Tuesday, July 05, 2016

5 இதழ்கள் + 1 டி-ஷர்ட்.....!

நண்பர்களே,

வணக்கம். சனியிரவில் சிவகாசியின் மையப் பகுதியில் நடந்துள்ள வெடி விபத்தினால் நமது பணிகள் ஒரு நாள் தாமதம் கண்டுவிட்டன ! ஞாயிற்றுக் கிழமையும் வேலை வைத்து - திங்கள் காலையில் 5 புக்குகளையும் நம்மிடம் ஒப்படைப்பதாக பைண்டிங் நண்பர் உறுதி சொல்லியிருந்தார். ஆனால் அவரது பணியாளர்கள் பலரின் வீடுகள் விபத்து நடந்த பகுதியில் என்பதால் அவர்கள் யாருமே ஞாயிறன்று வேலைக்கு வந்திடவில்லை போலும் ! அவர்களை சொல்லியும் தப்பில்லை ; அந்த ஏரியாவையே காலி செய்து அங்குள்ளோரை தற்காலிகமாய் 2 கல்யாண மண்டபங்களில் அதிகாரிகள் தங்க வைத்து வருவதால்  - சட்டி-பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டிய சங்கட நிலைமை ! So திங்கட்கிழமை மாற்று ஏற்பாடுகள் செய்து, பணியினை முடித்து இதழ்களை டெலிவரி செய்ய சாத்தியமான பொழுது கூரியர் நேரங்கள் முடிந்திருந்தன ! So இன்று காலை அவ்வளவு பிரதிகளும் - டி- ஷர்ட் சகிதம் கூரியர்களில்சீ க்கிரமே புறப்பட்டு விட்டன என்பதால்  நாளைய காலை உங்கள் இல்லங்களில் கனத்த டப்பாவை ஏந்திக் கொண்டு கூரியர் நண்பர்கள் ஆஜராகிடுவது நிச்சயம் ! 

And இதோ டாக் புல்லின் புது இதழின் அட்டைப்பட first look !! முழுக்கவே ஒரிஜினல் டிசைன் தான் இதன் முன்னட்டைக்கு ! ஒரே மாதத்தில் 2 சிக் பில் கதைகள் என்றாலும் - சித்திர பாணிகளிலும், கலரிங் பாணிகளிலும் ஒன்றுக்கொன்று நிறையவே மாற்றங்கள் தென்படுவதைக் காணப் போகிறீர்கள் ! "கோடியும்...ஒரு கேடியும்...".அந்த நாட்களது பளீர்..பளீர் டார்க் வண்ணங்களில் ஆளை அடிக்கும் ரகத்தில் இருப்பதையும் ; "நி 1...நி.2..!" சற்றே subtle வர்ணங்களில் இருப்பதையும் பார்த்திடலாம் !

ஆன்லைன் லிஸ்டிங்கும் செய்தாகி விட்டோம் ; so அவ்வப்போது வாங்கிடும் நண்பர்கள் க்ரெடிட் கார்டுகளைத் தேடி எடுத்துக் கொண்டால் - ஜூலையின் இதழ்களுக்கு ஆர்டர் செய்துவிடலாம் ! (http://lioncomics.in/special-issues/21085-lion-32-aandumalar.html_)
இதழ்களை பெற்றுக் கொண்டான பின்னே - உங்களது முதல் அபிப்பிராயங்களை பதிவிட மறவாதீர்கள் - ப்ளீஸ் !

பழைய caption போட்டி + இந்த ஞாயிறுக்கான போட்டி - என இரண்டுக்குமான தேடல்களுக்குள் தலைநுழைக்கக் கிளம்புகிறேன் ! ரமலான் பெருநாள் வாழ்த்துக்களும் - முன்கூட்டியே ! Bye now folks ! 

310 comments:

  1. அப்போ நாளை அதிகாலை கொரியர் ஆபீஸை முற்றுகை இடவேண்டியதுதான்

    ReplyDelete
  2. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Replies
    1. ஹா ஹா ஹா மாயாவியாரே...!!!

      உங்களுக்கு தூக்கத்தில் படிக்கிற வியாதியா !! :):):):)

      Delete
    2. சம்பத் எனக்கு தூக்கத்தில் காமிக்ஸ்கள் மூட்டை மூட்டையாய் கிடைக்கிற கணவுகள் தான் வருகிறது

      Delete
    3. செந்தில் சார்.!

      தற்போதுதான்
      கனவுகள் நிஜமாகி வருகிறதே ??.!

      Delete
    4. வெங்கடேஸ்வரன் சார் நான் சொன்னது பழைய காமிக்ஸ்கள்
      செண்னை புக் பேரில் சனிக்கிழமை காலையில் வந்து விட்டு போனதிலிருந்து ஞாயிறு மாலை வரை வரேவயில்லையே சார் நான் சனிக்கிழமை மதியம் தான் வந்தேன் நீங்கள் வந்து விட்டு போய் விட்டீர்கள் என்று டெக்ஸ் சொன்னார் மீண்டும் வருவீர்கள் என்று ஆவலாக இருந்தேன் நீங்கள் வராதது ஏமாற்றமே ஈரோடு புக் பேரில் உங்களை எதிர் பார்க்கிறேன் வருவீர்களா

      Delete
  4. அனைவருக்கும் இரவு வணக்கம்.

    ReplyDelete
  5. வாவ்,ஒரு தாமதமும்,ரொம்ப சீக்கிரமும்:இவ்வளவு சீக்கிரம் சுடச்சுட புதுப்பதிவு ஒன்றைப் பார்ப்பது இது தான் முதல்முறை என்று நினைக்கிறேன்.போஸ்ட் படித்து ஸ்பைடர்-ஆர்ச்சிக்கு ஒரு கமெண்ட் போட்டுவிட்டு தலையை உயர்த்தினால் மாயாவி சாரின் எடிட்டரோட புது பதிவு வந்திருக்கு..! அடுத்த பக்கத்தை பாருங்க..!! கமெண்ட் வரவேற்றது.

    ReplyDelete
  6. கோடியும் ஒரு கேடியும் :

    அதென்ன அட்டையில் "டாக்புல் தோன்றும் "????

    ஆர்டினின் பெயரை இருட்டடிப்பு செய்த எடிட்டர் அவர்களை வன்மையாக கண்ணடிக்கிறேன்.!
    ஸாரி ஸாரி கண்டிக்கிறேன்.!

    ReplyDelete
    Replies
    1. இவரு மட்டும் சிக்பில் கதைகள்னு லிஸ்ட்டிங் பண்ணுவாரு...............

      Delete
  7. எனக்கு பதிவு தபாலில் தாமதமாகத்தான் வரும்....
    இனடயில் ரமலான் லீவ் வேறு உள்ளது.....

    ReplyDelete
  8. Tomorrow first work courier office visit thanannuvathu

    ReplyDelete
  9. வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவனை வேண்டுகிறேன் .விரைவில் மீண்டு வர வேண்டும். மேலும் நல்ல கதைகளை, பெரிய கதைகளை, பழைய super special type ல் A4 Size ல் பல கதைகளை கொண்ட பெரிய புத்தகமாக வெளியிடுங்கள்.நன்றி . குளித்தலை ந.மணிகண்டன்

    ReplyDelete
  10. As I am on traveling... I missed Petti

    ReplyDelete
    Replies
    1. @ ரம்மி
      ட்ராவலுக்கு பெட்டி எடுக்காமல் பேக் எடுத்திருந்தால் மிஸ் ஆகாமல் இருந்திருக்கும் அல்லவா சகோ

      Delete
  11. நண்பர்களே, பேஸ்புக் பக்கத்தில் வந்த ஒரு சேதியை பாருங்கள்! :(
    Inaiya Monnai
    July 4 at 9:55pm ·

    நம் மீடியா ராம்குமார் இட்லி தின்னானா இடியாப்பம் தின்னானான்னு அங்க பல் குத்திக்கிட்டு சாவகாசமா செய்தி சேகரிச்சிக்கிட்டு இருக்கும் அதே வேளையில், இங்கு சிவகாசியில் எவ்வளவு தூரம் வெடித்துக் காலியாகுமோ, எத்தனை உயிரைக் காவு வாங்குமோ என்று மக்கள் பீதியில் இருக்கிறோம்..

    இரண்டு நாட்களுக்கு முன் நகரின் மத்தியில் இருக்கும் ஒரு மூலப்பொருள் கிட்டங்கியில் தீப்பிடித்தது.. கிட்டங்கியில் இருந்தவை முறையான அனுமதி பெற்ற பொருட்கள் தானா என்பதைப் பற்றித் தகவல் இல்லை.. தீயைத் தற்காலிகமாக அணைத்தார்கள் தீயணைப்புப் படையினர்.. ஆனால் இன்னமும் கிட்டங்கியில் கிலோ கிணக்கில் (டன் கணக்கில் என்று கூட வதந்தி) மருந்து புகைந்து கொண்டிருக்கிறது.. அப்புறப்படுத்த வந்தவர்கள் எல்லாம் முடியாது எனக் கை விரித்து விட்டார்கள்.. அல்ரெடி இரண்டு பேரோ மூன்று பேரோ காலி விபத்து நடந்த அன்று.. எத்தனை பேர் என்பதைப் பற்றியும் சரியானத் தகவல் இல்லை..

    இரண்டு நாட்களாக மக்கள் யாரையும் அந்தப் பக்கமே விடுவதில்லை.. ரோட்டை சீல் வைத்து விட்டார்கள்.. அந்தப் பக்கம் இருக்கும் தெருக்களைக் காலி செய்யச் சொல்கிறார்கள்.. அகதி போல் அந்த ஏரியா மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.. சுற்றுவட்டார மக்கள் அனைவரும் பீதியில் இருக்கிறோம்.. இந்தப் பீதியை இன்னும் அதிகரிக்க வதந்தி மிக வேகமாகப் பரவுகிறது.. ‘வெடிச்சிச்சின்னா 5கி.மீ.க்கு ஒன்னும் இருக்காது’, ‘ஊர்ல எல்லாரும் சிலிண்டர ஆஃப் பண்ணி வச்சிருங்க’, ‘தீயை அணைக்கவே முடியாது, அதுவா வெடிச்சிச் சிதறினாத்தான் உண்டு’, ‘செல்ஃபோனை யாரும் அந்தப் பக்கம் போகும் போது யூஸ் பண்ணாதீங்க’, ‘ஊரே தரை மட்டம் ஆகப்போகுது’ என்று மக்களின் பீதியை அதிகரிக்க மணிக்கொரு வதந்தி வருகிறது..

    ஆனால் சேர்மன், எம்.எல்.ஏ., எம்.பி, எங்கள் தொகுதி மந்திரி என்று யாரும் மக்களுக்குத் தைரியம் சொல்லவோ இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கவோ வந்த மாதிரித் தெரியவில்லை.. இரண்டு மாதத்திற்கு முன்பு வரை தெருத்தெருவாக ஓட்டு கேட்டு வரத் தெரிந்தது.. லேசாகப் புகைந்த உடன் ஓட்டுப்போட்டவனை விட்டுவிட்டு ஓடவும் தெரிகிறதோ? அட்லீஸ்ட் ஒரு ஸ்பீக்கரில் சுற்று வட்டார மக்களின் பயத்தைப் போக்க ஏதாவது சொல்லவாவது செய்யலாமே இந்த சேர்மனோ, எம்.எல்.ஏ.வோ? ’எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்கோ’ன்னு சொல்லுங்க, இல்லேன்னா ‘ஒரு பிரச்சன்னையும் இல்ல, தைரியமா இரு’ன்னு சொல்லுங்க.. ஒன்றுமே பண்ணாமல் மக்களை ஏன் சாவு பயத்தில் அல்லாட வைக்கிறீர்கள்??

    மக்கள் ஆளாளுக்குப் பயந்து புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள்.. தெரு, கடை, சாலை என எங்கும் இருவர், மூவர் என கூடி நின்று “நாளை காலை கண் விழிப்போமா?” என பேசிக்கொள்கிறோம்.. மீடியாவோ தங்கள் பசிக்குக் கிடைத்தத் தீனியான ராம்குமார் என்ன திங்கிறான் என ஆராய்கிறது.. எந்த டிவியிலும் இதை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவேயில்லை.. ஒரு வேளை இங்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு ஒரு ஏரியாவே காலியானால் மீடியா, ஆள்பவர்கள், ஆள நினைப்பவர்கள் எல்லாம் வருவார்கள் என நினைக்கிறேன்.. ஏனென்றால் எவனாவது செத்தால் தானே இவர்களுக்குப் பிழைப்பு, ஓட்டு, டிஆர்பி, பெருமை, புகழ் எல்லாம்?

    இன்னொரு போபால் விபத்து, கும்பகோணம் பள்ளி விபத்து போல் நடக்காமல் இருந்தால் சரி.. ஒரு வேளை இந்த விபத்துப் பெரிதாக ஆகாமல், தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றி விட்டால், அதோடு கடமை முடிந்தது என அரசாங்கம் நினைக்காமல், எங்கள் ஊரில் எவன் எவனெல்லாம் திருட்டுத்தனமாக வெடி பொருட்களை வீடு, குடௌன் எனப் பதுக்கி வைத்திருக்கிறானோ அத்தனை பேர் மீதும் ஏதாவது தீவிரவாத கேஸ், கொலை முயற்சி கேஸ் போட்டு உள்ளே தள்ளுங்கள்.. மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வெடி பொருட்கள் கடை இருந்தால் தூக்கிக் கெடாசுங்கள், லைசன்ஸைக் கேன்சல் செய்யுங்கள், இனியாவது ரூல்ஸை ஒழுங்காகப் பின்பற்றுங்கள், பின்பற்றாதவன் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.. வழக்கம் போல் 1000, 5000 பிச்சை எடுத்து எங்கள் உயிரை ஊசலாட வைக்காதீர்கள்.. இந்தப் பேராசை பிடித்த நாய்களால் நாங்கள் சாவு பயத்தோடு வாழ்ந்து தொலைப்பது இனியாவது இல்லாமல் இருக்கட்டும்..

    - சிவகாசிக்காரன்...

    ReplyDelete
    Replies
    1. @ FRIENDS : மெய்யான ஆதங்கங்கள் !

      விபத்து நடந்த தினம் நான் ஊரில் இல்லை என்பதால் அன்றிரவில் நிகழ்வுகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை. ஆனால் திங்கள் காலை ஊர் திரும்பும் போது சாலை மறிக்கப்பட்டு, தீயணைப்புத் துறையினர் ; ஆம்புலன்ஸ் என்றெல்லாம் ஊரின் நடுவே நிற்பதை பார்த்த போதே நெருடலாக இருந்தது ! அப்புறம் தான் விஷயமே தெரிய வந்தது....!.

      ஒட்டு மொத்தமாய் அந்த ஏரியாவையே காலி செய்திடச் சொல்லி வருகின்றனர் அதிகாரிகள் ! And yes - இன்னமும் புதைந்து கிடைக்கும் வெடிப்பொருட்களை பத்திரமாய் அப்புறப்படுத்தாது போயின் ஒரு மிகப் பெரிய கண்டம் காத்திருப்பதும் நிஜமே ! இதன் பொருட்டு நாகபூரிலிருந்து அரசு வெடிப்பு பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உயர் மட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனராம் ! நகரின் மத்திய பகுதி என்பதால் எல்லோருக்குமே ஏதேதோ வகைகளில் சிரமங்கள்...கஷ்டங்கள்..நஷ்டங்கள் !

      And பதிவர் சொல்லியிருப்பது போல வதந்திகளின்தாக்கமும் ரொம்பவே ஜாஸ்தி ! இதன் மத்தியில் நேற்று மதியம் வேறொரு இடத்தில் ரெய்ட் செய்ததில் இதை போலவே ஒரு பெரும் வெடிப்பொருள் குவியல் சிக்கியுள்ளது !

      ஊருக்குள் திரும்பிய பக்கமெல்லாம் பட்டாசுக கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கியுள்ளதன் கொடூரம் இப்போது தான் தூக்கலாய்த் தெரிகிறது ! எங்கள் அலுவலகம் & அச்சகக் கூடம் உள்ள வளாகத்தின் வாசலில் கூடவொரு பட்டாசுக் கடல் (!அவர்களது கடைப் பெயரே இதுதான் !!) உள்ளது !

      இனி சாமி கும்பிடும் போது கூடுதலாயொரு பிரார்த்தனையைச் சொல்லிக் கொள்ள வேண்டும் போல் படுகிறது - குட்டி ஜப்பானின் மக்களும் !

      Delete
    2. :( ஒவ்வொரு முறையும் ஏதேனும் சிவகாசி பட்டாசு விபத்து செய்தி வரும் போதும் நமது அச்சக பணியில் உள்ள நண்பர் கள் மற்றும் உங்கள் எல்லோரையும் நினைத்து கவலை ஏற்பட்டு விடும்சார்.

      Delete
    3. cap tiger : ஊருக்கெல்லாம் கேளிக்கை தரும் பட்டாசுகளின் மறுபக்கம் ரொம்பவே இருண்டது நண்பரே...!

      Delete
    4. எனது மனது கனக்கிறது, இதனை படித்த பின்.

      இது போன்ற ஒரு நிகழ்வு சிவகாசியில் நடந்துள்ளது என்பது இந்த பின்னோட்டத்தை படித்தபின்தான். இணையதள பத்திரிகைகளில் இது பற்றி எதுவும் இல்லை, இவர்களுக்கு இது மிக பெரிய விஷயம் இல்லை என்பது கொடுமையான விஷயம் :-(

      Delete
  12. நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நமது நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.!

      Delete
  13. இனிய இரவு வணக்கங்கள் :)

    ReplyDelete
  14. Have to wait until next week to collect the package, due to travel. But looking forward for the issues. Promotion to Sheriff on the cover title is a nice move... finally.

    Heart goes out to the families who suffered in the accident. It's been a sorry week with all bombing and terror attacks. Let the peace prevail.

    ReplyDelete
    Replies
    1. Rafig Raja : பெருநாள் வாழ்த்துக்கள் சார் !

      Delete
  15. முதல்முறையாக 'டாக்புல் தோன்றும்'னு அட்டைப் படத்திலே அச்சாகியிருக்குன்னா அர்த்தமில்லாம இருக்காது! ஷெரீப் - பட்டையைக் கிளப்பியிருக்கார் போலிருக்கே...
    பொழுது புலர்ந்திட வெய்ட்டிங்......

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : ஆர்டினுக்கும் பங்கிருப்பினும், இந்த ஆல்பத்தின் மையமே நம்ம "மொட்டை பாஸ்" தான் !

      Delete
    2. 'கெளபாய் உலகின் கவுண்டமணி-செந்தில் இவர்கள்'னு பின்னட்டையில் தாராளமாக ஒரு க்ரெடிட் கொடுக்கலாம் சார்!

      Delete
    3. Erode VIJAY @ சரியான அனுமானம்!

      Delete
  16. இனிய ரமலான் நல்வாழ்த்துகள் !!!!!!!

    ReplyDelete
  17. Id Mubarak! Looking ahead for my courier delivery!

    ReplyDelete
  18. பின்னட்டையை கண்ணுல காட்டாம விட்டிருக்கார்னா அதுல ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிற மாதிரியே... இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : பதிவு போட்ட லேப்டாப்பில் பின்னட்டை பைல் இல்லைங்கிறது தான் காரணம் ஷெர்லாக் பூனை அவர்களே..!

      Delete
    2. ஓ மை காட்! நீங்க எப்பத்தான் தூங்கறீங்க எடிட்டர் சார்? நடுசாமத்துல பதிவு, பேயுரங்கும் வேளையில் பின்னூட்டப் பதில், அதிகாலையில் கிண்டலாய் பின்னூட்டம்...
      எப்படி சாத்தியமாகுது உங்களுக்கு? ஒருவேளை, ஓவரா விழிச்சிருந்து விழிச்சிருந்துதான் உங்க கண்ணு அப்படி...

      Delete
    3. நம்மோடு உரையாடுவது அவருக்கு பிடித்தமானது போலும்,அதனால்தான் நேரம் ஒரு சுமையாக தெரியவில்லை.

      Delete
    4. @ FRIENDS : சந்தா Z -க்கு திகில் கதைகள் தேடுவதெனில் பேய்களோடு கைகோர்த்துக் கொண்டால் தானே ஒரு firsthand அனுபவம் கிடைக்கும் ? அதுனாலே தான் அவை உலாற்றும் வேளைகளில் முழித்துக் கிடக்க வேண்டியுள்ளதோ ?

      Delete
    5. அடடே! சந்தா-Zக்கு பேய்க் கதைகள் எல்லாம் ரெடியாகிட்டிருக்கா?!! சூப்பர் எடிட்டர் சார்!! எவ்வளவு பயங்கரமான பேய்க் கதைனாலும் கொஞ்சூண்டு மட்டும்தான் பயப்படுவேனாக்கும்! ( அதென்னமோ தெரியலை... கல்யாணத்துக்கு அப்புறம் இந்த பேய்-பிசாசுகள் எல்லாம் ரொம்ப அப்பிராணி ஜீவன்களா தெரியறது)

      Delete
    6. //அதென்னமோ தெரியலை... கல்யாணத்துக்கு அப்புறம் இந்த பேய்-பிசாசுகள் எல்லாம் ரொம்ப அப்பிராணி ஜீவன்களா தெரியறது//

      LOLz :P

      Delete
    7. உண்மை செயலாளரே கல்யாணத்துக்கு முன்பு சற்று பயம் தெரியும் இப்போதெல்லாம் பயமா எனக்கா ஹாஹாஹா

      Delete
  19. புக் அனுப்பியாச்சா ஹைய்யா சூப்பர்.

    ReplyDelete
  20. நெசம்மாவே வாங்கியாச்சு ...எம்மாம் பெரிய பார்சல். வீட்டுக்கு போய் பிரிச்சுட்டு....

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்டீல்

      நேத்து நீங்க 'புக்கு வாங்கியாச்சு'னு விளையாட்டுக்கு போட்டதை நம்பி, கொரியர் ஆபீஸுக்குப் போய் தேடிப் பார்த்து ஏமாந்த கதையும் நடந்துச்சு! இப்பிடி பண்றீங்களேம்மா...

      Delete
    2. நானும் நொடிப்பொழதில் ஏமாந்து விட்டேன்.!

      Delete
    3. சாரி நண்பர்களே....உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு என்ன மன்னிச்சு விட்ருவீங்க... இல்லாட்டியும் மன்னிச்சு விட்ருங்க

      Delete
    4. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @ // உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு //
      அப்படினா அடிச்சி நொறுக்கி விடுவோம் ஸ்டீல்!! இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க பார்காதிங்க :-)

      Delete
    5. //உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு என்ன மன்னிச்சு //

      கொஞ்சம் லாஜிக் இடிக்குதே ஸ்டீல்...! வேணுமின்னா எங்க வீட்டு பெரியப்பா, சித்தப்பா - இப்படி ஏதாவது... :D

      Delete
    6. உங்க குழந்தைகளின் வருங்கால குழந்தைகளுக்கா தாத்தா ...😆

      Delete
  21. ஐயம் வெயிட்டிங் ....


    கொரியர் போன் தகவலுக்கு ....

    ReplyDelete
  22. நண்பர்களே புத்தகத்தில் குற்றம் பார்க்கின் கடைசி பக்கத்து விளம்பரத்தை பார்த்ததும் அந்த கால பவளச்சிலை மர்மம் மற்றும் பல அற்புதமான விரைவில் வருது விளம்பரங்கள் அந்த கால நண்பர்களுக்கு நினைவில் வரவில்லை என்றால் சத்தியமாக நம்ப மாட்டேன் .

    ReplyDelete
  23. முஸ்லீம் சகோதரர்களுக்கு இனிய ரமலான் திருநாள் வாழ்த்துகள் .

    ReplyDelete
  24. Sir கடந்த முன்று மாதங்களில் புத்தகங்கள் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை ,போன தடவை இங்கே பதிவு செய்த பின் புத்தகங்கள் வந்து சேர்ந்தது இன்று காலையில் கிடைக்க வேண்டிய புத்தகங்கள் இன்று வர வில்லை விசாரித்து விட்டீன் உங்கள் ஆபிசில்,கேட்டால் அனுப்பி விட்டேன் என்று சொல்கிறார்கள் . சந்தா கட்டி குறித்த நேரத்தில் புத்தகங்கள் வரமட்டேகுது. சார் இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. Ranjith Ranjith : எல்லாப் பிரதிகளையும் நேற்றைய கூரியர்களில் அனுப்பி விட்டோம் சார் !

      சிவகாசி போன்ற சிறுநகரங்களிலிருந்து செயல்படும் கூரியர் நிறுவனங்களின் ஆட்பலம் சொற்பமே ! DTDC அந்த வகையில் தேவலை - புக்கிங் செய்தால் அன்று மாலையே ரசீதுகளைத் தந்துவிடுவார்கள்.

      ஆனால் ST -ல் ஓரிரு நாட்கள் கழிந்த பின்னரே புக்கிங் ரசீதுகள் எங்கள் கைகளுக்கு வந்திடும். மெயின் ஆபீஸ் ; கிளை புக்கிங் ஆபீஸ் என இரு இடங்களில் பிரித்துக் கொடுத்தாலும் ரசீதுகள் உடனுக்குடன் நமக்குத் தரப்படுவதில்லை ! நிலவரம் இதுவே... !

      So நீங்கள் அலுவலகத்தில் கேட்டால் - "அனுப்பி விட்டோமே சார் !" என்பதைத் தாண்டி வேறு பதில் சொல்ல மார்க்கமிராது அவர்களிடம் !

      Delete
    2. Sir உங்கள் ஊரில் DTDC.ST courier ஒரே ஆபிஸ் தான். ஆனால் எங்கள் ஊரில் நான் dtdc தேடி கண்டு பிடிக்க வேண்டும், எங்களுக்கு வசதியான கொரியர்தான் நாங்கள் விரும்ப முடியும் இத்தனை மாதம் குறித்த நேரத்தில் வந்த கொரியர் சர்விஸ்தான் கடந்த 3மாதமாய் சரியாக வரவில்லை என்றால் ரெகுலர் கஸ்டமர் ஆகிய நிங்கள் சொன்னால் அவர்கள் சரி செய்வார்கள்.அதை விட்டு கேள்வியை எனக்கே திருப்பினால் எப்படி?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  25. இந்த மாத புத்தகம்கள் 5 என்றால் அவை எவை:
    1. டெக்ஸ்
    2 & 3. சிக்-பில் 2 புத்தகம்
    4. இமயத்தில் மாயாவி

    இன்னொன்று என்ன? மறந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் தான் நம் ஆதர்ஸ் ஆண்டு மலா் சகோ

      Delete
  26. Replies
    1. ஆமாம் சரி! சுத்தமாக மறந்து விட்டேன்!!

      வரவு நல்வரவு ஆகட்டும் அரவிந்த்!

      Delete
  27. ஈரோடு புத்தக திருவிழாவிற்கு நான் வருவது ஏறத்தாள உறுதி, முன்பதிவு செய்துவிட்டேன்! சனிக்கிழமை (august 6) முழுவதும் நண்பர்களுடன் செலவிட ரெடியாகி விட்டேன்.

    ReplyDelete
  28. Replies
    1. சாமி எனக்கு உண்மை தெரியனும்! ஏழு மாதம்கள் ஓடி விட்டது. சந்தா-z பற்றி இன்னும் தகவல் இல்லை. முக்கியமா தோர்கல் எப்போது வருவார் என்றே தெரியவில்லை :-( இதை உறுதிபடுத்தினால் எனது ஈரோடு புத்தக திருவிழாவிற்கு வீட்டில்இருந்து உடனே விசா கிடைத்துவிடும்.

      ஏதாவது கருணை காட்டுங்க சாமி!

      Delete
    2. பரணி ஈரோட்டில் உங்களை காண ஆவலாக உள்ளேன் அதே போல் ஸ்டீல் கிளாவையும் சந்திக்க பெரு ஆவலாக இருக்கிறேன்

      Delete
    3. பரணி ஆசிரியர் சர்ப்ரைசாக மூன்று கதைகளை ஹார்டு பௌண்டில்....தோர்களத்தான் வெளியிடத் திட்டம் ..

      இப்படிக்கு
      பட்சி

      Delete
    4. தோர்கல் இல்லையென்று செண்னை புக் பேரில் ஆசிரியர் சொன்னார் நண்பரே

      Delete
    5. //பரணி ஈரோட்டில் உங்களை காண ஆவலாக உள்ளேன் அதே போல் ஸ்டீல் கிளாவையும் சந்திக்க பெரு ஆவலாக இருக்கிறேன்// +1

      Delete
    6. ஈரோடில் இத்தாலி குண்டு புத்தகத்தை காண பெற்று கொள்ள தயாராகி விட்டேன்!!

      Senthil Sathya @ இந்த வருடம் கண்டிப்பாக தோர்கல் வரும்! வரும்! கண்டிப்பாக வரும்!! ஆசிரியர் மேல் உள்ள நம்பிக்கையில் இதனை சொல்கிறேன்!!

      Delete
    7. நிச்சயம் இது சத்தியம்...நல்லா பாருங்க சாத்தியமில்லை ...சத்தியம்

      Delete
    8. தோர்கல் கண்டிப்பாக வரும் நண்பரே ஈரோட்டில் வருமா என்பது தான் சந்தேகம்

      Delete
    9. Mahendran Paramasivam @ இந்த மதுரை நண்பரை காண ஆவலுடன் இருக்கிறேன்!

      Delete
  29. நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவர்க்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  30. அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள் :)

    ReplyDelete
  31. ST, DTDC எதிலும் பார்சல் வரவில்லையாம். நேரில் போய் புலன் விசாரனை பண்ணிட்டு வந்துட்டேன்.!
    ஆறாம் தேதியும் போயே போச்சு. இனி நாளைக்குத்தானா இல்லை இன்னும் தள்ளிப்போகுமோ தெரியவில்லை.

    ஆர்டின்கள் மூவரும் ஜானியோடு இணைந்து பெட்டி பார்னோவ்ஸ்கியை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத பொறாமைப் பிடித்த அயல்நாட்டினரின் சதிதான் இது என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்.

    ReplyDelete
  32. சிவகாசி இந்தஊர் பெயரை கேட்டாலேசிறுவயதில் இருந்தே தீபாவளி வெடி என்பதை தாண்டி ஒரு வித பயத்துடன் அனுதாபம் இருக்கும்.நான் எப்போது நமது லயனில் இணைந்தேணோ அன்று முதல் மகிழ்ச்சியும் இணைந்து கொண்டது நன்றி நமது ஆபிஷிம் விபத்து நடந்த இடமும் எவ்வளவு தூரம் பணிபுரியும் அனைவரும்நலம்தானே

    ReplyDelete
  33. ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த எடிட்டர் , சகோதரர்கள் மற்றும் சகோதரி கடல் யாழ் என அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  34. இந்த முறை எனக்கும் புத்தகம் வரவில்லையாம் ...கொரியர் தகவல் ...;-(

    ReplyDelete
    Replies
    1. பெட்டியை பழித்ததால் பொட்டி வரவில்லையோ ....;-(

      Delete
  35. இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும். இனிய ரம்ஜான் தின வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  36. நமது காமிக்ஸில் என்ன மாறுதல்கள் செய்யலாம்..?ன்னு சில வருஷம் முன்னாடி திரு விஜயன் கேட்டபோது...சொல்லபட்ட ஒருமுக்கிய பரிந்துரை பார்கோடுகள்.

    அதை முத்துகாமிக்ஸ் 350 முதல் ஜூனியர் விக்ரம் சொன்னதின் பேரில் நடைமுறைக்கு கொண்டுவந்தார் எடிட்டர், அதென்ன ஜூனியர் சொல்லி வந்தது...? என ஒரு கேள்வி சின்னதாய் எல்லோரையும் போலவே எனக்கும் இருந்தது. அதன் விடையை இந்த புத்தகதிருவிழாவில் கண்கூடாக பார்த்தேன்..!

    எல்லோரும் செய்றாங்க...அதை எப்படி பயன்படுத்தறதோ...? நாமும் செய்வோம் என கடனுக்கு செய்யாமல்...அட்டை அலங்காரத்துக்கு செய்யாமல்..'இதை..இப்படி செய்தால்...பலன் இப்படி...அதை நான் இப்படி செயல்படுத்துவேன்' என பொறுப்பை ஒருவர் [ஜூனியர்] உணர்ந்து எடுத்துக்கொண்ட பின்...எடிட்டர் செய்திருப்பதை [ அவர் ஸ்டைலை] பாரட்டத்தான் வேண்டும்.

    சனிக்கிழமை...மாலை...புத்தகதிருவிழா கூட்டம்...கைநிறைய காமிக்ஸ் வைத்துகொண்டு பில் போட கிட்டத்தட்ட ஒரு குட்டி வரிசையே சேர்ந்துவிட்டது. அந்த வேர்வை கசகசப்பில் சேல்ஸ் மேனேஜர் கணேசனும்,அவர் உதவியாளரும் பில் போடவும்,பணம் வாங்கவும் தடுமாறிகொண்டிருந்தார்கள். ஈரோடு விஜய்,செந்தில்சத்யா இன்னும் சில நண்பர்கள் உதவியும் ஒன்றும் வேலைக்காகலை.!

    அந்த மாலையில் லேப்டாப் பையுடன் வந்த ஜூனியர்+எடிட்டர்...நின்றிருந்த வரிசை பார்த்து வேர்வை இன்னும் [சந்தோஷமாக] வேகமாக ஊறத்தொடங்கியது. பையிலிருந்து குட்டி லாப்டாப்+பார்கோடு ஸ்கேனர் எடுத்து..மடமடவென்று வேலையை ஆரம்பித்தார் ஜூனியர். வரிசையில் இருந்த புத்தகங்களை ஸ்கேன் செய்து, பில்லை பிரிண்டரில் எடுத்து கொடுக்க...அதுவரையில் பத்துநிமிடமாய் தலைசொறிந்துகொண்டிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு 'பளிச்'..! அடுத்து என்னவொரு வேகமான பில்.. ஸ்கேன்ஸ்.. பட்டுவா... அடடா..முன்னேற்றத்தை நோக்கி மேலும் ஒரு அடி..!

    'அட்டையில் அழங்கரிப்பதல்ல பார்கோட்டின் நோக்கம்...அதை பயன்படுத்தும் பெறுப்பும், திறனும் நம் கைக்கு வந்தபின்னே...அந்த பொறுப்பை எடுத்துகொள்ள நம்மாள் முன்வந்தபின்னே தான் அதற்கு வடிவம்..' என்ற திரு விஜயன் அவர்களின் கோட்பாட்டின் முழுமையை... பார்கோட்டின் வெள்ளோட்டத்தில் நன்றாகவே உணரமுடிந்தது..! இங்கு ஜூனியருக்கு ஒரு பாராட்டுக்கள்..!

    அந்த வெள்ளோட்டதருணம் இதோ...இங்கே'கிளிக்'

    [ கா.தீ.அ.ஆ.கூட்டம் -16 ]

    ReplyDelete
    Replies
    1. ஜூனியர் எடிட்டரின் இதுபோன்ற முயற்சிகள் நிச்சயம் பாராட்டுக்குரியவையே!! புயல் வேகத்தில் அவர் இயங்கியதையும், நம் நண்பர்கள் அதை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்ததும், இதையெல்லாம் நம் எடிட்டர் சற்றே எட்ட நின்று ரசித்ததும் - புத்தகத் திருவிழாவின் குட்டி குட்டி கவிதைகள்!

      Delete
  37. "ஒரு கடுப்பேற்றிய படலம்"
    என் வீட்டிற்கும் கூரியர் அலுவலகத்துக்கும் போய்வர25 கி.மீ.தூரத்துக்கும் அதிகம்..இன்னும் சில மாதங்களுக்கு என்னால் பைக் ஓட்ட இயலாது. கூரியர் வரும் நேரத்தில் நாம் எங்காவது வெளியே சென்றிருப்போம்(வீட்டிலும் 7 மாதமாக நான் தனியே உள்ளதால் கூரியர் அலுவலகம் சென்றுதான் வாங்கிவருவது வழக்கமாகிவிட்டது) இன்று ஒருநாள் வீட்டிலிருப்பேன். இந்தவாரம் முழுக்க சென்னை பயணம். பல சிக்கல்களுக்கு ஆறுதலாக இம்மாத புத்தகங்கள் துணையிருக்கும் என்று ஆவலோடு "எடிட்டரின் பதிவை" நம்பி போய் வர ஒரு ஆட்டோவை பேசி (250 ரூபாய் தண்டம்!!)ஆவலுடன் கூரியர்
    அலுவலகம் சென்றால் வாசலில் அலுவலக ஊழியர் தயாராக நிற்கிறார். என்னை உட்கார வைத்து நெற்றியில் நாமத்தை தீட்டி " வேன் லோடு இறக்கிவிட்டு போய்விட்டது புத்தகம் ஏதும் வரவில்லை!!" என்கிறார். இடையில் ஒரு குண்டை வேறு போடுகிறார். "கடலூருக்கு பதிலாக கூடலூருக்கு போயிருக்கலாம்" என்று!!! ஏற்கனவே ஆசிரியர் பண்ண குளறுபடியால் புத்தகம் அனுப்பியதே தாமதம். இதில் கூரியர்காரர்களின் சேட்டை வேறு....
    இன்னும் பத்து நாளைக்கு புத்தகத்தை கண்ணால் காண இயலாது என்பதால் மனம் நிறைய கோபம்தான் வருகிறது.ஆசிரியரின் குளறுபடி-
    "ஒவ்வொரு முறையும் ரோஜர் கதை ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகிறதென்றால் எதற்கு ரோஜரை இந்த ஆண்டு வெளியீடுகளில் சேர்க்கவேண்டும். ஆசிரியரின் மேஜைமேல் தூங்கும் காரிகன், ரிப்கெர்பி, சார்லி போன்றோரோடு ரோஜரை தூக்கி எறியவேண்டியதுதானே. தெரிந்தே ரோஜரை வெளியிடவேண்டியது. அப்புறம் மொக்கைக்கு ஒரு மருந்து தடவுவது!! இந்த ஆண்டு ரோஜருக்கு கடைசி நேரத்தில் கல்தா கொடுப்பது. (நான் விரும்பி பணம் செலுத்தியது ரோஜருக்குத்தான்.)ஏன் இந்த தடுமாற்றம். சில வாசகர்கள் "சூப்பர் சிக்ஸ் சந்தாவுக்கு என்ன அவசரம்?" என கேள்வி எழுப்புகையில் புரியாத அர்த்தம் இப்போது புரிகிறது. அதிலாவது என்ன கதை தேர்வு செய்கிறீர்களோ அதில் உறுதியாக இருங்கள்.இல்லை ஒவ்வொருமுறையும் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என்று பெரிய எழுத்தில் விளம்பரம் செய்யுங்கள்." சொல்ல வருத்தமாக இருந்தாலும்
    வேறு வழியில்லாமல் நமது காமிக்ஸ் மீதுள்ள காதல் இவ்வாறு பேச வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆ..ஆனால் திரு.ATR அவர்களே... ஏற்கனவே வெளியான புத்தகங்களையே படிக்க நேரமில்லாமல் அலைந்து கொண்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு நீங்கள் கூறிய ஞாபகம் இருக்கிறதே... !!! ஒருவேளை, அதையெல்லாம் படிச்சு முடிச்சுட்டீங்களோ என்னவோ?

      Delete
    2. @ இத்தாலியாரே

      ATR கிடைச்ச மாதிரி தனிமை வேறுயாருக்கு கிடைக்கும்...? 250 ரூபாய் செலவு செஞ்சி...25 கிலோமீட்டர் போய் பார்சலை வாங்குறவர்...எப்பவோ எல்லாம் கரைச்சி குடிச்சிருப்பார்.! படிச்சதமட்டும் கொஞ்சம்கூட காட்டிக்கவே மாட்டேங்கிறார், இந்த தன்னடக்கம் தான் புரியாதபுதிரா இருக்கு.....கிஈர்ர்ர்ரர்...

      Delete
    3. ஒருவேளை, புத்தகங்களை கொரியர் அலுவலகத்திலிருந்து வாங்கி பத்திரப்படுத்திவிட்டு வெளியூர் பயணம் மேற்கொள்வது உங்களது நோக்கமாக இருந்திருக்கலாம். பணவிரயம் வருத்தத்திற்குரியதே! :(

      Delete
    4. Suggestion- please check with courier office prior going there to collect any parcel. This save lot of time. Nothing to blame our editor on this. Think about this friends.

      Delete
    5. AT Rajan : துருக்கிய விமான நிலைய வெடிவிபத்து ; பங்களாதேஷில் நடந்த கொலைவெறித்த தாண்டவம் ; நேற்றைய மத்திய மந்திரிசபை மாற்றம் - இப்போதைக்கு இவை மட்டும்தான் என் கணக்கில் சேர்க்கப்படாது உள்ளன சார் ! அதையும் என்னுடைய குளறுபடிப் பட்டியலில் சேர்த்து விட்டீர்களெனில் திருப்தியாக இருக்குமல்லவா ?

      "காமிக்ஸ் காதல்".."காமிக்ஸ் நேசம்" என்ற பெயரில் அவ்வப்போது என்னைச் சலவை பண்ணும் தருணங்களில் ஒரே ஒரு விஷயத்தை பலரும் பரவலாய் மறப்பது என்னவித மறதி என்பதை நண்பர் சென.ஆனா.விடம் ஏதேனும் ஒரு நாளில் கேட்டால் தேவலை என்று தோன்றியது. ஒரு நாளின் சில மணி நேரங்களை காமிக்ஸின் பொருட்டு செலவிடும் தருணங்களில் பிரவாகமெடுக்கும் "காமிக்ஸ் நேசம்" - நாளொன்றுக்கு 12 மணி நேரத்துக்கு குறைவிலாது செலவிடும் என்னிடம் இராதென்று உங்களை நினைக்கச் செய்வது எதுவோ - தெரியவில்லையே ?

      ரோஜரின் கதை வராது போனதால் நீலவானம் தரையிறங்கி ; உங்களது சந்தா தொகை வீணாகி விட்டதாய் தோன்றினால் - தயக்கமுமின்றி உங்கள் நஷ்டத்தை ஈடு செய்திடுவோம். ! ஒவ்வொரு முகத்திலும் ஒரு சந்தோஷப புன்னகை என்பதே லட்சியம் எனும் பொழுது எங்களால் சலனம் கொள்வானேன் ?

      Delete
    6. @ திரு விஜயன்

      //நாளொன்றுக்கு 12 மணி நேரத்துக்கு குறைவிலாது செலவிடும் என்னிடம் இராதென்று உங்களை நினைக்கச் செய்வது எதுவோ - தெரியவில்லையே ? //

      விடை ரொம்பவே சிம்பிள் ஸார்...சேலம் டெக்ஸ் பாணியில் சொல்லனும்ன்னா...பிரியாணி வாங்கி வேகவேகமா முகர்ந்து பாக்கறதோட சரி, அதை சாப்பிடாமல் இருக்கிறதுதான் ஸார் காரணம்..!ஒரு வாய் சாப்பிட்டால் கூட போதும், சுவை தெரிந்துவிடும்...அந்த அறிகுறியே தெரியலையே..ம்...

      Delete
    7. சமீபகாலமாக ஆசிரியர் பணத்தை பிரதானமாக்கி வாசகர்களை எடை போடுவது வருத்தத்துக்குரியது. ஒரு நடிகரின் படத்தை பார்க்க விருப்பப்பட்டு முன் பதிவு செய்கிறோம். ஆனால் கடைசி நேரத்தில் அந்த நடிகரின் படத்தை போடாமல் வேறு ஒருவரின் படத்தைதான் போடுவோம் இல்லையென்றால் பணத்தை வாங்கிகொள்ளுங்கள் என்றால் எனக்கு பணத்தைவிட அந்த நடிகரின் படத்தை காணமுடியாமல் போனதுதான் வருத்தமாக தெரியும்.

      Delete
    8. எடிட்டர் சார் நீங்கள் திருப்பி தருவதாக சொன்ன தொகையால் எந்த முகத்திலும் புன்னகையை வரவழைக்க வாய்ப்பேயில்லை என உங்களுக்கு புரியாமல் போனதேன்! (உங்களது நையாண்டியும் புரிகிறது)உங்கள் நேர்மையையோ, உங்களது அர்ப்பணிப்பையோ இங்கு யாரும் கேள்விக்குறியாக்கிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.என்னுடைய ஒரு வினா டயபாலிக்கை கழுவி கழுவி ஊற்றினார்கள். அதனால் அவரை தூக்கி விட்டேன் என்று கூறிய நீங்கள் காலத்தின் கால் சுவடுகளின்போது ரோஜரை கழுவி ஊற்றியதையும் பார்த்தீர்கள். மஞ்சள் நிழலின் போதும் அதுவேதான் நடந்தது.மொக்கைக்கு ஒரு மருந்து என தண்டமாக உங்கள் "பணத்தை" விரயமாக்கினீர்கள்.அப்புறம் எதற்கு டயபாலிக் போல ரோஜரை தூக்கி எறியாமல் வைத்திருக்கவேண்டும். கடைசி நேரத்தில் கல்தா கொடுக்க வேண்டும்? இதற்கு விடை நீங்கள் சொல்வதால் இறங்கிவந்த வானம் மேலேறிட வாய்ப்பில்லை என்பதால் என்னுடைய ஆதங்கம் இதுவென விட்டுவிடுங்கள்.

      Delete
    9. நண்பரே பொறுமையாக படியுங்கள் ...ஆசிருயர் பணத்தை திருப்பித் தருவதாக கூறவில்லை ...ரோஜரும் பின்னர் வரும் என்றே அதன் அர்த்தம் . முதல் நாள் வாங்கிட வேண்டும் என்ற ாதங்கம் புரிகிறது .ஆண்டு மலரில் சிறந்த கதைகள் மட்டுமே வரணும்ன ாசிரியரின் ஆதங்கமும் புரியட்டுமே நண்பரே .ஆசிரியர் வரவழைத்த ிரு கதைகளும் மொக்கை என்பதால் மாற்றியது தங்களுக்கும் புரியுமே .மேலும் மாற்றம் பெட்டி எனும் போது உங்கள் உற்ச்சாக மீட்டர் உயர்ந்நு ஆசிரியரையும் உற்ச்சாக படுத்த வேண்டுமல்லவா நண்பரே ...ஆசிரியர் முன்பு தொண்ணூறுகளில்பம்பரமாய் சுற்றி வேலை பார்த்த அதே உற்ச்சாகத்துடன் சுற்றி வர காரணங்களில் நீங்களும் உண்டல்லவா . இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலயில் சிறந்த ரோஜர் வராமலா போயிடுவார் .பெட்டிய வாங்னதும் உங்எள் வலிகள் குறைவது நிச்சயம் நண்பரே .

      Delete
    10. தோழர்களுக்கு.... (பத்து நாள் மண்டைக்குள் வைத்து இருப்பதைவிட இறக்கிவிட்டால் எனது வேலையை நிம்மதியாக பார்க்க முடியும்) நம் ஆசிரியர், சீனியர் ஆசிரியர் மற்றும் அவர்களது நிறுவனத்தை பற்றிய தவறான எனது பதிவு ஏதேனும் இதுவரை வந்ததாக காட்டினால் இன்றே
      நமது blog ஐ விட்டு விலகுகிறேன்.அவர் எப்படி நேர்மையாக செயல்படுகிறாரோ நானும் அப்படித்தான்.கடைசி நேர மாறுதலை குறை சொன்னது கூட காரணமாகத்தான்.இந்த வருடம் டெக்ஸ் புத்தகம் ஒன்றுக்கும் உதவாமல் பக்கங்கள் மடிந்து அப்படியே பைண்டிங்குடன் வந்தது. (இந்த தவறு பலமுறை நடந்துள்ளது.ஆனால் வேறுவேறு விதம். ஒரு ரோஜர் கதை பாதி பக்கங்கள் கிழிந்து, ஒரு ரிப்போர்டர் ஜானி கதை ஒவ்வொரு பக்கமும் மை அப்பி...பட்டியல் போதும்)அதை என்ன பண்ணாலும் படிக்க இயலவில்லை. அதனால் பதிவில் "உங்களது தவறு இல்லையென்றாலும் கூரியரில் அனுப்பும் பிரதிகளை சரிபார்த்து அனுப்பச் சொல்லுங்கள்" என்றேன். ஒரு பத்து நாளில் அதே புத்தகம் நல்ல நிலையில் வந்தது. ஏன்டா சொன்னோம் என்று ஆகிவிட்டது. அவருக்கு ₹100 நட்டம்தானே என்ற உறுத்தல்.சென்ற முறை (மறுபடி
      எந்த புத்தகம் என்று சொல்லி யாசகம் பெற விரும்பவில்லை) பாதிபுத்தகம் சரியாக இருந்தது. மீதி பாதி புத்தகம் முதல் பாதியே மறுபடி பைண்டிங் பண்ணி உள்ளது. பாதி படித்து விட்டுவிட்டேன். நெய்வேலி புத்தக விழாவில் கிடைத்தால் வேறு வாங்கிக் கொள்ளலாம் என்று வைத்திருக்கிறேன். இன்று பணத்தை பற்றி ஆசிரியர் சொன்னதால் என்னுடைய நேர்மையை நானும் சொல்லவேண்டுமல்லவா? அந்த புத்தகத்தை ஸ்கேன் பண்ணி மெயில் அனுப்பி வேறு கேட்டிருக்க முடியாதா? யாரிடமும் யாசகம் பெற வேண்டிய நிலை எனக்கு இல்லை. பொறுமையாக காத்து வாங்கும் புத்தகத்துக்கே இந்த நிலை என்றால் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக தயார் பண்ணி அனுப்பினால் எந்த அழகில் வருமென்ற எண்ணத்தில் நான் சொன்னது தான் அது.( திரு.ஸ்டீல் உங்களது சந்தா தொகை வீணாகிவிட்டதாக தோன்றினால் திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்பதற்கு என்ன அர்த்தம். நான் பதிவிட்ட வார்த்தைகள் வேறாக இருந்தாலும் அர்த்தம் ஒன்றுதானே.சரியாக பாருங்கள்)சமீபகாலமாக எந்த குறையும் சொல்லக்கூடாது மீறி சொன்னால் பணத்தை வாங்கிக் கொள் என்பது அவரளவில் சரியான வாதமாக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை தவறென்றால் கூறுவேன். அது அவர் போடும் யாசகத்துக்காக அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டால் சரி.

      Delete
  38. அனைவருக்கும் இனிய ரம்ஜான் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. புத்தகங்களை பெற்ற தோழர்கள் சந்தோஷமிகுதியால் அவைகளை பற்றி விவரிக்க விவரிக்க tabல் அதை படிக்கையில் எனக்கு பல்ஸ் எகிறப் போகிறது. அதிலும் நேற்று" புத்தகம் வந்து விட்டது" என்ற குண்டை வீசிய தோழர் ஸ்டீல் பதிவை ஜாக்கிரதையாக தாண்ட வேண்டும்.அவர் காமிக்ஸை உருவாக்கியவரை விட அதிகமாகவே கதையை சொல்வார்!!
    "எடிட்டர் அனுப்பும் பெட்டியை பிரித்து உள்ளிருக்கும் பெட்டியை பார்க்கும் வரை எனக்கு ஆயுள் கெட்டியாக இருக்க வேண்டுமே" என்று நான் போட்ட பதிவு..... என்னையே மிரட்டுகிறது!! ஒரு பத்து நாள் தோழர்களின் பதிவுகளை (ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டே ) தாண்டித்தாண்டி படிக்கவேண்டும்!!!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்களுக்காகவே எனது எண்ணங்களை பதிவிடாமல் வைத்திருக்கிறேன் , ஏகமாய் கட்டுபடுத்தி save செய்துள்ளேன் ...உங்க கைக்கும் பிற நண்பர்கள கைக்கும் கிடைத்ததும் உடைக்கிறேன் .நான் பொய் சொன்னதும் ..அந்த ஏமாற்றமும்..அடுத்த நாளிலேயே மீண்டும் ஏமாந்ததும் தங்களை இப்படி பேச வைத்து விட்டது ....கோவிச்சுட்டீங்களா...கோவிச்சுக்குங்க...கோவிச்சுங்எஉங்க நண்பரே

      Delete
    2. ஸ்டீல்.உங்களது விமர்சனத்தை தாராளமாக பதிவிடுங்கள் மற்ற தோழர்கள் ஆட்சேபிக்காத பட்சத்தில். நேற்று நீங்கள் பொய் சொன்னதால் கோபமா? யார் சொன்னது? தோழர்களிடம் விளையாடாமல் வேறு யாரிடம் விளையாடமுடியும்.நீங்கள் என்னை திட்டினால்கூட கவலைபடமாட்டேன். ஏனென்றால் இங்குள்ள பலரை வாழ்க்கையில் ஒருமுறையாவது சந்திக்க வாய்ப்பு வரும்.அப்போது நாம் முறைத்துக் கொண்டு இருக்கக்கூடாதல்லவா? எனக்கு நாளை பெரும் தலைவலி ஒன்று காத்திருக்கிறது. அடிக்கடி அலைந்ததால் அடிபட்ட காலில் ஒரு வாரமாக பயங்கர வலி.இந்த நிலையில் புத்தகம் வராததை பெரியகுறையாக எண்ணி பதிவிட்டது என் தவறுதான்.இன்றோடு அதை மறந்துவிடுங்கள்.என்னை அல்ல.

      Delete
  40. ஆண்டுமலர் என்றால் பெரும்பாலும் சொதப்பல் தான்...
    இந்த ஆண்டு மட்டும் மாறிடுமா என்ன!!!...
    எந்த கொரியரில் அனுப்பி இருக்காங்கன்னே தெரியலயே...ஆண்டவனே...
    காலை முதல் ஒவ்வொரு கொரியர் ஆபீசா போய் அலைந்தது தான் மிச்சம்...
    Dtdc ல் 6மாதமாக சரியாக தான் வந்தது.ஆனால் இந்த மாதம் ஆண்டு மலர் அல்லவா???அவுங்களும் சொதப்பிட்டாங்ளான்னு தெரியலயே...
    Dtdc ல் விசாரித்து விட்டு ,St +Dtdc 2க்கும் பார்சல் வரும் மெயின் ஹப்புக்கு போய் பாரத்து அங்கியும் வர்லயாம்...
    இனி வரும்போது வரட்டும் என இருக்க வேண்டியது தான் , ஆண்டுமலர் என்ற ஆர்வம் வடியத்தொடங்கி விட்டது.ஹூம்...

    ஒராண்டு க்கு முன்னரே பணத்தை கட்டி விட்டு காத்திருக்கும் சந்தா நண்பர்களுக்கு அனுப்புவதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் சார்...

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : சொல்லுங்களேன் சார் - என்ன செய்வதென்று ? கேட்டுத் தெரிந்து கொள்கிறேனே ?

      Delete
    2. ஹா..ஹா...சார் ,என்னத்த சொல்ல???....
      பெட்டி பர்னோவ்ஸ்கியின் தரிசனம் இன்று இல்லை என்ற ரிசல்ட்ஸ் தெரிய வந்தது.
      நாளைக்கு மீண்டும் படையெடுப்பு வேறென்ன செய்ய இயலும்!!!...

      Delete
    3. @ டெக்ஸ் விஜய்

      //ஆண்டுமலர் என்ற ஆர்வம் வடியத்தொடங்கி விட்டது.ஹூம்...

      ஒராண்டு க்கு முன்னரே பணத்தை கட்டி விட்டு காத்திருக்கும் சந்தா நண்பர்களுக்கு அனுப்புவதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் சார் ///

      மேலே நீங்கள் கொஞ்சமாய் சிரித்துவைத்தாலும் மேற்கண்ட வரிகள் சற்று வேதனையளிப்பதாகவே உள்ளன. எடிட்டரின் மனம் இன்னும் சற்று அதிகமாய் புண்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு! :( இப்படிப்பட்ட வரிகளை; அதுவும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை!

      நம்பொருட்டு அவர் எவ்வளவோ சிரமப்படுகிறார்; அவருக்காக நாம் இன்னும் ஓரிரு நாட்கள் பொறுத்துப் போவதால் அப்படியென்ன குறைந்துவிடப்போகிறது? ஹூம்...!

      Delete
    4. உங்களிடம் கோரிக்கை வைக்க அனுமதிக்கிறீர்கள் ,ஆகவே கேட்கிறோம் சார்.இதில் உங்களை சங்கடப்படுத்தும் எண்ணம் துளியும் இல்லை சார்...இதே வேறு நிறுவனத்திடம் முன்பதிவு செய்யும்போது அவர்கள் அனுப்பும் வரை காத்திருப்பதை தவிர நாங்கள் செய்யக்கூடியது வேறொன்றுமில்லை சார்.
      கொரியரில் அனுப்புவதை உறுதி செய்வது வரை மட்டுமே உங்கள் கன்ரோல் சார் . அதற்கு பிறகு ஆயிரம் தடங்கல்கள் ஏற்படலாம்,உதாரணமாக சென்ற மாதம் 2வண்டிகளில் சேலத்திற்கு பார்சல்கள் வந்தன.ஒரு வண்டி டைமிற்கு வந்தது.ஆனால் மற்றது பழுதாகி 30கிலோ மீட்டர்கள் முன்பே நின்று போனது. பிறகு வேறு ஏற்பாடு செய்து அந்த பார்சல்கள் வருவதற்கு அடுத்த நாள் ஆகிட்டது. இதுபோன்ற சமயங்களில் காத்திருப்பதை தாண்டி ,புத்தகங்கள் கிடைக்கலயே என்ற ஆதங்கத்தை தாண்டி வேறுஎன்ன செய்ய இயலும் சார்.

      Delete
    5. மனித காதல் மட்டுமல்ல; இந்தக் காமிக்ஸ் காதலும் அளவுக்கு மீறினால் துன்பமே எஞ்சியிருக்கும்! வண்டியில் ஏற்றப்படும் சுமை அளவுக்கு அதிகமாகிக் கொண்டே போனால் அதன் அச்சாணி முறிந்துவிடும்!

      நண்பர்கள் புரிந்துகொண்டால் சரி!

      Delete
    6. சேலம் Tex விஜயராகவன் @
      // நாளைக்கு மீண்டும் படையெடுப்பு வேறென்ன செய்ய இயலும்!!!. //

      இது தான் காமிக்ஸ் காதல்!!

      Delete
    7. Erode VIJAY @
      // மனித காதல் மட்டுமல்ல; இந்தக் காமிக்ஸ் காதலும் அளவுக்கு மீறினால் துன்பமே எஞ்சியிருக்கும்! வண்டியில் ஏற்றப்படும் சுமை அளவுக்கு அதிகமாகிக் கொண்டே போனால் அதன் அச்சாணி முறிந்துவிடும்! //

      மிகவும் அருமையான வார்த்தை வரிகள்! உண்மை!! இதனை ஆமோதிக்கிறேன்!

      Delete
    8. @ திரு விஜயன்

      // சொல்லுங்களேன் சார் - என்ன செய்வதென்று ? கேட்டுத் தெரிந்து கொள்கிறேனே ?//

      இதை பாத்து ஒருதபா சிரிங்க ஸார்..எல்லாம் சரியாபோய்டும்...இங்கே'கிளிக்'

      Delete
    9. அய்யா டெக்ஸ்ம் கார்சும்...
      விட்ராதீங்க தல அந்த பார் ஓனரை.நன்கு "கவனி"த்து விசாரிங்க தல...

      Delete
    10. திருத்தபட்ட மறுபதிப்பு...இங்கே'கிளிக்'

      நன்றி:இளமாறன்.K

      Delete
    11. விஜய் @
      //ஆண்டுமலர் என்ற ஆர்வம் வடியத்தொடங்கி விட்டது.ஹூம்...///---இதை இப்படி நான் சொல்லி இருக்கலாம்...
      ///ஆண்டிமலர் பற்றிய ஆர்வத்தை இன்னும் ஒருநாள் நீட்டிப்பு செய்துவிட்டீர்களே சார்.ஓவ்///..
      ஆனால் மன சங்கடம் என்பது அனைவருக்கும் பொதுதானே????
      புத்தகங்கள் அனுப்பியாச்சா,என்று கடந்த 4நாட்களாக ஆர்வம் கொப்பளிக்க நண்பர்கள் கேள்வி கேட்டு கொண்டு இருந்தனர்.//நேற்று புத்தகங்கள் அனுப்பியாச்சு//-என்ற தகவலை யார் முதலில் அறிய அதிக உரிமை உடையவர்கள்????...
      ----இந்த கேளவிக்கு நீங்கள் விடை சொன்ன பிறகு தொடரலாம்,விஜய்.

      Delete
    12. @ சேலம் டெக்ஸ்

      பார் ஓனரா..???????????????????????

      கிர்ர்ரர்ர்ர்....எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பத் எடுத்துகொடுத்திருக்கார்...பின்னணி...போர்டு..பேப்பர்... பேப்பர் வெயிட்... அந்த எடிட்டருகே உண்டான டேபிள்..ஸ்டைல்...இதெல்லாம் கவனிக்காம.... அவுக்..அவுக்...

      Delete
    13. ஹா...ஹா....ஓவ்...மாயாசார்@ டெக்ஸும் கார்சனும் இப்படி ஒரு இடத்துக்கு போனாலோ, அந்த கவுண்டர்ல இருக்கும் ஆசிரியர் சாரின் போஸை பார்த்தாலோ டக்குனு என்ன தோன்றும்???...
      அந்த போஸை பார்த்தால்...வேறு எப்படி தோணும்...பர்ர்ரர்ர... ,

      இந்த வாரம் பூராவும் என் பெயர் டைகர் படித்து கொண்டு இருந்தேனா,அதுல இதுமாதிரி அந்த பார் சீனு மட்டுமே ஒரு 50இடங்களில் வந்து இருக்கும்.இன்னும் மூளையில் இருந்து அந்த நினைவுகள் போகல...

      Delete
    14. ஆசிரியருக்கு இன்று சோதனை....டெக்ஸ் வி.ரா. இந்த முறை ஆண்டு மலர் சிறப்பாய் வந்து அள்ளுவது நிச்சயம் .

      Delete
  41. courier: நமது ஆசிரியர் மற்றும் அலுவலக நண்பர்கள் புத்தகம்களை நேற்று அனுப்பிவிட்டார்கள் என்றால் அது இன்று கிடைத்துவிடும் என்று நம்பிக்கை கொள்வதில் தவறு இல்லை. அதே நேரம் நமக்கு புத்தகம் இன்று கைக்கு கிடைக்கவில்லை என்றால் ஆசிரியர் என்ன செய்ய முடியும் என்பதை சற்று நிதானமாக யோசிக்கவும்.

    எனக்கு பல முறை புத்தகம்கள் நமது அலுவலகத்தில் இருந்து அனுப்பி மூன்று நான்கு நாட்கள் கழித்தே கிடைத்துஉள்ளது. காரணம் கொரியர் அலுவலகத்தின் பார்சல்களை கையாளும் முறை மற்றும் அவர்களின் அலச்சியபோக்கு.

    DTDC எக்ஸ்பிரஸ் சர்வீஸ் இருக்கிறது, அனுப்பிய மறுநாள் பட்டுவாடா செய்து விடுவோம் என்ற உறுதி மொழியுடம் இருமடங்கு பணம் பெற்று கொண்டு, நான்கு நாட்கள் கழித்து பட்டுவாடா செய்கிறார்கள். காரணம் கேட்டால் ஏதாவது சொல்லி சமாளிக்கிறார்கள்.

    ST கூரியர் கடந்த 5 வருடம்களாக ஒழுங்காக (எந்த பார்சல் என்றாலும் 2-3 நாட்கள் கழித்துதான் கிடைக்கும் என்பது வேற விஷயம்) எனக்கு டெலிவெரி செய்தவர்கள் தீடிர் என்று சரியாக டெலிவரி செய்யவில்லை. காரணம் கேட்ட போது ஆள் இல்லை, சில நேரம் பார்சலை தொலைத்து விட்டார்கள், அலுவலகத்தில் உள்ளவர் பார்சலை கொண்டு வீட்டில் வைத்து கொண்டு விடுமுறையில் சென்று விட்டார். பலமுறை முறையிட்டும் இதை சரி செய்யவில்லை. கடைசியில் அவர்களிடம் தொடர்பை தூண்டித்து விட்டேன்.

    இது போல் அனைத்து நண்பர்களுக்கு இது போன்ற கூரியர் அனுபவம்கள் கண்டிப்பாக இருக்கும். எனவே நமது ஆசிரியரையோ நமது அலுவலக நண்பர்களையோ இதில் குற்றம் சொல்லுவதில் எந்த நியாயமும் இல்லை. நமது ஆசிரியர் பக்கம் தாமதம் என்றால் அவர் மனம் திறந்து ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை அனைவரும் அறிவர்.

    குறிப்பு: இன்று தொலை தொடர்பு வசதி வாய்ப்புகள் அதிகரித்து உள்ள நிலையில், கூரியர் அலுவலகம் செல்லும் முன் அவர்களிடம் ஒருமுறை போன் செய்து புத்தகம்/பார்சல் வந்து விட்டதா என விசாரித்து செல்வது நமது நேரம் மற்றும் மன உளைச்சலை குறைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பரணி சார் ஆசிரியரை எந்த விதத்திலும் குற்றவாளியாக்கவில்லை சார். அனைவர் எதிர்பார்ப்பையும் எகிற விட்ட ஆண்டுமலர் மாதம் இல்லையா சார்? ஒரு சாதாரண நடிகரின் படம் தள்ளிப் போவதற்கும் மிகப்பெரிய நடிகர்களின் பட ரிலீஸ் தள்ளிப் போவதற்கும் உள்ள வித்தியாசம் போலத்தான் இது. அந்த ஆதங்கத்தில் பேசுவதெல்லாம் புத்தகம் கையில் வந்தவுடன் எல்லா கசப்பும் பறந்து விடும்.இங்கு யாரும் விரோதிகளும் கிடையாது. ஆனால் அதற்காகஎதை சொன்னாலும் பணத்தை திரும்ப வாங்கிக்கொள் என்று கூறுவது ஆசிரியரிடம் சமீபகால வழக்கமாகிவிட்டது சரியா சார் ? இலவசமாக புத்தகத்தை தரவேண்டியுள்ளதால் இந்த மாற்றமோ? அதைக்கூட ஒருத்தரும் கேட்கவில்லை! இவராகத்தான் சொன்னார். நானும்கூட சொல்கிறேன். இந்த இலவச புத்தகத்தின் விலையை கேட்டால் தந்துவிடுகிறேனென்று.அது ஆசிரியர் கூறும் ஒவ்வொருத்தர் முகத்திலும் புன்னகை என்று அவரும் எடுத்துக் கொள்வாரா?

      Delete
    2. நண்பரே ஆசிரியர் துவக்கத்திலேயே கூறி விட்டார் ..அதாவது அந்த லக்கி கதைகள் வேண்டாம் என வேண்டுமென்றே வம்பிழுத்தவர்களுக்காக.. அதற்க்காக மட்டுமே வருபவர்களுக்காக ... உங்களுக்கு அப்படி கூறலியே ... இழப்பாய் ரோஜர் சிறப்பாய் வரப் போகிறார் என்றே ...

      Delete
    3. @ PfB

      தெளிவான கருத்துகள்! என்னுடைய நிலைப்பாடும் இதுவே!

      Delete
    4. பயணத்தின் போது பதிவு!! இது கோபமான பதிவல்ல! @ ஈரோடு விஜய் சைக்கிள் கேப்பில் ஆட்டோவா?
      தனிமையென்றால் ஈரோடு குசும்பா! முடிந்தால் ஈரோடு புத்தக விழாவில் சந்திக்கிறேன். அப்போது முதலில் பழைய பாக்கி கொட்டை தலையில் வாங்கிக்கொண்டு அப்புறம் கவனித்துக் கொள்கிறேன். (எனக்கு ஆட்டுக்கால் சூப் வேண்டும்.ஆட்டுக்கால் கிடைக்காவிட்டால் உங்கள் கால் சூப்பாக இருந்தாலும் பரவாயில்லை. நான் அட்ஜஸ்ட் செய்து கொள்வேன்.) எனது மாமியார் பெங்களூரில் வசிக்கிறார்..கடந்த டிசம்பரில் கார் மோதி முதுகெலும்பு முறிவு ஏற்பட்டதனால் என் மனைவி அவர்கள் எழுந்து நடமாடும் வரை கூட இருக்க கேட்டதால் அனுப்பிவிட்டு நேரம் கிடைக்கையில் நான் போய் பார்த்துவிட்டு வருவேன்.என் மகன் மரைன் இஞ்ஜினியரிங் முடித்து சிங்கப்பூரில் உள்ள அமெரிக்க கம்பெனியொன்றில் நவம்பர் மாதம் பணியில் சேர்ந்ததால் மறுபடி வர இன்னும் இரண்டுமாதம் ஆகும்.அதனால்தான் தனிமை. உடனே கிண்டல்! காமிக்ஸ் எதற்கு வாங்குவோம்? படிக்கத்தானே! படித்தபின்பு விமர்சனம் அவசியம் எழுத வேண்டுமா? தோழர்கள் தூள் கிளப்புகையில் நான் வேறா? ஒவ்வொருத்தரும் விமர்சனம் எழுத ஆரம்பித்தால்!!! காலட்சேபம் கேட்பதை போலாகிவிடும்!! (உங்களுக்கு நேரம் கிடைக்கிறது. ஒரே மூச்சில் படித்து விடுகிறீர்கள்.சில பிரச்னைகளால் என்னால் ஒரே தம்மில் படிக்க இயலவில்லை. விட்டு விட்டு படிக்கிறேன்.) தோழர் ஒருத்தர் கௌபாய்ஸ் ஈரோடு புத்தகவிழாவில் மோதுவோம் என்று உங்களை அழைத்திருக்கிறார். சகோ கடல் வேறு ஈரோட்டில் ஒரு வழி பண்ணுகிறேன் என்றிருக்கிறார்.என் மகன் அதற்குள் வந்துவிட்டால் அங்கு அழைத்து வருவேன். என் மகனின் உயரம் 6அடி நாலங்குலம். கராத்தேயில் பிளாக் பெல்ட். யூனிவர்சிடியில் ஜிம் கேப்டன்.( பொய்யல்ல. உண்மைதான்.) நீங்கள் இருவரும் தோழர்களை மகிழ்விக்க மோத வேண்டும். இது பற்றி கடல் அவர்கள் அபிப்பிராயத்தை தெரிவித்தால் நலமாக இருக்கும்!! சகோ கடல் விஜய் அவர்களின் குசும்பு தாங்கவில்லை.நல்ல முடிவாக சொல்லுங்கள்.(இவ்வளவு பேசுகிறேன் புத்தகவிழாவின் போது எனக்கு என்ன தடங்கல் வரப்போகிறதோ தெரியவில்லை!!)

      Delete
  42. பார்சல் கிடைத்தது. டிசர்ட் கிடைத்தது. மகிழ்ச்சி! :)

    ReplyDelete
  43. எடி சார் இந்த முறை திருப்பூர்க்கு கொரியரை லேட்டா அனுப்பச்சொல்லீட்டீங்க போல!!

    அதி காலை 5மணி
    காலை 8மணி
    காலை 10மணி

    ST & DTDC கொரியர் ஆபீஸை முற்றுகை இட்டும் இன்று வராதுங்க நாளைதான் வரும் என்று கூறிவிட்டார்கள்
    இரண்டு நாட்களாய் இன்று வருமென எதிர்பார்த்து
    என்ன ஒரு சோதனைகாலம் !!

    முதல்பிரதியா லபக்கலாம்ன்னு அலைந்து திரிந்ததுதான் மிச்சம்

    திருப்பூர் சின்ன ஊர் இல்லையே சார் ??

    ReplyDelete
  44. ஏடிஆர் சார் ...இதை இப்படியும் பார்க்கலாமே...

    பணம் போட்ட தயாரிப்பாளர் தான் விரும்பிய நாயகரை வைத்து அவ்வளவு செலவு செய்து எடுத்த படத்தை பார்த்து தன்னாலயே இதை பார்க்க முடிய வில்லையே ..தன்னை நம்பி பணத்தை கொடுத்து இந்த படத்தை காண்பித்து அவர்களுக்கு கடும் ஏமாற்றத்த்தை அளிப்பதை விட தனக்கு இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை அவர்கள் ஒரு நல்ல படத்தை பார்க்க ஏற்பாடு செய்யலாம் என்று முடிவெடுத்தால் அந்த தயாரிப்பாளர் நல்லவரா ..கெட்டவரா எனபதை தங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் ...;-)

    ReplyDelete
    Replies
    1. பரணிதரன் சார். இது வரை எந்த தயாரிப்பாளர் சார் படத்தை முழுவதும் எடுத்த பின்பு எல்லாம் தயாரான படத்தை தன்னாலேயே பார்க்க முடியவில்லை என்று நிறுத்தியிருக்கிறார் சார்? எனக்கு தெரியவில்லை! இதையே இப்படியும் பார்க்கலாமே சார். தயாரிப்பாளர்கள் ஓடுகிற குதிரையில் மட்டுமே பணம் கட்டுபவர்கள். தொடர்ந்து நஷ்டம் உண்டாக்கும் நடிகரை யார் பின் தொடர்ந்து செல்வார்கள். ரோஜர் ஒரு நொண்டிக்குதிரை என பல இதழ்களில் நிருபணமாகி இருக்கையில் எதற்கு அவரையே கட்டி அழவேண்டும்.மாடஸ்டியைவிட இவர் எந்த உயர்ந்தவர்.மாடஸ்டியையே ஓரங்கட்டி விட்டு எதற்கு இவர்பின்னால் போகவேண்டும்?

      Delete
    2. ஆனால் ரோஜர் வான்சின் தூரிகைக்கு சொந்தக்காரர் அல்லவா ..அத்தனை கதைகளில் சிறந்த ஒன்று கிடைக்காமலா போயிடும் என்று தேடுகிறார் ...நமக்குத் தேவையான தொல் பொருள் ஆராய்ச்சி கதைகளை கொண்ட ரோஜரல்லவா ....அன்னம் போல பிரித்து தர நினைக்கும் ஆசிரியருக்கு ...இந்த ஆண்டு முதல் மொக்கை கதைகளை எக்காரணம் கொண்டும் தரக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் ஆசிரியருக்கு ஒரு ஜே போடுவோமே .மாடஸ்டி போல அதிரடிக் கதைகள் பல உண்டே ..ஆனால் ரோஜர் ....பார்ப்போம் மொக்கை இல்லா கதை எனில் ஆசிரியர் வெளியிட காத்திருப்போம் ..இரத்தப் படலம் கேட்டு போராடுவீங்களா அதை விட்டு ....சாதாரண கதைக்காக .. ஆசிரியர் இவ்வளவு அற்புதமான மாற்றத்தை செய்து விட்டு அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் போது அவரை......

      Delete
    3. AT Rajan : மொக்கைக்கு மருந்து அவசியமா ? மாடஸ்டிக்கு இவர் எவ்விதம் மேலே - கீழே ? ; இதுக்கு இப்போது என்ன அவசரம் ? ; அட்டவணையில் மாற்றம் செய்ய எப்படிப் போச்சு ? என்ற உங்களது பல்முனைக் கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லிக்கொண்டே போவதைவிட - வேண்டுமெனில் இழுத்துப் போட்டு ஆத்திரம் தீர நாலு சாத்து சாத்திக் கொள்ளுங்களேன் ? என்று சொல்வது சுலபத் தீர்வாய்த் தெரிகிறது !

      எனக்கும் சில பல பாடங்களைக் கற்றுத் தர உங்களது அமில வார்த்தைகள் பயனாகியுள்ளதால் ஒருவிதத்தில் இதுவும் ஓ.கே தான் என்றே தோன்றுகிறது ! நானும் காலம் முழுக்கவே மடையனாய் காலம் தள்ளி விடக்கூடாதல்லவா ?

      Delete
    4. பரணிதரன் சார். இது வரை எந்த தயாரிப்பாளர் சார் படத்தை முழுவதும் எடுத்த பின்பு எல்லாம் தயாரான படத்தை தன்னாலேயே பார்க்க முடியவில்லை என்று நிறுத்தியிருக்கிறார் சார்?


      #####

      நண்பரே. அதை தான் நானும் சொல்கிறேன் ...எந்த தயாரிப்பாளர் இப்படி நிறுத்துவார் ...பணத்தையும் இறக்கி இது குப்பை என்று தெரிந்தும் படத்தை விற்க முயலும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் நமது தயாரிப்பாளர்...எப்படி பார்த்தீர்களா.....;-)

      Delete
    5. Paranitharan K : அட..விடுங்க தலீவரே ! எல்லாமே நன்மைக்கே ! ஒவ்வொரு அனுபவமும் ஒரு ஆசான் தானே ? நானும் நிறையவே படிக்க / புரிந்து கொள்ள வேண்டியுள்ளதல்லவா ?

      Delete
    6. ஆசிரியரே நொந்து கொள்ள வேண்டாம் சென்னை புக் பேரில் உங்களை மடக்கி மடக்கி ஆயிரம் கேள்விகள் கேட்டும் அசராமல் பதில் சொன்ன நீங்கள் இப்போது இப்படி பதில் என் மனதிற்கு கஷ்டமாக உள்ளது எங்கள் முகத்தில் புன்னகையை காண அயராமல் உழைத்த உங்களுக்கு நாங்கள் தந்த பரிசு உங்கள் முகத்தில் புன்னகையை மறைய வைத்ததுதான் எல்லோரின் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ஆசிரியரே

      Delete
    7. எடிட்டர் ஏன் இப்படி டென்ஷன் ஆகிவிட்டார் ? இதைவிட மோசமாக பேசியவர்களைக்கூட சமாளித்து டென்சன் ஆகாமல் கூலாக பதில் கூறியுள்ளார்.!

      சிவகாசி வெடிவிபத்து ஊரையே அழித்துவிடப் போகிறது என்ற செய்தியில் ஊரே பீதியில் மிரண்டுபோய் இருப்பதாக செய்தி வருகிறது.இதை புரியாமல் எனக்கு கூரியர் வரவில்லை என்று நாம் கொடி தூக்குவது நியாயம் இல்லைதான்.!

      Delete
  45. ஒரு டிப்ஸ்: மாதாமாதம் கொரியர்காரர்களை உலுக்கியெடுக்கும் பாவகாரியத்திற்கு பதிலாக சிவகாசிக்கு நேரில் பயணம் செய்தே புக்குகளை வாங்கிக்கொள்ளலாமே? ஆனால் இந்த வழிமுறையிலும் தீவிர வாசகர்களுக்கு அஹிம்சையைக் கடைபிடிக்க முடியாமல்போக சாத்தியங்கள் உண்டு. பஸ் மெதுவாக நகர்ந்தால் டிரைவர் தொலைந்தார்.. ரயில் மெதுவாக நகர்ந்தால் பக்கத்து சீட்காரர் தொலைந்தார்...

    Jokes apart, அத்தியாவசிய விஷயங்களுக்காக அவசரப்படுவது ஓ.கே. ஆனால் மாதாமாதம் வரும் காமிக்ஸ் இதழுக்காக கொரியர்காரர்களைப் படையெடுப்பது... அதை இங்கே வெளிப்படுத்துவது.... அதையே பலரும் சம்பிரதாயமாக எடுத்துக்கொள்வது...

    எனக்குத்தெரிந்து நம் தேவைகளைவிட நிஜமான அவசரத்தில் உள்ளவர்கள்கூட கொரியர்காரர்களிடம் நாசூக்காக நடந்துகொள்வதைப் பார்க்கமுடியும். பப்ளிக் சர்வீஸ் செய்பவர்களிடம் ஒரு நாசூக்கான இடைவெளியை மெய்ன்டெய்ன் பண்ணுவோமே?! கொரியர் சர்வீஸ்கள் பிரைவேட்டாக இருப்பினும் அவர்களுடைய சர்வீஸும் சமூகத்துடன் பிணைந்துள்ளது அங்கிள்களே! ப்ளீஸ்!

    ReplyDelete
    Replies
    1. // அத்தியாவசிய விஷயங்களுக்காக அவசரப்படுவது ஓ.கே. ஆனால் மாதாமாதம் வரும் காமிக்ஸ் இதழுக்காக கொரியர்காரர்களைப் படையெடுப்பது... அதை இங்கே வெளிப்படுத்துவது.... அதையே பலரும் சம்பிரதாயமாக எடுத்துக்கொள்வது... //

      +1

      Delete
    2. ///அங்கிள்களே!///

      இது மட்டுந்தான் கொஞ்சம் சங்க்க்கட்ட்ட்டமா இருக்கு!! :-)

      Delete
    3. ஆஸ்பத்திரிக்கு போகிறவங்க மட்டும் ரோட்ல போங்கயா...
      பொண்டாட்டி ஓடி போனவங்க மட்டும் போன் பேசுங்கய்யா...

      Delete
    4. @ ALL : இங்கும் சரி, போனிலும் சரி - ரொம்பவே சங்கடம் காட்டியுள்ள நண்பர்களின் பொருட்டு இன்றைக்கு உள்ளூர் ST கூரியரில் எல்லைகளுக்குள்ளான உஷ்ணத்தைக் காட்டி விசாரித்தோம். காலை முதலே கூரியர் ரசீதுகளைக் கோரி நம்மவர்கள் படையெடுக்க -" இந்தா..அந்தா" என்று போக்கு காட்டி வந்தனர் !அவர்களது மேனேஜரும் போனை ஆப் செய்துவிட்டு இப்போதுவரையிலும் நமக்குப் பதில் சொல்ல மறுத்து வர, ஏதோ நெருடியது.

      ஒரு மாதிரியாய் ரொம்பவே குரல்களை உயர்த்தி நம் பிரச்சனைகளை சொன்ன போது - "பார்சல்களை லோடில் ஏற்ற ஆட்களில்லை" என்று சொல்லி நேற்றிரவு மாமூலான கவர்களையும், தபால்களையும், மட்டும் லோட் செய்துவிட்டு, மெத்தனமாய் கடையைப் பூட்டி விட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை தெரிந்து உறைந்தே போய் விட்டோம். இதுவரையிலும் ஒருநாளும் இந்த மாதிரியான அசட்டை ST கூரியரில் இருந்ததில்லை ; ஆனால் இம்முறை அவர்கள் காட்டியுள்ள இந்த அசிரத்தை நிஜமாய் கொதிக்க வைக்கிறது !

      கோபப்படுவதை விடவும் காரியம் சாதிக்க வேண்டியதே முக்கியம் என்பதால் ஆத்திரங்களை அடக்கிக் கொண்டு அங்கேயே நம்மாட்களை நிறுத்தி வைத்து இன்றிரவாவது பிரதிகள் இங்கிருந்து புறப்பட்டு விடுவதை உறுதி செய்ய முயற்சித்து வருகிறோம் ! So நாளைய தினம் உங்கள் பகுதிக்கு கூரியர்களுக்கொரு போன்அடித்து உறுதி செய்து கொண்டே புறப்படுங்களேன் - ப்ளீஸ் ?

      DTDC கூரியரில் அனுப்பப்பட்ட எல்லாமே நேற்றே இங்கிருந்து டெஸ்பாட்ச் ஆகி ; அவற்றிற்கான ரசீதுகளை தந்து விட்டார்கள் !

      போன மாதம் சொதப்பிய DTDC இம்மாதம் perfect ; இதுவரையிலும் இத்தனை சொதப்பியிரா ST இம்மாதம் மொத்தமாய்க் குழியில் இறக்கி விட்டார்கள் ! "மன்னித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்" என்று கைக்கூப்புவதைத் தவிர்த்து வேறென்ன சொல்வதென்றே தெரியவில்லை !! Really really sorry guys !

      சற்றே பொறுத்து கொள்ளுங்கள் !

      Delete
    5. ஓ..காட்...மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் நிச்சயமாக எழவில்லை சார் ..
      கொரியர் கம்பெனிகளின் நடைமுறை சிக்கல்கள் நம்மை பதம்பார்க்கின்றன.இதுபோன்ற அசாதாரண சூழலில் காத்திருந்து பெற நாங்கள் ரெடி.ஆனால் இதுபோல நிலையை விசாரித்து நீங்கள் அப்டேட் கொடுத்தாலே போதுமானது சார்...
      என் பார்சலை பொறுத்து Dtdc மதுரையில் வண்டி மாறும்போது ஏற்றப்படவில்லை போலும்.என்னை போல மிஸ்ஸிங் ஆன நண்பர்களுக்கு இன்று மதுரையில் ஏற்றி நாளை கிடைக்கும் போல தெரிகிறது சார் .

      Delete
    6. மன்னிப்பெல்லாம் கேட்கவேண்டாம்
      எடி சார்

      இவ்வாறு நேர்ந்தமைக்கு மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்

      விபரம் ஏதும் தெரியாமல் நானும் உங்களைப்போலொரு காமிக்ஸ் ஆர்வம்(த்தில்) என்னை இங்கு டைப்ப வைத்துவிட்டது

      ** மன்னிப்பு கேட்பதெல்லாம் தயை செய்து வேண்டாமே எடி சார்
      ஆர்வத்தில் செய்த அறியா பிழை என்னோடது :) :)

      Delete
    7. Vijayna Sir,
      // மன்னித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்" என்று கைக்கூப்புவதைத் தவிர்த்து வேறென்ன சொல்வதென்றே தெரியவில்லை !! Really really sorry guys ! //

      கண்களில் வழியும் நீரை தவிர என்ன சொல்வது என்று தெரியைல்லை.

      Delete
  46. எடி சார் மற்றும் தோழர்களே இந்த விவாதம் இத்துடன் முடியட்டும். தவறு என்னுடையதானால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அழைப்பு வந்து விட்டது. கிளம்புகிறேன்.தோழர்கள் சந்தோஷமாக படியுங்கள். நடக்கையில் பாதையில் வரும் பள்ளத்தை போல் நினைத்து வெளியேறுவோம். விடிந்தால் வரப்போகும் பொக்கிஷங்களை நினைத்து அதைப்பற்றி பேசுங்கள். Please. இத்துடன் விட்டுவிடுவோம். யார் மனதிலும் திட்டமிட்டு காயமுண்டாக்க இந்த நிகழ்வு நடக்கவில்லை. ஒரு சின்ன வருத்தம் அவ்வளவுதான். அது இவ்வளவு பெரிய விவாதத்தை உண்டாக்கும் என நினைக்கவில்லை. மறுபடி அனைவருக்கும் sorry.

    ReplyDelete
  47. இந்த மாத புத்தகம்கள் கிடைத்தது! நன்றி!!

    ReplyDelete
  48. ஏனய்யா புத்தகங்கள் வாங்கிய யாராவது ஆண்டுமலர் குண்டு புக்கா அல்லது 3தனித்தனி இதழ்களா என போடலாமே...

    ReplyDelete
    Replies
    1. ஆண்டுமலர் குண்டு புக்

      Delete
    2. தகவலுக்கு நன்றி நண்பரே...

      Delete
  49. காமிக்ஸ் லிஸ்ட் போட்டால் ....அடுக்க ஏதுவாக இருக்கும் .............

    ReplyDelete
  50. lion list & muthu list as numarical order please

    JEGA ARANTANGI

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மெயில் ஐடியும் ப்ளீஸ்...

      Delete
    2. எனக்கும் அனுப்புங்க தல
      mail2sampathsam@gmail.com

      Delete
    3. எனக்கும் அனுப்புங்க தல
      muthudvp@yahoo.co.in

      Delete
  51. நான் இப்பொழுது புது இதழ்கள் இல்லாத பொழுது ஏற்கனவே சொன்னபடி பழைய இதழ்களை தவறாமல் தினம் படிக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதன் காரணமாக இன்று ஆண்டு மலர் மாதம் என்பதால் குண்டு புத்தகம் தான் படிக்க வேண்டும் என்பதால் படித்த இதழ் கெளபாய் ஸ்பெஷல் ....லக்கியின் தலைக்கு ஒரு விலை ..டெக்ஸ் அவர்களின் பனிக்கடல் படலம் என அட்டகாசமாய் மறுபதிப்பு சென்றது ..லக்கி அட்டகாச படுத்தினாலும் சிறிய எழுத்துக்களாக இப்போது தோன்றி உற்று படிக்க வேண்டி இருந்தது. ..(பதினாறில் இருந்து பதினேழு வயது ஏறுவது இதுதானா ..)...ஆனால் அருமை ..குதிரையில கடைசி வரை ஏறாமல் நகரத்தில் டெக்ஸ் நவ நாகரீக ரீதியில் ஒரு துப்பறிவாளர் போல பட்டையை கிளப்புவது இதில் ஒன்று தான் என நினைக்கிறேன்....அதகள படுத்தி விட்டார் ..


    நீண்ட வருடங்கள் பிறகு இந்த இதழை கையில் ஏந்த வைத்த எஸ்டி கொரியருக்கு நன்றி .....;-)


    ReplyDelete
  52. ஈரோடுக்கு நீ1..நீ2 வறுமா சாா் என்ன விலை

    ReplyDelete
  53. ஆசிரியரை நினைத்தால் பாவமாக தான் உள்ளது ...பத்து பதினைந்து நாட்கள் ....இரண்டு மாதம் ...மூன்று மாதம் கழித்து புத்தகங்கள் அனுப்பிய பொழுது கூட படாத பாடு இப்பொழுது ஒரு நாள் தாமதம் காரணமாக படாத பாடு படுகிறார் ....;-)

    ReplyDelete
    Replies
    1. அப்போது ப்ளாக் ம இப்போதுள்ள வசதிகள் எல்லாம் இல்லையே தலைவரே

      Delete
  54. @ ALL : ரம்ஜானுக்கென மாலையே வீட்டுக்குப் புறப்பட்ட மைதீனும் கூரியர் ஆபீசில் தவமிருந்து - விடுபட்டுப் போயிருந்த 256 பார்சல்களை வேனில் ஏற்றுவதை பார்த்து விட்டு - கூரியர் ரசீதுகளை மொத்தமாய் வாங்கித் தந்து விட - இனி இங்கு பிரதிகள் ஏதும் தங்கியிருக்கவில்லை என்பது உறுதி ! So நாளைக்கு காலையில் உங்கள் நகர ST அலுவலகங்களில் பேசிவிட்டு பிரதிகளை பெற்றுக் கொள்வதில் சிரமமிராது என்று நினைக்கிறேன் ! Fingers crossed !

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி சார்

      ஆனாலும் இந்த எஸ் டி கொரியர்காரங்களுக்கு * குறிப்பா மேனேஜருக்கு நாளை பிரியாணியா போட்டு வயிறு புடைக்க சாப்பிட வைத்திடுங்க சார்

      இரண்டு நாளைக்கு சாப்பாட்டைக் (பிரியாணியை) கண்டாலே அவங்களுக்கு பேதியாகணும்

      அப்போது தெரியும் அவர்களுக்கு வலியும் வேதனையும்

      Delete
    2. சிறு திருத்தம்

      // அப்போது தெரியும் அவர்களுக்கு உங்களோட வலியும் வேதனையும் //

      Delete
  55. @ Senthil sathya

    /// எங்கள் முகத்தில் புன்னகையை காண அயராமல் உழைத்த உங்களுக்கு நாங்கள் தந்த பரிசு உங்கள் முகத்தில் புன்னகையை மறைய வைத்ததுதான்///

    செம!

    ReplyDelete
  56. " என்ன சார் இப்ப... ரெண்டு மூனு நாள் தாமதமாகும்றீங்க, அதானே? ஒரு வாரம் கழிச்சு வரட்டுமே... என்ன ஆகிடப் போகுது? எங்களுக்காக ரொம்பவே மெனக்கெடறீங்க.. தூக்கத்தை மறந்து உழைக்கறீங்க... உங்களுக்காக இதைக்கூடவா சகிச்சுக்க மாட்டோம்? போங்க சார்.. போய் ரெஸ்ட் எடுங்க!" என்று சொல்லும் நண்பர்களை இத்தளத்தில் காண ஏனோ மனம் ஏங்குகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஈ.வி.
      பதிவுகளை படிச்சு சங்கடப்படறது/வருத்தப்படுவதை தவிர ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. தட்டி கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டிய குழுவை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குட்டிக் கொண்டே இருக்கிறோம். 😔😔😔😔😔😔😔😔

      Delete
  57. சார், சென்னைக்கும் இன்னும் பார்சல் வரவில்லை:நிற்க, இங்கு பொதுவாக யாராவது ஒரு நண்பர் மனதில் பட்டதை சொல்ல போக, ஒரு குழுவாக பரபரவென்று நாற்திசையிலிருந்தும் அவரை தாக்குவதும், ஆசிரியர் சார்பில் அவருக்கு பதில் சொல்வதும் சற்று நெருடலாக இருக்கிறது நண்பர்களே. இது வெறும் புகழ்ச்சியை தவிர இத்தளத்தில் வேறெதுவும் எடுபடாது என்பது போலிருக்கிறது

    ReplyDelete
  58. ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த எடிட்டர் , சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் என அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மறக்காம பிரியாணிய பார்சல்ல அனுப்பிடுங்க நண்பரே
      இங்க கறியும் பீன்ஸ்மா சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு

      Delete
    2. ST Courier OK - வா ஜி??? ;-)

      Delete
    3. ஹசன்!! ஹா...ஹா...ஹா....:-)

      Delete
  59. அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  60. விஜயன் சார்,
    ஒரு புத்தகத்தை உருவாக்கி அதை உங்கள் அச்சகத்தைவிட்டு நகர்த்தி கூரியர் ஆபிஸ்வரை அனுப்புவதே, அதுவும் உங்கள்மேற்பார்வையில் என்பதே அதிகம். அப்புறம் கூரியர் ஆபிஸ் சிக்கல்கள், டிரான்ஸ்பே ார்ட் தடங்கல், இன்னும் ஆக்சிடென்ட்ஸ் மற்றும் இயற்க்கை சீற்றத்திற்க்கெல்லாம் நீங்கள் ெ பாறுப்பேற்றுக் ெ காள்ள ஆரம்பித்தால்,
    அப்புறம் நீங்கள் காசி, ராமேஸ்வரம்தான்
    ே பாகவேண்டும், நிம்மதியதேடி.

    லேட்டுக்கு சிவகாசியில் அவ்வளவுபெரிய விபத்து ஏற்பட்டதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.

    மனிதம்/மனிதநேயத்தைவிட லேட்டா ஒரு நாள் காமிக்ஸ் படிப்பது ஒன்றும் முக்கியமல்ல.

    தேவையற்ற நிணைவுகளை/வருத்தங்களை தவிர்த்து, சூ.ஹீ. சூ.ஸ் - சீசன் 2வை விரைவில் ெ காண்டு வந்து ஈ.வியை சாந்த படுத்தகேட்டு ெ காள்கிறேன்.

    ReplyDelete
  61. புத்தகங்களை அச்சிட்டதும் பக்கம் பக்கமா வாசித்து சரிபார்த்து அனுப்பவேண்டியது கடமை என்பதையும் அவ்வாறு வாசிக்கும்போது எலுத்து பிலை வந்தாள் அதையும் திருத்தி ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பவேண்டியது கட்டாயம் என்பதையும் ஏதாவது பக்கத்தில் கலர் கொறைஞ்சிருந்தால் கலர் அடித்து அனுப்பவேண்டியது மிக முக்கியமானது அப்படீங்கறதையும் உணருங்கள். அப்படி செய்யாவிட்டால் அதுபற்றி அலுவலகத்துக்கு நாம் சொல்லவேண்டிய அவசியம் கெடையாது. இங்கே ப்ளாக்கில் எழுதி திட்டுவோம். கதை தேர்வுபற்றியும் அப்போதே கேள்வி எழுப்புவோம். எந்த ப்ரச்னையும் இல்லையா... எங்கள் சொந்த வீட்டு ப்ரச்னை பற்றி பக்கம் பக்கமா இங்கே எழுதுவோம்... தெர்தா?

    ReplyDelete
  62. இளவரசிக்கு நான் ரசிகன் என்றாலும் மனசாட்சிபடி சொல்கிறேன் எங்கள் இளவரசி கதை நேர் கோட்டில்தான் செல்லும் ஆனால் ஆக்ஸனில்(எங்களையும்) அசத்தி பிரமாதப்படுத்துவாள் எங்கள் தேவதை ஆனால் ரோஜர் பல வித்தியாசமான கதை களங்களில் தோன்றுவார் மர்ம கத்தி. தலை வாங்கும் சிலை .என்று அசத்தியுள்ளார் அதனால்தான் ஆசிரியர் ரோஜருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு தருகிறார் என்னை கேட்டால் மாடஸ்டியை போலவே ரோஜருக்கும் வாய்ப்பு தரலாம் ஆக்ஸன் கம்மி ஆனாலும் பரவாயில்லை.
    ஆனால் எங்கள் இளவரசியின் கதை நேர் கோட்டில் சென்றாலும் ரோஜரால் இளவரசியை மிஞ்ச முடியாது

    ReplyDelete
  63. அனைத்து சகோதரர்களுக்கும் புனித ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்...
    கோபங்கள் குறைந்து...
    அன்பும் பாசமும் பெருகட்டும்;
    நட்பும் நேசமும் தழைக்கட்டும்...

    ReplyDelete
  64. சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  65. பயணத்தின் முடிவில் பதிவு....

    " மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து ஒரு பதிவு"

    என எழுதிட ஆசைதான்.......

    ஆனால் கருவேப்பிலங்குறிச்சியிலிருந்துதான் எழுத வேண்டியிருக்கிறது....:-)

    நண்பர்களிடையே ஓரிரு நாள் தாமதம் ஏற்படுத்தும் எதிர்வினைகள் மிகவும் வருத்தமளித்தன.....


    எடிட்டர் போன பதிவில் தான் எக்ஸார்சிஸ்ட் ஆக மாறி தாமத பேயை ஓட்ட வேண்டியிருந்த்து பற்றி எழுதியிருந்தார்....மனமுவந்து வரவேற்க வேண்டிய மிகவும் ஏற்புடைய காரணம் அது...இடையில் கூரியர் குட்டிசாத்தானாக மாற வேண்டியிருந்தது சூழல் காரணமாக இருக்கலாம்....

    உற்சாகபடுத்தி ஊக்கபடுத்தவேண்டிய ஆசிரியரை மனம் நோக வைத்தது மிகவும் வருத்தப்பட வைத்தது....😕

    ReplyDelete
  66. இன்னும் இதழ்கள் கிடைக்காத நண்பர்களுக்கு, காமிக்ஸ் காதலில் காத்திருத்தலும் சுகமே.

    எனக்கு அனைத்து புத்தகங்களும் கடந்த வாரமே கிடைத்துவிட்டன. நேற்றே அனைத்தையும் படித்து முடித்து விட்டேன். அத்தனையும் சூப்பர். அதிலும் Tex-ன் அட்டைப்படம் அட்டகாசம், கதையோ அபாரமோ அபாரம். தலைப்பிற்கு ஏற்றாற் போல் Tex- 'பழி வாங்கும் புயலாகவே' உள்ளார். தனி நபராய் ஒரு ராணுவத்தையே எதிர்க்கும் துணிவு, ராணுவத்தால் குற்றம் சாட்டப்பட்டு, காடுகளில் ஒளிந்து திரியும் 'தளபதி'க்கு உண்டா.


    btw திரு. விஜயன், நண்பர்கள் அனைவரும் எந்த இதழ்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என தெரியவில்லை.

    (அப்பாடா...ஒரு மெசேஜ் சொன்னாமாதிரியும் ஆச்சி, நம்ம நெலமைய சொன்ன மாதிரியும் ஆச்சி, புக் கிடைக்காதவங்க வயித்தில ஒரு மூணு செகண்டு ஆசிட் வார்த்தா மாதிரியும் ஆச்சி அப்படியே நாம எந்த கட்சினு சொன்னா மாதிரியும் ஆச்சி).

    ReplyDelete
  67. சரி நடந்ததெல்லாம் நன்மைக்கேன்னுட்டு நண்பர்கள் , புத்தகம் கிடைத்தவர்கள் சூழலை கலகலப்பாங்குங்களன் .

    ReplyDelete
  68. அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்...! :)

    ReplyDelete
  69. Edit sir, why our comics4all site is not working, is it down permanently?

    ReplyDelete
  70. ///சந்தா கட்டுவது " முதலில் " காமிக்ஸ் படிக்க
    அல்ல.....
    அது தமிழ் காமிக்ஸ் வண்டியின் அச்சாணியில்
    சிறு பங்காக இருப்பதன் பெருமிதம்....////----
    .....நண்பர்களே@ இந்த வைர வரிகளை சொல்லி அந்த பெருமிதத்தில் என் பங்கையும் மீட்டு தந்த நம் நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நூறாயிரம். இங்கே நமக்கெல்லாம் முன்னோடியாக இருந்து கூல் ஹேண்டில் ஆக எதையும் கையாளும் வல்லமை பெற்றவரும் வழிகாட்டியாக திகழ்ந்து வருபவரும் அவர்....
    அந்த பெருமிதத்தை நண்பர்களிடம் இருந்து பறிக்க பார்த்த எனக்கு , லேசான குட்டு வைத்து விட்டு போக நண்பர்களை அழைக்கிறேன்.(நிறைய பேர் மோதிரத்தை அவசரமாக துளவி எடுத்து கையில் அணிவது தெரிகிறது,ஹி...ஹி...)

    ReplyDelete
    Replies
    1. முதல் குட்டு என்னுடையது தான் டெக்ஸ் ...இதற்கு தான் இருக்கும் சிறந்த இடத்தை விட்டு நகர்ந்தால் வெளி காற்றின் ஓதம் தமக்கும் மண்டைக்குள் ஏறும் ...;-(

      Delete
  71. இன்று காலை எட்டு மணிக்கே எஸ்டி கொரியரில் இருந்து பார்சல் வந்துவிட்டதாக தகவல் ....அதற்குள் அலுவலகம் கிளம்பி விட்டதால் இன்று மாலை கைபற்றி விடலாம் ....நன்றி சார் ....

    ReplyDelete
  72. 19.65 M hits already, I am expecting 2M hits special in August Edit!

    ReplyDelete
  73. @ ATR

    //உங்களுக்கு புரியாமல் போனதேன்!//

    //உங்களது நையாண்டியும் புரிகிறது//

    //ரோஜரை தூக்கி எறியாமல் வைத்திருக்கவேண்டும்//

    //விடை நீங்கள் சொல்வதால் இறங்கிவந்த வானம் மேலேறிட வாய்ப்பில்லை//

    //டெக்ஸ் புத்தகம் ஒன்றுக்கும் உதவாமல் பக்கங்கள் மடிந்து அப்படியே பைண்டிங்குடன் வந்தது.//

    //மறுபடி எந்த புத்தகம் என்று சொல்லி யாசகம் பெற விரும்பவில்லை//

    //இன்று பணத்தை பற்றி ஆசிரியர் சொன்னதால் என்னுடைய நேர்மையை நானும் சொல்லவேண்டுமல்லவா?//

    //அவசரம் அவசரமாக தயார் பண்ணி அனுப்பினால் எந்த அழகில் வருமென்ற எண்ணத்தில் நான் சொன்னது தான் அது.//

    //சமீபகாலமாக எந்த குறையும் சொல்லக்கூடாது மீறி சொன்னால் பணத்தை வாங்கிக் கொள் என்பது //

    //அவர் போடும் யாசகத்துக்காக அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டால் சரி.//

    //யாரிடமும் யாசகம் பெற வேண்டிய நிலை எனக்கு இல்லை//

    உங்கள் [AT Rajan6 July 2016 at 23:58:00 GMT+5:30] ஒரு கமெண்ட்லேயே இவ்வளவு வரிகளை தெறிக்கவிட்டிருகிறிர்கள்.. :(((( இந்த வசைகளை வாங்குவதற்கு பதிலாக உங்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பிடலாம் என்றே தோன்றுகிறது ATR..! காசுகொடுத்து படைப்பை வாங்கி பெட்டியில் வைப்பவர்களை விட... வாங்கிய 50 புத்தகத்தில் ஒரு ஐந்தையேனும் படித்துபார்ப்பவரையே எல்லா படைப்பாளியும் விரும்புவர்..! இதில் திரு விஜயனும் விலக்கல்ல,காசு கொடுத்தவனை மதி என்பதற்கும்...படைப்பை சுவைத்தவனின் பகிர்வுக்கும்... நிறையவே வித்தியாசம் இருக்கு.. :(((

    //.அவர் எப்படி நேர்மையாக செயல்படுகிறாரோ நானும் அப்படித்தான்// ஒரு வாசகரின் நேர்மை என்பது பணம் சம்மந்தபட்டதல்ல,படைப்பை படிப்பது சம்மந்தபட்டது...படைப்பை படிப்பதுதான் வாசகரின் நேர்மை என்பது கருத்து..! இந்த தளத்தில் வருபவர்களின் இன்றையவாழ்க்கையை பற்றிய பின்னணி விவரங்கள் யார்யாராருடையவை எல்லாம் உங்களுக்கு தெரியும் என பட்டியலிடுங்கள், ஒரே ஒருவரை தவிர வேறுயாருடைய பின்னணியும் தெரிந்துகொள்ள முடியாது. அந்த ஒருவர் ATR..! அவ்வளவு எழுதுகிறிர்கள்... இனி என்னஎழுதவேண்டும் என்பதும், உங்கள் நேர்மையை எப்படி காட்டவேண்டும் என்பதும் உங்கள் விருப்பம்..!

    வருத்தம்கொள்ளவைக்கும் இந்த பகிர்வுக்கு வருத்தப்படுகிறேன்...நன்றி..!

    ReplyDelete
    Replies
    1. திருத்தம்: ஒரு வாசகரின் நேர்மை என்பது பணம் சம்மந்தபட்டதல்ல,படைப்பை படிப்பது சம்மந்தபட்டது...படைப்பை படிப்பதுதான் வாசகரின் நேர்மை என்பது என்கருத்து..!

      Delete
  74. " என்ன சார் இப்ப... ரெண்டு மூனு நாள் தாமதமாகும்றீங்க, அதானே? ஒரு வாரம் கழிச்சு வரட்டுமே... என்ன ஆகிடப் போகுது? எங்களுக்காக ரொம்பவே மெனக்கெடறீங்க.. தூக்கத்தை மறந்து உழைக்கறீங்க... உங்களுக்காக இதைக்கூடவா சகிச்சுக்க மாட்டோம்? போங்க சார்.. போய் ரெஸ்ட் எடுங்க!"


    (ஆனா அந்த அயல்நாட்டு சதிய முறியடிச்சி பெட்டியை கைப்பிடிக்காம ஓயப்போறதா இல்லை.)
    (ஸாரி கைப்பற்றாம ஓயப்போறதில்லைன்னு சொல்லவந்தேன். விரல் ஸ்லிப்பாகி உண்மையை உளறிட்டேன்.)

    ReplyDelete