Powered By Blogger

Sunday, February 11, 2024

பிப்ரவரிக்குள் பெரும் பயணம் !

 நண்பர்களே,

வணக்கம். லயனின் நாற்பதாவது ஆண்டும் அதுவுமாய், இன்னமும் வாடகைச் சைக்கிளில் ஏறி ரிவர்ஸ் கியரை அமுக்காமல் இருக்கோமே ? என்ற நினைப்பு நேத்திக்குத் தான் மனதில் நிழலாடியது ! ரைட்டு.....மார்ச் இதழ்களுக்கு இன்னமும் நேரமிருக்க, பிப்ரவரியின் quick read இதழ்கள் சார்ந்த அலசல்களினூடே, பிப்ரவரிக்குள்ளேயே ஒரு flashback ட்ரிப் போய் வந்துப்புடலாமே ? என்று தோன்றியது ! So here goes :

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பானதொரு பிப்ரவரி அது ! கிட்டத்தட்ட 10 மாதங்களாகி இருந்தன - நான் ப்ளஸ் டூவுக்கு மங்களம் பாடி !  நமக்கு மேற்கொண்டு கல்வி கற்க அஞ்சல்வழி மட்டுமே இனி சாத்தியம் என்ற கசப்பான யதார்த்தத்தை ஒரு மாதிரியாய் மெதுமெதுவாக விழுங்கப் பழகிக் கொண்டிருந்த நாட்களவை ! அப்பாவின் தொழிலோ ICU-வில் குற்றுயிரும், குலையுயிருமாக தொங்கி கொண்டிருக்க, அங்கு சென்று பொழுதைக் கழிக்கப் பெருசாய் வழிகள் இருக்கவில்லை ! நெதத்துக்கும் ஒரு கடன்காரச் சேட்டு தமிழைக் கொத்துக்கறி போட்டபடிக்கே, பணத்தைக் கேட்டுக் கூப்பாடு போடும் அந்த மாமூலை சகிக்க இயலாது ! முத்து காமிக்சின் ஆபீஸிலோ ஆளாளுக்கு 'ஜிலோ'வென்று காற்று வாங்கிக் கொண்டிருப்பார்கள் - ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து அந்த மாதத்து இதழ் அச்சிட பேப்பர் வாங்கித் தர மொதலாளிக்குத் தீருமா ? என்ற வினாவோடே ! So அங்கேயும் போய் பொழுதை ஓட்ட ரசிக்காது ! பற்றாக்குறைக்கு "முத்து காமிக்ஸ் வாரமலர்" எனும் மெகா பல்பை நான் வாங்கிய நாள் முதலாய் அங்கே போகும் ஆசையே எனக்கு அறவே இல்லாது போயிருந்தது ! So விடிஞ்சு முழிச்சு எழுந்து, குளித்துக் கிளம்பி, வள்ளுவர் கோட்டத்து நிழலில் கட்டையைச் சாய்க்கும் கவுண்டரைப் போலவே, தினத்துக்கும் பொழுதை கடத்த குட்டிக் கரணம் அடிக்க வேண்டியிருந்தது ! 

நம்ம எதிர்காலத் திட்டம் - ஒரு பூந்தளிர் போல ; ஒரு கோகுலம் போல - ஒரு சிறுவர் இதழை உருவாக்கி வெளியிடுவது ! And அந்த இதழுக்காக பெயரினை டெல்லியில் உள்ள செய்தித்தாட்கள் பதிவகத்தில் பதிந்து விட்டு வேலையை ஆரம்பிப்பது என்பதே திட்டம் ! அந்த அப்ளிகேஷனில் ஒன்றுக்கு மூன்றாய் பெயர்களை நாம் வரிசைப்படுத்தி எழுதி அனுப்பிடலாம் ; ஒன்று இல்லாங்காட்டி அடுத்ததை வாங்கிக் கொள்ள ஏதுவாக ! நான் முதல் சாய்ஸாக "டிங்-டாங்" ; இரண்டாவது பெயர்த் தேர்வாக "புதையல்" & மூன்றாம் தேர்வாக "பொக்கிஷம்"(not sure about # 3) என்று வரிசைப்படுத்தி நவம்பர் 1983-லேயே அனுப்பி விட்டு தினம்தோறும் தபால்காரரை வழி மேல் விழி வைத்தபடிக்கே எதிர்பார்த்திருப்பேன் ! ஊரில் இருக்கும் அம்புட்டுப் பசங்களின் கல்யாணப் பத்திரிகைகளும் தபாலில் வரும் ; அப்பாவின் பெயர் போட்டு "முஜே பைசா சாஹியே...பைசா...பைசா...!" என்று அன்பான நினைவூட்டல்கள் உச்சஸ்தாயியில் வரும் ; ஆனால் டில்லியிலிருந்து நான் எதிர்பார்த்துக் கிடந்த ஒப்புதல் கடுதாசி மாத்திரம் வந்த பாடே இல்லை ! அட - அந்தப் பதிவு இல்லாட்டி தபால் கட்டணங்களும், ரயில்வே கட்டணங்களும் மட்டுமே சலுகைகளின்றிப் போயிருக்கும் ; மற்றபடிக்கு வண்டியைக் கிளப்பியிருக்கலாம் தான் ! ஆனால் அன்றைய அந்த 16.5 வயது அறிவாளிக்கு எல்லாமே முறைப்படிச் செய்திட வேண்டுமென்ற எண்ணம் ; அவா ! அது மாத்திரமன்றி, எங்கே ஆரம்பிப்பது ? எப்படி திட்டமிடுவது ? பணத்துக்கு என்ன செய்வது ? என்ற கேள்விகள் உள்ளுக்குள் மிரட்டிக் கொண்டிருக்க, "இதோ - டில்லியிலிருந்து பதிவு  வருது.... வருது...." என்றபடிக்கே நாட்களைக் கடத்திப் போவது எனது இயலாமையை பூசி மெழுக உதவியதொரு திரையாகவும் செயல்பட்டது என்பதே நிஜம் ! ஆனால் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாய்க் காத்திருந்து கண்கள் பூத்ததே மிச்சம் என்றான நிலையில், ஒரு செம காண்டான மதியத்தில் தான் -  "ச்சீ..சீ...அந்த சிறார் இதழ் சங்காத்தமே வாணாம் ; மரியாதையாய் முத்து காமிக்ஸைப் போல ஒரு முழுநீள இதழைத் திட்டமிடலாம் ! என்ற பெரும் சிந்தனை எழுந்தது ! So ஒரு சுபயோக சுபதின பிப்ரவரியில் மறுக்கா ஒரு விண்ணப்பம் பறந்தது டில்லிக்கு - சாய்ஸ் # 1 : லயன் காமிக்ஸ் ; சாய்ஸ் # 2 : டைகர் காமிக்ஸ் ; தேர்வு # 3 : ஏதோவொரு பெயர் - மறந்து போச்சு !! ஆனால் இம்முறை வேலைகளை ஆரம்பிச்சிடலாம் - பெயருக்கான அனுமதி வந்த பிற்பாடு ரெடியாய் இருக்கக்கூடிய மாவைக் கொண்டு சுடச் சுட வடை சுட்டுக்கொள்ளலாம் என்றும் தீர்மானித்தேன் ! 

So நமது இன்றைய பயணத்தின் ஒரு தம்மாத்துண்டு துவக்கப் புள்ளி இடப்பட்டது 40 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பிப்ரவரியினில் தான் ! சிறார் இதழினில் தொடராக வெளியிடுவதற்கென, அதற்கு முன்னமே வாங்கியிருந்த க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டின் முதல் ஆறு பக்கங்களை விடிய விடிய ரசித்துக் கொண்டே இருந்ததன் பலனுமே ஒரு முழுநீள காமிக்ஸ் இதழ் மீது எனக்கு மையல் எழுந்திருந்ததற்கு காரணம் என்பேன் ! எது எப்படியோ - அன்றைக்கு டில்லியில் சிறார் இதழ்களுக்கான எனது விண்ணப்பங்களை மடித்து காது குடைய ஏதோவொரு குமாஸ்தா மாமா முனைந்திருக்காட்டி - "லயன் காமிக்ஸ்" என்றதொரு சமாச்சாரம் ஜனித்திருக்கவே ஜனித்திருக்காதோ - தெரியாது !   

ஒற்றை ஆண்டினில் தான் எத்தனை-எத்தனை மாற்றங்கள் இறைவா ?! என்று தோன்றுகிறது - 1985 பிப்ரவரியினை அசைபோடும் பொழுதினில் ! ஜூலை 1984-ல் கத்திமுனையில் மாடஸ்டியும், நானும் களமிறங்கியிருக்க, நம்ம சிரசாசன SMS காரரான ஸ்பைடராரின் புண்ணியத்தில் கொஞ்ச காலத்திலேயே வண்டி டாப் கியரில் ஓடத் துவங்கியிருந்தது ! பகீரென்று பாக்கெட் சைசுக்கு பல்டி ; ஜஜாய்ங்கென்று மாக்சி சைசுக்கு ஜம்ப் ; இரும்பு மனுஷன் ; தீவாளி மலர் ; பொங்கல் மலர் என்ற ரகளைகள் தொடர்ந்திட, நமது அந்நாட்களின் வங்கிக்கணக்கில் இருபதாயிரத்துக்கும் மேலே பணம் கிடக்கும் எந்நேரமும் ! (அதைக் கொண்டு அமேசான் ஓனரிடம் அவரது கம்பெனியை விலை பேச  முடிஞ்சிருக்காட்டியும், பக்கத்திலேயே, எதிர்த்தாலேயோ இருக்கக்கூடிய ஒரு சஹாராவையோ ; ஒரு காங்கோவையோ  அந்நாட்களில் வாங்கியிருக்கக்கூடும் guys  !!) பேப்பர் ஸ்டார்க்காரர் பில் போட்ட ஈரம் காய்வதற்குள் நம்ம  முழியாங்கண்ண தொழிலதிபர் 'பச்சக்' என்று செக்கைக் கிழித்திருப்பார் ! கடன்ஸ் கேக்கமாட்டோம் ; அதே போல நாங்களும் கடன்ஸ் தர மாட்டோமுங்கோ - என்பதில் இந்தச் சொடலமுத்து படு ஸ்ட்ரிக்ட்டாக இருந்த நாட்களவை  ! யாராச்சும் ஏஜெண்ட்ஸ் டிராப்ட் அனுப்புவதற்குப் பதிலாய் செக் அனுப்பினால் போதும் - மறு நொடியே கண்சிவந்து ; காது வழியாய்ப் புகை கக்கியபடியே அதனைத் திருப்பி அனுப்பிடுவோம் ! அந்தப் பாவத்துக்கெல்லாம் சேர்த்தோ என்னவோ - உள்நாடு மாத்திரமன்றி, வெளிநாடு வரையிலும் நீண்டு செல்கிறது இன்றைய நமது நிலுவைச் சிட்டைகள் !  Phew !!

பிப்ரவரி 1985 எனது நினைவில் நிற்க ஒரு முக்கிய காரணம் உண்டு ! மாடஸ்டி...ஸ்பைடர்...ஆர்ச்சி....மீட்போர் ஸ்தாபனம் - என்று 4 நாயக / நாயகியர் நமது அணிவகுப்பில் இருந்தனர் ! ஆனால் நமக்குத் தான் புதுசாய்க் கதைகளைப் பார்த்தால் வாய் விட்டம் வரைக்கும் பிளக்குமே ? இன்டர்நெட்டெல்லாம் இல்லாத அந்நாட்களில் கைவசமிருக்கும் புக்ஸ் ; பழைய காமிக்ஸ் இதழ்களை உருட்டி உருட்டியே எதையேனும் தேடிப்பிடிக்க அவசியமாகிடுவது வழக்கம் ! அப்படியொரு தேடலின் போது கண்ணில் பட்டது தான் MASTERSPY என்றதொரு Fleetway கதை வரிசை ! "டைகர் காமிக்ஸ்" என்ற Fleetway வாராந்திர இதழில் தொடராய் வந்து கொண்டிருந்த C.I.D ஜான் மாஸ்டரின் சாகசம் அது ! ராணி காமிக்ஸ் செம ஜாம்பவான்களாய் தமிழ் காமிக்ஸ் உலகினில் அமர்ந்து, ஆக்ரமித்து வந்த நாட்களவை ! சிக்கல் என்னவெனில் நாமும் சரி, அவர்களும் சரி, அதே இந்திய முகவர் மூலமாகத் தான் கதைகளைக் கொள்முதல் செய்து கொண்டிருந்தோம் ! "ரெண்டாயிரம்" என்றால் நான் "ரெ-ண்-டா-யி-ர-மா-ஆஆ" என்று வாயைப் பிளப்பேன் ; ஆனால் ராணியிலோ 'சொய்ங்' என்று payment அனுப்பி விடுவார்கள் ! என் கையில் காசு இருந்தாலும், அரையணா..காலணா என்று கணக்குப் பார்த்துச் செலவிடும் எனது சுபாவம் இங்குள்ள முகவருக்கு அவ்வப்போது எரிச்சலை ஏற்படுத்துவதுண்டு ! So புதுசாய் அந்த MASTERSPY கதைவரிசையினைத் தோண்டிப் பிடித்து , இலண்டனிலிருந்து ஆர்டர் செய்து வரவழைக்குமாறு இந்திய ஏஜெண்டிடம் கோரிய சமயத்தில் லைட்டாக நெருடியது ! "ஆஹா....இந்தக் கதைகளை இவர்பாட்டுக்கு ராணி காமிக்ஸ் கண்ணில் காட்டிப்புட்டால், நொடியில் வாங்கிப்புடுவார்கள் ; நாம சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டது போலாகிடுமே !!" என்று பயம் உலுக்கியது ! 

ஜான் மாஸ்டரின் கதைகளை அவர் வரவழைத்திட்டார் தான் - ஒன்றுக்கு இரண்டாக & அந்த இரண்டாம் அத்தியாயம் செம நீளமானதும் கூட !! ஓலை ஒன்று வந்தது அஞ்சலில் : "இப்போல்லாம் ஏர்-மெயில் சார்ஜஸ் கூடிப் போச்சு ; இலண்டனிலேர்ந்து மொத்தமாய் வாங்கினா தான் கட்டுப்படி ஆகுது ! So நீ ஒரே நேரத்திலே மொத்தத்தையும் வாங்கிக்கிட்டா தேவலாம் !" என்று இருந்தது ! அந்த லெட்டரின் குறியீடு நன்றாகவே புரிந்தது எனக்கு - "மொத்தமா வாங்கிக்க பைசாவை புரட்ட முடிஞ்சா இது ஒனக்கு ; இல்லாங்காட்டி நஹி !" என்பதாக ! "தவிர,ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த Death of a Jester என்ற மாடஸ்டி கதையும் (மரணக் கோட்டை) ; ஸ்பைடரின் The Scarecrow's Revenge (பழி வாங்கும் பொம்மை)கதையும் ரெடியாக உள்ளன ; அவற்றையும்  சேர்த்தே வாங்கிக்க ஏற்பாடு செய்தால் நலம் !" என்று அந்த மடல் நிறைவுற்றது ! 39 ஆண்டுகளுக்கு முன்னேயான அப்போதைக்கே பல ஆயிரங்களில் மிரட்டியது மொத்த பில் ! எனக்கோ உள்ளுக்குள் ஜுரம் வராத குறை தான் ! அப்போதெல்லாம் லயன் காமிக்ஸ் மாதம் ஒரு முறை மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கும் எனும் போது,  ஆண்டுக்கு 12 இதழ்கள் ; ஸ்பெஷல்ஸ் ஏதேனும் இருந்தால் ஒண்ணோ , ரெண்டோ சேர்த்து 13 or 14 இதழ்கள் தான் வெளியிட இயலும் ! So அவ்வப்போது பணம் அனுப்பி, அவ்வப்போதைக்கான கதைகளைக் கொள்முதல் செய்து கொண்டாலே மதி ! என்றிருப்பேன் ! தவிர வங்கிக்கணக்கில் பணம்  கிடப்பதை தினத்துக்கும் நினைத்து மகிழ்ந்து கொள்வதிலும் ஒரு குடாக்குத்தனமான திருப்தி அப்போது ! இந்தக் கடுதாசிக் கணையோ - நான் பொத்திப் பாதுகாத்து வந்த வாங்கி இருப்புக்கு வெடி வைத்து விடும் போலுமே என்ற பயம் உலுக்கத் துவங்கியது ! 

ஆனால் அதே சமயம், புதுக் கதையானது ராணிக்கு போக நேரிட்டால் நம்ம கதை கந்தலாகிப் போகுமே என்றும் உள்ளுக்குள் குடைந்தது ! அப்போதெல்லாம் பூர்வீக வீட்டின் ஒரு போர்ஷனில் இயங்கி வந்த நமது ஆபீசுக்கு என்னோடு ரெகுலராய் எனது தாய்வழித் தாத்தாவும் வருவார்கள் & என் கையிலிருந்த ஒவ்வொரு அணாவுமே அவர் தந்த முதலீட்டின் பலனே ! இந்தத் தொழில் சார்ந்த அனுபவம் அவருக்கு கிடையாதே தவிர, மனிதர்களை வாசிப்பதில் ; பொதுவான தொழில் அணுகுமுறைகளில் அவரொரு அசகாயர் ! பேரனின் மொகரை வழக்கத்தை விடவும் கர்ண கொடூரமாய் இருப்பதை சீக்கிரமே உணர்ந்தவர் - "என்னடா விஷயம் ?" என்று கேட்டார் ! நானும் லைட்டாக சமாளித்துப் பார்த்துத் தோற்றவனாய் நிலவரத்தை ஒப்பித்தேன் !  கஞ்சி போட்டு வெளுத்து வாங்கிய வெள்ளைக் கதர் வேஷ்டி & கதர் ஜிப்பாவே காலம் முழுக்க தாத்தாவின் டிரஸ் !  சும்மா சொட சொடவென காட்சி தரும் வேஷ்டியில் பணம் வைக்க முடியாதென்பதால், நம்ம தலீவரின் பட்டாப்பெட்டி ஸ்டைலிலான நீளமான உள்டிராயரில் தான் பணமிருக்கும் ! அந்த டிராயருக்குள் கைவிட்டு ஒரு நூறு ரூபாய் கட்டைத் தூக்கி மறு கணம் கையில் திணித்தவர் - "பேங்குக்குப் போயி ஒரு DD எடுத்து அனுப்பிட்டு, ஏஜெண்டுக்கு டெலிகிராம் அடி !" என்றார் ! குனிய வேண்டிய வேளையில் குனிவதும், நிமிர வேண்டிய தருணத்தில் நிமிர்வதும், பாய வேண்டிய சமயத்தில் பாய்வதும், பம்ம வேண்டிய கணத்தில் பம்முவதும், தொழிலின் பன்முகங்கள் என்பதை அன்றைக்கு அவர் எனக்கு செயலில் காட்டியிருந்தார் ! "ஒரு வேகத்தில் இழுத்து ஓடிக்கொண்டிருக்கும் தொழிலில் தொய்வு ஏற்பட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க  கூடாதுடா" என்று அன்றிரவு எனக்குச் சொன்னார் ! அதற்கு முன்பே டிராப்ட் எடுத்து ரிஜிஸ்டர் தபாலில் போட்டு விட்டு - தந்தி ஆபீசுக்குப் போய் "SENT DD - Rs .______. STOP . ARRANGE TO DESPATCH ALL STORIES URGENTLY. STOP. KIND REGARDS .LION COMICS " என்று சும்மா கெத்தாய் எக்ஸ்பிரஸ் டெலிகிராம் அனுப்பியிருந்தேன் ! (டெலெக்ராம் என்றால் இன்றைக்கு நீங்கள் பயன்படுத்தி வரும் செயலி அல்ல 2k kids !!) கதைகள் ஒரு கத்தையாக பார்சலில் வந்த தினத்தில் வாயெல்லாம் பல்லாய் நான் திரிந்ததையே தனக்கான வெகுமதியென தாத்தா நினைத்தார்களோ - என்னவோ, அந்தப் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாய் திரும்ப தா என்று சொல்லக்கூடயில்லை ! கதைகளை மொத்தமாய் வாங்கிடும் ஒரு சொகுசுக்கு, ஒரு வேட்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது அன்றைக்குத் தான் என்பேன் ! இரண்டரை மாதங்களுக்கு முன்பாக தாத்தாவோடே தலைநகருக்குச் சென்று , ஸ்பைடர் கதைகளை அள்ளியிருந்தேன் தான் ; but இந்தக் கொள்முதல் அதை விடவெல்லாம் நிரம்பவே ஜாஸ்தி !

மரணக் கோட்டை

சதி வலை

பழி வாங்கும் பொம்மை

மாஸ்கோவில் மாஸ்டர் 

தொடர்ந்த மாதங்களில் சூப்பர் ஹிட் அடித்த மேற்படி கதைகள் ஒவ்வொன்றிலும் தாத்தாவின் அரூப அடையாளம் உண்டு !

February 1987 !! மறக்க இயலா இன்னுமொரு பிப்ரவரி - 37 ஆண்டுகளுக்கு முன்பானதொன்று !! லயன் காமிக்ஸ் ; திகில் ; ஜூனியர் லயன் காமிக்ஸ் ; மினி லயன் - என நான்கு தனித்தடங்கள் தடதடக்கத் துவங்கிய இரண்டாவது மாதம் ! "புரட்சித்தலைவன் ஆர்ச்சி" என்ற பாக்கெட் சைஸ் black & white இதழே அந்த மாதத்தின் லயன் இதழாகத் திட்டமிடப்பட்டிருந்தது ! நமது ஆஸ்தான ஓவியர் மாலையப்பனின் முதன்முதல் டிராயிங் அந்த இதழுக்கென நாம் பயன்படுத்தியிருந்த கவர் தான் ! In fact 1984-லேயே அதை வரைந்திருந்தார் ! 1984 தீபாவளி மலருக்கென அதைக் கோரியிருந்தேன் ; but மனுஷன் சாவகாசமாய் போட்டுக் கொண்டு வர, அதற்குள்ளாகவே நான் சிவகாசியிலேயே இருந்த மூத்த ஓவியர் காளியப்பாவிடம் அதற்கான டிசைனைப் போட்டு வாங்கியிருந்தேன் ! So மாலையப்பன் சாவகாசமாய் கொண்டு வந்திருந்த அந்த ஆர்ச்சி டிசைன் 1987 வரை பரணிலேயே கிடந்தது போயிற்று ! இடைப்பட்ட நாட்களில் நமது ஒட்டுமொத்த கவர்களையும் வரையத் துவங்கி செம பிசியாக இருந்தார் மாலையப்பன் ! 

ஒன்றுக்கு நான்காய் புக்ஸ் வெளியிடத் துவங்கியிருக்க - ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித சர்குலேஷன் இருந்திடும். So ஒவ்வொரு மாதமுமே முந்தைய இதழின் சேல்ஸ் என்னவென்று கணக்குப் பார்க்க விழைவோம் ! அதன்படியே ஜனவரி 1987-க்கான இதழின் விற்பனைக் கணக்கினை எடுத்துப் பார்த்தோம் and guess what - அது நம்ம 'தல' டெக்சின் "பழி வாங்கும் பாவை !!" அசுரத்தன விற்பனை கண்டிருந்தது அந்த இதழ் & பொங்கல் முடிந்த சமயமே கையிருப்பும் தரை தட்டியிருந்தது - இன்றைக்கு டின்டின் ஸ்டாக் தரை தட்டுவதைப் போலவே ! So எனது ஞாபகம் பிழையாக இல்லையெனும் பட்சத்தில் "புரட்சித் தலைவன் ஆர்ச்சி" இதழுக்கு நாம் அச்சிடத் தீர்மானித்தது 31,000 பிரதிகளை ! Phewwwww !! முப்பத்தி ஒன்றாயிரம் !!! And அதுவும் அந்த மாசமே sold out !! கோவைக்கு 3000 பிரதிகள் ; ஈரோட்டுக்கு 3000 ; சென்னைக்கு 5000 ; சேலத்துக்கு 2000 என்று கிறுகிறுக்கச் செய்யும் அந்நாட்களில் விற்பனை நம்பர்கள் !! மார்ச் 1987-ல் வெளியான மினி-லயனின் "கறுப்புப் பாதிரி மர்மம்" ஒரு ரூபாய் விலையில் வெளியாகி 43,000 பிரதிகள் விற்பனை கண்டது ! இன்று வரை அந்த நம்பரே நமது highest ever ! அந்த நாற்பத்திமூவாயிரத்தில் நீங்களும் ஒருவரா guys - கரம் தூக்குங்களேன் பார்ப்போம் ?!! இன்றைக்கு நினைத்துப் பார்க்கையில் பெரும் பெரும் பெருமூச்சு தான் வெளிப்படுகிறது !! எக்கட போயி அத்தனை வாசகர்களும் ? இன்றைக்கு அவர்களில் பத்தில் ஒரு பங்கு மிஞ்சினாலுமே இன்னா சூப்பராய் இருக்கும் ?? 

பிப்ரவரி...மார்ச்..ஏப்ரல் என ஒவ்வொரு மாதங்களோடும் டிசைன் டிசைனான  நினைவுகளுக்குப் பஞ்சமே இராது தான் ; but இப்போது டைப்படிக்க நேரமில்லை என்பதால் - விடைபெற்றுக் கிளம்புகிறேன் folks ! மார்டினின் ஆர்டிக் அசுரனை காலையில் ஆரம்பிக்க வேண்டி வரும் ! ரைட்டு, before I sign out - பூமியைப் புரட்டிப் போடப்போகும் கேள்விகள் சில :

1 .உங்களது பதினாறரையாம் வயதில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் guys ? என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?

2."சதிவலை" இதழினை ஒரிஜினலாக வாசித்தவரா நீங்கள் ?

3."புரட்சித்தலைவன் ஆர்ச்சி"யை அப்போதோ - இப்போதோ வாசித்ததுண்டா ?

4."கறுப்புப் பாதிரி மர்மம்" புக்கின் நாயகர் யாரென்று சொல்லுங்களேன் ? 

5.டின்டின் கூப்பனை அனுப்பியாச்சுங்களா ? If not - இன்றே, இப்போதே ப்ளீஸ் ?

6.பிப்ரவரியின் மூன்றில் எத்தனை முடித்திருக்கிறீர்கள் ? பூஜ்யம் / ஒன்னு / ரண்டு / மூணு ?

CHENNAI COMIC CON-ல் சந்திக்க முயன்றால் சூப்பராக இருக்கும் ; please give it a shot people ! 

Bye for now...have a great Sunday !



235 comments:

  1. Replies
    1. பதிவு இங்க நேரப்படி பதிவுக்க்கிழமையில வந்துருச்சு, சகோ
      முதலாவது வந்ததுக்கு வாழ்த்துகள் 😋😋😋

      Delete
  2. அதி காலை வணக்கம் 🙏🙏

    ReplyDelete
  3. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  4. 1 . 16 1/2 வயதில் 10 வது படித்து முடித்து அப்பாவின் லேத் ஓர்க்சாப்பில் சேர்ந்து வேலை செய்ய என்னை மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்க பாலிடெக்னிக் கில் என்னை சேர்த்த பின்பு அப்போது ( 16 1/2 யாவது வயதில் நான்
    மெக்கானிக்கல் படித்துக்கொண்டிருந்தேன் )

    ReplyDelete
  5. 2 சதி வலை அப்போது கண்ணில் படவில்லை. ஏனெனில் நான் என் ஊரைத்தாண்டியிரா சிறு வயது பால்யம்..

    ReplyDelete
  6. 3 சட்டித்தலையன் ஆர்ச்சி என் பேவரைட் என்றைக்கும். மனம் கஷ்டப்படும்போதெல்லாம் டெக்ஸ் கூடவே பயணிக்கும் ஒரு இரும்பு தலைல்லற் மை ஆல் டைம் பேவரைட்

    ReplyDelete
  7. 4 புயல் வேக இரட்டையர்கள்.

    ReplyDelete
  8. 1. அனேகமா +2 முடிச்சுட்டு் நுழைவுத் தேர்வுக்கு தயாராகிட்டிருந்தேன்.
    2. வந்தப்பவே வாங்கியாச்சு யெஸ்
    3. அப்போதே யெஸ்
    4. புயல்வேக இரட்டையர். I still have this book.
    5. நோ
    6. 0

    ReplyDelete
  9. 5 இன்றனுப்பி விடுகிறேங்க .. ( வாட்சப் நம்பர் பிளீஸ் ஆசிரியரே )

    ReplyDelete
  10. 1.12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

    2. சதிவலை அப்போது படிக்கவில்லை. பிறகு தான் படித்தேன்.

    3.புரட்சித் தலைவன் ஆர்ச்சி அப்போதே படித்தேன்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. 4.புயல் வேக இரட்டையர்கள்.

    5. நேபாள் கூப்பனை திங்கள் அன்று அனுப்புகின்றேன் சார்.

    ReplyDelete
  13. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  14. 1. படிச்சா மெடிக்கல் தான் இல்லாட்டி சும்மா இருப்பேன் என உறுதி செய்து வாய்க்கால் தால் என் நண்பன் பிரபுராஜை காலேஜுக்கு செல்லும் பஸ்ஸில் ஏற்றி விட BSA SLR காதல் வாகனத்தில் சைக்கிளில் பீளமேடு செல்வதும் மாலை அவனை வரவேற்கச் செல்வதும்....பகல் முழுதும் சோம்பலால் உறங்குவதும்...கிரிக்கட் டேஞ்சர் லென்ஸ் என நான் உருவாக்கிய டீமில் பொடியர்களை சேர்த்துக் கொண்டு கார்க் பாலால் வேகப்பந்து வீச்சாளராய் ஆவாரம்பாளையத்த மிரட்டியதும் ...அலைந்ததும்...நம்ம காமிக்ஸ் வருமா என தவம் கிடந்த தும்...அட்டகாச கார்சன் கடந்த காலத்தை பீளமேட்டில் பிடித்ததும்...ஒன்சைடு முதல் காதல் மஞ்சுவை காலை மாலை தரிசித்த தும் நினைவில்...கிரிக்கட் காதல் நண்பன் காமிக்ஸ் உறக்கம் இதான் அன்றய வாழ்க்கை...

    ReplyDelete
    Replies
    1. 2. அடடா மறக்க முடியுமா...முதன் முறையாக ஊரிலிருந்து பெரியம்மா மகனுடன் ரிட்டனான பகல் பயணத்தை வெகுவாய் ரசித்த படி மதுரை பஸ் நிலையத்தில் இறங்கி ஓடிச் சென்று ஆர்ச்சியின் நதி அரக்கன பாத்து மகிழ்ந்து...அந்த இரும்பு மனிதன் ஆர்ச்சி சைசுல வியந்து ...ஜான் மாஸ்டரை யும் முதல் உதவியாளர் கருப்பு இன நண்பன் ஸ்மித்தா.... பிரிவால் ஜான் மாஸ்டரை விட அதிகம் வருந்தி இரண்டாமுதவியாளர் கோணங்கி...விஞ்ஞானி ஹென்றியை ரசித்தும் ரசிக்காமலும்...இப்பவும் என கையிலுள்ள பொக்கிஷத்தை நாளை எடுத்துப் படிக்கும் ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளீர்கள்...பாக்கட் சைச மாஸ்கோவில் மாஸ்டருக்கு மட்டும் ஒதுக்கலாம்...அந்த பெரிய சைச நதிக்கரை அரக்க னுக்கும் மாஸ்டருக்கும் ஒதுக்கி அதே இதழா அன்று போல இன்னும் கோடை மலரா வந்தா...பெருமூச்சு தான்...நல்ல வேளை ஒரிஜினல் என் கைல

      Delete
    2. 3. அப்ப வாசிப்பது தான்...இப்ப வந்தா சூப்பர்...அக்கதை மட்டும் முதன் முறையாக பெருசா ரசிக்கலையோன்னு நினைவில்...

      Delete
    3. 4. நாயகர் நினைவில் இல்லை கதையும் நினைவில் இல்லை...தலைப்பு நல்லா நினைவில்...எதிர்பார்ப்பும் நினைவில் தலைப்பால்...செஸ்டிர் ப்ளேக்கா

      Delete
  15. கானகத்தில் கபட நாடகம் அட்டை சும்மா பட்டை...தெறிக்க விடுத்து வண்ணத்தால்...தலைப்பு உள்ளயே சுத்தி வருவது அழகு

    ReplyDelete
  16. இனி மார்ச்...ஏப்ரல்னு திரும்ப வாங்க....ஏற்கனவே வர உள்ள ஆர்டிக் அசுரன் அடுத்த மாதம் நினைவு மலராய் வர இருப்பது ஆச்சரியமான ...விடை பெற்றவர் நமது இதழ் வாயிலாக திரும்பி வருவது அதிசயமோ

    ReplyDelete
  17. ❤️👌🌹யப்பா...இந்த அதிகாலையில் டைம் டிராவலில் பின்னோக்கி பயணம் பண்ண வைத்ததற்கு மனமார்ந்த நன்றிகள் சார் 🙏.

    ஆரம்ப கால லயன் குழுமத்துடன், கண்ணுக்கு தெரியாமல் நானும் இணைந்திருந்தேன் என்பதை லயன் ஆசிரியரிடமே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    🌹 வாடகை புத்தக கடையில் முத்து காமிக்ஸ் இரும்புக் மாயாவி மற்றும் லாரன்ஸ் டேவிட் அறிமுகமானதை,
    🌹84ல் கடையில் தொங்கிய புதிய காமிக்ஸ் இதழை காசு கூட வாங்காமல் கடைக்காரர் அறிமுகப்படுத்தியதை,
    🌹ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்பைடரின் புத்தம் புது இதழான "கொலைப்படை"யை,
    ஆர்வமிகுதியால் ஸ்கூல் புத்தகங்களுடன் வைத்திருந்ததை யாரோ தமிழாசிரியையிடம் போட்டு கொடுக்க, 30 பேர் முன்னால் ஸ்பைடரை நாலாக கிழித்த தமிழாசிரியை,
    🌹5 ரூபாயில் வந்த லயன் கோடை மலருக்கு 1.50 பைசா குறைவுக்கு சிரமப்பட்டது.
    🌹முதலும் கடைசியுமாக வந்த குண்டு புக் "லயன் சூப்பர் ஸ்பெஷல்" தீபாவளி மலரை வாங்க காசில்லாமல் அலைந்தது,
    🌹 வீட்டுக்கு தெரியாமல் திரும்ப திரும்ப சலிக்காமல் படித்து, பரண் மேல் பாதுகாத்து வைத்திருந்த, 6 வருட காமிக்ஸ் சேமிப்புக்களை தூக்கி பழைய புத்தகக் கடைக்கு கொடுத்த வீட்டார்,
    🌹90 களுக்கு பின் ஊர் மாறி வந்ததும், காமிக்ஸ் தொடர்பே விட்டுபோன நாட்கள்,
    என எதையும் மறக்கவே முடியாத காமிக்ஸ் பசுமை நினைவுகள்.

    பழைய வாசகர்கள் இன்னமும் தொடர்ந்து வந்திருந்தால் காமிக்ஸ் உலகமே வேறுமாதிரி இருந்திருக்கும். காலச்சூழல் பலவாறு பிரித்து போட்டு விட்டது.
    புத்தக திருவிழாவில் இவர்களை அவ்வப்போது காண்பதில் சற்று நிம்மதி.

    இப்போதுள்ள வாசக நண்பர்களில் 80s கிட்ஸ்
    வாசகர்கள் மிக மிக குறைவுதான்.
    பெரும்பாலும் 95 க்கு பின் வந்தவர்களே.
    மேலும் இப்போதைய இயந்திர வாழக்கைக்கு
    இடையே இவர்களின் காமிக்ஸ் மீதுள்ள ஆர்வமும் வியக்க வைக்கிறது.
    இந்நிலையில் லயனின் ஆரம்பகால வாசகன் என்பதை தங்களுக்கு தெரிவிப்பதில் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

    1)88, 89 கோவை வாசம்.
    படிப்பு முடிந்து,
    பள்ளி நட்புக்களுடன் குட்டி வாசக வட்டத்தில்,காமிக்ஸ் வாசிப்பில் திளைத்துக் கொண்டிருந்த பொற்காலம்.

    2)yes. 84 லயன் முதல் இதழில் இருந்து 90 வரை உள்ள அனைத்து இதழ்களையும் வாசித்துள்ளேன். ஆர்ச்சி,ஸ்பைடர்,மாடஸ்டி, லாரன்ஸ்& டேவிட் முன், ஏனோ ஜான் மாஸ்டர் மனதில் தங்கவில்லை.

    3)இப்போது 2nd என்ட்ரியில் வாசிக்கவில்லை.
    அப்போது வாசித்தது தான்.
    டைம் ட்ராவலில் எதிர்காலத்துக்கு வரும் ஆர்ச்சி மற்றும் நண்பர்கள் ரோபோக்களிடம் சிக்கிக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.
    கதை முழுமையாக ஞாபகம் இல்லை.
    இதில்தான் பெரிய இயந்திர புழு வரும்?.
    ரோபோ கதையை அப்போதே செம்ம த்ரில்லராக சொன்ன கதை.

    4)மினி லயனின் 3 அல்லது 4 வது இதழ்.
    இரட்டையர் ஸாண்டி & ஜோ.
    உங்கள் நம்பர் வரிசையில் நிச்சயம் எனக்கும் இடம் உண்டு.
    (வாசகர்களுக்காக ----
    இரட்டை வேட்டையர் அல்ல. இது வேறு இரட்டையர்).

    5)புக் வந்ததுமே அனுப்பியாச்சுங்க சார்.

    6) 1)இளவரசியை முடித்தாயிற்று, அருமையான த்ரில்லர்.
    2)டெக்ஸ் - கொஞ்சம் காதில் பூச்சுற்றல்னாலும், 50 பக்கத்துக்கு மேல் புத்தகத்தை கீழே வைக்க முடியலை.
    3)வது இன்னும் தொடவில்லை.

    நினைவுகளை அசைபோட வைத்ததற்கு மீண்டும் நன்றிகளும் மகிழ்ச்சியும் ❤️

    ReplyDelete
  18. 1. ஏன் பதினாறரையாம் வயதில் நான் பத்தாவது படித்துகொண்டோருந்தான்
    2. சதிவலை படித்துஇருக்கான் , இன்றும் வைத்துஇருக்கான்
    3. புரட்சித்தலைவன் ஆர்ச்சி படித்துஇருக்கான்
    4. கருப்பு பாதிரி மர்மம் - ஹீரோ (ஜோ மற்றும் sandy )
    5. இல்லை
    6. மாடஸ்டி மட்டும் படித்துமுடித்துஇருக்கான்

    ReplyDelete
  19. 1.1986ல் வேலைக்கு வந்தாயிற்று சதி வலை புரட்சி தலைவன் ஆர்ச்சி இரண்டும் முதல் மாதங்களிலேயே படிச்சிருக்கேன்.கறுப்பு பாதிரி மர்மம் தான் ஞாபகத்தில் இல்லை .பின் நாட்களில் படித்துள்ளேன்.ஹிரோஸ் பேர் ஞாபகம் இல்லை.இம்மாதத்தின் மூன்று புத்தகங்கள் படித்தாயிற்று

    ReplyDelete
    Replies
    1. // இம்மாதத்தின் மூன்று புத்தகங்கள் படித்தாயிற்று //
      ஆஹான்.....

      Delete
    2. அவர் நம்ம ஆளுங்க ரவி அண்ணா...

      Delete
    3. கொஞ்ச நாளைக்கு அந்த லிஸ்டில் நான் இருக்க வாய்ப்பில்லை தம்பி...

      Delete
  20. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  21. பிப்ரவரியின் மூன்றில் எத்தனை முடித்திருக்கிறீர்கள் -மூணு

    ReplyDelete
    Replies
    1. அடடே என்னைப் போல ஒருவர்

      Delete
  22. 1. பிளஸ் டூ முடித்து கல்லூரி அட்மிஷனுக்காக அலைந்து கொண்டிருந்தேன் .
    2. சதி வேலை அந்த சம்மரில் எனது தினமும் படிக்கும் இதழில் ஒன்று. எனக்குத் தெரிந்த ஒரு 200 முறை படித்திருப்பேன். பட் இந்த புத்தகம் இப்போது என் கையில் இல்லை
    3.புரட்சித் தலைவன் ஆர்ச்சி அப்போது விரும்பி படித்த புத்தகம். கரையான் புண்ணியத்தில் என் சேகரிப்பில் காணாமல் போன பல புத்தகங்களில் அதுவும் ஒன்று.
    4.கருப்பு பாதிரி மர்மம் அப்போதைய வாசகர்களில் நானும் ஒருவன். ஜோ அண்ட் சாண்டி நன்றாக ஞாபகம் உள்ளது.
    5.டின் டின் கூப்பனை அனுப்பி ஆயிற்று
    6.இளவரசியை முடித்தாயிற்று. மாசா மாசம் டெக்ஸ் படித்து விடுவேன் சமீபகாலமாக ஒரு நான்கு மாதங்களாக டெக்ஸ் பெண்டிங்கில் இருக்கிறது. கொஞ்சம் ஸ்பீடு பண்ணனும் போல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சூப்பர்

      Delete
    2. 1.ஏங்க சார் கேட்டது 16வயசில என்ன செய்து கொண்டு இருந்தீங்கனு... அப்ப எப்படி +2முடிக்க இயலும்??. 1984, 1985களில்னா பதில் சரி!

      Delete
  23. இனிய காலை வணக்கங்கள்

    ReplyDelete
  24. 1. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். பாடப்புத்கங்கள் மட்டுமே என்றிருந்து தனிமை ஏற்பட்ட வேளையில் லயன் காமிக்ஸ் துணையாக இருந்தது

    2. இல்லை ஆசிரியே

    3.அப்போ படிக்கவில்லை, இப்பவும் இல்லை

    4. இல்லை

    5. கூப்பன் அனுப்பியாச்சு ஆசிரியரே

    6. நம்ம லயன் காமிக்ஸ் முதல் தலைவி மாடஸ்டியின் படித்து முடித்தாயிற்று, நன்றாக இருந்தது. காட்டேரியின் சாம்ராஜ்யம் 50 பக்கங்கள் தாண்டியாயிற்று

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் 4வயசுலயே ஸ்கூல் சேர்ந்திட்டீங்களா???

      Delete
    2. பிறந்தது டிசம்பர்
      அதனால மூன்றரை வயதில் சகோ 😊😁

      Delete
  25. அருமையான நினைவலைகள் ஆசிரியரே
    சூப்பர் தாத்தா தங்களின் தாத்தா

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா. உண்மையாகவே அவர் இல்லை என்றால் லயன் இல்லை.

      Delete
  26. பிப்பரவரி மாதம் தான் ஒரு ஆரம்பமாக இருந்தது என்று சொல்லிட்டீங்க ஆசிரியரே, கூடவே ஸ்பைடர் பெயர் வேற சொல்லிட்டீங்க
    இப்போ ஸ்டீல் சகோ ஒரு ஸ்பெசல் ஸ்பைடர் புக் வேணும்னு கேட்பாரு

    ReplyDelete
  27. 1)திருப்பூர் ல வேலைக்கு போயிட்டு இருந்தேன் ஆசானே..

    2)no

    3)yes- 94,95 வாக்குல படிச்ச ஞாபகம் சார்

    4)இரட்டை வேட்டையர்

    5)அனுப்பியாச்சு சார்..

    6)மூணும் முடிஞ்சதுங்க சார்

    ReplyDelete
  28. 1 .உங்களது பதினாறரையாம் வயதில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் guys ? என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?

    சேலத்தில் இருந்து
    சென்னைக்கு 10 வயதில் வந்து விட்டேன் 16 வயதில் படிப்பை தொடர முடியாமல் ரைஸ் மில்லில் எடுபிடி வேலையில் இருந்தேன்

    2."சதிவலை" இதழினை ஒரிஜினலாக வாசித்தவரா நீங்கள் ?

    4 ரூபாய் என்பதால் உடனே வாங்கமுடியவில்லை கொஞ்சம் தாமதமாகத்தான் படித்தேன்

    3."புரட்சித்தலைவன் ஆர்ச்சி"யை அப்போதோ - இப்போதோ வாசித்ததுண்டா ?

    அப்போதும் வாசித்தேன் கிடைத்தால் இப்போதும் வாசிப்பேன் புரட்சித்தலைவன் ஆர்ச்சி பின்னட்டை இரண்டு வகையாய் வந்ததாய் ஞாபகம்

    4."கறுப்புப் பாதிரி மர்மம்" புக்கின் நாயகர் யாரென்று சொல்லுங்களேன் ?
    புயல் வேக இரட்டையர்கள் ஜோ & ஸாண்டி

    5.டின்டின் கூப்பனை அனுப்பியாச்சுங்களா ? If not - இன்றே, இப்போதே ப்ளீஸ் ?

    அனுப்பியாச்சு ஆசிரியரே

    6.பிப்ரவரியின் மூன்றில் எத்தனை முடித்திருக்கிறீர்கள் ? பூஜ்யம் / ஒன்னு / ரண்டு / மூணு ?

    மூன்றுமே படித்தாயிற்று

    ReplyDelete
  29. டியர் விஜயன் சார்,

    1995-இல், என்னுடைய பதினாறரையாவது வயதில், பனிரெண்டாம் வகுப்பில் அரைகுறையாகவும், காமிக்ஸ் புத்தகங்களை முழுநேரமும் படித்துக் கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு அதே ஆண்டு மார்ச் மாதம், இறுதித் தேர்வுக்குப் படிக்க வேண்டிய நேரத்தில்,  "காமிக்ஸ் அட்டைப்பட ஐடியா"-க்களை உங்களுக்கு வரைந்து அனுப்பியிருக்கிறேன். லயன் டாப் டென் ஸ்பெஷலின் இறுதிப் பணிகளினூடே, நீங்கள் அனுப்பிய பதில் கடிதம் இதோ!

    1995 to 2011 - காமிக்ஸ் வனவாசம் - காமிக்ஸ் மட்டுமே படித்ததால், பிளஸ் டூவில் வாங்கிய அடி அப்படி!

    2012-இல், என்னுடைய முப்பத்து மூன்றாம் வயதில், ஆபிஸில் அரைகுறையாகவும், லயன் பிளாகில் முழுநேரமும் வேலை செய்து கொண்டிருந்தேன்! போதாக்குறைக்கு, அதே ஆண்டு பிப்ரவரி மாதம் உங்கள் பிளாகால் கவரப்பட்டு நானும் ஒரு வலைப்பூ தொடங்கி, காமிக்ஸ் விமர்சனம் என்ற பெயரில் 2014 வரை ஓவராக கம்பு சுற்றியிருக்கிறேன்!

    2015 - 2023 - கம்பையும், வம்பையும் தூக்கி ஓரமாக வைத்து விட்டு நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தேன்...  

    2024-இல், என்னுடைய நாற்பத்து ஐந்தாம் வயதில், ஆபிஸ் வேலையை முழுநேரமும், காமிக்ஸ் புத்தகங்களை ஆடிக்கு ஒரு முறையும், அமாவாசைக்கு இரு முறையும் படித்துக் கொண்டிருக்கிறேன்! 2012 - பெங்களூர் காமிக் கான் மற்றும் 2013 - ஈரோடு புத்தக விழாவிற்குப் பிறகு, 2024 சென்னை காமிக் கானில் வாய்ப்பிருந்தால், உங்களை காண எண்ணியிருக்கிறேன்!

    உங்களைப் போலவே காமிக்ஸ் சாதனைப் புள்ளி விவரங்களை பட்டியல் போட ஆசை இருந்தாலும், என்னுடைய ரேஞ்சுக்கு இவ்வளவு தான் தேறியது! நன்றி வணக்கம்... :-)

    ReplyDelete
  30. No human ever get satisfied with their current salary or sales. They always want to increase the numbers. But once we start losing them year by year, even though we work harder than yesterday years, we feel a sense of loss and we keep on thinking where we went wrong.

    Because I am also experiencing the same sir

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் சேல்ஸ் குறித்து நான் மண்டையைப் பிய்த்துக் கொள்வதேயில்லை சார் ! அங்கே பிய்க்க ஏதுமில்லை என்ற யதார்த்தத்தைத் தாண்டி, மாறி வரும் உலகினில், மாறி வரும் ரசனைகளில், மாறி வரும் வாழ்க்கை முறைகளில், இந்த பொம்ம புக் வட்டம் குறுகிடுவது தவிர்க்க இயலா ஒன்றே என்பதை உணர முடிகிறது !

      Yet on the flip side - நமக்குப் படியளக்கும் பிரான்சில் ஒரு புது காமிக்ஸ் எழுச்சி அலையடித்து வருவதை போலில்லாவிடினும் இங்கே நம்ம ஊர் ஓடைகளிலும், கம்மாய்களிலும் சின்ன சலசலப்போடாவது நீர்வரத்து அதிகரிக்காது போகாது என்ற நம்பிக்கையும் உள்ளுக்குள்ளே இருக்கிறது சார் ! இதோ - டின்டினின் வருகையும், அசுர வெற்றியும் அதற்கு உரம் சேர்க்கின்றன ! நம்பிக்கையோடு நடை போடுவோம் !

      Delete
  31. 1.உங்களது பதினாறரையாம் வயதில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் guys ? என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?

    சேலத்தில் +2 படித்துக் கொண்டு இருந்தேன்.

    2."சதிவலை" இதழினை ஒரிஜினலாக வாசித்தவரா நீங்கள் ?
    ஞாபகம் இல்லை சார் ஆனால் வாசித்து விட்டேன்.

    3."புரட்சித்தலைவன் ஆர்ச்சி"யை அப்போதோ - இப்போதோ வாசித்ததுண்டா ?
    அப்போதே

    4."கறுப்புப் பாதிரி மர்மம்" புக்கின் நாயகர் யாரென்று சொல்லுங்களேன் ?
    புயல் வேக இரட்டையர்

    5.டின்டின் கூப்பனை அனுப்பியாச்சுங்களா ? If not - இன்றே, இப்போதே ப்ளீஸ் ?
    அனுப்பி விட்டேன் சார்.

    6.பிப்ரவரியின் மூன்றில் எத்தனை முடித்திருக்கிறீர்கள் ? பூஜ்யம் / ஒன்னு / ரண்டு / மூணு ? ஒன்லி 3

    ReplyDelete
  32. அந்த இரண்டாவது பாராவில் முத்து-லயன்-முத்து காமிக்ஸ் வாரமலர்..
    லயன் பட்ட பாடுகள் அனைத்தையும் சுருங்கக் கூறியிருக்கிறார் விஜயன் சார்.. நமக்கெல்லாம் சொர்க்கம் காட்டிய இந்த தலைமுறை அறியாத சித்திரக்கதை என்னும் இன்ப அதிர்ச்சி உண்மையில் பதிப்பகத்துக்கோ ஏகப்பட்ட சிக்கல்களை இழுத்து விட்டிருக்கிறது. அதையெல்லாம் தாண்டி தாக்குப் பிடித்து நிற்கும் லயனுக்கு ஒரு ராயல் சல்யூட்.. இனிவரும் காலங்கள் சிறந்ததாகவே அமைவது வாசகர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் உருவாகும் புதிய தலைமுறைகள் சித்திரக்கதைகளை வாசிக்கும் பழக்கம் மேற்கொள்வதில்தான் இருக்கிறது.. ஆண்ட்ராய்ட் மோகத்தில் இருந்து பிள்ளைகளை கட்டி இழுத்துக் கொண்டு வர முயற்சிப்போம்..

    ReplyDelete
    Replies
    1. காலங்கள் மாறி வருகின்றன சார் ; கருவிகளுமே !

      அந்நாட்களில் எந்த ஊருக்குப் போனாலும் குறைந்தபட்சமாகவாவது பாதைகள் தெரிந்திருக்க வேண்டியிருக்கும் ; இல்லாங்காட்டி ஆட்டோ ஓட்டுனர்கள் ஊரையே சுற்றிக் காட்டி விடுவார்கள் என்ற பயமிருக்கும் ! ஆனால் இன்றைக்கோ OLA க்களை ஓட்டும் டிரைவர்களுக்கே ஊரும் சரி, பாதைகளும் சரி, தெரிந்திருப்பதில்லை - yet அந்த ஸ்மார்ட் போன்கள் விரல் பிடித்து இட்டுச் சென்று விடுகின்றன தானே ?!

      விரல் நுனியில் உலகத்தையே கொணர்ந்து நிறுத்தும் இந்த செயலிகளையும், கருவிகளையும் தவிர்க்க இனி மார்க்கமே லேது என்பது தான் யதார்த்தம் சார் ! இன்னும் இந்த செயற்கை நுண்ணறிவு விஸ்வரூபம் எடுத்தான பின்னே லோகத்தில் என்னென்னவெல்லாம் மாறிடக் காத்துள்ளனவோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் !

      So இன்றும், நாளையும், நாளை மறுநாளும் , அதன் பின்னேயும் கருவிகளோடே தான் காலம் தள்ளியாக வேண்டுமெனும் போது அவற்றைப் புறக்கணிக்க வாய்ப்பே இராது ! அவற்றின் பயன்பாட்டினை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வழிகளைத் தான் நாம் தேடிக் கொள்ள வேண்டியிருக்கும் !

      Delete
  33. 1)10ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேனுங்க

    2) இல்லைங்க

    3) வாசிக்கவே இல்லைங்க சார்

    4)இரட்டை வேட்டையர்னு இப்பதானுங்க சார் தெரியும்

    5)அனுப்பியாச்சு சார்

    6)பூச்சியம் தானுங்க சார்

    ReplyDelete
    Replies
    1. இதான் சரி.... 16வயசுல 10வது தான் படிக்க இயலும்.. எல்லாம் 4வயசுலும் 3வயசிலிம் 1வது சேர்ந்த மாதிரி 16வயசில +12 முடிச்சிட்டேன், +12 படிச்சிட்டு இருக்கேன்ங்கிறாங்க..🤔🤔🤔

      Delete
    2. புயல் வேக இரட்டையர் வேறு, இரட்டை வேட்டையர்கள் வேறு. இரண்டுமே அருமையான கதைகள். மறுபதிப்பு செய்ய ஏற்றவை.

      Delete
    3. வி ரா சகோ...
      12+ முடிச்சுட்டாங்கனா அதுக்கு
      ஏற்ற மாதிரி வருசத்தை கணக்கிட்டா சரி.
      85 ல சதிவலை.
      87 ல பு த ஆர்ச்சி,
      அப்ப 70கள்ல பொறந்துருப்பாங்க. சரிதானே சகோ.😌😀🤣

      Delete
  34. 1 .உங்களது பதினாறரையாம் வயதில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் guys ? என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?

    11th standard Annual exams at 16.5 - Early 1992. But that was among the wonder years for all comics in India - so was reading about 20 comics a month including our releases - sometimes more during weekends ! Wonder years !!

    2."சதிவலை" இதழினை ஒரிஜினலாக வாசித்தவரா நீங்கள் ?

    Yes !
    3."புரட்சித்தலைவன் ஆர்ச்சி"யை அப்போதோ - இப்போதோ வாசித்ததுண்டா ?

    Vaguely remember reading it.

    4."கறுப்புப் பாதிரி மர்மம்" புக்கின் நாயகர் யாரென்று சொல்லுங்களேன் ?

    Since I was allergic to all things ghostly those days - remember skipping this title - hence did not bother to check out who was the hero.

    5.டின்டின் கூப்பனை அனுப்பியாச்சுங்களா ? If not - இன்றே, இப்போதே ப்ளீஸ் ?

    Not interested to go solo.

    6.பிப்ரவரியின் மூன்றில் எத்தனை முடித்திருக்கிறீர்கள் ? பூஜ்யம் / ஒன்னு / ரண்டு / மூணு ?

    All 3 books in less than 2 days - last weekend - rapid reading fare !

    ReplyDelete
    Replies
    1. //Not interested to go solo//

      அடுத்தவாட்டி 2 பேரை எங்காச்சும் அனுப்பும் விதமாய்த் திட்டமிடலாம் சார் !

      Delete
  35. // 1 .உங்களது பதினாறரையாம் வயதில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் guys ? என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? //
    பதினொன்றாம் வகுப்பில் நடு பெஞ்ச் குரூப்பில் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டும்,வகுப்பிற்கு பின்னே பலவீனமாய் இருந்த ஜன்னல் கம்பிகளை அவ்வப்போது அழகாய் எடுத்து விட்டு வெளியே சுற்றி விட்டு,ஸ்னாக்ஸ்களை கொறித்து விட்டு,மீண்டும் அழகாய் ஜன்னல் வழியே வகுப்பறைக்குள் வரும் விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்த தருணமது...

    // 2."சதிவலை" இதழினை ஒரிஜினலாக வாசித்தவரா நீங்கள் ? //
    இல்லை சார்...

    // 3."புரட்சித்தலைவன் ஆர்ச்சி"யை அப்போதோ - இப்போதோ வாசித்ததுண்டா ? //
    அப்போது வாசித்தது இல்லை,இப்போதும் வாசித்ததாக நினைவில்லை...

    // 4."கறுப்புப் பாதிரி மர்மம்" புக்கின் நாயகர் யாரென்று சொல்லுங்களேன் ? //
    தெரியலையே,அவரும் ஒரு பாதிரியாரோ இருப்பாரோ,ஹி,ஹி,ஹி...

    // 5.டின்டின் கூப்பனை அனுப்பியாச்சுங்களா ? If not - இன்றே, இப்போதே ப்ளீஸ் ? //
    நேற்று மாலை வெற்றிகரமாக அனுப்பியாச்சிங் சார்...

    // 6.பிப்ரவரியின் மூன்றில் எத்தனை முடித்திருக்கிறீர்கள் ? பூஜ்யம் / ஒன்னு / ரண்டு / மூணு ? //
    டிசம்பர் முதல் பாதிவரைக்கும் மட்டும் படிச்சிருக்கேன் சார்,டிசம்பர் இரண்டாம் பாதி,ஜனவரி-2024,பிப்ரவரி-2024 இதழ்கள் எல்லாம் வெயிட்டிங்,வேலைப் பளு மற்றும் சிலபல காரணங்களால் வாசிப்பில் சற்றே தொய்வு நிலை,மார்ச் முதல் மே வரை சொல்லவே தேவை இல்லை,போறப் போக்கைப் பார்த்தா இந்த ஆண்டு விமர்சனங்களை மட்டும்தான் வேடிக்கைப் பார்க்கனும் போல...

    ReplyDelete
    Replies
    1. ஜனநாயகக் கடமை அழைக்குமன்றோ சார் ?!

      Delete
  36. 6.மூன்றையும் படித்துவிட்டேன் சார்.மார்ச் இதழ்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

    ReplyDelete
  37. 16.5 ல அருப்புக்கோட்டைல...+2...

    யெஸ்

    யெஸ்

    சாண்டீஸ் ஆண்டு ஜோஸ மறக்றதாவது

    நேத்தே அனுப்பீட்டேனே வாட்ஸப்ல

    இளவரசி சூப்பரு
    டிக்கு டக்கரு
    டொக்ஸ் டப்பா...

    ReplyDelete
  38. 1) +2 படித்துக் கொண்டிருந்தேன், மற்ற புத்தகங்களைத் தவிர்த்து பாடபுத்தகங்களே கதி என்றிருந்த இரு வருடங்கள். பத்தாம் வகுப்பு வரை தேர்வுக்கு முந்தைய நாளில்கூட கதைபுத்தகம் வாசித்துக் கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது.

    2,3,4) அது வந்த காலங்களில் நான் காமிக்ஸ்க்கு அறிமுகமாகி இருந்தேனா என்றே தெரியவில்லை. 90 களின் ஆரம்பத்தில்தான் ராணி காமிக்ஸ் வாசிக்கவே ஆரம்பித்தது. லயன் முத்துவெல்லாம் இங்கே கிடைத்ததாக ஞாபகம் இல்லை.

    ReplyDelete
  39. மஞ்சள் காமாலை லீவ். அண்ணா பள்ளிக்கு செல்லும் முன்பு பழி வாங்கும் பாவை மற்றும் சூப்பர் circus இதழை தந்துவிட்டு சென்றான். முதல் முறை, புதிய புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு. இல்லையேல் ரெண்டாவது தான் படிக்க கிடைக்கும். பழி வாங்கும் பாவை புத்தகத்தின் பேப்பர் தரம் இன்னும் நினைவில் உள்ளது. வெள்ளை வெளேர் என்று. Super circus வாழ்க்கையில் நிலைதிட்ட இத்தஸ்.

    ReplyDelete
    Replies
    1. Also the super circus cover !! Awesome

      Delete
    2. ஆயுசுக்கும் மறக்க இயலா இதழ்களின் லிஸ்ட்டில் சூப்பர் சர்க்கஸுக்கு உச்ச இடமுண்டு சார் !

      Delete
  40. 5) அனுப்பி விடுகிறேன் சார்!

    6) மூன்றையும் முடித்து விட்டேன். இரண்டுக்கு விமர்சனமும் எழுதியாகி விட்டது. மாதத்தின் மீதி நாட்களுக்கு சென்ற வருடத்தில் வாசிக்காமல் விட்டுப்போன புத்தகங்களை எடுத்து வைத்துள்ளேன்...

    ReplyDelete
  41. 2."சதிவலை" இதழினை ஒரிஜினலாக வாசித்தவரா நீங்கள் ?
    YES


    3."புரட்சித்தலைவன் ஆர்ச்சி"யை அப்போதோ - இப்போதோ வாசித்ததுண்டா ?

    APPOTHEY vasithu vitten

    4."கறுப்புப் பாதிரி மர்மம்" புக்கின் நாயகர் யாரென்று சொல்லுங்களேன் ?
    Nabakam illai sir

    5.டின்டின் கூப்பனை அனுப்பியாச்சுங்களா ? If not - இன்றே, இப்போதே ப்ளீஸ் ?
    I sent yesterday sir

    6.பிப்ரவரியின் மூன்றில் எத்தனை முடித்திருக்கிறீர்கள் ? பூஜ்யம் / ஒன்னு / ரண்டு / மூணு ?

    Completed all 3

    CHENNAI COMIC CON-ல் சந்திக்க முயன்றால் சூப்பராக இருக்கும் ; please give it a shot people !

    Sorry sir. After calculating all the expenses with a family trip I dropped the idea.

    ReplyDelete
    Replies
    1. Ha ha - same here - even for a local I decided against it - 3600 tickets for 4 and transport and dinner? Forget Comic Con Chennai !!!

      Delete
    2. In addition to that travel expenses and two days stay costs too much for nowadays.

      Delete
    3. 37000 பேர் வருகையாம் - போன வாரம் முடிந்திருக்கும் ஹைதராபாத் காமிக்-கானில் !! ஆயிரம்-ரெண்டாயிரம் என்ற நுழைவுக் கட்டணங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் 2K கிட்ஸ் போட்டுத் தாக்கி வருவதால் தான், இவர்கள் போகுமிடமெல்லாம் கல்லா கட்டி வருகிறார்கள் !

      பார்க்கணும் - நம்ம சிங்காரச் சென்னை எவ்விதம் react செய்கிறதென்று !!

      Delete
    4. Okay sir. Nowadays cost of living becomes more than what we are earning.😞

      Delete
    5. அதெல்லாம் நமக்குத் தான் போலும் சார்.... Mercedes Benz கார்களின் விற்பனை அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டே உள்ளது ! குடும்பத்தோடு அயல்நாடுகளில் விடுமுறைகளைக் கழிக்கும் பாங்கு கூடியுள்ளது ! போத்தீஸில் அலைமோதும் கூட்டங்கள் தான் குறைந்திடவில்லை என்றால் ஏர்போர்ட்டிலும் அதே கதை தான் ! நாம தான் பிழைக்கத் தெரியாமல் பிழைத்துக் கொண்டிருக்கிறோம் போலும் சார் ! ஒரு பக்கம் வளம்கொழித்துக் கொண்டே தான் உள்ளது !

      Delete
    6. அது ஒருவகையான வsளம்
      தான் sir.. மறுக்கவில்லை... அதைவிட அரை நூற்றாண்டு காலம் ஒரு பதிப்பகம், தொடர்ந்து உலகின் அட்டகாசமான ஓவியர்களையும், கதைஆசிரியர்களையும் தமிழில் அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளது, இன்றைய 5g காலத்திலும் தொடர்ந்து தாக்குப்பிடிப்பதோடு.. மிக குறைந்த அளவிலாவது வளர்ந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது... பிரான்ஸ் அரசு அன்போடு அழைக்கிறது.. முக்கியமாய்.. குறைந்த எண்ணிக்கை என்றாலும்,
      உங்கள் வாசக நண்பர்கள்..❤️❤️...அது பணத்தால் வாங்க முடியாத விஷயம் sir... எல்லோருக்கும் கிடைக்காது... 👍🙏
      வெறும் புகழ்ச்சி இல்லீங்க sir.. நீங்கள் ஒரு சாதனையாளர்... வாழ்த்துக்கள் sir.. ❤️👍🙏..

      Delete
    7. Agreed sir!

      // நாம தான் பிழைக்கத் தெரியாமல் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்
      போலும் சார் //

      True sir!

      Delete
  42. 1 .உங்களது பதினாறரையாம் வயதில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் guys ? என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?

    கோவையில் +2 படித்து கொண்டு இருந்தேன். சரியாக படிக்க வராமல் திணறி கொண்டு இருந்த நாட்கள்.

    2."சதிவலை" இதழினை ஒரிஜினலாக வாசித்தவரா நீங்கள் ?

    ஜான் மாஸ்டர் பாராசூட்டில் கப்பலை நோக்கி குதிக்கும் புத்தகம் தானே. அது தான் என்றால், நான் ஒரிஜினலாக வாசித்தவன் நான். அது இப்பொழுதும் பைண்ட் பண்ணி வைத்து இருக்கிறேன்.

    3."புரட்சித்தலைவன் ஆர்ச்சி"யை அப்போதோ - இப்போதோ வாசித்ததுண்டா ?

    அப்போதே வாங்கியவுடன் வாசித்து விட்டேன்

    4."கறுப்புப் பாதிரி மர்மம்" புக்கின் நாயகர் யாரென்று சொல்லுங்களேன் ?

    தெரியாது. இதை என் மாமா வாங்க மிஸ் பண்ணிட்டாரோ, இல்லை பொருளாதார சிக்கலோ?

    5.டின்டின் கூப்பனை அனுப்பியாச்சுங்களா ? If not - இன்றே, இப்போதே ப்ளீஸ் ?

    அனுப்பியாச்சு ஆசிரியரே

    6.பிப்ரவரியின் மூன்றில் எத்தனை முடித்திருக்கிறீர்கள் ? பூஜ்யம் / ஒன்னு / ரண்டு / மூணு ?

    பூஜ்யம். இன்று சாயங்காலம் என் வீட்டிற்கு அணைத்து காமிக்ஸ்சும் வந்து சேர்ந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. பாராசூட்டில் கீழிருக்கும் கப்பல் நோக்கிக் குதிக்கும் அந்த ராப்பரே தான் "சதிவலை" நண்பரே ; சுற்றிலும் சிகப்பு பார்டரில் !

      Delete
  43. 2,3,4,5 கேள்விக்கான பதில் : இல்லை. காரணம் நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்ததே 1995 இல் தான்.
    1 வது கேள்விக்கான விடை : நான் 16 வயது இருக்கும்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
    பிப்ரவரி மாத புத்தகங்களை கண்ணில் பார்த்ததோடு சரி இனிமேல் தான் படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாரமொன்று என படிக்க முயற்சி பண்ணுங்களேன் சார் ?!

      Delete
  44. பதினாறாம் வயதில் கோவையில் இருப்பிடம் ,பள்ளி படிப்பு சார்...அப்பொழுதே பள்ளிக்கூட பையில்
    நமது காமிக்ஸ் இதழ்கள் இருக்கும் ..பள்ளியிலும் காமிக்ஸ் படிக்கவும் வாசிக்கும் நண்பர்களிடையே இதழ்களை மாற்றி கொள்ளவும் செய்வோம்..

    ( அந்த 16 வயதில் வசித்த இடங்களிலும் ,படித்த பள்ளிக்கூட இடங்களையும் இருபது வருடம் கழித்து போனவாரம் தான் ஒரு நாள் முழுக்க சென்று சுற்றி வந்தேன் சார்..)

    ReplyDelete
  45. சதி வலை ,புரட்சி தலைவன் ஆர்ச்சி வந்த பொழுதே படித்தது இல்லை சார்...ஆனால் பின்னர் படித்தது உண்டு ...

    ReplyDelete
  46. டின்டின் கூப்பன் அனுப்பியாயிற்று சார்..


    பிப்ரவரி இதழ்கள் அனைத்தும் படித்தாயிற்று சார்..அடுத்த மாத இதழ்களுக்கு காத்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. நேபாளத்துக்கு பேக் பண்ணியாச்சா தலீவரே ?

      Delete
    2. தலீவருக்கு ஒரு ஒன்வே டிக்கெட் பார்சேல்ல்ல்...

      Delete
    3. ஐ...திண்ணை காலி...இனி ஜாலி...!

      Delete
    4. அச்சோச்சோ அங்கு ஒரு பதுங்கு குழி உருவாக்கி விடுவார் தலீவர்

      Delete
    5. புதிய வானம்..புதிய பூமி எனும் பாடலையும் டவுன்லோட் செய்துவிட்டேன் சார்..:-)

      Delete
  47. தங்களின் நையாண்டி நடையில் சிறப்பான பின்னோக்கி பதிவு அருமைங் சார்...

    பழங்கதை எத்தனை கேட்டாலும் இன்னும் கேட்க ஆசைதான்...

    தாத்தாவின் உதவி காலத்தின் மிகப்பெரிய கொடை...

    ReplyDelete
    Replies
    1. பொழுது போகாத நாட்களில் போடும் ரிவர்ஸ் கியர்கள் சார் ! நமது பால்யங்களது (காமிக்ஸ்) நினைவுகளோடு பிணைந்திருப்பதால், வாசிப்பில் சுவாரஸ்யம் கூடுகிறது போலும் !

      Delete
    2. இந்த ரிவர்ஸ் கியரை தான் தொகுப்பா போடுங்கன்னு காலம்காலமா போராட்ட போராட்டமா பண்ணி சலிச்சு போயிட்டோம் சார்..கேக்க மாட்டேங்கிறீங்களே..:-(

      Delete
    3. ஆமாங்க தலீவரே
      போராட்டத்தை இன்னும் வலுவாக ஆக்கனும்

      Delete
  48. அட்டாஹாசம்.. செம interesting... உங்க life sir... எல்லோருடைய வாழ்க்கையும் எழுதும் விதத்தில் super நாவல் ஆகும் போல சகோ...
    ❤️.. பள்ளி சேரும் போதே எனக்கு 7 வயது.10 ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்.. கடும் வறுமை... அதோடு படிப்பு கோவிந்தா.. 😄.. கொஞ்சமும் வருத்தம் இல்லை இப்போது...
    முத்து காமிக்ஸ் ல்... ஒரு ஆல்பத்தில் மட்டுமே,மூன்று இடங்களில்
    என் புகைப்படம் வந்திருந்தது..
    அது போதும் எனக்கு...என் வாழ்க்கை திருப்தியாகவும், மகிழ்வாகவும் முடிந்தே விட்டது.. இப்ப நான் வாழ்வது "போனஸ்"
    வாழ்க்கை..❤️..yes, எனக்கும், முத்து, லயன் காமிக்ஸ் க்கும்
    உள்ளது ஒரு உணர்வுப்பூர்வமான உறவு.. என்றாவது முகநூலில் எழுதுவேன்... நன்றி sir.. ❤️👍🙏..
    (

    ReplyDelete
    Replies
    1. பாரதி நந்தீஸ்வரன் ! மாதம்தோறும் போஸ்ட்கார்டில் உங்களை சந்தித்துக் கொண்டிருந்த நினைவுகள் இன்னமும் பசுமை சார் !

      Delete
    2. உணர்வுப்பூர்வமான எழுத்துக்கள் நந்தீஸ் ஜி..

      Delete
    3. எடிட்டர் sir.. நீங்கள் Robert ludlam பற்றி.. X111 பற்றி 30,35 வருடம் முன்பு எனக்கு
      எழுதியனுப்பிய கடிதம் இன்னும் என்னிடம் உள்ளது... அது நிச்சயம் பிரோ வில் உள்ள 600 காமிக்ஸ் ஆல்பம் ஒன்றில் உள்ளது.. இனிய நினைவுகள் sir..❤️. Erode
      விஜய்.. நன்றி பா... ❤️..

      Delete
  49. நானும் லிஸ்டில் உண்டு. இரட்டை வேட்டையர்பாணியில் இரட்டையர்ஹீரோ.அமர்க்களமான நாட்கள் அவை. அன்று பாக்கெட்மணியில் ஒரு காமிக்ஸிற்கு தேற்றுவதே கடினம்.கனவெல்லாம் காமிக்ஸ் என்று இருந்த நாட்கள் அவை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு ரூபாய்க்கு மினி-லயன் & இரண்டு ரூபாய்க்கு ஜூனியர் லயன் !!

      லக்கி லூக் கலரில் ; சிக் பில் கலரில்...phew !! அதெல்லாம் ஒரு கனாக்காலமே தான் நண்பரே !

      Delete
    2. Sir மினிலயன் 1 ரூ. ஜூனியர் லயன் ரூ1.25 கலரில்.திகில்,லயன் ரூ2.00 இதற்காக சினிமா வேண்டாம் என்று டிக்கெட் தொகைக்கு காமிக்ஸ் வாங்குவேன்.

      Delete
    3. "ஆங்கிலத்தில் சுமார் 30 ரூபாய்க்கு விற்கும் இந்தக் கதை தமிழில் முழு வண்ணத்தில் 2 ருபாய் விலையில் என்பது எனக்கே ஆச்சர்யமாய்தான் உள்ளது" என்று நீங்கள் சூப்பர் சர்க்கஸ் Intro-வில் எழுதியது - has stayed like a photograph sir ! என்னிடம் அந்தப் புத்தகப் பிரதி இல்லை. இவ்வரிகள் நினைவுப் பேழையிலிருந்து ...!
      Such was the impact that book created !

      Delete
    4. I also vaguely remember 1.25 vs 2.00 sir - may be different albums different rates

      Delete
  50. 1987 : பிளஸ் 2 படித்துக் கொண்டே, காதலையும் கற்றுக்கொண்டே, காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளில் தாத்தா வீட்டுக்குச் சென்று முத்து காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ் இவைகளில் மூழ்கி முத்து எடுத்துக்கொண்டேயி ருந்த காலம் அது .....1980 லேயே விடுமுறைகளில் தாத்தா வீட்டுக்கு காமிக்ஸ் படிப்பதற்காகவே போடிநாயக்கனூர் சென்று விடுவேன்.
    பதினேழு வயதுக்கு மேல் அப்பாவின் ஹோல் சேல் அரிசி கடை கொள்முதலுக்காக நான் தேனி, திண்டுக்கல், மதுரை என்று சுற்றி வரும் போது அவர் செலவுக்கு கொடுத்த பணத்தில், சாப்பிட கொடுத்த காசை மிச்சம் செய்து அப்போது வெளிவரத் துவங்கி இருந்த லயன் காமிக்ஸ், மினி
    லையன் ஆகியவற்றை வாங்கி என் பசியை ஆற்றிக் கொள்வேன். அப்பா காமிக்ஸ் வாங்க பணம் கொடுக்க மாட்டார் என்பதால் தான் இந்த பட்டினி ஏற்பாடு.

    சதிவலை இதழை வாசித்ததாக நினைவில்லை.

    புரட்சித்தலைவனை அப்போதே வாசித்து விட்டேன்

    கருப்பு பாதிரியும் வாசித்தாயிற்று. கலெக்க்ஷனிலும் இருக்கிறது

    கூப்பன் அனுப்பியாயிற்று சார்.. விழுந்தா நல்லது விழலைன்னா ரொம்ப நல்லது...

    மாடஸ்டி மட்டும் பாக்கி... மத்த ரெண்டும் வைல்ட் வெஸ்ட்....விடுவேனா என்ன?

    ReplyDelete
    Replies
    1. //விழுந்தா நல்லது விழலைன்னா ரொம்ப நல்லது//

      வாட் இஸ் திஸ் சார் ? சங்கம் வளர்த்த மருதையின் புகழை நேபாளம் வரைப் பரப்ப வாணாமா ?

      Delete
  51. 1.சேலத்தில் தான்....என்னுடைய 16அரை வயசுனா 1992... அப்போது SSLC தேர்வு முடித்து +1சேர்ந்து இருப்பேன்.....

    2.நஹி... (1997/98களில் ஓசியில வாசித்தது)

    3.பிற்பாடு வாசித்து உள்ளேன்

    4.கறுப்பு வெள்ளை டிவியில இந்தியா மேட்சுகள் பார்த்துட்டு இருந்த காலம்...இதில் பாதிரியோட மர்மத்துக்கு எங்கே போக நானு..🤔!

    5.டின் டின் கூப்பன் அனுப்பியாச்சுங்கோ.

    6.டெட்வுட் ஆச்சுங்கோ, மாடஸ்தி கூட நியூசிலாந்தில்.. அடுத்த வாரம் தலகூட!!

    காமிக்கான் வர்ற மாதிரியா டிக்கெட் விலை இருக்கு...!! போட்டோ போடுங்க பார்த்துகிறேன் சார்!

    நேபாள் டிக்கெட் கிடைக்கும் பார்டிக்கு அட்வான்ஸ் கன்கிராட்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பார்ட்டியே நீங்க தான்னா இன்னா பண்ணுவீங்க சார் ? திங்கிங் !

      Delete

  52. 1 .At the age of 16.5, i had been trying my hands on typewriting and foxpro(computer)

    2.no sir

    3.no sir

    4.no idea sir

    5.yes sir

    6.all 3 sir

    CHENNAI COMIC CON 18th of all goes well

    ReplyDelete
  53. 1.1994ம் வருஷம் லயன் centuary ஸ்பெசல் (sslc ரிசல்டுமே) எதிர்பார்த்து இருந்த வேளையில் எனது பால்ய நண்பன் ஜேசன் ஏப்ரல் 13ன்தேதி மாதம் தற்கொலை செய்து மாண்டு போனான். முந்தைய 2 நாள் முன்பு அவனை தெருவில் சந்தித்து அவசர அவசரமாக பிரிந்து வந்தேன். இந்த சம்பவம் எனது வாழ்வின் போக்கையே திருப்பி போட்டது...
    காமிக்சிற்கு, படிப்பிற்கு முழுக்கு போட வைத்து.

    ReplyDelete
    Replies
    1. 97ம் வருடம் துவக்கம் வெளிவந்த கள்ளம் இல்லா ஒரு கோச்சு வண்டியின் கதை மூலம் மீண்டும் காமிக்ஸ் எனும் வெள்ளத்தினில் சங்கமித்தேன். 🙏

      Delete
    2. 2. முதலில் 88ல் மாஸ்கோவில் மாஸ்டர் படித்திருந்தாலும் அரிதான சதிவலை தண்ணி காட்டியது... ஒருவழியாக 1990 வருஷம் சக்தி என்னும் எங்கள் ஒரு காமிக்ஸ் புலியிடம் 3 வேறு அரிய காமிக்ஸ் (டிராகன் நகரம் உட்பட) பரிமாற்றம் செய்து சொந்தமாக்கினேன்.

      Delete
    3. 3.1987 வாக்கில் படம் பார்த்த முதல் 4 நான்கு பாக்கெட் சைஸ் காமிக்ஸ்களில் புரட்சி தலைவன் ஆர்ச்சியும் ஒன்று.

      Delete
    4. 4.புயல் வேக இரட்டையர்
      5. Done sir
      6. About to complete மாடஸ்டி

      Delete
  54. 1. Was studying +2

    2. Yes sir. But all old books are lost. Eagerly waiting to see John Master again

    3.Not read sir

    4.Not read sir

    5.yes sir

    6.All the three books sir.

    ReplyDelete
  55. ***** தென்றல் வந்து என்னைக் கொல்லும் *****

    படிக்க ஆரம்பிக்கும்போது இப்படியொரு வாசிப்பு அனுபவம் கிடைக்கும்னு சத்தியமா நினைக்கலை நான்!
    அடோப் வால்ஸ் ஊர் மக்களோடு சேர்ந்து டெட்வுட் டிக்கும், அவனுடைய நண்பன் ஜாக்கும் அந்தப் பகுதி செவ்விந்தியர்களுக்கு எதிராக நிகழ்த்திடும் ஜீவமரணப் போராட்டம் ஒரு திக்திக்+ரகளையான அனுபவத்தைக் கொடுத்தது என்றால், இறுதியில் ஜாக்கின் வீரமும், தியாகமும் மனதை உருக்கிடும் நிகழ்வுகளாய் அமைந்து பிரம்மிக்கச் செய்தன!

    கதைக்களமும், சித்திரங்களும், சூழ்நிலைக்குக் கச்சிதமாகப் பொருந்திடும் ரகளையான வசனங்களும் கரம் கோர்த்துப் பயணித்திருக்க... அந்தப் பயணத்தில் பங்கெடுத்துக் கொண்ட எனக்கும் இதன் தாக்கம் இன்னும் சிலநாட்களுக்காவது நீடித்திருக்கும் என்றே நம்புகிறேன்!

    10/10

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக வழியிலே ஒரு மில்லீ புள்ளையைத் தேட ஆரம்பிச்சுடாதீங்க !

      Delete
    2. சார்.. சமீப காலமா நான் டெட்வுட் டிக்கின் கலருக்கு மாறிட்டேன்றதை நீங்க கவனிச்சிருப்பீங்க... துளியூண்டு தொப்பையையும் எக்கியோ முக்கியோ அப்படியே உள்வாங்கிட்டேன்னா மில்லீயுடன் குதிரையில் பயணிக்கத் தயாராகிடுவேன்! ஹிஹி!

      Delete
    3. இந்த புழு கிராஸ்...பிராணி வதைத் தடுப்பு....அப்டின்னுலாம் கேள்விப்பட்டதுண்டுங்களா ?

      Delete
    4. அப்புறம் நம்ம ஊரிலே "துளியூண்டே" இம்புட்டுன்னா ......

      Delete
  56. This month rating:
    1. Dead wood
    2. Tex
    3. Ilavarasi

    ReplyDelete
  57. சார்.. V-காமிக்ஸ் எடிட்டர்ட்ட சொல்லி ஒரு 'டூர்ஸ் & டிராவல்ஸ் கம்பேனி' ஆரம்பிச்சுட்டீங்கன்னா மாசாமாசம் குலுக்கல்முறையில ஒவ்வொரு நாட்டுக்கும் விசிட் பண்ணி, அங்கே இருக்கும் பழைய புத்தகக்கடைகளில் கொஞ்சம்போல காமிக்ஸ் கலெக்ட் பண்ணிக்கிடுவோம்..

    ReplyDelete
    Replies
    1. இளவரசி உபயத்தில் இந்த மாச V காமிக்ஸ் தெறிக்க விட்டிருக்கும் குஷியில் உள்ள மனுஷன் "இளவரசி டூர்ஸ்" அப்டின்னு நம்ம மாடஸ்டியின் லோகோவோட போட்டுப்புட்டா தொழிலதிபர்களும், டாக்டர்களும் ரவுண்டு கட்டிப்புடுவாங்களே !!

      அரசாங்க ஊழியர்கள்லாம் மேலிடத்திலிருந்து NOC வாங்கிட்டு வர்றதுக்குள்ளாற "கார்வின் டூர்ஸ்" லே தான் இடமிருக்கும் !

      Delete


    2. தலீவரும், சிஷ்யப்பிள்ளையும் தொழில் முனைவோர் கோட்டாவிலே இயவரசி டூர்ஸிலே கிளம்பியிருப்பாங்க !

      Delete
    3. 'இளவரசி டூர்ஸ்', 'கார்வின் டூர்ஸ்' - ரகளை பண்றீங்க சார்.. 😂😂😂😂😂😂

      Delete
  58. சில கடும் பணி சூழல்களால் இந்த மாத இதழ்களை விமர்சனம் பதிவிடமுடியா காரணத்தால் ...


    செயலரின் மேல்கண்ட டெட்வுட் சாகஸ் விமர்சனத்தை மீண்டும் வாசித்து கொள்ள வேண்டுகிறேன்..

    எனது பார்வையில் இந்த முறை முதல் வரிசையில் டெட்வுட் இரண்டாம் இடம் டெக்ஸ் மூன்றாம் இடம் இளவரசி இது ரசனையின் படியே தவிர மூன்று இதழ்களுமே அட்டைப்படம் ,சித்திரத்தரம் ,மொழி ஆக்கம் ,கதை என அனைத்துமே போராட்டக் ஐ அள்ளுகிறது..

    ReplyDelete
    Replies
    1. ///சில கடும் பணி சூழல்களால் இந்த மாத இதழ்களை விமர்சனம் பதிவிடமுடியா காரணத்தால் ...///

      ஆபீஸுக்கு லீவு போட்ருக்கீங்களா தலீவரே?!! ;)

      Delete
  59. காமிக்ஸில் தாத்தாக்கள் கலக்குனா அந்த காமிக்ஸ் வளர்ச்சிக்கு ஆசிரியரின் தாத்தா கலக்கியிருக்காரு

    ReplyDelete
  60. நானும் என்னுடைய 16ம் வயதில் முதன் முதலில் கரூரில்அரிசி ஆலையில் வேலைக்கு சேர்ந்தேன். செந்தில் சத்யா நீங்களும் ஆரம்பம் அரிசி ஆலைதானா.

    ReplyDelete
  61. சார்.. உங்களது முதல் கேள்வி சுயசரிதை எழுதும் கட்டாயத்திற்கு என்னையும் ஆளாக்குகிறதே..
    16 1/2 வயதில் - திருநெல்வேலி-பாளையங்கோட்டை வாசம்..
    10 வதில் நல்ல மதிப்பெண் இருந்தும் I.T.l-யில் Fitter ஆக சேர்ந்தேன். ( எனக்கு இந்த இங்கிலிபீஸு பிடிக்காது..)
    பாளை.யிலிருந்து - பே
    ட்டை I.T.l. க்கு பஸ் பயணம்.
    எனவே, கொஞ்சம் காசு நடமாடும்..
    லயன்+முத்துக் காமிக்ஸ்,
    மாலைமதி, ராணிமுத்துவில்
    குறிப்பிட்ட எழுத்தாளர்களின் கதைகளை வாங்கி படிக்க ஆரம்பித்துவிட்டே ன்..
    நான் கொஞ்சம் முசுடு (முரடு)..
    எனவே, வீட்டில் அனைவரும் பாடப்புத்தகத்தைப் படிக்கும் போது (நாங்கள் 5 பசங்கள்-நான் இரண்டாவது) நான் மட்டும் காமிக்ஸ்-ம்-நாவல்களுமாக ஜாலியாக படித்து ரசிப்பேன்..
    திருநெல்வேலி வந்ததும்தான்
    அம்மா- இரும்பு பீரோ வாங்கினார்கள்-
    எனவே - நான் ஒரு மர பீரோவை ஆக்கிரமித்துக்கொண்டேன்..
    (சொன்னேனே..நான் ஒரு முரடு..)
    2. சதி வலை..
    ஐயோ..அதெல்லாம் என்ன பந்தாவான புத்தகம்..
    (இரும்பு மனிதனையும்..
    சதிவலை-இதழையும் ஒளித்துை த்துத்தான் படித்து ரசித்தேன்.
    அண்ணன் தம்பிகள் பொறாமையில் வெந்துவிடுவார்களே என்று..
    3. புரட்டித் தலைவன் ஆர்ச்சி..
    அப்போதைய காலகட்டத்தில் ஆர்ச்சி ரொம்பவே ஃப்ரண்டாச்சே..
    ஒவ்வொரு கதையையும் எத்தனை முறை படிப்பது என்ற கணக்கே கிடையாது.. (இப்ப...ஸாரி ப்ளீஸ்)..
    4. கருப்பு பாதிரி மர்மம்_சிறுவர்கள் இணைந்து கலக்கிய 1ரூ - இதழ் என்று நினைக்கிறேன்..(பத்திரமாக இருக்கிறது..தேடி எடுக்க வேண்டும்.)
    5. பிப்பிரவரி - இதழ்கள் இரண்டு முடிச்சாச்சு..(நெல்லை புத்தகத் திருவிழாவில் கொஞ்சம் விடுபட்ட காமிக்ஸ் பர்சேஸ்,.)
    எனவே - அபிமான மாடஸ்டியை முடித்து, Tex-யின் அந்த ஆர்ட் ஓர்க்-யில் மெய்மறந்து ..
    (கதையில் அல்ல..இதெல்லாம் நாங்க பூத வேட்டை-யிலே பார்த்தாச்சு..)
    CID ராபினின் - கொலை நோக்குப் பார்வை.
    Mr.No -
    லக்கிலூக் - இரண்டு-என்று
    தினம் ஒரு காமிக்ஸ் என்று செல்வதால் - டிக்கை எடுப்பதா..
    வேண்டாமா என்று செல்கிறது..

    ReplyDelete
    Replies
    1. உள்ளதை உள்ளபடி மனம்திறந்து எழுதியிருக்கிறீர்கள் இளங்கோ ஜி! (குறிப்பாய் 'நான் ஒரு முசுடு' ஹிஹி)

      Delete
  62. ///
    1 .உங்களது பதினாறரையாம் வயதில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் guys ? என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?
    ///

    அப்போ +1 படிச்சுக்கிட்டிருந்தேன் சார். வீட்டில் யாரிடமும் பேசமாட்டேன். சதாகாலமும் படிப்பு.. படிப்புத்தான்! 'பையன் நைட்டும் பகலுமா படிச்சுத் தள்றான் போங்க'ன்னு எங்கப்பா பக்கத்துவீட்டுக்காரங்ககிட்ட பெருமையா பேசுவாரு! ஆனா படிக்கிற நேரத்துல பாதிநேரம் - பாடப் புத்தகத்துக்குள்ளே காமிக்ஸ் வச்சுப் படிச்சுக்கிட்டிருந்தேன்ற சமாச்சாரம்லாம் அப்போ அவருக்குத் தெரியாது. இப்போவரைக்கும் கூட தெரியாது! அப்படியே மெயின்ட்டெய்ன் பண்ணி வாழ்க்கையை ஓட்டிட வேண்டியதுதான் ஹிஹி!

    ReplyDelete
  63. லயன் ஆரம்பிக்கும்போது ஒருபுறம் ராணி காமிக்ஸ்,மற்றொரு புறம் ஜான் கதைகளாக வெளிவந்த மேத்தா காமிக்‌ஸ்,கலரில் தனி பாதையில்( மொழி மட்டும் சிறிது பிரச்னை),ஆனால் இவர்களுக்கு மத்தியில் இரும்புக்கை மாயாவி,ஜானி நீரோ,லாரன்ஸ் டேவிட் என்ற என்றும் மறக்காத முத்து காமிக்ஸ்,லயனின் வருகை எதிர்பார்க்க வைத்தது,ஆனால் ஏதோ மிஸ் ஆனது. தலைவன் ஸ்பைடர்தான் இரும்பு கை மாயாவியை மறக்க அடித்த ஓரே ஹீரோ. ஸ்பைடர் ரீலிஸ் ஒவ்வொன்றும் சூப்பர் ஸ்டாரின் FdFs போல காமிக்ஸ் ரசிகர்களை கொண்டாட வைத்தது.. இரும்பு மனிதன் ஆர்ச்சி,அதன்பின் எவர் கீரின் டெக்ஸ்வில்லர். ஆனால் இவர்கள் எல்லோரையும் விட லயன் காலரை தூக்க வேண்டியது.slow burn action தமிழில் ஜெயிக்கும் என நிருபித்து தமிழ் காமிக்ஸ் ரசனையில் ஒரு பாய்ச்சல. ஏற்படுத்திய XIII.இது தவிர ஹாட்லைனும்,சிங்கத்தின் சிறுவயதில்,ஹீரோக்கள் அறிமுகம் செய்த தொடர் என உங்கள் எழுத்துக்கும் நாங்கள் இரசிகர்கள.

    ReplyDelete
  64. நேத்துத் தான் இளம் டைகரின் 4 பாக சாகசத்தை படிச்சு முடிச்சேன்.

    *அட்டகாசமான ஓவியங்கள் & அருமையான கலரிங்*

    *கதையும் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பத்துடன் விறுவிறுப்பாக சென்றது*.

    அருமையான மொழிப்பெயர்ப்பு 👌🏻
    வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் ஷெரீப் ஜி. 💐👌🏻👏🏻

    இளம் டைகரின் அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளிவந்தால் நன்றாக இருக்கும். 🤷🏻‍♂️

    ReplyDelete
    Replies
    1. //இளம் டைகரின் அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வெளிவந்தால் நன்றாக இருக்கும்//

      +9

      Delete
  65. பதினாறரை வயதில் 10 ஆம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன்.

    அப்புறம் மேற் சொன்ன 2 கதைகளையும் படித்ததில்லை.

    ReplyDelete
  66. ரீபிரிண்ட் போட்டா படிக்க வசதியாக இருக்கும்

    ReplyDelete
  67. இளம் டெக்ஸின் *சிக்ஸர் ஸ்பெஷல்*

    செம்ம அட்டகாசமான டெக்ஸ் கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அட்டகாசமான டெக்ஸ் கதையைப் படித்த திருப்தி.

    கதையில் வசனங்கள் ஆங்காங்கே சும்மா தெறி.

    டெக்ஸ் எங்கே போனாலும் ஒரே அடிதடி & அதிரடி தான். இருந்தாலும் நிறைய நண்பர்களையும் & சில எதிரிகளையும் சம்பாதித்து கொள்கிறார்.

    செமினோல்களின் நிலையை கதையில் பார்க்கும் போதே ஒரு சோகம் மனதை ஊடுருவுது. நிஜத்தில் செவ்விந்தியர்கள் தங்கள் வாழ்வியலுக்காக எப்படி போராடி இருப்பார்கள் என்று நினைக்கும் போது கண் கலங்குது. 😞

    அந்த சதுப்பு நிலப் பரப்பில் கதை நகரும் விதம் அருமை.
    இது கலரில் வந்து இருந்தால் சும்மா நச்சுன்னு இருந்து இருக்கும்.

    இறுதி வரை டெக்ஸ்சை கைது செய்ய பின் தொடரும் கார்ஸ்வெல் இறுதியில் டெக்ஸை ராணுவ நீதிமன்றம் & குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தாமல் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்கும் போது நம் மனசை தொட்டு செல்கிறார்.

    ஆறு பாகங்களையும் படித்து முடிக்க 6 மணி நேரம் ஆயிற்று (ஓவியங்களையும் ரசித்ததால்) 😍😇

    ReplyDelete
  68. /// நானும் என்னுடைய 16ம் வயதில் முதன் முதலில் கரூரில்அரிசி ஆலையில் வேலைக்கு சேர்ந்தேன். செந்தில் சத்யா நீங்களும் ஆரம்பம் அரிசி ஆலைதானா.///
    same pitch ஜி.
    1982 ல் 12வது முடித்ததும் நான் முதலில் வேலைக்கு சேர்ந்ததும் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் இருந்த A.A. ரைஸ்மில்லில் தான்.

    Reply

    ReplyDelete
  69. கண்ணீருக்கு நேரமில்லை கதையிலும் டெக்ஸின் அதிரடி சும்மா தெறி.

    தன் உறவுகளை கயவர்களால் இழந்ததும் எரிமலையாய் வெடிக்கும் டெக்ஸ் அனைவரையும் நரகத்தின் விருந்தினர்களாக ஆக்குவது சும்மா தெறி மாஸ்.

    ReplyDelete
  70. இளம் டெக்ஸ் கதைகள் மனதை ரொம்பவே வருடம் செல்கிறது.

    கண்ணீருக்கு நேரமில்லை கதையில் சிறுவயதில் அந்த கிராமத்தில் நடக்கும் விருந்தும் & களேபரமும் செம்ம.

    அப்படியே பள்ளி படித்த நாட்கள் மனதில் இழையோடியது எனக்கு.

    ReplyDelete
  71. பத்மநாபன் சார் a.a.ங்கறது a.a.a. +, mmm. Groopங்களா.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  72. No sir ithu A .Arumuga nayinar rice mill.

    ReplyDelete
  73. ஒரு பண்டமாற்று படலம் - மாடஸ்டி- வில்லி சாகசம் - பெப்ரவரி 2024
    என் நண்பன் எனக்கு சுமையாக மாட்டான் டாக்டர்!

    வாவ்!

    இப்படியானதொரு உணர்வுப்பூர்வமான வசனங்களே காமிக்ஸ் படிக்கும் என் ஆவலை ஜீவனுடன் வைத்துள்ளன...

    ஆள் மாறாட்டப் படலம் பண்டமாற்றுப் படலமாகி, மேற்கண்ட முத்திரைப் பதிக்கும் வரிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

    மாடஸ்டி கார்வின் கதைகளில், கழுகு மலைக்கோட்டை, திகில் நகரம் டோக்கியோ, ஆவியின் பாதையில் போன்ற அசாதரணக் கதைகளில் இன்னமும் ஒன்று ப.மா. ப-வின் வடிவில் சேர்ந்துள்ளது என்பேன்.

    வில்லியின் சோலோ அதிரடியுடன் கதையின் ஆரம்பம் பட்டாசாக தெறிக்க, கராச்சியில் கயவர்களை அடையாளம் கண்டு ஓட விடுகிறார் மாடஸ்டி.

    வில்லன்கள் குழுவை எதிர் கொள்ள வில்லியும், மாடஸ்டியும் சுவாரசியமான திட்டத்தை போடும் போதே ஆட்டம் சூடு பிடிக்கிறது.

    அவர்களுடைய வலையில், அதே வகையில் வில்லன்களும் மாட்டுவது சற்றே செயற்கையாக தோன்றுகிறது. ஏனென்றால், மோதுவது மாடஸ்டியுடனும், வில்லியுடனும் தான் என்பது என்பது சேலம் குழுவினருக்கு தெரியும்.

    ஆனால், அதற்கும் டெஸ்ட் வைக்கிறார் ஒரிஜினல் வில்லன் ஹெய்ன். அதை முறியடிக்கிறார் ஜெரால்ட்!

    அடடே, இந்த கதையில் எல்லோருமே அதிரடி காட்டுகிறார்கள் என்று சொல்ல வைத்துள்ளது இந்த கதை...

    எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது என்னுடைய விமர்சனத்தின் முதல் வரி! அருமையான மொழிபெயர்ப்பு விருந்து இந்த ப.மா.பா!

    ReplyDelete
  74. தங்களது சிலாகிப்புக்கு (மாடஸ்டி கதை..) நன்றி..

    ReplyDelete
  75. நான் காமிக்ஸ் வாங்கி படித்த போது வீட்டில் அடி பின்னி விடுவார்கள். பாக்கெட் மணியாக எனக்கு கொடுக்கும் ஒரு ரூபாய் தான் மாத முடிவில் இருபது ரூபாயாக இருக்கும். அதில் லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ்வாங்கியது போக மீதம் அந்த மாதம் முழுவதும் நண்பர்களுக்காக செலவிடப்படும்.1995 இல் பத்து ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையாக இருந்தது. அன்று பாக்கெட் மணியாக சிறிது சிறிதாக சேர்த்து படித்த போது வந்த ஒரு திருப்தி இன்று 6000 ரூபாய் 7000 ரூபாய் என்று வருடத்தந்தா கட்டி வாங்கி படிக்கும்போது கூட இல்லை. மாதம் ஒரு புத்தகமாக படித்த போதும் பல கதைகள் முழுமையாக இன்று மனதில் நிலவாடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இன்று என் அளவில் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. Phwwwww..... அந்த நாட்கள் மீண்டும் வராதா என்கின்ற ஏக்கம் தான் மேலோங்குகிறது.

    ReplyDelete
  76. // எக்கட போயி அத்தனை வாசகர்களும் ? இன்றைக்கு அவர்களில் பத்தில் ஒரு பங்கு மிஞ்சினாலுமே இன்னா சூப்பராய் இருக்கும் ?? //

    இன்று காலை... காணாமல் போன கிளாசிக் ரசிகர் வாசகர்களில் ஒருவரான, நீண்ட வருட நண்பரும் கிளாசிக் காமிக்ஸ் பிரியருமான எனது நண்பரை இரண்டு வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன்.

    எடிட்டர் சாரின் இந்த சந்தேகத்தை குறித்து நண்பரிடம் சில நிமிடங்கள் பேச முடிந்தது.

    நண்பரின் கருத்துக்களை அறிய முடிந்தது. நாங்கள் இருவரும் பேசிக்கொண்ட விஷயங்களை பிளாக் பதிவிடவும் புறப்படும் முன்னர் நண்பரிடம் அனுமதி பெற்றுக்கொண்டேன். வரும் வாரங்களில் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  77. பத்மநாபன் சார் . நன்றிங்க சார் நாகராஜ் சேதுபதி சாரும் நம்ம லைன் தான் போல. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  78. 1984-85 during this period in our home we have access only Gokulam, Ambulimama. Comics are restricted in our home. With the help of my best friend Mr.John Gnana Izhavazhagan I read comics. My first read comics was spider's Bathala porattam, Pazhi vangum bommai. I have read sathi valai . Later I read our comics in lending library. My first bought comics sathurnga veriyan

    ReplyDelete
  79. கலாஷ்னிகோவ் காதல் முடிச்சாச்சி,வண்ணமயமான ஆக்‌ஷன் பிளாக்,என்னதான் துடிப்பான ஏஜெண்டாய் இருப்பினும்,பாசம்னு வந்தா பொங்கி எழுவது இயல்புதானே,சகோதரியின் முடிவில் சிஸ்கோவின் கோபம் வெடிப்பது சரிதான்...
    பரபரப்பான இண்டர்நேஷனல் களம்...
    அடுத்த சுற்று ஆல்பம் இன்னும் கலக்கலா இருக்கும்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  80. எல்லாம் படிச்சு முடிச்சாச்சு சாரே.....

    ஜான் மாஸ்டர் ஒரிஜினல் வாசிப்பில் யானும் ஒருத்தன்.....

    படித்தது பழனியில்

    வாங்கியது வள்ளுவர் திரை அரங்கு கீழே உள்ள கடையில்....

    Hoom பழைய நினைப்பு பேராண்டி

    ReplyDelete
  81. 1 .உங்களது பதினாறரையாம் வயதில் நீங்கள் எங்கே இருந்தீர்கள் guys ? என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?

    பாம்பேயில் பாட்ஷா பாய் என்று சொல்ல ஆசை தான். ஆனால் ராணி காமிக்ஸ் 'பர்மாவில் பாட்ஷா' தேடி வாங்கி படித்த ஞாபகம்.

    2."சதிவலை" இதழினை ஒரிஜினலாக வாசித்தவரா நீங்கள் ?

    அதற்கெல்லாம் அப்போது வசதியும் இல்லை வாய்ப்பும் இல்லை, 25 பைசா பாக்கெட் மணியில்.

    3."புரட்சித்தலைவன் ஆர்ச்சி"யை அப்போதோ - இப்போதோ வாசித்ததுண்டா ?

    நண்பர்கள் கலக்ஷனில் அட்டை பார்த்ததோடு சரி... 90 களுக்கு பிறகு தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ErB உபயத்தில்.

    4."கறுப்புப் பாதிரி மர்மம்" புக்கின் நாயகர் யாரென்று சொல்லுங்களேன் ?

    சிறுவர்கள் தானே ?!

    5.டின்டின் கூப்பனை அனுப்பியாச்சுங்களா ? If not - இன்றே, இப்போதே ப்ளீஸ் ?

    நேரில் வந்தே குலுக்கல் பெட்டியில் போட்டுறேன் .

    6.பிப்ரவரியின் மூன்றில் எத்தனை முடித்திருக்கிறீர்கள் ? பூஜ்யம் / ஒன்னு / ரண்டு / மூணு ?

    பூஜ்யம்... ஆனால், ஒன்றாவது இன்று படித்திடுறேன்.

    CHENNAI COMIC CON-ல் சந்திக்க முயன்றால் சூப்பராக இருக்கும் ;

    ஆஜர் எடி சார். 🥰

    ReplyDelete
    Replies
    1. // 5.டின்டின் கூப்பனை அனுப்பியாச்சுங்களா ? If not - இன்றே, இப்போதே ப்ளீஸ் ?

      நேரில் வந்தே குலுக்கல் பெட்டியில் போட்டுறேன் .// பெட்டியில் போட முடியாது ரபீக் சார். கூப்பனை எழுதி ஃபோட்டோ எடுத்து லயன் ஆஃபீஸ் What's App எண்ணுக்கு அனுப்பவும் 15th February க் கு முன்பு. ஏனென்றால் நடக்கப் போவது Virutual குலுக்கல் தான்.

      Delete
  82. இரட்டை வேட்டையரின் கருப்பு பாதிரி மர்மம் 43 ஆயிரம் பிரதிகள் விற்பனை என்றால் மலைக்கு செய்கிறது. ஒரு ரூபாய் விலையில் வந்த புத்தகம் என்று நினைக்கிறேன். படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  83. 1. பதினோராவது வயதில் காமிக்ஸ் என்றால் என்ன என்று கூட தெரியாது.
    2. சதி வலை, எந்த ஹீரோ உடைய புத்தகம் என்று கூட தெரியவில்லை.
    3. புயற்சித்தலைவன் ஆட்சி படித்திருக்கிறேன்
    4. கருப்பு பாதிரிமார்களும் படுத்திருக்கிறேன் இரட்டை வேட்டையர்
    5. டின்டின் குலுக்கல் கார்டு பத்திரமாக இருக்கட்டும் என்று எடுத்து வைத்தேன்,வைத்து இடத்தை மறந்துவிட்டேன் கிடைக்கவே இல்லை.
    6. பிப்ரவரி புத்தகங்கள் அனைத்தும் முடித்தாயிற்று

    ReplyDelete
  84. விஜயன் சார்,

    சென்னை காமிக்-கானில் நமது ஸ்டாலில் நமது முத்து காமிக்ஸின் ஆதர்ச நாயகனான இரும்புக்கை மாயாவியின் "இரும்பு கை" இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள் சார்!

    ReplyDelete
  85. விஜயன் சார், காமிக்ஸ்-கானில் நமது காமிக்ஸ் ஸ்பெஷல் புத்தக வெளியிடு ஏதாவது உண்டா சார்?

    ReplyDelete
  86. This comment has been removed by the author.

    ReplyDelete
  87. கேள்வி 1 : என்னுடைய 16-ம் வயதில் திருவண்ணாமலையில் சண்முகா தொழிற்சாலை அரசினர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். கேள்வி 2 & 3 : மேற்படி இரண்டு புத்தகங்களும் பார்த்ததும் இல்லை. படித்ததுமில்லை.

    ReplyDelete