Powered By Blogger

Sunday, September 27, 2015

எல்லாம் நலமே !

நண்பர்களே,

வணக்கம். பெங்களூரில் ஒரு நண்பர் உண்டு  ; பெரியதொரு பைக் ரசிகர் அவர் ! ஹார்லே டேவிட்சன் எனும் அந்த மொக்கை சைஸ் பைக்கை செல்லப் பிள்ளை போலப் பராமரித்துக் கொண்டு வார இறுதியாகி விட்டால் அதற்கெனப் பிரத்யேகமாய் வாங்கி வைத்திருக்கும் ஒரு கருப்பு லெதர் டிரெஸ்சைப் போட்டுக் கொண்டு 'தட்..தட்..தட்..' என்று அந்த அசுரனை ஒட்டிக் கொண்டு கூர்க் ; கோவா என்று நெடும்பயணம் செல்லும் ஒரு கிளப்பில் அங்கத்தினர் ! வார நாட்களில் பிசியானதொரு தொழில் அதிபராக இருப்பினும், வெள்ளி மதியங்கள் நெருங்கி விட்டாலே இருப்புக் கொள்ளாது தவிக்கத் தொடங்கி விடுவார் ! சீரியசாய் நாம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனைகளோ அங்கே அந்தப் பகாசுர பைக்கின் மேலே தான் லயித்து நிற்கும் ! அவரை ஒரு மாதிரியாய்ப் பார்த்ததனாலோ-என்னவோ, சனி இரவு ஆகும் போதே என் தலைக்குள் எழும் அந்த familiar குறுகுறுப்பை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது !  இல்லாததொரு மைக்செட் திடீரென்று என் முன்னே ஆஜராவதும்  ; எனது வீடிருக்கும் முட்டுச் சந்து மெகா மேடையாய் உருமாறுவதும், அடியேன் குற்றால அருவியாய் சொற்பொழிவுகளை ஆற்றோ ஆற்றென்று ஆற்றுவதும் விட்டலாச்சார்யா படங்களின் காட்சிகள் போல் ஒவ்வொரு சனிக்கிழமையும் என் தலைக்குள் துளிர்விடுவது சமீக காலங்களின் வாடிக்கையாகிப் போய் விட்டது ! So என்ன தான் '3 வாரத்து பிரேக்' என்று நேற்று அறிவித்திருப்பினும், இங்கே சட்டென்று திரும்பியுள்ள வெப்பமின்மையும், சில புரிதல்களும் நமது சாலையை சீக்கிரமே செப்பனிட்டுள்ளது போல் உணரச் செய்தன ! தவிர, நான் ஒரு இடைவெளி விட எண்ணியதும் என் பொருட்டல்ல - தர்க்கத்தில் சிக்கி நின்ற நண்பர்கள் சற்றே cool off செய்திடும் பொருட்டு மட்டுமே எனும் பொழுது எனது எண்ணம் சீக்கிரமே நிறைவேறி விட்டதாய்த் தோன்றிய பிற்பாடு விரதத்தைத் தொடரும் அவசியம் எழவில்லை !  இதை விடவும் சிக்கலான தருணங்களை நம் தளம் பார்த்துள்ளது தான் ; கடுமையாய் விமர்சனங்கள் என்பக்கமாய் வைக்கப்பட்ட பொழுதிலும் normal service தொடரவே செய்துள்ளது இந்த ரூட்டில் ! ஆனால் இம்முறை மோதல் நண்பர்களுக்கு மத்தியினில் என்றதனாலேயே என் சங்கடம் பன்மடங்காகியது ! Anyways - all's well that ends well ! தொடருவோமே எப்போதும் போலவே !  

விலையில் / பக்க நீளத்தில் அக்டோபரின் இதழ்களுள் முதன்மையாய் நின்றிடும் தோர்கலின் "சாகாவரத்தின் சாவி" அட்டைப்பட first look  இதோ !இந்தத் தொடரின் கதைகள் அனைத்துமே கிளாசிக் ரகங்கள் என்பதால் அவற்றிற்கு ஒரிஜினலாய் வரையப்பட்ட எல்லா ராப்பர்களுமே நமக்கும் tailor made என்று சொல்லலாம் ! So இந்த 2 பாகக் கதையின் தொகுப்புக்கு ஒரிஜினல் அட்டை டிசைன்களையே பயன்படுத்தியுள்ளோம் ! என்ன - இரண்டாவது கதைக்கான டிசைன் கொஞ்சம் ஆக்ஷன் நிறைந்ததாய்த் தோன்றியதால் அதனை முன்னட்டைக்குப் புரமோஷன் தந்துள்ளது மட்டுமே மாற்றம் ! 

கதையின் மொழிபெயர்ப்பு நமது சீனியர் எடிட்டரின் கைவண்ணம் என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கும் ; அதே போல எடிட்டிங்கின் பொருட்டு கதை # 2-க்குள் நான் நுழையவிருப்பதாகவும் அதே பதிவில் சொல்லியிருந்தேன் ! முதல் பாகம் பெரிதாய்  சிரமங்கள் வைக்காது 'கட..கட..'வென ஓடியதற்கு நேர்மாறாய் இரண்டாம் கதையினில் நிறையவே ஸ்பீடு -பிரேக்கர்கள் தென்பட்டன ! கிட்டத்தட்ட 100 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பினை மொழிபெயர்ப்பது நிறையவே concentration -ஐ அவசியப்படுத்தும் பணி எனும் பொழுது - பணியின் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் அதனை ஒரே சீராய் தக்க வைப்பது (எழுதும் ) அனுபவம் சார்ந்ததொரு விஷயம் ! முதன்முறையாகப் பேனா பிடிக்கும் அப்பா இத்தனை தூரம் சமாளித்ததே ரொம்பப் பெரிய விஷயம் என்பது புரிந்தது ! So அவசியமாகிடும் இடங்களில் rewrite செய்து இரண்டாம் பாகத்தையும் அழகாய் நிறைவு செய்து அச்சும் 90% முடித்து விட்டோம் ! திங்கட்கிழமை பாக்கி பத்து சதவிகித அச்சுப் பணியும் நிறைவு பெற்றான பின்னே இதழ்கள்  பைண்டிங்கின் பொருட்டு புறப்படும் ! தற்போது மின்னலாய் தலைதூக்கி நிற்கும் மின்வெட்டுப் பிரச்சனை பெருசாய் வேட்டு வைக்காது போயின்  புதன்கிழமை (30-sept ) நமது கூரியர்கள் புறப்படும் தினமாய் அமைந்திடும் ! 

கதையை முழுசாய் படித்துப் பார்க்கும் போது சமீப நாட்களில் நண்பர்களில் ஒருசாரார் வலியுறுத்தி வரும் - சகஜ நடை சாத்தியமாகி இருப்பதாகவே பட்டது ! 'மச்சி..மாமூ..dude' என்று தோர்கல் பேசுவதெல்லாம் நடவாக் காரியம் என்றாலும் - அந்தக் காலத்து R.S மனோஹரின் புராண நாடகங்களைப் பார்த்த feel நிச்சயமாய் இம்முறை தோர்கலில் இருந்திடாது என்றே நினைக்கிறேன் ! இந்த வார இறுதிக்குள் ரிசல்ட் தெரிந்து விடும் எனும் போது எனது ஈரைந்து விரல்கள் தவிர இன்னொரு பத்து விரல்களும் எங்கள் வீட்டிலிருந்தே குறுக்கப்பட்ட நிலையில் காத்திருப்பது நிச்சயம் !

இம்மாதத்து இதழ்களில் நீங்கள் இன்னமும் பார்த்திரா ஒரே அட்டைப்படமும் - இதோ உங்கள் முன்னே ! 

இந்தப் பதிவை நான் டைப் செய்யத் தொடங்கும் பொழுது தான் திருத்தங்கள் முடிந்த நிலையில் இது நமக்குக் கிட்டியது எனும் பொழுது - தற்போதையத் தயாரிப்புப் பணிகளுள் மிகப் பெரிய bottleneck தலைகாட்டுவது அட்டைப்பட டிசைனிங்கினில் தான் ! அதனை எவ்விதமேனும் சீர் செய்ய முடியும் பட்சத்தில் 2016-ல் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியை பெவிகால் போட்டுப் பிடித்துக் கொள்ள முடிந்திருக்கும் நமக்கு ! இங்கேயும் நமது ஜூனியர் எடிட்டரின் முயற்சிகளில் 2 புதிய (சென்னை ) டிசைனர்களைத் தேடி பிடித்துள்ளோம் தான் ; ஆனால் நாம் எதிர்பார்ப்பதை அவர்களிடமிருந்து வரவழைக்க மின்னஞ்சல் பரிமாற்றங்களும், போனில் சொல்லும் விபரங்களும் பற்ற மாட்டேன்கிறது என்பது தான் சிக்கலே ! (7 நாட்களில் எமலோகம் அவர்களுள் ஒருவரின் கைவண்ணம் !) இம்முறையும் முன்னட்டை FLEETWAY -ன் ஒரிஜினல் டிசைன் - பின்னணி coloring மாற்றங்களோடு ! பின்னட்டையோ - ரொம்ப மாதங்களுக்கு முன்பாக எகிப்திய ஓவியர் ஒருவர் நமக்குப் போட்டுத் தந்த டிசைனின் சற்றே refined version ! (இதன் பென்சில் ஸ்கெட்சை நாம் caption எழுதும் போட்டிக்கெல்லாம் பயன்படுத்தி இருந்தது அத்தனை சீக்கிரம் மறந்திருக்காது !! )

Moving on, 2 வாரங்களுக்கு முந்தைய பதிவில் நான் ஜாலியாய் preview கொடுத்திருந்த கதைகளின் டிஜிட்டல் பைல்களை முழுமையாய் கோரிப் பெற்று கவனத்தை ஒவ்வொன்றின் மீதும் செலுத்த முனைந்தேன் ! (என்னையும் சேர்த்து) நிறையப் பேரின் ஆர்வங்களைக் கிளறியிருந்த PANDEMONIUM கதையின் மூன்று பாங்கங்களையும் புரட்டிய போது கதை செம சுவாரஸ்யமாய்த் தோன்றியது ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஆரம்பிக்கும் adults only சமாச்சாரங்கள் தாக்குப் பிடிக்கவே முடியா லெவெலில் தொடர்வதைக் கதை நெடுகிலும் உணர்ந்திட முடிந்தது ! தவிர, கதையின் ஓட்டத்துக்கே அவை அவசியம் என்பதாய்த் தோன்றும் போது - நம் சென்சார் கத்திரிகளை அங்கே மேய விட முகாந்திரமிராது ! So வேறு வழியே இன்றி PANDEMONIUM தொடரினை கடாசிடும் அவசியம் நேர்கிறது !!  

அப்புறம், சமீபமாய் பிரெஞ்சில் வெளியாகியுள்ள ஆல்பங்களின் ரிப்போர்ட் வழக்கம் போல் படைப்பாளிகளிடமிருந்து நமக்கு வந்திருந்தது ! மாதம் 4 இதழ்களை வெளியிட்டு விட்டு நாம் காலரை காது வரை தூக்கி விட்டுக் கொள்ளும் வேளையில் அவர்களோ ஆளுக்கு மாதம் சுமார் 20 ஆல்பங்களை வெளியிடுவதைப் பார்க்கும் போது 'காதல்' பட பரத போல மண்டையில் கொட்டிக் கொண்டே ஓடத் தான் தோன்றுகிறது ! Anyways - அவற்றுள் ஒரு ஆல்பம் என் கவனத்தை ஈர்த்தது ! ரொம்ப காலமாகவே ரொமான்ஸ் genre -ஐ முயற்சித்தால் என்னவென்று நம்மில் ஒரு சின்ன / ரொம்பச் சின்ன அணி கோரி வருவது என் நியாபகத்துக்கு வந்தது ! இந்த ஆல்பமும் ஒரு காதல் கதையே - ஆனால் வழக்கம் போல அழகான பையனும், நவநாகரீக அம்மணியும் லவ்விக் கொள்ளும் சம காலத்து frame இதற்கில்லை ! மாறாக - கதையின் ஹீரோ ஒரு அவலட்சணமான பையன் ! அரண்மனையின் சிறைக்கூடத்தில் இருக்கும் தாயொருத்தி பெற்று எடுத்த காரணத்தினால் அந்த மழலையும் சிறைக்கூடத்திலேயே வளர வேண்டிய சூழல் ! இது தான் உலகமென்ற சிந்தனையில் சந்தோஷமாய் வளரும் அந்த சிறுவனின் வாழ்க்கையிலும் ஒரு நாள் காதல் மலர்கிறது ! அவன் இதயத்தைத் திருடியவளோ மன்னரின் மகள் !! தொடர்வது என்னவென்பதே இந்த 64 பக்க one shot ஆல்பம் ! நம் சினிமாக்களுக்கு ஏற்றதொரு ஸ்கிரிப்ட் என்ற ரீதியில் BOUFFON என்ற பெயர் கொண்ட இக்கதை என் கவனத்தைக் கோரியது ! இந்த பைல்களையும் வரவழைத்து - முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல் எழுந்தது ! ஒருக்கால் கதையின் தொடரும் பகுதி - மாயாஜாலம் ; மந்திரஜாலம் என்றும் 'சப்'பென்று முடியக் கூடும் ; அல்லது நிஜமாகவே அழகான கதையோட்டமும் இருந்திடக்கூடும் ! எப்படியிருப்பினும் இதனை இன்னும் கொஞ்சம்  கிளறிப் பார்க்கும் ஆர்வம் எழுந்துள்ளது ! 'அய்யய்யோ..ஆரம்பிச்சாச்சா ?' என்ற அபாய மணிகள் மடிப்பாக்கங்களிலும், பேடா நகரங்களிலும் , மங்கள நகரங்களிலும் ஒலிக்கக் கூடும் என்பது தெரிந்த விஷயமே - ஆனால் படைப்பாளிகள் முயற்சிக்கும் புதுப் புது பாணிகளை அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுவதே எனது இது போன்ற தகவல்களின் (தற்போதைய) பின்னணி ! 

அப்புறம் புதுக் கதைகளின் குவியலுக்குள் உலக காமிக்ஸ் ரசனைகளின்  ஒரு பிரபலமான கதைக்களம் கொண்டதொரு புதுத் தொடரும் கண்ணில் பட்டது ! அது APOCALYPSE என்ற genre -ல் வெளியாகும் ஒரு புதிய கதை வரிசை ! என்றோ ஒரு தூரத்து நாளில் உலகமே சூன்யமாகிப் போகும் பொழுது  ; மனிதகுலத்தின் பெரும்பகுதி அழிந்து போய் விடும் தருணத்தில் ;  எஞ்சி நிற்கும் மனிதர்களைச் சுற்றிப் புனையப்படும் கதைகளை இந்த APOCALYPSE வரிசைக்குள் அடக்கிடலாம் ! இவற்றைப் பின்னணியாகக் கொண்டு அமெரிக்காவிலும் சரி ; ஐரோப்பாவிலும் சரி - ஏகப்பட்ட வெற்றித் தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளன ! ஒரு powerful நாயகன் ; அதிரடி ஆக்ஷன் ; லாஜிக் நூல்பிடித்துச் செல்லும் கதைக்களம் ; பன்ச் டயலாக்குகள் ; ஒரு கிளைமாக்ஸ் என்று நாம் இதுவரைப் பழகியுள்ள சகல சமாச்சாரங்களையும் துடைத்து விட்டு - இந்தப் புது உலகினுள் நுழைந்து பார்ப்பின் - ஏராளமாய் புது வாசிப்பு அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக் கூடும் ! உலகெங்கும் வெற்றி ஈட்டி ; ஏராளமாய் விருதுகளும் பெற்றுள்ள இந்த பாணியினை "வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்" என்ற தடம் நோக்கிப் பொட்டலம் கட்டாது - நாம் அனைவருமே முயற்சித்துப் பார்க்குமொரு புதுப் பாணியாகக் கருதிடும் பட்சத்தில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கும் ! 2016-ன் அட்டணையில் என்றில்லாது தொடரும் ஆண்டிலாவது இதனை முழுமனதாய் முயற்சித்துப் பார்க்க முடியுமா guys ? தனிச் சந்தாத் தண்டவாளம் இருக்கவே இருக்கு என்றாலும் - சேர்ந்து இழுக்கும் தேர் விசையாய் ஓடுமல்லவா ? யோசித்துப் பாருங்களேன் guys !! And I repeat - I am NOT looking at this for 2016 ! 

புறப்படும் முன்பாய் சின்னதொரு கோரிக்கை மட்டுமே ! சர்ச்சைகள் ; சலனங்கள் ; வெளிநடப்புகள் என்ற திருஷ்டிப் பரிகாரங்கள் எல்லாமே நேற்றைய நிகழ்வுகளாகவே இருந்து விட்டு போகட்டும் ! அவற்றிலிருந்து அவசியமான பாடங்களை உணர்ந்து கொள்ளும் பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டென்பதால் நான் இதன் பொருட்டு லெக்சர் செய்யவெல்லாம் போவதில்லை! அதே போல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் நான் கோபித்துக் கொண்டு மூட்டையைக் கட்டி கிளம்பி விடுவேன் என்ற ரீதியிலான மௌன நிர்ப்பந்தங்களும் இங்கு துளியும் அமலில் இராது !  உங்கள் பார்வையில் அவசியமெனத் தோன்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எப்போதும் போலவே சுதந்திரமாய் பதிவிடலாம் ! ஏற்கனவே நம்மூர்களில் அடிக்கும் அனலே ஜாஸ்தி என்பதால் - உங்கள் பின்னூட்டங்களில் அது மட்டும் குறைவாய் இருப்பின், நிச்சயம் உரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் கிடையாது ! இது எப்போதுமே உங்கள் தளமே என்பதில் என்றைக்கும் மாற்றம் இராது ! 

நான் கோருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான் :  'இவன் இந்தக் கட்சியா ? - அந்தக் கட்சியா ? ' ; 'இவன் அவருக்கு நெருக்கமானவனா - எனக்கு தூரத்திலிருப்பவனா ?' என்ற ரீதியில் அவ்வப்போது பரீட்சைகள் வைக்காது இருப்பின், சந்தோஷத்துடன் என் பணிகளைப் பார்த்திடுவேன் ! கிளைக்குக் கிளை தாவுவது ; அந்தர் பல்டிகள் அடிப்பது என்ற ஆஞ்சநேயச் சேட்டைகளை எல்லாம் எனக்குப் பரிச்சயம் என்பதால் அவரைப் போலவே நெஞ்சினைத் திறந்து காட்டும் ஆற்றலும் என்னிடம் இருக்குமென்று நண்பர்கள் எதிர்பார்த்திருக்கலாம் தான் ! ஆனால் நீங்கள் அனைவருமே எனக்குப் பிரியமானவர்களே ; சம அளவில் முக்கியமானவர்களே என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் காட்டிட நெஞ்சினைப் பிளக்கும் ஆற்றல் கொண்ட ஆஞ்சநேயரும் அல்ல நான் ; நெஞ்சைத் திறந்து  சிகிச்சை செய்து விட்டுத் திரும்பத் தைத்து விடும் டாக்டர் செரியனும் அல்ல நான் ! So அந்தப் பரீட்சைகளை மட்டும் இல்லாது போயின் நிம்மதியாய் நடை போடுவேன் ! Thanks for reading folks ! மீண்டும் சந்திப்போம் - எல்லாம் நலமே !!

And - இது உங்கள் யூகக் குதிரைகளுக்கு கொஞ்சம் தீனி போட்டிட !! (Of course - சிற்சிறு மாற்றங்களுக்கு உட்பட்டது !!  ) Good night !! 

379 comments:

  1. //BOUFFON என்ற பெயர் கொண்ட இக்கதை என் கவனத்தைக் கோரியது ! இந்த பைல்களையும் வரவழைத்து - முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல் எழுந்தது ! ஒருக்கால் கதையின் தொடரும் பகுதி - மாயாஜாலம் ; மந்திரஜாலம் என்றும் 'சப்'பென்று முடியக் கூடும் ; அல்லது நிஜமாகவே அழகான கதையோட்டமும் இருந்திடக்கூடும் !//

    +1 :)

    லவ் இக்கு காமிக்ஸ் கதவுகள் திறக்கட்டும் ஜீம் பூம் ... ஆமா இது உங்க அலசல் தன :|

    ReplyDelete
  2. இத .. இத . இதைதான் எதிர்பார்த்தோம் :-)

    ReplyDelete
  3. மீண்டும் formக்கு வந்ததற்கு நன்றிகள் பல !

    ReplyDelete
  4. காமிக்ஸ் முன்னோட்டம் அக்டோபர் இதழ்களுடன் எதிர்பார்க்கிறோம் !

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : அக்டோபரில் (இறுதியில்) வரவிருக்கும் நவம்பர் இதழ்களோடு கிடைக்கும் நண்பரே !

      Delete
  5. அருமையான ஒரு நண்பருடன் தொடர்பில் இருக்கிறோம் என்ற எண்ணம், இந்த பதிவை படித்து முடித்ததும் மனதில் தோன்றியது !

    ReplyDelete
  6. ஆஹா.!
    2016 விளம்பரத்தில் தல டாக்புல்லை பாக்கச்சொல்லோ சும்மா ஜிவ்வ்வுன்னு கீது.!!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : அகில இந்திய கவுண்டர் ரசிகர் மன்றத்தின் சிவகாசி வட்டத்தின் சார்பினில் - "அகில உலக கவுண்டப் பெருந்தலை" டாக்புல்லை போட்டே தீரணும் (விளம்பரத்தில் தான்!!) என்று ஏகமனதாய் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது !!

      Delete
  7. காபி செலவில் காமிக்ஸ் புதையல் ...!
    :)

    பஞ்ச் ஓகே எடிட் சார் இங்க ஓசில டீ தான ...ஞே !
    :D

    ReplyDelete
    Replies
    1. border இல்லா "சாகாவரத்தின் சாவி" அட்டைபடம் சுப்பர் !
      வழக்கம் போல ஹீரோ focus மட்டும் இல்லது சிறுத்தை சண்டையை கோழிசண்டை மாதிரி பார்க்கும் அந்த பிரபுவும் frame இல் இருப்பது different அட்டகாசம்!

      Delete
    2. Satishkumar S : அட்டைப்படம் மட்டுமல்ல - கதைகளுமே செம அட்டகாசம் !

      Delete
  8. லவ் கலந்த detective காமிக்ஸ் என்றால் The Long Halloween ப்ளீஸ் !

    BUFFON வரவேற்க்கப்படவேண்டிய ஒன்றுதான ! + 1

    அப்புறம் அந்த 'பாண்டி' விளையாட்டு கதையை customized imprint ஆக வெளியிட உத்தேசம் உள்ளதா ?? ஹி ஹி !! :-D

    ReplyDelete
    Replies
    1. Raghavan : //அப்புறம் அந்த 'பாண்டி' விளையாட்டு கதையை customized imprint ஆக வெளியிட உத்தேசம் உள்ளதா ?? //

      நிச்சயமாய் நஹி !! ஹி..ஹி..!

      Delete
  9. Thank you sir, பதிவு போட்டதற்காக

    ReplyDelete
    Replies
    1. salemkelamaran@gmail.com : Thanks நண்பரே...தொடர்ந்து படித்து வருவதற்கு !

      Delete
    2. ஆசிரியர் சார் @ இளா எழுதவும் செய்வாரு ....நீங்கள் படிப்பதற்கே thanks சொன்னால் ,எப்படி ...சார்? ....
      இளா அவ்வப்போது எழுதவும் செய்யுங்கள் ....

      Delete
    3. தளம் சூடாக இருப்பதால் தள்ளி இருந்து பார்க்கிறேன். எதற்காகவும் பதிவை நிறுத்த வேண்டாம் என்பது வேண்டுகோள்.

      Delete
  10. உங்கள் தினசரி காப்பிக்கான செலவில்...
    காலத்திற்கும் அழியா ஒரு காமிக்ஸ் புதையல்!


    உண்மை உண்மை உண்மை! நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல ஒரு உண்மை! இந்தப் பதிவில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை!

    "காமிக்ஸ் விலை ஏறிப்போச்சு... என்னால வாங்க முடியலை..." என்று கூப்பாடு போடும் நண்பர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் ஒரு நாளில் செய்யும் அனாவசியச் செலவுகள் அல்லது குறைந்த முக்கியத்துவமுள்ள செலவுகள் எவ்வளவு என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் இது எத்தனை உண்மையென்பது அவர்களுக்கே புரியும்!

    ReplyDelete
  11. Replies
    1. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : புன்னகைப் படங்கள் ஒரு டஜன்...விரல்கள் குறுக்கப்பட்ட படங்கள் ரெண்டு டஜன் !

      Delete
  12. ///ரொம்ப காலமாகவே ரொமான்ஸ் genre -ஐ முயற்சித்தால் என்னவென்று நம்மில் ஒரு சின்ன / ரொம்பச் சின்ன அணி கோரி வருவது என் நியாபகத்துக்கு வந்தது ! இந்த ஆல்பமும் ஒரு காதல் கதையே - ///

    காதல் கதைன்னா.,
    கனவுல டூயட்டு., கதாநாயகியோட டாடி பண்ணையாரு., ஹீரோ ஏழையான அநாதை., முக்கியமா வேலைவெட்டி இருக்கக்கூடாது, ஹீரோயினை ஆபத்திலிருந்து காப்பாத்தனும், க்ளைமாக்ஸ்ல கொடுமைக்கார பண்ணையாரு நல்ல மியூசிக் பின்னனியில மனசு திருந்தி காதல் ஜோடியை சேத்து வைக்கிறது .. . .

    இதுமாதிரி இல்லாமே புதுமாதிரியா இருந்தா Welcome to the board.!

    ReplyDelete
  13. ///என்றோ ஒரு தூரத்து நாளில் உலகமே சூன்யமாகிப் போகும் பொழுது ; மனிதகுலத்தின் பெரும்பகுதி அழிந்து போய் விடும் தருணத்தில் ; எஞ்சி நிற்கும் மனிதர்களைச் சுற்றிப் புனையப்படும் கதைகளை இந்த APOCALYPSE வரிசைக்குள் அடக்கிடலாம் ! ///

    சிறுவயதில்., சிறுவர் மலரில் தொடர்ந்து வாராவாரம் காத்திருந்து., வெறியாய் இப்படி ஒரு கதையை படித்த நினைவு இருக்கிறது.

    முற்றிலும் மாறுபட்ட களம். வரவேற்கிறேன் சார்.!
    தொடர்கதையா அல்லது சிங்கிள்சாட் தொகுப்புகளா என்பதை பொறுத்து வரவேற்பின் சதவிகிதம் சற்றே மாறுபடக்கூடும்.! :-) (ச்சும்மா டமாஸ்ஸ்)

    ReplyDelete
    Replies
    1. கிட் ஆர்ட்டின்.!அடடே! எனக்கும் அந்ந சிறுவர் மலர் தான் ஞாபகம் வந்தது.நான் முதல் சிறுவர் மலரான விநாயகர் முதல் கொண்டு 1990 வரை அனைத்து சிறுவர் மலரும் வைத்திருந்தேன்.!அத்தனையும் எவனோ தூக்கிட்டு போய்ட்டான்.!இதை நினைத்தாலே தூக்கம் வராது.!

      Delete
    2. Madipakkam Venkateswaran : வக்கீலிடம் ஆட்டையைப் போட்ட தில்லாலங்கடி யாரோ ?

      Delete
    3. கிட் மாமே + MV சார் அந்த கால கட்டங்களில் நான் ரொம்பவே சின்ன பையன் போல ...உங்களை போன்ற சீனியர்களின் அனுபவங்களை படிக்கும் போது அடடா அதெல்லாம் படிக்காமல் விட்டு போச்சே என லைட்டா தோணும் ...

      Delete
  14. ///PANDEMONIUM கதையின் மூன்று பாங்கங்களையும் புரட்டிய போது கதை செம சுவாரஸ்யமாய்த் தோன்றியது ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஆரம்பிக்கும் adults only சமாச்சாரங்கள் தாக்குப் பிடிக்கவே முடியா லெவெலில் தொடர்வதைக் கதை நெடுகிலும் உணர்ந்திட முடிந்தது ! ///

    தேவை :
    கோடு போட்ட சட்டை தைக்க ஒரு டெய்லர் .

    பௌன்சரைவிட படா மோசாமா இருக்குமோ என்னமோ.? ??

    எது எப்படியோ., இந்த பேய்பிசாசு கதைகள்னாவே எனக்கு அலர்ஜி.! (இந்த ஆயா., மாயா., அரண்மனை இதெல்லாம் நான் பார்ப்பதே கிடையாது.) Phantamonium வராமல் போனதில் எனக்கு மகிழ்ச்சி இல்லேன்னாலும் வருத்தம் நிச்சயமாய் இல்லவேயில்லை.! :)

    ReplyDelete
    Replies
    1. Phandamonium. ங்கிறது., அந்த புற்று நோய் மருத்துவமனையில் நடப்பதாக சொல்லப்பட்ட திகில் கதைதானே ,,?
      நான் ஏதும் மாத்தி யோசிச்சிடலியே!!! :-)

      Delete
    2. KiD ஆர்டின் KannaN : புற்று நோயல்ல - காச நோய் மருத்துவமனை !

      Delete
  15. சிறையில் வளரும் அவலட்சணமான பையனுக்கு இளவரசி மேல காதலா?... ஐய்யோ... இந்த ஒன்லைன் ஸ்டோரிய வச்சு ஒரு சினிமா படமே எடுக்கலாமே... (தனுஷையும், தமன்னாவையும் நடிக்க வச்சா செமையா இருக்கும்). உடனே இதுக்கான காப்பிரைட்ஸை வாங்கிடுங்க எடிட்டர் சார்... எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை. அடுத்த வருஷம் பிப்ரவரி-14க்கு புக்கை ரெடி பண்ணிட்டீங்கன்னா அட்டகாசமா இருக்குமில்லையா? ;)

    அப்புறம்... PHATEMONIUM கைவிடப்பட்டதில் ஏக வருத்தம் எனக்கு! காசநோயின் தீவிரத்தை உணர்த்தும் விதத்தில் அந்தப் பனிப் போர்வையின் மேல் இரத்தம் சிந்திய காலடித்தடங்கள் ஹாஸ்பிடலை நோக்கி நீண்டு செல்லும் அந்த முதல் பக்க ஓவியமே அசத்தலாக இருந்ததே...! ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை இழந்துவிட்டதான எண்ணம் எனக்குள்! :(

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : எனக்கும் ரொம்பவே வருத்தமே - ஆனால் விவரிக்க இயலா பாலியல் களங்களும், அவை சார்ந்த வன்முறைகளும் கதையின் துவக்கத்திலேயே ஆஜராவதால் - நமக்கு சான்சே இல்லை !!

      Delete
    2. //அப்புறம்... PHATEMONIUM கைவிடப்பட்டதில் ஏக வருத்தம் எனக்கு! காசநோயின் தீவிரத்தை உணர்த்தும் விதத்தில் அந்தப் பனிப் போர்வையின் மேல் இரத்தம் சிந்திய காலடித்தடங்கள் ஹாஸ்பிடலை நோக்கி நீண்டு செல்லும் அந்த முதல் பக்க ஓவியமே அசத்தலாக இருந்ததே...! ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை இழந்துவிட்டதான எண்ணம் எனக்குள்! :(//
      +1

      Delete
    3. //ஆனால் விவரிக்க இயலா பாலியல் களங்களும், அவை சார்ந்த வன்முறைகளும் கதையின் துவக்கத்திலேயே ஆஜராவதால் - நமக்கு சான்சே இல்லை !!// +8888

      Delete
  16. ///இது உங்கள் யூகக் குதிரைகளுக்கு கொஞ்சம் தீனி போட்டிட !! ///

    எங்க யூகக் குதிரை., மூணு மாசத்துக்கு முன்னாடி இருந்தே ஓட ஆரம்பிச்சி., இப்போ டயர்ட் ஆகி ரெஸ்ட்ல இருக்கு சார்.!
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு க்ளுவா கொடுத்துகிட்டே வந்து அக்டோபர் இறூதி வாரம் அட்டவணையை வெளியிடுங்கள் சார்.
    சுவாஸ்யமாக இருக்குமே.!!!!

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : அந்தக் குதிரைகளை ஜாலி ஜம்பரிடம் எப்போவாச்சும் டிரைனிங்குக்கு அனுப்பினால் நலம் ! எப்போது ஓட வேண்டும் - எப்போது ஓய்வெடுக்க வேண்டுமென்று நம்மாள் தெளிவாய் கற்றுத் தந்து விடுவாரே !!

      Delete
  17. Replies
    1. இரண்டு கைகளதும் விரல்களை இறுக மூடி கைகளை உறுதியாக்கி, நான் வெளிப்படுத்திய உணர்வுகளை புரிந்துகொண்டதற்கும், பதில் வெளிப்பாட்டுக்கும் நன்றி.

      Delete
  18. 2016 இல் ஒரு காமிக்ஸ் அடை மழை காத்துள்ளது என்ற விளம்பரம் என் வாயில் நீர்விழ்ச்சியை வரவழைத்து உள்ளது என்பது நிஜம்தான் சார் ! எப்போது 2016 இற்கான அட்டவணை வரும் என்று துடிப்பாக உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. +2016 திருச்செல்வம் ப்ரபானந்த் சார்...:-)

      Delete
  19. அட்டை படங்கள் எல்லாமே சூப்பராக வந்துள்ளன. உங்கள் டீம் இற்கும் , உங்களுக்கும் (திரும்பி வந்ததுக்கு ஸ்பெஷல் ஆக ) நன்றிகள் கோடிகள் சீனியர் எடிட்டர் இப்போது நலமா சார் ?

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : நலமே சார் ! நீங்கள் ?

      Delete
  20. ஞாயிறு நள்ளிரவில் எழும் போதெல்லாம் ...பதிவு வந்துள்ளதா என பார்ப்பேன் சார் ....இதோ ,, இப்பவும் இந்த நள்ளிரவில் பார்த்தால் வழக்கம் போலவே உங்கள் பதிவு ......வாவ் வாவ் ....ஆண்டவனுக்கு நன்றி , உங்கள் மனதை மாற்றியமைக்கு..........இனி எல்லாம் நலமாக தொடரட்டும் சார் .....

    ReplyDelete
  21. பதிவு நாள் 27....
    மாதம் 9.....
    ஆண்டு 2016...
    கதைகள் 54 ..
    நாயகர்கள் 27...
    இதழ்கள் 46....
    ......இது நீங்கள் அறிவித்துள்ளவை சார் ...
    இதழ்களும் 45எனக் கொண்டால் அனைத்தும் 9என்ற இலக்கத்தில் பெரியதுமான , மந்திர எண்ணை நோக்கியே இருக்கும் சார் ....(ஏஏ ப்பா அந்த கையில் எடுத்துள்ள கல்லை அல்லாரும் கீழே போட்டு விடுங்களேன் , ஏதுவாயினும் பேசி தீர்த்துக்கலாம்......)

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் விஜய ராகவன்.!கையில் கல் கிடையாது.!லட்டு வைத்துள்ளேன்.!

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் : அட....பொழுது போகாத நேரங்களில் எண் கணிதமுமா ? போட்டுத் தாக்குங்கள் !

      Delete
    3. ஏன் டெக்ஸ் ஜி....45 கதைகள் தான் வேணுமா....54 கதைகள்னா இன்னும் சூப்பரா இருக்குமே....நீங்க சொன்னபடி கணக்கும் (9)சரியா வருமே..

      Delete
    4. கணக்கு சூப்பர் யுவா ...2016சந்தா இதழ்கள் 45.....
      ஏப்ரலில் தொடங்கும் தனி தண்டவாளத்தில் 9மாதங்கள் ,9இதழ்கள் .....ஆக மொத்தம் 54......


      Delete
    5. சாரி பாலா சார்...இதழ் னு டைப் பண்றதுக்கு பதிலா கதைகள் னு டைப் பன்னிட்டேன் சார்...

      Delete
  22. வரும் மாத இதழ்களுடன் 2016 அட்டவணை இனைந்து கிடைக்குமா சார், போன பதிவில் டெக்சை பற்றி நிங்கள் போட்டு இருந்த குறிப்புக்கள் நிக்கப்பட்டு இருந்நது ஏன் என்று தெரியவில்லை ,

    ReplyDelete
    Replies
    1. Ranjith : 560 பக்க TEX தீபாவளி மலரோடு 2016-ன் அட்டவணையும் அக்டோபர் 31-ல் கிடைக்கும் நண்பரே !

      Delete
    2. தீபாவாளி மலரோடு 2016 அட்டவனையும் .நாங்கள் கேட்டது கிடைக்கும் நம்பிக்கை அதில் தெரிகின்றது ok sir

      Delete
    3. //560 பக்க TEX தீபாவளி மலரோடு 2016-ன் அட்டவணையும் அக்டோபர் 31-ல் கிடைக்கும் நண்பரே !///.....ஆகா இந்த தீபாவளி நீண்ட காலம் கழித்து அட்டகாசமாக இருக்க போவது உறுதி சார் ....தனி தண்டவாளத்திலும் ஒரு சில டெக்ஸ் கதைகள் வரும் என அதில் அறிவிப்பு இருந்து விட்டால் .....

      Delete
  23. ஆகா.! செப்டம்பர் 30 ல் இதழ்கள் கிளம்புகிறதா.?ரொம்ப சந்தோசம்.!ஆனால் மின்சாரம் பெயரை சொல்லி ஒரு க் வைத்தது தான் பக் என்று உள்ளது.!

    ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது.,எல்ல பயங்களையும் பழக்கத்தின் மூலம் வென்று விடலாம் ஆனால் மரணபயத்தை அப்படி வெல்லமுடியாது .(எங்க தலைவி விதிவிலக்கு)

    ஆனாலும் பாருங்களேன்.!இந்த மனது எத்தனை தடவை ஏமாந்தாலும் ஒன்றாம் தேதி வந்து விடும் என்று உறுதியாக நம்புகிறது.!

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : உங்கள் நம்பிக்கைகள் வீண் போகக் கூடாதென பதினோராம் வட்டத்துத் தங்கத் தலைவி மன்றம் சார்பாக மின்சார தேவனை வேண்டிக் கொள்கிறேன் MV சார் !

      Delete
    2. உங்கள் நம்பிக்கைகள் வீண் போகக் கூடாதென கரூர் வட்டத்துத் தங்கத் தலைவி மன்றம் சார்பாக மின்சார தேவனை வேண்டிக் கொள்கிறேன் MV சார் !

      Delete
  24. இப்போதெல்லாம் சமீபகாலமாக அட்டை படங்கள் பட்டையைக் கிளப்புகின்றன.

    பது முயற்சிகளுக்கு எப்பவும் என் ஆதரவு உண்டு.

    ஜாலியா ஒரு கணக்கு......

    அன்றாட காபி செலவு (சாதாரண ரோட்டோர கடையில்) காஃபி ஒன்று ரூ. 15 என்று வைத்துக் கொண்டால்கூட மாதம் ரூ. 450. அப்போ வருடத்திற்கு ரூ. 5400/-

    அப்போ 2016 க்கு குத்துமதிப்பா ரூ. 6500/- ஒதிக்கடவேண்டிதுதான்!!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் காமிக்ஸ் - காஃபி கம்பாரிசன் சற்றே உதைக்குதே சார்!

      காபி குடிச்சிகிட்டே காமிக்ஸ் படிக்கலாம் ஓகே, காஃபி செலவுக்கு எல்லாரும் காமிக்ஸ் படிக்க முடியுமா சார்?! :D

      ச்சும்மா.... நண்பர்கள் யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க! :)

      Delete
    2. P.Karthikeyan : எங்க ஊரில் இன்னமும் பத்து ரூபாய்க்கு காப்பி கிடைக்கிறது சார் !!

      Delete
  25. டியர் விஜயன் சார்,

    தோர்கலின் கதை சூடு பிடிக்கும் பாகங்களைத் நீங்கள் தொட்டு விட்டீர்கள் என்பதால், தோர்கலுக்கான வரவேற்பு, இனி வரவிருக்கும் இதழ்களில் அதிகரிக்கும் என நம்புகிறேன்.

    Bouffen-ன் அட்டைப் படம் சற்றே பீதியைக் கிளப்பினாலும், //முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல்// என்று நீங்கள் எழுதி இருப்பது ஆறுதல். நண்பர் சதீஷ்குமார் அளித்திருக்கும் விமர்சன இணைப்பின் படி, கதை நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. விதூஷகன், சம்ஸ்கிருதம் அது இது என்று இங்கே நடந்த விவாதங்களால் தான், ஒரு Jester-ஐ நாயகனாகக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுத்தீர்களோ?! ;)

    //APOCALYPSE .. பாணியினை "வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்" என்ற தடம் நோக்கிப் பொட்டலம் கட்டாது//
    +1 லிமிடட் எடிஷன்களை விட மெயின் அல்லது கி.நா. சந்தாவிலேயே இவை போன்ற மாறுபட்ட genre-கள் வருவது நல்லது! அதிக நண்பர்கள் வரவேற்பு அளித்தால், எல்லோருக்குமே குறைந்த விலையில் கிடைக்கும்... எங்களில் பலர் பழைய்ய்ய மறுபதிப்புகளை வாங்கி ஆதரவு தருவதைப் போல! ;)

    @ஈரோடு விஜய்:
    //"காமிக்ஸ் விலை ஏறிப்போச்சு... என்னால வாங்க முடியலை..." என்று கூப்பாடு போடும் நண்பர்கள்//
    "காமிக்ஸ் வித் அவுட் காப்பி" விளம்பர வரிகளையும், உங்களின் இந்த insensitive கமெண்டையும் கடுமையாக கண்டிக்கிறேன்! :) தினசரி குடி, சிகரெட் மற்றும் இன்டர்நெட் மேய்வதற்கான செலவில் என்ற ரீதியில் போட்டால் கூட ஏற்றுக் கொள்ளலாம். காமிக்ஸ் வாங்க காப்பியை குடிக்காமல் இருக்க வேண்டுமா என்ன? ;) அது இல்லாமல் என்னைப் போன்றவர்களுக்கு பொழுதே புலராதே யப்பனே?! இப்படியே போனால், உங்கள் தினசரி காலையுணவுக்கான காசில், சாப்பாட்டுக்கான செலவில், டின்னருக்கான டப்பில் என்றெல்லாம் விளம்பரங்கள் வர ஆரம்பித்தால் என்ன பண்ணுவதாம்?! ;)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி! நாளைலேர்ந்து காப்பி, காப்பி-பேஸ்ட், காப்பி வித் கண்ணுத்தாயி - எல்லாத்தையும் நிறுத்திப்புடலாம்னு இருக்கேன் கார்த்திக்! ;)

      Delete
    2. Karthik Somalinga : //அதிக நண்பர்கள் வரவேற்பு அளித்தால், எல்லோருக்குமே குறைந்த விலையில் கிடைக்கும்... எங்களில் பலர் பழைய்ய்ய மறுபதிப்புகளை வாங்கி ஆதரவு தருவதைப் போல! ;)//

      கவனம் கோரும் வரிகள் நண்பர்களே...!! பிடித்தாலும் - பிடிக்காது போனாலும் மறுபதிப்புகளை முகச்சுளிப்பின்றி வாங்கி ஆதரவு தரும் நண்பர்களின் ரசனைகளுக்கு பதிலுக்கு ஊக்கம் தந்திடுவதும் நம் பொறுப்பு தானே ?

      Delete
    3. Erode VIJAY : ஒரு flow -ல் படிக்கும் போது இந்த "காபி- பேஸ்ட்" கூட கோல்கேட் மாதிரி ஏதோ ஒரு வகைப் பற்பசை என்பது போல் பொருள் தருகிறது ! அதை நிறுத்தி விட்டீர்களோ என்ற பீதியில் நாளையிலிருந்து நிறைய நண்பர்கள் நிறைய steps back என்று நின்று விடப் போகிறார்கள் - ஜாக்கிரதை !

      Delete
    4. எடிட்டர் சார்,

      ஆடு, மாடுகளுக்கெல்லாம் 'அந்த' சுதந்திரம் இருக்கும்போது பூனைகளும் அப்படி இருந்தாத்தான் என்னவாம்?

      சிக்கனம்னு வந்துட்டா எல்லாத்தையுமே நிறுத்திப்புடணும்! :D

      Delete
    5. Erode VIJAY : தீக்கோழி ; ஆடு...மாடு..சிக்கனம்..சிக்கன்...!! புரட்டாசி விரதம் ஆரம்பித்து இரண்டே சனிக்கிழமைகள் கடந்துள்ள நிலையிலேயே ஒரே பறக்கும், நடக்கும் பிராணிகளாய் உங்கள் பின்னூட்டங்களில் தட்டுப்படுவது தற்செயலான நிகழ்வு தானா ?

      Delete
    6. @ கார்த்திக் :
      காஃபி விசயம் உவமையாக சொல்லப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால், எனக்கு காஃபி சுத்தமாக பிடிக்காது.
      காமிக்ஸ் என்பது கண்களுக்கு விருந்தாகவும், அதன் கதைகள், அறிவு எனும் செடிக்கு ஊற்றும் நீராகயிருக்கிறது!
      காஃபி அருந்துவது உடலுக்கும், இல்லத்துக்கும் (செலவு) கேடு என்கிறது ஒரு மருத்துவ ஆராய்ச்சி.

      Delete
    7. @MH Mohideen:
      ஹா ஹா.. தெரியும் நண்பரே! இது விஜயை கலாய்ப்பதற்கு மட்டுமே :) என்ன தான் இருந்தாலும் அவர் கூப்பாடு என்றெல்லாம் சொல்லி இருக்கக் கூடாது இல்லையா? ஒரு பகுதி வாசகர்கள் அனைத்து காமிக்ஸ்களையும் வாங்க இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை தானே?! மற்றபடி, இந்த மருத்துவ ஆராய்ச்சிகளை நான் ஓரளவுக்கு நம்பினாலும் அவற்றை எல்லாம் பின்தொடர்வது கடினமே. நாம் தினசரி உட்கொள்ளும் பாலிஷ்ட் அரிசி, ரீஃபைன்ட் சர்க்கரை, பாக்கெட் பால், உரம் போட்ட காய்கறிகள் இத்யாதி இத்யாதி எல்லாமே உடலுக்கு ஆகாது தான்... என்ன செய்ய!

      @P.Karthikeyan:
      பாண்டி ரோட்டோரக் கடைகளில் காப்பி விலை பதினைந்தா?! பணக்கார நகரம் பாண்டி! ;) இங்கு சாந்தி சாகரிலேயே (நின்று கொண்டு குடித்தால்) அவ்வளவு தான் விலை! சாந்தி சாகர் போன்ற ஓட்டல்களும் ரோட்டோரத்தில் தானே இருக்கின்றன என்று மதியூகத்துடன் கேள்வி கேட்கப் படாது! :P

      Delete
    8. ஒரு டாலர் விலையில் பிரான்கோ பெல்ஜியன் 60 பக்க ஆல்பம் என்பது நம்ப முடியாத விலைதான். அதில் சந்தேகமோ மாற்றுக் கருத்தோ கிடையாது.

      சிலரால் 47-48 என்ற எண்ணிக்கையில் வரும்போது அனைத்தையும் சுவைக்க இயலாதே என்ற ஒரு ஆற்றாமை தான் அவ்வாறு பேச வைக்கிறது. அவர்கள் வசதிகள் முன்னேறும் தருணத்தில் அவர்களாலும் அனைத்தையும் வாங்கிட இயலும்தான். It is a waiting game !

      ஆனால் சுந்தரமூர்த்தி சொன்னது போல வெகு சில கதைகள் மட்டும் (தேர்ந்தெடுத்து) போருட்காட்சிப் பதிப்புக்கள் முயற்சிக்கலாம் - வருடத்திற்கு 3-4 இப்படி - உதாரணம் லக்கி லூக்! இதன் மூலம் ஒரு சிறு வாசகர் வட்டம் உருவாகக்கூடும்.

      @ எடிட்டர்

      சென்னையைப் போன்ற பல ஊர்களில் குடி தண்ணீருக்கு ஆகும் செலவை விட்டுவிட்டீர்களே :-) அதுவே மாதம் 250 ரூபாய் minimum :-)

      Delete
    9. Raghavan : இங்கே குளிக்க ; குடிக்க - சகலத்துக்கும் விலைக்கு வாங்கித் தான் வண்டி ஓடியாக வேண்டும் ! கந்தக பூமி !!

      Delete
  26. எடிட்டர் சார்.!ஆபாசம் என்பதற்காகவும் அதை எடிட் செய்ய சாத்தியமில்லை என்பதற்காகவும் ஓரு நல்ல கதைத்தொடரை தூக்கி எறிந்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.!அங்க நிற்கீங்க சார் நீங்கள்.!

    மாடஸ்டி எவ்வளவு ஆபாசமான சித்திரக்கதை .அதை அருமையாக எடிட் செய்து அதில் உள்ள அருவருப்பானவைகளை நீக்கி தூர எறிந்துவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் வைத்து தமிழ்நாட்டில் மாடஸ்டி கதைக்கு என்று நல்ல இமெஜ் கொடுத்த உங்களை எவ்வளவு
    பாராட்டினாலும் தகும்.!

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : எந்த பால் போட்டாலும் அதை "மாடஸ்டி கேலரி" பக்கமாகவே அடித்து ஆடும் உங்க பேட்டிங் பாணிக்கு யார் கோச் என்று எப்போவாச்சும் தெரிந்து கொள்ளணுமே சார் !

      Delete
  27. Editor Sir, பதிவிற்கு நன்றிகள் பல....

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : கடமையைச் செய்வதற்கு நன்றிகள் தேவையில்லையே சார் !

      Delete
  28. அப்பாடா... புயலடித்து ஓய்ந்த பின்னர், சிலுசிலுவென காற்றும், சிறு பறவைகளின் ஓசையும் கேட்பது போல இருக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. சிறு பறவைகளா நாமெல்லாம்? ஹை! கேட்க நல்லாத்தான் இருக்கு! ஆனா தீக்கோழி சைஸ்ல இல்ல இருக்கோம்? :P

      Delete
    2. VENKATESHH VARADHARAJAN : எங்கள் ஊரில் இரவு பெய்த மழைக்குப் பின்னே, பறவைகளின் ஒலியோடு இன்றைய காலை ரம்யமாகத் தானுள்ளது - நம் தளத்தைப் போலவே !!

      Delete
    3. வெங்கடேஷ் சார் ...

      :-)))

      இதற்கு தானே ஆசைபட்டீர்கள் பாலகுமாரா....:-)

      Delete
  29. // APOCALYPSE என்ற genre// // உலகெங்கும் வெற்றி ஈட்டி ; ஏராளமாய் விருதுகளும் பெற்றுள்ள இந்த பாணியினை "வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்" என்ற தடம் நோக்கிப் பொட்டலம் கட்டாது - நாம் அனைவருமே முயற்சித்துப் பார்க்குமொரு புதுப் பாணியாகக் கருதிடும் பட்சத்தில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கும் ! 2016-ன் அட்டணையில் என்றில்லாது தொடரும் ஆண்டிலாவது இதனை முழுமனதாய் முயற்சித்துப் பார்க்க முடியுமா guys ? தனிச் சந்தாத் தண்டவாளம் இருக்கவே இருக்கு என்றாலும் - சேர்ந்து இழுக்கும் தேர் விசையாய் ஓடுமல்லவா ? யோசித்துப் பாருங்களேன் guys !! And I repeat - I am NOT looking at this for 2016 ! //

    +1

    2017 ரெகுலர் வெளியீடு வரிசையில் கண்டிப்பாகத்தேவை!

    ReplyDelete
    Replies
    1. Ramesh Kumar : எறும்பாய் ஊறுவோம் ; எதிர்ப்புகள் நாளாசரியாய் தேயும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது !

      Delete
  30. மீண்டும் வாயெல்லாம் பல்லாகிவிட்டது.
    நன்றி ஆசிரியரே.....

    அப்புறம்...
    தலைவர் பரணீதரன் ,
    மடிப்பாக்கம் வெங்கடேஷ்வரன் மற்றும் அனேக கி.நா.பீதியாளர்கள ஓர் உடனடி மீடிங் போட வேண்டி கட்டாயத்தில் உள்ளோம்.
    நல்ல கதைகளையும்,அருமையான சித்திர விருந்துகளையும் ரசிக்க நாம் என்றுமே தயங்கியதில்லை என இந்த கொடூர உலகத்திற்கு புரிய வைப்பது காலத்தின் கட்டாயமாகி விட்டதால் இந்த மீடிங் அவசியமாகிறது.
    ஆசிரியர் அறிவிக்கும் எந்த ஒரு இதழையும் கைப்பற்றாமல் இருக்க நாம் இளிச்சவாயவர்கள் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : அட..எந்த அணியில் இருந்தாலும் தலீவர் பதவி நிரந்தரமோ நம்மவருக்கு ? பார்டா !!

      Delete
    2. ஹஹஹஹஹஹ..............!


      பாஸா சார்.!போன தடவை மக்கன் பேடா வை தவறவிட்டுவிட்டேன்.! டெக்ஸ் விஜய ராகவன் புகழ்ந்து பேசுவதை பார்த்து எனக்கு அப்படி என்னதான் இருக்க என்று பார்க்க தூண்டுகிறது.!சென்னை யில் எங்கு கிடைக்கும்.?

      Delete
    3. எவ்ளோ வேகமாக வரும் கல்லானாலும் முதல் மண்டையை தாண்டாதல்லவா சார் ......இதான் தலீவர் போஸ்ட் ரகசியம் சார் ..ஹி...ஹி...

      Delete
    4. MV சார் ....பாசா ஜியின் அன்புடன் சேர்ந்த அந்த மக்கன் பேடா டேஸ்ட் இன்னும் இனிக்கிறது . அதுல என்னா விசேசம்னா நான் ரெக்கமண்ட் பண்ணவும் ஒரு பத்து நண்பர்களுக்கும் மேல் ஆளாளுக்கு ஒரு பேடாவை என் கையில் திணித்தனர் . ஓரிரண்டு க்கு மேல் சாப்பிட்டு இருக்க மாட்டேன் என நினைக்கிறீர்கள் தானே ... நம் சாப்பாடு குரு கார்சன் கூற்றுப்படி "மறுப்பதே மரியாதை ஆகாதே .... "......சரி சரி முறைக்காதீர்கள் , ஒவ்வொன்றையும் சுவைக்கும் போது உங்கள் ஞாபகமே .....

      Delete
    5. //எவ்ளோ வேகமாக வரும் கல்லானாலும் முதல் மண்டையை தாண்டாதல்லவா சார் ......இதான் தலீவர் போஸ்ட் ரகசியம் சார் //

      டெக்ஸ் !!!சிரிப்பை அடக்கவே முடியல !!!!

      Delete
    6. டெக்ஸ் ....கிர்ர்ர்ர்....


      ரொம்ப நல்ல்ல்லாருக்கனும் நீங்க...

      முறைக்கும் படங்கள் பலபல...

      Delete

  31. தோர்கல் அட்டைப்படம் அட்டகாசம்! ஓவியம் - ஸ்தம்பிக்கச் செய்கிறது!!

    'சிறைப் பறவைகள்' அட்டைப் படத்தில் லாரன்ஸின் முகபாவத்தைப் பார்த்தால் 'சிட்டிசன்' படத்தில் வரும் மனநலம் குன்றிய அஜித்தின் ஞாபகம் வருகிறது! :P இடதுகை சுடுவதை வலதுகை தடுத்து நிறுத்த முயற்சிப்பது போல ஒரு ரியாக்ஸன் வேறு! வலது கை மணிக்கட்டில் அதென்ன ஏதோ வரிவரியாக... மாரியாத்தாவுக்கு மந்திரிச்சுக் கட்டின கயிறாக இருக்குமோ? ;)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : அட...நான் கூட அதை இப்போது தான் கவனிக்கிறேன் - நரம்புத் தளர்ச்சி வந்த ஆசாமி போல் கையைக் கெட்டியாய் அவரே பிடித்துக் கொண்டு நிற்கிறாரே !! இது தான் FLEETWAY -ன் ஒரிஜினல் அட்டைப்படமும் கூட !! ஷப்பா !!

      Delete
    2. அப்புறம் வலது கையில் ஆறு விரல்கள் இருப்பது போல் தெரிவது எனக்கு மட்டும் தானா?

      Delete
  32. தோர்கில் அட்டைபடம் அசத்தலாக உள்ளது ஆசிரியரே,கதையும் அதேபோல் அசத்தும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : கதைகள் crackerjack ரகம் !!

      Delete
    2. காமிக்ஸ் ரசிகர்கள் பெரும்பாலனோருக்கு கண்டிப்பாக பேண்டஸி ரக கதைகள் கண்டிப்பாக பிடிக்கும்,நானும் அதே ரகமே,விட்டலாச்சார்யா படம் பார்த்து வளர்ந்தவர்கள்தானே நாம்.
      அது ஒரு வகையான ஈர்ப்பு,எந்த ரகத்தில் அதை வகைப்படுத்த.
      ஒருவேளை அதற்கு ஏதேனும் உளவியல் காரணங்கள் இருக்கலாம்.

      Delete
    3. // காமிக்ஸ் ரசிகர்கள் பெரும்பாலனோருக்கு கண்டிப்பாக பேண்டஸி ரக கதைகள் கண்டிப்பாக பிடிக்கும்,நானும் அதே ரகமே,விட்டலாச்சார்யா படம் பார்த்து வளர்ந்தவர்கள்தானே நாம். //

      அதே! விட்டலாச்சார்யா வகைத் திரைப்படங்கள் இன்றும் டீவிக்களில் சைலண்ட்டாக ரசிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன!

      Delete
    4. @ FRIENDS : இந்தத் தொடரின் பிதாமகர் வான் ஹாம்மே எனும் போது தரச் சான்றிதழும் தேவையா - என்ன ? Rocking episodes !!

      Delete
    5. இனி வரும் தொர்கல் கதைகள் ஒரு கனவுலகிற்கு நம்மை இட்டுச்செல்லும் - சாகசம், போட்டி, திரில்லர், சோகம், துரோகம், திகில், ஆவிகள், தேவதைகள் என்று ஒரு வண்ணக்கனவு நம் முன்னே விரியக் காத்துள்ளது - exciting times ahead !

      இவ்வளவு விஷயங்கள் அடங்கியும் தொர்கல் ஒரு அடிப்படை எளிமையை விடாமல் பற்றி இருக்கும் விதம் வியக்க வைக்கும்.

      SPOILER ALERT START

      இந்த எளிமையான சாகச knotல் தொர்கலின் மகன் ஒரு விசேஷ பிறப்பு என்றறிந்த பின் அவனுக்கும் அவன் தந்தைக்கும் இடையே நடைபெறும் உணர்ச்சிப் போராட்டம், இன்னொரு சாகசத்தில் தொர்கல் தன் எதிர்கால உருவம் (தொர்கலேதான் !! :-)) நடத்தும் வாழ்வா-சாவா போராட்டம் என்று அட்டகாசங்கள் நிறைந்துள்ளன - ஹ்ம்ம் .. இப்படியே பேசிக்கிட்டே போகலாம் ! இது சரியாக உணரப்படும் பட்சத்தில் தமிழ் காமிக்ஸ்க்கு கிடைத்த நிஜ பரிசுகளில் ஒன்று.

      வான் ஹாம்மே மகாபாரதம் படித்திருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு ! (நண்பர்கள் மிரள வேண்டாம் - காப்பி இல்லை - கதையின் விஸ்தீரணம் (கார்த்திக், மணிப்ரவாளம் :-)) மற்றும் வளைவுகள் அவ்வளவு கிளைகளை அடக்கி இருக்கும் ! [சில வளைவுகளுக்கு எடிட்டர் கோடு போட்டு விடுவார் என்றாலும் .. ஹி ஹி ;-) :-) :-)] !!

      SPOILER ALERT END

      Delete
    6. அப்போ அடுத்த வருடம் தோல்கள் 5 இதழ்களாய் வந்தால் .....ஆஹா(பெளன்சருக்கு பதில்)gn

      Delete
    7. ராகவன் சார்...இதுவரை வந்த தோர்கல் கதை என்னை கவர வில்லை.இப்பொழுது நீங்களும் ..ஆசிரியரும் ..இன்னும் சில நண்பர்களும் சிலாகிக்கும் பொழுது ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ..:-)

      Delete
    8. Raghavan : //[சில வளைவுகளுக்கு எடிட்டர் கோடு போட்டு விடுவார் என்றாலும் .. ஹி ஹி ;-) :-)//

      கோடும், ரோடும் போடுவது நம் கடமையன்றோ ?! போட்டாச்சே !!

      Delete
    9. தமிழ் காமிக்ஸ் உலகில் எனக்கு பிடிக்காத ஒரு ஆசாமி இந்த 'டெய்லர் தங்கராசு' தான் .. கிர்ர்ர் ... !! இன்னொருவர் 'Censor Board சேகர்' [S Ve சேகர் அல்ல :-)]

      Delete
  33. சிறைப்பறவைகள் பின்னட்டை கெத்தாகவும்,முன்னட்டை கலரிங்கிலும் அசத்துகிறது சார்.

    ReplyDelete
  34. தோர்கில் அட்டைபடம் அட்டகாசம் உள்ளது...

    ReplyDelete
  35. மீண்டும் தாங்கள் பதிவிட்டது மகிழ்ச்சி சார்,இந்த தளத்தில் இனி ஆரோக்கியமான விவாதத்தை மட்டுமே அனைவரும் முன்னெடுத்து சென்றால் நலம் பயக்கும்.

    ReplyDelete
  36. இதழ்களின் வெளியீட்டில் அரைசதத்தை கடந்திருந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி கிட்டியிருக்கும்,சிறு மாற்றங்களுக்கு உட்பட்டு என்று கூறியிருக்கும் வாசகங்களுக்கு உட்பட்டு இந்த கோரிக்கையையும் பரிசீலனை செய்விர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  37. சார்......ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு...மகிழ்ச்சியை எப்படி சொல்றதுன்னே தெரிலை...நான் இன்னிக்கு பதிவு வந்திருச்சுன்னு தெரியாம ப்ளாக்கை ஓப்பன் பண்ண போவதி்ல்லை என்ற முடிவில் இருந்தேன்.காலை எழுந்தவுடன் செயலாளரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே என்ற செய்தி வந்துள்ளதா என்று தான் பார்த்தேன்..அதை பார்க்கவும் வாட்ஸ் அப்பில் யுவா கண்ணன் பதிவு வந்திரிச்சு என்று கத்தி லிங்க் கொடுக்கவும் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சி இன்னும் குறைய வில்லை .அந்த சந்தோசத்தில் இன்னும் பதிவையே படிக்க வில்லை சார் ...படித்து விட்டு வருகிறேன்...அனைத்து நண்பர்களின் சார்காகவும் மீண்டும் மீண்டும் ஆனந்த நன்றி சார் ....

    ReplyDelete
  38. ப்ளாக் மறு பதிப்பிற்கு நன்றி விஜயன் சார்

    ரொம்ப உற்சாகமாய் இருக்(கிறோம்)கீங்க

    புதிதாய் ஒரு பதிவு !!!

    ReplyDelete
  39. ' சிறைப் பறவைகள்' பின்னட்டைப்படம் நம்ம செல்வம் அபிராமியும், பாம்பாம்மும் வயிறுவலிக்க சிரிக்க வைத்த கேப்ஷன் போட்டி நாட்களை ஞாபகப்படுத்துகிறது! 'வார்னிங் ஷாட்டா - இல்ல.லஞ்ச் ஷாட்' காமெடி இன்னும் பல வருடங்களுக்கு பிறகும் சிரிக்க வைத்திடும்!

    ( இதுபோன்ற சிறப்பான/சிரிப்பான கேப்ஷன்களுக்காக நமது இதழில் ஒரு தம்மாதுண்டு இடம் ஒதுக்கினால் இணையத்திற்கு அப்பால் உள்ளவர்களும் சிரித்து மகிழ்வார்களே எடிட்டர் சார்! புத்தகத்தில் இடம்பெறுவதே காலத்துக்கும் அழியாத மிகச் சிறந்த பரிசு என்பதால், பரிசாகப் புத்தகங்களை அனுப்பிவைக்கும் சிரமங்களையும் தவிர்த்துவிடலாமில்லையா?)

    ReplyDelete
  40. எல்லோரும் இந்த காமிக்ஸ் நாட்டு மன்னர்களே என்று புரியும்படி சொல்லிவிட்டீர்கள். அருமை.

    ReplyDelete
  41. Things are back to normalcy...Nice to see. thanks Edit and Comic fans...let's continue to travel well.

    ReplyDelete
  42. டியர் எடிட்டர் சார்,
    நமது வலையில் புதிய பதிவு இல்லா ஞாயிறு வெறுமையாக போயிருக்கும்.... நன்றிகள் பல....

    ReplyDelete
  43. இந்த முறை லாரன்ஸ் அட்டை படம் செம கலக்கலாக இருக்கிறது சார் ..அருமை....

    பிறகு கிராபிக் நாவல் தனி சந்தா ...க்ளாசிக்ஸ் தனி சந்தா என்பவை கதை பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் அனைவரும் வாங்கி பயன்பெறுவர் என்பது தானே உண்மை ...அப்படி எனில் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தால் இன்னும் சில காமிக்ஸ் கள் இணைக்க முடியுமா சார் ...

    ReplyDelete
  44. இப்பொழுது எல்லாம் மாதம் நான்கு ஐந்து பதிவு என்றால் அதில் இரண்டாவது ஒரு வித்தியாசமான ...விசித்திரமான ...கிராபிக் தரமான கதைகளை பற்றிய விமர்சனமாகவே உள்ளதை கண்டால் ....

    " உள்ளுக்குள்ளே என்னமோ திட்டமிருக்கு "

    என்ற ரஜினி முத்து பட பாடல் தான் நினைவுக்கு வருகிறது சார் ....:-))))

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : அழுகாச்சிக் காவியங்களுக்கு அப்பாலும் அழகான கிராபிக் நாவல்கள் உண்டு என்ற புரிதலை மெதுமெதுவாய் நம்மிடையே கொணரும் முயற்சியின் துவக்க நாட்கள் இவை தலீவரே !! அதிக தொலைவில் இல்லா ஒரு நாளில் - 'இவையெல்லாம் எனக்கு இப்போவே - இங்கேயே வேணும் !!" என்று நீங்கள் அடம் பிடித்துத் தரையில் உருளும் வேளையொன்றை இந்தப் புவியுலகம் கண்குளிரத் தரிசித்ததாக வேண்டும் ! So அது தான் திட்டம் !

      பின் குறிப்பு 1 : இது நம்மளுக்குள்ளேயே இருக்கட்டும் ; செயலாளர் அடிச்சுக் கேட்டாலும் சொல்லிடாதீங்கே !

      பின் குறிப்பு 2 : பேப்பர் விலைகள் திடும் விலையேற்றத்துக்கு தாரமங்கலமும் ஒரு காரணம் என்று நியூஸ் படித்தேன் !

      Delete
  45. தோர்கல் அட்டைப் படம். உலத்தரம். அந்த சிறுத்தையின் ஒவ்வொரு ரோமமும்..அப்பாடி.

    ரூ.120 இதழ்களே தோர்க்கல் வெளியிட ஏற்றது. இனி தோர்க்கல் வேண்டும் என்ற் குரல் எட்டுத்திக்கும் ஒலிக்கத் தொடங்கும்.

    ஒரு மாய உலகத்தின் சாவி தோர்க்கல்.

    ReplyDelete
    Replies
    1. RAMG75 : //ஒரு மாய உலகத்தின் சாவி தோர்க்கல்.//

      Without a doubt !!!

      Delete
  46. உற்சாகம் தரும் பதிவு சார். அதிக புது முயற்சிகளை 2016ல் எதிர் பாக்கிறேன். டெக்ஸும், டைகரும், XIIIம், லார்கோவும் என்றோ ஒருநாள் புதுமுயற்சியாக தானே வந்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சிவ் சார் +1போடாலாமா வேண்டாமா என்று பெரும் குழப்பம் ..

      எனவே ஐம் ஜம்பிங் ...:-)

      Delete
    2. SIV : 2016-ன் ஏப்ரல் வழித்தடத்தில் தோர்கல் நீங்கலாக பாக்கி அனைத்துமே புது வரவுகளாகவே இருந்திடும் நண்பரே !

      Delete
  47. தினமும் பத்து ரூபாயில் செங்கல்பட்டில் வீட்டு மனை.

    ரூ 1 செலவில் இன்சூரன்ஸ் போன்ற விளம்பரங்கள் வருகிறது.

    காபி - காமிக்ஸ் வரிகள் இன்னும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ராம்ஜீ சார் :-)

      Delete
    2. RAMG75 : //காபி - காமிக்ஸ் வரிகள் இன்னும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வரிகள்.//

      இந்த வரிகளை இன்னமும் கொஞ்சம் refine செய்திட நண்பர்கள் உதவிடலாமே - ப்ளீஸ் ?

      Delete
  48. ஆஹா !!! ஓஹோ !!! வந்துட்டாருய்யா எங்க எடிட்டர் சார் !!! இனி என்றும் ஆனந்தம் தான் !!! Sunday Blog is return. welcome Editor sir!!

    post-apocalyptic கதைக்களம் நமது தமிழ் காமிக்ஸ்-க்கு புது தளம்!! ஆனால் , இது உலகளாய அளவில் மிகவும் வெற்றிகரமான Genre. 2016 அட்டவணை-யில் இத்தொடர் இடம்பிடித்தால் , சூப்பர்!!!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...பதிவு வருவது நின்றால் தானே ரிட்டன் ஆவதற்கு.....ஆசிரியர் அப்படியெல்லாம் நம்மை ஒருபோதும் தவிக்கவிடமாட்டார்...கவலைப்படாதீர்...

      Delete
  49. சார் தோர்களுக்காக காத்திருக்கிறேன் ஏக்கங்களை தவிர்க்க இயலாமல்.
    அட்டை படம் 2ம் அருமை.
    உலக அழிவினூடே ....சிறு வயதில் சிறுவர் மலரில் இது போன்ற கதைகள் படித்துள்ளேன்...புரட்ச்சி பெண் ஷீலா ...காத்திருக்கிறேன் ....இந்த அடுத்த வருட வெளியீடு குறித்த அற்புதமான விளம்பரத்தை பின் அட்டயில் வெளியிடலாமே சார்..

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் //புரட்ச்சி பெண் ஷீலா ...காத்திருக்கிறேன் ..//

      கோவையாரின் பின்னூட்டத்தைக் கோர்வையாய்ப் படிக்காது போனால் குடும்பத்தில் பல குழப்பங்கள் நேர்ந்திடும் வாய்ப்புகள் அதிகம் ஸ்டீல் சார் !!

      Delete
  50. மூன்று ஸ்பெசல் இதழ்கள் ....
    1.ஆண்டு மலர்...(ஈரோடு விழாவில் ...)
    2.தீபாவளி மலர் ...(டெக்ஸ் ஆக்சன் )
    3.கோடைமலர் .....(கோடைமலர்ல..)
    .....ஆண்டு மலர் , கோடை மலர் இரண்டிலும் டெக்ஸ் இருப்பது உறுதி தானே சார் .....ஆண்டுமலர் அட்டைகளில் டெக்ஸை பார்த்து சொக்கி நின்ற நாட்கள் மீண்டும் வருமாங் சார் ......

    ReplyDelete
  51. விஜயன் சார்,
    சாகாவரத்தின் சாவி" அட்டைபடம் அருமை! புத்தகம் என்று கையில் கிடைக்கும் அதனை துணைவி கைகளில் கொடுத்து விட்டு அவர் முகத்தில் ஓட போகும் சந்தோசத்தை ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்.

    சிறைபறவைகள் முன் அட்டை செமயா வந்து இருக்கிறது!

    நேற்று நண்பர் ஈரோடு விஜய் உடன் போனில் பேசிய போது அவர் சொன்னது உண்மையாகி விட்டது. உங்களால் வாரம் தவறாமல் எங்களிடம் உரையாடாமல் இருக்க முடியாது அதனால் நாளை காலை கண்டிப்பாக நமது ஆசிரியர் பதிவு போடுவார் என்றார். அது நடந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Parani from Bangalore : //புத்தகம் என்று கையில் கிடைக்கும் அதனை துணைவி கைகளில் கொடுத்து விட்டு அவர் முகத்தில் ஓட போகும் சந்தோசத்தை ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்//

      ரொம்பவே வித்தியாசமான உங்கள் ஆசை நனவாகிட இன்னமும் நான்கே நாட்கள் தான் நடுவில் உள்ளன !!

      Delete
  52. @ எடிட்டர்

    2016ல் NBSல் வெளிவந்த கான்க்ரீட் கானகம் நியூயார்க் கதையின் தனிப் பதிப்பு உண்டா ? லார்கோ 1 போல இதையும் களமிரக்கலாமே - நமது புது பாணி action genreக்கு இது நல்லதொரு introduction எனும் வகையில் விற்பனை தூள் பறக்கும் !

    ReplyDelete
    Replies
    1. Raghavan : சந்தாக்கள் நவம்பர் & டிசம்பர் மாதங்களுக்குள் முழுமையாய்க் கிட்டி விட்டால் - இது போன்ற விஷயங்களுக்குத் திட்டமிட உதவியாக இருக்கும் ! பார்ப்போமே !

      Delete
  53. " CHINA MAN " Ennachu sir? Announced 3 or 4 years back.

    ReplyDelete
    Replies
    1. Srinivas Nagarajsethupathi : தொடரில் அத்தனை சுவாரஸ்யம் தொடர்வதாகத் தெரியக் காணோம் என்பதால் - அவர் நம் ரேடாரில் இல்லை நண்பரே !

      Delete
  54. எடிட்டர் சார்.

    2016 (மினி புத்தகம்) அட்டவனை சந்தாவில் உள்ளவர்களுக்கு மட்டும் தானா சார்?
    என்னைப்போல் கடைகளில் வாங்குபவர்களுக்கு கிடைக்குமா சார்..கடந்த இரண்டு வருடங்களாக சந்தா கட்டியிருந்தேன் சார்,ஆனால் இந்த வருடம் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தா கட்டமுடியாமல் போய்விட்டது...அதனால் தான் கேட்கிறேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. kannan s : அனைவருக்கும் கிடைத்திட ஆவன செய்து விடுவோம் நண்பரே ! கடைகளில் எத்தனை தூரம் ஞாபகமாய் விநியோகம் செய்வார்களென்பது தான் தெரியவில்லை ! இதன் பொருட்டு TEX தீபாவளி மலரின் அட்டையில் ஒரு சிறு குறிப்பு போட முயற்சிப்போம் !

      Delete
  55. சிவகாசியில் காபி 10 ரூபாய் அப்படினா 365×10= 3650 இது தான் ஆண்டு சந்தாவா????
    வருடத்திற்கு 52 வாரம் அது போல் 52 புத்தகங்கள் வேண்டும் 46 பத்தாது

    ReplyDelete
  56. 2016 (மினி புத்தகம்) அட்டவனை சந்தாவில் உள்ளவர்களுக்கு மட்டும் தானா சார் ?

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar : இந்தாண்டு முதல் அனைவருக்கும் வழங்கிட ஏற்பாடு செய்திடுவோம் !

      Delete
  57. வேதாளர் கபால குகை . குரான். டெவில் காணகம் .முத்திரை மோதிரம். இவற்றை மறந்து விடாதிர்கள்

    ReplyDelete
    Replies
    1. Anandappane Mariappan : பத்திரமாய் ஞாபகங்களில் வைத்திருப்போம் நண்பரே...! கொஞ்ச காலத்துக்காவது !

      Delete
  58. காலையில் ( தூங்கிக் கொண்டிருந்த) நண்பர் ஒருவருக்கு ஃபோன் பண்ணி "எழுந்திருங்க. எடிட்டர் பதிவு போட்டுட்டார்"னு சொன்னேன். பதறியடிச்சு எழுந்த அவர் " ஆ! மூனு வாரமாவா தூங்கிட்டிருந்தேன்?" அப்படீன்னு கேட்கிறார்! ஹம்... எனக்கு வாய்த்த நண்பர்கள் அப்படி!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : பதிவில்லா ஞாயிறா..? குசும்பில்லா பூனையா ?

      Delete
    2. ஹம்... நமக்கு வாய்த்த எடிட்டரும் அப்படி! :D

      Delete
    3. விஜய் @ ஆரு அந்த கும்பகர்ணன் என தெரிந்து விட்டது எனக்கு ....

      Delete
  59. அன்புள்ள எடிட்டர்,

    இன்னும் புதிய கதைகளை, களங்களைத் தேடும் உங்கள் முயற்சி நன்று.. ஆனால் ஒரு formal, அறிவிப்பு வெகு நாட்களாகக் கிடப்பில் உள்ளது

    வெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவிக்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்

    முன்கூட்டிய நன்றிகள்! ..

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய முன்கூட்டிய நன்றிகளும்!

      Delete
    2. // மாதமொருமுறை அல்லது இருமுறை //

      ரொம்பத் தெளிவாதான் இருக்கீங்க!

      Delete
    3. 1.ரெகுலர் சந்தாவில் 6+1...
      2.தனி சந்தாவில் இரு மாதத்திற்கு ஒருமுறை ....(இந்த எக்ஸ்ட்ரா 600டெக்ஸ்க்காக செலுத்த நாங்கள் ரெடி சார் )..
      3.தனி சந்தாவில் வரும் சூப்பர் சாட் 6"-க்கு வேறு புதிய மொழி பெயர்ப்பாளர் என்றாலும்கூட ஓகே சார் ...
      4.நாங்களும் 40வயதை நெருங்கிய நிலையில் .....இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு டெக்ஸ் கதைகளை படிக்க..... இதுவே இறுதி சந்தர்ப்பம் .....

      Delete
  60. என்னுடைய வியாதி ( மறதி ) ஆசிரியருக்கும் தொற்றி கொண்டதில் மகிழ்ச்சி...

    ReplyDelete
  61. தோர்கல் சூடு பிடிக்கப் போவது சந்தோசம்...
    லவ் ஸ்டோரி கழுதை வயதில் படிக்க முடியுமான தெரியலையே.????

    அதற்கு பதிலாக மனைவியை சமாளிப்பதெப்படி???
    அடுத்த புத்தக திருவிழாவிற்க்கு வர மனைவியிடம் அனுமதி பெற சில யோசனைகள் நிறைந்த ... போன்ற சூழ்ச்சிகளும் , வீர சாகசங்களும் நிறைந்த கதை தொடர்களை முயற்சிக்கலாமே சார்...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா! ரம்மி... தூள்! :D

      Delete
    2. Rummi XIII : அதெல்லாம் வான் ஹாம்மே ஸ்கிரிப்ட் எழுதினால் கூட சரிப்படாத கனமான plot கொண்ட கிராபிக் நாவலாக இருக்கும் போல் தெரிகிறதே !! ஆக அந்தப் பச்சை அடையாளம் ஏதோவொரு bookfair விஜயத்தின் வீரப் புண் தானா ?

      Delete
    3. மொத்த விழுப்புண்களின் எண்ணிக்கை சார்....

      Delete
    4. @ரம்மி ......ஹா ...ஹா ....சிரிச்சு மாளல ....!!!!!!! :-))

      Delete
  62. Appadi ipathan comment poda mudinchathu.thanks sir for Sunday post.

    ReplyDelete
  63. Erode VIJAY // சிறு பறவைகளா நாமெல்லாம்? ஹை! கேட்க நல்லாத்தான் இருக்கு! ஆனா தீக்கோழி சைஸ்ல இல்ல இருக்கோம்? //

    தீக்கோழி? ... ஹா ஹா...

    நான்கைந்து தீக்கோழிகள் காமிக்ஸ் படிப்பது போல் யாராவது ஒரு இங்கே கிளிக் போட்டால் நன்றாக இருக்கும்.

    அப்புறம் " ஆ! மூனு வாரமாவா தூங்கிட்டிருந்தேன்?" அப்படீன்னு கேட்ட அந்த நண்பர் நம்ம தலீவர்தானே?

    ReplyDelete
  64. Ada...surprising post... un expected.... however thanks a lot. Interesting teaser for the 2016.... (could have increased the no of books. I hope the total number of books mentioned is excluding custom re prints, if any, right ???).

    Dear Sir...please continue to write Singathin Siru Vayathil without any break... very interesting ..some times more interesting than the comics.. thank you once again....

    ReplyDelete
  65. AHMEDBASHA TK //

    கி.நா.பீதியாளர்கள் சங்கத்தை எப்போது கூட்டினாலும் உடனடியாக ஒரு தாக்கீது அனுப்பவும் எனக்கு.... ஆசிரியரின் சிலபல அறிவிப்புகள் மற்றும் சில நண்பர்களின் உற்சாகத்தைப் பார்க்கும் போது கி.நா.பீதியாளர்கள் சங்கம் என்பது கி.நா.பேதியாளர்கள் சங்கமாக மாறிவிடும் போல் இருக்கிறது.

    ReplyDelete
  66. Can anyone please tell, how many books are there in October and November.....

    ReplyDelete
  67. அட போங்க சார்.... உங்களது பரந்த காமிக்ஸ் தேடல்களிலிருந்து எங்களுக்கொரு தீர்வு கிடைக்குமுனெ நம்பியிருந்த பூனையார் , தலீவர் , வக்கீல் சார் , இரும்பு கழுகார் , கிட் கவுண்டர், செனாஆனா மற்றும் சாத்தான்ஜி ஆகியோர்களின் சார்பாகவே அந்த கோரிக்கை( பெயர் விடுபட்ட நண்பர்கள் மன்னிக்க..)


    சத்தியமா நான் எனக்காக கேட்கலை

    ReplyDelete
  68. 2016ல் ரின்டின் உண்டுங்களா சார்?

    ReplyDelete
    Replies
    1. லக்கியின் ஒரு ஜெண்டில்மென் கதையில் வந்த அந்த பட்லர் கதை ஒன்று இருக்கிறது... 2016ல் பார்ப்போமா... என்று சொல்லியிருந்தீர்கள்... வாய்ப்பிருக்கிறதா எடிடட்டர் சார்?

      Delete
    2. S.V.VENKATESHH : நிச்சயமாய் சார் ! இப்போது நான் எழுதத் தொடங்கி இருப்பதே திருவாளர் ரி.டி.கே. கதையினைத் தான் !

      Delete
    3. S.V.VENKATESHH : பட்லரை 2017-ல் கவனித்துக் கொள்வோமே !

      Delete