நண்பர்களே,
வணக்கம். 1970கள் எல்லாம் உங்களில் பலருக்கும் என்னவென்றே தெரியாத ஒரு காலகட்டமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் இந்தியாவில் ஜனத்தொகை அடித்து பிடித்து பெருகிக்கொண்டிருக்க நாடெங்கும் "நாம் இருவர் - நமக்கு இருவர்" என்று ஸ்லோகன்கள் தயார் செய்து, பட்டிதொட்டி பாக்கியில்லாமல் சுவர்களில் கார்ட்டூன் சித்திரங்களை வரைந்து குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்துவது வழக்கம். அந்நாட்களில் ஒரு கேலிச்சித்திரமானது வெளிவந்தது எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது. சுவற்றில் ஒரு சிக்கனமான குடும்பம் "நாம் இருவர் -நமக்கு இருவர்" என்று சிரித்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு முன்னே ஒரு மாட்டு வண்டியில் ஒரு அரை டஜன் பிள்ளைகளுடனான குடும்பத்தை ஏற்றிக்கொண்டு ஒரு டாடி பள்ளிக்கூடம் கூட்டிப்போகும் படமது. அந்த முரணை அன்று எண்ணி நிறையவே பகடிகள் சுற்றி வந்தன. இத்தனை காலம் கழித்து எனக்கு அது அகஸ்மாத்தாய் நினைவுக்கு வருகிறது - நமது இம்மாதத்து அட்டவணையைப் பார்க்கும்போது. Crisp ரீடிங், லைட் ரீடிங், காம்பேக்ட் ரீடிங் என்றெல்லாம் ஒரு பக்கம் அள்ளி விட்டுக்கொண்டே மறுபக்கம் கட்டவிழ்ந்திருக்கும் ஒரு லோடு காமிக்ஸை ஒரு புதிரான பார்வையுடனேயே நானே பார்க்கிறேன். இம்மாதத்தின் FAB 5 வெளியீட்டினையும் சேர்த்தால், மொத்தப் பக்க எண்ணிக்கை 712. And "கிரிஸ்ப் ரீடிங்" என்று பகுமானமாய் பீலா விட்டு திரிந்தவனும் நானே. உள்ளதைப் படிக்கவே நேரமில்லை என்று நம்மில் கணிசமானோர் புலம்பி வரும் வேளையில், இந்த லாரி லோடு அவசியம் தானா? என்று எனக்குள்ளேயே கேள்வி ஓடத்தான் செய்கிறது. ஆனால் என்னதான் சிக்கனமாய்த் திட்டமிட்டாலும், அந்தத் தொடர் - இந்தத் தொடர் - அந்த முன்பதிவு - இந்த முன்பதிவு என்று எதையாவது இழுத்துவிட்டு பாதத்தை முழுமையாய் வாய்க்குள் திணித்துக் கொள்ளும் அந்த பழக்கமானதற்கு விடுதலை தந்த பாடையே காணோம்.
ஆனால் இந்த எல்லைகளற்ற சுதந்திரம் சில தருணங்களில் செமத்தியாகவே பயன் தரவும் செய்கின்றது தான். இல்லாவிட்டால் ரகம் ரகமாய் இத்தனை பாணிகளில் இத்தனை கதைகளை முயற்சித்துப் பார்க்கும் வாய்ப்பு கற்பனையில் கூடக் கிட்டிடாதே?! இம்மாதத்தின் ஐந்து இதழ்களையும் ஜான்ரா வாரியாகப் பிரித்துப் பார்த்தோம் எனில்,
*நம்பர் 1: டெக்ஸ் - வைல்ட் வெஸ்ட் சாகசம்.
*நம்பர் 2: மிஸ்டர் நோ - கானகச் சாகசம்.
*நம்பர் 3: சாமுராய் - அதிரடி, மன்னர் காலத்து ஜப்பானில் சாமுராய் சாகசங்கள்.
*நம்பர் 4: டிடெக்டிவ் ஜான் பிளாக்ஸாட் தோன்றும் "நிழல்களின் நிழல்களில்" - இதுவோ ஒரு நாய்ர் டிடெக்டிவ் த்ரில்லர்.
*And இறுதியாய் FAB 5 ன் இதழாக வந்திருக்கும் "கதிரவன் கண்டிரா கணவாய்" - ஒரு ஹை டென்ஷன், உயிர் பிழைக்கும் திகில் த்ரில்லர்.
So திக்குக்கொன்றாய் கல்லை சரேல் சரேல் என்று வீச எனக்கு நீங்கள் சுதந்திரம் தந்திருக்கும் போது, டிசைன் டிசைனாய் லூட்டிகள் அடிப்பதில் வியப்பில்லை தானே? இம்மாதத்தின் highlight என எதைச் சுட்டிக்காட்டுவது என்றே சத்தியமாய் தெரியவில்லை. ஏனெனில் ஒவ்வொரு ஆல்பமுமே அதன் அதன் விதத்தில் doing decently. ஆனால் 'உர்'ரென்ற கடுவன் பூனை மூஞ்சோடு முறைத்துக்கொண்டு நிற்கும் பிளாக்ஸாட் ஒளிவட்டத்தை தனதாக்கிக் கொண்டால் வியப்புக்கொள்ள மாட்டேன்.
ஏற்கனவே இந்தப் பூனைமூஞ்சி டிடெக்டிவைப் பற்றி பதிவிலும் எழுதியிருக்கிறேன் தான் ; நமது கம்யூனிட்டியிலும் பதிவிட்டு இருக்கிறேன் தான். இருந்தாலும், right before the release of the book இன்னும் கொஞ்சம் ஆழமாய் இவரைப் பற்றிப் பேசினால் தப்பில்லை என்று தோன்றுகிறது. மனித இயல்புகளும் குணங்களும் கொண்ட மிருக முகம் உடனான கதாபாத்திரங்கள் காமிக்ஸுக்கு புதிதே அல்ல தான். மிக்கி மவுஸ் அந்த ரகமே. டொனால்ட் டக், டாம் & ஜெர்ரி, ஸ்கூபி டூ, பக்ஸ் பன்னி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மனிதரைப்போல் மனிதர்களைப் போலவே பர்கர் சாப்பிடுவார்கள், காரோட்டுவார்கள், காசின் பின்னே ஓடுவார்கள், கோபப்படுவார்கள், கொஞ்சிக் குலவுவார்கள். ஆனால் மனித முகங்களின்றி அவர்களுக்குத் தந்திருக்கப்பட்டதோ விலங்குகளும் பறவைகளும் சொந்தம் கொண்டாடும் வதனங்களை. So இந்த விலங்கியல் உருவகத்திற்கு "ஆந்த்ரோபோமார்ஃபிஸம்" என்ற பெயராம். காமிக்ஸில் இது சரளமாய் புழக்கத்தில் இருப்பதும் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஆனால் பிளாக்ஸாட் சொல்ல விளைவது என்ன என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் in-depth பார்க்கலாமா?
1950களில் அமெரிக்காவில் ஒருவித இருண்ட அதிரடியான ஆக்ஷன் டிடெக்டிவ் கள நாவல்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருந்ததாம். பிரபல நாவலாசிரியர்களான ரேமண்ட் சேண்ட்லர், டேஷல் ஹேமட் போன்றோர் வண்டி வண்டியாய் டிடெக்டிவ் நாவல்களை எழுதிக் குவித்திருக்கிறார்கள். அந்தக் கதைகளிலெல்லாம் நீளமான ஓவர்கோட் போட்ட கம்பீரமான சிங்கிளான, சீற்றமான, சரக்கடிக்கும், பஞ்ச் பேசும், பஞ்ச் விடும் டிடெக்டிவ் நாயகர்களே பிரதானமாய் இருப்பார்களாம். அழகான அம்மணிகளை தட்டித் தூக்குவது மாத்திரமன்றி அமெரிக்காவின் காவாலிப் பயல்களை மொத்தி எடுப்பதும் அந்நாட்களது டெம்ப்ளேட் போலும். நாவல்களில் மட்டுமன்றி பிரபல டைரக்டர் ஹம்ப்ரி போகார்ட் போன்றோரின் சில வெள்ளித்திரைப் படைப்புகளிலுமே இந்தத் தனி வேங்கை டிடெக்டிவுகளுக்கு செம ஸ்லாகிப்பு உண்டு போலும். And அந்த நாட்களது அமெரிக்காவில் நிறைய ஊழல், நிறைய நிறவெறி, மதவெறி, பணவெறி என்றெல்லாம் துவேஷங்கள் தலைவிரித்தும் ஆடி இருக்கும் போல் தெரிகிறது. So அந்த 1950-களை பின்புலமாகக் கொண்டு ஒரு சோலோ டிடெக்டிவை மையமாக்கி காமிக்ஸ் தொடர் ஒன்றை உருவாக்க 2 ஸ்பானிஷ் படைப்பாளிகள் திட்டமிட்டிருக்கின்றனர்.
ரைட், இது ஏற்கனவே வண்டி வண்டியாய் அரைத்த அதே புளிச்சுப் போன தோசை மாவுதானே, இதில் புதிதாய் என்ன ஊத்தப்பம் செய்வது?? என்று பதிப்பகங்கள் கேட்டிருக்கலாமோ என்னவோ தெரியவில்லை. "Yes, இது அந்த 1950களின் அமெரிக்கப் பின்புலத்தில் உருவாக்க முற்படும் தொடரே தான். இருந்தாலும், இதில் ஒரு வித்தியாசம் இருந்திட உள்ளது!" என்று அந்தப் படைப்பாளிகள் சொல்லியிருக்கின்றனர்.
**இங்கே தனித்துத் திரியும் கடுவன் பூனை போலான முறைத்த முகரை டிடெக்டிவுக்கு, கடுவன் பூனையின் நிஜ முகத்தையே தந்திடவிருக்கிறோம்.
**குற்றப்புலனாய்வின் தேடலின் முழுமூச்சான நாய்களின் முகங்களை காவல் வீரர்களுக்குத் தந்திடலாம்.
**அருவெறுக்கச் செய்யும் பாம்புகளையும், தவளைகளையும், முதலைகளையும் இந்தக் கதைத்தொடரின் வில்லன்களின் முகங்களாக்கி விடலாம் என்றும் அந்தப் படைப்பாளிகள் முன்மொழிந்திருக்கின்றனர்.
இந்த 2000த்தாண்டின் துவக்கத்தின் போது களம் கண்ட பிளாக்ஸாட் தொடரானது பிரெஞ்சில் செமத்தியான வெற்றி கண்டதைத் தொடர்ந்து 27 இதர உலக மொழிகளில் ரவுண்டு கட்டி அடித்துள்ளது. So, மொழி நம்பர் 29ஆக தமிழுக்கு பிளாக்ஸாட் வருகை தருகிறார். இங்கே கதை நெடுக அந்த 1950-களின் ஆசாமிகள் வலம் வருவதைக் காணப் போகிறீர்கள்.கோடீஸ்வர வில்லன் அடுக்குமாடி நியூயார்க் கட்டிடத்தில் தவளை ரூபத்திலும், போலீஸ் சீஃப்போ ஜெர்மன் ஷெப்பர்ட் ரூபத்திலும், காவாலித்தனம் செய்யும் மத்திம நிலை வில்லப் பயல், பல்லி முகரையுடனும் சுற்றித் திரிவதைப் பார்த்திடவிருக்கிறீர்கள்.அந்நாட்களது சித்திர பாணி, கலரிங் பாணி என்று நிரம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள் - ஒரு இருண்ட மூடை உருவாக்கிட. ஒரு நேர்கோட்டுக் கதையை இப்படியான வித்தியாசமான கதை மாந்தர்கள் வாயிலாகச் சொல்ல முனையும் போது, ரொம்பவே வித்தியாசமான ரிசல்ட்ஸ் கிடைப்பதை உலகெங்கும் இந்தத் தொடர் ஈட்டியுள்ள வெற்றிகள் வாயிலாய் நாம் புரிந்துகொள்ளலாம். ஏற்கனவே நான் சொன்னது போல, நமது கம்பேக் துவங்கிய மறுவருஷமே இதைப் போடலாமே என்று நண்பர் பரிந்துரைத்திருந்தார். ஆனால் அந்தத் தருணம் way too early for us என்று பட்டதால், இதோ ஒரு டஜன் ஆண்டுகளுக்குப் பிற்பாடு பூனையாரோடு பயணம் செல்ல all is set. So இம்மாதத்து உங்களது முதல் வாசிப்பாக டிடெக்டிவ் ஜான் பிளாக்சாட் இருப்பின், செம வித்தியாசமாக இருக்கும் என்பது உறுதி. And கொஞ்சமே கொஞ்சமாய் கரடுமுரடான மொழி நடை இங்கு பயன்பாட்டில் இருக்கும். ஆனால் கெட்ட வார்த்தைப் பிரயோகங்கள் நேரடியாய் வேண்டாமே என்பதால் திரையில் வசனங்களுக்கு நடுவே "பீப்" செய்வது போல, வார்த்தைகளின் நடுவே ஸ்டார் போட்டுத் தாண்டியுள்ளோம். பார்க்கலாமே - இந்த முயற்சி எவ்விதம் வாசிக்க உதவுகிறது என்று.
அக்டோபரின் ஹைலைட் # 2 - ஐயமே இன்றி நமது தலை டெக்ஸின் "நள்ளிரவின் நயனம்" தான் என்பேன். அது என்னய்யா நயனம்? நாயனம்? என்று நம்மில் யூத்களின் மனதுகளில் கேள்வி எழலாம்தான். "கண்கள்" என்றோ "பார்வை" என்றோ பொருள் தரும் விதமான சொல் அது - என்பதால் ஸ்டைலாகப் பெயர் சூட்டப் பயன்படுத்தி இருக்கிறேன், அவ்வளவே. மற்றபடிக்கு "நள்ளிரவின் கண்கள்" என்பதான பொருளே இந்தத் தலைப்பிற்கு.
And ரொம்ப ரொம்ப காலம் கழித்து ஒரு out & out டிடெக்டிவ் அவதாரில் டெக்ஸ் ரவுண்டு கட்டி அடிப்பதை இந்த 256 பக்க எக்ஸ்ட்ரா நீள சாகசத்தில் மெய் மறக்க தரிசித்திட உள்ளோம். கார்சன் கிடையாது, கிட் வில்லர் கிடையாது, 'வோ' போடும் டைகர் ஜாக்கும் கிடையாது. ஆனால் சோலோவாக அந்தச் சிறு நகரத்தைத் தன் சுட்டுவிரலில் கட்டி ஆண்டு தெறிக்கவிடும் ஒரு வாசிப்பனுபவத்தை நம்மவர் இம்மாதம் வழங்குகிறார். In fact, இந்த ஆல்பத்தினூடே பேனா பிடிக்கும் போது உற்சாகம் கரைபுரண்டோடாத குறைதான். ஓஹோ, களவாணி படவா இவன் தானா? என்றபடி கே ஒரு திக்கில் டெக்ஸுடன் நாம் டிராவல் செய்தால், அங்கு போய் பார்த்தால் அது முட்டுச்சந்தாக இருக்கும். சரி ரைட்டு, என்று தல அடுத்த திக்கில் புறப்படும் போது, நாமும் அவசர அவசரமாய் வேஷ்டியை இடுப்பில் சொருகிக் கொண்டு அவர் பின்னே லொங்கு லொங்கு என்று ஓடினால், இமுறையும் பிம்பிலிக்கா பிலாக்கி என்று வில்லன் தண்ணி காட்டுவதை உணர முடியும். ரொம்ப ரொம்ப ரொம்ப காலமாச்சு - ஒரு டெக்ஸ் சாகசத்தில் இத்தனை ஈடுபாடு கொண்டு "வாட் நெக்ஸ்ட்?" என்ற கேள்வியோடு பயணித்து. அதுவும் நள்ளிரவில் தனித்து நிற்கும் அந்த மாட மாளிகையில் அரங்கேறும் நிகழ்வுகள் ஒவ்வொன்றுமே செம திகில் ரகங்கள். Again ஒரு சின்ன வேண்டுகோள் மக்களே : இந்த ஆல்பத்தை முடிந்தால் ஒரு இரவின் தனிமையில் 'ஏக் தம்'மில் வாசிக்க முனையுங்களேன். அற்புதமான சில மணி நேரங்கள் உத்தரவாதம் என்பேன். நள்ளிரவின் நயனம் doubtless a jewel in Tex's shining crown!
அக்டோபரின் இதழ் நம்பர் மூன்று என நான் கையைக் காட்டப்போவது நமது சமுராய்களின் "வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே" சாகசத்தின் திசையில் தான். இங்கே சின்னதாய் ஒரு விளக்கமும். இந்தக் கதைத் தொடரினில் பார்வைத் திறன் குறைந்த மாஸ்டர் இச்சி மாத்திரமே நிரந்தரர் போலும். பாக்கி அனைவருமே அந்தந்த சாகசங்களில் தலைகாட்டிவிட்டு ஆங்காங்கே கழன்று கொள்வார்கள் போலும். இம்முறையோ இச்சியோடு டிராவல் செய்வது ஒரு உயர்குடி சீமாட்டி. அவருக்கு வஞ்சம் தீர்க்கும் அவசியம் என்ன எழுந்தது? நளினமான விரல்களில் மரணத்தின் ஆயுதங்கள் தாண்டவமாடுவது ஏன்? என்றெல்லாம் இந்தச் சித்திர விருந்தில் ரசித்திட உள்ளோம். In fact, நமது காமிக்ஸ் வாசிப்பின் போது "ஊ", "யா", "ஊ", "யா" என்றெல்லாம் ஜாக்கி சான் படத்தில் வருவது போலான பின்னணி சவுண்ட் எஃபெக்ட்டுகளுக்கு ஏதாச்சும் ஒரு வாய்ப்பு இருந்தால், இந்த புக்கை நீங்கள் புரட்டி முடிக்கும் அரை மணி நேரத்திற்கும் தொண்டை கிழிய சவுண்ட் எஃபெக்ட் ஓடிக் கொண்டே இருந்த பொழப்பாகி இருக்கும். It's an absolute action blockbuster and சித்திரங்களில் ஓவியர் காட்டியுள்ள ஜாலங்கள் simply breathtaking! "வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே" நாம் இதுவரை தமிழ் காமிக்ஸில் பார்த்திராத ஒரு உலகின் அசாத்தியச் சித்தரிப்பு.
And புக் நம்பர் 4, அமேசான் கானகத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் மிஸ்டர் நோ. அட்டவணையில் தெரிவித்தது போலவே இதுதான் மிஸ்டர் நோ தொடரின் முதன் முதல் சாகசமுமே. பெரியவர் ஜி.எல். போனெல்லியின் உருவாக்கம். 1975ல் கவ்பாய் காமிக்ஸ் உலகிலிருந்து முற்றிலும் மாறானதொரு கதைக்களத்தில் இந்தப் புது நாயகரை இறக்கிவிட்டிருந்தார். பின்னாட்களில் பெரியவர் போனெல்லியின் கதைக்களத்தை கொஞ்சமாய் இரவல் வாங்கி, சில பல காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் கதாசிரியர்கள் பயன்படுத்தி இருப்பதை இந்தக் கதையோட்டத்தினூடே உணர முடிந்ததெனில் - ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் மக்களே - இது தான் முதலில் வந்தது ! So இதே ஜாடையில் பின்னாட்களில் வந்திருக்கக்கூடிய கதைகள் தான் காப்பிகள் ! எது எப்படியோ - மிஸ்டர் நோ ஜாலியாய் சரக்கடிக்கிறார் ; பைப்பர் பிளேனை புதுப் பொண்டாட்டியாட்டம் கொஞ்சுகிறார், குலாவுகிறார் , அமேசானின் ஆகப் பெரும் ஏழரைகளை சம்பாதித்த கையோடு மாநஸ் நகருக்கேயும் திரும்பவும் செய்கிறார். An absolute breezy read !
இம்மாத ரெகுலர் தடத்தின் இதழ்கள் சகலமும் இந்த மிஸ்டர் நோ சாகசத்துடன் நிறைவு கண்டிட, இதழ் நம்பர் ஐந்தாக தலைகாட்டுவது FAB 5-ன் 'கதிரவன் கண்டிரா கணவாய்'. கடந்த மூன்று நான்கு நாட்களாக என்னை நாக்கு தொங்கச் செய்து வரும் புண்ணியம் இந்த ஆல்பத்துக்கே சாரும். யோசித்துப் பார்த்தால், இந்த ஆல்பம் நம் கைக்கு வந்து ஆறோ, ஏழோ ஆண்டுகள் நிச்சயம் இருக்கும். ஆனால் இருண்ட பூமிக்குள் சிக்கிக்கிடக்கும் ஒரு மிரட்டலான உயிர் தப்பும் சர்வைவல் சீரிஸ் கதையினை கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் வெளியிட மனசு ஒப்பவில்லை. 2021-லும் அதே கதையாகிட மறுக்கா தள்ளிப் போட்டேன். அப்புறமாய் ஜம்போவிற்கே கல்தா தரும் ஒரு சூழல் உருவாகி இருக்க, இது போலான ஒன் ஷாட்ஸ் கையில் அப்படியே தேங்கிவிட்டன. 2023-ல் ஏதேனும் ஒரு தருணத்தில் இதை நுழைத்து விடலாம் என்ற எண்ணத்தில், அந்நேரம் நமக்குப் பணி செய்து வந்ததொரு சகோதரியிடம் கொடுத்து இதை எழுதி வாங்கி இருந்தோம். And ஏதோ ஒரு வேலை குறைவான தருணத்தில் இதனை டைப்செட் செய்தும் தயாரித்துவிட்டனர் நம்ம ஆட்கள். ஆனால் எடிட்டிங்கிற்குள் புகுந்தபோது அந்த மாமூலான நெருடல் உசிரை இங்கேயும் வாங்கத் தவறவில்லை. மொழியாக்கத்தில் நிறையவே திருத்தங்கள், மாற்றங்கள் செய்தால் தேவலாமே என்ற எண்ணம் ஒரு ஐந்து, ஆறு பக்கப் பயணத்திலேயே எனக்குத் தலைதூக்க, 160 பக்க சாகசத்தை பட்டி டிங்கரிங் பார்க்க 'தம்'மே இருக்கவில்லை. So, "அப்பாலிக்கா பார்த்துக்கலாம், அப்பாலிக்கா பார்த்துக்கலாம்" என்ற கதையாக ஒரு இரண்டரை ஆண்டுகளையும் கடத்தியாகிவிட்டது. இறுதியாக ஏதோ ஒரு குருட்டுத் தைரியத்தில் இந்த FAB 5 தொடரை அறிவித்தபோது, 'கா கா கா' ஆல்பத்தையும் எப்படியாவது கரைசேர்த்தே தீர்வது என்று தீர்மானித்தேன். ஏனெனில் இதுவே இதற்கு லாஸ்ட் சான்ஸ் என்றதொரு உணர்வு உள்ளுக்குள் தலைவிரித்தாடியது. இப்போதும் சோம்பலுற்று, இப்போதும் சொதப்பி வைத்தால், இது நிரந்தர கோவிந்தா என்று என் உள்மனசுக்குத் தெளிவாகவே தெரிந்தது.
ஆக, ரெகுலர் இதழ்கள் சகலத்தையும் தயார் செய்து முடித்த பிற்பாடு, மேஜையின் ஓரத்தில் கத்தையாய் ஒருவண்டித் தூசி சேர்ந்து கிடந்த இந்த ஆல்பத்தின் பக்கங்களை ஒருவழியாகப் புரட்ட ஆரம்பித்தேன். கதை சமகாலத்துப் பின்புலம் கொண்டது. So, பெருசாய் புராதன நெடி எல்லாம் அடிக்கவில்லை. அதே சமயம், கதாசிரியர் கிறிஸ்டோஃப் பெக் பற்றி எனக்கு நிரம்பவே பரிச்சயம் உண்டு என்பதால் இங்கு என்ன எதிர்பார்ப்பது என்பது பற்றியும் ஓரளவுக்கு ஐடியா இருந்தது. மனுஷன் தனது கதைமாந்தர்களை நாயடி பேயடி அடித்து, இல்லாத லோல்கள் எல்லாம் பட வைப்பார் என்பது பாலபாடம். So, இந்தக் கதையும் அதே டெம்ப்ளேட்டில் டிராவல் ஆக, கடந்த நாலு நாட்கள் 'ஆடரா ராமா தாண்டரா ராமா' என்று கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மொழியாக்கத்தை மாற்றி அமைத்து, பூமியின் பாதாளத்திற்குள் சிக்கிக்கிடக்கும் பசங்களோடு நானும் தத்தளித்து வந்தேன்.
Honestly, கிறிஸ்டோஃப் பெக்கின் டிரேட்மார்க்கில் "அடல்ட்ஸ் ஒன்லி" சமாச்சாரங்களை எப்படியாவது உட்புகுத்துவதும் அடங்கும் என்பது தெரிந்ததே. அட, கிட்டத்தட்ட முக்காலே மூன்று வீசம் பயணித்துவிட்டோம், இன்னும் பெரிதாய் மனுஷன் குண்டை தூக்கிப் போடக்காணோமே என்றபடியே பக்கங்களைப் புரட்டியபோது, 'பச்சக்' என ஒரு ஐந்தரைப் பக்க சீக்வென்ஸ் கதைக்கு நடுவே குபீரென்று தாண்டவமாடுவதைப் பார்க்க முடிந்தது. இது கதைக்குத் தேவைதானா? இது இல்லாமலும் வண்டி ஓடுமா?என்று கேட்டால், "ஓடும் தான்" என்றே பதில் கிட்டியது. இருந்தாலும் கதை மனிதர்களைப் பற்றிய, அவர்களது குணாதிசயங்கள் பற்றிய அடையாளமாய் கதாசிரியர் இதைச் சேர்த்து வைத்திருக்கிறாரா? அல்லது இது கிளுகிளுப்புக்கான சைடு டிஷ் மட்டும்தானா? என்ற கேள்வி என்னை நேற்று முழுக்க ஆட்டிப்படைத்தது. நமது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் அதை வினவி வைத்தபோது, இது மாமூலான டிக்கிலோனா ரக சீக்வென்ஸாக இருக்குமோ என்ற எண்ணத்தில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட நண்பர்கள் "அப்படியே தந்துவிடுங்கள்" என்றே அபிப்ராயப்பட்டிருந்தனர். ஆனால் trust me guys, அதை அப்படியே வெளியிட்டிடும் பட்சத்தில், சர்வ நிச்சயமாக புக் வெளியான பின்னே மூ.சந்தில் ஒரு முழு பழகிப் பார்க்கும் படலம் அரங்கேறிடும் என்று மட்டும் என் உள்ளுணர்வு எச்சரிக்கின்றது. நம்மில் நிறையவே மகளிர் வாசகர்களும் உள்ளனர் எனும்போது இதை ராவாக அப்படியே வெளியிட்டு வைத்து, அவர்களை சங்கடத்துக்குள்ளாக்கும் தப்பைச் செய்திட வேண்டாமே என்று பார்க்கிறேன். புரிகிறது, இந்தக் கேள்வியை நான் பொதுவெளிக்கு கொண்டு வந்திருக்காமலேயே நானாகவே கத்தரி போட்டிருக்கவும் செய்திருக்கலாம் தான். ஆனால் அதை நான் உங்கள் மத்தியில் பகிர்ந்ததற்கு ஒரு காரணமும் உள்ளது. அந்தக் காரணத்தை புக் வெளியான பிற்பாடு சொல்கிறேனே. இப்போதைக்கு அதைப்பற்றிப் பேசினால், இந்த இதழ் சார்ந்த எதிர்பார்ப்பை மட்டுப்படுத்தியது போலாகிவிடும். So ப்ளீஸ் wait until the book is out.
கதையைப் பொறுத்தவரை, இது நான் அடிக்கடி சொல்வது போல பூமியைப் புரட்டிப்போடப்போகும் இதிகாச ரேஞ்செல்லாம் கிடையாது தான். ஆனால், சாதாரண, சமகாலத்து மனிதர்களை விசித்திரமான சூழ்நிலைகளுக்குள் தள்ளி, பொம்மலாட்ட பொம்மைகள் போல ஆட்டுவிக்கும் கதாசிரியரின் வழக்கமான பாணியில் அச்சரம் பிசகாமல் பயணிக்கின்றது. சுரங்கப் பள்ளத்தினுள் விழுந்துகிடக்கும் அந்த இளசுகளோடு நாமும் கொடூரமான சில பகல்களையும் இரவுகளையும் கழித்தது போன்ற உணர்வை இந்த இதழ் தந்தால், 'Job Well Done' என்பேன்! எது மாதிரியும் இல்லாத ஒரு திசையில் பயணிக்கும் இந்த ஒன்-ஷாட் ஆல்பத்தை மிஸ் செய்வோர், நிச்சயமாக ஒரு offbeat களத்தைத் தவறவிட்டிருப்பார்கள். 'FAB 5' சந்தாவில் இன்னமும் இணையாதவர்களுக்கு—still not too late guys, you can jump in right now!
'கதிரவன் கண்டிரா கணவாய்' தவிர்த்த பாக்கி இதழ்கள் சகலமும் பிரிண்ட் ஆகி பைண்டிங்கில் உள்ளன. இந்த இதழ் மாத்திரமே இன்றைய பொழுதில் இறுதி எடிட்டிங்கிற்கு உட்பட்டு, நாளை அச்சுக்குச் சென்று, நாளை மறுநாள் பைண்டிங்கிற்குச் செல்லும் என்று எதிர்பார்த்திடுகிறோம். Fingers crossed! எல்லாம் ஓகே ஆகும் பட்சத்தில் புதனன்று டிஸ்பாட்ச்; தவறும்பட்சத்தில் வியாழன் உறுதி.
712 பக்கங்கள் என்றதொரு மினி மலையில் ஏறிய அயர்வு ஒருபுறம் கண்களைச் சுழற்ற, பற்றாக்குறைக்கு டிசம்பரில் வரவிருக்கும் 'டின்டின்' இதழுக்கும் பேனா பிடித்து விரல்கள் கதறாத குறைதான். இம்முறை டின்டினில் வழக்கத்தை விடவும் வசனங்கள் ஏகமோ ஏகம்! சரி ரைட்டு, ஒருவழியாய் பணிகளை முடித்துவிட்டோமே... கொஞ்சமாய் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாமா என்று பார்த்தால், நவம்பரில் கடோத்கஜர்கள் பாணியில், ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று தீபாவளி மலர்கள் வெயிட்டிங்கில் இருப்பது புரிகிறது! So, குட்டிக்கரணங்களே வாழ்க்கை என்ற சாங்கோடு, மெஃபிஸ்டோ உடனும் எமா உடனும் பத்மா உடனும் அடிக்க வேண்டிய லூட்டிகளைப் பார்க்கக் கிளம்புகிறேன்.Bye guys, see you around! Have a lovely Sunday!





First
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
Deleteநன்றிங்க
Deleteவாழ்த்துகள் சகோ
DeleteHi...
ReplyDeleteSecond
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஇதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் படித்துவிட்டு வருகிறேன் 🙏🌹🙏🌹
ReplyDeletehi
ReplyDelete🙋🏻♂️
ReplyDelete🙋🏽♀️🙋🏽♀️🙋🏽♀️
Deleteஉங்களுக்கு அவர கிட்ட வம்பு பண்ணாம இருக்க முடியாது போல ரம்யா ☺️
Delete🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
DeleteHi..
ReplyDeleteHi
ReplyDeleteஐ புது பதிவு 😍😍😍
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDeleteஅக்டோபர் 5 கதைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம், கண்டிப்பாக ஒரு வித்தியாசமான மாதம். இரண்டு புதிய கதைகள் இரண்டுமே ஆர்வத்தை தூண்டுகின்றன, அதுவும் பூனையார் கதை ரொம்ப நாள் காத்திருப்பு.
ReplyDeleteஅவர் டெக்சின் நள்ளிரவின் நயனம் வழக்கமான டெக்ஸ் அட்டை படத்தில் இருந்து வேறுபடுகிறது, நன்றாக உள்ளது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபூனையாரின் முகம் மட்டும் உள்ள அட்டைப்படம் செம வித்தியாசமாக இருக்கிறது, இதுவே புத்தக திருவிழாவில் புதியவர்களை ஈர்க்கும்.
ReplyDeleteநமது காமிக்ஸ் வரலாற்றில் அட்டை படத்தில் நாயக நாயகிகளுடன் குதிரை, நாய் போன்ற மிருகங்கள் வந்துள்ளன ஆனால் ஒரு பூனை முழு அட்டைபடத்தை ஆக்கிரமித்து வருவது இதுவே முதல்முறை என்று நம்புகிறேன்.
சூப்பர் மிகவும் அழகாக அட்டைப்படம்.
இல்லை திகில் அட்டை படத்தில் ஒரு முறை பூனை முகம் முழுவதும் வந்துள்ளது. நண்பரே.
Deleteமார்ச் 1986-ல் வெளியான திகில் இதழ் # 3
DeleteSuper sir
Deleteஎன்ன ஒரு ஞாபகம் சார்.
Deleteநானும் வந்தாச்சு.
ReplyDeleteஅட்டை படங்களை பார்த்து விட்டேன் அடுத்ததாக பதிவை முழுமையாக படித்து விட்டு பின்னர் வருகிறேன்.
ReplyDeleteரொம்ப ரொம்ப காலம் கழித்து ஒரு out & out டிடெக்டிவ் அவதாரில் டெக்ஸ் ரவுண்டு கட்டி அடிப்பதை இந்த 256 பக்க எக்ஸ்ட்ரா நீள சாகசத்தில் மெய் மறக்க தரிசித்திட உள்ளோம். கார்சன் கிடையாது, கிட் வில்லர் கிடையாது, 'வோ' போடும் டைகர் ஜாக்கும் கிடையாது. ஆனால் சோலோவாக அந்தச் சிறு நகரத்தைத் தன் சுட்டுவிரலில் கட்டி ஆண்டு தெறிக்கவிடும் ஒரு வாசிப்பனுபவத்தை நம்மவர் இம்மாதம் வழங்குகிறார்.-அருமை.. டெக்ஸ் வாசிப்புக்கு வெயிட்டிங்..
ReplyDelete+1
Deleteசூப்பர் பதிவு சார். புதன் கிழமை அல்லது வியாழன் அன்று Despatch. இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
ReplyDelete+1
Deleteபல விருப்ப கதாநாயகர்களின் புது ரிலீஸ் களை..... ட்ரைலர் வடிவில் பார்த்தாகி விட்டது.... Book parcel ற்கு ஆவலுடன் waiting. 🥰😍
ReplyDeleteவரும் வாரத்தில் சார்... !
Deleteஇந்த மாதம் ஐந்துக்கு ஐந்தும் ஹிட் அடிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக பட்சி சொல்கிறது.
ReplyDeleteஅது non-diabetic பட்சியாக இருக்கும் பட்சத்தில் ஒன் கிலோ சர்க்கரை பார்சல்லல்லல் !!
Deleteபார்சல் வாங்கி வச்சுருங்க சார்...
Delete//non-diabetic பட்சியாக//
Delete😂😂😂
அட்டகாசமான அக்டோபர் மாதம் தான்!
ReplyDeleteவணக்கம் அனைவருக்கும்.
ReplyDeleteஅக்டோபரிலும் ஒரு தீபாவளி.
ReplyDeleteஇது பெரிய செலவை உருவாக்காத தீபாவளி சார் !
Deleteபோன மாதமே முதல் வாசிப்பு மட்டுமல்ல முதலிடமும் டெக்ஸ் தான்டெக்ஸ் தான் என்று மனசுக்குள் உறுதி செய்து கொண்டு பார்சலை பிரித்த பிறகு ப்ளூ கோட்ஸூம் ஸ்டெர்னும் மறுவாசிப்பு மறுவாசிப்பு என்று ஈர்க்க டெக்ஸ் பின்னரே வாசிக்க முடிந்தது.இம்மாத வெரைட்டி யும் டெக்ஸை முதல் வாசிப்பிற்கு விடாது போல ! டெக்ஸ் மட்டுமல்லாமல் அனைத்து புத்தகங்களுமே முதல் இடத்திற்கு முந்துவது போன்ற 2026ன் அட்டவணை போன்றே2027 ன் அட்டவணை அமைய புனித மானிடோவை வேண்டுகிறேன்.
ReplyDeleteகுஞ்சாய்ன் !!
Deleteசார் அருமை.....இது வரை வந்லதிலே டாப்பட்டைக்கு அந்த பூனையும் நோவு கணவாயும் போட்டி போட....எதை முதலில் படிப்பது என்பதற்கு நான்கு கதைகளுமே உரியன என்றாலும்....பூனையா....கணவாயா என போட்டி மனதில்....நேற்றுதான் ஓல்டு மேன் அண்ட் சீ கதையை ஆடியோ வா கேட்டதும் என் மனதெல்லாம் நீங்கதான் வந்து போக....நீங்க இங்க தூவிய வரிகள் நிரூபிக்கின்றன....வெற்றி என்பது என்ன....ஜெயிக்கனும்னு அவசியமல்ல....தன்னைத்தானே திருப்தி படுத்தும்....ஓயாத போராட்டம்...ராயல் சல்யூட் ஆசிரியரே
ReplyDelete//OLD MAN & THE SEA கதையை ஆடியோவா கேட்டதும் என் மனதெல்லாம் நீங்கதான் வந்து போக//
Deleteஇதிலே ஏதாச்சும் உள்குத்து, வெளிக்குத்து உண்டோ கவிஞரே.. ?
மனமார்ந்த வரிகள் சார்
Deleteஓல்டு மேன் நீங்க....கதை புத்தகங்க அந்த மீன்...சிறுவன் வாசகர்கள்
Delete//ஓல்டு மேன் நீங்க....கதை புத்தகங்க அந்த மீன்...சிறுவன் வாசகர்கள்//
Delete💙💚💛
// 712 பக்கங்கள் என்றதொரு மினி மலையில் ஏறிய அயர்வு ஒருபுறம் கண்களைச் சுழற்ற //
ReplyDeleteசார் உடம்பையும் கவனித்து கொள்ளுங்கள் சார். உடம்புக்கு தேவையான ஓய்வை கொடுங்க சார்.
இன்னிக்கி ரெஸ்ட் சார் - நாக்கு தொங்கியே போச்சு அக்டோபர் புக்ஸுடன் அடித்த ரகளையில்... !
Deleteஅட்டவணை?
ReplyDeleteஉரிய நேரத்தில்... !
Deleteவாழ்த்துகள் சார்! காமிக்ஸ் வெறும் வாசிப்பு மட்டுமல்ல,ஒரு தனி பிரபஞ்சம்.இதழ்களை குறைக்காதீர்கள். சற்றே விலை ஏறினால் பாதகமில்லை,தொடர்ந்துஉங்களுடன் பயணிக்க நாங்கள் தயார்.தமிழில் இந்த விலையில் இந்த தரத்தில் நீங்களில்லாமல் இதழ்கள் சாத்தியமில்லை என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டு விட்டது .2027 அட்டவணைக்காக காத்திருக்கிறோம்.
ReplyDelete//காமிக்ஸ் வெறும் வாசிப்பு மட்டுமல்ல,ஒரு தனி பிரபஞ்சம்.//
DeleteVery true sir..
நண்பர் செந்தில் வேல் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்...
Deleteபதிவிற்கு நன்றி சார்...வாசித்து விட்டு வருகிறேன் ...:-)
ReplyDeleteஅடடே...விடிஞ்சிருச்சா தலீவரே.. ?!
Delete:-)
Deleteஅட போங்க சார் இது எங்க தலைவர் தூங்க போற நேரம் சார்
Delete:-(
DeleteSir Chennai book fair wait for next
ReplyDeleteஇம்மாத இதழ்களின் உங்களின் கருத்தாக்கமே அனைத்து இதழ்களையும் உடனே வாசிக்க வைக்க ஆர்வத்தை தூண்டுகிறது சார்...அதற்கு இன்னமும் தூண்டிலாய் புத்தகங்களின் அட்டைப்படங்கள் அமைந்து உள்ளன..அனைத்து இதழ்களின் அட்டைப்படங்களும் வெகு அருமை சார்...
ReplyDeleteஷார்ட் ரீடிங் ...ஷார்ட் ரீடிங் என நீங்கள் என்னத்தான் சொன்னாலும் இந்த முறை இப்படி ஐந்து புத்தங்கள்...அதிக பக்கங்கள் எனும் பொழுதுதான் வழக்கமான மாத சந்தோசத்தை விட இந்த மாத சந்தோஷம் தன்னால் அதிகரிக்கிறது சார்...எனக்கு ( எங்களுக்கு..)இதில் தான் மகிழ்ச்சி அதிகம்..
ReplyDeleteஉண்மை உண்மை
Deleteஆமாம் தலைவரே
Deleteஉள்ளது உள்ள படியே சென்சார் செய்ததில் வருத்தம் தான் ..மிகவும் ஓவர் எனில் அந்த சென்ஸார் ஓகே தான்...கதைக்கும் பாதிப்பு இல்லை என சொல்லி விட்டீர்கள் எனவே வருத்தம் பாதியாக குறைகிறது தான்...
ReplyDeleteஆனாலும்....:-)
துடைச்சுக்கோங்க தலீவரே... கரைபுரண்டு வழியுது..!
Deleteஉங்க கலை ஆர்வத்தைச் சொன்னேன்... 💪
DeleteROFL 🤣
Delete:-)))
Deleteஞாயிறு காலையே புத்துணச்சிப் பதிவு❤️❤️❤️❤️👌.
ReplyDeleteப்ளாக்ஸாட் அட்டைப்படம் மட்டுமல்ல கதை முன்னோட்டமும் சூப்பர்.
அக்டோபர் மாதமும் அடிபொலியா இருக்கப் போவுது.
என்னமோ தெரியலை இந்த வருடத்தின் ஒருசில அட்டைப் படங்களை தவிர பெரும்பாலான அட்டைப்படங்கள் செம்ம தூக்கலாக உள்ளது.
க க க - நீங்க எதெது வேணாம்னு தள்ளி வைக்கறீங்களோ அந்த கதைகள் தான் தனித்துவமான வரவேற்பு பெறுகிறதுங்க சார்.
அடுத்த வருசமும் ஒரு தனித்தடமா போட்டு மீதியுள்ள இப்படிப்பட்ட கதைகளை எங்களுக்கு கொடுங்கள்.
*ரகம் ரகமாய் இத்தனை பாணிகளில் இத்தனை கதைகளை முயற்சித்துப் பார்க்கும் வாய்ப்பு கற்பனையில் கூடக் கிட்டிடாதே*...
சத்தியமான வார்த்தைகள் சார்.
சற்று சிரமப்பட்டாலும்,
விதவிதமான ஜானர்களில் இப்படி மாதம் 4 அல்லது 5 புக் வருவது காமிக்ஸ்க்கு ஆரோக்கியமும்,
எங்களுக்கு உற்சாகமும் சார்.
இதுதான் சரியான முறை.
இதே பாதையில் தொடர்ந்து பயணிப்போம் சார்.
அக்டோபர் இதழ்களுக்காக
ஆவலுடன் வெய்டிங்.....❤️
உ-சு-ப்-பே-த்-தி-யேயேயே........ 🥹🥹
Deleteஇத்தனை இதழ்களுடன் அட்டவனை இதழ்களும் இருந்து இருந்தால் இந்த மாதமே தீபாவளி வெடி வெடித்தது போல் கொண்டாடி இருக்கலாம் சார்...:-)
ReplyDeleteதலீவரே.... நாமல்லாம் சூதானமா ரண்டு தரைச்சக்கரத்தையும், கம்பி மத்தாப்பையும் கொளுத்திட்டு அதிரசம் சாப்புட போற ஆட்களாச்சே - வெடி கிடிலாம் செட் ஆகுமா?
Deleteசார்.. சிவகாசில உங்களுக்குத் தெரிஞ்ச பட்டாசு கம்பெனியில் சொல்லி 'வேப்பிலை வெடி' னு ஒரு பட்டாசு ரகத்தை அறிமுகப் படுத்தச் சொல்லுங்களேன் சார்?
Deleteவேப்பிலை வெடி
Deleteஎப்படி வெடிக்கும் இளவரசரே
வெடிக்கறதெல்லாம் வழக்கமான வெடிகளைப் போலத்தான் சகோ! ஆனா அதுவொரு 18+ வெடி! அதாவது, அது வெடிச்சபிறகு சிதறி விழும் துண்டு பேப்பர்கள் எல்லாத்துலயும் 'கதிரவன் கண்டிரா கணவாயின்' அந்த 5½ பக்க காட்சிகள் காணக்கிடைக்கும்!😝😝
Deleteஇளவரசரே 😂😂😂😝😝
Delete:-)))
Deleteவணக்கங்கள்
ReplyDeleteபதில் வணக்கங்கள்......:-)
DeleteBlacksad அட்டைப்படம் தூள்
ReplyDeleteஇதன் முதல் அட்டைப்படம் எப்படி தரப் போறீங்க என யோசித்து கொண்டு இருந்தேன்
DeleteAs always surprise and impressive
முன்னட்டை செமயா இருக்குங்க சார்
ஈயை அப்படியே அடிப்பதானால் 54 ஆண்டுப் பாரம்பரியம் தேவையே இல்லியே..?!
Deleteஇருந்தாலும் தங்களுடைய மெருகூட்டல் அருமை
Deleteக. க. க. கதையில் "அந்த" பக்கங்களுக்கு கத்திரிப் போட்டதால் மூ. ச. முனை வரைக்கும் சென்று திரும்பி விட்டீர்கள் சார், நன்றி.
ReplyDeleteஆமாம் சார்...வருத்தங்களுடன் நன்றி....:-)
Deleteநமக்குலாம் பாரீஸ் கார்னர் மெரி மூ. ச. கார்னரும் ஜகஜமானதாச்சே?!
Deleteமூ.ச'க்கு சீரியல் பல்பு, பேனர் - எல்லாம் ஏற்பாடு பண்ணச் சொல்லியிருந்தேன்.. அத்தனையும் போச்சே!!
Deleteவிஜய் @ சங்கத்தில் பண பழக்கம் அதிகம் இருக்கும் போல தெரிகிறது 😉
Deleteலைட் ஆப் பண்ணிட்டு அப்படியே வைங்க இளவரசரே
Deleteபுத்தகங்கள் வந்தபின்பு எதற்கும் யூஸ் ஆகலாம்
ரம்யா @ நல்ல யோசனை
DeleteThank you 😁😎
Deleteபக்கங்களை censor செய்ததால் மூ.ச வுக்கு. வாய்ப்பிருக்கே
Deleteஅதே அதே தனபால் சார் 😄
Deleteஅப்கோர்ஸ்ங்க சகோ
Deleteபுத்தகங்கள் வந்த பின் மூசா--க்கு வேலை இருக்கும்
அப்படியே கதாசிரியர் Rodolphe யின் அடுத்த படைப்புக்களான அமோசான் மற்றும் நபீமியா தொடர்களுக்கும் ஏதாவது வழி பண்ணுங்க சார்.
ReplyDeleteஅவரை நல்ல விதமாவே நினைவு கூர்ந்திடுவோமே சார்?!
Deleteசார், இந்த தேவை இல்லாத காட்சிகளை நீக்குவது சரி என்பேன். ஏனென்றால் பல சமயங்களில் நான் படிக்கும் புத்தகங்களை என்னுடைய குழந்தைகளுக்கு படிக்க, படங்களை பார்க்க செய்வேன்; பல விதமான இடங்கள், காட்சிகள், மனிதர்கள், இது எல்லாம் தெரிந்துக்கொள்ள நம்ம காமிக்ஸ் புத்தகங்களை கொடுப்பேன். அப்பொழுதே இந்த மாதிரி தேவை இல்லாத படங்கள், காட்சிகள் இருந்தால் எனக்கு தர்ம சங்கடமாகிவிடும். அதனால ஒவ்வொரு தடவையும் புத்தகத்தை கொடுக்கும் போது அதுல எதாவுது தேவை இல்லாத பிரச்சினைக்குரிய காட்சிகள் இருக்கிறதா என்று பார்த்து விட்டு தரவேண்டிய சூழல் உருவாகியது. இதுவே பயமில்லாமல் கொடுப்பதாக இருந்தால் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்து பார், படி என்று சொல்லலாம். எனவே இந்த கருத்தையும் பரிசீலிக்க வேண்டுகிறேன். நன்றி
ReplyDeleteNo worries நண்பரே..
Deleteயெஸ் யெஸ் யெஸ்!! நான் வலியுறுத்துவதும் இதையேதான் சார்!
DeleteEagerly waiting for.நள்ளிரவின் நயனம் art work to see the New York in ,60s
ReplyDeleteவஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே - சீமாட்டி - "Sema party " - cover pic alluthu
நள்ளிரவின் நயனத்தில் 1960'ஸ் நியூ யார்க் பார்க்கணுமா??
Deleteபதிவை முழுசா வாசிங்க ப்ரோ - மேலோட்டமா browse பண்ணினா இதான் சிக்கலே!
Oops copy paste error !! பூனையின் padathu kila நள்ளிரவின் நயனத்தில் title highlighted ah irunthathu nala vantha venai
Deleteபூனை story newyork la than nadakuthu!
V-Comics - Vatham Seyvom Vengaikale s stock iruka?
ReplyDeleteIntha masam terrific tex book kedayatha?
டெக்ஸ் அட்டைப்படம் ஆவலை கிளப்புகிறது
ReplyDeleteயார் அவள் - படங்களும் சரி கதையும் சரி ரொம்பவே ரசிக்கும் படியாக இருந்தது. பாராட்டுகள் விக்ரம்.
ReplyDeleteஅர்னால்டு அப்பரசண்டி- செம ஜிலீர் வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. சூப்பர் முயற்சி விக்ரம். கற்பனை ஜாலி கதையில் சில லாஜிக்கை அருமையாக கையாண்டு இருந்தது சிறப்பு.
ReplyDeleteஅந்த கால குடும்ப கட்டுப்பாட்டை பற்றி ஏன் சொல்லுறீங்க என்று யோசித்து கொண்டே படித்தால் அழகாக நமது க்ரிஸ்ப் ரீடிங் உடன் இணைந்து பேசியது செம; அட்டகாசமான உதாரணம். நீங்கள் சொல்லும் விளம்பரம் எனக்கு ஞாபகம் உள்ளது.
ReplyDeleteஉங்களுக்கு ஞாபகம் இல்லாம இருந்தால் தான் ஆச்சரியம்!!!
Deleteகுமார் , மற்ற நண்பர்களை விட எனது நாபக சக்தி ரொம்ப கம்மி.
DeleteNice post. Expecting more...
ReplyDelete// 712 பக்கங்கள் என்றதொரு மினி மலையில் ஏறிய அயர்வு ஒருபுறம் கண்களைச் சுழற்ற //
ReplyDeleteஅதகளம் செய்து விட்டீர்கள் போல சார்,அருமை,அருமை...
என்னமோ கூத்தடிக்கிறேன் சார் !!
DeleteEagerly waiting for this month's issues and Deepawali issues sir.
ReplyDeleteஒவ்வொரு மாசமா போலாம்ஜி !
Deleteஎதிர்பார்ப்பை எகிர செய்யும் பதிவு.
ReplyDelete//கார்சன் கிடையாது, கிட் வில்லர் கிடையாது, 'வோ' போடும் டைகர் ஜாக்கும் கிடையாது//
ReplyDeleteஉதிரம் பொழியும் நிலவே-யிலும் நம்ம தல சோலொ பெர்மான்ஸ்
ReplyDeleteதமிழ்ல movie reviewer ஒருத்தர், video end-ல “இந்த படத்தை family-யோட பார்க்கலாம்” இல்ல “இது mature audience-க்கு மட்டும்”னு சொல்லுவாரு.
சில படங்களுக்கு இது “ரேஷன் கார்டு சமாச்சாரம்” மக்களே! 😂 அப்படின்னா, family-யோட பார்த்தா உங்க பேரையே ரேஷன் கார்டுல இருந்து தூக்குற அளவுக்கு matter இருக்கு-ன்னு அர்த்தம். 🤣
அதே மாதிரி disclaimer போட்டுட்டு, pages-ஐ cut பண்ணாம அப்படியே போட்டுடுங்க சார்! 😎
// trust me guys, அதை அப்படியே வெளியிட்டிடும் பட்சத்தில், சர்வ நிச்சயமாக புக் வெளியான பின்னே மூ.சந்தில் ஒரு முழு பழகிப் பார்க்கும் படலம் அரங்கேறிடும் என்று மட்டும் என் உள்ளுணர்வு எச்சரிக்கின்றது //
ReplyDeleteஜஸ்ட் மிஸ்.
நல்ல முடிவு சார் வரவேற்கிறேன்.
கடந்த வாரம் வெளியே சென்ற போது முத்து ஆண்டு மலரை கையில் வைத்து படித்து கொண்டு இருந்த போது, சில கன்னடம் + தெலுங்கு குழந்தைகள் 8-10 வயது இருக்கும்; நமது புத்தகத்தை ஆர்வமுடன் பார்த்து, நாங்களும் பார்க்கலாமா என கேட்க நானும் யோசிக்காமல் கொடுத்து விட்டேன், அவர்கள் படங்களை பார்க்க ஆரம்பித்த பிறகு தான் ஆகா இதில் 18+ படங்கள் ஏதும் இருக்க கூடாது என்று மனசு கூவ ஆரம்பித்து நல்லவேளை அப்படி எதுவும் நடக்க வில்லை; அதன் பிறகு மேலும் சில குழந்தைகள் புத்தகம் பார்க்க வேண்டும் என சொல்ல இந்த முறை முஞ்சாகிறையாக நானே பக்கங்களை புரட்டி காண்பித்தேன் ☺️
நன்று சகோ
DeleteHi editor sir,
ReplyDeleteஅடுத்த மாத புத்தகங்களின் அட்டைப்படங்கள் எல்லாமே அட்டகாசமாக இருக்கின்றன!
Black Sad-ஐ கொண்டு வந்ததற்கு நன்றி சார். அடுத்த மாத டெக்ஸ் வில்லர் புத்தகத்தைப் பற்றி நீங்கள் சொன்னது இன்னும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்!
122th
ReplyDelete// இங்கே தனித்துத் திரியும் கடுவன் பூனை போலான முறைத்த முகரை டிடெக்டிவுக்கு, கடுவன் பூனையின் நிஜ முகத்தையே தந்திடவிருக்கிறோம். //
ReplyDeleteவிதியசமான சிந்தனை.
ஜூடோபியா - என்ற அனிமேஷன் படம் இது போன்று ஆனால் செம ஜாலியான படம்.
// அந்தக் காரணத்தை புக் வெளியான பிற்பாடு சொல்கிறேனே. இப்போதைக்கு அதைப்பற்றிப் பேசினால், இந்த இதழ் சார்ந்த எதிர்பார்ப்பை மட்டுப்படுத்தியது போலாகிவிடும். So ப்ளீஸ் wait until the book is out. //
ReplyDeleteமறக்காம இந்த தளத்தில் அடுத்த வாரம் சொல்லுங்க சார். ஆவலுடன் காரணத்தை தெரிந்து கொள்ள காத்திருப்பேன்..
Me too
Delete5 type of stories. சொக்கா நான் என்ன செய்வேன் moment. வேண்டும் வேண்டும் மாதம் மாதம் இப்படி இப்படியே
ReplyDelete❤️👍🙏...
ReplyDelete5type stories சொக்கா நான் என்ன செய்வேன் moment ...வேண்டும் வேண்டும் மாதம் மாதம் இப்படியே+10000
ReplyDeleteஅட்டை படங்கள் எல்லாம் செம. “பிளாக்ஸாட்” அட்டை படமும் தனி. உரைநடையும் வித்தியாசமாக உள்ளது. Tex இன் “நள்ளிரவின் நயனம்” இல் பன் அட்டையில் கார்சன் உள்ளரே? “வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே” இப்போதுதான் சூடு பிடிக்கும் …… பார்ப்போம்.
ReplyDeleteமிஸ்டர் நோ இன் முன் அட்டையில் உள்ளவர் , யாரோ ஒருவரை நினைவுபடுத்துவது போல் உள்ளது எனக்கு மட்டும்தானா? “கதிரவன் கண்டிரா கணவாய்” மிரட்டுவது திண்ணம்.
//மிஸ்டர் நோ இன் முன் அட்டையில் உள்ளவர் , யாரோ ஒருவரை நினைவுபடுத்துவது போல் உள்ளது எனக்கு மட்டும்தானா//
Deleteஇது முதன் முதலில் உருவாக்கப்பட்ட கதை & ஒரிஜினல் சித்திரங்கள் சகோ
அதனால் தான்
// மிஸ்டர் நோ தொடரின் முதன் முதல் சாகசமுமே. பெரியவர் ஜி.எல். போனெல்லியின் உருவாக்கம். 1975ல் கவ்பாய் காமிக்ஸ் உலகிலிருந்து முற்றிலும் மாறானதொரு கதைக்களத்தில் இந்தப் புது நாயகரை இறக்கிவிட்டிருந்தார். //
ReplyDeleteசூப்பர். ரொம்ப ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
கதிரவன் கண்டிரா கணவாய் - அட பலவருடங்களுக்கு முன்பு வர வேண்டிய கதையா சார் இது. ஒரு வழியாக வெளிச்சத்துக்கு வர போகுது:-) ஐ ஜாலி ஜாலி
ReplyDeleteOctober lineup looks exciting .. waiting for MR.NO AND BLACKSHADE ..
ReplyDeleteAthu blacksad
DeleteRight uu ..
DeleteI guess october surprise is reprint of some old book, may be Pani mandala kotai?
ReplyDeleteWrong guess :-)
DeleteTex bday special poster??
Deleteஅட்டைப் படங்கள் வாங்கி விடு வாங்கி விடு என்று தூண்டுகின்றன.ஆனால் நினைத்தவுடன் வாங்க இது தமிழ் நாடா??? இலங்கை அல்லவா? தொடரும் ஏக்கமும் காத்திருப்பும் 😔🥹
ReplyDelete2 வருடங்களாகக் காமிக்ஸ் இங்கு வரல 🥹
Delete😒😒😒😒
DeleteI am waiting for fab 5
ReplyDeleteநாளை அல்லது நாளை மறுதினம் கிடைக்கலாம் ☺️
Deleteசார் இன்று புத்தகம் கிளம்பி விட்டது. இப்போதாவது அந்த சர்ப்ரைஸ் என்ன என்று சொல்லலாமே???
ReplyDeleteI guess Tex bday special poster??
Delete