நண்பர்களே,
வணக்கம். ஒரு சோம்பல் முறிக்கும் விடுமுறை தினத்தில் அக்டோபரின் ஐந்து இதழ்களையுமே என் முன்னே மேஜையில் பரப்பிப் போட்டுக்கொண்டு பராக்குப் பார்க்கும் சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றேன். பாஸோ, ஃபெயிலோ...... ஹிட்டோ, உப்மாவோ, இந்த நொடியில் அந்தத் தீர்ப்புகளுக்குள் மூக்கை நுழைக்காது, ரகம் ரகமாய் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள படைப்பாளிகளின் உருவாக்கங்களை நம் தமிழில் பார்க்க முடிந்துள்ள மகிழ்ச்சியை மட்டுமே பிரதானமாக்கியிருக்கிறேன் இந்த நொடியில். மாதம் ஐந்து இதழ்கள் என்பதெல்லாம் சமீப மாதங்களில்...... ஏன் சமீப ஆண்டுகளில் கூட நடைமுறையில் இல்லை என்றே ஞாபகம். Of course, GEN Z தடத்தின் குட்டி புக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் , ரெகுலர் இதழ்களை மட்டுமே மனதில் கொண்டு இதைச் சொல்கிறேன். So, FAB 5 தனித்தடத்தின் புண்ணியத்தில் இம்முறை மொத்த இதழ்களின் எண்ணிக்கை எகிறி நிற்பது செம pleasant surprise . And நடுவாக்கில் ஜூரத்தில் 4 நாட்கள் படுத்து எழுந்துமே, ஏதேதோ பல்டி அடித்து, இதழ்களை அக்டோபர் முதல் தேதிக்கு உங்கள் கைகளில் ஒப்படைத்த திருப்தி வேற லெவல். And இறுதி நொடியில், பைண்டிங்கில் நமக்கு துளியும் முகம் சுளிக்காது உதவிடும் நண்பருக்கே இங்கு கிரெடிட்டின் பெரும்பங்கு சார்ந்திடும். ஏனெனில் "கதிரவன் கண்டிரா கணவாய்" அச்சாகி பைண்டிங் போனதே செவ்வாய் காலையில்தான். And புதன் காலையில் டெஸ்பாட்ச் என்று காலில் வெந்நீரை ஊற்றிக்கொண்டு அவர் முன்னே தவம் கிடந்தோம். 'இவைங்க இப்படித்தான், மாசா மாசம் தவறாமல் உசிரை வாங்குவானுங்க' என்பது அவருக்கு இப்போதெல்லாம் பழகிப்போய்விட்டதோ என்னவோ, டாண் என்று புதன் காலையில் புக்ஸை ஆபீஸில் கொண்டுவந்து இறக்கிவிட்டார். So விடுமுறைகளுக்கு முன்பாகவே புக்ஸ் உங்களை எட்டிப்பிடித்திட வேண்டும் என்ற லட்சியம் ஈடேறிவிட்டதில் டபுள் மகிழ்ச்சி.
போன வாரத்துப் பதிவில் சொன்னது போலவே- இம்மாத மெனுவில் இட்லி, பொங்கல், பூரி, தோசை, பட்டூரா என்று ரகம் ரகமாய் காத்துள்ளன. And முதல் நாளிலேயே, நண்பர்களில் ஒரு சிறு அணியினராவது, இரண்டோ மூன்றோ இதழ்களை முழுசுமாய் போட்டுத் தாக்கி இருப்பது நேற்றிலிருந்தே பதிவாகி வருகிறது. ஒரு லெவல் மேலேறி ஐந்து இதழ்களையுமே நேற்றைக்கே படித்து முடித்திருந்த நண்பரும் உண்டுதான். இவர்களையெல்லாம் சில நூறு நம்பர்களில் க்ளோன் செய்து தமிழகமெங்கும் விதைத்து வைத்தால், மாதம் ஐந்தென்ன ஓரு டஜன் இதழ்களையுமே போட்டு தாக்கலாம் போலும்.
இம்முறை எனது பிரதான அக்கறை இருந்தது புது வரவு பிளாக்ஸாட் மீதே !! இந்தக் கடுவனார் உங்கள் மத்தியில் என்ன மாதிரியான முத்திரையினை பதிக்கக் காத்துள்ளாரோ என்று யூகிக்கத் தெரிந்திருக்கவில்லை . 'இது என்னடா பூனையும் தவளையுமா வருது..? இதெல்லாம் ஒரு கதையா..?' என்று மூக்கில் குத்திவீர்களோ ? என்ற பயம் கூடக் குடியிருந்தது ! Becos, இந்தக் கதை சொல்லல் பாணிக்குப் பழகிட கொஞ்சமாய் பொறுமை தேவைப்படக்கூடும் என்று பட்டது. ஆனால் சுனாமியிலேயே ஸ்விம்மிங் போடும் நீங்கள், லெப்ட் ஹேண்டிலேயே புதுமைகளையும் கையாள்வது கண்கூடாய் தெரிகிறது. Early days தான் - இருந்தாலும் இந்த இறுக்கமான புதுப்பாணிக் கதை சொல்லலை அட்டகாசமாய், ஆரவாரமாய், இதுவரையிலும் வரவேற்றிருப்பது வதனத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப்பை எரியச் செய்துள்ளது. காலமாய் ஏதேதோ தேசங்களில் இருந்தெல்லாம் கதைகளை வரவழைத்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம் தான். இருந்தாலுமே உலகெங்கும் மெகா ஹிட்ஸாகி வலம் வரும் ஒரு சில தொடர்களானவற்றை தமிழுக்குக் கொண்டுவரும்போது உற்சாகமானது ஒரு மிடறு தூக்கலாக இருப்பதை பலமுறை உணர்ந்துள்ளேன். லார்கோவை தமிழ் பேசச் செய்தபோது ஜிலோ என்றிருந்தது. டின்டினை நம் கரைகளுக்கு இட்டாந்த போது ஜிலீரென்றிருந்தது. அவற்றுக்குச் சற்றும் குறைவில்லா உற்சாகம் தருகின்றது ப்ளாக்சாடின் வருகை. Becos, இந்தப் பூனையார் பேசிடும் 29-வது உலக மொழி நமது தமிழ். கிட்டத்தட்ட 30 வெவ்வேறு தேசங்களில், வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு ரசனைகளில், உள்ள வாசகர்களை கவ்விக் கவர்ந்துள்ள ஒரு நாயகன் நமக்கும் பிடித்துள்ளது எனில் அது பெருமிதப்பட்டுக்கொள்ளும் சமாச்சாரம் தானே?! So BLACKSAD உங்கள் வாசிப்பில் எவ்விடம் ஸ்கோர் செய்கிறார் என்பதை மறவாது இங்குமே பதிவிடுங்களேன் ப்ளீஸ்.
And of course ஏற்கனவே சொன்னது போல இம்மாதம் டெக்ஸ் அடித்திருப்பது சிக்சரெல்லாம் அல்ல, பன்னிரண்டு ரன்கள் தரவேண்டியதொரு மெகா ஹிட். கதைக்குள் புகுந்துவிட்டால் எந்த வேலை குறுக்கிட்டாலுமே, இதழைக் கீழே வைக்க இயலாது என்று உறுதியாகச் சொல்வேன். And மருந்துக்குக் கூட அந்த இறுக்கமான டென்ஷனை மட்டுப்படுத்திடக்கூடாது என்பதற்காகவே கதாசிரியர் இம்முறை கார்சனை உட்புகுத்தியிருக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. முழுக்க முழுக்க டெக்ஸ் சோலோவாக செய்யும் ரகளை இங்கே வேறொரு லெவல். அதிலும் இரவில் ஹோட்டல் அறையில் மனுஷன் தனியாகப் படுத்திருக்கும் போது அவரைத் தீர்த்துக் கட்ட எதிராளி அனுப்பும் மரண தூதர்களை அவர் கையாளும் அந்தப் பக்கங்களெல்லாம் மெய்யாலுமே மயிர்க்கால்களை நட்டுக்கச் செய்யும். Oh yes டெக்ஸ் தொடரில் "துயிலெழுந்த பிசாசு" கூட நமக்கு நெஞ்சுக்கு நெருக்கமானதே, ஆனால் "நள்ளிரவின் நயனம்" போல துவம்சம் செய்யும் அசாத்தியங்களே, நாற்பத்தி ஓர் ஆண்டுகளுக்குப் பின்பும் நம் மத்தியில் இந்த மனுஷனை தன்னிகரின்றி உலவச் செய்திடுகின்றது. இம்மாத டெக்ஸ் போனலியின் கதை சொல்லலுக்கு ஒரு அட்டகாச அர்ப்பணிப்பு என்பேன்.
And சமுராய்களைப் பொறுத்தவரையில் இங்கே வாசிக்கும் நேரத்தை விட அகண்ட விழிகளோடு ஒவ்வொரு பிரேமையும் ரசிக்கத் தேவைப்படும் மெனக்கெடலே ஜாஸ்தியாக இருக்கும் என்பேன்.In fact, இங்கே கதாசிரியருக்கு ஒவ்வொரு பக்கத்தையும் வர்ணித்து எழுதித் தரும் பணிதான் அசுரத்தனமான வேலையாக இருந்திருக்குமே தவிர, வசனங்களைச் செதுக்குவது மொத்தமே அரை நாளது வேலையாகத்தான் இருந்திருக்கும். பேனா பிடிக்கும் போது எனக்குமே it was no different. அந்தப் பெண்மணி பழிவாங்கும் படலத்துக்குள் புகுந்த பிற்பாடு, ஆக்ஷனில் காட்டும் ஜாலங்கள், பேனாவை மூடிவிட்டு பராக்கு மட்டுமே பார்க்கச் சொல்லி என்னைக் கோரியது. 'வஞ்சம் தீர்க்கும் வேங்கைகளே' is going to be an absolute visual treat.
அப்புறம் நமது கானகத்துக்காரர் மிஸ்டர் நோவைப் பொறுத்தவரை, இதுதான் துவக்க சாகசம் என்பதால் ஏற்கனவே பார்த்ததொரு கதையின் டெம்ப்ளேட் நமக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் செம breezy read என்பதில் துளியும் ஐயம் கிடையாது. 1975-ல் டெக்ஸும் சரி, டைலன் டாகும் சரி, ஸாகோரும் சரி, பிரித்து மேய்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், முற்றிலும் புதியதொரு மார்க்கத்தில் ஒரு நாயகரை இட்டுச் செல்லும் உத்வேகத்தில் G.L. போனலி அவர்கள் இந்தச் சரக்கடிக்கும் பைலட்டை சிருஷ்டித்துள்ளார். And இந்த மனுஷனும் கிட்டத்தட்ட 400 சாகசங்கள் வரை இத்தாலியில் போட்டுத் தாக்கியிருப்பது அந்நாட்டின் காமிக்ஸ் வாசகர்களின் பன்முக ரசனைக்கொரு எடுத்துக்காட்டு !
Last but not the least... கதிரவன் கண்டிரா கணவாய் .
சினிமாவில் 'ரூம்காம்' என்றொரு கான்செப்ட் வைத்துப் படமெடுப்பார்கள். அதாவது, ஒரு வீட்டில் ஒரே அறைக்குள் உட்கார்ந்தபடிக்கே மூன்று, நான்கு பேர் மாத்திரமே பேசிக்கொண்டு அந்தக் கதையை நகர்த்திச் சென்று, படம் முழுக்கவே அந்த வீட்டுக்குள் மையம் கொண்டிருப்பதாக எடுத்திருப்பார்கள். இந்த ஆல்பத்தை 'அண்டர்கிரவுண்ட் காம்' என்று சொல்லலாம் போலும். ஏனெனில், துவக்கப் பக்கங்களைத் தாண்டிச் சென்ற பிற்பாடு, சுரங்கக் குழிக்குள் விழுந்துவிடும் அந்த யூத், கதையின் முடிவு வரைக்கும் அந்தக் குழிக்குள்ளேயே படும் பாடுகள்தான் இந்த சாகசமே. புக் வெளியான பிற்பாடு இதில் நான் செய்த சென்சார் பற்றி, செய்ய வேண்டிப் போன அவசியம் பற்றி, இந்த விவகாரம் பற்றி உங்களிடம் நான் வாய் திறக்க நேர்ந்ததும் ஏன் ? என்பது குறித்து விளக்குவதாக பிராமிஸ் செய்திருந்தேன். இதோ புக்ஸ் உங்கள் கைகளை எட்டிப் பிடித்துவிட்டன! ஆனால், இன்னமும் நிறையப் பேர் வாசித்திருக்க மாட்டீர்கள் என்பது உறுதி. வாசித்திருந்தாலுமே நான் கத்தரி போட்ட பக்கங்கள் எவை ? என்பதை யூகிக்க வழி இருக்காது தான். So கதையைப் பரவலாய்ப் படித்து முடித்த பிற்பாடு, நான் காலி செய்த பக்கங்கள் பற்றி மேலோட்டமாய் தகவல் தருகிறேன். பொதுவெளியில் பகிர்ந்திடும் அளவுக்குச் சிறப்பான சமாச்சாரம் அல்ல என்பதால் அதை விஸ்தீரணமாய் எழுதிடச் சாத்தியப்படாது. ஐஞ்சரைப் பக்கங்கள் - அஞ்சரைக்குள்ள வண்டிக்கு அண்ணன் ரகம் ! புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், நவம்பரின் தீபாவளி அதிர்வேட்டுகளைத் தயார் செய்ய நடையைக் கட்டுகிறேன் folks.
Bye now, have a great long weekend! See you around !!
Online listing : https://lion-muthucomics.com/latest-releases/1501-2026-october-pack-.html


,🤗👌
ReplyDeleteமிஸ்டர் நோ அட்டை போட்டோவை விட இதழை நேரில் பார்த்த போது நன்றாக இருக்கிறது சார்
ReplyDeleteCan few pages of Blacksad shared here?
ReplyDeleteசார்.. இதெல்லாம் போங்காட்டம்!!
ReplyDeleteஅந்த 5½ பக்க ரகசியத்தை இங்கே போட்டுடைப்பீர்கள் என்று எண்ணியிருந்தோம்.. 😤
சரிங்க சார்.. அந்த 5½ பக்க சம்பவம் இடம்பெறும் சூழல் - அந்த குகையா அல்லது வில்லனின் வீட்டிலா என்பதை மட்டுமாவது சொல்லுங்கள்!
குகையில்....
Deleteம்.. இப்போ புரியுதுங்க சார்!!😯
Deleteஊஹூம்... யூகிக்கவே முடியாது 🥹
Deleteஅவளுக்கு 'அந்த சம்பவத்தால் ' அப்படி என்ன உடலில் பிரச்னை ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள அவள் மருந்து-மாத்திரைகள் வைத்திருக்கும் கப்போர்டை ஒரு போட்டோ எடுத்து zoom செய்து அந்த மாத்திரை (Efavir 600) என்னவென்று தெரிந்து கொண்டேன் சார்! பாவப்பட்ட ஜென்மம் அவள்!!😤
Delete///ஊஹூம்... யூகிக்கவே முடியாது///
Deleteவலியால் துடிக்கும் கெவினுக்கு கொஞ்சம் relief தருகிறாள் - அதானேங் சார்? 🤔
ஒரு யூகமா அப்புடி சொல்லலாம் - அப்பிடி இல்லேன்னும் சொல்லலாம்... 🥹
Delete🤔🤔
Deleteவணக்கங்கள்
ReplyDeleteவணக்கம் சார். நன்றி
ReplyDeleteஅக்டோபர் pack - அள்ளுதுங்க சார்!!😍😍😍😍😍😍
ReplyDeleteநிலங்களின் நிழலின்- முதல் பேனலில் உள்ள வசனமே இது என்ன மாதிரி உலகம் என்று சொல்லி படிக்கிற ஆர்வத்தை தூண்டுகிறது
ReplyDeleteஇந்த டயலாக் - முஷ்டியில் இருக்கிற வலு மூளையிலே கிடையாதே நமக்கு
Deleteரொம்ப ரசித்தேன்
**** கதிரவன் கண்டிரா கணவாய்! ****
ReplyDeleteஇரண்டு இளம் பெண்களும், ஒரு இளைஞனும் கைவிடப்பட்ட பழைய சுரங்கம் ஒன்றை ஆராய, நகரத்திலிருந்து வெகு தொலைவு தள்ளி இருக்கும் ஒரு காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். சுரங்கத்தில் நுழைவதற்கான நுழைவாயிலை தேடிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு பாழடைந்த கிணறு போன்ற அமைப்பிற்குள் விழுகிறார்கள்!
செல்போன் சிக்னல் கிடைக்காத இடம். கையில் இருப்பது 3 லிட்டர் தண்ணீர் மட்டுமே! யாராவது தங்களை தேடி வருவார்கள் எப்படியும் தமக்கு உதவி கிட்டும் என்ற நம்பிக்கையில் நேரத்தை யுகமாய் கழிக்கிறார்கள்!
எப்படியாவது கிணற்றின் மேல் பகுதியை அடைந்து விட வேண்டும் என்ற வேட்கையில் மேலே ஏறும் அந்த இளைஞனின் முயற்சி தோல்வியில் முடிகிறது. அந்த முயற்சியில் அவன் காலில் பெரிய காயம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விடுகிறான்.
எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்ற முனைப்பில் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது!
ஐந்து நாள் ஜீவ மரண போராட்டத்தின் இறுதியில் என்ன நடக்கிறது என்பதை மீதக் கதை!
கதையின் இறுதியில் கதாசிரியர் நமக்கு ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்! கிணற்றுக்குள் விழும் மூவரில் ஒருவருக்கு பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு சென்று விட, அப்படி கோமா நிலைக்கு சென்றவரின் பார்வையில் முழுக்கதையும் நடப்பதாக கதையை முடிக்கிறார் கதாசிரியர்!!
யப்பா!! பாழடைந்த கிணற்றுக்குள் மூன்று பேரின் ஜீவ மரணப் போராட்டம் பதைபதைக்க வைக்கிறது! ஆரம்பம் முதல் இறுதி வரை திக் திக் - லப் டப் !! அந்த மூன்று பேருடன் நான்காவதாக நாமும் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள் கதாசிரியரும் ஓவியரும்!
கதை நகரும் பரபரப்பில் நமது எடிட்டர் சார் சொன்ன அந்த அஞ்சரைப் பக்கத்தை தேட வேண்டும் என்ற எண்ணம் கூட எழவில்லை என்பதே உண்மை!
எதிர்பார்த்ததை விட பல மடங்கு திக் திக் அனுபவத்தை ஏற்படுத்தி விட்டது இந்தக் கதை!
படித்து பல மணி நேரங்கள் ஆகியும் கூட என்னால் அந்த கிணற்றிலிருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை!!
நிஜமாகவே ஒரு மிரட்டலான வாசிப்பு அனுபவம்!! 😳😳😳
🤴
ஓவர்கோட் கிழிஞ்சா போனால் போகட்டும்னு உதறித் தள்ளக் கூடிய ஒரு டிடெக்டிவ் இந்த லோகத்தில் இன்னும் பிறந்ததாய் எனக்குத் தோணலை - உண்மை சார். செம டயலாக் ☺️
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவணக்கம் ஐயா..
ReplyDeleteவணக்கம் எடிட்டர் சார் 🙏
ReplyDeleteஇந்த முறை mr .நோ தான் முதல் வாசிப்பு
ReplyDeleteஅட்டைப்படம் மிகவும் நன்றாக உள்ளது
கதையும் அருமை , படம் அனைத்தும் பழைய template சூப்பர் . எனக்கு பழைய ஆபிரிக்கா சதி , இஸ்தான்புல் நாடகம் re create போல இருந்துது .
வந்துட்டேன்...
ReplyDeleteநான்கு புத்தகங்களை படித்து விட்டேன்.
ReplyDeleteமுதலில் நிழல்களின் நிழலில்
நாயகன் ஜான் பிளாக் சாட் ஒரு கலக்கல் அறிமுகம்.
தனது முன்னாள் காதலி கொல்லப்பட்டு கிடக்க யார் அந்த கொலையாளி என்று தேடத் துவங்குகிறான் ஜான். நமக்கு ரொம்பவும் தெரிந்த பழிவாங்கும் கதை தான் அதை சொன்ன விதம் தான் புதுசு. ஓவியங்கள், கலரிங் எல்லாமே அருமை அப்படி ஒரு அழகு கதையும் செம்ம வேகம் அட்டகாசமான முடிவு.
வசனங்கள் எல்லாமே அருமை.
மனதை கவர்ந்த ஒரு சில
"மனசாட்சியின் உறுத்தல் எப்போதுமே ஒரு சங்கடமான தோழன் தான்"
"உள்ளுணர்வுகள் ஊதும் சங்குகள் என்றும் பொய்த்தது இல்லையே"
எனது மதிப்பெண் 10/10.
செம 💐💐💐👏👏👏
Deleteஇரண்டாவது வஞ்சம் தீர்ப்போம் வேங்கைகளே
ReplyDeleteமுதல் பாகத்துக்கும் இதற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை.
ஆனால் ஆரம்பம் முதல் இறுதி வரை வேகம் வேகம் தான். தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்க செல்லும் மகளின் கதை தான் இது.
அதும் பயிற்சி முடிந்து வந்து அந்த வில்லன்களை வெட்டி வீசும் அந்த சண்டை காட்சிகள் எல்லாம் Wow. அதற்கு பிறகு அவளுக்குள் ஏற்படும் மாற்றம் அது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.
எனது மதிப்பெண் 9/10
குமார் சேலம்
😍😍😍 இதோ படிக்கறேன்..
Deleteநேற்று இரவே மூன்றாவதாக படித்தது கதிரவன் கண்டிரா கணவாய்
ReplyDeleteமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதும் இந்த கதையே. இதனாலேயே கி நா ரொம்ப பிடிக்கிறது.
ஒரு கை விடப்பட்ட சுரங்கத்திற்குள் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் மாட்டிக்கொள்ள அவர்கள் அங்கே இருந்து தப்பி வெளியே வந்தார்களா இல்லையா என்பது தான் கதை.
செல்போன் சிக்னல் இல்லை, சார்ஜ் இல்லை வெளியே செல்ல எந்த வழியும் இல்லை, கொண்டு வந்த உணவுப் பொருட்களும் குறைய தொடங்க தொடர்ந்து 5 நாட்கள் ஏதாவது உதவி வந்து சேருமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் பாசிடிவ் ஆக ஃபன் ஆக இருக்கும் அந்த நிலைமை நாளாக நாளாக மோசமாக மாற நாமும் அவர்களோடு அங்கே மாட்டிக் கொண்ட உணர்வு.
அதும் Carol அங்கே குளிர் தாங்க முடியவில்லை என்று சொல்லும் போது எனக்கும் குளிர தொடங்கி விட்டது. கெவின் சொல்லும் survival skills எல்லாமே அருமை. ஈவா வின் கடந்த கால நினைவுகள், இன்னும் பல விஷயங்கள்.
"என் முகத்தில் எப்போது சூரிய ஒளியின் வெதுவெதுப்பை உணருவேன் என்று இருக்கிறது. எப்போதுமே இருப்பதின் அருமையை அது இருக்கும் போது உணரவே மாட்டோம் போலும்" செம்ம டயலாக் சார்.
அந்த 5 1/2 பக்க கத்திரி சரிதான் சார். Very Disturbing.
Climax twist சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.
ஓவியங்கள், மொழிபெயர்ப்பு, கதை எல்லாமே அருமை.
குமார் சேலம்
நிழல்களின் நிழலில்
ReplyDeleteஆல்பத்தின் தலைப்பே அசத்தல் என்பேன். நிழல்களுக்கு நிழல் இருக்குமா? அப்படி நிழல்களுக்கு நிழல் இருந்தால் அது நிழலை விட கருப்பாக இருக்குமா? என்று லாஜிக் இல்லாமல் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. நிழல்களின் ராஜ்ஜியமான கருந்துளையின் நிழல்களை கூட நாம் காண முடிவதில்லை ஏனெனில் வெளிச்சத்தை விழுங்கி விடுவதால். அப்படிப்பட்ட நிழல்களின் நிழலாக நம்ம வில்லன். அந்த வில்லனின் மீதே வெளிச்சத்தை பாய்ச்சி தண்டனை வாங்கித் தர முடியுமா? சட்டத்தின் கண்கள் அவனை பார்க்குமா? ஆகையால் நிழல்களின் ராஜ்ஜியத்தின், ராஜாவான பூனை சட்டத்தை தானே கையில் எடுத்து நீதிபதியாகிறான்.
இந்தக் கதை சாதாரண ஒரு துப்பறியும் கதை. எந்த தடயமும் விட்டுச்செல்லாத ஒரு கொலையாளியை கண்டறியும் கதை.
இதில் என்னத்த புதுமையாக சொல்வது என்று கதாசிரியருக்கு தோன்றியத்தின் விளைவு, ஒவ்வொருவரின் ஆழ்மனதின் மிருக குணத்தை முகமாக வரைந்து வைத்திருக்கிறார்.
அங்கு தான் கதை சொல்லி வென்றிருக்கிறார். பல விஷயங்களை, அந்த அந்த மிருகங்களின் இயல்பை சொல்லாமல், நமக்கு செய்தி கடத்திய தன்மை, கதையை வேறொரு கோணத்தில் என்னை பார்க்க வைத்தது.
நேற்று எடிட்டர் அவர்கள் யாரெல்லாம் படித்து விட்டீர்கள் என்று கேட்ட பொழுது, கதையில் இன்னும் தெளிவு வர மறுவாசிப்பு செய்யணும் போல சார் என்றேன். மறுவாசிப்பை முடித்தும் குழப்பம் தீரவில்லை. வில்லன் யார்? ஒரு தவளை. தவளையின் தன்மை என்ன பூச்சிகளை தின்பது, ஒரு வகையில் விவசாயிகளுக்கு நண்பன் என்று யோசித்தாலும் அவன் எப்படி வில்லன் என்பது எனக்கு புரியாமல் இருந்தது. வேறு வழி இல்லை என்று கூகிளிடம் உதவி கேட்டேன்.
வில்லன் வெறும் தவளை அல்ல அவன் ஒரு cane toad. விக்கிபீடியா தமிழில் பிரம்பு தேரை என்கிறது ஆனால் அது கரும்புத் தேரையாக இருக்கும் என்பது என் புரிதல். CANE TOAD டின் குணாதிசயம் தான் இங்கு ஹைலைட்டே. இதன் விஷம் பிற உயிர்களுக்கு ஆபத்தானது. முக்கியமாக நாய்களுக்கு. நாய்கள் தான் இங்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் காவலர்கள். அவர்களால் வில்லனை தொட முடியாது. இந்த தேரை இனம் மிகவும் பசிமிக்கது. எவ்வளவு தின்றாலும் பசி அடங்குவதில்லை. ஆகையால் அது உணவாக உட்கொள்ளும் மிருகங்கள் வெறும் பூச்சி மட்டும் இல்லை. ஆகையால் தான் வில்லனால் நிழல் உலக சாம்ராஜ்யத்தை கட்டி ஆள முடிகிறது.
இந்த தன்மை புலப்பட்ட பின்பு, கதையின் தன்மை இன்னும் பிரகாசமாகியது. இந்த பிரகாசத்தின் வெளிச்சத்தில், நிழல்களின் நிழல் இன்னும் அழகாக தெரிந்தது.
கதை 10/10
ஓவியம் 11/10
மொழிபெயர்ப்பு 10/10
உடுமபு இறந்த பிறகு நம்ம ஹீரோ புகைபிடித்துக் கொண்டே சிந்திக்கும் காட்சியின் கேமராக் கோணம் ஆயிரம் வார்த்தைகளுக்கு ஈடானது. - SURES THANAPAL, TIRUVANNAMALAI
செம்ம ரிவ்யூ சுரேஷ் சார்
Delete😍😍😍💐💐💐💐
Deleteஅட்டகாசமான விமர்சனம்...
Delete*Blacksad*
ReplyDelete*நிழல்களின் நிழலில்..*
முதல் பக்கத்திலிருந்தே பரபரப்பு.. கதை சொல்லும் விதமோ hard-boiled crime fiction. ஆனால் இங்கே மனிதர்களுக்குப் பதிலாக மிருகங்கள். அதுவும் வெறும் gimmick ஆக இல்லை.
Blacksad ஒரு பூனை என்பதே character designன் முதல் layer. அவனுடைய கண்கள், முகபாவனைகள், body language எல்லாமே அவனை ஒரு world weary private detective ஆக மாற்றுகின்றன.
கதை simple
ஒரு கொலை.
ஒரு பழைய காதல்.
ஒரு detective.
ஒரு நகரம் முழுவதும் மறைத்து வைக்கப்பட்ட secrets.
ஆனால் அதன் presentation தான் magic.
Juanjo Guarnido வின் artwork இந்த volumeன் உண்மையான superstar. ஒவ்வொரு panelமும் animation background போல detailed.
Rain, shadows, interiors, night streets, cigarette smoke எல்லாமே 1950s American noir atmosphereஐ தூக்கி நிறுத்துகின்றன.
நமது ஆசிரியரின் writing அதற்கு சரியான counterpoint. Dialogue குறைவு, mood அதிகம்.
Blacksad பேசுவதைக் காட்டிலும் அவன் கவனிப்பதே அதிகம்.
மற்றொரு brilliant விஷயம், மிருகங்களின் speciesஐ characterisationஆக பயன்படுத்துவது.
ஆனால் அது குழந்தைகளுக்கான anthropomorphic fun அல்ல.
இங்கே fox, rhino, gorilla, dog, cat எல்லோரும் மனிதர்களைப் போலவே greedy, jealous, violent, corrupt, lonely என all shades of grey and black...
புத்தகம் முழுக்க, பல இடங்களில் ஒரு சிறிய visual joke இருக்கும், அடுத்த panelல் அதே உலகம் மிகவும் dark ஆகிவிடும்.
என்னை மிகவும் கவர்ந்தது
Blacksadன் silence.
அவன் typicalஆன "smart-ass detective" இல்லை. அதிகமாக பேசுவதில்லை. அதிகமாக explain செய்வதில்லை. அவன் பார்க்கிறான். புரிந்து கொள்கிறான். பிறகு only actionதான்..
அதுதான் characterக்கு ஒரு classic noir dignity கொடுக்கிறது.
ஒரு வரியில்,
*Disney animals meet Raymond Chandler*
⭐⭐⭐⭐⭐
Dr.A. K. K. Raja, Karur
Doc தான் First review போட்டாரு. அதனாலயே புத்தகத்தை படித்து விட்டு வந்து முதலில் இந்த ரிவ்யூவை படித்தேன்.
DeleteTop கிளாஸ்
எடிட்டர் சார் அந்த அக்டோபர் மாத சர்ப்ரைஸ் என்ன???
ReplyDeleteரெகுலர் அக்டோபரே இன்னமும் பாதிப் பேருக்கு கைக்கே போய்ச் சேர்ந்திருக்காது சார்.... So கொஞ்ச நாட்கள் போகட்டும்!
Deleteஓகே வெயிட் பண்ணுவோம்
Deleteநான் புத்தகங்களுடன் அந்த சர்ப்ரைஸ் வந்து சேரும் என்று நினைத்தேன் சார்.
Deleteஅனைவருக்கும் வணக்கம்....
ReplyDeleteMe in 😘😘💐👍😄
ReplyDeleteநம்ப போன் இப்பதான் சரியாச்சு 👍💐😘
ReplyDeleteBlog ல message இனிமேல் போடலாம் 👍😘
வெல்கம் சார்....:-)
Deleteஇம்முறை மொத்த இதழ்களின் எண்ணிக்கை எகிறி நிற்பது செம pleasant surprise .
ReplyDelete######
சார் இந்த மாதம் தீபாவளி அல்ல ..அடுத்த மாதம் தான் தீபாவளி எனவே அடுத்த மாதம் தீபாவளி விடுமுறைக்காக இதே போல் சஸ்பென்ஸ் இதழை ஏதாவது இணைத்து கொடுங்கள்...:-)
நிழல்களின் நிழலில் (பிளாக்ஸாட்)
ReplyDeleteதமிழில் வெளிவரும் முதல் Anthropomorphic Graphic Novel இதுதான்.
Writer, protagonist detective-க்கு Cat face, Police-க்கு German Shepherd Dog face, உடல் வலிமையான characters-க்கு Bear, Rhino face-ன்னு ஒவ்வொரு character-க்கும் வித்தியாசமான முக அமைப்புகளை கொடுத்திருக்கிறார். Villains-க்கு விதவிதமான Reptiles முகங்கள்!
முன்னாள் காதலியை Murder பண்ணியவனை கண்டுபிடிக்கிற ஒரு Straight-forward story-ஆ இருந்தாலும், விதவிதமான வித்தியாசமான முகங்களும், Dark Neo-Noir effect-ம், 1950s Retro vibe-ம் சேர்ந்து ஒரு புது விதமான அனுபவத்தை கொடுக்குது.
அந்த Neo-Noir effect-க்கு இன்னும் வலு சேர்க்குறது Watercolour Art Style. பக்காவான Illustration மற்றும் Paneling, கதையை ஒரு மிதமான வேகத்தில் ஒரே Feeling-ல தொடர்ந்து நகர்த்துது.
இந்த முதல் கதை, இந்த உலகத்தையும் Characters-ஐயும் Establish பண்ணுற விதத்தில் Perfect-ஆ இருக்கு. இனி வரப்போகும் Titles இன்னும் Complicated-ஆன Stories-ஓட இருக்கும் என்று நினைக்கிறேன்.
Negative-ன்னு சொல்லணும்னா, தமிழ் மொழிபெயர்ப்பில் “டாவு” என்பதற்குப் பதிலாக “முன்னாள் காதலி or Ex-lover”ன்னு பயன்படுத்தியிருக்கலாம்.
என்னன்னா, முதல் Panel-லேயே “டாவு”ன்னு வர்ற வார்த்தை, இந்தக் கதையோட Mood-க்கு சுத்தமா Set ஆகல. அந்த வார்த்தையைப் பார்த்த உடனேயே இது Dark Story-ஆ, இல்ல Jolly-ஆன Story-ஆன்னு ஒரு Confusion வருது
வஞ்சம் தீர்க்கும் வேங்கைகளே...
ReplyDeleteமீண்டும் ஓர் அட்டகாசமான...அதிரடியான ஓர் சாமுராய் சாகஸம்....முதலில் பலத்த கைத்தட்டல்களை கதையின் ஓவியருக்கு தான் கொடுக்க வேண்டும்...ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்க ,வாசிக்க மிக பொறுமையுடன் ..ரசிப்புடன் இதழ்களின் சித்திரத்தை நோக்கும் பொழுது நாமும் அதனுள் நுழைந்து விடலாமா என்பது போல் அவ்வளவு அழகு...அவ்வளவு பிரமிப்பு...கதையும் முன்வந்த சாமுராய் கதை போலவே படு விறுவிறுப்பாக நடை போடுகிறது...தனது தந்தையின் மரணத்தை பழித்தவர்களை மகள் பழிவாங்குவது தான் கதை ..அதை மிக மிக சுவராஸ்யமாக படைத்து உள்ளார்கள் ..போன சாமுராய் சாகஸத்தில் அட்டகாசம் செய்த இஸி தாத்தா இந்த முறையும் அசத்துகிறார்...போன கதைக்கும் ,இந்த கதைக்கும்..இந்த மாந்தர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனினும் அந்த இஸி தாத்தா கதாபாத்திரம் மட்டும் வருகை தந்து ஒவ்வொரு சாகஸத்திலும் பட்டையை கிளப்புகிறார்...போன முறை போலவே இந்த முறையும் சாமுராய் சாகஸம் வெற்றி கொடி கட்டுகிறது...வாசித்த ப்ளாக்சாட் ஆக இருக்கட்டும்..இந்த சாமுராய் சாகஸமாக இருக்கட்டும் ...இரு இதழ்களுமே ஒன்றுக்கொன்று முந்துகிறது எனில் இன்னமும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மற்ற மூன்று இதழ்களும் பட்டசாய் வெடிக்க போகிறது என்பது உண்மை....