நண்பர்களே,
வணக்கம். யுகங்களுக்கு முன்பானதொரு நிகழ்வு போல் உள்ளது - புக்ஸ் வெளியான தினத்தில் ஒரு பதிவையும் போடும் போது. முன்பெல்லாம் பக்கத்து வீட்டில் மாடு கன்று போட்டிருந்தால் அதற்கு ஒரு பதிவு, ஆபீஸ் போகும் வழியில் பதநீர் விற்றுக் கொண்டிருந்தால் அதற்கு இன்னொரு பதிவு என்றெல்லாம் கூத்தடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் பிஸியான பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் பழக்கம் மலையேறி இருந்தது. And இரு வாரங்களாய், ஒழுங்குப் பிள்ளையாய் பதிவு போட ஆரம்பித்த பிற்பாடு, இந்தப் பழக்கத்திற்குமே ஒரு புனர்ஜென்மம் தந்தால் தப்பில்லை என்று பட்டது. And அதற்கு கூடுதலாய் உந்துசக்தி தந்தது ஒரு ஒடிசலான உருவமே. In fact என் பார்வையில் இந்த மினி பதிவின் நாயகனே அவர்தான்.
ஒவ்வொரு மாதமும் அட்டவணையில் முன்கூட்டியே அறிவித்த இதழ்களை slot in செய்துவிட்டு அவற்றுக்குள் தத்தகா புத்தகா என்று உருண்டு புரண்டு எப்படியேனும் முதல் தேதிக்கு தயார் செய்வது என்பது இப்போதெல்லாம் நம் ஆட்களுக்கு தூக்கத்திலும் சாத்தியம் என்ற ரேஞ்சுக்கு நகர்ந்துள்ளது. தாமதம் என்று எழும் பட்சத்தில் முக்காலேமூன்று வீசம் அது இந்த முழியாங் கண்ணனின் சோம்பல் காரணமாய் இருந்தால்தான். And ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல ஆண்டின் கிளைமேக்ஸ் பகுதியில் எப்படியோ ஒரு வண்டி இதழ்கள் குழுமி விடுவதும் இப்போதெல்லாம் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகின்றது. And அப்படிப்பட்ட பிஸியான மாதங்களில், பணிகளை முடித்த கையோடு நெட்டி முறிப்பது என்பது மெய்யாலுமே ஒரு அட்டகாச அனுபவம்.
இதோ என் முன்னே செப்டம்பரின் ஐந்து இதழ்களும் கலர்கலராய், சைஸ் சைஸாய், மினுமினுத்துக் கொண்டிருக்கின்றன. இளம் டெக்ஸ் ஒருவரைத் தாண்டி பாக்கி நான்கு இதழ்களுமே கலர் என்பதால் - மேஜை மீது பரப்பிப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் 'ஆ'வென்று பராக்குப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். As cover pages go - இம்முறை யுத்தமே : டெக்ஸுக்கும், ஸ்டெர்னுக்கும் மத்தியில்தான் என்பேன். "எமனுடன் ஒரு யுத்தம்" அட்டைப்படத்தில் அந்த கெத்து நமக்கு பரிச்சயப்பட்ட ஒன்று என்றால், "விதி எழுதிய விசாரணை"யில் சோகம் படர்ந்த அந்த முகத்தோடு ஜெயில் செல்லுக்குள் ஸ்டெர்ன் அமர்ந்திருப்பது வானவில்லின் மறுமுனை. மஞ்சள் சட்டைக்காரரிடம் அந்த கம்பீரத்துடன் ஒரு வசீகரம் தென்படுகிறது எனில், இந்த நாகரீக வெட்டியானிடமும் ஏதோ ஒரு இனம் சொல்ல முடியா ஈர்ப்பு இருப்பதை என்னளவிற்காவது மறுக்க இயலாது. So இம்மாத அட்டைப்படப் போட்டியில் எனது ஓட்டு ஸ்டெர்னுக்கே. And ஒரு பேமானி எடிட்டராக அல்லாது, காமிக்ஸ் ஆர்வலனாக மாத்திரமே இருந்திருக்கும் பட்சத்தில் இம்மாதம் முதலில் வாசிக்க நான் தேர்ந்தெடுத்திருக்கக் கூடியதுமே "விதி எழுதிய விசாரணை"யாகத் தான் இருந்திருக்கும். இன்னமும் யோசிக்கின்றேன் - இந்த மனுஷனை முதல்வாட்டி பார்த்த போதே தமிழுக்குக் கொண்டு வரும் உந்துதல் எழுந்தது ஏன் என்று. பெருசாய் ஆக்ஷன் கிடையாது தான். அண்டர்டேக்கரைப் போல இவர் ஒரு அதிரடிக்காரரும் அல்ல தான். நமக்கு நிரம்பவே பழக்கப்பட்ட வன்மேற்குப் பின்னணி - ஆனால் முற்றிலும் வேறொரு பாணியில் நம்மோடு உரையாடுகின்றது !! And டமால் டுமீல் நங் கும் என்றெல்லாம் அல்லாது மெல்லிய உணர்வுகளோடு இந்த மெலிந்த தேகக்காரரை படைப்பாளிகள் பயணிக்கச் செய்திருப்பது முதல் புரட்டலிலேயே தெரிந்தது தான்.இருந்தாலுமே எனக்கு இவர் மீது ஒரு soft corner எழாது போகவில்லை. நம்பினால் நம்புங்கள் - முன்னொரு காலத்தில்...ரொம்ப ரொம்ப முன்னொரு காலத்தில்.... நம்ம மண்டை கூட ஸ்டெர்னின் இஸ்டைலில் தொங்கும் கேசத்துடன் காட்சி தந்தது தான் அவர் பக்கமாய் அணி சேர உதவிய ஒரு காரணமோ என்னவோ??!!
இன்னும் நிறைய பேருக்கு இதழ்களே கையில் கிடைத்திருக்காது என்பதாலும் இன்னும் பலர் வாங்கி இருக்கவே மாட்டார்கள் என்பதாலும், இங்கு ஸ்பாய்லராக நான் பெரிதாக எதையும் பேசி விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றேன். மாறாக இவற்றுள் என்னை என்ன ஈர்த்தது என்பதை சொன்னால் maybe மதில் மேல் பூனையாய் நிற்கக்கூடிய நண்பர்களுக்கு தீர்மானம் செய்வது சுலபமாகி விடக்கூடுமோ என்னவோ. Without doubt - இந்த ஆல்பத்தின் பிரதம நாயகர் : சித்திரப் பணியையும், கலரிங் பணியையும், ஒருசேரச் செய்திருக்கும் ஜூலியன் மாஃப்ரே தான். அந்த முதல் பக்கத்திலேயே நியூ ஆர்லியன்ஸ் நகரின் ஒரு ஏரியல் ஷாட்.... அதுவும் ஒரு மழை பெய்யும் தினத்தில். அடுத்த பிரேமில் கல்லறைத் தோட்டத்தில் வெட்டியானும், சக பணியாளரும் பிஸியாக இருக்கும் காட்சியோடு துவங்கும் அந்த கதையில் நியூ ஆர்லியன்ஸ் நகரும் சரி, அதன் மாறுபட்ட கட்டிடங்களும் சரி, கதை சொல்லலில் ஒரு மௌனப் பங்கேற்றிருப்பதாக எனக்குப் படுகின்றது. ஒவ்வொரு லாங் ஷாட் பக்கத்திலும் பின்னணியில் தெரியும் கட்டிடங்களை மறக்காமல் பாருங்களேன் folks - ஒரே ஸ்டைலில் இரண்டாவது கட்டிடம் இருப்பதாகத் தெரியவே செய்யாது. And கதையைப் பொறுத்தவரை, எப்போதும் போலவே மெலிதான மனித உணர்வுகளே இங்கு பிரதானமாக்கப்பட்டுள்ளன. பிழைப்பு நாடி புது மண்ணில் வேர்பிடிக்க எத்தனிக்கும் மரங்கள் என்ன மாதிரியான இன்னல்களை சந்திக்கின்றன என்பதை பக்கம் 73-ல் கதை முடியும் பிரேமில் ஓவியர் மௌனமாய் சொல்லி இருப்பது ஒருநூறு வீரியமான வரிகளை விட வலியவை !!
And இங்கே நான் குறிப்பிட விரும்பும் இன்னொரு விஷயமும் உண்டு. டின்டின் கதைகளுக்கு போடப்படும் சித்திர பாணிக்கு லைன் கிளேர் என்று பெயருண்டு என ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதாவது பெரிதாய் பேக்ரவுண்ட், ஏகமாய் முகபாவங்களில் டீடைல்ஸ் என்றெல்லாம் இல்லாது, சிம்பிளாக இப்படி வரைந்தால் மூக்கு, அப்படி வரைந்தால் வாய், அப்படி வரைந்தால் கண்கள், இப்படி விரிந்தால் கோபம், இப்படி சுருங்கினால் கடுப்பு என்று சகலத்தையும் மிகச் சுலபமான நேர்கோடுகளுக்குள் அடக்கும் அந்த பாணியை ஜாம்பவான் ஹெர்ஜ் தனது அடையாளமாக்கி இருந்தார். அதே ரேஞ்சுக்கு இல்லாவிடினுமே இங்கும் ஓவியர் முகபாவங்களை இயன்ற மட்டிற்கு பெரிய மெனக்கெடல்கள் இன்றி அதே சமயம் அசாத்தியமாய் வேறுபடுத்திக் காட்ட கதை நெடுக உழைத்திருப்பது கண்கூடு. ஒற்றைப் பக்கத்தில் நம்மை ஒட்டுமொத்தமாய் மிரளச் செய்வதெல்லாம் இந்த ஓவிய பாணிக்குக் கிடைத்திருக்கும் ஒரு அங்கீகாரம் என்றே சொல்வேன். புரட்டுவோர், படிப்போர் யாரையும் பக்கம் 70 ஒரு புரட்டு புரட்டாமல் விடாது என்பது எனது திட நம்பிக்கை. "Sorry bro, எனக்கு பொழுதுபோக்கே பிரதானம், 'நொய் நொய்' என்று நகரும் கதைகளெல்லாம் நமக்கு சரிப்படாது" எனும் அணியாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் that's absolutely fine too folks. ஸ்டெர்ன் பக்கமாய் வராது ஒரு U டர்ன் அடித்து விடுங்கள். இது மெதுவாக நகரும் மென்மையான உணர்வுகளின் பிரவாகம் மட்டுமே. எனக்கு பிடித்திருந்தது, உங்களுக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் ஹாப்பி அண்ணாச்சி. இல்லாது போனாலும் no worries.
இம்மாதத்தின் எனது இரண்டாவது வாசிப்பாக இருக்கக்கூடியது நமது பாயாசக்கார பாசக்காரர் அடிக்கடி குறிப்பிடும் ஓடிக்கொண்டிருக்கும் இளமதிகாரியே. ஆத்திச்சூடி எப்போதுமே தலைப்புகளுக்கு செட் ஆகும் பட்சத்தில், ஒரு தெறிக்கச் செய்யும் vibe தரும் என்பது எனது நெடுங்கால நம்பிக்கை. And அது இம்மாதமும் மெய்யாகியுள்ளது. இந்தப் பெயரானது இளம் டெக்ஸின் தொடரின் எந்த ஒரு ஆல்பத்துக்குமே பொருந்தக்கூடிய generic வகை என்பதை மறுக்கவே மாட்டேன். So, ஓராண்டுக்கு முன்பாகவே கதைகளை, பெயர்களை இறுதி செய்யும் வேளைகளில் இது போலான தலைப்புகள் அவ்வப்போது எனக்குக் கை கொடுப்பதுண்டு. And பின்னாட்களில் அந்தக் கதைகள் ரெடியாகி, அவற்றுள் பணியாற்றும் சமயம், பெயர்கள் பொருந்திப் போவதைக் கவனிக்கும் போது, "ச்சே ... பின்னிட்டடா மாப்ள" என்று நமக்கு நாமே சால்வை போர்த்திக்கொள்ளத் தோன்றும். And இந்த மூன்று அத்தியாய சாகசத்தில் எனக்கு நிரம்பவே பிடித்திருந்தது - முன்கதை, பின்கதை, சைடு கதை என்றெல்லாம் கொக்கிகளைப் போடாது, 'ஏக்'தம்மில் மூச்சிரைக்க ஓட்டமெடுக்கும் கதையாகவும் இருந்தது தான் ! என்னதான் அத்தனை கதைகளுக்குள்ளும் புகுந்து, அன்னம் தண்ணீர் புழங்கி இருந்தாலுமே, அந்த மாதம் முடிந்த கையோடு அவை சார்ந்த cache மெமரிகளை அப்படியே ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பி விடுவது வழக்கம். So, நாலு வருஷங்களுக்கு முன் வந்த கதையில் இந்த அப்புச்சி அங்கே வந்து நாலு அப்பு அப்பினார் என்றோ, இந்த அண்ணாச்சி அந்த சாகசத்தில் உசிரை கொடுத்தார் என்றோ கதைகளின் ஊடே குறிப்புகள் எழும்போது மண்டையை மங்கு மங்கென்று சொரிந்து கொள்ளவே தோன்றும். இம்முறை அதுபோலான இடர்கள் ஏதுமின்றி, கோவையின் ஜி.டி.நாயுடு ஃபிளைஓவரில் 'சல்' என்று வண்டி பறப்பது போல இளம் டெக்ஸும், டைனமைட்டும் தூள் கிளப்புவது செப்டம்பரின் செம ஹைலைட் என்பேன். And பாயாசம் போடும் எண்ணத்தில் இருப்போர் கூட இதில் relate செய்திட ஒரு வசனம் உள்ளது. எங்க எந்த context-ல் என்று தேடிப் பிடிப்பது உங்க வேலை மக்களே. ...
Moving on, இம்மாதத்தின் எனது மூன்றாவது வாசிப்பாக இருக்கக்கூடியது 'கோட்டையில் ஒரு குட்டிப் புயல்' தான். ஒரு போஷாக்கான பொடியன் கையை சப்பிக் கொண்டிருக்க, பின்னணியில் நமது சார்ஜன்ட் மாட்டின் மடியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, அந்த யுத்தகளம் ஒரு குட்டி நர்சரி போல் காட்சி தருவது ஆரம்பமே வித்தியாசமானது என்று பறைசாற்றுகிறது. பக்கத்தைப் புரட்டும் முதல் நொடியில் என்னை மிரளச் செய்வது - அந்தக் கலர் கூட்டணி தான். சும்மா பச்சை பசேல் புல்வெளிகளும், அடர்நீல ராணுவச் சீருடைகளும், பளீரென்ற மஞ்சள் தொடுவானப் பின்னணிகளும், எமிலியின் பஞ்சுமிட்டாய் கலர் கவுன்களும் பக்கத்துக்குப் பக்கம் கண்ணைப் பறிக்கின்றன என்று சொன்னால் அது மிகையே நஹி. நான் ஹாட்லைனில் குறிப்பிட்டிருந்தது போல, இந்த சாகசம் முழுக்கவே ஸ்கூபிக்கும், ரூபிக்கும் செம டஃப் தருவது கோட்டையின் கர்னல் தான். கதையோடு பயணிக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த மனுஷன் வரும் பக்கங்களிலெல்லாம், உற்சாக மீட்டர், பரபரப்பு மீட்டர் 'பச்சக்' என உச்சம் செல்வதை பேனாபிடிக்கும் போதே உணர முடிந்தது.
இங்கொரு நிஜத்தை சொல்லி வைக்கட்டுமா? 2027 அட்டவணையில் இந்த நீலச்சீருடையினர் இடம்பிடிக்கப் போகின்றனரா ? இல்லையா ? என்பதை நிர்ணயம் செய்திட இந்த இதழே உதவிடக்கூடும் என்று எனக்கு மண்டைக்குள் ஒரு சிந்தனை. So all the more reason for you to read and share your thoughts please 🙏🙏
அப்புறம் GEN Z தளத்தில் குட்டிப்பசங்களுக்கான "புதுசாய் ஒரு பூதம்". இதுவுமே கலரில் அந்த கியூட்டான படுக்கவச சைஸில் பட்டையைக் கிளப்புவதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்தக் காக்காவுக்கு, கண்ணில் தெரியும் முட்டையெல்லாம் பீமா ஜூவல்லரி சொக்கத்தங்கமாய் தென்படுவது இயல்பே எனும்போது - நிஜ ஜூரிகளாய் நீங்களே இருக்க முடியும். எது எப்படியோ இந்த ஜூனியர் டிடெக்டிவ்ஸ் கதைத் தொடரானது இந்த சாகசத்தோடு நிறைவு பெறுகிறது. And இந்த GEN Z தளத்திற்கு சந்தா கட்டி இருப்போர் தவிர்த்து ரொம்பச் சிலரே இதை தனிப்பட்ட முறையில் வாங்கி வருவதால், அடுத்த ஆண்டிற்கு GEN Z ஒரு பெரிய கேள்விக்குறியே !!
Last but not the least, TERRIFIC TEX தனித்தடத்தின் 'எமனுடன் ஒரு யுத்தம்' - நம்மவரின் ஒன் ஷாட் சிங்கிள் ஆல்பம். இது பாக்கெட் சைஸில், நியூஸ்பிரண்ட்டில் வெளிவந்ததொரு சாகசம் என்பது நினைவுள்ளது. And தற்செயலான ஒற்றுமையாய், அடுத்தடுத்த மாதங்களில் அடுத்தடுத்த இதழ்களாய் 'எல்லையிலொரு யுத்தம்' and 'எமனுடன் ஒரு யுத்தம்' என கிட்டத்தட்ட ஒரே போலான கதைக்களங்களோடு ஆல்பங்களும் வெளிவந்திருப்பது வியப்பே. புதுசாய் படிப்போருக்கு கிளாசிக் டெக்ஸ் படைப்புகளின் புராதனம் லைட்டாக கண்ணில் படக்கூடும் தான். இது பெரியவர் ஜி.எல். போனெல்லி மற்றும் துவக்க நாட்களின் ஓவியர் கேலப்பீனி பணியாற்றிய ஆல்பமே. And இப்போதெல்லாம் மௌரோ போஸெலி அவர்களின் வேற லெவலிலான 'தல' கதைகளைப் பார்த்த பின்பு, இங்கே லைட்டான நெருடல் எழும் பட்சத்தில் - மிரட்டும் கலரும் சரி, அந்தப் பரபரப்பான ஆக்ஷனும் சரி, அதனை சமன் செய்துவிடும் என்று நம்பலாம்.நம்மில் கணிசமானோருக்கு இது முதல் வாசிப்பாகவே இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. Because 1980-களின் இறுதிகளில் இது ஒரிஜினலாக வெளிவந்த சமயத்தில் வாசித்து வந்தோரில் இன்று தொடர்ந்திடும் நண்பர்களின் சதவீதம் ரொம்பவே குறைச்சலாக இருக்கும் என்பது உறுதி. So நிச்சயமாக இந்த quickfire ஆல்பம் ரசிக்கத் தவறாது என்பது எனது நம்பிக்கை.
ஆக, ஐந்து இதழ்களோடு இந்த செப்டம்பர் உங்கள் முன்னே கடைவிரித்து நிற்கின்றது.
- ஒரு கிராபிக் நாவல்,
- ஒரு ஹியூமர் ஆல்பம்,
- ஒரு ஹை வோல்டேஜ் வன்மேற்கு சாகசம்,
- ஒரு கிளாசிக் வன்மேற்கு சாகசம்,
- ஒரு சுட்டீஸ் குட்டி இதழ்
என்று சுவைகளிலும் வெரைட்டி காத்துள்ளது.
So யாருக்கு எது பிடித்திருந்தாலும், அவற்றிலிருந்து வாசிப்பைத் துவக்கிய கையோடு, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி, உங்களது எண்ணங்களை பதிவு செய்திடும்படி yet again கேட்டுக்கொள்கிறேன் folks. And ஸ்டெர்ன் ஆல்பத்தை வாசிக்க நீங்கள் தயாராகி வரும் பட்சத்தில், please do try it when you are relaxed and free. பக்கங்கள் 72 இருந்தாலும் வாசிப்புக்கென அரைமணி நேரம் பிடித்தாலே ஜாஸ்தி என்பேன். So நடுநடுவே மற்ற பணிகளுக்கு நேரம் தர அவசியம் இல்லாததொரு அரைமணி நேரத்தை இந்த நவீன வெட்டியானுக்கென ஒதுக்கினால் இவர் தரக்கூடிய அனுபவம் ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கும் என்பேன். Give it a try please.
ரைட்டு...அக்டோபரின் ஜான் பிளாக்ஸாடுடன் பயணத்தைத் தொடர கிளம்புகிறேன் guys. Happy reading and happy sharing too. Bye for now...See you around !!





Hi Sir
ReplyDeleteவாழ்த்துகள் சகோ
DeletePresent sir
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteஎன்னங்க நீங்க டைமிங் மிஸ் பண்றீங்க போங்ககா. நீங்க வணக்கங்கள்னு டைப் பண்றதுக்குள்ள அவங்க கமெண்ட் பண்ணிடராங்க 😅
DeleteToday 1st Comment
ReplyDeleteTop 10
ReplyDeleteNo.4
ReplyDelete😊😊😊
DeleteGreetings sir, Good to see back to back blogs
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteஇந்த தடவை சீக்கிரமாக ஆர்டர் போட்டதிற்கு காரணம்
ReplyDeleteவீட்டில் ப்ளூகோட்ஸ் எப்போது என இரண்டு வாரமாய் கேட்டுகிட்டே இருந்தாங்க
படித்துவிட்டு சிரித்து கொண்டு இருந்தாங்க
ஸ்கூபி சாமர்த்தியசாலி யாரிடம் எப்படி பேச வேண்டும் என தெரிந்தவன் என சொல்லி சிரிச்சாங்க
ப்ளூகோட்ஸ் கண்டிப்பாக அடுத்த வருடம் வேண்டும், சார்
Superb
ReplyDeleteப்ளூகோட்ஸ் 2027க்கு வரலாம் சார்.
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தனை இதழ்களும் அட்டகாசம்.
ReplyDeleteMe in 😘👍💐🙏😄
ReplyDeleteMe Happy annachi
ReplyDeleteWe want ப்ளூ கோட்ஸ் Sir😘👍💐🙏
ReplyDeleteReceived the books today evening sir. Shall take one or two days to complete. Eventhough Classic Tex is already in my collection, Colour Reprints are always more attractive in my view sir.
ReplyDelete@Edi Sir 🙏💐😘
ReplyDeleteஇந்த மாத combo books ₹699 (including courier charges) என தெரிவித்து உள்ளீர்களே. 🤔
4 புக்ஸ் விலையே ₹660 வருகிறது.
கூரியர் charges ₹39 மட்டும்தானா Sir 🤔
எப்படியும் வெயிட் 2 kgs வரும் போல. 🫣
கம்பெனிக்கு கட்டுப்படி ஆகுங்களா சார் 🤔🤔😘
நான்கும் சிறப்பு
ReplyDeleteசார், கார்ட்டூன் ரெயிலில் இப்போது இருக்கிறதே மொத்தம் 3 பெட்டி தான். அதில் ஒன்றைக் கழற்றி விட்டு விட வேண்டாமே? ப்ளூகோட்ஸ்-க்கு ஒரு ஸ்லாட் ப்ளீஸ்.
ReplyDelete