Powered By Blogger

Friday, September 25, 2015

தவணையில் ஒரு பதிவு !

நண்பர்களே,

வணக்கம்! விநாயகர் சதுர்த்தியைத் தாண்டிய நாட்கள் எங்கள் ஊருக்கு எப்போதுமே பரபரப்பானவையாக இருப்பது வழக்கம். அக்டோபர் இறுதிகளிலோ / நவம்பர் துவக்கத்திலோ வருகை தரும் தீபாவளியை முன்னிட்டு – பட்டாசுக் கடைகள் எல்லாமே தூக்கத்தை முடித்துக் கொண்டு கண் திறக்கக் துவங்குவது இந்த வேளைகளில் தான்! நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஆர்டர் தந்திடும் பொருட்டு ‘படா முதலாளிகள்‘ சிவகாசியை நோக்கிப் படையெடுப்பதும் இப்போது முதல் தான்! So- செப்டம்பர் இறுதி; அக்டோபர் என்றாலே ஊருக்குள் ஒரு சின்ன buzz இருப்பது நடைமுறை! அந்தப் பரபரப்பு சிறுகச் சிறுக பட்டாசு அல்லாத இதர தொழில்களுக்கும் தொற்றிக் கொள்ள அதிக நேரமெடுக்காது என்பதால் – ஆவலாய்க் காத்துள்ளோம் நாமும்!

அக்டோபரின் வருகைக்குத் தயாராகும் விதமாய் ரிப்போர்டர் ஜானியின் “காலனின் காலம்” + திருவாளர் லக்கி ஜுனியரின் “புயலுக்கொரு பள்ளிக்கூடம்” – இரு இதழ்களுமே தயாராகி விட்டன! இதோ – நமது ஆதர்ஷ சுட்டி லக்கியின் அட்டைப்பட first look; மற்றும் உட்பக்கங்களின் preview! ‘Oklahoma Jim’ என்ற பெயரோடு வெளிவந்துள்ள இந்தக் கதை – சுட்டி லக்கி தொடரின் ஆல்பம் # 2. ஆனால் சுட்டிக்கென தனியாக தொடர் ஏதும் இல்லாத காரணத்தால் இவை one shots போலவே பாவிக்கப்பட்டு, லக்கி லூக்கின் கதை வரிசையிலேயே இடம்பிடிக்கின்றன !  1997-ல் ஒரிஜினலாக வெளிவந்த கதை என்பதால் இதனில் கதாசிரியர் மோரிஸ் பணியாற்றவில்லை! இருப்பினும் அந்தக் குட்டிப் பயலும், குட்டி ஜாலி ஜம்பரும் இணைந்து frame-களில் வலம் வரும் வேளைகளில் வசீகரத்தில் துளியும் குறை தெரியவில்லை! மோரிஸே பெருமைப்பட்டிருப்பார் இவற்றைக் கண்டு!! 


இவையெல்லாம் டிஜிட்டல் யுகத்தில் பிறந்த கதைகள் என்பதால் – கலரிங் பாணிகளும் பட்டையைக் கிளப்புவதில் வியப்பில்லை! And இம்முறையும் நம்மவர்கள் அச்சில் சிரத்தையோடு பணி செய்திருப்பதால் – சுட்டி லக்கி ஹேப்பி அண்ணாச்சி! 2013-ல் ஈரோட்டுத் திருவிழாவின் சமயம் இதன் முதல் இதழ் வெளியானதும்; அந்த “நாக்கார்; மூக்கார் பாஷை” ஒரு ரவுண்ட் வந்ததும் நமது வலைப்பதிவின் ஒரு சந்தோஷ அங்கம்! இந்த லிங்க்கைப் பிடித்துப் போய் பார்த்தால் – அந்த நாட்களது உற்சாகத்தை திரும்பவும் ஒரு முறை வாழ்ந்து பார்த்த அனுபவம் கிட்டிடக் கூடும்! http://lion-muthucomics.blogspot.in/2013/08/blog-post.html


அக்டோபரின் இதழ் # 3ம் தயாரே; ராப்பர் நீங்கலாக! பொன்னன் அதிகமாய் நமக்கு நடைப்பயிற்சி வழங்காதிருப்பின் – ”சிறைப் பறவைகள்” கூட அடுத்த சில நாட்களில் முழுமையாகத் தயாராகி நிற்கும்! அதன் பின்னே பணிகள் பாக்கியிருப்பது பிரபஞ்சத்தின் புதல்வரின் double ஆல்பத்தின் மீதே! தோர்கலின் கதைகள் ஒரு classic ரகம் என்பதால் அவற்றின் மொழிநடைகள் ஒருவிதப் புராதனக் கலவையில் தான் இருந்திடும்! மொழிபெயர்ப்பு பணிகள் பற்றிய விவாதம் இங்கே ஒன்றிரண்டு நாட்களாய் ஓடிக் கொண்டிருக்கும் போதே என் மேஜையில் கிடந்ததோ – ‘மகாப் பிரபு‘; ‘தயாள தெய்வங்கள்‘; ‘பேதைப் பெண்ணே‘ என்ற ரீதியிலான வரிகளைக் கொண்ட கதை! தற்செயலாய் நிகழும் இது போன்ற coincidences-ஐ எண்ணிப் புன்னகைக்காமல் இருக்க இயலவில்லை! தோர்கலும் நவீனமாய்; சமகாலத் தமிழ் பேசினால் எவ்விதமிருக்குமென்று கற்பனை செய்து பார்த்தேன்...! ”சாமி... வாங்குகிற டின் பற்றாதா?” என்று மைண்ட்-வாய்ஸ் உரக்க ஒலிக்க, ஒழுங்கு மரியாதையாய் எடிட்டிங் வேலைகளுக்குள் தலையை நுழைத்துக் கொண்டேன்! இதில் ஒரு highlight என்னவெனில் இந்த தோர்கல் ஆல்பங்களின் தமிழாக்கம் நானோ – கருணையானந்தமோ கிடையாது; நமது சீனியர் எடிட்டரே! சில பல மாதங்களுக்கு முன் – “போரடிக்கிறது; ஏதாவது எழுதட்டுமா?” என்று கேட்ட பொழுது நான் டைலன் டாக்கின் ‘நள்ளிரவு நங்கையின்‘ ஆங்கில ஸ்கிரிப்டைக் கொடுத்திருந்தேன்! முத்து காமிக்ஸ் வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் எப்போதாவது ஒரு கபிஷ் கதைக்கோ; இன்ன பிற filler pages-க்கோ தந்தையார் மொழிபெயர்ப்பதைப் பார்த்திருக்கிறேன்; ஆனால் நானறிந்த வரைக்கும் ஒரு முழுநீளக் கதையில் அவர் பணியாற்றியது கிடையாது. அந்த அனுபவமின்மை (?!!!) டைலன் டாக்கின் மொழிபெயர்ப்பில் தெரிந்தது! வசனங்களுக்கு நம்பர் போடுவதில் தொடங்கி – கதையின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கத் திணறியிருந்தது வரை முதன்முறையாக பேனா பிடிக்கும் பாங்கை வழிநெடுகிலும் இனம் காண்பதில்  சிரமமே இருக்கவில்லை! அதிலும் க்ளைமேக்ஸில் டைலனின்  டயலாக்குகள் ரொம்பவே பேஸ்தடித்திருந்தன! அவற்றை இயன்றளவு சரிக்கட்டிட முயன்று தோற்றுப் போய்; கதையின் இறுதிப் பகுதியை முழுவதுமாய் rewrite செய்திருந்தேன்! So- 'இன்னொரு கதை இருந்தால் கொடுத்தனுப்பு !' என்று கேட்ட போது நிறையவே விழித்தேன்! அப்புறம் தான் தோர்கலின் அந்த classic ஸ்டைல், அப்பாவின் எழுத்துப் பாணிக்கு சரிவரக் கூடுமோ என்று தோன்றியது ! தினமும் காலையில்  ஆபீஸிற்கு வந்து எழுதத் தொடங்கி  ; சுடச் சுட அவற்றை என்னிடம் காட்டி மாற்றங்கள் / திருத்தங்கள் செய்வதென்பது தொடரும் நாட்களில் நிகழ்ந்தது !!   இறுதியில் ஒரு முறை முழுவதுமாய் rewrite செய்து – fresh ஆக என்னிடம் ஒப்படைத்ததை நமது டைப்செட்டிங் பிரிவில் தந்து    விட்டு நான் அடுத்த பணிகளுக்குள் மூழ்கியிருந்தேன்! நிறைய  வாசிப்பது ;எழுதுவது என்பதெல்லாம் கண்களுக்கு சிரமம் என்பதால் தேவையற்ற strain வேண்டாமென அப்பாவுக்கு  டாக்டர்கள் ஏற்கனவே சொல்லியிருந்ததால் – அந்த ஆரம்பத்து  ஆர்வ முயற்சிகளை நான் அதன் பின்பு ஊக்குவிக்கவில்லை! அதே சமயம் டைப்செட்டிங் முடிந்து கிடந்த தோர்கலை ‘அப்புறமாய்ப் பார்த்துக் கொள்ளலாம்‘ என மேஜையில் அடுக்கி விட்டிருந்தபடியால், அப்பாவின் மொழிபெயர்ப்பு எவ்விதமிருன்தது என்பதைப் பார்க்க மறந்தும் போயிருந்தது ! டைலன் டாக்கின் அனுபவம் அடிமனதில் கும்மியடிக்க, ஒரு லேசான பயத்தோடு தான் போன வாரம் கதையைக் கையில் எடுத்தேன் ! ஆரம்பத்தில் லேசாக ஆட்டம் தந்த வண்டி, போகப் போக ஸ்மூத்தாகவே பயணிப்பதை உணர்ந்த போது நிம்மதிப் பெருமூச்சு ! முதல் கதையை முடித்து விட்ட நிலையில் பெரிதாக மேடு-பள்ளங்கள் தட்டுப்படவில்லை பயணத்தில் ! So கதை # 2-க்குள் இன்றைக்கு புகுந்து, வெற்றிகரமாய் பணிகளை முடித்து விட்டேனெனில், ஒரு "இளம் 74 வயதே ஆன எழுத்தாளரின்"  படைப்பு தயாராகியிருக்கும் ! "ஈகோ என்றால் வீசம்படி எவ்வளவு ?" என்பது தான் எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்தே ஏன் தந்தையின் அடையாளம் ! 18 வயதாகும் நாட்களிலேயே நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் முகம் சுளிக்காது சரி சொன்னவர், 30 ஆண்டுகள் கழிந்த பின்னும் டியூஷனுக்கு செல்லும் மாணவனைப் போல ஒரு கட்டுரை நோட்டோடு ஆபீசுக்கு வந்து எனக்கு எழுதிக் காட்டிய அந்தக் காலைகள் மறக்க இயலாதவை ! "தந்தைக்குக் கற்பித்த பெரிய அப்பாடக்கர் " என்ற ரீதியில் இதனை நான் சொல்ல முனையவில்லை ! அது போன்ற குடாக்குத்தன கற்பனைகள் பிழைப்புக்கு  ஆகாது என்பது எப்போதுமே நினைவில் கொண்டிருப்பேன் ! ஆனால் இந்த வயதிலும் ஒரு புது முயற்சியின் பொருட்டு அவர் காட்டிய முனைப்பையும், ஆர்வத்தையும் highlight செய்திடவே இந்த update !

Moving  on , சமீப வாரங்களாய் ரீங்காரமிட்டு வரும் 'டெக்ஸ் சந்தா உண்டா - இல்லியா ?' என்ற விவாதங்களின் மீதாகவும் கவனத்தைத் திருப்புவோமா ? 2016-ன் அட்டவணைத் திட்டமிடல்கள் பற்றிய பேச்சு துவங்கிய சமயங்களிலேயே அக்டோபர் இறுதி வரை பொறுமை காத்திட வேண்டியிருக்குமென தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தேன்! இருப்பினும் நண்பர்களில் சிலர் தொடர்ச்சியாய் அதே கேள்வியை முன்வைத்து வருவது தர்மசங்கடமானதொரு நிலையை உருவாக்கி வருகிறது ! ஒவ்வொரு ஆண்டும் அட்டவனையை அக்டோபர் இறுதி வரையிலும் நாம் இழுப்பதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணமுண்டு ! ஒவ்வொரு அக்டோபரின் துவக்க வாரத்தில் அரங்கேறும் பிரான்க்பர்ட் சர்வதேசப் புத்தக விழாவானது எல்லா முக்கியப்  பதிப்பகங்களின் காலெண்டரிலும் ஒரு HUGE HUGE தருணம் ! காமிக்ஸ் பதிப்பகங்கள் மட்டுமென்றில்லாது, எல்லா ரகப் பதிப்பகங்களும் அந்த அக்டோபரின் 5 நாட்களுக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பிலிருந்தே முஸ்தீபுகளில் இறங்கி விடுவார்கள் ! 'தலை போகின்ற அவசரம்' ; நெருக்கடி ' என்றால் தவிர செப்டெம்பரில்,  ஒவ்வொரு பதிப்பகத்தின் லைசென்சிங் பிரிவிலிருந்தும் தவித்த வாய்க்கு ஒரு டம்ளர் தண்ணீர் கூடக் கேட்டு வாங்கிடவே இயலாது ! இது தான் யதார்த்தம் என்பதால் தொடரும் ஆண்டுக்கான கதைத் தேர்வுகள் ; அவற்றுள் எது-எதுக்கெல்லாம் கலரில் டிஜிட்டல் கோப்புகள் உள்ளன ? ; எவை black & white -ல் மாத்திரமே சாத்தியம் ? என்பதெல்லாமே அந்த பிரான்க்பர்ட் fever ஓய்ந்தான பின்னே தான் இறுதிப்படுத்திட இயலும் ! ஆகஸ்ட் - ஐரோப்பிய கோடை விடுமுறைகள் ; செப்டெம்பர் - அவர்ளது பிரான்க்பர்ட் முஸ்தீபுகள் எனும் பொழுது - ஜூலையிலேயே மறு ஆண்டுக்கான வேலைகளை செய்து முடிப்பது தான் நம் முன்னே உள்ள alternative ! ஆனால் அந்த சமயங்களில் நமது பணிகள் உச்சத்தில் இருப்பது ஒரு பக்கமெனில், நடப்பு ஆண்டில் எந்தெந்த நாயகர்கள் எவ்விதம் உங்களிடம் மார்க்குகள் வாங்குகிறார்கள் என்பதை நான் பார்த்திடவும் ஜூலை ரொம்பவே early அல்லவா ? So இவையெல்லாம் எங்களது back end சிக்கல்கள் ! இதன் பொருட்டு நான் அனுஷ்டிக்க அவசியமாகிடும் மௌனத்தை ஆளுக்கொரு விதமாய் அர்த்தம் பண்ணிக் கொண்டு சஞ்சலம் கொள்வதன் லாஜிக் புரியவில்லை ! And இதுமட்டுமன்றி - புது நாயகர்கள் சேர்க்கை - ஏற்கனவே உள்ள ஆசாமிகளில் யாருக்கேனும் தர வேண்டிய கல்தா பற்றியெல்லாம் சிந்திக்க சற்றே நேரம் எடுத்துக் கொள்கிறேனே guys ? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இதழும் ஒரு விதத்தில் ஒரு புதுப் பாடம் கற்பித்து வரும் நாட்களில், செய்த சொதப்பல்களிலிருந்து பாடம் படித்துக் கொள்ளவும் இந்தக் கூடுதல் அவகாசம் உதவிடும் தானே ? 

சமீபமாய் 'என் பெயர் டைகர்' அறிவிப்பினைத் தொடர்ந்து விலை பற்றி எழுந்த சர்ச்சைகளும், விமர்சனங்களும் நான் எதிர்பாரா ஒரு விஷயம். அன்றைய பொழுதை நாம் கடந்து வந்திருப்பினும் சந்தா அறிவிப்பினில் இதே போன்ற உராய்வுகள் நேர்ந்திடக் கூடாதே என்ற எண்ணத்தை என்னுள் ஆழமாய் விதைத்த நாள் அது ! 'ஒரே நாளில் கல்லா கட்டப் பார்க்கிறேன்' என்ற ரீதியிலான விமர்சனங்களும், அதன் பின்னணியாகச் சொல்லப்பட்ட காரணங்களும் என்னை நிறையவே சங்கடப்படுத்தின ! So இனியும் இது போன்ற வெற்றுக் கல்வீச்சுகளுக்கு முகாந்திரம் தந்திடக் கூடாதென்ற வைராக்கியம் உள்ளே குடிபுகுந்த சமயமே, சந்தாவின் திட்டமிடலில் ஆடம்பரங்களை இயன்ற அளவு தவிர்த்தல் நலம் என்றும் எனக்குள் ஒரு ஜாக்கிரதையுணர்வு குடி புகுந்தது !  பற்றாக்குறைக்கு 2 தனித்தனி இதழ்களாய் ரூ.75+ ரூ.100 என்ற விலைகளில் (ஓராண்டுக்கு முன்பாக) அறிவிக்கப்பட்டிருந்த டெக்ஸ் கதைகள் ஒருங்கிணைந்த தீபாவளி மலராகிடும் போது அந்த 560 பக பருமனுக்கு ஈடுதர பைண்டிங்கில் book sewing முறையை நடைமுறைப்படுத்திட வேண்டி வரும் ! இல்லையேல் நாளாசிரியாய்'நடுவிலே சில பக்கங்களைக் காணோம்' என்ற கதையாகிடும். தையலுக்கு ; அதைத் தொடரும் பைண்டிங் முறைகளுக்கு ; கூடுதல் கன ராப்பருக்கு ; அதனில் நாம் செய்ய நினைத்துள்ள சிறு வேலைப்பாட்டிற்கு எனும் பொருட்டு  (சந்தாவில் மாற்றம் செய்யாது) ரூ.25 விலையினை கூட்டினால் - "குனிந்தால் குட்டா ? நிமிர்ந்தால் தான் ஆச்சா ?" என்ற ரீதியில் குரல்கள் ஒலிக்கும் நாட்களிவை எனும் போதே - தொடரும் ஆண்டுக்கான costing-களை நிதானமாகவே சரி பார்த்துக் கொள்வோமே என்று நினைக்கத் தான் தோன்றுகிறது ! அதன் பொருட்டும் இந்த அவகாசம் அவசியம் தானே ? பாதி வழியில் ஏதேனும் மாற்றமெனில் அதன் பொருட்டும் குட்டு வாங்கவிருப்பது அடியேன் தான் எனும் போது அதனிலிருந்து தப்பிக்கவாவது ஹெல்மெட் மாட்டிக் கொள்ள கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்கிறேனே ?! 

எல்லாவற்றிற்கும் மேலாக - கோரப்படும் அபிப்பிராயங்கள் சகலத்தின் மீதும் உடனடியாய் positive பலன் தெரியாது போயின் - அது கருத்துச் சொன்னவர்களுக்கான அவமரியாதை என்ற ரீதியிலான சிந்தனைகளும் சங்கடத்தைத் தருகின்றன ! மனதில் அவ்வப்போது தோன்றுவதை தயங்காது இங்கே வெளிப்படுத்துவதே நமது 3.5 ஆண்டுகளின் பாணி! And மாறிடும் ரசனைகளுக்கேற்ப  நமது தீர்மானங்கள் ; சிந்தனைகள் வளைந்து கொடுக்கும் விதமாய் flexible ஆக ; fluid ஆக இருத்தல் அவசியம் என்றும் நிறைய முறைகள் வலியுறுத்தியுள்ளேன் ! இங்கே நான் கோரிப் பெரும் inputs சகலமும், சரியான சந்தர்ப்பத்தில் அமலுக்கு வருவது தான் நடைமுறை ! ஆனால் 'இன்றே-இப்போதே' என்ற ரீதியிலான எதிர்பார்ப்புகள் இந்த ஒற்றை விஷயத்தில் அமலுக்கு வருவது எத்தனை தூரம் practical ? 

And it's not like I have decided against a டெக்ஸ் சந்தா !! And it's not like I'm behind schedule either !! அக்டோபர் இறுதி வரை அவகாசம் கோரியிருந்த நான் அதற்கு மேலும் உங்களைக் காக்க வைப்பின் உங்கள் சலனங்கள் புரிந்திடும் ; ஆனால் அதற்கு ஒன்றரை மாதங்கள் பாக்கியிருக்கும் நாட்களிலிருந்தே இதன் பொருட்டு தூக்கங்களும், புன்னகைகளும் தொலைந்திடத் தான் வேண்டுமா ?? More than anything else - உங்களை நான் அலைய விட்டுப் பார்ப்பது போலவும் ; 'சார்..சார்..' என்று என்னைத் தாஜா செய்ய வைப்பதாகவும் தோற்றம் எழுந்திடவும் வாய்ப்புகள் உண்டன்றோ guys ? "வாங்கிட ரெடி !"  என்று நீங்கள் தயாராய் நிற்கும் போது - 'சார்..சார்..என்று உங்கள் தயவுகளை நாடி முன்னே நிற்க வேண்டியவன் முறைப்படி நான் தானே நண்பர்களே ?  நான் கோருவதெல்லாம் - இடையிடையே மாற்றங்களுக்கு அவசியம் தரா ஒரு சுவாரஸ்யமான அட்டவணையினை final செய்திட முறையான அவகாசம் மட்டுமே !! 

சரி, இத்தனை தூரம் வந்தான பின்னே - தேங்காயை உடைத்தே விடுவோமே  ! "தனி டெக்ஸ் சந்தா" எனும் பொழுது - நம் முன்னே உள்ள options - இரண்டே ! 

OPTION # 1 : இத்தாலிய பாணியில் மாதமொரு 104 பக்க black & white இதழ் ; கதைகள் தொடர்ச்சியாய் ஓடிக் கொண்டே இருக்கும் ; so ஆண்டொன்றுக்கு 12 தனித்தனி இதழ்கள் ! 

இந்தத் தொடர்கதை சங்காத்தமே வேண்டாமெனில் :

OPTION # 2 - ஆண்டுக்கு 6 இதழ்கள் (220 பக்க complete சாகசத்தோடு)! நாம் தற்சமயமே இது போன்ற கதைகளில் கிட்டத்தட்ட நான்கோ  / ஐந்தோ வெவ்வேறு பாணிகளில் வெளியிட்டு வருகிறோம் தானே ? So தொடரும் ஆண்டில் "6" எனும் எண்ணிக்கையைத் தொட்டு விட்டதன் ஒரே காரணத்தால் அதனை "தனி டெக்ஸ் சந்தா" என்று அறிவிப்பதில் பெரிதாய் புதுமை ஏதும் இல்லையல்லவா ? So தற்சமயத் திட்டமிடலின்படி ஆண்டுக்கு 6 டெக்ஸ் இதழ்கள் - தனித் தனி இதழ்களாய் - ரெகுலர் சந்தாவிலேயே என்றே இறுதி செய்துள்ளேன் ! இவை தவிர TEX மறுபதிப்பு (கள்) !

இதற்கிடையே உங்கள் எதிர்பார்ப்புகள் - ரெகுலர் சந்தாவில் வழக்கம் போல் நாலு டெக்ஸ் + இன்னுமொரு பிரத்யேக டெக்ஸ் சந்தா வழித்தடமா ? என்பது எனக்குப் புரியவில்லை ! எனது திட்டமிடல்களின்படி 6 ரெகுலர் (புது) இதழ்கள் என்றாலே சுமார் 1400 பக்கங்கள் எனும் பொழுது - இதற்கு மேலாக ஒரு EXCLUSIVE TEX TRACK வேறு சேர்ப்பதெனில் ஆண்டுக்கு சுமார் 3000 பக்கங்களுக்கு வறுத்த கறிக் காதலருக்கும், இரவுக் கழுகாருக்கும் நான் பன்ச் டயலாக் எழுதியே உங்களைப் பஞ்சராக்கும் நிலை தான் புலரும் ! And சந்தேகமே இல்லாது அது நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமானமாகிடும் ! "டெக்ஸ் மோகம்" உள்ளதென்பதற்காக அதற்கு முறையான நியாயம் செய்ய முடியாது போயின் அந்த முயற்சி வியர்த்தமாகிப் போகும் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது ! 

So - இது தான் நமது நிலைப்பாடு - படைப்பாளிகளின் இறுதி தலையசைப்பிற்கு உட்பட்டு ! இதனில் ஒருக்கால் OPTION #1 - worth a try - மாதந்தோறும் 'தல' ஒரு 104 பக்கத் தனி இதழில் வரட்டுமே என்று நீங்கள் நினைப்பின் - நான் ரெடி ! நீங்கள் ? உங்கள் சிந்தைகளை அறிந்திட ஆவலாய்க் காத்திருப்பேன் ! Bye for now guys !

P.S : October release - in Europe !! பாருங்களேன் !


162 comments:

 1. @ ALL : அப்பாவுக்கு சின்னதாயொரு மருத்துவ சிகிச்சையின் அவசியம் ; அதன் பொருட்டு இரு நாட்களாய் சென்னைப் பயணம் ; அக்டோபர் இதழ்களின் இறுதிப் பணிகளின் மும்முரம் என இந்தப் பக்கம் தலைகாட்டிட அதிக அவகாசமில்லாது போனது ! இடைப்பட்ட அந்த நாட்களுக்குள் இங்கே அரங்கேறி நிற்கும் காட்சிகள் நிச்சயமாய் நமக்குப் பெருமை சேர்க்கும் ரகத்தினில் இல்லை !

  சமூக வலைத்தள நாகரீகங்கள் பற்றியோ ; அவற்றுள் தாக்குப் பிடிக்கும் வழிமுறைகள் பற்றியோ கருத்துச் சொல்லும் அளவுக்கு எனக்கு ஞானமும் கிடையாது ; சமூக வலைத்தளப் பயன்பாட்டு அனுபவமும் கிடையாது ! ஆனால் அடிப்படை மரியாதைகளே ஏதேதோ காரணங்களுக்காக காற்றில் பறந்து போகும் வேளைகளிலும் இதுவும் கூட இன்றைய யுகத்தின் ஒரு பரிமாணம் தான் என எடுத்துக் கொள்ள எனக்கு முடியவில்லை ! உஷ்ணமான வார்த்தைகள் ; அதற்குப் பதிலாய் பின்னூட்டங்கள் ; ஏளனங்கள் ; புனைப்பெயரில் அர்ச்சனைகள் ; பாதாளம் செல்லும் மரியாதையுணர்வுகள் ; உயர்ந்து செல்லும் கொதிநிலைகள் என்பதை எல்லாம் சங்கடத்தோடு பார்க்கும் பொழுது ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிகிறது ! இன்றைய சர்ச்சைகள் ஒற்றை நாளின் பிறப்பல்ல ! காமிக்ஸ் எனும் அழகான ரசனைக்குப் பின்னே குமுறக் காத்திருந்த எரிமலையாய் ஏராளமான முரண்கள் ; கருத்து பேதங்கள் ; கோபங்கள் ; ஈகோ மோதல்கள் ; வியாபார முகமூடிகள் நம்மிடையே புதையுண்டு இருந்திருக்கின்றன ! கிடைத்த முதல் வாய்ப்பினில் அவை அனைத்துமே வீதிக்கு வந்து சேர ஒருவரையொருவர் காயப்படுத்திப் பார்க்கும் படலங்களும், அவற்றை கைதட்டி ஒருபக்கமிருந்து ரசிக்கும் காட்சிகளும் தான் இப்போது ஜரூராய் அரங்கேறி வருகின்றன !

  பிரச்சனைகள் துவக்கம் கண்டது எங்கே ? இதற்குத் தீர்வென்ன ?என்றெல்லாம் நான் அலசி, ஆராய்ந்து நடுவராகிட முனைந்தால் காயங்கள் எல்லாமே raw -வாக உள்ள இந்த நொடியில் புண்களை இன்னமும் கொஞ்சம் கிளறி விட்டதுக்கு சமமாகிப் போகும் ! And எதுவுமே நடவாதது போல, கவனங்களைத் திசைதிருப்ப நான் புதுசாய் ஒரு பதிவிடுவதும் உச்சக்கட்ட அபத்தமாக இருந்திடும் ! இப்போதைய உடனடித் தேவை சலனம் கண்ட மனங்கள் கொஞ்சம் சமனம் கொள்ளவொரு அவகாசம் மட்டுமே என்பதால் இரண்டல்லது, மூன்று வாரங்களுக்கு நமது வலைப்பக்கம் மெளனமாக இருந்திடும் ! இந்தச் சின்ன விடுப்பு எல்லா நோவுகளுக்கும் மருந்தாகிப் போகும் என்ற பகல்கனவில் நானில்லை ; நான் எழுதாது போய் விட்டால் ஞாயிறுகள் புலராமல் போகாது என்பதையும் புரிந்திடாமல் இல்லை ! ஆனால் தற்போதைய சூழலில் காலத்துக்கும் , கடவுளுக்கும் மட்டுமே மருந்திடும் ஆற்றலுண்டு என்றான பின்னே குறுக்கே நான் நந்தியாய் நிற்க விரும்பவில்லை ! எப்போது காமிக்ஸ் எனும் ரசனை பின்சீட்டுக்குப் போய் விட்டதோ அப்போதே இந்த வலைப்பதிவின் நோக்கமும் பரணுக்குப் போயாகின்றது !

  'இதுவும் ஒரு வகை ப்ளாக்மெயில் !" என்றும் ; "செமையா நடிக்கிறாண்டா " என்றும் ; "ஆஹா..தீபாவளி சீக்கிரமே வந்திடுச்சு டோய்" என்றும் எண்ணச் சிதறல்களை நமது இந்த தற்காலிக விடுப்பு ஏற்படுத்திடும் என்பதைக் குழந்தைப்புள்ளை கூட அறிந்திருக்கும் ! ஆனால் மூஞ்சியிலேயே ஓராயிரம் மிதி வாங்கியதொரு அனுபவஸ்தனுக்கு இதெல்லாம் ஒரு விஷயமாகிட முடியுமா - என்ன ? So இங்கு காயம்கண்ட நண்பர்களிடம் ஒரு பகிரங்க மன்னிப்புக் கோரலோடும் ; சங்கடத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் இதர நண்பர்களிடம் எனது ஆற்றமாட்டாமையையும் தெரிவித்த கையோடு ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொள்கிறேன் !

  2016-ன் அட்டவணையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேன் guys ! யாருக்கு எவ்விதமோ - ஆனால் மூன்றரை பிளஸ் ஆண்டுகளாய் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப் போய் விட்ட இந்தப் பக்கங்களை நிறையவே மிஸ் செய்வேன் ! Adios for now guys !

  ReplyDelete
 2. டேக் கேர் சார்.

  சீனியர் எடிட்டரின் நலன் மிகவும் முக்கியம்.

  கனத்த இதயத்துடன் பாதிகக்ப்பட்ட ஒரு வாசகன்.

  ReplyDelete
 3. அய்யா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்..

  ReplyDelete
 4. Take care sir .. Will pray for a speedy recovery and relief of the Tamil Comic Doyen ...

  ReplyDelete
 5. தந்தை விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறோம் சார் !

  ReplyDelete
 6. சார் ...தங்கள் தந்தையார் விரைவில் பூரண நலமடைய இறைவனை வேண்டுகிறேன் ....


  ReplyDelete
 7. சார் ...தங்கள் தந்தையார் விரைவில் பூரண நலமடைய இறைவனை வேண்டுகிறேன் ....

  ReplyDelete
 8. சார் ...தங்கள் தந்தையார் விரைவில் பூரண நலமடைய இறைவனை வேண்டுகிறேன் ....

  ReplyDelete
 9. சார் ...தங்கள் தந்தையார் விரைவில் பூரண நலமடைய இறைவனை வேண்டுகிறேன் ....

  ReplyDelete
 10. அப்பா குணம் அடைய ஆண்டவனை
  வேண்டுகிறேன்.
  காமிக்ஸ் உலக ஜாம்பவான் தங்கள்
  தந்தை வி ரைவில் வீடு திரும்ப
  வேண்டுகிறேன்

  ReplyDelete
 11. தந்தையார் விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன் சார் !

  ReplyDelete
 12. சீனியர் எடிட்டர் பூரண சுகம்பெற பிரார்த்திக்கிறேன்.

  @ எடிட்டர் சார்

  ' தவணையில் ஒரு பதிவு'னு சரியாத்தான் பேர் வச்சிருக்கீங்க! அடுத்த தவணை இன்னும் மூன்று வாரங்களுக்குப் பிறகா சார்?

  இதைவிடவும் மோசமான/முகம்சுளிக்கும்படியான சம்பவங்கள் இந்தத் தளத்திற்கு அத்துப்படிதானே சார்? அவற்றோடு ஒப்பிட்டால் இப்போதைய பிரச்சினை ஒரு Average ரகம் தானே? ஏன் இந்த விபரீத(!) முடிவோ? :(

  3 வாரங்களுக்குப் பிறகும் இதுமாதிரி/ இதைவிட மோசமான வாதங்கள் இங்கே எழுந்தால் மறுபடியும் பொங்கலுக்குத்தான் அடுத்த பதிவா சார்?

  'இரண்டு மாதங்களுக்கு வெளிநடப்புச் செய்கிறேன்' என்று முகத்தைத் தூக்கிக்கொண்டு இங்கிருந்து ramp-walk செய்வது 'காஜா பாய்ஸ்'களின் ஸ்டைல் ஆயிற்றே சார்? நீங்களும் அதே பாணியில் வெளியேறினால் இந்த உலகம் என்ன சொல்லும்?

  சரி, நீங்க ஒரு தடவ முடிவு பண்ணிட்டா அப்புறம் உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்கன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க. அதனால உங்க முடிவுல நீங்க உறுதியாவே இருங்க! ஆனால், சனிக்கிழமை இரவாகிவிட்டாலே அடுத்த பதிவுக்காக வார்த்தைகளை கோர்க்கத் தொடங்கிவிடும் உங்கள் மனசுக்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறீர்களாம்? கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால், பூதாகரமாகத் தோன்றும் இந்தப் பிரச்சினைகளும், பூசல்களும் ஒரு சிறு புள்ளியாக மட்டுமே புலப்படும் என்பதைத் தாங்களும் அறியாதவரல்லவே?

  ஒருவேளை நமது சீனியர் எடிட்டரின் உடல்நலக் குறைவு உங்களுக்குள் ஒரு சோர்வைக் கொடுத்திருந்தாலோ, அதன் தொடர்ச்சியாக உங்களுக்கு ஒரு break தேவைப்படுவதாக நீங்கள் கருதினாலோ தாராளமாக நீங்கள் விரும்பியபடியே செய்யுங்கள்!

  மூன்று வாரங்கள் தானே?... சனிக்கிழமைகளின் நள்ளிரவுகளிலோ... ஞாயிறுகளின் அதிகாலையிலோ திக் என்று கண் விழித்து, அரையிருட்டில் படுக்கையில் எங்கோ கிடக்கும் மொபைலைக் கையில் எடுத்து மசமசக் கண்களுடன் உங்கள் பதிவைப் படிக்கும் அந்தப் பரவச அனுபவம் எங்களுக்குப் பழகிப்போய்விட்டதென்னவோ உண்மைதான்! ஆனால், இன்னும் சில வாரங்களுக்கு அந்தச் சந்தோசம் கிடைக்காவிட்டால் ஒன்றும் குறைந்து போய்விடாதுதான்!

  adios amigos!

  ReplyDelete
  Replies
  1. /// சனிக்கிழமை இரவாகிவிட்டாலே அடுத்த பதிவுக்காக வார்த்தைகளை கோர்க்கத் தொடங்கிவிடும் உங்கள் மனசுக்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறீர்களாம்? கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால், பூதாகரமாகத் தோன்றும் இந்தப் பிரச்சினைகளும், பூசல்களும் ஒரு சிறு புள்ளியாக மட்டுமே புலப்படும் என்பதைத் தாங்களும் அறியாதவரல்லவே?

   ஒருவேளை நமது சீனியர் எடிட்டரின் உடல்நலக் குறைவு உங்களுக்குள் ஒரு சோர்வைக் கொடுத்திருந்தாலோ, அதன் தொடர்ச்சியாக உங்களுக்கு ஒரு break தேவைப்படுவதாக நீங்கள் கருதினாலோ தாராளமாக நீங்கள் விரும்பியபடியே செய்யுங்கள்!////

   மிகவும் சோர்வாக உணர்கிறேன் ஆசிரியரே.....
   உங்கள் எழுத்தை எல்லோரும் நேசிக்கிறார்கள் என்றால் நான் சுவாசிப்பவன்.
   இது வெற்று வார்த்தைகளா என்பதும் தங்களுக்கு தெரியும்.
   இனி வரும் மூன்று வாரங்களை எண்ணி நான் அடையும் சோர்வும்,வேதனையும் ............

   Delete
 13. டியர் விஜயன் சார், தங்கள் தந்தையின் உடல்நலம் தேறுவதற்கு எல்லாம் வல்ல இறையை இரைஞ்சுகிறேன்

  டியர் விஜயன் சார்,ஞாயிறு பதிவு இல்லையென்பது,ஒரிருவர் செய்த தவறுக்கு, எல்லோரையும் தண்டிப்பதாகும்.உங்களின் பதிவு வரவேண்டும் சார். கமெண்ட் செக்சனை மட்டும் நீக்கிவிடுங்கள்.சில பதிவுகள் வரையுமாவது.சில காயங்கள் ஆறும்வரை,இந்ததளம் நோட்டீஸ்போர்டாகவாவது இருக்கட்டுமே சார்.

  ReplyDelete
  Replies
  1. +1 ... Consider this option sir ...

   Delete
  2. +2... வெறும் நோட்டீஸ் போர்டாகவே இனி செயல்படட்டும் இந்த தளம் சார்

   Delete
  3. //டியர் விஜயன் சார்,ஞாயிறு பதிவு இல்லையென்பது,ஒரிருவர் செய்த தவறுக்கு, எல்லோரையும் தண்டிப்பதாகும்.உங்களின் பதிவு வரவேண்டும் சார். கமெண்ட் செக்சனை மட்டும் நீக்கிவிடுங்கள்.//
   +1

   Delete
  4. சார் சீனியர் எடிட்டர்.,விரைவில் குணமடைய எல்லாவல்ல இறைவனை பிராத்திக்கிறேன் சார்.

   Delete
 14. சீனியர் எடிட்டர் விரைவில் உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன் சார் .சலனங்கள் விலகும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 15. நடந்த சம்பவங்களுக்கு எல்லோர்(அல்லது பெரும்பாலோர் ) சார்பிலும் வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிக்கவும் வேண்டுகிறோம் சார் !!!!

  இது போன்று சம்பவங்கள் மீண்டும் நிகழாது இருக்க நண்பர்களிடம் எனது பணிவான வேண்டுகோள் ....

  எனது தனிப்பட்ட வருத்தமும் மன்னிப்பு கோரலும் ...._/\_

  ReplyDelete
 16. சார் தங்களது தந்தையும் எங்கள் சீனியர் ஆசிரியர் பூரன
  சுகம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 17. I miss you sir, we will wait. oru silar seytha thavarukku ithu periya thandanai. ungal idaththilirunthu parthal sariye. dad get well soon. bye sir. happy reading.

  ReplyDelete
 18. தங்கள் தந்தையாரும் ...எங்களின் சீனியர் எடிட்டரும் ஆன அய்யா அவர்கள் விரைவில் உடல் நலன் பெற்று விடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனாரைப் பிரார்த்தனை செய்கிறேன் சார் .......மன சங்கடங்கள் உண்டாக்கியதற்கு மனப்பூர்வமான மன்னிப்பை கோருகிறேன் சார் ........

  ReplyDelete
 19. நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
  கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதை கூ த்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி
  சந்தோசமா guys ...

  ReplyDelete
 20. நடந்த சம்பவங்களுக்கு எல்லோர்(அல்லது பெரும்பாலோர் ) சார்பிலும் வருத்தம் தெரிவிப்பதோடு மன்னிக்கவும் வேண்டுகிறோம் சார் !!!!

  இது போன்று சம்பவங்கள் மீண்டும் நிகழாது இருக்க நண்பர்களிடம் எனது பணிவான வேண்டுகோள் ....

  எனது தனிப்பட்ட வருத்தமும் மன்னிப்பு கோரலும் ...._/\_

  ReplyDelete
 21. சார்..தந்தையார் குணமடைய பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 22. நீங்கள் என்ன சொன்னாலும் நான் எப்போதும் போல இந்த வாரமும் தங்கள் பதிவுக்காக காத்திருப்பேன்+1

  ReplyDelete
  Replies
  1. என்ன சார் இங்கேயும் இரண்டு ஓட்டா?

   Delete
  2. ஹிஹி.........அது என்ன மாயமோ மர்மமோ தெரியலே.!அதுவா வந்துள்ளது.!

   Delete
 23. ராவணன் இனியன். உங்களின் இந்த வார்த்தை, மனதை நெகிழ செய்துவிட்டது.கண்டிப்பாக இவ்வார பதிவுக்கு நானும் காத்திருப்பேன்,உங்களை போலவே,...,

  ReplyDelete
 24. ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்
  வாராது போல்,வந்த மாமணியை தோற்போமோ
  பொழுது புலர்ந்தது ..யாம் செய்த தவத்தால்
  புன்மை யிருட்கணம் போயின யாவும்
  எழுபசும் பொற்சுடர் எங்க னும் பரவி
  எழுந்து விளங்கியது அறிவெனும் ரவி

  ReplyDelete
  Replies
  1. வண்ணப்புறா,!உங்கள் கவிதை மேலும் சோகத்தை கூட்டுதே.!........!

   Delete
 25. பிள்ளைகள் தங்களுக்குள் சண்டையிட்டால் அதை சமாதானப் படுத்தும் தந்தையாராக ,மாணவர்கள்
  தங்களுக்குள் சண்டையிட்டால் அதை அமைதிப்படுத்தும் ஆசிரியராக அவசியம் தாங்கள் வரவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. அதை அந்த பிள்ளைகள்/மாணவர்கள் உணர வேண்டுமே...

   Delete
 26. // 2016-ன் அட்டவணையோடு உங்களை சீக்கிரமே சந்திக்கிறேன் guys ! //

  Curiously waiting for that!

  Hope your valuable time spent with family & Comics as much as you love. Dealing / involving deeply with public, always brings unexpected situations like this - especially in the current era of rapid communication. Pretty sure you managed a lot of stressful times sincerely in the past and hope things will be better in couple of weeks!

  ReplyDelete
 27. Dear Editor

  You have the right to ignore or even forget us for a while. But a recent habit of your father has been to follow your write ups every week. Therefore you must write this week too so as to relax his body and mind.

  As such you may turn off comments !!

  ReplyDelete
  Replies
  1. And I promise if you write for your father this week I will stay off comments until the 2016 teaser write up !!

   Delete
  2. And there is a reason you must do a couple of posts for your dad only ... The most rapid healing for an elder statesman is always via hearing about the continued success of his Brain Child .. Thetefore you should pen and I should stay away !!!

   Delete
 28. வருத்தமாக உள்ளது சார்..சென்னை வாழ்க்கையில் சோம்பேறித்தனமான ஞாயிறு காலையில் உற்சாகமாக அதிகாலையில் எழந்து ஆர்வமாய் படிக்கும் சுகமே அலாதிதான்.!ஹும் "உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா" என்று இரண்டு வாரம் காத்து இருக்கவேண்டியதுதான்.!

  ReplyDelete
  Replies
  1. //சோம்பேறித்தனமான ஞாயிறு காலையில் உற்சாகமாக அதிகாலையில் எழந்து ஆர்வமாய் படிக்கும் சுகமே அலாதிதான்//
   +1

   Delete
  2. +11111111111111111111111111111111111111111111111111111111111111111111

   Delete
 29. உங்கள் நிலையில் நீங்கள் எடுத்த முடிவு சரியானதே அனால், ஒரு சிலரின் செய்கைக்காக அனைவரையும் தண்டிப்பது போல் உள்ளது.ஆதலால் தயவு கூர்ந்து கமெண்ட் option இல்லாமல் உங்கள் பதிவை மட்டும் எப்போதும் போல் தொடரவும். நான் சனி இரவில் இருந்து ரெப்ரெஷ் பண்ணே ஆரம்பித்து விடுவேன். இனி என்ன செய்வேன்....

  ReplyDelete
 30. உங்கள் தந்தையின் உடல் நலம் பெற எல்லா வல்ல அந்த ஆன்டவனை வேண்டுகிறேன் .சார். /// நாளைய பதிவுக்கு ஒரு பார்வையாளரய் காத்து கொண்டு இருக்கிறேன்,. டைம் இருந்தால் போடுங்கள் அதற்க்கு மேல் உங்கள் இஷ்டம்,,,.சிலர் செய்த தவறுக்கு எல்லோரையும் தண்டிப்பது போல் உள்ளது

  ReplyDelete
 31. senior எடிட் இன் சிகிற்சை எதுவானாலும் அவர் நலம்பெற எனது பிரத்தனையும் எடிட் சார்.

  நீங்கள் உங்கள் தந்தை நலம் வேண்டி இந்த விடுப்பானால் எமக்கு சம்மதமே. இல்லை எனும்போது நீங்கள் add comment இல்லாத பதிவுகளையாவது தொடரவேண்டும் என்பது என் கருத்து எடிட்.

  ReplyDelete
 32. அனைவருக்கும் வணக்கம். தங்களது தந்தை குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்களை காயப்படுத்திய நிகழ்வு/பதிவு எதுவாக இருக்கும் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கண்டிக்கதக்கதே. நீங்கள் பதிவை நிறுத்துவது இதற்கு தீர்வாகமா?

  ReplyDelete
 33. என்னால் யார் புண்படுத்தப்பட்டிருந்தாலும் மன்னித்து விடுங்கள் நண்பர்களே....
  அல்லாஹ்வின் மீதாணையாக இது என் ஆழ்மனதிலிருந்து வரும் மன்னிப்புகோரல்....

  இனி யாரையும் புண்படுத்தும் எந்த ஒரு சிறு வார்த்தையும் பதிய மாட்டேன்...
  முதலில் பிரின்டிங் சரியில்லை என்றோம்...
  அப்புறம் விலை நிர்ணயத்தில் அவரை நெரித்தோம்...உச்சபட்சமாக அவரின் கரைகண்ட எழுத்தாற்றலில் குறை கூறி என்றென்றும் மனதில் தங்கும்படியான வடு அமைத்துகொடுத்தோம்...
  சமீபமாக தரக்குறைவான வார்த்தைகளால் இந்த தளத்தை சாக்கடையாக்கினோம்.
  நமது அன்பு ஆசிரியர் இந்த அளவு வேதனையடைய ஏதோ ஒரு வகையில் நானும் காரணமாய் அமைந்துவிட்டேன் என்கிற குற்றுணர்வு வாட்டி வதைக்கிறது.
  அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை என்றும் போல் நேசிக்கின்றேன் ஆசிரியரே...
  என்னை மன்னித்து விடுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரரே சத்தியமான வார்த்தைகள்
   //என்னை மன்னித்து விடுங்கள்...///..... எங்கள் அனைவரையும் .....

   Delete
  2. AHMEDBASHA TK : நிச்சயமாய் பெரிய வார்த்தைகளுக்கு அவசியமில்லை சார் ! வேண்டாமே மனஉளைச்சல் !

   என்ன - பக்ரீத் பிரியாணியில் ஆளுக்கொரு சின்ன பொட்டலம் கொடுத்திருந்தால் டெக்ஸ் விஜயராகவன் போன்றோர் குஷியாகி இருப்பார்கள் !

   Delete
  3. ஹா ஹா ஹா........ ஆசிரியர் சார் @ நீங்கள் மீண்டும் பழைய நார்மல் லைனுக்கு வந்தது கண்டு 10பிரியாணி சாப்பிட்ட திருப்திகரமான மகிழ்ச்சிங் சார் ......வேணாம் சார் பிரியாணி , ஏற்கனவே மக்கன் பேடாவில் ஒரு 2000ரூபாய்க்கு செலவு வைத்து விட்டேன் .....அடுத்த ஈரோடு விழாவில் வாங்கி தரட்டும் சார் .....
   (நான் உண்மையில் நல்ல பையனாட்டும் பிரியாணி வேணாம் னு சொல்ரன்னு நினைத்து விடாதீர்கள் சார் ....புரட்டாசி விரதம் ...ஹி..ஹி..)

   Delete
  4. விஜயராகவன் சார்...
   அடுத்த ஈரோடு விழாவில் பெரிய ஸ்பெஷல் ஜாமூன் தயார் செய்து விடலாமா......?

   Delete
 34. எடிட்டர் சார் தங்களின் தந்தை விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறோம். நண்பர்களே இனிமேலாவது இத்தளத்தை ஆக்கபூர்வமாக அனுகுவோம். பிறர் மனம் நோகச்செய்யும் கருத்துக்களைக் கூறாமல் பிடிக்கவில்லை என்றால் தாண்டிப் போக பழகிக்கொள்வோம் நண்பர்களே. மௌன பார்வையாளர்களே அந்தந்த வாரம் பதிவுகளைப் பற்றியும் அந்த மாத இதழ்களைப்பற்றியும் நிறைய இல்லை என்றாலும் குறைவான வரிகளிலோ, வார்த்தைகளிலோ தெரிவிக்க வேண்டியதை கடமையாக நினையுங்கள். அப்படி செய்யாத பட்சத்தில் நாம் இழக்கப்போவது பல. கடமையை கண்டிப்பாக செய்வோம்

  ReplyDelete
 35. உங்கள் தந்தையின் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
 36. No idea what happened as most of the comments might be deleted. But this is not fair that if somebody put something and punishing others...if somebody saying comics is children thing and no use and you are stopping comics....if break needed for this web site fine for us. Take care..pray god for Father health..

  ReplyDelete
 37. Looks like I missed the entire party... For Good :)

  ReplyDelete
  Replies
  1. Wish your Father a speedy recovery, Dear Edit. Everything else can wait, including Comics. Take Care.

   Delete
 38. திராணி என்ற வார்த்தை, சில பதிவுகளுக்கு முன்னால் நான் பதிவு செய்த அர்த்தத்தில் இல்லை என்ற குழப்பம் நேற்று முதல் எனக்கு ஏற்பட்டுள்ளதால்; அதை என்னவென்று ஆராய்ந்து விளங்கி கொள்வதற்கு எனக்கும் கொஞ்சம் அமைதி தேவை படுகிறது. இல்லை என்றால் எனக்கும் ஒரு முகமூடி தயாரித்து கொண்டு பிடிக்காதவர்களை காச்சி எடுக்கும் திராணியை பெற்றுவிடுவேனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

  ReplyDelete
 39. //அப்பாவுக்கு சின்னதாயொரு மருத்துவ சிகிச்சையின் அவசியம்//

  அந்த ''சின்னதாயொரு'' என்ற வார்த்தை கூட இல்லாமல் நீண்ட ஆரோக்கியத்தோடு நெடுவாழ்வு வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 40. டியர் விஜயன் சார்,

  Email subscription மூலமாக மட்டுமே கமெண்டுகளை பார்ப்பது வழக்கம் என்பதால், மாலை முதல் இங்கே நிலைமை தலைகீழாக மாறியிருப்பது உடனே கவனத்திற்கு வரவில்லை. உங்கள் தந்தையார் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

  இது போன்ற பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வர & தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க எளிமையான பல வழிமுறைகள் இருக்கும் போது, தாங்கள் அகிம்சையை பலமாக கையாள்வது ஏனென்று புரியவில்லை! ஓரிரு மாதங்களுக்கு காமிக்ஸ் வெளிவராது என்று சொல்லாமல் விட்டீர்களே, அது வரையில் மகிழ்ச்சி! ஓய்வும், மன அமைதியும் பெற்று விரைவில் திரும்புங்கள்... Good night..!

  ReplyDelete
  Replies
  1. Karthik Somalinga : //இது போன்ற பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வர & தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க எளிமையான பல வழிமுறைகள் இருக்கும் போது, தாங்கள் அகிம்சையை பலமாக கையாள்வது ஏனென்று புரியவில்லை!//

   "Comments moderation" முறைக்கு நான் விசிறியல்ல ! சுதந்திரமாய்க் கருத்து சொல்ல அனுமதிக்கும் போதே ஒரு நூறு விமர்சனங்களை நாம் சந்திக்க நேரிடும் போது - 'வேண்டியோரின் கமெண்ட்ஸ்' உட்புகுகின்றன ; 'வேண்டப்படாதோரின் (???) கமெண்ட்ஸ் சென்சார் ஆகின்றன' என்ற சிக்கல்களையும் விலைக்கு வாங்குவானேன் ?

   தவிர, ஞாயிறு + திங்கள் நீங்கலாக நான் தொடரும் வெள்ளி / சனி வரைக்கும் இங்கே எட்டிப் பார்ப்பது எப்போதாவது தான் ! அடுத்த பதிவை எழுத ஆரம்பிக்கும் முன்பாகத் தான் முந்தய பதிவின் முழு கமெண்ட்ஸ் கடலுக்குள் நான் மூழ்கிடுவது வழக்கம். Comments Moderation அமல்படுத்துவதெனில் தினசரி இங்கே நான் ஆஜராவது அத்தியாவசியமாகிடுமே ? தவிர, ஆற்றலில் அசாத்திய திறன் கொண்டோர் ஒரு நூறு பேர் புழங்கும் ஓர் தளத்துக்கு கடிவாளம் போடும் அவசியமும் தேவை தானா ?

   CM தவிர்த்து வேறு முறைகள் இருப்பின், சொல்லுங்களேன் - தெரிந்து கொள்கிறேன் ; சரியாகப்பட்டால் செயல்பாட்டுக்கும் கொண்டு வந்து விடுவோமே ?

   Delete
  2. டியர் எடிட்டர்

   தினமும் moderate செய்ய முடியாமல் போய் விடினும் சில யோசனைகள் :

   1. ஒரு கமெண்ட் பாலிசி பதிவு போட்டு permanent லிங்க் கொடுத்து விடுங்கள் - என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது - எது வரம்பு என்று. இதனுடன் ...
   2. Blogger.com offers personalized registration - அதாவது :

   இங்கு கமெண்ட் இட விருப்பமுள்ளவர்கள் உங்களுக்கு தங்கள் முகவரி மற்றும் காண்டக்ட் நம்பர் கொண்ட ஒரு ஈமெயில் அனுப்ப வேண்டும் - என்ன ஐடியில் வருகிறார் என்பதையும் தெரிவிக்க வேண்டும் இந்த மின்மடலில். பின்னர் நீங்களோ உங்கள் staff ஒருவரோ வாரம் ஒரு நாள் இந்த ஈமெயில்களை உங்கள் blogger "allow these emails" பகுதியில் சேர்த்து விடலாம்.

   இவ்வாறு செய்வதனால் உங்கள் பாலிசி பின்பற்றப்படும் - மற்றும் அனைவரும் உங்களுக்குத் தெரிந்தே இருப்பதனால் கமெண்ட் moderation தேவை இருக்காது. வரம்பு மீறினால் நீங்கள் ஒரு personal warning அல்லது இடை நீக்கம் செய்து விடலாம் !

   முதலில் சற்றே கஷ்டமாக இருக்கும் - ஆனால் போகப் போக routine ஆகிவிடும்.

   Delete
  3. //CM தவிர்த்து வேறு முறைகள் இருப்பின், சொல்லுங்களேன்//

   ப்ளாகின் மெம்பர்கள் மட்டுமே கமெண்ட் இடுமாறு செட் செய்து விடுங்கள்:
   1) Go to Blogger dashboard and click on your blog.
   2) On the left pane, Settings --> Posts and Comments
   3) " Who can comment?"--> Select "Only members of this blog" --> Save settings

   பின்னர், தேவையற்ற கமெண்டுகளை இடும் மெம்பர்களை மட்டும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ Block செய்து விடலாம்:
   1) Go to Blogger dashboard
   2) Right next to your blog name, you will see the number of Followers - click on that link.
   3) In the members list, click on the problematic member name. This will take you to another page where you'll have the option to block that particular member.

   அப்படி block செய்யப் பட்ட மெம்பர், புதிய ID மூலமாக ப்ளாகில் இணைந்து, மீண்டும் தேவையற்ற கருத்துக்களை எழுதினால் என்ன செய்ய என்று நீங்கள் கேட்கலாம். இது Fool proof method அல்ல தான்... என்றாலும், புதிய ID-க்களை உருவாக்க நேரம் பிடிக்கும் என்பதோடு, தொடர்ந்து நீங்கள் எல்லை மீறும் மெம்பர்களை ப்ளாக் செய்து வந்தால், ஒரு கட்டத்தில் இது போன்ற செயல்கள் குறைந்து விடும் என்பது என் கருத்து.

   தவிர வருடக் கணக்கில் இங்கே கமெண்டு பதிந்து வருபவர்கள், தமது ID தடை செய்யப் பட்டு விடக் கூடாதே என்ற எண்ணத்தில், வார்த்தைகளை மேலும் கவனமாகக் கையாள்வர் என்பதும் என் கருத்து.

   Delete
  4. If we do not have self control, all other controls will not be effective and will only create more issues.... i fully go with Mr. Vijayan, as mentioned that he does not believe in censor...

   Delete
  5. காமிக்ஸ்ல் சென்சார் தேவை என்ற நிலைப்பாடு தானே நம்முடையது ....பிறகு கமெண்ட்ஸ் களிலும் சென்சார் க்கு தடையேதும் இல்லை ...மேலே நண்பர்கள் சொல்லி உள்ளதில் எது நடைமுறைக்கு எளிதோ அதை பின்பற்ற யோசியுங்கள் சார் ...

   Delete
  6. இந்த கணினி உலகில் இத்தகைய open blogல் சொல்லாடல் சார்ந்த பிரச்சனைகளை barriers கொண்டு தடுக்க முடியும் என நான் நினைகவில்லை. அதுவும் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் முகம் தெரிந்த நபர்களாலேயே பதியப்படும் சாத்தியம் இருக்கும் போது self morality/blog policy(base on it others can defend/oppose objectionable use of words) only could help.

   barriers are kept just to cross it over.

   Delete
 41. விஜயன் சார்...அப்பா விரைவில் குணமடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 42. மனசாச்சி என்ற ஒன்று யாருக்காவது இருக்குமானால் அவர்கள் இந்த பதிவை படிக்காமல் தயவு செய்து கடந்து போகவும்........


  இந்த பதிவு காமிக்ஸ் சம்பந்தமில்லாத ஒன்றாக தோன்றலாம் , ஆனால் இதில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள வழிமுறை இந்த தளத்திலிருந்து கற்று கொள்ளப்பட்டதே என்பதால் இங்கே சந்தோஷமாக வெளிப்படுத்துகிறேன்.


  மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு முன்பு, எனக்கும், என்னுடைய நண்பனின் நண்பனுக்கும் நேரடியாக நடந்த விவாதத்தில் என்னை பலபேருக்கு முன்னால் அசிங்கமாக பேசிவிட்டான். பல நாட்களாகவே என் வழியில் குறுக்கே வரும் அவனை எதாவது செய்யவேண்டுமென்ற நினைப்பு எப்போதும் உண்டு, ஆனால் அதை செயல்படுத்த சரியான காரணமும், நியாமும் அமையவே இல்லை, ஆனால் அன்று அவன் முகம் கருத்து போகும் அளவுக்கு நான் பதிலடி கொடுப்பதற்கு எனக்கு வாய்ப்பும் , நியாயமும் அவன் அமைத்து தந்தும் நான் எதுவும் செய்யாமல் கோபத்தை மறைத்து கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டேன். அங்கே குழுமி இருந்த சிலர், ''இந்த கேள்வி கேட்டும் இவன் ஒன்னுமே சொல்லாம போறானே'' என்று என்னைப் பற்றி பரிதாபத்துடன் பேசிக்கொள்வது காதில் கேட்டது. நானா விடுவேன், இவனை என்ன பண்ணுறேன் பாருங்க என்று மனதில் நினைத்துக் கொண்டே வந்துவிட்டேன்.  என்ன செய்யலாம் என்று யோசனை செய்து பார்த்தேன். இந்த ப்ளாக்கில் சிலர் கையாளும் வழிமுறை மின்னலாய் தோன்றியது. இதுதான் சரியா வரும் என்று நிச்சயமாய் தோன்றியது. ஹெல்மெட்டை எடுத்து தலையில் கவிழ்த்து கொண்டு, வண்டியை என் நண்பன் தினசரி வரும் டீ கடையை பார்த்தவாறு சற்று தள்ளி நிறுத்திவிட்டு அவனை நோட்டமிட்டேன். கீழிருந்து கல்லை எடுத்து அவன் தலையை நோக்கி குறி பார்த்து வீசினேன். தலையில் பட்டது. அவ்வளவுதான் அவனுக்கு நிற்க கூட திராணியில்லாமல் கீழே விழுந்தான்,

  (அவன் தலையில கல்ல போடுறதுக்கு நான் ஏன் ஹெல்மெட் போட்டு வந்தேன் என்ற சந்தேகம் இங்கே யாருக்காவது வரக்கூடும்...

  இது போன்ற காரியங்களுக்கு ஹெல்மெட் அணிவது இரண்டு நன்மைகளை தரும். முதலாவ்தாக நம்மை யாருக்கும் அடையாளம் தெரியாது. இரண்டாவதாக எதிராளி நம்ம மண்டையை நோக்கி கல் வீசினா ஹெல்மெட் காப்பாத்திடும்.)  வண்டியை ஒரு சந்துல மறைவா விட்டுட்டு , ஹெல்மெட்டையும் வைத்து விட்டு, வேறு வழியாக டீக்கடைக்கு சென்றேன். கூடி இருந்த கும்பலுக்கு நடுவுல என்னன்னு புரியாம பேந்த , பேந்த முழிச்சிக்கிட்டு கிடந்தான். அவனை அந்த நிலையில பார்த்த போது என் மனசுல ஏற்பட்ட சந்தோஷம் இருக்கே அதை உங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.

  என்னை பார்த்தும் அவனுக்கு ஒரு சந்தேகம் வரவில்லை. (வேற... நம்ம லயன் ப்ளாக்ல கத்துகிட்ட வித்தை சோடை போகுமா என்ன?)

  ஒரு ஆட்டோவில் அவனை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று ட்ரீட்மெந்த் கொடுத்துவிட்டு அவன் கையில இரண்டாயிரம் செலவுக்கும் கொடுத்துவிட்டு வந்தேன். இதெல்லாம் ஏன்னா ?!, நம்ம நல்லவன் இமேஜ் உயரணும் பாருங்க அதுக்காக. !


  அவன் அசிங்கமா பேசும் போதே அவனை நேருக்கு நேராய் எதிர் கொள்ள திராணி இல்லாமல் , நான் ஏதோ குற்றம் செய்றவன் மாதிரி அவனை திருட்டுதனாமா அடிச்சிட்டு வந்தேன்னு நினைப்பீங்க. அதற்கு வேற ஒன்னும் காரணம் இல்லீங்க, பொது இடத்துல என்னுடைய நல்லவன் இமேஜ் காலியாகிவிட கூடாது பாருங்க அதுக்காகத்தான்.

  அவன் அசிங்கமா பேசும் போதே நேருக்கு நேராய் மூஞ்சில அடிச்சமாதிரி பதில் சொல்லி இருந்தா, இந்த நல்லவன் இமேஜ் இன்னும் ஐந்து பாய்ண்ட் உயர்ந்திருக்குமேன்னு நீங்க நினைச்சிங்கன்னா உங்களுக்கு இன்னும் விபரம் பத்தலென்னு அர்த்தம்.


  அப்புறம் இது நேற்று ராத்திரி கண்ட கனவுங்க , எதற்கோ பயந்திட்டேன் போல இருக்கு. இப்பல்லாம் தூக்கத்துல கெட்ட, கெட்ட கனவா வருது.

  ReplyDelete
 43. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நேரில் வருபவர்களின் பட்டியலில் இரண்டாவதாக நானும்!

   Delete
  2. mayavi.siva : உங்களுக்கு எனது பதிவுகள் பிரதானமில்லை என்பதை ஆங்காங்கே இதற்கு முன்பாய் உங்கள் பின்னூட்டங்கள் வாயிலாக நான் தெரிந்து கொள்ளத் தவறவில்லை சார் - so அவை என் கவனத்தை ஈர்த்தனவோ - இல்லையோ என்ற சந்தேகத்தில் தொடர்ந்து highlight செய்து எழுதிட சிரமம் வேண்டாமே ? நண்பர்களோடு கலந்துரையாடும் களமாய் இது அமைவதே ரசிப்பிற்குரிய விஷயமென எண்ணம் கொண்ட உங்களைப் போன்ற நண்பர்கள் நிச்சயமாய் இங்கு நிறையவே இருப்பர் ! And I find that perfectly normal too !

   Delete
  3. // எதற்கோ மூன்று வாரம் இடைவெளி ....எதனுடனோ மூன்று வாரம் கழித்து வருகிறேன் என தாங்கள் கூறுவது என்ன ? எதை என்பது சரியாக கேட்கவும் இல்லை, புரியவுமில்லை ! அது பற்றி பெரிய ஆர்வமுமில்லை ! //

   @மாயாவி சிவா, உங்கள் நண்பர்களுக்கே புரியாத பாணியில் எழுதி அதன்மூலம் நட்பை (மட்டும்?) தக்கவைத்துக்கொண்டு அதேநேரம் மறைமுகமாகத் தாக்கும் அந்த எழுத்துத் திறமையை எல்லோரும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பது - எனக்கு குற்ற உணர்ச்சியளிக்கிறது. தயவுசெய்து அதனை நிறுத்திவிட்டு காமிக்ஸ் சம்பந்தமான கருத்துகள் பிரதானமாக இருக்கவிடுங்கள்.

   Delete
  4. டியர் மாயாவி சிவா,

   உங்களது பின்னூட்டத்திற்கான எடிட்டரின் பதிலே என்னை கீழ்க்காணுமாறு எழுதத் தூண்டியிருக்கிறது!

   நீங்கள் ஒரு வித்தியாசமான சிந்தனையாளர் ( மாத்தி யோசி மனிதர்) என்பதில் நான் உள்ளிட்ட நண்பர்கள் பலரும் மாற்றுக் கருத்துக்கு இடமளிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்! மாற்றி யோசிப்பதென்பது எல்லோருக்கும் கிடைத்திடா அரியதொரு வரமும் கூட! அந்த வரம் கிடைக்கப் பெற்றவர் நீங்கள்! ஆனால் வரம் வாங்கும்போது நீங்கள் ஏதோ குறும்பு செய்துவிட்டீர்களோ என்னவோ... மாற்றியோசித்ததை எழுத்துகளால் வடிக்கும்போது சில சமயங்களில் அது நீங்கள் தெளிவுபடுத்த விரும்பும் பாதையிலிருந்து விலகிப்போய் விடுகிறது! இதனால் அதைப்படிப்பவர்களுக்கு சிறு குழப்பமும், அதைத் தொடர்ந்து தவறான புரிதலும் ஏற்பட்டுவிடுகிறது!
   தவிர, உங்களது எழுத்துக்களில் ஒருவித ஆளுமையை நிரப்பியிருக்கிறீர்கள். உங்களுடன் பழகியிராத மற்ற நண்பர்களால் அந்த ஆளுமை ஒருவித உத்தரவாகவே புரிந்துகொள்ளப்படும்! உதாரணத்திற்கு ,
   ///இரண்டு மூன்று நாட்களுக்கு நீங்கள் கட்டாயம் இங்கே எழுதியே ஆக வேண்டும் ///
   இங்கே 'கட்டாயம்' மற்றும் 'எழுதியே ஆக வேண்டும்' என்ற சொற்கள் இங்கே நீங்கள் 'உத்தரவு' இடுவதைப்போல இருக்கிறதல்லவா? இங்கே நாம் உரிமையுடன் கோரிக்கை வைக்க மட்டுமே வாய்க்கப்பெற்றவர்களே அன்றி, கட்டளையிட அல்ல தானே?

   இறுதியாக, நீங்கள் மாற்றி யோசிப்பதற்காக எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிடக் கூடுதலாக அதைச் சரியான முறையில் வார்த்தைகளில் வெளிப்படுத்துவதற்கு எடுத்துக் கொள்ளவேண்டுமாய் அன்போடு கோரிக்கை வைக்கிறேன். நன்றி!


   பி.கு: இதை தனிப்பட்ட முறையில் நான் உங்களுக்குத் தெரிவித்திருக்கலாம்தான், ஆனால் காஜா பாய்ஸ் 'ஜா'வுக்கு மட்டுமின்றி கண்டிப்புக்கும் பேர் போனவர்கள் என்பதை இந்த உலகம் உணரவேண்டுமில்லையா? ;)

   Delete
  5. @ திரு விஜயன்

   நான் ரொம்பவே ஆசையுடன் சந்தா கட்டியுள்ளேன்...எனக்கு இந்த மாத புத்தகங்கள் வந்துவிடுமல்லவா..? என ஓரு எடிட்டராக உங்களை இந்த சமயத்திலும் சின்ன கண்ணேட்டத்துடன் பார்க்கும் சிலரை தாண்டி... உள்ளமெல்லாம் காமிக்ஸ் காதல் சுமந்து , ஓயாமல் உழைக்கும் திரு விஜயன் என்பவரை நண்பராக தழுவிக்கொண்டு, உங்களின் சுகதுக்கங்களை முன்னிறுத்தி பார்த்து "ஸார் முதலில் பிரச்சனையை கவனியுங்க...உங்க இயல்பு நிலை ரொம்பவே முக்கியம்...எங்களுக்காக நீங்க தரும் படைப்புகள் உழைப்பு சம்மந்தப்பட்டது மட்டுமில்ல...உங்க சிந்தனை சம்மந்தப்பட்டதும் ஸார்..." என பதிவு,பணம்,அறிவிப்பு,படைப்பு போன்றவற்றை பின்னால் வைத்து உங்களை நல்ல நண்பராக மனிதராக பார்க்கும் நண்பர்களையே இங்கு அதிகம் பார்க்கிறேன்..! நிறைய நண்பர்கள் என நீங்கள் குறிப்பிடுவது, எனக்கு அவ்விதமே தெரிகின்றனர்.அந்த பட்டியலில் நானும் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கிறேன் அவ்வளவே..!

   வயதும் நோயும் நெருங்கிய தோழர்கள் என்றாலும், கொஞ்சமேனும் தீவிரமில்லாமல், நீங்கள் அதை இங்கு பேச மாட்டீர்கள்...எதையோ மறைப்பதாகவே மனம் அமைதியின்றி தவிக்கிறது...! :(

   @ காமிக் லவர் ராகவன்

   வலியில் பங்குகொள்ளும் சாக்காக...நான் இங்கு வந்து ஒட்டிக்கொள்ளவில்லை, நாம் டெக்ஸ் பற்றி தீபாவளியின் போது பேசுவோம் ! எடியை 3வாரம் ப்ளாக்கை விட்டு ஓட்டிய காஜாவின் சமீப சாதனை என இந்த சமயத்திலும் கொச்சைபடுத்தி நோகடிப்பதை கொஞ்சமாக தவிர்க்க சொல்லவில்லை, தள்ளிவைக்கலாமே...!

   @ ரமேஷ்

   வலிகளின் காரணம் நண்பர்களின் எழுத்துக்களால் எடிட்டர் முன் வைத்த அறிவிப்பா ? ஐயாவின் உடநலகுறைவா ? என என்முன்வைக்கும் போது, சந்தேகமின்றி அறிவிப்பு என்வென்று பார்க்காமல் ...ஐயாவின் உடல்நலமே பிரதானமாக தெரிந்ததை திரு விஜயன் சரியாகவே புரிந்துகொண்டு பதிலளித்ததாகவே தோன்றுகிறது !

   @ இத்தாலி விஜய்

   இயல்பாய் வருவதை எழுதுகிறேன் ...இதில் சத்தியமாக ரமேஷ் சொல்வது போல எழுத்து திறன் அல்ல.நான் எழுதிய எழுத்துக்கு நான் பொறுப்பு ! அதை பிரித்து பிரித்து புரிந்து கொண்டதற்க்கு நீங்கள் பொறுப்பு ! இப்போதைக்கு அதை உங்கள் பொருட்டு நீக்கிவிடுகிறேன் !

   Delete
  6. @Erode VIJAY, அந்த விடுபட்ட 'மட்டும்' என்ற வார்த்தையைப்போலப் பலமுறை மாயாவிசிவா இதே அபிப்ராயத்தை வெளிப்படுத்திதான் வந்திருக்கிறார். மாயாவிசிவாவின் வார்த்தைக்கு நீங்கள் விளக்கம் தருவது இதுவரை எத்தனையாவது தடவை என யோசித்தீர்களென்றால் கொஞ்சமாவது மற்றவர்களின் பார்வை புரியும்.

   Delete
  7. @ மாயாவி சிவா,

   1) அது இங்கு போடப்பட்ட கமெண்ட் அல்ல
   2) அது எடிட்டர் அவர்களை நோகச் செய்யப் போடப்பட்ட கமென்ட் அல்ல

   இந்த கமெண்ட் பற்றியோ வேறு குழுக்கள் பற்றியோ இத்தளத்தில் பேசுவதாய் இல்லை

   Delete
  8. நண்பர்கள் இந்த கேள்வி பதில் cycle லிருந்து வெளிவருவது மட்டுமே இருவருக்கும் அமைதி தரும். every one have thousands of issues, why to be a prisoners of some thought clash.

   just let it go off your mind for your sake.

   Delete
  9. ரமேஷ் குமார்.! +1.
   இங்கு பெரும்பாலோர் வேண்டும் என்றே தவறாக எழதுவது கிடையாது.!"குரங்கு பிடிக்க போய் பெருமாளை பிடித்த கதைதான்.!

   ஒரு கதை:
   ஒரு ஜோசியன் அரசரிடம்,நீங்கள் தள்ளாத வயதிலும் உங்கள் பிள்ளைகளுக்கு கொல்லி போடுவீர்கள் என்று கூறியதும்.அரசர் கோபமுற்று அவருக்கு தண்டனை வழங்கிவிடுவார்.

   இதே விஷயத்தை, இன்னொரு ஜோசியர் ,மன்னரிடம், "மன்னரே உங்களுக்கு நீண்ட ஆயுள்.! உங்களுக்கு,உங்கள் மகன்களைவிட நீண்ட ஆயுள் "என்று கூறுனார்.!.உடனே மன்னர் நிறைய பரிசு கொடுத்து பராட்டினார்.!

   இதுபோன்றுதான் நான் , உட்பட ஒருசில நண்பர்களுக்கு பிரச்சினை.இதை எடிட்டர் பொறுத்தளவில் உண்மையை புரிந்கொண்டு பாஸிட்டிவ் வாக எடுத்துகொள்கிறார்.!

   நான் என்னை அறியாமல் அதிக பிரசிங்கித்தனமாக பேசி யார் மனதையாவது புண் படுத்தி இருந்தால் மன்னிச்சூ....._____/\____

   எடிட்டர் எடுத்த முடிவு வருத்தமாக உள்ளது.!நானும் இரண்டுவாரம் கழித்து வருகிறேன்.!

   இந்த தளத்திற்கு நான் வருவதற்கு முன்னால் , என்னிடம் லயன்&முத்து காமிக்ஸ் 80 % உள்ளது.! அதை ஐந்து பெட்டியில் வைத்து பரணில் போட்டு வைத்துள்ளேன்.! அதை மாதம் ஒரு பெட்டியை எடுத்து அதில் சில புத்தகங்களை எடுத்து படித்து சந்தோசப்படுவேன்.!ஆனால் இங்கு வந்த பின் அந்த பழக்கத்தை விட்டு விட்டேன்.அதை இப்பொழுது தொடர்கிறேன்.!நான் இங்கு வந்தபின் எடிட்டருடனும் மற்ற நண்பர்களுடனும் காமிக்ஸ் பற்றி பேசி மகிழ்ந்ததை என்றும் மறக்க மாட்டேன்.!நன்றி நண்பர்களே.!_________/\_________

   Delete
  10. @Madipakkam Venkateswaran இங்கே என்ன நடந்தது; நான் எது குறித்து கருத்து தெரிவித்தேன் என்ற புரிதலின் பின்பாக தங்களுடைய +1 போடப்பட்டிருக்கும்பட்சத்தில் அதற்கு என்னுடைய பதில்:

   புரிதலுக்கு நன்றி!

   Delete
  11. நீங்கள் குறிப்பிட்து 100%உண்மை.!

   என் பதிவை அடுத்த கமெண்டில் போட்டிருக்க வேண்டும் சாரி.!

   பாஸிட்டிவாக எழதவேண்டும் என்பதற்காக .,சிலர் கெட்டநோக்கம் கொண்டு என்று எழதுகிறார்கள் என்பதற்கு . பதிலாக பெரும்பாலான வர்கள் நல்லவர்கள் என்று பாஸிட்டிவாக எழதிவிட்டேன்.!இனிமேல் பாசிட்டிவ் ஆக எழதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.!புரியலையா.? டக்புல்லிடம் அடிவாங்கிய கிட் ஆர்டின் மாதிரி ஆகிவிட்டேன். நானும் கி.நா.மாதிரி எழதுவேன்.!

   Delete
  12. ஏன் எல்லாரும் ஒருத்தரை ஒருத்தரை வார்த்தைகளால் அடிச்சுக்கறீங்க
   கஷ்டமா இருக்கு நண்பர்களே

   காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த சிறு வயதுகாலமாக பாருங்களேன்

   நம்மோட சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்கிற ஒரு பொக்கிஷம்மா பாருங்களேன்

   நல்ல நட்பா பழகின நண்பர்கள் காமிக்ஸ் என்ற ஒரு வார்த்தைக்கு அடித்துக்"கொல் "வதை பார்த்தால் மன வருத்தமா இருக்கு

   நண்பர்கள் ஏன் இப்படி நடந்துகிறோம்னு ஒரு நாளாவது யோசிச்சிறுக்கீங்களா


   எடி சார் உங்க நெலமைய பார்த்தால் எனக்கே ஒரு மாதிரியா இருக்கு

   ஓப்பனா பேசினதுக்கு மன்னிச்சு விஜயன் சார்

   அப்பா விரைவா குணமடைய என் முருகனை வேண்டிக்கொள்கிறேன்

   குறை பேசுகிற மனிதர்களுக்கிடையே
   இவ்வளவு சிரமங்களுக்கும் இடையில் வாசர்களிடம் பேச இங்கு வர்ரீங்களே அதுக்கு ஒரு சல்யூட் விஜயன்சார்

   Delete
  13. This comment has been removed by the author.

   Delete
 44. விஜயன் சார், நமது காமிக்ஸின் வருத்தமான கருப்பு நாள் இது. உங்கள் முடிவு சரியானது. காலம்தான் சில காயம்களுக்கு சரியான மருந்து.

  உங்கள் தந்தையார் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப கடவுளிடம் வேண்டுகிறேன். தோர்கல் அடுத்த வருடமும் அவர்கள் தான் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் என இப்போதே சொல்லிவிடுங்கள்.

  சம்பந்தம் ல்லாத காரசாரமான விவாதம் நடத்த இந்த காமிக்ஸ் தளத்தை உபயோக படுத்த வேண்டாம் காமிக்ஸ் வாசகர்களே!

  ReplyDelete
  Replies
  1. தனி மனித தாக்குதல் இல்லாமல் "காமிக்ஸ் பற்றி மட்டும் பேசவே" இந்த தளம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் காமிக்ஸ் ரசிகர்களே. ஆனால் கடந்த சில வருடமாக இந்த "காமிக்ஸ்" புரிதல் இல்லாதது மிகவும் வருத்தபட கூடிய விஷயம். :-(

   Delete
  2. உண்மைதான் சார். நம் சொந்த விருப்பு வெருப்புகளை கொட்டுவதற்கான இடமல்ல இது.

   Delete
  3. உணர்வு பூர்வமா உணர்வது கஷ்டம்தான் ராஜசேகர் ஜி

   Delete
 45. Get well soon Senior Editor sir!!! We are sure that we will see more publications with your translation work in next year's to come.

  Dear Editor sir, a temp. break will bring strong bond again. I'm telling you from my experience. Looking forward to welcome your return asap sir. Till then, chill yourself. But. We all miss Sunday morning coffee with your weekly blog!!!

  Cheers,

  ReplyDelete
 46. சார் தந்தையார் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 47. @ ALL : நண்பர்களே,

  அப்பாவின் நலன் பற்றிய உங்கள் அக்கறையான விசாரிப்புகளுக்கு நன்றிகள் பல ! கடந்து 10+ ஆண்டுகளாய் அப்பாவுக்கு உள்ள நோவுகளைப் பட்டியலிடுவதெனில் ஒரு குயர் நோட்புக் பற்றாது தான் - ஆனால் அவற்றைக் கண்டு துளியும் பதறாது, இயல்பாய் வாழ்க்கையை நடத்த முனைவதே அவரது டிரேட்மார்க். So தற்போது எழுந்துள்ள ENT தொடர்பான பிரச்சனை அவருக்குப் பெரிதாய்த் தெரியாது இருப்பதில் வியப்பில்லை தான் !

  சின்னதாய் ஒரு ENT அறுவைசிகிச்சை ஒரு வார அவகாசத்துக்குப் பின்னே அவசியமென டாக்டர் சொல்லியுள்ளார் - இந்த வாரம் சென்னை சென்றது அந்த அறுவைசிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கே ! So உங்களின் GET WELL வாழ்த்துக்களை அட்வான்சாக எடுத்துக் கொண்டால் போச்சு !

  Thanks a ton folks !!

  ReplyDelete
 48. முத்து வின் ஜாம்பாவான் ஐயா திரு. சௌந்திரபாண்டியன் அவர்களின் உடல்நிலை விரைவில் குணமடைய என் முருகனை வேண்டிக்கொள்கின்றேன்

  ReplyDelete
 49. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு...
  தங்கள் தந்தை பூரண நலமடைய All the very best…
  பூரண சுதந்திரம் ....நம்முடைய blogக்கு ஒத்துவராது என்பது
  கண்கூடூ...
  Will be missing you.. more than I ever realized…it was one place I could forget my daily worries and relax….(Relaxing part…not recently..with our odd comments)…
  நண்பர்கள் தயவு செய்து ...இந்த breakஐ ...self analysisக்கு உபயோகிக்க வேண்டுகிறேன்...
  நமது comics காதல் அடுத்தவரை பாதிக்காமல் பகிர..நாம் பழக வேண்டிய தருணமிது...

  ReplyDelete
 50. டியர் விஐயன் சார்,
  சீனியர் எடிட்டர் விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
  நமது blog ஐ வாரம் ஒரு/இரு முறை அல்ல, தினமும் பார்ப்பவன் நான்.... பல நண்பர்களை போல.....
  தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யவும்..  ReplyDelete
  Replies
  1. நான் தினமும் பார்ப்பவன்

   Delete
 51. நமது பெருமதிப்பிற்குறிய எடிட்டர் அவர்களின் தந்தையார் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.!

  நாளைய பதிவை எதிர்நோக்கி ஆவலுடன்....

  ReplyDelete
 52. Dear Mr. Vijayan.... Please take care of your father and his health, which is the most important responsibility for any son. We understand the situation and the position that you have been put in for taking such a decision, and i hope all is for good only. You may ignore this blog for some time, no issues, but in the October Books, please add couple of more pages and add what is supposed to come here this week. Only if time permits.... Thank you.

  ReplyDelete
 53. This comment has been removed by the author.

  ReplyDelete
 54. Dear editor,
  Take care of the personal issues first...
  Enforce one comment, per user, per post
  To avoid catastrophes in the future..... or just remove the comments section. Nothing is better than nonsense....

  ReplyDelete
 55. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. //.நண்பர்களை..குற்ற உணர்ச்சியில் வைத்திருப்பவர் அல்ல எங்கள் ஆசிரியர் .. அதை எப்பொழுதும் எங்களுக்கு ஏற்படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு பலமாகவே உண்டு சார் ///

   வைர வரிகள்!

   Delete
 56. Break d silence sir..we r waiting

  ReplyDelete
 57. தங்களின் தந்தையார் பூரண நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்

  ReplyDelete
 58. நள்ளிரவு முதல் நான் உங்கள் பதிவிற்காக காத்திருப்பேன் எடி சார்

  மனவருத்தங்களை பின்னே எறிந்துவிட்டு மகிழ்ச்சியுடன் பதிவிட முன்னோக்கி வாருங்கள்

  ReplyDelete
 59. Dear sir. We need your posts regularly. Just leave the comments. Avargalin pokkil senru allal pada avasiamillaiye. Please consider sir. But these days many people here for fun with comments. If you load them in mind its useless for new dimension of next generation of comics heros sir. Just leave their opinions with them.

  ReplyDelete
 60. இது போன்ற இணையப் பக்கங்களில், மரியாதை மனதளவிலும், மரியாதை நிமித்தமான நல்வாழ்த்துக்கள் ஓர் அளவுடனும் இருந்தாலே போதுமானது. அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டு, உணர்ச்சி பொங்கும் வசனங்களை எழுதுவதால் - விஜயன் அவர்கள் சங்கடத்திற்கு ஆளாகி, சீனியர் எடிட்டரின் உடல் நிலை குறித்த முழு விவரங்களை இங்கே பகிர வேண்டிய தர்ம சங்கட சூழ்நிலை நேர்ந்திருப்பதை என்னவென்று சொல்வது?! அவருக்கென்று ஒரு privacy இருக்கக் கூடாதா?!

  "விஜயன் அவர்கள் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் மட்டுமே" என்ற குறுகிய பார்வையைத் தாண்டிய கருத்துக்களை வெளியிட, அக்கறை மற்றும் ஆழ்ந்த நட்பை வெளிக்காட்ட வேறு வழிமுறைகள் உள்ளன; அதை அனைத்து வாசகர்களும் செய்தே ஆக வேண்டும், அதுவும் பொதுவில் தான், குறிப்பாக, அவரது வலைப்பூவில் வைத்துத் தான் காட்ட வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லை.

  அதீத அக்கறையை (பொதுவில்) வெளிக்காட்டுவதற்கும், செயற்கைத்தனமான அக்கறைக்கும் இடையே - ஒரு நூலிழை அளவே வேறுபாடு உள்ளது. அந்த எல்லையைத் தாண்டும் கருத்துக்கள், என்னைப் பொருத்த வரையில், முழுக்க முழுக்க செயற்கைத்தனமாகவே படுகிறது!

  ReplyDelete
  Replies
  1. // அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டு, உணர்ச்சி பொங்கும் வசனங்களை எழுதுவதால் - விஜயன் அவர்கள் சங்கடத்திற்கு ஆளாகி, சீனியர் எடிட்டரின் உடல் நிலை குறித்த முழு விவரங்களை இங்கே பகிர வேண்டிய தர்ம சங்கட சூழ்நிலை நேர்ந்திருப்பதை என்னவென்று சொல்வது?! அவருக்கென்று ஒரு privacy இருக்கக் கூடாதா?! //

   உண்மை! என்னதான் எடிட்டரை நமது நண்பர் என்று சொல்லிக் கொண்டாலும் நமக்கான எல்லைகளை உணர்ந்திருப்பது நல்லது!

   Delete
 61. This comment has been removed by the author.

  ReplyDelete
 62. நன்றி கார்த்திக் சார் ..

  புரிந்து கொண்டேன் ...


  மன்னிக்க வேண்டுகிறேன் ...


  ஆசிரியரிடமும் ....:-(

  ReplyDelete
 63. This comment has been removed by the author.

  ReplyDelete
 64. என்னை பொறுத்த வரையில் இந்த பிரேக் நல்லதே....
  வாரா வாரம் ஏதாவதொரு சங்கடமான சூழ்நிலையே நிலவுவதாய் ஒரு தோற்றம்...
  காமிக்சும் , அது சார்ந்த விவாதங்களும் , விசயங்களும் பரண் மேலே கூட இருக்கிறதா என தெரியவில்லை....
  ஒரு கதை பிடிக்கவில்லை என சொல்பவர்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ , அதே உரிமை கதை பிடித்திருக்கிறது என்பவர்களுக்கும் உள்ளதை இரு சாரரும் புரிந்து கொள்ள இந்த அவகாசம் வாய்ப்பளிக்கும் .

  புது வருட கதைகளின் விவரங்களோடு மீண்டும் ப்ரெஷ் ஆக வாருங்கள் சார் .

  ReplyDelete
 65. சீனியர் எடிடட்டர் சீக்கிரம் நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்

  ReplyDelete
 66. சீனியர் எடிட்டர் பூரண குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை தொடந்து பிரார்த்திகிறேன் . ஞாயிறு காலை கண் விழிப்பதே உங்கள் பதிவில்தானே. இப்படி வெளி நடப்பு செய்யலாமா சார் ? நாம் எங்கே போவோம் சார் ? கமெண்ட்ஸ் இல்லாது விட்டாலும் , உங்கள் பதிவு மட்டுமாவது இருக்கட்டுமே சார் ? ப்ளீஸ் ?

  ReplyDelete
 67. சார் இந்த இடைவெளி தேவையே. உங்களுக்கும் சரி எங்களுக்கும் சரி இங்கு செலவிடும் நேரத்திற்கான பலன் அல்லது நியாயம் கிடைப்பதாக தெரியவில்லை.

  படிக்க வேண்டிய இதழ்கள் பல பாக்கி இருந்தாலும் இங்கு நேரம் செலவிடும் வாசகர்கள் பலர் உள்ளனர். அதே போல முன்பெல்லாம் இதழ் வாங்கிய அடுத்த நொடி படிப்பது ஹாட் லயன் தான். ஆனால் இன்று ஹாட் லயன் மீது அந்த அளவு ஈர்ப்பு இல்லை.

  ஆகையினால் மாதம் ஒரு பதிவு என்பதே போதும். இங்கு செலவிடும் நேரத்தில் நீங்கள் புது கதைகள் தேடுவதிலும் நாங்கள் வாசிப்பில் ஆழம் செல்வதுமே சரியாக இருக்கும்.
  இடையிடையே ஹாட் லயன் மற்றும் காமிக்ஸ் டைம் உள்ளதே. அதில் உங்கள் எழுத்துகளை காண ஆர்வமாக உள்ளேன்.

  ReplyDelete
  Replies

  1. @ SIV

   உங்கள் கருத்திலிருந்து சற்றே மாறுபடுகிறேன் நண்பரே!

   அடிக்கடி இங்கே எட்டிப் பார்த்திடும் நம்மைப் போன்றவர்களுக்கு [ சரி விடுங்க... இங்கேதான் குடியிருக்கிறேன், போதுமா? ;) ] ஹாட்லைன்/காமிக்ஸ் டைம் படிப்பதில் ஈர்ப்பு குறைந்திருப்பதாகச் சொல்லப்படுவதில் உண்மை இருக்கக்கலாம்தான்! இது மாதம் 4 அல்லது 5 முறை இங்கே பதிவுகளாகப் பல விசயங்களையும் அலசி ஆராய்வதினால் ஏற்படும் ஒரு வகை adverse effect ! இதைத் தவிர்க்க முடியாது ; தவிர்க்க நினைத்தால் எடிட்டருக்கு அதிக மெனக்கெடல் அவசியமாகிடலாம்! இந்த 'ஆர்வக் குறைபாடு' இத்தளத்திற்குப் பரிட்சயமில்லாத மற்ற வாசகர்களிடத்தில் இருக்கச் சாத்தியமில்லை என்றே நம்புகிறேன்!

   என்னைப் பொருத்தவரை, மாதம் ஒரு முறை கிடைக்கும் ஹாட்லைன்/காமிக்ஸ்-டைம் இன்பத்தை விட, மாதத்திற்கு நான்கு முறை பல்வேறு விசயங்களையும் விரிவாக அலசி, துவைத்து, தொங்கப்போடும் எடிட்டரின் இப்பதிவுகளே சிறந்ததென்பேன்!

   Delete
  2. ஈரோடு விஜய் @ +2........
   புத்தகங்கள் வந்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் படித்து முடித்து விடுகிறேன் .....பிறகு மாதம் முழுதும் ப்ளாக்+பேஸ் புக்கே கதி....இப்போ இதுக்கும் ஆப்பு வைத்தால் நான்லாம் என்ன செய்வேன் .....????...அதுவும் ஆடி, புரட்டாசி , மார்கழி போன்ற தமிழ் மாதங்களில் கடைக்கு ஒரு பயலும் வரமாட்டாங்க....இப்ப போய் ,மாதம் ஒரு பதிவுன்னா .....என்னத்த சொல்ல ....இருக்கும் 65டெக்ஸ் கதைகளையும் மனப்பாடம் பண்ண வேண்டியது தான் .......க்ர்ர் ...

   Delete
 68. விஜயராகவன் சார்...
  அடுத்த ஈரோடு விழாவில் பெரிய ஸ்பெஷல் ஜாமூன் தயார் செய்து விடலாமா......?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ....ஆகா ஆகா....சந்தோஷமாக ...ஆனால் உங்களுக்கே செலவு .. ..இம்முறை என்னோட சேரும் சரி பாதி எனில் ஓகே....அடுத்த மாசமே ஈரோடு விழாவாக இருக்காதா ....பாசாஜி...ப்ளீஸ் கால் மி ஜஸ்ட் விஜய் ....நோ சார்.... ப்ளீஸ் ....1987களில் நீங்கள் எழுதியுள்ள லட்டர் திகில் காமிக்ஸ் ல் வந்துள்ளதை போன மாதம் பார்த்தேன் .....நான் 1990களுக்கு பிறகே காமிக்ஸ் படிக்க வந்தேன் , நீங்கள் என்னை விட படாஆஆஆஆ சீனியர் ...

   Delete
  2. ஹா ஹா ....ஆகா ஆகா....சந்தோஷமாக ...ஆனால் உங்களுக்கே செலவு .. ..இம்முறை என்னோட சேரும் சரி பாதி எனில் ஓகே....அடுத்த மாசமே ஈரோடு விழாவாக இருக்காதா ....பாசாஜி...ப்ளீஸ் கால் மி ஜஸ்ட் விஜய் ....நோ சார்.... ப்ளீஸ் ....1987களில் நீங்கள் எழுதியுள்ள லட்டர் திகில் காமிக்ஸ் ல் வந்துள்ளதை போன மாதம் பார்த்தேன் .....நான் 1990களுக்கு பிறகே காமிக்ஸ் படிக்க வந்தேன் , நீங்கள் என்னை விட படாஆஆஆஆ சீனியர் ...

   Delete
 69. 'எடிட்டரின் புதிய பதிவு ரெடி, நண்பர்களே!' - இது ஒவ்வொரு சனி இரவும் என் மொபைலின் text editorல் நான் தயாராக வைத்திருக்கும் வாக்கியம். இது இன்று பிரயோஜனப்படுமா???

  ReplyDelete
 70. Things that are happening here look very childish. Dear Edit, you are the boss so you make the call. Please don't discuss on price options in this forum.. That's an irrelevant topic to be discussed here..and for the comic fans.. There is no need for a publisher to discuss his prices with us also running a print media business needs a lot of effort and time.. That too for a limited subscription it is like playing Russian roulette.. So please understand and support his efforts rather finding faults.

  ReplyDelete
 71. Dear Editor,
  நீங்கள் பதிவிடாமல்போனால், அது இங்கே ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்கு பலன் கிடைத்ததாகவும், உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கும் பெரும்பான்மையான நண்பர்களுக்கு ஏமாற்றமாகவும் ஆகிடும்.

  ReplyDelete
  Replies
  1. //நீங்கள் பதிவிடாமல்போனால், அது இங்கே ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்கு பலன் கிடைத்ததாகவும், உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கும் பெரும்பான்மையான நண்பர்களுக்கு ஏமாற்றமாகவும் ஆகிடும்.//
   +1

   Delete
 72. எந்தெந்த கமெண்ட்களை அனுமதிக்கலாமென கட்டுப்படுத்துவது சிக்கலான வழிமுறை. ஆனால், பின்னூட்டமிடும் ஐடி க்களை அனுமதிப்பதை கட்டுப்படுத்துவது ஓரளவு இலகுவானதாக இருக்கும்.

  ReplyDelete
 73. காமிக்ஸ் நண்பர்களுக்கிடையிலான கலந்துரையாடல்களுக்கு வேறு பல தளங்களும், களங்களுமிருக்க - இங்கே ஆசிரியரின் ஒவ்வொரு பதிவுக்குமான பின்னூட்டங்களை மட்டும் இட நண்பர்கள் முயற்சிக்கவேண்டும். இதை நான் பலமுறை வலியுறுத்திவந்தபோதும் அது நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்பை யாருமே ஏற்படுத்தவில்லை. அதனால், இப்போதெல்லாம் ஓரிரு பின்னூட்டங்களுடன் என் ஆர்வத்தையும், கைகளையும் கட்டுப்படுத்திவருகிறேன்.

  ReplyDelete
 74. விஜயன் சார்

  தங்களது தந்தையார் பூரண நலமுடன் இல்லம் திரும்ப
  எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக _/\_
  .

  ReplyDelete
 75. In Search of Moebius (BBC 4 Documentary) ஆங்கில subtitle உடன் இருக்கும் இந்த டாகுமெண்டரி moebius கடந்து வந்த பாதையை விளக்குகிறது(ப்ளூபெரி,the Incal, etc ) சில வரலாற்று காமிக்ஸ் தொடர்களின் ரிஷிமூலதை அறிய விரும்பும் நண்பர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு தொகுப்பு.

  https://www.youtube.com/watch?v=jNas99oEXBU

  ReplyDelete
 76. Things that are happening here look very childish. Dear Edit, you are the boss so you make the call. Please don't discuss on price options in this forum.. That's an irrelevant topic to be discussed here..and for the comic fans.. There is no need for a publisher to discuss his prices with us also running a print media business needs a lot of effort and time.. That too for a limited subscription it is like playing Russian roulette.. So please understand and support his efforts rather finding faults.

  ReplyDelete
 77. சார் காரணமில்லாது காரியமில்லை ..காரியமில்லாது காரணமில்லை ...உங்களுடைய பதிவு இல்லாது
  இந்த ப்ளாக் கில் ஞாயிறு இல்லை .... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ..அது இதைப் படித்தால் ..உங்களுக்கும் நன்றாகவே நடந்தது ... முதல் புள்ளி இல்லாமல் கோலம் இல்லை..நீங்கள்தான் முதல் புள்ளி .
  வாருங்கள் சார் ..வசந்தம் வரும் ..கோடை வரும் வறட்சியும் வரும் எல்லாமே ஒரு உன்னதமான கோட்பாட்டின் படி நடப்பதுதானே சார் ..இன்று இரவு எப்போதும் போல் உங்கள் எழுத்துக்காக காத்திருக்கும் ரசிகன் .....

  ReplyDelete
 78. //இன்று இரவு எப்போதும் போல் உங்கள் எழுத்துக்காக காத்திருக்கும் ரசிகன் .....//
  +1.. Waiting sir...

  ReplyDelete
 79. டியர் எடிட்டர்

  சில நாட்களுக்கு முன் batman பரிந்துரைகள் கேட்டிருந்தீர்கள்:


  1. The Long Halloween - Tim Sale

  இரண்டாவது ஒரு famous series - நல்ல detective மற்றும் action ழான்ரா (genre) கலந்தது. அனால் ஒரு தொடராகவோ அல்லது குண்டு புக்ககவோ வெளியிட வேண்டியிருக்கும் - சுமார் பதிமூன்று மாதங்கள் வந்த Holloween தொடர் இது. அமெரிக்க தேச விடுமுறை தினங்களில் எல்லாம் ஒரு கொலை விழும். இதைத் துப்பறிய கிளம்புவார் batman. உதவி catwoman [catwoman ஒரு professional திருடி ஆனால் இவளுக்கும் batmanக்கும் ஒரு "இது" கதை முழுதும் விரவியிருக்கும். ஜாலியான சைடு track அது]. ஒரிஜினல் கலரிங் கிடைக்குமா என்று பார்க்கவும் - தற்போது வந்துள்ள recolored செட்டிங் நம்மவர்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு.

  ... தொடரும் ...

  ReplyDelete
  Replies
  1. ராகவன்ஜி ! இரண்டு விஷயங்கள்

   1. சிறிய வேண்டுகோள் ...பேட்மேன் டைட்டில் குறிப்பிடவும் ..

   கதைவரிசையின் நியுக்ளியஸ் அல்லது கோரினை குறிப்பிட வேண்டாம் (அல்லது அதனை எடிட்டருக்கு தனிமெயிலில் அனுப்பலாம் ...ஒரு 10% ஸ்பாய்லர் ஆக அது மாறுகிறது என்பதற்காக ...(for the sake of new readers )

   2. இது காமிக்ஸ் சம்பந்தபடாதது ..

   நீங்கள் ஏன் genre வை ழான்றா என எழுதுகிறீர்கள் ...

   us உச்சரிப்பு ஷோனர் uk உச்சரிப்பு ஷோன்ரா என்றுதானே உள்ளது ...

   முதலாவது ....வேண்டுகோள் ...

   இரண்டாவது ..சந்தேகம் ....

   Delete
 80. SA: OK on Batman spoliers - will send mail to Editor :-)

  And ..

  ge மற்றும் re ஆகிய பதங்களுக்கு உச்சரிப்பில் பல திரிபுகள் உண்டு - uk / us உச்சரிப்புகள் இப்போது பிரபலாமானவை. பல சொற்களுக்கு நாம் அறியாத பல்வகை ஐரோப்பிய உச்சரிப்புகளும் உண்டு.

  g என்ற பதம் சில ஐரோப்பிய மொழிகளில் zh ஆக ஒலிக்கும். zh என்பது ழ. - (1)

  கணிதத்தில் euler's theorm கேள்விப்படிருப்பீர்கள். அதில் வரும் e ஆ என்ற ஓசை பெரும் (ஆய்லர்s theorm என்று சொல்வார்கள்). - (2)

  so இவ்விடத்தில்g+e சேர்ந்து ழ + ஆ = ழா --- (A)

  இதே போன்று :

  r + e என்பது ற + ஆ = றா -- (B)

  so genre = ழான்ரா (A + B)

  US / UK திரிபுகள் பெருன்பான்மை உச்சரிப்பே அன்றி actual ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை.

  நம் ஊரில் ராஜன், ராயன், ராசன் போன்று தான் இதுவும் .. :-)

  ReplyDelete
  Replies
  1. @ ஈரோடு விஜய் :

   ஜால்ராவை இனி GELRE என்றும் எழுதலாம் :-) :-p (ஜாலிக்காண்டி!!)

   Delete
  2. @ selvam abrami,

   அமெரிக்கா மற்றும் இங்க்லீஷ்காரனுக்கு வாயில ழ வராம தான் - காலிகட் அது இது என்று nasty செய்து இப்போ அவர்களுக்கு நாக்கில் வரும் உச்சரிப்பை உசிதம் என்கிறார்கள் :-)

   Delete
  3. S A : யோசித்து பார்த்ததில் நான் மையக் கருத்து - knot - வெளியிட்ட காரணம் நம்மில் பெரும்பாலோருக்கு batman பிடிப்பதில்லை என்பதாலும் அனால் அவரது சில கதைகள் பிடிக்கும் என்பதாலும். எனவே அடுத்த முறை SPOILER ALERT BEGIN / SPOILER ALERT END கொடுத்து விடுகிறேன் .. தாண்டி செல்ல வசதியா இருக்கும் உங்களுக்கு

   Delete
 81. நடக்கும் சம்பவங்களை மெளனமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். நிறைய பேர் கத்தி வீச வந்துவிட்டார்கள். ஒரு காலத்தில் நானும் கத்தி வீசியதை நினைத்து பார்க்கிறேன். ஒரு விசயம் எனக்கு புரியவில்லை. இரண்டு தரம், இரண்டு விலையில் புத்தகம் வெளியிடலாம் என்று நான் யோசனை சொன்னபோது என்னை கழுவி கழுவி ஊற்றியவர்கள் எல்லாம் , இப்பொழுது அது நிஜமாகும் போது ஏன் அமைதியாக இருக்கிறார்கள்,

  ReplyDelete
  Replies
  1. சிறிய அளவில் பதிப்பிபவர்களுக்கு எல்லா நேரங்களிலும் இரு பதிப்புக்கள் கட்டுப்படியாகாமல் இருக்ககூடும். அதனால் பொதுவில் இல்லாமல் சில குறிப்பிட்ட கதைகள் இரு பதிப்புக்களில் வருமாறு செய்ய எடிட்டர் யோசித்திருக்கலாம். பல யோசனைகள் நாள் பட நாள் பட இங்கே எற்க்கப்படிருக்கின்றன என்பது சென்ற 4 ஆண்டுகளில் நான் gradual-ஆக பார்த்த நிஜம். ஆனால் எல்லா யோசனைகளையும் அவர் ஏற்க வேண்டுமென்பதில்லையே :-)

   Disclaimer: இந்த பதில் உங்களுக்கு மட்டுமே :-)

   Delete
 82. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :))))

  ReplyDelete