நண்பர்களே,
வணக்கம். ஒரு சோம்பல் முறிக்கும் விடுமுறை தினத்தில் அக்டோபரின் ஐந்து இதழ்களையுமே என் முன்னே மேஜையில் பரப்பிப் போட்டுக்கொண்டு பராக்குப் பார்க்கும் சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றேன். பாஸோ, ஃபெயிலோ...... ஹிட்டோ, உப்மாவோ, இந்த நொடியில் அந்தத் தீர்ப்புகளுக்குள் மூக்கை நுழைக்காது, ரகம் ரகமாய் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள படைப்பாளிகளின் உருவாக்கங்களை நம் தமிழில் பார்க்க முடிந்துள்ள மகிழ்ச்சியை மட்டுமே பிரதானமாக்கியிருக்கிறேன் இந்த நொடியில். மாதம் ஐந்து இதழ்கள் என்பதெல்லாம் சமீப மாதங்களில்...... ஏன் சமீப ஆண்டுகளில் கூட நடைமுறையில் இல்லை என்றே ஞாபகம். Of course, GEN Z தடத்தின் குட்டி புக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் , ரெகுலர் இதழ்களை மட்டுமே மனதில் கொண்டு இதைச் சொல்கிறேன். So, FAB 5 தனித்தடத்தின் புண்ணியத்தில் இம்முறை மொத்த இதழ்களின் எண்ணிக்கை எகிறி நிற்பது செம pleasant surprise . And நடுவாக்கில் ஜூரத்தில் 4 நாட்கள் படுத்து எழுந்துமே, ஏதேதோ பல்டி அடித்து, இதழ்களை அக்டோபர் முதல் தேதிக்கு உங்கள் கைகளில் ஒப்படைத்த திருப்தி வேற லெவல். And இறுதி நொடியில், பைண்டிங்கில் நமக்கு துளியும் முகம் சுளிக்காது உதவிடும் நண்பருக்கே இங்கு கிரெடிட்டின் பெரும்பங்கு சார்ந்திடும். ஏனெனில் "கதிரவன் கண்டிரா கணவாய்" அச்சாகி பைண்டிங் போனதே செவ்வாய் காலையில்தான். And புதன் காலையில் டெஸ்பாட்ச் என்று காலில் வெந்நீரை ஊற்றிக்கொண்டு அவர் முன்னே தவம் கிடந்தோம். 'இவைங்க இப்படித்தான், மாசா மாசம் தவறாமல் உசிரை வாங்குவானுங்க' என்பது அவருக்கு இப்போதெல்லாம் பழகிப்போய்விட்டதோ என்னவோ, டாண் என்று புதன் காலையில் புக்ஸை ஆபீஸில் கொண்டுவந்து இறக்கிவிட்டார். So விடுமுறைகளுக்கு முன்பாகவே புக்ஸ் உங்களை எட்டிப்பிடித்திட வேண்டும் என்ற லட்சியம் ஈடேறிவிட்டதில் டபுள் மகிழ்ச்சி.
போன வாரத்துப் பதிவில் சொன்னது போலவே- இம்மாத மெனுவில் இட்லி, பொங்கல், பூரி, தோசை, பட்டூரா என்று ரகம் ரகமாய் காத்துள்ளன. And முதல் நாளிலேயே, நண்பர்களில் ஒரு சிறு அணியினராவது, இரண்டோ மூன்றோ இதழ்களை முழுசுமாய் போட்டுத் தாக்கி இருப்பது நேற்றிலிருந்தே பதிவாகி வருகிறது. ஒரு லெவல் மேலேறி ஐந்து இதழ்களையுமே நேற்றைக்கே படித்து முடித்திருந்த நண்பரும் உண்டுதான். இவர்களையெல்லாம் சில நூறு நம்பர்களில் க்ளோன் செய்து தமிழகமெங்கும் விதைத்து வைத்தால், மாதம் ஐந்தென்ன ஓரு டஜன் இதழ்களையுமே போட்டு தாக்கலாம் போலும்.
இம்முறை எனது பிரதான அக்கறை இருந்தது புது வரவு பிளாக்ஸாட் மீதே !! இந்தக் கடுவனார் உங்கள் மத்தியில் என்ன மாதிரியான முத்திரையினை பதிக்கக் காத்துள்ளாரோ என்று யூகிக்கத் தெரிந்திருக்கவில்லை . 'இது என்னடா பூனையும் தவளையுமா வருது..? இதெல்லாம் ஒரு கதையா..?' என்று மூக்கில் குத்திவீர்களோ ? என்ற பயம் கூடக் குடியிருந்தது ! Becos, இந்தக் கதை சொல்லல் பாணிக்குப் பழகிட கொஞ்சமாய் பொறுமை தேவைப்படக்கூடும் என்று பட்டது. ஆனால் சுனாமியிலேயே ஸ்விம்மிங் போடும் நீங்கள், லெப்ட் ஹேண்டிலேயே புதுமைகளையும் கையாள்வது கண்கூடாய் தெரிகிறது. Early days தான் - இருந்தாலும் இந்த இறுக்கமான புதுப்பாணிக் கதை சொல்லலை அட்டகாசமாய், ஆரவாரமாய், இதுவரையிலும் வரவேற்றிருப்பது வதனத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப்பை எரியச் செய்துள்ளது. காலமாய் ஏதேதோ தேசங்களில் இருந்தெல்லாம் கதைகளை வரவழைத்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம் தான். இருந்தாலுமே உலகெங்கும் மெகா ஹிட்ஸாகி வலம் வரும் ஒரு சில தொடர்களானவற்றை தமிழுக்குக் கொண்டுவரும்போது உற்சாகமானது ஒரு மிடறு தூக்கலாக இருப்பதை பலமுறை உணர்ந்துள்ளேன். லார்கோவை தமிழ் பேசச் செய்தபோது ஜிலோ என்றிருந்தது. டின்டினை நம் கரைகளுக்கு இட்டாந்த போது ஜிலீரென்றிருந்தது. அவற்றுக்குச் சற்றும் குறைவில்லா உற்சாகம் தருகின்றது ப்ளாக்சாடின் வருகை. Becos, இந்தப் பூனையார் பேசிடும் 29-வது உலக மொழி நமது தமிழ். கிட்டத்தட்ட 30 வெவ்வேறு தேசங்களில், வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு ரசனைகளில், உள்ள வாசகர்களை கவ்விக் கவர்ந்துள்ள ஒரு நாயகன் நமக்கும் பிடித்துள்ளது எனில் அது பெருமிதப்பட்டுக்கொள்ளும் சமாச்சாரம் தானே?! So BLACKSAD உங்கள் வாசிப்பில் எவ்விடம் ஸ்கோர் செய்கிறார் என்பதை மறவாது இங்குமே பதிவிடுங்களேன் ப்ளீஸ்.
And of course ஏற்கனவே சொன்னது போல இம்மாதம் டெக்ஸ் அடித்திருப்பது சிக்சரெல்லாம் அல்ல, பன்னிரண்டு ரன்கள் தரவேண்டியதொரு மெகா ஹிட். கதைக்குள் புகுந்துவிட்டால் எந்த வேலை குறுக்கிட்டாலுமே, இதழைக் கீழே வைக்க இயலாது என்று உறுதியாகச் சொல்வேன். And மருந்துக்குக் கூட அந்த இறுக்கமான டென்ஷனை மட்டுப்படுத்திடக்கூடாது என்பதற்காகவே கதாசிரியர் இம்முறை கார்சனை உட்புகுத்தியிருக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. முழுக்க முழுக்க டெக்ஸ் சோலோவாக செய்யும் ரகளை இங்கே வேறொரு லெவல். அதிலும் இரவில் ஹோட்டல் அறையில் மனுஷன் தனியாகப் படுத்திருக்கும் போது அவரைத் தீர்த்துக் கட்ட எதிராளி அனுப்பும் மரண தூதர்களை அவர் கையாளும் அந்தப் பக்கங்களெல்லாம் மெய்யாலுமே மயிர்க்கால்களை நட்டுக்கச் செய்யும். Oh yes டெக்ஸ் தொடரில் "துயிலெழுந்த பிசாசு" கூட நமக்கு நெஞ்சுக்கு நெருக்கமானதே, ஆனால் "நள்ளிரவின் நயனம்" போல துவம்சம் செய்யும் அசாத்தியங்களே, நாற்பத்தி ஓர் ஆண்டுகளுக்குப் பின்பும் நம் மத்தியில் இந்த மனுஷனை தன்னிகரின்றி உலவச் செய்திடுகின்றது. இம்மாத டெக்ஸ் போனலியின் கதை சொல்லலுக்கு ஒரு அட்டகாச அர்ப்பணிப்பு என்பேன்.
And சமுராய்களைப் பொறுத்தவரையில் இங்கே வாசிக்கும் நேரத்தை விட அகண்ட விழிகளோடு ஒவ்வொரு பிரேமையும் ரசிக்கத் தேவைப்படும் மெனக்கெடலே ஜாஸ்தியாக இருக்கும் என்பேன்.In fact, இங்கே கதாசிரியருக்கு ஒவ்வொரு பக்கத்தையும் வர்ணித்து எழுதித் தரும் பணிதான் அசுரத்தனமான வேலையாக இருந்திருக்குமே தவிர, வசனங்களைச் செதுக்குவது மொத்தமே அரை நாளது வேலையாகத்தான் இருந்திருக்கும். பேனா பிடிக்கும் போது எனக்குமே it was no different. அந்தப் பெண்மணி பழிவாங்கும் படலத்துக்குள் புகுந்த பிற்பாடு, ஆக்ஷனில் காட்டும் ஜாலங்கள், பேனாவை மூடிவிட்டு பராக்கு மட்டுமே பார்க்கச் சொல்லி என்னைக் கோரியது. 'வஞ்சம் தீர்க்கும் வேங்கைகளே' is going to be an absolute visual treat.
அப்புறம் நமது கானகத்துக்காரர் மிஸ்டர் நோவைப் பொறுத்தவரை, இதுதான் துவக்க சாகசம் என்பதால் ஏற்கனவே பார்த்ததொரு கதையின் டெம்ப்ளேட் நமக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் செம breezy read என்பதில் துளியும் ஐயம் கிடையாது. 1975-ல் டெக்ஸும் சரி, டைலன் டாகும் சரி, ஸாகோரும் சரி, பிரித்து மேய்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், முற்றிலும் புதியதொரு மார்க்கத்தில் ஒரு நாயகரை இட்டுச் செல்லும் உத்வேகத்தில் G.L. போனலி அவர்கள் இந்தச் சரக்கடிக்கும் பைலட்டை சிருஷ்டித்துள்ளார். And இந்த மனுஷனும் கிட்டத்தட்ட 400 சாகசங்கள் வரை இத்தாலியில் போட்டுத் தாக்கியிருப்பது அந்நாட்டின் காமிக்ஸ் வாசகர்களின் பன்முக ரசனைக்கொரு எடுத்துக்காட்டு !
Last but not the least... கதிரவன் கண்டிரா கணவாய் .
சினிமாவில் 'ரூம்காம்' என்றொரு கான்செப்ட் வைத்துப் படமெடுப்பார்கள். அதாவது, ஒரு வீட்டில் ஒரே அறைக்குள் உட்கார்ந்தபடிக்கே மூன்று, நான்கு பேர் மாத்திரமே பேசிக்கொண்டு அந்தக் கதையை நகர்த்திச் சென்று, படம் முழுக்கவே அந்த வீட்டுக்குள் மையம் கொண்டிருப்பதாக எடுத்திருப்பார்கள். இந்த ஆல்பத்தை 'அண்டர்கிரவுண்ட் காம்' என்று சொல்லலாம் போலும். ஏனெனில், துவக்கப் பக்கங்களைத் தாண்டிச் சென்ற பிற்பாடு, சுரங்கக் குழிக்குள் விழுந்துவிடும் அந்த யூத், கதையின் முடிவு வரைக்கும் அந்தக் குழிக்குள்ளேயே படும் பாடுகள்தான் இந்த சாகசமே. புக் வெளியான பிற்பாடு இதில் நான் செய்த சென்சார் பற்றி, செய்ய வேண்டிப் போன அவசியம் பற்றி, இந்த விவகாரம் பற்றி உங்களிடம் நான் வாய் திறக்க நேர்ந்ததும் ஏன் ? என்பது குறித்து விளக்குவதாக பிராமிஸ் செய்திருந்தேன். இதோ புக்ஸ் உங்கள் கைகளை எட்டிப் பிடித்துவிட்டன! ஆனால், இன்னமும் நிறையப் பேர் வாசித்திருக்க மாட்டீர்கள் என்பது உறுதி. வாசித்திருந்தாலுமே நான் கத்தரி போட்ட பக்கங்கள் எவை ? என்பதை யூகிக்க வழி இருக்காது தான். So கதையைப் பரவலாய்ப் படித்து முடித்த பிற்பாடு, நான் காலி செய்த பக்கங்கள் பற்றி மேலோட்டமாய் தகவல் தருகிறேன். பொதுவெளியில் பகிர்ந்திடும் அளவுக்குச் சிறப்பான சமாச்சாரம் அல்ல என்பதால் அதை விஸ்தீரணமாய் எழுதிடச் சாத்தியப்படாது. ஐஞ்சரைப் பக்கங்கள் - அஞ்சரைக்குள்ள வண்டிக்கு அண்ணன் ரகம் ! புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், நவம்பரின் தீபாவளி அதிர்வேட்டுகளைத் தயார் செய்ய நடையைக் கட்டுகிறேன் folks.
Bye now, have a great long weekend! See you around !!
Online listing : https://lion-muthucomics.com/latest-releases/1501-2026-october-pack-.html


,🤗👌
ReplyDeleteமிஸ்டர் நோ அட்டை போட்டோவை விட இதழை நேரில் பார்த்த போது நன்றாக இருக்கிறது சார்
ReplyDeleteCan few pages of Blacksad shared here?
ReplyDeleteசார்.. இதெல்லாம் போங்காட்டம்!!
ReplyDeleteஅந்த 5½ பக்க ரகசியத்தை இங்கே போட்டுடைப்பீர்கள் என்று எண்ணியிருந்தோம்.. 😤
சரிங்க சார்.. அந்த 5½ பக்க சம்பவம் இடம்பெறும் சூழல் - அந்த குகையா அல்லது வில்லனின் வீட்டிலா என்பதை மட்டுமாவது சொல்லுங்கள்!
குகையில்....
Deleteம்.. இப்போ புரியுதுங்க சார்!!😯
Deleteஊஹூம்... யூகிக்கவே முடியாது 🥹
Deleteஅவளுக்கு 'அந்த சம்பவத்தால் ' அப்படி என்ன உடலில் பிரச்னை ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள அவள் மருந்து-மாத்திரைகள் வைத்திருக்கும் கப்போர்டை ஒரு போட்டோ எடுத்து zoom செய்து அந்த மாத்திரை (Efavir 600) என்னவென்று தெரிந்து கொண்டேன் சார்! பாவப்பட்ட ஜென்மம் அவள்!!😤
Delete///ஊஹூம்... யூகிக்கவே முடியாது///
Deleteவலியால் துடிக்கும் கெவினுக்கு கொஞ்சம் relief தருகிறாள் - அதானேங் சார்? 🤔
ஒரு யூகமா அப்புடி சொல்லலாம் - அப்பிடி இல்லேன்னும் சொல்லலாம்... 🥹
Delete🤔🤔
Deleteநம்ம ஆசிரியர் கொடுத்த பில்ட்அப்ல, “அப்படி அஞ்சு பக்கத்துல என்னதான் இருக்கு?” அப்படின்னு நினைச்சு, அந்தப் புத்தகத்தைத் தேடி கண்டுபிடிச்சிட்டேன்.
Deleteஇந்த ஃபிரான்ஸ்ல ஒரு நல்ல வசதி என்னன்னா, நம்ம லைப்ரரியில அந்தப் புத்தகம் இல்லன்னாலும், வேற ஏதாவது ஒரு ஊர்ல இருக்கிற லைப்ரரியில இருந்து “எனக்கு இந்தப் புத்தகம் வேணும்”ன்னு கேட்டா, அவங்க அந்த ஊர்ல இருந்து நம்ம ஊருக்கு எடுத்துவந்து கொடுத்துருவாங்க.
இந்தப் புத்தகம் இன்னைக்கு கிடைக்கப் போகுது !!!
@Erode VIJAY : விஜய், அப்படி என்னதான் அந்த புக்குல இருக்குனு பார்த்துட்டு, உங்களுக்கு அனுப்புறேன். பாப்போம்! 😄
Deleteரதிஜா 🤣🤣🤣🤩🤩🤩😀
Deleteஇளவரசருக்கு விடை கிடைக்கும் நேரம் நெருங்கி வருகிறது
Deleteவணக்கங்கள்
ReplyDeleteவணக்கம் சார். நன்றி
ReplyDeleteஅக்டோபர் pack - அள்ளுதுங்க சார்!!😍😍😍😍😍😍
ReplyDeleteநிலங்களின் நிழலின்- முதல் பேனலில் உள்ள வசனமே இது என்ன மாதிரி உலகம் என்று சொல்லி படிக்கிற ஆர்வத்தை தூண்டுகிறது
ReplyDeleteஇந்த டயலாக் - முஷ்டியில் இருக்கிற வலு மூளையிலே கிடையாதே நமக்கு
Deleteரொம்ப ரசித்தேன்
**** கதிரவன் கண்டிரா கணவாய்! ****
ReplyDeleteஇரண்டு இளம் பெண்களும், ஒரு இளைஞனும் கைவிடப்பட்ட பழைய சுரங்கம் ஒன்றை ஆராய, நகரத்திலிருந்து வெகு தொலைவு தள்ளி இருக்கும் ஒரு காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். சுரங்கத்தில் நுழைவதற்கான நுழைவாயிலை தேடிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு பாழடைந்த கிணறு போன்ற அமைப்பிற்குள் விழுகிறார்கள்!
செல்போன் சிக்னல் கிடைக்காத இடம். கையில் இருப்பது 3 லிட்டர் தண்ணீர் மட்டுமே! யாராவது தங்களை தேடி வருவார்கள் எப்படியும் தமக்கு உதவி கிட்டும் என்ற நம்பிக்கையில் நேரத்தை யுகமாய் கழிக்கிறார்கள்!
எப்படியாவது கிணற்றின் மேல் பகுதியை அடைந்து விட வேண்டும் என்ற வேட்கையில் மேலே ஏறும் அந்த இளைஞனின் முயற்சி தோல்வியில் முடிகிறது. அந்த முயற்சியில் அவன் காலில் பெரிய காயம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விடுகிறான்.
எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்ற முனைப்பில் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது!
ஐந்து நாள் ஜீவ மரண போராட்டத்தின் இறுதியில் என்ன நடக்கிறது என்பதை மீதக் கதை!
கதையின் இறுதியில் கதாசிரியர் நமக்கு ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்! கிணற்றுக்குள் விழும் மூவரில் ஒருவருக்கு பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு சென்று விட, அப்படி கோமா நிலைக்கு சென்றவரின் பார்வையில் முழுக்கதையும் நடப்பதாக கதையை முடிக்கிறார் கதாசிரியர்!!
யப்பா!! பாழடைந்த கிணற்றுக்குள் மூன்று பேரின் ஜீவ மரணப் போராட்டம் பதைபதைக்க வைக்கிறது! ஆரம்பம் முதல் இறுதி வரை திக் திக் - லப் டப் !! அந்த மூன்று பேருடன் நான்காவதாக நாமும் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள் கதாசிரியரும் ஓவியரும்!
கதை நகரும் பரபரப்பில் நமது எடிட்டர் சார் சொன்ன அந்த அஞ்சரைப் பக்கத்தை தேட வேண்டும் என்ற எண்ணம் கூட எழவில்லை என்பதே உண்மை!
எதிர்பார்த்ததை விட பல மடங்கு திக் திக் அனுபவத்தை ஏற்படுத்தி விட்டது இந்தக் கதை!
படித்து பல மணி நேரங்கள் ஆகியும் கூட என்னால் அந்த கிணற்றிலிருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை!!
நிஜமாகவே ஒரு மிரட்டலான வாசிப்பு அனுபவம்!! 😳😳😳
🤴
//அந்த மூன்று பேருடன் நான்காவதாக நாமும் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள் கதாசிரியரும் ஓவியரும்!//
Delete+9
விமர்சனத்துக்கு நன்றி
Deleteஇப்பொழுது தான் வாசித்து முடித்தேன் ...உண்மை செயலரே...இதே விமர்சனத்தையே எனது விமர்சனமாகவும் எடுத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...:-)
Deleteஓவர்கோட் கிழிஞ்சா போனால் போகட்டும்னு உதறித் தள்ளக் கூடிய ஒரு டிடெக்டிவ் இந்த லோகத்தில் இன்னும் பிறந்ததாய் எனக்குத் தோணலை - உண்மை சார். செம டயலாக் ☺️
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவணக்கம் ஐயா..
ReplyDeleteவணக்கம் எடிட்டர் சார் 🙏
ReplyDeleteஇந்த முறை mr .நோ தான் முதல் வாசிப்பு
ReplyDeleteஅட்டைப்படம் மிகவும் நன்றாக உள்ளது
கதையும் அருமை , படம் அனைத்தும் பழைய template சூப்பர் . எனக்கு பழைய ஆபிரிக்கா சதி , இஸ்தான்புல் நாடகம் re create போல இருந்துது .
😃😃
Deleteவந்துட்டேன்...
ReplyDeleteநான்கு புத்தகங்களை படித்து விட்டேன்.
ReplyDeleteமுதலில் நிழல்களின் நிழலில்
நாயகன் ஜான் பிளாக் சாட் ஒரு கலக்கல் அறிமுகம்.
தனது முன்னாள் காதலி கொல்லப்பட்டு கிடக்க யார் அந்த கொலையாளி என்று தேடத் துவங்குகிறான் ஜான். நமக்கு ரொம்பவும் தெரிந்த பழிவாங்கும் கதை தான் அதை சொன்ன விதம் தான் புதுசு. ஓவியங்கள், கலரிங் எல்லாமே அருமை அப்படி ஒரு அழகு கதையும் செம்ம வேகம் அட்டகாசமான முடிவு.
வசனங்கள் எல்லாமே அருமை.
மனதை கவர்ந்த ஒரு சில
"மனசாட்சியின் உறுத்தல் எப்போதுமே ஒரு சங்கடமான தோழன் தான்"
"உள்ளுணர்வுகள் ஊதும் சங்குகள் என்றும் பொய்த்தது இல்லையே"
எனது மதிப்பெண் 10/10.
செம 💐💐💐👏👏👏
Deleteநீங்க எப்பவுமே பாஸ்ட் தான். இந்தமுறை ராக்கெட் ஸ்பீட் விமர்சனம் குமார்.
Deleteஇரண்டாவது வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே
ReplyDeleteமுதல் பாகத்துக்கும் இதற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை.
ஆனால் ஆரம்பம் முதல் இறுதி வரை வேகம் வேகம் தான். தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்க செல்லும் மகளின் கதை தான் இது.
அதும் பயிற்சி முடிந்து வந்து அந்த வில்லன்களை வெட்டி வீசும் அந்த சண்டை காட்சிகள் எல்லாம் Wow. அதற்கு பிறகு அவளுக்குள் ஏற்படும் மாற்றம் அது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.
எனது மதிப்பெண் 9/10
குமார் சேலம்
😍😍😍 இதோ படிக்கறேன்..
Deleteமகிழ்ச்சி குமார்
Deleteநேற்று இரவே மூன்றாவதாக படித்தது கதிரவன் கண்டிரா கணவாய்
ReplyDeleteமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதும் இந்த கதையே. இதனாலேயே கி நா ரொம்ப பிடிக்கிறது.
ஒரு கை விடப்பட்ட சுரங்கத்திற்குள் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் மாட்டிக்கொள்ள அவர்கள் அங்கே இருந்து தப்பி வெளியே வந்தார்களா இல்லையா என்பது தான் கதை.
செல்போன் சிக்னல் இல்லை, சார்ஜ் இல்லை வெளியே செல்ல எந்த வழியும் இல்லை, கொண்டு வந்த உணவுப் பொருட்களும் குறைய தொடங்க தொடர்ந்து 5 நாட்கள் ஏதாவது உதவி வந்து சேருமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் பாசிடிவ் ஆக ஃபன் ஆக இருக்கும் அந்த நிலைமை நாளாக நாளாக மோசமாக மாற நாமும் அவர்களோடு அங்கே மாட்டிக் கொண்ட உணர்வு.
அதும் Carol அங்கே குளிர் தாங்க முடியவில்லை என்று சொல்லும் போது எனக்கும் குளிர தொடங்கி விட்டது. கெவின் சொல்லும் survival skills எல்லாமே அருமை. ஈவா வின் கடந்த கால நினைவுகள், இன்னும் பல விஷயங்கள்.
"என் முகத்தில் எப்போது சூரிய ஒளியின் வெதுவெதுப்பை உணருவேன் என்று இருக்கிறது. எப்போதுமே இருப்பதின் அருமையை அது இருக்கும் போது உணரவே மாட்டோம் போலும்" செம்ம டயலாக் சார்.
அந்த 5 1/2 பக்க கத்திரி சரிதான் சார். Very Disturbing.
Climax twist சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.
ஓவியங்கள், மொழிபெயர்ப்பு, கதை எல்லாமே அருமை.
குமார் சேலம்
நிழல்களின் நிழலில்
ReplyDeleteஆல்பத்தின் தலைப்பே அசத்தல் என்பேன். நிழல்களுக்கு நிழல் இருக்குமா? அப்படி நிழல்களுக்கு நிழல் இருந்தால் அது நிழலை விட கருப்பாக இருக்குமா? என்று லாஜிக் இல்லாமல் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. நிழல்களின் ராஜ்ஜியமான கருந்துளையின் நிழல்களை கூட நாம் காண முடிவதில்லை ஏனெனில் வெளிச்சத்தை விழுங்கி விடுவதால். அப்படிப்பட்ட நிழல்களின் நிழலாக நம்ம வில்லன். அந்த வில்லனின் மீதே வெளிச்சத்தை பாய்ச்சி தண்டனை வாங்கித் தர முடியுமா? சட்டத்தின் கண்கள் அவனை பார்க்குமா? ஆகையால் நிழல்களின் ராஜ்ஜியத்தின், ராஜாவான பூனை சட்டத்தை தானே கையில் எடுத்து நீதிபதியாகிறான்.
இந்தக் கதை சாதாரண ஒரு துப்பறியும் கதை. எந்த தடயமும் விட்டுச்செல்லாத ஒரு கொலையாளியை கண்டறியும் கதை.
இதில் என்னத்த புதுமையாக சொல்வது என்று கதாசிரியருக்கு தோன்றியத்தின் விளைவு, ஒவ்வொருவரின் ஆழ்மனதின் மிருக குணத்தை முகமாக வரைந்து வைத்திருக்கிறார்.
அங்கு தான் கதை சொல்லி வென்றிருக்கிறார். பல விஷயங்களை, அந்த அந்த மிருகங்களின் இயல்பை சொல்லாமல், நமக்கு செய்தி கடத்திய தன்மை, கதையை வேறொரு கோணத்தில் என்னை பார்க்க வைத்தது.
நேற்று எடிட்டர் அவர்கள் யாரெல்லாம் படித்து விட்டீர்கள் என்று கேட்ட பொழுது, கதையில் இன்னும் தெளிவு வர மறுவாசிப்பு செய்யணும் போல சார் என்றேன். மறுவாசிப்பை முடித்தும் குழப்பம் தீரவில்லை. வில்லன் யார்? ஒரு தவளை. தவளையின் தன்மை என்ன பூச்சிகளை தின்பது, ஒரு வகையில் விவசாயிகளுக்கு நண்பன் என்று யோசித்தாலும் அவன் எப்படி வில்லன் என்பது எனக்கு புரியாமல் இருந்தது. வேறு வழி இல்லை என்று கூகிளிடம் உதவி கேட்டேன்.
வில்லன் வெறும் தவளை அல்ல அவன் ஒரு cane toad. விக்கிபீடியா தமிழில் பிரம்பு தேரை என்கிறது ஆனால் அது கரும்புத் தேரையாக இருக்கும் என்பது என் புரிதல். CANE TOAD டின் குணாதிசயம் தான் இங்கு ஹைலைட்டே. இதன் விஷம் பிற உயிர்களுக்கு ஆபத்தானது. முக்கியமாக நாய்களுக்கு. நாய்கள் தான் இங்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் காவலர்கள். அவர்களால் வில்லனை தொட முடியாது. இந்த தேரை இனம் மிகவும் பசிமிக்கது. எவ்வளவு தின்றாலும் பசி அடங்குவதில்லை. ஆகையால் அது உணவாக உட்கொள்ளும் மிருகங்கள் வெறும் பூச்சி மட்டும் இல்லை. ஆகையால் தான் வில்லனால் நிழல் உலக சாம்ராஜ்யத்தை கட்டி ஆள முடிகிறது.
இந்த தன்மை புலப்பட்ட பின்பு, கதையின் தன்மை இன்னும் பிரகாசமாகியது. இந்த பிரகாசத்தின் வெளிச்சத்தில், நிழல்களின் நிழல் இன்னும் அழகாக தெரிந்தது.
கதை 10/10
ஓவியம் 11/10
மொழிபெயர்ப்பு 10/10
உடுமபு இறந்த பிறகு நம்ம ஹீரோ புகைபிடித்துக் கொண்டே சிந்திக்கும் காட்சியின் கேமராக் கோணம் ஆயிரம் வார்த்தைகளுக்கு ஈடானது. - SURES THANAPAL, TIRUVANNAMALAI
செம்ம ரிவ்யூ சுரேஷ் சார்
Delete😍😍😍💐💐💐💐
Deleteஅட்டகாசமான விமர்சனம்...
Delete👌👌👌👌👌👏👏👏👏
Deleteசூப்பர் சூப்பர் குமார்
Deleteசுரேஷ் சார் வழக்கமான தரமான விமர்சனம். பாராட்டுக்கள்.
DeleteThank you friends
Delete*Blacksad*
ReplyDelete*நிழல்களின் நிழலில்..*
முதல் பக்கத்திலிருந்தே பரபரப்பு.. கதை சொல்லும் விதமோ hard-boiled crime fiction. ஆனால் இங்கே மனிதர்களுக்குப் பதிலாக மிருகங்கள். அதுவும் வெறும் gimmick ஆக இல்லை.
Blacksad ஒரு பூனை என்பதே character designன் முதல் layer. அவனுடைய கண்கள், முகபாவனைகள், body language எல்லாமே அவனை ஒரு world weary private detective ஆக மாற்றுகின்றன.
கதை simple
ஒரு கொலை.
ஒரு பழைய காதல்.
ஒரு detective.
ஒரு நகரம் முழுவதும் மறைத்து வைக்கப்பட்ட secrets.
ஆனால் அதன் presentation தான் magic.
Juanjo Guarnido வின் artwork இந்த volumeன் உண்மையான superstar. ஒவ்வொரு panelமும் animation background போல detailed.
Rain, shadows, interiors, night streets, cigarette smoke எல்லாமே 1950s American noir atmosphereஐ தூக்கி நிறுத்துகின்றன.
நமது ஆசிரியரின் writing அதற்கு சரியான counterpoint. Dialogue குறைவு, mood அதிகம்.
Blacksad பேசுவதைக் காட்டிலும் அவன் கவனிப்பதே அதிகம்.
மற்றொரு brilliant விஷயம், மிருகங்களின் speciesஐ characterisationஆக பயன்படுத்துவது.
ஆனால் அது குழந்தைகளுக்கான anthropomorphic fun அல்ல.
இங்கே fox, rhino, gorilla, dog, cat எல்லோரும் மனிதர்களைப் போலவே greedy, jealous, violent, corrupt, lonely என all shades of grey and black...
புத்தகம் முழுக்க, பல இடங்களில் ஒரு சிறிய visual joke இருக்கும், அடுத்த panelல் அதே உலகம் மிகவும் dark ஆகிவிடும்.
என்னை மிகவும் கவர்ந்தது
Blacksadன் silence.
அவன் typicalஆன "smart-ass detective" இல்லை. அதிகமாக பேசுவதில்லை. அதிகமாக explain செய்வதில்லை. அவன் பார்க்கிறான். புரிந்து கொள்கிறான். பிறகு only actionதான்..
அதுதான் characterக்கு ஒரு classic noir dignity கொடுக்கிறது.
ஒரு வரியில்,
*Disney animals meet Raymond Chandler*
⭐⭐⭐⭐⭐
Dr.A. K. K. Raja, Karur
Doc தான் First review போட்டாரு. அதனாலயே புத்தகத்தை படித்து விட்டு வந்து முதலில் இந்த ரிவ்யூவை படித்தேன்.
DeleteTop கிளாஸ்
அருமை டாக்டர் சகோ
Deleteசூப்பர் ராஜா சார்
Deleteஎடிட்டர் சார் அந்த அக்டோபர் மாத சர்ப்ரைஸ் என்ன???
ReplyDeleteரெகுலர் அக்டோபரே இன்னமும் பாதிப் பேருக்கு கைக்கே போய்ச் சேர்ந்திருக்காது சார்.... So கொஞ்ச நாட்கள் போகட்டும்!
Deleteஓகே வெயிட் பண்ணுவோம்
Deleteநான் புத்தகங்களுடன் அந்த சர்ப்ரைஸ் வந்து சேரும் என்று நினைத்தேன் சார்.
DeleteYes. It is good to wait. Agreed with you sir.
Deleteஅனைவருக்கும் வணக்கம்....
ReplyDeleteMe in 😘😘💐👍😄
ReplyDeleteநம்ப போன் இப்பதான் சரியாச்சு 👍💐😘
ReplyDeleteBlog ல message இனிமேல் போடலாம் 👍😘
வெல்கம் சார்....:-)
Deleteசூப்பர் ஜம்பிங் தல
Deleteஇம்முறை மொத்த இதழ்களின் எண்ணிக்கை எகிறி நிற்பது செம pleasant surprise .
ReplyDelete######
சார் இந்த மாதம் தீபாவளி அல்ல ..அடுத்த மாதம் தான் தீபாவளி எனவே அடுத்த மாதம் தீபாவளி விடுமுறைக்காக இதே போல் சஸ்பென்ஸ் இதழை ஏதாவது இணைத்து கொடுங்கள்...:-)
நிழல்களின் நிழலில் (பிளாக்ஸாட்)
ReplyDeleteதமிழில் வெளிவரும் முதல் Anthropomorphic Graphic Novel இதுதான்.
Writer, protagonist detective-க்கு Cat face, Police-க்கு German Shepherd Dog face, உடல் வலிமையான characters-க்கு Bear, Rhino face-ன்னு ஒவ்வொரு character-க்கும் வித்தியாசமான முக அமைப்புகளை கொடுத்திருக்கிறார். Villains-க்கு விதவிதமான Reptiles முகங்கள்!
முன்னாள் காதலியை Murder பண்ணியவனை கண்டுபிடிக்கிற ஒரு Straight-forward story-ஆ இருந்தாலும், விதவிதமான வித்தியாசமான முகங்களும், Dark Neo-Noir effect-ம், 1950s Retro vibe-ம் சேர்ந்து ஒரு புது விதமான அனுபவத்தை கொடுக்குது.
அந்த Neo-Noir effect-க்கு இன்னும் வலு சேர்க்குறது Watercolour Art Style. பக்காவான Illustration மற்றும் Paneling, கதையை ஒரு மிதமான வேகத்தில் ஒரே Feeling-ல தொடர்ந்து நகர்த்துது.
இந்த முதல் கதை, இந்த உலகத்தையும் Characters-ஐயும் Establish பண்ணுற விதத்தில் Perfect-ஆ இருக்கு. இனி வரப்போகும் Titles இன்னும் Complicated-ஆன Stories-ஓட இருக்கும் என்று நினைக்கிறேன்.
Negative-ன்னு சொல்லணும்னா, தமிழ் மொழிபெயர்ப்பில் “டாவு” என்பதற்குப் பதிலாக “முன்னாள் காதலி or Ex-lover”ன்னு பயன்படுத்தியிருக்கலாம்.
என்னன்னா, முதல் Panel-லேயே “டாவு”ன்னு வர்ற வார்த்தை, இந்தக் கதையோட Mood-க்கு சுத்தமா Set ஆகல. அந்த வார்த்தையைப் பார்த்த உடனேயே இது Dark Story-ஆ, இல்ல Jolly-ஆன Story-ஆன்னு ஒரு Confusion வருது
வஞ்சம் தீர்க்கும் வேங்கைகளே...
ReplyDeleteமீண்டும் ஓர் அட்டகாசமான...அதிரடியான ஓர் சாமுராய் சாகஸம்....முதலில் பலத்த கைத்தட்டல்களை கதையின் ஓவியருக்கு தான் கொடுக்க வேண்டும்...ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்க ,வாசிக்க மிக பொறுமையுடன் ..ரசிப்புடன் இதழ்களின் சித்திரத்தை நோக்கும் பொழுது நாமும் அதனுள் நுழைந்து விடலாமா என்பது போல் அவ்வளவு அழகு...அவ்வளவு பிரமிப்பு...கதையும் முன்வந்த சாமுராய் கதை போலவே படு விறுவிறுப்பாக நடை போடுகிறது...தனது தந்தையின் மரணத்தை பழித்தவர்களை மகள் பழிவாங்குவது தான் கதை ..அதை மிக மிக சுவராஸ்யமாக படைத்து உள்ளார்கள் ..போன சாமுராய் சாகஸத்தில் அட்டகாசம் செய்த இஸி தாத்தா இந்த முறையும் அசத்துகிறார்...போன கதைக்கும் ,இந்த கதைக்கும்..இந்த மாந்தர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனினும் அந்த இஸி தாத்தா கதாபாத்திரம் மட்டும் வருகை தந்து ஒவ்வொரு சாகஸத்திலும் பட்டையை கிளப்புகிறார்...போன முறை போலவே இந்த முறையும் சாமுராய் சாகஸம் வெற்றி கொடி கட்டுகிறது...வாசித்த ப்ளாக்சாட் ஆக இருக்கட்டும்..இந்த சாமுராய் சாகஸமாக இருக்கட்டும் ...இரு இதழ்களுமே ஒன்றுக்கொன்று முந்துகிறது எனில் இன்னமும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மற்ற மூன்று இதழ்களும் பட்டசாய் வெடிக்க போகிறது என்பது உண்மை....
👏👏👏
Deleteசூப்பர் தல
Delete51th
ReplyDeleteஆகாயத்தில் அதகளம்...
ReplyDeleteமிஸ்டர் நோ பழமை நாயகராக இருந்தாலும் காமிக்ஸ் உலகில் ஏன் வீறுநடை போடுகிறார் என அவரின் முதல் சாகஸத்திலியே அறிந்து கொள்ள முடிகிறது...இந்த இதழின் பழையபாணி சித்திர தரமும்..கதை செல்லும் பாணியும்.. மொழி ஆக்கமும் ஓர் பழைய லயன் காமிக்ஸ் இதழை அதே மகிழ்வோடு அது விறுவிறுப்போடு மீண்டும் கண்டு வாசித்தது போல் உணர வைக்கிறது...முதல் நான்கு ..ஜந்து பக்கங்கள் நகைக்க வைத்து கொண்டே கதை முன்செல்ல அதன் பின் படு சுவராஸ்மாய் செல்கிறது...அதுவும் விமானத்தை உதை விட்டு கிளம்ப வைப்பது...வில்லன் நோ விடம் விமானத்தை பற்றி விமர்சிப்பது என கதை இறுதி வரை புன்வறுவலை மனதில் கிளப்பி கொண்டே படு சுவராஸ்யமாகவும் நகர்கிறது...அதே சமயம் க்ளைமேக்ஸ் மிஸ்டர் நோ எதிர்பார்த்த படி அமையாமல் போனாலும் மகிழ்வுடன் அவர் சென்றாலும் இவ்வளவு பாடுபட்டு ..உயிரை பணயம் வைத்தும் அவருக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் போனது எனக்கு வருத்தத்தை தான் அளித்தது...பல பல வருடங்களுக்கு முன் வந்த மிஸ்டர் நோ வின் அறிமுக சாகஸம் இப்பொழுது வாசிக்கும் பொழுதும் மனதை கவர்கிறது ...மீண்டும் ஓர் வெற்றி இதழ்...இந்த மாதம் அனைத்து இதழ்களுமே வாசித்து முடித்தவுடன் சூப்பர் என சொல்ல வைக்கறது ....வாழ்த்துக்கள் சார்....
வஞ்சம் தீர்க்கும் வேங்கைகளே!!!
ReplyDeleteAccardi-யோட artwork, 4 Bacardi அடிச்ச மாதிரி தெறிக்குது! ஒவ்வொரு panel-உம் Bramayugam-ல பார்த்த Black & White frames மாதிரி அவ்வளவு அழகு!!!
இந்த year-ஓட Best Artwork Book இதுதான்... chance-ஏ இல்ல! 🔥
Kill Bill style-ல ஒரு action அட்டகாசம். Bullet train speed-ல 100 pages-உம் பறக்குது. ஒரு regular revenge story-யை ரத்தம் தெறிக்கத் தெறிக்க Tarantino style-ல present பண்ணி அசத்தி இருக்காங்க... both writer and illustrator! 🔥
It's a 100% must-read!!!
அப்படியே இந்த “வதம் செய்வோம் வேங்கைகளே” stock-ல இருந்தா சொல்லுங்க பா?
Editor sir please 18+ disclaimer podunga !!
DeleteIntha Book ration card samacharam makkale !!
அடுத்த வெளியீடு விளம்பரங்களில் இரும்புக்கை மாயாவியின் புது சாகஸங்களின் அறிவிப்பு ஆச்சர்யத்தை அளித்தது சார்...புத்தக விழாக்களில் பட்டையை கிளப்ப போகிறது ..:-)
ReplyDeleteஆமாம் தல. இந்த விளம்பரம் சில மாதம் முன்பு வநதது இந்த ரெண்டு கதைகளும் நான் படித்தது இல்லை. நானும் ஆர்வமுடன் உள்ளேன்.
Deleteஎன்ன புத்தகங்கள் சார்
Deleteசுவிட்சர்லாந்தில் மாயாவி
Deleteமாயாவி Vs மேக்னா
🙋🏻♂️
ReplyDelete🙋🏽♀️🙋🏽♀️🙋🏽♀️
Delete******* நிழல்களின் நிழலில்! ******
ReplyDeleteதன் காதலியைக் கொன்றவனை பழிவாங்குகிறான் டிடெக்ட்டிவ் பிளாக்ஸாட் - இதுதான் ஒரு வரி கதை! அப்படி ஒன்றும் பிரம்மாதமான கதை இல்லைதான்! ஆனால் நிறைய சமாச்சாரங்கள் ஆச்சரியப்பட வைக்கிறது! கதை நகரும் லாவகம், மிரட்டலான சித்திரங்கள், வரையப்பட்ட கோணங்கள், வசீகரிக்கும் வண்ணங்கள், கதை நெடுக வரும் மெல்லிய நையாண்டி கலந்த வசனங்கள், மிகச் சரியாக கையாளப்பட்ட மிருகங்களின் முகங்கள், மிருகங்களின் குணாதிசயங்களை மனிதர்களோடு பொருந்தி போகச் செய்யும் அந்த வித்தியாசமான சிந்தனை - என்று ரசிக்க ஆயிரம் கொட்டிக்கிடக்கிறது இப்புத்தகத்தில்!
பிளாக்ஸாட் - தமிழில் வருகிறது என்று எடிட்டர் அறிவித்திருந்த சமயம் மனசுக்குள் 'பூனையின் முகத்தைக் கொண்ட ஒரு டிடெக்டிவா... இதெல்லாம் செட் ஆகுமா நமக்கு?!!' என்ற சந்தேகம் இருந்தது உண்மையே! 'எடிட்டர் கொஞ்சம் ஓவராத்தான் ரிஸ்க் எடுக்கிறாரோ' என்ற பயமும் கூட இருந்ததுதான்! ஆனால் படிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே என் பயம் அனாவசியமானது என்பதைப் புரிந்து கொண்டேன்! உண்மையில் இது 'வேற லெவல்' படைப்பு!!
கதையைப் படித்து முடிக்கும் போது "உனக்கு மட்டும் காதலியாக இல்லாமல் ஊருக்கே காதலியாக இருந்தவளின் மரணத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டமான பழிவாங்கல் நடவடிக்கையெல்லாம் தேவையா பிளாக்ஸாட்?" என்று கேட்க தோன்றுகிறது!
1950களின் நியூயார்க் நகரை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதிலும், மிருகங்களின் விதவிதமான முக பாவங்களை காட்டுவதிலும், ஆச்சரியப்படுத்தும் கேமரா கோணங்களிலும், வசீகரிக்கும் வண்ண கலவைகளாலும் - ஓவியர் ஜுவாஞ்சோ கார்டினோவே (பிளாக்ஸாட்டைக் காட்டிலும்) ஹீரோவாகத் தெரிகிறார்!!
நல்வரவு பிளாக்ஸாட்!!💐
🤴
//ஓவியர் ஜுவாஞ்சோ கார்டினோவே (பிளாக்ஸாட்டைக் காட்டிலும்) ஹீரோவாகத் தெரிகிறார்!!//
Delete+9
Good review.
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவாங்க வாங்க
Delete10,000,000 எட்டியதை கொண்டாட ஒரு மினி பதிவு சார். அப்படியே அந்த அஞ்சரை பக்கும் suspense உடைச்சிட்டீங்கனா மனசு நிம்மதியாகிடும்
ReplyDelete10,000,000 எட்டியதை கொண்டாட - A new special book!
Deleteஅதுவும் சரி தான்
Delete81st
ReplyDeleteஒரு கோடிப் பார்வைகள்.
ReplyDeleteநிச்சயம் மெகா சாதனை இது சார்.
ஒரு ஸ்பெஷல் இதழ் கண்டிப்பா வேண்டும்.
அதிலும் குண்டு இதழ் என்றால் மிகச் சிறப்பாக இருக்கும்.
நேரா ரெண்டு கோடிய தொடட்டும் சார் - அந்நேரம் பார்த்துப்போம்....! தானா நிகழ வேண்டியதை இப்படி முட்டுக் கொடுத்து நிகழ்த்துவதில் என்ன சாதனை கண்டிடப் போகிறோம்?
Deleteசெயற்கையாய் நம்பரை ஏற்றி நாம் சாதிக்கப் போவது ஏதுமில்லை.... So இதனில் பிஸியாக உள்ள நண்பர் (கள்) கொஞ்சம் அடக்கி வாசித்தால் தேவலாம் 🥹
ReplyDeleteமன்னிக்கவும் சார்
Delete👍👍👍
5 கோடி ஆனாதான் நாங்க ஒத்துக்குவோம் 👍😘💐😄🙏
ReplyDeleteஇயல்பாய் நடந்திருந்தால் எத்தனை உற்சாகத்தை உருவாக்கி இருக்கும் இந்தத் தருணம்....? அதை மிஸ் பண்ணி விட்டோமே... 🤕🤕
Delete"வெற்றி... வெற்றி " என்று இதனை இப்போது நாம் கொண்டாடினால் - "வெட்டி... வெட்டி " என்றே மனசுக்குள் ஒலிக்கும் ! 🙄🙄
DeleteOctober 1 தேதியன்று மட்டுமே 55,146 பார்வைகளாம்...😶
Deleteபோன மாதம் மட்டுமே 191,600 பார்வைகளாம்...🙄
அடங்கப்ப்பா... !!!
இதைக் கொண்டாட வேண்டுமெனில் - " *The வாய் நிறைய அல்வா ஸ்பெஷல்"* என்று தான் போடணும் ..!
DeleteAnd to think I had something very special planned for the *real* moment.....!!
அட்டவணையில் கூட அதனை அறிவித்து, விளம்பரம் பக்காவாய் ரெடி செய்திருந்தோம்! திங்களன்று அது அச்சாகி இருக்க வேண்டியது - just மிஸ்டா சாமி 🥹🥹..!
சார் 😑😑😑
Deleteஅதற்காக அதனை கேன்சல் செய்ய வேண்டாமே 😣😣😣
புக்சில் காமெடி இருந்தால் சிறப்பாக இருக்கும் ரம்யா...!
Deleteஆனால் நானே காமெடி ஆகி நின்றால் கண்றாவியாய் இருக்கும்..!
புரிகிறதுங்க சார் 😞
Deleteவருத்தமாக உள்ளது சார். இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே நான் எதிர்பார்த்த ஒரு மைல்கல். கடைசியில் 😒
Deleteஅதுவாய் நிகழ்ந்திருப்பின் அடுத்த மே அல்லது ஜூனில் ஒரு கோடிப் பார்வைகளைத் தொட்டிருக்க வேணும்... And அந்த உற்சாக நொடியில் ஒரு மெகா இதழை முன்பதிவுக்கு அறிவித்து ஈரோடு விழாவின் சமயம் ரிலீஸ் செய்திட எண்ணியிருந்தேன்.
DeleteBut உப்பும், இல்லாமல் புளியும் இல்லாமல், அந்த நொடியை இப்போதே இழுத்து வந்துள்ளனர் ஆர்வக்கோளாறில்! இதில் கொடுமை என்ன தெரியுமா folks - ஒரு ஆயுட்கால வாய்ப்பு அம்பேல் ஆகியுள்ளது!
முழு வீச்சில் செயல்பட்ட காலகட்டத்திலேயே ஒரு கோடி என்ற மந்திர எண்ணை எட்டித் தொட கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அவசியமாகியுள்ளது! அடுத்த ஒரு கோடிப் பார்வைகள் maybe by 2042 என்று வைத்துப் பார்த்தால் அன்றைக்கெல்லாம் "காமிக்ஸ்" என்றொரு physical சமாச்சாரமே இருக்கும் வாய்ப்புகளை என்னவென்பது? சகலமும் AI என்றாகி இருக்கக்கூடிய எதிர்காலத்தில் இதே பாணி தொடரவாவது செய்யுமா?
So ஒரு ஆயுட்கால ஸ்பெஷல் தருணத்தை காமெடியாக்கி நிற்கும் இந்த நொடியில் ஒரு ரின்டின் கேன் இதழை போட்டால் கூட பொருத்தமாய் இராது guys 🤕🤕
It's all about moments and we've lost a very very special one!
உண்மைங்க sir.. காய் தானாக கனிய வேண்டும்...அப்ப சாப்பிட்டாதான் சூப்பர் ஆ இருக்கும்.. 😄❤️👍🙏..
ReplyDeleteயாரோ புகை போட்டு பழுக்க வைக்கப் பார்த்தார்கள்... புகையாய் கரைந்துவிட்டது!😟
Deleteவிஜய்.. 😄😄😄... ❤️👍
Deleteஇந்த blog என்பது உங்களின் கூட்டு முயற்சிகளின் பலன்....! And இதில் ஆகப் பெரும் சோகமே - உங்களுக்குப் பெருமிதம் சேர்த்திருக்க வேண்டியதொரு உச்ச வாய்ப்பை, என்ன செய்கின்றோம் என்பதை உணராமலே கால்களுக்குள் போட்டு துவம்சம் செய்திருக்கின்றனர்!
Delete15 ஆண்டுகளின் உங்களின் கூட்டு முயற்சிகள் down the drain...!
1.டெக்ஸ்.1.1பிளாக்ஸாட்2.வஞ்சம் தீர்ப்போம் 3.கதிரவன்கண்டிரா 4.நோ ஐந்தும் பட்டாசு! நோ வை தவிர எல்லாமே சற்று மனித மன இருள்வெளி உலாவல்கள்( கதிரவன் கண்டிரா ஒரு மிடறு கசப்பு தூக்கல்- குறையாக சொல்லவில்லை,ருசிகரம் அப்படி) . தீபாவளிக்கு கலர்புல்லாக பிளான பண்ணி இருப்பீர்கள் என்பது பழகிய ஊகம்.
ReplyDelete100
ReplyDelete// இந்த மனுஷனும் கிட்டத்தட்ட 400 சாகசங்கள் வரை இத்தாலியில் போட்டுத் தாக்கியிருப்பது அந்நாட்டின் காமிக்ஸ் வாசகர்களின் பன்முக ரசனைக்கொரு எடுத்துக்காட்டு ! //
Deleteஅடேங்கப்பா முரட்டு எண்கள் சார். இதனை எட்டி பிடிக்க பல பிறவிகள் வேண்டும் போல சார்.
// உற்சாகம் தருகின்றது ப்ளாக்சாடின் வருகை. Becos, இந்தப் பூனையார் பேசிடும் 29-வது உலக மொழி நமது தமிழ். கிட்டத்தட்ட 30 //
ReplyDeleteசூப்பர் சார். உண்மையில் தமிழ் வாசகர்கள் மிகவும் கொடுத்து வந்தவர்கள் சார். எங்களுக்கு இது போன்று உலக அளவில் பிரசித்தி பெற்ற கதைகளை தேர்ந்தெடுத்து கொடுக்கும் உங்களுக்கு நன்றிகள் சார்.
உண்மை பரணி சகோ.. ❤️👍🙏...
ReplyDelete🙏🏻🙏🏻
Deleteஆகாயத்தில் அதகளம்...
ReplyDeleteMr No-வின் முதல் சாகசம். முத்திரை பதிக்கும் பிரவேசம்!
இந்த Book-oda story-யும் artwork-யும் பார்க்கும்போது, late 90s-ல் வந்த சிறுவர் மணி / சிறுவர் மலர் இதழ்களில் படித்த stories மாதிரியே ஒரு perfect nostalgic effect கிடைக்குது.
70s Hollywood action-adventure movies மாதிரி, ஒரு lonely retired hero… பல skills-ஓட flight எடுத்துக்கிட்டு Amazon காட்டுக்குள்ள அமர்க்களம் பண்ண கிளம்புறாரு.
அங்க போய் tribals-கூட ஒரு thug life நடத்திட்டு, நடுவுல சண்டை போடுற gap-ல சரக்கும் போட்டுட்டு, shooting-ம் adventure-ம் கலந்த கதை. Starting-ல இருந்து end வரைக்கும் பெருசா bore அடிக்காம போகுது.
Last 15–20 pages மட்டும் கொஞ்சம் trim பண்ணியிருந்தா இன்னும் sharp-ஆ இருந்திருக்கும்.
Top 10 Suresh மாதிரி review சொல்லணும்னா...
மொத்தத்தில், Mr No-வின் “ஆகாயத்தில் அதகளம்...” → அமர்க்களம்! 🔥
இந்த story hit ஆச்சுன்னா, இதே format-ல வர்ற David & Lawrence stories-க்கும் இப்படியொரு பிரவேசம் கண்டிப்பா வேணும்!
லாரன்ஸ் - டேவிட் ஜோடி என்னிக்கி காட்டுக்குப் போனாங்க? என்னிக்கி சரக்கடிச்சாங்க...? இந்த format லே எப்போ வந்தாங்க பாஸூ...?
Deleteஅவுங்கபாட்டுக்கு அ ..கொ. தீ. க. கூட மல்லு கட்டிட்டு, ஐ. நா. சபைக்கு பதில் சொல்லிட்டு வலம் வர்றாங்க...?!
அவுங்களுக்கும் மிஸ்டர் நோவுக்கும் க்யா சம்பந்தம்?
Sir, inga naan solla vandhadhu, indha title -oda story-telling-um artwork-um David & Lawrence stories maadhiri oru 60s vibe irukku. குறிப்பா Flight 731 story-யும் ஞாபகப்படுத்துற மாதிரி, ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு பயணம் பண்ணிக்கிட்டே போகுற travel-adventure feel
Deleteஆகாயத்தில் அதகளம்
Delete
Mister No முதல் கதை
விறுவிறுப்பான வேகமான அட்வென்ச்சர் சாகசம்
பிரேசிலில் உள்ள மனாஸ் (Manaus) நகரில் கதையின் நாயகனான ஜெர்ரி டிரேக் (மிஸ்டர் நோ) வாழ்கிறார். இவர் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க விமானப் படையில் பணியாற்றிய ஒரு முன்னாள் வீரர். போரின் கொடூரங்களால் சலிப்படைந்து, அமைதியான வாழ்க்கையைத் தேடி அமேசான் மழைக்காடுகள் நிறைந்த மனாஸ் நகருக்கு வந்து குடியேறுகிறார்.
அங்கு தனது சிறிய பைபர் (Piper) ரக விமானத்தின் மூலம், அமேசான் காடுகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக (Tourist Guide) வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார்.
சாம் டக்கர் (Sam Tucker) என்ற அமெரிக்கப் பொறியாளர் அமேசான் காடுகளுக்குள் செல்லத் தனக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர் மிஸ்டர் நோவை வேலைக்கு அமர்த்துகிறார்.
ஆனால், அமேசான் காடுகளுக்குள் பயணிக்கும்போதுதான் மிஸ்டர் நோவிற்கு ஒரு உண்மை தெரியவருகிறது — சாம் டக்கர் ஒரு சாதாரண பொறியாளர் அல்ல; அவர் தான் யார் என்பதை மறைத்து ஏதோ ஒரு ரகசிய தேடலுக்காக இங்கு வந்திருக்கிறார் என்று.
அவரை நாடி வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் கணித்துக் கூற முடியாதவர்களாகவே இருக்கிறார்கள், பொறியாளர் சாம் டக்கரும் இதற்கு விதிவிலக்கல்ல.
தங்களை நாடி வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் மனிதர்களின் பேராசையால் வரும் ஆபத்துகளிலிருந்து
தனது போர்க்காலப் அனுபவத்தைப் பயன்படுத்தித் தப்பிக்கிறார். எதிரிகளை எதிர்த்துத் தாக்கி, இறுதியில் மனாஸ் நகரில் இருக்கும் தனது அமைதியான அன்றாட வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.
My Rating 8/10
அருமையான விமர்சனம் சிக் பில் சார்
Delete****** வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே! *****
ReplyDeleteஅரசவையில் புரையோடிப் போயிருந்த ஊழலைத் தடுப்பதற்காக, அரசவையிலேயே தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான் ஒரு நேர்மையான சாமுராய்! அவன் சாகும்போது ஏளனமாகச் சிரிக்கிறார்கள் அரசனும், அரசனின் அல்லகைகளும்!
கணவன் இறந்த சோகத்தில் அந்தச் சாமுராயின் மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறாள்!
இவர்கள் இருவரும் இறந்த துக்கத்தில் அவர்களதும் மகளும் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள்! இஷி தாத்தா சரியான நேரத்தில் ஆஜராகி அதைத் தடுத்து விடுகிறார்! வஞ்சம் தீர்க்க முடிவு செய்யும் அந்த இளம் பெண்ணை போராளியாக்குவதற்கான ஒரு பயிற்சிப் பட்டறையில் சேர்த்துவிடுகிறார் இஷி தாத்தா!
பயிற்சியை முடிக்கும்(?) அந்த இளம் பெண் தன் தந்தையின் மரணத்தைப் பார்த்து சிரித்தவர்களை வஞ்சம் தீர்ப்பதே மீதக் கதை!
ஒவ்வொரு ஆக்சன் காட்சியிலும் ரத்தம் தெறிக்கிறது! தெறிப்பது ரத்தம் மட்டுமல்ல - கை கால் தலை என்று சகலமும் தான்! இதுபோன்ற 'தெறி' சமாச்சாரங்களை எல்லாம் ஒரு ஆண் செய்து - பார்த்துப் பழகிப் போய்விட்ட நமக்கு, ஒரு இளம் பெண் வெறிகொண்ட புலியாக மாறித் தெறிக்க விடுவது நிஜமாகவே மிரட்சியடைய வைக்கிறது!
இத்தனைக்கும் அவளது தந்தையை யாருமே கொல்லவில்லை. அவரே தான் தற்கொலை செய்து கொண்டார். அவர் சாகும்போது மற்றவர்கள் சிரித்தார்கள் - அவ்வளவு தான்! ஏம்மா.. அது ஒரு குத்தமாம்மா?!! அதுக்கா இத்தனை ரெளத்திரமும், ரத்தக்களரியும்?!!
அத்தனை பேரையும் கொன்று குவித்துவிட்டு கடைசியில் இஷி தாத்தாவிடமே வம்பு செய்ய முனைவதும், தனக்குப் பயிற்சியளித்த பாட்டிம்மாவிற்கு இந்தப் பெண் புலி கொடுக்கும் அன்புப் பரிசும் - வெறித்தனத்தின் உச்சம்!!
இந்த மாதிரி கதைகளையெல்லாம் படித்து முடித்தவுடனே வீட்டுக்காரம்மாக்களின் கண்களில் படாதவாறு பரணில் ஒளித்துவைத்து விடுவது உசிதம்!
இஷி தாதாத்தாவின் பங்களிப்பு குறைச்சலாக இருப்பது ஒரு குறை தான்! ஆரம்பப் பக்கங்களில் ஒருமுறை தன் வாளைச் சுழற்றக் கிடைத்த வாய்ப்பைத் தாண்டி அவருக்கு வேறு வாய்ப்புகள் இல்லை!!
மற்றபடிக்கு, இந்த மாத வெளியீடுகளில் இதுவும் ஒரு மிரட்டலான வாசிப்பு அனுபவமே!
🤴
//அவ்வளவு தான்! ஏம்மா.. அது ஒரு குத்தமாம்மா?!! அதுக்கா இத்தனை ரெளத்திரமும், ரத்தக்களரியும்?!!//
Delete😂😂😂
//இந்த மாதிரி கதைகளையெல்லாம் படித்து முடித்தவுடனே வீட்டுக்காரம்மாக்களின் கண்களில் படாதவாறு பரணில் ஒளித்துவைத்து விடுவது உசிதம்!?//
😂😂😂😂😂
அந்த பயம் இருக்கட்டும்
வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே! - தனது தந்தை மற்றும் தாயின் இறப்பை பார்த்து சிரித்தவர்களை பழிவாங்கும் பெண்ணின் கதை. இஷி தாத்தா அந்த பெண் புலிக்கு சரியான வழியை காட்ட, சித்திரங்கள் வசனம் இல்லாமல் ஆக்சன் காட்சிகள் கதையை நகர்த்த இறுதி முடிவு என்ன அடுத்த பாகத்தில் என்ன நடக்கும் என்று ஆவலை கிளப்பும் வகையில் உள்ளது.
ReplyDeleteமுதல் கதையில் இருந்த ஈர்ப்பு இந்த கதையில் இல்லை, சண்டை காட்சிகளை ரொம்பவே கவனிக்க வேண்டியிருக்கிறது,
இசித்தோ இந்த பெண்ணுக்கு டிரைனிங் கொடுக்க விட்ட இடத்தில் அந்த தலைமை பெண்ணின் செயல் முகம் சுளிக்க வைக்கிறது அதனையும் தாண்டி பழிவாங்க தன்னை தயார் செய்து கொள்கிறாள் அந்த இளம் பெண் இறுதியில் அவளை போட்டு தள்ளுவது அவளின் மனதில் அது எவ்வளவு பெரிய காயத்தை ஏற்படுத்தி இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
6/10
Delete///
Deleteமுதல் கதையில் இருந்த ஈர்ப்பு இந்த கதையில் இல்லை, சண்டை காட்சிகளை ரொம்பவே கவனிக்க வேண்டியிருக்கிறது,
///
சண்டைக் காட்சிகளிலும் ஓவியர் பின்புல டீடெயில்ஸ் நிறைய கொடுத்திருப்பதே காட்சியை சரிவர கவனிக்க முடியாமல் போவதன் காரணம்! ஒரு ரீடிங் லென்ஸ் வைத்துப் படித்தபோது இந்தப் பிரச்சனையை ஓரளவுக்கு என்னால் சமாளிக்க முடிந்தது!
இஷி தாத்தா அந்த பயிற்சி பட்டறையின் தலைவி குணம் தெரிந்து கொண்டே இளம்பெண்ணை அங்கே விடுகிறாரா அல்லது அவருக்கு இது தெரியாதா? ஒருவேளை தெரிந்து கொண்டே இளம் பெண் மூலம் அவளுக்கு முடிவு கட்ட இந்த முடிவை எடுத்தாரா?
Deleteவிஜய் அப்பறம் முதல் கதையில் உள்ளது போன்றே சண்டை காட்சிகள் என்பதால் கொஞ்சம் போர் அடிக்கிறது.
Deleteஅது பெண்களுக்கான பயிற்சிப் பட்டறை என்பதால் 'இந்த' சமாச்சாரம் குறித்து இஷி தாத்தாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன் 🤔
Delete///விஜய் அப்பறம் முதல் கதையில் உள்ளது போன்றே சண்டை காட்சிகள் என்பதால் கொஞ்சம் போர் அடிக்கிறது///
Deleteம்ம்ம்.. தற்கொலைக்கு முயன்றவளுக்கு எதனால் அப்படியொரு கொலைவெறி ஏற்பட்டது என்பதற்கும் காரணமில்லை.
'தற்கொலை' செய்துகொண்ட தன் தந்தையின் பொருட்டு அவள் செய்து முடித்த குரூரக் கொலைகளின் எண்ணிக்கை சுமார் 40க்கும் மேல்!!😳😳👀
இது பழிவாங்கும் கதைதான் ஆனால் அதன் காரணம் புதிது 🤣
Deleteகதிரவன் கண்டிரா கனவாய்...கிராஃபிக் நாவலோட விமர்சனம்.( Psychological Survival)
ReplyDeleteமுதல்ல இதோட அட்டைப்படத்தைப் பத்தி சொல்லியே ஆகணும். திகிலான, அருமையான வண்ணக் கலவையில அமைஞ்ச இந்த கவர் பேஜ், நம்மை ரொம்பவே சுலபமா ஒரு கற்பனை உலகத்துக்குள்ள கூட்டிட்டு போயிடுது. அதிக சிரமமில்லாம, கதையோட ஓட்டத்தோட நம்மளால இயல்பா ஒன்றிப்போக முடியுது. கதை ஓரளவுக்கு எளிதில் யூகிக்கக்கூடியதுதான்.
குகை ஆராய்ச்சி, புதிய இடங்களைக் கண்டறியறதுல தீவிர ஆர்வம் கொண்ட கெவின், கேரோ மற்றும் ஈவா ஆகிய மூன்று நண்பர்கள். அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட, மூடப்பட்ட 'பார்க் மில்ஸ்' சுரங்கத்தை ஆராய முடிவு செய்றாங்க.
ஈவா எழுதி வச்சுட்டுப்போன குறிப்பை ஒரு பூனை பாழாக்கிடுறதால, அவங்க எங்க போயிருக்காங்கன்னு யாருக்குமே தெரியாம போயிடுது. அதிகாலை வெளிச்சத்தில் மூழ்கியிருக்கும் அந்த கைவிடப்பட்ட சுரங்கத்தோட பயமுறுத்தும், விசித்திரமான இடிபாடுகளை அவங்க ஆராயத் தொடங்குறாங்க.
சுரங்கத்துக்குள்ள நுழைஞ்ச சிறிது நேரத்திலேயே, சரியாக மூடி வைக்கப்படாத ஒரு கிணறு வழியா, இயற்கை வெளிச்சமே படாத இருள் சூழ்ந்த பாதாளப் பகுதிக்குள்ள தவறி விழுந்துடுறாங்க.
அந்தப் பாதாளத்துக்குள்ள சிக்கியிருக்கும் அவங்க, தப்பிக்க எல்லா வழிகளையும் முயன்று பார்க்குறாங்க. ஆனா, அவங்களுக்கு ஒரே ஒரு வழிதான் மிஞ்சியிருக்கு... உதவி வரும் வரை காத்திருப்பதுதான் அது!
வெளி உலகத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலை. அவங்க எங்க இருக்காங்கன்னு யாருக்கும் தெரியாதுங்கிறதால, மீட்புக் குழு உடனடியாக வர சாத்தியமே இல்லை.
ஐந்து நாட்கள் ஆகிடுது... முற்றிலும் இருண்ட அந்த இடத்துல அவங்க காத்திருக்கும் போது, அவங்ககிட்ட இருக்குற உணவு, தண்ணீர் எல்லாம் வேகமாகத் தீர்ந்து போகுது.
மீட்புக் குழு வருமா வராதாங்கிற அச்சத்தோட போராடுற அதே வேளையில, அவங்க தங்களுக்குள்ளேயும் போராடிக்கிறாங்க. பயத்தினாலும் பதற்றத்தினாலும் பாதிக்கப்படுற அவங்க, மெல்ல மெல்லத் தங்களோட நிதானத்தை இழக்குறாங்க. பயமும் பைத்தியக்காரத்தனமும் அவங்களை ஆட்கொள்ள, எது உண்மை, எது மாயைன்னு பிரித்தறிய முடியாத நிலை ஏற்படுது. இது நண்பர்களுக்குள்ள மனக்கசப்பையும் வாக்குவாதத்தையும் உருவாக்குது.
அந்த அடர்ந்த இருள்ல அவங்களோட மன உறுதி குலைய, கடுமையான மன மாயைகளுக்கும் (hallucinations) ஆளாகுறாங்க.
கடைசியில, அவங்க எப்படி அந்தச் சுரங்கத்துல இருந்து வெளியே வர்றாங்கங்கிறதை நீங்க புத்தகத்தைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
இறுதியா, இதோட ஓவியங்களைப் பற்றி நான் கண்டிப்பா பேசியாகணும். இதில் உள்ள படங்கள் சில இடங்களில் மிக அழகாக இருந்தன. இந்த ஓவியங்களுக்காகவே, நான் எதிர்பார்த்ததை விட இப்புத்தகம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. பிரம்மாண்டமான அதே சமயம் பயமுறுத்துற மாதிரி இருக்குற அந்த கருப்பு-வெள்ளை ஓவியங்கள், பாழடைந்த சுரங்கத்தோட சூழலை மிக அழகாக வெளிப்படுத்துது. ஓவியத்தின் தரமும் மிகச் சிறப்பு!
My Rating: 7 out of 10.
நன்றி!
சூப்பரா எழுதியிருக்கீங்க chick bill நண்பரே!!💐💐💐
Deleteஆகாயத்தில் அதகளம் - மிஸ்டர் நோ அட்டை படத்தில் ஹாலிவுட் ஹீரோவை மாடலாக வைத்து வரைந்தது போல உள்ளது; குறிப்பாக சமகால ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ போல தெரிகிறார் எனக்கு.
ReplyDeleteகதை உண்மையில் ரசிக்கும் படி இருந்தது. தனது விமானம் கிளம்பவில்லை என்பதால் உதைத்து அதனிடம் பேசி ஸ்டார்ட் செய்வது படிக்காதவன் படத்தில் ஹீரோ தனது காரை லக்ஷ்மி என்று சொல்லி அதனையும் சக மனிதன் போல நடத்தியது ஞாபகம் வந்தது.
Deleteமிஸ்டர் நோ என்ற பெயர் வந்த காரணம் அருமை. கடைசி சில பக்கங்கள் மிகவும் ரசித்தேன், வாழ்கை இப்படிதான் இருக்கும்.
Deleteஇதுவரை படித்து முடித்த கதைகளின் தர வரிசை:
ReplyDelete1. நிழல்களின் நிழல்
2. ஆகாயத்தில் அதகளம்
3. வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே
இந்த கதைகளின் தலைப்பை கவனிச்சீங்களா நணபர்களே, சில பதிவுகளுக்கு முன்னால் தலைப்பின் கதை என்று சொன்னதோடு ஒற்றுபோகும் ☺️
இந்த பதிவோட தலைப்பும் இதில் அடங்கும் அ-அ 🤩
Deleteநிழல்களின் நிழலில்
ReplyDeleteBLACKSAD
Murder Investigation Thriller
என் மதிப்பீடு 8 / 10
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைப்பட நடிகை நடாலியா வில்ஃபோர்ட் (Natalia Willford) கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள். அந்த வழக்கை விசாரிக்கக் களமிறங்குகிறான் கதைநாயகன் ஜான் பிளாக்ஸாட் (John Blacksad).
அவன் வெறும் தனியார் துப்பறிவாளர் (Private Investigator) மட்டுமல்ல, கொலை செய்யப்பட்ட நடிகை நடாலியாவின் முன்னாள் காதலனும்கூட!
ஏமாற்றங்களும், கசப்பான கடந்த கால நினைவுகளும், விரக்தியும் நிறைந்த பிளாக்ஸாட்டின் பயணமே இந்த கதைக்களம்.
நடிகை நடாலியாவின் கொலையில் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரும், பெரும் புள்ளியுமான 'இவோ ஸ்டாட்' (Ivo Statoc) சம்பந்தப்பட்டிருக்கிறான். பணமும் அதிகாரமும் படைத்த அவனுக்கு எதிராக நகர காவல்துறையால் எதையும் செய்ய முடிவதில்லை.
மேலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் வழக்கு முடக்கப்படுகிறது.
நேர்மையான காவல்துறை அதிகாரியான கமிஷனர் ஸ்மிர்னோவ் (ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்) ஆரம்பத்தில் பிளாக்ஸாடை எச்சரித்து விலகி இருக்கச் சொல்கிறார்.
ஆனால், சட்டத்தின் கரங்களால் குற்றவாளியைத் தண்டிக்க முடியாது என்பதை உணரும்போது, அதிகாரப்பூர்வ எல்லையைத் தாண்டி பிளாக்ஸாடைத் தனியாகச் சந்திக்கிறார்.
காவல்துறையாக எங்களால் இவனை எதுவுமே செய்ய முடியாது. ஆனால் நீ சட்டத்தின் விதிகளுக்கோ அரசியல் அழுத்தங்களுக்கோ கட்டுப்பட்டவன் அல்ல. அந்தப் பாதகனை ஒழித்துக்கட்டு, உனக்குப் பின்னால் நான் பாதுகாப்பாக நிற்கிறேன் என்று சொல்கிறார்.
இறந்தவள் தன் முன்னாள் காதலி... கூடவே நேர்மையான அதிகாரியின் ஆதரவு! இனி பிளாக்ஸாட் சும்மா இருப்பானா? களத்தில் இறங்கி வேட்டையைத் தொடங்குகிறான்.
ஓவியமும் பாணியும்
இந்த கிராஃபிக் நாவலின் மிகப்பெரிய பலமே இதன் Watercolor ஓவியங்களும், திரைப்படப் பாணியிலான பக்க அமைப்புகளும்தான் .
மனிதர்களை வைத்து வரைவதை விட, மனித குணாதிசயங்கள் கொண்ட விலங்குப் பாத்திரங்களை வைத்து மனிதர்களின் நுட்பமான உணர்ச்சிகளை ஓவியத்திலேயே மிக அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த Blacksad IN நிழல்களின் நிழலில் MURDER INVESTIGATION த்ரில்லர் பிரியர்கள் தவறவிடக்கூடாத ஒரு படைப்பு.
// மனிதர்களை வைத்து வரைவதை விட, மனித குணாதிசயங்கள் கொண்ட விலங்குப் பாத்திரங்களை வைத்து மனிதர்களின் நுட்பமான உணர்ச்சிகளை ஓவியத்திலேயே மிக அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். //
Deleteஎஸ். இது தான் இந்த கதையின் சிறப்பு.
மிக சரியாக கணித்து இருகீர்கள்.
Deleteஅருமை சகோ
Deleteசூப்பரா எழுதறீங்க Chick bill ஜி!!👏👏👏💐💐💐😍😍
DeleteThis was on Oct 1st upon receiving the books from the courier friend
ReplyDeleteOct 2026 issues-
Just completed reading Samurai, Tex and Mr.cat detective
It’s awesome October so far
Tex book - top of the list - one of the finest, True Detective style script, just loved the unexpected twist in the climax ❤️❤️
In recent years
Samurai- visual treat and fantasist ending
Mr.Cat - amazing visuals,💕💕❤️❤️. We don’t mind the script!!
Tex - 20 out of 10
Samurai - 15/10
Cat man - 9/10
After a long time, finished 3 books with in 3 hours after courier delivery.
///
DeleteAfter a long time, finished 3 books with in 3 hours after courier delivery.///
😳 மூன்று மணி நேரத்தில் 3 புத்தகங்களா?!! அசுர வேகம் தான்!!
அடடே... 😁😁
Delete*நள்ளிரவின் நயனம்..*
ReplyDeleteஉணவில் பிடித்த பதார்தத்தை இறுதியாக பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள் சிலர்...அதுபோல் தான் எனக்கு டெக்ஸ் வில்லர் சாகஸம்...அதுவும் பதார்த்தத்தின் அளவு ( பக்கங்கள் ) அதிகமாக இருந்தால் மற்றவற்றை உடனடியாக காலிசெய்து விட்டு பிடித்த இந்த பதார்த்தை மிக மிக ரசித்து ருசித்து உணவருந்துவது தான் நமக்கு பிடித்தமான ஒன்று...அது என்றுமே சுவை குறையாது என்று ஆணித்தரமாக தெரியும்...அதுபோல் தான் நமது டெக்ஸ்வில்லரும்...
உண்மையாகவே ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக அரிஸோனா ஹார்ஷா நகரத்தில் நானும் திக்..திக் ..உணர்வுனடன் எவன் கொலைகாரன் என்ற துடிதுடிப்போடும் ...பதைபதைப்போடும் அந்த நகரத்திலியே உலவி வர வைத்து விட்டதுஇந்த நள்ளிரவின் நயனம் சாகஸம்...வழக்கமான வெறும் ரவுடி பயல்களுடன் ஆன டமால் ...டுமீல் சாகஸமாக இல்லாமல் ஓர் த்ரில்...சஸ்பென்ஸ் சாகஸமாக டெக்ஸ் பட்டையை கிளப்பி விட்டார்....கதையின் ஓட்டத்திற்கு இந்த கதையின் சித்திரங்கள் அவ்வளவு அழகுடனும் ..தெளிவுடனும்.....இருக்க நிதர்சனமாக நம்மை அந்த நகரத்தில் உலவ வைத்து விடுகிறது இந்த நள்ளிரவின் நயணம்...கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே நம்மை அவர்களுடன் நெருங்க வைக்க எதிரி யார்..யார் என்பதை நாமும் டெக்ஸ்வில்லர் பதைபதைப்புடன் நகர,நகர இறுதியில் அறியும் பொழுது அதிர்ச்சியே....தனி ஆளாக டெக்ஸ் இந்த சாகஸத்தில் களமாட கெளரவ வேடம் போல் முன்நினைவில் கார்ஸனின் குறு பகுதி யும் கதைக்கு சிறப்பு சேர்க்கிறது...எப்பொழுதும் போலவே டெக்ஸ் இந்த முறையும் வேறு ஓர் பாணியில் நம்மை கவர்ந்து விட்டார் என்பதோடு வழக்கம் போல் நம்மையும் ஒரு மணிநேரத்திற்கும் போல் அந்த சிறு வன்மேற்கு நகரில் நம்மை உலவ வைத்து விட்டார்...
இந்த மாதம் வந்த ஐந்து இதழ்களும் ஏஒன் ரகம் ....எனக்கு எந்த இதழை முன்னணி யில் வைப்பது ...பின்னணியில் வைப்பது என்றே தெரியவில்லை..ஆனாலும் மற்ற இதழ்களை விட அதிக நேரம் எப்பொழுதும் போல என்னை வன்மேற்கு உலகில் அதுவும் இந்த முறை வன்மேற்க்கில் ஓர் துப்பறியும் க்ரைம் த்ரில்லர் போல் உலவ வைத்த காரணமாக நான் டெக்ஸ்ற்கே முதலிடத்தை அளிக்கிறேன்....
மீண்டும் டெக்ஸை சந்திக்க ஆவலுடன்....
சூப்பர் தலீவரே!!😍😍😍💐💐
Deleteதலையின் தல கதை விமர்சனம் சூப்பர்.
Deleteநள்ளிரவு நயனம் (டெக்ஸ் சோலோ சாகசம்)
ReplyDelete
நண்பர்களின் (கிட் கார்சன், டைகர்) உதவியின்றி டெக்ஸ் வில்லர் தனி ஒருவனாக இறங்கி நடத்தும் இந்த புலனாய்வுச் சாகசம்.
ஆனால் கிட் கார்சன்னுக்கு கெஸ்ட் ரோல் ஒன்று உண்டு
ஒரு காலத்தில் 'ஹார்ஷா' (Harshaw) நகரத்தையே தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்து அட்டகாசம் செய்துவந்த கொடூரமான மனிதன் ஜேசன் கார்ட்வெல் (Jason Cardwell).
ஆனால் பல வருடங்களுக்கு முன்பு டெக்ஸ் வில்லரின் துப்பாக்கிச் சூட்டிற்கும் கைப் பலத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் அவனது சாம்ராஜ்யம் சரிந்து, ஊரை விட்டே விரட்டப்படுகிறான்.
பிறகு, அதே நகரத்தின் வியாபாரிகள், நிலக்கிழார்கள் மற்றும் சாமானிய மக்களைப் பயமுறுத்தியும், அதிகாரப் புள்ளிகளைத் தன் வசப்படுத்தியும் தான் அவர் மேயர் பீடத்தைக் கைப்பற்றுகிறார். அவரது சாம்ராஜ்யத்தை எதிர்த்து கேள்வி கேட்க ஆள் இல்லாத சூழலில், அவரே நகரத்தின் முடிசூடா மன்னனாக வலம் வருகிறார்.
ஆண்டுகள் உருண்டோட, வயதான நோயாளியாக மாறும் கார்ட்வெல் தன் தவறை உணர்ந்து நல்வழியில் வாழத் தொடங்குகிறான். ஆனால், அவனது நிம்மதியைப் பறிக்கும் விதமாக நள்ளிரவுகளில் பயங்கரமான கனவுகளும், இருளில் நிழலாடும் "பழிவாங்கும் அரக்கனின்" தோற்றமும் அவனைச் சித்திரவதை செய்கின்றன.
தன் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் கார்ட்வெல், வேறு வழியின்றித் தன்னை வீழ்த்திய பழைய எதிரியான டெக்ஸ் வில்லரையே உதவிக்கு நாடுகிறான்.
பழைய பகைமையைப் பொருட்படுத்தாமல், ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவத் துணியும் கம்பீரத்தோடு டெக்ஸ் களத்தில் இறங்குகிறார்.
அங்கு சென்று ஆராயும் போதுதான் தெரிகிறது—அது வெறும் மனப்பிரமையோ அல்லது பேயோ அல்ல; இருளின் மறைவில் இருந்து தாக்கும் கொடூரமான மனிதர்களும், பழைய பகையைத் தீர்க்கத் துடிக்கும் பேராபத்தான சதித்திட்டமும் தான் என்று!
No Spoiler
இது வழக்கமான தூசி பறக்கும் காவ்பாய் அதிரடிக் கதையாக இல்லாமல், நள்ளிரவுப் பின்னணியில் நகரும் ஒரு நேர்த்தியான 'மிஸ்டரி த்ரில்லர்' பாணியில் கதை நகர்கிறது.
கருப்பு-வெள்ளை ஓவியங்கள் மிக நேர்த்தியாக வந்துள்ளன. குறிப்பாக இரவின் இருள், பயமுறுத்தும் நிழல்கள், பிரம்மாண்டமான மாளிகை மற்றும் தீப்பற்றி எரியும் கிளைமாக்ஸ் காட்சிகள் அருமை.
கதைக்களம் நன்றாக இருந்தாலும், சில இடங்களில் புலனாய்வு உரையாடல்கள் தேவையின்றி நீண்டுகொண்டே போவது போல் உணர்வதைத் தவிர்க்க முடியவில்லை. மேக்ஸி டெக்ஸ்க்கு தயாரிக்கப்பட்ட கதை என்று நினைக்கிறேன்.
தீவிரமான காவ்பாய் துப்பாக்கிச் சண்டைகளையும் அதிரடி ஆக்ஷன்களையும் மட்டுமே எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு, நீண்ட விசாரணைகளும் உரையாடல்களும் சற்று சலிப்பை ஏற்படுத்தலாம்.
அதிரடி துப்பாக்கிச் சூடுகளை விட, இருண்ட பின்னணியில் நகரும் மர்மமான புலனாய்வுக் கதைகளில் டெக்ஸ் இருந்தால் எப்படி இருக்கும் என விரும்பி வாசிக்கும் வாசகர்களுக்கு 'நள்ளிரவின் நயனம்' ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்!
ஒரு வெஸ்டர்ன் காவ்பாய் கதையில் நுட்பமான 'கிரைம்-த்ரில்லர்' பாணியை மிக அழகாகக் கொண்டு வந்ததே இக்கதையின் மிகப்பெரிய சிறப்பு
ஆக்ஷன் விரும்பிகளுக்குச் சராசரியான கதையாகவும், மர்மம் மற்றும் ஓவிய நேர்த்தியை ரசிப்பவர்களுக்கு ஒரு Masterpiece போலவும் தெரியலாம்.
My Rating 7/10

நள்ளிரவின் நயனம்..!!
ReplyDeleteகடைசியாகத்தான் வந்த விநாயக் மாதிரி, கடைசியாக வந்து கலக்கிட்டாரு தல டெக்ஸ்.
Jo Ortiz-க்கு அப்புறம், இப்போதான் இன்னொரு artist-கிட்ட இருந்து இப்படி ஒரு பக்காவான illustrated artwork பார்க்கிறேன். HD தெளிவு ரகம். Background characters-க்கு silhouette-ல விட்டுடாமல், proper detailing கொடுத்து கலக்கி இருக்காரு.
Reporter Johnny-யோட script-ல Tex-ஐயும் Texas-ஐயும் வெச்சா எப்படி இருக்கும்... அதுதான் இந்த story.
பழைய பகையாளி Mayor-ஓட பையனைத் தேடிப் போன பையப்புள்ள... அவனும் Ranger-ஆம். Kid Carson-க்கு substitute player மாதிரி வர்ற இந்தப் பையன் Ric.
Mayor-க்கு மண்டை குழம்ப ஆரம்பிக்க, doctor மேலேயும் அவரோட daughter மேலேயும் doubts கிளம்ப, குறுக்கே Reverend-உம், notorious-ஆன Notary-உம் வந்து குட்டையைக் குழப்ப... current, flashback-னு மாறி மாறி story போனாலும், 265 pages-உம் சலிக்காம பற பறன்னு போகுது.
இதுல வர்ற அந்த quackery doctor, டக்குனு Lucky Luke-ல வர்ற quackery stories-ஐ ஞாபகப்படுத்திட்டாரு. ரெண்டு characters-க்கும் crossover பண்ணி விட்டிருந்தா, mass-over-ஆ இருந்திருக்கும்.
இதை சொல்லி சொல்லி bore அடிச்சது போதும்...
இதுவும் hit list வகையறா! 🔥
சூப்பர் விமர்சனம்!! 😍😍💐💐💐💐
DeleteNandri
DeleteOCTOBER RATING :
ReplyDelete1.நள்ளிரவின் நயனம் :
சற்று வித்தியாசமான TEX கதை ..DETECTIVE , MYSTERY GENRE .. வன்மேற்க்கில் ஓர் துப்பறியும் க்ரைம் த்ரில்லர் போல் உலவ வைத்த காரணமாக நான் டெக்ஸ்ற்கே முதலிடத்தை அளிக்கிறேன்
9.5/10 ..
2. BLACKSAD
TYPICAL ,DETECTIVE NOIR STORY .. ஆனால் இதில் மனித குணங்களை பிரதிபலிக்கும் வகையில் மிருக முகங்கள் கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள் .. ART S GOOD .. WELCOME DEBUT FOR BLACKSAD .. 9/10 ..
3.MR NO :
இது MR.நோ வின் முதல் கதை என்பதால் அந்த கிளாசிக் டச் தெரிகிறது .. BUT MR .NO IS ALWAYS FUN .. JOLLY, BREEZY READ .. COULD VE TRIMMED A LITTLE AT THE END .. 8.5/10
4. SAMURAI:
முதல் கதையில் இருந்த வலு இதில் இல்லை .. இஷி இன் ஜென் தத்துவங்களும் இதில் அதிகம் இல்லை .. SIMPLE REVENGE STORY .. BUT A VISUAL TREAT .. 8/10 ..
5. கதிரவன் கண்டிரா கணவாய்
முக்கால் வாசி கதை SURIVIVAL THRILLER ஆக உள்ளது .. கடைசி கால்வாசி PSYCHOLOGICAL கதை ஆக உள்ளது .. கிளைமாக்ஸ் எனக்கு சரியாக புரியவில்லை .. ஏதோ INCOMPLETED கதையை படித்தது போல ஒரு உணர்வு .. 7.5/10 ..
நச்!!😍😍😍💐💐
Deleteகதிரவன் கண்டிரா கணவாய் ---
ReplyDeleteஉடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நினைவுகளுக்குள் சுழன்றேழுகிறது முழுக்கதையும்! பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அதன்மூலம் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மனப்பிறழ்வுக்கு தள்ளப்பட்டு, உலகை வெறுத்து தற்கொலைக்கு முயல்கிறாள் ஏவா! அப்போது ஏற்படும் அவளது முதல் ஹாலுசினேஷனில் , அவளது நண்பர்களுடன் அட்வென்சர் பயணம் மேற்கொள்கிறாள்! அந்த delusional பயணத்தில் மேலும் ஒரு near death experience, இப்போது அவளது கனவுக்குள் ஒரு கனவு! இந்த இரண்டாம் ஹாலுசினேஷனில் கனவில் கூட எதிர்கொள்ள தயங்கும் அவளது ஆல் மனதின் ஆசைகளின் வெளிப்பாடு. இரண்டாம் விபத்தில் resurrect செய்யப்பட்டவள், முதல் தற்கொலை முயற்சியால் கடைசியாக உயிரை விடுகிறாள்! இத கதாசிரியர் கூட யோசிச்சிருக்க மாட்டாருங்க! பட் இந்த angle'ல இன்னொரு முறை படிங்க! சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது! 😀😀 Happy Reading!
இது புதுஷ்ஷ்ஷ்சா இருக்குங்களே!!😁
Deleteபாக்கறேன். அந்தக் கோணத்திலும் படிச்சுப் பாக்கறேன்!!
Btw, நீங்க கோவை ரவீந்திரன் தானே?
ஆமாம் ஈ.வி! முன்பு போல் இப்போது அதிகம் எழுத முடிவதில்லை!
Deleteஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்!
புத்தகங்களுக்கு whatsapp/ப்லோக் கில் வரும் அலசல்களை / விமர்சனங்களை ஒவ்வொரு புத்தகத்துக்கும் தனி பதிவை உருவாக்கி அதில் பதிவிட வேண்டும். அந்த பக்கத்தின் metadata வில் புத்தகத்திற்கான unique universal identifier meta property= "og:title" content="Sunlight by Christophe Bec" இருந்தால் இன்னமும் சிறப்பு.
வாட்ஸாப்ப் பில் வரும் விமர்சனங்கள் அலசல்கள் விரைவில் மறைந்து விடுகின்றன. நமது ப்ளோகில் புத்தகங்களுக்கு தனி பக்கங்கள் இல்லை.
எதுக்கு சொல்றன்ன்னா, எனக்குள் உதிச்ச அறிய சிந்தனை வேறு யாருக்காவது உதிச்சிருக்கான்னு AI மூலம் தேடினால், அது நிறைய விமர்சன பக்கங்களை (ஆங்கிலம்/பிரெஞ்சு) சுட்டுது.
நமது புத்தகங்களின் அலசல்களை அப்போதைய பார்வைக்கு என விடாமல் ஒரு Organized structureக்குள் கொண்டு வந்தால், உலக அளவில் தேடல்களின் போதும் நமது சிந்தனைகள் AI மூலம் அனைவருக்கும் பகிரப்படும். மேலும் அருட்பா/மருட்பா பதிவுகள் கண்டன இலக்கியங்கள் அப்படின்னு ஒரு தொகுப்புக்குள் போனது போல , நமது நண்பர்களின் எழுத்துக்கள் வருங்காலத்தில், விமர்சன இலக்கியம் அப்படின்னு ஒரு தொகுப்புக்குள் போக வாய்ப்புக்கள் அமையும்!
ஓவரா எதிர் பாக்கரேனோ???
சூப்பர் ஐடியாங்க சுஸ்கி-விஸ்கி ஜி!!
Deleteசெயல்படுத்தினால் செமயாக இருக்கும்! 😍😍😍
Super Ravi sir.
Deleteவஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே
ReplyDelete
கதையை மிக விறுவிறுப்பாக, ஒரு நவீன சாமுராய் திரைப்படம் பார்க்கும் உணர்வை தரும்.
வாள்வீச்சு, சண்டைக்காட்சிகள் மற்றும் பழிவாங்கும் தருணங்கள் மிகவும் அழுத்தமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் வரையப்பட்டுள்ளது.
கதாபாத்திரங்களின் முகபாவனைகள், ஆடை வடிவமைப்பு மற்றும் பின்னணி வேலைப்பாடுகள் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன.
அரசவையில் நடந்த கொடூரமான ஊழலையும் அநீதியையும் எதிர்த்துத் தன் தந்தை அவமானத்துடன் தற்கொலை செய்துகொண்டதை அரசவையின் உயர்மட்டப் பிரபுக்களும் 'டாய்மியோ'வும் (Daimyo - குறுநில மன்னர்) அவளது தந்தையின் தியாகத்தையும் ரத்தத்தையும் கண்டு பரிகசித்து சிரிக்கிறார்கள்.
அவமானமும் துயரமும் தாங்க முடியாத ஜுன், பெய்யும் கனமழைக்கு நடுவே ஒரு பாலத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள குதிக்க முயல்கிறாள்.
அந்தத் தருணத்தில், அங்கு வரும் இச்சி (Ichi) என்ற பார்வையற்ற, ஆனால் கூர்மையான வாள்வீச்சுத் திறமை கொண்ட ஒரு துறவி/சாமுராய் அவளைத் தடுத்து நிறுத்துகிறார்.
அவளுக்குத் தற்கொலைக்கு பதிலாக பழிவாங்கும் வழியைக் காட்டு விடுகிறார். ஒரு பயிற்சி பட்டறைக்கும் அழைத்துச் செல்கிறார்.
அங்கு பயிற்சி பெறும் ஜுன் துரோகிகளையும் ஊழல்வாதிகளையும் துணிச்சலுடன் எதிர்க்கும் ஒரு சக்திவாய்ந்த பெண் சாமுராயாக உருவெடுக்கிறாள்.
பயிற்சிகளை முடித்து வல்லமை பெறும் ஜுன், தந்தையின் மரணத்தைக் கேலி செய்த அனைவரையும் இரக்கமின்றி கொடூரமாகக் வெட்டிக் கொல்கிறாள்.
இச்சி எதிர்பார்த்ததை விட ஜுன் மிகவும் கொடூரமான ஒரு படுகொலையை நிகழ்த்தி முடித்திருப்பார்.
இச்சியின் நோக்கம், ஜுனுக்கு வாள்வீச்சையும் தற்காப்புக் கலையையும் கற்றுக்கொடுத்தது அவளது தந்தையின் கௌரவத்தைக் காப்பதற்கும், அநீதியை எதிர்ப்பதற்குமே தவிர, அவளை வெறும் ரத்தவெறி பிடித்த கொலைகாரியாக மாற்றுவதற்கு அல்ல.
ஆனால், பழிவாங்கும் தாகத்தில் மூழ்கிய ஜுன், எதிரிகளை மட்டுமின்றி மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்து எல்லை மீறிச் செல்கிறாள்.
பழிவாங்கல் முடிவுக்கு வந்த பிறகு, ஜுன் அடைந்த ரத்தவெறியையும் அவளது கட்டுப்பாடற்ற கோபத்தையும் கண்டு இச்சி அதிர்ச்சியடைகிறார்.
இச்சி அவளுக்கு அளித்த வாளைத் திரும்பத் தருமாறு கேட்கிறார். ஏனெனில், ஒரு சாமுராயின் தர்மத்தை விட்டு விலகி, பழிவாங்கும் நோக்கில் மட்டுமே செயல்படும் ஒருவரிடம் அந்த வாள் இருப்பது ஆபத்தானது என அவர் கருதுகிறார்.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான பதற்றமும் ,வாள்வீச்சுப் போட்டியும் உருவாகும் சூழல் ஏற்படுகிறது.
இறுதியில், ஜுன் தன் தவறையும் ஆசிரியரின் நோக்கத்தையும் உணர்ந்து, அவரிடம் வாளைத் திருப்பி ஒப்படைத்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து தனி வழியில் செல்கிறாள்.
இதன்பின்னர், இச்சி தன் சொந்த வழியைக் தேர்ந்தெடுத்து நகர்கிறார்கள்.
My Rating 9/10
அருமையா விளக்கியிருக்கீங்க ஜி!! 😍😍💐💐💐💐ஆனால் கடைசியில் - ஜூனுக்கு பயிற்சியளித்த டீச்சரம்மாவின் கதியைப் பற்றி மட்டும் சொல்லாமல் விட்டுட்டீங்களே!!🤔
Delete***** நள்ளிரவின் நயனம்! *****
ReplyDeleteடெக்ஸ் கதை வரிசையில் ஒரு வித்தியாசமான சாகசம்!
நிறைகள் :
* இறுதிவரை யூகிக்க முடியாதபடிக்கு சஸ்பென்ஸாகவே கதை நகர்கிறது!
* இறுதியில் புதிர் விலகும்போது அது நாமும் ஏற்றுக்கொள்ளும்படியான காரணமாக இருக்கிறது!
* கேமியோ ரோலில் ஒன்றிரண்டு பிரேம் வந்தாலுமே கார்சனின் உருவம் மிடுக்காக வரையப்பட்டிருக்கிறது!
குறை :
* ஓவியம் - சில பிரேம்களில் டெக்ஸின் முகம் அழகாகவும், சில கோணங்களில் ஈயம் பூசினாற்போலவும் இருக்கிறது !👀
அவ்வளவு தான்! மற்றபடிக்கு படித்துப் பரவசமடைய வேண்டியதுதான் பாக்கி!!😍😍😍
🤴
me the 156
ReplyDeleteErode Vijay sir, பழிவாங்கும் தாகத்தில் மூழ்கிய ஜுன், எதிரிகளை மட்டுமின்றி மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்து எல்லை மீறிச் செல்கிறாள்.
ReplyDeleteயெஸ்!!
Deleteடீச்சரமாவை ஒழித்து கட்டுவதற்கு இதுதான் காரணம்,முதலில் தந்தைக்காக பழிவாங்க வேண்டும் என்று நினைத்தவள், பிறகு எத்தனை அவமானப்படுத்தியவர்களையும் கூட அழிக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.. மேலும் டீச்சர் அம்மாவின் அந்த தோட்டத்தோட கூடிய இடம் கூட தனது வேண்டுமென்று நினைத்திருக்கலாம்.
ReplyDeleteமொத்ததில் ஒரு முழு ரவுடி ஆகிவிட்டாள்!!😰
Deleteஅங்கு அவளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் கூட இருக்கலாம்
Deleteஜூன், முதலில் தன் தந்தைக்காக பழிவாங்க வேண்டும் என்று நினைத்தவள், பிறகு தன்னை அவமானப்படுத்தியவர்களையும் கூட அழிக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.. மேலும் டீச்சர் அம்மாவின் அந்த தோட்டத்தோட கூடிய இடம் கூட தனது இருப்பிடமாக வேண்டுமென்று நினைத்திருக்கலாம்.
ReplyDeleteதன் வினை தன்னை சுடும்,
ReplyDelete சாதுவாக இருந்த ஜூனை கொலை மற்றும் களவு போன்ற கலைகளில் பயிற்சி அளித்து அவளை ரிவஞ்சிக்கு தயாராகிறாள். இந்த தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற முடிவு தான் அது.
வணக்கம் சார்
ReplyDeleteவணக்கம் பரணி
Deleteவாங்க குமார் 😊
Deleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஆமாங்க சார்
Deleteயெஸ் யெஸ்!!இன்று பதிவுக் கிழமை!!😍😍😍
DeleteIpo ellam sunday , athhuvum2 week's once thaan post varuthu ( if no Book release)
Deleteஎனது தரவரிசை
ReplyDelete1. வஞ்சம் தீர்ப்போம்
2. கதிரவன் கண்டிரா கணவாய்
3. நள்ளிரவு நயனம்
4. மிஸ்டர் நோ
5. பிளாக் சாட்
சார், RomCom என்றால் Romantic Comedy படங்கள்தானே? ப்ளாக்ஸாட் ரொம்ப வருடங்களாகவே எதிர்பார்த்தது. வாங்க வேண்டியதுதான்.
ReplyDelete