Powered By Blogger

Sunday, January 01, 2017

புத்தாண்டும், புதுப் பார்வைகளும் !

நண்பர்களே,
            
வணக்கம். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 2017 நமக்கு நலமும், வளமும், மகிழ்ச்சியும் தடையற வழங்கிட படைத்தவரிடம் பிரார்த்திப்போம் ! மின்னலாய் நம்மைத் தாண்டிச் சென்று விட்ட 2016, இனி “அந்தக் காலத்திலே” என்று ஞாபகப் பேழையினுள் ஆழ்ந்து போகுமொரு ஆண்டாகி விடும் என்பதில் சன்னமாய் ஒரு வருத்தம் எனக்குள் ! இந்தாண்டின் ஒவ்வொரு நாளுமே ஒன்றன்பின் ஒன்றாய்ப் பணிகள் ‘பிம்பிலிக்கா பிலாக்கி‘ என்று அணிவகுத்திருப்பினும் - அவை சார்ந்த நினைவுகள் ரொம்பவே பிரத்யேகமானவைகளாக எனக்குள் தொடரும் ! சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவுக்குப் பின்பானதொரு வேளையில் ஓரங்கட்டிக் கொண்டு கமான்சே இதழினை எடிட் செய்த நாட்களும் ; புது டில்லி விமான நிலையத்திலிருந்து திருத்தங்கள் செய்த மார்ட்டின் பக்கங்களை வாட்சப்பில் ஜுனியருக்கு அனுப்பிய நாட்களும், ரயிலின் மேல் பெர்த்தில் குந்திக் கொண்டு - குருவாயூர் செல்லும் வழியில் லார்கோவோடு மல்யுத்தம் செய்ததும் அத்தனை லேசுக்குள் மறந்திடாது ! இன்றைக்கு கலர் கலராய் ஒவ்வொரு இதழையும் நமது ஆபீஸின் ரேக்கில் பார்க்கும் போது - அதன் பின்னணி நினைவலைகள் ஒரு நூறு அலையடிக்கின்றன ! But சக்கரங்களின் சுழற்சிக்கு ஒரு அட்டகாச ஆண்டு கூட விதிவிலக்காகாது எனும் போது - காத்திருக்கும் புதியவர் (2017) நமக்கு இதை விடவும் கூடுதல் உற்சாகங்களையும் உயரங்களையும் அடையாளம் காட்டிடுவார் என்ற திட நம்பிக்கையோடு பார்வைகளை முன்னே செல்லும் பாதையில்  பதிக்கிறோம்!

வழக்கமாய் இது போன்றதொரு தருணத்தில் - “The Year in Review” என்று கடந்து சென்றுவிட்ட ஆண்டையும், அதன் உச்சங்களையும், உதவாக்கரைகளையும் அலசும் ஆவல் எழுந்திடும் ! அல்லது - “once upon a time, நான் பிராங்க்பர்ட் போகிறச்சே” என்று சட்டி பெட்டிகளைக் கட்டிக் கொண்டு 30+ ஆண்டுகள் பின்நோக்கிப் போய் முகாமிடத் தோன்றும் ! ஆனால் இன்று அவ்விரண்டையுமே செய்வதாகயில்லை ! மாறாக - காத்திருக்கும் காலங்களில் நம் முன்னே தோகை விரித்திடக் கூடிய புதுத்தொடர்கள் ; கதைகள் பற்றிப் பார்க்கத் தோன்றியது ! Maybe நான் தற்சமயம் பணியாற்றி வரும் ஜெரெமயா கதையின் தாக்கமிதா ? அல்லது கிட்டத்தட்ட ஓராண்டாய் நான் மாத்திரமே இப்படியும், அப்படியுமாய்ப் புரட்டிக் கொண்டிருந்த ட்யுராங்கோவை உங்கள் கைகளில் ஒப்படைத்து, நீங்களும் ரசிக்கத் துவங்கியிருப்பதன் பலனா ? என்று சொல்லத் தெரியவில்லை ! ஆனால் - ஒரு புதுவரவு நம்முள் ஏற்படுத்தக் கூடிய அந்த ஹை-வோல்டேஜ் உற்சாகத்தை அனுபவிக்கும் போது, சுட்ட தோசைகளையே ‘சொய்ங்... சொய்ங்‘ என்று ஒரு சொட்டு நெய்யுடன் புரட்டிப் போடும் அனுபவம் அத்தனை சுகமாய் தெரியக் காணோம் ! So ஒரு புத்தாண்டில் - இன்னும் சிலபல ஆண்டுகளோ, மாதங்களோ, வாரங்களோ, கழிந்த நிலையில் நாம் ரசித்திடக் கூடிய கதைகள் பக்கமாய் ஒரு ஜாலியான பார்வையோட்டமே இந்த புத்தாண்டு பதிவு 

வலெரியான் & லாரெலின்:

இந்தாண்டே சந்தா E-க்குள் இந்த ஜோடி புகுந்திருப்பார்கள் - என் கட்டைவிரலைத் தயக்கமின்றிக் கடவாய்க்குள் திணிக்கத் துணிந்திருப்பின் ! Sci-fi கதைகளுக்குள் நாம் பயணம் செய்யும் நாள் அதிக தொலைவில் இல்லை என்று எனக்குள் தோன்றினாலும் - அவ்வப்போது இங்கே நண்பர்களுள் ஒரு அணி அடிக்கும் உடுக்கைச் சத்தத்தைக் கேட்டு எனக்கு நானே பிரேக் போட்டுக் கொள்ளுவேன் ! வலெரியான் தொடரானது வழக்கம் போலொரு பிரான்கோ-பெல்ஜியப் படைப்பே ! (நெட்டில் இவர்களது பரிச்சயம் கொண்டிருக்கும் நண்பர்கள் - மன்னிச்சூ ! மறுஒலிபரப்பாய் உங்களுக்குத் தோன்றிடக் கூடிய இந்த சமாச்சாரங்கள் நமது இதர நண்பர்களின் பொருட்டே !) இது உருவாக்கப்பட்டது 1970-ல் என்பதால் - அந்நாட்களின் அதீதக் கற்பனைகள் - 45 ஆண்டுகள் கழிந்த தற்போதைய உலகிற்கு ஒரேடியாக ஓவராய்த் தோன்றிட வாய்ப்புகள் குறைச்சல் ! இன்னொரு பால் மண்டலம் ; புது கிரகம் ; எதிர்கால விஞ்ஞானம் ; அது சார்ந்த கதைக்களம் என்று படு சுறுசுறுப்பாய் பிரயாணம் செய்யும் இந்தத் தொடரினில் மொத்தம் 29 கதைகள் தான் ! இதன் ப்யூட்டியே – இதன் சித்திரபாணி தான் என்பேன் ! ‘க்ரீன் மேனர்‘ கதைகளின் அதகள இருண்ட தன்மைக்கும், அங்கு பயன்படுத்தப்பட்டிருந்த கார்ட்டூன் பாணிச் சித்திரங்களுக்கும் striking contrast இருந்ததல்லவா ? கிட்டத்தட்ட அதே பாணி தான் இங்குமே ! கதையோட்டம் Sci-fi ரகமெனினும், சித்திரங்களில் ஒரு இலகுத்தன்மை இருக்கும் ! நாயகர் ஹாலிவுட் ஹீரோ போலிருக்க மாட்டார் ; ஹீரோயினோ நம் நண்பர்கள் ஒரு சிலரிடம் நயாகராவை உற்பத்தி செய்யும் சொப்பன சுந்தரியாகவும் இருக்க மாட்டார் ! ஆனால் கதையோட்டம் தங்கு தடையின்றி ‘ஜிவ்‘வென்று பிரயாணம் செய்யும் ! 

போன முறை நான் பாரிஸ் சென்றிருந்த தருணம்- “வலெரியான்” ஒரு ஹாலிவுட் திரைப்படமாக அசுரத்தனமான பட்ஜெட்டுடன் தயாராகி வருவதாகவும், ஷுட்டிங் முடிந்து, post production வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லி விட்டு - "காமிக்ஸ் வடிவத்தை முயற்சிக்க ஆசையா?" என்று கேட்டு வைத்தார்கள் ! இம்மாத டெக்ஸ் கதையினில் ஓரிடத்தில் கார்சனுக்கு நான் எழுதிய   வரிகள் தான் எனக்கு அன்றைக்கும் பாரிசில் தோன்றியது ! சும்மாவே சாமியாடுபவனுக்கு, மைக்செட்; ஸ்பீக்கர்; மேடை என்று போட்டுக் கொடுத்தால் சும்மா இருக்குமா கால்கள் ? “ஓ... யெஸ்! அதற்கென்ன?” என்று 'பூம்பூம்' மாடாய் மண்டையை ஆட்டி விட்டு, அதற்கான கான்டிராக்டை அனுப்பவும் சொல்லி விட்டேன் ! 2017-ன் சந்தா பட்ஜெட் பற்றிய கவலையில்லாதிருந்தால் - சந்தா E-ல் இந்த ஜோடி தலைகாட்டியிருக்கும் ! But just a matter of time ! வித்தியாசமான முயற்சிகளுக்கென சந்தா E என்றான பின்னே - வெகுஜன ரசனைக்குள் அல்லாத இது போன்ற கதைகளை, “விரும்புவோர் ரசிக்கட்டுமே” என்ற ரீதியில் கொண்டு செல்வதாகத் திட்டம் ! “ரிப்போர்டர் ஜானி கதையில் லாஜிக் ஓட்டை ! அதை மொழிபெயர்த்த நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி?” என்றதொரு நீ-ள-மா-ன வினவல் சமீபமாய் எனக்கு வந்திருந்தது ! ‘லாஜிக்கில் ஓட்டை போடுவது மாத்திரமே கதைக்களங்கள்‘ என்ற ரீதியிலான புதுமைகளை முயற்சிக்க நினைக்கும் போது - நண்பர்களின் இத்தகைய எதிர்பார்ப்புகள் லேசாக ‘ஜெர்க்‘ அடிக்கச் செய்தாலும், சிறுகச் சிறுகவேணும் மாற்றங்களை உட்புகுத்த வேண்டுமென்ற ஆசை தணிவதில்லை ! Valerian - sooner than later !! 


2017 ஜுனில் வெளிவரக் காத்திருக்கும் திரைப்படத்தின் நாயக்கரும், நாயகியும் இதோ :


ஷெர்லக் ஹோம்ஸ்:

ஒரு எதிர்காலப் பயணம் ஒரு பக்கமெனில் - நூற்றாண்டுகளுக்கு முன்பானதொரு புராதனத் துப்பறிவாளர் மறு பக்கம் ! ஆனால் இம்முறையோ நான் சொல்வது அந்நாட்களில் நாம் வெளியிட்ட b&w ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளல்ல ! மாறாக - மரணத்தின் விளிம்பிலிருந்து புனர்ஜென்மம் எடுத்து வந்து - மிரட்டலான வில்லன்களை அதகளக் கலரில், அட்டகாசமான சித்திரங்களோடு சந்திக்கும் ஒரு ஷெர்லாக் 2.0 ஐப் பற்றியே ! ஐரோப்பாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, இவரது கதைகள் புதுப் பாணிகளில் உருவாக்கப்பட்டிருப்பதால், துப்பறியும் கதைகளை ரசிக்கும் அவா நமக்கு எழுந்திடும் வேளைதனில், ஏதேனுமொரு தேசத்தின் படைப்பாளிகளிடம் நமது காவடிகளைத் துவக்கிடுவதென்று உள்ளேன் ! அவர்களது லைசன்சிங் பிரிவுகளில் உள்ளோர் ஏற்கனவே எனக்கு  அறிமுகமானவர்களே என்பதால் - சரியான முயற்சியை செய்திடும் பட்சத்தில் இந்த சீரியஸ் டிடெக்டிவ் தமிழ் பேசத் தயாராகிடுவார் ! Fingers crossed!

ஹெர்லக் ஷோம்ஸ் :

ஷெர்லக் ரேடாரில் இடம்பிடித்திருக்கும் போது - ஹெர்லக் தொலைவில் இருப்பாரா - என்ன ? இந்தக் கார்ட்டூன் / காமெடி டிடெக்டிவ் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பது ‘90-களின் லயன் காமிக்ஸ் வாசகர்களுக்கு நினைவிருக்கும் ! பெர்சனலாக நான் இந்த 'உட்டாலக்கடி நாயகருக்கொரு' பெரிய ரசிகன் ! இவரது கதைகளுக்கு வர்ணங்கள் தீட்டி, கலரில் தகதகக்க விட்டுள்ளனர் ! ஆனால் ராயல்டித் தொகைகள் சார்ந்த படைப்பாளிகளின் எதிர்பார்ப்பு நமது தம்மாத்துண்டு பேங்க் இருப்புகளுக்கு இடராய் இருப்பதே ஹெர்லக் இன்னமும் நமது கார்ட்டூன் சந்தாவினில் இடம்பிடிக்காதிருப்பதன் காரணம் ! But நமது வலுக்கள் சற்றே அதிகமாகிடும் நாளொன்று புலராது போகாது ; இந்த ஜாலி ஹீரோ நம்மை சந்திக்காது போக மாட்டார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது!

ப்ரூஸ் ஹாக்கர்:

கடல் கொள்ளையர்கள் சார்ந்த கதைக்களங்கள் சர்வதேசக் காமிக்ஸ் உலகில் ரொம்பவே பிரசித்தம் ! லாங் ஜான் சில்வர் ; பராகுடா ; ப்ரூஸ் ஹாக்கர் என்று நிறையத் தொடர்களுண்டு ! நம்மைப் பொறுத்தவரையிலும் இந்த பாணி ரொம்பவே fresh எனலாம் ! கடல் சார்ந்த கதைகள் என்று பார்த்தால் கேப்டன் பிரின்ஸ் மட்டுமே ஒரு மேஜர் நாயகராக உலா வந்திருப்பார் இது வரையிலும் ! ஆனால் அவரது கதைகளெல்லாம் சம காலத்து உலகின், ஆக்ஷன் த்ரில்லர்கள் எனும் போது, இந்தக் கடற்கொள்ளையர் கதைகளுக்கும், பிரின்ஸின் கதைகளுக்குமிடையே துளி கூட சம்பந்தமிருக்க வாய்ப்பில்லை ! So பல நூற்றாண்டுகளுக்கு முன்பான அந்த இருண்ட நாட்களின், இரத்தவெறி கொண்ட மனிதர்களின் கதைகளை முயற்சித்துப் பார்ப்பதில் எனக்கு ரொம்பவே ஆர்வமுண்டு ! ப்ரூஸ் ஹாக்கர் தொடர் ஓவியர் வில்லியம் வான்ஸின் கைவண்ணமென்பதும் இந்தத் தொடர் மீது எனக்கொரு மையல் தொடர்ந்திடக் காரணம் ! ஏகப்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாகவே; நமது b&w நாட்களின் போதே இவரைத் தமிழுக்குக் கொணரும் வேகமும் எனக்குள் இருந்தது ! But எப்படியோ அன்றைக்கு அது நனவாகிடவில்லை ! தொடரும் நாட்களில் இந்த genre-க்கு உயிரூட்டும் நாளொன்று புலராமலா போய் விடும ?

ஆசைக்கும், ஆர்வத்துக்கும்  என் தலைக்குள் எல்லைகள் கிடையாது என்பதால் - ஒரு பக்கம் "பொறுப்புப் பொன்னுசாமி" அவதாரம் எடுக்கும் அவசியம் இருந்தாலும் - இன்னொரு பக்கம் ஓசையின்றிக் "கனவுகள் கண்ணாயிரமும்" குடி இருக்காது தவறுவதில்லை ! அம்பி லேசாக  ஒதுங்கிக் கொண்டு, அந்நியன் என்ட்ரி ஆகிடும் தருணம் சன்னமாய்ப்  புலர்ந்திடும் பட்சத்தில் கூட, இவர்கள் மாத்திரமின்றிப் புதியவர்கள் இன்னும் நிறைய பேர் திபு திபுவென்று உள்ளே புகுந்திடுவர் ! ஜன்னல்களைத் திறக்கும் சுதந்திரமும், வாய்ப்பும்  கிட்டிடும் முதல் தருணத்தில் புதுக் காற்றும் உள்ளே ஜிலீரிடத் தவறாது ! காத்திருப்பேன் அந்த நாளுக்கு !

இப்போதைக்கு ஜனவரி இதழ்கள் பக்கமாகவே பார்வைகள் நிலைத்திருக்கட்டுமே folks  ? இந்த மாத 4 இதழ்களையும் அழகாய் அலசுவதில் ஒரு பிள்ளையார்சுழி போட்டு வைப்போமே 2017 -ன் முழுமைக்கும் செல்லும் விதமாய் ?

மீண்டும் சந்திப்போம் !! உற்சாகமான புத்தாண்டு வாழ்த்துக்கள் மீண்டும் !! Bye for now !

P.S : And ஒரு உற்சாகமூட்டும் சேதியும் கூட : இன்றைக்கு மட்டுமே சுமார் 15 சந்தாப் புதுப்பித்தல்கள் கிட்டியுள்ளன நமக்கு ! இதே வேகத்தில் எஞ்சியுள்ள நண்பர்களும் செயல்படின் - தலை தப்பித்து விடுவோம் இந்தாண்டின் சந்தா இலக்கினில் ! Please guys - இன்றைக்கே செயலில் இறங்கிடலாமே ? 
இது சீனியர் எடிட்டரிடமிருந்து folks !!

319 comments:

  1. மதிப்புக்குரிய சீனியர் எடிட்டர் அவர்கள், திரு.விஜயன் அவர்கள், ஜூனியர் எடிட்டர், நமது அலுவலக தோழர்கள் மற்றும் நம் இணைய தோழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    புது வருடம் அனைவருக்கும் இனிய நாட்களை பிரசவிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இவ்வாண்டில் அனைவரின் கனவுகளும் நிஜமாகட்டும்.
    அடுத்த ஜென்மம் என்றொன்று இருந்தால் அப்போதும் தொடரட்டும் நம் பாசமும் நேசமும்.
    இனி...
    பிடியுங்கள் மேளத்தை..!
    அடியுங்கள் தாளத்தை..!!
    புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாகட்டும்..டும்..டும்..டும்..!!!

    ReplyDelete
  2. புத்தாண்டுப் பதிவின் முதல் பின்னூட்டம்!

    ReplyDelete
    Replies
    1. திரு.ATRருடையதுன்னு சொல்ல வந்தேன்! ஹிஹி!

      Delete
    2. திரு.ஈ.வி. சந்தா ரயிலில் என்னை ஏற வைத்த உங்களுக்கும், நம் எடிட்டருக்கும், முகமறியா தோழருக்கும்.வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.

      Delete
  3. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. Happy new yr 2 our anbardha comics kudumbam.

    ReplyDelete
  6. Surprise gift Calendar very sooper sir.. முதல் மாத மாயாவி படம் தெறிக்குது....
    ட்யுராங்கோ அட்டை அசத்தலா இருக்கு...Stunned...Grey & Red combination is superb...
    2017 is started with a visual treat...

    Thanks for Senior Editor, You, Junior editor and the Team for this excellent job

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : சார்..காலெண்டரின்நிஜமான நாயகன் நமது டிசைனர் பொன்னனே! இரண்டே நாட்களில் இந்தப் பனி மொத்தத்தையும் நாங்கள் முடித்து ; அச்சிட்டு, தயார் செய்ததை இப்போது நினைத்தால் மலைப்பாய் உள்ளது ! !

      Delete
    2. //சார்..காலெண்டரின்நிஜமான நாயகன் நமது டிசைனர் பொன்னனே! இரண்டே நாட்களில் இந்தப் பனி மொத்தத்தையும் நாங்கள் முடித்து ; அச்சிட்டு, தயார் செய்ததை இப்போது நினைத்தால் மலைப்பாய் உள்ளது ! !//
      has done wonderful job sir...

      Delete
  7. அத்தனையும் தித்திக்கும் செய்திகள்!! அட்டகாசம்!!!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : பதிவின் update பார்த்த பின்பு ஜூன் 2017 -ல் ரிலீசாகக் காத்துள்ளதொரு படத்துக்கு இப்போவே முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளதா ? என்று ஈரோட்டில் யாரோ விசாரிப்பதாக அதற்குள் பிளாஷ் நியூஸ் கிட்டியுள்ளது !

      Delete
    2. ஹிஹி.. இப்பத்தான் கவனிச்சேன் எடிட்டர் சார்! உங்களுக்கும் சேர்த்தே ஒரு டிக்கெட் போட்டுடவா? ;)

      Delete
    3. எங்களுக்கு பிரிவியூ ஷோவுக்கே டிக்கெட் ரெடி !!

      Delete
  8. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசிரியரே தாங்கள் சனியன்று சென்னை வருவது உறுதிதானே நான் குடும்பத்துடன் தங்களை சந்தித்து சந்தாவில் இனைகிறேன்

    ReplyDelete
  9. காமிக்ஸ் வாழ்வில் சென்ற ஆண்டு மறக்க முடியாத ஆண்டு டெக்ஸ் வில்லரின் தனி ராஜ்யம் கார்ட்டூன் குதுகலம் ஜேசன் பிரைஸ் அசத்தல் அறிமுகம் லக்கி லூக் கிளாசிக்ஸ் என சகல துறையிலும் கலக்கல் இதே போல் இந்த ஆண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஆசிரியரே புத்தகத் திருவிழாவில் எதாவது சஸ்பென்ஸ் இதழ் உண்டா

    ReplyDelete
    Replies
    1. செந்தில் சத்யா : இந்த ஆட்டத்துக்கே நான் வரலை சாமி !! பிப்ரவரிக்குள் மூழ்கிடவே நேரம் பற்றலை !!

      Delete
  11. முந்தைய பதிவிலிருந்து :

    //Erode விஜய் : கொரியரைக் கைப்பற்றியாகிவிட்டது! காலண்டர் - பிரம்மிக்ச் செய்திடும் அட்டகாசமான புத்தாண்டு பரிசு! ரொம்பவே கலர்ஃபுல்லாக ஸ்தம்பிக்கச் செய்யும்படி இருக்கிறது. குறிப்பாக, டைகர் மற்றும் ஸ்பைடர்+ஆர்ச்சி படங்களின் தேர்வும், டிசைனும் அருமை அருமை! வீட்டிலிருப்பவர்களிடமெல்லாம் காலண்டரின் பக்கங்களைப் புரட்டிக் காட்டிப் பெருமிதப்பட்டுக் கொண்டேன்!

    அழகான புத்தாண்டுப் பரிசளித்த சீனியர் எடிட்டருக்கு நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! _/\_//

    "நானே தயாரிக்க முனைகிறேன்" என்று வீட்டுக்கு அருகிலிருந்ததொரு டிசைனரைக் கொண்டு சீனியராக துவக்கத்தில் பணிகளைத் துவங்கிட முயற்சித்தார் தான் ! ஆனால் நோட்ப்புக் ராப்பர்களுக்கு டிசைன் போடும் அந்த டிசைனரால் திருப்தி தரும் விதமாய் எதையும் தயாரிக்க இயலவில்லை ! சுமாரான ஒன்றை அவர் போட்டு சீனியரிடம் தர, அதனைக் கொண்டு வந்து என்னிடம் காட்டி, திருத்தங்களைக் கேட்டுச் செல்வது நிச்சயமாய் வேலைக்கு ஆகாது என்று பட்ட பின்னரே, இதை பொன்னனிடம் ஒப்படைத்து, நானே எப்படியாவது தேற்றி விடுகிறேன் என்று சொல்லி பொறுப்பை ஏற்றுக் கொண்டேன் ! ஆண்டின் இறுதியில் ஒரு வண்டி வேலைகள் குவிந்து கிடக்கும் நிலையில், பொன்னனிடம் நிச்சயமாய் லேட்டாகும் என்பது அப்போதே தெரியும் எனக்கு ; ஆனால் காத்திருப்புக்குப் பலனின்றியும் போகாது என்பதும் தெரியும். So கடைசி நிமிடம் வரை ஜவ்வு மிட்டாய் இழுத்தாலும், இந்த வாரம் புதன் & வியாழனுக்குள் மொத வேலைகளையும் முடித்து, தேரை எல்லை கொண்டு சேர்த்தோம் !!

    பட்ட பாட்டுக்குப் பலன் இருப்பதை பார்க்கும் பொழுது நிறைவாக உள்ளது !

    ReplyDelete
  12. லயன் &முத்து
    **************
    அசராமல் அடிக்கும் டெலிபோனுக்கு பொறுமையாகவும் மரியாதையாகவும் பதில் அளிக்கும் ஸ்டெல்லா &வாசுகி அவர்கள் ஆகட்டும். ...
    எத்தனையோ ஜோடி செருப்புகள் தேய்ந்த போதிலும் அசராமல் அங்கிங்கு ஓடும் மைதீன் பாய் ஆகட்டும். ....
    எவ்வளவு தான் குடலை உருவிய போதிலும் ஒவ்வொரு அட்டைக்கும் தனிச்சிறப்பு உடன் பணியாற்றிய அன்பர்கள் ஆகட்டும். ....
    அச்சில் வார்த்து பைண்டிங்கில் அழகுற செய்து கையில் தரும். நண்பர்கள் ஆகட்டும். ...
    எல்லாவற்றுக்கும் மேலாக "இவர்கள் இல்லையென்றால் புத்தகம் என்ன ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது என்று உழைப்புக்கு முன்னுரிமை கொடுத்ததன் மூலம் தலையில் முடி மட்டும் இல்லை. தலைக் கனமும் இல்லை என்று உறக்கச் சொல்லும் தங்களின் பொற்பாதங்களுக்கும் உங்களின் முதுகெலும்பாக இருக்கும் நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். .
    இந்த காமிக்ஸ் பயணம் என்றென்றும் தொடர எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  13. முந்தைய பதிவிலிருந்து :

    Raghavan //The calendar gift had me really excited. Thanks to Founding editor. Wish you all A Happy New Year 2017 //

    'பளிச்' என்று நாலு பேர் கண்ணில் படும் இடத்தில தொங்க விடுங்கள் சார் ; நமது உலகம் பற்றி புதியவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே ? New Year வாழ்த்துக்கள் & நன்றிகளும் !

    ReplyDelete
    Replies
    1. அந்த காலண்டர் உடன் சேர்த்து Tex, இரும்புக்கை மாயாவி ஆகிய புத்தகங்களை என் (அலுவலக) நண்பர், நமது சென்ற வருட சந்தா B பிரியருக்கு புது வருட அன்பளிப்பாய் கொடுத்துவிட்டேன் - boofairக்காக waiting - tex மற்றும் durango வாங்க !

      Delete
  14. முந்தைய பதிவிலிருந்து :

    Sridhar //சத்தமின்றி யுத்தம் செய். சாதனை செய்கிறது.//

    அதற்குள் படித்து விட்டீர்களா சார் ??

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார். ஆரம்ப frame hero entry செம்மை. டுரஙொ உடனேயே கவர்ந்து விட்டார். சித்திரம் அபாரம்,அட்டகாசம். உங்கள் ரசனை எங்களுக்கு ஒத்து போகிறது.

      Delete
  15. முந்தைய பதிவிலிருந்து :

    //Anandappane karaikal :
    புலி வாலை பிடித்து விட்டீர்கள்?????
    நான் காலண்டரை சொன்னேன்
    இனி வருடா வருடம்
    காலண்டர் கொடுத்தாகனும்!!!!!

    அப்புறம் நான்கு இதழ்களுமே அருமை
    ஒன்றை ஒன்று போட்டி
    போடுகிறது
    டெக்ஸ் . மாயாவி வழக்கம் போல் சூப்பர்
    ஒரு வருடம் பார்க்காமல் இருந்த ப்ளு கோட் முதலில் படிக்கிறேன்
    நாளை ஜனவரி1 அன்று சத்தமின்றி யுத்தம் செய்ய போகிறேன் //

    நாமாய் நிர்ணயித்துக் கொள்ளும் இலக்குகளை நாமாகவே தாண்டிப் போவதும் ஒரு சுவாரஸ்ய அனுபவம் ! சுவாரஸ்யம் கிட்டுமெனில் டைனோசர் வாலையே பிடிக்கத் தயாராக இருப்போம் சார் !

    ReplyDelete
  16. முந்தைய பதிவிலிருந்து :

    T.K. AHMEDBASHA : ஆரம்பமே சிக்ஸர்...!!! ஆசிரியரின் உத்தரவாதம் 100%+ நிறைவேற்றம்.
    அட்டைப்படங்களை உலக தரத்தில் அமைப்பதை வழக்கமாக்கொண்டுள்ளார் ஆசிரியர்.
    உள்பக்கங்களை தீய உள்நோக்கம் உள்ளவர்கள் மட்டுமே குறைகூற முடியும்.கண்களுக்கு எதிர்பாரா விருந்து கிடைத்துள்ளென்றால் மிகையாகாது சார்.....
    ஒரு WORLD CLASS தயாரிப்புடன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளீர்கள்.
    அசந்து விட்டேன்.//

    பாஷா சார் - சில பணிகள் தாமாக, நம்மையும் இழுத்துக் கொண்டு தட தடவென்று டி விடும் ; ஒரு சிலவோ, நேர் மாறாய் அமைந்திடும் ! தட்டுத் தடுமாறித், தாஜா செய்து தான் அவற்றை நாம் கரை சேர்க்க வேண்டி வரும் ! ட்யுராங்கோ - முதல் ரகத்தைச் சார்ந்திருந்தது தயாரிப்பில் !

    And இதன் அச்சு மேற்பார்வையில் ஜுனியர் எடிட்டரின் பங்கே 95 % ! நான் அந்நேரம் "ஆவியின் ஆடுகளத்தில்" சிக்கிக் கிடந்ததால், முழுக்கவே இளையவரின் பொறுப்பாய்ப் போனது ! சோடை போகாது போனதில் எனக்குப் பெருமிதமே !

    ReplyDelete
  17. முந்தைய பதிவிலிருந்து :

    விஜயன் சார், 5 வருடம் வலைபதிவு - இதற்கு ஏதும் சிறப்பு மலர் கிடையதா. - இப்பக்கு எதற்கு எடுதாலும் சிறப்பு மலர் கேட்கும் நண்பர்ககளை பார்த்து கெட்டு போனவர்ககள் சங்கம் - Parani from Bangalore

    ஏன்...? நல்லது தானே போய்க்கிட்டிருக்கு சார் ? இப்படிக்கு : ஓவர் ஆசை ஆரோக்கியத்துக்கும், நிதி நிலைமைக்கும், தலைக் கேசத்துக்கும் கேடு விளைவிக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தோர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினன் !

    ReplyDelete
  18. முந்தைய பதிவிலிருந்து :

    selvam abirami : //காலண்டர் பார்த்தவுடன் நூறு ரூபாய் நோட்டை கணக்கின்றி தரும் ஏடிஎம் கண்ட சாமான்யன் நெஞ்சம் போல் துள்ளி குதித்தது...
    அட்டகாசம் சார்..............நன்றிகளும் கூட................
    ட்யூராங்கோ முதல் பார்வையிலேயே கட்டமைப்பினால் மனதை கொள்ளை கொள்கிறது
    விரைவில் விமர்சனமும் எழுதப்படும்....
    இரட்டை ஸ்டாலுக்கும் ,பெருக போகும் விற்பனைக்கும்,
    மெலிதான நகைச்சுவை இழையோட எங்களை கட்டி போட்டு வைத்து இருக்கும் அகவை ஐந்தினை தொட்டு விட்ட உங்கள் இனிய – இணைய பதிவு எழுத்துகளுக்கும் வாழ்த்துகள் சார்.
    வரும் ஆண்டு நமது காமிக்ஸ் உலகில் பல்வேறு நிறைவுகளையும் ,ஆனந்தத்தையும் வாரி வழங்க உங்களுக்கும். டீம் லயனுக்கும் காமிரேடுகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ..... //

    வந்துட்டார்னு சொல்லு ! "நிதிப் பொறுப்பாளர்" என்ற சங்கத் பொறுப்பை ஏற்ற உடன் டர்கி டவலைக் காணோம்...ராம்ராஜ் வேஷ்டியைக் காணோமென்று டாப் கியரைப் போட்ட நண்பர் திரும்பவும் வந்துட்டார்னு சொல்லு !

    மகிழ்ச்சி என்றும் சொல்லு !!

    ReplyDelete
  19. விஜயன் சார், இந்த கதைகள் இந்த வருடமெ எங்கள் கையில் சிக்கிக் தவிக்க உங்களுக்கு தேவையான வசதியை வழங்க எல்லாம் வல்ல இறைவனை வெண்டுகிரென்.

    ReplyDelete
  20. Willer செம்மை திரில்லர். texக்கு ஈடு இணை வேறு ஒன்றும் கிடையாது என்பதற்கு சான்று ஆவிகளின் ஆடுகளம். மொத்தத்தில் அதகள்ம்.

    ReplyDelete
    Replies
    1. Sridhar : புதிதாய் யார் வரினும், அந்த முதன்மைப் பொறுப்பு மாறிடாது தானே !!!

      Delete
  21. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  22. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    குறள் பால்:அறத்துப்பால்.குறள் இயல்:துறவறவியல்.அதிகாரம்:தவம்
    குறள் 270:
    ‘’இலர்பல ராகிய காரணம் நோற்பார்
    சிலர்பலர் நோலா தவர்.’’

    மு.வ உரை:
    ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

    பரிமேலழகர் உரை:
    இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராகநல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் -தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பனஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வுஇன்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார்ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக்காரணம் கூறினமையான், காரியம் வருவித்துஉரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரதுதாழ்வு கூறப்பட்டது.).

    மணக்குடவர் உரை:
    பொருளில்லாதார் உலகத்துப் பலராதற்குக் காரணம் தவஞ்செய்வார் சிலராதல்; அது செய்யதார் பலராதல்.

    ReplyDelete
  23. 2017 காலண்டர் அருமை. புத்ததாண்டு பதிவில் sci-fi கதைகள் பற்றிய செய்தி எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ReplyDelete
  24. சீனியர்,ஆசிரியர்,ஐீனியர்
    அவர்களுக்கும்,பணியாளர்களுக்கும் மற்றும் நமது வலைபதிவு நண்பர்களுக்கும் & அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. அன்பு விஜயன் சார்,

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்,
    இந்த புத்தாண்டு காலையே மிக மிக மிக... மகிழ்ச்சியான செய்தியை தந்துள்ளீர்கள்...
    Valerian and Laureline... என்னுடைய all time favorite stars.... நமது லயன்முத்து காமிக்ஸ்
    வரலாற்றிலும்... இது ஒரு மைல்கல்லாக திகழும் என்பதில் இரு வேறு கருத்துக்களே இருக்கமுடியாது...

    We are ready to mingle among the big boys of world comics என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது... இந்த கனவை நினைவாக்க நீங்கள் எவ்வளவு போராடி இருப்பீர்கள் என எண்ணும் பொழுது.... மிகவும் பெருமையாக உள்ளது...

    இது நமது காமிக்ஸ்சை எண்ணி கர்வம் கொள்ளும் நேரம்.... Waiting for the joy of reading V & L in தமிழ் with bated breath....

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... அன்பு காமிக்ஸ் காதலர்களே...

    😊😊😊

    ReplyDelete
    Replies
    1. ///
      இது நமது காமிக்ஸ்சை எண்ணி கர்வம் கொள்ளும் நேரம்.... ///

      +100000

      Delete
    2. நம் வாசகர்களை எண்ணி நான் கர்வம் கொள்ளும் நேரமும் கூட !!

      Delete
  26. சந்தோஷத்தை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளில்லை சார்.நேற்று இதழ்களின் மிரட்டல்,இன்று ஹை வோல்டேஜ் பதிவு.
    தயாரிப்பு தரம் உச்சங்களை தொட ஆரம்பித்துள்ளது கண்கூடாய் தெரிகிறது சார்.ஜூனியர் எடிட்டர் நிச்சயம் பதினாறடி பாயும் ரகம்.

    ReplyDelete
  27. புத்தாண்டு அறிவுப்புகள் கன ஜோர் !

    ReplyDelete
  28. எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்...!

    ReplyDelete
  29. /////
    P.S : And ஒரு உற்சாகமூட்டும் சேதியும் கூட : இன்றைக்கு மட்டுமே சுமார் 15 சந்தாப் புதுப்பித்தல்கள் கிட்டியுள்ளன நமக்கு !////

    மகிழ்ச்சி சார்! எல்லாம் கண்கவர் காலண்டரின் மகிமை என்றே தோன்றுகிறது!
    கடின உழைப்பின் கண்கூடான பலன்!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : சத்தமின்றி வந்த காலெண்டர் மாத்திரமின்றி, சத்தமின்றி யுத்தம் செய்ய வந்திருப்பவருக்கும் இதனில் பங்குள்ளது என்று நினைக்கிறேன் !!

      Delete
  30. சூப்பர்... பைரேட் கதைகளை கடல்புறா படித்த காலத்திலிருந்தே எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். விரைவில் வெளியிடாவிட்டால் ஒரு 3 ரீல் பேப்பரை தலீவருக்கு ஸ்பான்சர் செய்வேன் என்பதை ஒரு எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : அந்த 3 ரீல் பேப்பரை என்னிடம் ஒப்படைத்தால் அதில் புக்கையே அடித்து அனுப்பி விடுவேனே ?

      Delete
  31. அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. தவிர்க்க முடியாத காரணத்தால் இன்னும் சந்தா கட்டவில்லை. நாளை கட்டி விடுவேன். எனக்கு calendar உண்டு தானே?
    குறிப்பிட்ட மாதிரி கதைதான் படிப்பேன் என்று இல்லாமல் எனக்கு புதுமையான கதைகளங்களில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு.
    கடந்த ஆண்டு முடிந்த வரை எனது நண்பகளுக்கு காமிக்ஸ் பரிட்சயம் ஏற்படுத்தி ஓரு சிலரை வாங்க வைத்து உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar Kumar : உண்டு நண்பரே !

      Delete
  33. 2017ன் முதல் வணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே...!!!

    ட்யூராங்கோ முதல் அத்தியாயம் "ரௌத்திரம் பழகு":-
    புதிய ஹீரோ என்பதாலும், ஏக எதிர்பார்ப்பை கிளறியதாலும் முதலில் படிக்க ஆரம்பித்தேன்.
    நானும் சற்று நேரத்திலேயே வன்மேற்கின் வன்முறைக் களஞ்சியத்தில் உலவுவது போல பிரமையை ஏற்படுத்தி விட்டது ஆரம்ப அத்தியாயமே...

    1960களின் இத்தாலிய செபகேட்டி வெஸ்டர்ன் மூவிகளில் வரும் அத்துனை காட்சிகளையும் கண்முன்னே கொண்டு வந்துட்டது...
    பாவப்பட்ட ரோஸிக்கு கண்ணீர் சிந்த மட்டுமே முடிந்தது.

    ட்யூராங்கோ அடுத்த சில ஆண்டுகளுக்கு முத்துவின் வரலாற்றில் சத்தமின்றி யுத்தம் செய்வான்.

    முத்துவின் க்ளின்ட் ஈஸ்ட்வுட் என்றால் மிகையாகாது.

    சமீப ஆண்டுகளின் அறிமுக நாயகர்கள் சோடைபோவதில்லை, ட்யூராங்கோ வும் அந்த வரிசையில் இடம் பிடித்து விட்டான்...

    ReplyDelete
  34. டுராங்கோ அதகளமான துவக்கம். இனி இவர் பெயரும் வாசக இதயங்களில் தனியே முத்திரை பதித்து நிற்கும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. இந்த மாத இதழ்கள் ரேட்டிங்:
    1.ட்யூராங்கோ-10/10,
    2.டெக்ஸ் -8.5/10,
    3.ப்ளுகோட் -8/10,
    4.மாயாவி -7/10.

    ReplyDelete
    Replies
    1. பின்றீங்க அறிவரசு ரவி அவர்களே!

      Delete
  36. இந்த மாத கிப்ட் அருமை சார்,காலண்டர் ஐடியா மிகச் சிறப்பானது,
    அளிக்கும் பரிசை விட அளிப்பவரின் மனம் மேலானது,அந்த வகையில் இந்த பரிசு சிறப்பானது.

    ReplyDelete
  37. Dear Editor
    Wishing you and your team a very happy 2017!
    Eagerly waiting for all the books as part of sandha family!
    We owe a lot for your efforts and passion!!

    ReplyDelete
  38. லயன் முத்து வெர்சன் 2.0ல் ஒவ்வொரு ஆண்டும் அசத்திய அறிமுக நாயகர்கள்,
    ஒவ்வொருவரும் நம்மிடையே ஏற்படுத்திள்ள தாக்கங்கள் வெவ்வேறானது.

    2012-லார்கோ வின்ச்
    2013-வெய்ன் செல்டன்
    2014-தோர்கல்
    2015-பெளன்சர்
    2016-ஜேசன் ப்ரைஸ்
    2017-ட்யூராங்கோ
    2018-???????????
    2019-???????????
    2020-???????????
    ----இந்த புதுநாயக வரிசையில் இணைய காத்திருக்கும், நாம் பார்க்கா புதிய வெரைட்டிகளை புத்தாண்டில் வரிசைப்படுத்தி அசத்தி விட்டீர்கள் சார். சூப்பர்.

    இந்த சமயத்தில், சென்றாண்டு சந்தாதாரர்களுக்கு இலவச இணைப்பாக வந்த 'லயன் மினி"யில் அறிவிக்கப்பட்ட வில்லியம் வான்ஸின் "ரிங்கோ" மினி தொடர் தொடர் பற்றிய தகவல் ஏதும் உண்டா சார்????

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களை கச்சிதமாகக் கவ்வுகிறீர்கள், டெக்ஸ் விஜய்!

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் : "ரிங்கோ" இரண்டே கதைகள் தானே சார் ; கிடைக்கும் வாய்ப்பினில் அவரையும் ஆட்டத்துக்குச் சேர்த்துக் கொள்ள முயற்சிப்போம் !

      Delete
  39. Wishing you and your family a Happy new year Vijayan sir,

    New year wishes for all lion family members.

    Special New year wishes for our lion comics team.

    ReplyDelete
  40. ட்யூராங்கோ செம சார்,அற்புதமான கலரிங்,மிக சிறந்த பைண்டிங்,அபாரமான ஆர்ட் வொர்க்,அற்புதமான வர்ணச் சேர்க்கைகள்,படு சுறுசுறுப்பான கதையோட்டம்,இன்னும் சொல்லிகிட்டே போகலாம்,வாசிப்பின் ஆகச்சிறந்த ஒரு அனுபவம்.
    ட்யூராங்கோ மனசுல நின்னுட்டார்,டெக்ஸ்,டைகருக்கு அடுத்தபடியான ஒரு சிறந்த கதை நாயகர் நமக்கு கிடைத்து விட்டார்.
    89,100,169,184,194 ஆகிய பக்கங்களில் உள்ள சித்திரங்கள் கை தட்ட வைக்கிறது,இயற்கையின் பின்னணி ஓவியரின் தூரிகையில் அபாரமாக விளையாடுகிறது,மொத்தத்தில் பெருமை கொள்ள வைக்கும் ஒரு படைப்பு இது,45 ஆண்டு மலருக்கு இதைவிட ஒரு பொருத்தமான கதை நாயகர் அமைய முடியாது.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi //45 ஆண்டு மலருக்கு இதைவிட ஒரு பொருத்தமான கதை நாயகர் அமைய முடியாது.//

      இந்த ஊர்ஜிதத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் சுகமே அலாதி சார் ! மொழிபெயர்ப்பு ; தயாரிப்பு, அச்சு, பைண்டிங் என்பனவற்றில் கிட்டும் பாராட்டுக்களை ஈட்டுவது கூட அத்தனை கடினமல்ல ! ஆனால் ஒரு வேற்று மொழிக் கதைத் தொடரை, நம் நண்பர்களின் இன்றைய நுணுக்கமான அளவுகோல்களைத் தாண்டி அது வெற்றி கண்டு விடுமா ? என்று அனுமானிக்க முயற்சிப்பது ரொம்ப ரொம்பச் சிரமம் என்பேன் !

      லார்கோ ; டைகர் ; டெக்ஸ் போன்ற தொடர்களின் முதல் புரட்டலிலேயே "இவை ஹிட் கொடுக்கும் material " என்று யூகிப்பது ரின்டின் கேனுக்குக் கூட சாத்தியமாகிடும். ஆனால் அடுத்த நிலை நாயகர்களை எடை போடுவது கம்பி மேல் நடக்கும் அனுபவம் ! அதிலும் ஒரு ஆண்டுமலர் ; ஆண்டின் முதல் இதழ் ; புதுச் சந்தா வேளையின் துவக்கப்படிக்கட்டு எனும் பொழுது - எனது தேர்வு துல்லியமாய் அமையாது போயின், முகம் முழுக்கக் கரியைப் பூசிக்க கொண்டது போலாகி விடும்தானே ? So பின்னணியில் இந்த ஓசையில்லா டென்சன் என்னோடே பயணம் செய்து கொண்டுதானிருந்தது - உங்களின் தீர்ப்புகளைத் தெரிந்து கொள்ளும் நொடிவரை !

      Delete
    2. @ ALL : "அட...சும்மா சும்மா இவனுக்கு ஜால்ரா கேட்குதாக்கும் ?" என்ற எண்ணத்தில் நண்பர்கள் பல தருணங்களில் தத்தம் appreciation -ஐ உள்ளுக்குள் புதைத்துக் கொள்வது புரியாதில்லை ! ஆனால் உங்கள் thumbs up களை சரியாக வெளிப்படுத்தவதிலும், வெளிப்படுத்தாது போவதிலுமே, எனது ரசனைகளின் தேர்ச்சியும், வீழ்ச்சியும் அடங்கியுள்ளது guys ! என் தேடல்களின் இலக்குகள் சரியாக அமைந்திருப்பின், அதைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் வளர்ந்திடப் போவது எனது தலைக்கனமல்ல - எனது எடை போடும் திறன் மாத்திரமே !

      ஒற்றை வரிக்கும், மௌனத்துக்குமிடையே ஒரு உலகளவு வேற்றுமை உண்டு தானே !!

      Delete
    3. ////ஒற்றை வரிக்கும், மௌனத்துக்குமிடையே ஒரு உலகளவு வேற்றுமை உண்டு தானே !!///

      சூப்பர்! மெளனப் பார்வையாளர்கள் இனியாவது தயக்கம் களைவார்கள் என நம்புகிறேன்!

      Delete
  41. ஆசிரியர் அவர்களுக்கு இன்று பிறந்த நாளா?

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : வருஷத்துக்குப் பிறந்தநாள் சார் ; எனக்கல்ல !!

      Delete
    2. முகநூலில் வந்தது சார்,ஹி,ஹி.

      Delete
  42. காமிக்ஸ் அறிந்த கனவாண்கள் அனைவருக்கும் KiD ஆர்டினின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.!!

    ட்யூராங்கோ, முதலிரண்டு பாகங்களை படித்துவிட்டேன்.!
    அந்த சித்திரங்களும் வர்ணஜாலங்களும் இன்னும் சிந்தையை விட்டு விலகவேயில்லை.
    ரௌத்திரம் பழகு முதல் பக்கத்தில் ட்யூராங்கோவின் ஸ்டில் அப்படியே Eastwood ஐப் பார்த்தார்ப்போல இருக்கிறது. வன்முறையில் வரைமுறையில்லா வன்மேற்க்கை படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள். ஆண் பெண் பேதமின்றி தோட்டாக்களால் துளையிடும் கொடூரன்கள்., கால்நடைகளை விடத் துச்சமாகிப்போன மனித உயிர்கள்., பணத்திற்காக எதுவும் செய்யத் துணிந்த "செயல் வீரர்கள் " என்று ஒரே ரத்தக்களரியான களம்.
    படியளந்த முதலாளியை ரெனோ போட்டுத்தள்ளும் இடம், அந்நாட்களில் மேற்கே மனிதாபிமானம் என்ற சொல்லுக்கு என்ன மரியாதை இருந்தது என்று தெளிவாக விளக்குகிறது.

    ட்யூராங்கோ டெக்ஸ், டைகர் வரிசையில் நிச்சயம் அடுத்த இடத்தைப் பிடிப்பார் என்பது உறுதி.!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இந்தப் பாத்திரத்தை வெள்ளித் திரையில் செய்திருப்பின் - ட்யுராங்கோ தொடரானது இந்நேரம் ஒரு சர்வதேச சூப்பர் ஹிட்டாகி இருக்கும் !

      இந்தக் கதையினைத் தேர்வு செய்திடும் போது - எனக்கு நிறையவே சிந்தனைகள் இருந்தன ! பிரெஞ்சுக் கதை என்பதால் முதல் பாகத்தை மொழிபெயர்த்து வாங்கி, அதனைக் கொண்டு படித்துப் பார்க்க முயற்சித்தேன். முதல் வாசிப்பினில் "முழுமையாய் ஓ.கே. !" என்று சொல்லத் தோன்றவில்லை ; அதே சமயம் கதையினில் விரவிக் கிடந்த ஒருவித மௌனமான இறுக்கம் எனக்குப் பிடித்திருந்தது ! 'பன்ச்' டயலாக் பேசும் டெக்ஸ் ; கலாய்த்தலை ஜாலியாய்ச் செய்திடும் டைகர் ; வியாக்கியானமாய்ப் பேசும் கமான்சேக்கு மத்தியில் இந்த மௌனமான மனுஷன் ஒரு 'பளிச்' மாறுதலாய்த் தோன்றுவார் என்று மனத்துக்குப் பட்டது ! அது மட்டுமன்றி - எவ்வித சாயங்களும் இல்லாமல், உள்ளதை உள்ளபடிக்கே சித்தரிக்கும் அந்த முரட்டு பாணி பவுன்சர் அளவுக்கு வக்கிரங்களைத் தொடாது பயணிப்பதால் நமக்குச் சரிப்படும் என்று தோன்றியது. கதை நகர்ந்து கொண்டே செல்லும் போது - பின்னாட்களது அத்தியாயங்களில் இன்னுமொரு லெவல் கூடிப் போவதையும் கண்கூடாய்ப் பார்க்க முடிந்தது !

      இதுதான் ட்யுராங்கோ தமிழ் பேசத் தீர்மானித்ததன் பின்னணி !

      Delete
    2. இன்னமுமொரு விஷயமும் : வழக்கம் போல் மாதமொரு ஆல்பம் என்ற ரீதியில் ஆண்டினில் இரண்டோ, மூன்றோ வாய்ப்புகளை இவருக்குத் தந்திருந்தால் இதே தாக்கம் சாத்தியமாகியிருக்குமா என்பது கேள்விக்குறியே ! For starters, இந்த hardcover; தயாரிப்புத் தர மேம்பாடுகள் கிட்டியிருக்காது ! And ஒரு தொகுப்பாய்த் தொடர் பயணம் செய்யும் அந்த அனுபவம் மிஸ் ஆகிப் போயிருக்கும் என்று நினைத்தேன் ! So அந்த எண்ணத்தில் தான் தைரியமாய் ட்யுராங்கோவுக்கு அறிமுகத்திலேயே 4 ஸ்லாட் ஒதுக்கினேன் !

      Delete
    3. /// ஒரு தொகுப்பாய்த் தொடர் பயணம் செய்யும் அந்த அனுபவம் மிஸ் ஆகிப் போயிருக்கும் என்று நினைத்தேன் ! So அந்த எண்ணத்தில் தான் தைரியமாய் ட்யுராங்கோவுக்கு அறிமுகத்திலேயே 4 ஸ்லாட் ஒதுக்கினேன் !///

      உண்மைதான் சார். வருடம் ஒரு ஆல்பம் என்று வந்திருந்தால் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடிய வாய்ப்பு சற்று குறைவுதான்.

      தொடரும் ஆண்டுகளிலும் இதே போல் ட்யூராங்கோவை குண்டாகவே எதிர்பார்க்கிறோம் சார்.!

      Delete
    4. Jason braise போல் பிரித்து இருந்தால் அவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்காது.4 பாகங்களை ஒருங்கிணைத்தது மிக மிக மிக சரியான முடிவு சார். நன்றி

      Delete
    5. Finished reading. Thanks..thanks Edi sir for introducing this story. Art work unbelievable. This story needs sometime to get used to the character and it is an excellent decision to combine 4 stories in a book.

      Friends DONT MISS THIS BOOK AND STORY.

      I am kind of excited and 100% satisfied.

      Delete
  43. ஆசிரியருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
    லயன் முத்து அலுவலுகதினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
    காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
    அனைவரும் இந்த புத்தாண்டில் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. கடல்யாழ்9 : நன்றிகள் ரம்யா ! உங்களுக்கும், அம்மாவுக்கும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள் !

      Delete
  44. ///அம்பி லேசாக ஒதுங்கிக் கொண்டு, அந்நியன் என்ட்ரி ஆகிடும் தருணம் சன்னமாய்ப் புலர்ந்திடும் பட்சத்தில் கூட, இவர்கள் மாத்திரமின்றிப் புதியவர்கள் இன்னும் நிறைய பேர் திபு திபுவென்று உள்ளே புகுந்திடுவர்.///

    இப்போ குருநாயர் வந்து,

    அப்பப்போ அந்நியனுடன் ரெமோவையும் லேசாக எட்டிப்பார்க்கச் சொல்லுங்க சார்.!

    ன்னு சொல்வாரு பாருங்க..!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : இவர் ஊதுறதையும், அவர் ஆடுறதையும் பாக்குறப்போ "தில்லானா மோகனாம்பாள்" பார்த்த மாதிரியே ஒரு பீலிங்கு !!

      Delete
    2. ஹிஹி! சிஷ்யப் பிள்ளைக்கு சிலை அமைத்த குருநாயரை யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா...? இனிமேல் படுவீர்கள்! :)

      Delete
  45. அன்பு விஜயன் சார்,

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்,
    இந்த புத்தாண்டு காலையே மிக மிக மிக... மகிழ்ச்சியான செய்தியை தந்துள்ளீர்கள்...
    Valerian and Laureline... என்னுடைய all time favorite stars.... நமது லயன்முத்து காமிக்ஸ்
    வரலாற்றிலும்... இது ஒரு மைல்கல்லாக திகழும் என்பதில் இரு வேறு கருத்துக்களே இருக்கமுடியாது...

    We are ready to mingle among the big boys of world comics என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது... இந்த கனவை நினைவாக்க நீங்கள் எவ்வளவு போராடி இருப்பீர்கள் என எண்ணும் பொழுது.... மிகவும் பெருமையாக உள்ளது...

    இது நமது காமிக்ஸ்சை எண்ணி கர்வம் கொள்ளும் நேரம்.... Waiting for the joy of reading V & L in தமிழ் with bated breath....

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... அன்பு காமிக்ஸ் காதலர்களே...

    😊😊😊

    ReplyDelete
    Replies
    1. AKK : சார்..நம் வாசகர்களை எண்ணி நான் கர்வம் கொள்ளும் நாட்களிவை !!

      Delete
  46. Dear Editor and office staffs happy new year 2017. Best wishes for successful new year.

    Durango - Amazzzing cover, color, binding, printing. Especially the back cover stunning. It has beaten world class quality by a mile. Rating 200/100.

    Calendar superb gift.

    Thanks a lot

    ReplyDelete
    Replies
    1. RAMG75 : //It has beaten world class quality by a mile. Rating 200/100.//

      :-) :-)

      Delete
    2. சின்னதொரு கொசுறும் இங்கே ! பொதுவாய் இதழ்களை முதல் நாளன்று இப்படியும், அப்படியுமாய்ப் புரட்டுவதைத் தாண்டி அடுத்த மாதத்துப் பணிகளுக்குள் மூழ்கியான பிற்பாடு நான் கண்டுகொள்வது கிடையாது ! அதிலும் ஜுனியர் எடிட்டர் இந்த விஷயங்களில் ரொம்பவே cool ; எதையும் பெரிதாய் சிலாகிப்பதும் கிடையாது, அலட்டிக் கொள்வதும் கிடையாது !

      ஆனால் இம்மாத ட்யுராங்கோ புக்கை கடந்த நாலைந்து நாட்களாய் தினமும் புரட்டிக் கொண்டும், ரசித்துக் கொண்டுமிருப்பதை பார்த்தேன் !

      Delete
    3. 45ம் ஆண்டுமலருக்கு சீனியர் அவர்களின் ரியாக்சன் என்ன என அறிய ஆவல் சார்...!!!

      Delete
    4. ////ஜுனியர் எடிட்டர் இந்த விஷயங்களில் ரொம்பவே cool ; எதையும் பெரிதாய் சிலாகிப்பதும் கிடையாது, அலட்டிக் கொள்வதும் கிடையாது !

      ஆனால் இம்மாத ட்யுராங்கோ புக்கை கடந்த நாலைந்து நாட்களாய் தினமும் புரட்டிக் கொண்டும், ரசித்துக் கொண்டுமிருப்பதை பார்த்தேன் !////

      ஹாப்பி வயசுக்கு வந்த டே, ஜூனியர்! :D

      Delete
  47. ஆசிரியர் குடும்பத்தினர், அலுவலக உத்தியோகத்தர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  48. ஹெர்லக் ஷோம்ஸ் - மறக்கவிலயாத நாயகர். சட்டென்று இப்படி மேக்கப்போட்டுக்கொள்ளலாம் என்பதை பார்த்தே வாயைப்பிளந்திருக்கிறோமல்லவா?

    ReplyDelete
  49. ஆசிரியர் மற்றும் சீனியர் எடிட்டர் ..ஜீனியர் எடிட்டர் மற்றும் குடும்பத்தினர் ..லயன் பணியாளர்கள் ...மற்றும் இங்கே கூடும் அனைத்து காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...


    நேற்று காலை கொரியரில் அழைப்பு வந்தவுடன் விடுமுறை என்பதால் உடனடியாக கொரியர் அலுவலகம் செல்ல கண் முன்னர் அங்கே மிகப் பெரிய கவர் பாக்ஸ் நமது போலவே தென்பட அது இல்லை என்றே மனது அலைபாய்ந்தாலும் அதனையே உற்று நோக்க ஒரத்தில் பெரிய எழுத்தில் கவர் மேல் மு என்று எழுத்து மட்டும் தெரிய ஆரம்பத்தவுடன் ..உள்ளே சென்ற கொரியர் நண்பரை ஹலோ ஹலோ இங்கே வாங்க அந்த பாக்ஸ்ல பரணிதரன்னு இருக்கா ன்னு பாருங்க என்று கூவ ...அதே தான் ...அடிச்சேண்டா லக்கி ப்ரைஸ் என்ற மன சந்தோசத்தில் பார்சலை ஒரு திடுக் திடுக் சஸ்பென்ஸ் உடன் இந்த மாதம் என்ன சர்ப்ரைஸ் ஆசிரியர் அளித்து இருப்பார்... இவ்வளவு பெரிதாக வேறு அமைந்துள்ளது என்ற ஆனந்த மன போராட்டத்தோடு வீடு வந்து சேர உடனடியாக பிரிக்க ஆரம்பித்தேன் ..


    நண்பர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வருட காமிக்ஸ் காலண்டரை கண்டவுடன் அலாதி ஆனந்தம் ..ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி ரசித்து உடனடியாக கடையில் மாட்டி விட்டாகி விட்டது .... ..டெக்ஸ் வில்லர் பக்கம் மட்டும் அவரின் வேறு புகைப்படம் இடம் பெற்று இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்குமோ என்று தோன்றினாலும் மொத்தமாக செம அட்டகாசமான புத்தாண்டு பரிசை அளித்து இந்த புத்தாண்டை கூதுகலபடுத்திவிட்டீர்கள் ..சீனியர்எடிட்டர் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் ..


    அடுத்து ட்யூராங்கோ ...

    இதழை கையில் ஏந்தியவுடன் அவ்வளவு சந்தோசம் ..அந்த ஹார்ட் பைண்டிங் ...மற்றும் நாயகனின் முகம் தெரியா அந்த அட்டகாசமான அட்டைப்படம் ...உள்ளே அட்டகாச தரத்தில் சித்திர தரம் ...அச்சு தரம் என செம கலக்கல் ...ஓவியங்கள் டைகர் கதைகள் ..பிரின்ஸ் கதை சித்திரங்களை நினைவூட்டுகிறது ..

    இன்று புத்தாண்டில் டெக்ஸ் ..ட்யூராங்கோ எதை முதலில் படிக்க என்று குழப்ப மனநிலையோடு காத்திருக்கிறேன் ...குழப்பம் தீர்ந்ததும் ..படித்து முடித்தும் விரைவில் வந்து விடுகிறேன் சார் ...


    இந்த சமயத்தில் இந்த சந்தோசத்தை எனக்கு இந்த வருடம் முழுவதும் அளித்த அந்த முகம் தெரியா நண்பருக்கு மனமார்ந்த நன்றியை எப்படி வார்த்தைகளில் வடிப்பது என தெரியாமல் வழக்கம் போல இந்த மூன்றெழுத்திலியே தெரிவித்து கொள்கிறேன் நண்பரே ...


    நன்றி....நன்றி....நன்றி....

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....வருஷத்தில் முதல் நாளும் அதுவுமாய்க் குழப்பம் நீடிக்க வேண்டாமே ? சங்கத்தின் விஞ்ஞானபூர்வமான இ.பி.பா. யுக்தியைக் கையில் எடுத்துக் கொண்டு - எதை முதலில் படிப்பதென்று தீர்மானித்து விடுங்கள் !! பாவப்பட்ட அந்த ப்ளூ கோட் கோஷ்டியும் இம்மாத ஆட்டத்தில் உண்டென்பதையும் மறந்து விடாதீர்கள் !

      Delete
    2. ///விஞ்ஞானபூர்வமான இ.பி.பா. யுக்தியைக் கையில் எடுத்துக் கொண்டு ///

      :D

      Delete
  50. எடிட்டர் சார்
    வழக்கமாக 35 mm சைஸ் பெட்டியில்தானே பொக்கிஷங்கள் வரும்.
    இன்று சினிமாஸ்கோப் சைஸில் வந்துள்ளதே!
    நமக்கு வரவேண்டிய பார்சல்தானா இது என்று ஒரு நிமிடம் தடுமாறவைத்து விட்டது இம்மாத பார்சல்.
    பிரித்த பின்பு பிரமிப்பு அடங்க சற்று நேரம் ஆகியது. எனக்கு மட்டுமல்ல இந்த அனுபவம். அனைவருக்குமே கிடைத்திருக்கும் என்பது உறுதி.
    காலண்டர் அற்புதம்.ஆனந்தம். பரவசம். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதைப்போய் எங்களால் முடிந்த சிறிய சர்ப்ரைஸ் என்று கூறினீர்களே. இது நியாயமா?
    பாதி பக்கங்களுக்கு விளம்பரங்களாக நிரப்பிக் கொண்டுவரும் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் வேறெந்த பத்திரிக்கையாக இருந்தாலும் கண்டிப்பாக இதனை விற்பனைக்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தி பளபளக்கும் வண்ண காலண்டர் இலவசம் இலவசம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்பார்கள். நாளிதழ்களோ சற்று விலையை கூட்டியிருக்கும். ஆனால் நீங்களோ சத்தமில்லாமல் சாதனை புரிந்திருக்கிறீர்கள். ஒரு பக்கம் இது சரியெனப்பட்டால்கூட மறுபக்கம் தவறோ என தோன்றுகிறது. கொஞ்சம் சத்தம்போட்டு சொல்லியிருக்கலாமோ எனத்தோன்றுகிறது. உங்களது வழி தனிவழி என்றால்கூட நமது காமிக்ஸ் இன்னும் அதற்கான உச்சத்தை தொடவில்லையெனும்போது அதற்கான வழிகளை ஒதுக்கி வைப்பது சரியாகப் படவில்லை. விஸ்வரூபமாக இருந்தாலும் கபாலியாக இருந்தாலும் விளம்பரம் தேவைப்படுவதுதானே நிதர்சனம்.
    ஜூனியர் எடிட்டர், நீங்கள், பொன்னன் ஆகியோரின் பங்களிப்பில் உருவான காலண்டரை பற்றி சத்தம் போட்டு சொல்லியிருக்கலாம்.
    இனியாவது தயவுசெய்து கொஞ்சமேனும் விளம்பர உத்தியின் மணத்தை நுகர்ந்து பார்க்க முயலலாமே சார்.
    (தயவுசெய்து என் வார்த்தைகளில் தவறிருந்தால் மன்னியுங்கள் சார். உலக தரத்தில் நமது காமிக்ஸ் வரும் இந்த நேரத்தில்கூட நீங்கள் விற்பனைக்கு அளவுக்கு அதிகமான வியர்வையை சிந்துவது ரொம்பவும் சங்கடமாக உள்ளது சார். பிறந்துவிட்ட இந்த ஆண்டிலாவது விற்பனையானது மாதம் குறைந்த பட்சம் இருபத்தையாயிரம் பிரதிகளையாவது தொட வேண்டும் சார்.)
    அடுத்தது ட்யூராங்கோ. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை் ஆனால் ஆளை அசரடிக்கும் அட்டைப்படமும் உள் பக்கங்களும் இந்த புலி பதுங்கிப்பாயும் புலியல்ல. எடுத்த எடுப்பிலே பாயும் புலி எனதெரிந்து விட்டது. இதர கௌபாய் நாயகர்களுக்கு கடும் போட்டியை தரப்போகும் அறிகுறி இப்போதே தெரிகிறது. போட்டி இருந்தால்தானே ஆட்டம் சூடு பிடிக்கும். எங்களுக்கும் இன்னமும் த்ரில் கூடும்.
    டெக்ஸ். கொடுக்கும் பணத்துக்கு அதிகமாகவே ஆனந்தத்தை அள்ளித் தருபவர்.
    மாயாவியின் கதை. இதனை ஐம்பதுக்கும் மேற்பட்ட தடவை படித்த கதையே என்றாலும் இப்போதும் fresh ஆக இருப்பதுதான் அவருடைய சாதனை.காதில் பூச்சுற்றல் என்று கூறுபவர் இருந்தாலும் அந்தப் பூவானது இன்னமும் பல தலைமுறைகளை கடந்து மணக்கப் போவதுதானே உண்மை.
    ப்ளூகோட் பட்டாளம்.எப்போதும் கார்ட்டூன் கதைகள் இறுதியாகத்தான் படிப்பேன். அதுவும் டென்ஷன் அதிகமாக இருக்கையில் அதனை குறைக்க இம்மாதிரியான கதைகள் கண்டிப்பாக உதவத்தான் செய்கிறது.
    ஆண்டின் துவக்கத்திலேயே இந்த ஆண்டின் இதழ்கள் அட்டைப்படம், கதைகள், உட்பக்க அச்சுத்தரம், வண்ண சேர்க்கை என்று கடந்த ஆண்டினை மிஞ்சப்போவதென்னமோ உறுதி. உறுதி.உறுதியென சத்தம் போட்டு இப்போதே சொல்கிறேன்.
    உங்களது குழுவினர் சிந்தும் வியர்வையே உருமாறி எங்களுக்கு காமிக்ஸ்ஆக கையில் கிடைக்கிறது. அந்த வியர்வை அப்படியே உருமாறி விற்பனையில் உச்சம் தொட்டால் சிந்திய வியர்வைக்கும் ஒரு அர்த்தம் கிடைக்குமல்லவா. அந்த உச்சம் தொடும் நாள் விரைவில் வருவதற்கு இணைய தோழர்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. AT Rajan : சார்...விளம்பரங்கள் ; இத்யாதிகளின் அவசியங்கள் புரிகின்றன தான் ; ஆனால் இந்தக் காலெண்டர் நமது சந்தா நண்பர்களுக்கொரு நன்றி நவிலலாகவே நான் பார்த்தேன் ! அதை முன்கூட்டியே விளம்பரப்படுத்தி - அதனுள் வியாபார நோக்கத்தை புகுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை ! வியாபாரியாக மிளிர வேறு தருணத்தை ; மார்க்கங்களைத் தேடிக் கொண்டால் போச்சு !

      அப்புறம் 25 ,000 பிரதிகளா ? ஆவ்வ்வ்வ்வ் !!! அதனில் ஐந்தில் ஒரு பங்கு விற்கும் நாள் பிறந்தால் நான் எடுத்த ஜென்மம் சாபல்யம் கண்டிருக்கும் !! நாம் உயிராய் நேசிக்கும் இந்த காமிக்ஸ் கலை இன்னமும் கோடானு கோடி மக்களுக்கு வெறும் "பொம்மைப் புஸ்தகம்" தானே சார் !

      Delete
    2. //"நாம் உயிராய் நேசிக்கும் இந்த காமிக்ஸ் கலை இன்னமும் கோடானு கோடி மக்களுக்கு வெறும் "பொம்மை புஸ்தகம்" தானே சார்!"//
      வலியை உள்ளடக்கிய வார்த்தைகள் சார். எனக்கும் இது மிகப் பெரிய ஆதங்கமாகத்தான் உள்ளது சார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று கூறுவார்கள். அதே போல் எதை செய்தால் கோடி மக்களின் கண்களுக்கு பொம்மை புத்தகங்களாக தெரியும் நம் புத்தகங்கள் இது வெறும் பொம்மை புத்தகம் அல்ல. காலம் காலமாக பாதுகாக்கப்பட வேண்டிய கலைப் பொக்கிஷங்கள் என்று உணர வைக்க முடியும் என புரியவில்லை சார். தள்ளி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கும் எங்களுக்கே வலிக்கிறது. ஆனால் வாழ்வின் பெறும் பகுதியை இதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டும், திரும்ப கிடைக்கும் உத்தரவாதமல்லாமல் பணத்தை முதலீடாக செலவழித்துக் கொண்டும் உள்ள உங்களை நினைக்கையில் ஒரு கணம் உடல் சிலிர்க்கத்தான் செய்கிறது.
      பசுமாட்டின் கொம்பில் பால் கறப்பதைப்போன்றதொரு காரியத்தைத்தான் நீங்கள் செய்து கொண்டுள்ளீர்கள். அதுவும் சலிப்பில்லாமல்.
      இந்த புத்தாண்டு தினத்தில் இந்த நிமிடம் எனக்கு தோன்றுவது என் வாழ்நாளுக்குள் நம் காமிக்ஸ் குறைந்தது இருபத்தையாயிரம் பிரதிகளாவது விற்க வேண்டும்.(சீரியஸாகத்தான் சார் சொல்கிறேன்) மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால் புத்தகம் வாசிக்கும் பழக்கம் எப்படி படிப்படியாக குறைந்ததோ அதே மாதிரி புத்தகம் வாசிக்கும் வழக்கம் படிப்படியாக பரவலாக அதிகரிக்க வேண்டும்.
      காமிக்ஸை படிக்காமலும் அதனைப்பற்றி தெரியாமலும் பொம்மை புத்தகம் என்று ஒரே வார்த்தையில் சொல்லி ஒதுக்கித்தள்ளுபவர்கள் ஒரே ஒரு முறை இரத்தப்படலம் தொகுப்பையோ, மின்னும் மரணம் அல்லது சர்வமும் நானேவையோ, ஜேசன் ப்ரைஸையோ இம்மாத ட்யூராங்கோவையோ படிக்க நேர்ந்தால் இதனையெல்லாம் பொம்மை புத்தகம் என்று சொல்ல வெட்கப்பட நேரிடும். ஒரு திரைப்படத்திற்கு சற்றும் குறையாத உருவாக்கமல்லவா இவைகளெல்லாம். இதிலென்ன வேடிக்கையென்றால் நமது காமிக்ஸை படிக்காதவர்கள்தான் இம்மாதிரியான விமர்சனத்தை முன் வைப்பவர்களாக இருக்கிறார்கள்.
      சந்தாதாரர்களுக்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் சர்ப்ரைஸாக அன்பாய் ஒரு கிஃப்ட் வழங்கப் போவதைப்பற்றிகூட யாரோ நக்கல் செய்திருந்ததாக நண்பர் பதிவிட்டபோது கோபமும் வருத்தமும் கலவையாய் எழுந்தது. உங்கள் மீது அன்பு கொண்ட அனைவருக்குமே உங்களால் கையொப்பம் இட்டு வழங்கப்பட்ட சிறிய வாழ்த்து அட்டையாக இருந்தாலும் எங்களுக்கு அது மிகப்பெரிய சந்தோஷத்தையே தரும். நாங்களெல்லாம் கொடுக்கின்ற பொருளைப் பார்ப்பவர்களல்ல. கொடுக்கின்ற மனதை பார்ப்பவர்கள் என்று அவர்களுக்கு புரியாது. புரிய வேண்டிய அவசியமும் இல்லை.
      இப்புத்தாண்டை சென்ற ஆண்டிலேயே ஆரம்பித்து வைத்துவிட்டீர்கள். நீங்கள் தொடருங்கள் சார். உங்கள் பாதையில் தடம் மாறாமல் பயணிக்க உண்மையான அன்புள்ளங்கள் உங்கள் பின்னே அணிவகுத்து நிற்கிறது.
      தாமதமானாலும் உழைப்பு அதற்குண்டான பலனை கண்டிப்பாய் பெற்றுத்தரும். இது சத்தியம்.

      Delete
    3. ////உங்கள் பாதையில் தடம் மாறாமல் பயணிக்க உண்மையான அன்புள்ளங்கள் உங்கள் பின்னே அணிவகுத்து நிற்கிறது.
      தாமதமானாலும் உழைப்பு அதற்குண்டான பலனை கண்டிப்பாய் பெற்றுத்தரும். இது சத்தியம்.////

      +100000 அருமை!

      Delete
  51. To Editor and his family, to all my dear frnds, to Lion office staffs I wish u a HAPPY NEW YEAR!!!
    Hav a great Comics Year ahead!!!

    ReplyDelete
  52. வணக்கங்கள் நண்பர்களே.!

    தமிழ் காமிக்ஸ் படைப்புகள் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட,அதை வாங்கி படிப்பவர்கள் எண்ணிக்கை பலவீனமாக உள்ளது நமக்கு தெரிந்ததே.

    இந்த காமிக்ஸ் சுவையை புதிதாக வாசகர்களுக்கு அறிமுகபடுத்தி ஒருபடி முன்னேறுவது என்பதற்கான வாய்ப்பு...துரதிஷ்டவசமாக கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதாக தெரியவில்லை.

    காமிக்‌ஸ் சுவைத்த பழைய வாசர்கள் காலவெள்ளத்தில் சிக்கி அதன் சுவை மறந்து, சிதறிக்கிடப்பது காலத்தின் கோலமாக மற்றவர்களுக்கு தெரிந்தாலும்....

    என் மனம் அவர்களை மீல்வருகை செய்ய ஏதும் ஓரு நல்ல வாய்ப்பையே தேடியது. அவர்களுக்குள் தூங்கும் காமிக்ஸ் படிக்கும் பழக்கத்தை மீண்டும் தட்டி எழுப்ப என்னளவில் நல்ல வாய்ப்பு எதுவாக இருக்கும் என வெகுநாள் மாத்தியோசித்தது. அந்த வாய்ப்பு ஒரு முயற்சி சம்மந்தப்பட்டதல்ல, குறைந்தது ஒரு வருடம் முழுதும் விடாமல் முயற்சிக்க வேண்டிய ஒன்று என்பது மட்டும் தெளிவு.!!

    இன்று பொழுதுவிடிந்ததும் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்களில் வைரலாக தினமும் பகிரப்படும் ஒரு விஷயம்... குட்டியான நம்பிக்கை வாசகங்கள் கொண்ட வால்பேப்பர்களும் ஒன்று. இன்று முதல் தினம் ஒரு வால்பேப்பர் உங்களை வரவேற்க்கும்,அதில் ஒரு பொன்மொழியும் முத்து காமிக்ஸின் அட்டைபடமும் இடம்பெறும். அந்த டூ இன் ஒன் பயணிக்கும் வழியில் பழைய வாசகர்களை மீட்டெடுக்கும் என ஆழமாக நம்புகிறேன் நண்பர்களே.!

    உங்களிடம் நான் எதிர்பார்ப்பது அதை முடிந்தமட்டும் பகிர்வதையே,ஆனால் இங்கு ஒரு வேண்டுகோள் என்னவென்றால்...இதை காமிக்ஸ் நண்பர்களுக்கு பகிர்வதுடன் நின்றுவிட்டால் இதன் உயிரோட்டம் நின்றுபோகும். மாறாக மந்திரசொல் உள்ள வால்பேப்பர் என்பதால் சங்கோஜமின்றி பொது உலகில் எவருக்கும் தாராளமாக ஷேர் செய்ய வேண்டுகிறேன் நண்பர்களே ப்ளிஸ்.!

    முதல் பாதியில் உள்ள அந்த மந்திரசொல் காமிக்ஸ் அல்லாத நண்பரை தாண்டி பயணக்கும்போது, மறுபாதியில் உள்ள பழைய அட்டைபடங்கள்...அங்கொன்று இங்கொன்று என சிதறி புதைந்துகிடக்கும் காமிக்ஸ் வாசகர்களை நிச்சயம் இந்த உலகிற்கு எப்படியும் ஈர்த்து கொண்டுவந்தே தீரும்.

    இந்த வருடம் முழுதும் தினமும் ஒரே தடத்தில் திரும்பதிரும்ப இந்த எறும்பு ஊர்ந்து செல்லும் குட்டிதடத்தின் பயணத்தை துவக்குகிறேன்.

    இதன்பலனை...பாறை தேய்ந்ததா என்ற தகவலை இடையிலோ,இந்த வருடத்தின் முடிவிலோ திரு விஜயன் அவர்கள் அறிவிப்பார் என்பதை சொல்லத்தான் வேண்டுமா என்ன.!!

    முதலில் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லும்...இங்கே 'கிளிக்'

    முயற்சியும் துவக்கமும்...மாத்தியோசி-1

    நட்புடன்
    மாயாவி.சிவா

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு பரிசு பற்றி நண்பர்கள் எண்ணங்கள் காது ஜவ்வை கிழித்தாலும்...அதை கண்கூட பார்க்கும் வாய்ப்பு நாளைதான் எனக்கு கிடைக்கும் - குடும்பத்துடன் வெளியில் இருப்பதால்.. :(((((

      Delete
    2. mayavi.siva : As always அசாத்திய அழகு ! கலக்குங்கள் சார் ! நானும் முடிகின்ற போதெல்லாம் நமது FB -ல் போட்டும் பார்க்கிறேன் !

      Delete
    3. Maaத்தி யோசி செம்ம Maaயா சார்....

      Delete
    4. Mayavi Sir i already started sharing in my whatsapp groups

      Delete
    5. அபாரமான சிந்தனை மாயாவி அவர்களே! உங்களின் எண்ணவோட்டம் வியக்கச் செய்கிறது! காமிக்ஸின் எதிர்காலத்தை வளமாக்கிட நீங்கள் மேற்கொண்ட இம்முயற்சிக்கு எங்களால் ஆனதை நிச்சயம் செய்வோம்!

      தொடருங்கள்... பகிர்கிறோம்!

      Delete
    6. நேற்று இரவு வீடுதிரும்பியதும்...

      ஓடோடி நான் பார்க்க தவித்த பார்சலை தேடி ஆபீஸ்அறைக்கு சென்றேன்.அங்கு டேபிளில் இருந்த பார்சலை பார்த்தும்,அது காமிக்ஸ் பார்சல் போலவே இல்லை. கல்யாண ஆல்பம் சைஸில் இருந்தது.! பார்சலை பிரிக்கும்போது கிடைத்த உணர்வு...சொந்தவீட்டு விசேஷ போட்டோ ஆல்பம் பிரித்து போலவே இருந்தது.பேக்கிங் என்னவொரு நேர்த்தி..அட்டகாசம்..!

      உள்ளே அதேசைசில் புத்தகங்கள் இருக்கும் என பார்த்தால்....கிரர்ர்ர்ர்

      நாலே நாலு சீட் உள்ள காலெண்டர் அளவுக்காக....
      கடைகளுக்கு அனுப்பும் விளம்பர சீட் இரண்டாக வெட்டிய ஒரு பத்து ரூபாய் சமாச்சாரம்....
      ஐநூருக்கும் குறைவான வாசகர்களுக்கு அனுப்ப வேண்டி...
      அந்த நாலு சீட் மடங்காமல் இருக்க அந்த அளவுக்கு 5௦௦ அட்டைபெட்டி ஸ்பெஷலாக தயாரித்து...
      அந்த பெரிய அளவுக்கு ஒரு பிளாஸ்டிக் கவரையும் பிடித்து...
      அந்த நாலு சீட் சுருட்டினாலும் ஒன்றும் ஆகாது,அதை சுருட்டாமல் தர வேண்டி செஞ்ச உழைப்பில்....

      கடவுளே...இந்த உழைப்பில் எங்குமே வியாபாரமே தெரியலையே விஜயன் அவர்களே..!

      உங்கள் மனதின் விசாலத்தை வெளிப்படுத்தியுள்ள தன்மை
      படைப்பை வழங்குவதில் தெரியும் அழகு
      காமிக்ஸ் மேல் உள்ள காதலை வெளிப்படுத்தும் கம்பீரம்
      எஞ்சியுள்ள சின்ன வாசகர் வட்டத்திற்காக காட்டும் நேர்த்தி

      அடேங்கப்பா..பின்னிட்டிங்க ஸார்..!!
      [எழுந்து கைவலிக்க கைதட்டும் படங்கள் இஸ்டத்துக்கு]

      பார்சல் பிரித்ததும் கையில் எடுத்து பார்த்த அந்த ஹாட்பவுண்டு அட்டை+பைண்டிங் செய்த முத்து-45 வது ஆண்டு மலர்...அவுக்..அவுக்...

      என் மனதில் தோன்றிய வரிகள்...மாத்தியோசி-2

      அந்த அட்டைபடங்களை பற்றி நீட்டமா சொல்லியே ஆகணும்...[ஒரு நாள் பொறுத்து..]

      Delete
    7. mayavi.siva : சார்...ஒரு தம்மாத்துண்டு புக்மார்க் தந்தால் கூட, அதனை எத்தனை வாஞ்சையாய் நம்மவர்கள் பத்திரப்படுகிறார்கள் என்பதை பார்க்கத்தானே செய்கிறேன் ! அவ்வளவு ஏன் - சமீபமாய் நான் கோரிய முந்தைய இதழ்களை நீங்கள் அனுப்பி வைத்தபோது, அவற்றை நீங்கள் பத்திரப்படுத்தியிருந்த விதங்களையும் காண முடிந்தது தானே ? அப்படி இருக்கையில் ஓராண்டு முழுவதும் தொங்க வேண்டியதொரு சமாச்சாரம் வளையாமல், கசங்காமல் உங்கள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டியது எத்தனை அத்தியாவசியம் என்று உணராது போக முடியுமா ? அந்த உந்துதலுக்கு முன்பாய்ச் செலவுகளோ, சிரமங்களோ பெரிதாய்த் தெரியவில்லை சார் !

      Delete
    8. mayavi.siva : சின்னதொரு வேண்டுகோளும் கூட சார் : அந்த "மாத்தி யோசி " ஷேர் சித்திரங்களில் எங்கேனும் ஒரு மூலையில் சின்னதாய் நமது ஆன்லைன் ஸ்டாரின் வலைத்தள முகவரியினையும் இணைத்திட முடிந்தால் புதியவர்களுக்கு உதவிடக் கூடுமே ?

      Delete
    9. @ திரு விஜயன் அவர்களுக்கு

      நமது வலைதள முகவரி கொடுப்பதில் ஒரு பிரச்சனையும் இல்லை ஸார். இந்த பணியை துவக்கும்முன் வலைதள முகவரி தரலாமா..? அல்லது செல்போன் நெம்பர் தரலாமா..? என ஒரு ரொம்பவே ஆழமாக யோசித்து பார்த்தேன்.

      வலைதள லிங்க் பலன்: நேராக ஆன்லைன் ஸ்டோருக்கு சென்று முதலில் பட்டியல் பார்த்து மலைத்து பின்னால் அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை ஆடர் செய்து வாங்கிகொண்டு விடுவார்கள். இது முறையான, அருமையான வழி என்பதில் மாற்று கருத்தேஇல்லை. உங்கள் ஆபிஸுக்கு போன் வராது, இன் பாக்ஸில் விழும் ஆடர்களை பார்த்து சிஸ்டமேட்டிக்கா வேலையை நீங்கள் முடிக்கலாம்.இரண்டு பக்கமும் திருப்தி.!

      போன் நெம்பர் பலன்: பழைய நினைவால் தூண்டப்பட்டவர்கள் போன் போட்டு "காரிகன் கிடைக்குமா ? சிஸ்கோ பாஞ்சோ வெச்சிருக்கிங்களா.? ஆர்ச்சி வேண்டுமே..? இரட்டை வேட்டையர் ஏதும் புதுசு..?" என போனில் நச்சரிப்பார்கள்.வாட்ஸ்ஆபில் டைப்புவார்கள். பழசே வேணும்ன்னு அடம்பிடிப்பார்கள்.

      என் நோக்கம் பழைய வாசகர்களின் உள்ளே தூங்கும் ஆர்வத்தை தொடர்ந்து கிளறுவதே. அவர்கள் எல்லோரும் குடும்பஸ்தர்கள்,நடுத்தரவர்க்கத்தினர்,ஆன்லைன் பக்கம் அதிகம் பரிச்சியமே இல்லாதவர்கள்.! அவர்களின் டிஜிடல் தொடர்பு எனபார்த்தால்...1.வாட்ஸ்ஆப் 2.பேஸ்புக் என ரெண்டுமட்டுமே இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவர்கள் இடத்தில் நின்று பார்த்தால்...

      சட்டென தொடர்பு கொள்ள, "விசாரித்துதான் பாப்போமே.". என எதற்கு கைபோகும் என பார்த்தால் முதலிடம் செல்போன் தான், ஆன்லைன் ஷாப் போவது என்பது சோம்பலானது, ஏன்னா அது உங்களுக்கு சௌகர்யமானது இல்லையா..! எது நமக்கு குடைச்சலோ அதுதான் [ஆரம்பத்தில்] மக்களுக்கு வசதியானது. அவர்களின் வசதிதானே இன்றைய வியாபாரவளர்ச்சியின் பிரதானம்.!கன்சியூமர் சைக்கலாஜி உங்களுக்கு தெரியாதா ஸார்.!!

      அன்புகூர்ந்து சில மாதங்களுக்கு போன் குடைச்சலை பொறுத்துக்கொள்ளுங்கள் ஸார். இன்றைய தேதியில் புதிதாக ஒரு வாசகரிடமிருந்து ஒரு போன் அழைப்பு வருவது என்பது பிரதமர் மோடி அவர்களின் அழைப்புக்கு நிகரானது அல்லவே.!

      45வது ஆண்டுமலரின் தலையங்கத்தில் கடைசி பத்தி உள்ள உங்கள் வேண்டுகோள் "யார் கண்டது-அந்த மாயாவி மாயஜாலம் அவரிடமும் பலித்துவிட்டால் நமக்கொரு ஆயுட்கால ரசிகர் கிடைத்த மாதிரி இருக்குமல்லவா?"என்ற உங்கள் ஏக்கம் என்னை தூங்கவிடுவதாக தெரியவில்லை ஸார். அழைக்கும் ஒவ்வொரு நெம்பரையும் ஸ்டெல்லா மேடத்திடம் ஒரு நோட்டில் குறித்து கொண்டே வர சொல்லுங்கள். அந்த டேட்டாபேஸ்தான் நமக்கான புதியசந்தாவுக்கு அஸ்திவாரம்.!என் இலக்கு இரண்டு மாதத்தில் 100 பழைய வாசகர்களின் அழைப்புகள்.!! அந்த அழைப்பை நூல் பிடித்து அவர்களை பிடிக்கும் திட்டம் 50 நாட்கள் கழித்து துவங்குவோம்.!!! [ நன்றி:மோடி சர்கார் :)]

      Delete
    10. ஒரு உபபதிவுக்கே லோடுமோர் என பறக்கும் கமெண்ட்ஸ் பகுதி இன்று முக்கிய பதிவுக்கே கமெண்ட்ஸ் இல்லாமல் திணறுகிறது. மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தால் எல்லா ஆர்வமும் வடிந்து உறைந்துவிடுகிறது என்பதுதான் இங்கும் நான் அறிந்து கொண்ட உண்மை. வடிந்துகிடப்பவர்களின் மனதில் புகுந்து ஆர்வத்தை வளர்ப்பது என்பது ஒரு சவாலாகவே என்முன்னே நிற்கிறது.

      ஆதார் எண் மூலமாக பணபரிமாற்றம் நடப்பதை விட செல்நெம்பரில் தான் எல்லாமே நடக்கிறது. நம் பண அடையாளமாகவே வங்கிகள் செல்நெம்பரை மாற்றிவிட்டது. எல்லா டிஜிடல் வர்த்தகத்திற்கும் முதல் அடையாளம் செல்போன் நெம்பரே.

      ஒரு விசிட்டிங் கார்டில் உள்ள செல்நெம்பர்-வெப்அட்ரஸ் இதில் எதை தொடர்புக்கு தேர்ந்தேடுப்பீர்கள் என கணக்கெடுத்ததில் கிடைத்த விடை 90/100 செல்போன் நெம்பரே.

      வாசகர்கள் கொட்டிகிடந்த காலத்தில் 'மை' சிதறிய காகிதத்திலாவது காமிக்ஸ் கிடைக்காதா? என்ற ஏக்கம் நிலவியது.

      புதிய 2000 ரூபாய் தாளைவிட ஒருபடி உயர்வான தரத்தில் காமிக்ஸ்கள் கொடுக்க,உழைக்க நீங்கள் தயாராக உள்ள காலத்தில் கண்ணுக்கெட்டிய மட்டும் ஒரு கணிசமான வாசகர்களை காணவில்லை.

      இந்த இரண்டுக்கும் ஒரு முடிச்சி போடாமல் நான் விடுவதாய் இல்லை வாத்தியாரே..!

      Delete
    11. வரிசையாக மூன்று மெகா ஹார்ட் பவுண்ட் புத்தகங்களை அடுக்கிவைத்து பார்த்தேன்.

      மின்னும் மரணம்
      என் பெயர் டைகர்
      ட்யுராங்கோ

      * 45 வது ஆண்டுமலர் என்ற லோகோ
      * ட்யுராங்கோ என்ற எழுத்துகள் முக்கோண வண்ண சிதறல்
      * மேகங்கள் கைரேகையாக மெல்லிய கோட்டில் ஜொலிக்கும் கோட்டிங்
      * கௌபாயும் தண்ணீர்தொட்டி+மரகூரையும் கண்ணாடி போல துல்லியமாக மின்னும் லோமிமேட்
      * பின் அட்டையில் அலை அலையாக ஓடும் பாறைகள்
      * மலைமுகடுக்கு பின்னால் உதிக்கும் 'ட்யுராங்கோ'
      * புல்வெளியில் மறைத்திருக்கும் ஓவியரின் கையெழுத்து
      * கதாசிரியரின் கண்ணாடி முகம்
      * நல்லவனா..? வல்லவனா..? என்ற வரிகளின் வண்ண கலவை
      * குதிரையும் ட்யுராங்கோவும் பளபளக்கும் கச்சிதமான லேயர்

      மொத்தத்தில் சத்தமின்றி ஒரு சாதனையை படைத்திருகிறது நம் லயன் டீம்.! மின்னும் மரணமும் என் பெயர் டைகரும் போட்டியில் இருந்து தானாகவே விலகி விட்டது எனலாம்.

      வரும் புத்தகத்திருவிழாவில் உள்ள 700 பதிப்பகத்தில் இப்படி ஒரு அசத்தலான, நுணுக்கமான,நேர்த்தியான ஒரு ஹார்ட் பவுண்ட் அட்டையை தேடிபிடித்து காட்டுபவர்களுக்கு ஒரு பரிசையே அறிவிக்கலாம் என தோன்றுகிறது.!

      இன்றைய மாத்தியோசி-3

      Delete
    12. மாயாவிகாரு,
      பின்னணியில் இலைகளைக் காற்றில் சிதறவிடும் அந்த ஒற்றை மரம் - கொள்ளை அழகு!
      font வித்தியாசமாக இருந்தாலும், படிப்பதற்கு சற்றே கடினமாக இருக்கிறது!

      Delete
    13. @ இத்தாலிகாரு

      படிப்பதற்கு கஷ்டமாக உள்ள ஒற்றைவரியை ...
      திரும்ப திரும்ப படித்து பார்ப்பதால்...
      மனசுக்குள் உரசிபார்த்து உண்டாக்கும் பொறிதானே முக்கியம்.!

      மாத்தியோசி - 3A: எல்லா கடினத்திற்கும் பின்னாலும் ஒரு பலன் ஒழிந்திருப்பதை கண்டுகொள்ளுங்கள்.!

      Delete
    14. மாத்தியோசி - 3B : மனிதர்களோடு வம்பு வளர்த்துக்கொள்ளுங்கள் - மாத்தியோசிக்கும் மாயாத்மாக்களோடு அல்ல!:P

      Delete
  53. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  54. எடி அவர்களுக்கு பிறந்த நாள் எனறு fb யில் உள்ளது.1.1.17 ஆனால் அதை பற்றிய பின்னூட்டம் நமது blog ,face book இரண்டிலும்இல்லை விவரம்தெரிந்தவர்கள் பதிவிடவும்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அதே ஐயம்தான்.!!

      Delete
    2. Sundar & K.O.K : அச்சச்சோ ! FB -ல் பக்கத்தைப் பதிவு செய்து தந்தது நமது அப்போதைய web developer திடீரென்று profile -க்கு பெயர் ; பிறந்த தேதி இத்யாதிகளைக் கேட்ட போது ஜனவரி 1 என்று போடச் சொல்லியிருந்தேன் - இதையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்களென்று ! இன்றைக்கு வரிசையாய் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று notifications வந்த போதுகூட - மண்டையில் உரைக்கவில்லை ! இங்கே, இப்போது இந்தப் பின்னூட்டங்களை படிக்கும் போதே புரிகிறது ! எனக்கு இன்னும் 50 வயசு ஆகலீங்கோ !!

      Delete
    3. /// எனக்கு இன்னும் 50 வயசு ஆகலீங்கோ !!///....ஹா...ஹா...
      50ஐ எட்டிப்பிடிக்க இன்னும் 3மாதம்தானே இருக்கும் போல சார்..

      Delete
    4. சேலம் Tex விஜயராகவன் : அட...அது கிடக்கு சார் 80 நாட்களுக்கு அப்பால் ! ஷப்பா !!

      Delete
  55. இன்று பொன்விழா காணும் நமது பிரியத்திற்க்கும் மதிப்பிற்க்குமுரிய எடிட்டர் அவர்களுக்கு நெஞ்சு நிறைந்த பிறந்தநாள் வணக்கங்கள். .!!

    பொன்விழா ஷ்பெசல் ஏதாச்சும் கேட்போமா??

    (இப்படீன்னு பின்னூட்டம் போடலாமான்னு தெரியலையே.!? இன்னிக்கு எடிட்டர் சாருக்கு பிறந்தநாள் தானான்னு உறுதி செய்யுங்களேன்.)

    ReplyDelete
    Replies
    1. மார்ச் 18(வருடம் கேட்காதிங்கோ) அன்றுதான் எடிட்டர் அவர்களின் பிறந்தநாள். FB யில் இருந்த தகவல் குழப்பத்தால் முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டேன். பரவாயில்லை .., எப்படியும் பொன்விழா சிறப்பு மலரை மார்ச்சில் வாங்காமல் விடப்போவதில்லை..!! :-)

      Delete
  56. Dear sir,ஜனவரியில் புத்தக கன்ண்காட்சியில் tex surprise இதழ் உண்டு தானே!

    ReplyDelete
    Replies
    1. Sridhar : நான் உங்களை சர்ப்ரைஸ் செய்கிறேனோ இல்லியோ, நீங்கள் எனக்கு சர்ப்ரைஸ்களாகக் கொடுத்தே வருகிறீர்கள் !!

      Delete
    2. Sir நான் ஒன்றும் சும்மா சொல்லவில்லை. நீங்கள் தான் ஜனவரியில் surprise இதழ் அதுவும் TeX willerக்கு என்று சொன்னீர்கள்.

      Delete
    3. ஓஷோவின் குட்டிக்கதை ஒன்று...
      ஒரு துறவி தன் சீடர்களிடம் "நாம் கோபமாயிருக்கும் போது ஏன் கத்திப் பேசுகிறோம்?" எனக்கேட்டாராம்.
      அதற்கு "கோபப்படும்போது நாம் அமைதியை இழந்து விடுகிறோம். அதனால்தான் கத்திப்பேசுகிறோம்" என்றார்களாம்.
      துறவி "கேள்வி அதல்ல. அமைதியை இழந்தாலும் நாம் கோபப்பட்ட நபர் அருகில்தானே இருக்கிறார்.மெல்லப்பேசினால்கூட அவருக்கு கேட்குமே பின் எதற்கு கத்திப்பேசுகிறோம்?" என்று மறுபடி கேள்வியை தொடர சீடர்கள் யாருக்கும் விடை தெரியவில்லை. பின்னர் துறவி அதற்கான விளக்கத்தை கூறினாராம்.
      "ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது இருவர் இதயங்களிலும் அகங்காரம் தலைதூக்குவதால் மனதளவில் இருவரும் தொலைதூரம் விலகிப் போய்விடுகிறார்கள். அதனால் கத்திப்பேசுகிறார்கள்ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது அங்கே இதயங்கள் நெருங்கிப்போகின்றன. அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது. தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய் கரைந்து காணாமல் போகிறது" எனக்கூறினாராம்.
      அது சரி! புத்தாண்டுக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்பவர்களுக்கு ஓஷோவின் புத்தகத்தை படித்தபோது துறவியின் வார்த்தைகள் மனதில் தைத்தது. அதை இங்கே பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்.

      Delete
    4. அருமை.வாழ்க்கையில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய போதனை.

      Delete
    5. திரு ATR, அருமையான கருத்துள்ள குட்டிக்கதை. படித்ததை உங்களோடு வைத்துக்கொள்ளாமல் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கும் உங்களுடைய நல்ல மனதுக்கு நன்றிகள் பல. .!

      அருமை அருமை..!!

      Delete
    6. நன்றி தோழர்களே. இன்னும் ஒரே ஒரு கதை சொல்லிவிடவா? இதுவும் ஓஷோ கதைதான்.
      ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.மரத்தின் மேல் சரசரவென ஏறி அவற்றில் சில பழங்களை பறித்துதின்றான். மிகக்கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன.அவற்றை எட்டிப்பறிக்க கிளையின்மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
      சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த வேறொரு கிளையை பிடித்து தொங்க ஆரம்பித்தான்.
      குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து "யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்" என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்கும் நிலை வந்துவிட்டது.
      தற்செயலாக அப்போது அந்தப்பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியுடன் கீழே பார்த்த இளைஞனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே. உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.
      பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.மேலும் கோபமுற்ற இளைஞன் பெரு முயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக்கொண்டு "நான் கீழே வந்தால் உம்மை சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.
      பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மீது வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளை மேல் ஏறிவிட்டான். விடுவிடுவென இறங்கிவந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான்." ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.
      பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே " தம்பி.நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் புரியாமல் முழித்தான்.
      பெரியவர் விளக்கினார்." தம்பி.நான் உன்னை முதலில் பார்த்தபோது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்.உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படி பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கிவிட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை.உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து நான் உன்னை திசை திருப்பினேன்." என்று சொல்லிவிட்டு தன்வழியே அவர் போய்விட்டார்.
      நீதி: "எந்த சிக்கலின் போதும் பயமின்றி நாம் யோசிக்க ஆரம்பித்தால் அந்த சிக்கலில் இருந்து அடுத்தவர் துணையில்லாமல் நாமாகவே வெளிவந்துவிட முடியும்."

      Delete
    7. நல்ல கதைகளுக்கு நன்றி திரு.ATR சார்! இன்று இந்தக் கதைகளைத்தான் என் குழந்தைக்குச் சொல்லித் தூங்கவைத்தேன்!

      Delete
    8. நன்றி திரு.ஈ.வி. உங்களது குழந்தையின் பெயர் ரம்யாதானே?
      நாளை காலை அவர் தூங்கி எழுந்தவுடன் மறக்காமல் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள்.

      Delete
    9. AT Rajan : பொறுமையாய் இத்தனையை டைப் செய்வது மாத்திரமின்றி, தங்கு தடையில்லா மொழிநடையோடு பதிவிடுவது எத்தனை சிரமம் என்பதை இங்குள்ளோர் அனைவரும் அறிவர் ! பிரமாதம் சார் !

      Delete
    10. புத்தாண்டுக்கு எடிட்டர் வாயால் பாராட்டு!!!
      நன்றிகள் சார். நம் blog ல் உங்கள் பதிவுகளை 2012 லிருந்து படித்து வருகிறேன் சார். பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போலத்தான் இதுவும்.

      Delete
  57. காமிக்ஸ் வாழ்வில் சென்ற ஆண்டு மறக்க முடியாத ஆண்டு டெக்ஸ் வில்லரின் தனி ராஜ்யம் கார்ட்டூன் குதுகலம் ஜேசன் பிரைஸ் அசத்தல் அறிமுகம் லக்கி லூக் கிளாசிக்ஸ் என சகல துறையிலும் கலக்கல் இதே போல் இந்த ஆண்டும் சாதனை புரிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  58. நாம் கோபப்பட்ட நபர் அருகில்தானே இருக்கிறார்.மெல்லப்பேசினால்கூட அவருக்கு கேட்குமே பின் எதற்கு நாம் கோபப்பட்ட நபர் அருகில்தானே இருக்கிறார்.மெல்லப்பேசினால்கூட அவருக்கு கேட்குமே பின் எதற்கு கத்திப்பேசுகிறோம்?
    அருமை

    ReplyDelete
  59. எனது இதழ்கள் இன்னும் னக்ககு வரவில்னல, ஊரில் உள்ளேன், நானள போய் வாங்க வேண்டும்....
    நண்பர்கள் பதிவுகனள பார்த்தவுடன் உடனே படிப்க தோன்றுகிறது, படித்துவிட்டு வருகிறேன்.....

    ReplyDelete
  60. Nanum sippai than super...first book in new year enjoyed a lot

    ReplyDelete
    Replies
    1. tex kit : ஷப்பாடி ! இந்தப் பசங்களை நீங்களாச்சும் ஞாபகம் வைத்திருந்தீர்களே !!

      Delete
  61. காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும்., ஆசிரியர் மற்றும் அவர்தம் குடும்பத்தார்.,அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  62. விஜயன் சார் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மற்றும்
    அவரது அலுவலக பணியாளர்கள் மற்றும்
    அனைத்து காமிக்ஸ் காதல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🏼

    இன்றுபோல மென்மேலும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
    நன்றி _/|\_
    .

    ReplyDelete
  63. ட்யூராங்கோ

    தலைவர் பாணியில் சொல்வதென்றால்

    " அசத்தல் "

    வழக்கம் போல உங்களது செலக்சன் சோடை போகவில்லை

    அட்டை முதல் இறுதிவரை கலக்கல்

    அசத்திவிட்டார்

    புத்தாண்டு கோலாகலமாக ட்யூராங்கோவுடன் பயணிக்க ஆரம்பித்துள்ளது

    ஆரம்பமே அதிரடின்னா இன்னமும் 11 மாசமும் திருவிழான்னுதான் சொல்லுங்க சார்

    மிக்க நன்றி 🙏🏼
    .


    ReplyDelete
    Replies
    1. Prabakar T : //ஆரம்பமே அதிரடின்னா இன்னமும் 11 மாசமும் திருவிழான்னுதான் சொல்லுங்க//

      வாண வேடிக்கைகளுக்குப் பஞ்சமிராது என்பது மட்டும் நிச்சயம் சார் !

      Delete
  64. Great start to the future with Durango. Absolutely amazing choice.
    Very exciting to see the new heroes and storylines lined up.
    RENAISSANCE period of our Muthu/lion comics touching new heights.
    Keep up the good work sir.
    Congratulations and happy new year to you and your team.

    ReplyDelete
    Replies
    1. event horizon : அன்பான வரிகளுக்கு நன்றிகள் சார் ; மாதம்தோறும் உங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்திட முயற்சித்துப் பாருங்களேன் !

      Delete
  65. ஆசிரியருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், பணியாளர்கள் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  66. என்னதான் 'ட்யுராங்கோ' என்ற எரிநட்சத்திரத்தை ஆசிரியர் அமர்க்களமாக அறிமுகம் செய்து வெளியிட்டாலும், இம்மாத கதைகளில் முதல் ரேங்க் தட்டி செல்வது டெக்ஸ்சின் "ஆவியின் ஆடுகளம்"தான். ஆரம்பம் முதல் இறுதி வரை நம் இதயத்தை 'திக்' 'திக்' என்று அங்கும் இங்குமாக எகிற வைத்துவிட்டது. எங்கே சார் ஒளித்து வைத்திருந்தீர்கள் இவ்வளவு அற்புதமான ஒரு டெக்ஸ் கதையை.!? "சத்தமின்றி ஒரு யுத்தமும் நன்றாக இருந்தது. முதல் 2 பாகங்களும் எரிமலை பிழம்பாக தகித்தது. ஆனால் அடுத்த கடைசி 2 பாகங்களும் SLOW'வாக நகர்கிறது. அதுவும் இறுதியில் பாதியோடு நின்றுவிடுவதால் மிச்ச கதையை அடுத்த வருடம்தான் படிக்க முடியுமோ என்று புத்தகம் மூடும்போது மனதில் கவலை உண்டாகிறது.

    ReplyDelete
    Replies
    1. Jagath Kumar : இருவருமே குதிரை வீரர்கள் தான் எனினும், பாணிகளில் டெக்ஸும் , ட்யுராங்கோவும் எதிர் எதிர் துருவங்கள் தானே ? And yes - இம்மாதத்து டெக்ஸ் சாகசம் படிக்க ரொம்பவே இலகுவானது ; விறுவிறுப்பானதும் தான் !!

      "தல" போல வருமா ?

      Delete
  67. சத்தமின்றி யுத்தம் செய்...

    ( படிக்காதவர்களும் படிக்கலாம் )


    நான்கு கதைகள் ...ஒரே குடையின் கீழ்...ஒரே நாயகனின் கீழ்..என்னதான் அறிமுக நாயகன் என்றாலும் கெளபாய் நாயகன் எனில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு உற்சாகம் பல மடங்கு கூடுதலாகும் என்பது மறுக்க முடியாத உண்மை...அந்த உற்சாகத்தை ட்யூராங்கோ உறுதிபடுத்தினாரா எனில்..... நூறு சதவீதம் என்பதே உண்மை .தனி தனி கதைகளாகவும் சத்தமின்றி யுத்தம் செய் இதழை படிக்கலாம் என்ற அறிவிப்பினால் முதலில் முதல் இரண்டு பாகங்களை மட்டும் இன்று படிக்கலாம் என நேற்று முடிவெடுத்து நேற்றே இதழை வாசிக்க ஆரம்பத்தேன் ..எப்பொழுதும் மிகவும் விரும்பும் நாயக இதழ்களை கடைசியாக படிப்பதே வழக்கம் என்றாலும் புத்தாண்டின் முதல் நாள் நாம் விரும்பும் நாயகரோடு பயணம் செய்யலாம் என்ற மாறுபாடான நிலைப்பாட்டை ஏற்படுத்தி கொண்டு டெக்ஸ் உடன் பயணிக்கலாமா ட்யூராங்கோ உடன் பயணிக்கலாமா எனும் குழப்பத்தில் இங்கீ பாங்கி மூலம் வெற்றி பெற்றவர் ட்யூராங்கோ ..அதன் படி தான் இரண்டு பாகங்களை முதலில் படித்து விடலாம் என முடிவெடுத்து ரெளத்திம் பழகு...பாகத்தின் முதல் வரியில் ஆரம்பித்தால் இறுதியாக தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் கடைசி அத்தியாயத்தின் கடைசி வரியில் தான் இதழை கீழே வைக்க முடிந்தது.. நான்கு அத்தியாயங்களும் தனி தனியாக படித்தாலும் குழப்பமில்லா திரைக்கதை பாணி என்றாலுமே கடைசி பக்கம் வரை படிக்க வைத்தது ட்யூராங்கோ அளித்த உற்சாகம் தான் என சொல்லவும் வேண்டுமா என்ன...மேலும் சித்திர தரங்களும் ..அச்சு தரமும் அந்த கெளபாய் உலகில் நாமும் உலவ வைத்தன எனில் மிகையில்லை ...அட்டை படத்தை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்பதில்லை....மொத்தத்தில் டயூராங்கோ வும் வெற்றி நாயகரே என்பதை நிரூபித்து விட்டார் ..

    என்ன ஒன்று அடுத்த ட்யூராங்கோ சாகஸம் வெளிவரும் பொழுது இதை போல் தொகுப்பாக வெளியிட்டால் சிலமணி நேரம் என்பது அல்லாமல் ஒரு நாள் முழுவதும் அந்த கெளபாய் உலகில் வசித்த அனுபவம் ஏற்படும் என்பதை மறக்காதீர்கள் சார் ..

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : சத்தமின்றி யுத்தம் செய்பவரை உரக்க விமர்சித்திருந்தது சுவாரஸ்யமாக இருந்தது ! கவலையே வேண்டாம் - ட்யுராங்கோ இதே போல் 3 அல்லது 4 பாகத் தொகுப்புகளில் தான் வலம் வருவார் !

      Delete
  68. ****** சி.சி.வயதில் ******

    'திகில் லைப்ரரி #2' உருவானதன் பின்னணி பற்றிய சுவையான சம்பவத்தை எடிட்டரின் நகைச்சுவை நடையில் படித்து நான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததில், பஸ்ஸில் எனக்கு இருபுறமும் உட்கார்ந்திருந்தவர்களுக்கு இடுப்புவலி கண்டிருப்பது நிச்சயம்!

    அந்தப் 'பின்குறிப்பு' ஏதோவொரு சோகத்தையும், நிறைவையும் ஒருசேரக் கொடுத்தது!

    திகில் லைப்ரரியில் ஒன்றைக்கூட பார்த்திராத/படித்திராத பாவியாகிவிட்டேனே என்ற ஏக்கம் எழுகிறது, இன்னும் பலமாக! ஹூம்...

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : //அந்தப் 'பின்குறிப்பு' ஏதோவொரு சோகத்தையும், நிறைவையும் ஒருசேரக் கொடுத்தது! //

      முப்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் ; வாழ்க்கையில் வசதியான நிலைக்குச் சென்றான பின்னேயும் - நம்மை நினைவு வைத்திருந்து, ஆபீஸைத் தேடித் பிடித்து வந்து நேரம் செலவிட்டது நிஜமாகவே மன நிறைவைத் தந்தது !! நமது புது இதழ்களை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டார் !

      Delete
  69. சஅர் ஏகப்பட்ட சந்தோசங்களை சென்ற ாண்டில் அள்ளித் தெளித்ததுடன்...இந்த ாண்டு விதைகளை கண்ணில் காட்டி விட்டீர்கள்....சீக்கிரம் விதைக்க சந்தா செலுத்தும் நண்பர்கள் மேலும் அதிகரித்துதவட்டும்....சூப்பர் சார் ....விண்வெளிக் கதைகள் வெகுவாய் ஈர்த்ததில்லை இதுவரை...ஸ்பைடரின் விண்வெளிப் பிசாசு தவிர...தாங்கள் காட்டிய ொரு பக்கம் சும்மா அள்ளுது...நிச்சயம் தூள் கிளப்பும்.....1980களின் வருகிறது விளம்பரங்களுக்கு ஏதுமீடாகுமா என்ற எண்ணம் பழய பக்கங்களை புரட்டும் போது வந்து போவதுண்டு....2017 அட்டவனைக்கு பின்னர் சத்்தியமாய் தகர்ந்து விட்டது...ட்யூராங்கோ...லேடி s...ஜெராமையா...பென்னி.....ஸ்மர்ஃப்.....இப்ப நேத்து காட்டிய அறிமுகங்கள் ...இந்த விளம்பரங்களை நமது புத்தகங்களிலும் ஒரு பக்பத்தோடு இடைநிரப்பியாய் காட்டும் வல்லமையை ஓடின் அருளட்டும்...சந்தா பதிப்பிக்க அனுப்பிய லக்கியின் நினைவூட்டலும் அருதை...

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல்,

      மேலேயிருக்கும் பத்தியை வச்சு எடிட்டர் தாராளமா ஒரு 'எழுத்துப்பிழைகளை எண்ணும் போட்டி' வைக்கலாம்! ;)

      ஆனால் அந்தப் போட்டியில் யாராலுமே ஜெயிக்க முடியாது என்பதுதான் உண்மை! :P

      Delete
    2. Erode VIJAY : அட...அது உலோகக் கரத்தோடு டைப் அடிக்கும் போது இதெல்லாம் சகஜம் தான் போலும் !!

      அப்புறம் நான் பயன்படுத்தும் தமிழ் சங்கதி.காம் சமீபமாய் ஏதேதோ மென்பொருள் முன்னேற்றங்கள் செய்துள்ளார்கள் ! நிமிர்ந்து பார்க்காமல் நாம்பாட்டுக்கு டைப் அடித்துக் கொண்டே போய்க்கொண்டிருந்தால் தர்மஅடி வாங்கும் சூழலும் சாத்தியமே ; செம வில்லங்கமான தமிழாக்கங்களை முன்னிறுத்துகிறது !! சாமி !!!

      Delete
  70. சார் கடல் கொள்ளையர்கள்..சிறுவயதில் ஏதோ ஒரு காமிக்சில் அதாவது பொன்னி காமிக்சில் படித்து வெகு வேட்கையோடு தேடித் திரிந்தும்..ஏதுமகப்படலை...நீங்க ிபவில் வான்ஸ் குறித்து எழுதிய போது ..இது குறித்தும் பதிவிட்டீர்கள்...வெகுவாய் சந்தோசப்பட்டேன்..தற்போது மறந்தே போய் விட்டேன்..அட்டகாசம் சார்..கனவுகள் கைவரப் பெறுகிறேனஅதும் வான்ஸ் எனும் போது....அடடா.....இனி புதை பொருள் ஆராய்ச்சி...புதையல்.....பிரமிட் வந்தால் ......

    ReplyDelete
  71. ஆவியின் ஆடுகளம் செமயா இருந்தது..New Year with Tex...

    ReplyDelete
    Replies
    1. tex kit : வித்தியாசமான சாகசமல்லவா இரவுக் கழுகாருக்கு ?!

      Delete
    2. ஹைய்யா! Tex kitக்கு பேச்சு வந்துடுச்சு!
      ஆத்தா.. மகமாயி.. நான் வேண்டிக்கிட்டது வீணாப்போகலை! :)

      Delete
    3. பாருங்க....சீக்கிரமே நம்ம ஸ்டீல் ரேஞ்சுக்குப் பேச்சு வரவும் போகுது !!

      Delete
    4. //// நம்ம ஸ்டீல் ரேஞ்சுக்குப் பேச்சு வரவும் போகுது !!////

      ஆத்தா... கருமாரி... அப்படி ஏதும் ஆகிடாம அந்தப் புள்ளைய நீதான் காப்பாத்தணும்! :D

      Delete
  72. நானும் சிப்பாய் தான் ....

    எப்பொழுதுமே நமக்கு தெரிந்த நாயகர்களின் தெரியாத முன் வரலாறு கதைகள் சுவராஸ்யமாகவே அமையும் ..உதாரணமாக டெக்ஸ் வில்லர் எவ்வாறு நவஜோ தலைவரானார் ... மனைவி செவ்விந்திய பெண்ணாக அமைந்தது என்பது ..லார்கோ சைமன் கூட்டணி எவ்வாறு இணைந்தது போன்றவை சுவை மிக்க பகுதிகள் ..( விதிவிலக்கு..நம்ம பதிமூன்று கதாபாத்திரங களின் முன் வரலாற்று கதைகள் ..ரொம்பவே சோதித்த ஒன்று ...எனக்கு மட்டுமாவது..)
    அதை போலவே இந்த நானும் சிப்பாய்தான் ஸ்கூபி ரூபியின் அறிமுக வரலாறு ..மிதமான நகைச்சுவை போக்கில் சுவராஸ்யமாக செல்வதுடன் ஸ்கூபி ரூபி குதிரையின் அனுபவ விவாதங்களை கேட்டு குதிரையே மயக்கம் அடைவதும் .எதிர் படையா நமது படையா என தெரியாமலே மூன்று நாட்களாக போரிடுவது....சீட்டு குலுக்கலில் எந்த பெயருமே இல்லாமல் உயரதிகாரி கிழித்து எறிவதும் என பல இடங்கள் எல்லாம் வாய்விட்டு சிரிக்கவும் வைத்தன...முடிவுமே அவ்வாறே...கண்டிப்பாக ஏமாற்றம் இல்லாத பட்டாளம் ...தாராளமாக இவர்களை தொடர்ந்து களம் இறக்குங்கள் சார் ..


    சிங்கத்தின் சிறு வயதில் நீங்கள் கூறிய அந்த திகில் லைப்ர்ரி இதழை சிறுவயதில் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் கதைகள் கொஞ்சம் கொஞ்சம் தானே உள்ளது .வாங்கலாமா வேண்டாமா என்று தடுமாறி நின்றது இங்கே படித்தவுடன் நினைவில் வுருகிறது..பிறகு அந்த வயதில் மட்டுமல்ல இன்றும் கூட அரை நிஜார் காலர் இல்லா பனியனுடன் தாங்கள் இருந்தாலும் சூப்பரா தான் இருப்பீங்க சார் ..:-)


    ReplyDelete
    Replies
    1. நினைவில் வருகிறது ...என படிக்கவும் .
      (கோவை ஸ்டில் க்ளா என நினைப்பா என்று திட்ட வேண்டாம் ..ஹீஹீ...)..p

      Delete
    2. Paranitharan K : //இன்றும் கூட அரை நிஜார் காலர் இல்லா பனியனுடன் தாங்கள் இருந்தாலும் சூப்பரா தான் இருப்பீங்க//

      என்னெ வச்சு காமெடி..கீமடி பண்ணலியே ?

      Delete
  73. அடுத்து வெளிவரும் டெக்ஸ் வில்லரின் அராஜகம் அன்லிமிடெட் இதழை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்..காரணம் நமது டெக்ஸ் ஒற்றைக்கண் ..தாடியுடன் பழைய ஜெய்சங்கர் பட வில்லன் பாணியில் இருப்பது எதனால் என்பதை அறிய ஆவல் அதிகமாகிறது..:-)

    ( ஆமாம் ...அது டெக்ஸ் வில்லர் தானே சார் :-)

    ReplyDelete
  74. Paranitharan K : அது நம்மவரே தான் தலீவரே ! வித்தியாசமான ராப்பரும் காத்துள்ளது இந்த இதழுக்கு ! !

    ReplyDelete
  75. ட்யூராங்கோ அருமை சார்... நேற்று இரவு ஒரு பாகம் மட்டும் படிக்கலாம் என நினைத்து படிக்க ஆரம்பித்து, மூன்று பாகங்களை முடித்து விட்டே நிமிர்ந்தேன் (ஜூனியர் 11 மணி ஆகியும் தூங்க மறுத்ததால் 4 ஆம் பாகம் இன்று)


    //லாங் ஜான் சில்வர் ; பராகுடா ; ப்ரூஸ் ஹாக்கர்//

    பாராகுடா தொடரையும் இதே போல ஓரே (குண்டு) புத்தகமாக வெளியிடலாம் ... அருமையான விருந்தாக அமையும் ...

    ReplyDelete
    Replies
    1. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : அட்டவணை அறிவிக்கப்பட்ட சமயம் "புது வரவுக்கு 4 கதைகளா ?" என நண்பர்களுள் சிலர் ஆச்சர்யப்பட்டிருந்தது நினைவுள்ளது ! ஆனால் இந்த ரகக் கதைகளை ஒருசேரப் படிக்கும் அனுபவம் நிச்சயமாய் விறு விறுப்பாய் இருக்குமென்று மனதுக்குப்பட்டது !

      Delete
  76. ஆவியின் ஆடுகளம் மற்றும் நானும் சிப்பாய் தான் இரண்டையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன் ... அற்புதம் ....

    பார்சல் இருந்த சைஸ் பார்த்து இவ்ளோ பெரிய புக் ஆஹ் என்று ஆச்சர்யப்பட்டேன்....:)

    Calendar gift simple superb ...

    Thx a ton Edi sir :)

    ReplyDelete
    Replies
    1. saravanan v : சத்தமின்றி என்ட்ரி ஆகியிருப்பினும், பாராட்டுக்கள் பெற்றுவரும் ப்ளூ கோட் பட்டாளத்தை எண்ணி சந்தோசம் கொள்கிறேன் !! Feels good !

      Delete
  77. சார்,
    ட்யுராங்கோ அட்டைப்படம் வெகு அழகு.
    இதுப் போன்ற நீண்ட தொடர்களை ஜவ்வாக இழுக்காமல், அதிரடியாக நான்கு ஆல்பங்களை இணைத்து ஒரே இதழாக வெளியிட்டது, நல்லதொரு தொடக்கம். அந்த பாணிக்கு பிள்ளையார் சுழியிட்ட 'ட்யுராங்கோ' வின் அடுத்த தொடர் ஆல்பங்களும் இதே பாணியில் வரவேண்டும்.

    இந்த இதழின் ஹை-லைட் டே அந்த ஹார்ட் பவுண்ட் தான். அதில்லாமல் வந்திருந்தால் ஒரு குறையாகவே இருந்திருக்கும். சமயோஜிதமாக கடைசி நேரத்தில் இதழை ஹார்ட் பவுண்ட் டாக மாற்றியமைக்கு நன்றி. பிரிண்டிங்கின் அதகளமும், சித்திரங்கள் செய்யும் மாயாஜாலமும், வர்ணக்கலவைகளின் வசீகரமும் சேர்ந்து, இதை ஒரு மறக்க முடியாத இதழாக மாற்றிவிட்டது. சும்மா சொல்லக் கூடாது அந்த ஜெர்மன் 'மை' நன்றாகவே வேலை செய்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. MH Mohideen : சார்...17 ஆல்பங்களே கொண்டதெனும் போது ட்யுராங்கோ தொடரானதை நீளமானதொன்றாகப் பார்க்கத் தோன்றவில்லை ! தற்போதைய நமது தொகுப்பின் பாணியில் 4 இதழ்களைப் போட்டு வைத்தால் - தொடரை நிறைவு செய்திருப்போம் ! In some ways இதுவொரு துவக்கப் புள்ளியே !

      Delete
    2. @ ALL : இன்னொரு கொசுறுச் சேதியும் கூட ! 2017-ன் திட்டமிடலில் இன்னமுமொரு வித்தியாசமான கௌபாய் தொடரையும் இணைத்திட எண்ணியிருந்தேன் ! ஆனால் ஒவ்வொரு சந்தாவிலும் 10 இதழ்கள் மட்டுமே சாத்தியம் என்று எண்ணிக்கையை trim செய்ய அவசியமான பொழுது அவரை ஓசையின்றிப் பின்னணிக்கு கடத்தி விட்டேன் !

      காத்திருக்கிறார் அவரும், இது போலொரு அழகான வாய்ப்பை எதிர்நோக்கி !

      Delete
    3. ///காத்திருக்கிறார் அவரும், இது போலொரு அழகான வாய்ப்பை எதிர்நோக்கி !///

      காத்திருப்போம் நாங்களும் - அந்த வித்தியாசமான கெளபாய் தொடரை எதிர்நோக்கி!

      Delete
    4. /// இன்னொரு கொசுறுச் சேதியும் கூட ! 2017-ன் திட்டமிடலில் இன்னமுமொரு வித்தியாசமான கௌபாய் தொடரையும் இணைத்திட எண்ணியிருந்தேன் ! ஆனால் ஒவ்வொரு சந்தாவிலும் 10 இதழ்கள் மட்டுமே சாத்தியம் என்று எண்ணிக்கையை trim செய்ய அவசியமான பொழுது அவரை ஓசையின்றிப் பின்னணிக்கு கடத்தி விட்டேன் ! ///

      எப்படியும் இந்த வருடத்தில் அறிவிக்க வேண்டிய இரத்தக்கோட்டை+தோட்டா தலைநகரம் வண்ண மறுபதிப்பு பாக்கி இருக்கிறதல்லவா? அதனுடன் சேர்த்து இந்த புது கௌபாயையும் அறிவித்து விடலாமே சார் ஏதாவது ஒரு ஷ்பெசல் தருணத்தில்??

      Delete
  78. Dear Sir, one confirmation. Have you shipped outstation couriers like Hyderabad also on the same day (30th Dec)? As such there are delays in the registered post.

    ReplyDelete
    Replies
    1. Rajmohan : Yes ! ஆனால் இங்கு தபால் நிலையத்தில் இப்போதெல்லாம் பகுதி நேர பணியாளர்களே உள்ளனர் ; ஒரு நாளுக்கு குறிப்பிட்ட அளவு பார்சல்களையே புக்கிங் செய்கிறார்கள் ! So முதல் நாள் / மறு நாள் என்று தான் புக்கிங் செய்கிறார்கள் !

      Delete
  79. Yet to read jan releases
    Will comment soon Sir!
    Infact books got delivered only today!

    ReplyDelete
  80. சனிக் கிழமை சென்னை வரலாம்னு இருக்கேன் 624.625.ல்
    யார் யார் இருப்பீங்க

    ReplyDelete
    Replies
    1. @ Anandappane karaikal

      இத்தாலி விஜய் தலைமையில் அடியேன் ஆஜராவேன்.!

      Delete
    2. @ Anandappane karaikal

      'மாத்தியோசி' மாயாவியின் தலைமையில் அடியேன் ஆஜராவேன்.!

      Delete
    3. இத்தாலி விஜய் தலைமையில் அடியேன் ஆஜராவேன்.

      'மாத்தியோசி' மாயாவியின் தலைமையில் அடியேன் ஆஜராவேன்.!

      - ---------------- -

      ராஜகுமாரன் படத்துல, வடிவேலுவின் தங்கை மணிமேகலைய பெண்பாத்து பயந்துபோன, தலைவர் கவுண்டரும் செந்திலும் தன்னை மட்டம்தட்டியும் அடுத்தவரை புகழ்ந்து பேசியும் கல்யாணத்துல இருந்து தப்பிக்க பார்ப்பாங்களே,,

      ஏனோ அந்த சீன் கண்ணு முன்னால வந்து போகுது..!! :-)

      Delete
  81. we are waiting!!!
    any update on Chennai book fair 2017...

    ReplyDelete
  82. நானும் சிப்பாய்தான் :-

    ஒரு வருட இடைவெளிக்குப்பின் ஸ்கூபி ரூபியை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்தத் தொடரில் முதல் கதையாக வந்திருக்க வேண்டியது இதுதானோ? பல இடங்களில் வசனங்கள் விலாவில் கிச்சுகிச்சு மூட்டுகின்றன.
    குறிப்பாக 16 ஆம் பக்கத்தில் முதல் கட்டத்தில் உள்ள இரண்டாவது வசனத்தை இரண்டு முறை படித்து மூன்று அர்த்தம் புரியவும் நான்கு நிமிடங்கள் சிரித்துக்கொண்டிருந்தேன்.
    மூன்று நாட்கள் இடைவிடாத பீரங்கித் தாக்குதல் முடிவுக்கு வரும் விதம் சற்றும் எதிர்பாராத செம்ம காமெடி .! ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதில் மிஸ் போர்க்கி பெரும் பங்கு வகிக்கிறாள். (எண்ட அம்மே :-)) முதலில் ரூபி அப்புறம் அலெக்ஸ், பின்னர் விருப்பமில்லாமல் சேர்ந்த ஸ்கூபியையும் பட்டாளமே பெஸ்ட் என்ற முடிவுக்கு கொண்டுவருகிறாள்.
    பல இடங்களில் வசனங்கள் செம்ம ரகளையாக ரசிக்கும்படி இருக்கின்றன. கலரிங் கண்களுக்கு இதமாக இருக்கிறது.
    நானும் சிப்பாய்தான், ப்ளூகோட்ஸின் இடத்தை நிரந்தரமாக வருடாந்திர பட்டியலில் இடம்பெறச்செய்யும் என்று நம்புகிறேன்.!!

    ReplyDelete
    Replies
    1. ///ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதில் மிஸ் போர்க்கி பெரும் பங்கு வகிக்கிறாள். (எண்ட அம்மே :-)) முதலில் ரூபி அப்புறம் அலெக்ஸ், பின்னர் விருப்பமில்லாமல் சேர்ந்த ஸ்கூபியையும் பட்டாளமே பெஸ்ட் என்ற முடிவுக்கு கொண்டுவருகிறாள். ///

      'எண்ட அம்மே'னு ஸ்கூபி அலறும்போது வெடிச் சிரிப்பை அடக்கமுடியவில்லை!

      என்னாவொரு ஹ்யூமர் சென்ஸ்!!

      Delete
    2. ////நானும் சிப்பாய்தான், ப்ளூகோட்ஸின் இடத்தை நிரந்தரமாக வருடாந்திர பட்டியலில் இடம்பெறச்செய்யும் என்று நம்புகிறேன்.!! ///

      நானும் அப்படியே!

      Delete
    3. ////குறிப்பாக 16 ஆம் பக்கத்தில் முதல் கட்டத்தில் உள்ள இரண்டாவது வசனத்தை இரண்டு முறை படித்து மூன்று அர்த்தம் புரியவும் நான்கு நிமிடங்கள் சிரித்துக்கொண்டிருந்தேன்///

      :P

      U naughty!

      Delete
    4. @ FRIENDS : ப்ளூகோட் பட்டாளத்தின் தொடரில் முதல் கதையாகப் படைப்பாளிகளே இதனைத் தயாரித்திருக்கவில்லை ; "சிறைக்குள் சடுகுடு " தான் ஆல்பம் # 1 .... நடுவாக்கில் இந்த ஜோடியின் பிளாஷ்பேக்கை சுவாரஸ்யமாய்ச் சொல்லுவோமே என கதாசிரியர் நினைத்திருப்பார் போலும் !

      மொழிபெயர்ப்பினில் ஒரு ஜாலியான நடை தெரிந்திட காரணம் உண்டென்று சொல்லுவேன் ! இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளிரவும், தூங்கப் போகும் முன்பாய் கார்ட்டூன் கதைகளின் மொழிபெயர்ப்புப் பணிகளை செய்வதையே ஒரு routine ஆகக் கொண்டுவந்துள்ளேன் ! முன்னரெல்லாம் , சிக்குகின்ற நேரத்தில், சிக்குகின்ற பணிகளை செய்வது வாடிக்கை ; but கடந்த 2 மாதங்களாகவே இரவுகள் கிச்சு கிச்சு கதை மாந்தர்களுக்கு மட்டுமே ! நிசப்தத்தின் மத்தியில், பிளிறும் செலபோன் நொச்சுக்களின்றி, இந்த ஜாலியான பணிகளை செய்யும் போது, எழுத்துக்களில் உற்சாகம் ஒரு மிடறு தூக்கலாய் அமைவது போல் தோன்றியது ! மதியிலா மந்திரியாரும், லக்கி லூக்கும், சுட்டிப் புயலும் இதற்கு சாட்சி சொல்வார்கள் - தொடரும் மாதங்களில் !

      Delete
  83. ****** நானும் சிப்பாய்தான் *****

    ப்ளூகோட்ஸ் ஆசாமிகளிடமிருந்து இப்படியொரு ரகளையான காமெடி மேளாவை எதிர்பார்க்கவில்லை! அள்ளி வீசப்பட்டிருக்கும் யதார்த்தமான காமெடி வசனங்கள் நிறைய நிறைய சிரிக்க வைக்கிறது!
    இதுவரை வந்த ப்ளூகோட் பட்டாளக் கதைகளில் இதுவே பெஸ்ட் என்பேன்!

    ஸ்கூபி-ரூபி ஆகியோரின் பின்புலம், அவர்களுக்குள்ளான அறிமுகம், பட்டாளத்தில் சேர வேண்டிய நிர்பந்தம், ரூபி சார்ஜண்ட் ஆகவும்; ஸ்கூபி கார்ப்போரலாகவும் ஆனதன் பின்புலம் என்று - நியாயப்படி இதுவே நமக்கு முதல் இதழாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்! அப்படிச் செய்திருந்தால் இந்த காமெடி இரட்டையர் ஆரம்பத்திலேயே நம் எல்லோர் மனதிலும் கேள்விகளுக்கு இடமின்றி நங்கூரமிட்டிருப்பர்!

    முழுக்க முழுக்க நிறைவான ஒரு இதழ்!

    என்னுடைய ரேட்டிங்: 10/10

    ReplyDelete
  84. இருநாட்கள் தாமதத்திற்குப் பின்பாய் கூரியர் கிடைத்தது... காலண்டர் அட்டகாசமாய் இருந்தது... வாழ்த்துக்கள் சார்...

    முதலில் படித்தது ஆவியின் ஆடுகளமே.

    கதை வெகு சுமார் ரகம். பழைய தலைவாங்கிக் குரங்கையும் நினைவுபடுத்தியது. (...ஆனால் அதிலிருந்த திரில் இதில் இல்லை).

    ரேஞ்சர்கள் இருவரும் குற்றம் புரிந்தவர்களை தண்டிக்கவும் இல்லை... நீதியின் பிடியில் ஒப்படைக்கவும் இல்லை. (...ஒரு வேளை விடுதிக் கட்டணம் செலுத்தாமல் இருப்பதற்காக இருக்குமோ?)

    டெக்ஸ்வில்லர் - 2017 சவசவவென்று ஆரம்பித்திருக்கிறது.... பார்ப்போம்.

    கிட்ஆர்டினின் புளுகோட் விமர்சனம் படிக்க ஆவல் கொள்ள வைத்திருக்கிறது... படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  85. ஆவியின் ஆடுகளம்

    எனக்கு பிடித்திருக்கிறது. டெக்ஸ் கதைகள் பெரும்பாலும் கதை ஆரம்பித்து சில பக்கங்களிலேயே வில்லன் இவர்தாம்பா, இதான்பா ரீஸன், வில்லனுக்கு இவ்ளோ கும்பல் இருக்குபா, நம்ம ஹீரோ டெக்ஸ் அவர் குழுவோடு இப்படிதாம்பா செய்யப்போறார் என்று தெளிவாக சொல்லிவிட்டு, கதையை எக்ஸ்பிரஸ் வேகத்தில் டமால் டுமில், கும் சத் என்று தடதடவென்று கொண்டு செல்வார்கள். அதே எதிர்பார்ப்போடு அல்லது அதே ரசனையோடு இக்கதையை வாசகர்கள் அனுகினால்...ஸாரி இந்த ஆவி அவர்களுக்கான ஆடுகளம் இல்லை !

    ஆனால் ஒரு வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லரில் டெக்ஸை ரசிக்கவேண்டும் என்ற என்னத்தோடு இக்கதையை படித்தால் ஒரு அற்பதமான அனுபவத்தை ரசிக்கலாம். இதில் கும்பல் கும்பலாக போக்கிரிகளை முழுநேர வேலையாக போட்டுத்தள்ளும் வேலை டெக்ஸுக்கு கிடையாது. இதில் மிகக்குறைவான கேரக்டர்களை கொண்டு தெளிவான சஸ்பென்ஸ் த்ரில்லரை சுவராஸ்யமாக கொடுத்திருக்கிறார்கள். யார் கொலையாளி என்பதை சற்றே யோசித்தால் கதையோட்டத்தில் கண்டுபிடித்து விடலாம்தான். ஆனால் அதை கடைசிவரை விருவிருப்பாக நகர்த்தி சென்றதுதான் ஸ்பெஷல்.

    ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு துப்பறியும் கதையை படித்த அனுபவம் நிச்சயம் ‘ஆவியின் ஆடுகளம்’ கொடுத்தது எனலாம்.

    ’ஆவியின் ஆடுகளம்’ என்ற தலைப்புக்கு பதிலாக

    ”ஒரு மழை இரவுக் கொலைகள்” அல்லது

    “பிசாசு விடுதி” என்றிருந்திருந்தால் இன்னும் டெர்ரராக இருந்திருக்கும் என்பது எனது கருத்து!

    ReplyDelete
  86. அன்பு ஆசிரியரே....!!
    தவறுதலாக இம்மாத இதழ்கள் திருப்பத்தூர்/பெங்களூர் என இரண்டு விலாசத்திற்கும் வந்துள்ளன.
    சென்னையில் தங்களை சந்திக்கும் பொழுது ஒன்றை ஒப்படைத்துவிடுகிறேன்.
    (கொசுறு செய்தி:காலண்டரை லவட்டுமாறு என் வீட்டார் வேண்டுகிறார்கள்.தாங்கள் அனுமதித்தால் காலண்டரை வைத்துக்கொள்வேன்)

    ReplyDelete
  87. நானும் சிப்பாய் தான் ....

    எப்பொழுதுமே நமக்கு தெரிந்த நாயகர்களின் தெரியாத முன் வரலாறு கதைகள் சுவராஸ்யமாகவே அமையும் ..உதாரணமாக டெக்ஸ் வில்லர் எவ்வாறு நவஜோ தலைவரானார் ... மனைவி செவ்விந்திய பெண்ணாக அமைந்தது என்பது ..லார்கோ சைமன் கூட்டணி எவ்வாறு இணைந்தது போன்றவை சுவை மிக்க பகுதிகள் ..( விதிவிலக்கு..நம்ம பதிமூன்று கதாபாத்திரங களின் முன் வரலாற்று கதைகள் ..ரொம்பவே சோதித்த ஒன்று ...எனக்கு மட்டுமாவது..)
    அதை போலவே இந்த நானும் சிப்பாய்தான் ஸ்கூபி ரூபியின் அறிமுக வரலாறு ..மிதமான நகைச்சுவை போக்கில் சுவராஸ்யமாக செல்வதுடன் ஸ்கூபி ரூபி குதிரையின் அனுபவ விவாதங்களை கேட்டு குதிரையே மயக்கம் அடைவதும் .எதிர் படையா நமது படையா என தெரியாமலே மூன்று நாட்களாக போரிடுவது....சீட்டு குலுக்கலில் எந்த பெயருமே இல்லாமல் உயரதிகாரி கிழித்து எறிவதும் என பல இடங்கள் எல்லாம் வாய்விட்டு சிரிக்கவும் வைத்தன...முடிவுமே அவ்வாறே...கண்டிப்பாக ஏமாற்றம் இல்லாத பட்டாளம் ...தாராளமாக இவர்களை தொடர்ந்து களம் இறக்குங்கள் சார் ..


    சிங்கத்தின் சிறு வயதில் நீங்கள் கூறிய அந்த திகில் லைப்ர்ரி இதழை சிறுவயதில் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் கதைகள் கொஞ்சம் கொஞ்சம் தானே உள்ளது .வாங்கலாமா வேண்டாமா என்று தடுமாறி நின்றது இங்கே படித்தவுடன் நினைவில் வுருகிறது..பிறகு அந்த வயதில் மட்டுமல்ல இன்றும் கூட அரை நிஜார் காலர் இல்லா பனியனுடன் தாங்கள் இருந்தாலும் சூப்பரா தான் இருப்பீங்க சார் ..:-)


    ReplyDelete
  88. ஆசிரியர் அவர்களுக்கு இன்னும் அகவை 50 ஆகவில்லையா..??!!
    இன்னும் ஒரு வாரம் ஆகும் ஜனவரி இதழ்கள் கைகளில் கிடைக்க.. நான் இருப்பது வெகு தொலைவு...உங்கள் விமர்சனங்கள் எனக்கு எனர்ஜி...

    ReplyDelete