Powered By Blogger

Sunday, December 13, 2015

நானும் திரும்பிப் பார்க்கலாமா ..?

நண்பர்களே,
            
வணக்கம். இயற்கையின் சீற்றத்தைப் பற்றி ஆயிரமாயிரம் பக்கங்கள் எழுதப்பட்டுள்ள நிலையில் சேதத்தின் வலிகளை; இழப்புகளின் கிரயங்களை மதிப்பீடு செய்யும் வேளை புலர்ந்து வருகிறது ! தேசமே உதவிக்கரம் நீட்டிடத் தயாராக உள்ள போதிலும் அதற்காகக் காத்திராமல் நம் இளைய தலைமுறை செய்து வரும் களப்பணிகளின் நிஜப் பரிமாணத்தை நிச்சயமாய் வரலாறு மறக்காது! And நேற்று வரை மான்களையும், மயில்களையும் ரவுண்ட் கட்டி சூப்பர் சிங்கர்களாகவும்; முதல் தர ஜோடிகளாகவும் வலம் வரச் செய்த சானெல்களும் ; சந்தைக்கடையை நினைவுபடுத்தும் செயற்கையான; சத்தமான விவாத மேடைகளின் கர்த்தாக்களாய் இருந்து வந்தோர்களும் ஒற்றை நொடியினில் உயிர் காக்கும் உன்னதப் பொறுப்புகளைக் கையில் எடுத்தது நிச்சயம் ஈர மனதுகளின் வெளிப்பாடுகளே! எல்லாவற்றிற்கும் மேலாக சமூக வலைத்தளங்கள்?!!! அப்பாடி!!! கலாய்த்தல்களுக்கும்; ஜாலியான சேதிப் பரிமாற்றங்களுக்கும் மட்டுமே இவை சரிப்படும் என்று மேம்போக்காக எண்ணியிருந்த என் போன்ற எண்ணற்றோருக்கு இம்முறை அரங்கேறிய “சமூகதள விஸ்வரூபம் ஒரு அசாத்தியக் கற்றிடும் அனுபவம்! நிஜமானதொரு தேவை உதயம் கண்டிடும் போது அடையாறு ஆற்றை விடச் சீற்றமாய் மனிதநேயம் எழுந்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக முன்னுக்கு வருவதை உணர்ந்த போது இந்த மீடியத்தின் வலிமையை எண்ணி நிஜமாய் சிலிர்ப்பாக இருந்தது! “Hats off; Great job; Standing ovation” என்ற தேய்ந்து போன சொற்றொடர்களுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப அப்பால் நிற்கக்கூடிய வார்த்தைகள் இங்கே அத்தியாவசியம் என்பேன்! உலகின் அத்தனை வணக்கங்களும் உரித்தாகட்டும் அந்த ஆற்றலாளர்கள் அனைவருக்கும்!! இது போன்ற நிஜமான அர்த்தம் கொண்ட சமூக உதவிகளுக்குக் காரணகர்த்தாவாக இருக்கத் தெரியாத கத்துக்குட்டியாய் நான் சுற்றி வந்தாலும் ஏதோவொரு சிறுவிதத்தில் நானும் கூட வலிய இந்த சமூகவலைப் பின்னலின் ஒரு துக்கடா அங்கம் என்ற சந்தோஷத்தோடே இந்த வாரத்தினுள் நுழைகிறேன்! 

2015 திரும்பிப் பார்க்கும் நேரமிது என்ற தலைப்போடு கேள்விகளை உங்கள் முன் வைத்திருந்தேன்! இதே போன்ற review முயற்சிகள் 2013-ன் இறுதியிலும்; 2014-ன் டிசம்பரிலும் நாம் செய்திருந்த போதிலும் சென்றாண்டு உங்களில் பலர் அதனில் பங்கெடுக்க ஆர்வம் காட்டியிருக்கவில்லை! ஆனால் surprise... surprise!! இம்முறை இங்கே வலைப்பதிவினில் நமது ரெகுலரான நண்பர்களும்; மின்னஞ்சல்களில் நமது மௌன நண்பர்களும் / வலைக்கு அப்பாலான நண்பர்களும் தூள் கிளப்பியுள்ளனர்!! அதே போல நம்ப முடியாததொரு ஆச்சர்யம் இந்த வாரம் முழுவதும் சென்னை வாசகர்களும் சரி; பரவலான மற்ற மாவட்டத்து வாசகர்களும் சரி சுட்டி லக்கியின் கவணின் வேகத்திற்கு ஈடாக சந்தாக்களைப் புதுப்பித்து வருகின்றனர் !! எரியும் வீட்டில் ஈட்டிக்காரனைப் போல நிற்க வேண்டாமே என்ற ஆதங்கத்தில் கடந்த ஞாயிறின் பதிவினில் சந்தாக்கள் பற்றி நான் வாயே திறந்திருக்கவில்லை ! ஆனால் டிசம்பர் இதழ்கள் கிடைக்கக் கிடைக்க - சந்தா எக்ஸ்பிரஸ் தானாகவே வேகம் பிடிக்கத் துவங்கி விட்டது ! ஜனவரி 2016-ன் சென்னைப் புத்தக விழாவானது ஏப்ரல் 2016-க்கு இடம்பெயர்கிறது எனும் போது நமக்குக் குடிநீராய் இருந்து வரும் “சென்னை விற்பனை தள்ளிப் போவதால் உங்கள் சந்தாக்கள் எப்போதையும் விட இப்போது precious ஆகத் தோன்றுகின்றன! And தற்போதைய உங்கள் வேகத்தைப் பார்க்கும் போது“பயம் கொள்ளத் தேவையே இல்லை! என்பது புரிகிறது ! Thank you ever so much all!

2015-ன் திரும்பிப் பார்த்திடும உங்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளன! அதன் consolidated வடிவத்தை பிப்ரவரியின் இதழ்களில் வெளியிடுவது தான் முறையாக இருக்குமென்று நினைக்கிறேன் simply becos டிசம்பர் இதழ்கள் இன்னமும் அனைவரது கைகளையும் எட்டிப் பிடிக்கவில்லை. So- எல்லோரது விமர்சனங்களுக்கும் அவகாசம் தந்திடுவோமே!! இப்போது தொடரப் போவதோ  ‘எடிட்டர்‘+ வாசகன்‘ என்ற குல்லாக்களை ஒருசேர அணிந்து கொண்டு கடந்து சென்ற 12 மாதங்களையும் அந்த 36 இதழ்களையும் பார்வையிட முயன்றிடும் ஒரு பதிவு ! So, எனது 11 கேள்விகளுக்கான பதில்களாக இல்லாது கடந்த 11 மாதங்களின் overall பார்வையாக இதைப் பார்த்திடக் கோருகிறேன்!

Without a doubt 2015-ன் ஜனவரி பல விதங்களில் ஒரு மறக்க இயலா மாதம்! லக்கி லூக்கின் “ஒரு ஜென்டில்மேனின் கதை ஆட்டத்தைத் துவங்கி வைத்தது நினைவிருக்கலாம்! இதழ் வெளியானது என்னவோ ஜனவரியில் என்ற போதிலும் இதன் பின்னணிப் பணிகள் 2014 அக்டோபரிலேயே ஆரம்பித்திருந்தன! நிஜத்தைச் சொல்வதானால் Shadows of the Derricks” என்றதொரு லக்கி சாகஸமே 2015-க்கென நான் முதலில் shortlist செய்திருந்தேன்! ஆனால் கடைசி நிமிட மனமாற்றத்தின் காரணமாய் பேட்டியின் வெள்ளைக்கார மருமானோடு நமது ஜனவரி துவங்கியது! காரைக்குடியில் கானாடுகாத்தான் அரண்மனைக்கு எதிரேயுள்ளதொரு குளக்கரையில் அமர்ந்து ஒரு அதிகாலையில் இந்த ஜென்டில்மேனை நான் எழுதத் தொடங்கியது நேற்றுப் போல நினைவில் ‘பளிச்‘! ஜாலியான கதைக்களம் – for a change – கதையின் நிஜ நாயகனாக வலம் வந்தது அந்த சீமைத்துரை தான் என்ற காரணங்களால் எனக்கு இந்தக் கதை மீதொரு மையல்! (And அந்த “ஜீஜீலிப்பா“ சமாச்சாரத்துக்கு நன்றி சொல்ல வேண்டியது நமது கவுண்டருக்கே!! பிரபுவோடு அவர் நடித்திருநத ஏதோவொரு படத்தில் அந்தச் சமயமாக இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்க முடிந்தது!) இந்த இதழுக்கு எனது மார்க் 7/10.

And ஜனவரியின் கார்ட்டூன் கதை # 2 கூட எனக்கு ரொம்பவே பிடித்ததொரு இதழ் ! ப்ளுகோட்ஸ்பட்டாளக் கதைவரிசையினில் Cinebooks கூட “சிறைக்குள் ஒரு சடுகுடு“ இதழைத் தான் முதலாவதாக தேர்வு செய்திருந்தனர் எனும் போது எனக்கென்னவோ “ஆகாயத்தில் அட்டகாசம்“ அதை விட சூப்பராக அமைந்திருந்தது போலத் தோன்றியதால் சிறையில் சடுகுடு நமது இதழ் வரிசையின் பின்னுக்குச் சென்றது! சந்தேகமின்றி இந்த இதழின் முதல் attraction என்று நான் நினைப்பது நமது டிசைனர் பொன்னனின் அட்டைப்படம்தான்! ஒரிஜினலின் அதே ஓவியம் தானென்ற போதிலும் நம்மாள் improve செய்து தயாரித்தது இரண்டே டிசைன்கள்! அவற்றில் சிகப்புப் பின்னணி பார்த்த நொடியே பிடித்துப் போனதால் தேர்வானது! இதோ போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்த டிசைன்! கதையைப் பொறுத்த வரை இதனையும் ரொம்பவே ரசித்தே தான் எழுதினேன் என்பது நினைவுள்ளது! இதழ் சோடை போகவில்லை என்றாலும் லேசான அதிருப்திக் குரல்களும் ப்ளுகோட்சைக் சுற்றியடிக்கத் தொடங்கியது ஜனவரியில் தான் ! 6.5/10 என் பார்வையில்!
ஜனவரியில் என் முதுகைப் பளபளபாக்கிய புண்ணியம் நமது இளவரசி அம்மையாரின் கைங்கர்யமே! “நிழலோடு நிஜயுத்தம் கதையினை நமது DTP அணியினரைக் கொண்டு பணியாற்றுவதில் நேர்ந்த சொதப்பல்கள்; and ஓவியர் நெவில் காலின்ஸின் கீச்சல் ரகச் சித்திரங்கள் ஒன்று சேர்ந்த போது பலனாகிது தர்ம அடி தான்! நமது கருணையானந்தத்தின் அடிததளத்தின் மீது மாடஸ்டி & கார்வினின் டயலாக்குகளைப் பதித்தது நான் தான் என்பதும், கதை decent ஆனதொன்று தான் என்பதும் நினைவில் நின்றாலும் சடுதியில் நான் மறக்க விரும்புமொரு இதழ் இதுவென்பதில் ஐயமில்லை! மார்க்? 4/10 போட்டுக் கொள்ளலாமா ?! இக்கட ஒரு கொசுறு தகவல்! இது தான் அன்றைக்குத் தயாரான ஒரிஜினல் front & back கவர்! பின்னட்டை பிரமாதமாகக் காட்சி தந்ததால் அதையே அடுத்த மாடஸ்டிக்கு முன்ராப்பராக்கிடலாமெனத் தீர்மானித்தேன்! பாருங்களேன்!

ஜனவரியின் highlight மட்டுமின்றி இந்தாண்டின் ஒரு மறக்க இயலா அங்கமாகவும் இருந்தது அங்கஹீனனான நமது “பௌன்சர்“ தான் என்பதை நான் சொல்லவும் தேவையா? 2014-ன் ஆகஸ்டிலேயே இவரது உரிமையை “விடாதே... பிடி...“ என்று விரட்டோ விரட்டாய் தேடிப் பிடித்து வாங்கி விட்ட போதிலும் அந்த நாள் முதல் நான் வீட்டில் என் எழுத்து மேஜையினில் அமரும் சமயமெல்லாம் ‘மலையூர் மம்பட்டியான்‘ போல ஒரு போர்வையைப் போர்த்திக் கொள்ளாத குறை தான்! “கதைகளை வாங்கியாச்சு... ஆனால் இவற்றுக்கு மாமூலான நமது ஸ்டைலில் கத்திரி போட முடியாது"  எனும் போது டப்பா தாண்டவமாடியது; மரியாதைகளின் எல்லைகளை மீறாது இந்த இதழினை உங்களிடம் கொண்டு சேர்ப்பது எவ்விதமென்ற குழப்பத்தில் நித்தமும் சித்த நேரம் குளிர் ஜூரம் பீடிப்பதே வாடிக்கை ! மிகப் powerful ஆன கதைக்களம் எனும் போது அதனை நீர்த்துப் போகச் செயவதற்கு பயம்! க்ரீன் மேனர்களும்; தேவ இரகசியங்களும் தந்திருந்த தைரியமானது என்னை உந்திக் கொண்டு சென்றது! And ஜனவரியின் புத்தக விழாவின் சமயம் இதனை டி.வி.யில் வெளியிடலாமா? என நண்பர் விஸவா கேட்ட போது என் பயம் இருமடங்கானது! ஓவராய் நான் கொடுத்து வைத்திருந்த பில்டப் ஒருபக்கமிருக்க; டி.வி. விளம்பரம் இத்யாதிகள் இன்னும் கொஞ்சம் எதிர்பார்ப்புகளை அதிகம் பண்ணி வைத்து இதழ் அவற்றிற்கு நியாயம் செய்யாது போனால் சிரிப்பாய் சிரித்துப் போவோமே என்ற பீதி தான்! ஆனால் கதையின் வலிமையும்; ஓவியங்களின் துல்லியமும் என் கஷ்டங்களைப் பெருமளவு மட்டுப்படுத்திட இந்த இதழ் நமது பட்டியலுள் one of the most talked about இதழாக மிளிர்ந்தது மறக்க இயலா அனுபவம் ! அது மட்டுமின்றி முதல் இதழைப் பெற்றுக் கொண்ட மதிப்பிற்குரிய மூத்த ஓவியர் திரு.மணியம் செல்வன் அவர்கள் “வாய்ப்புக் கிட்டும் போது ஏதேனும் ஒரு சிறுகதைக்கு நான் சித்திரங்கள் போட்டுத் தருகிறேன்! என்று சொன்ன தருணம் - icing on the cake! பௌன்சரின் ரௌத்திரம் - நமக்கு சந்தோஷம்! 8/10 என் பார்வையில்!
And lest I forget – ஜனவரியின் இன்னுமொரு உச்சநொடி கரெண்ட் துவாரங்களைத் தேடித் திரியும் நமது இரும்புக்கையாரின் மறுபதிப்பின் முதல் இதழ் புத்தம் புதிய format-ல்! “நயாகராவில் மாயாவி“ மறுபதிப்புக் கண்டிரா இதழ் என்பதோடு; புத்தகவிழாவின் பழமை விரும்பிகளுக்குக் குதூகலம் தந்த இதழ் என்ற முறையில் விற்பனையில் அதகளம் செய்திருந்தது! என் நினைவு பிசகாதிருப்பின் இந்த இதழ் மட்டுமே சென்னைப் புத்தக விழாவில் 1500+ விற்பனை கண்டது! மார்க் போடப்படும் நிலைகளைத் தாண்டியவர் நமது இரும்புக்கரத்தார் என்பதால் புன்னகையோடு தாண்டிச் செல்கிறேன்! And – அதே நிலை தான் நமது கூர்மண்டையர் ஸ்பைடரின் மறுபதிப்புக்கும்! A big thumbs up!

திரும்பிப் பார்க்கையில், ஜனவரியின் அசாத்திய momentum-களை பிப்ரவரியில் நாம் தக்கச் செய்யத் தவறிவிட்டோம் என்பேன்! இரத்தப் படலம் (அம்பின் பாதையில்) அற்புத சித்திரங்கள்; சுறுசுறுப்பான கதைக்களம் என்று இருந்தாலும் காலாவதியான மெகா சீரியலின் உணர்வைத் தான் தந்தது என்பேன் at least எனக்காவது! சென்ற முறையே இந்தக் கேள்வியை எழுப்பியிருந்த போதிலும் நமது ஞாபகமறதிக்கார நண்பரின் ரசிகர்கள் சினம் கொண்டெழுந்ததது மறக்கவில்லை தான்! But – பாகம் 18; அந்த ஜனாதிபதிக் கொலையின் பின்னணிகள் என்ற முடிச்சுகளுக்குப் பின்பாக – இந்த mayflower ரூட்டில் கதையை நகர்த்திச் செல்லும் படைப்பாளிகளின் லாஜிக்கைப் புரிந்து கொள்ள முடியவில்லை! May be – காத்திருக்கும் இறுதி பாகம் அந்தக் கேள்விக்குறிக்குப் பதில் தருமோ – என்னவோ?! என் பார்வையில் 5.5/10 நிச்சயமாய் XIII காதலர்களின் ஒப்புதல் இராது என்பது தெரியும் தான் – but இது எனது தனிப்பட்ட அப்பிராயம்!
இப்போது விற்பனையில்...Black & White இதழாக..!
பிப்ரவரியில் ஷெல்டன் சாகஸம் என்னைப் பொறுத்த வரை சுவாரஸ்யமே! One shot கதை எனும் போது கிடைக்கும் 44 பக்கக் கேன்வாசிலேயே கதாசிரியர் பயணிக்க முடியும் எனும் போது – சமீபத்தைய “வரலாறும்... வல்லூறும் போல ஆழமாய் பின்னணிகளைத் தயார் செய்வது சாத்தியமாகாது! So- ‘நறுக்‘என்ற ஆக்ஷன் கலவையில் உருவாக்கப்பட்ட இந்த சாகஸத்திற்கு என் பார்வையில் 6.5/10! மீசைக்காரரின் முந்தைய இதழ்களோடு ஒப்பிடாமல் – “ஆதலினால் காதல் கொள்ளாதீர்” இதழை மட்டுமே என் மனக்கண்ணில் நிறுத்தினேன்! 
மார்ச் மாதம் ஒரு mixed bag என்று சொல்லத் தோன்றுகிறது! C.I.D. ராபினின் சாகஸமான “எத்தர்களின் எல்லை” அழகாய்; crisp ஆன சித்திரங்களோடு நம்மை நிமிர்ந்து பார்க்கச் செய்த black & white இதழ்! நுணுக்கமான துப்பறியும் முடிச்சுகளெல்லாம் இல்லாது – ஒரு தெளிவான கதையாக இது அமைந்ததை ப்ளஸ்ஸாகவும் பார்த்திடலாம்; மைனசாகவும் பார்த்திடலாம் ; ஆனால் ஒரு எடிட்டருக்கு இது போன்ற கதைகள் ‘ரஸ்க் சாப்பிடுவது‘ போன்ற சுலபமான / சுவையான அனுபவம் எனும் போது – 7/10 என் மதிப்பீடு!

மார்ச்சின் தடுமாற்றம் நமது மார்ஷல் டைகரின் பொருட்டே என்று சொல்லலாம்! வான்சின் சூப்பர் சித்திரங்களைத் தாண்டி – சொல்லிக் கொள்ளும் விதமாய் நிறைய positves "வேங்கைக்கு முடிவுரையா ?"  இதழில் இல்லை என்பது தான் வார்னிஷ் பூசாத நிஜம்! டைகரின் ரசிகர்கள் அருகிலுள்ள துடைப்பங்களைத் தேடுவது என் மனக்கண்ணில் அகலமாய் விரிந்தாலும் – அவர்களும் கூட என் அபிப்பிராயத்தை உள்ளுக்குள் வழிமொழிந்திடக் கூடும்! எனது மதிப்பெண்கள் 5.5/10!

தடுமாற்றம் சுமாரான கதைக்களத்தின் காரணமாய் ஒரு பக்கமெனில் – அனல்பறக்கும் ஒரு கதையின் பொருட்டு வேறு விதமான தடுமாற்றமும் மார்ச்சினில்! இம்முறையும் அதன் காரணகர்த்தா திருவாளர் பௌன்சரே! “சர்ப்பங்களின் சாபம்” yet another பௌன்சர் அதகளம்! கதைக்குத் தொடர்பிலா ஒரு adults only பக்கத்தை ஒட்டுமொத்தமாய் நீக்கிட கதாசிரியர் சம்மதித்து விட்ட போதிலும் – ஓவியர் நிறைய யோசனைக்குப் பின்பே ஓ.கே. சொன்னார்! கத்தி மேல் நடப்பது போன்ற அனுபவம்; மொழிபெயர்ப்பில் தினம்தோறும் செய்த ஓராயிரம் அடித்தம் திருத்தங்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக – வித்தியாசமான இதன் கலரிங் பாணிகளை நமது அச்சுப் பிரிவில் match செய்திட அடித்த அந்தர்பல்டிகள் என்று நினைவில் நிற்க இந்த இதழ் நிறையக் காரணங்களைத் தந்தது! “ஐயோ... சாமி! இதெல்லாம் தேவை தானா?” என்ற ரீதியில் குரல்கள் எழுந்தாலும் – பௌன்சரின் உக்கிரத்துக்கு மதிமயங்காதோர் சொற்பமே என்று சொல்லுவேன்! “இது சரி... தவறு‘ என்ற சர்ச்சைகளுக்குள் தலைநுழைக்காமல் இந்த இதழின் overall performanceக்கு 8/10 தருவேன்!

ஏப்ரல் 2015 – ஒரு மைல்கல் மாதம் – நமது பயணத்தில் என்ற சொல்வதில் மிகை ஏதுமிராது என்ற தைரியம் எனக்குள்ளது! லார்கோவின் டாலர் ராஜ்ஜியம்” அட்டகாசமானதொரு ஆக்ஷன் த்ரில்லர் ; one of the best in the Largo series என்பது உறுதி! தற்போதைய நமது டாப் ஸ்டார்களில் இவருக்கொரு உச்ச இடம் உண்டு எனும் போது – அந்தத் தகுதிக்கு நியாயம் செய்த இதழிது என்று சொல்லுவேன்! இதோ - அதற்கென நாம் முயற்சித்த சில டிசைன்கள் !   

ஆனால் நிஜமான show stopper நமது ‘ஆயிரம்வாலா சரவெடி‘ மின்னும் மரணம்” தான் என்பதை குழந்தை கூட அறியும்! இதற்கு முன்பாக முத்துவின் NBS; லயனின் LMS; என்றெல்லாம் மெகாப் பணிகளுள் நாம் கால்பதித்திருந்தாலும் – இரத்தப் படலம் 1-18 தொகுப்புக்குப் பின்பாக எங்களைத் துவைத்துப் பிழிந்த புண்ணியம் மின்னும் மரணத்திற்கே! மறுபதிப்பு தானே – எழுத்துப் பிழைகளுக்கு வேட்டையாடுவதைத் தாண்டி அதிகமாய் வேலை பிடிக்காது என்று நம்ம்ம்பி இதனுள் புகுந்தது மாத்திரமே நினைவுள்ளது! தொடர்ந்தது அத்தனையும் நேர்மாறான அனுபவங்கள்! பௌன்சரின் கதைகள் உக்கிரமாக இருப்பினும் – ஆங்காங்கே ஒரு மொழிபெயர்ப்பாளன் ஓய்வெடுக்க இண்டுகளும், இடுக்குகளும் உண்டு! ஆனால் கேப்டனின் இந்த saga-விலோ ஒரு நொடி கூட எங்குமே take it easy ஆக இருந்திடல் சாத்தியமில்லை! அதிலும் அந்நாட்களது ஒரிஜினல் black & white இதழ்களில் நாம் வெட்டியும், ஒட்டியும் ஏகப்பட்ட டகுல்பாஜி வேலைகளை செய்திருப்பதை “மின்னும் மரணம் வண்ண இதழ்களின் பணிகளின் போது தான் புரிந்து கொள்ள முடிந்தது! அவற்றைச் செப்பனிட அவசியமான கவனங்களும்; எழுத்துப் பிழைகளை மிகுந்திட அனுமதிக்கலாகாது என்ற வெறியில் ஒன்றுக்கு மூன்று பேராய் proof reading செய்த நாட்களும் – ஐயோ சாமி – ஆயுசுக்கும் மறக்கா விஷயங்கள்! அதிலும் proof reading-க்குள் ஒருபோதும் தலைநுழைக்கா நமது கருணையானந்தம் அவர்களையும் இம்முறை ஜோதியில் ஐக்கியமாக்கிட – அவர் இயன்ற சகல ஒத்தாசைகளையும் செய்தார் – இறுதியாய் ஒரேயொரு வேண்டுகோளோடு! ”தயவு செய்து திரும்பவும் ஒரு முறை இது போன்ற வேலைக்குள் என்னை இழுத்து விடாதே; கண்ணெல்லாம் தண்ணீர் ஓடுகிறது!” என்பது தான் அந்த வேண்டுகோள் ! எங்களது பணிகள் முடிய முடிய அச்சிலும், பைண்டிங்கிலும் வேலைகளை செய்து வாங்குவதென்பது முடிவேயில்லாததொரு படலமாய் எனக்கே தோன்றியது! எல்லாவற்றிற்கும் மேலாக – இதற்கான அட்டைப்படத் தயாரிப்பினில் நான் தூக்கங்களைத் தொலைத்த இரவுகள் ஏராளம்! இறுதியாய் நாம் தயாரித்த ராப்பர் டிசைனில் சிலருக்குத் திருப்தி; சிலருக்கு not so என்றிருந்த போதிலும் – வழக்கமான பாணிகளிலிருந்து இது விலகி நிற்பதாகவே எனக்குப்பட்டது! நமது டிசைனரை நான் முட்டை புரோட்டா போட்டது எத்தனை முறை என்ற கணக்கெல்லாம் வைத்திருந்தாரெனில் பொன்னன் இந்நேரம் சந்திரமண்டலத்திற்குத் தான் குடிபெயர்ந்திருக்க வேண்டும்! Metalic மசிகள் கொண்ட அச்சு; அப்புறமாய் அதன் மேலொரு dust jacket என்று ஒரு குரங்குக் கூத்து பாக்கியின்றிச் செய்து விட்டு – முதல் finished இதழைப் பார்த்த போது 1993-ன் நள்ளிரவைத் தாண்டியதொரு தருணத்தில் குட்டியானதொரு பிரசவ ஆஸ்பத்திரியின் வளாகத்தில் என் பிள்ளையை 2 "மி.மி." எடையினில் குட்டிப் பயலாக முதல்முறையாகப் பார்க்க முடிந்த சிலிர்ப்பு தான் என் நினைவுக்கு வந்தது! சென்னையில் என் தந்தை + தனயன் சகிதம் இதழை வெளியிட்டது; நண்பர்களோடு குதூகலமாய் பொழுதுகளைக் கழித்தது என்பதெல்லாம் ‘வாம்மா மின்னல்‘ என்ற வேகத்தில் பயணிக்கும் நினைவுகளாய் என்னுள் தங்கி விட்டன! இன்னும் ஏராளமான இதழ்களினுள் நான் பணியாற்றலாம் தான்; இதை விடவும் சுவாரஸ்யமான project-களும் எதிர்ப்படலாம் தான் – ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்! “மின்னும் மரணம்” will never be surpassed ! சரி – மதிப்பெண்கள்?” என்ற கேள்வி எழுப்பிடுகிறீர்களா ? நம்பர்களுக்கெல்லாம் அப்பாலொரு விஷயம் எப்போதாவது துளி விடுவதுண்டு தானே ?  அதைப் போன்றதொரு சமயமாய் இதையும் பார்த்திடுவோமே! I leave it to your choice...!!

அடுத்த வாரம் சந்திப்போம் folks – 2015-ன் பாக்கி மாதங்களின் behind the scenes பார்வைகளோடு! அது வரை – have a dry & safe week ahead! Bye for now!

P.S : Please carry on with your reviews of 2015..!!

296 comments:

  1. அட! இன்னும் யாரும் பதிவிடலையா

    ReplyDelete
  2. வணக்கம்... படித்துவிட்டு வருகிறேன்...

    ReplyDelete
  3. ஆஹா..எடி சார்...!எங்கள் அனைவரின் விமர்சனத்தை விட உங்களது அருமையாக இருக்கிறது.!சுவாரஸ்யமாய் படித்துக்கும் போது சட்டென்று தொடரும் போட்டு விட்டீர்களே....?

    ReplyDelete
    Replies
    1. ஜேடர்பாளையம் சரவணகுமார் : இதுவே 11 பக்கங்கள் ஆகிப் போச்சு சார் ; புல்ஸ்கேப் பேப்பரில் !!

      Delete
    2. எடிட்டர் சார்.!

      கட்டாயம் ஜனவரி இதழில் இந்த பதிவுகளை வெளியிடுங்கள் சார்.!

      ஒன்று.,இணையதளம் வராத வாசகர்கள் படிக்க வசதியாக இருக்கும்.

      இரண்டவதாக.,காலத்தால் அழியாத நினைவுகளாக தொடரும்.இன்று கூட பழைய இதழ்களில் உங்களுடைய வருட ஆய்வு வாசகர்களுடன் கலந்து உங்கள் ரசனையையும் சேர்ந்து படிக்கும்போது மனதுக்கு உற்சாகமாய் உள்ளது.

      ( அதுவும் பலவருடங்களுக்கு முன்னர் மாடஸ்டி கதைகள் எண்ணிக்கை இந்த வருடத்தில் அதிகம் என்று 1996 வருட ஆய்வு பூமிக்கொரு பிளாக்-மெயில் கதைபுத்தகத்தில் வந்தததை அடிக்கடி படிப்பேன்.!

      Delete
    3. அதென்னவோ தெரியலைல..நீங்க எவ்ளோ பெரிய பதிவை போட்டாலும் கடைசி வரியை படிக்கும் போது அடடா....! அதுக்குள்ள முடிஞ்சிருச்சேன்னுதான் இருக்கு.....!
      மடிப்பாக்கம் சார் உங்க கருத்துக்கு ப்ளஸ்ஸோ ப்ளஸ்....

      Delete
  4. அனைவருக்கும் காலை வணக்கம்! டெக்ஸ் வில்லரின் தீபாவளி மலரை கடந்த வெள்ளியன்று படித்து முடித்தேன்! கதைகள் இரண்டும் அதிரடியின் சரவெடிகள்! குறிப்பாக எமனின் வாசலில் சித்திரங்கள் master piece! டிசம்பர் இதழ்களில் கதைகளின் நாயகன் தோர்கல் நாயகி சந்தேகம் இல்லாமல் மாடஸ்டி அம்மையார்தான்! கதை முடிவுராததால் ஏமாற்றமளித்த இதழ் வானம் எங்கள் வீதி -3 ஆனால் அதன் சித்திரங்கள் ஏமாற்றவில்லை ! commanche ok!

    ReplyDelete
    Replies
    1. //நாயகி சந்தேகம் இல்லாமல் மாடஸ்டிதான்.!//

      இத!இத!இதத்தான் எதிர்பார்த்தேன்.!

      நமது நண்பர் அறிவரசு ரவி குறிப்பிட்ட மாதிரி மாடஸ்டி கதைகள் எதுவுமே என்றுமே சொதப்பியது கிடையாது.இது 100% உண்மை. ஓவியங்களின் புதிய பாணி ஒரு சில கதைகளில் சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.மற்றபடி மாடஸ்டி கதைகள் அனைத்தும் சொக்க தங்கம் சார்.!

      Delete
    2. மடிப்பாக்கம் நண்பரே இப்பதான் மாடஸ்டிய படிச்சிட்டிங்களா எப்படி இருக்குன்னு கேக்கலாம்னு வந்தேன்,ஹி,ஹி நீங்களே சொல்லிடிங்க அருமை நண்பரே அருமை.

      Delete
    3. // நாயகி சந்தேகம் இல்லாமல் மாடஸ்டி அம்மையார்தான்! //
      அம்மையார் என்ற வார்த்தைக்கு வேறு வார்த்தையை பரிசிலிக்கலாமே.ஹி,ஹி.

      Delete
    4. வணக்கம் நண்பரே.! மழை வெள்ளம் காரணமாக என்து ஏரியா கூரியர் ஆபீஸ் ஒரு வாரமாக திறக்கவில்லை.!எனவே லேட்.!

      Delete
    5. நீங்கள் நலம்தானே.

      Delete
    6. நலம் நண்பரே.!

      இயற்கையை திட்டி புலம்பாமல் , மாடஸ்டி கதைகளின் அடிப்படை கான்செப்ட்டானா " விதியின் போக்கில் சென்று விவேகமாய் செயல்பட்டு வென்று வரவேண்டும் ." என்ற கொள்கை ,இயற்கையை சமாளிக்க எனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.!

      Delete
    7. ஆச்சிரியமாக உள்ளது நண்பரே,காமிக்ஸ் கேரக்டர் இந்தளவு உங்களுள் ஊடுருவியுள்ளது வியப்பானதொன்று,
      மேலும்,அந்த கேரக்டரை நம் வாழ்வின் பாஸிட்டிவ் அணுகுமுறைக்கு பயன்படுத்தி கொள்வது இன்னும் வியப்பானது
      அருமை நண்பரே.

      Delete
  5. நானும் வந்துட்டோம்ல

    ReplyDelete
  6. மின்னும் மரணம் பச்சை கலர் அட்டையிலும் வந்ததா எடி சார் ?

    ReplyDelete
  7. அனைவருக்கும் காலை வணக்கம்..

    ReplyDelete
  8. வணக்கம் சார்...
    வணக்கம் நட்பூஸ்...
    ஆசிரியர் என்ற பெயருக்கு முன் எப்போதும் முன்னிற்கும் காமிக்ஸ் ரசிகர்,வெறியர் - ஆக உங்கள் விமர்சனங்களை முன்வைத்து உள்ளீர்கள் , சூப்பர் சார்..... கை தட்டும் & விசில் அடிக்கும் படங்கள் பல......
    ஆண்டின் முதல் பகுதியை விட 2ம் பகுதியே பல ஹிட்களை கொணர்ந்தது, என்னைப் பொறுத்து- அடுத்த வார பதிவை இப்போதே ஆவலுடன் எதிர் நோக்கி........

    ReplyDelete
    Replies
    1. நானும் ஆவலுடன்.

      Delete
    2. டெக்ஸ் விஜயராகவன்.!

      2 ஆம் பாகத்தில் டெக்ஸ் வருகிறார் என்று சிம்பாளிக்கா சொல்லவருகிறீர்கள் இல்லையா.?

      Delete
    3. அப்படியும் சொல்லலாம் MV சார்....
      டெக்ஸ் 5கதையில் 3மெகா ஹிட், கமான்சே 2ஹிட், தோர்கல் முத்திரை பதித்த 2இதழ்கள், வெய்னின் - வரலாற்றும் வல்லூறும், CCC பாக்ஸ் செட், சைத்தான் துறைமுகம்... என ஏகப்பட்ட மறக்க இயலா இதழ்கள்,...
      மிக முக்கியமாக லயன் வரலாற்றில் டெக்ஸ்க்கு 12கதைகள் என்ற அறிவிப்பு இப்படி.....
      ஆண்டின் முதல் பகுதி = மட்டன் பிரியாணி வித் ஃபிஷ் ப்ரை...
      2ம் பகுதியோ- சிக்கன் பிரியாணி வித் தந்தூரி சிக்கன், பெப்பர் ப்ரை....

      Delete
  9. ///அந்த “ஜீஜீலிப்பா“ சமாச்சாரத்துக்கு நன்றி சொல்ல வேண்டியது நமது கவுண்டருக்கே!! பிரபுவோடு அவர் நடித்திருநத ஏதோவொரு படத்தில் அந்தச் சமயமாக இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்க முடிந்தது!)///

    படம் - வியட்நாம் காலணி.

    ஜுஜிலிப்பா - இந்த வார்த்தையை அடிக்கடி உச்சரிப்பது படத்தின் நாயகி வினிதா .


    (ஹைய்யா! குறை கண்டுபுடிச்சிட்டேனே!!!! ) :-)

    ReplyDelete
    Replies
    1. அது வியட்நாம் காலனி சார் ......"காலணி" அல்ல ! ஹை...ஹை...நாங்களும் கண்டு புடிச்சிடோம்லே !! எப்பூடி ?

      Delete
    2. ஹா,ஹா நல்ல காமெடி.

      Delete
    3. "ஆர்டினுக்கும் அடி சறுக்கும் "

      (ஹிஹிஹி ! அசடு வழியும் படங்கள் ஐந்து )

      Delete
  10. ///சந்தாக்கள் எப்போதையும் விட இப்போது precious ஆகத் தோன்றுகின்றன! And தற்போதைய உங்கள் வேகத்தைப் பார்க்கும் போது“பயம் கொள்ளத் தேவையே இல்லை!” என்பது புரிகிறது ///

    எனில்., சந்தா Z ஐ சந்தோசமாக எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன் சார்.!

    (என்னுடைய சந்தா புதுப்பித்தலை இந்த வாரத்தில் செய்திடுவேன். )

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு விளக்கம் சொல்லி விட்டு இனிமேல் தான் சந்தா புதுப்பித்தலா? நீரே இவ்வளவு தாமதமா? கோபமாக முகத்தில் குத்து விடும் படங்கள் 100

      Delete
    2. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!மாடஸ்டி புத்தகங்கள் ஐந்து படிக்க கடவாய்.!

      (நானும் இன்னமும் கட்டவில்லை எப்பொழதும் ஒரு காப்பி செலவுபோல் சுலபமாக சந்தா கட்டும் எனக்கு இம்முறை 20 சந்தா கட்டும் தொகை மருத்துவ செலவாக அநியாயமாக போய் விட்டது.ஹும்.!

      Delete
    3. // இவ்வளவு விளக்கம் சொல்லி விட்டு இனிமேல் தான் சந்தா புதுப்பித்தலா? நீரே இவ்வளவு தாமதமா? கோபமாக முகத்தில் குத்து விடும் படங்கள் 100//
      அதானே என் பங்குக்கு குத்து விடும் படங்கள் நூறு.

      Delete
    4. ///கிட் ஆர்ட்டின் கண்ணன்.!மாடஸ்டி புத்தகங்கள் ஐந்து படிக்க கடவாய்.!///

      கடவாய்ல படிக்கணுமா? அதெப்படிங்க முடியும்.? :-)

      மாடஸ்டி புத்தகங்களை யாராச்சும் சபிச்சாத்தான் படிக்க முடியும் போலிருக்கே?? :-)

      ///கோபமாக முகத்தில் குத்து விடும் படங்கள் 100 //

      ///அதானே என் பங்குக்கு குத்து விடும் படங்கள் நூறு.///

      appointment வாங்கிண்டு அடிச்சிக்காமே ஒவ்வொருத்தரா லைன்ல வாங்கப்பு !!!

      Delete
  11. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  12. @Editor sir,
    சென்னைப் புத்தகத் திருவிழா தள்ளி போனதில் எனக்கு ஏக வருத்தம் சார் (-:(-:(-:

    நிறைய கனவுகள், நிறைய எதிர்பார்ப்புகள், உங்களிடம் சொல்ல நினைத்திருந்த நிறைய suggestions என்று இந்த வாரப் பதிவில் பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன்...

    இதையெல்லாத்தையும் விட முக்கியமாக புத்தகத் திருவிழாவில் தான் சந்தா கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன்...

    இதில் என் சுயநலம் கூட உண்டு...புத்தகத் திருவிழாவில் சந்தா கட்டினால் அங்கேயே அந்த மாதத்து புத்தகங்களை நானே பார்த்து பார்த்து எடுத்துக் கொள்ளலாம், அங்கேயே உங்கள் கையால் டி-ஷர்ட் டும் பெற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் கற்பனைக் குதிரையைப் பறக்க விட்டுக் கொண்டிருந்த்தேன் சார்....

    ஹும்ம்ம்ம்... சரி எது நடந்தாலும் அது நன்மைக்கே என்றே எடுத்துக் கொள்வோம்...

    முடிந்தால் நம் நீங்கள் மற்றும் நம் காமிக்ஸ் நண்பர்கள் எல்லோரும் மீட் செய்து கொண்டால் கூட போதும் சார்...

    P.S.
    2016 புது வருடத்தின் முதல் நாள் முதல் வேலையே நமது காமிக்ஸ்க்கு சந்தா கட்டுவது என்று தீர்மானித்து விட்டேன் சார்...
    கண்டிப்பாக கட்டி விடுவேன் சார்!!!

    ReplyDelete
    Replies
    1. சத்யா சார்.!

      ஏதோ ஒரு இதழில் மின்னும் மரணம் வெளியானபோது நான் சிறுவன் அப்போது வாங்க
      முடியவில்லை.தற்போது அது கிடைப்பது இல்லை என்று புலம்பி வாசகர் கடிதம் எழதியதையும்.அதற்கு நம் எடிட்டர் பதில் அளித்து பெருமை பட்டுக்கொண்டதையும் மறக்க முடியாது.எனவே.,

      " கறை நல்லது " என்ற விளம்பரம் மாதிரி.,

      " சந்தா நல்லது.!"

      பின் நாளில் அந்த புத்தகம் இல்லையே.? இந்த புத்தகம் இல்லையே என்று புலம்ப வேண்டிய கஷ்டம் கிடையாது.!

      Delete
    2. @Madipakkam Venkateswaran:
      :-):-):-)

      Delete
  13. சென்னை புத்தக விழா தள்ளி போனது ஏமாற்றமாக உள்ளது. 2015 ல் என்னை கவர்ந்தவை, மின்னும் மரணம், கில் ஜோர்டான் மற்றும் பெளன்சர். எடி சார் திகில் பற்றிய update pl sir

    ReplyDelete
  14. அப்பாடி.... எவ்வளவு பெரிய மாத்திரை....

    ReplyDelete
  15. விஜயன் சார்,
    தோர்கல் மிகவும் நன்றாக இருந்தது. வழக்கம் போல் வாயை பிளக்கவைக்கும் அட்டகாசமான சித்திரம்கள் & வேகமான கதை நகர்வு. இந்த வேகமான கதை நகர்வில் தடை போட்டது, காரணம் "பக்கம் பக்கமாக" தென்படும் வசனம்.

    "சகாவரத்தின் சாவி" அதன் மிகப்பெரிய பிளஸ் - மொழி பெயர்ப்பு மற்றும் இயல்பான வசனம்கள்.

    ReplyDelete
    Replies
    1. இவருக்கு இந்த முறை இரண்டாம் இடம்தான்!

      Delete
  16. விஜயன் சார், காமன்சே - கதை முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு, இத்தனைக்கும் அதிகபடியான டாமல் டுமீல் இல்லை. ஆனால் ஒரு விறுவிறுப்பான கதைக்கு தேவையான அனைத்தும் இருந்தது. இவருக்கு இந்த மாதம் முதல் இடம்!

    ReplyDelete
  17. விஜயன் சார், மாடஸ்டி கதை ஒரே நேர்கோட்டில் சென்றது, முதல் சில பக்கம்களை படித்தவுடன் இதுதான் கதை என புரிந்து கொள்ள முடிகிறந்து. வழக்கமான மாடஸ்டி & வில்லி சாகசம்.

    பிளஸ் - புத்தக வடிவமைப்பு, விலை (அதிகபடியானவர்களால் வாங்கி படிக்க முடியும்.)

    இந்த மாதம் மூன்றாம் இடம்

    ReplyDelete
    Replies
    1. அலோ ஏதோ " பயணங்களும் பாதைகளும் "- புண்ணியத்தில 3ம் இடம் கிடைத்து உள்ளது.....இல்லினா சனவரி மாதிரி ....
      அந்த திருஷ்டி பரிகாரம் போல உள்ளவை, புதிய பாணி ஓவியங்களா....???.வேணாம்.... கர்ர்ர்....

      Delete
    2. Madipakkam Venkateswaran @ நானும் இளவரசியின் ரசிகன்தான், அதற்காக உண்மையை மறைக்க விரும்பவில்லை.

      Delete
    3. மாடஸ்டி,பழைய மொந்தையில்....பழைய கள்!! ஆனாலும் 'கிக்' இருக்கத்தான் செய்கிறது!!!

      Delete
    4. பரணிசார் நீங்கள் எல்லாம் சீனியர் ரசிகர் அல்லவா.?


      குணா சார்.! உண்மை.! உண்மை.!நம் எடிட்டரின் மாடஸ்டி கதைகளை படிப்பதில் தனி ஆனந்தம்தான்.! மற்ற பதிப்பகத்தில் ,கதையின் சிறப்பு அம்சமான மாடஸ்டி& கார்வின் நட்பை,கணவன் மனைவியாக சித்தரித்து துவம்சம் செய்திருப்பார்கள்.!

      Delete
    5. உண்மை தான்! கண்களை கட்டிக்கொண்டு இருவரும் மோதும்போது,ஓரு வித லயத்தில் கயிறை சுண்டி விட்டு, இருவரும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் அந்தக்காட்சிகள்,,,,,, பர,பர.விறு,விறு!!!

      Delete
  18. *ஒற்றை இதழ்களாய் வந்த கொண்டிருந்த தோர்கல், இரு இரட்டை இதழ்களில் வந்து ...தள்ளாடிக்கொண்டிருந்த தனது இடத்தை மிக வலுவாக உறுதி செய்துள்ளார் சார், அந்த வகையில் முத்திரை நாயகன் இந்த ஆண்டு தோர்கலே....ஆனாலும் இம்மாத 2ம் பாகத்தின் ஆரம்பத்தில் உள்ள கன்டிடியூட்டி மிஸ்ஸிங் கிற்கு விளக்கம் சொல்லுங்கள் சார்....

    ReplyDelete
  19. 2015 - முத்திரை நாயகன் இந்த ஆண்டு தோர்கலே - இவரின் கதைக்கும் எளிதான வாசிக்கும் அனுபவம் கிடைக்கும் படி அதன் வசனம்களை அமைப்பது இவரின் கதைக்கு இன்னும் வலுசேர்க்கும். உதாரணம் சாகவரத்தின் சாவி; இது போன்று இவரின் வர இருக்கும் இதழ்களையும் உருவாக்க வேண்டும்.

    ReplyDelete
  20. அருமை சார்....ௐரே குறை டாலர் ராஜ்ஜியத்தின் 3வது அட்டை கலக்கலாயிருந்திருக்கும்...

    மிக எதிர் பார்த்த வா.எ.வீ. பொசுக்கென முடிந்தது போல படுகிறது.எதிர் பார்க்கவே விரும்பா மாடஸ்டி அதகளம்.

    ReplyDelete
    Replies
    1. //மாடஸ்டி அதகளம்//

      வசிஸ்டர் வாயால் பிரம்மஸ்ரீ பட்டம்.!

      Delete
  21. டியர் எடிட்டர் சார்,

    சில பதிவுகளுக்கு முன் கீழே உள்ள கமென்ட்டை பதிந்திருந்தேன். தங்களின் கவனத்திற்கு வராமல் போயிருக்ககூடும் என நினைக்கிறேன். தக்க பதில் கிடைக்குமென்ற நம்பிக்கையில் இங்கே மறுபடி பதிகிறேன்.

    ///டெக்ஸ் - முன் பின் அட்டைகள் இரண்டுமே சற்று உள் மடங்கி பக்கங்கள் வெளியே தெரிகின்றது. தாளின் நிறம் சற்று மங்கலான வெண்மையாக இருக்கின்றது. முந்தைய b&w இதழ்கள் பளீர் வெண்மையாக இருந்த்து.

    ஜானி - சித்திரங்கள் சற்று டார்க்காக ப்ரிண்ட் ஆகி உள்ளது.

    ஷெல்டன் & மஞ்சள் நிழல் - பல பக்கங்களிலிருந்து கையில் பவுடர் போல் ஒட்டுகின்றது. ( இந்த பிரச்சினை விண்ணில் ஒரு வேங்கையில் மிக மோசமாக இருந்தது).

    எனக்கு வந்த புத்தகங்களில் மட்டுமே இந்த பிரச்சினைகள் என்றாலும் கூட இவை கண்டிப்பாக களைய வேண்டியவைகளே.

    பத்தோடு பதினொன்று என்றில்லாமல் அனைத்து புத்தகங்களையும் காலகாலத்திற்க்கு பாதுகாக்க நினைப்பதாலயே இதை சொல்கிறேன்.//.

    ReplyDelete
  22. Sir,
    I haven't received my books yet, I sent sms and posted here also. Please send my books Asap

    ReplyDelete
  23. ஆசிரியரே உங்கள் விமர்சனம் & மாறுபட்ட பார்வை-நல்லதொரு அலசல் கண்ணோட்டம்.

    ReplyDelete
  24. எடிட்டர் என்ற முறையிலும் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்ற முறையிலும் எல்லா புத்தகங்களையும் அலசுவது சுவராசியமாக இருந்தது.!இந்த தொடரும் வார்த்தையை கேட்டாலே எரிச்சல் உண்டாவது எனக்கு மட்டும்தானா.? சார் இதை மறக்காமல் புத்தகத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.!

    அது சரி சார்., எங்க தலைவியின் கதைக்கு வெறும் 4 மார்க் .? கர்ர்.......:-(

    ReplyDelete
    Replies
    1. அட ஃப்ரீயா விடுங்க சார்...! இளவரசி இந்த மாதம் அதகளப்படுத்தி விட்டாரில்லையா? அடுத்த வாரம் பாருங்க...மரணத்தின் முத்தம் பத்துக்கு பத்துன்னு மார்க் போட்டுருவார்....!

      Delete
  25. // டிசம்பர் இதழ்கள் கிடைக்கக் கிடைக்க - சந்தா எக்ஸ்பிரஸ் தானாகவே வேகம் பிடிக்கத் துவங்கி விட்டது !//
    மகிழ்ச்சி ஆசிரியரே.

    ReplyDelete
  26. நண்பர்களுக்கும்,எடிட்டர் அவர்களுக்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்!2015-ன் முதலிடத்திற்கு முண்டியடித்துக்கொண்டு போட்டி போடுகிறார்கள்,, பைளன்சரும்,தோர்களும்!!அசாத்தியங்கள் சாத்தியப்பட்டிருக்கின்றன!2015-ன் மரண மொக்கைகளில் போட்டியின்றி தேர்வாகிறது....பாதைகளும்,பயணங்களும் தொடர்..இந்தச் சுற்றோடு நிறுத்திக்கொண்டால் தேவலாம்!!எடி சார்,சந்தா-z ல் இது போன்றதொரு கதைத் தேர்வுகள் இல்லாதிருப்பின் தன்யனாவேன்!அடுத்த வாரம் எப்படியும் சந்தா கட்டிவிட முடியும் என்று பட்சி சொல்லுகிறது!!முதல் முறையாக சந்தாவில் இணையப்போகிறேன்..ஏனோ இந்த நினைப்பே எனக்கு மிகப்பெரிய சந்துஷ்டியைத் தருகிறது! பார்சலை கையில் ஏந்தியவுடன் கிடைக்கவிருக்கும் அந்த பேரானந்த சுகானுபவத்தை அனுபவிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்!!!

    ReplyDelete
    Replies
    1. குணா...க்ரீன் மேனர் முதல் பாகத்த மறுபடியும் ஒரு தடவ படிச்ச கையோட கமெண்ட் போட வந்துட்டியா? சந்துஷ்டி..தன்யனானேன்....பேரானந்தம்னு வார்த்தைகள் விளையாடுதே..?

      Delete
  27. டிசம்பர் இதழ்களைப் பற்றிய என்னுடைய கருத்தை வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன் ..தோர்கல் ..நிறைய எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்து சிலபல குழப்பமான முடிவுகளை சந்தித்த கதை ..சித்திரங்கள் வழக்கம்போல் அற்புதம் அடுத்த கதையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்று நம்புவோம் ..கமாஞ்சே ..வீர தீர சாகசங்களோ எதிர்பாராத திருப்பங்களோ எப்போதும் கம்மா ன்சே இடம் எதிர்பார்க்க முடியாது....துல்லியமான சித்திரங்கள் காரண்டி ...அடுத்து மாடஸ்டி குமுதத்தில் கருப்புமுத்து என்று சித்திரத் தொடராக வந்த காலத்தில் இருந்தே மாடஸ்டி என் அபிமான சாகசத் தலைவி ..இந்தமுறை திகில் நகரம் டோக்யோவை நினைவு படுத்தும் கதை ..வெறும் முப்பதே ரூபாய்க்கு நமக்கு கிடைத்த பொக்கிஷம் .. முதலிடம் மட்டுமல்ல தனிஒருவளாக டிசம்பரில் ஜொலிக்கிறார் மாடஸ்டி ..இன்னொரு கதை ..?முப்பதாவது தடவையா வாசிச்சு காட்டிட்டேன் ..புரிஞ்சுதா இல்லியா சொல்லு ... இறக்கி விட்டுடறேன்

    ஐயோ அம்மா லட்சம் தடவை நீ வாசிச்சி காட்டினாலும் எனக்குப் புரியப் போறதில்லே ..கிராபிக்ஸ் நாவலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் ..அதுக்கு பதிலா என்னை சுட்டுடு
    இதில் டெ க்ஸ் இடத்தில் நான்

    ReplyDelete
    Replies
    1. //குமுதத்தில் கருப்பு முத்து என்று சித்திரதொடராக வந்த காலத்திலிருந்தே மாடஸ்டி என் அபிமான சாகஸதலைவி...//

      வெட்டுக்கிளி சார் சூப்பர்.!சூப்பர்.!

      Delete
    2. இளவரசியைப் பற்றி யாரும் எதுவும் சொல்லிடக்கூடாதே!! எம்.வி.சாருக்கு ஒரே குதூகலம்தான்!

      Delete
    3. குணா சார்.!

      இளவரசிக்கு ஆதரவு பெருகிவருவதை கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி.!அடுத்த வருடம் 2017 ல் சுலபமாக நமது எடிட்டரிடம் நிறைய கதைகளை போராடி பெற்றுக்கொள்ளலாம் இல்லையா.?

      கலரில் கேட்டு போராடிய நம் ராவணன் சாரை காணோம்?.மீட்பு பணியில் உள்ளாரோ.?

      Delete
    4. மாடஸ்டியே நல்ல கலர்....ஆகையால் அவரை கலரில் வெளியிட படைப்பாளிகள் ஆர்வம் காட்டவில்லை என்று ஒருமுறை எடிட்டர் கூறியுள்ளார்...!நம்ம தலைவிக்கு எதுக்கு சார் வண்ணமெல்லாம்....?கறுப்பு வெள்ளையிலேயே கலக்குவாரே....!அது சரி ம.வெ.சார்...மாடஸ்டி படிச்சாச்சா..?

      Delete
    5. ஜேடர் பாளையத்தார்.!

      எனக்கு லேட்டாகத்தான் புத்தகங்கள் கிடைத்தது.! எனது ஏரியா கூரியர் ஆபீஸ் ஒரு வாரமாக செயல்படவில்லை.திறந்ததும் அவர்கள் அனுமதி பெற்று.,சிவகாசிக்கு போன் மூலம் தகவல் சொல்லி பெற்றுக்கொண்டேன்.!

      வாங்கியவுடன் உடனே படித்துவிட்டேன்.!மாடஸ்டி கதைகள் வைரம் மாதிரி.வைரம் பட்டைதீட்ட தீட்டத்தான் பிரகாசமாய் ஜொலிக்கும்.அதைப்போல பல தடவை ரசித்து படித்தால்தான் கதையாசிரியரின் கதையினுள் மைல்டாக திணிக்கப்பட்ட சில விசயங்கள் & கருத்துகள் நன்றாக புரியும்.!

      எனவே நிறையதடவை படிக்க வேண்டும்

      மு.வா. தமிழ்வாணன் ,லியோ டால்ஸ்டாய் போன்றோர் கதைகளில் அவர்கள் கற்றதை ,அவர்கள் கருத்தை,அனுபவங்களை கதையினுள் ஆங்காங்கே புகுத்தி இருப்பார்கள்.அதுபோலவே மாடஸ்டி கதைகளையும் உன்னிப்பாக இன்னொரு தடவை படிக்க வேண்டும்.!

      Delete
  28. 2015 ன் மரண ,மா ரண மொக்கை சந்தேகம் இல்லாமல் மஞ்சள் நிழல் தான் ..

    ReplyDelete
  29. விறுவிறு வென பதிவு சென்று திடீரென ப்ரேக் போட்டது போல ஒரு எண்ணம் ....;-))

    ReplyDelete
  30. எனது பார்வையில் 2015 டாப் இதழ்கள்...

    Top 3 இதழ்கள்:
    1. மின்னும் மரணம்
    2. தி லயன் 250
    3. பெளன்சரின் அனைத்து கதைகளும்

    Worst 3 இதழ்கள்:
    1. மூளைத் திருடர்கள்
    2. மஞ்சள் நிழல்
    3. வேங்கைக்கு முடிவுரையா

    Top 3 அட்டைப்படம்:
    1. மின்னும் மரணம்
    2. பெளன்சர்-சர்ப்பங்களின் சாபம்
    3. சீற்றத்தின் நிறம் சிகப்பு
    3. விண்ணில் ஒரு வேங்கை

    Top 3 சிறந்த அறிமுகம்:
    1. பெளன்சர்
    2. ஸ்மர்ஃப்ஸ்
    3. கர்னல் கிளிப்டன்
    3. லியோனர்டோ தாத்தா

    ReplyDelete
    Replies
    1. Top 3 Comeback நாயகர்கள்:
      1. மறுபதிப்பு மன்னர்கள் (இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், ஜானி நீரோ மற்றும் லாரன்ஸ்&டேவிட்)
      2. மர்ம மனிதன் மார்ட்டின்
      3. தோர்கல்

      Delete
  31. ஆசிரியரே வணக்கம்
    பல தடைகளை தான்டி
    நானும் வந்து விட்டேன்
    நண்பர்களே

    ReplyDelete
  32. ஆசிரியரே தற்போது வேலையிருப்பதால்
    இரவில் 2015 ன்
    விமர்சனம் எழுதுகிறேன்

    ReplyDelete
  33. எடிட்டர் சார்,
    உங்கள் பார்வையில் 'இந்தத் திரும்பிப் பார்க்கும் படலத்தை' படிப்பது ஒரு சுகமான அனுபவம்! ( மின்னும் மரணத்துக்கு மட்டும் மார்க்குப் போடாம விட்டீங்க பாருங்க - அங்க நிக்கறீங்க நீங்க!)

    ஆனா நாங்க எதுக்கு இருக்கோம், விடமாட்டோம்ல? உங்களுடைய அசாத்திய உழைப்பின் பயனாக எங்களுக்குக் கிடைத்த இந்தப் பொக்கிஷத்துக்கு இந்த வருடத்தின் மிகச்சிறந்த புத்தகமாகப் பிரகடனம் செய்கிறேன். அட்டைப்பட வடிவமைப்பு, ஒட்டுமொத்த வடிவமைப்பு, சிறந்த அச்சுத்தரம் போன்றவை முக்கிய காரணங்களாக, அப்புத்தகத்தை நம் சீனியர் எடிட்டர் வெளியிட்டபோது சில நொடிகளுக்கு மூச்சு நின்றுபோனதைப்போல இருந்ததே... அம்மாடியோவ்! அந்த உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே கிடையாது எடிட்டர் சார்!

    வசனங்களைப் பலூனுக்குள் அடக்க நீங்கள் மேற்கொண்ட பிரம்மப் பிரயத்தனம் ஒவியங்களின்மீது சற்று அதிக ஆதிக்கம் எடுத்துக்கொண்டதை வேண்டுமானால் ஒரு சிறு குறையாகக் எடுத்துக்கொண்டோமென்றால், இதன் ஒட்டுமொத்த மார்க் 9.85/10 எ.எ.மா!

    தூக்கத்தத்தை தொலைத்து பல இரவுப் பொழுதுகளை உழைப்பாய் மாற்றி நீங்கள் அளித்த அந்தப் பொக்கிஷத்தைக் காணும்போதெல்லாம் உடனே ஒரு பிரம்மிப்பு வந்து ஒட்டிக்கொள்கிறது எனக்குள்! எத்தனை நூறு நன்றிகள் சொல்வதென்று தெரியவில்லை எடிட்டர் சார்... நன்றி ! நன்றி ! நன்றி!

    பி.கு: நீங்க இதைவிடவும் ரொம்பக் கஷ்டப்பட்டு உழைப்பதற்காக 2017க்கு ஒரு ப்ராஜக்டை ரெடி பண்ணியிருக்கோம் நாங்க. பேரு - 'இரத்தப் படலம்' ( ஹிஹி)

    ReplyDelete
    Replies
    1. இத்தாலிகார் பளபள சாவுதான் எல்லா விதத்திலும் டாப்ன்னு போனவாரமே சொன்னேன்..ம்..அது ரீபிரிண்ட்..சந்தாவுல வராத தளபதின்னு கூட்டமா சேந்து கெட்டவுட் சொல்லிட்டாங்களே..!

      Delete

    2. "இத்தாலிகார் " @

      2017 ல இரத்தக்கோட்டை அல்லவா டார்கெட் வைத்தோம்.

      இப்படி மாத்தி யோசிச்சிட்டிங்களே இத்தாலிகார்!!! : -)

      யாருங்க அது பளபளா சாவை லிஸ்ட்டுல வராதுன்னு சொல்லி மாயாவியாரை கெட்ட வுட்டுன்னு சொன்னது.????

      மாயாத்மா.,

      பளபளா சாவு லிஸ்ட்ல வரும் நண்பரே.
      என்னுடைய டாப் 3 லிஸ்டில்கூட முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.!

      நீங்க அடிச்சி ஆடுங்க. அவுட் குடுத்தா நோ பால்னு சமாளிச்சிக்குவோம்.!!!!

      Delete
    3. @Erode Vijay Anna:
      //பி.கு: நீங்க இதைவிடவும் ரொம்பக் கஷ்டப்பட்டு உழைப்பதற்காக 2017க்கு ஒரு ப்ராஜக்டை ரெடி பண்ணியிருக்கோம் நாங்க. பேரு - 'இரத்தப் படலம்' ( ஹிஹி)//

      +10000000000000000 :-):-):-)

      Delete
    4. @ கிட்டு

      'இரத்தக் கோட்டை'யை மறுபதிப்பு செய்வதெல்லாம் நம்ம எடிட்டருக்கு சப்பை மேட்டருங்க. ரெண்டு நாள் நைட்டு கண்ணு முழிச்சு ஒரு அட்டைப்படத்தை ( பொன்னன் அவர்களுக்கு புரோட்டா வாங்கிக் கொடுத்து) ரெடி பண்ணிட்டார்னா கிட்டத்தட்ட சோளி முடிஞ்சாப்லதான். அப்புறம் கத்தையா பேப்பரை மிசின்ல விட்டு லேசா அப்படி - லேசா இப்படி - பிரிண்டு ரெடி! அவரோட ரேஞ்சுக்கு இதெல்லாம் மினி-ப்ராஜக்ட்டுங்க. நம்ம ஜூ.எடிட்டர்ட்ட கூட இதுமாதிரி மினி ப்ராஜக்ட்டுகளைக் கொடுத்து ட்ரையல் பாக்கலாம்.
      எடிட்டரோட ரேஞ்சுக்கு 'ப்ராஜக்ட்டு'னா ச்சும்மா கும்ம்முனு இருக்க வேண்டாமா? அதான் - இரத்தப்படலம்! :)

      Delete
    5. சில நாட்களுக்கு முன் இதழை செல்பில் இடம் மாற்றிவைக்கும்போது எடுத்துப்பார்த்தேன். இரத்தப்படலம் துவக்கப் பாகங்களின் ஓவியங்களைப் பார்க்கையில்.. அவை வண்ணத்தில் வந்தால் என நினைத்துப் பார்க்கும்போதே மெய் மறக்கிறது. ஸ்டன்னிங் ஒர்க்!

      வண்ண மெகா பிராஜக்டுக்கு மிகத்தகுதியா ஒரு கிராபிக் நாவல் அது. காத்திருப்பு சில வருடங்கள் ஆயினும் பரவாயில்லை சார். மனதின் ஒரு ஓரத்தில் இப்போதே தயாராகுங்கள்.

      ஈ.வியை வழிமொழிகிறேன்!

      Delete
    6. @FRIENDS : அது ஏனோ தெரிலே, கட்டதுரையும், கைப்புள்ளயும் மாறி மாறி என் மன(முட்டைக்) கண்ணில் ஓடி வருகிறார்கள் !!

      Delete
    7. நல்ல அறிகுறி சார்! சீக்கிரமா வேலையை ஆரம்பிச்சுடுங்க. ;)

      Delete
    8. XIII கலர் ஸ்பெஷல் வழிமொழிகிறேன்.

      Delete
  34. நீங்க இதைவிடவும் ரொம்பக் கஷ்டப்பட்டு உழைப்பதற்காக 2017க்கு ஒரு ப்ராஜக்டை ரெடி பண்ணியிருக்கோம் நாங்க. பேரு - 'இரத்தப் படலம்' ( ஹிஹி)
    +1111111111111111111111111

    ReplyDelete
  35. ஈரோடு அகில்: அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும், எடிட்டர் சார் அவர்களுக்கும் வணக்கம்...

    என்னுடைய 2015 Top இதழ்கள்:
    டாப் 3 இதழ்கள்:
    1.லயன் 250
    1.ரோஜர்
    2.முத்து 350
    2.தங்கம் தேடிய சிங்கம்
    3.துணைக்கு வந்த தொல்லை

    டாப் சொதப்பல்:
    1.விண்ணில் ஒரு வேங்கை

    டாப் 3 அட்டைப்படம்:
    1.லயன் 250
    1.ரோஜர்
    2.தங்கம் தேடிய சிங்கம்
    3.சைத்தான் துறைமுகம்

    டாப் 3 சொதப்பல் அட்டைப்படம்:
    1.தீபாவளி வித் டெக்ஸ்
    2.மர்ம மனிதன் மார்ட்டின்
    3.விண்ணில் ஒரு வேங்கை

    இப்படிக்கு,
    S.Akil
    Erode
    Mobile:8903132348

    ReplyDelete
  36. ஆசிரியர் அவர்களே என்ன?பதிவை அந்தரத்தில் விட்டது போல உள்ளது.
    ..

    ReplyDelete
    Replies
    1. Jana Krishna : 11பக்கங்கள் சார் - இதுவே ! அதிலும் காய்ச்சலுக்கு மாத்திரையை விழுங்கிக் கொண்டே தயார் செய்தது !! அடுத்து ஞாயிறுக்கு இன்னும் 6 நாட்கள் தூரம் தானே ?

      Delete
  37. 1. சந்தா புதுப்பிப்பு பிக்கப் ஆகியுள்ளது எதிர்பார்த்ததுதான், இருப்பினும் அதை அறியத்தந்தமைக்கு நன்றி, மகிழ்ச்சி!

    2. டிசம்பர் இதழ்களை சென்னைக்கு வழக்கம்போல் அனுப்பிடாது, ஒத்திப்போட்டதும் ஒப்புதல் பெற்று அனுப்பியதும் மிக நல்ல நடவடிக்கை. இத்தகைய அக்கறை அன்புக்குரியது. அதற்கொரு நன்றி.

    3. 2015 இதழ்கள் பற்றிய தங்கள் நினைவலைகளும், மதிப்பெண்களும் சுவாரசியம். தொடரவும். வாசகர்களுக்கான தங்கள் கேள்விகளுக்கு சற்றே ஓய்வு கிடைக்கும் நாளொன்றில் அனுப்பிடுகிறேன் மெயிலில்.

    4. என் பெயர் டைகரை ஏப்ரலுக்குத் தள்ளிவைத்தீர்கள். இப்போது புத்தகச்சந்தையே ஏப்ரலுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தளபதியின் பவரை இப்போதாவது உணர்வீர்கள் என நம்புகிறேன். ஹிஹி!!

    ReplyDelete
    Replies
    1. ///4. என் பெயர் டைகரை ஏப்ரலுக்குத் தள்ளிவைத்தீர்கள். இப்போது புத்தகச்சந்தையே ஏப்ரலுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தளபதியின் பவரை இப்போதாவது உணர்வீர்கள் என நம்புகிறேன். ஹிஹி!!///

      ஆட்டோ ஆதி அவர்களே!

      அடேங்கப்பா.!!!!!



      ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சாம். அதே ஊருல ஒரு பனைமரமும் இருந்துச்சாம். அதே ஊருல ஒரு மைனரும் இருந்தாராம்.
      அந்த மைனரு பனைமரத்து நிழலுல ரெஸ்டு எடுத்துகிட்டு இருந்தாராம்.
      அந்த பனைமரத்துல ஒரு பனம்பழம் நல்லா பழுத்து கீழே விழுகறத்துக்கு ரெடியா இருந்துச்சாம்.

      அந்த காக்காவும் பறந்த அலுப்பு தீர அந்த பனைமரத்துல பழுத்திருந்த பனம்பழத்து மேல உக்கார வந்துச்சாம். பனம்பழம் கீழே விழத்தொடங்கின அதே சமயத்துல காக்கா பழத்துமேல உக்கார ட்ரை பண்ணிச்சாம். அதுக்குள்ள பனம்பழம் கீழே விழுந்துடுச்சாம். காக்காவும் பனம்பழத்தையே மெதிச்சி கீழே தள்ளிட்டோமேன்னு கெத்தா பறந்து போச்சாம்.

      இதையெல்லாம் பாத்துகிட்டு இருந்த மைனரு ஊருக்குள்ள போயி காக்கா உக்காந்து பனம்பழம் விழுந்திருச்சி அப்படீன்னு பெருமையா சொன்னாராம்.!! !!


      கதை முடிஞ்சிடுச்சி.!!! :-)

      Delete
    2. அட...ஏற்கனவே "ஆட்டோ ஆதியாய் " பெங்களூராரால் அன்பாய் அறியப்பட்ட நண்பர் இன்று முதல் "மைனர் ஆதி" என்று அன்போடு அறியப்படுவார் !!

      Delete
    3. welcome genius :-)

      இப்போ நம்ம அண்ணன் வந்து., அறிவாளிங்க சிரிக்கிற மாதிரி ஒரு கதை சொல்லப்போறாரு.!!!

      அண்ணே! சொல்லுங்கண்ணே!!

      Delete
  38. எடிட்டர் சார்;ஒரு சந்தேகம்,தலையோட புது கதை "ஒரு நாயகன் ஒரு சகாப்தம்"இந்த வருடம் வரும் என்று பயங்கர எதிர்பார்ப்பில் இருந்தேன்,ஆனால் அதை பற்றி ஒரு தகவலும் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.அந்த கதையை இந்த வருடத்தில் தயவுசெய்து வெளியிடுங்கள் சார்...ப்ளீஸ்..

    ReplyDelete
    Replies
    1. kannan s :அது கிராபிக் நாவலின் ரூட்டுக்கென காத்துள்ளது நண்பரே ! பிளஸ் இது தொடரவிருக்கும் நீளத்தைப் பற்றியும் அறிந்து கொண்டான பின்பு உள்ளே புகுந்திடுவோமே !!

      Delete
    2. எடிட்டர் சார்,

      இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி விட்டது போல் தெரிகிறது.

      http://www.sergiobonelli.it/scheda/39030/Frontera-.html

      Delete
    3. ////அது கிராபிக் நாவலின் ரூட்டுக்கென காத்துள்ளது நண்பரே ////-- கி.நாவிலும் டெக்ஸ் ஆகா ஆகா. ....
      ப்ளாக்& வொயிட்ல டெக்ஸ்...
      வண்ண ஸ்பெசல் இதழ்களில் டெக்ஸ்...
      மறுபதிப்பில் டெக்ஸ்...
      இப்போ , கி்.நா.விலும் டெக்ஸ்...
      பலமான கைதட்டலோடு வரவேற்கிறேன் சார், ....(குத்தாட்டம் போடும் படங்கள் 100)
      தொடர்கதையா இருந்தால் அவர்கள் முடித்தபின்பு மட்டுமே முயற்சிங்கள் சார்
      ...... ( சுடுபாலை முறைத்து பார்க்கும் பூனை படம் மூன்று)...

      Delete
    4. டெக்ஸ் விஜயராகவன்.!

      //தொடர்கதையாக இருந்தால் அவர்கள் முடித்தபின் மட்மே முயற்சிங்கள் சார்.!//

      உண்மை சார்.! தொடரும் என்ற போர்டை பார்த்தாலே கொலை வெறி ஆகிவிடுகிறது.!

      Delete
  39. Replies
    1. இந்த வருடம் என்னை மிகவும் கவர்ந்த இதழ் மின்னும் மரணம். இவைகளை கருப்பு வெள்ளையில் படிக்கும் போது ஏதோ (காமிக்ஸ்) படிக்கவேண்டும் என்று படித்தேன்; முக்கிய காரணம் அடுத்த அடுத்த பாகம்களும் தொடர்ச்சியாக வரவில்லை அதனால் சுவாரசியம் இல்லாமல் இருந்தது.

      ஆனால் ஒரே புத்தகமாக படித்த போது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது, பக்கத்துக்கும் பக்கம் அதன் வண்ணம், ஓவியம், வசனம்கள், கதாபாத்திரம்கள் அனைத்தும் என்னை பிரமிக்கவைத்தது. ஒரே புத்தகமாக அதுவும் வண்ணத்தில் படிக்கும் போது கதையின் வீரியம் புரிந்தது. இதனை என்னால் மறுபதிப்பு வகையின் சேர்க்க விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை இது ஒரு புதிய கதை/புத்தகம். 2015 இந்த புத்தகதிற்கே முதலிடம்.

      Delete
  40. இந்தவருடம் தேவை இல்லாத (அ) மொக்கை என்ற இடத்தில் மஞ்சள் நிழல் மற்றும் (இரண்டாம் இடத்தில) மார்ஷல் டைகர்.

    மார்சல் டைகர் கதையில் வண்ணத்தில் சித்திரம்கள் ரசிக்கும்படி இருந்தது, மற்றபடி ஒன்றும் இல்லை.

    மஞ்சள் நிழல் ரசிப்பதற்கும் ஒன்றுமே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இந்த லிஸ்டில் அம்பின் பாதையில் தாரளமாக சேர்த்து கொள்ளலாம். அருமையாக சித்திரம்கள் இருந்தும் வரலாற்று பின்னணியில் அமைத்து எனது பள்ளி கூட நினைவுகளை திருப்பி பார்க்கவைத்த ஒரு மொக்கை கதை. மிகவும் மோசமான ஒரு selection. Please avoid these kind of story book in the future.

      Delete
    2. ஆனால் இவற்றை எல்லாம் பின்னால் தள்ளிவிட்டு முதல் இடம் பிடிப்பது "விடுதலையே உன் விலையென்ன", தலைப்பை தவிர இந்த புத்தகத்தில் ஒன்றும் இல்லை. இந்த கதைக்கு மிக "பெரிய ஜீரோ". இரண்டாம் இடம் அம்பின் பாதையில், முன்றாம் இடம் மஞ்சள் நிழல், நான்காம் இடம் மார்ஷல் டைகர்.

      Delete
  41. தோர்கல் .கதையை ஒருவழியாக படித்து முடித்துவிட்டேன்.!

    பொதுவாக இந்தமாதிரி லாஜிக் இல்லாத கப்ஸா கதைகள்.,மாயாஜால கதைகளை கண்டாலே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி விடுவேன்.! தோர்கல் தொடர் இனிமேல் நன்றாக இருக்கும் என்று பல நண்பர்கள் பரிந்துரை செய்ததால் படித்தேன்.நிறைய கப்ஸாக்கள் முகத்தை சுழிக்க வைத்தாலும் சுவராசியமாகவே கதை சென்றது.சென்ற கதையில் இவ்வளவு கபஸா இல்லை.எனவே சூப்பராக இருந்தது.அடுத்தது எப்படியோ..........?

    ReplyDelete
  42. XIII க்கு 5.5 மார்க் கொடுத்த உங்களை மன்னிக்க முடியாது.

    2017 ஜனவரி க்கு XIII (1-18) முழு வண்ணத்தில் எதிர்பார்க்கிறேன்.

    R . பசுபதி
    திருப்பூர்.

    ReplyDelete
    Replies
    1. Pasupathy R :அட..நம்மளுக்கு கோயமுத்தூர் பக்கமாங்கன்னா ? அங்க பொன்ராசு..பொன்ராசுன்னு ஒருத்தர் ரொம்ப வேண்டப்பட்டவரோங்கன்னா ?

      Delete
    2. இல்லை சாரே. காமிக்ஸ் வட்டத்தில் ஒரு 2, 3 பேரை மட்டுமே தெரியும். நான் ஒரு silent மெம்பெர்.
      உங்களை 2 வருடங்களுக்கு முன் ஈரோடுஇல் முதல் முறை சந்தித்தபோதே XIII ஐ கலரில் கேட்டேன். நீங்கள் அதற்கு 15 நிமிடம் விளக்கம் கொடுத்தீர்கள்.

      ஆனாலும் முயற்சியை கை விட மாட்டேன். சமயம் கிடைக்கும் போது கேட்பேன்.

      Delete
  43. ஹிஹி! 'இரத்தப் படலம்' ஜுரம் மறுபடியும் பத்திக்கிச்சு! ஏதோ என்னால முடிஞ்சது! ;)

    ReplyDelete
    Replies
    1. வேதாளம்(XIII) விக்கிரமாதித்தன்(Editor) கிட்ட இருந்து மறுபடியும் முருங்க மரம் ஏறிடுச்சு.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ஈரோட்கார்,கொளுத்திப் போட்டாச்சா...ஓகே!ஓகே!!

      Delete
  44. லோகத்துல ஒருத்தருக்கும் பொறுப்பே கிடையாது.!

    இப்போ இரத்தக் கலர் படலமா முக்கியம்?

    நான் எத்தனை பொறுப்பா முக்கியமானதா கேக்குறேன் பாருங்கோ!!


    எடிட்டர் சார்.,

    பெட்டி டார்லிங்கோட ஸ்பின் ஆஃப் எப்போ வரும்?
    பெட்டி போர்னோவ்ஸ்கியோட ப்யூட்டிஃபுல் பிண்ணனிய தெரிஞ்சிக்க நெறம்ப ஆவலோடு இருக்கிறோம் சார்.!!!

    இவண் -

    "பெட்டி " வெறியர் பாசறை!

    ReplyDelete
  45. பாதைகளும் பயணம்களும் - பாதைகளும் குழப்பம்களும்ன்னு பெயர்வைத்து இருக்கலாம்.

    முதல் பாகம் கவர்ந்த அளவு இந்த பாகம் என்னை கவரவில்லை, காரணம்
    1. நண்பர்கள் இட மாற்றத்தில் குழப்பம்
    2. உப்பு சப்பு இல்லாத ஒரு கிளைமாக்ஸ்

    இந்த கதையின் சிறப்பு ஓவியம்.
    சிறுவயது நண்பர்கள் பிற்காலத்தில் வெவ்வேறு பாதையில் பிரிந்து மீண்டும் சந்திக்கும் இந்த கதையை இன்னும் சிறப்பாக சொல்லி இருக்க முடியும் (அதற்கு மிகவும் தகுதியான ஒரு கதை) ஆனால் பக்கம் பக்கமான வசனம்கள் மற்றும் குழப்பம் என்ன கதாசிரியர் இந்த கதையை சொதப்பிவிட்டார்.

    வேண்டுகோள்: இந்த கதையின் தொடர்ச்சி அடுத்த வருவதாக இருந்தால் ஒரு முறைக்கு நூறு முறை யோசித்து தமிழில் வெளி இடவும்.

    இந்த கதை நான்காம் இடம்தான்!

    ReplyDelete
  46. 1.2015 ன் டாப் 3 இதழ்கள்
    1.மாடஸ்டி இதழ்
    2.கமான்சே இதழ்
    3.ஆரிசியா ஷானியா இதழ்கள்

    ReplyDelete
  47. 1.2015 ன் டாப் 3 இதழ்கள்
    1.மின்னும் மரணம்
    2.லயன் 250
    3.சர்பங்களின் சாபம்

    2.2015 ன் டாப் 3 மொக்கை பீஸ்கள்
    1.விண்னில் ஒரு வேங்கை
    2.விடுதலையே உண் விலையென்ன
    3.பாதைகளும் பயணங்களும்

    3.2015 ன் பெஸ்ட் அட்டை படம்
    அம்பின் பாதையில்

    4.2015 ன் வொஸ்ட் அட்டை படம்
    விடுதலையே உன் விலையென்ன
    5.2015 ன் மறக்க முடியாத தருணம்
    ஈரோட்டில் ccc ன் கொண்டாட்டம் மற்றும்
    ஆசிரியருடன் உணவருந்தியது
    6.2015 ல் முத்திரை பதித்த நாயகர்
    தோர்கல் 2014 ல் டம்மி பீஸாய் இருந்தவர் 2015 ல்
    பின்னியெடுத்து விட்டார்
    7.2015 ல் அதிகம் ஏமாற்றமளித்த இதழ்
    இரத்த படலம்
    8.கௌபாய் கதைகள் திகட்டுகிறதா
    இல்லவே இல்லை இன்னும் வேண்டும்
    9.2015 ன் பெஸ்ட் அறிமுகம்
    பௌன்சர் தான் என்று கூறவும் வேண்டுமா
    10.என்ன குறைகிறதென்று பட்டது 2015ல்
    டிடெக்டிவ் திரில்லர்கள் ஜானி கதைகள்
    அதிகரிக்க வேண்டுகிறேன்
    11.2015ன் overall அனுபவம் எப்படி இருந்தது
    ஏற்றம் இறக்கம் இருந்தாலும்
    மிகமிக அருமையாக இருந்தது

    ReplyDelete
  48. டிசம்பரின் இதழ்கள் ரேட்டிங்
    1.மூன்றாம் உலகம்
    2.மரணத்தின் முத்தம்
    சித்திரம் இன்னும் அருமையாக இருந்திருந்தால் அழகி தான்
    முதலிடம் பிடித்திருப்பாள்
    3.சீற்றத்தின் நிறம் சிவப்பு
    4.பாதைகளும் பயணங்களும்
    இந்த மாதிரி கிளைமாக்ஸ் சொதப்பல் கதைகள் வேண்டாம்

    ReplyDelete
  49. ஆசிரியரே டாலர் ராஜ்யத்தின்
    3வது அட்டை படம்
    சூப்பராக இருக்கிறது

    ReplyDelete
  50. ////////////மிகப்பெரிய குழப்பம் என்னவென்றால் ,

    முதல் பாகம் முற்றும் போடப்பட்ட இடத்தில்,,

    ஷார்தாரை தேடி தோர்கல்., காலதோர்ன். வார்கன் மூவரும் ஒன்றாகத்தானே கிளம்புகிறார்கள்.
    இரண்டாம் பாகத்தில் எப்படி தனித்தனியே பிரிந்து வருகீறார்கள். ஜோரண்ட்டின் படை மற்றும் வார்கன் இணைந்தது எப்படி காலதோர்ன் தனியாகவும் தோர்கல் தனியாகவும் ஏன் பிரிகிறார்கள். தோர்கலின் துணை வேண்டுமென்பதால்தானே காலதோர்ன் அவரை குணப்படுத்தி அழைத்து செல்கிறான். பிறகு பிரிந்து தனித்தனியே படையெடுக்க காரணம் என்ன??

    "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் "
    (இல்லை ஒரு பாகத்தையே காணோமா? ) :-)

    ஒருவேளை நான் சரியாக கதையை புரிந்து கொள்ளவில்லையா.!//////////////////
    @ கிட் ஆர்ட்டின் கண்ணன்.........
    கால்தோர்ன் தனது அரசாட்சியை மீட்க பலரது உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை.........
    வைகிங்குகள் இனத்தை சார்ந்த ஆரிசியாவை ஷார்தார் சிறைபடுத்தியிருப்பது கால்தோர்ன்-க்கு சாதகமாக உள்ளது.....
    தேவதைகளின் வரம் பெற்ற தோர்கல் தனது மனைவியை மீட்க போராடுவான் என்பதை அறிந்தே வார்கனை தோர்கலிடம் அனுப்புகிறான்.

    வார்கனை ஜோரன்ட்டிடம் அனுப்பி ஷார்தர் மேல் படையெடுக்க சம்மதிக்க செய்கிறான்....
    மேம்போக்கான காரணம் வைகிங்குகள் இனத்தை சார்ந்த ஆரிசியாவை விடுவிப்பது...
    அழுத்தமான காரணம் ஷார்தர்இடம் உள்ள தங்கம்.....
    கால்தோர்ன் தலைமையில் நிலமார்க்கமாக ஒரு பிரிவு வைகிங்குகள்,
    ஜோரன்ட் தலைமையில் கடல் மார்க்கமாக ஒரு பிரிவு வைகிங்குகள்,
    ஷார்தர் மேல் போர் தொடுக்கிறார்கள்......
    இது சரியான யுத்த வியூகம்தானே.........................................
    கால்தோர்ன் வழியெங்கும் உள்ள ஷார்தாரின் வீரர்களை தோற்கடிப்பது மட்டுமின்றி ஷார்தர் மேல் அதிருப்தி உள்ள பிரபுக்களின் நட்பையும் சம்பாதித்து கோட்டையை நோக்கி முன்னேறுகிறான்.....இது சரியான செயலும் கூட........................................................
    தோர்கல் வீரன்தான்...எனினும் போர் வீரன் அல்ல.....
    தனது மனைவியை மீட்பதே அவன் நோக்கம்.....எனவே அவன் தனித்து இயங்க அனுமதிக்கபடுகிறான்
    போரினூடே தனது மனைவி கொல்லப்படுமுன் அவளை காப்பாற்ற விழைகிறான் தோர்கல்......
    இது 92-ம் பக்கம் தோர்கல் இரண்டாம் பேனலில் பேசும் வசனம் புரிய வைக்கிறது.
    ஷார்தரின் மரணத்துக்கு காரணமாக இருப்பதின் மூலம் தோர்கல் தன்னை தனித்து செயல்பட அனுமததித்ததை நியாயபடுத்துகிறான்......
    குழப்பம் ஏதும் இருப்பதாக தெரியவில்லையே...........................

    ReplyDelete
    Replies
    1. செல்வம் அபிராமி சார் ..அருமை ..எனக்கும் எந்த குழப்பமும் ..ஒற்றை பக்கத்தை காணோம் என்ற குழப்பம் எல்லாம் வரவில்லை .....ஆனால் நண்பர்களின் சந்தேகத்திற்கு எப்படி விளக்கம் அளிப்பது என்று தெரியாமல் அமைதி காத்தேன் ..அருமையாக விளக்கி உள்ளீர்கள் ..

      பாராட்டுக்கள் ....;-)

      Delete
    2. தெளிவான விளக்கம் தந்ததற்கு சில பல நன்றிகள் செல்வம் சார்........
      தோர்கல் ஆரம்பிக்கும் முன்பே, அறிவிப்பு வந்தபோது முதல் 6பாகங்கள் ஒரு செட், அப்படியே வரு தொகுப்பாக வெளியிட நண்பர் ப்ளேடு கார்த்திக் கேட்டு கொண்டார்.ஆனால் வரவேற்பு எப்படி இருக்குமோ என ஆசிரியர் தயங்கி, தயங்கியே ஒவ்வொரு பாகமாக வெளியிட்டார்....அதன்படியே இப்போது நிறைவுற்றும் உள்ளது....தோர்கல் இப்போது முத்திரை பதித்த நாயகனாகனாகிட்டார், முன்பே கணித்த கார்த்திக்கிற்கு பாராட்டுகள் & வாழ்த்துகள்....
      உள்ளம்கவர் நாயகன் தோர்கலுக்கு சந்தா Z ல் மூன்று rs125 இதழ்கள் (6 பாகங்கள்) ஒதுக்க வேணும் என கேட்டுகொள்கிறேன் சார்....
      மேலும் 2017 ல் சந்தா A ல்.....வேணா வாணம், ஒரு இடம் தான் தருவீர்கள்...தோர்கல் zலேயே இருக்கட்டும் வருடம் 6பாகங்களாவது வரட்டும் சார்...

      Delete
    3. செனா அனா!

      நல்ல விளக்கம். ஆனா நானும் இதைத்தான் ஏற்கனவே யூகித்திருந்தேன்.! (ஆனா உங்க அளவுக்கு இல்லை :-) )

      ///இது 92-ம் பக்கம் தோர்கல் இரண்டாம் பேனலில் பேசும் வசனம் புரிய வைக்கிறது.///

      மூன்றாம் பாகம் முதவ் பக்கத்தில் ஒரு சின்ன கட்டம் போட்டு நீங்க கொடுத்த விளக்கத்தை கொடுத்திருந்தால் குழப்பமே வந்திருக்காது இல்லிங்களா.???

      குறைந்தபட்சம் 92 ஆம் பக்கம் மூனாவது பேனலில் பார்க்க. என்றாவது சொல்லியிருக்கலாம்.
      (டமாஷ் டமாஷ்) :-)

      தோர்கலையும் கி நா முத்திரை குத்தி நண்பர்கள் ஒதுக்கிடுவாங்களோ என்ற நல்ல பயத்தில்தான் டவுட் கேட்டேன்.! !!

      Delete
    4. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!

      //கி.நா.முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயம்.!//

      நல்ல கதையாக இருந்தாலும் , எளிதாக புரிந்தாலும் கி.நா.என்றாலும் மற்ற எதுவாக இருந்தாலும் கவலையில்லை.!

      Delete
  51. 1) 2015 இன் Top 3 இதழ்கள்
    ==> மின்னும் மரணம்
    ==> லயன் தீபாவளி இதழ்
     ஏழு நாட்களில் எமலோகம்


    2) 2015 இன் Top 3 மொக்கை பீஸ்கள்
    ==> மஞ்சள் நிழல்
    ==> மஞ்சள் நிழல்
    ==> மஞ்சள் நிழல்




    3) 2015 இன் பெஸ்ட் அட்டை படம்
    ==> சைத்தான் துறைமுகம்


    4) 2015 இன் worst அட்டை படம்
    ==> மஞ்சள் நிழல்


    5) 2015 இன் மறக்க இயலா தருணம்
    ==> மின்னும் மரணம் வெளியீடு



    6) 2015 இல் முத்திரை பதித்த நாயகர்
    தோர்கல்


    7) 2015 இல் அதிகம் ஏமாற்றம் அளித்த இதழ்
    ==> பாதைகளும் பயணங்களும்


    8) கெளபாய் கதைகள் திகட்டுகின்றதா ?
    ==> இல்லை


    9) 2015 இன் பெஸ்ட் அறிமுகம்
    ==> லியனார்டோ


    10) 2015 இல் குறை
    ==> சிக்பில் கதைகள் குறைவு


    11) 2015 இன் Overall அனுபவம்
    ==> அருமை .

    ReplyDelete
  52. விடுதலைையே உன் விலை என்ன? மொக்கைகளில் இரண்டாமிடம்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்மர்ப்-பிடித்திருக்கிறது!என்னை விட என் செல்ல மகளுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது.கதை படித்த இரண்டு நாட்களாய் என் பிட்டம் பார்த்து 'அவுக்,அவுக்'என கத்திக்கொண்டிருந்தாள்!

      Delete
    2. ஸ்மர்ப்-பிடித்திருக்கிறது!என்னை விட என் செல்ல மகளுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது.கதை படித்த இரண்டு நாட்களாய் என் பிட்டம் பார்த்து 'அவுக்,அவுக்'என கத்திக்கொண்டிருந்தாள்!

      Delete
  53. இதுவே பதினொரு பக்கம் ....####


    உண்மை சார் ....இங்கே அலைபேசியில் தங்கள் பதிவை படிக்கும் பொழுது சுருக்கமாக இருப்பது போலவும் ....ஒரு அரை பக்க தகவல் போலவும் தான் தங்கள் பதிவுகளை உணர முடிகிறது ...ஆனால் இதே வலை பக்கத்தை இதழில் சிங்கத்தின் சிறு வலையில் என்ற பகுதியில் அச்சில் பார்க்கும் பொழுது அடேங்கப்பா இவ்வளவு பெரிய பதிவா என்ற ஆச்சர்யம் தலை தூக்குகிறது....;-))

    ReplyDelete
  54. கஷ்டப்பட்டு ....கடினப்பட்டு .....ஜனவரி புத்தக காட்சிக்கு இல்லத்தரசியிடம் இரண்டு நாட்கள் அனுமதி வாங்கியிருந்தேன் ...


    இப்போது ஏப்ரலில் .....


    மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கஷ்டபட்டு ...கடினப்பட்டு .....போராட வேண்டும் ...ஹீம் ...;-((((

    ReplyDelete
  55. என் பெயர் டைகர் சந்தாவை 2016 சந்தாவுடன் இனைத்து கட்டியிருந்தேன் ....ஆனால் இதழில் என் பெயர் வரவில்லை என்றதும் ஒரு திடுக் ....அலுவலகத்தில் விசாரித்ததும் தெளிவாக எடுத்துரைத்து எனது புக்கிங் எண்ணையும் அறிவித்த பணியாளருக்கு ஒரு மாபெரும் நன்றி .....

    ReplyDelete
  56. மொக்கை கதைகளில் நான் மட்டும் கிராபிக்ஸ் நாவலை தேர்வு செய்து இருப்பேனா என்ற குற்ற உணர்ச்சியை தெரிவு செய்த நண்பர்கள் அனைவருமே ஆளுக்கொரு கிராபிக்ஸ் நாவலை தவறாமல் தெரிவு செய்து அந்த குற்ற உணர்ச்சியை மறக்கடித்த பாங்குக்கு எனது மாபெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ...;-))

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. 1.       2015 top 3 issues?
    மின்னும் மரணம்
    டாலர் சாம்ராஜ்யம்
    கார்ட்டூன் ஸ்பெஷல்

    2.       2015 top மொக்கை?
    நிழலோடு நிஜ யுத்தம்
    விண்ணில் ஒரு வேங்கை
    விடுதலையே உன் விலை என்ன?

    3.        2015 best cover?
    டாலர் சாம்ராஜ்யம்

    4.       2015 worst cover?
    காலனின் காலம் (மார்டின்)

    5.   மறக்க முடியா தருணம்?
    Erode book fair

    6.       2015 முத்திரை நாயகர்?
    பௌன்சர்

    7.       ஏமாற்றிய இதழ்?
    டெக்ஸ் கதைகள் (மட்டும்) கொண்டுவடிவமைக்கப்பட்ட லயன் 250 இதழ். ஒரு மைல்கல் இதழில் மற்ற சில நாயகர்களையும் இடம்பெற செய்திருந்தால் நலம்.

    8.       கௌபாய் கதைகள் அதிகமா?      இல்லை

    9.       Best அறிமுகம் ?
    (வரிசைப்படி)
    பௌன்சர்
    பொடியர்கள்
    காமெடி கர்னல் 

    10.   2015 குறை?
    ஆர்வம் தராத - மந்தமான மறுபதிப்புகதைகள்...

    11.   2015 அனுபவம்?
    நன்றாக இருந்தது.

     பின் குறிப்பு :  nov  dec  இதழ்கள் இன்னும்படிக்கவில்லை. அனைத்து கருத்துக்களும்அக்டோபர் இதழ்கள் வரை மட்டும் மனதில்கொண்டு கூறப்பட்டவை.

    ReplyDelete
    Replies
    1. திருத்தம்
      4.       2015 worst cover?
      கனவின் குழந்தைகள் (மார்டின்)

      Delete
  59. டைலன் டாக்,ஓகே.மேஜிக் விண்ட் ஓகே.ஆனால் விண்ட் வண்ணத்தில் மிளிரவில்லை!கருப்பு,வெள்ளையிலும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து!

    ReplyDelete
    Replies
    1. யெஸ்...!மேஜிக் விண்ட் கறுப்பு வெள்ளையே போதும்.

      Delete
  60. ப்ளு கோட்,முதல் இரண்டு கதைகளில் இருந்த ஹாஷ்யம் அடுத்தடுத்த கதைகளில் குறைவே! ஓகே,ஓகே!!

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. மறக்க இயலா தருணம்-மின்னும் மரணம்!அதிலே பாருங்க,க்ளைமாக்ஸிலே அந்த பொம்மனாட்டிகாக சப்பை மூக்கார் படும் பாடு இருக்கே....அய்யோ,அய்யோ,,சிரிச்சு மாளாது!!

    ReplyDelete
  63. கெளபாய் கதைகள் திகட்டவில்லை,,மாறாக தித்திக்கிறது!ி

    ReplyDelete
  64. இவையனைத்தையும் விட என் தானைத்தலைவனுக்கே முதலிடம்,,,! வேறு யார்--- குற்றச்சக்ரவர்த்தியும் இவனே! நீதிக்காவலனும் இவனே!!ஹா!ஹா!!ஹா!!!

    ReplyDelete
  65. 1. பௌன்சர்
    வாராதோ ஓர் விடியலே
    மின்னும் மரணம்
    2. விண்ணில் ஒரு வேங்கை
    விடுதலையே உன் விலையென்ன
    பாதைகளும் பயணங்களும்
    கிராபிக் நாவல் என்பதால் அல்ல. கதையில் விருவிருப்பு துளி கூட இல்லை என்பதால்
    3. சாத்விகமாய் ஒரு சிங்கம்
    4. ஆதலினால் காதல் கொள்ளாதிர்
    5. மின்னும் மரணம் வெளியிட்டின் போது, விழாவில் கலந்து கொண்டவர்களின் மகிழ்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு, விழாவுக்கு வரமுடியாதவர்களின் உணர்வுகளை ஆசிரியர் அலட்சிய படுத்திய விதம் இன்னுமும் மனதை விட்டு அகலவில்லை. கசப்பான மறக்க முயன்றும் முடியாத அனுபவம்
    6. பௌன்சர்
    7. மஞ்சள் நிழல் (தொடர் கதை என்பதால் மனம் கதையில் லயிக்கவில்லை)
    8. இல்லை
    9. ஸ்மர்ப்
    10. சஸ்பென்ஸ், த்ரில்லர், துப்பறியும் கதைகள் இல்லாதது மற்றும் டயபோலிக் இல்லாதது
    11. புது முயற்சிகள் மற்றும் புதிய வரவுகள் - வரவேற்க தக்க மாற்றங்கள்
    ஆனால் பாயிண்ட் 10 இல் குறிப்பிட்ட Genre கதைகள் இல்லாதது ஏமாற்றமே

    ReplyDelete
    Replies
    1. 8. இல்லை, திகட்டவில்லை

      Delete
  66. Blue berry = 400.00
    Largo=125.00
    Prince=65.00
    Modesty= just 40.00
    Reporter=65.00
    Locky Luke=130.00
    Woodcity=130.00
    Tex [ missing+new hero's+variety comics]=1560.00
    Unjustice preparation
    Rs 1560.00=24 new comics books.

    ReplyDelete
  67. படிக்கற போக்குல தோணின கமெண்ட்ஸ்...

    நமக்கு வயசு ஏறினா கவனம் அதிகமாகுது..! அம்மையார் [என்கிற மாடஸ்டி] -க்கு மறதி அதிமாய்ட்டே போகுது..! கம்போடியான்னு பேர் சொன்னதும் டக்குன்னு உடனே, சண்டை கத்துகிட்ட எடம் நியாபம் இருக்குமாம், மாஸ்டர் பேரு, அவ பேத்தி, மூஞ்சி எல்லாம் நியாபகம் இருக்குமாம். கம்போடியா அரசாங்கத்தையே கவுக்கற அளவு பெட்டி பெட்டிய தங்கத்தை ஆட்டையை போட்டதும், அங்கபுரட்சிகாரங்க தனக்கு எதிராக இருக்காங்ககிறதும் நியாபகமே வரதாம்..! ம்...எட்டு வயசுல பார்த்தபெண்னை திரும்ப பதினாறு வயசுல பாக்கறாங்க, அப்போ திரும்ப கம்போடியாவுக்கு எட்டு or பத்து வருஷம் கழிச்சிதான் போறாங்க,ஆனா அதுக்குள்ளே இவ்வளோ பெரிய மறதியா...??? மறதி ஒரு தொத்து வியாதியா..? ஏன்னா கார்வின் அதுக்கு மேல..!

    நமக்கெல்லாம் இருபது முப்பது வருஷம் முன்னாடி, ஒரு ருபாய்க்கும் ரெண்டு ரூபாய்க்கும் வாங்கி படிச்ச கதையே மறக்கமாட்டேங்குது..ஆனா...என்னம்மா மாடஸ்டி இப்படி பன்றியேம்மா..??? இந்த கதையை திரும்ப எடுத்து படிக்கனும்ன்னு தோணவே எத்தனை வருஷங்கள் பிடிக்குமோ..??? [ நட்புஸ் உங்க பதில்..]

    ReplyDelete
    Replies
    1. M V @

      யாரோ உங்களை கூப்பிடுறாங்க. என்னன்னு கேளுங்க! :-)

      Delete
    2. M V @

      யாரோ உங்களை கூப்பிடுறாங்க. என்னன்னு கேளுங்க! :-)

      Delete
    3. இந்த மாதிரி ரெண்டு முணு தபா கூப்பிடுறது கூண்டுக்கு உள்ள நிக்கவேண்டியவங்களை தான்..! கோடையிடி கண்ணன் அவர்களே..வெளிய நிக்கறவங்களுக்கு ஒரு தபா கூப்பிட்டலே போதும்...ஹா..ஹா..!

      Delete
    4. மாயாஜீ புரட்சிகாரங்க மறந்து இருப்பாங்க அப்படின்னு மாடஸ்தி நினைச்சு இருக்கலாம் இல்லையா ...ஹீஹீ ....

      Delete
    5. இப்படி ஒப்பேத்தி ஒப்பேத்தியே ஒருத்தரை சிவகாசியில நீங்க சிங்கமில்லைன்னு நம்பவெச்சிட்டு இருக்கிங்க..!

      தலீவா இதை சமாளிச்சு ஒரு ஸ்டேட்மென்ட் ப்ளிஸ்..! [கண்ணடிக்கும் படங்கள் எட்டு]

      Delete
    6. மாயாவி சார் ,! தனக்கு சண்டையை கற்றுத்தந்த குருவை மதிக்கும் அழகை பாருங்கள் சார்.!அவரின் திறமையை கண்மூடித்தனமாக நம்பும் மாடஸ்டியை இங்கிலாந்து ஏகலைவன் மாதிரி எனக்கு தோன்றுகிறது.


      // வில்லன்களை மறந்துவிடும் மாடஸ்டி //

      இன்று யோகாவை பற்றியும் தியானம் பற்றிய பெருமையை வெளிநாட்டுகாரங்க சொன்னாத்தான் நமக்கு தெரியுது.! இதை அன்றே கற்றுத்தேர்ந்த எங்க இளவரசி இந்த அரைவேக்காட்டு டம்மி பீசையெல்லாம் குப்பையாக ஞாபகம் வைத்திருக்க அவசியம் இல்லை.

      மாடஸ்டி யை யும் கார்வினையும் குள்ளநரிபோல் பழிவாங்கும் முறையை வைத்தே எதிரி ஒரு டம்மி பீசுன்னு எனக்கே தெரியுது. ஷார்ப்பான மாடஸ்டிக்கு தெரியாதா.?

      Delete
    7. MV அவர்களே...

      வில்லன்களை மறந்துவிடும் மாடஸ்டி, அறிய யோகா கற்றவங்களாகவே இருக்கட்டும்..! அந்த அரைவேக்காட்டு டம்மி பீசையெல்லாம் குப்பையாக ஞாபகம் வைத்திருக்க அவசியம் இல்லைமாலும் போகட்டும்..! ஆனால் தனக்கு அறியகலையை கற்றுத்தந்த குருவுக்கு, அவர் வாசிக்கும் பகுதியில் உள்ள தன் எதிரி [குள்ளநரி] யாரேனும் ஒருவனால் ஆபத்து வருமோ என 'கணம்' மாடஸ்டிக்கு மின்னல் போல பளிச்சிடாமல்...நேரபோய் சிக்குறது...மனசார சொல்லுங்க...பெரிய ஓட்டையில்லையா..!!!

      கதையை இப்படி முடிக்கணும்கிறத்துக்காக மறைக்கப்பட்டது...அம்மையாரின் திறமையை அல்லவா...???

      apps அனுப்பியுள்ளேன், அப்டேட் செய்யவேண்டாம்..! பழைய வெர்ஷன் அது, செம..!

      Delete
    8. மாயாஜீ தனது மாஸ்டரிடமிருந்து தகவல் என்றவுடன் மாடஸ்தி அவர் இன்னும் உயிருடன் தான் உள்ளாரா என்று சந்தேகத்துடன் கேட்கிறார் ...அப்படி இருக்கும் பொழுது அதே எல்லையில் ..இன்னமும் அங்கே இருந்து அவரிடமிருந்து தகவல் வரும் பொழுது தகவலின் காரணமாகவோ அல்லது மூப்பின் காரணமாகவோ அவருக்கு ஆபத்து சூழ்ந்துள்ளது என ஐயப்பட தேவையில்லையே .....

      இதுவும் லாஜீக் மீறல் எனில்


      இப்படிபட்ட சிறு சிறு லாஜீக் மீறல் மாடஸ்தி கதைகளில் மட்டுமல்ல அனைத்து நாயகர்கள் கதைகளிலும் தென்படும் ஒன்றே ...இவற்றை எல்லாம் உற்று ஒன்றி சந்தேகம் வாசகர்களுக்கு எழுந்தால் கதையின் நாயக...நாயகியர் ...தனது இல்லத்திலேயே அமர்ந்து தான் சாகஸம் செய்ய வேண்டியதாக இருக்கும் ....;-))


      அப்புறம் சார் நம்ம சிவகாசில இல்ல சேந்தம்பட்டி குழுவிலியும் என்னை சிங்கமாகவா நினைச்சுட்டு இருந்தீங்க ....இதை முதல்லியே சொல்லி இருக்க கூடாது ...நான் சேந்தம்பட்டி குழுவுக்கு ஆடாக ...அதுவும் பலி ஆடாக என்றுதானே நினைத்து கொண்டு இருந்தேன் ..இப்பதானே நீங்க சொல்லியிருக்கீங்க....இனி பாருங்க ....;-))

      Delete
    9. திரும்பவும்...

      வேண்டிய பதிலுக்கு ஏத்த கேள்விகேக்கற மாதிரியே...உங்களுக்கு வேண்டிய வரியை மட்டும் எடுத்துகிட்டா எப்படிங்க தலீவா...?

      "ஓ..அவர் இன்னமும் உயிரோடு
      தானிருகிறாரா? புது ஆட்சியினரால்
      ஏற்கனவே கொல்லப்பட்டிருப்பார்
      என்றெல்லவா எண்ணிக்
      கொண்டிருந்தேன்!"
      <<<<<<<< இதுதான் அந்த டயலாக்..!

      ஆட்சியாளர்களால் கொல்லப்படும் ஆபத்துள்ளவர், தப்பிபிழைத்துள்ளரென்றால்... அப்போ ஆபத்து இருக்குகிறது உறுதியா தெரியுதில்லையா..!!! ஆட்சியாளர் பத்தி அம்மையார் பேசுவாங்கலாம்.. ஆனா அங்க ஆட்டையை போட்ட தங்கத்தை கோட்டையை விட்ட பழைய புரட்சிகாரங்க [ இன்றைய புது ஆட்சியாளர்கள்] பத்தி சுத்தமாவே கணக்கு போட மாட்டாங்கலாம்..!

      கொஞ்சம் மனசாட்டியோட சொல்லுங்க தலீவா.. :((( நான் என்ன ஆட்டைய போட்ட தங்கத்துல பங்கா கேட்டேன்..! இல்லை,"அட்டைபடத்துல 'குட்டி தவளை' டாலருக்கு பதிலா இப்படி உள்ளாடை தெரியற பிகரு படத்தை போய் எடி போட்டிருக்காரே...இது என்ன லாஜிக்...அய்யோ.." ன்னா கேட்டேன்..???? நீங்களே நியாயம் சொல்லுங்க..! நான் தப்பு சொல்றது கதையில கோட்டைவிட்ட பிரிட்டிஷ்காரனை பத்தி, இதில் திரு விஜயன் அவர்களுக்கு என்ன பங்கு இருக்க முடியும்..? அப்படிங்கிறதை கணக்குல எடுத்துகிட்டு தீர்ப்பை மாத்தி சொல்லுங்க'தல'.

      Delete
    10. மாயாவி சிவா.!

      எங்க தலைவரின் கர்ஜனைக்கு பதில் உண்டா.?


      எதையும் தம் மதியூகத்தில் சரியாக கணிக்கும் மாடஸ்டி.,தன் குருநாதர் மீது அளவுகடந்த பக்தி வைத்துள்ளார்.தன் குருநாதரின் பற்றிய செய்தி கிடைத்தவுடன் அவர் புரட்சி கும்பலால் கொல்லப்பட்டு இருப்பார் . என்று கருதும் மாடஸ்டி உற்சாகம் ஆகிறார்.

      யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல்.தன் குருநாதருக்காக எந்த தியாகமும் செய்ய தயார்.இருந்தாலும்.இந்த மூளையில்லாத புரட்சிகாரர்களை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் செய்து கொண்டுதான் செல்கிறார்.!அங்கு பேத்தி இல்லை என்றாலும்.சதாரண நண்பர்களுக்கே தன்உயிரை பணயம் வைக்கும் மாடஸ்டி.,தன் குருநாதரின் மீது கண்மூடித்தனமான பக்தியின் காரணமாகவே எல்லாவற்றையும் எதிர்கொள்கிறார்.மாடஸ்டி இங்கிலாந்தின் ஏகலைவன்.!

      Delete
    11. மனசாட்டியோட=மனசாட்சியோட

      Delete
    12. //நாயகன் நாயகியர் வீட்டில் இருந்துதான் சாகஸம் செய்யவேண்டியிருக்கும்.!//

      ஹாஹாஹாஹாஹாஹாஹா...........! தலைவரே.! சூப்பர்.!

      Delete
    13. மாயாவி சிவா.! ஹலோ ஹலோ ஹல்ல்ல்லலோ.!

      Delete
    14. @ MV

      "புரட்சியாளர்களோ - அரசாங்கமோ,
      ஆட்டையை போடுவதில் நமக்கு
      பாரபட்சம் கிடையாது"
      <<<<<< இது 15-ம் பக்க மாடஸ்டி டயலாக்..!

      அம்மையாருக்கு தான் தங்கத்துல குறின்னு டயலாக் சொல்லுது.....ஹீ..ஹீ..! எனக்கு கதையில குறி, அம்மையார் கதையை எழுதினவரு கோட்டைவிட்டு மாடஸ்டி பேரை ரிபேர்ஆக விட்டாரேன்னு வருத்தம் MV ஸார்..!

      சரிவிடுங்க வானமே எங்கள் வீதியில இதைவிட ஒரு பயங்கர ஓட்டை இருக்கு...அங்க போறேன் MV அவர்களே..!

      Delete
  68. இந்த மாதம் எல்லா புத்தகங்களையும் படித்துவிட்டேன்.!

    இரவில் நிலாவும் விண்மீன் களும் அழகாய் தெரியும்.! ஆனால் சூரியன் வந்த பிறகு.,மற்றவை கண்ணுக்கு தெரியாது.அதைப்போல சூரியன் போல் நீண்ட இடைவெளிக்கு பின் அருமையான சித்திரத்தில் வந்த மாடஸ்டிகதை மற்ற கதைகளை மறையச்செய்துவிட்டது.!

    மரணத்தின் முத்தம் ஓவிங்கள் மற்றும் கதை அருமை.சராகம் கேரக்டர் எனக்கு பிடித்திருந்தது.தன் பேத்தியின் உயிரா ? மாடஸ்டியின் உயிரா என்று மிரட்டும்போது இறுக்கமான ஓவியங்கள் தத்ரூபம்.இருபது வயது மாடஸ்டி நன்றாகத்தான் உள்ளார்.டயலாக்கிற்கு ஏற்ற முகபாவனை பிரமாதமாக உள்ளது. பேத்தியின் உயிரா மாடஸ்டியின் உயிரா என்று தீர்மானிக்கும் காரணம் சுயநலம் கலந்த புத்திசாலித்தனமான முடிவு.அதையே மாடஸ்டியும் ஏற்றுக்கொண்டு "சரீரத்திலேயே அதிகமாக பயன்படுத்தவேண்டியது மூளைதான் " அழகான உண்மை.!


    கேப்ரியல் போன்ற சூப்பர் வில்லன்களுடன் மோதிவிட்டு. ஒரு புரட்சி கும்பலின் ஒரு டம்மி பீஸுடன் மோதுவது கொஞ்சம் காரம் கம்மியாக இருந்தது போல் இருந்தது.

    எதிரில் இருப்பது மாடஸ்டி என்று கண்ணை கட்டி இருந்தாலும் யூகிப்பது அட்டகாசம் புல்லரித்து விட்டது.!

    இதேபோல் நி.நி.யு. கதையில் அவ்வளவு கஷ்டப்பட்டு போலி மாடஸ்டியை உருவாக்கினாலும் தூரத்தில் இருந்தே இது டூப் மாடஸ்டி என்று கண்டுபிடிக்கும் இடம் அட்டகாசம்.

    இதேபோல் கத்திமுனையில் மாடஸ்டி கதையில் கார்வின் போல் வேடம் அணிந்து கத்திவீசும் வில்லனிடம் லாவகமாக தப்பிக்கும் இடம் அட்டகாசமாய் இருக்கும்.!

    ReplyDelete
  69. இவையனைத்தையும் விட என் தானைத்தலைவனுக்கே முதலிடம்,,,! வேறு யார்--- குற்றச்சக்ரவர்த்தியும் இவனே! நீதிக்காவலனும் இவனே!!ஹா!ஹா!!ஹா!!!

    ReplyDelete
  70. ஆசிரியர் சார் ரூபாய் ஆயிரத்து ஐநூற்றி அறுபது மதிப்புள்ள டெக்ஸ் கதைகளால் மற்ற கதைகள் ..நாயகர்கள் எப்படி இருந்தாலும் ஓகே என்று ஆனந்த கூத்தாட தோன்றுகிறது ....;-)

    ReplyDelete
    Replies
    1. ஆனந்த தேன் சிந்தும் பூச்சோலையில்....
      1560ரூபாய்க்கு டெக்ஸ் கதைகள் வந்ததய்யா...
      டெக்ஸ் காமிக்ஸ்..அந்த சுகம் கண்டு கொள்ள இங்கே கொஞ்சம் வந்தாள் என்னய்யா...
      நீ குதிரையில் போகையிலே,
      புயல் கடந்து போக கண்டேன்...
      நீ சாகசம் செய்த கதைகளிலே,
      நீதி வழிந்தோட கண்டேன்....
      ஆனந்த தேன் சிந்தும்......

      Delete
    2. அட்ரா சக்க,!அட்ரா சக்க..!கவித,கவித!!

      Delete
    3. கணக்கை கரெட்டா போட்டு குதிங்கப்பா...என்னா டெக்ஸ் ரசிகனுங்களோ...???
      உம்...மொத்தம் 1675 ரூபாய்க்கு டெக்ஸ் புக்ஸ் வருது..! ஒருத்தன் தப்புதப்பா கணக்கு போட்டு சொன்ன தப்பை அப்படியே காப்பி ஆத்தினா எப்படி...!!!

      Delete
    4. //அப்படியே காப்பி ஆத்தினா எப்படி// ஹஹஹஹஹஹஹஹஹஹ.....

      Delete
  71. hi i am the new one of this blog i want to type in tamil what can i do?

    ReplyDelete
    Replies
    1. இந்த காமிக்ஸ் உலக வலைதளத்துக்கு உங்களை வருக..வருக..என வரவேற்கிறேன் ராஜ்..!

      இந்த என் mayavisivakumar@gmail.com க்கு ஒரு ஹாய் போடுங்க..apps லிங்க் அனுப்புறேன், அப்புறம் தமிழ்ல பூந்து விளையாடலாம்..!

      Delete
    2. மாயாவிசார் . எனக்கும் அந்த லிங்க் கை எனது ஈமெயிலுக்கு அனுப்பி வையுங்களேன்.

      Delete