Powered By Blogger

Wednesday, July 13, 2016

ஈரோட்டில் நமது ஸ்டால் நம்பர் 91.....

நண்பர்களே,

வணக்கம். "ஆகாஷவாணி....!! செய்திகள் வாஷிப்பது...." என்று அடித்தொண்டையில் கறகறக்கும்  ரேடியோவின் முன்னே தவமிருந்து அன்றைய கிரிக்கெட் ஸ்கோர்களைக் கேட்டுவந்த ஏதோவொரு கி.மு காலத்தினுள் தான் எனது பால்யம் இருந்ததாய் ஞாபகம். அப்போதெல்லாம் பொழுது போக்கிற்கு வழிகள் ஏக குறைச்சல் என்பதால் - புத்தகங்கள் தான் ஆபத்பாந்தவர்களாய்த் தெரிவது வாடிக்கை ! அவற்றுள் ஒரு வகையான activity books-ல் "புள்ளிகளை இணையுங்கள்" என்றிருக்கும்.....!  உதிரியாக உள்ள புள்ளிகளை நம்பர்வாரியாக இணைக்கும் போது அழகாய் ஏதேனும் உருவங்கள் புலப்படும் !ஓரிஜினலாய் படம் வரைவதற்கும் நமக்கும் ஏழல்ல- பதினான்காம் பொருத்தம் என்பதால் - நோகாமல் குடிக்க வசதிப்படும் இந்த நோன்புக் கஞ்சி மேல் எனக்கு ரொம்பவே ஆர்வம் !! புள்ளிகளை சேர்த்து - பதுங்கி கிடக்குமொரு  உருவத்தை வெளிக்கொணரும் அதே  உணர்வு தான் மேலோங்கியது - கடந்த பதிவினில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு நீங்கள் போட்டிருந்த மதிப்பெண்களை கூர்ந்து நோக்கும்  பொழுது..!  

டெக்சின் கதைகளில் உங்கள் ரசனைகளின் pattern ; கார்டூன்களுக்குப் பொதுவாய் உங்களின் மதிப்பீடுகள் ; "என் பெயர் டைகர்" பற்றிய உள்ளத்து திறப்புகள்...ஆண்டின் டாப் + bottom இதழ்கள் .... .இத்யாதி...என ஒவ்வொரு விஷயத்திற்கும் உங்களது ரேட்டிங்குகளைப் பொறுமையாய் கவனிக்கும் போது நிறைய மௌன செய்திகளை உணர முடிகிறது ! மேலோட்டமாய்ப் பின்னூட்டங்களை பார்த்தால் - ரிக்டர் அளவுகோல்களில் பூகம்பத்தின் பரிமாணத்தைக் குறிப்பது போல் 7.0 ....8.0 என்று தோன்றினாலும் அந்த நம்பர்கள் நமக்குச் சொல்லும் செய்தியை ஜுனியரின் உதவியோடு கொஞ்சம் systematic ஆக பத்திரப்படுத்தி வருகிறேன் ! இதே பாணியிலான கேள்விகளை இந்தாண்டின் இறுதியிலும் ஒருமுறை கோரிக் பெறுவோம் ; 2016-ன் ஒரு முழுமையான அனுபவத்தைக் கிரகித்துக் கொள்ளும் பொருட்டு ! இப்போதைக்கு 2017-ன் கதைத் தேடல்களுக்கு ; கல்தா படலங்களுக்கு உங்கள் மதிப்பெண்கள் நிறையவே உதவி உள்ளன என்பது உறுதி  guys !!Keep them going !!

"இன்னுமொரு உபபதிவு" என்பதோடு நிறுத்திக் கொள்ளாது - வரக் காத்திருக்கும் ஈரோட்டுப் புத்தக விழா பற்றிய மேலோட்டமான updates-களையும் பகிர்ந்து கொள்ள இதனைப் பயன்படுத்திக் கொள்வோமே  என்று  நினைத்தேன் !  ஜூலை 13-ம் தேதி ஸ்டால் ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் நடைபெற உள்ளது ; so மாலைக்குள் நமது ஸ்டால் நம்பர் தெரிந்து விடும் ! Hopefully - சைடு நடைபாதைகளை ஒட்டியதொரு ஸ்டால் இம்முறையும் கிடைப்பின் சூப்பராக இருக்கும் ! வெளியூர் நண்பர்கள் ஈரோடு ட்ரிப் அடிக்கும் நோக்கில் இருப்பதை இங்கும், மின்னஞ்சல்கள் வழியாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது ! "போன ஆண்டைப் போல சந்திப்புகள் ஏதேனும் உண்டா ?" ; "சென்னையைப் போல "பரீட்சைகள்" உண்டா ?" ;  "சிலபஸ் எதுவோ ?" ; " பிட் ஏதாச்சும் கொண்டு வரலாமா ? " என்ற ரீதியில் ஏகப்பட்ட கலாய்ப்ஸ் !! 

"ஈரோட்டில் இத்தாலி" இதழையும் நேரில் பெற்றுக் கொள்கிறோமே ? என்ற வேண்டுகோள்களும் தான் ! So முதல் வாரயிறுதியின் முதல் நாளைக்கு (சனிக்கிழமை - ஆகஸ்ட் 6) இதழின் ரிலீஸ் + நமது சந்திப்பை வைத்துக் கொள்வோமே என்று நினைத்தேன். முந்தைய தினம் கூரியர்களை சீக்கிரமே அனுப்பிவிடும் பட்சத்தில் ஈரோட்டுக்கு வர இயலா நண்பர்களுக்கும் கூட அதே நாள் காலையில் இதழ்கள் கிடைத்து விடும் ! சென்றாண்டைப் போலவே புத்தக விழாவின் வாசலில் உள்ள LE JARDIN ஹோட்டலின் சின்ன மீட்டிங் ஹாலையே பயன்படுத்தினால் தேவலை என்று தோன்றியது ; அதற்கான ஏற்பாடுகளை சீக்கிரமே செய்து விடுவோம் ! வருகை தர எண்ணியுள்ள நண்பர்களின் எண்ணிக்கை உத்தேசமாய்த் தெரிந்தால் நாற்காலிகளும், பீட்சாக்களுக்கும், "question பேப்பர்" அச்சடிப்புக்கும் உதவிடும் என்பதால்  கை தூக்குங்களேன் - ப்ளீஸ் ?! And இந்தமுறை வாசகர் சந்திப்பினை கொஞ்சமே கொஞ்சமாய் சுவாரஸ்யமாக்கிட ஒரு surprise காத்துள்ளது ! So நமக்கென சற்றே நேரம் ஒதுக்கி விட்டு, மஞ்சள் நகருக்கொரு விசிட் ப்ளீஸ் ?

See you around soon folks ! Bye for now !

236 comments:

 1. Replies
  1. அடடே!


   முதல் இரண்டு இடங்களிலும் மாடஸ்டி ரசிகர்கள்.சூப்பர் !

   Delete
 2. "வாழ்க ஈரோடு புத்தக திருவிழா."
  பதிப்பாளர்களும், வாசகர்களும் இணைந்து விற்பனையில் தூள் கிளப்பவும்,
  "சென்னை புத்தகவிழாவை மிஞ்சிய (விற்பனையில்) ஈரோடு புத்தகவிழா" என்ற ஆசிரியரின் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. திரு விஜயன் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் காலை வணக்கங்கள்..!

  //"ஈரோட்டில் இத்தாலி" இதழையும் நேரில் பெற்றுக் கொள்கிறோமே ? என்ற வேண்டுகோள்களும் தான் ! So முதல் வாரயிறுதியின் முதல் நாளைக்கு (சனிக்கிழமை - ஆகஸ்ட் 6) இதழின் ரிலீஸ் + நமது சந்திப்பை வைத்துக் கொள்வோமே என்று நினைத்தேன். முந்தைய தினம் கூரியர்களை சீக்கிரமே அனுப்பிவிடும் பட்சத்தில் ஈரோட்டுக்கு வர இயலா நண்பர்களுக்கும் கூட அதே நாள் காலையில் இதழ்கள் கிடைத்து விடும் ! //

  ஹீஊஊஊஊய்ய்ய்ய்..! என்னதான் சொல்லுங்கள்.... புத்தகங்கள் வீடுதேடி பெட்டியில் வந்ததும் அதை தனியே பிரித்து பார்பதற்கும், நண்பர்கள் சூழ நம் பெயர் தாங்கிய பெட்டியை சீனியர் & எடிட்டர் கைபடவாங்கும் அந்த தருணம்..அதை பிரித்து மணக்கமணக்க தடவும் கனம் மகிழ்ச்சியின் உச்சம்..! நேரில் பெற்றுகொள்ளும் வரிசையில் அடியேன் முதல் ஆள்.!

  எனது சந்தா எண் : 143

  ReplyDelete
  Replies
  1. பதுங்குகுழியில் இருந்து பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்த போராட்டகுழு இருளை கிழித்துக்கொண்டு வெளிவந்துக்கொண்டிருகிறார்கள்..அதை பார்க்க...இங்கே'கிளிக்'
   [தமாஸு..தமாஸு]

   Delete
  2. ///.... புத்தகங்கள் வீடுதேடி பெட்டியில் வந்ததும் அதை தனியே பிரித்து பார்பதற்கும், நண்பர்கள் சூழ நம் பெயர் தாங்கிய பெட்டியை சீனியர் & எடிட்டர் கைபடவாங்கும் அந்த தருணம்..அதை பிரித்து மணக்கமணக்க தடவும் கனம் மகிழ்ச்சியின் உச்சம்..! நேரில் பெற்றுகொள்ளும் வரிசையில் அடியேன் முதல் ஆள்.! ///

   சிறியேன் இரண்டாவது ஆள்.!!!

   Delete
  3. அடியேன் நான்காம் பகுதி ....;-)

   Delete
  4. மேகூம் பாஞ்ச் ஹே ?? 5.

   Delete
  5. நானும் ஆறாவது ...

   Delete
 4. ஆகஸ்ட் 6 Erode வர முயற்சி செய்கிறேன் சார்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. @ குளித்தலை மணிகண்டன்

   திருப்பூர் சந்திப்பு தவறிவிட்டது...ஆகஸ்ட் 6 அவசியம் வந்துவிடுங்கள்..!

   Delete
 5. வணக்கம் சார்...வணக்கம் நட்பூஸ்...
  ஈரோடு விழா இவ்வளவு அருகே நெருங்கி விட்டதா...வாவ்...சூப்பர் தகவல் சார்..மீண்டும்...
  ஆசிரியர் +நண்பர்கள் சந்திப்பு...
  கலாய்ப்புகள்...
  கால்வாரல்கள்...
  சரமாரி கேள்விகள்...
  ஆசிரியர் பதில்கள்...
  ஹைலைட்-வெளிநாட்டு நண்பர்கள் வரவு, கிடாவெட்டு...
  ஆகா ஆகா நினைக்கும்போபோதே குத்தாட்டம் போட தோணுதே....

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியருக்கென்றே ஏதேனும் கொஸ்டீன் பேப்பர் தயாராகி வருகிறதா டெக்ஸ் ஜி ??

   Delete
  2. நாங்க திருவிளையாடல் தருமிக்கு பக்கத்து வீட்டுக்கு, எதிர் வீட்டுக்கு பின்வீட்டுக்காரங்கோ....எங்களுக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் !!

   Delete
  3. பரிட்சை முடிந்த உடன் எனக்கு புகை சமிக்ஞை கொடுக்கவும் . அதன் பின்னர் நான் மீட்டிங் உள்ளே வருகிறேன் .

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. //ஆசிரியருக்கென்றே ஏதேனும் கொஸ்டீன் பேப்பர் தயாராகி வருகிறதா டெக்ஸ் ஜி ??///----நிச்சயமாக ,உறுதியாக ,ஈறாறு பனியிரண்டு டெக்ஸ் புக் மேல் சத்தியமாக....
   இன்றைய பதிவை பார்த்த உடன் தாரமங்கலம் பகுதியில் 2குயர் நோட்டெல்லாம் தீர்ந்து போனதாக வாட்ஸ்அப் செய்திகள் தெரிவிக்கின்றன...
   பதிவு போட்ட கையோடு A4சீட்டுகள் 10பண்டல்கள் பர்சேஸ் பண்ணியதாகவும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.
   இரண்டு பக்கமும் ராக்கெட் ஏவுகணைகள் மாறி மாறி தாக்குமோ என பீதியில் உலவுவதாக ஃப்ளாஷ் நியூஸ்....
   சம்பத் @ ஜோக்ஃஸ் அபார்ட் அட்டகாசமான கோரிக்கைகள் இம்முறை உண்டு.
   என் பங்கிற்கு ஒரு கோரிக்கை ,ஆசிரியர் எதிர்பாராத கோணத்தில் (நன்றி ஸ்டீல் க்ளா)
   ரெடியாகி வருகிறது. அவரால் அதை மறுக்கவே முடியாது என்று மட்டும் உறுதி கூறுகிறேன்....

   Delete
 6. @ திரு விஜயன்

  டெஸ்ட் எழுத எந்த புத்தகத்தில் இருந்து கேள்விகள் வரும்ன்னு சொல்லிட்டா...பாக்கவா படிச்சி ரெடியாய் வந்துடுவோம்..! இந்த பரிச்சை ஜுரம் பத்திக்க முதல்ல என்ன புக் பரிசுகிறதை அவிச்சிடுங்களேன்.நான் ஊரெல்லாம் தண்டோரா போட்டுடறேன்..!

  ReplyDelete
  Replies
  1. சிலபஸ் எல்லாம் முன்கூட்டியே எனக்கு தெரிவிக்க வேண்டியதில்லை சார்.
   நானெல்லாம் ஜீனியஸாக்கும் .(Question paper ஐ மட்டும் பரிட்சைக்கு ரெண்டு நாள் முன்னாடி கொடுத்துட்டிங்கன்னா போதும்.)!!!

   Delete
  2. [என் காதில் மைக்ரோ குரலில்..]
   கோடையிடியார்: குசு..குசு..குசு..குசு..ஸ்ஸ்ஸ்..குசு..குசு...குசு..குசு..குசு..குசு..குசு..ஸ்ஸ்ஸ்..குசு..குசு...குசு..
   குசு..குசு..குசு..குசு..ஸ்ஸ்ஸ்..குசு..குசு...குசு..குசு..குசு..குசு..குசு..ஸ்ஸ்ஸ்..குசு.ஓகே..!
   மேற்கண்ட 'குசு..குசு' மொழிபெயர்ப்பு : மாயாத்மா..எடி எந்த புத்தகம்ன்னு சொன்னதும் அதை pdf பண்ணிடலாம்,பதிலை கோழியாட்டம் அமுக்கி குழம்பு வெச்சிடணும்..இது நமக்குள்ள..ஓகே...

   Delete
  3. பிட் அடிக்கிற பசங்கள கண்காணிப்பு செய்ய இத்தாலியில் இருந்து டெக்ஸ்ம் கார்சனும் வருவதாக புகை சமிக்ஞை சொல்கிறது...இரண்டு பேர் மூக்கும் பத்திரம் அய்யா ,ஹெல்மெட் அணிந்து பரிட்சை ஹாலுக்கு வாருங்களேன்....

   Delete
  4. @ சேலம் டெக்ஸ்

   நாங்கெல்லாம் அப்பவே அப்படி...இப்ப சொல்லவா வேணும்.ஹேய்ய்ய்...ஹ..!

   Delete
  5. //இந்தமுறை வாசகர் சந்திப்பினை கொஞ்சமே கொஞ்சமாய் சுவாரஸ்யமாக்கிட ஒரு surprise காத்துள்ளது !// பிட் அடிப்பதை கண்காணிக்க புதுசா யாராவது கையில் பெரம்போடு வருவாங்களோ... அதானாலென்ன.. கடைசி பெஞ்ச்ல இருக்கிறங்க இதபார்த்தெல்லாம் கவலை பட மாட்டோம்...

   Delete
 7. /// வருகை தர எண்ணியுள்ள நண்பர்களின் எண்ணிக்கை உத்தேசமாய்த் தெரிந்தால் நாற்காலிகளும், பீட்சாக்களுக்கும், "question பேப்பர்" அச்சடிப்புக்கும் உதவிடும் என்பதால்.///

  பீட்சான்னா ஸ்வீட்டா காரமா இல்லை பேய்ப்படமா????

  ReplyDelete
  Replies
  1. அதுவொரு அட்டகாசமான அசௌகர்ய பதார்த்தம் கோடையிடியாரே..! சொம்பு அடிவாங்கியிருந்தாலும்கொண்டாந்திடுங்க..ஹாஹாஹா..!

   Delete
  2. காக்கா முட்டையில அந்த ஆயா, தக்காளி பச்சை மிளகாய் எல்லாம் வெச்சி சுடுமே, அந்த தோசையா!! ஹிஹிஹி!!!
   வேதாளரே! இதுக்கு சொம்பு எதுக்குங்க! பீட்சான்னா கடிச்சி சாப்பிடுற பொருள்தானே, கரைச்சி குடிக்கச் சொல்லுவிங்க போல!!!

   Delete
  3. @ கோடையிடியார்

   போனதபாவே ஒரு காகா முட்டை cd காந்தகண் கபாலிக்கு அனுப்பினேன்..அவர் ஆம்லெட் போட்டு சாப்பிட்டாரு போல..! விடுங்க இந்ததபா அந்த ஆயாவை வெச்சே பீட்ஸாவை போடவெப்போம்..!

   சொம்பு எதுக்குன்னா..அங்க ஒரு பாத்ரூம் தான் இருக்கு..ஹீ..ஹீ..ஹீ...

   Delete
  4. ங்ஙே!!!
   அப்போ பீட்சான்னா பேதி மாத்திரையா????

   Delete
 8. மஞ்சள் மாநகரின் சார்பாக நண்பர்களை வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. @ கார்த்திக்

   வருகைக்கும் வரவேற்பிற்கும் நன்றிகள் கார்த்திக்..! ரெண்டுநாள் மொத்த டீமையும் கவனிச்சி அனுப்பிடணும்..! வரவேற்ப்புக்கு தாரைதப்பட்டை கிழியனும்..ஹி..ஹி..ஹி..!

   Delete
  2. வரவேற்புக்கு நன்றிகள் கார்த்தி....
   அப்புறம் ஆறு வேளையும் "கவனி"ப்பு நல்லா இருக்கனும்....

   Delete
  3. வரவேற்புக்கு நன்றிகள் கார்த்தி...

   ப்ளக்ஸ், பேனர், அலங்கார வளைவு எல்லாம் அமர்க்களமா இருக்கட்டும். முடிஞ்சா, நையாண்டி மேளம், பட்டி மன்றம் எல்லாம் பக்காவா ரெடி பண்ணிடுங்க.

   (இதையெல்லாம் படிச்சிட்டு 6 ஆம் தேதி வெளியூர் போயிடுறது பெட்டர்னு முடிவெடுத்துடாதிங்க) :-)

   Delete
  4. வரவேற்புக்கு நன்றி கார்த்தி. . . .
   போன தபா மேரியே நல்லா கெவ்னிங்கோ.
   கெவ்னிச்சதுக்கு அப்பால,
   நாஷ்டா வாங்கி குடுத்தது யாருன்னு கூட கண்டுக்காம நல்லா துன்ட்டு ,சோத்துல உப்பு இல்ல. கொயம்புல புளிப்பு இல்லேன்னு சேட்டஸ் போட்டு தாக்குங்கோ.!

   Delete
 9. Replies
  1. @ L கார்த்திகேயன்

   ஈரோடு கார்த்திக்...L கார்த்திக்...T கார்த்திக்...ஒரே கார்த்திக் மயம்தான் போங்க...

   வந்துடுங்கோ V கார்த்திகேயன்..வந்துடுங்கோ..!

   Delete
  2. நன்றி @Mayavi.

   @மேற்கிலிருந்து ம. ராஜவேல் - will try my best :)

   Delete
 10. ஈரோட்டில் பீட்ஸா .....

  ReplyDelete
 11. சந்தா நண்பர்களுக்கு தான் சர்ப்ரைஸ் என்றால் ஈரோடு வருகை தரும் நண்பர்களுக்கும் சர்ப்ரைசா ....

  தூள் .....;-)

  ReplyDelete
 12. best wishes for ERODE book fair sales .

  ReplyDelete
 13. போன பதிவு தேர்வு நேரம் என்பதால் விமர்சனம் இட. வில்லை ..இந்த முறை விமர்சனம் செய்யலாம் என்றாலும் படிக்காத நண்பர்கள் நினைவுக்கு வருகிறார்கள் ..ஆனாலும் கருத்தை சொல்ல வேண்டுமே ..எனவே சிறு சிறு வரியில் .....


  குற்றம் பார்க்கின் ...

  அக்மார்க் டெக்ஸ் சாகஸம் ..அருமை ....சிறு சிறு இடங்களில் டெக்ஸ் உறுத்தினாலும் மற்ற பிண்ணனி சித்திரங்கள் அதனை மறக்க செய்கிறது ...முழு திருப்தி அளித்த டெக்ஸ் ....

  கோடியும் ஒரு கேடியும் ...

  மீண்டும் அதகள வெற்றி ...ஆர்ட்டினின் ஆயுதம் போலவே இந்த இதழும் மாஸ் ஹிட் ..நல்ல நகைச்சுவை ...தெளிவான சித்திர அச்சு தரம் என முழு திருப்தி ...

  நிழல் ஒன்று நிஜம் .....


  மறுபதிப்பு இதழ் என்றாலும் சுமாரன ஓவியங்கள் பழைய இதழில் என்ற நினைவை தவிர வேறு ஏதும் மண்டைக்குள் இல்லை என்பதால் புது கதையை போலவே படிக்கும் திருப்தி கிடைத்தது ...அழகான ஓவியங்களும் ...அசத்தல் அச்சுதரமும் ..சிறப்பான கதை ஓட்டமும் மனதை கவர்ந்தது ..கலக்கல் ...

  இமயத்தில் மாயாவி ...

  இந்த முறை மறுபதிப்பு இதழ்களில் இது வரை வந்த இதழ்களை விட அழகான சித்திரங்கள் ..தரமான தாள் ...தெளிவான அச்சு என தோன்றுவது எனக்கு மட்டும் தானா ...வழமை போல ஓகே ..ஆனால் அட்டை படம் சுமார் ரகம் ....

  ஆண்டு மலர் ....

  ஜானி வழக்கம் போல கலக்கி விட்டார் ..இரு வேடங்களில் போல அவர் தந்தையும் சாகஸத்தில் இடம் பெற்று கலக்கி விட்டார் ..

  பிரின்ஸ் ...சிறு கதைகள் என்றாலும் முதன்மை பெற தவற வில்லை ..மேலும் பிரின்ஸ் காவல் துறையில் இருந்து எப்படி கப்பல் கேப்டன் ஆனார் ...பொடியன் ஜின் எப்படி அவருடன் இனைந்தார் என்பதை எல்லாம் அறிந்ததில் மகிழ்ச்சி .சில கதைகள் திகில் காமிக்ஸ் இதழில் படித்த நினைவு ...முடிந்தால் அடுத்த முறை பிரின்ஸ் குழுவில் பார்னே எப்படி இனைந்தார் என்பதற்கான சிறுகதை இருப்பின் அதனையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் சார் ...


  பெட்டி ...

  ஹீம் ...என்ன சொல்லலாம் ..சரி கதையை விடுங்கள் ..ஒரு பாட்டு மட்டுமே நினைவுக்கு வருகிறது ...

  ஆடிய ஆட்டம் என்ன ..

  மாடஸ்தியை பழித்தோர் கூட்டம் என்ன ..

  மற்றபடி ....


  மீண்டும் ஈரோட்டில் நண்பர்கள் படை சூழ தங்களை காண ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ...

  ReplyDelete
  Replies
  1. இரட்டை வேடத்தில் டெக்ஸ் கலக்கிய கதை ஒன்று உள்ளதாமே
   தலீவரே அது என்னன்னு கேட்டு வெளியிட ஆவன செய்யவும்

   Delete
  2. தலை இரட்டை வேடமா?தயவுசெய்து சீக்கிரம் அந்தகதையை போடவும் pls ஆசிரியர் அவர்கள்

   Delete
  3. //இரட்டை வேடத்தில் டெக்ஸ் கலக்கிய கதை ஒன்று உள்ளதாமே///--ஆகா சூப்பரு...
   அட்டைபட போட்டோ அல்லது உள்பக்க படங்கள்ஏதாவது இருந்தால் அந்த
   Tex டெக்ஸ் வில்லர் -ல போடுங்கள்.

   Delete
  4. தலீவரே.!

   எல்ல விமர்சனத்தையும் ஆங்கில பட கடைசியில் போடும் டைட்டில் மாதிரி சிம்பிளா முடிச்சிட்டீங்களே ?

   Delete
 14. ஈரோடு புத்தக விழா!
  காத்திருக்கிறேன்!
  மகிழ்ச்சி!

  ReplyDelete
 15. காலை வணக்கம் நண்பரேகளே இத்தாலியை ஈரோட்டில் கலக்கப்போகும் நண்பர்களுக்கு என் இதயம்கனிந்த வாழ்த்துக்கள் அப்புறம் இந்த முறையாவது பிட் அடிக்காமல் தேர்வு எழுத மாயாவிகாரரை மாயஉருவில் அங்கு அனுப்பிவைக்க கேட்டு உள்ளேன் உஷார் நண்பரேகளே உஷார்

  ReplyDelete
 16. காலை வணக்கம் நண்பரேகளே இத்தாலியை ஈரோட்டில் கலக்கப்போகும் நண்பர்களுக்கு என் இதயம்கனிந்த வாழ்த்துக்கள் அப்புறம் இந்த முறையாவது பிட் அடிக்காமல் தேர்வு எழுத மாயாவிகாரரை மாயஉருவில் அங்கு அனுப்பிவைக்க கேட்டு உள்ளேன் உஷார் நண்பரேகளே உஷார்

  ReplyDelete
 17. Tex
  1.7/10
  2.8/10
  3.7/10
  4.10/10
  5.8/10
  6.9/10
  7.8/10

  Cortoon
  1.5/10
  2.6/10
  3.5/10
  4.7/10
  5.4/10
  6.3/10
  7.7/10
  Question no:3 பிரமாதம்
  Question no:4 super

  Best book: 1.தனலயில்லா போராளி 'தல'க்கு ஒரு ஜெ!!
  2.என்பெயர் னடகர் சூப்பர்

  டப்பா புக்: 1.ஸ்மார்ப் கனதகள்
  2. ரின்டின்கேன்

  ReplyDelete
 18. கிளாசிக் மறுபதிப்பு கனதகள் அன்னத்தும் சூப்பர் சார்.... இம்மாதம் வந்த இமயத்தில் மாயாவி கனதயும் சித்திரமும் சூப்பர்.....

  ReplyDelete
 19. அனைத்து தடபுடல்களும் சனிக்கிழமை மட்டும்தானா. என்னைப் போல ஞாயிறு வரும் நண்பர்களுக்கு ஏதாவது உண்டா சார்

  ReplyDelete
  Replies
  1. முக்கிய ஐட்டங்கள்ல பாதி ஞாயிறு தானே உண்டு...கவலை வேணாம்...நீங்கள் வந்தால் மட்டும் போதும்...

   Delete
  2. @ கிருஷ்ணா VV

   ஏன் சனிக்கிழமை வாய்ப்பில்லையா...???

   Delete
  3. நன்றி விஜய்.

   இல்லை சிவா ஜி சனி காலை தான் பழனி விஜயமே. அங்கு அனைவரையும் சந்தித்து விட்டு ஞாயிறு ஈரோடு.

   Delete
 20. சென்ற வருடத்தைக் காட்டிலும் இம்முறை EBF அல்லோலகல்லோலப்படும் என்பது உறுதியாகத் தெரிகிறது. இம்முறை அதிக எண்ணிக்கையில் வெளிநாடுவாழ் நண்பர்களும், வெளிநாட்டுக்கு சென்று திரும்பியிருக்கும் நண்பர்களும் பங்கேற்கயிருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது!

  மிக விரைவில் நண்பர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டபின்பு, எடிட்டரின் வியூகத்தின் அடிப்படையில் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்படும்!

  தற்போது நான் உடல்நலக்குறைவால் சற்று முடங்கிப் போயிருப்பினும், புத்தகத் திருவிழாவின் தொடக்கநாளுக்கு முன்பாகவே முழுவீச்சில் ரெடியாகி அனைத்து நண்பர்களையும் வரவேற்கக் காத்திருப்பேன் என்று உறுதியுடன் நம்புகிறேன்!

  காமிக்ஸ்..காமிக்ஸ்..காமிக்ஸ் - காமிக்ஸ் அன்றி வேறில்லாத ஒரு உற்சாகக் கொண்டாட்டத்திற்கு தயாராவோம் நண்பர்களே!!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த வாரம் 24ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் மினி மீட்டிங்.. ஓ.கேவாஜி...

   Delete
  2. @ K.S

   எனக்கு ஓகே ஜி! அதற்கு முன்பாகவே ஒரு கூட்டம் நடத்தினாலும் எனக்கு ஓகே! மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்!

   Delete
  3. @ கரூர்கார்

   ஹீஊஊஊஊய்ய்ய்ய்..! :-))))

   Delete
 21. விஜயன் சார்,

  // எண்ணிக்கை உத்தேசமாய்த் தெரிந்தால் நாற்காலிகளும், பீட்சாக்களுக்கும், "question பேப்பர்" அச்சடிப்புக்கும் உதவிடும் என்பதால் கை தூக்குங்களேன் - ப்ளீஸ் //

  நான் வருகிறேன்!!! ஆனால் எனக்கு பீட்சா வேண்டாம்!!! நமது தமிழ்நாட்டில் நான் சாப்பிட விரும்புவது தலைவாழையிலை விருந்து!!! நமது பாரம்பரிய சாப்பாடு வேண்டும்!!!

  முடிந்தால் பாரம்பரிய சாப்பாடு ஏற்பாடு செய்யலாமே!!!

  ஈரோடில் இத்தாலி ஓகே, ஆனால் பீட்சா வேண்டாம் :-(

  ReplyDelete
  Replies
  1. பாரம்பரிய சாப்பாடு - சோறு, சாம்பார், ரசம், ரெண்டு பொரியல், அப்பறம் அப்பளம்!

   Delete
  2. //முடிந்தால் பாரம்பரிய சாப்பாடு ஏற்பாடு செய்யலாமே//

   PfB,
   மண் சட்டியில் சோறு பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை உருட்டக் கொடுத்தால் செம பாரம்பரியமா இருக்கும்ல? ;)

   Delete
  3. @ இத்தாலியார்

   நல்லவேளை...மடியில உட்கார வெச்சி ஊட்டிவிட்டா இன்னும் டச்சிங்கா இருக்கும்ன்னு சொல்லலை..ஹாஹாஹா...

   பரணி கவலைவேண்டாம்...மதியம் மங்களம் ஓட்டலில் தலைவாழையிலையில் சுவிட்,பாயாசம்,பீடா,வாழைப்பழம் உள்பட முழு மாப்பிள்ளை விருந்துக்கு உத்திரவாதம்..வந்துடுங்க..! :))))

   Delete
  4. Erode VIJAY @

   // மண் சட்டியில் சோறு பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை உருட்டக் கொடுத்தால் செம பாரம்பரியமா இருக்கும்ல? ;) //

   mayavi. siva @

   // நல்லவேளை...மடியில உட்கார வெச்சி ஊட்டிவிட்டா இன்னும் டச்சிங்கா இருக்கும்ன்னு சொல்லலை..ஹாஹாஹா... //

   நான் ரெடி :-)

   Delete
  5. @ பெங்களூர்கார்

   ஞே... கிர்ர்ரர்ர்ர்..!

   Delete
 22. Replies
  1. @ கோகுல் C

   அந்த துபாய் ஷேக் காஸ்டியூம்ல முடிஞ்சா வாங்க... :))))

   Delete
 23. ஈரோடு வருகை புரியும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ....

  நமது ஆசிரியரின் அன்பளிப்பான லயன் டீ சர்ட் சென்னை புத்தக காட்சியிலேயே அணிய நினைத்தாலும் பலரிடம் போய் சேர்ந்திரா நிலையில் ஈரோட்டில் அதனை கடை பிடிக்கலாம் என இருந்தோம் ..எனவே ஈரோடு வருகை புரியும் நண்பர்கள் சனி ..ஞாயிறு இந்த இரு நாளில் ஏதாவது ஒரு நாள் காமிக்ஸ் நண்பர்கள் அனைவரும் அந்த டீ சர்ட்டை அணிந்து நமது காமிக்ஸ் அணியினரை அடையாளம் காண செய்வோமே ....என்னை கேட்டால் ஆசிரியரிடம் புத்தகம் பெறும் அந்த மீட்டிங் ஹால் சந்திப்பு நிகழும் நாளில் அனைவரும் நமது லயன் டீ சர்ட் அணிந்து நாமும் லயன் தான் என்பதை கவனிக்க செய்வோமா நண்பர்களே ....

  ReplyDelete
  Replies
  1. @ தலீவா

   ஆகட்டும்..டும்..!

   Delete
  2. கண்டிப்பாக நான் டீ சர்ட் அனிந்து வருகிறேன் தலைவரே நண்பர்களும் அனிந்து வந்தால் மகிழ்ச்சி

   Delete
  3. நல்ல ஐடியா தலைவரே

   Delete
 24. ஆசிரியரே நானும் புத்தகங்களை ஈரோட்டில் பெற்று கொள்கிறேன்
  எனது சந்தா எண் 266

  ReplyDelete
 25. Replies
  1. அட 73 பேர் புக்ஸை ஈரோட்டில் வாங்கி கொண்டாட சேர்ந்தாச்சா...! :))))

   Delete
 26. ஈரோடில் விற்பனை சிறப்பாக நடக்க என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. இந்தமுறை வாசகர் சந்திப்பினை கொஞ்சமே கொஞ்சமாய் சுவாரஸ்யமாக்கிட ஒரு surprise காத்துள்ளது...! Expecting......
  !!!!!

  ReplyDelete
 28. @ ALL : ஈரோட்டில் நமது ஸ்டால் நம்பர் 91.....

  ReplyDelete
  Replies
  1. நடை பாதையை ஒட்டியதாகவும் இருக்க கடவது.

   Delete
  2. 91 நடுவே உள்ளது...லுப்ட்ல 4கடைகள்...ரைட்ல 3கடைகள்...கார் பார்க்கிங் அருகே உள்ளது...கூட்டம் நிறைய இருந்தால் ,வழக்கம் போல போட்டோ எடுத்து கொண்டு விட்டு மரத்தடியில் ஒதுங்கி விடலாம்...

   Delete
 29. சார் நானும் (முதல் முறையாக) வருகிறேன்

  ReplyDelete
 30. சார் நானும் (முதல் முறையாக) வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. @ சிவகுமார்

   நாங்களும் உங்களை முதல் முறையாக சந்திக்க வருகிறோம் சிவகுமார்..!

   Delete
 31. இன்னுமொரு 25 நாட்களில் ஒரு மெகா காமிக்ஸ் சந்திப்பு..! சென்றாண்டைப் போலவே ஈரோட்டில் புத்தகத்திருவிழா கண்டகாட்சி வாசலில் உள்ள LE JARDIN ஹோட்டலின் உள்ள A/C மீட்டிங் ஹாலில் குட்டி காமிக்ஸ் மாநாட்டுக்கு திரு விஜயன் ஏற்பாடு செய்துள்ளதை ஒட்டி....

  இதோ வன்மேற்கின் முகவரிக்கு சொந்தக்காரர் உங்களை சந்திக்க அழைக்கும் அழைப்பை பார்க்க இங்கே'கிளிக்'

  ReplyDelete
 32. அது டெக்சுன்னு சொன்னா கார்சனே நம்ப மாட்டாரு ...........

  அதான் குற்றம் பார்க்கின் ......

  ReplyDelete
 33. Hi 🙋 friends
  Hi 🙋 vijayan sir

  My best wishes for the successful sales & ceremony of ebf

  ReplyDelete
 34. நானும் உள்ளேன் ஐயா

  ReplyDelete
  Replies
  1. @ பிரபுராஜ் RPC

   உங்களை இந்த காமிக்ஸ் உலக வலைதளத்திற்கு வருக..வருக..எனவரவேற்று மாயாவி சிவாவின் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் நண்பரே..!

   Delete
 35. I will be coming to the meet for the first time! Excited!!
  -Vinesh Erode

  ReplyDelete
 36. Our Lion-Muthu Comics stall no.91 is indeed on the outer side!!

  See stall layout for 2016:
  http://erodebookfestival.com/images/map.jpg

  ReplyDelete
  Replies
  1. @ ஈரோடு வினேஷ்

   உங்களுக்கும் என் வணக்கங்கள்..! ஸ்டால் மேப் ஸுப்பர்..! விழாபற்றிய பிறவிஷயங்களை அவ்வப்போது பகிருங்கள் நண்பரே..!

   Delete
  2. வேதாளர் @

   ஸ்டால் நம்பர் 91 க்கு அருகிலேயே பாத்ரூம் வசதி இருக்கு கவனிச்சிங்களா!?!?
   பீட்சா சாப்பிட இபேபோது உங்களுக்கு தடையேதும் இல்லைதானே??? :-)

   Delete
  3. பரவாயில்லையே நம்ம மாயாத்மா வினேஷ விக்னேஷ் ஆக்காம விட்டுட்டாரே....

   Delete
 37. இனிய இரவு வணக்கம் எடிட்டர் சார்😊
  இனிய இரவு வணக்கங்கள் நண்பர்களே😊

  ReplyDelete
 38. நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வருஷம் ஒரு கமெண்டை தவறாம போடுகிறிங்க..ஆடிட்டர்... :)))

   Delete
  2. ஹா...ஹா....
   ஆனாலும் உங்கள் ஞாபக சக்தி அபாரம் மாயாசார்...

   Delete
 39. டியர் எடிட்டர்,

  ஈரோடு விழாவில் அப்படி என்ன surprise என்று 'ரூம் போட்டு மல்லாக்க படுத்து யோசித்ததில்' -

  பதிவு, உப-பதிவு என்று போட்டு தாக்குரிகீர்கள் - இப்போவே 197000 தாண்டிய views இன்னும் ஒரு வாரத்தில் 2 மில்லியனைத் தாண்டி விடும் - எனவே மில்லியன் அண்ட் மோர் ஸ்பெஷல் சிறப்பு வெளியீடு !

  A release befitting the occasion as well as sales befitting the crowd :-)

  கரெக்டா? இது தார்கல் special-ஆ இல்லை அது தனியா?

  PS - விற்பனை சிறக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 40. அய்யோ ஈரோட்டில் வரப்போகும் அந்த surprice என்னவென்று தெரிவதற்குள் தலையே வெடித்துவிடும்போல் இருக்கிறதே

  ReplyDelete
 41. அய்யோ ஈரோட்டில் வரப்போகும் அந்த surprice என்னவென்று தெரிவதற்குள் தலையே வெடித்துவிடும்போல் இருக்கிறதே

  ReplyDelete
 42. மகிழ்ச்சியான செய்தி ஆசிரியரே :)
  Hoping to take a selfie in Erode
  Will be cumng with my frnd

  ReplyDelete
 43. 1. சட்டத்திற்கொரு சவக்குழி ........................ > 7.5/10
  2. திகில் நகரில் டெக்ஸ் ........................ > 7.5/10
  3. விதி போட்ட விடுகதை ........................ >7/10
  4. தலையில்லாப் போராளி ........................ >9/10
  5. டாக்டர் டெக்ஸ் ........................ > 6/10
  6. பழி வாங்கும் புயல் ........................ >9/10
  7. குற்றம் பார்க்கின் ........................ >7/10

  கேள்வி # 2
  A. சூ மந்திரி காலி (மதியில்லா மந்திரி) ........................ >7.5/10
  B. ஒரு பட்டாப் போட்டி (லக்கி லூக்) ........................ > 9/10
  C. நில்... சிரி... திருடு (கர்னல் க்ளிப்டன்) ........................ >7/10
  D. ஆர்டினின் ஆயுதம் (சிக் பில்) ........................ > 8/10
  E. தேவதையைக் கண்டேன் (ஸ்மர்ஃப்) ........................ > 8/10
  F. பிரியமுடன் பிணைக்கைதி (ரின் டின் கேன்) .................... >9/10
  G. கோடியும் ஒரு கேடியும் (சிக் பில்) ........................ > 8/10


  கேள்வி # 3 –

  என் பெயர் டைகர்” இதழுக்கு உங்கள் மதிப்பீடு : பிரமாதம்
  கேள்வி # 4 –
  வண்ண இதழ் 7/10
  Black & White பதிப்பு 9/10

  கேள்வி எண் 5 –
  * இதுவரையிலும் இந்தாண்டின் Best இதழ்>>>>>>>> என் பெயர் டைகர்
  * இதுவரையிலும் டப்ஸா இதழ் >>>>>>>>>>ஒன்றுமில்லை  ReplyDelete
  Replies
  1. எங்க கொஞ்சநாளா ஆளை காணோமே selvam abirami sir?

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. வெளியூர் வாசம் சதீஷ்..!!!!

   மாயாவிஜி பாஷையில் சொன்னாக்க.


   வெளிநாட்டுக்கு போயிருந்தேன்..:-)

   Delete
  4. :)

   எனக்கு ஒரு doubt சோனா... நாம்ம கர்சன் க்கும் கிட் கார்சன் (https://en.wikipedia.org/wiki/Kit_Carson) வரலாற்று தொடர்பு இருப்பதாய் சந்தேகம்.கிட் கார்சன் அமெரிக்கர்களால் ஹீரோவாக சித்தரிக்கப்பட்டாலும் நான் படித்த சில புத்தகம் சிகப்பிந்திய பிராந்தியம் பாலைவனம் ஆக மூல காரணமாக இயற்கை ஆதாரங்களை அழித்து சிகப்பிந்தியர்களை ஒழிக்கும் ஒரு யுக்தியாக மரத்தை வெட்டும் வேலையை செய்தவராக குறிப்பிடுவது கண்டு வியந்தேன். உண்மை எது? நமது கர்சன் நல்லவரா கெட்டவரா?..... உங்களுக்கு இதில் ஏதேனும் வரலாறு தெரிந்தால் நிச்சயம் பகிருங்கள்...

   Delete
  5. மாயாவிஜி பாஷையில் சொன்னாக்க.


   வெளிநாட்டுக்கு போயிருந்தேன்..:-)


   #####

   செனா அனா ஜீ என்று அன்புடன் அழைக்க படும் எங்கள் பொருளாளர் அவர்களே ...

   அது மாயாஜீ பாஷை அல்ல ...பரணியின் பாஷை ...

   மாயாஜீ க்கு வெளிநாடு வெளியூர் மாதிரி ...நிம்பிள்க்கு தான் வெளியூர் வெளிநாடு மாதிரி .. அவர் பாஷையை மாத்தலாமா ...;-)

   Delete
  6. @ தலீவர் ....நீங்க சொன்னா சரி.....ஈனா வினா சென்னைக்கு பணிக்கு சென்றபோது மாயாவிஜி அப்படி எழுதி இருந்தார்...அதனால் அப்படி சொன்னேன்..:-)

   Delete
  7. @ சதீஷ்குமார்

   மைசூர் போண்டாவுக்கும் மைசூருக்கும் எவ்வளவு தொடர்பு உள்ளதோ அவ்வளவு தொடர்புதான் நம்ம ஆட்டு தாடிவாலாவுக்கும் நிஜ கிட் கார்சனுக்கும் ....:-)
   நிஜ கிட் கார்சன் செவ்விந்தியர்களுக்கு அநீதி இழைத்தாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்....
   முற்றிலுமாக செவ்விந்தியர்கள் –அப்படி ஒரு இனமே-கொன்று ஒழிக்கப்படாமல் தடுக்க ரிசர்வேசன் பகுதி முறையை முதன்முதல் பரிந்துரைத்தவர் இவர்தான் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன....
   இவர் தலைமையில்தான் நவஹோக்கள் ரெட் இண்டியன் ரிமூவல் சட்டப்படி தமது வாழிடம் விட்டு அகற்றப்பட்டனர்...பலர் இந்த அகற்றத்தின்போது மடிந்தனர்....
   அதனால் இவர் கொடுமையானவர் என சொல்ல முடியாது....

   ஒகலஹோமா, பட்டாபோட்டி கதைகளில் வரும் செவ்விந்தியர் நிலைப்பாடு –கதைகளில் நம்மை சிரிக்க வைத்தாலும் உண்மையில் கண்ணீர் தடங்களினால் நிரம்பியது.....
   இரு வேறு கலாச்சாரங்கள் முட்டிகொள்ளும்போது நாகரீகத்தில் மேம்பட்ட கலாச்சாரம் வெற்றி கொள்ளத்தான் செய்யும்....
   பழைமையான நாகரீகத்தை சார்ந்தவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு செவ்விந்தியர்கள் விதிவிலக்கல்ல என்றே கொள்ள வேண்டும்........

   கிட் கார்சன் நிஜத்தில் ஒரு தேச பக்தர்.. போர் வீரர்.. வன் மேற்கின் பெருமை மிகு –அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல-அடையாளம்
   அது சரி சோனா-ன்னு எழுதி இருக்கீங்களே....சோனா பெண் பால் அப்படின்னு ஈனா வினா பின்னாடியே வருவாரே ;-)

   Delete
  8. உறுப்பிடி தகவல் நன்றி, ஒரு கதையில் கர்சன் எங்களின் இயற்கை வளத்தை அழித்து தாண்டவமாடிய கொடூரன் என்று(ஆங்கிலத்தில் தான்) ஒரு பெண்மணி பேசிய வசனம் ரொம்ப குலுக்க இந்த கேள்வி.

   //சோனா//
   :) அது காமிக்ஸ் உலகில் தங்கமான தகவலை தருபவர் என்று ....

   இந்த சமாளிப்பை, கற்று கொடுத்த உலகநாதன், பெரியசாமி என்று பல நாமகரன சொந்தக்காரருக்கு சமர்ப்பணம் செய்கிறேன் ... ;P

   Delete
 44. ஈனா வினா@ உடம்புக்கு என்னாச்சு?

  எடிட்டர் அனுப்புன ஸ்பைடர் புக்கை பிரிச்சு படிக்காதீங்க -ன்னு சொன்னதை கேட்டாத்தானே????

  :-)

  டேக் கேர்....

  ReplyDelete
  Replies
  1. @ செனா அனா

   //எடிட்டர் அனுப்புன ஸ்பைடர் புக்கை பிரிச்சு படிக்காதீங்க -ன்னு சொன்னதை கேட்டாத்தானே???//

   ஹா ஹா! இன்னும் எந்த ஸ்பைடர் புத்தகமும் வந்து சேரலை. 'உடம்பு சரியில்லை'னு சொன்னாலாவது பரிதாபப்பட்டு அனுப்பாம விட்டுடுவாங்களோன்னு ஒரு நப்பாசை தான்! :P

   Delete
  2. ஈரோடு விஜய் !

   ஹிஹிஹி ..... உங்களுக்கு வேண்டாம் என்றால் அடியேனுக்கு கொடுத்து விடுங்களேன். காமிக்ஸ் கிடைக்கும் என்றால் லடாக்(இமயமலை) க்கில் இருக்கின்றது என்றாறாலும் கழுதை மீதேறி சென்றாவது வாங்கி விடுவேன்.! உத்தரவு இடுங்கள் சார்.!

   Delete
 45. நானும் வருகிறேன் ... நிகழ்வுகளையும், நண்பர்களையும் பார்க்க ஆர்வமாக உள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. @ சிவ்

   ஜூனியர் குப்பண்ணாவின் வாசலில் கடைசியாக உங்கள் பார்த்து...ஒரு வருஷம் ஓடிபோச்சி..நாங்களும் ஆர்வமாய் இருக்கிறோம்...இங்கே'கிளிக்'

   Delete
 46. Had tried earlier times to be present to book fair but this time I ll make it for sure sir.. Happy to meet all comic lovers there...

  ReplyDelete
  Replies
  1. @ ஸ்ரீநிவாஸ் நாகராஜ்சேதுபதி

   உங்களுக்கு என் முதல் வணக்கங்கள்..! உங்களை சந்திக்க நாங்களும் ஆவலாய் காத்திருக்கிறோம்..!

   Delete
 47. நிழல்..1 நிஜம்..2..! விமர்சனம்..!

  ஒரு இளைஞர் தினமும் ஒருபாட்டியிடம் ஆரஞ்சு பழங்களைவாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கிபணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார். உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு, இல்லையேப்பா, நல்லா தானே இருக்கு" என்பார், உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டுசெல்வார்.

  இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம், ஏங்க.. பழங்கள் நல்லா இனிப்பாக தானே உள்ளது, என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க" என்று கேட்ப்பார்.உடனே அந்த இளைஞர் சிரித்துகொண்டு மனைவியிடம், அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களைதான் விற்கிறார், ஆனாலும்தனக்கென்று ஒரு பழத்தைக் கூடசாப்பிட மாட்டார். நான் இப்படி குறை கூறி கொடுப்பதால் தினம்அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தைசாப்பிடுகிறார் என்றார்.தினமும் நடக்கும் இந்த நாடகத்தை

  இருந்த காய்கறிவியாபாரி கவனித்து விட்டு, அந்தபாட்டியிடம், அந்த ஆள் தினமும் உன்பழங்களை குறைகூறுகிறான்,இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடைஅதிகமாக போட்டு பழங்களைகொடுக்கிறாய் எனக் கேட்கிறான்.உடனே அந்த பாட்டிபுன்னகைத்துவிட்டு, அவன்என்னைதினமும் ஒரு பழத்தைசாப்பிட வைப்பதற்காக இப்படிகுறை கூறுவது போல கூறிகொடுத்து சாப்பிட வைக்கிறான்,இது எனக்கு தெரியாது என்றுநினைக்கிறான், நான் எடைஅதிகமாக பழங்களைபோடுவதில்லைமாறாக அவனதுஅன்பில் எனது தராசு கொஞ்சம்சரிந்துவிடுகிறது என்றார்அன்போடு.சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு..!

  அந்த தராசை கொஞ்சம் சரியவைத்த ஆரஞ்சு பழத்தை பார்க்க...இங்கே'கிளிக்'  கோடையிடி மைண்டுவாய்ஸ் : வேதாளரே... அப்போ நம்ம எடிட்டர் பழம்விக்கிற ஆயாவா..??? அந்த ஆயாவை பாக்கத்தான் ஈரோடு போறோமா..??? அப்போ அந்த ஆயா சுட்டுத்தர்ற பீட்ஸாவை தின்னுபாத்திடவேண்டியது...ஹி..ஹி..ஹி..!

  ReplyDelete
  Replies
  1. கண்ணில ஜலம் அருவியா கொட்டுறது மாயாசார் உங்கள் ஆரஞ்சு கதையை படித்து...
   (யாருய்யா அது லேசா ஏமாந்த போது அந்த ஆரஞ்சு பழ தோலை பிதுக்கி கண்ணில அடிச்சது)

   Delete
  2. வேதாளரே!
   என்னை பீட்சா சாப்பிட வைக்காம ஓயமாட்டிங்க போலத் தெரியுதே.!!!:-)

   எடிட்டரை ஆயான்னு சொல்லிட்டிங்களே??? உங்க பீட்சாவுல உப்பே இருக்கப்போறதில்லை என்பது உறுதி! ஹிஹிஹி!!! (இந்த ஹிஹிஹி யை அழுத்திப்பாத்து ஏமாந்துடாதிங்க) :-)

   Delete
  3. Really Superb story. I read comics as one of my activities. I look wonder you people are coming to Chennai Book Fair and now started to EBF. I congratulate you.

   Delete
  4. மிக அற்புதமான கதை நம்ம எடிட்டர் தான் அந்த பாட்டியோ!!

   Delete
 48. சேலத்திற்கும் ஈரோட்டுக்கும் கணிசமான தொலைவு இருந்தாலும்கூட ,2013,2014,205என 3ஈரோடு விழாக்களை அட்டென் பண்ணிய முன்அனுபவம் உள்ள சீனியர் என்ற வகையில் இம்முறை விழாவிற்கு புதிய நண்பர்களை வருக வருக என வரவேற்கிறேன்...

  ReplyDelete
 49. எல்லோரும் ஈரோட்டுத் திருவிழாவிலும் பீட்சா பர்கரிலும் பிசியா இருக்கீங்க போல. கொஞ்சம் கோச்சுக்காமே ஒரு கன்னிப்பையனின் புலம்பலுக்கு காது கொடுத்துப் பாருங்கேளேன்.பல உண்மைகள் தெரிய வரும்!!! :-)

  ஹி..!ஹி..!ஹி..!

  ReplyDelete
  Replies
  1. @ கோடையிடி கிட்

   ஹீஊஊஊஊய்ய்ய்..! இப்பவாச்சும் டெக்ஸ் வில்லர் அடிமனசு என்னான்னு தெரிஞ்ச்சிகிட்டிங்களே...இனிமேவாச்சும் டெக்ஸ் வில்லரிடம் ஒரு டிஸ்டன்ஸ் மெயிண்டன் பண்ணுங்க...அப்புறம் காலம்பூராவும் நீங்க கன்னிப்பையனாவே இருக்கவேண்டிய வரும்..ஹாஹஹாஹாஹா..!

   Delete
 50. Replies
  1. @ அகமத்பாஷா

   பாஷாபாய்..இந்த வருஷம் மக்மல்பேடா நாங்க தர்றோம்...நீங்க வந்தா போதும்...அந்தநாள் நினைவிக்கும், ஒருவேளை எதுங்கிற கேள்விஇருந்தா பார்க்க... இங்கே'கிளிக்'

   Delete
  2. * ஒருவேளை எங்கிருக்கிற அப்படிங்கிற கேள்விஇருந்த...

   Delete
 51. @ மாயாவி

  நெகிழ்வான கதை! இன்னிக்கு ராத்திரி என் குழந்தைக்கு bed time Story இதுதான்!

  @ கிட்ஆர்ட்டின்

  உங்க ஹிஹிஹி'க்கு ஒரு ஹாஹாஹா!

  ReplyDelete
 52. 1.98M+ ஹிட்ஸ் :) :D:D:D:D:D:D !

  2M பக்கமா வந்துடே இருக்கு :) :) :) :) :) எடிட், அசுர கதியில் அந்த கி ந வை கம்போஸ் பன்னுங்க .........! ;P

  ReplyDelete
 53. I am also coming with my husband on 7th 🙌😎

  ReplyDelete
  Replies
  1. உங்க ஹஸ்பண்டோட கூலிங்-க்ளாஸ் சூப்பர்!:P

   Delete
  2. பூனைக்கு கருவாட்டு குழம்பு ஊத்திட்டாங்க போல தெரியுதே....

   Delete
  3. LoL 😁 😁 😆 😂

   Both Vijays r rocking 😆😆

   Delete
  4. நிக்கோலா நீங்கள் கணவருடன் வருவது மகிழ்ச்சி ஏனென்றால் என் மனைவியுடன் என்னால் வர முடியாது பேயுடன் வருவதென்றால் எனக்கு பயம்

   Delete
 54. Replies
  1. @ நிக்கோல

   முடிந்தால் 6-ம் தேதி வர முயலுங்களேன்..!

   Delete
  2. I will try my best mayavi Siva sir.thanks 4 ur concern 🙏

   Delete
 55. * மூகமுடி வேதாளர் கதைகள் முத்து காமிக்ஸில் திரும்ப வருமா..?
  * ஏன் அவை மட்டும் மறுபதிப்பு செய்யாமல் உள்ளீர்கள்..?
  * ஏற்கனவே போட்ட கதையை போட ராயல்டி வாங்கவேண்டுமா..?
  * வேதாளரின் வாசகர்கள் வரவேற்ப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன..?
  இந்த கேள்விகளுக்கு எடிட்டரின் பதில்கள்... பார்க்க...இங்கே'கிளிக்'

  [ கா.தீ.அ.ஆ.கூட்டம் -17 ]

  ReplyDelete
 56. @ செல்வம் அபிராமி

  ரொம்பநாளா ஒரு டவுட்...கேட்டு சிரிச்சுபுடாதீங்க...

  அதுஎன்ன...ஈனா வினா, செனா அனா...? என்னதான் அர்த்தம்..? ஏதோவொரு முக்கியபதிவை நான் படிக்காமல் விட்டதன்விளைவா..? எப்பஇருந்து இப்படி..? ப்ளிஸ் விளக்கம்.. :(

  ReplyDelete
  Replies
  1. ஹா .....மாயாஜீ க்கே சந்தேகமா ....உண்மையாகவே தெரிய வில்லையா ...மாயாஜீ ..சரி விடுங்கள் நானே சொல்லி விடுகிறேன் ...இப்படி ஈஸியான கேள்வியை எங்கிட்ட கேளுங்க ...கஷ்டமான கேள்வியை மட்டுமே செனா அனாவிடம் கேளுங்கள் மாயாஜீ ..

   ஈனா வினா ....ஈரோடு விஜய் ..

   செனா அனா ....செல்வம் அபிராமி ...

   மானா சினா ....மாயாவி சிவா ....;-))

   Delete
  2. @ தலீவா

   அது ஏன்...

   ஈகா விகா
   செகா அகா
   மாகா சிகா

   இல்லைன்னா...

   ஈபா விபா
   செபா அபா
   மாபா விபா

   இல்லைன்னா...

   ஈதா விதா
   செதா அதா
   மாதா விதா

   இல்லைன்னா...

   ஈகி விகி
   செகி அகி
   மாகி சிகி

   இப்படி இல்லமா 'னா' போட என்ன காரணம்..? விளக்குங்க..தலீவா.. :)))

   Delete
  3. ஙே ......

   நான் நாலு நாளைக்கு ப்ளாக் லீவு ...;-(

   Delete
  4. மாயாஜி.. ஏற்கனவே தலிவரு, ஈரோட்டுல தங்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறாரு... இதுல நீங்க வேற இடக்கு மடக்கா கேள்வி கேட்டு, அவரு பேய் முழி முழிச்சார்ன்னா, ஈரோட்டுக்கான விசாவும் கேன்சல் ஆயிரும்.. அப்புறம் நமக்கு டைம்பாஸுக்கு ஆள் கிடக்காது..

   Delete
  5. தமிழ் படத்தில் அ,ஆ,இ,...கற்று தர இந்த அனா..ஆவன்னா..இன்னா...என்று தானே காட்டுகிறார்கள்.அந்த வழக்கம் தான் இந்த செனா அனா...
   ஈனா வினா...
   அந்த முந்தானை முடிச்சில அஅஅஅஅஅ....ன்னுனு கற்று தரம் காட்சியை ஒருமுறை பாருங்களேன் மாயாசார்...
   லேட்டஸ்ட் எ ஏ...பி பீ..சி சீ..ன்னு மதராஸ்பபட்டினம் படத்தில் படிப்பதையும் பாருங்களேன்...

   Delete
  6. நான் என்னநினைச்சேன்னா...

   வடிவேலுகாமெடியில "சுனா பானா..சுனா பானா ன்னு ஒருத்தர் இருந்தாரு.." ன்னு ஒருடயலாக் வரும்,அதை பேஸ்பண்ணி இப்படி எழுத்தறாங்களா..?? இதுஏதோ கிண்டல் சமாசரம்ன்னு நினைச்சேன்...ஹாஹாஹா..!

   ஆனாக்க டெக்ஸ் நீங்க சொன்ன காரணம் சரிதானா..???

   Delete
  7. நீங்கள் நினைச்சதும் சரிதான்...
   அந்த படத்தில் அவர் பேரு,
   சுப்பையா பாண்டி..
   அந்த முதல் எழுத்துக்களை தமிழ் வழக்கப்படி சுனா பானா -ன்னு சொல்லிக்குவாரு...க்ளைமேக்ஸில் அவுங்க வீட்டம்மா வாய் வாயா குத்தும் பாருங்கள்,டெக்ஸ்க்கு அந்த அம்மா தூரத்து சொந்தம்னு நினைக்கிறேன்...

   Delete
  8. வேதாளரே,
   இந்த கேள்வியை இங்கே கேட்ட சில நிமிடங்களில் உங்க வாட்ஸ்அப்பை பார்த்திருந்தால் இவ்வளவு நீட்டியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.!!!

   என்னம்மா நீங்க? இப்பிடி பண்ணிட்டீங்களேம்மா!!??? :-)

   Delete
  9. @ கோடையிடி கிட்

   ம்....என்னபண்ணா..???? கூட்டுகுடும்பமா இருந்த வாட்ஸ்ஆப்வீட்டுல லவ் பண்ணின ஒரு குத்ததுக்காக ஊரை விட்டு ஒதுக்கிவெச்சிட்டிங்களே...[தமாஸு ..தமாஸு..]

   ஆகா அந்த அனா ஆவன்னா ஆரம்பிச்சு வெச்சதே கன்னிபையன் நீங்கதானா...ஹஹஹா...[கிட் முதுகில் செரிப் உப்புமூட்டை ஏறி சிரிக்கும் படங்கள் நான்கு..]

   Delete
  10. /// கன்னிபையன் நீங்கதானா...ஹஹஹா.///

   ங்ஙே!!! வேதாளரே,

   கன்னிப்பையன்னு கார்சனை சொன்னேன் என்னையில்லை.
   என்னை சின்னப்பையன்னு வேண்ணா சொல்லலாம்.! :-)

   Delete
 57. facebook live என்ற புதிய வசதி வந்துள்ளது. ஈரோடு புத்தக திருவிழாவில் நம்ம எடி இந்த வசதியை பயன்படுத்தி வாசகர்களுடன் ஒரு அரைமணிநேரம் உரையாடலாமே? புத்தககண்காட்சியில் கலந்துகொள்ள முடியாத வாசகர்களுக்கும், ஆசிரியருக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும், மேலும் புத்தகவெளியீட்டில் கலந்துகொண்டு அங்கு வந்த நண்பர்களையும் பார்த்து போல இருக்கும். :)

  ReplyDelete
  Replies
  1. அட கடவுளே...அப்போ facebook ல சிவகுமார் [ரஜினி தாடி வெச்ச படம்] கிற பேர்ல இருக்குறவர் நீங்க தானா cap tiger..???

   அப்போ இங்க சிவகுமார் [பஞ்சசவர்ண கிளி படம்] கிறது வேறையா...??? கிரர்ர்ர்ரர்ர்ர்ர்....பகவானே யாரு யாருக்கு ஜோடின்னே தெரியமாட்டேங்குதே...

   Delete
 58. எனது சந்தா எண்: 194

  ReplyDelete
  Replies
  1. நல்ல நம்பர்தான் ரவி. கூட்டுத்தொகை 5 வருது நியூமராலஜி படி. 5ஆம் எண் அனைவருடனும் நல்லா அட்ஜஸ்ட் செஞ்சிக்கும்.

   எதுக்காக சந்தா எண்ணை குறிப்பிடுகிறீர்கள் அய்யா???
   ஹிஹிஹி!!!

   (வெறுமேனே சந்தா எண்ணை மட்டும் சொன்னால் ஜோசியம் பார்ப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும்) :-)

   Delete
  2. @ கோடையிடி கிட்
   அப்போ எடிட்டரோட பதிவே படிக்காம...கமெண்ட்ஸ் மட்டுமே போடுறாப்புல தெரியுதே...

   Delete
  3. நம்ம கண்ணன் டைமிங்ல ரைமிங்கா அடிக்கிறாராம் மாயாவி ஜி.
   ஹா ஹா ஹா.

   Delete
 59. நமது லயன் பதினைந்து வருடத்துக்கு முந்தையஇதழ்கள் (கோடைமலர்கள் உள்பட) 30,
  முத்துகாமிக்ஸ் 1980க்கு முந்தைய இதழ்கள் 34,
  மாலைமதி AFI காமிக்ஸ் 7,
  மேத்தா காமிக்ஸ் 3,
  மேகலா காமிக்ஸ் 4,
  ராணி காமிக்ஸ் 23,
  அமர் சித்ர காமிக்ஸ் 10,
  கல்கியில் தொடராக 1960 களில் வந்த காமிக்ஸ்கள் பைண்டிங் பண்ணியது 5,
  கோகுலத்தில் தொடராக வந்த வாண்டுமாமா காமிக்ஸ்கள் பைண்டிங் பண்ணியது 6,
  TARZAN ஆங்கிலத்தில் வண்ணத்தில் பெரிய சைசில் 15,
  வேதாளர், மான்ரேக் வண்ணத்தில் ஆங்கிலத்தில் பெரிய சைசில் 4,
  பொன்னி காமிக்ஸ் 5,
  வாசு காமிக்ஸ் 2,
  திகில் காமிக்ஸ் 5,
  இந்திரஜால் காமிக்ஸ் 5,
  முத்து மினி காமிக்ஸ் 4,
  பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் தொடர்கள் கல்கியில் வந்ததை பைண்டிங் செய்தது,
  குமுதத்தில் 1970களில் தொடராக வெளியான மர்ம தொடர்கள் 3,
  கல்கியில் வெளியான சுழிக்காற்று என்ற சூப்பர் த்ரில்லர் பைண்டிங்குடன், தமிழ்வாணன் கதைகள் கல்கண்டில் வந்தவை பைண்டிங் செய்தது 11,
  குமுதத்தில் வெளியான பட்டாம்பூச்சி கதை(தலையணை சைசில் 800 பக்கங்களை தாண்டும் )குண்டு புத்தகம்,
  சுஜாதா தொடர்கள் குமுதத்தில் வந்தது பைண்டிங் பண்ணியது 3 இவை அத்தனையும் ₹1500 தான்!
  ஆச்சர்யமாக இல்லை!! சுனாமியின் போது என்னுடைய அத்தனை காமிக்ஸ்களும் பறிபோனதால் எங்கள் ஊர் பழைய புத்தக கடைகள் மற்றும் எந்த ஊருக்கு போனாலும் அங்கும் பழைய புத்தக கடைகளை தேடி ஓய்ந்துபோன நான் ஆறு மாதத்திற்கு முன் ஒருநாள் வியாபாரிகளை தேடிப்போவதை விட அவர்களுக்கு சப்ளை
  பண்ணுபவர்களை பிடித்தால் என்ன என்ற யோசனையில் தெருவில் பழைய பேப்பர் வாங்கும் 3 நபர்களை அணுகி தலா ₹100 கொடுத்து எனது மொபைல் என்னையும் கொடுத்து காமிக்ஸ் கிடைக்கும் போது என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறி பின் மறந்தும் விட்டேன்.
  நேற்று காலை 6 மணிக்கு மூவரில் ஒருவர் அழைக்கிறார். ₹1500 தயாராக வைத்திருங்கள் வீட்டுக்கு 10 மணியளவில் வருகிறேன் என்று கூற நான் சரி ஏதோ கிழிந்து போன புத்தகத்தை கொண்டு வருவார் என அலட்சியமாக காத்திருக்க ஒரு ஏர்கூலர் பெட்டியில் அத்தனையும் கொஞ்சம் கூட கசங்காத பொக்கிஷங்கள். இன்ப அதிர்ச்சியில் அவர் சொன்ன பணத்துடன் கூட ஒரு 100ஐயும் கொடுத்து அனுப்பினேன். (அடுத்த வேட்டைக்கு அட்வான்ஸ்!!) பழைய காமிக்ஸ் வேட்டையில் உள்ள நண்பர்கள் இந்த வழியில் முயற்சிக்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் சாரே.

   Delete
  2. வாழ்த்துகள் திரு.ATR சார்!

   நானும் அதே மாதிரி 3 பேரை பிடிக்கிறேன்...
   தலா 100 ரூபாய் கொடுக்கிறேன்...
   எனக்குன்னு ஒரு ஏர்கூலர் பெட்டி இல்லாமலா போயிடும்? :P

   Delete
  3. /// ஒரு ஏர்கூலர் பெட்டியில் அத்தனையும் கொஞ்சம் கூட கசங்காத பொக்கிஷங்கள்///

   மாதாமாதம் வாங்கும் புத்தகங்களை எங்கே வைத்தால் கசங்காமல் பாதுகாக்க முடியும்?- என்ற குழப்பத்தில் இருந்தேன்! இன்று சரியான தீர்வு கிடைத்துவிட்டது!
   நன்றிகள் திரு.ATR சார்!

   Delete
  4. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பூனையாரே.

   Delete
  5. Ravi சார்...
   வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் பொக்கிஷங்கள் கிட்டியான பின்னே அதிலுள்ள அட்டையில்லாத புத்தகங்களை... ம்... வேணாம் வேணாம்... புத்தகங்களில்லாத அட்டைகளை பரிசாகக் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறேன்!! அட்வான்ஸ் வாழ்த்துகள்!! ;)

   Delete
  6. ஞே,அத நம்ம தலைவருக்கு பரிசா கொடுத்துடுங்க.ஹி,ஹி.

   Delete  7. " கண்ணா ஏடிஆருக்கு கிடைச்சுருச்சூ லட்டு "


   " கண்ணா ஈனா வினா விற்கு கிடைக்க போகுது லட்டு "

   Delete
  8. @ M.V சார்

   திரு.ATR அவர்களுக்கு கிடைச்ச அதே லட்டுகூட எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கில்லையா? ;)

   Delete
  9. நானும் நம்பர்களை பார்த்து நம்ப சந்தாவில் இல்லாத புத்தகத்திற்கு மார்க் போடறீங்களேனு நினைச்சேன் ATR. இப்படி பதிவு போட்டு வயித்தில் ஜெலுசில் உத்தவைக்காதீங்க நண்பரே ;P

   இந்த Never before special யாராவது Spare விற்பனைக்கு இருந்தால் ஒரு கமெண்ட் என்னுடைய profileல் இடுங்கள் அன்பர்களே.

   Delete
  10. EV://அதே லட்டுகூட எனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கில்லையா? ;)//

   பூனை கிட்ட இருந்து லட்டு பத்திரம் ;P

   Delete
  11. Sathishkumar S இந்த பொக்கிஷங்களுக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன் தெரியுமா? இவைகளெல்லாம் லட்டுகள் அல்ல! இழந்த நம் உறவினர்கள். திரும்ப என்னிடம் வந்து சேர்ந்திருக்கின்றனர்.
   எப்போது எனக்கு ஒரே புத்தகம் இரண்டாவது முறையாக மறுபடி கிடைத்தாலும் அப்போது பதிவில் தெரிவிக்கிறேன். தேவைப்படுவோர் இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம். ஆனால்-
   அது எப்போது என்பதற்கு என்னிடம் விடையில்லை.

   Delete
  12. //திரும்ப என்னிடம் வந்து சேர்ந்திருக்கின்றனர். //

   :)

   உங்களின் தேடல் நிறைவு பெற்றது குறித்து மகிழ்ச்சி நண்பரே!

   Delete
  13. நண்பரே தேடல் நிறைவு பெறவில்லை.தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. நமது காமிக்ஸில் இதுவரை வெளியானது எத்தனை?
   ஆனால் எனக்கு கிடைத்தது எத்தனை என்று பார்த்தாலே தேடல் நிறைவு பெறவில்லை எனத் தெரியுமே தோழரே.

   Delete
 60. இந்த மாத இதழ்கள்,
  1.ரிப்போர்ட்டர் ஜானி - 09/10
  2.கேப்டன் ப்ரின்ஸ் - 08/10
  3.கோடியும் ஒரு கேடியும் - 09/10
  4.டெக்ஸ் - 07/10
  5.பெட்டி பார்னோவ்ஸ்கி - 07/10
  6.மாயாவி - 07/10

  ReplyDelete
 61. இந்த மாத இதழ்கள்......................

  ஆண்டுமலர்

  1.நேற்றும் இன்றும்.............செம விறுவிறுப்பான கதை...இறுதி ட்விஸ்ட் ஆகா ரகம்..

  2.கேப்டன் பிரின்ஸ்...........பில்லர் ரகமாக வேறு இதழ்களில் வந்து இருக்கலாம் என தோன்றியது

  ஸாரி....ஆண்டு மலரில் இடம் பெற்று இருக்க வேண்டாம்....மற்றபடி கதைகள் ஓகே ரகம்...

  3... பெட்டி பார்னோஸ்கி.....இந்த வகை ஸ்பின் ஆப் கதைகளில் கதாபாத்திரத்தின் பின்புலம் முக்கியம் என்பதால் சொல்லப்பட்ட விதம் அருமை..................

  B. கோடியும் ஒரு கேடியும்......சிரிப்பு தோரணம் ....கடைசி பேனலில் பெண்டுலத்தார் எஸ்கேப் ஆவது செம சிரிப்பு வெடி..........

  C. குற்றம் பார்க்கின்..............மற்றுமோர் முறை ஒரு இயல்பான குற்ற சம்பவ இடத்தில் டெக்ஸ் அழகாக பொறுந்தி வருகிறார்............தலைப்பு பொருத்தம்தானா????. அல்லது குற்றம் PARK-IN -ஆ?????

  D.இமயத்தில் மாயாவி.......இளம் வயதில் படித்து இருந்தால்....பனிமனிதர்கள் பற்றிய தீக்கனவுகள் வந்து இருக்கும்....இப்போதும் படிக்க அருமைதான்....

  ReplyDelete
  Replies
  1. ///..தலைப்பு பொருத்தம்தானா????. அல்லது குற்றம் PARK-IN -ஆ?????//

   That's why we love u செனா!!!!

   Delete
  2. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்ற பழமொழியை ஞாபகப்படுத்தும் தலைப்பு. இன்னும் புத்தகம் வாங்கவில்லை. நாளைக்குத்தான் டைம் இருக்கிறது. கடைக்கு போய் 5 புத்ததகங்களையும் வாங்கி படிக்க வேண்டும்.

   Delete
 62. மினி பார்வை :
  1. ரிப்போர்ட்டர் ஜானி - வழக்கம்போல் தலையை சுற்றி மூக்கை தொடும் களம்,கணிக்க முடியாத வில்லன்,சுவராஸ்யமான,சவாலான வாசிப்புக்கு உத்தரவாதம் அளித்தது.
  2. கேப்டன் ப்ரின்ஸ் - குட்டி குட்டி சிறுகதைகள்,பிரின்ஸ் அணியினரின் கூட்டணி அமைந்த விதம் பற்றிய பின்னணியை பற்றி தெரிந்து கொள்ள உதவியது.
  3. கோடியும் ஒரு கேடியும் - சிரிப்பு மருந்துக்கு உத்தரவாதம்,இனி வரும் சிக் பில்-கிட் ஆர்டின் கதைகளுக்கு ஆர்வத்தை கிளப்பியுள்ளது,
  4. டெக்ஸ் - ரசிக்கும்படியான சித்திரங்கள்,கதைக்களம்,நல்ல மொழிபெயர்ப்பு,ஆனால் இந்த கதையில் டெக்ஸ் வில்லருக்கு பதிலா வேற யாரோ டூப் போட்ருக்காங்க,
  5. பெட்டி பார்னோவ்ஸ்கி - அசத்தலான படங்கள், மற்றபடி கதைக்களம் எந்த ஆர்வத்தையும் கிளப்பவில்லை, கிட்டத்தட்ட ஒரு சோக காவியத்தை ஒட்டி இருந்தாற்போல ஒரு உணர்வு, XIII யின் வெற்றியை கருத்தில்கொண்டு விற்பனையை மையமாக கொண்டே இந்த படைப்பை ஒரிஜினல் படைப்பாளிகள் வெளியிட்டார் போல தோன்றுகிறது.
  6.மாயாவி - படிக்காத இதழை படித்த திருப்தி.

  ReplyDelete
  Replies
  1. அறிவரசு ரவி@

   சுருக்கமாக திருக்குறள் மாதிரி இரண்டு அடிகளில் சொல்லீட்டீங்க .! சூப்பர்.!

   Delete
 63. மதிப்பெண்கள் தானே இனி சகலமும்...
  ஆண்டுமலர்32
  1.ரிப்போர்ட்டர் ஜானி - 8/10
  2.கேப்டன் ப்ரின்ஸ் -7/10
  3.பெட்டி-5/10
  4.குற்றம் பார்க்கின்...8/10
  5.கோடியும் ஒரு கேடியும் - 09/10

  அன்டு த வின்னர் ஈஸ்-டாக்புல் கோஷ்டி...

  ReplyDelete
 64. 1.குற்றம் பார்க்கின் 10/10
  2.கோடியும் ஒரு கேடியும்- 9/10
  3.நிழல்1நிஜம்2.9/10
  4.ஜானி -8/10
  5.பிரின்ஸ் -7/10
  6.பெட்டி -5/10
  7.இமயத்தில் மாயாவி 9/10

  ReplyDelete