Thursday, September 03, 2026

சிறப்பாய் ஒரு செப்டம்பர் ..!

 நண்பர்களே, 

வணக்கம். யுகங்களுக்கு முன்பானதொரு நிகழ்வு போல் உள்ளது - புக்ஸ் வெளியான தினத்தில் ஒரு பதிவையும் போடும் போது. முன்பெல்லாம் பக்கத்து வீட்டில் மாடு கன்று போட்டிருந்தால் அதற்கு ஒரு பதிவு, ஆபீஸ் போகும் வழியில் பதநீர் விற்றுக் கொண்டிருந்தால் அதற்கு இன்னொரு பதிவு என்றெல்லாம் கூத்தடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் பிஸியான பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப்  பழக்கம் மலையேறி இருந்தது. And இரு வாரங்களாய், ஒழுங்குப்  பிள்ளையாய் பதிவு போட ஆரம்பித்த பிற்பாடு, இந்தப்  பழக்கத்திற்குமே ஒரு புனர்ஜென்மம் தந்தால் தப்பில்லை என்று பட்டது. And அதற்கு கூடுதலாய் உந்துசக்தி தந்தது ஒரு ஒடிசலான உருவமே. In fact என் பார்வையில் இந்த மினி பதிவின் நாயகனே அவர்தான். 

ஒவ்வொரு மாதமும் அட்டவணையில் முன்கூட்டியே அறிவித்த இதழ்களை slot in செய்துவிட்டு அவற்றுக்குள் தத்தகா புத்தகா என்று உருண்டு புரண்டு எப்படியேனும் முதல் தேதிக்கு தயார் செய்வது என்பது இப்போதெல்லாம் நம் ஆட்களுக்கு தூக்கத்திலும் சாத்தியம் என்ற ரேஞ்சுக்கு நகர்ந்துள்ளது. தாமதம் என்று எழும் பட்சத்தில் முக்காலேமூன்று வீசம் அது இந்த முழியாங் கண்ணனின் சோம்பல் காரணமாய் இருந்தால்தான். And ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல ஆண்டின் கிளைமேக்ஸ் பகுதியில் எப்படியோ ஒரு வண்டி இதழ்கள் குழுமி விடுவதும் இப்போதெல்லாம் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகின்றது. And அப்படிப்பட்ட பிஸியான மாதங்களில், பணிகளை முடித்த கையோடு நெட்டி முறிப்பது என்பது மெய்யாலுமே ஒரு அட்டகாச அனுபவம்.

இதோ என் முன்னே செப்டம்பரின் ஐந்து இதழ்களும் கலர்கலராய், சைஸ் சைஸாய், மினுமினுத்துக் கொண்டிருக்கின்றன. இளம் டெக்ஸ் ஒருவரைத் தாண்டி பாக்கி நான்கு இதழ்களுமே கலர் என்பதால் - மேஜை மீது பரப்பிப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் 'ஆ'வென்று பராக்குப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். As cover pages go - இம்முறை யுத்தமே : டெக்ஸுக்கும், ஸ்டெர்னுக்கும் மத்தியில்தான் என்பேன். "எமனுடன் ஒரு யுத்தம்" அட்டைப்படத்தில் அந்த கெத்து நமக்கு பரிச்சயப்பட்ட ஒன்று என்றால்,  "விதி எழுதிய விசாரணை"யில் சோகம் படர்ந்த அந்த முகத்தோடு ஜெயில் செல்லுக்குள் ஸ்டெர்ன் அமர்ந்திருப்பது வானவில்லின் மறுமுனை. மஞ்சள் சட்டைக்காரரிடம் அந்த கம்பீரத்துடன் ஒரு வசீகரம் தென்படுகிறது எனில், இந்த நாகரீக வெட்டியானிடமும் ஏதோ ஒரு இனம் சொல்ல முடியா ஈர்ப்பு இருப்பதை என்னளவிற்காவது மறுக்க இயலாது. So இம்மாத அட்டைப்படப் போட்டியில் எனது ஓட்டு ஸ்டெர்னுக்கே. And ஒரு பேமானி எடிட்டராக அல்லாது, காமிக்ஸ் ஆர்வலனாக மாத்திரமே இருந்திருக்கும் பட்சத்தில் இம்மாதம் முதலில் வாசிக்க நான் தேர்ந்தெடுத்திருக்கக் கூடியதுமே "விதி எழுதிய விசாரணை"யாகத் தான் இருந்திருக்கும். இன்னமும் யோசிக்கின்றேன் - இந்த மனுஷனை முதல்வாட்டி பார்த்த போதே தமிழுக்குக் கொண்டு வரும் உந்துதல் எழுந்தது ஏன் என்று. பெருசாய் ஆக்ஷன் கிடையாது தான். அண்டர்டேக்கரைப் போல இவர் ஒரு அதிரடிக்காரரும் அல்ல தான். நமக்கு நிரம்பவே பழக்கப்பட்ட வன்மேற்குப் பின்னணி - ஆனால் முற்றிலும் வேறொரு பாணியில் நம்மோடு உரையாடுகின்றது !! And டமால் டுமீல் நங் கும் என்றெல்லாம் அல்லாது மெல்லிய உணர்வுகளோடு இந்த மெலிந்த தேகக்காரரை படைப்பாளிகள் பயணிக்கச் செய்திருப்பது முதல் புரட்டலிலேயே தெரிந்தது தான்.இருந்தாலுமே எனக்கு இவர் மீது ஒரு soft corner எழாது போகவில்லை. நம்பினால் நம்புங்கள் - முன்னொரு காலத்தில்...ரொம்ப ரொம்ப முன்னொரு காலத்தில்.... நம்ம மண்டை கூட ஸ்டெர்னின் இஸ்டைலில் தொங்கும் கேசத்துடன் காட்சி தந்தது தான் அவர் பக்கமாய் அணி சேர உதவிய ஒரு காரணமோ என்னவோ??!! 

இன்னும் நிறைய பேருக்கு இதழ்களே கையில் கிடைத்திருக்காது என்பதாலும் இன்னும் பலர் வாங்கி இருக்கவே மாட்டார்கள் என்பதாலும், இங்கு ஸ்பாய்லராக நான் பெரிதாக எதையும் பேசி விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றேன். மாறாக இவற்றுள் என்னை என்ன ஈர்த்தது என்பதை சொன்னால் maybe மதில் மேல் பூனையாய் நிற்கக்கூடிய நண்பர்களுக்கு தீர்மானம் செய்வது சுலபமாகி விடக்கூடுமோ என்னவோ. Without doubt - இந்த ஆல்பத்தின் பிரதம நாயகர் : சித்திரப் பணியையும், கலரிங் பணியையும், ஒருசேரச் செய்திருக்கும் ஜூலியன் மாஃப்ரே தான். அந்த முதல் பக்கத்திலேயே நியூ ஆர்லியன்ஸ் நகரின் ஒரு ஏரியல் ஷாட்.... அதுவும் ஒரு மழை பெய்யும் தினத்தில். அடுத்த பிரேமில் கல்லறைத் தோட்டத்தில் வெட்டியானும், சக பணியாளரும் பிஸியாக இருக்கும் காட்சியோடு துவங்கும் அந்த கதையில் நியூ ஆர்லியன்ஸ் நகரும் சரி, அதன் மாறுபட்ட கட்டிடங்களும் சரி, கதை சொல்லலில் ஒரு மௌனப்  பங்கேற்றிருப்பதாக எனக்குப் படுகின்றது. ஒவ்வொரு லாங் ஷாட் பக்கத்திலும் பின்னணியில் தெரியும் கட்டிடங்களை மறக்காமல் பாருங்களேன் folks - ஒரே ஸ்டைலில் இரண்டாவது கட்டிடம் இருப்பதாகத்  தெரியவே செய்யாது. And கதையைப் பொறுத்தவரை, எப்போதும் போலவே மெலிதான மனித உணர்வுகளே இங்கு பிரதானமாக்கப்பட்டுள்ளன. பிழைப்பு நாடி புது மண்ணில் வேர்பிடிக்க எத்தனிக்கும் மரங்கள் என்ன மாதிரியான இன்னல்களை சந்திக்கின்றன என்பதை பக்கம் 73-ல் கதை முடியும் பிரேமில் ஓவியர் மௌனமாய் சொல்லி இருப்பது ஒருநூறு வீரியமான வரிகளை விட வலியவை !!

And இங்கே நான் குறிப்பிட விரும்பும் இன்னொரு விஷயமும் உண்டு. டின்டின் கதைகளுக்கு போடப்படும் சித்திர பாணிக்கு லைன் கிளேர் என்று பெயருண்டு என ஏற்கனவே சொல்லி இருந்தேன். அதாவது பெரிதாய் பேக்ரவுண்ட், ஏகமாய் முகபாவங்களில் டீடைல்ஸ் என்றெல்லாம் இல்லாது, சிம்பிளாக இப்படி வரைந்தால் மூக்கு, அப்படி வரைந்தால் வாய், அப்படி வரைந்தால் கண்கள், இப்படி விரிந்தால் கோபம், இப்படி சுருங்கினால் கடுப்பு என்று சகலத்தையும் மிகச்  சுலபமான நேர்கோடுகளுக்குள் அடக்கும் அந்த பாணியை ஜாம்பவான் ஹெர்ஜ் தனது அடையாளமாக்கி இருந்தார். அதே ரேஞ்சுக்கு இல்லாவிடினுமே இங்கும் ஓவியர் முகபாவங்களை இயன்ற மட்டிற்கு பெரிய மெனக்கெடல்கள் இன்றி அதே சமயம் அசாத்தியமாய் வேறுபடுத்திக் காட்ட கதை நெடுக உழைத்திருப்பது கண்கூடு. ஒற்றைப் பக்கத்தில் நம்மை ஒட்டுமொத்தமாய் மிரளச் செய்வதெல்லாம் இந்த ஓவிய பாணிக்குக் கிடைத்திருக்கும் ஒரு அங்கீகாரம் என்றே சொல்வேன். புரட்டுவோர், படிப்போர் யாரையும் பக்கம் 70 ஒரு புரட்டு புரட்டாமல் விடாது என்பது எனது திட நம்பிக்கை. "Sorry bro, எனக்கு பொழுதுபோக்கே பிரதானம், 'நொய் நொய்' என்று நகரும் கதைகளெல்லாம் நமக்கு சரிப்படாது" எனும் அணியாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் that's absolutely fine too folks. ஸ்டெர்ன் பக்கமாய் வராது ஒரு U டர்ன் அடித்து விடுங்கள். இது மெதுவாக நகரும் மென்மையான உணர்வுகளின் பிரவாகம் மட்டுமே. எனக்கு பிடித்திருந்தது, உங்களுக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் ஹாப்பி அண்ணாச்சி. இல்லாது போனாலும் no worries.

இம்மாதத்தின் எனது இரண்டாவது வாசிப்பாக இருக்கக்கூடியது நமது பாயாசக்கார பாசக்காரர் அடிக்கடி குறிப்பிடும் ஓடிக்கொண்டிருக்கும் இளமதிகாரியே. ஆத்திச்சூடி எப்போதுமே தலைப்புகளுக்கு செட் ஆகும் பட்சத்தில், ஒரு தெறிக்கச் செய்யும் vibe தரும் என்பது எனது நெடுங்கால நம்பிக்கை. And அது இம்மாதமும் மெய்யாகியுள்ளது. இந்தப் பெயரானது இளம் டெக்ஸின் தொடரின் எந்த ஒரு ஆல்பத்துக்குமே பொருந்தக்கூடிய generic வகை என்பதை மறுக்கவே மாட்டேன். So, ஓராண்டுக்கு முன்பாகவே கதைகளை, பெயர்களை இறுதி செய்யும் வேளைகளில் இது போலான தலைப்புகள் அவ்வப்போது எனக்குக்  கை கொடுப்பதுண்டு. And பின்னாட்களில் அந்தக் கதைகள் ரெடியாகி, அவற்றுள் பணியாற்றும் சமயம், பெயர்கள் பொருந்திப் போவதைக் கவனிக்கும் போது, "ச்சே ... பின்னிட்டடா மாப்ள" என்று நமக்கு நாமே சால்வை போர்த்திக்கொள்ளத் தோன்றும். And இந்த மூன்று அத்தியாய சாகசத்தில் எனக்கு நிரம்பவே பிடித்திருந்தது - முன்கதை, பின்கதை, சைடு கதை என்றெல்லாம் கொக்கிகளைப் போடாது, 'ஏக்'தம்மில் மூச்சிரைக்க ஓட்டமெடுக்கும் கதையாகவும்  இருந்தது தான் !   என்னதான் அத்தனை கதைகளுக்குள்ளும் புகுந்து, அன்னம் தண்ணீர் புழங்கி இருந்தாலுமே, அந்த மாதம் முடிந்த கையோடு அவை சார்ந்த cache மெமரிகளை அப்படியே ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பி விடுவது வழக்கம். So, நாலு வருஷங்களுக்கு முன் வந்த கதையில் இந்த அப்புச்சி அங்கே வந்து நாலு அப்பு அப்பினார் என்றோ, இந்த அண்ணாச்சி அந்த சாகசத்தில் உசிரை கொடுத்தார் என்றோ கதைகளின் ஊடே குறிப்புகள் எழும்போது மண்டையை மங்கு மங்கென்று சொரிந்து கொள்ளவே தோன்றும். ​இம்முறை அதுபோலான இடர்கள் ஏதுமின்றி, கோவையின் ஜி.டி.நாயுடு ஃபிளைஓவரில் 'சல்' என்று வண்டி பறப்பது போல இளம் டெக்ஸும், டைனமைட்டும் தூள் கிளப்புவது செப்டம்பரின் செம ஹைலைட் என்பேன். And பாயாசம் போடும் எண்ணத்தில் இருப்போர் கூட இதில் relate செய்திட ஒரு வசனம் உள்ளது. எங்க எந்த context-ல் என்று தேடிப் பிடிப்பது உங்க வேலை மக்களே.  ...

Moving on, இம்மாதத்தின் எனது மூன்றாவது வாசிப்பாக இருக்கக்கூடியது 'கோட்டையில் ஒரு குட்டிப் புயல்' தான். ஒரு போஷாக்கான பொடியன் கையை சப்பிக் கொண்டிருக்க, பின்னணியில் நமது சார்ஜன்ட் மாட்டின் மடியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, அந்த யுத்தகளம் ஒரு குட்டி நர்சரி போல் காட்சி தருவது ஆரம்பமே வித்தியாசமானது என்று பறைசாற்றுகிறது. பக்கத்தைப் புரட்டும் முதல் நொடியில் என்னை மிரளச் செய்வது - அந்தக் கலர் கூட்டணி தான். சும்மா பச்சை பசேல் புல்வெளிகளும், அடர்நீல ராணுவச் சீருடைகளும், பளீரென்ற மஞ்சள் தொடுவானப்  பின்னணிகளும், எமிலியின் பஞ்சுமிட்டாய் கலர் கவுன்களும் பக்கத்துக்குப் பக்கம் கண்ணைப் பறிக்கின்றன என்று சொன்னால் அது மிகையே நஹி. ​நான் ஹாட்லைனில் குறிப்பிட்டிருந்தது போல, இந்த சாகசம் முழுக்கவே ஸ்கூபிக்கும், ரூபிக்கும் செம டஃப் தருவது கோட்டையின் கர்னல் தான். கதையோடு பயணிக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த மனுஷன் வரும் பக்கங்களிலெல்லாம், உற்சாக மீட்டர், பரபரப்பு மீட்டர் 'பச்சக்' என உச்சம் செல்வதை பேனாபிடிக்கும் போதே உணர முடிந்தது.

​இங்கொரு நிஜத்தை சொல்லி வைக்கட்டுமா? 2027 அட்டவணையில் இந்த நீலச்சீருடையினர் இடம்பிடிக்கப் போகின்றனரா ? இல்லையா ? என்பதை நிர்ணயம் செய்திட இந்த இதழே உதவிடக்கூடும் என்று எனக்கு மண்டைக்குள் ஒரு சிந்தனை. So all the more reason for you to read and share your thoughts please 🙏🙏

​அப்புறம் GEN Z தளத்தில் குட்டிப்பசங்களுக்கான "புதுசாய் ஒரு பூதம்". இதுவுமே கலரில் அந்த கியூட்டான படுக்கவச சைஸில் பட்டையைக் கிளப்புவதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்தக் காக்காவுக்கு, கண்ணில் தெரியும் முட்டையெல்லாம் பீமா ஜூவல்லரி சொக்கத்தங்கமாய் தென்படுவது இயல்பே எனும்போது - நிஜ ஜூரிகளாய் நீங்களே இருக்க முடியும். எது எப்படியோ இந்த ஜூனியர் டிடெக்டிவ்ஸ் கதைத் தொடரானது இந்த சாகசத்தோடு நிறைவு பெறுகிறது. And இந்த GEN Z தளத்திற்கு சந்தா கட்டி இருப்போர் தவிர்த்து ரொம்பச் சிலரே இதை தனிப்பட்ட முறையில் வாங்கி வருவதால், அடுத்த ஆண்டிற்கு GEN Z ஒரு பெரிய கேள்விக்குறியே !!

Last but not the least, TERRIFIC TEX தனித்தடத்தின் 'எமனுடன் ஒரு யுத்தம்' - நம்மவரின் ஒன் ஷாட் சிங்கிள் ஆல்பம். இது பாக்கெட் சைஸில், நியூஸ்பிரண்ட்டில் வெளிவந்ததொரு சாகசம் என்பது நினைவுள்ளது. And தற்செயலான ஒற்றுமையாய், அடுத்தடுத்த மாதங்களில் அடுத்தடுத்த இதழ்களாய் 'எல்லையிலொரு யுத்தம்' and 'எமனுடன் ஒரு யுத்தம்' என கிட்டத்தட்ட ஒரே போலான கதைக்களங்களோடு ஆல்பங்களும் வெளிவந்திருப்பது வியப்பே. புதுசாய் படிப்போருக்கு கிளாசிக் டெக்ஸ் படைப்புகளின் புராதனம் லைட்டாக கண்ணில் படக்கூடும் தான். இது பெரியவர் ஜி.எல். போனெல்லி மற்றும் துவக்க நாட்களின் ஓவியர் கேலப்பீனி பணியாற்றிய ஆல்பமே. And இப்போதெல்லாம் மௌரோ போஸெலி அவர்களின் வேற லெவலிலான 'தல' கதைகளைப் பார்த்த பின்பு, இங்கே லைட்டான நெருடல் எழும் பட்சத்தில் - மிரட்டும் கலரும் சரி, அந்தப்  பரபரப்பான ஆக்ஷனும் சரி, அதனை சமன் செய்துவிடும் என்று நம்பலாம்.​நம்மில் கணிசமானோருக்கு இது முதல் வாசிப்பாகவே இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. Because 1980-களின் இறுதிகளில் இது ஒரிஜினலாக வெளிவந்த சமயத்தில் வாசித்து வந்தோரில் இன்று தொடர்ந்திடும் நண்பர்களின் சதவீதம் ரொம்பவே குறைச்சலாக இருக்கும் என்பது உறுதி. So நிச்சயமாக இந்த quickfire ஆல்பம் ரசிக்கத் தவறாது என்பது எனது நம்பிக்கை.

ஆக, ஐந்து இதழ்களோடு இந்த செப்டம்பர் உங்கள் முன்னே கடைவிரித்து நிற்கின்றது.

  • ​ஒரு கிராபிக் நாவல்,
  • ஒரு ஹியூமர் ஆல்பம்,
  • ஒரு ஹை வோல்டேஜ் வன்மேற்கு சாகசம்,
  • ஒரு கிளாசிக் வன்மேற்கு சாகசம்,
  • ஒரு சுட்டீஸ் குட்டி இதழ் 

என்று சுவைகளிலும் வெரைட்டி காத்துள்ளது.

​So யாருக்கு எது பிடித்திருந்தாலும், அவற்றிலிருந்து வாசிப்பைத் துவக்கிய கையோடு, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி, உங்களது எண்ணங்களை பதிவு செய்திடும்படி yet again கேட்டுக்கொள்கிறேன் folks. And ஸ்டெர்ன் ஆல்பத்தை வாசிக்க நீங்கள் தயாராகி வரும் பட்சத்தில், please do try it when you are relaxed and free. ​பக்கங்கள் 72 இருந்தாலும் வாசிப்புக்கென அரைமணி நேரம் பிடித்தாலே ஜாஸ்தி என்பேன். So நடுநடுவே மற்ற பணிகளுக்கு நேரம் தர அவசியம் இல்லாததொரு அரைமணி நேரத்தை இந்த நவீன வெட்டியானுக்கென ஒதுக்கினால் இவர் தரக்கூடிய அனுபவம் ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கும் என்பேன். Give it a try please.

​ரைட்டு...அக்டோபரின் ஜான் பிளாக்ஸாடுடன் பயணத்தைத் தொடர கிளம்புகிறேன் guys. ​Happy reading and happy sharing too. Bye for now...See you around !!







71 comments:

  1. Replies
    1. என்னங்க நீங்க டைமிங் மிஸ் பண்றீங்க போங்ககா. நீங்க வணக்கங்கள்னு டைப் பண்றதுக்குள்ள அவங்க கமெண்ட் பண்ணிடராங்க 😅

      Delete
    2. ஆமாங்க தம்பி 😂😂😂😂😂

      Delete
  2. Greetings sir, Good to see back to back blogs

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  4. இந்த தடவை சீக்கிரமாக ஆர்டர் போட்டதிற்கு காரணம்
    வீட்டில் ப்ளூகோட்ஸ் எப்போது என இரண்டு வாரமாய் கேட்டுகிட்டே இருந்தாங்க
    படித்துவிட்டு சிரித்து கொண்டு இருந்தாங்க
    ஸ்கூபி சாமர்த்தியசாலி யாரிடம் எப்படி பேச வேண்டும் என தெரிந்தவன் என சொல்லி சிரிச்சாங்க

    ப்ளூகோட்ஸ் கண்டிப்பாக அடுத்த வருடம் வேண்டும், சார்

    ReplyDelete
  5. ப்ளூகோட்ஸ் 2027க்கு வரலாம் சார்.

    ReplyDelete
  6. நீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தனை இதழ்களும் அட்டகாசம்.

    ReplyDelete
  7. We want ப்ளூ கோட்ஸ் Sir😘👍💐🙏

    ReplyDelete
  8. Received the books today evening sir. Shall take one or two days to complete. Eventhough Classic Tex is already in my collection, Colour Reprints are always more attractive in my view sir.

    ReplyDelete
  9. @Edi Sir 🙏💐😘

    இந்த மாத combo books ₹699 (including courier charges) என தெரிவித்து உள்ளீர்களே. 🤔

    4 புக்ஸ் விலையே ₹660 வருகிறது.

    கூரியர் charges ₹39 மட்டும்தானா Sir 🤔

    எப்படியும் வெயிட் 2 kgs வரும் போல. 🫣

    கம்பெனிக்கு கட்டுப்படி ஆகுங்களா சார் 🤔🤔😘

    ReplyDelete
  10. நான்கும் சிறப்பு

    ReplyDelete
  11. சார், கார்ட்டூன் ரெயிலில் இப்போது இருக்கிறதே மொத்தம் 3 பெட்டி தான். அதில் ஒன்றைக் கழற்றி விட்டு விட வேண்டாமே? ப்ளூகோட்ஸ்-க்கு ஒரு ஸ்லாட் ப்ளீஸ்.

    ReplyDelete
  12. மீண்டுமோர் அருமையான பதிவு சார்....புத்தகங்களை புரட்டும் போது முதலில் என்னைக் கவர்ந்தது ...அந்த ப்ளூ கோட்ஸ் வண்ணச் சேர்க்கைதான்....வேற லெவலில் அசத்தல்

    ReplyDelete
  13. நன்றிகளைத் பற்றி தெரியாது மன்மதா....ஆனால் நாங்கள் இங்கு இருக்கிறோம்......😄😄😄🦾🦾🦾செம செம........சார்....அட்டைப்படம் இதுதான் டாப்....இது வரை வந்த அட்டைகளில் ஏ என ஒவ்வோர் வாயும் முனுமுனுப்பது உறுதி...புத்தகத்தை கைல ஏந்தயிலேயே பாயாச பார்ட்டிகள் தலைலயே அந்த பானையான புத்தகத்தில் நச்

    ReplyDelete
    Replies
    1. கதையின் துவக்கமே தீப்பிடிக்குது....வண்ணங்களில் ஓர் மிரட்டல்....நம்ம தலலல இப்படி அதிரடி இருந்தும்...நான் தேடும் டெக்ஸ் இருந்தும் சுத்தமா நினைவிலில்லை....

      Delete
  14. கண்ணீர் தீவில் மாயாவி....வேற லெவல் சார் ...பத்து பக்கத்துக்கே இழுத்திருச்சி .....முதல் புரட்டல்...இதுவும் தொட்டதா கூட நினைவில்லை...வெண்டைக்காய் கிலோ என்ன விலையோ...வருகிறது விளம்பரங்கள் அன்றய காலகட்ட விளம்பர ஈர்ப்புக்கு மீண்டுமோர் சவால்...பால்யத்துக்கு காலப் பயணம் தர தவறில்லை....சுவிட்சர்லாந்தில் மாயாவி....மாயாவி மேக்னோ....அடடா அமர்க்களம்....அட்டையுமழகே...

    ReplyDelete
  15. கோட்டையில் ஒரு குட்டிப்புயல்....முதல் பக்கமே தலைப்பை வந்திடுச்சு போல....வண்ணங்களின் வாரிசு.....புரட்ட புரட்ட பேரானந்தம்...நாளை முதல் புரட்டல் இதான்....நேரம் வாய்க்குமா என ஒரு கை பாக்கனும்

    ReplyDelete
  16. ஓட்டத்தை கைவிடேல் துவக்க பக்கங்கள் வெகு அழகு...சுட்டெரிக்கும் சூரியன் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்தப் பரந்த பாறைப் பகுதிகளில் வெப்பக் காற்றினூடே மரணத்தின் நெடியும் கலந்திருந்தது....

    அப்படியே அந்த பகுதிக்கு அழைத்துச் செல்ல....

    இரண்டே பக்கங்கள் தமிழர்க்கு பெருமை நீந்திக் கொள்ளும் நம் மக்கள் சாராய சோதனைக்குப்....திரைப் போதைக்கும் அடிமையாகி உரிமைய இழந்து வந்தாரை ஆள விட்ட அவலநிலை செவ்விந்தியரை தமிழனாய் காட்ட தவறில்லை....

    ஹாட் லைன் அடுத்த மாத விலங்குகள் தலை சுவாரஸ்யத்தை இப்பக்கங்களுக்கிணையாய் ஏற்ற தவறவில்லை



    ReplyDelete
    Replies
    1. அட்டை நெட்டிலே டாப்பாய் தெரிய.....நேரில் வண்ணச் சேர்க்கை ஈர்ப்பால்....எமனுடன் ஓர் யுத்தத்துக்கு பின்பாய் சென்றாலும்.....அந்தப் பாய்ச்சல் அதகள ஈர்ப்பாய்

      Delete
  17. விதி எழுதிய விசாரணை....முதல் பக்கமே அப்படியோர் கவிதையாய் மனதை நனைக்குது மழையாய் மழையால்.....

    அந்த மழை செல்ல தோண்டிய வழித்தடம் அதிலோடும் நீர்....விடுமுறைக்கு சிறுவயதில் ஊரில் ரசித்த அந்தக் காலம் அடேயப்பா....இந்த ஒரு பக்கமே போதும் சார் இக்கதைக்குள்ளே வழிந்தோடி எனது நேரமெல்லாம் நிரம்ப ...

    ReplyDelete
  18. புதுசாய் ஓர் பூதம் ....ஏழு மணிக்கு புத்தக பார்சலோட வீட்டுக்குள் நுழைய .....சின்னவர் சூப்பர்பா என எனது பின்னே பாய....நான் திண்பண்டம் ஏதும் வாங்கலையே என நொறுங்க....புத்தக பார்சலோட சின்னவர் ஏகப்பட்ட மகிழ்ச்சியோடு ஓட....படித்து கொண்டிருந்த மூத்தவருக்கு நான் சப்போர்ட் செய்ய அமர்ந்திருக்க...பார்சல் பிரிக்க பட்டதை கவனிக்கவில்லை....சின்னவர் அவருடைய குட்டி புத்தகத்தின் பின் பகுதிய ...அந்த டெடிய முழுக்க பிங்க் நிறத்தால் அவர் சவுரியத்துக்கு குளுப்பாட்டியதோர் அழகு....இனி ஏழு முதல் என்பதை மூன்று முதலென மாற்றலாம்....மாற்றமே மாறாதது....

    ReplyDelete
  19. Tex – "எமனுடன் ஒரு யுத்தம்"

    அட்டைப்படமே அட்டகாசம்!

    கள்ள நோட்டடிக்கும் கயவர்களை கையும் களவுமாக கபளீகரம் பண்ண Carson-ஓடு களம் இறங்குகிறார் நம்ம இரவுக் கழுகர்!

    ஆரம்பமே அதிரடிதான். But pages போகப் போக humour, action-ஐ overtake பண்ணுது. என்னடா இது, நம்ம படிக்கிறது Tex-ஆ இல்ல Chic Bill-ஆன்னு doubts வருது! 😂 ஒரு second அட்டைப்படத்தைப் பார்த்து acknowledgement போட்டுட்டு continue பண்ணினா, அடுத்தடுத்து action top gear போட்டுத் தூக்குது.

    சும்மா ஒரு 2000 பேரை சுட்டுத்தள்ளிட்டு, கள்ள நோட்டை lens-ல பார்த்து அதுல இருக்குற secret message-ஐ decode பண்ணிட்டு போய், ஒரு மாஸ் முடிவோடு கதையை முடிக்கிறார் Tex.

    In short, heavy action-packed story, minimal dialogues, நிறைய humour... இது ஒரு sure hit list!

    இது ஒரு classic story. அந்தக் காலத்துலேயே writers fake currency-க்குள்ள secret message வைக்கிற அளவுக்கு detailing கொடுத்திருக்காங்க! கதை முழுக்க unnecessary-ஆ எதையும் இழுக்காமல், straight-ஆ action-க்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது நல்லா இருக்கு.

    இந்த மாதிரி classic titles-ஐ, அந்தக் காலத்துல வந்த மாதிரியே black & white-ல, அதே pulp paper quality-யோட replica edition-ஆ போட்டா சிறப்பா இருக்கும்.

    Comic book collectors-களும் இதே மாதிரியான original-style replica version-ஐ விரும்பி வாங்குவாங்க. இப்போ கூட grey market-ல இதுபோன்ற பழைய editions-க்கு பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்குறாங்க... (Not all!) 😄

    இப்படி ஒரு classic Tex-ஐ மறுபடியும் அந்த vintage feel-ஓட கொண்டு வந்தா, collector-களுக்கு செம treat-ஆ இருக்கும்! 🔥


    ReplyDelete
  20. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  21. நேற்றே ஒரே ஸ்பீடில்
    இரண்டு புத்தகங்களை முடித்து விட்டேன்..
    ஸ்டெர்ன்
    இளம் டெக்ஸ்...
    இரண்டிலும் ஏறக்குறைய ஒரே கதைக்களம்...
    இளம் டெக்ஸ் நம் மனதில் இருக்கும் ஒரு ஹீரோயிசம்...
    அதன்படியே கதை போகிறது.
    ஆனால் ஒரிஜினலாய்
    நாம் அனைவரும் ஸ்டெர்ன் தான்..
    கதைப்படி தான் நாம் தடுமாறுகிறோம்..
    முதலில் ஸ்டெர்ன் படித்து விட்டு இளம் Tex படித்தால் தப்பினோம்...
    அல்லது மனதின் பாரத்தை இறக்க முடியுமா என்பது சந்தேகமே....

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் ஒரிஜினலாய்
      நாம் அனைவரும் ஸ்டெர்ன் தான்.. ///

      True sir.

      Delete
  22. முதலில் ஸ்டெர்ன் தான் படிக்கலாம்னு நினைச்சிருந்தேன் சார். ஆனா கொஞ்சம் சிரிக்கணும் போல ஆசை ஆசையாய் இருந்தது. அதனால ப்ளூகோட்ஸ் முதல்ல. 😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  23. விதி எழுதிய விசாரனை

    100/10

    ஸ்டெர்ன் கதாபாத்திரம் 💖💗💓💞💕❣💝💛💚💙💜🤍

    ReplyDelete
  24. வெட்டியான் மனதை வருடும் கதையோட்டம்.

    ReplyDelete
  25. சூப்பர் பதிவு சார். நன்றி

    ReplyDelete
  26. விதி எழுதிய விசாரணை

    இந்த amusement parks-ல “Free Fall”னு ஒரு ride இருக்கும். மெதுவா height-க்கு நம்மள ஏத்திட்டு, திடீர்னு பொத்துன்னு high speed-ல கீழே போட்டுட்டு, நம்மள ஒரு வழி பண்ணிடும்.

    இந்த story-யும் அதே மாதிரிதான்!

    மெதுவா கதை start ஆகி, characters-ஐ set பண்ணிட்டு, திடீர்னு என்னடா நடக்குது இங்கன்னு ஒரு வெறித்தனமான சம்பவம். அதுக்கப்புறம் chasing, actionன்னு கதை பறபறன்னு போய், நமால digest பண்ணவே முடியாத ஒரு climax-ல முடிஞ்சிடுது.

    இந்தக் கதை politics, race hatred, எப்படி ஒரு system தனக்கு சாதகமா rules-ஐ bend பண்ணுது, அதே system எப்படி விளிம்பு நிலை மனிதர்களோட விதியையே திருப்பிப் போடுது என்பதையெல்லாம் பேசுது.

    Vera level artwork! Framing, wide-angle shotsன்னு ஒவ்வொரு panel-ம் கதையை dialogues இல்லாமலேயே smooth-ஆ move பண்ணுது. சில scenes-ல அந்த visual storytelling மட்டும் பார்த்தாலே போதும்... என்ன நடக்குதுன்னு நமக்கே புரிஞ்சிடுது.

    ஒரு page-ஐ கூட miss பண்ணாம படிக்க வேண்டிய graphic novel இது!

    இந்த வருடத்தின் Top Graphic Novel-களில் இதுவும் கண்டிப்பா ஒன்று! 🔥

    ReplyDelete
  27. 1. STERN :

    ஸ்டெர்ன் கதைகளில் எப்போவும் கதை தான் கதாநாயகன் .. மனித எண்ணங்கள் , செயல்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும், மாறும் என்பதே இக்கதையின் பிரதானம் .. இங்கு நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் யாரும் இல்லை .. எல்லாம் சூழ்நிலை கைதிகளே .. தனி மனிதனாக இருக்கும் போது செய்ய தயங்கும் அல்லது செய்ய பயப்படும் விஷயங்களை MOB MENTALITYல் இருக்கும் போது EASY ஆக செய்ய முடிகிறது .. STERN IS ALWAYS MORE CLOSE TO REALITY .. THAT FINAL PAGE HITS HARDER .. NEED STORIES LIKE THIS AT LEAST OCCASIONALLY ..

    9.5/10 ...

    2. BLUE COATS :

    NOT A BIG FAN OF BLUECOATS .. DUE TO SAME WAR TEMPLATE .. இந்த முறை அது போல் இல்லாமல் it was fun .. ரூபி அண்ட் scooby இதில் பிரதான characters ஆக இல்லாமல் மற்ற characters முக்கியத்துவம் இருந்தது ஒரு காரணம்.. கர்னலும் அவரது மற்ற சிப்பாயிகளும் stole the show ..

    9/10 ...

    3. டெக்ஸ் :(ELDER )

    மறுபதிப்பாக இருந்தாலும் ITS MY FIRST TIME READ .. TYPICAL TEX BANG BANG COMMERCIAL ENTERTAINER .. FUN AND BREEZY READ .. 8/10 ..

    4. ஜூனியர் டிடெக்டிவ்ஸ் :

    IT REMINDS ME OF SCOOBY DOO CARTOONS .. FUN READ .. GEN Z CAN CONTINUE NEXT YEAR SIR ..

    ReplyDelete
  28. விதி எழுதிய விசாரணை - சுமார் ஒருமணி நேரம் ஆனது கதையை படித்து முடிக்க ஒரு அமைதியான சூழலில். இந்தமுறை கதையை சித்திரம்களே மனதை வருடி கதையை அழகாக சொல்லியது. ஒவ்வொரு பக்கத்தில் உள்ள சித்திரங்களும் பலவிசயம்களை நமக்கு சொல்லி கதையுடன் நம்மை பயணிக்க செய்தது. வசனங்கள் குறைவு ஆனால் அதன் தாக்கம் மிகவும் விரீயமானது.

    கதையின் கடைசி பக்கம்களை பார்த்த உடன் கதையின் ஆரம்பத்தில் இருந்து பயணித்த வந்த என்னை கண்களை கலங்க வைத்து விம்மி அழ செய்து விட்டது.

    சோகம் என்று சொல்லும் நாம மனதில் பாரம் இருக்கும் போது இளையராஜாவின் தாலாட்டை கேட்கும் பொழுது நாமும் பயணித்து கண்களை நனைத்துக் மனதை லகுவாகி கொள்வோம், அதுவே இந்த கதையில் நடந்தது.

    கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

    ReplyDelete

    ReplyDelete
    Replies
    1. இந்த ஸ்டெர்ன் ஆல்பம் ரொம்பவே தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது

      Delete
  29. 24 நேர விடா முயற்சிக்கு பிறகு பின்னூட்டம் இட முடிந்தது.

    ReplyDelete


  30. ‎THE BLUECOATS

    ‎Bluecoats வெறும் போர் கதை அல்ல.
    ‎இதில்:
    ‎போர் + நகைச்சுவை + சாகசம் + வரலாறு எல்லாம் கலந்து இருக்கும்.

    ‎ஆனால் இந்த கதை கொஞ்சம் வித்தியாசம் .

    ‎(புதியவர்களுக்கு ஒரு அறிமுகம்

    ‎Sergeant ரூபி– ராணுவ விதிமுறைகளை மிகவும் கடுமையாகப் பின்பற்றும் Sergeant.போரில் வீரமாக இருக்க விரும்புவார்

    ‎ஸ்கூபி– போரில் ஈடுபடுவதை விரும்பாத, புத்திசாலித்தனமாக பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முயலும் ஒரு Corporal.

    ‎ஆனால் ஸ்கூபி பெரும்பாலும் “எப்படியாவது உயிருடன் திரும்ப வேண்டும்!” என்ற எண்ணத்தில் இருப்பார். 😄

    ‎ஒவ்வொரு album-லும் Civil War காலத்தின் வெவ்வேறு சம்பவங்களை மையமாகக் கொண்டு தனித்தனி சாகசக் கதை இருக்கும்.)

    ‎கோட்டையில் ஒரு குட்டி புயல்
    ‎கதை சுருக்கம்

    ‎அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள இருவரும் பாலைவனப் பாதையில் பயணிக்கும் போது ஒரு ஆதரவற்ற ஆண் குழந்தையை
    ‎ கண்டெடுக்கிறார்கள். அந்த குழந்தையை ராணுவ முகாமிற்கு அழைத்து வருகின்றனர்.

    ‎ராணுவ முகாமில் நடக்கும் கலாட்டாக்கள்,
    ‎கரடுமுரடான வீரர்கள் வாழும் முகாமிற்குள் குழந்தை வந்தவுடன் சூழலே மாறுகிறது.

    ‎துப்பாக்கியையும் வாளையும் பிடிக்கும் கரங்களுக்குத் துணி மாற்றுவதும் (Diapering), குழந்தையைத் தாலாட்டுவதும் மாபெரும் சவாலாக மாறுகிறது.

    ‎கேப்டன் மற்றும் மேஜர் போன்ற உயர் அதிகாரிகள் குழந்தையை முகாமில் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    ‎ஆனால் அந்த குழந்தைக்காக முழு ராணுவ முகாமே தலைகீழாக மாறுவது போன்ற காட்சிகள் நல்ல நகைச்சுவை.

    ‎இறுதியில், குழந்தையைக் தொலைத்த உண்மையான பெற்றோரிடம் குழந்தை சேர்ந்ததா என்பதே கதை.

    ‎ரூபி மற்றும் ஸ்கூபி கதாபாத்திரங்களின் உள்ளே இருக்கும் தாய்மை மற்றும் பாச உணர்வை மிக அழகாக வெளிப்படுத்திய கதை இது.
    ‎8/10.

    ReplyDelete
    Replies
    1. அருமையான விமர்சனம் சார்

      Delete
  31. **** விதி எழுதிய விசாரணை ****

    முந்தைய ஸ்டெர்ன் கதைகளை விடவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய கதை இது!
    ஆரம்பம் முதல் இறுதிவரை தடக் தடக் இதயத்தோடே பயணம் செய்ய வேண்டி இருந்தது! படிக்க ஆரம்பித்தால் யாராலும் முடிக்காமல் வைக்க இயலாது!

    ஸ்டெர்ன் - என்னதான் போலீஸ் உருட்டினாலும் மிரட்டினாலும் துளியும் வளைந்து கொடுக்காத இந்த ஒல்லிபிச்சான் மனிதனின் மன உறுதி ரொம்பவே வியக்க வைக்கிறது - ஸ்டெர்னின் மீதான மரியாதையை ஒரு படி அதிகரிக்கிறது!

    சம்பாதித்த காசை பேங்கில் போடப் போனது ஒரு குற்றமா?!! ஒரு சிறு சம்பவம் எத்தனை பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்பதை பூதாகரமாக சொல்கிறது இக்கதை!

    கதையில் வழக்கத்தை விட கம்மியான வசனங்கள் தான். ஓவியங்களே மீதிப் பாதியைப் பேசி விடுகின்றன. எண்ணிக்கை குறைவென்றாலும் ஒவ்வொரு வசனமுமே சுளீர் என்று ஒரு எதார்த்ததை எடுத்துச் சொல்லி மனசுக்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது!

    'ணங்.. கும்.. சத்' - இதிலுமே நிறைய உண்டுதான். ஆனால் நாமறிந்த வழக்கமான ஒன்றல்ல!

    கிளைமாக்ஸ் - மனசுக்குள் மௌன அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது!

    ஸ்டெர்ன் - காமிக்ஸ் உலகம் தவற விடக் கூடாத கேரக்டர்!


    🤴

    ReplyDelete
    Replies
    1. அதே அதே விஜய். கிராபிக்ஸ் நாவல் என்று நினைக்கும் நண்பர்கள் இது போன்ற கதைகள் தான் நமது வாழ்கை என்று புரிந்து கொண்டால் இவற்றை கொண்டாடுவார்கள்.

      Delete
  32. ஒன்றுக்கு இரண்டாய் டெக்ஸ் இருக்கும் மாதத்திலும், ஒரு வெட்டியான் வெளிச்ச வட்டத்தை தனதாக்கி வருவது மெய்யாலுமே interesting 😀😀

    ReplyDelete
    Replies
    1. சார் டெக்ஸ் கதைகள் வழக்கமான நங் கும் சத் கொஞ்சம் காமெடி மற்றும் ஆக்சன் கொண்ட சூப்பர் ஹீரோ கதை, நிஜத்தில் செய்ய முடியாத விஷயங்கள் இந்த கதைகள் படிக்கும் போது கிடைக்கும். ஆனால் இந்த நவீன வெடியான் போன்ற கதைகள் இயல்பான மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகள் சார், எனவே இதற்கே எனது முதல் மரியாதை சார்.

      Delete
  33. ப்ளூ கோட்ஸ்ஸும் சரியான போட்டி கொடுக்கிறார்கள் சார்.பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்துள்ளார்கள்.

    ReplyDelete
  34. நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  35. ‎விதி எழுதிய விசாரணை

    ‎ஸ்டெர்ன் தனது ஊதியத்தை வங்கியில் டெபாசிட் செய்யச் செல்லும்போது ,முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் வங்கியாளரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்புகிறார்கள்.

    ‎ சாட்சியாக விசாரிக்கப்படும் ஸ்டெர்ன், கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காட்டும்படி கோரப்படுகிறார் , மேலும் காவல்துறை, அப்பாவிகளான மூன்று இத்தாலிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பிடித்துப் பழிபோட முயல்கிறது.


    ‎அந்த இத்தாலியர்கள் குற்றமற்றவர்கள் என்பதில் ஸ்டெர்ன் உறுதியாக இருக்கும் நிலையில், காவல் நிலையத்தில் அவர்களைக் குற்றவாளிகள் என ஒப்புக்கொள்ள வலுவான அழுத்தம் தரப்படுகிறது.

    ஆனால் ஸ்டெர்ன் அதற்குப் பணிய மறுக்கிறார். இதன் விளைவாக,
    ‎இதனால் ஆத்திரமடையும் காவல்துறை, ஸ்டெர்ன் மீதே பொய்க் குற்றம் சுமத்தி, அந்த இத்தாலியர்களில் ஒருவனான லூக்காவோடு சேர்த்துச் சங்கிலியால் பிணைத்துச் சிறையில் அடைக்கிறது.

    ‎ஆனால், ஸ்டெர்ன் கைவிலங்கிடப்பட்ட நிலையில் அந்தப் பிரதிவாதிகளில் ஒருவனுடன் சிறையிலிருந்து தப்பிக்கும்போது கதை முழுவதுமாகத் தலைகீழாக மாறுகிறது.

    ‎மனசாட்சிக்குத் துரோகம் செய்ய விரும்பாத ஸ்டெர்ன், மொழி தெரியாத அந்த இத்தாலிய இளைஞன் லூக்காவுடன் சேர்ந்து கைவிலங்கோடே சிறையிலிருந்து தப்பிக்கிறார். காவலர்களிடமிருந்து தப்பி ஓடும் அந்த ஆபத்தானப் பயணத்தில், இருவருக்கும் இடையே ஒரு ஆழமான பிணைப்பு உருவாகிறது.

    இறுதியில் ஸ்டெர்ன் தனது தன் மீதான பழி துடைக்கப்பட்டாலும், இந்த அதிகார வர்க்கத்தின் சுயரூபத்தைக் கண்டு விரக்தியடையும் ஸ்டெர்ன், மீண்டும் தனது பழைய அமைதியான சவ அடக்கம் செய்யும் வாழ்க்கைக்கு திரும்புகிறார். 8/10

    ReplyDelete
  36. நான் இளம் டெக்ஸ் புத்தகத்துல 50 pages இப்போதான் complete பண்ணேன். Artwork-ல இருக்குற ஆட்களையும் background-ஐயும் distinguish பண்ணிப் பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. இது இந்த மாதிரி artwork-ல common-ஆ இருக்குற விஷயமா? இல்ல desert-ல இருக்குற harsh-ஆன வெயில், high sun rays-ஐ காட்டுறதுக்காகவே இப்படியொரு effect use பண்ணியிருக்காங்களா? இல்ல எனக்குத்தான் ஏதாவது eye issue இருக்குமா?

    Saguaro புத்தகத்தைப் படிக்கும்போதும் இதே மாதிரி issue எனக்கு இருந்தது.

    ReplyDelete