Powered By Blogger

Sunday, July 17, 2016

இத்தாலிய மாதமிது...!

நண்பர்களே,
            
வணக்கம். பிசியான இரயில்வே ஸ்டேஷன்களிலோ, சந்தைக்கடை மாதிரியான விமான நிலையங்களிலோ, மினுமினுக்கும் குனிந்த தலை நிமிராமல் கடமை வீரன் கண்ணாயிரமாய் நோட்டில் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒரு கபாலிக் கண்ணனைப்(!!!) பார்த்தீர்களேயானால்- ஓரமாய் ஒதுங்கிப் போய் விடுங்களேன்? Chances are that – 'அடுத்த பதிவைத் தயார் பண்ணுகிறேன் பேர்வழி !' என்று புதுசாய் ஒரு மொக்கையைத் தயார் செய்துகொண்டிருக்கும் அடியேனாகத் தானிருக்கும் அது ! இப்போதெல்லாம் இரயில்களுக்கோ- விமானங்களுக்கோ காத்திருப்பதென்பது சுவாரஸ்யமான விஷயமாகி விட்டது – simply becos எந்தப் பிடுங்கல்களுமின்றி- சம்பந்தா சம்பந்தமில்லா இடங்களில் உட்கார்ந்து எழுதுவது ஒரு வித்தியாச அனுபவமே !  ‘கிறி-முறி-கிறி-முறி‘ என்று ஆர்டினின் கச்சேரியைப் போல சுற்றுமுற்றிலும் சத்தம் செவியைப் பிளந்தாலும் ஒரு மந்தகாசப் புன்னகையோடு கைபோன போக்கில் எதையாவது எழுதுவதென்பது தான் சமீப வாரங்களது நடைமுறை! படிக்கும் உங்களை பரமபிதா காப்பாறாக !

ஈரோடு” என்ற புயல் பரபரப்பாய் வேகம் சேர்த்து வருவதை சமீப நாட்களின் உங்கள் பின்னூட்டங்கள் வாயிலாகப் புரிந்து கொள்ள முடிகிறது! “ஆந்திரா பக்கமாய் கரை சேர்ந்தது... அந்தமான் திசையில் கரை கடந்தது” என்ற ரீதியில் இந்த வானிலை அறிக்கை பிசுபிசுத்துப் போகாது என்ற நம்பிக்கை ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது! இல்லங்களில் விசாக்களை முறையாகக் கேட்டு வாங்கிவிட்டு டிக்கெட்டுகளைப் போட்டீர்களேயானால் இரு நாட்களை நண்பர்களோடு கலக்கலாய் கொண்டாடிடலாம்! And இந்தத் தருணத்தை highlight செய்திடத் தயாராகி வரும் புது இதழ்களின் பக்கமாய் பார்வைகளை இந்த வாரம் ஓட விடுவோமா?

சந்தேகமின்றி “ஈரோட்டில் இத்தாலி” தான் இம்மாத 4+1 (?!)இதழ்களுள் showstopper என்பதில் ஐயமில்லை! 2016-ன் அட்டவணையைத் தயாரித்த போதே ஆகஸ்டிற்கென ‘வெயிட்டான‘தொரு இதழ் அவசியம் என்று note போட்டு வைத்திருந்தேன்! And இதற்கான கதைகளும் ‘டக் டக்‘கென்று தானாகவே தேர்வாகிக் கொள்ள- என் வேலை ரொம்பவே சுளுவாகிப் போனது! 
“What you do well- I can do even better!” என்பது தான் எனக்குத் தோன்றிய முதல் எண்ணம்- இந்த இதழின் பிரதான நாயகரான டெக்ஸ் வில்லரின் "ஒரு கணவாயின் கதை" யினைப் படித்த பொழுது ! சமீபமாய் கேப்டன் டைகரின் சாகஸம் ஒரு வரலாற்றின் நிஜப்பக்கத்தினுள் ஐக்கியமாகிப் பயணித்ததைப் பார்த்திருந்தோம் - சிலாகித்திருந்தோம்! ஆனால் “நாங்களும் பரட்டை தானே... எங்க கிட்டேயும் சீப்பு இருக்குல்லே ?” என்று இரவுக்கழுகார் சொல்லாத குறை தான்- “ஒரு கணவாயின் கதையில்”! வன்மேற்கின் வரலாற்றில் நிகழ்ந்த இன்னொரு இரத்தக்களரியான அத்தியாயத்தினில் நம்மவரை இணைத்து ஒரு அழகான ஆக்ஷன் த்ரில்லரை 100 பக்கங்களில் உருவாக்கியுள்ளார் மௌரோ போசெல்லி ! மனுஷன் எத்தனை தான் research செய்வாரோ தெரியவில்லை- ஆனால் டெக்ஸ் & கோ விற்கு விதவிதமாய் களங்கள் உருவாக்கித் தரும் பொருட்டு இவர் எடுக்கும் மெனக்கெடல்கள் அசாத்தியம் என்பேன்! நமக்கு இப்போது நன்றாகவே பரிச்சயமாகிப் போகியுள்ள அந்த O.K CORRAL நேருக்கு நேர் துப்பாக்கி மோதலைப் பின்புலனாக்கி - இதற்கு முன்பாய் நாம் வெளியிட்ட வரலாறு கலந்த டெக்ஸ் சாகசம் "நில்..கவனி...சுடு." என்பது நினைவிருக்கலாம் ! அதே பாணியில்  - இன்னுமொரு நிஜ நிகழ்வினைப் பின்னணியாக்கி - அதனுள் நம் நண்பர்களைப் பயணிக்கச் செய்துள்ளார் போசெல்லி !  வரலாற்றின்  கோடு கதையினுள் மெலிதாய் இழையோடினாலும் - வழக்கமான டெக்ஸ் அதிரடி பாணியினைத் துளிகூட விட்டுத் தராமல் ஒரு அழகான சிங்கிள் ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் மனுஷன் !  And இரவுக்கழுகின் முழு டீமும் இங்கே ஆரவாரமாய் ஆஜராவதால்- பக்கங்கள் சும்மா வைகை எக்ஸ்பிரஸ் போல பறக்கின்றன! And முழுவண்ண இதழ் எனும் போது கேட்கவும் வேண்டுமா? பக்கத்துக்குப் பக்கம் கண்ணைப் பறிக்கின்றது! இதோ ஒரு preview !!
கதை # 2 என்று  எதனைக் குறிப்பிடுவதென்று சின்னக் குழப்பம்- ஏனெனில் டெக்ஸோடு பக்கங்களைப் பகிர்ந்திடும் பாக்கி மூவருமே இந்த இதழில் தூள் கிளப்பியுள்ளார்கள்! அப்புறம் யோசித்துப் பார்த்ததில்- சீனியரான C.I.D. ராபினைத் தான் இரண்டாம் இடப் பிரமுகராக்குவதென்று தீர்மானித்தேன்! “காற்றில் கரைந்த காதலி” ராபின் தொடரில் சிலபல காரணங்களுக்காக வித்தியாசமாகத் தோன்றவிருக்கும் கதையென்பேன்! For starters – இது ராபின் தொடரின் கதை # 200! So அந்த landmark-ஐ கௌரவிக்கும் விதமாய் இந்த சாகஸத்தை முழுவண்ணத்தில் வெளியிட்டிருந்தனர்! ராபின் தொடரின் இறுதி சாகஸமும் இதுவே என்பது சற்றே சோகமான சிறப்பம்சம்! 2005 ஜனவரியோடு இந்தத் தொடரை போனெல்லி நிறுத்திக் கொண்டனர்! 199 சாகஸங்களுக்கு ஒண்டிக் கட்டையாய் சுற்றித் திரிந்த மனுஷனுக்கு ஒருவழியாய் இருநூறாவது சாகஸத்தில் கல்யாணம் செய்து வைப்பார்களென்று எதிர்பார்த்தால்- ஆப்பை வசமாகச் செருகுவதே அங்கு தான்! கல்யாண மாப்பிள்ளையாய் தேவாலயத்தில் ராபின் காத்திருக்க- மணப்பெண் is gone - போயே போய் விடுகிறார்! தொடரும் ஆக்ஷன் அதிரடிகள் தான் ராபினின் "கா.க.கா." !முழுவண்ணத்தில் LMS-ல் வந்த ராபின் கதை வண்ணங்களில் பல்லைக் காட்டியதற்கு நேர் மாறாய் இம்முறை ‘பளிச்‘ கலர்களில் கலக்குகிறார்! ஆண்டின் முதல் 'அக்மார்க்' டிடெக்டிவ் சாகசமிது - "ரிப்போர்ட்டர்" ஜானியினை அந்தப் பட்டியலும் நுழைக்காதிருப்பின் ! 200 கதைகள் கொண்ட ராபினுக்கு இன்னமும் கூடுதலாய் இட ஒதுக்கீடு செய்திட ஆசைதான் எனக்கு - ஆனால் நமது நாயகர்கள் பட்டியலின் நீளம் ஒரு தடையெனில் - ராபினின் தொடர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள சித்திரத் தரங்கள் ரொம்பவே up & down ரகத்திலானவை ! So - 'இது ராபினின் ஒண்ணுவிட்ட பெரிப்பாவா ? சித்தப்புவா ?' என்ற வினாக்கள் எழ நிறையவே வாய்ப்புகள் உண்டென்பதால் - ஓரளவுக்கு ஓ.கே artwork கொண்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து வருகிறோம் ! 
கதை # 3 – நமது கறுப்பு-சிகப்புக் combination டைலன் டாக்கினுடையது! எப்போதும் போலவே இதனிலும் மனுஷன் மர்மம்; திகில்; பரபரப்பு; என்று எங்கெங்கோ ரவுண்ட் கட்டியடித்தாலும்- வண்ணத்தில் அவரோடு சுற்றித் திரிவது செம சுவாரஸ்யமான அனுபவமாய் அமைந்திடப் போகிறது! And இந்த இதழின் artwork மிரட்டல் ரகம்!!! இதுவரையிலும் நீங்கள் பார்த்திருக்கக்கூடிய டைலன் டாக்கின் சித்திரங்கள் வேறொரு ரகமெனில் - இந்த சாகஸத்தின் artwork தரம் அதற்கொரு படி மேலே ! And இம்முறை கதையும் கூட ரொம்பவே மாறுபட்ட பாணி ! பேய்..பிசாசு...மர்ம மண்டலங்கள்...என்றெல்லாம் போட்டுத் தாக்காது - நவீன இலண்டனிலேயே ஒரு வித்தியாச முடிச்சினை டைலன் இம்முறை அவிழ்க்கிறார் ! மஞ்சள் சட்டை மாவீரரின் நீல ஜீன்ஸ் + மஞ்சள் சொக்காய் - புக்கின் முதல் பகுதியினை ஆக்கிரமிக்கிறதெனில் - red & black உடுப்பில் mr .DD கலக்குகிறார் ! And வழக்கம்போலவே டைலனின் இத்தாலிய ரசிகர்கள் தயாராகி வருகின்றனர் - இந்த இதழுக்கு ஆர்டர் செய்திட ! எனக்கு இன்னமும் புரிபடாத ஒரே சமாச்சாரம் - இத்தனைபெரிய  mass following கொண்ட இரவுக்கழுகாருக்கு இத்தாலியில் ஒரு  வீரியமான ரசிகர் அமைப்பு  இதுவரையிலும் என் இல்லை  ? என்பதே...! டைலன் டாகுக்கும் சரி, திருவாளர் டேஞ்சர் டயபாலிக்குக்கும் சரி - ஆர்ப்பாட்டமானதொரு fan following உள்ளதெனும் பொழுது - இரவுக்கழுகாரின் அணியினர் இன்னமும் பன்மடங்கு வேகமாய் இருந்திட வேண்டும் தானே ? டைலன் டாக் எனில் குறைந்த பட்சம் 50 பிரதிகள் இத்தாலிக்குப் பார்சல் ; "டே.ட." எனில் குறைந்தது 100+ என்பது நமக்கே கிடைக்கும் ஆர்டர்கள் ! ஆனால் sadly "தல" ரசிகர்கள் இது விஷயத்தில் ஆர்வம் காட்டுவதே இல்லை !  

கதை # 4 –  இந்த இதழின் ஒரு ஓசையிலா டைனமைட்டாக அமைந்து போயின் ஆச்சர்யப்பட மாட்டேன்! மேஜிக் விண்ட் இது வரையிலும் சம அளவு பூமாலைகளையும், சம அளவில் பூரிக்கட்டைகளையும் ஈர்த்திருப்பதில் ரகசியமில்லை ! 'கௌ-பாய் தொடரென்பதா? fantasy கதையென்பதா? அமானுஷ்யம் சார்ந்ததென்பதா ?' என்று இந்த series-ஐ சுற்றிலும் மெல்லிய குழப்பம் இழையோடுவதை நாமறிவோம்! ஆனால் “பூமிக்குள் ஒரு பிரளயம்” கதை முற்றிலும் புதிதாய் ஒரு நான்காவது கோணத்திலிருந்தும் இந்தத் தொடரை அணுகும் சாத்தியக் கதவுகளைத் திறந்திடப் போகிறதென்பேன்! சளசளத்தபடியே உடன் சுற்றித் திரியும் போ‘ஒரு poor man’s கார்சன்' தான்; ஆனால் அதிகம் பேசாமலே அழுத்தமாய் சுற்றி வரும் மேஜிக் விண்ட்- இந்த சாகஸம் ஹிட்டடிக்கும் பட்சத்தில்- சிலபல துடைப்பங்களுக்கு வேலையின்றிப் போகச் செய்து விடுவாரென்று நம்புகிறேன்! ‘பூ.ஓ.பி‘ 96 பக்க டைனமைட்! இந்தாண்டின் கதைகளுள் நான் ஆவலாய் எதிர்பார்த்திருக்கும் கதைகளுள் இதுவுமொன்று  ! 
So கௌ-பாய் ; டிடெக்டிவ் ; ஹாரர் ; என்பதோடு ‘எது மாதிரியும் இல்லாத புது மாதிரி‘ கதையும் கைகோர்க்க- இந்த போனெல்லியின்  FAB FOUR ஈரோட்டை மட்டுமன்றி நமது சேகரிப்புகளையும் colorful ஆக்கக் காத்துள்ளனர்! Hard cover; முழுக்கவே Art Paper; முழு வண்ணம் எனும் பொழுது இந்த இதழ் நிச்சயம் ரசிக்கும்விதம் அமையுமென்று மெய்யாக நம்புகிறேன் ! And அட்டைப்படமும், ரொம்ப அழகாய் அமைந்துள்ளதை எனக்குத் தோன்றியது ! So fingers crossed ! 

ஆகஸ்டின் black & white குத்தகைக்காரரும் அதே இத்தாலிப் பட்டணக்காரர் எனும் பொழுது அவர் மாத்திரம் கலக்காது விட்டு விடுவாரா- என்ன? இப்பொழுது வெளியாகக் காத்துள்ள மர்ம மனிதன் மார்ட்டின் சாகசமான "இனியெல்லாம் மரணமே"  சுமார் 7 / 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது திட்டமிடலில் இடம் பிடித்தது ! ! ஏதோ ஒரு சமயம் இத்தாலியில் சுற்றித் திரிந்த போது இந்த மெகா சைஸ் மார்ட்டினின் ஆல்பத்தை, ரோம் நகரின் ரயில்வேநிலையத்தில் பார்த்து, அதன் சித்திரத் தரத்தில் மெய்மறந்து அந்த இதழை வாங்கி வந்திருந்தேன்! இத்தாலிய மொழிபெயர்ப்பினை அந்நாட்களில் நமக்குச் செய்து வந்தவர் மட்டும் ‘திடுதிடு‘ப்பென்று கடையை மூடிப் போயிராவிடில் இந்த சாகஸம் என்றைக்கோ வெளிச்சத்தைப் பார்த்திருக்கும் ! இத்தனைகாலம் என்னிடம் துயில்பயின்ற கதையினை ஜூனியர் எடிட்டரின் இத்தாலிய மொழிபெயர்ப்பு டீமின் புண்ணியத்தில் எழுதி வாங்க சமீபமாய் சாத்தியமாக - இந்தாண்டின் "ம.ம.மா." சாகசம் களம் காண ரெடியாகிறது ! அன்றைக்கே போட்டிருந்த அட்டைப்பட ஓவியம் இத்தனை வருஷங்களாயினும், மெருகு குறையாது பத்திரமாக இருக்க- ஒரு ஜோடி Bata காலணிகள் வாங்கும் செலவு மிச்சமானது - அட்டைப்படத்தின் டிசைனிங்கின்  பொருட்டு! And இந்த இதழின் உட்பக்கச் சித்திரங்களைப் பார்த்தால் திகைத்துப் போய் விடுவீர்கள்- இவற்றின் நேர்த்தியின் காரணமாய் ! “குற்றம் பார்க்கின்” இதழில் டெக்ஸின் சித்தப்பா சார் தான் கண்ணில் பட்டாரென்று கவலை கொண்ட நண்பர்கள்- இம்முறை மார்ட்டினின் சுந்தரத்தைச் சந்தித்து மலைக்காதிருக்க இயலாது! Stunning artwork!!

ஆண்டின் மெகா இதழ்களுள் “தீபாவளி மலர்” மாத்திரமே எஞ்சி நிற்க- இதர கதைகள் பெரும்பான்மையின் மீதான பணிகள் கணிசமாகவே நிறைவுற்று நிற்கின்றன! இப்போதெல்லாம் எனக்குப் பணியாற்றுவது எப்படியோ - உங்களுக்குத் படிப்பது எப்படியோ - ஆனால் தயாரிப்பில் ஈடுபடும் எங்களது டீமுக்கு ஒரு 52 பக்க இதழானது மூன்றல்லது ; நான்கு நாட்களது சமாச்சாரமாகிப் போய் விட்டது ! கதையில் பாதியை எழுதிவிட்டு வேறு வேலையினுள் தலைநுழைத்தால் - ஆபீசுக்குள் நுழையும் போதே - "ஏமண்டி...எங்களுக்கு வேலை லேது !" என்று போர்டு நிற்கிறது ! So  இவர்களுக்குப் பயந்தாவது ஆந்தைகளோடு குசலம் விசாரிக்க தினப்படி அவசியமாகிறது ! 

Before I wind off - 2 தனித்தனி நிகழ்வுகள் - ஆனால் ஒரே திசையினைச் சுட்டுக் காட்டும் விதத்தினில் .....! 
 • வழக்கம் போல் வசூல் + ஆர்டர்களின் பொருட்டு சேலம்  ; கோவை நகர்களில் சென்ற வாரம் நமது மார்க்கெட்டிங் நிர்வாகி கணேஷ் ரவுண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அன்றாட கலெக்ஷன் + ஆர்டர் நிலவரங்களை update செய்யும் பொழுது - புத்தகக் கடையினரின் ஒற்றை agenda பற்றிச் சொன்னதை கேட்ட பொழுது மண்டையைச் சொரிந்து கொள்ளத் தான் தோன்றியது ! "எல்லா மறுபதிப்புகளிலும் 5 பிரதிகள் வீதம் + எல்லா டெக்ஸ் வில்லர் இதழ்களிலும் 10 பிரதிகள் வீதம்" என்பது தான் கிட்டத்தட்ட எல்லோருமே கொடுத்திருக்கும் ஆர்டர்கள் !! XIII பதிமூன்று ; XIV பதினான்கு ; கிராபிக் நாவல் ; கிச்சடி  நாவல்...லார்கோ ...wells fargo .....சந்தா Z : X ; Y ; ஜூலியா ...அவங்கக்கா .... என்று யாரைப்  பிரதானப்படுத்த முயன்றாலும் அது உங்க ஆசை  சாமியோவ்   - இங்கே விற்பது இது மட்டும் தான் என்பதை அவர்கள் சொல்லாது சொல்வதை "ரோசனை"யோடு ஆராய்கிறேன் !  
 • இது போன வாரத்து நிகழ்வெனில் - நேற்றுக் காலை கிட்டிய அனுபவம் இன்னமும் ஒருபடி மேலே ! திங்கட்கிழமை மதியமே ஒரு திடீர் வேலை நிமித்தம் ஊர் சுற்றக்  கிளம்பியிருந்தவன் சனிக்கிழமை அதிகாலையில் மூன்றரை மணிக்குப் போல் சென்னை வந்து சேர்ந்திருந்தேன். விமானத்தில் என்னோடு கோந்து போட்டு ஒட்டிக் கொள்ளாத குறையாய் நெருங்கிப் போயிருந்த ஒரு 4 வயது குட்டி வாண்டைத் தூக்கிக் கொண்டு அவனின் தந்தை தனது தடித் தடி சூட்கேஸ்களை பெல்ட்டிலிருந்து மீட்டெடுத்து வரும்வரை துணைக்கு நின்றிருந்தேன். எனக்கு மதுரை போகும் விமானம் 5-45 க்கு என்பதால் ஒருமாதிரியாக வாண்டிடமும், தந்தையிடமும் சொல்லிவிட்டு விறு விறுவென்று வாசலை நோக்கி நடைபோட்டேன். ஆப்பிரிக்கா போனாலும் சரி ; அமெரிக்கா போனாலும் சரி - எனது லக்கேஜ் எப்போதுமே ஏழு அல்லது எட்டுக் கிலோ கொண்டதொரு பை மாத்திரமே என்பதால் அதனை உருட்டிக் கொண்டே போகும் என்னை ஒரு நாளும் வாயிலில் நிற்கும் customs அதிகாரிகள் நிறுத்துவதில்லை ! பை நிறைய அழுக்குத் துணிகள் மாத்திரமே இவனிடம் இருக்குமென்பது நம் முகத்திலேயே தான் எழுதி ஒட்டியிருக்குமே ! ஆனால் நேற்றோ - ஒரு மிடுக்கான அதிகாரி என் தோளைப் பற்றி தான் பக்கமாய் இழுத்துக் கொண்டு "ஹலோ சார்" என்றார் ! "போச்சுடா - அடுத்த பிளேனைப் பிடிக்க ஓடும் வேளையில் தானா கஸ்டம்ஸ் பரிசோதனை ?" என்று நினைத்துக் கொண்டே "yes sir ?" என்று கேட்க -  முகம் நிறையப் புன்னகையோடு அருவி கொட்டியது போல் ஆரம்பித்தார் பாருங்கள்........... அடுத்த 5 நிமிடங்களுக்கு "டெக்ஸ் வில்லர்" என்ற மந்திரச் சொல்லின் முழுமையான ஆற்றலை yet again நேரில் ரசித்திட முடிந்தது ! 9-வது படிக்கும் போதிலிருந்தே லயன் காமிக்ஸ் தீவிர ரசிகர் என்றும், திருச்சிக்கு அருகினில் உப்பிலியபுரம் சொந்த ஊர் என்றும் அறிமுகம் செய்து கொண்டார் ! விமானப் படையில் ; அங்கே இங்கேயென்று 15 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தற்போது சென்னை விமான customs-ல் பணியாற்றுவதாய்ச் சொன்னவர் - டெக்சின் அதி தீதீதீதீவிர ரசிகர் போலும் !! "டெக்சின் அந்தக் கதையில் இந்தப் பக்கத்தின் இந்த action super சார் ; அந்த இதழில் கார்சனின் டயலாக் அட்டகாசம்  ; மெபிஸ்டோ தலைகாட்டும் அமானுஷ்யம் சார்ந்த டெக்ஸ் கதைகள் நிறைய உண்டா சார் ? ; அவற்றைப் போடுங்களேன்....; நெட்டில் தேடித் பார்த்தேன் - எல்லாம் இத்தாலிய மொழியில் உள்ளன ; தமிழில் படிப்பது செம அனுபவம் " என்று மடை திறந்த வெள்ளமாய்ப் பொரிந்து தள்ளினார் ! "இத்தனை கூட்டத்தில் என்னை எங்கே அடையாளம் கண்டு பிடித்தீர்கள் ? " என்று கேட்க - "கவர்னர்  கிரண் பேடி மேடம் நீங்கள் வந்த  பிளைட்டில் தான் வந்திருந்தார்கள் ; அவர்களை வரவேற்க நின்று கொண்டிருந்த போது உங்கள்  பையனோடு வருவதைக் கவனித்தேன் ; ப்ளாக் ரெகுலராய்ப் படிப்பேன் ; so உங்களை அடையாளம் தெரிந்து கொள்வதில் சிரமம் இருக்கவில்லை " என்றார் !  கவர்னர் கிளம்பிய பின்னே என்னைத் தேடி இருக்கிறார் - ஆனால் நானோ அந்தக் குட்டிப்  பையனோடு  ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்ததால் - எப்படியும் வாயிலைத்  தாண்டித் தானே போயாக வேண்டும் - அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருந்ததையும் சொன்னார் ! "இன்னும் ரெண்டு வருஷத்தில் கல்யாணம் பண்ணும் வயசில் பையன் இருக்கான் சார் எனக்கு  ; அது விமானத்தில் ஸ்னேஹம் செய்து கொண்ட வாண்டு" என்று விளக்கி விட்டு, அவரது குடும்பம், பணி பற்றிப் பேச எத்தனித்தேன் ! ஆனால் அவரோ - டெக்ஸைத் தாண்டி வேறெங்கும் நகர்வதாய் இல்லை ! "அட...கண்டு புடிச்சிடீங்களா சார் ?" என்று பக்கத்திலிருந்த பெண் அதிகாரி அந்நேரம் கேட்க - அவருக்கும் இடைப்பட்ட அவகாசத்தில் டெக்ஸ் புராணம் நிச்சயமாய் சொல்லியிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன் !! எனக்கு அடுத்த டெர்மினல் செல்ல அதிகம் அவகாசமில்லை என்பதால் - "புறப்படுகிறேன் சார்   " என்று விடைபெற்றேன் ! அவரோ - "இருளின் மைந்தர்கள் " பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் !! "ஒரிஜினலாய் இத்தாலிய கதைகளில் டெக்ஸ் வசனங்கள் இது போலவே இருக்குமா சார் - கார்சனின் நையாண்டி இப்படி இருக்குமா சார் ? ; நம் மொழிக்கேற்ப நீங்கள் செய்யும் மாற்றங்கள் அவை என்று நினைக்கிறேன் ! படிக்கும் போது தெறிக்கிறது " என்று அவர் சிலாகித்துக் கொண்டிருந்தது தொடர, அதிகாலை 4-15 க்கு என் சிரமெல்லாம் ஜிலீரென்றது ! பிரமிப்பாய் இருந்தது - நாம் கண்ணிலேயே பார்த்திரா ஒரு வன்மேற்கின் மண்ணில் உலவும் ஒரு இத்தாலியக் கற்பனைக் கதாப்பாத்திரத்துக்கு இத்தனை பெரிய தாக்கம் ; இத்தனை விதமானோரிடம் இருப்பதை உணரும் பொழுது ! "நான் மௌன ப்ளாக் வாசகன் சார் ; நம்மை விடவும் தீவிர காமிக்ஸ் ரசிகர்கள் இருப்பதை சந்தோஷமாய் ரசித்துக் கொள்வேன் ; அவ்வப்போது டைகர் கதைகளும் படிப்பேன் ; நமக்கு என்னவோ தெரியலை - டெக்ஸைத் தாண்டி உலகமே கிடையாது !" என்றவரிடம் விடைபெற்று புறப்பட்டு விட்ட போதிலும், அந்த 5 நிமிடங்களின் தாக்கம் என்னைவிட்டு நீங்க ரொம்ப ரொம்ப நேரமாகியது ! சில பல டஜன் மணிநேரச் சிந்தனைகள் தரும் தெளிவுகளை விட - ஒரு 5 நிமிட சந்திப்பு தரும் "பாதை விளக்கம்" கூடுதல் ஆற்றல் கொண்டதாக இருக்க முடியுமென்பதை நேற்றைய காலை எனக்கு உணர்த்தியது ! அரசு பணியில் ; அதிலும் ஒரு முக்கிய பாதுகாப்பு சார்ந்த துறையில் நண்பர் பணியாற்றுவதால் அவரது பெயரை இங்கே வெளியிட தயக்கமாகவுள்ளது ! இன்றைக்கு அவரும் இத்தனை மௌனமாய் வாசிப்பாரென்பது நிச்சயம் - thanks a ton to you sir !
And நாம் எல்லோரும் நேசிக்கும்  'தல'யைப் பற்றி சொல்ல புதிதாய் என்னவுள்ளது - 'தலைவா.....you are just awesome !!" என்பதைத் தாண்டி ? Bye folks....see you around !! 

P.S : ஈரோட்டில் ஆகஸ்ட் இதழ்களை பெற்றுக் கொள்ள விரும்பும் நண்பர்கள் - சிரமம் பாராது உங்கள் சந்தா நம்பர் / அல்லது முகவரியோடு ஒரு மின்னஞ்சலைத் தட்டி விடுங்களேன் - ப்ளீஸ் ? இங்கு செய்திடும் பின்னூட்டங்கள் நம்மவர்களை எட்டிடாதே !

277 comments:

 1. Her Comes the குட்டி சூப்பா்மேன்

  ReplyDelete
 2. வணக்கம் எடிட்டர் சார்....!
  வணக்கம் நண்பர்களே...!

  ReplyDelete
 3. Sunday morning with Comics and our blog always energy booster for the whole week!

  ReplyDelete
 4. Replies
  1. பாஸா ஃபெயிலா சுரேஷ் சந்த் ஐயா

   Delete
 5. மேஜிக் வின்ட் இந்தாண்டு சோடை போக மாட்டார் என நம்போவோமாக! மர்ம மனிதன் மார்டின் மீண்டும் காண ஆவலோடு காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 6. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே..

  ReplyDelete
 7. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே...!!!!

  ReplyDelete
 8. வணக்கம் நண்பர்ளே ோட்டில் சந்திக்க ஆவலுடன் இருக்றேன்.

  ReplyDelete
 9. அதகளம் ஆகிற ோட்டில் நானும் இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்

  ReplyDelete
  Replies
  1. மாமா நானும் கண்டிப்பா இந்தவாட்டி ஈரோட்டில்-சிவா,திருப்பூரிலிருந்து

   Delete
 10. சென்ற அக்டோபரில் 2016 க்கான இதழ்களின் பட்டியல் கொண்ட குட்டி புக்கை பார்த்தபோதே, எப்போது இந்த கதைகளை படிப்போம் என்ற ஆர்வத்தை கிளப்பியவர்கள் மார்ட்டினும்,மேஜிக் விண்டுமே...!
  ஆவலாய் காத்திருக்கிறேன்...!

  ReplyDelete
 11. எடிட்டர் சார் நீங்கள் எந்த கதைகள் வேண்டுமானாலும் போடூங்க,ஆனால் புக்கை கையில் எடுத்தால் அப்பரம் படிக்கலாம்ன்னூ கீழே வைக்காத மாறி பாத்தூக்கோங்க.

  ReplyDelete
  Replies
  1. கதை வேகம் சீரக இறுக்க வேண்டும்
   RPR+1

   Delete
  2. daibolik akkik அகில்..... நீங்களும் இந்த வலைப்பதிவின் ஆர்வமான ஒரு அங்கம் என்றான நிலையில் தமிழ் டைப்பிங்கில் கொஞ்சமே கொஞ்சமாய்க் கவனம் காட்டுங்களேன் ? அந்த "ர ; ற" சமாச்சாரங்கள் உங்கள் கவனத்தைக் கோருகின்றன !

   மாணவர் என்ற முறையிலும் அது உங்களுக்கு அத்தியாவசியம் தானே ?

   Delete
 12. மேஜிக் விண்டு:
  நான் டி.வில் காா்ட்டூன் தொடா் பாா்ப்பது போல் வித்தியசமான கதை கறுப்பு காகிதங்கள் கதை தொடா் போல் வந்தால் நல்லது அந்த வில்லன் என்னவானன் என்று போன வறுடம் முதலே எதிா்பா்ப்பு

  ReplyDelete
 13. டைலன் டாக்:
  போன வறுடத்து கதையை சொல்லியே தீறவேண்டும் சூப்பா் கதை உன்மையான பாசம்,நேசம்,தியகம் என்று கதை சூப்பா் ஆனால் புக் என்னுடையது இல்லை டைலன் தொடாில் தனியாக வந்த மூன்று புக்கும் படித்திறுக்கிறேன் ஆனால் என்னுடையது இல்லை

  ReplyDelete
 14. குற்றம் பார்க்கின் - தமிழ் நாடு வந்த இத்தாலிய பெண்ணுக்கு

  குங்கும பொட்டு வைத்ததுப் போல அட்டகாசமான தலைப்பு.

  ACTION'ஐவிட வசனங்கள் நிறைய இருந்தாலும் ஒரு பக்கம்

  கூட சலிப்பூட்டவில்லை. அந்த காட்டுக் குதிரையை அடக்கும்

  காட்சிக்கு இன்னும் 4 படங்கள் சேர்த்திருக்கலாம். கதை

  நன்றாக இருந்தாலும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு ஊரிலும்

  நடக்கும் கதை போலத்தான் இருந்தது. என்ன வித்தியாசம்!

  நம்மூர் கதைகளில் ஒவ்வொருவர் கைகளிலும் வீச்சசரிவாள்

  இருக்கும், அங்கே வின்செஸ்டர் இருக்கிறது. லான்ஸ்

  ஸ்டோடர்ட் என்ற பண்ணைக்காரர், BAD RIVER என்ற ஊர்,

  அந்த ஊர் ரெயில் நிலையம், டிக்கெட் எடுக்க காசில்லாமல்

  ரெயிலில் ஒட்டிக்கொண்டு வந்து அங்கே இறங்கும் ஜெயில்

  கைதி ஒருவன், அவனை எதிர்பார்த்து காத்து கிடக்கும்

  ரௌடிகள், அங்கே நடக்கும் சண்டைக் காட்சி, பிறகு வரும்

  காதல் காட்சிகள் என இந்த புத்தகம் படித்த அந்த ஒரு மணி

  நேரம் ஏதோ டெக்ஸ் வில்லர் நடித்த தமிழ் படம் ஒன்று

  பார்ப்பது போல பரபரப்பாக இருந்தது.

  ReplyDelete
 15. //அதிகம் பேசாமலே அழுத்தமாய் சுற்றி வரும் மேஜிக் விண்ட்- இந்த சாகஸம் ஹிட்டடிக்கும் பட்சத்தில்- சிலபல துடைப்பங்களுக்கு வேலையின்றிப் போகச் செய்து விடுவாரென்று நம்புகிறேன்! ‘பூ.ஓ.பி‘ 96 பக்க டைனமைட்! இந்தாண்டின் கதைகளுள் நான் ஆவலாய் எதிர்பார்த்திருக்கும் கதைகளுள் இதுவுமொன்று!//

  I AM WAITING EDIT SIR!

  ReplyDelete
 16. //இங்கே விற்பது இது மட்டும் தான் என்பதை அவர்கள் சொல்லாது சொல்வதை "ரோசனை"யோடு ஆராய்கிறேன் ! // பல வாசகர்களுக்கு ஒரு எல்லையைத் தாண்டிடுவதில் தயக்கம் இருக்கவே செய்கிறது. டெக்ஸ் கதைகள் அவ்வப்போது வந்தால், அவர்களும் வேறு கதைகளை ட்ரை பண்ண ஒரு வாய்ப்பு அமைந்திடும். ஆனால், தல - மாதாமாதம் வித விதமாக வருவதால் அவர்களுக்கு அதற்கான தேடல் இல்லாமல் போய்விடுகிறது. இப்படியாக, எனவே, நம்மிடமுள்ள ஏனைய நாயகர்கள் பற்றி, டெக்ஸ் புத்தகங்களோடு சிறு சிறு அறிமுக இணைப்புகளைக் கொடுக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. //ஆனால், தல - மாதாமாதம் வித விதமாக வருவதால் அவர்களுக்கு அதற்கான தேடல் இல்லாமல் போய்விடுகிறது///---6மாதங்களாக தானே இப்படி வருகிறது பொடியனாரே.சென்ற ஆண்டு 2இதழ்கள் மட்டுமே வந்தது.
   ஆனால்இது 4வருட நடப்பல்லவா!!!...

   Delete
  2. டெக்ஸ் comic ஸ் கம்மியாக வந்த போது அதன் மிது ஈர்ப்பு அதிகம் இருப்பது இயல்பு ஆனால் வருடத்திற்கு 12 வரும் போது அதன் மிதன ஆர்வம் கண்டிப்பாக ஓன்று அல்லது இரண்டு வருடங்களில் குறைந்து விடும்.ஆறு மாதத்தில் கிடைத்த வரவேற்பு இரண்டு வருடங்களுக்கு மேல் தங்குமா? வாய்ப்புகள் மிக குறைவு என்பது என் கருத்து

   Delete
  3. ஆறு மாதத்தில் கிடைத்த வரவேற்பா ///--- ஏங்க 20வருடமாக போராடி பெற்ற வெற்றிக்கு கிடைத்த அங்கீகாரம் அல்லவா அது.
   2ஆண்டுகளில் வற்றி போக இது ஒன்றும் , 6மாதங்களில் மட்டுமே கிடைத்த வரவேற்பு அல்லவே.
   ஆழமான வெற்றி , லயன் 1000வாது இதழ் தாண்டி இழுத்து செல்லும் வல்லமை வாய்ந்த வரவேற்பு இது.

   Delete
  4. டெக்ஸின் மீது ஈர்ப்பு குறைய வாய்ப்பே இல்லை.

   Delete
  5. அட்டையை கிழித்தால் எல்லா டெக்ஸ் கதைகளும் ஒன்றுதான் என்ற இத்தளத்தின் பிரபல வரிகள் தற்போது பொருந்துவதில்லை என ஐயமற தெரிகிறது...

   டெக்ஸ் தனி சந்தா அறிவித்தபின் கதைக்களம் வெரைட்டியாக தேர்ந்தெடுப்பதில் எடிட்டர் கூடுதல் கவனம் செலுத்துகிறார்....

   தேர்ந்தெடுக்க நிறைய கதைகள் இருப்பது டெக்ஸின் கூடுதல் பலம்...

   டெக்ஸ் அலுப்பு ஏற்படுவதென்பது நடக்காத காரியம் என்பது பெரும்பான்மை நிஜம்.....


   நகைமுரண் என்னவெனில் டெக்ஸ் கதைகளின் உண்மையான எதிரி அதன் வெகு சிலவான ஆழமான கதைக்களனே...

   ஒரு உதாரணம்..வல்லவர்கள் வீழ்வதில்லை வந்தபோது இடப்பட்ட பல பதிவுகளே....

   டெக்ஸ்= 1/0

   Delete
  6. குமார் சார்.!


   நான் ஒரு சப்பாத்தி வெறியன். உடம்பை குறைக்க மூன்று வருடங்கள்.,காலை & மாலை ,சனி ,ஞாயிறு மூன்று வேளையும் சப்பாத்திதான் சாப்பிட்டேன்.கொஞ்சம் கூட அலுப்பு தட்டவில்லை.காரணம் தொட்டுக்கொள்ள விதவிதமான சட்னி குழம்பு தொட்டு சாப்பிடுவேன்.   அதைப்போலத்தான் தற்போதய டெக்ஸ் கதைகள் விதவிதமான கதைகளங்களை கொண்டு போரடிக்காமல் செல்கிறது.! கிட்டத்தட்ட 60 வருடங்கள் தொய்வில்லாமல் டெக்ஸ் கதைகளை வழங்கும் பொனெல்லி குழுமத்தின் சூட்சுமத்தை நம் எடிட்டரும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்.!

   Delete
  7. இந்த மாதிரி பதில்கள் எதிர்பார்த்ததுதான்.(பிளக்ல நா வர ஆரம்பித்து இரண்டு வரூஷ ஆச்சு. பிளக்கின் அத்தனை நெளிவு சுளிவும் தெரிய ஆரம்பிச்டுச்சு). இரண்டு வருடம் வரை கத்திருப்போமே.

   ஆனால் டெக்ஸ் 20லிருந்து 30 வயது உள்ளோரை கவரவில்லை என்பது என்னுடைய கருத்து.(இந்த வயது உள்ளவர்கள் largo winch படிப்பதில் காட்டிய ஆர்வம் cowboy கதை படிப்பதில் காட்ட வில்லை)

   Delete
  8. //ஆனால் டெக்ஸ் 20லிருந்து 30 வயது உள்ளோரை கவரவில்லை என்பது என்னுடைய கருத்து//

   இந்த வயது ரேஞ்சில் காமிக்ஸ் படிப்பவர்களின் விகிதாச்சாரம் மிகவும் குறைவு என்பதை விற்பனை அளவு சுட்டி காட்டுகிறது என்பது வருத்தமான உண்மை....

   Delete
  9. குமார் சார்.!@

   20 வயது முதல் 30 வயது வரை உள்ளோரை கவரவில்லை.!//


   உண்மைதான்.! காமிக்ஸ் வாசிப்பு கூட அடுத்த தலைமுறைக்கு செல்லுமா ? என்பதே சந்தேகம்தான்.! அனைவரும் அன்ராய்டு போன் அடிமை ஆகிவிட்டனர் !

   Delete
  10. இது ஓரு தற்காலிக மோகம் தான் Android mobile எல்லோர் கைகளில் வர ஆரம்பித்து வருடமாகத்தான். ஆரம்பத்தில் வந்த 3d படங்கள் அத்தனையும் ஹிட் அடித்து. 2000 ஆண்டு வாக்கில். ஆனால் தற்போது நிலைமை தலை கிழ். அதுபோல் android mb லோட மோகம் குறைந்து விடும். ஆனால் comics ஸில் எவ்வளவு பிரம்மாண்டமாக வேண்டுமானலும் குறைந்த பட்ஜெடில் வெளியீடு செய்ய முடியும்.

   Delete
  11. // டெக்ஸ் தனி சந்தா அறிவித்தபின் கதைக்களம் வெரைட்டியாக தேர்ந்தெடுப்பதில் எடிட்டர் கூடுதல் கவனம் செலுத்துகிறார்.... //

   This is the foremost reason for Tex subscription hit. Kudos to editor for bringing in variety within Tex stories.

   Delete
 17. ஒரு கணவாயின் கதை: teaser looks interesting Edit sir

  ReplyDelete
 18. சார்! லக்கி லூக்கின் 'திருடனும் திருந்துவான்' எந்த மாதம் வருகிறது?

  ReplyDelete
  Replies
  1. It may come in September
   ஆசிரியா் நல்ல காமேடி கதை என்றாா்கள் கதை கண்டிப்பாக சூப்பா்ரக தான் இறுக்கும்(எதிர் வீட்டில் எதிரிகள் போல்)

   Delete
 19. எடிட்டர் சார் !

  விமான நிலையத்தில் , கஸ்டம்ஸ் அதிகாரி எங்கள் இளவரசியை பற்றி ஏதுவும் கேக்கவில்லையா சார்.?

  ReplyDelete
  Replies
  1. எடிட்டா் சாா்,
   காஸ்டம்ஸ் ஆப்பிசா் எங்கள் அதகள hero டயபாலிக்கை பற்றி கேட்கவில்லையா(??!!)

   Delete
  2. மொத்தத்தில் காமிக்ஸை பற்றி கேச்டரே அதுவே போதும்

   Delete
  3. Madipakkam Venkateswaran : வில்லை !! :-)

   Delete
 20. மர்ம மனிதன் மாா்ட்டின் எப்பவுமே நன்றக இறுக்கும்

  ReplyDelete
  Replies
  1. மார்ட்டின் சாகசங்கள் எப்போதும் சவாலான வாசிப்புக்கு உத்திரவாதமனவை.

   Delete
 21. சார் அருமை .ராபினின் வண்ணம் சென்ற முறை ஏமாற்றத்தை அளித்ததை தொடர்ந்து இதனை கருப்பு வெள்ளையில் விடலாமே என்று தோன்றிய எண்ணம் இன்று பேச்சின்றி அடங்கி விட்டது .... டைலன் வண்ணம் மட்டுமே விருந்தளிக்க ....சென்ற இதழ் மனதை பிசைந்து சென்றிட இந்த இதழ் தங்கள் விளக்கப்படி பட்டய கிளப்பலாம்

  ஆனா காமிக்ஸ் உலகிற்க்கு தாங்கள் செய்த கொடுமை தூள் கிளப்பத் துவங்கிய மேஜிக் விண்டை குறைத்தது .அடுத்த வருடம் இதழ்களை அதிகரிக்க தாங்கள் தயாராய் இருப்பதால் கூடுதலாய் இரண்டு இடங்கள் என மூன்றாய் , நான்காய் வந்தால் நலம் .
  டெக்ஸ்..டெக்ஸ் ....
  மார்ட்டின்......ஆhaஅப்படியே அட்டய காட்டிருக்கலாம் ...ஹார்டு பௌண்டில் நான்கு கதைகள் நினைக்க நினைக்க நாக்கை நனைக்கிறதே...எப்படா வரும் ஆகஸ்டு

  ReplyDelete
  Replies
  1. //மார்ட்டின்......ஆhaஅப்படியே அட்டய காட்டிருக்கலாம் ...ஹார்டு பௌண்டில் நான்கு கதைகள் நினைக்க நினைக்க நாக்கை நனைக்கிறதே...எப்படா வரும் ஆகஸ்டு//

   :)

   Delete
 22. எனக்கான இம்மாத இதழ்கள் இன்னும் கிடைக்கவில்லை

  ReplyDelete
 23. //எல்லா டெக்ஸ் வில்லர் இதழ்களிலும் 10 பிரதிகள் வீதம்"///...டெக்ஸ் வெறியனாக வானத்துக்கும் பூமிக்கும் குத்தாட்டம் போடுகிறேன்....


  //யாரைப் பிரதானப்படுத்த முயன்றாலும் அது உங்க ஆசை சாமியோவ் - இங்கே விற்பது இது மட்டும் தான் என்பதை அவர்கள் சொல்லாது சொல்வதை "ரோசனை"யோடு ஆராய்கிறேன் ! ///-----ஒரு காமிக்ஸ் ரசிகனாக கவலை கொள்ள வைக்கும் விசயமிது...இதற்கு இந்நேரம் வழிகள் உங்கள் மனதில் ஓடி இருக்கும் சார்...இந்த பரீட்சையிலும் கூட டிக்ஸ்டின்சன் வாங்குவீர்கள் என்ற நம்பிக்கை ஏராளமாக உள்ளது சார்...

  ReplyDelete
  Replies
  1. ஹும் ,பத்து பிளேட் பிரியாணி சாப்பிட்ட எபக்ட் தெரியுதே......?

   Delete
  2. படிக்க படிக்க இனிக்குதடா டெக்ஸா...
   உந்தன் கதையை படிக்க படிக்க இனிக்குதடா டெக்ஸா....டெக்க்க்ஸா...படிக்க..படிக்க ...

   Delete
 24. //Before I wind off - 2 தனித்தனி நிகழ்வுகள் - ஆனால் ஒரே திசையினைச் சுட்டுக் காட்டும் விதத்தினில்//

  எடிட் சார் பாதை எனக்கும் பிடித்திருக்கிறது இந்தவருடம் டெக்ஸ் வில்லர் கதை தேர்வுகள் ஒரு இமேஜ் make over தந்து இருக்கிறது சென்ற ஆண்டு வரை வந்ததில் "கார்சனின் கடந்த காலம்" மட்டும் எனக்கு பிடித்திருந்தது இப்போது ஒரு 4 புது புத்தகங்களும் அந்த லிஸ்ட்இல். அதற்காக மற்ற கதைகளை அடுத்த ஆண்டு டீல்இல் விட்டுவிடாதீர்கள்.

  மாஜிக் விண்ட்ற்கு அதிக slot அடுத்த ஆண்டாவது தாருங்கள் எடிட். அப்புறம் அந்த இரத்தப்படலாம் deluxe edition பிளான் பற்றி ஒரு அறிவிப்பு இந்த ஈரோடு சந்திப்பில் வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.


  B/W கி.ந.: இறந்த காலம் இறப்பதில்லை (Le Storie) பாணியில் ஆன சிறிய புத்தங்களாகவாவது முயற்சியுங்கள்

  ஜூலியா நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,இதில் பார்க்கிறேன் differentஆன புலனாய்வு ஒரு புது genre give more chance for her too.

  ReplyDelete
 25. அடுத்த மாதம் வறவுல்ல ராபின் உன்மையான கதை பெயா்
  Progetto dakotadakota அந்த அட்டைபடத்தில் மனப்பொண்ணை பாா்தேன்
  கதை கண்டிப்பாக சூப்பா்ரக தான் இறுக்கும்

  ReplyDelete
  Replies
  1. daibolik akkik : அட்டையில் உள்ளது மணப்பெண்ணில்லை அகில் !

   Delete
 26. Erode till itali - i am waiting

  ReplyDelete
 27. //பதிமூன்று ,பதினான்கு கி.நா.கிச்சடி ,பச்சடி , ஜுலியா ,அவுங்க அக்கா (?அது யாருங்க சார் பெட்டியா ?) //


  சார் நிறையபேர் கதை எளிமையாக ,அதாவது கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பாகு மாதிரி வாயில் போட்டவுடனே சுவையுடன் கரைந்து போகவே விரும்புகின்றனர்.


  கி.நா.போன்ற கதைகள் கடுக்காய் முட்டாய் மாதிரி கடக்கு முடக்கு என்று கரையாமல் இருப்பதை பெரும்பாலானோர் விரும்பவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.கடுக்கா மிட்டாய் லிஸ்டில் எங்க இளவரசி இல்லை என்பது சந்தோசமான விஷயம்.!

  ReplyDelete
  Replies
  1. ஆனால் எங்களை போன்ற பள்ளி மானவா்களுக்கு கடுக்காய் மிட்டய் ஒன்றை போட்டோமனால் period முழவதும் இறுக்கும்

   Delete
  2. //சார் நிறையபேர் கதை எளிமையாக ,அதாவது கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பாகு மாதிரி வாயில் போட்டவுடனே சுவையுடன் கரைந்து போகவே விரும்புகின்றனர்.///---101%அக்மார்க் உண்மை MV sir...

   Delete
  3. Madipakkam Venkateswaran : சார்..நெய் மைசூர்பாகு செம டேஸ்ட் தான் ; வாயில் போட்ட உடனே கரையும் தான் ; ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்ஸில் அதை மாத்திரமே நம்பி இராது வகை வகையாய் காரங்களையும், தித்திப்புகளையும் பக்கத்திலேயே அடுக்கி வைத்திருப்பதிலேயே ஒரு கதை சொல்லாது சொல்லப்பட்டுள்ளதே ?

   திகட்டிப் போகும் சார் - சுவை மாற்றங்கள் இல்லாது போயின் ! வயிற்றுக்குப் போடுவதிலாகட்டும், வாசிப்புக்குப் போடுவதிலாகட்டும் !

   Delete
  4. @ திரு விஜயன்

   //சார்..நெய் மைசூர்பாகு செம டேஸ்ட் தான் ; வாயில் போட்ட உடனே கரையும் தான் ; //கிருஷ்ணா ஸ்வீட்சில் வகை வகையாய் காரங்களையும், தித்திப்புகளையும் பக்கத்திலேயே அடுக்கி வைத்திருந்தாலும் கூட..அந்த மைசூர்பாகுவைமட்டும் ரெண்டு பாக்ஸ் வாங்கி மொத்தத்தையும் நீங்க ஒருத்தரே உள்ள தள்ளிட்டிங்களோன்னு தோணுது...ஹாஹாஹா..ஏன் இந்த டவுட்டுன்னா...சில வாரம் முன்னாடி மைசூர்பாகு பரிசு வாங்கிய நண்பர்கள்,அதை கைபற்றிய தகவலே எதுவும் வரலையே..அதுதான்..ஹாஹாஹா..![மைசூர்பாகுன்னா அவ்வளவு இஷ்டமா ஸார்...பீட்ஸாவை தூக்கிட்டு மைசூர்பாகுவை ரீப்ளேஸ் பண்ணிடலாமா..!!!]

   Delete
 28. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் விடுமுறை நாள் வணக்கங்கள்

  ReplyDelete
 29. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் விடுமுறை நாள் வணக்கங்கள்

  ReplyDelete
 30. // And நாம் எல்லோரும் நேசிக்கும் 'தல'யைப் பற்றி சொல்ல புதிதாய் என்னவுள்ளது - 'தலைவா.....you are just awesome !!" என்பதைத் தாண்டி ? Bye folks....see you around !! டெக்ஸ் வில்லர் சூப்பர்ஸ்டார் போல,இது பதில் இல்லாத கேள்வி,ஏன்,எதற்கு என்று கரணங்கள் கூற இயலாது.சிலவற்றிக்கு விளக்கங்கள் கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. அது எங்களுக்கு...எதையும். தீர்க்கமாக ஆராயும் ஜென்குரு உங்களுக்கு , இதற்கு நிச்சயமாக ஏதாவது விளக்கங்கள் தோன்றி இருக்கனுமே..

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. எனக்கு தெரிந்த உளவியல் விளக்கம்,
   1. பொதுவாகவே நம்மால் இயலாத சாகச வேலைகளை ஒரு கதை நாயகர்,கதாபாத்திரம் செய்யும் போது அதன் மேல் இயல்பாகவே பெரும்பாலான நபர்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவது இயல்புதான்.
   2. ஏனெனில் நிறைய பேர் ரோல் மாடல்களையே விரும்புகின்றனர்.
   3. நாம் அதை போல் இருப்பதில்லை என்பது வேறு விஷயம்.
   4. மற்றொரு காரணம் பெரும்பாலான நபர்கள் எதை விரும்புகிறார்களோ அதை அப்படியே விமர்சனங்கள் இன்றி ஏற்றுக் கொள்ளும் மனோபாவம்.(அது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்)
   5. நிறைய பேருக்கு இயல்பு வாழ்க்கையில் சாகசங்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை,வாழ்க்கையின் யதார்த்தம் அப்படி,எனவே சாகச நாயகனை நம்மில் பொருத்திக் கொள்வது எளிதானதுதான்.
   இன்னும் பல விளக்கங்கள் இருக்கலாம்.
   யோசித்தால் அனைவருக்கும் புலப்படும்.

   Delete
 31. இன்றைய தினமலர் நாளிதழில் எழுத்தாளர் கவுதம நீலாம்பரன் அவர்கள் "வேதாளர்" கதைகதையையும், கதாப்பாத்திரத்தையும் பிரித்து மேய்ந்து, அலசி காயப்போட்டிருக்கிறார். இது நாள் வரை வேதாளர் கதாப்பாத்திரத்தின் மீது கொண்டிருந்த மதிப்பு குறைந்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. sundaramoorthy j : அவரது அபிப்பிராயங்கள் உங்களது ரசனையை மாற்றிடுவானேன் நண்பரே ? உங்களுக்காக சலிப்பு ஏற்படின் அது வேறு விஷயம்...!

   Delete
 32. //MV: சார் நிறையபேர் கதை எளிமையாக விரும்புகின்றனர்.//

  எளிமையாக வேண்டாம் என யாரும் கேட்கவில்லையே, எளிமையாகவும் இருந்தால் அனைவரும் ரசிப்பார்கள். நாம் ரசிக்கும் டெக்ஸ் இல் டாப் 10 இல் வரும் கதை அவ்வாறு மிக மிக எளிமையாக மட்டும் இருக்கும் கதைகள் இருப்பதில்லை என்பதே இதன் சான்று. பௌன்சர்ஐ பலரும் இங்கே இந்த காமிக்ஸ் நட்பு வட்டாரத்தில் கதைக்காக மட்டும் பலரும் ரசித்ததும் இதைபோன்றே.

  ReplyDelete
  Replies
  1. சதீஸ் சார்.@

   நான் புதியதாக படிக்கும் காமிக்ஸ் வாசகர்களுக்கு எளிதில் புரியக்கூடிய ஆக்ஷன் கதைகளைத்தான் கொடுப்பேன்.


   நாம் கூட ஆரம்பத்தில் கன்னித்தீவு ,இரும்புக்கை மாயாவி ,வேதாளர் ,ஸ்பைடர் என்று படிப்படியாக முன்னேறிதான் தற்போது இந்த நிலையை அடைந்துள்ளோம் என்பதை மறுக்கமுடியாது.!

   Delete
  2. MV சார்,
   புதிதாக நாம் காமிக்ஸ் படிக்கும்போது DC, MARVEL அவ்வளவாக இந்தியாவில் கால் பாதிக்கவில்லை TV பேட்டியும் ஒரு அளவாக தான் நமது கற்பனை திறனுடன் விளையாடியது இப்போது வரும் சினிமாவே கதைக்களம் இல்லாமல் சூப்பர் ஹிட் ஆவது இல்லை (தலைவர் படம் இந்த கால ட்ரெண்ட் படிதானே வருகிறது).

   எடிட் கூட இந்த ஆண்டு சிரத்தையுடன் டெக்ஸ்இன் கதை களம் தேர்தெடுக்கிறார். அளவான எளிமை, மிக எளிமை இடையே நான் அளவான எளிமையான ஆக்ஷன் (வருடம் 25% to 30%)கதைக்கு ஜே தான்.

   Delete
 33. //நாம் ரசிக்கும் டெக்ஸ் இல் டாப் 10 இல் வரும் கதை அவ்வாறு மிக மிக எளிமையாக மட்டும் இருக்கும் கதைகள் இருப்பதில்லை என்பதே இதன் சான்று///..+1..
  1.பழிவாங்கும் புயல்
  2.கார்சனின் கடந்த காலம்
  3.ட்ராகன் நகரம்
  4.கழுகு வேட்டை
  5.பவள சிலை மர்மம்
  6.இரத்த முத்திரை
  7.எல்லையில் ஒரு யுத்தம்
  8.இருளின் மைந்தர்கள்
  9 சாத்தான் வேட்டை
  10.மரணமுள்
  11.மந்திர மண்டலம்
  12.மரண தூதர்கள்
  13.மெக்சிகோ படலம்
  14.வல்லவர்கள் வீழ்வதில்லை
  15.ஒக்லஹோமா
  ........
  இதெல்லாம் டெக்ஸ் என்ற மாயபிம்பத்தை தாண்டி கதைக்களன்கள் வலுவானதாக இருப்பதாலேயே டாப் லிஸ்ட் ல உள்ளன.
  ரசிகர்கள் மனிதில் நின்று விளையாடும் இவைகள் நிச்சயமாக எளிமையான கதைகள் இல்லை தானே!!!!!....

  ReplyDelete
  Replies
  1. கழுகு மலைக்கோட்டை -நிறைய பேரின் விருப்ப தேர்வாக இருக்க காரணம்,இளவரசியை தாண்டி கதை வலுவாக இருப்பதாலேயே...

   இரத்த படலம்
   இரத்த கோட்டை
   தங்க கல்லறை
   மின்னும் மரணம்
   கேப்டன் பிரின்ஸ் பல கதைகள்
   வெய்ன் செல்டனின் 3பாக முதல் சாகசம்
   ......இப்படி பல கதைகள் மெகா ஹிட் அடிக்க காரணம் நாயகனை விட கதைகள் வலுவாக ஸ்கோர் செய்திருந்ததே.
   லார்கோவின் பெயரை மட்டுமே வைத்து ஒப்பேற்ற பார்த்து சில கதைகள் தேற முடியவில்லை. லார்கோவே என்றாலும்கூட கதை எளிதாக இருந்தால் வரவேற்பும் எளிதாகவே போய் விடுவதில் ரகசியம் ஒன்றுமில்லை....

   Delete
 34. // "எல்லா மறுபதிப்புகளிலும் 5 பிரதிகள் வீதம் + எல்லா டெக்ஸ் வில்லர் இதழ்களிலும் 10 பிரதிகள் வீதம் என்பது தான் கிட்டத்தட்ட எல்லோருமே கொடுத்திருக்கும் ஆர்டர்கள் !!" //

  கார்ட்டூன் வகைக்கதைகள் இதே விதமான வரவேற்பினை இன்னமும் எட்டவில்லையா சார்? அப்படியெனில் நம்மூரில் ஒன்று மிஸ்ஸாகிறது, அது - தனக்காக புத்தகம் வாங்குவோர்கூட தன் குழந்தைகளுக்கானதைத் தேர்ந்தெடுத்து வாங்கித்தரும் பழக்கம். இதுவொரு அனுமானம்தான் ஆனாலும் தவிர்க்க இயலவில்லை :(

  ஆனாலும் டெக்ஸ் வில்லர் கதைகள் கொஞ்சம் உத்திரவாதமான திசையில் சென்றுகொண்டிருப்பது ஆறுதல்!

  ReplyDelete
  Replies
  1. Ramesh Kumar : துரதிர்ஷ்டவசமாய் கார்ட்டூன் இதழ்கள் இன்னமும் அந்த முழுமையான விற்பனை அங்கீகாரத்தை பெறவில்லை - at least புத்தகக் கடைகளிலாவது !

   ஸ்மார்ட் போன்களும், இன்டர்நெட்களும், ஆபீஸின் பணி தொடர்ச்சிகளை வீட்டுக்கு நீட்டிக்கும் பாங்குகளும், நம் வீட்டுக் குட்டிகளுக்கு கதை சொல்லி வளர்க்கும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் காணாது போகச் செய்கிறதோ - என்னவோ ?!

   Delete
 35. சார் கருப்பு வெள்ளையில் மேஜிக் விண்டை ஒரு முறை விட்டுப் பார்க்கலாமே...வண்ணங்கள் அதில் சாதாரணம்தானே . இரு கதைகள் கிடைக்குமே

  ReplyDelete
 36. அப்புறம் அந்த சஸ்பென்ஸ் இதழ் டெக்ஸின் மேக்ஸி பிராங்கோ பெல்ஜிய இதழ்தானே

  ReplyDelete
  Replies
  1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் Nopes!

   Delete
 37. Last week marks query
  1 8/10
  2 6/10
  3 9/10
  4 6/10
  5 4/10
  5 6/10
  6 9/10
  For tex stories

  ReplyDelete
 38. 1. 10/10
  2. 6/10
  3. 8/10
  4. 6/10
  5. 5/10
  6. 10/10
  7. 10/10
  For cartoons

  ReplyDelete
 39. 3. Tiger book - ok
  5. BEST Of this year - Aandu malar
  So so of this year - Doctor Tex

  ReplyDelete
 40. அனைவருக்கும் காலைவணக்கங்கள்..!

  ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு கனவு இருக்கும்,அதுவும் புத்தகபிரியர்களின் மனதில் உள்ள கனவு சுவையானது. அதுவும் காமிக்ஸ் பிரியர்களின் கனவு இன்னும் ஒருபடி மேல்..! இலக்கியமும்,சித்திரக்கதையும் சமமாய் ரசிக்கும் ஒரு வாசகரின் கனவு என்னை ரொம்பவே ரசிவைத்த ஒன்று..!

  அவரின் கனவு தனக்கே தனக்கென்று ஒரு குட்டி லைப்ரரியை உருவாக்குவதுதான்.! அதற்காகவே ஒவ்வொரு புத்தகதிருவிழாவின் போதும் பலரிடம் சேகரித்த பலதுறை புத்தகபட்டியலை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பதிப்பக ஸ்டாலையும் முற்றுகையிட்டு கட்டுகட்டாய் புத்தகங்களை அள்ளுவார்.

  அவரின் கனவுமட்டும் என்னைகவர்ந்ததல்ல...கொஞ்சம்கூட அதிர்ந்து பேசாத மெல்லியகுரலில் பேசும், கோபமேகொள்ள அவரின் சுபாவமும்தான்..! அவரின் சுபாவத்திக்காகவே அவரை நம் நண்பர்கள் வட்டத்தில் ஜென்குரு என அழைப்போம். அவ்வளவு அமைதி..!

  அவரின் சுபாவம் மட்டும் அமைதியானது அல்ல..அவரின் மனமும் கூட.! நினைத்த நேரத்தில்,நினைத்தவுடன் சட்டென்று கணநேரத்தில்..எவ்வளவு கடுமையான சூழல் இருந்தாலும்கூட ஐந்துநிமிடங்கள் கண்முடி தூக்கத்தில் ஆழ்ந்து...மனதை சமன்படுத்திக்கொண்டு விழிப்பது அனைவரையும் ஆச்சரியபடுத்தும் ஒன்று.!

  இந்தமுறை சென்னைபுத்தகவிழாவில் இரண்டு கட்டை பைகள் நிறைய புத்தகங்களுடன் ரூமில் நுழைந்ததும் அதிர்ச்சியாக ஒன்றை செய்தார்...அது...அவரின் சட்டையை எடுத்து ஒரு முறுக்கு முறுக்கினார்..'ஜலஜல' வென சிந்தியவை அவ்வளவும் வேர்வை துளிகள்..! வெளிபட்டது வேர்வை மட்டுமல்ல...அவரின் புத்தகபிரியமும்தான்..!

  அந்த நண்பரின் பெயர் அறிவரசு@மல்லூர் ரவி..! அவரைபற்றி நான் அதிகம் சொல்லிவிட்டதால்...நானே அவரை கொஞ்சமாய் கலாத்தும் விடுகிறேனே...!
  [எல்லாரும் என்னை கலாய்த்து விட்டார்கள்...நீங்க மட்டும்தான் மாயாவி பாக்கி...அது எப்போ..? என்பதற்கு ரவி...விடை இதோ...ஹாஹாஹா..திருப்திதானே..! ]

  பார்க்க...இங்கே'கிளிக்'

  [ கா.தீ.அ.ஆ.கூட்டம் -18 ]

  ReplyDelete
  Replies
  1. மாயாவி ஜி செம,செம.ஹா,ஹா,ஹா.
   எனக்கு ஒரு சந்தேகம், நீங்க நல்லவரா,கெட்டவரா?!
   பின்னணி இசை-டொண்ட,டொண்ட டொய்ங்,டொடொயிங்க்.
   கலக்குங்க.

   Delete
  2. இந்த முறை கண் அசந்ததே எனக்கு தெரியாத நிகழ்வு, அந்த காட்சியை கனகச்சிதமாக கவ்வியது,நம்ம மருத்துவ நண்பர் சுந்தர் அவர்கள் தான்.
   இதை மெருகேற்றியது தங்கள் திறமை,இந்த முறை மாட்டாமல் இருக்க முயற்சிக்கிறேன்.

   Delete
  3. மாயா ஜி மாங்காத்த அஜித் மாதிாி
   மாயா ஜி mind voice:-எவ்ளோ நாள் தான் நானும் நல்லவனவே நடிக்கிறது

   Delete
  4. ///..எவ்வளவு கடுமையான சூழல் இருந்தாலும்கூட ஐந்துநிமிடங்கள் கண்முடி தூக்கத்தில் ஆழ்ந்து.///

   மாயாவியாரே,

   என்ன வார்த்தை சொல்லிட்டிங்க!? தூக்கமா!? உலக சமாதானத்துக்காக அவ்வபோது ஆழ்நிலை தியானத்திற்க்கு சென்றுவிடும் எங்க ஜென்குருவை பார்த்து தூங்கி வழிகிறார்னு சொல்லிட்டீங்களே. . .அய்யகோ. . நெஞ்சு பொறுக்குதிலையே. . .!!!

   ஹோட்டலில் ஆம்லெட்டுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, அது ரெடியாக எடுத்துக்கொள்ளும் ஐந்து நிமிடங்களில் ஒரு "தியானத்தை " முடித்துவிடுவாரே!?!

   அவ்வளவு ஏன்?
   இன்டர்வியூக்கு போயிருந்த போது கூட ஒரு கேள்விக்கும் அடுத்த கேள்விக்கும் இடையில் அந்த அதிகாரி தண்ணீர் குடிக்க எடுத்துக்கொண்ட அரைநிமிட அவகாசத்திலேயே ஆழ்நிலை "தியானத்திற்கு" சென்று சாதனை புரிந்த அறிவரசு ரவி (எ) எங்க ஜென்குருவை தூங்கி வழிகிறார் என்று ஒற்றை வார்த்தையில் நீங்கள் அவமதித்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

   இவண் :-

   அறிவரசானந்தா சீடர் குழாம், சேலம் கிளை...!!!

   Delete
  5. அற்வரசு ரவி சார்.@

   ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..........
   இனிமேல் எல்லோரும் அலார்ட் ஆறுமுகம் போல் உஷார இருக்கவேண்டும் ஜி.!

   Delete
  6. "ஜென்குரு"....அட...பேர் நல்லா இருக்குதே !

   Delete
 41. நண்பா்களே,
  பீளிஸ் யாரவது எனக்கு சாந்த z பணம் அனுப்பமுடியுமா நான் பிறகு உங்களூக்கு தந்து விடுகிறேன்விடுகிறேன்(??!!)

  ReplyDelete
  Replies
  1. தம்பி இன்னும் இஸட் சந்தாவே அறிவிக்கவே இல்லையே.!

   என்னிடம் (பழைய )டபுள்ஸ் புத்தகங்கள் கொஞ்சம் உண்டு. ஏதாவது ஐந்து தருகிறேன்.!(அதற்காக டிராகன் நகரம் ,கோடை மலர்கள் கேட்டுவிடாதீர்கள்.!)

   Delete
  2. சாாி சகோ அதான் super six (absolute classic)

   Delete
 42. Dear Edi,

  No wonder Tex is the Magic Word all these years for our Comics. I used to feel they were a overdose back then, but the selective story publishing these recent years are making for a good read. Thanks for your Editor role in that.

  I only wish that serious Tex fans, also venture out to other comics series to broaden their comics interest. What's fun, if you don't enjoy the variety on offer?? :o)

  All Power to our Comics Love.

  ReplyDelete
  Replies
  1. Rafiq Raja : //What's fun, if you don't enjoy the variety on offer?? :o)//

   நிஜமே.....!! சில நேரங்களில் நம்மவர்கள் பழகிப் போன அந்த comfort zone -ஐ விட்டு வெளிவர ரொம்பவே தயங்குகிறார்கள் ! ஆனால் ஆளும் பேருமாய்ச் சேர்ந்து, கயிறு கட்டியாவது அந்த வட்டத்துக்கு வெளியேவும் கால்பதித்துப் பார்க்க இழுத்து விடமாட்டோமா - என்ன ?

   Delete
  2. //ஆனால் ஆளும் பேருமாய்ச் சேர்ந்து, கயிறு கட்டியாவது அந்த வட்டத்துக்கு வெளியேவும் கால்பதித்துப் பார்க்க இழுத்து விடமாட்டோமா - என்ன ?//

   அவ்வப்போது ஏற்படும் அந்த நம்பிக்கை.. அப்புறம் புஸ்க்கென்று போய்விடுகிறதே சார்...?

   Delete
 43. 89வது நபர் பதிவை படித்துவிட்டு வருகிறேன்

  ReplyDelete
 44. மர்ம மனிதன் மார்ட்டின் ,நாய் சேகர் (அதாங்க டைலன் டாக் ) மேஜிக் விண்ட் ஆகிய மூன்று கப்ஸா அமானுஸ்ய கதையாக இருந்தாலும் ,மேஜிக் வின்ட் ஏதோ ஒரு சுவராசியம் உள்ளது.கதையுடன் ஏதாவது வசிய மை வைத்து வெளியிடுகிறார்களோ ? என்ற சந்தேகம்.மர்ம மனிதன் கதைகள் கூட ஒன்றிரண்டு கதைகள் நன்றாக இருந்தது.ஆனால் நாய் சேகர் கதைதான் பிடிக்கவில்லை.!

  ReplyDelete
 45. "தல" க்கு ஒரு ஜெ! போடுங்க.....
  Super six (apsolute classic) க்கு நான் புக் பண்ணிட்டேன்.... தல கதயில என் போட்டோ வருமே.... ஐ....!!!!!
  எப்பசார் புக் வரும்.....

  ReplyDelete
  Replies
  1. yazhisai selva : 'தல' மறுபதிப்பு எந்தக் கதையினை என்பதை முதலில் தீர்மானம் செய்தாக வேண்டுமே ?

   Delete
  2. /// 'தல' மறுபதிப்பு எந்தக் கதையினை என்பதை முதலில் தீர்மானம் செய்தாக வேண்டுமே ?///

   ட்ராகன் நகரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லையா சார்.!

   ட்ராகன் நகரம் இல்லையெனில் மரணமுள், சைத்தான் சாம்ராஜ்யம் இவற்றுள் ஒன்றை முயற்சிக்கலாம் சார்.
   மரணமுள் அருமையான கதை + அட்டகாச சித்திரங்கள் .(கலரில் கண்ணைப் பறிக்குமே)

   சைத்தான் சாம்ராஜ்யம் ஹிஹிஹி கதைதான் ஆனாலும் சித்திரங்கள் பட்டாசாய் இருக்கும். ஏரியில் இருந்து ட்ராகன் திடுமென எழும் காட்சியெல்லாம் கலரில் பட்டையை கிளப்புமே. (அது ட்ராகனா இல்லை பாம்பா? இல்லை பெரிய சைஸ் ஓணானா என்று இன்றுவரை கண்டறிய முடியவில்லை :):-)

   Delete
  3. //yazhisai selva : 'தல' மறுபதிப்பு எந்தக் கதையினை என்பதை முதலில் தீர்மானம் செய்தாக வேண்டுமே ?// சார் ஆரம்ப கதைகளில் ஒன்றை தெரிவு செய்யுங்கள்...ப்ளீஸ்... 90களுக்கு முன்னே போவோமே????

   Delete
  4. மரண முள் வண்ணத்தில் அருமையாக இருக்கும்,எனது ஓட்டு அதற்கே.

   Delete
 46. tex willer இன் கதைகள் அலுப்பு தட்டுவதில்லை . ஆனால் கதைகள் வித்யாசமாக இருக்க வேண்டும்."தல " இன் கதைகளில் அமானுஷ்யம் சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் வந்து நெடு நாட்களாகிவிட்டன . விஜயன் ஸார் , TEX இன் மந்திர , தந்திர சைத்தான் சாம்ராஜ்யம் , அல்லது மந்திர மண்டலம் போன்ற கதை ஒன்றை முயற்சிக்கலாம் சார்.

  ReplyDelete
 47. மர்ம மனிதன் மார்ட்டின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. டயலொன் dog ஐ பொறுத்தவரை அவரொரு ஆக்ஷன் ஹீரோ வாகவோ , அல்லது டிடெக்ட்டிவ் ஆகவோ பார்க்காமல் சராசரியான நம்மை போன்ற ஒரு character hero வாகவே (neo -noir ) படைப்பாளிகள் படைத்துள்ளனர். எனவே dylon ஐ குறை போட்டுக்கொள்ள தேவை இல்லை . இந்த நியூ trend neo -noir வகை ஹீரோ க்களையே தற்போது italy மட்டுமல்லாது பல western நாடுகளிலும் இன்றைய தலைமுறையினர் விரும்புகிறார்கள் .

  Magic wind ஐ பொறுத்த மட்டில் இன்னும் நாம் கதைகளை படிக்கவே ஆரம்பிக்கவில்லை என்று சொல்லலாம் . மேலோட்டமான 3 கதை காலை மட்டுமே படித்து உள்ளோம். செவ்விந்திய கலாச்சார விழுமியங்களை மாஜிக் wind ஐ போல வேறு எந்த கதை தொடரிலும் வெளிக்கொண்டுவரவில்லை .

  ReplyDelete
  Replies
  1. leom : //செவ்விந்திய கலாச்சார விழுமியங்களை மாஜிக் wind ஐ போல வேறு எந்த கதை தொடரிலும் வெளிக்கொண்டுவரவில்லை//


   Very true...

   Delete
 48. dylon dog , மற்றும் மாஜிக் wind கதை களை அதற்கான mood மற்றும் mind set உடன் படித்தால் நிச்சயம் ரசிக்க கூடிய கதைகளே .

  ReplyDelete
 49. //படிக்கும் உங்களை பரமபிதா காப்பாற்றுவாராக //


  எடிட்டர் சார், என்ன இப்படி பொசுக்கென்று இப்படி சொல்லிட்டீங்க ?

  ஞாயிற்றுக்கிழமை காலையில் உங்கள் பதிவை நினைத்து எழந்து சந்தோசமாக வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க உங்கள் பதிவை படிப்பதே ஒரு ஆனந்தம் .!!!

  ReplyDelete
  Replies
  1. Madipakkam Venkateswaran : MV சார்...படிப்பதும், ரசிப்பதும் உங்கள் பெருந்தன்மை ! ஆனால் ஒவ்வொருமுறை பேனாவைக் கையில் பிடிக்கும் போதும், என் வயிற்றிலும் பட்டாம் பூச்சி நடனம் போடுவதும் நிஜமே !

   Delete
 50. கேடியும் ஒரு கோடியும் - நிறைய அறிவாளிகள் தவறான பாதையில் செல்கிறார்கள், அவரால் தனது திறமையை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும், என்பதை இந்த காமெடி கதையை படித்து முடித்தவுடன் தோன்றியது.

  முதல் பக்கத்தில் இருந்து நகைசுவையுடன் ஆரம்பித்தது, கடைசி பக்கம் வரைக்கும் புன்னகையை முகத்தில் சுமந்து கொள்ள செய்தது. இதில் வில்லன் கிரேஸ் கதையின் முதல் பக்கத்தில் இருந்து நமது கதை நாயகர்களுடன் பயணித்தாலும் இறுதி பக்கம்களை நெருங்கும் போதுதான் அந்த முகமூடி வில்லன் இவனாக இருக்குமோ என தோன்றியது இந்த கதையின் சிறப்பு. கிரேஸ் தனது ஒரு வேளை உணவை பெறுவதற்காக கிட் மற்றும் ஷெரிப் உடன் செய்யும் குண்டகமண்டக காமெடிகள் விழுந்து விழுந்து சிரிக்க செய்தன; அதுவும் இவன் வேலை செய்யும் இடத்திலேயே ஷெரிப் இவனுக்கு சாப்பாடு வாங்கித்தரும் sequence மிகவும் ரசித்த இடம்கள்.

  ஓவ்வொரு முறையும் கிரேஸ் பெண்டுலம் முலம் நாணயம்களை சரியாக கண்டு பிடிக்கும் போது அந்த பெண்டுல ரகசியம், என்னை மிகவும் யோசனை செய்யவைத்தது. கடைசியில் அதன் ரகசியத்தை போட்டு உடைக்கும் போது, அட போடவைத்தது நமது கிரேஸ்ஸின் மேதாவிதனம்.

  இந்த கதையில் உண்மையான நாயகன் என்றால் கிரேஸ்தான்!! ஓவ்வொரு பக்கத்தையும் ரசித்து படித்தேன்.

  நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த உட்-சிட்டி நாயகர்களின் உண்மையான காமெடி தோரணம்.

  ReplyDelete
  Replies
  1. பரணி அருமை ...அந்த வில்லன் அப்பாவித் தனமாக மூஞ்ச வச்சிகிட்டு ஜாம் நல்லா இருக்குதா.......பசிக்கும் போது பிறர் சாப்டறத பாக்கும் போது ...என பேசி கவிழ்க்கும் அந்த காட்சிகள் ...வசனங்கள் நகைச்சுவை மட்டுமின்றி பல ுணர்வுகளை கொட்டும்....ஆசிரியர் ரசித்து மட்டுமின்றி வெகு ஈடுபாட்டோடு செய்திருக்கிறார் ...ஒவ்வொரு உரையாடலும் கிளாஸ்...எனக்கு முகமூடியுடன் வரும் நபரின் அசைவுகளிலேயே வில்லன் இவன்தானென யூகித்து விட்டேன் .அனைத்துக்கும் +1

   Delete
  2. ஆனா உட்சிடி அனைத்து கதைகளும் இரண்டு வருடமாய் கலக்கல் என்னை பொருத்து

   Delete
 51. ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ..(ம் ..டெக்ஸ் எதிர்பாளர்கள் ஆயிரம் கரங்களுக்கு எங்கே போவார்கள் ..)...

  அறுபது கரங்கள் மறைத்தாலும் டெக்ஸ் புகழ் மறைவதில்லை ....


  என்பது தங்களின் இரு சம்பவ பதிவுகளுமே உணர்த்துகிறது சார் ..

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : தலீவரே....'சிவனே' என்றிருப்போரை அவ்விதமே இருக்க விடுவோமே ?

   Delete
  2. ஆசிரியர் சார் @ விசயம் இருக்கு,இன்னும் மேலேயுள்ள கமெண்ட்ஸ் படிக்கும்போது உங்களுக்கு தெரியவரும் அது...

   Delete
  3. இங்கே என்ன சத்தம்??(

   Delete
 52. பஸ்ஸோ,ரயிலோ,விமானமோ நான்செல்லும் பயணத்தில் 2,3 டெக்ஸ் புக்கை எடுத்து கொள்வேன் உட்காரஇடம் கிடைத்து விட்டால் 1 புக்கை வாசித்துக் கொண்டே செல்வேன் யார் நம்மை பரிகாசமாக பார்த்தாலும் அதைபற்றி எல்லாம் கவலைபடாமல் காம்க்ஸ் உலகத்தில் கலந்துவிடுவேன்.அது ஒரு உலகம் அதைபற்றி தெரியாதவர்களை பற்றி நாம் ஏன் கலவைப்பட வேண்டும்.
  ஒவ்வொரு நாளும் மனைவியுடன் பேச துடித்துகொண்டு இருப்பது எவ்வளவு நிஜமோ அதுப்போல் ஞாயிறுக்கும் ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்.உங்களின் எழுத்தின் ஜாலத்திற்கு.இந்த எழுத்துகளை படிக்கவிடாமல் செய்தால் அதுவே பரமபிதா எனக்கு அளிக்கும் தண்டனை (அடிமனதின் எழுத்துக்கள் புகழ்ச்சிவார்த்தைகள் அல்ல)
  ஈரோட்டில் இத்தாலி:இந்த வருட டெக்ஸ் 100 பக்க 5 சாகஸத்தில்இக்கதையை கலரில் தேர்ந்தெடுத்தப்போதே அதிலே உள்ள வீரீயம் தெரிகிறது. டெக்ஸின் துப்பாக்கியில் தோட்டா தீர்ந்து போகதா என்று கேட்டவர்களுககு பதில் சொல்வதுபோல் இந்த teasure அமைந்துள்ளது. மேலே உள்ள படத்தில் இறந்துகிடப்பவர் லெப்டி.ப்யுடான்வி போல் உள்ளது அப்படியென்றால் அவரது சாவுக்கு நியாயம் தேடும் கதைபோல் தெரிகிறது டெக்ஸின் மகுடத்தில் ஒரு வைரக்கல் பதியபோகிறது.
  நல்ல கலரில் வரப்போகும் ராபினை,டிடெக்டிவ் பாணியில் களம் காணும் டைலன்டாக்கை வரவேற்கிறேன்.(இத்தாலியில் பெரியஅளவில் டெக்ஸ் க்கு ரசிகர்மன்றம் ஏன் இல்லை என்றகேள்வி ஒவ்வொரு டெக்ஸ் இதழையும் பார்க்கும்போதும் எழுவதை தவிர்க்க முடியவில்லையே ஏன்?(பதில் யார் அறிவாரோ?)
  மேஜிக்விண்ட்: எதுமாதிரியும். இல்லாத fantasy கலந்த
  கெளபாயை தந்த ஆசிரியருக்கு நன்றி.
  விமானநிலையத்தில் ஒரு பெரிய பதவியில் உள்ளவர் டெக்ஸ் என்ற பெயரில் கட்டுண்டு இருக்கிறார் என்றால். நாங்கள் எம்மாத்திரம்.
  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு உண்மை தான். இது உணவு விசயத்தில் வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் புத்தக வாசிப்பல் அது சாத்தியமா சொல்லுங்கள்?
  தானத்தில் சிறந்தது அன்னதானம் காரணம் தானம் பெறுபவர்கள் போதும் என்று சொல்வதால் கொடுப்பவர்கள் மனம் நிம்மதி அடைகிறது. நீங்கள். இடுவது அன்னமல்ல அறிவு அதை போதும் என்று நாங்கள் சொல்ல போவதில்லை. ஆதலால். நீங்கள் கொடுத்து கொண்டே இருங்கள்.
  இந்த வருடம் டெக்ஸில் ஒரு குறை என்னவென்றால் கடந்த ஆண்டுகளில் 2,3 டெக்ஸ் கதைகளை சேர்த்து குண்டு புக் தந்தீர்கள். இந்த வருடம் டெக்ஸ் சந்தா வந்ததால் அப்படியொரு வாய்ப்பை இழந்துவிட்டோம். இனிவரும் ஆண்டுகளில் டெக்ஸ் சந்தவோடு டெக்ஸ் special குண்டு புக் வரவேண்டும் ஆவணம். செய்வீர்களா? Please

  ReplyDelete
  Replies
  1. ஆசைகள் கட்டுக்குள் இருப்பது நல்லது.அந்த 2 மூன்றை காட்டிலும் 12 க்கும் மேலாக எடிட்டர் தந்து கொண்டிருக்கிறார்.   Delete
  2. தவறாக புரிந்துகொண்டிருப்பீர்கள் நண்பரே நான் சொல்லவந்தது டெக்ஸ் சந்தா தனிவழி அதுயில்லாமல் தனியே டெக்ஸ் special குண்டு புக் அம்புடுதேன் ஏம்பா நான் சரியாக சொல்றேன்(சங்கிலிமுருகன் வாய்ஸில்)

   Delete
  3. இருக்கே நண்பரே...தீபாவளிக்கு டெக்ஸ் ஸ்பெசல் ,குண்ண்ண்ட்ட்ட்டா ஒண்ணு இருக்கே...

   Delete
  4. சரன்செல்வி(எழுத்துக்கள் சரியா)
   நம்மை காட்டிலும் நமது எடிட்டர் நமது ஆசைகள் சகலவற்றையும் அறிவார்,ஏன் நமது எண்ணஒட்டங்களையும் கூட.
   நமது விருப்பங்கள் எதையும் விட்டு வைத்ததே இல்லை.

   Delete
  5. நன்றி அதுதெரிந்ததுதானே சும்மா ஞாபகம் படுத்தினேன் அவ்வளவே

   Delete
  6. Saran Selvi : நண்பரே... பெரிய வார்த்தைகள் ஏகமாய் இழையோடும் பின்னூட்டம் - நன்றிகள் என்பதைத் தாண்டி என்ன சொல்வதென்று தெரியவில்லை !

   வித்தியாசமானதொரு ரசனையை ; ரசனையானதொரு நண்பர் வட்டத்துக்குக் கொண்டு வருவதை பணியாக அமையப் பெற்றவன் நான்....அந்த வரத்திற்கு என்றைக்கும் கடமைப்பட்டிருப்பேன் !

   Delete
 53. 89வது நபர் பதிவை படித்துவிட்டு வருகிறேன்

  ReplyDelete
 54. Dear Editor,

  மறுபதிப்புக்களும் டெக்ஸ் கதைகளும் அதிகம் விற்பனை காணுவதில் ஆச்சர்யம் இல்லை தான்.

  ஒரு மூன்று-நான்கு வருடங்களுக்கு முன்பு cinebook அறிமுகம் ஆகியபோது மனம் போன போக்கில் franco-belgian ஆங்கில பாதிப்புக்களை வாங்கி குவித்த நான் இப்போது விரும்பி வாங்குவது - thorgal, XIII, lucky luke, bluecoats மட்டுமே - எப்போதாவது blake & mortimer .. இந்த வருடம் சில lady s .. அவ்வளவே .. இதில் இனித் தொடரப்போவது thorgal, லக்கி லூக் மட்டுமே ... லார்கோ உட்பட புதிய franco - belgian தொடர்கள் சில கதைகளுக்கு பிறகு they miss their hallmark definitely- lose their fizz ! Simply put, franco-belgian கதைகளில் முன்பு 2-3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட்ட போது இருந்த சுவாரஸ்யம் இப்போ மாசம் ஒண்ணு வரும்போது .. நஹி !

  கார்ட்டூன் சாந்தாவின் பெரும் குறை 3 சிக் பில், 3 SMURFS - நிஜமாக திகட்டுகிறது. Lack of variety is telling !

  தொடரும் 2017ல் :

  மறுபதிப்பு - 12
  action - 6
  cartoon - 6
  tex - 6
  rest of italian - 6
  Special குண்டு - 4 (every Quarter begins with a குண்டு புக் - except q3 at Erode in August)

  இந்த அளவோடு இருந்தால் எல்லா genreகளிலும் variety காட்டுவது சுலபம். இரு கதைகளுக்கு மேல் எந்த நாயகருக்கு ஒரே வருடத்தில் வாய்ப்பில்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் சலிக்காமல் இருக்கும் (except Tex).

  ReplyDelete
  Replies
  1. Raghavan SMURFS தவிர்த்து - பாக்கி நாயகர்கள் யாருக்குமே இரண்டுக்கு அதிகமான ஸ்லாட்ஸ் ஒதுக்கவில்லை (of course டெக்ஸ் நீங்கலாய்) ! சிக் பில் மறுபதிப்பு தற்செயலாய் நேர்ந்த சமாச்சாரம் !

   SMURFS -ஐப் பொறுத்த வரை ஒரு மினிமம் வெளியீட்டு எண்ணிக்கை உறுதியினை அவர்கள் கோருவதால் வேறு வழி இருக்கவில்லை எனக்கு ! Anyways 2017-ல் நிச்சயமாய் SMURF ஓவர்டோஸ் இராது !

   Delete
 55. நாம் அதிகமாக டெக்ஸ் புராணம் பாடுவதாக தெரிகிறது. சூரியனின் ஒளியை நாம் சொல்லி தான் உலகிற்கு தெரியவேண்டும் என்றா எண்ணுகிறீர்கள். அந்த நிலையை சூரியன் அடைந்து விட்டதா என்ன.
  நாம் அனைத்து இதழ்களை பற்றி பேசுவதும் நமது கடமையாகும்.

  ReplyDelete
 56. ஈரோட்டில் எனக்கு ஓர் இருக்கை ஒதுக்குங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா , உள்துறை அமைச்சர் விசா வழங்கிவிட்டார் போலும்.!

   Delete
  2. எழுதியாச்சு, போன மாசமே உங்கள் பேரை எழுதியாச்சு...

   Delete
  3. நன்றி சேலம் டெக்ஸ்.அங்கு MV சாரும் உண்டல்லவா...

   Delete
  4. MV sir வருவாரு...லட்டும் வருதாம்...

   Delete
  5. எங்களுக்கும் ஒரு அஞ்சாறு சீட் போட்டு வைங்கஜி...!

   Delete
  6. அப்படியே எனக்கும் ஒரு சீட் ஜேடர்பாளையத்தார் பக்கத்துல..ஹி..ஹி..!

   Delete
  7. பறந்து பறந்து போட்டோ எடுக்க போகும் உங்களுக்கு சீட்டு எதற்கு சார்...

   Delete
  8. M.v.சார் பக்கத்தில் எனக்கு ஒரு சீட்

   Delete
  9. M.V சார் லட்டு பார்சல் பக்கத்தில் எனக்கு ஒரு சீட்...

   Delete
  10. எங்களுக்கும் ஒரு அஞ்சாறு சீட் போட்டு வைங்கஜி...!

   Delete
 57. ஸ்மர்ஃப்ஸ் Hit ஆ என்று தெரியவில்லை.3 Slot ஒதுக்கீடு அதிகம் தான். நான் வாங்கி படிக்காமல் அருகில் உள்ள அரசு பள்ளி சிறார்களுக்கு கொடுத்து விட்டேன், அந்த பள்ளியின் தலமையாசிரியர் கேட்டு கொண்டதால்.
  ஸ்மர்ஃப்ஸ் உடன் சென்றவர்கள்,
  மினி 6 இதழ்கள், சிக்பில் கதைகள்,ரோஜர் மூர் கதைகள், லியனார்டோ,மதியில்லா மந்திரி மற்றும் சில டெக்ஸ் புத்தகங்கள்.
  Head master இடம் எது Hit அடித்தது என்று கேட்டால், ம் வேறு என்ன
  "கும்மாகுத்து" என்கிறார்.
  உங்களுக்கு புரிகிறதா...

  ReplyDelete
 58. டெக்ஸ் கதைகளுக்கு மதிப்பிடுவது என்பது எனக்கு சிரமமான காரியமாய் தெரிகிறது. டெக்ஸ் கதையை 10 ரூ விலையில் சில பாகங்களாக மாத இடைவெளி விட்டு வெளியிட்ட சூழலில், அன்று அதன் தொடரை படிக்க காத்திருக்க பொறுமை இல்லை,இன்று சுட சுட.
  அன்றைய நாட்களில் தடித்த இதழ்களாக வந்த கால கட்டத்தில், அது ஏற்படுத்திய உணர்வலைகள் இன்றும் மறக்க முடியாதவை.

  ReplyDelete
 59. சேலம் டெக்ஸ்,முத்து காமிக்ஸ் பற்றிய E mail மீண்டும் அனுப்ப முடியுமா.
  CC Comics பதிப்பில் வந்த புத்தகங்கள் பற்றி விவரம் தயாரித்து இருக்கிறீர்களா.சன்ஷைன் லைப்ரரி
  இதழ்களையும் இதோடு சொல்ல முடியுமா.

  ReplyDelete
  Replies
  1. அனைத்தும் அனுப்பி விட்டேன் சார்...

   Delete
 60. சேலம் டெக்ஸ், MV சார்,
  மாடஸ்டியின்"கழுகு மலை கோட்டை"
  32 மற்றும் 162 வது இதழ்களாக வந்திருக்கிறது.ஆனால் அதன் கதையை சில வரிகளில் சொல்ல முடியுமா.ட்விஸ்ட் இருந்தால் அதை Lock செய்யவும்.

  ReplyDelete
 61. "கில்டேர்" மற்றும் "ஜான்சில்வர்" பற்றி எந்த குறிப்பும் எனது நினைவலைகளில் சிக்கமாட்டேன் என்கிறது. மாயாவி சார் இவர்களை பற்றி போஸ்டர் வெளியிட முடியுமா."க்ளிக்" மூலமாக...

  ReplyDelete
  Replies
  1. @ AGS நாயகம்

   நீங்கள் கேட்ட 'ஜான்சில்வர்' பற்றி சின்ன அறிமுகம்+அவரின் புத்தகங்கள் பட்டியல் பார்க்க..இங்கே'கிளிக்'

   Delete
 62. பிரின்ஸ் சிறுகதை தொகுப்பு: பிரின்ஸ் கடந்த காலம், பொடியன் பிரின்ஸ் உடன் சேர்ந்தது எப்படி என்று இந்த கதைகள் முலம் தெரிந்து கொண்டேன். ஓவ்வொரு கதையும் ஒருவிதத்தில் சிறப்பு, சிறு கதைகளாக இருந்தாலும் சுவாரசியமாக இருந்தது.

  ஆரம்ப கால பிரின்ஸ் கதைகளை/கதாபாதிரம்களை இந்த தொகுப்பின் முலம் தரிசிக்க செய்த உங்களுக்கு நன்றி.

  குறை:
  அப்படியே பார்னே எப்படி பிரின்ஸ் குழுவில் இணைந்ததார் என்பதை சொல்லும் கதை ஏதும் இருந்தால் இதில் இணைத்து இருந்து இருக்கலாம் சாரே :-)

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : //குறை:
   அப்படியே பார்னே எப்படி பிரின்ஸ் குழுவில் இணைந்ததார் என்பதை சொல்லும் கதை ஏதும் இருந்தால் இதில் இணைத்து இருந்து இருக்கலாம்//

   சட்டியில் இருந்தாகணுமே....பரிமாற அகப்பையை எட்டிட ?

   Delete
  2. //அப்படியே பார்னே எப்படி பிரின்ஸ் குழுவில் இணைந்ததார்//


   இதற்கான விடை சைத்தான் ஜெனரல் General Satan ( 1969 ). லில் இருப்பதாய் google கூறுகிறது புத்தகம் உள்ளவர்கள் உறுதி படுத்தமுடியுமா ?

   Delete
 63. குற்றம் பார்க்கின்: வழகமான டெக்ஸ் கதை என்று சொல்ல முடியாது, ஒரு குற்றவாளி பக்கம் நியாயம் இருப்பதை புரிந்து கொண்டு அவனக்கு ஒரு நல்ல வாழ்கை கிடைக்க டெக்ஸ் தனியாக போராடும் கதை. சொல்ல போனால் ஒரு அக்-மார்க் தமிழ் படதிற்கு என்ன தேவையோ அது எல்லாம் உள்ள ஒரு கதை.

  தனியாக இந்த கதையில் இவர் திரிவதால் எனவோ கதை ஆங்காங்கே போரடித்தது!

  ReplyDelete
 64. கார்ட்டூன் சந்தாவில் டெக்ஸ் size color பிரிண்ட் (வருடத்திற்கு ஒன்று, இரண்டு ஆவது) சாத்தியமா எடிட் சிறிய size கார்ட்டூன் சிறிய விலை நிச்சயம் கார்ட்டூன் கதைகளின் விற்பனை, சுவர்யசத்தை கூட்டும். இபோது வரும் மேஜிக் விண்ட் size டெக்ஸ் புத்தகங்களை வீட்டில் பலரும் படிக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Satishkumar S : விலை குறைவெனில் - விற்பனை கூடுமென்ற மாயைக்குள் திரும்பவும் சிக்கிட வேண்டாமே ? கதைகளின் தரம் & நாயகர்களின் வலிமையோ, வலிமையின்மையோ மாத்திரமே விற்பனையை இன்றைக்கு நிர்ணயம் செய்கின்றன என்பதை கடந்த 4.5 ஆண்டு அனுபவத்தில் சொல்ல முடிகிறது.

   சின்ன சைஸ் ; சின்னப் படங்கள் ; சின்ன எழுத்துக்கள் என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டு ஆரம்ப நாட்களில் செய்த அதே தவறை மறுபடியும் செய்திட வேண்டாமே !. ஒரு மினிமம் தரம் ; அதனில் காம்ப்ரமைஸ் வேண்டாம் என்பதில் உறுதியாய் உள்ளேன்..!

   Delete
  2. விலைஐ பொறுத்தமட்டில் correct பாதை தான், இப்போதய size நல்லது தான் எடிட், ஆனால் குழந்தைகள் genre இல் இப்போது அந்த size புத்தகமே இல்லையே. (வருடத்திற்கு)ஒரு வெரைட்டி size நல்லது தானே.

   Delete
 65. “பூமிக்குள் ஒரு பிரளயம்” - எனது அபிமான ஹீரோ கதையை வாசிக்க ஆர்வமுடன் காத்துகொண்டு இருக்கிறேன்!!

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : நிச்சயமாய் ஏமாற்றம் இராது !

   Delete
 66. அன்று என்னை கவர்ந்த நாயகர்கள்,
  இரும்பு கை மாயாவி
  கேப்டன் பிரின்ஸ்
  ரிப்போர்ட்டர் ஜானி
  இன்று
  டெக்ஸ் வில்லர்
  கேப்டன் டைகர்
  நாளை
  டெக்ஸ் வில்லர்

  ReplyDelete
 67. அடுத்த மாதம் வறவுல்ல டைலன் டாக்கின் கதை பெயா்
  Gli uccisori
  Magic wind original name
  THE BEAST

  ReplyDelete
 68. இனிய இரவு வணக்கம் எடிட்டர் சார்!!!
  இனிய இரவு வணக்கம் நண்பர்களே!!!

  ReplyDelete
 69. பெர்னார்ட் பிரின்ஸின் ஆறு சிறுகதைகளும் நன்றாக இருந்தன.
  விளையாட்டு வினையானது கலரில் அட்டகாசமாக இருக்கிறது. (ஏற்கனவே படித்த ஞாபகம் இருக்கு க / வெ யில்)
  ஜின்னை பிரின்ஸ் தத்தெடுக்கும் கதையில் பெரிதாக விறுவிறுப்பு இல்லாவிட்டாலும் ஒருவித ஈர்ப்பு இருக்கவே செய்தது.
  பார்னேவின் சோலோ சாகசமும் அட்டகாசம். குடும்பத்தோடு குளிக்கப்போன இடத்தில் ஒருவருக்கு உதவப்போய் பிரின்ஸ் வம்பில் மாட்டிக்கொள்ளும் கதையும் அருமை. அதில் அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு பிரின்ஸின் வேலையை எளிதாக்கியதை ரசிக்க முடிந்தது.

  ஆண்டு மலருக்கு நியாயம் செய்யும் விதத்தில் ஓரளவிற்கே பெர்னார்ட் ப்ரின்ஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.
  வேறு தருணத்தில் வந்திருந்தால் இப்படி தோன்றியிருக்க வாய்ப்பில்லைதான்.
  ஆனால் ஆண்டு மலர் என்று வரும்போது நம்மையறியாமலேயே நம் மனது பெரிதாய் எதிர்பார்த்துவிடுகிறது போலும். :-)

  ReplyDelete
  Replies
  1. KiD ஆர்டின் KannaN : கேப்டன் ப்ரின்ஸின் எஞ்சியிருக்கும் ஒரே (ஓரளவுக்குப்) புது ஆல்பம் இது மாத்திரமே என்பதால் தான் இதனை ஆண்டுமலரில் இணைக்கத் திட்டமிட்டேன். இந்தச் சிறுகதைகளை filler pages -ஆக வேறு இதழ்களுள் நுழைக்க அனுமதி கிடையாதெனும் போது - இந்தத் தொகுப்பைத் தனி இதழாய் வெளியிடுவது ரொம்பவே ரிஸ்க் என்று பட்டது !

   இது தவிர்த்து இன்னுமொரு புது முழு நீளக் கதை இந்தத் தொடரில் உள்ளது ;ஆனால் அந்த ஒற்றை ஆல்பத்தின் உரிமைகள் மாத்திரம் இடியாப்பச் சிக்கலில் புதைந்து கிடக்கிறது - வேறொரு பெல்ஜிய பதிப்பகத்திடம் !

   Delete
  2. ஆசிரியர் சார் @ திங்கள் காலையில் ,சுடச்சுட பதில்களுடன் தளத்தில் ,திடீர் சஸ்பென்ஸ் ...
   வாவ்...

   Delete
  3. நம்மிடம் உள்ள 16பிரின்ஸ் கதைகளையும் வண்ண மறுபதிப்புல போட்டி விட்டு மொத்தமாக ,அந்த ஒற்றை கதை உள்ள பதிப்பகத்தாரிடம் காண்பித்தால் அதன் உரிமையை தந்து விட மாட்டார்கள் சார் ????

   Delete
  4. சேலம் Tex விஜயராகவன் : அந்த நிறுவனம் கடையை ஆரம்பித்த சூட்டிலேயே மூடியும் விட்டனர் என்பதால் அந்த ஒற்றைக் கதையின் உரிமைகளின் பொருட்டு நிறைய legal formalities அவசியமாகிடும் சார் ! ஒரேயொரு கதைக்காக அந்த மெனக்கெடலில் பொருளிராது !

   Delete
  5. 'பிளாங்கோ' என்ற புதிய பதிப்பகம் வெளியிட்ட 'La Dynamitera' என்ற கதையின் Rapper

   இதற்கு முன் க்ரேக் கதாசிரியருடன் இணைந்து பணியாற்றிய ஓவியர் ஹெர்மன் இதில் விலகிக் கொண்டுவிட, புது ஓவியர் EDOUARD AIDANS அதே பாணியில் அசத்தியுள்ளார்.

   Delete
  6. MH Mohideen,
   "La Dynamitera"
   இது என்ன? ஒரு வேளை எனக்கு சேலம் டெக்ஸ் தான் விளக்கம் தருவாரோ.

   Delete
  7. பெர்னாட் பிரின்ஸ் கதைகள் இதுவரை 18ஆல்பங்கள் வெளிவந்துள்ளன...
   அதில் 15மற்றும் 16தவிர ஏனைய 16ஆல்பங்களும் ஏற்கனவே திகில் ,லயன் காமிக்ஸ் களில் வெளிவந்துவிட்டன...
   ஆல்பம் 15சிறுகதைகள் தொகுப்பு ,அதுதான் இம்மாதம் வெளிவந்த ஆண்டுமலர் பிரின்ஸ் கதைகள்..
   எஞ்சிய ஒரே கதை நண்பர் மொகய்தீன் போட்டுள்ள அட்டைப்படத்தில் உள்ளது ,அதன் ஆங்கில பெயர்....

   "Miss Dynamite"- , Greg/Aidans--இந்த பதிப்பகம் தான் தொடங்கிய நிலையில் மூடப்பட்டது, அதை வெளியிட வாய்ப்பில்லை என ஆசிரியர் சார் காலைலியே விளக்கம் அளித்து விட்டார்...சோ,பிரின்ஸ் 17தமிழில்..இவற்றுள் மறுபதிப்பாக வராத கதைகள் படிக்க நானும் ஆவலுடன் உள்ளேன்...

   Delete
  8. பெர்னாட் பிரின்ஸ் கதைகள் இதுவரை 18ஆல்பங்கள் வெளிவந்துள்ளன...
   அதில் 15மற்றும் 16தவிர ஏனைய 16ஆல்பங்களும் ஏற்கனவே திகில் ,லயன் காமிக்ஸ் களில் வெளிவந்துவிட்டன...
   ஆல்பம் 15சிறுகதைகள் தொகுப்பு ,அதுதான் இம்மாதம் வெளிவந்த ஆண்டுமலர் பிரின்ஸ் கதைகள்..
   எஞ்சிய ஒரே கதை நண்பர் மொகய்தீன் போட்டுள்ள அட்டைப்படத்தில் உள்ளது ,அதன் ஆங்கில பெயர்....

   "Miss Dynamite"- , Greg/Aidans--இந்த பதிப்பகம் தான் தொடங்கிய நிலையில் மூடப்பட்டது, அதை வெளியிட வாய்ப்பில்லை என ஆசிரியர் சார் காலைலியே விளக்கம் அளித்து விட்டார்...சோ,பிரின்ஸ் 17தமிழில்..இவற்றுள் மறுபதிப்பாக வராத கதைகள் படிக்க நானும் ஆவலுடன் உள்ளேன்...

   Delete
 70. என்ன அனைவரும் கூட்டுக்குள் அடைந்து விட்டார்களா.
  இனி
  இரவுக்கழுகுகள் உலாவும் நேரமிது.

  ReplyDelete
 71. நண்பர்களுக்கு,
  காலை வணக்கங்கள்...

  ReplyDelete
 72. எடிட்டருக்கு,
  முன்பு நமது காமிக்ஸ் இல் Research செய்தார் காமிக்ஸ் பற்றி.அவர் Paper supmit செய்து விட்டாரா.நமது காமிக்ஸ் என்ன சொல்லி இருக்கிறார்.

  ReplyDelete
 73. நமது காமிக்ஸ் -இல் புதிதாய் வலம் வர இருக்கும் நபர் யாரோ.

  ReplyDelete
 74. காமிக்ஸ் கௌபாய் ?

  ReplyDelete
 75. Tex என்றும் சலிக்காது

  ReplyDelete
 76. என் முகநூலில் பகிர்ந்த என் கருத்து விரும்பாத ஒன்றெனில் திரு விஜயன் இதை நீக்கிவிடலாம்..!


  //தினமலர் நாழிதளில் 17-7-2016 அன்று திரு Gouthama Siddarthan அவர்கள் காமிக்ஸ் பற்றி எழுதிருந்ததை சார்ந்து என் கருத்து..!
  வெள்ளையர்கள் கறுப்பர்களை ஆண்டார்கள்,ஆண்டும் வருகிறார்கள் என்பது நிஜம்..! ஒரு வெள்ளைக்காரனின் படைப்பில்,வெள்ளையர்களை மகிழ்விக்க படைக்கபடும் படைப்பில் கறுப்பினத்தவர் எப்படி கதாநாயகனாக இருக்கமுடியும்..???
  மெக்ஸிகோ பழங்குடியினரை காக்க மூகமுடி ஜோரோ...பெங்காலி பழங்குடியினரை காக்க மூகமுடி வேதாளர்...காங்கோ பழங்குடியினருக்கு டார்ஜான்...அரிஸோனா செவிந்தியர்களின் தலைவனாக டெக்ஸ் வில்லர்...இப்படி எல்லா கதைகளிலும் ஒரு வெள்ளையனே நாயகனாக இருப்பது...படைப்பாளி வெள்ளையராக இருக்கும்போது இயல்புதானே..!!
  சித்திரக்கதை உலகம் என்பது மொத்தஉலகையும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியல்ல..!வரலாறு நடந்து வந்த பாதையுமல்ல..! அது ஒருவரின் கற்பனையுலகை அடுத்தவரின் கண்களுக்கு காட்டும் தளம். கற்பனையில் வளர்ச்சிபெறாத சிறுவர்கள் முதல்...எழுத்தகளால் மட்டுமே கண்டுவந்த உலகை கொஞ்சம் சித்திரங்களால் ரசிக்கவைக்கும் விருந்தை திறந்துவிடும் அற்புதசாவி..! வேதாளர் பழங்குடியினர்களை தாக்கினார்,கொன்று குவித்தார்,அவரின் உரிமைகளை பறித்தார் .என்றிருந்தால்.... திரு Gouthama Siddarthan சொல்லும் குற்றசாட்டு பொருந்தும்..! வேதாளர் காமிக்ஸில் நாம் கண்டதெல்லாம் உறுதியும்,நம்பிக்கையும்,மனிதநேயமும்,சத்தியத்திற்கு கட்டுபாட்ட பழங்குடியினரையும்..அவர்களை சூறையாடும் வெள்ளையர்களையும் தான்..! வலிமையான கரங்கள் கொண்ட வெள்ளைதோல் போக்கிரிகளை... அதை வெள்ளைத்தோல் மனிதரான வேதாளர் தன் வலிமையால் தடுத்தும்,தட்டி கேட்டும் பழங்குடியினர்களின் அமைதியான வாழ்வை தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக உறுதிசெய்தவைகளைதான் நாம் பார்த்தவைகள்..! அதுமட்டுமா..??? காங்கோ,பெங்காலி காட்டுகளையும்,அரிஸோனா பாலைவனத்தையும் இயல்பு மாறாமல் எத்தனை கதைகளில் அனுபவித்திருப்போம்..!
  அதுமட்டுமா..??? எவ்வளவு வகையான பழங்குடியினரையும் செவ்விந்தியர்களையும் இன்னும் பல இனத்தவர்களையும்,அவர்களின் வாழ்வியலையும் சந்தித்திருப்போம், இலவசமாக எவ்வளவு நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணித்திருப்போம்..!
  காமிக்ஸ் என்ற படைப்பு ஒரு இரண்டு தனி நபர்களின் கூட்டு முயற்சி...அதுவொரு கற்பனையின் பரிணாமம்..! காமிக்ஸ்படைப்பாளிகள் அரசியல்செய்யும் சாணக்கியர்கள் அல்ல..!! ஏதோ இரும்புக்கரம் கொண்ட பெரும்அரசியல்சதி நடந்தது போல ஒட்டுமொத்த காமிக்ஸ் உலகின் மீதும்...பழங்குடியினரின் வாழ்வை சூறையாடியதே காமிக்ஸ்தான் என்பதுபோல சித்தரித்து தலைப்பிட்டு குளிர்காய்வது...
  திரு Gouthama Siddarthan என்ற பெயர் கவர்ச்சிக்கு வைத்ததாகவே உள்ளதே அன்றி...உள்ளே ஒரு புத்தரின் புன்னகையோ,பார்வையோ மலர்ந்ததாக தெரிவில்லை என்பது வருத்தமாக உள்ளது..! கௌதமபுத்தரும் அவரின் சிடர் சித்தார்த்தரும் நம் மண்ணில் பிறந்தவர்கள்..அவரின் கொள்கையும் கோட்பாடும் வெளிதேசத்தில் கொடிகட்டி பறந்தும் ஆழமாக இன்று கால் ஊன்றியிருந்தலும்... அவரின் கொள்கையை நம் மண்ணில் புதைந்துபோய்யிருந்தாலும் கூட... சிலரின் மனங்களில் மிச்சமிருக்கும் என நம்பிகொண்டுள்ளேன். Gouthama Siddarthan பெயர் உள்ள ஒரு எழுத்தாளரின் உள்ளத்தில் கூட அது மலரவில்லை என்பது இன்னும் வேதனையாகஉள்ளது. Gouthama Siddarthan அவர்களின் கருத்தை நான் கண்டிக்கவில்லை..மாறாக...
  ஒரு பூ மலரும் முன்பு முதலில் முட்கள் தான் முளைகின்றன, பின்னர் பூ பூக்கிறது..! முட்களாக குத்தும் அவரின் கருத்தை அடுத்து ..விரைவில் ஒரு மலர் அவரின் மனதில் மலரும் என எதிர்பார்த்து....

  மலர பிரார்த்திக்கிறேன்..!//
  தினமலர் கட்டுரையை தெளிவாய் படிக்க...இங்கே'கிளிக்'

  ReplyDelete
  Replies
  1. மிக அருமையான கருத்து... Well said மாயாஜி..

   Delete
  2. என் சிறு வயதில் வேதாளரை படித்தது, இன்னும் நீங்கா நினைவில் உள்ளது. வேதாளருக்கு மரணம் என்பதே இல்லை,சித்திர வடிவங்களில் வேதாளராய் கண்டு பிரமித்தது இன்றும் மறக்க முடியாதது. காமிக்ஸ் இன்றும் நம்மோடு பின்னி பிணைந்திருப்பதற்கு வேதாளருக்கும் முக்கிய பங்குண்டு.வேதாளர் இல்லாத காமிக்ஸ் உலகமா.
   அவருக்கு என்று ஒர் உலகம் இருக்கிறது.அவ்வுலகை ரசிக்காதவர் பற்றி நமக்கு என்ன கவலை.

   Delete
  3. மாயாவி சார் !

   கமல் பம்மல் கே சம்மந்தம் படத்தில் ஓரு டயலாக் கூறுவார் அதாவது ,

   "பழமொழின் அனுபவிக்கனும் ஆராயக்கூடாது !"

   இது நம் காமிக்ஸுக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.!(ஏங்க ! நான் சரியாத்தான் பேசறனா.???)

   Delete
 77. டெக்ஸ் வில்லர் எப்போதும் எனக்கு சலிக்க மாட்டார் அன்றும் இன்றும் என்றும் காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டார் எங்கள் வில்லர் டெக்ஸ் வில்லர்

  ReplyDelete
 78. Hi Friends We will meet Erode book festival

  ReplyDelete
 79. பிரின்ஸ் சிறு கதைகள் சூப்பர்...
  பெட்டி அட்டாகாசமான கதை... என்னைப் போன்ற இளைஞர்கள் இந்த கதையோடு எளிதில் ஒட்டிக் கொள்ள முடியும்... எதிர்பார்த்த சில விசமங்கள் இல்லையெனினும் இது ஒரு நல்ல கதை.
  டெக்சு கதை வழக்கம் போல...
  ஜானி கதையின் வில்லனை ஜானி பிறக்கும் முன்னரே ஜானியின் அப்பா காலத்திலேயே யூகித்து விட்டேன்... ஆனாலும் கதையின் விறுவிறுப்பு அருமை..
  இந்த மாதத்தில் டாப் என்றால் நி.1 நி.2... சுருக்கம் எதனாலென்றால் எந்த நி. முதலில் என்ற குயப்பமே...

  ReplyDelete
 80. பெட்டியை விடவும் நான் ரெம்பவும் எதிர்பார்ப்பது ஜூடித்தை தான் என்பதை ஜொள்ளவும் வேண்டுமா என்ன???

  ReplyDelete