் கோணங்கள் என்று பாருங்களேன் ! 
 • முதல் frame - மேலிருக்கும் ஆசாமியின் பார்வை கீழிருக்கும் விதமாய் !
 • Frame # 2 : விளிம்பிலிருப்பவளின் கோணத்திலிருந்து இந்த ஷாட் !
 • Frame # 3 : க்ளோஸ் அப் !
 • Frame # 4 : தூரத்து ஷாட் - மொத்தமாய் silhouette -ல் !
 • Frame # 5 ; 6 & 7 : ஆக்ஷன் சித்திரங்கள் - சுற்றிச் சுற்றி ஒவ்வொரு சைடிலிருந்தும் ! 
 • Frame 8 : இன்னமும் அதிரடி செய்யும் ஆசாமியின் முகத்தைக் காட்டாது - ஒரு midsection ஷாட் !!
 • கடைசி Frame : இன்னமும் அவனது முகம் மறைவினில் தான் !! 

ஒற்றைப் பக்கத்தின் பின்னணியினில் தான் எத்தனை சிந்தனை ; உழைப்பு !! Phew !! ஒரு வித்தியாசமான ‘மினி தொடர்‘ நினைவுக்கு வருகிறது என்பதால் இந்த ஒட்டுமொத்த ‘ஜேஸன் பிரைஸ் அனுபவத்தை‘ப் பற்றி, தொடரும் வாரங்களில் ஏதேனும் ஒரு வேளையில் ஒரு கலந்துரையாடல் நடத்துவோமா guys? One of these Sundays பகலில் இதனைச் செய்து பார்க்கலாமா ?

Moving on - இம்மாத இரவுக்கழுகாரின் சாகஸமே வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது ! பெயரைப் போலவே இதற்கான ராப்பரும் வித்தியாசமானதென்பேன் ! Here you go – அந்த டிரேட் மார்க் மஞ்சள் சொக்காயின்றி சல்மான்கான் பாணியில் ஆறு பொட்டணமோ ; ஏழு பொட்டணமோ காட்டிக் கொண்டு நிற்பது சாட்சாத் நமது டெக்ஸ் வில்லரே தான் ! இதுவுமே இத்தாலிய ஒரிஜினல் டிசைனே - பின்னணியில் கலர் மாத்திரம் மாற்றப்பட்டு ! பின்னட்டையோ நமது ஓவியரின் கைவண்ணம். முன்னைப் பின்னாகவும், பின்னை முன்னாகவும் தான் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தேன். ஆனால் நம்மவரின் இந்த ‘சண்டையிலே கிழியாத சட்டையும் உண்டா?‘ போஸைப் பின்னுக்குத் தள்ளி விட மனது கேட்கவில்லை ! So முன்நிற்கிறார் ‘தல‘ - முன் எப்போதுமிலாக் கோலத்தில் ! 


கதையைப் பொறுத்தவரை இதுவும் Tex-ன் ‘பொற்காலக் கதைக் குவியலென்ற‘ 1-300 க்குள் இடம்பிடிக்குமொரு சாகஸம் ! In fact இந்த சாகஸம் இதழ்கள் நிர்: 106 & 107 ஆக இத்தாலியில் வெளியானவை. சற்றே பின்னோக்கிப் பயணிக்கும் சமயங்களில் டெக்ஸ் என்ற நாயகரும்; “டெக்ஸ்” என்ற அந்த brand-ம் கூட காலத்தின் ஓட்டத்தில் எவ்விதம் செதுக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும் ! இன்றைய மௌரோ போசெல்லி யுகத்து டெக்ஸுக்கும், செர்ஜியோ போனெல்லி காலத்து டெக்ஸுக்குமிடையே உள்ள மாற்றங்களுமே நாம் ஏதேனுமொரு பொழுதில் அலசி ஆராய வேண்டியதொரு தலைப்பு என்பேன் ! இதனையும் கூட இன்னொரு ஞாயிறுக்கென திட்டமிடுவோமா folks ?

வரிசையில் மூன்றாவதாக நின்று கொண்டு எட்டி, எட்டி குதிக்க முற்படுவதோ நமது மதியில்லா மந்திரியார்! இவரது கதைகளுக்கு நானொரு தீவிர ரசிகன் ! வழக்கமான காமெடிக் களங்களை நம்பிடாமல் ஒரு மாயாஜால லோகம் போலவொரு பாக்தாத்தை உருவாக்கி அதனில் காமெடிக் கூத்துகளை சரவெடியாய் அவிழ்த்து விடுவதென்பது லேசுப்பட்ட காரியமல்லவென்பேன் ! அதிலும் வார்த்தை விளையாட்டுக்களுக்கு ஏகமாய் முக்கியத்துவம் தந்து, கதைக்குப் பொருந்திப் போவது போல வரிகளை அமைப்பதிலும் கதாசிரியர் சிலம்பாட்டம் ஆடிடுவது வாடிக்கை ! இம்முறையும் அதே நிலவரமே ! ஒரே மாற்றம்- முதல் கதையின் நீளம் ! வழக்கமான 4/6 பக்கக் கதையாக அல்லாது 20 பக்கங்கள் ஓடிடுகிறது ! “என் ராஜ்யமே ஒரு கேரட்டுக்கு” – மனிதனின் பேராசைகளையும், பலவீனங்களையும் புன்னகைக்கும் விதத்தில் சொல்ல முற்படுமொரு முயற்சி ! இதோ அட்டைப்படம் + உட்பக்கமும்!

இதுவுமே ஒரிஜினல் ராப்பரே - பின்னணியை மட்டும் லேசாக மாற்றியமைத்து ! And உட்பக்கங்கள் எப்போதும் போலவொரு கலர்புல் தோரணம் ! “முழு நீளக் கதைகள்” என்ற பெட்ரோமேக்ஸே தான் வேண்டும் என்ற பிடிவாதங்களைக் கொஞ்சமே கொஞ்சமாய்த் தளர்த்திக் கொண்டு ஜாலியாக இந்த பாக்தாத்தினுள் புகுந்தால் - அரை மணி நேரத்திற்காவது உங்கள் முகங்களில் புன்னகைகளுக்கு உத்தரவாதம் என்பேன் !

Last in line- ஆனால் பலருக்கும் ஆதர்ஷத்தில் முதன்மையான மறுபதிப்பு நாயகர்களே தாட்டியமாய் நிற்கின்றனர் ! “CID லாரன்ஸ்” இதழின் அட்டைப்படம் இதோ ! 
இது நமது ஓவியரின் கைவண்ணமே ! ‘பளிச்‘சென்று இருப்பது போல் எனக்குத் தோன்றியது ; உங்களது அபிப்பிராயங்கள் என்னவோ என்றறிய ஆவல் ! 

So இம்மாதத்து நால்வர் அணி- உங்களது பிப்ரவரியினைக் கலர்புல்லாக்கிடத் தயாராகி நிற்கின்றது ! மாதம் பிறக்கும் போது உங்களிடம் தஞ்சமடைந்திடும் - கூரியர் நண்பர்களின் சகாயத்தோடு ! உங்களின் எண்ணங்களை, அபிப்பிராயங்களை, கதைகளை பற்றிய விமர்சனங்களுக்காக - we’ll be waiting !! See you around folks !Bye for now !

P.S: சின்னதொரு வேண்டுகோள் ப்ளீஸ் ?! நமது இதழ்களையும், அவை கிடைக்கும் இடங்களையும் போட்டு  மதுரையில் கேபிள் டி.வி.யில் விளம்பரம்  செய்ய நினைத்து வருகிறோம். அங்கே popular ஆன சேனல் எது ? என்றும் ; அதன் தொலைபேசி நம்பரும் அனுப்பிட முடியுமா guys? ஏற்கனவே கும்பகோணம் நகரில் இந்த முயற்சியை நடத்திப் பார்த்துள்ளோம் - அழகான results சகிதம் ! So சிறுகச் சிறுக ஒவ்வொரு மாவட்டமாய் இந்த முயற்சிகளைக் கையாண்டு பார்க்க நினைக்கிறோம்!  

And இது என்னவென்று யூகித்துச் சொல்லுங்களேன் பார்க்கலாம் ? 

259 comments:

 1. டுரங்கோ – நண்பர்கள் பலரும் இந்த கதையை பலவகையில் சிறப்பாக விமர்சனம் செய்துவிட்டதால் புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை எனினும், எனது ரெண்டு வரி விமர்சனம்.

  இவரின் கதை யதார்த்ததுடன் கமர்சியல் விஷயம்களை சரியான விதத்தில் கலந்து கொடுக்கும் இயக்குனர் பாலாவின் படம் போல் உள்ளது. விறுவிறுப்பாக நகரும் விதம் கதையை அமைத்தது இதன் வெற்றியை பறைசாற்றி விட்டது.

  நமது வலை மன்னன் ஸ்பைடரை பிடிக்கும் எல்லோருக்கும் இவரை பிடிக்கும் இருவருக்கும் உள்ள ஒற்றுமை Anti-Hero.

  ReplyDelete
 2. " ஒரு திரை விலகும் நேரம்
  எழுதப்பட்ட விதியின்
  மறைக்கப்பட்ட நிஜங்கள்
  வெட்ட வெளிச்சமாகிடாதோ!"

  பின்னீட்டிங்க எடிட்டர் சார்! மூன்று தலைப்புகளையும் ஒருங்கிணைத்த விதம் - அருமை!

  அட்டைப் படம் - மிரட்டுகிறது!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY @ சூப்பரா சொன்னீங்க!

   Delete
  2. கவிதா அல்ல...கவித ...கவித..ஈவி , பரணி சரியா டைப்பிருக்கன்ல..

   Delete
 3. நீங்கள் XIII குண்டு பூக்கும் செட்டு புக்குமாக போடப் போகிறேன் என்று சொன்னாலும் சொன்னீர்கள் காமிக்ஸ் ரசிகர்கள் பாடு திண்டாட்டமாகி விட்டது. ரெண்டு புக்கையும் எப்படி வாங்கப் போகிறோமோ என்று என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட வசந்த மாளிகை சிவாஜி லெவலுக்குப் போய்

  கலெக்சனுக்கு ஒரு மனமிருந்தால்
  குண்டு புக் வாங்கி விடலாம்
  குண்டு புக்கை மறப்பதற்கு ஒரு மனமிருந்தால்
  செட்டு புக் வாங்கிவிடலாம்
  ஆனால் இருப்பதோ ரூ 2000
  நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்

  இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
  குண்டு புக் வாங்க ஒன்று
  செட்டு புக் வாங்க ஒன்று

  இரவும் பகலும் இரண்டானால்
  இன்பம் துன்பம் இரண்டானால்
  உறவும் பகையும் இரண்டானால்
  புக்கு ஒன்று போதாதே

  இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
  குண்டு புக் வாங்க ஒன்று
  செட்டு புக் வாங்க ஒன்று

  கலெக்சனின் தண்டனை குண்டு புக் வ(லி)ழி
  பேராசையின் தண்டனை செட்டு புக் வ(லி)ழி
  காமிக்சின் தண்டனை காமிக்ஸ் ரசிகன் வ(லி)ழி
  காமிக்ஸ் ரசிகனை தண்டிக்க என்ன வழி?

  என்று பாடிக் கொண்டிருக்கிறோம். ரெண்டு வகையான புக் தேவைதானா ? எங்கள் பாக்கெட்டை முழுமையாக ஓட்டை போடும் விஷயமாக இருக்கிறது. ஏதாவது ஒரே வகையாக போடலாமே ? சிந்திப்பீர்களா ?

  ReplyDelete
  Replies
  1. Raj Muthu Kumar S : அச்சச்சோ...ஜமுக்காளத்தை லாண்டரிக்குப் போட்டு விட்டு ; ரசீதைக் கூட எங்கே வைத்தேன் என்று தெரியாது தேடிக் கொண்டிருக்கிறேன். காளை மாடுகளையும் அவிழ்த்து விட்டு, ஒரு நடை அலங்காநல்லூர் போயிட்டு வாங்க என்று வழியனுப்பி வைத்தாச்சே ? இனிமேல் கூட்ட வேண்டுமானால் சுனா.பனா பஞ்சாயத்தே சாத்தியமாகுமே ?!

   Delete
  2. ரா.மு.கு

   :D

   "இந்த பாமா, ருக்மணி இருவருமே உங்கள் ஒருவருக்காஆஆஆஹ..." ;)

   Delete
  3. ரெக்கார்டுக்கு ஒரு மனமிருந்தால்
   குண்டு புக் வாங்கி விடலாம்
   குண்டு புக்கை மறப்பதற்கு ஒரு மனமிருந்தால்
   செட்டு புக் வாங்கிவிடலாம்
   ஆனால் இருப்பதோ ரூ 2000
   நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்

   இரண்டு புக்கு வேண்டும் ஆசிரியரிடம் கேட்டேன்
   தூக்கி படிக்க ஒன்று
   வைத்து படிக்க ஒன்று

   இரவும் பகலும் இரண்டானால்
   இன்பம் துன்பம் இரண்டானால்
   உறவும் பகையும் இரண்டானால்
   புக்கு ஒன்று போதாதே

   இரண்டு புக்கு வேண்டும் ஆசிரியரிடம் கேட்டேன்
   குண்டு புக் வாங்க ஒன்று
   செட்டு புக் வாங்க ஒன்று

   பிரம்மிப்பின் தண்டனை குண்டு புக் வ(லி)ழி
   பேராசையின்(மூன்று அட்டயின்) தண்டனை செட்டு புக் வ(லி)ழி
   காமிக்சின் தண்டனை காமிக்ஸ் ரசிகன் வ(லி)ழி
   காமிக்ஸ் ரசிகனை தண்டிக்க என்ன வழி?

   Delete
  4. எழதுங்கள் என் கல்லறையில் " இவன் பைத்தியக்காரன் என்று.! "
   Delete
  5. ஆமாம் நீங்கள் பைத்தித்தகாரரே

   Delete
 4. 4 அட்டைகளுமே அமர்க்களம். அதிலும் சட்டை இல்லாமல் அட்டை யிலும்,உள்ளே ஒத்தக் கண்ணுடனும் தல வெரைட்டி காட்டுகிறார். ஐ யம் வெயிட்டிங் 4 ம் ருசிக்க

  ReplyDelete
 5. அராஜகம் அன்லிமிடெட் - முன்னட்டை ஒரிஜினலை விட, பின்னட்டை (நமது ஓவியரின்) வண்ண ஜாலங்களே அசத்துகிறது!

  சட்டைய கிழிச்சுட்டீங்க...
  கையை பொத்தல் போட்டுட்டீங்க...
  கண்ணை நொள்ளை பண்ணிட்டீங்க...
  தாடி விட வச்சுட்டீங்க...

  இன்னும் எங்க தல'க்கு என்னென்ன கொடுமைகள் பண்ணிப் பார்க்கப் போறீங்களோ...! எங்கள் தல'யின் மீதான அராஜகம்தான் கொஞ்சம் அன்லிமிட்டட்டாப் போய்க்கிட்டிருக்காப்ல இருக்கு! கிர்ர்ர்ர்ர்...

  ReplyDelete
  Replies
  1. கதை சூப்பரா இருக்கும் ஈ.வி ன்னே
   அதானே நமக்கும் வேணும்

   Delete
  2. @ TeX sampath
   நம்ம கவுண்டமணி மாதிரி கோழி குருடா இருந்தா என்ன? குழம்பு ருசியா இருக்கும்னு சொல்றீங்க...!

   நீங்க சொல்றதும் சரிதான்.

   Delete
  3. அடி வாங்குன டெக்ஸ் வில்லருக்கே இவ்வளவு காயம்ன டெக்ஸ் கிட்டிட அடி வாங்குனவ உயிரோட இருபாங்குர????

   Delete
  4. @ G.K

   ஹா ஹா ஹா! செம டைமிங்! :))))

   Delete
  5. //அடி வாங்குன டெக்ஸ் வில்லருக்கே இவ்வளவு காயம்ன டெக்ஸ் கிட்டிட அடி வாங்குனவ உயிரோட இருபாங்குர????//

   'தல'யின் இந்தத் தலைவிரி கோலம் நண்பருக்கு ரொம்பவே பிடித்திருப்பதன் காரணம் புரிகிறது !!

   :-) :-)

   Delete
 6. //// மதுரையில் கேபிள் டி.வி.யில் விளம்பரம் செய்ய நினைத்து வருகிறோம். அங்கே popular ஆன சேனல் எது ? என்றும் ; அதன் தொலைபேசி நம்பரும் அனுப்பிட முடியுமா guys? ஏற்கனவே கும்பகோணம் நகரில் இந்த முயற்சியை நடத்திப் பார்த்துள்ளோம் - அழகான results சகிதம் ! So சிறுகச் சிறுக ஒவ்வொரு மாவட்டமாய் இந்த முயற்சிகளைக் கையாண்டு பார்க்க நினைக்கிறோம்! ////

  அதிகம் செலவு வைக்காத(?) நல்ல முயற்சி!

  ReplyDelete
 7. கரூரில் கேட்டு சொல்லவா சார். ?

  ReplyDelete
  Replies
  1. palanivel arumugam : சொல்லுங்கள் பழனிவேல் !

   Delete
 8. ////And இது என்னவென்று யூகித்துச் சொல்லுங்களேன் பார்க்கலாம் ? ////

  ஸ்மர்ஃப்ஸ் கம்பெனியை நாம வாங்கிட்டோமா சார்? ;)

  பார்த்தா... இந்த எழுத்துருக்களுக்கு Trade Mark வாங்கச் சொல்லி படைப்பாளிங்க உங்களைக் கட்டாயப்படுத்தின மாதிரி இருக்கே..?!!

  ReplyDelete
  Replies
  1. இல்லை நாம் போட்ட டிசைன் அங்கீகரிக்கப் பட்டது சரிதானே சார் ?

   Delete
  2. @ FRIENDS : இல்லை நண்பர்களே ! இது SMURFS படைப்பாளிகள் தாமே தமிழ் உருவில் உருவாக்கியுள்ள லோகோ ! SMURFS என்பதை தமிழில் எப்படி எழுதுவீர்கள் என்று கேட்டிருந்த போது நானும் டைப் செய்து அனுப்பிவிட்டு மறந்தும் போய்விட்டேன் ! ஆனால் அவர்களோ, தங்களது பெல்ஜிய ஸ்டூடியோவில் ஒரிஜினலாக SMURFS க்கு லெட்டரிங் செய்திடும் ஓவியரைக் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர் !

   அதுமட்டுமன்றி - இதனை உலகெங்கும் பிரத்யேகமாய்ப் பயன்படுத்திடப் பதிவும் செய்து விட்டார்கள் !! தங்களது படைப்பு உலகின் எந்தவொரு மூலையில் வெளியானாலும் அதற்கென இவர்கள் காட்டும் முனைப்பு அசர வைக்கிறது !

   Delete
  3. Erode VIJAY : //ஸ்மர்ஃப்ஸ் கம்பெனியை நாம வாங்கிட்டோமா சார்? ;)//

   சொப்பனசுந்தரி யாருக்கு வேணும் ?! ஆனாக்கா அந்த காரையாச்சும் வாங்கலாம்னு ஆசைதான் !!

   பெல்ஜியத்தில் இவர்களின் வரவேற்பறையை மட்டுமாவது வாங்க உலக வங்கி கடன்கொடுப்பின், சொத்தே போனாலும் பரவாயில்லையென வாங்கியிருப்பேன் !! உப்ப்ப்ப்....என்னவொரு அசாத்திய அழகு..கலைநயம் !

   (அப்புறம் வரவேற்பறையோடு சேர்த்து receptionist -ம் உண்டா சார் ? என்ற கேள்வி மைண்ட்வாய்ஸ் கேட்கிறது !! கட்டி வைத்து உதைப்பாங்க சாமியோவ் !!)

   Delete
  4. ///(அப்புறம் வரவேற்பறையோடு சேர்த்து receptionist -ம் உண்டா சார் ? என்ற கேள்வி மைண்ட்வாய்ஸ் கேட்கிறது !!///


   எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ..??!! :-)

   Delete
  5. ஆக உதைக்காம குடுத்தா வாங்கிப்ப்பபீங்க அப்படித்தானே எடிட்டர் சார்!?

   Delete
  6. ///அப்புறம் வரவேற்பறையோடு சேர்த்து receptionist -ம் உண்டா சார் ? என்ற கேள்வி மைண்ட்வாய்ஸ் கேட்கிறது !! ///

   அப்படிக்கிப்படி ஏதாச்சும் இருந்தால் நீங்க ஏன் TMBல ஒரு ஹவுசிங் லோன் வாங்கக்கூடாது, எடிட்டர் சார்? ;)

   ////கட்டி வைத்து உதைப்பாங்க சாமியோவ் !!///

   கண்ணாலம் கட்டிவச்சுத்தானே உதைப்பாங்க சார்? ;)

   Delete
 9. போன பதிவுக்கு முன்னாடியே போட்டேன்
  வெறும் 4 ரூபாய்க்கு
  அல்டிமேட் கலெக்க்ஷன்
  இரத்தப்படலம்
  547 நாட்கள்
  ஒரு நாளைக்கு
  4ரூபாய்
  மொத்தம்
  ரூ.2188
  கவலையை விடுங்கள் மக்களே. !

  ReplyDelete
 10. பிப்ரவரி புத்தக திருவிழாவில் சந்தா செலுத்தலாம் என்றிருந்தேன் ஆனால் ஆா்வ காேளாறு அன்லிமிடெட்டாக இருப்பதால் நேற்று கட்டி விட்டேன்..

  ReplyDelete
  Replies
  1. நல்வரவு சந்தா குடும்பத்தில் இணைந்ததிற்கு!

   Delete
  2. ////ஆா்வ காேளாறு அன்லிமிடெட்டாக இருப்பதால் நேற்று கட்டி விட்டேன்..///

   :D

   Delete
  3. இன்னுமொரு 50 நண்பர்களை இந்த "ஆர்வக் கோளாறு அன்லிமிடெட்" தொற்றிக் கொண்டால் சந்தோஷமாக இருக்கும் !

   Delete
 11. //ஏற்கனவே கும்பகோணம் நகரில் இந்த முயற்சியை நடத்திப் பார்த்துள்ளோம்//

  அனைவருக்கும் வணக்கம். அட்டைப்படங்கள் அருமை. கும்பகோணத்தில் எந்த சானலில் விளம்பரம் வருகின்றது.

  ReplyDelete
 12. நீங்கள் ஒரிஜினலை அப்படியே போட்டிருப்பதாகச் சொன்னாலும், ஒரிஜினலில் சரியாக வரையப்பட்ட டெக்சின் முகம், எமது அட்டையில் சப்பை மூக்கும், ஒன்றரைக் கண்ணுமாக, வேறு யாரோ போல் காட்சியளிப்பது எனக்கு மட்டும் தானா? :-|

  ReplyDelete
  Replies
  1. @ Prunthaban

   நீங்கள் கூறிய வித்தியாசம் எனது மொபைல் திரையில் சரியாகப் புலப்படவில்லை எனினும், வலதுகை புஜத்தை வரைந்திருப்பதில் இந்த வித்தியாசத்தை உணரமுடிகிறது! துப்பாக்கி உறை கூட ஒரிஜினலைவிட குறுகிப் போயிருக்கிறது! அவ்வளவு நீளமான ரிவால்வரை அந்தக் குட்டியூண்டு உறையில் வைத்தால், நடக்கும்போது கீழே விழுந்துவிடும் சாத்தியம் அதிகம்! ( ஒருவேளை அதானால்தான் கையில் கட்டோடு அலைகிறாரோ என்னமோ!!)

   Delete
  2. ஒரிஜினலை ட்ரேஸ் செய்யும்போது ஒரு muscle கூடியோ/குறைந்தோ விடுகிறது போலும்!
   பெரிய குறைகளாகத் தெரியவில்லை எனினும், ஒரிஜினலையும், வரையப்பட்டதையும் வைத்து 'ஆறுவித்தியாசம்' போட்டி நடத்தலாம்! :)

   Delete
  3. //நீங்கள் ஒரிஜினலை அப்படியே போட்டிருப்பதாகச் சொன்னாலும், ஒரிஜினலில் சரியாக வரையப்பட்ட டெக்சின் முகம், எமது அட்டையில் சப்பை மூக்கும், ஒன்றரைக் கண்ணுமாக, வேறு யாரோ போல் காட்சியளிப்பது எனக்கு மட்டும் தானா? :-|//

   எனக்கும் தான்.

   Delete
  4. //ஒரிஜினலையும், வரையப்பட்டதையும் வைத்து 'ஆறுவித்தியாசம்' போட்டி நடத்தலாம்! :)//

   'ஆறுவித்தியாசம்' போட்டி நடத்துவதற்கு இரண்டு படமும் கொஞ்சமாவது ஒத்துபோகணுமில்ல :-)))

   சாரி சார், இரண்டாவது முறையாக டெக்ஸ் அட்டைப்படம் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

   Delete
 13. டெக்ஸ் முகத்தோற்றம் வேறுபடுகிறது! மற்றபடி பிப்ரவரி இதழ்கள் அட்டைப்படங்கள் ஆவலை தூண்டுகிறது! Welcome February!

  ReplyDelete
 14. Smurf logo மார்ச் கார்ட்டூன் quota அட்டைப்படத்தின் முன்னோட்டம்!?

  ReplyDelete
 15. அனைவருக்கும் வணக்கம்.

  ReplyDelete
 16. குறள் பால்:அறத்துப்பால்.குறள் இயல்:துறவறவியல்.அதிகாரம்:தவம்
  குறள் 270:
  ‘’இலர்பல ராகிய காரணம் நோற்பார்
  சிலர்பலர் நோலா தவர்.’’

  மு.வ உரை:
  ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

  பரிமேலழகர் உரை:
  இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராகநல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் -தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பனஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வுஇன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார்ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்துஉரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரதுதாழ்வு கூறப்பட்டது.).

  மணக்குடவர் உரை:
  பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.

  ReplyDelete
  Replies
  1. இந்த குறள் எற்கனவே ஓரு பதிவில் போட்டு இருக்கிங்க.

   Delete
  2. ///இந்த குறள் எற்கனவே ஓரு பதிவில் போட்டு இருக்கிங்க.///

   இதை மறுபதிப்புன்னு எடுத்துக்கோங்களேன். .! :-)

   Delete
  3. //மறுபதிப்பு//
   ஸஸஹஹஹஹ

   Delete
  4. மறுபதிப்பு சீசன் அல்லவா நமக்கு ? :-)

   Delete
 17. 1ம் தேதிக்கூ காத்துள்ளேன்.

  ReplyDelete
 18. All are welcome ,& good morning
  டியுராங்கே மற்ற பாகங்கள் 2017 அட்டவனையில் இல்லையே சார் எஞ்சியவைகளை எப்போ வெளியிட உத்தேசம்

  ReplyDelete
 19. நான்கில் ஜேஸன் ப்ரைஸ் அட்டைப்படம் செம கலக்கலாயிருக்கிறது.டெக்ஸ் ஒரிஜினல் அட்டைப்படத்தில் மஞ்சள் கலர் சட்டையைப்போட்டு அழகு பார்க்க முடியவில்யென்று, தொப்பியையாவது மஞ்சள் கலரில் போட்டுவிடுமென்று ஓவியர் முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறதே......!!!

  ReplyDelete
 20. ஜேசன் ப்ரைஸ் ஏற்கனவே இரண்டு பாகத்திலும் முடிவு என்ன வென்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டது , ஜனவரி இதழான டெக்ஸ் இன் ஆவியின் ஆடுகளம் கதை சூப்பர் சார் நமது தலையை இப்படி டிடக்டிவ் பானியில் பார்க்கவே பிடித்திருக்கின்றது இதற்கு முதல் திகில் நகரில் டெக்ஸ் கதை ஏற்படுத்திய உனர்வை இந்த ஆவியின் ஆடுகளம் ஏற்படுத்தியது சொல்லப்போனாக் இந்த இரண்டு கதைகளும் பெஸ்ட் சார் வழமையான டெக்ஸ் கதைகளின் பானியிலிருந்து இவை சற்று விலகி நிற்பதே இதன் தனித்துவம்

  ReplyDelete
  Replies
  1. YES!! ஆவியின் ஆடுகளம், திகில் நகரில் டெக்ஸ் இரண்டு கதைகளிலும் வில்லன் யார் என்று கடைசி வரை புதிராகவே இருக்கிறது. ஆனால் கதையின் ஆரம்பத்திலேயே வில்லன் இவன்தான் என்று காட்டிவிட்டு, அவனை கடைசியில் மடக்கும் கதைகளில் அவ்வளவு சுவாரசியம் இருப்பதில்லை. 'சர்வமும் நானே' கூட ஆரம்பத்திலேயே வில்லனை காட்டிவிடுகிறார்கள். முதல் பாதி மட்டுமே விறுவிறுப்பாக சென்ற சர்வமும் நானே கதை, பின் பாதியில் சுவாரசியம் குறைந்து விட்டது. கடைசி 200 பக்கங்கள் தொடர்ச்சியாக நல்லதே நடந்துக் கொண்டிருப்பது ஒருவகை சலிப்பை உண்டாக்கிவிட்டது.

   Delete
  2. Aashique.stark : //வழமையான டெக்ஸ் கதைகளின் பானியிலிருந்து இவை சற்று விலகி நிற்பதே இதன் தனித்துவம்//

   ஒரே template தான் என்றாலும், அதனுள் இயன்றளவு மாற்றங்களைக் காட்டும் பொருட்டே தெடிக் கொண்டே இருக்கிறோம் TEX கதைக்க குவியலுக்குள் !

   Delete
 21. ///
  And இது என்னவென்று யூகித்துச் சொல்லுங்களேன் பார்க்கலாம் ?///


  இந்த மாத சந்தாவுக்கான சர்ப்ரைஸ் சம்மந்தப்பட்ட ஏதோ ஒன்று. .!!

  ReplyDelete
 22. காலை வணக்கம்இருதினத்துமுன்பு பழையபுத்தகத்தை புறட்டபோது டால்டன்நகரமபடித்தேனஆதில்ஒருகாரட்டின்கதை விளம்மரம்இருந்த்து

  ReplyDelete
  Replies
  1. எத்தனை வருஷம் ஆனாலும் குடுத்த வாக்கை நம்ப ஆசிரியர் காப்பாத்துவாரு. இருபது வருஷம் தாமதம் நினைக்கிறேன்.

   Delete
  2. ஹி...ஹி..ஹி..! அசடு வழியும் படங்கள் 20 !

   Delete
 23. C.I.D.லாரன்ஸ் இதுவரை படிக்காத கதை.மேலும் காமிக்ஸ் க்ளாஸிக்ஸில் வராத கதை என்பதாலும் ஆவலுடன் வெய்ட்டிங்....!

  ReplyDelete
 24. \\\ "முழுநீளக்கதைகள் " என்ற பெட்ரோமேக்ஸேதான் வேண்டும்.....///

  இந்தக்கூட்டத்தில் நானும் ஒரு மெம்பர்தான் சார்...!
  கொஞ்சம் யோசித்துப்பார்க்கிறேன்.ஏன்சிறுகதைத்தொகுப்புகள் படிக்கும் சுவாரஸ்யத்தை மட்டுப்படுத்துகின்றன..? மினி லயனில்,திகிலில் கூட நிறைய சிறுகதை தொகுப்புகள் வந்து வாசக மனங்களை கொள்ளை கொண்டு ஹிட்டடித்திருக்கின்றனவே...? இப்போது மட்டும் ஏன் சிறு கதைகள் என்றாலே பிடிக்கமாட்டேனென்கிறது..?
  அன்று பிடித்தது.
  இன்று பிடிக்கவில்லை.
  ஏன்...? ஏன்...? ஏன்...?
  விடை மிக எளிது.
  சமீபத்தில் லயனின் சுல்தானுக்கொரு சவால் இதழை மறுவாசிப்பு செய்தேன்.இரண்டு மதியில்லா மந்திரி.ஒரு சிக் பில்,ஒரு ரிப் கிர்பி என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வெரைட்டிகள்.ஆனால் தற்போது ஒரே நாயகரின் ஒரே விதமான டெம்ப்ளேட் கதைகளை ஒரு இதழ் முழுக்க படிப்பதால் ஒரு ஆயாசம் குடிகொண்டு பிடிக்காமல்போய்விட்டதோ...?
  எனினும் சார்..முன் போல பல கதை பொட்டலங்களுக்கு படைப்பாளிகளின் அனுமதி சாத்தியமில்லையென்பதால்....,தற்போதைய சிறுகதைத்தொகுப்புகளையும் கொஞ்சம் கொஞ்சமாய் ரசிக்க முயற்சிக்கிறேன் சார்...!

  ReplyDelete
  Replies
  1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : வெறும் 44 பக்கங்களை சிறு கதைகளாக்கிப் படிப்பதில் ஆயாசம் தோன்றவும் முடியுமா - என்ன நண்பரே ? அதிலும் லைட்டான கார்ட்டூன்களில் ?

   Delete
 25. அதெல்லாம் இருக்கட்டும்.... நம்ம மாடஸ்டி குட்டி(புக்) எங்க சார்? :-)

  ReplyDelete
  Replies
  1. நாங்க எல்லாம் மாடஸ்டி குண்டு புக்
   கேட்டுகிட்டு இருக்கோம் நீங்கள் குட்டி புக் கேக்குறிங்களே.

   Delete
 26. அராஜகம் அன்லிமிட்டட் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
  ஜேசன் ப்ரைஸ் சர்ப்ரைஸ்.

  ReplyDelete
 27. ஸ்மர்ஃப்ஸ் - தொடருக்காக ப்ரொஃபஷனல் டிசைன் நிறுவனத்திடம் லோகோ டிசைன் செய்யக் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள். அதன் அப்ரூவலுக்கான டிசைன்களா இங்கே நீங்கள் பதிவிட்டிருப்பவை?

  ReplyDelete
 28. இம்மாத அட்டைப்படங்கள் அனைத்தும் அருமை. TOP அட்டைப்படம் டெக்ஸ்சின் அட்டைப்படமே. சற்றும் எதிர்ப்பார்க்காத தோரணையில் டெக்ஸ் கலக்குகிறார். கதையின் TITLE'ம் அட்டையும் இது ஒரு வித்யாசமான கதை என உணர்த்தி, படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

  ReplyDelete
 29. வணக்கம் சார் & ஹாய் ப்ரண்ட்ஸ்...

  4ல் வழக்கமாக பரிசீலனை செய்யும் 3ல்,
  3வது மந்திரிதான்...
  2க்கும் 1க்கும் டெக்ஸா?ஜேசனா? என இருவரும் மல்லுக்கட்டுவதால் புதன்வரை தீர்ப்பு தள்ளிவைக்கப்படுகிறது சார்.

  சென்ற மாத ஜேசன் விளம்பரங்கள் ஒன்றில் ஒரு மனிதன் இதயத்தை கையில் எடுத்து வைத்து ஏதோ மந்திரங்கள் செய்து கொண்டு இருப்பது போல இருந்தது. அதற்கும் கதையின் க்ளைமாக்ஸ்க்கும் முக்கிய தொடர்பு இருக்கும் என நினைக்கிறேன்...
  விடை அறிய, இரு மாதங்கள் காத்திருந்தது பெரிதாக தோணல, இன்னும் இரண்டு நாட்கள் உள்ளனவே என்பது இரு யுகங்களோ என தோன்றுகிறது சார்.

  ReplyDelete
  Replies
  1. இது எழுதப்பட்ட விதி ஜி..

   Delete
  2. சேலம் Tex விஜயராகவன் : இந்த க்ளைமாக்ஸ் பாகத்தை ஒருமுறை படித்தால் பற்றாது சார் ; நிச்சயமாய் இரண்டாம் வாசிப்பில் தான் முந்தைய முடிச்சுகள் சகலமும் எவ்விதம் சம்பந்தப்பட்டுள்ளன என்பது புலனாகும் !

   Delete
  3. சார் லார்கோவ படிச்சு அசந்து போய்...தோர்கள ரசிச்சிட்டிருந்தேன்..அப்ப இன்னைக்கு ஜேசன்தா..

   Delete
 30. Dear Edit,

  February Covers are all attractive. Looking forward to hold them soon. This would probably be the first month in over two years when Comics of said month, going to be released on the same. isn't it?? Remarkable achievement so far.

  ReplyDelete
  Replies
  1. Rafiq Raja : பிப்ரவரி பிறக்கும் முன்பே இதழ்களை ஒப்படைத்திருக்க இம்முறையும் முயற்சித்தோம் ; but டெக்ஸ் கதையின் எடிட்டிங்கில் கொஞ்சம் லேட்டாகி விட்டது ! இல்லையேல் 31 st ஜனவரியே உங்கள் கைகளை எட்டியிருக்கும் சார் !

   Delete
 31. அனைவருக்கும் இனிய காலை
  வணக்கம்.

  ReplyDelete
 32. விஜயன் சார்,

  தங்களது முந்தைய பதிவில் இன்னொரு மெகா குண்டு கதை காத்து கொண்டுள்ளது என்று சொல்லியிருந்தீர்கள்.
  அது மேக் கோய் (Mac Coy) தானா?

  Looks like "Alexis MacCoy" is famous cowboy like Blueberry.

  http://www.bedetheque.com/BD-Mac-Coy-Tome-9-Le-canyon-du-diable-20168.htm

  Excerpt from your previous post:
  "அதே சமயம் ஒரு வித்தியாசமான கதைத் தொடரானது கண்ணில் படவே செய்தது ! 1250 பக்கங்கள் கொண்ட ஒரே மெகா-மெகா-மெகா கதையது ! "

  அப்புறம் ப்ரூஸ் ஜே ஹாகர் ( or ப்ரூஸ் ஜே ஹாவ்கர்?) எப்பொழுது தமிழ்நாடு துறைமுகத்திற்கு வருகிறார் என்றும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

  And every Sunday morning starts with reading your post on a mobile. Thanks a lot for that making our Sundays special.

  ReplyDelete
  Replies
  1. Typo in last line.
   Please read it as "Thanks a lot for making our Sundays special."

   Delete
  2. இந்த 1250 பக்கக் கதையை(யும்) த.இ.போ சைஸுல போடுங்க எடிட்டர் சார், ஆள் வச்சுத் தூக்கியாவது படிச்சுக்கறேன்! :)

   Delete
  3. Erode Thalabathi,
   +1.
   I second your suggestions on bigger size book.

   Delete
  4. Mahesh kumar S : "இவர் - அவர் அல்ல !!"

   McCoy ஒரே சங்கிலித் தொடரில் பயணமாகும் கதைகள் - ட்யுராங்கோவைப் போலவே !

   ஆனால் நான் குறிப்பிட்ட கதையானது One Single Plot ! ஒரே சீராய் மொத்தக் கதையும் ஒரே திசையில் பாய்ந்து ஓடிடுகிறது !

   //Thanks a lot for making our Sundays special."//

   உங்களது ஞாயிறுகளில் நம் பதிவுகளுக்கெனவொரு சின்ன இடமிருப்பது ரொம்பவே சந்தோஷம் கொள்ளச் செய்யுமொரு விஷயம். சில நேரங்களில் இதற்கென நான் அடிக்க நேர்ந்துள்ள கூத்துக்கள் சொல்லி மாளா ரகம் !! அவற்றைப் பற்றி எழுதினாலே, இரண்டு பதிவுகள் ஓடிவிடும் !! ஆனால், இங்கும் சரி, நேரில் சந்திக்கும் போதும் சரி, மலர்ந்த முகத்தோடு - "தவறாமல் blog படிப்பேன் சார் !" என்று நண்பர்கள் சொல்வதைக் கேட்கும் பொது அந்த behind the scenes மெனக்கெடலுக்கொரு அர்த்தம் இருப்பது போல் தோன்றும் ! Thank you sir !

   Delete
  5. சரி சார்..2019 ல அத போட்டு தூள் கிளப்பிடுங்க....கதை எது குறித்தென கூறலாமே..

   Delete
  6. Vijayan sir,

   Thanks for the clarification on McCoy.
   As Steel Claw Ponraj said, please give a note about that story line.

   Thanks again for Sunday posts in this blog.

   Regards,
   Mahesh kumar Selvaraj

   Delete
 33. ஜேஸன் பிரைஸ் எவ்வளவு பெரிய surprise கொடுக்க போகிறார் என்று தெரிய வில்லை.

  ReplyDelete
  Replies
  1. Ganeshkumar Kumar : எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி புகுந்திடுங்கள் சார் ; கதாசிரியரின் கற்பனை சிறகு விரிப்பதைக் காண்பீர்கள் !

   Delete
 34. நான் முதலில் படிக்க போவது மதியில்லா மந்திரி தான்.

  ReplyDelete
  Replies
  1. நானும்! நான் எப்போதும் முதலில் படிப்பது நமது காமிக்ஸ் காமெடி நாயகர்கள்தான்!

   Delete
  2. Ganeshkumar Kumar & Parani from Bangalore : ஒவ்வொரு மாதமும் முதலில் நான் எழுதி முடிப்பது மட்டுமன்றி ; தயாரிப்பில் முந்திக் கொள்வதும் கார்ட்டூன் கதைகளே ! இப்போது மே மாதத்து மொழிபெயர்ப்பு ஓடிக்கொண்டுள்ளது கார்ட்டூன்களுக்கு !!

   At a stretch 15 பக்கங்கள் எழுதினால் கூட நோவு தெரிவதில்லை ; ஆனால் மற்ற கதைகளுள் 4 பக்கங்களை ஒருசேர முடிப்பதற்குள் தொங்கிப் போகும் நாக்கு !

   Cartoons !! Luv them !

   Delete
 35. பிப்ரவரி மாத அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் டாப் ரகம் சார்!!!

  'என் ராஜ்ஜியமே ஒரு கேரட்டுக்கு' பதிலா 'கேரட் ராஜ்ஜியம்' இல்ல 'ஒரு கேரட்டின் ராஜ்ஜியம்' title வெச்சிருக்கலாமோ சார்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு தம்பி,

   கதையை படித்தபிறகு உங்களுடைய எண்ணத்தில் மாற்றமிருக்கக் கூடுமில்லையா?

   சாதாரணமாகத் தோன்றிய சில தலைப்புகள், கதையைப் படித்தபிறகு வீரியமாய் தெரிவதை உணர்ந்திருக்கிறேன்!

   Delete
  2. ///சாதாரணமாகத் தோன்றிய சில தலைப்புகள், கதையைப் படித்தபிறகு வீரியமாய் தெரிவதை உணர்ந்திருக்கிறேன்!///

   உண்மையோ உண்மை. .!

   நான் அவ்வாறு சமீபத்தில் உணர்ந்த டைட்டில் NBS ல் வெளியான ஜில் ஜோர்டானின் "அலைகளின் ஆலிங்கனம் " . .! இதைவிடப் பொருத்தமாய் இந்தக் கதைக்கு வேறொரு டைட்டில் இருக்க வாய்ப்பேயில்லை. .!!

   Delete
  3. // நான் அவ்வாறு சமீபத்தில் உணர்ந்த டைட்டில் NBS ல் வெளியான ஜில் ஜோர்டானின் //

   சமீபத்தில் ??????

   Delete
  4. அதற்கு எதற்கு ஓய் 4வருடம் முன்னாடி போனீரு...!!!
   4மாதம் முன்னாடி வந்த "எழுதப்பட்ட விதி " யே சமீபத்திய பொருத்தமான தலைப்பு தானே...

   Delete
  5. சமீபத்தில் படித்து உணர்ந்த - என படிக்கவும்!

   Delete
  6. @நண்பர்களே:
   :-):-):-)

   Delete
  7. நாலுநாளா NBSஐத்தான் புரட்டிட்டு இருக்கேனுங்க., அதான். ..!!!

   Delete
  8. Sathiya : கதையைப் படித்த பின்னரும் உங்கள் கருத்தில் உறுதியாக இருப்பீர்களா ? என்பது சந்தேகமே ! வேறு எந்தப் பெயரும் இதற்கு suit / set ஆகாது என்று சொல்வீர்கள் நிச்சயமாக !

   Delete
  9. ஜனவரியின் கார்ட்டூன் செக்ஷனில் வந்த "நானும் ஒரு சிப்பாய்தான்" கதையை படித்து முடித்ததும் எனக்கு தோன்றிய தலைப்பு "சகலகலா சிப்பாய்."

   Delete
  10. @எடிட்டர் சார்:
   தலைப்பு ஒரு முடிவில்லாமல் இருப்பது போல் தோன்றியது சார்...Anyways இந்த தலைப்பும் ஓ.கே. தான் சார்!!!

   Delete
 36. ///So சிறுகச் சிறுக ஒவ்வொரு மாவட்டமாய் இந்த முயற்சிகளைக் கையாண்டு பார்க்க நினைக்கிறோம்! ///

  மாவட்டம்தோறும் விளம்பரம் செய்வதற்கு இன்னொரு எளிய வழி தோன்றுகிறது சார்.

  இரண்டு அல்லது நான்கு பக்கங்களுக்கு விளம்பர நோட்டிஸ் போல அச்சடித்து, அந்தந்த மாவட்டத்தில் பேப்பர் போடும் ஏஜெண்டுகளை சரிகட்டி, அத்தனை தினசரி பேப்பர்களுக்குள் நோட்டீஸை வைத்து டெலிவரி செய்யச் சொல்லலாம்.
  டீவியில் விளம்பரம் தொடங்கியதும் ரிமோட்டின் பேட்டரிக்கு ஆயுள் குறையத் தொடங்கிவிடுகிறது. ஆனால் செய்தித்தாளுடன் சேர்ந்து வரும் விளம்பர நோட்டிஸ் நிச்சயம் நிறைய கரங்களையும் கண்களையும் சென்றடையும் வாய்ப்புகள் அதிம். முக்கியமாக வாசிப்பு பழக்கத்தை விட்டகுறை தொட்டகுறையாக தொடர்ந்து கொண்டிருக்கும் பலரைச் சென்றடையும்.
  அவர்களில் ஓரளவு மீள்வருகை புரிந்தாலும் கூட நம் காமிக்ஸ் குடும்பம் செழித்தோங்குமே ..!!

  ஒரு சின்ன ஆலோசனைதான். நிறைகுறைகள் நிச்சயம் இருக்கக்கூடும். .!!

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே இது சேலம் உள்ளிட்ட சில ஊர்களில் நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டது! நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை!

   Delete
  2. இது சுப்பர் ஐடியா....

   Delete
  3. @ FRIENDS : 25,000 நோட்டீஸ்கள் சென்னைக்கு ; 1௦,௦௦௦ நோட்டீஸ்கள் ஈரோட்டுக்கு என்று இதை ஓராண்டுக்கு முன்னரே முயற்சித்தோம். இதற்கென பிரத்யேகமாய் ஒரு ஆர்ட் பேப்பர் நோடீஸும் அச்சிட்டிருந்தோம் - லக்கி லூக்கின் "புரட்சித் தீ" கதையின் உட்பக்கத்தை ஒரு சைடிலும் , மறுபக்கத்தில் ஆங்காங்கே உள்ள நமது ஏஜென்ட்கள் முகவரியோடும் ! Posh ஆன அடையார் ; பெசன்ட் நகர் ; OMR அடங்கிய தென் சென்னையில் தான் இத்தனைக்கும் முயற்சித்தோம் !

   ஊஹூம்....மருந்துக்கு கூட எவ்வித பலன்களும் கண்ணில் படவில்லை ; இரு நகர முகவர்களுக்கும் எவ்வித enquiry களும் வந்திருக்கவில்லை !

   ஆனால் சமீபமாய் கும்பகோணத்தில் கேபிள் டி-வி.யில் அங்குள்ள 2 கடைகளின் போட்டோக்களோடு நம் விளம்பரங்களை ஓட்ட ஆரம்பித்த முதல் மாதத்திலேயே 50 % ஜம்ப் தெரிந்தது விற்பனையில் !! குறைந்த பட்சம் 15 புது வாசகர்கள் phone செய்ததாக முதல் வாரத்திலேயே சொன்னார்கள் !

   Delete
 37. விஜயன் சார், இந்த டெக்ஸ் கதை டெக்ஸ் என்பவர் எங்களுக்கு எல்லாம் அறிமுகமாவதற்கு முன்னால் வந்த கதையா, அல்லது டெக்ஸ் என்ற பெயரில் வேறு ஒருவர் மாறுவேடத்தில் வலம்வந்த கதையா? அல்லது டெக்ஸ் பிளாஸ்டிக் surgery செய்வதற்கு முன்னால் வந்த கதையா? - ஹி ஹி ஒண்ணும் இல்ல இந்த டெக்ஸ் அட்டைபடத்தை பார்த்தவுடம் தோன்றிய கேள்விகள்!

  ReplyDelete
  Replies
  1. @ PfB

   நீங்க இப்படியெல்லாம் கேட்பீங்கன்னு தெரிஞ்சுதான் TEXனு பெரிசா லோகோ போட்டிருக்கோம்! என்ன.. ஒரு அம்புக்குறி போடாம விட்டுட்டோம், அவ்வளவுதான்! ;)

   Delete
  2. Erode VIJAY @ அந்த "TEX" என்பது மட்டும்தான் இது டெக்ஸ் கதை என்பதை சொல்லுகிறது! இதை மட்டும் நம்ப ஆசிரியர் அட்டையில் பிரிண்ட் செய்யாமல் இருந்தால் விளைவை எண்ணி பார்க்வே பயமாக இருக்கிறது!

   ஆனாலும் நம்ப ஆசிரியர் ஒரு தீர்கதரிசி, இப்படி எல்லாம் கேள்வி வரும் என்பதால் டெக்ஸ் கதைகளுக்கு தனி தடம் என்று ஆரம்பித்தவுடன் "TEX" என்பதை அட்டைபடத்தில் பெரிய எழுத்துகளில் வெளிஇட்டதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

   Delete
  3. சார்...டெக்ஸ் ஒரு புக்குக்கும் , அடுத்த புக்குக்கும் அட்டையில் வித்தியாசம் தெரிய மாட்டேன்கிறது ; படித்த புக்கையே நேற்றைக்கு மறுபடியும் வாங்கிப் போய் விட்டேன் என்று இம்முறை என்னிடமோரு சென்னை நண்பர் குறை பட்டுக் கொண்டார் ! அவர் இந்த மாதம் நிச்சயம் குஷிப்படுவார் தானே ?

   'தல'யின் பழனியாண்டிக் கோலம் never before ரகமல்லவா ?

   Delete
  4. // 'தல'யின் பழனியாண்டிக் கோலம் never before ரகமல்லவா ? //
   உண்மைதான் சார்!

   Delete
 38. நமது காமிக்ஸ் பலரை சென்றடைய இன்னும் ஒரு யோசனை: அந்த காலத்தில் ஒரு ஆட்டோவில் மைக் & ஸ்பீக்கர் செட் கட்டிகொண்டு தங்களின் பொருள்களை விளம்பரம் செய்து கொண்டு, நடுவே பாடல்களை போட்டு கொண்டு அவர்கள் கம்பெனியின் விளம்பர நோட்டீஸ்களை விநியோகம் செய்து கொண்டு போவார்கள். அவர்கள் ஒவ்வொரு தெருவிலும் 5-10 நிமிடம்கள் செலவிடுவார்கள்! பழைய யோசனைதான் ஆனால் பலன் உத்திரமனது.

  ReplyDelete
  Replies
  1. இதைவிடவும் பலமடங்கு பலன் கொடுக்கக்கூடியது மாயாவி சிவாவின் '2 in 1 மாத்தியோசி' கான்செப்ட்! தன் தரப்பில் சிற்சில குறைகளைக் களைய அவரும், அதை சமூகவலைத்தளங்களில் பரப்பிட நாமும் மெனக்கெடுவோமானால் பைசா செலவின்றி பெரிய விளம்பர ரீச் கிடைக்கப்பெறலாம்!

   அவர் ரெடிதான்! நம்மில் எத்தனைபேர் ரெடி என்பதே இப்போதுள்ள பிரச்சினை!

   Delete
  2. // மாயாவி சிவாவின் '2 in 1 மாத்தியோசி' கான்செப்ட் // அதில் உள்ள குறைகளை முதலில் களையட்டுமே, அதன் பின்னர் நான் ரெடியா இல்லையா என சொல்லுகிறேன்!

   Delete
  3. Parani from Bangalore : ஆட்டோவும், மைக் செட்டும் தெருவுக்குள் பார்த்தால் ஏதோ பை-எலெக்ஷன் அறிவிச்சுட்டாங்க போலிருக்கு என்று நம்மவர்கள் குஷியாகக் கூடிவிடுவார்கள் ! அவர்கள் கையில் லார்கோ வின்ச் ; தோர்கல் ; டெக்ஸ் என்று நோட்டீஸ் கொடுத்தால் கொலைவெறியாகிப் போவார்கள் சார் !

   //பழைய யோசனைதான் ஆனால் பலன் உத்திரமனது//

   ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு நம்மவர்கள் சந்தா அட்ரஸ்களை டைப் செய்து விட்டால், வருஷம் முழுக்க தவறான முகவரிச் சீட்டுக்களோடே பார்சல்கள் பயணமாகுமே என்று தோன்றியதால் - இன்றைய நம் வாசக வட்டத்தை சமீபமாய் முகவரிகளோடு பரிசீலித்தேன் !! கிட்டத்தட்ட 50 % சென்னை & பெங்களூருவில் IT நிறுவனங்களில் பணிபுரிவோர் தான் நமது core வாசகர்கள்.

   ஆன்லைனில் வாங்கிடுவோரும் கிட்டத்தட்ட இதே போலவே தான் !! So நமது எதிர்காலம் இருப்பது இந்த FB ; Twitter ; Instagram தலைமுறையிடம் தான் சார் !

   Delete
  4. சார்,திடுதிப்புனு இப்படி சொல்லுவீங்கண்ணு எதிர் பார்க்க வில்லை

   Delete
  5. சில நேரங்களில் அணில்களின் உதவியும் தேவைப்படுகிறது.

   Delete
 39. திரை விலகும் நேரம் ..


  மூன்று பாகங்களையும் ஒரு சேர படிக்க ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ..


  குறைந்த பக்கங்களில் சிறுகதைகளாக வரும் படைப்புகள் அதிகம் மனதை கவர்வதில்லை...ஆனால் அதிலும் ஒரே விதிவிலக்கு மதியில்லா மந்திரி...நான்கு ..ஐந்து பக்கங்களிலியே மனதை கவர்பவர் சிறிது முழு நீளமாக எனில் சொல்லவா வேண்டும் ...கை தட்டி ரசிக்க காத்திருக்கிறேன் சார்...


  சிஐடி லாரன்ஸ் ...

  மறுபதிப்பு இதழாக இந்த கதையை பார்த்து இருந்தாலும் அப்பொழுதே கண்களினால் கூர்ந்து பார்த்தாலும் சிரம படும் படி இருந்த பொடி எழுத்தால் இப்போது புது மறுபதிப்பு இதழை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது..


  டெக்ஸ் சொல்லவும் வேண்டுமா ...என்ன ..பரபரப்பாக காத்திருக்கிறேன் ...:-)

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : ஜேசன் ப்ரைஸ் மூன்று பாகங்களையும் மொத்தமாகப் படிக்கப் போகும் தலீவர், உள்ளூர் கருப்பசாமி கோவிலுக்குப் போய் லைட்டா தண்ணி அடிச்சிட்டு (முகத்திலே தான் !!) வந்தால் நலம் என்பேன் !! மிரட்டிடும் மூன்றாம் பாகம் !!

   Delete
 40. எடிட்டரை இன்னும் காணாததை வச்சுப் பார்த்தால், தலையில்லா போராளி சைஸுல ஒரு இரத்தப்படலம் specimen பிரதியை ரெடி பண்ணி, 'சின்னக்கவுண்டர்' படத்தில் செந்தில் புல் ஆராய்ச்சி பண்ற போஸ்ல படுத்துகிட்டு தலையை திருப்பித் திருப்பி ரசிச்சுக்கிட்டிருக்கார்னு தோனுது!

  அ..அப்படித்தானுங்களே எடிட்டர் சார்?

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : இல்லீங்கண்ணா....... சம்பந்தமே இல்லாத இன்னொரு சமாச்சாரத்துக்கு 'டம்மி' போட்டு செந்தில் பாணியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கேன் !

   Delete
  2. அது அந்த மெகா தொடர் தானே

   Delete
  3. Rummi XIII : இல்லையே !

   Delete
  4. ///ஸ்பைடரோட அந்த மெகாவா..///

   கட்டப்பா..! என்னையும் குத்திடுப்பா.!!

   Delete
 41. மதியில்லா மந்திரியின் உட்பக்க டீசர், ஏற்கனவே ஃபில்லர் பேஜாக வந்த கதை போலிருக்கே.!

  சுல்தானை கிரகம் விட்டு கிரகம் கடத்த மந்திரி செய்யும் தகிடுதத்தங்களும் விளைவுகளும் செம்ம ரவுசாக இருக்கும்.!
  வண்ணத்தில் காண ஆவல். .!!

  ReplyDelete
  Replies
  1. KiD ஆர்டின் KannaN : மந்திரியார் கதைகள் எல்லாமே கலரில் ரசிக்கப்பட வேண்டியவை நண்பரே ! அதிலும் அந்த ஊரணிக்குள் ஒரு பூதம் வரும் கதை நினைவிருக்கிறதா ? யாரைத் தொட்டாலும் கரைத்து விடுமென்று அந்த பூதத்தை ஒரு குவளையில் அரண்மனைக்குத் தூக்கிக் கொண்டு வருவாரே...? அது all time classic என்பேன் !

   Delete
  2. சுல்தானுக்கொரு சவால் என்று நினைக்கிறேன்.

   Delete
  3. இல்லை ரவி..!

   "கரைப்பார் கரைத்தால் "

   Delete
  4. டெக்ஸ் வில்லரின் 'இரத்த நகரம்' இதழில் ஃபில்லர் பேஜாக வந்தது..'கரைப்பார் கரைத்தால்..' என்ற பெயரோடு...!இது நமது மீள்வருகைக்குப்பின் வண்ணத்திலும் வந்துவிட்டது.

   Delete
  5. சார் மந்திரி அட்டய பாத்து படிக்க படிக்க.. எப்ப மந்திரிய நெனச்சாலும் அந்தக்கததான் என் நினைவுக்கும் வரும்...வண்ணத்துல அத ரசிக்க கண் கோடி வேணுமே...

   Delete
 42. ஸ்மர்ப்ஃஸ்

  எங்களுக்கு ஸ்மரஃப்ஸ் படம் போட்ட ஜமன்ட்ரி பாக்ஸ் குடுக்க போறிங்களா...

  ReplyDelete
 43. இந்த மாத இதழ்கள் அனைத்தும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சார்.

  ReplyDelete
 44. திரை விலகி புதிரை அவிழ்க்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,தல அட்டைபடம் அசத்தல் வழக்கம்போல் கதையும் அசத்தும்,மதியில்லா மந்திரி எனது விருப்ப பட்டியலில் உள்ளவர் எப்போதும்போல நகைச்சுவையில் அசத்துவார்,மறுபதிப்பு இன்னும் வசிக்காத இதழ்.
  மொத்தத்தில் எல்லாமே கலக்கல்.

  ReplyDelete
  Replies
  1. Arivarasu @ Ravi : CID லாரன்ஸ் முதன்முறை படிக்க அழகாக இருக்கும் ! And இதனில் மொழிபெயர்ப்பும் decent !! உறுத்தாது நிச்சயமாய் !

   Delete
  2. நானும் குத்து மதிப்பாதான் போட்டேன் கண்ணன்,எப்படியும் சரி பண்ண வந்துருவிங்கன்னு ஒரு நம்பிக்கைதான்.

   Delete
 45. Replies
  1. Balachandran Subramaniam : தயாராக உள்ளன files ! But கலர் சரி பார்க்க நேரம் பிடிக்கிறது !

   Delete
 46. எனக்கென்னவோ டைகர் சொற்ப ரசிகர்களை திருப்திபடுத்துவதற்க்காக பல லட்சம் ரசிகர்களை கொண்ட டெக்ஸை இப்படி அட்டைப்படமா போட்டிருக்காரோ எடிட்டர் அப்டின்னு டவிட் வருது! :-)

  ReplyDelete
  Replies
  1. P.Karthikeyan : இதில் ஏதோ உள்குத்து...சைடுகுத்து...பின்குத்து இருப்பது போல் தோன்றுகிறது யுவர் ஆனர் !

   Delete
  2. டைகர் கிருஷ்ணன் மாதிரி எப்படிப் பார்த்தாலும் நல்ல இருக்கும்.

   டெக்ஸ் இராமர் மாதிரி.

   Delete
  3. இதில் ஏதோ உள்குத்து...சைடுகுத்து...பின்குத்து இருப்பது போல் தோன்றுகிறது யுவர் ஆனர் !


   #####


   :-))))

   Delete
 47. சார் அட்டைபடங்கள் அனைத்தும் அமர்க்களம்..கதைய பற்றிய உங்க முன்னோட்டம் ஜேசனையும்..டெக்சயும் பன் மடங்கு ஆர்வத்த கூட்டி எதிர் பார்க்கசெய்து விட்டது...டெக்ஸ் இரண்டு பக்க அட்டயும் ஒன்றையொன்று மிஞ்சுது...ஆனா ஒரிஜினல் அட்டய வட்டம் போடாம நிறச்சேர்க்கய மட்டும் நாம செஞ்சிருந்தா இன்னும் எடுப்பா தெரிந்திருக்குமோ...மந்திரி பின்னி எடுக்கு அட்டை...அதிலும் பின்னட்டை ரோஜாப்பூ மாலய நினைவுறுத்தும் ரகம்..எல்லாத்லயும் டாப் லாரன்ஸ் அட்டை..பழைய நினைவை தூண்டுவதாய் ஓவியமும்...அசத்தலான நிறச் சேர்க்கயும் பிரம்மாண்டம்....கண்டு பிடிச்சாச்சு .....அது ஸ்மர்ஃப்ஸ்தானே சார்..

  ReplyDelete
 48. ஸ்மர்ப்ஸ் : நாம் உருவாக்கிய லோகோவை அக்செப்ட் செய்து tm அனுமதி பெற்று அதை நிரந்தரப் பயன்பாட்டுக்கு ரெகுலரைஸ் செய்து ஸ்மர்ப்ஸ் நிறுவனத்திலிருந்து வந்த லோகோ அவை. சரியா?

  ReplyDelete
  Replies
  1. @ FRIENDS : இல்லை நண்பர்களே ! இது SMURFS படைப்பாளிகள் தாமே தமிழ் உருவில் உருவாக்கியுள்ள லோகோ ! SMURFS என்பதை தமிழில் எப்படி எழுதுவீர்கள் என்று கேட்டிருந்த போது நானும் டைப் செய்து அனுப்பிவிட்டு மறந்தும் போய்விட்டேன் ! ஆனால் அவர்களோ, தங்களது பெல்ஜிய ஸ்டூடியோவில் ஒரிஜினலாக SMURFS க்கு லெட்டரிங் செய்திடும் ஓவியரைக் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர் !

   அதுமட்டுமன்றி - இதனை உலகெங்கும் பிரத்யேகமாய்ப் பயன்படுத்திடப் பதிவும் செய்து விட்டார்கள் !! தங்களது படைப்பு உலகின் எந்தவொரு மூலையில் வெளியானாலும் அதற்கென இவர்கள் காட்டும் முனைப்பு அசர வைக்கிறது !

   Delete
  2. முதல் வரி தவிர நான் சொன்னது சரிதான் போலிருக்கு. அதோடு நாம் உருவாக்கியதும், இது வரை பயன்படுத்தி வந்ததும் கூட இதே போல்தானே என்பதாக ஞாபகம்.

   Delete
  3. இது ஓரு வகையில் அவர்களுக்கும் பெருமை தான். உலகில் எத்தனை மொழியில் தங்கள் படைப்பு வருகிறது என்ற எண்ணிக்கையில் ஒன்று கூடி இருக்கும்.
   நம் சர்குலேஷன் சிறிதாக இருந்தாலும் இந்தியா போன்ற பெரிய மார்க்கெட் ல் தாங்கள் படைப்பு பிரந்திய மொழியிலும் வருகிறது என்று சொல்லி கொல்லலாம்.

   Delete
 49. ஜேசன் -ஆவலோடு வெயிட்டிங். மொத்தமாக வாசிக்கவிருக்கும் நண்பர்கள் குழுவில் நான் இருக்கிறேன். எல்லோரும் ரொம்ப பில்டப் செய்திருக்கிறீர்கள். மொக்கை வாங்கினால் பிச்சு பிச்சு!

  டெக்ஸ் அட்டை ரொம்பவே சுமார் ரகம்!

  ReplyDelete
  Replies
  1. ///மொக்கை வாங்கினால் பிச்சு பிச்சு!///

   அது ஏற்கனவே மூணு பாகங்களா பிச்சு பிச்சு தான் வந்திருக்கு ஆதியண்ணே. .!
   உங்களுக்கு வேலை மிச்சம் ..!

   Delete
 50. சார்...இந்த மாத சர்ப்ரைஸ்

  ஒரு ...க்ளூ....:-)

  ReplyDelete
  Replies
  1. ஒரு கொரியன் கிராபிக் நாவலாம் தலீவரே. .!!

   Delete
 51. To: editor,
  டெக்ஸ் முன்னட்டை ஒரிஜினல் டிசைன் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், அது நமது ஓவியர் வரைந்ததுபோலவே இருக்கே?

  ReplyDelete
 52. செந்தில் சத்யாவிடமிருந்து எடிட்டருக்கு :

  சென்ற பதிவினை ரொம்ப ரொம்ப ரசித்தேன்! உங்களுடைய நினைவுகூறல் பதிவுகள் எங்களையும் எங்களின் சிறுவயதுக்கு கூட்டிச்செல்லும் சக்தி வாய்ந்தவை! அப்பதிவின் தொடர்ச்சியை விரைவில் பதிவிடுவீர்களென எதிர்பார்க்கிறேன்!
  அடுத்தமாத புத்தகங்களின் அட்டைப்படங்கள் எல்லாமே அருமை!

  ஈனாவினாவின் பின்குறிப்பு : மெரினா பீச்சில் நடந்த தடியடியில் மண்டை உடைபட்டு, மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஓய்விலிருக்கிறார், நண்பர் செந்தில் சத்யா! துரதிர்ஷ்டவசமாக, தடியடியின்போது இவரது மொபைல் திரையும் நொறுக்கப்படவே, தற்போது கமெண்ட் போடமுடியாத நிலை இவருக்கு!

  நண்பர் விரைந்து குணமடையப் பிரார்த்திப்போம் நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. விரைவில் செந்தில் சத்யா குணமடைய வாழ்த்ததுக்கள்.

   Delete
  2. நண்பர் மனமும் , உடலும் குணமடய ெலலாம் வல்ல இறைவன் அருளட்டும்..

   Delete
  3. @ செந்தில் சத்யா : வருத்தமாகவும்....பெருமிதமாகவும் உள்ளது சத்யா !! சீக்கிரமே நலம் பெற்றிட நானும் வேண்டிக் கொள்வேன் !! அந்தப் புன்னகையோடு மீண்டு வாருங்கள் !

   Delete
  4. நண்பரின் உடல் நிலை விரைவில் பழைய சுறுசுறுப்புடன் நலம் பெற்று திரும்ப இறைவனை வேண்டுகிறேன் ..

   Delete
  5. நண்பரே ... விரைவில் நலம் பெற்று திரும்ப இறைவனை வேண்டுகிறேன் __/\__

   Delete
  6. நண்பர் விரைவினில் உடல் நலம் விரைவினில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .

   Delete
  7. உடலும் மனமும் விரைவில் நலம்பெற்று முன்போல் வருக செந்தில். .!!

   Delete
 53. Expected RATHA PADALAM JUMPO SPECIAL at early. I ready for paid sandha. But give me more time for our readers. Then only we will ready for Mandira enn. 600. All the best for your efforts. I am waiting for February issues.

  ReplyDelete
 54. எடிட்டர் சார் அவர்களுக்கு! நான் சேலத்தில் ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறேன். பார்சல் வாங்க வரும் கஸ்டமர்களுக்கு பில் போட்டு கொடுப்பது என் வேலை.
  என்னிடம் வரும் கஸ்டமர்கள் எல்லோரும் என் கையில் இருக்கும் புத்தகத்தை பார்க்கிறார்கள். ஏனெனில், நான் எந்நேரமும் காமிக்ஸ் புத்தக கையோடுதான் அமர்ந்திருப்பேன்.
  வரும் கஸ்டமர்களில் நிறைய பேர் இந்தபுத்தகத்தை வாங்கி பார்க்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஒரு காலத்தில் கடைகளில் காமிக்ஸ் வாங்கி படித்தவர்கள். சிலர் என்னிடம் "இது எந்த வருடம் வெளிவந்த புத்தகம்?" என்று கேட்டார்கள். நான் "இந்த மாதம் வந்தது." என்றதும் உடனே ஆச்சரியப்பட்டார்கள். "இன்னுமா இந்த புத்தகங்கள் வருகிறது" என்று கேட்டார்கள். சிலர் உங்கள் புத்தகம் விற்பணையாகும் கடையை கேட்டு தெரிந்துக் கொண்டார்கள்.
  இப்படி ஷாப்பிங் வருபவர்களை தவிர இன்னும் வீட்டிலேயே முடங்கி கிடப்பவர்கள் எத்தனை பேரோ. அவர்களுக்கெல்லாம் உங்கள் காமிக்ஸ் சென்றடைய கேபில் TV விளம்பரமே சிறந்தது.
  நியூஸ் பேப்பர் படிப்பவர்களை விட, TV பார்ப்பவர்களே அதிகம். சேலத்தில் தினமும் காலையில் சைக்கிளில் நியூஸ் பேப்பர் போடுபவர்களை பார்க்கிறேன். ஆனால், என் சொந்த ஊர் சேலத்தில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் இருக்கும் வனவாசி என்ற ஊரில் அப்படி பேப்பர் போடும் பயல்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அதனால் லயன் & முத்து காமிக்ஸ் புத்தகங்கள்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடைய நியூஸ் பேப்பர், நோட்டீஸ் விளம்பரங்களை விட கேபில் TV விளம்பரம் சிறந்ததே.

  ReplyDelete
  Replies
  1. @ Jagath kumar

   கஷ்டமர் அதிகமாக வருகைதரும் குறிப்பிட்ட சில நேரங்கள் தவிர, உங்களுக்கு பணியின்போதே
   காமிக்ஸ் படிக்கக் கிடைத்திடும் பொன்னான நேரங்கள் எனக்குக் கிடைக்காததில் துளியூண்டு பொறாமை எனக்கு! உங்கள் உணவகத்தைக்
   கடந்துசெல்லும் சில தருணங்களில் நீங்கள் காமிக்ஸில் லயித்துக் கிடப்பதை மேற்கூறிய பொறாமையோடு பார்த்துச் சென்றிருக்கிறேன்!

   இந்த வருடம் நீங்கள் சந்தாவில் இணைந்திருப்பதும் மகிழ்ச்சியான விசயமே!

   கடையிலிருந்தபடியே முடிந்தவரை நம் காமிக்ஸின் மீள் வருகையை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு என் வாழ்த்துகள்!

   Delete
 55. Texன் முன்னட்டை சுமாராக இருந்தாலும் பொற்கால கதை குவியலில் இருந்தமையால் நிச்சயம் Hit ஆகும்.

  ReplyDelete
 56. Texன் முன்னட்டை சுமாராக இருந்தாலும் பொற்கால கதை குவியலில் இருந்தமையால் நிச்சயம் Hit ஆகும்.

  ReplyDelete
 57. சார், இரத்த படலம் மறு பதிப்பு ஆனது தலையில் லா போராளி அளவில் இருந்தால், நன்றாக இருக்கும். மீண்டும் இது போன்று வருமோ வராதொ, காலதிர்க்கும் அழ்ஹியத காவியமன இது காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மாக்சி அளவில் வெளியானால்
  நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

  ReplyDelete
 58. அட்டை படங்கள் , உட்பக்க டீசர்கள் எல்லாமே அழகாக வந்துள்ளன . இதழ்கள் எப்போது வரும் என்று காத்துளேன் .

  ReplyDelete
 59. "“CID லாரன்ஸ்” இதழின் அட்டைப்படம் " - நம்ம ஓவியர்கள் கலக்கிட்டாங்க, மறுபதிப்புக்கு நம் ஓவியர்களின் டிசைன்தான் correct .

  ReplyDelete
 60. டெஸ் சும்மா சல்மான் கான் கணக்கா கும்முன்னு இருக்காரு :)
  நிஜமா வித்தியாசமான அட்டை படம்

  ReplyDelete
 61. "மதியில்லா மந்திரியார்" - ரொம்ப நாள் கழித்து வருவது மகிச்சி.
  நம்ம "மதியில்லா மந்திரியார்" விற்பனை எப்படி சார், வருஷத்துக்கு ஒரு புக்கு வந்தாலே பெரிய விஷயமா இருக்கேன்னு கேக்கிறேன் சார்.

  ReplyDelete
 62. இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் நாகராஜ் சாந்தன் அவர்களுக்கு எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தீவிர டெக்ஸ் ரசிகரான ப்ளூபெர்ரி அவர்களுக்கு ஈனாவினாவின் இனிய வாழ்த்துகளும்! :)

   Delete
  2. அதிதீவிர "டெக்ஸ்" ரசிகரும், இனிய நண்பரும், காமிக்ஸ் உடன்பிறப்புமான சகோதரர் ப்ளுவுக்கு இதயம் கனிந்த இனிப்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
   சீக்கிரமே அந்த இளம் "டெக்ஸ்" கதைகளையும் பெற அன்போடு வாழ்த்துகிறேன்...

   Delete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ளூபெர்ரி. .!!

   Delete
 63. தல.. ஓடிடு தல..! எங்கயாச்சும் ஓடிடு!

  அட்டைப்படத்துல வித்தியாசம் காட்டுறோம்னு இப்பவே உன்ர சட்டையக் கழட்டி நிறுத்திப்புட்டாங்க. அடுத்தமாசம் இன்னும் டீப்பா வித்தியாசம் காட்றோம்னு உன்னையும், கார்சனையும் 'ஜெமினி ஸ்டூடியோ - குழலூதும் குழந்தைகள்' கணக்கா நிறுத்தினாலும் நிறுத்திடுவாங்க தல!

  ஓடிடு தல..! ஓடிடு!

  ReplyDelete
 64. காணாமல்போனவர்கள் அறிவிப்பு
  மாயாவி சிவா
  கடல் யாழ்
  மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்மற்றும்பலநண்பர்கள்
  இவர்கள் எங்குஇருந்தாலும்
  Blogக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

  ReplyDelete
 65. சார்..!! ஜனவரியில் பிப்ரவரி நாளை கிடைக்காதா???

  ReplyDelete
 66. ஆவியின் ஆடுகளம்......
  நெருடல் 1....
  மழைக்கால இரவுகளில் மட்டுமே டெர்ரி தன் வசமிழந்து கொலைவெறி கொள்ளுகிறாள்.
  அதுவும் குடிகாரர்களை மட்டுமே கொல்லுகிறாள்.( அதற்கு காரணம் கதையில் விளக்கப்பட்டுள்ளது)
  பாஸ்டன் செய்திதாள்கள் தெரிவிப்பதும் இதையே....
  ப்ளாக்டன் கொலையும் அப்படியே...
  (ப்ளாக்டன் போன்று பெண்களிடம் முறை தவறி நடப்பவர்களை கொல்ல மன நோய் என்ற முகாந்திரம் தேவையில்லை...)
  ஆனால் டெக்ஸ், கார்சன் இருவரையும் டெர்ரி கொல்ல முயற்சிப்பது பகல் வேளையில் .அவர்கள் குடிகாரர்களும் அல்ல...
  பின் கொலை வெறி ஏற்படுவது எஞ்ஞனம் சாத்தியமாகும்????

  நெருடல் 2...
  ஜெஸ்-ம் டெர்ரி-ம் சகோதர சகோதரி உறவு என்றபோதும் ஒரே அறையில் தங்குவதாக வாலஸ் சொல்லும் இடம்...பக்கம் 57..

  ReplyDelete