வணக்கம்.
உங்களில் நிறையப் பேரைப் போலவே புதிய பின்னூட்ட முறையினுள் புகுந்து நானும் பாயைப் பிறாண்டாத குறை தான் என்பதால் - நள்ளிரவில் எழுந்து அமர்ந்தொரு விநாயகர் சதுர்த்திப் பதிவுக்குப் பிள்ளையார் சுழி போட்டு விட்டேன் ! இதனை 'மைக் டெஸ்டிங்..1..2.33...' பாணியாக எடுத்துக் கொள்வோம் ; இதெல்லாம் வேலைக்கு ஆகாதென்று இதன் பின்னூட்ட அனுபவங்களும் சொல்லிடும் பட்சத்தில் - 'போன மச்சான் திரும்பி வந்தான்' என ஞாயிறு பதிவினில் நமக்குப் பரிச்சயமான பழசுக்கே வாபசாகி விடுவோம் ! So கடிதம் எழுதத் தயாராகி விட்ட தலீவரைக் கொஞ்சமே கொஞ்சமாய்ப் பிடித்து நிறுத்தி வையுங்களேன் guys !! (ஈரோடு விழா முடிந்த கையோடு தலீவர் அனுப்பிய 7 பக்கக் கடிதத்தை சமீபமாய்த் தான் பார்த்தேன் !!)
இது நடுநிசியின் திடீர் பதிவென்பதால் வழக்கமான முன்னோட்டங்கள் ; பின்னோட்டங்கள் என்றெல்லாம் வில்லுப்பாட்டுப் பாடாது ; சமீபமாய் நான் பார்த்த, சில பல புதுக் கதைத் தொடர்கள் பற்றியதொரு preview show-வாக இருந்திடும் ! இந்த டிரைலர்கள் சுவாரஸ்யமாகத் தெரிந்திடும் பட்சத்தில் ; இவற்றின் மீது நாம் இன்னும் கொஞ்சம் ஆர்வம் காட்டிடலாம் என உங்களுக்குத் தோன்றும் பட்சத்தில் - அந்த 'தனிச் சந்தா' தண்டவாளத்தில் இவைகளைப் பரிசீலிக்க முயற்சிக்கலாம் !
AND : பெரிய எழுத்துக்களில் ஒரு எச்சரிக்கைப் பலகையினை முன்கூட்டியே தூக்கி நிறுத்தி விடுகிறேனே......!
- இவை எல்லாமே நான் சமீபமாய்ப் பார்க்க / பரிசீலிக்க நேரம் எடுத்துக் கொண்ட தொடர்கள் மட்டுமே தவிர ; இவையெல்லாம் 'வரப் போகும்' பட்டியலில் இடம் பிடித்திருக்கும் விஷயங்கள் அல்ல - at least 2016-ன் ரெகுலர் சந்தாவிற்குள் !
- அப்புறம் - இவை எல்லாமே ஒவ்வொரு விதத்தில் மாறுபட்ட கதைகள் / ரசனைகள் என்பதால் உங்களுக்கு அவை பிடித்திடா பட்சத்தில் -1 என்ற அபிப்பிராயப் பதிவோடு தாண்டிச் சென்றிடலாமே - ப்ளீஸ் ?! "அய்யோ ..இதெல்லாம் வரப் போகுதா ? கிழிஞ்சது போ !! " என்ற ரக எண்ணங்கள் சிதறல்களாய் இங்கு விரவிடாது இருப்பின் மகிழ்வேன் !
பிரெஞ்சுப் பதிப்புலகில் எனக்கு ரொம்ப காலமாகவே ஒரு சின்ன ஆச்சர்யம் உண்டு ! தங்களுக்கு சிறிதும் அண்மையில் இல்லாததொரு தேசத்தின் மீது ; கலாச்சாரங்களில் துளியும் சம்பந்தமில்லா ஒரு நாட்டின் மீது பிரெஞ்சுக் காமிக்ஸ் ஒளிவட்டம் இத்தனை அதிகம் பாய்ந்திடுவதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நிறைய முறை யோசித்திருக்கிறேன் ! அந்த "அமெரிக்கக் காதல்" கௌபாய் கதைகளின் ரூபத்தில் ஒரு பக்கம் வழிந்தோடுவது சகஜம் எனில் தொடர்ந்த 19-ஆம் நூற்றாண்டின் முதல் quarter -ன் மீது அது மீண்டும் மையல் கொண்டு நிற்பது உண்டு ! ஜனவரி 1920-ல் அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தது ! 'சரக்கை' விற்பதோ ; வாங்குவதோ ; எடுத்துச் செல்வதோ குற்றமென ஆன பின்னும் மக்களிடையே அதற்கொரு வெறித்தனமான தேவை இருந்து வந்தது ! அந்த நேரம் பார்த்து இத்தாலியில் முசோலினி சர்வாதிகார ஆட்சியினைப் பிரகடனம் செய்திட, சாரை சாரையாய் இத்தாலிய மக்கள் அமெரிக்கக் கரையினில் தஞ்சம் புகுந்தனர் ! அவர்களுள் நிறையப் பேர் அமெரிக்காவின் மாபியா கும்பல்களில் ஐக்கியமாகிட - ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு வட்டமும் சிறுகச் சிறுக இந்தக் குற்ற முதலைகளின் பிடிக்குள் ஓசையின்றி அடங்கிப் போயின ! அக்டோபர் 1929-ல் அமெரிக்கப் பங்குச் சந்தை வரலாறு காணா ஒரு வீழ்ச்சியை சந்தித்ததன் பின்னே, நாடெங்கும் வேலையின்மை தாண்டவமாடியது ! அதுநாள் வரையிலும் செல்வச் செழிப்பில் மிதந்து வந்ததொரு நாட்டுக்கே இந்த புது சூழலைக் கையாளத் தெரிந்திருக்கவில்லை ! So 1939-ல் உலகப் போர் துவங்கிடும் முன்பான காலகட்டம் கூட அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய பகுதி என்று சொல்லலாம் !
இந்தக் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு பிரெஞ்சில் நிறையக் கதைகளும், தொடர்களும் உருவாகியுள்ளன !! அவற்றில் நமக்கு நேரடியாய் எவ்வித சம்பந்தமும் இல்லாவிடினும், கிட்டத்தட்ட 80-90 ஆண்டுகளுக்கு முன்பான நாகரீக உலகின் உச்ச சின்னமான அமெரிக்காவின் இன்னொரு முகத்தினை தரிசிக்கும் ஜன்னல்களாக இது போன்ற கதை வரிசைகளைப் பார்த்திடலாம் ! (இப்போவே கண்ணைக் கட்டுதே...என்று எண்ணும் நண்பர்கள், ஒரு கொழுக்கட்டையைக் கூடுதலாய் உள்ளே இறக்கிக் கொண்டு 'தம்' பிடித்துத் தொடரலாமே ?! )
அப்படியொரு பின்னணியினில் சமீபமாய் வெளியானதொரு 2 ஆல்பம் கொண்ட கதை தான் BLUENOTE !! இந்தக் கதையினை சென்றாண்டே ஆசை ஆசையாய்ப் புரட்டினேன் நான் ; ஆனால் அச்சமயம் பாகம் 2 வெளி வந்திருக்கவில்லை எனும் போது பெரிதாய் அதன் மீதொரு அபிப்பிராயம் உருவாக்கிட இயலவில்லை !
"மதுவிலக்கின் இறுதி நிமிடங்கள்" என்பது ஆல்பத்தின் பெயர் ! 1930-ல் அமெரிக்காவில் குடிபெயர வரும் ஒரு முன்னாள் குத்துச் சண்டை வீரர் தான் கதையின் நாயகர் ! ஒரு சதுரத்துக்குள் புகுந்து எதிராளியை நொங்கி எடுக்கும் அந்த பாக்சிங் ஆட்டத்துக்கே ஒரு முற்றுப்புள்ளிடா சாமி என்ற வைராக்கியத்தோடு நியூ யார்க்கின் கரைகளில் ஒதுங்குகிறார் ஜாக் டாய்ல் ! இனியும் பந்தயங்களுக்காக பாக்சிங் செய்யப் போவதில்லை என்பதில் தீர்மானமாய் உள்ளான் ஜாக் ! ஆனால் விதி அவனை விடாது துரத்துகிறது - ஒரே ஒரு இறுதி சண்டைக்கு பாக்சிங் மேடையினில் ஏறியே தீர வேண்டுமென்ற சூழல்களை உருவாக்கும் விதமாய் ! ஒரே நேரத்தில் சொர்க்கமாகவும், நரகமாகவும் பரிமாணங்களைக் காட்டக் கூடிய நியூயார்க் நகரில் ஜாக்கின் வாழ்க்கையே ஆல்பம் # 1. பாருங்களேன் அந்த மாறுபட்ட ஓவிய பாணிகளை ; கண்ணை உறுத்தா வர்ணக் கலவைகளை !
ஆல்பம் # இரண்டிற்கும் அதே பெயர் தான் ; இம்முறையும் கதையின் பின்னணி மிரட்டலான நியூ யார்க் தான் ! இதுவோ இசை ஆல்பம் வெளியிடும் வெறியோடு கரை ஒதுங்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையைச் சுற்றிய கதை ! ஒரே கால கட்டத்தை ; ஒரே மண்ணை - இரு வேறு நிலைகளிலிருந்து பார்த்திடும் இருவரின் வாழ்க்கைப் போராட்டங்களே BLUE NOTE -ன் பின்னணி ! நியூயார்க்கின் இரவுகள் ; அதன் கருணையிலா முகம் என அந்த சித்திரங்களில் ஒரு மெல்லிய கதை சொல்லியுள்ளார் ஓவியர் !
என்றோ முடிந்து போனதொரு யுகத்தை ; எங்கோ ஒரு உலக வரைபட மூலையின் மாந்தர்களை ; அவர்கள் வாழ்க்கை முறைகளை ; அந்த சோகங்களை நாம் பார்த்து சாதிக்கப் போவதென்ன ? என்ற கேள்வி உங்கள் உதடுகளில் இருப்பின், அதற்கான பதில் என்னிடம் நிச்சயமில்லை ! ஆனால் - மனித உணர்வுகளைச் சொல்ல முற்படும் இது போன்ற கதைகளும் என்றைக்கோ ஒரு தூரத்து நாளிலாவது நம் (காமிக்ஸ்) வாசிப்புக் களங்களில் இடம் பிடித்தால் நிச்சயமாய் என் வதனத்தில் ஒரு குட்டியூண்டு "ஈஈ" இடம்பிடித்து நிற்கும் ! (இப்போதைக்கு அந்தப் புன்னகை தலீவர் 'ணங்..ணங்' என அருகாமையிலுள்ள சுவற்றில் முட்டிக் கொள்ள முற்படுவதைப் பார்த்தும் ; மடிப்பாக்கத்தில் ஒருத்தர் விழுந்தடித்துக் கொண்டு ரிவர்ஸ் கியர் போடுவதை ரசிப்பதிலும், மக்கன் பேடாவோடு ஏதேனும் மூளைச்சலவைப் பேடா போட வாய்ப்புள்ளதா என்று வினவிடும் பெங்களூராரை ரசிப்பதிலுமே எழுந்து நிற்கிறது !)
தொடர்வது SHERMAN என்றதொரு 6 பாகக் கதை ! இங்கும் களம் அமெரிக்காவே ! கால கட்டமோ - இரண்டாம் உலக யுத்தம் துவங்கிடும் தருணமும், அது முற்றுப் பெற்று உலகமெங்கும் ஒரு புனர்ஜென்மம் எடுக்க விளையும் 1950-களின் முதல் பகுதியும் ! அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக நிற்கும் ராபர்ட் ஷெர்மன் சுட்டுக் கொல்லப்படுகின்றார் ! துடித்துப் போகும் அவர் தந்தை ஜே ஷெர்மன் தன ஒரே மகனின் கொலையின் பின்னணியினைத் துருவிப் புறப்படுகிறார் ! அந்த நீண்ட சதி வலையில் தனக்கும், தனது இறந்த காலத்துக்கும் பெரியதொரு பங்கிருப்பதை ஜே உணர்கிறார் ! அமெரிக்காவில் தொடங்கும் கதை ஜெர்மனிக்கும் நீள்கிறது ; யுத்தத்தின் பின்னணியில் ! ஒரு உலக யுத்தம் நிகழும் போது அந்நாடுகளில் தினசரி வாழ்க்கைகள் ; வர்த்தகங்கள் எவ்விதம் மாற்றம் காண்கின்றன ; யுத்த அரக்கனின் நிழலில், மனிதர்களுக்குள் தூங்கிக் கிடக்கும் பேராசை அரக்கன் எவ்விதம் விஸ்வரூபம் எடுக்கிறான் என்பதை இந்த 6 பாகத் தொடர் சொல்கிறது ! சித்திரங்கள் சற்றே நுணுக்கங்களின்றி இருப்பது போல் தோன்றினாலும், கதையோடு ஒன்றிப் போகும் வேளைகளில் நமக்குப் பெரிதாய் ஒரு வித்தியாசம் தெரியாது போய் விடுகிறது ! நிறைய விருதுகள் பெற்றுள்ள இந்தத் தொடரில் ஆங்கங்கே adults only விஷயங்கள் சரளமாய் வருவதன் காரணமாகவே இதனை "இரத்தப் படலத்தின்" வாரிசாய் நாம் இன்னமும் அறிவிக்காது இருக்கிறோம் ! நிறைய மனித உணர்வுகளை வெகு கிட்டே இருந்து காட்டிடும் இந்தக் கதைத் தொடர் 288 பக்கங்கள் கொண்டதொரு சாகசம் !!
பிரெஞ்சுப் பதிப்புலகில் SOLEIL எனும் ஒரு சமீப காலத்து நிறுவனம் பல அட்டகாசமான கதைகளைத் தன்னிடம் கொண்டுள்ளது ! எனது சமீப ஊர்சுற்றல்களின் பொழுது இவர்களையும் சந்தித்ததன் பலனாய் SOLEIL -ன் படைப்புகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாய் தமிழில் பார்த்திடும் வாய்ப்பு உருவாகியுள்ளது ! இவர்களது கேட்லாக்கை பரிசீலனை செய்யவே ஒரு வாரம் பிடித்தது எனக்கு !! அவற்றுள் நமக்கு எது ஆகும், ஆகாது என்ற பரிசீலனை ஒரு பக்கமிருக்க - பார்த்த நொடியிலேயே என்னை மிரளச் செய்ததொரு படைப்பு தான் PANDEMONIUM என்றதொரு 168 பக்க - 3 பாகக் கதைத் தொடர் ! (தலைவிரித்தாடும் குழப்பம் ; திகில் என்பது போன்ற பொருள் எடுத்துக் கொள்ளலாம் !
திரும்பவும் கதை மையமிடுவது அமெரிக்காவினில் தான் ! 1951-ன் கோடைக் காலம் ; காச நோய் கண்ட தன இளம் மகளை அமெரிக்காவின் பிரசித்தி பெற்றதொரு TB சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்கிறாள் ஒரு தாய் ! ஆனால் அங்கே அவர்கள் சந்திக்கப் போவது மருத்துவ சிகிச்சையினை அல்ல ; ஆனால் பல இருண்ட விவகாரங்களை மட்டுமே என்பதை அவள் அறிந்திருக்க வழியில்லையே ! என்றைக்கோ மூடப்பட்டிருந்த ரயில் தடத்தினில் இருந்து இரவினில் கேட்கும் ரயிலின் விசிலோசை ; திகைக்கச் செய்யும் சில திகில் தோற்றங்கள் என சிறுமி அங்கே சந்திப்பது எல்லாமே இருளின் ராஜ்யத்தை தான் !! மிரட்டலான சித்திரங்கள் ; நிஜ நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட இந்தக் கதையிலும் 'adults ஒன்லி' சமாச்சாரங்கள் தவிர்க்க இயலா விதத்தில் கதையோடு இணைந்து கிடப்பதால் இதனை என்ன செய்வதென்ற யோசனையில் மண்டையைப் பிய்ச்சிங் !! இது தான் அந்த சிகிச்சை மையம் பற்றிய நிஜத்தின் பின்னணி : https://en.wikipedia.org/wiki/Waverly_Hills_Sanatorium
இரத்தம், ஆவி, TB என்ற பக்கமிருந்து திரும்பிட இதொவொரு மாற்றம் : "என் தாத்தா ஒரு ஆவியாக்கும் !!" என்ற தொடரோடு !! இத்தாலிய தாய்க்கும், வியட்நாம் தந்தைக்கும் பிறக்கும் குட்டிப் பயல் தான் நம் கதையின் ஹீரோ ! பத்தே வயதுப் பாலகனின் தாத்தா இறந்து போய் விடுகிறார் ! பொடியனின் தாயும், தந்தையும், எலியும், பூனையுமாய் தினசரி சண்டை போட்டுக் கொண்டிருக்க - ஒரு விவாகரத்து விரைவில் அங்கே அரங்கேறும் சூழல் ! அப்போது தான் மேலுலகில் இருந்து தன பிரியமான ஈரானைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டுத் திரும்புகிறார் தாத்தா - ஆவியாய் ! இந்த நல்லெண்ண ஆவியால் பொடியனுக்கு நேரும் சங்கடங்களும், சௌகர்யங்களுமே இந்தக் கதைத் தொடர் ! இடையிடையே அந்தப் பள்ளி வயசுச் சிரார்களுக்கே உரிய சிரமங்கள், வீட்டில் அமைதி இல்லாது போகும் சமயம் நேரும் சங்கடங்கள் என செல்லும் கதை இது ! வித்தியாசமாய்த் தோன்றியது ; இன்னும் கொஞ்சம் பரிசீலனை தேவை என முத்திரை குத்தி வைத்துள்ளேன் !
இன்னமும் எனது மேஜையில் குவிந்து கிடக்கும் கதைகள் எல்லாவற்றையும் பற்றி இங்கே ஒரு note எழுதுவதாயின் - கோழி கூவிடும் என்பதால் இத்தோடு இந்த 'out of the blue " பதிவை நிறைவு செய்து கொண்டு தலையணை தேடலில் கிளம்பிடுகிறேன் ! நாளைய பொழுதை கொழுக்கட்டைகளோடும் ; TV பட்டிமன்றங்களோடும் கழித்திடவிருக்கும் புண்ணியவான்களை நோக்கியொரு ஏக்கப் பெருமூச்சை விட்டபடிக்கு gud nite சொல்லிப் புறப்படுகிறேன் - எங்களுக்கு வழக்கம் போல் வேலை நாளை ! And "காலனின் காலம்" & சிறைப் பறவைகள் அச்சாகும் நாள் கூட ! சுட்டி லக்கி ஏற்கனவே அச்சாகி விட்டது - என்பதால் அக்டோபர் அட்டவணையில் தோர்கல் மட்டுமே இப்போதைக்குப் பாக்கி ! Bye guys....! See you around !
why no comments?
ReplyDeletewhy all the previous comments are not appearing sir?
ReplyDeleteஅருண்@சார்.! கடந்த சில தினங்களாக இந்த தளமே முற்றிலும் டிஸ்கஸ் என்ற முறையில் மாற்றப்பட்டது.!அது பேஸ் புக் கமெண்ட் போல் எடிட், லைக் போன்றவையுடன் நன்றாக இருந்தது.இந்த மாற்றம் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை.!மேலும் அதன் மைனஸ் பாயிண்ட்களை எடிட்டர் கீழே விளக்கி உள்ளார்.பேக் டூ பெவிலியன் என்று உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு போனமாதிரி சந்தோசமாய் திரும்பிவிட்டோம்.! அவ்வளவுதான்.!
Deleteடியர் எடிட்டர் சார் ,
ReplyDeleteதளம் பழையபடி திரும்பி விட்டதா ?
நண்பர்களே,
ReplyDeleteநமது முந்தைய 240+ பதிவுகளின் 65,000+ கமென்ட்களை புதிய பின்னூட்ட முறையான DISQUS கையாண்டிட திணறுகிறது ! 24 மணி நேரங்களுள் முந்தைய பின்னூட்டங்கள் சகலமும் இங்கே இறக்குமதி ஆகி விடுமென்று நமக்கு சொல்லப்பட்டிருந்தது ! ஆனால் அந்தக் கெடுவெல்லாம் தாண்டியும் error என்ற சேதி மட்டுமே கிடைத்து வருவதால் - திரும்பவும் பழைய முறைக்கே செல்கின்றோம் ! என்ன தான் புது பாணி நவீனமாய் இருந்தாலும் , ஒட்டு மொத்தமாய் உங்களின் மூன்றரை ஆண்டுப் பின்னூட்டங்களைக் காவு கொடுக்க மனம் ஒப்பவில்லை ! So we are back to square one !
DISQUS -ல் பதிவான பின்னூட்டங்களை இங்கே blogger -க்கு இறக்குமதி செய்ய முயற்சித்தால் அதற்கான sync ஒத்துழைக்க மறுக்கின்றது ! நாளைய காலையில் அவற்றை எப்படியாவது இங்கே திரும்பக் கொணரும் வேலையைச் செய்து விடுகிறோம் !
அசடு ஒரு டன் வழிய....சாரி guys !!
@editor sir !
DeleteYou need not apologize sir ! nothing wrong trying to implement novel things ...
Personally it has been fun while it lasted ......(though the purpose of blog is not for fun but essentially a channel of reader's expressions ).
Probably the only benefit of DISQUS is nobody can forget the title "PANDEMONIUM "as DISQUS caused widespread noisy commotion and uproar and to certain extent panic among readers ..:-)
@ கடவுள்
Deleteபதினைந்து இலட்சத்தி என்பதாயிரம் முறை இந்த தளம் காமிக்ஸ் ரசிகர்களால் பார்க்கப்பட்டது...எங்கள் அன்பு ஆசிரியர், அருமை நண்பர் திரு விஜயன் அவர்களின் பதிவுகளுக்காக அல்ல..! அவரின் கருத்தின் கீழ்...சக காமிக்ஸ் நண்பர்களின் கலந்துரையாடல், கருத்து பரிமாற்றம், வளர்ச்சி நோக்கிய பல விவாதங்களில் கலந்துகொள்ளவும், பார்வையிடவும், ஓயாத அலைகள் போல...வருகை தந்த நண்பர்களின் வருகைபதிவே காரணம்..! அந்த அலைகள் உருவாக்கிய தங்க கடற்கரையை...65000+ கருத்துகளை திருப்பிகொடுக்க வேண்டிய என் பிரார்த்தனையை நிறைவேற்றிய, முழு முதற்கடவுளான விநாயகரே..உனக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் ..!
இங்கனம்
தனி ஒருவன்
DISQUS'க்கு மாறிய பல ப்ளாக் ஓனர்கள் பழைய கமெண்ட்களை இம்போர்ட் செய்வதில் சிரமப்படுவதை இணையத்தில் பரவலாகக்காண இயல்கிறது. So reverting back is the only option we have!
Deleteஇந்த கமெண்ட் சிஸ்டத்திலேயே Like Button மற்றும் Edit Option சேர்க்க முடிந்தால் முடிந்தால் இதுவே DISQUSஐவிட சிறந்த வழிமுறையாக இருக்கும்.
@mayavi. siva:
// கடவுள் //
// இங்கனம் தனி ஒருவன் //
அய்யே..மிடியல
கடவுளுக்கெல்லாம் கடுதாசி போட ஆரம்பிச்சுட்டீங்களே மாயாவி அவர்களே... :D
Delete////இந்த தளம் காமிக்ஸ் ரசிகர்களால் பார்க்கப்பட்டது...எங்கள் அன்பு ஆசிரியர், அருமை நண்பர் திரு விஜயன் அவர்களின் பதிவுகளுக்காக அல்ல..! ///
"....அருமை நண்பர் திரு விஜயன் அவர்களின் பதிவுகளுக்காக. மட்டும் அல்ல..!" என்றிருப்பதே சரியான வாக்கியமாக இருக்கும் மாயாவி அவர்களே! ( வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் கவனமாகக் கையாளுமாறு கேட்டுக்கொள்கிறேன் வேதாளரே! )
இங்ஙனம்
கூட்டமாய் பலர் :D
@ இத்தாலி விஜய்
Deleteஆமா..ஆமா...சரியாதான் சொன்னிங்க...மட்டும்விட்டுபோச்சி..ஹீ..ஹீ..!
கடிதாசி கடவுள்க்குகிறதால, பொய் சொல்லகூடாது..அப்புறம் சாமி நாக்கு அறுத்துரும்ன்னு பயத்துல ஒரு கணக்கு போட்டு பாத்தேன்..! 511 பேர் இந்த தளத்தை பின் தொடர்ராங்க...இதுவரையில் வந்துள்ள 240 பதிவையும் ஒவ்வொருத்தரும் ரெண்டு ரெண்டு தபா படிச்சாலும் 511 X 240 X 2 = ரெண்டு இலட்சத்தி நாற்பத்திஐந்தாயிரம் தடவைதான் வருது..! மீதி பதிமூனுஇலட்சத்து நாற்பதாயிரம் தபா கமெண்ட்ஸ்கள் போடவும், கமெண்ட்ஸை பார்வையிடையும் தானே..! நீங்க சராசரியா ஒரு பதிவுக்கு பத்து கமெண்ட்ஸ் போடறீங்க...பத்து தடவையும் ஆசிரியர் பதிவை படிச்சிட்டு...அதுக்கப்புறம் பிரண்ட்ஸ்க்கு பதில் சொல்ல வாய்ப்பில்லை என்பது தானே நெஜம்..!
யோசிச்சிபார்த்து..சாமிகுத்தம் வேண்டாம்ன்னு உண்மைய எழுதிட்டேன்..ஹீ..ஹீ..! அடுத்த தபா ஜமாய்சுடறேன்..!
இங்ஙனம்
தனி ஒருவன்
@ ரமேஷ்
Deleteரசிப்பு என வந்துவிட்டால் அதில் தல,தளபதி,ஜாலிஜம்பர்,ச்மார்ப்ஸ் என பேதம் என்னிடம் கிடையாது [என பொருள்படும்] என்ற உங்கள் ரசிப்பின் அளவுகோள் எனக்கு பிடித்த ஒன்று..! அதேபோலவே நல்லவைகளை, வீரியமான விஷயங்களை புத்தகத்தில் மட்டுமல்ல...வெண்திரையில் கிடைத்தாலும் பிடித்துக்கொள்வதில் நான் பேதம் பார்ப்பதில்லை..!
இதை விட என்னால் //அய்யே..மிடியல//
டெக்ஸ்க்கான தனியொருவனின் விரதத்தை ஆரம்பித்து விட்டு இங்கே வந்தால் ....மீண்டும் பழைய இடம் , பழகிய இடம் .......ஆண்டவனுக்கு நன்றி .......
Deleteடியர் எடிட்டர் சார் ,
ReplyDeleteLion comics .in இல் எனது முகவரி பக்கம் போகும் போது தனியே country என்னும் இடத்தில் இந்தியா , நியூ சிலாந்து மட்டுமே வருகிறது . நீங்கள், தெரிந்த நண்பர்கள் யாராவது எனக்கு உதவ முடியுமா பிளீஸ் ? பிளீஸ் ? ப்ளீஸ்?
பிரான்ஸ் இலுள்ள நண்பர்கள் suji -bala அவர்கள் இவிடயத்தில் எனக்கு உதவி செய்வீர்களா ?
ReplyDeleteThiruchelvam Prapananth : சார் ; அதற்கென மாற்றம் செய்து விட்டார் ஜூ.எ. இனி நீங்கள் பதிவு செய்திட சிரமமிராது !
DeleteGood! We are back to our block!! I am very happy with this!
ReplyDeleteஇப்பதான் நம்ப ப்ளாக் மாதிரி தெரிகிறது! ஹாப்பி அண்ணாச்சி!
Delete// PANDEMONIUM என்றதொரு 168 பக்க - 3 பாகக் கதைத் தொடர் ! //
ReplyDelete// "என் தாத்தா ஒரு ஆவியாக்கும் !!" //
I LIKE these two.
Other twos BIG NO.
மிண்டும் பழைய முறைக்கு மாறியது மிக்க மகிழ்ச்சி சார். டெக்ஸ் சந்தா பற்றி அக்டோபர் முன்னாடி ஒரு கோடிட்டு சொல்ல கூடாதா ,சார். டெக்ஸ் சந்தா வரவில்லை என்றால்.டையபாலிக்கு தனி சந்தா கேட்டு போராட்டம் செய்ய வேண்டி வரும் சார் :p
ReplyDelete// டையபாலிக்கு தனி சந்தா கேட்டு போராட்டம் செய்ய வேண்டி வரும் சார் //
Deleteசெம லொள்ளு!
Deleteranjith. :)
The last 2 looks interesting, Editor sir. The first two looks impressive, but sounds like novels. For comics, you need something happening in every frame, action, comedy etc. Atleast thats what i think. What others feel, lets wait for their opinion...
ReplyDeleteஅப்பா.....ஏதோ வேண்டாத சொந்தகாரங்க வீட்ல இருந்து திரும்பி சொந்த வீட்டுக்கு வந்த
ReplyDeleteமாதிரி (சத்தோசமா) நிம்மதியா இருக்கு....
நன்றி எடி சார்....
எங்கே ஒரேடியாக காணாமல் போய் விடுவேனோ என்ற எண்ணமே வந்து விட்டது :-)
ReplyDeleteஅப்பப்பா...Disqus ஐப் பார்த்த போதெல்லாம் என்னவொரு வெறுப்பு ?! அதன் மேலிருந்து எழுந்த வெறுப்பு அலைகள், என் காமிக்ஸ் ரசனையையும் பாதித்து விடுமோ என்று கொஞ்சம் அச்சமே வந்து விட்டது :-( தற்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். நன்றி !!
அப்பாடா.!மிஸ்டர் மரமண்டையை மீண்டும் பார்த்ததில் சந்தோஷம்.!
DeleteMadipakkam Venkateswaran : நன்றி Mv சார் :-))
Deleteஉங்களையும் Madipakkam Venkateswaran என்ற பெயரில் பார்ப்பதே மகிழ்ச்சி அளிக்கிறது. மாடஸ்டி ரசிகன் என்ற பெயர் ஏனோ உங்களை அன்னியமாக்கியது என்பதே உண்மை. ஆசையும், ரசனையும் மனதில் இருந்தால் மட்டுமே போதுமே சார் - பெயரிலும் பிரதிபலிக்க தான் வேண்டுமா என்ன ?!
அடடே!என்னை அடையாளம் கண்டுபிடித்து விட்டீர்களா.?சபாஷ்.!நானும் உங்களைப்போல் முகமூடியுடன் வலம் வரலாம் என்று நப்பாசையுடன் இருந்தேன்.!எடிட்டர் பழைய முறைக்கே கொண்டு வந்து விட்டார்.!வடை போச்சே.!(இங்கே நம்முடைய கருத்துகளை அடுத்தவர் மனம் புண் படாமல் கூற, நம்முடைய நதி மூலம் ரிஷி மூலம் தேவையில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.!)
Delete///அடடே!என்னை அடையாளம் கண்டுபிடித்து விட்டீர்களா.?சபாஷ்.!நானும் உங்களைப்போல் முகமூடியுடன் வலம் வரலாம் என்று நப்பாசையுடன் இருந்தேன்.!///
Deleteஹாஹாஹா.!!!
உங்க இளவரசியே உங்களை காட்டிக்கொடுத்துவிட்டாள் M V!!! :-)
///அடடே!என்னை அடையாளம் கண்டுபிடித்து விட்டீர்களா.?சபாஷ்.!நானும் உங்களைப்போல் முகமூடியுடன் வலம் வரலாம் என்று நப்பாசையுடன் இருந்தேன்.!///
Deleteஹாஹாஹா.!!!
உங்க இளவரசியே உங்களை காட்டிக்கொடுத்துவிட்டாள் M V!!! :-)
கிட் ஆர்ட்டின் கண்ணன்.!ஓ.!நீங்களும் கண்டுபிடித்து விட்டீர்களா.?எப்படீங்க ?புரஃபைலில் என்னைப் பற்றி ஒரு க்ளு கூட தரவில்லையே .? இளவரசிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் அவர்களில் ஒன்றாக கருதுவீர்கள் என்று நம்பினேன்.! அடச்சே.!இதற்காகவே பழைய முறையை விரும்பினேன்.!
Delete/இளவரசிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ///----
Deleteஅப்படியா எங்கே சார் .....
கர்ர்ர்ர்ர்............!
Deleteஇதுவும் நல்லா இருக்கு சார்! :-)
ReplyDeleteSherman தொடரின் சித்திரங்கள் "தேவரகசியம் தேடலுக்கல்ல " வை ஞாபகப்படுத்துகிறது.!
ReplyDeleteமுடிந்தால் 2016 ல் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக போட்டு முடித்துவிடுங்கள் சார்.!
இன்னொரு யங் டைகரையோ., ரத்தப்படலத்தையோ இந்த பூலோகம் தாங்காது.!!!!! (வருசம் ஒண்ணு ரெண்டுன்னு தனித்தனி ஆல்பமாக வேண்டாம் எ.எ.க .)
இப்பொழுது குறிப்பிட்டிருக்கும் கதைகளை, புதிய முயற்சிகளை கண்டிப்பாக தொடரவும். முன்பொருமுறை 'the redempteur'' பற்றி குறிப்பிடிருந்தீர்கள் . அவரையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஉலக யுத்த பின்னணியை கொண்ட கதைகளுக்கும், இடியாப்ப சிக்கல்களை கொண்ட கதைகளுக்கும் என் ஆதரவு எப்பொழுதும் உண்டு!
மீண்டு ( ம் ) வந்ததில் மகிழ்ச்சி ...புதிய கதைகள் வருவது மிக்க மகிழ்ச்சி ..வரவேற்கிறேன்
ReplyDeletePANDEMONIUM, என் தாத்தா ஒரு ஆவியாக்கும், தொடர்களை வரவேற்கிறேன். மாஃபியா கலாசாரத்தை கொண்ட BLUENOTE, SHERMANNலாம் நம்ம எல்லா வாச்கர்களுக்கு பிடிக்குமான்னு தெரியலை. நாயகன் பாணி கதை, mafia வீடியோகேம் விளையாடியவர்களுக்கு பரிச்சயமான கதைகளாக அது இருக்ககூடும்! :)
ReplyDelete/// : "என் தாத்தா ஒரு ஆவியாக்கும் !!" என்ற தொடரோடு !! இத்தாலிய தாய்க்கும், வியட்நாம் தந்தைக்கும் பிறக்கும் குட்டிப் பயல் தான் நம் கதையின் ஹீரோ ! ///
ReplyDeleteஇத்தொடர் நம்வீட்டு வாண்டுகளை கவரக்கூடும்.!
சரி விடுங்க எடிட்டர் சார்... இந்த 'டிஸ்கஸ்'ஐ விடவும் மேம்பட்ட வசதிகளுடன் எதிர்காலத்தில் 'டஸ்புஸ்' அல்லது 'உஷ்உஷ்' னு ஏதாச்சும் comment system வரும்... அப்போ பார்த்துக்கிடலாம்!
ReplyDeleteஅப்படியொரு நாள் புலர்ந்திடும்போது...
* எழுத்துக்களாக அல்லாமல் voice tag / Video tag மூலமாகவே உங்கள் பதிவுகளைக் கேட்போம்...
* Voice tag/video tag மூலமாகவே நாங்களும் பின்னூட்டமிடுவோம்... ( கொரியர் ஆபீஸுல நின்னுக்கிட்டு "எனக்கு இன்னும் புக்கு வரல எடிட்டர் சார்"னு கத்துகிற மாதிரியான video tag எல்லாம் தமாஷா இருக்கப்போவது உறுதி!)
Ivlo puthu kathaya vidaranu sollum edi sir namma tex santha &dragon nagaram reeeeeee printtttttttttttttt paththi ethuvatsum solli iruntha vinayakar sathurthi makilsiya irunthirukkum ......................................................................................................................................................so namakku eppothum edi than thunai ............2016 la namakku enna varam kudupparo ....................ooooo god(edi sir) tex santhavukku karunai kattunkal..............................pls .......................
ReplyDeleteடியர் காமிரேட்ஸ்,
ReplyDeleteதமிழ் காமிக்ஸ் உலகின் அசாத்திய திறமைசாலியும், நமது முத்து காமிக்ஸ் வார மலர், லயன் காமிக்ஸ் விடுமுறை மலர், முத்து காமிக்ஸ் போன்ற இதழ்களில் காமிக்ஸ் கதைகளுக்கு ஓவியம் வரைந்தவருமான திரு செல்லம் அவர்களுக்கான நினைவு கூர்தல் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சென்னை திருவான்மியூரிலி இருக்கும் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற உள்ளது.
இந்த கலைஞனுக்கு நாம் செய்யும் இறுதி மரியாதை அவரது நினைவு கூர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு அவரது நினைவுகளை சிறப்பிப்பதே. I believe that could be a fine way to make our tribute to this Maestro.
முன்னிலை: ஓவியர்கள் மணியம் செல்வம், ஜெயராஜ், ராமு, அரஸ், மாருதி
தலைமை: திரு ட்ராட்ஸ்கி மருது
நாள்: வெள்ளிக்கிழமை 18-09-2015
நேரம்: மாலை 5:00 மணி
இடம்: பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை.
ஒருங்கிணைப்பு: கரும்பனை கலை இலக்கிய ஊடகத்தளம்
பின்குறிப்பு: அவரது மிகச்சிறந்த ஓவியங்களில் சில இங்கே காண்பிக்கப்படும்.
சிறுவர்கள் உலக சித்திரக்கதைக்கு சித்திரம் போடும் முடிசூடா மன்னன் மறைவு...ஈடுசெய்ய முடியா இழப்பு..! அவரின் இரங்கல் கூட்டத்திற்கு பங்குகொள்ள மனம் துடித்தாலும், தூரமும் சூழலும் தடுக்கிறது...நேற்று இரயில் டிக்கெட் எடுக்க முயன்றும் கிடைக்கவில்லை..! வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள்..! ஓவியமன்னர்கள் ஒரு சேர பார்க்கும் வாய்ப்பும் கிட்டும்..!
Deleteஇந்த இரங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய உதவிய கிங் விஸ்வாவிற்கு இங்கு நன்றிகள்..!
//நமது முந்தைய 240+ பதிவுகளின் 65,000+ கமென்ட்களை புதிய பின்னூட்ட முறையான DISQUS கையாண்டிட திணறுகிறது ! 24 மணி நேரங்களுள் முந்தைய பின்னூட்டங்கள் சகலமும் இங்கே இறக்குமதி ஆகி விடுமென்று நமக்கு சொல்லப்பட்டிருந்தது ! ஆனால் அந்தக் கெடுவெல்லாம் தாண்டியும் error என்ற சேதி மட்டுமே கிடைத்து வருவதால் - திரும்பவும் பழைய முறைக்கே செல்கின்றோம் ! என்ன தான் புது பாணி நவீனமாய் இருந்தாலும் , ஒட்டு மொத்தமாய் உங்களின் மூன்றரை ஆண்டுப் பின்னூட்டங்களைக் காவு கொடுக்க மனம் ஒப்பவில்லை ! So we are back to square one ! ////------ முந்தைய பழைய ப்ளாக்கர் பதிவுகளின் கமெண்ட்ஸ் களை ....அந்த டிஸ்கஸ் முறையில் ஏன் இறக்குமதி செய்ய இயலவில்லை ???, .... கமெண்ட்ஸ் களை மாற்றி தர இயலும் என சொன்னது தவறான வழிகாட்டலா ???---- கொஞ்சம் கம்ப்யூட்டர் வல்லுந நண்பர்கள் விளக்கவும் ...ப்ளீஸ் ...
ReplyDeleteசேலம் இரவுகழுகாரே பதில் ரொம்பவே சிம்பிள்....
Deleteநீங்கள் உங்கள் பெயரில் அனுப்பிய மெயில்...நீங்கள் நினைத்தாலும் அதை திரும்ப பெறமுடியாது..! எதிராளி உங்கள் மெயிலை நிரந்தரமாக அழித்துவிட்டால்..மீண்டும் அதை அவர்..அந்த நாள்,கிழமை,நேரத்தில் அந்த மெயிலை திரும்ப பெறமுடியாது..! அவை உங்கள் நண்பருக்கு தேவையெனில்..அதை நீங்களே திரும்ப அனுப்பினால் தான் உண்டு..! அப்போது கூட..இன்றைய தேதி,நேரம் தான் காட்டும்..அந்த முதலில் அனுப்பிய விவரம் போனது..போனதுதான்..!
இந்த விதி sms,email,whats app, face book, twitter,bolg என எல்லாவற்றிக்கும் பொதுவே..! உதாரணமாக face bookகில் அல்லது ஈமெயிலில் போனமாதம் நீங்கள் போட்ட கமெண்ட்ஸ்களை...whats app அல்லது DISQUS போன்ற அடுத்த தளத்தில், போனமாத அதே தேதியில் வந்ததாக பதிவுசெய்யவே முடியாது..! [அப்படி செய்வற்கு பெயர் ஹாக்கிங் என்பது வேறு விஷயம்] மூன்று நிமிடங்கள் முன்போ...மூன்று வருஷங்கள் முன்போ...எதுவாயினும் ப்ளாக்கில் வந்த கமெண்ட்ஸை அப்படியே அதே நேரத்திற்கு DISQUS தளத்திற்கு மாற்றவே முடியாது..! DISQUS தளத்தில் வந்தவைகள் blog /comments பகுதிக்கும் மாற்றமுடியாது...ஏனெனில் ஒவ்வொரு கமெண்டசும் ஒரு ஈமெயில் ID உடன் சம்மந்தப்பட்டது..! இது விஞ்ஞானம் சம்மந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல...திரும்ப பெறவே முடியாதகாலம்சம்மந்தப்பட்டதும்..!
இங்ஙனம்
தனி ஒருவன்
நன்றி தனி ஒருவன் சார் ......இது முதல் கேள்வி யை விளக்கி விட்டது ....
Delete2வது க்கும் கொஞ்சம் ...
இரண்டாவது கேள்வியா...? அது என்ன..எங்கே இருக்கு...!?!?
Delete//கமெண்ட்ஸ் களை மாற்றி தர இயலும் என சொன்னது தவறான வழிகாட்டலா ???----////--- கமெண்ட்ஸ் களை மாற்றி தர இயலும் என நம்ப வைக்கப்பட்டது எப்படி ????
Deleteசேலம் இரவுகழுகாரே வில்லங்கமான கேள்வி..இதுக்கும் பதில் ரொம்பவே சிம்பிள்....
Deleteநம்பிக்கை தான் வாழக்கை...நம்பி செய்யறது பூராவும், முடிவுல எதிபார்த்த பலன்லயே முடிவதுதில்லை.. ஹாஹா...!
That "என்னவோ போடா மாதவா " moment. :):):)
Deleteஎடிட்டர் சார்.!
ReplyDeleteநடிகர் சத்தியராஜ் ஒரு படத்தில் வழக்கை தலையை கிண்டல் செய்யும் ஒருவனிடம்.!, "எனக்கும் சிறுவயதில் பொசு பொசுவென்று முடி இருந்தது வயதாகியதால் சொட்டை விழுந்து விட்டது ஏதோ பிறவியிலே சொட்டை விழுந்தமாதிரி பேசறீங்களே" என்பார்.! அதைப்போல.,எங்களுக்கும் கி.நா. படிக்க ஆசைதான். ,ஆனால் எழத்துக்களை படித்தே ரசித்து பழகிய எங்களுக்கு.,எழத்துக்கள் துணையின்றி படங்களை மட்டுமே பார்த்து புரிந்துகொள்ள தடுமாற்றம் ஏற்பட்டு ஒன்றிபோவதில் சிரமம் ஏற்படுகிறது.!இதனால் எரிச்சல் மற்றும் கோபம் ஏற்படுகிறது.!ஆகவே,கதையில் தடுமாற்றம் ஏற்படும் இடங்களில் குறிப்பாக திடீரென்று மாறும் கதை களங்கள் மற்றும் குழப்பமான இடங்களில் உங்கள் எழத்துக்கள் மூலம் உதவி செய்யலாமே சார்.!நாங்களும் கதைகளில் ஒன்றி படிக்க உதவியாக இருக்குமே சார்.அவ்வாறு உதவி செய்வது தவறு என்று நீங்கள் கருதினால் ,இந்த மாதிரி கதை அனைத்தும் காமிக்ஸாக தோன்றாமல்.,ஒரு தகுதி தேர்வாகவே எங்களுக்கு தோன்றும்.!
அப்பாடா பழையபடி பதிவுகளை பார்க்கும்போதுநிம்மதியாக உள்ளது
ReplyDeleteதளத்துக்கு வருவது ஆசிரியரின்
பதிவுகளை படிப்பதற்காக மட்டும்
அன்றி அவரது அறிவுப்புகளை
தெரிந்துகொள்ளவும்தான்
டெக்ஸ் தனி சந்தா .......
ReplyDeleteநீ வரலாம் ...வராமல் போகலாம் ..ஆனால்
நான் காத்திருக்கிறேன்
உன் சுவாசம் என்மீது படலாம் படாமல் போகலாம் ஆனால்
நான் காத்திருக்கிறேன்
வெய்யில் காலத்து நிழலாக ..மழைக்காலத்துக் குடையாக
நீ வரலாம் வராமல் போகலாம் ..ஆனால்
நான் காத்திருக்கிறேன்
இதய நீருற்று வறண்டு விடாமல் இருக்க
புதிய கற்பனைகள் பீறிட் டெழு ந்து சிந்தை இனிக்க
உன் வருகையை எதிர்பா ர்த்திருக்கிறேன்
உனக்குத்தெரியாது ..எனக்கு தைரியம் கற்று கொடுத்தது நீ
கலங்காதே நெஞ்சே திட சிந்தை கொள் எனப் போதித்தது நீ
மழலை மாறா காலத்தில் உன் கைவிரல் பற்றி நடந்த து நான்
மறந்து போனாயோ மறுபடி வருவா யோ
நான் காத்திருக்கிறேன்
துடிக்கும் இதய நம்பிக்கை லப்டப்போடு
நான் காத்திருக்கிறேன்
அடடா! அருமை!!
Deleteஇந்த கவிதையை இத்தாலிக்கு அனுப்பி வச்சீங்கன்னா டெக்ஸ் வில்லரே நேர்ல வந்துடுவாருனு தோனுது! ;)
அப்படியிருக்க,
இங்கே சிவகாசியில் ஒரு கல் மனம் கரையாததும் ஏனோ?
விதி செல்லும் பாதையை அறிந்தார்தான் யாரோ?
மாதமொரு டெக்ஸ் இல்லாத வாழ்க்கையும் வீணோ? :P
//vannappuraa//
Deleteகாத்திருப்பு கவிதை பிரமாதம் நண்பரே.
Edit sir, I hope all of us deserve the answer, its making us furious from curious to make all of us wait till October.
அன்புள்ள எடிட்டர்,
ReplyDeleteவெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவிக்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற்கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்
முன்கூட்டிய நன்றிகள்! ..
நானும் முன்கூட்டிய நன்றிகள்!
ReplyDelete+1
ReplyDeleteSHERMAN என்றதொரு 6 பாகக் கதை -supper நிச்சயம் ஒருநாள் நீங்கள் இதை பதிப்பிர்கள் (சில பாகங்கள் 2016 கி.ந.ல்?)
ReplyDeleteSOLEIL யின் PANDEMONIUM -நன்று திகில் சந்தாவில் துண்டு போட போகும் முதல் போட்டியாளர்(?)
dupuis யின் Mon pépé est un fantôme -OKக தெரிகிறது, 2016 கார்டூன் சந்தா(?) இல்லை கார்டூன் ஸ்பெஷல்(?) புத்தகம்
but Edit sir, ஒரு வருடத்தில் கி ந சந்தாவில் முழுதும் horror ஆகாவோ, சந்தா முழுதும் action( Bouncerஐ போல) ஆகவோ, அல்லது சந்தா முழுதும் போர்கலமாகவோ இல்லாமல் variety ஆகா எதிர்பார்கின்றேன். முக்கியமாக "The Incal" போன்ற sci-fiயும் சேர்க்க வேண்டும் எடிட் சார்.
அப்புறம்
BLUENOTE - நிச்சயம் 2016 கி ந சந்தாவில் இணைத்துவிடீர்கள் தானே ? நிச்சயம் அத்தகைய soulful சிந்தனைகள் உங்களுள் துளிர் விட்டிருக்க அனுமதித்திருபீர்கள் என்று தெரியும் எடிட் ! :)
ஸ்ஸ்ஸ்.........யப்பா! இப்பவே கண்ணகட்டுதே!என்னவோ போடா மாதவா.!
Deleteஎன்ன மடஸ்தி ரசிகரே இதுக்கே கண்ணகட்டுநா மீதம் அக்டோபரில் 2016 schedule... டெக்ஸ் தனி சாந்தாவுடன் ஒரு மடஸ்தி மறுபதிப்புடன்...
Delete:D
அப்புறம் எல்லாருக்கும் தெரிஞ்ச மடஸ்தி ரசிகர் நீங்க இப்படி கோன்டைய மறைக்க தெரியாம வந்தத என்ன சொல்ல நண்பரே .... :D
சதீஸ் குமார் சார்.!டீசர் ஒவியங்கள் அட்டகாசமாய் உள்ளது உள்ளது.! எப்படியும் வழக்கம் போல் இரண்டு இதழ்கள் வாங்குவேன்.! இருந்தாலும் படத்தை மட்டுமே பார்த்து புரிந்துகொள்ளவேண்டும் என்ற சூழ்நிலை பற்றி நினைக்கும் போது,சூடு கண்ட பூனையின் நிலைதான்.!இருந்தாலும் விஜயன்சார் மீது நம்பிக்கை உண்டு.!அவரால் உருவாக்கப்பட்டதுதான் என் காமிக்ஸ் ரசனை.!எனவே அவருக்கு எனக்கும் 90% ரசனை ஒத்துப்போகும்.!இப்போது புரியவில்லை என்றாலும் பின்னர் ஒருநாள் புரியும் என்று நம்புகிறேன்.!
Deleteமாடஸ்டி ரசிகன் என்று புனைப்பெயரில் யாருக்கும் தெரியாது என்று நம்பிய என் மடத்தனத்தை நினைத்தால் எனக்கே சற்று வெட்கமாய் உள்ளது.சாரி நண்பர்களே.!
உங்க நம்பிக்கை வீண்போகாது MV sir ! :)
Deleteவெட்கப்பட ஒன்றுமே இல்லை நண்பரே ! just laugh and leave மடஸ்தி ரசிகரே :)
ஹா..ஹா...MV சார் ....ஏதும் டெக்ஸ் ரசிகன் அல்லது கி.நா.ரசிகன் ...இப்படி ஏதாவது ட்ரை செய்திருக்கலாம் நீங்கள் .....ஆனாலும் உங்கள் மாடஸ்தி நேசம் திகைக்க வைத்து விட்டது சாரே .....
Deleteசேலம் இரவு கழுகார்.!
Deleteஎனக்கு டெக்ஸ் வில்லர் கதை ரொம்ப பிடிக்கும்.,கி.நா.நோ கமெண்ட்ஸ்.டெக்ஸ் வில்லர் கதைகளில் உடம்பில் புல் அரிக்கும் சம்பவம் நிறைய இருக்கும்.!ஆனால் நெஞ்சை நெகிழச்செய்யும் சம்பவம் ஒன்றே அது பவளச்சிலை மர்மம் .,!அதில் கடைசியில் தொங்கு பாலத்தை டெக்ஸ் வெட்டி விடப்போவார் அப்பொழுது கார்சன் சொல்லும் டயலாக் மற்றும் இருவரின் நட்பு கண்களில் நீரை வரவழைத்தது.(இந்த இடத்தை உங்க மாமா எப்படி கையாளப் போகிறார் என்று ஆர்வத்துடன் உள்ளேன்.!)
மாடஸ்டி கதைகளில் பழிவாங்கும் புயல் அற்புதமான கதை,ஓவியங்கள்,கதை,ஆக்ஷன்,வசனங்கள்,மாடஸ்டி கார்வின் நட்பின் ஆழம்,ஏன் வில்லன் கேப்ரியல் கூட அட்டகாசமான ஆளுமை கேரக்டர்.விஜயன் சார் மொழிபெயர்ப்பு என்னும் கிரீடத்தில் இந்த கதை ஒரு வைரம் என்றால் அது மிகையில்லை.!
அதைப்போல் சுமரான கதையில் மரணப்பிடி(நன்றி மாயாவி,என்னிடம் முன் அட்டை இல்லை) கதையில் ஒரு சிறுமி தன்னைப்போல் அனாதை ஆகிவிடக்கூடாது என்று துரோகி பட்டத்தை கூட ஏற்றுக்கொள்ள தயங்காது செயல்படும் இளவரசி ,மாடஸ்டி தான் முக்கியம் நாட்டுப் பற்றெல்லாம் அப்புறம்தான் என்று செயல்படும் கார்வின் ,என்று கதை அருமையான மொழிபெயர்ப்பில் என்னை தேம்பி தேம்பி அழவைத்து ஒரு கர்சீப்பே ஈரமாக்கிய கதை.!!இப்போது படித்தாலும் கண்களில் தாரை தாரையாக நீர் கொட்டும்.!
ஆணாதிக்க மனோபாவத்தை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு படித்தால் மாடஸ்டி கதைகள் வைரமாய் ஜொலிக்கும்.!
சேலம் இரவுக்கழகார்.!
Deleteஎனக்கு கம்யூட்டர் சம்மந்தமான அனைத்து வேலைகளயும் என் மனைவிதான் செய்து கொடுப்பாள்.! இதை உருவாக்கி கொடுத்ததே என் மனைவிதான்.! மாடஸ்டி வெங்கி என்றோ,மாடஸ்டி ரசிகன் என்று பெயர் வைக்க எவ்வளவோ போராடி பார்த்தேன்(இரண்டு மாதங்கள்) நோ என்று உறுதியாக இருந்துவிட்டாள்.எனவே வேறு வழி இல்லாமல் மடிப்பாக்கம் வெங்கடேஸ் வரனாக வலம் வருகிறேன்.!டிஸ்கஸ் பகுதியில் எனக்கு நானே என்று வந்தபோது அவசரப்பட்டு ஆழ் மன ஆசையில் மாடஸ்டி ரசிகன் என்று பெயர் வைத்து மாட்டிக்கொண்டுவிட்டேன்.!
MV சார் நீங்கள் மாடஸ்தி கதைகளை விமர்சனம் செய்யும் விதமே ,, அட மீண்டும் படிக்கனும் என்ற எண்ணத்தை எழச்செய்கிறது.....நீங்கள் ஏன் ஒரு மாடஸ்தி பதிவு எழுத கூடாது, எங்களோடு இணைந்து.........
Deleteஇப்போது கூட உங்கள் பெயரில் மாடஸ்தி யை இணைத்து விடலாமே சார் ,அனுமதி கிடைக்கும் பட்சத்தில் .....
//அக்டோபர் அட்டவணையில் தோர்கல் மட்டுமே இப்போதைக்குப் பாக்கி !//
ReplyDeleteசெப்டம்பரில் அக்டோபர் இதழ்கள் வரும் போல தெரிகிறதே ? :P
அப்பாடா......நைட் பத்து மணிக்கு இந்த பழைய முறை எவ்வளவு அழகு...புது முறை எவ்வளவு கடினம் என்று விளக்கிவிட்டு அது பதிவானாதா இல்லையா என தெரியாமலே தூங்கி விட்டு இப்பொழுது இங்கே வந்தால் பழையபடி சொந்த வீட்டிற்கே வந்தாகி விட்ட உணர்வு....நன்றி சார் ...
ReplyDeleteஅப்புறம் செயலாளர் அவர்களே உங்கள் டவர் கமெண்ட் இரவு படித்து விட்டு வாய் விட்டு சிரிக்க தூங்கிய இல்லதரசி எழுந்து முறைக்கும் அளவிற்கு ஆகிவிட்டது.ஆனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை....இப்படி அடுத்தவர்களை சிரிக்க வைக்கும் தங்களுக்கு பதிவிற்கு இத்தனை கமெண்ட தான் இடுவேன் என்ற சட்ட திட்டம் எல்லாம் எதற்கு....எப்போதும் போல வாருங்களேன் ....
பிறகு இன்றைய பதிவிற்கு எனது கருத்து
அந்த தாத்தா பையனுக்கு ஒரு ப்ளஸ் சார் ...
மற்றவை பற்றி
நோ.....கமெண்ட்ஸ்..:-((
தலைவரே.!பழைய முறைக்கே திரும்பியாச்சு.!இப்போது சந்தோஷமா.?
Deleteநிரம்ப சந்தோசம் ம.மாடஸ்தி சார்..:-)))
Deleteதலைவரே.!எடிட்டருக்கு அப்படி என்ன எக்ஸ்ட்ரா ஸ்டாம்ப் ஒட்டி கடிதம் எழதிணீங்க.?
Deleteசேலம் விஜய ராகவன்!
ReplyDeleteஎனக்கு தெரிந்தவரை காலன் தீர்த்த கணக்கு மட்டுமே மொக்கை கதை.! சைத்தான் வேட்டை எவ்வளவு அற்புதமான கதை அது பிடிக்கவில்லையா.?அதிசியம்தான்.!
அது சரிங்க.!உங்கள் மாமா எழதுவதாக கூறிய பவளச்சிலை மர்மம் எப்பொழது வரும்.?விரைவில் வர ஆவனம் செய்யுங்கள்.!ஆவலுடன்.....................!
MV சார் ... சாத்தான் வேட்டை அற்புதமான கதை , ஆனால் ஓவியங்கள் சொதப்பல் ..அதே சூப்பர் சித்திரங்களோடு அந்த கதை இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் தானே ...அதை சொன்னேன் சார் ....ரசிக்க இயலவில்லை என்று தானே சொல்லி உள்ளேன் .....
Deleteபிடிப்பது வேறு ....ரசிப்பது வேறு .....
சுவீட் எனக்கு பிடிக்கும்.....அந்த சின்ன பூந்தி மோதி லட்டு ரொம்பவே ரசிக்கும் படி பிடிக்கும் ....ரசித்து சாப்பிடுவேன்....(ஈரோட்டில் தான் நீங்கள் லட்டு வாங்கி தர்ல , வரும் சென்னை விழாவில் ......5கிலோ அல்லாரும் சாப்பிடும் படி.......ஹி...ஹி...)
மாமாவுக்கு கடும் பணிச்சுமை ....சற்றே பொருத்து பவளம் மின்னும் சார் ....
டெக்ஸ் விஜய ராகவன் சார்.! ஓ.கே.சார்.பதிவு ரெடியானதும் தெரியப்படுத்துங்கள்.! 250க்கு மேல் பதிவு சென்று விட்டால்., லோடு மோர் பிரச்சினை., மீண்டும் இத்தளத்திற்கு வர கடினமாக உள்ளது.!
Deleteடெக்ஸ் விஜய ராகவன் சார்.!
Deleteஈரோட்டில் கலந்து கொள்ள கன்பாம் ஆன டிக்கெட்டை கேன்சல் செய்தேன்.! எனக்கும் பயண திட்டத்திற்கும் ஏழாம் பொருத்தம்.எல்லாம் அவன் செயல்.!
@Editor:
ReplyDelete//"சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களின் சகலமும் ஒரு சராசரி வாசகனுக்குப் புரிந்திருக்கும் என நீங்கள் எதைக் கொண்டு அனுமானித்துக் கொள்கிறீர்களோ ; அதற்கொரு மறு பக்கமாய் நான் (மாற்றிச்) சிந்திக்கவும் வாய்ப்புண்டு என்பதை ஏன் மறந்து விடுகிறீர்கள் ? 'இங்கே ஒரு வாசகனுக்குக் குழப்பம் நேரிடக் கூடுமே' என்ற எனது முன்ஜாக்கிரதை - சாலையில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகைகள் போலத் தானே ?
"10 / 20 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கியிருக்கும் எனக்கு இந்த ரோட்டில் எந்த ஸ்பீடில் போகணும்னு தெரியாதாக்கும் ? " என்று எத்தனை முறை அந்த ரோட்டில் நிற்கும் போலீஸ்காரரிடமோ , PWD ஆசாமிகளிடமோ சண்டைக்குப் போகப் போகிறோம் நாம் ?
'அவசியப்படுவோர்க்கு அது !' என்று நம் பாட்டைக் கவனிப்பது தானே இயல்பு ? ஒரு காமிக்ஸ் பக்கத்தினுள் மட்டும் அந்த லாஜிக் காணாது போய் - இதுவொரு வாசகனின் முதிர்ச்சியின் அளவுகோலாய்ப் பார்க்கப்படும் காரணம் புரியவில்லையே எனக்கு !"//
"அவசியப்படுவோர்க்கு அது!"
I can't believe you actually said this. Are you expecting your reader to turn a blind eye to printed lines in your books due to the fact that they are superfluous to one but might come handy to another reader? Poor form, sir.
@editor:
ReplyDelete//Prasanna : வெப்பத்தை நீக்கி விட்டு உங்கள் பின்னூட்டத்தைப் படிக்கும் பொழுது உங்கள் ஆதங்கங்கள் புரிகின்றன ! அதே சமயம் இவை உங்களின் அபிப்பிராயங்களாக இருக்க முடியுமே தவிர, வேதவாக்காய் இருந்திடும் அவசியம் கிடையாதென்பதும் புரிகிறது !
'மொழியாக்கம் ஒரிஜினலோடு நின்று விடட்டும்' என்பது உங்கள் சிந்தை எனில் அதனை அழுத்தமாய்ப் பதிவு செய்வதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இருந்திட முடியாது ! ஆனால் "shoddy translation " ; "losing the plot " இத்த்யாதி..இத்யாதியெல்லாம் உங்கள் உணர்வுகளாக மட்டுமே இருக்க முடியுமே தவிர அவற்றுக்கும் தலையாட்டும் முகாந்திரம் என் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை !
மாற்றங்கள் காலத்தின் கட்டாயம் என்பது நியதி ! நம் காமிக்ஸ் ரசனைகள் பழமையில் ஊறியவை என்பதும் நிதர்சனம். So மாற்றங்களுக்கும், ஸ்திரத்தன்மைக்கும் மத்தியிலானதொரு மெல்லிய கோட்டின் மீதே தற்போது நடந்து செல்கிறோம் !
ஒரே நாளில் ரோமாபுரியும் கட்டப்படவில்லை ; ஒரே நாளில் கட்டிய மௌலிவாக்கம் குடியிருப்பும் நிலைத்து நிற்கவில்லை !
அவசியமாகிடும் மாற்றங்கள் சிறுகச் சிறுக அமலாவதை உங்கள் ரௌத்திரம் மட்டுப்பட்டதொரு பொழுதினில் நீங்களும் உணர்வீர்கள் ! அன்றைய தினம் உங்கள் பதிவும் தமிழில் இருந்திடக்கூடும் எல்லோரும் அதனோடு கலந்து கொள்ளும் விதமாய் ! //
"சராசரி வாசகன" - I think this is where the underlying problem is. You're taking your average reader for granted, when 'average' doesn't have to mean that the reader is practically unable to comprehend the context said (or not) in a balloon. A reader is someone who should be allowed to READ BETWEEN LINES (or pictures, in our case). You really don't have to expose every single thing in detail just because you think the reader might struggle in comprehending a particular part.
As an editor of publication, you mustn't be presuming the general IQ of your readers. That's what I meant by 'spoon-feeding'. Expository dialogues/prose are not what comic books are made for. Pictures in the comic book do serve a purpose and at the moment you're disallowing them for your own presumptions.
Now, if you get annoyed at the above few lines i just wrote, and spurred you to think "who's this guy telling me what i should or shouldn't do", then I will have made my point. Because that's exactly how I feel as a reader when I read your translations.
Also, I never said what i am pointing out are "veda vaaku" and all. And it'd be absolutely foolish of me to expect you to "nod your head in agreement" and make the change overnight just because one of your random reader has gone on a tirade, so I wouldn't do that. Instead I only asked you to pay attention to the apparent shortcomings that I point out. I don't think I've let emotions come in the way when conveying something that's not praise.
I hope you don't take it personal. I do respect you for what you do. It's how you do is what I'm highly critical of.
(As to why all these in English, it's pretty simple really - I don't know tamil typing.)
P.s: This conversation started in DISQUS. since we reverted back to the old style, replying to Editor sir's comments from here.
Delete@Prasanna,
DeletePoints well made. A needed feedback as we have wide variety of story series with reasonable number of books per month.
// Now, if you get annoyed at the above few lines i just wrote, and spurred you to think "who's this guy telling me what i should or shouldn't do", then I will have made my point. Because that's exactly how I feel as a reader when I read your translations. //
Have to agree with this. We can skip an option for some practical reasons but can't skip a concept itself. If the original script writer consciously tried to keep dialogues to be subtle - at the risk of making readers to concentrate on every single word precisely, the same strategy should be implied to another language too. It requires efforts, special efforts and diversions from routine writing style too. That's not a choice but necessity.
Personally I felt Tex & Magic Wind kind of stories generally fits with branded style of writing while the modern stories such as Dylan Dog, Largo etc suffers to stay precise and simple - to the extent that it can affect the reader's opinion about entire story series.
PS: I just utilized the advantage of typing in English to save some time.
காகிகீகுகூகெகீல்கை ஞாஞஞான் ஔட்ய் ப்லோடுற்றேவ்ம்
Deleteலலாம்கிட்ஞ்ச்ற்றெக்வ்ட்ச் பொல்ம்ன்ப்cவ்cர்ப்ர்ஹ்ஹ்ஜ்ஜ்ன் ப சத்
பொப்டீம்க்வ்வ்cற்ற்யிக்ம்ன்வ்ஜ்ம்ப்cக்ஷ்ச்க்த்ஜுஇம்ன்ன்ன்வ்cc
சூப்பர்
@Ramesh:
DeleteGlad you agree. I have noticed that more friends here who have consistently been raising this complaint, but the Editor is too stubborn to be bothered about trivial things such as translation.
Translation is a serious issue. Editor chooses only to give them counter reasons to justify his style of work in books but never seemed to adapt a change, atleast for once.
I think Tex Willer stories also do suffer from bad translation. Even for a hero who has been around for nearly seven decades, Editor is still looking for punch dialogues to sell him.
You don't need a commercial punch line to sell an iconic comic character!
Tex is italian so I can't compare more but I'm sure with even sharper dialogues Tex and Carson could be presented better instead of plaguing every page with brotherly fill-in words like APPANAE, IYANAE, PARAMA PITHAVAE, etc.
But definitely the graphic novels are the worst hit here. "Sippaayin Suvadugalil" was one splendid, poignant story but it was spoiled by unbelievably bad choice of words. I saw a dialogue in it: "Nanben da". I need say no more.
With this kind of work being done here, I don't see many new young readers swarming in for our comic books in near future.
Prasanna : ஒரு பொதுத்தளத்தினில் விமர்சனங்களை முன்வைக்கும் உரிமைகளை இங்கு யாரும் தடை சொல்லப் போவதில்லை ! ஆனால் ஒரு குறைந்த பட்ச மரியாதையினை எதிர்பார்க்கும் உரிமையை என் வயதாவது சம்பாதித்துள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது !
Delete"வாசகர்களின் vocabulary விரிவாக்கத்துக்கு முயற்சிப்பவன்" ; "பிடிவாதக்காரன்" ; "மொழியாக்கத்தை "trivial " ஆக எடுத்துக் கொள்பவன்".."இன்றைய நடைமுறை புரியாதவன்"..இத்யாதி.இத்யாதி என்று வார்த்தைகளைக் கொட்டிடும் வேகத்தின் போது -சொல்ல நினைக்கும் கருத்துக்கள் பின்சீட்டுக்குச் செல்வதை என்றோ ஒரு நாள் உணர்வீர்கள் !
இதே பதிவின் பின்னூட்டங்களுக்கு மத்தியில் - "கதைகள் சுலபமாய்ப் புரிவதற்கு நீங்கள் இன்னும் கொஞ்சம் ஒத்தாசை செய்தால் நாங்களும் சற்றே கடினமான கதைகளை ரசித்து விட்டுப் போவோமே !" என்ற ரீதியிலான வாசக ஆதங்கங்கள் உங்கள் பார்வைகளுக்கு எட்டாது போயினும், அவற்றின் மீதும் கவனம் செலுத்தும் கடமை எனக்குண்டு !
உங்கள் பார்வையில் நானொரு புராதனச் சின்னமாய்த் தோன்றினால் அதன் பொருட்டு தூக்கத்தைத் தொலைக்கப் போவதில்லை நான் ! அதே சமயம் "தமிழாக்கம்" பற்றி ; தமிழில் வெளிவரும் இதழ்களைப் பற்றி ; ஒரு தமிழ் தளத்தினில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுவது தான் நவீனத்தின் அடையாளமெனில் - நான் டைனோசாராகவே இருந்து விட்டுப் போகிறேனே !
சென்ற பதிலில் சொன்ன அதையே இங்கே மறுபடியும் சொல்கிறேன் : மாற்றமெனும் இயற்கை நியதிக்கும், நம்மவர்களின் காமிக்ஸ் ரசனைகளின் ஸ்திரத்தன்மைக்கும் மத்தியில் ஒரு மெல்லிய கோட்டில் நடந்து கொண்டிருக்கிறோம் ! மாற்றங்களுக்கு நான் எதிரியுமல்ல ; அதே சமயம் நமக்கென பதிவாகியுள்ளதொரு பாணியில் தொடர்வது தேச துரோகமும் அல்ல !
Prasanna good to know that you liked Sippaayin Suvadugalil, i share my empathy on state of tamil graphics novels.
DeleteReg Translatin, I even Edit acknowledged your point and asked for readers opinion(do refer some of his old post, where he did a retrospect on translation) about using fresh bloods in translations, he is trying his best I believe, I do see a glimpse of change( latest example: radical style he used for Smurfs), a change of good happening and mostly our comics steeped by better thoughts nowadays. we know our Comics always open for change, but our problem is that it wont happen sudden as we expected, it need lots of convincing for Edit too, he have legacy steak of loyal subscribers and readers Edit is taking all of em along with, in this change, Its not about critical about Edit, but the pessimist("I don't see many new young readers swarming in for our comic books in near future.") words you used could have been avoided while making a strong point friend.
@Prasanna and @ Ramesh:
DeletePoints very well made and I am in total agreement.
@ Editor
There is no need to be annoyed at suggestions as can be inferred from some of the words in your reply. Instead of personalizing comments I guess an example would be more apt here.
Given your passion for comics I am sure you are familiar with Len Wein's BATMAN tales (some of them include what in Tamil came as Batman Kirukkanaa, Mr.Freeze etc). If you compare Len Wein's flowery language and verbosity - that was the order of the day for much of seventies and into early Eighties. Compare this with Alan Moore (which itself was actually more verbose), Frank Miller (Lesser extent but still long winded), Grant Morrison (who actually started being to the point) and now with Scott Snyder - you will feel the difference and pace at which Comic scripting for the same Hero has evolved. Not that of all folks, I must tell and of all folks you must listen :-)
Also available for reference are many volumes of another comic world godfather - GEOFF JOHNS - please compare his books of 10 years ago with latest that he himself writes now - just awesome precision !
As for intelligent dialogues for Tamil Fans - my PERIAPPA is the best example I can cite - do you refute sir? :-)
A famous example of his sentence: அவள் புன்னகை மட்டுமே அணிந்திருந்தாள் !
FINAL WORD: Millions read English Comics - literally Millions. Not everyone is a DC fan NOR Marvel fan NOR Blueberry Fan.
5000 read Tamil Comics today.
All 5000 are YOUR FANS - VIJAYAN'S fans.
But a lot of us want Tex, Blueberry, Largo and Dylan to speak differently - not like VIJAYAN. For your voice there is always this blog and the first few pages of those books we cherish every month ! We will express our mind to you -
- not because we know it all
- not because we want to advise you
- not because you do not know it already
- not so much as to annoy you or you staff who read this or your son
- BUT because we can freely express to Vijayan
- BUT because we want to be with you
- BUT because we want to see you go from 5000 to 50000 to 100000 (you may not want but we want !!)
We will continue furiously :-) :-) :-) (ஸ்மைலி போட்டாச்சு ... சிரிச்சுடுங்க ...)
@ Editor:
Delete/* ஆனால் ஒரு குறைந்த பட்ச மரியாதையினை எதிர்பார்க்கும் உரிமையை என் வயதாவது சம்பாதித்துள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது ! */
Same problems with my dad and you :-)
The ISSUE is not lack of respect - it is the LIBERTY that is born out of the DEARNESS that we have for our loving Editor - and those of us who have exposed over the past 15-20 years to more liberal environments abroad have learnt to express straight without RESERVATIONS out of the same LIBERTY we take born out of RESPECT.
Normally fellow readers quote: would you do the same thing with say Vikatan's editor? Would they even allow you to talk / comment / inside the campus?
My Answer: I would not care about a crap called Vikatan as much as I care about a comics from Vijayan ! And where there is care there will be pursuit of excellence !!
Dear Editor,
Deleteடெக்ஸ்-க்கும் கார்சனுக்குமான வசனங்களை மெருகூட்டுவது போல, மற்ற கதைகளுக்கும், கதையின் மாந்தர்களுக்கும் ஏற்றவாறு அமைக்க முடியுமா.
//But a lot of us want Tex, Blueberry, Largo and Dylan to speak differently // +1
//BUT because we can freely express to Vijayan// +1001.
Dont take me wrong my friends, Edit dont deserve the word stubborn, and if he felt translation as trivial matter he would have not retrospect it by putting straight questions to the readers.
DeleteHe acknowledge the issue by putting his translation in line by offering/asking the opinion on using new translators, i dont see him as stubborn. I see him as adaptive, he is bold enough to ask question on his translations only that strong focused opinion was not shared then. now the aura is such encouraging he changes too, and taking his legacy followers with the change. All this time he heeded to his readers wise opinions, I am sure he continue to do so.
//But a lot of us want Tex, Blueberry, Largo and Dylan to speak differently - not like VIJAYAN. For your voice there is always this blog and the first few pages of those books we cherish every month ! We will express our mind to you -//
Delete+1
@விஜயன் சார், தமிழில் கமெண்ட் போட்டால் - குறிப்பாக வசன நடை பற்றி கமெண்ட் போட்டால் தங்கள் கவனத்துக்கு அது சென்று சேருகிறதோ இல்லையோ, குறைந்தது 4-5 பிற வாசகர்களின் கவனத்தையாவது வேறுதிசையில் ஈர்க்கும் சாத்தியம் அதிகம் (And we have to think about their time too. Too much of interaction kills feedbacks and other's time unnecessarily). என்னளவில் நான் ஆங்கிலத்தில் கமெண்ட அதுவே நிஜமான காரணம்.
DeleteMyself said: // Points well made. A needed feedback as we have wide variety of story series with reasonable number of books per month. //
பகிர நினைத்ததை மேலேயே தெரிவித்துவிட்டேன் இருந்தாலும் விளக்கிடுவது பெட்டர்..
சர்க்குலேஷனில் வளர்ந்திருக்கிறோமோ இல்லையோ, வெரைட்டி + மாதாந்திர கதைகளின் எண்ணிக்கை என்கிற திசையில் வளர்ந்துதான் இருக்கிறோம், இதுவொரு வளர்ச்சிதான். இதற்குமேலேயும் வெரைட்டிக்கான தேடுதலையும் செய்துகொண்டுதான் இருக்கிறோம் எனவே அந்தந்த கதைகளுக்கான பொருத்தத்தோடு வசனநடை அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் தொடர்பான விமர்சனங்கள் எழுவது இயற்கையே. தாங்கள் கூறியதுபோல இதனை ஒரு பெருங்குற்றம் என்ற விதத்தில் விமர்சிப்பது கவலையளிக்கும் விஷயம்தான்.
@ ALL : கொஞ்சமே கொஞ்சம் நிதானமாய்த் தமிழிலேயே பதிவுகளைத் தொடருவோமே ? "இது இதர வாசகர்களின் ஆங்கிலப் புலமைக்கொரு இழுக்கு !" என்று அடுத்த பின்னூட்டத்தில் பெடலெடுத்தாலும் பரவாயில்லை ; தமிழில் சொல்லப்படும் சிந்தனைகள் ஒதுங்கி நிற்கும் சில நண்பர்களையும் எட்டிடும் அல்லவா ?
Delete@ Raghavan : ஒரு சின்ன விஷயத்தை சுட்டிக் காட்ட அனுமதியுங்களேன் ?! ஒரு BATMAN தொடரினில் இது வரையிலும் பணியாற்றியுள்ள எழுத்தாளர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்ற தோராயக் கணக்கைப் பார்த்திட ஒரு கேல்குலேடர் தேவைப்படும் தானே ? Bob Kane -ல் ஆரம்பிக்கும் பட்டியல்,Devin Grayson, Grant Morrison, Ed Brubaker, Marv Wolfman, Len wein etc..etc. என்று ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு நூறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது ! And இவர்களில் பெரும்பாலானோர் உதவி ஸ்கிரிப்ட் ரைட்டர்களோடு தான் பணியாற்றுவதும் இயல்பு ! So காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப BATMAN -ம் வித்தியாசமாய்ப் பேசுவது என்பது அந்த மாறுபடும் கூட்டணிகளின் கூட்டு முயற்சிகளுக்கான வெற்றி ! ஆனால் படைத்த பிரம்மாவே ஒரிஜினல் எழுத்தாளர் ஆக இருப்பினும், அந்த நாயகர்கள் தமிழுக்கு வரும் போது - தமிழ் பேசப் போவது கருணை ஆனந்தம் அவர்கள் வாயிலாகவும், என் மார்க்கமாகவும் மட்டுமே எனும் பொழுது - நமக்கு இந்த BATMAN உதாரணங்கள் எத்தனை தூரம் பொருந்திடும் ? அமெரிக்காவில் நடப்பது உங்கள் பெரியப்பாவைப் போன்ற ஒரு நூறு ஜாம்பவான்களின் ஒட்டு மொத்தக் கூட்டு முயற்சி ; நாமோ அவர்களது சிறு நிழலில் நின்று நர்த்தனம் ஆடிப் பார்க்கும் amateurs !
அது மட்டுமன்றி - அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட genre -ல் பணியாற்றுகிறார்கள் - மாதக்கணக்கில் ; சில சமயங்களில் ஆண்டுக்கணக்கில் அவகாசம் எடுத்துக் கொண்டு ! ஆனால் நாமோ தலைநுழைத்திருக்கும் genre -கள் தான் எத்தனை ?
டெக்ஸ் - மேற்கின் களம் + லேசான நகைச்சுவை ஒரு மாறுதலுக்கென
டைகர் - மேற்கின் களம் + ஜிம்மி & ரெட் வரும் வேளைகளில் மட்டும் கொஞ்சம் offbeat
லக்கி லூக் : clean fun
சிக் பில் : நகைச்சுவை - கதையோட்டத்தோடு !
கிளிப்டன் : இங்கிலாந்தின் மேட்டுக்குடியை நையாண்டி செய்து கொண்டே ஆக்ஷன் + நகைச்சுவை
SMURFS : முழுக்க, முழுக்க ஒரு மாறுபட்ட களம்
பௌன்சர் : கரடு முரடாய் களம் ; பௌன்சருக்கு சன்னமாய் ஒரு கம்பீரம்
லார்கோ - உயர்மட்ட ஆடுகளம் - லோக்கல் பையன் !
ஷெல்டன் : முதிர்ச்சி வயதில் - செயல்களில் ; களங்களில் இளமை.
XIII - ஒரு மௌன கம்பீரம்
இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் ! சத்தியமாய் இதனை எங்களது சாதனையை நான் முன்வைக்கவில்லை ; எங்கள் முன்னேயுள்ள பணிகளின் பன்முகத்தன்மையும், அதன் சிரமங்களையும் லேசாக அடிக்கோடிட மட்டுமே இதனைச் சொல்கிறேன் ! And இந்தத் தொடர்கள் எல்லாவற்றிற்கும் நாங்கள் நியாயம் செய்து விட்டோமென்றும் நான் சொல்லப் போவதில்லை ! நிச்சயமாய் - 'இது இன்னும் இப்படி இருந்திருக்கலாம்' ; 'அது அப்படி இருந்திருக்கலாம்' என்ற எண்ணங்கள் இருப்பது இயல்பே ! ஆனால் இரண்டே பேராய் இருந்து கொண்டு மாதக்கணக்கில் / ஆண்டுக்கணக்கில் என்ற அவகாசங்கள் எடுத்துக் கொள்ளும் சொகுசெல்லாம் இல்லாமல் பணியாற்றும் சூழலில் - ஒரு DC காமிக்ஸின் சாதனைகளோடு நம்மை ஒப்பிடுவது பொருந்துமா ?
contd :
Continuation : இத்தனை காலமாயின்றி இன்றைக்கு இந்த விஷயம் ஒரு நெருடலாய் சிலருக்குத் தோன்றுவதன் காரணம் என நான் நினைப்பது இதன் பொருட்டே :
Delete1.ஆண்டொன்றுக்கு சுமார் 55 கதைகள் x கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் - எனும் பொழுது நமது சமீப வேகம் நமக்கே சில வழிகளில் counter -productive ! ஆண்டுக்குப் 10 கதைகளை மட்டுமே படிக்க வாய்ப்பிருந்த காலம் போய் இன்று அடைமழையாய் காமிக்ஸ் கொட்டும் போது - நான் உங்கள் முகங்களுக்குள் டான்ஸ் ஆடுவது எப்போதையும் விட இப்போது ஜாஸ்தி என்றாகிறதைத் தவிர்க்க இயலவில்லை ! Add to that the blog writing !
2.நம் பதிப்பின் வேகத்துக்கு இணையாக ; மாறும் ரசனைகளுக்கு ஈடு தந்திட புது மொழிபெயர்ப்பாளர்களை தேடித் பிடிக்க நாம் முயற்சிப்பது வெற்றி பெற்ற பாடில்லை என்பது அடுத்த காரணம் ! கடந்த 9 மாதங்களாய் இணைய தளங்களில் ; THE HINDU & TIMES OF INDIA -வின் ஒவ்வொரு மாவட்டக் classifieds விளம்பரப் பகுதிகளின் வழியாகவும் தேடிக் கொண்டே தான் இருக்கிறோம் ! நிறையப் பேர் வேகமாய் ; ஆர்வமாய் விண்ணப்பித்தாலும் - பணியின் தன்மையைப் பார்த்து விட்டுப் பின்வாங்கி விடுவது தான் நிதர்சனம். அதற்கு மீறி எழுதிட முயற்சிப்போரின் ஆக்கங்கள் ஜீவனின்றி உள்ளன ! 'ஒரு வார்த்தைக்கு இவ்வளவு' - என்ற ரீதியில் சில திறமையான எழுத்தாளர்கள் quote செய்தார்கள் தான் ; அவர்களது எழுத்து மாதிரிகளும் அழகாக இருக்கவும் செய்தன தான் ; ஆனால் ஒரு வார்த்தைக்கு இவ்வளவென்று ஊதியம் தரும் "MNC ஆற்றல்கள்" நம்மிடம் ஏது ? சரி...M.A படித்தவர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, ஒரு 6 மாத காலத்திலாவது தயாற்படுத்திட முடியாதா ? என்ற ஆதங்கத்தில் உள்ளூர் கேபிள் டி-வி யில் விளம்பரம் கொடுத்தோம். சுமார் 40 பேர் விண்ணப்பிக்கவும் செய்தனர் ; ஆனால் "எழுதும் பணி" என்ற உடனேயே ரிவர்ஸ் கியர் போட்டவர்கள் அதில் 90% ! பாக்கி 10% முதல் இரண்டு நாட்களுக்கு மேலாகப் பணிக்கு வரவில்லை ! இது துளியும் வார்னிஷ் அடிக்கா நிஜம் !
எழுதுவது ; தொடர்ந்து எழுதுவது ; எழுதிக் கொண்டே இருப்பது என்பது எத்தனை சிரமம் என்பதை தினமும் நள்ளிரவை தோழனாக்கிக் கொண்டே திரியும் எனக்கு நன்றாகவே தெரியும் ! இந்தச் சுமையை காலத்துக்கும் தூக்கி நிற்கும் ஆற்றல் எனக்குக் கிடையாதென்பதும் அறிவேன் ! ஆனால் ஒரு வாகான replacement அமையும் வரைக்கும் முடிந்த குட்டிக்கரணங்களை அடிப்பதே என் முன்னேயுள்ள வலி / வழி !
எல்லாவற்றிற்கும் மேலாக - 'மாற்றமே வேண்டாம் - என்றதொரு அணி நம்மிடையே குறிப்பிடும் அளவுக்கு இருப்பதில் இரகசியம் தான் ஏது ? "1970-ல் வந்த மும்மூர்த்திகளின் கதைகளில் ஒரு புள்ளியைக் கூட மாற்றி விடாதீர்கள் !" என என்னிடம் கோரிய மூத்த வாசகர் இன்றைய ஒய்வு பெற்ற IAS அதிகாரி ! "எழுத்துப் பாணி என்பது ஒருவரது கைரேகையைப் போல ; ஆண்டவன் தந்த பரிசு ! அதை மாற்ற முற்படாதீர்கள் " என்று எனக்கு அறிவுரை சொன்னவர் இன்றைய பத்திரிகை உலகில் ஒரு மூத்த எழுத்தாளர் ! பெரிதாய் எவ்வித மாற்றங்களும் செய்திட வேண்டாமே என்ற கோரிக்கையை இந்தத் தளம் பார்ப்பது நாம் அனைவரும் அறிந்தது தானே ? அவர்களது உணர்வுகளுக்கும் காயமின்றி - நெருடலின்றி மாற்றங்களை அமலுக்குக் கொணர நான் நினைப்பது அத்தனை பெரிய குற்றமா ??
"புதுசாய் வாசகர்கள் வந்த மாதிரித் தான் !!" என்று உதட்டைப் பிதுக்கிடுவது சுலபமே ! ஆனால் ஏற்கனவே உள்ள வாசகர்களின் ரசனைகளையும் மதிக்கும் அவசியத்தை ஜன்னல் வெளியே தூக்கிக் கடாசி விட்டுத் தான் புது வரவுகளைத் தேட வேண்டுமெனில் - I would still try & look for a middle path !
மாற்றங்கள் அவசியம் என்பதை நான் புரிந்து ஒரு மாமாங்கம் ஆகிப் போய் விட்டது ; அதை நயம்பட நண்பர்களில் பலரும் எப்போதோ உணர்த்தியும் விட்டார்கள் ! ஆனால் அவற்றை நிஜமாக்கிப் பார்ப்பது ஒரே நாளின் செயல் அல்ல ; அந்த மாற்றங்கள் seamless ஆக இருந்திட வேண்டுமென்பதே நானுங்களிடம் கோரும் புரிதல் !
And @ Raghavan : ஸ்மைலி போட்டிருக்க அவசியமே இல்லை - "5000" என்ற உங்களின் அந்த விற்பனை எண்ணிக்கை நம்பரைப் பார்த்து கெக்கே பிக்கே என்ற சிரிப்பு தான் !! ஒவ்வொரு வெளியீட்டிலும் ஐந்தாயிரம் பிரதிகளை ஒரு 2 ஆண்டு அவகாசத்திற்குள் விற்க முடியுமெனில் கூட நான் ஆபீசுக்கு 7 வருஷமாய் ஒரே APACHE -யிலா போய்க் கொண்டிருப்பேன் ? வீட்டு மொட்டைமாடியில் ஒரு ஹெலி-பேட் அமைத்திருக்க மாட்டேனா ?
"5000" என்ற அந்த விற்பனை நம்பரை எட்டிப் பார்க்கும் சாத்தியம் கொண்ட ஒரே ஆசாமிக்கு கையில் உலோகம் தான் அடையாளம் ! மற்ற யாருக்கும் - 'தல' உட்பட - அந்த ஆற்றல் கிடையாது என்பது தான் bottomline !! Good night !
@Editor:
DeleteIt's not great to see you've taken my accusations directed against your work as a personal thing. I'd probably only be half your age. I have addressed you as 'sir' in my reply. but it seems you've mistaken me in every word i said.
What as a reader I wanted to convey was simply we'd like to see our comics to feature better translation. That is all. I do read your blog regularly. Do scroll through the comments too. I know you've proposed for some fresh faces in translation work in a few blogs back. What I don't see often is barring a few friends, not many critical points are raised enough to get your attention regarding translation. I'd think that's because maybe our readers are not yet treated to that level of language work in our books.
About "reader's vocabulary", I won't back down here. You have yourself openly mentioned in a comment in a previous blog, that you want your readers to get acquainted with the new words that you incorporate in our books.
I have already mentioned that I do not know tamil typing but you seem to be very consistent in singling me out as though I'm the only one here who use English to convey thoughts in this blog. I wonder why. I've never commented on this blog before until today (though i'm very much used to discussions in social media). Clearly it didn't go well with you.
you have, time and again, said that you're aware of the members/readers who are beyond internet blog space. I can't help but notice most of your decisions reflect mostly that of our online friends. I'm sure i'm not alone in this.
//நமக்கென பதிவாகியுள்ளதொரு பாணியில் தொடர்வது தேச துரோகமும் அல்ல//
Nichyamaga alla thaan sir. ennudaya ennamellam athuvae preferred norm aagivda koodaathu enbathu thaan.
I think people have already brought to your notice that they have started skipping Hotline pages and you have acknowledged it as well. That should serve as an alarm. This doesn't mean we dislike your writing. It only means the characters in our comic books mustn't talk like your writing.
Employing precise and curt dialogues in conversations, terse language in prose, staying as close as possible to the original text is all an average reader wants. of course you can call that just my opinion.
Again @ Raghavan : நிச்சயமாய் அந்த அன்புக்கும், அக்கறைக்கும் கடமைப்பட்டுள்ளேன் ; அதற்குரியவனாய் என்னை உருமாற்றிக் கொள்ள என்னால் இயன்ற எதையும் செய்யத் தவற மாட்டேன் ! Many many thanks !!
DeletePrasanna : //I have already mentioned that I do not know tamil typing but you seem to be very consistent in singling me out as though I'm the only one here who use English to convey thoughts in this blog.//
Deleteஎப்போதாவது ஆங்கிலத்தில் பதிவிடுவதற்கும் , எப்போதுமே ஆங்கிலத்தில் பதிவிடுவதற்கும் வேறுபாடு உள்ளதென்பதால் தான் !
@பிரசன்னா
Delete//I have already mentioned that I do not know tamil typing //
நான், சதீஷ், மாடஸ்டி வெங்கடேஸ்வரன் எல்லாம் ரொம்ப நாளைக்கு சிரமப்பட்டுட்டு இருந்தோம். இங்க மாயாவி சிவா, ஈரோடு விஜய்ன்னு காமிக்ஸ் நல தொண்டர்கள் சிலவங்க இருக்காங்க...:) ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்க என்ன பண்ணும்னு சொல்லுவாங்க.. (நான் கொஞ்சம் சோம்பேறி. ஹி...ஹி...)
நம்ம சதிஷை பாருங்க இப்ப தமிழ்ல பின்னு பின்னுன்னு பின்றார்.
Regarding translation I not fully convinced that we should just try to mimic English comics. I think the biggest problem for Tamil Comics now (than in the past) is that a lot of readers are English comics fans and they are used to that style and they expect that in Tamil as well.
DeleteFor me, I do not read anything other than Tamil for comics and I am fine with current translations except in places where the sentences are a bit too contorted than being direct. Other than that I do not have complaints with Vijayan's translation.
சுஜாதா தான் எழுத்துக்கு முன்னோடி, அவர் போல் எழுதுவது தான் வேதம் என்று எந்த விதியும் இல்லை. ஜெயமோகன் எழுத்தைப் படியுங்கள். குறிப்பாக வெண்முரசின் "நீலம்" நாவல் படியுங்கள். அதுவும் தமிழ் தான்.
ஆங்கிலத்தில் காமிக்ஸ் வாசிப்பவர்களை ஈர்க்க வேண்டும். எனவே ஆங்கிலத்தை ஒட்டிய தமிழில் எழுத வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. Original சிதையாமல் ஆங்கில ஆதிக்கம் இல்லாத, பேச்சு வழக்கு எல்லா இடமும் ஆதிக்கம் செலுத்தாத (உரையாடல்களுக்கு ஓகே) மொழிபெயர்ப்புக்கே எனது ஓட்டு.
சிறு வயதில் வாண்டுமாமா என்றால் பைத்தியமாய் அலைந்த கூட்டம் இல்லையா நாம்? அவர் தமிழ் நடை அட்டாகாசம் இல்லையா? அவர் என்ன எளிய பேச்சுத் தமிழிலா எழுதினார்?
@ Editor,
Delete/* DC காமிக்ஸின் சாதனைகளோடு நம்மை ஒப்பிடுவது பொருந்துமா ? */
The quote was for the example and not the brand. Am aware each brand grows at its own place and has its own yardstick!
@ Prunthaban:
/* சுஜாதா தான் எழுத்துக்கு முன்னோடி, அவர் போல் எழுதுவது தான் வேதம் என்று எந்த விதியும் இல்லை. */
Again quoted out of context. My reference was to expressing brevity. FYI - I do not agree with Sujatha on a lot of his writings as they are not original at all - he read a lot and he wrote mostly based on what he read which is not being original !! What he was however good at was dialogues - sharp, precise.
/* சிறு வயதில் வாண்டுமாமா என்றால் பைத்தியமாய் அலைந்த கூட்டம் இல்லையா நாம்? அவர் தமிழ் நடை அட்டாகாசம் இல்லையா? அவர் என்ன எளிய பேச்சுத் தமிழிலா எழுதினார்? */
Yuck - again a not so original writer who mainly decorated his writings and was an acing in plagiarism if you can read many of his "creations" - let Tamil community not glorify a copy cat overly !! My Tamil Comics experience was restricted to Lion comics and I have said it many times here !!
... and as usual the particular subject derailed, this is what I usually worried! By generalising things, we can never give useful opinion something.
Delete:)
@Editor:
Delete//THE HINDU & TIMES OF INDIA -வின் ஒவ்வொரு மாவட்டக் classifieds விளம்பரப் பகுதிகளின் வழியாகவும் தேடிக் கொண்டே தான் இருக்கிறோம் //
Think this is the first time we're getting to know of these struggles. I wish I could say maybe I should've been less harsh. Though I do still stand by every single one of my word.
I understand it's only natural that you want to keep both your older and younger readers on the same scale without disrupting the balance and making everyone happy is almost an impossible task.
from what I see, the oldest fans of our comics seem to want only the -reprints- to be in the exact same way as they once saw in their youth. I don't think they themselves would want to force their own style of likings upon the current crop of young readers. Neither will they want to see 70s style of writing in NEW books that are being published in 2015. Neither will they want their children to talk and behave just like they did with their own parents three decades back. No sir, our elder readers are better and wiser than that. I think they would welcome change. They would embrace it.
Besides the whole essence of my comments are basically the need for the usage of, say, three lines in text where we currently require five. If you make your move, it'd be barely noticeable. Seen this way, nobody's aesthetics in language are going to go out through the window :)
So there is still hope - which is hoping that you succeed in your mission of finding that eluding translating talent that could fit well with the demands of our comics.
@Raghavan and friends:
//The ISSUE is not lack of respect - it is the LIBERTY that is born out of the DEARNESS//
completely agree. That is why in the first place we're talking and commenting about the pros and cons of a book with the greatest transparency ever known between a publishing editor and his readers. cheers.
@Raghavan No no, I did not misunderstand. I was only pointing out that Sujatha's dialogue writing style is not the only one that is right. He was great, no doubt (I have every single book of his which I painfully shifted to America from India. I like him that much). But that should not become a reason to reject someone who writes in a 'decorative' way. Again I am also not talking about the actual 'content' he wrote. Same with Vandumama. He did plagiarize a lot but then plagiarism was the norm back then :) A lot of tamil writers from 30s to 70s thought (or knew) most of their readers had no exposure to international (or even other Indian) writing and they happily copied from all over the place and got away with it. So yes, lets not get into the debate of content and concentrate only on the 'language' skill.
DeleteI know opinions can differ and I am happy to agree to disagree. But personally I am a big fan of Vandumama style writing for prose. He played a major role in my childhood to enhance my Tamil vocabulary. His stories like "Puli valartha pillai" and "Maya modhiram" (which was again a copy) dialogues are still fresh in my mind though I read them long long ago. Surely the present day kids who watch cartoon channels and "chutti tv" which clearly promotes "cheap" slang tamil, will not be able to appreciate or even understand those dialogues. But then should we even try to convert these kids? Let these kids read in English and study in English. We need not dumb down the language to attract these kids is my personal opinion.
Finally I know I will be in the minority to say this. But I would say let Tamil die with our generation than morph into "Tanglish" to suit the kids with their American dreams.
//தமிழில் கமெண்ட் போட்டால் - குறிப்பாக வசன நடை பற்றி கமெண்ட் போட்டால் தங்கள் கவனத்துக்கு அது சென்று சேருகிறதோ இல்லையோ, குறைந்தது 4-5 பிற வாசகர்களின் கவனத்தையாவது வேறுதிசையில் ஈர்க்கும் சாத்தியம் அதிகம் (And we have to think about their time too. Too much of interaction kills feedbacks and other's time unnecessarily). என்னளவில் நான் ஆங்கிலத்தில் கமெண்ட அதுவே நிஜமான காரணம்.//
Deleteஇது ஒரு தனிப்பட்ட வாசகருக்கும் ,ஆசிரியருக்குமான பிரச்சினை இல்லை. வசன நடை பற்றி நீங்கள் ஆங்கிலத்தில் எதையாவது சொல்லி ,ஆசிரியரும் அதற்கு தலையாட்டி, ''நியூ லுக் ஸ்பெஸல்'' லக்கிலூக் வசனநடை பாணியில் டெக்ஸ் இதழ்கள் வரத் தொடங்கினால், டெக்ஸ் தனி சந்தா கேட்டு நிற்கும் எங்கள் நிலை என்னாவது ?
இது அனைவருக்கும் பொதுவான பிரச்சினை, எனவே அனைவருக்கும் புரியும் மொழியில் தொடர்வதே நேர்மையானது.
// அனைவருக்கும் புரியும் மொழியில் தொடர்வதே நேர்மையானது.//
Delete+1
// இது ஒரு தனிப்பட்ட வாசகருக்கும் ,ஆசிரியருக்குமான பிரச்சினை இல்லை. வசன நடை பற்றி நீங்கள் ஆங்கிலத்தில் எதையாவது சொல்லி ,ஆசிரியரும் அதற்கு தலையாட்டி, ''நியூ லுக் ஸ்பெஸல்'' லக்கிலூக் வசனநடை பாணியில் டெக்ஸ் இதழ்கள் வரத் தொடங்கினால், டெக்ஸ் தனி சந்தா கேட்டு நிற்கும் எங்கள் நிலை என்னாவது ?
Deleteஇது அனைவருக்கும் பொதுவான பிரச்சினை, எனவே அனைவருக்கும் புரியும் மொழியில் தொடர்வதே நேர்மையானது. //
இதனை ஒரு வேண்டுகோள் என்னும் விதத்தில் பார்த்தால் இயல்பானதே, அதேநேரம் இதனை ஒரு வற்புறுத்தலாக முன்வைப்பது ஏற்கெனவே இங்கே இருக்கும் நடைமுறையையே கேள்விக்குள்ளாக்கிவிடும். "அனைவருக்கும்" என்கிற வார்த்தையின் அகலம்தான் இங்கே பிரச்சனையே.
அனைத்து விமர்சனங்களும் சக ப்ளாக் வாசகர்களின் பரிசீலனைக்கோ அல்லது புரிந்துகொள்ளுதலுக்கோ உட்படும் விதத்தில்மட்டும்தான் சொல்லப்படவேண்டும் என்ற ஏற்பட்டைச் செய்யவேண்டுமென்றால் - முதலில் மாற்றுக் கருத்திடுபவர்களும் அவரவரின் தனிப்பட்ட ரசனைகளையும் விருப்பங்களையும் வடிகட்டிவிட்டு பொதுநோக்குடன் மட்டுமே கருத்திடும் வழிமுறையை ஆரம்பிக்கவேண்டியிருக்கும். அந்த ரீதியிலான எதிர்பார்ப்பும் நியாயமாகாது / சாத்தியமில்லை என்பதோடு இம்மாதிரியான எதிர்பார்ப்புகள் ஒரேமாதிரியான விமர்சனக் கருத்துகளுக்கே பாதைபோடும் / போடுகிறது என்பது சங்கடமான உண்மை.
Hope we halt this somewhere, probably here! :)
+2
DeleteAnybody can comment...but when someone is running the show with so many issues and running the show, it requires lot of appreciation. Try to understand the pain our editor goes through every month to bring out the issues. He is undergoing labour pain every month, literally.
DeleteWe all can give suggestions and feedback to improve the quality. Everything I mentioned here is in reply to Prasanna's comments ONLY.
மீரான்.!ஹஹஹஹஹஹ.....................+1
Deleteபாலா.!+1111111111
Delete@ ALL : விவாதங்கள் நம்மளவிற்கு இருந்திடும் வரை எல்லாமே ஒ.கே. தான் ! ஆனால் திரு.சுஜாதா, திரு வாண்டுமாமா என்றெல்லாம் எழுத்துலக அசுரர்கள் பக்கம் வரை நீளும் போது நம் கருத்துக்களில் ஒரு கட்டுப்பாடு இருத்தல் அவசியமே ! Please let's respect them for what they have achieved....!
DeleteBala @ Well said!
Delete@Editor sir:
Delete//எப்போதாவது ஆங்கிலத்தில் பதிவிடுவதற்கும் , எப்போதுமே ஆங்கிலத்தில் பதிவிடுவதற்கும் வேறுபாடு உள்ளதென்பதால் தான் ! //
again, the same mistake.
Thamizhil il mattum thaan ingae vimarsanam mun vaika vendum endraal, I'm not sure it's a particularly appealing idea for those hundreds of silent readers (like me) of your blog, whose participation somehow you strangely claim to encourage but totally refuse if and when they do.
but come to think of it, our friends are all probably correct. passing criticism in english is the biggest threat facing Lion comics today.
This comment has been removed by the author.
Delete//அனைத்து விமர்சனங்களும் சக ப்ளாக் வாசகர்களின் பரிசீலனைக்கோ அல்லது புரிந்துகொள்ளுதலுக்கோ உட்படும் விதத்தில்மட்டும்தான் சொல்லப்படவேண்டும் என்ற ஏற்பட்டைச் செய்யவேண்டுமென்றால் - முதலில் மாற்றுக் கருத்திடுபவர்களும் அவரவரின் தனிப்பட்ட ரசனைகளையும் விருப்பங்களையும் வடிகட்டிவிட்டு பொதுநோக்குடன் மட்டுமே கருத்திடும் வழிமுறையை ஆரம்பிக்கவேண்டியிருக்கும்.//
Deleteமேலே இருக்கும் உங்கள் வரிகள்,
தமிழில் பதிவிட்டாலே பொது நோக்கத்துடன்தான் பதிவிட வேண்டும் என்ற அர்த்தம் தருகிறது.
மேலும் இங்கே அனைவருக்கும் புரியும் மொழியில் விமர்சனம் வைப்பவர்கள் எல்லாம் தங்களின் தனிப்பட்ட ரசனையையும் , விருப்பங்களையும் வடிகட்டிவிட்டுதான் பதிவிடுகின்றார்கள் என்ற அர்த்ததையும் தருகிறது.
மேலும் அனைத்து வாசகர்களின் புரிந்த்துகொள்ளும் வரம்பு என்பது இங்கே பிரச்சினை இல்லை., உங்களின் கமெண்ட் சிலருக்கு புரியவே கூடாது என்று நீங்கள் நினைப்பதுதான் பிரச்சினையே. இந்த காரியம் வாசகர்களின் இடையே தகுதி பிரிக்கும் செயலின் ஒரு ஆரம்பமாகவே பார்க்கப்படும் என்பது அனைவராலும் புரிந்து கொள்ள கூடியதே.
அந்த அகலம் என்பது, ''மற்றவர்களை தகுதி பிரிக்கும் செயலை தள்ளிவிட்டு'' சிந்தித்தால் தெரியும்.
@Meeraan,
Deleteநீங்கள் Quote செய்த என் கருத்துக்கீழே நான் தெரிவித்த இதையும் இணைத்துப்படித்தால், நான் சொல்லவந்தது புரியும்:
//அனைத்து விமர்சனங்களும் சக ப்ளாக் வாசகர்களின் பரிசீலனைக்கோ அல்லது புரிந்துகொள்ளுதலுக்கோ உட்படும் விதத்தில்மட்டும்தான் சொல்லப்படவேண்டும் என்ற ஏற்பட்டைச் செய்யவேண்டுமென்றால் - முதலில் மாற்றுக் கருத்திடுபவர்களும் அவரவரின் தனிப்பட்ட ரசனைகளையும் விருப்பங்களையும் வடிகட்டிவிட்டு பொதுநோக்குடன் மட்டுமே கருத்திடும் வழிமுறையை ஆரம்பிக்கவேண்டியிருக்கும். அந்த ரீதியிலான எதிர்பார்ப்பும் நியாயமாகாது / சாத்தியமில்லை என்பதோடு இம்மாதிரியான எதிர்பார்ப்புகள் ஒரேமாதிரியான விமர்சனக் கருத்துகளுக்கே பாதைபோடும் / போடுகிறது என்பது சங்கடமான உண்மை. //
ஒரே மாதிரியான விமர்சன கருத்து வேண்டும், நீங்கள் சொல்வதிலிருந்து மாறுப்பட்ட கருத்தை வேறு யாரும் வைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அனைவருக்கும் புரியும் மொழியில் கருத்து பதிவதை நீங்கள் தவிற்கின்றீர்கள் என்பதுதானே உண்மை.
Deleteஅனைவருக்கும் புரியும் மொழியில் விமர்சனம் வைத்தால்தான் விமர்சனம் வேறு பல பரிமாணங்களை எட்டும்.
தான் சொல்வதில் இருந்து மாறுபட்ட கருத்து வந்துவிடக் கூடாது என்று சிலருக்கு புரியாத வேற்று மொழியில் பதிவிடுவது,முகமூடி அணிந்து கொண்டு கருத்து பதிவதற்கு இணையானது.
இது போன்ற செயல்கள்தான் ஓரேமாதிரியான விமர்சனக் கருத்துகளுக்கு பாதை போடும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாமே ! ?
@Meeraan, // தான் சொல்வதில் இருந்து மாறுபட்ட கருத்து வந்துவிடக் கூடாது என்று சிலருக்கு புரியாத வேற்று மொழியில் பதிவிடுவது,முகமூடி அணிந்து கொண்டு கருத்து பதிவதற்கு இணையானது.//
Deleteநம் இதழ்களின் ஆங்கில மூலங்களை வாசித்த அனுபவமுள்ள வாசகர்களும் இங்கே இருக்கிறார்கள். நமது மொழிபெயர்ப்பினை ரசிப்பவர்களே கூட முன்னேற்றங்களை எதிர்பார்க்க்கூடும். அவர்களுக்கப் புரியும் கருத்துகள் தமிழில் மட்டுமே வாசித்துப் பழகிய நண்பர்களுக்கு புரிய வாய்ப்புகள் எல்லா சமயங்களில் அமையாது. எனவே சில நேரங்களில் ஆங்கில கமெண்டைத் தவிர வேறு வழியில்லை எனத் தோன்றவைக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
ஒன்று விடாப்பிடியாக தகுதி பற்றி குழப்பிக்கொள்கிறீர்கள் அல்லது அடுத்தவரின் பகிறும் முறை பற்றி ஆராய்கிறீர்கள். நிஜத்துக்கு வாருங்கள். அதே கருத்தினை இங்கே பதிவிட தயங்கி நான் Email'ல் அனுப்பியிருக்கும் பட்சத்தில் அது தங்களால் எப்படிப் பார்க்கப்படும்? எட்டப்பன் வேலை என்கிறவிதமாகவா?
// சிலருக்கு புரியாத வேற்று மொழியில்... //
Delete:D
சிரிப்புதான் வருகிறது மீரான் சார். அது ஒன்றும் வேற்று கிரக மொழியல்ல. இங்கே குறைந்தது பாதிப்பேருக்காவது புரியக்கூடிய சாட்சாத் ஆங்கிலமொழிதான் அது! ஏதே ராணுவக்குறியீட்டு மொழியல்ல.
இப்பொழுது தான் சுலபமாக உள்ளது.
ReplyDelete1. Shermon OK.
ReplyDelete2. Blue Note OK.
3. My Granpa is a Phanthom Ok.
4. What happened to reprint of all old Junior /Mini Lions? (Alibaba, Suski & Wishki)
5. Separate Subscription for Texwiller?
6. Earlier I opted to My Name is Tiger in B/W version. My kids are not turning the pages of B/w Comics. My son is fan of Diabolik. So he turns the Diabolik. Earlier. Mr Maramandai told that going for B/w Comics is nothing but a suicide and return to Stone Age. He is correct. My followers are fond to only colour comics only. Almost, all the comics now releasing are only in Colour version only. I am forced to vote for Colour only because my kids.
மீண்டும் பழைய முறையேவா? எது எப்படியோ பதிவு இட தளம் வசதியாக இருந்தால் அதுபோதும்.
ReplyDeleteகார்த்திக் சோமலிங்கா சார்.!எங்கே ஆளையே காணோம்..!உங்கள் ஒரே ஒரு கோட்டா கமென்ட் இன்னும் வரவில்லையே.???
ReplyDeletePANDEMONIUM : +1111111111111111111111111111111111111
ReplyDeleteஎன் தாத்தா ஒரு ஆவியாக்கும் !!: +11111111111111111
SHERMAN: +111111111
BLUENOTE: +11111
I always prefer different genres. Please atleast try to publish "PANDEMONIUM & என் தாத்தா ஒரு ஆவியாக்கும்"
Blue Note - S
ReplyDeleteSherman - No. (ஏனோ யுத்த பின்னணியில் உள்ள கதைகளை இரசிக்க முடிவதில்லை.)
PANDEMONIUM - Double SS.
என் தாத்தா ஒரு ஆவியாக்கும் !! - No.
+++111111111....
Deleteஇந்த பேன்டமோனியம் - அட்டைப்படத்தை பார்த்தால் , இரவே இருளே கொல்லாதே "- டைப்பில் இருக்கும் போல சார் ....சட்டு புட்னு தனி தண்டவாளத்தில் முதல் வெளியீடாக ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்யுங்கள் சார் .....
இந்திய கிரிக்கெட் டீம்ல , கேப்டன் தோனி இல்லாமல் மற்ற 10பேரை வைத்து மட்டுமே மேட்சை ஆட முடியாதல்லவா ?, ....
ReplyDeleteஅதேபோல் லயன் காமிக்ஸ்ன் கேப்டன் டெக்ஸ் இல்லாமல் டீம் ஃபெர்பாமென்ஸ் பண்ண முடியாது என நினைக்கிறோரோ என்னவோ ?????......
ஹூம் ....நவம்பர் முதல் வாரத்தில் 2016 ன் ப்ளானிங் புக்லெட் வரும் வரை இப்படி ஏதாவது புலம்ப வேண்டியது தான் போல.....
எங்களை வைச்சுகிட்டு நீங்க படரபாடு இருக்கே...பாவம் சார் நீங்க...
ReplyDeleteMahendran Paramasivam : அட...இப்படிப் பார்ப்போமே சார்....எத்தனை பதிப்பகங்களுக்கு இது போன்ற அக்கறையான வாசக வட்டம் கிடைத்திடும் ? அதுவும் பத்திரிகையுலகம் இன்றைக்கு உள்ள நிலையில் ?
Deleteஜவுளிக்கடை விளம்பரங்களும், நகைக்கடை விளம்பரங்களும் இல்லாது போனால் இன்றைக்குத் தாக்குப் பிடிக்கப் போகும் ஊடகங்கள் எத்தனை இருக்க முடியும் ?
43 ஆண்டுகளாய் ஒரே ஒரு சீவக்காய் விளம்பரம் நீங்கலாய் - விளம்பர வாசனையையே அறிந்திராதிருந்தும் நமது வண்டி ஓடுவது உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவினால் தானே ? (அந்த சீவக்காய் விளம்பரத்துக்கு டப்பு வரவில்லை என்பது கொசுறுச் சேதி !!)
இப்பொழுது கேட்டீர்களெனில் கொசுறாய் சீவக்காயே கிடைத்தாலும் கிடைக்கலாம்.... ;)
Deleteமேற்கிலிருந்து ம. ராஜவேல். : அதை எங்கே கொண்டு போய் இப்போது தேய்ப்பதாம் சார் ?
Delete//எத்தனை பதிப்பகங்களுக்கு இது போன்ற அக்கறையான வாசக வட்டம் கிடைத்திடும் ? அதுவும் பத்திரிகையுலகம் இன்றைக்கு உள்ள நிலையில் ?//
Deleteஅக்கறை இருப்பதை மறுக்கவில்லை. அக்கறையுடன் சற்றே வலிகளின் புரிதலும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது ஆதங்கம்...:)
Jokes apart, விளம்பரமே இல்லாததை ஒரு மைனசாகவும் பார்த்திடலாம் தான் ; ஆனால் இப்போதைய நமது படைப்பாளிகளில் 90% - இதழ்களில் விளம்பரங்களுக்கு 'NO NO' சொல்பவர்கள் !
Delete@ Vijayan
Deleteஇங்கு வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதே நம் ஊரிலிருந்து கொண்டு வந்த மசாலா, மிளகாய் பொடிகளில்தான். மறக்காமல் அந்த சீவக்காயை வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கவும். அடுத்தமுறை நம் அலுவலகத்திற்கு வரும்பொழுது வாங்கிக் கொள்கிறேன். சென்ற முறை வந்தபோது மைதீன், ஸ்டெல்லா மற்றும் ராதா கிருஷ்ணன் அண்ணாச்சியை பார்த்தேன் ( btw எதேச்சையான தேசிய ஒருமைப்பாட்டை கவனிக்கவும்)
விஜயன் சார்.!உங்களுடைய பாஸிட்டிவ் ஆன அப்ரோச் எனக்கு பிடித்துள்ளது.!
Deleteமகேந்திரன் பரமசிவம் சார்.!அருமை சார்.!உங்கள் வாக்கியங்கள்.," ஒரு வாசகம் சொன்னாலும் திரு வாசகம் சார்.! "
ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருக்கும் விமர்சனத்திற்கு நீங்கள் தமிழில் பதில் அளித்திருப்பது தொலைந்து போனது திரும்ப கிடைத்த திருப்தியை தருகிறது,
ReplyDeleteடியர் விஜயன்,
ReplyDeleteசட்டுபுட்டென்று 2016-க்கான சந்தா தொகையை அறிவிக்கவும். ரூபாயின் மதிப்பு உயர்வதற்குள். (இந்த ஒரு இடத்தில்தான் பொதுநலமும், சுயநலமும் கத்தி கத்தி 'கத்திச் சண்டை' இடுகின்றன.)
//டெக்ஸ் - மேற்கின் களம் + லேசான நகைச்சுவை ஒரு மாறுதலுக்கென
ReplyDeleteடைகர் - மேற்கின் களம் + ஜிம்மி & ரெட் வரும் வேளைகளில் மட்டும் கொஞ்சம் offbeat
லக்கி லூக் : clean fun
சிக் பில் : நகைச்சுவை - கதையோட்டத்தோடு !
கிளிப்டன் : இங்கிலாந்தின் மேட்டுக்குடியை நையாண்டி செய்து கொண்டே ஆக்ஷன் + நகைச்சுவை
SMURFS : முழுக்க, முழுக்க ஒரு மாறுபட்ட களம்
பௌன்சர் : கரடு முரடாய் களம் ; பௌன்சருக்கு சன்னமாய் ஒரு கம்பீரம்
லார்கோ - உயர்மட்ட ஆடுகளம் - லோக்கல் பையன் !
ஷெல்டன் : முதிர்ச்சி வயதில் - செயல்களில் ; களங்களில் இளமை.
XIII - ஒரு மௌன கம்பீரம்//
இவர்களின் கதைகளை உங்கள் மொழிப்பெயர்ப்பில் படிக்கும் போது எனக்கு அந்த, அந்த கதா பாத்திரங்களே மனதில் தோன்றுகிறது. குறிப்பாக அவர்களின் ஆளுமையை உணர்கிறேன்.
உங்களின் முகம் என்றுமே நினைவில் வந்ததில்லை. எந்த வட்டார வாடையும் அடிக்காமல் தமிழில் எழுதுவதே பெரிய கலை அல்லவா !?
டெக்ஸ் வசனம் உச்சரிக்கும் போது டெக்ஸின் தெனாவெட்டை உணர்கிறேன், லார்கோவின் வசனங்களில் ''என்கிட்டேயேவா'' என்று லார்கோ மனதில் நினைப்பதினை உணர்கிறேன்.
xiii மனதில் இருக்கும் குழப்பம் வசனங்களில் வெளிப்படுவதை உதாரணங்களுடன் இங்கே சுட்டிகாட்ட முடியும்.
ஒரு வேளை நான் இவர்களின் கதைகளில் ரொம்பவே ஒன்றி போய் படிப்பதால் எனக்கு மட்டும் அப்படி தோன்றுகிறதா என்று தெரியவில்லை. !
எனினும் லயன் வாசகனாய் நான் இன்று வரை தொடர்வது அதன் மொழிப் பெயர்ப்பினால்தான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன் .
+111111111....
Deleteவெல் செட் மீரான் ....
இன்றும் டெக்ஸ் பேசும் தெனாவட்டு வசனங்களுக்கு நான் அடிமை...அடிமை..அடிமை...
மீரான் சார்... நீங்கள் சொல்வதை கிட்டத்தட்ட நானும் உணர்கிறேன். இதில் டைகர், லக்கி லூக், கிளிப்டன்,
DeleteSMURFS, பௌன்சர், லார்கோ, ஷெல்டன், மற்றும் XIII ஆகியவற்றை ஆங்கிலத்திலும் படித்து இருக்கிறேன். ஆனால் தமிழில் வருவதையே படிக்க விரும்புகிறேன் என்றால் அதற்கு மொழிப்பெயர்ப்பும் ஒரு காரணம். கஞ்சன் வீட்டு பந்தி வசனத்தின் மூல வசனம் மிகவும் ஆபாசமாக இருக்கும். அதை நாசுக்காக நாகரிகமாக மொழிப்பெயர்த்ததற்கு தனியாக பாராட்ட வேண்டும்.
மகேந்திரன் பரமசிவம் சார்.!+11111111111
Delete+2222222222
DeleteMeeran well said .எனக்கும் english...
Deleteநிஜ வாழ்வில், நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகளின் தொணியின் மூலம் நம் மன உணர்வுகளை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும். அதையே எழுத்தில் தொணியை வெளிப்படுத்த மிகுந்த திறமை வேண்டும். எழுத்தில் வார்த்தைகளின் தொணியை வெளிப்படுத்துவதில் உங்க டீம் அற்புதமாக வேலை செய்யுது சார் !
ReplyDelete(இந்த தளத்தில் அடிக்கடி பிரச்சினை எழுவதற்கு காரணமே, தன் மன உணர்வை சரியாக வெளிப்படுத்தும் விதமாக கருத்து பதியாமல் போவதால்தான். சில பின்னூட்டங்கள் சிரிப்பதற்காக எழுதப்பட்டுள்ளதா ?, கோபமாக ,அல்லது விவகாரமாக எழுதப்பட்டுள்ளதா என்று தெரியாமல் போவதற்கு காரணம் அவை எழுதப்பட்டிருக்கும் தொணி சரியாக இல்லாமல் இருப்பது தான். நாம் சொல்ல வந்ததை சரியாக சொல்ல வேண்டுமென்பதற்கு பல முத்திரைகளை வேறு { எ.கா : ) } பயன்படுத்துகிறோம்.)
ஒரு கதையுடன் நாம் ஒன்றி போவதற்கு அதன் எழுத்துநடை மிக முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் கதையின் ஜீவனை வெளிப்படுத்த அந்த கதையை முழுமையாக உள்வாங்கி கொண்டு மொழிப்பெயர்க்கும் ஒருவராலேயே முடியும். அது உங்கள் டீமால் சரியாக செய்யப்படுகிற்து. மேலே ஒவ்வோரு ஹீரோவை பற்றி நீங்கள் கொடுத்திருக்கும் குறிப்பு ஒரு உதாரணம் சார் !
சில கிராபிக் நாவல்களின் தோல்விக்கு காரணம் அதன் ஜீவனை சரியாக உள்வாங்கி கொள்ளாமல் மொழிப் பெயர்த்ததே என்று நினைக்கின்றேன்.
கதையோடு ஒன்றாமல்,'' I = நான் '' என்று வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்பவர்களால் கதையில் என்ன ஜீவனை எழுப்ப முடியும் என்று புரியவில்லை சார் ?
மொழி பெயர்க்க ஆள் அமர்த்தினால் அதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென்று தோன்றுகிறது. உங்கள் மொழிப்பெயர்ப்பும் , வசன நடையுமே ஒவ்வோரு கதைக்கும் உயிரோட்டத்தை தருகிறது. அதுவே என் போன்றவர்களை வசியம் செய்து வைத்திருக்கிறது. அதில் மாற்றம் செய்கிறேன் என்று ''தங்க கல்லறை'' மறுபதிப்பை போல் ஆகிவிடாமல் இருக்க வேண்டுகிறேன்.
@ மீரான்
Deleteஆழமான கருத்து...அழகான வார்த்தையமைப்பு...! பின்றிங்க...!!
மீரான் .!சூப்பர் .!தற்போது உங்கள் எழுத்துக்கள் தெளிவாகவும்.ஆழமான கருத்துகளையும் கொண்டுள்ளது.!
Deleteஅருமை.!இப்படியே தொடருங்கள்.!
மீரான் ....முதலில் அதிகம் பேர் படிக்கும் ஹாட்லைன் கூட சிலருக்கு பிடிக்காதது எனக்கு ஆச்சலியமே.மொழி பெயர்ப்பு பாத்திரங்களுக்கு ஏற்ப என்பது எகம்
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteதற்போது வரும் மொழி பெயர்ப்பு நன்றாக உள்ளது. கதையை உள்வாங்கி அதனை மொழி பெயர்ப்பு செய்வதால்தான் எங்களை அனைவராலும் உங்கள் பின்னால் வர முடிகிறது. சொல்ல போனால் நமது காமிக்ஸில் (25 வருடம் முன்னால் வந்த) பழைய கதைகளை இன்று படித்தாலும் மனதில் பெரிய நெருடல் ஏற்பட்டதில்லை; அதே நேரத்தில் வேறு சில பதிப்பகம்களின் பழைய கதைகளை இன்று எடுத்து படித்தால் "முடியவில்லை". இதுவே நமது காமிக்ஸ், நமது மொழி பெயர்ப்பின் வெற்றி.
காலமாற்றத்திற்கு ஏற்றால் போல் நீங்கள் செய்து வரும் சில மாற்றம்கள் வரவேற்க வேண்டிய விஷயம்.
நீங்கள் சொல்வது போல் ஆண்டு ஆண்டுகளாக தொடர்ந்து எழுதுவது முடியாத விஷயம், புதியவர்களை தொடர்ந்து தேடலாம். நல்ல எழுத்தாளர்கள் அமையும் போது புதிய கதைகளை அவர்களை மொழி பெயர்க்க சொல்லி வெளி இடலாம். ஆனால் தற்போது நீங்கள் மொழி பெயர்க்கும் கதைகளுக்கு நீங்கள் தொடர வேண்டும்.
நமது காமிக்ஸ் வாசகர்கள் இந்த மொழி பெயர்ப்பில் விருப்பம் இருந்தால் அவர்களையும் விண்ணப்பிக்க கோரலாமே?
அதே நேரத்தில் புதிய வாசகர்களை கவர மொழிநடையை நவீனபடுத்த வேண்டும், அப்போதுதான் நமது வாசகர் வட்டம் விரிவடையும் என்றால் அது "மிகவும்" தவறான எண்ணம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. புதிய வாசகர்களுக்கான வெரைட்டி நம்மிடம் நிறைய உள்ளது, நாம் நமது காமிக்ஸ் அவர்களுக்கு அறிமுகபடுத்த அதுபோதும்.
புதிய வாசகர்களை கொண்டுவர நினைக்கும் அதே சமயம், நமது பழைய வாசகர்களுக்கு நாம் முன்பை விட சிறப்பாக மீண்டு(ம்) வந்து இருக்கிறோம் என்பதை விளம்பரபடுத்தி/கடிதம்/sms தெரிவிக்க வேண்டும்.
எனது நண்பர்கள்/ஆபிஸ் நண்பர்கள் வட்டத்தில் நமது காமிக்ஸ் பலமுறை அறிமுகபடுத்தி அதனை வாங்க வைக்கும் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. அவர்கள் நமது புத்தகத்தை பாராட்டிபேசியதோடு சரி. அதே நேரத்தில் அவர்களின் குழந்தைகளுக்கு நமது காமெடி கதைகளை பரிசாக கொடுத்து படிக்க தூண்டிய போதும் வெற்றி கிட்டவில்லை. எனது சிறு மூளைக்கு எட்டிய காரணம், வேகமாக செல்லும் இந்த உலகில் புத்தகத்தை படிக்க யாரும் விரும்பவில்லை, facebook, whats up, டிவி போன்றவைகள் அவர்களில் வாழ்வில் ஒரு அங்கம் ஆகிவிட்டது. குழந்தைகள் அவர்களுக்கு டிவி, video/mobile games தேவையான சந்தோசத்தை கொடுத்துவிடுகிறது.
நாம் நமக்கு தெரிந்த காமிக்ஸ் வளர்சிக்கான விவரம்களை சொல்லும் அதே நேரம் ஆசிரியர் நிலையில் இருந்து கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல விசயம்கள் உணர முடியும். நமது கருத்துகளை அவர் ஒரு போதும் ஒதுக்கியதில்லை, அவரால் முடித்த விசயம்களை செய்தார், செய்கிறார், செய்வார். (அவர் செய்த மாற்றம்களை கடந்த மூன்று ஆண்டுகளில் நாம் அவைகளை கண்கூடாக பார்க்கிறோம்)
நீங்கள் என்றும் போல் உங்கள் எழுத்து நடையில் தொடரவேண்டும், அதனை மாற்ற வேண்டாம்.
//அதே நேரத்தில் புதிய வாசகர்களை கவர மொழிநடையை நவீனபடுத்த வேண்டும், அப்போதுதான் நமது வாசகர் வட்டம் விரிவடையும் என்றால் அது "மிகவும்" தவறான எண்ணம் //
Deleteமொழி நடையை தாண்டி பல gapகள்(marketing, தொடராக வரும் தொகுப்பு ஒன்றாக விற்காமல் விற்பனை மையத்தில் வாங்குபவர் ஒரு கதையை வங்கி ஒரு தொங்கலில் விடப்படும் சாத்தியங்கள், நமது ஹீரோ worshipஐ மையப்படுத்தி வரும் கதைகள் புது வாசகருக்கு வேபங்காய் ஆகும் சாத்தியம், etc .....) fill செய்யபடாமல் ஒரு முறை காமிக்ஸ் புத்தக திருவிழாவில் வாங்கி try செய்வோர் மீண்டும் வாங்க நினைக்க வைக்க வேண்டிய பல dashகளும் இருக்கிறது என்பது என் கருத்து கூட.
If you publish any of the above books you reviewed I will not buy.... please understand what we expect in Tamil comics.... Periyar is asking about Tex willer monthly... what's your take on that... looks like we have to focus on the demand... else you might ended up building warehouses to store comics...
ReplyDeletesrini : பதிவின் இரண்டாவது பத்தியில் முரட்டு எழுத்துக்களில் உள்ள disclaimer பக்கமாய் கவனத்தைக் கொஞ்சம் செலுத்தலாமே ? And மாறுபட்ட முயற்சிகள் "விரும்பினால் வாங்கலாம்" பாணியில் மாத்திரமே இருக்கும் என்றும் நிறைய முறைகள் சொல்லி விட்டேன். So டெக்ஸ் வில்லருக்கு அப்பாலும் காமிக்ஸ் தினங்களின் உதயமும், அஸ்தமனமும் நிகழும் என்பதில் நம்பிக்கை கொண்டோர் வாங்கிடப் போகிறார்கள் ! Simple as that..
Delete@ திரு விஜயன்
Deleteஇந்த பதிவில் நான் தெரிஞ்சிகிட்ட ஒரு முக்கிய தகவல் என்னவென்றால்...
உங்கள் டேபிளில் உள்ள புத்தகங்களை பற்றிய ஒரு குட்டி அலசல்...அவைகளை பதிப்பிட அல்ல..மாறாக, உங்கள் அலசலின் தடம் எவ்வாறு பயணிக்கிறது...? என்ற மறுபக்கத்தை காட்டவே..! நம் காமிக்ஸ் காதலர்களை கவரும்படியான வித்தியாசமான கதை, ஓவியத்துடன் அசத்தல் படைப்புகள் ஏதும் சிக்குகிறதா... என ஓயாமல் உங்களுக்குள் இருக்கும் ஹெர்லாக் ஹோம்ஸ் விழிப்பாக, பூதகண்ணாடியுடன் தேடிக்கொண்டிருகிறார் என்ற தகவல் கிடைக்க பெற்றேன்...நல்ல புதையலா தேடிபிடிக்க வாழத்துக்கள் ஸார்..தொடருங்கள்..!
இங்ஙகனம்
தனி ஒருவன்
// டெக்ஸ் வில்லருக்கு அப்பாலும் காமிக்ஸ் தினங்களின் உதயமும், அஸ்தமனமும் நிகழும் ///-----...........
Deleteகடைசி தோட்டாவும் வெளிவந்து விட்டது .....ஆக டெக்ஸை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட நீங்கள் முடிவு செய்திருப்பது நன்றாகவே புரிகிறது சார் ........ டைகர் ஆல்ரெடி ஓவர்.....இப்போது டெக்ஸும் ....கொளபாய்களின் சூரியன் அஸ்தமனத்தை நோக்கி புறப்பட்டு விட்டது போல......(மொளனமாக தலை குனிந்து நிதானிக்கும் போட்டோக்கள் பத்து )
இரவுகழுகாரே..பகலில் ஏன் இந்த பார்வை தடுமாற்றம்...?
Deleteடெக்ஸ் வில்லருக்கு அப்பாலும் ன்னு தானே சொல்லியிருக்கார்...!!!
டெக்ஸ் வில்லர் இல்லாமலும் ன்னு சொல்லலையே..!!!
பார்வை தடுமாற்றம் அல்ல ...தனி ஒருவன் சார் .....நெஞ்சில் கனல் தகிக்கிறது ......ஏற்கனவே பல மாதங்களாக பதில் இல்லாத தவிக்கும் வேளையில் ......வம்புக்கு இழுக்கவும் டெக்ஸ்தான் கிடைத்தாரா ????......வார்த்தைகளில் விளையாடும் வித்தை எனக்கு தெரியாது ....
Deleteடெக்ஸ் விஜய ராகவன்.! நீங்கள் மனம் தளர அவசியமே இல்லை.!டெக்ஸ் வில்லர் தக்க சூழ்நிலையில் வருவார்.!நமக்கு ஒரே வேலை காசு கொடுத்த படிக்கும் ஒரே வேலைதான்.!அநேகமாக ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் அனைத்து விதமான ரசனைகள் கொண்ட வாசகர்களையும் திருப்தி படுத்தும் நோக்கில் இருக்கலாம்.!
Deleteஇங்கு தளத்திலேயே எத்தனை விதமான ரசனை கொண்ட வாசகர்கள்.!இதில் ஈமெயில்,கடிதம் மற்றும் மௌனமாக விற்பனையின் மூலம் தனது ரசனையை வெளியே காட்டும் வாசகர்கள்.! எல்லாவற்றையும் கண்காணித்து பின் மெதுவாக தனி சந்தா என்று மெதுவாக அடியெடுத்து வைப்பார் ..சற்று பொறுமையுன் இருப்போம்.! மூம்மூர்திகள் மூன்று வருட தாமதத்திற்கு பின்தானே நமக்கு கிடைத்தது.!
நன்றி MV sir....
Deleteஉங்கள் வாக்கு படி நல்லதே நடக்கும் என நம்புகிறேன்.....
/பார்வை தடுமாற்றம் அல்ல ...தனி ஒருவன் சார் .....நெஞ்சில் கனல் தகிக்கிறது ......ஏற்கனவே பல மாதங்களாக பதில் இல்லாத தவிக்கும் வேளையில் ......வம்புக்கு இழுக்கவும் டெக்ஸ்தான் கிடைத்தாரா ????......வார்த்தைகளில் விளையாடும் வித்தை எனக்கு தெரியாது ....//
Deleteசேலம் கழுகு... நாம உதாரணமாக காட்ட "GREATEST" எதுவோ அதை சொல்லுவோம். உதாரணத்துக்கு "சூரியனுக்கு அப்பாலும்". அது தான் இது. அதனால நீங்க பெருமைப்படத்தான் வேண்டுமே ஒழிய வருத்தப்பட ஒன்றுமே இல்லை.
மஹி சார் ...இன்னொரு முறை சொல்லுங்கள் ...காது குளிர கேட்கலாம் .......டெக்ஸ்தான் கிரேட் -என உங்களை போன்ற நடுவண் ரசிகர்கள் சொல்லும் போது அதன் தாக்கம் அதிகம் சார் ......
Deleteஆசிரியருக்கு....
ReplyDeleteமுதலில் உங்களுக்கு மிக பெரிய நன்றி சார்.எதற்கு எனில் தமிழ காமிக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பதிவிடும் நண்பர்களுக்கு தங்களின் பதில் தமிழில் அமைந்து எங்களை போன்ற பாமரனும் அறிந்து கொள்ள செய்தீர்களே அதற்கு தான் அந்த நன்றி...
அவர்களின் கருத்து எனது வினாவோ விடையோ ஆசிரியருக்கு ஆனது.நண்பர்களுக்கானது இல்லை எனில் அதனை ஆசிரியரின் மெயில் ஐடிக்கு அனுப்பினால் அவர் படித்து அறிந்து கொள்வதுடன் எங்களை போன்ற பாமரன் ," ஐய்ய்யயோ... என்னென்னமோ பெரிய மனுசங்க பேசறாங்க...நாம ஓடி போயிரலாம்னு ஒரு ஏக்கமும் வெளிவராமல் இருக்கும் ...
தமிழில் பதிவிட தெரியவில்லை எனில் பரவாயில்லை .தெரிந்தாலும் வேற்று மொழியில் பதிவிட்டு கடுப்பேத்தாறாங்க மை லார்டு.ஆனாலும் என் உரிமை ..என் போராட்டம் ன்னு யார் வேற்று மொழியில் எழுதினாலும் தங்கள் பதில் தமிழில் இருக்கட்டும் சார்.ஆதி தெரியா விட்டாலும் மூலமாவது தெரிந்து கொள்கிறோம் .
அப்புறம் அந்த ஆங்கில வினாவிற்கான தங்களின் விடை கண்டு மொழி பெயர்ப்பை குறை சொல்வதாக அறிய நேரிடைகிறது.அது தவறாக நான் பொருள் புரிந்து கொண்டேனோ என தெரிய வில்லை.ஆனால் அது உண்மை எனில் அவர்களுக்கான எனது ஒரே பதில் ...
1980 வாக்கில் புற்றீசல் போல பல காமிக்ஸ்கள் முளைத்தாலும் ..90 வாக்கில் கூட மேகலா போன்ற பெரிய ஜாம்பாவான்களின் காமிக்ஸ் முளைத்தாலும் அவை எல்லாம் புதையுண்டு புல் முளைத்தாகி விட்டாலும் நமது காமிக்ஸ் குழந்தை தனத்தோடு நடந்து...கொஞ்ச காலம் ஊட்டசத்து குறைந்து தள்ளாடி தள்ளாடி நடந்தாலும் அதையெல்லாம் மீறி இப்போது வீர நடை போடுகிறது என்றால் அதற்கு ஓரே காரணம் ...அடித்து சொல்வேன் உங்கள் காமிக்ஸ் காதல் மட்டுமல்ல ..உங்கள் மொழி ஆக்கத்தின் திறமையாலும் தான் ..இந்த வீர நடை....உண்மையை சொல்ல போனால் கிராபிக் நாவல் பிடிக்கா விட்டாலும் ஒரு முறை ஆவது அதனை படிக்க வைப்பதன் காரணம் தங்கள் மொழி ஆக்கம் தான் .நாலு பக்கத்துக்கு மேலே படிக்காமலே தூக்கி போட்ட வேறு காமிக்ஸ் படைப்புகள் பல உண்டு..நன்றி.
முக்கிய குறிப்பு ; ஆங்கிலம் தெரியாத என்னை போன்ற பாமர மக்களே ..இந்தி...இங்கிலீஷ் ..எல்லாம் தெரியலைன்னு யாரும் தாழ்வு மனப்பான்மையில் வாட வேண்டாம் .நான் கடை பிடிக்கும் இரண்டு வரி ஆங்கிலத்தை மனப்பாடம் செய்து கொண்டால் ஆசிரியர் போல நாமும் உலகம் சுற்றலாம் ..அதை இங்கே இடுகிறேன. .
"ஐ நோ இங்கிலீஷ்..அன்ட் இந்தி..பட் ஐ லைக் ஒன்லி தமிழ்.ஐ ஸ்பீக் ஒன்லி தமிழ் "
படித்து வீட்டிர்களா....இதை மனப்பாடம் செய்து வேலைக்காரன் ரஜினி போல வேகமாக பேசினால் நம்மிடம் பேசும் இங்கிலீஷ்காரன் கூட மிரண்டு தமிழில் பேசிவிடுவான் .தமிழா என ஏளனத்துடன் பார்க்கும் உள்ளூர் ஆட்கள் கூட அடேங்கப்பா எல்லா மொழி தெரிஞ்சாலும் தமிழ பேசும் தமிழ் பண்பாளர்ன்னு பெருமையா பாப்பான் ..ஓகே.....இதை வச்சு தான் நான் உலகம் பூரா சாரி..நாடு பூரா ....சாரி....மாநிலம் பூரா ...சாரி. மாவட்டம் பூரா சுத்திட்டு இருக்கேன் ..ஹிஹி..
பெங்களுர் பரணி.!
Deleteநானும் புதிய வாசகர்களை நம் வட்டத்தினுள் இழுக்க உங்ளைப்போன்று முயன்று பல்பு வாங்கியதுதான் மிச்சம்.!நான் பரிசாக கொடுத்த புத்தகங்கள் எந்த பழைய புத்தக கடைக்கு போனதோ என்று வருத்தபடுவது உண்டு.! சிறு வயதில் நம்மைப்போல் காமிக்ஸ் படித்தவர்கள் சுலபமாக நம் வட்டத்தில் வருகிறன்றனர்.!(இதுவரை இரண்டு பேரை மட்டும்தான் இழுக்க முடிந்தது.!அவர்கள் ரெகுலராக கடையில் வாங்குகிறார்கள்.!)
தலைவரே(பரணி சார்).! எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக பட் என்று போட்டு உடைக்கும் உங்கள் பாணியே பாணி.!சூப்பர்.!
இங்கு பிரசன்னா போன்ற சில நண்பர்கள் கருத்து என்னை தனிமைப் படுத்தியது போன்று உணர்ந்தேன்.!ஆனால் இப்போது நான் கூட்டமாய் இருப்பதாக உணர்கிறேன்.! நன்றி நண்பர்களே.!
//.அடித்து சொல்வேன்///----யாரை தல.....
DeleteThis comment has been removed by the author.
Delete@Tex - lol
Delete//அதற்கு ஓரே காரணம் ...அடித்து சொல்வேன் உங்கள் காமிக்ஸ் காதல் மட்டுமல்ல ..உங்கள் மொழி ஆக்கத்தின் திறமையாலும் தான் ..//
Delete+111111111
தலீவரே! சும்மா பிண்ணி பெடலெடுக்குறீங்க!!!
Deleteதலீவரே இந்தாங்க சோடா ...எனக்கும் கொஞ்சம் ...
Deleteவிஜயன் சார், மொழி பெயர்ப்பு பற்றிய மற்றொரு செய்தி: ஆங்கில படம்களை தமிழில் மொழிபெயர்த்து வெளி வரும்போது அந்த அளவு கவர்வது இல்லை. காரணம் அவர்களின் உதடு அசைவுக்கு ஏற்றார் போல் வசனம்களை கொடுக்க வேண்டும், அதற்கு மேல் கொடுக்க முடியாது. எனவே அவைகளை முழு அளவில் ரசிக்க முடியாது.
ReplyDeleteஅதே போல் காமிக்ஸ்ல்: ஆங்கில வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்த்தால் ஒரு ஈர்ப்பு இல்லாமல் கதை கந்தலாகி போய்விடும். நமது சிறப்பு கதையை முழுமையாக புரிந்து தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி கொடுப்பதால் எங்களால் முழுமையாக ரசிக்க முடிகிறது. இல்லேன்னா ஹிந்தி சீரியல் தமிழில் மொழிபெயர்த்த கதையாகி விட்டு இருக்கும்.
பெங்களுர் பரணி.!@ உண்மை.!உண்மை.! எடிட்டர் சார் .!வழக்கம் போல உங்கள் பாணியே பின்பற்றுங்கள் !ஜுனூன் தமிழ் வேண்டாம் சார்.!--------------------காமிக்ஸின் பெரிய மைனஸ்,மொழிபெயர்ப்பு ஜுனூன் ஸ்டையிலில் ஜீவன் இல்லாமல் இருப்பதுதான்.!
Delete+1
Delete+1
Deleteமற்றும் ஒரு முக்கியமான கோணத்தில் ஆன கருத்து நண்பரே!
DeleteIf you have to attract TN college guys towards tamil comics, it is very important talk in their language. I think that is what happens here. What is so wrong in characters saying "Nanbenda"? That is how we talk with close friends. So, what is the big deal?
ReplyDeleteAccording to me, comics are like stress busters and if the characters speak our way, it gets more closer. We like Rajini movies and we don't him to change his style or genre. As simple as that.
Humble request to Editor Sir - We love your writing style. I wish you won't change it.
+++1
Delete"விரும்பினால் வாங்குபவர்கள் வாங்கலாம்" என்ற நிலைப்பாடு இருக்கும் சிறிய வாசகர் வட்டத்தையும் பாதிக்கும் ஆபத்து உள்ளது, if any good comics comes out i'll definitely support. not these sad stories...
ReplyDeleteஇது வரை
மார்டின் மிஸ்ட்ரி யில் 305 காமிக்ஸ் வெளிவந்துள்ளது.
டெக்ஸ் வில்லரில் 1192 காமிக்ஸ் வெளிவந்துள்ளது.
ஜில் ஜோர்டனில் 48 காமிக்ஸ் வெளிவந்துள்ளது.
கதைகளுக்கு எந்த பஞ்சமும் இல்லாத போது எதற்காக இந்த தேடல்.
டெக்ஸ் வில்லர் / மார்டின் மிஸ்டரி monthly or bi-monthly யாக தனி சந்தா அறிவிக்கலாமே
"விரும்பினால் வாங்குபவர்கள் வாங்கலாம்" என்ற நிலைப்பாடு இருக்கும் சிறிய வாசகர் வட்டத்தையும் பாதிக்கும் ஆபத்து உள்ளது, if any good comics comes out i'll definitely support. not these sad stories...
ReplyDeleteஇது வரை
மார்டின் மிஸ்ட்ரி யில் 305 காமிக்ஸ் வெளிவந்துள்ளது.
டெக்ஸ் வில்லரில் 1192 காமிக்ஸ் வெளிவந்துள்ளது.
ஜில் ஜோர்டனில் 48 காமிக்ஸ் வெளிவந்துள்ளது.
கதைகளுக்கு எந்த பஞ்சமும் இல்லாத போது எதற்காக இந்த தேடல்.
டெக்ஸ் வில்லர் / மார்டின் மிஸ்டரி monthly or bi-monthly யாக தனி சந்தா அறிவிக்கலாமே
+123456789
DeleteTex + Martin Mystry.... super idea
+123456789
DeleteTex + Martin Mystry.... super idea
+123456789123456780123456789.............................................................................
Delete//டெக்ஸ் வில்லரில் 1192 காமிக்ஸ் வெளிவந்துள்ளது.////-- ஆகா ஆகா ....அத்தனையும் படிக்க துடிக்கிறது மனசு ....ஆனால் .....ஆனால் ....ஆனால் ..
திகட்டி விடக்கூடாதே...
Deleteமிக சிறந்த கதைகளை தேர்வு செய்து வெளியிடட்டும் .2 மாதத்திற்கொன்றாய்
Delete//கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்//
Delete+1
ஸ்பெஷல் வெளியீடுகளையும் சேர்க்கும் போது 2மதங்களுக்கு ஒன்று கூட ok தான்
Dear Editor,
ReplyDeleteI am still waiting. .. for the announcement / confirmation
Thanks in advance
me 2 sir......
Deleteநமது காமிக்ஸின் தனித்தன்மையே
ReplyDeleteஅழகுதமிழும் அற்புத சித்திரங்களும்தான். ஆங்கிலத்தில்
படிக்க 1000 புத்தகங்கள் வந்தாலும்
நமது லயன் போல் எதுவும் இருக்காது.
அன்பு வேண்டுகோளுக்கு நம் ஆசிரியர்
நிச்சயம் செவி சாய்ப்பார்.தரமான
அனைத்து காமிக்சும் மாதாமாதம்
5#6வர/தர வேண்டும்
பிறகு சார் ...மாதம் ஐந்து..ஆறு காமிக்ஸ் வந்தால் எங்களுக்கு போரடித்து விடும் என்று மட்டும் தப்பு கணக்கு மட்டும் போட்டு விடாதீர்கள் .இந்த மாத நாலு காமிக்ஸை நாலு நாளில் படித்து விட்டு அடுத்த மாசம் எப்ப வரும்னு காத்து காத்து ....துரும்பாய் இருந்த நான் எறும்பாய் இளைத்து போகிறேன் சார் ...
ReplyDeleteபின் குறிப்பு...போன வாரம் நெய்வேலி பஸ் பயணத்தில் துனைக்கு வந்தது ...நம்ம டெக்ஸ் ன் காவல் கழுகு...அப்போது புதிதாய் படித்ததை விட இப்போது செம கலக்கலாய் இருந்தது சார் ..கார்சன் ..டைகர்...யாருமே இல்லை எனினும் டெக்ஸ் தனி ஆவர்தனமாய் கலக்கிவிட்டார் ....கருப்பு வெள்ளையிலும் டெக்ஸ் எப்போதும் கலக்கல் தான் .கறுப்பு வெள்ளை நாயகர்களை கலரில் ஒரு மாதிரியும் ...கலரில் பார்த்த நாயகர்கள் கறுப்பு வெள்ளையில் பார்த்தால் ஒரு மாதிரியும் இருந்தாலும் ....இரண்டிலும் பார்த்தாலும் அலுக்காத நாயகர் ஒருவர் தான் ..அவர் தான் தனி ஒருவன் டெக்ஸ் ...
எத்தனை முறை படித்தாலும் சலிப்படைய வைக்காத ஒரே ஹீரோ ...தனி ஒருவன் டெக்ஸ் .....
நணபர்களோடு வந்தாலும் ...தனியாளாய் வந்தாலும் எப்போதும் கலக்குபவர் தனி ஒருவன் டெக்ஸ் ....
..............
தனி ஒருவர் டெக்ஸ் - என மாற்றி போடுங்கள் தல....
Deleteஹா !ஹா !
Delete""அசோகரு உங்க மகரா. "" .டி .எஸ் பாலையா காதலிக்க நேரமில்லை -யில் சொல்லுவாரே ..
அந்த மொமண்ட் ....
டைமிங்... நிறைய பழைய விஷயங்களை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்... செ.அ.சார்... நன்றி...நன்றி!
Delete//தனி ஒருவர் டெக்ஸ்//
Deleteயாருப்பா ர்ர்ர்...அ விட்டது :D
இங்கு பிரச்சனையே சிலர் ஆசிரியரின் எழுத்து பாணியை மாற்ற சொல்கிறார்கள் ஆனால் ஒருவருடைய எழுத்து என்பது தன்னுடைய கைரேகை போன்றது என்று ஆசிரியர் பலமுறை கூறிவுள்ளார்
ReplyDeleteஅதனால் அவருடைய பானியை மாற்ற சொல்வதர்க்கு பதில், புது மொழிபெயர்பாலறை கண்டுபிடிக்க நாம் உதவலாம்.
பின்குரிப்பு
நம் ஆசிரியரின் எழுத்து பாணிக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது (என்னையும் சேர்த்து).
அடுத்த பதிவு எப்போ சார் :)
ReplyDelete+12345678900000000000000000000000000
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசுஜாதா...வாண்டுமாமா பெரிய ஆளா என எனக்கு தெரியாது . ஆனால் எனது உலகில் நீங்கள்தான் வெகு உயரம் இவர்களை காட்டிலும். ஸ்மர்ப்ஸ் போல கடவுளோ நீங்களோ படைத்த அழகிய உலகம். தயவு செய்து புத்தகங்கள் எண்ணிக்கயை 5ஆக உயர்த்தி புதிய நாயகர்களை களமிரக்கவும்.
ReplyDeleteலார்கோ ...முடிந்ததும் /முடித்து விட்டு உடனே ஒரு தொடர் நாயகனை இணைக்கலாமே...
Delete//லார்கோ ...முடிந்ததும் /முடித்து விட்டு உடனே ஒரு தொடர் நாயகனை இணைக்கலாமே...//
Delete+1
டியர் எடிட்டர்
ReplyDeleteபிகாஸ் எ லாட் ஆப் பீபள் கனாட் அண்டரஸ்டாண்ட் இங்க்லீஷ் ரைட்டிங், பரம் நொவ் ஆன் ஐ வில் பீ டைப்பிங் இன் தமிழ் வோன்லி :-) ;-)
தேங்யூ...:-))
Deleteதமிழ் திரை உலக வரலாற்றிலியே எனக்கு மிகவும் பிடித்த வசனம்
ReplyDeleteதமிழ் தெரியாதுன்னு தெரிஞ்சுட்டு இங்கிலீஷ் காரன்ட்ட இங்கிலீஷ் பேசற நீ இங்கிலீஷ் தெரியாத தமிழ்தாட்டு காரன்கிட்ட ஏண்டா இங்கிலீஷ்ல பேசற ...
:(((((
இது ஸ்மைல் குறி அல்ல ....
தலீவரே கொஞ்சம் மாற்றி டைப்பி விட்டீர்களே ....இதோ...சரியான வசனம் .....
Delete"தமிழ் தெரியாத இங்க்லீஷ்காரன்கிட்ட தமிழ்ல பேசக்கூடாதுன்னு தெரிஞ்ச உனக்கு.,
இங்க்லீஷ் தெரியாத பச்சைதமிழன்கிட்ட இங்க்லீஷ் பேசக்கூடாதுன்னு ஏண்டா தெரியாம போச்சு. "
ஙே.....
Deleteதமிழ் வரலாற்றிலியே எனக்கு பிடித்த தமிழ் வசனத்தையே என்னால ஒருங்கா நினைவுபடுத்த முடியலைன்னா
இங்கிலீஷ்ல பேசுனா என் கதி ....
:(((
மன்னிக்கவும் டெக்ஸ் ....
///////////// நோ போட்டிக்காண்டி////////
ReplyDelete/////////// ஒன்லி லூட்டிக்காண்டி////////
மாடஸ்டி ::Archie !!mi hai detto che seisiete ironman Robert Downey Jr..Lei mi ha ingannato !!!!!
கசேன்ட்ரா : yes .... you bluffed !!!!! i can even tolerate misogynists !!!! but not polygamists on false pretences ....!!!!!!
you rotten meat.....or should i say rusted metal?
ஆர்ச்சி : rrrrrrrrrrmmmmmmmmmmmssshhhrrrrrrrzzzzzzzz!!!!!!
மாடஸ்டி பொறந்தது கிரீஸ் அப்டின்னாலும் வளர்ந்தது இத்தாலிய வாசனையில் என்பதால் அவர் இத்தாலிய மொழியில் பேசுவதாக உள்ளது.....
கசேன்ட்ரா பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் பேசுகிறார்...
ஆர்ச்சி பேசுவது சைபோட் லாங்குவேஜ்.....
எல்லோரும் தமிழில் பேசுவது போலவே எழுதி இருக்கலாம் ஆனால் மிஸ்டர் பிரசன்னாவுக்கு அந்த மொழி பெயர்ப்பு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற பயத்தில் அவரவர் தாய்மொழியில் பேசுவதாக எழுதி இருக்கிறேன்....
@ mr prasanna : no malice intended ...just to make some chuckles ....if you object it will be deleted with apology