Powered By Blogger

Sunday, July 03, 2016

ஒரு பேயோட்டும் படலம்...!

நண்பர்களே,
  
உஷார் : இதுவொரு ஜாலியான unplugged ரகப் பதிவே...! 
          
வணக்கம். ‘தாமதம்‘ என்ற பேயை ஓட்ட ஏகமாய் முயற்சிகள் எடுத்து- அதனில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டுள்ள நிலையில் கடைசி நிமிடக் கதை மாற்றமானது காலை வாரிவிட்டது இந்த ஜுலையில்! Maybe லயனின் நெடுங்கால தோஸ்தான “மிஸ்டர் தாமதம்”- ஆண்டுமலர் எனும் முக்கிய தருணத்திலாவது நலம் விசாரித்துப் போகலாமே என்று நினைத்ததோ, என்னவோ! Anyways - தொடரும் மாதங்களில் இந்தத் தலைவலி தொடர்ந்திடாதிருக்க இப்போதே சில ஏற்பாடுகள் பற்றிய ‘ரோசனைகள்‘ தலைக்குள் வாக்கிங் போய்க் கொண்டுள்ளன!

இப்போதென்றில்லை - ஒவ்வொரு சமீப மாதத்திலுமே எனக்குச் சிக்கலை ஏற்படுத்துவது மொழிபெயர்ப்புகளில் அவசியமாகிடும் மேம்படுத்தல்களே! நான் எழுதும் கதைகளில் இந்த பட்டி-டின்கரிங் வேலைகளை அவ்வப்போதே செய்து விடுவேன் என்பதால்- அந்த இதழானது டைப்செட்டிங் செய்யப்பட்டு என் மேஜைக்கு வரும் வேளைகளில், அதிக நேரம் செலவிடாமல்  தாண்டிச் செல்ல சாத்தியமாகிறது !  ஒரு 46 பக்கக் கதையின் ஸ்க்ரிப்டை  எழுதும் போதே குறைந்த பட்சம் 20 தடவையாவது மாறி மாறிப் படித்து விடுவேன் என்பதால் எடிட்டிங்கின்  போது அதனை புதிதாய் வேறொரு கோணத்தில் பார்க்கவே தலையில் 'தம்' இராது ! So எழுத்துப் பிழைகள் ; டிசைனிங் குறைபாடுகள் ; டமால்-டுமீல் சேர்க்கைகள் என்று பொதுவான வேலைகளை செய்து விட்டு கையைத் தட்டிவிட முடியும். ஆனால் நமது டீமின் மற்றவர்கள் பணி செய்த பக்கங்களை ஆங்காங்கே கைவைக்க நினைக்கும் போது ஏகமாய் நேரம் ஓடி விடுகிறது! ‘இது தான் perfect மொழியாக்கம் !‘ என்ற கோனார் நோட்ஸ் ஏதும் கிடையாதென்பதால் ஒவ்வொருவரது அணுகுமுறையும் வெவ்வேறு விதங்களில் இருப்பது இயல்பே! அவற்றை நமது பொதுவான ஸ்டைலுக்கு நெருக்கமாக்கிட முனையும்போது மணித் துளிகளும், மணி நேரங்களும் உசேன் போல்ட்டைப் போல் ஓட்டமாய் ஓடி விடுகின்றன! ஓரளவுக்கேனும் எழுத்து நடைகளில் தோன்றக் கூடிய 'பாணி மாற்றங்களை' நம்மவர்கள் ஏற்றுக் கொள்ளும் நாளொன்று புலரும் வரை பொறுமையாய் இதன் பொருட்டு நேரத்தை முதலீடு செய்தாக வேண்டி வருகிறது ! 

டைப்செட்டிங்கைப் பொறுத்த வரையிலும் நமது in house பெண்களும்; அவ்வப்போது வெளியிலிருந்து உதவிடும் ஆண் / பெண்களும் ‘அவசரம்‘ என்று சொல்லி விட்டால் அசுர கதியில் வேலைகளை ரவுண்ட் கட்டி அடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டு விட்டனர் என்பதை ‘பெட்டி பர்னோவ்ஸ்கி‘ படலம் காட்டியுள்ளது! எண்ணி இரண்டே நாட்களில் 54 பக்கங்களை முடித்துத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்றால் பாருங்களேன்! என்ன பிரச்சனை- மாதா மாதம் ‘அவசரம்‘ என்ற பலகையைக் கழுத்தில் கட்டிக் கொண்டே திரியும் அவசியம் ஏதோவொரு ரூபத்தில் எழுந்து விடுகிறது!

And ‘மிஸ்டர் தாமதம்‘ கும்மாளமிட்டுக் குதூகலிக்கும் திடல் # 2- நமது அட்டைப்பட டிசைனிங்கில்! நமது ஓவியரை ராப்பகலாய்க் குடலை உருவி டிசைன் போட்டு வாங்குவதை நம்மால் செய்திட முடிகிறது! And பெரியதொரு மாற்றங்களுக்கு அவசியமின்றி- ஈயடிச்சான் காப்பியாக ஒரிஜினல் டிசைன்களைப் பயன்படுத்த சாத்தியமாகும் இடங்களில் நமது DTP பெண்களே அதைச் செய்து முடித்து விடுகிறார்கள்! ஆனால் கொஞ்சம் நகாசு வேலைகள் தேவையென்று நமது டிசைனர் பொன்னனிடம் ஒப்படைத்து விட்டால்- 2 விஷயங்களை உத்தரவாதமாக உறுதியென்று எடுத்துக் கொள்ளலாம்! டிசைன் ‘பளிச்‘ ரகத்தில் அமைந்து விடுமென்பது முதலாவது உத்தரவாதமெனில்- Bata பாதணிகள் இரண்டு ஜோடிகளாவது அந்த மாதத்துக் கொள்முதல் பட்டியலில் இணைத்திட அவசியமாகும் என்பது இரண்டாவது உத்தரவாதம்! Bata பில்கள் நாளொருமேனி, பொழுதொரு வண்ணமாய் அதிகமாகிக் கொண்டே செல்வது தான் கவலைக்குரிய அம்சம். இடியே விழுந்தாலும் அந்தந்த மாதங்களது கடைசி வாரம் புலரும் வரையிலும் அட்டைப்படங்கள் தயாராவதில்லை எனும் பொழுது- டிசைனுக்கு அப்புறமாய் அச்சு; லேமினேஷன்; க்ரீஸிங் போன்ற பணிகளை லக்கி லூக்கின் சுடும் வேகத்தில் செய்தாகும் நெருக்கடிகள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு ! இதற்கொரு தீர்வு தயாராகிடாதவரை எங்களது கடைசி வார அக்கப்போர்களுக்கு விமோச்சனம்  பிறக்காதுதான் !

And சிக்கல்களின் தாயகம் # 3 – இம்மாதம் போலான கதைத் தேர்வுக் குளறுபடிகளில் ! என்ன தான் ‘தம்‘ கட்டி; ஆலோசனைகள்; reviews; internet ஆராய்ச்சிகள் என்று செய்தாலும் - there are times when it all falls flat! ஐம்பது- அறுபது கதைகள் கொண்டதொரு தொடர் என்றால் இந்தச் சிக்கல் அங்கே பன்மடங்காகிப் போகிறது! ஒவ்வொரு ஆண்டும் கீழ்க்கண்ட தொடர்கள் நம்மை கொலம்பஸை விடவும்; மார்கோ போலோவை விடவும் பெரிய ஆராய்ச்சியாளர்களாக மாற்றிடுகின்றன:

- ரிப்போர்டர் ஜானி
- சாகஸ வீரர் ரோஜர்
- சிக் பில்
- ப்ளுகோட் பட்டாளம்
- ரின்டின் கேன்

லக்கி லூக் தொடரிலும் 70+ கதைகள் உண்டென்றாலும் அவற்றின் பெரும் பகுதி ஆங்கிலத்தில் இருப்பதால் அவற்றை வாசித்து ஒரு தீர்மானம் எடுக்க சாத்தியமாகிறது! ஆனால் மேலேயுள்ள பட்டியலில் (கொஞ்சமாய்) ப்ளுகோட் பட்டாளம் நீங்கலாக மற்ற தொடர்களில் மருந்துக்குக் கூட ஆங்கிலப் பதிப்புகள் கிடையதாதெனும் போது- படிக்கிறோம்; படிக்கிறோம்- பால்யத்தில் பள்ளிகளில் படித்ததையெல்லாம் விடவும் ஜாஸ்தியாக! அதிலும் இத்தாலிய சாகஸக்கரர்களின் கதைகளோ மொத்தமாய் வேறு ரகம்!

* டெக்ஸ் வில்லர்- 660+ கதைகள்; எங்கே ஆரம்பித்து- எங்கே முடிவுறும் என்பதைக் கண்டுபிடிப்பதில் இடுப்பை முறிக்கும் சிரமங்கள் ; சரி- கதையைத் தேர்வு செய்து விட்டோமென்று ஒரு குதூகலத்தில் பக்கங்களைப் புரட்டினால் அதன் சித்தரங்கள் நம்மைப் பார்த்து தரையில் புரண்டுருண்டு பல்லைக் காட்டும். So நமக்கு ஏற்புடைய பாணியில் ஓவியங்கள் கொண்ட ; நமக்கு ஏற்புடைய கதை ஸ்டைலும்; நீளங்களும் கொண்ட கதைகளாக shortlist செய்வது நாக்காரை தூக்கிலிடும் முயற்சிக்கு சமானமானது!

சரி- ‘தல‘ தான் இப்படியெனில்- மார்ட்டின் தொடரில் அதிக வேறுபாடில்லாத் தலைவலிகள்! சரியான கதையைத் தேர்வு செய்தாலே- படித்துப், புரிந்து, ரசிக்க நாம் கைதேர்ந்த அப்பாடக்கர்களாக இருக்க வேண்டி வரும்! இந்த அழகில் ஒரு பூச்சு அதிகமாய் ‘குளறுபடிகள்‘ ஏற்றிக் கொண்ட கதைகளைத் தெரியாத்தனமாய் ‘டிக்‘ அடித்து விட்டால் அந்த மாதம் முழுவதும் ‘டிக்கிலோனா‘ தான்! சமீபத்தைய “கனவின் குழந்தைகள்“ இந்த ரகம் ! அதன் மீது பணியாற்றிய ஒரு வாரம் நானும் ‘குண்டிங்காஸ்‘ போல ஒரு மார்க்கமாய் முழித்துக் கொண்டு தான் திரிந்தேன்! (கதையைப் படித்த போது உங்கள் முழிகள் எவ்விதமோ ?!! )

C.I.D ராபின் இது போல ஜாஸ்தி பஸ்கி எடுக்கச் செய்வதில்லை என்றாலும்- இங்கேயும் ஏகமாய் ஓவியப் பாணிகளில் வேற்றுமைகளுண்டு! And again- கதைகளின் எண்ணிக்கை 200+ எனும் போது எதைப் பார்த்தாலும் சுவாரஸ்யமாய் தோன்றுவதும், தேர்வான பின்னே அவற்றைப் பார்த்தால் ‘ஙே‘ என்ற முழிக்கத் தோன்றுவதும் நடைமுறைகளே!

* இந்தப் பட்டியலில் புதிதாய் நமது அபிமானத்தை ஈட்டியுள்ள ஜுலியாவும் இணைந்து கொள்கிறார்! இங்கேயும் இருநூற்றுச் சொச்சக் கதைகள் எனும் போது, கண்களில் castor oil ஒரு வண்டி விட்டுக் கொள்ள அவசியப்படுகிறது!

* டைலன் டாக்கின் எந்தக் கதையுமே நேர்கோட்டில் பயணம் போவதில்லை என்பதால் அதனில் கொஞ்சமாய் எங்கள் பணி சுலபம் என்பேன்! மிகுந்த ஆராய்ச்சிக்கும் அறிவுசார்ந்த சிந்தனைகளுக்கும் பின்பாக- விஞ்ஞானபூர்வமாக இங்க்கி-பிங்க்கி-பான்க்கி வழிமுறையைக் கையில் எடுத்து விடும் போது ‘எல்லாம் அவன் செயல்‘ என்று மனதைத் தேற்றிக் கொள்ளவாவது மார்க்கமிருக்கும்!

அப்படிப் பார்த்தால் லார்கோ; ஷெல்டன்; கமான்சே போன்ற தொடர்களுள் இலகுவாய் நாம் மூச்சு விட வழிகளுண்டு! வரிசைக்கிரமமாய் சகலத்தையும் போட்டு விடுவதென்றாகும் போது- தேர்வு செய்யும் தலைவலி எங்கள் பொறுப்புகளாகாதே?! தோர்கலைப் பொறுத்த வரையிலும் இதே வசதி தான்! ‘எல்லாவும் இருக்கு- நல்லாவும் இருக்கு‘ எனும்போது நம்பர்வாரியாகக் கதைகளுக்கு ஆர்டர் பண்ணி விட்டு ஆனந்தமாய் மல்லாந்து விடலாம்!

ரெகுலரான தொடர்களிலேயே சமாச்சாரம் இந்த அழகு எனும் போது- கிராபிக் நாவல்கள் தேடல்களில் கிட்டிடும் ஆனந்த அனுபவங்களைப் பற்றி நான் சிலாகிக்கவும் வேண்டுமா என்ன? சமீபத்தில் கூட இதன் பொருட்டு நயமாய் ஒரு லோடு அல்வா வாங்கினேன்- மணக்க மணக்க! பிரெஞ்சில் அந்த படைப்பைப் பார்க்கும் போது ஆக்ஷனும், அதிரடியும் அட்டகாசமாய் தோன்றிட- அதைப் பற்றிய ஆராய்ச்சிகளும் ‘அக்மார்க் ஹிட்‘ என்ற பாணியில் முடிவுகளை நல்கிட- அவசரமாய் அதற்கான கான்டிராக்டைக் கோரினேன்! ஆனால் அதனை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கச் செய்து, படித்துப் பார்க்க ஆரம்பித்த போது தான் ஜண்டு பாம் உற்பத்தியாளர்களை அவசரமாய் தேடும் அவசியம் எழுந்தது! கதை மாந்தர்கள் ஒரு 100 பேர் குஷாலாய் பிக்னிக்  வந்தது போல் வழி நெடுகச் சுற்றித் திரிய- ‘இவர் படித்துறைப் பாண்டி!‘; ‘அது அலெர்ட் ஆறுமுகம்‘; ‘இது நாய் சேகர்!‘; என்று மனதுக்குள் பதித்துக் கொண்டே பக்கங்களைப் புரட்டப் புரட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பஞ்சாயத்துச் சங்கிலி முருகன் நிலைமை தான் எனக்கு! இந்தக் கதையைத் தமிழில் இறக்கி விட்டால் ஆங்காங்கே ‘கையப் புடிச்சு இழுத்தியா?‘ பிராதுகள் எழும் வாய்ப்புகள் ஜெகஜ்ஜோதியாய் தெரிந்திட- அவசரம் அவசரமாய் back அடிக்க முயற்சித்து வருகிறேன்! நல்ல காலத்துக்கு டிஜிட்டல் பைல்களை ஆர்டர் பண்ணாததால் இப்போதைக்குத் தலை தப்பித்தது!

ஆனால் சில தருணங்களில்- ரிசல்ட் எவ்விதமிருப்பினும் ‘இவற்றைப் போட்டே தீரணுமே!‘ என்ற ஏக்கத்தை உண்டாக்கும் சில கதைகளும்  இருந்திடுவதுண்டு! இப்போது கூட அத்தகைய முயற்சி ஒன்றை தினமும் என் தலையணைக்கு அடியில் புதைத்து வைத்து அதன் மீதொரு தீர்மானமெடுக்க ஆனமட்டிலும் முயற்சித்து வருகிறேன்! கடைசி நேரத்தில் ‘ஏன் வம்பு?‘ என்ற பயம் இதனிலும் தலைதூக்காது இருப்பின் நிச்சயமாய் மகிழ்வேன்! அசாத்தியமானதொரு dark படைப்பு அது !! 

ஆக, இவையெல்லாமே ஏதோவொரு வகையில் தாமதப் பேய்க்கு படையல் போட்டு உபசரிக்கும் காரணிகளாக அமைந்து விடுகின்றன! அதிலும் முக்கியமாய் அந்த “மொழியாக்க மங்காத்தா“ கிணற்றை மட்டும் தாண்டிட வழிபிறப்பின்- விரயமாகும் நேரத்தை ரொம்பவே மிச்சப்படுத்திடலாம்!

சரி- ஊர்க்கதை; உலகக் கதை எல்லாம் போதும்- தற்போதைய இதர புது இதழ்கள் பக்கமாய் பார்வையை ஓட விடலாமா? இதோ ஜுலையின் நமது இரவுக் கழுகாரின் அட்டைப்பட first look! 

Bombay Dyeing விளம்பர மாடலைப் போல நம்மவர் ராப்பர்களில் வலம் வருவதை மாற்றக் கோரிய குரல்களை  மண்டைக்குள் ஏற்றிக் கொண்டதன் பலனாக- இதோ நமது ஓவியரின் கைவண்ணம்! கதையின் சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டிசைனிது! அச்சாகி, லேமினேஷனோடு பார்க்கையில் pleasant ஆகத் தோன்றுகிறது என்று நினைத்தேன்! நிச்சயமாய் இது பற்றி உங்களுக்கும் சிலபல அபிப்பிராயங்கள் இருக்குமென்பதால்- அவற்றைக் கேட்டு அறிந்திடக் காத்திருக்கிறோம்! And கதையைப் பொறுத்த வரை- 100+ க்க  யானை வெடிச்சரமிது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்! தமிழ் சினிமாக்களுக்கும், டெக்ஸின் கதைக்களங்களுக்கும் செம நெருக்கமான தொடர்புண்டு என்பது எனது பல காலத்து அனுமானம்! அதனை மீண்டுமொரு தடவை மெய்ப்படுத்தும் கதை- “குற்றம் பார்க்கின்“! செமையாக ரசித்தேன் - இதன் மீதான பணிகளை! நீங்களும் இந்த இதழுக்கு ‘ஜே‘ சொல்லிடும் பட்சத்தில்- கதாசிரியர் போசெல்லிக்கு இன்னுமொரு இறகைச் சூட்டி விடலாம், ஏற்கனவே பல பாராட்டுகளைச் சுமந்து நிற்கும் அவரது தொப்பிக்கு! இயன்ற வகைகளிலெல்லாம் கதைக்குக் கதை மாற்றங்களைக் கண்ணில் காட்ட வேண்டுமென்ற அவரது மெனக்கெடல்கள் ஒரு ராயல் சல்யூட்டுக்கு உகந்தவை !

சிக் பில் & கோ வின்... சாரி... சாரி... டாக் புல் & கோவின் புது சாகஸத்திற்கு அட்சரசுத்தமாய் ஒரிஜினல் ராப்பரே! அதனை கூரியர் அறிவிப்புப் பதிவினில் கண்ணில் காட்டுகிறேனே...?! 

ஆங்காங்கே விமானநிலையங்களில் சிக்கிய சந்து பொந்திலெல்லாம் எழுதோ- எழுதென்று எழுத வசதிப்படுவதால் எனக்கு நேரமும் ஓடி விடுகிறது; வேலைகளும் ஆனது போலாகி விடுகிறது ! என்ன ஒரே  சிக்கல் - IPhone களை நோண்டிக் கொண்டே அமர்ந்திருக்கும் சிறுசுகளும், பெருசுகளும் குனிந்த தலை நிமிராது கிறுக்கிக் கொண்டிருக்கும் என்னைப் பார்க்கும் பார்வைகளைச் சமாளிப்பது தான் ஒரு மார்க்கமான அனுபவமாய் இருந்து வருகிறது!

சென்ற பதிவுகளில் favourite ஆண்டு மலர் இதழ் எதுவோ? என்ற கேள்வியைக் கேட்டிருந்தேனல்லவா? எனது தேர்வானது of course LMS ஆக இருந்திடக் கூடும் தான்; ஆனால் அதையும் விட செம ஜாலியாகப் பணியாற்றிய இதழொன்று உண்டு! அது தான் நமது முதன் முதல் ஆண்டு மலர்! 1985-ல் ‘சைத்தான் விஞ்ஞானி‘யையும், ‘குதிரை வீரன் ஆர்ச்சி‘யையும் உங்களுக்கு அறிமுகம் செய்த நாட்களை மறக்கத் தான் முடியுமா ? அந்நாட்களில் நம்மிடையே ஸ்பைடர்காரு  சந்தேகமின்றி செம 'மாஸ்' நாயகர் என்பதோடு - ஆர்ச்சியும் ஒரு அப்பாட்டக்கரே என்பதால் இந்த இதழைத் திட்டமிட்டே போதே இது பட்டையைக் கிளப்பும் என்று எனக்கு யூகிக்க முடிந்திருந்தது !

அந்நாட்களில் கௌபாய் கதைகளுக்குள் நாம் கால் பதித்திருக்கவில்லை என்றாலும் - ஆர்ச்சியை குதிரையில் ஏற்றிவிட்டு கோணாங்கித்தனங்கள் செய்யும் விதமாய் கதையின் போக்கு இருப்பதை நம்மிடம் கிடந்த (FLEETWAY )LION வாரயிதழின் குவியலில் பார்த்திருந்தேன். So அவை வெளியான தேதிகளைக் குறிப்பிட்டு, இந்த பெட்ரோமாக்சே தான் வேணும் ! என்று டில்லியிலிருந்த ஏஜென்ட்டிடம் கோரியிருந்தேன். லண்டனில் எனக்கு அந்நேரம் FLEETWAY -ல் நேரடிப் பரிச்சயம் கிடையாதென்றாலும் - மாதம்தோறும் இது போன்ற கொக்கு மாக்கான கதைக் கோரல்களை அனுப்புவதால் அடியேன் பெயர் அங்கேயும் லேசாய் பிரபலம் என்பதை பின்னாட்களில் தெரிந்து கொண்டேன் ! "குதிரைவீரன் அர்ச்சி" கதையின் ஒரிஜினல்களைத்  தேடிப் பிடித்து நமக்கு பார்சலில் bromide prints  அனுப்பிய தருணம் - "எங்கள் இதழ்களை - எங்களைவிடவும் ஜாஸ்தியாய் கையிருப்பில் வைத்திருந்து ரசிப்பவருக்கு வாழ்த்துக்கள்" என்றொரு குட்டி note வைத்திருந்தனர் ! டில்லியில் இருந்த ஏஜெண்ட்டைப் பொறுத்தவரை  நானொரு நொய் புடிச்ச பார்ட்டி....; தயாராய் உள்ள கதைகளை பிற மொழிப்பதிப்பகங்களை போல பேசாமல் வாங்கிடாது - "இதை வரவழைத்துக் கொடு ; அதைத் தேடித் பிடித்துக் கொடு " என்று குடலை உருவும் ஆசாமி ! ஆனால் லண்டனில் முகம் சுளிக்காது எனது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து வந்ததால் - "நமக்கென்ன போச்சு ?" என்று மௌனமாய் இருந்துவிடுவார் ! "இதெல்லாம் உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?" என்று மருந்துக்கு கூட ஒருநாளும் கேட்டதில்லை !
ஆர்ச்சிக்குக் கௌபாய் வேஷம் போட்டு ராப்பரை டிசைன் செய்யச் சொல்லி நமது ஓவியரிடம் கொடுத்த போதே எனக்குள் ஏக பரபரப்பு ! மறு பக்கத்துக்கு ஸ்பைடரின் ராப்பரும் போட்டுத் தாக்க - பாக்கட் சைசில் நிச்சயம் இதுவொரு குண்டு இதழாகத் தோன்றுமென்பதை நிர்ணயித்த போதே 3000 பிரதிகள் கூடுதல் பண்ணினேன் பிரிண்ட் run-ஐ !! இருபதாயிரம் முதல் இருபத்திரெண்டாயிரம் வரைக்கும் நமது நார்மலான விற்பனைகள் இருந்த அந்நாட்களை இன்றைக்கு நினைத்துப் பார்க்கும் போது குக்கரிலிருந்து வருவது போல் பெருமூச்சே மிஞ்சுகிறது ! ஸ்பைடரின் "சைத்தான் விஞ்ஞானி" அன்றைக்கே ஒரு மார்க்கமான கதையாய் எனக்குத் தோன்றினாலும் - அதையெல்லாம் ஒரு விஷயமாகவே பெரிதுபடுத்தத் தோன்றவில்லை ! கோமுட்டித்  தலையனான வில்லனுக்கு  நாலு சாத்து ; ஆர்டினிக்கு ரெண்டு குத்து ; பெல்ஹாமுக்கு கொஞ்சம் அர்ச்சனை என்றாலே கதை  சூப்பர் ஹிட் என்ற அளவுகோல்கள் நிலவிய நாட்களவை !! இதழ் விறு விறுவென்று தயாராகி - பைண்டிங்கில் இருந்த போது அந்நாட்களது நமது பைண்டிங் கான்டிராக்டரான திருநெல்வேலியைச் சார்ந்த "நைனா" (அவர் பெயர் கடைசிவரை தெரியாது ; எல்லோருக்கும் அவர் "நைனா" தான்!) இதழைப் பார்த்துவிட்டு - "புக்கு சூப்பரா வந்திருக்கு தம்பி" என்ற போதே ஜிவ்வென்று இருந்தது எனக்கு ! அந்நாட்களது மனிதர் ; காமிக்ஸ் பற்றித் துளியும் தெரிந்திராதவர் ; ஆனால் மிகுந்த அனுபவசாலி ! அவரது கணிப்பு துளியும் மிஸ் ஆகிடாது - விற்பனை அட்டகாசமாய் அமைந்திட - ரொம்ப ரொம்பச் சீக்கிரமே கையிருப்பு மொத்தமும் விற்றுத் தீர்ந்தது !! பின்னாட்களில் நிறைய இதழ்கள் ; ஆண்டுமலர்கள் என்றெல்லாம் நாம் பார்த்திருப்பினும் - அந்த முதல் மலர் என்றைக்குமே செம ஸ்பெஷல் எனக்கு ! அதுவும் கேக்  முன்னே சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் அந்தச்  சிங்கத்தின் உருவத்தையும் FLEETWAY கார்ட்டூன் ஒன்றிலிருந்து சுட்டு - நமக்கொரு ஆண்டுமலர் அடையாளமாக்கியது இன்னமும் நினைவில் நிற்கிறது !
இன்றைக்கும் அதே நாயகர்கள் சுற்றி வந்தாலும், அவர்கள் உருவாக்கும் தாக்கங்கள் மாறியிருக்கலாம்! But - லயனின்  ஆரம்ப நாட்களை turbo charged ஆக வைத்திருக்க இந்த இரு பிரிட்டிஷ் பிரகஸ்பதிகளும் தான் காரணம் என்பதில் துளியும் மாற்றுக் கருத்து கிடையாது! ‘ஸ்பைடர்‘ என்றால் வழக்கத்தை விடவும் 5000 ஜாஸ்தி; ‘ஆர்ச்சி‘ என்றால் 3000 ஜாஸ்தி!‘ என்ற பார்முலாக்களை மறக்கத் தான் முடியுமா? இன்றைக்கும் இவர்களைக் கொண்டு ஒரு “சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்- சீசன் 2“ வெளியிட்டால் தெறிக்கத் தான் செய்யும்...! ஆனால் நம்மில் பலரும் சிக்கிய திசைகளில் தெறித்து ஓடுவதையும் என் மனக்கண்ணில் பார்க்க முடிகிறது! எதற்கும் அசராமல் நமது ஸ்டீல் பொன்ராஜ் மாத்திரமே விசிலடித்துக் கொண்டிருக்க, பாக்கிப் பேர் கன்ன மருக்களோடு ஒடிஷா; பீஹார்; ஜார்கண்ட் பக்கமாய் குடிபெயரச் செய்த ‘புண்ணியம்‘ நமக்கேன்? என்பதால் சட்டித் தலையனுக்கும், கூர்மண்டையர்களுக்கும் இதயத்தில் இடம் தருவதோடு நிறுத்திக் கொள்வோம்!
இங்குள்ளோரின் 90% ஸ்பைடர் & ஆர்ச்சியை ரசித்து வளர்ந்தவர்களே என்ற முறையில் உங்களது அந்நாட்களது அனுபவங்களைக் கேட்டறிய ஆவல்! உங்களது Top ஸ்பைடர் & ஆர்ச்சி சாகஸங்கள் எவையாக இருந்தனவோ? இந்த வாரயிறுதியில் உங்கள் "சூப்பர் மலரும் நினைவுகளால்" மெருகூட்டலாமே?

அப்புறம் நமது பால்யத்து நண்பர்களுக்கொரு  caption எழுதும் போட்டியை பிரெஷ்ஷாக வைத்து இந்த ஞாயிறை அதிர வைப்போமா ? வெற்றி பெறும் வரிகளுக்கு ஒரு FLEETWAY (ஒரிஜினல்) ANNUAL பரிசு ! So get cracking !!மீண்டும் சந்திப்போம் all ! Bye for now ! 

254 comments:

 1. Super. I am first :)
  will read and update

  ReplyDelete
 2. Replies
  1. 2பேரும் டை ...பெனால்டி கிக் அடிப்போமா,நண்பரே....

   Delete
  2. நமக்கு புட் பால் அவ்வளவா வராது பாஸ்.

   Delete
  3. அப்போ நான் 2nd ௲ப்பர்தான்

   Delete
 3. அப்போது போலவே இப்போதும் ஸ்பைடர் பிடிக்கத்தான் செய்கிறது.
  ஸ்பைடருடனான மலரும் நினைவுகள் விரைவில்...

  ReplyDelete
  Replies
  1. அப்போது போலவே இப்போதும் ஸ்பைடர் பிடிக்கத்தான் செய்கிறது.//
   +1

   Delete
  2. அப்போது மட்டுமல்ல இப்போதும் ஸ்பைடரும் ஆர்ச்சியும் எங்களுக்கு ஸ்பெஷலே

   Delete
  3. //அப்போது மட்டுமல்ல இப்போதும் ஸ்பைடரும் ஆர்ச்சியும் எங்களுக்கு ஸ்பெஷலே//
   +1

   Delete
 4. டெக்ஸ் அட்டைப்படம் பளீர் என அட்டகாஷ் சார்...இதுமாதிரி தான் எதிர் பார்க்கிறோம்...டெக்ஸ்க்கு மட்டுமே இடம் என்ற ஃபார்முலா லயன் 250போன்ற இதழ்கள்ல மட்டுமே செய்யுங்கள் சார் ...

  டாப் ஸைஃபர் ச்சே ஸ்பைடர் சாகசம்-கடத்தல் குமிழிகள்- அசால்ட்டான க்ளைமாக்ஸ்...
  டாப் ஆர்ச்சி சாகசம்- உறுதியாக "உலகப்போரில் ஆர்ச்சி"-

  ReplyDelete
 5. Dear எடிட்டர் Sir ,

  ஸ்பைடர், நீண்ட நாட்கள் நான் பித்து பிடித்து அலைந்தது இந்த ஹீரோ கதைகளுக்கே. கற்பனை உலகம் என்றால் என்ன என்பதற்கு ஸ்பைடர் கதைகளுக்கே பொருந்தும் . இன்றும் எனது மகனுக்கு(4 Years) இக்கதைகளை கூறியே தூங்க செய்கிறேன்.

  எனக்கு மிகவும் பிடித்தது பாட்டில் பூதம் மற்றும் ஆர்கோவின் விசித்திர சவால். கால இயந்திரம் அறிமுகம் செய்த இதழ் அது . இன்றும் time ட்ராவல் படங்களை தேடி பிடித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் எந்த படமும் ஸ்பைடர் கதைக்கு அளவு எனக்கு பிடிக்கவில்லை :)

  ஒரு வேண்டுகோள்
  மீதம் உள்ள வெளியிடாத ஸ்பைடர் கதையை limited எடிஷன் ஆக வெளியிடுங்கள்.

  நன்றி இனிய நினைவுகளி மீட்டதற்கு
  சுரேஷ்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா பெயர் நினைவில் இல்லை .....கோடை மலரில் வந்த ிந்த கதை ..அடடா ...பன்றி முகத்தான் ...என பல வியப்புறும் உருவங்கள் ...கோடை விடுமுறை ....அந்த வெளியிடா கதை நானும் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++.......

   Delete
  2. ///கோடை மலரில் வந்த ிந்த கதை ..அடடா ...பன்றி முகத்தான் ...என பல வியப்புறும் உருவங்கள்.///

   டாக்டர் ஆக்ரோவின் "விசித்திர சவால் "

   Delete
 6. ஆர்ச்சி: என்னப்பா ஸ்பைடர் நாம என்னதான் கலரு, பாலிஷு போட்டு ன்னு வந்தாலும் எடிட்டர் இதயத்துல தான் இடமுன்னு சொல்லிட்டாரு.

  ஸ்பைடர்: போட சட்டி தலைய, சூப்பர்ஸ்டார் ரசிகர்களை விட வெறித்தனமான ரசிகர்கள் எனக்கு இருக்கிற வரைக்கும் நான் திருப்பி வரத யாராலும் தடுக்கவே முடியாது

  ReplyDelete
 7. Good Morning. கனவின் குழந்தைகள் வித்தியாசமான வாசிப்பு அனுபவம். மார்டின் கதைகள் அனைத்தும் publish பண்ணியாச்சா சார்.

  ReplyDelete
 8. எடிட்டர் சார்,
  ஸ்பைடர் & ஆர்ச்சி கதைளுக்காக நான் முத்துவிலிருந்து, லயன் படிக்க துவங்கினேன்.

  சூ.ஹீ சூ.ஸ் சீசன்-2 க்கு +1

  ReplyDelete
 9. எடிட்டர் அவர்களுக்கு. பேய் பிடித்தாலே முடியாது இதில் நம்மை வெகுகாலமாக பிடித்திருந்த தாமதப்பேய் மீண்டுமா?அய்யோ சாமி தாங்காது. 😜 😜😜😜

  No 1:சென்ற வருடம் சொன்னதாக ஞாபகம் 200 பக்க ஸ்பைடர் கதை உள்ளதாக அதனுடன் ஆர்ச்சி,மாயாவி புதிய or பழைய கதையை சேர்த்து நீங்கள் சொல்வது போல். ௲ ஹுரோ ௲ ஸ்பெஷல் தரலாமே?
  No2:1000 பக்க black&white குண்டு புக் தருவதாக சொன்னீங்க அது எப்போ?
  No3:tex-யை பலகோணத்தில் பார்த்தாகிவிட்டது(சலிப்பு தட்ட சான்ஹே இல்லை. அது வேற)செவ்விந்திய மரபுஉடை சாகஸம் கலரில் பார்க்க ஆசை நிறைவேறுமா?
  No4:தோட்டா டைமில் உங்களின் எழத்து 4 வரிகளாவது இருக்கவேண்டும் முடியுமா?
  கேள்விகளும்,ஆசைகளும் தொடரும்👏👏👏👏👏(எனக்கு நானே சபாஷ் சொல்லி கொள்கிறேன்)எப்படி

  ReplyDelete
 10. ஸ்பைடர்:என்னடா சட்டிதலையா. எங்கே ஓடுறே?என்ன பார்த்து பயமா?
  ஆர்ச்சி: அட நீ வேற நம்ம பழைய ரசிகர்களை நினைத்து பயந்து ஓடுறேன்

  ReplyDelete
 11. ஸ்பைடரில் பிடித்தது நீதிக்காவலன் ஸ்பைடர்
  ஆர்ச்சியில் பிடித்தது ஆர்ச்சிக்கொர் ஆர்ச்சி

  ReplyDelete
 12. சிறு வயதில் , உண்மையில் சைத்தான் விஞ்ஞானி புத்தகத்தை கையில் எடுத்தவுடனே வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்ததை இன்றும் உணர்கிறேன். அந்த குண்டு சைஸ் மற்றும் அந்த கால சூப்பர் ஸ்டார்கள் இருவரும் ஒன்றாக வந்தது பெரும் ஆனந்ததத்தை கொடுத்தது.

  அந்த சிறுவயதில் , இந்த புத்தகத்திற்கு ஷேர் மார்க்கெட்டில் பாங்குகள் மதிப்பு உயர்ந்தது போல் சரியான டிமாண்டு.செகண்ட்ஸ் சேல்ஸ்களில் மற்ற புத்தகங்கள் தாராளமாய் கிடைத்த காலத்தில் இந்த புத்தகம் மட்டும் கிடைக்கவேயில்லை. என்னிடம் இருந்த புத்தகத்தை காசு கொடுத்து வாங் கடும் போட்டி நிலவியது.அன்று முதல் இன்றுவரை நான் காமிக்ஸை ஒருபோதும் விற்றதில்லை.இது இனிமேலும் தொடர கடவுள் காப்பாற்றுவாறாக.!.( கடைசியில் பக்கத்து வீட்டு சக மாணவிக்கு இரவல் கொடுத்து காணாமல் போய்விட்டது.!

  ReplyDelete
 13. காலை வணக்கம் நண்பர்களே....

  ReplyDelete
 14. ஆர்ச்சி: ஹாய்! நீங்க தான் "அந்த" ஸ்பைடரா?
  ஸ்பைடர்: ஸ்பைடர்னு சொன்னதும் ஹாலிவுட் படங்கள்ல பில்டிங்ல தொங்கி கிட்டு, ஜிங்கு சான்னு சிவப்பு கலர் dress போட்டுகிட்டு, மக்களுக்கு ஒரு ஆபத்துன்னா ஓடி வந்து உதவுவானே அந்த மாதிரி ஸ்பைடர்னு நினைச்சியாடா?? ஸ்பைடர்டாாாா...

  ReplyDelete
 15. டெக்ஸின் அட்டைபடம் அள்ளுது அதை விட டெக்ஸ்க்கு கொடுக்கும் டயலாக் என்னமோ போங்க சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை

  ReplyDelete
 16. ஸ்பைடர்:என்னடா சட்டிதலையா. எங்கே ஓடுறே?என்ன பார்த்து பயமா?
  ஆர்ச்சி: அட நீ வேற நம்ம பழைய ரசிகர்களை நினைத்து பயந்து ஓடுறேன்

  ReplyDelete
 17. அட்டை படம் சூப்பர் ஸார்.

  ReplyDelete
 18. அந்திரிக்கி நமஸ்காரம்!!!

  ReplyDelete
 19. எனது தேர்வில் top ஸ்பைடர் & ஆர்ச்சி சாகஸங்கள் சதுரங்க வெறியன் , நீதிகாவலன் ஸ்பைடர், புதையல் வேட்டை , புரட்சி வீரன் ஆர்ச்சி!

  ReplyDelete
 20. மொழிபெயர்ப்பில் கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.பராசக்தி படத்தில் பேசுவது போன்ற டயலாக்குகளை தனி ஒருவன் போன்ற இன்றைய காலகட்ட படங்களில் பேசினால் எப்படியிருக்கும்,யோசித்துப் பாருங்கள்(கர்ண கொடூரமாக இருக்கிறதல்லலா).அதுவும் டெக்ஸ் வில்லர் கதைகளில் இதே பாணி தொடர்ந்து வருகிறது.200+ பக்க கதையான "தலையில்லாப் போராளி"யை வாசிக்கும் போது ரொம்பவும் பழைய நெடி அடிப்பதாக மனதிற்குபட்டது.ஆக இது போன்ற நீ....ண்ட கதைகளில் கொஞ்சம் புதுவிதமான ரசிக்கக்கூடிய வகையிலான மொழிபெயர்பை முயற்சி செய்யலாமே!??

  ReplyDelete
  Replies
  1. Kavinth JeevA : தவறான புரிதல் ! "பழைய பாணி" ; "புது பாணி" என்ற விஷயத்தில் பேச்சு வழக்கிற்கும், எழுத்து நடை நடைமுறைக்கும் நிறையவே வேற்றுமை உண்டு.

   ஒரு திரைப்படத்தில் அதன் கதாப்பாத்திரங்கள் சம கால பேசும் பாணிகளை பயன்படுத்திடுவது விடுதலாய்த் தெரியாது. ஆனால் தூய தமிழ்நடைக்கு அதே பேச்சு வழக்குப் பாணி இணக்கமாகிடாது !

   "விடாதே மச்சி.." - இது தனி ஒருவன் தமிழாக இருக்கலாம் ;
   "விடாதே தோழா" - இது பராசக்தி பாணியாகத் தென்படலாம் !

   ஆனால் "மாற்றம்" என்பதற்காக முந்தைய வரிகளை டெக்ஸ் வில்லர் போன்றதொரு classical ஹீரோ பேசினால் நெருடலின்றிப் போகாது !

   "தனி ஒருவன்" அரவிந்த்சாமி பராசக்தி பாணியில் பேசினாலும் பொருந்தாது ; நடிகர் திலகம் மணிரத்னம் பாணியில் டயலாக் பேசினாலும் எடுபடாது ! So "மாற்றம் " என்ற பெயருக்கான மாற்றமல்ல நமது தேடல் !

   தூய தமிழ் தொடர்ந்திடும் போதும் எழுதும் விதங்களில் எழக் கூடிய மாற்றங்களைக் கோருவதே எனது எண்ணம்.

   Delete
  2. And - சமீபமாய் ; at least கடந்த ஆறு மாதங்களிலாவது சன்னமாய் ஒரு shift அரங்கேறி வருகிறது மொழிபெயர்ப்புப் பாணிகளில்.

   Julia போன்ற சமகால (புது) வரவுகளுக்கு துவக்கத்திலேயே ஒரு down to earth பாணியைக் கையாள முனைந்து வருகிறோம். ஷெல்டன் தொடரிலும் அது நடைமுறையில் உள்ளது. ஆனால் அதே பாணியை கமான்சே போன்றதொரு classical தொடருக்கு முயற்சித்தால் - ஒட்டாது ! பாணி மாற்றங்கள் selective ஆக இருத்தல் முக்கியம்.

   Delete
  3. //at least கடந்த ஆறு மாதங்களிலாவது சன்னமாய் ஒரு shift அரங்கேறி வருகிறது மொழிபெயர்ப்புப் பாணிகளில். //
   அதை நிச்சயமாய் உணரமுடிகிறது. வரவேற்கத்தக்க முயற்சி!

   Delete
  4. நான் எதிர்பார்த்த பதில்தான்.புதுப்பாணி என்றவுடன் தற்கால பேச்சு வழக்குடன் ஒப்பிடுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்.நான் குறிப்பிட்டது புது varietyயை.23ம் புலிகேசியும் ராஜா காலத்து கதைதான்,தமிழின் ஆரம்ப கால படங்களும் ராஜாக்களைப்பற்றியதுதான்.ஆனால் இரண்டிலுமே வேறுபட்ட பேசும் பாணிகளை கொண்டு எம்மை கவர்ந்து இருப்பார்கள் அல்லவா.அதேபோல் வெய்ன் ஷெல்டன் கூட சில நேரங்களில் பேசும்போது பராசக்தி சிவாஜியாகத்தான் கண்ணுக்கு தெரிகிறார்.தனி ஒருவன் போன்ற ஸ்டைலிஷ் அவர் பேச்சில் தெரியமாட்டேன் என்கிறது.டெக்ஸ் வில்லர் கதைகளை எடுத்துக் கொண்டால் தலைவாங்கிக்குரங்கு முதல் தலையில்லாப்போராளி வரை அதே மொழிநடைதான் இன்றும் தொடர்கிறது(ஒரு சில கதைகள் விதிவிலக்கு).ஆதிகாலத்தில் நடப்பது போன்ற கதைகள்தான்.ஆனால் அதற்குள் சிற்சிறு மாற்றங்களை கொண்டுவரலாமே.
   eg:-தலையில்லாப் போராளியில் ஒரு சில இடங்களில் கார்சனை வில்லர் ப்ரோ என்று அழைப்பார்.இதைப்போன்ற புது varietyயை மற்றும் சொல்லாடல்களைதான் நான் குறிப்பிட்டேன்

   Delete
 21. ஆஹா டெக்ஸ் அட்டைப் படங்களிலே வழக்கம் போல இதான் பெஸ்ட் .....ஆர்ச்சி குதிரையில் ...அன்று போலவே இன்றும் ஜில் ....படிச்சிட்டு வரேன்

  ReplyDelete
 22. எடிட்டர் சார்,

  கதைத் தேர்வின்பொருட்டு இத்தாலிய ஹீரோக்கள் உங்களைப் படுத்தியெடுப்பது சற்றே வேதனையளிக்கிறது! ஆனால், முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியாது; உங்கள் மண்டையை உருட்டாமல் எங்களுக்கு நல்ல கதைகள் கிடைக்காது என்ற நிலையில் 'கஷ்டப்படட்டுமே... என்ன இப்ப!' என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது ஹிஹி! (உண்மையான 'கிராதகர்கள்' கதைகளில் உலவவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் சரி!)

  டெக்ஸின் அட்டைப்படம் தமிழக முதல்வருக்கு பிடித்த வண்ணத்தில் அள்ளுகிறது! ஆனால், நாலடி தூரத்தில் கயவர்கள் பின்புறத்தில் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்க, நம்ம தல எங்கோ மலைமுகட்டை தேமேனு லுக்கு விட்டுக் கொண்டிருப்பது கொஞ்சம் முரண்பாடாய் + காமெடியாய் இருக்கிறது! தல'யின் பின்னால் நிற்கும் அந்த கூர்மண்டைப் பெண் - அழகு!

  ReplyDelete
  Replies
  1. //ஆனால், நாலடி தூரத்தில் கயவர்கள் பின்புறத்தில் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்க//
   இரண்டும் வேறு வேறு காட்சிகள். அதனால்தான், வர்ணத்தில் வேறுபாடு காட்டியிருக்கிறார் ஓவியர்! இப்போதைக்கு இந்த மாற்றம் எவ்வளவோ தேவலாம்!! :-)

   Delete
 23. /அப்புறம் நமது பால்யத்து நண்பர்களுக்கொரு caption எழுதும் போட்டியை பிரெஷ்ஷாக வைத்து இந்த ஞாயிறை அதிர வைப்போமா ? //
  ஏற்கனவே ஒரு போட்டி முடிவு அறிவிக்கப்படாமலேயே உள்ளது என நினைக்கிறேன் சார்.

  ReplyDelete
  Replies
  1. Podiyan : அந்தப் பதிவின் லின்க் மட்டும் போடுங்களேன் சார்...இன்றைக்கே அறிவித்து விடுவோம் !

   Delete
  2. இதுதான் அந்தப் பதிவு சார்: http://lion-muthucomics.blogspot.com/2016/05/blog-post_22.html

   அதனை ஞாபகப்படுத்த காரணம், பரிசு ரொம்ப்ப ரொம்ப்ப ஸ்பெஷலானது:
   //பரிசு : முத்து காமிக்ஸ் 1-50 பட்டியலின் ஏதேனும் ஒரு vintage இதழ் ! //

   Delete
 24. சார் உங்களது இவ்வளவு உழைப்புக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என எண்ணினால் ...இப்போது தாங்கள் எழுதிய தங்கள் சிரமங்கள் என்னத்த சொல்ல முடியிம் என எண்ண வைக்கிறது .அதிலும் தொடர்ந்து மேம்பட்டு வரும் நமது இதழ்கள் நிச்சயம் விரைவில் பலரின் கவன ஈர்ப்பை பெற்றுத் தரும் என்ற வழக்கமான நம்பிக்கையே வாழ்க்கை என கடந்து செல்கிறேன் .
  சார் அந்த நூற்றுக் கணக்கான மாந்தர்கள் உலவும் கதை அதிரடி அது இதுவென மனதில் உற்ச்சாகத்தை எழுப்பினாலும் சிக்கலான கதை சிண்டை பிய்த்தத புரிந்து கொள்ள முடிகிறது .ஆனா இரத்தப்படலம் ஓரிரு இடங்களில் நெருடியத தவிர மொத்த கதயயும் நகர்த்திய அந்த மொழி பெயர்ப்பும் அதன் எடிட்டிங்கயும் நினைத்தால் பிரம்மிக்க வைக்கிறது .சில கேள்விகள் எழுந்தால் உடனே வாயடைக்கும் பதில் என தக்க மொழி பெயர்ப்பும் ,தொடர்ந்து படித்து ஏற்றிக் கொண்டு செய்த ஈடுபாடான எடிட்டிங்கும் இப்போதய தங்கற் வார்த்தைகளில் புரிகிறது .தங்கள் காதலும் தெரிகிறது .ஆகவே அந்த கதை தங்களுக்கு ஜுஜூபி என நினைக்கிறேன் ...

  ReplyDelete
  Replies
  1. மார்ட்டின் கதை அட்டகாசமாகத்தானிருந்தது .நண்பர் கூறிய மாற்றத்தை முதலடியிலேயே கச்சிதமாய் பிடித்து விட்டீர்கள் ...அந்த பச்சை வண்ணப் பின்னனியும் , துரத்தும் மாந்தர்களும் அட்டை படத்தை மேலும் மேம் படுத்துகின்றன .

   Delete
  2. ஆண்டு மலர் என்றதும் பளிச்சென நினைவிற்க்கு வந்தது இதே இதழ்தான் ...இதே குதிரை மீது ஆர்ச்சிய கொண்ட குண்டிதழ் எனும் காரணம்தான். என்ன ஒரு அட்டகாசமான படைப்பு .. அதும் சைத்தான் விஞ்ஞானி இப்பவும் அசத்தும் இதழ் .ஆர்ச்சி மலைய குடைய தன் மார்பிலிருந்து எடுக்கும் கருவிகள் ,பீய்ச்சும் காற்று ...ஒரு சேரில் கௌபாய் போல அமர்ந்திருக்கும் சித்திரங்கள் நினைவில்....கதை சுத்தமாய் நினைவில் இல்லை . ஆனா அந்த சந்தோசம் அப்படியே நினைவில் .ஆனா எந்த புத்தகத்த கடையில பாத்து வாங்கியவுடன் பொங்கி வரும் சந்தோசம் ஆர்ச்சி ,ஸ்பைடர கண்டா கூடுதலாகிடும் எனும் போது இருவரும் ஒரு சேர ....குண்டான இதழ் எனும் போது பீறிட்டிடாதா .இந்த இதழ எனது சித்தியிடம் மேட்டுப் பாளையம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று விண்டு திரும்புகையில் காந்திபுரம் கஸ்தூரி பவன் அருகே உள்ள பெட்டிக் கடையில் துள்ளிக் கொண்டே காசு வாங்கி வாங்கியது பசுமையாய் நினைவில் .இந்த இதழ் வருவதே தெரியாது ...அடுத்த வெளியீடுகள் குறித்த புரிதல் ,ஞானம் அப்போது இருந்திருக்காததால் அந்த இன்ப அதிர்ச்சி என நினைக்கிறேன் ..

   Delete
  3. அப்புறம் சூ.ஹீ.ஸ் 2ல் இரும்புக் கை மாயாவியும் ,sinsters 7ம் வந்தால் காமிக்ஸ் உலகம் பேருவகை கொள்ளுமே .ஒரு சிறப்பு மலர் இதை தாங்கி வந்தால் இதை விட சிறப்பேதோ .

   Delete
  4. இவர்களது சிறப்பே இப்ப படித்தால் அற்புதமாய் தெரியும் காரிகன் ,கெர்பி ,மாடஸ்டிய அன்று சாதாரணமாக்கியதுதானே ..

   Delete
  5. கொலைப்படை ,எத்தனுக்குஎ, டாக்.டக்கர்,பா..போராட்டம் ,க.குமிழிகள் ,ப.வா.பொம்மை ,யார் அ..மி.ஸ் ,சதுரங்க வெறியன் ,நீகாஸ், மி.ம ,த.எ ,கோடை மலர் ,பாட்டில் பூ ....எதனை விட

   Delete
  6. மலரும் நினைவுகள் பல உண்டு ...அவ்வப்போது இவை குறித்து இதழ்கள் வெளியாகையில் பகிர்கிறேன் .அந்த ஆண்டு மலர இப்பத்தய சைசில் வெளியிட்டால் எப்படி இருக்கும் ...ஆனா அதுக்கான வாய்ப்ப ில்லாம பண்ணியாச்சே

   Delete
 25. ஸ்பைடர்:டேய்... சட்டித்தலையா... ஓடாதே... நில்லுடா.. என்னப்பாத்து ஏண்டா அப்படி சொன்ன?

  ஆர்ச்சி:இன்னமும் தான்தான் பெரிய ஹீரோனு நெனெச்சுகிட்டு இருக்கிற அண்ணன் கிட்ட, அந்த காலத்துல நீங்கதான்ணே பெரிய சூப்பர் ஸ்டார்னு சொன்னது தப்பா? கையில வச்சிருக்கிற துப்பாக்கியில இருந்து என்ன வருமோனு வேற தெரியிலயே...

  ReplyDelete
 26. //டிசைனுக்கு அப்புறமாய் அச்சு; லேமினேஷன்; க்ரீஸிங் போன்ற பணிகளை லக்கி லூக்கின் சுடும் வேகத்தில் செய்தாகும் நெருக்கடிகள் ஒவ்வொரு மாதமும் எங்களுக்கு ! இதற்கொரு தீர்வு தயாராகிடாதவரை//

  நண்பர்களது பங்களிப்பு நம்பிக்கை தரவில்லையா சார். இந்த விடயத்தில்?? :-(

  ReplyDelete
 27. மார்ட்டின் கதைகள் புரிந்து கொள்ள கடினமாக இருப்பினும், அதை நான் வெகுவாக ரசிக்க முடிகிறது் ். ஒரு மறைக்கு இருமுறை அமைதியான சூழ்நிலயில் கதையோடு ஒன்றி படிக்கும்போது எப்படிபட்ட கடினமான கதையாக இருப்பினும் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறரது். ். ் graphic novel, martin. மார்ட்டின் தொடர வேண்டும் என்பது எனது அவா்.......

  ReplyDelete
 28. ஸ்பைடர் கதைகளில் நான் மிகவும் எதிர்பார்த்ததும்...மனதை கவர்ந்து சென்றதும் ஒரு இதழ் எனில் அது நீதி காவலன் ஸ்பைடர் ...காரணம் வில்லனாக இருக்கும் பொழுதே அதிகமாக ரசிக்க வைத்த இந்த கூர் மண்டையர் இதழ் வெளி வருவதற்கு முன்னரே ஸ்பைடர் நல்லவனாக மாறினான் ..நீதி காவலனாக வர போகிறான் போன்ற விளம்பரங்கள் பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது ..அச்சமயத்தில் ஆஹா நம்ம தலைவர் வில்லனாக இருக்கும் பொழுதே எதிர் வில்லன்களை பட்டையை கிளப்புகிறார் ...இனி நல்லவனாக ..காவல்துறைக்கு உதவியாக எனும்போது வில்லன்களை சுளுக்கெடுக்க போகிறார் என பள்ளி காமிக்ஸ் நண்பர்களிடம் உரையாடியது நினைவில் வருகிறது ...எதிர் பார்த்த படியே நீ.கா. ஸ்பைடர் பட்டையை கிளப்பியது ...

  பிறகு நீதிகாவலனாகவே ஸ்பைடர் உருமாற வில்லனாக திரும்ப வருவாரா என்றும் மனம் பழைய படி திரும்ப அச்சமயத்தில் ஸ்பைடர் நல்லவனாக மாறுவதற்கு முன் நிகழ்ந்த சாகஸம் என்ற அறிவிப்புடன் வந்ந "மிஸ்டர் மர்மம் .."மறக்க முடியாத இதழாக அமைந்தது....இப்போதும் மனதை கவர்ந்த இதழ்கள் நீதி காவலன் ஸ்பைடரும் ..மிஸ்டர் மர்மமும் ....

  இப்படி இருவேறு நிலையில் ஸ்பைடர் மாறும் அந்த முதல் இதழ்களை விட பட்டாசாய் ஏற்படுத்திய அடுத்த விளம்பரமாய் அமைந்தது யார் அந்த மினி ஸ்பைடர் ...ஹே ...எங்கள் ஸ்பைடர் ...படத்துல வர்ற மாதிரி டபுள் ஆக்டல வர போறார் தெரியுமா என மகிழ்ச்சி பொங்க நண்பர்களிடம் கலந்துரையாடியதும மனதில் இன்னும் மறவா நிகழ்வாக திகழ்கிறது ..பிறகு கதை வந்தவுடன் டபுள் ஆக்ட் அல்ல என கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தாலும் ஸ்பைடரும் ..மினி ஸ்பைடரும் உண்மை புரிந்து இருவரும் கை கோர்க்கும் பொழுது அப்பொழுது எம்ஜியார் இருவேடங்களில் நல்லவனாகவும் ..கெட்டவனாகவும் நடித்து பின்னர் வில்லன் வேறு நாம் சகோதரர்கள் என உணர்ந்து இனையும் பொழுது திரை அரங்கில் கைதட்டல் அதிருமே அது போல இந்த இரு ஸ்பைடரும் இனைந்தவுடன் மனதில் அப்படி ஒரு கூதுகலம்...

  இப்படி ஸ்பைடரின் இந்த மூன்றும் முக்கனிகளாய். இன்னும் நினைவில் ....

  ReplyDelete
  Replies
  1. @ பரணிதரன்

   அருமை..அற்புதம்...அட்டகாசம்...!

   ஸ்பைடரைப்பற்றி நிறைய மலரும் நினைவுகள் களேபரமாக மனதில் அலைந்து கொண்டிருக்கும் போதிலும்...அதை வார்த்தைகளில் வடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். என் மனதில் உள்ளதை அப்படியே பதிவிட்டிருக்கிறீர்கள்..! சூப்பர்..!

   பெரிய சைஸில் வந்த கொலைப்படையும் மறக்க முடியாத இதழல்லவா...?

   Delete
  2. எனக்கு ஸ்பைடர் நீதிக் காவலனாய் மாறுவது பிடிக்கவில்லை ...ஆனா நீதிக் காவலன் ஸ்பைடர் அட்டகாசம் என்பதில் மறு பேச்சே இல்லை .

   Delete
  3. பெரிய சைஸில் வந்த கொலைப்படையும் மறக்க முடியாத இதழல்லவா...?


   #####

   உண்மை நண்பரே ....ஆனால் அதை குறிப்பிடாமல் விட்டதற்கு காரணம் உண்டு .....காரணம் அந்த மெகா ஒரிஜினல் இதழை இதுவரை கண்ணில் கூட கண்டதில்லை ...பாக்கட்சைஸ் மறுபதிப்பில் மட்டுமே படித்துள்ளேன் ..;-)

   Delete
  4. நான் படித்திருக்கிறேன் நண்பரே..! கொலைப்படை + ஆர்ச்சியின் மர்மத்தீவு இணைந்த இதழாக இரு வண்ணங்களில் வந்தது. என் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து நானும் என் சகோதரனும் கெஞ்சி கூத்தாடி வாங்கிப்படித்தோம்...!
   அவர் அவ்வப்போது சொல்லும் சின்ன சின்ன எடுபிடி வேலைகளை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு கொடுத்தார்.
   அதெல்லாம் ஒரு நெலாக்காலம்....!!!

   Delete
 29. //“கனவின் குழந்தைகள்“// - அது ஒரு க்ளாஸிக் ரக கதை! சார். உங்கள் உழைப்பு கதையை மிகத் தெளிவாக கொண்டு சேர்த்தது. !! 90 களில் லயனில் வந்த கதைகளை (மாடஸ்டி, ரிப் கிர்பி, காரிகன் - என்று அனைவருக்குமே அட்டகாசமான களங்களை அப்போது கொடுத்திருந்தீர்கள் - 2000 களில் அது அந்தர் பல்டி!!!) ஒத்ததாக இருந்தது!

  ReplyDelete
 30. Betty barnowsky க்காக நம்நண்பர் XIII கதை யை 1-18 வரை படித்தாயாற்று மீண்டும் ஒருமுறை. மற்ற spin off கதைகளையும் வாசித்து வருகிறேன். விரியனுன் விரோதி, அம்பின் பாதை். இதர..... எடி சார் பதிமூன்றின் மர்ம்ம் இரு பலனாய்வாளர்களின் பார்வையில் என்ற கதையை எப்போது வெளியாகும் என தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்... Spin off தொடரில் கர்னல் ஆமோஸ் கதையை எப்போது வெளிவரும் சார்.....

  ReplyDelete
  Replies
  1. அந்த குண்டுகள் பாய்ந்து பிரசிடண்ட் சாகும் இடத்தில் குழப்பம் தெரிகிறதா நண்பரே

   Delete
 31. குற்றம் பார்க்கின் அட்டைபடம் அருமை,அதிலும் அந்த அடர்பச்சை வண்ண பின்னணி ஒரு வித்தியாசமான லுக்கை தருகிறது.

  ReplyDelete
 32. Edit sir comics4all not working from last week is this site closed permanently?

  http://comics4all.in/

  ReplyDelete
 33. ஸ்பைடர்: "டேய் சட்டித்தலையா! எங்கே ஓடுகிறாய்? நில்! நிற்காவிட்டால் என் வலைத்துப்பாக்கிக்கு பதில் சொல்லவேண்டிவரும்...."
  ஆர்ச்சி: "போடா..கூர்மண்டையா! உனக்கு கேப்ஷன் போட்டி வைக்கும்போது பொதுவாக வைப்பது. என்னை வைத்து கேப்ஷன் போட்டி வைக்கும்போது மட்டும் பால்ய காலத்து நண்பர்களாமே! என்னையும் என் ரசிகர்களையும் தாத்தாக்களாக்கிய விஜயனை ஒருவழி பண்ணிவிட்டு உன் வலைத்துப்பாக்கிக்கு பதில் சொல்கிறேன்..."

  ReplyDelete
 34. நண்பர்களே,TeX willed ன் மரணத்தின் நிறம் பச்சை, சைத்தான் சாம்ராஜ்யம் இரு புத்தகங்களும் படிக்க கிடைக்குமா் ...... 10 நாட்களில் திருப்பி தருகிறன் ..... My favourite stories

  ReplyDelete
 35. ஸ்பைடர்: "டேய் சட்டித்தலையா! எங்கே ஓடுகிறாய்? நில்! நிற்காவிட்டால் என் வலைத்துப்பாக்கிக்கு பதில் சொல்லவேண்டிவரும்...."
  ஆர்ச்சி: "போடா..கூர்மண்டையா! உனக்கு கேப்ஷன் போட்டி வைக்கும்போது பொதுவாக வைப்பது. என்னை வைத்து கேப்ஷன் போட்டி வைக்கும்போது மட்டும் பால்ய காலத்து நண்பர்களாமே! என்னையும் என் ரசிகர்களையும் தாத்தாக்களாக்கிய விஜயனை ஒருவழி பண்ணிவிட்டு உன் வலைத்துப்பாக்கிக்கு பதில் சொல்கிறேன்..."

  ReplyDelete
 36. நண்பர்களே,TeX willed ன் மரணத்தின் நிறம் பச்சை, சைத்தான் சாம்ராஜ்யம் இரு புத்தகங்களும் படிக்க கிடைக்குமா் ...... 10 நாட்களில் திருப்பி தருகிறன் ..... My favourite stories 7871930729

  ReplyDelete
 37. EDITOR SIR, SUPERHERO SUPER SPECIAL 2KKU, NEXT YEAR ORU SPACE PLS

  ReplyDelete
  Replies
  1. ஸ்பைடர் & ஆர்ச்சி என்றால் மட்டும்
   +11111

   Delete
  2. ஸ்பைடர் ஆர்ச்சி என்றால் நானும்
   +111111

   Delete
  3. ஆமா ஆமா ..............நானும் தயார் .......முமூர்திகள் ......மாயாவி .....ஸ்பைடர் .....ஆர்ச்சி தான் ...........லாரென்ஸ் டேவிட் ஜானி எல்லாம் அதற்கு பின்னால் தான் .............என்ன நா சொல்றது

   Delete
 38. ஸ்பைடர் ரசித்து படித்தது .யார் அந்த மினி ஸ்பைடர்
  ஆர்ச்சி ரசித்து ருசித்து .ஆர்ச்சிக்கோர் ஆர்ச்சி

  ReplyDelete
 39. ஆண்டு மலர்....! சில துணுக்குகள்...!

  1984 முதல் 2000 வரை...!

  அதிக கதைகளில் இடம் பிடித்த நாயகர்கள் பட்டியலில் முலிடம் நம் டாப் ஸ்டார் டெக்ஸ் வில்லருக்கே..!
  1986 ல் இரண்டாம் ஆண்டு மலர் பவளச்சிலை மர்மம்.

  1990 ல் எமனுடன் ஒரு யுத்தம்.(6 ஆம் ஆண்டு மலர் )

  1989 ல் 5 ம் ஆண்டு மலர் நடுக்கடலில் அடிமைகள் இதழில் மாய எதிரி சிறுகதை

  1997 மிஸ்டர் மகாராஜா இதழில் பாங்க் கொளளை சிறுகதை. (13 ம் ஆண்டுமலர்.

  இரண்டாமிடததை மூன்று ககைளோடு மாடஸ்டி இடம் பிடிக்கிறார்.
  1988 கானகத்தில் கண்ணாமூச்சி .4 ம் ஆண்டுமலர்.
  1989 நடுக்கடலில் அடிமைகள் 5ம் ஆண்டு மலர்.

  1994 மந்திர மண்ணில் மாடஸ்டி.

  லக்கி லூக்:-
  பூம் பூம் படலம் 11ம் ஆண்டு மலர்.

  கானகத்தில் கலவரம் இதழில் மனதில் உறுதி வேண்டும் .14 ம் ஆண்டு மலர்.

  சிக் பில் :-
  1997.மிஸ்டர் மஹாராஜா. 13ம் ஆண்டு மலர்

  1999 தலைவாங்கு் தேசம்.15ம் ஆண்டு மலர்

  ReplyDelete
  Replies
  1. ஜேடர் பாளையத்தார்@

   பரலோசத்திற்கொரு பாலம் லக்கி லூக் கதையும் ஒரு ஆண்டு மலர் என்று நினைக்கின்றேன்.

   Delete
  2. ஆமாம் நண்பரே...!

   1984 முதல் 2000 வரையிலான இதழ்களை மட்டும் லிஸ்ட் எடுத்தேன்...!

   பரலோகத்திற்கொரு பாலம் அதற்குப்பின்னால் வந்தது.

   Delete
 40. அந்த குண்டுகள் பாய்ந்து பிரசிடண்ட் சாகும் இடத்தில் குழப்பம் தெரிகிறதா நண்பரேகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்3 July 2016 at 09:53:00 GMT+5:30
  அந்த குண்டுகள் பாய்ந்து பிரசிடண்ட் சாகும் இடத்தில் குழப்பம் தெரிகிறதா நண்பரே

  உறுதியாக, காலனின் கைக்கூலி யில் உள்ளதம்கும், விரியனின் விரோதியில் Steve Rowland சுடுவதற்கும் வித்தயாசம் தெரிகிறது்....மேலும் குழப்பம் என்னவென்றால் Steve Rowland ஐ சுடுவது யார்..... கர்னல் மெக்காலா........ மேலும் Kim Rowland அல்லது Kim ன் பங்கு என்ன என்பதுதான்......

  ReplyDelete
  Replies
  1. சுடுவது ஸ்டீவ்தான் என்பது விரியனின் விரோதியில் தெரியும் . ஆனால் ஸ்டீவின் துப்பாக்கியிருந்து மூன்று டுமீல்கள் மங்கூஸை நோக்கி பாயும் .விரியனின் விரோதியில் சிறிது சொதப்பல் இதனால் . ஷெரிடன் தலையில் குண்டுகள் பாயும் படம் ...ஆனால் அந்த ஸ்டீவ் சுட்டதாய் கைப்பற்றப்பட்ட வெது வெதுப்பான துப்பாக்கியில் காணாமல் போனதாய் கைபற்றப்பட்ட மூன்று தோட்டாக்களும் பிரசிடெண்ட் மார்பில் எடுக்கப்பட்டதாய் ஆமோஸ் முதல் பாகத்தில் கூறுவார் .ஆனா இந்த முடிச்ச அவிழக்க யாரோ துப்பாக்கிய மாத்திட்டாங்கன்னு புதிய பாகமே சுவாரஷ்யமாய் உருவாகலாம் யார் கண்டார் நாம் பெரிதும் எதிர் பார்க்கும் ஆமோஸ் கதயில் இந்த முடிச்சவிழலாம் . காத்திருப்போம் ஆவலாய்..

   Delete
  2. ஸ்டீவை ச கொல்வது மங்கூஸ்தான் நண்பரே .இரண்டு தோட்டாக்கள் பாய்வது மங்கூஸ் துப்பாக்கியிலிருந்தே . மாக்கால் தப்பும் போது சுடும் குண்டு ஸ்டீவின் காலில் பாயும் . காலனின் கைக்கூலியில் பார்க்க .

   Delete
  3. சாரி ....ஸ்டீவ் தப்பும் போது மாக்கால் சுடும் குண்டு ஸ்டீவின் காலில் பாயும்

   Delete
  4. கேள்விய சரியா கவனிக்கலை ..கிம்மின் பங்கு இரட்டை வேடம் . தந்தை காரிகனிடம் அவர்களுக்கு உதவுவதாய் கூறிக் கொண்டே வாலிக்கு உதவுதல் . ஆனால் மகனை வைத்து வாலி பிளாக் மெயில் செய்வார் .தெளிவாக அவரவர் பார்வயில் ....அதாவது காரிங்டன் குழு மற்றும் கிம்மின் அதாவது வாலிக்கான கிம்மின் பார்வயில் செயல் படுவதை அட்டகாசமாக உள்வாங்கிக் கொண்டு மொழி பெயர்த்த அந்த மொழி பெயர்ப்பும்....எடிட்டிங்கும் அடடா....யோசித்து செய்தால் மட்டும் சாத்தியமாகி இருக்காது ...நேசித்தும் செய்ததால் மட்டுமே .காரிகனுக்கு கிம் அனுப்பிய ஃபிளாப்பியில் , அனைத்தயும் தெளிவு படுத்தி இருப்பார் .

   Delete
 41. 1984 முதல் 2000 வரை ஒரே ஒரு ஆண்டு மலர் இதழ்களில் மட்டுமே தோன்றி சாகசம் செய்த இதழ்கள் :-

  1985 .லயனின் முதலாம் ஆண்டு மலர்.தானைத்தலைவன் ஸ்பைடர் & ஆர்ச்சி கூட்டணியில் வந்த சைத்தான் விஞ்ஞானி + குதிரை வீரன் ஆர்ச்சி.
  1987 அதிரடிப்படை 3ம் ஆண்டு மலர்
  1991 மர்ம முகமூடி .காரிகன் சாகஸம்.முன் அட்டையில் ஆண்டு மலர் ன்ற வாசகம் இல்லாமல் வந்த 7 ம் ஆண்டு மலர்
  1992 மின்னலோடு ஒரு மோதல்.ஆக்ஷன் ஹீரோ சைமன் சாகஸம்.8 ம் ஆண்டு மலர்.

  1993 ரிப் கிர்பியின் கானக கோட்டை 9ம் ஆண்டு மலர்.
  1996 இரத்தப்படலம் 6 .12 ம் ஆண்டுமலர்

  1998 கானகத்தில் கலவரம்.கேப்டன் பிரின்ஸின் அதிரடி சிறுகதை.14 ம் ஆண்டு மலர்.

  2000 இரத்த பூமி.16 ம் ஆண்டு மலர்.

  ReplyDelete
 42. //இன்றைக்கும் இவர்களைக் கொண்டு ஒரு “சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்- சீசன் 2“ வெளியிட்டால் தெறிக்கத் தான் செய்யும்...!//
  +1
  I have missed Super hero Super Special 1. எப்போ சார் "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்- சீசன் 2" புக் கிடைக்கும்... Hehehehehehehe

  ReplyDelete
 43. ஸ்பைடர் சாகங்கள் அனைத்துமே எனக்கு பிடித்தமானவைதான் என்றாலும்....ஆல் டைம் ஃபேவரிட்ஸ் ...:
  பழி வாங்கும் பொம்மை
  நீதிக்காவலன் ஸ்பைடர்
  எத்தனுக்கு எத்தன்

  ReplyDelete
 44. ஆனாலும், XIII போன்ற மெகா high-tech ஆன கதை ஒரே மூச்சில் படிக்க முடியாத்தால் கதாபாத்திரங்களை நினவில் வைக்கவே பகீரத பிரயத்தனம் செய்யவேண்டியிருந்த்து் இப்படபட்ட ஒரு mega story ஐ படைத்திட van hamme and William Vance கூட்டணி செய்திருக்கும் உழைப்பு பிரமிக்க செய்கிறது. அதை நமக்கு திகட்ட திகட்ட தமிழில் வழங்கிய நம் விருப்பத்திற்கு உரிய விஜயன் சாருக்கு ஒரு mega salute செய்ய கடமைபட்டள்ளோம்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாய் ...அதனை எளிதாய் படிக்க உதவியாய் சுவாரஷ்யத்தை கூட்டும் விதமாய் ஒரு நோட்சை படிக்க கஷ்டபடும் நண்பர்களுக்காக ாசிரியருக்கு அனுப்பி வைக்கிறேன் ...சில கேள்விகளுடன் விரைவில் ...மறுபதிப்பு வேண்டுகோளுடன் .....இப்ப sinsters seven போதும்

   Delete
 45. எடிட்டர் சார் முத்துகாமிக்ஸ் வாரமலரில் வெளியான இரும்புக்கை மாயாவியின் பச்சைக் கண் மர்மம்(பலரும் படித்திராத கதை) தொடராக வெளியான ஸ்பைடரின் வின்வெளிப் பிசாசு(இதுவும் பலரும் படித்திராத கதை) இவைகளுடன் ஆர்ச்சி(வெளியான நாளில் நல்ல வரவேற்பு பெற்ற எதுவாகினும்)மற்றும் இதுவரை வெளியாகாமல் உங்களிடம் கையிருப்பில் உள்ள காரிகன், ரிப் கெர்பி, சார்லி, விங் கமான்டர் ஜார்ஜ், (இன்னும் மிச்சமுள்ள நாயகர்கள் ஏதேனும் இருப்பின்)இவர்கள் அத்தனை பேரும் இடம் பெறும் "சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் -2" ஒன்றை black&white ல் வெளியிட்டு "நம் இதழ்களின் ஆரம்ப கால (குண்டு புத்தக) நினைவுகளை கொஞ்சம் மீட்டுத்தாருங்களேன்.சாத்தியமென்றால் ஓட்டெடுப்பை துவக்கி விடுங்களேன்.வீட்டில் உள்ள முதியவர்களை முதியோர் காப்பகத்தில் விட்டுவிடுவதைப் போல் அன்று எங்களைபரவசத்தில் ஆழ்த்திய நாயகர்களெல்லாம் இன்று கேட்பாரற்று இருப்பதைப் போன்ற வருத்தம் ஏற்படுகிறது.என்னதான் நாகரீக ஆடம்பர பங்களாவில் குடியேறினாலும் நாம் பிறந்து வளர்ந்த வீட்டுக்குள்(ஓட்டை வீடாக இருந்தாலும் )நுழைகையில் நம் உள்ளே சுரக்கும் இனம் தெரியாத பரவசம் இவர்களையெல்லாம் மீண்டும் சந்திக்கையில் ஏற்படுவதை யாராலும் மறுக்க முடியாது. எனவே சாத்தியமென்றால் செயல்படுத்துங்கள்.Please...

  ReplyDelete
  Replies
  1. அபாரம் அருமை நானும் வழிமொழிகிறேன்

   Delete
  2. ஹிஹிஹி......... !ஏடிஆர் சார்.! அருமையான யோசனை.!


   இதற்கு என் ஓட்டும் அல்லாது கள்ள ஓட்டு போடவும் தயராக உளிளேன்.

   அரைச்ச மாவை அரைப்போமா ? துவச்ச துணியை துவைப்போமா ? என்பதை தற்காலிகமாக நிறுத்துவிட்டு ஒரு மொக்கை குண்டு ஸ்பெஷல் ஒன்று போடுங்கள்.!

   Delete
  3. ஹிஹிஹி......... !ஏடிஆர் சார்.! அருமையான யோசனை.!


   இதற்கு என் ஓட்டும் அல்லாது கள்ள ஓட்டு போடவும் தயராக உளிளேன்.

   அரைச்ச மாவை அரைப்போமா ? துவச்ச துணியை துவைப்போமா ? என்பதை தற்காலிகமாக நிறுத்துவிட்டு ஒரு மொக்கை குண்டு ஸ்பெஷல் ஒன்று போடுங்கள்.!

   Delete
  4. பேசும்படம் என்ற சினிமா பத்திரிக்கையில் (தற்போது அது வருவதில்லை) இசையப்பாளர் இளையராஜா அறிமுகமான சமயத்தில் ஒரு கேள்விபதில்....கேள்வி: "இளையராஜா இசையமைக்கும் பாடல்கள் எதுவுமே நன்றாக இல்லையே..! M.S. விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இசையமைத்த பாடல்கள் போல இனி வருமா?" இதற்கு ஆசிரியர் பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலாக M.S.விஸ்வநாதனும் ராமர்த்தியும் புதியபறவை, அன்பேவா, காதலிக்கநேரமில்லை என்று தொடர்ந்து கலக்கிய 1960 களில் அதே பேசும்படம் பத்திரிக்கையில் ஒரு வாசகர் எழுப்பிய கேள்வியையே பதிலாக போட்டிருந்தார். அந்த கேள்வி "M.S. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்கும் பாடல்கள் எதுவும் தியாகராஐபாகவதர், N.S. கிருஷ்ணன் காலத்து பாடல்களைப் போல் இனிமையாக இல்லையே? " இதற்குபின் ஆசிரியர் இன்று இளையராஜாவின் பாடல்கள் நன்றாக இல்லையென்று கூறுபவர்கள் இன்னும் 20ஆண்டுகள் கழித்து அவர் பாடல்களை கொண்டாடப் போகிறார்கள் என்று முடித்திருந்தார்.
   அதுதானே நடந்தது.இசைஞானி 1000படங்களைதாண்டி சாதித்துக் கொண்டிருக்கிறாரே! 1972 களில் நமது காமிக்ஸ் வந்தபோது ஆனந்தத்தின் உச்சமாக தெரிந்த அவைகள் இன்று மொக்கை என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இன்று நாம் தலையில் தூக்கிகொண்டாடும் கதைகள், அதன் நாயகர்கள் அடுத்த 30ஆண்டுகளில் என்ன விதமான விமர்சனத்திற்கு உள்ளாகும் என்று யாரரிவார்? இன்றே நமது வாரிசுகள் இவற்றை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. எனக்கு என்றுமே நம் நாயகர்கள், கதைகள் இவையெல்லாம் மொக்கையாக தெரிவதில்லை. இளவயது முதலே எத்தனையோ சோதனைகளை சந்தித்தபோது உடனிருந்து எல்லாவிதமான காயங்களுக்கும் மருந்திட்ட அந்த கதைகளையும், நாயகர்களையும் நான் கேலி செய்தால் நன்றி மறந்தவனாவேன்.அதனால் அந்த தவறை எக்காலத்திலும் செய்யமாட்டேன்.

   Delete
  5. உண்மை .எனக்கும் இப்ப ரஹ்மானின் பாடல்கள் பிடிப்பதில்லை இளையராஜா அளவிற்க்கு .தெளிவாக எதார்த்தத்தை கூறி விட்டீர்கள் .பழைய கதையை ஆராதிக்கும் பல நண்பர்கள் லார்கோவை கூட சீண்டுவதில்லை .என் பெயர் டைகர் , இ.ப க்களை எடுத்துப் படித்தாலே ஆயிரம் பேர் கூடுதலாய் தேறி விட மாட்டார்களா .. இவற்றை தொடக் கூட மாட்டேன்கிறார்களே ...

   Delete
 46. "சுட்டிக் குரங்கு கபிஷ்" கதையை படிக்காதவர்கள் இந்த பதிவை தாண்டுங்கள்.நன்றி. தோழர்கள் எல்லா கதைகளையும் கிழிகிழி என(கலா மாஸ்டர் போல) விமர்சனம் செய்வதை பார்த்த எனக்கும் ஆசை....இனி கதை: "ஒரு காடு!( Wrong Turn படத்தில் வருவது போல் பயங்கரமாக இருக்காது.) நாம் குடியிருக்கும் நகரைவிட நன்றாகவே இருக்கும்.அந்த காட்டில் குடும்ப கட்டுப்பாடு கடுமையாக அமலில் உள்ளதால் விலங்குகள் அளவோடு பெற்று வளமோடு வாழ்கின்றன.ஒருநாள் காட்டில் திடீரென தீ பிடிக்க டூவின் என்ற முயல் குட்டி தீயின் நடுவில் மாட்டிக்கொள்கிறது. டூவினைக் காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாத(சோம்பேறி!)அம்மா முயல் மற்ற மிருகங்களிடம் குட்டியை காப்பாற்ற கெஞ்ச யாரும் உதவாததால் நம் ஹீரோ கபிஷை அழைக்கின்றனர். விடுமுறையில் ஜானியும் ஸ்டெல்லாவும் போல கபிஷ் மற்றும் குட்டியானை பண்டிலாவும் பொழுதை கழிக்க (கர்னல் ஜாக்கப் இல்லாமல்) அழைப்பு வருகிறது.இதனிடையே வஞ்சக நரி ஸீகல்(ஹாலிவுட் நடிகர் Steven Seagal இல்லை!) அதற்கு ரொம்ப நாளாகவே ரோஸ்ட் பண்ணின முயல்கறி சாப்பிட ஆசை.ஆனால் என்ன துரதிஷ்டம் பாருங்கள்! சட்ட சபையில் நாக்கை துருத்தின கேப்டனைப் போல நாக்கை துருத்தியதோடு சரி! (சந்தேகம் வந்தால் ஸீகல் படத்தை ஒருமுறை பார்த்து விடுங்களேன்!) பின் டெபாசிட் காலியாகி ஆள் எஸ்கேப்!! இதற்கு நடுவில் ஒரு flash back! தவமிருந்து அனுமனிடம் பறக்கும் சக்தியையும் சேர்த்து கேட்காமல் வெறும் வாலை மட்டும் நீட்டும் வரம் பெற்றிருக்கிறது மட்டிக்குரங்கு Sorry சுட்டிக்குரங்கு கபிஷ். பின் பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசை வென்ற!கழுகு பஞ்சாவும் கபிஷூம் சேர்ந்து டூவினை மீட்டார்களா? அது Suspense! கதையை படித்தபின் சில சந்தேகங்கள்:
  1. வழக்கமாக கபிஷை பிடித்து விற்க முயலும் நபர்(பெயர் ரங்கையாவா நினைவில் இல்லை) blue cross க்கு பயந்து தொழிலை மாற்றிவிட்டாரா?
  2. என் சிறுவயது முதல் கேட்பாரற்று கிடக்கும் இந்த காட்டை வளைத்து யாரும் plot போடாதது ஏன்? இந்த கதை உணர்த்தும் நீதி: இனி யாரும் எதையும் ஆட்டையை போட்டாலும் வரமாக பெற்றாலும் முழுமையாக (போட)பெறவேண்டும்.இல்லையேல் ( கயிறு கட்டி தொங்கும் நம் ஹீரோக்கள் போல் இல்லாமல்)கபிஷைப் போல இடுப்பில் கயிறு கட்டாமல் அந்தரத்தில் தொங்கி ரிஸ்க் எடுக்கவேண்டும் என்பதே!! (ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைபோல என்போருக்கு இந்த நீதி பொருந்தாது!!)

  ReplyDelete
  Replies
  1. ATR sir ...!
   அந்த வேட்டைக்காரனின் பெயர் தோப்பையா...!
   ரங்கையா அல்ல...!

   Delete
 47. Texகனத அட்னடபடம் சூப்பர் சார்.....
  இந்தமாதம் புக் எப்படி வரும் சார்..... ஆவலாக உள்ளது.....

  ReplyDelete
 48. Texகனத அட்னடபடம் சூப்பர் சார்.....
  இந்தமாதம் புக் எப்படி வரும் சார்..... ஆவலாக உள்ளது.....

  ReplyDelete
 49. டெக்ஸ் அட்டைபடம் வெகு அசத்தல் சார் ...இதழை விரைவில் நேராக பார்க்க ஆவல் கூடுகிறது ..;-)

  ReplyDelete
 50. என்ன!! காமிக்ஸ் வாங்க பட்ட சிரமங்களை பகிர்ந்து கொண்ட கடல் அவர்கள் இன்னும் அந்த பசுமையான இனிமையான நினைவுகளிலிருந்து நிகழ்காலத்திற்கு திரும்பவில்லையா? இந்நேரம் ஒரு பத்து பதிவாவது போட்டு அசத்தியிருப்பார்களே!!

  ReplyDelete
 51. // கனவின் குழந்தைகள் .//

  மார்ட்டின் கதைகளே மொக்கைதான் (எல்.எம்.எஸில் வந்த கதையை தவிர ).அதிலும் இது மரண மொக்கை.!

  // இருந்தாலும் இந்த கதையை ( கி.நா ) எப்படியாவது வெளியிட்டே தீரவேண்டும் //

  மறுபடியும்ம்ம்ம்ம்மாமாமா.????????????????????????????????????????????..............தலைவரே பதுங்கு குழியை ஆழமா தோண்டுங்க பூமியின் மறுபக்கம் போய் விடுவோம்.நமக்கு நாட்டை விட்டு வெளியேறுதுவதை தவிர வேறு வழி தெரியவில்லை

  ReplyDelete
 52. ஸ்பைடர்: "ஏய் சட்டித்தலையா! என் புஜபராக்கிரமத்தை கண்டு பயந்து ஓடுகிறாயா? நில்...இல்லையேல் என் வலைத்துப்பாக்கியில் சிக்க வைத்து உன்னை சின்னாபின்னமாக்கி விடுவேன்!!". ஆர்ச்சி: அடேய்.கூர்மண்டையா! கொஞ்சம் இரு. கால இயந்திரத்தில் எங்களுடன் பயணித்த எடிட்டர் விஜயனுடன் 1988 க்கு போய் அந்த காலத்திலேயே விட்டுவிட்டு வந்து விட்டோம். மறுபடி தாமதப்பேய் அவரை பிடித்து புத்தகங்களை தாமதமாக வெளியிட ஆரம்பித்து விட்டார். மீண்டும் 1988க்குப் போய் அவரை மறுபடி 2016 க்கு கொண்டுவராவிட்டால் இனிமாதாமாதம் இதே நிலமைதான்.என்னை இன்று என் ரசிகர்கள் மறந்தாலும் நான் அவர்களை மறக்கவில்லை.அவர்கள் புத்தக தாமதத்தால் படும் வருத்தத்தை போக்கிவிட்டு வருகிறேன்.அப்புறம் உன் புஜபராக்கிரமத்தை காட்டு பார்க்கலாம்!!

  ReplyDelete
 53. Caption:
  ஸ்பைடர் : ஏம்பா சட்டித்தலையா, எங்கேப்பா நட்டு, போல்ட்டெல்லாம் தெறிச்சு விழறமாதிரி ஓடறே?

  ஆர்ச்சி: நம்ம எடி, சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்- சீசன் 2 ஆரம்பிக்கிற எண்ணத்துல இருக்கார் போல. இன்னொரு தபா கழுவிக் கழுவி ஊத்துறத தாங்க முடியாதுப்பா. அதுதான் இமயமலைல ஏதாவதொரு குகைக்குள்ளாற போய் ஒளிஞ்சுக்கப்போறேன்...!

  ReplyDelete
 54. வணக்கம் சார். என்னுடைய என் பெயர் டைகர் முன்பதிவு எண் :206 சி.அழகு, கருப்பர் கோவில் பட்டி, சிங்கம்புணரி, 630502. சார் இன்றுவரை (3ஜூலை) எனக்கு என்னுடைய புத்தகம் கிடைக்கவில்லை. நான் வாங்கும் ST COURIER ஆபிஸில் கேட்டால் என்னுடைய முகவரிக்கு இன்னும் புத்தகம் வரவில்லை என்கிறார்கள். நமது அலுவலகத்தில் கேட்டேன்(15ஜூன்-அன்று. அனுப்பிவிடுவதாக சொன்னார்கள். சார் நான் வீட்டிலிருந்திருந்தால் இந்தப் பிரச்சனை இல்லை. ஆகவே தயவு செய்து இதற்க்குப் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி சார்.

  ReplyDelete
 55. ஸ்பைடர் : டேய் ஆர்ச்சி நீற்கிறாயா இல்லையா? உன் பேட்டரியில் இருந்து என் செல்லுக்கு சார்ஜ் ஏத்திட்டு போடா. இண்டர்நெட்ல மலரும் நினைவுகள் பார்க்கனும்
  ஆர்ச்சி :வலை மன்னன் தேய்ஞ்சு வலை தள மன்னனாயிட்டானே

  ReplyDelete
 56. ஸ்பைடர் : டேய் ஆர்ச்சி நீற்கிறாயா இல்லையா? உன் பேட்டரியில் இருந்து என் செல்லுக்கு சார்ஜ் ஏத்திட்டு போடா. இண்டர்நெட்ல மலரும் நினைவுகள் பார்க்கனும்
  ஆர்ச்சி :வலை மன்னன் தேய்ஞ்சு வலை தள மன்னனாயிட்டானே

  ReplyDelete
 57. // இங்குள்ளோரின் 90% ஸ்பைடர் & ஆர்ச்சியை ரசித்து வளர்ந்தவர்களே என்ற முறையில் உங்களது அந்நாட்களது அனுபவங்களைக் கேட்டறிய ஆவல்! உங்களது Top ஸ்பைடர் & ஆர்ச்சி சாகஸங்கள் எவையாக இருந்தனவோ? //

  நான் முதன் முதலாகப் படித்த காமிக்ஸ் (probably!) மொத்தியான தீபாவளி மலர் 1986. அதில் ஸ்பைடரின் 'தவளை எதிரி' மற்றும் ஆர்ச்சியின் 'பனிப்பூதம்' கதைகளின் சம்பவங்கள், சித்திரங்கள், கட்டங்கள் இன்றுவரை மனதில் பதிந்து உள்ளன.

  இந்த புத்தகம் 4 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளி நண்பர்களின் கையிலிருந்து என் கைக்கு யதேச்சையாகக் கிடைத்து ஒரு வார வாசிப்புக்குப் பின்னர் தானாகக் கைவிட்டுப்போனது. அந்த ஒருவார காலத்துக்குள் என்னை ஈர்த்த விஷயங்கள் அனைத்தும் என் அண்ணனையும் கவர்ந்திருந்தது. பனிப்பூதம் கதையின் படரும் பனி, இரயில், மியூசியம், எகிப்திய சிலைகள் and a lot! ஸ்பைடர் கதையில் வரும் விசித்திரமான கதாபாத்திரங்களான தவளை(மேன்) எறும்பு(மேன்)களின் சுபாவங்கள், சித்திரங்களின் நுணுக்கம் போன்றவை ஒரு Black hole போல ஈர்த்துக்கொண்டது. இன்றுவரை அதிலிருந்து எஸ்கேப் ஆகமுடியவில்லை! ;)

  ReplyDelete
 58. இந்தா பாரு ஸ்பைடறு ..இந்த விஷப் பரீட்சைக்கு எல்லாம் வேறே ஆளைப்பாரு ..என்னை விட்டுரு

  அப்படி என்ன பெருசா கேட்டுட்டேன்னு எல்லாப் பயல்களும் பயந்து ஓடுறாங்க ... என் கிட்டே இருக்கிற எல்லா
  கிராபிக் நாவல்களையும் ஒரே தடவையிலே படிச்சி அர்த்தம் சொல்லுங்க ன்னு சொல்றேன் ..இது ஒருதப்பா மக்களே ..

  ReplyDelete
 59. EDITOR SIR, SUPERHERO SUPER SPECIAL 2KKU, NEXT YEAR ORU SPACE PLS

  ReplyDelete
 60. SPIDER : டேய்! ஸ்பைடரை ஃபோட்டோலே பார்த்திருப்பே.. டிவியிலே பார்த்திருப்பே... உன் வீட்டு ஓட்டுலே பார்த்திருப்பே. இப்படி கம்பீரமா வந்து துப்பாக்கிய நீட்டி கர்ஜிக்கிறதை பார்த்திருக்கியா??? வெறித்தனமா நின்னு வேட்டையாடி பார்த்திருக்கியா??? பார்த்திருக்கியா?????

  ARCHIE : வாடா என் மச்சி.. என் பேரு ஆர்ச்சி.. நீ வெறும் எட்டுக்கால் பூச்சி.. போயி வேற வேலை பார் ஜீ.!!

  ReplyDelete
 61. குற்றம் பார்க்கின் அட்டை அள்ளுகிறது சூப்பர் சார் அந்த பச்சை வர்ணம் மிக அருமை

  ReplyDelete
 62. ஸ்பைடர் :

  டேய் சட்டி தலையா நில்லுடா ! உன் கம்ப்யூட்டர் மூளையை பயன்படுத்தி இருளே இருளே கொல்லாதே கதை என்னவென்று படித்து சொல்லீட்டு போடா....!


  ஆர்ச்சி :(மனதினுள் )

  ஐயய்யோ ! இவன் என்னடா குண்டை தூக்கி போடரான் ? நானே அந்த காலத்து பழைய கம்ப்யூட்டர் மூளையை வைச்சுகிட்டு திரியுறேன்.இந்த கதையை படித்தால் என் மண்டை சார்ட் சர்க்யூட் ஆகி வெடித்துவிடுமே.! ஆளை விடுங்கடா சாமி.!!!

  ReplyDelete
 63. ஸ்பைடர்

  டேய் சட்டித்தலையா ! எடிட்டரும் சில வாசகர்களும் நம்மை கலாய்கராங்க வா கோட்டையுலும் ஹெலிஹாரிலும் போய் ஒரு வழி பண்ணுவோம் .!


  ஆர்ச்சி


  அடப்போடா ! ஆடி காத்துல அம்மியே
  பறக்குது.! மாடஸ்டி கதையின் தலையெழத்தே கழுகு மலைக்கோட்டை விற்பனையில்தான் உள்ளதுன்னு தமிழ் நாடே கவலைப்பட்டுக்கிட்டு இருக்கு .இதுல நீ வேற????

  ReplyDelete
 64. காமிக்ஸை பொருத்தவரை கையில் எடுத்தோமா அட்டையை முன்னும் பின்னும் திருப்பி ரசித்தோமா பின்னர் உள்ளேயும் ஒரு புரட்டு புரட்டி படங்களை ரசித்தோமா அப்படியே அதன் புது மணத்தை சற்று முகர்ந்தோமா பின் கதைக்குள் நுழைந்தால்....இடியே என் தலையில் விழுந்தாலும் தலையை லேசாக தேய்த்துவிட்டு மறுபடி தொடரவேண்டும்.இப்படித்தான் என் காமிக்ஸ் ரசனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காமிக்ஸில் லாஜிக் பார்ப்பது, காதில் பூ சுற்றுகிறார்கள் என்ற விமர்சனம் எல்லாம் என்னுள் எழாது. அவ்வளவு உயர்ந்த ரசனை கொண்டவனாக இருந்தால் அதற்கு தீனி போடத்தான் ஏராளமான இலக்கிய புத்தகங்கள் இருக்கின்றனவே! எனக்கு மாடஸ்டி, மாயாவி, லாரன்ஸ் டேவிட், ஜானி ஸ்டெல்லா, ஸ்பைடர்,டெக்ஸ், டைகர், ஆர்ச்சி,ஷெல்டன், லார்கோ, காரிகன், ரிப் கெர்பி, மாரட்டின், க்ராஃபிக் நாவல், வேதாளர், கிஸ்கோகிட், சார்லி லக்கிலூக் இன்னும் பெயர்குறிப்பிடா எல்லா நாயகர்களின் காமிக்ஸூம் வேண்டும். எந்த காமிக்ஸூம் சரித்திர நிகழ்வுகள் கிடையாது. எல்லாமே கற்பனைதான் எனும்போது அந்த கற்பனைக்கு எல்லைக்கோட்டை நிர்ணயிப்பது யார்? நான் பசிக்கு சாப்பிடுபவன். ருசிக்கு அல்ல. தரம் பிரித்து உயர்ந்த ரசனை, காதில் பூ சுற்றுகிறார்கள் என்ற விமர்சனம் எல்லாம் எழாமல் அனைத்து நாயகர்களும் எப்போதும் நம் கரங்களில் தவழும் நாள் ஒன்று மலருமானால் அதுதான் உண்மையான காமிக்ஸ் திருநாளாக இருக்கும். என்ன ஆச்சு! இவனுக்கு என்கிறீர்களா? நண்பர் ஒருவரிடம் காலை ஒரு விவாதம்.காமிக்ஸை பற்றி கிண்டல் பண்ணினார். லாஜிக் பற்றி ஒரு வகுப்பையே நடத்தினார். காமிக்ஸை கிண்டலடித்த அவர் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் ஹாரிபாட்டர் போன்ற எந்த படங்களையும் தவறாமல் பார்ப்பவர்.மேலும் நம்ம தமிழ் படங்களை ஒன்று விடாமல் ரசிப்பவர். ஒல்லிப் பிச்சான் நடிகர்கள் இருபது பேரை அடிப்பதையும், பேரன் பேத்தி எடுத்த நடிகர்கள் டூயட் பாடுவதையும், கத்தியை கையில் வைத்து பஞ்ச் டயலாக் பேசுவதும், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு பாடல் துவங்கியதும் வெளிநாட்டின் தெருக்களில் மக்களின் மத்தியில் ஆடிபாடுவதும்(நம்ம எடிட்டர் ஒரு வித்தை காட்டும் சாமியார் புகைப்படம் போட்டாரே)அப்படி வெளிநாடுகளில் நம்ம ஊர் மானத்தை கப்பலேற்றும் படங்களை ரசிக்க முடிந்த அவரால் காமிக்ஸ் படிப்பவர் ரசனையை எப்படி தவறாக மதிப்பிட முடிகிறதென புரியவில்லை. அநேகமாக இந்த பதிவை அவர் பார்ப்பார். பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஏடிஆர் சார்.!

   ஆமாம்.! அதுதானே, எனக்கும் கி.நா. வேற்றுகிரக கதைகளை தவிர அனைத்தையும் வேறுப்டு இல்லாமல் ரசித்து படிப்பேன்.!

   உங்களுக்கு ஏற்பட்ட( நண்பர்களின் நக்கல்) எனக்கும் அடிக்கடி ஏற்படுவதுண்டு , "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை " எனறு மனதில் நினைத்துக்கொண்டு , இவனிடம் விவாதம் செய்வது வேஸ் என்றுட் ஒரு புனமுறுவலுடன் நகர்ந்து விடுவேன்.!

   Delete
  2. M.V. சார். நானும் இப்படிப் பட்ட விவாதங்களில் ஈடுபடுவதில்லைதான். ஆனால் அந்த நபர் காமிக்ஸை வெறுப்பவர். ஆனால் நமது blog ல் பார்வையாளராக மட்டும் இருப்பவர். நேரில் இரண்டு பேரை வைத்து கலாய்த்ததோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கு வந்தபின்பு செல்ஃபோன் பண்ணி கலாய்க்கிறார். நண்பர்தான் என்றாலும் அவருடைய ரசனையை நான் என்றுமே குறைத்து பேசியதில்லை. எனவேதான் கொஞ்சமாவது உரைக்கட்டுமே என்று பதிவை இட்டேன். என்னுடைய 1972 முதல் 1985 வரையிலான அத்தனை காமிக்ஸ் சேகரிப்பையும் ஒரு வருடம் நான் ஊரில் இல்லாததால் அத்தனையையும் ஒன்றுகூட மிச்சமில்லாமல் தனது நண்பர்களுக்கு தாரைவார்த்த எனது சொந்த அண்ணனிடமே 20ஆண்டுகளுக்கு மேலாக பேசவில்லை. இவரெல்லாம் ஒரு பொருட்டே அல்லதான் என்றாலும் நமது blog பக்கம் இனி எட்டிபார்க்கும் எண்ணம் வரக்கூடாது என்பதால் அந்த பதிவு. என் வார்த்தைகள் தவறாக இருப்பின் நண்பர்கள் பொறுத்துக் கொள்ளவும். அந்த நபர் மாலை ஃபோன் பண்ணி sorry கேட்கிறார். நான் தொடர்பை துண்டித்துவிட்டேன். எனக்கு நமது காமிக்ஸை நக்கலடித்தால் கொஞ்சம் கோபம் வந்துவிடுகிறது. நமக்கு அதுதானே உயிர் என்பது புரியாத ஜடங்கள் அவர்கள்.

   Delete
  3. நன்றி திரு.ஸ்டீல்.

   Delete
  4. atrஆனா இப கேள்விகளோடு படித்தால் மட்டுமே ஆசிரியர் குழுவின் மொழிபெயர்ப்பும் மெனக்கெடல்களும் ,திறமையும் தெரிய வரும் .எப்படியாச்சும் அடுத்த வருடம் ஆசிரியரின் மணிமகுடத்தில் மின்னும் அந்த வைரக்கல்லான இப வை வண்ணத்தில் பட்டை தீட்டி விடனும் மீண்டுமொரு முறை .

   Delete
  5. ஸ்டீல் அது மட்டும் நிறைவேறினால் நம்மைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்கமுடியாதல்லவா? அந்த எண்ணத்தை ஆசிரியரின் மனதில் ஆழமாக பதியவைத்தால் தான் அது சாத்தியமாகும்.அவர் எண்ணம் அந்த விஷயத்தில் வலுப்பெற்று விட்டால் பின்பு அவர் பின் வாங்கமாட்டார். காமிக்ஸ் வரலாற்றின் உச்சமாக அது இருக்கும்.

   Delete
 65. ஸ்பைடர் Says: பயந்தோடாதே ஆர்ச்சி, நில்..! காலத்துக்கேற்றமாதிரி ஃபைபரில் குறைந்த எடையில் உன்னைத் தயாரிக்கத்தான் விக்டரும் தாமசனும் அழைக்கிறார்கள். ஆண்டுகள் பல கழித்து உன்னை ஆன் செய்ய அதுவே காரணம்!

  ஆர்ச்சி Thinks: ம்.. ஸ்பைடரின் விளக்கம் நம்பும்படிதான் இருக்கு.. ஆனாலும் ஆர்ச்சி அசடல்ல.. இரும்பு விலை பற்றியும் என்னுடைய எடை பற்றியும் விக்டரும் தாம்சனும் பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி நினைத்தாலே பகீரென்கிறது...

  ReplyDelete
 66. ஸ்பைடர் :

  டேய் சட்டித்தலையா நில்றா.! நாமிருவரும் சேர்ந்து இன்னொரு சூப்பர் ஹிட் கொடுப்போம்.!

  ஆர்ச்சி :

  அட போப்பா ! என் ஸ்பேர் பாட்ஸ் எல்லாம் துரு பிடித்து போய்விட்டது. உனக்கு நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போய்டுச்சு.உன் ஹெலிகார் எடுத்துட்டு வா !சிவகாசி வரை போய் எடிட்டர் விஜயன் சாரிடம் பென்சன் கேட்டு வாங்கி வரலாம்.

  ReplyDelete
 67. Hi 🙋 friends
  Hi 🙋 vijayan sir

  Nice post.
  Tex cover art - excellent,especially the greenish background

  My caption

  Archie : Nee enna pannalum 'antha' ragasiyathai solla maatten

  Spider : Poda satti thalaiya

  😁😆 😆

  ReplyDelete
  Replies
  1. Ooooooh not even a single like 😒😢 may be I have to improve my humour sense 😡😣
   Better luck next time Nicky ✌

   Delete
 68. ****** நோ போட்டிக்காண்டி ******

  ஆர்ச்சி : ஏய்... யேய்... என் பின்னாலேயே துரத்திக்கிட்டு வர்றதை நிறுத்தித் தொலை ஸ்பைடரு... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை...

  ஸ்பைடர் : 'முருகேசன்'னா ஆண்பால்; 'முருகேசி'ன்னா பெண்பால். அதுமாதிரியே 'ஆர்ச்சன்'னா ஆண்பால்; 'ஆர்ச்சி'னா பெண்பால் தானே! எங்கிட்டயேவா? ஹோ ஹோ ஹோ... ஓடாதேடி... நில்லுடி...

  ReplyDelete
  Replies
  1. 'இளவரசன்'னா ஆண்பால்; 'இளவரசி'ன்னா பெண்பால். இப்படி பொருத்திக்கலாமா சார்?


   பழைய ராஜேஷ்குமார் நாவல்களிலும் இன்னும் சில இதழ்களிலும் உங்களது பெயர் தவறாமல் வாசகர் கடிதங்களில் பார்த்துள்ளேன். நீங்கள் தானா அது?

   Delete
 69. வணக்கம்வணக்கம் தோஸ்த்ஸ்

  ReplyDelete
 70. எப்போடியோ 8ம் தேதி தான் கடைக்கு புக் வறும் என்ன கொடுமை

  ReplyDelete
 71. ****** நோ போட்டிக்காண்டி season-2 ******

  ஆர்ச்சி : நில்லுடா.. மைல்கல் மண்டையா! இல்லேன்னா, எஃக்கை விட உறுதியான இந்த நூலிழைகளை வச்சு உன்னை நொடியில் முடக்கிப் போட்டுடுவேன்... ஆம்ம்மா!

  ஸ்பைடர் : நீ இப்ப இருக்கிற நிலைமைல ஒரு நூல்கண்டு வாங்கக்கூட காசில்லைன்னு தெரியும் ஸ்பைடரு... உன் வலைத்துப்பாக்கியின் வாயில கூடுகட்டி குடித்தனம் பண்ணிக்கிட்டிருக்கும் அந்தக் குளவிக்கூட்டை கலைக்கிற வழியைப் பாரு மொதல்ல!

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY @ ஆர்ச்சி பேச வேண்டிய இடத்தில் ஸ்பைடர், ஸ்பைடர் பேச வேண்டிய இடத்தில் வரவேண்டும் என நினைக்கிறன்!!

   Delete
  2. @ PfB

   அடடே! ஆமாம்ல? நன்றி PfB! தூக்க கலக்கத்துல தவறா போட்டுட்டேன். Btw, நீங்க ஒரு PRPனு ( Proof reading puli) நிரூபிச்சிட்டீங்க!:)

   Delete
  3. Ev தெளிவாத்தான எழுதிருக்கீங்க இது வயதான பின்னே வரும் ஒரு வகை சிண்ட்ரோம் .ஆர்ச்சி ஸ்பைடரின் புகழ் கண்டு புழுங்கியதாலும் ...ஸ்பைடர் ஆர்ச்சி புகழ் கண்டு புழுங்கியதாலும் நினைவுகள் இடம் மாறி விட்டன . அவை உங்கள் கரங்களில் வலுவாய் வெளிபட்டுருச்சி ..அவ்ளோதான் .இத குறிச்சு செனா ஆனா விளக்குனா தெளிவா விஞ்ஞான உண்மைகளும் தெரிய வரலாம் . அவர காணலியே ..

   Delete
  4. @ ஸ்டீல்

   என்ன இதெல்லாம்? ஏன் இப்படியெல்லாம் யோசிக்கறீங்க? பயமாருக்குங்கோவ்! :)

   Delete
 72. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. ///எச்சரிக்கை இது ஜாலியான பதிவு இல்லை ///

   உண்மைதான்! படிச்சவுடன் குலைநடுங்கிப் போய்ட்டேன்!! ப்பா.. என்னவொரு பயங்கரமான பின்னூட்டம்!! :P

   Delete
  2. Erode VIJAY @ இப்படி எல்லாம் பயபடுவிங்கன்னு தெரிஞ்சுதான் தூக்கிடோம்ல. தைரியமா இருங்க! அடுத்த மாதம் ஈரோட்டில் சந்திக்கலாம்!

   Delete
 73. நமது முதலாவது ஆண்டு மலர் என்னிடம் உள்ளது!! இதில் என்னை மிகவும் அட்டைபடம், அதிலும் ஆர்ச்சி கௌபாய் உடையில் உள்ள அட்டைபடம்! இரண்டு கதைகளும் டாப், இதில் என்னை மிகவும் கவர்தது ஆர்ச்சி கதை!! சிறு வயதிலும் இன்றும் நான் அடிக்கடி எடுத்து படிக்கும் கதைகள் இவை!!

  ReplyDelete
  Replies
  1. பரணி பாவம் நீங்க . ebfக்கு உங்க கேமராவோட அப்ப அந்த ஆண்டு மலரையும் கூடுதலா சுமந்து வர வேண்டி இருக்கும் .யார் கண்டா ..கூடுதல் சுமை கை மாறும் போது உங்களை துள்ள வைக்கலாம்

   Delete
 74. விஜயன் சார், சூ.ஹீ.ஸ்பெஷல்-2 என்றும் எப்போதும் எனது ஆதரவு உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறேன்!! அடுத்த ஆண்டுமலர் சூ.ஹீ.ஸ்பெஷல்-2 வருவதாக இருந்தால் எனக்கு டபுள் ஓகே! அல்லது ஈரோட்டில் இதனை சஸ்பென்ஸ்-ஆக வெளி இட்டாலும் எனக்கு சம்மதம்.

  நமது மறுபிரவேசதில் அதிகம் விற்பனையான ஒரு இதழ் சூ.ஹீ.ஸ்பெஷல் எனும் போது வரும் காலம்களில் சூ.ஹீ.ஸ்பெஷல்-2 கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்.

  ReplyDelete
 75. விஜயன் சார், டெக்ஸ் கதைகளின் அட்டைபடம் ஒரே மாதிரியாக வருகிறது என்பதற்கு வித்தியாசமான அட்டைபடம்களை முயற்சிப்பது பாராட்டுக்குரியது.

  "குற்றம் பார்க்கின்" அட்டை படத்தை இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கலாம்.

  வரும் காலம்களில் டெக்ஸ் கதைகளின் ஒரிஜினல் அட்டைபடம்களை பயன்படுத்த முடியமா? அவை நன்றாக இருக்கும் பட்ச்சத்தில் மட்டும்.

  ReplyDelete
  Replies
  1. பரணி செம ஐடியா ஈரோட்டில் சஸ்பென்ஸ் இதழ் சூ.ஹீ.ஸ்பெஷல்.2. என்றால் டபுள் ஓகே

   Delete
 76. இன்னிக்கு ஆசிரியர் புத்தகங்கள அனுப்பியதும் அட்டகாசமான டாக் புல் அட்டையுடன் புதிய பதிவை போட்டு தாக்குவதுடன் சூஹீஸ் சீசன் three ஐ ஈரோட்டில் விடுவது குறித்து தனது எண்ணங்கள வெளிபடுத்துவார் போல படுகிறதே .

  ReplyDelete
 77. ம் நக்கல்ஸ் ...ஏண்டா முக்கா மண்டையா ..எடிட்டர் என்னைய வச்சி இன்னொரு சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் போடப் போறாருங்கிறது தெரிஞ்சதும் என்னடா கிண்டலடிச்சே ..மறுபடி சொல்லுடா
  ம்...அவனா நீயி அப்படின்னேன்

  ReplyDelete
 78. Spider:
  டேய் சட்டிமண்டயா நில்லுடா உள்ள இடமில்ல இப்படியே டீசர் ஓட ஓடிப்போயிடு ...!


  Archi:
  டேய் ஐஸ்கோன் மண்டையா நீயா....இனி என்னுடைய ஆட்டம் ஆரம்பம் டா, ஓரமா உக்காந்து வெடிக்க மட்டும் பாரு...!

  ReplyDelete
 79. எடிட்டர் சார்...!
  ஸ்பைடர் ஆர்ச்சிக்கு இன்னமும் மவுசு குறையவில்லை என்பதை நண்பர்களின் பின்னூட்டங்கள் நிரூபிக்கின்றன. நண்பர்கள் சொல்வதைப்போல சூ.ஹீ.சூ.ஸ்பெஷல் 2 க்கு என் பலத்த ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.அந்நாட்களில் வந்த சைத்தான் விஞ்ஞானி +குதிரை வீரன் ஆர்ச்சி , கொலைப்படை + மர்மத்தீவு போல ஸ்பைடரும் ஆர்ச்சியும் இணைந்து கலக்கும் ஒரு இதழ் தற்போது வந்தால் அட்டகாசமாக இருக்கும்.
  அப்படி ஒரு இதழை வளியிட தாங்கள் மனம் வைத்தால் , கொலைப்படையும் , மர்மத்தீவும் என் தேர்வாக இருக்கும்.அன்று வந்ததைப்போலவே பெரிய சைஸில் ..., இயன்றால் முழு வண்ணத்தில் வெளியிட ஆவன செய்வீர்களா...?

  பின் குறிப்பு :
  சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் சொதப்பல் பட்டியலில் இடம் பிடித்ததற்கு காரணம்..மாயாவியின் நீ.....ளளளளளளளமான அயர்ச்சியை உண்டாக்கிய கதைதான் காரணமேயன்றி...நிச்சயம் ஸ்பைடரும் ஆர்ச்சியுமல்ல எ.எ.க.

  ReplyDelete
  Replies
  1. அதே இரு வண்ணத்தில் வந்தால் நினைவுகளை போற்றும் வகையிலுமாகுமே .

   Delete
  2. உண்மை நண்பரே அயர்ச்சியை உண்டாக்கியது ஆர்ச்சியல்ல மாயாவியின் நீளமான கதைதான்

   Delete
  3. ஆம்.. மற்ற கதைகள் படித்து முடித்து மிக நீண்ண்ண்ட நாள் கழித்தே மாயாவியின் கதை படிக்க முடிந்தது...

   Delete
 80. /‘இவர் படித்துறைப் பாண்டி!‘; ‘அது அலெர்ட் ஆறுமுகம்‘; ‘இது நாய் சேகர்!‘; என்று மனதுக்குள் பதித்துக் கொண்டே பக்கங்களைப் புரட்டப் புரட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பஞ்சாயத்துச் சங்கிலி முருகன் நிலைமை தான் எனக்கு! இந்தக் கதையைத் தமிழில் இறக்கி விட்டால் ஆங்காங்கே ‘கையப் புடிச்சு இழுத்தியா?‘ பிராதுகள் எழும் வாய்ப்புகள் /

  சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது

  ReplyDelete
 81. /எங்கள் இதழ்களை - எங்களைவிடவும் ஜாஸ்தியாய் கையிருப்பில் வைத்திருந்து ரசிப்பவருக்கு வாழ்த்துக்கள்"/ ஹாஹா செம,

  இப்படி புல் ஜாலி போஸ்ட் பாத்து கொஞ்ச நாள் ஆச்சு.

  ReplyDelete
 82. பாக்கிப் பேர் கன்ன மருக்களோடு ஒடிஷா; பீஹார்; ஜார்கண்ட் பக்கமாய் குடிபெயரச் செய்த ‘புண்ணியம்‘ நமக்கேன்?

  ஹாஹா. நான் சட்டிஸ்கர் மாவோயிஸ்ட் களோட ஜாயின் பண்ணிடுவேன்

  ReplyDelete
 83. ஸ்பைடர்:... நெருப்புடா ......நெருப்புடா...........

  ஆர்ச்சி : வந்துட்டேன்னு சொல்லு .......25 வருஷத்துக்கு முன்னாடி எப்டி போனேனோ அதே மாதிரி திரும்பி ஆர்ச்சி வந்துட்டேன்னு .சூப்பர் ஹீரோ ஸ்பெசல்ல .........

  .........ஜ்ஷுஊம்ம்ம்ம்ம்ம்ம் .......

  ஆர்ச்சி :ஏன்டா நெருப்ப வச்ச என் மேல ........

  ஸ்பைடர்: நான் தான் கத்துனேன்ல .....நெருப்புடா நெருப்புடா ன்னு .....நெருப்பு துப்பாக்கி லீவர் கெட்டு போச்சுடா ...............
  நீ பாட்டுக்கு பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டு இருக்க......

  ஆர்ச்சி :ஹே ஹே என்ன யாராலையும் அழிக்க முடியாது ...

  ஸ்பைடர் :ரொம்ப சரி ....

  ReplyDelete
 84. சார் லாரன்ஸ் டேவிட் , ஜானி நீரோ ,மாயாவி , ஸ்பைடர் ,ஆர்ச்சி ,மாடஸ்டி ,காரிகன்,கெர்பி ஆகிய கருப்பு வெள்ளை நாயகர்களை வைத்து ஒரு பிரம்மாண்ட லயன் முத்து குடும்ப மலர் ...இரண்டு லயன் முத்து லோகோக்களும் ஒரே அட்டயில் ...ஏராளமான நாயகர்கள்பழைய சிறப்பிதழ்களை போல முன்னட்டையை நிறைக்க ......அட்டகாசமான ஹார்டு பௌண்டில் வந்தால் ...பழைய கோடை மலர்களாலும் ஈடு தர முடியாதே .

  ReplyDelete
  Replies
  1. ஸ்டீல் நினைத்தாலே இனிக்கிறதே!
   உண்மையில் அப்படி ஒரு நிகழ்வு நடக்குமானால்.....
   அந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது!!

   Delete
  2. Steelclaw

   OMG. How passionate u r 😲😓

   I support the one u said above.it may be useful to get immediate sleep 😝😜

   Delete
  3. படித்து முடித்ததும் நிம்மதியான உறக்கம்உடனடியாய் சந்தோச மிகுதியால்

   Delete
  4. @ Nicola சிங்கத்த சாய்ச்சுப் புட்டீங்களேம்மா......கர்...ர்...ர்ர்...

   Delete
 85. Replies
  1. அடடே! வாழ்த்துகள் ஃபெர்னான்டஸ்! CBFன் பொருட்டு இதுவொரு மகிழ்ச்சியான செய்தியும் கூட!

   Delete
  2. சூப்பர்...அடுத்த சென்னை புத்தக விழாவின் போது தங்குவதற்கு ஓட்டல் தேவையில்லை...உங்கள் வீட்டு மொட்டை மாடியில் இடம் ரிசர்வ் பண்ணிடுங்க போதும்...

   Delete
  3. @ஈசேலி விஜய்
   அப்படியா!!

   @DVR


   மொட்டைமாடி OK

   ஆனா யாரும் நான் போதையில் மிதக்க எதுவும் கொண்டு வர வேண்டாம்,அதையெல்லாம் ஒரு மலை நாட்டு நணபர்,ஊத்தி கொடுக்கும் உத்தமர் பாத்துக்கொள்வார்.

   Delete
 86. என்னதான் A/C ஹாலில் அண்டர்கிரவுண்ட் கூட்டத்தில் அரைநாள் பொழுது கழிந்துவிட்டாலும்கூட...சென்னை வெயில்...அதுவும் தகரகொட்டாய்க்கு அடியில் புத்தககண்காட்சி..உஸ்ஸ்ஸ்...அரிஸோனா பாலைவனம் தான்..!

  "இரண்டுநாள் இருந்தேதீருவேன்.." என சென்னை வந்த புத்தகபிரியர் ஒருவர் அடித்த கானலில்...வந்த வேகத்தில் "ஆள விடுங்கடா சாமி..." என ஒரே ஓட்டமாக கிடைத்த வண்டிபிடித்து மாயமாய் மறைந்து கரைந்துவிட்டார்..!

  ஆனால் "என்னால் இருக்கமுடியுமான்னு தெரியலை..நான் கொஞ்சம் கிளைமேட் விரும்பி...a/c ஸ்டோரில் இருந்தே பழக்கப்பட்டவன்.." என நீல்கிரிஸ் டிபாட்மென்ட் ஸ்டோர் ஓனர்...நண்பர் கரூர் சரவணன்..கிட்டத்தட்ட மூன்று சட்டைகள் வேர்வையில் நனைத்தும் சலிக்காமல் புதுசட்டை மாற்றிக்கொண்டு செமயாக எங்களுடன் கொண்டாடினார்..! சூப்பர்ஸ்டார் சிக்ஸ் ப்ளான் எடிட்டர் அறிவித்த மறுகணமே...கையில் இருந்த tab-ல் உடனே முதல் நபராக பணத்தை பரிமாறிய அவர் காமிக்ஸ் காதல்.... வாழ்க்கை ஓட்டம் பலரையும் வேறு வேறு சுழலில் சிக்கவைத்திருந்தாலும்...மறைந்திருக்கும் அந்த காமிக்ஸ் மேல் உள்ள காதல் வெளிப்படும்போது..அரடிக்க செய்கிறது..!

  அப்படி அசரடித்து..அசராமல் நின்ற அருமை நண்பர் கரூர்கார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்..! ஒரு வாழ்த்து சொல்லுவோமே..! இங்கே'கிளிக்'

  [ கா.தீ.அ.ஆ.கூட்டம் -15 ]

  ReplyDelete
  Replies
  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரவணன் சார் ....;-)

   Delete
  2. பழக இனியவரும், பண்பாளருமாகிய நண்பர் கரூர் சரவணன் அவர்களுக்கு ஈ.வி'யின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!

   @ மாயாவி
   கரூர் சரவணன் பற்றிய விளக்கம் - அழகு! தகவலுக்கு நன்றி!

   Delete
  3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சரவணன் சார்...இந்தாண்டு போல் எப்போதும் காமிக்ஸ் மழையில் நனைய வாழ்த்துக்கள்...

   Delete
 87. கரூர் சரவணன் சகோதரருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
  இந்த நாள் மிக மிக இனியமையான நாளாக இருக்க வாழ்த்துக்கள் :)

  மறக்காமல் கடலை மிட்டாய் வேண்டும் :D

  ReplyDelete
  Replies
  1. @ கடல்யாழ்

   ஹா..ஹா..இவர் கரூர் சரவணன்...இவர் ஒரு கெடா பிரியர்...நீங்க ஈரோடுக்கு வந்தால் ஜூனியர் குப்பண்ணாவில் இவர் செலவில் வெட்டலாம்..! :-)))

   அவர் கோவில்பட்டி ராஜசேகர் ..அவர் ஈரோடுக்கு வரவேண்டுமென்றால் கடலைமிட்டாய்களோடு தான் வரவேண்டும்..இல்லைன்னா 'விசா' தர்றவங்க அவர் பாஸ்போட்டை முடக்கிடுவாங்க..!

   Delete
  2. @ மாயாவி

   நம்ம கடல் சகோ விவரமாத்தான் கேட்டிருக்காங்க! நீல்கிரிஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வச்சிருக்கிறவரிடம் கடலை மிட்டாய் இல்லாமல் போய்விடுமா என்ன? அந்த ஸ்டோரில் அவருக்கு தேவையானதை கேட்டிருக்கிறார் - அவ்வளவுதான்!

   இதே நானாக இருந்திருந்தால் ஒரு கிலோ ஊட்டி வர்க்கி கேட்டிருப்பேன் (கடலை மிட்டாய் சாப்பிட்டு சாப்பிட்டு சலிச்சுப் போச்சு. ஹிஹி)

   Delete
  3. விஜய் @ EBF க்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. ஆராரு என்ன சாப்பிட அனுப்புறாங்கனு லிஸ்ட் ஐ போடுங்கள்...

   Delete
  4. @ இத்தாலியாரே

   ஹேங்....

   Delete
  5. கரூர் திரு.சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் நலமுடன் வாழவாழ்த்துகிறேன்.

   Delete
 88. என்னதான் A/C ஹாலில் அண்டர்கிரவுண்ட் கூட்டத்தில் அரைநாள் பொழுது கழிந்துவிட்டாலும்கூட...சென்னை வெயில்...அதுவும் தகரகொட்டாய்க்கு அடியில் புத்தககண்காட்சி..உஸ்ஸ்ஸ்...அரிஸோனா பாலைவனம் தான்..!

  "இரண்டுநாள் இருந்தேதீருவேன்.." என சென்னை வந்த புத்தகபிரியர் ஒருவர் அடித்த கானலில்...வந்த வேகத்தில் "ஆள விடுங்கடா சாமி..." என ஒரே ஓட்டமாக கிடைத்த வண்டிபிடித்து மாயமாய் மறைந்து கரைந்துவிட்டார்..!

  ஆனால் "என்னால் இருக்கமுடியுமான்னு தெரியலை..நான் கொஞ்சம் கிளைமேட் விரும்பி...a/c ஸ்டோரில் இருந்தே பழக்கப்பட்டவன்.." என நீல்கிரிஸ் டிபாட்மென்ட் ஸ்டோர் ஓனர்...நண்பர் கரூர் சரவணன்..கிட்டத்தட்ட மூன்று சட்டைகள் வேர்வையில் நனைத்தும் சலிக்காமல் புதுசட்டை மாற்றிக்கொண்டு செமயாக எங்களுடன் கொண்டாடினார்..! சூப்பர்ஸ்டார் சிக்ஸ் ப்ளான் எடிட்டர் அறிவித்த மறுகணமே...கையில் இருந்த tab-ல் உடனே முதல் நபராக பணத்தை பரிமாறிய அவர் காமிக்ஸ் காதல்.... வாழ்க்கை ஓட்டம் பலரையும் வேறு வேறு சுழலில் சிக்கவைத்திருந்தாலும்...மறைந்திருக்கும் அந்த காமிக்ஸ் மேல் உள்ள காதல் வெளிப்படும்போது..அரடிக்க செய்கிறது..!

  அப்படி அசரடித்து..அசராமல் நின்ற அருமை நண்பர் கரூர்கார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்..! ஒரு வாழ்த்து சொல்லுவோமே..! இங்கே'கிளிக்'

  [ கா.தீ.அ.ஆ.கூட்டம் -15 ]

  ReplyDelete
  Replies
  1. Many more happy returns of the day Karur sarvan sir💐🎈🎁🎂

   Delete
 89. இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 90. கரூர் சரவணாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க

  ReplyDelete
 91. ஒரு ஆர்ச்சியை கண்டாலே உற்சாகம் பொங்கும் நாளில் இன்னோரு ஆர்ச்சி கஸ் செய்யும் சேட்டைகளும் கடைசியாக ஆர்ச்சி கஸ்சை கயலான் கடை போகிற அளவுக்கு மொத்துகிற மொத்தும் ஆர்சிக்கோர் ஆர்ச்சி திருப்தியான விருந்து

  ReplyDelete
 92. This comment has been removed by the author.

  ReplyDelete
 93. ஸ்பைடர்: "வாடா ஏ மச்சி...
  வாழக்கா பஜ்ஜி..!
  ஒ(ன்) ஒடம்ப பிச்சி
  நான்போடுவே(ன்) பஜ்ஜி....!!"
  ஆர்ச்சி : "ஏய் கூர்மண்டையா!
  வயசாச்சே! ஒனக்கு மண்டயிலதான் ஒண்ணுமில்லன்னு பாத்தா
  கண்ணுங்கூட அவுட்டா?
  என் ஒடம்ப பிச்சா உன் நகந்தான் கழண்டுபோகும்.போய் மொதல்ல கண்ண சரிபண்ணிட்டு வாடா!
  அப்பறம் பாடலாம் பாட்டு!! " (ஆர்ச்சி மைன்ட் வாய்ஸ்)
  "இவன கண்ணாடியோட நெனச்சிபாத்தா எனக்கே சகிக்கலியே! நாலு மாசத்துக்கொரு தரம் புஸ்தகத்துல பாக்கப்போற வாசகர் நெலமய நெனச்சாத்தான் கவலயாயிருக்கு! அதுவுங்கூட நல்லதுதான். அப்பத்தான் இவன கழட்டி விட்டுட்டு இவனுக்கு பதிலா விஜயன் நம்மள போடுவார்!!"

  ReplyDelete
  Replies
  1. @ Nicola நான் எழுதுவதை எனக்கே மறுபடி பார்த்தால் like போடத்தோன்றாது.உங்களது கேப்ஷனுக்கு ஒருவரும் like போடவில்லை என்பதை நினைக்காதீர்கள். நாம் நண்பர்களோடு பேசும்போது கஷ்டப்பட்டு "ஜோக்" சொல்லுவோம். சுற்றியிருப்பவர்கள் அப்படியா என்று கதை கேட்பதைப்போல கேட்பார்கள். ஆனால் சிலநேரங்களில் சாதாரணமாக நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு நண்பர்கள் விழுந்து விழுந்து(அடிபடாமல்தான்!) சிரிப்பார்கள்.... தொடர்ந்து (நேரம் கிடைக்கையில்) எழுதுங்கள். likes தானாக வரும்.

   Delete
 94. சகோ கடல். "கடலை மிட்டாயென்றால் அவ்வளவு பிரியமா? நீங்களும் சென்னை புத்தகவிழாவிலிருந்து கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்! இன்னும் கிடைத்த பாடில்லை!!உங்கள் ஆசை ஈரோடு புத்தகவிழாவில் நிறைவேற என் வாழ்த்துக்கள்!!"

  ReplyDelete
 95. "பெட்டி" வரும் பெட்டியின் வருகை நேரம் நெருங்க நெருங்க லேசாஆஆஆஆஆஆன பதட்டம் அதிகரிக்கிறது. அனுப்பிச்சாச்சுனு ஒரே ஒரு லைனை போட்டுவிட்டு கொஞ்சம் நகம் கடிப்பதில் இருந்து ரெஸ்கியூ பண்ணுங்க சார்....
  டெக்ஸ் வித் தீபாவளி க்கு பிறகு ஆர்வம் சற்றே அதிகரிப்பது இம்மாதம் தான்....
  மேலும் ஒரே குண்ண்ண்ண்டா ???....
  ஒல்லிகளின் கூடாரமான்னும் தெரியலயே ???...

  ReplyDelete
 96. அந்த பெட்டிகோட்டு .....அம்மா எப்ப தான் வருதாம் ....?

  ReplyDelete