Powered By Blogger

Sunday, February 04, 2024

டிக் அடித்த டிக் !

 நண்பர்களே,

வணக்கம். ஜனவரி புலர்வதை ரசித்து, சென்னை விழாவின் விஸ்வரூபத்தை தரிசித்து ; , ஒரு ஜாம்பவான் நாற்கூட்டணியின் வெற்றியினையும் நுகர்ந்து - இதோ பிப்ரவரியில் நிற்கிறோம் ! ஆனால்....ஆனால்...."டின்டின்" என்ற மந்திரச்சொல்லின் பிரவாகம் இன்னமும் அடங்கிய பாடில்லை ! திருப்பூர் புத்தக விழாவின் must buy லிஸ்ட்டில் "திபெத்தில் டின்டின்" இடம் பிடித்துள்ளதென்றால், ஏஜெண்ட்களிடமும், நம்மிடம் ஆன்லைனில்  வாங்குவோரும் இன்னமுமே தெறிக்க விட்டுக்கொண்டுள்ளனர் ! Almost தினசரி ஏதேனும் ஒரு ஊரின் முகவர் மறுக்கா ஆர்டர் தந்து கொண்டிருக்கிறார் & ஒவ்வொரு மாலையிலும் புதுசு புதுசாய் இல்லங்களைத் தேடி டின்டின் பிரதிகள் கூரியரில் படையெடுத்துக் கொண்டும் உள்ளது ! இதில் icing on the cake - ஐரோப்பிய சேகரிப்பாளர்களின் ஆர்வப் பிராவகமுமே - பெல்ஜியத்துக்கு மட்டுமே 3 கணிசமான எண்ணிக்கையில் ஏர்-மெயில்கள் போயுள்ளன ! ஒரு உலகளாவிய ஜாம்பவானின் நிஜமான வீச்சு என்னவென்பதை இத்தனை தசாப்தங்களுக்குப் பின்பாய் தரிசிக்கும் வாய்ப்பாய் இதனை பார்த்திடுகிறோம் ! Oh yes - வெற்றி நாயகர்கள் நமக்குத் புதியவர்கள் அல்ல தான் - ஆனால் இதுவரையிலுமான நமது அணிவகுப்பின் சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லைகள் இருந்து வருகின்றன ! டின்டினைப் போல "வானமே எல்லை" என்றோர் வெகு சொற்பமே !

*மாயாவி - strictly a British star ! இன்னும் சொல்லப் போனால் இவருக்கு இங்கிலாந்தில் உள்ள பிரபல்யத்தினைக் காட்டிலும் தமிழில் உள்ளது பன்மடங்கு அதிகம் என்பதை படைப்பாளிகளே சொல்லியுள்ளனர் !

*டெக்ஸ் - இத்தாலியில் ஒரு அசாத்தியர் ; பிரேசிலில் ; போர்ச்சுகலில் ; க்ரோவேஷியாவில் ; துருக்கியில் ; தமிழில் ஒரு அசாத்திய சூப்பர் ஸ்டார் ! ஆனால் ஐரோப்பாவிலேயே பல முன்னிலை காமிக்ஸ் மார்க்கெட்களில் 'தல' யின் presence கிடையாது ! And உலகின் முதல் மார்க்கெட்டான அமெரிக்காவில் ரொம்ப சமீபமாய் தான் காலூன்ற முயற்சித்து வருகிறார் ! உலகின் மார்க்கெட் # 2 ஆன ஜப்பானில் nopes !

*லக்கி லூக் : ஏகப்பட்ட மொழிகளில் ஐரோப்பாவில் கோலோச்சி வரும் பிஸ்தா தான் ; but ஒரிஜினல் பிதாமகர்களான மோரிஸ் & கோஸினிக்குப் பின்பாய் தொடரின் பிற்பகுதியில் உள்ள சில மிதரகக் கதைகள், தொடரின் நியாயமான அங்கீகாரத்துக்கு லைட்டாய் ஸ்பீட்-பிரேக்கர் போடுகின்றன ! 

*XIII - ஐரோப்பிய அதிரடி வெற்றித் தொடர் ! அதைத் தாண்டிய வீச்சு வேறெங்கெல்லாம் என்று அலசிட வேண்டி வரும் !

*கேப்டன் டைகர் - Ditto !! ஐரோப்பிய கண்டத்தினுள் ஒரு உச்ச ஆளுமை ! அதன் பின்னே வீச்சின் அளவு அதே வேகத்தில் கிடையாது !

மெய்யான ஒரு உலகளாவிய reach கொண்டதொரு கதைவரிசையினை அடையாளம் காட்டிடுவதானால் SMURFS நீலப் பொடுசுகளை சுட்டிக்காட்டிடலாம் ! ஐரோப்பாவில் ; அமெரிக்காவில் ; சீனாவில் ; ஜப்பானில் என்று இவர்களின் வெற்றித்தடங்கள் பதியாத தேசங்கள் வெகு குறைச்சல் ! ஆனால்.....ஆனால்...நம் மத்தியில் இவர்களுக்கு உருப்படியானதொரு அங்கீகாரம் இல்லாது போனது தான் துரதிர்ஷ்டமே !!

And yes - வேதாளருக்கு ஒரு global reach உண்டு தான் ! James Bond-க்குமே தான் !

ஆனால் அகவை 95 ஆகியும் புராதனம் கிஞ்சித்தும் தொனிக்காது ; எல்லைகளே இல்லா வீச்சுடன், அனைத்து வயதினருக்கும் ஏற்புடையதொரு நாயகராய் மிளிரும் டின்டின் முற்றிலும் வேறொரு உசரத்தில் இருப்பது புரிகிறது ! Of course இவருக்கு சவால் விடக்கூடிய பிரபல்யம் ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் தொடருக்கு இருக்கலாம் தான் - but அவர்களைத் தமிழ் பேச வைப்பதும், அதனை நீங்கள் ரசிக்கும் சாத்தியங்களும் சிரமங்களின் இமயம் என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது ! இப்போதைக்கு அடுத்த டின்டின் டபுள் ஆல்பத்தினை ஆகஸ்டுக்கு ரெடி பண்ணிட இப்போதே கரணம் போட ஆரம்பிச்சாச்சு ! இந்தத் தொடரின் 24 ஆல்பங்களையும் நமது வரிசையில் அணிக்கோர்க்கச் செய்யும் தினத்தில், நமது கேட்லாக்கின் ரேஞ்சே வேறு மாதிரி இருக்கும் போலும் !! Phewwwww & Fingers Crossed big time - பயணிக்க ஏகமோ ஏக தூரம் இருப்பதால் !!! 

Moving on, இம்மாதத்து இதழ்கள் வெளியாகி ஓரிரு நாட்களே ஆகியுள்ளன தான் - ஆனால் early trends காட்டுவதெல்லாம் நமது புதுத் தாரக மந்திரத்தின் அவசியத்தினையே ! வழக்கமாய் ஆன்லைன் ஆர்டர்களில் டெக்ஸ் இதழ்களைத் தேர்வு செய்து விட்டு, மீத இதழ்களுக்குள் இங்கி-பிங்கி-பாங்கி போடும் படலமே நடைமுறையில் இருந்திடும். ஆனால் இம்முறையோ - முக்கால்வாசி ஆர்டர்கள் மூன்று இதழ்களுக்குமே & பாக்கி கால்வாசி டெட்வுட் டிக் இல்லாது ஆர்டர்கள் ! இதனைப் புரிந்து கொள்வதில் சிரமமே இல்லை தான் - நமது டிக் பையன் கடுங்காப்பி போலானவன் என்பதால் ! கடுங்காப்பி அத்தினி பேருக்குமே ரசிக்கும் என்று எதிர்பார்க்க இயலாது தானே ?! So 'தல'யும், இளவரசியும் இம்மாதத்தினை ஆங்காங்கே தெறிக்க விடுவர் என்பதை ஏற்றுக் கொள்வதில் நம்மளவில் சிரமங்களில்லை !

டெட்வுட் டிக் !! 

நேற்றே நம்ம பத்து சாருக்கான பின்னூட்ட பதிலில் இது குறித்து எழுதியிருந்தேன் ! இந்த நாயகனை ஒரு நார்மலான காமிக்ஸ் வட்டத்துக்கு அறிமுகம் செய்வதென்பது - கல்யாணப் பந்தியில், கோவக்காய் கூட்டு + பாவக்காய் பொரியல் என்பதை பரிமாறுவதற்குச் சமம் என்பேன் ! ஆனால் 'கோவக்காயோ, பாவக்காயோ, அதையும் ரசித்துத் தான் பார்ப்போமே ; நல்லா இருந்தா ஏற்றுக் கொள்ளவும் செய்வோமே ?!' என்ற பக்குவம் உங்களைத் தவிர்த்த இன்னொரு இந்திய மொழியின் காமிக்ஸ் வட்டத்துக்கு நஹி என்பதே bottomline ! ரிட்டையர் ஆகி, ஊட்டுல குந்திக் கிடக்கும் பல் போன நாட்களில் இந்தப் பயணத்தினை அசை போடும் தருணங்களில், நான் எண்ணி வியக்கவும், மலைக்கவும் போகும் சமாச்சாரங்களின் பட்டியலில் உசரே இருக்கப் போவன  - தாத்தாஸ் ; நவீன வெட்டியான் ஸ்டெர்ன் ; டெட்வுட் டிக் ; நிஜங்களின் நிசப்தம் போலான offbeat முயற்சிகளாகவே இருந்திடும் ! பத்தில் ஒன்பது காமிக்ஸ் எடிட்டர்கள் நிராகரிக்கக்கூடியவற்றை 'டிக்' அடிக்க மட்டுமன்றி, அவை காணும் வெற்றிகளை ரசிக்கும் வரமும் வாய்த்திருப்பது எனக்கன்றோ ?!  

And டெட்வுட் டிக்கின் வெற்றி ஒற்றை ஆல்பத்தின் flash in the pan அல்லவே ! மொத்தம் 7 அத்தியாயங்கள் கொண்ட 425 பக்கக் கதைவரிசை இது ! முதலிரண்டு பாகங்களைப் போட்டுவிட்டு, வரவேற்பைப் பார்த்துவிட்டு மீதத்தை வாங்கிக் கொள்ளும் option நமக்கு இருந்தது ! ஆனால், உங்களின் ரசனைகள் மீதான நம்பிக்கை + குரல்வளை வரைக்கும் கட்டைவிரலை தினித்துப் பார்க்கும் ஆனந்தம் - ஒன்றிணைந்து மொத்த 425 பக்கங்களையும் 'ஏக் தம்'மில் வாங்கிடப் பணித்தன ! And இதோ - 7 மினி ஆல்பங்களையும், மூன்று ரெகுலர் ஆல்பங்களில் பூர்த்தி செய்து நிற்கின்றோம் - டிக்குக்கு வாஞ்சையாய் டாட்டா சொன்னபடிக்கே ! நம்மைப் பொறுத்தவரை வெள்ளைக்கார துரைமார்-கருப்பு அடிமைகள் என்ற கோட்பாடெல்லாம் பரிச்சயம் கிடையாது - அமெரிக்காவினில் போல  ! நாமே ஒரு காலத்தில் தோல் கருத்த அடிமைகளாய் பார்க்கப்பட்டோர் தான் என்பதால் நமக்கு டிக்கின் வாழ்க்கையோடு ஒன்றிடுவது அத்தனை பெரிய சிரமமாக இருந்திடக்கூடாது தான் ! ஆனால் யதார்த்தம் அதுவல்ல என்பேன் - at least காமிக்ஸ் வாசிப்பினைப் பொறுத்த வரையிலும் ! இந்த 52 ஆண்டுகாலப் பயணத்தில் நாம் பார்த்துள்ள நாயக / நாயகியர் அனைவருமே வெளீர் தோல் கொண்ட அமெரிக்கர்களோ ; பிரிட்டிஷாரோ ; ஐரோப்பியர்களோ தான் ! In fact வெள்ளைத் தோல் கொண்டிரா ஒரே நாயக வட்டம் - நம்ம smurfs மாத்திரமே ! Oh yes - ஏஜென்ட் ராபினின் உதவியாளன் மார்வின் வெள்ளையன் அல்ல ; நமது XIII-ன் ஆதர்ஷத் தோழி ஜோன்ஸ் வெள்ளை அழகி கிடையாது ; டைகர் & டெக்சின் பல சாகசங்களில் கறுப்பினர்களுக்கு நல்லதொரு பங்களிப்பு சாத்தியப்பட்டுள்ளது தான் - ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரை ஒரு தொடரின் ஹீரோவாக நாம் பார்த்துள்ளதாக எனக்கு நினைவே இல்லை !  So நம்மையும் அறியாது - ஒரு காமிக்ஸ் வாசிப்பின் இலக்கணமாய் இந்த நிறபேதம் அமைந்திருப்பது ஒரு அரூப சமாச்சாரம் ! So இப்படியொரு ஹீரோவை ஏற்றுக் கொள்வது மாத்திரமன்றி, அவனது வாயிலிருந்து அருவியாய் கொட்டிடும் கலீஜ்களை உள்வாங்கிக்கொள்வதும் நமக்கே ஒரு மாறுபட்ட பரீட்சார்த்த முயற்சி தான் ! And நீங்கள் அந்தப் பரீட்சையில் அடி தூள் கிளப்பியுள்ளீர்கள் என்பது நமது பயணப் பெருமிதங்களுள் ஒன்று !  

Of course - ஆள் தான் கரடு முரடாய் இருக்கிறான் சரி, குறைந்த பட்சமாய் அவனை ஒழுங்காகப் பேசவாவது செய்திருக்கலாமே ? என்ற விசனம், கி.நா.மீது பெருசாய் அபிமானம் இல்லாத நண்பர்களுக்குத் தோன்றிடலாம் தான் ! ஆனால் ஒரு ஓவியர் எவ்விதம் கதாசிரியரின் கற்பனைக்கு உயிர் கொடுக்கிறாரோ - அதற்கு இணையான பங்கு ஸ்கிரிப்டுக்குமே உண்டு தானே ? So நான் கதாசிரியருக்கான தமிழக கூரியர் பாயாக வலம் வரும் போது பார்சலிலுள்ள முகவரிக்கே தானே பட்டுவாடாவைச் செய்திட வேணும் ? நான்பாட்டுக்கு எக்ஸ்டரா நம்பர்களைப் போட்டு வைத்தால், இந்தத் தொடரின் வீரியத்துக்கே ஆப்படிச்சாப்போல ஆகிடும் அல்லவா ? வார்த்தைகளில் நாசூக்கு பற்றியெல்லாம் பெருசாய் கவலை கொள்ளாது ; 'நம்ம மூத்திர சந்து தானே...நாலு சாத்து வாங்குனா வாங்கிட்டுப் போய்க்கினே இருப்போம் !' என்று நான் தீர்மானித்ததன் பின்னணி இதுவே ! இன்று கோர்வையாய் படித்துப் பார்க்கும் போது டிக்குக்கு ஜென்டிலான பேச்சு பாணியினைத் தந்திருந்தால் இந்தத் தொடர் விளக்குமாற்றுப் பூசை வாங்கியிருக்கும் என்பது புரிகிறது ! Pheww !!

இம்மாதத்தின் surprise packet என்னளவில் மாடஸ்டி தான் ! கோணாம்பட்டியிலேயே இன்றைக்கு IPhones புழக்கத்தில் இருக்க, கதை நெடுக மாடஸ்டி "அல்லோ...கோப்பால்...இங்கே உங்க மருமாள் நலம் !! கவலையை விடுங்க !" என்று ஆசுவாசப்படுத்தும் sequences கணிசம் ! ஆனால் இளவரசியின் கதாப்பாத்திரத்தின் வலிமையின் முன், சிலபல அயல்நாட்டு சக்திகளைத் தவிர்த்தோருக்கு வெறெந்தப் பிசிறும் தட்டியிருக்கவில்லை என்பது ஒரு சந்தோஷ ஆச்சர்யம் ! And கதை அரங்கேறும் நியூசிலாந்து ; அந்த மவ்ரீக்கள் ; நமது வாசிப்புகளுக்கு புதுசு என்பதுமே "ஒரு பண்டமாற்றுப் படலம்" இதழின் freshness க்கு ஒரு காரணியாக இருக்கலாம் ! Of course - மாடஸ்டி-கார்வின் நட்பின் அந்தப் பிரதிபலிப்பு நமக்கெல்லாம் செம பிடித்தமான விஷயம் என்பது yet again நிரூபணம் கண்டுள்ளது ! ஆஹா...இனி next stop இளவரசி டைஜஸ்ட் தான் !! என்று நம்ம கரூர் ராஜசேகர் சார் குதூகலிக்கக்கூடும் தான் - ஆனால் சுவீட்டை சாதம் ரேஞ்சுக்குப் பரிமாறினால் திகட்டிப் போய்விடும் என்பதே எனது அபிப்பிராயம் ! Maybe ஒன்றுக்கு இரண்டாய் சுவீட்களைப் பரிமாறிடலாம் ; அதற்கு மேலென்றால் பற்களுக்கும் பிரச்சனை ; ஜீரணத்துக்குமே !!

இம்மாதத்தின் டெக்ஸ் ஒரு வித்தியாச combo என்பேன் ! 'மொரிசுக்கோ தான் வராரு.....மர்மம் தரப் போறாரு...!!' என்ற சாங்கோடு கதை துவங்கினாலும், இது முழுக்கவே நம்ம தல டீமின் ஆவர்த்தனமே ! நம்மைப் போலவே மொரிஸ்கோவும் அகலப் பிளந்த வாயோடு அந்த "ஷுப்காப்ரா" சைத்தான்களை பராக்குப் பார்த்தபடியே பயணிக்கிறார் ! முழுக்க முழுக்க ஆக்ஷன் ; தோட்டாக்களின் தோரணம் ; with an element of the supernatural - என்று தடதடக்கும் இந்தக்கதைக்கு ஓவியங்கள் ஒரு ஜீவநாடி எனலாம் ! சும்மா ப்ரேமுக்கு ப்ரேம் ஓவியர் மிரட்டியிருப்பது மொரிஸ்க்கோவின் டீமை மட்டுமல்ல - நம்மையும் தான் ! அட்டைப்படமும் டெரராய் அமைந்திருக்க, டெக்சின் தொடரோட்டம் தொடர்கிறது !   

Looking ahead, இன்றைக்கு திருப்பூர் புத்தக விழா நிறைவுக்கு வருகிறது & நெல்லையில் நேற்று தான் விழா துவங்கியுள்ளது ! திருப்பூரின் அசுர வேகம் நெல்லைக்கு சாத்தியமாகிடுமா ? என்பதை தொடரும் தினங்களில் பார்த்திடும் அதே மூச்சில், பிப்ரவரி 17 & 18 தேதிகளில் சென்னையில் அரங்கேறிடவுள்ள COMIC CON பற்றிய சிந்தனைகளும் ஓட்டமெடுத்து வருகின்றன ! கிறுகிறுக்க வைக்கும் கட்டணங்கள் தான் ஸ்டாலுக்கு ; நுழைவுக் கட்டணமும் தொள்ளாயிரமோ என்னவோ தான் & இந்த 2 நாட்களில் காமிக்ஸ் விற்பனை என்பதெல்லாம் எம்புட்டு தூரத்துக்கு சாத்தியம் என்பது மர்மமே - yet இவர்கள் இந்தியாவுக்குள் கால்பதிக்கும் நகர்களிலெல்லாம் அதிர்வெடி வெற்றியினை ஈட்டி வருகின்றனர் ! இதோ - போன வாரம் ஹைதெராபாத்தில் நிறைவுற்றிருக்கும் HYDERABAD COMIC CON-ல் இரு தினங்களின் அட்டெண்டன்ஸ், வாய் பிளக்கச் செய்யும் 37000-மாம் !!! So நாம் பத்தாண்டுகளுக்கு முன்பாய்ப் பார்த்திருந்த விழாவுக்கும், இப்போதைக்கும் என்னென்னெ மாறியுள்ளன ; 2k இளசுகளின் ரசனைகள் என்னவென்பதை பராக்குப் பார்க்கவாச்சும் CHENNAI COMIC CON-க்கு வருகை தாருங்கள் guys என்பேன் ! ஒரு தக்கனூண்டு 2 x 2 மீட்டர் ஸ்டாலில் நமது இதழ்களில் selective ஆன தலைப்புகளோடு ; இங்கிலீஷ் காமிக்ஸ்சும் சேர்த்து display செய்திடவுள்ளோம் ! And yes - ஞாயிறு காலை கொஞ்சமாச்சும் நண்பர்கள் தேறும் பட்சத்தில் டின்டின் கூப்பனின் நேபாள குலுக்கலையும் போட்டுத் தாக்கி விடலாம் ! Hope to see you guys !!




Bye for now....have a great Sunday all ! See you around !

100 comments:

  1. //நமது கேட்லாக்கின் ரேஞ்சே வேறு மாதிரி இருக்கும் போலும் //

    அப்பவாச்சும் ISBN இருக்குமா சார்..

    ReplyDelete
    Replies
    1. அப்போவரைக்கும் போவானேன் ? இப்போவே உள்ளதை பாக்கலீங்களா ?

      Delete
    2. அந்த நாலு நம்பர் பார்கோட் ISBN நம்பரா சார்? டின்டின்க்கு கூட இல்லையே?

      Delete
  2. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. டெட்வுட்டிக் ககதை நிகழும் காலக்கட்டம் நிஜமான சம்பவம் ஒன்றை மையப்படுத்தியே அமைந்திருந்தது.. 700 செவ்விந்தியர்களை சுமார் இருபதே எருது வேட்டையர்கள் எதிர்கொண்ட வெற்றி கீதம் இந்த தென்றல் வந்து என்னை கொல்லும்..
    கதையின் சரித்திரம் இதோ..எருமைகளை வேட்டையாடுபவர்களுக்கும் சுமார் 700 கோமான்சே, கியோவா மற்றும் தெற்கு செயென் வீரர்களுக்கும் இடையேயான இந்தச் சண்டையில் இந்தியத் தோல்வி ஏற்பட்டது, 1874-75 ஆம் ஆண்டு சிவப்பு நதிப் போர் என்று அழைக்கப்படும் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையின் போது பலவற்றில் ஒன்று. சமீபத்திய சன் டான்ஸ் மற்றும் கோமஞ்ச் மருந்து மனிதர் இசதாயின் எளிதான வெற்றியின் வாக்குறுதியால் ஈர்க்கப்பட்டு, டெக்சாஸ் பன்ஹேண்டில் பரந்த தெற்கு மந்தைகளை அழிக்கும் வெறுக்கத்தக்க எருமை வேட்டைக்காரர்களுக்கு எதிராக போர்வீரர்கள் ஒரு மரண அடியை ஏற்படுத்த முயன்றனர். அடோப் வால்ஸில் வசிக்கும் இருபத்தெட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுக்கு எதிரான சோதனையின் பெயரளவு தலைவர்களாக இசதாயில் இளம் கோமான்சே குவானா பார்க்கர் இணைந்தார், இது இன்றைய டெக்சாஸின் ஹட்சின்சன் கவுண்டியில் உள்ள சிறிய வர்த்தகக் கடைகள் மற்றும் சலூன்.

    ஜூன் 27, 1874 அதிகாலையில், இந்தியர்கள் குடியிருப்பாளர்களைத் தாக்கினர், வேகனில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வேட்டைக்காரர்களை விரைவாகக் கொன்றனர். சலூனில் உடைந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் இரவு முழுவதும் விழித்திருந்ததால் மற்றவர்கள் உடனடியாக எச்சரிக்கப்பட்டனர். அவர்கள் பல தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தினர், மற்ற இரண்டு பாதுகாவலர்களை மட்டுமே இழந்தனர் - ஒன்று இந்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஒரு துப்பாக்கியின் தற்செயலான வெளியேற்றம். முற்றுகை ஐந்து நாட்கள் தொடர்ந்தது. இந்திய உயிரிழப்புகள் பல டஜன்களாக அதிகரித்தன, மேலும் இசதாயின் சக்தியின் மீதான நம்பிக்கை மங்கியது. முற்றுகையின் இரண்டாவது நாளில், பில்லி டிக்சன் தனது கட்டுக்கதையான ஷாட்டை ஒரு மைல் தொலைவில் உள்ள ஒரு போர்வீரனை முழுமையாக தாக்கினார். ஆறு வாரங்களுக்குப் பிறகு அடோப் வால்ஸ் குடியேற்றம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியர்கள் அதை தரையில் எரித்தனர். ஆயினும்கூட, போர் அவர்களுக்கு ஒரு கசப்பான பின்னடைவாக இருந்தது, மேலும் இது இராணுவத்தின் கைகளில் விரைவில் தொடரும் பெரிய தோல்வியை முன்னறிவித்தது.
    டெட்வுட் டிக்கை கதாசிரியர்கள் தொடர வேண்டும் என்பதே ஆசை.

    ReplyDelete
    Replies
    1. Yes sir..."டெட்வுட் டிக்"கே ஒரு வரலாற்று நிஜத்தின் நீட்சி தான் ! Nat Love என்றதொரு கறுப்பினச் சிப்பாயே டிக்கின் inspiration !

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. பார்டா !!

      அடுத்தவாட்டி COMIC CON ட்ரிப்புக்கு அரை டஜன் நண்பர்களுக்கு குலுக்கலில் sponsor செய்திடலாம் போலுள்ளது சார் !

      Delete
    2. அச்சச்சோ - அதுக்குள்ளாற வூட்டம்மா பெர்மிஷனை ரத்து செய்து விட்டார்களா சார் ?

      Delete
    3. இல்லை இல்லை சார். தவறாக type செய்ததால் அழித்து விட்டேன் சார்.

      Delete
    4. நான் ComicCon வருகிறேன் சார். ஞாயிறு அன்று. குலுக்கலை அன்றே வைத்துக் கொள்வோம் சார்.

      Delete
  5. // ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரை ஒரு தொடரின் ஹீரோவாக நாம் பார்த்துள்ளதாக எனக்கு நினைவே இல்லை //
    Comanche sir?

    ReplyDelete
    Replies
    1. கமான்சே அம்மணி ; ரெட் டஸ்ட் - இருவருமே கறுப்பினர் அல்ல சார் ! ஒவொயர் ஹெர்மனின் கலரிங் பாணி அவ்விதம் காட்டுகிறது !

      Delete
    2. ஹெர்மனின் "தனித்திரு....தணிந்திரு" முழுக்கவே blacks கொண்டதொரு ஆல்பம் !

      Delete
  6. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  7. தென்றல் வந்து என்னைக் கொல்லும்..

    பிப்ரவரி மாத புத்தகங்களில் முதலில் படிக்க எடுத்தது டெட் வுட் டிக் தான் சென்னை கண்காட்சியில் நீங்கள் இக்கதையை பற்றி கூறி இருந்தீர்கள்.

    உங்களிடம் எனக்கு இதுவரை வந்த கதைகள் பிடிக்கவில்லை சார் என்றதற்கு இக்கதையை படித்துப்பாருங்கள் என்று கூறி இருந்தீர்கள்.

    அதன் படி முதல் வாசிப்பு முடிந்தது. ஒரு அட்டகாசமான ஆக்சன் த்ரில்லர். இதுவரை வந்த கதைகளில் கறுப்பர் பற்றி அதிகம் விவாதிக்க படும் ஆனால் இதில் அதனை குறைத்து ஆக்சன் அதிக படுத்தி உள்ளனர்.

    இக்கதையின் உண்மையான ஹீரோ நீங்கள் தான். ஒவ்வொரு நக்கல் வசனங்களும் தெறி ரகம் உங்களுக்கு மட்டும் உரித்தான ஸ்டைல் பல இடங்களில் சிரிப்பை வரவழைத்தது.

    அடுத்தது ஆர்ட் ஒர்க் இதுவரை வந்த கதைகள் போல இல்லாமல் இதில் டிக் முகம் கொஞ்சம் நன்றாக இருந்தது போல இருந்தது. அதுவும் எனக்கு பிடித்திருந்தது.

    கதை டிக் மற்றும் அவரது நண்பன் ஜாக் ஒரு சிறு ஊருக்கு சென்று செவிந்தியர்கள் முற்றுகையில் மாட்டிக்கொள்கிறார்கள் அதில் இருந்து தப்பித்தார்களா என்பதே மீதி கதை

    கொஞ்சம் யோசிக்க வைத்தது இரு வார்த்தைகள் தான் தூர் மற்றும் லகடு தான் அதற்கு பதில் கொஞ்சம் சுலபமான வார்த்தைகள் பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றியது.

    ஒரு இடத்தில் கார்சன் போல குடிப்பேன் என்பதும் சரியாக இல்லை காரணம் அவர் அவ்வளவு மொடா குடிகாரரும் இல்லை.

    அடுத்து கதையும் முற்றுகை முடிந்ததும் முடித்திருக்கலாம் அதற்கு அடுத்து ரொம்பநேரம் சென்றது தேவை இல்லாத ஆணியாக தோன்றியது.

    மொத்தத்தில் டிக் தனது கடைசி சாகசத்தில் எனக்கு பிடித்தவராக மாறிவிட்டார். அவர்க்கு மகிழ்ச்சியாக விடை கொடுக்கிறேன்.

    ReplyDelete
  8. எடிட்டர் சார்! மாடஸ்டியின் கதை ஒரு பண்டமாற்று படலம் நன்றாக இருந்தது. ஆனால் சித்திரங்களை மீறிய பலூன்கள்தான் ரசிக்க ஒட்டாமல் செய்துவிட்டது... விலை கூடுதலானாலும் பரவாயில்லை. ஆரம்பத்தில் வந்த "கத்தி முனையில் மாடஸ்டி!"சைசில் சித்திரங்கள் சிதைவுறாமல் இனி வரும் மாடஸ்டியின் கதைகளை வெளியிட்டால் விற்பனையில் வெற்றி பெறும் என்பது எனது கருத்து!

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. டெட்வுட் டிக்: தென்றல் வந்து என்னைக் கொல்லும்!

      "இதைக்காட்டிலும் காட்டுமிராண்டித்தனமான காட்சி ஏதும் இருக்க வாய்ப்பில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதை நான் கண்டதில் புல்லரித்துப் போயிருந்தேன். நூற்றுக்கணக்கான தென்மேற்கு சமவெளிப் பழங்குடியினரின் போர் வீரர்கள், தங்கள் சிறந்த குதிரைகளின் மீது ஏறி, துப்பாக்கிகள் மற்றும் ஈட்டிகளுடன் ஆயுதம் ஏந்தி, அடர்த்தியான எருமைத் தோலினால் செய்யப்பட்ட கனமான கேடயங்கள் சகிதம், காற்றைப் போல வேகமாக வந்து கொண்டிருந்தனர்.
      அவர்கள் மீதும் அந்த குதிரைகளின் உடல்கள் மீதும் பூசப்பட்டிருந்த அடர் சிவப்பு, குங்குமம் மற்றும் காவி போன்ற அடர்த்தியான போர் வண்ணங்கள் பளீரென ஒளிர்ந்தன. எக்கச்சக்க மண்டைத் தோலிகள் அவர்களின் போர்க் கவசங்களிலிருந்தும், குதிரைகளின் கடிவாளங்களில் இருந்தும் தொங்கிக் கொண்டிருந்தன. பிரகாசமான இறகுகளால் செய்யப்பட்ட அணிகள் அவர்களின் தலைகளிலும் குதிரைகளின் பிடரி மற்றும் வால்களிலும் ஊசலாடின. அவர்களின் அரை நிர்வாண உடல்களில் வெள்ளி மற்றும் பித்தளை ஆபரணங்கள் மின்னியது. அந்த அணிவகுப்பானது புல்வெளியின் எல்லைவரையிலும் நீண்டிருந்ததாகத் தோன்றியது. அடிவானத்தில் உதய சூரியன் தனது காலை கிரணங்களை பரப்பிக் கொண்டே உயர்ந்தபோது அந்த ஒளிரும் பின்னணியில் இருந்து போர்வீரர்கள் வெளிப்பட்டதாகவே தோன்றியது".

      -மேற்காண் வரிகள் அடோப் வால்ஸ் சண்டையில் ஈடுபட்ட பில்லி டிக்ஸன் செவ்விந்திய வீரர்களின் அணிவகுப்பை முதலில் கண்டபோது கூறியது. 700க்கும் மேற்பட்ட செவ்விந்திய வீரர்களின் முற்றுகையை வெறும் 28 காட்டெருமை வேட்டையர்கள் சிதிலமான கட்டடங்களில் மறைந்தவாறே சமாளித்த இரண்டாம் அடோப் வால்ஸ் சண்டையின் உண்மைக் காட்சிகள்தான் இவை.

      முதல் பாகத்தில் வெள்ளைப் பெண்மணியைப் பற்றி கனவு கண்டதற்காகவே தூக்கிலிட துரத்தப்பட்ட டிக்; அடுத்த பாகத்தில் தன் நண்பனின் உடலை நல்லதோர் இடத்தில் இளைப்பாரச் செய்ய விடாமல் தடுத்த மொத்த ஜனத்தையே(?!) நசுக்கி ஆரவாரம் புரிந்த டிக்; இந்த பாகத்தில் பயணிப்பது ப்ளாக்ஹாட் ஜாக் மற்றும் மில்லியுடன். இந்த கதையைப் பற்றி எதுவும் நான் கூறப்போவதில்லை. ஆனால் நாயகனாகவே இருந்தாலும் கூட ஒரு கருப்பன், அழகான வெள்ளைக்காரியை சல்லாபிப்பதை நினைச்சா உச்சந்தலை சூடாகும் நிலை கதை முடிவுல கூட மாறலைங்கிறதுதான் வருத்தமே!!

      *டெட்வுக் டிக்: மாஸ்டர்பீஸ்!*

      Delete
    2. டெட்வுட்டிக்
      செவ்விந்திய கூட்டத்தினரின் முற்றுகையை எருது வேட்டையர்கள் முறியடித்த சாகசம் நிஜத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு என்பது நான் இதுவரை அறிந்திடாத
      தகவலே.
      நன்றி ஜானி மற்றும் சரவணகுமார் இருவருக்கும்.

      Delete
  10. காமிக் கான் டிக்கெட் கிட்டத்தட்ட இரண்டு நாள் சம்பளம் அதனால் வருவது சிரமம் ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. புரிகின்றது சத்யா ; அத்தனை பணம் தந்து 2 நாட்களைச் செலவிட இளசுகள் வரிசை கட்டி நிற்பதால் தான் இந்தக் கட்டணங்களை நிரந்தரமாக்கி விட்டார்கள் !

      Delete
  11. நன்றி அண்ணா...
    இந்த மாத புத்தகங்கள் திருப்பூர் வந்து சேர்ந்தது எக்ஸ்ட்ரா எனர்ஜி.
    இதுக்காகவே பல வாசகர்கள் தேடி வந்து வாங்கினர்.
    குழந்தைகளுக்கு டின்டின் அறிமுகப்படுத்துவது மிக எளிதாக உள்ளதால்
    மாலை ஒரு 5 டின்டின் இடத்தை காலி செய்தார்.
    இன்று கண்டிப்பாக கணிசமான விற்பையை தொடும் என நம்பலாம்.
    பிறகு...
    இது போன்ற புத்தக திருவிழா சமயத்தில் மாத புத்தகங்கள் வெளிவரும் போது உடனடியாக ஸ்டாலுக்கும் அனுப்ப கோரிக்கை வைக்கிறேன்.
    ஏனெனில் புதிய புத்தகங்கள் வருது என்றதுமே சந்தாவில் அல்லாத பல மறை முக வாசகர்கள் இந்த புத்தகங்களை ஸ்டாலில் வாங்க மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.
    "சந்தாவில் அனுப்பி விட்டுதான் ஸ்டாலுக்கு" என்ற கட்டுப்பாடுகளை தளர்த்தினால் நல்லது சார். இதுக்காக சந்தாவில் உள்ள நண்பர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன்.
    இது புத்தகத் திருவிழாவுக்காக மட்டுமே வேண்டுகோள்.
    🌹

    ReplyDelete
    Replies
    1. //சந்தாவில் அனுப்பி விட்டுதான் ஸ்டாலுக்கு" என்ற கட்டுப்பாடுகளை தளர்த்தினால் நல்லது சார். இதுக்காக சந்தாவில் உள்ள நண்பர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன்.//

      Nopes sir... ஓராண்டுக்கு முன்கூட்டியே முன்பணம் தந்திருப்போரே இந்தப் பயணத்தின் அச்சாணிகள் ! அவர்களின்றி இங்கு எதுவுமே சாத்தியமாகாது !

      So அவர்களுக்கான வாடிக்கைகளில் என்றைக்குமே மாற்றங்கள் இருந்திடாது !

      Delete
  12. *காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்*

    இரு வேறு தடத்தில் இருந்து கிளம்பும் கதை இணையும் பொழுது அனைத்து முடிச்சுகளும் அவிழ்ந்து சுபம். ரசவாதம் எனும் அறிவியல் ஆராய்ச்சியை மையப் படுத்தி கதையை நகர்த்தி உள்ளனர். எந்த மாயாஜாலமும் இல்லை, அறிவியல் குறித்து பெரும் விளக்கங்களும் இல்லாமல் கதையை அழகாக நகர்த்தி உள்ளனர். 

    ஏற்கனவே டைகர் ஜாக்கும் டெக்ஸும் ஷூப்காப்ராக்களை சந்தித்துள்ளனர் என்பது கதையின் ஓட்டத்தில் தெளிவாகிறது. அந்த கதையையும் படித்து விட ஆர்வம் எழும்புகிறது. 

    கதை 10/10
    ஓவியம் 10/10
    மேக்கிங் 8/10

    ReplyDelete
  13. *ஒரு பண்டமாற்றுப் படலம்*

    63 பக்கங்கள் தானே என்று தொடங்கினால், கதை என்ன என்பது 24 ஆம் பக்கத்திலேயே தெரிந்து விடுகிறது. அதன் பின் திரைக்கதையில் ஒரு தோய்வு. இங்கு மாடஸ்டி இதை தான் செய்யப் போகிறாள் என்றும் கார்வின் இதை தான் செய்யப் போகிறார் என்றும் ஏற்கனவே தெரிந்து விட்டபடியால் சுரத்தே இல்லாமல் படிக்க நேர்ந்தது. 

    மாவ்ரீக்கள் மற்றும் அவர்களின் வாழ்வு முறை தெரிந்துக் கொள்வதில் இந்த கதை உதவியது எனலாம். 

    மாடஸ்டியை ரசித்து பார்த்து படிப்பவர்களுக்கு தொய்வு ஏற்படாது. 

    கதை 8/10
    ஓவியம் 10/10
    மேக்கிங் 9.5/10 

    ReplyDelete
  14. *தென்றல் வந்து என்னைக் கொல்லும்*


    எங்கும் படர்ந்து இருக்கும் கருப்பு நிறத்தில் ஆங்காங்கே வெளிச்சக் கீற்றாய் வெள்ளை நிறத்தில் உருவங்களை செதுக்கிய ஓவியம் ஆயிரம் வார்த்தைகளை சொல்லிச் செல்கிறது முதல் பேணலிலேயே. 

    18 ஆம் பக்கத்தில் கதை சூடு பிடிக்கிறது. 1874 ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கதையில் குழைத்து கொடுத்திருக்கிறார்கள். கதையை படித்த உடன் SECOND WAR OF ADOBE WALLS படித்த உடன் டெட் வுட் டிக் உயிருடன் எழுந்து வந்து கண் முன் உலாத்துகிறார். 

    கதையில் வரும் மில்லீ, நம் டெட்வுட் டிக்கின் அழகான பக்கத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறாள். டெட்வுட் டிக்கின் முதல் கதையில் (நரகத்திற்கு நடுவழியே) நடந்த ஒரு கொடுமைக்கு, ஒத்தடம் கொடுத்தது போல் சில பல காட்சிகள் இதமாய் உள்ளது. ஆனால் பிரிவு கொஞ்சம் வேதனையை வரவழைத்தது. 

    கடைசி வரி இரவில் இந்தக் கதையை படித்துக் கொண்டிருந்த எனக்காகவே சொல்லப்பட்டது போல் இருந்தது. 

    " சாத்தானும் நானும் நாளை புறப்பட்டு விடுவோம் நண்பா! ஆனால் இந்த இரவு உன் கூடத் தான்!"

    டெட்வுட் டிக்குடன் உடனான என் பயணம் இத்துடன் முடிவுதான் இதயத்தை கனமாக்கவே செய்கிறது. 

    கதை 10/10
    ஓவியம் 10/10
    மேக்கிங் 9.5/10

    ReplyDelete
    Replies
    1. டெட்வுட்டிக், தனது குதிரை சாத்தானுடன் கிளம்பும் இறுதிக் காட்சி லக்கி லுக்கின் தனிமையே என் துணைவன் தீம் சாங்கை எனக்கு நினைவூட்டியது.

      Delete
    2. Idhayaththil konjam adhigam ganam(weight)

      Delete
  15. டெட்டிவுட் டிக்ன் முதலில் வந்த கதையை இப்பதான் தேடி எடுத்தேன்.

    மனிதர்களில் பலதரப்பட்ட வகைகள் உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் அதில் இதொரு வகை.
    ஓபன் டாக் பேசும் மனிதர்களை அப்படியே பிரதிபலிக்கிறது இந்த கேரக்டர்கள்.
    தனித்து பேசும்போது கொஞ்சம் தணிந்தும், நண்பர்களுடன் பேசறப்ப ஓபன் டாக்காக பேசுவதும் ஒரு பாணி.
    கிட்டத்தட்ட தாத்தாஸ் போல.
    இதில் பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவும் இல்லை.
    ஒருவேளை இப்படிப்பட்ட மனிதர்களை நாம நேரில் பாக்காமலேயே இருந்திருந்தால் "ஏன் இப்படி பேசுகிறார்கள்" என கேக்கலாம், ஆனா அப்படி பேசும் நபர்களை நாம் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கண்டிருக்கக்கூடும் பட்சத்தில் இதிலுள்ள பேச்சுக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே தோணுகிறது. இன்றைக்கு நேரிலும், வலைத்தளங்களிலும் சர்வ சாதாரணமாக வல்கர் வார்த்தைகளை நாம் பாக்காம இருப்பதில்லை என சொன்னால் யாருமே ஏற்றுக் கொள்ள முடியாது.
    மேலும் கதையை கதையாக பார்த்தால் அந்த விவாதங்கள் தேவையற்றது.

    ReplyDelete
  16. //நான் கதாசிரியருக்கான தமிழக கூரியர் பாயாக வலம் வரும் போது பார்சலிலுள்ள முகவரிக்கே தானே பட்டுவாடாவைச் செய்திட வேணும் ? நான்பாட்டுக்கு எக்ஸ்டரா நம்பர்களைப் போட்டு வைத்தால், இந்தத் தொடரின் வீரியத்துக்கே ஆப்படிச்சாப்போல ஆகிடும் அல்லவா ? வார்த்தைகளில் நாசூக்கு பற்றியெல்லாம் பெருசாய் கவலை கொள்ளாது ; 'நம்ம மூத்திர சந்து தானே...நாலு சாத்து வாங்குனா வாங்கிட்டுப் போய்க்கினே இருப்போம் !' என்று நான் தீர்மானித்ததன் பின்னணி இதுவே///

    மிக மிக சரியான தீர்மானம் சார்..இந்த தொடரின் வெற்றிக்கு இந்த லோக்கலான லேங்வேஜே காரணம்..

    ReplyDelete
  17. There is 1% chance of myself reaching COMICCON on 17th or 50% chance of myself and my son reaching COMICCON on 18th. Fingers crossed.

    ReplyDelete
  18. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete

  19. கல்லூரியில் படிக்கும்போது அழகிய நாரீமணிகள் பலர் இருந்தனர். முதலில் தோற்றத்தினால் ஈர்ப்பை ஏற்படு்த்தியபோதும் தொடர்ந்து வந்த நாட்களில் அந்த ஈர்ப்பை இழந்துவிட்டனர்.

    சுமாரான தோற்றமுடைய ஒரு பெண்ணும் இருந்தார்.உடல் மொழி, அணுகுமுறை, பேசும் தொனி, பேச உபயோகப்படுத்தும் வார்த்தைகள் ஆகியவற்றினால் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் வசீகரித்தார்.

    டெட்வுட் டிக் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட பெண்மணி ரகம்.
    நடையழகால் , வாசகர்களை அணுகிய விதத்தால் , இரக்கமில்லா பதங்களால் வெற்றிக் கொடி நாட்டிய கதை

    9.2/10

    ReplyDelete
  20. காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்...

    நேற்று இரவு வழக்கம் போல ஒரே மூச்சில் படித்து முடித்தாயிற்று...வழக்கம் போலவே பரபரசுறுசுறு..சித்திரதரம் ,அட்டைப்படம் இன்னும் அழகு..இந்த முறை தொடக்கத்திலியே மோரிஸ்கோ வருகை தர மரணமுள் போல வித்தியாசமான கதையாக இருக்க போகிறது என நினைத்து வரும் பொழுது டெக்ஸ் வழக்கம் போல ஒரு பக்கம் சாகஸம் செய்து வர பக்காவான டெக்ஸ் பாணி என படித்து வர பின் இரு திசைகளும் ஒன்று சேர என கதை பட்டாஸாய் பறந்து விட்டது..அருமை.

    ReplyDelete
  21. இனிய காலை வணக்கங்கள்

    ReplyDelete
  22. வரும் வாரம் பேரனுடன் பெங்களூரில் வாசம்.
    So திரும்பி வந்ததும் டெட் வுட் டிக்கின் மூன்று கதைகளும் ஒரு சேர மறுவாசிப்பு .
    அந்த அளவுக்கு டிக் என்னை வசீகரித்து விட்டார்.

    ReplyDelete
    Replies
    1. அட டே வெல்கம் டு டெட்வுட் மன்றம் சார்.

      Delete
  23. நெல்லை விழாவில் வெற்றிகரமாக விற்பனை & வரவேற்பு அமைய வாழ்த்துகள் சார்....


    காமிக்கான் 20ரூவா டிக்கெட் இன்னிக்கி 45மடங்கு எனும்போது அவர்களின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. வித்தியாசமான அனபவமாக இருக்க கூடும்.

    நேபாள் வின்னருக்கு முன்கூட்டியே வாழ்த்துகள்💐💐💐💐


    ReplyDelete
  24. பல மாதங்கள் கழித்து இன்று நான் பிளாகில் பதிவிட்டே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்திய புத்தகம் டின்டின்

    TinTin :
    டின்டின் என்னுடைய சின்ன வயசில் ஆடம்பர கனவு. லயன் காமிக்ஸ் 2 ருபாய் 5 ருபாய் இருந்த காலத்திலேயே டின்டின் ஆஸ்டெரிக்ஸ் 80 ருபாய் இருந்தது. ஒரு முறை 1985 இருக்கும் என்று நினைக்கிறன், ஒரு புத்தக விழாவில் நான் கெஞ்சி கேட்டதற்காக டின்டின் அல்லது ஆஸ்டெரிக்ஸ் ஏதோ ஒன்று தான் வாங்கி தருவேன் என்று அப்பா சொல்ல, வேறு வழியில்லாமல் நான் ஆஸ்டெரிக்ஸ் வாங்கி வீடு வந்தேன்.

    வீட்டிற்கு சென்று ஆசையாய் என் அம்மாவிடம் ஆஸ்டெரிக்ஸ் புத்தகத்தை நீட்ட, என் அம்மா என் அப்பாவை நன்றாக திட்டி எனக்கு கொடுத்த அடி .. அது மட்டும் இல்லாமல் என் அப்பிச்சியிடமும் போட்டு கொடுக்க அவர் இத்தனை காசு குடுத்து உனக்கு காமிக்ஸ் கேக்குதா என்று என்னை அடித்து 100 முறை தோப்புக்கரணம் போட வைத்தார்.

    அதன் பிறகு 1988 இல் எனக்கு Ahamadnagar என்று நார்த் இந்தியா போய் என் மாமாவுடன் தங்கினேன். என் மாமா என்னை ராணுவ லைப்ரரி கூட்டி சென்றார். அங்கு எனக்கு பிடித்த டின்டின் அண்ட் ஆஸ்டெரிக்ஸ் கதைகள் ஏகப்பட்டது இருந்தன. நான் அங்கு இருந்த ஒரு மாதம் முழுவதும் அத்தனை நாளும் ஒரு நாளுக்கு 1 டின்டின் ஆஸ்டெரிக்ஸ் ஆசை தீர படித்து ரசித்தேன்.

    தமிழில் டின்டின் வரும் என்று அறிவித்தபோது ஒரே பரபரப்பு ஆகி விட்டது கூடவே பயமும். எங்கே டின்டின் காமிக்ஸை சிறிதாக்கியோ அல்லது குண்டு புக்க்காக போட்டு விடுவார்களோ என்று. அதே சைஸ் அதே தரம் டின்டின் publishers அவர்களின் மேற்பார்வையில் வர போகிறது என்ற போது தான் நிம்மதி ஆயிற்று.

    இருந்தாலும் மொழிபெயர்ப்பு எப்படி இருக்குமோ, அதே சாராம்சத்தை கொண்டு வர முடியுமா என்று ஏகப்பட்ட கேள்வி எழுந்தது. ஜனவரி மாதம் வந்தது, டின்டின் புத்தகம் தமிழில்... ஆகா ஆஹ்ஹா அதே தரம், அதே thickness, அதே சைஸ்.. என் மனதில் எழுந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.

    எனக்கு கேப்டன் haddock சொல்லும் "Billions and Billions of Blue Blistering Barnacles" இதை எப்படி தமிழில் கொண்டு வருவார்கள் என்று குழப்பம். எப்படி translate பண்ணினாலும் மொக்கையாக இருக்கின்றதே என்று நினைத்தேன். ஆனால் " கோடி சூறாவளி சேர்ந்து சாத்தியெடுக்க", "நங்கூரத்தை நடு மண்டையில் இறக்க" என்று அதே பீலிங் அண்ட் காமெடி எபெக்ட் கொண்டு வந்த போது சந்தோஷத்தில் எல்லை. ஏன் என்றால் வரும் அத்தனை டின்டின் புத்தகத்திலும் இதே தான் வந்தாக வேண்டும். அடுத்த புத்தகத்தில் வசனத்தை மாற்ற முடியாது / கூடாது எனும்போது, புடிச்சிட்டாங்கடா... என்று நிம்மதி.

    மொத்தத்தில் நான் திபெத்தில் டின்டின் படிச்சு சிரித்த அளவு ஒரு லக்கி லுக் அல்லது சிக் பில்லில் கூட எவ்வளவு சிரித்ததில்லை.

    எடிட்டர் சார்.. உங்க வசனம் பின்னி எடுத்துடீங்க. நன்றி நன்றி நன்றி.


    அடுத்தது ஆஸ்டெரிக்ஸ் .... ப்ளீஸ்

    ReplyDelete

  25. நண்பர்களே, அகில உலக தமிழ் டெக்ஸ்வில்லர் ரசிக கண்மணிகளே@

    லயன் காமிக்ஸின் பயணத்தில் நம் அன்பின் ஆசிரியர் திரு விஜயன் சார் எத்தனையோ சாதனைகளை கடந்து சாதித்து வர்றார்.

    ஒரு ஹீரோவின் 50வது, 100வது இதழ்கள், கதைகள் என்ற மைல்கற்களை டெக்ஸ் வில்லர் ஏற்கனவே வெற்றிகரமாகத் தாண்டி நம்மை வசிகரித்து வர்றார்.

    இன்று நம் கைகளில் தவழ்ந்து வரும் டெக்ஸ் வில்லரின் சாகசம் "காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்..." கதைக்கு தனிசிறப்பு உண்டு....

    ""லயன் காமிக்ஸின் 150வது கதை வெளியான நாயகன்"" என்ற சிறப்பையும் இன்று டெக்ஸ் பெறுகிறார்....!

    ஆம் நண்பர்களே டெக்ஸ் வில்லர் தமிழில் தோன்றும் 150வது கதை இம்மாத "காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்"... ஒரு காமிக்ஸ் நாயகனின் 150கதை வெளியாவது இன்றைய காலகட்டத்தில் அசாத்திய சாதனையே... வாழ்த்துகள் சார்& டீம் லயன்....💐💐💐💐💐💐💐

    தொடர்ச்சியாக 200, 250....னு டெக்ஸின் பயணம் லயனில் தொடர வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. தமிழ் டெக்ஸ் வில்லர் கதைகள்.....

      1.தலைவாங்கிக் குரங்கு-1985

      2.பவளசிலை மர்மம-1986

      3.பழிவாங்கும் பாவை-1987

      4.பழிக்குப்பழி-1987

      5.ட்ராகன் நகரம்-1988

      6.இரத்த முத்திரை-1988

      7.வைக்கிங் தீவு மர்மம்-1989

      8.மாய எதிரி-1989(மாடஸ்தியின் நடுக்கடலில் அடிமைகள் இதழில் இணைந்து வந்தது)

      9.அதிரடிக் கணவாய்-1989

      10.எமனோடு ஒரு யுத்தம்-1990

      11.மரணத்தின் நிறம் பச்சை-1991

      12.சைத்தான் சாம்ராஜ்ஜியம்-திகில் கோடைமலர்1991

      13.பழிவாங்கும் புயல்-1991

      14.கழுகு வேட்டை-1991

      15.இரத்த வெறியர்கள்-1993

      16.இரும்புக் குதிரையின் பாதையில்...!-1994(லயன் சென்சுரி ஸ்பெசல்)

      17.பாலைவனப் பரலோகம்-1995(லயன் டாப்10 ஸ்பெசல்)

      18.மரண முள்-1996

      19.நள்ளிரவு வேட்டை-1996

      20.மரண நடை-1997

      21.கார்சனின் கடந்தகாலம்-1997

      22.பாங்க் கொள்ளை-1997

      23.எரிந்த கடிதம்-1998

      24.மந்திர மண்டலம்-1999

      25.இரத்த நகரம்-1999

      26.எல்லையில் ஒரு யுத்தம்-2000
      27.மரண தூதர்கள்-2000

      28.மெக்ஸிகோ படலம்-2001

      29.தனியே ஒரு வேங்கை, கொடூர வனத்தில் டெக்ஸ்& துரோகியின் முகம்(3பாக தொடர் கதை)-2002

      30.பயங்கரப் பயணிகள் & துயிலெழுந்த பிசாசுகள்(இருபாக தொடர்)-2002

      31.பறக்கும் பலூனில் டெக்ஸ்-2003

      32.ஓநாய் வேட்டை& இரத்த தாகம்(இருபாக தொடர்)-2003

      33.இருளின் மைந்தர்கள்-2003

      34.சாத்தான் வேட்டை-2003

      35.கபால முத்திரை& சதுப்பில் ஒரு சதிகார கும்பல்(இருபாக தொடர்)-2004

      36. சிவப்பாய் ஒரு சிலுவை-2004

      37.இரத்த ஒப்பந்தம், தனியாத தணல் & காலன் தீர்த்த கணக்கு(3பாக தொடர்)-2005

      38.கானகக் கோட்டை-2006

      39.பனிக்கடல் படலம்-2007

      40.மரணத்தின் முன்னோடி, காற்றில் கரைந்த கழுகு& எமனின் எல்லையில் (3பாக தொடர்)-2008

      41.சிவப்பாய் ஒரு சொப்பனம்-2013

      42.பூத வேட்டை-2013

      43.நிலவொளியில் ஒரு நரபலி(டெக்ஸ் வில்லரின் முதல் தமிழ் வண்ண இதழ்)-2013

      44.நீதியின் நிழலில்-தீபாவளிமலர்2013

      45.மரண தேசம் மெக்ஸிகோ -தீபாவளிமலர்2013

      46.நில் கவனி சுடு-2014

      47.காவல் கழுகு-2014

      48.சட்டம் அறிந்திரா சமவெளி-2014

      49.வல்லவர்கள் வீழ்வதில்லை-2014

      50.ஒக்லஹோமா- லயன் 250-2015

      Delete
    2. 51.முகமில்லா மரண தூதன்-தி லயன் 250-2015

      52.பிரம்மன் மறந்த பிரதேசம்-தி லயன் 250-2015

      53.டைனோசரின் பாதையில்...!-தீபாவளி வித் டெக்ஸ்-2015

      54.எமனின் வாசலில்...!-தீபாவளி வித் டெக்ஸ்-2015

      55.சட்டத்திற்கொரு சவக்குழி-2016

      56.திகில் நகரில் டெக்ஸ்-2016

      57.விதி போட்ட விடுகதை-2016

      58.தலையில்லாப் போராளி-2016

      59.டாக்டர் டெக்ஸ்-2016

      60.குற்றம் பார்க்கின்!-2016

      61.ஒரு கணவாயின் கதை-"ஈரோட்டில் இத்தாலி"- இதழ்-2016

      62.துரோகத்திற்கு முகமில்லை-2016

      63.தற்செயலாய் ஒரு ஹீரோ-2016

      64.சர்வமும் நானே!-தீபாவளி மலர்-2016

      65.நீதிக்கு நிறமேது?-2016

      66.ஆவியின் ஆடுகளம்-2017

      67.அராஜகம் அன்லிமிடெட்-2017

      68.இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்-2017

      69.ஒரு வெறியனின் தடத்தில்-2017

      70.கவரி மான்களின் கதை-2017

      71.கியூபா படலம்-"லயன்300"-2017

      72.கடற்குதிரையின் முத்திரை-2017

      73.ஒரு தலைவன் ஒரு சகாப்தம்-தீபாவளிமலர்-2017

      74.அழகாய் ஒரு அராஜகம்-தீபாவளிமலர்-2017

      75.ஒரு கணவாய் யுத்தம்-2018

      76.விரட்டும் விதி-2018
      77.வெண்பனியில் செங்குருதி-2018

      78.பாலைவனத்தில் புலனாய்வு-2018

      79.கடைசிப்பலி-2018

      80.நடமாடும் நரகம்-2018

      81.இரவுக்கழுகின் நிழலில்-2018

      82.காற்றுக்கு ஏது வேலி-2018

      83.மண்ணில் துயிலும் நட்சத்திரம்-2018

      84.புயலுக்கொரு பிரளயம்-டைனமைட் ஸ்பெசல்-2018

      85.தெற்கே ஒரு தங்கத்தேட்டை-டைனமைட் ஸ்பெசல்-2018

      86.காதலும் கடந்து போகும்-தீபாவளி மலர்-2018

      87.புனிதப் பள்ளத்தாக்கு-2018

      88.காலனின் கானகம்-2018

      89.யார் அந்த மரண தூதன்?-2018

      90.சாத்தானின் சீடர்கள்-2019

      91.பாலைவனத்தில் ஒரு கப்பல்-2019

      92.பச்சோந்திப் பகைவன்-2019

      93.வெளிச்சத்துக்கு வந்த நிழல்-2019

      94.சிங்கத்தின் சிறுவயதில்-2019

      95.நட்புக்கு நாட்களேது-2019

      96.தகிக்கும் நியூ மெக்சிகோ-2019

      97.ஒரு ரெளத்திர ரேஞ்சர்-2019

      98.புதைந்து போன புதையல்-2019

      99.சர்க்கஸ் சாகசம்-தீபாவளி மலர்-2019

      100.சூது கொல்லும்-2019

      Delete

    3. 101.ரெளத்திரம் மற-2019

      102.ஒரு துளி துரோகம்-பிப்ரவரி2020

      103.இருளோடு யுத்தம்-மார்ச்2020

      104.வானவில்லுக்கு நிறமேது!-மே2020

      105.கைதியாய் டெக்ஸ்-ஜூன்2020
      106.எதிரிகள் ஓராயிரம்-ஜூலை2020

      107.பந்தம் தேடிய பயணம்-செப்டம்பர்2020

      108.யுத்த களத்தில் டெக்ஸ்-தீபாவளி மலர்-நவம்பர்2020

      109.பனிவனப் படலம்-தீபாவளி மலர்-நவம்பர்2020

      110.விண்டர் ஸ்பெசல்-நவம்பர்2020

      111.ஒரு கசையின் கதை-டிசம்பர்2020

      112.தங்கத்தின் பாதையில்-பிப்ரவரி2021

      113.மின்னும் சொர்க்கம்-பிப்ரவரி2021

      114.நெஞ்சே எழு-மே2021

      115.ஒரு பிரளயப் பயணம்-ஜூலை2021

      116.புத்தம் புது பூமி வேண்டும்-லயன்400-ஆகஸ்ட்2021

      117.பனியில் ஒரு புதுநேசம்-ஆகஸ்ட்2021

      118.கண்ணே கொலைமானே-அக்டோபர்2021

      119.பொக்கிஷம் தேடிய பயணம்...தீபாவளி மலர்-நவம்பர்2021

      120.ஓநாய் ஜாக்கிரதை-தீபாவளி மலர்-நவம்பர்2021

      121.பருந்துக்கொரு பரலோகம்-தீபாவளி மலர்-நவம்பர்2021

      122.திக்கெட்டும் பகைவர்கள்-டிசம்பர்2021
      123.பாலைவனத்தில் பிணம் தின்னிகள்-மார்ச்2022

      124.சிகாகோவின் சாம்ராட்-ஏப்ரல்2022

      125.விடாது வஞ்சம்-மே2022

      126.ஒரு காதல் யுத்தம்-ஜூன்2022

      127.புயலில் ஒரு புதையல் வேட்டை-ஜூலை2022

      128.மெளன நகரம்-ஆகஸ்ட்2022

      129.சொர்கத்தில் சாத்தான்கள்-செப்டம்பர்2022

      130.ஒரு மாயனோடு மோதல்-தீபாவளி மலர்-அக்டோபர்2022

      131.பருவத்தே கொலை செய்-தீபாவளி மலர்- அக்டோபர்2022

      132.நிழல்களின் ராஜ்யத்தில்-டிசம்பர்2022

      133.பகை பல தகர்த்திடு-ஜனவரி2023

      134.பறக்க மறந்த பறவைகள்-பிப்ரவரி 2023

      135.ஓநாய் வனத்தில் டெக்ஸ்-மார்ச்2023

      136.கலவர பூமியில் கனவைத் தேடி-ஏப்ரல்2023

      137.ஒரு கெளபாய் காதலி-மே2023

      138.கரையெல்லாம் குருதி-ஜூன்2023

      139.கைதியாய் கார்சன்-ஜூலை2023

      140.மீண்டு(ம்) வந்த மாயன்- ஆகஸ்ட் 2023

      141.திக்கெட்டும் திகில்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023

      142.சர்ப்பத்தின் சின்னம்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023

      143.வந்தார் வென்றார்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023

      144.பூதம் காத்த புதையல்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023

      145.The Tex சிக்ஸர் ஸ்பெசல்-தீபாவளி மலர்-நவம்பர்2023

      146.குற்றத்தின் குரல்- சந்தா இலவச இணைப்பு -நவம்பர்2023

      147.உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி-டிசம்பர்2023

      148.பருந்துக்கொரு பொறி-சந்தா இலவச இணைப்பு-டிசம்பர் 2023

      149.கண்ணீருக்கு நேரமில்லை-ஜனவரி2023

      150.காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்-பிப்ரவரி2023

      Delete
    4. பேருக்கு ஏத்த மாதிரியே டெக்ஸ் encyclopedia வா இருக்கீங்க Vijayaragavan

      Delete
    5. #தொடர் கதைகள் ஒரே கதையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

      #லயன் 250, தீபாவளி வித் டெக்ஸ், டைனமைட் ஸ்பெசல், Supremoபோன்ற வற்றில் வந்திருந்த தனி தனி கதைகள் தனிதனியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

      #டெக்ஸ்க்கு அடுத்தபடியாக லக்கி லூக், மாடஸ்தி, ஸ்பைடர் போன்ற லயன் ஹீரோக்கள் எண்ணிக்கையில் இருக்க கூடும்

      #ஸ்பெசல் புக் கேட்டு இருக்கலாம் தான், ஆனா ஆசிரியர் சாரின் கடுமையான பணி சூழலை பார்த்து மனசு வர்ல..

      --STV வித் KOK, ஷரீப் & பேபி!

      Delete
    6. வாவ்.

      அருமையான பணி STV ஜி.

      இந்த மாதிரி எல்லாம் லிஸ்ட் எடுத்து அதை மெயிண்டைன் பண்றது எல்லாம் அதி தீவிர வாசகருக்கே சாத்தியம்.

      வாழ்த்துக்கள் & பாராட்டுகள் 💐👏🤝

      Delete
  26. இரண்டு வருட இடைவெளிக்கு பின் வந்த லார்கோ விஞ்சின் இரவின் எல்லையில் ..... லார்கோ வின்ச் எனும் காமிக்ஸ் இன் எல்லை கோட்டை தாண்டி எங்கோ சென்று விட்டது. அட அட அட .... என்ன கதை, என்ன சித்திரம்.

    லார்கோ விஞ்சின் முக்கியத்துவமே அதன் சித்திரங்கள் தான். நம்மிடையே இருக்கும் காமிக்ஸின் சித்திரங்கள் என்று எடுத்து கொண்டால், லார்கோ விஞ்சின் சித்திரங்களும், XIII சித்திரங்களும் தான் TOP CLASS.

    அதுவும் இந்த கதையோ, தற்போது நாட்டில் நடக்கும் முக்கிய டெக்னாலஜி ஆன Space டெக்னாலஜி பற்றிய கதை. நம்ம ஊர் ISRO உம் ELON MUSK செய்து கொண்டு இருக்கும் சாதனை ஒட்டிய கதை.

    அதுவும் இந்த முறை, புத்தகத்தில் ஏகப்பட்ட ஹாலிவுட் செலிபிரிட்டிஸ் முகத்தை கதையில் வரும் charactergalukku கொடுத்து உள்ளனர்.

    1. ஏஞ்சலினா ஜோலி
    2. டாம் ஹிடில்ஸ்டன்
    3. மோர்கன் பிறீமன்
    4. ஜிம் பார்சன்ஸ்
    5. ஜான் சேனா
    6. டெர்ரி க்ரூஸ்
    7. ரோசரியோ டாவ்சன்

    டின்டின் அடுத்தபடியான அதிரடி லார்கோ வின்ச்

    ReplyDelete
  27. Dear Sir,
    Looking forward to meet you at Comic Con on Feb 17, 2024.
    மேலும் சில நண்பர்களும் வருவார்கள்.

    ReplyDelete
  28. மாடஸ்டி டைஜெஸ்ட் மாடஸ்டி மேக்ஸி வேண்டாம் .கலரில்
    சின்னதாக ஒரு
    மாடஸ்டி கதை.எதாவதுஒரு கேப்பில் நுழைத்து விடுங்கள் சார்.

    ReplyDelete
  29. அதனால் தான் ஸ்மர்ஃப்ஸ் தொடர(ர்) வேண்டும் என்கிறேன் சார்.

    நிற பேதம் இவ்வுலகில் எங்கும் உள்ளது. ஆனால் ஸ்மர்ஃப்ஸ் உலகிலோ எல்லாமே நீலம்தான்..

    Smurfs Tales என்று Papercutz நிறுவனம் வெளியிடுவது போல தமிழில் வந்தால் நன்றாக இருக்கும்.

    பாப்பா ஸ்மர்ஃப் கிட்டே சொல்லி நல்லதா ஒரு மருந்தை நமது வாசகர்களுக்கு கொடுக்கணும்... ஹ்ம்ம்...

    ReplyDelete
  30. Super பதிவு விஜயன் சார்

    ReplyDelete
  31. மெய்யான ஒரு உலகளாவிய reach கொண்டதொரு கதைவரிசையினை அடையாளம் காட்டிடுவதானால் SMURFS நீலப் பொடுசுகளை சுட்டிக்காட்டிடலாம் ! ஐரோப்பாவில் ; அமெரிக்காவில் ; சீனாவில் ; ஜப்பானில் என்று இவர்களின் வெற்றித்தடங்கள் பதியாத தேசங்கள் வெகு குறைச்சல் ! ஆனால்.....ஆனால்...நம் மத்தியில் இவர்களுக்கு உருப்படியானதொரு அங்கீகாரம் இல்லாது போனது தான் துரதிர்ஷ்டமே !!

    Please 🙏 Support SMURF guys

    The SMURFS are back.🤗🤗🤗🤗🤗🤗

    ReplyDelete
    Replies
    1. S for SMURFS in TINTIN format - nonetheless !

      Delete
    2. ஸ்மர்ப்ஸ் ஆதரிக்கப்பட வேண்டிய ஒரு தொடர்தான் தொடர் வந்தபோது எழுந்த கண்டனக் குரல்களின் டெசிபல் மிகவும் அதிகம் என்பதால் மீண்டும் வர வாய்ப்பு குறைவே.alas!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. தற்போது ஸ்மர்ப்ஸ் கதை ஒன்றுதான் ஸ்டாக்கில் உள்ளது என நினைக்கிறன், புத்தக திருவிழாவில் வரும் குழந்தைகளுக்கும் எங்களை போன்ற குழந்தைகளுக்கும் ஒரு புதிய ஸ்மர்ப்ஸ் கதையை இந்த வருடம் ஏதாவது ஒரு புத்தக திருவிழாவில் கொடுத்தால் நன்றாக இருக்கும் சார்.

      Delete
  32. ////ரிட்டையர் ஆகி, ஊட்டுல குந்திக் கிடக்கும் பல் போன நாட்களில் இந்தப் பயணத்தினை அசை போடும் தருணங்களில், நான் எண்ணி வியக்கவும், மலைக்கவும் போகும் சமாச்சாரங்களின் பட்டியலில் உசரே இருக்கப் போவன - தாத்தாஸ் ; நவீன வெட்டியான் ஸ்டெர்ன் ; டெட்வுட் டிக் ; நிஜங்களின் நிசப்தம் போலான offbeat முயற்சிகளாகவே இருந்திடும் ! பத்தில் ஒன்பது காமிக்ஸ் எடிட்டர்கள் நிராகரிக்கக்கூடியவற்றை 'டிக்' அடிக்க மட்டுமன்றி, அவை காணும் வெற்றிகளை ரசிக்கும் வரமும் வாய்த்திருப்பது எனக்கன்றோ ?! ///

    +111👍

    ReplyDelete
  33. டெக்ஸ் இன் அத்தனை புத்தகங்களுக்கும் அட்டவணை அடிக்கடி அயராது நமக்களிக்கும்
    " என்சைக்ளோபீடியா". டெக்ஸ் விஜயராகவன் சாருக்கு கோடானு கோடி நன்றிகள். தேங்க்ஸ் சார்

    ReplyDelete
  34. சூப்பர் சார்......ஆஸ்ட்ரிக்சயும் சீக்கிரமா அழைத்து வாங்க...உற்ச்சாகம் தெறிக்கட்டும்

    ReplyDelete
  35. 1.சாலையில் ஒரு சிறுத்தை ‌!

    Comment :
    கடுகு சிறுத்தாலும்...


    2. ஜேன் இருக்க பயமேன். ?

    Comment :
    நீண்ட நாட்கள் ஆயிற்று இப்படி சிரித்து


    3. கண்ணீருக்கு நேரமில்லை...?

    Comment :
    அசுரத்தனமான வேகம்...
    உ கொ மகிழ்ச்சி,
    கொடுக்க தவறியதை இது
    ஈடு செய்து விட்டது.
    இதை மீண்டும் மீண்டும் வாசிக்க வாசிக்க இன்னும் சிறப்பாக இருக்கும்.
    இன்னும் அடுத்த அத்தியாயம்
    வேறு வர வேண்டும்.


    4. தலைக்கு ஒரு விலை !

    Comment :
    சிறைக்கு போனாராம் மாமா..!
    அங்கே கம்பி எண்ணினாராம்..ஆமா..!

    கம்பி எண்ணப் போனாராம் தாத்தா.
    தன் கதையை சொன்னாராம் பாட்டா..

    அழகான பொண்ணு தான் !
    அதுக்கேத்த கண்ணுதான் !

    லக்கியின் செம மாஸான கிளாசிக் கதை.


    5. இரவின் எல்லையில்..!

    Comment :
    இப்படி ஓர் கதை இனி வரப்போவதில்லை.
    லார்கோவே காமிக்ஸ் உலகின்
    முடிசூடா மன்னன்.

    6. மேற்கே ஒரு மாமன்னர் !

    Comment :
    இப்பத்தான் நினைச்சேன்...
    என்னடா நம்ம ஆளு உள்ளே போன
    சித்த நேரத்துக்கெல்லாம்
    ஆசாமி எவனாவது ஜன்னல் வழியா
    சொய்ங்னு வருவானே..
    இன்னமும்
    காணலயேன்னு நினைச்சேன் !

    இப்படி ஜன்னல் வழியே வெளுத்து
    அனுப்பும் லக்கியே
    ஓர் முரட்டு சண்டை இட்டு விட்டு
    ஜன்னல் வழியே எஸ்கேப் ஆகும்
    மெகா சீன்...

    சூப்பர் கிட் பாடல்,
    படுக்கையிலே மூட்டை பூச்சி படுத்தி எடுக்குது...
    பாவி மகன் உன் நினைப்பும்
    சுளுக்கி எடுக்குது

    சூப்பர் வசனம்
    (ப) 36 , (பே) 3. பேமானிங்க !

    மரண பயம் காட்டும் கிளைமாக்ஸ் சீன்,
    ( ப) 45, ( பே) 4.


    7. திபெத்தில் டின்டின்

    Comment :
    மிகவும் மெதுவாக படித்தேன்.
    15 பக்கம் முடித்து ஓர் ப்ரேக்

    23 பக்கம் முடித்து அடுத்த ப்ரேக்

    மூன்றாவது பகுதி,
    அடுத்த அமர்வில் முடிந்தது.

    இந்த கதையை பற்றி சொல்ல
    நிறைய இருக்கிறது.

    ஒரே வார்த்தையில்
    சொல்ல வேண்டுமானால்
    " அபாரம் ".

    நான் பிறந்த பயனை
    அடைந்து விட்டேன்.

    எனது தாய் மொழியில்
    படிக்க விரும்பிய இரண்டில்,
    ஒன்றை கண்டு விட்டேன்.

    மற்றொன்றையும்
    காண நேர்ந்தால்.....

    ReplyDelete
  36. I was initially very interested in taking kids to comic con sir. However in India - with no major comics releases - we tend to end up looking at costume parties. To be honest - shelling 3600 INR for a family and looking at someone wearing costumes not fitting their physique does not ring too great for a weekend sir :-) In the late 40s I would invest this amount in one unit of TCS stock :-) :-) :-)

    All the best for your sales though !

    PS: Irumbukai Mayavi is amazing to read - need a collectors edition of this with Muthu comics No 1 cover replica - hard bound in high quality paper and scan. I am willing to pay even 300 INR for a high quality Muthu No 1 reprint.

    Also given the milestone year please reprint Lion No 1 (and the next 4) as milestone replica edition(s) sir - Modesty !

    ReplyDelete
  37. காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சனப்போட்டி
    விமர்சனம் 1
    பெயர்:ரம்யா (கடல்யாழ்)
    ஊர்: கோயமுத்தூர்

    96 மணி நேரங்கள்

    அதுவொரு பனிக்காலம் என ஆரம்பிக்கும் ஓவியங்கள்
    அங்கு நடந்தேறிடும் ஒரு க்ரைம் புதிர்

    பனியின் குளிரோ மேயரின் மேடை பேச்சோ உப்புமாவை போன்றது மேயரின் துணைவியாருக்கு.
    இந்த மேயரின் மனைவியிடம் மாட்டி கொள்கிறார் நம் துப்பறியும் கதாநாயகி ரூபின். அவங்க வீட்ல ஒரு திருட்டு நடக்குது, ரூபின் தான் கேஸ பார்த்துக்கனும் என்று கேட்கிறாங்க, சாதாரன திருட்டு கேஸூக்கு நாம் எதுக்கு என்று நொந்து கொண்டே செல்கிறார். சரி நம்ம வேலையை செய்வோம் என்று கடமையை செய்கிறார். கைரேகை தடயங்கள் ஆட்டம் காண்பிக்கின்றன. மேயரின் மனைவி திரும்ப அழைத்து உதவி செய்யுமாறு கேட்டு கொள்கிறார்.
    நம்ம டிடெக்டிவ் யாருக்கும் தெரியாமல் புதிருக்குள் நுழைய ஆரம்பமாகிறது "96 மணி நேரங்கள்"

    நட்புன்னா என்னனு தெரியுமா, அதுக்கு பெயர் க்ளெண்டா என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொள்கிறார் தோழி
    மனைவி மீது அக்கறை காட்டும் கணவனாக ஜார்விஸ்
    நீ ஒரு அதிர்ஷ்டகாரி என்று எண்ணும் முன்பே விதி விளையாடுகிறது
    ஜூலியா மனசாட்சி உறுத்தலால் உண்மையை சொல்லி விடுகிறாள்
    எங்களுக்கு உங்க வாக்குமூலத்தை தவிர வேற எந்த சாட்சியமும் இல்லை புதிய பறவை படத்தில் எம்.ஆர்.ராதா வசனம்
    பேசுவார், அதை போல் இங்கு கொலை நடந்ததற்கான சாட்சி ஜூலியாவின் வாக்குமூலத்தை தவிர வேறு எதுவும் இல்லை
    சடலம் கிடைக்கவில்லை இன்னார் என்று அறியவும் வழியில்லை
    ஆனால் திட்டமிட்ட கொலை என்று தீர்ப்பாகி மரண தண்டனை விதிக்கபடுகிறது

    வருடங்கள் பல கடந்த பின்னே மீண்டும் பனியல் ஒருநாள், குறும்பக்கார இருவரால் ஒரு பிராங்க் வீடியோ எடுக்க படுகிறது. படம் பிடிக்கபட்ட நபர் யார்?
    இதற்கும் மேயர் வீட்டில் நடக்கும் திருட்டுக்கும் என்ன சம்பந்தம்?
    திருட்டில் கிடைக்கும் கைரேகைகள் இறந்து போன ஜூலியாவுடையது தான?
    இறந்து போனதாக கருதப்படும் ஜூலியா எப்படி தப்பி பிழைத்தார்?
    இதற்கிடையே இன்னொரு நபர் துப்பு துலக்கிறார். யாரிவர்? இவர் ஏன் இதை செய்ய வேண்டும்? ரூபினிடம் இருப்பவர் உண்மையைதான் பேசுகிறாரா?

    கேள்விகளுக்கு விடை கிடைக்க புதிர்கள் விடுபடுகின்றன

    ஆரம்பத்தில் நடக்கும் கொலையில் சில உறுத்தல்கள் இருந்து கொண்டே இருந்தன
    க்ளெண்ட்டால் எப்படி ஒரு ஆணின் எடையை அதுவும் சடலத்தை எளிதாக தூக்கி செல்ல முடிகிறது என்று
    மற்றும் அவ்வளவு நெருக்எத்தில் ரத்தபொக்கு கொஞ்சம் வந்திருக்க வேண்டும், அது என்னவோ திருஷ்டி பொட்டுடாட்டும் ரத்தத்துளி. பின்னர் க்ளெண்டா பனியில் சீக்கரமாக உடலை தூக்கி போட்டு வந்துவிடும் நேரமும் உறுத்தலாக இருந்தது.
    ஜூலியாவை சரியாக கணித்து வைத்துள்ளனர் அவள் தோழியும், கணவரும்.

    வெள்ளைப்பனி பார்க்க அழகு என்றாலும், பனியன் குளிர்கரங்களோ ரசிக்க முடியாத கொடுமைக்கார ராட்சனாக இருக்கிறது, விமான விபத்தில் ஜூலியா தப்பித்தது வரமா சாபமா என்ற அளவுக்கு ஆகிவிடுகிறது நிலைமை. புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது என்று பாட்டு பாடும் அளவுக்கு ஆரம்பத்தில் செல்பவள் "ரெவணன்ட்" லியோ டிகாப்பிரியோ மாதிரி ஆகிவிடும் நிலைமை
    கோடைமலரின் கடைசி பக்கங்களில் உள்ள ஓவியம் பனியன் ஆட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.

    -தொடரும்

    ReplyDelete
    Replies
    1. -தொடர்ச்சி

      நான் கவனித்து தவறாக கணித்த ஒன்று
      பக்கம் 61-இல் ஒரு பேணலில் வருவதை ஓவிய பிழை கருதினேன், கதையின் புதிர் விடுபடும் போதுதான் சந்தேகம் வந்திருக்க வேண்டிய இடம் என்று உறைத்தது.
      ஆசிரியரும் ஓவியரும் சிறப்பாக இதனை செய்து உள்ளார்கள். பாராட்டுகள் பல.

      பனியின் ஓவியங்களை பாராட்டிட வேண்டும் அவ்வளவு அழகாக தத்ருபமாக்கி இருக்கிறார்கள்.

      பாத்திர படைப்புகள் சிறப்பு.
      மேட்ஜ்ஜை பாராட்டிட வேண்டும். ஜூலியாவை பார்த்து கொண்டதும் இல்லாமல் புதிரை விடுவிக்க அவளுக்கு உதவுவது பெரிய மனது. ஜுலியாவுக்கு கிடைத்த ஒரு நல்ல நட்பு
      மேயரின் மனைவி தொல்லை படுத்துபவர் போல் தோன்றினாலும் மனிதர்களை எடை போடுவதில் சமர்த்து, மேட்ஜ் மற்றும் நம்ம ரூபினின் திறமை மேல் வைக்கும் நம்பிக்கைகள அதை பறைசாற்றுகின்றன.

      ரூபினை கலாய்க்கும் சக ஆபிஸர்கள் பேச்சுகள், மேயர் போலீஸாரிடம் டாக்டர்களிடமும் பேசியதை கிண்டல் செய்யும் இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன, கிண்டல் செய்யும் வசனங்கள் அருமை

      ரூபின் கதைகளை வாசித்ததில் எனது பார்வையில் நான் பார்த்த ஒற்றுமைகள்
      உண்மைகள் வெளிவர சம்பந்தம் இல்லாத நிகழ்வுகளால் சம்பந்தபட்டவர்களை தேடி செல்கிறது.
      அதுக்கென்று ஒரு உயிர் இருந்து சரியான நேரம் பார்த்து ஒரு முயற்சி எடுப்பது போல் தோன்றியது
      நேர்கோடு என்று ஒன்று செல்லும் கணித்து விடலாம், இடியாப்ப சிக்கல் என்று ஒன்று இருக்கும், நாம் ஊகிக்க தவறிவிடுவோம்.
      நேர்கோடு சுலபமாக இருந்தாலும், கதையினை நகர்த்தி செல்லும் விதம் படிக்க சுவாரஸ்யமனதாக படைக்கபட்டுள்ளது.

      பெண் கதாநாயகியர் இல்லாத குறையை ரூபின் தீர்க்கிறார். நீதி காவலர் பணியில் இருப்பது, அவர் நிலைத்து நிற்க ஒரு கூடுதல் காரணமனதாக கருதுகிறேன் .
      மற்றும் ரூபின் சோ க்யூட்😊😊😊

      **பரிசு பெற்ற விமர்சனம்**

      Delete
    2. அருமையான விமர்சனம் ரம்யா! போட்டிக்கான மிகவும் சரியான கதை தேர்வு!

      Delete
    3. நன்றி சகோதரர்களே
      @பரணி சகோ
      @ஸ்டீல் சகோ

      Delete
  38. ஒரு பண்டமாற்று படலம்:

    நேர்கோட்டு கதை, அருமையான சித்திரங்கள், அனைவருமே அழகாக தெரிகிறார்கள்! கதை தொடங்கிய கொஞ்ச நேரத்தில் இதுதான் நடக்க போகிறது என தெரிந்து விடுகிறது! கதை அநியாயத்துக்கு நேர்கோட்டில் போவது போரடித்து விட்டது!

    எளிதான வாசிப்புக்கு நன்று!

    ReplyDelete
  39. காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்:

    மூன்று திசையில் ஆரம்பிக்கும் கதை இடைவேளையின் போது ஒரு இடத்தில் சந்திப்பது செம! டெக்ஸ் அன்&கோ-வின் அதிரடி, நையாண்டி, திருப்பம்கள், முதல் பக்கத்தில் இருந்து செம விறுவிறுப்பான கதை! கதையை 90 நிமிடத்தில் படித்துவிட்டேன்! கருப்பு வெள்ளையில் அட்டகாசமான சித்திர விருந்து, அதுவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு டெக்ஸ் கதைக்கு மிக சிறந்த ஓவியம்! வேறு என்ன வேண்டும் அருமையான வாசிப்பு அனுபவத்திற்கு!

    இந்த மாதம் காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் முதல் இடம்!

    ReplyDelete
  40. விஜயன் சார், ஜாலி சம்மர் ஸ்பெஷல் விளம்பரத்தை பார்த்தவுடன் வீட்டில் உள்ள குழந்தைகள் & வளர்ந்த குழந்தைகளுக்கு சந்தோஷம்; எப்போது வரும், எத்தனைக்கதை நான்கு கதைகளும் ஒன்றாக வருமா, சுறாவின் வாய் ரொம்ப அழகாக உள்ளது, மிஸ்டர் பொ.கே என்றால் என்ன என சரமாரி கேள்விகள் :-)

    மிஸ்டர் பொ.கே என்றால் என்ன சார்? சொல்லுங்க சார் சொல்லுங்க! மிகவும் ஆர்வமுடன்!

    ReplyDelete
  41. நேற்று டெக்ஸ் படித்து விட்டேன். இந்த மாத புத்தகங்கள் எல்லாம் ஓவர்.

    எனக்கு இந்த கதை பிடித்தே இருந்தது. ஓவியங்கள் அருமை. எனவே ரொம்பவே ரசித்து படித்தேன். வசனங்களும், சிப்காராகளுடன் நடக்கும் மோதல்களும் அருமை. பாலைவனப் பரலோகத்தில் அந்த மலை சிங்கங்களுடன் நடக்கும் மோதல் தான் நினைவுக்கு வந்தது.

    மொத்தத்தில் திருப்தியான மாதம்.
    இந்த கதைக்கு எனது மதிப்பெண் 8.5/10

    ReplyDelete
  42. *கண்ணீருக்கு நேரமில்லை*

    கதையின் ஆரம்பத்தில் டெக்ஸ் தன்னுடைய குடும்பத்தினருடன் சந்தோசமாக இருந்த நாட்களைப் படிக்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி மனசுல இழையோடியது.

    அதற்க்கப்புறம் அவருடைய தந்தை & டெக்ஸ்சின் ட்ரெயினர் கன்னீ & கடைசியாக அவர் தம்பி போன்றோர் கொல்லப் படும் போது ஒரு பாரம் மனசுல இறங்குது.

    ஆனால் அதற்க்கப்புறம் டெக்ஸ் தீயாய் மாறி எல்லாரையும் பழி தீர்ப்பது சும்மா தெறி.

    தோட்டாக்கள் தெறிக்கும் போது எதிரிகளும் தெறிச்சு ஓடுகின்றனர். 💪🏻💪🏻

    டெக்ஸின் இளவயது சாகசத்துல மிஸ் பண்ணக் கூடாத கதை.

    ReplyDelete
  43. ஒரு பண்டமாற்றுப்படலம்..
    மாடஸ்டியின் அட்ராசிட்டி ...
    மாடஸ்டியின் வலிமைக்கு - துணிவுக்கு-தைரியத்திற்கு
    எடுத்துக்காட்டான கதை..
    அழுத்தமான ஓவியம் ஒரு ப்ளஸ் பாயிண்ட்..
    மேலும்.. நெஞ்சைத் தொடுவது "போன்ற - ஒரிரு வசனங்கள்..
    "ஒரு நண்பன் என்றுமே சுமையாக தெரியமாட்டான்" - ப்பா..(மனதை விட்டு நீங்காத வசனம்..)

    ReplyDelete
  44. Replies
    1. அதெல்லாம் போன மாதமே வந்து விட்டதே.

      Delete
  45. @Edi Sir..😍😘

    அந்த மிஸ்டர்.பொ.கே..🥰

    மிஸ்டர். பிரீட்மேன்..😘

    இவங்கெல்லாம் யாருங்க...😃😃😃

    ReplyDelete
  46. எடிட்டரிடமிருந்து ஒரு வருத்தமான செய்தியுடன் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete