Powered By Blogger

Wednesday, September 02, 2015

புலியும்..புலி வாலும்..!

நண்பர்களே,

வணக்கம். சற்றே ஆச்சர்யமாக இருக்கலாம் ; ஆனால் இந்த ஞாயிறின் பதிவுக்கான உங்களின் பலதரப்பட்ட எண்ணச் சிதறல்கள் என்னுள் நிறைய சந்தோஷத்தை உருவாக்கியுள்ளது என்பது தான் நிஜம் ! விலை அதிகமே என்ற ஆதங்கத்தை முன்வைத்துள்ள நண்பர்களும் சரி ; அதன் அவசியங்களைச் சுட்டிக் காட்டிய நண்பர்களும் சரி - நம் மீது உண்மையான ஈடுபாடு கொண்டவர்களே என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை எனும் போது வருத்தங்களுக்கும் இடமில்லை ! And ஒரு ஆரோக்கியமான விவாதத்தால் தளம் நிரம்பிடும் போது பார்க்கப் / படிக்க ரொம்பவே நயமாக உள்ளது ! மாறுபடும் பார்வைகள் ; ஆத்மார்த்த அக்கறையோடு சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை நிதானமாய்ப் படித்த போது எனக்குள்ளும் சில பல டப்பாக்களை 'டிக்' அடிக்க சாத்தியமானது என்பது ப்ளஸ் பாய்ன்ட் ! 2016-ன் அட்டவணை கூப்பிடு தூரத்தில் உள்ள இத்தருணத்தில் இந்த மினி சர்ச்சையும் ஓர் விதத்தில் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டேன் ! 

"விலை"...."சரியான விலை" என்ற ரீதியிலான கேள்விக்குள்ளே நுழையும் முன்பாக எனக்கு 11-ஆம் வகுப்பில் பொருளாதாரப் பாடம் நடத்திய ஆசிரியர் தான் நினைவுக்கு வருகிறார் !  DEMAND (தேவை) எனும் நேர்கோடும், SUPPLY (வரத்து) எனும் இன்னொரு நேர்கோடும் உரசிக் கொள்ளும் புள்ளி தான் விலை என்று போர்டில் படம் போட்டுச் சொல்லிக் கொடுப்பார் ! ஆனால் அவரிடம் நமது காமிக்ஸ் துறையின் பொருளாதாரக் கோட்பாடுகளைச் சொல்லியிருந்தால் - 'ஆளை விடுங்க சாமி!' என்று ஓட்டமாய் ஓடியே போயிருப்பார் ! Simply because "விலை" என்று நம்மிடையே தற்போது புழக்கத்தில் இருக்கும் அந்த ரூ.40 ; 50 ; 60 என்ற நம்பர்கள் எல்லாமே தற்போதைய DEMAND-ன் அடிப்படையில் நிர்ணயம் ஆகிடுபவை அல்ல ! இன்றைய தேதிக்கு உள்ளதொரு தேவை + கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குள்ளாக எழுமென்று நாம் எதிர்பார்க்கும் தேவையையும் இணைத்து ஒரு குருட்டுக்கணக்கில் தான் print run -ஐ நிர்ணயம் செய்கின்றோம் ; and அதன் அடிப்படையில் தான் விலையும் நிர்ணயம் காண்கிறது ! So துவக்கப் புள்ளியிலேயே நாம் நிறைய compromise செய்து கொள்ளத் தயாரான பின்பு தான் இன்றைய ரெகுலர் விலைகள் சாத்தியமாகின்றன ! (ஆஹா...அடுத்த விலையேற்றத்துக்கு பிட்டைப் போட்டுட்டானா ? என்ற கேள்வி உங்கள் மனதில் இழையோடத் தொடங்கினால் - worry not ; இன்றைய விலைகளில் 2016-ல் எவ்வித மாற்றங்களும் கிடையவே கிடையாது !)  "என் பெயர் டைகர்" விலை அதிகமென்ற கருத்துக் கொண்ட நண்பர்களிடம் நான் கோரிடும் புரிதல் இது மட்டுமே ! ஆண்டுதோறும் எங்கள் கிட்டங்கியிலிருந்து வெளியே செல்லும் சரக்குகளுக்கும் , உள்ளே புகுந்திடும் புதுச் சரக்குகளுக்கும் மத்தியினில்  ஒரு மல்யுத்தப் போட்டி நடத்தினால் புது வரவுகள் ஒரே நொடியில் hands down ஜெயித்து விடும் !கொஞ்ச காலம் காத்திருப்பினும் விற்றுக் கொள்ளக் கூடிய ரெகுலர் இதழ்களுக்காக  இந்தப் பொதி சுமப்புப் படலத்தை  செய்திடுவது நமக்குப் பழகிப் போய் விட்டது ; ஆனால் விற்பனை  guarantee இல்லா விலை கூடுதலான இதழ்களின் பொருட்டு நாம் அதே பாணியை / பணியைத் தொடரத் தயங்குவதே customized imprints எனும் குடைக்குக் கீழே 'எ.பெ.டை' இதழினை ஐக்கியமாக்கிடும் முயற்சி !  So ரெகுலர் சந்தா விலைகளில் "எ.பெ.டை".இதழைப்  புகுத்திட இயலாததன் பின்னணி இதுவே !

அடுத்த கேள்வி - why now ? இந்த இதழின் அறிவிப்புக்கு இப்போதென்ன அவசியமென்ற வினா.....! இன்னும் 45 நாட்களில் 2016-ன் அட்டவணை உங்களிடம் ஒப்படைக்க வேண்டிய வேளை இது ! சில அர்த்தஜாமத்துச் சிந்தனைகளின் பேரில் அட்டவணையில் சில கூட்டல்கள், கழித்தல்கள் அவ்வப்போது நடந்து வந்தாலும்  - ஒரு விஷயத்தில் மட்டும் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை! அது தான் - 2016-ல் டைகருக்கு ஒரு slot  கூட இல்லாத சங்கதி ! இளம் டைகர் கதைகள் தொடராய் செல்வதால் அவற்றைக் கையாள சங்கடம் ; இந்த மிஸ்டர்.ப்ளூபெர்ரி தொடரில் 5+1 கதைகள் உள்ள நிலையில் அவற்றையும் அட்டவணைக்குள் நுழைக்க வாய்ப்பில்லை ! So 2016-ல் மட்டுமல்ல ; தொடரும் ஆண்டுகளிலும் இதே சிக்கல்களின் காரணமாய் "டைகர் எக்ஸ்பிரஸ் " புறப்படவே போவதில்லை என்பது தான் கஷ்டமான ; கசப்பான நிஜம் ! டைகர் போன்றதொரு ஆர்ப்பரிக்கும் நாயகரை இப்படி VRS கொடுத்து மூலையில் அமரச் செய்ய மனது கேட்கவில்லை என்பதோடு - டைகர் ரசிகர்களின் கடுப்பையும் 2016 அட்டவணை ஈட்டிடுமே என்ற ஆதங்கமும் எனக்குள்ளே ! So அட்டவணை ; அடுத்தாண்டுச் சந்தா என்ற ஒரு வட்டத்துக்குள் புகுந்திடும் முன்பாக "எ.பெ.டை" அறிவிப்பை வெளியிட்டால் - மேற்சொன்ன சிக்கல்களில் பெரும்பான்மையைத் தவிர்த்துக் கொள்ளலாமே என்று தோன்றியது ! Hence this announcement - at this point of time !

டைகரின் இன்றைய கதைகள் அவ்வளவாய் சோபிக்காது போனமைக்கு எனது நெகடிவ் பில்டப் தான் காரணம் என்ற கருத்தை எவ்விதம் அணுகுவதென்று எனக்குத் தெரியவில்லை ! எனது பில்டப்போ / பில்டப்பின்மையோ ஒரு கதையின் வெற்றி / தோல்வியை நிர்ணயம் செய்திடப் போகிறதா - என்ன ? நானென்ன அத்தனை ஞானமுள்ள விமர்சகனா ? - அல்லது நீங்கள் தான் அறியாக் குழந்தைகளா ? நான் திரும்பத் திரும்பச் சொல்ல வருவதெல்லாம் - நாம் டைகரின் உச்சத்தை எடுத்த எடுப்பிலேயே தரிசனம் செய்து பழகி விட்டதால் - நார்மலான கதைகள் கூட ஒரு மாற்றுக் குறைவாகத் தெரியக்கூடுமென்பதெ ! "ஜொலிக்கும் சாவுகளையும்" ; "சொர்ணச் சுடுகாடுகளையும்" அளவுகோல்களாகக் கொள்ளாது டைகரின் இதர சாகசங்களை அணுகினால் சிக்கலிராது என்பதே எனது நிலைப்பாடு ! தவிர, ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு கதைக்கும் நான் அதே "ஆஹா..ஓஹோ.." பில்டப் / முன்னோட்டங்கள் செய்யத் தொடங்கினால் - மிச்சம் சொச்சமிருக்கும் எனது நம்பகத்தன்மையை அரிசோனாவின் கணவாய்களில் தான் தேட வேண்டி வருமன்றோ ?  And "எ.பெ.டை. கதைகள் மின்னும் மரண தரத்தில் இராதே ; அதன் பொருட்டு காசைச் செலவு செய்வதா ?" என்ற வினாக்கு சத்தியமாய் என்னிடம் விடையில்லை - simply becos இவை அனைத்துமே ஒரு அமர படைப்பாளியின் ஆக்கங்களின் ஒரு பகுதி ! சச்சின் ஆடிய அத்தனை ஆட்டங்களிலுமா சதம் போட்டு விட்டார் ? அத்தனை இன்னிங்சிலுமா சொக்க வைத்தார் ? அவரும் தடவித் தடுமாறிய நாட்கள் எராளமன்றோ ? இருந்தாலும் அவர் பாட்டிங் செய்ய களமிறங்கும் ஒவ்வொரு முறையும் நம் நம்பிக்கைகளும் அவரோடு கைகோர்த்துச் சென்றன தானே ? அது  போலவே காமிக்ஸ் உலகின் ஒரு பிதாமகரின் படைப்பை தரிசிக்க ஆவல் காட்டுவோமே guys ? இளம் டைகர் தொடரைப் போல நீண்டு செல்லாது ஒரே இதழில் இதன் முழுக் கதையையும் படிக்க முடியுமெனும் போது உற்சாக லெவெல்களை இன்னும் சற்றே அதிகமாக்கிக் கொள்ளக் கூடாதா ? 

"விலை" என்ற இந்த விவாதம் இங்கே துவங்கிய சமயம் நான் டில்லி விமானநிலைய மசால் தோசையோடு ஜாலியாக லாலி பாடிக் கொண்டிருப்பினும், ஜூனியர் எடிட்டர் எனக்கு போன் அடித்துத் தகவல் சொன்ன பின்னே, போனில் புகுந்து பின்னூட்டங்களைப் பார்க்கத் தொடங்கினேன் ! அப்போது என் முன்னே இருந்த புத்தகக் கடைக்குள் நுழைந்து எப்போதும் போலவே காமிக்ஸ் பிரிவினில் பார்வையை ஓட விட்டேன் ! மிரளச் செய்யும் நான்கு இலக்க விலைகளில் சில பல சூப்பர்மேன் ; பேட்மேன் இதழ்கள் ; அப்புறமாய் ரூ.195 விலைகளில் Campfire காமிக்ஸ் ; ரூ.220 விலையில் ANA காமிக்ஸ் ; ரூ.395 ; ரூ.595 விலைகளில் சென்னையில் தயாராகும் கிராபிக் நாவல்கள் (!!) ; ரூ.300 விலைகளில் GARFIELD என்று குவிந்து கிடந்தன ! வேறொரு மொழி ; வேறொரு விற்பனை பாணி ; வேறொரு மார்கெட் ; வேறொரு தயாரிப்புத் தரம் என்ற போதிலும் அவர்கள் அனைவரது விலைகளும் நம்மை விட ஏகமாய் அதிகமிருப்பது கண்கூடு ! ஆனால் அந்த விலைகளே அவர்களது விற்பனைகளுக்கும் தடங்கல் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது - ஒவ்வொரு இதழின் மீதும் படிந்து கிடந்த ஒரு வண்டித் தூசியைப் பார்க்கும் போது !  எல்லாப் பக்கங்களிலும் காமிக்ஸ் விலைகள் கூடி வருவது பற்றி காமிக் லவர் குறிப்பிட்டிருந்ததை நான் சரியாக அந்நேரமே கவனிக்க, இந்தத் துறைக்கு இதுவொரு புலி வால் பிடித்த கதையே என்பது புரிந்தது ! 'விலை ஏற்றினால் விற்காது - விலை ஏற்றாவிட்டால் தாக்குப் பிடிக்க முடியாது !' என்பதே அந்த சிறு வட்டம் ! நம் பாடாவது அந்த வகையில் தேவலை என்று நினைத்துக் கொண்டேன் - முழுவதுமாய் நேரடி விற்பனையையும் சார்ந்திராது ; முழுக்க முழுக்க முகவர்களின் சகாயங்களையும் நாடியே காலத்தை ஒட்டாது ஏதோ ஒரு அந்தி மண்டலத்தில் பயணிக்கிறோமே என்று நினைத்துக் கொண்டேன் ! நண்பர் ஆதி தாமிரா சொல்லியிருந்த அந்த ஷேர் ஆட்டோ உவமை நமது தற்போதைய சூழ்நிலையை கச்சிதமாய் விளக்கும் சங்கதி ! நாம் ஒரு மாத இதழைப் போல தோற்றம் தந்தாலும், நாம் மாதப் பத்திரிகை அல்ல ; customized imprints என்று சொல்லிக் கொண்டாலும் - முழுமையாக அந்தக் கிளையிலும் நாம் தஞ்சம் புகுவதில்லை ! இங்குமன்றி ; அங்குமன்றி காலமெல்லாம் குட்டிக் கரணங்கள் அடிப்பதே  நம் பாணி என்பது நமக்கொரு சாபமா - வரமா ? பதில் தெரியவில்லை எனக்கு !  

சரி...விலை குறைப்புக்கு வர்ணங்களைக் குறைப்பதும் ஒரு வழி என்ற option -ஐ முன்வைத்தேன் -உங்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு ! Again காமிக்ஸ் லவர் சொல்வதும் சரி தான் - black & white -ல் ஒரு கம்பீரம் உண்டென்பதில் ; and கார்த்திக் சோமலிங்காவின் கருத்தும் கிண்டலுக்குச் சொல்லப்பட்டது அல்ல - 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் இதனையே வர்ணத்தில் போடலாமே என்ற கோரிக்கை எழக்கூடும் என்ற விதத்தில் ! பற்றாக்குறைக்கு கலர் பிரிண்டர் + ஸ்பைரல் பைண்டிங் மார்க்கெட்டிங் முயற்சிகளுக்கு நாமே இன்னொரு களத்தை உருவாக்கி விட்டது போலாகியும் விடுமன்றோ ?  

சரி..விலை காரணமான சங்கடங்களுக்குத் தீர்வு தான் என்னவென்று சென்னை திரும்பும் போதே சிந்திக்கத் தொடங்கினேன் ! Hardcover பைண்டிங்குக்கு கல்தா கொடுத்து விட்டால் ஒரு தொகை குறையும் என்பதால் அதனை நடைமுறைப்படுத்தி விடலாம் ! நம் இலாபத்திலும் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்வதன் மூலம் விலைகளில் கொஞ்சம் சலுகை கிட்டிட வழி பிறக்கும்  !  So  கூரியர் கட்டணம் சேர்த்து முன்பதிவுக்கு விலை (தமிழகத்துக்குள்)  ரூ.415 என்று அமைத்திடலாம் ! (கூரியர் + பேக்கிங் டப்பா கட்டணங்கள் மட்டுமே ரூ.50--க்குக் குறையாது )

சரி..இது தவிரவும் வேறு ஏதேனும் சாத்தியமா என்ற யோசனை தொடர்ந்தது !ரொம்ப காலமாக எனக்குள்ளே ஒரு ஓரத்தில் குடியிருந்த சிந்தனையானது லேசாய் எட்டிப் பார்க்க - 'அட..இதைக் கூட முயற்சித்தால் என்ன ?'  என்று நினைக்கத் தோன்றியது ! இந்த இதழை  மட்டுமேனும் வண்ணத்தில் ஒரு delux edition ஆகவும் ; black & white -ல் ஒரு economy edition ஆகவும் உருவாக்கினால் சரி வருமா ? என்ற யோசனை தான் அது ! ஒரே இதழை 2 வெவ்வேறு விதங்களில் வாங்குமொரு option -ஐத் தந்து வாசகர்களிடையே ஒருவித ஏற்ற தாழ்வை நாமே உருவாக்கிடக் கூடாதே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்ததால் / இருப்பதால் இந்தத் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வரவில்லை ! ஆனால் ஒரு இதழை விலை காரணமாய் வாங்காமலே போவதை விட ; அதனை B &W -ல் வாங்குவதில் தவறில்லை என நண்பர்கள் கருதினால் - இந்தப் பரிசோதனைக்கு நாங்கள் ரெடி ! And yes, இது வம்பை நாமே விலை கொடுத்து வாங்கும் முயற்சி என்பது தெரியாதில்லை ! தொடரும் ஒவ்வொரு புது முயற்சிக்கும் இந்தப் பாதை சாத்தியமல்ல என்பதும் , ஒவ்வொரு தடவையும் நண்பர்களில் ஒருசாரார் இதே போன்ற  economy edition கோரிக்கையை முன்வைக்க நேரிட்டால் அதற்கு செவி சாய்ப்பது சிரமமாகிடலாம் என்பதெல்லாம் நன்றாகவே புரிகிறது எனக்கு  ! But விலைகள் குறித்து இப்படியொரு ஆதங்கம் நண்பர்களிடையே நிலவிடும் பட்சத்தில் அதனை முடிந்தளவுக்கு சரி செய்திட நாம் கொஞ்சம் சிரமம் மேற்கொள்வதில் தவறில்லை என்று மனதுக்குப் பட்டது ! So - கீழ்க்கண்ட ஒரு வாய்ப்பையும் பரிசீலனை செய்யுங்களேன் guys :
 • அதே பெரிய சைஸ்  
 • தற்போது டெக்ஸ் வில்லர் கருப்பு-வெள்ளைக் கதைகளுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளை காகிதம்  
 • அதே 256 பக்கங்கள் ; 
 • black & white அச்சு ; 
 • அதே அட்டைப்படம் ; 
 • அதே பைண்டிங் 
 • விலை ரூ.200
 • இந்த விலை  முன்பதிவுகளுக்கு மாத்திரமே !
 • கூரியர் கட்டணங்கள் தனி ! (Need to check on it tomorrow)
நீங்கள் ரெடி என்றால் - இந்த ஆட்டத்தை ஆடிப் பார்க்க நாங்களும் ரெடி guys ! மேலோட்டமாய்ப் பார்க்கையில் இதன் சாதக-பாதகங்கள் தெரியத் தான் செய்கின்றன ; but  உங்கள் பார்வைகளில் இந்த proposal எவ்விதம் தெரிந்திடக் கூடுமென்று முழுமையாய் கணிக்கத் தெரியவில்லை ! யோசித்துத் தான் பாருங்களேன் ? 

And before I wind off - ஓட்டை வாய் உலகநாதன் ஒரு அறிவிப்போடு  எட்டிப் பார்க்கிறார் :

சமீப காலங்களில் நமது பரிசோதனை முயற்சிகள் விற்பனை எனும் அளவுகோல்களைத் திருப்திகரமாய்த் தாண்டவில்லை என்பதால் அவற்றை சற்றே ஆறப் போட்டிருக்கிறோம் என்பதில் இரகசியமில்லை ! கிராபிக் நாவல்கள் ; புது கதைக் களங்கள் என்றாலே ஓரம் கட்டுவோம் என்ற சிந்தனை நண்பர்களின் ஒரு அணிக்கு இருப்பது கண்கூடு ! ஆனால் இந்த சிந்தனைகளுக்குள் என்னை முழுமையாய் இணைத்துக் கொள்ள முடியவில்லை ! வித விதமாய் கதைகள் ; புதுமைகள் என காமிக்ஸ் உலகம் ஒரு பக்கம் புயல் வேகத்தில் பயணம் செய்து வர - நாம் பழகிப் போன அதே பார்முலாக்களை விடாப்பிடியாய்த் தொடர்வது என்றேனும் ஒரு நாள் அயர்ச்சிக்கு ரோடு போடக் கூடும் என்ற மெல்லிய பயம் என்னுள்ளே உள்ளது  ! So 2016-ன் ஏப்ரல் முதலாய் ஒரு தனி டிராக் செயல்படத் தொடங்கிடும் ! அந்தத் தடத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் மட்டுமே ; முன்பதிவுகளின் பெயரில் அரங்கேறிடும் ! அங்கே economy edition களும் சாத்தியமகிடாது ; புது genre -களுக்கும் 'தடா' இராது ! வழக்கமான கதைகளை ரசிக்கும் நண்பர்களுக்கு ஜனவரியில் வழக்கமான விருந்து அமர்க்களமாய்க் காத்துள்ளது ! ஏப்ரலில் துவங்கவுள்ள பந்தியில் வித்தியாசமான சுவைகள் காத்துள்ளன !  நீங்கள் இரண்டையும் சுவைக்கத் தயாராக இருப்பின் குதூகலம் கொள்வேன் ! Bye for now guys ...Good night !! 

279 comments:

 1. Replies
  1. நான் நிச்சயம் color தான் வாங்குவேன். ஆனால் இந்த economy/deluxe எனக்கு உடன்பாடுதான்.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 2. B&w and colour editions for the same album is quite normal in Europe. I don't think that will work for us. I strongly suggest for the color edition only.

  ReplyDelete
 3. //ஏப்ரலில் துவங்கவுள்ள பந்தியில் வித்தியாசமான சுவைகள் காத்துள்ளன ! //
  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..? யெஸ்... யெஸ்...!!!!!

  ReplyDelete
 4. சரி..விலை காரணமான சங்கடங்களுக்குத் தீர்வு தான் என்னவென்று சென்னை திரும்பும் போதே சிந்திக்கத் தொடங்கினேன் ! Hardcover பைண்டிங்குக்கு கல்தா கொடுத்து விட்டால் ஒரு தொகை குறையும் என்பதால் அதனை நடைமுறைப்படுத்தி விடலாம் ! நம் இலாபத்திலும் ஒரு பங்கைக் குறைத்துக் கொள்வதன் மூலம் விலைகளில் கொஞ்சம் சலுகை கிட்டிட வழி பிறக்கும் ! So கூரியர் கட்டணம் சேர்த்து முன்பதிவுக்கு விலை (தமிழகத்துக்குள்) ரூ.415 என்று அமைத்திடலாம் ! (கூரியர் + பேக்கிங் டப்பா கட்டணங்கள் மட்டுமே ரூ.50--க்குக் குறையாது )  சார் தயவுசெய்து நீங்கள் முன்பே அறிவித்த படி ரூபாய் 450 விலையில் HARDCOVER அட்டைப்படத்துடனே வரட்டும். சார்.குறைந்த விலையில் வேண்டுபவர்கள் B&W ல் வாங்கிக்கொள்ளலாம் சார்.ஒரு 35ரூபாய்க்காக HARDCOVER அட்டைப்ப்படத்தை இழக்க வேண்டாமே சார்.

  ReplyDelete
  Replies
  1. +7(hard cover ன் hard core fans :-) ]

   Delete
  2. +7(hard cover ன் hard core fans :-) ]

   Delete
  3. செல்வம் சார் உண்மை உண்மை உண்மை

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. "என் பெயர் டைகர்" முழுக்க வர்ண கலவை ஆக வருவதே என் விருப்பம் சார் . அதுவும் கார்டு கோர் வருவதே சிறப்பு . அதுவே என்ன விருப்பம் . ஒரு 35 ரூபாய் இதற்கென செலவு செய்வது தவறு இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து .

  ReplyDelete
 7. டியர் ஸார்,
  ஏப்ரல் முதல் தனிதரதடத்தில் பரீச்சாத்த முயற்சிகள் தொடரும் என்ற உங்களின் அறிவிப்புக்கு நான் தலை வணங்குகின்றேன் ஸார்.

  ReplyDelete
 8. நீங்கள் உங்களின் முந்தைய எண்ணப்படியே கலரில் Hard. Cover உடன் வெளியிடுங்கள்.முடிந்தால் விலையை குறைக்க முயற்சியுங்கள்.தரம் அளவு நிறம் இவற்றில் சமரசம் வேண்டாம்.ஒவ்வொருவரையும் தனித்தனியாக திருப்தி செய்ய முயற்சி செய்தால் கால விரயம் தான் ஏற்படும்.Colour&b&w என்று காமிக்ஸ் நண்பர்களை இரண்டாக்கி விடாதீர்கள்

  ReplyDelete
  Replies
  1. மிகவும் உண்மை... அனைவரையும் திருப்தி படுத்த முடியாது... ஜனவரியில் தான் வெளிவருவதால் மாதம் 100ரூபாய் செலவை குறைத்து. சேமித்தால் கூட வாங்கி விடலாம்.. முதலில் வாங்கும் மனம் வேண்டும்...

   Delete
  2. //திருப்தி செய்ய முயற்சி செய்தால் கால விரயம் தான் ஏற்படும்.//
   +1

   Delete
 9. நள்ளிரவு வணக்கம் சார் ...
  *உங்கள் மற்றும் எங்கள் முன் உள்ள ஆப்சன்ஸ்களை எங்களுக்கான பதில்களின் வாயிலாக உள்வாங்கி கொள்ளவே இருமுறை படிக்க வேண்டி உள்ளது ....அந்த புலி வால் படம் இன்றைய காமிக்ஸ்ன் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் அதேவேளை மனதில் அந்த புலியை பற்றிய கிலியையும் சற்றே ஆழமாக விதைக்கிறது சார் ...
  *பல்வேறு நண்பர்களின் எண்ணத்தை வெளிப்படையாக அறிந்து கொண்ட பிறகு நீங்கள் எடுத்துள்ள இருவகை தோசையே இந்த என் பெயர் டைகருக்கு மட்டுமல்லாமல் இளம் டைக்கருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன் சார் ..
  *தோசையில் ஊற்ற முட்டையை உடைத்து விட்ட பிறகு நண்பர்களுக்கு இடையே பிரிவுகள் வேண்டாமே என்ற தயக்கமும் உடைபட்டதாகவே இருக்கட்டும் சார் ......
  *நீங்கள் முன்பே அறிவித்தது போல 450விலையில் வித் ஹார்ட் கவருடன் ஒரு டீலக்ஸ் பிரிண்ட்ம் மற்றும் வண்ணத்தை விரும்பாத நண்பர்களுக்கு கருப்பு வெள்ளையிலும் ஒரு எடிசன்ம் ஆக வெளியிடும் முடிவையே செயல்படுத்துங்கள் சார் ...நண்பர்கள் மேலே சொல்லிஉள்ளபடி 35ரூபாய்க்காக என்றும் நிலையாக இருக்கும் ஹார்ட் கவரை இழக்க நானும் தயாரில்லை சார் .... .(நான் இரு வித தோசைகளையும் சாப்பிடுவேன் சார் )
  *ஐசிசி யே டெஸ்ட் கிரிக்கெட்டை இரவில் நடத்தும் பரிசோதனை யை செய்ய போகிறார்கள் ,, ஏன் பார்முலா ஒண்ணே இப்போது இரவு பகல் ரேஸ் களை நடத்தும் சூழலில் .....இந்த காலத்தின் கட்டாயம் கொணர்ந்த ஆட்டத்தையும் ஆடுப் பார்த்து வுடுங்கள் சார்.....
  *நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதற்கேற்ப இந்த விலை புலியும் ஒரு நன்மையை செய்துள்ளது சார் ....அதுதான் நீங்கள் அறிவித்துள்ள ஏப்ரல் 2016 புதிய ட்ராக் சார்,, பலமான கரகோசம் செய்து அதை வரவேற்கிறேன் சார் .....அந்த தடத்தில் பயணம் செய்ய இப்போதே மனம் ஏங்க ஆரம்பித்து விட்டதுங் சார் ....

  ReplyDelete
  Replies
  1. +1....டெக்ஸ் ஜி நாங்களும் இரண்டு விதமான தோசைகளையும் சாப்பிடுவோம் ஜி.:):)

   Delete
 10. காலை வணக்கங்கள் எடிட்டர் சார்
  தனி டிராக் பரிட்சார்த்த முயற்சிகளுக்கு என்பது நல்ல முடிவு விருப்பம் உள்ளவர்கள் அதை தொடரலாம்
  எ.பெ.டை கரை பொறுத்த வரை நீங்கள் முதலில் நன்கு யோசித்து எடுத்த 450 கலர் முடிவு சரியானது
  இத்தனை குழப்பங்கள் பரமார்த்த குருவை குதிரையில் கூட்டிச்சென்ற கதை போல் ஆகிவிடும்
  தற்போது இருக்கும் விலைவாசிக்கு தக்க விலை ஏற்றங்களும் தவிர்க்க இயலாதவையே
  செருப்புக்கு தகுந்தவாரு காலை வெட்ட ஆரம்பித்தால் பழையபடி சின்ன சைஸில் மட்டகாகித பிரிண்டங்கிற்கு செல்ல வேண்டியதுதான்
  சீடர்களே தயவு செய்து நம் பரமார்த்த குருவை குதிரை மேல் அமர வைப்போம் குதிரையை அவர் மேல் அமரவைத்து விடாதீர்கள்

  ReplyDelete
  Replies
  1. //செருப்புக்கு தகுந்தவாரு காலை வெட்ட ஆரம்பித்தால் பழையபடி சின்ன சைஸில் மட்டகாகித பிரிண்டங்கிற்கு செல்ல வேண்டியதுதான் //
   +1

   Delete
 11. ஒரு பொருளின் விலையை ஒரு வியாபாரி நிர்ணயிக்கும் போது தன்னுடைய உழைப்பு, மூலப் பொருளின் விலை, வேலையாட்களுக்கான சம்பளம், மற்றும் லாபம் அனைத்தும் சேர்த்தே கணக்கிடுகிறான். இதில் தங்களுடைய உழைப்பு பெரும்பாலும் விலையில்லா பொருளாகவே எங்களுக்கு கிடைக்கிறது. மற்றவை உங்கள் கையில் இல்லை. இருந்தாலும் அதையும் பெரும்பாலும் சமாளித்து கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறீர்கள். எனவே நீங்கள் நிர்ணயிக்கும் விலையில் என்றும் எனக்கு கேள்வியில்லை.

  உங்களுடைய க&வெ மற்றும் வண்ண இதழ் யோசனை அருமை. இதை தான் நண்பர் SVVயும் முன் வைத்தார். இதெல்லாம் நடக்கிற காரியமா என்று வியந்து கொண்டிருந்தேன். முடியும் என்கிறீர்கள். இதன் மூலம் ரமேஷ்/KAK அவர்கள் சொன்ன பிரச்னையும் சரி செய்யப்படுகிறது. இது வெற்றி பெற வேண்டும். இது போல் நிறைய வர வேண்டும் என்ற ஆசை பெருக்கெடுக்கிறது. எனக்கு தெரிந்து "மன்னிக்கவும், அடுத்த இதழில் இருந்து விலை ஏற்றுகிறோம்" என்று சொல்லும் பதிப்பகங்களை மட்டும் பார்த்து இருக்கிறோம். வாசகர்களின் விருப்பத்தைக் கேட்டு செய்யும் இந்த வழி கொஞ்சம் வித்யாசமாகவே இருக்கிறது.

  ஏற்கனவே வண்ண இதழுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். எனக்கு வண்ண இதழ் வேண்டும். நாங்கள் மீண்டும் மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமா? என் விருப்பம் ஹார்ட் கவர். மற்றதும் ஓகே.

  ஏப்ரலுக்கு இன்னும் எட்டு மாதம் இருக்கு. ஓட்டை வாயை இன்னும் கொஞ்சம் தொறக்கக் கூடாதா? நாக்கை தொங்கப் போட்டு காத்து கொண்டிருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. ஒரு பொருளின் விலையை ஒரு வியாபாரி நிர்ணயிக்கும் போது தன்னுடைய உழைப்பு, மூலப் பொருளின் விலை, வேலையாட்களுக்கான சம்பளம், மற்றும் லாபம் அனைத்தும் சேர்த்தே கணக்கிடுகிறான். இதில் தங்களுடைய உழைப்பு பெரும்பாலும் விலையில்லா பொருளாகவே எங்களுக்கு கிடைக்கிறது./////
   துளியும் மிகைப்படுத்தல் இல்லாத உண்மை...

   Delete
  2. ///ஒரு பொருளின் விலையை ஒரு வியாபாரி நிர்ணயிக்கும் போது தன்னுடைய உழைப்பு, மூலப் பொருளின் விலை, வேலையாட்களுக்கான சம்பளம், மற்றும் லாபம் அனைத்தும் சேர்த்தே கணக்கிடுகிறான். இதில் தங்களுடைய உழைப்பு பெரும்பாலும் விலையில்லா பொருளாகவே எங்களுக்கு கிடைக்கிறது./////

   Very true

   Delete
  3. //இதில் தங்களுடைய உழைப்பு பெரும்பாலும் விலையில்லா பொருளாகவே எங்களுக்கு கிடைக்கிறது.//
   +1

   Delete
 12. ///So 2016-ன் ஏப்ரல் முதலாய் ஒரு தனி டிராக் செயல்படத் தொடங்கிடும் ! அந்தத் தடத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் மட்டுமே ; முன்பதிவுகளின் பெயரில் அரங்கேறிடும் ! அங்கே economy edition களும் சாத்தியமகிடாது ; புது genre -களுக்கும் 'தடா' இராது ! ///

  ஆஹா.!
  கேட்டது கிடைத்தது
  போட்டது முளைத்தது
  2016 லே நானொரு ராஜாதான்.!!!

  ReplyDelete
  Replies
  1. யாரு! அட நம்ப கிட் ஆர்டின் கண்ணன் சாரா இது.சார் நீங்க மேலே இருக்கும் அறிவிப்பை தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கிங்கன்னு நினைக்கிறேன்.நல்லா பாருங்க அது கார்ட்டூன் தனி சந்தா அல்ல..

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. அடடே யாருங்க., யுவா அண்ணாத்தையா , வாங்க வாங்க.!

   இதுவும் நான் ரொம்ப நாளா எதிர்பாத்து கொண்டிருந்த விசயம்தானுங்க.!
   ஸோ., இதுக்கும் குத்தாட்டம் போடத்தான் செய்வேங்க அண்ணாத்தே.!

   Delete
 13. ///இளம் டைகர் தொடரைப் போல நீண்டு செல்லாது ஒரே இதழில் இதன் முழுக் கதையையும் படிக்க முடியுமெனும் போது உற்சாக லெவெல்களை இன்னும் சற்றே அதிகமாக்கிக் கொள்ளக் கூடாதா ?////

  விலை சில நண்பர்களுக்கு உறுத்தியுள்ளது ஒரு பக்கமென்றாலும் அனைவரும் உற்சாகமாகத.தான் உள்ளார்கள் சார்...

  மேலே சொல்லப்பட்டிருக்கும் நடைமுறைச்சிக்கல்கள் தலை சுற்ற வைக்கின்றன. "வரமா..!சாபமா ?என்ற வரியில், தாங்கள் பல்லாண்டுகளாக சந்தித்த/சந்தித்து வரும் விலை/விற்பனை போராட்டங்களின் அயற்சியும் வலியும் தெரிகின்றன.
  படித்துவிட்டு மனதுக்கு கஷ்டமாகி விட்டது.
  Anyway...
  Color& BW இரண்டையும் ரசிக்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு பெரிய விசில்....

  ReplyDelete
  Replies
  1. //மேலே சொல்லப்பட்டிருக்கும் நடைமுறைச்சிக்கல்கள் தலை சுற்ற வைக்கின்றன. "வரமா..!சாபமா ?என்ற வரியில், தாங்கள் பல்லாண்டுகளாக சந்தித்த/சந்தித்து வரும் விலை/விற்பனை போராட்டங்களின் அயற்சியும் வலியும் தெரிகின்றன.
   படித்துவிட்டு மனதுக்கு கஷ்டமாகி விட்டது.//

   உண்மை !! பாட்சா போன்று நீண்ட நெடுங்காலமாக நமது காமிக்ஸ் உடன் பிணைந்து இருக்கும் வாசகர்கள் எடிட்டரின் வலிகளை உணர்வதாக சொல்லும்போது அந்த வரிகளில் அழுத்தம் கூடுகிறது ...

   வலிகளின் வீரியம் குறைய இவை ஆறுதலாக அமையட்டும் ...!!!!!

   Delete
  2. /வலிகளின் வீரியம் குறைய இவை ஆறுதலாக அமையட்டும் ...!!!!!/// அருமை யாக சொன்னீர்கள் சார் ....கை கூப்பி வணங்கும் படங்கள் பத்து ....

   Delete
 14. ///இந்த மிஸ்டர்.ப்ளூபெர்ரி தொடரில் 5+1 கதைகள் உள்ள நிலையில்-///

  5 ஆ 6ஆ. சார்.!

  6 கதைகள் 256 பக்கங்களில் முடிகிறதா.?
  விலையை விட இது பெரிய குழப்பமாக உள்ளது! :-)

  ReplyDelete
  Replies
  1. 5மட்டுமே ஐந்து ....சற்றே பொறுங்கள் கிட் மாமா...அவர்களே...சரியான விளக்கம் இன்னும் கொஞ்ச நேரத்தில் "இங்கே க்ளிக்"கும்..... .....

   Delete
  2. 5மட்டுமே ஐந்து ....சற்றே பொறுங்கள் கிட் மாமா...அவர்களே...சரியான விளக்கம் இன்னும் கொஞ்ச நேரத்தில் "இங்கே க்ளிக்"கும்..... .....

   Delete
 15. ///அதே பெரிய சைஸ்
  தற்போது டெக்ஸ் வில்லர் கருப்பு-வெள்ளைக் கதைகளுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளை காகிதம்
  அதே 256 பக்கங்கள் ;
  black & white அச்சு ; ///

  கலரில் ஒன்று ப்ளாக் அண்ட் ஒய்ட்டில் ஒன்று என்ற இரட்டை சவாரி., சரியாக வருமா என்று தெரியவில்லை.
  ப்ளாக் அண்ட் வொய்ட் மட்டுமே என்றால் ஓ.கே.
  கலரில் மட்டுமே என்றால் டபுள் ஓ.கே.

  என்னுடைய ஓட்டு கலர் வித் ஹார்டு கவர்.! (₹35 மிச்சம் பிடித்து லேசான அட்டையில் வாங்குவதைவிட.)

  ReplyDelete
 16. எடிட்டர் சார் !

  அற்புதமான முடிவு ! நானும் இரு இதழ்களையும் வாங்கத்தான் போகிறேன் ..

  காமிக்ஸ் எனும் இந்த அற்புத பயணத்தில் main stream நாயகர்கள் கதைகள் மட்டுமாவது
  அனைத்து தரப்பு நண்பர்களையும் எட்ட வேண்டும் என்ற நண்பர் mr ராகவனின் கோரிக்கை நமது காமிக்ஸ் -ன் ஆரோக்கிய செயல்பாட்டில் உள்ள அக்கறையால் வந்தது என்பது தெளிவு .

  ரவி கண்ணன் ,மற்றும் சில நண்பர்கள் கமெண்ட்ஸ் மன கசிவை ஏற்படுத்தியதும் உண்மை ...(இது போன்ற தங்கள் சிரமங்களை உங்களையன்றி வேறு யாரிடம் சொல்ல இயலும் )

  பல்வேறு தொழில் சிரமங்களுக்கு மத்தியில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து செல்ல நீங்கள் எடுத்துள்ள இந்த முடிவு சரியானதே ....


  நன்றிகள் சார் !

  ReplyDelete
  Replies
  1. //பல்வேறு தொழில் சிரமங்களுக்கு மத்தியில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து செல்ல நீங்கள் எடுத்துள்ள இந்த முடிவு சரியானதே ....//
   +1

   Delete
 17. ///டைகரின் இன்றைய கதைகள் அவ்வளவாய் சோபிக்காது போனமைக்கு எனது நெகடிவ் பில்டப் தான் காரணம் என்ற கருத்தை எவ்விதம் அணுகுவதென்று எனக்குத் தெரியவில்லை ! ///

  அப்படியென்றால்., நீங்கள் பாஸிட்டிவ் பில்டப் கொடுத்து இருந்த "நிழலோடு நிஜ யுத்தம் " அதிரிபுதிரி ஹிட் அடித்திருக்க வேண்டுமே? :-)

  இளம் டைகர் கதைகளுக்கு வரவேற்பு குறைந்த காரணமாக (கவனிக்க., தோல்வி அல்ல) நான் கருதுவது.
  யுத்தப் பிண்ணனி.,
  தொடர் கதை.,
  இடைவெளி.,
  எது எதனுடைய தொடர்ச்சி என்ற குழப்பம்.
  and finally,
  டைகரின் bad luck.!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. அதே அதே தான் கிட் மாமா....இதே இளம் டெக்ஸ் கதைகளை களம் இறக்கி பாருங்கள் சார் ....சும்மா சுட்டு தள்ளும் ....

   Delete
  3. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!நி.நி.யு.அதிரிபுதிரி சூப்பர் ஹிட் கதைதானே.!

   //கார்வின் முன் மூன்று நிமிங்களுக்கு மேல் நடிக்க முடியாது என்பார் வில்லி. .ஆனால் உண்மையில் தூரத்தில் வரும்போதே கண்டுபிடித்து விடுவார்.// அடடடா இந்த இடத்தை படிக்கும்போது உடம்பில் புல் அரித்துவிட்டது. என்ன ஓவியங்கள் தான் முதல் இரண்டும் பக்கத்திற்கு கொஞ்சம் ஒருமாதிரியாக இருந்தது.பின் கதையின் விறுவிறுப்பு அந்த குறையை மறைத்து விட்டது.கதை அதிரிபுதிரி ஹிட்தான். டிசம்பர் மாதம் மாடஸ்டி வருகையை நினைத்தால் மனம் குதூகலம் ஆகிறது.!

   Delete
  4. சார் வில்லியும் கார்வின்னும் ஒருவர் தானே:):)

   Delete
  5. ஓ...சாரி . வில்லன் பெண்பால் வில்லி.(அவள் பெயரை மறந்துவிட்டேன்.!)

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
 18. போட்டோவில் புலியின் வாலை பிடித்திருக்கும் ஆஜானுபாகுவான மனிதரை எங்கோ பார்த்தது போல் தோன்றுவது நேக்கு மட்டுமா.??
  ஆனால் புலி அவரிடம் பயந்து தப்பி ஓட முயல்வது போலல்லவா இருக்கிறது.! (P)

  ReplyDelete
  Replies
  1. காமிக்ஸ் தளத்திலும் ஜாதியா ? சரி நாமதான் தமிழர்களாச்சே .. ஜாதி பிரிக்காம ஆகாதே :-) :-p

   Delete
  2. ஒரு ஃப்ளோவுல வந்திடுச்சி விடுங்க ராகவன் சார்.!

   புறாவுக்கு ஒரு போரா ?!?!?

   Delete
 19. // ! So 2016-ன் ஏப்ரல் முதலாய் ஒரு தனி டிராக் செயல்படத் தொடங்கிடும் ! அந்தத் தடத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் மட்டுமே ; முன்பதிவுகளின் பெயரில் அரங்கேறிடும் ! அங்கே economy edition களும் சாத்தியமகிடாது ; புது genre -களுக்கும் 'தடா' இராது ! வழக்கமான கதைகளை ரசிக்கும் நண்பர்களுக்கு ஜனவரியில் வழக்கமான விருந்து அமர்க்களமாய்க் காத்துள்ளது ! ஏப்ரலில் துவங்கவுள்ள பந்தியில் வித்தியாசமான சுவைகள் காத்துள்ளன !//

  துள்ளி குதிக்க வைக்கும் வரிகள் !

  இதில் genre ,விலை பற்றி யாதொரு கவலை இன்றி தூள் கிளப்புங்கள் சார் !

  கை கோர்ப்போம் !

  கொண்டாடுவோம் !!!!

  ReplyDelete
 20. படித்து விட்டு வருகிறேன் சார் ..இந்த மேக பிண்ணனி வர்ணம் அழகாகவும் ..படிப்பதற்கு தெளிவாகவும் உள்ளது .:)

  ReplyDelete
 21. :)

  for follow up (out of station )

  ReplyDelete
  Replies
  1. Just recently noticed that clicking the "Notify me" check box is enough for follow up emails - it works even without posting a comment! Just thought this could be useful for busy ones.

   Delete
  2. மிஸ்டர் மரமண்டை .!சீக்கிரம் வாங்க.!கமென்ட் போடமுடியாத இடம் எது.? உங்கள் பௌன்சர் கதை விமர்சனத்தை படித்து விட்டுத்தான் நான் பௌன்சர் கதைபடிக்க வேண்டும்.!அதற்குள் வந்துவிடுவீர்கள் அல்லவா.?

   Delete
 22. சார் தயவுசெய்து நீங்கள் முன்பே அறிவித்த படி ரூபாய் 450 விலையில் HARDCOVER அட்டைப்படத்துடனே வரட்டும். சார்.குறைந்த விலையில் வேண்டுபவர்கள் B&W ல் வாங்கிக்கொள்ளலாம் சார்.ஒரு 35ரூபாய்க்காக HARDCOVER அட்டைப்ப்படத்தை இழக்க வேண்டாமே சார்.
  டெக்ஸ் ஜி நாங்களும் இரண்டு விதமான தோசைகளையும் சாப்பிடுவோம் ஜி.:):)
  விலை சில நண்பர்களுக்கு உறுத்தியுள்ளது ஒரு பக்கமென்றாலும் அனைவரும் உற்சாகமாகத.தான் உள்ளார்கள் சார்... Color& BW இரண்டையும் ரசிக்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றிகள் சார் !
  // ! So 2016-ன் ஏப்ரல் முதலாய் ஒரு தனி டிராக் செயல்படத் தொடங்கிடும் ! அந்தத் தடத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் மட்டுமே ; முன்பதிவுகளின் பெயரில் அரங்கேறிடும் ! அங்கே economy edition களும் சாத்தியமகிடாது ; புது genre -களுக்கும் 'தடா' இராது ! வழக்கமான கதைகளை ரசிக்கும் நண்பர்களுக்கு ஜனவரியில் வழக்கமான விருந்து அமர்க்களமாய்க் காத்துள்ளது ! ஏப்ரலில் துவங்கவுள்ள பந்தியில் வித்தியாசமான சுவைகள் காத்துள்ளன !//
  அதை வரவேற்கிறேன் சார்

  ReplyDelete
 23. Dear Sir,

  Please retain hard cover + color as Rs 450

  Black and White with normal cover as Rs 250

  ReplyDelete
 24. The art in this post looks great and we can make this as cover

  ReplyDelete
 25. // So 2016-ன் ஏப்ரல் முதலாய் ஒரு தனி டிராக் செயல்படத் தொடங்கிடும் ! அந்தத் தடத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் மட்டுமே ; முன்பதிவுகளின் பெயரில் அரங்கேறிடும் ! அங்கே economy edition களும் சாத்தியமகிடாது ; புது genre -களுக்கும் 'தடா' இராது ! ஏப்ரலில் துவங்கவுள்ள பந்தியில் வித்தியாசமான சுவைகள் காத்துள்ளன ! //

  அருமை விஜயன் சார்! யாஹூ!

  ReplyDelete
 26. Sir deluxe / Black and white முயற்சி வரவேற்க தக்கதே .. ஆனால் color book ஐ hard bound ல் வெளியிடவும் .. 415 க்கும் 450 க்கும் பெரிதாய் வித்தியாசம் இல்லை Sir ...

  ReplyDelete
 27. வண்ண டைகர் இதழ் 450 ரூபாயில் ஹார்ட் கவர் அட்டையில் வரும் படியே கொண்டு வாருங்கள் சார் ..35 ரூபாய் விலை ஏற்றம் ஹார்ட் கவர் அட்டைகாக நண்பர்கள் பொறுத்து கொள்வார்கள் .எனவே அது அறிவித்த படியே இருக்கட்டும் .விலை அதிகம் எனப்படும் நண்பர்களுக்கு தான் மற்ற சாய்ஸ் கொடுத்து விட்டிர்களே ... :-)

  *****************

  டைகர் .....கருப்பு வெள்ளை இதழ் கண்டிப்பாக உண்டா சார் ..(நடைமுறை சாத்தியத்தை நினைத்து பார்க்கிறேன் ) உண்டு எனில் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் சார் ...பல லட்ச விற்பனை பிரதிகள் கூட விலை ஏற்றத்தை கடமைக்கு சொல்லி விட்டு அடுத்த இதழை உடனடியாக ஏற்றி விடும் சூழலில் நண்பர்கள் சிலரின் விலை ஏற்ற கருத்தை அறிந்தவுடன் வண்ணம் ..வெள்ளை என்று இங்கு யாரும் எடுக்க முடியாத ஒரு முடிவை நண்பர்களுக்காக எடுத்தது உண்மையில் மனதில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது .

  நன்றி சார்......

  **********************
  வண்ணம் ...கருப்பு வெள்ளை என்ற இரு நிலைகளில் எனது சாய்ஸ் கருப்பு வெள்ளை தான் .காரணம்.... என்னை பொறுத்த வரை டைகர் கதைகளை பொறுத்த வரை வண்ணத்தை விட கருப்பு வெள்ளை இதழில் இன்னும் தரமாக...மனதுக்கு நெருக்கம்மாக வருகிறார் .எனவே உடனடியாக தாங்கள் கருப்பு வெள்ளை இதழின் விலை கொரியர் உடன் இணைத்து எவ்வளவு என அறிவித்தால் உடனடியாக பணம் செலுத்த வசதியாக இருக்கும் சார் ...

  ***********************

  ReplyDelete
 28. சார்.!
  எடிட்டர் சார் பிண்ணனி வர்ணம் அருமை.வர்ணத்திற்கும் நம் மனநிலைக்கும் நெருங்கிய சம்மந்தம் உண்டு என்பதை உணர்கிறேன்.மனம் லேசாக உள்ளது.


  எனக்கு எவ்வளவு விலை என்றாலும் ஒ.கே.பல நண்பர்கள் உற்சாகம் என்ற பெயரில் மாதம் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும்போது ம் அதனுடன் ஒப்பிடும்போது இதெல்லாம் ஒரு செலவே கிடையாது.எனக்கு காமிக்ஸ் மூலம் உடம்பை கெடுத்துக்கொள்ளமால் மிகக்குறைந்த செலவில் உற்சாகமும் மகிழ்ச்சி கிடைக்கிறது.!


  கார்த்திக் சோமலிங்க சார்!. !,எப்படி சத்தமில்லாமல் சாதித்துவிட்டீர்கள் .?வாழ்த்துக்கள் .!
  நீங்கள் கூறியதிலும் ஒரு சில உண்மைகள் உள்ளது.!மாடஸ்டி கதைகள் சிறு வயதில் அவ்வளவாக பிடித்தது கிடையாது..தற்போது அதன் அருமையை உணர்கிறேன்.பார்ப்போம்.......!

  சார்! முக்கியமாக இந்தமாத இதழ் எப்பொழது வரும்.?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. எனக்கு எவ்வளவு விலை என்றாலும் ஒ.கே.பல நண்பர்கள் உற்சாகம் என்ற பெயரில் மாதம் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும்போது அதனுடன் ஒப்பிடும்போது இதெல்லாம் ஒரு செலவே கிடையாது.எனக்கு காமிக்ஸ் மூலம் உடம்பை கெடுத்துக்கொள்ளமால் மிகக்குறைந்த செலவில் உற்சாகமும் மகிழ்ச்சி கிடைக்கிறது.!

   +1

   Delete
 29. @Edi

  1. If you are planning for economy edition then please dont compromise on the hard cover for the color edition.Color edition price you can retain as planned before(my opinion).

  2. April track hope it is not going to be part of the 48 and hoping it has special format
  2.a. current 60 rs issue is very very very THIN, jus does not give satisfaction of holding a book
  2.b. Please try in April track the big book version(size of asterix / tin) currently the fonts are extremely small


  3. Sincerely appreciate your intention of trying multi cuisine knowing that it is only going to increase your efforts and maybe eat into the margin.

  My support is always there to your efforts.

  ReplyDelete
 30. என் பெயர் டைகர் விலையை குறைக்க முன்வந்ததற்கு மிகவும் நன்றி சார். ஆனால் இதுவும் விலை அதிகம். மேற்கொண்டு விலையை குறைக்க முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன். இதுபோன்ற புகார்கள் அடிக்கடி வரும் பட்சத்தில் தாங்கள் என் பெயர் டைகரை இலவசமாகவே வெளியீடு காலம் வெகு தொலைவில் இருக்காது என்று நம்புகிறேன். அப்படி இலவசமாக வந்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. சாப்பிட்டு கொண்டே படிக்க புத்தக பார்சலுடன் 50 ருபாய் மதிப்புள்ள பாப்கார்ன், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ்களும், வசதியாக அமர்ந்து படிக்க ஒரு டேபிள் மேட்டும் அனுப்பி வைத்தால்தான் புத்தக பார்சலை பெற்றுக் கொள்வேன்.

  LMS புத்தகத்தை நேற்றுதான் எடைக்கு போட்டேன். வெறும் 10 ருபாய் மட்டும்தான் கொடுத்தார்கள். அப்படி இருக்க தாங்கள் மட்டும் என்னிடம் 500 ருபாய் பெற்றுக் கொண்டதை சற்றும் ஜீரணிக்க முடியவில்லை. நேற்றுதான் காமிக்சின் உண்மையான மதிப்பு எனக்கு தெரிந்தது. நீங்கள் எங்களுக்கு புதிதாக கொடுத்ததால் புது புத்தகத்திற்கு 20 ருபாய் என்று வைத்துக் கொண்டு பாக்கி பணத்தை எனக்கு திருப்பி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  மேலும் மாதா மாதம் வெளிவரும் சின்ன சைஸ் புத்தகத்திற்கு 60 ருபாய் என்பதும், வருட சந்தா 4 ஆயிரத்திற்கு மேல் என்பதும் பகற்கொள்ளையாக உள்ளது. அதனால் வருட சந்தாவாக 100 ருபாய் தருகிறேன். புத்தகம் வெளிவரும் அன்று எனக்கு போன் செய்து விலாவரியாக கதை சொல்லவும். போனிலேயே கதை சொல்லிவிடுவதால், மாதா மாதம் கூரியர் கட்டணத்தை எனது பேங்க் அக்கவுண்டில் போட்டு விடவும்.

  எங்கள் ஊர் கடையில் ஒரு டீ 10 ருபாய்க்கும், ரேசனில் இலவசமாக போடும் அரிசி கிலோ 60 ருபாய்க்கும் விற்கிறார்கள். விலையை குறைக்க சொன்னால் அடிக்க வருகிறார்கள். ஆகையால் எங்கள் ஊரில் லயன் கபே, லயன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தொடங்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு இன்று நள்ளிரவே ஒரு புது பதிவை போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 31. எடிட்டர் சார்,

  நமது தமிழ் காமிக்ஸ் உலகின் வெகுஜன நாயகர்களில் ஒருவரான கேப்டன் டைகரின் ஒரு (மறுபதிப்பல்லாத) புதிய இதழுக்கு சாமானிய வாசகர்கள் சற்றே மிரண்டுவிடும்படியான ஒரு விலை அறிவிப்பு எங்களில் சிலருக்கு ஒருவித நெருடலை ஏற்படுத்தியிருந்தது. அது எங்கோ தூரத்தில் ஒரு அபாயமணி ஒலிப்பதாக உணரவைத்தது. ஆனால் உங்களின் இந்தப் பதிவு - அந்த அபாய மணியை ஆலய மணியாக மாற்றி இதமாக ஒலிக்கவைத்திருக்கிறது!

  Deluxe edition, Economy edition - என்ற இந்த அதிரடி அறிவிப்பு நாங்கள் துளியும் எதிர்பாராதது! இப்படியொரு முடிவுக்கு எங்கள் வாழ்த்துகள்! இந்த அறிவிப்பின்மூலம் மேற்கூறிய எங்களது நெருடல்கள் தகர்த்தெறியப் பட்டிருக்கிறது; என்றாலும்கூட, வாசகர்களான எங்களின்பொருட்டு நீங்கள் ஏற்கனவே அடித்துவரும் அளவிலாத அந்தர்பல்டிகளோடு கூடவே இந்த பல்டியையும் அடிக்க வைத்துவிட்டோமே என்ற குறுகுறுப்பும் கொஞ்சமாகவாவது எழாமலில்லை! 'உழைப்பு' என்ற ரீதியில் உங்களைக் கஷ்டப்படுத்தி காமிக்ஸ் பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை... ஆனால், 'முதலீடு' என்ற வகையில் உங்களை நஷ்டப்படுத்திட நாங்கள் ஒருபோதும் துணிவதுமில்லை! ஒரே இதழுக்கு கலர் & கருப்பு-வெள்ளை என்ற இப்படியொரு இக்கட்டான, பரிட்சார்த்தமான நிலைக்கு உங்களை உள்ளாக்கியிருக்கும் எங்களை மன்னிக்கக் கடவீர்களாக! ( பொருளாதார ரீதியாக உங்களை பாதிக்குமெனில் தயவுசெய்து இந்த இரட்டை எடிஷன் முறையை மறுபரிசீலனை செய்யுங்களேன் ப்ளீஸ்?)

  இந்தப் பதிவைப் படிக்கும்போது ஒரு நெருக்கமான நண்பன் எனக்கு எழுதிய கடிதத்தைப் படிப்பதுபோல உணரமுடிந்தது; 'ஹார்டு கவர் இல்லாமல் ரூ.415 ' என்ற வரிகளைத் தவிர! ஒரு 35 ரூபாயக்காக ஹார்டு கவரை இழக்க விரும்பவில்லை சார். "ரூ.450 + ஹார்டுகவர்" என்றே இருக்கட்டுமே ப்ளீஸ்? ( நண்பர் MV சொல்லியிருப்பதைப் போல 'விலை அதிகம் என்று நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது economy edition!)

  நான் Delux edition ஒன்றும், economy edition ஒன்றும் வாங்க முடிவு செய்திருக்கிறேன் ( ஆசைக்கு ஒன்று - ஆஸ்திக்கு ஒன்று! ;) )

  ////// ! So 2016-ன் ஏப்ரல் முதலாய் ஒரு தனி டிராக் செயல்படத் தொடங்கிடும் ! அந்தத் தடத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் மட்டுமே ; முன்பதிவுகளின் பெயரில் அரங்கேறிடும் ! அங்கே economy edition களும் சாத்தியமகிடாது ; புது genre -களுக்கும் 'தடா' இராது ! வழக்கமான கதைகளை ரசிக்கும் நண்பர்களுக்கு ஜனவரியில் வழக்கமான விருந்து அமர்க்களமாய்க் காத்துள்ளது ! ஏப்ரலில் துவங்கவுள்ள பந்தியில் வித்தியாசமான சுவைகள் காத்துள்ளன !/////

  எகிறிக் குதித்து துள்ளவைத்திடும் அட்டகாசமான அறிவிப்பு! இத இத இதத்தான் எதிர்பார்த்தோம்... போட்டுத் தாக்குங்கள் சார்! விளக்கமான அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம்....

  ( இந்தக் களேபரங்களுக்கு நடுவில் இந்த மாச புக்ஸ் எப்போ கிடைக்கும்னு அறிவிக்கமாம விட்டுட்டீங்களே எடிட்டர் சார்?)

  ReplyDelete
  Replies
  1. பஸ்ஸில் பயணித்துக்கொண்டே டைப்பியதால் சில ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள்... மன்னிக்க!

   Delete
  2. செயலாளர் அவர்களின் கூற்றை முழு மனதுடன் நானும் வழி மொழிகிறேன் சார் ...

   Delete
  3. //இந்தப் பதிவைப் படிக்கும்போது ஒரு நெருக்கமான நண்பன் எனக்கு எழுதிய கடிதத்தைப் படிப்பதுபோல உணரமுடிந்தது;//

   ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா ? ஓ! மேலே உள்ளதில் "நண்பி ' என்பதற்கு பதிலாக "நண்பன் " என அடித்து விட்டதை சொல்கிறீர்களா ???? ;-)

   Delete
  4. @ செனா அனா

   ஹிஹி!(வெட்கம்). என்ர கேள்பிரண்டு கடுதாசியப் படிச்சீங்கன்னா வரிக்குவரி அம்முகுட்டி, பொம்முகுட்டி, புஜ்ஜிம்மா, தொப்ளா குட்டி, பப்லுகுட்டி, உம்மாகுட்டி'னு ஏகத்துக்கும் இருக்குமாக்கும்! ஹிஹி( மறுபடி அதே வெட்கம்!) ;)

   Delete
  5. //Deluxe edition, Economy edition - என்ற இந்த அதிரடி அறிவிப்பு நாங்கள் துளியும் எதிர்பாராதது! இப்படியொரு முடிவுக்கு எங்கள் வாழ்த்துகள்! இந்த அறிவிப்பின்மூலம் மேற்கூறிய எங்களது நெருடல்கள் தகர்த்தெறியப் பட்டிருக்கிறது; என்றாலும்கூட, வாசகர்களான எங்களின்பொருட்டு நீங்கள் ஏற்கனவே அடித்துவரும் அளவிலாத அந்தர்பல்டிகளோடு கூடவே இந்த பல்டியையும் அடிக்க வைத்துவிட்டோமே என்ற குறுகுறுப்பும் கொஞ்சமாகவாவது எழாமலில்லை! 'உழைப்பு' என்ற ரீதியில் உங்களைக் கஷ்டப்படுத்தி காமிக்ஸ் பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை... ஆனால், 'முதலீடு' என்ற வகையில் உங்களை நஷ்டப்படுத்திட நாங்கள் ஒருபோதும் துணிவதுமில்லை!//
   +1

   Delete
  6. ஈரோடு விஜய்.!விலை அதிகம் என்று நான் ஒருபோதும் கூறியது இல்லை.அதே போல் மேல் அட்டை பற்றியும் நான் கவலை படுவது கிடையது..ஏதோ கிழியாமல் பாதுகாப்பாய் இருக்கஅட்டை இருந்தால் போதும் அப்படித்தான் நினைப்பேன்.!

   Delete
  7. @ M.V அவர்களே

   //ஈரோடு விஜய்.!விலை அதிகம் என்று நான் ஒருபோதும் கூறியது இல்லை. //

   நீங்கள் அப்படிக் கூறியதாக நானும் ஒருபோதும் கூறவில்லையே?! மேற்கண்ட என்னுடைய கமெண்ட்டில் நான் 'நாங்கள்' என்று விழித்திருப்பது என்னைப்போலவே ஒத்தக் கருத்துடைய கிட்ஆர்ட்டின் உள்ளிட்ட வேறுசில நண்பர்களையே! குழப்பிக்கொள்ள வேண்டாமே M.V அவர்களே!

   அல்லது... நான் "நாங்கள்" என்று குறிப்பிட்டது 'மாறிப்போன மாப்பிள்ளை'யில் கிட்ஆர்ட்டின் பேசும் 'மன்னர் பாஷை'யாகவும் இருக்கலாம்! 'நாம்' சொல்வதை விளங்கிக்கொள்ள முடிகிறதல்லவா? ;)

   Delete
 32. GOOD MORNING FRIENDS AND COMICS LOVERS . I THINK THIS BLOG ONLY TO EXPRESS OUR LOVE IN COMICS ONLY. BUT NOW A DAYS SO MANY PERSONS ARE MADE THIS BLOG AS WAR FRONT WITH BRUTAL WORDS . THIS IS A COMIC GARDEN
  HEAR COMIC FLOWERS HAS TO BLOOM WITH DIFFERENT COLOR AND DIFFERENT SMELLS .

  ReplyDelete
 33. விஜயன் சார், எ.பெ.டை. கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்தில் இரண்டு புத்தகமாக வருவதற்கு எனது ஆதரவு.

  கொசுறு செய்தி: எனக்கு இரண்டு புத்தகம்களும் வேண்டும் :-) வண்ணத்தில் வரும் புத்தகத்திற்கு முன் பதிவு செய்துவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. கருப்பு வெள்ளை புத்தகத்திற்கு நீங்கள் சொன்ன ரூ.200 என்பது சரியானது!

   Delete
 34. டியர் விஜயன் சார்,

  //2016-ன் ஏப்ரல் முதலாய் ஒரு தனி டிராக் செயல்படத் தொடங்கிடும் ! அந்தத் தடத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் மட்டுமே ; முன்பதிவுகளின் பெயரில் அரங்கேறிடும் ! அங்கே economy edition களும் சாத்தியமகிடாது ; புது genre -களுக்கும் 'தடா' இராது !//

  மகிழ்ச்சி! என்ன தான் பரீட்சார்த்த முயற்சி என்றாலும், கதைகளின் தேர்வில் கவனம் மிக அவசியம். காமிக்ஸ் ஆர்வலர்களிடையே பரவலாக அறியப்பட்டு, விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ள பிரபலமான கதைகளை (across genres) மட்டுமே இந்த வரிசையில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்! (உதாரணத்திற்கு, "வானமே எங்கள் வீதி" ரக பரிசோதனைகள் வேண்டவே வேண்டாம்!). Critically acclaimed கதைகள் யாவும், தமிழிலும் அதே வரவேற்பைப் பெறுமா என்பது கேள்விக் குறியாக இருந்தாலும், வேண்டாத கதைகளை வடிகட்டுவதில் அது நிச்சயம் உதவியாக இருக்கும்

  "NBS - Economy edition"-ஐயும் வெளியிடலாமே என்று, 3 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே கேட்டிருந்தேன். இந்த Economy+Deluxe வழிமுறை எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும் என்பது எ.பெ.டை. மூலமாக தெரிய வரும். காமிக்ஸ் சேகரிப்பாளர்களைப் பொருத்த வரை, கூடுதல் செலவு தான் (₹200+₹450)! குண்டு புக்குகளை இரண்டிரண்டு பிரதிகள் வாங்கிக் கொண்டிருந்த நடைமுறைக்கு பதிலாக, எடிஷனுக்கு ஒரு காப்பி என்று வாங்கி செலவைக் குறைக்க வேண்டியது தான்! ;)

  ReplyDelete
  Replies
  1. இந்த கூற்றையும் நான் முழு மனதுடன் வழி மொழிகிறேன் சார் ..:)

   Delete
  2. @எடிட்டர்:
   முக்கியமாக, இந்த தனி ட்ராக்கின் கதைத் தேர்வின் போது நண்பர் பரணிதரனின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று வன்மையாக கேட்டுக் கொள்ளப் படுகிறது! ;-)

   உதாரணத்திற்கு, இது போன்ற கோரிக்கைகள்:
   //போர்முனை .....விமான முனை ....வரலாற்று காவியங்கள் .....அழுகாச்சி காவியங்கள் அல்லாத பரீசார்த்த முயற்சிகள் இருப்பின் அது மாபெரும் கொண்டாட்டமாக இருக்கும் சார் ...//

   @பரணிதரன்:
   //அதுவும் எவ்வளவு நீளமாக இருப்பினும் ஒன் சாட் கதைகளாகவே வந்தால் இன்னும் சிறப்பு ....//
   இதுக்கு மட்டும் +1 :)

   @ஆட்டோ ஆதி:
   இவரைக் கொஞ்சம் கவனிங்களேன் ப்ளீஸ்... :)

   Delete
  3. @karthi

   "@ஆட்டோ ஆதி:" ரொம்ப நாள் கழித்து வாய் விட்டு சிரிக்க வைத்தது :-)

   Delete
  4. // போர்முனை .....விமான முனை ....வரலாற்று காவியங்கள் .....அழுகாச்சி காவியங்கள் அல்லாத பரீசார்த்த முயற்சிகள் இருப்பின் //

   இதெல்லாம் இல்லாம இனிமே எடியே யோசிச்சு தயாரிச்சாதான் உண்டு :-) ;-)

   Delete
  5. @எடிட்டர்:
   என்னுடைய விருப்பம் & கோரிக்கை என்னவென்பதை மேலும் சற்று தெளிவு படுத்த விரும்புகிறேன்:

   1. கிராஃபிக் நாவல் சந்தா:
   ஆண்டுக்கு ஆறு இதழ்கள் என்று ஏற்கனவே இருக்கும் கி.நா. சந்தாவில், ஓரிரு பாகங்களில் முடியக் கூடிய கதைகளை (உ.ம்.: எமனின் திசை மேற்கு, பிரளயத்தின் பிள்ளைகள், ஒரு சிப்பாயின் சுவடுகளில்...) மட்டும் வெளியிடுங்கள். இதன் மூலம், ஒரு சந்தாவை ஓரிரு நாயகர்களே முழுமையாக ஆக்கிரமிக்கும் நிலை மாறும் (இப்போது, தோர்கல் & பௌன்ஸர் மட்டுமே அந்த சந்தாவில் வெளிவந்து கொண்டிருப்பது போல!). மேலும், பலவகையான அதே நேரம் முழுமையான கதைகள், குறைந்த விலையில் வாசகர்களுக்கு கிடைக்கும்.

   2. Different Genres, Limited Edition, Pre-booking Track:
   இப்போது புதிதாக அறிவிக்கப் பட்டிருக்கும் இந்த தனி ட்ராக்கில், காமிக்ஸ் ஆர்வலர்களிடையே பரவலாக அறியப்பட்டு, விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ள பிரபலமான கதைகளை (across genres) மட்டும் வெளியிடுங்கள். அவை, complete collection-களாகவோ (Metabarons, Watchmen, V for Vendetta...), அல்லது பல பாகங்கள் ஒன்றிணைந்த story arc-களாகவோ (Incal, Thorgal, Locke & Key, Walking dead...) இருப்பது நலம்!

   போதிய முன்பதிவுகள் + வரவேற்பு இருந்தால், சற்றே offbeat படைப்புகளைக் (Osamu Tezuka's Buddha) கூட வெளியிடலாம். "Well known + Critically acclaimed" என்ற காம்பினேஷன், Limited Edition-களின் higher price tag-ஐ justify செய்வதாக அமையும்! "விடுதலையே உன் விலை என்ன" போன்ற பரி"சோதனை"களை, premium விலையில் வாங்கி, நொந்து போகக் கூடாது அல்லவா?! :)

   Delete
  6. கார்த்தி சார் இதையே தான் எனது பாணியில் கேட்டேன் ...அதுக்கு போய் ஆட்டோ ஆதியை எல்லாம் கூப்பிடுறீங்க .....அவ்வ் .....:(

   Delete
  7. கார்த்திக் சோமலிங்க சார்.!தலைவர் அண்ணனை நீங்கள் ஆட்டோ ஆதியை வைத்து பணிய வைத்தாலும்.,அண்ணனின் விழுதுகள் நான்,பாஸா சார் எல்லாம் இருக்கோமே!.(தனி டிரேக் என்பதால் பிரச்சினை இல்லை.! எங்கள் கோட்டாவானா 48 ல் கைவைக்காமல் இருந்தால் அது போதும். மீதி எங்களுக்கு போனஸ்தான் )

   Delete
  8. பேராட்டக்குழு தலைவரைத்தானே.. அவருக்கு தனியே ஒரு நாள் மண்டகப்படி நடத்தவேண்டியிருக்குது. அடுத்த ஈரோடு சந்திப்பில், நடுவாக நான், இடது பக்கம் நீங்கள், வலது பக்கம் ஈவி, (ஈவியை இந்த இடத்தில் குழுவின் கறுப்பு ஆடு என்பதை தெரியப்படுத்திவிடக்கூடாது) நைசாக பேசி தலையை நாம் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டும். உள்ளே போனதும் கதவைச் சாத்திவிட்டு.. கும்! குமால்! டுஷூம்! சத்! பூரா ஒரே டெக்ஸ் கதையில் வர்ற சத்தம்தான் கேட்கணும்!! :-))))))))))))

   Delete
 35. போர்முனை .....விமான முனை ....வரலாற்று காவியங்கள் .....அழுகாச்சி காவியங்கள் அல்லாத பரீசார்த்த முயற்சிகள் இருப்பின் அது மாபெரும் கொண்டாட்டமாக இருக்கும் சார் ...

  அதுவும் எவ்வளவு நீளமாக இருப்பினும் ஒன் சாட் கதைகளாகவே வந்தால் இன்னும் சிறப்பு ....

  ReplyDelete
 36. முட்டையிடும் கோழிக்கும் சந்தா தரும், ஆப்ரிக்க கானகங்களுக்கும் ஒரு ரிப்போர்ட்டரையும் அனுப்பி வைக்கும் புரட்சித்தீ எடிட்டர் ஹோராஸ்க்ரீலியை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் எடிட்டர் சார்...

  உங்களுடைய எக்கனாமி மற்றும் டீலக்ஸ் அறிவிப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவசரப்பட்டு எடுத்த முடிவு போல் தெரிகிறது. சாத்தியமான விலைகளை முயற்சித்து, வர்ணம் அல்லது கருப்பு வெள்ளை என ஏதாவதொன்றை மட்டும் அறிவித்திருக்கலாம்.

  ஒரே சமயத்திதில் இரண்டு வெர்ஷன்களும் என்பது தற்கொலை முயற்சி போல் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் யோசியுங்கள் சார்.

  அப்புறம் நண்பர்களுக்கு, இன்றைய தமிழ் தி இந்துவில் கிங் விஸ்வா சாரின் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. எனக்கு 'இங்கே கிளிக்' போடும் தொழில்நுட்பம் இன்னும் கைவரவில்லை... எனவே ஈ.வி., மா.சி. போன்ற நண்பர்கள் யாராவது ஒரு 'இங்கே கிளிக்' போடவும்

  ReplyDelete
 37. உலக நாதர் சாரிடம் சொல்லி அப்படியே அடுத்த வருடம் ஆறு மாதங்கள் கழித்தாவது டெக்ஸ் தனி சந்தா ஏதாவது வருகிறதா என்று கேட்டு சொல்லுங்க சார் ...:)

  ReplyDelete
 38. திரு விஜயன் அவர்களுக்கு..!

  //ஒரே இதழை 2 வெவ்வேறு விதங்களில் வாங்குமொரு option -ஐத் தந்து வாசகர்களிடையே ஒருவித ஏற்ற தாழ்வை நாமே உருவாக்கிடக் கூடாதே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்ததால் / இருப்பதால் இந்தத் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வரவில்லை ! ஆனால் ஒரு இதழை விலை காரணமாய் வாங்காமலே போவதை விட ; அதனை B &W -ல் வாங்குவதில் தவறில்லை என நண்பர்கள் கருதினால் - இந்தப் பரிசோதனைக்கு நாங்கள் ரெடி ! //

  * கலரில் வேண்டுமென்றால் 500 ரூபாய்...HARDCOVER இல்லாமல் 450 ரூபாய்..!
  * கறுப்பு வெள்ளையில் வேண்டுமென்றால் 200 ரூபாய்..!

  கலரில் போடவேண்டியதை b&w போட நாங்கள் ரெடி...உங்களுக்கு எது வேண்டும்..? ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுங்கள் என நீங்கள் கேட்பதாகவே, எத்தனை முறை படித்தாலும் தோன்றுகிறது..!

  பரிசோதனையாக இரண்டையும் போடுகிறேன்...! என நீங்கள் எங்கும் கூறுவதாக எனக்கு படவில்லை. இதை நீங்கள் தெளிவு படுத்தினால் தான் நண்பர்களின் சிந்தனை அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்..!

  ReplyDelete
  Replies
  1. 'மாத்தி யோசி' கான்செப்டை விட்டு நீங்க இன்னும் வெளியே வரலை போலிருக்கே மாயாவி அவர்களே? ;) மாத்தி யோசிச்சாக் கூட பரவாயில்லை... மாத்தி மாத்தி மாத்தி யோசிச்சா எப்படிங்க மாயாவி அவர்களே... :D

   Delete
  2. ஹாஹாஹா!
   மூளக்காரங்க அப்படித்தான் இருப்பாங்க.! (மூல க்காரங்கன்னு தப்பா நினைச்சுடாதிங்க) (P)

   Delete
  3. @ இத்தாலி விஜய்

   மீண்டும்மீண்டும் சொல்கிறேன்...கிட்.ஆ.க & செல்வம் அபிராமி என இருவர் சொன்ன //கலரில் ஒன்று ப்ளாக் அண்ட் ஒய்ட்டில் ஒன்று என்ற இரட்டை சவாரி// என்ற வரிகளை எல்லோரும் பிடித்துக்கொண்டு பின் தொடர்கிறீர்கள்..ஹாஹா...! கலரில் 500ரூபாய்க்கு 1000 பிரதிகள்...b&w யில் 200ரூபாய்க்கு 1000 பிரதிகள் என ரெண்டு வகையில் அடித்து கையில் வைத்துக்கொண்டு...எது விற்கும் எது பின் தங்கும்ன்னு சோதனை செய்து பார்க்கும் அளவிற்கு...எடிட்டர் கம்பேனிக்கு புது மேனேஜர் அல்ல..!

   தவறாக நினைத்துகொண்டு எல்லோரும் ஓடுவதை, எடிட்டர் ஓடவிட்டுப்பார்த்துக்கொண்டிருக்கிறார்...என்பதே உண்மை..! ஆட்டத்தின் முடிவில் புரியவரும்...பொறுத்திருந்துதான் பார்ப்போமே...! :-)))

   Delete
  4. //தொடரும் ஒவ்வொரு புது முயற்சிக்கும் இந்தப் பாதை சாத்தியமல்ல என்பதும் , ஒவ்வொரு தடவையும் நண்பர்களில் ஒருசாரார் இதே போன்ற economy edition கோரிக்கையை முன்வைக்க நேரிட்டால் அதற்கு செவி சாய்ப்பது சிரமமாகிடலாம் என்பதெல்லாம் நன்றாகவே புரிகிறது எனக்கு //

   ...என எடிட்டர் கூறியதன் அர்த்தம் "தோர்கால்,மேஜிக்விண்ட்,டைலன் டாக்,இதர கிராபிக்ஸ் நாவல்கள் என கலர்ல போடவேண்டியதை, காபிரைட்காரங்க கண்டிஷனா... 'போட்டால் கலரில் தான் போடணும்'னு சொன்னதை...விலைக்காக economy edition போடுங்ககிற கோரிக்கை செல்லாது..." அப்படிங்கிறது தானே உண்மையான அர்த்தம்..! இது ஏன் யாரும் தெரியாத மாதிரியே பேசிகிறாங்க..!?!?! ஒரு வேலை "முதல் அறிவிப்பை புரிஞ்சிகாம பேசிட்டோம்...இப்பவும் புரிஞ்சிகாம பாராட்டிடுவோம்.." அப்படிங்கிற எண்ணம் தான் காரணமோ..! :D

   Delete
  5. // blah blah blah..... அப்படிங்கிறது தானே உண்மையான அர்த்தம்..! இது ஏன் யாரும் தெரியாத மாதிரியே பேசிகிறாங்க..!?!?! ......blah blah blah//

   @மாயாவி சிவா சாரே, நீங்க புடிச்ச புலிக்கு ரெண்டு வால்னு ப்ரூஃப் பண்ண இவ்வளவு மெனக்கெடனுமா? இங்கே எல்லோரும் பதிவின் சாராம்சத்தைப் புரிந்துதான் கருத்துக்களை பதிகிறார்கள். தாங்கள்தான் Assumption Mania என்ற மாயாவுலகத்திலிருந்து சற்று இறங்கி வரவேண்டும்.

   Delete
  6. ஐயோ அப்படி முடியாது முடியாது...என சொல்லிவிட்டு, ஆஹா செஞ்சா நல்லாயிருக்கும்னு நைட் தோணிச்சின்னு எல்லா விஷயத்துலயும், எடிட்டர் எப்படி உல்டா ஆனார்ன்னு நண்பர் பொடியன் சில பதிவுக்கு முன் பட்டியல் போட்டு சொன்னார்..! b&w ல் வந்தகதையை கலரில் கேட்டு, காதுல ரத்தம் வர போராட்டம் செய்யும் காலம் இந்த காலம்..! இந்த டைம்ல கலர் கதையை, கறுப்பு வெள்ளையில போடுறேன்னு சொன்னா பட்டாபட்டி கிழிஞ்ச்சிடுன்னு பெவிக்கால் பெரியசாமியா இருந்தார்..! வெயில்ல வெச்ச பால் சூட்டுக்கு பொங்கி பொங்கி (?) பால்கோவா ஆனா கணக்கா நாலு கமெண்ட்ஸ் வர...இப்ப சாதாதோசை 200 ரூபாய்க்கு...யோசிங்கன்னு சொல்றார்..!

   ஒரு கதையை ஒரு பிரிண்ட் போட்டே விக்க முடியாமா குடோன்ல தூங்கரப்போ...ஒன்னையே ரெண்டு டைப் அடிச்சி ஆப்பு வெச்சிக்குவாரா..??? "விஷயம் இதுதான் நண்பர்களே...ரெண்டு டைப் அடிக்கிறேன்...யாருக்கு எது வேணும்..or ரெண்டுல ஒரு டைப் தான் அடிக்க முடியும்...எது அடிக்க..?" என எடிட்டர் ஏன் இதை முடிவுக்கு கொண்டுவரலை தெரியுமா..? இந்த குழப்பத்துல ரெண்டு பாயின்ட்ஸ் (?) பிடிக்கிறார்..! கனவை கலைக்கறது பாவம்ன்னு வேற பெரியவங்க சொல்லியிருக்காங்களே...! இந்த கனவை கலைக்காம சத்தமில்லாம, விதவையுடன் பௌன்சரும், மொட்டை போட்ட ரெட் டஸ்ட்டும் உங்களுக்காக வெய்ட்டிங்..!ன்னு ரூட்டை இன்னிக்கு நைட்டே திருப்பிவிட்டுடுவார்..!

   லயன் காமிக்ஸோட மொத்த ஜாதகத்தையும் கணிச்சி பாத்தாலும், இப்படி ஒன்னு நடக்க சான்ஸேஇல்லை...! ஏன்னா சிச்சுவேஷன் அவ்வளவு வீக். சுடு ஆறினதும் "பிரண்ட்ஸ்..பதிப்பகத்தார் கறுப்பு வெள்ளைக்கு ஒத்துக்கலை...ஸாரி கய்ஸ்...முடியும் போது போட்டுக்கலாம்...அடுத்த அறிவிப்பு.." ன்னு... ha ha ha [ஸல்லூம் உங்க ha இல்லை]...ஆரம்பிக்கபோறார்...! எடிட்டர் தனக்கு வெச்சிகிட்ட எல்லா பட்டபெயர்களை காப்பாத்திக்க ஏன் இவ்வளவு மெனக்கெடனமோ..!?!?! :-)))

   Delete
 39. Dear Friends,
  தனி ட்ராக்கின் கதைத்தேர்வு தொடர்பில் ஆசிரியருக்கு அழுத்தம் கொடுக்கவேண்டாமே?
  'வானமே எங்கள் வீதி', 'தேவ இரகசியம் தேடலுக்கல்ல', 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' போன்ற கதைகளுக்காக காத்திருக்கும் என் போன்றவர்களுக்கும் ஆசிரியர் கொஞ்சம் 'தீனி' போடட்டுமே, Please?

  ReplyDelete
  Replies
  1. +1

   ஆனாலும் விண்ணில் ஒரு வேங்கைய நினைச்சா கொஞ்சம் பயந்துதான் வருது.!

   Delete
  2. //வானமே எங்கள் வீதி', 'தேவ இரகசியம் தேடலுக்கல்ல', 'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' போன்ற கதைகளுக்காக காத்திருக்கும் என் போன்றவர்களுக்கும் ஆசிரியர் கொஞ்சம் 'தீனி' போடட்டுமே, Please?//
   +1

   Delete
 40. டியர் விஜயன் சார்,இந்த இரட்டை சவாரி,எங்களுக்கு,கண்ணா,ரெண்டு லட்டு தின்ன ஆசையா வை,நியாபகபடுத்தினாலும், அதன் பொருளாதார,சிரமங்கள் தங்களை மட்டுமே,சார்ந்தது.யோசித்து செய்யுங்கள் சார்.
  அப்புறம், கலர் டைகரில், பலூனுக்குள் வசனங்களை,அடைக்கும் கட்டாயம் உள்ளதாலும்,பிளாக்&வொயிட்டைகரில், அந்த கட்டாயம் இல்லாததாலும், மொழிபெயர்ப்பில், இந்த ஈரு புத்தகங்களிலும் சிற்சில மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதா சார்..;-)

  ReplyDelete
  Replies
  1. /* பலூனுக்குள் வசனங்களை,அடைக்கும் கட்டாயம் உள்ளதாலும் */

   Ha ha !! Now that has become the ultimate humor line of Tamil Comics - the actual difficulties notwithstanding !

   Delete
 41. /அதே பெரிய சைஸ்
  தற்போது டெக்ஸ் வில்லர் கருப்பு-வெள்ளைக் கதைகளுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளை காகிதம்
  அதே 256 பக்கங்கள் ;
  black & white அச்சு ;
  அதே அட்டைப்படம் ;
  அதே பைண்டிங்
  விலை ரூ.200
  இந்த விலை முன்பதிவுகளுக்கு மாத்திரமே !
  கூரியர் கட்டணங்கள் தனி ! (Need to check on it tomorrow)//

  எல்லாம் சரி

  வெளியீடு எண் ஒன்றா வெவ்வேறா

  ReplyDelete
 42. எடிட்டர் சார் உண்மையில் இது ஒரு அருமையான டெக்னிக் இந்த மாத புத்தகங்களை பற்றிய நினைவை மறக்கடித்து விட்டீர்களே உங்கள் புதிய பதிவின் மூலம்
  இந்த வாரம் புத்தகம் வருமா சார் அல்லது அடுத்த பதிவா சார்?

  ReplyDelete
 43. This comment has been removed by the author.

  ReplyDelete
 44. B/W Comics are my passion. Reason1 - Cost. Reason2 - Eye strain for its glaring at light by art paper. Reason3 - Art paper is heavy.

  ReplyDelete
 45. சார் ..கலர் புத்தகம் ஒன்னு பிளாக் அண்ட் ஒயிட் ஒன்னு ...என்ன சார் ..என்ன சார்... எப்படி சார் ..வேண்டாம் சார்
  டைகரை கலர்புல்லாவே பார்ப்போமே ... தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ ..போயிட்டேஇ ருப்போம் சார் அது பாட்டுக்கு நல்லதே நடக்கும்

  ReplyDelete
 46. Replies
  1. வணக்கம் துரை சார்! சமீப காலமாக (ஒன்றிரண்டு கமென்ட்டுகள்தான் என்றாலும்) உங்களது பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்களேன்!

   Delete
 47. அந்த புலி வாலைப் பிடிச்சிட்டு இருக்கிற சைனா மான்க் வாலின் கடைசி நுனியைப் பிடிக்காம ஆரம்பத்திலேயே
  பிடிச்சி இருக்காரே இதிலே ஏதாவது தத்துவம் இருக்கா

  ReplyDelete
  Replies
  1. @ வெட்டுக்கிளி

   அந்தப் புலிக்கு வவுறு சரியில்லாம அடிக்கடி கம்மாக்கரைப் பக்கமா ஒதுங்கறதை அந்த ஓல்டு மாங்க் கவனிச்சிருக்கலாமில்லையா? :D

   Delete
 48. நண்பர்களுக்கு மதிய வணக்கம்.

  ReplyDelete
 49. தரமான காமிக்ஸ்ம ற்றும் தரமான கதைகளுக்கு விலை ஒரு பொருட்டல்ல.

  ReplyDelete
 50. இந்த மாத புக் எப்ப கிடைக்கும்

  ReplyDelete
 51. @எடிட்டர் ,
  இந்த இரண்டு எடிஷன் முயற்சியில் எனக்கு உடன்பாடில்லை. இது ஒரு விபரீத முயற்சியாகவே தெரிகிறது. 'ஆழம் பார்த்து கால்களை விடு' என்ற பழமொழி வேறு அடிக்கடி நினைவிற்கு வந்து தொலைகிறது!
  ஒரு கண்ணில் வெண்ணையும், சுண்ணாம்பும் எதற்கு?

  இந்த இதழை தாங்கள் ரூ.350/- க்கு அறிவித்திருந்தால் ஆஹா ஓஹோவென்று நண்பர்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால், ரூ.450/- என்றவுடன் இத்தனை களேபரம். (இந்த ரூ.100/- மிச்சப்படுத்தி ஆகப் போவதென்னவோ...?) இது டைகரின் கடைசி தொடர், அதுவும் one shot - ல் வரயிருக்கின்றது. இதற்கப்புறம், டைகரின் புது தொடர்கள் நாம் தலைகீழ் நின்றாலும் கிடைக்குமா....? இந்த இதழெல்லாம் '[போனா வராது, பொழுதுபோனா கிடைக்காது' ஏதோ பார்த்து செய்ங்க.

  ReplyDelete
 52. /// இது டைகரின் கடைசி தொடர், அதுவும் one shot - ல் வரயிருக்கின்றது. இதற்கப்புறம், டைகரின் புது தொடர்கள் நாம் தலைகீழ் நின்றாலும் கிடைக்குமா....? இந்த இதழெல்லாம் '[போனா வராது, பொழுதுபோனா கிடைக்காது' ஏதோ பார்த்து செய்ங்க.///

  அருமையாக சொன்னீர் பாய்....

  ReplyDelete
 53. sir .................................................................................................antha dragon nagaram .........................................................................................................................................reprint........................................................................................................................................................................................pls

  ReplyDelete
 54. neenga tiger book ka podunga illa potatha ponga .........................engalukku dragon nagaram reprint vanthe aakanum..................................................................................aamam........................................

  ReplyDelete
  Replies
  1. டியர் சரவணன் @ நீங்கள் இந்த அளவு உருகி கேட்கும் அளவுக்கு ஒர்த்தான கதை ட்ராகன் நகரம் நிச்சயமாக கிடையாது .......வழ வழா கொழ கொழா கதை அது......லயனின் 50வது இதழாக வந்ததால் அது அதிகம் கவனிக்க படுகிறது ....உண்மையில் மறுபதிப்பு செய்ய இதைவிட நல்ல கதைகள் டெக்ஸ் கதைகளில் பல உண்டு ......நீங்கள் இந்தியா வரும் போது சொல்லுங்கள் அந்த புத்தகத்தை நானே உங்கள் ஊருக்கு கொரியர் அனுப்பி வைக்கிறேன் ..படித்து விட்டு பிறகு உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள் ......இப்போதைக்கு ட்ராகன் பாவம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் ...ப்ளீஸ் .......

   Delete
  2. % சேலம் டெக்ஸ் விஜயராகவன்

   நட்பே, நீங்கள் யாரோ எவரோ தெர்ல. ஆனா ரொம்ப நல்லவர்னு தெர்து. நானு நேத்திக்கு முன்னாடி தான் இந்தியா வந்திருக்குது. எனிக்கு இந்த டிராகன் நகரம், மரணத்தின் நிறம் பச்சை, வைக்கிங் தீவு மர்மம் அல்லாம் ரீபிரின்டு கேக்குது. நிங்களு அத்மாதிரி வழ வழா கொழ கொழா கதைகள என்ர அட்ரசுக்கு அனுப்பி வைச்சீங்கன்னா படிச்சுட்டு கோரிக்கை வைக்குது நானு. ன்னான்றீங்க நட்பே?

   நிங்கள் ஓகேன்னு சொல்லுது நானு நேர்ல வந்து புக்குஸ கலெக்ட்பண்ணிக்கினு கொரியர் காச மிச்சம் பண்ணுது. நட்பு என்ன சொல்து?

   Delete
  3. அரே! விஜியா ரோகவென் ஜி.,
   நம்பள் துபாய் மேல குறுக்கூ சந்துலே குடிக்கிறான். புரீலே., இஸ்டே பண்ணிக்கீறான்.
   நிம்பள் மாரி ஒரு நெல்ல மன்சன்., இந்தே துன்யா மேலே நம்பள் பாத்தான் இல்லே.!
   அரே! சாப்., நம்பள்க்கும் ட்ராகன் நகரம்., கயுகூ வேட்டே மாரி அல்லா புக்ஸும் நிம்பள் தரான். நம்பள் படிக்கிறான். பேரிக்கா விக்கிறான். ச்சீ., கோரிக்கே வெக்கிறான்.!
   நிம்பள் நெல்ல மன்சுக்கு நம்பள் நமஸ்கார் பண்றான் சாப்.!!!!!

   Delete
  4. ஹா !ஹா !விஜய் @..........

   Delete
  5. ஹா !ஹா!ஹா !ஹா!ஹா !ஹா!

   Delete
  6. டியர் வெளிநாட்டு நண்பர்கள் விஜய் &ஆர்டின் .....நண்பர்களுக்கு படிக்க தரவே அனைத்து டெக்ஸ் கதைகளிலும் கஷ்டப்பட்டு இரண்டு இரண்டு காப்பிகளாக சேர்த்தேன் .....அவ்வப்போது என்னை பற்றி கேள்விப்பட்டு வரும் நண்பர்களுக்கு படிக்க இரவல் தந்தும் ,இப்போது கூட தந்தும் வருகிறேன் ....ஆனால் அந்த இரவல் தரும் 2வது செட்டில் சில புத்தகங்கள் கோவிந்தா ஆயின......பிறகு வெளியூர் நண்பர்களுக்கு தருவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன் .....இப்போது நண்பர் டெக்சாஸ் சரவணன் , அதுவும் அவர் உள்ள மாநிலத்தின் நகரான மே பீ ஹூஸ்டனில் நடக்கும் சாகசமான ட்ராகன் நகரை படிக்க ரொம்பவே ஆவல் காட்டுவதால் அவருக்கு மட்டும் படிக்க தரலாம் என நினைக்கிறேன் ...படித்து முடித்த பிறகு நிச்சயமாக அவர் கோரிக்கை மாறும் ..... ஆனால் நீங்கள் இருவரும் புரியாத பாசை பேசுவதால் இந்த புத்தகங்களை உங்களால் படிக்க இயலாது ..சாரி....ஹி...ஹி....

   Delete
  7. ///அரே! விஜியா ரோகவென் ஜி.,
   நம்பள் துபாய் மேல குறுக்கூ சந்துலே குடிக்கிறான். புரீலே., இஸ்டே பண்ணிக்கீறான்.
   நிம்பள் மாரி ஒரு நெல்ல மன்சன்., இந்தே துன்யா மேலே நம்பள் பாத்தான் இல்லே.!
   அரே! சாப்., நம்பள்க்கும் ட்ராகன் நகரம்., கயுகூ வேட்டே மாரி அல்லா புக்ஸும் நிம்பள் தரான். நம்பள் படிக்கிறான். பேரிக்கா விக்கிறான். ச்சீ., கோரிக்கே வெக்கிறான்.!
   நிம்பள் நெல்ல மன்சுக்கு நம்பள் நமஸ்கார் பண்றான் சாப்.!!!!!///

   @ Kid ஆர்டின் கண்ணன்....

   பட்டையை கிளப்புகிறீர்கள்...
   சிரித்துக்கொண்டே எழுதுகிறேன்..

   Delete
  8. //....neenga tiger book ka podunga illa potatha ponga .........................engalukku dragon nagaram reprint vanthe aakanum..................................................................................aamam........................................ //

   +1111111111111111111111111111111111111111111111111111111111111111

   டிராகன் நகரம் - உடன் பின்வரும் கதைகளையும் மறுபதிப்பில் சேர்த்துக் கொள்ளவும்,
   - கழுகு வேட்டை
   - பழிக்குப் பழி
   - மரணத்தின் நிறம் பச்சை
   - வைக்கிங் தீவு மர்மம்
   - பழி வாங்கும் பாவை

   கழுகு மலைக்கோட்டை (ஹி.. ஹி .. மாடஸ்டியும் சேர்த்து..)

   Delete
  9. //..நீங்கள் இந்த அளவு உருகி கேட்கும் அளவுக்கு ஒர்த்தான கதை ட்ராகன் நகரம் நிச்சயமாக கிடையாது .......வழ வழா கொழ கொழா கதை அது.....//

   சேலம் டெக்ஸ் ...

   உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை... தயவுசெய்து தங்களது பெயரில் சேர்த்துள்ள "தல" அடைமொழியை அழித்துவிடவும்...

   Delete
  10. பெரியார் @ ஆசிரியரே உண்மையை ஓப்பனாக சொல்லி வரும் காலமிது ....என் பெயர் டைகரை அதீத எதிர் பார்ப்பு காட்டாமல் படித்தால் நன்றாகவே இருக்கும் என சொல்கிறார் அல்லவா ???......
   பிறகு நாமும் ஏன் ட்ராகன் நகரம் - சூப்பர் டூப்பர் ஹிட்டான காலத்தை வென்று நிற்கும் கதை என ஓவராக பில்டப் தரணும் ......தங்க ஊசி என்பதற்காக கண்ணை குத்தி கொள்ளவா முடியும் ???? நண்பரே .....உண்மையான நிலைப்பாட்டை சொல்ல என்றுமே நான் தயங்கியதில்லையே......

   Delete
  11. ஈரோடு விஜய்.!&கிட் ஆர்ட்டின் கண்ணன்.!விழந்து விழந்து சிரிக்கின்றேன்.யப்பா நல்ல நகைச்சுவை உணர்வு.!

   Delete
  12. @சேலம் டெக்ஸ்: டைகர் ரசிகர்களே டிராகன் நகரம் வழா கொழ கொழா கதை-ன்னு சொல்ல மாட்டாங்க.. நீங்க இப்படி சொல்லீட்டீங்களே

   Delete
  13. படித்து குடித்ததால் அப்படி தெரியலாம்...படிக்கும் போது வாழைப்பழம் அருகில் இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
   விறுவிறுப்புக்கு பஞ்சமில்லா கதை அது.

   Delete
 55. 1. கிராஃபிக் நாவல் சந்தா: iyyo samy enakku vendave vendam......................................................................................................................

  ReplyDelete
 56. Sir நம்ம Website la முன்பதிவு எப்போ ஆரம்பம் ?????
  Pls do let us know sir... அப்போதுதான் I can reserve easily from Maldives sir...

  ReplyDelete
 57. புது முயற்சிகளுக்கு நல்வரவு Sir.... i am waiting.....

  ReplyDelete
 58. //வழக்கமான கதைகளை ரசிக்கும் நண்பர்களுக்கு ஜனவரியில் வழக்கமான விருந்து அமர்க்களமாய்க் காத்துள்ளது ! ஏப்ரலில் துவங்கவுள்ள பந்தியில் வித்தியாசமான சுவைகள் காத்துள்ளன ! நீங்கள் இரண்டையும் சுவைக்கத் தயாராக இருப்பின் குதூகலம் கொள்வேன்//
  Good news..i am waiting...
  Different Genre is must...

  ReplyDelete
 59. I am fine with deluxe edition...So i don't have any opinion about economy edition..

  ReplyDelete
 60. //புதுமைகள் என காமிக்ஸ் உலகம் ஒரு பக்கம் புயல் வேகத்தில் பயணம் செய்து வர - நாம் பழகிப் போன அதே பார்முலாக்களை விடாப்பிடியாய்த் தொடர்வது என்றேனும் ஒரு நாள் அயர்ச்சிக்கு ரோடு போடக் கூடும் என்ற மெல்லிய பயம் என்னுள்ளே உள்ளது //
  +1

  ReplyDelete
 61. ////புதுமைகள் என காமிக்ஸ் உலகம் ஒரு பக்கம் புயல் வேகத்தில் பயணம் செய்து வர - நாம் பழகிப் போன அதே பார்முலாக்களை விடாப்பிடியாய்த் தொடர்வது என்றேனும் ஒரு நாள் அயர்ச்சிக்கு ரோடு போடக் கூடும் என்ற மெல்லிய பயம் என்னுள்ளே உள்ளது //
  Me too often getting afraid seeing our friends negative opinion about Diabolic, graphic novels etc etc..For me, i need variety of comics and should not limit within selected genre and reprints..

  ReplyDelete
  Replies
  1. சார் .!டேஞ்சர் டயபாலிக் சமீபத்திய கதைகள் ஒரு அக்யூஸ்டின் சார்ஜ்ஷிட்டை படித்த மாதிரியே உள்ளது.இது போன்ற கதைகள் இல்லாமல் ஸ்பைடர் போல் இன்னொரு வில்லனுடன் மோதும் மாதிரியான கதைகள் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும்.அருமையான சித்திரம் .நல்ல தரம்.அதை ஏன் இழக்க வேண்டும்.?

   Delete
 62. Sir, please create link for pre booking of Tiger edition

  ReplyDelete
 63. டெக்ஸ் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் கதையான "டிராகன் நகரம் "டெக்ஸ் ராகவனுக்கே வழவழ கொழ கொழ கதையா ....


  அட ...டெக்ஸ் மாதவா .......:(

  ReplyDelete
  Replies
  1. தல பரணீதரன் அவர்களே.,

   ட்ராகன் நகரம் ஒரு பக்கா ஆக்ஷன் கதை. அதன் லேட்டஸ்ட் வெர்சன்தான் சட்டம் அறிந்திரா சமவெளி.
   என்ன ச.அ.சமவெளியில் வில்லர் வில்லராகவே இருக்கிறார். ட்ராகன் நகரத்தில் வில்லர் கில்லராக இருக்கிறார். அம்புட்டுதேன்.!!!!
   முதல் பக்கத்தில் தொடங்கும் கும்., சத்.,ணங்., டமால் , டூமீல் , ஆஆஆ சத்தங்கள் கடைசி பக்கம் வரை விரவியிருக்கும்.!

   கழுகு வேட்டை
   பவளச்சிலை மர்மம்
   வைகிங் தீவு மர்மம்
   மரணத்தின் நிறம் பச்சை
   என நிறைய இருக்கு கேட்பதற்கு.!

   ட்ராகன் நகரமும் ரீப்ரிண்ட் வேண்டும்தான்.! ஆனால் அதைவிட டாப் கதைகளை முதலில் கேட்போமே.!!!

   Delete
  2. முக்கியமாக கோடைமலர் 1987ல் வந்த பழிக்குப் பழி- அக்மார்க் டெக்ஸ் சாகசம் ...
   மலரில் வந்த காரணமாக நிறைய நண்பர்கள் படித்து இருக்க மாட்டார்கள் ...
   இரத்த முத்திரையும், ட்ராகன் நகருக்கு முன்பே மறுபதிப்பாக வர தகுதி வாய்ந்த கதை...........

   Delete
  3. //பழிக்கு பழி..அக்மார்க் கதை.//
   இது இது 100% உண்மை.!டிராகன் நகரம் கதையும் அற்புதம் தான்.அதை நான் படி படி என்று படித்து புத்தகமே நைந்து போய்விட்டது.புத்தகத்தின் நலன் கருதி படிப்பதை குறைத்து விட்டேன்.மொழிபெயர்ப்பு அற்புதமாக இருக்கும்.டெக்ஸின் அடாவடியை எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத கதை இது.!
   டெக்ஸ் விஜயராகவன் இதை நீங்கள் சொல்லிவிட்டீர்களே.!(தேம்பி தேம்பி அழம் படம் ஐந்து.!)

   Delete
  4. *பெரியார் ,கிளா ,, MV சார் .....இன்னும் என்னை தவறாக புரிந்து கொண்டிருக்க கூடிய மற்ற நண்பர்களுக்கும் .....
   ---இப்ப நானே ட்ராகன் நகரம் சூப்பர் , டாப் , அட்டகாசம் , பரபரப்பான ஒன்று ...இப்படி அடுக்கி கொண்டே செல்வதால் என்ன லாபம் ? கொஞ்ச காலம் முன்பு இங்கே ஆசிரியர் ஒரு லைனை போட்டார் ,"டெக்ஸ் ராகவனுக்கு டெக்ஸ் கதைகள் பிடிக்கலனாதான் ஆச்சரியம் "..என. ..அது உண்மைதானே ...நான் அப்படி சொன்னதால் தானே நடுவண் நண்பர்கள் டெக்ஸை பாராட்டுகீறீர்கள்...அதுதானே வேண்டும் .....அந்த வகையில் தலைக்கு மேலும் புகழ் .....மறுபதிப்புக்கு ஏன் ட்ராகன் நகரை விட மற்ற கதைகள் முந்துகின்றன என பிறகு ......தொடரும் ....(நாங்களும் சஸ்பென்ஸ் வைப்பமில்ல )...

   Delete
 64. 1. ஏப்ரலிலிருந்து புது ட்ராக்..// ஆனாலும் மிக மிக அநியாயம்? இதை நான் வன்மையாக கண்ணடிக்கிறேன்!! அதென்ன ஏப்ரல்? ஏதும் நல்ல மாசம் பாத்திருக்கீங்களா? எல்லா சந்தாவையும் போல ஜனவரியிலயே துவக்குவதற்கென்ன? மூஸ்மூஸ்!!!

  2. எகனாமி/ டீலக்ஸ் அறிவிப்பு நிச்சயம் எதிர்பாராத ஒன்று. இதுபோன்ற வாகான ஓரிரு சந்தர்ப்பங்களில் போட்டுப்பார்த்தால்தான் அதன் சாதக, பாதகங்கள் என்னவென்று புரியும் என்பதால் தாராளமாக முயற்சியுங்கள். வரவேற்பு இருந்தால் எதிர்காலத்திலும் தாராளமாக தொடரலாம். ஆனால் இந்த ஒரு முறை விற்பனையை வைத்து மட்டும் முடிவு கட்டிவிடாதீர்கள். ஏன்னா இதுமாதிரி முயற்சி முதல் தடவை என்பதால் பெரும்பாலான நண்பர்கள் இரண்டு பிரதியையுமே வாங்கக்கூடும். நானும்தான். இது தளபதி புக் என்பதாலும், முதல் தடவை என்பதாலும் மட்டும்தான். இல்லாவிட்டால் என் தேர்வு கலர் புத்தகமாக இருக்கும். ஹார்ட் கவர் நண்பர்கள் அனைவரிடமும் ஒரு எதிர்ப்பு கூட இல்லாமல் ஏகோபித்த ஆதரவு பெற்றுள்ளது. எனக்கு அந்த ஒரு விஷயத்தில் மட்டும் மாற்றுக்கருத்து உள்ளது. ஹார்ட் கவருக்கு நான் எதிரி இல்லை எனினும், அது கட்டாயம் வேண்டும் என்று சொல்லும் அணியில் நான் இல்லை. இல்லை எனிலும் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. என்ன படுத்துக்கொண்டு படிக்க இன்னும் கொஞ்சம் ஆர்ம்ஸ் பவர் தேவைப்படுகிறது, அவ்ளோதான் வித்தியாசம். சீக்கிரம் ஒரு முடிவு பண்ணிவிட்டு சொல்லவும். முன்பதிவு பண்ணனும்.

  ReplyDelete
 65. காலை வணக்கம் ஆசிரியரே!
  அந்த தனி 'ட்ராக்' ல தானே இனி 'டெக்ஸ் மக்ஸ்ஸி' கதைகளை வெளியிட போறீங்க?
  (பத்த வச்சாச்சா?)

  ReplyDelete
 66. டெக்ஸ் விஜய் ....கிட் ஆர்ட்டின் அவர்களே ....

  டிராகன் நகரத்தை விட சிறந்த கதைகள் டெக்ஸ் சாகஸத்தில் உண்டு .அதை மறக்க வில்லை ...மறுக்க வில்லை ...டிராகன் நகரத்திற்கு பதிலாக வேறு டெக்ஸ் கதைகளை மறுபதிப்பில் வெளியிடலாம் .அதையும் மறுக்க வில்லை ...

  ஆனால் அதற்காக டிராகன் நகரம் வழ வழா கொழ கொழா கதை என்றெல்லாம் தயவுசெய்து "கதை " விடாதீர்கள் .ப்ளீஸ் ..இதுவரை நான் அதிக முறை படித்த டெக்ஸ் கதை டிராகன் நகரம் மற்றும் பழி வாங்கும் பாவை ..தான் .டெக்ஸ் பிடிக்காதவர்கள் கூட டிராகன் நகரம் சிறந்த கதை என்பார்கள் ..

  அதை போய் பழிப்பது உங்கள் "ஐ"யை உங்கள் "பிங்கரால் "குத்துவது போல ..."ஹார்ட் " வலிக்கிறது ...பேசாமல் போய் விடுங்கள் ஆமாம் ....

  ReplyDelete
  Replies
  1. தலீவரே உங்களுக்கு மேலே பதில் போட்டுள்ளேன்.....சும்மா 1ம் பக்கத்தில் இருந்து முற்றும் போடும் வரை பார்க்குற அத்தனை பேரையும் மூக்கில் குத்தி முகரையை பெயர்த்து எடுத்து கொண்டே இருந்தால் ....அதை வேறு எப்படி சொல்வது தல......ட்ராகன் நகரில் , டெக்ஸ்கிட்ட குத்து வாங்காத ஆட்கள் கார்சன் ,, கிட், டைகர் ஜாக் மூவர்தானே......கர்னலையும் ஷரீஃப் பையும் வார்த்தைகள் கொண்டு குத்தி எடுத்து விடுவார் டெக்ஸ்....அந்த ஷரீஃப் போட நகரில் உட்கார்ந்து கொண்டே....ஷெரீஃப்பை கையாலாகதவன் - என என்னா தெனா வெட்டா டெக்ஸ் சொல்வார் .....சரி உங்களுக்காக படார், தடார் .....சாகசம் னு வேணா வைத்து கொள்வோம் ...

   Delete

  2. பரணிதரன் அவர்களே.!
   ட்ராகன் நகரம்., வழ வழா., கொழ கொழா ன்னு நான் சொல்லவில்லை.
   அது ஒரு ஒன்லைன் ஸ்டோரி. அதில் வில்லர் கண்ணில் படும் மனிதரையெல்லாம் கைமுஷ்டியாலும் கால் ஷூக்களிலும்தான் நலம் விசாரிப்பார்.! இரத்த நகரம் , நில் கவனி சுடு போன்ற கதைகளும் இப்படித்தான் என்றாலும் அவற்றில் இருக்கும் அழுத்தமான சம்பவ கோர்வைகள், ட்ராகன் நகரத்தில் கிடையாது.
   கதை முழுதும் ஆக்ஷன் ஆக்ஷன் ஆக்ஷனை தவிர வேறு எதுவும் கிடையாது. சைனாக்காரங்களை முகத்தை பெயர்ப்பது ஒன்றே மாறுபட்ட விசயம். (சைனா வில்லன்கள் வேறு கதைகளில் பார்த்த ஞாபகம் இல்லை.)
   சட்டம் அறிந்திரா சமவெளி டெக்ஸின் டாப் ஸ்டோரிகளில் ஒன்று என்று நீங்கள் ஒத்துக்கொண்டால்., ட்ராகன் நகரமும் டாப் ஸ்டோரிதான்.!
   ஆனால் மறுபதிப்பில் ட்ராகன் நகரம் நிச்சயம் வரும். அதுவும் வண்ணத்தில்.! ! காத்திருப்போம்.! !!

   Delete
  3. அழுத்தமான டெக்ஸ் அதிரடி.அற்புதமான கதை.டெக்ஸ் என்றால் இப்படித்தான் எனும் முன்னுரைதான் இக்கதை.ஆனாலும் அலட்டலான அந்த சவால் ...சுதாடி நிக்சன் துணணயுடன் பக்கத்துக்கு பக்கம் ....அழுத்தமான கதை

   Delete
 67. சார் சீக்கிரமா கறுப்பு வெள்ளை டைகருக்கு கூரியர் கட்டணம் சேர்த்து எவ்வளவு என்று சொல்லுங்கள் ..பணம் அனுப்ப வேண்டும் ..இந்த மாயாஜீ வேற உங்களுக்கு புரியலை புரியலைன்னு சிரிச்சுட்டே இருக்காரு ..அவர் சொல்ற மாதிரி இருந்தா அதையும் சொல்லுங்க ...வண்ணத்திற்கு பணம் கட்டுகிறேன் ..

  டைகர் கதை மாதிரியே டைகர் சந்தாவும் தலையை பிச்சுக்குது ...:(

  ReplyDelete
 68. ஹலோ ..நண்பர்களே .டிராகன் நகரம் மறுபதிப்பு வேணுமா வேண்டாமா ங்கிறது இங்கே விசயம் இல்லை ..டிராகன் நகரத்துல டெக்ஸ் எல்லாத்தையும் அடிக்கிறார்ன்னா மத்த கதைல எல்லாத்திலேயும் சோறா ஊட்டி விடுறாரு ....கிர்ர் ....

  ReplyDelete
  Replies
  1. தலீவர் அவர்களே.!
   ட்ராகன் நகரம் சூப்பரான கதை.! இல்லேன்னா 50 ஆவது மலரா வருமா.? அட்டகாசமான கதை.! இல்லேன்னா கருப்பு வெள்ளையில வருமா.? அற்புதமான கதை இல்லேன்னா டெக்ஸ் அதுல இருப்பாரா.?
   டெக்ஸ் வில்லரின் டாப் லிஸ்டில் நம்பர் ஒன் கதை ட்ராகன் நகரம் ட்ராகன் நகரம் ட்ராகன் நகரம்.!


   (பரணி! நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன். கரெக்டா புக்கை கொடுத்திடுங்க ஆமா! )

   Delete
 69. சார் ஒரு வெள்ளோட்டம்...டைகரை வைத்து ...வாசகர்கள்நிலையை அறிய உதவலாம்.எனக்கும் இரண்டிலும் ௐன்று

  ReplyDelete