Powered By Blogger

Sunday, January 15, 2017

"குண்டு" நல்லது !

நண்பர்களே,

வணக்கம். ரொம்ப நாளாகி விட்டது ஒரு பதிவுக்கு பின்னூட்ட எண்ணிக்கை ஒரே நாளில்  300-ஐத் தாண்டி !! இதுவே இரத்தப் படலம் கொணரும் உணர்வுகளுக்கொரு இண்டிகேட்டர் என்று கூட எடுத்துக் கொள்ளலாம் போலும் !! So நமது சமீபத்து சம்பிரதாயப்படி இதோ ஆஜராகிறேன் -ஒரு உப்மாப் பதிவுடன்....சாரி...சாரி..உப பதிவுடன் !!

நமக்குப் பரிச்சயமான இந்தப் XIII தொடர் போல் - பதினாலு (XIV) ; பதினைந்து (XV) என்று  வேறு தொடர்கள் ஏதேனும், இதே போல ஒரே knot-ஐ சுமந்து கொண்டு இத்தனை நீளமாய் பயணமாகியுள்ளனவா ? என்ற curiosity எனக்குள் அவ்வப்போது எழுந்திடுவதுண்டு ! எனது அந்தத் தேடல்களில் - நெடும்பயணமாய்த் தொடரும்  சில பல sci-fi கதைகள் சிக்கியுள்ளன தான் ; ஆனால் அந்த எதிர்காலத்து உலகின் கதை  ரசனைக்குள் நாம் உட்புக இப்போது தான் சிறிது சிறிதாகத் தயாராகி வருகிறோமெனும் பொழுது உடனடியாய் ஒரு  'தொபுக்கடீர்' டைவ் சரிப்படாது என்று பட்டது ! 

அதே சமயம் ஒரு வித்தியாசமான  கதைத் தொடரானது கண்ணில் படவே செய்தது ! 1250 பக்கங்கள் கொண்ட ஒரே மெகா-மெகா-மெகா கதையது ! அசாத்திய சித்திரங்கள் ; இதுவரையிலும் நாம் சுற்றி வந்திருக்கா ஒரு முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் என்று செல்லும் இந்தத் தொடரை தூரத்திலிருந்து ரசிப்பதோடு ஒதுங்கியிருந்தேன் ! ஆனால் இப்போது சிறுகச் சிறுக நம்மை ஆட்கொண்டு வரும் இந்த "குண்டு" புக் காதலானது எனது சிந்தனைகளையும் மெல்ல மெல்ல மாற்றியமைத்திடும் போல்படுகிறது !! "இரத்தப் படலத்தின் பக்க நீள ரெக்கார்டை முறியடிக்க வேறு கதைகள் உண்டா ?" என்று அவ்வப்போது என்னிடம் வினவும் நண்பர்களுக்கு இந்த ஆல்பம் குறித்த சேதியானது  ஒரு 1250 வாட்ஸ் பல்ப் பிரகாசத்தை நல்கிடக்கூடும் ! இந்த வாரம் பிறந்ததும் முதல் காரியமாய் அந்தப் பக்கங்களை முழுமையாய் வரவழைத்து - நமது மொழிபெயர்ப்பாளரிடம் ஒப்படைத்து ஒரு அபிப்பிராயம் கோர வேண்டியது தான் ! கதை நமக்கு ஏற்றதொன்றாய் அமைந்திடும் பட்சத்தில்...."உலகத் தொலைகாட்சி வரலாற்றில் முதன்முறையாக.........!!!" என்ற அந்தக் கட்டைக் குரல் மாடுலேஷனை என்றைக்கேனும் ஒருநாள்  ஒரு ஆந்தைக்கண்ணன் இரவல் வாங்கிட நேர்ந்தால் ஆச்சர்யம் வேண்டாமே ?! Bye now all !! Enjoy the evening & the week ahead !! See you around !

97 comments:

  1. குண்டு .நல்லது.அப்படியே படிப்பேன்

    ReplyDelete
  2. குண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்தூதூதூ..!

    ReplyDelete
  3. ///1250 பக்கங்கள் கொண்ட ஒரே மெகா-மெகா-மெகா கதையது ! அசாத்திய சித்திரங்கள் ; இதுவரையிலும் நாம் சுற்றி வந்திருக்கா ஒரு முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் ///

    இந்த குண்டு ஷ்பெசலை அவசரமில்லாமல் பொறுமையாகத்தான் கையாளவேண்டும் சார்.! பதறாத காரியம் சிதறாது என்பார்கள். எனவே எந்த பதற்றமும் கொள்ளாமல் பொறுமையாக யோசித்து தீர்க்கமாக முடிவெடுத்து இந்த தொடரை ஒரே செட்டாக வரும் ஜனவரி 2018 CBF க்கு வெளியிட்டுவிடலாம் சார்.
    அவசரப்பட்டு அதற்கு முன்பாக வேண்டாம் சார். :-)

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : 2018 ஜனவரியே இதற்கு ரொம்பச் சீக்கிரம் என்பேன் நண்பரே !! இதன் பரிசீலனையே அவகாசம் பிடிக்கும் !! So "நிதானமாய்-வேகமாய்" செல்வோம் !!!!!

      Delete
    2. சார். .! நான் சீக்கிரம் வேண்டுமென்றுதான் ஜனவரி 18ஐக் குறிப்பிட்டேன்..!! :-)

      Delete
    3. //இந்த தொடரை ஒரே செட்டாக வரும் ஜனவரி 2018 CBF க்கு வெளியிட்டுவிடலாம் சார்.
      அவசரப்பட்டு அதற்கு முன்பாக வேண்டாம் சார். :-)//
      +1

      Delete
  4. Intha mega comics images post pannunga editor sir

    ReplyDelete
    Replies
    1. KID ORDINN : இப்போதைக்கு too early ! கதைப் பரிசீலனை முடிவுற்று, இது நமக்கு ரசிக்குமொரு தொடராய் அமையுமென்ற நம்பிக்கை பிறக்கும் போது திரை விலகட்டுமே ?

      Delete
  5. இதை இதை இதை தானே எதிர்பார்த்தாய் பாலகுமாராஆஆஆஆஆஆஆஆஆஆ.........

    ReplyDelete
  6. அப்புறமா ஒரே ஒரு சின்ன டவுட்டு சார் ..இது எதிர் கால .....கிராபிக் களம் இல்லாத இதழ் தானே சார் ....

    ReplyDelete
  7. குண்டுக்கு வந்துட்டீங்க ...ரொம்ப ரொம்ப சந்தோசம் சார் ..ட்ரையல் பாத்தேன் ..நமக்கு தப்பி தவறி செட் ஆகலை (ஆகாது ...ஆகாது..)அப்படின்னு சொல்லிட்டீங்கன்னா கமர்ஷியல் கதம்ப குண்டாவது போடுங்க ..

    எந்த குண்டா இருந்தாலும் அவசரம் எல்லாம் பட வேண்டாம் சார் ...2017 கோடை மலராகவோ ..அல்லது 2017 தீபாவளி மலராகவோ கொண்டு வந்தால் போதுமானது ...

    வெரி அர்ஜன்ட் இல்லை சார் ..:-)

    ReplyDelete
    Replies
    1. //எந்த குண்டா இருந்தாலும் அவசரம் எல்லாம் பட வேண்டாம் சார் ...2017 கோடை மலராகவோ ..அல்லது 2017 தீபாவளி மலராகவோ கொண்டு வந்தால் போதுமானது .//

      +1.. ama ama

      Delete
  8. எனக்கு நேத்தே அந்த காமிக்ஸ் வேனும்...

    ReplyDelete
  9. அருமை சார் அருமை,கை தட்டும் படங்கள் நூறு.மிக்க மகிழ்ச்சி, கொண்டாடும் தருணம் இது.

    ReplyDelete
  10. @Editor sir:
    Superrrrrrrrrrrr sir :-):-):-)
    தூள் கிளப்பிட்டீங்க....ஹுர்ர்ர்ர்ர்ர்ரே :-):-):-)
    இந்த குண்டு புக் 'இரத்தப்படலம்' ஒரே புக்காக வருவதற்கு ஒரு முன்னோடியாக அமையட்டும்!!!

    ReplyDelete
  11. குண்டு உடம்புக்கு தான் ஆகாது புத்தகம் எவ்வளவு குண்டாக வேனும்னாலும் இருக்கலாம்
    மின்னும் மரணம்....இரத்த படலம் இரண்டையும் பக்கங்களில் முறியடித்தால் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  12. இப்பாலிக்கா 3 set பார்சல்

    ReplyDelete
  13. அப்படியே அந்த tex 554 மறந்து போய் வீ டாதீர்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. //அப்படியே அந்த tex 554 மறந்து போய் வீ டாதீர்கள் சார்.//
      +1

      Delete
  14. 1250÷50=25 தோராயமாக 25 பாகங்கள் அடங்கிய தொடராஆஆஆஆஆஆஆஆஆஆஆ....

    அம்மாடி...ஆத்தாடி...

    இதுவும் ஒரே புத்தகமா போடுறமா சார் !!!?

    ReplyDelete
    Replies
    1. 26 பாகங்கள் வரும்போல இருக்கு. ரெண்டா பிரிச்சி ஒரே செட்டா ஜனவரி 2018 CBFக்கு போ(கே)ட்டுடலாமான்னு யோசனை பண்ணிட்டு இருக்கோம். .!!

      Delete
    2. நாக்கில் சப்புக் கொட்டும் படங்கள் நூறு.

      Delete
  15. சார் ஒரு கதம்ப குண்டு போட்ட ரொம்ப நல்லா இருக்கும் கொஞ்சம் consider சார்

    ReplyDelete
  16. சார் ஒரு கதம்ப குண்டு போட consider பண்நுங்க please

    ReplyDelete
  17. குண்டு இதழ் . நினைத்தே இனிக்கிறதே . இத இதைத்தான் எதிர்பார்த்தேன் . காத்திருக்க நான் தயார் சார்.

    ReplyDelete
    Replies
    1. சார், நீங்களும் என்னைப் போல் வெளிநாட்டில் இருந்து சந்தாப் பணம் அனுப்பும் நண்பர் என்பதால், எப்படி அனுப்பினீர்கள் என்று ஒரு முறை சொல்கிறீர்களா? PayPal இல் Email மூலம் இந்தியாவுக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்ப முடியாது (Bank Transfer மட்டுமே சாத்தியம்).
      WesternUnion இல் இரண்டு வழிகளில் அனுப்பலாம்,
      1. Cash at Agent Location - இதற்க்கு Firstname, Lastname மற்றும் முழு முகவரி வேண்டும். நாம் அனுப்பினால் அங்கே சிவகாசிக் கிளையில் பணம் கொடுப்பார்கள்.
      2. Bank Transfer - இது PayPal போலவே தான். Bank Account தகவல் முழுதும் வேண்டும்.

      நீங்கள் என்ன செய்தீர்கள்?

      Delete
    2. Prunthaban : இந்தியாவுக்கு PAYPAL மூலம் பணம் அனுப்ப ஏன் இயலாது சார் ?

      நமது அயல்நாட்டு வாடிக்கையாளர்களின் பாதிப் பேர் பயன்படுத்துவது PAYPAL தான் ! ஒரே நிமிடத்தில் உங்கள் கம்பியூட்டரிலிருந்து எங்கள் PAYPAL முகவரிக்கு பணம் அனுப்பிட முடியும் & ஐந்தாவது நிமிடமே எங்களுக்கு confirmation மின்னஞ்சலும் கிட்டிவிடும். ரொம்ப ரொம்பச் சுலபமாய் இந்தப் பரிவர்த்தனைகள் சாத்தியம் என்பதால் தான் ஆரம்பம் முதலே நான் அதை உங்களுக்குப் பரிந்துரை செய்து வருகிறேன் ! பணம் பெற்றிட உள்ளவரின் மின்னஞ்சல் முகவரி மட்டுமே தேவை இதற்கு !

      Delete
    3. நண்பரே, நான் western Union மூலமாக பணம் அனுப்பி விட்டு ஒரு மின்னஞ்சல் மூலமாக நமது எடிட்டரிடம் இலக்கத்தை தெரிவித்து விடுவேன். அதை எடிட்டர் பெற்றுக் கொண்டதும் உடனடியாக எனக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்து விடுவார். நான்எப்போதோ பணம் அனுப்பியது சார்.

      Delete
  18. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்...............

    ReplyDelete
  19. குண்டாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆதான் வேணும் சார்

    ReplyDelete
  20. 1200+ பக்கங்களா.. ஆர்வம் தாளவில்லை. சீக்கிரம் மேற்படி விவரங்களை வெளியிடுங்கள்.
    ஒரு சிறு கோரிக்கையும் இங்கே வைக்கிறேன். அடுத்த லக்கி கிளாசிக்ஸ் இந்த இரு கதைகளையும் வெளியிட consider பண்ணுங்களேன்:
    1. ஜேன் இருக்க பயமேன்.
    2. மனதில் உறுதி வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ///அடுத்த லக்கி கிளாசிக்ஸ் இந்த இரு கதைகளையும் வெளியிட consider பண்ணுங்களேன்:
      1. ஜேன் இருக்க பயமேன்.
      2. மனதில் உறுதி வேண்டும்.///


      ரெண்டுமே செம்ம கதைகள். வழக்கமான ஜேனின் கண்ணியமான சம்பாஷனைகளுடன் கலககலவென நகரும் ஜேன் இருக்க பயமேன் கதை. லக்கியும் ஜேனும் முதன்முதலில் சந்தித்துக்கொள்வது இக்கதையில்தான்.

      மனதில் உறுதி வேண்டும், ஒரு பிரின்ஸ் கதையின் போர்வையில் (கானகத்தில் கலவரம்) வந்த லக்கியின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்று. ஆனால் அப்போது முழுவண்ணத்தில் வரவில்லை. டால்டன்களுடன் மனநல மருத்துவர் ஒருவரும் கலந்துகட்டி அடிக்கும் லூட்டி சிரிச்சு மாளாது.
      நல்ல தேர்வுகள். (அஃப் கோர்ஸ் லக்கி , சிக்பில் எல்லாத்தையுமே நான் இப்படித்தான் சொல்வேன்.)

      என்னுடைய தேர்வுகள்

      மேடையில் ஒரு மன்மதன்
      பயங்கரப் பாலம்.

      Delete
    2. எனது தேர்வு
      மேடையில் ஒரு மன்மதன்
      மலையோடு மல்யுத்தம்

      Delete
    3. மலையோடு மல்யுத்தம் ஆர்டின் & டாக்புல் அதகள காமெடி செந்தில். லக்கி க்ளாசிக்ஸில் போடமுடியாதே? :-)

      Delete
    4. எனது தேர்வு:
      1. மனதில் உறுதி வேண்டும்.
      2. தாயில்லாமல் டால்டன் இல்லை.

      Delete
  21. pongal wishes.pl come out with Ratha padalam in 3volumes for readers like me .l have not read it.

    ReplyDelete
  22. மனதில் உள்ளதை ஒளியாமல் சொல்வதாயின் ..........
    உலக காமிக்ஸ் அரங்கில் முதல்முறையாக என்ற வெளிச்சத்தினை தவிர்த்து,
    உணர்வுவயப்பட்டு முடிவு எடுக்காமல் எளிய வாசகர்களையும் கவனத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டுகிறேன்......
    கடவுள் அருளால் விலை எத்தனையாயினும் என்னால் வாங்க முடியும் எனினும் வாங்க இயலாத –ஆனால் வாங்க விரும்ப கூடிய – வாசகர்களையும் கருத்தில் கொள்ளவும் ....
    மனதில் காமிக்ஸ் நேசம் இருப்பினும் தொகை குறித்து சஞ்சலம் அடையும் இவர்கள் குரல்கள் ஒலிப்பதேயில்லை....
    மீறி குரல் எழுப்பிய ஓரிருவர் ஓசைகளும் கடந்த ஆண்டுகளில் பதிவுகளில் அமுங்கி விட்டன.
    டைகர் கதையினை கருப்பு வெள்ளை , வண்ணம் என வெளியிட நேர்ந்தது இதே காரணங்களினால்தான் என்பதை யாரும் மறக்க இயலாது.....
    புதிய கதை -1250 – பக்கங்கள் என்பது பேரானந்தம் ஏற்படுத்திய போதிலும் அதனை பல பாகங்களாக பிரித்து –அது 2019-ம் ஆண்டில் வருமாயினும்- ஆறு மாதங்களாக வருமாறும் –இயலுமாயின் ரெகுலர் சந்தாவில் வருமாறும் – செய்யவும் ....
    அன்பு நண்பரும் மனதிற்கு நெருக்கமானவரும் கிட் ஆர்ட்டின் கண்ணன் ரத்த படலம் வண்ண இதழின் விலையினை வீட்டிற்கு தெரியாமல் செய்ய வழிவகை செய்ய போன பதிவில் சொன்னபோது அது சங்கடம் அளித்தது .
    வீட்டில் உள்ளோரின் குறிப்பாக துணைவியரின் மனக்கசப்புக்கு ஆளாகாதவண்ணம் விலைகள்,இதழ்கள் சீராக இருக்க வகை செய்யவும்....
    எங்கள் அன்புக்குரிய எடிட்டர் ஆகிய தாங்கள் எங்கள் எல்லோரை காட்டிலும் அதி தீவிர காமிக்ஸ் ரசிகர் என்பது ஊரறிந்த உண்மை ...
    உங்கள் பலம் அதுவே.......
    உங்கள் பலவீனமும் அதுவே......
    சிங்கத்தின் சிறுவயதில் தொடர்ந்து படிப்போர்க்கு உங்களின் அதீத உற்சாகம் சில சமயங்களில் உங்களை இடற வைத்தது நன்கு புரியும்...
    ரெகுலர் சந்தாவிலும் ஆரோக்கியமான மாற்றங்கள்...
    டெக்ஸ் ரெகுலர் சந்தா
    கார்ட்டூன் ரெகுலர் சந்தா
    மறுபதிப்புகளுக்கு சந்தா...
    இவ்வருடம் புதிதாக E சந்தா
    தவிர அட்டகாசமான க்ளாசிக்ஸ் சந்தா....
    மீண்டும் இவ்வருடமே ரத்த கோட்டை வண்ண மறுபதிப்பு....
    ரத்த படலத்துக்கான பூர்வாங்க முன்பதிவு கோரல்கள்....
    500-ரூபாய்க்கு மேல் விலை வரும் காமிக்ஸ்கள் பற்றி நிதானமாக செயல்படவும் சார்..
    இது என் வேண்டுகோளேயன்றி வேறெதுவும் இல்லை.........
    இதில் ஒருவகையில் புதிது எதுவும் இல்லை .....ஏற்கனவே பல சூழ்நிலைகளில் சொல்லப்பட்டதுதான்......
    நமது காமிக்ஸ்-ன் ஆரோக்கியமான போக்கு பற்றி சிறிது கவலையுடன் எழுதப்பட்டது...

    சராசரி வாசகன் ஒரு வருடத்திற்கு நமது காமிக்ஸ்-க்கு என செலவழிக்கும் தொகை பற்றிய உச்ச வரம்பு குறித்து உங்களுக்கு ஒரு கண்ணோட்டம் ஏற்பட வேண்டுவது அவசியம் என தோன்றுகிறது சார்......

    சாலைத்தடைகளும் நல்லவையே!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ///புதிய கதை -1250 – பக்கங்கள் என்பது பேரானந்தம் ஏற்படுத்திய போதிலும் அதனை பல பாகங்களாக பிரித்து –அது 2019-ம் ஆண்டில் வருமாயினும்- ஆறு மாதங்களாக வருமாறும் –இயலுமாயின் ரெகுலர் சந்தாவில் வருமாறும் – செய்யவும் ....///

      +1

      Delete
    2. காமிக்ஸ் நெசத்தைத் தாண்டிய ஒரு நிஜமான சிந்தனை செனா ஆனா சார்...

      Delete
    3. + 1

      வழிமொழிகிறேன் !

      காமிக்ஸ் ஆர்வத்தினால் நான் செலவிடும் தொகையை வீட்டில் சொல்லாமல் இருந்ததே இல்லை - இதனால் சினிமா பார்ப்பதை அறவே நிறுத்தி விட்டேன். CD , Kindle , புதிய மொபைல் போன்கள் வாங்குவது கிடையாது - கடைசியாய் நான் வாங்கிய மொபைல் 4 ஆண்டுகளுக்கு முன்பு. ஊர் ஊராய் செல்வதும் குறைத்து விட்டேன். இவ்வளவும் செய்த பின்னரும் வீட்டுக்காரம்மாவிடம் சொல்லாமல் - அது நமது காமிக்ஸோ அல்லது அயல் நாட்டு காமிக்ஸோ வாங்குவதே இல்லை !

      புதிய 5 ட்ராக் சந்தா + சூப்பர் 6 + அவ்வப்போது நீங்கள் வெளியிட விரும்பும் இதழ்கள் என்று பார்க்கும் பொது ஆகஸ்ட் '17 என்பது சுமார் 7500 ரூபாய் காமிக்ஸ் சார்பில் ஆகி இருக்கும். தரமான இதழ்கள் வருகின்றனதான். எனினும் சற்றே தளர்த்தி திட்டமிடுவோமே டியர் எடிட்டர் !

      --

      XIIIக்கு இன்னொரு - அனைவருக்கும் பர்ஸ் பாதிக்காத ஒரு ஐடியா - 18 issues with a hard slip case - தமிழின் முதல் slipcase collection ! இதனை ஒரு சந்தாவாகவே அறிவித்து 18 மாதங்களில் செயல் படுத்தலாம். 2017 ஈரோட்டில் துவங்கி 2019 சென்னையில் முடிக்கலாம்.

      Delete
    4. உண்மைதான் ...ஜீ...

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. நண்பர்களே,

      விலை சார்ந்த எண்ணங்கள் பற்றிய எனது two cents...! கண்ணுக்குத் தெரியும் சிக்கலைச் சொல்லி விட்டீர்கள் - சுலபமாய் ! புலப்படா விடையைத் தான் தேடி வருகிறேன் 5 ஆண்டுகளாய் !

      இது விலைகளுக்கோ ; எண்ணிக்கைகளுக்கோ நான் செய்திடும் நியாயப்படுத்தலும் அல்ல ; உங்கள் சிந்தனையினில் குறை காணும் முயற்சியுமல்ல ! மாறாக - ஒரு unique சூழலில் ஒற்றையாய் அமர்ந்திருக்கும் எனது நிலையின் பகிர்வு மாத்திரமே !

      கோழி முதலில் வந்ததா ? முட்டை முதலில் வந்ததா ? என்றால் நம்மைப் பொறுத்தவரையிலும் கோழி தான் முதலில் என்பேன் ! காமிக்ஸ் ரசிப்போரின் எண்ணிக்கை '90 களின் நடுவிலிருந்து சிறுகச் சிறுகக் குறைந்து கொண்டே சென்று - 2000 -களின் மதியினில் ஒரு மிகக் குறுகிய வட்டத்தினுள் நிலை கொண்ட பின்னே தான் நமது version 2 .0 நடைமுறைக்கு வந்தது ! ("நீ அன்றைக்கே இதை இப்படிச் செய்திருக்க வேண்டும் ; அதை அப்படிச் சரிபடுத்தியிருக்க வேண்டுமென" ஆங்காங்கே அறிவுரைகள் விரைவில் நல்கப்படும் என்பதை அறிந்தும் தான் இதைப் பதிவிடுகிறேன் ;simply because '95 க்குப் பிற்பாடான அந்த இருண்ட நாட்களின் சிரமங்களையும், வலிகளையும் அறிந்தவன் நான் மாத்திரமே !!) பத்து ரூபாய்க்கு வெளியாகிய பிரான்க்கோ-பெல்ஜியக் கதைகளை மாதம் வெறும் 4000 பிரதிகள் மாத்திரமே அச்சிட்டு, அவற்றுள் 1500 ஐ வருஷங்களாய்க் கையிருப்பில் வைத்திருந்தது தானே 2010 வரைக்குமான நிலவரம் ? ரூ.200 விலையில் 852 பக்கங்களோடு இரத்தப் படலம் B & W வெளியாகி அவற்றை விற்பனை செய்திட நாக்குத் தொங்க 20 மாதங்கள் காத்திருந்ததும் நாம் அறிந்த விஷயம் தானே ? So காமிக்ஸ் வாசிப்பினைத் தீர்மானிக்கும் ஒரு இறுதிக் காரணியாக விலைகளைப் பார்த்திடுவதில் எனக்கு உடன்பாடில்லை !

      இதோ - ஒவ்வொரு ஆண்டும் புத்தக விழாக்களில் நம்மை அடையாளம் கண்டு, அந்நேரம் ஆர்வமாய் காமிக்ஸ் வாங்கிடும் வாசகர்கள் அடுத்த புத்தக விழா வரையிலும் தம் கொள்முதல்களையோ ; வாசிப்புகளையோ தொடர்வதில்லை என்பது தானே யதார்த்தம் ? Granted - சென்னை போன்ற பெருநகரினில் நமது ஏஜென்ட்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவே ! ஆனால் ஈரோடு / சேலம் போன்ற நகரங்களில் குறைந்த பட்சம் ஐந்தாறு கடைகளில் நமது இதழ்கள் கிடைக்கின்றன எனும் போது - நிச்சயமாய் அங்கே சின்னதொரு மெனக்கெடலின் பின் நம் இதழ்களைத் தேடித் பிடிப்பதில் சிரமம் இருந்திடக் கூடாது தானே ? But 5 ஆண்டுகளும் ; 5 புத்தக விழாக்களும் கழிந்தான நிலையிலும் அங்கெல்லாம் நமது விற்பனை எண்ணிக்கைகளில் ஒரு குட்டியூண்டு முன்னேற்றம் கூடக் கிடையாது என்பது தான் நிஜம். So நமக்குப் பிடிக்கிறதோ - இல்லையோ ; அதனை ஏற்றுக் கொள்வது கசப்பாக இருக்கிறதோ - இல்லையோ - காமிக்ஸ் வாசிப்பென்பது இன்னமுமே ஒரு வெகுஜன ரசனையுமல்ல ; அத்தியாவசியமுமல்ல என்பதே bottomline !!

      இது தான் நமக்குக் கிட்டியுள்ள களம் எனும் பொழுது, அதனை எண்ணி விசனப்பட்டுக் கொண்டிருந்த நாட்கள் தான் நமது version 1 .0 -ன் இறுதி வேளைகள் ! ஆனால் அதுவே நம் பலமாகவும் மாறிட வாய்ப்புண்டு என்ற புரிதல் பிறந்ததன் பலனே version 2 .0 ! சர்க்கஸ் கூடாரம் அமைத்து, ஊர் கூடிக் கைதட்டும் பொழுது கம்பி மேல் நடப்பதும் சாகசமே ; சாலையோரமாக கம்பி கட்டி விட்டு, டோலக்கு அடித்துக் கொண்டே "பாருங்க ஷாமியோவ் !!" என்றபடிக்கே அதே கம்பி மேல் பத்துப் பேர் முன்னே நடப்பதும் கூட சாகசமே என்று புரிய எனக்கும் அவகாசம் அவசியப்பட்டது ! அந்தப் புரிதலுக்குப் பின்பாகவே மாற்றங்கள் வடிவங்களிலும், விற்பனை பணிகளிலும், விலைகளிலும் அரங்கேறின ! சின்னதொரு வட்டமே ; ஆனால் காமிக்ஸ் நேசத்தில் எஞ்சி நிற்கும் கூட்டம் ! அகவைகளில், ரசனைகளில் அடுத்த லெவெலில் நிற்கும் அணி ! அவர்களது ரசிப்புகளுக்கு மட்டுமன்றி, மாறிவிட்டிருக்கும் சந்தையின் தர அளவுகோல்களுக்குமே நியாயம் செய்திடும் ஒரு மினிமம் தரத்திற்கு நம்மை நாமே reinvent செய்து கொள்ளல் அவசியம் என்பது காலத்தின் கட்டயாமாகி நின்றது !

      Contd.

      Delete
    7. வடிவம், தரம், விலைகள்,உற்சாகம் என சகலமும் புதுசாகி நின்ற பொழுது நம் பயணம் வேகமெடுத்தது ! ஆனால் அன்றைக்கே எனக்குள் இந்த விலைகள் குறித்த நெருடல் இல்லாதில்லை ! எங்களது அலுவலகத்துக்கு கையில் நூறு ரூபாயை மட்டுமே வைத்துக் கொண்டு வந்து - டபுள் த்ரில் ஸ்பெஷலையும் ; இன்னும் ஏதோவொரு இதழையும் பெருமூச்சோடு பார்த்துக் கொண்டு நின்ற சிறுவனைப் பற்றி எழுதியிருந்தது நினைவுள்ளது ! ஆனால் சர்க்கஸ்களுக்கே கூட்டம் சேர நாக்குத் தொங்கும் இன்றைய நாட்களில், ஒரு சாலையோர சாகஸக்க்காரனுக்கு உள்ள limitations புரிபட்டதால் - வேறு வழியின்றி தொடர்ந்திட்டோம் !

      நாட்கள் நகர நகர, நமது இந்த இரண்டாம் வருகை ஒரு fluke அல்ல ; இம்முறை இது தொடர போகும் நிஜமே என்பது உங்களுக்கும், எங்களுக்கும் ஊர்ஜிதமான போதே நம் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகமானது தானே நாம் கடந்து வந்துள்ள நாட்கள் ? ஒரு NBS திறந்துவிட்ட கனவுகளின் கதவுகள் ஓராயிரமல்லவா ? ஆயிரம் ரூபாய்க்கொரு மறுபதிப்பென்பது உங்கள் கனவுகளை நிஜமாக்கும் எங்கள் பணிகளின் ஒரு பகுதி தானே ? ஒரு பொழுதும் மறுபதிப்புகள் பற்றிய எனது சிந்தைகளை நான் இரகசியமாக்கியவனல்ல ! Given a choice மாயாவிகாருவோ ; மின்னும் மரணங்களோ ; இரத்தப் படலங்களோ நிச்சயமாய் எனது அட்டவணையின் மேற்பகுதியில் இருந்திருக்கவே செய்யாது ! ஆனால் உங்கள் உற்சாகங்கள் தான் நாமின்று surf செய்யும் அலைகளின் மேலடுக்கு எனும் பொழுது அந்த உற்சாகங்கள் மீது ஈரத் துணியைப் போட்டு வைப்பது, நமக்கு நாமே கால்கட்டைப் போட்டுக் கொள்வதற்கு சமானம் என்றே நான் பார்க்கிறேன் !
      Contd :

      Delete
    8. முன்பெல்லாம் ஒரு நூறு ரூபாய் இதழைக் கொண்டு நான்கு வாரங்களையும், நாலைந்து பதிவுகளையும் நாம் ஒப்பேற்றினோம் ! ஆனால் இன்று யோசித்துப் பாருங்களேன் நிலவரத்தை :
      4 பாகங்கள் கொண்ட ட்யுராங்கோ ; ஒரு முழுநீள டெக்ஸ் ; ஒரு ப்ளூ கோட் சாகசம் + ஒரு மாயாவி மறுபதிப்பு

      நமக்குப் பத்து நாட்களுக்குத் தாக்குப் பிடிக்க மாட்டேன்கிறது ! ட்யுராங்கோ என்றோ ஒரு தூர நாளில் வெளியானதொரு இதழாய்க் காட்சி தருவது நிச்சயம் எனக்கு மட்டுமல்ல என்பேன் ! Of course - 2016 -ன் பாதி இதழ்களையே இன்னமும் படிக்க நேரமின்றியுள்ள நண்பர்களும் கணிசமே ; ஆனால் அதன் பொருட்டு எண்ணிக்கைகளில் பிரேக் போடுவதென்பது நம் சின்ன வட்டத்தின் எனர்ஜிக்கும் பிரேக் போட்டது போலாகிடும் என்பதே எனது பயம் !

      இதோ - இப்போது கூட இந்த இரத்தப் படலம் முயற்சியானதை நடைமுறைக்குக் கொணர்வதில் குறைந்த பட்சம் ரூ.இருபது லட்சம் சம்பந்தப்பட்டுள்ளது ! And இதன் பணிகளில் ஒட்டு மொத பெண்டும் கழன்றே போகுமென்பதிலும் இரகசியமேது ? ஆனால் இது தான் நம்மை சந்தோஷம் கொள்ளச் செய்யும் தாரக மந்திரமெனில், அதற்கு நாங்கள் ரெடி என்று கைதூக்கி நிற்பது கடமையன்றோ ? இந்தப் பின்னூட்டத்தில் துவக்கத்தில் நான் சொன்ன விஷயத்தை இங்கே அடிக்கோடிட்டு முனைகிறேன் !! நானிருப்பதொரு "unique " இடத்தினில் ! கம்பிமேல் நிற்கும் எனக்கு மேலே வானமும், கீழே மண்சாலையும் தான் என்றாலும், உங்களின் சிறுசிறு கனவுகளை நிஜமாக்கும் சாவியுமே என்னிடம் இருப்பது தானே தவிர்க்க இயலா யதார்த்தம் ? எனது தலையாட்டலோ, மறுப்போ தானே - உங்களின் ஒரு ஆதர்ஷ இதழின் வருகைக்கும், இல்லாமைக்கு இடையிலான வித்தியாசம் ? சத்தியமாய் இதனை அகங்காரத்தின் வெளிப்பாடாய்ச் சொல்லவில்லை ; ஆனால் சில வேளைகளில் எனது அவஸ்தைகளின் முழுப் பரிமாணங்களும் கண்ணுக்குப் புலப்படுவது இல்லை என்பதால்தான் இதனை இங்கு குறிப்பிட வேண்டிப் போகிறது !

      Oh yes ...ஒரு ஆதர்ஷ உலகினில், நிறைய பேர் காமிக்ஸ் படிக்கவும், நிறைய நிறுவனங்கள் விளம்பரங்கள் தரவும் தயாராகும் வேளையில் விலைகள் தாமாய் கீழிறங்கி விடும் ! ஆனால் அந்த ஆதர்ஷ உலகு தோர்கல் தேடித் திரியும் மூன்றாம் உலகை விடக் கூடுதல் தூரத்திலிருக்கும் பொழுது என் கட்டுக்குள் உள்ள சமாச்சாரங்கள் சொற்பம் தானே guys ?

      இரத்தப் படலத்தை சைஸ் சுருக்கிடும் பட்சத்தில் விலையினை சற்றே கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புண்டு ! Maybe TEX கதைகளின் சைசில் அதனை முயற்சிக்கலாம் தான் ! உங்களுக்கு ஓ.கே. எனில் I'm game for it !!

      வேறெதெற்காக இல்லையெனினும் - வேலைப் பளுவின் காரணமாகவேணும் அடுத்தாண்டினில் நமது நம்பர்களை மட்டுப்படுத்துவது பற்றி நிச்சயம் சிந்திப்போம் !! உங்கள் எண்ணங்களிலுள்ள நியாயம் நிச்சயம் என் கவனத்தைத் தப்பவில்லை ! And நம் பொருட்டு, நீங்கள் கொள்ளும் அக்கறைகளும், தொலைநோக்குச் சிந்தனைகளும் எத்தனை உயர்வானவை என்பதும் புரிகிறது !!

      இந்த "1250 குண்டு"புக்கை இப்போதைக்கு உங்கள் தலைகளில் போட்டு விடுவேனோ என்ற பயம் வேண்டாம் !! இதனை approve செய்யவே மாதங்கள் பிடிக்கும் ; அதன் பின்னே இதனில் பணியாற்ற பல பல மாதங்கள் !! So அதற்கு நிறையவே நேரமுள்ளது !

      அப்புறம் நடப்பாண்டினில் ஏற்கனவே பிராமிஸ் செய்திருந்த இரத்தக் கோட்டை & maybe அந்த இன்னொரு cowboy ஆல்பம் மட்டுமே அறிவிக்கப்பட்டதைத் தாண்டி வரவிருப்பவை !! அவையும், புத்தக விழாக்களின் பொழுது கூடிடும் நண்பர்களின் உற்சாக லெவெல்களை அதிகரிக்கும் பொருட்டே தவிர்த்து - ஆண்டின் நம் turnover -ஐ அதிகம் செய்திடும் நோக்கிலானதல்ல என்பதை நீங்களும் அறிவீர்கள் !

      Before I sign off - இரத்தப் படலத்திற்கென நண்பர் ராகவன் பரிந்துரைக்கும் அந்த "18 மாதம் - 18 இதழ்கள் - நார்மல் விலை - ஒரு slipcase " என்ற அந்த option பற்றியும் கொஞ்சம் சிந்திக்கலாமே guys ? ரூ.75 விலையில் 18 நார்மல் சந்தா இதழ்கள் எனும் பொழுது ரூ.1350 + அந்த slipcase கிரயமாய் இன்னுமொரு ஐம்பது என்று வைத்துக் கொண்டாலும், ரூ.1400 -ல் வேலை ஆகிவிடும் தன !! அனைவருக்கும் கிடைத்தது போலவுமிருக்கும் ; விலைகளும் சல்லிசாய் (at least in comparison !!!) அமைந்தது போலவுமிருக்கும் தான் ! நான் முன்னமே சொன்னது போல, மறுபதிப்புப் பந்துகள் என்றைக்குமே உங்கள் கோர்ட்டில் தான் ! அவற்றை எவ்விதம் ஆடச் சொல்கிறீர்களா, அதன்படி நான் ரெடி ! கோஹ்லியும், கேதார் ஜாதவும் ஆடியது போல் ஆடுவதா ? சற்றே நிதானமாய் ஆடுவதா ? சொல்லுங்கள் - செய்கிறோம் !! Bye for now all !!

      Delete
    9. நண்பர் ராகவன் கூறியுள்ள யோசனை - தனி சந்தாவில் 18 மாதங்களில் 18 இதழ்கள் - நல்ல யோசனையாகப்படுகிறது.

      மாதத்தில் ஒரு இதழ் மட்டும் எனும்போது புது வாசகர்களும் மலைப்பு தோன்றாமல் படிக்க வசதியாக இருக்கும்.

      மேலும் இப்படி தனி இதழ்களாக தொடர்ந்து வெளியிடும் போது கதையோட்டத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் புது வாசகர்கள் தொடரந்து வாங்கவும் ஒரு தூண்டுதலாக இருக்கும். இதன் மூலம் மற்ற இதழ்களையும் அவர்கள் வாங்கலாம். ஒரே இதழாக வெளியிடும் போது இந்த ஆர்வம் இருக்குமா என்பது தெரியாது. ஒரு கதையை தொடராக படிக்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் அதை ஒரே இதழாக படிக்கும்போது அவ்வளவாக இருப்பதில்லைதானே..

      Delete
    10. இரத்தப் படலம் மறுபதிப்பில் ஒரே இதழாக, 3 தனித் தனி இதழாக என ரிஸ்க் எடுப்பதற்கு பதில், "18 மாதம் - 18 இதழ்கள் - நார்மல் விலை - ஒரு slipcase " என்பது ஒரு safe zone. ஏற்கனவே ஒரு முழு தொகுப்பாக b / w வந்த இதழ் இப்போது ஆர்ட் பேப்பர் & வர்ணத்திற்காகவும் எனும் போது எப்படி வந்தால் என்ன? மறுபதிப்பிற்கான முழு இதழ் எனும் போது அதில் செலவாக்கக்கூடிய உழைப்பும், முதலீட்டையும், நேரத்தையும் வேறொரு புதிய கதைகள் கொண்ட "குண்டு" இதழுக்கு பயன் படுத்தலாம் எ . எ . க .

      Delete
    11. இரத்தப்படலத்தின் பின்புலம், அதன் Classical Value, 18 பாகங்கள் கொண்ட ஒரு evergreen காமிக்ஸ் தொடர் போன்ற விஷயங்கள் புது வாசகர்களையும் சென்றடைய வேண்டும்.

      இரத்தப்படலத்தின் முதல் பாகத்தை முதன்முதலில் படிக்கும் எந்த ஒரு பது வாசகரும் அது தரும் அனுபவத்தை மறக்க முடியாது. முதல் பேனலில் தொடங்கும் வில்லியம் வான்ஸின் தூரிகை ஜாலம் கதையின் முடிவில் அதன் உச்சத்தை அடைந்திருக்கும். கதையின் முடிவில் நம்மை சூழும் சோகமும் கேள்விகளும் தரும் அந்த அனுபவம் காமிக்ஸ் இதழ்களின் மேல் தனி மரியாதையை ஏற்படுத்தும். மேலும் பல காமிக்ஸ் இதழ்களை தேடிப்பிடித்து படிக்க வைக்கும்.

      இந்த அனுபவம் ஒரே இதழாய் படிக்கும் போது கிடைப்பது கடினம்.

      Delete
    12. இரத்தப்படலத்தின் பின்புலம், அதன் Classical Value, 18 பாகங்கள் கொண்ட ஒரு evergreen காமிக்ஸ் தொடர் போன்ற விஷயங்கள் புது வாசகர்களையும் சென்றடைய வேண்டும்.

      இரத்தப்படலத்தின் முதல் பாகத்தை முதன்முதலில் படிக்கும் எந்த ஒரு பது வாசகரும் அது தரும் அனுபவத்தை மறக்க முடியாது. முதல் பேனலில் தொடங்கும் வில்லியம் வான்ஸின் தூரிகை ஜாலம் கதையின் முடிவில் அதன் உச்சத்தை அடைந்திருக்கும். கதையின் முடிவில் நம்மை சூழும் சோகமும் கேள்விகளும் தரும் அந்த அனுபவம் காமிக்ஸ் இதழ்களின் மேல் தனி மரியாதையை ஏற்படுத்தும். மேலும் பல காமிக்ஸ் இதழ்களை தேடிப்பிடித்து படிக்க வைக்கும்.

      இந்த அனுபவம் ஒரே இதழாய் படிக்கும் போது கிடைப்பது கடினம்.

      Delete
    13. நண்பர் ராகவன் கூறியுள்ள யோசனை - தனி சந்தாவில் 18 மாதங்களில் 18 இதழ்கள் - நல்ல யோசனையாகப்படுகிறது.

      மாதத்தில் ஒரு இதழ் மட்டும் எனும்போது புது வாசகர்களும் மலைப்பு தோன்றாமல் படிக்க வசதியாக இருக்கும்.

      மேலும் இப்படி தனி இதழ்களாக தொடர்ந்து வெளியிடும் போது கதையோட்டத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் புது வாசகர்கள் தொடரந்து வாங்கவும் ஒரு தூண்டுதலாக இருக்கும். இதன் மூலம் மற்ற இதழ்களையும் அவர்கள் வாங்கலாம். ஒரே இதழாக வெளியிடும் போது இந்த ஆர்வம் இருக்குமா என்பது தெரியாது. ஒரு கதையை தொடராக படிக்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் அதை ஒரே இதழாக படிக்கும்போது அவ்வளவாக இருப்பதில்லைதானே..

      Delete
  23. ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தை மட்டுமல்ல எங்கள் மனதையும் தட தடக்க செய்து விட்டது எங்களின் சின்ன உலகிற்கு வெல்கம் ட்யுராங்கோ

    ReplyDelete
  24. ஞாயிறு பதிவு ரொம்பவே தாமதம் ஆசிரியரே

    ReplyDelete
  25. ஞாயிறு பதிவு ரொம்பவே தாமதம் ஆசிரியரே

    ReplyDelete
  26. தேடல்கள் மேலும் புதையல்களை கொணரட்டும்!

    ReplyDelete
  27. ஐயோ, இந்த ரத்தப்படலம் நம்மை பாடாய் படுத.துகிறதே. குண்டோ ஒல்லியோ சீக்கிரமாக இதை எப்போது படிப்போம் என்றிருக்கிறது.

    ReplyDelete
  28. 8 வருடங்களுக்கு முன் நியூஸ்பிரிண்ட் தாளில் வெளியான இக்கதை முதன் முறையாக படித்த போது எனக்கு சரியாக புரியவில்லைதான்... ஆனால் படிக்க படிக்க இனம் புரியாத ஒரு வகை வசீகரம் இக்கதையில் நம்மை ஆட்கொண்டு வருகிறது. எனவே தான் b/w ,,படித்த இக்கதை கலரில் வரும்போது எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பை ஏற்றி உள்ளது.

    ReplyDelete
  29. Dear editor sir
    The problems will always be there even you are postponing the release of Rathapadalam.only that the dimension and the perspective of the problems may be different
    1000 copies sales is possible,
    If it is planned for later the
    Price may increase further and some friends finds it more difficult to buy
    So if you release it earlier,the friends who could not able to buy it at the time of release may buy it later.

    ReplyDelete
  30. சார், தலை சுற்றுகிறது. ரத்தப் படலம் இருக்கா இல்லையா ? ரத்தப் படலத்துக்கு பதிலாக இந்த புதிய தேடலா ? விளக்கம் ப்ளீஸ்

    1250 பக்கங்களுக்காக நாங்கள் ரத்தப் படலத்தை கேட்க வில்லை. அதன் கதைக்காவே கேட்க்கிறோம்.

    குண்டு போக்க ஆக போட்ட மின்னும் மரணத்தையும் , என் பெயர் டைகரையும் கையில் தூக்கி படிப்பதற்கும் கை வலித்துப் போகிறது. என் கருத்தை நண்பர்கள் ஆமோதிப்பார்கள் என்று நம்புகிறேன். ஒரே தடவையில் போடுங்கள் ஆனால் ட்யுரங்கோ மாதிரி நாலு அல்லது ஐந்து பாகங்களை சேர்த்து ஒரு புக் வீதம் மூன்று புக் ஒரே செட்டில் தரலாமே. அதுதான் படிப்பதற்கும் எங்கும் எடுத்து செல்வதர்க்கும் ஏற்றதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. என்னை கேட்டால் ஒரு அளவிற்கு மேல்(அதிக பக்கங்கள் _ வரும் குண்டு கேட்டது .

      Delete
  31. //
    @ FRIENDS : மௌனப் பார்வையாளர்கள் அனைவரும் தத்தம் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டால் ஒரு தெளிவு பிறக்குமல்லவா ?

    Please folks ?

    //

    சென்ற பதிவில் கேட்டதற்கு,

    ரத்தப் படலம் தொகுப்பு மூன்று புத்தகமாக ஒரு அட்டைப்பெட்டியில் வருவது நன்றாக இருக்கும். அமர் சித்ர கதா 'மஹாபாரதம்' போல. முடிந்தால் அந்த 19 வது பாகத்தையும் இணைத்து விடுங்கள். அதை தனியாக வெளியிடுவது நன்றாக இருக்காது.

    நானும் மௌன வாசகனே. தங்களை புத்தக திருவிழாவில் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி ஆசிரியரே..

    -சங்கர், கூடுவாஞ்சேரி

    ReplyDelete
  32. Sir, please consider the size of Rathappadalam like a TeX maxi size thaliyilla porali....it will be amazing for collection and reading....

    ReplyDelete
  33. தலையில்லா போராளி அளவில் ரத்த படலத்தையும் வெளியிட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்......

    ReplyDelete
  34. இரத்தப்படலம் புதிதாக வந்த எந்த புத்தகத்தையும் படிக்கவில்லை, இரத்தப்படலம் போதுமடா சாமீ என்றாகி விட்டது, மின்னும் மரணமே இன்னும் படித்து முடிக்கவில்லை இதற்குள் இன்னொன்னு தாங்காது, இதற்கு பதில் நீங்கள் புதிய நாயகரையோ அல்லது 20 மாறுபட்ட கதை களங்களையோ நீங்கள் அறிமுகப்படுத்தலாம்.

    //அதே சமயம் ஒரு வித்தியாசமான கதைத் தொடரானது கண்ணில் படவே செய்தது ! 1250 பக்கங்கள் கொண்ட ஒரே மெகா-மெகா-மெகா கதையது ! அசாத்திய சித்திரங்கள் ; இதுவரையிலும் நாம் சுற்றி வந்திருக்கா ஒரு முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் என்று செல்லும் இந்தத் தொடரை தூரத்திலிருந்து ரசிப்பதோடு ஒதுங்கியிருந்தேன் ! ஆனால் இப்போது சிறுகச் சிறுக நம்மை ஆட்கொண்டு வரும் இந்த "குண்டு" புக் காதலானது எனது சிந்தனைகளையும் மெல்ல மெல்ல மாற்றியமைத்திடும் போல்படுகிறது !!.//
    இந்த மாதிரி புதிய கதை களங்களுக்கு என் ஆதரவு எப்பொழுதும் உண்டு. இரத்தப்படலம் சும்மா வாங்கி செல்ப்பில் அடுக்கி வைப்பதை விட வேற எதுவும் செய்ய போவது இல்லை.
    Thumbs down to Iratha padalam Kundu book.(Enough)
    Thumbs up to new initiatives like you said 1250 pages sci-fi story or any new stories.

    ReplyDelete
  35. அந்த 1250 பக்க குண்டு புத்தகம் கௌபாய் கதையா சார்?

    ReplyDelete
  36. // 1250 பக்கங்கள் கொண்ட ஒரே மெகா-மெகா-மெகா கதையது //
    டக்கரா சொன்னிங்க சாரே,செம யோசைனையா கீது.

    ReplyDelete
  37. இரத்தப்படலம் வண்ண மறுபதிப்பில் அனைத்து பாகங்களும் ஒரே புத்தகமாக வருவதை விட சில பாகங்களாக பிரித்து வெளியிடுவதே நல்லது.

    இரத்தப்படலம் முழுவதையும் ஒரே மூச்சில் படிக்கும் வாய்ப்புகள் குறைவு. அவ்வப்போது தேவையான பாகங்களை எடுத்துப்படிக்க
    பிரித்து வெளியிடுவதே சிறந்த தேர்வாக இருக்கும். நண்பர் ராகவன் கூறியுள்ள யோசனை - தனி சந்தாவில் 18 மாதங்களில் 18 இதழ்கள் - நல்ல யோசனையாகப்படுகிறது.

    ReplyDelete
  38. 18 இதழ்கள் நான் ஆதரிக்கிறேன்.+11111111223334445556666666

    ReplyDelete
  39. என்னிடம் ரத்தப்படலம் B/W இல்லை. அதனை வெளியிடுவதாக அறிவித்திருந்த போது என்னால் வாங்க முடியாத சூழல். தற்போது டெக்ஸ் விஜய் தயவால் அதைப் படிக்க முடிந்தது.எனவே வண்ணத்தில் நிச்சயம் வாங்கத்தான் போகிறேன். ஆனால் ஒரே புத்தகமாக வராவிட்டால் வாங்குவதற்கு யோசிப்பேன்.

    குண்டுபுக்காக வரும்போது - என்னுடைய யோசனை + அனுபவம் - ஆர்ட் பேப்பரை தவிர்த்து நார்மலான பேப்பரை உபயோகப்படுத்தினால், வெகுநாட்கள் கழித்து புத்தகத்தைப் பிரிக்கும் போது ஒட்டிக் கொண்டிருக்கும் பேப்பர்கள், அதனால் அச்சு மற்றொரு பக்கத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது, ஈரம் பட்டால் வீணாவது (நானெல்லாம் சாப்பிடும் போதும் படிக்கும் வழக்கம் கொண்டிருப்பவன்...), படிக்கும் போது கிளேர் அடிப்பது போன்ற இம்சைகளை தவிர்த்து விட முடியும்.

    கூடுதல் அம்சமாக விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது...

    மற்றபடிக்கு இப்போதைகே என்பதுதான் எனது அபிப்பிராயமும். ஒரு வேளை அப்பாலிக்கா என்பதாய் முடிவு எடுக்கப்படுமானால், வேற ஒரு கதம்ப குண்டாவது எங்கள் மீது வீசுங்கள் எடிட்டர் சார்.

    அப்புறம் ஒரு கோரிகை... கிளாஸிக்ஸ்சில் டிராகன் நகரத்தை ஓரம் கட்டிவிட்டு, அதில் வேறு ஏதாவது புதிய கதைகளை வெளியிட்டால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  40. இரத்தப்படலம் வண்ண மறுபதிப்பில் அனைத்து பாகங்களும் ஒரே புத்தகமாக வருவதை விட சில பாகங்களாக பிரித்து வெளியிடுவதே நல்லது.

    இரத்தப்படலம் முழுவதையும் ஒரே மூச்சில் படிக்கும் வாய்ப்புகள் குறைவு. அவ்வப்போது தேவையான பாகங்களை எடுத்துப்படிக்க
    பிரித்து வெளியிடுவதே சிறந்த தேர்வாக இருக்கும். நண்பர் ராகவன் கூறியுள்ள யோசனை - தனி சந்தாவில் 18 மாதங்களில் 18 இதழ்கள் - நல்ல யோசனையாகப்படுகிறது.

    ReplyDelete
  41. புதிய பதிவு ரெடி நண்பர்களே.

    ReplyDelete
  42. dear vijayan sir, my thoughts are ---> there is a big difference in terms reader's experience when you hold and read a one big kundu book. I think having 18 issues across 18 months - will not bring that experience. hence, I'm game for Only Kundu book. There is no limit on price tag for the magic by creators Van Hamme & William Vance's stunning art works. XIII in color -- in kundu book - will be a wonderful reading experience. I'm sure. however, thats my thought only.

    ReplyDelete